Saturday, December 05, 2015

தண்ணீரும்...தலைநகரமும்...!

நண்பர்களே,
     
வணக்கம். தலைநகரமே தண்ணீர் நகரமாகக் காட்சி தருவதைப் பார்க்கும் பொழுது வறட்சியை மாத்திரமே கண்டு பழகிய எங்களைப் போன்றோருக்கு எழுந்திடும் திகைப்பை வார்த்தைகளில் கொண்டு வர முடியமாட்டேன்கிறது! நேற்று வரை அனகாபுதூர், பெரும்பாக்கம், துரைப்பாக்கம், முடிச்சூர் என்ற தனித்தனிப் பெயர்களோடும், அடையாளங்களோடும் இருந்து வந்த பகுதிகள் இன்றைக்கு C/o. எட்டடி நீர்த்தேக்கங்கள் என்றிருப்பதை ஊடகங்கள் வாயிலாகப் பார்க்க நேரிடும் போது அடிவயிறு கலங்குகிறது ! இயற்கையின் சீற்றத்தின் முன் நாமெல்லாம் எத்தனை சிறியவர்கள் என்பதை தாண்டிச் சென்றுள்ள நாட்களானவை  பிடரியில் அறைந்து புரியச் செய்துள்ள போதிலும், அதற்கு இத்தனை உக்கிரம் அவசியம் தானா ?? இயற்கை அன்னைக்கு முன் நாமெல்லாமே மக்குப் பிள்ளைகள் தான் எனும் போது , சற்றே சாத்வீகமாய் பாடம் கற்றுத் தந்திருக்கலாமே ? என்ற ஆதங்கம் அலைமோதுகிறது ! ஆனால் இடர்கள் எத்தனை எழுந்தாலும் மனித மனத்தின் அளப்பரிய ஆற்றலும் வீறுகொண்டு எழுவதையும் இந்தக் கஷ்டகாலங்கள் நமக்குக் காட்டும் போது பிரமிப்பைக் கட்டுப்படுத்த இயலவில்லை ! சென்னையிலும் சரி; வெள்ள பாதிப்பில் சிக்கி நிற்கும் ஒவ்வொரு நகரத்திலும் சரி- அசாத்திய மனஉறுதியுடனும், மனிதாபிமானத்துடனும் செயலாற்றி வரும் அத்தனை மாந்தர்களும் நிச்சயமாய் சூப்பர் ஹீரோக்கள் தான்! ஸ்பைடர்களும், மாயாவிகளும், பேட்மேன்களும், சூப்பர்மேன்களும் கதைகளில்,திரைகளில் உலகைக் காப்பாற்றியிருக்கலாம் ; ஆனால் இன்று கழுத்தளவுத் தண்ணீருக்குள் நின்று கொண்டு முதியோருக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் உதவிடும் ஒவ்வொரு ஆற்றலாளருமே ஒரு சூப்பர்மேன் தான் !  உணவும், உடையும் எடுத்துக் கொண்டு பிரதியுபகாரம் எதிர்பார்த்திடாது வீதி, வீதியாய்ச் சென்று விநியோகிக்கும் அந்த நல்ல உள்ளங்கள் சகலமும் சூப்பர் ஹீரோக்களே !! SALUTE ! AND A MEGA SALUTE TO THE POWER OF THE HUMAN WILL !!

சங்கடமானதொரு வேளையில் ‘ஹி..ஹி...ஹி‘ என்று பல்லைக் காட்டிக் கொண்டு எதையேனும் எழுத வரவில்லை! அதே சமயம் ஈரப் போர்வையை நானும் போர்த்திக் கொண்டு மூக்கால் அழுது தீர்ப்பதால் சாதிக்கப் போவது ஏதுமில்லை என்பதும் புரிகிறது! எங்கோ ஒரு தூரத்து மூலையில் அமர்ந்து கொண்டிருக்கும் போது- வார்த்தைகளால் இதம் தரவாவது நமக்கு முடிந்தால் அதுவே பெரிய விஷயம் என்பதால் இப்பதிவு normal service-ஆகவே இருந்திடும்! 

நேற்றைய மாலை டிசம்பர் மாதத்து இதழ்களைச் சுமந்து கொண்டு; ஒன்றுக்கு இரண்டாய் பாலிதீன் ராப்பர்களோடு உங்கள் கூரியர்கள் இங்கிருந்து புறப்பட்டு விட்டன! SMS மூலம் அனைத்து சந்தா நண்பர்களுக்கும் ‘பிரதிகளை இப்போது அனுப்பிடல் ஓ.கே. தானா?‘ என்றொரு தகவலைத் தட்டி விட்டிருந்தோம்; ஆனால் நம் துரதிர்ஷ்டமோ என்னவோ; சென்னையின் முக்காலே மூன்று வீச டவர்களும்; நம்பர்களும் செயல்படும் நிலையில் இல்லை! முடிந்த மட்டிற்கு சென்னை வாசகர்களுக்குப் போன் செய்து ஊர்ஜிதம் செய்து கொண்டான பின்பே கூரியர்களை அனுப்பிடச் சொல்லியிருந்தேன் நம்மவர்களிடம்! ஆனால் அதிலும் 5% வெற்றி கூட கண்டபாடில்லை ; So- ‘பிரதிகளை அனுப்பலாம் தான்!‘ என்ற க்ரீன் சிக்னல் தந்துள்ள சென்னை வாசகர்கள் நீங்கலாக பாக்கி (சென்னை) நண்பர்களின் பார்சல்கள் நம் ஆபீஸிலேயே தான் காத்துள்ளன! உங்கள் பகுதிகளில் நிலவரம் தேவலை என்பதாக நீங்கள் கருதும் சமயம், சிரமம் பாராது 9842319755 என்ற நம்பருக்கொரு வாட்சப் / SMS தகவல் அனுப்பி விட்டால் உடனே கூரியரில் புக் செய்து விடுவோம்! ஒன்றிரண்டு நாட்கள் தாமதமாகக் கிடைத்தாலும் பிரதிகள் பத்திரமாகக் கிடைத்தாக வேண்டுமே என்ற ஆதங்கத்தில் தான் இந்த முன்ஜாக்கிரதை !

டிசம்பரின் நாயகன் வருண பகவானே என்ற போதிலும் தோர்கல்” அவருக்கே கடும் போட்டியைத் தருவானென்பது சர்வ நிச்சயம்! இரண்டு high-voltage கதைகளின் தொகுப்போடு வெளிவரும் “மூன்றாம் உலகம்” அட்டைப்படத்திலேயே உங்களைக் கட்டுண்டு நிற்கச் செய்வது உறுதி – ஒரிஜினல் டிசைனே பிரமாதமாக வந்துள்ளது! And கதை; வர்ணங்கள்; அச்சு என்று எல்லாமே decent ஆக அமைந்திருப்பதால் இந்தாண்டின் memorable இதழ்களின் பட்டியலில் இது நிச்சயம் இடம்பிடிக்குமென்று உறுதியாக மனதுக்குப்படுகிறது! But உச்சக்கட்ட ஜுரிக்கள் நீங்களே எனும் போது – உங்கள் தீர்ப்பே இறுதியானதாக இருந்திடும்! Fingers crossed!

இம்மாதத்து மற்ற 2 வண்ண இதழ்களுமே ஒரு ஒற்றுமை கொண்டவை! கலரிங் பாணியில் இரண்டிலுமே அடர் வர்ணங்களே தூக்கல் என்பதால் பக்கத்துக்குப் பக்கம் ‘கபால்-கபால்‘ என்று dark colors போட்டுத் தாக்கும்! And “பாதைகளும்... பயணங்களும்” இதழினில் பெரும்பகுதி இரவு நேரக் காட்சிகள் என்பதால் நிறைய frame-களில் மணிரத்னம் திரைப்பட லைட்டிங் எஃபெக்ட் இருப்பதைப் பார்த்திடப் போகிறீர்கள் !

டிசம்பரின் one & only கறுப்பு-வெள்ளை இதழினில் ‘பளீர்‘ வெள்ளைத் தாளில் இளவரசி டாலடிப்பதை ரசித்திடலாம்! இங்கே சின்னதொரு மாற்றம் – விலையினில்! போன முறை போல மாடஸ்டியின் இந்த சாகஸத்தையும் page makeup செய்திடத் திட்டமிட்டு – இந்த இதழுக்கு 80 பக்கங்கள்; விலை ரூ.40/- என்றும் தீர்மானித்திருந்தோம்! மும்மூன்று frame-கள் அடங்கிய ஒவ்வொரு மாடஸ்டி strip-லும் வசனம் நிறையவே இருப்பதால் டைப்செட்டிங் பணிகளைச் சுலபமாக்கும் பொருட்டு பக்கமொன்றுக்கு 5 படங்களை மட்டுமே அமைத்திருந்தோம் – ‘நிழலோடு நிஜயுத்தம்‘ இதழினில்! So பக்க எண்ணிக்கை சற்றே அதிகமாகியிருந்தது. ஆனால் பக்கத்துக்கு 5 படங்கள் மட்டுமே எனும் போது – ஒரேயொரு சித்திரம் மாத்திரமே இடம்பிடிக்கும் வரிசையினில் நமது DTP பணியாளர்களாகவே படங்களைக் கொஞ்சம் நீட்டிக்க அவசியம் நேர்ந்தது! முன்நாட்களில் இந்த வேலைகளை நமது ஓவியர்கள் செய்து வந்தார்களென்ற போது – பிசிறின்றி சித்திர extension களை அவர்கள் பார்த்துக் கொள்வது வழக்கம். ஆனால் சர்வமும் கம்ப்யூட்டர் மயம் என்றான பின்னே – அந்த perfection-ஐ நமது DTP அணியால் சாதிக்க முடியவில்லை! அதே சிக்கலை இந்தத் தடவையும் விலை கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டாமே என்ற முன்ஜாக்கிரதையில் பக்கத்துக்கு 6 படங்கள் என்றே மரியாதையாக set பண்ணத் தீர்மானித்தேன் – இறுதி நிமிடத்தில்! கதையும் ஏற்கனவே சற்றே குறைவான நீளம் என்ற பொழுது – இந்தக் கறாரான பக்க அமைப்பும் சேர்ந்திட – மொத்த page count 57-ஐத் தாண்டவில்லை! திரும்பவும் துண்டும், துக்கடாவுமாய் filler pages களை இணைத்து பக்க எண்ணிக்கையை 80க்குக் கொண்டு வந்து வம்படியாய் நிறுத்துவதற்குப் பதிலாக – விலையில் கை வைத்து விட்டால் வேலை சுலபமென்று தோன்றியது! ‘2015-ன் பணிகள் முடிந்து விட்டன !‘ என்ற எண்ணம் இரு வாரங்களுக்கு முன்பே தலைக்குள்ளே குடிவந்து விட்ட நிலையில் ; 2016-க்குள் முழுமூச்சாகச் செயல்படத் துவங்கியிருந்த நிலையில் – மேற்கொண்டு 16 filler pages என்பது ஒரு இமாலயப் பணியாகத் தோன்றியது என்பதும் நிஜம்! So- ரூ.30/- என்ற ஸ்டிக்கரை பரபரவென்று தயார் செய்து மாடஸ்டியின் ராப்பரில் சத்தமில்லாமல் ஒட்டி இதழைத் தயார் செய்து விட்டோம்! 

And ஏற்கனவே நான் சொல்லியிருந்தபடி – டிசம்பரின் இதழ்களுள் – 2015-ன் ஒரு ஒட்டுமொத்த review தொடர்பான 11 கேள்விகளும்; உங்கள் நினைவுகளைக் கோதி விட இந்தாண்டின் பட்டியலும் உள்ளன! இம்மாத இதழ்களை வாசித்தான பின்பு – கடந்து சென்றுள்ள 12 மாதங்களையும் நிதானமாய் அசைபோட நேரம் ஒதுக்கி – நமது வினாக்களுக்கு விடை தந்திடக் கோருகிறேன்! இத்தனை காலம் மௌன வாசகர்களாக நீங்கள் தொடர்ந்திருப்பினும் – ஆண்டின் இந்த ஒரு தருணத்தின் போது மட்டும் உங்களின் சிந்தனைகளை நம்மோடு பகிர்ந்திட்டால் மிகுந்த சந்தோஷம் கொள்வோம்! Maybe பொது மேடையில் உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்திடத் தயக்கமாகயிருக்கும் பட்சத்தில் – lioncomics@yahoo.com என்ற நமது மின்னஞ்சல் முகவரிக்கொரு ஈ-மெயிலில் உங்கள் கருத்துக்களைத் தெரிவித்திடலாமே? Please folks?
எட்டும் தூரத்தில் ஜனவரி காத்துள்ள போது – அதன் இதழ்களுள் ஏற்கனவே ஜரூராய் எங்கள் டீம் பணி செய்து வருகிறது! ‘சட்டத்திற்கொரு சவக்குழி நமது இரவுக்கழுகாரின் 330 பக்க நீள MAXI சாகஸம்! டெக்ஸின் 2016 விஸ்வரூபத்தைத் துவக்கி வைக்கக் காத்திருப்பது இந்த அதிர்வேட்டு adventure தான்! ரொம்பவே பரிச்சயமான கதைக்களம்; ஆனால் செம உற்சாகமான ‘தல‘யின் தாண்டவம்; அட்டகாசமான சித்திரங்கள் என்று இந்த இதழே ஒரு breezy read ஆக அமையக் காத்துள்ளது ! ஒரு வருஷத்தை மட்டுமன்றி ஒரு புது சந்தாவையே துவக்கிட இதை விட அனல்பறக்கும் கதையொன்று சிக்காதென்று மனதுக்குப் பட்டது! இந்த இதழை உங்கள் கைகளில் ஒப்படைக்க இப்போதே எனக்கு உள்ளங்களையில் அரிக்கிறது!
ஜனவரியில் இன்னொரு innings opener ஆகக் களமிறங்குபவர் நமது குள்ள வாத்து (மதியில்லா) மந்திரியார்! சந்தா C-ன் பிரதிநிதியாக – கலர் கார்ட்டூனின் முதல் இதழாக “சூ... மந்திரி... காலி...!” வருகின்றது! And இது மந்திரியாரின் 6/8 பக்கக் கதைகளின் தொகுப்பு என்பதால் கொஞ்சமும் போரடிக்காது – செம ஆர்வமாய் எழுதி முடிந்தது! அதன் பலனாய் இதழ் இப்போதே தயாராகி – நாளைய தினம் அச்சுக்குச் செல்கிறது என்பது தான் நிலவரம்

பாக்கி நிற்பது ஷெல்டனின் “விதி எழுதிய திரைக்கதை”யின் பணிகள் மட்டுமே! இதற்கான டிஜிட்டல் பைல்களை எதிர்பார்த்து ‘ஆவென்று‘ காத்துக் கிடக்கிறோம்! Rounding off the January preview. நமது இரும்புக்கரத்தாரின் “பாம்புத் தீவு” இதழும் கூட ரெடி! இது எத்தனையாவது முறை மறுபதிப்பாகிறதோ தெரியாது – ஆனால் எனது பணிக்காலத்தினுள் இவை இனியொரு முறை வெளிச்சத்தைப் பார்க்கப் போவதில்லை என்பது மட்டும் சர்வ நிச்சயம் ! இதன் மொழிபெயர்ப்பின் முக்கால்பங்கு நிகழ்காலத்திலேயே உள்ளதை நெருடலோடு கவனித்தேன் ! "கப்பலில் சரக்கு ஏற்றப்படுகிறது"......"மாயாவி தீவிரமாய் யோசிக்கிறார்" என்ற பாணியில் உள்ள வரிகள் இது ஒரிஜினலாய் வெளியான 1972-ல் தலை தப்பியிருக்கலாம் ; ஆனால் இப்போதும் அதையே கொண்டு வண்டி ஓட்ட மனம் ஒப்பவில்லை ! So அவசியப்படும் மாற்றங்களை மட்டும் அடுத்த ஓரிரு நாட்களுக்குள் நான் நிறைவு செய்து விடும் பட்சத்தில் – இந்த இதழும் வரும் வாரத்தில் அச்சுக்குச் சென்று விடும்! So கூப்பிடு தூரத்தில் உள்ள புத்தாண்டுக்கு ஈடு தந்திட இப்போதே சிறுகச் சிறுகத் தயாராகி வருகிறோம் ! 

சென்னையின் மழைகள் கதிகலங்கச் செய்திருப்பினும் – அதன் மனிதர்களின் அசாத்திய மனவலிமை நம்மையுமறியாது நம் சித்தங்களைப் புத்துணர்வு கொள்ளச் செய்துள்ளது என்றே சொல்ல வேண்டும்! கற்பனைக்கும் அப்பாற்பட்ட இடர்களை ; சூழல்களை ; இக்கட்டுகளைக் கையாள மக்கள் காட்டி வரும் steely resolve உலகுக்கே ஒரு பாடமெனும் போது – நமக்கும் தானே? எழுந்து வாருங்கள் நண்பர்களே – மீண்டு(ம்) வாருங்கள் ! காத்திருப்போம் உங்களின் உற்சாகமான அண்மைக்கு! மீண்டும் சந்திப்போம்! Have a safe weekend !

P.S : புது இதழ்களின் review -க்களை இங்கே தொடங்கிடலாமே ?! 

229 comments:

 1. நல்ல சேதிகள் இரண்டு..ஒன்று வெள்ளம் வடிந்துகொண்டு இருப்பது ..இன்னொன்று இன்று காலை புத்தகங்கள் கையில் கிடைக்கும் என்பது ...

  ReplyDelete
 2. வணக்கம் சார், வணக்கம் நண்பர்களே...
  படித்து விட்டு வருகிறேன்....

  ReplyDelete
 3. வணக்கம் நண்பர்களே...!
  வணக்கம் எடிட்டர் சார்...!

  ReplyDelete
 4. திரும்பவும் என்னோட லக்கி நம்பர் 4..!

  ReplyDelete
 5. மதியில்லா மந்திரியார் எனக்கு மிகவும் கதை வரிசையில் இதுவும் ஒன்றாகும்,மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 6. இரும்புக் கையாரின் பாம்புத் தீவும் படித்ததில்லை ஆவலுடன்.

  ReplyDelete
 7. ஜனவரி வெளியீடுகள் அனைத்தும் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் அமைந்திருப்பது மகிழ்ச்சி,வரவேற்கிறேன்.

  ReplyDelete
 8. இன்று காலையில் விசாரித்தேன்.சென்னை.திருப்பெரும்பூதூர் காஞ்சிபுரம் ,st கொரியர் மழையின் கரானமாய் ஆபிஸ் லிவ் என்று சொன்னார்கள்

  ReplyDelete
  Replies
  1. இனி திங்களில் தான் புக்கை எதிர்பார்க்க வேண்டும்

   Delete
 9. Dear Editor Sir,

  Thanks a lot for checking before dispatching the books.

  ReplyDelete
 10. தோர்கலை உடனே படித்திட மனசு துடிக்கிறது. ஆனால் ஆனால்...

  ReplyDelete
 11. Looking forward for the December set Edi. Prayers goes to all rain affected in Chennai, Cuddalore, and surrounding areas.

  Lost almost 20% of my book collections from childhood. But it pales in comparison to those lives lost. Nature is a great Teacher, indeed.

  ReplyDelete
 12. எடிட்டர்& ப்ரண்ட்ஸ் காலை வணக்கங்கள்..!

  * குளிரில் நடுங்கும் புத்தகங்களுக்கு 'சுவெட்டர்' போடவேண்டிய நேரத்தில், இரண்டடுக்கு பாலித்தீன் கவர் பாதுகாப்பு தரவேண்டியபடி செய்த இயற்க்கை சீற்றத்தை என்னவென்பது..! இரட்டை பாலித்தீன் பாதுகாப்பு அவசியமான ஒன்று..! அடுத்தமுறை ஒரு கவராயினும் அதை பேக்கிங் சீல்வைத்தால் பலன் பல மடங்கு கூடுமே..!

  * SMS,வாட்ஸ் ஆப் முறைகள் பார்த்ததும், வெள்ளத்தில் இருந்து பத்திரமாக மீண்டேன்.என்ற தந்தி பார்த்த மாதிரி ஒரு திருப்தி..!

  * அம்மையாருக்கு இந்த முறை கூடுதல் கவனம் செலுத்தப்பட்ட விஷயத்தை, குதித்து குதித்து கொண்டாக மடிபாக்கம் வெங்கடேஸ்வரன் நிலை என்ன..? அவரின் தொடர்பே இல்லாத, அமைதி மனதை பிசைகிறது..! :((( [ ஜோடர்பாளையத்தாரே கொண்டாடுங்கள் ]

  * //நமது இரவுக்கழுகாரின் 330 பக்க நீள MAXI சாகஸம்! டெக்ஸின் 2016 விஸ்வரூபத்தைத் துவக்கி வைக்கக் காத்திருப்பது// இந்தவரிகள் படிக்கும்போது ரோலர்கோட்சில் பயணித்தது மாதிரி மொத்த உடம்பும் ஜில்லிடுகிறது..! அந்த டகடும்...டகடும்..டகடும்..டகடும்..டகடும்.. காதில்கேட்டும் இரைச்சலே நின்றபாடில்லை..! என்னவொரு பிரம்மாண்டமான திருப்புமுனை..! அதற்குள்ளே அடுத்த தாக்குதல்.[டெக்ஸ் with தீபாவளி கதையின் டாப் சீனைதான் சொல்கிறேன்]

  * முதல் MAXI கதையில் நிலம் பிடிக்க ஓடும் பல்லாயிரம் பந்தயசத்தம் நெஞ்சை அதிரச்செய்தது.! இரண்டாவது MAXI யில் காட்டெருமை கூட்டத்தின் டகடும்..டகடும்..சத்தம் மொத்த உடம்பையே அதிரசெய்தது.! அடுத்து வரும் மூன்றாவது MAXI யில் என்ன காத்திருகிறதோ..!!! அதுவும்கூட இன்னும் 30 நாட்களில்...இப்போது எனக்கு ஒரு சந்தேகம் டிசம்பர் அடுத்துவரும் ஜனவரியில் தானே இந்த விஸ்வருபம்..??? [இந்த குழப்பத்தை கொஞ்சம் கிளியர் பண்ணுங்க ப்ரண்ட்ஸ்...கிர்ர்ர்...]

  ReplyDelete
  Replies
  1. ஓஓஓஓஓஓவ்..பார்சல் இப்போதுதான் கைக்கு வந்தது..! பார்சலையே ஒரு பாலித்தீன் கவரில் போட்டு, பேக்கிங் சீல்..! ஸுப்பர்..!! சொல்ல வார்த்தைகளே இல்லை..! படபடப்புடன் பிரித்துக்கொண்டிருகிறேன்..!

   Delete
  2. ஐ யாம் வெயிட்டிங்... வாட்சிங் ரோட்

   Delete
 13. ////கழுத்தளவுத் தண்ணீருக்குள் நின்று கொண்டு முதியோருக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் உதவிடும் ஒவ்வொரு ஆற்றலாளருமே ஒரு சூப்பர்மேன் தான் ! உணவும், உடையும் எடுத்துக் கொண்டு பிரதியுபகாரம் எதிர்பார்த்திடாது வீதி, வீதியாய்ச் சென்று விநியோகிக்கும் அந்த நல்ல உள்ளங்கள் சகலமும் சூப்பர் ஹீரோக்களே !! SALUTE ! AND A MEGA SALUTE TO THE POWER OF THE HUMAN WILL !!////

  மனிதம் மறைந்துவிடவில்லை.!
  வணங்குகிறேன் ஹீரோக்களே.!!!

  ReplyDelete
 14. டாப்3:
  1லயன்250
  2தீபாவளி வித் டெக்ஸ்
  3ஷெல்டனின் வரலாறும் ஒரு வல்லூறும் மற்றும் மார்ட்டினின் கனவின் குழந்தைகள்

  ReplyDelete
 15. சுமாரான கதைகள் என் பார்வையில்....!
  மார்ஷல் டைகர்.,துனணக்கு வந்த தொலலை,தங்கம் தேடிய சிங்கம்,மாறிப்போன மாப்பிள்ளை,மஞ்சள் நிழல்,காலனின் காாலம்......!
  மரணமொக்கைகள்;
  விடுதலையே உன் விலை என்ன?,விண்ணில் ஒரு வேங்கை

  ReplyDelete
 16. கொரியரில் புத்தகம் வந்துவிட்டதாக தகவல் சார் ....இன்று மாலை கைப்பற்றி விடலாம் ....காத்திருக்கிறேன் ..

  அடுத்த மாத இதழ்கள் அனைத்தும் ஆவலுடன் எதிர் பார்க்க வைப்பவை ...புத்தாண்டை கொண்டாட காத்திருக்கிறேன் .

  ReplyDelete
 17. *2015 ன் டிசம்பர் மாத பார்சல் வந்து கிடைத்தது சார்.....நல்ல சிரத்தை எடுத்து பேக் பண்ணியுள்ளீர்கள், நன்றிகள் பல உங்கள் அணியினருக்கு....பார்சலின் மேலே ஒரு பாலிதீன் கவர் , ஈரம் ஆகாமல் காக்க...நல்ல ஐடியா....மழை வரும் மாதங்களில் இதை தொடருங்கள் சார்....
  * அண்மைக்காலங்களில் அட்டைப்படங்கள் அசத்தலாகவே உள்ளன, இம்மாதமும் அப்படியே, தொடர்ந்து ஒரிஜினல் களையே பயன்படுத்துங்கள் சார்...அட்டைபடங்களில்,மூன்றாம் உலகம் டாப், 2ம்இடம் சீற்றத்தின் நிறம் சிகப்பு,..3வது தான் மாடஸ்தி...பின்அட்டையில் இளவரசி கலக்கல்....
  * முதல் புரட்டலில் அனைத்து இதழ்களும் பிரிண்டிங் தரம் அருமையாக வந்துள்ளது, கமான்சே நிறைய பக்கங்களில் ஸ்டன்னிங், தோர்கல் அசத்துகிறது, நிறைய பக்கங்களில் வியக்க வைக்கும் வகையில் உள்ளது...வண்ணச்சேர்க்கை அபாரம் இரண்டிலும்...
  * பாதைகளும் பயணங்களும்- முன்கதை சுருக்கம்+ கி்நா.வுக்குண்டான வண்ண கலவையில் உள்ளது....
  *அதீத எதிர்பார்ப்பை கிளப்பிய மாடஸ்தி சோடை போகல,தயாரிப்பில்....பழைய பாணியில் மீண்டும் காண ஆனந்தமாக உள்ளது, மாடஸ்தி ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்து கருப்பு வெள்ளை பிரியர்களுக்கும் பிடிக்கும்...மாடஸ்தி வெங்கடேஸ்வரன் சார்,நலமா???? இந்த சமயத்தில், உங்கள் சோதனை காலத்தில் இதுஒரு நல்ல செய்தி , விரைவில் உங்களை இங்கே காண விரும்பும் பலரில் நானும் ....

  ReplyDelete
  Replies
  1. தோர்கலில், அந்த ஆரிஸியா புள்ளைக்கு ஏதாச்சோ என தவித்திருந்த மனசுக்கு ஆறுதல் தர ,விடையளிக்க, மூன்றாம் உலகில் பயணிக்கிறேன் , ..பை ஃபார் நவ்...

   Delete
  2. கொரியர் நண்பர் மதியம் மூன்று மணிக்குதான் வருவார்....!வெய்ட்டிங்.....!

   Delete
 18. மதியில்லா மந்திரியார் பல வருடம் கழித்து நமது காமிக்ஸில் வர உள்ள இவரை தரிசிக்க ஆர்வமாய் இருக்கிறேன்!

  ReplyDelete
 19. 2015ன் சிறந்த கதை எது என்றால்....அதுவும் டெக்ஸ் கதைதான்.ஒக்லஹோமா....!எந்த கதையும் இதன் கிட்டேகூட நெருங்க முடியாது....அந்தளவுக்கு அதிர்வேட்டு சாகசம்....இரண்டாவதும் டெக்ஸேதான்...டைனோசரின் பாதையில்...!மூன்றாவதாக...அசாத்திய சித்திரங்களுக்காக எமனின் எல்லையில்....!இதுவும் டெக்ஸ்.....!

  ReplyDelete
  Replies
  1. @ ஜோடர்பாளையம் சரவணகுமார்

   லயன் காமிக்ஸில் வந்த டாப் கதை எதுவென கேட்டால் நீங்கள் சொல்வது சரி..! மொத்த காமிக்ஸில் டாப் எதுவென சொல்ல பெரிய ஆராய்ச்சி எல்லாம் வேண்டியதில்லை..! அந்த கதையின் உயரத்திற்கு எதுவுமே நெருங்கவே முடியாது..! விலையிலும் கூட..! விற்பனையிலும் கூட..! அந்த பளபள சாவு க்கு இன்னொன்று ஈடாகுமா என்ன..!!!

   Delete
  2. பளபளா சாவு @ ஆயிரந்நான் இருந்தாலும் மறுபதிப்பு தானே... இந்த ஆண்டு லிஸ்ட்ல்ல வராதே மாயாவி சார்...வேணும்னாக்கா காணலாய் ஒரு காதல்"- மட்டுமே இந்த ஆண்டுக்கான இதழ்களில் சேர்த்து கொள்ளுங்கள்...

   Delete
  3. மறுபதிப்புகளை நான் கணக்கில் கொள்ளவில்லை மாயாவிஜி..!அப்டியே இருந்தாலும் என் ஓட்டு தானைதலைவன் ஸபைடருக்குதான். (???).பரட்டைக்கெல்லாம் போடமாட்டேன்.மி.ம.ஒரு காவியம்.அது தனியாக தனித்துவமாக இருக்கட்டும்.

   Delete
  4. .///மி.ம.ஒரு காவியம்.அது தனியாக தனித்துவமாக இருக்கட்டும்///-- அதே அதே,.....
   மி.மி., XIII - இரண்டும் காமிக்ஸ் காவியங்கள்...... தோர்கல் அதில் இணைய வாய்ப்புண்டா????

   Delete
  5. ஒகே...

   இந்த தல, தளபதி,காவியம் இதையெல்லாம் தனியா வெச்சிட்டு நியாயமா சொல்லுனும்ன்னா..மொத்த காமிக்ஸ் உலகையே ஒரு கலக்கு கலக்கின...

   துல்லியமான ஓவியங்கள், வித்தியாசமான கதை போக்கு, உணர்வுகளை பதம்பார்க்கும் காட்சிகள், அடுத்து என்ன என்றே கணிக்க முடியாத நாலுகால் பாய்ச்சல் திருப்பங்கள்..என தூள் கிளப்பிய நாயகனுக்கு தான் 2015 சிறந்த கதை, சிறந்த ஓவியங்கள்,சிறந்த அட்டைபடங்கள்,சிறந்த நாயகன் என்ற ஒட்டுகள்..!
   [நான் சொல்லும் நாயகன் யார் என தெரிந்து விட்டது தானே ;) ]

   Delete
  6. ஒக்லஹோமா-என ஒரே வார்த்தைல சொல்லி இருக்கலாம் நீங்கள்...

   Delete
  7. உணர்வுகளை பதம் பார்க்கும் காட்சிகள்............ ஆழப்பதிந்து விட்டான்... ஒற்றை கையன்! பட்டியலில் முதலிடம் இவனுக்கே!!

   Delete
  8. மாயாவியாரே...! சின்ன திருத்தம்,,! ஜோடர்பாளையம் அல்ல.., ஜேடர்பாளையம்! கோச்சுக்காதிங்.....!

   Delete
 20. chennai more places water logged and no signal... worst situation...

  ReplyDelete
 21. ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு வணக்கம்

  ReplyDelete
 22. 30 வது. வெள்ளம் வடிந்து கொண்டு இருப்பது நெஞ்சுக்கு கொஞ்சம் ஆறுதலான செய்தி.

  ReplyDelete
 23. Still water logged in my area ( Ashok Nagar ). So much water around, still not much useful water. Rationing the water until things settle down. Compared to other parts, I am kind of safe. Mmm...

  Requested lion office to send my books next week.

  ReplyDelete
 24. மழைக் காட்சிகளும் சேதிகளும் மனதை மிகவும் பாதித்தன. பெரும்பாலான நமது நண்பர்கள் பாதுகாப்பாக இருப்பது தெரியவந்தது. ஒரு சிலரது தொடர்பு இன்னமும் கிடைக்கவில்லை. அவர்களும் பத்திரமாக இருப்பார்கள் என்றே நம்புகிறேன். மழைகாலம் ஆரம்பித்ததும் வெள்ளம் வடிந்தோட உடைத்துவிட வேண்டிய சில முகத்துவாரப் பகுதித் தடுப்புகள் உடைக்கப்படாமையே வெள்ளம் இந்த அளவுக்கு நகருக்குள் தேங்கக் காரணம் என்று ஒரு நண்பர் சொன்னார். அது உண்மையானால், அது தொடர்பான பணியிலிருந்தவர்களின் கவனக் குறைவு எவ்வளவு பாதிப்புக்கு வழிகோலியிருக்கிறது! சென்னைக்கு வெளியேயும் பல பகுதிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதும் அங்கே மீட்புப் பணிகள் மந்தமாக நடந்ததும் கவலை தந்தது. எல்லாத் துன்பங்களிலிருந்தும் மீண்டு வர இயற்கையைப் பிரார்த்திப்போம்.

  ReplyDelete
 25. இன்னும் புக் வரவில்லை கடவுளை வேண்டி கொண்டு இருக்கிறேன் மழை எங்கள் இயல்பு வாழ்க்கையை பந்தாடி கொண்டு இருக்கிறது

  ReplyDelete
 26. Varuna bagavan karunai kattatum. Tex new year waiting!

  ReplyDelete
 27. // இடர்கள் எத்தனை எழுந்தாலும் மனித மனத்தின் அளப்பரிய ஆற்றலும் வீறுகொண்டு எழுவதையும் இந்தக் கஷ்டகாலங்கள் நமக்குக் காட்டும் போது பிரமிப்பைக் கட்டுப்படுத்த இயலவில்லை ! சென்னையிலும் சரி; வெள்ள பாதிப்பில் சிக்கி நிற்கும் ஒவ்வொரு நகரத்திலும் சரி- அசாத்திய மனஉறுதியுடனும், மனிதாபிமானத்துடனும் செயலாற்றி வரும் அத்தனை மாந்தர்களும் நிச்சயமாய் சூப்பர் ஹீரோக்கள் தான்! ஸ்பைடர்களும், மாயாவிகளும், பேட்மேன்களும், சூப்பர்மேன்களும் கதைகளில்,திரைகளில் உலகைக் காப்பாற்றியிருக்கலாம் ; ஆனால் இன்று கழுத்தளவுத் தண்ணீருக்குள் நின்று கொண்டு முதியோருக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் உதவிடும் ஒவ்வொரு ஆற்றலாளருமே ஒரு சூப்பர்மேன் தான் ! உணவும், உடையும் எடுத்துக் கொண்டு பிரதியுபகாரம் எதிர்பார்த்திடாது வீதி, வீதியாய்ச் சென்று விநியோகிக்கும் அந்த நல்ல உள்ளங்கள் சகலமும் சூப்பர் ஹீரோக்களே !! SALUTE ! AND A MEGA SALUTE TO THE POWER OF THE HUMAN WILL !! //

  எவ்வளவு அழகாக மனதில் உள்ளத்தினை வார்த்தைகளில் கொண்டு வந்திருக்கிறீர்கள் சார்


  மொழி இனம் கடந்து மனிதம் மட்டும் நேசிக்கும் இந்த உணர்வு
  எப்பொழுதும் நிலைத்திருக்கட்டும் __ /\__

  ReplyDelete
 28. மாடஸ்டி அழகை ரசித்து
  கதையை ருசித்து படித்திட
  புத்தகம் கிடைக்க வில்லையே

  ReplyDelete
 29. M.v. சார் என்ன ஆளையே கானோம்
  புத்தகம் கிடைக்க வில்லையா

  ReplyDelete
  Replies
  1. பெரும்பாலான சென்னை நண்பர்கள் பற்றிய தகவல் கிடைத்துவிட்டது....
   இன்னும் MV சாரை தொடர்பு கொள்ள இயலவில்லை. செல்போன் தொடர்பு கிடைத்ததும் விரைந்து பதில் அளியுங்கள் MV சார்....

   Delete
  2. மாடஸ்டி பிளைஸி படித்து விட்டாலும், மடிப்பாக்கம்.வெ வந்து படித்து விட்டு கருத்து கூறும்வரை அதுபற்றி 'மூச்'..!

   Delete
  3. நானும்...!மடிப்பாக்கம் சார் இங்கு வந்து இளவரசியின் கதையைப்பற்றி கருத்து கூறும் வரை மாடஸடி கதையைப்பற்றிய விமர்சனத்தை பதிவதாக இல்லை...!வாருங்கள் MV சார்...!

   Delete
  4. அவர் இயல்புநிலை திரும்பியதும் வருவார்...அதற்குமுன் கதையில் வரும் ஒரு 'பன்ச்' டையலாக் மட்டும்..!

   'சரீரத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட வேண்டியது மூளைதான்'

   Delete
  5. நான் இன்னும் மூன்று தினங்கள் காத்திருக்க வேண்டும்!

   Delete
 30. வருடத்தை சந்தோஷமாக ஆரம்பித்து வைத்ததும் மாடஸ்டிதான் வருடத்தை
  இனிமையாக முடித்ததும் மாடஸ்டிதான்

  ReplyDelete
 31. பார்சல் வந்து விட்டது...!மாடஸ்டியின் புத்தக வடிவமைப்பு,உள்பக்க சித்திரங்கள்,பின் அட்டைப்படம் எல்லாமே சூப்பர்...!பக்க நிரப்பிகளாக பரட்டைதலை ராஜா,ஆறு வித்தியாசங்கள்,வழி கண்டு பிடியுங்கள் என எல்லாமே நறைவாக உள்ளது.குறைந்த பக்கங்களுடன் சிக்கென்ற சைஸில் சிக்கனமான விலையில் அட்டகாசமாய் இருக்கிறது.

  ReplyDelete
 32. காலையில் புத்தகங்கள் கிடைத்தது. என்ன ஆச்சரியம் பாலிதீன் கவரில் கவனமாக அனுப்பிய பார்சலில் புத்தகங்கள் மத்தியில் 2016க்கான வாழ்த்து அட்டை! உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 33. மதியில்லாத மந்திரியாரை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்!!

  ReplyDelete
 34. Friends, We are safe. Luckily we are in safe place. Lake water release didn't affect us. I use this opportunity to donate biscuts , rusk, glucose,, paste , brush, napkin to Big FM channel office. Yesterday donated PAAI. Still it is not enough. Saw many humanity helps irrespective of caste and religion. This Flood makes manitham. Friend pray for the people affected. Donate generously, people need more for the after effects of flood.

  Sir, it is a good idea to ask before send the courier.

  ReplyDelete
 35. இந்த மாத இதழ்கள பற்றிய விளக்கங்களும்...
  அடுத்த மாத இதழின் முன்னோட்டமும் அருமை சார்!

  ReplyDelete
 36. ஆசிரியரே தலைப்பு தண்ணீரும் தலை நகரமும் என்பதற்கு பதிலாக
  தண்ணீரும் எங்கள் தலையெழுத்தும் எண்றிருந்தால் சரியாக இருந்திருக்கும்
  டிசம்பரில் சந்தா கட்டலாம்
  எண்றிருந்தேன் 25 நாட்கள் வேலை இல்லை
  என்னை மன்னியுங்கள் ஆசிரியரே விரைவில்
  சந்தா கட்டி விடுவிடுகிறேன்

  ReplyDelete
  Replies
  1. Senthil Sathya : நண்பரே, தண்ணீர் இம்முறை கண்ணீருக்கு வழி செய்துள்ளது விதியின் விளையாட்டே ! உங்களின் கடினமான இந்தத் தருணத்தில் சந்தா பற்றிய கவலைகள் வேண்டாமே !

   அதே நேரம் உங்கள் காமிக்ஸ் வாசிப்பு இந்தச் சங்கடங்கள் வாயிலாய் மட்டுப்பட்டு விடக்கூடாதே என்ற ஆதங்கத்தில் நம் நண்பர்களுள் ஒருவர் உங்களுக்கான சந்தாத் தொகையை செலுத்தியுள்ளார் ! A+B+C+D சந்தாக்களில் உங்கள் பெயர் பதிவாகி விட்டது !

   சிக்கல்கள் மட்டுப்பட்டு நீங்கள் சந்தோஷமாய் இங்கே தொடர்ந்திட நண்பர் வேண்டியுள்ளார் ; நாமும் அதனில் இணைந்து கொள்கிறோம் ! God be with you !!

   Delete
  2. நல்ல மனம் படைத்த அந்த நண்பர் வாழ்க! :)

   Delete
  3. ஆசிரியரே தயவுசெய்து அந்த நல்ல உள்ளம் கொண்டவரின் பெயரை
   வெளியிட முடியுமா

   Delete
 37. நிஜமான நிகழ்வுகள் சார்! மக்களே இங்கே சூப்பர் ஸ்டார்கள்! மக்களே இங்கே எழுச்சி நாயகர்கள். பரபரப்புக்கும், பீதிக்கும் முற்றுப்புள்ளி வைத்து மக்களை வழிநடத்த மக்களே எங்களுடன் கைகோர்த்து நின்றது சிறப்பு. காசி தியேட்டர் பாலத்தை வெள்ளம் குறைந்த மறு நிமிடமே துப்புரவாக்கும் முயற்சியில் தாங்களே எங்களுடன் முன்வந்து கைகோர்த்தனர். கண்ணாடிகள் பட்டு கை கிழிசல் அடைந்த ஒரு சாதாரணர் அதனைத் தன் கர்ச்சீப்பில் கட்டி மறைத்துக் கொண்டு உடனே உதவ வந்து வலுக்கட்டாயமாக எங்களால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவரது மக்கள் மீதான அபிமானத்தை என்னவென்று கூற? இதைப்போல் எக்கச்சக்கக் காட்சிகள். மீள்வோம். மலர்வோம். இன்னும் பல தீங்கு திரண்டாலும் ஒற்றுமைக் கரங்களை நீட்டுவோம் என்பதே மக்கள் கூறிடும் நற்செய்தி இங்கே!

  ReplyDelete
  Replies
  1. இன்னொரு சம்பவம்..இன்னொரு ஹீரோ..

   வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட இருவரை, வெள்ளத்தில் நீந்தி சில நிமிடங்களுக்குள் இறங்கிகாப்பாற்ற வேண்டிய அவசர நெருக்கடி..! ஒரு காவல்துறை நண்பன் "நான் இறங்கி காப்பாற்றுகிறேன்.." என வெள்ளத்தில் தன் தைரியத்துடன், உயிர் காக்க, தனக்கு தெரிந்த குறைவான நீச்சல் பயிற்சியை நம்பி இறங்கினார். மெல்ல தட்டுதடுமாறி தத்தளிப்பவர்களின் இடத்தையும் அடைந்தார். ஆனால் வெள்ளம் அவரையும் சேர்த்து இழுத்தது. இயற்கையின் சீற்றத்தை வேகத்தை கணக்கிட தவறிய அந்த காவல்துறை நண்பர் ஒரு கணம் திகைத்து உறைந்து விட்டார். மெல்ல வெள்ளம் அவரை அந்தரத்தில் தள்ளிக்கொண்டு போனது. சில அடிதூரம்தான் அப்படி..சட்டென்று ஒரு கயிறு அவரின் இடுப்பிலிருந்து கட்டிஇழுத்தது. அவர் இடுப்பில் திடிரென எப்படி கயிறுகட்டப்பட்டது என ஆச்சரியத்தில் கடவுளை நினைந்தார்.

   ஆம்..அவர் ஆற்றில் இறங்கும்முன்,அவர் உயிர்காக்கும் பதட்டத்தில் இருந்தாலும்கூட, வெள்ளத்தில் இறங்குபவரை காப்பாற்ற, ஒருவர் அவர் இடுப்பில் கயிற்றை கட்டியிருந்தார். அது அந்த காவல் நண்பரை காப்பாற்றியது. தன் உயிரை துச்சமாக எண்ணி உதவுபவர்களை கவனமாக பாதுகாக்க, கரையில் பல உயிர்கள் கைகோர்த்து கவனித்துக்கொண்டு, விழிப்புடன் மனிதாபிமான வடிவில் கடவுள்தன்மை வாழ்ந்துகொண்டுதான் உள்ளன.

   அந்த காவல்துறை நண்பர் : ஜான் சைமன்

   Delete
  2. மீள்வோம். மலர்வோம். இன்னும் பல தீங்கு திரண்டாலும் ஒற்றுமைக் கரங்களை நீட்டுவோம் என்பதே மக்கள் கூறிடும் நற்செய்தி இங்கே! - இதுவே சென்னை மக்கள்! அவர்களை போல் வேறு யாரும் பிரச்சனைகளை சந்தித்தது இல்லை, அவர்களை போல் (கஷ்டத்திலும்) பிறருக்கு உதவும் மனம் யாருக்கும் இருந்தது இல்லை; இதையெல்லாம் விட இவர்களின் மனவுறுதி அளவிட முடியாது. சென்னை விரைவில் மீண்டும் சிங்கரா சென்னையாக மாறும்.

   Delete
  3. உண்மையான நாயகன் ஜானி ஜி யின் வீரத்தையும் மனிதாபமானத்தையும் வணங்குகிறேன்

   Delete
  4. //உண்மையான நாயகன் ஜானி ஜி யின் வீரத்தையும் மனிதாபமானத்தையும் வணங்குகிறேன்//
   +1

   Delete
  5. நண்பர் ஜானியின் மகத்தான சேவைக்கு தலைவணங்குகிறேன். உங்களை நண்பராகக் கொண்டதில் பெருமையும் அடைகிறேன் ஜானி அவர்களே!

   ஒரு ரியல் ஹீரோவை அடையாளம் காட்டியதற்கு நன்றி மாயாவி அவர்களே!

   Delete
  6. Great Job John Simon C Sir!
   HATS OFF to you and Really feel proud of You!

   Delete
  7. ஜான் சைமன் உண்மையான ரியல் ஹீரோ!

   Delete
  8. Hats off Johnny ji....
   உங்கள் நண்பனாக இருப்பதில் பெருமை அடைகிறேன்...

   Delete
  9. Johnny Ji,
   Great.
   உண்மையான நாயகன் ஜானி ஜி யின் வீரத்தையும் மனிதாபமானத்தையும் வணங்குகிறேன்
   Regards,
   Mahesh

   Delete
 38. மனிதாபிமானம் இண்னும் மறையவில்லை
  சைமன் ஜீ

  ReplyDelete
 39. மாதேச்டி முதல் முறையாக பக்கங்களை புரட்டும் போதே ரசிக்க வைக்கிறார் அட்டகாசமான ஓவியங்கள்.....புத்தகமும் சிறியதாக இருந்தாலும் எடுக்கும் போதே ஒரு சந்தோஷ உணர்வு.....ஓவியங்கள் என்பதுகளுக்கே அழைத்து சென்றன .......

  அட்டை படம் வானமே எல்லை நேரில் பட்டய கிளப்புது ...வர்ணிக்க வார்த்தைகளே இல்லை
  தோர்கள் முதல் பக்கமே கண்ணை கொள்ளை கொள்கிறது...படிக்க நேரம் கிடைக்கவில்லை ....படித்தவுடன் பகிர்கிறேன் .....

  ReplyDelete
 40. புத்தகங்கள் பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டது ஆசிரியரே,நன்றிகள் பல,திரும்பி பார்க்கும் நேரமிது பகுதியில் கேட்டுள்ள கேள்விகளுடன் இந்தாண்டின் சிறந்த பேக்கிங் எந்த மாதத்தினுடையது என்ற கேள்வியையும் இணைத்திருக்கலாம்,
  சந்தேகமே வேண்டாம் இந்த டிசம்பர் மாத பேக்கிங் தான் அருமையானது.
  மிகவும் சிரத்தையான,அருமையான பேக்கிங்.இந்த முறையை தொடர்ந்து பின்பற்ற முடிந்தால் கண்டிப்பாக முயற்சி செய்யவும்.

  ReplyDelete
 41. இந்த ஆண்டின் பெஸ்ட் அறிமுகம்...?
  அவுக்....அவுக்....அவுக்.....!

  ReplyDelete
 42. இந்த ஆண்டின் சிறப்பான (கரடு முரடான)
  அறிமுகம் பௌன்சர் தான்

  ReplyDelete
 43. காமிக்ஸ் நண்பர்கள் சார்பாக ஜான் சாருக்கு ஒரு ராயல் சல்யூட் ......

  ReplyDelete
  Replies
  1. நண்பர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்கள் நலமாக மீண்டு வரட்டும்.

   Delete
 44. இம்மாத காமிக்ஸ் பெட்டகத்தை இன்று மதியம் தான் திறக்க இருக்கிறேன் ..இன்று மதியம் முதல் நாளை காலை வரை அலுவலகத்தில் தனி ஒருவனாக இருப்பதை மறக்கும் வகையில் பெட்டகத்தை கையோடு அலுவலகம் கொண்டு வந்தாயிற்று ...அனைத்து இதழ்களையும் இன்று படித்து முடித்து விடுவேன் ...


  ம.பாக்கம் மாடஸ்தி சார் உங்கள் போன் தொடர்பு துண்டிப்பு ...உங்கள் வருகைக்காகவும் காத்திருக்கிறேன் ..

  ReplyDelete
  Replies
  1. ம.பாக்கம் மாடஸ்தி சார் உங்கள் வருகைக்காக காத்திருக்கிறேன்

   Delete
 45. Hi Mr. Parani, Madippakkam is totally inundated. Let us wish our Madippakkam friend and his family are safe.

  ReplyDelete
  Replies
  1. OK. I hope they will be safe. My prayers for them to be safe.
   Warm welcome to you

   Delete
  2. Hi Mr. Kathir, Thanks. I'm a silent watcher for years (here as well as in the book fairs).

   Delete
 46. இந்த மாத வெளியீடுகளை,
  1.தோர்கில்-டாப் கிளாஸ்,
  2.காமன்சே-அருமை,
  3.இளவரசி-ரசனைக்குரிய களம்,
  4.பாதைகளும் பயணங்களும்-ஓகே ரகம்,
  என்று வகைபடுத்தலாம்.

  ReplyDelete
 47. முதலில் தோர்கில் வாரே வாவ் என்ன ஒரு அபாரமான கதை ஆசிரியரே,அட்டை டு அட்டை வர்ணஜாலம் தான்,
  ரசிக்க வைக்கும் அட்டைப்படங்கள்,அபாரமான கதைக் களம்,அற்புதமான ஓவியங்கள்,பலம் சேர்க்கும் சிறப்பான வர்ண சேர்க்கைகள்,,
  எந்த விதத்திலும் சோடை போகாத ஒரு விறுவிறுப்பான கதையிது,புத்தகத்தை எடுத்தது மட்டும் தான் எனக்கு தெரியும்,ஒரு புதிய உலகத்தில் அற்புதமான பயணம் சென்ற உணர்வு கிட்டியது,தோர்கிலை தொகுப்பாக வாசிக்க மனம் பரபரக்கிறது,இந்த வேகத்தில் சென்றால் எல்லா ஹீரோக்களையும் நகர்த்திவிட்டு சத்தமில்லாமல் தோர்கில் முதல் இடத்திற்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  ReplyDelete
 48. இரண்டாவது காமன்சே கலக்கலான அட்டை,ரசிக்க வைக்கும் ஓவியங்கள்,விறுவிறுப்பான கதை,சிறப்பான பின்னணி வர்ண சேர்க்கைகள் என்று அனைத்தும் நன்றாக அமைந்துள்ளன.

  ReplyDelete
 49. மூன்றாவது நம்ம இளவரசிதான்,சொல்லப்போனால் மூன்றாவது என்று சொல்ல மனம் வரவில்லை என்பதே உண்மை,ஓவியங்களை ஒப்பிடும்போது இந்தாண்டின் தொடக்கத்தில் வந்த நி.நி.யுத்தத்தை விட பரவாயில்லை என்று ரகத்தில் அமைந்துள்ளது,ஆனால் ஓவியங்கள் முழு சிறப்பாக அமைந்துள்ளது என்று சொல்ல இயலவில்லை,
  கதைக்களன் நன்கு விறுவிறுப்பாக அமைக்கப்பட்டுள்ளது,கதை சீக்கிரம் முடிந்துவிட்டதே என்று கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது,இளவரசிக்கும் கார்வினுக்கும் உள்ள ஒரு புதிரான அற்புத புரிதலை கனகச்சிதமாக கதையில் பொருத்தி உள்ளனர்,கார்வினும்,இளவரசியும் கடுமையான,சவாலான ஒரு சண்டை களத்தை சட்டென்று அவர்கள் வசம் சாதகமாய் மாற்றிவிடுவது மசாலா படத்திற்கு உரிய அமைப்போடு இருந்தாலும் நம்பும்படியாகவே உள்ளது.ஏனெனில் அவர்கள் அந்தளவு திறமைசாலிகள்.
  மாஸ்டர் சராகத்தின் கதைபாத்திரமும் சிறப்பாக உள்ளது.

  ReplyDelete
 50. இறுதியாக பாதைகளும் பயணங்களும்,ரசிக்கும்படியான கதைக் களன்,நிகழ்காலம் மற்றும் இறந்த காலம் என்று இருவேறுபட்ட களங்களில் கதை பயணிப்பதால் புரிதலில் ஆங்காங்கே சிறு தடங்கல் ஏற்படுகிறது,அடர் வர்ண சேர்க்கைகள் நன்றாக இருப்பினும்,ஆங்காங்கே தட்டுப்படும் டி எபெக்ட் படங்களும்,தெளிவற்ற வசனங்களும் குறையாகவே தெரிகின்றன,இதை தவிர்த்தல் நலம்,கதையின் ஓட்டமும் அவ்வளவு விறுவிறுப்பாக இல்லை.என்னை பெரிதாக ஒன்றும் இக்கதை ஈர்க்கவில்லை,

  ReplyDelete
 51. திரும்பி பார்க்கும் நேரமிது,
  1.2015 ன் டாப் 3 இதழ்கள் எவை?
  1.எமனின் வாசலில்,
  2.சகவரத்தின் சாவி,
  3.ரெளத்திரம் பழகு,
  டாப் இதழ்களை சற்றே குழப்பத்தின் இடையேதான் தேர்ந்தெடுக்கிறேன்,ஏனெனில் பவுன்சர்,தோர்கில் கதைகள் இரண்டு,மூன்று என்று பல பகுதி கதைகளாக வந்துள்ளது,அவை அனைத்தும் சிறப்பானவை,
  எனவே,கதை நாயகரை தேர்வு செய்வதா? அல்லது கதையை தேர்வு செய்வதா?

  ReplyDelete
 52. 2.2015 ன் டாப் 3மொக்கை பீஸ்கள் எவை?
  1.விண்ணில் ஒரு வேங்கை,
  2.மஞ்சள் நிழல்,
  3.நிழலோடு நிஜ யுத்தம்.
  இளவரசியையும்,ரோஜாரையும் வேறு வழியின்றி தான் தேர்ந்தெடுக்கிறேன்.

  ReplyDelete
 53. 3.2015 ன் best அட்டைப்படம்?
  1.தீபாவளி வித் டெக்ஸ்,
  2.மின்னும் மரணம்.

  ReplyDelete
 54. 4.2015 ன் worst அட்டைபடம்?
  1.மஞ்சள் நிழல் தான்.

  ReplyDelete
 55. 5.2015 ன் மறக்க இயலா தருணம்?
  1.தளபதி (மின்னும் மரணம்) வெளியான நாள்-
  2.தல (லயன் 250 ஸ்பெஷல்) வெளியான நாள்-
  3.தீபாவளி வித் டெக்ஸ் வெளியான நாள் மூன்றும் மறக்க இயலா தங்கத் தருணங்கள்.

  ReplyDelete
 56. 6.2015 ல் முத்திரை பதித்த நாயகர் யார்?
  1.புதிய நாயகரில்-பெளன்சர்,
  2.ரெகுலர் நாயகர் எனில் டெக்ஸ் தான்.

  ReplyDelete
 57. 7.2015 ல் அதிகம் ஏமாற்றம் அளித்த இதழ் எது?
  1.மஞ்சள்நிழல்,
  2.நிழலோடு நிஜ யுத்தம்.

  ReplyDelete
 58. 8.கெளபாய் கதைகள் திகட்டுவது படுகிறதா?
  இல்லை கண்டிப்பாக இல்லை.இது தொடரட்டும்.

  ReplyDelete
 59. 9.2015 ன் Best அறிமுகம்?
  சந்தேகமேயில்லை கண்டிப்பாக ஸ்மர்ப் தான்.இது ஒரு ஊதா உலகம்.அற்புதமான உலகம்.

  ReplyDelete
 60. 10.என்ன குறைகிறது என்று பட்டது 2015 ல்?
  இதழ் எனில் டயபாலிக் தான்,

  ReplyDelete
 61. 11.2015 ன் Overall அனுபவம்?
  சிறப்பாகவே இருந்தது,பெரிய குறைகள் எதுவும் இல்லை,ஆங்காங்கே தட்டுப்படும் சிறு குறைகளை களைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.2014 ஐ ஒப்பிடும்போது இந்த வளர்ச்சி சிறப்பானதே.

  ReplyDelete
 62. Dragon nagaram reprint kettu sornthu poitten sir...sorry sir ippo comics patikkirathula oru sorvu erpaduthu sir sorry sir inime nan ethum ketkamatten...kidaikkathunu therintha piraku kettu enna seiya sir sorry....

  ReplyDelete
  Replies
  1. அப்படியெல்லாம் முயற்சியை கைவிடக்கூடாது நண்பரே...!கல்லை வீசிக்கொண்டே இருப்போம்.டிராகன் நகரம் எனும் நம் கனவு 2017லாவது நனவாகும்.டெக்ஸின் ரசிக கண்மணிகளே..! ஆதரவு கொடுங்கள்...!

   Delete
  2. *சோர்ந்து போக தேவையில்லை டெக்ஸாஸ் சரவணன் ஜி......
   உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் இந்த தகவல்.....

   *இந்த ஆண்டு ஈரோடு விழாவில், வாசகர்கள் 60பேர் கலந்து கொண்ட அன்று வாசகர்கள்ஆசிரியரிடம் டெக்ஸ் மறுபதிப்பு கேட்டனர். அங்கிருந்த கரும்பலகையில் மறுபதிப்பு விருப்பங்களை எழுத சொன்னார். ஒவ்வொரு நண்பராக சொல்ல சொல்ல 8தலைப்புகள் நான்தான் எழுதினேன். எதுவும் முடிவுக்கு வாராத நிலையில், ஆசிரியர் சொன்னது," நான் 3தலைப்புகள் எழுதுகிறேன், நீங்கள் கைஐய தூக்கி ஓட்டு போடுங்கள், வெற்றி பெரும் தலைப்பு 2016 ல் வரும் , 2ம்இடம் வரும் தலைப்பு 2017, அடுத்தது 2018 இப்படி தொடர்ந்து வரும்"- என்றார்...

   *அவர் எழுதியவை.....
   1.டிராகன் நகரம்..
   2.சைத்தான் சாம்ராஜ்யம்..
   3.பழிவாங்கும்புயல்...
   தொடர்ந்து ஓட்டெடுப்பில் பழிவாங்கும் புயல்25ஓட்டுகள் பெற்று வெற்றி, 18ஓட்டுகள் பெற்று 2ம் இடம் ..ஆசிரியர் அறிவித்தபடி 2016 வண்ண மறுபதிப்பாக பழிவாங்கும் புயல் வருகிறது, 2017 ல் நிச்சயமாக டிராகன் நகரம் வெளிவரும்..
   இப்போது திருப்திதானே......அப்போது அந்த பலகையை மதிப்பெண் உடன் எடுத்த போட்டோ என்னிடம் உள்ளது, உங்கள் மெயில் ஐடியோ, வாட்ஸ்அப்எண்ணோ எனக்கு அனுப்புங்கள், அந்த பொட்டோவை அனுப்புகிறேன்... உங்கள் சோர்வை இத்துடன் விட்டு விடலாம் நீங்கள்....
   viji.comics@gmail.com..
   9629298300

   Delete
 63. ஹலோ சார், இன்னும் இந்த வருட சந்தா கட்டவில்லை, கட்டவும் பிடிக்கவில்லை, லயன் திரும்ப வர ஆரம்பித்து, இதனை வருடங்களில் இவ்வளவு மோசமான 2016 பிளானை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கவில்லை, கொஞ்சம் நிதானமாக முடிவெடுத்து இருக்கலாம். வருடத்துக்கு 12 டெக்ஸ் தேவையா? எனக்கு தெரிந்து நான் பேசிய நண்பர்கள் யாருக்குமே இந்த பிளான் பிடிக்கவில்லை, இப்பொழுது வருகிற எல்லா டெக்ஸ் கதைகளுமே வேறு சுமாரான கதை கருவுடன் வரும் போது, இதனை டெக்ஸ் தேவையா??. அதற்க்கு பதிலாக மர்ம மனிதன் மார்டின், டயபாலிக், டைலன் போன்றவர்களுக்கு வாய்ப்பு அளித்து இருந்தால் அட்டகாசமாக இருந்திருக்கும். "அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு" , இந்த பழமொழி இப்போ டெக்ஸ்க்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும்.
  இதில் அடுத்த கொடுமை 12 பழைய முத்து மறுபதிப்புகள், ஒவொரு கதையும் எத்தனை தடவை மறு பதிப்பு செய்யப்பட்டது என்று உங்களுக்கு தெரியும், இதில் எத்தனை நண்பர்கள் அந்த கதையை படிக்கிறார்கள் என்பது அந்த ஆண்டவுக்கே வெளிச்சம். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால், இதுவரை வந்த எந்த ஒரு முத்து மறுபதிப்பையும் இதுவரை நான் படிக்கவில்லை. வாங்க வேண்டுமே என்றுதான் வாங்குகிறேன். நீங்கள் இந்த மறு பதிப்புக்கு பெரிய அளவில் பணம் செலவு பண்ணி copy rights வாங்கி இருப்பது எல்லோருக்கும் தெரியும், நான் ஒரேடியாக வேண்டாம் என்று சொல்லவில்லை. வருடத்திற்கு 6 புக் போதும், மீதி 6 ஸ்லாட்களை அழகாக சிக் பில், ரிப்போர்ட்டர் ஜானி மற்றும் பிரின்ஸ் வண்ண மறு பதிப்பு போட்டு இருந்தால் (கருப்பு வெள்ளை மறு பதிப்பு 50ரூபாயில் 6, கலர் மறுபதிப்பு 60 இல்லை 65 ரூபாயில் 6 ), நிச்சயம் இந்த 2016 சாந்த மிக வசீகரமான சந்தாவாக மாறி இருக்கும். கருப்பு கிழவிக்கு கூட ஒரு ஸ்லாட் கொடுத்து இருக்கலாம் இது என் மன குமுறல் மட்டும் இல்லை, எத்தனையோ என் நண்பர்கள் மௌன பார்வையாளர்களாக வந்து போகிறார்கள், அவர்களின் எண்ணத்தையும் சேர்த்துதான் பதிவிடுகிறேன்.

  ReplyDelete
 64. +1
  நான் நினைத்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.

  ReplyDelete
 65. எடிட்டரு பயங்கர பயணங்களும், சிக்பில்லும், ராஜா ராணி ஜாக்கியும்
  ஏதேதோ சொன்னத நினைத்து மிக பெரிய எதிர்ப்பார்ப்போடு இருந்தேன், b&w reprints பாதியும் கலர் reprints பாதியும் வந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

  ReplyDelete
 66. This blog is for only tex willer fans. So don't comment any negative abt tex willer, (where u have been , when edi prepare list only me and one or two guys opposed it ,anyway I also not going to pay this year Santha)

  ReplyDelete
 67. சந்தா அனைவரையும் திருப்பதிப் படுத்தாது என்பது உண்மை தான். ஆனால் ஆசிரியர் தானே சுயமாக முடிவு எடுக்கிறார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவரது ஒவ்வொரு முடிவும் விற்பனையில் அவர் பார்ப்பவற்றின் எதிர்வினைகளே! அப்படியும் ஒன்றிரண்டு சறுக்கத் தான் செய்யும். அவர் ஒன்றும் கை தேர்ந்த வியாபாரி அல்ல (செட்டியார் முருக்கானவர் அல்ல என்று அவரே சொன்னார்).
  டெக்ஸ் சந்தா என்பது அவர் விற்பனையை வைத்து எடுத்த முடிவு. இந்த வலைத் தளப் பார்வையாளர்களை மட்டும் வைத்து எடுத்த முடிவு அல்ல. உதாரணமாக இதே தளத்தில் ப்ளூகோட் இல்லாதது வருத்தமே என்று தான் அதிக ஓட்டு விழுந்திருக்கிறது. இருந்தாலும் விற்பனையை வைத்து ப்ளூகோட் வேண்டாம் என்று ஆசிரியர் முடிவு செய்யவில்லையா?
  உங்களுக்கு சந்தா பிடிக்கவில்லை என்பது கவலைப்படும் விஷயம் தான். டெக்ஸ், மறு பதிப்புத் தவிர A & C சந்தா கட்டலாமே?

  ReplyDelete
  Replies
  1. // டெக்ஸ் சந்தா என்பது அவர் விற்பனையை வைத்து எடுத்த முடிவு. இந்த வலைத் தளப் பார்வையாளர்களை மட்டும் வைத்து எடுத்த முடிவு அல்ல //

   பழைய பதிவுகளில் எடிட்டரின் விளக்கங்களுக்கு இது முரணாக உள்ளது. ப்ளாகில் வாசகர்கள் நச்சரிக்காமல் இருந்திருக்கும் பட்சத்தில் இந்தாண்டு டெக்ஸ் சந்தாவுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. கண்காட்சி / கடைகளில் டெக்ஸ் வில்லரின் கதைகள் கூடுதலாக விற்பனையாவதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஆனால் அதற்காக புதியவர்கள் (who contributes extra sales) எவ்வளவுபேர் ரெகுலர் சந்தா அல்லாமல் டெக்ஸ் சந்தாவை மட்டும் ஆர்வம் காட்டுவர் என்பது கேள்விக்குறி.

   Regarding Blue Coats, just my guess... தற்போது ப்ளூகோட்ஸ் கதைகள் ஓகே என வரவேற்பவர்கள் மேலும் ஓரிரு ப்ளூகோட்ஸ் கதைகளைப் படிக்க வாய்ப்பிருக்கும்பட்சத்தில் அதன்பிறகு தவிர்த்துவிட வாய்ப்புள்ளது.

   Delete
  2. ////பழைய பதிவுகளில் எடிட்டரின் விளக்கங்களுக்கு இது முரணாக உள்ளது. ப்ளாகில் வாசகர்கள் நச்சரிக்காமல் இருந்திருக்கும் பட்சத்தில் இந்தாண்டு டெக்ஸ் சந்தாவுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை.////--- ஹா ஹா...சிரிச்சாச்சு , ஜோக் ஆஃப் த சென்சுரிக்கு...ப்ளாக்ல நச்சரித்ததால், ஹூம் என்ன ஒரு தவறான அனுமானம்....
   விற்பனை, தேவை என்ற இரண்டும் சந்தைப்படுத்தலுக்கு எவ்வளவு முக்கியம் என விற்பனை துறையில் உள்ள நண்பர்களுக்கு என்னை விட ஆயிரம் மடங்கு தெரியும்..
   வெறும் 50பேர்,தோராயமாக பதிவிட்டு வரும், இந்த தளத்தில் டெக்ஸ் தனி சந்தா கேட்டது அதிகபட்சம் ஒரு 15பேர் இருக்கலாம், இந்த அளவு கேட்டாலே தனி சந்தா போட்டு விடுவாரா ஆசிரியர்!!!....
   சந்தா நண்பர்கள் சுமார் 700, கடைகளின் விற்பனை, புத்தக காட்சி விற்பனை, ஆண்டு முழுதும் விற்பனை என எவ்வளவோ விசயங்கள் உள்ளன்...
   இந்த ப்ளாக்ல கேட்பதற்கு, ஆசிரியர் எடுக்கும் முடிவில் அதன் தாக்கம் அதிகபட்சம் 1% க்கும் குறைவாகவே இருக்கும்...
   கடிதம் வாயிலாக , மெயில் வாயிலாக, நேரில் சந்திக்கும் , புத்நக விழாக்களல் சந்திக்கும் ....பல விதமான வாசகர்களின் விருப்பமே நிறைவேற்றப்பட அதக வாய்ப்பு உள்ளது....நாம ஒரு 10பேர் கேட்டவுடன் எதுவும் கிடைக்கும் என்பது எவ்வளவு நகைப்புக்கு உரிய விசயம்..
   10, 10பேருக்கு ஒரு சந்தான்னா ஆங்கில ஆல்பபட்கள் அனைத்திற்கும் சந்தா வந்து விடும் நண்பர்களே....
   ஒரு டெக்ஸ் வண்ண மறுபதிப்பு வாங்க 15ஆண்டுகளுக்கு மேலாக கேட்டோம், மறக்க கூடியதல்லவே ....

   Delete
 68. @ அறிவரசு என்கிற ரவி
  உங்க 11 கேள்விகளுக்கு பதில்கள்+ டிசம்பர் கதைகள் விமர்சனங்களுக்கு பலத்த கைத்தட்டல்கள்..!

  @ ஜேடர்பாளையம் சரவணகுமார் [ஜோ போடலை குணா..]
  அந்த அறிவிப்பின் போது நீங்களும் இருந்தீர்கள்..! அதை நீங்க மறந்துவிட நியாயமிருக்கு, உங்க வீட்டம்மா பக்கத்துல இருந்ததுதான் காரணம்னு சொல்லவரலைங்க.. ;)

  @ சேலம் டெக்ஸ்
  அது கரும்பலகை இல்லிங்க...வெண்பலகை. ;)))

  @ இத்தாலி விஜய்
  அந்த காக்கும்முயற்சியில் தலைக்கு வந்தது தலைபாகையோடு போச்சிங்க்கிற மாதிரி, நண்பர் ஜான் சைமன் செல்போன் வெள்ளத்தோடு போச்சி. விஜய் நீங்க சென்னையில இருக்கிறதா செய்தி. MV அவர்களை பற்றி ஏதும் தகவல்..???

  @ கிரிதரன் V
  2016-ம் வருட அட்டவணையை குறை சொல்வதை ஏற்க்கமுடியவில்லை நண்பரே..!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா, மாயாவி சார் உண்மைதான், அது வெண்பலகை தான்....
   இப்ப ,அந்த விபத்துக்கு உள்ளான ப்ளாக் பாக்ஸ் கண்டுஎடுக்கப்பட்டது- என சொன்னால் அது கறுப்பு பெட்டி அல்ல, உண்மையில் அது சிவப்பு அல்லது அடர் ப்ளு வில் இருக்கும்..சில பொருட்களை காரண பெயர் சொல்லி அழைப்பதால், வெண்பலகையில் எழுதினாரும் , அது கறும்பலகை என்றே சொல்லப்படும் ..ஹி...ஹி..

   Delete
  2. ;) இந்த சிம்பலை fb யில கமெண்ட்ஸ்ல டைப்பண்ணி பாருங்க..!

   Delete
  3. நன்றி மாயாவி ஜி.

   Delete
 69. 2015ன் முத்திரை பதித்த நாயகர்..?
  பௌன்சர்
  பெஸ்ட் அறிமுகம்..?
  ஸ்மர்ஃபப்ஸ்...
  கௌபாய் கதைகள்...?
  திகட்டடேவேயில்லை என்றுமே அலுக்காத கதை களங்கள் அவை..!

  ReplyDelete
 70. மறக்க இயலா தருணம்..?
  லயன் 250 ஐ கையில் ஏந்திய தருணம்.
  அதிகம் ஏமாற்றமளித்த இதழ்...?
  நிழலோடு நிஜ யுத்தம்.நீண்ட நாள்களுக்கு பிறகு வெளிவந்த இளவரசியின் இதழ் இப்படியா அமையவேண்டும்.அந்த மோசமான சித்திரத்தரம் பெருத்த ஏமாற்றத்திற்குள்ளாக்கியது..அதற்கான காரணங்களை நீங்கள் நிறையவே சொல்லியிருந்தாலும் மனம் சமாதானமடைய மறுக்கிறது....!
  என்ன குறைச்சலாகப்பட்டது.?
  பக்க நிரப்பிகளதான்..!இந்த ஆண்டில் நிறையவே குறைத்து விட்டீர்கள்.அதிலும் ஒரு சில இதழ்களில் அடடை டு அட்டை கதை மட்டுமே இருந்து எனக்கு குறையாகதுதோன்றுகிறது..!
  அட்டைப்படங்களை பொறுத்தவரை இது சூப்பர் இது மோசம் என என்னால் சொல்ல முடியவில்லை.அனைத்துமே அழகாய்தானிருக்கின்றன..!

  2015 overallஅனுபவம்...?
  சூப்பர்..சுமார்..மரணமொக்கை என இவ்வருட இதழ்களை வகைப்படுத்தி இருந்தாலும்...வருடம் முழுதும் பெய்த காமிக்ஸ் அடைமழையில் ஆனந்தமாய் நனைந்தோம்....!

  ReplyDelete
 71. எடி சார்,
  2016 சந்தா கட்டியாச்சி. டிசம்பர் புக்ஸ்காக வெய்ட்டிங். என்னை பொறுத்தவரை 2016 சந்தா ப்ளான் அருமை. குறை கூறுபவர்கள் எப்போதும் இருக்க தான் செய்வார்கள். சந்தா கட்டாமல் காமிக்ஸ் வாசிக்கும் அனுபவத்தை இழப்பது நண்பருக்குதான் நஷ்டம்.

  ReplyDelete
  Replies
  1. ப்ளசோ, ப்ளஸ்கள் சரவணன் ஜி....

   Delete
  2. உண்மைதான் நண்பரே

   Delete
  3. //saravanan srinivasan7 December 2015 at 15:03:00 GMT+5:30
   எடி சார்,
   2016 சந்தா கட்டியாச்சி. டிசம்பர் புக்ஸ்காக வெய்ட்டிங். என்னை பொறுத்தவரை 2016 சந்தா ப்ளான் அருமை. குறை கூறுபவர்கள் எப்போதும் இருக்க தான் செய்வார்கள். சந்தா கட்டாமல் காமிக்ஸ் வாசிக்கும் அனுபவத்தை இழப்பது நண்பருக்குதான் நஷ்டம்.//

   இது ஒரு போலி ஐடி, இதற்கு சேலம் டெக்ஸ் விஜய ராகவன் ஜால்ரா (saravanan srinivasan7 - எனக்கு தெரிந்து இது சேலம் டெக்ஸ் விஜய ராகவன் தான் என்று நினைக்கிறேன், இவருக்கு மாத்திரம் பல போலி ஐடிகள் இருபது உறுதி) , இவங்க மாதிரி ஜால்ரா கோஷ்டிகளை தடை பண்ணினால் எடிட்டர் சுதந்திரமாக முடிவெடுக்க முடியும்....

   Delete
  4. @ endrumcomiclover

   திடிரென இப்படி தாக்கும், உங்க ஆர்வம் புரிகிறது..! போலி ID வைத்து தாக்கும் அளவிற்கு அவருக்கு விரோதிகளே இல்லை. மனம் பொறுக்காதவர்கள் வேண்டுமானால் இருக்கிறார்கள்..! சரவணன் சீனிவாசன் சென்னையில் கொரட்டூர் பகுதியில் உள்ள நண்பர்..! நல்ல தொடர்பில் இருக்கும் எல்லோருக்கும் தெரிந்தவரே..! உங்களுக்கு சரியாக முகம் தெரியாததால் வந்த குழப்பமாக இருக்கும் என தோன்றுகிறது. உங்களுக்காக ஒரு...இங்கே'கிளிக்'
   வேண்டாமே இந்த முகமூடி ஆட்டம்..! நீங்கள் உண்மையான அக்கரையுள்ளவரேன்றால்..அந்த 'கிளிக்'கில் உள்ளவர்கள் யார்யார் என சொல்லுங்களேன் பார்ப்போம்..!

   Delete
  5. endrumcomiclover @ I met Saravanan Srinivasan in chennai starting of this year.

   Delete
  6. Endrumcomiclover@ நீங்கள் போலி ஐடி என்றாலும், அதன்பின் இருக்கும் நிஜ முகத்துற்கு....
   * இங்கேயும்,பேஸ்புக்கிலும் எனக்கு நண்பர்கள் மட்டுமே உள்ளனர்,அதனால் போலி ஐடிகளில் உலவும் அவசியம் ஏதுமில்லை நண்பரே....நண்பர்களுடன் அவ்வப்போது எளும் விவாதங்களில் போலி ஐடிக்கு வேலை இல்லையே....ஆசிரியருக்கு ஜால்ரா அடித்து எனக்கு ஆவப்போவது ஒன்றும் இல்லை ....சொல்லப்போனால் பல சமயங்களில் உண்மையை சொல்லி வாங்கி கட்டி கொண்ட அனுபவம் மட்டுமே உள்ளது...ட்ராகன் நகரம்- நல்லாயில்லைனு சொல்லி அதனால் எனக்கு கிடைத்த " பாராட்டுகளை"- இங்கே நீங்கள் ரெகுலரா வர்ரவர் எனில் உங்களுக்கு தெரிந்து இருக்கும்...
   * இந்த ஆண்டு ஏப்ரலில் சென்னயில் நடந்த " மின்னும் மரணம் "- வெளியீட்டு விழாவில் நண்பர் சரவணன் ஸ்ரீனிவாசனை சந்தித்தோம்,அவர் போலி ஐடி என்ற அபாண்ட குற்றச்சாட்டு வேணாமே..அதுவும் சென்னை நண்பர்கள் இருக்கும் இந்த சோதனையான நிலையில்...
   * என்னை பொறுத்து எப்போதும் ஒளிவு மறைவு கிடையாது, என்போன் எண், மெயில் ஐடி, முகவரி எல்லாமே ஓப்பன் தான்...உங்களுக்கு ஏதேனும் சொல்லனும்னா கால்மி இன் 9629298300...டெக்ஸ் கதைகள் அதிகம் வேணும்னு குரல் கொடுத்த நண்பர்களில் நானும் ஒருவன் அவ்வளவே,மற்றபடி போலி ஐடிக்கள் உருவாக்க வசதி,வாய்ப்பு,நேரமோ , அவசியமோ எப்போதும் இல்லை ...மீண்டும் ஒரு கலவரம் செய்து ஆசிரியருக்கும், மற்ற நண்பர்களுக்கும் சங்கடத்தை தர வேணாம் நண்பரே...

   Delete
  7. Enrumcomiclover @ நானோ, சரவணன் ஸ்ரீனிவாசனோ போலி ஐடி இல்லை என உங்கள் கையிலேயே ஆதாரம் உள்ளது நண்பரே.....இம்மாத இதழ்களில் ஒன்றான "பாதைகளும் பயணங்களும்"-ல் "என் பெயர் டைகர்"- முன்பதிவு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது, பக்கங்கள் 50&51 ல்...என்னுடைய புக்கிங் எண் கலரில் 70&கருப்பு வெள்ளையில் 18...சென்னை நண்பர் சரவணன் ஸ்ரீனிவாசனின் முன்பதிவு எண் கலரில்161& கருப்பு வெள்ளையில் 55....இது உங்களுக்கு தெள்ளத்தெளிவாக விளக்கும் நண்பர் சரவணன் ஸ்ரீனிவாசன் போலி ஐடி அல்ல என....இனிமேல் ஆதாரம் இல்லாத பொய்யான குற்றச்சாட்டை வைத்து எங்களைப்போன்ற நடுநிலை நண்பர்களின் மனதை சங்கடப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் நண்பரே...

   Delete
  8. endrumcomiclover @ அடுத்தவரை போலி ஐடி என சொல்லும் நீங்கள் உங்களின் உண்மையான ஐடி வந்து சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்! உங்களுக்கு ஏன் இந்த முகமூடி.

   Delete
 72. டியர் சரவணன்.,சரியாகச்சொன்னீர்கள்.

  நான் சென்ற இரு வருடங்களாகவே, சந்தா கட்டாமல்., சேலம் தேசன் புத்தக நிலையத்தில்தான் வாங்கி வருகிறேன்.
  இவ்வருடம் முதல் சந்தா கட்டலாமென்றிருக்கிறேன்,கூடவே
  என் நண்பருக்கும் சேர்த்து.

  2016 சந்தா எனக்கு முழு திருப்தி.

  ReplyDelete
 73. இம்மாத அனைத்து இதழ்களையும் படித்தாகி விட்டது சார் ..மூன்று நாயகர்களான தோர்கல் ..கமான்சே ...குட்டி தவளை மூன்று பேருமே பட்டைய கிளப்பி விட்டார்கள் ...பாதைகளும் பயணங்களும் படிக்கும் பொழுது...

  எங்கே போகும் இந்த பாதை ..

  என்ற பாடல் பிண்ணனியில் ஒலித்ததால் மற்ற நண்பர்களுக்காக நோ கமெண்ட்ஸ் என்ற விதத்தில் மட்டும் முடித்து விடுகிறேன் சார் ..


  மரணத்தின் முத்தம் .....


  நீண்ட நாட்களுக்கு பிறகு "குட்டி தவளையை "வில்லியின் துணை யோடு அழகான அளவில் ..பளிச் வெள்ளை தாளில் ...அழகான சித்திரங்களோடு மனதை கவர்ந்து விட்டார் ..எப்போதும் போல நண்பருக்காக இருவரும் உயிரை பணயம் வைத்து அதி நம்பிக்கையுடன் எதிரியின் இடத்திலும் பயணம் செய்வதாகட்டும் ...இவர்கள் இருவருமே ஒன்றுக்கொன்று எதிராக போரிடும் சூழலில் அவரவரின் தனிப்பட்ட திறமையை கண்டறிந்து தப்புவுது ...மாடஸ்தி கார்வின் கதைகளுக்கும் ...இருவரின் நட்புக்குமே உரித்தான ஒன்று ...வருட முதல் சாகஸத்தில் சித்திரத்தால் சோடை போனதை இந்த சாகஸத்தில் களைந்து விட்டது மகிழ்ச்சி ...மொத்ததில் திருப்தியான இதழ் ....

  சீற்றத்தின் நிறம் சிவப்பு ....

  கீச்சலான ஓவிய பாணி எனினும் சித்திரங்கள் அனைத்தும் அப்படியே இயற்கையாக தெரிவது ஓவியரின் மிகப்பெரிய திறமை ...ஒவ்வொரு பக்கமும் நிஜத்தை அப்படியே கண்முன் நிறுத்துகிறது ஓவியங்கள் ..கதையும் விறுவிறு ..பரபரவென சென்றது ..எதிரியின் படைபலம் குறைய அமைந்த காரணம் எதிர் பாரா ஒன்று ...படிக்காத நண்பர்களுக்காக விபரமாக வேண்டாம் என்பதால் இந்த இதழுமே அருமை என்ற ஒற்றை வரியில் முடித்து விடுகிறேன் ..என்னை பொறுத்த வரை இம்மாத இதழில் மட்டுமல்லாமல் இந்த வருட இதழ்களிலும் சிறந்த அட்டை படமாக அமையும் ..

  மூன்றாம் உலகம் ...


  அட்டகாச சித்திர தரத்தில் இரண்டு பாகங்களும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் சென்றது ..மாயாஜால கதைகள் எல்லாம் சிறுபிள்ளை தனமாக இருக்கும் என்ற மாயையை ஆரம்ப இதழ்களில் அமைந்த தோர்கல். இப்போது எல்லாம் கெளபாய் நாயகர்களுக்கே சவால் விடுகிறார் என்பதே உண்மை .. ஷானியா கேரக்டர் மேல் ஒரு வித வெறுப்பு இருந்ததும் ...உண்மை ...ஆருஷியாவிற்காக தான் மறைவதுடன் தோர்கலுக்காக கடைசி வரை ஏங்குவதும் ஷானியா மேல் இருந்த வெறுப்பு படிபடியாக பச்சாபதத்தையே வர வழைத்தது ..மொத்ததில் மிக அருமையான அனுபவத்தை தந்த இதழாக தோர்கல் அமைந்து இருந்தது ..மொத்ததில் மூன்று இதழ்களுமே அனைத்து வழிகளிலும் சிறப்பாக அமைந்து இருந்தது ..

  வழக்கம் போல சி .சிறு வயதில் மறுப்புக்காக மட்டும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன் .

  ReplyDelete
  Replies
  1. //இந்த வருட இதழ்களின் சிறந்த அட்டைப்படம் என்ற பெருமை.//

   சூப்பர் தலைவரே.! 100% உண்மை.!

   Delete
 74. அடுத்த வருட சந்தா இதழ்களுக்கான தொகுப்பு அட்டகாசமான ஒன்று சார் ...இதற்காகவே அதிக நண்பர்கள் சந்தாவில் இணைவது உறுதி ...இனி வரும் நாட்கள் அதை உறுதி படுத்தும் ...பொறுத்து இருந்து பாருங்கள் ...;-)

  ReplyDelete
 75. 2015 டாப் த்ரீ இதழ்கள் ...


  ஓக்லஹோமா ....தீபாவளி மலரில் வெளிவந்த இரண்டு டெக்ஸ் கதைகளுமே ....

  2015 ன் சொதப்பல் இதழ்கள் ....

  விண்ணில் ஒரு வேங்கை ...

  பாதைகளும் பயணங்களும் ...

  விடுதலையே உன் விலையென்ன ....

  2015 ன் பெஸ்ட் அட்டைபடம் ...

  சீற்றத்தின் நிறம் சிவப்பு ..


  மோசமான அட்டை படம் ...

  மஞ்சள் நிழல் ..

  மறக்க இயலா தருணம் ...

  லயன் 250. ...கைகளில் ஏந்திய தருணம் ...


  முத்திரை பதித்த நாயகன் ...


  டெக்ஸ் ....டெக்ஸ் ...டெக்ஸ் ....(டெக்ஸ் ரசிகன் என்ற விதத்தில் அல்ல ...நிஜமாகவே ..
  .)


  ஏமாற்றம் அளித்த இதழ் ....


  ஹீஹீ ...ஏற்கனவே சொல்லியாயிற்று சார் ..மூன்றில் எது வேண்டுமானாலும் தேர்ந்துடுத்து கொள்ளலாம் ...


  கெளபாய் கதைகள் திகட்டலா .....

  ஆஹா ....இன்னும் புது கெளபாய் ஹீரோ யாராவது இருப்பின் அறிமுக படுத்துங்கள்..சார் ..மற்ற உலகங்களில் விட கெளபாய் உலகில் உலாவுவது எவ்வளவு இனிமையாக உள்ளது தெரியுமா சார் ....


  பெஸ்ட் அறிமுகம் ...

  இந்த வருட அறிமுகமா என குழப்பம் ...எப்படி இருப்பினும் ....பெளன்சர் ...


  2015 ன் குறைகள் ...

  அட்டை டூ அட்டை மட்டுமே வரும் இதழ்கள் ...

  2015 ன் ....அனுபவம் ....


  simply suppper.......

  ReplyDelete
 76. தோர்கலின் முதல் பக்க ஃபிரேமே அந்த மாய உலகினுள்...,மூன்றாம் உலகத்துள் இழுத்துச்சென்று விட்டது.புத்தகத்தை படித்து முடித்து வெகுநேரமாகியும் அந்த மாயாலோகத்திலிருந்து வெளியே வரமுடியாமல் திணறிக்கொண்டிருக்கிறேன்.கதாசிரியரின் அதீத கற்பனை வளத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை.முதல் நிலை நாயகர்கள் பட்டியலில் தனக்கான இடத்தை மிக அழுத்தமாய் பதிவு செய்திருக்கிறார் தோர்கல்..!

  ReplyDelete
 77. பாதைகளும் பயணங்களும்....!

  ஜெட் வேகத்தில் பறந்து கொண்டிருக்கும் நம் காமிகஸ் பயணத்தில் இதுபோன்ற பாதையிலும் செல்ல வேணடியிருக்கிறதே..?என்னத்தை சொல்ல...!ஒன் லைன் கதையை மூன்று பாகங்களாய் இழுத்திருக்கிறார்கள்...!கி.நா.வுக்குரிய கனமான களமும் இல்லை...ரெகுலர் காமிக்ஸிற்குரிய வேகமும் இல்லை...இந்தாண்டின் சொதப்பல் பட்டியலில் இதற்கு நிச்சயம் இடமுண்டு...!

  ReplyDelete
 78. மூன்றாம் உலகம் :-

  சாஸ்வதத்தின் சாவியின் தொடர்ச்சியாக தெளிவான முதல் பாகம். ஆரிசியாவின் உயிரை மீட்க தன்னையே பலியாக தரும் ஷானியா மனசுல நின்னுருச்சி.

  மரணதேவனின் இடத்திற்கு செல்லும் வழி., வழி நெடுகிலும் விரியும் காட்சிகள்., பாதாள லோகம்., நூழிலைகளாய் தொங்கும் உயிர்கள்., பாதாளத்திலிருந்து தோர்கல் வெளியேறுவது., முக்கியமா சாவிகளின் காவலாளி என கற்பனை படிப்பதற்கு அற்புதமாகவும் அதிக சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.

  இரண்டாம் பாகத்தை மட்டும் கொஞ்சம் கவனமாக படிக்கவேண்டும். (இல்லேன்னா கி நா முத்திரை குத்தப்படும் வாய்ப்பு பலமா இருக்கு) .

  ஆரிசியா ஜோலனை மறைத்து வைப்பதையும் , அதனால்தான் ஜோலன்., தோர்கலை பொறியிலிருந்து காப்பாற்ற முடிந்தது என்பதையும் நாமாகவே யூகித்துக் கொள்ளவேண்டும் (காட்சி விளக்கம் கதையில் இல்லை) .
  ஷார்தாரை கொல்ல முயலும் இருவரும் யார்., காலதோர்னின் கையாட்களா அல்லது புரட்சிவீரர்களா என்பதும் புரியாத புதிராகவே நிற்கிறது. (இவங்க கொலை முயற்சிய பாக்குறப்போ., உள்ளத்தை அள்ளித்தா செந்திலும் பாண்டுவும் ஞாபகத்துல வந்துட்டு போனாங்க) .

  மிகப்பெரிய குழப்பம் என்னவென்றால் ,

  முதல் பாகம் முற்றும் போடப்பட்ட இடத்தில்,,

  ஷார்தாரை தேடி தோர்கல்., காலதோர்ன். வார்கன் மூவரும் ஒன்றாகத்தானே கிளம்புகிறார்கள்.
  இரண்டாம் பாகத்தில் எப்படி தனித்தனியே பிரிந்து வருகீறார்கள். ஜோரண்ட்டின் படை மற்றும் வார்கன் இணைந்தது எப்படி காலதோர்ன் தனியாகவும் தோர்கல் தனியாகவும் ஏன் பிரிகிறார்கள். தோர்கலின் துணை வேண்டுமென்பதால்தானே காலதோர்ன் அவரை குணப்படுத்தி அழைத்து செல்கிறான். பிறகு பிரிந்து தனித்தனியே படையெடுக்க காரணம் என்ன??

  "நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் "
  (இல்லை ஒரு பாகத்தையே காணோமா? ) :-)

  ஒருவேளை நான் சரியாக கதையை புரிந்து கொள்ளவில்லையா.!

  இந்த சந்தேகத்தை தீர்த்து வைப்போருக்கு ஆயிரம் பொற்காசுகள். (தரும் அளவுக்கு மீட்டரு இல்லாததால ஆயிரம் கைதட்டல்கள் .)!!!

  ReplyDelete
  Replies
  1. ///
   "நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் "
   (இல்லை ஒரு பாகத்தையே காணோமா? ) :-)///--- ஆம் எனக்கும் அந்த 2ம்பாக தொடக்கத்தில் இதே குழப்பமே, ஆசிரியர் சார் அல்லது யூகிக்கக் கூடிய நண்பர்கள் யாராவது விளக்குங்களேன்...ப்ளீஸ்....

   Delete
 79. அப்பாடி ஒரு வழியா மாதேஸ்டி...........
  கதை படிச்சாச்சு .......
  கலக்கல் ...........
  ராணி காமிக்ஸில் வந்ததை விட அருமை ........


  அப்புறம் நண்பர்களே .......
  ஏங் கன்னம் ரெண்டு வீங்கி இருக்கு..........

  ஏன்னா ........

  நல்லா கேட்டேள் போங்கோ.......

  இருட்டுல ..........


  மாடேஸ்டி மாதிரியே கொண்டை....போட்டு விட பழகி கொண்டு இருந்தேன் ........

  பிச்சு புட்டாயங்க........என்னா அடி

  பின்ன .........  இருட்டுல.............

  கொண்டை போட்டு விட்டது.........


  பக்கத்துக்கு வீட்டுக்காரிக்குல........

  (உபயம் தென்கச்சி கோ சாமிநாதன் )

  ReplyDelete
  Replies
  1. மந்திரியாரே!

   மாடஸ்டி படிச்சிட்டு கொண்டை போட்டு பழகுனிங்க சரி.

   மாயாவி கதைய படிச்சிட்டு கரண்ட்ல கைய குடுத்துட போறிங்க.! (பக்கத்துவீட்டு கரண்டா இருந்தாலும் பெப்பேதான்) :-)

   Delete
  2. கொண்டைய போட்டு பழகலாம் .............
   மண்டைய போட்டு பழக முடியுமா ........?

   சைமன் ஜி ..........
   தமிழும் இங்கிலிஷும் சேர்த்த மாதிரி பேர் வச்சு இருக்குற இவர தண்ணிக்குள்ள தூக்கி போடுங்க .......போலசுக்குவாறு....

   .....தண்ணியல கண்டம் மட்டும் இல்ல ஆக்சிஜென் கூட இருக்குனு புரிய வைங்க......


   அஸ்கு புஸ்க்கு ..........


   Delete
  3. ///கொண்டைய போட்டு பழகலாம் .............
   மண்டைய போட்டு பழக முடியுமா ........?///

   ஹாஹாஹா!!!

   லொல் (அதாங்க LOL)

   Delete
  4. மதியில்லா மந்திரி.!

   வேறொரு பதிப்பகத்தில் வந்த கதை என்றாலும்.,நம் எடிட்டரின் மொழிபெயர்ப்பில் படிப்பதே தனி சுகம்.!

   நாமே சாம்பார் வைத்து சாப்பிட்டால் வெந்தும் வேகாமலும் உப்பும் காரமும் சரிவிகிதத்தில் இல்லாமல் சப்பென்று இருக்கும்.அதே சாம்பர் அன்னையின் கை பக்குவத்தில் சாம்பார் ரெடியாகும் போது அதன் சுவைக்கு ஈடு இணையில்லை.! அது போலவே மாடஸ்டிகதை இருந்தது.!

   Delete
 80. கடலூர் கடும்வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு அத்தியாவசிய பொருட்களுடன் களமிறங்கிய real ஹீரோ..!
  அருமை நண்பர் சேலம் சுசிந்தர் அவர்களுக்கும் அவர் நண்பர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்..!

  இங்கே'கிளிக்'-1

  இங்கே'கிளிக்-2

  இங்கே'கிளிக்'-3

  ReplyDelete
  Replies
  1. வணங்குகிறேன் பேபி (சுசீந்தர்)!!!

   Delete
  2. சுசீ ஜீ உங்களை நண்பராக அடைந்ததற்காக பெருமைபடுகிறேன்......

   Delete
 81. ஆசிரியர் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தாலே உடனடியாக ஜால்ரா கோஷ்டியில் இணைக்கும் நண்பர்களை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது ...அதுவுமில்லாமல் இங்கே அடுத்தவர்களை மட்டம் தட்டவதற்கும் ...ஆசிரியரரை குறை சொல்வதற்கும் வரும் நண்பர்களுக்கு வேண்டமானால் தனது முகத்தை மறைத்து போலி முகமூடி தேவைபடலாமே தவிர ஜால்ரா கோஷ்டிக்கு எதற்கு முகமூடி .....


  இதனை ஆதாரத்துடன் தெரிவித்த மாயாஜீ அவர்களுக்கு ....ஜால்ரா கோஷ்டியாக இல்லாமல் நடுநிலை நண்பர்கள் சார்பாகவும் நன்றி .......

  ReplyDelete
  Replies
  1. ///இங்கே அடுத்தவர்களை மட்டம் தட்டவதற்கும் ...ஆசிரியரரை குறை சொல்வதற்கும் வரும் நண்பர்களுக்கு வேண்டமானால் தனது முகத்தை மறைத்து போலி முகமூடி தேவைபடலாமே தவிர ஜால்ரா கோஷ்டிக்கு எதற்கு முகமூடி .....///

   அதானே.!!!

   Delete
 82. @endrum Comics lover, this is not fake id, you can meet me in no. 27 karymariamman nagar, korattur, chennai 76. போலி idயில் வந்து அரசியல் பண்ண எங்களுக்கு நேரமில்லை நண்பரே.

  ReplyDelete
 83. 2017 ல் வேதாளரை கண்ல காட்டுங்க.நன்றி சார்

  ReplyDelete
  Replies
  1. +111111
   அப்படியே மாண்ட்ரேக்கும்...

   Delete
  2. என்றும் எனது ஆதரவு இதற்கு உண்டு!

   Anandappane karaikal @ வரவு நல்வரவு ஆகட்டும்.

   Delete
 84. மடிப்பாக்கம் வெங்கடேஸ்வரன் அவர்களிடம் சற்றுமுன்புதான் தொடர்புகொள்ள முடிந்தது. நலமாக இருக்கிறார். வெள்ளத்தால் பல இன்னல்களைச் சந்தித்தபோதும் மாடஸ்டியின் மனவுறுதியுடன் அவற்றிலிருந்து மீண்டுவந்திருக்கிறார். அவர் வசிக்கும் பகுதியில் தொலைத் தொடர்பு முற்றிலுமாகச் செயலிழந்ததாலும், மின்பழுது, தண்ணீர்-உணவு பற்றாக்குறை, கொசுக்கடி, தொற்றுவியாதி போன்றவற்றால் ஒரு கற்கால வாழ்க்கையிலிருந்ததாலும் யாரையும் தொடர்புகொள்ள இயலவில்லை எனத் தெரிவித்தார். இன்னும் புத்தகங்களைக் கைப்பற்றவில்லையாம். தற்போது voice network சரியாகிவிட்டாலும் Data இன்னும் கிடைக்கவில்லையாம்.

  நண்பர்களின் விசாரிப்புகளும், அன்பும் மகிழ்ச்சியளிப்பதாகவும், அனைவருக்கும் நன்றி தெரிவித்ததாகக் கூறும்படியும் தெரிவித்தார்!

  மகிழ்ச்சி! மகிழ்ச்சி! :)

  ReplyDelete
  Replies
  1. நல்ல செய்தி சொன்னதற்கு நன்றி விஜய்....இப்போ நானும் மகிழ்ச்சி.. மகிழ்ச்சி..

   Delete
  2. நன்றி விஜய்.!

   நமது காமிக்ஸ் ஹீரோக்கள் மூலமாக (குறிப்பாக டெக்ஸ் வில்லர்) இக்கட்டான சூழலை சமாளிக்க முன்னெச்செரிக்கை நடவடிக்கைககள் எடுத்துக்கொண்டதாக கூறினார் மடிப்பாக்கம் வெங்கடேஸ்வரன்.!

   மனவுறுதியை தந்தது மாடஸ்டி ப்ளைசி என்றும் கூறினார்.!

   வாழ்க வளர்க நமது காமிக்ஸ் காதல் மற்றும் காதலர்கள்.!! !!

   Delete
  3. என்னது ....மாடஸ்ட்டி ரசிகரை கொசு கடித்து விட்டதா ..........


   என்ன கொடுமை இது விஜயன் சார்

   Delete
  4. இயற்கை அன்னை, புரட்டி புரட்டி அடித்து துன்புறுத்தினாலும் .,இணையதள நண்பர்கள் அக்கறையுடன் நலம் விசாரித்தது , மனதுக்கு இதமாக இருந்தது. அனைத்து நண்பர்களுக்கும் நன்றி
   _____/|\_____

   Delete
  5. வருக MV அவர்களே...வருக..!

   Delete
 85. ஜூனியர் டைகரின் சீற்றத்தின் நிறம் சிகப்பு அட்டகாசமாக இருந்த்து.

  ரெட்டஸ்ட் கலக்கி விட்டார்

  ReplyDelete
 86. மடிப்பாக்கம்னாலே இப்பல்லாம் மாடஸ்டி ஞாபகம்தான் வருது. ம.வெ. சார் சீக்கிரம் ப்ளாக் பக்கம் வாங்க, v r waiting

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சரவணன் சார்.! இன்று மதியத்தில் இருந்து நெட் கனெக்ஷன் சரியாகிவிட்டது.!

   Delete
  2. வணக்கம் MV ஸார். உங்களை மீண்டும். கண்டதும் மகிழ்ச்சி!

   Delete
 87. Editor sir ,

  Nowadays we couldn't find "filler" short stories , it would be great if you add few pages for shorts stories .Please consider sir

  ReplyDelete
 88. 1. 2015 ன் Top 3 இதழ்கள் எவை.?

  (இது கொஞ்சம் கஷ்டமான கேள்வி)

  1. லயன் 250 ஷ்பெஷல் + மின்னும் மரணம்

  2. தீபாவளி மலர் + C C C (box set)

  3. வரலாறும் வல்லூறும் + காலனின் காலம் + சாகாவரத்தின் சாவி (ஆனா எனக்கு சாஸ்வதத்தின் சாவி தான் பிடிச்சிருக்கு.)


  2. 2015 ன் Top 3 மொக்கை பீஸ்கள் எவை.?

  (இது ரொம்ப சுலபமான கேள்வி)

  1. விண்ணில் ஒரு வேங்கை

  2. மஞ்சள் நிழல்

  3. கறுப்பு காகிதங்கள் + நிழலோடு நிஜ யுத்தம்.

  substitute player i.e story -விடுதலையே உன் விலையென்ன.
  (யாருக்காச்சும் மேலே உள்ள லிஸ்டில் எந்த கதைக்காச்சும் மறுப்பு இருந்தால் சப்ஸ்டிட்யூட் போட்டுக்கோங்க.) :-)

  ReplyDelete
  Replies
  1. 2015 ன் Top 1 மொக்கை பீஸ் எவை.?

   (இது ரொம்ப சுலபமான கேள்வி)

   1. விண்ணில் ஒரு வேங்கை

   Delete
 89. 3. 2015 ன் best அட்டைப்படம்?

  அம்பின் பாதையில்

  மூன்றாம் உலகம்

  விண்ணில் ஒரு வேங்கை.


  4. 2015 ன் worst அட்டைப்படம்?

  worst ன்னு சொல்லிக்கிற மாதிரி எதுவும் இல்லை.
  வேண்டுமானால் மறுபதிப்பில் ஒன்றிரண்டை குறிப்பிடலாம்.

  5. 2015 ன் மறக்க இயலாத் தருணம்.?

  Classic Cartoon Collection பற்றிய அறிவுப்பு வந்த தருணம். (வேறென்னத்தைச் சொல்லப் போறேன். நேக்கு வேறென்ன தெரியும்.!)

  ReplyDelete
 90. "விதி எழுதிய திரைக்கதை"-யை விட

  "விதி எழுதிய விடுகதை" பொருத்தமாய் இருக்குமா.

  ReplyDelete
 91. 1) 2015 இன் Top3 இதழ்கள்
  லயன் 250 வது இதழ்
  CCC பாக்ஸ் செட்
  லயன் தீபாவளி இதழ்

  2) 2015 இன் மொக்கை பீஸ்கள்
  நிழலோடு நிஐ யுத்தம்
  மஞ்மள் நிழல்
  வேறு இல்லை

  3) 2015 இன் பெஸ்ட் அட்டை படம்
  லயன் 250 ஸ்பெஷல்

  4) 2015 இன் worst அட்டை படம்
  விடுதலையே உன் விலையென்ன?

  5) 2015 இன் மறக்க இயலா தருணம்
  CCC அறிவிப்பு வெளியான தருணம்

  6) 2015 இல் முத்திரை பதித்த நாயகர்
  சந்தேகமில்லாமல் டெக்ஸ்தான்

  7) 2015 இல் அதிகம் ஏமாற்றம் அளித்த இதழ்
  நிழலோடு நிஐ யுத்தம்

  8) கெளபாய் கதைகள் திகட்டுவது போல் எனக்கு படவில்லை.

  9) 2015 இன் பெஸ்ட் அறிமுகம்
  சந்தேகமில்லாமல் ஒற்றை கையன்தான்

  10) என்ன குறைகிறதென பட்டது 2015 இல்
  குறை ஒன்றும் சொல்ல முடியாது. ஆனாலும் கறுப்பு கிழவி தொகுப்பு வராத குறை மட்டும்தான்

  11) 2015 இன் Overall அனுபவம் நன்றாகவே இருந்தது.

  ReplyDelete
 92. வானமே ..........
  வீதியே .........
  ஐயோ..........
  அம்மா ..........
  சாமி ........

  இதுக்கு பேசாமல்
  ஜானி .....ரத்தகாட்டேரி....ரத்த அம்பு ......
  பிரின்ஸ் ன்.....பணிமண்டலகோட்டை ....போட்டு இருக்கலாம் .....  புஸ்ஸ்ஸ் ......

  ReplyDelete
  Replies
  1. என்ன கொடுமை இது விஜயன் சார்

   Delete
  2. கொடுமைமயிலும் கொடுமை மகா கொடுமை....!
   நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள கதைகளில் ஏதாவது ஒன்றை வெளியிட்டிருந்தால் கூட
   அட்டகாசமாய் இருந்திருக்கும்..!

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
 93. 1) 2015 இன் Top3 இதழ்கள்

  லயன்250&மின்னும்மரணம்

  டாலர் ராஜ்யம் & வரலாறும்வல்லூறும்

  எமனின் எல்லையில்&ரெளத்திரம் பழகு  2) 2015 இன் மொக்கை பீஸ்கள்

  மஞ்மள் நிழல்

  நிழலோடு நிஐ யுத்தம்

  விடுதலையே உன் விலையென்ன?  3) 2015 இன் பெஸ்ட் அட்டை படம்

  அம்பின் பாதையில்..  4) 2015 இன் worst அட்டை படம்

  மஞ்சள் நிழல்...  5) 2015 இன் மறக்க இயலா தருணம்

  பெளன்சர் வெளியீட்டுவிழா& இரண்டு நாள் ஆசிரியர் மற்றும் சென்னை நண்பர்களுடன் முதல் சந்திப்பு...

  மின்னும் மரணம் - வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு ப்ரகாஷ் பப்ளிசர்சின்-தி பெஸ்ட் இதழான " மின்னும் மரணத்தை" அய்யா செளந்திரபாண்டியன் கையால் பெற்றது...

  ஈரோடு விழாவில்  CCC வெளியீட்டு தருணம், ஆசிரியரிடம் இருந்து லயன் 250 பெற்றது, அன்பு நண்பர் பாசா பாய் தந்த மக்கன் பேடாவின் சுவை இன்னும் நாவில் இனிப்பது, ஞாயிறு காலை ஆசிரியருடன்- ஈரோடு நண்பர் ஸ்டாலின் வீட்டில் டிபன் சாப்பிட்டது, அன்று நடந்த வாசகர் சந்திப்பு,பழிவாங்கும் புயல் - வண்ண மறுபதிப்பாக தேர்வு பெற்றது, மதியம் பாரிஸ் நண்பர் ஹசன் அளித்த கிடா விருந்து....

  தீபாவளி மலரை மாயாவி சாருடன் இணைந்து பலத்த போராட்டத்திற்கு பிறகு காலை7மணிக்கு வாங்கி பார்த்தது....என பல மறக்க இயலா நினைவுகளை நெஞ்சில் விதைத்த ஆண்டு இது....  6) 2015 இல் முத்திரை பதித்த நாயகர்

   டெக்ஸ்& டைகர்  7) 2015 இல் அதிகம் ஏமாற்றம் அளித்த இதழ்

  மஞ்சள் நிழல்...  8) கெளபாய் கதைகள் திகட்டுவது போல் படுகிறாதா???..

  நிச்சயமாக இல்லை, காமிக்ஸ் னா கொளபாய்- கொளபாய்னா காமிக்ஸ்...

  9) 2015 இன் பெஸ்ட் அறிமுகம்

  பெளன்சர்& ஸ்மர்ப்புகள்...  10) என்ன குறைகிறதென பட்டது 2015 ல்..

  சிற்சில கசங்கிய பக்கங்கள் ஓரிரு சமயங்களில் வந்தது, சந்தா நண்பர்களுக்கு அனுப்பும் முன் செக்கிங் இன்னும் தேவை,  11) 2015 இன் Overall அனுபவம் நன்றாகவே இருந்தது.  லயன்250, மின்னும் மரணம், CCC,தீபாவளி மலர், இரண்டு வாசகர்கள் சந்திப்பு என கம்பேக்கின் சிறந்த ஆண்டு இது.....

  ReplyDelete
 94. Mmm...intha year santha kattina old muthu comics free .......ya.......friends.....mmmmm.......oru nanpar sonnar.......nan santha kattaporen nengalum. Udane kattunga..intha thagaval unmayakuda irukkalam........mis pannidathinga ......

  ReplyDelete
 95. Mmm...intha year santha kattina old muthu comics free .......ya.......friends.....mmmmm.......oru nanpar sonnar.......nan santha kattaporen nengalum. Udane kattunga..intha thagaval unmayakuda irukkalam........mis pannidathinga ......

  ReplyDelete
 96. பெஸ்ட் அறிமுகம் ஸ்மர்ப்புகளை எப்படி நான் மறந்தேன்- ஒற்றைக் கையனுடன் + ஸ்மர்ப்புகள் ஆகியவை சிறந்த அறிமுகங்கள்

  ReplyDelete
 97. Sir,
  Please send my books to my mailing address, S.Mahesh, Nungambakkam, Chennai-34

  ReplyDelete
 98. Sir,
  Please send my books to my mailing address, S.Mahesh, Nungambakkam, Chennai-34

  ReplyDelete
 99. 6. 2015 ல் முத்திரை பதித்த நாயகர் யார்?

  வருசாவருசம் முத்திரை பதிக்கும் வில்லர் இந்த வருசமும் மிஸ் பண்ணாமல் முத்திரை பதித்திருந்தார்.

  ஆனாலும்
  இந்த வருடத்தின் முத்திரை நாயகர் என்றால் தோர்கல் தான்.
  முதலிரண்டு ஆல்பங்களில் பெரிதாக கவராத தோர்கல் இந்த வருடம் பின்னி பெடலெடுத்துவிட்டார். (மூன்றாம் உலகம் கதையின் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் இடையே என்ன நடந்தது என்ற குழப்பத்தை தவிர)

  நிறைய நண்பர்களின் தேர்வாக இருக்கும் பௌன்சர் முத்திரை பதித்தாரா என்பது ரெண்டாம்பட்சம்.
  பௌன்சர் கதைகளுக்கு ஒரு ஒப்புமை சொல்கிறேன்.

  சில வருசங்களுக்கு முன்னாடி எல்லாம்., பத்திரிக்கைக்கு பேட்டி கொடுக்கும் ஈரோயினிங்க தவறாம ஒரு வாக்கியத்தை சொல்லுவாங்க.!
  "கதைக்கு தேவைப்பட்டா கவர்ச்சியா நடிப்பேன் " அப்படீன்னு.

  ஆனா கதையே தேவைப்படாத பாட்டுல கூட படு கவர்ச்சியா நடிச்சிருப்பாங்க. அதேமாதிரிதான் பௌன்சரும்.
  வன்முறைய சொல்றேன் பேர்வழின்னு கோடாரிய தலையில சொருகீட்டு திரியறது. பசங்க முன்னாடியே மிஸ்ஸை ஜலபுலஜங்ஸ் பண்ண ட்ரை பண்றது.
  கையில்லாத ஹீரோ., காலில்லாத நாய்., பல்லில்லாத பாட்டீமா., மூக்கில்லாத முனீமா ன்னு 'கதைக்கு தேவையான' எல்லாமே ரொம்ப சாஸ்தி.

  இதையெல்லாம் விட பத்து வயசு பசங்க கூட சர்வசாதாரணமா கத்தியை கழுத்துல எறக்குறதுன்னு தேவைக்கு மீறினதாகவே எனக்கு பட்டதால் பௌன்சருக்கு நோ முத்திரை.!!!

  ReplyDelete
 100. Today I got Comics books at Erode... Comanche super super, modesty super...

  ReplyDelete
 101. 1) 2015 இன் Top 3 இதழ்கள்
  ==> மின்னும் மரணம்
  ==> சாகாவரத்தின் சாவி + மூன்றாம் உலகம்
  ==> லயன் தீபாவளி இதழ்
  ==> டாலர் ராஜ்ஜியம்


  2) 2015 இன் Top 3 மொக்கை பீஸ்கள்
  ==> விடுதலையே உன் விலையென்ன
  ==> நிழலோடு நிஐ யுத்தம்
  ==> மஞ்சள் நிழல்


  3) 2015 இன் பெஸ்ட் அட்டை படம்
  ==> மின்னும் மரணம்


  4) 2015 இன் worst அட்டை படம்
  ==> மஞ்சள் நிழல்


  5) 2015 இன் மறக்க இயலா தருணம்
  ==> மின்னும் மரணம் வெளியீடு
  ==> ஈரோடு புத்தக விழா - மீட்டிங்


  6) 2015 இல் முத்திரை பதித்த நாயகர்
  ==> மின்னும் மரணம் நாயகன்


  7) 2015 இல் அதிகம் ஏமாற்றம் அளித்த இதழ்
  ==> நிழலோடு நிஐ யுத்தம்


  8) கெளபாய் கதைகள் திகட்டுகின்றதா ?
  ==> கெளபாய் கதைகள் என்றைக்குமே நமக்கு திகட்டியதில்லை :)


  9) 2015 இன் பெஸ்ட் அறிமுகம்
  ==> ஊதா பொடியர்கள்


  10) 2015 இல் குறை
  ==> சிங்கத்தின் சிறு வயதில் தொகுப்பு இந்த வருடமாவது வரும் என்று எதிர்பார்த்தேன் :) தலைவரே ... செயலாளரே ... எங்கே இருக்கீங்களா ?


  11) 2015 இன் Overall அனுபவம்
  ==> அருமை சார், குறைந்த எண்ணிக்கையில் வாசகர்கள் இருந்தாலும், எங்களை திருப்தி படுத்த நீங்களும், ஜூனியர் ம் அலுவலக பணியாளர்களும் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஒரு ராயல் சலுயூட் .... _/\_

  ReplyDelete
 102. நல்லதொரு மீள்வரவு மாடஸ்டி வெங்கி அவர்களே.!!!!

  (இனிமே லோட்மோர் வந்திடும்):-)

  ReplyDelete

 103. 7. 2015 ல் அதிகம் ஏமாற்றமளித்த இதழ் எது?

  விண்ணில் ஒரூ வேங்கை.

  விளம்பரங்களையும் பில்டப்ஸையும் பார்த்து ரொம்பவே எதிர்பார்த்து ஏமாந்த கதை இதுதான்.

  நிழலோடு நிஜ யுத்தம். -

  எதிர்பார்ப்பு இல்லாததால் இது ஏமாற்றமாக தெரியவில்லை (எனக்கு) .!!!

  ReplyDelete
 104. 8. கௌபாய் கதைகள் திட்டுவதுபோல் தெரிகிறதா? இல்லை இது ஓ.கே தானா?


  ரொம்ப நாளாவே இந்த டவுட்டு எனக்கு இருக்கு.
  கௌபய்ஸ்னா மாடு மேய்க்குற பசங்கன்னுதானே அர்த்தம்.
  குறைந்தபட்சம் மாட்டு பண்ணையிலயாச்சும் வேலை பாக்குறவங்களா இருக்கணும் இல்லிங்களா?
  அப்படி பாத்தா.,
  கமான்சே தொடர் மட்டுந்தான் கௌபாய் தொடர். ரெட் டஸ்ட் மட்டுந்தான் கௌபாய்.
  ஒரேயொரு தொடர். ஆண்டுக்கு ரெண்டு கதைகள் மட்டுமே. எப்படி திகட்ட முடியும்.

  அகராதி :- (திமிர் இல்லை அர்த்தம் சொல்றது)

  டெக்ஸ் வில்லர் & கிட் கார்சன் : ரேஞ்சர்கள்.

  டைகர் - லெப்டினென்ட் (ஜீம்மி - தண்ணிவண்டி) .

  லக்கி லூக் - சமூக சேவகர் .

  டாக்புல் & கிட் ஆர்டின் - ஷெரீஃப் மற்றும் டெபுட்டி

  ஸ்கூபி & ரூபி - கார்பெரல் மற்றும் சார்ஜெண்ட்

  பௌன்சர் - வேலையே பௌன்சர்தான்.

  மேஜிக்கு விண்டு. - இந்தாளு என்ன கேட்டகிரின்னே தெரியலை. ஆனா நிச்சயம் மாடு மேய்க்கிறதில்லே.

  ஆக ,
  கூட்டி., கழிச்சி., பெருக்கி., வகுத்து , பிதாகரஸ் தியரம் எல்லாம் பயண்படுத்தி பாத்ததுல

  கௌபாய் தொடர் கமான்சே மட்டும்தான்னு தெரிய வருது.

  எனவே பற்றாக்குறையை சரிசெய்ய இன்னும் சில கௌபாய் தொடர்கள் தேவைப்படுகின்றன என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது.!!!

  ReplyDelete
  Replies
  1. குதிரையில வர்ரவங்க எல்லாத்தையும் கௌபாய்ஸ்னு சொல்லாம ,

   இன்னிக்கு இருந்து

   குருதைபாய்ஸ் னு சொல்லலாமே!!!!

   இப்படிக்கு -

   எப்படி வேணாலும் யோசிப்போர் சங்கம்.

   Delete