நண்பர்களே,
வணக்கம். மாயாவி கதைகளின் ஆங்கில ஒரிஜினல்களில் "அந்தத் தருணத்தை" அட்டகாசமாய் விவரித்திருப்பார்கள் ; தமிழில் அதற்குரிய முக்கியத்துவமோ, மொழிபெயர்ப்பில் அதற்கென தனி கவனமோ தரப்பட்டது போல் எனக்கு அதிகம் நினைவில்லை ! அரூபமாயிருக்கும் மாயாவிக்கு உடலினுள் மின்சாரம் ஸ்டாக் தீரும் வேளையில், அவருக்கு சுயரூபம் திரும்பும் தருணத்தில் - உடலெங்கும் பரவும் ஒருவித அதிர்வுகள் பற்றி ஆங்கிலப் பதிப்புகளில் கதாசிரியர் செய்திடும் விரிவான விவரிப்பே நான் குறிப்பிடும் "அந்த moment" ! இப்போதெல்லாம் சனிக்கிழமை மாலையாகி விட்டாலே எனக்குள்ளும் கிட்டத்தட்ட அதே போன்ற அதிர்வுகள் அலையடிக்கத் துவங்கிடுகின்றன ! சனியிரவிலோ , ஞாயிறு காலையிலோ வெளிச்சம் காண வேண்டிய புதுப் பதிவினில் என்ன எழுதுவது ? என்பது பற்றிய மெலிதான 'ரோசனைகள்' தலைக்குள் குறுக்கும் நெடுக்கும் வலம் வரத் தொடங்கிடும் ! இவ்வாரச் சனியும் அதற்கொரு விதிவிலக்கல்ல ! ஆனால் எப்போதும் போலவே கணினி முன்னே அமரும் போது ஏதேனும் ஞானம் பிறக்கும் என்ற நம்பிக்கை இது வரையிலுமாவது என்னைக் கரை சேர்த்துள்ளது ! இம்முறையும் அது மெய்ப்படும் என்ற நம்பிக்கையோடு தொடர்கிறேன் !
நவம்பர் மாதத்து 4 இதழ் கூட்டணியினில் டாப் எது ? என்ற கேள்விக்கு ஒற்றை பதிலே ஒட்டு மொத்தப் பதிலாய் இருந்திடும் என்பது நமது மங்குணி smurf-க்கு கூடத் தெரிந்திருக்கும் ! "சர்வமும் நானே" என்று மார்தட்டுவது பெரிதல்ல - ஆனால் அந்த hype-க்கு முற்றிலும் தகுதியானவரே என்பதை நடைமுறையில் சாதித்துக் காட்டுவது சுலபக் காரியமே அல்ல தான் !! அந்த ஆற்றல் ; அந்த வீரியம் ; அந்த வசீகரம் இதுவரையிலான நமது 44+ ஆண்டு காலப் பயணத்தில் எத்தனை நாயகர்களுக்குச் சாத்தியமாகியுள்ளது என்பதை "வாரமொருவர்" என்ற ரீதியில் ஜாலியாய் தொட்டுச்செல்ல முற்படுவதே இவ்வாரத்துப் பொழுதுபோக்கு !
And அந்தப் பட்டியலில் முதலாமவர் யாரென்பது குறித்து சந்தேகம் கூடத் தேவையா - என்ன ? Oh yes - நமது "மின்சார பார்ட்டி " தான் அந்த முதல்வர் ! ஆனால் - "மாயாவி கராத்தே வெட்டு வெட்டினார்" " மாயாவி சத்தம் கேட்டுத் திடுக்கிட்டார்" என்ற மாமூலான புராணங்களை இங்கே நான் பாடப் போவதில்லை ! அவரது 'ஹிட்' கதைகள் பற்றிய பட்டியல்களை போடப் போவதில்லை ! புள்ளி விபரங்களோடு "ரமணா" ஸ்டைலில் அடுக்கப் போவதில்லை ! மாறாக அவரோடு என் பரிச்சயம் ; சில behind the scenes நிகழ்வுகள் பற்றி ஜாலியாய் !
ஒரு அரூப அசகாயர் !! காலத்தை வென்று நிற்கும் நமது மாயாவி பெருந்தகையை இப்படியும் கூப்பிடலாம் ! 1971-ல் சீனியர் எடிட்டர் இலண்டனுக்கு மட்டுமன்றி, ஒரு வண்டி ஐரோப்பிய & ஆப்பிரிக்க நாடுகளுக்கு புளியோதரை, தயிர்சாதம் கட்டாத குறையாக சுமார் ஒன்றேகால் மாதம் டூர் அடித்து வந்தது எனக்கு சன்னமான நினைவுகளாய் உள்ளன ! அங்கிருந்து ஏதேதோ விளையாட்டுச் சாமான்களை வாங்கி வந்தது ; அந்நாட்களில் அசாத்திய நவீனமான டேப் ரிகார்டர் வாங்கி வந்தது என்பதெல்லாம் எப்படியோ நினைவில் தங்கி விட்டன ! நிலாவில் மனிதன் கால் பதித்திருந்த சமீபம் அது என்பதால், பேட்டரி போட்டால் அட்டகாசமாய் ஓடும் நிலா சென்ற ராக்கெட் பொம்மையும் அவற்றுள் அடக்கம் ! அந்த ஜாலியான கொள்முதல் பட்டியலில் இந்த காமிக்ஸ் பயணத்தின் துவக்கப் புள்ளியான "இரும்புக்கை மாயாவி" யுமே சேர்த்தி என்பது அந்தத் தருணத்தில் எனக்குத் தெரியாது போயினும், வெகு சீக்கிரமே அந்த வசீகரத்தினுள் சிக்கிக் கொண்டேன் ! நானாக வாசிக்கத் தொடங்கிய முத்து காமிக்ஸ் எதுவென்ற ஞாபகமெல்லாம் இல்லை ; ஆனால் ஆரம்ப இதழ்களின் வரிசையானது "மூளைத் திருடர்கள்' வரை அந்நாட்களிலேயே எனக்கு அத்துப்படி !
"53,புது ரோட்டுத் தெரு" என்ற முகவரியில் இருந்த பூர்விகமானதொரு பிரம்மாண்ட வீட்டில் தான் அந்நாட்களது முத்து காமிக்ஸ் செயல்பட்டு வரும் ! பள்ளி சென்று வீடு திரும்பும் பாதை அதுதான் என்பதால் வாரத்தில் பாதி நாட்களில் எங்கள் ரிக்ஷா அங்கே டேரா போட்டுவிடுவது வழக்கம். உள்ளே நுழைந்தால் அந்தப் பரபரப்பு நம்மையே தொற்றிக் கொண்டு விடும் ! ஒரு பக்கம் கையால் அச்சுக்கோர்க்கும் பிரிவில் குனிந்த தலை நிமிராது பணியாற்றிக் கொண்டிருப்பார்கள் ; மூன்றோ, நான்கோ ஓவியர்கள் இன்னொரு பக்கமாய் அமர்ந்து வரைந்து கொண்டிருப்பார்கள் ! நடு அறையில் முத்து காமிக்ஸின் மேனேஜராய்ப் பணியாற்றி வந்த பாலசுப்ரமணியம் அமர்ந்திருப்பார் ; அவருக்கு மறுபக்கம் டெஸ்பாட்ச் பிரிவினர் ! மாடியில் ஒரு புத்தகச் சுரங்கமே குவிந்து கிடக்கும் - காமிக்ஸ் மாத்திரமன்றி பொதுவான இதழ்களுமாய்ச் சேர்ந்து !! இஷ்டப்பட்டதை வீட்டுக்குத் தூக்கிப் போவேன் ; எனது சேகரிப்பில் இணைத்திடுவேன் - யாரும் எதுவும் சொல்லிட மாட்டார்கள். அந்நாட்களில் ஊருக்குள் ஆங்கில மீடியம் பள்ளிகளே கிடையாதாம் ; என்னைச் சேர்த்தது தான் one & only ஆங்கிலப் பள்ளி என்பதால் அடியேனுக்கு ஆபீசில் கொஞ்சம் மவுசு அதிகம் ! "இங்கிலீபீஸிலேயே பேசுவான்பா !!" என்று சிலாகிப்பார்கள் ! என் தந்தையோ, அவரது சகோதரர்களோ அந்த ஆபீஸ் பக்கம் தலைவைத்துப்படுப்பது அரிது என்பதால் நான் ஜாலியாய் அங்கே அமர்ந்து பொழுதைக் கழிப்பேன் ! அப்போது நீளமான பாக்கெட்களில் இலண்டனிலிருந்து ஏர் மெயிலில் வந்து சேரும் கதைக் கவர்கள் தான் எனது பிரதான இலக்காக இருந்திடும் ! கவரினுள் ஒவ்வொரு புதுக் கதையிலும் குறைந்த பட்சம் 6 செட் ஒரிஜினல்கள் இருக்கும் ! ரொம்ப நாள் வரைக்கும் ஒரே கதையை அரை டஜன் செட்கள் அனுப்புவதன் பின்னணிக் காரணம் எனக்குப் புரிந்ததில்லை ! ஆனால் FLEETWAY உடனான கடிதப் போக்குவரத்தைப் படித்துப் புரிந்து கொள்ளும் வயதை எட்டிய பொழுதுதான் அந்த "தேவ இரகசியம்" அம்பலமானது ! தமிழ் மொழிக்கு மாத்திரமன்றி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி & (மலேசிய ) மலாய் மொழிகளுக்குமென மொத்தம் 6 மொழிகளுக்கு காண்டிராக்ட் போட்டிருந்ததால் - மொத்தம் 6 செட் பிரோமைட் பிரிண்ட் வந்து கொண்டிருந்தன ! காமிக்ஸ் பதிப்பு என்பதே என்னவென்று தெரியாததொரு யுகத்தில், இத்தனை தொலைநோக்குப் பார்வை அசாத்தியமானது என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருந்திட முடியாது ! ஆனால் இதனை "சக்திகளுக்கு மீறிய ஆசை " என்று பார்ப்பதா ? அல்லது நடைமுறை காணாது போனதொரு கனவின் பரிமாணமாய்க் காண்பதா ? என்பது இன்றைக்கும் எனக்குத் தெரியவில்லை ! அதே போல, புரியாத புதிர் இன்னொன்றும் கூட உண்டு ! துளி கூடத் தயாரிப்பிலோ, மொழியாக்கத்திலோ, திட்டமிடல்களிலோ, கதைக் கொள்முதல்களிலோ தொடர்பிலா ஒரு மனுஷனை ஒளிவட்டத்தின் முழுமையையும் பெற்றுக் கொள்ள அந்நாட்களில் அனுமதித்தது ஏனென்பதும் அந்தப் புதிர்ப் பட்டியலில் சேர்த்தி !
Back on track, மாயாவி தான் நமது டாப் நாயகர் என்பதை அந்நாட்களில் விற்பனை நம்பர்கள் வாயிலாக மாத்திரமே தெரிந்து கொண்டிருக்க சாத்தியமாகியிருக்கும் ! வாசகர் கடிதங்களுக்கு இடமே கிடையாது ; புத்தக விழாக்களிலோ, வேறு சந்தர்ப்பங்களிலோ வாசகர்களை சந்தித்ததில்லை என்பதால் - மாயாவியின் வெற்றி ஒரு மௌனமான வெற்றியே என்று தான் சொல்ல வேண்டும் ! ஆனால் அன்றைக்கு ஓசையின்றி ஒரு தலைமுறையின் இதயங்களில் இடம்பிடித்த மாயாவி - கிட்டத்தட்ட 40+ ஆண்டுகள் கழித்தும் ஜீவித்து வருவது அசாத்திய சாதனை !
மாயாவியின் வெற்றிக்கு காரணம் என்னவென்று அலசிப் பார்ப்போமே என்று சோம்பலானதொரு நாளில் முயற்சித்திருக்கிறேன் ! எனக்கு முதலில் மனதில் பட்ட காரணத்தை நான் உரக்கச் சொன்னால் நீங்கள் 'கெக்கே பிக்கே' வென்று சிரிக்கப் போவது நிச்சயம் ! ஆனால் சிரித்து, உருண்டு, புரண்டு முடித்தான் பின்னே கொஞ்சம் யோசியுங்களேன் ? மாயாவி வெளியான 1970-களில் இருந்திருக்கக் கூடிய ஒரே மேஜர் பொழுது போக்கு சினிமாவாகத் தானிருக்க முடியும் ! அந்நாட்களது திரையுலகை ஜாம்பவான்களாய் ஆட்சி செய்து வந்தவர்கள் அனைவருமே அழகான முகங்கள் கொண்டவர்களே !! அன்றைக்கெல்லாம் ஒரு non conventional looker வெற்றி காண்பது குதிரைக் கொம்பு ! மாயாவி அந்த "நாயக இலக்கணத்திற்கு" அட்சர சுத்தமாய்ப் பொருந்துபவர் அல்லவா ? படிய வாரிய தலை ; லேசாய் சிவாஜி சாரையும், (ஹிந்தி) திலீப் குமார் சாரையும் நினைவூட்டும் முகம் ; சதா நேரமும் கோட் சூட் என்ற டிப்டாப் தோற்றம் - பார்த்தவுடன் மனதில் ஒட்டிக் கொள்ளச் செய்ததற்கு இதுவொரு காரணமோ ? என்று நினைப்பேன் ! Of course - மின்சாரம் பாய்ந்தால் அரூபமாகிடும் அந்த fantasy அனைவரையும் வசீகரித்துள்ளது என்பதில் இரகசியமில்லை ; ஆனால் அது ஒன்று மட்டுமே அரை நூற்றாண்டினை நெருங்கும் இந்த வெற்றிக்குக் காரணமாகிட முடியாதே ?!
எனக்குத் தோன்றிய அடுத்த காரணம் - கதைகளுள் (குறிப்பாய் அந்த முதல் 13) இருந்த அட்டகாச variety !! முதல் இதழில் கலைப் பொக்கிஷங்களை லவட்ட இரும்புப் படையை அனுப்பும் வில்லன் ; இரண்டாம் சாகசத்தில் விஞ்ஞானிகளை ஐஸ் கட்டியாக்கிடும் கொடியவன் ; மூன்றில் பூமியை நாசம் செய்யும் கதிர்வீச்சுக்களை ஏவும் மூர்க்கன் ; நான்கில் பாம்புகளோடு குடித்தனம் செய்யும் கண்ணாடிக்காரன், இத்யாதி..இத்யாதி என அந்தப் 13 கதைகளுமே தனித்துவமான கதைக்கருக்கள் கொண்டவை ! இன்றைக்கு சில பல "ஹி..ஹி..க்கள்" உருவாகிட இவை காரணம் தந்தாலும் - ஒரிஜினலாக இவை வெளியான காலகட்டத்தில் பிரமிப்பே மேலோங்கியிருக்கும் என்பதில் ஐயமேது ? So கதைகளின் வீரியும் + வசீகரம் ஒரு பிரதான காரணம் ! அப்புறமாய் நான் சொல்வது அந்த artwork ! ஸ்பைடர் கதைகளில் ஆளாளுக்கு படம் போட்டிருக்கிறார்கள் ; நமது 'ஜாக்கி ஜட்டி' ஜானி நீரோவுக்கும் தினுசு தினுசான ஓவியங்கள் உண்டு ! (கொலைகாரக் கலைஞன் ; மூளைத் திருடர்கள் போன்ற சுமார் ரகங்களும் ; கடத்தல் முதலைகள் ; ஜானி in ஜப்பான் போன்ற சூப்பர் ரகங்களும் !) ஆனால் மாயாவிக்கு ஓவியர் மாசிமோ பேலார்டினெல்லி ; ஜீசஸ் பிளாஸ்கோ போன்றோரின் சீரான, வித்தியாசங்கள் இல்லா, அழகான பாணிகளே என்பதால் கண்ணுக்கொரு விருந்து உத்திரவாதம் ஒவ்வொரு முறையும் !
இன்னொரு striking காரணமென்று நான் நினைப்பது ஒவ்வொரு கதையிலும் உள்ள ஏதேனுமொரு மறக்க இயலா sequence ! முதல் இதழான "இரும்புக்கை மாயாவி" இதழின் highlight - கட்டிப்போடப்பட்டிருக்கும் மாயாவியை நோக்கி அடி மேல் அடி வைக்கும் அந்த வாள் சுமக்கும் பொம்மை தானல்லவா ? கடைசி நொடியில் மாயாவிகாரு அந்த பொம்மையை இயக்கும் கடிகாரத்தைச் சுட்டுப் பொசுக்கும் தருணத்தை இன்றும் என்னைப் போலவே ஓராயிரம் வாசகர்கள் நினைவு கூர்வது உறுதி ! இயந்திரத்தலை மனிதர்களின் கிளைமாக்ஸ் மறக்கக் கூடியதா - என்ன ? அயல் கிரகத்திலிருந்து கிளம்பியிருக்கும் படையை வீழ்த்திட மாயாவி மாமா கார் பேட்டரியிலிருந்து மின்சாரம் திருடி ஏவுகணைகளை இயக்கும் கேபிளை விசையாகப் பிடிக்கும் நொடியில் இங்கே ஒரு நூறு வீட்டுத் திரைச்சீலைகளையாவது நாம் பற்றி லயித்திருந்திருப்போம் என்பது நிச்சயம் ! இப்படியே ஒவ்வொரு கதையிலும் ஒரு ஸ்பெஷலான knot இருப்பது அந்தக் காலகட்டத்தில் வாசக அபிமானங்களை ஈட்டியதில் வியப்பேது ? "பாம்புத் தீவில்" தண்ணீருக்குள் மின்சார ஈல் மீனை வில்லன் அனுப்பும் தருணமோ ; 'கொள்ளைக்கார பிசாசில்" ஒட்டு மொத்தமாய்ப் பிசாசுகள் நடை போட்டு வருவதையோ ; "நடுநிசிக் கள்வனில்" மங்கிய பார்வையோடு சீற்றம் கொண்ட காளையை எதிர்கொள்ளும் காட்சிகளோ காலாவதியாகிடா நினைவுகள் தானே ?!!
மருந்துக்கும் விரசம் கிடையாது ( அது சரி - இரும்பு claw காரர் கதையில் எங்கேனும் பெண்கள் தலை காட்டியுள்ளார்களா ? நடுநிசிக் கள்வனில் பார்த்துள்ளது நினைவுள்ளது ! ) Clean story lines ; எப்போதுமே "நீதியே வெல்லும்" என்ற கதையோட்டம் ; ஒரே சீரான பக்க அமைப்புகள் ; கதை நீளம் - இவையும் கூட இந்த மின்சார முழுங்கரின் வெற்றிக்குக் காரணங்கள் அல்லவா ? இன்றைக்குப் புராதன நெடி இங்கு தட்டுப்பட்டாலும் கூட - ஒவ்வொரு புத்தக விழாவின் போதும் - "ஆஆ...மாயாவியா ???" என்று ஆனந்தக் கூத்தாடும் மூத்த வாசகர்களைப் பார்க்கும் போது "புராதனமானது...புண்ணாக்காவது !" என்று தான் நினைக்கத் தோன்றும் ! 20 மாதங்களுக்குள் மூன்று முறை மறுபதிப்பு (நயாகராவில் மாயாவி) செய்திடச் செய்திருக்கும் ஆற்றல் இங்கு வேறு யாருக்குண்டு ? So "சர்வமும் நானே ; சாதனை நாயகனும் நானே !!" என்று முழங்கிட முழுத் தகுதி கொண்டவர் நம் பயணத்தின் முதல் புள்ளிக்குச் சொந்தக்காரர் !
அடுத்த வாரம் - ஜாம்பவான் # 2 பற்றி பார்ப்போமே ?!
பழமையினுள் பவனி செய்தது போதுமென்பதால் - இதோ காத்திருக்கும் டிசம்பரின் இதழ் # 1-ன் அட்டைப்பட முதல் பார்வை !
சென்ற மாதத்து ஜேசனின் பாகம் 1-ஐப் போலவே இம்முறையும் ஒரிஜினல் அட்டையே - துளி கூட மாற்றங்களின்றி ! இங்கே ஸ்க்ரீனில் தெரிவதைவிடவும் நேரில் கூடுதல் அழுத்தமாய் ; கம்பீரமாய் இந்த ராப்பர் தோன்றிடுவதை பார்த்திடப் போகிறீர்கள் ! கதையைப் பொறுத்தவரையிலும் - இப்போதைக்கு இவ்வளவு மட்டுமே நான் சொல்லிடுவேன் : இந்தாண்டின் வாசிப்பு அனுபவங்களில் மட்டுமல்லாது - சமீபத்தைய அனுபவங்களுள்ளும் இந்த மினி தொடரானாது ஒரு உச்ச இடத்தைப் பிடித்தால் நான் வியப்படைய மாட்டேன் ! பணியாற்றும் நேரம் வரையிலும் பாகம் 2-ஐப் படிப்பதில்லை என்று வைராக்கியமாக இருந்தேன் ; இப்போது அதே தீர்மானம் பாகம் 3-ன் பொருட்டும் தொடர்கிறது ! So கிளைமாக்ஸ் பாகத்தில் கதாசிரியர் அசாத்தியமான விளக்கங்களை நமக்காக வைத்திருக்க வேண்டும் ; அல்லது அபத்தமான வியாக்கியானங்களோடு மங்களம் பாடியிருக்க வேண்டும் ! எது எப்படியோ - பாகம் 2-ன் வேகம் - அதிர செய்யும் அதகள அசுர வேகம் ! And முடிச்சுகளுக்கு மேல் முடிச்சுகளாய் போட்டுக் கொண்டே செல்கிறார்கள் கதாசிரியரும், ஜேசன் ப்ரைஸும் ! முதல் பாகத்தை விடவும் இங்கே வசனங்கள் சற்றே ஜாஸ்தி, என்பதால் கதையின் டெம்போ துளியும் சேதம் கண்டிடாது பயணிக்க, இயன்ற குட்டிக் கரணங்கள் சகலத்தையும் போட்டுள்ளேன் ! சமீபமாய் பேனா பிடித்த அனுபவங்களுள் ஜேசன் ஒரு படுவித்தியாசமான அனுபவத்தை எனக்கு நல்கியுள்ள புண்ணியவான் ! இந்த வாரத்தில் அச்சு செல்லவிருக்கும் "மறைக்கப்பட்ட நிஜங்கள்" உட்பக்க பிரிவியூ இதோ ! அந்தக் கடைசி 3 frame களைப் பாருங்களேன் !!! Phew !!!
கடந்த வரத்து caption போட்டிக்கு ஏகப்பட்ட entries வந்துள்ளதால் - நிதானமாய்ப் பகல் பொழுதில் பரிசீலனை செய்து விட்டு (!!!) முடிவை அறிவிக்கிறேன் ! அதற்கு மத்தியில் - சந்தா D பரிசாக யாருக்கேனும் வழங்கிடும் வாய்ப்பு இதோ :
இன்னுமொரு ஜாலி update !! "தினமலர் தீபாவளிமலர்" இதழில் நமக்கு கிட்டியிருந்த விளம்பரம் காரணமா ? அல்லது எப்போதும் போலவே நமது இரவுக்கு கழுகாரின் ஸ்பெஷல் இதழ் வெளியாகும் நேரத்துப் பரபரப்பா ? அல்லது இரண்டும் சேர்ந்த கலவையே காரணமா ? என்றெல்லாம் தெரியவில்லை - ஆனால் கடந்த 2 வாரங்களாக நமது ஆன்லைன் ஸ்டோரில் அனல் பறக்கிறது !! வாங்குவோரில் நிறைய பேர் புதுவரவுகள் என்பது புரிகிறது - அவர்களது ஆர்டர்களின் கனத்தைப் பார்க்கும் பொழுது !! So நிச்சயமாய் "தினமலர் " effect இங்கே கணிசம் என்றே தோன்றுகிறது !! அவர்களுக்கு நமது நன்றிகள் என்றென்றும் !!
Before I sign off : வழக்கம் போல் சந்தா நினைவூட்டல் folks ! எட்டும் தூரத்தில் 2017 நிற்கும் தருணத்தில் - உங்கள் சந்தாத் தொகைகளை அனுப்பிட முஸ்தீபுகள் செய்திடத் தொடங்கலாமே ? இதுவரையிலும் எந்த ஆண்டும் இல்லா விறுவிறுப்பு இம்முறை சந்தாக்களில் தென்படுகிறது ! அது மட்டுமன்றி - 3% SILVER & 2% PLATINUM என்பதைத் தாண்டி பாக்கி 95% முழுக்க முழுக்க GOLD சந்தாக்களே !
Before I sign off : வழக்கம் போல் சந்தா நினைவூட்டல் folks ! எட்டும் தூரத்தில் 2017 நிற்கும் தருணத்தில் - உங்கள் சந்தாத் தொகைகளை அனுப்பிட முஸ்தீபுகள் செய்திடத் தொடங்கலாமே ? இதுவரையிலும் எந்த ஆண்டும் இல்லா விறுவிறுப்பு இம்முறை சந்தாக்களில் தென்படுகிறது ! அது மட்டுமன்றி - 3% SILVER & 2% PLATINUM என்பதைத் தாண்டி பாக்கி 95% முழுக்க முழுக்க GOLD சந்தாக்களே !
"So தங்கம் வாங்க தாமதமின்றி வாங்க !! " Bye now !! See you around !!
Online-ல் சந்தா செலுத்திட எண்ணும் பட்சத்தில் http://lioncomics.in/2017-subscription/240-2017-subscription-abcde-tamilnadu-st-courier.html
Online-ல் சந்தா செலுத்திட எண்ணும் பட்சத்தில் http://lioncomics.in/2017-subscription/240-2017-subscription-abcde-tamilnadu-st-courier.html
First time first,
ReplyDeleteGood morning sir
DeleteSabari Nathan : Good night நண்பரே !!
Delete4
ReplyDeleteHai
ReplyDelete7வது
ReplyDeleteஇனிய அதிகாலை வணக்கங்கள் நண்பர்களே :)
ReplyDeleteசார், காலையில் 9 மணிக்குன்னு சொல்லிட்டு, இப்படிப் பண்ணிட்டீங்களே!! :-P
ReplyDeletePodiyan : காலையில் உங்களைக் காக்க வைப்பதற்குப் பதிலாய் இரவில் கொஞ்சம் தூக்கத்தை வீட்டுக் கொடுத்தால் தப்பில்லை என்று தோன்றியது !
Deleteவணக்கம்
ReplyDeleteYes! Mayavi looked more like the well dressed handsome Hero Mr. Dev Anand in those days.
ReplyDeleteமாயாவிகாரு இன்றும் என்றும் அனைவர் மனதிலும் முதல் இடத்தில். இன்றும் எனது நண்பர்ககளிடம் நமது comics பற்றி சொல்லும் போது இவரைதான் முதலில் சொல்லுவென், என் என்றால் இன்று 30 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இவரது கதையை அந்த காலதில் படிக்காமல் இருந்திருக்க மாடார்கள். அப்போது அவர்கள் முகதில் தோன்றி மறையும் சந்தோசம் பல கோடி கொடுதாலும் கிடைகாது.
ReplyDeleteKathirvel S : மாயாவியின் மாயாஜாலம் !!
Delete//அதே போல, புரியாத புதிர் இன்னொன்றும் கூட உண்டு ! துளி கூடத் தயாரிப்பிலோ, மொழியாக்கத்திலோ, திட்டமிடல்களிலோ, கதைக் கொள்முதல்களிலோ தொடர்பிலா ஒரு மனுஷனை ஒளிவட்டத்தின் முழுமையையும் பெற்றுக் கொள்ள அந்நாட்களில் அனுமதித்தது ஏனென்பதும் அந்தப் புதிர்ப் பட்டியலில் சேர்த்தி ! //
ReplyDelete''மு.த'' - ஹி..ஹி...!
அது தொடர்பில் சீனியர் எடிட்டர் ஒரு பதிவைத் தந்தால் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம்!
Deleteசைத்தான் சிறுவர்கள் கதையை என்னால் மறக்க முடியாது. நான் முதலில் படித்த மாயாவி கதை. முதலில் பாக்கெட் சைசில் வந்து பின்பு மெகா சைசில் வந்த சூப்பர் (!?) கதை.
ReplyDeleteஅதிகாலை வணக்கம்
ReplyDeleteஇனிய விடுமுறை நாள் வணக்கம். ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு.
ReplyDeleteநான் முதலில் லயன்முத்து காமிக்ஸ் ஸில் முதலில் படித்தது 'கன்னி தீவில் மாயாவி' அந்த காமிக்ஸ் எப்படிப் என் கைக்கு வந்தது என்று நினைவில்லை. ஆனால் இன்று வரை நான் லயன்முத்து வாசகன் ஆக பிள்ளையார் சுழி போட்டது அந்த காமிக்ஸ் தான்.
ReplyDeleteஅப்படியொரு இதழ் முத்துவில் வரவில்லையே? ஒருவேளை 'கண்ணீர் தீவில் மாயாவி' யை குறிப்பிடுகிறீர்களோ?
Deleteநீங்கள் கூறுவது போல் இருக்கலாம்.நான் படித்து போது அந்த காமிக்ஸில் அட்டை படம் இல்லை. அதன் முதல் பக்கத்தில் கன்னி தீவில் மாயாவி என்று ஏழுதி இருந்தது. அந்த கதையில் மாயாவி தீவில் இருக்கும் சிறையில் இருந்து கைதிகள் எவ்வாறு தப்பி விடுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க கைதி மாதிரி வேடமிட்டு செல்வார். இந்த கதையில் மாயாவி ரொம்ப வதை சித்திர வதை செய்ய படுவார்.இதில் climax ஸை நான் படிக்க வில்லை. அந்த பக்கங்கள் மிஸ்ஸாகி விட்டது. இந்த கதை எந்த வருடம் வந்தது என்று கூற முடியுமா?. நான் எந்த வருடத்தில் இருந்து காமிக்ஸ் படிக்க ஆரம்பித்தேன் என்று தெரிந்து கொள்வேன்.
Delete1990
Deletemore details on/; http://akotheeka.blogspot.in/2010/01/blog-post_15.html
''எப்பொருள் யார்யார்வாய்க் கேப்பினும் அப்பொருள்
ReplyDeleteமெய்ப்பொருள் காண்பது அறிவு''
போன மாதம் என் office friendக்கு லார்கோ முதல் பாகம் படிக்க கொடுத்தேன் . படித்து விட்டு எனக்கு எல்லா பாகமும் வேண்டும் என்று கேட்டு போன வாரம் onlineனில் முழு செட்டையும் order செய்து வாங்கி விட்டார்.
ReplyDeleteசூப்பர் சார்.!
Deleteசரியான கதையை சரியான நண்பருக்கு கொடுத்து நம் பாதையில் இழுப்பதே ஒரு திறமைதான்.!
good job Ganesh!
Deleteஅந்த பையன் corres ஸில் MBA படித்து கொண்டு இருக்கிறான். வயசு 23 இல்லை 24 இருக்கும். குடுக்கும் போதே கண்டிப்பாக இவ முழு செட்டையும் வாங்கி விடுவான் என்று எதிர்பார்தேன். எனென்றால் MBA தேவையான அவ்வளவு விஷயம் இந்த காமிக்ஸ் தொடரில் ஆங்காங்கே கொட்டி கிடைக்கிறது.
Deleteசூப்பர் கணேஷ்குமார்
Delete//MBA வுக்கு தேவையான அவ்வளவு விஷயங்கள் கொட்டிகிடக்கிறது.!//
Deleteலிமிடேட் கம்பெனியின் வண்டவாளகளை தண்டவாளத்தில் ஏற்றும் கதை.! மேற்கண்ட தொழிலில் சம்பந்தப்பட்டவர்கள் நம்மைபோன்றவர்களை விட அதிகமாகவே ரசிப்பார்கள்.!
இன்று உலகத்தை ஆண்டு கொண்டு இருப்பது corporate companyனிகள் தான்.
Deleteகுமார்.! 100 % உண்மை.!
Deleteகுட் ஜோப் கணேஷ்!
DeleteSuperb boss!
DeleteGaneshkumar Kumar : நன்றிகள் சார் !
Deleteசென்னையிலொரு வாசகர் உள்ளார் - லார்கோவின் அத்தனை ஆங்கில இதழ்கள் + தமிழ் இதழ்களை வாங்கி - திரைத் துறையிலிருக்கும் ஒரு டைரக்டருக்கு அன்பளிப்பாய் வழங்கியுள்ளார் !
காலை வணக்கங்கள்....
ReplyDeleteகாமிக்ஸ் சொந்தங்களே..!
GOOD MORNING Friends! :)
ReplyDelete"மறைக்கப்பட்ட நிஜங்கள்"- i am waiting.....
காலை வணக்கம்
ReplyDeleteகாலை வணக்கம் அன்பு எடி,மற்றும் நண்பர்களே
ReplyDeleteவணக்கம் நண்பர்களே...
ReplyDeleteவணக்கம் சார்...
வரலாற்று பதிவுகள் என்றுமே படிக்க சுவாரஸ்யமானவை...
சூப்பர்...
தொடருங்கள் சார்...
+1
Deleteunmai thala!
Deleteஉண்மை உண்மை உண்மை! புக்குல 'சி.சி.வ' எழுதும்போது இரண்டு பக்கங்கள்ல முடிக்கவேண்டிய கட்டாயம் இருக்கலாம்! ஆனால் வலைப் பதிவுகளில் அதுபோன்ற கட்டுப்பாடுகள் கிடையாதே! நாங்களும் மாசம் நாலஞ்சு 'சி.சி.வ' படிச்சா மாதிரி இருக்கும்!
Deleteசேலம் Tex விஜயராகவன் & friends : : இரண்டரைக்குப் பதிவைப் போட்டுவிட்டு கட்டையைக் கிடத்தினால் மூன்றேகாலுக்கு வாட்சப் கிணுகிணுக்கிறது ! ஓட்டிப் போய்க் கிடக்கும் ஆந்தைக் கண்களை பிரித்துப் பார்த்தால் - சீனியர் எடிட்டரின் மெசேஜ் : "அந்த நாள் ஞாபகம் வந்ததே !" என்று !! Phew !
Delete///சீனியர் எடிட்டரின் மெசேஜ் : "அந்த நாள் ஞாபகம் வந்ததே ///...
Deleteதீபாவளிப்பதிவு, புத்தாண்டு பதிவு , பொங்கல் பதிவு, மே1பதிவு, ஆண்டுமலர் பதிவு போன்ற சிறப்பு பதிவுகளை மூத்த ஆசிரியரை எழுத வைக்க ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா சார்???
1971ல் முத்து காமிக்ஸ் தொடங்கப்படுகிறது எனில், அதற்கு ஒரு 10ஆண்டுகளுக்கு முன்னதாகவே திட்டமிடுதல் தொடங்கப்பட்டுருக்க கூடும் தானே சார்.அந்த துவக்க கால சுவையான& சுவாரசியமான நிகழ்வுகளை நாங்கள் அறியச்செய்ய வேண்டியது உங்களின் பொறுப்பு சார்...
லயனுக்கு சி.சி.வயதில் மாதிரி,
முத்துவுக்கு " அந்த நாள் ஞாபகம் வந்ததே"...
Good morning to all.எடிட்டர் க்கு மட்டும் good night.
ReplyDeleteGood morning to all
ReplyDeleteஏதோ மாயாவி ஸ்பெசல் உண்டு போல மகிழ்ச்சி
ReplyDeleteமாயாவி ஸ்பெசல் போடலாமே. இது உண்மையிலேயே நல்ல ஐடியாதான்.
Deleteஆமா ஜி 3 கதை 150ரூபாய்
Delete4 கதை 200ரூபாய்
palanivel arumugam : 5 கதை 250 ரூபாய் ; 6 கதை 300 ரூபாய் !
Deleteவாய்ப்பாடு தானே..? நானும் சொல்லிக் கொண்டால் போச்சு !
Dear Editor,
ReplyDeleteகாலம் கடந்தும் மாயாவி கதைகள் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருவது ஒன்றும் அதிசயமில்லை. அதைபற்றி ஆசிரியர் வியந்திருப்பது எனக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்துகிறது. மாயாவிக்கு அதிசய சக்திகள் இருந்தாலும் அவரது கதையோட்டம் எதார்த்தமானது. அவரும் சராசரி மனிதன் என்ற தோரணையிலேயே படைப்பாளிகள் நடமாடவிட்டதாலேயே வாசகர்களிடம் அன்றும் இன்றும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளார். மும்மூர்த்திகளில் ஒருவரை பற்றி விவரித்து எழுதியுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்சியினை தந்துள்ளது. அடுத்த மூர்த்தியின் விபரங்களை அடுத்த பதிவில் தெரிந்து கொள்ள மிகுந்த ஆவலோடு உள்ளேன்.
மாயாவியின் கதைகளில் படங்கள் துல்லியாக பளிச்சென்று இருக்கும். ஆனால் ஜானி நீரோ கதைகளில் சில ஓவியர்கள் மட்டுமே தரமான படங்களை தந்திருப்பார்கள். அதே போன்றுதான் லாரன்ஸ் & டேவிட் கதைகளிலும் இருக்கும். உதாரணத்திற்கு ஒன்று சிறைப்பறவைகள் கதையில் ஓவியங்கள் சிறப்பாக இருக்கும்.
// சா்வமும் நானே-
ReplyDeleteவில்லன் வல்லவனிடம் சேரும் கிட் அவனுடன் ஒரே மேஜையில் அமா்நது விவாதிப்பது ரொம்பவே நெருடலாக உள்ளது. பழகிய பழைய ஆட்களை விட புதிதாக வந்து சோ்ந்தவனிடம் வில்லன் சகஜமாக பேசுவது அதுவும் வந்தவன் உண்மையானவனா என்ற சந்தேகம் உள்ள நிலையில் விசித்திரமாக படுகிறது.//
போன பதிவில் பதிவிட்டதிருந்ததற்கு ஆசிரியரின் பதிலை எதிர்பார்க்கிறேன்.
இந்த லாஜிக் எல்லாம் எதிர்பார்தா டெக்ஸ் கதையை படிக்கவே முடியாது.
Delete"புயலும் பதுங்கும் இவர் பெயர் சொன்னாலெ!"
புயலுக்கே இவர் பெரை சொன்னால் பதுங்கனும் தெரியுது.
ஹிஹிஹிஹி..................
Deleteகுமார் சார்.!
க.க.க.போ.!
டெக்ஸ் கதைகளை அனுபவிக்கனும்.,ஆராய கூடாது.!
" சாமி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி .! என்று கிளம்பிவிட்டால் ...முகத்தில் மரூ ஒட்டிக்கொண்டு எடிட்டரும் எஸ்கேப் ஆகிவிடுவார்.!
லாஜிக் பார்த்தா எந்த காமிக்ஸ் கதையும், ஏன் எந்த கதைகளையும் அது ஏன் சினிமா படம்களையும் தான் ரசிக்க முடியாது! சில படம் அல்லது கிராபிக் நாவல்கள் மட்டும் இதற்கு விதி விலக்கு!
Deleteஇது போன்ற பொழுதுபோக்கு விசயம்களில் ரொம்ப ஆராய்சி செய்ய கூடாது! இது எனது கருத்தே!
சேலம் டெக்ஸின் பார்வையில் எப்படி ?
Deleteஎந்தப் பொழுதுபோக்கும் இல்லாத ( ஒரு மரம், செடி, புல் பூண்டு கூட கிடையாதுங்க) பாவம் அந்த வில்லனும் அந்த சபிக்கபட்ட தீவில் எத்தனை நாள்தான் தன் கொரில்லா மூச்சி அல்லகைகளோடவே பேசிக்கிட்டிருப்பான்? யாராவது புது ஆள் தீவுக்கு வந்தால் பொழுதைக் கழிப்பதற்காகவும், அந்தப் புது ஆளின் திறமைகள்/எண்ணவோட்டத்தை ஆழம் பார்ப்பதற்காகவும் உட்கார வைத்துப் பேசியிருக்கலாம்!
Deleteகிட்வில்லரை உட்கார வைத்துப் பேசியதைப் போலவே பணயக்கைதியான அந்த பெண்ணையும் (செனட்டரின் மகள்) உட்கார வைத்துப் பேசுவதைக் கவனித்திருக்கலாம்!
மரியாதை தெரிஞ்ச வில்லப் பயபுள்ளையா இருக்கும்! ;)
Jegang Atq : சார்...FLIGHT 731 இதழை எடிட் செய்த போது நான் சிரித்த சிரிப்பை சிக் பில்லோ ; ரின்டின் கேனோ கூட உருவாக்கியதில்லை ! டவுன் பஸ்ஸைப் பிடிக்கும் பாணியில் லாரன்ஸ் & டேவிட் விமானங்களை ஊர் ஊருக்குப் பிடிக்கும் கூத்தை லாஜிக் எனும் கண்ணாடியோடு அணுகினால் மிஞ்சுவது என்னவாக இருக்கும் ?
Deleteஅட..லாரன்ஸ் வரைப் போவானேன் - மாயாவியை முஞ்சிய புய்ப்பச் சூட்டல்தான் உண்டா ? செலபோன் சார்ஜ் போட ப்ளக்கைச் சொருகுவது போல மனுஷன் சிக்கும் இண்டுக்குள்ளும், இடுக்குக்குள்ளும் விரல் விடுவதை "ஆவென்று" ரசிக்கத் தானே செய்தோம் / செய்கிறோம் / செய்வோம் ?
அவற்றை எவ்விதம் ஏற்றுக் கொள்கிறோமோ - அதே பாணியில் தான் டெக்சின் துப்பாக்கிகளின் தோட்டா அமுதசுரபியாய்த் தொடர்வதையும், குண்டடிபட்டால் ஒரே வாரத்தில் மீண்டும் எக்கு மனிதராய்த் திரும்புவதையும் பார்த்திடல் வேண்டும் !
கற்பனைகளுக்கு தரப்படும் சில சலுகைகளன்றோ இவை எல்லாமே ?
Erode VIJAY : //மரியாதை தெரிஞ்ச வில்லப் பயபுள்ளையா இருக்கும்! ;)//
Deleteஆனாலும் குசும்புக்கொரு அளவில்லை !!
அருமையான ப்ளாஷ்பேக்.! இதை அதிகாலையில் படித்த போது ஒருவித சந்தோசம்.!
ReplyDeleteஒட்டுமொத்த நகரமும் சனிக்கிழமை இரவு தூக்கத்தை நள்ளிரவு வரை நீட்டித்துவிடுவதால்.ஞாயிறு காலை தூக்கம் நீண்டுவிடுகிறது..ஞாயிறு சோம்பல் காலையில் பூஸ்ட் குடித்ததுபோல் ஒரு உற்ச்சாகத்தையும் தெம்பையும் தருவது உங்கள் பதிவுதான்.!
மாடஸ்டி வெங்கடேஸ்வரன். : உங்கள் காலைகள் ரம்யமாகிட ஏதோ வகையில் காரணமாகிடுகிறேன் எனில் - நானடிக்கும் சாமக் கூத்துக்களில் தவறில்லை !!
Delete///சேலம் டெக்ஸின் பார்வையில் எப்படி///... குத்துறதுல எதுக்கு சார் லாஜிக்...!!!
Deleteசிக்கன்னா பிரியாணி செய்துடனும்...
சில்லுன்னா பேத்து போடனும்...
ஃபிஸ்ஸுனா ஃப்ரைதான் டாப்பு...
டெக்ஸுனா குத்துத்தான் கெத்து...
உள்ளேன் ஐயா..!!
ReplyDelete//தினமலர் தீபாவளி மலர் //
ReplyDeleteகட்டுரை நன்றாக இருந்தது.உங்கள் பேட்டியை படிப்பதற்காகவே வாங்கினேன்.!
மாடஸ்டி வெங்கடேஸ்வரன். : நன்றிகள் சார் ; இன்னமும் கொஞ்சம் சமகாலச் சமாச்சாரங்களை பற்றித் தான் சொல்லியிருந்தேன் ; but கட்டுரைகளை அந்தப் பழமை சார்ந்த சமாச்சாரங்களை நினைவூட்டும் விதமாய் எழுதுவதுதான் சுவாரஸ்யம் என எடிட்டர்கள் கருதுவதால் தற்போதைய நடப்புகள் லேசாய் பின்சென்று விடுகின்றன ! Anyways - கிடைத்துள்ள விளம்பரத்தின் மதிப்பு அசாத்தியமானது !
Deleteநான் காமிக்ஸ் என்ற வஸ்துவை அறிமுகம் செய்து கொண்டதே மாயாவி மாமாவின் நயாகராவில் மாயாவி மூலமாகத்தான்.
ReplyDeleteஅப்போது அஞ்சாப்போ, ஆறாப்போ படிச்சிட்டு இருந்த ஞாபகம். என்னுடைய தந்தை நிறைய நாவல்கள் படிப்பார். அப்போதெல்லாம் பிரதான பொழுதுபோக்கு புத்தகவாசிப்பு ஒன்றுதான்
எனும்போது எல்லோரும் எல்லாவற்றையும் காசு போட்டு வாங்க மாட்டார்கள். எக்ஸ்சேஞ் மேளா கொடிகட்டி பறந்த காலகட்டம் அது. அப்படித்தான் என் அப்பாவின் நண்பர் ஒருவர் மூலமாக ஒரு கத்தை காமிக்ஸ் இதழ்கள் வந்து சேர்ந்தன். அவற்றுள் பல நினைவில் இல்லை என்றாலும் நயாகராவில் மாயாவி (முதன்முதலாய் படித்தது என்ற காரணத்தாலும்.) மஞ்சள் பூ மர்மம் (அந்த டைட்டிலும் தேம்ஸ் நதி முழுக்க மஞ்சள் பூக்களாய் நிறைந்திருந்தது அந்த வயதில் பிரமாண்டமாய் தோன்றியதாலும்) பாம்புத் தீவு (பாம்புன்னாவே பயம்தானே) , கொலைக்கரம் ( அந்த வில்லன் கைககளாலேயே எல்லோரது கழுத்தையும் நெரிப்பது இன்னும் நினைவில்) அத்தோடு பாதாளப்போராட்டம், டாக்டர் டக்கர், எத்தனுக்கு எத்தன் போன்ற புத்தம்புதிய (அன்றைக்கு) கதைகளும் நினைவில் தங்கிவிட்டது விந்தைதான் ..!! :-)
அந்த வயதில் நயாகராவில் மாயாவி படித்தபோது சில அறிவார்த்தமான ஐயங்கள் என்னுள் எழுந்ததுண்டு.
ReplyDeleteதண்ணிக்குள்ள எப்புடி வெடி வைக்க முடியும்?, திரி அமிஞ்சி போயிடாதா? என்றும் நினைத்ததுண்டு. ! நீரடி வெடிகுண்டு என்றாலும் நமுத்துப்பூடுமே என்று யோசித்தது கூட உண்டு. ஏன்னாக்கா, அப்போ பார்த்திருந்த சில திரைப்படங்களின் எஃபெக்ட் அது. .கதாநாயகன், காமெடியன் யாரையாவது மரத்தில் கட்டிவைத்து பாம் வைத்துவிடுவார்கள். திரியை கொளுத்திவிட்டு அது வெடிக்கிறதா, ஹீரோ அழிஞ்சிடுவானா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கேனத்தனமாய் சிரித்துவிட்டு ஜீப்பில் ஏறிப்பறந்துவிடும் வில்லன் குரூப். திரி எறிந்துகொண்டே கால்களுக்கு கீழே வரும்போது கட்டிவைக்கப்பட்டவர்கள் ஒன்பாத்ரூம் மூலம் திரியை அணைத்து தப்பிவிடுவார்கள். இப்படி படம்பார்த்து பழகியிருந்ததால் தண்ணீருக்குள்ளேயே வெடிகுண்டு என்பது மிக வித்தியாசமாய் அக்காலகட்டத்தில் தெரிந்ததால் நச்சென்று நெஞ்சில் நிலைத்துவிட்டது. .!
கிட்ஆர்ட்டின் :))))
Deleteஉச்சா செய்து திரியை அணைப்பது பெரும்பாலும் நாயாகவோ, ஆடாகவோ இருக்கும்; நானும் பார்த்திருக்கேன்! :))
"ஒரு உச்சாப் படலம்" - இதுகூட ஏதேனும் ஒரு தலைப்புக்கு ஆகுமோ ?
Deleteசக்திமான் என்றொரு தொடரைப் பார்த்துவிட்டு, சக்திமான் வந்து காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் மொட்டைமாடியில் இருந்து குதித்ததாக ஒரு செய்தியை படித்ததுண்டு.
ReplyDeleteஅதேபோல சில வருடங்களுக்கு முன்புகூட ஒரு சினிமாவைப் பார்த்துவிட்டு உடம்பில் பெட்ரோல் ஊற்றித் தீவைத்துக்கொண்டு பைக்கில் போக முய்ன்றதாக ஒரு செய்தியும் கேள்விப்பட்டதுண்டு.
ஆனால் இத்தனை வருடங்களில், இரும்புக்கை மாயாவியை படித்துவிட்டு, நானும் மாயமாய் மறைகிறேன் பேர்வழி என்று யாரும் இதுவரை கரண்ட் பெட்டிக்குள் கைவிட்டதாக வரலாறோ பூகோளமோ எதுவுமேயில்லை.
எனவே மக்களே ஆணித்தரமாக அடித்துக்கூறுகிறேன், காமிக்ஸ் படிப்பவர்கள் அனைவருமே ஒருபடி மேம்பட்ட புத்திசாலித்தனம் கொண்டவர்கள்தாம். .!! :-)
செம கண்ணன்!!
Deleteமேச்சேரிகாரு.!
Deleteஉங்கள் நடையில் சூப்பர்.!
XIII ன படிச்சுட்டு பச்சைகுத்துவோம் தெரியும்ல. !
Deleteஉண்மைதான் பாஸ்!
Deleteஅதே சமயம் ஒரு பழைய மாயாவி புக்ல இதை நீங்கள் வீட்டில் முயற்சிக்க வேண்டாம்னு எச்சரிக்கை வாசகம் பார்த்ததா ஞாபகம் !
///ஆனால் இத்தனை வருடங்களில், இரும்புக்கை மாயாவியை படித்துவிட்டு, நானும் மாயமாய் மறைகிறேன் பேர்வழி என்று யாரும் இதுவரை கரண்ட் பெட்டிக்குள் கைவிட்டதாக வரலாறோ பூகோளமோ எதுவுமேயில்லை. ///
Deleteஆனால் ஜானி நீரோவின் பூப்போட்ட அன்ட்ராயர் ஸ்டைல் நிச்சயமாக அன்று பலராலும் பின்பற்றப்பட்டிருக்கக்கூடும்! வெளியே தெரிய வாய்ப்பில்லாத சமாச்சாரம் என்பதால் அப்படியே அமுங்கிப் போயிருக்கவும்கூடும்! ;)
ஈ.வி
Deleteஅனுபவமா
Some more advertisements will bring more readers sir, good morning.
ReplyDeleteநான் முதலில் படித்தது காணாமல் போன கடல். அப்புறம் tex பவள சிலை மர்மம்., தலை வாங்கி குரங்கு. மந்சள் பூ மர்மம்,டாக்டர் டக்கர்
ReplyDeleteSridhar : நீங்கள் லயனின் செட் என்பது புரிகிறது ல்நீங்கள் விவரிக்கும் இதழ்கள் எல்லாமே லயனின் 1985+ வெளியீடுகள் !
Deleteஅந்நாளில் மாயாவியின் கனத மூலமாக தான் சித்திரக்கனத படிக்கும் பழக்கம் வந்தது....
ReplyDeleteநண்பர்கள் படிக்கும் போது ஏக்கமாக இருக்கும்.....
90 னபசாவுக்கு வெளிவந்த அந்த புனதயல் சொல்ல வார்த்னத இல்னல...
மாயாவினய தொடர்ந்து லாரன்ஸ், டேவிட்டின் அதிரடி கனதகளில் சின்றப்பறனவ, ப்னளட் நம்பர்731, எனது வாசிப்பில் பிடித்தனவ.....
ஜானி நீரோ வின் ஜானி இன் பாரிஸ் , ஜானி இன் லண்டன் மிகவும் பிடிக்கும்.....
ஏடிட்டர்,மற்றும் காமிக்ஸ் நண்பர்களுக்கு என் அன்பார்ந்த காலை வணக்கம்
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்.
ReplyDeleteஎடிட்டர் சார் இன்னொரு மாயாவி கதையில் ஒரு பெண் பாத்திரம் மாயாவியை வில்லனிடமிருந்து காப்பாற்ற மாயாவிக்கு பலவகையில் உதவி செய்யும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது சார்.
அந்தக் கதை "யார் இந்த மாயாவி?".
அந்த பெண் புரபசர் பாரிங்கரின் மருமகளான லூசி.வண்ணத்தில் கலக்கிய இதழ்.
எடிட்டர் அவர்கள் தெரிவித்த மறுபதிப்புகள் முடிவுறும் தருவாயில் மாயாவியின் கொரில்லா சாம்ராஜ்யம் ஹார்ட் பவுன்ட் அட்டையுடன் வண்ணத்தில் வெளியிடலாமென்று கூறியதை நினைவுபடுத்தி பார்க்கையில்
முன்பு வண்ணத்தில் வெளியான மாயாவியின் கொள்ளைக்கார பிசாசு, யார் இந்த மாயாவி ஆகிய இரண்டு கதைகளும் கூடவே சேர்த்து மூன்று மாயாவியின் கதைகளையும் ஒரே புத்தகமாக வண்ணத்தில் வெளியிட்டால் சூப்பராக இருக்கும். (சீனியர் எடிட்டர் ஒரு சூப்பர் எடிட்டர் சார்.மாயாவி கதைகளில் சூப்பரான மூன்று கதைகளை தேர்ந்தெடுத்து அந்த காலத்தில் வண்ணத்தில் வெளியிட்டுள்ளார். அவருக்கு மிகப் பெரிய சல்யூட்.இளவயதுகளில் எங்களது இதயத்துடிப்பை பலமடங்கு எகிற வைத்த கதைகள் சார் இவைகள்)
இன்றைக்கும் விற்பனையில் பட்டையை கிளப்பும். எடிட்டர் சார் கொஞ்சம் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
+1
Deleteசூப்பர் சார்!
Delete3 மாயாவி புக் கலரில்....
நிச்சயமா இது மாயாவிக்கு பிரியா விடை குடுக்கும் போது செய்ய வேண்டிய மரியாதை தான் !
மாயாவி இன்னும் ாிட்டயா் ஆகவில்லை. அவா் கதைகள்தான் பீக்கில் உள்ளது.
Deleteடெக்ஸ்: 10/10
ReplyDeleteதாத்தா: 10/9
லாரான்சே 10/8
This comment has been removed by the author.
ReplyDeleteவிஜயன் சார்,
Deleteசர்வமும் நானே: ஒரே வரியில் சொன்னும்னா இந்த வருடம் வந்த டெக்ஸ் கதையில் ஏன் நமது மறுபிரவேசத்திற்கு பிறகு வந்த கதைகளில் மிகவும் சிறந்த கதை!
மிகவும் சரியான தலைப்பு, பக்கத்துக்கு பக்கம் விறுவிறுப்பு; அதுவும் முழு டீம் முழு actionனில், செம!! இந்த கதையில் மிகவும் பிடித்த நபர் டோனன், கடைசிவரை இவர் நல்லவரா இருப்பாரா என்று தவிப்புடன் இவரின் பாத்திரத்தை அமைத்தது சிறப்பு என்றால், அதனை அதே சுவையுடன் கொடுத்தது உங்களின் மொழி பெயர்ப்பு!
நண்பர்கள் பலர் விமர்சனம் செய்து விட்டதால் இத்துடன் முடித்து கொள்கிறேன்!
தாத்தா:
ReplyDeleteகடந்த முறை வெறும் சிக்ஸர் அடித்த இவர் இந்த முறை டபுள் சிக்ஸர் அடித்து பந்தை தேடும்படி வைத்து விட்டார்!
பக்கத்துக்கு பக்கம் வெடி சிரிப்பு, இந்த முறை நமது Scientist அவரது உதவியாளரை படுத்தி எடுத்துவிட்டார்! பாவம் சார் அந்த அல்லக்கை!
வழக்கம் போல் வித்தியாசமான புதிய கண்டுபிடிப்புகள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து விட்டன!
Parani from Bangalore : நம்ம அறிவரசு ரவி சார் என்ன சொல்கிறாரென்று பாருங்களேன்..?
DeleteVijayan @ ரசனைகள் பலவிதம்! வேற என்ன சொல்ல!! குறுகிய வட்டத்தில் இருந்து வெளிவந்தால் இவைகளை ரசிக்கலாம்!
Delete52nd
ReplyDeleteSir,Sarvamum naane book some pages missing(194 to 225) and sane page repeating I HV dropped a mail also..yesterday only started reading so informing late..
ReplyDeleteடெக்ஸா, லாரன்ஸா? I ll wait
ReplyDeleteஎனது சிறுவயதில் முதல் அறிமுகமே மாயாவியின் பாம்பு தீவுதான். அதன்பின் இன்றுவரை எனது காமிக்ஸ் காதல் எனக்கு தொடர்கிறது.
ReplyDeleteகாலை வணக்கம் அன்பு எடி,மற்றும் நண்பர்களே
ReplyDeleteஜாக்கு..இன்னிக்கு நமக்கு நல்ல நாள்..கிடைக்கிற மீன் எல்லாமே தங்க மீனா ஜொலிக்குதே
ReplyDeleteநல்லா பாருங்க தலே ..மூணு சில்வர் ,ரெண்டு பிளாட்டினமும் இருக்கு
அருமை👍👍👍👍
Deleteகனல் அணையாம பார்த்துக்குங்க ன்னு கார்சன் கர்ஜனை பண்ணிட்டு போறானே..எதிரிகளை ஒழிக்கணும் ங்கிற வீரக் கனல்தானே
ReplyDeleteஅதெல்லாம் இல்லே ..எப்படியாவது ஒரு ஆட்டை வேட்டையாடிட்டு வர்றேன்..கறியை வறுக்க நெருப்பை அணையாமபார்த்துக்குங்கன்னு சொல்லிட்டுப் போறார்
ஹா ஹா ஹா! :))))
DeleteFriends from Monday Gun Singers programme will be telecasted in Discovery Channel. Our favourite Hero and Villans. Including Jessy James.. A pure wild west story. Don't miss..
ReplyDelete@ சிம்பா
Deleteஒளிபரப்பாகும் நேரம்?
காமிக்ஸ் நண்பர்களும் ஜாம்பவான்ககலெ.நமது ஆசிரியர் மிக பெரிய ஜாம்பவான். இவ்வளவு காலம் கட்டி காப்பதற்கு ஆசிரியரை விட்டால் வேறு யார் உள்ர்.
ReplyDeleteSridhar : சார்...கலைக்கு ஏது அழிவு ? 9th ஆர்ட் என்று அறியப்படும் இந்த காமிக்ஸ் ராஜ்ஜியம் யார் இருந்தாலும், இல்லாது போனாலும் தாட்டியமாகவே தொடர்ந்திடும் ! நாமில்லாது போயிருப்பேன், வேறு யாரோ அந்த இடத்தை நிரப்பியிருப்பார்கள் ! காமிக்சால் நாம் !
Deleteஜேசன் அட்டை படம் கலக்கலாக உள்ளது, வண்ணக்கலவை அருமை, அதிலும் சிகப்பு நிற பின்னணி செம!!
ReplyDeleteதூண்டில் இல்லாம வலை இல்லாம வெறும் ஈட்டியாலேயே தண்ணிக்குள்ளே உள்ள மீனை குறி பார்த்து அடிக்கிறியே ஜாக்கு உன் கண் பார்வை இவ்வளவு கூர்மையா இருக்க காரணம்?
ReplyDeleteவேறென்ன ..மீன் சாப்பிடறதுதான்
:)))
Deleteவிதியோட விளையாட்டை பார்த்தீங்களா தலை
ReplyDeleteஎன்ன சொல்றே ஜாக்கு
நீங்க எத்தனையோ பேரை சுட்டு இருக்கீங்க ஒரு பயலையும் சாப்பிட முடியல..இப்போ ஒரு பாவமும் அறியாத இந்த மீனை சுட்டு சாப்பிடறீங்க
நிறைய மீன்களை பிடிச்சி குடுத்திருக்கே ஜாக்கு ..ஆகையினாலே உனக்கு ..
ReplyDeleteஎனக்கு?
மீன் டும் மீன் டும் நன்றி .
:))))))
Deleteஇந்த வருட டெக்ஸ் கதைகளில் டாப் 1 எது என்பதில் ஏற்கனவே போட்டி கடுமையாக இருக்கிறது இப்போது சர்வமும் நானே பலமான போட்டியை உருவாக்கி உள்ளது
ReplyDeleteடெக்ஸ் நாணயத்தை சுட்டு ஓட்டை போடுவதாகட்டும் கொந்தளிக்கும் கடலை கடப்பதாகட்டும் டெக்சுக்கு நிகர் டெக்ஸே
கார்சன் கிட் டுக்கு ஆபத்து என்றவுடன் என் செல்லப்பிள்ளைக்கு ஆபத்து என புயலேன பறக்கும் இடம் புல்லரிக்க வைக்கிறது வசனங்கள் இந்த வருடத்தின் டாப் வசனங்கள் எல்லாமே அருமை
மொத்தத்தில்
சர்வமும் நானே
சகலமும் நானே
//கார்சன் கிட் டுக்கு ஆபத்து என்றவுடன் என் செல்லப்பிள்ளைக்கு ஆபத்து என புயலேன பறக்கும் இடம் புல்லரிக்க வைக்கிறது வசனங்கள் இந்த வருடத்தின் டாப் வசனங்கள் எல்லாமே அருமை ///
Delete+1
இம்மாத புத்தகங்களின் ரேட்டிங்
ReplyDeleteடெக்ஸ்: 9.5/10
ராபின்: 8/10
தாத்தா:8/10
லாரண்ஸ்&டேவிட்: 8.5/10
வணக்கமுங்க
ReplyDeleteசார மாயாவியின் இந்தக்கதை எனக்கும் டாப் இதான் .அன்று எங்கள் பழய ிரும்புக் கடைக்கு சில பக்கங்கள் கிழிந்த நிலையில் வந்த ிவ்விதழில் திகைத்து இரசித்தது அந்தக் காட்சிதான்..மாயாவி கதைகளை தேடப் படிக்கத் துவங்கினேன்...பின்னர் களிமண் மனிதர்கள்...வாங்கி வியந்தது நினைவில் ..என்னை கட்டி போட்ட காட்சி..கட்டி போட்ட கதையை காட்டி அன்றய நினைவில் ஆட விட்டு விட்டீர்கள்...
ReplyDelete// தங்கம் வாங்க தாமதமின்றி வாங்க.!//
ReplyDeleteதீபாவளி பண்டிகை நிறைய பேருக்கு போனஸ் , நல்ல வியாபாரம் ,என்று குதூகல படுத்தினாலும்., ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் பேர்,
குறிப்பாக தொழிலில் வளர்ந்து வருபவர்கள் ,தொழில் தள்ளட்டம் கொண்டவர்களுக்கு தீபாவளி என்றாலே கி.நா. மாதிரி மிரண்டு போவார்கள்.!
அதற்கு காரணம் அவர்களுக்கு வரவேண்டிய நிலுவைத்தொகை பல லட்சம் இருந்தாலும்.,கடன் வாங்கி தொழிலாளர்களுக்கு தலையை அடமானம் வைத்தாவது போனஸ் கொடுத்தே ஆகவேண்டும்.
தீபாவளி என்றாலே மேற்கண்ட வகையினருக்கு பணமுடை ஏற்படுத்தி அல்லல் படுத்தும்.! இந்த சங்கிலியில் நானும் ஒரு அங்கத்தினர்.!
லக்கிலூக் கதையான பூம்பூம் படலம் கதையில் , அமைதியான இடம்தேடி ஒரு ஸ்டேஷன் மாஸ்டர் தேடிதேடி மாற்றலாகி போவார் விடாது கருப்பு மாதிரி டால்டன் நைட்ரோகிளிசரின் தொடர்ந்து அந்த ஸ்டேசன் மாஸ்டரை நொந்த குமார் ஆக்கிவிடுவார்கள்.
அதைப்போல தீபாவளிக்கு பயந்து எடிட்டரை கெஞ்சி கூத்தாடி கொஞ்சம் முன்னரே சந்தா அறிவிப்பு செய்ய வைச்சா...........
தீபாவளியும் ( அக்டோபரில்) முன்னாடியே வந்திருச்சு....?
" கொடுமே கொடுமேன்னு கோயிலுக்கு போன அங்க ரெண்டு கொடுமை தலைவிரிச்சு போட்டு ஜங்ஜங்ன்னு ஆடிகிட்டு இருந்துச்சாம்.!"
சொலவடைதான் ஞாபகம் வருது.!
அக்டோபர் 29 தீபாவளி வந்துச்சு பாருங்க அது இன்னும் கொடும...
Deleteதீபாவளி என்பது ஒரு பிரிவினர்க்கு கிலி ஏற்படுத்துகிற விசயத்தை இன்றுதான் தெரிந்துகொண்டேன்! தீபாவளியின் மறுபக்கம்!
Deleteநம் லயன் அலுவலகம் சார்பாக கிட்டத்தட்ட இதே மாதிரியான 'தீபாவளி போனஸ்' சமாச்சாரங்களை நம் எடிட்டரும் எதிர்கொண்டிருக்கக்கூடும்! நிச்சயமாகக் கணிசமான தொகை ஒன்று இந்தக் காலகட்டத்தில் 'செலவினம்' வகையில் சேர்க்கப்பட்டிருக்கும்!
Deleteஎப்படிச் சமாளிக்கிறார் என்பது எடிட்டருக்கே வெளிச்சம்!
@ FRIENDS : சிவகாசியின் அச்சகங்களின் நடைமுறை பற்றி உங்களுக்குத் தெரிந்திரா இரகசியம் ஒன்றினைச் சொல்லட்டுமா ? ஆண்டொன்றுக்கு இங்கே வழங்கப்படும் போனஸ் விபரம் இது :
Deleteதீபாவளி போனஸ் - 2 மாதச் சம்பளம்
பங்குனிப் பொங்கல் (உள்ளூர் கோவில் திருவிழா) போனஸ் - 2 மாதச் சம்பளம்
சித்திரை பொங்கல் போனஸ் - அரை மாதச் சம்பளம்
So ஒவ்வொரு பண்டிகைக் காலத்தின் போதும் அச்சக அதிபர்கள் "காதல்" பரத் போலவே உலவுவது வழக்கம் ! நாமும் அதற்கு விதிவிலக்கல்ல !!
பட்டாசு & தீப்பட்டித் தயாரிப்பினில் பெரும்பாலும் காண்டிராக்ட் பணியாளர்கள் என்பதால் அவர்களுக்கு இத்தகைய சுமைகள் ஜாஸ்தி இராது ! அச்சகங்கள் பிழைப்போ பெ பெ பெ....பெ பெ பெ தான் !
ஊப்ப்ப்ஸ்!!! வருடத்திற்கு நாலரை மாதச் சம்பளம் போனஸா?!! இதுவே சிலபல லகரங்களைத் தாண்டிவிடுமே எடிட்டர் சார்?!! சிரமம் தான்!
Deleteம்... அதுவந்து... உ..உங்க ஆபீஸுல ஏதாவது வேலை காலி இருக்குமுங்களா? ;)
எனக்கு ஆபீஸை கூட்ட பெருக்க டீ வாங்கி வருவது போன்ற வேலைகள் கிடைக்குமா லயன் ஆபிஸில் வேலை செய்வதே ஒரு வரம் தானே
Delete@ செந்தில்
Deleteஹலோ... மிஸ்டர்... நாங்க மட்டும் என்ன எடிட்டர் வேலைக்கா (அய்யே..!) அப்ளிக்கேஷன் போட்டிருக்கோம்? அதே கூட்டல் பெருக்கல் வேலைக்குத்தான்! வரிசையில நில்லுங்க சாமி! ( அடடா... அடுத்தவருசம் நாலரை போனஸ் வாங்கிடலாம்னு பார்த்தா அதுக்கும் போட்டிக்கு வந்திடறாங்களே...!) ;)
சார் ஜேசன் அட்டை அட்டகாசம்...நீங்கள் காட்டிய திகில் பக்கம் இன்னும் அட்டகாசம்....steel claw எழுத்தை உபயோகப்படுத்தவும்...இரும்பாய் தெரிகிறது...
ReplyDeleteஅம்பத்தி ஏழாவது தடவையா ஒன்னைப்புகழு றேன்னு கூச்சப் படாதே ஜாக்கு ஒன்னோட கை ராசி அப்படி நீ பிடிக்கிற மீன் எல்லாமே சூப்பர்
ReplyDeleteசரி சரி..அம்பத்தி எட்டாவது மீனையும் நீங்களே சாப்பிடுங்க
ஹா ஹா ஹா! பட்டைய கிளப்புறீங்க வெட்டுக்கிளி!! செம! :)))))))))))
Deleteஉய்ய்ய்.........ஈரோடு விஜய் வந்துட்டார்.!
Delete" சிங்கம் களம் இறங்கி விட்டது.!"
M.V சார்,
Deleteஉண்மையான 'சிங்கம்' மிட்நைட்ல பதிவ போட்டுட்டு வ்ழாவை சிறப்பிக்க கிளம்பிட்டமாதிரி இருக்கே!
Erode VIJAY : அட..விழாவை நான் சிறப்பித்து விட்டாலும்..?!! நேற்றைய பொழுது ஒரே நீல ரகம் !!
Delete'ஜெர்க்' ஆகி வில்லங்கமான அர்த்தம் கொண்டு விடாதீர்கள் சாமி !!
நீலப் பொடியர்களோடும், ஜனவரிக்கான நீல உடுப்புக்காரர்களோடும் (ப்ளூ கோட் பட்டாளம்) கொட்டிய குப்பையைத் தான் குறிப்பிட்டேன் !
ஹா ஹா ஹா! :))))
Deleteஇரண்டாவது வரியைப் படிப்பதற்குள் அந்த முதல் வரியிலேயே போதுமான அளவுக்கு ஜெர்க் ஆகிவிட்டேன் என்பதுதான் நிஜம்! ;)
சென்னைக்கு என்ன ஸ்பெசல் ஸார்
ReplyDeleteஇந்தப் பதிவப் பார்த்தா எனக்கென்னவோ 'சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் - சீசன்2'னு தோனுதுங்க!
Deleteஆமாங்கோவ் !👌
Deletepalanivel arumugam : சென்னைக்கு முத்து காமிக்ஸ் ஆண்டுமலர் # 45 தான் !
Delete
ReplyDeleteசில நிகழ்வுகளின் பின்புறம் நடந்தவற்றை காலங்கள் கடந்தபின் தெரிந்துகொள்வது மகிழ்சியான ஓன்று.
எனது தந்தை வெளியூர் சென்று வரும்பொழுது வாங்கி வந்த விளையாட்டு பொம்மைகளை ஞாபக படுத்திவிட்டீர்கள்.
இரும்புக்கைமாயாவி கதைகளை மறையும் தன்மைக்காக மட்டும் படிக்கவில்லை. பெரும்பாலும் ஒரு பக்கத்தில் இரண்டு படங்கள் மட்டும் உள்ள நிலையில் கருப்பு வெள்ளையில் அவை பளிச்சென்று தெரியும். ஒருசில படங்கள் முழு பக்கத்தில் இருக்கும், அவைகள் மாயாவியை மிக அருகில் (close-up) காட்டும். பெரும்பாலும் கதையின் கடைசி பக்கத்தில் மாயாவி அந்த கதையின் சாகசத்தை நிகழ்த்திவிட்டு வீறு நடைபோட்டு செல்வது போல் அமைந்திருக்கும். அவைகள் என்னை மிகவும் கவர்ந்தவை.
நீங்கள் கூறியது போல மாயாவி பெரும்பாலும் clean shaven முகத்துடன் கோட்டு-சூட்டு-டை உடன் இருப்பார். சித்திரங்கள் வசிகரிக்கும்படி இருக்கும். ஒரு கதையில் மட்டும் (கொள்ளைக்கார மாயாவி) தாடி உடன் இருப்பார், அதுவும் பிரிடன் பிரதமர் கேட்டுக்கொண்டபடி எதிரிகளுடன் சேர்ந்து கொள்ள.
பெரும்பான்மையான கதைகளில் மாயாவி நம்மை எதாவது ஒரு ஊர்/இடத்திற்கு அழைத்து செல்வார். கதைகள் அப்படியே அமைக்கபட்டிருக்கும். இமயத்தில் மாயாவி – இமயமலை, நடுநிசி கள்வன்- மெக்ஸிகோ, பாம்புத்தீவு – பசிபிக் கடல் ஒரு குட்டி தீவு, பாதாள நகரம் – சகாரா பாலைவனம் கெய்ரோ, இயந்திர தலை மனிதர்கள் – வடதுருவ பனி மண்டலம், நயாகராவில் மாயாவி – நயாகரா நீர்வீழ்ச்சி. சிறுவயதில்அந்த கதைகளை படிக்கும் பொழுது அந்த ஊர்களுக்கு சுற்றுலா செல்வதை போல உணர்வு மேலோங்கும்.
மாயாவி முதலில் வந்த எல்லா கதைகளிலும் தனியாகவே யாருடைய உதவியும் இல்லாமல் சாகசங்கள் செய்வார். நூறாவது கதையாக வண்ணத்தில் வந்த யார் இந்த மாயாவில் மட்டும் லூஸி என்ற பெண் மாயாவிக்கு உதவி செய்வதை போல்கதை அமைக்க பட்டிருக்கும் அந்த கதை தவிர வேறு எந்த கதையிலும் பெண்கள் வருவது போல் இல்லை. 2012 பிறகு நான் காமிக்ஸ் வாசிக்க திரும்பியதிலிருந்து இந்த வண்ணகதை இன்றும் எனக்கு கிடைக்கவில்லை. இந்த நூறாவது கதை எதாவது சிறப்பு மறுபதிப்பு வெளியீடாக வண்ணத்தில் வர வேண்டும்.
தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் இரும்புக்கை மாயாவி இன் இடத்தை யாரும் அடைய முடியாது.
பரிமேல் சார்!
Deleteபட்டையக் கிளப்பிட்டிங்க! ஒவ்வொரு வரிக்கும் ஒரு +1 போடலாம்! குறிப்பாக //இந்த நூறாவது கதை எதாவது சிறப்பு மறுபதிப்பு வெளியீடாக வண்ணத்தில் வர வேண்டும்//
+1
DeleteAll+1
Deleteparimel : //பெரும்பான்மையான கதைகளில் மாயாவி நம்மை எதாவது ஒரு ஊர்/இடத்திற்கு அழைத்து செல்வார். கதைகள் அப்படியே அமைக்கபட்டிருக்கும். இமயத்தில் மாயாவி – இமயமலை, நடுநிசி கள்வன்- மெக்ஸிகோ, பாம்புத்தீவு – பசிபிக் கடல் ஒரு குட்டி தீவு, பாதாள நகரம் – சகாரா பாலைவனம் கெய்ரோ, இயந்திர தலை மனிதர்கள் – வடதுருவ பனி மண்டலம், நயாகராவில் மாயாவி – நயாகரா நீர்வீழ்ச்சி. சிறுவயதில்அந்த கதைகளை படிக்கும் பொழுது அந்த ஊர்களுக்கு சுற்றுலா செல்வதை போல உணர்வு மேலோங்கும்.//
DeleteVery True...அதுவும் உலகம் சுற்றுவதெல்லாம் நமக்கொரு புதுமையாக இருந்த நாட்களல்லவா அவை ? மாயாவியின் பெயரைச் சொல்லி சூப்பர் சுற்றுலா சாத்தியமானது நிஜமே !!
இவ்வளவு மீனையும் ஒருசேர எங்க வீட்டம்மா பார்த்தாங்க...விடவே மாட்டாங்க
ReplyDeleteமசாலா தடவி வறுத்துருவாங்களோ ?
ஊஹூம் ..தெருத்தெருவா போய் கூவி வித்து காசோட வான்னு என்னை அனுப்பிடுவாங்க
///கடந்த 2 வாரங்களாக நமது ஆன்லைன் ஸ்டோரில் அனல் பறக்கிறது !! வாங்குவோரில் நிறைய பேர் புதுவரவுகள் என்பது புரிகிறது - அவர்களது ஆர்டர்களின் கனத்தைப் பார்க்கும் பொழுது !! So நிச்சயமாய் "தினமலர் " effect இங்கே கணிசம் என்றே தோன்றுகிறது !! அவர்களுக்கு நமது நன்றிகள் என்றென்றும் !!///
ReplyDeleteரொம்பவே சந்தோசமான தகவல் எடிட்டர் சார்! தினமலருக்கு காமிக்ஸ் வாசகர்கள் சார்பாகவும் நன்றி!
நீர் உயர வரப்புயரும்...
வரப்புயர நெல் உயரும்...
நெல் உயரக் குடி உயரும்...
குடிஉயரக் கோன் உயரும்!
ஒட்டுமொத்த தமிழகமும் காமிக்ஸ் வாசிப்பைப் பெருமையாகக் கருதிடும் நாள் ஒன்று வரும்!
பின்ரீங்... செயலரே ;-)
Deleteநன்றி தினமலர் !
@ Saravanan
Deleteகோயில் மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்ததாக நீங்க நினைச்சுக்கப்படாது! ;)
சே..சே..
Deleteநேத்து வீட்ல பாப்பாவுக்கு தமிழ் சொல்லி கொடுத்தீங்க போல ;-)
அட! அடுத்த வாரத்துப் பதிவுல 'ஜாம்பவான் #2'வாக எங்கள் இளவரசி மாடஸ்டியை அறிவித்து, அம்மயாரைப் பற்றிப் பத்துப் பக்கங்களுக்கு ( எத்தினி 'ப்'!!) குறையாமல் கட்டுரை எழுத வேண்டும் - அப்படீன்னு இந்நேரம் கோரிக்கை வைப்பாங்கன்னு நினைச்சேனே?!! ;)
ReplyDeleteஎன்ன ப்ரோ இப்படி சொல்லிடீங்க !
Deleteநம்ம தல கோடௌன எட்டி பார்த்துட்டு இங்க வந்து பாட்டாவே படிக்க போறார் பாருங்க !
நடுவுல நடுவுல 'மானே...தேனே...பொன் மானே' எல்லாம் மறக்காம போட்டுக்குங்க தல ;-) !
Erode VIJAY : அட..ஏன்சாமி பீதியைக் கிளப்புறீங்க ?
DeleteCaption: 1
ReplyDeleteA :
(தல singing )
ஒன்னு.... ரெண்டு.... மூணு.... நாலு... அஞ்சு.... ஆறு.............
ஏக்...தோ...தீன்.....ச்சார்....பாஞ்.......
B :
தல உண்மையாவே பாட்டுதான் பாடறாரா......?
இல்ல....ரொம்ப நேரமா அஞ்சு மீனதான் குத்தி இருக்கேனு நம்மள ஓட்றாரா.....?
Caption : 2
ReplyDeleteB :
(singing)
ஒன்னு.... ரெண்டு.... மூணு.... நாலு... அஞ்சு.............
ஏக்...தோ...தீன்.....ச்சார்....பாஞ்.......
A :
(தல மனதிற்குள் )
ரொம்ப நேரமா அஞ்சு மீன புடுச்சிட்டு அத பாட்டா வேற பாடி வெறுப்பேத்தறானே !
ஹ்ம்ம்...இவன என்ன பண்லாம் !
Caption: 3
ReplyDeleteB :
(singing)
ஒன்னு.... ரெண்டு.... மூணு.... நாலு... அஞ்சு.............
ஏக்...தோ...தீன்.....ச்சார்....பாஞ்.......
A :
(தல மனதிற்குள் )
புடிச்ச மீன்தான் அஞ்ச தாண்டலனா....
பாட்லயும் அஞ்ச தாண்ட மாட்டிங்கறானே?
நம்மள கலாய்க்கறானோ !
Caption : 4
ReplyDeleteB :
ஏன் தல! எப்படியும் நம்ம வெள்ளி முடியார் ஒரு மானோ ஒரு முயலோ வேட்டையாடிட்டு வர போறாரு !
நாம ஏன் வறுத்த மீன அவருக்கு வச்சுட்டு…..மான் சாப்பிட கூடாது !
A :
(தல மனதிற்குள்)
ஹிஹி...தம்பிக்கு தாத்தாவை பத்தி சரியா தெரியல போல!
பாவம் ! தம்பி இன்னைக்கு பட்னியாத்தான் கிடக்க போகுது !
:))))
DeleteCaption: 5
ReplyDeleteB :
ஏன் தல!
குதிரைக்கு தண்ணி காட்டிட்டு வரேன்னு போனவங்கள இன்னும் காணலையே ?
A :
(தல மனதிற்குள் கர்ஜிக்கிறார்....)
ஹ்ம்ம்...தண்ணீர்தான் காட்டுகிறார்கள் !
ஆனால் குதிரைக்கு அல்ல !
Caption: 6
ReplyDeleteB :
என்ன தல!
மீன கைல வச்சிக்கிட்டு ஒரே ரோசன...... !
எல்லாரும் நம்மள மீன் வறுக்க விட்டுட்டு எஸ்கேப் ஆயிட்டாங்கனு யோசிக்கறயா ?
A :
இல்ல.....!
இந்நேரம் கருவாட்டு வாசத்துக்கு உங்க பூனை முடியார் ஆஜராகி இருப்பாரே !
இன்னும் காணோமேன்னு யோசிக்கிறேன் !
Caption :7
ReplyDeleteB: (ராகத்தோடு)
வோ!
வோ! வோ!
வோ!!!!! வோ!! வோ!
வோ!!!
வோ!
A:
(தல மனதுக்குள்...)
என்னப்பா இவன மீன் பிடிக்க சொன்னா....
இவன் மீனுக்கு டான்ஸ் சொல்லி கொடுத்துக்கிட்டு இருக்கான் !
Caption: 8
ReplyDeleteB :
டெக்ஸ் !
யாரோ வர்றாங்க !
(தொலை தூரத்தில் இருந்து கார்சனின் சன்னமான சீட்டி ஒலி....
"மீனம்மா...மீனம்மா....உன் கண்கள் மீனம்மா....
தேனம்மா...தேனம்மா...உன்ன தின்ன….வந்தேன் நானம்மா.....")
A :
தம்பி....உன் நல்லதுக்குதான் சொல்றேன்.....கூச்ச படாம ரெண்டு மீன் எடுத்து வச்சிக்கோ !
அவன் வந்தப்புறம் எல்லா மீனும் அவன் வயத்துக்குள்ள நீச்சல் அடிக்க போயிரும் !
அப்பறம் என்கிட்ட அழுது ப்ரயோஜனமில்லை… பார்த்துக்க!
:)))))))
DeleteCaption: 9
ReplyDeleteB :
ஓ..ஓ..ஓ..
ஒவ்...ஒவ்...ஒவ்...
ஓ..ஓ..ஓ… ஒவ்,,,,
A :
(தல) என்னப்பா ! மீன் பிடிக்க சொன்னா…மாடு ஓட்டற.....?
B :
இல்ல தல! மீனை எல்லாம் கூட்டமா சேர்க்கறேன் !
ஓ..ஓ..ன்னா…. அவ்ளோ பெரிய மாடே கூட்டமா சேருது!
மீன் கூட்டமா சேராதா ?
A :
(தல மனதிற்குள் )
அடப்பாவி! கொஞ்ச நேரம் கார்சன் கடியில இருந்து தப்பிச்சி சந்தோசமா இருந்தா......
இவன் நம்மள கடிச்சே கொன்னுருவான் போல!
இவனனன........................
(உரக்க)
அடேடே !
மீன் பிடிக்கற பையனுக்கு இவ்வளவு மூளையா?
தம்பி ! இப்போ நீங்க சொன்னதை......
நம்ம ரெட் இந்தியன் மியூசியம் கல்வெட்டுல பதிச்சி வச்சு...
பக்கத்துலேயே நீங்களும் கார்சன் தாத்தாவும் உக்காந்துக்குங்க!!!
உங்களுக்கு பின்னால வர்ற சந்ததிகள் அத படிச்சு தெளிவாயிடுவாங்க....!!!
(தல எழுந்து கொண்டே மனதிற்குள்.....) "ஐயாம் எஸ்கேப் ;-)”
ஹா..ஹா.. கேப்சன் சரவணன்.. எல்லா கேப்சன்களும் சர வெடி... வாழ்த்துக்கள்...
Deleteநன்றி பாஸ் :-)
Deleteஇந்த மாத இதழ்கள் ரேட்டிங்:
ReplyDelete1.சர்வமும் நானே - 10/10,
2.ராபின் - 08/10,
3.தாத்தா - 05/10,ஹி,ஹி இதுவே அதிகம்னுதான் தோணுது
4.மறுமதிப்பு - 07/10.
இந்த மாத இதழ்கள் மினி பார்வை:
ReplyDelete1.சர்வமும் நானே - சகலமும்(டெக்சே)நானே,பக்க கமர்ஷியல் அதிர்வெடி வெட்டு,கதை ஓட்டம் கடைசி வரை நம்மை கைபிடித்து செல்வதில் கதாசிரியர் வெற்றி பெறுகிறார்.
2.ராபின் - கதை ஓகே,விறுவிறுப்பான கதைக் களம்,அட்டைப்படம் தான் ஹி,ஹி ரகம்.
3.தாத்தா - ஹி,ஹி,முடியல.ஸ் யப்பா இப்பவே கண்ணை கட்டுதே.
4.மறுமதிப்பு - இதுவரை படிக்காத கதை,இப்ப படிக்க காதில் பூ ரகமாக இருந்தாலும்,சிறு பிராயத்து வாசிப்புக்கு சுவாரஸ்யம் சேர்த்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை,அந்த வகையில் ஓகே ரகம் தான்.
///அதிர்வெடி வெட்டு,கதை ஓட்டம் கடைசி வரை நம்மை கைபிடித்து செல்வதில் கதாசிரியர் வெற்றி பெறுகிறார்.///
Deleteநச்'னு சொன்னிங்க ரவி சார்!
சார் எல்லாம் எதுக்கு நண்பரே,ரவின்னே கூப்பிடுங்க.
Delete//3.தாத்தா - ஹி,ஹி,முடியல.ஸ் யப்பா இப்பவே கண்ணை கட்டுதே///--- கிட் அங்கிள் தாத்தா தடிக்கிட்டார் போல தெரிகிறதே???...
Deleteநீங்களும் டெக்ஸ் படத்தை புரோபைல்ல வைத்து பூடகமாக சொல்ல வருவது என்னவோ...!!
A: நமக்கு தனி சந்தா கொடுத்தது போதாது என்று நம்பள வைத்து caption வேற எழுத சொல்லுறாரு; இது தான் சந்தர்ப்பம் என்று இந்த டைகர் ரசிக கண்மணிகள் caption எழுதுறேன் என்று நம்பள போட்டு வாருவாருன்னு வாரி அசிங்கபடுத்துறாங்க :-(
ReplyDeleteB: என்ன இரவு கழுகாரே போற போக்கில் புலம்புறதுல நம்ப வெள்ளி முடியாரை பின்னுக்கு தள்ளி விட்டுருவிங்க போல :-)
A: குயில்ல பிடிச்சி கூண்டில் அடைச்சி பாட சொல்லுற உலகம்... மயில பிடிச்சி காலை உடைச்சி ஆட சொல்லுற உலகம் ... கொஞ்சம் கண்ணு சரியாய்தெரியலன்னு இந்த கிழ கொட்டன் கார்சன்ட சொன்னவுடன் துப்பாக்கிய பிடிங்கிட்டு மின் பிடிக்க அனுபிட்டானே :-(
ReplyDeleteB: வோ! ஓவரா அவர கலாய்தத்தினால் வந்த விளைவு!
A: கொஞ்சம் மெதுவா மீன் பிடி கண்ணா… நீ பாட்டுக்கு வதக்கு வதக்குன்னு பிடிச்சிப் போட்டுற… சுத்தம் பண்ண நேரம் ஆகுதுல்ல… துப்பாக்கி சுட்டே பழகுன கைக்கு மீன் சுட கொஞ்சம் லேட் ஆகும்ல…
ReplyDeleteB: இது சும்மா சல்ஜாப்பு… இந்நேரம் கார்சன் இங்க இருந்தா வறுத்த மீனுக்கு ஆசைப்பட்டு என்னா ஸ்பீடா சுத்தம் பண்ணுவார் தெரியுமா..!
A:டைகர் மீனப்பிடின்னா ஒரே யோசனையில இருக்கே என்ன விஷயம்?
ReplyDeleteB:இல்ல தல உங்க எதிரிகளையெல்லாம் நீங்களே காசு கொடுத்து கூட்டிவர்ரீங்களோ? பயபுள்ளைக சுட்டா உங்க மேல குண்டு படவே மாட்டேங்குது.
இப்படி ஏகாந்தமா மீனைப் பிடிச்சோம் சுட்டோம் சாப்பிட்டோம் .திருப்தி யா இருக்கு தலே
ReplyDeleteஅதென்ன ஜாக்கு .மூணு கிலோ மீனை எடுத்து சுத்தம் பண்ணி மசாலா தடவி எண்ணையில் பொறிச்சி மனைவி கையாலே சாப்பிடற சுகமே தனின்னு முந்தி சொல்லுவே
சொல்லுவேன்..அப்புறம் ஒருவண்டி பாத்திரத்தை யார் கழுவுறது
VETTUKILI VEERAIYAN : இதிலே எங்கேயோ சொந்த அனுபவம் கலந்திருக்கிற மாதிரியே தோணுறது எனக்கு மட்டும் தானா ?
Deleteவயதும் அனுபவமும் ஏற ஏற பகிர்ந்து உண்டு பசியாறுதல் என்பதில் வேலைகளை பகிர்ந்து என்பதும் அடங்கும் தானே சார்
DeleteA: என்னப்பா இவ்வளவு நேரமா ரெண்டு மீன்தான் பிடிச்சி இருக்க?
ReplyDeleteB: வோ!!இவருக்கு ஓய்வு கொடுத்து அனுபுனாலும் அனுப்புனாங்க இவரு கொடுக்குற டார்ச்சர் தாங்க முடியல சாமி! மீன தூண்டில் போட்டு பிடிகிறத விட்டுட்டு ஈட்டிய வச்சு குத்து முட்டுன்னு!!
ஆசிரியர் சார்@ இவ்வாரம் மாயாவி தர்பார் பார்த்தாச்சு...
ReplyDeleteஅடுத்த வாரம் இந்த வரிசையில் சிறு மாற்றம் வேணும் சார்...
தொடர்ந்து முத்து காமிக்ஸ் ஹீரோக்களாக நீங்கள் எழுதினால் என்னைப் போன்ற இளவட்டங்கள் சற்றே நெளிவோம்.
வரும் வாரம் லயன் ஜாம்பவான், அடுத்த வாரம் முத்து ஜாம்பவான்-2, அதற்கடுத்து லயன் ....இப்படி எழுதுவேணும் என்பது எங்கள் இளவட்ட கிளப் வேண்டுகோள் சார்...
லயன்ல இரும்புக் கரத்தார் மாதிரி கோலோச்சியவர் பற்றி அறிய ஆவல்...
சுத்தி வளெச்சி சொன்னால்...ஹி...ஹி...
ஆமா ஆமா ஆமா!
Delete+1000000000
@ விஜயராகவன்
Deleteஇதை சொல்வதற்கு எதுக்கு சுற்றி வளைத்து, நெளிஞ்சிக்கிட்டு.. ஓப்பனா அது வலை மன்னன், குற்றவியல் சக்ரவர்த்தி 'ஸ்பைடர்' என்று சொல்லிடவேண்டியது தானே...! (நீங்கள் எதிர்பார்க்கும் லயன் கோட்டாவில் அடுத்த வரிசையில் சட்டி தலையன் ஆர்ச்சி மல்லுக்கட்டுவதுப் போல் தெரிகிறதே..? எப்படியும் உங்க 'தல' தப்புவது மூணாவது வரிசையில் தான்.)
மொகய்தீன்@ லயன் அட்டைல ஸ்பைடர் படம் இருந்தா ஹிட்னு சொல்லி அடிச்ச சூப்பர் ஸ்டார் அவர் என்பது என்னைப்போன்ற சிறுவர்களாலும் உணர முடிகிறது.
Deleteஅக்காலத்திய இதழ்கள் பற்றி ஆசிரியர், நண்பர்கள் சிலாகிப்பது, மறுபதிப்பில் ஹிட்,விற்பனையில் சாதனை,,ஏனைய புள்ளி விபரங்கள்.... உணர்த்துவது தெளிவாக இதைதான்... சத்தமாகவே லயனின் முதல் ஜாம்பவான் ஸ்பைடர் தான் என சொல்லலாம்...
என்னதான் பூ சுற்றினாலும், குமிழிகள் கடத்துவது, மீண்டும் ஸ்பைர்ல கண்ணாடியில் தூர காட்சிகளை பார்ப்பது, ஹிப்னாடிசத்தில் வசப்படுத்தி கொள்ளகள் என ஒரு வித ஈர்ப்பு இருப்பதை இப்போதும் என்னால் உணர முடிகிறது.ஸ்பைடரின் வெற்றிக்கு அந்த எகத்தாளமான வசனங்களும் பெரும் பங்காற்றின...
ஆனால்...ஆனால்..
ஆர்ச்சிக்கு அப்படி ஒரு மகிமை இருந்ததா..??? என்றால் அது பெரிய கேள்விக்குறிதான்...
இரண்டாம் ஜாம்பவான் டெக்ஸ் என்பதில் எள்ளலவும் எனக்கு ஐயமில்லை..
ஆசிரியர் லயனின் இரண்டாம் ஜாம்பவான் பற்றி எழுதும்போது அது உறுதிப்படும்...
ஸ்பைடருடன் விற்பனையில் போட்டி போடும் அளவு இல்லையென்றாலும் ஆர்ச்சியும் வசூல் சக்கரவர்த்தியே அந்நாளில் ஸ்பைடர் மாயாவி ஆர்ச்சி இம்மூவரும் தான் கட்டயாமான வெற்றியை கண்டவர்கள்
Deleteஇரண்டாம் வகுப்பு படிக்கும் போதே என்னைப் படிக்க வைத்தது ஆர்ச்சிதான்....காமிக்ஸ் ஈடுபாட்டிற்கு காரணம் அந்தப் பெரிய ிரும்பு மனிதன் புத்தகம்தான் ..பல நாட்கள் கடையில் விற்காமல் தொங்கிக் கொண்டிருந்த அது...பல மாதங்கள் கூட ிருக்கலாம்....எனக்காக தவம் செய்தது....ஆர்ச்சி ...ஸ்பைடரை யார் பெரியவர் என பிரித்துப் பார்க்க முடியாது என்னால் முதலிடம் இருவருக்குமே....அது போல மாயாவி அளவிற்கு ஈர்த்தது ....லாரன்ஸ் ..டேவிட் என்றால் மிகை அல்ல...
DeleteTest
ReplyDeleteஅப்பாடி பதிவை படிப்பதற்காகவே இன்று நடு சாமம் வரை விழித்தாகி விட்டது...
ReplyDeleteஇனி நாளை ...:-)
அப்பாடி.மறுபதிப்புக்கள் விற்பனையில் பட்டையை கிளப்புவது மகிழ்ச்சி.
ReplyDeleteஜாம்பவான்களுக்கு மறு நல்வரவு.
சொன்னா நம்ப மாட்டீங்க தலே நான் ஈட்டியை குத்தவே இல்லே மீன்களெல்லாம் தானாவே வந்து மாட்டுது
ReplyDeleteஏன் அப்படி ?
நாலே பேரை வச்சிக்கிட்டு ஒரு ராணுவத்தையே நாசம் பண்ணின கதை அதுங்களுக்கு தெரிச்சுடுச்சினு நினைக்கிறேன் ம்ஹ்ம் என்னமோ போடா மாதவா ...
வெட்டுக்கிளியாரே...
Deleteதூள்!!! :)))
வெட்டுக்கிளியாரே...
Deleteதூள்!!! :)))
Vanakkamungo
ReplyDeleteஇந்த மாத தல இதழை கையில் பிடித்து பார்க்கும்போதும்,இதழை புரட்டும்போதும்,முகத்தில் ஒரு பெருமிதமும்,சந்தோஷ ரேகை படர்வதையும் ஏனோ தவிர்க்கதான் முடியவில்லை.
ReplyDeleteமொழிபெயர்ப்பும்,வர்ணச் சேர்க்கைகளும் பிரமாதம் சாரே.
இரும்பு கை மாயாவி தான் தமிழ் காமிக்ஸ் உலகின்ததலதளபதி
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete****** வம்பிலுக்கும் போட்டி *******
ReplyDeleteB : பொழுது சாய்வதற்குள் போன வாரத்து மீன்பிடி போட்டிக்கான வெற்றியாளரை அறிவிக்கிறேன்னு சொல்லிட்டு, இப்போ மறுபடியும் மீன் பிடிக்க விட்டுட்டீங்களே இரவுச்சிங்கமே... எங்கள் சிவகாசி தங்கமே!
A : ஹிஹி! அடுத்ததாக, C.சாந்தாவை பரிசாக அடைவதற்கான மீன் பிடிபோட்டி ஆரம்பம்! போட்டியில் கலந்துகொள்பவர்கள் தலா 3 மீன்களை மட்டுமே பிடிக்கவேண்டும். போட்டி முடிவுகள் ஏதாவதொரு பகல் பொழுதின் பரிசீலனைக்குப் பிறகு (ஞாபகமிருந்தால்) அறிவிக்கப்படும்! ( ஒருவேளை அன்றைய பொழுது நீல ரகமாக அமைந்துவிட்டால் போட்டி முடிவுகள் காலவரையறையின்றி கிடப்பில் போடப்படும் ( அட! என்ர புளூ கலர் ஜீன்சு பேன்ட்டை துவைக்கிற வேலையைப் பத்திச் சொல்றேன் சாமிகளா! ஆனாலும் ரொம்ப ஓவராத்தான் ஜெர்க் ஆகறீங்க, சொல்லிட்டேன்! )
வோ..!அனைவருக்குமே ஒன்றல்ல இரண்டல்ல ஐநூறு,ஆயிரம் பிரச்சினைகள் ..பார்ப்போம் .
ReplyDelete"5 ரூபாய், 10 ரூபாயில் வெளிவந்த எந்தக் காமிக்ஸும் இன்றிரவுமுதல் செல்லாது"ன்னு எடிட்டரும் ஒரு அதிரடி அறிவிப்பு வெளியிட்டார்னா, பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல நூறு கோடைமலர்களும், தீபாவளி மலர்களும் பழைய புத்தகக் கடைகளுக்கு வரும் வாய்ப்பிருக்குமோ என்னவோ?!! :D
ReplyDeleteபூனையாரே.!
Deleteநமது எடிட்டர் பதுக்களை ஒழிப்பதில் முன்னோடி..விலை மதிப்பில்லாத ஆரம்ப கால முத்து ,லயன் புத்தகங்கை மறு பதிப்பு செய்து ஓய்த்துகட்டிவிட்டார்.!
வீட்டில இடத்தை அடைத்துகொண்டிருக்கும் குப்பை என்று மனைவியிடம் ,அடிக்கடி வசைவுகள் கிடைக்கும் போதெல்லாம் , " யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் "" என்று காலரை தூக்கிவிட்ட நான் தற்போது ,டிசம்பர் 30 க்கு பிறகு 1000 ரூபாய் தாளின் நிலைக்கு காமிக்ஸ் வந்தவிட்டதை உணர்கிறேன்.!
அட நம்ம ஆபிஸ் ல 500 1000 செல்லும் சீக்கிரம் சந்தா கட்டுங்கப்பா
ReplyDeleteCaption contest
ReplyDeleteEntry 1
B டைகர் ஜாக் : புனித தேவனின் அருளால் இந்த ஓடையில் மீன் நிறைய ஓடுகிறது
A டெக்ஸ் வில்லர் மைன்ட் வாய்ஸ் : நமக்கு அதிர்ஷ்டம், மீன் பாவம்
Entry 2
B டைகர் ஜாக் : இந்த ஈட்டியின் கூரான முனைக்கு இந்த மீன் எம்மாத்திரம்...ஹாஹா ஹா
A டெக்ஸ் வில்லர் மைன்ட் வாய்ஸ் : இனிம பயல உட்டுட்டு நாம மட்டும் சாகசம் செய்ய கெளம்பக் கூடாது. மெண்டல் மாதிரி பினாத்துறான்
Entry 3
B டைகர் ஜாக் :இத்துடன் வெற்றிகரமாக ஐந்து மீன் பிடித்தாகி விட்டது இரவுக்கழுகாரே.
A டெக்ஸ் வில்லர் மைன்ட் வாய்ஸ் : உப்பு மசாலாவை கிராமத்தில் மறந்து வச்சுட்டு பேச்சைப் பாரு.
Entry 4
B டைகர் ஜாக் : தலையில்லாப் போராளி வருவதற்குள் சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பனும் இரவுக்கழுகாரே.
A டெக்ஸ் வில்லர் மைன்ட் வாய்ஸ் : ஆமாமா. நம்மளைப் பாத்தாலே பயந்துடுவான். ஆயா மாதிரி மீன் தோலை செத்திக்கிட்டு இருக்குறத பாத்தா மானம் போயிடும்.
Entry 5
B டைகர் ஜாக் :செயன்னிக்கள் ஏதோ மெக்டோனால்ட்ஸ் என்ற ஹோட்டலில் சாப்பிட்டார்களாம் டெக்ஸ்
A டெக்ஸ் வில்லர் மைன்ட் வாய்ஸ் : வயித்தெரிச்சலை கெளப்புறான். அடுத்து உடும்பு புடிக்க அனுப்பிட வேண்டியது தான்
Entry 6
B டைகர் ஜாக் : எங்கள் தாத்தா சீப் இரட்டைக் காடி சொல்லுவார், "ஓடு மீன் ஓட உறு மீன் வர காத்திருக்குமாம் கொக்குனு"
A டெக்ஸ் வில்லர் மைன்ட் வாய்ஸ் : உட்டா திருக்குறளை எழுதினது இவன் ஒண்ணுவிட்ட சித்தப்பான்னு சொல்லுவான் போல.
Entry 7
B டைகர் ஜாக் : மீனின் நாற்றம் கம்மியாக உள்ளதே இரவுக்கழுகு.
A டெக்ஸ் வில்லர் மைன்ட் வாய்ஸ் : ஆமாம். நீ மூணு வாரமா குளிக்காத நாத்தத்துல மீன் நாத்தம் கம்மியாயிடுச்சி
Entry 8
B டைகர் ஜாக் : மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுத்தது யார் இரவுக் கழுகு?
A டெக்ஸ் வில்லர் மைன்ட் வாய்ஸ் : டேய் பசிக்குதுடா. தொன தொன னு பேசாம இன்னும் நாலு மீனை புடிச்சு போடுற வழிய பாரு. முடியல.
A-எப்பதான் இந்த Mcelmo Creek பிரதேசத்த விட்டு வெளியாக போறோமோ அருகில் தொண்டையை நனைக்க கூட ஒரு இடம் கிடையாது
ReplyDeleteB-இரவுக்கழுகாரே உங்க மைண்ட் வொய்ஸ நான் கெச் பன்னிட்டன் மீன் இருக்கும் போது வருத்த கறியை பற்றி நினைப்பது ஏன் பேசாமல் மீனை சுடுங்கள் இரவுகழுகாரே துப்பாக்கி சுட தெரிந்த கைக்கு மீன் சுட தெரியாமலா இருக்கும்
B : அந்த சலூன் வாசல் வரைக்கும் என்னைக் கூட்டிப்போய்ட்டு... திடீர்னு 'மீன் பிடிச்சு சாப்பிலாம் வாப்பா'ன்னு குதிரையத் திருப்பிட்டியே தல...! இன்னா உன் கணக்கு?
ReplyDeleteA: எங்கிட்ட ஐநூறு, ஆயிரம் ரூபா நோட்டுக்கள் தான் இருந்துச்சு... அதான்!
timing comedy!
DeleteA: நமக்கு போதுமான மீன் இருக்கு, போதும் என்று சொன்ன பிறகும் இன்னும் என்ன பிடிக்கிற?
ReplyDeleteB: கடந்த "caption" போட்டியில் வென்றவர்கள் பெயரை கடந்த ஞாயற்றுகிழமை மதியம் அறிவிக்கிறேன்ன்னு சொல்லிட்டு போன நமது எடிட்டர் "caption" என்கிற கடலில் முழ்கிவிட்டரோ என தேடிகிட்டு இருக்கிறேன்!
💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹இன்று பிறந்தநாள் கொண்டாடிக்கொண்டிருக்கும் அன்பு நண்பர் ரஃபீக்கிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்💥💥💥💥💥💥💥
ReplyDeleteஇன்று போல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் 🙏
🎂🎂🎂🎂🎂
🍧🍧🍧🍧🍧
💐💐💐💐💐