Powered By Blogger

Sunday, March 06, 2016

ஒரு புன்னகை தினம் !


நண்பர்களே,

வணக்கம். சில நேரங்களில் பெரியதொரு காரணமே இல்லாது போனாலும்,   பேய் முழியோடு சுற்றித் திரியும் நாட்கள் புலர்ந்திடும் ! சில சமயங்களிலோ - பொழுது விடிந்த நேரத்திலிருந்தே 'கோபால் பல்பொடி' விளம்பர மாடல் போல் மொச்சைக்கொட்டைப் பற்களைக் காட்டிக் கொண்டு பவனி வரத் தோன்றும் ! இன்றைய பொழுது பிந்தைய ரகத்தைச் சார்ந்ததாய் இருப்பதால் - காலையிலிருந்தே லானாவைக் கண்ட ஷெரீப் டாக்புல்லைப் போல சுற்றிக் கொண்டிருக்கிறேன் !  

மார்ச் இதழ்களின் reviews இன்னமும் முழுவீச்சில் அரங்கேறிடவில்லை என்றாலும் - இதுவரைப் பதிவாகியுள்ள கருத்துக்களின் பெரும்பான்மை 'தம்ப்ஸ் அப் ' தந்திடும் விதமாகவே இருப்பது எனது இளிப்பின் காரணமாய் இருக்கக் கூடும் ! டெக்ஸ் & கோ. "விதி போட்ட விடுகதை"யில் உங்களது கரகோஷங்களை ஈட்டியிருப்பதில் no surprises indeed ! சென்றாண்டின் பிற்பகுதியில் - டெக்ஸ் கதைத் தேர்வுக்குள் நீச்சலடித்துக் கொண்டிருந்த போது - சிக்கிய இத்தாலியக் குடல்கள் அத்தனையின் நீள-அகலங்களையும் அலசிப் பார்த்துக் கொண்டிருந்தேன் ! அப்போதே இந்த சாகசத்தின் பிற மொழிகளின் reviews நிறையவே பார்த்திட முடிந்தது ! எல்லோருமே கதையோட்டத்தை ; சித்திரங்களை ; கிட வில்லரின் காதல் track -ஐ ரொம்பவே சிலாகித்திருந்தனர் என்பதால் - 2016-ன் டெக்ஸ் கதைத் தேர்வினில் நான் அடித்த மூன்றாவது 'டிக்' இது தான் ! (முதல் டிக் - நெடுங்காலத்து வாக்குறுதி நிறைவேற்றலின் பொருட்டு "திகில் நகரில் டெக்ஸ் " & இரண்டாவது டிக் - "பழி வாங்கும் புயல்" மறுபதிப்பு !) ஒரு பொறுப்பான, பாசமான தந்தையாகவும் டெக்ஸ் இதில் மிளிர்வதைப் பற்றி வேற்று மொழி வாசகர்கள் அவர்களது களங்களில் பதிவிட்டிருந்ததைப் படிக்க முடிந்த போதே இந்த ஆல்பம் நமக்கொரு சுவாரஸ்யமான அனுபவமாய் அமைந்திடுமென்று தோன்றியது ! இத்தாலிய மொழிபெயர்ப்பு டிசம்பரிலேயே தயாராகி விட்ட போதிலும் - தமிழாக்கத்தினை பிப்ரவரி ஆரம்பம் வரையிலும் ஆரம்பிக்க இயலவில்லை ! முதல் பாதியைத் தாண்டிய போதே - இது டெக்ஸ் வரிசையில் ஒரு memorable இதழாக அமையப் போவது உறுதியென்று பட்சி சொன்னது ! சரியாக அதே வேளையில் பொன்னனின் அட்டைப்பட டிசைனும் அழகாய் அமைந்து போக - 'மார்ச் முதல் வாரம் எப்போது புலரும்டா சாமி ?' என்ற நமைச்சல் எடுக்கத் துவங்கிவிட்டது எனக்குள் ! எதிர்பார்ப்புகள் மெய்யாகும் போது அலையடிக்கும் ஒரு மெல்லிய திருப்தி - பல்லாயிரத்துக்கு ஈடாகும்  உணர்வன்றோ ? அதே போலவே, கமான்சே சாகசம் பற்றிய யூகங்களும் பிசிறடிக்கவில்லை ! யதார்த்தத்தின் வெளிப்பாடான series இது எனும் போது - டெக்ஸ் வில்லர் / பௌன்சர் / டைகர் கதைகளின் 'பட்டாசு பாலு' பரபரப்பினை இங்கே எதிர்பார்த்தல் சாத்தியமில்லை என்பதில் இரகசியமேது ? So ஆக்ஷன் ரசிகர்களுக்கு இது உறக்கம் கிடத்தும் தாலாட்டைப் போலவும் ; யதார்த்த விரும்பிகளுக்கு தெம்மாங்குப் பாட்டாகவும் தோன்றுவது உறுதி தானே ? சாத்தானின் உள்ளங்கையில் " ஆல்பத்தில் - நாயகன் ரெட் டஸ்ட் - எப்போதும் போலவே ஒளிவட்டத்தைத் தவிர்க்க முயற்சித்துக் கொண்டே - கதை முழுதிலும் ஒரு சராசரிக் கௌபாயாக வலம் வந்ததை கதாசிரியரின் தன்னம்பிக்கையின் வெளிப்பாடாகப் பார்த்தேன் நான் ! அந்தச் சித்திர அட்டகாசமும், அச்சின் துல்லியமும், வர்ணங்களின் இதமும் நான் ரசித்தவைகளாக மாத்திரமே இல்லாது - (இ. பி.பா. போராட்டக் குழு நீங்கலாக)  பாக்கி அனைவரின் ரசனைக்கும் ஏற்புடையவையாக அமைந்ததால் அடியேன் ஹேப்பி அண்ணாச்சி ! கிளைமாக்சில் துப்பாக்கிச் சண்டைகளெல்லாம் நிறைவுற்றான பின்னர், ரெட் டஸ்டும், தான்காணும் தரையில் கால் நீட்டி அமர்ந்து கொண்டு பேசிக் கொள்ளும் இடம் எனக்குப் பிடித்திருந்தது ! எந்த (சீரியஸ்) ஹீரோவை இப்படியொரு போஸில் நாம் ரசித்திருக்க முடியும் ? 'வயதாவதற்கும் வரம் வாங்கி வந்திருக்க வேண்டும்' என்ற ரீதியிலான டயலாக்கினைப் பேசுமிடத்தில் கதாசிரியரின் presence 'பளிச்'செனத் தெரிவதாக நினைத்தேன் ! கதாசிரியர் க்ரெக்கின் ஒரிஜினல் வசனங்களுக்கு மொழிபெயர்ப்பில்  நான் எத்தனை தூரம் நியாயம் செய்தேன் என்று தெரியவில்லை - ஆனால் இதுவரையிலும் நான் பணியாற்றியுள்ள பிரெஞ்சுக் கதைகளின் ஸ்க்ரிப்ட்களுள் one of the toughest என்பதில் சந்தேகமே கிடையாது ! இரண்டே வரிகளில் அவர்களது மொழியில் சொல்லச் சாத்தியமாகும் அந்த உணர்வுகளை சேதமின்றித் தமிழுக்குக் கொணர - கொஞ்சம் நீளமான வரிகளின் சகாயத்தை நாடுவதில் தப்பில்லை என்று நினைத்தேன் ! 

மார்ச்சின் இதழ் # 3 - நமது கர்னல்ஜியின் கார்ட்டூன் கலாட்டா ! இன்னமும் நண்பர்களில் நிறையப் பேர் இந்த ஆல்பத்தினுள்  புகுந்திருப்பது போல் தோன்றவில்லை என்பதால் இதற்கான விமர்சனங்களை ஜாஸ்தி பார்க்க முடியவில்லை ! Maybe இந்த வாரம் நமது focus -ஐ மீசைக்காரர் மீது  திருப்பிடுவோமா ? "நில்..சிரி...திருடு" பற்றிய உங்கள் பார்வைகளை முன்வைக்கலாமே folks  ?

கழுவிக் கழுவி காக்காய்க்கு ஊற்றப்பட்ட நமது ஸ்பைடர்காருவின் ராப்பர் பற்றிய சிறுகுறிப்பு ! இது நமது ஓவியரின் தயாரிப்பே என்றாலும் - வெறுமனே வர்ணம் பூசுவதும், பின்னணியில் கலர் சேர்ப்பதுமே அவரது பங்களிப்பு ! வலைமன்னரின் டிராயிங் Fleetway -ன் LION வாரயிதலின் அட்டைப்படத்தின் ஜெராக்சே ! And அதனை வரைந்திருப்பதும் ஸ்பைடர் தொடரின் ஒரு மூத்த ஓவியரே என்பதால் அதனை நோண்டிட முற்படவில்லை ! ஆனால் புத்தகமாகப் பார்க்கும் போது - பக்கத்து வீட்டுப் புள்ளையைக் கையைப் பிடித்து இழுத்து விட்டு, ஊர் பஞ்சாயத்துக்குப் பயந்து ஓட்டம் பிடிக்கும் பாவனை லைட்டாகத் தோன்றத்தான் செய்கிறது ! Anyways ஒரு வலைமன்னனின் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமே என்பதால் - அடுத்த முறை இதனை ஈடு செய்யும் விதமாய் ஒரு சூப்பர் ராப்பரை தயார் பண்ணிட உறுதி சொல்கிறேன் !

Talking of wrappers - இதோ பாருங்களேன் நமது நண்பரின் கைவண்ணத்தை ! நாம் அனுப்பியிருந்த black & white பக்கங்களைப் பார்த்து - அதனிலிருந்து frame களைத் தேர்வு செய்து ; லைன் டிராயிங்காகவே வரைந்து, பின்னர் வர்ணம் பூசியதொடு மட்டுமல்லாது - தலைப்பையும் அமைத்து ; லோகோவையும் வண்ணத்தில் அனுப்பித் தந்துள்ளார் ! பெயரில் ஸ்மர்ப் இருப்பினும், ஆற்றலிலும், காமிக்ஸ் நேசத்திலும் விஸ்வரூபமெடுத்து நிற்கும் இவர் யாரென்று any guesses ?  
இன்னொரு நண்பரிடமும், இன்னொரு MMC இதழின் அட்டையினை டிசைன் செய்யும் பணியை ஒப்படைத்துள்ளோம் ! காத்திருப்போம் அவரது கைவண்ணத்தையும் ரசித்திட ! சும்மாயிருந்த நேரத்தில் மைதீனை நமது பரனை உருட்டச் செய்த போது சிக்கியவை தான் என்னவென்று பாருங்களேன் !! 
1973 & 74-ல் தீட்டப்பட்ட ஓவியங்கள் இன்னமும் ஒரு இம்மி மெருகு குறையாமல் டாலடித்துக் கொண்டுள்ளன நமது கிட்டங்கியில் ! அந்நாட்களில் ஓவியர்கள் பயன்படுத்தும் போஸ்டர் கலர்களில் கொஞ்சமாய் கோந்து சேர்த்துக் கொள்வதைப் பார்த்த ஞாபகம் உள்ளது ! அது ஏனென்று இன்றைக்குப் புரிகிறது ! இத்தனை இத்தனை ஆண்டுகள் கடந்து பின்னேயும் அந்த வர்ணங்கள் துளிகூட வீரியம் குறையாமல் தொடர்வதற்கு அந்தக் கொந்தும் ஒரு காரணம் போலும் !! ஒரிஜினல் பெயிண்டிங்குகள் பத்திரமாய் இருப்பதால் - அவற்றையே process செய்து - இயன்ற இடங்களில் ராப்பர்கலாக்கி விடுவோம் ! முதல் சுற்று முத்து மினி காமிக்ஸில் 6 இதழ்கள் ரூ.20 விலையில் வெளியாகிடும் ! எல்லாமே அந்நாட்களது கூட்டு எழுத்திலான ஸ்கிரிப்ட் என்பதால் ஒட்டு மொத்தமாய் புது டைப்செட்டிங் செய்திடவிருக்கிறோம் ! ஏப்ரல் இறுதியில் அல்லது மே துவக்கத்தில் இவை தயாராகி விடும் ! 

தேர்தலின் பொருட்டு ஏப்ரலில் நடைபெறுவதாகயிருந்த சென்னைப் புத்தக விழா தள்ளிச் செல்கிறது ! So இந்த MMC இதழ்களை வேறு ஏதேனுமொரு புத்தக விழாவினில் வெளியிட வேண்டி வரலாம் ! தற்போது திருச்சியில் நடந்து வரும் புத்தக விழா - அளவில் அத்தனை பெரிதல்ல என்றாலும் ஆச்சர்யமூட்டும் விதத்தில் சரளமான ஜனத்திரளைச் சந்தித்தே வந்துள்ளது - முதல் இரு நாட்களிலுமே !! பஸ் நிலையமருகே சென்ற முறை புத்தக விழா நடந்த பொழுதே விற்பனை ரொம்ப மந்தம் என்ற புள்ளி விபரம் தலைக்குள் குடியிருக்க - இம்முறை விழா அரங்கு சற்றே ஒதுக்குப்புறம்  என்று கேள்விப்பட்ட போது நான் மிரண்டு தான் போயிருந்தேன் ! ஆனால் நல்ல கூட்டம் ; decent விற்பனை என ஆரம்ப நாட்கள் உற்சாகமூட்டும் விதமாய் அமைந்துள்ளன ! பற்றாக்குறைக்கு, நமது (முன்னாள்) முகவர் ஒருவர் தற்செயலாக நம் ஸ்டாலுக்கு வந்திருக்க, உள்ளூர் வாசகர்களின் ஆர்வத்தை நேரடியாகப் பார்த்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் முதற்கொண்டு தன கடைக்கு மீண்டும் இதழ்களைத் தருவித்துக் கொள்ள உறுதி சொல்லியிருக்கிறார் ! ஸ்டாலுக்கு வந்திருந்த நண்பர்களின் செல்நம்பர்களைப் பெற்றுக் கொண்டு - இனி ரெகுலராகத் தொடர்பில் இருக்க சம்மதம் சொல்லியுள்ளார் ! தொடரும் நாட்களில் இது போல் இன்னம் சிறுகச் சிறுக கதவுகள் திறப்பின், மலைக்கோட்டை மாநகரில் நாம் "ஹி.ஹி.." என்று திரிய பெரியதொரு அவசியம் இருந்திடாது ! 

பரணில் பழைய பெயிண்டிங்குகளை உருட்டிக் கொண்டிருந்த தருணத்தில் கண்ணில்பட்ட இன்னுமொரு பழமையின் நினைவுச் சின்னம் முகம் நிறைய புன்னகையை வரச் செய்தது  ! இதோ - அந்த இதழின் அட்டைப்படம் ! 

"உன்னை விட வயதில் மூத்த இதழிது - தெரியுமா ? " என்று ஜூனியரிடம் இதனைக் காட்டிய போது ஒரு மெல்லிய பெருமிதம் எனக்குள் இருந்தது நிஜமே !  நியூஸ்பிரிண்ட் இதழ்கள்  என்றாலே காத தூரம் ஓடும் ஜூ.எ. ஒரு வித ஆச்சர்யத்தோடு இதைப் புரட்டிப் பார்த்தது வேடிக்கையாக இருந்தது எனக்கு ! 'இந்த ஆர்ட்பேப்பர் ; வர்ணம் ; இத்யாதி இத்யாதியெல்லாம் சமீபமாய்த் தான் அப்பு ; நாம் வளர்ந்ததே இந்தச் சாணித்தாள் எணியின் மீதேறித் தான் !" என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டேன் ! 24 ஆண்டுகளுக்கு முன்னர், கோடை (பள்ளி) விடுமுறைகளின் சமயம் நாம் தயாரித்த இதழிது என்று ஞாபகம் !  

ஸ்பைடர் மேனியா ஒரு விதத் தளர்நிலையில் இருந்த நேரமும் கூட  என்ற ஞாபகமும் உள்ளது ! ஸ்பைடர் கதைகள் கிட்டத்தட்ட காலியாகிப்  போகும் தருணம் என்பதால் மெது மெதுவாய் வேறு விதக் கதைக்களங்களுக்குள் கால் பதிக்கத் தொடங்கியிருந்தோம் ! அந்த நேரத்தில் இந்தக் கதையின் தலைப்பே ஒருவிதப் புத்துணர்ச்சியினை வழங்கிட - '90- களின் ஒரு மறக்க இயலா ஹிட்டாக இந்த இதழ் அமைந்தது அந்நாட்களது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம் ! நிஜத்தைச் சொல்வதானால் -கங்காரூ தன வயிற்றில் குட்டியைத் தூக்கிக் கொண்டே திரிவது போல்  இந்தக் கதையை 1988 முதலே நான் சுமந்து கொண்டிருந்தேன் - simply becos காதினில் இது சூட்டியது புஷ்பங்களை மாத்திரமல்ல - ஒரு புஷ்ப மார்கெட்டையே ! பாட்டிலுக்குள் கர்கோ பூதம் ; சாத்தான் ; டைனோசார்கள் ; அழகு ராணி ; கொலைகார கொரில்லாக்கள் ; இவர்களோடு  வலைமன்னன் மோதுவது என்று எங்கெங்கோ சுற்றித் திரியும் fantasy -ன் உச்சமாக இந்தக் கதை இருந்ததால் - தர்ம அடிக்குப் பயந்தே இதனை வெளியே கொண்டு வராது பத்திரப்படுத்தியிருந்தேன் ! ஆனால் கதைப் பஞ்சம் என்ற நிலை எழுந்த போது - "காதுலே புய்ப்பம்" - "அதிரடி ஆக்ஷனாக" காட்சி தர - ஹாலிடே சூப்பர் ஸ்பெஷல் தயாரானது ! அந்நேரம் நமது ஓவியர் மாலையப்பன் நம்மிடம் பணியாற்றவில்லை என்று நினைக்கிறேன் ; இந்த அட்டைப்படம் சிகாமணியின் கைவண்ணம். ! அதிலும் முதலில் பூதத்தை மட்டும் வரைந்து விட்டோம் ; அப்புறம் அட்டைப்படத்தில் 'தலைவர்' இல்லது போனால் மாஸ் இருக்காதென்று தோன்ற ஸ்பைடரின் அழகு வதனத்தை அப்புறமாய் இணைத்தோம் ! And டாலடிக்கும் ரோஸ் வர்ணம் இந்த ராப்பரில் கூடுதலாய் அச்சிடுவதெனத் தீர்மானித்ததால் - ஸ்பைடரின் முகத்தை பிங்கில் மட்டுமே வருமாறு பார்த்துக் கொண்டோம் ! அட்டையைப் பார்த்த போதே - நம்பிக்கை பிறந்தது - இது ஓடும் குதிரையென்று ! 

வழக்கமான கிறுகிறுக்கச் செய்யும் ஸ்பைடர் கதையை விட - நான் இந்த இதழில் ரசித்தது - ரிப் கிர்பியின் சாகசத்தை ! தன் கனவுக் கன்னியைத் தேடிச் செல்லும்  மொழு மொழு மண்டை டெஸ்மாண்ட் கதை முழுவதிலும் சுற்றி வருவதால் - செம சுவாரஸ்யமாய் பக்கங்களைப் புரட்ட முடிந்திருக்கும் !! ரிப் கிர்பியும் காரிகனும் தான் அந்நாட்களில் நம் மானம் காத்த ரட்சகர்கள் என்பதால் காரிகனுக்கும் இந்த இதழில் இடம் தவறாது இருந்தது ! அட்டைப்படத்தில் தொங்கு மீசை பாட்டில் பூதமெனில் - காரிகனின் கதையிலும் தொங்கு மீசை டாக்டர் 7 இருந்தார் ! Dr 7 கதைகள் எப்போதுமே விறுவிறுப்பாக இருக்குமென்பதால் இந்தக் கதையைக் குறிப்பாகத் தேடித் பிடித்து தேர்வு செய்தேன். FLEETWAY -ன் பெருச்சாளிப் பட்டாளம் (War ) சிறுகதை ; ராடார் சிறுகதை ; இறுதியாய் "மறையும் மாயாவி ஜாக்கின் : கதையொன்று என நீளமான cast  இருந்ததால் இதழ் நல்ல புஷ்டியாய் 224 பக்கங்களோடு அமைந்து போனது ! அந்நாட்களில் பத்து ரூபாய் என்பது இன்றைய நூறு ரூபாய்க்கு ஈடாகப் பார்த்திடலாம் எனும் போது - இயன்றதைச் செய்து இதழின் கனத்தை ஏற்றுவதே லட்சியமாக இருந்தது ! வெளியாகி ஒராண்டுக்குள்ளாகவே இந்த இதழ் காலியாகி விட்டதென்று தான் நினைக்கிறேன் ; இதனை ஸ்டாக்கில் அதிக நாட்கள் சுமந்து திரிந்ததாக நினைவில்லை ! And இந்த இதழினை தயாரித்துக் கொண்டிருந்த நாட்களை நினைவில் இருத்திக் கொள்ள கூடுதலாயும் ஒரு காரணமுண்டு ; அடியேனுக்குப் பெண் பார்க்கும் படலம் தீவிரமாய் நடந்து வந்த ஆண்டும் அது ! So கலர் கலராய் அமைந்தவை அந்நாட்களது அட்டைப்படங்கள் மாத்திரமல்ல என்பதைச் சொல்லவும் வேண்டுமா ? 

Back to the future  - இங்கி -பிங்கி-போட்டுக் கொண்டிருக்கும் போராட்டக் குழுவின் மனவுறுதியை அசைத்துப் பார்க்கும் பல ஐட்டங்கள் விறுவிறுப்பாய் தயாராகி வருகின்றன ஏப்ரலுக்கு ! கோடீஸ்வரரின் பணிகளும், வுட்சிடிகாரர்களின் பணிகளும் ஏற்கனவே முடிந்து விட்டன - அச்சு மாத்திரமே பாக்கி ! இரவுக் கழுகாரின் மெகா அவதாரமும் தொடரும் வாரத்தில் நிறைவு பெற்றிடும் என்பதால் - போங்கு இல்லா இ.பி.பா. ஏப்ரலிலும் தொடருமாயின் சங்கத்துக்குள் சில சலசலப்புகள் ஏற்பட வாய்ப்புகள் பிரகாசமெனத் தோன்றுகிறது !

Joking apart - "மாதமொரு டெக்ஸ்" என்ற அட்டவணை அமலுக்கு வந்த ஆரவாரத்தின் மத்தியினில் எனது பணிச்சுமை வெகுவாகக் கூடிப் போனதை உங்களில் பலர் கவனித்திருக்க வாய்ப்பில்லை ! எழுதிட டெக்ஸ் கதைகள் சுலபமே என்றாலும் - 224 பக்கங்கள் என்பது குறுக்கைப் பதம் பார்க்கும் விஷயம் ! எழுதிய பின்னே - மூன்று முறைகள் என் மேஜைக்கு வந்து செல்லும் - டெக்சின் டைப்செட் செய்யப்பட்ட பக்கங்கள் ! "சாமி..இதுக்கு மேல் இந்தக் கதையைப் பார்த்தால் நான் சுவற்றைப் பிறாண்டத் தொடங்கி விடுவேன் !" என்ற நிலையில் தான் அவை அச்சுக்குச் செல்லும் ! இதன் மத்தியினில் "இது எனக்கே - எனக்கு" என பூதம் போல் கார்ட்டூன் கதைகளையும் நானே அடைகாத்துக் கிடக்க - அதன் பணிகள் இன்னொரு பக்கம் நடந்தேறிடும். சின்னதாய் ஏதேனும் ஒய்வு கிடைக்கும் சமயம் unwind செய்யும் விதமாய் ஏதேனும் எழுதுவோமே என்று யோசிக்கும் போது - "என் பெயர் டைகர்" ஜிங்கு ஜிங்கென்று மேஜையில் குதிப்பது கண்ணுக்குப் படும் ! அல்லது - எதிர்பாரா சிக்கல்கள் ஏதேனும் தலைதூக்கும் - ஏப்ரலின் சிக் பில் கதையினில் நேர்ந்ததைப் போல ! இது சென்றாண்டே வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கதை & இதனை நமது கருணையானந்தம் அவர்களை   எழுதச் சொலியிருந்தேன் ! ஏதோவொரு ஞாபகத்தில் அவர் இந்தக் கதைக்குமே தூய தமிழ் நடையைக் கையாண்டிருக்கிறார் ! எழுதி வந்த ஸ்கிரிப்ட் பீரோவுக்குள் தூங்க, போன வாரம் அதனை நமது பணியாளர்களிடம் தந்து டைப்செட் செய்தும் வாங்கி விட்டேன் ! எப்போதுமே கார்டூன் கதைகள் ; அதுவும் சிக் பில் கதைகள் எனும் போது எடிட்டிங் வேலைகள் ஜாலியாக ஓடியே விடும் ! அந்த நம்பிக்கையில் இதனையும் வீட்டுக்குத் தூக்கிப் போய் இரவு புரட்டினால் - தூக்கிவாரிப் போட்டுவிட்டது அந்த சீரியசான மொழிநடையைப் பார்த்தவுடன் ! டாக்புல்லும்  , ஆர்டின்னும் சுத்தமான தமிழ் செப்புவதைப் பார்க்கப் பார்க்க மிரட்சியாக இருந்தது ! முழுக் கதையையும் rewrite செய்வதைத் தாண்டி வேறு வழி ஏதும் புலப்படவில்லை ; ஒரிஜினலை ரிப்பேர் செய்வதைவிட, புதுசாய் எழுதி விடுவது எப்போதுமே உத்தமம் ! So ப்ளஸ் 2 பரீட்சைக்குப் பிள்ளைகள் படிக்கும் வேலையினில் நானும் வேதாளம் போல் எழுந்து உட்கார்ந்திருந்தேன் - திங்கள் இரவும், செவ்வாய் இரவும் !!

இன்னமும் "என் பெயர் டைகர்" 250 பக்கங்கள் என்னை உக்கிரமாய் முறைத்துக் கொண்டு நிற்கும் போது - போராட்டக் குழுவின் அரைகூவல்கள், தலீவரின் சாந்த முகத்தைப் போலவே சாதுவாய்த் தெரிவதில் வியப்பில்லையோ ? என்னதான் டெர்ரர் face காட்ட எக்கச்சக்கமாய் எத்தனித்தாலும், அந்தப் பிஞ்சு முகங்களுக்கு அது ஒத்து வருமா - என்ன ? தை பிறந்தால் வழி பிறக்குமோ - இல்லையோ -  "எ.பெ.டை" பிறந்தால் எனக்குக் கொஞ்சம் மூச்சு விட நேரம் பிறக்கும் ; மூச்சு விட நேரம் பிறந்தால் மற்றவை தொடரும்! என்ற நம்பிக்கையோடு - இ.பி..பா. போராட்டத்தை டெரர் பாய்ஸ் & girls (!!) கைவிடுமாறு கேட்டுக் கொள்வோமா folks ?

Before I sign off - ஒரு ஜாலியான குட்டிப் புள்ளிவிபரம் ! நமது ஆன்லைன் தளத்தில் பதிவாகியுள்ள வாடிக்கையாளர்களின் விபரங்களையும், சமீபமாய் (6 மாதங்கள்) ஆன்லைனில் விற்பனையாகியுள்ள இதழ்களின் விபரங்களையும் ஜூ.எ. எனக்குக் காட்டினார் ! அங்கு பதிவாகியுள்ளதில் 30% - பெண்களே !  (Maybe தம் வீட்டுப் பெண்களின் பெயர்களில் பிரதிகளை நம் நண்பர்கள் வரவழைத்திடவும்   வாய்ப்புண்டு தான் !) And அவர்கள் தவறாது வாங்குவது நமது 'தல' சாகசங்களையே !! ஆண்களிடம் மட்டுமன்றி - மகளிரிடமும் இரவுக் கழுகார் ரொம்பவே popular என்பது புரிகிறது !! 

சென்ற வாரம் சிவகாசியில் என்னை தயக்கத்தோடு சந்தித்த அன்பு நண்பர் ராஜசேகர் கூட - தன் இல்லத்தரசி ஒரு டெக்ஸ் ரசிகை என்று குறிப்பிட்டது நினைவில் உள்ளது ! இரண்டு பெரிய பாகெட் கடலை மிட்டாய்களை என்னிடம் தந்தவர் - தனது குட்டிப் பெண் வாரிசு தரை முழுக்க காமிக்ஸ் இதழ்களை நிரப்பிப் போட்டுக் கொண்டு அதன் மத்தியில் உற்சாகமாய்க் குதிக்கும் சின்னதொரு வீடியோ க்ளிப்பைக் காட்டிய போது - பசியோ, களைப்போ பெரிதாய்த் தோன்றவில்லை ! ஆந்தைகள் உறங்கும் வேளையிலும் விழித்துக் கொண்டு பணி செய்யும் சுமைகள் எல்லாமே இது போன்ற ஒற்றை நொடிகளின் மனநிறைவுகளின் முன்னே இலவம் பஞ்சுப் பொதியாய்த் தன் காட்சி தருகின்றன ! சொல்லுங்களேன் - நாள் முழுக்கப் புன்னகையோடு சுற்றி வர இது போன்ற காரணங்கள் போதாதா ?  Bye for now !! Have a great weekend !! 

430 comments:

  1. சங்கி மங்கி,
    கோல் மால்,
    பட்டா் கட்டா்,
    பப்பி ஷேம்,
    ஹம்டி டம்டி,
    இங்க்கி பிங்க்கி,
    பனானா,
    அப்பாடக்கா்....,
    கேரட் மீசைக்காராின் கதையிலே பாத்திரப் படைப்புகளின் பெயா்கள் தான்,அடடா..,அடடா..!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கமுங்கோ..!

      Delete
    2. Guna karur : எழுபதுகளில் உருவான க்ளிப்டனின் இந்தக் கதைகளில் - பிரிட்டிஷ் மக்களையும், அவர்களது கலாச்சாரங்களையும் மெலிதாய்ப் பகடி செய்யும் பாணிக்கு முக்கிய பங்குண்டு ! அதன் ஒரு முக்கிய அம்சம் - பிரிட்டிஷ் பெயர்களை ஜாலியாய் வாருவதும் தான் ! So தமிழாக்கத்தின் போது கதையின் முக்கிய மனுஷர்களுக்கு தமிழிலும் / ஆங்கிலத்திலும் எடுபடக்கூடிய பெயர்களாய்த் தேர்வு செய்வது முக்கியம் என்பது புரிந்தது ! அதன் பொருட்டு மண்டையை உருட்டியதன் பலனே - சீட் காலி தியேட்டர்களும் ; ஜெல்லி பீன் போலீஸ்காரர்களும் ; அலெக்ஸ் அப்பாடக்கர்களும் !!

      Delete
  2. மூன்றாவது
    ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இனிய ஞாயிறு வணக்கங்கள்

    ReplyDelete
  3. க்ளிப்டன் சோடை போகவில்லை..!இரண்டு கதைகளுமே நல்ல விதம்,நமது இதழ்களில் ஒரு ரவுண்டு வர பிரகாசமான வாய்ப்புள்ளது..!க்ளிப்டனாருக்கு நல்வரவு..சிவப்புக் கம்பள விரிப்போடு..!

    ReplyDelete
    Replies
    1. நண்பரே காமெடி கர்ணல் படித்திருக்கிறிர்களா தலைப்புகேற்றார் போல் செம காமெடியாக இருக்கும் பெல்டில் கையை விட்டு தலைகீழாக அடிக்கும் அடியை பார்த்தால் சிரிப்பு வராதவர்களுக்கும் சிரிப்பு வரும்

      Delete
    2. ஹாஹாஹா சரியாக சொன்னீர் :)

      Delete
  4. சார் மீள் வரவில் கிளிப்டன் அசத்துகிறார் காமெடி கர்ணலை கணக்கில் சேர்த்தால் இது அவருக்கு ஹாட்ரிக் வெற்றி சார்

    ReplyDelete
    Replies
    1. Senthil Sathya : என்ன - ரொம்ப நீ -ள-மா -ன இடைவெளியிலான ஹாட்ரிக் !

      Delete
  5. மனம் நொதிந்து போய்க் கிடக்கிறது...,நடு மாா்பை துளைத்த தோட்டா கொஞ்சம் விலகிச் சென்றிருக்கக் கூடாதா..? தோள் பட்டையிலே பதிந்து போய் கிடக்கக் கூடாதா..? அந்த ஆயுத வியாபாாி சுடும் முன், டெக்ஸ் முந்திக் கொண்டுருக்கக் கூடாதா..? ....,
    விழி நிறை நீர் கொண்டு அப் பக்கத்தின் ஒரு ஓரம் நனைந்து போகிறது..!திரும்பத்,திரும்ப அக்காட்சி மனத் திரையில் நிழலாடுகிறது..!
    கதை மாந்தா்கள் அத்துனை பேரையும் புறந் தள்ளி விட்டு, அகக் கண்ணாடியில் மாய ரூபமெடுத்து ஒயில் பயில்கிறாள்..!
    சில்வா் மூன்!
    பக்கங்கள் முடிந்து போய்,புத்தகம் மூடி, நீண்ட நெடு நேரம் வெறுமையே வேட்கையாய்..!
    சமாதி விட்டு விலகுகிறான் கிட்!
    விலகிச் செல்ல மனமில்லாமல் அங்கேயே வீழ்ந்து கிடக்கிறோம் நாம்....!

    ReplyDelete
    Replies
    1. @ Guna karur

      கதை ஏற்படுத்திய தாக்கத்தின் வீரியம் - உங்கள் எழுத்துக்களில் பிரதிபலிக்கிறது! செம!
      குறிப்பாய், ///பக்கங்கள் முடிந்து போய்,புத்தகம் மூடி, நீண்ட நெடு நேரம் வெறுமையே வேட்கையாய்..!
      சமாதி விட்டு விலகுகிறான் கிட்!
      விலகிச் செல்ல மனமில்லாமல் அங்கேயே வீழ்ந்து கிடக்கிறோம் நாம்....!///

      செம! செம!!

      Delete
    2. குணா சார்.

      லிட்டில் மூனை கொன்ற கதையாசிரியர் மீது கோபம் வந்தாலும் ,அப்படியில்லாமல் லிட்டில் மூன் உயிரோடு இருந்து அவரை திருமணம் செய்திருந்தால்........ அவர் அன்பிலும் அழகிலும் மயங்கி.....

      நாம் அவர் சாகஸத்தை பார்க்க முடியாது.அவர் சாப்பாட்டிற்கு ரசம் வைப்பதைத்தான் பார்க்க முடியும்.!

      Delete
    3. Madipakkam Venkateswaran : //நாம் அவர் சாகஸத்தை பார்க்க முடியாது.அவர் சாப்பாட்டிற்கு ரசம் வைப்பதைத்தான் பார்க்க முடியும்.!//

      பெம்மிக்கன் சமைத்து கிட்டுக்கு டிபன் கேரியரில் கொடுத்தனுப்பும் அழகை ரசித்திருப்போம் ; கார்சன் அதிலும் லைட்டாக கை நனைக்க முயற்சித்திருப்பார் !!

      Delete
  6. மூன்றாவது
    ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இனிய ஞாயிறு வணக்கங்கள்

    ReplyDelete
  7. கடந்து போன காலங்களின் காதல் நினைவுகளோடு-காா்சன்!
    மாித்துப் போன மனையாளின் ஞாபகங்களோடு-டெக்ஸ்!
    இன்று..துளிா் விட்ட போதே கருகிப் போன காதலோடு-கிட்!
    கதாசிாியா்களுக்கு அப்படி என்னதான் சோகமோ..?! குடித்தனம் நடத்தவே விடமாட்டேங்குறாங்களே..??!!

    ReplyDelete
  8. என்னுடைய மனைவியும் டெக்ஸின் பெரிய ரசிகை, அவர் படித்த பின்புதான் எனக்கு :(
    'திகில் நகரில் டெக்ஸ்' மட்டும் பர்மிஷன் வாங்கி முதலில் படித்தேன், ஆசிரியர் டிடெக்டிவ் கதைகளை மரந்துவிட்டதால் - இந்த கதையை படித்து ஆருதல் அடைந்தேன். டெக்ஸ் கதை வரிசையில் நிச்சயம் ஒரு வித்தியாசமான படைப்பு.

    இந்த வருடம் டெக்ஸ் வருசைக்கென ஆசிரியர் ரொம்பவே மெனக்கட்டுள்ளார், ஒவ்வொரு இதழிலும் ஒரு வித்தியாசம் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. V Karthikeyan : //ஒவ்வொரு இதழிலும் ஒரு வித்தியாசம் உள்ளது.//

      ஆண்டின் இறுதியிலும் இதே அபிப்பிராயம் அனைவரிடமும் இருந்திட வேண்டுமென்பதே எனது வேண்டுதல் !!

      Delete
  9. அட! என்ன,எல்லாம் ஒரே "மர்மம்" - ஆ இருக்கே !

    ReplyDelete
  10. சத்தியமாக எதிர்பார்க்கவில்லை சார்.நீங்கள் சொன்ன இவ்வளவு வேலைப்பழுவுக்கு மத்தியிலும்(மீதி சொல்லாத வேலைகளையும் சேர்த்து) என்னை என்னையும் ஒரு பொருட்டாக மதித்து சந்தித்து அன்புடன் உரையாடியது மட்டுமல்லாமல் அதையும் தங்களின் பதிவில் குறிப்பிடுவது நிச்சயம் தங்களின் வாசகர்மீதான அன்பையும், மரியாதையையும், அவர்கள் ஒவ்வொருவரின் மீது நீங்கன் கொண்டிருக்கும் தனிக்கவனத்தையும் அக்கரை தெரிவிக்கிறது சார். நிச்சயம் இந்த வாரம் என் வாழ்வில் மறக்க முடியாத வாரமாக அமைந்துவிட்டது சார். மிக்க நன்றி சார்.

    ReplyDelete
    Replies
    1. rajasekarvedeha : ஓடையோ...நதியோ...சமுத்திரமோ ....சகலத்தின் துவக்கமும் ஒற்றைத் துளி தானே நண்பரே ?! உங்கள் ஒவ்வொருவரின், ஈடுபாடும், ஆர்வமும் இல்லாது போனால் இந்தப் பயணம் சாத்தியமே இல்லையே !!

      Delete
  11. அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கங்கள் .

    ReplyDelete
  12. இந்த பதிவை பார்த்து பதில் டைப் செய்து கொண்டிருக்கும்போதே எனது தம்பியிடமிருந்து போன் வந்தது. அண்ணே நான் திருப்பதி போய் சாமி கும்பிட்டுட்டு தாதர்ல வந்துட்டிருக்கிறேன் 10 நிமிசத்துல ஸ்டேசனுக்கு வந்துரு அப்புடின்னு. போன கமெண்ட அவசர அவசரமா முடிச்சுட்டு தம்பிய வீட்டுக்கு கூட்டிட்டு வந்த உடனே திருப்பதி லட்டை கொடுத்தான். பல் விளக்காமல் சாப்பிடவான்னு மனம் யோசிக்க. மணமோ வாயோரம் ஜலப்பிரவாகம் வரவைக்க கடைசியில் வாயாரே வென்றார். இனிமை வாயிலும் மனதிலும் நிறைந்திருக்க ஆண்டவனுக்கும் அன்பு ஆசிரியருக்கும் நன்றி

    ReplyDelete
  13. கர்னல் கிளிப்டன் சப்பைக் கொள்ளை நடக்கும் ஒவ்வொரு சமயத்திலும் மனதினுள் பிறாண்டுவது கடைசியில் மாத்தி யோசி தத்துவத்தை கைக்கொண்டு(பூனையாரின் உதவியையும் கொண்டுதான்) நடக்கவிருக்கும் உண்மையான கொள்ளையை கண்டுபிடிப்பது அனைத்தையும் காமெடியுடன் படிக்கும்போது மிகவும் நன்றாக இருந்தது. நில் சிரி திருடு - ரசனை

    ReplyDelete
  14. ஆஹா...சார் அட்டை படங்களை துளி கூட மாற்றமின்றி இவற்றயே போட்டு விடலாம்...சிறிதும் (நினைத்து கூட)பார்த்திடாத கதைகள்...வாங்கணுமென்ற எண்ணம் கூட ில்லா கதைகள்...அட்டை படங்களை பார்த்ததும் துள்ளச்செய்கின்றனவே..அட்டகாசம்...

    பாட்டில் பூதம் பரிச்சை லீவில் ஊரில் இருந்த போது எப்போதும் வாங்கி விடும் நான் கோவை திரும்பிய பின்னே வாங்கினேன்..ஆகவே மே இறுதியில் வந்திருக்கலாம்..

    ஸ்பைடர் கதைகள் வருவது நின்ற பின்னர் வாராது வந்த மாமணி இது...இன்னும் ஆச்சரியம் ஸ்பைடர் இதழ்கள் மாபெறும் வெற்றி பெற்றும் 7sinsters இதழை ஏன் அப்போது வெளியிடவில்லை என்பதே...பூச்சுற்றல் என்பதனை ஏற்றுக்கொள்ள ஏலவில்லை...
    டெக்ஸ் அட்டை படத்த எதிர்பார்த்தால் மாபெறும் புதயல் அட்டைகளோடு பழி வாங்கும் புயல் வண்ணத்தில் அவதாரமெடுக்க நேரம் கனிந்து விட்டது போலுள்ளதே...

    ReplyDelete
    Replies
    1. இந்த வார அட்டை படங்களை v்டு விட்டீர்களே....லார்கோ...பெரிய சைசசில் டெக்ஸ் ..ஆஹா அடுத்த மாதமும்...
      நண்பரின் படைப்பும் அழகு...ஆனால் எனது தேர்வு பழய புதயலே...

      Delete
    2. ஸார் முத்து மினி பழைய அட்டையை முன்புறமும்....புதிய நண்பர்களின் கைவண்ணத்தை பின் புறமும் போடுங்கள்

      Delete
    3. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : //இந்த வார அட்டை படங்களை v்டு விட்டீர்களே....லார்கோ...பெரிய சைசசில் டெக்ஸ்//

      மார்ச் இதழ்களின் மீதான கவனத்தை இன்னும் கொஞ்ச நாட்களுக்குத் தொடர்வது முக்கியம் நண்பரே ! அதற்குள்ளாக ஏப்ரலுக்குள் புகுந்துவிட்டால் - ஒரு வாரத்துக்கு முந்தய இதழ்கள் கூட ஆறிப் போன கஞ்சாகத் தெரியக்கூடுமல்லவா ?

      Delete
    4. காத்திருப்பேன் சார்...அந்த ஸ்பைடர் கதய ேன் சார் வெளியிடலை

      Delete
  15. கமான்சே தொடரில் ரெட் பணிபுரியும் நகரில் அமைதி நிலைபெற்றுவிடும் சூழலில் அங்கிருந்து வெளிக்கிளம்பி புதியதொரு இடத்துக்கு செல்லும்போது வழியிலேயே பல்பு வாங்கி கொஞ்சம் அகலக்கால் வச்சுட்டமோன்னு சிந்திக்கும்போதும், பண்ணையில் ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் பேசும் வசனங்களும் ஹீரோவாக அல்லாமல் சராசரி மனிதனின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக அமைந்தது. கண்ணுக்கு இதமளிக்கும் சித்திரங்கள் மட்டும் இல்லை என்றால் நமது ஆசிரியரே நிச்சயம் யோசித்திருபார்கள். (எதற்கு) சாத்தானின் உள்ளங்கையில்- கலர்புல்

    ReplyDelete
  16. விஜயன் சார், இந்த முறை முதலில் படித்து நில் சிரி திருடு; முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை விறுவிறுப்பு காமெடி உடன். இவரின் காமெடி ரசிக்கும் படி இருந்தது. அவரின் உதவியாளர் அடிக்கும் டயலாக், அவரை ஏற்றி செல்ல இருக்கும் டாக்ஸி டிரைவரிடம் கர்னலை பற்றி கொடுக்கும் "முன் எச்சரிக்கை", பொது இடத்தில் நாகரிகமாக பேசவேண்டும் என சொல்லும் போது அந்த இடத்தை விட்டு செல்லும் போது "வெங்காயம்" என திட்டிவிட்டு மன திருப்தியுடன் செல்வது... நிறைய சொல்லலாம்.

    பக்கத்திற்கு பக்கம் சிரிப்பை வர வழைக்க உங்களின் உழைப்பு இந்த இதழின் வெற்றி.

    இதே புத்தகத்தில் வந்த இரண்டாம் கதையை துப்பறியும் கதையாகதான் படித்தேன்:-) இந்த சிறிய கதையில் காமெடி வசனம்களை புகுத்துவது சிரமம் என்பதை புரிந்து கொண்டேன்!

    மொத்தத்தில் இந்த சிரிப்பு கர்னல் என்னை இந்த முறையும் கவர்ந்து விட்டார்.

    ReplyDelete
  17. எடிட்டர் சார்,

    சென்ற வாரம் தான் சட்டத்திற்கு ஒரு சவக்குழி மற்றும் திகில் நகரில் டெக்ஸ் இரண்டு கதைகளையும் படித்தேன்.

    சட்டத்திற்கு ஒரு சவக்குழி : ஆஹா! ஓஹோ ! சித்திரங்கள் ஒவ்வொன்றும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் ரகம். ஒவ்வொரு பிரேமையும் ரசித்துக்கொண்டே படிப்பதற்கு மூன்று நாட்கள் ஆகிவிட்டது. உதாரணதிற்கு : ஏரியில் இருந்து பறந்து செல்லும் வாத்துக்கூட்டம், குஞ்சுகளுக்கு இரை கொடுக்கும் தாய் பறவை என கதை முழுவதும் Mr Miguel Angel Repetto கலக்கி உள்ளார். ஒரு வரி கதையை வைத்துக்கொண்டு கொஞ்சம் கூட தொய்வில்லாமல் கதையை நகர்த்தி இருப்பது சாதாரண விஷயமல்ல. உங்களின் மொழிபெயர்ப்பும் அருமை.

    திகில் நகரில் டெக்ஸ்: குற்றவாளி யார் என்பதை கடைசிவரை யூகிக்க முடியவில்லை என்றாலும் கூட, டெக்ஸ் அதை கண்டுபிடிக்க ஒன்றுமே முயற்சி எடுக்கவில்லை என்பதால் சிறிது ஏமாற்றமே.
    நீங்கள் ஏன் இந்தக்கதையை இவ்வளவு நாட்கள் தள்ளிபோட்டு வந்தீர்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. எங்களுக்கு only the best வழங்கவேண்டும் என்பதுதான் உங்களது குறிக்கோள் என்றாலும், இந்தக் கதை இவ்வளவு நாள் காத்திருக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. Radja : சில நேரங்களில் நமது இடியாப்பப் புகழ் ரிப்போர்டர் ஜானியையும் கவனியுங்களேன் நண்பரே - எதுவுமே பெரிதாய் செய்யாது கிராமத்தைச் சுற்றிச் சுற்றியே வந்தாலும் மனுஷன் மர்மங்களை முடிச்சவிழ்த்து விடுகிறார் அல்லவா ? அதே பாணியைத் தான் இரவுக் கழுகாரும் திகில் நகரில் பயன்படுத்தியுள்ளார் !

      Being at the right place, at the right time counts !!

      Delete
  18. விஜயன் சார், முத்து மினி அட்டையை மாற்றம்கள் ஏதும்இன்றி அப்படியே உபயோகபடுத்துங்கள்.

    நண்பர் தயாரித்த காந்தமலை மர்மம் அட்டைபடம் நன்றாக உள்ளது, முடிந்தால் இதனை வரவுள்ள முத்து மினி காமிக்ஸில் உள்ள பக்க அட்டையாக பயன்படுத்த முடியுமா? இந்த அட்டையை தயாரித்தவர் நமது "lucky limit"?

    ReplyDelete
    Replies
    1. முத்து மினி வேண்டுகோள்: மறுபதிப்பாக வரவுள்ள கதைகளுக்கு புதிய டைப்செட்டிங் செய்வது வரவேற்புக்கு உரியது, எழுத்து பிழைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். இதழில் தரத்தில் குறையில்லாமல் பார்த்து கொள்ளவும், ஏன் என்றால் இதன் வெற்றி புதிய & பழைய வாசகர்களை மீட்டுவரும். இந்த புத்தகத்தை வாங்க ஆர்வமுடம் உள்ள நண்பர்கள் ஏராளம். இது சிறப்பாக வந்தால் இதனை தொடர்ந்து வர உள்ள மற்ற மறுபதிப்புகள் வெற்றி பெறும். "ஜெய் முத்து மினி"

      Delete
  19. //இதோ பாருங்களேன் நமது நண்பரின் கைவண்ணத்தை ! நாம் அனுப்பியிருந்த black & white பக்கங்களைப் பார்த்து - அதனிலிருந்து frame களைத் தேர்வு செய்து ; லைன் டிராயிங்காகவே வரைந்து, பின்னர் வர்ணம் பூசியதொடு மட்டுமல்லாது - தலைப்பையும் அமைத்து ; லோகோவையும் வண்ணத்தில் அனுப்பித் தந்துள்ளார் ! பெயரில் ஸ்மர்ப் இருப்பினும், ஆற்றலிலும், காமிக்ஸ் நேசத்திலும் விஸ்வரூபமெடுத்து நிற்கும் இவர் யாரென்று any guesses ? ///

    பெயரில் 'ஸ்மர்ஃப்' - என்றால் அது நண்பர் பொடியன் தான் என்பது என் யூகம்!

    வாழ்த்துகளும், பாராட்டுகளும் பொடியன் அவர்களே! உங்கள் உழைப்பும், ஆர்வமும் - செம!!

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய வாழ்த்துக்களும் +பாராட்டுக்களும் பொடியனாரே....

      Delete
  20. எடிட்டர் சார்,

    சிங்கத்தின் சிறு வயதில் வராததற்கு உங்களின் ஞாயம் ஏற்புடையதாகவே இருக்கிறது. ஆகையால் போராட்டத்தை கைவிடலாம் என்று நினைக்கிறேன். எனினும், நமது செயலாளர் மற்றும் தலீவரின் உத்தரவுக்காக காத்திருக்கிறேன் :-))

    ReplyDelete
    Replies


    1. ஆமாம்.! செயலாளர் & உத்தரவுக்காக உறுப்பினர்கள் வெயிட்டிங்........

      Delete
    2. கையில் tissue பேப்பரோடு தலீவர் ஒரு வடை அங்காடியின் முன்னே காணப்பட்டதாகவும், செயலாளரோ அஞ்சப்பர் ஹோட்டல் வாசலில் ஒரு பன்னீர் சோடாவை விட்டு அடித்துக் கொண்டிருந்ததாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் சொல்லுகின்றன !! மடிப்பாக்கத்தில் இல்லாத வாழைப்பூ மார்கெட்டா - பாரிசில் இல்லாத நண்டு ப்ரையா ?

      யெவ்வ்வ்வ்வ் !!

      Delete
  21. # முதல் சுற்று முத்து மினி காமிக்ஸில் 6 இதழ்கள் ரூ.20 விலையில் வெளியாகிடும் ! எல்லாமே அந்நாட்களது கூட்டு எழுத்திலான ஸ்கிரிப்ட் என்பதால் ஒட்டு மொத்தமாய் புது டைப்செட்டிங் செய்திடவிருக்கிறோம் ! ஏப்ரல் இறுதியில் அல்லது மே துவக்கத்தில் இவை தயாராகி விடும் !#
    மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி சார். இந்த புத்தகங்களை ஒரே நேரத்தில் மலிவு விலை பதிப்பிலும், நல்ல காகித தரத்தில் கூடுதல் விலை பதிப்பிலும் வெளியிட்டால் அவரவர் விரும்பும் வகையில் சேகரித்து வைப்பதற்கு நன்றாக இருக்கும். அல்லது இந்த 6 புத்தகங்களை ஒன்றாக்கி குண்டு புத்தகமாக வெளியிட்டாலும் (கூடுதல் விலை பதிப்பிற்கு மட்டும்) அழகாக புக் செல்பில் அடுக்கி வைத்து பாதுகாப்பதற்கும் வசதியாக இருக்கும். இதுபற்றி உங்கள் கருத்தையும், நம் குழு நண்பர்கள் கருத்துக்களை அறிய ஆவல். அனைவருக்கும் காலை வணக்கங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இவை தனித்தனி இதழ்களாக வரவேண்டும் என்பது எனது ஆவல். முக்கிய காரணம் இந்த குறைந்த விலை புத்தகம் பலரை சென்று அடையும், அடைய வேண்டும்.

      Delete
    2. # இந்த குறைந்த விலை புத்தகம் பலரை சென்று அடையும், அடைய வேண்டும்.#
      நிச்சயமாக என் விருப்பமும் அதுதான் சார். மாணவர்களையும் விலையின் காரணமாக விலகி செல்பவர்களையும் சென்றடைய வேண்டும். காமிக்ஸ்களை (விலை பற்றிய கவலையின்றி) பொக்கிசமாக சேர்ப்பவர்களுக்காக ஒரே நேரத்தில் இரண்டு வகையான பேப்பர்களில் ப்ரிண்ட் செய்து அவரவர் விருப்பத்திற்கேற்ப வழங்கலாம்.

      Delete
    3. முதலில் என் பெயர் டைகர் கருப்பு வெள்ளை & கலர் என்ற முயற்சியை வெற்றி பெற செய்வோமே ஜேய்!

      Delete
    4. jey : எல்லா நேரங்களிலும் இது போன்ற economy edition ; deluxe edition முயற்சிகள் சாத்தியமாகாது ! குறைந்த விலையிலேயே நல்ல தரமாய் இதழை வழங்கிட ஆனமட்டிலும் முயற்சிப்போம் நண்பரே !

      Delete
  22. இரண்டாவது படித்த கதை காமன்ச்சே: அமைதியாக ஆரம்பிக்கும் கதை ராகெட் வேகத்தில் முடிவதுதான் சிறப்பு. விவசாய நிலத்தை விவசாயம் செய்யவிடாமல் தாமிரத்திற்காக அடாவடியாக வாங்க நினைக்கும் கும்பலிடம் போராடும் கதை. தேவையான திருப்பம்கள்... குறிப்பாக டுஸ்ட் பாப் & பால்டியால் காப்பாற்றும் இடம்.

    டங்கன் ஒற்றைக்கு ஒற்றை நடை பெற இருக்கும் நாளில் எவ்வித பதற்றமும் இன்றி தனது காபியை குடித்து கொண்டு துப்பாக்கியை தயார் செய்வது... என பல விஷயம்களை சொல்லாமல் சொல்லியது (எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் நிதானமாக கையாள வேண்டும்.

    இந்த கதையில் மிகவும் பிடித்தது இதன் வசனம்கள், குறிப்பாக டஸ்ட் மற்றும் டங்கன் இடையே நடக்கும் உரையாடல், இறுதி காட்சியில் வயதானதை பற்றி சொல்லும் இடம்...
    "சில விசயம்களை மறந்திட நாம் எத்தனை தான் முயற்சித்தாலும் அதனை நினைவூட்டிடுவதற்கென யாரேனும் இல்லாது போக மாட்டார்கள்"

    "அது வேறொரு வாழ்கை! அதை எப்பொழுதோ மறந்தும், கடந்தும் விட்டேன்"

    தனது தந்தைக்கும் வயதாகி விட்டதை சொல்லும் இடம்.. "முப்பினால் வரும் தளர்ச்சி காலனின் கைக்கூலியைக்கூட விட்டு வைக்காது என்பது புரிகிறது".

    வழக்கம் போல் புத்தகத்தை படித்து முடித்தவுடன் மனதில் தோன்றியது... காமன்ச்சே கதை விறுவிறுப்பாக செல் என்ன காரணம்.. ஓவியமா, கதைஅமைப்பா, குறைந்த அளவு வசனம்களா (இந்த முறை வசனம்கள் அதிகம் என்றால் விறுவிறுப்பு குறைய வில்லை), இதன் கதை நாயகரின் பாத்திரபடைப்பா? இதனை பற்றி ஒரு பட்டி மன்றமே நடத்தலாம்.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : //
      வழக்கம் போல் புத்தகத்தை படித்து முடித்தவுடன் மனதில் தோன்றியது... காமன்ச்சே கதை விறுவிறுப்பாக செல் என்ன காரணம்..? ஓவியமா ? கதைஅமைப்பா ? குறைந்த அளவு வசனம்களா ? இதன் கதை நாயகரின் பாத்திரபடைப்பா? இதனை பற்றி ஒரு பட்டி மன்றமே நடத்தலாம்.//

      வெற்றிகரமாய் 2019-ல் இத்தொடர் (தமிழில்) நிறைவுறும் போது அந்தப் பட்டிமன்றத்தை நடதிட்டால் போச்சு !

      Delete
  23. ///இந்த இதழினை தயாரித்துக் கொண்டிருந்த நாட்களை நினைவில் இருத்திக் கொள்ள கூடுதலாயும் ஒரு காரணமுண்டு ; அடியேனுக்குப் பெண் பார்க்கும் படலம் தீவிரமாய் நடந்து வந்த ஆண்டும் அது ! So கலர் கலராய் அமைந்தவை அந்நாட்களது அட்டைப்படங்கள் மாத்திரமல்ல என்பதைச் சொல்லவும் வேண்டுமா ?
    ///

    ஆஹா!!! எடிட்டரின் முகத்தில் என்னா ஒரு வெட்கப் பிரவாகம்!!

    'சிங்கத்தின் ரொமான்ட்டிக் வயதில்' தொடரை ஆரம்பிக்க உகந்த தருணமும் இதுவல்லவோ? :)

    ReplyDelete
    Replies
    1. //சிங்கத்தின் ரொமான்டிக் வயதில்//...இது கூட நல்லாயிருக்கே..!

      Delete
    2. Erode VIJAY : அடக்கி வாசிங்க சாமி ! தலீவர் பாட்டுக்கு அடுத்த போராட்டத்துக்குத் தயார் - கியார் ஆகிடப் போறார் !!

      Delete
  24. Good morning to all.super post.I remember my past.thank u sir.

    ReplyDelete
  25. டாக்டர் டக்கர்: இந்த கதையை சிறுவயதில் படித்த ஞாபகம் இல்லை.. ஆனால் கிளைமாக்ஸில் ஸ்பைடர் ஆயுத கிடங்கில் உள்ள துப்பாக்கிகளுக்கு உயிர் ஊட்டுவதை பார்த்தவுடம் சிறுவயதில் படித்தவை ஞாபகம் வர ஆரம்பித்தது; அதே நேரம் எந்திரன் படத்தில் கிளைமாக்ஸில் ஒரே நேரத்தில் சில நூறு துப்பாக்கிகளை ஒரே நேரத்தில் machine-gun போல் கையாளும் ரோபோ நாயகன் மன கண்ணில் வந்து சென்றார் :-)

    மிகவும் ரசித்து படித்தேன். உயிர் ஊட்டி தூப்பாக்கி என்ற ஒரு சிறு விஷத்தை வைத்து முழு கதையை சுவாரசியமாக தந்துள்ளார். இந்த உயிர் ஊட்டி தூப்பாக்கி என்பது பூசுற்றல் என நினைத்தால் இன்று மிக பெரிய வெற்றியை சுவைக்கும் ஹாலிவுட் (jurassic park/world, avatar, etc) படம்களும் பூசுற்றல் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

    இந்த கதையில் மிகவும் ரசித்தது, வில்லன்களுக்கு இடையில் மோதல் நடக்கும் வித்தியாசமான location தேர்வு.

    முழுகதையை படித்த பின் ஒரு பிரம்மாண்டமான, விறுவிறுப்பான ஹாலிவுட் படம் பார்த்த திருப்தியை தந்து என்றால் மிகையில்லை.

    ReplyDelete
    Replies
    1. இந்த கதையின் ஓவியம்கள் ஒரு சிறப்பான அம்சம்.

      Delete
    2. //ஹாலிவுட் படம் பாா்த்த திருப்தியை தந்ததென்றால் மிகையில்லை!//
      :-)))

      Delete
  26. இந்த மாதம் வெளி வந்த 4 கதைகளும் மிகவும் அருமையாக இருந்தது. பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் உங்களுக்கு நன்றி. அதிலும் குறிப்பாக விதி போடும் விடுகதை இதழ் எல்லா வகையிலும் ஒரு படி மேலே தான். ஓவியங்கள் மிகவும் நேர்த்தியாக இருந்தது. சிறப்பம்சமாக டெக்ஸ் வில்லருக்கும் அவரது மகன் கிட்டுக்கும் பல இடங்களில் உருவ ஒற்றுமை மிகவும் அருமை. இதுவரை நான் படித்த கதைகளில் இதுபோல கண்டதில்லை. ஒவியர் கிளாடியோவின் உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் அசத்தல் ரகம். முடிவு கனத்த சோகத்தையும், அனைத்தும் கடந்து போகும் என்ற எதார்த்தத்தையும் சொல்லும் விதம் அருமை. முழு நிறைவான கதை. டெக்ஸ் கதைகளில் மற்றுமொரு மைல்கல்.

    ReplyDelete
    Replies
    1. jey : அருமையான பாயிண்ட் ! தந்தைக்கும், மகனுக்கும் உருவ ஒற்றுமையினை ஓவியர் கிளாடியோ அட்டகாசமாய் கொணர்ந்திருந்தார் !

      அழகான விமர்சனம் !!

      Delete
    2. அதிலும் கிட் பந்தயத்தில் ஜெயித்துவிட்டு தலைவலியால் துடிக்கும்போது சில்வர்மூன் வைத்தியம் செய்துகொண்டே என் பேச்சைக் கேட்காமல் போனதால்தான் இப்படி ஆகிவிட்டது என்று சொல்வதைக்கேட்டு செவ்விந்தியக் குடியிருப்புவாசிகளின் முகங்களில் மெல்லிய நமட்டுச் சிரிப்பை காட்டியிருப்பார் பாருங்கள் நம்மையறியாமல் நம் முகத்திலும் அப்படி ஒரு புன்னகை உருவாவதை தடுக்க இயலவில்லை.லிட்டில் கோலியத் முகத்தை பார்க்கும்போது சொல்லாமலேயே அப்பாவித்தனத்தை உணரலாம். டெக்ஸ் கதைகளுள் இது ஒரு ரத்தினம்

      Delete
    3. அது பல கிட் நான் உன் டாடி என டெக்ஸ் நெஞ்சை திறந்து காட்டிய படி வெளிப்படும் கட்டத்தில் டெக்ஸின் ஏக்கம் கலந்த முகபாமும் இயல்பான வசனமும் அடடா...ஆஆ

      Delete
  27. விதி போட்ட விடுகதை: action, காதல், தந்தை மகன் பாசம், பழிவாங்கல் என்று எல்லாம் கலந்து கட்டிய "பிரியாணி கதை". வழகமான (கடந்த இரண்டு) டெக்ஸ் கதைகளில் இருந்து மாறுபட்டு இருந்தது என சொல்லலாம்.

    கதையில் வெவ்வேறு திசையில் பயணம் செய்யும் ஜென்ட்ரி & ப்ளாக் டைகர் & டெக்ஸ் & அடிபட்டு நினைவு தப்பிய கிட் ஒரு கோட்டில் சந்திக்க செய்தது.

    இந்த கதையில் நான் மிகவும் ரசித்த பாத்திரம் "கோலியாத்", இந்த அப்பாவியின் ரசிகன் நான். அதே போல் சில்வர் மூனின் அப்பா.

    சிறப்பு: நீண்ட இடைவெளிக்கு பிறகு டெக்ஸ் நண்பர்கள்பட்டாளத்துடன் கொலோசிய கதை.

    குறை: எழுத்து பிழைகள்.

    கேள்வி:இதுவரை அந்த எல்லா டெக்ஸ் கதைகளில் நவஜோகள் என படித்தவை இந்த கதை முழுவதும் நவஹோகள் என குறிப்பிட்டது ஏன்? எது சரியான வார்த்தை?

    கடந்த இரண்டு மாதம்களாக வந்த டெக்ஸ் கதைகள் என்னை கவர்ந்த அளவு இந்த கதை என்னை அந்த அளவு கவரவில்லை. இவருக்கு இந்த மாதம் கடைசி இடம்தான்.

    மொத்தத்தில் இந்த மாத புத்தகம்கள் மீண்டும் ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நவஹோ தான் பின்னாளில் நவஜோ என மாறிவிட்டது

      எ.காட்டு : டெக்ஸ் கில்லர் / டெக்ஸ் வில்லர்

      Delete
    2. ///எ.காட்டு : டெக்ஸ் கில்லர் / டெக்ஸ் வில்லர்.///

      ட்ராகன் நகரம் என்ற ஒரேயொரு கதையில் வில்லர் தனக்குத்தானே சூட்டிக்கொள்ளும் பெயரே டெக்ஸ் கில்லர் என்பது. அதிலெல்லாம் மாற்றம் ஏதும் இல்லை சம்பத் அண்ணே!!!
      இன்னும் டெக்ஸ் வில்சன்னு கூட ஒரு கதையில மாற்றுப் பெயர் வைத்துக்கொள்வார்., அடையாளத்தை மறைக்கும் பொருட்டு (எல்லையில் ஒரு யுத்தம் என்பதாக நினைவு) .

      ரத்த நகரம் கதையில் கூட டெக்ஸ் வீராச்சாமி
      கிட் கார்மேம் னு பெயரை மாத்தி வெச்சிக்குவோம்னு கார்சன் நக்கலா சொல்லுவாரு.!!
      அதுவும் மாறிடூச்சின்னு போராட்டம் பண்ணீடாதீக சம்பத் அண்ணே!!! :-)

      Delete
    3. இனிமேல் நம்ம கிட் ஆர்டினை புள்ளி விவரம் பூராசாமி என்றே கூப்பிடலாமா ?

      Delete
    4. கி.நா.ஜாம்பவான் என்றும் கூப்பிடலாம்.!

      Delete
    5. @ ALL :
      நவஜோ X
      நவஹோ ✓

      நன்றிகள் - நண்பர் மகேந்திரன் பரமசிவம் அவர்களுக்கு !

      Delete
  28. விஜயன் சார், என் பெயர் டைகர் எந்த மாதம் வருகிறது.... ஏப்ரல்?

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : ஏப்ரல் இறுதியில் !

      இடையில் ஏதேனும் புத்தக விழா அமைந்தால் வாகாக இருக்கும் ; but அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை !

      Delete
  29. காந்த மலை மா்மம்! நண்பாின் கைவண்ணம் அட்டகாசம்! அசலை விட இது பட்டையைக் கிளப்புகிறது! வாழ்த்துக்கள் அன்பு நண்பரே..!

    ReplyDelete
  30. சார் என் பெயர் டைகர் முன்பதிவுப் பட்டியல கொஞ்சம் வெளியிடுங்களேன்

    ReplyDelete
    Replies
    1. ASR SIVA : அடுத்த பதிவில் போட்டு விடுவோமே !

      Delete
  31. //ஆண்களிடம் மட்டுமன்றி - மகளிரிடமும் இரவுக் கழுகார் ரொம்பவே popular என்பது புரிகிறது !! ////---- ஆகா ஆகா ஆகா.....
    நாமும் இப்போ ஈஈஈஈஈஈஈஈ ன்னு நாள் முழுதும் இருப்போம்ல ......
    திருச்சியில் கலக்கலான ஆரம்பம் ,நல்ல செய்தி சார் ....
    அதான் மே மாதம் முதல் சி .சிறு வயதில் வர இருப்பதால் இ.பி.பா.போராட்டத்தை வாபஸ் வாங்குங்க விஜய் .....

    ReplyDelete
  32. one of the best and touching posts...
    இந்த மாத ரிவியூ
    டெக்ஸ் தான் மாசாமாசம் வராறேன்னு முதல்ல என் பேவரிட் கிளிப்டன் கதையை படிச்சேன். bland humorனாலும் கார்ட்டூன் கார்டூனே. ரொம்ப ஜாலியான அனுபவம். கிளிப்டன், ரின் டின் கேன், லியனார்டோ தான் நமது எதிர்காலம். இன்றைய குழந்தைகள் இதை விரும்பி படிக்கிறார்கள். நாமும் நேற்றைய குழந்தைகள் என்பதால் மிக விரும்பிப் படிக்கிறோம். ஏமாற்றமில்லா கிளிப்டன் சாகசம். 4stars

    அடுத்தது கமான்சே. (டெக்ஸ், காமிக்ஸ் உலகில் நம் காந்தி தாத்தா போல. ரூபாய் நோட்டில் எந்நேரமும் சிப்பது போல எப்போதும் நம்மோடு இருப்பதாலேயே இட்லி மாதிரி நமக்கு டெக்சை புடிச்சு போச்சு). அப்புறமா டமால் டுமீலை பார்ப்போம், இப்ப டைகர் போல இருக்கும் அழுக்கு மூஞ்சி ஆனா ரியாலடி ததும்பும் கமான்சேவை படிக்கலாம்னு எடுத்தேன். நல்ல கதை. ஆனா இவர் எப்பவும் காப்பாத்துற பொண்ணு கமான்சே போலே இருப்பதால கற்பனை வரட்சியோனு சந்தேகம். காப்பர் மைனிங் என்பதால் இந்த இடத்தில் ரெட் இருந்தால் அவர் ஆரோக்கியத்துக்கு நல்லதில்லையே எனும் கவலை வேறு. நல்ல சாகசம். நன்றி.

    சரி. நல்ல மூட்ல இருக்கும். டெக்ஸ்கிட்ட சொல்லி நாலு பேரை நாலு சாத்து சாத்துவோம்னு, டெக்ஸ் புக்கை எடுத்தேன். கார்சனின் கடந்த காலம், நள்ளிரவு வேட்டை-இவையே என் மனதைத் தொட்ட சாகசங்கள். பிப்ரவரி டெக்ஸ் இதழ் ஒரு மைல் கல் இதழ். கிட் காதலிய சாகடிக்காம இருந்திருந்தால் தேவலை. கதாசிரியர் மேல் எனக்கு ஏக கோபம். டெக்ஸ் மட்டும் லிலிதை கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை பெத்துக்கலாம். நாப்பது வருஷமா சுத்துற கிட் என்ன செய்தார் பாவம். அவருக்கு புள்ள குட்டி பொறந்து, அதுவும் கார்சனை வருத்தெடுத்தால் இன்னும் சூப்பரா இருக்கும்ல. டெக்ஸ் பையன், பேரனோட சேந்து டைனோசார் வேட்டைக்கு போயிருந்தா இன்னும் சூப்பர்(!). ஹேட்ஸ் ஆப் ஆசிரியரே. இந்தக் கதையை தேர்ந்தெடுத்ததற்கு. இந்தக் கதை கிளாசிக் கல்ட் ஆயிடிச்சு. திரும்ப படிக்கப்போறேன்.

    பிரித்தெடுத்த பிப்ரவரி.

    ReplyDelete
    Replies
    1. //பிப்ரவரி டெக்ஸ் இதழ் ஒரு மைல் கல் இதழ். கிட் காதலிய சாகடிக்காம இருந்திருந்தால் தேவலை. கதாசிரியர் மேல் எனக்கு ஏக கோபம்.//
      +1

      Delete
    2. +1

      லிட்டில் மூனை கொன்றது எனக்கும் கோபம்தான்.

      Delete
    3. //பிாித்தெடுத்த பிப்ரவாி//
      அருமை!

      Delete
    4. பிப்ரவரி இதழ் திகில் நகரில் டெக்ஸ் அல்லவா?!
      மார்ச் இதழ்தானே விதி போட்ட விடுகதை.

      Delete
    5. Dr.Hariharan : கார்சன் எனும் கட்டிளன்காளையே கல்யாணத்துக்கு வழியின்றி சுற்றித் திரியும் போது கிட் குடும்பஸ்தனாகி விட்டால் - வெள்ளிமுடியார் மனதொடிந்து போய் விட மாட்டாரா ?

      வருத்தப்படா வாலிபர் சங்கத்து உறுப்பினர்களாகவே தொடரட்டுமே சார் !!

      Delete
  33. இம்மாத வெளீயீடுகளில் இன்னும் ஒன்றைக்கூட படித்து முடிக்கவில்லை. க்ளிப்டனை மட்டுமே லேசாக புரட்டிப்பார்த்து இருக்கிறேன்.! !

    இ.பி.பா போரட்டத்தைவிட என்னுடையது பெரிய போராட்டமோ ன்னு தப்பா நினைச்சுடாதிங்க மக்களே.!

    நேரமின்மை கூட பெரிய காரணமில்லை.!!!
    ரெகுலரா படிக்க யூஸ் பண்ற பல்பு ப்யூஸ் போயிடுச்சி!! வேற ஒண்ணு வாங்கணும். :)

    ReplyDelete
    Replies
    1. ஹய்யோ... எம்மாம் பெரிய பல்பு... பீஸ் போயிருச்சு...

      Delete
    2. அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா.

      Delete
    3. அண்ணா காமெடி கர்னல் படிச்சு சீக்கிரம் விமர்சனம் போடுங்கோகோ....

      Delete
  34. ஞாயிறு வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே.

    ReplyDelete
  35. பாட்டில் பூதம் என் முதல் வாசிப்பின் புத்தகம்,எப்போது வெளிவந்தது என்று சரியான நினைவு மட்டும் இல்லை.இப்போதுதான் தெரிகிறது 24 வருடங்கள் என்று.
    10 வகுப்பு படிக்கும் காலத்தில் குடும்பத்தோடு வெளியூர் செல்லும் போது திருச்சி பஸ் நிலையத்தில் உள்ள புத்தகக்கடையில் டேபிளில் வீற்றிருந்த ஸ்பைடர் புத்தகத்தை ஏக்கத்தோடு வெறும் டிராயரில் கையை விட்டுக் கொண்டு பார்த்த ஞாபகம் மட்டும் நெஞ்சில் நினைவலையாக உள்ளது.
    மீண்டும் தங்கள் நினைவூட்டலில் பழைய நினைவுகள் என்னுள் பொங்கி பிரவாகமெடுக்கின்றது.
    மறுபதிப்பு பட்டியலில் விரைவில் பாட்டில் பூதமும் இடம்பெறும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  36. பழைய புத்தகங்களுக்கு இருபது ரூபாய் என்பது மிகக் குறைவான விலை. எப்படி உங்களுக்கு கட்டுப்படியாகும். இது கலெக்டர் ஸ் எடிஷன் என்றால், விலை அதிகாக தானே இருக்க வேண்டும். நீங்கள் ஒன்றும் ஸ்கேன்லேஷன் பண்ணவில்லையே. உங்கள் சொத்து அது. எவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கியிருப்பீர்கள். எவ்வளவு நாள் விற்பனை இல்லாமல் முடங்கியிருப்பீர்கள். அந்த நஷ்டத்தை யார் சரிகட்டுவது? அம்பது என விலை வையுங்கள். நாங்கள் வாங்குகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. இது மாணவர்களுக்கான காமிக்ஸ் டாக்டர் சார்

      Delete
    2. Dr.Hariharan : "அதிக விலை" என்றாகி விட்டால் ஐம்பதோ ; இருநூறோ - in principle இரண்டுமே தவறு தானே டாக்டர் !

      மாணவர்களுக்கென நாம் எத்தனிக்கும் இதனில் நிச்சயமாய் நாம் கையைச் சுட்டுக் கொள்ள மாட்டோம் !

      Delete
  37. ஞாயிறு வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே.

    ReplyDelete
  38. Hi..........


    ஹேப்பி சண்டே

    ReplyDelete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தில் வருவது போன்றதொரு சமாச்சாரம் இது!

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. யோசிக்க வேண்டிய விஷயம் தான்!

      Delete
  40. hi....
    muthu mini wrapper attakasam sir!

    ReplyDelete
  41. MMC யை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
    ஆனால் திருச்சி புத்தக விழாவுக்கு அடுத்து ஈரோட்டில் ஆகஸ்டில் தானே புத்தகவிழா வருகிறது.அப்ப MMC அதுவரைக்கும் வெளிவராதா? வேறெதுவும் புத்தக விழா இடையில் வருகிறதா?

    ReplyDelete
    Replies
    1. Arivarasu @ Ravi : நிச்சயமாய் இடையினில் ஏதேனும் புத்தக விழா இல்லாது போகாது !

      Delete
  42. ///இ.பி.பா. ஏப்ரலிலும் தொடருமாயின் சங்கத்துக்குள் சில சலசலப்புகள் ஏற்பட வாய்ப்புகள் பிரகாசமெனத் தோன்றுகிறது !///

    ஹிஹிஹி!!!!

    சங்கம் ஏற்கனவே சலசலப்புகளுக்கு மத்தியில்தானே ஓடிக்கொண்டு இருக்கிறது.!

    தலைவர் விவரமா , ஸ்பைடர் கதையை ஒதுக்கியதில் இருந்தே தெரிகிறதே?,!,!? :)

    ReplyDelete
    Replies
    1. கம்பெனி ரகசியத்தை வெளியே சொல்லாதீங்கோ.!

      Delete
  43. கடந்த 3 மாத இதழ்கள் சரியான தேர்வுகள்.டாக்டர் டக்கர் மறுவாசிப்புக்கு ஏற்ற கதை. பணி சுமை காரணமாக bapsi book festival க்கு செல்ல இயலவில்லை. எடிட்டர் சார் திருச்சி புத்தகவிழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளதா? கலந்துக்கொள்ளும் நண்பர்கள் updates பகிறுமாறு கேட்டு கொள்கிறேன்

    ReplyDelete
  44. திருச்சி புத்தகவிழா சிறக்க வாழ்த்துகள்....!

    ReplyDelete
  45. 1973 & 74-ல் தீட்டப்பட்ட ஓவியங்கள் இன்னமும் ஒரு இம்மி மெருகு குறையாமல் டாலடித்துக் கொண்டுள்ளன///
    எடிட்டர் ஸார்,
    உங்கள் கிட்டங்கியில் ஒரு மாபெரும் கொள்ளை நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளேன்.கொள்ளை நடக்கும் போது நீங்கள் பூரண ஒத்துழைப்பு நல்குமாறும் முடிந்தால் பூட்டை திறந்து வைத்து பூட்டை மிச்சம் பண்ணி கொள்ளவும்.இல்லாவிட்டால் கீசிடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. Jaya Kumar : ஒருமுறையேனும் ஏதாவதொரு புத்தக விழாவினில் டபுள் ஸ்டாலாக எடுத்து நம்மிடமுள்ள முந்தைய ஓவியங்களை display செய்யும் கனவில் உள்ளேன் நண்பரே ; ஆட்டையைப் போட்டு விடாதீங்கோ !!

      Delete
  46. திரு விஜயன் அவர்களுக்கு,

    சிறுவயதில் படித்த புத்தகங்களை மறுபதிப்பில் திரும்ப படிக்க விரும்புவது, அப்போது படித்து சிலாகித்த உணர்வை மீண்டும் நினைவு கூர்ந்து மீட்டெடுக்கவே..! ஏதோவொரு ரூபத்தில் அதை படிப்பதால், நம் அந்த சிறுவயதில் சிலாகித்த அதே உணர்வை மீட்டெடுக்க முடியுமா என்றால் fifty fifty தான்..!

    கதைகளை சித்திரங்களை படிப்பதால்..பார்த்தால், பால்ய நினைவுகளை நினைவுக்கு வர ஐம்பது சதவிகிதம் உதவுகிறதென்றால் ...

    மீதி ஐம்பது சதவிகிதத்தை அதன் அட்டைபடத்தை பார்த்தால் போதும், நினைவுகளை மீட்டெடுக்கும் வாய்ப்பை சந்தேகமேயின்றி அட்டைபடம் அந்த வாய்ப்பை தட்டி செல்கிறது..!

    மறுபதிப்பின் வெற்றி...முடிந்தமட்டும் பழமை மாறாமல் படைப்பை தருவதில் தான் சவால் உள்ளதே அன்றி, புதுமையாய் தருவதில் ஒன்றும் சுவையில்லை..! அந்த பழமை தோற்றமே பழைய வாசகர்களை மீண்டும் இந்த உலகிற்கு படையெடுக்க வைக்கும் சக்தி வாய்ந்தவை..! படைப்பை அரவனைத்துகொள்ளும் வேகமும் இரட்டிப்பு வேகம் பெரும்..!

    வரும் மாத இரும்புக்கை மாயாவியின் 'நாச அலைகள்' மறுபதிப்பை மட்டும் ஒரேயொரு முறை அந்த பழைய அட்டையை அப்படியே பயன்படுத்தி பாருங்களேன்..! விற்பனை பேராமீட்டர் ஸும்மா எகிறி குதிக்கும்,அதுமட்டுமல்ல தொடர்பு அறுந்த வாசகர்களின் படையெடுப்பும் கண்கூட பார்க்கலாம்..!

    இந்த பதிவில் கூட உங்கள் நினைவுகளை மீட்டெடுக்க தூண்டியதில் முதல் ஐம்பது சவிகித பங்கு, அதன் அட்டைபடத்தில் தான் இருந்தது என்பதை மறுக்கமுடியுமா..!!!

    ஆரம்பபள்ளி இருந்த இடத்தில் நவீனகட்டிடம் பார்ப்பதில், நம் அருகில் அமர்ந்த தோழர்களின் சிரிப்பின் எதிரொலியும், எதிரில் நின்ற ஆசிரியரின் முகமும் நினைவுக்கு வருவது சந்தேகமே..! பழமைமாற அந்த வகுப்பில் கால்வைக்கும் போதுதான் அந்த அற்புதம் நிகழ்கிறது..!

    அறுபட்ட வாசகர்களின் நினைவுகளை மீட்டு ஒரு புரட்சிசெய்யும் பழமை மாற படைப்புக்கு, ஒரே ஒரு முயற்சிக்கு மனமுண்டா ஸார்...???

    குறிப்பு: இந்த பகிர்வுக்கு தூண்டுகோள், இங்கே பார்த்த முத்து மினியின் அட்டைபடங்களே..! அது எனக்குள் செய்த அற்புதம் அவரவர் நிலையில் அனைவர்க்கும் நிகழ வேண்டுமென்பதே..!

    ReplyDelete
    Replies
    1. அடுத்தடுத்து வரும் அனைத்து மறு பதிப்புகளிலும்,அந்நாளைய அட்டைப் படத்தையே பயன்படுத்தவும்!மாயாவியாா் மிக அழகாகச் சொல்லியுள்ளாா்! தற்போது வந்து கொண்டிருக்கும்,மறு பதிப்புகளின் அட்டைப் படங்களை நண்பா்கள் அனைவரும்(நானும்) கழுவிக்,கழுவி ஊற்றிக் கொண்டிருப்பதை, தாங்கள் மறுக்க முடியாதல்லவா..!

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. //காமிக்ஸ் காரிகன் டாக்டர் செவன்...//

      ஹாஹாஹா........நல்ல உதாரணம்.!

      எனக்கு என் தந்தைதான் காமிக்ஸ் வாங்கி படிக்கும் வழச்கத்தை பழக்கி வைத்தார்.!

      எனக்கு வாத்தியார்தான் எதிரி......

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. ராஜேந்திரன் அவர்களே... உங்கள் சிறுவயது அனுபவங்கள், புத்தகங்கள் இழந்த சோகம், பறிகொடுத்த புத்தகங்களுக்காக உடன்பிறந்தவருடன் இருபது வருடங்கள் பேசாமல் காமிக்ஸ் மேல் கொண்ட காதல், பழமையை தேடும் கனவுகள் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை..!

      இன்றைய பதிவில் எடிட்டர் அப்டேட் செய்த போட்டோவில் என்னை ரொம்பவே தாக்கியவை இரண்டு..! ஒன்று: ஸ்டில் கிளா குறிப்பிட்டது போலவே 'காந்தமலை மர்மம்' அந்த டைட்டானிக் கப்பல். நான் சிறுவயதில் பார்த்த அந்த குட்டி புக் மூச்சுள்ளவரையில் மறக்க முடியாத ஒன்று.

      இரண்டாவது: அந்த மூகமுடி வேதாளரின் படம்..! அடேங்கப்பா, எங்கோ புகைமண்டலத்திற்கு இடையில் அப்படியொரு படம் பார்த்த நினைவு, அது..அது..எங்கே எங்கே என பழைய இதழ்களை புரட்டியதில் சிக்கியது..! ஆனால் அந்த விளம்பரம் கறுப்பு வெள்ளையில் வந்தவை, அதை வண்ணத்தில் பார்க்கும்போது...அந்த உணர்வை எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை ராஜேந்திரன் ஸார்..! உங்களுக்கு அவை நினைவில் உள்ளதா..? அதை சற்று பொறுத்து அப்டேட் செய்கிறேன்..!

      Delete
    6. mayavi.siva : நாச அலைகளுக்கு ஒரிஜினல் டிசைனே ராப்பராக ஏற்கனவே அச்சிட்டாகி விட்டோம் சார் !

      ஒரிஜினலாய் அந்நாட்களில் நாம் பயன்படுத்திய டிசைன்கள் கதைக்குத் தொடர்போடு இருந்து - அந்த ஒரிஜினல் பெயிண்டிங்களும் நம்மிடம் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் அவையே நமது first choice ஆக இருந்திடும்.

      "மூளைத் திருடர்கள்" அட்டையில் 'தேமே' வென ஓடும் ரயில் ; "நயாகராவில் மாயாவியில்" பறக்கும் ஹெலிகாப்டர் ; "மலைக்கோட்டை மர்மம்" இதழின் ரோப்கார் ; போன்றவற்றை இன்றைய சூழலில் மறுபடியும் பயன்படுத்தப் பிடிக்கவில்லை !

      பாம்புத் தீவு, உறைபனி மர்மம் ; பெய்ரூட்டில் ஜானி போன்ற இதழ்களின் ஒரிஜினல் டிசைன்கள் நம்மிடம் இல்லை எனும் போது புதிதாய்த் தயாரிக்க அவசியமாகிறது ! அந்நாட்களது புத்தகங்களை ஸ்கேன் செய்து அச்சிட்டால் ரொம்பவே சுமாராக இருக்கும் !

      Delete
    7. 1977, மே மாதம் வெளியான முத்து காமிக்ஸில் வந்த 'பில்லிசூனியமா ? பித்தலாட்டமா ?' என்ற பிலிப்காரிகன் கதையில் கடைசிபக்கத்தில் வெளிவந்த விளம்பரம்தான் அந்த மூகமுடி வேதாளர் படம்..! கொஞ்சம் நினைவுகளை மீட்டெடுக்க பார்க்க...இங்கே'கிளிக்'

      Delete
  47. ஸார் முத்து மினி பழைய அட்டையை முன்புறமும்....புதிய நண்பர்களின் கைவண்ணத்தை பின் புறமும் போடுங்கள்....ஸார் முத்து மினி பழைய அட்டையை முன்புறமும்....புதிய நண்பர்களின் கைவண்ணத்தை பின் புறமும் போடுங்கள்.அதிலும் அந்த டைடானிக் கப்பல் கொள்ளை அழகு.

    ReplyDelete

  48. போராட்டக்குழுவின் போர்'வால்'களே, கழகக் கண்மணிகளே, நண்பர்களே...

    ஒருவாரகாலமாக நடைபெற்ற நமது ஆப்பரேசன் இ.பி.பா'வுக்கு கிடைத்த ஏகோபித்த ஆதரவால் பலத்த பீதியடைந்த நம் எதிர்தரப்பு, இன்றைக்கு வெளியிட்டுள்ள ஒரு அவசர அறிக்கையில் இரண்டு மாத கால அவகாசத்துக்குள் நம் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்திருக்கிறது! இதையடுத்து, பெருந்தன்மைக்கு பெயர்போன நமது போராட்டக்குழுவானது, எதிர்தரப்புக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்கும் வகையில் இந்த போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்படுவதாக ஏகமனதாக முடிவெடுக்கிறது!

    இரண்டுமாதங்களுக்குப் பிறகும் நமது கோரிக்கையை நிறைவேற்ற எதிர்தரப்பு மெத்தனம் காட்டிடும்பட்சத்தில் 'ஆப்பரேசன் triple-T' ( Two two tablet, two two OUT!) எனும் புதிய போராட்டம் களமிறக்கப்படும் என்பதை இந்தப் போராட்டக்குழு தெரிவித்துக் கொள்கிறது!

    போராட்டக்குழுவினரை 'சாந்த முகம்' என்றும் 'பிஞ்சு முகம்' என்றும் பரிகாசம் செய்திருக்கும் எதிரணிக்கு நமது கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்! கிர்ர்ர்ர்...

    அப்புறமென்ன நண்பர்களே... பரண் தாவும் படலத்தை ஆரம்பிக்க வேண்டியதுதானே?! ஹூம்ம்ப்ப்... :))))

    ReplyDelete
    Replies
    1. //போராட்டக்குழுவினரை 'சாந்த முகம்' என்றும் 'பிஞ்சு முகம்' என்றும் பரிகாசம் செய்திருக்கும் ////--- லேசா தானே வீங்கியிருக்கு நீ பாட்டுக்கு போடா சூனா பானா -டயலாக் தான் ஞாபகம் வருது....ஹி....ஹி....

      Delete
    2. செயலாளர் மற்றும் தலைவரின் ஆணைகளுக்கிணங்க கமான்சே இப்போது படிக்க போறேன்.!


      சங்கத்தை அடிக்கடி உசுப்பேத்திவிடும் டெக்ஸ் விஜயராகவன் அவர்களே.!

      வழி எதுவானாலும் முடிவு வெற்றி எங்களுக்கே.!

      முட்டை உடையாமல் ஆம்லேட் போட முடியுமா.?

      சண்டையில் கிழியாத சட்டை இருக்கா ?

      Delete
    3. @ ALL : இன்று முதல் தமிழகம் மீண்டும் அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்திட உதவிய சங்க உறுப்பினர்களுக்கு நம் சார்பில் - புது ஐட்டமாக நன்னாரி சர்பத் வழங்குவோம் !

      Delete
  49. சிங்கத்தின் சிறுவயதில் கடந்த சில மாதம்களாக வராதது வருத்தம் இல்லை. காரணம் உங்களின் இணையதள பதிவு ஒவ்வொன்றும் பல சிங்கத்தின் சிறு வயதிற்கு சமம்.

    ReplyDelete
  50. இதனை வழி மொழிகிறேன் ....நண்பர்களே ...

    இதில் என்ன கொடுமை என்றால் எவ்வளவு சீரியஸாக போராட்ட குழு போராடினாலும் ஆசிரியர் வடிவேல் ரேஞ்சுக்கே போராட்ட குழுவை மதிப்பது தான் கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது ....போராட்ட குழு ...."எலி "...அல்ல ...புலி ....என்பதை அடுத்து வரும் போராட்டத்தில் நிரூபிப்போம் என்பதை தெரிய படுத்தி கொண்டு ஆசிரியரின் வேண்டு கோளை ஏற்று வலை மன்னனை புரட்ட புறப்படுகிறேன் நண்பர்களே ...கழக தோழர்களே .....தாங்களும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு இதழினை புரட்ட புறப்படுங்கள் தோழரே ....

    அதே சமயம் போராட்ட குழு என்பது நண்டு வறுவலுக்கும் ....வாழைபூ வடைக்கும் இனி மயங்காது என்பதையும் ...இங்கே போராட்ட குழு என்பது ஒற்றை படை எண்ணிக்கையில் உள்ள அரசியல் கட்சிகள் போல அல்ல ...ஆயிரக்கணக்கான தொண்டர்களை கொண்ட அன்பு கூட்டம் இது என்பதையும் ...இந்த போராட்ட குழு .என்பது ..ஆண்களால் மட்டும் நிரப்ப பட்டுள்ளது அல்ல....பெண் நண்பர்களின் அன்பான ஆதரவையும்

    ReplyDelete
    Replies
    1. பெற்ற மாபெரும் கூட்டமிது என்பதையும் ஆசிரியருக்கு (எங்களுக்குமே )நிரூபித்த அனைத்து தோழ ..தோழிகளுக்கும் போராட்ட குழுவின் அன்பான நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் ...அதே சமயம் சிரிப்பு போராட்டம் முடியுட்டும் ..சீரியஸ் போராட்டம் விடியட்டும் என்று போராட்ட குழுவிற்கு விடியலை காட்டிய செயலாளர் அவர்களுக்கு போராட்ட குழு சங்கத்தில் இருந்து ஒரு டீயும் ....சிங்கிள் பன்னும் அனைத்து கரகோஷ ஓசையின் மத்தியில் அவருக்கு அளிக்க படுகிறது ...இந்த இடை தேர்தலின் மூலம் சாரி இடை போராட்டத்தின் மூலம் நமது வாக்கு வங்கி 8% அளவிற்கு மேல் வாங்கியுள்ளதை ஆசிரியர் அறிந்து கொண்டதால் இனி நமது போராட்டதிற்கு ஆசிரியர் இனி ஒவ்வொரு முறையும் நமது வேண்டுகோளை ஏற்று நமக்கு ஆதரவை அளிப்பார் என்றும் நம்புகிறோம் ..

      Delete
    2. தலைவரே.!

      ஒவ்வொரு பதிவும் சி.சி.வ.போல் சுவராசியமாக இருந்தாலும் புத்தகத்தில் திரும்ப திரும்ப படிக்கும்போது தரும் சந்தோசத்தை தருவதில்லை.

      Delete
    3. உண்மையோ உண்மை மடிப்பாக்கம் மாடஸ்தி சார் ....

      ஒரு முக்கிய குறிப்பு ...


      இதனை நான் வழிமொழிகிறேன் என்ற எனது ஆரம்ப வரிகள் ..

      செயலாளர் அவர்களின் கூற்றை வழி மொழிவது ...எனது பதில் வருவதற்கு முன்னரே நண்பர் பெங்களூரு பரணி முந்தி கொண்டதால் அவருக்கான பதிலாக ஒப்பு கொள்ள பட்டுள்ளாதாக தோன்றுகிறது...என்ன தான் இனைய வழியில் பல காமிக்ஸ் இதழ்கள் கிடைத்தாலும் புத்தகத்தை கையில் ஏந்தி படிக்கும் சுவைக்கு ஈடேது ...அதே போலவே தான் இங்கே இடும் ஆசிரியர் பதிவு கண்டிப்பாக சுவையானது ...ஒவ்வொரு ஞாயிறும் எதிர் பார்க்கிறோம் என்பது உண்மையே ..ஆனால் புத்தகத்தில் சி.சிறு வயதில் அச்சில் படிக்கும் சுவை இதற்கும் மேலானது என்பது தாம் உண்மை ...

      Delete
    4. அருவாளோட கைபுள்ளே கிளம்பிட்டாரு...எத்தனே தல உருளப் போதோ - தெரிலயே !!

      Delete
    5. Madipakkam Venkateswaran & Paranitharan K @ உங்களை போன்ற நண்பர்களுக்காகதான் நமது ஆசிரியர் இங்கே பதிவிடும் சில பதிவுகளை ஒவ்வொரு மாத புத்தகத்திலும் அச்சிடுகிறார்கள், உங்களின் புத்தக வாசிப்பு அனுபவத்திற்காகவே :-)

      Delete
  51. சந்தோசமான விஷயம்: திருச்சியில் நமது (முன்னாள்) காமிக்ஸ் முகவர் நமது இதழ்களை மீண்டு(ம்) விற்பனை செய்முன் வந்து இருப்பது. சபாஷ் நமக்கு ஒரு அருமையான/சரியான முகவர் சிக்கிவிட்டார்:-)

    ReplyDelete
  52. நமது T-Shirt இடம் பெற - NO Comics..... NO Friendship

    ReplyDelete
  53. @மாயாவிசிவா, அருமையான உதாரணம், அருமையான கருத்து. என்னதான் பழைய பொக்கிஷங்கள், மறுபடியும் வந்தாலும், ஒரிஜனலின் மீதான காதல் ஏனக்கு குறையவில்லை. மாறாக அதிகரிக்கிறது. உதாரணமாக எத்தனுக்கு எத்தன், சதுரங்க வெறியன், மிஸ்டர் மர்மம்,மரண மாஸ்டர், யா.அ.மி.ஸ்பைடர், கல் நெஞ்சன் ஆகிய ஒரிஜனல் புத்தகங்களை சமீபத்தில் வாங்கிய நான் , தற்போது டாக்டர் டக்கர், கிடைக்குமா என பார்க்க தொடங்கி இருக்கிறேன். என்னதான் புதுசு வந்தாலும் ஒரிஜினலின் மதிப்பு குறைவதில்லை

    ReplyDelete
  54. ஒவ்வொரு மறுபதிப்பும், அதன் மூலத்தின் மீதான தேடலை அதிகரிக்கிறது

    ReplyDelete
    Replies
    1. சரவணன் சார்.!

      ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை.


      எனக்கு கதைதான் முக்கியம்.! பழசு , புதுசு , அட்டை உள்ளது அட்டை இல்லாதது மறுபதிப்பு ஒரிஜினல் எல்லாம் எனக்கு முக்கியமில்லை.

      Delete
  55. ஹும்.. என்ன செய்தாலும் இவங்க மாற மாட்டாங்க என சில நண்பர்கள் விடும் பெருமூச்சு கேட்கிறது

    ReplyDelete
  56. சமீபகாலமாக, பல அதிரடி முடிவுகளை எடுத்து வரும் எடி சார், பழைய காமிக்ஸ் உலகில் நிலவி வரும் கடும் விலையேற்றத்தையும், பதுக்கல்களையும் குறைக்க மீண்டும் புத்தக சந்தை பகுதியை தொடங்க சாத்தியங்கள் உண்டா?

    ReplyDelete
    Replies
    1. saravanan srinivasan : MV சார் சொல்வது போல கதைகளை ; சேகரிப்புகளை பிரதானமாக்கிப் பாருங்களேன் நண்பரே - கிரே மார்கெட்டின் அந்த விலை ஏற்றங்கள் போயே போய் விடும் ! " பழசே தான் வேண்டும் " என்ற இல்லாததற்கான தேடல் தொடரும் வரை அவர்கள் அதனை cash in செய்யவே முனைவார்கள் !

      புக் மார்கெட் பகுதிக்கு திரும்பவும் கதவைத் திறந்து விடுவது தீர்வாகாது !

      Delete
    2. சார், தற்போதும் நண்பர்கள் ஒருவருக்கொருவர் இல்லாத புத்தகங்களை பரிமாற்றம் செய்து கொள்வது நடைமுறையில் உள்ளது. இது பரவலாக செயல்படுத்த படுமானால் நிச்சயம் க்ரே மார்கெட் கலாச்சாரம் குறைந்து விடும். பாருங்களேன், ஒரு மூத்த வாசகருக்கு, மாயாவிின் சாரின் முயற்சியின் மூலமாக, டெக்ஸ் சாரிடம் உள்ள extra copy கிடைக்க வாய்ப்பு வந்திருக்கிறது. இது officialaga வந்தால் மேலும் நிறைய வாசகர்கள் பயன் பெறுவர்.

      Delete
    3. சரவணன் சார்.!

      விஜயராகவன் போல் நல்ல நண்பர்கள் பத்து சதவீதம் பேர்தான் தேறுவார்கள்.! மீதி பேர் நல்லவர்களாக இருந்தால் கூட புத்தக இரவல் விஷயத்தில் மண்ணின் மணம் வெளிப்பட்டுவிடும் (அதாவது ஆட்டையை போட்டுவிடுவது.) இதனால் மனக்கசப்பு ஏற்படும்.அறிமுகப்படுத்திய நண்பரை ஜாவாப்தாரியாக கருதி அவர்மீதும் வெறுப்பு ஏற்பட்டுவிடும்.!

      இவையெல்லாம் எனக்கும் என் கண்முன் மற்றவர்களுக்குனே நடந்தது.! எனது பன்னிரண்டு வயதில் பொன்னி காமிக்ஸை ஆட்டையை போட்ட (பறக்கும் வீரரும் பயங்கரவாதிகளும் கதை கண்முன்னே நிற்கிறது.) நண்பரை இன்று சந்தித்தாலும் கேட்டு கடுப்பேற்றுவேன்.ஆகவே தற்போது நான் இரவல் கொடுப்பதற்காகவே ஒன்றை எக்ஸ்ட்ரா வாங்கி விடுகிறேன்.!

      Delete
  57. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. நல் மாா்க்கமிது..!

      Delete
    2. Rajendran A.T & Guna Karur & others : இவை எல்லாமே ஒரு புதிய தலைமுறைக்குமான இதழ்களாகவும் இருந்திடல் அவசியம் என்பதை நம் பழமைக் காதலின் பொருட்டு மறக்கிறோமா ? அந்நாட்களது டிசைன்கள் எங்கு பொருத்தமாக இருக்குமோ - அங்கு அவற்றையே பயன்படுத்துவதில் தவறில்லை தான் ! ஆனால் - நன்றோ - சுமாரோ ; ஒட்டு மொத்தமாய் பழசை மட்டுமே சார்ந்திருக்கும் ஒரு தீர்மானம் எத்தனை தூரம் சரியானதாக இருந்திடும் ?

      Let's be selective guys !

      Delete
    3. @ ALL : சின்னதொரு விஷயத்தையும் இங்கு நாம் நினைவு கூர்தல் நலமென்பேன் : 45 ஆண்டுகளுக்கு முந்தைய பொழுதுகளில் - நம் வயதுகள் ; ரசனைகள் மாறியிருந்தன ! ஆனால் அதை விட ரொம்பவே முக்கியமானதொரு வேறுபாடும் இருந்தது - அது தான் இன்றைக்குப் போல் உலகினை ஒரு விமர்சனக் கண்ணோட்டத்தில் அனைவருமே சகஜமாய்ப் பார்த்திடும் மனப்பாங்கு ! அன்றைக்கு சமூக வலைத்தளங்கள் கிடையாது ; ஒவ்வொருவருக்கும் எட்டும் தொலைவில் ஒரு விமர்சனக் குரல் சாத்தியப்பட்டதில்லை ! So நயமோ ; சராசரியோ ; மொக்கையோ - எவ்வித சலனங்களும் / சங்கடங்களுமின்றி நாட்களைக் கடத்த இயன்றது !

      அன்றைக்கும் இன்றைய விமர்சன பாணிகள் இருந்திருக்கும் பட்சத்தில் - ""மாயாவி சண்டை போட்டார் " ; "ஜானி ஒரு கராட்டே வெட்டு வெட்டினார் " ; என்ற ரீதியிலான வரிகளும் ; "CID லாரன்ஸ்" இதழின் "தேமே" விமான அட்டைப்படங்களும் ; மூளைத் திருடர்கள் ரயில்வண்டி ராப்பர்களும், FLIGHT 731 ராப்பர்களும் தலை தப்பியிருக்குமென்று நிச்சயமாய் நான் நம்பவில்லை ! சொல்லி மாளா எழுத்துப் பிழைகள் ; டிசைனிங்கில் நிறைய தப்பும், தவறுகளும் இன்றைக்கு நியான் விளக்கொளியில் கண்களுக்குத் தட்டுப்படுவது - அன்றைய வயதுகளிலும், மனப்பாங்குகளிலும் நம்மில் யாருக்குமே ஒரு பொருட்டாகவே தெரிந்திருக்கவில்லை ! OLD IS GOLD of course - ஆனால் அன்றைக்கு அது உட்படுத்தப்பட்ட பார்வைகளில் இத்தனை ஆராயும் நோக்கு இருந்திருக்கவில்லை !

      இன்றைய தலைமுறைக்கு - இது வாழ்வின் ஒரு சகஜ அங்கமே என்றான பின்னே நாமும் அதற்கேற்ப தேவைப்படும் இடங்களில் மட்டுமாவது திருத்தங்கள் / மாற்றங்களைக் கொண்டு வருவதில் தவறில்லையே ?!

      பழமைக் காதலர்களுக்கு எனது இந்தக் கருத்தின் பொருட்டு உஷ்ணம் எறிடல் இயல்பே ; ஆனால் கொஞ்சமே வேகம் தணிந்த பின்னே என் கருத்தின் நிஜங்களைப் புரிந்து கொள்வதில் சிரமமிராது !!

      பழமைக்கு "ஜே" போடுவோம் ; selective ஆக !!

      Delete
    4. // பழமைக்கு "ஜே" போடுவோம் ; selective ஆக !! //
      +100

      Delete
    5. @ திரு விஜயன்

      பழமையை ரசிப்பவர்களின் ஆசைக்காகவோ, உங்களுக்கு விற்பனையின் சதவிகிதம் உயரும் என்ற மற்றொரு காரணத்திற்காகவோ மட்டும் அல்ல இந்த கோரிக்கை. ஒரு காலத்தில் காமிக்ஸ் படிப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் ஐம்பதாயிரம் தொடும்..!

      பலருக்குள்ளும் தூங்கும்...சித்திரக்கதையை ரசிக்கும் இரசனையை திறக்கும் 'மந்திரசாவி' பழமைமாற அட்டைபடமே. அப்படி இரசனையை உணர்ந்த ஒரு பள்ளி ஓவிய ஆசிரியரை சமீபத்தில் சந்தித்தேன், இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஒய்வுபெறப்போகும் அவர் வயது என்னவென்று சொல்லவேவேண்டியதில்லை.காமராஜர் மேல்நிலை பள்ளியில் பணிபுரியும் அவர் பெயர் திரு ராஜாராம். அவர் நினைவுகளை மீட்டெடுத்தது நமது 2014 சேலம் புத்தகதிருவிழாவின் போதுதான்..!

      இங்கு உபரியாக ஒரு ஆதங்கம்: அவர் ஒரு தீவிர டெக்ஸ் வில்லரின் ரசிகர், நம் ப்ளாகை அவ்வப்போது தொடர்ந்து பார்வையிடுகிறார்.அவர் விரும்பி கேட்ட LMS ஸ்பெஷலை வாங்கிதர எவ்வளவோ முயன்றும் பலன் பூஜ்யம். கடந்த வாரம் கூட நான்கு LMS லயன் ஆபீஸில் இருந்து வியாபாரிகள் கைக்கு மாறியுள்ளது. ஒரு உண்மையான ரசிகரின் கைக்கு [அதுவும்கூட மூத்தகுடிமகனுக்கு] ஏனோ கிடைக்கமறுகிறது.

      எப்படி பெறுவது என தெரியாமல், சமூகபொறுப்பில் புதைந்திருக்கும் இப்படிபட்ட ரசிகரள்ளவோ நம் அஸ்திவாரங்கள்..! முடிந்தால் ஒரு பிரதி ப்ளிஸ் சார்..!

      Delete
    6. மாயா சார் @ LMS ல் என்னிடம் உள்ள 3வது காப்பியை அந்த ஓவிய ஆசிரியருக்கு தர சம்மதிக்கிறேன். அவர் தீவிர டெக்ஸ் ரசிகர் என்பதால் , இந்த அதி தீவிர டெக்ஸ் ரசிகன் , அவருக்கு அன்பளிப்பாக தருகிறேன் . ஆசிரியரிடம் இருந்து பிரதி கிடைக்காத பட்சத்தில் தொடர்பு கொள்ளுங்கள் சார் ,என்னை.....
      viji.comics@gmail.com

      Delete
    7. டெக்ஸ் விஜய ராகவன்.!

      //எல்.எம்.எஸ். அன்பளிப்பு...//

      "அந்த வானத்தைப்போல மனம் படைத்த மன்னவனே.! "

      ஹிஹிஹி..........

      நானும் டெக்ஸ் ரசிகன்தானுங்கோ.... ( மாடஸ்டிக்கு முதலிடம். )
      என்னிடம் கழுகு வேட்டை.,ஏதோ கணவாய் என்று வறுமை இவை இரண்டையும் கண்ணால் கூட பார்த்தது இல்லை.என்னைப் பொருத்தவரை 1990 முதல் 1995 வரை எனக்கு காமிக்ஸ் இருண்ட காலம் நிறைய புத்தகங்களை கண்ணால் கூட பார்த்தது இல்லை அதில் இந்த டெக்ஸ் கதையையும் சேர்த்து.!

      Delete
    8. @ சேலம் இரவுகழுகு

      உங்களிடம் நான் கேட்டிருக்கவேண்டும் மன்னிக்க, இதற்கு முன் உபரியாக LMS ஸ்பெஷல் வாங்கிய...கிடப்பதாக சொன்ன நண்பர்களிடம் எல்லாம் கேட்டேன். அதிகவிலையில் க்ரே மார்கெட்டில் வாங்கும் எண்ணமும் இல்லை. அதை பள்ளி ஓவியரிடம் சொல்லி காமிக்ஸ் மதிப்பை குறைக்க மனமும் இல்லை. ஒருகட்டத்தில் படித்தபுத்தகத்தை மூன்று கைகள் மாறி வரும் கூரியர் சார்ஜ் கொடுத்து வாங்கி, கூரியர் பற்றி அவரிடம் சொல்லாமல் புத்தகத்தை கொடுக்கவும் தயாராக இருந்தேன். ஆனால் எல்லாம் பேச்சு வார்த்தையோடு நின்றுவிட்டது.

      இந்த விஷயத்தில் திருப்பூர் குமார் என்னைவிட தீவிரமாக கிடைக்க முயன்றுவருகிறார். திருப்பூர் புத்தகதிருவிழாவில் கூட மூன்று நண்பர்களுக்கு தள்ளுபடி விலையில் வாங்கிகொடுத்தாராம்..!
      ஆனால் விஜயராகவன் உங்களுக்கு நல்லமனது. உண்மையான டெக்ஸ் ரசிகரின் தவிப்பை புரிந்துகொண்டு அன்பளிப்பாக தர முன்வரும் அன்புக்கு தலைவணங்குகிறேன் நண்பரே..! ரசிகனேன்றால் நீர்தானய்யா ரசிகன்..!! இப்ப ஸ்டாக் முடிஞ்ச ஒரு புத்தகத்தை கேட்டு கதவு தட்டியபோதுதான் இந்த உலகின் விசித்திரமான பக்கங்களை சங்கடத்துடன் பார்க்க நேர்ந்தது. அவ்வளவு ஆட்டம்காட்றங்க..!நண்பர்களை சந்திக்க ஓவியரும் "இதெல்லாம் பேச ஆள் இருக்கங்களா..? நான் தனி ஆளுகிடையாதா..? டியூட்டி டைம் தவிர எப்பவேன்னா சொல்லுங்க " என ஆர்வமுடன் காத்திருக்கிறார், உங்கள் பெயர் அவருக்கு நன்கு பரிச்சயம், நேரில் உங்களை சந்திப்பதால் ரொம்பவே சந்தோசபடுவார். இரண்டொரு நாளில் சந்தித்துவிடலாம்..ஒகே..!

      Delete
    9. MV sir@
      ஹா ..ஹா ....ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ள 2புத்தகங்களும் என்னிடம் ஒற்றை காப்பிகளே உள்ளன ...

      மாயா சார் @
      சரியாக 16 மாதங்கள் முன்பு வந்த LMSஐ நான் தருவது ஒன்றும் பெரிதல்ல .... 1994க்கு பிறகு டெக்ஸ் புத்தகங்கள் நான் தேடி அலைந்த வேளையில் ,அதற்கும் பல ஆண்டுகளுக்கு முன் வந்த புத்தகங்களை எனக்கு கொடுத்து உதவிய நண்பர்கள் பலரின் நல்ல மனதே பெரிது...
      ஏன் சமீபத்தில் அரிதான இரத்த படலம் ஜம்போ ஸ்பெசலை மூன்று நண்பர்கள் , ரஃபீக் ,சேலம் ஶ்ரீதர் & பாம்பாம் பிக்காலோ (போட்டியில் வென்ற இதழ் ) அன்பளிப்பாக ,நம்முடைய மற்ற 3நண்பர்களுக்கு தந்தது மிகப்பெரிய விசயம் ......இதைப்போல சத்தம் இல்லாமல் சாதனை செய்து வரும் பல நண்பர்களின் அன்பு இதயங்களை வணங்குகிறேன் ...
      மதிய வேளையில் 2to4, அல்லது வரும் ஞாயிறு அந்த ஓவிய நண்பரை சந்திக்கலாம் சார் ....

      Delete
    10. mayavi.siva : நம்மிடம் LMS ஸ்டாக் உள்ளதோ - இல்லையோ தெரியவில்லை ; ஆனால் நிச்சயமாய் ஆசிரியருக்கொரு பிரதி இல்லாது போகாது ! அவரது முகவரியினை அனுப்பிடுங்கள் - நம் அன்புகளோடு நாளை கூரியர் அனுப்பிடுவோம் !

      Delete
    11. சேலம் Tex விஜயராகவன் @ நல்ல மனம் வாழ்க!

      Delete
    12. @ டெக்ஸ் விஜய் & எடிட்டர் விஜய்

      உங்கள் நல்ல மனம் வாழ்க!

      இப்படிக்கி,
      ஈரோடு விஜய்

      Delete
  58. யதாா்த்தத்தின் பிரதிபலிப்பாய்...,தெளிந்த நீரோடை போல,அழகான ஓவியங்கள்..,அற்புத வண்ணச் சோ்க்கைகள்..,களேபரங்கள் இல்லா இறுதிக் காட்சி என நல்ல ஸ்கோா் செய்திருக்கிறது... கமான்சே!அதென்ன ட்ரிபிள் சிக்ஸ் என்பதற்கு பதிலாக,ட்ரிபிள் எக்ஸ்...!!??

    ReplyDelete
  59. சார் தயவு செய்து எந்த பழைய அட்டை படங்களயும் மாற்றி விடாதீர்கள்...

    ReplyDelete
  60. This comment has been removed by the author.

    ReplyDelete
  61. /////எடிட்டர் சார் எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும். மார்ச் மாத டெக்ஸ் கதாசிரியர் நம்ம ஊர் படங்களை பார்த்து ரசித்தவரோ? கதையை படிக்கும் போது மண்வாசணை நெடி தூக்கலாக உள்ளது. அதுவும் டெக்ஸின் மகன் கிட்டுக்கு பழைய நினைவுகள் மறந்து தலையில் அடிபட்டு நினைவுதிரும்பும் போது..... சூப்பர் இதுதான்டா நம்ம ஊர் சரக்கு எனதோன்றியது. ஒரே ஒரு சந்தேகம். நண்பர்கள் யாராவது விளக்குங்களேன். மூன்றாம்பிறை படத்தில் ஸ்ரீதேவி பழசை மறந்தபின் கமலுடன் நட்பாக இருப்பதும் நினைவுதிரும்பியவுடன் கமலை மறந்துவிடுவார்.விதி போட்ட விடுகதையில் கிட் பழசை மறந்தபின் மூன் உடன் நட்பாக இருக்கிறார். பழய நினைவுதிரும்பிய பின் மூனையும் ஞாபகம் இருக்கிறது. டெக்ஸையும் ஞாபகம் இருக்கிறது. இரண்டு கதைகளில் சரியானது எது?
    விக்ரமாதித்தனிடம் வேதாளம் கேட்கும் கேள்விபோல் தெரிந்தாலும் உண்மையில் தெரிந்துகொள்ளத்தான் இந்த கேள்வி///////


    ராஜேந்திரன் சார்.............
    அருமையான கேள்வி.......
    இதற்கு நினைவுகள் இழத்தல் பற்றி அறிய வேண்டும்.....
    அடிபட்டதால் நினைவிழத்தல் அடிப்படையில் இரண்டு வகை
    Post traumatic amnesia……
    1. Retrograde amnesia
    2. Anterograde amnesia

    /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
    Retrograde amnesia –தலையில் அடிபடுவதற்கு முன் உள்ள கைவசம் உள்ள continuos memory தகவல்கள் அனைத்தும் அழிந்து விடும்.
    நமது xiii, கமலின் வெற்றி விழா போன்றவைகள் இந்த வகையை சார்ந்தவை
    சம்பவம் நடக்குமுன் உள்ள எதுவும் நினைவில் வராது......
    //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////


    Anterograde amnesia தலையில் அடிபட்டபின் புதிய எதையும் இவர்களால் நினைவில் கொள்ள இயலாது....

    காலையில் என்ன சாப்பிட்டாய் என கேட்டால் பதில் சொல்ல இயலாது.....

    இதிலும் declarative memory loss ,procedural memory loss என உண்டு....

    இதை எளிமையாக சொல்கிறேன்....

    காலையில் காரில் யாரை பார்க்க சென்றாய் என கேட்டால் பதில் வராது......இது declarative memory loss.( இதிலும் episodic,semantic என உட்பிரிவுகள் உண்டு)


    ஆனால் கார் ஓட்ட தெரிவது என்பது procedural memory இருக்கிறது என்பதன் அடையாளம்......

    இதற்கான எல்லோருக்கும் தெரிந்த உதாரணங்கள்
    1. Memento……கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய படம்.......
    2. கஜினி......சூர்யா நடிப்பில் வந்தது.

    ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////


    சிலசமயம் ஒரே நேரத்தில் ஒருவருக்கு Retrograde amnesia ,Anterograde amnesia இரண்டும் ஏற்படலாம்....மருத்துவ வரலாறில் இதற்கான சாட்சியங்களை காணலாம்.....

    இப்படிப்பட்ட நபர் குணமானால் (if and only if) அடிபடுவதற்கு முன் உள்ள சம்பவங்களை , நினைவுகளை மட்டும் திரும்ப பெறுவார்......

    இதற்கு நீங்கள் சொன்ன ஸ்ரீதேவி , கமல் க்ளைமாக்ஸ் காட்சி பொருந்தும்.( தியரிட்டிகலி.)

    //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////


    நமது கிட்டுக்கு ஏற்படுவது Retrograde amnesia .,,,சில்வர்மூனை சந்தித்தபின் உள்ள அனைத்து சம்பவங்களும் அவர் நினைவில்தான் இருக்கும்.... Retrograde amnesia சரியாகும்போது பழைய புதிய நினைவுகள் அனைத்தும் continuos memory டேட்டாக்களாக மாறி ஒருங்கே இணையும்.
    ( கதையில் வருவது போல் அவ்வளவு டிராமாட்டிக் ஆக இல்லாவிட்டாலும் கூட)

    //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////


    நயன்தாரா படங்களை டவுன்லோட் செய்து பார்த்துகொண்டு இருக்கும்போது வூட்ல மாட்டி பூரிக்கட்டை நமது கபாலத்தில் பட்டு தெறிக்கும்போது இந்த பேரண்டமே ஒரு 15 நிமிடம் மறந்து போகுமே.....அது ஒரு தனியான டெம்பரரி மெமரி லாஸ்....;-)

    ////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////





    ReplyDelete
    Replies
    1. //////லிட்டில் மூனை கொன்றது எனக்கும் கோபம்தான்./////

      mv sir சில்வர்மூனை லிட்டில் மூன் என அழைப்பது recent memory loss ...:-)

      ( mv sir மன்னிச்சூ)

      Delete
    2. @ செனா அனா

      எனக்கும்கூட அதே டவுட் இருந்தது. உங்களைத் தான் கேட்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் மனசுக்குள் ஒரு பட்சி "பொறுப்பா! அதுக்கான விளக்கத்தை அவரே சொல்ற நேரம் வரும்" என்று சொல்லியதால் அமைதியாய் இருந்துவிட்டேன். பட்சிக்கும், உங்களுக்கும், பாலமாக செயல்பட்ட ATR அவர்களுக்கும் நன்றி!

      Delete
    3. selvam abirami : நல்ல காலம் - இந்த வாரம் நான் மேலிருந்து கீழாகப் பதில் சொல்லிக் கொண்டு வருகிறேன் ; இல்லையேல் ATR சார் கேட்டிருந்த கேள்விக்கு நான்பாட்டுக்கு மொக்கையாய் ஏதாச்சும் பதில் சொல்லித் தொலைத்திருப்பேன் !!

      அட்டகாசம் !!!

      நம் நண்பர்கள் குழுவினில் தான் எத்தனை எத்தனை வித ஆற்றலாளர்கள் !!!

      Delete
    4. செல்வம் அபிராமி சார்.!

      நீங்கள் சகலகலா வல்லவர் என்பதை உறுதிபடுத்தி விட்டீர்கள்.அகந்தை இல்லாமல் ஒரு நல்ல பேராசிரியர் போன்று விளக்கம் கொடுத்ததற்கு நன்றி.! _______/|\________ !

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete

  62. 'நில்.. சிரி.. திருடு'...

    சென்ற பதிவில் செல்வம் அபிராமி சொன்ன 'லக்கிலூக், கிட்ஆர்டின் வரிசையில் இனி கர்னல் கிளிப்டனும் தனக்கென்று ஒரு இடம் பிடிப்பார்' - என்பது 100 சதவீதம் உண்மையென்பதை நானும் பலமாக ஆமோதிக்கிறேன்.

    ஆரம்பப் பக்கங்களில் க்ளிப்டன் அந்த ஹோட்டலுக்கு திரும்பவந்து "போய்வரட்டுமா வெங்காயங்களா" என்று கத்துமிடத்தில் நான் சத்தம்போட்டுச் சிரித்ததில் பஸ்ஸுக்குளிருந்த பாதிபேராவது திரும்பிப் பார்த்திருப்பார்கள்! செம செம! :)))))

    கிளிப்டனின் வசனங்களும், பரபரப்பான க்ரைம் த்ரில்லர் வகையைச் சார்ந்த கதை நகர்வும், படித்தவுடன் சிரிக்கவைக்கும் கதாபாத்திரங்களின் பெயர்களும் ( உதாரணம் : பட்டர் கட்டர்) பக்கத்துக்குப் பக்கம் பட்டையைக் கிளப்புகின்றன! செம!

    ரொம்பவே இயல்பான மொழிபெயர்ப்பும், நகைச்சுவை உணர்வும், கூடவே கொஞ்சம் க்ரியேடிவிட்டியும் இணையும்போது இதுபோன்ற மாயாஜாலம் நிகழ்கிறதோ என்ற எண்ணம் வருகிறது! அட்டகாசம் எடிட்டர் சார்! செம்ம!

    இதுவரை வந்த கதைகளைப் போலதான் இனிவரும் கதைகளும் இருக்குமென்றால் - க்ளிப்டனுக்கு தனி சந்தா கேட்டு போராட்டம் நடத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதும் உறுதி!

    என்னைப்பொறுத்தவரை, சமீபத்திய புதுவரவுகளில் கர்னல் கிளிப்டன் தொடர்ந்து முதலிடம் பிடிக்கிறார்!

    செம!

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : இந்தத் தொடரின் அனைத்துக் கதைகளும் இதே ரகத்தில் இருக்காது என்பது தான் நிஜமே ; ஆனால் இப்போது வரைத் தொடரும் series என்பதால் 22 கதைகள் உள்ளன நாம் தேர்வு செய்ய ! போன மாதம் தான் ஜனவரி 2016-ல் வெளியான ஆல்பத்தின் மாதிரி நமக்கு வந்து சேர்ந்தது ! செமையாகத் தெரிந்தது !

      Delete
  63. This comment has been removed by the author.

    ReplyDelete
  64. அடடே! வழக்கத்துக்கு மாறாக இன்று எடிட்டர் மேலிருந்து கீழாக பதிலளிக்கிறாரே...!! உண்மையச் சொல்லுங்க எடிட்டர் சார்... யாரிடம் வாங்கிக் கட்டிக்கிட்டீங்க? :P

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : அட....நாங்களாகவும் போதிமரத்தடியில் உட்காருவோமில்லே !!

      Delete
    2. ஆசிரியர் சார் @ ///அட....நாங்களாகவும் போதிமரத்தடியில் உட்காருவோமில்லே !! ////--- நம்பிட்டோம் நம்பியே விட்டோம் ...

      //So கலர் கலராய் அமைந்தவை அந்நாட்களது அட்டைப்படங்கள் மாத்திரமல்ல என்பதைச் சொல்லவும் வேண்டுமா ? ///--- கலர் பார்த்ததை காலையில் சொன்னாதற்கு ,கைமேல் பலன் மாலையில் கிட்டிட்டது,உங்களுக்கு கிடைத்த ஞானத்தில் இருந்து தெளிவாக புரிகிறது சார் .....ஹி..ஹி...

      Delete
  65. கமான்சே கதையை படித்துவிட்டேன்.இதுவரை படித்த கதைகளில் இதுதான் அதிக விறுவிறுப்பு என்றால் மிகையில்லை.ஆனாலும் கடைசியில் சப் என்று முடிவதுதான் மாறவில்லை.!

    மொத்தத்தில் இந்த மாதமும் அனைத்து கதைகளும் அம்சமாய் அமைந்து விட்டது.! ஆக மொத்தம் ஹாட்ரிக் சாதனையிது.!

    சீக்கிரம் கி.நா.வை கொண்டுவாருங்கள்.! திட்டுவதற்கும் கழுவி கழுவி ஊற்றவும் சப்ஜெக்ட் கிடைக்கவில்லை.! கல்யாண கலாட்டா இல்லாத கல்யாணம் சுவராசியமாக இருக்காது என்பது என் எண்ணம்.!

    ReplyDelete

  66. ஆள் பாதி ஆடை பாதி’ என்பார்கள்.

    கதை பாதி அட்டைப்படம் பாதி என்பதே உண்மை.

    ஒருவன் அணிந்திருக்கும் ஆடை அவனது தன்மை, தரம், சார்பு போன்றவற்றை அல்லது இயல்பை எடுத்து இயம்பும் என்பர்

    அட்டைப்படமும் அப்படிதான் அந்த கதையின் தன்மை தரம் சார்பு போன்றவற்றை ஒரே பார்வையில் வெளிப்படுத்தும்.

    அட்டை படத்திற்காக நீங்கள் தீவிர முயற்சி எடுப்பது கண்கூடு.

    மனதில் நின்ற எடுப்பான அட்டை படங்களை மறுபதிப்பில் மறுபடியும் உபயோக படுத்துவது நல்லது என்பது என் கணிப்பு.

    ReplyDelete
    Replies
    1. @ Parimal

      +1

      அருமையா சொன்னிங்க சார்! செம!

      Delete
  67. இனிய மாலை வணக்கம் எடிட்டர் சார்!!!
    இனிய மாலை வணக்கம் நண்பர்களே!!!

    ReplyDelete
  68. ஆசிரியரின் நல்ல முடிவால் இன்று வலை மன்னனை புரட்டி ரசிக்க முடிந்தது ...ஏற்கனவே படித்த கதை தான் ...காதில் பூசுற்றல் கதை தான் ...மறுக்க முடியாது ...ஆனால் ஒவ்வொரு முறை மறுபதிப்பு இதழுமே படித்து முடித்தவுடன் சொல்வது தான் ...இந்த வார்த்தைகளை ...ஆனால் உண்மை தானே ....என்ன செய்வது ...

    பெரிய அளவில் ...தெளிவான சித்திர தரங்களோடு ....பெரிய எழுத்தில் ஸ்பைடரின் எள்ளல் வசனங்களோடு ..ரசித்து ருசிக்க முடிகிறது ....இப்படி படித்த கதைகளே இவ்வளவு ரசித்து ருசிக்க முடிகிறது என்றால் கொரில்லா சாம்ராஜ்ஜியம் போன்ற படிக்காத இதழ்கள் காண கிடைக்கும் பொழுது எவ்வளவு ரசிக்க முடியும் ....

    அருமை .....ஸ்பைடர் டக்கர் ....

    ReplyDelete
  69. விதி போட்ட விடுகதை ....

    அனைவரும் ரசிக்க வேண்டுமே என்ற காரணத்தினால் போன பதிவிலியே அருமை என்ற ஒற்றை வார்த்தையோடு நிறுத்தி விட்டேன் ...இப்போது அனைவரும் ரசித்து விட்ட படியால் ...அழகான விவரிப்பில் ஒவ்வொரு நண்பர்களுமே தங்கள் விமர்சனத்தை எழுதி விட்டதால் நான் சொல்வதற்கு ஏதுமில்லை தான் ...எனவே சுருக்கமாக ...


    ***ஏற்கனவே அந்த அடர்த்தியான சிவப்பு அட்டை பட்டையை கிளப்பி இருந்தது ..போன பதிவில் நீல மேக வர்ணம் அதை விட ஒரு மாற்று குறைவு போல தென்பட்டது நிஜம் ..ஆனால் அப்போது ஆசிரியரின் வர்ண மாற்றதிற்கான காரணமும் ...கதையை படித்து முடித்தவுடன் மீண்டும் அட்டையை திரும்பி பார்த்தால் செம என்றுதான் நினைக்க தோன்றுகிறது ..அட்டகாசமான அட்டை படம் சார் ...சில மாதங்களுக்கு முன்னர் எப்பொழுதாவது டெக்ஸ் வரும் பொழுது கூட ஏதாவது ஒரு இதழ் அட்டை படத்தில் சுமாராக தோன்றுவது போல தோன்றும் ...ஆனால் இனி ஒவ்வொரு மாதமும் டெக்ஸ் என்ற அறிவிப்பு வந்த பொழுது கதையை பற்றி எல்லாம் ஏதும் நினைக்க வில்லை ...எப்படியும் அசத்தி விடுவார் என்ற நம்பிக்கை பலமாகவே உண்டு ...ஆனால் ஒவ்வொரு மாதமும் அட்டைபடத்தில் தேறி விடுவாரா என்ற சந்தேகம் மட்டுமே வெளி காட்ட வில்லை எனினும் அப்போது தோன்றியது ...ஆனால் இப்போது என்னடாவென்றால் ஒவ்வொரு மாத டெக்ஸ் அட்டைபடமும் முன்னர் வந்த அட்டை படத்தை போட்டி போட்டு கொண்டு முன்னேறுகிறது ...நமது அட்டை பட ஓவியர்களுக்கு ஒரு டெக்ஸ் சல்யூட் சார் ..சூப்பர் ....

    ****

    அடுத்து பாராட்ட வேண்டியதும் உள் பக்க சித்திர ஓவியரை தான் ...கார்டூன் கதைகளை சித்திர ங்களை ஊன்றி கவனித்து படித்தால் தான் ரசிக்க முடியும் என்பது போலவே இந்த அழகான சித்திரங்களை பார்த்த பொழுது ஒவ்வொரு ப்ரேமும் ரசித்து கவனித்து படிக்கவேண்டும் என முடிவெடுத்து படிக்க ஆரம்பித்தேன் ...அருமை அருமை ஓவியரை பாராட்ட வார்த்தைகளே இல்லை ...

    முதல் பாராட்டு மேலே நண்பர் சொன்ன படி டெக்ஸ் மகன் கிட்டின் ஓவியம் ..அப்படியே இளவயது டெக்ஸ் கண்முன்னால் தெரிகிறார் ...மேலும் பல ஓவிய கட்டங்களை அதே போல பாராட்டி சொல்ல வேண்டுமென்றால் சொல்லி கொண்டே இருக்கலாம் ..ஆனால் உதாரணத்திற்கு ஒன்றை மட்டும் சொன்னால் கூட போதும் ஓவியரின் திறமையை உணர ...

    டொன்காவா என்ற பெயரில் செவ்விந்திய தோழர்களிடம் வீர போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றாலும் மயக்க மடைந்த நிலையில் கிடக்கும் பொழுது சில்வர் மூன் ஒரு கணவரை கவனிக்கும் விதத்தில் கிட்டை. அதட்டி கவனிக்க அங்கே குழுமியிருந்த அந்த செவ்விந்திய தோழர்களின் மெளனமான ...மகிழ்ச்சி கலந்த ...உண்மை காதலை உணர்ந்த அந்த மெளன சிரிப்பே பல அர்ததங்களை அவர்களுக்குள் தெரிவித்து கொள்ளும் அந்த ஓவியம் ஒன்று போதுமே .(பார்க்க பக்கம் 142 )...

    இப்படி ஒவ்வொரு விதத்திலும் அட்டகாச திருப்தியை அளித்து கொண்டே சென்ற இதழ் படித்து முடித்ததும் இந்த முறை மகிழ்ச்சியை அளிக்காமல் மனதில் ஒரு வித பாரத்தை அளித்து சில மணி துளிகள் நம்மையும் ஒரு துக்க மெளன நிலையில் இருக்க வைத்து விட்டது ...மனதில் பாரத்தை ஏற்றிய கதை கூட என்னை திரும்ப படிக்க தூண்டுமா ....கண்டிப்பாக கிடையாது ....ஆனால் டெக்ஸ் இதிலும் வெற்றி பெற்று விட்டார் ....படைத்த கதையாசிரியர் ..ஓவியர் ...மட்டுமல்லாமல் இதனை எங்களுக்கு அளித்த ஆசிரியருக்கும் ....மொழி பெயர்த்த திறமைக்கும் எங்களால் கொடுக்க முடிந்தது அந்த புத்தகத்தின் விலையான நூறு ரூபாய் தான் சார் ....அதற்கு மேல் நீங்கள் விரும்பா விட்டாலும் எங்களால் கொடுக்க முடிந்தது ஒன்றே ஒன்று தான் சார் ....


    சிவகாசியை நோக்கி ......



    ஒரு ராயல் சல்யூட் சார் .....

    ப்ளீஸ் ....பெற்று கொள்ளுங்கள் ..

    ReplyDelete
    Replies
    1. தலீவரே,

      /////படைத்த கதையாசிரியர் ..ஓவியர் ...மட்டுமல்லாமல் இதனை எங்களுக்கு அளித்த ஆசிரியருக்கும் ....மொழி பெயர்த்த திறமைக்கும் எங்களால் கொடுக்க முடிந்தது அந்த புத்தகத்தின் விலையான நூறு ரூபாய் தான் சார் .///

      அருமையா சொன்னிங்க தலீவரே! செம! +1000000

      Delete
    2. தலீவரே....வரிகளில் உள்ளத்தைத் திறந்து காட்டும் உங்கள் எழுத்துக்களுக்கு நான் என்றுமே ரசிகன் ! இந்த விமர்சனமும் அதற்கு விதிவிலக்கல்ல ! 2016-ன் சகல டெக்ஸ் இதழ்களையும் திருப்தியாக முடிக்கும் பாக்கியம் எனதாகிடும் சமயம் அந்த சல்யூட்டை வாங்கிக் கொள்கிறேனே !

      Delete
  70. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Rajendran A.T : சார்....மொத்தமே 3 நண்பர்கள் தான் இதனில் இதுவரையிலும் ஆர்வம் காட்டியுள்ளனர் ! And 20 நாள் அவகாசத்தினில் நாம் பார்த்திருக்கும் ஒரே டிசைன் "காந்தமலை மர்மம்" ராப்பர் மாத்திரமே ! இதற்கென நேரம் ஒதுக்குவதும், தத்தம் அன்றாடப் பொறுப்புகளுக்கு மத்தியினில் நண்பர்கள் இதனை நடைமுறைப்படுத்துவதும் அத்தனை சுலபமல்ல !!

      Delete
  71. புதியவற்றை வரவேற்போம், பழமையை மறக்காதிருப்போம். இன்று காமிக்ஸ் காதலர்களாக இருப்பவர்கள் அனைவருக்குள்ளிருந்தும் செயல்படுத்துவது, அந்த நாட்களில் படித்த காமிக்ஸ்கள்தானே.

    ReplyDelete
    Replies
    1. @ சரவணன் ஸ்ரீனிவாசன்

      உங்கள் கருத்துகளை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறேன் நண்பரே..! எனக்கு மெயிலில் ஒரு ஹாய் போடுங்களேன்..!

      Delete
  72. திருச்சி புத்தகத்திருவிழாவில் நமது ஸ்டால் முன்பு...

    நண்பர் திருச்சி விஜய் மற்றும் திருச்சி நகராட்சி உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு சிவகுமார் அவர்கள். பார்க்க...இங்கே'கிளிக்'

    ReplyDelete
    Replies
    1. நேற்றையதினம் திருச்சி புத்தகத்திருவிழா...இங்கே'கிளிக்'

      மின்னும் மரணம் கையில் வைத்திருப்பவர் நண்பர் மணிகண்டன்.

      Delete
    2. நன்றி மாயாவி அவர்களே!

      Delete
  73. This comment has been removed by the author.

    ReplyDelete
  74. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ராஜேந்திரன் அவர்களே...உள்ளதை சொல்லும் உங்கள் கருத்து அழகோ அழகு..! உங்கள் மெயில் id ப்ளிஸ்...

      Delete
    2. நெகிழ்வாக உணர்கிறேன் ATR சார்!

      Delete
    3. What you said is very true Rajendran Sir!
      However I think Editor wants to try and satisfy everyone 100%.
      So he wants to fix even minor issues and make everyone happy!
      It gives him immense pleasure when no one can point even a slightest of the errors!
      So I think he's trying to take everything as productive remarks and not as an offence!
      Again this is my personal view boss!

      Delete