Powered By Blogger

Sunday, November 15, 2015

வழக்கம் போலொரு ஞாயிறு !!

நண்பர்களே,

வணக்கம்.'இதோ வருது தீபாவளி ...அதோ வருது விடுமுறை என்று காத்திருந்த நாட்களெல்லாம் கரைந்து செல்ல - தீபாவளியுமே அடித்துத் துவைத்த மழையின் மத்தியில் ஓசையின்றித் தாண்டிச் சென்றது போலத் தோன்றியது எனக்கு மட்டும் தானா - தெரியவில்லை ! ஆனால் மழைத் தூறலின் மத்தியிலும் எங்கள் ஊரில் அந்த சாயங்காலப் பொழுதை பட்டாசுகளால் அதிரச் செய்த ஜனம் ஏராளம் ! So இன்னுமொரு வருஷம்...இன்னுமொரு பண்டிகை நம் நினைவுகளின் பேழைகளுக்குள்ளே பார்சலாகிட - நார்மலான நாட்களின் ராஜ்ஜியம் தொடர்கிறது ! உலகுக்கே இது தான்கதை எனும் போது - கதை சொல்வதே உலகமான நமக்கு மட்டும் மாறுபட்டா இருந்திடும் நிலவரம்? ஆண்டின் இறுதி மாதத்து இதழ்களோடு மல்லுக்கட்ட எப்போதும் போல் தயாராகிக் கொண்டிருக்கிறோம் ! And இம்மாதம் தூள் கிளப்பப் போவது "தோர்கல்" தான் என்பதில் துளியும் சந்தேகமில்லை எனக்கு ! வேற்று மொழியின் ஒரிஜினல்களிலிருந்து மொழிபெயர்க்க வேண்டிய கதைகள் என்றாலோ - சற்றே இடியாப்பமான கதையோட்டம் கொண்ட ஆல்பங்கள் என்றாலோ - முன்ஜாக்கிரதையாய் கொஞ்சம் முன்கூட்டியே எழுதத் தொடங்கிடுவது வழக்கம். ஆனால் Cinebooks புண்ணியத்தில் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் தரத்தில் தோர்கலின்  ஆங்கில மொழிபெயர்ப்பு நமக்குக் கிடைத்திருப்பதால் சாவகாசமாய் தான் இந்தக் கதைக்குள் மூழ்கினேன் ! வாவ் !!! என்பதைத் தாண்டி எனக்கு வேறு வார்த்தைகள் வரவில்லை - கதையோட்டத்தை ரசிக்க இயன்ற போது !!  இது இது வரையிலான கதைகள் பிரமாதம் எனில் - காத்திருக்கும் 2 சாகசங்களும் சுத்தமாய் புதியதொரு லெவல் என்று தான் சொல்ல வேண்டும் ! கதாசிரியர் வான் ஹாம்மேவை நிறைய நாம் சிலாகித்திருக்கிறோம் ; XIII ; லார்கோ ; ஷெல்டன் போன்ற அவரது சமகால படைப்புகளைக் கண்டு வியந்திருக்கிறோம் - ஆனால் fantasy-ல் மனுஷன் வீடு கட்டி அடிப்பதைப் பார்த்தால் மிரட்சியாக உள்ளது !! கதையை எழுதும் போது அடுத்த knot இதுவாக இருக்குமோ ? - இந்த மாதிரிக் கொண்டு சென்றிருப்பாரோ ? என்ற யூகத்தோடே நானிருக்க - எந்தவொரு guesswork-ம் பருப்பு வேகவில்லை ! ஒவ்வொரு முச்சந்தியிலும் மனுஷன் எந்தப் பக்கம் இன்டிகேடரைப் போடுவாரோ என்ற சுவாரஸ்யத்திலே முதல் பாகம் முடிந்து விட்டது ! "பிள்ளைகளுக்குக் கதை சொல்ல சூப்பரான ஆல்பம் !" என்று நினைத்துக் கொண்டே இதற்குள் மூழ்கினால் - நாமே கொஞ்ச நேரத்தில் கட்டை விரலை வாய்க்குள் செருகி அமர்ந்திருப்பதை உணரலாம் ! This is an absolute crackerjack !!
WORKS IN PROGRESS....
இதோ இன்னுமொரு ஒரிஜினல் ராப்பரின் பயன்பாடு - துளியும் மாற்றங்களின்றி !! இந்தத் தொடருக்குத் தீட்டப்பட்டுள்ள அட்டைப்படங்கள் ஒவ்வொன்றுமே classic ரகத்தினில் இருப்பதால் - இங்கே நமது ஓவியருக்கோ, டிசைனருக்கோ துளியும் வேலையிராது என்பது அப்பட்டம் ! (இந்த முன்னட்டையினில் மட்டும் கொஞ்சமே கொஞ்சமாய் டெய்லர் வேலை செய்யச் சொல்லி நம் டிசைனருக்குச் சொல்லியுள்ளேன் !!)

நவம்பர் இதழ்களின் உங்கள் review களை சுவாரஸ்யமாய்ப் படித்தேன்....! என்னைப் பொறுத்த வரை டெக்சின் டபுள் இதழ் ஹிட் அடித்ததில் ஆச்சர்யமில்லை ...! "டைனோசாரின் பாதையில்" கதைக்கான சித்திரங்கள் மட்டுமே கொஞ்சம் புருவ உயர்த்தல் சமாச்சாரமாகிடும் என்பதை எதிர்பார்த்திடுவதில் அதிக சிரமம் இருக்கவில்லை  ; அது நீங்கலாக பாக்கி சமாச்சாரங்களை 'தல'யின் presence பார்த்துக் கொள்ளுமென்பது தான் தெரியுமே ! So "தீபாவளி with டெக்ஸ் " நமது "புஷ்டியான ஹிட் இதழ்கள்" பட்டியலுக்கொரு புது வரவு என்பது புரிகிறது ! And ஷெல்டனின் சாகசமும் நிச்சயமாய் சோடை போகாதேன்றே எதிர்பார்த்தோம் ! வரலாற்றுப் பின்னணி கொஞ்சம் நிறையவே இருப்பினும், ஒரு டபுள் ஆல்ப கதை நகற்றலுக்கு அது அத்தியாவசியமே என்று தோன்றியது ! கதை 'பர பர' வேகமெனில் சித்திரங்கள் ஆளை விழுங்கும் அழகு என்பதை சொல்லவே தேவையில்லை - was simply awesome ! நவம்பரின் surprise என்று நான் பார்ப்பது சா.வீ.ரோ. சாகசத்தையே !  லாஜிக் பார்க்காத வரையிலும் "மஞ்சள் நிழல்"அழகானதொரு படைப்பே என்பதில் எனக்கு ஐயமிருக்கவில்லை - ஆனால் தட்டுப்படும் புராதனம் + குட்டிப் பிள்ளைகள் crayons கொண்டு கீச்சியது போலான வர்ண சேர்க்கைக்கும் உங்களது reactions எவ்விதம் இருக்குமோ என்பதில் சின்னதாய் ஒரு பயமிருந்தது எனக்குள் ! But 44 பக்கக் கதை தான் எனும் பொழுது "லாஜிக் லங்கேஷ்வரர்களாக" அவதாரமெடுக்க நீங்கள் அதிகம் மெனக்கெடவில்லை என்ற மட்டில் ஒரு நிம்மதிப் பெருமூச்சு !! Last of the lot - மறுபதிப்பான "மூளைத் திருடர்கள்" கொஞ்சம் மொக்கை என்பதில் ஒளிவு மறைவு அவசியமிராது தான் ! இந்தக் கதை முத்து காமிக்ஸில் வெளியான போதே ஜானி நீரோவை ஏன் இத்தனை "ஞே " முழியோடு வெளியிட்டுள்ளனரோ என்று யோசித்தது நினைவுள்ளது - and ஒரு சிவப்புக் கலர் ரயில் ஓடும் ராப்பர் தான் அந்நாட்களது கவர் என்பதும் நினைவில் உள்ளது ! ஜானி நீரோ கதைவரிசைக்கும் சரி ; ஸ்பைடரின் ஆல்பங்களுக்கும் சரி - இடையிடையே கொஞ்சம் கோக்கு மாக்கான ஓவிய பாணி நடைமுறையில் இருப்பதை இப்போது உணர முடிகிறது ! தொடரும் ஆண்டின் மறுபதிப்புகள் அனைத்திலும் இந்தச் சிக்கல் இல்லை என்ற மட்டில் சந்தோஷப்பட்டுக் கொண்டேன் !

இம்மாத highlight என்று சொல்வதாயின் - டெக்சின் வருகையினாலோ என்னவோ 'ஜிவ்'வென்று ஒரு எகிறு எகிறியுள்ள நமது ஆன்லைன் விற்பனையினைத் தான் சொல்ல வேண்டும் !! கடைசியாக CCC வெளியான ஜூலையில் இதே போலொரு ஆன்லைன் பரபரப்பு இருந்தது நம் விற்பனையில் ! அதன் பின்னே இந்த நவம்பரும் ஒரு உற்சாகப் பொழுதாகியுள்ளது ! நம் வாசக வட்டத்தினுள் ஒரு பகுதி - தரம் பிரித்து வாங்குவதை இது காட்டுவதோடு - கார்ட்டூன்கள் + டெக்ஸ் என்ற கூட்டணிக்கு அவர்களது thumbs up இருப்பதும் புரிகிறது ! 2016-ல் இந்த இரு சங்கதிகளுக்குமே நிறைய முன்னுரிமை இருப்பதால் நமது ஆன்லைன் வாசகர்களும் குஷி கொள்ளவொரு சாத்தியம் தெரிகிறது !! Fingers crossed !

சந்தோஷமான இக்கட்டொன்றும் இந்த "highlight " பிரிவினில் சேர்த்தி என்று சொல்லுவேன் ! 2016-ன் நமது அட்டவணையினில் இணைத்திடும் பொருட்டு - ஒரு அழகான கௌபாய் புதுத் தொடருக்கான உரிமைகளைக் கோரியிருந்தேன். ஆனால் அவர்களிடமிருந்து அது தொடர்பான பதில் கிட்டவில்லை எனும் பொழுது தாமதிக்க நம்மிடம் அவகாசம் இருக்கவில்லை ! ஆனால் இந்த வாரம் அவர்கள் சம்மதம் சொல்லி மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர் !! இந்தப் புதியவரை எவ்விதம் - எப்போது - எங்கே நுழைப்பது என இல்லாத கேசத்தைப் பிய்த்துக் கொண்டிருக்கிறேன் !

சந்தா Z தொடர்பான தேடல்களும், சிந்தனைகளும் இன்னொரு பக்கத் தண்டவாளத்தில் ஓடிக் கொண்டு வருகிறது ! அதன் பொருட்டு புதுசு புதுசாய்க் கதைகளைப் படிப்பது ஒரு ஜாலியான வேலையாக இருந்து வருகிறது !! அது ஏனோ தெரியவில்லை - எனக்கு பிரமாதமாகத் தெரியும் கதைகளின் முக்காலே மூன்று வீசம் யுத்தப் பின்னணிக் கதைகளாகவே இருந்து வருகின்றன !! ஆனால் கடும் பிரயத்தனங்களின் பெயரில் இம்முறை அந்தப் பக்கம் பார்வையை ஓட விடப் போவதில்லை என்றொரு தீர்மானம் எடுத்துள்ளேன் ! And டாகுமெண்டரி ரகக் கதைகளையும் தொடுவதில்லை என்று மண்டையில் பதிவு செய்துள்ளேன் ! So புரட்டிய மூன்றாம் பக்கத்திலேயே விட்டம் வரை விரியும் கொட்டாவிகள் இம்முறை ஆஜராகா என்ற தைரியம் கொள்ளலாம் நீங்கள் ! சுவாரஸ்யமான கதைகள் - சொல்லப்பட்டுள்ள பாணிகளில் வித்தியாசம் என்பதே Z -ன் விசிடிங் கார்டாக இருந்திடப் போகிறது !

ஆண்டின் இறுதி மாதம் நம் முன்னே காத்திருக்கும் வேளை எனும் பொழுது - ஆண்டறிக்கை ; இந்த வருஷத்தின் performers ; non -performers பற்றிய சிந்தனைகளும் எனக்குள் மேலோட்டமாய் ஓடத் துவங்கியுள்ளது ! இம்மாத இதழ்களில் வழக்கம் போலொரு கேள்விகள் பகுதி இருந்திடும் என்பதால் அதற்கு உங்களின் பதில்களை ஆவலாய் எதிர்பார்ப்போம் ! இப்போது வரையிலான 2015-ன் BEST எதுவென்ற உங்கள எண்ணங்களை  அறிந்து கொள்ள மாத்திரம் இப்போதைக்கு ஆவல் ! 11 மாதங்களது சுமார் 44 இதழ்களுள் உங்கள் சிந்தையைக் கவர்ந்த இதழ் எதுவோ ? And why ? பதிவிடலாமே இந்த ஞாயிறை சற்றே சுறுசுறுப்பாக்கிட  ?

Before I wind off - கடைசிக் caption எழுதும் போட்டியினில் (முதலைக்கு மேலே கார்சன் + டெக்ஸ் _ அந்த ஆரம்பத்து 'மினி லயன்' இதழின் பரிசைத் தட்டிச் செல்வது  "உருவுது..உருவுது.."நண்பர் சரவணன் ! உங்களின் முகவரியை ஒரு மின்னஞ்சலில் தட்டி விடுங்களேன் நண்பரே !

And இந்த வாரத்துக்கு yet another போட்டி ! இதற்கு ஆரம்பத்து லயன் இதழைப் பரிசாக்கிடுவோமா ?

And before I sign off - சந்தாப் புதுப்பித்தலின் நினைவூட்டல் !!! ப்ளீஸ் - இன்னும் சற்றே வேகம் நண்பர்களே ?!! See you around ! Bye for now !

252 comments:

  1. நான் முதன் முதலாக.

    ReplyDelete
  2. படித்து விட்டு வருகிறேன் நண்பர்களே.

    ReplyDelete
  3. அற்புதமான பதிவு

    ReplyDelete
  4. ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்!

    ReplyDelete
  5. Very happy good morning to Editor and comic lovers.

    ReplyDelete
  6. அந்த புதியவர் யார் சார்?

    ReplyDelete
  7. நான் முதன் முதலாக.

    ReplyDelete
  8. இனிய காலை வணக்கம் எடிட்டர் சார்!!!
    இனிய காலை வணக்கம் நண்பர்களே!!!

    ReplyDelete
    Replies
    1. சத்யா நீண்ட நாட்களுக்கு "பின்" வருகையோ

      Delete
    2. @Tex Sampath:
      வணக்கம் வணக்கம் நண்பரே :-)

      Delete
  9. காலை வணக்கம் எடிட்டர் சார்
    இனிய காலை வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  10. மஞ்சள் நிழல் மட்டுமே படித்துளேன்! Not Bad!மற்றவை இன்று படிக்க இருக்கிறேன்!"தோர்கல்" அட்டை படமே சுவாரசியமாக உள்ளது. புதிய கௌபாய் தொடர் பற்றி அறிய ஆவல் !

    ReplyDelete
  11. அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  12. Good morning editor
    Will thikil stories come in Z?

    ReplyDelete
  13. குளிரான காலை வணக்கம் சார்...
    வணக்கம் நண்பர்ஸ்....

    ReplyDelete
  14. காலை வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே.

    ReplyDelete

  15. மினிலயனை பரிசாகப் பெறயிருக்கும் நண்பர் சரவணன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்! :)

    ///ஆனால் இந்த வாரம் அவர்கள் சம்மதம் சொல்லி மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர் !! இந்தப் புதியவரை எவ்விதம் - எப்போது - எங்கே நுழைப்பது என இல்லாத கேசத்தைப் பிய்த்துக் கொண்டிருக்கிறேன் !///

    அதான் 'சந்தா-D'க்கும் 'சந்தா-Z' நடுவாலே அநியாய இடைவெளி இருக்கே சார்? அதுல ஏதாவது ஒரு எழுத்தை ஃபில்அப் பண்ணிக்கலாமில்லையா? Dial L for Late arrivals? ;)

    ////சுவாரஸ்யமான கதைகள் - சொல்லப்பட்டுள்ள பாணிகளில் வித்தியாசம் என்பதே Z -ன் விசிடிங் கார்டாக இருந்திடப் போகிறது !////

    Interesting ....

    அப்புறம்... 'டைகர்' வேடமணிந்த ஆசாமி ஒருவன் 'தல'யைத் தொங்கவிட்டு முஷ்டியை உயர்த்தி வயித்தெறிச்சலில் ஏதோ சொல்றாப்ல கேப்ஷன் போட்டி வச்சிருக்கீங்களே... அதுல ஏதாச்சும் உள்குத்து இருக்குங்களா எடிட்டர் சார்? ;)

    ReplyDelete
    Replies
    1. ///அதான் 'சந்தா-D'க்கும் 'சந்தா-Z' நடுவாலே அநியாய இடைவெளி இருக்கே சார்? அதுல ஏதாவது ஒரு எழுத்தை ஃபில்அப் பண்ணிக்கலாமில்லையா? Dial L for Late arrivals? ;)///
      Nice...Hahahahaha

      Delete
    2. அதான் 'சந்தா-D'க்கும் 'சந்தா-Z' நடுவாலே அநியாய இடைவெளி இருக்கே சார்? அதுல ஏதாவது ஒரு எழுத்தை ஃபில்அப் பண்ணிக்கலாமில்லையா? Dial L for Late arrivals? ;)
      அப்புறம்... 'டைகர்' வேடமணிந்த ஆசாமி ஒருவன் 'தல'யைத் தொங்கவிட்டு முஷ்டியை உயர்த்தி வயித்தெறிச்சலில் ஏதோ சொல்றாப்ல கேப்ஷன் போட்டி வச்சிருக்கீங்களே... அதுல ஏதாச்சும் உள்குத்து இருக்குங்களா எடிட்டர் சார்? ;)

      ஹா...ஹா...

      டெக்ஸை கட்டி தொங்க விடுறதுலேயே எடிட்டர் சார் குறியா இருக்காரு....

      சரவணன் @ ...வாழ்த்துக்கள்.....

      Delete
    3. நன்றி நண்பர்களே!

      Delete
  16. தோர்கல் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  17. காலை வணக்கம். இவ்வளவு தாமதமாக பதிவை எதிர்பார்க்கவில்லை.

    ReplyDelete
  18. Z க்கு பக்கத்துல x,y இந்த மாதிரி ஏதாவது ஒண்ணு சேர்த்து விடுங்க ஆசிரியரே.படிக்க நாங்க ரெடி.

    ReplyDelete
  19. // இந்தப் புதியவரை எவ்விதம் - எப்போது - எங்கே நுழைப்பது என இல்லாத கேசத்தைப் பிய்த்துக் கொண்டிருக்கிறேன் !////------ ஜேசன் ப்ரைஸ் க்கான இடங்கள் இரண்டு உள்ளனவே சார்.... ஜேசன் , கி.நா. அதுவும் கதைக்கருவும் நீங்கள் வெளியிட தயங்கிய ஒற்றல்லவா சார்????.... ப்ரைசை மூவ் டூ சந்தாZ, சார்.... மேலும் சந்தாzல் வரும்போது ஒரே கதையாக , ஒரே இதழாக வரும் வாய்ப்பும் உள்ளதே சார்.... ரெகுலர் சந்தாவில் தந்து சாத்துக்கள் வாங்குவதும் குறையுமே சார்....3மாதங்கள் காத்திருக்கும் அவஸ்தை கிடையாது+ எல்லோரும் ஹேப்பி அண்ணாச்சி , ஒரே பாக்சில் பல ஸ்வீட்கள் சார்.... ஹி...ஹி...

    ReplyDelete
    Replies
    1. நல்ல ஐடியா, விஜய ராகவன்!

      Delete
    2. டைனமட் பெயேர எதிர்பார்ப்பை எகிறச் செய்தது.....சென்ற வருடம் பெரிய எதிர் பார்ப்பை விதைத்த ஜேசன் ஏனோ ....டைனமைட்டுக்கு மாற்றாய் வருவதாலோ ஏற்றுகொள்ள ஏலலை....இந்த கெளபாய் ஏனோ மனதோரம் விசிலடிக்கிறார்.

      Delete

  20. ******* ச்சும்மா ஒரு லூட்டிக்காண்டி ******

    மிஸ்டர் புலிப்பாண்டி : படுவா! தமிழ்நாட்டுல உனக்கெல்லாம் தனி சந்தா கேட்குதா? எப்படி தனியா தொங்கவுட்டுட்டேன் பாத்தியா?

    தல : தொங்கவிட்டதெல்லாம் சரிதானுங்க புலி சார்... அப்படியே கொஞ்சமா ஆட்டி விட்டு, ஒரு பத்து நிமிஷத்துக்கு'கண்ணுமணி பொண்ணுமணி... எஞ் சிங்காரக் குண்டுமணி ஆஆச்...'னு தாலாட்டும் பாடுணீங்கன்னா... சித்தே கண்ணசந்துடுவேன் பாருங்க?

    ReplyDelete
  21. வாழ்த்துகள் "உருவுது " சரவணன் சார். :-)

    ReplyDelete
  22. ///இந்தப் புதியவரை எவ்விதம் - எப்போது - எங்கே நுழைப்பது என இல்லாத கேசத்தைப் பிய்த்துக் கொண்டிருக்கிறேன் !///

    ஹாஹாஹா.!!!

    சந்தா A வில் புதிய கௌபாயை சேர்த்து விட்டு., அந்த ஜேசன் அண்ணாத்தைய சந்தா Z. ல ஒரே புக்கா வெளியிட்டு விடுங்கள் சார்.!
    தனித்தனி ஆல்பங்களாய் வெளிவந்திருந்தால் பௌன்சர் வெற்றியடைந்திருக்குமா என்பது சந்தேகமே.!
    மொத்தமே மூன்று ஆல்பங்கள் எனும்போது (சரியாத்தான் பேசுறேனா?) ஜேசனை ஒரே குண்டு புக்காக படிப்பதையே பலரும் விரும்புவர். . ( சுயநலமெல்லாம் இல்லீங் சார்.) :-)

    ReplyDelete
  23. தோர்கல் பற்றிய முன்னறிவிப்புகள் உற்சாகத்தை ஏற்படுத்தி விட்டது சார்...
    வெய்ன் ஷெல்டன் தரத்தில் அச்சுதரம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள் ப்ளீஸ்..

    ReplyDelete
  24. வணக்கம் friends..!have a wonderfulday...
    காலைப்பதிவை சரசர சிவகாசி வெடியாய் உள்ளது...ஸ்பீடான எழுத்து நடை..!

    ReplyDelete
  25. யுத்தப் பின்னணி கதைகளை பயன்படுத்துவதில் தவறில்லை சார்! ஒரேயடியாக ஒதுக்குவது ஏனோ??!!

    ReplyDelete
  26. அந்த புதிய கெளபாய் ஹீரோவுடன் முடிந்தால் சிஸ்கோ ..பாஞ்சோ வையும் இனைத்து கூட்டி வர முடியுமா என பாருங்கள் சார் ...

    அந்த கெளபாய் ஹீரோவை புதுசா ஒரு சந்தாவில் நுழைக்க முடியுமா என பாருங்கள் ...அது வேலைக்கு ஆகாது என்றால் நம்ம ஜூலியா அவர்களுக்கு இதயத்தில் இடம் கொடுத்துவிட்டு வெளியே அந்த கெளபாய் ஹீரோவுக்கு இடம் கொடுத்து விடுங்கள் ...

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. தரமற்ற வார்த்தைப் பிரயோகங்கள் அதிர்ச்சியளிக்கிறது! பலத்த கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்! :( :( :(

      Delete
    2. இதை போன்ற தரமற்ற கமெண்ட்ஸ் களை போட்டிக்கு என்ற பெயரில் பதிவிடுவது அதிர்ச்சியளிக்கிறது....
      போட்டிதான் என்றாலும் நம்முடைய குடும்பத்தில் உள்ள மூத்தோர்களை இப்படி அழைப்போமா நண்பரே N.Arul.. ?????
      நானும் என்னுடைய கண்டனத்தை பதிவு செய்கிறேன்.....

      Delete
    3. காமெடிதான் என்றாலும் வார்த்தைப் பிரயோகங்களில் நாகரிகம் தேவை ..

      Delete
    4. எனது கன்டணங்களையும் பதிவு செய்கிறேன்...,.

      Delete
    5. ஏனுங்க இப்டி பேசி போட்டிங்க.பேசும்போது கொஞ்சம் ரோசன பண்ணி பேசுங்க நண்பரே.

      Delete
    6. மட்டகரமான வார்த்தைப்பிரயோகம்
      வன்மையாக கண்டிக்கிறேன்

      Delete
    7. எனது கன்டணங்களையும் பதிவு செய்கிறேன்...,.!!!

      Delete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. ஆசிரியரின் கட்டளை படி தரமற்ற கமெண்ட்ஸ் வரும் பொழுது ஆசிரியர் தாண்டி செல்ல சொன்னதால் சேந்தம்பட்டி குழு தாண்டி செல்கிறது ...எனவே எனது கமெண்ட்ஸ் லூட்டிக்காண்டி அல்ல போட்டிக்காகவே ...

    ReplyDelete
  30. சும்மா தல தலன்னு பேரை மட்டும் வச்சுகிட்டு ஆலு மா டோலுமா பாட்டுக்கு ஸ்டெப்ஸ் போடத் தெரியலேன்னா எப்படி ....இப்படியெல்லாம் தொங்கி ப்ராக்டிஸ் பண்ணினாதான் முடியும் ..

    ReplyDelete
  31. ///அன்புள்ள எடிட்டர்,

    2016 ஆண்டு சந்தாவுடன் T-Shirt-க்குப் பதிலாக, 12 sheet calendar தர இயலுமா? - ஒவ்வொரு மாதத்திற்கும் நமது ஹீரோ / ஹீரோயின் ஒவ்வொருவருடைய படத்துடன், நல்ல தரமான/கனமான அட்டைகளில். முடிந்தால் spiral binding உடன். எங்களுக்கு கிட்டத்தட்ட 12 போஸ்டர்கள் கிடைத்த மாதிரி இருக்கும். அத்துடன் ஆண்டு முழுவதும் பத்திரமாக வைத்துக் கண்டு மகிழ்வோம்.

    முன்கூட்டிய நன்றிகள்,

    அன்புடன்,
    பெரியார்////................
    நண்பர் பெரியார் கருத்தை நானும் வழிமொழிகிறேன் சார்....

    ReplyDelete
    Replies
    1. இது கூட நல்லா இருக்கே.

      Delete
    2. சபாஷ் சரியான யோசனை.!அப்படியே எங்கள் தலைவியை தனி ஸ்டில்லா போட்டு அசத்துங்கள் ! ,.இதற்கு எல்லா தகுதியும் இளவரசிக்கு உண்டு.!

      Delete
    3. //987654321//

      பெரியார் .! இது கள்ள ஓட்டு செல்லாது.!செல்லாது.! (அது உங்க கருத்து.! அதுக்கு நீங்களே +987654321 போட்டா எப்படி.???)

      Delete
    4. மாடஸ்தி காலண்டர் வேண்டுந்தானே MV சார்...???கண்டுக்காதீங்க, முடிஞ்ஞா நீங்களும் கூட 4கள்ள ஒட்டு போடுங்கள்... ஹி..ஹி...

      Delete
    5. டெக்ஸ் விஜய ராகவன்.! ஒ.கே.ஒ.கே.கம்பெனியின் ரகசியத்தை இனிமேல் யாரிடமும் கூறமாட்டேன்.!

      Delete
    6. @Madipakkam Venkateswaran :

      அது போன பதிவு .. இது இந்தப் பதிவிற்காக :)

      இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும், நான் வழிமொழிய/வேண்டுகோள் விடுக்கத்தயார்... எடிட்டர் செவிசாய்த்தால் சரி :)

      Delete
    7. ஸார்,டெக்ஸ்,ன் இந்த கருத்தை நான் மீண்டும் வழிமொழிறேன்.கட்டாயம் நீங்கள் இதை பரிசீலிக்க வேன்டுகிறேன்.

      Delete
  32. //மூளை திருடர்கள் கொஞ்சம் மொக்கை //

    சார்! இது சூப்பர் கதை.! எனக்கு இந்த கதை சிறுவயதிலேயே பசுமரத்தாணி போல் பதிந்துவிட்டது.!அது தொலைந்துபோய் கடும்முயற்ச்சிக்கு பின் சில ஆண்டுகளுக்கு முன் கைப்பற்றினேன்.கதை முழு பக்கங்களும் என் மூளையில் சிறுவயதினிலேயே ஸ்கேன் செய்யப்பட்டு நினைவில் இருந்தது.!அற்புதமான கதை.நான் அடிக்கடி படிக்கும் கதை.!

    ReplyDelete

  33. ******* ச்சும்மா ஒரு லூட்டிக்காண்டி ******

    மிஸ்டர் புலிப்பாண்டி : ம்... அஸ்கு புஸ்கு! வழக்கம்போல இந்த ஆபத்திலிருந்தும் நீ எப்படியாவது தப்பிச்சுட்டேன்னா என்ன பண்றது... அதனால நான் யார்ன்றதை உனக்குச் சொல்ல மாட்டேன் டெக்ஸு!

    தல : அடப்போப்பா...! இல்லேன்னா மட்டும் தெரியாதாக்கும்? உடைஞ்ச மூக்கை மறைக்க ஒரு முகமூடி;பரட்டைத் தலையை மறைக்க ஒரு டர்பன்; பல மாசங்களா குளிக்காததை மறைக்க புனுகுப்பூனை சென்ட்டு - இதெல்லாம் போதாதா நீ யார்னு கண்டுபிடிக்க?

    ReplyDelete
    Replies
    1. " புலிப்பாண்டி.""

      ஹஹஹஹ........இத்தாலிகாரர்களை மதுரைக்காரர் ஆக்கிவிட்டீர்களே.! .ஈரோடு விஜய் அவர்களே

      Delete
  34. //மறுபதிப்பான "மூளைத் திருடர்கள்" கொஞ்சம் மொக்கை என்பதில் ஒளிவு மறைவு அவசியமிராது தான் !/
    நான் ரசித்து படித்த கதைகளில் இதுவும் ஒன்று

    ReplyDelete
  35. அடடே ! எப்பா ! நானே தானா !
    ரொம்ப நன்றி விஜயன் பாஸ்!
    (சமீப காலமா Courier problemnu ரிப்போர்ட் பண்ண அதே சரவணன் தான் பாஸ்!)
    அனைத்து நண்பர்களுக்கும் நன்றி !

    என்கிட்ட இல்லாத (பயங்கர பயணம் மாதிரி first பத்துல ஒரு மினி லயன் புக் கிடைக்க வேண்டும் கடவுளே :)

    Thanks a lot again!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் சரவணன்.!

      //என்கிட்ட இல்லாத புத்தகங்கள்.......//

      நண்பரே.! தானம் கிடைத்த மாட்டை பல்லை பிடித்து பார்க்கக் கூடாது நண்பரே.!

      Delete
    2. வாழ்த்துகிறேன் நண்பர் சரவணன்......

      Delete
    3. Nandri Boss! Ungal Vai Mukurtham Palithathu!

      Delete
  36. ஹலோ புலி வேசக்கார்...இங்கே இருந்து அரை கிலோ மீட்டர் தள்ளி வேறே மரம் இருக்கா?
    இருக்கு,,ஏன் கேட்குறே ...
    என் நண்பன் கார்சன் என்னை காப்பாத்த வருவான்..தப்பித்தவறி அவனை இதே மரத்திலே என்னோட கட்டிப் போட்டுறாதே ..கிழவன் பேசியே கொன்னுடுவான்

    ReplyDelete
  37. Caption : 1

    Tiger :
    நாட்டுல இருக்கலாம் ஆயிரம் புலி!
    ஆனா இந்த புலி....
    attract பண்ற புலி... அட்டாக் பண்ற புலி...அட்டகாசமான புலி...
    அசால்ட்டான புலி...அசத்தலான புலி...
    அசுர புலி....அசரா புலி..
    இது அற்புத புலி..இது அதிசய புலி...இது அபூர்வ புலி...இது அம்சமான புலி...
    இது வாடாத புலி...இது வதங்காத புலி......இது வணங்காத புலி...இது வலிமையான புலி...........................................

    டெக்ஸ்:
    ஐயோ! சாமியோவ்!!
    பேசாம என்ன சுட்டுடு புலி !!!!

    ReplyDelete
  38. அன்புள்ள எடிட்டர்,

    தங்களது முதல் தீபாவளி மலர் மலரும் நினைவுகள் அருமை ... இவ்வளவு "வரலாற்று சிறப்பு மிக்க" இந்த தீபாவளி மலரை, நாம் ஏன் அடுத்த பொங்கலுக்கு (அல்லது தீபாவளிக்கு) மறுபதிப்பு செய்யக்கூடாது? :)


    //...கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்14 November 2015 at 09:39:00 GMT+5:30
    அதே சைசில்......இரு வண்ணத்தில் அதே அற்புதமான அட்டை படத்தில் ....கொரில்லா சாம்ராஜ்யம் , கொலைப்படை.....போன்ற இதழ்கள் பழங்கதைகளும் சிறப்பு மலர்களாய் மலர உதவட்டுமே ஸார் ப்ளீஸ்
    ...//

    //...palanivel arumugam14 November 2015 at 14:42:00 GMT+5:30
    நாம் ஏன் அடுத்த பொங்கலுக்கு (அல்லது தீபாவளிக்கு) மறுபதிப்பு செய்யக்கூடாது? :)
    சூப்பர் சார்
    ..//

    //...
    Parani from Bangalore14 November 2015 at 22:15:00 GMT+5:30
    அடுத்த பொங்கலுக்கு -> வரும் பொங்கலுக்கு அப்படின்னு சொல்லுங்க!

    ..//

    ReplyDelete
    Replies
    1. பழைய மெகா வெற்றி பெற்ற தீபாவளி மலர்கள் வரிசையாக, ஒவ்வொரு சென்னை விழாவிலும் மறுபதிப்பாக , நண்பர்கள் விருப்பப்படி பொங்கல் மலராக வெளியிடுங்கள் சார்........
      அடுத்த போராட்டமாக தெரிவுசெய்ய இது நல்ல தீம் ஆக உள்ளது போ.கு.தலீவர்களே...

      Delete
    2. //... பழைய மெகா வெற்றி பெற்ற தீபாவளி மலர்கள் வரிசையாக, ஒவ்வொரு சென்னை விழாவிலும் மறுபதிப்பாக , நண்பர்கள் விருப்பப்படி பொங்கல் மலராக வெளியிடுங்கள் சார்........ ...//

      +22222

      நான் இதை வெகு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ... எடிட்டர் விரைவில் ஆவண செய்வாராக

      Delete
  39. Dear Editor,

    I have requested for additional subscription (A, B,C,D + additional copies of B & D) cost details through couple of mails. In spite of my repeated follow-ups with your office (spoke to Stella & Vasuki over the phone), but they couldn't provide the details as they need to confirm with you. Could you please confirm respond to my mail regarding the additional subscription for B & D along with full subscription?

    Thanks,
    Periyar

    ReplyDelete
    Replies
    1. Periyar :கூரியர் கட்டணங்கள் எடை கூடக் கூட விதம் விதமாய் மாறிப் போகின்றன உங்கள் நகருக்கு ! So உருட்டுப் பொதியாய் தான் இது போன்ற கோரிக்கைகளுக்கு கட்டணங்கள் சொல்லிட வேண்டி வரும். நாளை தகவல் சொல்லச் செய்கிறேன் !

      Delete
  40. //// ஒரு அழகான கௌபாய் புதுத் தொடருக்கான உரிமைகளைக் கோரியிருந்தேன்.////

    அழகான கௌபாயா????
    கௌபாய்ஸ்னாவே கரடுமுரடாத்தானே இருப்பாங்க.!!!

    ஒருவேளை கௌகேர்ளா சார்?? :-)

    ReplyDelete
    Replies
    1. KiD ஆர்டின் KannaN :எப்டிலாம் யோசிக்கிறாங்கடா சாமி ! :-)

      Delete
  41. தொர்கலின் இந்தக் கதைக்கு பின் நம்மவர்கள் இவனுக்கு முழு நேர ரசிகர்களாவது நிச்சயம்! 2017 திட்டத்தில் தனி குண்டு தொர்கல் புக் வேண்டும் என்ற போராட்டம் அடுத்த நான்கு மாதங்களில் வலுப்பெறும் !

    ReplyDelete
    Replies
    1. Raghavan :அட....சைவ குருமா & பரோட்டா கூட தயார் செய்யத் தேவைப்படுமோ ? :-)

      Delete
    2. ஹா ஹா .. இப்டியே போயிட்டு இருந்தா நீங்க சைடுல ஒரு ஹோட்டல் பிசினஸ் ஆரம்பிக்க வேண்டியதுதான் :-)

      Delete
  42. ////2017 திட்டத்தில் தனி குண்டு தொர்கல் புக் வேண்டும் என்ற போராட்டம் ////


    உண்மை.!
    தோர்கலின் முதல் இரண்டு ஆல்பங்களை படித்துவிட்டு தோர்கல் சொதப்பல் என்று இங்கேயே கருத்து தெரிவித்தேன்.
    சாஸ்வதத்தின் சாவி யை படித்ததும் தோர்கலின் ரசிகனாகிவிட்டேன்
    2017 ல் எதற்கு, 2016 Z சந்தாவிலேயே தோர்கல் குண்ண்ண்டு புக் வேண்டும் என்ற போராட்டத்தை தொடங்குவோமே.? ???

    ReplyDelete
    Replies
    1. இதை வன்மையாக ஆமோதிக்கிறேன்.......
      வேண்டும் வேண்டும்..தோர்கல் குண்ண்ட்டு வேணும்..... போராட்டம் ஓங்குக.....
      ---- இவன் தமிழக சாவிகள் காப்பாளினிகள் ரசிகர்சங்கம்....

      Delete
    2. கிட் ஆர்ட்டின் கண்ணன்.!@

      //கௌகேர்ல்.....//

      ஹஹஹஹ...........


      தோர்கல் குண்டு புத்தகம் காலத்தின் கட்டாயம்.!

      Delete
    3. நண்பர் ஆதியின் யுக்திக்கு வேளை / வேலை பிறக்கப் போகுதோ..?

      சேலம் - மேச்சேரி பக்கமாய் ஒரு பன் பரோட்டா..சிக்கன் மசாலா பார்சல் !!

      Delete
    4. நண்பர்களே
      நமது எடிட்டர் வேலை வாங்குவதற்காக மட்டுமே பரோட்டா..சிக்கன் மசாலா வாங்கி கொடுப்பார்,எனவே நாம் கண்டிப்பாக போராட வேண்டுமென்பதே அவர் விருப்பம்.

      பி.கு:-
      சந்தா கட்டிவிட்டு போராடுவோம் ;)

      Delete
  43. "ஹெலோ மந்ச சட்டை...நீ என்ன கிழிச்சேனு எடிட்டர் உனக்கு ஸெபரேட் டிராக்க் கொடுத்தரு 2016 ல. நீ இல்லாம எப்பிடி 2016 ஓட்டுரார்னு பாக்கீரேன். மாப்ளே உன்னை காப்பாத்த வரட்டும் எடிட்டர் , நான் வெச்சுகிரேன்....!!"

    "மாங்கா.. உனக்கு மண்டைதான் இல்லை... மூளையூமா இல்லை?எடிட்டர் பத்தி உனக்கு தெரியாது. நீயும் நானும் காலம் பூரா இங்கேயே கிடக்க வேண்டியது தான். " பழயான கழிதலும் புதியன புகுதலும்னு" special edition பதிவு ஒண்ணு நாளைக்கே போட்டு இந்த புது கௌபாய் யாரோ டீல் போட்டு இருக்காரு, அந்த ஆள, உள்ள சொருவிடுவார் 2016 ல. இந்த பக்கம் அவர் assistant கூட வர மாட்டாரு. அவுத்து வுடுயா.. அவர் கிட்ட போய் பேசி பாக்கலாம்"


    Corrected version for all.....

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள்& வாழ்த்துகள், நல்ல முயற்சி....

      Delete
    2. N.Arul :பின்னூட்டங்கள் உங்கள் எண்ணங்களின் பிரதிபலிப்பாகவே இருந்து விட்டுப் போகட்டுமே...உங்கள் மனதில் என்ன தோன்றியதோ அதனைப் பதிவிட்டீர்கள்.... பின்னே பின்வாங்குவானேன் ?

      Corrected version for all என்று எழுதும் போதே இது தள நாகரீகத்தின் பொருட்டு மாத்திரமே எனபது வெளிச்சமாகிறதே ?

      Delete
  44. புலிப்பாண்டி.:
    என்னங்க டெக்ஸ் வில்லர்.சும்மா கயிற்றில் தங்க விட்டதுக்கே மூஞ்சி தொங்கிபோச்சே.?


    டெக்ஸ்.:
    எனக்கு என்ன மாடஸ்டி மாதிரி யோகாவும் குங்பூ மா கத்துவெச்சு இருக்கேன் .? டைவ் அடித்து கையிற்றை அவிழ்க்க.?கார்சனோ டைகரோ வந்து கட்டை அவிழ்த்தால்தான் உண்டு.!

    ReplyDelete

  45. ******** எமனின் வாசலில் ********

    அம்மாடி!!!! என்னவொரு சித்திரங்கள்!!!!!!! துளியும் யோசிக்காமல் சொல்லிவிடலாம் - துள்ளியமான சித்திரத்தரமே கதையின் நாயகன் என்று!
    அருமையான தொடக்கத்துடன் (ரிப்போர்ட்டர் ஜானியின் கதை மற்றும் காட்சி அமைப்பு பாணியில்) ஒரு தேர்ந்தெடுத்த த்ரில்லரைப் போல விறுவிறுவென்று நகரும் கதை, பிற்பாடு முக்கிய முடிச்சவிழ்க்கப்பட்ட பிறகு சற்றே தொய்வைச் சந்தித்து டெக்ஸின் வழக்கமான டுமீல் டுமீல்களுடன் இனிதே நிறைவடைகிறது!

    ஓவியர் மேக்னஸுக்காக டெக்ஸும் கார்ஸனும் சற்று விட்டுக்கொடுத்து அடக்கிவாசித்திருப்பதைப் போல ஒரு உணர்வு! க்ளைமாக்ஸுக்கு முந்தைய பகுதியில் (தமிழ்பட பாணியில் ) கதாபாத்திரங்களிடம் ஏற்படும் மனமாற்றங்கள் மொத்தக் கதையையும் சற்றே பலவீனப்படுத்துகின்றன!

    எது எப்படியோ, கதைக்காக ஒரு முறை புரட்டலாம் என்றால், சித்திரங்களை வியப்பதற்காகப் பலநூறு முறை புரட்டலாம்! இக்கதைக்காக ஏழு வருட அசாத்திய உழைப்பைக் கொடுத்துவிட்டு ஏதோ தன் கடமை முடிந்துவிட்டதான நிம்மதியில் இன்னுயிர் நீர்த்த ஓவியர் மேக்னஸுக்காக ஒருமுறை எழுந்துநின்று கைதட்டலாம்!
    ____/|\______ R.I.P Magnus! ___/|\___

    ReplyDelete
  46. கார்சன் Thinks : அப்பனே டெக்ஸ்.. ஒருவழியா மாறுவேஷத்திலாவது வந்து உன்னை மடக்கியாச்சு! தாத்தா, கிழம், ஆட்டு தாடினு சதாகாலமும் நீ என்னை கலாய்ச்சதுக்கு பதிலடியா உன்னை ஏதாவது செய்யனுமே.. என்ன செய்யலாம்... ம்ம்ம்..?

    டெக்ஸ் Thinks : அந்த சிங்க முகமூடியின் அகலத்திறந்த வாய்க்குள்ளே தெரிவது நேற்று நான் கலாய்த்த அதே ஆட்டுதாடிதான்! கிழத்துக்கு சமர்த்து போதாது!

    ReplyDelete
    Replies
    1. Correction: Replace the word சிங்க முகமூடி with புலி முகமூடி

      ஹி ஹி, சரியா கவனிக்கலை!

      Delete
  47. இம்மாத இதழ்களின் தரவரிசை ! top 5

    1.எமனின் வாசலில் !
    2.டைனோசரின் பாதையில் !
    3.வரலாறும் வல்லூறும் !
    4.மஞ்சள் நிழல் !
    5.மூளைத் திருடர்கள் !

    Mv சார், வணக்கம், நன்றி !

    ReplyDelete
  48. யதார்த்தம் ;))

    மிஸ்டர் புலி முகமூடி - (மனவோட்டம்) : ஹலோ டெக்ஸ் வில்லர், என்றாவது ஒரு நாள் உன்னைக் கொள்ளாமல் விடமாட்டேன்... ஹா....!!

    டெக்ஸ் வில்லர் - (மனவோட்டம்) : லூசுப் பய.. ரெண்டு கையைக் கட்டி என்னைத் தொங்க விட்டப் பின்பும் கூட இப்படி இவன் வாய்ச் சவடால் விடும் வரை, நம் காட்டில் எப்போதும் போல் அடை மழை தான் ;))

    ReplyDelete
  49. யதார்த்தம் ;))

    டெக்ஸ் வில்லர் : 2016ல் தனிச் சந்தா கொடுத்த பாவத்திற்கு, என்னை இப்படி தொங்க விட்டுட்டானே இந்தப் படுபாவி :((

    டைகர் : நீ சாகக் கூடாது வில்லர், அதனாலத் தான் தொங்க மட்டும் விட்டுட்டேன். உன்னுடைய டப்பா கதைகள் தான் என்னுடைய பலம், புகழ், பேர் எல்லாமே... ''என் பெயர் டைகர்'' கதை மட்டும் வராமல் போகட்டும், அப்ப இருக்கு உனக்கு... ஹா..!

    ReplyDelete
  50. யதார்த்தம் ;))

    முகமூடி : ஹலோ நண்பா... இந்த ஆக்டிங் போதுமா, இல்ல இன்னும் கொஞ்சம் வேணுமா ?!

    டெக்ஸ் வில்லர் : ஐயய்யோ... கவுத்துடாதப்பா.. கோலிவுட் ரேஞ்சுக்கு ஆக்டிங் கொடுக்கச் சொன்னா, இவன் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இல்ல ஆக்ட் கொடுக்குறான் ;((

    ReplyDelete
  51. யதார்த்தம் ;))

    டெக்ஸ் வில்லர் : எதுக்காக நாம தொங்கறோம், என்ன பிரச்சனையின்னே தெரியலேயே....

    புலி முகமூடி : அட போப்பா, எனக்கு மட்டும் என்ன பிரச்சனைன்னு தெரியுமா என்ன ;))

    ReplyDelete
  52. @இனிய நண்பர்களுக்கு:
    லேப்டாப் பிரச்சினையால்...நீண்ட நாட்களுக்குப் பிறகு (கிட்டத்தட்ட 3 வருடங்களுக்குப் பிறகு) ஒரு வழியாக புது ஸ்மார்ட் போன் வாங்கிவிட்டேன் நண்பர்களே!!!

    My WhatsApp No---+91 9941395393 :-)

    ReplyDelete
  53. @இனிய நண்பர்களுக்கு:
    லேப்டாப் பிரச்சினையால்...நீண்ட நாட்களுக்குப் பிறகு (கிட்டத்தட்ட 3 வருடங்களுக்குப் பிறகு) ஒரு வழியாக புது ஸ்மார்ட் போன் வாங்கிவிட்டேன் நண்பர்களே!!!

    My WhatsApp No---+91 9941395393 :-)

    ReplyDelete
  54. மஞ்சள் நிழல் @ four !

    இம்முறை சாகச வீர ரோஜர் அவர்களுக்கு நான்காம் இடம் மட்டுமே. சாகச வீரர் எனும் போதே அங்கு கொஞ்சமாவது சாகசம் இருக்க வேண்டும். ஆனால் இந்தக் கதையில் சாகசம் இல்லாமல் இருப்பதே ஒரு பெரியக் குறை என்று சொல்லலாம். ''மஞ்சள் நிழலை''ப் பற்றி ஏற்கனவே ரோஜருக்கும், பில் பாலன்டைனுக்கும் தெரியும் எனும் போதே, நமக்கு மட்டும் ஏன் தெரியவில்லை என்ற ஆதங்கம் ஏற்படுகிறது. இதுபோன்ற இடைநிலைக் கதைகளை, நடுவில் இருந்து படிக்கும் போது அதன் சுவாரசியம் பெரிதும் குறைகிறது. குறிப்பாக ''மஞ்சள் நிழலின்'' பராக்கிரமமோ , அவனின் கீர்த்தியோ தெரியாமல் இடையில் படிக்கும் போது, ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளால், அந்தக் கதை தன்னுடைய இயல்பான அதிரடியை அடகு வைப்பதாகவே உணருகிறேன்.

    முந்தைய வெளியீடான ''காலத்தின் கால்சுவடுகளில்'' இருந்த ஆச்சரியம், பிரமிப்பு, சாகசம் - என அனைத்தும், இந்தக் கதையில் நிலுவையில் மட்டுமே நின்று விட்டது பெரிய ஏமாற்றமே. பொதுவாகவே, ஒரு ஹீரோவுக்கு என - இந்த வேடம், இந்தக் கதாப்பாத்திரம் மட்டும் தான் ஒத்து வரும் என்று தெரிந்தப் பின், அதன் அடிப்படையிலேயே கதையைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே அவையனைத்தும் மிகப்பெரிய வெற்றியை ஈட்டும். சாகச வீரர் ரோஜரைப் பொறுத்தவரை அவருக்கு - காடு, மலை, ஆறு, ஏரி, கடல், கடந்தகாலம் என்ற ரீதியில் கதைக்களம் அமைந்தால் - அந்தக் கதை மிகவும் ரசிக்கத் தக்கதாக இருக்கும் என்று நினைக்கிறேன். மாறாக, அனைத்துக் கதைகளையும் வெளியிடும் சூழல் இருக்கும் பட்சத்தில், இரண்டு மூன்று தொகுப்பாக புத்தகத்தை வெளியிட்டால் அவையும் கூட மிகப்பெரிய வரவேற்பை பெரும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை !

    hi, ரோஜர்.. சீ யூ in 2016.

    ReplyDelete
    Replies
    1. //இதுபோன்ற இடைநிலைக் கதைகளை, நடுவில் இருந்து படிக்கும் போது அதன் சுவாரசியம் பெரிதும் குறைகிறது. குறிப்பாக ''மஞ்சள் நிழலின்'' பராக்கிரமமோ , அவனின் கீர்த்தியோ தெரியாமல் இடையில் படிக்கும் போது, ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளால், அந்தக் கதை தன்னுடைய இயல்பான அதிரடியை அடகு வைப்பதாகவே உணருகிறேன்//
      +1

      Delete
    2. மிஸ்டர் மரமண்டை.! நான் படிக்கும்போது உணர்ந்தேன்.யானை கல்லறை கதை மாதிரி பின்னொரு நாளில் இடையில் உள்ள கதையை படித்துக்கொள்ளலாம்.! (இடையில் உள்ள கதையை எடிட்டர் டீலில் விட்டதுக்கு காரணம் அது படு மொக்கையோ என்னவோ.?)

      Delete

  55. ******* ச்சும்மா ஒரு லூட்டிக்காண்டி ******

    தல : அப்படி நான் என்னத்த கேட்டுட்டேன்னு இப்படி என்னை மரத்துல கட்டித் தொங்கவிட்டுட்டீங்க புலி சார்? இதுக்கு முன்னாடி நீங்க வச்சிருந்த சிகுவாகுவா சில்க்கை இப்ப யாரு வச்சிருக்கறாங்கன்னு கேட்டேன்... இது ஒரு தப்பா?

    ReplyDelete
  56. வரலாறும் ஒரு வல்லூரும் @ three

    வேயின் ஷெல்டனின் சாகசம் இந்தமாதம் மூன்றாம் இடம் பிடித்ததில் பலருக்கும் மிகப்பெரிய ஆச்சரியம் இருக்கலாம். காரணம் ரொம்பவே சிக்கலற்றது. வரலாற்றுப் பின்னணி - கதைக்கு மிகப்பெரிய பலமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே கதாசிரியரால் அமைக்கப் பட்டிருந்தாலும், அதுவே சிறிய சறுக்கலுக்குக் காரணமாகவும் அமைந்து விட்டது. ஏனெனில், வேயின் ஷெல்டனின், நாத்திகப் பேச்சும், நாத்திக நம்பிக்கையும் தான் காரணம்! ஷெல்டன் எடுத்து வைக்கும் நாத்திக வாதங்களால், நம்மால் அந்தக் கதையோடு அல்லது அந்தக் காலகட்ட வரலாற்றுப் பின்னணியோடு ஒன்ற முடியாமல் போய் விடுகிறது. இதுபோன்ற கதைக்களத்தில், ஏதாவது ஒன்றில், சார்பு நிலை அதிகமாக இருக்கும் நிலை இருந்தால் மட்டுமே, அதைப் படிக்கும் வாசகனும் அதில் நம்பிக்கைக் கொண்டு, தன் சுயச் சிந்தனையை இழந்திருப்பான். ஆனால், இதிலோ இரண்டும், அதாவது ஆத்திகமும், நாத்திகமும் சரிசமமாக தன் வாதங்களை முன் வைப்பதோடு மட்டுமல்லாமல், நம்மைக் குழப்புவதிலும் வெற்றி பெற்று விடுகிறது. ஒருவேளை, கதாசிரியரும் இதைத் தான் எதிர்பார்த்திருக்கலாம், ஆனால் அதையே இதன் குறையாகவும் நான் கருதுகிறேன்.

    பொதுவாக, தற்போதைய காலகட்டத்தில் வெற்றி முகம் காட்டும் எந்தத் தொடராக இருந்தாலும், அது லார்கோ வின்ச்'' ஆகவோ அல்லது வேயின் ஷெல்டனாகவோ இருந்தாலும் கூட, அவர்களுக்கு ''மாஸ்'' இருக்கும் போதே, அத்தொடரை முதல் இரண்டு ஆண்டிற்குள்ளாகவே முடித்து விடுவதே சிறந்த வியாபார வெற்றிச் சிந்தனையாக இருக்கக் கூடும் என்று கருதுகிறேன் !

    hi, வேயின் ஷெல்டன், சீ யூ அகைன் !

    ReplyDelete

  57. ******* ச்சும்மா ஒரு லூட்டிக்காண்டி ******

    மிஸ்டர் புலிப்பாண்டி : ஓங்கி அடிச்சா ஒன்னரை டன் வெயிட்டுடா... பாக்குறியா பாக்குறியா...?

    தல : ஓங்கியடிக்கறதுக்கு தண்ணில இறங்கி வந்தா உங்களுக்கு ஜல்ப்பு பிடிச்சு நிமோனியா கண்டிடும்னு ஊருக்கே தெரியுமே புலி சார்! ரொம்ப நேரமா அங்கயே நின்னு கூவிக்கிட்டிருக்காம, குதிரைச் சேனத்தில் தொங்கிட்டிருக்கற அந்தக் குடுவையக் கொஞ்சம் எடுத்துட்டு வாங்க... ஆளுக்கு ஒரு கல்ப் அடிக்கலாம்!


    ReplyDelete
  58. டெக்ஸ்: ஏம்ப்பா புலி முகமூடி, என் கைகளைக் கட்டி தொங்கவிட்டதுதான் விட்ட, எதுக்கென்று சொல்லுப்பா ..

    புலி முகமூடி: இன்னொரு தடவை உன்னை இந்த மஞ்சள் சட்டையில பார்த்தேன், இப்படி உன் கைகளைக் கட்டிதொங்க விட மாட்டேன். உன் சட்டையோட சேர்த்து உன்னையும் சேர்த்து துவைத்து காய போட்டு விடுவேன், ஜாக்கிரதை!

    ReplyDelete
  59. டைனோசரின் பாதையில் @ two

    டெக்ஸ் வில்லர் 'ஓவர் டோஸ்' என்ற வாதங்கள் மிக வலுவாக இருக்கும் தற்போதையச் சூழலிலும் கூட இந்தக் கதை இரண்டாம் இடம் பிடிக்கக் காரணம், அதன் கதையமைப்பும், இரண்டு மூன்று விதமான தனித் தனி ட்ராக்''குளை மிகச் சிறப்பாகக் கையாண்டு, கடைசியில் ஒரு நேர்க்கோட்டில் கொண்டு வந்து எவருக்கும் மனத்தாங்களின்றி முடித்திருக்கும் சிறப்பம்சமே இக்கதையின் மிகப்பெரிய வெற்றிக்கு வழிக்காட்டியுள்ளது.

    குறிப்பாக, டைனோசரின் 'எலும்புப் படிமங்கள்' - கதையின் திசையை, நம் எண்ணப் போக்கை டெக்ஸ் வில்லரிடம் இருந்து சற்று விலக்கி வைக்கிறது, அதுவே இந்தக் கதையின் வெற்றிக்கு காரணமாகவும் அமைந்து விடுகிறது. செவ்விந்தியர்களின் நம்பிக்கையைச் சிதைக்காமலும், அதே சமயம், 'எட்வர்ட் கேப்' போன்ற ஆராய்ச்சியாளரின் மனம் கோணாமலும் டெக்ஸ் வில்லரால் எடுத்து வைக்கப்படும் நடுநிலைமை வாதங்கள் மிகவும் சிறப்பானதாகவும், தொடர்ச்சியான கைதட்டல்கள் பெரும் தகுதியைப் பெற்றிப்பதும் பாரட்டுதலுக்குரியது. படிக்க, ரசிக்க மிகவும் சுவாரசியமான கதை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை !

    hi, டெக்ஸ் உன்னைப் போய் இப்படி மேல தொங்க விட்டுடாங்கலேப்பா ;-))

    ReplyDelete
  60. புலி முகமூடி : இவருக்கு பெரிய ''ராமராஜன்'' னு மனசுக்குள்ள நெனப்பு, இன்னொரு முறை உன்னை மஞ்சள் சட்டையில பார்த்தேன் அவ்வளவுதான்.... உன்ன, இந்த மாதிரி தொங்க விட மாட்டேன், ஒரேடியா தூங்க வச்சிடுவேன், கபர்தார் :::))

    டெக்ஸ் : அடப்பாவிங்களா... இதுக்கெல்லாமா தொங்க விடுவீங்க, என்ன கொடும எடிட்டர் சார் இது :-((

    ps : inspired by MH Mohideen :))

    ReplyDelete
    Replies
    1. அடடே! மிஸ்டர் மரமண்டை .! தீபாவளிக்கு ரொம்ப பிஸியா.? உங்கள் விமர்சனம் அருமை.!&அதிரடி.

      இதேபோல் தெளிவான நீரோடை போல் உங்கள் விமர்சனத்தை கி.நா.விலும் எழதினால் சந்தோசப்படுவேன்.!

      Delete
  61. "காமிக்ஸிம் சில common சிந்தனைகளும்” புதிய பதிவினைக்காண http://tamilcomicseries.blogspot.in/

    ReplyDelete
  62. Dialogue போட்டி என்ற பெயரில், வாராவாரம் "தல" - டெக்சை தொங்க விடுவது கொஞ்சம் கூட நல்லாயில்லை

    ReplyDelete
  63. Caption : 2

    புலி: (சங்க தமிழ்)

    என் ஆளுங்களை கொன்ற உன்னை....
    அடித்துது...
    உதைத்துது...
    உன் கை கால்களை உடைத்துது...
    நார் நாராஹா கிழித்துது...
    கொல்லப் போகிறேன் !

    தல டெக்ஸ்: (சென்னை பாஷைல)

    யோவ்!!!
    நல்லா வர்து வாய்ல....!
    இன்ன்னா தாய்யா உன் பிரச்சன !
    சொம்மா அப்பால இருந்து...
    அடிச்சு......
    தொவச்சு......
    காயபோட்டுனுட்டு....
    காமெடி பண்ணிட்டு இருக்க...!

    கட்ட அவுத்துட்டு பார்யா!
    நானு உனுக்கு காரியம் பண்றன்!

    ReplyDelete
  64. Caption # 3 (current trend’la)

    புலி வில்லன்:
    டாய்ய்ய்..........
    யார்ரா நீநீநீ!!!
    எங்கிருந்துடா வர்ற!

    தல டெக்ஸ்:
    என்னப் பார்த்து "இத்தாலில" யாருன்னு கேட்ட மொத ஆளு நீதான்!

    புலி வில்லன்:
    "இட்லி" தெரியும்! அது என்ன "இட்டாலி"!

    தல டெக்ஸ்:
    ஹிஹிஹி...
    தமாசுசு....
    தமாசுசு....!
    :)

    ReplyDelete
  65. அட்டை கிழிந்த புத்தகங்களும்) அச்சு அழிந்த பக்கங்கள் கொண்ட பூத்தகங்களும்) கசங்கிய பக்கங்கள் உள்ள புத்தகங் களும் வருவது அதிகரித்து வருகிறது. ஆனால் ஆசிரியர் பல பணிகளை தனியாளாய் செய்ய வேண்டியிருப்பதால் அவரை குறை சொல்ல மனம் வரவில்லை. சந்தா பிரதிகளை அனுப்புவோர் கூடுதல் கவனம் செலத்தினால் நல்லா இருக்கும். டெக்ஸின் வித்தியாசமான கதை கொண்ட தீபாவளி மலர் அட்யையே கிழிந்து இருந்ததாலேயே இதை பதிவிடுகிறேன்.

    ReplyDelete
  66. வாழ்த்துக்கள்! சரவணன் ஸார். அந்த புதிய கெளபாய் யார் ஸார்? சஸ்பென்ஸ் எல்லாம் நமக்கு ஒத்துவராது. ஹி ஹி ஹி

    ReplyDelete
  67. பெரியார் அவர்களின் ஹிற் அடித்த இதழ்களான பழைய தீபாவளி, பொங்கல் இதழ்களை வரும் பொங்கல், தீபாவளியில் மறுபதிப்பு செய்யும் யோசனை மிக அருமை. நீங்கள்தான் ஸார் மனது வைக்க வேண்டும். இப்படியாவது அவ்விதழ்கள் நம்மை வந்து சேராதா? நாம் அவற்றை படித்து விட மாட்டோமா என்ற சிறு நப்பாசைதான்.

    ReplyDelete
  68. சார் ...இப்போது வரும் காமிக்ஸ் க்ளாசிக் இதழ்கள் அப்பொழுது வந்த ஒரு ரூபாய் இதழை போலவே சைஸ் ..காகித தரம் அனைத்தும் அமைந்து ஒரிஜினல் இதழை போலவே நினைவு படுத்துவதை போல இந்த கொரில்லா சாம்ராஜ்ஜியம் இதழையும் அப்போது வந்தது போலவே பெரிய சைசிலும் ..வண்ணத்திலும் வெளியிட்டால் அந்த ஒரிஜினல் இதழை மீண்டும் கிடைத்த சந்தோசம் நண்பர்களுக்கு ஏற்படுமே ...முடியுமா சார் ...எப்பொழுதுவாது இரும்பு மனிதன் கதையும் ரீபிரிண்ட் ஏற்படும் சூழ்நிலை ஏற்படின் அதைனையும் இதே போல மறந்து விடாதீர்கள் சார் ...

    ReplyDelete
  69. Saravanan R @ மினி லயன் வென்றதற்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  70. காமிக்ஸ் க(ல)ழக கண்மணிகளுடன் கடந்த இரண்டு வாரம்களாக நமது ஆசிரியர் கலந்துரையாடாத அளவுக்கு தொந்தரவு கொடுத்த ஜல்பு என்ற ஜலதோஷதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    ReplyDelete
  71. டியர் எடிட்டர்

    டைனாசரின் பாதையில் கதை நன்றாய் இருந்தது .. இரண்டாம் கதை இன்னொரு மழை நாள் விடுமுறைக்கு ... சில நண்பர்கள் கூறுவது போல 2-3 224க்கு அதிக பக்ககங்கள் சேரும்போது சிறு அயற்ச்சி ஏற்பட்டது உண்மையே (உதாரணம் Lion 250).

    எனினும் டெக்ஸ் சந்தாவில் கதைகள் பிரிந்து வருவதாலும் - அதிக பட்சம் 336 pages என்பதாலும் இந்த பிரச்சனை இருக்காது என்றே தோன்றுகிறது.

    இம்மாதத்து எனது வரிசை :

    1) டைனாசரின் பாதையில்
    2) மஞ்சள் நிழல்
    3) மூளைத் திருடர்கள்
    4) ஆண்டவனின் ஆயுதம்

    * எமனின் வாசலில் இன்னும் படிக்கவில்லை

    ReplyDelete
  72. இம்மாதத்து எனது வரிசை 1) டைனாசரின் பாதையில்
    2) மஞ்சள் நிழல்
    3) மூளைத் திருடர்கள்
    4) ஆண்டவனின் ஆயுதம்

    ReplyDelete
  73. எமனின் வாசல் எதிர்பார்த்த அளவு இல்லை.படங்கள் ஓகே.முதல் பக்கங்கள் ரொம்ப போர்

    ReplyDelete
  74. எமனின் வாசல் எதிர்பார்த்த அளவு இல்லை.படங்கள் ஓகே.முதல் பக்கங்கள் ரொம்ப போர்

    ReplyDelete
  75. இம்மாதத்து எனது வரிசை 1) டைனாசரின் பாதையில்
    2) மஞ்சள் நிழல்
    3) மூளைத் திருடர்கள்
    4) ஆண்டவனின் ஆயுதம்

    ReplyDelete
  76. எனது கதைவரிசை

    1) எமனின் எல்லையில்

    2)டைனோசரின் பாதையில்

    3)மூளைத்திருடர்கள்

    4) ஆண்டவனின் ஆயுதம்

    5)மஞ்சள் நிழல்.

    ReplyDelete
  77. 'இரத்தப்படலம் complete collection' ன்னு பரிசு அறிவிச்சப்ப....எப்படியாவுது நல்ல கேப்ஷனா எழுதி போட்டியில் பரிசு வாங்க வேண்டும் என்று இருந்த வேகம்... ஏனோ மற்ற கேப்ஷன் போட்டிகளில் வர மாட்டேன் என்கிறது....ஹும்ம்ம்ம்....

    ReplyDelete
    Replies
    1. சத்யா அண்ணா .! உங்களுக்கு வேண்டுமானால் டிராகன் நகரம் அல்லது தீபாவளி சூப்பர் ஸ்பெஷல் கொடுத்துவிடலாமா.?

      Delete
    2. @MV:
      ஹும்ம்ம்ம்....எனக்கு 'இரத்தப்படலம்' தான் வேணும்...ஹ்ம்ம்ம்ம்...ஹ்ம்ம்ம்... :-)

      Delete
    3. சத்யா.!
      சென்னையில் மின்னும் மரணம் வெளியீட்டின் போது உடுமலை பேட்டையை சேர்ந்த நல்ல உள்ளம் கொண்ட நண்பர் ஒருவர் இரத்தப்படலம் மூன்று வைத்திருப்பதாகவும் அதில் ஒன்றை சோழிங்க நல்லூரில் உள்ள அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறு கூறினாரே .? இன்னமும் போய் வாங்கவில்லையா.?

      Delete
  78. இருந்தாலும்...இந்த வாரத்துக்கான எனது கேப்ஷன் முயற்சி....

    Caption 1:
    புலிப்பாண்டி: அடேய் டெக்ஸ்...உனக்கு மட்டும் எப்படி எடிட்டர் தனி சந்தா அறிவிக்கலாம்...
    அதான் தூங்கும்போது உன்ன அலேக்கா தூக்கிட்டு வந்து 'வேதாளம்' மாதிரி தொங்கவிட்டேன் பாத்தியா...
    என்னை யாருன்னு நினைச்சே...புலி புலி புலி புலி....

    டெக்ஸ் வில்லர்: 'தல' 'தளபதி' ன்னு சொல்லி கூப்பிடுறதனால பய ரொம்ப கன்புயுஸ் ஆயிட்டான் போல...
    யாராவுது எடிட்டர் கிட்ட சொல்லி...,'என் பெயர் டைகர்' 1000 த்துக்கும் மேலே முன் பதிவு ஆயிடுச்சாம்...ஜனவரி புக் பேர் க்கு கன்பார்ம்னு இவன்கிட்ட சொல்ல சொலுங்கப்பா...பாடியே சாகடிக்கிறானே கடவுளே!!!!!!

    ReplyDelete
  79. இருந்தாலும்...இந்த வாரத்துக்கான எனது கேப்ஷன் முயற்சி....

    Caption 1:
    புலிப்பாண்டி: அடேய் டெக்ஸ்...உனக்கு மட்டும் எப்படி எடிட்டர் தனி சந்தா அறிவிக்கலாம்...
    அதான் தூங்கும்போது உன்ன அலேக்கா தூக்கிட்டு வந்து 'வேதாளம்' மாதிரி தொங்கவிட்டேன் பாத்தியா...
    என்னை யாருன்னு நினைச்சே...புலி புலி புலி புலி....

    டெக்ஸ் வில்லர்: 'தல' 'தளபதி' ன்னு சொல்லி கூப்பிடுறதனால பய ரொம்ப கன்புயுஸ் ஆயிட்டான் போல...
    யாராவுது எடிட்டர் கிட்ட சொல்லி...,'என் பெயர் டைகர்' 1000 த்துக்கும் மேலே முன் பதிவு ஆயிடுச்சாம்...ஜனவரி புக் பேர் க்கு கன்பார்ம்னு இவன்கிட்ட சொல்ல சொலுங்கப்பா...பாடியே சாகடிக்கிறானே கடவுளே!!!!!!

    ReplyDelete
  80. 'இரத்தப்படலம் complete collection' ன்னு பரிசு அறிவிச்சப்ப....எப்படியாவுது நல்ல கேப்ஷனா எழுதி போட்டியில் பரிசு வாங்க வேண்டும் என்று இருந்த வேகம்... ஏனோ மற்ற கேப்ஷன் போட்டிகளில் வர மாட்டேன் என்கிறது....ஹும்ம்ம்ம்....

    ReplyDelete
  81. முப்பதாவது தடவையா வாசிச்சு காட்டிட்டேன் ..புரிஞ்சுதா இல்லியா சொல்லு ... இறக்கி விட்டுடறேன்

    ஐயோ அம்மா லட்சம் தடவை நீ வாசிச்சி காட்டினாலும் எனக்குப் புரியப் போறதில்லே ..கிராபிக்ஸ் நாவலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம் ..அதுக்கு பதிலா என்னை சுட்டுடு

    ReplyDelete
    Replies
    1. கிளியாருக்குத்தான் பரிசு.... அருமை....

      Delete
    2. அருமையாகத்தான் உள்ளது.! ஆனால் எடிட்டரின் செல்லம் கி.நா.வை கலாய்த்து விட்டாரே.! .........ஒந்து !ஒந்து! அதனால் பரிசு லேது.!

      Delete
  82. My caption:
    புலி அண்ணன்: பாசத்துக்கு முன்னாடி தான் நான் பனி! பகைக்கு முன்னாடி நான் புலி!
    டெக்ஸ் அண்ணன்: துவைச்சு தொங்க விட்டுட்டு பஞ்ச் டயலாக்-ம் பேசறானே! என்ன கொடுமை சார் இது!

    ReplyDelete
  83. புலி அண்ணாத்தே:
    காட்டோரம் மேயும் குறும்பாடு! அதை போட்ட தான் நமக்கு சாப்பாடு! சீறினா சீறுவேன் கீறினா கீறுவேன்!

    டெக்ஸ் அண்ணன்:
    நான் எப்படா சீறினேன்! வூடு கட்டி அடிச்சே! இப்ப இட்டு கட்டி பாடுறே!
    கையை அவுத்து விடுடா! வீட்டுக்கு போகணும்! லேட்- ஆ போன ஆத்தா வையும்!

    ReplyDelete
  84. மொக்கப்புலி: டேய் மஞ்ச சட்டை இனி நீதான் எனக்கு boxing bag
    Tex: பயபுள்ள இதைதான்யா காலையில இருந்து சொல்லிட்டு இருக்கான் பக்கத்திலேயே வரமாட்டேங்கிறானே

    ReplyDelete
  85. மொக்கப்புலி: டேய் மஞ்ச சட்டை இனி நீதான் எனக்கு boxing bag
    Tex: பயபுள்ள இதைதான்யா காலையில இருந்து சொல்லிட்டு இருக்கான் பக்கத்திலேயே வரமாட்டேங்கிறானே

    ReplyDelete
  86. புலி: என் பெயர் டைகர்க்கு சந்தா கட்டுறேன்னு சொல்லு உன்னை இறக்கி விட்டுறேன்
    டெக்ஸ்: நீ ஏன் கையில இல்லை கழுத்துல கட்டுனா கூட பரவாயில்லை இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்

    ReplyDelete
  87. டைகர்.:

    டெக்ஸ்! ஒழங்க போனெல்லி குழமத்தில் என்னையும் சேர்த்துக்க.! சாலியர் இறந்து விட்டதால் என்னை டம்மி பீஸ் டம்மி பீஸாக்கி விட்டானுக பாவிகள்.! "வேண்டா வெறுப்பா பிள்ளைய பெத்து காண்டா மிருகம் ன்னு பெயர் வைக்கிற மாதிரி " என என் கதையை உருவாக்குறானுக .! இல்லைன்னா உன் பக்கத்திலேயே தூக்கு மாட்டி செத்துடுவேன்.!

    டெக்ஸ்.சரி ! சரி ! சேத்துக்க சொல்றேன்.! ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமா நீ செத்துக்கிட்டேதான் இருக்கே.!ஆனா ஒரு நிபந்தனை தனி சந்தாவெல்லம் கேட்டு போட்டிக்கு வரக்கூடாது.!ஆமா சொல்லிட்டேன்.!

    ReplyDelete
  88. இன்று பிறந்தநாள் கொண்டாடும் நம் பாரீஸ் நண்பர் திருச்செல்வம் பிரபானந்த் , இன்று போல் என்றும் கைநிறைய காமிக்ஸ் உடன் மகிழ்ச்சி யாக இருக்க , அனைத்து சேலம் நண்பர்கள் சார்பில் வாழ்த்துகிறேன்...... இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் பிரபா சார்....

    ReplyDelete
    Replies
    1. Many more happy returns of the day prabha sir.....!!!!!

      Delete
    2. Mr. Prabahnand, Wish you many happay returns of the day

      Delete
    3. வாழ்த்துக்கள் கூறிய நண்பர்களுக்கு என் நன்றிகள்கோடி.

      Delete
  89. நண்பர் திருச்செல்வம் பிராபனந்த் அவர்களுக்கு "இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்" :-):-):-)

    ReplyDelete
  90. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் திருச்செல்வம் பிராபனந்த் Sir

    ReplyDelete
  91. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் திருச்செல்வம் பிராபனந்த் Sir!! !

    ReplyDelete
    Replies
    1. திருச்செல்வம் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!

      Delete
    2. நன்றிகள் நண்பர்களே !

      Delete
  92. Happy Birth Day Thiruchelvam Prapananth Sir!

    ReplyDelete
  93. வில்லரு ..உம்மேலே எனக்கு எந்த கோபமும் இல்லே ..உன் பிரண்டு கார்சன் இருக்கானே உன்னை காப்பாத்த வருவான் ..அவனைத்தான் இருபத்தஞ்சி வருசமா தேடுறேன் ..வந்ததும் ஒரே போடு ...
    அட அப்பாவியே ..அதுக்கு ஏண்டா என்னை கட்டி தொங்கப் போட்டு இருக்கே ..காலே கால் கிலோ கறி வாங்கி அதை வறுத்து வடை ச்சட்டியிலே கட்டித் தொங்க ப் போட்டிருந்தா எங்கிருந்தாலும் கிழவன் இந்நேரம் பறந்து வந்திருப்பானே ....

    ReplyDelete
  94. சார் நான் சந்தா கட்டிட்டேன் ............
    குட் பாய் சார் நானு.........
    அல் ரூ குட் பாய்

    ReplyDelete
  95. கேப்ஷன் போட்டி.
    டைகர்:- அதிரடியே எந்தன் பாணி,என்னிடம் மோதினால் கட்டி தோங்க விட்டு மண்டை தொலியை உரித்து விடுவேன்.
    டெக்ஸ்:- சரி சரி ஏற்றுக்கொள்கிறேன்.இறக்கிவிடு இனி நாம் இருவரும் இணைந்து பணியாற்றுவோம்.

    ReplyDelete
  96. நண்பர் திருச்செல்வம் பிராபனந்த் அவர்களுக்கு "இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்" :-):-):-)

    ReplyDelete
  97. Caption 2:
    கார்சன் (மைண்ட் வாய்ஸ்): அடேய் வில்லர்...எத்தனை தடவை என்ன கலாயிச்சிருப்பே...வறுத்த கறி முழுசா கொடுக்காம நீயே சாப்பிட்டியிருப்பே...அதுக்குத்தான் மாறுவேஷத்துல தூக்கிட்டு வந்து இப்படி தொங்க விட்டிருக்கேன்....ஹா..ஹா...

    வில்லர்: ஹா...ஹா...

    கார்சன்: இப்படி தொங்கிட்டு இருக்கும்போதும்...என்ன சிரிப்பு உனக்கு....?!

    வில்லர்: அது ஒண்ணும் இல்ல புலிப்பாண்டி சார்...கெட்டதுலயும் ஒரு நல்லதுங்கிற மாதிரி...என்ன மட்டும் இப்படி தொங்க விட்டு நல்லது ப்ண்ணீங்க...பக்கத்துல அந்த அரைக் கிழம் கார்சனையும் தொங்க விட்டிருந்தீங்க அவ்வளவுதான்...புலம்பியே கொன்றிருப்பான்...அப்பாடா!!!

    மறுபடியும் கார்சன் மைண்ட் வாய்ஸ்: அடப்பாவி...உலகமே அழிஞ்சாலும் இவன் நம்மள கலாய்காம இருக்க மாட்டான்...
    ஙே...ஙே...ஙே....

    ReplyDelete
  98. கார்சன்...சரியான நேரத்துக்குத்தான் வந்திருக்கே ..கொஞ்சம் கூடத் தயங்காமே இந்த புலிவேசக்காரனை சுட்டுரு
    டெக்சு ..இவரு யாருன்னு நினெச்சே ..இவ்ர்தாம்பா உன்னைவச்சி ஐநூ ரு பக்கம் கிராபிக்ஸ் நாவல் எழுதப் போற எழுத்தாளர்
    அப்போ கொஞ்சம் கூடத் தயங்காம என்னை சுட்டுறு

    ReplyDelete
  99. என்ன செய்றது டெக்ஸ் சார்..உங்களுக்கோ இந்த மஞ்சள் சட்டையக் கழட்ட மனசில்லே நானோ என் வேலையைப் பார்த்தாகணும் .. அதான் உங்களை இந்த சட்டையோடவே சோப்பு போட்டு துவைச்சி காய வச்சிருக்கேன் ..வீட்லே உங்க மகன்கிட்டே போயி சலவைக் கான காசை வாங்கிடறேன்

    ReplyDelete
    Replies
    1. வெட்டுக்கிளி வீரையன் @
      டெக்ஸ் : பரவால்லே புலிப்பாண்டி. .! காய்ஞ்சதும் வந்து அப்படியே அயர்ன் பண்ணி விட்டுடு.!

      (இப்படி பினிஷ் பண்ணியிருந்தா நல்லா இருந்திருக்குமே வெட்டுக்கிளியாரே.!!!)

      Delete
    2. உங்கள் ரசனைக் குதிரை நாலு கால் பாய்ச்சலில் அற்புதமாய்ப் பறக்கின்றது நன்றி கண்ணன் ..(அப்படி அழைக்கலாம்தானே )

      Delete
    3. வெட்டுக்கிளியாரே.!

      சும்மா தூள் கிளப்புறீங்க .!பரிசு கிடைத்தால்.எங்கு அனுப்புவதாம்.?

      Delete
    4. வணக்கம் மடிப்பாக்கம் சார் ..உங்கள் ஊரில் வெள்ளம் என்று டிவி யில் சொல்கிறார்கள் ..நீங்கள் ஹாயாக கமெண்டை ரசித்துக் கொண்டு இருக்கின்றீர்கள் ..நன்றி

      Delete
    5. வெட்டுக்கிளியாரே.!

      பாலைவனத்தில் பயணம் செய்யும் போது டெக்ஸ் வில்லரும் கார்சனும் பயணத்தின் போது தேவையான அத்யாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு கிளம்புவார்களே அதைப்போலவே மழை தொடங்கும் முன்னரே தண்ணீர் கேன் ,கேஸ்,மெழகுவர்த்தி தீப்பெட்டி ,முட்டை, பால்,மளிகை சாமன்கள் ,டெட்டால் ,பினாயில் ,லைசால்,பாராசிட்டமல் ,ஆண்டிபயாடிக் மாத்திரைகள்,விக்ஸ் என்று சகலமும் 15 நாட்களுக்கு இருப்பு வைத்துள்ளேன்.மூன்று நாட்களாக வீட்டில் முடங்கி கிடக்கின்றேன்.! வீட்டை சுற்றி அகழி போல் தண்ணீர் சூழ உட்கார்ந்து உள்ளோம்.! இன்று பரவாயில்லை.நாளை மாமூல் வாழ்கை தொடரும் என்று கருதுகிறேன்.! கோடை காலங்களில் கூட 24 மணிநேரமும் மின்சாரம் இருந்தது.தற்போது சிலமணிநேரமே மின்சாரம் உள்ளது.கரண்ட் வந்தால் உடனே சார்ஜர்தான்.!எப்படியோ காமிக்ஸ் படிப்பது நிஜ வாழ்க்கைக்கும் உபயோகப்படுகிறது.!

      Delete
  100. நண்பர் திருச்செல்வம் ப்ரபானந்த் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளும்!

    ReplyDelete
  101. ******* ச்சும்மா ஜாலிக்காண்டி ******

    புலிப்பாண்டி : இத்தனை அடி வாங்கினதுக்கப்புறமும் பொன்னாடை போர்த்தின பொலிட்டிக்கல் லீடர் மாதிரியே முகத்தை வச்சுக்க உன்னால எப்படி டெக்ஸூ முடியுது?!!

    தல : அடப்போப்பா! நீ புலி வேசம் போட்டுக்கிட்டு வந்து லேசா பிறாண்டி வச்சதுக்கெல்லாம் நான் கதறி அழவா முடியும்? போனவாரம்கூட நாலுபேரு முதலை வேசம் கட்டிக்கிட்டு வந்து முழங்கால் வரை கடிச்சானுவ. மூச்சுக் காட்டலையே நான்! அதோ அங்கே போறானே... அவனைக் கூப்பிடு! அவன் போன மாசமே கரடி வேசம் போட்டுக்கிட்டு வந்து கபால்னு கழுத்தைக் கடிக்கிறதாச் சொல்லியிருந்தான், இன்னும் வரவேயில்லை.

    ReplyDelete
  102. @கேப்ஷன் போர்-ட்டி:
    டெக்ஸ்: நீ என்னை கீழிறக்கியதும், நகைச்சுவை (?!) என்ற பெயரில் நம்மை நக்கலடித்துக் கொண்டிருப்பவர்களை சுட்டுத்தள்ளப் போகிறேன்...

    டைகர்: பொறு டெக்ஸ்! விசிறிகளை வீழ்த்த வின்செஸ்டர் எதற்கு? முஷ்டியை இப்படி லேசாக உயர்த்திக் காட்டினாலே போதும்!

    @ஆசிரியர்:
    //யுத்தப் பின்னணிக் கதைகள் ... பக்கம் பார்வையை ஓட விடப் போவதில்லை//
    இப்படி பொத்தாம் பொதுவாக ஒரு நல்ல genre-ஐ தவிர்க்க வேண்டாமே?!

    ReplyDelete
    Replies
    1. கார்த்திக் சோமலிங்கா சார்.!

      ________/|\______._______/|\_______

      எங்கள் மீது கோபமா .? ரொம்ப நாளா ஆளையே காணோமே.?

      Delete
    2. அப்படி எல்லாம் இல்லீங் சார்! :D கமெண்டு போட்டு அலுத்து விட்டதால், பதிவுகளை படிப்பதுடன் சரி...! இப்போதெல்லாம் உங்கள் யானைக் குன்று பார்முலா தான்! ;)

      Delete
  103. புலி வாயன் : நீ என்னமோ பெரிய அப்பாடக்கராமே. உனக்கு தனி சந்தாவலாம் அறிவிச்சிருக்காங்களாம். நீ கைய தூக்கினா எதிராலிக்கு கும்மங்குத்துதானாமே. எங்க இப்ப குத்து பார்ப்போம் !

    டெக்ஸ் : டேய் புலி வாயா, மூளைய தலப்பா உள்ள வச்சிருக்கியா. கைய கட்டி தொங்க விட்டுப்புட்டு குத்துடான்னா எப்படிடா. அவுத்துவுடு அப்ப தெறியும் என் முஸ்டியோட வலிமை !

    ReplyDelete
  104. நண்பர்களே.!

    டிசம்பர் மாத இதழ்கள் எத்தனை.? என்ன ? என்ன ?

    ReplyDelete
    Replies
    1. 1.ஆரிஸியா...
      2.கமான்சே....
      3.மாடஸ்தி....
      4.ஹன்னா....

      Delete
    2. டெக்ஸ் விஜயராகவன்.!@நன்றி.!


      ஹஹஹஹஹஹஹ......................

      இதில் ஆரிஸியா சேர மாட்டார் நண்பரே.! .அவர் க்யூட் கேர்ல். மற்றவர்கள் எல்லாம் சொர்ணாக்கா வகையை சேர்ந்தவர்கள்.

      Delete
  105. புலி வேடதாரி:டேய் டெக்சு உன்னை அவுத்து உடறேன்.என்கிட்ட ஒண்டிக்கு ஒண்டி. வர்ரியா?
    டெக்ஸ்:இந்த புலிய முறத்தாலயே அடிச்சு விரட்ட மாடஸ்டியே போதும்.மானம் போவதற்குள் ஓடிப் போயிடு

    ReplyDelete