Powered By Blogger

Tuesday, November 29, 2016

நவம்பரில் டிசம்பர் ..!

நண்பர்களே,

வணக்கம். டிசம்பர் இதழ்கள் இன்றைய மதியமே கூரியரில் புறப்பட்டு விட்டன !

நவம்பரிலேயே   டிசம்பருக்கான இதழ்களை அழகு பார்க்கும் வாய்ப்பு சாத்தியமாகியது - அதனால் ஒரு நாள் முன்பாகவே "பொட்டிகள்" புறப்பட்டு விட்டன ! காலையில் கூரியர் கதவுகளை தட்டிப் பாருங்களேன் ?

மீண்டும் சந்திப்போம்.
இப்போது விற்பனையாளர்களுக்கு புத்தகங்கள் வைக்க பிரத்தியேக ரேக் தருகிறோம் !

அப்புறம், இந்தாண்டில் நாங்கள் வாங்கியுள்ள மதிப்பெண்கள் என்னவென்று தெரிந்திட ஆவலாய்க் காத்திருப்போம் ! கூரியர் "பொட்டிகளுக்குள்" உள்ள இந்த ரிப்போர்ட் கார்டைப் பூர்த்தி செய்து அந்தக் கவரில் போட்டு அனுப்பிடுங்களேன் - ப்ளீஸ் ? 





And last - but not the least !! 


210 comments:

  1. குறள் பால்:அறத்துப்பால்.குறள் இயல்:இல்லறவியல்.அதிகாரம்:தீவினையச்சம்.
    குறள் 203:
    ''அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
    செறுவார்க்கும் செய்யா விடல்''.

    மு.வ உரை:
    தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர்.


    பரிமேலழகர் உரை:
    அறிவினுள் எல்லாம் தலை என்ப - தமக்கு உறுதி நாடும்அறிவுரைகள் எல்லாவற்றுள்ளும் தலையாய அறிவு என்று சொல்லுவார் நல்லோர், செறுவார்க்கும் தீய செய்யா விடல் - தம்மைச் செறுவார் மாட்டும் தீவினைகளைச்செய்யாது விடுதலை. (விடுதற்குக் காரணம் ஆகிய அறிவை 'விடுதல்' என்றும் , செய்யத் தக்குழியுஞ் 'செய்யாது' ஒழியவே தமக்குத் துன்பம் வாராது எனஉய்த்துணர்தலின், அதனை 'அறிவினுள் எல்லாம் தலை' என்றும் கூறினார். செய்யாதுஎன்பது கடைக்குறைந்து நின்றது. இவை மூன்று பாட்டானும் தீவினைக்குஅஞ்சவேண்டும் என்பது கூறப்பட்டது.).

    மணக்குடவர் உரை:
    எல்லா அறங்களையும் அறியும் அறிவு எல்லாவற்றுள்ளும் தலையானஅறிவென்று சொல்லுவர் நல்லோர்; தமக்குத் தீமை செய்வார்க்குந் தாம் தீமைசெய்யாதொழிதலை. இஃது எல்லாவற்றுள்ளுந் தலைமை யுடைத்தென்றது.

    ReplyDelete
  2. மகிழ்ச்சியில் முதலில் குறளை பதிவு செய்ய மறந்து விட்டேன்.

    ReplyDelete
  3. அனைவருக்கும் இரவு வணக்கம்.

    ReplyDelete
  4. விஜயன் சார், நமது புத்தகம்கள்வைப்பதற்கு பிரத்யோக அலமாரியை புத்தக விற்பனையாளர்களுக்கு கொடுப்பது நல்ல யோசனை! இது நமது இதழ்களை புத்தக விற்பனை நிலையம்களில் எல்லோருக்கும் வெளிச்சம் போட்டுகாட்டும்!! நமது விற்பனையை அதிகரிக்க ஒரு நல்ல வழி!

    ReplyDelete
  5. நாம் புத்தகத்தை காண எவ்வளவு ஆர்வமாக இருக்கிறோமோ அதைவிட பலமடங்கு அதிகமான ஆர்வமுடன் அதனை நம் கையில் சேர்ப்பதற்கு ஆசிரியர் செயல்படுவதை எண்ணி ஆச்சர்யப்படாமல் இருக்கமுடியவில்லை.
    இதற்கு காரணமான அத்தனை பேருக்கும் நன்றிகள் சார்.

    ReplyDelete
  6. Thank u sir.நீங்கள் சொன்ன மாதிரி மெய்ன் பிக்சர் ரிலீஸ் செய்துது விட்டீர்கள்.

    ReplyDelete
  7. இதற்கு காரணமான அத்தனை பேருக்கும் நன்றிகள் சார்.

    ReplyDelete
  8. வாவ்...
    10க்குள் இடம் கிட்டியது...

    நவம்பரில் டிசம்பர்///---செம்ம தலைப்பு சார்...
    தலைப்பே பதிவின் சாரத்தை பதிவு செய்திட்டது...சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. நண்பரே videos பார்த்து விட்டீர்களா? இல்லையா.

      Delete
  9. நல்ல முயற்சி வாழ்த்துக்கள் சார்....
    இதழ்கனள காண ஆவலுடன் உள்ளேன்....
    அட்னடப்படங்கனள பதிவிட்டு இருக்கலாம் சார்.....

    ReplyDelete
  10. Replies
    1. இங்க பேப்பர் காஷே கிடைக்கலையாம் இவருக்கு அட்ட காஷ் தேவைநாம்.... ஹ்ம்

      Delete
    2. இந்தியாவே அட்ட(Card)காஷை நோக்கித்தான் போய்கொண்டிருக்கு ரின்டின் சாரே. .!! :-)

      Delete
    3. @ கிட்ஆர்ட்டின்

      :D செம!

      Delete
    4. கிட் ஆர்டின் சார்.
      சூப்பர். ஒரு வாசகம் சொன்னாலும் அது திருவாசகமாகிவிட்டது.
      வினாவுக்கு விடையளித்ததோடு
      அந்த விடைக்குள் இன்றைய நிஜத்தையும் பதிவு செய்து விட்டீர்கள்!
      சூப்பர்.

      Delete
    5. மூக்கு உடைந்து கால் தெறிக்க ஓடும் படங்கள் பல

      Delete
    6. நீங்க சொல்லுவது இந்த அட்ட பூச்சியா?(ரத்தத்தை உறிஞ்சுவது)

      (Sorry Kannan இதை பதிவதற்க்கு. மனதில் தோன்றியதை டைப்பினேன்.
      கோபப்பட்டால் போன் பண்ணி திட்டவும்😂)

      Delete
  11. ///இப்போது விற்பனையாளர்களுக்கு புத்தகங்கள் வைக்க பிரத்தியேக ரேக் தருகிறோம் ///

    நல்ல முயற்சி சார்.! நமது இதழ்கள் தனியாக (கெத்தாக) தெரியும். .!

    ReplyDelete
  12. அதிகாலை வணக்கம்

    ReplyDelete
  13. காலை வணக்கங்கள் ஆசிரியரே :)
    நமது புத்தகங்களுக்கு பிரத்தியேக ரேக், மிக அருமை சார்

    ReplyDelete
    Replies
    1. இந்தக் குரலை எங்கேயோ கேட்ட மாதிரியே இருக்கே...

      Delete
    2. எங்கேயோ கேட்ட குரல் ...:-)

      Delete
    3. @Erode Vijay
      @கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல்
      @Paranitharan K
      வணக்கம் சகோதரர்களே
      நலமா உள்ளீர்களா
      நெட் கனெக்க்ஷன் இல்லை
      அலுவலகத்தில் எப்போதாவது தான் பயன் படுத்த முடியும்

      எல்லாரும் நல்ல பார்மில் இருக்கிறிர்களிங்க போல

      LOLZ brothers

      Delete
  14. இன்று புத்தகங்கள் கிடைக்கப்பெற்று குதூகலத்தில் திளைத்து மகிழ நண்பர்களுக்கு வாழ்த்துகள்!

    விற்பனையாளர்களுக்கு பிரத்யேக ரேக் - பிரமாதமான ஐடியா!!

    அதேமாதிரி "இப்போது வாசகர்களுக்கு புத்தகங்கள் வைத்துக்கொள்ள ஒரு பிரத்யேக பீரோ தருகிறோம்" அப்படீன்னு என்னிக்காச்சும் ஒருநாள் அறிவிப்பு வரும்னு திடமாக நம்புகிறோம்! :P ( குறைந்தபட்சம் ஒரு ட்ரங்க் பொட்டியாவது கொடுங்க பாஸ்.. புத்தகங்களை அதுல போட்டு குழிதோண்டி புதைச்சு வச்சுக்கிடறோம்) :D

    ReplyDelete
    Replies
    1. ///இப்போது வாசகர்களுக்கு புத்தகங்கள் வைத்துக்கொள்ள ஒரு பிரத்யேக பீரோ தருகிறோம்" ///

      அடேங்கப்பா..!! குருநாயர்ட்ட பீரோலுல வைக்கிற அளவுக்கு கலெக்ஷன் இருக்கும் போல..!!

      Delete
    2. ஜி பேங்ல லாக்கர் வெச்சிருக்கார் பூனையார் தெரியுமா ?

      Delete
    3. அப்படியே ....எங்களுக்கும் ஒரு அலமாரியை அனுப்ப முடியுமா சார் ..
      பதுங்கு குழில அடுக்கி வைக்க வசதியா இருக்கும் ..:-)

      Delete
    4. //"இப்போது வாசகர்களுக்கு புத்தகங்கள் வைத்துக்கொள்ள ஒரு பிரத்யேக பீரோ தருகிறோம்" அப்படீன்னு என்னிக்காச்சும் ஒருநாள் அறிவிப்பு வரும்னு திடமாக நம்புகிறோம்//

      +9 :D :P

      Delete
  15. D க்கு முன்னால E னு ஒரு விளம்பரம் வருமே சார் அது டூப் இது நிஜம் கலக்குங்க. அடுத்து ஜனவரிக்கு முன்னால் டிசம்பர் தானே சார். ?

    ReplyDelete
  16. அட யாராவது புக் வாங்கிட்டேன்னு சொல்லுங்களே. ?

    ReplyDelete
    Replies
    1. வாங்கிட்டேன் ஜீ..:-)

      Delete
    2. ஜனவரி க்கு என்ன ஸ்பெஷல் சார்

      Delete
  17. வாவ் .....வாவ் ......இன்று அலுவலகம் தாமதமாக செல்வதன் காரணமாக ...



    பார்சல் பொக்கிஷத்தை கைப்பற்றி ஆகி விட்டது ....

    நன்றிகள் சார் ...:-)

    ReplyDelete
  18. நீண்ட நாட்களுக்கு பிறகு கடல்யாழ்
    வரவு மகிழ்ச்சி.

    ReplyDelete
  19. மிக்க மகிழ்ச்சி! சம்பளம் வாங்குவதற்கு முன்பாகவே நம் புத்தகங்கள் கைகளில் கிடைப்பது மகிழ்ச்சியான தருணங்களே!

    ReplyDelete
  20. Good morning to all. 11.00 மணிக்கு புத்தகம் கைக்கு கிடைச்சிடும்.

    ReplyDelete
  21. பொக்கிஷ கவரை பிடித்தவுடன் உள்ளே ஒரு அலுவலக கவர் ....ஆஹா அடுத்த வருசத்தில் இருந்து தானே மாதம் ஒரு சர்ப்ரைஸ் ...இந்த மாதமே ஆசிரியர் தொடங்கி விட்டாரோ ...என ஒரு ஆச்சர்யம் ....


    உண்மையில் சந்தோச அதிர்ச்சியே ..ஆசிரியர் கையொப்பம் உடன் ஒரு நன்றி அட்டை ....மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது . ..நன்றிக்கு நன்றி சார் ..


    இன்னும் ஒரு சின்ன சர்ப்ரைஸ் ...அதனை நான் சொல்லாமல் இருப்பது தான் நண்பர்களுக்கு செய்யும் உதவி என்பதால் ஆசிரியரின் பெவிக்காலை நான் கொஞ்சம் எடுத்து கொள்கிறேன் ...:-)

    ReplyDelete
  22. Replies
    1. Kanaga Sundaram : போட்டாச்சே சார் !

      Delete
  23. பார்சல் வந்துட்டதேஏஏஏஏஏஏ....

    லக்கி...செம்ம...
    கலக்டர் ஸ்பெசல்னா என்னான்னு எடுத்துக்காட்டாக இதை சொல்லலாம்...
    ஹார்ட் கவரில் அட்டை காஷ்...
    கையில் வைத்து அழகு பார்த்து கொண்டே இருக்க செய்கிறது...
    டெக்ஸ் இம்முறை சரியான போட்டியை எதிர்கொள்வார் போல...

    நன்றி தெரிவித்து ஆசிரியர் மடல் ஒன்று ஜொலிக்கும் ஃபுளோரசன்ட் அட்டையில்..
    பட்டையை கிளப்புது...

    ReplyDelete
  24. அண்மைக்காலங்களில் அட்டைப்படங்களில் எது டாப், எது லைட்னு முடிவு செய்வதற்குள் கண்கள் பிதுங்கி விடுகின்றன. இம்மாதமும் அதுபோலவே,
    4ல் எது டாப்புனு பார்க்க கொஞ்சம் சிரமம் தான்...
    4வது இடம் டெக்ஸ் அட்டை(கதையில் தான் தல ஸ்கோர் செய்யனும்)

    3வது மறைக்கப்பட்ட நிஜங்கள்

    2வது...ம், லக்கி

    டாப் ஆஃப்த மன்த் சர்ப்ரைஸ் ஆக பொடியர்கள்...
    அந்த பிங் வண்ண பின்னணியில்,
    பொடி குழந்தையை சுற்றி சீனியர் , பொடினி, மற்ற பொடியர்கள் நின்று இருப்பது அட்டகாசமான காட்சி,
    அதிலும் அந்த மங்குனி ஸ்மர்ஃப் திரும்பி நின்றுள்ளான், அவன் முக பாவனை, மற்றவர்கள் முகத்தில் தெறிக்கும் மகிழ்ச்சி என நம்மை கட்டிப்போட்டு விடுகிறது...
    ஆண்டின் சிறந்த டாப்3அட்டைப்படங்களில் இடம்பிடிக்க "வானம் தந்த வரம்"- டார்க் ஹார்ஸ்...

    முதல் புரட்டலில் ஜேசன் மிரட்டுகிறது...

    2016ன் இறுதி மாத மற்றொரு சர்ப்ரைஸ் *"***"******* பற்றி ஆசிரியர் விவரிப்பது தான் சரியாக இருக்கும்...

    ReplyDelete
  25. எடிட்டர் சார் தங்களுடைய இந்த முயற்சி மிகவும் நல்ல பயன்கிடைக்கும்.இதனால் நமது காமிக்ஸின் விற்பனை அதிகரிக்க வாய்பு உள்ளது.
    மிகவும் மகிழ்ச்சி.
    இன்னும் புத்தகம் என் கைக்கு இந்த நிமிடம் வரை கிடைக்கவில்லை.ம்ம்ம்!

    ReplyDelete
  26. அனைத்து இதழ்களையும் புரட்டி ரசித்தாயிற்று ...


    ஆனால் தேடுகிறேன் ..தேடுகிறேன் ..தேடிக்கொண்டே இருக்கிறேன் ..

    லயனின் ஸ்மால் ஏஜ்ஜை.....:-(


    ReplyDelete
    Replies
    1. செயலாளர் அவர்கள் எங்கிருப்பினும் மேடைக்கு வருமாறு அழைக்கிறோம் ..

      Delete
  27. டிசம்பர் மாத நான்கு இதழ்கள் நவம்பர் முடியும் முன்னரே..

    லக்கி க்ளாசிக்ஸ் முன்கூட்டியே அட்டாகாஷ தரத்தில் ...

    ஒரு சிறு கவர் சர்ப்ரைஸ் ...


    என சூழல் காரணமாக கண்டனத்தை பதிவு செய்யலாமா ....வேண்டாமா ...


    இங்கி பாங்கி உண்டா ...இல்லையா ...


    விடை காண காத்திருக்கிறோம் செயலாளருக்கு ....


    பின்குறிப்பு....பத்து நாள் எந்த காமிக்ஸும் படிக்காமல் கொலை பட்டினியாக கிடப்பதால் செயலாளர் பார்த்து தீர்ப்பு சொல்லுமாறு வேண்டிகொள்கிறேன் ..:-(

    ReplyDelete
    Replies
    1. தலீவரே,

      உங்க தீக்கனல் பார்வையின் தகிப்பை என்னாலேயே தாங்கிக்க முடியலையே... எதிர்தரப்பின் நெலைமையை நென்ச்சா பாவம் பாவமா வருது தலீவரே!

      லக்கி க்ளாசிக்ஸின் ஃபில்லர் பக்கங்களுக்காக எதிர்தரப்பு நிறையவே உழைச்சுருக்கு தலீவரே! புத்தக வடிவமைப்பு பட்டையைக் கிளப்புதுன்னு பரவலா தகவல் வந்துக்கிட்டிருக்கு! அந்த உழைப்புக்கு மதிப்புக் கொடுப்போம் தலீவரே... இந்தத்தபா மைல்டா நம்ம கண்டனத்தை மட்டும் தெரிவிச்சுக்கிட்டு, போனாபோவுதுன்னு உட்டு வப்போம்! ஆனா அடுத்த தபா - நோ மோர் எச்சூச், ஆம்ம்ம்மா!

      இப்போ, மைல்டாக கண்டனத்தைத் தெரிவிப்பதற்கான வழிமுறை:

      இம்மாதப் புத்தகங்களின்...

      (1) அட்டையை கன்னத்தில் வைத்துத் தேய்த்து அதன் வழவழப்பையையும், குளிர்ச்சியையும் உணருவதைத் தவிர்ப்போம்!

      (2) பக்கங்களை சர்ர்ர்ரென்று புரட்டி 'ம்..ஹாஆஆ' என்று மை வாசத்தை குடல்வரை உள்ளிழுப்பதைத் தவிர்ப்போம்! ( இந்நேரம் மை வாசமே தீர்ந்துபோற அளவுக்கு நீங்க பலநூறு 'ம்..ஹாஆஆ' போட்ருப்பீங்கன்னு தெரியும் தலீவரே! )

      சங்கக் கண்மணிகளும் மேற்கண்ட போராட்ட வழிமுறைகளைக் கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்! (ஏதாச்சும் டவுட்டுன்னா - கேட்கலாம்)

      ம்..ஹாஆஆ... ( அட! கொட்டாவி விட்டேங்க. இன்னும் புக்கே வர்லயாக்கும்!)

      Delete
    2. ஓகே ...நன்றி செயலர் அவர்களே ...உங்கள் உத்தரவுக்காக தான் காத்து கொண்டு இருந்தேன் ..இனி படித்து விட்டு வருகிறேன் ..

      Delete
    3. Erode VIJAY @ தாங்க முடியலப்பா உங்க லொள்ள! செம காமெடி!

      Delete
    4. @Erode VIJAY
      இதனை செயல் படுத்துவது கடினமாயிற்றே செயலாளராரே :(

      Delete
  28. லக்கி ஸ்பெசலைப் பார்த்து பிளந்த வாயை மூடாமல் உள்ளார் மேச்சேரி மாம்ஸ் அவர்கள். அவர் வாய் வழியே நுழைந்த கொசு , ஈயாகி மாறி வெளயேறியது கூட உணராமல் மெய் மறந்துபோய் உள்ளார்.
    96பக்கங்களை கொண்ட லக்கி ஸ்பெசலுக்கு ஹார்ட்கவர் செட் ஆகுமா என யோசித்து வந்த அவருக்கு ஆனந்த அதிர்ச்சி.
    அட்டகாச அட்டையும், லக்கி கதைகளின் பின்னனி தகவல்களுடன், ஒரு ரியல் கலக்டர் எடிசனாக வெளிவந்தது கண்டு, காமெடி ரசிகரான அவர் உற்சாகத்தில் போட்ட குத்தாட்டம் காரணமாக மேச்சேரியில் நெட் டவர் கட் ஆகிட்டு. வேறொரு போனில் தொடர்பு கொண்டபோது அவரின் மகிழ்ச்சியையும் திருப்தியையும் என்னோடு பகிர்ந்து கொண்டார்.
    எடிட்டர் சார் ரிசர்வ் த பெஸ்ட் ஃபார் த லாஸ்ட் மன்த் என பாராட்டுதலை தெரிவிக்க சொன்னார்.

    ReplyDelete
    Replies
    1. ஓ....அப்படி போகுதா ரூட்டு ...நாங்க போன் பண்ணினா மட்டும் சுவீட்ச் ஆப் ன்னு வருது ....


      நேர்ல கவனிச்சுக்குறேன் ...கிர்ர்ர்..

      Delete
  29. டியர் எடிட்டர்

    இந்த மாதம் “லக்கி ஸ்பெஷல்” இந்த வருடத்திலேயே ஒரு மெகா சிக்ஸர் அடித்திருக்கிறது ! ஒரு தரமான இதழை கொடுத்து, அதன் விலைக்கு அதிகமாகவே நியாயம் செய்திருக்கிறீர்கள். உலகத்தரத்தில் ஒரு இதழ் என்று சொல்லும் அளவிற்க்கு சைலண்டாக வெளியிட்டு காமிக்ஸ் காதலர்களின் ஒட்டு மொத்த பாரட்டுகளையும் அள்ளி இருக்கிறீர்கள் !

    மொத்ததில் “லக்கி ஸ்பெஷல்” மெகா சூப்பர் ஹிட் !!

    ReplyDelete
    Replies
    1. P.Karthikeyan : ஆரம்பமே அதிரடியாக இருந்தால் அழகாய் இருக்குமென்று நினைத்தேன் - லக்கி அதை நடத்தித் தந்து விட்டார் !!

      Delete
  30. இன்னும் புத்தகம் கிடைக்கவில்லை
    சந்தாவில்தான் உள்ளேன்????????
    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  31. லக்கி லூக் ஹார்ட் கவர் பைண்டிங்கில் தூள். பெயருக்கேற்றபடி சூப்பர் 6 ன் முதல் இதழே சிக்ஸராக அமைந்துவிட்டது. ஆசிரியருக்கு ஜே!!!

    ReplyDelete
    Replies
    1. Mohamed Harris : லக்கி லூக்குக்கு போடுவோம் சார் அந்த "ஜே" வை !!

      Delete
  32. கொரியர் ஆபிஸுக்குப் போய் ட்ராக்கிங் நம்பர் சொல்லி விசாரித்ததில், என்னுடைய 'பொட்டி' வண்டி மாறி கோயம்புத்தூருக்குப் போய்டுச்சாம்! $%#*€¢£ நாளைக்கு வந்தா வரும்னு சொல்லிட்டாங்க! ( உங்க இரும்புக்கையால ஒரு ஆசீர்வாதம் பண்ணி, புத்தகங்களை ஈரோட்டுக்கு அனுப்பிவச்சுடுங்க ஸ்டீல்க்ளா! ;) )

    ReplyDelete
  33. அற்புதம்....அட்டகாசம்...!!!
    CLASSIC என்றால் எப்படி இருக்கவேண்டும் என்பதை இந்த இதழ் நிரூபித்து உள்ளது.இரண்டு மணிநேரம் அழகை ரசிப்பதிலேயே கழிந்துள்ளது.
    HATS OFF ஆசிரியரே....!!!

    ReplyDelete
    Replies
    1. T.K. AHMEDBASHA : வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷிப் பட்டம் !! நன்றிகள் சார் !

      Delete
  34. ev இடையறாத பணியினூடே புத்தகங்கள கைப்பற்றியாச்சு மதியம் மூன்று மணியளவில்...கையழுக்கால் இப்பதான் பிரிச்சேன்....சும்மா அள்ளுது..அதும் அந்த நெடிந்துயர்ந்த டெக்ஸ் அட்டை சும்மா அசத்தலோ அசத்தல்..நண்பர்கள் கூறிய படி டாப் அட்டை...மிச்சம் மீதி அற்புதங்கள வீட்டுக்கு போய் ரசித்தபடி பதிகிறேன் ஏதோ எனது கரத்தால்

    ReplyDelete
  35. லக்கி கிளாசிக்ஸ் .....


    இந்த இதழின் அறிவிப்பின் பொழுது இரண்டு மறுபதிப்பு இதழ்கள் 200 ரூபாய் என்பதோடு ஹார்ட் கவர் பைண்டிங் என்பது அதிக பக்கங்களுக்கான சிறப்பு இதழ்களுக்கே சிறப்பு என்பதாக எனது பார்வை இருந்தது. லக்கியின் இந்த நூறு பக்க இதழுக்கு இந்த ஹார்ட் பைண்டிங் முறையெல்லாம் சிறப்பாக இருக்குமா என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது..


    ஆனால் இன்று இந்த இதழை கையில் கண்டவுடன் அசந்து விட்டேன் என்பதே உண்மை...ஹார்ட் பைண்டிங்கில் முன் ...பின் ...இருபக்க புதிய அட்டைப்படமும் ...ஆரம்பத்தில் வந்த அட்டைப்பட பேனலும் ...என வெளி பார்வையிலேயே அசத்த உள்ளே ஆஹா ..ஆஹா....ரகம் .....லக்கியின் முதல் சாகஸமான சூப்பர் சர்க்கஸ் இதழில் வந்த லக்கி அறிமுக படலம் ...கதையின் கதை ...லக்கியின் அழகான ஒரிஜினல் இதுவரை பாராத அட்டை படங்கள் ..போக்கிரிகள் பட்டியல் ..கார்ட்டூன் வகுப்பறை ..அந்த நாள் ...மெளன வில்லன் .....ம் .....இன்னும் சொல்லி கொண்டே போகவேண்டும் போல...மேலும் அட்டைபடத்தை திறந்தவுடன் முன் ...பின் அந்த சிவப்பு வண்ண லக்கி கதாபாத்திரங்களின் அழகுற ஓவியங்கள் அழகோ அழகு..சார் ...ஏற்கனவே படித்திருந்த கதையாக இருப்பினும் ...அந்த கதையே பலமுறை படித்து நினைவிலே இருந்தாலும் கூட இப்படி பட்ட சிறப்பான இதழில் மீண்டும் உடனடியாக படிக்க தான் மனது பரபரத்து முதல் கதையை படித்தும் ஆயிற்று ...இந்த ஒரு கதையை படித்த முடித்தவுடனே இதனை எழுதுகிறேன் சார் .மறுபதிப்பு கதை போல அல்லாமல் ஒரு புது லக்கி கதையை படித்த திருப்தி ....இனி வரும் க்ளாசிக் இதழ்களை எல்லாம் இது போல எப்படி கொண்டு வர போகிறீர்களோ என ஆச்சர்ய எதிர்பார்ப்புடன் காத்து கொண்டு இருக்கிறேன் ....


    மொத்ததில் இதழை காணும் வரை இருநூறு ரூபாயா என்று திண்டாடிய பலரின் மனது இதழை கண்டவுடன் இருநூறு ரூபாய் தானா என கொண்டாட போகிறது .....


    அடுத்து கோச்சு வண்டியில் பயணிக்க செல்ல இருப்பதால் பயணத்தை முடித்து கொண்டு மீண்டும் வருகிறேன் சார் ...


    Simply supppper.......

    ReplyDelete
    Replies
    1. தலீவரே,

      நித்தமும் ஒரு பரீட்சை எழுதும் வரம் வாங்கி வந்தவன் நான் ; ஆகையால் ஒவ்வொரு புது முயற்சியின் போதும் புதுப் புதுக் கேள்விகளும், சவால்களும் முன்னிறுத்தப்படுவது பழகிப் போய் விட்டது ! சூப்பர் 6 அறிவிப்பின் போதும் நிறைய அவநம்பிக்கை ; விலை சார்ந்த விவாதங்கள் ஓடியது மறந்திராது ! ஆனால் இந்த மறுபதிப்புகளுக்கென நான் திட்டமிட்டிருந்த format நிச்சயமாய் உங்களைக் குஷிப்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்குள் திடமாய் இருந்தது ! அதனை நடைமுறைப்படுத்த கிடைத்த வாய்ப்பை ஒழுங்காய் பயன்படுத்தியதில் சந்தோஷம் எங்களுக்கும் !

      எங்களை நம்பி நீங்கள் ஒப்படைக்கும் ஒவ்வொரு ஒற்றை ரூபாய்க்கும் நியாயம் செய்திட நாங்கள் ஒரு நூறு தடவைகள் மண்டையைப் பிசைவோம் என்ற நம்பிக்கையை உருவாக்கத் தான் எங்களது மெனக்கெடல்களின் ஒவ்வொரு பரிமாணமும் !

      Delete
    2. ///எங்களை நம்பி நீங்கள் ஒப்படைக்கும் ஒவ்வொரு ஒற்றை ரூபாய்க்கும் நியாயம் செய்திட நாங்கள் ஒரு நூறு தடவைகள் மண்டையைப் பிசைவோம் என்ற நம்பிக்கையை உருவாக்கத் தான் எங்களது மெனக்கெடல்களின் ஒவ்வொரு பரிமாணமும் !///

      சூப்பர் சாரே!

      Delete
  36. Dear Editor

    போன மாதம் வந்த 2017-ம் ஆண்டுக்கான ட்ரைலர் புக்-ஐ பேருந்தில் பக்கத்தில் உள்ளவர் கேட்டார் என்று கொடுத்தேன் அவர் அதனை திருப்பித் தராமல் சென்று விட்டார். அந்த புக் ஒன்று திரும்ப கிடைக்குமா?

    ReplyDelete
    Replies
    1. Jegang Atq : Sorry சார்...அட்டவணை பிரதிகள் ரொம்பவே குறைவாய்த் தான் கைவசம் உள்ளன ; சென்னைப் புத்தக விழாவினில் சந்தா செலுத்திடக் கூடிய புது வாசகர்கள் புரட்டிப் பார்க்கவேணும் அவை அவசியப்படும். Soபுத்தக விழா முடிந்த பிற்பாடு அனுப்பிட முயற்சிக்கிறோம் !

      Delete
  37. 2016-ஒவ்வொரு முகத்திலும் புன்னகை...!!!
    ன் நிஜமான வெற்றிக்கு அடுத்து, ஆசிரியர் அறிவித்துள்ள தீம்...

    2017-"மாதந்தோறும் ஒரு காமிக்ஸ் புதையல்"
    என விளம்பரங்களில் மனசை அள்ளுது...

    புத்தாண்டில் முத்துக்காமிக்ஸ் 45ம் ஆண்டுமலர் டைகர் பாணியில் தோற்றம் அளிக்கும் ட்யூராங்கோ தோன்றும்

    "சத்தமின்றி யுத்தம் செய்"

    ப்ளூகோட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த

    "நானும் சிப்பாய் தான்"

    தமிழ் காமிக்ஸ் மாயன் தோன்றும்

    "இயந்திரதலை மனிதர்கள்"

    &

    டெக்ஸ் ஆம் டெக்ஸ் தான் , 2017ல் டெக்ஸ் கதைகள் எண்ணிக்கையில் குறைவால், புதிய கொளபாய் வரும்போது தல தாண்டவம் இருக்காதோ என நான் நினைத்ததற்கு மாறாக வருகிறார்

    அமானுஸ்ய டெக்ஸ் ஆக

    "ஆவிகளின் சரணாலயம்"...

    25ஆண்டுகளாக எனக்கு தெரிந்து கையில் எத்தகைய காமிக்ஸ் புதையல் தவழ்ந்தாலும் "வருகிறது" விளம்பரங்கள் கவருவதின் ரகசியம் புலப்படவில்லை...
    "மாற்றம் ஒன்றே மாறாதது"-பொய்த்துப் போவது இவ்விடத்தே....

    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் : 'தல' இல்லா புத்தாண்டா ? சாமி கண்ணைக் குத்திடும் சார் !!

      And கவலையே வேண்டாம் - ஆண்டின் ஓட்டத்தின் போது 'தல' தாண்டவம் குறைவாய் இருப்பது போலொரு உணர்வு நிச்சயம் தோன்றாது ! பார்த்துக் கொண்டே இருங்களேன் !

      Delete
    2. /And கவலையே வேண்டாம் -//..நன்றிகள் சார்...


      //ஆண்டின் ஓட்டத்தின் போது 'தல' தாண்டவம் குறைவாய் இருப்பது போலொரு உணர்வு நிச்சயம் தோன்றாது ! பார்த்துக் கொண்டே இருங்களேன் !///---...

      வாவ்...சூப்பர்சார்...ஆகா ஆனந்தம், மட்டன் பிரியாணி&சிக்கன் பிரியாணி இரண்டும் ஏக காலத்தில் வார்த்தீர்கள் சார்...
      "தலை"க்கு ஏதோ சஸ்பென்ஸ்ஸாக திட்டம் இருக்கும் போல...!!! என்னவாக இருக்கும்...???

      Delete
  38. Alert : எடிட்டரின் பதிவு Update செய்யப்பட்டுள்ளது நண்பர்களே!

    ReplyDelete
  39. இப்படியொரு 'ரிப்போர்ட் கார்டு' சற்றும் எதிர்பாராதது எடிட்டர் சார்! குறிப்பாக, எல்லா அட்டைப் படங்களையும் போட்டு அசத்தலாகத் தயாரித்திருக்கிறீர்கள்! 'உங்கள் மெனக்கெடல்களின் எல்லைதான் என்னவாயிருக்கும்!' என்று ஆச்சரியப்பட வைக்கிறது! அந்த நன்றி அறிவிப்பு கார்டும் அவ்வாறே!!

    ஒரு வாத்தியார் தன் மாணாக்கர்களிடம் மார்க்கை எதிர்பார்ப்பதுதான் கொஞ்சம் நகைமுரண்! :P

    ரிப்போர்ட் கார்டின் முதல்பக்கக் கீழ்பகுதியில் அந்த //// மாணவரின் பெயர் : லயன்-முத்து காமிக்ஸ், வயது : என்றும் 16. ///
    ஹா ஹா ஹா! குறும்பு! :)))

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : //எல்லா அட்டைப் படங்களையும் போட்டு 'ரிப்போர்ட் கார்டு அசத்தலாகத் தயாரித்திருக்கிறீர்கள்! 'உங்கள் மெனக்கெடல்களின் எல்லைதான் என்னவாயிருக்கும்!' என்று ஆச்சரியப்பட வைக்கிறது!//

      இப்போதெல்லாம் காமிக்ஸ் தேவன் மனிடோ கூரையைப் பிரித்துக் கொண்டு இதழ்களை நம் மீது பொழியும் பொழுது - 2 மாதங்களுக்கு முந்தைய சமாச்சாரங்களே - யுகங்களுக்கு முன்பான நிகழ்வுகளாய்த் தோன்றுகின்றன - at least எனக்காவது ! So 'ஓராண்டின் 48 இதழ்களுக்கும் மார்க் போடுங்களேன் ?' என்று நான் சம்பிரதாயத்துக்கு கேட்டு வைத்தால் - 'விதியே' என்று உங்களில் ஒரு சின்ன எண்ணிக்கையிலானோர் மட்டும் அதனைச் செய்திட முனையலாம் !

      ஆனால் வரிசையாய், அழகாய் அத்தனை கதைகளின் பெயர்கள் + அட்டைப்படங்கள் என்று உங்கள் முன்னே அணிவகுக்கச் செய்யும் பொழுது - இந்தாண்டின் காமிக்ஸ் பயணத்தை மீண்டுமொருமுறை அசைபோட்டுப் பார்த்த சந்தோஷம் கிடைக்கக் கூடும் தானே ?

      அது மாத்திரமின்றி - நாங்கள் எடுத்துள்ள முயற்சிகளுக்குப் பிரதிபலனாய் அந்தப் படிவத்தினைப் பூர்த்தி செய்யும் முனைப்பும் சற்றே கூடிட வாய்ப்புண்டல்லவா ? ஒரு முப்பது - நாற்பது வாசகர்கள் கூடுதலாய் இதற்கென நேரம் செலவிட்டால் கூட அதனுள் ஏதேனும் ரசனை சார்ந்த pattern கண்ணில் படுகிறதா ? என்ற 'ரோசனைக்கு' உதவிடும் எனும் பொழுது - எங்களது மெனெக்கெடல்கள் விரயமாகிடா !

      எல்லாவற்றிற்கும் மேலாய் - சின்னதொரு வட்டத்தை சுவாரஸ்யத்தோடு தொடரச் செய்ய இது கொஞ்சமேனும் உதவிட்டால் - why not ? என்று நினைத்தேன் !!

      And இதனைப் பொறுமையாய் வடிவமைத்த நமது DTP டீமின் கோகிலாவுக்கே பாராட்டுக்கள் சேர்ந்திட வேண்டும் !

      Delete
    2. Erode VIJAY : //ஒரு வாத்தியார் தன் மாணாக்கர்களிடம் மார்க்கை எதிர்பார்ப்பதுதான் கொஞ்சம் நகைமுரண்! //

      அட..ஒரு தேசத்தின் சர்வ வல்லமை படைத்தவரே - மார்க் போடக் கோரி / அபிப்பிராயம் சொல்லக் கோரி App வெளியிட்டு வரும் நாட்களிவை !! சுண்டைக்காய்களான நாமெல்லாம் - நம் சக்திக்குள்ளான விதங்களில் உங்கள் சிந்தனைகளை / மார்க்குகளை கேட்டுத் தெரிய முயற்சிக்காது விட்டு விடுவோமா - என்ன ?

      Delete
    3. //And இதனைப் பொறுமையாய் வடிவமைத்த நமது DTP டீமின் கோகிலாவுக்கே பாராட்டுக்கள் சேர்ந்திட வேண்டும் !///

      அருமையாகப் பணியாற்றியிருக்கும் கோகிலா சகோவுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்!

      Delete
    4. Thanks to Kokila Sister for a well done job :)

      Delete
  40. Dear edit,
    Can i get Lucky classic from Chennai book fair

    ReplyDelete
    Replies
    1. மேஜிக் வின்ட் மனோகர் : சென்னை புக் பேரில் ஸ்டால் உறுதியான பின்னல்லவா மற்ற எல்லாமே ? அந்தக் கிணறைத் தாண்டிக் கொள்வோம் முதலில் !

      Delete
  41. முதல் ஆச்சரியம்..சந்தோசம் என எடுத்தால் அந்த நன்றி சொல்லும் அட்டைதான்...பளிச்சென மயக்குகிறது..எடுத்து தடவியதும் பழிவாங்கும் பாவை இதழ் அட்டைபடம் கண் முன்னே வந்து சென்றது....எப்படி சார் இந்த ஐடியா வந்தது...விளக்கம் ப்ளீஸ்....ஒரே வண்ணமயம்...அதனை மடித்து புத்தகம் போல் வைத்து பார்த்தால் இன்னும் கொள்ளை கொல்கிறது ..அட்டகாசம் சார்...இது போல ொரு அட்டைப்படம் டெக்ஸ் அல்லது லார்கோவுக்கு ப்ளீஸ்....ஸ்பைடர..ார்ச்சிய காணோம் இதில்!

    ReplyDelete
    Replies
    1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : //ஸ்பைடர..ார்ச்சிய காணோம் இதில்!//

      எந்த ATM வாசலில் தேவுடா காத்துக் கிடக்கிறார்களோ இந்த பிரிட்டிஷ் பிள்ளைகள் ?!

      Delete
    2. சார் இருந்தாலும் அவங்க வரும் வரை காத்திருந்து விட்டிருக்க வேண்டும்...தொடரியில் என்ஜின் இல்லாதத போல காட்சி தருகிறது ...அந்த வாழ்த்து மடல்....

      Delete
  42. இரண்டாம் இனிய அதிர்ச்சி கிளாசிக்ஸ்தான்...அசத்தலான அட்டை...உள் சிவப்பு தாள்..அட்டை வழவழப்பும்....அந்த கண்ணாடித் தாள் இல்லா வழவழப்பும் சூப்பர...ொரே வண்ணக்கலவைகள் குஷி படுத்துகின்றன...அருமை டெக்ஸ் கருப்பு ..சிவப்ப அட்டயில காட்னா ..ஃபிடலின் மறைவுக்கு அஞ்சலி போல...அந்த கம்யூனிச சிவப்பும்...சேவின் தொப்பியில் காணும் ஸ்டார் போல டெக்ஸ் சூவில் தெரிவதும் ஆஹா..என்ன பொருத்தம்..அசத்துறார் நம்ம ஆஸ்தான ஓவியர்..அட்டகாசம் சாரே...

    ReplyDelete
  43. "சர்வமும் நானே"!!!!!
    டிராகன் நகரம்,பாலைவன பரலோகம்,கார்ஸனின் கடந்த காலம் போன்ற கதைகள் மீண்டும் கிடைக்காதோ என்றிருந்த என்னை அசரடித்து விட்டது.இரண்டு நாட்களில் இருமுறை வாசிக்க வைத்த கதைக்களம் ஒரு பக்கமெனில்,புத்தக வடிவமைப்பும்,அட்சரம் பிசறாமல் செதுக்கப்பட்ட ஒவ்வொரு பலூன் வசனமும் இதழை காலத்தால் அழிக்க முடியாத ஒரு பொக்கிஷமாக்கியுள்ளது.
    ஆசிரியரே.....! இது தான் உங்களின் டிரேட் மார்க்.

    ReplyDelete
    Replies
    1. T.K. AHMEDBASHA : சார்...ஒரு மாதம் லேட்டில் ஓடுகிறது உங்கள் வண்டி !!

      நானோ இங்கே பிப்ரவரி'17 இதழுக்குள் தலைபுதைத்துக் கிடக்கின்றேன் !!

      Delete
  44. Replies
    1. விஜயன் சார்,
      புத்தகம்கள் கிடைத்து விட்டது! இதுவரை வந்த ஹார்ட் பைண்டிங்கில் இம்மாத லக்கி கிளாசிக்ஸ் பைண்டிங்தான் டாப்! இதுவே இனிவரும் காலம்களில் தொடரட்டும்.

      ஹார்ட் பைண்டிங்கில் புதிய மற்றும் சர்வதேச தரத்தை தொட்டுவிட்டோம் என்பது எனது எண்ணம்.

      ஹார்ட் அட்டையின் உள்பக்கம்களில் உள்ள வண்ண காகிதம்கள் நன்றாக உள்ளது, அதில் தேர்ந்தெடுத்து அச்சிடபட்டுள்ள படம்கள் மனதை கவர்கிறது.

      கதையின் அச்சின் தரம் சூப்பர்!

      நன்றி!! நன்றி!!! நன்றி!!!

      Delete
    2. Parani from Bangalore : //ஹார்ட் அட்டையின் உள்பக்கம்களில் உள்ள வண்ண காகிதம்கள் நன்றாக உள்ளது, அதில் தேர்ந்தெடுத்து அச்சிடபட்டுள்ள படம்கள் மனதை கவர்கிறது. //

      அந்த 2 + 2 பக்கங்களுக்காக கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் பொறுமையாய்ப் பணியாற்றினார்கள் நம்மவர்கள் !!

      Delete
    3. // அந்த 2 + 2 பக்கங்களுக்காக கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் பொறுமையாய்ப் பணியாற்றினார்கள் நம்மவர்கள் !! //
      Good job!! It gives us the good results!!!

      Delete
  45. ரொம்பவே எதிர்பார்த்த Lucky classic. ஆரம்பத்தில் office receptionல போய் பெட்டிய பார்ததுமே நம்பளேடது கேட்டு வங்கிட்டு வந்து பார்சலை பிரக்க ரொம்ப சிரமாபோச்சு. ஓரு வழியா பிரிச்சு பார்த்த Lucky classic இல்லை. வந்த டென்ஷனுக்கு அளவே இல்லை. 1000 வருஷம் edi நல்ல இருக்கனும் சபிச்சிகிட்டு இருக்கும் போது receptionல இருந்து கால் வருது உங்களுக்கு இன்னொரு box வந்துள்ளது சொன்ன போது ஏதோ bank statementதான் நினைச்ச்கிட்டு போன Lucky classic இன்னெரு பெட்டியில்.
    இப்படி ஓரு comics என் கையில் கிடைத்தது இருப்பது எனக்கு கொடுக்க பட்ட வரம்.
    அட்டை படத்தில் உள்ள 'லக்கி' வார்த்தை யின் டிசைனுக்கே 200 ரூபாய் சரியாபோச்சு.
    ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றி.

    ஜேஸன் பிரைஸ் படித்து முடித்து விட்டேன்.
    கத சும்மா மிரட்டுது

    ReplyDelete
    Replies
    1. Ganeshkumar Kumar : சூப்பர் 6 இதழ்களுக்கு கிட்டத்தட்ட 6 மாதங்களாய் முன்பதிவுகள் நடந்து வருவதால் - அவற்றை ஒன்றிணைத்து அனுப்ப நம்மவர்கள் ரொம்பவே மெனக்கெட்டனர் ! அதையும் மீறி சிற்சில பிழைகள் நேரின் - ஒரேயொரு பொறுமையான மின்னஞ்சல் ப்ளீஸ் ; நொடியில் சரி செய்து விடுவோம் !

      ஜேசன் ப்ரைஸ் கதைக்குள் புகும் யாரும் மிரண்டு போகாது மிஞ்சுவது சிரமமே என்பேன் !! அதிலும் இந்த இரண்டாம் பாகம் அனல் !!

      Delete
  46. Yet to get my package in Bangalore - hopefully today :)

    Looking forward for the December set.

    Dear Edi, when would the Chennai Book Fair stall would be confirmed. Can plan ahead if dates are known in advance.

    ReplyDelete
    Replies
    1. Rafiq Raja : சென்னை ஸ்டால் உறுதியாவதற்கு இன்னும் நிறையவே நாட்கள் உள்ளன சார் ; நீங்கள் அந்த முதல் வாரயிறுதிக்கு டிக்கெட்டைப் போட்டு வைத்து விடுங்கள் !

      Delete
  47. புத்தகம் கிடைத்து விட்டது
    அற்புதம் என்ற சொல் சிறியது என்று
    நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ganesh kv sir...!
      ""//புத்தகம் கிடைத்து விட்டது
      அற்புதம் என்ற சொல் சிறியது என்று
      நினைக்கிறேன்//

      இதைவிட சிறப்பாக விவரிக்க முடியாது.

      Delete
    2. @ Ganesh kv

      //அற்புதம் என்ற சொல் சிறியது என்று
      நினைக்கிறேன்.///

      அற்புதம்! ( இதுவும் சிறியதுதான்!)

      Delete
  48. Erode vijay sir, நீங்கள் மட்டும் எப்படி update, புதிய பதிவு எல்லாம் உடனுக்குடன் தெரிவிக்கீரிர்கள்.உங்கள் செயல் வேகம் என்னை வியக்க வைக்கிறது. நன்றி. நீங்கள் சொல்லவில்லை என்றால் notify போட்டு விட்டு Mail மட்டுமே பார்த்து க் கொள்வேன்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி Sridhar sir! உங்களைப் போன்ற பலருக்கும் இது பயனளிப்பதில் மகிழ்ச்சி எனக்கு! உண்மையில், இப்படியொரு ஐடியாவை நமக்களித்த மிஸ்டர் மரமண்டை'க்கு நன்றி சொல்வதே சரியானது!

      Delete
  49. முதல் பார்வையில் அட்டைப் படங்கள் அனைத்தும் அருமை சார்,லக்கி-லூக் கிளாசிக் அட்டைப்படம் மேலோட்டமாக பார்க்கும் போது தலைகீழாக தோன்றுவது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை. ஆனாலும் கனரக அட்டையில் அசத்துகிறது,கலெக்‌ஷனுக்கு அருமையான இதழ்.மொத்தத்தில் மனநிறைவு சார்.

    ReplyDelete
  50. ஜனவரி-2017 புத்தக கண்காட்சியை மனதில் வைத்து,சூப்பர்-6 இரண்டாம் இதழின் வெளீயிட்டை வைத்திருக்கலாமே சார்,விற்பனை சற்று உங்களுக்கு கை கொடுக்க வாய்ப்பு உண்டே.
    அதில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா?

    ReplyDelete
    Replies
    1. Limited edition என்பதை மறந்துவிட்டீர்களா அறிவரசு ரவி அவர்களே? தவிர, முத்து-45வது ஆண்டுமலர் பணிகள் வேறு இருக்கிறதே?

      Delete
    2. Erode VIJAY : ஹலோ...ஹலோ...ஒரு சின்ன ரகசியம் : இப்போது பணிகள் நடந்து வருவது பிப்ரவரி இதழ்களுக்கு !!

      Delete
  51. எடிட்டர் சார்.
    எங்கள் இளவயதுகளில் தியேட்டர்களுக்கு படம் பார்க்க செல்கையில் படம் முடிந்து வெளியே வருபவர்கள் முகத்தை வைத்தே படத்தின் வெற்றி தோல்வியை கணிக்க முடியும்.சந்தோஷமாக வெளியே வரும் மக்கள் அதிகமாக இருக்கும் படம் வெற்றி பெறுவதும், பேயறைந்த முகத்துடன் வெளியே வருபவர்கள் அதிகமாக இருப்பின் படம் பப்படமாக ஆகப்போவதையும் கணிக்கமுடியும்.
    எதற்கு இந்த முன்கதையெல்லாம் என நினைக்காதீர்கள்.
    ஆண்டு முழுமைக்கும் நிறைவான கதைகளை தேர்வு செய்து அதனை அழகுற எங்களிடம் சேர்த்தும் வந்தீர்கள்.ஆண்டிறுதியில் இதே போல் சோடை போகாத கதைகளாக இருந்து விட்டால் இந்த ஆண்டு "மொக்கையில்லாத வருடமாக" ஆகிவிடும் என எதிர்பார்த்திருந்தது வீண்போகவில்லை. அருமையான கதைகளை தேர்வு செய்து அதனை அழகுற எங்களிடம் சேர்ப்பித்தும் விட்டீர்கள்.அதிலும் "க்ளாசிக்" இதழ் உண்மையில் அதன் தோற்றத்திலாகட்டும், கதை தேர்வாகட்டும் சூப்பருக்கும் மேலே.
    இதில் வரும் வசனங்கள் நரசிம்மராவையும், மன்மோகன் சிங்கையும் கூட குத்தாட்டம் போட்டு சிரிக்கவைக்கும். நகைச்சுவை நாட்டியமாடும் வார்த்தை ஜாலங்களுக்காக உங்களுக்கு "உலக மகா குசும்பர்" என்ற பட்டத்தை காணிக்கையாக்குகிறேன்!!
    இன்று வங்கிகளில் வரிசையில் நிற்கும் மக்களைப் போல லக்கிலூக் கதையிலும் நிற்கிறார்கள். கதையில் ரயிலை கடத்தி கொள்ளையடிக்க இன்றோ ரயிலின் மேற்கூரையை ஓட்டை போட்டு கொள்ளையடிக்கிறார்கள். ஏறக்குறைய இன்றைய யதார்த்தமும் கதையில் நகைச்சுவையுடன் கலந்து வெளிப்பட்டிருக்கிறது.இரண்டே கதைகளுக்கு எதற்கு இந்த ஹார்ட்பவுன்ட் அட்டை என உள்மனது புத்தகத்தை கையில் ஏந்தும் வரை உறுத்திக்கொண்டேயிருந்தது. ஆனால் புத்தகம் கையில் கிடைத்ததும் தேர்தல் நேரத்தில் கூட்டணிமாறும் அரசியல்வாதிகளைபோல் என் மனதும் தடாலடியாக உங்களது எண்ணத்துடன் கூட்டணி வைத்துக்கொண்டது.இந்த இதழ் இப்படி வராமலிருந்தால் பத்தோடு பதினொன்றாய் போயிருக்கும். அன்று சிரித்த முகத்துடன் தியேட்டரைவிட்டு வெளியேறிய மக்களைபோல எங்களையும் ஆண்டிறுதி இதழ்களை மனநிறைவுடன் கையிலேந்தி சிரிக்கவைத்து இந்த ஆண்டை வெற்றிகரமாக கடந்துவிட்டீர்கள். நீங்கள் வாசகர்களின் ரசனையை முழுமையாக கணித்தது இந்த ஆண்டே. இந்த அனுபவம் உங்களுக்கு வரவிருக்கும் ஆண்டுகளில் முழுவதுமாக கை கொடுத்து எங்களுக்கு திகட்டாத விருந்தாக கிடைக்கப் போவது உறுதி.

    ReplyDelete
    Replies
    1. //இந்த அனுபவம் உங்களுக்கு வரவிருக்கும் ஆண்டுகளில் முழுவதுமாக கை கொடுத்து எங்களுக்கு திகட்டாத விருந்தாக கிடைக்கப் போவது உறுதி.///--- செம்ம...உறுதியோ உறுதி...

      Delete
    2. ஏடிஆர் சார் ...அழகாக சொல்லியுள்ளீர்கள் ...வாழ்த்துக்கள் ...

      Delete
  52. நண்பர் திருப்பூர் குமாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.🎂🎁💐🎉🎊🌹

    ReplyDelete
    Replies
    1. @ திருப்பூர் குமார்

      இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே! திருப்பூர் புத்தகத் திருவிழாவில் உங்களுடைய பணி மகத்தானது! அது எந்நாளும் தொடர்ந்திட என் வாழ்த்துகள்!

      Delete
    2. திருப்பூர் குமார் அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....

      Delete
    3. திருப்பூர் குமார் அவர்களுக்கு எனது மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்றைய மகிழ்ச்சி என்றைக்கும் தொடர எனது வாழ்த்துக்கள்.

      Delete
    4. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் திருப்பூர் குமார்

      Delete
    5. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் குமார்...

      Delete
    6. சகோதரர் குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

      Delete
  53. சார்,
    லக்கி ஸ்பெஷல் simply stunning. முதல் முதலாக L.M.S-சை HARD BOUND-ல் பார்த்தபொழுது உள்ளம் அன்று முழுவதும் பரவசத்தில் துள்ளிக் குதித்தது. இன்று லக்கி கிளாஸ்சிக்ஸ் அதே போன்ற ஒரு HARD BOUND முயற்சிதான் என்றாலும் ஒரு வித்தியாசத்தை உணரமுடிகிறது. இது HARD BOUND-ன் அடுத்த பரிமாணமா ? அல்லது NEXT LEVEL லா என்று சொல்லத் தெரியவில்லை. ஏதோவொன்று வசீகரிக்கிறது...!

    அட்டையம் சரி, உள்ளே உள்ள சித்திரங்களும் சரி, A1 ராகம். அ.TO அ. உங்கள் கூட்டணியின் உழைப்பை உணரும் அதே வேளையில், COME BACK ஸ்பெஷல் இதழில் வந்த லக்கியின் (ஒற்றர்கள் ஓராயிரம்) இது வரையிலுமான சித்திரத்தரத்தில் முதன்மையென்பேன். இப்பொழுது எடுத்து புரட்டினாலும் உலகத்தரத்தை பறைச்சாற்றும்.! அப்போதிருந்த அந்த உயர் ரக imported பிரின்டிங் மெஷின் தான் அதற்கான காரணமென்றாலும், அது இப்போது சாத்தியமாகியிருக்கும் பட்சத்தில் இந்த 'லக்கி கிளாஸ்சிக்ஸ்' இன்னுமொரு உச்சத்தை எட்டியிருக்கும். Anyway, இந்த லெவலே அட்டகாசம்தான்.

    அப்படியே அடுத்த மாதம் வரவிருக்கும் முத்துவின் '45' ஆண்டு மலரையும் HARD BOUND-ல் கொண்டு வந்துவிடுங்கள். ஐயையோ, அந்த திட்டமிடலெல்லாம் இல்லையேயென்று கையை ஓதராமல், பல்லைக் கடித்துக்கொண்டாவது HARD BOUND-ல் தள்ளிவிட்டுடுங்கோ....ஏனெனில், இனி ஸ்பெஷல் இதழ் என்றாலே அது 'HARD BOUND' தான்.

    ReplyDelete
    Replies
    1. நமது வெளியீடுகள் அனைத்துமே ஸ்பெஷல்தானே
      அப்படியானால் இனிவரும்
      இதழ்கள்Hardbound அட்டையுடனா
      ?????????????

      Delete
  54. லக்கி CLASSICS தரத்தில் ஒரு அட்டைப்படத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை.(ஹாலிவுட்/பாலிவுட் இதழ்களின் அட்டைப்படங்களையும் சேர்த்து தான்)

    இந்த டிசைனை எங்கிருந்து பிடித்தாரோ தெரியவில்லை!!!!!

    ஓசையின்றி சாதனை படைத்துள்ளார் ஆசிரியர்.

    என் நண்பர்கள் மிரண்டுபோய் பார்க்கிறார்கள்.
    வண்ணங்களும் அந்த ஷைனிங் பிரிண்டும் நிச்சயம் வேற லெவல் தான்.

    ஆசிரியருக்கும் அவரது டீமிற்கும் ராயல் சல்யூட்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டைப் பெறுவதைவிடக் கஷ்டமானது - அந்தப் பாராட்டைத் தக்கவைத்துக் கொள்வது!

      எடிட்டரை நினைச்சா எனக்குப் இப்பவே பாவம் பாவமா வருது! :)

      Delete
    2. Erode VIJAY : எனக்கு நம்ம டிசைனர் பொன்னனை நினைச்சா பாவம் பாவமா வருது !!

      Delete
    3. T.K. AHMEDBASHA : //வண்ணங்களும் அந்த ஷைனிங் பிரிண்டும் நிச்சயம் வேற லெவல் தான்.//

      சிவகாசியில் இருந்து கொண்டு இந்த நகாசு வேலைகளைச் செய்யாது விடுவோமா சார் ?

      Delete
  55. இன்னமும் CLASSICS சந்தா செலுத்தாத நண்பர்களே....!!!!
    விரைந்து CLASSIC வண்டியை பிடித்துக்கொள்ளுங்கள்.
    புத்தகத்தை வேறு நண்பர்களிடம் காண நேர்ந்தால் பின்னர் பொறாமைப்படுவதை தவிர வேறு மார்க்கம் கிடைக்காது.
    தவற விடாதீர்கள்.

    ReplyDelete
  56. ABS Classics வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது

    ReplyDelete
    Replies
    1. Mahendran Paramasivam : A job well begun, is half done என்பது மெய்யாகயிருப்பின், SUPER 6 - "பெயர் சொல்லும் 6" ஆக அமைவது உறுதி !

      Delete
  57. "ரொம்ப டயர்டா இருக்கியே கண்ணு... உழைச்சு உழைச்சே ஓடாத் தேஞ்சுட்டியேம்மா...! வேணுமின்னா உங்க அம்மா வீட்டுக்குப் போய் ஒரு ரெண்டு மூனு நாளைக்கு ரெஸ்ட் எடுத்துட்டு வாயேன்?"

    " இந்தமாசக் காமிக்ஸ் உங்க கைக்குக் கிடைச்சாச்சு. அப்படித்தானே...?"

    " ஹிக்! ....ஹிஹி"

    ReplyDelete
  58. விஜயன் சார், அனைத்து தரப்பு வாசகர்களிடம் இருந்தும் இந்த வருட புத்தகம்கள் பற்றிய அபிமானம்களை தெரிந்து கொள்ள எடுத்து கொண்ட முயற்சி பாராட்டுக்குறியது, அதில் போட்ட உழைப்பு உங்களின் காமிக்ஸ் காதலை வெளிபடுத்துகிறது. இதனை பொறுமையுடன் தயாரித்த நமது DTP அலுவலருக்கு எனது நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : எங்கள் பங்குக்கு உழைத்து விட்டோம் - பதில்களில் உங்கள் உழைப்புகளைக் காணும் ஆவலோடு !

      Delete
  59. ***** வானம் தந்த வரம் ******

    'கொரியர் மேடம் நாரை' ஒரு குழந்தை ஸ்மர்ஃபை அட்ரஸ் மாறி டெலிவரி செய்துவிட, மாறிய அட்ரஸ் நம் ஸ்மர்ஃப் வில்லாவாக இருந்துவிட, பேபி ஸ்மர்ஃபை வைத்துக்கொண்டு நம் நீலப்பொடியர்கள் படும் அல்லல்களும், சந்தோசங்களும் முதற்பாதிக் கதை! இப்படியாக, எல்லாப் பொடியர்களும் பேபி ஸ்மர்ஃப் மீது பாசமழையாகப் பொழிந்து கொண்டிருக்கும் சமயத்தில், அக்குழந்தையை திரும்பப் பெற்றுக்கொண்டு சரியான விலாசத்தில் கொண்டு சேர்க்க நாரை மேடம் வந்து நிற்க, ஸ்மர்ஃப் வில்லாவே சோகத்தில் மூழ்குகுறது! அதைத் தொடர்ந்து, பேபி ஸ்மர்ஃப்பும் திடீரென்று காணாமல் போகிறது! குழந்தையைக் கடத்தியது யார்? ஏன்? குழந்தை உரியவரிடம் சேர்ப்பிக்கப்பட்டதா இல்லையா? குழந்தையின் மீது பாசமழை பொழிந்த நம் நீலப்பொடியர்களின் நிலை என்ன? - என்பதையெல்லாம் அழகான பக்கங்களைப் புரட்டிப் படித்துக்கொள்ளுங்கள் மக்களே!

    குழந்தைக்காக நடக்கும் பாசப் போராட்டங்கள் நம்மையும் கொஞ்சம் பதைபதைக்க வைத்துவிடுவதாலோ என்னவோ (இதற்குமுன் வந்த கதைகளைப் போலல்லாமல் ) இதில் ரசித்துச் சிரிக்க குறைந்த வாய்ப்புகளே கொடுக்கப்பட்டிருக்கிறது! அந்தக் குழந்தை சென்டிமென்ட்தான் கதையின் ஜீவனே என்பதாலோ என்னவோ, அதைக் குலைக்க விரும்பாமல் எடிட்டரும் தன் ரகளையான வசனங்களை சற்று அடக்கியே வாசித்திருக்கிறார்!

    மற்ற இரு கதைகளான 'கும்மாங்கோ-குத்தாங்கோ' மற்றும் 'ஸ்மர்ஃப் பொறிகள்' வழக்கமான ரகளையுடன் சிரிக்க வைக்கின்றன!

    ரொம்பவே அழகான முன்-பின் அட்டைப்படங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன!

    குழந்தைகளுக்கு படித்துக்காட்டி கதை சொல்ல மீண்டும் ஒரு அழகான படைப்பு!

    எனது ரேட்டிங் : 9/10

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : பொடியன்களுக்கு சிரிக்க வைக்க மட்டுமல்ல, சென்டிமெண்டைத் தொடவும் தெரியும் என்று காட்டிடவே இந்தக் கதையைத் தேர்வு செய்தேன்......பார்ப்போமே, பரவலான அபிப்பிராயம் எவ்விதம் உள்ளதென்று ?!

      Delete
  60. பொக்கிஷ பெட்டியை நேற்றுதான் கைபற்றினேன்

    ReplyDelete
  61. டியர்ல எடிட்டர் சார் லக்கி ஸ்பெஷல் மிக மிக அருமையாக வந்துள்ளது

    சித்திர வண்ணச்சேர்க்கை பிரமாதம்

    ஏற்கனேவே படித்திருந்தாலும் மீள்வாசிப்பையும் ஒருதடவை கலரில் படித்து முடித்துவிட்டேன்

    இக்கதைகள் தொடர்பான விஷயங்களையும் சேர்த்திருப்பது நான் எதிர்பார்க்காத ஒன்று

    ( திடீர் திருப்பமாக லக்கி போஸ்டர் ஏதாவது தருவீங்கன்னு நான் எதிர்பார்த்தேன் )

    ReplyDelete
  62. (*** கடைசி பக்கத்திற்க்கு முன் பக்கம் (லக்கி-ஜாலிஜம்பர்) அந்தப்பக்கத்தை நீங்கள் விளம்பரம் ஏதும் செய்யாமல் அப்படியே விட்டிருக்கலாம்.

    அவ்ளோ அழகா இருக்கு

    அதை கட் செய்து ப்ரேம் பண்ணி மாட்டியிருப்பேன்

    இதனால் உங்களை குறை சொல்வதாக அர்த்தம் இல்லை

    அழகான ஒரு விஷயம் கைக்கு கிடைக்காமல்போன மனவருத்தம் மட்டுமே)

    ReplyDelete
    Replies
    1. Tex Sampath : //அதை கட் செய்து ப்ரேம் பண்ணி மாட்டியிருப்பேன் //

      ஒரு Collector 's எடிஷனை வெட்டிச் சிதைக்க மனம் ஒப்புமா என்று முதலில் யோசித்துப் பாருங்களேன் ? நான் யோசித்தேன்...

      Delete
    2. நீங்க யோசிச்சது ரொம்ப நல்ல விஷயம்தான் நான் அதை வரவேற்கிறேன் சார்

      ஆனாலும் என் மனம் அந்த படத்துக்காக ஒரு ஏக்கம்மாகிடுச்சு

      மனசு கேட்கலை அதான் இந்த கேள்வி

      பதிலலித்தமைக்கு மிக்க நன்றி சார்

      (வெளிநாடுகளில் இது போன்ற படங்களை ப்ரேம் செய்து மாட்டி வைத்திருந்ததை மூஞ்சுபுக் கில பார்த்ததினால வந்த ஒரு ஏக்கம்னு கூட வச்சிக்கலாம் எடி சார்)

      Delete
  63. சார் கொலைப் படை வரும் போது ஹார்டு பௌண்டு அட்டை லக்கி கிளாசிக்ஸ போலவோ.....நன்றி மடல் தந்தத போலவோ விட்டால் அட்டகாசமாக இருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஸ்டீல் க்ளா,கொலைப் படையை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது,அதன் நாயகன் யார்?அதை பற்றி விரிவாக ?

      Delete
    2. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : தொட்டதுக்கெல்லாம் ஹார்ட் கவர் என்றாகி விட்டால், அதன் மேலான ஈர்ப்பு குன்றிவிடும் நண்பரே !

      பார்ப்போமே அந்நேரத்துக்கு !

      Delete
  64. **** மறைக்கப்பட்ட நிஜங்கள் *****

    ஒரு 50, 60 கேள்விகளை ( அல்லது இன்னும் அதிகமாக) அடக்கிய கேள்வித் தாள் ஒன்றை அப்படியே ஒரு காமிக்ஸ் ஆக்கி இரண்டு மூன்று பாகங்களாக வெளியிட முடியுமா என்றால் 'முடியும்' என்கிறது இந்தக் கதையின் படைப்பாளிகள் குழு! ( ஏம்ப்பா படைப்பாளிகளா... உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? பக்க எண்ணிக்கையைவிட ட்விஸ்டுகளின் எண்ணிக்கையை அதிகமா வச்சுப்புட்டீங்களேப்பா...?!! )

    விறுவிறுவென்று பக்கங்களைப் புரட்டமுடிகிறதென்றாலும், கதையின் போக்கை துளிகூட யூகிக்க முடியாதபடிக்கு ஒருவகை அமானுஷ்யத்தோடு கதையை நகர்த்தியிருப்பது இத்தொடரின் சிறப்பம்சம்! இறுதிப் பாகமான 'ஒரு திரை விலகும் நேரத்தில்' ஒரு பிரம்மிக்கச் செய்யும் வாசிப்பு அனுபவம் காத்திருப்பதாக உள்மனசு உரக்கச் சொல்கிறது! (அப்படிக்கிப்படி திரைகள் விலகாதுபோயின், ஜன்னல் திரையைக் கிழித்துக்கொண்டு வெளியே குதித்துவிடும் ஐடியா இருக்கிறது என்னிடம்! ;) )

    சித்திரங்களும், கதையின் தன்மைக்கேற்ற வண்ணக்கலவைகளும் இப்பாகத்தில் சற்று கூடுதலாகவே ஸ்தம்பிக்கச் செய்கின்றன! குறிப்பாக, பெரிய பேனல்களில் வரையப்பட்ட (ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய ) லண்டன் மாநகர வீதிகளில் தெரியும் ஒருவித அமானுஷ்ய அழகு - அடடா அடடடடா!!!

    திரைவிலகி, மண்டைக் குடைச்சல் நீங்க இன்னும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டுமா? ஹம்...

    ReplyDelete
    Replies
    1. @விஜய், மூன்றாம் பாகத்தில் மர்மங்கள் விலகும்போது ஆ என்று நீங்கள் வாய் பிளக்கப்போவது உறுதி. முதல் பகுத் தந்த பிரமிப்பால் சற்றே தடுமாறி கதையின் மற்ற பாகங்களை ஆங்கிலத்தில் தேடிப் பிடித்து வாசித்து விட்டேன். நம் காமிக்ஸ் பயணத்தில் ஜேசன் பிரைஸ் ஒரு புதிய அத்தியாயத்தை துவக்கி வைக்கக்கூடும் (அ) வைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

      Delete
    2. வாவ்!! தகவலுக்கு நன்றி, கார்த்திகைப் பாண்டியன் அவர்களே! நம் எல்லோரது விருப்பமும் அதுதானே!! :)

      அடுத்த ஈரோடு திருவிழாவில் மீண்டும் உங்களைச் சந்திக்கக் காத்திருப்பேன்! :)

      Delete
    3. Karthigai Pandian sir please give me the title of the English book.

      Delete
  65. என்னவோ மனசு கேக்க மாட்டேங்குது சார் இந்த மாதிரியான ஸ்பெஷல் புக் போல எங்க இரத்தப்படலமும இருந்தா எப்படி இருக்கும் என்று. என்ன செய்ய காத்திருக்க வேண்டியது தான் .மனசு அடிச்சுகுது சார். 😢

    ReplyDelete
  66. வானம் தந்த வரம் ....

    எளிமையான ஆனால் அழகான அட்டைப்படம் மனதை கவர்கிறது ...போனமுறை போலவே இம்முறையும் பொடியர்கள் மனதை கவர்ந்து விட்டார்கள் ..சிறப்பான கதை களத்திலும் அழகாக நகைச்சுவையை தெளித்து அட்டகாச படுத்தி விட்டார்கள் .பேபி பிறப்பிற்கு சீனியர் பொடியர் விலாவரியாக விளக்க ரொம்ப தெளிவா புரியது என நடையை கட்டும் இடமாகட்டும் ...வில்லன் கார்காமெல்லை பார்த்து பயந்து ஓடும் பொடியர்கள் சூழல் காரணமாக அவனையை பார்த்து மிரட்டுவதும் அவன் மன்னிப்பு கேட்டு விலகுவதும் ....பின் அவனே இவனுக்கு நான் ஏன் பயப்படனும் என குழம்புவதும் ...என பல இடங்களில் புன்னகைக்க வைத்த பொடியர்கள் ..ஜோக்கர் பொடியனின் பரிசை பெற்று பிறகு இருவருமே கலங்குவது ...பேபி பொடியர்காக அனைவருமே கலங்குவது என பலவிதங்களில் மனதை கவர்ந்து விட்டார்கள் ..

    இரண்டாம் கதையான தி ..ஸமரபோனி வானம் தந்த வரத்தை விட இன்னும் நகைச்சுவையில் முந்தி செல்ல அட்டகாஷ் படுத்துகிறது ..மூன்றாம் கதையும் சிறிதாக இருப்பினும் சிறப்பே ..


    மொத்ததில் இந்த முறையும் பொடியர்கள் வெற்றிகொடி நாட்டி விட்டார்கள் ..

    ReplyDelete
    Replies
    1. ////ஜோக்கர் பொடியனின் பரிசை பெற்று பிறகு இருவருமே கலங்குவது ...////

      ரொம்பவே டச்சிங்ஆன இடம் அது தலீவரே!

      Delete
    2. //மொத்ததில் இந்த முறையும் பொடியர்கள் வெற்றிகொடி நாட்டி விட்டார்கள் ..//... காமெடியில் லக்கி லூக், உட் சிட்டி கும்பல் க்கு அடுத்து ஊதா பொடியர்கள் தான் என டிரெண்ட் செட் செய்துட்டார்கள்...

      அடுத்த ஆண்டு பென்னியும் இந்த டெம்போவை இன்னும் கொஞ்சம் ஏகிறச் செய்தால் கொளபாயும் காமெடியும் இணைந்த கூட்டணி, இடியாப்பம் வித் பாயா போல எகிறி அடிக்கும்...

      Delete
  67. எது எப்படியோ லக்கி சூப்பர் .என் மனைவிதான் முதலில் பிரித்தவுடன் மாமா ரோஸ் கலர் புக் சூப்பரா இருக்கு மாமா என்ன சொல்ல..... ஓ.மை காட்

    ReplyDelete
  68. செந்தில் : ஏன் ,, ஆத்தா பல்லு அப்படி இருக்கு?
    தலைவர் : வாயை வெச்சிகிட்டு சும்மா இருந்தாத்தானே? தீபாவளியும் அதுவுமா எவங்கிட்டயோ போய் எகத்தாளம் பேசியிருக்கு., அவன் பட்டாசை கொளுத்தி வாயில போட்டுட்டான். .

    சின்னகவுண்டர் படத்தில் தலைவர் பேசிய டயலாக்தான் என் நிலையும் இப்போது. போற பக்கமெல்லாம் "பழமை " பேசியதால என்னோட சிம்முக்கு செய்வினை வெச்சிட்டாங்க. லாக் ஆன சிம்மோட சேந்து மொபைலும் மேட்டராகிப்போச்சு.
    பொல்லாத நேரம் வந்தா பொடலங்காயும் பாம்பா மாறும்ன்ற மாதிரி, சர்வீஸ் சென்டருக்கு போனா அவங்க கடைய சாத்திட்டு டூர் போய்ட்டாங்க.

    ஒருவழியா மூணு நாள் படையெடுப்புக்கு பிறகு மொபைல் தப்பிடுச்சி, ஆனா சிம் நட்டுகிச்சி. அதே நம்பருக்கு ரெண்டு நாள் ஆகும்னுட்டாங்க.

    லக்கி க்ளாசிக்ஸ், ஜேசன் ப்ரைஸ், ஸ்மர்ப்ஸ், டெக்ஸ் னு ஒன்றையொன்று மிஞ்சும் விதத்தில் காமிக்ஸ் கைக்கு கிடைத்த தருணத்தில் வாயார மனசார நாலு நல்ல வார்த்தை சொல்லி கமெண்ட் போட முடியாம தவிச்சிப் போய்ட்டேன்.
    அதனாலதான் மாற்று ஏற்பாட்டோடு வந்து கமெண்டுகிறேன். .!

    முதல் பார்வை :-

    லக்கி க்ளாசிக்ஸ் - சொக்கா. . ஆயிரம் பொன்னும் எனக்கேவா. .!!

    மறைக்கப்பட்ட நிஜங்கள் - சூறாவளியும் சுனாமியும் சேந்தா மாதிரி இருக்கு.

    ஸ்மர்ஃப்ஸ் - உள்ளம் கவரும் உலகம்.

    நீதிக்கு நிறமேது - வில்லரை விவரிக்க வார்த்தையேது. !.

    விரிவான விமர்சனங்களுக்கு விருப்பம் இருக்கும் அளவுக்கு இப்போதைய இருப்பு இல்லையாதாலால் நிலமை சீரடைந்ததும் சிறப்பாக செய்திட விரும்புகிறேன். ..!!

    ReplyDelete
  69. ///கூரியர் "பொட்டிகளுக்குள்" உள்ள இந்த ரிப்போர்ட் கார்டைப் பூர்த்தி செய்து அந்தக் கவரில் போட்டு அனுப்பிடுங்களேன் - ப்ளீஸ் ? ///

    சார்!
    வித்தியாசமான பரிட்சைதான். கொஸ்டீன் பேப்பரிலேயே பதில் எழுதி அனுப்புவதும் சூப்பர்தான். அதற்கான கவரையும் நீங்களே கொடுத்திருப்பதும் அருமைதான். கவரின் மேலே டூ அட்ரஸ் எழுதும் வேலையை மிச்சப்படுத்தியிருப்பதும் அட்டகாசம்தான். . .ஆனா. . .ஆனா. . .ஆனா. . .அந்த கவர் மேல ஒரு அஞ்சிரூபா ஸ்டாம்பும் ஒட்டி அனுப்பி இருந்தீங்கன்னா ,, அடா அடா. .அமர்க்களமா இருந்திருக்குமே. !! :-)))

    ReplyDelete
  70. சார் வானம் தந்த குழந்தை அருமை...கூடவே பயணித்தது போல இருந்த உணர்வு ..வியப்பு.....சிடுமூஞ்சி ஸ்மர்ஃப் ...குழந்தையாக மாறுவது அருமை...வழியெங்கும் நாமேங்கும் வண்ணமயமான அம்புலி மாமா இடங்கள்...தடங்கள் அற்புதம்.....கதையை விட இத்தடங்கள்..ஆறு ..துவக்க வரிகள்..தீவு....என கட்டியிழுத்தது மனதை.....அருமை அட்டகாசம்...கடசில சிடுமூஞ்சி இயல்பு நிலைக்குத் திரும்பும் வசனம் அருமை...

    ReplyDelete
  71. சார் ஒரு தவறு...இவ்வளவு அழகான ரிப்போர்ட் கார்ட அனுப்ப மனம் வரவில்லை...அனைத்துக்கும் முழு மதிப்பெண்கள்....ஸ்மர்ஃப்...டைகர்....மார்ட்டின்....அதுக்கும் மேலே....

    ReplyDelete
    Replies
    1. //.இவ்வளவு அழகான ரிப்போர்ட் கார்ட அனுப்ப மனம் வரவில்லை..///

      இஸ்கூல் ரிப்போர்ட் கார்டையும் இப்படித் தான் ஆட்டையை போட்டீங்களா ஸ்டீல்? ;)

      Delete
    2. Mr.ஈ.வி உங்களால் மட்டுமே இப்படி கூலாக க்லாய்க்க்க முடியும். மனம் விட்டு சிரிக்க முடிகிறது. நன்றி.

      Delete
    3. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் & Erode VIJAY @ இன்றைக்கும் அவர் இஸ்கூல் பையன்மாதிதான்; இன்னும் மாறவே இல்லை!! :-)

      கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் @ இனிமேலாவது கொஞ்சம் திருந்துங்க :-)

      Delete
    4. @ PfB

      ///இன்றைக்கும் அவர் இஸ்கூல் பையன்மாதிதான்; இன்னும் மாறவே இல்லை!!///

      போனமுறை நீங்க அவரைச் சந்திச்சபோது உங்களை நறுக்குனு கிள்ளிவச்சுட்டு ஓடிட்டார் போலிருக்கே! :P

      Delete
    5. Erode VIJAY @ உண்மைதான்! போனமுறை கொஞ்சம் கவனக்குறைவா இருந்துவிட்டேன், அடுத்தமுறை கவனமா இருந்துகிறேன்!

      Delete
  72. ***** நீதிக்கு நிறமேது ******

    'நிறவெறிக்கு எதிரான ஒற்றை மனிதனின் போராட்டம்' என்ற ஒற்றைவரிக் கதையைக்கொண்டு 160 பக்கங்களுக்கு அனல் தெறிக்க நகர்த்திப் போகமுடியுமா என்றால் அது டெக்ஸின் படைப்பாளிகளுக்கே சாத்தியம்!
    சிலாகித்துச் சொல்லவேண்டிய மிக முக்கிய அம்சம் - வசனங்கள்! மிக இயல்பாக; தனித்துவமாக ; மனதுக்குள் 'அட!' போடவைத்து மறுபடியும் படித்து ரசிக்கத் தூண்டுகின்றன! டெக்ஸும் அவரது பால்ய நண்பரும் ஆரம்பப் பக்கங்களில் அடிக்கும் 'மலரும் நினைவுகள்'அரட்டை சற்றே நெளிய வைத்தாலும், அதன் பிறகு கதையின் கடைசிவரை விறுவிறு-சுறுசுறு தான்! மொழிபெயர்த்தது திரு.கருணையானந்தமா அல்லது திரு.எடிட்டரா அல்லது திரு.வேறுயாரேனுமா தெரியாது! ஆனால் யாராக இருந்தாலும் பிடியுங்கள் ஒரு பூங்கொத்தை! செம செம!!

    தன் பக்கவாத்தியக் குழுவினர் இல்லாமல் டெக்ஸே தனி ஆவர்த்தனத்தில் பட்டையைக் கிளப்ப, கடைசி கட்டத்தில் கார்சனும் வந்து கச்சேரியில் சேர்ந்துகொள்வது உற்சாகத்தை ஒரேடியாக எகிறச் செய்கிறது!

    படைப்பாளிகளே கோட்டை விட்ட ஒரு சின்னத் தவறாக எனக்குத் தோன்றுவது : தோள்பட்டையில் காயமடைந்து கம்பெளன்டரால் கட்டுப் போடப்படும் டெக்ஸ், ஒரு நீளமான துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு தன் சட்டையைக் கழற்ற நேரும்போது, அந்த 'கட்டு' மிஸ்ஸிங்!

    இந்த ஆண்டில் தனக்கான இறுதிப் பந்தையும் சிக்ஸருக்கு அனுப்பித் தன் பங்களிப்பை மிக நேர்த்தியாகச் செய்து முடித்திருக்கிறார் டெக்ஸ்!

    எனது ரேட்டிங் : 9.5/10

    ReplyDelete
    Replies
    1. இன்னும் கும்பகோணத்திற்கு books வரவில்லை.so no விமர்சனம்.especially TeX only please.

      Delete
    2. Mr. Sridhar! இதுவரை படிக்காதவர்களையும் புத்தகத்தை (வாங்கிப்) படிக்க வைத்திடும் நோக்கில்தான் விமர்சங்கள் எழுதப்படுகிறன்றன! கும்பகோணத்திற்கு புக்கு வராததற்கே 'நோ விமர்சனம் ப்ளீஸ்'னா... கலிஃபோர்னியாவிலும், கொலராடோவிலும் குடியிருக்கும் நம்ம நண்பர்களின் நிலைமையை நினைச்சுப் பாருங்களேன்!! ;)

      Delete
    3. தவிர, முழுக்கதையை விவரித்து நான் விமர்சனம் எழுதுவதில்லை என்பதையும் மேற்கோள் காட்ட விரும்புகிறேன்!

      Delete
    4. புக் கிடைத்து விட்டது. Mr.E.V.Jason bride ஒரே பாகமாக முழுமையாக வெளியிட்டு இருக்கலாம்.suspence thaanga mudiyavillai.

      Delete
    5. ///Jason bride ஒரே பாகமாக முழுமையாக வெளியிட்டு இருக்கலாம்.suspence thaanga mudiyavillai.///

      +1

      நம்மைக் காக்க வைத்து வேடிக்கை பார்ப்பதில் எடிட்டருக்கு அப்படியொரு கிளுகிளுப்பு!

      Delete
    6. அடுத்த பதிவு எப்போ கேட்டு சொல்லுங்க.குளிர் ல க்டு கிடு கிடுனு ஆடுது உடம்பு.

      Delete
  73. Mr.விஜய்,சும்மா பின்ரிங்க,தங்கள் விமர்சனத்திற்கு நான் தலைவணங்கிறேன்!!.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ் சூர்யா நண்பரே! :)
      (கீழுள்ள கமெண்ட்டுக்கும் சேர்த்து மீண்டும் ஒரு நன்றி! ;) )

      Delete
  74. Mr.விஜய்,சும்மா பின்ரிங்க,தங்கள் விமர்சனத்திற்கு நான் தலைவணங்கிறேன்!!.

    ReplyDelete
  75. Mr,கார்த்திகை பாண்டியன் ஜேசன் பிரைஸ் மூன்றே மூன்று அத்தியாயங்களுடன் அதன் ஆசிரியர் நிறைவு செய்துள்ளதாக கேள்வி!

    ReplyDelete
    Replies
    1. சார்.. நான் ஜேசன் பிரைஸ் தொடர வேண்டுமென்கிற அர்த்தத்தில் சொல்லவில்லை. கிராபிக் நாவல் என்றால் அழுவாச்சி காவியம் மட்டுமே என்கிற பொதுப்பார்வை மாறி நிறைய ஜானரில் காமிக்ஸ் வெளியாக பிரைஸ் ஒரு திறப்பாக அமையட்டும் என்பதே என் ஆசை

      Delete
    2. Well said sir.

      சிப்பாயின் சுவடுகளில் இருந்தே நானும் இதைத்தான் விரும்புகிறேன். ஜேசன் ப்ரைஸ் போன்ற எத்தனையோ முத்துக்கள் காமிக்ஸ் கடலில் கிடைக்கும் வாய்ப்பிருக்கையில் நாம் இன்னும் இன்னும் மூழ்கி முத்தெடுக்க வேண்டும் என்பதே என்னுடைய அவாவும்.!!

      Delete