Sunday, November 29, 2015

COMIX TIMES !

நண்பர்களே,
     
வணக்கம். ரயில்வே ஸ்டேஷன்களில் ஓரம் கட்டிக் கொண்டும், ஏதாவதொரு நகரத்து ஹோட்டல் பால்கனியில் தொற்றிக் கொண்டும், ஸ்லீப்பர் பஸ்களில் சயனித்துக் கொண்டும் சமீப வாரத்துப் பதிவுகளைத் தயாரித்தே பழகிப் போய்விட்டதால், ரொம்ப நாள் கழித்து வீட்டிலிருந்தபடி ஒரு பதிவை எழுதுவது எனக்கே கொஞ்சம் வித்தியாசமாகப் படுகிறது! நவம்பர் இதழ்களின் அச்சுப் பணிகள் நிறைவேறும் தருணம் என்பதால் அங்கே-இங்கே ஊர் சுற்ற முடியவில்லை; ஒழுங்காய், மரியாதையாய் ஆபீஸிலேயே வாரத்தின் எல்லா நாட்களையும் கழிக்க அவசியமானது !இதோ – 2015-ன் இறுதி இதழின் அட்டைப்பட first look:
இதுவொரு மாடஸ்டி பிளைஸி நாவலின் ராப்பரின் தழுவலே என்பதால், பின்னட்டையில் மட்டுமே நமது கைவண்ணம் சொல்லிக் கொள்ளும் விதமாய் உள்ளது! வசீகரமாய் எனக்குத் தோற்றம் தந்த டிசைன் உங்களையும், நமது மாடஸ்டி பக்தர்களையும் அதே போல கவர்ந்திட்டால் நிச்சயம் சந்தோஷம் கொள்வேன் ! கடைசியாய் வெளிவந்த மாடஸ்டியின் உட்பக்க சித்திர பாணிகள் நிறையவே சர்ச்சைகளுக்கு இடம் தந்தது என்பது மறக்கவில்லை ; இம்முறையோ அதற்கான முகாந்திரம் துளியும் இருந்திடாது என்பது உறுதி! இந்தக் கதைக்கான சித்திரங்கள் ஓவியர் பீட்டர் ரோமெரோவின் கைவண்ணம்! ஏகப்பட்ட ‘ஹிட்‘ மாடஸ்டி சாகஸங்களுக்குத் தூரிகை பிடித்தவர் இவர் என்பதால் artwork-ன் பொருட்டு இந்தத் தடவை நெருடல்களுக்கு வாய்ப்பேயில்லை! And நமது டைப்செட்டிங் & டிசைனிங் பிரிவிலும் சென்ற முறையின் தவறுகள் தொடர்ந்திட வாய்ப்பளிக்கவில்லை என்பதால் கதைக்குள் நீங்கள் ஐக்கியமாகிட சித்திரங்கள் / layout ஓர் சிரமமாய் இருந்திடாது ! அப்புறம் இளவரசி + கார்வின் கூட்டணி அதிரடியாய் வலம் வருவதால் மாடஸ்டி ரசிகர்களுக்கு மாத்திரமின்றி நம் எல்லோருக்குமே ஒரு treat காத்துள்ளது என்று சொல்லலாம் ! அச்சின் பாக்கிப் பணிகள் முடிந்து, பைண்டிங்கும் முடிந்து – வரும் வெள்ளியன்று (டிசம்பர் 4) உங்கள் சந்தாப் பிரதிகள் புறப்படும்! ஆண்டின் இறுதி மாதம் என்பதால் டயரிகள்; planner-கள் என்று ஏகமாய் பைண்டிங்கில் பணிகள் குவிந்து கிடப்பதால் அவர்களுக்கு அவகாசம் தர வேண்டியது அவசியமாகிறது ! So- சற்றே பொறுமை ப்ளீஸ்!

மாடஸ்டியின் பின்னட்டையில் மட்டுமின்றி, இம்மாதத்து சகல வெளியீடுகளின் பின் ராப்பர்களிலும் சின்னதொரு bar code டப்பா இருப்பதைப் பார்த்திடப் போகிறீர்கள்! நமது ஜுனியர் எடிட்டரின் ஓசையில்லா முயற்சிகளின் பலனிது ! நமது கையிருப்பு + வரும் 2016 முதற்கொண்டான விற்பனைகள் என சகலத்தையும் computerize செய்திடும் முயற்சிகளின் ஆரம்பப்படிகள் இந்த bar codes! மழைகாலத்துத் தவளை போல ‘வறக்...வறக்‘ என்று சத்தம் போடுவது என் பாணி எனில் – அதன் மறுமுனை ஜு.எ.! இந்தாண்டின் இறுதிக்கு முன்பாக ஜுனியரின் ஒரு சுவாரஸ்யமான project-ன் பலனை இங்கே அறிவித்திடுவேன்! “புதுசாய் ஒரு காமிக்ஸைத் தொடங்குவது பற்றிய அறிவிப்போ?” ‘ஸ்பெஷல் இதழ் ஏதேனும் தொடர்பான தகவலோ?‘ என்ற யூகங்கள் நிச்சயம் தவறாகிடும் ; ஏனெனில் இது வேறொரு மார்க்கத்தின் படலம் ! இந்தப் புது முயற்சியானது நமது சந்தாதாரர்களுக்கு ஒரு அழகான பரிசினையும் தரக் காத்துள்ளது என்பதை மட்டுமே இப்போதைக்கு சொல்ல முடியும்! நிச்சயமாய் இது உடான்ஸோ; உதாரோ கிடையாது guys ! அது என்னவாக இருக்குமென்பதை இப்போதைக்கு உங்கள் யூகங்களுக்கு விட்டு விடுகிறேன் !

And சென்ற வாரத்து எனது பதிவைத் தொடர்ந்து சந்தா மட்டுமின்றி ‘எ.பெ.டை.‘ முன்பதிவுகளிலும் ஒரு சுறுசுறுப்பைக் கண்டிட முடிகிறது என்பது சந்தோஷமான update! இன்னும் சிலரோ - "சந்தா C " தனை பள்ளிகளுக்கு அன்பளிப்பாக்கிட முனைந்துள்ளனர் !! நிறைய வாசகர்கள் (இங்கே பதிவிடுவோரும் சரி; மௌனப் பார்வையாளர்களாக இருந்து வருவோரும் சரி) அக்கறையாக ஈ-மெயில்கள் அனுப்பி, “இதுவரையில் நாங்கள் சந்தாவைப் புதுப்பிக்காததன் காரணம் இவை ; இந்தத் தேதிக்குள்ளாகப் பணம் அனுப்பி விடுவோம்!” என்றும் ”சென்றாண்டின் நம்பரை எட்ட முடியாது போனால் அந்தக் குறைபடியை நண்பர்களாய் இணைந்து சரி செய்து விடுகிறோம்!” என்றும் தெரியப்படுத்தியுள்ளதைப் பார்க்கும் போது என் முகத்தில் லிட்டர் கணக்கில் அசடு வழியத் தான் செய்கிறது! டெக்ஸ் சந்தா & கார்ட்டூன் சந்தாவென 2016-க்குப் பிரத்யேகமாய் அறிவித்ததைத் தொடர்ந்து சென்னையின் மழைகளைப் போல சந்தா வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுமென்ற கற்பனை எனக்குள் ஒரு ஓரமாய் குடிகொண்டு விட்டது போலத்தான் படுகிறது! அவ்விதமில்லாது – நார்மலான வேகத்தில் வந்து கொண்டிருந்த சந்தாக்கள் என் ஆந்தை விழிகளுக்கு அலாரமடிக்கும் ஆபத்தாய் காட்சி தந்து விட்டது போலும்! இன்னும் ஒரு படி மேலே சென்று – சென்றாண்டின் சந்தா வரவுகளின் pattern-ன் மீது கொஞ்சம் கவனத்தை லயிக்கச் செய்த போது – சந்தாக்களின் 75% டிசம்பரிலும், ஜனவரியின் துவக்கத்திலும் தான் பதிவாகியிருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது! So- அவசரம் அவசரமாய் புயல் எச்சரிக்கையை துறைமுகத்தில் ஏற்றியது போலான என் அவரசக் குடுக்கைத்தனத்தின் பொருட்டு apologies guys! 

அதே சமயம் – இதிலும் ஒரு நன்மை இல்லாதில்லை என்றே சொல்வேன்! பல தரப்பிலிருந்தும் நண்பர்கள் சந்தாவுக்கென நாம் செய்திடக் கூடிய incentives; ஊக்கங்கள் பற்றிய கருத்துக்களை நம் காதுகளுக்குக் கொணர்ந்துள்ளனர்! அவற்றை ஒரே தம்மில் நம்மால் அமல்படுத்திட இயலாதெனினும் நிச்சயம் நமது cache memory-ல் அவை பதிந்திருக்குமென்ற நம்பிக்கை கொண்டிடலாம் நீங்கள்! “நான் சொல்லும் யோசனைகளை ஏற்றுக் கொள்ள மாட்டேன்கிறீர்கள்!” என்றோ – “என் யோசனைக்குப் பதில் சொல்லக் கூட மாட்டேன்கிறீர்கள்!” என்றோ வருத்தம் கொள்ளும் நண்பர்களுக்கு : உங்கள் ஒவ்வொருவரின் எண்ணங்களுக்கும் ஒவ்வொரு முறையும், ஆங்காங்கே நான் react செய்திடாது போயினும், அவற்றை உள்வாங்கிடத் தவறுவதில்லை guys! அனுதினமும் எனது நேரங்களை காமிக்ஸ் + மற்ற தொழில்கள் என்ற குதிரைகளுக்கு மத்தியில் பங்கிட்டுச் சவாரி செய்வதன் சிரமத்தை – நான் விவரிக்கத் தொடங்கினால் – அதுவொரு பீற்றல் புராணமாகி விடும்! தினமும் இமைகள் மூடும் பொழுது நள்ளிரவைத் தாண்டி நிறைய நேரம் கடந்திருக்குமென்பதே எனது routine என்பதில் தான் இரகசியம் இல்லையே ?! இதனில் உங்களின் எண்ணங்களுக்கு பதிலளிக்காது போவதால் அவை என் கவனத்தை ஈர்க்கவில்லை என்றோ ; அவற்றைப் படித்திட, சீர்தூக்கிப் பார்த்திட நான் நேரம் ஒதுக்கவில்லை என்றோ உங்களின் முயற்சிகளுக்கு / நேரங்களுக்கு மதிப்புத் தரத் தவறியதாகவோ எண்ணிட வேண்டாமே - ப்ளீஸ் ?! உங்களின் ஒவ்வொருவரும் தத்தம் பணிகளில் எத்தனை பிசி என்பதையோ ; நமக்காக நீங்கள் அக்கறையோடு செலவிடும் நேரத்தின் மதிப்பினையோ நாம் நிச்சயம் மறக்கவோ ; உதாசீனம் செய்வதோ  சாத்தியமே கிடையாது ! Rest assured ,சாத்தியமானதொரு suggestion-ஆக இருக்கும் பட்சத்தில் இயன்ற தருணங்களில் உங்கள் ஆலோசனைகளைச் செயல்படுத்தத் தயங்க மாட்டேன் ! 

கடந்த பதிவின் பின்னூட்டங்களில் கூட வாசகர்களுக்கு SMS அனுப்புவது பற்றி நண்பர்கள் எழுதியிருந்தது என் கவனத்துக்கு வராதில்லை! 2016-ன் துவக்கம் முதலாய் இதனை நடைமுறைப்படுத்த எல்லா ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டு விட்டன! நமது ஆன்லைன் விற்பனைகளை நிர்வகித்து வரும் Worldmart தளம் இதற்கான ஒரு package ஏற்பாடு செய்துள்ளது ! உங்கள் பின்னூட்டங்களைப் பார்த்தான பின்பு, அதனை டிசம்பருக்குமே செயல்படுத்திட ஜூ.எ.விடம் கேட்டுள்ளேன் ; so அநேகமாய் இம்மாதமே அது நடைமுறைக்கு வந்திடும் ! கம்ப்யூட்டர் சார்ந்த பணிகளிலோ; புதுயுக செயல்பாடுகளிலோ நானொரு டைனோசர் என்பதில் இரகசியமேதுமில்லை எனும் பொழுது – உங்கள் பார்வைகளில் சுலபமாய்த் தோன்றிடும் பல விஷயங்கள் என்னை எட்டிடக் கொஞ்சம் கூடுதலாய் நேரம் எடுக்கவே தான் செய்கிறது! More than anything else – மொழிபெயர்ப்பிலும் தயாரிப்பிலும் எனக்கு அவசியமாகிடும் man hours தவிர்க்க இயலாதொரு விஷயம்! அதற்கென நான் ஒதுக்கிடும் அவகாசத்தை மட்டுப்படுத்திடும் பட்சத்தில் கதை literal ஆகக் கந்தலாகிப் போகும் என்பதால் – அந்தப் பொறுப்புகளை ஜு.எ. ஏற்றிடத் தயாராகும் நாள் புலரும் வரை – ‘எடிட்டர்‘ என்ற தொப்பியே என் வழுக்கை மண்டையை அதிக நேரம் சூழ்ந்து நிற்கும்! அதனைக் கழற்றி விட்டு “வியாபாரி“ என்ற குல்லாவும் அணிதல் காலத்தின் கட்டாயமென்பதை நான் உணராதில்லை guys – but முதலாவது தொப்பியே எனது நேசத்திற்குரியதாக இருந்திடும் – என்றென்றும் ! சரக்கு முறுக்காகவே இருப்பினும் செட்டியாரும் முறுக்காக இருத்தல் அவசியம் என்பதை நீங்கள் புரியச் செய்திருக்கிறீர்கள் ! May be நான் சரக்கு மாஸ்டராகவும்; ஜு.எ. செட்டியாராகவும் இருந்து பார்த்தால் வண்டி எவ்விதம் ஓடுகிறதென்பதைச் சிறுகச் சிறுகப் பார்த்திடலாமே! வளரும் வயதில் என்றைக்குமே என்னை "இதைச் செய்...அதைச் செய்.!".என்று சொல்லி என் தந்தை வற்புறுத்தியதில்லை என்பதால் எனக்கும் ஜூனியரின் தலையில் பொறுப்புக்களை  வம்படியாய்த் திணிப்பதில் ஆர்வமில்லை ! நதி செல்லும் பாதையை இயற்கையே தீர்மானம் செய்யட்டுமே ! 

"சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு ‘டி-ஷர்ட்‘; ஜிப்பா – பைஜாமா என்றெல்லாம் முயற்சிப்பது சுத்த வேஸ்ட்! வாசகர்கள் எதிர்பார்ப்பது இது போன்ற ஜிகினா சமாச்சாரங்களையல்ல!" என்றும் சில நண்பர்கள் மின்னஞ்சல்களில் சொல்லியிருந்தனர் ! இங்கே I beg to differ! டி-ஷர்ட்கள் வழங்கிடும் திட்டமானது நமது சந்தாதாரர்களைக் குஷிப்படுத்திடும் வியாபார நோக்கிலானது அல்ல – அவ்விதம் திட்டமிட்டிருப்பின் சந்தா சார்ந்த விளம்பரங்களில் ; கூப்பன்களில் ; நமது இதழ்களில் அதனை முன்னிலைப்படுத்தியிருக்க மாட்டோமா? புத்தக விழா சந்திப்புகளின் போது நம்மவர்கள் ஒரே மாதிரியாகப் போட்டு வந்து அசத்த இது உதவுமே என்ற நோக்கம் மட்டுமே இந்த அறிவிப்பின் பின்னணி! So இது சந்தாவுக்கான சலுகையோ, ஊக்கப் பரிசோ அல்ல; நம்மவர்களுக்கொரு ஜாலியான gift மாத்திரமே!

ரொம்ப காலமாகவே நான் செய்திட நினைத்து வந்ததொரு விஷயத்தின் நடைமுறைப்படுத்துதலை maybe நமது சந்தாதாரர்களுக்கான ஸ்பெஷல் சமாச்சாரமாகக் கருதிடலாம்! இத்தாலியில் TEX Magazine என்ற பெயரில் ஆண்டுக்கு இரண்டோ – மூன்றோ ஆன்லைன் இதழ்களை போனெல்லி வெளியிட்டு வருகிறதைப் பார்த்த நாள் முதலாகவே அது போலொரு முயற்சியினில் நாமும் கால்பதித்துப் பார்க்க வேண்டுமென்பது எனது தீராத ஆசை! டெக்ஸ் கதாசிரியர்களோடு பேட்டிகள்; ஓவியங்களின் முன்னோட்டங்கள்; கதைகள் தயாரானதன் பின்னணிகள்; புதுசாய் உள்ள திட்டமிடல்கள் என TEX-ன் சகல பேக்கிரவுண்ட் சங்கதிகளையும் உள்ளடக்கிய 64 பக்க ஆன்லைன் இதழ் அது! அத்தனை பெரிதாகவோ; அத்தனை in-depth ஆகவோ நாம் முயற்சிப்பதும் சிரமம்; அதனில் சுவாரஸ்யத்தைத் தங்கச் செய்வதும் சிரமம் என்பதால் – அதன் ஒரு மினி version-ஐ நாம் நிஜ பத்திரிகையாகச் செய்து பார்த்தால் என்னவென்பது கொஞ்ச காலமாகவே எனது ஆசை! அதிலும் TEX-ன் ஆக்கத்தோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாது – இதர பிரான்கோ பெல்ஜியக் கதைவரிசைகளின் பின்னணிகளை; அவற்றின் கதாசிரியர்களைக் கையைக், காலைப் பிடித்தாவது பேட்டி எடுத்து வெளியிடுவது ஒரு variety ஐத் தருமென்று நினைத்தேன்! So - ஒரு வண்ண நியூஸ் பேப்பர் வடிவத்தில் – “COMIX TIMES” என்ற பெயரில் ஆண்டுக்கு 4 முறைகள் ஒரு பிரத்யேகப் பத்திரிகையினைத் தயாரிக்கவுள்ளோம் ! நமது சந்தாதாரர்களுக்கு இதனை ஃப்ரீயாக இதழ்களோடு கூரியரில் அனுப்பிடுவோம்! And சந்தாவில் இணைந்திடா நண்பர்கள் இதனைப் படித்திட வேண்டுமெனில் ஒரு சிறு இடைவெளிக்குப் பின்பாக ஆன்லைனில் நமது தளத்தில் ஒரு லிங்க் தந்து விடலாம்! பேட்டிகள்; முன்னோட்டங்கள்; உலகெங்கும் நடந்திடும் காமிக்ஸ் நிகழ்வுகள்; ஸ்வாரஸ்யமான கார்ட்டூன் பக்கங்கள்; நமது முந்தைய ஹிட் இதழ்களின் review-கள் – என இந்த நியூஸ்பேப்பரை ஒரு சுவாரஸ்யமான படைப்பாக்கிட உங்களின் ஆர்வமான பங்களிப்பும் அவசியமே! இணையத்தினுள் புகுந்தால் வானமே எல்லை எனும் போது – உங்களின் தேடல்களும் நமது COMIX TIMES-க்கு மெருகூட்டுமென்பது நிச்சயம்! ஒரே பாதையில் ஒரே மாதிரியாக ஓடிக் கொண்டிருக்கும் நமது பயணத்திற்கு இதுவொரு சின்ன வித்தியாசமாக இருந்தாலே கூட நமக்கு சந்தோஷமே!


And before I sign off – some updates : 
 • கோவையில் புதியதொரு இளம் முகவரின் ஆர்வமான ஒத்துழைப்பு கிடைத்திருப்பதால் – கண்ணன் டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸ் போன்ற ஷாப்பிங் தளங்களிலும் நமது select இதழ்களைப் பார்த்திட முடியும்! நூறு பேரின் பார்வைகளில் பட்டால் ஒருத்தராவது வாங்கக் கூடும் என்ற லாஜிக் workout ஆனால் கூட இது போன்ற பிஸியான இடங்களில் நமது காமிக்ஸ்கள் take off ஆகிடக் கூடும் என்பதால் நம்பிக்கையோடு காத்திருப்போம்!
 • இத்தாலியில் நமது வலைப்பதிவுகளுக்கென ஒரு சிறு ரசிகர் குழு உள்ளதாம் !! டெக்ஸ் பற்றிய நமது பதிவுகளை ; விவாதங்களை google translate துணையுடன்  ஆர்வத்தோடு அவர்களும் ரசித்து வருகிறார்கள் !! 'அட..உங்கள் மண்ணிலும் எங்களவருக்கு இத்தனை வெறித்தன ரசிகர்களா ?' என்ற வியப்பை வெளிப்படுத்தியுள்ளனர் ! அது மட்டுமன்றி இத்தாலியில்   - ALL TEX சந்தாவிற்கு 4 பேர் பதிவு செய்துள்ளனர் !! 
 • 2016-ன் நமது அட்டவணையின் பொருட்டு போனெல்லி நிறுவனம் ஒரு புன்னகை கலந்த thumbs up தந்துள்ளனர் !! அவர்களது படைப்புகளுக்கு நம்மிடையே முக்கியத்துவம் அதிகரிப்பது குறித்து ரொம்பவே சந்தோஷப் பட்டுள்ளார்கள் ! (இதர மார்கெட்களில் அவர்கள் தூள் பறத்துவதை ஒப்பிட்டால் நாம் ஜூஜூபி என்பது வேறு விஷயம் !!)
 • நமது வலைப்பதிவுகளை மூத்த வாசகர்களும் கவனித்து வருகிறார்கள் என்பதை சமீபத்தைய ஒரு வாசகர் கடிதம் மூலம் அறிய முடிந்தது ! எப்போதுமே நெடிய கடிதங்கள் மட்டுமே அனுப்பிடும் இந்த சீனியர் வாசகர் இம்முறை அனுப்பிய கடிதத்தில் இங்கே நம் வலைப்பதிவில் ஓடிடும் current topics பலவற்றையும் துல்லியமாய்க் குறிப்பிட்டு, அதனில் தனது நிலைப்பாடுகளையும் பற்றி எழுதியிருந்ததை ஆச்சர்யத்தோடு படித்தேன் ! ஒவ்வொரு ஞாயிறும் ஆர்வமாய் ; மௌனமாய் இங்கு வருகை புரிவது பற்றி அவர் எழுதியிருந்தது ரொம்பவே நெகிழ்ச்சியாக இருந்தது ! நன்றிகள் சார் !! 
மீண்டும் சந்திப்போம் folks ! Have a fun Sunday ! Bye for now !

224 comments:

 1. Happy Suday to all.....Wowwwwwwwwwwwwwwww

  ReplyDelete
 2. //ஒரு வண்ண நியூஸ் பேப்பர் வடிவத்தில் – “COMIX TIMES” என்ற பெயரில் ஆண்டுக்கு 4 முறைகள் ஒரு பிரத்யேகப் பத்திரிகையினைத் தயாரிக்கவுள்ளோம் !//
  +1
  Sooperrrrr Sir....

  ReplyDelete
 3. Comix Times அதுவும் onlineல் எனும்போது மிக நல்ல முயற்சி! Keep It Up!

  ReplyDelete
  Replies
  1. senthilwest2000@ Karumandabam Senthil : சின்னத் திருத்தம் நண்பரே....சந்தாதாரர்களுக்குக் கிடைக்கவிருப்பது நிஜ நியூஸ்பேப்பர் ! இதர வாசகர்களுக்கு ஆன்லைன் இதழாக..!

   Delete
 4. மரணத்தின் முத்தம் Modesty Blaze தேவியாரின் அட்டைப்படத் தோற்றம் ஓஹோ!

  ReplyDelete
 5. SMS updates நமது புததகங்கள் எங்களுக்கு கிடைக்கும் நாளை தெரிவிக்கும் என நினைக்கிறன். சரிதானே ஆசிரியரே!

  ReplyDelete
 6. ஒரு ராக்கோழி வேலை பாத்துகிட்டிருந்ததால் ரொம்ப நாளைக்குப்பிறகு முதல் 10 பின்னூட்டத்துக்குள் வரமுடிந்திருக்கிறது. :-))))

  போன பதிவு கொஞ்சம் அழுகாச்சியாக இருந்தது, ஆனால் சேர்த்துவைத்து இந்தப்பதிவில் உற்சாகம், புரிதல், மகிழ்ச்சி, புதிய விஷயங்கள் என ஆரவாரம் செய்திருக்கிறீர்கள். செமை!

  1. சந்தா முன்பதிவு பேட்டர்ன் நிச்சயம் இப்படித்தான் இருக்கும் என நினைத்தேன். ஏனெனில் அது நம் தேசிய குணம். ரயிலில் முன்பதிவு செய்தால் கூட தட்கல்தான் நமக்கு. டிசம்பர் சம்பள நாட்கள் மற்றும் ஜனவரி சம்பள நாட்களில்தான் முன்பதிவு ஜரூராக இருக்கும் என நினைக்கிறேன். இருப்பினும் சென்ற ஆண்டு +/- 10 சதவீதம் வந்துவிடுவோம் என்பது என் கணிப்பு. அதைவிட 30% தாண்டினால் ரொம்ப மகிழ்ச்சி, சரியான ரூட்டில் போய்க்கொண்டிருக்கிறோம் என நம்பலாம்.

  2. சந்தாவுக்கு டிஷர்ட் எனக்கும் அவ்வளவா பிடிக்கலை. ஒரு நண்பர் சொல்லியதைப்போல ப்ளோஅப் காலண்டர் இருந்தால் செமையாக இருக்குமே என தோன்றியது. இப்போ இல்லாவிட்டாலும் நெக்ஸ்ட் இயர் ஆவன செய்யலாமே!

  3. 2016ன் புதிய அட்ராக்‌ஷன்களுள் காமிக்ஸ் டைமும் சேரவிருப்பதில் மகிழ்ச்சி!

  டிசம்பர் இதழ்களைக்காணும் ஆவலுடன்..

  -ஆதி

  ReplyDelete
  Replies
  1. ஆதி தாமிரா : காலெண்டர் தந்திட எனக்கும் ஆசையே....ஆனால் வெவ்வேறு படைப்பாளிகள் தங்கள் கதாப்பாத்திரங்களை க்ரூப் போட்டோவிற்குப் போஸ் கொடுப்பது போல் இணைந்து நிற்கச் செய்வதற்கு இசைவு சொல்வதாக இல்லை ! அதிலும் போனெல்லி குழுமத்துக்கு இந்த கான்செப்டில் சுத்தமாக இஷ்டமே இல்லை !

   வேண்டுமாயின் மாயாவி மாமா + ஸ்பைடர் சித்தப்பாவை தினமும் தரிசிக்க ஏற்பாடுகளைச் செய்யலாம் ! :-)

   Delete
  2. //மாயாவி மாமாவும் ஸ்பைடர் சித்தப்பாவும்.!//

   அப்படியே உடைந்த மூக்காரையும் சேர்த்துக்கொள்ளுங்கள் சார்.!வீட்டுக்கு வெளியே மாட்டிவைத்துவிடுகிறோம்.. திருஷ்டி கழியும்.!

   Delete
  3. ஏன்" உங்கள்" மாடஸ்டி படத்தை காலண்டரில் போட்டால் டபுள் திருஷ்டி கழியும் நண்பரே.

   Delete
  4. ஏன்" உங்கள்" மாடஸ்டி படத்தை காலண்டரில் போட்டால் டபுள் திருஷ்டி கழியும் நண்பரே.

   Delete
 7. அட்டையில் கார்வினின் பிச்சுவா கத்தியை மட்டும் போட்டு விட்டு அவரை எப்போதும் போல் ஓரங்கட்டினால் எப்படி...!? உண்மையில், அட்டைபடத்தில் அந்த கத்தி (மட்டும்) அட்டகாசமாகயிருக்கிறது. அது சரி, இளவரசி ஏன் அந்த டாலரை அப்படி உற்றுப் பார்க்கிறார்.? இளவரசிக்கும், டாலருக்கும் என்ன சம்பந்தம்..? டாலரை பிடித்திருக்கும் கை அல்லது கையிலிருக்கும் டாலர் யாருடையது...? ஆங்... புரிஞ்சிச்சு...புரிஞ்சிச்சு...அதானே கதை.(உள்ளே சித்திரங்கள் சொதப்பலாகயிராது என்பது ஒரு ஆறுதலானே விஷயம்)

  சென்ற வார சந்தா பற்றிய கதைகளை படித்து விட்டு இரண்டு பாட்டில் பீர் அடித்து மட்டையானவன் போலிருந்தேன். இந்த வாரம் சந்தாக்கள் சற்று எக்ஸ்பிரஸ் வேகம் எடுப்பதுப் பற்றி அறிந்தவுடன் கொஞ்சம் 'பூஸ்ட்' குடித்த தெம்பு வந்திருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. MH Mohideen : சார்...இதுவொரு மாடஸ்டி நாவலின் அட்டைப்பட டிசைன்....so அதே sequence -ல் நமது இதழினுள் யாராச்சும் டாலரை இளவரசியின் மூக்குக்கு நேராக ஆட்டுகிறார்களா என்ற தேடல் பயன்தந்திடாது ! But "கதை சூப்பர் !" என்ற தைரியத்தோடு படிக்கலாம் !!

   Delete
 8. இளவரசிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்......

  ReplyDelete
  Replies
  1. அடடே! ஜேடர் பாளையத்தாரும் இளவரசி ரசிகரா? சூப்பர் !

   தலைவரே.! இளவரசி ரசிகர் பட்டாளம் கூடிவருகிறது.! கவனித்தீர்களா.?2017 மாடஸ்டி வருடமாக்கி விடலாம்.!

   Delete
  2. @ M.V. ஆ..ஊன்னா..கொடியெ பிடிச்சிட்டு கூட்டம் கூட்டமா வர்றாங்கே !! (ஒருவிரல் கிருஷ்ணாராவ் modulation -ல் !) :-) :-)

   Delete
  3. ஆசிரியர் சார் ..


   ஹாஹாஹா ....;-)))))

   Delete
  4. ///////ஆ..ஊன்னா..கொடியெ பிடிச்சிட்டு கூட்டம் கூட்டமா வர்றாங்கே !! (ஒருவிரல் கிருஷ்ணாராவ் modulation -ல் !) :-) :-)/////

   :-)))

   Delete
  5. ஒரு விரல் கிருஷ்ணாராவ் இல்லை.
   அந்த டயலாக்குகக்கு சொந்தகாரர்
   என்னத்தே கண்ணையா

   Delete
  6. MVசார் நம்மைப்போல் மாடஸ்டி ரசிகர்கள் நிறையப் பேர் இருப்பார்கள்...அவர்களையெல்லாம் இனம் கண்டு ஒனறு திரட்டி போராடுவோம்...2017ல்..குறைந்தது மூன்று கதைகளாவது கேட்டு வாங்கி விட வேண்டும்...

   Delete
 9. * சந்தா எண்ணிக்கை சூடு பிடித்துவருவது எதிர்பார்த்த மகிழ்ச்சி!

  * சந்தா உள்ளிட்ட எந்தவொரு சிறுபிரச்சினைக்கும் நமது வாசக நண்பர்கள் வரிந்துகட்டிக்கொண்டு களமிறங்கி ஐடியாக்களையும், ஆதரவையும், ஆறுதலையும் அள்ளிவழங்கிவருவது மகிழ்ச்சியளிக்கிறது! நெகிழ்ச்சியளிக்கிறது!

  * பார்கோடுகளை நம் புத்தகங்களிலும் கண்டுவிடவேண்டுமென்ற உள்ளூர ஆசை அடுத்தமாத வெளியீடுகளில் நிறைவேறயிருப்பது அடுத்த மகிழ்ச்சி!

  * நாளிதழ் வடிவிலான 'Comix times' வெளிவரயிருப்பது சற்றும் எதிர்பாரா மற்றொரு மகிழ்ச்சி!

  * ஜூ.எடியின் 'தொழில்நுற்பம் சார்ந்த ' முயற்சிகளுக்கு வாழ்த்துகள்! அவர் காட்டிவரும் ஈடுபாட்டுக்கு மகிழ்ச்சி!

  * 'கண்ணன் டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸ்'ன் கோவைக் கிளையில் நமது வெளியீடுகள் விற்பனைக்கு வந்திருப்பது மகிழ்ச்சி! இது என்னுடைய நீண்டநாள் ஆசையும்கூட! பிற ஊர்களிலுள்ள கிளைகளிலும் இது நடைமுறைக்கு வந்தால் மிக்க மகிழ்ச்சியே!

  * மாடஸ்டியின் அட்டைப்படம் நன்றாக வந்திருப்பதில் மகிழ்ச்சி! சித்திரத் தரமும் உத்தரவாதமளிக்கப் பட்டிருப்பதில் (ஒரு நிம்மதி கலந்த) மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!

  * இத்தாலி ரசிகர்கள் 'இப்புடு சூடி' வருவதில் மகிழ்ச்சி! ஏற்கனவே பிரேசில் நாட்டு ரசிகர்களும் நமது வலைப்பூவைப் பார்வையிட்டு வருவதாக இங்கே எடிட்டர் அறிவித்திருந்ததாக ஞாபகம்! சீக்கிரமே இத்தாலி மற்றும் பிரேசில் ரசிகர்களும் இங்கே பின்னூட்டமிட்டு ஜோதியில் ஐக்கியமாகிடும் நாள் வெகுதொலைவில் இல்லை! ( அங்கே பழைய காமிக்சு எல்லாம் என்ன ரேட்டு பிரேசில் ஃப்ரண்ட்ஸ்?). மகிழ்ச்சி மகிழ்ச்சி!

  * இப்போது நடுத்தர வயதுடையவர்கள் பலரும் பெரிய திரை கொண்ட மொபைல் ஃபோனை கையாளுவதையும், இன்ட்டெர்நெட்டை( குறிப்பாக வாட்ஸ்அப்) பயன்படுத்துவதையும் பரவலாகக் காணமுடிகிறது! சீக்கிரமே நமது இதழ்களுக்கென ஒரு பிரத்யேக 'ஆண்ட்ராய்டு App' புழக்கத்தில் வந்தால் மகிழ்ச்சியே!

  அவ்வப்போது சில இடர்பாடுகள் வந்தாலும்கூட, இந்தப் பாதையும் பயணமும் என்றென்றும் அளித்திடும் - மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!

  ReplyDelete
  Replies
  1. ஆனால் நீங்கள் Whats app ku வரமாட்டிங்கரீங்க vijay sir

   Delete
  2. //இளவரசி அட்டைப்படம் சூப்பர்.//


   அப்பாடா.! வசிஸ்டர் வாயால் பிரம்ம ஸ்ரீ பட்டம்.! சூப்பர்.!

   Delete
  3. // பார்கோடுகளை நம் புத்தகங்களிலும் கண்டுவிடவேண்டுமென்ற உள்ளூர ஆசை அடுத்தமாத வெளியீடுகளில் நிறைவேறயிருப்பது அடுத்த மகிழ்ச்சி! //

   +1

   Delete
  4. Erode Vijay,

   இன்னிக்கி காலேல எழுந்த உடனே, நீங்க "மகிழ்ச்சி .. மகிழ்ச்சி.. "ன்னு போடும் கமெண்ட்ஸ் இன்னிக்கும் வரும் என்று நினைத்தேன். There you go .. :-)

   மகிழ்ச்சி !

   Delete
  5. Erode VIJAY : //சீக்கிரமே நமது இதழ்களுக்கென ஒரு பிரத்யேக 'ஆண்ட்ராய்டு App' புழக்கத்தில் வந்தால் மகிழ்ச்சியே!//

   காசு..பணம்..துட்டு..money ..money ...தான் ! ரூ.12,000 செலுத்தினால் Worldmart நமக்கென ஒரு App செய்து தரக் காத்துள்ளனர் ! So கூடிய விரைவில் அதுவும் நனவாகிடும் !

   Delete
  6. 16 தடவைகள் மகிழ்ச்சி என்று தாங்கள் சொல்லிவிட்டதால் ஆட்டத்திலிருந்து அவுட்டாகிவிட்டீர்கள்!! :-))))

   Delete
  7. Dear Editor Sir
   Android App would be excellent.
   Like Flipkart, we can use the notification feature to
   - Announce new books dispatched details
   - new blog
   - Any info you want to communicate at the short notice..etc

   Delete
 10. மாடஸ்டியின் சித்திரங்களின் பொருடடு உத்திரவாதம் அளிக்கப்பட்டது மகிழ்ச்சி..!
  சித்திரங்கள் சுமாரோ..சூப்பரோ...பரபரப்பான கதை களனுக்கு இளவரசி எப்போதுமே உத்திரவாதம்தான்..

  ReplyDelete
  Replies
  1. //சுமாரோ.... சூப்பரோ ...பரபரப்பான கதைகளத்திற்கு இளவரசி எப்போதுமே உத்திரவாதம்தான்.!//

   " ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் சார்.!"

   Delete
 11. எனக்கென்னவோ முன்னட்டையை விட பின்னட்டை சூப்பராக இருக்கிறது

  ReplyDelete
 12. நானும் வந்துட்டேன். "COMICS TIMES"அருமையான அறிவிப்பு. வாழ்த்துக்கள் சார்.

  ReplyDelete
 13. டியர் எடிட்டர் ஸார்,
  Comics Times வருவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. மாடஸ்டியின் அட்டை படம் சூப்பர். முன் அட்டையை விட எனக்கு பின் அட்டை படம்தான் கூட பிடித்துள்ளது. சந்தாக்கள் புதுப்பித்தல்கள் சூடு பிடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜூனியர் எடிட்டரின் முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள் .

  ReplyDelete
  Replies
  1. //மாடஸ்டியின் அட்டை படம் சூப்பர்.!// +1

   Delete
 14. காலை வணக்கம் எடிடட்டர் சார்

  இத்தாலி டெக்ஸ் பேன்ஸ் ன் நமது பக்கத்தின் (Page) பெயர் என்ன

  ReplyDelete
  Replies
  1. Tex Sampath : இங்கேயே ஒரு option உள்ளது நண்பரே ; அப்படியே நம் பதிவுகளை ஆங்கிலத்திலோ, வேறு மொழியிலோ மாற்றம் செய்து கொண்டு வாசித்திட...! So டெக்ஸ் சார்ந்த பதிவுகள் ; படங்கள் கண்ணில் தட்டுப்படும் போதெல்லாம் படித்து வருகிறார்கள் !

   Delete
 15. “COMIX TIMES” நல்லதொரு முயற்சி. அதிலும் நமது ஐரோப்பிய வெளியீட்டாளர்களின் கெடுபிடிகள் தொற்றிக்கொள்ளாது என நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. Podiyan : இது அவர்களது முயற்சிகளுக்கான விளம்பரமே எனும் பொழுது சிக்கல்கள் ஏதும் எழுந்திடக் கூடுமென நான் நினைக்கவில்லை !

   Delete
 16. // இத்தாலியில் நமது வலைப்பதிவுகளுக்கென ஒரு சிறு ரசிகர் குழு உள்ளதாம் !! டெக்ஸ் பற்றிய நமது பதிவுகளை ; விவாதங்களை google translate துணையுடன் ஆர்வத்தோடு அவர்களும் ரசித்து வருகிறார்கள் !! ///

  Page name pls ...

  ReplyDelete
 17. கலக்கத்தை கொடுத்தது சென்ற வாரப் பதிவு. இந்த வாரப் பதிவு கலகலப்பு! ஹப்பாடா!! நிம்மதிப் பெருமூச்சு!காமிக்ஸ் டைம் சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. Guna karur : உங்கள் நகரில் கூட கூடுதலாய் ஒரு சில புத்தகக் கடைகளை நம்மவர்கள் அணுகியுள்ளனர் ! விரைவிலேயே இன்னும் பரவலாய் கரூரில் நம் இதழ்களைப் பார்த்திட இயலுமென்று நினைக்கிறேன் !

   Delete
  2. கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோரில் அவ்வப்போது கிடைக்கிறது சார்! ஒரு சில நாட்களிளேயே விற்றும் தீர்ந்து விடுகிறது!

   Delete
 18. All the success editor sir. 2016 இதழ்களுக்காக காத்திருக்கிறேன். Department storeல் விற்பனைக்கு வருவது போன்று விரைவில் பட்டி தொட்டிகளிலு விற்பனைக்கு வந்தால் சந்தோசம்

  ReplyDelete
 19. ///- ஒரு வண்ண நியூஸ் பேப்பர் வடிவத்தில் – “COMIX TIMES” என்ற பெயரில் ஆண்டுக்கு 4 முறைகள் ஒரு பிரத்யேகப் பத்திரிகையினைத் தயாரிக்கவுள்ளோம் ! ///

  நியூஸ் பேப்பர் சைஸில் என்றால் படிக்க எளிதாக இருக்கும். ஆனால் பாதுகாக்க சிரமமாக இருக்கும் சார்.

  அஅதையே நான்காகவோ., எட்டாகவோ மடித்து புத்தகமாக வெளியிட்டால் கையாள்வதற்கும் பாதுகாக்கவும் எளிதாக இருக்கும் என்பது தாழ்மையான அபிப்ராயம்.!!!

  ReplyDelete
  Replies
  1. @ FRIENDS : முதல் பேப்பரைப் பார்த்தான பின்னே உங்கள் அபிபிராயங்களைச் சொல்லுங்களேன்..! இது நிச்சயம் அழகாக இருக்கும் !

   Delete
 20. மாடஸ்டிக்கு நல்வரவு

  ReplyDelete
 21. மாடஸ்டியின் பின் அட்டை சூப்பர்.!

  முன்னட்டை.!மாடஸ்டி தங்கச்சி மாதிரி உள்ளது.மாடஸ்டியின் முகத்தில் தெனாவெட்டு + உணர்ச்சியை வெளிக்காட்டாத உறுதியான கண்கள்+ உணர்ச்சிகளை வெளிக்காட்டவில்லை என்றாலும் மைல்டாக அவர் வெளிப்படுத்தும் உணர்வு.மிஸ்ஸிங்.!ஆனால் அழகாக உள்ளது.!மோனலிசா ஒவியம்போல் புன்னகையா? சோகமா ?என்று புரிந்து கொள்ளமுடியாத ஒரு வகை வசீகரம் தான் மாடஸ்டி.!

  ReplyDelete
  Replies
  1. நீர் ரசிகரையா ரசிகர்!!!

   Delete
  2. இம்முறையாவது, உள்ளேயும் மாடஸ்தி ஜொலிக்கனும் MV சார்..... கடவுளை வேண்டி கொள்ளுங்கள்.... ஆண்டின் துவக்கம் போலவே முடிவும் அமைத்து விடப்போகிறது!!!!!!

   Delete
  3. Madipakkam Venkateswaran : //முன்னட்டை.!மாடஸ்டி தங்கச்சி மாதிரி உள்ளது. //

   உங்கள் தங்கத்தலைவி இன்னமும் இளமையாய் இருப்பின், குஷி கொள்ளக் கூடுதலாய் ஒரு காரணம் தானே MV சார் ?!

   Delete
  4. சேலம் Tex விஜயராகவன் : அட...அவர் வயிற்றில் புளியைக் கரைக்காதீர்கள் சார் ! இந்த சாகசம் பார்க்கப்-படிக்க A-1 !!

   Delete
 22. //இத்தாலியில் நமது வலைப்பதிவுக்கு என்று ஒரு சிறு ரசிகர் குழ உள்ளது.!//

  ReplyDelete
 23. இங்க பார்றா இளவரசி மின்னுது ! :) கதையும் மின்னினா சரி!

  Comix Times ஐடியா உண்மையிலேயே ஆர்வத்தை கிளப்புகிறது !

  என் சந்தா புதுப்பித்தல் எப்பவுமே ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் இரண்டாவது வாரம்தான், ஆமா சொல்லிபுட்டேன் ! :)

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் " சுவாமிநாதன் " சார்.!

   (இரண்டு தீபாவளி கடந்தாலும் சுவாமிநாதனை மறக்கமுடியலை சார்.!)

   Delete
 24. காலை வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே.

  ReplyDelete
 25. காமிக்ஸ் டைம்ஸ் நல்வரவு..

  ReplyDelete
 26. காமிக்ஸ் டைம் நல்ல யோசனை ஆசிரியரே,நிச்சயம் பலன் அளிக்கும், வாழ்த்தி வரவேற்கிறேன்.

  ReplyDelete
 27. ////2016-ன் நமது அட்டவணையின் பொருட்டு போனெல்லி நிறுவனம் ஒரு புன்னகை கலந்த thumbs up தந்துள்ளனர் !! அவர்களது படைப்புகளுக்கு நம்மிடையே முக்கியத்துவம் அதிகரிப்பது குறித்து ரொம்பவே சந்தோஷப் பட்டுள்ளார்கள் !/////--- வாவ், சூப்பர் சார்.... வசிஸ்டர் வாயால் பிரம்மரிசி பட்டம், அட்டகாசம்..... இந்த பாராட்டுதான், நண்பர்களின் விடாமுயற்சி போராட்டத்தில் விளைந்த டெக்ஸின் விஸ்வரூபத்திற்கான அங்கீகாரம் சார்.....

  ReplyDelete
 28. இளவரசியின் அட்டை படம் சூப்பர்! அந்த கத்தி டிசைன் அருமை! மதுரை பாசையில் சொல்லனும்னா செம!

  இளவரசி & தோர்கல் கதைகள் படிக்க ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறேன்!

  கடந்த வருடம் சந்தா தாரர்களுக்கு சிறு சிறு surprise உண்டு என குறிபிட்டதில் ஒன்று அட்டை பெட்டியில் நமது புத்தகம்களை அனுப்பியது என நினைக்கிறன்!

  விஜயன் சார்,

  இளவரசியின் இந்த அட்டைபடத்திற்காகவே ரசிகர் கூட்டம் அதிகரிக்கும், இதன் விற்பனை இந்த முறை மாயாஜாலம் செய்யபோகிறது.

  வருத்தம்: இளவரசி கதையின் உட்பக்கம்களை இங்கு நீங்கள் பதிவேற்றாமல்விட்டது.

  காமிக்ஸ் டைம் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்!

  ReplyDelete
 29. நண்பர்கள் அனைவருக்கும் இங்கு இளவரசி பற்றி பதிவிடும் அனைத்து பின்னூட்டம்களுக்கும் Madipakkam Venkateswaran சார்பாக ஒரு "+1" கிடைக்கும். எனது இந்த பின்னூட்டதிற்கும் கண்டிப்பாக ஒரு "++++" கிடைக்கும் :-)

  Madipakkam Venkateswaran @ இந்த ப்ளாக்கில்உங்கள் பெயரை மாடஸ்டி வெங்கடேஸ்வரன் என பேர் மாற்றும் எண்ணம் ஏதும் உண்டா!

  ReplyDelete
 30. டியர் விஜயன் சார், ஒவ்வொரு வாரமும் ஞாயிறு எனக்கு,விடிவதே தங்கள் பதிவில்தான். சென்ற வாரபதிவு சோகம் கொஞ்சம் தூக்கல்.அதனால், ஞாயிறின் சந்தோஷம் சற்று மட்டுபட்டது போல் தெரிந்ததுசார்.

  இந்த வார பதிவில் அறிவித்துள்ள Comix times சிறந்தபரிசோதனை முயற்சியாக அமையகூடும்.அதில் காமிக்ஸ் எக்ஸ்பிரஸில் வந்தது போன்று, டெக்ஸ் தொடர் ஏதேனும் வர வாய்ப்பிருக்கிறதா சார்:-)
  மாடஸ்டி கதைகளை, அதன் சித்திரத்திற்காகவே பலமுறை வாசித்துள்ளேன்.கழுகுமலைகோட்டை என் ஆல்டைம் பேவரிட். ஆரம்பத்தில் லயனில் வந்த மாடஸ்டி கதைகளில் வந்த சித்திரங்கள் ஈடுஇணையற்றவை.ஆனால், பத்து ரூபாய் இதழ்களில் வந்த, மாடஸ்டி ஓவியங்கள் என்னை கவரவில்லை.பழைய புத்தகங்களிலிருந்த தெளிவான சித்திரங்கள் அதில் மிஸ்ஸானது போல தோன்றியது.
  மரணத்தின் முத்தத்திலாவாது, தெளிவான, வரிக்குதிரை உடையணியாத மாடஸ்டி வருவார் என்ற எதிர்பார்ப்பில்.

  ReplyDelete
  Replies
  1. Dr.Sundar,Salem. : //காமிக்ஸ் எக்ஸ்பிரஸில் வந்தது போன்று, டெக்ஸ் தொடர் ஏதேனும் வர வாய்ப்பிருக்கிறதா சார்:-)//

   போன முறை வாங்கிய சாத்துக்களுக்குக் கட்டுப் போடவே பொழுது பற்றவில்லை ; இனியொரு தடவை முயற்சித்தால் - புத்தூருக்கு பஸ் பிடிக்க வேண்டியது தான் !!

   But yes , டெக்ஸ் போன்ற prime நாயகர்களின்றி - ஆர்ச்சியார் ; கூர்மண்டையார் போன்ற ஜாலிப் பேர்வழிகளை தொடராய் கலமிரக்கிடும் எண்ணம் தலையின் ஒரு மூலையில் hibernate செய்கிறது ! பார்ப்போமே..!

   Delete
 31. பூமாலைல கடைசியா வர்ற பூச்செண்டு...
  தங்கச்சங்கிலில கடைசியா இருக்கற டாலர்...
  இதல்லாம் எப்படி அததுக்கு அழகையும் மதிப்பையும் தருதோ,
  அது மாதிரி இந்த வருட காமிக்ஸ்கள் அத்தனைக்கும் கடைசியா வர்ற மாடஸ்டி...

  ReplyDelete
  Replies
  1. M.V. சார் சார்பாக இங்கேயும் ஒரு +111

   Delete
 32. ஆகா ....இந்த பதிவை படிக்க ..படிக்க உற்சாகம் கொப்பளிக்கிறது சார் ...அருமை ...காமிக்ஸ் டைம்ஸ் செய்தி தாள் அட்டகாசமான அறிவிப்பு ..என்ன தான் இணையத்தில் படித்தாலும் ...புத்தகம் ...செய்தி தாள்களில் படிப்பது தான் அதனில் ஒன்றி போக செய்கிறது ...எனவே சந்தா நண்பர்களுக்கு கொண்டாட்டம் தான் ....செய்தி தாள் போல் அல்லாமல் பெரிய சைஸ் புத்தகம் போல (திகில் ஆரம்ப இதழ்கள் போல )இருந்தால் படிக்க மட்டுமல்லாமல் பாதுகாக்கவும் வைத்திருக்க முடியும் என்பது உறுதி சார் ...முடிந்தால் (மட்டுமே )அதனை நிறைவேற்ற பாருங்கள் சார் ..

  மாடஸ்தி சாகஸத்தை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் ...போன முறை ஒரு சிறந்த கதை சொதப்பலான சித்திரத்தால் கடுமையான எதிர்ப்பை சந்தித்தது ...இந்த முறை உங்கள் முன்கூட்டிய உத்தரவாதம் மகிழ்ச்சி அளிக்கிறது ...


  சந்தாதார்ர்களுக்கு இன்னொரு அட்டகாச பரிசு காத்திருக்கிறதா ....ஆஹா ...அட்டகாசம் சார் ....அது அப்படியே சி.சிறு வயதில் தொகுப்பாக இருந்தால் சூப்பராக இருக்கும் ...;-)))

  ReplyDelete
  Replies
  1. அருமையா சொன்னிங்க பரணி.

   Delete
  2. Paranitharan K : தலீவரே...படித்தே அதே பழம் புராணத்தை திரும்பவும் ஒரு புக்காக்கி உங்கள் கைகளில் ஒப்படைப்பதற்குப் பரிசென்று பெயராகாது - "தண்டனை" என்று சொல்லலாம் !! இது வேறு மாதிரியானதொரு விஷயம் !

   Delete
  3. ஆசிரியர் சார் ...அந்த விஷயம் வேண்டுமானால் வேறாக இருக்கலாம் ...ஆனால் நீங்கள் சொல்லும் அந்த " தண்டனையை " எப்பொழுதும் ஆனந்தத்துடன் அனுபவிக்க இங்கே பலர் காத்திருக்கின்றனர் என்பதை மட்டும் எப்பொழுதும் மறவாமல் இருங்கள் சார் ....


   காத்து கொண்டே இருக்கிறோம் ....

   Delete
  4. சி.சி.தண்டனையா.? மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு தெரியாது.! ஆனால் நான் ஹாட்லைனுக்கு அடுத்தபடியாக நான் படிப்பதும் இரசிப்பதும் சி.சி.தான்.!

   Delete
 33. இளவரசியை பிடிக்காதவர்கள் யார்தான் உண்டு,அப்படி இருந்தால்தான் ஆச்சரியம்.
  நானும் ஆவலுடன் இதழை எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மாடஸ்டியை நமது கலாசாரத்திற்கு ஒத்து வராதவர், அவரது இதழ்கள் தேவையில்லை. என கடந்த ஆண்டு சந்தா அறிவிப்பின் போது வாதிட்டவர்களும் இங்குண்டு தோழரே. யார் எவர் என நினைவு இல்லை. ஆனால் நான் ஏற்றுக் கொள்ளாத கருத்து என்பதால் கசப்பு மட்டும் எஞ்சி நிற்கிறது..

   Delete
  2. வழிப்போக்கன் : அட..ப்ரீயா விடுங்க சார் ! ஆளுக்கொரு ரசனை...ஆளுக்கொரு தேர்வு ! இருந்துவிட்டுப் போகட்டுமே..!

   Delete
  3. வழிவழிப்போக்கன் சார் ....மாடஸ்தி நமது கலாச்சாரத்திற்கு ஒத்து வராதவர் என்பது அதன் ஒரிஜினல் பதிப்பில் வேண்டுமானால் இருக்கலாம் ...ஆனால் தமிழில் நமது கலாசாரத்திற்கு ஏற்றவாறு மிக அருமையாக ....ஆசிரியர் வெளி கொண்டுவருகிறார் என்பதே உண்மை ....

   நமது கலாச்சாரத்துக்கு அவர் ஏற்றவாறு இல்லையெனில் லார்கோ ...ஷெல்டன் ...அவர்களும் அந்த லிஸ்டில் தான் வரவேண்டும் ...;-))

   Delete
  4. மாடஸ்தியை விரும்பாதவர்கள்
   அழகின் எதிரியாய் இரூப்பார்கள்

   Delete
  5. வழிப்போக்கன் .!

   நண்பரே.! நீங்கள் ஒரிஜினல் பதிப்பில் கூறியது உண்மைதான்..! ஆனால் நமது தமிழ்பதிப்பில் எடிட்டர் அந்த ஆபாசத்தை , கதைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அழகாக எடிட் செய்து ,தண்ணீர் கலந்த பாலில் தண்ணீரை மட்டும் தனியே பிரித்தெடுக்கும் அன்னப்பறவைபோல் ,நல்லதை மட்டும் பிரித்து கொடுத்துள்ளார்.! நான் எந்த ஒரிஜினல் இதழையும் பார்த்தது இல்லை.பார்க்கவும் போவது இல்லை. சமீபத்தில் வாட்சப்பில் வந்த ஆபாச படத்தை பார்த்து டர் ஆகிவிட்டேன்.! சில விஷயங்களில் நதிமூலம் ரிஷி மூலம் தெரியாது இருப்பது நன்மை பயக்கும்.அதில் மாடஸ்டி கதையும் ஒன்று.

   அது ஏன் நமது இந்திய கலாச்சாரத்தில் கூட நம் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு கம்பர் கூட பட்டி டிங்கரிங் ஓர்க் பார்த்துதான் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

   அதேபோல் பாலிவுட் சென்சார் போர்டுக்கும் , நமது சென்சார் போர்டுக்கும் வித்தியாசம் உண்டு.!

   குடும்ப பெண்கள் கூட ரசித்து படிக்கின்றார்கள்..அந்த அளவிற்கு எடிட்டர் தன் கத்தரிக்கு வேலைகொடுத்து உள்ளார்.!

   கதையை படிக்கும்போதே கதை ஆசிரியர் நல்ல உலக அனுபவம் மற்றும் பலநூல்களை கற்ற ஞானிபோல் தோன்றுகிறது.! மகரந்த சேர்க்கை நடக்கவும் தேணீக்களுக்கு தேன் கிடைக்கவும் மலர்களை கடவுள் அழகாகவும் கவர்ச்சியாகவும் படைத்தது போல .,தன் கருத்துக்கள் எல்லோரையும் சென்றடைய ஆசிரியர் கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்துக்கொண்டார் போலும்.!

   Delete
 34. இனிய காலை வணக்கம் எடிட்டர் சார்!!!!
  இனிய காலை வணக்கம் நண்பர்களே!!!!

  ReplyDelete
 35. A warm welcome to "Comix Times" :-):-):-)
  இது எனது நீண்ட நாள் ஆசையும் கூட...இன்றைய இளைய தலைமுறை பெரும்பாலும் புத்தகம் படிக்காமல் அனைத்தையும் மொபைலிலேயே படிக்கின்றனர்...

  சுஜாத்தாவின் சிறுகதைகளில் தொடங்கி...பொன்னியின் செல்வன் வரை எல்லாம் மொபைலில் தான் படிக்கின்றனர்...

  அவர்களைக் கவர இது ஒரு அருமையான முயற்சி!!!

  ஜூனியர் எடிட்டரின் இந்த முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்!!!!

  ReplyDelete
  Replies
  1. Sathiya : ஹலோ..ஹல்லல்லோ.....comix times அடியேனின் முயற்சியே !! அவ்வளவு சீக்கிரத்தில் VRS வாங்கிடுவேனா - என்ன ?

   Delete
  2. ஹா...ஹா...ஹா....சூப்பர் சார் :):)

   Delete
  3. @Editor sir:
   (செந்தில் பாணியில்)ஐயம் வெரி sorry எடிட்டர் சார்... :p:p:p

   எப்படியாவது இந்த தலைமுறை மற்றும் அடுத்த தலைமுறையை நமது காமிக்ஸ் குடும்பத்துக்குள் கொண்டு வந்திடனும் சார்....அதுக்கு நீங்க என்ன முயற்சி எடுத்தாலும் எங்களுக்கு எப்பவும் ஓ.கே.சார் :-):-):-)

   Delete
  4. Intha chinna!!!! Vayasile VRS-ah? No.No. we can't allow this.

   Delete
 36. /////And சென்ற வாரத்து எனது பதிவைத் தொடர்ந்து சந்தா மட்டுமின்றி ‘எ.பெ.டை.‘ முன்பதிவுகளிலும் ஒரு சுறுசுறுப்பைக் கண்டிட முடிகிறது என்பது சந்தோஷமான update! ///--- அப்படீன்னா ஜனவரியில் சென்னையில் Tex &Tiger இணைந்து மிரட்டும் முரட்டு அசத்தலா சார்.....ஆஹா நினைத்தாலே இனிக்கிறது.......கன்ஃபார்ம் பண்ணீங்கன்னா இரட்டை சந்தோசம் சார்...

  ReplyDelete
  Replies
  1. சேலம் Tex விஜயராகவன் : சென்னையில் TEX & TIGER மிரட்டத் தான் போகிறார்கள் நண்பரே - ஆனால் ஏப்ரலில் தான் ! ஜனவரியில் நமது இரவுக் கழுகாரின் நீண்ட சாகசம் மட்டுமே - இதர வண்ண இதழ்களோடு !

   Delete
  2. சூப்பர் சார், சூப்பர்....
   Tigerக்கு எப்பவும் ஏப்ரலில் நடக்கும் விழா தான் ராசி போல....இந்த ஆண்டு மின்னும் மரணம்" விழா போலவே , என் பெயர் டைகர் + டெக்ஸ் மெகா சைஸ் இதழ் - என இரட்டை விழாவா அட்டகாசம் சார்....கரும்பு தின்ன கூலியா??......
   அந்த " என் பெயர் டைகரில்" -கோடை மலர் என போட இயலுமா சார்????.... மெகா கோடை மலர் பார்த்து நாள் ஆயிற்று சார், ரொம்ப நாள் ஆயிற்று....

   Delete
  3. மேக்ஸி டெக்ஸ் ஜனவரியில்தானே.!

   Delete
  4. ///ஜனவரியில் நமது இரவுக் கழுகாரின் நீண்ட சாகசம் மட்டுமே - இதர வண்ண இதழ்களோடு ///--- இல்லை போல தெரியுதே ரவி....நீண்ட சாகசம் என தானே சொல்லியுள்ளார், டிசம்பர் இதழில் தெரிந்து விடும்...சைஸ் ரெகுலரா அல்லது மேக்ஸியா என....

   Delete
 37. முன்னட்டையில் இருப்பது மாடஸ்தி தானா? என்றொரு சந்தெகம் எனக்குள். பின்னட்டை நன்றாக உள்ளது.

  ReplyDelete
 38. புதுச்சேரியில் டிசம்பர் 18 முதல் 27 வரை புத்தக கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நமது பதிப்பகம் அதில் கலந்துகொள்கிறதா?

  ReplyDelete
  Replies
  1. Arun Kumar : Sorry, no ! கடந்தாண்டு மிகச் சுமாரான விற்பனை என்பதால் இம்முறை பங்கேற்கத் தோன்றவில்லை !

   Delete
 39. January Tex special Patrick ethuvum solavey illiye why sir

  ReplyDelete
  Replies
  1. Sridhar : டிசம்பர் இதழில் விளம்பரங்கள் உள்ளன நண்பரே !

   Delete
 40. நண்பர்கள் யாராவது டிசம்பர் இதழ்கள் வந்த பின்னர் இந்த வருட இதழ்கள் லிஸ்ட் வெளியிட்டால் இந்த வருட டாப் இதழ்கள் ...சுமாரான இதழ்கள் போன்றவற்றை தேர்ந்தெடுக்க வசதியாக ....இருக்கும் ..


  செய்வீர்களா ..?

  யாராவது செய்வீர்களா ..?

  ;-))

  ReplyDelete
  Replies
  1. அந்தச் சிரமே உங்களுக்கு வேண்டாம் தலீவரே...கேள்விகள் + 2015-ன் வெளியீடுகளின் பட்டியல் டிசம்பர் இதழினில் உள்ளது !

   Delete
  2. ஆஹா ....அருமை சார்....நன்றி .....;-))

   Delete
  3. நன்றி சார்,கருத்து சொல்ல வசதியா இருக்கும்.

   Delete
 41. மாத காலண்டர் ஒன்று.
  மாதம் ஒரு காமிக்ஸ் ஹீரோ.
  சந்தாதாரர் க்கு இலவசம்.
  புக்பேர்களில் விற்பனைக்கு.
  எப்புடி நம்ம ஐடியா.
  சேம் ஐடியா பார் டீசர்ட்

  ReplyDelete
  Replies
  1. சந்தாதாரர் களில் டீசர்ட் வேண்டாதவர்கள் காலண்டரை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்

   Delete
  2. அமர்நாத் சார் காலண்டர் வெளியிட முடியாமைக்கான காரணத்தை ஆசிரியர் இங்கே தெரிவித்துள்ளாரே ....கவனிக்க வில்லையா ....;-))

   Delete
  3. குரூப் போட்டாவுக்கு தானே ஆசிரியர்சிக்கல் களை சுட்டிக்காட்டியுள்ளார்.
   தனியாகத்தானே நான் கேட்கிறேன்.
   ஸமர்ப் நிறுவனம் இதற்கு ஒத்துக்கொள்ளாது.
   ஆனால் மற்றவர்கள்?

   Delete


 42. அருமையான காமிக்ஸ் டைம் முடிவு விஜயன் சார் :))

  ஜூ எடிட்டரிடமிருந்து என்ன தகவலென்று தெரியலியே சஸ்பெனஸ் தாங்க முடியலயே :(

  ReplyDelete
 43. Dear Editor
  I request u to send me booklet of 2016 preview
  with December sandha issues
  I didn't receive them last time
  Thank you
  Regards
  Arvind
  Besant nagar Chennai

  ReplyDelete
 44. சார் வணக்கம்,
  சந்தா சூடுபிடித்தது மகிழ்ச்சி. மாடஸ்டி அட்டை பட ஓவியத்தில், மாடஸ்டியின் அழகான பெரிய கண்கள் மிஸ்ஸிங் சார்.
  மறுபதிப்பாக மேலும் பல இளவரசி கதைகள் வேண்டும் சார்

  ReplyDelete
 45. மீண்டும் தளதில் உற்சாகம் பற்றிக்கொள்ள செய்த பதிவு. மகிழ்ச்சி. காமிக்ஸ் டைம் இவ்வருடம் தல வருடமாக இருக்கப் போவதை ஆணித்தரமாக நிரூபித்துள்ளது.

  ReplyDelete
 46. Anaithu muyarchigalukkum valthukkal sir.

  ReplyDelete
 47. Dear Sri Vijayan, When is the pending Unnamed Graphic Novel scheduled. WIll it see the light in January.

  ReplyDelete
 48. எல்லோருக்கும் வணக்கம்
  எடி அறிவித்த படி யாவையும்கூடி வர இறைவனை வேண்டுவோம்

  ReplyDelete
 49. ஆசிரியரே கடந்த பதிவு என்னை மிகவும்
  கஷ்டப்படுத்தியது ஆனால் இந்த பதிவு என்னை மகிழ்சி கூத்தாட வைக்கிறது

  ReplyDelete
 50. காமிக்ஸ் டைம் காக காத்திருக்க வேன்டியதுதான். இனையதளப் பதிவு வரை

  ReplyDelete
 51. இளவரசி பின்னட்டையில்சிறப்பாக அமைந்துள்ளார்,அதையே முன் அட்டையில் வைக்க முடியாதா?

  ReplyDelete
 52. சந்தா எண்ணிக்கை சுறுசுறுப்பாக உள்ளது மகிழ்ச்சியான விஷயம்,சந்தா என்னும் சத்துபானம் இதழ்களை விரைவில் வெளியிட வசதியாக இருக்கும்.

  ReplyDelete
 53. இந்த சந்தா விஷயம் டிசம்பர்-ல் அனுப்பலாம் என்றிருந்தேன். நண்பர்கள் (ராகவன் மற்றும் பலர்) ஏற்கனவே கூறியுள்ளது போல், 48-50 இதழ்களில் ஒரு 25% எனக்கு பிடிக்காததே. இருப்பினும் அதனை வாங்குவது 'நம் குழு'மத்திற்காகவே. 2016-ல் எனக்கு பிடித்த ப்ளுகோட் இல்லாததில் சற்றே வருத்தம். தற்போது வரும் லக்கிலூக், சிக்பில்-லை விட இவர்கள் அடிக்கும் லூட்டி அதகளம். உள்நாட்டு போர் தான் களமெனினும், உங்களின் விரல்களுக்கு அவர்கள் வைக்கும் வேலை எளிதல்லவே.(...!?) அவர்களுக்கு ஒன்றிரண்டு வாய்ப்பளித்திருக்கலாம்.

  பின்னட்டையில் உள்ள மாடஸ்டி கம்பீரம்.

  அட...இந்த இதழில் இருந்து ISBN ஏற்பாடா....இல்லை இதற்கு முந்தைய இதழ்களில் நான் கவனிக்க தவறிவிட்டேனா.

  ReplyDelete
 54. @Editor sir:
  ஈரோட்டிலிருந்து 'S.அகில்' எனும் 14 வயதுடைய நமது காமிக்ஸின் தீவிர வாசக நண்பன் தன்னுடைய மொபைலில் சின்ன பிரச்சினை என்றும்...ஆகையால் அவனது சில கருத்துக்களை இங்கே நான் பதிவிடுமாறு கேட்டுக் கொண்டான்....
  அவ்வண்ணமே இங்கே...

  ReplyDelete
 55. S.Akil:
  எடிட்டர் மற்றும் அனைத்து காமிக்ஸ் நண்பர்களுக்கும் எனது வணக்கம்!!!

  @எடிட்டர் சார்:
  ->நான் லயன் முத்து காமிக்ஸின் தீவிர ரசிகன், வாசகன்...நமது காமிக்ஸை மாதம் தவறாமல் படித்து விடுவேன்....

  ->நான் மட்டுமல்லாமல் எனது வகுப்பில்லிருக்கும் எனது நண்பர்கள் கிட்டத்தட்ட 18 பேரும் நமது காமிக்ஸின் அதி தீவிர ரசிகர்கள்...

  ->எங்களுக்குக் காமிக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும்...அதுலையும் 'டேஞ்சர் டயபாலிக்' என்றால் எங்கள் அனைவருக்கும் மிக மிக அதிகமாக பிடிக்கும்...

  ->டயாபலிக்கின் 'ஆபரேஷன் சூறாவளி' கதை யை எத்தனை தடவைப் படித்திருப்போம் என்று எங்களுக்கே தெரியாது...அந்த அளவுக்கு ரொம்ப பிடிக்கும்!!!

  ReplyDelete
 56. ->டெக்ஸ்,டைகர்,லார்கோ,ப்ளூகோட்ஸ் போன்ற கதைகள் எங்களுக்கு பிடிக்கும்...ஆனால் இவை அனைத்தையும் விட எங்களுக்கு டயாபலிக்கைத் தான் மிகவும் படிக்கும்...

  ->ஆனால் அப்படிப்பட்ட 'டயாபலிக்' கதை அடுத்த வருடம் ஒன்று கூட இல்லாதது எங்கள் அனைவருக்குமே மிக மிக வருத்தம்...

  ->அதே போல் எங்களுக்கு ப்ளூகோட்ஸ் மற்றும் ஜில் ஜோர்டன் கதைகளும் மிகவும் பிடிக்கும்...அவைகளும் அடுத்த வருடம் இல்லை என்பதில் மிக வருத்தம்...

  -> ஜில் ஜோர்டன் & ப்ளூகோட்ஸ் கதைகள் இல்லாத காரணத்தாலயே நான் 'option c-c for comics' க்கு சந்தா கட்டவில்லை....

  ->அதேபோல option-A விலும் டயாபலிக் இல்லாதது மிக வருத்தமாக உள்ளது...

  ->option-z லயாவது டயபாலிக்கைக் கொண்டு வாருங்கள்

  -> அதேபோல் ஈரோட்டில் ஒரு சில கடைகளில் மட்டுமே காமிக்ஸ் கிடைப்பதால் வாங்குவ்ச்தற்கு சிரமமாக உள்ளது...

  ->ரோஜர் கதைகள் நிறைய வர வேண்டும்

  -> டிடக்டிவ் ராபின் கதைகளை வண்ணத்தில் வெளியிட வேண்டும்...

  ->மர்ம மனிதன் மார்ட்டின், மாடஸ்டி கதைகள் ஆண்டுக்கு இரண்டு ஓ.கே...

  ReplyDelete
 57. Replies
  1. Sathiya : என்றைக்குமே இல்லாததைத் தேடி அலைபாய்வது தானே மனித மனம் ? டயபாலிக் வந்து கொண்டிருந்தவரையும் அவரைச் சீந்த நாதியின்றி இருந்தது ! அவருக்கு VRS கொடுத்தான பின்னே அவரைத் தேடும் குரல்கள் ! ப்ளூ கோட்ஸ் & ஜில்லார் விஷயத்தில் கூட அதுவே தான் !

   கீறல் விழுந்த ரெக்கார்ட் போல நான் திரும்பத் திரும்ப உங்கள் ஒவ்வொருவரையும் தத்தம் அபிப்பிராயங்களைச் சொல்லக் கோருவது இதன் பொருட்டே ! "பிடிக்கவில்லை " என்றொரு நிலை எழும் சமயம் அதனை அழுத்தமாய்ப் பதிவது போலவே - ஒரு கதைத் தொடரை நீங்கள் ரசித்திடும் பட்சத்தில் அந்த ரசனையையும் பதிவு செய்வதும் முக்கியமன்றோ ? மௌன வாசகர்களாய் இருப்பது தவறில்லை தான் ; ஆனால் அதன் மறு பக்கம் இது போன்ற சிக்கல்கள் குடியிருப்பதும் இயல்பே ! விடுபட்டவர்களை 2017-ல் பரிசீலனைப் பட்டியலுக்குள் கொணர்வோமே !

   Delete
  2. டயபாலிக் 'டேஞ்சர்' கட்டத்தை தாண்ட என் போன்ற ஆக்ஷன் இரசிகர்கள் உதவத் தயாராக உள்ளோம்! டெக்ஸ்-க்கு கொடுத்த இடத்தில் டயபாலிக்கை ஒரு இடத்திலாவது பயன்படுத்தி இருக்கலாம் ஐயா!...

   Delete
  3. @Editor sir:
   நீங்கள் சொல்வது அத்தனையும் நிஜம் சார்!!!
   வேண்டாம் என்று உரத்த குரல் கொடுக்கும்போதே வேண்டும் என்றும் குரல் கொடுத்தால் தான் வேண்டியது கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை சார்!!!

   நான் மேலே கூறிய கருத்துக்கள் யாவும் சிறு வயது காமிக்ஸ் ரசிகனான அகிலின் எண்ணங்களின் வெளிப்பாடே சார்....
   என்னுடையது அல்ல சார்...
   அவன் எனக்கு கால் பண்ணி சொன்னதை அப்படியே இங்கே தமிழில் டைப் செய்து கமெண்டாக போட்டு விட்டேன் சார்....

   இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால்...இப்பொழுது இங்கே கமெண்ட் போடுவதற்கே என் உதவியை நாடும் சகோதரன் அகிலுக்கு அன்று 'டயாபலிக்,ப்ளூகோட்ஸ்' போன்றவர்கள் வேண்டும் என்று குரல் கொடுக்க முடியாமல் போயிருக்குமோ என்கின்ற நினைப்பு தான் சார்!!!!

   இந்த தலைமுறையிலும் நமது காமிக்ஸ் வாகர்கள் இருப்பதைக் கண்ட சந்தோஷத்திலும்....இவனைப் போன்றவர்களின் கருத்துக்கள் உங்களை வந்தடைய வேண்டும் என்பதற்காகத்தான் அவன் கூறியதை அப்படியே இங்கே பதிவிட்டேன்....

   Delete
  4. எனக்கு இன்னொன்றும் தோன்றுகிறது சார்...இவனைப்போல இன்னும் எத்தனை பேரோ?!

   இன்னும் எத்தனை மௌனப் பார்வையாளர்களோ?!

   ஹும்ம்ம்ம்....

   Delete
  5. 2017 ல் கண்டிப்பாக டயபாலிக் வேண்டும் ஆசிரியரே,காத்திருப்பு பட்டியலில் சீனியாரிட்டிபடி டயபாலிக்கிற்கு முதல் வாய்ப்பு கொடுக்கவும்.ஹி,ஹி.

   Delete
  6. //ஆனால் அப்படிப்பட்ட 'டயாபலிக்' கதை அடுத்த வருடம் ஒன்று கூட இல்லாதது எங்கள் அனைவருக்குமே மிக மிக வருத்தம்...
   option-z லயாவது டயபாலிக்கைக் கொண்டு வாருங்கள்//
   +1111111111111111111111111

   Delete
  7. டயபாலிக் சந்தா Zல் சேர்த்து விடவும் :-)

   'இவரு கெட்டவருடா .. கொல கொலயா முந்திரிக்கா மட்டுமே விளையாடுறாரு' என்று சொல்லும் மகான்களுக்கு தோதாக, "இது டயபாலிக் 'நல்ல, பண்புள்ள திருடனாய்' மாறுவதற்கு முன் நிகழ்ந்த கதை" என்று முதல் பக்கத்தில் ஒரு பிட்டு சேர்க்கவும் :-p

   Delete
 58. //அச்சின் பாக்கிப் பணிகள் முடிந்து, பைண்டிங்கும் முடிந்து – வரும் வெள்ளியன்று (டிசம்பர் 4) உங்கள் சந்தாப் பிரதிகள் புறப்படும்! ///--- ஒரு வழியாக வெளியீட்டு தேதி தெரிந்து விட்டது...அந்த சின்னப்பெண் ஆரிஸியாவுக்கு என்ன ஆச்சோ என இரண்டு மாசமா மனசு கடந்து தவிக்குது சார்... அதான் கொஞ்சம் எதிர்பார்ப்பு இம்முறை, அதனாலேயே பொறுமை கொஞ்சம் தொலைந்து விட்டது....ஹி...ஹி...

  ReplyDelete
  Replies
  1. சேலம் Tex விஜயராகவன் : ஆரிசியாவும் சரி, சின்னப் பெண் ஷானியாவும் சரி - இம்மாதம் உங்களை மெர்சல் ஆக்காது விட மாட்டார்கள் பாருங்களேன் !

   Delete
  2. இன்னும் மெர்சலான திருப்பங்களா சார்.....ஆகா, இந்த பிஞ்சு மனசு எப்படி தாங்குமோ????...

   Delete
 59. சுறுசுறுப்பான முன்பதிவு,சந்தா ...இனிப்பான செய்தி ..வரவேற்கிறேன்

  ReplyDelete
 60. டிசம்பர் இதழ்களில் தோர்கல் கமான்சே மாடஸ்டி போன்றவை எதிர்பார்ப்பை எகிற வைக்கின்றன...
  இந்த வானமே எங்கள் வீதியை நினைத்தால் ரொம்பவே பீதியாய் இருக்கிறது....!

  ReplyDelete
 61. கடந்த வருடம் வெளிவந்த முதலிரண்டு பாகங்களை படித்து விட்டு தலையும் புரியாமல் வாலும் புரியாமல் கடுப்பாகிப்போய் பரண் மேல் தூக்கிப்போட்டு விட்டேன் ..முதலில் அதை தேடி எடுக்கனும் ...
  மூன்று பாகங்களையும் ஒரு மொத்தமாய் படிக்கும் போதாவது புரியுதானனு பார்ப்போம்.....!

  ReplyDelete
 62. நண்பர்களுக்கு தாமதமான இரவு வணக்கங்கள்..!
  [இதை மெல்லிய புன்னகையுடன் எழுதுகிறேன்]

  நம் நூறு பேர்களின் எண்ண ஓட்டத்தை, நம்மால் கூர்ந்து கவனிக்கப்படுபவர் நாடிபிடிக்கும் போது, நூறு பேர் சேர்ந்து ஒரு நபரை நாடிபிப்பது கொஞ்சமேனும் சிரமம் இருக்குமா என்ன ! "ச்சே ஏன் இப்படி செய்கிறார் ?" என ஓவ்வொரு முறையும் பெரும்பாலானவர்கள் மனதில் தோன்றும் போதெல்லாம்...இதை இப்படியே விட கூடாது என பல கைகளின் பரபரக்கும் போதெல்லாம்... ஒரு விஷயம் தவாறாது நடக்கிறது..!

  அது "சுவிச்சை ஆப் செய்வது"

  நாமும் 'லாலிபாப்' கையில் பிடித்து கொண்டு "சரி விடுங்க...இனி நிறைய நல்லதுக்காண்டி மாத்துவாரு.." என நடையை கட்டியிருக்கிறோம் ! ஆனால் ஒரு இடைவேளைக்கு பின், முருங்கைமரம் கதை அரங்கேற்றம் மட்டும் தவறாது தொடர்கிறது ! இந்த "சுவிச்சை ஆப்" செய்பவரை சமாளிக்கும் சாமார்த்தியம் நமக்கு போதாது! 'டக்' என எதோ ஒரு சமாதனத்தை கையில் திணித்து விடுகிறார்.

  இப்போது விடை தேடல் முடிந்து,உற்சாகம் துவங்கி விட்டது ! திரும்ப விடைகள் தேடும் வினாக்களை மறுபதிப்பில் போடலாமா சில வாரங்கள் கரைந்த பின் துளிர் விடும் ! மெல்ல முருங்கை மரத்தின் நினைவு நிழலாடும் ! அந்த சந்தர்ப்பத்தில்...அடுத்த முறை வழக்கமாக ஏறும் அந்த மரம் அங்கு இருக்ககூடாது!

  அதற்காக நான் அந்த மரத்தின் வேரின் மீதே கைவைத்துள்ளேன்..!

  நான் குறிப்பிடுவது : கடந்த பதிவில் கேட்கப்பட்ட கேள்விக்கு அதிகபட்சமனவர்களின் மனஓட்டத்தை, பலதயக்கங்களை தாண்டி, பலமுறை வாக்கியங்களை முடிந்தமட்டும் சரிபார்த்து, எனக்கு இதை கேட்காமல் விடுவது தவறு என தோன்றியதை பதிவிடுவதைதான்..!

  கேள்வி கேட்கப்பட்ட இடத்திலேயே பதில் சொல்வதுதானே..பலரின் மனதில் அலைகழிக்கும் எண்ணத்தை பதிவுசெய்துள்ளேன்..! அதாவது முந்தைய பதிவில்..!

  ReplyDelete
 63. சொல்வதுதானே.. = சொல்வதுதானே சரி...

  ReplyDelete
 64. Yes nowadays bluecoat is comparatively better than lucky luck & chick bill. Especially his last adventure THANGAM THEFIYA SINGAM is very gud... His absence on 2016 is a big disappointment for me.

  ReplyDelete
 65. Vijayan sir,

  I feel some new comics offering should be there for all ages. Vikatan has created a big hype with chandrahasam. We should be creating different genres in order to gain more new readers cum subscribers for our comics.
  The A+B+C+D doesn't appeal to everyone. It's not the price only the offerings do not suit our tastes.

  ReplyDelete
 66. Shhappa!!!! finally I HAVE POSTED MY COMMENT. VETRI!!!! VETRI!!!

  ReplyDelete
 67. Hi
  I m Ganesan, a comic fan for the past 30 years and silent spectator of this blig. I tried several times post my commends in the blog but I failed patheticly. Snyhow I think I succeed now.

  ReplyDelete
 68. @Ganesan(aka)chattamethai:
  முப்பது வருட காமிக்ஸ் வாசகரா...அடடே!!!
  நமது ப்ளாக்கிற்கு நல்வரவு நண்பரே :-)

  ReplyDelete
 69. comix times ! என் கருத்து !

  சிறிதும் ஈர்ப்பில்லாத அறிவிப்பு. இதில் எனக்கு, பெரிய ஆர்வமோ ; எதிர்பார்ப்போ நிச்சயமாக இருக்கப் போவதில்லை. சந்தாவுடன் வரும் இந்த 'நியூஸ் பேப்பரை' முழுவதுமாக படிக்க முடிந்தாலே அது மிகப்பெரிய விஷயமாக இருக்கும். இந்த அறிவிப்பால் 'சந்தா' கூடுமோ ?! என்பதில் என்னைப் போல் பல வாசகர்களுக்கும் சந்தேகமே மிஞ்சும். பணமும், நேரமும், எடிட்டரின் கிடைப்பதற்கரிய உழைப்பும் - விரயமாகி விடுமோ என்ற எண்ணமே தோன்றுகிறது :-(

  ReplyDelete
 70. //சரக்கு முறுக்காகவே இருப்பினும் செட்டியாரும் முறுக்காக இருத்தல் அவசியம் என்பதை நீங்கள் புரியச் செய்திருக்கிறீர்கள்//

  :-))

  தங்களின் கருத்தில் இருந்து முரண்படுவதற்கு மன்னிக்க வேண்டும் எடிட்டர் சார், சரக்கு முறுக்காக இருக்கிறதா என்பதல்ல பிரச்சனை - இங்கு செட்டியார் மட்டுமே முறுக்காக இருக்கிறார் என்பதே பலரும் பார்த்து வரும் அனுபவம் :))

  Bar code மற்றும் ISBN சம்பந்தமாக இங்கு முதன்முதலாக பின்னூட்டம் மூலமாக கோரிக்கை வைத்த கோவை நண்பர் சதீஷ்குமார் அவர்களுக்கு வாழ்த்துகள் !!

  ReplyDelete
 71. வரபோராடா.....

  ஏன் செல்லகுட்டி.......


  ஏன் சீமாட்டி.............

  ஏன் வெல்லக்கட்டி............

  ஏன் தங்க கட்டி.....................

  ஏன் அட்ராசிட்டி..............
  ''பார்'' ரும் ....
  தேவையில்ல...
  ''கோடும்''
  தேவையில்ல...........

  நீ ........
  இருக்கும்..........
  புக்கில்....
  பாரே கோடு தான் ...
  கோடே பார் தான் ..............
  ஆச்சர்யகுறி......  பாரும் நீயே ......
  கோடும் நீயே ........

  கவித........ கவித................

  பார் குடுத்த புண்ணியவான் .....ஜூனியர்
  கோடு குடுத்த புண்ணியவான்......சீனியர் (கொடேஸ்டி)

  நீ வீர் வாழ்க

  ReplyDelete
  Replies
  1. மந்திரியாரே!

   கவித!

   கவித!

   ஜூப்பரப்பு!!!


   ஜூப்பரப்பு!!!!

   Delete
  2. மங்காத செல்வமே........... வாழி நீ வாழ்க

   Delete
 72. மந்திரியாரே கவிதை பிண்ணுறிங்க

  ReplyDelete
  Replies
  1. நீங்க ரொம்ப புகழ்றீங்க ...........

   Delete
 73. மந்திரியாரே கவிதை பிண்ணுறிங்க

  ReplyDelete
  Replies
  1. நீங்க ரொம்ப............... ரொம்ப............... புகழ்றீங்க ...........

   Delete
 74. மாடஸ்டி கதையின் பெயர் மரணத்தின் முத்தம் மாடஸ்டி அழகுக்கோ ஆயிரம் முத்தம்

  ReplyDelete
  Replies
  1. சத்தமிலா முத்தம் ................

   சீனியர் ஆசானே ...............பேர மாத்துங்கோ

   அதான் செந்தில் சொல்றாருல

   Delete
  2. மந்திரியார் கமெண்ட் போட்டலே
   கலக்கல்தான் போங்கோ

   Delete
 75. மந்திரிஜி மாடஸ்டியை புகழ்ந்து கவி பாடியதால் என் மனம் குளிர்ந்தது!
  பரிசாக இதோ ஆயிரம் பொன்...!
  M.V.சார்....கொடுத்துங்க.....!

  ReplyDelete
  Replies
  1. //...............மாடஸ்டியை புகழ்ந்து கவி பாடியதால் என் மனம் குளிர்ந்தது!

   புரியுது உங்க ராஜ தந்திரம்...................
   இதே போல் மாடேஸ்டியும் குளிர்ந்தால் தங்களுக்கு மிக சந்தோசம் ............அதானே..

   அதாகப்பட்டது................
   கதையில் மாதேஸ்ட்டி குளிக்க வேண்டும் ........
   பின்பு மாதேஸ்டி குளிரில் நடுங்க வேண்டும் ...............

   ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்...................

   (ஆசான் cum சந்திரமுகி வடிவேல் mind வாய்ஸ்) ...............நான் இருக்கும் வரை அது நடக்காதுப்பூ


   பின்பு நாம கெட்டு போகாமலிருக்க...........
   ஆசான் கத்திரி போடவேண்டும் .........
   பின்பு கோடு போடவேண்டும்.................
   பின்பு ரோடு போட வேண்டும்...............


   Delete
  2. @ FRIENDS : வெள்ளமே ஓடினாலும் மடிப்பாக்கத்தில் ஒருத்தர் "ஒ..பாப்பா..லாலி ! கண்மணி..லாலி....! என்று பாடிக் கொண்டிருப்பது உறுதி !! துணைக்கு இத்தனை நண்பர்கள் சேர்ந்து விட்டால் கேட்கவும் வேண்டுமா ?

   Delete
 76. காமிக்ஸ்கள் பற்றிய தகவல்களுக்கு நியூஸ் பேப்பர் வடிவில் ஓர் Comix Times ! அருமை !

  நேரடி சந்தா கட்டாது கோகுலம் வாசகர் வட்டம் மூலம் காமிக்ஸ் வாங்குவோர்க்கும் அனுப்புங்களேன் சார் :)


  ReplyDelete
 77. கார்வின் வருகிறாரா?அட்டையும் செய்தியும் சூப்பர் ! :)

  ReplyDelete
 78. சார் அருமை ! வெற்றி நிச்சயம்.....வானமே எங்கள் வீதிக்காக காத்திருக்கிறேன் ..........சிங்காநல்லூர் பஸ் ஸ்டேண்ட் அருகேயும் நமது இதழ்கள் கிடைக்கும் !

  ReplyDelete
 79. மாடஸ்டி ஆதரவாளர்கள் நெறய பேர் இருப்பாங்க போலிருக்கே.!

  ஓடீர்ரா கைப்புள்ள.!!!!!

  ReplyDelete
  Replies
  1. கார்வினுக்கும் உண்டு ஜி :)

   Delete
 80. சிங்காநல்லூர் பஸ் ஸ்டேண்ட் அருகேயும் நமது இதழ்கள் கிடைக்கும் - ஸ்டீல் சார் book stall பெயர் என்ன ?

  ReplyDelete
 81. வணக்கம் நண்பர்களே

  ReplyDelete
 82. விடாது கருப்பு எ ன்பது போல் சென்னையை விடாது மழை படுத்துகிறது

  ReplyDelete
 83. // சென்றாண்டின் சந்தா வரவுகளின் pattern-ன் மீது கொஞ்சம் கவனத்தை லயிக்கச் செய்த போது – சந்தாக்களின் 75% டிசம்பரிலும், ஜனவரியின் துவக்கத்திலும் தான் பதிவாகியிருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது! So- அவசரம் அவசரமாய் புயல் எச்சரிக்கையை துறைமுகத்தில் ஏற்றியது போலான என் அவரசக் குடுக்கைத்தனத்தின் பொருட்டு apologies guys!

  அதே சமயம் – இதிலும் ஒரு நன்மை இல்லாதில்லை என்றே சொல்வேன்! blah blah blah... //

  Hmm....

  ReplyDelete