Powered By Blogger

Saturday, November 19, 2016

வந்தார்...வென்றார்....!

நண்பர்களே,
            
வணக்கம். ஜாம்பவான்களின் படலம் இந்த ஞாயிறும் தொடர்கிறது - முற்றிலுமொரு ஜாலியான ஆசாமியோடு ! “வந்தார்... கண்டார்.... வென்றார்...!” என்பதே இவருக்கான அறிமுக வரிகளாக இருக்க முடியும் ! சொல்லப் போனால் நமது பட்டியலில் ஏற்கனவே இடம் பிடித்து நிற்கும் இரும்புக்கை மாயாவியும், கேப்டன் டைகரும் கூட இதே போலான impact-ஐத் தான் நம்மிடம் கொண்டிருந்தனர் ! So ஒரு ஜாம்பவானின் முதல் முத்திரையே ஒரு ஆயுட்கால முத்திரையாக அமைகிறதை ஜாம்பவான்களுக்கிடையிலான ஒற்றுமையாய்ப்  பார்த்திட முடிகிறது !

Without much ado சொல்லி விடுகிறேனே - இவ்வார அலசலுக்கு ஆளாகிடுபவர் நமது இணையிலாக் குற்றச் சக்கரவர்த்தியே என்பதை  ! நியூயார்க்கைக் கொள்ளயைடித்த நிறையப் போக்கிரிகளைப் பார்த்திருப்போம் ; ஆனால் நியூயார்க்கையே கொள்ளைப் பொருளாக்கிய பக்கியை நாம் முதல் முதலாய் பார்த்தது ஆகஸ்ட் 1984-ல் ! Oh yes - லயனுக்கும், லயனின் சமவயது வாசகர்களுக்கும் ஒரு நிகரில்லா ‘சூப்பர்-டூப்பர் ஹீரோவாய்க் காட்சி தந்த திருவாளர் ஸ்பைடர் தான் இவ்வாரத்தின் அலசலுக்குள்ளாகிடும் ஜாம்பவான் # 3  !! “சிங்கத்தின் சிறு வயதில்” பகுதிகளில் நமது கூர்மண்டையரைப் பற்றி நிறையவே எழுதி விட்டேன் ; இவரது வரலாறு ; பூகோளம் எல்லாமே நமக்கு அத்துப்படி தான் ! ஆனாலும் இந்த anti-hero மீதான நேச நாட்களைப் பற்றி மீண்டுமொரு முறை பேசுவதில் தவறிராது என்றே நினைத்தேன் !

“எத்தனுக்கு எத்தன்” கதையை நான் முத்து காமிக்ஸிலிருந்து லவட்டி விட்டு வெளியிடத் தயாரானது 1984 ஜுனின் இறுதியில் !! ‘இதையா போடப் போறே ?‘ என்று புருவத்தை உயர்த்தியது என் தந்தை மட்டுமன்றி ; முத்து காமிக்ஸின் (அன்றைய) மேனேஜரும் கூட ! ஆனால் எனக்கோ இந்தச் சிலந்தி மனிதரின் கதையில் ஏதோவொரு வசீகரம் இருப்பது போலவே தோன்றியது ! “எத்தனுக்கு எத்தன்” வெளியிடத் தீர்மானித்த சற்றைக்கெல்லாமே தொடரின் இன்ன பிற கதைகளைக் கோரி டெல்லியிலிருந்த ஏஜெண்டுக்கு ஆர்டர் அனுப்பிய போதும் கிட்டத்தட்ட அதே பாணியிலான response; “இந்தக் கதைகள் நிச்சயமாக வேண்டும் தானா ? இந்தியாவிலேயே இது வரை இவற்றை யாரும் வெளியிட விருப்பம் காட்டியதில்லை - are you sure?” என்ற கேள்வியோடு கடிதமொன்று வந்தது ! “துளியும் சந்தேகமில்லை- ஆர்டர் போடுங்கள் !” என்று நான் உறுதி செய்த பிற்பாடு கிளம்பி வந்தவை தான் “டாக்டர் டக்கர்” & “பாதாளப் போராட்டம்!” கதைகள் !

“ஸ்பைடர்” என்ற நாயகரின் அந்த நாட்களது அசாத்திய வெற்றிக்குக் காரணமென்னவென்று ஒரு நாளும் யோசிக்க நான் மெனக்கெட்டதில்லை தான் ! சாவகாசமாய் இப்போது அந்தப் பக்கமாய் சிந்தனையை ஓட விடும் போது சில பல சமாச்சாரங்கள் தட்டுப்படுகின்றன ! 

பிரதானமாய் எனக்குத் தோன்றுவது அந்த நெகடிவ் பாத்திரப்படைப்பு ! அது வரையில் முத்து காமிக்ஸ் & maybe இன்ன பிற காமிக்ஸ் இதழ்களிலும் நாம் பார்த்திருந்ததெல்லாமே நேர்கோட்டுக் கதைக்களங்களில், goody-goody கதாநாயகர்களையே ! ஒரு மாயாவியோ - லாரன்ஸோ – ரிப் கிர்பியோ – காரிகனோ – வேதாளரோ – மாண்ட்ரேக்கோ என்றைக்கும் நீதிக்கு மறுபக்கம் நின்றதாய் சரித்திரமே கிடையாது ! So வழக்கம் போல் நல்லவரான நாயகர்- தீமையின் பல அவதாரங்களை நசுக்குவதைப் பார்த்து லேசாகப் போரடித்துக் கிடந்த நமக்கு – இந்த சத்யராஜ் பாணியிலான நக்கல் கலந்ததொரு வில்லனைப் பார்த்த சமயம் ஏதோவொரு லயிப்பு எழுந்திருக்க வேண்டும் ! வில்லனாக இருந்தாலும் - end of the day போலீஸார் செய்திருக்க வேண்டிய பணிகளை நம்மாள் செய்து முடிக்கும் அந்தப் பாங்கில் தென்பட்ட வித்தியாசம் தான் ஸ்பைடரை உயரத்துக்கு இட்டுச் சென்ற நிஜமான ஹெலிகார் என்பேன்!

அது மட்டுமன்றி – மாயாவி கதைகளிலோ, அந்நாட்களின் இதர நாயகர்களின் கதைகளிலோ, தொடர்வாய் இணை பயணம் செய்திடும் கைத்தடிக் கதாப்பாத்திரங்களுக்கு அத்தனை முக்கியத்துவம் இருந்ததில்லை ! ரிப் கிர்பிக்கு சொட்டைத்தலை பட்லர் டெஸ்மாண்டும் ; சிஸ்கோ கிட்டுக்கு வளமான தொப்பையன் பாஞ்சோவும் சகாக்களாக வலம் வரக் கண்டிருக்கிறோம் தான் - ஆனால் பெல்ஹாமும், ஆர்டினியும் போலக் கதை நெடுக டிராவல் செய்து - அவ்வப்போது நம்மைப் புன்னகைக்கச் செய்திட அவர்களுக்குக் கிடைத்த வாய்ப்புகள் சொற்பமே ! So ஒரு அடாவடி நாயகன் + குழி பறிக்க நினைக்கும் அல்லக்கைகள் என்ற கூட்டணியோடு நாமும் அந்நாட்களில் lock ஆகி விட்டோம் !

அடுத்ததாய் மனதுக்குத் தோன்றுவது அந்த gadgets !  ‘80-களின் மத்திகள் இன்றைய டெக்னாலஜி யுகமல்ல என்ற போதிலும் - நிச்சயமாய் லாந்தர்விளக்குப் புராதன நாட்களுமல்ல தான் ! So ஸ்பைடர் தூக்கித் திரியும் வலைத்துப்பாக்கி ; வாயுத் துப்பாக்கி ; ஸ்பைடரையே தூக்கித் திரியும் ஹெலிகார் என்ற சமாச்சாரங்கள் நமது பால்யக் கற்பனைகளுக்கொரு சுவாரஸ்யத்தைத் தந்திருப்பது நிச்சயம் ! பற்றாக்குறைக்கு வில்லன்கள் கொணரும் உட்டாலக்கடி ஆயுதங்களும் கண்டுபிடிப்புகளும் ! ஆக, ஒரு குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் அவசியங்களின்றி - இஷ்டப்பட்ட புல்வெளிகளில் சவாரி செய்யலாம் ; சிக்கிய மலர்ச்சரங்களை காதெல்லாம் சூட்டிக் கொள்ளலாம் என்ற சுதந்திரத்தை நாம் லயித்து ஏற்றுக் கொண்டிருக்கிறோம் - ஸ்பைடருடனான டீலிங்கில் !

அப்புறமாய் அந்த வில்லன்கள் ! என்ன தான் வேதாளரின் வில்லன்கள் வெறியன்களாக இருப்பினும் ; மாயாவியின் எதிரிகள் எமகாதகர்களாக இருப்பினும் - ஸ்பைடர் எதிர்கொண்ட வில்லன்களின் ரகமே தனியல்லவா ?! ஆழ்கடல் ராக்கெட்டுகளைச் செய்து நியூயார்க்கைப் பிய்த்து இழுத்துப் போகச் செய்யும் ‘பிம்பிலிக்கா பிலாக்கி‘ வில்லனிலிருந்து ; சோளக்கொல்லை பொம்மை வில்லன் ; சதுரங்கப் பார்ட்டி ; சைத்தான் புரஃபஸர்  என்று தினுசு தினுசாய், ரக ரகமாய் அதிரடி காட்டிய அத்தனை வில்லங்கப் பார்ட்டிகளும் ஹாலிவுட் ரக வில்லப்பயலுகள் என்பதில் சந்தேகம் கிடையாது ! பிரபல ஹாலிவுட் டைரக்டர் ஆல்பிரட் ஹிட்ச்காக்  சொன்னது போல - மூர்க்கமான வில்லன் அமைந்தால், அந்தக் கதை (அல்லது படம்) ஹிட்டாகும் வாய்ப்புகள் பிரகாசம் என்பது நம் கூர்மண்டையரின் விஷயத்திலும் நிஜமாகியுள்ளது !

Last but not the least – அந்தப் பாக்கெட் சைஸ் ! வாழ்க்கையில் வெற்றி கண்ட சில விஷயங்கள் ரொம்பப் பெரிய திட்டமிடலைப் பின்புலமாக எல்லா வேளைகளிலும் கொண்டிருப்பதில்லை ! சில தருணங்களில் யதேச்சையாக நிகழும் சம்பவங்கள் - வெற்றிப் படிக்கட்டுகளாய் அமைந்து போவதும் உண்டு ! அந்த பாக்கெட் சைஸ் தீர்மானமும் அத்தகையதே என்பேன் ! மாடஸ்டி பிளைஸி கதையமைப்பு தினசரி செய்தித்தாள்களின் strips எனும் போது – அதற்கான இதழ் அமைப்பும் ; ஸ்பைடரின் – பக்கத்துக்கு இரண்டே (பெரிய) படங்கள் தான் என்ற ஏற்பாட்டிற்கும் சுத்தமாய் sync ஆகவில்லை ! என்னென்னமோ உருட்டிப் பார்த்தும் – மார்கெட்டில் கிட்டி வந்த நார்மலான காகித சைஸ்களுக்குள் நமது குற்றச் சக்கரவர்த்தியை அமர்த்த வழி புலப்படவில்லை ! அப்புறம் தான் சென்னையிலிருந்த பேப்பர் மொத்த விற்பனையாளரைப் பிடித்து, நமக்கு ஒத்து வரக் கூடிய ஸ்பெஷல் சைஸைச் சொல்லி ஏற்பாடு செய்து தர முடியுமா ? என்று கேட்டு வைத்தேன். அந்நாட்களில் நமது சர்குலேஷன் 20,000-க்கு அருகாமையில் என்பதால் - 128 பக்கங்கள் கொண்டதொரு (பாக்கெட் சைஸ்) இதழுக்குத் தேவையான காகிதம் ஒரு கணிசமான அளவாகவே இருந்தது. அவர்களும் யோசித்து விட்டு- ‘இத்தனை டன் ஒரே நேரத்தில் வாங்கினால் சப்ளை செய்கிறோம் !‘ என்று சொன்ன போது- அது கிட்டத்தட்ட 2½ இதழுக்கான பேப்பரை ஒட்டுமொத்தமாய் வாங்க வேண்டியதொரு அளவாக இருந்தது ! எனக்கோ வேறு வழியே கிடையாதென்பதால் சரி என்று தலையாட்டி விட்டேன் ! அதற்கான பணத்தைப்  புரட்ட நான் பட்ட பாடு - ஸ்பைடரிடம் சாத்து வாங்கும் ஆர்டினியின் பாட்டை விடப் பாடாவதியானது ! ஆனால் எப்படியோ ஒப்பேற்றினேன் & பாக்கெட் சைஸும் நிஜமானது ! And we know the rest of the story.......! பள்ளிக்கூடப் பைகளுக்குள் திணித்துக் கொள்ளலாம் ; டியூஷனில் புத்தகத்துக்கு மத்தியில் வைத்துப் படிக்கலாம் ; பாக்கெட்டுக்குள் திணித்துக் கொள்ளலாம் என்ற சௌகரியங்களோ - என்னவோ ஆரம்பமே அமர்க்களமாகிப் போனது ! So ஸ்பைடர் + அந்தப் பாக்கெட் சைஸ் என்பது தற்செயலாய் அமைந்து போனதொரு கூட்டணி  என்பேன் !

ஒரு கூர்மண்டையனை, ஒரு சகாப்தமாக்கிட நம் முன்னே இருந்த முகாந்திரங்கள் ஏராளம் & அவற்றை நாம் அனைவரும் சரியாகச் செய்து வைக்க - லயனின் முதல் பருவத்தின் அசைக்க இயலா சக்தியாய் உருமாறினான் ஸ்பைடர் ! அட்டைப்படத்தில் ‘ஸ்பைடர்‘ மண்டையும் , அந்த இளிப்பும் இருந்தாலே போதும் - அந்த இதழ் சுத்தமாய் விற்றுத் தீர்ந்து விடும் என்பதில் என்னை விடவும் நமது அந்நாட்களது விற்பனையாளர்கள் ரொம்பவே தெளிவாக நம்பிக்கை கொண்டிருந்தனர் ! So Fleetway-ன் ஆண்டுமலர்களுள் இடம்பிடித்துக் கிடந்த ஸ்பைடரின் சிறுகதைத் தொகுப்புகளையும் விட்டு வைக்காது வாங்கி, சிக்கிய சந்திலெல்லாம் சிந்து பைரவி பாடச் செய்த போது ஸ்பைடரின் கொடி உச்சத்தில் பறந்து கொண்டிருந்தது ! 

பின்நாட்களில் ஸ்பைடரின் நீள நீளமான வாராந்திரப் பக்கங்களை ஒன்றிணைத்து முழுநீள இதழ்களாக்க முனைந்த நாட்களின் போது, டெக்ஸ் வில்லர், கேப்டன் பிரின்ஸ், ரிப்போர்டர் ஜானி, ப்ரூனோ பிரேசில் போன்ற ஐரோப்பிய இறக்குமதிகள் - காதிலே புய்ப்பமிலா யதார்த்தங்களோடு நம்மைச் சந்தித்துக் கொண்டிருந்தனர். So ஓவரோ ஓவராய் காதுகளில் தோரணங்கள் தொங்கவிட முற்பட்ட அந்த ஸ்பைடர் நெடுங்கதைகள், லேசாய் ஒரு அயர்ச்சியை கொண்டு வந்த காலகட்டத்தில் – நைஸாக நம்மவருக்கு VRS தந்திட முற்பட்டேன் ! 

நமது மறுவருகையின் போது “சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷலில்” மனுஷனை ஆஜராக்கிய போது, இங்கும், அங்குமாய் சில பல ‘ஹி...ஹி...ஹிக்கள்‘ கண்ணில் பட்டபோதிலும், வெளியான மூன்றே மாதங்களில் சிட்டாய்ப் பறந்து இதழ் காலியாகிப் போனதற்கொரு முக்கிய காரணி நமது ஹெலிகார் ஜாம்பவானே ! இன்னமும் நாம் வெளியிடாதிருக்கும் The Sinister Seven என்ற கதைக்கோசரம் அவ்வப்போது கேட்டு வரும் குரல்கள் - இந்த சகாப்தத்திற்கு என்றைக்கும் அழிவில்லை என்பதைச் சுட்டிக் காட்டும் சான்றுகளாகவே பார்த்திடுகிறேன் ! And இப்போதைய மறுபதிப்புகளிலும் "மிஸ்டர் சிரசாசன SMS" தூள் கிளப்பி வருவதை ஆச்சர்யத்தோடு நானும், சற்றே பொறாமையோடு  நமது சமகால நாயகர்களும் பார்த்து வருகிறோம் ! சில பயணங்கள் முடிவதில்லை தான் போலும் ! Hail the Colossus of our early days – The one & only Spider! 

வழக்கம் போல நிகழ்காலத்திற்குத் திரும்புவோமா- காத்திருக்கும் டிசம்பர் இதழ்களுள் ஒரு பார்வைச் செலுத்தலோடு ? இதோ - நமது SUPER 6 இதழ் # 1-ன் அட்டைப்பட preview ! Hardcover-ல்; வழக்கம் போல நகாசு வேலைகளுடன், கலக்கலாய், கலர்புல்லாய் தயாராகி வருகிறது - நமது டிசைனர் பொன்னனின் கைவண்ணம் ! தொடரும் மூன்று டிசைன்களுமே நாம் முயற்சித்துப் பார்த்தவைகள் ! The real thing எது ? என்பதை இம்மாதம் டப்பாவை உடைக்கும் போது பார்த்துக் கொள்ளுங்களேன்; அது வரை யூகங்கள் நடை போடட்டுமே ?!

ஏற்கனவே நாம் ரசித்தான அதே கதைகள் தான் என்ற போதிலும் - இந்தத் தொகுப்பினில் ஏதேனுமொரு வித்தியாசம் காட்ட வேண்டுமென்ற ஆர்வம் எனக்குள் ஏகமாய் இருந்தது ! “கதைகளின் கதைகள்” என்ற ரீதியில் லக்கிலூக்கின் ஆல்பங்களின் பெரும்பான்மைக்குப் படைப்பாளர்கள் ஒரு முன்னோட்டத்தை உருவாக்கி வெயிடுவதை கவனித்திருந்தேன் ! So அவற்றை கேட்டு வாங்கி - ஒவ்வொரு கதையின் முடிவிலும் இணைத்து - இந்த லக்கி கிளாசிக்கை கூடுதல் சுவாரஸ்யமாக்கிட முனைந்துள்ளேன் ! இதோ- அவற்றிற்கான சின்னதொரு டிரெயிலர் ! 

So இம்முறை நீங்கள் ரசித்திடவுள்ளது வழக்கமான இரு லக்கி லூக் கதைகளை மட்டுமன்றி - அவற்றின் பின்புலமாக அந்நாட்களில் அமைந்திருந்த சிலபல சமாச்சாரங்களையுமே  ! இந்த இதழ்(கள்) முன்பணம் செலுத்தித் தருவித்துக் கொள்ளும் (சொற்பமான) முகவர்கள் நீங்கலாக வேறு எவருக்கும் அனுப்பிட நாம் திட்டமிடவில்லை என்பதால் SUPER 6 முன்பதிவு ஜோதியில் ஐக்கியமாகிட சூப்பரான தருணமென்பேன் !

அதே போல- 2017ன் சந்தா ரயிலில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்டீர்களா folks ? நம்மிடம் GOLD வாங்க PAN கார்ட் விபரம் தரத் தேவையில்லை ; வருமான வரி இலாக்காவிற்குப் பதில் சொல்லும் பீதியும் இல்லை எனும் போது - இதில் முதலீடு செய்தாலென்ன ? ஞாயிறும் கூட கடை (ஆன்லைன் ஸ்டோர்) திறந்திருக்கும் !! So தங்கம் வாங்க எங்கிட்டே வாங்க !! http://lioncomics.in/2017-subscription/240-2017-subscription-abcde-tamilnadu-st-courier.html

Before I sign off - 2  விஷயங்கள்

முதலாவது ஒரு கோரிக்கை : அடுத்த மறுபதிப்பான "இயந்திரத்தலை மனிதர்கள்" மீது  பணிகள் நடந்து வருகின்றன! எங்களிடமுள்ள ஒரிஜினலில் - நடு நடுவே கொஞ்சம்  பக்கங்கள் குறைகின்றன ! So நமது ஆரம்ப நாட்களது "இ.த.ம." பிரதிகள் யாரிடமேனும் இருப்பின் - மின்னஞ்சலில் தகவல் கொடுங்களேன் - ப்ளீஸ் ? ஆங்கில இதழ் இருப்பினும் great !

இரண்டாவது சமாச்சாரம் - இரு வாரங்களுக்கு முன்பான caption போட்டிக்கான முடிவு ! நாசூக்காய்ப் போட்டியினை வென்ற பூனையாருக்கு வாழ்த்துக்கள் !!

Erode VIJAY :
B : கோச்சு வண்டியைக் கொள்ளையடிச்சுட்டுப்போன கயவர் கும்பலை பின்தொடர்ந்துபோய் மடக்காம, இப்படி சாவகாசமா மீன் வறுத்துத் திண்ணுக்கிட்டிருக்கீங்களே தல?

A : அட அவனுங்க கொள்ளையடிச்சதெல்லாம் ஆயிரம் ரூவா நோட்டுகளாம்ப்பா! 

A : மறுகரையில் யாரோ விம்மி விம்மி அழும் சத்தம் கேட்கிறதே டைகர்?

B : ஏற்கனவே விசாரிச்சுட்டேன் தல! எவனோ.. ரயிலின் மேற்கூரையை ஓட்டைபோட்டு பணத்தை ஆட்டையை போட்டவனாம்! 

மீண்டும் சந்திப்போம்! அது வரை have a lovely weekend all ! Bye for now!

167 comments:

  1. I am eight.எல்லாருக்கும் வணக்கம்.

    ReplyDelete
  2. வாழ்த்துகள் விஐய்....

    ReplyDelete
  3. GOOD NIGHT GUYS & HAPPY SUNDAY

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்.ஈ.வி.

    ReplyDelete
  5. ஈ வி @

    வாழ்த்து சொல்லி சொல்லி வாய்வலிக்குது குருநாயரே. .!!
    காத்துல பறக்க க்ளைடர்
    காதுல பூவுக்கு ஸ்பைடர்

    கேப்ஷனுக்கு குருநாயர்.!!


    வாழ்த்துகள்!! வாழ்த்துகள்!!
    (அடுத்த தபாவுக்கும் சேர்த்தி ஹிஹி..)

    ReplyDelete
  6. லக்கி கிளாசிக்ஸிஸ் அட்டைப்படங்களுள் முதலாவது நச்சென்று இருக்கிறது.
    இரண்டாவது ம்ஹூம். . மூன்றாவது. .நல்லாத்தான் இருக்கு ரகம்.

    என்னுடைய ஓட்டு முதலாவது அட்டைப்படத்திற்கு. நீங்கள் எப்படி தீர்மானித்து இருக்கிறீர்களோ தெரியவில்லையே!?

    ReplyDelete
    Replies
    1. ///லக்கி கிளாசிக்ஸிஸ் அட்டைப்படங்களுள் முதலாவது நச்சென்று இருக்கிறது.
      இரண்டாவது ம்ஹூம். . மூன்றாவது. .நல்லாத்தான் இருக்கு ரகம். ///

      +10000

      முதல் அட்டை பட்டையைக் கிளப்புகிறது! என்னுடைய வோட்டும் முதல் அட்டைக்கே!

      Delete
    2. பூனையாரே வாழ்த்துக்கள்.!


      ரயிலில் மேல் கூரையை ஓட்டை போட்டு கொள்ளையடித்த டைமிங்கான கலாய்ப்பு செம.! விழுந்து விழுந்து சிரித்தேன்.!

      Delete
  7. என்னம்மா இப்படி பின்னுரின்க.

    ReplyDelete
  8. இந்த வருடம் ஆரம்பத்தில் சந்தாதாரர்ககளுக்கு இலவச இணைபாக வந்த வாரமலர் புத்ககம் தொடர்ந்து வராமல் நின்று போனது மிகப்பெரிய வருத்தம். மீண்டும் வரும்மா என்ற கனவுடன் தூங்க செல்கிறேன். இது பொன்ற புதிய முயற்சிகளை பாராடுங்ககள் நண்பர்கலய்

    ReplyDelete
  9. ஸ்பைடர் இந்த முகத்தை,பெயரை பார்க்கும்போது ஏற்படும் உற்சாகம் 25 வருடங்கள் கழித்தும் மறையவில்லையே.என்ன ஒரு அதிசயம்! !!!
    1.மாடஸ்டி தடுமாறிய சமயம் சிந்துபாத் கதை கிடைத்தால் கூட போட்டு இருப்பேன்.அந்த சமயம் ஸ்பைடர் உங்கள் கண்ணில் காட்டிய கடவுளுக்கு நன்றி. அன்று மட்டும் சிலந்தி மனிதன் கை கொடுக்கவில்லை என்றால் எங்களுக்கு இந்த காமிக்ஸ் பயணம் அமைந்து இருக்குமா????.
    இதுஒன்றே போதுமே தானை தலைவனை தலைமேல் தூக்கி வைத்து ஆட..
    2.முதன்முதலில் பாக்கெட் சைஸில் அழகான சித்திரத்தில் வந்த காமிக்ஸ் இதுவாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். பிற்காலத்தில் காமிக்ஸ் சேகரிப்பின் போது கூர்மண்டையருக்காக அலைந்த நாட்கள் அலாதியானது.படுசுவாரஸ்யம் ஆனது.
    அப்பேர்பட்ட எங்கள் வலைமன்னன் ஜாம்பவான் இல்லை என்று சொன்னால் தான் ஆச்சரியம்! !!.
    3.The sinister seven கதையை வெளியிட ஏன் தயங்குகிறீர்கள் என்று தெரியவில்லை. தயவுசெய்து அடுத்த வருடம் ஏதேனும் புத்தகவிழாவில் முதன்முதலாக வண்ணத்தில் (ஸ்பைடர்) இந்த கதையை வெளியீடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி

    ReplyDelete
    Replies
    1. மீதமிருக்கும் எங்கள் தங்க தலைவர், காமிக்ஸ் உலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் " தல" ஸ்பைடர் கதையை இனிமேலும் தாமதப்படுத்தாமல் வெளியிடுமாறு அன்புடன் அனைத்து ஸ்பைடர் வாசகர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். எத்தனை கதைகள் இருந்தாலும் ஒரே புத்தகமாகவே போடவும். விலை பற்றி கவலை இல்லை.

      Delete
  10. வாழ்த்துக்கள் விஜய்....
    அந்த ரயில் கூரை கேப்சன்தான் டாப்...

    எதிர் பார்த்த மாதிரியே சைபரு ச்சே ஸ்பைடரு தான் 3வது ஜாம்பவான்...ம், என்சாய் ஸ்பைடர் ரசிகாஸ்...

    ReplyDelete
    Replies
    1. Hello விஜய் எங்கள் ஸ்பைடர் தான் லயன் காமிக்ஸின் நிஜமான ஜாம்பவான் என்பதை உணர்ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள். தேவையில்லாமல் மற்றவர்களை பராட்டுவதை விட்டு விட்டு, உன்மையான சூப்பர் ஸ்டார் "தல" ஸ்பைடரின் புகழ் பாடுங்கள்.

      Delete
    2. உண்மையிலே எடிட்டர் பதிவை படித்தபின்.ஸ்பைடரின் கதைகளை மீண்டும் வாசிக்க ஆவலாக உள்ளது.! அருமையான பதிவு.

      Delete
  11. அருமையான பதிவு ஸ்பைடர் பற்றி நீங்கள் கூறிய காரணங்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை.

    ReplyDelete
  12. // கதைகளின் கதைகள்” என்ற ரீதியில் லக்கிலூக்கின் ஆல்பங்களின் பெரும்பான்மைக்குப் படைப்பாளர்கள் ஒரு முன்னோட்டத்தை உருவாக்கி வெயிடுவதை கவனித்திருந்தேன் ! So அவற்றை கேட்டு வாங்கி - ஒவ்வொரு கதையின் முடிவிலும் இணைத்து - இந்த லக்கி கிளாசிக்கை கூடுதல் சுவாரஸ்யமாக்கிட முனைந்துள்ளேன் ! இதோ- அவற்றிற்கான சின்னதொரு டிரெயிலர் ! //

    செம ஐடியா! அதே போல் இந்த கிளாச்சிக் அட்டைபடத்தில் முதலும் மூன்றாவதும் சிறப்பாக உள்ளது!

    ReplyDelete
  13. பால்கிடைத்த பூனையாருக்கு என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. ஸ்பைடர் என்றுமே வாசகர் மனதில் இருந்து நீங்காத தனித்தன்மை படைத்தவர். அவர் நல்லது செய்தாலும், கெட்டது செய்தாலும் அதில் இருக்கும் ஹீரோயிசம் மாற்றம் அடையாதது. லக்கியின் அட்டைகள் லக் செய்தவை. நன்றாக வந்துள்ளன.

    ReplyDelete
  15. மாடஸ்டி பிளைசி

    ReplyDelete
  16. "அடுத்த மறுபதிப்பான "இயந்திரத்தலை மனிதர்கள்" மீது பணிகள் நடந்து வருகின்றன! எங்களிடமுள்ள ஒரிஜினலில் - நடு நடுவே கொஞ்சம் பக்கங்கள் குறைகின்றன ! So நமது ஆரம்ப நாட்களது "இ.த.ம." பிரதிகள் யாரிடமேனும் இருப்பின் - மின்னஞ்சலில் தகவல் கொடுங்களேன் - ப்ளீஸ் ? ஆங்கில இதழ் இருப்பினும்..." பக்கங்களைக் கூறுங்கள் சார். உடனே அனுப்புகிறோம். நன்றி.

    ReplyDelete
  17. லக்கி-கிளாசிக்ஸில் 'கார்ட்டூன் வகுப்பறை' ஒரு அருமையான முயற்சி! நம் நண்பர்களில் சிலபலர் சித்திரங்களை நுனிப்புல் மேயும் பாணியில் கடந்துசெல்வது காமிக்ஸ் வாசிப்பிற்கு முழுப் பலன் அளிக்காது! எக்ஸாம் ஹாலுக்குள் நுழைவதற்கு முன்பு வேகவேகமாய் சில பக்கங்களைப் புரட்டுவதைப்போல காமிக்ஸையும் புரட்டிச் சென்றோமேயானால் சித்திரங்களிலுள்ள சில நுணுக்கங்களை தவறவிட்டவர்களாகிறோம்! லக்கி, ரின்டின்கேன் உள்ளிட்ட கார்ட்டூன் கதைகளில் இந்த சித்திர நுணுக்கங்களே சிரிப்பை வரவழைக்கும் ரகத்திலானவை!

    கி.நா வகையறாக்களிலோ, கதையின் ஒரு முக்கிய முடிச்சே கூட நாம் எளிதாகக் கடந்துவந்துவிட்ட ஏதோவொரு சித்திரத்துக்குள் அடங்கியிருக்கக்கூடும்! எனவே சித்திரங்களைக் கூர்ந்து பார்த்துப் படித்தல் அவசியம்! ( கிளுகிளுப்பான சித்திரங்களை மட்டும் பக்கங்களே ஒட்டை விழும் அளவுக்கு கூகூகூர்ந்து பாக்குறோமில்ல? ;) )

    இங்கே, தனது 'ஓவியப் பார்வை'யினால் ஆச்சர்யப்படுத்தும் வகையில் பதிவுகளை இட்ட நண்பர் ராஜ்முத்துகுமார் அவர்களை நினைவுகூறாமல் இருக்கமுடியவில்லை! சித்திரங்களின் மீதான எனது பார்வையை நான் சற்றே விசாலப்படுத்திக்கொண்டதற்கு அவரது 'ஓவியப் பார்வை'யும் ஒரு முக்கிய காரணம்!

    வாழ்க ஓவியப் பார்வை!
    வளர்க கார்ட்டூன் வகுப்பறை!

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு காலம் கழித்தும் என்னை நினைவு கூர்ந்த பூனையாருக்கு நன்றிகள் பல. :D

      Delete
    2. செயலாளரே வாழ்த்துக்கள்

      Delete
    3. அடியேனும் ஓவியப்பார்வை ரசிகன்.!

      Delete
  18. டைமிங் காமெடினு சொல்லுவாங்களே அது இதுதான் பேஷ் பேஷ் ரொம்ப நல்லாயிருக்க வெல்டன் விஜய் வாழ்த்துகள்.இதை தேர்வு செய்த ஆசிரியருக்கு நன்றி

    ReplyDelete
  19. எடிட்டர் சார் good morning

    ReplyDelete
  20. அமேசான் தளத்தில் நமது இரும்புக்கை மாயாவி புத்தகம், கண்ணகட்டுது சாமி!
    http://www.amazon.in/Steel-Claw-Vanishing-Man/dp/1845761561

    ReplyDelete
    Replies
    1. என்னது ரூ.2,241/- .................

      Delete
    2. Parani from Bangalore : இது நாம் வெளியிட்ட கதையல்ல ; இடையில் மாயாவிக்கொரு மறுபிறவி தந்திட எண்ணி புதிதாய் உருவாக்கப்பட்டது ! சொதப்பலாகிப் போன முயற்சி !

      Delete
    3. விஜயன் சார், அப்படியா!! ஆனால் விலை ரொம்ப ஜாஸ்தி என்பது எனது எண்ணம்!

      Delete
  21. SPIDER (and remembering SPIDER tales / days) are evergreen memories :-) My favourite Tamil Comics Hero.

    ReplyDelete
  22. வெல்டன் விஜய் sir வாழ்த்துகள்.இதை தேர்வு செய்த ஆசிரியருக்கு நன்றி.

    ReplyDelete
  23. BTW, Lucky cover looks like one of a GAY MAGAZINE ;-)

    ReplyDelete
    Replies
    1. ஹிக்!! காமிக் லவரே... உங்க கற்பனைக்கும், லொள்ளுக்கும் ஒரு அளவே இல்லையா?

      Delete
    2. ///Lucky cover looks like one of a GAY MAGAZINE ;-)///

      ஆண்டவரே. . இதை மன்னிப்பீராக..! :-)

      Delete
  24. வாழ்த்துகள் விஜய் சார்.

    ReplyDelete
  25. வெல்டன் விஜய் sir வாழ்த்துகள்.இதை தேர்வு செய்த ஆசிரியருக்கு நன்றி.vijay vanthaar venrar.

    ReplyDelete
  26. லக்கி லூக்கை போல் SUPER 6 ல் மாடஸ்டியின் கழுகுமலைக் கோட்டை அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. நியாயம் செய்வீர்கள் என நம்புகிறேன்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக செய்வார்.! உறுதியாக செய்வார்.!

      Delete
  27. எங்களின் தானைத் தலைவன் ஸ்பைடருக்கு ஈடு இனையே கிடையாது ஜாம்பவான் பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர் ஸ்பைடர்
    அடுத்த மூவர் 1.டெக்ஸ் வில்லர். 2.ரிப்போர்ட்டர் ஜானி.3.நம்பர் 13.

    ReplyDelete
  28. அதிகாலை வணக்கம்

    ReplyDelete
  29. 'குறிப்பின் குறிப்பு உணர்வாரை உறுப்பினுள்
    யாது கொடுத்தும் கொளல்'

    ReplyDelete
  30. எனது காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் காலை வணக்கங்கள்.மேலே படித்து விட்டு வருகிறேன்.

    ReplyDelete
  31. // பள்ளிக்கூடப் பைகளுக்குள் திணித்துக் கொள்ளலாம் ; டியூஷனில் புத்தகத்துக்கு மத்தியில் வைத்துப் படிக்கலாம் ; பாக்கெட்டுக்குள் திணித்துக் கொள்ளலாம் என்ற சௌகரியங்களோ - என்னவோ ஆரம்பமே அமர்க்களமாகிப் போனது ! So ஸ்பைடர் + அந்தப் பாக்கெட் சைஸ் என்பது தற்செயலாய் அமைந்து போனதொரு கூட்டணி என்பேன் ! //

    ஒரு பக்கத்துக்கு ஓரிறு ஃப்ரேம் மட்டுமே என்ற பாக்கெட் சைஸ் புத்தகங்களின் வழிமுறை படிக்க எளிதாக இருந்தது. கிட்டத்தட்ட ஒவ்வொரு கட்டமாக உற்றுநோக்கும் உந்துதலைத் தந்தது. இப்போதும் பாக்கெட் சைஸ்தான் என்னுடைய ஃபேவரிட்! மாறாக பக்கத்துக்கு 8+ பேனல்களுடன் வரும் பெரிய புத்தகங்கள் இலகுவாக தோன்றுவதில்லை.

    ReplyDelete
  32. அருமையான பதிவு.சூப்பர் சார்...!ஸ்பைடரா கொக்கான்னானாம்......!

    ReplyDelete
  33. சூப்பர் சார் . சூப்பர் 6 இன் அட்டை படங்கள் 1, 3 அருமையாக உள்ளது . அதிலும் முதலாவது செம்ம . வாழ்த்துக்கள் ஈரோடு விஜய் சார் .
    கூர் மண்டையார் ஸ்பைடர்க்கு ஜம்பவான் என்பது மிக பொருத்தம் சார் . எனது பால்ய காலத்தில் சிலந்தி மன்னன் இன் ஒவ்வொரு கதைகளையும் ரசித்து படித்தவன் சார்.

    ReplyDelete
  34. பாக்கெட் சைஸ் ஸ்பைடரஉடன் களித்த நாட்களை மறக்கமுடியாது!The Sinister Seven எப்போது Sir?

    ReplyDelete
  35. கிளாசிக் மாயாவி ஓ.கேவா சார்

    ReplyDelete
  36. ஈரோடு விஜய் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  37. Super 6 ,லக்கி கிளாக்ஸில் முதல் அட்டைபடம் மிக அருமை,இரண்டாவது சுமார்,மூன்றாவது பரவில்லை.எனது சாய்ஸ் முதல் அட்டைபடமே.

    ReplyDelete
  38. /// இந்த இதழ்(கள்) முன்பணம் செலுத்தித் தருவித்துக் கொள்ளும் (சொற்பமான) முகவர்கள் நீங்கலாக வேறு எவருக்கும் அனுப்பிட நாம் திட்டமிடவில்லை என்பதால் SUPER 6 முன்பதிவு ஜோதியில் ஐக்கியமாகிட சூப்பரான தருணமென்பேன் ///

    புரியவில்லையே சார்.!!! லக்கி ஸ்பெஷல் புத்தக நிலையங்களில் கிடைக்குமா? கிடைக்காதா சார்?

    ReplyDelete
  39. சூப்பர் 6 வரிசையில் என் ஆர்வமெல்லாம் மூன்றே மூன்று புத்தகங்களின் மீதுதான்.
    1.இளவரசி
    2.இரவுக்கழுகு
    3.கேப்டன் பிரின்ஸ்

    ReplyDelete
  40. நியூயார்க்கைக் கொள்ளயைடித்த நிறையப் போக்கிரிகளைப் பார்த்திருப்போம் ; ஆனால் நியூயார்க்கையே கொள்ளைப் பொருளாக்கிய பக்கியை நாம் முதல் முதலாய் பார்த்தது ஆகஸ்ட் 1984-ல்

    #####


    ஹாஹா.....நகைக்க வைத்த வரிகள் ...:-))

    ReplyDelete
  41. செயலாளர் அவர்களே வாழ்த்துக்கள் ..( நேற்று வெற்றி பெற்றதற்கு ..)...வாழ்த்துக்கள் ..(இன்று வெற்றி பெற்றதற்கு ..)...வாழ்த்துக்கள் ...( நாளை வெற்றி பெறுபவைகளுக்கு ..)...



    எப்படியோ ...இப்படியாவது சங்கத்தை அபராதத்தில் இருந்து மீட்க பாருங்கள் ...:-))

    ReplyDelete
  42. ஸ்பைடரின் மீதிக் கதைகளுக்கு எப்ப சார் வாய்ப்பு கிடைக்க போகுது.
    ஸ்பைடரின் பாட்டில் பூதம் கதை அடுத்த வருசமாவது மறுபதிப்பு காணுமா?

    ReplyDelete
    Replies
    1. Arivarasu @ Ravi : அது தான் ஆண்டுதோறும் மறுபதிப்புகள் சீராய் வருகின்றனவே சார் ?!

      Delete
  43. அந்த வில்லனிக் ஹீரோ தான் மனதை வெகுவாக கவர்ந்து வலை மன்னன் க்கு வலை வீசி தேட சொல்லியது ...பல அதிரடிகளுக்கு பிறகு வில்லனாக இருக்கும் போதே இந்த கிளப்பு கிளப்புறாரே இன்னும் நேர்மையாளனாக இருந்தால் ஸ்பைடர் எவ்வளவு சூப்பராக பட்டையை கிளப்புவார் என்று அப்பொழுது பள்ளி நண்பர்களிடம் விவாதிப்பது உண்டு ..போலவே அச்சமயத்தில் விரைவில் ஸ்பைடர் நல்லவனாக மாறினான் என்ற தலைப்பு செய்தியோடு விளம்பரம் வந்த வுடன் மனது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ..நீதி காவலன் ஸ்பைடர் எனும் தலைப்பே அப்போது என்னை மதி மயக்கியது ...ஆனால் கால சூழல் அந்த நீதீகாவலனை அவ்வளவு சீக்கிரம் கண்ணில் காட்டவில்லை ..சில பல மாதங்களுக்கு பிறகு கோவை பழைய புத்தக கடையில் அட்டை இல்லாமல் கிடைத்த பொழுதே அவ்வளவு கொண்டாட்டம் ...பிறகு சில இதழ்களில் நேர் நாயகனாக வலை மன்னன் பட்டையை கிளப்பினார் ...மனம் ஒரு குரங்கு என்பது போல மீண்டும் ஸ்பைடர் குற்ற சகர்வர்த்தியாகவே களம் கண்டால் எப்படி இருக்கும் என மாற தொடங்கியது ..அதற்கு ஏற்றார் போல நீண்ட காலங்களுக்கு பிறகு ஸ்பைடர் நல்லவனாக மாறியதற்கு முன் நடந்த கதை என்ற விளம்பரத்தோடு வந்த மிஸ்டர் மர்மம் ...இப்பொழுதும் எனது மனம் கவர்ந்த இதழ் ..:-)


    அதே போல திகிலில் வெளிவந்த விண்வெளி பிசாசு தொடர் கதையை ஒரே இதழாக வெளியிட்டால் எப்படி இருக்கும் என ஏங்கியது உண்டு...


    இனியாவது நிறைவேறுமா சார் ..?

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : //திகிலில் வெளிவந்த விண்வெளி பிசாசு தொடர் கதையை ஒரே இதழாக வெளியிட்டால் எப்படி இருக்கும்//

      தலீவரே.....சமீபமாய் கோவை பக்கமாய்ப் பயணமோ ?

      Delete
    2. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு

      ரொம்ப காலமாகவே நான் இதை கோரி வந்துள்ளேன்.

      Delete
  44. வாழ்த்துக்கள் ஈ வி.
    ஆசிரியருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஞாயிரு
    வாழ்த்துக்கள்.
    இரத்தப்படலம் வண்ண மறு பதிப்பு
    எப்போது????
    சிறப்பு இதழாக 2017 ல் கோடை மலராக
    வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  45. Replies
    1. ஸ்பைடர்ரா கொக்கா, மிகவும் ரசித்த டயலாக்.

      அதிலும் அந்த நியூயார்க் நகரம் வில்லனால் இழுத்து செல்லும் காட்சி (கற்பனை செய்து பார்க்கமுடியாத ஐடியா), அடியில் இழுவை எந்திரம்கள்! நியூயார்க் வெறிஜோடிய பின் சிரித்து சிரித்து வில்லனை நக்கல் செய்வது.

      சைத்தான் விஜ்ஞானி: கிளைமாக்ஸ்ஸில் வெளிகிரகத்தில் உள்ள சைத்தான்களை கொண்டுவந்து சைத்தான் விஜ்ஞானியை மடக்குவது.

      அந்த காலத்தில் யார் அந்த மினி ஸ்பைடர் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது, அதனை அது பூர்த்தி செய்வவும் செய்தது. மறுபதிப்பில் மீண்டும் எப்போது வரும் என்று ஆவலுடன் இருக்கிறேன்.

      பழிவாங்கும் பொம்மை புதிய அனுபவம், அதுவும் சொளக்காட்டு பொம்மை போல் நிற்கும் அட்டை படத்தை மறக்க முடியாது.

      சதுரங்க வேட்டை?? இன்றும் படிக்க தூண்டும் ஒரு கதை, போன வாரம் மீண்டும் ஒரு முறை படித்த கதை.

      ஸ்பைடர் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு ரகம், முக்கியமாக அவரின் துப்பாக்கிகள், முதுகில் உள்ள சிலிண்டர், SMS, எதிரிகளை முறியடிக்க பெல்காம் கண்டு பிடிக்கும் புதிய ஆயுதம்கள், சொல்லிக்கொண்டே செல்லலாம்.

      ஸ்பைடர் ஒரு சகாப்தம்.

      The Sinister Seven எப்போது, சிக்கிரம் கண்ணில் காட்டவும்!

      Delete
    2. வராமலும் வெல்வார் யம் தலைவர்...நண்பரே.....s.s7அடுத்த வருட 35வது ஆண்டு மலராய் பெரிய டெக்ஸ் சைசில் என பட்சி சொல்லுது

      Delete
  46. ஞாயிறு. மன்னிக்கவும்.

    ReplyDelete
  47. இரத்தக் கோட்டை,2017லில் ஸ்பெஷல் பதிப்பா?இதைப் பற்றி நமது காமிக்ஸ் நண்பர்கள் யாராவது விளக்கம் கூறுங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. இந்த வருட ஈரோடு புத்தக திருவிழாவில் இரத்தக் கோட்டை 2017 வரும் என்று ஆசிரியர் சொன்னதாக ஞாபகம். ஆசிரியர் இதனை உறுதி செய்யட்டும்.

      Delete
    2. வரட்டும்! எனக்கு டைகர் கதைகளை தனி தனியாக படிப்பதை விட ஒரே புத்தகமாக வரும்போது படிப்பது ரொம்ப பிடிக்கும்!!

      Delete
  48. வாழ்த்துக்கள் இ(ளை)ணைய தளபதி
    திரு.ஈரோடு விஜய் அவர்களே.

    ReplyDelete
  49. பரணி தங்கள் பதில் அளித்ததுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  50. இன்று பிறந்தநாள் காணும் - உற்சாகத்தின் உரைவிடமும், இஸ்பைடரின் தீவிர வெறியரும், பின்னூட்டமிடுவதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவரும், குழந்தைகளும் புரிந்துகொள்ளும்படியான எழுத்துக்களுக்குச் சொந்தக்காரருமான (ஹிஹி) நண்பர் ஸ்டீல்க்ளா பொன்ராஜ் அவர்களை வாழ்த்த வயதுக்கு வரவில்லை! அதனால் வணங்குகிறேன்! _/\_

    ReplyDelete
    Replies
    1. :-))))



      எனது வாழ்த்துக்களும்.....

      Delete
    2. இன்று பிறந்தநாள் காணும் - உற்சாகத்தின் உரைவிடமும், இஸ்பைடரின் தீவிர வெறியரும், பின்னூட்டமிடுவதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவரும், குழந்தைகளும் புரிந்துகொள்ளும்படியான எழுத்துக்களுக்குச் சொந்தக்காரருமான (ஹிஹி) நண்பர் பன்மொழிவித்தகர் ஸ்டீல்க்ளா பொன்ராஜ் அவர்களை வாழ்த்த வயதுக்கு வரவில்லை! அதனால் வணங்குகிறேன்! _/|\__/|\__/|\_

      Delete
    3. இனிய தோழர் இரும்புக்கரத்தார்
      திரு.ஸ்டீல் க்ளா அவர்களுக்கு
      இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

      Delete
    4. ///பன்மொழிவித்தகர் ///

      தமிழ்மொழி(யை)வித்தவர்! ;)

      Delete
    5. @ BIRTHDAY BOY : நமது மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷலுக்கும் ; MILLION & MORE -க்கும் ; தொடரும் காலங்களது TRIPLE MILLION ஸ்பெஷலுக்கும் அன்பாய் அடிக்கோலிட்டு வரும் நண்பருக்கு நமது பிறந்த தின வாழ்த்துக்கள் !!

      Delete
    6. நண்பர் ஸ்டீல்கிளாபொன்ராஜ் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

      Delete
    7. 😊 நண்பர்களே....எனது பிறந்த நாளில் தானைத் தலைவர் பற்றி பதிவு...அரிய பரிசு சார்

      Delete
  51. Mr.E.V.அவர்களுக்கு.நண்பர் TeX vijay அவர்களுக்கு இரண்டு videos whatsupஇல் அனப்பியுல்ள்ளெய்ன்.அதை பார்த்து விட்டு நமது ஆசிரியர் அவர்கல்ளுக்கு அனுப்பி வைக்க தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இதெல்லாம் கள்ளாட்டை ஆம்மா!! :-)

      Delete
    2. அப்படியே ஆகட்டும் Mr.Sridhar அவர்களே!

      @ டெக்ஸ் விஜய்

      வீடியோவை எனக்கு அனுப்புங்களேன் ப்ளீஸ்!

      Delete
    3. //இதெல்லாம் கள்ளாட்டை ஆம்மா!! :-)///....
      இல்லையே! இன்று வெள்ளாட்டை வெட்டி தொங்கி விட்டுருந்த தொடையில் இருந்து தானே அரை கிலோ 100வா நோட்டா கொடுத்து வாங்கி வந்தேன்....

      Delete
  52. அப்படி எல்லாம் இல்லை நண்பர் kid ஆர்டின் அவர்கல்ளெ.எங்கு அனுப்பி வைத்தால் எல்லாருக்கும் பயனுள்ளதாக இருக்மோ அங்கே அனுப்பினேன் அவ்வள்வேவே.

    ReplyDelete
  53. நான் காமிக்ஸின் நீண்டநாள் தீவிர ரசிகன் என்றாலும்,எனக்கு நீண்டநாட்களாக காமிக்ஸின் தொடர்பு இல்லாமல் இருந்தது,என்னென்றால் முத்து காமிக்ஸின் மீண்டும் மறுவருகை எனக்குத் தெரியாமலேயே இருந்தது.சென்ற வருடம்2015 மார்ச் மாதம் என்று நினைக்கிறேன் தினகரன் பேப்பர்? மூலமாக முத்து காமிக்ஸின் மறுவருகைப் பற்றிய தகவலும்,தொடர்பு எண்ணும் கிடைக்க பெற்றவுடன்,சிவகாசிக்கு தொடர்பு கொண்டு,சகோதிரி ஸடெல்லா மூலமாக,சேலத்தில் முத்து காமிக்ஸ் முகவர் தேஷன் புக் அவர்களின் மூலமா நான் நீண்ட நாட்களுக்கு பின் எனக்கு பிரியமான காமிக்ஸ், டைகரின் வேங்கைக்கு முடியுரையா?,சர்பங்களின் சாபம்,எத்தர்களின் எல்லை,முதலியவைகளை வாங்கினேன்.அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.நான் என் நீண்ட நாள் பிரிந்த பாலிய நண்பனை கண்டதுபோல் மிக மகிழ்ச்சியில் திளைத்தேன்.நான் காமிக்ஸ் படிக்காத இடைபட்ட காலம் சுமார் 3.5வருடங்களாக காமிக்ஸ் உலகத்தில் நான் மிகமிக பின்தங்கிவிட்டேன்.இருந்த போதிலும் பிரகாஷ் ப்ப்ளிஷர் மூலமாக நேரடியாக என்னால் படிக்காத காமிக்ஸ்களை அதிகபச்சமாக வாங்கி படித்துள்ளேன்.
    நான் இதுவரை டைகரின்.
    1)வேங்கைக்கு முடியுரையா?
    2)மின்னும் மரணம்
    3)என் பெயர் டைகர்,முதலிய புத்தகங்களை மட்டுமே படித்துள்ளேன்
    சென்ற பதிவினை படித்தபின் கேப்டன் டைகரின் அனைத்து காமிக்ஸையும் படிக்க வேண்டும் என்று பேர்ஆவலால் அன்றே ஆன் லைனில் கேப்டன் டைகரின் ஸ்பெஷல், ஆடர் கொடுத்து வாங்கியும் விட்டேன்,இக் காமிக்ஸ் போக கேப்டனின் அனேக காமிக்ஸ் நான் படிக்கவில்லை.
    என்னை போல் இன்றும் எத்தனை பேருக்கு,முத்து காமிக்ஸின் மீண்டும் மறுவருகை தெரியாமல் இருக்கிறதோ?

    ReplyDelete
  54. சார் நான் நவம்பர் இதழ்கல் வாங்க போகிறேன் , என்னக்கு கார்ட்டூன் புக் வேண்டாம் . நமது online ஷாப்பில் தனி தனி புக் display ஆகவில்லை. please help

    ReplyDelete
  55. டியர் எடிட்டர்,

    ஒரு சிறிய விண்ணப்பம் - collector's edition பதிப்புக்களில் (சைஸ் எவ்வாறாக இருந்தாலும்) ஒரு basic template கவர் வைத்து (front, back and side) அந்த templateக்குள் அட்டைப் படங்கள், சித்திரங்கள் வைத்தால் இனி வரும் இவ்வாறான படைப்புக்களுக்கும் சேர்த்து ஒரு continuity இருக்கும். (Example: See two covers of DC Showcase OR MARVEL Essentials - you will get the point). முயற்சி செய்யுங்களேன். ஓரிரு நாட்கள் தாமதமானாலும் பரவாயில்லை - நமக்குத்தான் பொழுது போக்க இப்போ பேங்க் க்யூ இருக்கே ;-)

    ReplyDelete
    Replies
    1. ///// ஓரிரு நாட்கள் தாமதமானாலும் பரவாயில்லை - நமக்குத்தான் பொழுது போக்க இப்போ பேங்க் க்யூ இருக்கே ;-)//////

      ha....ha...ha.....:-)))))))

      Delete
  56. நண்பர்களே எனது Whatsapp no
    7299576996
    எனக்கும் வீடியோ அனுப்பலாம்
    கிடைத்தால் மகிழ்ச்சி.

    ReplyDelete
  57. தலைவரே ( ஆசிரியர் விஜயன்)
    இரத்தப்படலம் வண்ண மறுபதிப்பு
    எப்போது???????????????????????????????
    மிகமிக ஆவலுடன்எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  58. வரும்னு தான் சொல்லாரு !

    ReplyDelete
  59. கிளாசிக்கில வந்த இயந்திரத்தலை மனிதர்கள் அனுப்பவா சார். ?

    ReplyDelete
  60. Dear Edi,

    Apt choice for Legend #3 in the form of Spider. Among the other comics stars in mid and late 80s, even across publishers, Spider had an unique appeal - unparalleled.

    Now that the top 3, is sealed, I guess the honors for #4, and #5 would certainly be Tex, and Lucky Luke. Robot Archie is a Black Horse though :)

    For the Collector's Edition, I second Raghs comment of maintaining a similar template for all editions. That would be good showcase in our collection for sure.

    ReplyDelete
  61. வாழ்த்திய அன்பு நண்பர்கள் அனைவருக்கும், தேர்ந்தெடுத்த எடிட்டர் சமூகத்திற்கும் நன்றிகள் பல!

    நான் மூன்று நாட்கள் முக்கிமுக்கி யோசித்து எழுதிய கேப்ஷன்கள் மண்ணைக் கவ்விய நாட்கள் பலயிருக்க, மூன்று நிமிடங்களில் எழுதிய கேப்ஷன் பரிசை வெல்லும் ஆச்சரியமும் நடக்கத்தான் செய்கிறது! :)

    ஓரிரு வருடங்களுக்குமுன் சிலர் செய்த சதியால் தன் வேலையை இழந்து, விபத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, 'இனி இழப்பதற்கு எதுவுமில்லை' என்று சிலநாட்களுக்கு முன் மருத்துவமனையிலிருந்தபடியே பதிவிட்ட நம் மதிப்பிற்குரிய மூத்த சகோதரர் திரு. A.T.R அவர்களுக்கு எனக்குக் கிடைத்த இந்த சந்தா-D பரிசை நம் எடிட்டர் சமூகம் சார்பாக வழங்க விரும்புகிறேன்!

    அடிக்கடி நானே பரிசை வென்று நண்பர்கள் பலரையும் திரும்பத் திரும்ப வாழ்த்த வைத்து கஷ்டப்படுத்துவதைப் போன்ற குற்றவுணர்வு சமீப காலமாக நிறையவே எழுவதால் ;) இனி கேப்ஷன் போட்டிகளில் பங்குகொள்வதில்லை என முடிவு செய்திருக்கிறேன்! ( இம்முடிவு, குறிப்பிட்ட சில பரிசுப் பொருட்களுக்குப் பொருந்தாது ஹிஹி! )


    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோதரர் திரு.ஈ.வி.அவர்களே.
      தங்களுடைய பதிவை இப்போதுதான் பார்த்தேன். என்ன சொல்வதென புரியவில்லை. உடன்பிறந்தவர்களே நாம் கஷ்டப்படும் நேரத்தில் ஒதுங்கிப்போகும் இந்த காலத்தில் எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் எங்கோ பிறந்த என்னை ஒரு சகோதரனாக மதித்து உங்களது உழைப்பிற்கு கிடைத்த பரிசினை நீங்கள் அனுபவிக்காமல் எனக்கு வழங்க முன்வந்த இந்த அன்பிற்கு தலை வணங்கி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். நவம்பர் 15 எனது பிறந்த நாள். இந்த மாதத்தில் உங்களது பரிசு கிடைத்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி.உண்மையை சொல்வதானால் இந்த வருடம் சந்தா செலுத்த முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்தேன். தொடர்ந்து அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது.இப்போது உங்களால் அந்த அச்சம் வெகுவாக
      குறைந்திருக்கிறது. டிசம்பருக்குள் செலுத்திவிடுவேன்.இதற்கு
      காரணமான உங்களுக்கும் இப்படி ஒரு கேப்ஷன் போட்டியினை அறிவித்து அதற்கு பரிசினையும் வழங்க முன்வந்த நமது எடிட்டர் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
      "பயன்தூக்கார் செய்த உதவி
      நயன்தூக்கின்
      நன்மை கடலின் பெரிது."

      Delete
  62. இன்று தனது திருமணநாளை கொண்டாடிக்கொண்டிருக்கும்
    நமது ஆசிரியர் விஜயன் சார் அவர்கள் இன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ
    எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் _/\_

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் _/\_
    நன்றி
    .

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் சார் @ என்னுடைய வணக்கங்களும்...

      Delete
    2. Mr. எடிட்டருக்கும் Mrs.எடிட்டருக்கும் என்னுடைய வாழ்த்துகளும் வணக்கங்களும்! _/\_

      தகவலுக்கு நன்றி சி.பி அவர்களே!

      Delete
    3. எடிட்டர் சார்.! இந்த நல்ல நாளில் நானும் வணங்குகிறேன்._/|\_/|\_

      Delete
    4. எடிட்டர் சார்.! இந்த நல்ல நாளில் நானும் வணங்குகிறேன்._/|\_/|\_
      +1

      Delete
  63. ஆசிரியர் அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ....

    இச்சிறப்பான நாளை. முன்னிட்டு. சிறப்பிதழ் வெளியிடா விட்டாலும் சிறப்பு பதிவாது இடுமாறு போராட்ட குழுவின் சார்பாக பணிவன்புடன் வேண்டி கொள்கிறேன் ...

    ReplyDelete
    Replies
    1. தலீவர் +100000

      எடிட்டரின் திருமணத்தை நேரில் பார்த்த நண்பர்கள் யாரேனும் இருப்பின், 'மேடையில் ஒரு மன்மதன்' திருதிருவென்று விழித்துக்கொண்டு நின்ற அந்தக் காமெடி நிகழ்வை இங்கே பகிர்ந்துகொள்ளலாமே? :)

      Delete
  64. ஆசிரியர் அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்(வாழ்த்த வயசில்லாவிட்டாலும் மனம் இருக்கிறது)_____/\______/\______

    ReplyDelete
    Replies
    1. எடிட்டர் சாருக்கு இனிய திருமண வாழ்த்துக்கள். வணங்குகிறேன். -----^-----^-------

      Delete
  65. ஸ்பைடரின் உருவம் அன்று மிக மிக ஈர்ப்பாக ிருந்தது.....இன்றும் கூட.. ஆர்டினி கழுதைகாது என திட்டியும் கூட....அந்த உடுப்புகளும்....ஹெலிகாரும்...வலைத் துப்பாக்கியும்...லேசர் துப்பாக்கியும்.....அதும் யார் அந்த மினி ஸ்பைடரில் மட்டும் லேசரை உபயோகிப்பான் மினி...ஸ்பைடர் பூ சுற்றுவதாய் தோன்றினாலும் விஞ்ஞான ுதவியால் சாத்தியமே என நம்பிக்கை ஊட்டுவதே ஸ்பைடரின் வெற்றி....பகிர்கிறேன் மீண்டும்

    ReplyDelete
  66. இன்று தனது திருமணநாளை கொண்டாடிக்கொண்டிருக்கும்
    நமது ஆசிரியர் விஜயன் சார் அவர்கள் இன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ
    எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் _/\_

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் _/\_
    நன்றி

    ReplyDelete
  67. ஈரோடு விஜய் இதே நகைச்சுவை உணர்வோடு எதிலும் வெற்றி மேல் வெற்றி பெற வாழ்த்துக்கள்..எடிட்டர் இனிய மண நாள் வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெட்டுக்கிளியாரே! :)

      Delete
  68. என்ன ஒரு ஒற்றுமை இன்று எனக்கும் திருமண நாள்.thanks சி.பி அவர்களெ.நன்றி. நினைவுபடுத்தியமைக்கு.

    ReplyDelete
    Replies
    1. தோழர் ஸ்ரீதர் அவர்களே
      இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.
      இன்று போல் என்றும் வாழ்க வளமுடன்.

      Delete
    2. @ Sridhar

      அடடே! உங்களுக்கும் என் வாழ்த்துகள் நண்பரே! :)

      Delete
    3. நண்பர் ஶ்ரீதர் அவர்களுக்கு இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்.

      Delete
  69. @ ALL : வாழ்த்திய ..வாழ்த்தப் போகும் ..வாழ்த்த எண்ணிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் ! அன்புக்குத் தலைவணங்குகிறேன் !

    (பி.கு. : "வாழ்த்த வயதில்லை" என்று ஏகமாய் வணக்கம் வைத்திருப்பதைப் பார்க்கும் போது - லைட்டா ஒரு பெருமூச்சு !!)

    ReplyDelete
    Replies
    1. @ தலீவர்

      பெரிசா ஒரு பதிவக் கேட்டு கோரிக்கை வச்சா இங்க சிம்பிளா ஒரு 'பின்குறிப்பு' மட்டும் வருது!
      வர வர போராட்டக்குழு மேல ஒரு பயம் இல்லாமப் போய்டுச்சு... உடனே ஏதாவது செய்யணும் தலீவரே!

      Delete
    2. செயலாளர் ...அவர்களே ...

      போராட்ட குழு கேட்டுகொண்டதால் தான் இந்த " பின்குறிப்பாவது" வந்தது என சொல்லி பழகுங்கள் ..

      சங்கத்து மருவாதையை நீங்களே வெளியே விட்றாதீங்கோ ...:-(

      Delete
  70. எடிட்டர் சார்
    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
    எனக்கு உங்களை வாழ்த்த வயதிருக்கிறது.
    இருந்தாலும் அந்த வாழ்த்தினை தலை வணங்கியே தெரிவித்துக் கொள்கிறேன்.
    இன்றைய நாளின் உங்களின் உற்சாகமும், சந்தோஷமும் பல்லாண்டுகளுக்கும் தொடர
    எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  71. வாழ்த்திய ..வாழ்த்தப் போகும் ..வாழ்த்த எண்ணிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் ! அன்புக்குத் தலைவணங்குகிறேன் ! Copy paste உபயம்.ஆசிரியர்.

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் வாழ்த்துக்கள் ஸ்ரீதர். ஜீ...:-)

      Delete
  72. ஒரு வில்லங்கமான கேள்வி!

    ம்.. அதாவது... யாருக்காச்சும் ஒரே வருடத்தில் இரண்டு ( அல்லது அதற்கு மேற்பட்ட) திருமண நாட்கள் வரும் வாய்ப்பிருக்கிறதா? ;)

    கில்லாடி கிட்டப்பாக்கள் கையைத் தூக்கவும்! :P

    ReplyDelete
    Replies
    1. எனக்கென்னவோ ஒரு நாலஞ்சு மாசங்களுக்கு முன்னாடிதான் எடிட்டருக்கு திருமணநாள் வாழ்த்துச் சொல்லி நாமெல்லாம் இங்கே கமெண்ட் போட்ட மாதிரியேஏஏஏ.. இருக்கே?!! ம்...? :P

      Delete
  73. May God shower flowers of health,happiness and wealth when you walk along a long path,hand in hand with your loved ones
    Happy wedding anniversary editor sir

    ReplyDelete
  74. Happy wedding day sir...

    கழுகு வேட்டையில் தங்கள் திருமண அழைப்பிதழை பார்த்து இவ்வளவு இளம் வயது ஆசிரியரா என்று தோன்றிய ஆச்சரியம்...அன்றைக்கு ஒருவேளை சென்னையில் உங்கள் திருமணம் நடைபெற்றிருந்தால் எப்படியும் வந்திருப்பேன். இத்தனை காலம் கடந்து 23 ஆண்டாகிவிட்டது என்பதை பார்க்கும்போதும், உங்கள் புதல்வன் விக்ரம் ஜூனியர் எடிட்டராக காமிக்ஸ் ஜோதியில் இணைந்திருப்பதை பார்க்கும்போதும் இன்றும் ஆச்சரியம். என்றென்றும் தங்கள் காமிக்ஸ் பயணம் தொடர வாழ்த்துக்கள், சார்.

    ReplyDelete
  75. எடிட்டர் அவர்களுக்கு எனது மனமாரந்த திருமண நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  76. Belated Wedding anniversary wishes editor sir

    ReplyDelete
  77. ஆசிரியருக்கும் அவரது திருமதியாருக்கும் இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  78. ஆசிரியர் அவர்களுக்கும் அவரது திருமதியாருக்கும் எனது மனப்பூர்வ திருமண நாள் வாழ்த்துக்கள்.
    பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.

    ReplyDelete
  79. ஆசிரியர் தம்பதி சகிதமாய் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

    ReplyDelete
  80. நண்பர் ஸ்ரீதருக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  81. கடந்த வருடம் ஆசிரியர் திருமண நாள் அன்றுதான் நான் நமது பிளாக்கில் கமெண்ட் போட்ட முதல் நாள்
    நான் பிளாக்கிற்க்கு வந்து ஒரு வருடமாகி விட்டது எனக்கு ஆதரவளித்த ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் நன்றி

    ReplyDelete
  82. ஆசிரியருக்கும் அவரது திருமதியாருக்கும்

    இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  83. மீண்டும் வணக்கம் சார்.
    இந்த பதிவை மிகவும் ரசித்து படித்தேன்... காரணம் வலை மன்னன்.
    போன பதிவிலேயே இரும்புக்கை மாயாவிக்கு அடுத்த 2வது ஜாம்பவான் இடம் ஸ்பைடருக்கு வரும் என எதிர்ப்பார்த்தேன்... பரவாயில்லை தகுதியான அபிமான ஒருவருக்கு தான் 2ம் இடம் கொடுத்துள்ளீர்கள்.

    "குற்றவியல் சக்கரவர்த்தி"யின் புதிய கதைகள் தான் வருவதில்லை, இப்படி கட்டுரைகளில் படிக்கும் போதாவது ஒரு வகை திருப்தி கிடைக்கிறது...

    ஒரு வேண்டுகோள் சார்.
    அடிக்கடி "சூப்பர் ஸ்டார் ஸ்பைடர்" போல 16 பக்க மினி நாவலை புதிய கதைகள் இல்லா நாயகர்களுக்கு சான்ஸ் கொடுத்து நீங்களாவது, அல்லது வாசகர் ஸ்பாட் லைட் போல ஏதாவது போட்டி வைத்தாவது உருவாக்கி வெளியிடுமாறு கேட்டு கொள்கிறேன்...

    பிறகு, பழிவாங்கும் பொம்மை, யார் அந்த மினி ஸ்பைடர் போன்ற உங்களின் வெளியீடுகள் செய்திட்ட உச்சகட்ட பிரிண்ட் ரன் சாதனைகளை இன்றைய இளம் வாசகர்கள் அறியும் வண்ணம் இந்த பதிவில் குறிப்பிட்டிருந்தால் அட்டகாசமாக இருந்திருக்கும்...

    ஆரம்ப காலத்து பாக்கெட் சைஸ் இன்றைக்கும் எங்களின் favorite சைஸ் தான். மாடஸ்டி, கார்வினின் "கழுகு மலைக் கோட்டை" பாக்கெட் சைஸில் தானே வருகிறது?

    "சிங்கத்தின் சிறுவயதில்" தொடருக்குப் பிறகு இந்த "நாங்களும் ஜாம்பவான்கள் தாம்" தொடர் படிக்க அருமையாக இருக்கிறது.

    ReplyDelete
  84. This comment has been removed by the author.

    ReplyDelete
  85. என்ன தளம் அமைதியாக உள்ளது. 164 comments அப்படியே நிற்கிறது.

    ReplyDelete
  86. நீதியின் நிழலில் மறைக்கப்பட்ட நிஜங்கள் வெளிவருமா?
    ஜெஸ்ஸி ஜேம்ஸ் கோச் வண்டியில் கதை சொல்ல எப்போது வரப்போகிறார்?

    Awaiting ..!!

    இப்படிக்கு

    ஜோக்கர் ஸ்மர்ஃப்..!!

    ReplyDelete
  87. அடுத்த ஜாம்பவான் அம்புட்டு பெரிய்ய்ய அப்பாடக்கரா இருப்பாரோ...? பதிவு போட இம்புட்டு நேரமாகுதே....?!

    ReplyDelete
  88. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!!!!

    ReplyDelete