Powered By Blogger

Tuesday, December 06, 2016

மறைந்திருப்பது ஒரு சகாப்தம் எனும் பொழுது மௌனத்துக்கும், மரியாதைகளுக்கும், அஞ்சலிகளுக்கும், அன்பான நினைவு கூர்தல்களுக்குமான  நேரமன்றோ இது ? 

R.I.P our beloved Amma !



94 comments:

  1. தமிழகத்தின் இரும்பு மனுஷி தன்னிகரற்ற தலைவி அம்மா ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம் (-:(-:(-:

    ReplyDelete
  2. மிகுந்த துயரமான நாள் இது!அவரது ஆன்மா சாந்தியடைவதாக :(((

    ReplyDelete
  3. _ஒரு இரும்புக்கோட்டை தகர்ந்திருக்கிறது்
    அனைத்து மகளிர்க்கும் பெருமதிப்புக்குரிய இந்திராகாந்தி அம்மையாருக்கு அடுத்த படியாக ஒரு மாபெரும் உந்துசக்தியாகவும் ஆணுக்கு எந்த வகையிலும் குறைந்தது இல்லை எங்கள் பெண் இனம் என்று தன் செயல்பாடுகளின் மூலம் ஒவ்வொரு நொடிகளும் வெளிப்படுத்தியவர் இன்று ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். அவர் மீண்டு(ம்) வருவார் என்ற பலகோடி மக்களின் நம்பிக்கையை பொய்யாக்கி இன்று மீளாதுயிலில் ஆழ்ந்துவிட்டார். ஆனால் அவர் விதைத்த தன்னம்பிக்கை, விடாமுயற்சி,தைரியம் இவையெல்லாம் தமிழக வரலாற்றில் கல்வெட்டாய் பதிந்து என்றைக்கும் தலைநிமிர்ந்து நிற்கும். அவரின் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  4. அம்மா.
    சொல்லவோனா துயரத்தில் மனம் கனக்கிறது. தங்கள் பிரிவு தங்களின் இழப்பு எங்கள் மனத்தைப் ரணமாக்கி விட்டது.

    We felt now how deep you living in our heart. They way you lead the massive party they way you stood against the anti social elements and piercing politicians , I have no words to describe. When we found no one can replace the vacuum you created, we realised what cult figure , what a legend, larger than life personality you are.

    அம்மா! தங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

    Amma. RIP.

    ReplyDelete
  5. கண்ணீர்...இதயம் அழுகிறது...

    ReplyDelete
  6. தமிழ்நாட்டின் அசைக்க முடியாத இரும்புத் தலைவி இனி என்றும் நம்முடன் இருக்கப்போவதில்லை என்பதை எதிரணியினரும் கனத்த இதயத்தோடே உணர்ந்திட்டதே முதல்வரின் சகாப்தம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது... தமிழகத்தின் முதல்வரின் பிரிவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

    ReplyDelete
  7. மரணத்துடனும் அறுபது நாட்களுக்கு மேல் போராடினார் ...rip

    ReplyDelete
  8. தமிழ்நாட்டின்
    தைரிய லட்சுமி
    தங்கத்தாரகை
    இரும்பு மனுஷி
    நம்முடன் இல்லை
    எதற்கும் அஞ்சாமல் போராடியவர் எமனுடன் சமரசம் செய்து கொண்டு நம்மிடமிருந்து விடை
    பெற்றுக் கொண்டார்கள்

    ReplyDelete
  9. இன்னொருவரை, ஈடு என்று சுட்டிக்காட்ட ஆளில்லா இழப்பு .. கலைத்துறையில் கனியவைத்த காவியத்தலைவி..இரும்பு இதயத்தோடு எதிர்ப்புகளை எதிர் கொண்ட புரட்சித்தலைவி மீளாத நித்திரைக்கு உள்ளானார் ..

    ReplyDelete
  10. :( அம்மா இல்லாத தமிழகம் அனாதையானது.

    ReplyDelete
  11. பல்வேறுபட்ட விமர்சனங்களைக் கடந்தும் இரும்புப்பெண்மணியாய் நிமிர்ந்து நின்றவர். இப்படி சட்டென்று மறைந்திடுவாரென்று நிச்சயம் எதிர்பார்த்திடவில்லை. அவரது ஆட்சியில் - இலங்கைத் தமிழர்களுக்கும் நியாயமான தீர்வொன்று முன்வைக்கப்படுவதற்கான அழுத்தம் இலங்கை அரசுக்கு பிரயோகிக்கப்பட்டுவந்தது பெரு நம்பிக்கையை எம்மவர் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது. இனி நாம் யாரிடம் போவோம்? கண்ணீர் திரையிட தலை வணங்கி அஞ்சலிகளைச் செலுத்திடுகிறோம்....

    ReplyDelete
  12. ஜெ.
    தமிழ்நாட்டின் தவிர்க்க இயலாத ஆளுமை.

    ஆணாதிக்க சமூகத்தில் பெண்ணின் வலிமைக்கும் தன்னம்பிக்கைக்கும் ஓர் அடையாளம்

    ReplyDelete
  13. மனதில் ஒரு வெறுமை,அன்று என் அன்னையை இழந்த பொழுது, இன்று தமிழக அன்னையை இழந்த பொழுது #RIPAmma

    ReplyDelete
  14. சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை,
    மனம் கனக்கிறது,கண்ணீ்ர் பெருக்கிறது,அன்னையின் ஆத்மா சாந்தியடைய எல்லாவல்ல இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.

    ReplyDelete
  15. இறுதி பயணம் சொல்லும் செய்தி...இங்கே'கிளிக்'

    ReplyDelete
  16. இன்று ஒரு கண்ணீர் பதிவு வரும் என்று நினைத்து பார்க்க வில்லை. இரண்டாவது தாயும் என்னை விட்டு சென்று விட்டார். வேறு என்ன சொல்ல..😭😭😭😭😭😭😭😭

    ReplyDelete
  17. அந்த கம்பிர தோற்றத்தை இனி யாரிடம் காண முடியும்...

    ReplyDelete
  18. அரசியலுக்கு அப்பாற்பட்டு , இப்படி ஒரு ஆளுமையை இவ்வளவு சீக்கிரம் இழந்துவிட்டோமே என்று நினைக்கையில் இதயம் கனக்கிறது.

    ReplyDelete
  19. 39வது,ஆழ்ந்த இரங்கல் அஞ்சலிகள்.

    ReplyDelete
  20. ஆழ்ந்த வருத்தங்கள்.

    ReplyDelete
  21. அம்மா.
    அம்மா..
    நீங்கள் எங்கே...
    ஆழ்ந்த வருத்தத்துடன்....

    ReplyDelete
  22. விடை கொடு வெண்ணிலவே. மீண்டும் வருவாயா? வாழ்வு தருவாயா? மறக்க முடியுமா உன் தேஜஸை. கடமையும் கண்டிப்பும் உன்னை ஒரு படி மேலேயே அன்றோ நிறுத்தி ஆராதிக்க வைத்தது. சுவர்க்கத்தில் சமாதானமாக ஓய்வெடு. R.i.p.

    ReplyDelete
  23. Varuthamum kannerum ellai meruhindana AMMA Vai ninaittu

    ReplyDelete
  24. REST IN PEACE

    உறக்கமில்லாமல் உழைத்தது போதுமென்று
    மீண்டுவரமுடியாத உறக்கத்தில்

    அந்த இரும்பு மனுசி

    :( :( :(

    ReplyDelete
  25. அம்மாவின் இழப்பு மிகுந்த துயரத்தை தந்துள்ளது
    Miss U Amma, Love U

    ReplyDelete
  26. நேற்றைய அதிர்ச்சி அம்மாவின் மறைவு.
    இன்றைய அதிர்ச்சி வழக்கறிஞர், நாடக இயக்குநர், நடிகர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர் என்ற பன்முகத்திறமை கொண்ட திரு.சோ அவர்கள்.
    அரசியலில் யாருக்கும் பயப்படாமல் தன்னுடைய கருத்தினை யார் மனதும் நோகாமல் சொல்வதில் தனக்கு நிகர் யாருமில்லை என இறுதிவரை நிரூபித்தவர். இன்று நம்மைவிட்டு மறைந்து விட்டார். அவருடைய மரணத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  27. ஐயா சோ ராமசாமி அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள் . அடுத்தடுத்து நாம் மதிக்கும் தலைவர்களின் மறைவு என்பது தாங்க முடியாத பேரிழப்பு .

    ReplyDelete
  28. ஆசிரியர் சாருக்கு வணக்கம்!! உங்களுடைய 'திடீர்' அறிவிப்பை கண்டு கலங்கி போயிருந்தேன். லக்கி CLASSICS புத்தக கடைக்கு வராதே என்ற கவலையில் இருந்தேன். ஆனால் இன்று அது சேலம் தேசன் புத்தக நிலையத்தில் கிடைத்தது. அனுப்பி வைத்தமைக்கு மிக்க நன்றிகள்!! இம்மாத புத்தகங்கள் அனைத்தும் வாங்கிவிட்டேன். படித்துவிட்டு விமர்சனம் செய்கிறேன். 2017-க்கான சந்தாவை இம்மாத இறுதி வாரத்தில் கட்ட இருக்கிறேன். நன்றிகள் பல!!

    ReplyDelete
  29. துக்கம் அனுஷ்டித்தது போதும் வாத்தியார் சார்.. மூனு நாளா மனசு பாறை மாதிரி கனத்துக் கிடக்குது... என்னோட முகம் நரசிம்மராவோடது மாதிரி மாறிட்டு வருது... மைல்டா ஸ்மைல் பண்ண மனசு ஏங்குது... நாலுவரில ஒரு பதிவப் போட்டீங்கன்னா பென்சில்ல கோடு போட்டாப்ல லைட்டா சிரிச்சு வப்போம்...!

    சென்னை புத்தகத் திருவிழாவுக்கு சேந்தம்பட்டி நண்பர்கள் ஆயத்தமாகிட்டிருக்காங்க. எங்கே? எந்நேரம்னு? எப்டி? -னு உங்க ஐடியா( அப்படீன்னு ஒன்னு இருந்துச்சுன்னா)வை எடுத்து விட்டீங்கன்னா எல்லா நண்பர்களுக்குமே பயண ஏற்பாடு பண்ண வசதியா இருக்கும்?

    ன்னான்றீங்க?

    ReplyDelete
    Replies
    1. திரு.ஈ.வி. சார்.
      உண்மையில் மனது பாறையாகத்தான் மாறிவிட்டது. ஆசிரியரின் மௌனம் கலைந்தால் எல்லாம் ஒரு நொடியில் மாறிவிடும். அதுவரை "நமக்கு நாமே" கிச்சு கிச்சு மூட்டிக்கொள்ள வேண்டியதுதான்!!!
      ஒரு பழைய ஜோக்.....!
      ஆபரேஷன் தியேட்டருக்குள்....
      நர்ஸ் நெ.1 : "ஏன்டீ விமலா. இந்த பேஷன்டுக்கு வயிற்றில்தானே கோளாறு. அதுக்கு ஏன் நம்ம டாக்டர் இந்த பேஷன்டை கவிழ்த்து போட்டு கட்டிலடியில் படுத்துக் கொண்டு ஆபரேஷன் செய்கிறார்..!!??"
      நர்ஸ் நெ2: " ஸ்...ஸ்..சனியனே! சத்தம் போட்டு பேசாதே! நம்ம டாக்டர் இதுக்கு முன்பு கார் மெக்கானிக்காக இருந்தவராம்!!"
      சிரிப்பு வராவிட்டால் அட்லீஸ்ட் கஷ்டப்பட்டாவது சிரிக்கலாமே!
      இன்னொரு சர்தார் ஜோக்.... இதுவும் பழைய ஜோக்தான். "சர்தார் ஒருவர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். தூக்கம் அதிகமாக அவரை இம்சை படுத்திக் கொண்டிருந்தது.அவர் இறங்க வேண்டிய இடத்திற்கு இன்னும் ஒரு மணிநேரத்திற்கு மேலாகும் என்பதால் அந்த பெட்டியில் சற்று அப்பாவிபோல் காணப்பட்ட
      கொட்டகொட்ட விழித்திருந்த மனிதனின் பக்கத்தில் சென்று அமர்ந்தார்.
      (இவர்கள் இருவரை தவிர அங்கு யாருமில்லை) சர்தார் மெல்ல அந்த மனிதனிடம் " தம்பி உனக்கு ஐம்பது ரூபாய் தருகிறேன். (அவர்இறங்க வேண்டிய இடத்தை குறிப்பிட்டு) நான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் எழுப்பிவிடுகிறாயா?" என்றார்.
      அந்த மனிதனும் பணத்தை பெற்றுக்கொண்டு "ஆகட்டும் பெரியவரே" எனக்கூற சர்தாரும் நன்கு அசந்து தூங்கலானார். அந்த மனிதன் ஒரு முடி திருத்துபவன். இறங்க வேண்டிய இடத்தை சொல்ல சர்தாரிடம் ஐம்பது ரூபாய் பெற்றது உறுத்த பதிலுக்கு கைமாறு ஏதேனும் செய்ய சர்தாரின் தூக்கம் கெடாமல் மெல்ல அவருடைய மீசை தாடியை வழித்துவிட்டான்.
      பின்பு சர்தார் இறங்கவேண்டிய இடம் வந்ததும் அவரை எழுப்பிவிட அவரும் நடந்தது எதுவும் தெரியாமல் வீட்டிற்குபோய் கண்ணாடியை பார்த்து அதிர்ச்சியடைந்து அவர் மனைவியிடம் கூறினார் "ரயிலில் ஒரு மடையன் ஐம்பது ரூபாய் வாங்கிக்கொண்டு எனக்கு பதிலாக வேறு எவனையோ எழுப்பிவிட்டு விட்டானென்று!!!"

      Delete
    2. சர்தார்ஜி ஜோக்கை ரொம்பவே ரசித்தேன் திரு.ATR சார்! நன்றிகள் பல! ஆனாலும் அந்த முடிதிருத்துபவன் சார்தார்ஜிக்கு பதிலாக வேறொருவனை எழுப்பியிருக்கக் கூடாதுதான்!

      முதல் ஜோக்கைப் படிக்கும்போது ஒருநிமிடம் அந்த டாக்டரைப்பத்தி என்னென்னவோ நினைச்சுட்டேன்! :P

      Delete
    3. அ..அப்புறம்... நீங்க ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டிருக்கறது அ..அப்பல்லோ ஹாஸ்பிடலில் இல்லைதானே? :o

      Delete
    4. தோழரே

      ஏன் இந்த விபரீத கற்பனையெல்லாம்!

      Delete
    5. தோழர் ஈ.வி.
      நான் இப்பெல்லாம் சாப்பாட்டுடன் அப்பளம் கூட சேரத்துக் கொள்வதில்லை என்றால் பாருங்களேன். அப்பளம் என்றவுடன் அப்பல்லோ ஞாபகம் வருகிறது. "செயலாளரே! நல்லா கெளப்புறாங்க பீதிய....."

      Delete
  30. RIP - J the CM
    RIP - Cho the journalist
    RIP - கிடைமட்டமாக காலில் விழும் கலாச்சாரம்..

    ReplyDelete
  31. Next post with New Caption competition please !

    ReplyDelete
  32. ஓரெழுத்து பிரமுகர்கள் ஜெ..சோ மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

    ReplyDelete
  33. இறந்தவர்கள் கடவுளை சென்றடைந்து விட்டனர்
    இனி இருப்பவர்கள் நல்லதுக்கு வாழ்த்துக்கள் சொல்வோமா

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் இனிய தோழி கடல் யாழ் என்கிற ரம்யா விற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்வில் எல்லா நாட்களுமே அவருக்கு சந்தோஷமான நாட்களாக வாழ்த்துகிறேன்
    எப்போதும் அவர் நம்முடன் ஒற்றுமையாக இருக்க கடவுளை வேண்டுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. கடல்யாழ் ரம்யாவுக்கு ஈனாவினாவின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! :)

      Delete
    2. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கடல் சகோ...!!!

      Delete
    3. @தோழர் சத்யா
      என்னுடைய மிகுந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்
      என் பிறந்த நாளை நினைவில் வைத்து இங்கு ப்ளாக்கில் வாழ்த்துக்கள் கூறி மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டிர் :)

      Delete
    4. @சகோதரர் ஈனா வினா
      நன்றி நன்றி மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் :)

      Delete
    5. @சகோதரர் சேலம் Tex விஜயராகவன்
      சகோ கடல்யாழிலின் நன்றிகள் பல
      மகிழ்ச்சி :)

      Delete
  34. Replies
    1. நன்றி KiD ஆர்டின் KannaN சகோதரரே :)

      Delete
  35. கடல்யாழ் அவர்களுக்கு
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
    இன்றைய நாளின் மகிழ்ச்சி தொடரட்டும்
    என்றென்றும்.

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய இனிமையான வாழ்த்துக்களுக்கு நன்றி AT Rajan சார் :)

      Delete
  36. கடல்யாழ் அவர்களுக்கு
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
    இன்றைய நாளின் மகிழ்ச்சி தொடரட்டும்
    என்றென்றும்.

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி AT Rajan சார் :)

      Delete
  37. சகோதரி கடல்யாழ்அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..KannaNவை மிகவும் ரசித்தேன் சகோதரி

    ReplyDelete
    Replies
    1. @rajaram.k Kathalingam
      வாழ்த்துகளுக்கு நன்றிகள் சகோதரரே :)

      Delete
  38. Wishing you many more happy returns of the day Sis @kadalyazh

    ReplyDelete
  39. How to transfer Subscription using WesternUnion? It will be nice if someone gives me details...

    ReplyDelete
  40. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரியே....

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றிகள் தலைவரே :)

      Delete
  41. இனி எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதாய் இல்லை.
    ஈரோடு நிகழ்ச்சி ஒன்றே போதும். விழாவை ஒருங்கிணைத்தவர், ஒவ்வொருவரிடம் நுழைவு கட்டணமாக ₹ 100 (அ) ₹200 பெற்றுக்கொண்டு நல்உணவை கொடுத்திருக்கலாம். நிகழ்ச்சி முடிந்ததும் சாக்கில் இருந்த கோலிக்குண்டு , சாக்கை கவுத்தியதும் அனைத்து திசைகளிலும் சிதறிப்போனார்கள்.
    நமக்கென்ன ,சந்தாவை கட்டி விட்டு புத்தகங்கள் வீடு வந்ததும் படித்துவிட்டு அமைதியாய் இருக்க வேண்டியது தான்.
    வெகு தொலைவில் வந்ததற்கு நல்ல கவனிப்பு.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. @ Shinesmile Foundation

      :(

      சென்ற பதிவில் டெக்ஸ் விஜயராகவனும், எடிட்டரும் உங்களுடைய இதே மனக்குறைக்கு/வயிற்றுக்குறைக்கு பதிலளித்திருப்பதை நீங்கள் பார்க்கவில்லை போலிருக்கிறதே சார்?! எனில், சிரமம்பாராது அப்பதில்களை ஒருமுறை படியுங்களேன் ப்ளீஸ்?

      //நமக்கென்ன ,சந்தாவை கட்டி விட்டு புத்தகங்கள் வீடு வந்ததும் படித்துவிட்டு அமைதியாய் இருக்க வேண்டியது தான்.//

      நல்ல முடிவு தான்! குறைந்தபட்சம் உங்களைப் பொருத்தமட்டிலுமாவது!

      Delete
  42. Shinesmile Foundation
    உங்கள் கருத்தில் தலையிடுவதற்கு மன்னிக்கவும்.
    சேலம் டெக்ஸ் அவர்கள் அன்றைய சூழலை அழகாய் எடுத்துரைத்தாரே.
    நமது ஆசிரியரும் நீங்கள் குறிப்பிடும் குறைகளை வரும் காலங்களில் இல்லாமல் பார்த்துக் கொள்வதாக கூறியுள்ளாரே. தாங்கள் அதனை பார்க்கவில்லை என நினைக்கிறேன்.
    இது நம்ம வீட்டு திருவிழா சார்.எல்லோருமே பங்கெடுத்து செய்யவேண்டும்.தவறாக எண்ணவேண்டாம் சார்.
    நம்ம வீட்டு விசேஷத்தில் நாமே குறை காணலாமா?
    நீண்ட தூர பயணம், பசியினால் வந்த களைப்பு இவையெல்லாம் உங்களை இவ்வாறு கூறவைக்கிறது. இன்று தமது சொந்த பணத்தை எடுக்க வங்கிகள் மற்றும் ATM வாயிலில் பசியுடன் வெய்யிலில் வாடும் மக்களை பாருங்கள். உங்கள் வருத்தம் காணாமல் போய்விடும்.
    மனதில் உள்ள குறைகளை கொட்டிவிட்டீர்கள்.அதற்கான விளக்கத்தையும் பெற்றுவிட்டீர்கள். அனைத்தையும் மறந்து வழக்கம் போல் பதிவிடுங்கள்.
    Please.....
    வரவிருக்கும் புதிய ஆண்டிற்கு வரவேற்பு கொடுக்கும் வண்ணம் கசப்பான நினைவுகளை புறந்தள்ளுங்கள்.
    என்னுடைய கருத்தில் தவறேதுமிருப்பின் மீண்டும் ஒருமுறை மன்னிப்பை வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. //இது நம்ம வீட்டு திருவிழா சார்.எல்லோருமே பங்கெடுத்து செய்யவேண்டும். //

      //நம்ம வீட்டு விசேஷத்தில் நாமே குறை காணலாமா? //

      +1000

      Delete
  43. ஆசிரியரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே...!!!
    (நண்பர் விஜய் சார்பில்)

    ReplyDelete
  44. AT Rajan Sir,
    தாங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை. நான் மிகுந்த மதிப்பு வைத்திருக்கும் நண்பர்களில் நீங்கள் மிகவும் அற்புதமானவர்.
    எனது எண்ணங்களை ,உணர்வுகளை பகுத்து பார்த்து அதை விம்ர்சிப்பதற்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு. இப்படி எழுதி என்னை சங்கடபடுத்தாதீர்கன்.நான் என்றுமே வெளிப்படையாய் செயல்படுத்துபவன்.எனக்கு உண்டான உணர்வுகளை என்றும் வெளிப்படையாய் கூறுபவன். இதை புரிந்து கொள்பவர் 4 (அ) 5 பேர் இருந்தால் போதுமானது.
    ஈடோடு விஜய் அவரது கருத்தை சொல்லி இருக்கிறார்.
    அது அவரது உரிமை.
    செயலாளரோ,தலைவரோ அதை பற்றி எனக்கென்ன.
    நான் முத்து ,லயன் துவக்க நாள் முதற்கொண்டே அதன் வாசகன் நா ன். அதுவே எனக்கு போதும்.

    ReplyDelete