நண்பர்களே,
வணக்கம். திறந்த வாய் இன்னமும் மூடாத நிலையில் இந்தப் பதிவினை ஞாயிறு அதிகாலையில் டைப்புகிறேன் !! வேறென்ன ? தேசமே மலைத்தும், வியந்தும் பார்த்துவரும் பாகுபலி - The Conclusion திரைப்படத்தை சனி மதியம் சோழ மண்டலத்துத் தியேட்டர் ஒன்றில் ஜுனியரோடு பார்த்துவிட்டு வந்த போது ஓபன் ஆன வாய் தான் இன்னமும் அலிபாபா குகை போலவே திறந்து கிடக்கிறது ! நமது வலைப்பதிவினில் காமிக்ஸ் சார்ந்த சமாச்சாரங்களைத் தாண்டி வேறெதுவும் இடம்பிடித்திடாது என்பதை ஒரு எழுதப்படா கோட்பாடாய் நாம் கொண்டு செல்வதில் இரகசியம் இல்லை தான் ; ஆனால் ஒரு அசாத்திய கற்பனைப் புனைவு கண்முன்னே திரைவிலகும் வேளையில் அதனைச் சிலாகிப்பதில் தவறில்லை என்று பட்டது - simply becos சித்திரங்கள் வாயிலாய்க் கதை சொல்லும் காமிக்ஸ் யுக்திக்கும் , இந்தத் திரைமுயற்சிக்கும் ஒரு மிக நெருக்கமான தொடர்பு இருப்பதை படம் நெடுகிலும் உணர முடிந்தது ! டைரக்டர் ராஜமௌலி ஒரு அதிதீவிர Amar Chithra Katha ரசிகர் எனும் பொழுது அவரது மனதில் ஓடிய ஒவ்வொரு பிரேமிலும் என்றோ, எங்கெங்கோ அவர் படித்திருக்கக்கூடிய காமிக்ஸ் கதைகள் inspire செய்த சமாச்சாரங்கள் இடம்பிடித்தல் சாத்தியமே என்று நினைத்தேன் ! And படம் ஓட ஓட - எனக்கு ஒவ்வொரு காட்சியிலும் கண்ணில் தெரிந்தது நாயகர் பிரபாஸ் அல்ல - நம்மவர் தோர்கலே !! அனுஷ்காவாய் என் முன்னே நிழலாடியது முழுக்கவே அரிசியா தான் !! இந்தக் கற்பனைக் களத்துக்கு இந்திய சாயல் மாத்திரம் இல்லாவிடின் - தோர்கலை இங்கு பொருத்திப் பார்ப்பது வெகு சுலபம் என்பேன் ! படம் நெடுகிலும் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமானspecial effects ஒவ்வொன்றும் அதன்பின்னுள்ள ஓவியர் அணியின் அசாத்திய உழைப்பையும் பறைசாற்றுவதை உணர்ந்த பொழுது - ரொம்பவே பெருமையாக இருந்தது ! அசாத்திய ஆற்றல் கொண்டதொரு அணியின் கூட்டு வெற்றி இது என்ற போதிலும், அதன் ஒரு ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் காமிக்ஸ் என்ற முத்திரை நமக்கெல்லாம் பொதுவானதொரு விஷயம் என்ற விதத்தில் பாகுபாலியோடு நாமும் நெருக்கமாய் உணர முடிகிறதோ என்னவோ ?!!
ஆகாச உயரத்திலிருந்து நம் நடைமுறைக்குத் திரும்புவோமா இனி ? நேற்றைய தினம் (சனி) உங்களது சந்தாப் பிரதிகள் சகலமும் கூரியரில் புறப்பட்டு விட்டன guys ! தென்னைமரத்திலே தேள் கொட்ட முகாந்திரம் என்னவோ - தெரியாது ; ஆனால் அது கொட்டிவைத்தால் அதன் பலனாய் பனைமரத்தில் நெரி கட்டுமென்பது பழமொழி அல்லவா ? அதனை இந்த வாரத்தில் உணர்ந்தோம் ! மேதின விடுமுறை காத்திருப்பதால் கூறியர்களை எப்பாடு பட்டேனும் வெள்ளிக்கிழமையே இங்கிருந்து கிளப்பியாக வேண்டுமென்று திட்டமிட்டிருந்தோம். ஆனால் ஊரின் மையத்தில் நெடுங்காலமாய் நீடித்து வந்ததொரு ஆக்கிரமிப்பைத் தட்டிவிட உச்சநீதிமன்றத்தின் உத்தரவு வியாழனன்று அமல்படுத்தப்பட்டது ! So புல்டோசர்களும் , போலீஸ் பாதுகாப்புமாய் பனி ஜரூராய் நடைபெறத் துவங்கிய சற்றைக்கெல்லாமே பெரும்பான்மையான பகுதிகளில் மின்சாரத்தையும் துண்டித்துவிட்டார்கள் ! So வியாழன் முன்னிரவு வரை நமது பைண்டிங் ஆபீஸ் இருளிலே மிதக்க, அன்றைய பணிகளும், நமது திட்டமிடல்களும் ஒருங்கே பணாலாகிப் போயின ! வெள்ளியிரவே பிரதிகள் நம்மை வந்து சேர, சனிக்கிழமை பேக்கிங் செய்து அவற்றை அனுப்பியுள்ளனர் !! ஒருக்கால் ஞாயிறன்றும் கூரியரின் கதவைத் தட்டிப் பார்சலை வாங்கி கொள்ளல் சாத்தியமாகியின் - good luck & happy reading over the weekend !
மே இதழ்களின் ஆன்லைன் லிஸ்டிங்குமே தற்போது செய்யப்பட்டுள்ளது - மொத்தமாகவும், தனித் தனியாகவும் ! So சந்தாவில் இடம் பெறா நண்பர்கள் இங்கே க்ளிக் செய்திட்டால் போதும் : http://lioncomics.in/monthly-packs/354-may-2017-pack.html .
சந்தா என்ற topic-ல் இருக்கும் வேளையிலேயே சின்னதொரு நினைவூட்டலுமே கூட : சந்தாக்களை 2 தவணைகளாய் செலுத்தத் திட்டமிட்டிருந்த நண்பர்கள் இறுதித் தவணைகளை அனுப்பி உதவிடுங்களேன் - ப்ளீஸ் ?
Moving on, அடுத்த மாதங்களின் பக்கமாயும், எஞ்சியிருக்கும் 2017-ன் இதழ்கள் பக்கமாயும் பார்வைகளை சில நாட்களுக்கு முன்பாய் ஓடவிட்டுக் கொண்டிருந்த பொழுது சில விஷயங்கள் பளிச் என்று கவனத்தைக் கோரின ! ரெகுலர் சந்தாப் பிரிவுகள் A B C & D-ல் தலா 10 இதழ்கள் எனும் பொழுது மாதம்தோறும் 4 இதழ்களென்ற பார்முலாவைத் தொடர்ந்திடும் பட்சத்தில் - அக்டோபரிலேயே அறிவிக்கப்பட்ட இதழ்களை மங்களம் பாடி முடித்திருப்போம் !! சந்தா E & Super 6-ன் எஞ்சியுள்ள இதழ்களும் கைவசம் இருப்பதால் ஒரு தினுசாய் manage செய்ய முடிகிறது ! அவை மட்டும் இல்லாது போகும் பட்சம் - லேசாயொரு வெற்றிடம் தெரிந்திட வாப்புகளுண்டு என்பேன் ! Take away சந்தா D (மறுபதிப்புகள்) from the equation & எஞ்சி நிற்க கூடியது 2 புது இதழ்கள் மட்டுமே என்றிருக்கக் கூடும் !
இங்கொரு கேள்வி எழுப்பிட ஆசை ! மாதம்தோறும் 4 இதழ்கள் எனும் பொழுது - இவற்றைப் படித்து முடிக்க சராசரியாய் உங்களுக்கு அவசியமாவது எத்தனை நாட்கள் ? அதைவிட முக்கியமான இன்னொரு வினாவும் ! இந்தாண்டின் இதுவரையிலுமான இதழ்களில் எத்தனை பாக்கி நிற்கின்றன - படிக்க அவகாசம் கிட்டா காரணத்தின் பொருட்டு ? நிச்சயம் கோபித்துக் கொள்ள மாட்டேன் - தாராளமாய் நிஜத்தைப் பகிர்ந்திடலாம் - ப்ளீஸ் ? கிட்டத்தட்ட வருடத்தின் பாதிப் பகுதியை எட்டிப் பிடிக்கவிருக்கிறோம் என்ற நிலையில் - 2018-ன் அட்டவணைத் திட்டமிடல் பக்கமாய் நிறையவே சிந்தனை தந்திட அவசியமாகிறது ! So இந்தத் தருணத்தில் உங்களது inputs கிடைப்பின் - நிச்சயம் உதவிடும் !
அரைத்த மாவுகளையே புதுசாய் recycle செய்திடாது ஒரு ஒட்டுமொத்தமான புது நாயக அணியோடு ஓராண்டாவது களமிறங்கித் தான் பார்க்க வேண்டும் - என்பது எனது சமீப காலத்து அவா ! No லார்கோ ; No ஷெல்டன் ; No கமான்சே ; No லக்கி ; No சிக்பில் என்ற ரீதியில் ஒரு அட்டவணையை 2017 க்கே ஒருவாட்டி எழுதிப் பார்த்தேன் - எங்கோ ஒரு இரயில்நிலையத்தில் தேவுடு காத்து நின்ற வேளையில் ! ஆனால் சிலபல துடைப்பங்கள் DTDC கூரியரில் கிளம்பிடக்கூடுமென்று பட்டதால் - ஜகாவும் வாங்கிவிட்டேன் ! என் கேள்வி இதுவே : ஒரு சுழற்சி முறையில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு சந்தாப் பிரிவில் ஒரு ஒட்டுமொத்த ஆள்மாறாட்டம் செய்ய முனைந்தால் ஓவராய் உதைப்பீர்களா - மிதமாய்ச் சாத்துவீர்களா ? Say - முதல் ஆண்டில் சந்தா A -வில் ஒட்டுமொத்தமாய் புது ஆக்ஷன் & டிடெக்டிவ் நாயகர்களை புகுத்துவது ; மறு ஆண்டில் - தற்போதைய black & white நாயகர்கள் சகலருக்கும் ஓராண்டு விடுமுறை தந்து - புதுவரவுகளை வரவேற்பது ; ஆண்டு # 3 -ல் அந்தப் பரீட்சார்த்த முயற்சியைக் கார்ட்டூன்கள் பக்கமாய்த் திருப்புவது என்றிருப்பின் - அது பற்றிய உங்கள் எண்ணங்கள் என்னவாக இருக்கும் ? 'ரைட்டு...பாயைப் பிறாண்ட ஆரம்பிச்சுட்டான் புள்ளையாண்டான் !' என்ற பயம் வேண்டாமே - இது சும்மா தலைக்குள் தோன்றியதொரு நினைப்பின் உரத்த பகிர்வே ! ஒருவித அயர்ச்சியை விலக்கி, இந்த முயற்சியானது நமது உற்சாகங்களைத் தக்க வைக்குமென்று உங்களுக்குமே தோன்றிடும் பட்சத்தில் - maybe 2019 முதல் இதுக்கொரு துவக்கம் தந்து பார்க்கலாம் ! 'பரவால்லே...இப்போ பிடுங்கிட்டு இருக்கும் ஆணிகளே நலம் !" என்று மனதில் பட்டால் - அதையும் தெரிவிக்கலாம் guys !
போன மாதம் இலண்டனுக்குப் போயிருந்த சமயம் நான் கவனித்த சில விஷயங்கள் பற்றியும், அவை நமது திட்டமிடல்களை மெருகூட்டக் கூடிய விதங்களைப் பற்றியுமே கொஞ்சம் பேசட்டுமா ? நமது ஆரம்பங்கள் சகலமுமே பிரிட்டனின் கரைகளைச் சார்ந்த கதைகளே என்பதை நாமறிவோம் ! மாயாவிகாருவில் துவங்கி இரும்புக்கை உளவாளி (வில்சன்) வரைக்கும் ஒருவண்டி Fleetway & DC Thomson கதைகளுக்குள் நாம் மண்டையை நுழைத்து நின்றது அந்நாட்களது உச்சங்கள் ! அப்போதெல்லாம் இங்கிலாந்தின் காமிக்ஸ் மார்க்கெட்டும் செம விறுவிறுப்பாய் இருந்திடும் ! ஏதேனும் வேலை காரணமாய் அங்கு செல்லும் போதெல்லாம் - புத்தகக் கடைகளுக்குள் புகுவதே சொர்க்கத்துக்குச் செல்லும் ஒரு அனுபவமாய் இருப்பது வழக்கம் ! ரேக் முழுவதும் வித விதமாய் ; கலர் கலராய் காமிக்ஸ் இதழ்கள் கண்ணைப் பறிக்கும் !! அங்கேயே நின்று அவற்றைப் புரட்டினாலோ, படித்தாலோ, யாரும் ஏதும் சொல்வதில்லை என்பதால் சாவகாசமாய் மாலைப் பொழுதுகளை இந்தப் பராக்குப் பார்க்கும் படலத்தில் செலவிடுவது வழக்கம் ! ஆனால் துரதிர்ஷ்டவசமாய் பிரிட்டிஷ் காமிக்ஸ் பாணிகள் சிறுகச் சிறுக ஈர்ப்பை இழந்திட, அமெரிக்க காமிக்ஸ் படையெடுப்பு இங்கு வெற்றி காணத் துவங்கியது ! BUSTER ; BEANO ; DANDY ; VULCAN ; MISTY என்ற இதழ்களையாகப் பார்த்தும், ரசித்தும் வந்த பிற்பாடு - ஸ்பைடர்மேன் / சூப்பர்மேன் என்ற அமெரிக்க சூப்பர் ஹீரோ சாகசங்களை அதே ரேக்கில் பார்க்கும் போது ஏனோ ஒரு சின்ன ஏமாற்றம் தோன்றும் உள்ளுக்குள் ! ஆனால் இம்முறையோ ஒரு ரொம்பவே pleasant surprise !! பிரிட்டிஷ் சிறுவர் இதழ்கள் & காமிக்ஸ் மறுபடியும் ஒரு மெல்லிய சுறுசுறுப்பைக் காட்டி வருவதை - உணர முடிந்தது ! அந்நாட்களது அதே அதகளம் என்றில்லை தான் ; but நிச்சயமாய் ஒரு சின்ன மறுமலர்ச்சி கண்ணில்பட்டது போலிருந்தது ! Of course - CINEBOOK அதிரடியாய் பிரெஞ்சு காமிக்ஸ் இதழ்களை மொழிமாற்றம் செய்து ஆங்கிலத்தில் வெளியிட்டு தூள் கிளப்பி வருகிறது தான் ; ஆனால் ஏனோ தெரியவில்லை லண்டனின் புத்தகக் கடைகளில் அவை அவ்வளவாய்க் கண்ணில்படவே இல்லை !! வேற்றுமொழிப் படைப்புகள் - என்ற கோணத்தில் இவையங்கு பார்க்கப் படுகிறதா - சொல்லத் தெரியவில்லை ! நம்மைப் பொறுத்தவையிலும் என்னதான் பிரான்க்கோ-பெல்ஜிய கதைகள் ; இத்தாலியக் கதைகள் என்ற நாம் சுற்றி வந்தாலுமே - அந்த நேர்கோட்டு fleetway சாகசங்களின் சுவாரஸ்யமும், சுலபத்தனமும் ஒரு வித்தியாசமே என்ற சிந்தனைக்குச் சொந்தக்காரன் நான் ! So முன்னர் போல முழுக்க அதனுள் மூழ்கிடாது போனாலும் - நடுநடுவே பிரிட்டிஷ் கதைகளைக் கண்ணில் காட்டல் ஓகே தானா ? இது தொடர்பாய் பிள்ளையார் சுழிகள் ஏற்கனவே போட்டு வைத்திருக்கிறேன் என்றாலும் - உங்களின் அபிப்பிராயங்களே எனது அடுத்த அடிகளை நிர்ணயிக்க உதவிடும் ! இதனையொரு ரிவர்ஸ் கியர் போடும் முயற்சியாக நீங்கள் பார்ப்பீர்களா ? அல்லது சிகப்புக் கம்பளம் இல்லாட்டியும் லேசாய்ச் சாயம் போனதொரு ஜமுக்காளத்தையாவது விரிக்கத் தயாராவீர்களா ?
Before I sign off - சில வேண்டுகோள்கள் !!
# 1 : நமது சூப்பர் 6 -ல் காத்திருக்கும் டிராகன் நகரம் இதழின் முதல் பக்கத்தில் உங்கள் போட்டோக்களை அச்சிட்டுத் தருவதாய்ச் சொல்லி இருந்ததை நிச்சயம் மறந்திருக்க மாட்டீர்கள் ! நேரமிது - உங்கள் போட்டோக்களை சேகரித்திட !! ஏற்கனவே ஒரு 25 பேர் சுமாருக்கு மட்டும் தபாலில் தங்களது போட்டோக்களை வெவ்வேறு தருணங்களில் அனுப்பி இருப்பர் ! இப்போது எல்லோருமே தங்கள் படங்களை : photos_lion@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட இயலுமா - ப்ளீஸ் ? இப்போதிலிருந்து துவக்கினாலே இந்த மெகா முயற்சியை வெற்றியாக்கிட இயலும் ! So சீக்கிரமே அனுப்புங்களேன் - Super 6 subscribers ?
# 2 : இரத்தக் கோட்டை தொகுப்பு தயாராகி வருகிறது ! Early Birds களுக்கு அது தொடர்பான டீசர்கள் சீக்கிரமே அனுப்பப்படும் ! இந்த இதழில் "டைகர் - தொடரும் ஒரு சகாப்தம் ! " என்ற தலைப்பில் சில பக்கங்களை ஒதுக்கியுள்ளோம் - உங்களின் எண்ணச் சிதறல்களை அதனுள் அடக்கிடும் பொருட்டு ! So இங்கே பின்னூட்டங்களாக வெளியிட்டாலும் சரி, நமக்கு மின்னஞ்சலில் (lioncomics@yahoo.com)அனுப்பினாலும் சரி - பயனாகிடும் ! பேனாக்களைத் தயார் செய்யுங்களேன் folks ?
# 3 : சமீபமாய் நமது பதிவில் வாசக டிசைனர்களின் திறமைகளை முன்னிறுத்திய "பயங்கர புயல்" ராப்பர்களைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது - உங்களின் திறமைகளை மீண்டுமொருமுறை showcase செய்திடும் ஆவல் மேலோங்கியது ! காத்திருக்கும் அடுத்த கார்ட்டூன் இதழுக்கு ராப்பர் வடிவமைக்கும் ஒரு குட்டியான contest வைத்தாலென்னவென்று தோன்றியது ! So ரின்டின் கேனாரின் "தடை பல தகர்த்தெழு !!" இதழின் முகப்பை உங்கள் கைவண்ணத்தில் மிளிரச் செய்வோமா ? ஆர்வமுள்ள நண்பர்கள் கரம் தூக்குங்களேன் - ப்ளீஸ் ?
Hai
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!
ReplyDeleteஜஸ்ட் மிஸ்ஸு..!!
Deleteசெந்தில் ஹிஹிஹி. .!!
கிட் நமக்குள் யார் முதலில் வந்தாலும் இருவருமே முதலிடம் தான்
Deleteதிருப்பூரில் காமிக்கை பெற அழைக்கவும் : 9487243494 , 8667666736..
DeleteHollo 4
ReplyDeleteHi
ReplyDeleteHai
ReplyDelete6th
ReplyDeleteSuper mama
Deleteஆசிாியா் மற்றும் நண்பர்களுக்கு காலை வணக்கம்
ReplyDeleteஜெய் மகிழ்மதி...
ReplyDeleteHi
ReplyDeleteநான்கு புத்தகங்களை படிக்க நான்கு நாட்கள் அதிகம்
ReplyDeleteஆசிரியருக்கும் ...நண்பர்களுக்கும் இனிய ஞாயிறு வணக்கம்.....:-)
ReplyDelete///மாதம்தோறும் 4 இதழ்கள் எனும் பொழுது - இவற்றைப் படித்து முடிக்க சராசரியாய் உங்களுக்கு அவசியமாவது எத்தனை நாட்கள் ?///
ReplyDeleteஅதிகபட்சம் ஒரு வாரம் சார். .!
மாடஸ்டியோ மறுபதிப்புகளோ கொஞ்சம் கூடுதல் அவகாசம் எடுத்துக்கொள்வதும் அவ்வபோது நடப்பதுண்டு..!! :-)
முதலில் காலை சற்று திடமாய் தரையில் ஊன்றி விட்டு புதிய களங்களில் வெளுத்துக் கட்டுவோம் அதுவரை கமர்ஷியல் பார்முலாவில் பயணம் செய்வோம்
ReplyDeleteஇதுவரை எந்த புத்தகமும் எடுத்து வைக்க வில்லை எல்லாவற்றையும் படித்து விட்டேன்
Deleteஏன் பதிவிட இவ்வளவு தாமதம்
ReplyDeleteour editor is out of town and no internet connection for him last night, hence delay.
DeleteOk sir
Delete//முதல் ஆண்டில் சந்தா A -வில் ஒட்டுமொத்தமாய் புது ஆக்ஷன் & டிடெக்டிவ் நாயகர்களை புகுத்துவது ; மறு ஆண்டில் - தற்போதைய black & white நாயகர்கள் சகலருக்கும் ஓராண்டு விடுமுறை தந்து - புதுவரவுகளை வரவேற்பது ; ஆண்டு # 3 -ல் அந்தப் பரீட்சார்த்த முயற்சியைக் கார்ட்டூன்கள் பக்கமாய்த் திருப்புவது என்றிருப்பின் - அது பற்றிய உங்கள் எண்ணங்கள் என்னவாக இருக்கும் ?//
ReplyDeleteவணக்கம் எடிட்டர் சார்,
மாற்றம் ஒன்றே மாறாதது என்பது தானே மாறா விதி சார்! கண்டிப்பாக முயற்சிக்கலாம். அப்படி நீங்கள் யோசித்ததன் விளைவு தானே தற்போதைய லார்கோவும், ஷெல்டனும், தோர்கலும்.
சாத்தியமிருந்தால் லேடி எஸ் போல் இவ்வருடமே சிலரை அறிமுகப்படுத்தி விட்டு வரும்வருடங்களில் முழு வீச்சில் கொண்டுவரலாம். முடிந்தால் மட்டுமே!!
+1
Delete+1
DeleteThanks Friends.
Deleteமுதலில் போட்டோவை அனுப்பி விடுகிறேன்! பின்பு, இந்த காரசாரமான விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட ஏதாவது பதிவிடுங்களேன்?
ReplyDeleteநான்கு ஞாயிறுகளுக்கு நாலு இதழ்கள் சரியாக உள்ளது ஸார். மாதத்தில் ஐந்தாவது ஞாயிறு வந்தால் இதழ் இல்லை ஸார்.
ReplyDeleteமுதலில் போட்டோவை அனுப்பி விடுகிறேன்! பின்பு, இந்த காரசாரமான விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட ஏதாவது பதிவிடுங்களேன்?
ReplyDelete###மாதம்தோறும் 4 இதழ்கள் எனும் பொழுது - இவற்றைப் படித்து முடிக்க சராசரியாய் உங்களுக்கு அவசியமாவது எத்தனை நாட்கள் ? #####
ReplyDeleteநான்கு புத்தகங்களும் படித்து முடிக்க அதிகபட்சமே ஒரு வாரம்தான் ஆகிறது...
###ஒரு சுழற்சி முறையில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு சந்தாப் பிரிவில் ஒரு ஒட்டுமொத்த ஆள்மாறாட்டம் செய்ய முனைந்தால் ஓவராய் உதைப்பீர்களா - மிதமாய்ச் சாத்துவீர்களா ? ####
ஏன் இருப்பதை கழிக்க யோசிக்கனும் ?? புதியதாக ஒரு சந்தாவை ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் புகுத்துங்கள் தொகை செலுத்தும் சிரமம் இருக்காதல்லவா...
+123
Deleteசார் இப்படி சொல்ல மன்னிக்க மாதம் ஒரு கார்ட்டூன் என்பது என்னைப்பொருத்தவரை யோசிக்கலாம் இன்னும் படிக்காமல் இருக்கும் புத்தகங்கள் கார்ட்டூனே ! லியார்ட்னோ கர்னல் இன்னும் சில
ReplyDelete-1234........-
Deleteமேச்சேரி மாமா மன்னிச்சு
ReplyDeleteமன்னிச்சாச்சுப் பா
Deleteரின்டின் கேன் @
Deleteஅவர் எங்கிட்ட சொன்னாருங்க.!
இதுக்கெல்லாமா சப்ஸ்டியூட் போடுவாங்க..! :-)
Palanivel @
கார்ட்டூன் விசயத்துல கொஞ்சம் கருணை காட்டுங்க மாமோய். .!
ஒவ்வொரு இடத்திலும் ப்ரசர் ரிலீஸ்க்கென ஒரு வாய்ப்பு இருக்கும்.
Deleteநம் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய ஸ்ரெஸ் ரிலீஸர்களாகத்தான் காமிக்ஸ் இருக்கிறது. அதிலும் கார்டூன்கள் தான் அந்த ரிலீஸ் கருவியின் வால்வு.
இதயவால்வு போனால் வாழ்வு பணால்;
ஸ்ட்ரஸ் ரிலீஸ் வால்வுகளான கார்டூன்கள் போனால் காமிக்ஸ் பணால்.உண்மையில் காமிக்ஸ்களை தாங்கிப் பிடிப்பதில் கார்டூன்களுக்கு கணிசமான பங்கு இருக்கிறது. அவற்றின் பங்களிப்பு மாதந்தோறும் அவசியம். டெக்ஸின் இடத்தை லார்கோ நிரப்பக்கூடும். கார்டூன்களின் இடத்தை.......??????
// காமிக்ஸ்களை தாங்கிப் பிடிப்பதில் கார்டூன்களுக்கு கணிசமான பங்கு இருக்கிறது. அவற்றின் பங்களிப்பு மாதந்தோறும் அவசியம் // super ji. Well said
Deleteஇங்கொரு கேள்வி எழுப்பிட ஆசை ! மாதம்தோறும் 4 இதழ்கள் எனும் பொழுது - இவற்றைப் படித்து முடிக்க சராசரியாய் உங்களுக்கு அவசியமாவது எத்தனை நாட்கள் ? அதைவிட முக்கியமான இன்னொரு வினாவும் ! இந்தாண்டின் இதுவரையிலுமான இதழ்களில் எத்தனை பாக்கி நிற்கின்றன - படிக்க அவகாசம் கிட்டா காரணத்தின் பொருட்டு ?
ReplyDelete1. சாதாரண வெளியீடுகள் படிக்க 3 - 4 நாட்கள். ஸ்பெஷல் வெளியீடுகள் என்றால் சுமார் 1 வாரம்.
2. இதுவரை படிக்காத புத்தகங்கள் - கார்டூன் கலாட்டாக்கள் (காமிக்ஸ் ஆர்வத்தின் காரணமாக, என்றேனும் ஒரு நாள் படிப்பதற்காக இன்று இவற்றை சந்தாவில் வாங்குவதோடு சரி)
Dear Editor,
Deleteரொம்ப நாட்களாக தங்களிடம் பகிரவேண்டும் என்று இருந்த ஒரு விஷயம்.
ஒரு புத்தகத்தை படிக்க எவ்வளவு நாள் ஆகின்றது என்று கேட்ட நீங்கள், எத்தனை முறை ஒரு புத்ததகத்தை படிப்பீர்கள்என்று கேட்டிருந்தால் (நீங்கள் நேரடியாக கேட்காவிட்டாலும்) எனது பதில் பின்வருமாறு.
நான் சிறு வயதில் ஒவ்வொரு காமிக்ஸ் புத்ததகத்தையும் எத்தனை முறை படித்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. அதற்காக என் அப்பா, அம்மாவிடம் எத்ததனை முறை திட்டு வாங்கி இருப்பேன் என்பதும் எனக்கு தெரியாது (அதன் பிறகு IIT ல் சேர்ந்hத படித்ததது வேறு கதை. இன்று என் அப்பாவும், அம்மாவும் இன்னுமாடா இந்த காமிக்ஸ் எல்லாம் படிக்கிற என்று நகைப்புடன் கேட்கிறார்கள்). முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் நான் சிறு வயதில் காமிக்ஸ் படிக்கும் பொழுது அதன் படங்களை நன்றாக ரசித்துப்பார்த்து கதைகளை படிப்பேன் . படங்கள் மிகத்தெளிவாக இருக்கும். அதற்காக இன்று படங்கள் தெளிவாக இல்லை என்று நான் சொல்லவில்லை, ஆனால் படங்களை மீறி வசனங்கள் மிகவும் அதிகமாக உள்ளன.
திரு. சாபு சிரில் (Art Director - எந்திரன் மற்றும் பாஹுபலி) ஒரு முறை தனது பேட்டியில் சொல்லியிருந்ததை நான் இங்கு குறிப்பிடுகிறேன், "எனக்கு மொழி தெரியாதவர்களிடம் சேர்ந்து வேலை செய்வது ஒரு கடினமான விஷயம் இல்லை, ஏனெனில் எனக்கு தேவையானவற்றை நான் படமாக வரைந்து காட்டிவிடுவேன்" என்று கூறி இருந்தார் (100% fact, since I have faced the same situations while working in Germany).
இன்று தாங்கள் வெளியிடும் புத்தகங்களில் வசனம் மிக அதிகமாக இருப்பதால் புத்தகங்கள் அனைத்தயும் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு தோற்றத்தை தருகின்றது (Example - சில or பல? வருடங்களுக்கு முன்னாள் ஹிந்தியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டு வந்த ஜுனூன் எனும் தொலைக்காட்சி நாடகம், தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் "ஜுனூன் தமிழ் என்று புகழ் பரப்பியது"). மாறாக நமது காமிக்ஸ் Editor என்ற முறையில் நீங்கள் இந்த வசனங்களை சற்று குறைக்க சிறிது முயற்சி செய்யலாம் (இது எனது வேண்டுகோள் மட்டுமே).
மேலும் காமிக்ஸ் என்றால் படத்தை பார்த்து பிறகு கதையை படிப்பது என்ற ஆதாரப்புள்ளி மறைந்துவிட்டதை போல் ஒரு தோற்றத்தை தருகின்றது (டெக்ஸ் வில்லர் வெற்றிக்கு முக்கிய காரணம் அதில் உள்ள குறைவான வசனங்களே என்பது எனது கருத்து). தரமான கதையை தேர்ந்தெடுத்து தருவதைப்போல அதை சிறிய வசனங்களிலும் (சொல்ல வந்த கருத்து மாறாமல்) தந்தால் அனைவரும் ரசித்துப்படிக்க மிகவும் வசதியாக இருக்கும்.
முத்து காமிக்ஸ் 40 வருட ஆண்டு மலர் விழாவில் (@ Chennai Book Fair) தங்கள் தந்தை கூட படக்கதைகளை பற்றி ஒரு சிறந்த உதாரணம் கூறியிருந்தார். பனிப்பொழிவு உள்ளது போல படம் வரைந்து இருந்தால், அதைப்பார்க்கும் நமக்கு குளிரவேண்டும் என்று. ஆனால் இன்று இந்த படத்தில் ஒருவர் மற்றொருவரிடம், "என்ன குளிருதா" என்று கேட்க்கும் வசனம் ஒன்றும் தேவை இல்லாமல் உள்ளது (this is just an example). Editor என்ற முறையில் இதை நீங்கள் சிறிது கவனிக்கலாம் (again just a request only).
அதற்காக மாதம் 4 புத்தகங்கள் வருவதே இதற்கு காரணம் என்று புத்தகங்களை தயவு செய்து குறைத்துவிடவேண்டாம். மேலும் வசனங்கள் குறைவாக இருந்தால் எழுத்து பெரிதாகவும், படிப்பதற்கு வசதியாகவும் இருக்கும், தங்களின் 77 வயது வாசகர்களையும் மகிழ்விக்க முடியும்.
(நான் Silent Watcherஆக இருப்பதற்கு "தமிழில் டைப்புவதில்" உள்ள சிரமங்கள் மட்டுமே காரணம்)
How to safe guard our comics book?
DeleteWatch this video.
https://www.youtube.com/watch?v=L0nCK1djezo
தேர்ந்தேடுத்த 6 கார்ட்டூன் 6 டெக்ஸ்
ReplyDelete12 மறுபதிப்பு கோடைமலர் தீபாவளி மலர் ஆண்டுமலர் ஈரோட்டுமலர் சென்னைக்கு ஒரு மலர்
Today early morning , I opened this blog and couldn't find this weeks article , really worried and asked mr.senthil Vinayagam sir if he has editors whatsapp number , thank god , for this asusual Sunday,
ReplyDelete#####அசாத்திய ஆற்றல் கொண்டதொரு அணியின் கூட்டு வெற்றி இது என்ற போதிலும், அதன் ஒரு ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் காமிக்ஸ் என்ற முத்திரை நமக்கெல்லாம் பொதுவானதொரு விஷயம் என்ற விதத்தில் பாகுபாலியோடு நாமும் நெருக்கமாய் உணர முடிகிறதோ என்னவோ ?!! #####
ReplyDeleteநாம் திரையில் பார்த்து ரசித்த 'பாகுபலி' திரைப்படத்தை காமிக்ஸ் புத்தமாக வெளியிட உள்ளனர். கிராபிக் இந்தியா என்ற நிறுகூனம் 'பாகுபலி' திரைப்படத்தை படத்தைத் தயாரித்த நிறுவனத்துடன் இணைந்து இந்த புத்தகத்தை வெளியிடுகிறது.
நாமும் முயற்ச்சிக்கலாமே சாா்.
Delete+100...
DeleteDear Editor, எனது இந்த கேள்வி கொஞ்சம் சிக்கலானது. நான் Super 6 சந்தா 2 கட்டியுள்ளேன். அதனால் நான் எனது புகைப்படத்தையும் (for first subscription) எனது மகளின் புகைப்படத்தையும் (for 2nd subscription) அனுப்பலாமா? Also one more doubt, what sort of photo......only portrait?
ReplyDeleteதிருப்பூரில் நமது காமிக் விற்கும் கடைகள் : நிவேதிதா புக் ஸ்டால் ,P.N.ரோடு, போயம்பாளையம். சுபா புக் ஸ்டால், புஷ்பா தியேட்டர். பத்மா புக் ஸ்டால், அன்னபூர்ணா ஹோட்டல் அருகில், டவுன்ஹால். செந்தில் புக் ஸ்டால், மாநகராட்சி பில்டிங் நேரெதிரில், பழைய பஸ் ஸடாண்ட்.
ReplyDeleteGood to know this.
Deleteபுத்தம்புதிய நாயகர்கள்.,புத்தம்புதிய புத்தகங்கள்.,வரவேற்கிறோம்.
ReplyDelete$ 4 புத்தகங்களை படிக்க எனக்கு ஒரு வாரம் போதும்....மீதி வாரங்கள் படிக்க தான் புத்தகங்கள் இல்லை....
ReplyDelete# இது வரை வந்த எல்லா இதழ்களையும் படித்து விட்டேன்...!
அடடே! புத்தகங்களை அனுப்ப எப்படியும் திங்கட்கிழமை ஆகிவிடும்னு நினைச்சுக்கிடுடிருந்தா - சத்தமில்லாம அனுப்பிவச்சு இன்ப அதிர்ச்சி கொடுத்துட்டீங்களே... சூப்பர்!
ReplyDeleteஒருவாரம் பத்துநாள்ல எல்லாக் கதைகளையும் படிச்சுடுவேன். ஒன்றிரண்டு மறுபதிப்புகள் மட்டும் படிக்காம பாதுகாப்பா வச்சிருக்கேனாக்கும்!
எந்த மாதிரியான மாற்றத்தை வேண்டுமானாலும் கொண்டு வாங்க. ஆனா அது புத்தகங்களோட மொத்த எண்ணிக்கையை அதிகரிக்கறாப்ல இருக்கட்டும். எதையும் விடவேணாம். குறிப்பா - மாதம் ஒரு டெக்ஸ், மாதம் ஒரு கார்ட்டூன்ல மட்டும் துண்டு விழவே கூடாது ... பார்த்துக்கோங்க!
அப்புறம்... அட்டைப்படப் போட்டியில் வெற்றிப்பெறப் போகும் நண்பருக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்!
ஏற்கனவே வச்ச கேப்ஷன் போட்டிக்கு இன்னும் பரிசு அறிவிக்கலையே எடிட்டர் சார்...
///குறிப்பா - மாதம் ஒரு டெக்ஸ், மாதம் ஒரு கார்ட்டூன்ல மட்டும் துண்டு விழவே கூடாது ... பார்த்துக்கோங்க! ///
Deleteஆமாமா..!! அந்த விசயத்துல நாங்க ரொம்ப கறாரான ஆளுக.!
///குறிப்பா - மாதம் ஒரு டெக்ஸ், மாதம் ஒரு கார்ட்டூன்ல மட்டும் துண்டு விழவே கூடாது ... பார்த்துக்கோங்க! ///+1000
Deleteடெக்ஸும் கார்டூன்களும் காமிக்ஸ்ன் இருகண்கள்...
ஆமாம் நான் கூட கண்டிசனா சொல்லிப்புட்டேன் டெக்ஸ் ம் கார்ட்டூனும் துண்டு விழக்கூடாது
Delete+10000000000
DeleteGreat Minds Think alike!
அட உங்க மூணு பேரையும் சொன்னேன் பாஸ் :-)
வெல்கம் சரவணாரே
Deleteஆமாம் நான் கூட கண்டிசனா சொல்லிப்புட்டேன் டெக்ஸ் துண்டு விழக்கூடாது.விழவே கூடாது.
DeletePresent sir
ReplyDeleteமாதம் 4 இதழ்கள் படித்துமுடித்து விடுகிறேன். Jeremiah மட்டுமே படிக்கவேண்டியதில் பாக்கி.சுவைக்கு குறைவில்லையென்றால் British வெளியிடுகளை ஏன் விட்டுவைக்கவேண்டும்? அதையும் ஒரு கை பார்த்துவிடலாம் .
ReplyDeleteஎல்லோருக்கும் வணக்கம் !
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசுஸ்கி விஸ்கி வர வாய்ப்புன்டா?
ReplyDeleteஇந்த கேள்வியை ஆசிரியரிடம் கேட்டு கேட்டு சலித்துப் போய் விட்டேன் நண்பரே
Deleteகண்டிப்பாக வரும் ஜி, காத்திருப்போம்
Deleteநானும் கேட்டு வைக்கிறேன் இதே கேள்வியை..!!
Deleteநான் ரின்டின் கேனாரின் ரசிகனாக்கும் !
ReplyDeleteவாலாட்டும் படங்கள் நூறு
Deleteவாலாட்டும் படங்கள் நூறு
Deleteநான் ரின்டின் கேனாரின் ரசிகனாக்கும் !
ReplyDeleteநான் ரின்டின் கேனாரின் ரசிகனாக்கும் !
ReplyDeleteHappy Sunday to All
ReplyDelete47th
ReplyDeleteDear sir, I admit I lack higher taste(Italian . . .graphic novels etc.) But I do like British comics.In my collection there are so many of our new issues unread while I enjoy reading our 1980s issues repeatedly! So I welcome, welcome welcome British comics
ReplyDelete5 புத்தகங்களை படிக்க எனக்கு அதிகபட்சம் ஒரு நாள் போதும்....மீதி நாட்கள் படிக்க தான் புத்தகங்கள் இல்லை....
ReplyDeleteஇது வரை வந்த எல்லா இதழ்களையும் படித்து விட்டேன்...
சில கதைகளை மறுவாசிப்பும் செய்து விட்டேன்..
எந்திரன் மாதிரி படிப்பீங்களோ சார்...
Delete52வது
ReplyDeleteஅனைவருக்கும் இனிதான காலை வணக்கம் நண்பர்களே.
ReplyDeleteபுதிய இதழ்களின் விரவிற்கு வாழ்த்துகள் .... வந்தனம்....
ReplyDeleteமாதம் நான்கு புத்தகங்கள் வருடாந்திர கணக்குல A +B +C +D யில் தலா 10 வெளியீடுகள்; சூப்பர் 6 சந்தாவில் 6எண்ணிக்கையையுன் கூட்டுத் தொகையையும் சேர்த்து பற்றாக்குறை இதழ்களை கணக்கிட்டால் 2 இதழ்களுக்கான இடம் காலி உள்ளது.அதில் சந்தா E,F,G,னு வெளியிடலாம் அல்லவா.
ReplyDeleteபுத்தகப் பாா்சல் கையில் கிடைத்த உடன் டெக்ஸ் காமிக்ஸை படித்து முடித்துவிடுவேன் மற்ற கதைகளையும் மூன்று நாட்களுக்குள் படித்து விடுவேன்
ReplyDelete//மாதம் ஒரு டெக்ஸ் மட்டும் துண்டு விழவே கூடாது ... பார்த்துக்கோங்க! //
ReplyDelete+1111111111
A&B SUPER, "C" CAN VE RELACED BY NEW ENDEAVOURS.
ReplyDelete//So முன்னர் போல முழுக்க அதனுள் மூழ்கிடாது போனாலும் - நடுநடுவே பிரிட்டிஷ் கதைகளைக் கண்ணில் காட்டல் ஓகே தானா ?//
ReplyDelete'மின்னல் படை', 'பெருச்சாளிப் பட்டாளம்', போன்ற இராணுவ கதைகளை முயற்சிக்க வாய்ப்புண்டா சார்? அவை பெரும்பாலும் எதிர்த்தரப்பை முட்டாள்களாகக் காண்பிப்பவையாக இருந்தாலும். சில கதைகள் சுவாரஸ்யத்துக்கு குறையில்லாதவையாக இருப்பவைதானே?
காலை வணக்கம் சார் & நண்பர்களே _/\_
ReplyDelete.
சென்ற வார தங்களது கேள்விகளுக்கு அடியேனின் இந்த வார பதில் :))
ReplyDelete1. நண்பர்களை விடுங்கள். நீங்களே கூட கேலி செய்வீர்கள்.தேவ் ஆனந்த் அளவிற்கு வொர்த் இல்லை எனினும் மாயாவிகாரு கதாபாத்திரத்திற்கு எனது சாய்ஸ் நடிகர் கணேஷ் வெங்கட்ராம்!
2.இமயத்தில் மாயாவி.
3.இதற்கும் உதைக்க வருவார்கள் எனினும் எனது தேர்வு - ஜெரேமையா!
4. The Grand Ranger Special!
ஓராண்டு முழுவதும் அறிமுக நாயகரா.....
ReplyDeleteசார்....சார்....ஏன்.....?
இந்த மாதம் டெக்ஸ் இல்லை என இங்கே அறிவித்த பொழுது டெக்ஸ் 70 அறிவிப்பால் அது ஒரு குறையாக தெரியாமல் தான் இருந்தது... ஆனால் இப்பொழுது புத்தகம் கொரியரில் கிளம்பி விட்டது என அறிவிப்பு வரும் பொழுது இந்த மாசம் டெக்ஸ் இல்லைல என ஒரு ஏமாற்றம் மனதினுள் எழுவது உண்மை....அந்த உண்மையான வெறுமையை லார்கோ கொஞ்சம் குறைத்தாலும் அது முழுமைக்கும் அல்ல என்பதே உண்மை...
ஒரு மாசத்துக்கே இப்படி....
ஒரு வருசத்துக்குன்னா ....?
அது சந்தா A மட்டும்னாலும் சரி....A to Z வரைக்குன்னாலும் சரி....சார்...
என்னை பொறுத்தவரைக்கும் இது சந்தோச செய்தி அல்ல...:-(
அதற்காக முழுவதுமாக புது வரவு வேண்டாம் என்பதல்ல சார் எனது கருத்து...மூன்றோ அல்லது நான்கோ என்பது ஓகே...:-)
Delete
Deleteசார்....சார்....ஏன்.....?
இந்த மாதம் டெக்ஸ் இல்லை என இங்கே அறிவித்த பொழுது டெக்ஸ் 70 அறிவிப்பால் அது ஒரு குறையாக தெரியாமல் தான் இருந்தது... ஆனால் இப்பொழுது புத்தகம் கொரியரில் கிளம்பி விட்டது என அறிவிப்பு வரும் பொழுது இந்த மாசம் டெக்ஸ் இல்லைல என ஒரு ஏமாற்றம் மனதினுள் எழுவது உண்மை....அந்த உண்மையான வெறுமையை லார்கோ கொஞ்சம் குறைத்தாலும் அது முழுமைக்கும் அல்ல என்பதே உண்மை...
ஒரு மாசத்துக்கே இப்படி....
ஒரு வருசத்துக்குன்னா ....? வேண்டாம் சார். இந்த மாதம் டெக்ஸ் தள்ளி போட விட்ட்தற்கு தண்டனை யா சார்.
//ஒரு சுழற்சி முறையில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு சந்தாப் பிரிவில் ஒரு ஒட்டுமொத்த ஆள்மாறாட்டம் செய்ய முனைந்தால் ஓவராய் உதைப்பீர்களா - மிதமாய்ச் சாத்துவீர்களா ?//
ReplyDeleteவேதாளர், பேட்-மேன், காரிகன், புஸ் ஸாயர்(சார்லி), சுஸ்கி-விஸ்கி, ஷெர்லக் ஹோம்ஸ், ஹெர்லக்-ஷோம்ஸ், ரிப்-கிர்பி, சிஸ்கோ கிட், மான்ட்ரேக், ஜெஸ்லாங், ஜானி (பைலட்), பெர்ரி மேஸன், வெஸ் ஸ்லேட், ரோஜர் மூர், ஜார்ஜ், ஜான் ஸ்டீல் - என்று எமக்குப் பரிச்சயப்பட்ட ஆட்களே எக்கச்சக்கமாயிருக்கிறார்களே, அவர்களுக்கு ஒரு கம்-பேக் கொடுக்க இயலாதா? புதிய நாயகர்களோடு இவர்களையும் அவ்வப்போது களமிறக்கிடும் சந்தர்ப்பம் வாய்த்தால் 'சாத்துக்களுக்கு'ப் பதில் சாமரமே வீசமாட்டோமா, என்ன?
+987654321
Delete//புதிய நாயகர்களோடு இவர்களையும் அவ்வப்போது களமிறக்கிடும் சந்தர்ப்பம் வாய்த்தால் 'சாத்துக்களுக்கு'ப் பதில் சாமரமே வீசமாட்டோமா, என்ன?//---+100
Deleteஇந்த பேர்களையெல்லாம் படிக்கையிலேயே மயங்குது மதி...
Podiyan : Absence makes the heart grow fonder என்ற பழமொழி நிஜம் தான் போலும் நண்பரே ! பட்டியலில் பேட்மேன் ; வேதாளர் & சுஸ்கி-விஸ்கி ; சிஸ்க்கோ கிட் நீங்கலாய் பாக்கியுள்ள பெயர்களின் பெரும்பான்மை அன்றைய நாட்களிலேயே இரண்டாம் நிலை நாயகர்கள் தானே ? சார்லியையும், மாண்ட்ரேக்கையும் பார்த்த மறுகணமே குதிகால் பிடரியில் அடிக்க நம் முகவர்கள் ஓடியுள்ளது நிஜம் ! வெஸ் ஸ்லேட் ; ரிப் கிர்பி ; பெரி மேசன் ; ஷெர்லக் ஹோல்ம்ஸ் ; ஜார்ஜ் ; ஜான் ஹேவக் என்ற சகலரின் கதைகளிலும் நாம் அன்றைக்கே வாங்கி வைத்து, இன்னமும் வெளியிடாது உள்ளவை என் பீரோவில் ஒரு வண்டி தேறும் ! அவற்றில் கிட்டத்தட்ட பாதிக்கு மொழிபெயர்ப்பும் செய்தெ கிடக்கின்றன சார் ! மாற்றமென்ற பெயரில் புளியோதரையை fried rice என்று பார்சல் செய்ய முயன்றது போலாகி விடுமென்ற பயத்தில் தான் அவர்களின் பீரோ உறக்கங்களை தொந்தரவு செய்வதில்லை !
Deleteஅனைத்து அந்தந்த நமது மாத இதழ்களை படிக்க ஆகும் நாள்கள் ...
ReplyDeleteகுறைந்த பட்சம் நான்கு நாட்கள் சார்....அதுவும் சமீபமாக ...
காரணம் ஆரம்பத்தில் இதழ்கள் வந்தவுடன் உடனடியாக அனைத்து இதழ்களையும் படித்துவிட்டு பிறகு காமிக்ஸ் மோட்டு வளையத்தை பார்த்து கொண்டு இருப்பது வழக்கமாக இருந்தது... பிறகு அடுத்த மாதம் பிறப்பது என்பது ஒரு வருடம் போல தாமதமாகிறது என்பதால் நானே எனக்கு புது இதழ்கள் வந்தவுடன் ஒரு நாளைக்கு ஒரு காமிக்ஸ் என சுய கட்டுப் பாட்டை ஏற்படுத்தி கொண்டேன்...
ஆனால் கொரியர் வந்த முதல் நாள் படிப்பதில்லை...அன்று அனைத்து இதழ்களையும் அட்டைப்படம் ...ஓவியங்கள்...சித்திரதரம் என ஓவ்வொரு பக்கமாக புரட்டி ரசித்து பின் ஹாட்லைன்..அடுத்த வெளியீடு விளம்பரங்கள்..சிங்கத்தின் சிறு வயதில் ( வருகை தந்தால் ) வாசகர் கடிதம் என படித்து ரசிப்பதோடு சரி..பிறகு அடுத்த நாள் தான் ஆட்டத்திற்குள் நுழைவது...
ஆனால் பகல் பொழுதில் பேருந்து பயணத்தில் மாயாவியை...ஸ்பைடரை பேருந்து பயணத்திலியே முடித்து விட்டு அடுத்த மூன்று இதழ்களும் உறக்கத்திற்கு முன்னர் மன சூழலுக்கு ஏற்றவாறு இதழ்களை தேர்ந்தெடுத்து படித்து முடிக்க என ஆக சரியாக நான்கு தினங்கள் ஆகிறது சார்...
பிறகு வழக்கம் போல அடுத்த மாத இதழ்களுக்கு ஏங்குவதாக இருப்பதால் இனி இதழ்களை மேலும் மாதந்தோறும் ஒன்றோ ..இரண்டோ கூடுதலாக இனைத்து அனுப்புமாறு இச்சமயத்தில் பணிவன்புடன் வேண்டிகொள்கிறேன் சார்..!
Paranitharan K : //பகல் பொழுதில் பேருந்து பயணத்தில் மாயாவியை...ஸ்பைடரை பேருந்து பயணத்திலியே முடித்து விட்டு அடுத்த மூன்று இதழ்களும் உறக்கத்திற்கு முன்னர் மன சூழலுக்கு ஏற்றவாறு இதழ்களை தேர்ந்தெடுத்து படித்து முடிக்க என ஆக சரியாக நான்கு தினங்கள் ஆகிறது சார்...//
DeleteMaybe பஸ்ஸில் படிப்பதை இரவுக்கு மாற்றி விட்டீர்களெனில் உறக்கம் துரிதமாய் வருமல்லவா தலீவரே ?
:-)))
Deleteஎது செய்தாலும் டெக்ஸில் கை வைத்து விடாதீர்கள்.
ReplyDelete+10000000000000000000000000000
DeleteKrishna VV : 'தல' மீது கை வைத்தால் தமிழகத்தில் குப்பை கொட்டத் தான் முடியுமா ? :-)
Deleteஎந்த ஒரு புத்தகத்தையும் ஆழமான நிதானத்தோடு அணுக சில மணி நேரங்களே போதுமானதாக
ReplyDeleteஉள்ளது.பக்கங்களின் தடிமனை பொருத்து ஓரிரு மணித்துளிகள் கூடுதலாக குறைவாக
அமையும்.மாதத்தில் எத்தனை நேரம் வாசிப்பக்கு பயன்படுகிறுது என்பதை அளக்க முனைந்ததில்லை.பத்தகங்களின் சுவாரஸ்யத்தை பொறுத்தே காலப்பயன்பாடு.சவாலான படைப்புகளுக்கு கூடுதலான நேரம் ஒதுக்குவது இயல்பு.4கு காமிக்ஸ் இதழ்களை புரிந்து கொள்ள ஒரு நாள் போதும்.சில பல வெளியீடுகளை வாங்குவதை தவிர்த்ததுண்டு'சில இதழ்களை மாத இறுதியில் மேய்ந்ததும் உண்டு.வாசிக்கத் தவறியதாக உணர்ந்ததில்லை.
அன்பு எடிட்டர், டெக்சில் குறை இல்லாமல் இருப்பது நலம்
ReplyDelete4 கதைகளை படிக்க அலுவலக வேலைகளை பொருத்து ஒரு வாரம் வரை ஆகும்.பிரிட்டன் காமிக்ஸ் ஓகே
Deletesenthil Madesh ://டெக்சில் குறை இல்லாமல் இருப்பது நலம்//
DeleteNo worries !!
புது வரவுகளுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பதில் தவறில்லை. ஆனால் அது இங்கிலாந்தின் வரவு என்பதே நெருடலாக உள்ளது.அந்த படைப்புகளில் கற்பனை வளமோ'கதை வளமோ காணக்கிடைக்காதவையாகத்தான் இருக்கும் எண்பது என் தணிப்பட்ட கருத்து.கதைத் தேர்வுகளில் கூடுமான வரை கவனமாக இல்லாவிடில் உருளுவது உங்கள் தலைதான்.முன்பே வெற்றி நாயகர்களாக அறியப் பெற்றவர்களை விடுத்து முற்றிலும் புதியவர்களை கொண்டு களம் காண்பது என்பது தற்கொலைக்கு ஒப்பானது.கரணம் தப்பினால் மரணம். பாத்து செய்யுங்க இல்லனா செஞ்சுருவாங்க.
ReplyDeleteSri Ram : //வெற்றி நாயகர்களாக அறியப் பெற்றவர்களை விடுத்து முற்றிலும் புதியவர்களை கொண்டு களம் காண்பது என்பது தற்கொலைக்கு ஒப்பானது//
Deleteவெற்றி நாயகர்களின் அளவீட்டை என்னவென்று நிர்ணயிப்பது நண்பரே ? நாமெல்லாம் சேர்ந்து சூட்டும் மகுடம் தானே அது ? இன்டர்நெட்டோ - அயல்தேசத்து காமிக்ஸ் சுவாசங்களோ அதிகமிலா நாட்களில் நம் மத்தியில் கால் பதித்தவர்கள் தானே டெக்ஸ் வில்லரும் ; கேப்டன் டைகரும் ? தம் ஆற்றலாலும், கதை வளத்தாலும் நம்மை ஈர்த்தவர்கள் தானே இருவருமே ? But நம்மிடையே அறிமுகமான தருணத்தில் இருவருமே வெறும் பெயர்கள் மாத்திரம் தானே ?
உருவான இங்கிலாந்தில் கிட்டா சிலாகிப்பை இங்கு தலைமுறைகளாய்ப் பார்க்கும் மாயாவியையும் நாமறிவோம் ; உலகெங்கும் கொண்டாடப்படும் SMURFS நம்மிடையே mixed reactions ஈட்டுவதையும் அறிவோம் தானே ? So "வெற்றி நாயகர்" என்ற அடையாளத்தோடு வந்து சாதிப்பவர்கள் மட்டுமே நம் தேர்வுக்கு உட்பட்டாக வேண்டுமென்ற அளவுகோல் சற்றே தூக்கலானதல்லவா சார் ?
சார் எங்களுடைய இரசனைகளை மெருகேற்றத்துடன் வடித்து கொடுத்த விஸ்வகர்மா தாங்கள்.பதிய முயற்சிகளில் உள்ள சவால்களை அறியாதவர்அல்லவே.ஜெராமையாவை அறிமுகம் செய்து வரற்பையும் எதிர்புகளையும் ஒருங்கே பெற்றது கூட மிகச் சமீபத்திய உதாரணம்.உங்களுடைய உழைப்பு வர்த்தக ரீதியாக தங்களுக்கு ஆக்கமுடையதாக அமைய வேண்டும்.காமிக்ஸ் விற்பனை தொடர்பான வர்த்தகத்தை வாசகர்களான நாங்களும் அறியாதவர்கள் அல்ல.எண்ணவோட்டங்கள் தவறாக புரிந்து கொள்ளப்படாமல் அமைந்து விட்டால் நலமே.உங்களுடைய நலனில் அனேக வாசகர்களின் அன்பு கலந்த அக்கறை உள்ளதை அனைவரும் அறிந்த ஒன்றே.
Delete///மாதம்தோறும் 4 இதழ்கள் எனும் பொழுது - இவற்றைப் படித்து முடிக்க சராசரியாய் உங்களுக்கு அவசியமாவது எத்தனை நாட்கள் ? அதைவிட முக்கியமான இன்னொரு வினாவும் ! இந்தாண்டின் இதுவரையிலுமான இதழ்களில் எத்தனை பாக்கி நிற்கின்றன///....
ReplyDeleteஉண்மையை சொல்லனும்னா டெக்ஸை முதல் நாளில் படித்து விடுவேன் சார்.
மற்றவை வாரம் ஒன்றாக மாதம் முழுதும் வைத்து படிப்பேன். இதுவரை வெளிவந்த இதழ்களில் ஒரு சில மதிப்புகள் மட்டுமே பாக்கி உள்ளன படிக்க.
டெக்ஸும் கார்டூனும் லார்கோவும் நிச்சயமாக மறுவாசிப்பு உண்டு. சமீபத்திய டியூராங்கோ இந்த பட்டியலில் இணைந்துள்ளார் சார்.
சேலம் Tex விஜயராகவன் : //சமீபத்திய டியூராங்கோ இந்த பட்டியலில் இணைந்துள்ளார்//
Deleteஅடடே !!
//maybe 2019 முதல் இதுக்கொரு துவக்கம் தந்து பார்க்கலாம் ! 'பரவால்லே...இப்போ பிடுங்கிட்டு இருக்கும் ஆணிகளே நலம் !" //...
ReplyDeleteஇந்தாண்டு கிட்டத்தட்ட 8ல் ஒரு பாக அளவுக்கு புதிய நாயகரகர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளது போல சார்.
அடுத்தாண்டு 5ல்1பாக அளவுக்கு வாய்ப்பளிக்கலாம் என்பது என் கருத்து சார்.
2020ல் இதை 50:50என்ற அளவில் முயற்சித்தால் வெற்றி வாய்ப்பு பிரகாசமானமாக இருக்கக்கடும் சார்.
சேலம் Tex விஜயராகவன் : சார்....தற்போதைய நாயக அணியானது நமது மிகத் தீவிரமான அளவுகோல்களைக் கடந்து வந்தது தானே ? So உங்களுக்குச் சலிப்புத் தட்டாத வரையிலும் எனக்கு no problems தான் ! ஆனால் இந்தப் "புதியவர்களோடு பரிசோதனை" அவ்வப்போது எனக்குள் தோன்றத் தவறுவதில்லை !!
Delete///"புதியவர்களோடு பரிசோதனை" அவ்வப்போது எனக்குள் தோன்றத் தவறுவதில்லை !!///
Deleteஆசிரியர் சார்@ அடுத்த லார்கோவையும் கண்டுபிடித்து விடுவீர்கள் என எதிர்பார்க்கிறோம் சார்.
டைகரின் இடத்தை ஒருநாள் டியூராங்கோ பிடிக்ககூடும் என கணிக்கிறேன் சார்.
ஒவ்வொரு புதிய ஹூரோ அறிமுகம் ஆகும்போதும் பழைய தோஸ்த்களுடன் ஒப்பிடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது சார்.
இந்த ராமையா தம்பிகளுக்கு அநேகமாக அடுத்த செட் பார்த்து விட்டால் யார் சோடினு முடிவு செய்துடுவோம் என தோணுது, ஒரு அவுட்லைன் தூரத்தில் தெரிகிறுது சார்.
ஒரு கால கட்டத்தில் திரைப்படங்கள் தனிப்பட்ட முறையில் என் மீது தாக்கத்தை ஏற்படுத்திய அறிவியல் தொழிற்நுட்பம்.பென்_ஹெர்'டைட்டானிக்'க்ளாடியேட்டர்'கேஸ்ட் அவே போன்ற உலக சினிமாக்களை உள்வாங்கிக் கொண்டு ஒரு 180 பக்க ஏடுகளில் பல திரைபடங்களின் திரைக்கதைகளை எழுதிப் பார்த்த காலங்களும் உண்டு. திரைப்படங்களுக்கு சற்றும் குறையாத ஆற்றலோடு சித்திரக்கதைகள் அமைக்கப்பட்டிருப்பதை பல முறை உணர்ந்திருக்கிறேன்.காட்சி கோணங்கள்'காட்சி அமைப்புகள்'கதையை நகர்த்தும் யுக்திகளை காமிக்ஸ் மூலமாக எளிதில் கற்க முடியும்.இன்றளவும் பல வெற்றி திரைப்படங்களின் அடித்தளதமாக ஸ்டோரி போர்ட்"ஸ்கிரீன் ப்ளே போன்றவற்றை அமைத்துக் கொள்ள காமிக்ஸ் வடிவம் பெரும் அளவில் உதவும்.ஆனால் வருந்தும் விதமாக இதை வெளிப்படையாக ஏற்கும் மன நிலையில் திரைத்துறையினர் இல்லை.மோசன் கேப்சர்'க்ராபிக்ஸ்'3டி'அனிமேசன் போன்ற எண்ணற்ற தொழிற்நுட்பங்களோடு திரைத்துறை வளர்ந்திருந்தாலும் காமிக்ஸ் வழிகாட்டுதலோடு மிக எளிதாக கையாள முடியும்.பாகுபலி மட்டும் அல்லாது எண்ணற்ற திரைப்படங்களில் இதன் தாக்கம் நிறைந்துள்ளது.இந்த போக்கு எதிர்காலத்தில் அதிகப்படும்.
ReplyDeleteSri Ram : //மோசன் கேப்சர்'க்ராபிக்ஸ்'3டி'அனிமேசன் போன்ற எண்ணற்ற தொழிற்நுட்பங்களோடு திரைத்துறை வளர்ந்திருந்தாலும் காமிக்ஸ் வழிகாட்டுதலோடு மிக எளிதாக கையாள முடியும்.பாகுபலி மட்டும் அல்லாது எண்ணற்ற திரைப்படங்களில் இதன் தாக்கம் நிறைந்துள்ளது.இந்த போக்கு எதிர்காலத்தில் அதிகப்படும்.//
Delete+1
88
ReplyDeleteபுதிய கதைகளை தாராளமாக களம் இறக்கலாம் சார் ஆனால் அந்த புதிய கதைகள் கார்ட்டூன் கதைகளாக இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள் இந்த கார்ட்டூன் கதைகள் என்றால் ஏனோ எனக்கு செட்டாகுவதே இல்லை இந்த கார்ட்டூன் கதைகளை குறைத்து விட்டு அவ்விடத்தில் வேறு புதியவர்களுக்கு இடம் கொடுக்கலாமே சார் இது எனது தனிப்பட்ட கருத்து மாத்திரமல்ல சில நன்பர்களுடன் பேசியதில் அவர்களது என்னமும் இதுவாகவே இருந்தது
ReplyDeleteலார்கோ வின்ச் , மார்ட்டின் போன்ற கதைகள் இருந்தால் தைரியமாக இறக்குங்கள் சார் , இது வரை தமிழில் வெளிவந்த அனைத்து மார்ட்டின் கதைகளையும் சேர்த்து மார்ட்டின் ஸ்பெசல் என்று ஒரு புக் வெளியிட்டாலும் அமோகமாக இருக்கும் சார் ஏன் என்றால் நிறைய ஸ்பெசல் புக்குடன் வெளியான மார்ட்டின் கதைகள் எல்லாம் கையில் கிடைக்கவில்லை மறுபதிப்பில் மார்ட்டின் எப்போது புகுவார் இப்படி பல கேள்விகள் எனக்குள் மார்ட்டினுக்கு ஒரு தீவிர ரசிகன் நான்
Aashique.stark : //புதிய கதைகள் கார்ட்டூன் கதைகளாக இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள் இந்த கார்ட்டூன் கதைகள் என்றால் ஏனோ எனக்கு செட்டாகுவதே இல்லை இந்த கார்ட்டூன் கதைகளை குறைத்து விட்டு அவ்விடத்தில் வேறு புதியவர்களுக்கு இடம் கொடுக்கலாமே//
Deleteஆஹா !! ரசனைகளின் பன்முகங்களில் இதுவும் ஒன்று தானோ ? கார்ட்டூன்களே நமது அடுத்த தலைமுறைக்கு ஒரு பாலம் என்பதாலேயே அதனில் தொடர் கவனம் தந்து வருகிறோம் ! But உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதில் பிழை கிடையாது தான் ; உங்கள் அணியில் இன்னும் கூடுதலாய் நண்பர்கள் உள்ளனர் தான் !
சார் இது போன வாரத்துக்கான பதில்
ReplyDeleteசார் முதலில் அட்டைப்படம் ,வண்ணமும் , டேவிட்டும் ..ஏன் மொத்த அட்டயுமசத்தல் . லார்கோ இன்னும் மூன்று கதைகள் இருக்குன்னே நினைத்தேன் . மாயாவி படம்...ஆஹா....களிமண் மனிதர்கள் மற்றும் பறக்கும் பிசாசு இன்னும் மாயாவிக்கோர் மாயாவி எனது தேர்வு .அஜித் முகத் தோற்றம் கச்சிதமா பொருந்துவதால் ..அஜித்த தெறிக்க விடலாம்..ஸ்பைடர அறிமுகபடுத்துனா இன்னும் அசத்துமே.....நானும் லார்கோ xiii ஐ தேர்வு செய்வேன் படத்துக்கும் அற்புதமான மெகா மறுபதிப்புகளுக்கும் .டெக்ஸுக்கு பணியாற்றிய அனைவரின் படைப்பிலும் ஒன்றை கலந்து கருப்பு ,வெள்ளயிலும் கலரிலும் பிரம்மாண்ட சைசிலும் ஆயிரத்தைனூறு பக்கத்தில் வரட்டும் .ஐநூறு பக்க இதழ் மூன்றில் ஒரு பாகத்த அடைக்கும் என்பதால அத தனியா விடலாம் .
சார் முயற்சிக்கலாம் .ஷெல்டன் , லார்கோவ மட்டும் விடலாம் . இங்கிலாந்து கதைகளுக்கு சிவப்புக் கம்பளம் . எனது நேரத்தை தற்போதய தொழிலும் , தங்கை மகளும் பிடுங்கிக் கொள்வதால் முழு மூச்சில் படிக்க இயலவில்லை . சென்ற மாத இதழில் ஜெரமயாவும் , இரவுக்கழுகின் தீபாவளி மலர் , கொலைக்கரம் மட்டும் படிக்கலை .
ReplyDeleteகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : //எனது நேரத்தை தற்போதய தொழிலும் , தங்கை மகளும் பிடுங்கிக் கொள்வதால் முழு மூச்சில் படிக்க இயலவில்லை//
Deleteநிச்சயமாய் அவையிரண்டுமே முன்னிறுத்தப்பட வேண்டிய காரணங்களே !! கிடைக்கும் சைக்கிள் கேப்பில் காமிக்ஸ்களை நுழைத்துக் கொண்டாலே பெரிய விஷயம் சார் !
அனைத்து இதழ்களையும் படித்தாகி விட்டது. மே மாத இதழிற்காக ஆவலுடன் வெயிட்டிங்!!! ஒவ்வொரு மாதமும் இதழ்கள் கைகளை வந்தடைந்தவுடன், 3-4 நாட்களில் ஸ்வாக... சில நேரங்களில் 2 நாட்களிலும்!!! ஒரு மாதத்திற்குள் 2 முறையாவது ரிவிஷனும்!!!
ReplyDeleteஏற்கனவே, கதைகளில்லை என்ற காரணத்தினால் தளபதியை தொலைத்து விட்டிருக்கிறோம்(றேன்). இப்பொழுது No லார்கோ, No ஷெல்டன் என்றால் எங்கு போய் சொல்வது? புதிய நாயகர்களை முயற்சி செய்ய ஏற்கனவே இருக்கும் வழிமுறைகள் போதுமானது என்பது என் கருத்து. இதை விட வேறு ஏதாவது வழிமுறையில் முயற்சி செய்து பார்க்கலாமே ஐயா!!!
discoverboo : நண்பரே - நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அடுத்த ஆண்டினில் No லார்கோ ; நோ ஷெல்டன் தான் ! அவர்களது தொடர்களின் அந்திமப் பகுதியில் அல்லவா நாமிருக்கிறோம் இப்போது ?
Deleteஎனக்கும் புரிகிறது சார்! ஆனால் பாழாப் போன மனசுக்கு புரிய மாட்டேங்குதே!
Deleteபடிக்காத இதழ்கள்...
ReplyDeleteம்ஹீம் ஒன்று கூட இல்லை சார்...
இன்குளூடிங்(!) கிராபிக் நாவல்ஸ் அன்ட் ஜெரோமயா உட்பட...:-)
Paranitharan K : உங்க ரேஞ்சே வேறாகிப் போய் விட்டது தலீவரே !
Deletedear EDITOR,
ReplyDeleteNEW HEROES ARE WELCOME. இங்கிலாந்து கதைகள் வேண்டாம் என்றே தோன்றுகிறது. அந்த தேசத்தவர்கள் மட்டுமே மனித குலத்திற்கு பாடுபடுவதுபோல கதைகள் உருவாக்குவார்கள். அவை பழய காலத்திற்கு சரி . நியூ ஏஜ் கதைகள் எடுபடுவதில்லை என்பது என் கருத்து. மற்றபடி புதிய ஹீரோக்களை வரவேற்கிறேன். ஆண்டு முழுவதும் என்றாலும் சரி. விங் கமாண்டர் ஜார்ஜ் தோன்றும் ஒரு கதை, கதை பெயர் தெரியவில்லை . கிளைடர் விமானத்தை ஒட்டிக்கொண்டு மங்கோலியா பாலைவனத்தில் மாட்டிக்கொள்வார். அருமையான கதை. அது போன்ற சாகசங்களை நவீன இங்கிலாந்து படைப்பாசிரியர்கள் வெளியிடுகிறார்களா என்று தெரிய வில்லை. அது போன்ற கதைகளை பரிசீலிக்கலாம் .
leom : சார்..விங் கமாண்டர் ஜார்ஜும் Cold War காலத்து உலகில் சாகசம் செய்த நாயகர் ! இன்றைக்கு எங்கெங்கோ பயணித்துவிட்ட உலகில் அவருமே ஒரு புராதனைச் சின்னமாகவே தான் தெரிவார் ! But anyways point taken !!
DeleteMinimum 2 days maximum 3 days for all books
ReplyDeletejarudbilla : And சகலத்தையும் படித்து விட்டீர்களா இந்தாண்டினில் ?
Deleteஆமா 48 புத்தகத்திற்கு
Delete48 மணிநேரம் போதுமே
சூப்பர் பாசா ஜி. வெல்கம் வித் வணக்கம்.
ReplyDeleteஎன்னதான் லார்கோ, கிளிப்டன், கி.நா'னு கேட்வாக் பண்ணிட்டுவந்து இந்தண்டை அந்தண்டை அழகு காட்டினாலும், டெக்ஸ் இல்லா இம்மாதம் பருப்பில்லாக் கல்யாணம் போல் உணரப்படும். பக்கத்துல இல்லாதபோதுதான் ஒருத்தரோட அருமை தெரியும்னு சொல்லுவாய்ங்க... தல விசயத்துல அத உணரமுடியுது!
ReplyDeleteமிஸ் யூ வெரி பேட்லி தல! இனி நீயில்லாத இம்மாதம் நிலவில்லா வானம் போல் இருண்டு கிடக்கட்டும்!
உண்மை உண்மை
Deleteஉண்மை செயலரே....ஒரு ஏமாற்றம் நெஞ்சினிள் இந்த மாதம்..:-(
Deleteநாளைக்கு மே 1,கொரியர் செவ்வாய் அன்றுதான் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteஅட ...ஆமால்ல ..நாளைக்கும் போச்சா....:-((
Deleteநடுநடுவே பிரிட்டிஷ் கதைகளைக் கண்ணில் காட்டல் ஓகே தானா?//
ReplyDeleteஎங்கெ கிடைத்தால் என்ன சார்,நல்ல கதையாக இருந்தால் ஓகேதான்.
மாதம்தோறும் 4 இதழ்கள் எனும் பொழுது - இவற்றைப் படித்து முடிக்க சராசரியாய் உங்களுக்கு அவசியமாவது எத்தனை நாட்கள்?//
ReplyDelete2 அல்லது 3 நாட்கள்.
ஒரு சுழற்சி முறையில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு சந்தாப் பிரிவில் ஒரு ஒட்டுமொத்த ஆள்மாறாட்டம் செய்ய முனைந்தால் ஓவராய் உதைப்பீர்களா?//
ReplyDeleteநோ ஆணி சார்,புதிய அறிமுகங்கள் அளவோடு கலந்து ரெகுலரில் வருவதே சிறப்பு.
இந்தாண்டின் இதுவரையிலுமான இதழ்களில் எத்தனை பாக்கி நிற்கின்றன - படிக்க அவகாசம் கிட்டா காரணத்தின் பொருட்டு ?//
ReplyDeleteஎல்லாத்தையும் படிச்சாச்சி சார்,ஒரு இதழை மட்டும் வாசிக்க பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது.
சார்... புதுமையான கதாநாயகர்களை நிறைய கொண்டுவாருங்கள் அதற்காக கார்டூன்களை ஒரே அடியாக புறக்கணித்து விடாதீர்கள். கார்டூன்கள் என்கிற நீர்வீழ்ச்சி இல்லையெனில் காமிக் உலகமே வறண்டுவிடும்.
ReplyDeleteசுழற்சி முறையை எதற்காக அமல்படுத்த வேண்டும்?
ReplyDeleteபுது வரவுகளுக்கு தனித்தடம்(சந்தா) ஒண்ணு ரெடி பண்ணா போதுமே.
மாசம் நாலு காமிக்ஸ் எனக்கு பற்றாக்குறையாக தோணுது. இன்னும் நாலு காமிக்ஸ் வந்தாலும் பற்றாக்குறையாகத்தான் தோணும்'ணு தோணுது.
ஆனால் என்னை ஊள்ளூர அரித்துக்கொண்டிருக்கும் ஒரு பெருங்குறை நிதிப்பற்றாக்குறையே.
I want more 'னு மேல் மனசு கூவுது. அடிமனசோ 'மொதல்ல மோர் குடிக்க காசிருக்கா'னு பிறாண்டுது.
இருந்தாலும் அதிக காமிக்ஸ் வரவேற்கிறேன்.
வெளியீடுகள் அதிகரிக்கும்போது
கொண்டாட்டங்கள் அதிகரிக்கும்.கொண்டாட்டங்கள் அதிகரிக்கும்போது நம்மை திரும்பி பார்க்கும் பார்வைகளும் அதிகமாகும்.
கதவைத்திறக்கும் போது காற்றும் வரும். கூட வெளிச்சமும் வரும். நமக்கு ரெண்டும் முக்கியம் அல்லவா?
அதனால் கதவை திறவுங்கள் அய்யா காற்றோடு காமிக்ஸும் மிகுதியாக வரட்டும்.
////I want more 'னு மேல் மனசு கூவுது. அடிமனசோ 'மொதல்ல மோர் குடிக்க காசிருக்கா'னு பிறாண்டுது.////
Delete:)))))))))
///I want more///...ஆம். Me too
Deleteஆசிரியர் சார்@ மாதம் 4எனும்போது மீண்டும் 4X12=48க்கு திருப்புங்கள் சார்.
Super6 & Santha" E"- extra milage.
:-))
Deleteஈரோடு விஜய் குறிப்பிட்டிருக்கும் அழகியலோடு கூடிய அந்த வரிகள்;அஹ்கா°°°****°°°பலே.இப்பூடியெலாம் எழுதலாம....ஓஹோ!!!.விட்டத்தை பார்த்து ரோசிக்கும் படங்கள் 100
Deleteஇரண்டு நாட்களில் அனைத்து புத்தகங்களையும் படித்து விடுவேன். டெக்ஸ் மற்றும் டைகர் கதைகள் மீது தனி ஈர்ப்பு உண்டு.இவர்கள் இல்லா காமிக்ஸ் அசைவப் பிரியனான எனக்கு சைவம் சாப்பிடுவது போல தான்
ReplyDelete//////இங்கொரு கேள்வி எழுப்பிட ஆசை ! மாதம்தோறும் 4 இதழ்கள் எனும் பொழுது - இவற்றைப் படித்து முடிக்க சராசரியாய் உங்களுக்கு அவசியமாவது எத்தனை நாட்கள் ? அதைவிட முக்கியமான இன்னொரு வினாவும் ! இந்தாண்டின் இதுவரையிலுமான இதழ்களில் எத்தனை பாக்கி நிற்கின்றன - படிக்க அவகாசம் கிட்டா காரணத்தின் பொருட்டு ? நிச்சயம் கோபித்துக் கொள்ள மாட்டேன் - தாராளமாய் நிஜத்தைப் பகிர்ந்திடலாம் - ப்ளீஸ் ? கிட்டத்தட்ட வருடத்தின் பாதிப் பகுதியை எட்டிப் பிடிக்கவிருக்கிறோம் என்ற நிலையில் - 2018-ன் அட்டவணைத் திட்டமிடல் பக்கமாய் நிறையவே சிந்தனை தந்திட அவசியமாகிறது ! So இந்தத் தருணத்தில் உங்களது inputs கிடைப்பின் - நிச்சயம் உதவிடும் ! ///////
ReplyDeleteஒரு வாரத்துக்குள்ளாக ....அனைத்து இதழ்களும்...( மாயாவிஜி கேள்வி கேட்டா இரண்டு வாரத்துக்கும் மேல் . :-) }மறுபடி மறுபடி படிக்கவேண்டிவரும் . விளையாட்டா சொன்னாலும் மனுஷர் ரசிச்சு படிப்பார் .....சிலசமயம் அவர் சொன்னபிறகுதான் அப்படி ஒரு விஷயம் இருக்குங்கிறதே தெரியும் ...ஜெரெமியாவில் அவர் சொன்ன ஒட்டகம் டாபிக் படு இன்டெரெஸ்டிங்கான விஷயம் ... (இதைப்பற்றி பேசினால் தள நண்பர்கள் ஆட்டோவில் ஏறி விடுவார்கள் ..:-) }
கடைசியாக படிப்பது மறுபதிப்பு இதழ்கள் .....
படிக்காத இதழ்கள் ???? ...அப்படி ஒன்றுமில்லை ....
///////என் கேள்வி இதுவே : ஒரு சுழற்சி முறையில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு சந்தாப் பிரிவில் ஒரு ஒட்டுமொத்த ஆள்மாறாட்டம் செய்ய முனைந்தால் ஓவராய் உதைப்பீர்களா - மிதமாய்ச் சாத்துவீர்களா ? Say - முதல் ஆண்டில் சந்தா A -வில் ஒட்டுமொத்தமாய் புது ஆக்ஷன் & டிடெக்டிவ் நாயகர்களை புகுத்துவது ; மறு ஆண்டில் - தற்போதைய black & white நாயகர்கள் சகலருக்கும் ஓராண்டு விடுமுறை தந்து - புதுவரவுகளை வரவேற்பது ; ஆண்டு # 3 -ல் அந்தப் பரீட்சார்த்த முயற்சியைக் கார்ட்டூன்கள் பக்கமாய்த் திருப்புவது என்றிருப்பின் - அது பற்றிய உங்கள் எண்ணங்கள் என்னவாக இருக்கும் ? 'ரைட்டு...பாயைப் பிறாண்ட ஆரம்பிச்சுட்டான் புள்ளையாண்டான் !' என்ற பயம் வேண்டாமே - இது சும்மா தலைக்குள் தோன்றியதொரு நினைப்பின் உரத்த பகிர்வே ! ஒருவித அயர்ச்சியை விலக்கி, இந்த முயற்சியானது நமது உற்சாகங்களைத் தக்க வைக்குமென்று உங்களுக்குமே தோன்றிடும் பட்சத்தில் - maybe 2019 முதல் இதுக்கொரு துவக்கம் தந்து பார்க்கலாம் ! 'பரவால்லே...இப்போ பிடுங்கிட்டு இருக்கும் ஆணிகளே நலம் !" என்று மனதில் பட்டால் - அதையும் தெரிவிக்கலாம் guys ! /////
**********செம ஐடியா சார்!!!!
துணிந்து செய்யலாம் சார் !!!!! பழக்கப்பட்ட கடல் தடத்தில் பயணிக்கும் கப்பல்கள் குறிப்பிட்ட துறைமுகத்தினை அடைந்தவுடன் பத்திரமாகத்தான் இருக்கும்..அதற்காக ????
புதிய தடங்களில் கடலில் பயணிக்கவும்தானே கப்பல்களை கட்டுகிறோம் !!!!!
கதவுகள் திறந்திருக்கையில் கர்ஜிக்கும் சிங்கம் வழமை என்ற கூண்டுக்குள் அடைபட வேண்டிய அவசியம்தான் என்ன ????
ரிஸ்க் எடுக்காமல் இருப்பதுதான் வாழ்வின் பெரிய ரிஸ்க் என்ற மார்க்கின் வார்த்தைகளும் ஞாபகம் வருகிறது ...
புதுயுக எழுத்தாளர்களும் ,நாயகர்களும் அவசியம் தேவை சார் !!! *********
இப்படி எழுத கை பர பரங்குது ....
ஆனா ... முதல் உங்களுது அப்டின்னு நினைக்கும்போது கை தடுமாறுது ...
தனிப்பட்ட முறையில் புதுவரவுகளை பெரிய கரகோஷத்துடன் வரவேற்கிறேன் சார் !!
// ஆனா ... முதல் உங்களுது அப்டின்னு நினைக்கும்போது கை தடுமாறுது ...
Deleteதனிப்பட்ட முறையில் புதுவரவுகளை பெரிய கரகோஷத்துடன் வரவேற்கிறேன் சார் !! //
+1 :)
///துணிந்து செய்யலாம் சார் !!!!! பழக்கப்பட்ட கடல் தடத்தில் பயணிக்கும் கப்பல்கள் குறிப்பிட்ட துறைமுகத்தினை அடைந்தவுடன் பத்திரமாகத்தான் இருக்கும்..அதற்காக ????
Deleteபுதிய தடங்களில் கடலில் பயணிக்கவும்தானே கப்பல்களை கட்டுகிறோம் !!!!!
கதவுகள் திறந்திருக்கையில் கர்ஜிக்கும் சிங்கம் வழமை என்ற கூண்டுக்குள் அடைபட வேண்டிய அவசியம்தான் என்ன ????
ரிஸ்க் எடுக்காமல் இருப்பதுதான் வாழ்வின் பெரிய ரிஸ்க் என்ற மார்க்கின் வார்த்தைகளும் ஞாபகம் வருகிறது ...
புதுயுக எழுத்தாளர்களும் ,நாயகர்களும் அவசியம் தேவை சார் !!! *********///
செனா அனா @
ப்ளஸ்ஸோ ப்ளஸ் ங்கண்ணா..!!
டெக்ஸ் மற்றும் கார்டடூன் கதைகளில் கை வைத்து விட வேண்டாம். சிக்பில், லக்கி போன்ற கதைகள் மிகச்சிறந்த ஸ்ட்ரெஸ் ரிலீவர்ஸ். படிக்க பத்து மாசம் ஆகுது. 😜 இந்த வருடம் சில பல காரணங்களால் செப்டம்பர் முதல் வந்த புத்தகங்களைப் பெற முடியவில்லை. தேர்வுகள் முடிந்து விட்டதால் வீட்டில் இருக்கும் பேத்திகள் வழியாக ஏப்ரல் புத்தகங்களையும் சேர்தது புதன் கிழமை அனுப்பி விடுவதாக என்று அம்மா வாக்களித்துள்ளார். டெக்ஸ் மற்றும் கார்டடூனகள் உடனடியாக காலியாகி விடும். மீதிக்கதைகளையும் சேர்தது ஒரு மாதத்தில் படித்து முடித்து விடுவேன். கதைகளை அதிகப்படுத்தும் சின்னத்திறகு என்னுடய நல்ல மற்றும் கள்ள ஓட்டை நாலாயிரம் ரூபாய் வாங்கமலே போடுவதாக உத்தேசம்.
ReplyDeleteNow i am age about 54.I am a great fan of maayaavi,lawrence and david,johnny neroFROM 1972 when mullai thangarasan as a editor.sir,i kindly request to you that please issue golden classic issues like IRUMBU KAI MAAYAVI.PAATHAALA NAGARAM,KAATRIL KARAINTHA KAPALGAL,NADU NISIKALVAN,MARMA THEEVIL MAAYAVI.VINNIL MARAINTHA VIMAANANGAL.VAAN VELI KOLLAYAR,GORRILA SAAMRAJYAM,JOHNNY IN JAPAN.MICRO ALAI VARISAI,KOLAI KAARA KALIGNAN.THANGA VIRAL MARMAM.KADATHAL RAGASIYAM AS SOON AS POSSIBLE.THANK YOU SIR.
ReplyDeleteநீங்க எந்த கதை போடடாலும்ங்க நான் வாங்க யோசிக்கவே மாட்டேன்
ReplyDeleteஎன் காமிக்ஸ் காதல் இதுவரை என் மனைவிக்கு கூட தெரியாது
ReplyDeleteஎடிட்டர் சார்..நீங்கள் புதிதாக புத்தகம் போடுவது ஒருபக்கம் இருக்கட்டும்..நாளைக்கே நமது பிளாக்கில் ஒரு புதிய பதிவைப்போடுங்க சார் ப்ளீஸ்..ஒரு வாரமெல்லாம் வெயிட் பண்ணவே முடியல...
ReplyDeleteஇரவு 7.30க்கு கூரியர் நண்பர் சற்று கனம் குறைந்த பொக்கிஷ பெட்டியை கொடுத்துவிட்டு போனார்.
ReplyDeleteவிடுமுறை நாளிலும் பொறுப்பான கடமை உணர்ச்சி.
வாழ்க S.T. கூரியர்.
டெக்ஸ் இல்லாத கதை வரிசைகளை கையில் ஏந்துகையில் சற்று வருத்தமாகத்தான் உள்ளது.
சர்ப்ரைஸ் கிஃப்டின் பின் பக்கம் உள்ள டெக்ஸ் ப்ளோஅப்பை பார்த்து ஆறுதலடைந்து கொள்ள வேண்டியதுதான்.
புத்தகங்களின் மணத்தை நுகர்ந்து கொண்டே ஒவ்வொன்றாக புரட்டி புரட்டி இரவுப் பொழுதை இன்பமாக கழிக்க வேண்டும்.
புத்தகங்களை நேற்றே அனுப்பிவைத்த ஆசிரியருக்கு நன்றி.
இந்த மாதம் டெக்ஸ் இல்லா ஒரு நாளை நினைத்து பார்க்க முடியவீல்லை...
ReplyDeleteஎனவே டெக்ஸ் மறுவாசிப்பு ஒன்று என முடிவெடுத்துவிட்டேன்....
அது எதுவென இன்று தேடுவது ( இன்னும் அரை மணி நேரத்தில் ..) தான் எனது இப்போதைய வேலை....:-)
இரத்த நகரம்- மிஸ் மோலி
Deleteதோட்டா தலைநகரம்- ஸ்கூல் மிஸ்.
மறுவாசிப்புகளுக்கு ஏற்ற கதைகள்.
2லும் அந்த இளம்பெண்கள் மனதை கவரும் பாத்திரங்கள்;கதையின் போக்கில் முக்கிய பங்கும் உண்டு...
அவர்களுக்காகவே பலமுறை ரசித்து படித்துள்ளேன் அய்யா...
ATR நீங்கள் கொடுத்து வைத்தவர்
ReplyDeleteபுத்தகம் கிடைத்ததை சொன்னேன்
எனக்கு எப்படியும் 2ம்தேதிதான் கிடைக்கும்
ReplyDeleteகாலை 9:30 க்கே பார்சலை கைப்பற்றிட்டோமுல்ல..! (கிடைக்காதவங்க மன்னிச்சூ சாமியோ..)
ReplyDeleteலார்கோ புக், உயரம் குறைந்து சற்றே அகலம் அதிகமாகியிருப்பது போல் தோன்றுவது நேக்கு மாத்திரம்தானா??
ஒரு முடியா இரவு - முதல் லுக்கில் எதையோ சொல்ல வருகிறது. .!
கர்னல் க்ளிப்டன் - படிச்சாச்சே..! செம்ம ப்ரிண்டிங் & கலரிங் (Hats off u sir)
தலைகேட்ட தங்கப்புதையல் - கைகடிகாரத்தில் மணி பார்க்க கண்ணாடி எதுக்கு? (லெஜன்ட்ஸ்ன்னு சொல்ல வந்தேன்..:-))
///லார்கோ புக், உயரம் குறைந்து சற்றே அகலம் அதிகமாகியிருப்பது போல் தோன்றுவது நேக்கு மாத்திரம்தானா??///
Deleteஇல்லையில்லை வழமையான சைசில்தான் இருக்கிறது,சரிபார்த்துவிட்டேன் .!
காலையில (9:30 மணிக்கு) தூக்கக்கலக்கத்துல பாத்துட்டேன் போலிருக்கு..!
ஆங்..! சர்ப்ரைஸை மறந்துட்டேனே.!
ReplyDeleteவிச்சு கிச்சு தொடங்கி அதிமேதாவி அப்பு வரை அனைத்துமே செம்ம கலெக்ஷன். முத்தாய்ப்பாக டெக்ஸ் ப்ளோ அப் - 70 ஆவது பிறந்தநாளுக்கு என்ன செய்யப்போறிங்கன்னு துப்பாக்கி முனையில மிரட்டுறாரு.!
சின்ன நெருடல் - இந்த சைஸ்தான் சார்.! நம்ம புக் சைசுல இருந்தா பாதுகாக்க சுலபமா இருக்குமேன்னு தோண்றது..!
///நடுநடுவே பிரிட்டிஷ் கதைகளைக் கண்ணில் காட்டல் ஓகே தானா ? இது தொடர்பாய் பிள்ளையார் சுழிகள் ஏற்கனவே போட்டு வைத்திருக்கிறேன் என்றாலும் - உங்களின் அபிப்பிராயங்களே எனது அடுத்த அடிகளை நிர்ணயிக்க உதவிடும் ///
ReplyDeleteஏற்கனவே பிள்ளையார் சுழி போட்டுட்டதாலே விஷப்பரிட்சையாயினும் எழுதத் தயாராகிக் கொள்கிறோமே சார். .!
///- முதல் ஆண்டில் சந்தா A -வில் ஒட்டுமொத்தமாய் புது ஆக்ஷன் & டிடெக்டிவ் நாயகர்களை புகுத்துவது ; மறு ஆண்டில் - தற்போதைய black & white நாயகர்கள் சகலருக்கும் ஓராண்டு விடுமுறை தந்து - புதுவரவுகளை வரவேற்பது ; ஆண்டு # 3 -ல் அந்தப் பரீட்சார்த்த முயற்சியைக் கார்ட்டூன்கள் பக்கமாய்த் திருப்புவது என்றிருப்பின் - அது பற்றிய உங்கள் எண்ணங்கள் என்னவாக இருக்கும் ?///
ReplyDeleteஇங்க்லீசுல இருபத்தியாறு எழுத்துகள் இருக்கே சார். .! அப்புறம் எதுக்கு அந்த A, B, C, D, E க்களையே தொந்தரவு பண்ணிட்டு இருக்கணும்.?!
ஒரு தனித்தடத்தை போட்டுவுட்டு சந்தா I (Introduction) ன்னு பேரு வெச்சிட்டா, அதுபாட்டுக்கு ஒருபக்கம் ஓடிட்டு இருக்கப் போகுது..!!
சந்தா I யில சக்சஸ் பண்ற நாயகர்களை ரெகுலர் வரிசைக்கு கொண்டு வந்திடுவோம். சொதப்பல் இருந்தா அப்படியே விவாகரத்து பண்ணி அனுப்பிடுவோம். சோ சிம்பிள்..! :-)
Deleteதனித்தடத்தை போட்டுவுட்டு சந்தா I (Introduction) ன்னு பேரு வெச்சிட்டா, அதுபாட்டுக்கு ஒருபக்கம் ஓடிட்டு இருக்கப் போகுது..!!//
Deleteகண்ணன் நல்ல ஆசை நிறைவேறினால் மகிழ்ச்சி.
+11111
இன்று ஞாயிறுகிழமை என்பதால் கொரியர் கிடையாது. நாளைதான் புத்தகங்கள் கைக்கு கிடைக்கும். அதுவரை சிலகாமிக்ஸ் ரீபிட் மோடில் படித்துவரவேண்டும். :) ராப்பர் வடிவமைக்கும் contestல் கலந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன் சார். போட்டோ நீங்கள் சொன்ன மின்னஞ்சலுக்கு அனுப்பிவிடுகிறேன், ஆனால் போட்டோவிற்கான ஃபைல் சைஸ் எந்தளவு இருக்கவேண்டும் வேண்டும் ? 2எம்பி அல்லது 3 எம்பி?
ReplyDeleteதமிழில் காமிக்ஸ்..தமிழில் காமிக்ஸ்..அவ்வளவுதான். நீங்கள் எந்தவகை கதைகள் வெளியிட்டாலும் ஆதரவு தர தயாராக இருக்கிறோம். தயங்காமல் புது புது ஜர்னர்களை களமிறங்குங்கள் சார்! அதிலும் பிர்ட்டன் காமிக்ஸில் இரண்டாம் உலக யுத்தகதைகள் வெளியிட்டால் தற்போதைய சூழலுக்கு ஏற்றார்போல் இருக்கும்! (அமெரிக்க-வடகொரியா முறைப்பு) :)
ReplyDeleteஆமாம் சார் இதை நானும் ஆமோதிக்கிறேன். இரண்டாம் உலகப்போர் என்பது கடந்த நூற்றாண்டில் நடந்த எவ்வளவு பெரிய விஷயம்? அது சம்பந்தப்பட்ட காமிக்குகளை வெளியிட்டீர்களானால் செம கிளாஸிக்கா இருக்கும்.!
Delete///தமிழில் காமிக்ஸ்..தமிழில் காமிக்ஸ்..அவ்வளவுதான். நீங்கள் எந்தவகை கதைகள் வெளியிட்டாலும் ஆதரவு தர தயாராக இருக்கிறோம். தயங்காமல் புது புது ஜர்னர்களை களமிறங்குங்கள் சார்! ///
Delete+1
ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு. ,
ReplyDelete1984 ல் தந்தை கற்பித்த காமிக்ஸ் காதலால் தனியாக லயன் என்ற காமிக்ஸை தொடங்கியது.ஒரு ஆர்வகோளாறு என்று எடுத்து கொண்டாலும் முதலிரண்டு கதைகள் சரியாக போகவில்லை என்றதும் கடையை மூடாமல் வேறு என்ன கதை போடலாம் என்று யோசித்து இந்தியாவில் யாருமே முயற்சிக்காத (தந்தை கூட)ஏஜண்ட் கூட ஏற இறங்க பார்த்து வரவழைத்து தந்த கூர்மண்டையன்,சட்டித் தலைவனை வெளியிட்டப்போது யாரை கேட்டு வெளியிட்டீர்கள்.அதுவும் அந்த பாக்கெட் சைஸ்! !!!!அந்த சமயத்தில் அப்படியொரு சைஸ் வந்து உள்ளதா என்று சத்தியமாக தெரியவில்லை. டிடெக்டிவ்,சூப்பர் ஹீரோ என்று பவனி செய்த போது கொண்டு வந்தீர்களே ever green super star எங்கள் மஞ்சள் சட்டை மாவீரரை களம் காண வைத்தீர்களே எப்படி?பாக்கெட் சைஸில் கோடைமலர்,தீபாவளி சூப்பர் ஸ்பெஷல்(87-ல் 10 ரூபாய் விலை.யாருமே முயற்சிக்காத ஒன்று) எப்படி? எத்தனைஹீரோக்களின் அறிமுகம் ,எத்தனை விதமான சைஸ்கள்&விலைகள் இந்திய காமிக்ஸில் யாருமே முயற்சிக்காத பல ஸ்பெஷல் கள்,அதிலும் உலகில் யாருமே முயற்சிக்காத இரத்தப்படலத்தின் முழு தொகுப்பு.இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். இதை எல்லாம் செய்த போது வாசகர்கள் ஆகிய எங்களிடம் சொன்னீர்களா?அல்லது 10 ரூபாய் விலைக்கு சூப்பர் ஸ்பெஷல் வெளியிட வேண்டாம் என்றவர்களின் பேச்சை கேட்டீர்களா? பிறகு ஏன் ?இப்போது எல்லாம் எங்களிடம் ரைட் சைடில் போலமா லெப்ட் சைடில் போலாமா என்ற கேள்விகள் ஏன்?
1.இளங்கன்று பயம் அறியாது என்பர்களே அப்படி இருந்தீர்களா நேற்று வரைக்கும். ...
அல்லது2.எதை போட்டாலும் விற்று விடும் என்ற நினைப்பா?(அப்படி நினைத்திருந்தால் நமது காமிக்ஸ் மட்டும் நிலைத்து நின்றிருக்கமா!!!!!
இப்படி எத்தனையோ கேள்விகள் மனதில் தோன்றினாலும் எனக்கு கிடைத்த ஒரு பதில்..........
காமிக்ஸை ஆரம்பித்த பலர் இன்றுபலர் கல்லறைக்கு சென்ற போதிலும் நமது காமிக்ஸ் மட்டும் (தமிழில்) ஏனோ தானோ என்று வராமல் அழகாக அதிஅற்புதமாக வெளிவருவதற்கு காரணம் ஆசிரியர் என்னதான் வாசகர்கள் ஆகிய நாம் தான்பெட்ரோல், காற்று,மூச்சி..etc...என்று சொன்னாலும் ஆசிரியரின் அந்த காமிக்ஸ் காதல் மட்டும் இல்லை என்றால் இந்த பயணம் இல்லை. காமிக்ஸை வெறும் வியாபாரமாக பார்த்தவர்கள் போய் சேர்ந்த இடம் தான் நமக்கு தெரியுமே????
//ஏனோ தானோ என்று வராமல் அழகாக அதிஅற்புதமாக வெளிவருவதற்கு காரணம் ஆசிரியர் என்னதான் வாசகர்கள் ஆகிய நாம் தான்பெட்ரோல், காற்று,மூச்சி..etc...என்று சொன்னாலும் ஆசிரியரின் அந்த காமிக்ஸ் காதல் மட்டும் இல்லை என்றால் இந்த பயணம் இல்லை.//
DeleteWell said
@ Saran selvi
Deleteஅருமை! ஒவ்வொரு வரிக்கும் ஒரு லைக் போடலாம்!
அருமை ஜி அருமை.
DeleteSaran selvi : சிந்திக்க வைத்த பின்னூட்டம் !
Deleteநீங்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு என்னிடமே பதில்கள் இருந்ததில்லை நண்பரே ! இன்றைக்கு யோசித்தாலும் அந்நாட்களது தடாலடிகளின் பின்புலத்தின் மீது விரல் வைக்க இயல மாட்டேன்கிறது ! நான் வளர்ந்த நாட்களில் என்னைச் சதா நேரமும் சூழ்ந்திருந்த காமிக்ஸ் குவியலை தமிழுக்கு கொண்டு வர வேண்டுமென்ற உத்வேகமும், ஏதேனும் சிற் சிறு மாற்றங்களை / முன்னேற்றங்களை தொடர்ந்து செய்து காட்டி உங்கள் ஆச்சர்யங்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றதொரு வேட்கையும் எனக்குள் இருந்தன ! Maybe அவையே நமது உந்துசக்தியோ - என்னவோ ?!
இன்னொரு விஷயமும் கூட அதற்கொரு பங்கெடுத்திருப்பதாயும் சொல்லலாம் - அதுவே உங்களின் அந்நாட்களது ஒட்டுமொத்த பாசிட்டிவ் உற்சாகங்கள் ! சமூக வலைத்தளங்களோ ; தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்த இத்தனை மார்க்கங்களோ இல்லா அந்நாட்களில், 15 பைசாப் பழுப்புப் போஸ்ட் கார்ட்களும், எதேச்சையாய் நேரில் வந்து சந்திக்கும் தருணங்களில் சாத்தியமாகிடும் வாஞ்சையானதொரு கைகுலுக்கலுமே உங்கள் எண்ணங்களை எங்களுக்குச் சொல்லும் வழிமுறைகளாக இருந்து வந்தன ! நம் அகவைகளும் குறைவெனும் பொழுது, அந்நாட்களில் நிறைகள் மாத்திரமே உங்கள் கண்களில் பட்டன எனும்பொழுது - எனது கால்களின் வேகங்களும் கூடுதலாய் இருந்தது ! Oh yes - அதற்கொரு மறுபக்கமும் இருக்கவே செய்தது ; தாமதப் பேய்களை சுலபமாய் சவாரி செய்ய நான் அனுமதித்த வகைகளில் ! ஆனால் அந்நாட்களது overriding உற்சாகமானது என் ஓட்டத்துக்குப் பெட்ரோல் போட்டது மறுக்க இயலா நிஜம் என்பது இப்போது புரிகிறது !
இன்றைய நாட்களோ முற்றிலும் வேறல்லவா ? கருத்து சுதந்திரம் ; கலாய்க்கும் சுதந்திரம் ; முச்சந்தியில் வைத்து ஜலக்கிரீடை செய்து விடும் சுதந்திரமென நிறையவே இருக்கும் பொழுது - 30 + ஆண்டுகளுக்கு முன்பான 'தட தட விஜயன்' இன்றைக்கும் அதே பாணியைக் கடைபிடித்தால் 'தடுக்கி விழும் விஜயனாக' மாறிடும் வாய்ப்புகள் உண்டு தானே சார் ? Of course இன்றைக்கும் எனது gut feel சொல்வதை நான் ஒருபோதும் உதாசீனப்படுத்துவதில்லை ; but கொஞ்சமாய் நிதானத்தையும் அதனோடு கலந்திட முயற்சிக்கிறேன் ! அவ்வளவே !
விமர்சனங்களுக்குப் பயந்து என் பாணிகளை மாற்றிக் கொள்வதில்லை மாறாய் ஆண்டின் பட்ஜெட்டை மட்டுமே கருத்தில் கொள்கிறேன் இப்போதெல்லாம் !
முன்னர் ஒரு நாளிலேயே அனைத்து இதழ்களையும் படித்து விடுவேன் . இப்போது 4 நாட்கள் செல்கின்றது . நான் மருத்துவமனையில் இருக்கும்போது, நிறைய இதழ்களினை மறுவாசிப்புக்கு உட்படுத்தினேன் . ஆனால் எல்லா இதழ்களையும் எவ்வளவு வேலை இருந்தாலும் தவறாது வாசித்து விடுவேன் . சிறு வயதில் இருந்தே காமிக்ஸ் எனது சுவாசம் அல்லவா ? மே மாத இதழ்களுக்காக ஆவலுடன் வெயிட்டிங் . இம் மாதம் தல இல்லாது விட்டாலும் லார்கோ வின்ச் , ஒரு முடியா இரவு என்பன சரிக்கட்டி விடும் என்ற நம்பிக்கை . பார்ப்போம் . நடுநடுவே பிரிட்டிஷ் கதைகளைக் கண்ணில் காட்டல் ஓகேதான் சார் . லார்கோ , செல்டன் தொடர்கள் முடிய இருப்பதினால் , அவற்றின் இடத்தினில் புது நாயக்கர்களினை களம் இறக்கலாம் சார் .
ReplyDelete///நான் மருத்துவமனையில் இருக்கும்போது, நிறைய இதழ்களினை மறுவாசிப்புக்கு உட்படுத்தினேன் ///
Deleteநீநீநீண்டதொரு மருத்துவமனை வாசத்திற்குப் பிறகு நீங்கள் கண்டிருப்பது ஒரு மறுபிறப்புக்கு ஒப்பானது என்பது என்னுடைய யூகம், பிரபானந்த் சார்! நம் காமிக்ஸின் மறுபிறப்புப் போலவே உங்களுடைய இம்மறுபிறப்பும் கலர்ஃபுல்லாய் அமைந்திட என் வாழ்த்துகள்!
////லார்கோ , செல்டன் தொடர்கள் முடிய இருப்பதினால் , அவற்றின் இடத்தினில் புது நாயக்கர்களினை களம் இறக்கலாம் சார் .///
+11111
//நீநீநீண்டதொரு மருத்துவமனை வாசத்திற்குப் பிறகு நீங்கள் கண்டிருப்பது ஒரு மறுபிறப்புக்கு ஒப்பானது//
Deleteஉண்மை ஈரோடு விஜய் சார். நான் மீண்டு வந்ததுக்கு எமது காமிக்ஸ் பெரிதும் உதவின என்பது மறுக்க முடியாத உண்மை . உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள் சார் . இன்னும் முழுமையாக நான் குணமடையா விட்டாலும், 95% பழையபடி திரும்பி விட்டேன் . இப்போதும் எமது காமிக்ஸ் எனக்கு பழையபடி திரும்ப பெரிதும் உதவி செய்கின்றன .
அந்த 5% சதவிகிதமும் சீக்கிரமே குணமாக நான் ஆண்டவனை வேண்டுகிறேன்
DeleteThiruchelvam Prapananth : சார்....தலைவரின் வரிகளை இரவல் வாங்கி கொள்ளத் தோன்றுகிறது இங்கே : நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பார் ; ஆனால் கைவிட மாட்டார் !! சீக்கிரமே 100 % நலம் காண்பீர்கள் !!
Deleteபி.கு. வரிகள் நம் 'தலீவரின்' உபயமல்ல !!
ஆதலால் உங்களின் காமிக்ஸ் காதலை கொஞ்சம் கூட குறைக்காமல் எங்களை போன்ற வாசகர்களை மனதில் கொண்டு கால் கட்டை விரலை வாயில் வைத்து கொண்டே இருங்கள்.வாழும் காலம் மிக சிறியது அதற்குள் எவ்வளவு காமிக்ஸ் படிக்க முடியுமோ!!!!?????
ReplyDeleteஏஜெண்ட்கள் வாயிலாக சென்றால் இந்த காமிக்ஸ் பயணம் தொடாரது என்றதால் நேரடி சந்தா க்கு வந்த நீங்கள் மறுபடியும் ஏஜெண்ட்கள் சொன்னார்கள் புடலங்காய் சொன்னார்கள் என்று 4 புத்தகத்திற்காக எங்கள் தல புக்கை வெட்டியது மனதிற்கு மிகவும் கஷ்டமாகி விட்டது. 4 புத்தகம் தான் வேண்டும் என்றால் உடலில் எதை வேண்டுமானாலும் வெட்டிக் கொள்ளுங்கள். ஆனால் தலையை மட்டும் வெட்ட வேண்டாம்.தல இல்லையேல் அது வெறும் முட்டமே.(இங்கு ஒரு சின்ன விசயத்தை தெரியப் படுத்துகிறேன்.சவூதியில் இருக்கும் எனக்கு புத்தகம் கிடைப்பதில்லை.காரணம் அட்டையில் துப்பாக்கி,கத்தி,ஆயுதம் உடன் வந்தால் not allowed.என்ன ஒரு சவூதி காரர்கள் மூளை.அதற்காக ஆயுதம் இல்லாமல் போஸ் கொடுப்பாரா நம்ம தல?ஆதலால் நண்பர்கள் யாராவது வருகிறார்கள் என்றால் அவர்கள மூலமாக டெக்ஸ் புத்தகத்தை வரவழைத்து படிப்பது வழக்கம்.கடந்த ஒரு வருடமாக அப்படி யாரும் வராத சூழ்நிலையிலும் டெக்ஸ் கதையை ஒரு மாதம் கூட விடமால் படித்து வந்தேன்.ஒவ்வொரு மாதமும் டெக்ஸின் ஒவ்வொரு பக்கத்தையும் போட்டோ பிடித்து whatsupல் அனுப்பி வைப்பால் என் மனைவி .முழு திருப்தி கிடைக்காது என்ற போதிலும் மனதிற்கு டெக்ஸ் கதையை படித்த சந்தோஷம் கிடைத்தது.அடுத்த மாதம் கவரிமான்களின் கதை படிக்க போகிறேன் என்று 1 மாதமாக காத்திருந்த எனக்கு பேரிடியாக வந்தது.தலை இல்லா இந்த மாதம்...புத்தகம் வருவதாக இருந்தால் மட்டும் விளம்பரம் செய்யவும்.humble request நன்றி. ஜெய்ஹிந்த்....
////ஒவ்வொரு மாதமும் டெக்ஸின் ஒவ்வொரு பக்கத்தையும் போட்டோ பிடித்து whatsupல் அனுப்பி வைப்பால் என் மனைவி .முழு திருப்தி கிடைக்காது என்ற போதிலும் மனதிற்கு டெக்ஸ் கதையை படித்த சந்தோஷம் கிடைத்தது.////
Deleteமனிதர்களுக்கு ஏற்படும் விதம்விதமான பிரச்சினைகளும், அவர்கள் அதைச் சமாளிக்கும் விதங்களும்தான் எத்தனை மாறுபட்டவை!!!!
நண்பரின் பின்னூட்டத்தைப் படிக்கும்போதே கொஞ்சம் பாவமாகவும், கொஞ்சம் பிரம்மிப்பாகவும் இருக்கிறது!
க்ரேட்!
நன்றி நண்பரே.புத்தகம் படிக்க முடியாமல் போகிறதே என்ற வருத்தம் சம்பளம் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தையும் மிஞ்சுகிறது என்றால் பார்த்து கொள்ளுங்களேன் என் நிலையை.என்ன செய்வது காலத்தின் கொடுமை
Delete//நண்பரின் பின்னூட்டத்தைப் படிக்கும்போதே கொஞ்சம் பாவமாகவும், கொஞ்சம் பிரம்மிப்பாகவும் இருக்கிறது!//
Delete+1
பொறுமையாய் whatsapp -ல் டெக்ஸை படிக்க முற்படுவது ஒரு பக்கமெனில், அதனை இங்கிருந்தபடிக்குப் பொறுமையாய் போட்டோ எடுத்து அனுப்பும் துணைவியாரின் அன்பை என்னவென்பது ?!! Awesome !!
DeleteFirst thing i do after receiving courier is open the box and take a look at all the books then smell the fresh smell of ink then put it back inside the box, i will read reprint first and tex at last before every new month as time permits.
ReplyDeleteMahesh : அடடே....மறுபதிப்புக்கு முதல் மரியாதையா ?
Delete#மாதம்தோறும் 4 இதழ்கள் எனும் பொழுது - இவற்றைப் படித்து முடிக்க சராசரியாய் உங்களுக்கு அவசியமாவது எத்தனை நாட்கள் ? #####
ReplyDeleteஎனக்கு அதிக பட்சம் ஓரு நாள். முதல் நாள் டெக்ஸ்ஸை தவிர மற்ற மூன்று புத்தகங்கள். மறு நாள் டெக்ஸ்.
நான் அதிக நாட்கள் எடுத்து கொண்ட காமிக்ஸ் பெங்களூர் பரனியிடம் வாங்கிய இரத்த படலம். அனைத்து பாகங்களும் படித்து முடிக்க நான்கு நாட்கள் ஆனது. மின்னும் மரணம் படிக்க மூன்று நாட்கள் ஆகியது.
Ganeshkumar Kumar : இரத்தப் படலத்தை நான்கே நாட்களில் போட்டுத் தாக்குவதே ஒரு சாதனை என்பேன் !! அந்த மெகா இதழின் எடிட்டிங்கை நான் நாலு மாசமாய் ஒப்பேற்றினேன் என்பது இன்னமும் நினைவுள்ளது !
Deleteஎல்லா கோட்டை யும் ஆழிச்சிட்டு. முதல்ல இருந்து பரோட்டா சாப்பிட நான் எப்பவுமே ரெடி.
ReplyDeleteGaneshkumar Kumar : துணைக்கு இன்னும் கொஞ்சம் சூரிக்களைச் சேர்த்துக் கொண்டால் நானுமே பரோட்டா சாப்பிட்ட மாதிரி இருக்கும் !!
DeleteHai
ReplyDelete2.5 வயசு twins பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு 10 நாட்களுக்குள் அந்த மாத இதழ்களை படித்து முடித்துவிடுகிறேன். இன்னும் நிறைய கதைகளை எதிர்பார்க்கிறேன். கார்ட்டூன் கதைகள் என்றால் +12345678910...
ReplyDeleteஅதுவும் ரெண்டும் ஒண்ணாம் நம்பர் வாலு பசங்க... பெரு மூச்சு விடும் படங்கள் 10
DeleteSankar C : ஒன்றுக்கு இரண்டாய் மாடஸ்டிக்கள் வீட்டில் - அதிரடிக்குப் பஞ்சமிருக்குமா - என்ன ?
DeleteHai
ReplyDeleteவணக்கம் மீரான்
DeleteAny specifications for photo sir? Group photo permitted?
ReplyDeleteSankar C : உங்கள் பிரியம் சார் - ஆனால் போட்டோக்களோடு உங்கள் பெயர் and முன்பதிவு நம்பர்கள் அவசியம் ! நேற்றைக்கு நிறைய நண்பர்கள் போட்டோக்களை மாத்திரம் இ-மெயில் செய்துள்ளனர் ! அவை யாருடையவை என்பதை மின்னஞ்சல் முகவரிகள் வழியாக பலருக்கும் ஊர்ஜிதம் செய்து கொள்ள இயலவில்லை ! தெளிவான விபரங்கள் அவசியம் ப்ளீஸ் !
Deleteஎந்த ஒரு புத்தகத்தையும் ஆழமான நிதானத்தோடு அணுக சில மணி நேரங்களே போதுமானதாக
ReplyDeleteஉள்ளது.பக்கங்களின் தடிமனை பொருத்து ஓரிரு மணித்துளிகள் கூடுதலாக குறைவாக
அமையும்.மாதத்தில் எத்தனை நேரம் வாசிப்பக்கு பயன்படுகிறுது என்பதை அளக்க முனைந்ததில்லை.பத்தகங்களின் சுவாரஸ்யத்தை பொறுத்தே காலப்பயன்பாடு.சவாலான படைப்புகளுக்கு கூடுதலான நேரம் ஒதுக்குவது இயல்பு.4கு காமிக்ஸ் இதழ்களை புரிந்து கொள்ள ஒரு நாள் போதும்.சில பல வெளியீடுகளை வாங்குவதை தவிர்த்ததுண்டு'சில இதழ்களை மாத இறுதியில் மேய்ந்ததும் உண்டு.வாசிக்கத் தவறியதாக உணர்ந்ததில்லை.
ஆசிரியர் சாரின் பணியாளர்களுக்கும்&
ReplyDeleteஅனைத்து உழைப்பாள நண்பர்களுக்கும் மே தின வாழ்த்துகள்.(நானும் உழைப்பாளிதான்பா)