நண்பர்களே,
வணக்கம். ஆண்டுகள் ஐந்து நிறைவடைகிறது இந்த வலைப்பதிவுப் பக்கத்துக்கு ! தட்டுத் தடுமாறி நாலு வரிகளைப் பதிவிடவே ஓராயிரம் தடவை யோசித்த தருணங்களுக்கு இத்தனை வயதாகி விட்டதா ? என்று ஒரு பக்கம் மலைப்பாக இருந்தாலும் - என்னமோ இதை யுகங்களாய் செய்து வருவது போலும் உள்ளுக்குள் தோன்றாதில்லை ! “இரத்தப் படலம் – The Collector’s Edition” வெளியான பின்பாக மொத்தமாய் மல்லாந்து படுத்தவன் - ஏதோவொரு அசட்டுத் தைரியத்தில் 2011-ன் இறுதியில் ஒரு மீள்வருகையைப் பற்றி யோசித்த போது ரொம்பவே கூச்சமாக இருந்தது ! எனது credibility – நம்பகத்தன்மை கால்மிதிக்கும் தணிவானதொரு நிலையில் இருந்த சமயமல்லவா அது ? "திரும்பவும் வந்துட்டேன்... கலர் கலரா வந்துட்டேன் ! "என்று நான் சூடத்தை அணைத்துச் சத்தியம் செய்திருந்தாலும் அரையணாப் பிரயோஜனம் இருக்க வாய்ப்பில்லை என்ற நினைப்பில் பம்மிக் கிடந்தவனை இந்த வலையுலகிற்குள் பிடித்துத் தள்ளி விட்டது ஜுனியர் தான் ! பதிவைத் தொடர்ந்து புதுப்பொலிவுடனான இதழ்களும் ; இதழ்களைத் தொடர்ந்து புதுப் பொலிவுடனான பதிவுப் பக்கங்களும் தொடர்ந்தது வரலாறு (!!!) இடையிடையே “மானே... தேனே... பொன்மானே...” என்று போட்டுக் கொள்ள சாத்து வாங்கும் படலங்களும் விதவிதமாய் அமைந்தாலும் இந்த ஒட்டுமொத்த அனுபவம் ஒரு ஆயுட்கால நினைவென்று சொல்வேன் ! இத்தனை தொலைவு பயணிக்க அனுமதித்த உங்கள் பெருந்தன்மைகளுக்கும் ; நமக்கு எரிபொருளாய்த் தொடர்ந்திடும் அந்த காமிக்ஸ் காதலுக்கும் இந்தத் தருணத்தில் ஒரு மெகா சலாம் !! இரண்டுமின்றிப் போயின் என்றைக்கோ கடையை மூடி விட்டு, சனியிரவையும், ஞாயிறு பகல்களையும் குறட்டை தேசத்திற்கு நெடுங்குத்தகைக்கு விட்டிருப்பேன் !
மொக்கைகளோ, நமது இதழ்கள் சார்ந்த பதிவுகளோ, இதுவரையில் இங்கே நான் எழுதியுள்ள எவையுமே பெரியதொரு சிந்தனையின் பிள்ளைகளல்ல ! ஏதேனும் சிக்கல்கள் / விளக்கங்கள் தரும் அவசியங்கள் எழுந்திருக்கும் தருணங்கள் தவிர்த்து பாக்கி நாட்களில் எதையும் தலைக்குள் போட்டு உருட்டிக் கொள்வதில்லை -சனியிரவு கம்பியூட்டரின் முன்னே ஆஜராகும் வரையிலும் ! அந்தக் கடைசி 7 நாட்களுள் எனது பணி சார்ந்த நினைவுகள் ; காத்திருக்கும் தயாரிப்புகள் என்று ஏதேனும் ஒரு சமாச்சாரம் வாகாக அமைந்து கொள்ளும் என்ற நம்பிக்கை இதுவரையிலுமாவது என் காலை வாரியதில்லை ! So இந்தப் "பதிவுகளின் கதையையே" இன்றைய பதிவாக்கி விட்டாலென்னவென்று இன்றைக்குத் தோன்றிய போது - ‘அப்படியே செய்தால் போச்சு‘ என்று தான் தோன்றியது !
இங்கொரு சின்ன "உஷார் பலகையும்" கூட ! இங்கு நான் பதிவிடக்கூடிய சிந்தனைகளில் சில / பலவற்றை முந்தைய பதிவுகளிலோ ; எனது பதில்களிலோ நான் சொல்லியுள்ள சமாச்சாரங்களே ! So ஒரு மறு ஒலிபரப்புப் போல தோன்றிடும் பட்சத்தில் - இது காலவோட்டத்தின் போக்கில் நமது பார்வைகள் ஓடிடும் திசைகள் பற்றிய ஒரு updated பார்வையாக எடுத்துக் கொள்ளுங்களேன் - ப்ளீஸ் ? அப்புறம் நிறைய விதங்களில் இது ‘ரமணா‘ பாணியிலான பதிவாக இருக்கக் கூடுமென்பதால் - பாதித் தூக்கத்தில், சிரமத்தோடு கண்விழித்து மொபைலை உற்றுப் பார்ப்பவராக நீங்களிருப்பின் - ‘தூங்கி முழித்து விட்டே வாருங்களேன்‘ என்று சொல்வேன் ! நிச்சயமாய் வார்தாப் புயல் பாணியில் பூமியைப் புரட்டிப் போடக் கூடிய சங்கதிகள் இதனிலிருக்க வாய்ப்புகள் சொற்பம்! Here goes :
பதிவுகளின் எண்ணிக்கை நிற்பது 350-க்கு அருகாமையில் என்றாலும் - துவக்கத்து நாட்களின் 4 வரிப் பதிவுகள் ; இடையிடையே போட்ட உபபதிவுகளுமாய் ஒரு 50 இடங்களை ஆக்ரமித்திருக்குமென்று நினைக்கிறேன். So அவை நீங்கலாகப் பார்த்தால் தேறக் கூடியது 290-300 பதிவுகள் - which makes it roughly 60 posts an year ! "வாரமொன்று" என்பதைத் தாண்டியும் நிறையவே எழுதித் தள்ளியிருக்கிறேன் என்பது புரிகிறது ! உசிலம்பட்டியில் ஆரம்பித்து உஸ்பெகிஸ்தான் வரை இதனுள் travel பண்ணியிருப்போம் நாம் ! அவற்றுள் ‘பளிச்‘ என்று நினைவில் நிற்பவை சிலபல பதிவுகளே ! முதலாவதாய் ஞாபகத்தில் உச்சத்தை ஆக்ரமித்து நிற்பது - நமது மறுபதிப்புத் தடத்தை அறிவித்ததொரு ஞாயிறின் பதிவே :
2012-ல் அறிவிப்போடு மாயாவி & கோ. காணாது போய் விட, தொடர்ந்த நாட்களில் நிறையவே சாத்துக்கள் அதன் பொருட்டு வாங்கியது மறக்கவில்லை ! So ஒரு வழியாக 2014-ல் “நயாகராவில் மாயாவி” மார்க்கமாக மீண்டும் மும்மூர்த்திகள் + ஸ்பைடரார் வலம்வரவுள்ளனர் என்று நான் அறிவித்த தினத்தின் பதிவுக்கு 360 பின்னூட்டங்கள் கிட்டியிருந்ததாய் நினைவு ! அந்த நாளில் நிறைய உற்சாகம் உருப்பெறும் என்பதை நான் யூகித்திருந்தேன் தான் - ஆனால் அன்று காணக் கிடைத்தது என் எதிர்பார்ப்புகளை விடப் பன்மடங்கு வீரியமான ஆரவாரத்தை ! So என் மண்டைக்கள் இதுவரையிலான பதிவுகளில் - அசாத்தியமான நம்பர் 1 இடம் அதற்கு என்று சொல்லுவேன் !
இரண்டாம் இடமென்று சொல்லுவதாயின் 2014-ன் ஈரோட்டுப் புத்தகவிழாவின் காலையில் LMS வெளிவரவிருந்த தருணத்தில் வந்த பதிவைச் சொல்வேன் ! முதல் hardcover என்ற விதத்தில் இந்தத் தருணம் நமக்கெல்லாம் ரொம்பவே fresh ஆனதொரு வேளையாக அமைந்தது என்பதோடு ; காத்திருந்த ஈரோட்டு விழாவின் சந்திப்பு சார்ந்த உற்சாகங்களும் அன்றைய பதிவினில் கரைபுரண்டோடியது என்பேன் !
மூன்றாம் இடத்தை என் தலைக்குள் தக்க வைத்திருக்கும் பதிவோ- “தெளியத் தெளிய வைத்துத் தெறிக்க விடுவது எப்படி?” என்ற செயல்முறை விளக்கம் ! Yes – அதீத உற்சாகத்தோடும், பரபரப்போடும் வேகம் பிடித்திருந்த பயணத்துக்கு - “மொத்து வாங்குவதென்றால் என்ன ?” என்பதை முதன்முறையாகச் சுட்டிக் காட்டிய 2012 அக்டோபரின் AFTER ‘தங்கக் கல்லறைப் பதிவு‘ தான் அது ! டெரரான ராப்பர் ; அசாத்தியக் கதைக்களம் ; பிரமாதமான வர்ணத் தயாரிப்பு என்றாலும் - “மொழியாக்கத்தை என்னமாய் மாற்றப் போச்சு ?” என்று விழுந்த தர்ம அடிகள் - ஷெரீப்பிடம் கிட் ஆர்டின் வாங்குவதை விடவும் விசேஷமானவை ! அது வரையிலும் சகல இதழ்களும் பாராட்டு மழையையே வரவழைத்திருக்க - “அட... சமூக வலைத்தளங்களில் வெற்றி காண்பது இவ்ளோ தானா?” என்ற மெலிதான தெனாவட்டை எனக்குள் விதைத்திருந்தன ! So- நாணயத்தின் மறுபக்கத்தைப் பார்க்க முதல் முறையாகச் சாத்தியமான அந்த சப்தநாடிகளை ஒடுங்கச் செய்த நாட்களும் ரொம்பவே memorable என்பேன் - albeit for the wrong reasons!
இந்தாண்டின் ஈரோட்டு வாசகர் சந்திப்பு சார்ந்த பதிவினில் எழுதிட எனக்கு அதிக அவசியங்கள் இருந்திடவில்லையெனினும் - சரமாரியான ஃபோட்டோக்களும், அன்றைய தினத்தில் நாம் ஒட்டுமொத்தமாய் உணர்ந்த நேசமும் அந்தப் பதிவை என் நெஞ்சுக்கு ரொம்பவே நெருக்கமானதாக்கி விட்டிருந்தது ! இன்னமும் அசைபோடும் போது - ‘ஐயையோ... அவரைக் குறிப்பிட மறந்து விட்டோமே ; இவரைப் பற்றி எழுதத் தவறி விட்டோமே !" என்ற பதைபதைப்பு எழத் தவறுவதில்லை ! சுருக்கமாகச் சொன்னால் ஒரு அசாத்திய நாள் பற்றியதொரு நினைவு கூர்தல் அந்தப் பதிவை ரொம்பவே ஸ்பெஷலாக்கித் தந்தது எனக்கு !
‘பௌன்சரின் வருகை‘ பற்றிய அறிவிப்பை 2 ஆண்டுகளுக்கு முந்தையதொரு செப்டம்பரிலோ ; அக்டோபரிலோ வெளியிட்ட வேளையில் இங்கே ரவுண்ட் கட்டிய உத்வேகமும் மறக்க இயலா ரகம் ! சாதகங்கள்- பாதகங்கள் என்று இருவிதக் கருத்துப் பரிமாற்றங்கள் இருந்தாலும், ஒரு out of the ordinary நாயகரின் வருகை ஏற்படுத்தித் தந்திருந்த அதிர்வுகளை அந்தப் பதிவில் துல்லியமாய் ரசிக்க முடிந்தது!
NBS எனும் ஒரு extraordinary அனுபவமும் நமக்கொரு மைல்கல் தருணமாய் அமைந்தது நிஜம் ! வெளியீட்டின் தர மேம்பாட்டில் மட்டுமன்றி ; பதிவின் சுவாரஸ்யம் சார்ந்த விஷயங்களிலும், NBS ஏற்படுத்தித் தந்திருந்த உத்வேகத்தை என்னவென்று விவரிப்பது ? அதிலும் அந்த இதழின் சென்னைப் புத்தக விழாவின் வெளியீட்டு வேளையை இப்போது நினைவு கூர்ந்தாலும் - மின்சார ஓட்டைக்குள் விரல் செருகிடும் மாயாவியின் உணர்வலைகள் என்னையும் தாக்குவது போலுள்ளது ! மூன்றடி நடைபாதையிலும், ஒரு 9’ x 9’ ஸ்டாலினுள்ளும் அந்த மாலை குழுமியிருந்தோர் 180 பேர் !! ஆறு மணி சுமாருக்கு ஆரம்பித்த அதகளம் எட்டு மணி வரைக்கும் நீடித்ததெனும் போது - சுற்றுமுற்றுமிருந்த கடைக்காரர்களின் திகைப்பை இப்போது உருவகப்படுத்திப் பார்க்க முயன்றாலும், கிறுகிறுக்கிறது ! அன்றைய தினம் நம்மைப் பிட்டத்தில் உதைத்து வெளியேற்றாது விட்ட அமைப்பாளர்களுக்கு ஆயுள் முழுக்கவும் நாம் கடமைப்பட்டிருப்போம் ! கட்டுப்பாடிலா, காட்டாற்று வெள்ளமாய் காமிக்ஸ் காதல் பிரவாகமெடுத்த அந்தத் தருணத்தை மீண்டுமொரு முறை கண்ணில் பார்க்கத் தான் முடியுமா ? Phew! மறக்க இயலா தினம்... நினைவை விட்டு அகலாப் பதிவு!
வெளியீட்டு விழாவின் கோலாகல அளவுகோல்களில் NBS-ன் தெருப்பக்கமாய்க் கூட மற்ற ஸ்பெஷல்கள் நெருங்கிட வாய்ப்பில்லை என்றாலும் - தயாரிப்பின் பிரம்மாண்டத்தின் பொருட்டு ஒரு தடாலடி அனுபவமும், அற்புதமான பதிவையும் நல்கியது ”மின்னும் மரணம்” என்பேன் ! படித்த கதை தான் ; பரிச்சயமான நாயகர் தான் - ஆனாலும் முழு வண்ணத்தில் ; ஒரு ராட்சஸத் தொகுப்பாய் இதனை நாம் வெளியிடத் தீர்மானித்து அறிவித்த வேளையின் energy level களும் விண்ணைத் தொட்ட ரகம் ! ஸ்பெஷல் இதழ்கள் ; கையில் சுகமான சுமையாகக் கனக்கும் "குண்டூஸ்" - நமது adrenaline சுரப்பிகளைத் தட்டியெழுப்பி விடுவது அப்பட்டமாய்த் தெரிகிறது ! So “மின்னும் மரணம்” அறிவிப்புப் பதிவும் சரி ; வெளியான பின்னே உங்கள் பாராட்டு மழைகள் பிரவாகமெடுத்த பதிவும் சரி- very very special ones!
சென்றாண்டும், இந்தாண்டும், புது அட்டவணைகள் அறிவிக்கப்பட்ட தினத்தின் பதிவுகள் - நிஜமாகவே எங்களது பெட்ரோல் டாங்குகளை உற்சாகமெனும் எரிபொருளால் நிரப்ப நிரம்பவே உதவியவை ! அந்த விதத்தில் இரு ஆண்டுகளுமே அந்த அறிவிப்பு நாளில் இங்கு கரைபுரண்ட உற்சாகம் - out of the world !
திரும்பிப் பார்க்கையில் இந்த 5 ஆண்டுப் பயணத்தில் எக்கச்சக்கமோ எக்கச்சக்கமான சந்தோஷத் தருணங்கள் நமதாகியுள்ளது புரிகிறது ! Yes of course - பஞ்சாயத்துகளுக்கும், பழுத்த முதுகுகளுக்கும் பஞ்சமே இல்லை தான் என்றாலும் - the positives far outweigh everything else - hands down!
- 2012-ன் முதன் முதல் சந்திப்புகள்- சென்னைப் புத்தக விழாவின் போது & Come back ஸ்பெஷலின் ரிலீஸ்.
- 2012 செப்டம்பரில் பெங்களுர் காமிக்-கான்
- 2013 ஜனவரியில் NBS ரிலீஸ்
- சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷலும், அது உருவாக்கிய அதகள சிரிப்பலைகளும்...!
- 2014 ஆகஸ்டில் LMS
- "மின்னும் மரண" அறிவிப்பு
- 2014 அக்டோபரில் மும்மூர்த்திகளின் மறுவருகை சார்ந்த அறிவிப்பு
- 2015 சென்னைப் புத்தக விழா
- 2015 மின்னும் மரணம் ரிலீஸ்
- 2016 ஈரோட்டு வாசகர் சந்திப்பு
என்று ஏராளமாய் ஜாலியான வேளைகளை நாம் கடந்து வந்துள்ளது புரிகிறது ! எப்போதுமே சுமாரான பழம்நினைவுகள் கூட நிகழ்காலத்தில் ரொம்பவே ஜிலுஜிலுப்பாய்த் தோன்றுவது சகஜம் தானே ? அவ்விதத்தில் பார்க்கையில், maybe 10 / 15 ஆண்டுகள் கழிந்த நிலையில் - கிராபிக் நாவல்களும், sci-fi கதைகளும் படித்துக் கொண்டிருக்கும் சூழலில் - “அந்தக் காலத்திலே மாதிரி வருமா?” என்று ஏக்கப் பெருமூச்சிட இந்தத் தருணங்களுள் ஏதோவொன்று பிரயோஜனப்படுமோ - என்னவோ ?! And இந்த 60 மாதங்களுள் உங்களின் ஆதர்ஷ நினைவுகள் எதைச் சார்ந்தவையோ guys ? தெரிந்து கொள்ள ஒரு சின்ன அவா !!
TOP 3 of 2016 :
அடடே...அதற்குள்ளாக இன்னொரு ஞாயிறா ? - 5116 views
http://lion-muthucomics.blogspot.in/2016/07/blog-post_24.html
இத்தாலிய மாதமிது...! - 4954 views
http://lion-muthucomics.blogspot.in/2016/07/blog-post_17.html
ஒரு 'மினி"மம் முயற்சி ! - 4278 views
http://lion-muthucomics.blogspot.in/2016/02/blog-post_14.html
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ALL TIME TOP 10 :
'தல'....தளபதி.....திருவிழா..! - 7305 views
http://lion-muthucomics.blogspot.in/2014/08/blog-post_2.html
ஒரு பனி இரவின் உரத்த சிந்தனை ! - 6658 views
http://lion-muthucomics.blogspot.in/2013/01/blog-post.html
இது வேங்கையின் வேளை ! - 6177 views
http://lion-muthucomics.blogspot.in/2013/11/blog-post_16.html
எட்டும் தூரத்தில் NBS ! - 6071 views
http://lion-muthucomics.blogspot.in/2012/12/nbs.html
காசு...பணம்...துட்டு...money..money !! - 6019 views
http://lion-muthucomics.blogspot.in/2013/06/moneymoney.html
ஒரு கௌபாய் வானவில்..! - 5846 views
http://lion-muthucomics.blogspot.in/2014/10/blog-post_11.html
சித்திரமும் பேசிடுமே..! - 5746 views
http://lion-muthucomics.blogspot.in/2012/11/blog-post.html
வண்ணத்தில் ஒரு விருந்து..! - 5352 views
http://lion-muthucomics.blogspot.in/2013/12/blog-post_10.html
இது புலியின் தினம்..! - 5248 views
http://lion-muthucomics.blogspot.in/2015/04/blog-post_19.html
தீபாவளிக்கொரு நல்வரவு ....! - 5227 views
http://lion-muthucomics.blogspot.in/2014/10/blog-post_19.html
நாளாசரியாய் எல்லாமே அதன் மெருகை இழப்பது இயல்பே என்ற விதத்தில் - 5 நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னேயும் துவக்க நாட்களது அதே உற்சாகத்தைத் தக்க வைத்தக் கொள்வது எல்லோருக்கும், எல்லாத் தருணங்களிலும் சாத்தியமல்ல என்பது புரிகிறது ! அதிலும் நவம்பர் 8 ATM படையெடுப்புகள் துவங்கிய பின்பாக - இங்கே நண்பர்களின் பங்களிப்பு குறுகலாகியிருப்பதும் புரிகிறது ! ஆனால் - ஆண்டின் preview சார்ந்த பதிவுகளிலாவது இன்னும் கொஞ்சம் ஈடுபாடு கிட்டின் - நிறைவாக உணர்வோம்! But, எல்லா நிலைகளிலும் - குன்றா வேகத்தோடும், உற்சாகத்தோடும் இங்கு வருகை தந்து, பதிவிட்டு, தளத்தையும், பார்வையாளர்களையும் உற்சாகப்படுத்திடும் die-hard நண்பர்களுக்கு இந்தத் தருணத்தில் ஒரு மிகப்பெரிய வணக்கம் ! உங்கள் ஈடுபாட்டுக்கும், மெனக்கெடல்களுக்கும், மாறா அன்புக்கும் அனைவருமே கடமைப்பட்டுள்ளோம் !
And இதோ- ஜனவரியின் இரவுக்கழுகாரின் b&w வெளியீட்டின் அட்டைப்பட முதல் பார்வை ! நமது ஓவியர் + டிசைனர் வழக்கம் போலக் கைகோர்க்கின்றனர் இந்த ராப்பருக்கும் ! உங்களுக்கும் பிடித்திருப்பின்- சூப்பர் ! கதையைப் பொறுத்த வரை - இது க்ளாடியோ நிஸ்ஸி உச்சத்தில் இருந்த சமயம் உருவானது ! ‘ஓக்லஹோமா‘ புகழ் ஓவியர் லெட்டரீ சித்திரங்களுக்குப் பொறுப்பேற்கிறார் ! ஆவி - அமானுஷ்யம் என்றாலும், நம்மவர் நடுமூக்கில் தான் குத்துவார் என்பது தெரிந்த விஷயம் தானே ? ஒரு டிடெக்டிவ்வாக இரவுக் கழுகார் வலம் வருவதே இந்த சாகஸத்தின் highlight ! மிரட்டலான ‘பன்ச்‘ டயலாக்குகள் எழுத அதிகம் அவசியப்படவில்லை இம்முறை என்றாலும் - கதையோட்டத்தில் அழுத்தமான வரிகளுக்கும் வாய்ப்புகள் கிட்டாமல் போகவில்லை! ஜாலியாக, ரசித்து எழுத முடிந்த கதையிது என்று சொல்வேன் !
”நீலச் சீருடை நல்லவர்களின்” அட்டைப்பட முதல் பார்வையுமே இதோ ! ஒரிஜினல் டிசைன் ; லேசான நமது நகாசு வேலைகளுடன் ! இதிலும் உங்கள் தீர்ப்பென்ன என்றறிய ஆர்வம் !
சகல இதழ்களும் அச்சாகி விட்டன- டெக்ஸ் நீங்கலாக ! திங்களன்று அதுவும் முடிந்து விடுமெனும் போது - பைண்டிங்ஆபீஸ் போகும் சாலைகளே நம்மவர்களின் பாதையாக இருக்கும் - அடுத்த சில நாட்களுக்காவது !
“சந்தாவினில் மாதமொரு Surprise” என்பதற்குத் துவக்கம் தரும் முயற்சியும் இன்னொரு பக்கம் தயாராகி வர -காத்திருக்கும் அடுத்த சில நாட்கள் எங்களுக்குப் பரபரப்பான பொழுதுகளாய் இருக்கப் போவது உறுதி ! இன்னமும் சந்தா ரயிலுக்கான டிக்கெட் புக்கிங்குகள் முடிந்த பாடில்லை என்பதால் - அவர்களுக்காகவும் சற்றே பொறுமையாய் காத்திருக்கிறோம் ! இந்த வாரத்தினில்சந்தாக்களை அனுப்பி வைத்து, புது இதழ்களை ரசித்திடத் தவறாதீர்கள் - ப்ளீஸ்!
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் ! Enjoy this Blessed Day ! மீண்டும் சந்திப்போம் !
P.S : சென்னையில் அடுத்த வெள்ளிக்கிழமை முதல் துவங்கிடவுள்ள சென்னை புத்தகக்காட்சி 2017-ல் நமக்கு முதன்முறையாக டபுள் ஸ்டால் ஒதுக்குப்பட்டுள்ளது ! நமது ஸ்டால் நம்பர்கள் 624 & 625 !!
BAPASI அமைப்பிற்கு நமது உளமார்ந்த நன்றிகள் ! PLEASE DO VISIT US !!
வணக்கம் முதல் இடமா ?
ReplyDeleteஅட ஆமாங்க இனிய Christmas வாழ்த்துக்கள்
ReplyDeleteAm second
ReplyDeleteமூன்றாவது.அனைவர்க்கும் கிருஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய காலை வணக்கம்
ReplyDeleteகிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.. நண்பர்களே..
ReplyDeleteஎன்னுடைய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களும் நண்பர்களே..!!!
Delete8th
ReplyDelete9th. Iam very happy
ReplyDeleteHai
ReplyDeleteVery interesting one on our blog flash back.
ReplyDeleteஅனைவருக்கும் கிறிஸ்து பிறந்த நன்னாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆசிரியர், அலுவலகத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!
ReplyDeleteஅனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளுடன் அதிகாலை வணக்கமும்.
ReplyDeleteவணக்கம் சார்...
ReplyDeleteவணக்கம் நண்பர்களே...
அருமையான வரலாற்று பதிவு சார்...
வரலாற்று பதிவுகள் எப்போதும் அலாதியானவை...
ReplyDeleteஎடிட்டர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!
எடிட்டர் சார்,
'ஆவியின் ஆடுகளம்' அட்டைப்படம் - அதகளம்! கீழிருந்து நோக்கும் கோணத்தில் வரையப்பட்ட விதமும், பின்னணியில் அந்தப் பிசாசு உருவமும் மிரட்டுகின்றன! ஆனால், சற்றே கோணலாக வரையப்பட்டிருக்கும் டெக்ஸின் வலப்பக்க முழங்கையும், கார்ஸனின் இடதுப்பக்க முழங்காலும், குளவி கொட்டினாற்போல் தடித்துத் தெரியும் டெக்ஸின் உதடுகளும் மட்டும் சற்றே திருஷ்டிப் பொட்டாய் அமைந்திடாவிடில் இன்னும் பிரமாதப்படுத்தியிருக்கும்! 'ஆவியின் ஆடுகளம்' என்ற டைட்டிலும் ரொம்பவே சாதாரணமான ஃபான்ட்டில் அமைந்திருக்கிறதே? அப்படியொரு அமானுஷ்ய டைட்டிலுக்கு இந்தச் சாதாரண எழுத்துருக்கள் நியாயம் சேர்க்கவில்லை எ.எ.க!
'ப்ளூகோட்ஸ்' ஒரிஜினல் அட்டைப்படம் வழக்கம்போல கலக்குகிறது!
விஜய் : பின்னட்டையில் இருக்கும் டெக்ஸை நீங்கள் கவனிக்கவில்லையா :-)
Delete@ Radja
Deleteடெக்ஸா?! எ..எங்கே?!! ;)
// 'ஆவியின் ஆடுகளம்' அட்டைப்படம் - அதகளம்! //
Delete+1
@ Friends : முன்னட்டையிலுள்ள நமது ரேஞ்சர்கள் இருவருமே வரையப்பட்டதில் நிறைய சிரத்தை உள்ளது ! வழக்கமாய் நான் தரும் மாடலைப் பார்த்துக் கொண்டே நம் ஓவியர் பென்சில் ஸ்கெட்ச் போடுவார் ; அப்புறமாய்த் திருத்தங்கள் செய்து வர்ணம் பூசுவார். ஆனால் இம்முறையோ அந்த ஒரிஜினல் சித்திரத்தின் angle ரொம்பவே வித்தியாசமானது என்பதால் - ஒரிஜினலை டிஜிட்டலில் மிகப் பெரிதாய் பிரிண்ட் போட்டு, அதனை ஒரு black & white ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு சித்திரம் போடவிருக்கும் அட்டைமீது ஒட்டி விட்டார் நம் ஓவியர். அந்த ஜெராக்ஸ் மீதே துல்லியமாய் trace செய்து உருவங்களை போட்டு விட்டு, அப்புறமாய் கலரிங் ! So இதன் பின்னணி - ஒரிஜினல் அட்டைப்பட ஓவியரின் கைவண்ணமே !
Deleteபின்னட்டை ஒரிஜினல் சித்திரத்தின் செபியா shade மட்டுமே ; ஒரிஜினலை மேலே பாருங்களேன் !
E.Vijay @
Delete// 'ஆவியின் ஆடுகளம்' என்ற டைட்டிலும் ரொம்பவே சாதாரணமான ஃபான்ட்டில் அமைந்திருக்கிறதே? //
அதான் ஆவி பெரிசா தெரிகிறதே!அது போதும் இந்த புத்தகம் விற்பனையாக! நீங்க சொல்லற படி font பெரிசா போட்டு பேய் பிசாசு கதைன்னு பயந்து வாங்காமல் போய் விட போறாங்க :-)
இந்த ஆண்டின் மிக போர் ஆன பதிவு இது தான்.
ReplyDeleteSridhar : அதுவும் கூட ஒரு தனிச் சிறப்பு தானே சார் ?
DeleteMy dear editor sir,ஜனவரியில் ஒரு அதகள்ம் இருக்கும் என சொன்னீர்கள்?!
Deleteகிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே! மலரும் நினைவுகளால் புலரும் காலை இது!
ReplyDeletesenthilwest2000@ Karumandabam Senthil :-)
Deleteகடந்து சென்ற மாதங்கள் 60 தான் என்றாலும், அவை தந்த அனுபவங்கள் அசாத்தியம் அல்லவா ?
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteகுறள் பால்:அறத்துப்பால்.குறள் இயல்:இல்லறவியல்.அதிகாரம்:ஈகை.
குறள் 229:
‘இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.’
மு.வ உரை:
பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.
பரிமேலழகர் உரை:
நிரப்பிய தாமே தமியர் உணல் - பொருட்குறை நிரப்பவேண்டிவறியார்க்கு ஈயாது தாமே தனித்து உண்டல் இரத்தலின் இன்னாது மன்ற -ஒருவர்க்குப் பிறர்பால் சென்று இரத்தலினும் இன்னாது ஒருதலையாக. (பொருட்குறைநிரப்பலாவது: ஒரோ எண்களைக் குறித்து இத்துணை ஈட்டுவதும் என ஈட்டத்தையேமேற்கொண்டு இவறிக் கூட்டுதல். தனித்தல்: பிறரை ஒழித்தல். இரத்தற்கு உள்ளதுஅப்பொழுதை இளிவரவே: பின் நல்குரவு இல்லை, தமியர் உண்டற்கு அவை இரண்டும்உளவாம் ஆகலின், 'இரத்தலின் இன்னாது' என்றார். 'நிரப்பிய' என்பதற்குத் 'தேடிய உணவுகளை' என்று உரைப்பாரும் உளர்.).
மணக்குடவர் உரை:
இரத்தல்போல மெய்யாக இன்னாதாம்: தேடின உணவைத் தாமே தமியராயிருந் துண்டல். தமியரா யென்றது ஒருவருங் காணாமலென்றது.
வந்துட்டேன்
ReplyDeleteகிருஸ்மஸ் வாழ்த்துக்கள் வலைபதிவு நண்பர்காள்.
ReplyDeleteநண்பர் ஆதி தாமிரா வந்து வெகு நாளாகி போனதே... மீண்டும் ஒரு மீள் வருகை தரவும். உங்கள் பதிவுகளின் ரசிகன் நான்...
////நண்பர் ஆதி தாமிரா வந்து வெகு நாளாகி போனதே... மீண்டும் ஒரு மீள் வருகை தரவும். உங்கள் பதிவுகளின் ரசிகன் நான்...///
Deleteநானும்!
Me 4
DeleteMe 5
DeleteMe 6
DeleteMe 7
DeleteMe 8
DeleteMe too.
Deleteநானும்.!
Deleteஆசிரியர், அலுவலகத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!
ReplyDeleteவணக்கம் தலைவரே :)
Deleteகிறிஸ்த்துமஸ் வாழ்த்துகள். .!!
ReplyDeleteசார்...!!
ReplyDeleteசென்னை புத்தக விழா எப்போது? நாம் பங்கேற்கிறோமா?
விவரங்கள் ப்ளீஸ்.
T.K. AHMEDBASHA : இந்த வாரத்தில் தெரிய வரும் சார் !
DeleteJan 6-19 நடைபெறுகிறது புத்தக விழா !
பதிவு அரைத்தமாவு போல உள்ளது any way good morning to all
ReplyDeleteAnandappane ji@ and Sridharji @
Deleteஒரு இளம் தம்பதியி பெருநகரில் இருந்தனர். கணவன் மாலை அலுவலகத்தில் இருந்து களைப்போடு வந்து சலிப்போடு டிவி பார்த்து கொண்டிருந்தான். அப்போது தன் அலுவலகம் முடிந்து வந்த மனைவி, கணவனின் சலிப்பை பார்த்துக்கொண்டே தன்கையில் இருந்த கிஃப்ட் பாக்சை பிரித்து வைத்தாள். அதில் இருந்த வாசகம்,
"Happy 100th day of marriage"....
------அதைப்பார்து அந்த கணவனுக்கு அப்போது தான் தங்களின் திருமண வாழ்வில் 100வது நாள் இன்று என ஞாபகம் வந்தது ் .....
கூடவே தாங்கள் காதலித்த சந்தோச நாட்கள், அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்த நண்பர்கள், என பழைய நினைவுகள் உற்சாகமாக மாற, இருவரும் சந்தோசமாக செலபரேட் செய்கின்றனர்.
நீதி:வாழ்வில் கவலையை மறக்க செய்து இனிமையை மலரசெய்வது பழைய நினைவுகளே.அவைகள் மறந்து போயின் வாழ்வு நரகம்.(எப்போதோ படித்த ஒரு பக்க கதை இது , சுமாராகத்தான் ஞாபகம் இருக்கு)
நம்ம சூப்பர் ஸ்டாரும் சொல்லி உள்ளாரே குசேலன் படத்தில்...
ஏறிவந்த ஏணி போன்ற ஆசிரியர்கள் அப்படியே உள்ளனர்.அவர்கள் தயாரிப்பான நாம் மேலே மேலும் வளர்கிறோம்.-என அன்போடு ஆசிரியரையும், தன் பழைய நண்பனையும் ஞாபகப்படுத்தி பேசுவார்.எத்தனை வருடமானாலும் மறக்காத அற்புதமான க்ளைமாக்ஸ் காட்சி அல்லவா அது...
இந்த ஆசிரியர் பதிவை படித்துவிட்டுங்கடந்த 5ஆண்டின் கடந்துபோன நினைவுகளை அசைபோட்டால்,எத்தனை எத்தனை மகிழ்ச்சியான கணங்களில் மீண்டும் வாழ்ந்து பார்க்கலாமே நண்பர்களே....
சேலம் Tex விஜயராகவன் : //கடந்துபோன நினைவுகளை அசைபோட்டால்,எத்தனை எத்தனை மகிழ்ச்சியான கணங்களில் மீண்டும் வாழ்ந்து பார்க்கலாமே நண்பர்களே....//
Deleteஅற்புதமான வரி !
சேலம் Tex விஜயராகவன் @ நீங்க இப்பதான் இப்படியா இல்ல எப்பவுமே இப்படியா? வர வர ரொம்ப நல்லா எழுதுறத சொல்லுறேன்! வாழ்த்துக்கள்!
Deleteதவறாக நினைக்க வேண்டாம் சார் நான் இன்று எதிர்பார்த்தது புத்தகம் எப்போது புறப்படும் என்றும்
Deleteஇந்த மாத சர்ப்ரைஸ் என்ன?
டெக்ஸ்/ட்யுராங்கோ கதை சுருக்கங்களை தான்
மற்றபடி
எடிட்டர் எதை எழுதினாலும்
படிப்போர் சங்கத்தை சேர்ந்தவனே
///சேலம் Tex விஜயராகவன் @ நீங்க இப்பதான் இப்படியா இல்ல எப்பவுமே இப்படியா? வர வர ரொம்ப நல்லா எழுதுறத சொல்லுறேன்! வாழ்த்துக்கள்!///
Deleteபோன வருசம் பூரிக்கட்டை ஒன்னு புயல்வேகத்துல வந்து மண்டையில் டொம்னு ஏற்படுத்திய சவுண்டுக்குப் பிறகு அவரது எழுத்துக்களில் அப்படியொரு அற்புத மாற்றமாம்! ;)
ATM கியூ சந்தாவை பாதிக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு "நான் அதுக்கூ மேல " என்று பதிவு பார்வைகளையே குறைக்கும் சங்கதி என்று இன்று தான் எனக்குப் புரிந்தது.
ReplyDeleteதங்க கல்லறை இதழ் அப்போதுதான் படித்ததனால் பழைய மொழியாக்கம் புதிய மொழியாக்கம் என்று நான் அப்பபோது நினைக்கவில்லை. ஆனால் முதல் பக்கத்தில் இருந்து ஆரம்பித்த எழுத்துப் பிழைகள் மண்டையை கிர்ரடித்து காதில் புகை வர வைத்தது. அதை ஒப்பிடும்போது இப்போ நம்ம லெவெலெ வேற.
நண்பர்களுக்கும் எடிட்டருக்கும் இனிய கிறித்துமஸ் தின வாழ்த்துக்கள் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பிறக்க இருக்கும் புத்தாண்டில் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்.
Raj Muthu Kumar S : ATM கியூக்களின் நிஜமான தாக்கங்களை காத்திருக்கும் நாட்கள் தான் சொல்ல வேண்டும் சார் !! தலை தப்பித்தால் தம்புரான் புண்ணியம் என்றே ஒவ்வொரு தொழிலில் உள்ளோரும் நினைக்க வேண்டியுள்ளது !
Deleteஇந்த முறை சந்தா அறிவிப்பு சற்று முன்பே வந்து விட்டாதாது தான் நல்ல செயல்.
Delete"ஓருவேளை ஆசிரியர் முனபே விசாயம் தெரியுமோ"
//ஒரு வேளை ஆசிரியருக்கு முன்பே தெரியுமோ.?//
Deleteஹஹஹஹஹ ! அப்படி போடு அருவாளா.!
Hi
ReplyDelete////And இந்த 60 மாதங்களுள் உங்களின் ஆதர்ஷ நினைவுகள் எதைச் சார்ந்தவையோ guys ? தெரிந்து கொள்ள ஒரு சின்ன அவா !! ////
ReplyDeleteஈரோடு மாநகரில் ஒரு அப்பாவி இளைஞன் தானுண்டு தன் வேலையுண்டு என்று வாழ்ந்து வந்தான்! அவ்வப்போது கடைகளில் காணக் கிடைத்த பொம்மைப் பொஸ்தவங்களை மட்டும் களிப்போடு வாங்கிப் படித்துவந்த அவனுக்கு, அவனை மாதிரியே பொம்மைப் பொஸ்தவங்களைக் காதலோடு ரசித்திடும் ஒரு நண்பன் கிடைக்கமாட்டானா என்ற ஏக்கத்தில் நாட்களைக் கடத்திவந்தான்! இப்படியிருந்த அவனுக்கு 2010/2011வது வருடங்கள் இன்னும் சோதனையாய் அமைந்தது! வழக்கமாக காமிக்ஸ் வாங்கும் புத்தகக் கடையில் ரொம்ப மாதங்களாக காமிக்ஸே காணக் கிடைக்கவில்லை! விசாரித்ததில் 'காமிக்ஸே இப்போதெல்லாம் வருவதில்லை தம்பி' என பதில் வந்தது! மனது ரணமாக மேலும் சில மாதங்களை வேறு தேடல்களின்றி கடத்தியபிறகு, 2012ன் ஒரு கோடைகால மாலை வேளையில் ஒரு இன்டர்நெட் ப்ரெளசிங் சென்டரில் அமர்ந்து கூகுள் ஆண்டவரிடம் அவன் தன் கவலையைத் தெரிவிக்க, வந்துவிழுந்த தகவல்களில் ஒன்றுதான் அவன் வாழ்க்கையின் காமிக்ஸ் வசந்தத்தை மீட்டெடுத்த இந்த வலைப்பூ! கஞ்சியாவது கிடைக்காதா என பசியில் அலைந்துகொண்டிருந்தவனுக்கு பிரியாணி விருந்தே கிடைத்ததைப் போல இருந்தது அன்று! கிடைக்கும் நேரத்தில் எல்லாம் ப்ரெளசிங் சென்டரில் நுழைந்து தன் ஆதர்ச எழுத்தாளரின் ( யாரோ சிங்கமுத்து வாத்தியாராம்!) பதிவுகளை படித்து படித்து ரசிக்க ஆரம்பித்தான்! காமிக்ஸ் புதியதொரு பரிணாமத்தில் மீண்டு வந்திருப்பதையும், தன்னைப் போலவே (அல்லது தன்னைவிடவும் அதிகமாக) பொம்மைப் பொஸ்தவங்களை உயிராக நேசிக்கும் ஜீவன்கள் பலர் இருப்பதையும் அறிந்தான்! தன் மொபைல்ஃபோன் வழியாக அவன் தட்டுத்தடுமாறி பின்னூட்டங்கள் இட ஆரம்பித்ததும், பிறகு ஈரோடு ஸ்டாலின், புனித சாத்தான், ஆடிட்டர் ராஜா போன்ற உள்ளூர்வாசிகளை அடையாளம் கண்டுகொண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஒன்றுகூடிக் களித்ததும் அவனளவிலாவது வரலாற்றுச் சம்பவங்களே!
தொடரும் நாட்களில் 'காமிக் கான்'ல் தன் ஆதர்ச எழுத்தாளரை முதன்முதலாகத் தரிசித்திடும் பேரார்வத்தோடு பெங்களூரு வந்ததும், அங்கே ஸ்டாலில் அமர்ந்திருந்த இராதாகிருஷ்ணன் அண்ணாச்சியை சிங்கமுத்து வாத்தியார் என்றெண்ணி அறிமுகப் படுத்திக்கொண்டதும்; பிறகு அசடு வழிந்தபடியே ஒரிஜினல் சி.மு.வாத்தியைக் கண்டு ஆச்சர்யத்திலும் மகிழ்ச்சியிலும் நா மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டு பேச்சு வராமல் விக்கித்து நின்ற நிகழ்வுகளெல்லாம் வாழ்க்கையின் ஒரு மறக்க இயலா நிகழ்வுகளாகிப் போனது அவனுக்கு!
இன்று ஈனாவினா என்று பெயர் தாங்கி பலநூறு நண்பர்களின் நேசத்திற்குப் பாத்திரமாகிவிட்டிருக்கும் அவன் இன்று இவ்வலைப்பூவையே குட்டிப்போட்ட பூனையாட்டம் சுற்றி வருவதில் தான் வியப்பேது?!
இவ்வலைப்பூ ஐடியாவை சி.மு.வாத்திக்கு அறிமுகப்படுத்தி, இதில் கால்பதிக்கச் செய்த ஜூனியர் சிங்கமுத்து வாத்தியாரை இந்நேரத்தில் நன்றியோடு நினைவுகூர்கிறேன்! (நன்றிகள் பல ஜூனியர்! நீங்கள் இன்னும் பல சாதனைகளை சத்தமின்றியோ/சத்தத்தோடோ ஆற்ற என் அட்வான்ஸ் வாழ்த்துகள்!)
இந்தக் காமிக்ஸ் நேசம் நாளும் வாழ்க!
Erode VIJAY : //'காமிக் கான்'ல் தன் ஆதர்ச எழுத்தாளரை முதன்முதலாகத் தரிசித்திடும் பேரார்வத்தோடு பெங்களூரு வந்ததும், அங்கே ஸ்டாலில் அமர்ந்திருந்த இராதாகிருஷ்ணன் அண்ணாச்சியை சிங்கமுத்து வாத்தியார் என்றெண்ணி அறிமுகப் படுத்திக்கொண்டதும்; பிறகு அசடு வழிந்தபடியே ஒரிஜினல் சி.மு.வாத்தியைக் கண்டு ஆச்சர்யத்திலும் மகிழ்ச்சியிலும் நா மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டு பேச்சு வராமல் விக்கித்து நின்ற நிகழ்வுகளெல்லாம் வாழ்க்கையின் ஒரு மறக்க இயலா நிகழ்வுகளாகிப் போனது அவனுக்கு!//
Deleteபுல்லரித்துப் போயிருப்பார் நம்மவர் இராதாகிருஷ்ணன் !! !!
அந்த முதல் காமிக் கானில் ரெம்போ கூச்சத்துடன் பூனையார் தலை காட்டியது எனக்கும் நினைவுள்ளது !! எப்படி இருந்த ஈனாவினா.......!!!!
ஈனாவினா @ பெங்களூர் காமிக்ஸ்-கான் வந்தத சொல்லவே இல்லை :-) உங்க கூட டூ!
Delete:)
Delete+1
பூனையாரே அருமை.!
Deleteநகைச்சுவை உணர்வுகள் ததும்பும் உங்களின் அந்த உற்சாக எழுத்தாதாளுமைதான் இந்த 5 ஆண்டின் தொய்வில்லா வலைபதிவு பயணம் சார். அப்புறம் நமது வாசக நண்பர்களின் டமால் டூமில் ரக சரவெடி கருத்துகளும், சிரிக்க வைக்கும் ஜாலியான கருத்துகளும்தான் என்னை போன்ற அதிகம் எழுதாத ஆனாலும் அதிகம் படிக்கும் வாசகர்களை பதிவு பக்கம் இழுக்கும் காரணிகள். இன்னும் நிறைய நிறைய புது முயற்சிகள், பழைய நினைவுகள் உங்கள் வசம் ஏராளமாய் புதைந்து கிடைப்பதால் நமது இந்த வலைபதிவு பக்கம் நாளுக்கு நாள் மெருகேறும் என்பதில்லை ஐயமில்லை. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் சார்.
ReplyDelete+1000
Deleteஅருமையாச் சொன்னீங்க cap tiger!
// இன்னும் நிறைய நிறைய புது முயற்சிகள், பழைய நினைவுகள் உங்கள் வசம் ஏராளமாய் புதைந்து கிடைப்பதால் நமது இந்த வலைபதிவு பக்கம் நாளுக்கு நாள் மெருகேறும் என்பதில்லை ஐயமில்லை. //
Delete+1
cap tiger : நம் பதிவுகளுக்கு நிறைய மௌனப் பார்வையாளர்கள் உண்டு என்பதை, ஒவ்வொரு புத்தக விழாவினிலும் சங்கோஜத்துடன் அணுகும் பல புது நண்பர்கள் வாயிலாகத் தெரிந்து கொண்டிருக்கிறேன் ! அப்போது சொல்வதையே இப்போதும் சொல்கிறேன் சார் :
Deleteவிரிவாகவோ, சுருக்கமாகவோ - உங்கள் கருத்துக்களை நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதிலும் ஒரு ரம்யம் உள்ளது !! நாமும் மகிழ்ந்து, நண்பர்களையும் மகிழ்விக்கக் கூடியதொரு வாய்ப்பைத் தவற விடுவானேன் ?
More the merrier sir !!
Deleteதங்கள் பதிலுரைக்கு நன்றி சார், சொல்ல வேண்டிய விசயங்கள் மனது நிறைய இருந்தாலும், தங்கள் அட்டகாசமான பதிவும், நண்பர்களின் பல விதமான பின்னூட்டங்களும் நேரத்தை ரம்மியமாக கழித்துவிடுகிறது, இதனுள் தனியாக சொல்வதற்கு ஒன்றுமில்லை என விட்டுவிடுகிறேன். இனிவரும் நாட்களில் எண்ணவோட்டங்களை எழுத்தாக்க முயற்சிக்கிறேன். :)
DeleteHappy Christmas
ReplyDeletegood Morning To all.
ReplyDeletemerry christmas
அட்டைப்படங்கள் அருமை
ஆசிரியர், அலுவலகத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!!
ReplyDeleteஇனி வரும் அனைத்து ஆண்டுகளும் இன்னும் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்!
மாதம் ஒரு முறை வரும் நமது புத்தகங்களை விட வாரம் ஒரு முறை வரும் உங்கள் பதிவிற்க்கு நான் அடிமை.
ReplyDeleteஎந்த பூனையை பார்த்தாலும் உடனே
நமது ஈவீ பூனையாரின் சிரித்த முகத்துடன் வணக்கம் சொல்லும்
அரசியல்வாதிபோஸ்தான் நினைவுக்கு
வருகிறது.
ங்ஙாவ்.. ங்ஙாவ்... ( பூனைங்க வெட்கப்பட்டா இப்படித்தான் முனகுமாக்கும்) :)
Deleteganesh kv : சார்....அந்த மாதமொருமுறை வந்திடும் இதழ்களுக்காகத் தானே எனது பத்தி பத்தியான பதிவுகள் எல்லாமே ? So எல்லாப் புகழும் இதழ்களுக்கே !
DeleteErode VIJAY : நல்ல வேளை விளக்கமாய்ச் சொன்னீர்கள் ! இல்லாங்காட்டி "ங்ஙாவ்.. ங்ஙாவ்" ங்கிறதை பார்த்து ஜலதோஷத்தில் பூனைக்கு மூக்கடைத்துக் கொண்டது போலும் என்றுஎண்ணி ஆவி பிடிக்க யாரேனும் தூக்கிப் போய் விட்டிருப்பார்கள் !
Delete///ங்ஙாவ்.. ங்ஙாவ்... ( பூனைங்க வெட்கப்பட்டா இப்படித்தான் முனகுமாக்கும்) :)///
Deleteஇந்தப்பூனை இது நம்ம ஆளு படத்தில் சத்தம் கொடுக்குமே அந்தப்பூனை . :-)
////இந்தப்பூனை இது நம்ம ஆளு படத்தில் சத்தம் கொடுக்குமே அந்தப்பூனை .///
Delete:D
எப்படித்தான் கண்டுபிடிக்கறாய்ங்களோ!! ;)
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் & ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDelete5 வருஷம் ஓஓஓஓடிப் போயிடுச்சுன்னே நீங்க சொன்ன அப்புறம் தான் தெரியுது... ஒரு பதிவும் கூட நிச்சயம் போரடித்ததில்லை. ஒவ்வொரு வாரமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோடல்லாமல் , பூர்த்தியும் செய்யும் அற்புதமான எழுத்து நடை. இந்த எழுத்து நடை உங்களுக்கு கிடைத்த வரம் என்றால் , இந்த வலை பக்கம் எங்களுக்கு கிடைத்த வரம் ..
ReplyDeleteRummi XIII : Yes - வருடங்கள் 5 ஓட்டமாய் ஓடிவிட்டன !!
Deleteஎழுத எழுதத் தான் சரளம் சாத்தியமாகும் என்பதை அனுபவத்தில் உணர்கிறேன். அதை நடைமுறைப்படுத்திப் பார்க்கக் கிடைத்துள்ள மேடையே இந்த வலைப்பதிவுப் பக்கம் என்பதால் அதன் பொருட்டு அனைவருக்குமே ஒரு தேங்க்ஸ் !
And கனிவான வார்த்தைகளுக்கு நன்றிகள் நண்பரே !
Rummi XIII @
Delete// இந்த எழுத்து நடை உங்களுக்கு கிடைத்த வரம் என்றால் , இந்த வலை பக்கம் எங்களுக்கு கிடைத்த வரம். //
செமையா சொன்னீங்க!
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் & ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களின் பதிவுகளில் பரண் உருட்டும் படலம் தான் நான் கணக்கில்லாமல் படித்த பதிவு அப்போது நான் வலைத்தளத்தில் இல்லை வெறும் பார்வையாளன் நானும் உங்களுடன் பதிவிட வேண்டும் என உத்வேகத்தை தூண்டியதில் முதலிடம் பரண் உருட்டும் படலத்திற்கே இரண்டாவது டெக்ஸ் வில்லரின் தனி சந்தா அறிவிப்புக்கு ஞாயிறன்று உங்கள் பதிவை படிக்கவில்லை என்றால் அந்த நாள் முழுமையடையாது உங்களின் பதிவே உற்சாக டானிக்
ReplyDelete"பரண் உருட்டும் படலம்" எது பற்றிய பதிவென்று நினைவில்லை ; but நேற்றைக்குப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது கணிசமான பார்வைகளை ஈட்டியவற்றுள் அதுவும் ஒன்றென்பதை கவனித்தேன் !
Delete"பரண் உருட்டும் படலம்" எங்களை (இந்த பரணிகளை) புரட்டி போட்ட பதிவு என்றால் மிகையில்லை!
Deleteஸ்பைடர் & மும்மூர்த்திகள்
Deleteஇவர்களின் வரவுகளை தம்பட்டம் அடித்தது தான்
பரண் உருட்டும் படலம்
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇந்த இனிய நாளில் நம் ஆசிரியரின் "பாதுகாக்கவேண்டிய பதிவு" அமைந்தது இன்னாளுக்கு இன்னமும் சிறப்பை கூட்டுகிறது.
ஆண்டு இறுதியில் வரும் ஆண்டிற்கான பயணதுவக்கத்துக்கான ஆயிரம் பணிகளுக்கிடையில் இவ்வளவு மெனக்கெடலுடன் கூடிய பதிவை இட்ட ஆசிரியருக்கு என் நன்றிகள்.
AT Rajan : பொதுவாக இதழ்களின் மையத் தயாரிப்பானது - கட்டுமானத்தில் செங்கல் கட்டுப் போன்றது ; மளமளவென்று உயர்ந்து விடும். ஆனால் அட்டைப்படங்கள் ; அதன் உட்பக்கங்கள் ; சில்லறைப் பக்கங்கள் ; விளம்பரங்கள் ; சி.சி.வயதில் போன்றவை - வீட்டின் finishing போல ஜவ்வாய் இழுக்கும் பணிகள் !! பொறுமையெல்லாம் சோதித்து விடும் !
Deleteஜனவரியின் இதழ்களுக்கான எனது பணிகள் கிட்டத்தட்ட முடிந்தன என்பதால் கொஞ்சம் தெம்பாக இருக்க முடிகிறது சார் ! பைண்டிங் ; டெஸ்பாட்ச் என அடுத்தகட்டப் பணிகளை மேற்பார்வை மட்டுமே இனி காத்துள்ளதால் நான் ஜாலியாக ஜெரெமியாவுக்குள்ளும், மதியில்லா மந்திரியாருக்குள்ளும் பேனா பதிக்கும் வேலையில் நாட்களைக் கடத்தி வருகிறேன் ! இரண்டுமே ஒன்றுக்கொன்று துளி கூடச் சம்பந்தமிலா பாணிகள் என்பதால், இதில் கொஞ்ச நேரம், அதில் கொஞ்ச நேரமென்று விறுவிறுப்பாய் பொழுது ஓடுகிறது !
உள்ளதை உள்ளபடியே கூறும் உங்களின் வெளிப்படையான பதிலுக்கு ஓராயிரம் நன்றிகள் சார்.
Delete@Vijayan Sir // பைண்டிங் ; டெஸ்பாட்ச் என அடுத்தகட்டப் பணிகளை மேற்பார்வை மட்டுமே இனி காத்துள்ளதால் நான் ஜாலியாக ஜெரெமியாவுக்குள்ளும், மதியில்லா மந்திரியாருக்குள்ளும் பேனா பதிக்கும் வேலையில் நாட்களைக் கடத்தி வருகிறேன் //
Deleteஓ.!! அப்படின்னா பிப்ரவரியில் ஜெரேமியாவின் கதை வரப்போகிறதா சார் ?
நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇடர்களை கண்டு அதைரியப்படேல்
ReplyDeleteஇவைதான் நான் இரண்டு வாரங்களாக எனக்குள் சொல்லிக்கொண்டு மீண்டு வந்துவிட்டேன் ஆசிரியரே நான் சென்னை புத்தகத் திருவிழாவிற்கு வருகிறேன் ஸ்டால் கிடைத்தவுடன் தங்களது வருகை எப்போது என தெரியப்படுத்தவும்
சீனியர் எடிட்டருக்கு தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்
செந்தில் சத்யா : //இடர்களை கண்டு அதைரியப்படேல்//
Deleteசென்னையின் அடையாளமன்றோ அது ?
ஜனவரி 7 -ன் பெரும் பகுதிக்கும், 8 -ன் பகல் பொழுதுக்கும் சென்னையில் இருப்பேன் நண்பரே !
எடிட்டர் சார்...'ஹாட் லயன்' ன்னும் சரி வார வார பதிவாயினும் சரி இன்னும் சலிக்காமல் மென்மேலும் படிக்க தூண்டுவது தங்களின் எழுத்துக்களே சார்...
ReplyDelete5 வருடம் என்ன இறைவனின் அருளால் 50 வது வருட பொன்விழா பதிவைக் கொண்டாடக் காத்திருக்கிறோம் சார்!!!
Sathiya : அட...எழுத நான் தேர்வு செய்யும் விஷயங்களில் தானே சுவாரஸ்யத்தின் பெரும் பங்கே உள்ளது சத்யா ? காமிக்ஸ் பற்றியல்லாது, வேறேதேனும் தலைப்புகளில் எழுதத் தொடங்கி இருந்தேனெனில் இந்நேரத்துக்கு உங்கள் கருத்து இதுவாகவே இருக்குமா என்பது சந்தேகமே !
DeleteEditor sir :-):-):-)
Delete//2012-ன் முதன் முதல் சந்திப்புகள்- சென்னைப் புத்தக விழாவின் போது & Come back ஸ்பெஷலின் ரிலீஸ்.
ReplyDelete2012 செப்டம்பரில் பெங்களுர் காமிக்-கான்
2013 ஜனவரியில் NBS ரிலீஸ்
சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷலும், அது உருவாக்கிய அதகள சிரிப்பலைகளும்...!
2014 ஆகஸ்டில் LMS
"மின்னும் மரண" அறிவிப்பு
2014 அக்டோபரில் மும்மூர்த்திகளின் மறுவருகை சார்ந்த அறிவிப்பு
2015 சென்னைப் புத்தக விழா
2015 மின்னும் மரணம் ரிலீஸ்
2016 ஈரோட்டு வாசகர் சந்திப்பு //--- செம்மையான டாப் 10நிகழ்வுகள் சார்..
இவற்றுள் 2012 முதல் கம்பேக் சந்திப்பு& 2013 nbs ரிலீஸ் தவிர்த்த மற்ற 8தருணங்களில் நேரடியாக பங்கு கொண்டு நண்பர்கள் உற்சாகத்தை நேரில் பார்த்து உள்ளேன்.ஒவ்வொன்றும் இனிமையானநினைவுகள். இப்போதும் உற்சாகத்தை வாரி வழங்கும் நினைவு பெட்டகங்கள்.மீண்டும் மீண்டும் நினைக்க வைத்து மறுபடிஎப்போ என நினைக்க வைக்கும் அற்புத தருணங்கள்.அவற்றை எதிர்நோக்கி....
ஐந்து வயதாகும் இந்த அழகான குழந்தையுடன் எனது பரிச்சயம் ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகளுக்கு மேல். மௌணப்பார்வையாளனாக ஏழெட்டு மாதங்களை ஓட்டியபின் மெல்ல மெல்ல உள்ளே நுழைந்து ஒவ்வொரு கமெண்டாக போட்டு (பெருசா கருத்தெல்லாம் சொன்னதாக நினைவில்லை) சரியாத்தான் எழுதியிருக்கோமா? இதை சொல்வதால் யாராவது கோபப்படுவார்களோ, நம்மை தவறாக நினைத்துவிடுவார்களோ என்றெல்லாம் அஞ்சி, திரும்ப திரும்ப கமெண்டை சரிபார்த்து பப்ளிஷ் பட்டனை அமுக்காமல், மனதில் பட்டதை பட்டவர்த்தனமாக அப்படியே டைப்பி, உடனே பப்ளிஷ் செய்துவிடுவேன். சிலபல கமெண்ட்டுகளால் யாரையாவது புண்படுத்தி இருந்தால், ஆண்டின் இறுதிப்பதிவான இன்றைய தினத்தில் மன்னிப்பு கோருகிறேன். (இனிமேல் வரப்போகும் கமெண்ட்டுகளுக்கு மீண்டும் அடுத்தாண்டு இறுதிப் பதிவில்தான் வருத்தம் தெரிவிப்பேன். இடையில் யாரும் எதிர்பார்க்கக்கூடாது ஆம்ம்மா!!)
ReplyDeleteஎடிட்டர் சார், கிறிஸ்த்துமஸ் தாத்தா வேடமணிந்த நம் கார்ஸன் தாத்தாவையும், தல'யையும் வைத்து இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு கேப்ஷன் போட்டி வைத்தீர்களே... அதன் முடிவு இன்று அறிவிக்கப்படுமானால் கிறிஸ்மஸ் தாத்தா இந்த கிறிஸ்மஸ் நன்னாளில் நம் நண்பருக்கு பரிசு வழங்கியதைப் போல இருக்குமே?
ReplyDeleteஒரு ஆலோசனை தான்!
/// இந்த 60 மாதங்களுள் உங்களின் ஆதர்ஷ நினைவுகள் எதைச் சார்ந்தவையோ guys ? தெரிந்து கொள்ள ஒரு சின்ன அவா !! ///
ReplyDeleteஒன்றா இரண்டா எடுத்துச்சொல்ல..!!
ஒவ்வொரு ஞாயிறும் புதுப்பதிவை எதிர்நோக்கி, இந்தவாரம் என்ன ஷ்பெசல் என்று ஆவலோடு படித்துவிட்டு, நம்முடைய கருத்துகளையும் பதிந்து, தினசரி வந்துவிழும் கமெண்ட்டுகளை படித்து ....,, இப்படி ஜவ்வாக இழுக்காமல் சிம்ப்பிளாகச் சொல்லவேண்டுமெனில்,
இந்த மூன்றரை ஆண்டுகளாய், தினமும் டீ குடிப்பது டிபன் சாப்பிடுவது போல இந்த ப்ளாக்கை பின்தொடர்வதும் என் வாழ்வின் ஒரு தவிர்க்கவே முடியாத அங்கமாகிப்போனது சார். . அவ்வளவுதான்..!!:-)
ஞாயிறு வணக்கங்கள் ஆசிரியரே :)
ReplyDeleteஞாயிறு வணக்கங்கள் காமிக்ஸ் நண்பர்களே :)
அனைவருக்கும் கிறிஸ்த்துமஸ் வாழ்த்துக்கள் :)
விஜயன் சார்,
ReplyDelete// ஜனவரி 7 -ன் பெரும் பகுதிக்கும், 8 -ன் பகல் பொழுதுக்கும் சென்னையில் இருப்பேன் நண்பரே ! //
முடிந்தால் நீங்கள் அங்கு இருக்கும் நேரத்தை குறிப்பிட முடியுமா? நான் சென்னைக்கு மற்றுமொரு விசயமாக குடும்பத்துடன் வந்தாலும் வருவேன், நேரம் சரியாக அமைந்தால் உங்களை மற்றும் நண்பர்களை சந்திக்க முயற்சிக்க உள்ளேன்.
@ PfB
Delete///நான் சென்னைக்கு மற்றுமொரு விசயமாக குடும்பத்துடன் வந்தாலும் வருவேன், நேரம் சரியாக அமைந்தால் உங்களை மற்றும் நண்பர்களை சந்திக்க முயற்சிக்க உள்ளேன்.///
அதான் குடும்பத்தோடு வருவேன்னு சொல்லும்போதே நேரம் சரியில்லன்னு தெரிஞ்சுடுச்சே! :D
Erode VIJAY @ அப்ப வரல சாமி!
Deleteசீனியர் எடிட்டர் திரு.சௌந்திரபாண்டியன் அவர்களுக்கு என் தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் :)
ReplyDelete+1
Deleteதாமதமான பிறந்த நாள் வாழ்த்து திரு.சௌந்திரபாண்டியன் sir !
எனது தாமதமான வாழ்த்துக்களும்.
Deleteஎனது தாமதமான நன்றிகளும் - சீனியரின் சார்பாய் !!
Deleteஆசிரியருக்கும் அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் ..நல்ல நிகழ்வுகள் நடந்ததை நினைத்துப் பார்த்து மகிழ்வதும் ஒரு சந்தோசமே.
ReplyDelete87வது. அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteடாப் 10, டாப் 3 போலவே இந்த ஐந்து வருடங்களில் வாசகர்கள் / ரசிகர்களில் ஒரு டாப் 5 அல்லது 10 யும் குறிப்பிட்டிருக்கலாமே ஆசிரியர் சார்?
ReplyDeleteSV VENKATESHH : சார்...தற்சமயமிங்கு இருப்பதே விரல் விட்டு எண்ணிடக்கூடிய அளவிலான நண்பர்கள் தானே ? அவர்கள் ஒவ்வொருவருமே நமக்கு சம முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் தானே ?
Deletewhat ia going to be a surprise to ua all . nothing but a tex 2017 calender isnt it ?
ReplyDeletej
அழகான மலரும் பதிவுகள் ....
ReplyDeleteஎத்தனையோ சங்கடங்கள் ...இடர்கள் என பலப்பல வாழ்வில் குறுக்கிட்டாலும் சனி இரவு உறங்க செல்லும் பொழுது அப்பாடா நாளை ஞாயிறு ...ஆசிரியர் பதிவு வருமே என்ற உற்சாக உணர்வோடு எம்மை உறங்க வைப்பது
உங்கள் பதிவுகள் தான் சார் ...
மனமார்ந்த வாழ்த்துக்கள் சார் ....பல பல பூங்கொத்துகளுடன் ....
சில பூங்கொத்துகளுடன் இல்லாமல் பல பல பூங்கொத்துகளுடன்வரும்! நமது சங்க காவல் நாயகன் அவர்களுக்கு பணிவு வணக்கம் :)
DeleteAnd இந்த 60 மாதங்களுள் உங்களின் ஆதர்ஷ நினைவுகள் எதைச் சார்ந்தவையோ guys
ReplyDelete######
சொல்லவும் வேண்டுமா சார் ...இந்த வலை பக்கத்திற்கு பங்கு கொள்ள வேண்டுமே என்பதற்காகவே நண்பன் மூலம் ஈமெயில் முகவரி உருவாக்கி சில நாட்கள் தமிழங்கிஷில் பதிவிட்டு பின்பு சிறிது சிறிது தமிழ் பதிவு சிறு சிறு பிழை எழுத்துக்களுடன் பதிவிட்டு ...பிறகு செயலாளரின் வேண்டுகோளுக்கு பிறகு பொறுமையுடன் பிழை இல்லாமல் கருத்துக்களை இட கற்றுக் கொண்டு இந்த வலைப்பக்கத்தில் எனது பெயருடன் கருத்துக்களை பார்க்கும் பொழுதே ஏற்படும் ஆனந்தம்
பிறகு எனது கடிதமும் ...அதற்கு தங்கள் பதிலுமே ஒரு பதிவாகவே இட்ட பொழுது மனதில் ஏற்பட்ட அந்த மாபெரும் ஆனந்தந்தை விவரிக்க வார்த்தைகள் ஏது ..?
அன்று விடிகாலையே நான் படிப்பதற்கு முன்னரே செயலாளர் ..ஈரோடு ஸ்டாலின் ..என பலர் எனக்கு அலைபேசி மூலம் தகவல் தெரிவிக்க அன்று முழுவதும் தரையிலே மிதந்து நடந்ததை யார் அறிவார் ...:-)
////பிறகு எனது கடிதமும் ...அதற்கு தங்கள் பதிலுமே ஒரு பதிவாகவே இட்ட பொழுது மனதில் ஏற்பட்ட அந்த மாபெரும் ஆனந்தந்தை விவரிக்க வார்த்தைகள் ஏது ..?///
Deleteசாதாரண கடுதாசியா தலீவரே அது?! சிவகாசியையே கண்ணீர் கடலில் மிதக்க வச்சுதே!
உங்க கடுதாசிய படிச்சுட்டு நம்ம லயன் ப்ளாக்குல எல்லாரும் அழுத அழுகாச்சுல பக்கத்து ப்ளாக்காரங்களெல்லாம் என்னவோ ஏதோன்னு எட்டிப் பார்க்க ஆரம்பிச்சதையெல்லாம் எப்படி மறக்க முடியும்?! ;)
:-)))))
Deleteஆனாலும் எனது கடிதங்கள் நமது இதழ்களில் வந்து இருந்தாலும் வாசகர் ஹாட் லைனாக இதழில் அது இடம் பெறாதது இன்னமும் சிறிது வருத்தம் செயலர் அவர்களே...:-(
Deleteவிடுங்க தலீவரே! ஒரு ரெண்டு குயர் நோட்டு வாங்கி 'தலீவரின் தக்கனூண்டு வயதில்'னு எழுத ஆரம்பியுங்க... போராட்டம் நடத்தியாவது லயன்-400ல பப்ளிஷ் பண்ண வச்சுப்புடலாம்! தமிழ்நாடே மிதக்கணும்! எல்லாரும் நீந்தித்தான் ஆபிஸுக்குப் போகணும்! பாத்துப்புடலாம்!
DeleteEV://ஒரு ரெண்டு குயர் நோட்டு//
Deleteதலைவரின் மாண்பை குறைக்கும் வகையில் ஒரு ரெண்டு குயர் நோட்டு புத்தகத்தில் கடிதம் எழுதச்சொன்ன புனையருக்கு கண்டனம் தெறிவித்து! ஒரு டன் பேப்பர் ரோல் அபராதமாக அவருக்கு உடனடியாக அனுப்பும்படி சமூகத்தின் சார்பாக தெரிவிக்கிறேன் !:P
ஙே....:-(
DeleteParanitharan K : தலீவரே, இந்த 60 மாதங்களுள் உங்களது ஆதர்ஷ நினைவாக எது இருந்தாலும், எனது நினைவுகளுள் முக்கியமானதாக இருப்பது கூச்சமானதொரு புன்னகையோடு நண்பர்களுக்குப் பின்னே ஒளிந்து கொண்டிருந்த உங்களை அடையாளம் தெரிந்து கொள்ள முடிந்ததே !
Deleteஅதே போல சென்னைப் புத்தக விழாவினில் ஒருநாள் முழுக்க நீங்கள் பம்பரமாய்ச் சுழன்று பில் போடவும், பேக்கிங் செய்யவும் செய்த ஒத்தாசைகளும் தான் !
still claw ponrajiku seevindiya book eppothu publish pana padukirathU
ReplyDelete///And இந்த 60 மாதங்களுள் உங்களின் ஆதர்ஷ நினைவுகள் எதைச் சார்ந்தவையோ guys ? தெரிந்து கொள்ள ஒரு சின்ன அவா !! ///
ReplyDeleteஆசிரியர் சார் @ இந்த காமிக்ஸ் உலகம் வலையால் கட்டுண்ட பிறகு மறக்க இயலா நினைவுகள் பல உள்ளன. நண்பர்களுடன் உற்சாகமாக செலவிட்ட நிமிடங்கள் நினைவில் நீங்கா காலப்பொக்கிசங்கள்.
என்னுடைய மிகச்சிறிந்த நினைவு முதன்முதலில் தங்களை பெங்களூரு 2012 காமிக்கானில் சந்தித்ததே... பூனையார் சொன்ன மாதிரி , உங்களை முதல் முதலில் சந்தித்தபோது பேச்சு வர்ல எனக்கும். அந்த சந்திப்பை உங்கள் எழுத்தால் தளத்தில் நீங்கள் விவரித்ததே எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிசம்.
நண்பர்களே ஆசிரியரின் பொக்கிச வரிகள்:-
......////மறு நாள் காலை பத்து மணிக்கு விழா துவங்கிய போது, பெங்களுரு நண்பர்கள் நமக்கு முன்பே ஆஜர் அங்கே ! ஞாயிறு என்பதால் கூட்டமும் ரொம்ப சீக்கிரமே அலைமோதியது ! சற்றைகெல்லாமே நம் ஸ்டாலில் முதல் நாளைப் போலவே (புதியதொரு) வாசகக் குழமம் ! முதல் நாளை விட இன்றைக்கு குடும்பங்களின் வருகை அதிகமாய் இருந்தது highlight ! அப்போது சேலத்திலிருந்து வந்திருந்த நண்பர் தம் புதல்வர் மூலம் ஒரு giftwrap செய்யப்பட்ட டப்பாவைத் தந்திட, அதன் மேல் அழகாய் ஒரு வாழ்த்துச் சேதி !! உள்ளேயோ ஒரு மைசூர்பாகு டப்பா ! டெக்ஸ் வில்லரின் அதி தீவிர ரசிகரான இந்நண்பர் நம்மை சந்திக்கவே குடும்பத்தோடு புறப்பட்டு வந்திருந்தார் !! இனிப்பாய் அங்கே கரைந்தது கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நெய் மைசூர்பாகு மாத்திரமல்ல என்பதை நான் சொல்லிடத் தேவையும் உண்டா - என்ன ?////.....
////என்னுடைய மிகச்சிறிந்த நினைவு முதன்முதலில் தங்களை பெங்களூரு 2012 காமிக்கானில் சந்தித்ததே... பூனையார் சொன்ன மாதிரி , உங்களை முதல் முதலில் சந்தித்தபோது பேச்சு வர்ல எனக்கும். ////
Deleteஅப்போ உங்க வீட்டுக்காரம்மாவும் கூடவே இருந்தாங்கதானே? அப்படின்னா உங்களுக்குப் பேச்சு வராமப் போனது இயற்கைதானே? ;)
டியர் விஜயன் சார்,
ReplyDelete"வலைப்பூவில் தொடர்ந்து ஐந்து வருடங்கள் எழுதி வருவது லேசுப்பட்ட..." எனத் தொடங்கி முன்னர் முக்கால் பேஜுக்கு முழுக் கவிதை வடித்து இருப்பேன். இப்போது சுருக்கமாக மனமார்ந்த வாழ்த்துக்களுடன் முடித்துக் கொள்கிறேன்! ;)
சண்டை, சச்சரவு என இங்கு கணிசமாகவே நேரத்தை வீணடித்திருந்தாலும், காயப் பட்டும் படுத்தியும் இருந்தாலும், மேல்மட்ட நினைவுகளில் தங்கி இருப்பவை என்னவோ அந்நாளைய சுவாரசிய விமர்சனங்களும், நண்பர்கள் மற்றும் "அன்பர்களுடனான" விறு விறு விவாதங்களும், பரஸ்பர கால் வாரல்களும் தான்! நண்பரே என்று தொடங்கி சகட்டு மேனிக்கு வாருவதும், வழங்குவதும் என... என்ன தான் இருந்தாலும் அந்நாளைய செட்டு போல வராது! :)
இப்படிக்கு,
முன்னாள் பின்னூட்டன்
ஓய்...கார்த்திக்!!!
Deleteஅதற்காக நீர் இங்கு பதிவிடாமல் இருந்துவிடுவீரா...?
நம் அன்பு ஆசிரியரின் தளமல்லவா இது...?
விவாதங்கள்/கால்வாரல்கள்....
இவை அனைத்தையும் விட நம் ஆசிரியரின் மீதான அன்பும்,காமிக்ஸ் மீதான காதலும் தானே பிதானம்.
டார்ச்சரான விமர்சனங்களால் ஆசிரியரை வறுத்தெடுப்பவன் தானே நானும்.ஆனால் அது ஒரு விஷயமே அல்ல.
அழகான உங்கள் எழுத்து நடையால் தொடர்ந்து பதிவிடுங்கள்.
காத்திருப்போம்.
// ஓய்...கார்த்திக்!!!
Deleteஅதற்காக நீர் இங்கு பதிவிடாமல் இருந்துவிடுவீரா...? //
அதானே... உங்கள் பதிவுகளை மிஸ் செய்யும் நபர்களில் நானும் ஒருவனே...
//டார்ச்சரான விமர்சனங்களால் ஆசிரியரை வறுத்தெடுப்பவன் தானே நானும்.ஆனால் அது ஒரு விஷயமே அல்ல.///--- அதானே....
Deleteஇதற்காகவா இங்கு வராமல் இருப்பீர்கள் நண்பரே கார்த்திக் சோமலிங்கா..???
பிளேடு Vs பூனையாரின் டுயூல்களுக்கு நாங்கள் எல்லாம் பெருங்கூட்டமாகன ரசிகர்கள் அல்லவா!!!
மீண்டும் வாருங்கள் கார்த்தி...
உங்களை இன்ஸ்பைரேசனாக கொண்டு எழுதி பரிசெல்லாம் வாங்கி உள்ளேன் அய்யா!!!
வணக்கம் பின்னூட்டன்:)
Delete+1
அகமத் பாஷா அவர்களின் கருத்தை வரிக்கு வரி வழிமொழிகிறேன் ...
Deleteமேலும் சில தினங்களுக்கு முன் ஒரு நண்பர் காமிகஸ் ஒரு அலசல் என்ற தங்களின் பதிவு தொகுப்பை படிக்க நேர்ந்தது நண்பரே ..மிகவும் அருமை ..
அதற்கும் ஒரு வாழ்த்துக்கள் ...:-)
நண்பர் மூலமாக...என படிக்கவும் ..
Deleteப்ளேடு பீடியாவுக்கு ரெக்கை முளைத்துடுத்து... ப்ளாக்கை விட்டே பறந்ந்ந்து போயிடுத்து...
Delete@T.K. AHMEDBASHA:
Deleteநண்பரே, மேற்சொன்ன கருத்து, ஆசிரியரின் கீழ்க்கண்ட கேள்விக்கான பதில் மட்டுமே: //இந்த 60 மாதங்களுள் உங்களின் ஆதர்ஷ நினைவுகள் எதைச் சார்ந்தவையோ//
இந்த நினைவுகளும் காமிக்ஸ் காதலின் ஒரு அங்கம் தானே?! மற்றபடி, எனது காமிக்ஸ் காதலை - காமிக்ஸ் படிப்பதிலும், இங்கே வாரம் தவறாமல் எட்டிப் பார்ப்பதிலும் காட்டிக் கொண்டு தான் இருக்கிறேன்! :)
@SV VENKATESHH:
நன்றிகள் நண்பரே!
@சேலம் Tex விஜயராகவன்:
வாழ்த்துகள் நண்பரே!!! ஆனால், காணாமல் போன பதிவரை எல்லாம் இன்ஸ்பிரேஷன் லிஸ்டில் வைத்திருப்பது - கபாலி தமிழில் சொல்வதென்றால், "மிகுதி"! :)
@Satishkumar S:
வணக்கம் பிளஸ்ஒன்! :D
@Paranitharan K:
நன்றி நண்பரே, அதைத் தொகுத்த நண்பருக்கும்!
@Erode VIJAY:
பூனை கிளியை பயமுறுத்திடுத்து, அதான் பறந்ந்ந்து போயிடுத்து! :P
Karthik Somalinga : வாழ்த்துக்களுக்கு நன்றிகள் கார்த்திக் ! இன்றைய பிஸியான உலகில் நேர நெருக்கடிகள் ஒவ்வொருவருக்கும் ஒருவிதம் ! அதனுள் காமிக்ஸ் வாசிப்புக்கென சமயம் ஒதுக்குவதே மகிழ்வான விஷயம் தான் ! அவ்வப்போது இங்கே பதிவிடவும் நேரம் கிட்டின் icing on the cake !
Deleteபோன வாரம் A+B+C+D (silver சந்தா ) online ல பெங்களூர் க்கு listing செய்ய கேட்டு இருந்தேன். நீங்கள் திங்கள் அன்று listing செய்வதாக சொல்லி இருந்திர்கள். இன்னும் ஆக வில்லை. இந்த வாரம். முடிந்தால் நாளை listing செய்து விடவும்.
ReplyDeleteGaneshkumar Kumar : Sorry !! இன்றிரவு நிச்சயம் போடச் செய்கிறேன் சார் !
Deleteநான் வரும் சென்னை புத்தக விழாவை மகவும் ஆர்வத்தோடு எதிர் பார்க்கிறேன்
ReplyDeleteLate Review.
ReplyDeleteJust finished "என் பெயர் டைகர்" - முதல் பாகம் மிக சுமார், கொஞ்சம் சரித்தர நிகழ்வுகள் கதையில் உள்ளதால் இராண்டாம் பாகத்திர்குள் நுழைந்தேன். அங்கேயிருந்து கதை சூடு பிடித்தது, நிகழ் கால கதை மற்றும் டைகர் flashback என இரண்டு விரு விரு கதைகள் parallel ஆக பயணித்து நிறைவான கிலைமாக்ஸுடன் நிறையுற்றது.
பிறித்து போடாமல் ஒரே புத்தகமாக போட்ட ஆசிரியருக்கு ஒரு பாறாட்டு.
புத்தகத்தின் தரம் சூப்பர், கதையை தொடர்ந்து follow செய்ய உதவியாக இருந்தது.
அதிரடி ஆக்ஷன் குரைவுதான் என்றாலும், கதை நெடுகிலும் ஒரு டென்ஷனை உணரமுடிந்தது.
உரு நிறைவான காமிக்ஸ் படித்த அனுபவத்தை தந்தது.
அடுத்து டெக்ஸ் "சர்வமும் நானே", படிச்சிட்டு வர்ரேன்
+1
Deleteஎனது ஒரு நண்பர் இந்த புத்தகத்தை இரவல் வாங்கி படித்து இப்பொது சந்தா காரர் ஆகிவிட்டார் :)
V Karthikeyan : போன மாதத்து இதழ்களே எப்போதோ வெளியானவைகளாய் எனக்குத் தோன்றிடுகின்றன சார் ; "எ.பெ.டை" ஒரு மகாமகத்துக்கு முன்பானது போல் நினைவு !!
DeleteBut லேட்டெனினும், சுறுசுறுப்பான விமர்சனம் ! அவ்வப்போது எழுதுங்களேன் ?
:)
ReplyDeleteமனம் கமழும் நினைவுகள் தாம் எடிட் சார் !
உங்களின் 2017 அட்டவணை ஆவலைத்தூண்டும் வகையில் அமைத்திருக்கிறீர்கள். அந்த திகில் ஸ்பெஷல் கி நா ஸ்பெஷல் ஆகா உருமாறியது கவனிக்கத்தக்கது எல்லாம் நன்மைக்கே. 2017ஐ ஆவலுடன் அனைவரும் எதிர்நோக்கிஇருக்கிறோம் எடிட்.
பக்கெட் சைஸ் புக்கு போட்டால் நான் மட்டும் தினமும் நூறு கமெண்ட் போடுவேன் .........ஏதாவது ஐடியா உண்டா ஆசான்.......ஒரு ஆறுமாதத்திற்கு முயற்சி பண்ணலாமே......
ReplyDeleteபாகெட் சைஸ் ஆதரவாளர்கள் வாங்கோ ......
///
Deleteபாகெட் சைஸ் ஆதரவாளர்கள் வாங்கோ ///
மந்திரியார் கூப்பிட்டா, பாக்கெட் பக்கெட் னு எந்த சைசுக்கும் ஆதரவு தரத்தயாராக இருக்கிறோம்.!!
ஒரேயொரு சின்ன நிபந்தனையோடு,
அந்த பாக்கெட் சைசில் புதிய கதைகள் கலரில் வரவேண்டும் அவ்வளவே..!!
//அந்த பாக்கெட் சைசில் புதிய கதைகள் கலரில் வரவேண்டும் அவ்வளவே..!!//
Deleteமேச்சேரி சார் +1
ஆசான் தோ ரெண்டாவது பார்டி .........
Deleteபேர எழுதிகோங்கோ
அப்புறம் வண்ணத்தில் வண்ணத்தில் வண்ணத்தில் மட்டுமே ...
யாருபா அந்த நாலாவது பார்ட்டி .......
Deleteதப்பா கூட்டினாலும் நமக்கு சாதகமாகவே கூட்டனும் .........
///பாகெட் சைஸ் ஆதரவாளர்கள் வாங்கோ///
Deleteபாக்கெட் சைசில் புதிய கதைகள் கலரில் வரவேண்டும்.
மந்திரியாரே, நீங்க ஸ்டார்ட் பண்ணிய வண்டி தடம் மாறி பயணிக்குது போலிருக்கே!!
Deleteபுதுசு கண்ணா புதுசு :-)
எடிட்டர் தற்போது ஹாட்லைன் எழுதும்போது,பல கலர் டிசைன் மேல் சின்ன எழுத்துக்களில் எழுதுவதையே படிக்க சிரமமா உள்ளது.இதில் பாக்கெட் சைஸ்வேறா.? தற்போது உள்ள வாசகர்களில் 80% 40 + தான்.
Deleteஅட...திடீர் மோகம் ஏனோ மந்திரியாரே பாக்கெட் / பக்கெட் சைசுக்கு ?
Deleteநான் வேணும்னா முதுகுப்பக்கமா பெரிய பாக்கெட் வச்சுத் தச்ச சட்டைகளைப் போட்டுக்கறேன். நீங்க 'தலையில்லாப் போராளி' பாக்கெட் சைஸுக்கே எல்லா புத்தகங்களையும் போட்டுடுங்களேன்? :D
Deleteஅப்புறம் இந்தியா டெஸ்ட் போட்டி தரவரிசையில் முதலில் வந்தால் ஒரு ஸ்பெஷல் ரிலீஸ் பண்ணுறேன்னு எப்பவோ சொன்னமாதிரி நியாபகம் ...! :P
ReplyDeleteஅத்தையும் பாகெட் சைஸ் ல போடு சாரே ......
Delete///இந்தியா டெஸ்ட் போட்டி தரவரிசையில் முதலில் வந்தால் ஒரு ஸ்பெஷல் ரிலீஸ் பண்ணுறேன்னு எப்பவோ சொன்னமாதிரி நியாபகம் .///
Deleteவிளையாட்டை பேஸ் பண்ணி ஒரு கிராபிக் நாவல் போடச்சொல்லி கேட்டுவிடலாமா சார்..!!?
விளையாட்டுன்னா கிரிக்கெட், ஃபுட்பால், பேஸ்பால் இப்படி..! நம்ம குருபூனையார் ஆசைப்படுற மாதிரி இல்லை..!:-)
@ Sathiskumar & கிட்ஆர்ட்டின்
Deleteஎன்னிக்காச்சும் ஒருநாள் இந்தியா மக்கள் தொகையிலும் முதலிடம் பிடிக்கும்! அப்போ எந்தமாதிரி கதை கேட்பீங்களாம்? ;)
///என்னிக்காச்சும் ஒருநாள் இந்தியா மக்கள் தொகையிலும் முதலிடம் பிடிக்கும்! அப்போ எந்தமாதிரி கதை கேட்பீங்களாம்? ;)///
Deleteபாத்திங்களா பாத்திங்களா
கேட்டிங்களா கேட்டிங்களா
கீ ஈச் வெர்ரி(றி) டேஞ்சரசு ஃபில்லோவ் ..!! :-)
மியாவ்காரரே.......
Delete***இந்தியா மக்கள் தொகையிலும் முதலிடம் பிடிக்கும்!***
அதுக்கு எவ்ளோ நாள் ஆகும்னு தெரிஞ்சால் .....
ஆசான் கிட்ட சொல்லி ஸ்பெசல் புத்தகம் தயார் பண்ணிபுடலாம்.....
///அதுக்கு எவ்ளோ நாள் ஆகும்னு தெரிஞ்சால் .....
Deleteஆசான் கிட்ட சொல்லி ஸ்பெசல் புத்தகம் தயார் பண்ணிபுடலாம்.///
அத்தையும் பாகெட் சைசுலதானே???
வாங்க மந்திரியாரே! இந்தியா மக்கள் தொகையில் முதலிடம் பிடிக்கும்போது கூட்டுக் குடும்பத்தின் மகத்துவத்தை உணர்த்தும்படியான ஒரு கி.நா கேட்கலாம்னு யோசிச்சிக்கிட்டிருந்தேன்! அதற்குள் இந்த பேடுபாய் கிட்ஆர்ட்டின் என்னியப் பாத்து 'டேஞ்சரச்சு பஃப்பல்லோ'னு சொல்றாரு!
Delete///அத்தையும் பாகெட் சைசுலதானே???///
Deleteவேணாம்! 'தலையில்லாப் போராளி' சைஸுல போடச் சொல்லலாம்! அப்பத்தான் சித்திரங்களைத் தெளிவாப் பார்த்து ரசிக்கமுடியும்!
(ஏனோ 'ஓவியப் பார்வை' புகழ் ராஜ்முத்துக்குமாரின் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை!)
######'தலையில்லாப் போராளி' சைஸுல போடச் சொல்லலாம்....###
Deleteபூனைமீஸ் காரு ஆட்டைய கலச்சுடுவார் போல இருக்கே....
ஈ.வி. சார் சொல்வது போல புதிய கதைகளை "தலையில்லா போராளி" ஸைசில் போட்டால் சித்திரங்களை தெளிவாக பார்த்து ரசிக்க முடியும். புதிய கதைகள் 'த.போ.' ஸைசிலேயே வரட்டும். ஆனால், பழைய மறுபதிப்புகள் பாக்கெட் ஸைசில் வெளியிட்டால் நன்றாக இருக்கும். 1999'இல் வெளிவந்த "மரண தூதர்கள்" கதையை என்றாவது ஒரு நாள் மறுபதிப்பாக வெளியிட்டால், அதே பாக்கெட் ஸைசில் முழுவண்ணத்தில் வெளியிடுங்கள். அந்த கதையை முழு வண்ணத்தில் அதே பாக்கெட் ஸைசில் படிக்க வேண்டும் என்று ஆசை.
Deleteநான் இந்த ஆட்டைக்கே வரலை சாமி !! இன்னமும் கணை தொடுக்கும் சிந்தனையில் தலீவர் லயித்துக் கிடக்கும் நேரம் - நான்பாட்டுக்கு ஸ்போர்ட்ஸ் கி.நா. ; கசமுசா கி.நா. என்று உங்கள் பேச்சைக் கேட்டு வெளியிட்டால் அப்புறம் பூமி தாங்காது ; பேப்பர் மில்கள் இயங்காது ; கூரியர்கள் கோவிந்தாவாகிப் போகும் ; தபால் இலாக்கா ஸ்தம்பித்துப் போகும் !!
Deleteஅந்த பாக்கெட் சைசில் புதிய கதைகள் கலரில் வரவேண்டும் அவ்வளவே..!!
ReplyDelete+11111
அப்படித்தான் அப்படித்தான் ......
Deleteஅறிவரசு @ ரவி.!& மதியில்லா மந்திரி.!
Deleteஉஸ்ஸ்ஸ்........யப்ப்பபப......இப்பவே கண்ணைகட்டுதே..!
அது தான் இளவரசியார் வண்ணத்தில், பாக்கெட் சைசில் ஆஜராகவிருக்கிறாரே நண்பர்களே ?
Deleteவண்ணத்தில்...
Deleteபாக்கெட் சைஸில்...
அஜய் சாமியின் அட்டைப்படத்தில்...
மாடஸ்டிக்கு கல்யாணக் களை வந்துட்டாப்ல இருக்கே... ;)
ஜனவரி இதழ்களை முடிந்த அளவுக்கு சீக்கிரம் அனுப்புங்க சார்,இதழ்களையும் மாதமொரு சர்ப்ரைஸ் பரிசையும் காண கண்கள் ஆவலுடன்,கைகள் பரபரப்புடன்.
ReplyDeleteஅறிவரசு @ ரவி!
Deleteஅதே.! அதே.!
Not too long a wait !!
Delete+100
ReplyDeleteசார் அட்டைப்படம் அள்ளுது...இரண்டுமே தூள்...அப்படியே பின்னட்டையாக ஒரிஜினலை அப்படியே உபயோகித்திருக்கலாம்...இரண்டு அட்டயும் ஒன்றையொன்று விஞ்சி இருக்கும்..அட்டகாசம்...
ReplyDeletewe are waiting for January book festival!!!!!???
ReplyDeleteWarm welcome ji
DeleteAll your new and good tries we are all in your back...
ReplyDeleteThanks for life's sweetest and unforgettable memories in childhood age, we welcome!
ReplyDeleteSiva Lingam : :-)
Delete60 மாதங்களில் நான் ஒரு 50மாதமாவது ொடர்ந்து படிளேன். ஆனால் மௌன வாசகனாய்.
ReplyDeleteபல நேரங்களில் எனது கருத்தை பதிய மொபைல் போன் குரோமில் தமிழ் தட்டச்சு குளறுபடி பண்ணுவதால், அதிகம் மெனக்கெடுவதில்லை.
தற்போதுகூட வெளியில் தட்டி இங்கு போட்டுள்ளேன்.
350 பதிவுகளில் எத்தனை பதிவுகளை நான் திரும்ப திரும்ப பலமுறை படித்துள்ளேன் என்ற கணக்கு எனக்கே தெரியாது. ஏனென்றால் போரடிக்காத/அலுக்காத/ஹாஸ்சியமான எழுத்து நடை.
தொடருங்கள் சார். நாங்கள் எப்போதும் உங்கள் பின்னே...
தற்போது வாட்ஸ்அப் குரூப் இருந்தாலும், தெளிவான விவரங்களை உங்கள் பிலாக்கே தருகிறது.
நன்றி சார்.
-- ஹசன் --
//போரடிக்காத /அலுக்காத ஹாஸ்யமான எழுத்து நடை //
Deleteசூப்பர்.! சூப்பர்.! ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம்.!
Hassan MOUGAMADOU : தமிழில் தட்டச்சு செய்வதன் சிரமம் நிறைய நண்பர்களை மௌன வாசகர்களாக்குவது புரிகிறது சார் ! வரும் காலங்களில் வாய்ஸ் அசிஸ்டன்ட் போல் ஏதேனும் ஒரு மென்பொருள் இதற்கும் கண்டுபிடிக்கிறார்களா என்று பார்க்கலாம் !
DeleteHassan MOUGAMADOU & கேப்ரியல். : நன்றிகள் ஒரு நூறு !!
ஜனவரி முதல்வார கடைசியில் ஊர் திரும்ப உள்ளதால், அதற்குள் ஜனவரி மாத காமிக்ஸ் கிடைத்துவிடுமா??
ReplyDeleteகடந்த 4 மாதங்களும் எனக்கு லேட்டாகவே கிடைத்துள்ளது.
காரணம் கூரியர்காரர்கள் அல்ல.
2017 ஆரம்பம் நல்லபடியாக அமைய விரும்புகிறேன்.
முன் நன்றி
-- ஹசன் --
Hassan MOUGAMADOU : கவலையே வேண்டாம் சார் ! நிச்சயம் கிடைக்கும் !
Deleteநண்பர்களே, என்னுடைய கேள்வி இந்த blog சம்பந்தப்பட்டது அல்ல. நான் தற்போது என்னிடம் இருக்கும் பழைய லயன் மற்றும் முத்து காமிக்ஸ் படித்து கொண்டு இருக்கிறேன். நான் சேகரித்து வைத்துள்ள காமிக்ஸ் எல்லாம் பைண்ட் செய்து வைத்து இருக்கிறேன். அதில் சில காமிக்ஸ்களுக்கு அட்டை இல்லை. இதனால் அதன் தலைப்பு தெரியவில்லை.
ReplyDeleteஎன் கேள்வி இப்பொழுது ஒரு ஆர்ச்சி புக் புதியது. கதை என்னவெனில், ஆர்ச்சி, தாம்சன், விக்டர் ஒரு பொருட்காட்சியை கண்காணித்து பாதுகாக்க வரவழைக்க படுகின்றனர். ஒரு எதிரி அந்த பொருட்காட்சியை மூட சதி செய்கிறான். ஆர்ச்சி அதை முறியடிக்கிறது.
இந்த கதையின் தலைப்பு யாருக்காவது தெரிந்தால் பதில் சொல்லுங்கள் ப்ளீஸ்.
@ பிரபு
Deleteஉங்களுக்கான பதில்...இங்கே'கிளிக்'
அதிரடி ஆர்ச்சி
Deleteஹெலிகாப்டரை பறந்து பிடித்து மரத்தை வேரோடு பிடுங்கியடித்து பல சாகசங்கள் செய்யும் ஆர்ச்சியை மக்கள் பாராட்ட,
"உங்கள் பாராட்டுகளை ஆர்ச்சி ஏற்றுக்கொள்கிறது, ஆர்ச்சி ஒரு மானுடன் இல்லை என்றாலும் " என்று ஆர்ச்சி பந்தா பண்ண,
தாம்சனும் விக்டரும்
பயலுக்கு தலைக்கனம் ஏறிவிட்டது, ஆர்ச்சிக்கு ஒரு துணைவனை உண்டாக்குவோம், அது ஒரு எலக்ட்ரானிக் அற்புதமாக இருக்கும் என்று சொல்லியிருப்பார்கள் கதை முடிவில்.
சொன்னபடி ஆர்ச்சிக்கோர் துணைவனை உண்டாக்கினார்களா மாயாத்மா???
@ ஓ.பி+கு
Deleteஆர்ச்சிக்கு ஒரு துணைவனை உருவாக்கினார்களோ இல்லையோ..எனக்கு தெரியாதுங்க,ஆனா தாம்சனும் விக்டரும் இப்படி பேசியது இதே மாதம்..இதே நாள்..வேறுஒரு வருடத்தின் கிறிஸ்மஸ்கொண்டாடத்தின் போது... ;)
ஓ.பி+கு=ஒல்லிபிச்சானும் குண்டுசும் புரபைல் செம... :)
மாயாவி அவர்களே, மிக்க நன்றி. நான் ஒரு பெரிய லிஸ்ட் excel il வைத்து இருக்கிறேன். அதில் என்னிடம் உள்ள காமிக்ஸ்கள், எது எல்லாம் என்னிடம் இருக்கிறது, எது தொலைந்து போனது, கதைகளின் சுருக்கம் என்று எல்லா விவரங்களும் சேகரித்து கொண்டு இருக்கிறேன்.
Deleteஅதில் சில சந்தேகங்கள் இருக்கின்றன. நான் உங்களிடம் தேவைப்படும்போது கேட்கிறேன்.
உங்கள் துரித உதவிக்கு நன்றி
///ஓ.பி+கு=ஒல்லிபிச்சானும் குண்டுசும் புரபைல் செம...///
Deleteசெம Performers ஓட போட்டோ செம்மையாகத்தானே இருக்கும் வேதாளரே.! (உங்களுடைய புரொஃபைல்தானே உங்களுடைய மிகப்பெரிய அடையாளம்!?)
அதுமட்டுமின்றி i love
STAN LAUREL & OLIVER HARDY ..!!
ம்ம்ம்..(ஏக்கப்பெருமூச்சு)
இவங்களோட படங்களும் காமிக்ஸா வந்தா நல்லாத்தான் இருக்கும். .!!
KiD ஆர்டின் KannaN : 1960-களின் இறுதிகளிலும், '70 களின் பெரும்பான்மைக்கும் இங்கிலாந்தில் தோர்ப் & போர்ட்டர் என்றொரு பதிப்பகம் இருந்தது. அமெரிக்காவிலிருந்து இந்தச் சிரிப்பு இரட்டையரின் கதைகளுக்கு உரிமைகளை வாங்கி, அழகாய், வண்ணத்தில் வெளியிட்டு வந்தனர் ! அவை எல்லாமே ரூ.10 விலையில் அந்நாட்களில் இந்தியாவில் சுடச் சுட கிடைக்கும். என்னிடம் அவை ஒரு குவியலே உண்டு & ஓராயிரம் தடவைகள் அவற்றை நான் வாசித்திருப்பேன் !!
Delete4 அல்லது 5 பக்கச் சிறுகதைகளாய் தூள் கிளப்பும் இந்தத் தொடர் சுவாரஸ்யமானதே ! ஆனால் துரதிர்ஷ்டவசமாக நம்மில் பலருக்கும் இந்தச் சிற்சிறுக் கதைகள் என்றாலே ரசிக்க மாட்டேன்கிறது ! தவிர, mainstream காமெடி நாயகர்களான லக்கி லூக் & சிக் பில் தாண்டிய இதர சமீப வரவுகள் தங்களை முழுமையாய் நிலைநாட்டிக் கொண்டுவிட்டதாக 100 % அடித்துச் சொல்ல முடியா நிலையில் - லாரல் & ஹார்டியை நம்மவர்கள் எவ்விதம் அணுகுவார்கள் என்பது கேள்விக் குறியே !
ஒரு வழியா சந்தா கட்டியாச்சு.பொன்ராசு ஹேப்பி அண்ணாச்சி...சார் புக் எப்ப அனுப்புவீங்க....ட்யூராங்கோ i am waiting
ReplyDeleteகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : விரைவில்...வெகு விரைவில்...!
Delete@ ALL : நன்பர்களே,
ReplyDeleteவணக்கம். சென்னையில் அடுத்த வெள்ளிக்கிழமை முதல் துவங்கிடவுள்ள சென்னை புத்தகக்காட்சி 2017 -ல் நமக்கு முதன்முறையாக டபுள் ஸ்டால் ஒதுக்குப்பட்டுள்ளது ! நமது ஸ்டால் நம்பர்கள் 624 & 625 !!
BAPASI அமைப்பிற்கு நமது உளமார்ந்த நன்றிகள் !
PLEASE DO VISIT US !!
ஸ்டால் கிடைத்திருப்பதற்கு வாழ்த்துகள் எடிட்டர் சார்!
Deleteஇரட்டை ஸ்டால் கிடைத்திருப்பதில் இரட்டை மகிழ்ச்சி! கூட்டம் சற்றே அதிகரித்தாலும் 9×9 அளவிலான ஒற்றை ஸ்டால் திணறிவிடுவது நிஜம்! அந்தக்குறை களைந்து, இம்முறை மக்கள் சற்று நிதானமாகவும், காற்றோட்டமாகவும் புத்தகங்களைப் பார்வையிட இயலுமென்பது நிம்மதியளிக்கிறது!
இரட்டை ஸ்டாலுக்கான உங்கள் முயற்சிக்கு இரட்டை வாழ்த்துகள்!
ஸ்டால் கிடைத்திருப்பதற்கு வாழ்த்துகள் எடிட்டர் சார்!
Deleteஇரட்டை ஸ்டால் கிடைத்திருப்பதில் இரட்டை மகிழ்ச்சி! கூட்டம் சற்றே அதிகரித்தாலும் 9×9 அளவிலான ஒற்றை ஸ்டால் திணறிவிடுவது நிஜம்! அந்தக்குறை களைந்து, இம்முறை மக்கள் சற்று நிதானமாகவும், காற்றோட்டமாகவும் புத்தகங்களைப் பார்வையிட இயலுமென்பது நிம்மதியளிக்கிறது!
இரட்டை ஸ்டாலுக்கான உங்கள் முயற்சிக்கு இரட்டை வாழ்த்துகள்!
Erode VIJAY : இரட்டை ஸ்டால் என்பதற்காக இரட்டை வாழ்த்துக்களுக்கு நன்றிகள் !
Deleteஒரு சின்ன ஸ்டாலுக்குள் பத்துப் பேர் இருந்தாலே அடைசலாய் இருப்பது போல் வெளியிலிருந்து பார்க்கும் போது தோன்றிடுவதால் நிறைய பேர் உள்ளே கால்வைக்க மெனக்கெடுவது கூட இல்லை என்பதை rush hours -ல் கவனித்திருக்கிறேன் ! ஆனால் இந்த டபுள் ஸ்டால் புலியினைப் பிடிக்க எனக்குள் இருக்கும் 'கஞ்சன் கருப்பண்ணசாமி' மனம் ஒப்பியதே கிடையாது ! ஆனால் இந்தாண்டு ஜுனியர் எடிட்டர் முயற்சித்துப் பார்ப்போமே ? என்று கொக்கியைப் போட்ட போது மறுக்க முடியவில்லை !
பாத்தீங்களா எடிட்டர் சார்... கமெண்ட் கூட இரட்டையாவே விழுது!
Deleteஸ்டால் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் புதிதாய் ரேக்குகள் கூட ஆர்டர் செய்து வாங்கி வைத்து விட்டோம். இதர பதிப்பகங்கள் பயன்படுத்துவது போலான சாய்வான தட்டுக்கள் கொண்ட ரேக்குகள் ! So வெளியிலிருந்து பார்க்கும் போதே புத்தகங்கள் அழகாய்த் தெரிந்திடும் !
Deleteஸ்டால் உறுதியாகும் வரையிலும் வாய் திறக்க வேண்டாமே என்று தான் பெவிகால்ப் பூச்சு !!
So எல்லாமே தயார் ; ஆண்டவன் அருளும், வாசகர்களின்ஆர்வமுமே இப்போதைய / எப்போதைய தேவைகள் !!
///இதர பதிப்பகங்கள் பயன்படுத்துவது போலான சாய்வான தட்டுக்கள் கொண்ட ரேக்குகள் ! So வெளியிலிருந்து பார்க்கும் போதே புத்தகங்கள் அழகாய்த் தெரிந்திடும் ! ///
Deleteஅட்டகாசம் எடிட்டர் சார்! இதுவும்கூட ஒரு சிறு குறையாகவே இத்தனைநாளும் இருந்துவந்தது! இதனையும் களைந்திருப்பதற்கு ஏற்கனவே சொன்ன இரட்டை வாழ்த்துகளோடு இலவச இணைப்பாய் இன்னுமொரு வாழ்த்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்!
(இந்த சாய்வு ரேக் விசயமும் ஜூ.எடியின் தலையீடுதானா? கஞ்சர் கருப்பண்ணசாமிக்கு வயிறெல்லாம் எரியுமே?) ;)
Yeeeyahee.. Great news... Will try to catch-up with you all on the D day.
ReplyDeleteThis time sales and our comics reach should also be doubled.. May the almighty help us all..
///This time sales and our comics reach should also be doubled.. May the almighty help us all.. ///
Delete+1
+101
Delete