Sunday, March 27, 2016

ஒரு வி.பி.ப. !

நண்பர்களே,
            
வணக்கம். ஏப்ரலின் நாயகர்கள் அனைவரும் தத்தம் கூரியர் பயணங்களைத் துவக்க ஆயத்தமாகி வருகிறார்கள் !! பைண்டிங் பணிகள் முடிந்த கையோடு டப்பாக்களுள் அடைக்கலமாகி ஏப்ரல் முதல் தேதியன்று உங்கள் இல்லங்களைத் தட்டி நிற்பார்கள்! So இந்த வார இறுதியினை  நமது ஐரோப்பிய விருந்தாளிகளுக்காகக் கொஞ்சம் ஒதுக்கிடலாமா ? கடல் கடந்து வந்திருக்கும் இந்தக் கோடீஸ்வரரும், வுட்சிடியின் நீதிக் காவலர்களும், இத்தாலியின் ஆதர்ஷ புத்திரர்களும் ; மின்சாரத்தை டிபனாக்கிடும் இரும்புக்கரத்தாரும் உங்களது ஏப்ரலை அழகாய்த் துவக்கி வைக்கும் ஆர்வத்தில் இருப்பர் என்பது நிச்சயம்! And இம்மாதம் முதற்கொண்டு மாதத்தின் மையப் பகுதியின் ஒரு ஞாயிறு காலையை அந்தந்த மாதத்து இதழ்களின் review-க்கென ஒதுக்கிப் பார்ப்போமா? உங்களுக்குத் தோதானதொரு நேரத்திற்கு நானும் ஆன்லைன் வந்து விட்டேனெனில் இதழ்களை Surf excel போட்டு சலவை செய்து அலசிப் பார்த்திடலாமே? What say all? Maybe காலை 10-12 ? 

ஏப்ரல் இதழ்களுள் புது வரவுகள் மூன்றுக்கும் ஏகமாய் ஏற்கனவே பில்டப்கள் கொடுத்து விட்டபடியால் – எஞ்சி நிற்கும் நமது evergreen மாயாவிகாருவின் அட்டைப்படத்தை மாத்திரமே உங்களுக்கு காட்டும் வேலை பாக்கியுள்ளது! இதோ- ஒரிஜினலின் அதே டிசைன் – துளியும் மாற்றமின்றி! 

முத்து காமிக்ஸின் இதழ் # 3 ஆக வெளிவந்த இந்த சாகஸத்திற்கு இது எத்தனையாவது மறுபதிப்பு? என்ற பொதுஅறிவுக் கேள்வியை நிச்சயமாய் நான் கேட்கப் போவதில்லை becos – பதில் எனக்கே தெரியாது! ஆனால் one last time என்பது மாத்திரம் உறுதி! இந்த மறுபதிப்பின் proof reading பணிகளில் ஒத்தாசை செய்தது நமது நண்பர் பெங்களுர் பரணியே! (முதல் பக்கத்திலேயே ஒரு பிழை ‘ஙே‘ என்று பல்லைக் காட்டுவதற்கு அவர் பொறுப்பல்ல; நான் இறுதியாக எழுதித் தந்த title page-ன் ஆரம்ப வரிகளில் நம்மவர்கள் விட்ட கோட்டை அது!) ‘கொரில்லா சாம்ராஜ்யம்‘ வண்ணத்தில் தொடரும் ஆண்டில் வெளிவந்திடும் பொருட்டு ‘நாச அலைகள்‘ முந்திக் கொள்கிறது - தற்போதைய அட்டவணையில்! புராதனம் ‘கம கமக்கும்‘ நாச அலைகளின் அந்தத் தமிழாக்கத்தை – நமது பால்ய நினைவுகளின் நறுமணம் வெற்றி கண்டிடும் என்ற நம்பிக்கையில் மேலோட்டமான பட்டி-டிங்கரிங்கைத் தவிர்த்து வேறெதுவும் செய்திருக்கவில்லை! ஆனால் நியாயமாகப் பார்த்தால் அந்த ஹைதர் அலி பருவத்து மொழிபெயர்ப்பிற்குக் கல்தா கொடுத்து விட்டு – புதியதொரு நடையை நல்கியிருக்க வேண்டும்! துரதிர்ஷ்டவசமாய் நேரமின்மை ஒரு தடிமனான தடையாகி வருவதால் அது சாத்தியப்படவில்லை!

On the subject of translation – சமீபமாய் நண்பர்களிடம் மொழிபெயர்ப்பில் ஈடுபட ஆர்வமுள்ளதாவென்று நாம் கோரியிருந்தது நினைவிருக்கலாம் – ஏழு நண்பர்கள் ஆர்வம் தெரிவித்திருப்பினும் – பணியில் ஈடுபட நேரம் ஒதுக்க முடிந்துள்ளது இதுவரையிலும் ஒருவருக்கு மட்டுமே! 2016-ல் “மாதமொரு டெக்ஸ்“ + “மாதமொரு கார்ட்டூன்“ என்ற திட்டமிடல் அமலுக்கு வந்தது முதலாகவே எனக்கு வாயோரம் சோப்பு நுரை பொங்காத குறைதான்! ஸ்டைலாக அறிவிப்பை வெளியிட்டு விட்டு – அந்த ஆந்தை விழிகள் – பேய் முழி முழித்து வருவதே சமீப சமயங்களின் வாடிக்கை! டெக்ஸ் கதைகளைப் பொறுத்தவரையில் கருணையானந்தம் அவர்கள் எழுதிடும் ஸ்க்ரிப்டில் டெக்ஸ் / கார்சன் / கிட் / டைகர் பகுதிகளை முழுக்க முழுக்கவே மாற்றியமைக்க அவசியப்படும் போது – கிட்டத்தட்ட முழுக் கதையையுமே redo செய்ய வேண்டி வருகிறது ! இம்மாதத்து "தலையில்லாப் போராளி" ஒரு classic example. 224 பக்க நீளம் கொண்ட கதையினை ஒரிஜினல் இத்தாலியன்-ஆங்கில ஸ்க்ரிப்டையும் ஏந்திய கையோடு - மெருகூட்ட முனையும் பொழுது கிட்டத்தட்ட புதுசாய் எழுதுவதற்கான நேரம் எடுத்துக் கொண்டது ! சமீபமாய் ஓசையின்றி இன்னும் சிலபல freelance மொழிபெயர்ப்பாளர்களின் முயற்சிகளையும் பயன்படுத்திடப் பார்க்கிறோம் தான் – ஆனால் சரியோ – தப்போ – டெக்ஸ் கதைகளுக்கென நாம் பழகி விட்டிருக்கும் template-ஐ எட்டிப் பிடிக்க இன்னமும் சாத்தியமாகமாட்டேன்கிறது! And இது நமது flagship நாயகரின் தொடர் எனும் போது - 'கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் பரவாயில்லை !' என்று அசட்டையாக இருக்கவும் வழியில்லை ! சென்ற மாத இதழான ‘விதி போட்ட விடுகதை‘யினை ஒரிஜினலாக தமிழாக்கம் செய்தது ஒரு புதிய மொழிபெயர்ப்பாளரே! ஆனால் அதனை செப்பனிடும் முயற்சியில் இருமடங்கு நேரம் செலவாவது போலத் தெரிந்ததால் கடைசி நேரத்தில் மொத்தத்தையும் தூக்கி ஓரம் கட்டி விட்டு , விடிய விடிய முழுசையுமே புதிதாய் எழுதிடும் ராக்கூத்துக்கள் அரங்கேறின ! 

கார்ட்டூன் கதைகளிலோ – வேதாளம் புதையலைக் காவல் காத்து நிற்பது போல அத்தனையையும் என் தலையணைக்கடியிலேயே நான் பத்திரப்படுத்தி வைத்துக் கிடக்கிறேன்! இந்த genre-ல் எழுதுவதில் நோவு தெரிவதில்லை என்றாலும் – பக்கம் பக்கமாய், பத்தி பத்தியாய் சிரிப்பு நாயகர்கள் கதை நெடுகிலும் சலசலத்துச் செல்வதைப் பார்க்கும் போது – ‘பேச்சைக் குறைங்கப்பாடேய் !‘ என்று சொல்லத் தோன்றுகிறது! அம்மாதிரித் தருணங்களில் – அந்நாட்களின் மறுபதிப்புகளில் நடனமாடும் ‘மாயாவி மேலே பார்த்தார்‘; ‘விரலிலிருந்து புகை வந்தது‘; "மாயாவி சண்டை செய்தார்" ரீதியிலான டயலாக்குளை மொத்தமாய் தூக்கிப் போட்டு விட்டு புதுசாய் எழுதிடும் ‘தம்‘ எழுந்திட மறுக்கிறது! 

சரி... அந்நாட்களது மறுபதிப்புகளில் தான் இந்தக் கூத்தென்றால் – பெண்டை நிமிர்த்துவதில் நாங்களும் சளைத்தவர்களில்லை என்று ‘கெக்கே பிக்கே‘ காட்டுகிறார்கள் – உட்சிடியின் சிரிப்புப் பயில்வான்கள்! ‘நிழல் 1 – நிஜம் 2‘ மறுபதிப்பை அப்படியே டைப்செட் பண்ணினால் வேலை முடிந்தது என்று பந்தாவாக மைதீனிடம் தூக்கிக் கொடுக்க – தொடர்ந்த நாட்களில் பணி முடிந்த பக்கங்கள் என்னிடம் வந்து சேர்ந்தன! ‘அட... இந்தக் கதை நினைவுள்ளதா – பார்ப்போமே?!‘ என்றபடிக்கு வேக வேகமாய் அதனுள் நுழைந்தால் – ஏகப்பட்ட வசன பலூன்கள் காலியாய் பல்லிளித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தன! 'இதென்ன கூத்து?' என்றபடிக்கு நமது b&w ஒரிஜினல் இதழை எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால் – ஷெரீப் டாக்புல்லின் அழகான வதனத்தைப் போலானது என் முகம்! இந்தக் கதையினை 1957-ல் ஒரிஜினலாக உருவாக்கியுள்ளனர் படைப்பாளிகள்! நமக்கு b&w இதழாக வெயியிட்டிட தரப்பட்ட version-ம் இதுவே! ஆனால் 1970-களின் இறுதிகளில் பல classic கதைகளை மெருகூட்டி, புதிய சித்திரங்களுடனும், புது வர்ணச் சேர்க்கைகளுடனும் remake செய்திருக்கிறார்கள்! அவ்விதம் மாற்றம் கண்டுள்ள ‘நிழல் 1 – நிஜம் 2‘ ஆல்பத்தில் நிறையவே மாற்றங்களும்; புதுச் சேர்க்கைகளையும் படைப்பாளிகள் செய்துள்ள விஷயம் இப்போது தான் புலனாகிறது! So அந்நாட்களில் வெளியான அதே கதை ; அதே plot தான் என்றாலும் – கதையின் ஓட்டத்தில் ஏகமாய் நகாசு வேலைகள் செய்துள்ளனர்! வேறு வழியேயின்றி – பிரெஞ்சிலிருந்து மறுபடியும் ஒரு முழு மொழிபெயர்ப்பைக் கோரி நமது மொழிபெயர்ப்பாளர்களைப் பிஸியாக்கியுள்ளோம்! அது கிட்டிய பிற்பாடு முடிந்த இடங்களில் பழைய வரிகள்; இதர இடங்களில் புதுசாய் வரிகள் என்று அந்தர்பல்டி அடிக்க வேண்டும்! So – மறுபதிப்பென்ற குடைக்குக் கீழே லைட்டாக இளைப்பாற நினைத்தால் – தெளியத் தெளிய சோடா அடித்து சும்மா கும்மு கும்மென்று கும்முகிறார்கள் உட்சிடிக்காரர்கள்! 'அட... சிவனேன்னு புதுசா படம் வரைஞ்சோமா – புக்கைப் போட்டோமா... என்றில்லாமல் இத்தனை கூடுதல் முயற்சிகள் தேவைதானா? என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட கணத்தில் – ‘எக்ஸ்ட்ரா நம்பர் கேட்டேனா? நான் எக்ஸ்ட்ரா நம்பர் போடச் சொல்லிக் கேட்டேனா?‘ வடிவேலு தான் ஞாபகத்தக்கு வந்தார்! Anyways – “நிழல் 1 – நிஜம் 2” சீக்கிரமே வரும் – புதுப் பொலிவோடும், நிறைய மாற்றங்களோடும்! And நமது blog துவங்கிய நாட்களில் நாம் சந்தித்த பஞ்சாயத்துக்களுள் இதுவும் கூட ஒன்றென்பது நினைவிருக்கலாம் ! மறந்திருப்போர்க்கு நினைவூட்டிட இதோ அதன் லிங்க் : http://lion-muthucomics.blogspot.in/2012/02/blog-post_13.html
இந்தத் தருணத்தில் கையைத் தூக்கிக் கொண்டு – ‘என்னைப் பற்றியும் எழுதலியா?‘ எனக் கேள்வி எழுப்பும் நமது உடைந்த மூக்காரின் காத்திருக்கும் சாகஸத்தைப் பற்றியும் குறிப்பிட்டே தீர வேண்டும்! சவாலான எழுத்துக்கள் என்பது ஒரு பக்கமிருக்க – routine ஆன பணிகள் என்பதுகூட  வேறு விதத்தில் சிரமமே ! டைகர் கதைகளில் டெக்ஸ் பாணியிலான பன்ச் டயலாக்குகளோ, கார்சனின் ரக நையாண்டிகளோ அதிகம் அவசியப்படுவதில்லை என்றாலும் கதையைப் பக்கம் பக்கமாய் நகர்த்திச் செல்வதே வித்தியாசமானதொரு சவாலாகும்! “என் பெயர் டைகர்” கதையிலோ மைக் கிடைத்த அத்தனை பேரும் பேசிடும் நமது தேர்தல் மேடைகளைப் போல கதை மாந்தர்கள் அவ்வளவு பேரும் பேசிக் கொண்டே போவதை நமது கருணையானந்தம் அவர்கள் பொறுமையாகத் தமிழாக்கம் செய்துள்ளார். இது போன்ற கதைகளில் பணியாற்றும் போது ஒரு எழுத்தாளர் score செய்திட வாய்ப்புகள் சொற்பமே என்றாலும் – இது கூட ஒரு நெட்டியைக் கழற்றும் பணியே!
போன வாரம் “அட்டைப்பட வாரம்” என்பது போல – இந்த வாரம் “மொழிபெயர்ப்புப் பீலா வாரம்” என்ற எண்ணத்தை உங்களுக்குத் ஏற்படுத்துவதோ- ‘பார்த்தீங்களா மகாஜனங்களே... கம்பி மேலே நாங்கோ நடக்குது... அல்லாரும் ஜோரா ஒன் தபா கைதட்டுங்கோ! என்று வித்தை காட்டும் நோக்கமோ கிடையாது! மாறாக- சந்தா Z தள்ளிக் கொண்டே போவதற்கான இன்னுமொரு முக்கியக் காரணியை உங்களுக்கு மெதுவாய் புரியச் செய்திடும் முயற்சியே இது! இரவுக் கழுகாருக்கும், கார்ட்டூன்காரர்களுக்கும் இரண்டு ஷிப்ட் போட்டு கவனம் தர வேண்டியுள்ள சூழலில் – கிராபிக் நாவல் களங்களையும் உள்ளே புகுத்திக் கொண்டால் – ‘சேது‘ பட விக்ரம் போல சுற்றித் திரிய நேரிடுமோ என்ற பயம் பீறிடுகிறது! நிதி நிலைமை; விற்பனை நிலவரங்கள்; சென்னைப் புத்தகவிழா தள்ளிச் செல்வது; கிட்டங்கியின் நிரம்பி வழியும் நிலவரம் என்பன பிரதான காரணங்கள் எனில் – இந்த மொழியாக்கம் சடுகுடுக்களும், அவை கொணரும் நேர இக்கட்டுகளும் இரண்டாம் நிலைக் காரணங்களாக உருப்பெற்று நிற்கின்றன! “என் பெயர் டைகர்” பணிகளையும்; “முத்து மினி காமிக்ஸ்” மறுபதிப்புகளையும் மே மாதத்தினில் நிறைவு செய்து விட்டால் மண்டைக்குள் லேசான தெளிவும்; மூச்சு விடக் கொஞ்சமே கொஞ்சமாய் அவகாசமும் கிடைத்திடும்! இன்னொரு விஷயமும் மே மாதம் அரங்கேறவிருப்பதாய் ஆரம்பகட்டத் தகவல்கள் வந்துள்ளன – சென்னைப் புத்தக விழாவின் ரூபத்தில்! மே 24 – ஜுன் 7 வரையிலும் சென்னை நந்தனம் YMCA-வில் புத்தக விழா நடைபெற உள்ளதாகக் கேள்வி! So இது நிஜமாகிடும் பட்சத்தில் – விற்பனைக்கொரு வாயிலாகவும், நாம் சந்திப்பதற்கொரு சந்தர்ப்பமாகவும் அமைந்திடும்! இம்மாத டெக்ஸ் கதையில் வரும் ‘தலையில்லாப் பிசாசைப்‘ போல நானும் மண்டையைக் கழற்றி வைத்துத் திரியும் இந்தத் தருணத்தில் புதுத்தடப் பயணங்களின் திட்டமிடல்களை வைத்துக் கொள்வதை விட கொஞ்சம் நிதானமும், தெளிவும் குடிகொண்டிருக்கும் சமயத்தில் அதனை அணுகிடல் நலமென்று நினைத்தேன்!

On the flip side – புது இதழ்களின் தயாரிப்புச் சிரமங்கள்; மொழிபெயர்ப்பின் சிக்கல்களைத் தந்திடா Absolute Classics மறுபதிப்பு முயற்சிகளில் கவனம் செலுத்துவதும் இந்தத் தருணத்தில் ஒரு உருப்படியான சிந்தனையாக இருக்குமென்று தோன்றியது! திகிலில்; மினி லயனில் அந்நாட்களில் வெளியான சிலபல ப்ரான்கோ-பெல்ஜியக் கதைகள் அனைத்துமே வண்ணத்தில் மறுபதிப்பாகிடத் தகுதி வாய்ந்தவைகளே என்று சொல்லலாம்! புராதனம் சொட்டும் சில ப்ரூனோ பிரேசில் கதைகள் நீங்கலாகப் பார்த்தால் –
 • - கேப்டன் பிரின்ஸ்
 • - ரிப்போர்ட்டர் ஜானி
 • - லக்கி லூக்
 • - சிக் பில்
 • - சுஸ்கி & விஸ்கி
 • - சாகஸ வீரர் ரோஜர்
 • - (சாவதற்கு நேரமில்லை) சைமன்
 • - மாடஸ்டி பிளைசி

போன்ற தொடர்களை அழகாய் மலரச் செய்தால் எப்படியிருக்குமென்று தோன்றியது எனக்கு! ஏற்கனவே இது பற்றிப் பதிவிட்டது போல வழக்கமான பாணியில் நிறைய அச்சிட்டு கிட்டங்கியை ரொப்பிடும் வேலைகளை இதனில் செய்திடாது – சின்னதாயொரு printrun-ஐ நிர்ணயம் செய்து கொண்டோமேயானால்- நேரடியாய் நம்மிடம் வாங்கிக் கொள்ளும் நண்பர்களுக்கும்; புத்தக விழா விற்பனைகளுக்கும் மாத்திரமே இவற்றைப் பயன்படுத்திடலாம்! Of course கடன் கோரிடாது முன்பணம் அனுப்பும் முகவர்களுக்கும் பிரதியைத் தரலாம் தான்! இவற்றுள் எனக்குப் பெரிதாய் வேலைகள் ஏதுமிராது எனும் போது – ஜுனியர் எடிட்டரின் மேற்பார்வையே இதற்குப் போதுமானதாக இருந்திடலாம்! குறைவான printrun எனும் போது அதற்கேற்ப விலை அதிகமாகிடும் என்பது மாத்திரமே இதனில் உள்ள சிக்கல்! அதைச் சமாளித்துக் கொள்ளலாமெனில் பிரெஞ்சில் அவர்கள் வெளியிடுவது போல இரண்டோ; மூன்றோ கதைகளை ஒருங்கிணைத்து INTEGRAL ஆக வெளியிட்டால் எவ்விதமிருக்கும் folks ? இந்த விஷயத்தில் நம்மூர் பாணிகளில் “கூட்டணிகள்” சாத்தியமாகாது என்பதால் – ‘சிக்பில் டைஜெஸ்ட்‘; ‘லக்கி லூக் டைஜெஸ்ட்‘; ‘கேப்டன் பிரின்ஸ் டைஜெஸ்ட்‘ என்று அமைத்திடலாம்!

For starters – இது லக்கி லூக்கின் 70-வது ஆண்டென்பதால் லக்கியின் Top 3 Classic கதைகளைத் தேர்வு செய்தால் - அவற்றை ஏதேனும் ஒரு புதுக்கதையோடு இணைத்தும் வெளியிடலாம் ; அல்லது மறுபதிப்புத் தொகுப்பாகவே கொணரவும் செய்யலாம்! இதோ பாருங்களேன் - லக்கியின்  70-வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ஒரு  பகுதியாய் உருவாகி வரும் புது ஆல்பத்தின் preview :

"லக்கி லூக்கைக் கொன்ற ஆசாமி " என்பது இந்த ஆல்பத்தில் பெயர் & இதோ அதன் துவக்கப் பக்கம் ! 2 கிளாசிக் கதைகளின் மறுபதிப்பு + இந்த புது ஆல்பம் என்ற combo  எவ்விதம் இருந்திடுமென்று நினைக்கிறீர்கள் ?
இந்த மறுபதிப்புத் தடத்தை இந்தாண்டே துவங்கிடலாமா ? அதன் சாகத / பாதகங்கள் என்னவாக இருக்குமென்று உங்களுக்குத்  தோன்றுகிறது? பச்சைக் கொடி காட்டுவதாயிருப்பின் – இந்தப் பட்டியிலிலுள்ள தொடர்களின் Top 3 கதைகளைத் தேர்வு செய்திடலாமே? ‘மாதமொரு இதழ்‘ என்றெல்லாம் எவ்வித அட்டவணைகளையும் போட்டுக் கொள்ளாமல் – மூன்றோ-நான்கோ மாதங்களுக்கொரு ‘டைஜெஸ்ட்‘ என்று நிர்ணயித்துக் கொள்ளலாம்! இது பற்றிய உங்கள் எண்ணங்களுக்காகக் காத்திருப்போம்! 

And இந்த முயற்சி takeoff ஆவது சாத்தியமென்று நீங்கள் அபிப்பிராயப்பட்டால் – print run; விலை; எப்போதிருந்து துவக்குவமென்ற ஆராய்ச்சிகளை ஆரம்பித்து விடலாம்! So இந்த வாரத்துப் பொழுதை இது பற்றிய சிந்தனைகளுக்குச் செலவிடுவோமா? And வேதாளர் கதைகளின் பட்டியலோடு வேண்டுகோள் இந்த நொடியில் வேண்டாமே – ப்ளீஸ்?! அவற்றை நாம் திரும்பவும் வெளியிட வேண்டுமெனில் ஒன்றோ, இரண்டோ கதைகளோடு வண்டியை ஓட்ட சாத்தியமாகாது! ஆண்டுக்குக் கணிசமான அளவுக் கதைகளை வெளியிடும் திட்டமிடலோடு தான் ஒட்டுமொத்தமாய் கதைகளை படைப்பாளிகளிடம் வாங்கியாக வேண்டும்! So- நமது ரெகுலர் அட்டவணையிலும் வேதாளரைப் புகுத்தும் சந்தர்ப்பம் கனியும் சமயம், அவரை மறுபதிப்பிலும் ரசித்திடலாம்! இப்போதைக்கு, நமது முதல் சுற்று மறுபதிப்பு இலக்குகளை இந்தப் பட்டியலின் நாயகர்களிடமிருந்து ஆரம்பிப்போமே? உங்கள் சிந்தனைக் குதிரைகளை இந்தப் பக்கமாய் மேய்ச்சலுக்கு அனுப்பி விடுங்களேன் ? See you around soon folks ! Bye for now !

P.S : Caption போட்டிக்கான முடிவினை காலையில் இணைத்திடுகிரேனே இந்த பதிவில்...விட்டம் வரை விரியும் கொட்டாவிகள் இதற்கு மேல் டைப்படிக்க தடை சொல்லுகின்றன !! 

429 comments:

 1. நான்தான் ஃபர்ஸ்ட்..!

  ReplyDelete
  Replies
  1. ஹப்பா... கொட்டக் கொட்ட கண்ணு முழிச்சுக்கிட்டு இருந்தது வீண் போகலை. இனித்தான் போயி பதிவப் படிக்கணும். என்னதான் இருந்தாலும் இப்பிடி முதல் பின்னூட்டமிசுறதும் ஒரு த்ரில் தான்..!

   Delete
  2. #பின்னூட்டமிடுறதும்

   Delete
  3. அருண் சாரே ! இந்த தூக்கம் தூக்கம்னு ஒன்னு இருக்கே.அதைப்பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா ? )))

   Delete
 2. நான்தான் ஃபர்ஸ்ட்..!

  ReplyDelete
 3. Vijayan sir, digest is good idea, but I prefer to start this from next year onward. For me it looks like we are overloaded already; like mutu mini, z santha, tiger, muthu classic reprint. Let us make this success on this year. Luke Luke good stories are re-published after our comback. So instead we can think of other goled oldy comedy stories.

  ReplyDelete
  Replies
  1. //Parani from Bangalore20 March 2016 at 01:00:00 GMT+5:30
   விஜயன் சார், இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்து மாதம் நான்கு புத்தகம் வந்தாலும் நாலு நாட்களில் படித்து விடுகிறேன். இந்த வருடம் இதுவரை வந்த கதைகள் அனைத்தும் சுவாரசியமாக உள்ளது ஒரு காரணம், மேலும் ஒரு காரணம் டெக்ஸ் கதையை தவிர அனைத்தும் 54 பக்க கதைகள். என்ன சொல் வருகிறேன் என்றால் மாதம் முழுவதும் காமிக்ஸ் படித்து கொண்டே இருக்க ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள் //

   போன பதிவில் உங்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆசிரியர் தொகுப்பு போடுவதாக சொன்னால், இப்ப வேண்டாங்கிறீங்களே.
   இன்னா நைனா இப்படி பண்றீங்களே.....

   Delete
  2. இந்த வருடம் தோர்கல் வேண்டாம்னு ஆசிரியர் நினைச்சிட போறாரு


   கபர்தார்...

   Delete
  3. ஜி, அடுத்த அடுத்த மாதம்களில் வரவுள்ள புத்தகம்களை கொஞ்சம் யோசிங்க... பிரின்ஸ் Digest, முத்து மினி, முத்து classic collection (இது இன்னும் ஆசிரியர் உறுதி செய்யவில்லை / நான் தவறாக புரிந்து விட்டேனா என தெரியவில்லை), என் பெயர் டைகர், Z-சந்தா என பல அறிவிப்புகளுடனும் ஆலோசனைகளுடனும் உள்ளன. எனது சென்ற பதிவின் நோக்கம் இவைகளை அறிவித்தபடி வெளி ஈட வேண்டும் என்பதைதான் அவ்வாறு கேட்டு இருந்தேன்.

   // போன பதிவில் உங்களின் வேண்டுகோளுக்கிணங்க //
   தவறு ஜி!

   Delete
  4. பரணி முன் கூட்டிய நன்றி கலந்த வாழ்த்துகள் ..

   Delete
 4. டைஜஸ்ட் நல்ல ஐடியாதான் சார்.ஆனால், வரும் சென்னை புத்தகவிழாவில், அதனை செயல்படுத்தும் அளவுக்கு, கால அவகாசம் இருக்குமா? என்பது மட்டும்தான் என்முன் இருக்கும் கேள்வி.
  மற்றபடி, நீங்க எத்தனை,புக் போட்டாலும் படிக்க நாங்க ரெடி.

  பழைய காமிக்ஸில். கல்லாகட்டிவரும் காமிக்ஸ் மாபியாக்களுக்கு, பழைய காமிக்ஸ் டைஜஸ்ட் என்பது பேரிடிதான்.அவர்கள் யாரையாவது தூண்டிவிட்டு, மாசாமாசம்,வர காமிக்ஸையே, வாங்கமுடியல..,அதிக விலையா இருக்கு, இன்னும் புதுசா டைஜஸ்ட் விட்டா, நாங்க லோன் போட்டுதான் காமிக்ஸ் வாங்கனும்னு,சொல்ல வைக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. //இரண்டோ; மூன்றோ கதைகளை ஒருங்கிணைத்து INTEGRAL ஆக வெளியிட்டால் எவ்விதமிருக்கும் folks //
   //மற்றபடி, நீங்க எத்தனை,புக் போட்டாலும் படிக்க நாங்க ரெடி.//

   +1

   Delete
  2. //பழைய காமிக்ஸில். கல்லாகட்டிவரும் காமிக்ஸ் மாபியாக்களுக்கு, பழைய காமிக்ஸ் டைஜஸ்ட் என்பது பேரிடிதான்.அவர்கள் யாரையாவது தூண்டிவிட்டு, மாசாமாசம்,வர காமிக்ஸையே, வாங்கமுடியல..,அதிக விலையா இருக்கு, இன்னும் புதுசா டைஜஸ்ட் விட்டா, நாங்க லோன் போட்டுதான் காமிக்ஸ் வாங்கனும்னு,சொல்ல வைக்கலாம்//

   நெத்த்த்த்தியடி

   Delete
  3. சுந்தர் @
   ஹாஹாஹா!!! செம்ம!!!

   Delete
 5. Replies
  1. //மாசாமாசம்,வர காமிக்ஸையே, வாங்கமுடியல..,அதிக விலையா இருக்கு,//

   ஜீ ஒரே தவணைல 4000,5000 கட்டுறதெல்லாம் எல்லாருக்கும் சாத்தியமானதுதானா..?

   அதற்குப் பதில், அடுத்தவருடம்னு இப்பவே சொல்லிட்டா, கொஞ்சம் கொஞ்சமாக் கட்டி புக் வாங்க முடியுமே..? கள்ள விற்பனை மாஃபியாக்கள் வித்தா நீங்க ஏன் வாங்கறீங்க..?
   கண்டிப்பா இத்தனாம் தேதி இந்த புக் ரிலீஸ்ங்கிற நம்பிக்கைய ஒவ்வொருத்தர் கிட்டயும் ஏற்படுத்தீட்டா, அப்புறம் ஏன் பெருகுது கள்ள விற்பனை..?
   (கொஞ்சம் இந்திரஜால் நடை போலிருக்கோ..?)

   Delete
 6. தெய்வமே. முதலில் மாடஸ்டி பிளைசி கலர் டைஜஸ்ட் கொண்டு வாருங்கள்.இது தங்களிடம் என்னுடைய வெகுநாள் வேண்டுகோள்.அருள் புரிய வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. சரவணகுமார் நீங்களும் தேவதை என்றே அழைக்கிறீர்கள் சூப்பர்

   Delete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. நாச அலைகள் அட்டை படம் அருமை... செமயா இருக்குது.

   Delete
 8. Lucky like digest:
  1.பிசாசுகள் பண்ணை
  2.பயங்கர பொடியன்2
  3.அதிரடி பொடியன்

  ReplyDelete
  Replies
  1. பிசாசுகள் பண்ணை - படித்து இல்லை! முயற்சிக்கலாம்!

   Delete
  2. மஞ்சள் சட்டை மாவீரன் அருமையான தேர்வுகள் நண்பரே

   Delete
  3. பயங்கர பாலம் - செம காமெடி கதை!

   Delete
 9. அனைவருக்கும் வணக்கம். டைஜஸ்ட் இதழ்கள் வெளியிடுவது நல்ல ஐடியா. Print run எண்ணிக்கை எவ்வாரு தீர்மாணிக்க போகிறிர்கள். முதல் டைஜஸ்ட் எப்போது வெளிவரும்

  ReplyDelete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. எடிட்டர் சார்,

  ஏற்கனவே மொழிபெயர்ப்பு பணிகளும், தயாரிப்புப் பணிகளும் உங்களைப் பாடாய் படுத்திவருவது புரிகிறது! எங்களுக்குக் கொடுத்த (சந்தா-Z) வாக்குறுதியின்பொருட்டு மேலும் இடுப்பொடிய மெனக்கெடுவதைவிட நீங்கள் மேற்சொன்னபடி 'லக்கி-டைஜெஸ்ட்', 'கேப்டன் பிரின்ஸ் டைஜெஸ்ட்' போன்ற அதிக சிரமம் வைக்காத சமாச்சாரங்களை இவ்வாண்டின் இறுதியில் களமிறக்கிவிடுங்களேன்? சந்தா-Zஐ வேண்டுமானால் அடுத்தவருடத்திற்கு நகர்த்திவைத்துக் கொள்ளலாம் எ.எ.தா.க! ( தீவிர Z - வெறியர்கள் மன்னிப்பார்களாக!)

  ReplyDelete
  Replies
  1. மாதம் ஓரு டெக்ஸ் புது வரவுகளை பாதிக்கிறது என்பதை ஆசிரியர் இந்த பதிவில் தெரிந்தோ தெரியாமலோ ஆசிரியர் கூறிவிட்டார்(அல்லது உளரி விட்டார்). ஓரு வருடம் z சந்தா தள்ளிப் போடுங்கள் என்று கூறுவதை வேதனை வேடிக்கை பார்ப்பதை விட வேறு என்ன செய்து விட முடியும்?.

   Delete
  2. டெக்ஸுக்காக சந்தா-Zஐ அன்னந்தண்ணி புழங்காமல் இந்த ஊரைவிட்டே ஒதுக்கி வைத்தாலும் கவலையில்லை! ;)

   Delete
  3. இத்தாலி விஜய் சூப்பர்
   செம

   Delete
  4. என்ன சொல்றதுன்னே புரில...இதான் திரிசங்கு சொர்க்கமா

   Delete
  5. @Erode Vijay Super Boss!
   இப்போ reprint 'எ இல்ல சந்தா Z அப்டின்னு ஒரு கேள்வி வந்தா....

   சந்தா Z இருக்கட்டும்....

   வேண்ணா...

   இந்த reprint digest வர போகுதுங்கரத பெருசா விளம்பரம் செஞ்சு next இயர் வச்சு செய்லாம்!
   (அதாவது reprint வர போகுத்னு ரீச் ஆனா போதும்.... கள்ள மார்க்கெட் down ஆய்டும்)

   என்ன நான் சொல்றது !

   Delete
 12. ஆசிரியருக்கும் காமிக்ஸ் தோழர்களுக்கும்& தோழிகளுக்கும் இனிய விடுமுறை நாள் வணக்கம்

  ReplyDelete
 13. இந்த வருடத்திற்கு ஏற்கனவே கேப்டன் பிரின்ஸ் டைஜஸ்ட் உண்டல்லவா????

  ReplyDelete
 14. //.... இரண்டோ; மூன்றோ கதைகளை ஒருங்கிணைத்து INTEGRAL ஆக வெளியிட்டால் எவ்விதமிருக்கும் folks ? இந்த விஷயத்தில் நம்மூர் பாணிகளில் “கூட்டணிகள்” சாத்தியமாகாது என்பதால் – ‘சிக்பில் டைஜெஸ்ட்‘; ‘லக்கி லூக் டைஜெஸ்ட்‘; ‘கேப்டன் பிரின்ஸ் டைஜெஸ்ட்‘ என்று அமைத்திடலாம்! ...//

  சூப்பர்! இதை.. இதைத் தானே.. ரொம்ப நாளைக் கேட்டுக்கிட்டு இருக்கோம் ... சாத்தியமானால், உடனடியாகச் செயல்படுத்தவும்.

  முடிந்தால், கீழ்வரும் DIGEST-கள் முதலில் :)
  - சுஸ்கி & விஸ்கி digest
  - அலிபாபா (Ali Beber) digest
  - சிக் பில் digest
  - காரிகன் digest
  - விங் கமாண்டர் ஜார்ஜ் digest
  - ரிப் கிர்பி digest

  முக்கியமாக.. டெக்ஸ் வில்லர் digest ஹி ஹி :)

  ReplyDelete
  Replies
  1. ///- சுஸ்கி & விஸ்கி digest
   - அலிபாபா (Ali Beber) digest///...+100000000....

   //முக்கியமாக.. டெக்ஸ் வில்லர் digest ஹி ஹி :)////--+200000000000000

   Delete
  2. - சுஸ்கி & விஸ்கி digest
   - அலிபாபா (Ali Beber) digest
   - சிக் பில் digest
   --முக்கியமாக.. டெக்ஸ் வில்லர் digest ஹி ஹி :)

   +1 Billions of Billions Bro :)!

   Delete
 15. லக்கிலூக், சிக்பில், பிரின்ஸ், ஜானி, மாடஸ்டி, சு-வி - டைஜெஸ்ட்டுகள் (என்னைப் போலவே) பலரது நாக்கில் பிரவாகம் ஏற்படுத்தப் போவது உறுதி! சளப்... சளப்... சளப்...

  ReplyDelete
 16. ரிப்போர்ட்டர் ஜானி பிரின்ஸ் லக்கி லூக் மாடஸ்டி டைஜஸ்ட்க்கு + 1000000

  ReplyDelete
 17. எடிட்டர் சார் நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் அதற்கு கட்டுப் படுவோம் உடனே மறுபதிப்பு வேலையை ஆரம்பியுங்கள்

  ReplyDelete
 18. ஆசிரியருக்கும் காமிக்ஸ் தோழர்களுக்கும்& தோழிகளுக்கும் இனிய விடுமுறை நாள் வணக்கம்

  ReplyDelete
 19. விஜயன் சார்,
  சந்தா-Z - கண்டிப்பாக வேண்டும். தோர்கல் கதை இப்போதுதான் சுடுபிடித்தகையோடு அதன் ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்து உள்ள நேரத்தில் தோர்கலை தொங்க விட வேண்டாம் என மன்றாடி கேட்டு கொள்கிறேன். மறுபதிப்பை வரவேற்கிறேன்... ஆனால் ஒரேடியாக மறுபதிப்பு மறுபதிப்பு என்பதை விரும்பவில்லை. அதே நேரம் மறுபதிப்புக்காக இந்த வருட திட்டமிடலில் உள்ள Z-சந்தாவை அடுத்த வருடதிற்கு கொண்டு செல்லும் எண்ணம் ஏதும் இருந்தால் அதனை தயவு செய்து தவிர்த்துவிடுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தோர்கல் - அப்படியொன்றும் கடினமான மொழிபெயர்ப்புப் பணியாகத் தெரியாத காரணத்தால் 'Z சிரமங்கள்' இதில் சேர்த்தியாகாது!

   தோர்கல் - நிச்சயம் வேண்டும்!

   Delete
  2. //தோர்கல் - நிச்சயம் வேண்டும்!//
   +1

   Delete
  3. காமிக்ஸ்ஸின் பரம விரோதியான என் மனைவிக்கு கூட தோர்கல் மட்டும் பிடிக்கிறது.

   Delete
  4. டியர் எடிட்டர்

   படிக்க இன்னும் எவ்வளவோ கதைகள் இருக்கும்போது அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பது வேண்டாமே என்பது என் கருத்து. சென்ற வருட ஹிட் ஆன Thorgal இவ்வருடம் 4 மாதங்களாகியும் ஒரு இதழ் கூட வராமல் இருக்கும் நிலையில் - இனி வரும் Thorgal கதைகள் சுவாரஸ்யமானவை என்ற பின்னணி இருக்கும்போதே இவ்வாறு வெளிவராமல் இருக்கும்போது - முத்து மினி போன்ற பழைய இதழ்கள் களம் காணுவதே சற்று மிகை எனும்போது - மீண்டும் மீண்டும் பழைய வெளியீடுகள் வேண்டாமே ப்ளீஸ் :-)

   சந்தா - Z வராவிட்டாலும் (இந்த ஆண்டு) Thorgal கதைகளை புத்தகக் கண்காட்சி காலங்களில் வெளியிடவும் ப்ளீஸ் !

   Delete
  5. This comment has been removed by the author.

   Delete
  6. விஜயன் சார், தோர்கல் அடுத்த வருடம் என தள்ளி போனால் என்ன நடக்கும்: போன வாரம்தான் தெரிந்தோ தெரியாமலோ வீட்டுக்கு புதுசா ஒரு பெரிய பூரிகட்டை வாங்கி கொடுத்தேன், தோர்கல் மட்டும் இந்த வருடம் இல்லேன்னா அந்த பூரிகட்டையால செமமாத்து கூடிய சீக்கிரமே வாங்க எனக்கு முழுதகுதி கிடைத்து விடும் :-); அதே நேரம் எங்கள் விட்டு கிட்சென் பக்கம் இருந்து உங்களுக்கு காரசாரமான எல்லா மசாலும் கலந்து ஒரு கடிதம் வரும் என்பதை சொல்ல கடமைபட்டு உள்ளேன்.

   Delete
 20. காலை வணக்கம் எடிட்டர் சார்.

  ReplyDelete
 21. எடிட்டர் சார் வேறெந்த சிந்தனையும் இல்லாமல் தியான நிலையில் எங்களை மகிழ்விக்க செயல்படும் உங்களது வேளைபளு பாதியளவாவது குறைந்திருக்கும் என நம்புகிறேன். மாத இறுதி நாட்களை எண்ணி நெஞ்சம் படபடக்க காத்திருக்கிறேன். சார் இணையத்தில் மட்டுமே பேசப்படும் முத்து மினி காமிக்ஸ் பற்றிய செய்தி பரவலாக பலரை சென்றடையாமல் உள்ளதை அனுபவபூர்வமாக உணரமுடிகிறது. 6 புத்தகம்₹1800க்கு விற்பனை செய்த தை வாங்கியவர்கள் தவிர்த்து அதனை வாங்க இயலாமல் உள்ள பலருக்கு அதே புத்தகங்கள்₹120 க்கு கிடைக்கப்போகிறது என்ற செய்தி பலரை எட்டாமல உள்ளது .அது பற்றிய விளம்பரங்கள் ரெகுலர் இதழ்களில் வெளிவராத து கூட காரணமாக இருக்கலாம். எனவே நமது ரெகுலர் இதழ்கள் மற்றும் பலரது ஆவலைதூண்டி அநேகமாக க்ளைமாக்ஸை நெருங்கிக் கொண்டுள்ள என் பெயர் டைகர் இதழிலும் முத்து மினி காமிக்ஸ் விளம்பரம் கண்டிப்பாக தேவை. க்ரே கூட்டத்தினரை களையெடுக்கும் முயற்சி முழுவெற்றி பெறவேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் எனது பதிவு.மற்றபடி உங்களுக்கு அறிவுரை சொல்வதாக எண்ணவேண்டாம். உங்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு வெற்றியும் உங்களை தொடர்ந்து வரும் எனக்கும் வெற்றி கிடைத்த மனநிறைவுதான்.

  ReplyDelete
 22. சார்,
  //மூன்றோ-நான்கோ மாதங்களுக்கொரு ‘டைஜெஸ்ட்‘ //
  என்பது கொஞ்சம் அதிக இடைவெளிப் போல் தெரிகிறது. அதை 2 மாதத்திற்கொருமுறை அமைத்தால் சரியாகயிருக்கும் எ. எ. க. வருகின்ற ஜூலையில் ஆரம்பித்து இந்த வருடம் முடிய 3 டைஜெஸ்ட் வெளியிடலாமே!

  இதழின் விலை ரூ.250/- (based on print run)
  3 / 4 கதைகள்
  டைஜெஸ்ட் என்பதால் Hard Bound அவசியம்.

  அப்படியே, இந்த வருஷம் எங்க தானைத் தலைவர், தங்கத் தலைவர் ரோஜரை டைஜெஸ்ட் மூலமாக உள்ளே நுழைத்து விட்டீங்கனா புண்ணியமா போகும். (அதிலும் அந்த 'மர்ம கத்தி' வண்ணத்தில் கைப்பற்ற கைகள் இப்போதே பரபரக்கின்றன.)

  ஆமா, எங்கே போனாலும் இந்த மாடஸ்டி புள்ள வேற கால்களையே சுற்றி சுற்றி வருகிறதே, என்னவாம்...

  ReplyDelete
  Replies
  1. // ஆமா, எங்கே போனாலும் இந்த மாடஸ்டி புள்ள வேற கால்களையே சுற்றி சுற்றி வருகிறதே, என்னவாம்... //

   நம்ப ஆசிரியரும் மாடஸ்டி ரசிகர் மன்றத்தில் ஒருவர் என்பதை வேறு உங்களுக்கு சொல்ல வேண்டுமா என்ன :-)

   Delete
 23. 'நி1-நி2' மறுபதிப்பு - பலப்பல புதிய மாற்றங்களோடு வரயிருப்பதில் சந்தோசமடைகிறோம்! "சமீபத்தில் வந்த கதைதானே; அதற்குள் மறுபதிப்பு தேவையா?" என (நியாயமான) கேள்வியெழுப்பிய நண்பர்களையும் இந்த 'மாற்றங்கள்' சமாதானப்படுத்திடும்!

  ReplyDelete
  Replies
  1. அதிலும் இந்த வேளைப் பளு நடுவுலயும் சத்தமில்ஆம பழச போடு பாண்டின்னு நழுவாம புதுச தரணும்கிற தரமான மனசுக்கு என்னத்த தர/சொல்லணுண்ணு சத்தியமா தெரியல சார்

   Delete
 24. பிரின்ஸ், லக்கி லூக், ரிப்போர்ட்டர் ஜானி ஸ்பெஷல் முதலிலேயே வந்து விட்டதால், சுஸ்கி விஸ்கி, மாடஸ்டி பிளைசி ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

  ReplyDelete
 25. விஜயன் சார், Detective-digest என்ற சில பல வருடம்களுக்கு முன் நீங்கள் அறிவித்து இருந்தீர்கள். Digest என்பதற்கு Detective-digest என்பது ஒரு ஆரம்பபுள்ளி, எனவே Digest என்ற புதிய தடம் ஆரம்பிக்கும்பொழுது இவர்களுக்கும் மறக்காமல் ஒரு வாய்ப்பு கொடுங்கள்.

  ReplyDelete
 26. வி.பி.ப. - அப்படினா என்ன? :-(

  ReplyDelete
  Replies
  1. வி.பி.ப - விஜயனின் பிறந்தநாள் பரிசு?

   Delete
  2. விழி பிதுங்கும் படலம்....

   Delete
  3. Erode VIJAY @ லொள்ளு

   selvam abirami @ இதுதான் சரி என நினைக்கிறன்!

   Delete
 27. அவரவருக்கு என்ன வேண்டுமோ அதை ஆசிரியரிடம் கேளுங்கள். அதை விடுத்து மாடஸ்டியின் மாமியார் போல நடந்து கொள்ளாதீர்கள்

  ReplyDelete
  Replies
  1. // மாடஸ்டியின் மாமியார் போல நடந்து கொள்ளாதீர்கள் //
   ஹா ஹா... LOL

   Delete
 28. ஆசிரியரே கையைகொடுங்கள். மாத ஆரம்ப தேதியில் என்னை மயக்கம்போட வைக்கும் இதழ்கள் ஒரு பக்கமெனில் டைஜஸ்ட் பற்றிய அறிவிப்பு நேரே சிவகாசிக்கே வந்து நித்திரையிலிருந்து உங்களை எழுப்பி வலிக்க வலிக்க கைகுலுக்க தோன்றுகிறது.. உங்களுக்கு தோதான வழியில் அள்ளிக் கொடுங்கள் சார். பெற்றுக் கொள்ள நான் ரெடி.இந்த அறிவிப்பை உங்களது பிறந்த நாள் பரிசாக எங்களுக்கு அறிவிப்பதாகவே எடுத்துக்கொள்கிறேன். நாச அலைகள். ஒரிஜினல் அட்டைபடத்தோடு....பேஷ்..பேஷ்...ரொம்ப நன்னாருக்கு என்று உசிலை மணியாரைப்போன்று. பாராட்டத்தோன்றுகிறது.முதல்பக்க குறையா? இவ்வளவு நிறைவு இருக்கையில் குறையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல சார். இவ்வளவு அதிரடிகளை ஒரே பதிவில் போட்டு தாக்கி விட்டீர்களே.....இனி தூங்கியமாதிரிதான். மிச்சமுள்ள இரவுமுழுவதும் படுக்கைைய பிராண்டிக்கொண்டே மறுபதிப்பு பற்றிய சிந்தனையில்தான் கழிக்கவேண்டும். இன்னும் புதிது புதிதாக நீங்கள் யோசிக்க தடையாய் நிற்பது உங்களது கிட்டங்கியில் தேங்கிநிற்கும் புத்தகங்கள்....கவலை வேண்டாம் சார் புத்தகவிழாவின் போது உங்களது கிட்டங்கி காலியாவது உறுதி.இறுதியாக நீங்கள் காட்டிய 7 டெக்ஸ் அட்டைகளில் தேர்வானது எதுவென்று தெரிந்து கொள்ள இன்னும் ஐந்ந்ந்ந்து நாட்கள் காத்திருக்கவேண்டுமா? சஸ்பென்ஸை கொஞ்சம் உடையுங்களேன். Please....

  ReplyDelete
  Replies
  1. ///நாள் பரிசாக எங்களுக்கு அறிவிப்பதாகவே எடுத்துக்கொள்கிறேன். ///

   +1

   Delete
 29. /// இந்த மறுபதிப்பின் proof reading பணிகளில் ஒத்தாசை செய்தது நமது நண்பர் பெங்களுர் பரணியே! ///

  அடடே! வாழ்த்துகள் பரணி அவர்களே!

  இன்னும் நிறைய புத்தகம்களில் புரூஃப் ரீடிங் செய்து வெளிஈட வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கள் பரணி நண்பரே!!!

   Delete
  2. வாழ்த்துகள் பரணி!!!

   Delete
  3. வாழ்த்துக்கள் நண்பர் பரணி

   Delete
  4. வாழ்த்துகள் பாஸ்!

   Delete
  5. வாழ்த்துக்கள் நண்பரே......அடுத்து ?;-)

   Delete
  6. நன்றி நண்பர்களே. ப்ரூப் ரீடிங் புதிய அனுபவம், ஆனால் எளிதான வேலையாக தெரியவில்லை. ஒவ்வொரு முறை படிக்கும் போது புதிய பிழைகள் தட்டுபட்டது இதனை இன்னும் சிறப்பாக செய்து இருக்கலாமே என்ற எண்ணம் தோன்றியது (ஆசிரியர்பாடை நினைத்து பார்த்து கொண்டேன்). எனக்கு சந்தோசம் கொடுத்தது இந்த ப்ரூப் ரீடிங். என்னால் முடிந்த அளவு ப்ரூப் ரீடிங் செய்துள்ளேன், மேலும் ப்ரூப் ரீடிங் வரும் காலம்களில் வாய்ப்புகள் கிடைத்தால் சிறப்பாக செய்ய ஆர்வமுடன் உள்ளேன்.

   Delete
 30. வணக்கம் எடிட்டர் சார்....!

  வணக்கம் நண்பர்களே....!

  ReplyDelete
 31. டைஜஸ்ட்..! நல்ல முயற்சிதான்..! ஆனால்..ஏற்கெனவே கால் கட்டை விரலை வாயில் திணிக்கும் முயற்சிகளில் இருக்கும் போது,மற்றொரு கால் விரலையும் திணிக்க முயற்சிப்பது போல் படுகிறது..!இருப்பினும் அதன் சாதக,பாதகங்களை நீங்கள் யோசிக்காமல் இருந்திருக்க மாட்டீா்கள்..! நடைமுறைக்கு கொணா்வது இவ்வருடமோ அடுத்த வருடமோ..அது உங்கள் விருப்பம்..!சந்தா இஸட்-ன் பிரதானமானவன் தோா்கல் கண்டிப்பாக வேண்டும்..!இதில் தாங்கள் எந்த சமாதானமும் சொல்லி சமாளிக்கக் கூடாது..! டெக்ஸைப் போலவே தோா்கலுக்கும் ஒவ்வொரு மாதமும் தனிப் பாதையை உருவாக்கி மாதம் ஒரு தோா்கல் என்றால் கூட பரம சந்தோசமே..!!

  ReplyDelete
 32. நாச அலைகள்!-அட்டைப்படம் அருமை!

  ReplyDelete
 33. சுஸ்கி-விஸ்கி,அலிபாபா,சைமன் என மறுபதிப்பு காணாத நாயகா்களுக்கு டைஜஸ்டில் முன்னுாிமை தரலாம்..!

  ReplyDelete
 34. என்ன சார் காலையிலேயே அதிர்ச்சி இரத்தப்படலம் இப்போ இல்லையா சார் ...? ப்ளீஸ் அப்படிமட்டும் சொல்லிவிடாதீர்..

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. அன்புடன் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் இரத்தப்படலம் வெளிவர ஆதரவு தெரிவிப்போம் ப்ளிஸ் இப்போ விட்டா மீண்டும் அது மீண்டுவர முடியாது நம்மில் பலர் எதிர் நோக்கும் ஒரே மிகப்பெரிய ஒரே கதை அல்ல காவியம் தயவுசெய்து ஆதரவு தாருங்கள்.எடிட்டர் சார் தயவுசெய்து ஒரு முன்பதிவு மற்றும் ஒரு அறிவிப்பு தாருங்கள் என் சார்பில் 30 புத்தகங்கள் இப்போதே குறித்துகொல்லுங்கள் இது சத்தியமான வார்த்தை சார் ப்ளீஸ் சத்தியமா காலை முதல் மனசே சரியில்லை சார் .

   Delete
  3. அன்புடன் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் இரத்தப்படலம் வெளிவர ஆதரவு தெரிவிப்போம் ப்ளிஸ் இப்போ விட்டா மீண்டும் அது மீண்டுவர முடியாது நம்மில் பலர் எதிர் நோக்கும் ஒரே மிகப்பெரிய ஒரே கதை அல்ல காவியம் தயவுசெய்து ஆதரவு தாருங்கள்.எடிட்டர் சார் தயவுசெய்து ஒரு முன்பதிவு மற்றும் ஒரு அறிவிப்பு தாருங்கள் என் சார்பில் 30 புத்தகங்கள் இப்போதே குறித்துகொல்லுங்கள் இது சத்தியமான வார்த்தை சார் ப்ளீஸ் சத்தியமா காலை முதல் மனசே சரியில்லை சார் .

   Delete
  4. இரத்தப்படலம் வண்ணத்தில் கேட்டு போராட்டம் நடத்தவும் தயார்!

   Delete
  5. ஆஆஆஆ நெஞ்சு வலிக்தே

   ரத்தப்படலம் வண்ணத்தில் படிச்சா சரியாயிடும்

   Delete
  6. @ மந்திரி

   ஹாஹாஹா! செம!

   Delete
  7. This comment has been removed by the author.

   Delete
 35. இரத்தப்படலம் கண்டிப்பாக இந்த வருடத்திலேயே முழு வண்ணத்தில் வர வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. +111111111
   அதுவும் ஒரே புக்காக என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் நண்பரே...

   Delete
  2. கண்டிப்பாக அன்பாக உறுதியாக எப்படியோ வரவேண்டும் நண்பர்களே ஆதரவு போதவில்லை அனைவரு தங்கள் ஆதரவை தெரிவியுங்கள்

   Delete
  3. "கண்டிப்பாக" வர வேண்டும்........

   Delete
  4. எனக்கு என்னமோ ரத்தப் படலம் வண்ண மறுபதிப்பு அடுத்த வருடம் ஏப்ரலில் தான் வெளிவர சாத்தியம் என்று மனசுக்குள் ஒரு பஜ்ஜி சொல்கிறது.

   Delete
 36. இனிய காலை வணக்கம் எடிட்டர் சார்!!!
  இனிய காலை வணக்கம் நண்பர்களே!!!

  ReplyDelete
 37. என்னாது மறுபடியும்'இரத்தப்படலம்' தள்ளிப்போகுதா :-(:-(:-(:-(:-(:-(:-(:-(:-(:-(:-(:-(:-(

  ReplyDelete
  Replies
  1. இல்லை அப்படி நடக்க நாம் விடக்கூடாது

   Delete
 38. சபைக்கு நமஸ்காரம்!!!

  ReplyDelete
 39. முன்ன ஒரு முறை சொன்ன மாதிரி டைஜெஸ்ட் தான் பெஸ்ட் பாஸ்!
  யாருக்கு எப்போ என்ன வேணுமோ வாங்கற சாய்ஸ் இருக்கு!

  ஹீரோ மட்டும் இல்லாமல்(அல்லது reprint ஹீரோ தவிர்த்து)
  மினி லயன் 1 டு 10, 10 டு 20, 20 டு 30, etc
  ஜூனியர் லயன் 1 டு 10, 10 டு 20, 20 டு 30, etc
  திகில் 1 டு 10, 10 டு 20, 20 டு 30, etc
  லயன் 1 டு 10, 10 டு 20, 20 டு 30, etc
  முத்து 1 டு 10, 10 டு 20, 20 டு 30, etc
  போலவும் செய்தால் நன்றாக இருக்கும் சாரே!

  ReplyDelete
  Replies
  1. அருமையான யோசனையாகப்படுகிறது.ஆனால் எடிட்டர் பிரான்காே-பெல்ஜியன் கதைகள் என்று கூறுகிறாரே....

   Delete
 40. //கதையிலோ மைக் கிடைத்த அத்தனை பேரும் பேசிடும் நமது தேர்தல் மேடைகளைப் போல கதை மாந்தர்கள் அவ்வளவு பேரும் பேசிக் கொண்டே போவதை போல...!!!!!! //
  ஹா....ஹா......
  அட்டகாசம் ஆசிரியரே.....
  Typycally Editor......

  ReplyDelete
 41. சார் மாயாவி அட்டை படம் கிளாஸ்...சூப்பர்... புரட்டிக் கொண்டே வரும் போது லக்கியை முடித்து விட்டார்களே 70தானய்யா ஆவுதுன்னுன்னு மின்னல் வேகத்தில் விசனம் மறையஅட்ட படம் மேகமற்ற நீலவான பின்னனியில் மழையினூடே லக்கி இதை விட சந்தோசம் எதிலடாஇருக்கு ஆடுறா ராமா என மனக்குரங்கை ஆடச் செய்ய...காட்டிய அந்த முதல் பக்கம் லக்கி லூக் விழுந்து கிடப்பதை கண்டதும் மனதை உலுகக்கியது நிஜமெனில் , அடுத்த நீல வான் ...ஊற்றறும் மழையினூட நனைந்து செல்லும் அந்த நீல வண்ணத்தால் மட்டுமே முழு பக்கமுமே செறிவு பெற்றிடினும் அதிக வண்ண பக்கங்கள்கூட அந்த சந்தோசத்தை வழங்குமா என்பது ஆச்சரியமே...

  ReplyDelete
 42. ///இது லக்கி லூக்கின் 70-வது ஆண்டென்பதால் லக்கியின் Top 3 Classic கதைகளைத் தேர்வு செய்தால் - அவற்றை ஏதேனும் ஒரு புதுக்கதையோடு இணைத்தும் வெளியிடலாம் ;///

  மேடையில் ஒரு மன்மதன்
  கொச் வண்டியின் கதை
  கௌபாய் எக்ஸ்ப்ரஸ்
  அதிரடிப் பொடியன்
  மனதில் உறுதி வேண்டும்
  ஜெஸ்ஸி ஜேம்ஸ்

  பகவானே!!!!, என்னால முடியல. எதைச்சொல்ல, எதை விட,
  எடிட்டர் சார்,
  எல்லா லக்கி கதைகளுமே சூப்பர் டூப்பர் ஹிட்ஸ்தான் எனும்போது,, நீங்களே சீட்டுக் குலுக்கிப்போட்டு தேர்ந்தெடுத்து விடுவதே தேவலை என்பேன் சார்!

  ReplyDelete
  Replies
  1. மூன்றுதானென்றல்
   மேடையில் ஒரு மன்மதன்
   மனதில் உறுதி வேண்டும்
   ஜெஸ்ஸி ஜேம்ஸ் ஓகே வா
   கிட்

   Delete
  2. ஜெஸ்ஸி ஜேம்ஸ் ரொம்ப சுமாரான கதை என்னை பொருத்தவரை!

   Delete
 43. ஆர்டின் & டாக்புல் டாப்ஸ் (அந்த டாப்ஸ் இல்லிங்கோ. ஹிட்ஸ்)


  தலைவாங்கும் தேசம்
  மலையோடு மல்யுத்தம்
  மிஸ்டர் மஹாராஜா
  விசித்திர ஹீரோ (மாண்டனா கிட்)
  அதிரடி மன்னன்

  ங்ஙே! இந்த லிஸ்ட்டும் ரொம்ப நீளமா போகும் போலிருக்கே!!!!!

  ReplyDelete
  Replies
  1. இரும்புக் கௌபாய் ; விண்ணில் ஒரு எலி....! மறந்துட்டீங்களே அப்பு !!

   Delete
 44. சுஸ்கி விஸ்கி :
  பயங்கர பயணம்
  பேரிக்காய் போராட்டம்
  ராஜா ராணி ஜோக்கர்
  (ஹைய்யா! இதுதான் சுலபமான லிஸ்ட். ஏன்னா அவ்வளவுதானே மறுபதிப்புக்கு உள்ள கதைகள்)

  இவற்றோடு வெளியிட்டிராத புதுக்கதைகளை நிறைய்ய்ய்ய சேர்த்துக் கொள்ளுங்கள் சார்.

  ReplyDelete
  Replies
  1. அது ராஜா ராணி ஜாக்கி ரவிகண்ணன் ஜோக்கர் நினைப்பிலியே இருங்க ;-)

   Delete
 45. நாச அலைகள் அட்டைபடம் பழைய ஒரிஜினல் அட்டை எனினும் மனதை அள்ளுகிறது சார் ...அருமை ....

  *****
  டைஜஸ்ட் முடிவு அருமை சார் ...இதுவரை மறுபதிப்பில் வராத சுஸ்கி விஸ்கி மற்றும் மாடஸ்தி அவர்களுக்கு முதலில் முன்னுரிமை கொடுத்தால் நலம் பயக்கும் ...சுஸ்கி விஸ்கி இதுவரை நமது இதழ்களில் வந்த அனைத்து கதைகளுடனும்....மாடஸ்தி கதை எனில் மறவாமல் மர்ம எதிரி கதையில் வந்த மாடஸ்தியின் பிறப்பு வளர்ப்பு பற்றிய மாடஸ்தியின் கதையையும் இனைத்து வந்தால் சிறப்பாக இருக்கும் சார் ..

  ReplyDelete
  Replies
  1. Paranitharan K : //சுஸ்கி விஸ்கி மற்றும் மாடஸ்தி அவர்களுக்கு முதலில் முன்னுரிமை கொடுத்தால் நலம் பயக்கும் ...//

   அட..இளவரசி மீது என்னவொரு பயபக்தி ...மரியாதை !

   Delete
 46. ரிப்போர்ட்டர் ஜானி, கேப்டன் ப்ரின்ஸ் கதைகளை பொறுத்தவரையிலும் வரிசைகிரமமாக மும்மூன்று கதைகளை டைஜஸ்டாக வெளியிடலாம் சார்.

  மாடஸ்டி ப்ளைசி ., . . , ,

  மாடஸ்டிக்கு நான் ஒண்ணு விட்ட மச்சான்டார் என்பதால் நோ கமெண்ட்ஸ்.
  (சகுனமே பார்ப்பதில்லை எனும்போது, பூனை இடம் போனாலென்ன வலம் போனாலென்ன?) :)

  ReplyDelete
 47. ஜாகஜ வீரர் ரோசர் & சைமன்

  ;) ;) :-)

  ReplyDelete
 48. கொரில்ல சாம்ராஜ்ஜியம் பழைய படி வண்ணத்திலியே அவதாரம் எடுக்க வைப்பதற்கு காமிக்ஸ் நண்பர்கள் சார்பாக பெரிய. நன்றிகள் சார் ..;-)

  ReplyDelete
 49. சார் வசனங்களை வெகவாய் ரசிக்கும் எனக்கு speecha குறைங்கடா எனும் தங்கள் அயற்ச்சி அதிர்ச்சியளித்தாலும் டைகர் முழங்க போகிறார் என்பதுறுதி என சந்தோச படுகிறேன் .தங்கள் வேளைப் பளு zல் பின்னடைவை ஏற்படுத்த காரணம் சிறப்பாய் தரணுமே என்ற தங்கள் ஆதங்கம் விற்பனை எகிற வேண்டும் என கடவுளை வேண்டச் செய்ய தவறவில்லை....
  வேதாளனும் வருவார் இந்த ஒற்றை சொல் போதும் சார்...கிளாசிக் கதைகள் எனும் போது இரத்தப்படலம் வெகு விரைவில் என வாயால் சொல்லியது காதில் உரக்க ொலிக்கத் தவறவில்லை சாரே...சுஸ்கியை முதலில் களமிரக்கினால் சிறுவர்களை லக்கியை போல கவரலாமே சார் ... மாடஸ்டி மறு பதிப்பில் கத்தி முனையில் மாடஸ்டி , மா இ இஸ்தான்புல் , மரணக் கோட்டை....

  ReplyDelete
 50. Replies
  1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : கொஞ்சம் கூடுதலாய் நேரம் எடுத்துக் கொள்கிறேன் நண்பரே ! ரொம்பவே வித்தியாசமான சவாலாய் உள்ளது இந்த இதழ் !!

   Delete
 51. ///உங்களுக்குத் தோதானதொரு நேரத்திற்கு நானும் ஆன்லைன் வந்து விட்டேனெனில் இதழ்களை Surf excel போட்டு சலவை செய்து அலசிப் பார்த்திடலாமே? What say all? Maybe காலை 10-12 ? ///

  10 to 12 மணியாம்! நண்பர்களே... விடாதீங்க... அமுக்குங்க!

  ReplyDelete
 52. ஆதர்ஷ ஹீரோக்களின் டைஜஸ்ட் வடிவத்தை வரவேற்கிறேன்.எங்களின் பல நாள் கனவும் இதுதானே.....!
  குறைந்த பிரிண்ட் ரன் என்பதால் விலை கூடும்தான்.ஆனால் அற்புதக்கதைகளை அட்டகாசமான தரத்தில் ரசிக்க அந்த கூடுதல் வில பெரிய விஷயமே இல்லை.நம் காமிக்ஸ் பயணத்தில் என்றும் உங்களுடன் கைகோர்த்து வருவோம்....!

  ReplyDelete
 53. இந்த லக்கி அட்டய பார்க்க பார்க்க பரவசம்...
  அந்த மின்னல்..தவளை சந்தொசம்...இத்தனை அற்புதங்கள் இருக்கா...மறுபதிப்புகளிடத்தில் இவற்றை வெளியிடலாம் என நீங்கள் கத்தியததன் நியாயம் புரிகிறது சார் ஒவ்வொரு புதிய ெளியீடுகள் குறித்தும் தாங்கள் எழுதும் போதும்...z புஷ்டியாக வரணுமென வேண்டாத நாளிலை...

  ReplyDelete
  Replies
  1. புரூஃப் ரீடிங் செய்யும் பெங்களூரு பரணி எங்கிருந்தாலும் வரவும்! :D

   Delete
 54. அன்பு எடிட்டர்

  க்ரே மார்க்கட்டின் முக்கிய வரவினமே பழைய முத்து காமிக்ஸ்தான் எனும் போது அவைகளை வெளியிட தரும் முன்னுரிமையே கி.ம வை கட்டுப்படுத்தும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

  ReplyDelete
  Replies
  1. Senthil Madesh : நிச்சயமாய் அவையும் நமது ரேடாரில் உண்டு சார் !

   Delete
 55. ஞாயிறு வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே.

  ReplyDelete
 56. காலையிலேயே 120 க்கு மேற்பட்ட பின்னுட்டங்களா வாவ் அருமை.

  ReplyDelete
 57. டெக்ஸுக்காக சந்தா-Zஐ அன்னந்தண்ணி புழங்காமல் இந்த ஊரைவிட்டே ஒதுக்கி வைத்தாலும் கவலையில்லை! ;


  #####

  இதை அன்னந்தண்ணி சாப்பிட்டு கொண்டே நானும் வழிமொழிகிறேன் செயலாளர் அவர்களே ....;-)

  ReplyDelete
  Replies
  1. Paranitharan K : சும்மா ரீல் விடாதீங்க தலீவரே....நீங்களாவது அன்னம் சாப்பிடுவதாவது ! அது தண்ணீர் குடித்தே வளர்ந்த உடம்பல்லவா ?

   Delete
 58. இப்போ reprint 'எ இல்ல சந்தா Z அப்டின்னு ஒரு கேள்வி வந்தா....

  சந்தா Z இருக்கட்டும்....

  வேண்ணா...

  இந்த reprint digest வர போகுதுங்கரத பெருசா விளம்பரம் செஞ்சு next இயர் வச்சு செய்லாம்!
  (அதாவது reprint வர போகுத்னு ரீச் ஆனா போதும்.... கள்ள மார்க்கெட் down ஆய்டும்)

  என்ன நான் சொல்றது !

  ReplyDelete
  Replies
  1. // இந்த reprint digest வர போகுதுங்கரத பெருசா விளம்பரம் செஞ்சு next இயர் வச்சு செய்லாம்!
   (அதாவது reprint வர போகுத்னு ரீச் ஆனா போதும்.... கள்ள மார்க்கெட் down ஆய்டும்) //

   Good suggestion!!

   Delete
  2. நண்பர்களே....இது சந்தா Z (or ) reprints ? என்ற கேள்வியே அல்ல ! மறுபதிப்புகள் மூச்சு விட சிறு அவகாசம் தரக்கூடுமே என்ற ஒற்றை நோக்கமே இந்தத் தருணத்தில் !

   Delete
 59. சார்....லயன் ஆரம்ப வரிசை நண்பர்கள் பலரிடம் இல்லை....
  மாடஸ்டி IN இஸ்தான்புல்...
  மாஸ்கோவில் மாஸ்டர்...
  என லயன் கதைகளின் மறுபதிப்பை கொண்டுவரலாமே.....!!!!

  ReplyDelete
  Replies
  1. AHMEDBASHA TK : ஜான் மாஸ்டரை இரண்டாம் சுற்றுத் தேர்வில் இணைத்துக் கொள்வோம் சார் !

   Delete
 60. ஆசிரியரின் எந்த முயற்சிக்கும் (எனது)
  எங்கள் ஆதரவு என்றும் உண்டு
  வாராவாரம் ஆரவாரம் வேண்டும்.
  அதற்க்கு மாதம் 4 சந்தா வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. durai kvg : இப்போதே மாதம் 4 சந்தா உண்டு தானே நண்பரே ?

   Delete
 61. I wish happy Easter to C.John Simon, Cinnapparaj Jesiyan, Prince Immanuel, Jebadoss, S.Jeyaseelan Peter, John Victer, S.Kerubakaran and all the Christians those who are following lion muthu comics

  ReplyDelete
 62. சார் உங்களது மறுபதிப்பு டைஜஸ்ட் என்ற செய்திகேட்டு ஆனந்தகொண்டாட்டம் போட்ட என்மனது வழக்கம் போல ஆமை ஓட்டுக்குள் புகுவதைபோல புகுந்து சில சிந்தனைகள ஓடவிட்டது.அந்த சிந்தனையிலிருந்து சிலதுளிகள் இதோ..... டைஜஸ்ட் என்றால் குறைந்த து ஐந்து கதைகள் கொண்ட தொகுதியாகவேனும் இருக்கவேண்டும். அதிலும் வண்ணம்(ஆஹா)வேறு! இப்படி கற்பனையாக நினைக்கையில் மனம் ஆனந்தகூத்தாடினாலும் குறைவானதொரு printrun எனும் போது அதன் விலை சற்றுகூடுதலாகவே இருக்கும். என்னைப்போன்ற வாசகர்கள் நீங்கள் கால் பதித்த தடத்திலே மறுபேச்சில்லாமல் கால்பதிக்க தயாரென்றாலும் விலை அதிகம் என்ற வார்த்தைகள் ஓங்கி எழும் வாய்ப்பும் உள்ளது. ஏற்கனவே என் பெயர் டைகர் அறிவிப்பின்போது அதன் விலையைபற்றி எழுந்த விவாத த்தின் விளைவாக கருப்புவெள்ளை, வண்ணம் என இரண்டு குதிரைகளில் சவாரி செய்யும் நிலமை உங்களுக்கு உருவானது. அதன் அறிவிப்பு வெளியாகி இத்தனை மாதமாகியும் முன்பதிவு நிர்ணயித்த இலக்கை எட்டுவது கடினமான காரியமாக இருக்கும்போது தற்போது மறுபதிப்பு வண்ணத்தில் சற்று விலை கூடுதலாக எனும்போது அதன்முன்பதிவுக்கு எத்தனை காலமெடுக்கும் என யோசிக்கவைக்கிறது.அதன் விளைவாக கூத்தாடிய மனதை கும்மாங்குத்தை குத்தி கீழே தள்ளிவிட்டது.இதனால் நீங்கள் முதலில். எத்தனை கதைகள் (வண்ணத்தில்??) என்ன சைஸ், விலை இவற்றை தெரிவிக்கவேண்டுகிறேன். அதன்பிறகு வாசகர்களின் மனவோட்டங்களையும் தெரிந்த பின்னர் என் ஆட்டத்தை தொடரலாமா என்பதை முடிவு செய்வேன்.நன்றி.

  ReplyDelete
 63. சார் எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்??? மறுபதிப்பு நாயகர்கள் என்று நீங்கள் போட்ட பட்டியலில் எனது தங்கதலைவி மாடஸ்டிக்கு கடைசி இடமா? இது ஞாயமாகுமா ? சரிபோகட்டும் நான் அந்த பட்டியலை கீழிருந்து மேலாக படித்துக்கொள்கிறேன். அப்போது என் தங்கதலைவி மாடஸ்டிக்கு முதல் இடம் கிடைத்துவிடும்.ஹீ..ஹீ.... எப்புடீ...என் ஐடியா? இது சம்மந்தமான ஒரு பெரிய தத்துவத்தை உதிர்க்கப்போகும் தருணமிது. சார் "அம்மா "என்ற வார்த்தையில் "மா "என்ற எழுத்து. கடைசியில் தானே உள்ளது.
  மா வை எடுத்து வெறுமனே". "அம்". என்று சொன்னால் அம்மாவாக முடியாது. ஆனால் மா " மா" என்ற ஒற்றை எழுத்தை உச்சரித்தாலே அம்மா என்ற அர்த்தம் வரும். அது போல மறுபதிப்பு பட்டியலில் தங்கத்தலைவி மாடஸ்டியை எடுத்தால் அந்த பட்டியல் முழுமை பெறாது.ஆனால் மாடஸ்டிக்கு மட்டுமே மறுபதிப்பு என்றாலும் அந்த அறிவிப்பு முழுமை பெறும். (யாரடா இந்த கோமாளி என்ற பட்டம் நான் கேட்காமலே எனக்கு இந்த தத்துவ முத்துக்களை உதிர்த்ததன்மூலம் மூலம் கிடைக்கவாய்புள்ளது. ஏற்கனவே பல பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதை இத்தருணத்தில் பெருமையாக நினைத்துபார்க்கிறேன்.) மாடஸ்டிக்காக எப்படியெல்லாம் ரோசனை பண்ணவேண்டியுள்ளது!!! எது எப்படியோ தலைவியை வண்ணத்தில் அதுவும் கழுகு மலைக்கோட்டை கதையை வண்ணத்தில் பார்த்தால்போதும் என் கருத்துக்களஞ்சியத்தை இத்துடன் மூடிக்கொள்கிறேன். இது முடிவல்ல.ஆரம்பம்தான்......

  ReplyDelete
 64. ஜாகஜ வீரர் ரோசர் & சைமன்

  ;) ;) :-)

  ReplyDelete
 65. @ ALL : காலை வணக்கங்கள் all ! ஈஸ்டர் வாழ்த்துக்களும் !

  ReplyDelete
 66. Hello மணி பத்தாச்சப்பா ஆசானை காணல..

  ReplyDelete
 67. ஸ்பைடர் படை ரீப்பிரின்ட் எப்ப வரும்
  Exchange கேட்டா கால்வாசி கலக்‌ஷன் கேக்கராங்க

  பதில் சொல்லுங்க காமிக்ஸ் ஆசான்

  ReplyDelete
  Replies
  1. 2017-ல் போட்டுத் தாக்கிடுவோம் !

   Delete
 68. Dear Editer Sir
  Why you forget to wish Happy Easter to your comics readers , I hope you will do that. In your circle some of the Christians are following your lion muthu comics

  ReplyDelete
  Replies
  1. மேலே பாருங்களேன் - 10-01 க்கு எனது பின்னூட்டத்தை !

   Delete
 69. @ ALL : தற்போது பொடிந்து வரும் நீலக் குட்டி மனுஷர்களின் "தேவதையைக் கண்டேன்" கதையினில் கவிஞர் ஆந்தைவிழியாரின் திரைகீதங்கள் ஆங்காங்கே இடம்பெறுவதைக் காணப் போகிறீர்கள் ! அந்த flow -ல் கண்விழித்த உடன் தொன்றியதொரு கவிதை இதோ காலைக் குற்றாலமாய்...!!

  தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு தெரிஞ்சுக்கோ...!!
  கண் முழிக்கும் நேரத்திலே கமென்ட் எண்ணிக்கை எகிறியிருந்தா
  அன்னிக்கு ப்ளாக் ஹிட்டுன்னு தெரிஞ்சுக்கோ..!

  டீக்கடை மறைவிலே தம்மு அடிச்சா தெரிஞ்சவன் வரான்னு தெரிஞ்சுக்கோ...
  ப்ளாக்கு முழுக்க "இளவரசி"ன்னு எதிரொலிச்சா மடிப்பாக்க அணி வருதுன்னு தெரிஞ்சுக்கோ..!

  இன்னமும் சொல்றேன் தெரிஞ்சுக்கோ....
  ப்ளாக்கு முழுக்க கண்ணீரா ஓடுனா அது தம்பி சத்யாவின் "இ.ப."கோரிக்கைன்னு தெரிஞ்சுக்கோ..!

  தட்சணை கொடுத்து தெரிஞ்சுக்கோ...
  போஸ்ட்மன் கத்தையா கவர் கொணர்ந்தா அது தலீவர் கடுதாசி தெரிஞ்சுக்கோ !

  ReplyDelete
  Replies
  1. ஹா...ஹா...அட்டகாஷ் சார் !

   Delete
  2. சாத்தன் ஜி ரத்தபடலம் பற்றி ...?

   Delete
  3. தம்பி சத்யா எங்கிருந்தாலும் மேடைக்கு...ஹிஹி ஸாரி...பிளாக்குக்கு வரவும்.

   Delete
  4. சார் , இந்த கவிதையை நீங்களே எழுதினீங்களா இல்லை மண்டபத்துல யாராவது எழுதிக் கொடுத்தாங்களா ? ;-)

   Delete
 70. It' s very too late to get your wish sir and do you think saying Easter (single word) is enough to satisfy your Christians followers.

  ReplyDelete
  Replies
  1. சார்...இங்கே காமிக்ஸ் நேசத்துக்கும் ; ரசனைகளுக்குமே முதலிடம் ! தயை கூர்ந்து இங்கே வேறு எவ்வித வர்ணப் பூச்சுகளுக்கும் இடம் தர வேண்டாமே !

   Delete
 71. ப்ளாக்கு முழுக்க கண்ணீரா ஓடுனா அது தம்பி சத்யாவின் "இ.ப."கோரிக்கைன்னு தெரிஞ்சுக்கோ..!
  சின்ன திருத்தம் சார் ரத்தக்கண்ணீர் அல்லது ரத்தபடலகண்ணிர்

  ReplyDelete
  Replies
  1. ஒரு வடை சுடவே உளுந்தை எத்தனை மணி நேரம் ஊற வைக்க வேண்டியுள்ளது பழனி...? அப்படியிருக்க - ஒரு 30 வருடப் பயணத்தை மேக்கி நூடுல்ஸ் போல எதிர்பார்த்தால் சரியாகுமா ? உங்கள் ஆதர்ஷ நாயகர் XIII -ன் பொறுமையில் ஒரு சிறு பங்கையாவது அவரிடம் இரவல் வாங்கிடலாமே - ப்ளீஸ் ?

   Delete
 72. ஆசிரியர், நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். ஹேப்பி ஈஸ்டர்!!!!

  ReplyDelete
 73. ஒப்பு நோக்கும் பணியில் (அதுதாங்க - ப்ரூஃப் ரீடிங்) தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ள நண்பர் பரணிக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்!

  ReplyDelete
 74. அறிவிப்புக்கள் அனைத்தும் அமர்களமாகத்தான் உள்ளன...சூப்பர் ஹீரோ என்றொருவர் இல்லாத குறையைத்தவிர..!

  ReplyDelete
 75. ஆசிரியருக்கு, நண்பர்கள் இங்கு குறிப்பிடுவதுபோன்று - டைஜஸ்ட் என்று வரும்போது (கலரில்) அதுவும் குறைந்த எண்ணிக்கையில் பிரதிகள் எனும்போது விலை சற்றே அதிகமாக இருக்கும் நிலையில் அதற்கான வரவேற்பு ஒரு குறுகிய வட்டத்தினால்தான் கிடைக்கும் என்பது தெரிகிறது. அதனால், முதலில் கறுப்பு - வெள்ளை கதைகளை (மாடஸ்டி??) 'டைஜஸ்ட்' முயற்சியில் களமிறக்கி - அதன் சாதக பாதகங்களை தெரிந்துகொண்டு அடுத்த கட்டத்துக்கு நகரும் எண்ணத்துக்கு முன்வரிசையில் இடம்கொடுப்பீர்களா?

  ReplyDelete
  Replies
  1. Podiyan : "விலை கூடுதல்" என்பது நானூறு ; ஐநூறு என்றெல்லாம் இருந்திடாது நண்பரே ! தற்சமயம் நடைமுறையில் உள்ள விலைகளிலிருந்து ஒரு giant leap நிச்சயம் இராது !

   2 கதைகள் கொண்ட hardcover ஆல்பம் ரூ.200 என்ற ரீதியில் இருக்கக் கூடும் - உத்தேசமாய் !

   Delete
 76. ஸ்பைடர் படை ரீப்பிரின்ட் எப்ப வரும்
  Exchange கேட்டா கால்வாசி கலக்‌ஷன் கேக்கராங்க

  பதில் சொல்லுங்க காமிக்ஸ் ஆசான்

  ReplyDelete
  Replies
  1. மந்திரியாரே..நீங்க ரொம்ப லேட்...மேலே உள்ள உங்களின் இதே கேள்விக்கு நான் பதிலிட்டு ஒரு மாமாங்கம் ஆகிப் போச்சு !

   Delete
 77. காலை வணக்கங்கள் எடிட்டர் சார் :)
  காலை வணக்கங்கள் காமிக்ஸ் நண்பர்களே :)

  ReplyDelete