Powered By Blogger

Sunday, February 15, 2015

மார்ச்சின் மார்ஷல்..!

நண்பர்களே,

வணக்கம். நத்தை வேகத்தில் ஊர்ந்திடும் இன்டர்நெட் கொண்டதொரு இடத்தில்  2 நாட்கள் ஜாகை என்றான பின்னே, இன்றைய பதிவுக்கான பைல்களை ஆபீசிலிருந்து வரவழைப்பதே பொறுமையின் சோதனையாகிப் போனது !! பற்றாக்குறைக்கு நம்மவர்கள் அவற்றைப்  பெரிய, பெரிய பைல்களாய் அனுப்பி வைக்க - சிண்டைப் பிய்க்காத குறை தான் ! ஆனால் இன்றைய தினம் ஒரு கிரிக்கெட்   திருவிழாவின் துவக்கமாய் இருப்பதால் - நமது கவனங்கள் டி.வி.யைத் தாண்டி அதிகமிருக்கப் போவதில்லை எனும் போது இந்தப் பதிவை சுருக்கமானதொன்றாக அமைப்பதற்கு எனக்குக் கூடுதலாக ஒரு காரணம் கிட்டியுள்ளது ! So அனல் பறக்கும் அடிலைடில் நம்மவர்களின் ஆட்டத்தை  ரசிப்பதன் மத்தியினில் இங்கே எட்டிப் பார்க்கும் நண்பர்களுக்கு - இதோ மார்ச்சின் மார்ஷல் !! 

ஆகஸ்டில் வெளியான LMS இதழ் # 2-ல் துவங்கிய டைகரின் மார்ஷல் அவதாரத்தின் கிளைமாக்ஸ் பாகங்களே மார்சின் நமது வண்ண இதழின் முதலாவது ! So ஓவியர் வில்லியம் வான்சின் ஒரிஜினல் ஓவியத்தோடு வெளியாகும் "வேங்கைக்கு முடிவுரையா ?" அட்டைப்படத்தின் முதல் பார்வை இதோ :  


 முன்னட்டை + பின்னட்டை டிசைன்களை ஏற்கனவே நாம் முந்தய இதழ்களில் பயன்படுத்தி இருந்தாலும் - ஓவியர் வான்சின் unique ஸ்டைலினை மீண்டுமொருமுறை ரசிப்பதில் தவறிராது என்று நினைத்தேன் ! தவிர, ஓவியர் வான்சின் கைவண்ணத்தில் மிளிரும் டைகரின் முகத்தை நம் ஒவியரென்றில்லை - வேறெந்த ஓவியரும் அப்படியே உல்டா செய்வதும் நடக்கிற காரியமல்ல என்பதால் உள்ளதை உள்ளபடியே விட்டு விட்டோம் !  Hope you like it ! 

மொத்தம் 3 பாகங்கள் கொண்ட இந்த மார்ஷல் டைகர் தொடரின் முதல் பாகம் LMS -ல் வெளிவந்துள்ள நிலையில் - எஞ்சி நிற்கும் பாகம் 2 & 3 -ன் தொகுப்பே இம்மாத இதழ் என்பதை நாம் அறிவோம். இதனில் பாகம் 2-க்கு மட்டுமே ஓவியர் வான்ஸ் சித்திரங்கள் போட்டுள்ளார் ; இறுதிப் பாகத்துக்கு மிஷெல் ரூஜ் ஓவியப் பொறுப்பினை ஏற்றுள்ளார் ! இதோ பாகம் 2-ன் உட்பக்க மாதிரி - வான்சின் அதகள சித்திரத் தரத்தோடு : 


முதல்முறையாய் மழு மழு கன்னத்தோடு காட்சி தரும் டைகரைக் கண் குளிர ரசித்துக் கொள்வோமே...?! மார்ஷல் உடுப்புகளை இந்த இதழோடு தூக்கிக் கடாசி விடும் மனுஷன் மீண்டும் தனது பழைய வாழ்க்கைக்குப் போகவிருக்கிறார் எனும் போது இந்த சவரம் செய்யப்பட வதனத்தை இன்னுமொருமுறை பார்க்க வாய்ப்புக் கிடைக்குமோ - என்னவோ ?! தொடர்வது கிளைமாக்ஸ் பாகமான "ரணகள ராஜ்யத்திலிருந்து" ஒரு டீசர் ! இதன் ஓவியங்களோ மிஷெல் ரூஜ் !  




காரணங்கள் ஏதோ தெரியவில்லை - ஆனால் 1993-ல் "வேங்கைக்கு முடிவுரையா ?" வெளியான நிலையில் - கிளைமாக்ஸ் உருவானது ஏழாண்டுகளுக்குப் பின்னர் தான் !  Limbo -வில் தொங்கிய தொடரை புது ஓவியர் + புது கலரிங் ஆர்டிஸ்ட் துணையோடு 2000-ல் தான்முடித்து வைத்துள்ளார்கள் ! வான்சின் ஓவிய பாணி + அந்தப் பாகத்தின் கலரிங் பொறுப்பை ஏற்றிருந்த பெட்ராவின் பாணியும் - பின்னாட்களில் பாகம் 3-ன் creative டீமின் பாணிக்கு முற்றிலும் வேறுபட்டிருப்பதால்  - இந்த இதழில் இரு contrasting styles களை நாம் பார்க்கவிருக்கிறோம் ! சித்திர பாணிகள் எவ்விதமிருப்பினும், கதாசிரியரும், கதையின் முடிச்சும் ஒன்றே என்பதால் அந்தப் பரபரப்பான flow தொடர்ந்திடுகிறது ! தவிர, நமது சமீபத்திய ராசியோ - என்னவோ இப்போதெல்லாம் முக்குக்கொரு முத்தக் காட்சி அமைந்து போகின்றது கதைகளில் ! இதனிலும் அந்த பாணி தொடர்கிறது - 'தளபதி'யின் 'பச்சக்' சாகசங்களோடு  ! எதெதிலோ 'தலை' - நம் தளபதிக்குக் கடும் போட்டி தரலாம் தான் ; ஆனால் இந்த டிபார்ட்மெண்டில் தளபதியை அடித்துக் கொள்ள வாய்ப்பே இல்லை  என்பது நிச்சயம் !

More of tiger - தொடரும் ஏப்ரலின் இறுதிக்குள் "மின்னும் மரணம்" முழுத் தொகுப்பினையும் நம் சத்துக்கு நாம் வெளியிடத் தயாராகி வரும் நிலையில் - படைப்பாளிகளோ - கடந்த டிசம்பரில் 1456 பக்க ராட்சச டைகர் தொகுப்பு ஒன்றினை 69 யூரோ விலையில் வெளியிட்டுள்ளனர் ! பாருங்களேன் :
இளம் டைகர் கதைகளோடு துவங்கி ; மின்னும் மரணம் கதைகள் பதினொன்றையும் கொண்டு ; அப்படியே மிஸ்டர் ப்ளூபெர்ரி தொடரையும் தழுவிச் செல்லும் ராட்சசப் படைப்பு இது !! இதோ அதன் கதைகளின் பட்டியல் :
காலங்கள் ; ரசனைகள் ; கதைக்களங்கள் என சகலமும் நிறையவே மாறிப் போனாலும் - சில classic கதைகளுக்கு வரவேற்பு இன்னமும் மாறாது இருப்பது நிறைவாய் உள்ளது !  Old is Gold forever I guess...! அடுத்த வாரம் வழக்கம் போலொரு நீண்ட பதிவோடு சிந்திப்போம் ! அது வரை - let's enjoy the cricket...! Bye for now guys ! 

180 comments:

  1. Everyone watching match it seems. Let me read and comment again

    ReplyDelete

  2. 1456பக்கங்கள் நாமும் தொடரலாமே!!

    ReplyDelete
    Replies
    1. sai vignesh : தொடரலாம் தான்...ஆனால் எதையோ பார்த்து எதுவோ சூடு போட்டுக் கொண்டது போலாகி விடுமென்பது தான் சிக்கலே !!

      Delete
  3. v r eagerly waiting for MINNUM MARANAM

    ReplyDelete
  4. காலை வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  5. Replies
    1. என்னவாயிற்று ரம்மி பதின்மூன்று

      Delete
  6. வேங்கைக்கு முடிவுரை எழுதும் நேரத்தில் அடுத்த Collectors Editionக்கான கோரிக்கை எழுப்பும் வேளையாய் இருக்கிறது ! நமக்கும் தளபதியின் அனைத்து கதைகளையும் ஒரே தொகுப்பாக பார்க்க ஆவலாக இருக்கிறது ! தளபதியின் வீரர்களே இக்கோரிக்கைக்கு அணி திரள்வீர் ! அட்டைபடம் பிரமாதம் Colour Combination அபாரம்!

    ReplyDelete
    Replies
    1. போராட்டக்குழு தலைவரைக் கூப்பிடுங்கப்பா

      அவர் தலைமையில் அனைவரும் ஓரணியாய் திரளுவோம்

      Delete
    2. -1. Minnum Maranam + Mister Blueberry = 1456 Page special. we are getting Minnum Maranam and Mister Blueberry(Muthu 350) collections two separate books this year . We should ask for ratha Kottai and Thotta Thalai nagaram collector edition.

      Delete
    3. Mahendran Paramasivam : அளவுக்கு மீறினால் வேங்கையும் மியாவியாகிப் போகும் ஆபத்துண்டு ! So இப்போதைக்குப் போதுமே மறுபதிப்புகளின் பட்டியல் !

      Delete
    4. அது சரி தான் சார் ! இந்த ஆண்டு வேண்டாம் . 2016-ல் ரத்த கோட்டை , தோட்டா தலை நகரம், ட்ராகன் நகரம் + few டெகஸ் reprint . பாவம் சார் ஈரோடு பூனை . அவருக்காக ரத்தப் படலம் (1-19) 2017 ல். :)

      கார்ட்டூன் ஸ்பெஷலை பிரிச்சி 3 அல்லது 4 புத்தகமாக போட வழி உண்டா ? பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு வாங்க எளிதாக இருக்கும். எப்படி வந்தாலும் 3 செட்டாக வாங்கி விடுவேன். படிக்க, பாதுகாக்க, மற்றும் என் மகளுக்கு ஒன்று. சீக்கிரம் முன் பதிவை அறிவித்து விடுங்கள். நண்பர்களுக்கு திட்டமிட வசதியாக இருக்கும்.

      Delete
    5. \\அது சரி தான் சார் ! இந்த ஆண்டு வேண்டாம் . 2016-ல் ரத்த கோட்டை , தோட்டா தலை நகரம், ட்ராகன் நகரம் + few டெகஸ் reprint .\\
      +1

      Delete
  7. ///முதல்முறையாய் மழு மழு கன்னத்தோடு காட்சி தரும் டைகரைக் கண் குளிர ரசித்துக் கொள்வோமே...?! மார்ஷல் உடுப்புகளை இந்த இதழோடு தூக்கிக் கடாசி விடும் மனுஷன் மீண்டும் தனது பழைய வாழ்க்கைக்குப் போகவிருக்கிறார்///

    புதிதாய் பார்க்கப்போகும் ஆர்வம் என்னுள்ளே!

    ReplyDelete
    Replies
    1. Jaya Sekhar : ஜாலியான ஆக்ஷன் மேளா தான் !!

      Delete
  8. Hi friends good morning to all

    And once again I entered top 15 members .

    Sham 1881 @ erode

    ReplyDelete
  9. Dear editor ,

    Y today posted the article in very delay ? Myself waiting to c tiz article from today early morning 4 am

    Sham1881@erode.

    ReplyDelete
    Replies
    1. sham1881 : பார்க்க ப்ளீஸ் : பதிவின் முதல் வரி !

      Delete
  10. இனிய காலை வணக்கங்கள் விஜயன் Sir :)

    ReplyDelete
    Replies
    1. SeaGuitar9 : இனிய மாலை வணக்கங்கள் ரம்யா !

      Delete
  11. 'வேங்கைக்கு முடிவுரையா' முன்னட்டை ஒரிஜினலைவிடவும் அடர்த்தியான வண்ணங்களில் அசத்துகிறது! இருள்சூழ்ந்த பின்னணியும், தெறிக்கும் நீர்த்திவலைகளும் மிரட்டலாய் இருக்கின்றன. சமீபகாலங்களில் வந்த டைகர் அட்டைப்படங்களில் இதுவே பெஸ்ட் என்பேன். க்ளோஸ்-அப்பில் முறைப்பது போன்ற அட்டைப்படத்தைப் போட்டு வயிற்றில் புளியைக் கரைக்காத எடிட்டருக்கு ஸ்பெஷல்சாதா நன்றிகள்! ;)

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : இந்த சாகசம் முழுவதிலும் மிடுக்காய்த் தோற்றம் தரும் தளபதிக்கு மிடுக்கான அட்டை அவசியமென்று நினைத்தேன்...!

      Delete
    2. //இந்த சாகசம் முழுவதிலும் மிடுக்காய்த் தோற்றம் தரும் தளபதிக்கு மிடுக்கான அட்டை அவசியமென்று நினைத்தேன்...!//

      +1

      Delete
  12. வணக்கம் சார் . அதிசயமாக இன்று இந்தியா அசத்தி வருகிறது சார் . மதிய உணவு வேளையில் எட்டி பார்க்கிறேன் சார் . முதல் முறையாக உலக்கோப்பையில் 300பாகிஸ்தான் கூட அடிப்பார்கள் போல் தெரிகிறது சார் .

    ReplyDelete
    Replies
    1. // மதிய உணவு வேளையில் எட்டி பார்க்கிறேன் சார் //

      அதாவது லஞ்ச டைமில் எட்டிப்பார்க்கப் போறீங்களா டெக்ஸ் விஜய்? ;) நீங்க எட்டிப் பார்க்கறீங்களோ இல்லையோ, உங்க வாயிலிருந்து லெக்-பீஸ் எட்டிப்பார்க்கப் போவது உறுதி! ;)

      Delete
    2. அற்புதம் அருமை சபாஷ் சார் . காமிக்ஸ் பற்றி அல்ல . இந்திய அணியின் ஆட்டம் சரியாக 300ரன்கள் 50ஓவர்கள் முடிவில் சார் .

      Delete
  13. என் இப்போதைய ஒரே கவலை எல்லாம் மின்னும் மரணம் எனும் ஒரு கிளாசிக் தொகுப்பின் அட்டையைக் குறித்துதான்! ஆனது ஆச்சு, பேசாம வான்சுக்கே ஒரு போனைப்போட்டு பிரஷ்ஷா ஒரு படத்தை போட்டுத்தரச்சொல்லிருங்க! :-)))

    அவர்களுடைய ராட்சச புக்கின் அட்டைப்படம் நமக்கும் சரியா வரும்னு தோணுது. ஏதோ பாத்துப் பண்ணுங்க சார்!

    ReplyDelete
    Replies
    1. //என் இப்போதைய ஒரே கவலை எல்லாம் மின்னும் மரணம் எனும் ஒரு கிளாசிக் தொகுப்பின் அட்டையைக் குறித்துதான்! ///

      க்ளோஸ்-அப்பில் போடாதவரையில் எல்லா அட்டைகளுமே ரசிக்கும்படிதான் இருக்கும், ஆதி அவர்களே! ;)

      Delete
    2. ஆதி தாமிரா & Erode VIJAY : //அவர்களுடைய ராட்சச புக்கின் அட்டைப்படம் நமக்கும் சரியா வரும்னு தோணுது//

      //க்ளோஸ்-அப்பில் போடாதவரையில் எல்லா அட்டைகளுமே ரசிக்கும்படிதான் இருக்கும்//

      அவர்களுடைய ராட்சச புக்கின் அட்டைப்படமே - closeup தானே..?

      Delete
  14. I am bus. Travell to Bangalore. I need big post sir?

    ReplyDelete
    Replies
    1. salemkelamaran@gmail.com : அனைவரும் ஆஸ்திரேலியாவில் இருப்பதால் இந்த வாரம் மினி பதிவு மட்டுமே நண்பரே !

      Delete
  15. நாமும் இரத்த படலம் ,அதன் தொடர்ச்சி ஸீரிஸ் ,ஸ்பின் ஆஃப் தொடர்கள் எல்லாத்தையும் கலர்ல ஒரே புக்கா போட போறோம் அப்டின்னு தோணுது .(ஹி. ..ஹி...)

    ReplyDelete
    Replies
    1. நான் உங்களை மாதிரி பேராசையெல்லாம் படமாட்டேன். எனக்கு இரத்தப்படலம் 1-18 ஒரே புக்கா வந்தாலே போதும். எப்போ வரும்னு யாராவது ஒரு நல்ல ஜோசியகாரர்கிட்ட கேட்டுச் சொல்லுங்களேன்...

      Delete
    2. @ FRIENDS : //நாமும் இரத்த படலம் ,அதன் தொடர்ச்சி ஸீரிஸ் ,ஸ்பின் ஆஃப் தொடர்கள் எல்லாத்தையும் கலர்ல ஒரே புக்கா போட போறோம் அப்டின்னு தோணுது .//

      "ஞ்யன்ங் ..ஞ்யன்ங் .,,ஞ்யன்ங் ..!!" .என்று சிவகாசிப் பக்கமாய் ராவினில் யாரோ மண்டையில் குட்டிக் கொண்டே வாக்கிங் போவது போலொரு பிரமை !

      Delete
  16. ஆனாலும் அநியாயம் இது. நம்ம டைகரை பற்றி குறுஞ்செய்தியைப் ( SMS ) போன்றதொரு பதிவு.

    ஆக படைப்பாளிகளால் நமக்கு முன்பே முழு தொகுப்பும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழிலும் முழு தொகுப்பை பார்த்திட மிகவும் ஆவலாக உள்ளது.

    கீழிருந்து மேலாக இரண்டாவதாக உள்ள டைகரின் அட்டைப்பட வண்ண சேர்க்கை , நமது பிரபல ஓவியர் "மணியம் செல்வம்" அவர்களை நினைவூட்டியது.

    ReplyDelete
    Replies
    1. Pushparaj R : //ஆனாலும் அநியாயம் இது. நம்ம டைகரை பற்றி குறுஞ்செய்தியைப் ( SMS ) போன்றதொரு பதிவு.//

      தளபதி பற்றியான அடுத்த சந்தர்ப்பத்துப் பதிவில் இதை ஈடு கட்டி விடுவோம் ! :-)

      Delete
    2. //தளபதி பற்றியான அடுத்த சந்தர்ப்பத்துப் பதிவில் இதை ஈடு கட்டி விடுவோம் ! :-)//

      Really need a big post for Captain Tiger Sir :)

      Delete
    3. \\ஆக படைப்பாளிகளால் நமக்கு முன்பே முழு தொகுப்பும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழிலும் முழு தொகுப்பை பார்த்திட மிகவும் ஆவலாக உள்ளது.\\
      +1

      Delete
  17. டியர் விஜயன்சார், மார்ச் மாதத்தை நோக்கி ஆவலுடன்.இன்று.முகபுத்தகத்தில் போகன் சங்கர் என்ற நண்பர் சென்னை புக்பேரில் நம் காமிக்ஸ் ஸ்டாலில் நடந்த சில சம்பவங்களை தனக்கே உரித்த முறையில் நகைச்சுவையாக எழுதியிருந்தார்.அதிலும் ஒருவர், தன் திருமணமான புதிதில் ஹனிமூனுக்கு சென்றபோது தங்ககல்லறை படிக்கசொல்லி மனைவியை டார்ச்சர் கொடுத்ததையும்,அவரே உங்களிடம் விஸ்கி சுஸ்கி கேட்டுமணிகனக்கில் மல்லுக்கு நின்றதையும், அந்த களேபரத்துக்கு நடுவில் இவர் நுழைந்து ரோஜரின் மர்மகத்தியை சத்தமாக கேட்டுவிட்டு வீரநடை போட்டதையும் எழுதியிருந்தார்...பாவம் சார் நீங்க..

    ReplyDelete
    Replies
    1. பாவமா !
      ரொம்ப பாவம் சார்ர்ர்ர் நீங்க

      Delete
    2. Dr.Sundar,Salem : நான் பாவமென்றால் - ஹனிமூன் சென்ற இடத்தில் "கல்லறைக் காவியத்தை" படிக்க நேர்ந்த துரதிர்ஷ்ட சகோதரியை என்னவென்பதாம் ? :-)

      Delete
  18. “அம்பின் பாதையில்” – வெகு சுமாரான கதை! நமது XIII கடந்த காலத்தை சொல்லும்போது சுவாரசியமான சம்பவம்கள் இல்லை, மேலும் அவரது முதாதையர் பற்றிய (Mayflower) இடத்திலும் வரலாற்றை பற்றி சொல்கிறேன் என்று படிக்கும் போது எனக்கு கொட்டாவியை வரவழைத்ததுதான் மிச்சம். இந்த கதையில் சொல்லி கொள்ளும்படி உள்ள விஷயம் என்றால் இதன் சித்திரம்கள் மற்றும் வண்ணகலவை. என்னை பொருத்தவரை இதுவரை வந்த XIII கதைகளில் இது சுமாருக்கும் கீழ் உள்ள இடத்தை பிடிகிறது.

    இந்த கதையில் கற்பனை வறட்சி அதிகம் போல் தெரிகிறது (காமிக்ஸ் என்பதை மறந்து விட்டு வசனம்களை கொண்டு கதாசிரியர் கதையை நகர்த்தி உள்ளது என்னால் ரசிக்க முடிய வில்லை), என்னை பொறுத்தவரை அடுத்த பாகத்துடன் இந்த கதை தொடரை நமது காமிக்ஸில் முடித்து கொள்ளவது நலம்.

    கோரிக்கை - எதிர்காலத்தில் XIII கதை வருகிறது என்றால் அது “மிகவும் சிறப்பாக” இருந்தால் மட்டும் நமது காமிக்ஸில் வெளி இடவும்.

    இந்த மாத கதைகளின் எனது வரிசை, 1. ஷெல்டன் 2. ஸ்பைடர் 3. XIII

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : எனக்கு எழுந்த ஆச்சர்யமே இந்த Mayflower வரலாற்றுக்குறிப்பை அமெரிக்கர்கள் அல்லாதோர் படிக்கும் ஒரு மார்கெட்டில் (பிரான்ஸ் / ஜெர்மன் / டட்ச் இத்யாதி..) இத்தனை சிலாகிக்க வேண்டியதன் அவசியம் என்னவென்றே..!! அமெரிக்கர்களே தங்கள் வரலாற்றை இவ்வளவு ஆழமாய் ஆராய்ச்சிக்க பிரியப்பட்டிருப்பார்களோ என்னவோ ?!!

      Delete
  19. விஜயன் சார், மின்னும் மரணம் வெளி ஈடும் தேதி பற்றி முடியுமா? வெளியூரில் இருந்து வரும் நமது காமிக்ஸ் வாசகர்கள் தங்கள் பயண சீட்டை முன்பதிவு செய்ய வசதியாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : தயாரிப்புப் பணிகளை ஓரளவுக்கு முடித்துக் கொண்டு சொல்கிறேனே..ப்ளீஸ் !

      Delete
    2. I am waiting... please ensure we have enough time to book our train tickets!

      Delete
  20. விஜயன் சார், டைகர் கதையின் அட்டைபடம் அருமை!

    ReplyDelete
    Replies
    1. உண்மைய சொல்லனும்னா ஒரிஜினலை விட நமது அட்டைபடம் சுப்பரோ சூப்பர்!

      Delete
  21. 1456 பக்கமாம் எடிட்டர் சார் மின்னும் மரணத்தை தள்ளி போட்டுட்டு இந்த Collection க்கு முயற்சி பண்ணலாம் போலிருக்கே

    ReplyDelete
    Replies
    1. ricky_tbm_Ramesh : ஒரு சிக்பில் கதையின் பெயர் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது நண்பரே...!

      மலையோடு மல்யுத்தம் !

      Delete
  22. 1 ரூபாயில் ஆரம்பித்த முத்து காமிக்ஸ் 1000ரூபாய்க்கு வை வெளிவர உள்ளது. நமது காமிக்ஸ் 1000 பக்க வெளியிடு அறிவிப்பு எப்போது?

    ReplyDelete
    Replies
    1. \\1 ரூபாயில் ஆரம்பித்த முத்து காமிக்ஸ் 1000ரூபாய்க்கு வை வெளிவர உள்ளது. நமது காமிக்ஸ் 1000 பக்க வெளியிடு அறிவிப்பு எப்போது?\\
      +1

      Delete
  23. Replies
    1. test உலகக்கோப்பை 2017ல். இப்போது odi ......

      Delete
  24. 10நாட்கள் கடுமையான வேலைக்கு பிறகு நேற்று தான் அம்பின் பாதை படிக்க முடிந்தது சார் . இரவு 11.50க்கு படித்து முடித்து விட்டத்தான் புக்கை கீழே வைக்க முடிந்தது சார் . ஆரம்பம் முதல் அப்படி ஒரு வேகம் சட சட .......... முதல் சுற்றைப்போல டீப்பான கதைக்களம் இல்லாததால் அடுத்த பாகத்தோடு முடிக்க இருப்பது புரிகிறது சார் . பெட்டி யின் அழகான ஓவியங்கள் என்னைப்பொறுத்து ஹைலைட் சார் . கிளைமாக்ஸ் பாகத்திற்கு வெயிட்டிங் சார் . அதுவும் வந்து உடன் 5பாகங்களை மீண்டும் படிக்க வேண்டும் சார் .

    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் : //பெட்டி யின் அழகான ஓவியங்கள் என்னைப்பொறுத்து ஹைலைட் //

      அன்னிகாவை மறந்து விட்டீர்களே ..!! :-)

      Delete
    2. ஆப்பிள் இருக்கும் போது தக்காளி எடுபடாமல் போவதில் வியப்பு ஒன்றும் இல்லையே சார் . ஹி. ..ஹி.....ரகசியம் நமக்குள் இருக்கட்டும் சார் .( ஈரோட்டு விழா அல்லது சேலம் விழா வில் என் வீட்டுக்காரி நமது ஸ்டாலுக்கு வரக்கூடும் ,அதனால் ஒரு முன்னெச்சரிக்கை அதான் சார் )

      Delete
  25. // படைப்பாளிகளோ - கடந்த டிசம்பரில் 1456 பக்க ராட்சச டைகர் தொகுப்பு ஒன்றினை 69 யூரோ விலையில் வெளியிட்டுள்ளனர் ! //

    சூப்பர் நியூஸ் விஜயன் சார்

    அப்ப உங்க கால் கட்டை விரலுக்கு
    வேலை வந்தாச்சுன்னு சொல்லுங்க :)

    இரத்தப் படலம் 856 பக்கம் தான் இதுவரை வந்த மிகப் பெரிய வெளியீடு
    என்று நினைத்ததுக்கு போட்டியாக
    1456 பக்கங்களில் அவர்கள் வெளியிட்டதால்
    ஒரு 2000 பக்கத்துக்கு
    நம்ம பங்குக்கு வெளியிடவேண்டும் சார்
    நன்றி :)
    .

    ReplyDelete
    Replies
    1. Prabakar T : //1456 பக்கங்களில் அவர்கள் வெளியிட்டதால் ஒரு 2000 பக்கத்துக்கு நம்ம பங்குக்கு வெளியிட வேண்டும்//

      ஒய் திஸ் கொலைவெறி நண்பரே ?

      Delete
  26. டியர் எடிட்டர் சர்ர்,
    மர்ர்ஷல் டைகரின் " வேங்கைக்கு முடிவுரையர?", " ரணகள ர்ரய்யிஐம்" இரண்டின் அட்டைப்படங்களும் சூப்பர். நம்மை முந்திக்கொண்டு அவர்கள் 1456 பக்க ராட்சத புளூபெர்ரியை வெளியிட்டிருக்கிறர்ர்கள் அவ்வளவே.அதுவும் 69€ விலையில். இப்போது வெளியிட்டரல் விற்பனை பிச்சுக்கும் என்று அவர்களுக்கு தெரியும். இப்போது நமக்குத்தரன் மின்னும் மரணம் வெளிவருகிறதே.

    ReplyDelete
    Replies
    1. Thiruchelvam Prapananth : நம்மை முந்திக் கொண்டு அவர்கள் வெளியிட்டு விட்டார்களா ? ஆவ்வ்...அவர்கள் தானே சார் படைப்பாளிகளே ?!! அதை மறக்கலாமா ?

      Delete
    2. டியர் எடிட்டர் சர்ர்,
      உண்மைதரன் ஸர்ர். அவர்கள் படைப்பரளிகள்தரனே. முன்பே வெளியிட்டு விட்டீர்கள். XIII 1-18 தொகுப்பு மட்டும் நரம் முந்திக்கொண்டு வெளியிட்டு உள்ளோம். படைப்பரளிகள் இப்போதுதரன் 4-5 ஆல்பங்கள் ஒன்று சேர்ந்து வெளியிட்டு வருகிறர்ர்கள்.

      Delete
  27. Small post.
    Is this the only book for match?

    ReplyDelete
    Replies
    1. V Karthikeyan @ இத்துடன் சேர்த்து பௌன்செரின் அடுத்த ஆல்பம் 3 பாக கதைகளுடன் வெளி வருகிறது!

      Delete
    2. Bouncer next issue already, thought thorgal would come next in graphic novel.

      Thanks parani

      Delete
    3. @ FRIENDS : டைகர் + பௌன்சர் + C.I.D ராபின் - March schedule !

      Delete
    4. எனக்கு என்னமோ நம்ப ஆசிரியர் பௌன்சர் கதை தொடருக்கு ஒரே மூச்சில் வசனம் எழுதி வெளி விட்ட பின்தான் (பௌன்சர்) தோர்கல் கதைகளை வெளி இடுவார் என நினைக்கிறன்!

      Delete
  28. எடிட்டர் சார், மார்ஷல் டைகரின் இந்த இறுதிப்பாகங்களுக்கு முதல் பாகத்தின் கதையை முன்னுரையாகக் (சில வரிகளில்) கொடுக்கும் ஐடியா இருக்கிறதா சார்?

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : ஒஹ்..யெஸ் ! உண்டு !

      Delete
  29. விஜயன் சார்,
    // படைப்பாளிகளோ - கடந்த டிசம்பரில் 1456 பக்க ராட்சச டைகர் தொகுப்பு ஒன்றினை 69 யூரோ விலையில் வெளியிட்டுள்ளனர் ! //

    இது டைகரின் அனைத்து கதைகளுமா? அல்லது மின்னும் மரணம் மட்டுமா?

    ReplyDelete
    Replies
    1. அனைத்தும் சேர்த்துதான் சார்

      Delete
    2. @ FRIENDS : மொத்தம் 28 பாகங்களின் தொகுப்பு : இளம் டைகர் + இரத்தத் தடம்+ தங்கக் கல்லறை + மின்னும் மரணம் + மிஸ்டர் டைகர் கதைகளின் அணிவகுப்பு !

      Delete
    3. விஜயன் சார்,
      // மிஸ்டர் டைகர் //
      இது என்ன புதுசா இருக்கு! இது நமது முத்து காமிக்ஸில் வரவில்லை என்றால் இதனை அடுத்த வருடன் வெளி இடவேண்டும்!

      Delete
    4. முத்து 350ஆவது இதழாக வரப்போவது இந்த 5 பாகங்களும் தான் நண்பரே :))
      .

      Delete
    5. Prabakar T @ அப்படியா! நன்றி!

      Delete
  30. விஜயன் சார், வேங்கைக்கு முடிவுரையா கதையின் டீசர் பக்கத்தின் ஓவியம் மற்றும் வண்ணத்தை விட ரணகள ராஜ்யத்தின் டீசர் பக்கம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது!

    ReplyDelete
  31. //நமது சமீபத்திய ராசியோ - என்னவோ இப்போதெல்லாம் முக்குக்கொரு முத்தக் காட்சி அமைந்து போகின்றது கதைகளில் ! இதனிலும் அந்த பாணி தொடர்கிறது - 'தளபதி'யின் 'பச்சக்' சாகசங்களோடு ! எதெதிலோ 'தலை' - நம் தளபதிக்குக் கடும் போட்டி தரலாம் தான் ; ஆனால் இந்த டிபார்ட்மெண்டில் தளபதியை அடித்துக் கொள்ள வாய்ப்பே இல்லை என்பது நிச்சயம் ! ///

    எங்க தல எந்த விசயத்திலும் யாருக்கும் குறைஞ்ச ஆளிலில்லைன்னு நிரூபிக்கப்போறோம். 'வல்லவர்கள் வீழ்வதில்லை'யின் இறுதிப்பக்கங்களில் சரமாரியாக டுமீல் டுமீல் ரட்டட்டட் சத்தங்கள் வருமே, அதைப்போலவே ஒரு அத்தியாயம் முழுக்க 'இச்ச், இம்ப், பச்ச்சக்' சத்தங்களால் நிரம்பியிருக்கறா மாதிரி ஒரு டெக்ஸ் கதையை தயார் பண்ணும்படிகேட்டு போனெல்லிக்கு ஒரு கடுதாசி எழுதப்போறோம்!
    ரேஞ்சர்கள் காய்ஞ்சு கிடப்பதில்லை!

    ReplyDelete
  32. தலையாவது
    தளபதியாவது

    கதை எங்கே ரசிக்க முடியுதோ
    அங்கே உள்ளது உயிரும் , மனமும்
    அப்பிடியே
    நாம கஷ்டப்பட்டு கட்டுற சந்தா பணமும்

    ReplyDelete
    Replies
    1. தலையாவது
      தளபதியாவது +1111

      Delete
  33. ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு,

    இந்த பிப்ரவரி மாதம் முத்துகாமிக்ஸ் எதுவும் வரவில்லையே என்ற சின்ன ஆதங்கத்தை ஈடுகட்டும்விதத்தில் தங்கத்தலைவன் 'கேப்டன் டைகர்'-ன் புது அவதாரமான 'மார்ஷல்' மார்சு மாதம் வரவிருப்பது பற்றிய உற்சாக அறிவிப்பு வந்திருந்தாலும்....
    முத்துகாமிக்ஸ் என்றால் இன்றைய தலைமுறையினருக்கு 'கேப்டன் டைகர்' என அடையாளமாகவே மாறிவிட்ட தங்கதலைவனின் முதல் பிரவேசமான 'தங்க கல்லறை' மறுபதிப்பும் மார்ச்சில் வந்துவிட்டால்....
    'டைகர் ஜுரம்' மார்ச்சில் துவங்கி, தமிழ் புத்தாண்டு வரை தொடர வசதியாக இருக்குமே சார்...!
    அதற்கு வாய்ப்பு உண்டா சார்..?

    2015 அட்டவணையில் வந்த 'மார்ஷல் டைகர்' டீசர் பார்க்க...இங்கே'கிளிக்'

    ReplyDelete
    Replies
    1. mayavi.siva : "தங்கக் கல்லறை" தான் ஏற்கனவே விற்பனையாகி வருகின்றதே..! 2 வாரங்களுக்கு மேலாச்சே..!

      Delete
    2. நம்பவேமுடியவில்லை....இது பற்றிய அறிவிப்பு எங்கும் வந்ததாக தெரியவில்லையே...!
      ஆக 'டைகர் ஜுரம்' ஆரம்பம் ஆயிடிச்சாங்க...சூப்பர்..!!

      Delete
    3. wild west ஸ்பெஷல்(மரண நகரம் மிசௌரி) கூட விற்பனைக்கு வந்துவிட்டதா ஸார்..?

      Delete
    4. ஆக நீங்க காமிக்ஸ் பக்கம் கரை ஒதுங்கி நீண்ட நாட்களாகி விட்டது போலிருக்கே?! மாயாவி சார்

      Delete
  34. //நமது சமீபத்திய ராசியோ - என்னவோ இப்போதெல்லாம் முக்குக்கொரு முத்தக் காட்சி அமைந்து போகின்றது கதைகளில் ! இதனிலும் அந்த பாணி தொடர்கிறது - 'தளபதி'யின் 'பச்சக்' சாகசங்களோடு ! எதெதிலோ 'தலை' - நம் தளபதிக்குக் கடும் போட்டி தரலாம் தான் ; ஆனால் இந்த டிபார்ட்மெண்டில் தளபதியை அடித்துக் கொள்ள வாய்ப்பே இல்லை என்பது நிச்சயம் ! ///

    :D

    ReplyDelete
    Replies
    1. not yet seaGuitar :( me and my family far from cbe,will reach home town by next week end, hope to order one during that time.

      Delete
  35. டியர் எடிட்டர் சர்ர்,
    இன்டர்நெட் குறைவரன இடத்தில் இருந்தரலும் பதிவிட்ட உங்களுக்கு பெரியதொரு யே! எப்போ வருவீர்கள் ஸர்ர்?

    ReplyDelete
  36. வலைப்பூ நீங்கள் வந்தரல் மட்டுமே களைகட்டும். அதுதரன்

    ReplyDelete
  37. எல்லாரும் நல்லா இருக்கீங்களா அப்பு.?

    காலையில இருந்து அடிலெய்ட் ல இருந்தேன்.

    டைகரோட பதிவு போல இருக்கு.
    என்கிட்ட சொல்ல ஒரே ஒரு கருத்துதான் இருக்கு.!

    வல்லவர்கள் வீழ்வதில்லை.

    ReplyDelete
    Replies
    1. பெண்களிடமும் ....:-)

      Delete
    2. இப்படி சொன்னாலும் டெக்ஸ் இப்ப உயிரோட இருக்க காரணமே ஒரு பொண்ணுதானே ..

      காமிக் வைன் உள்ளார முன்னொரு நாள் எட்டி பாத்தப்ப இப்படித்தான் போடபட்டிருந்தது

      நவஜோ தலைவர் ரெட் ஆரோ கிட்ட தனியா மாட்டி கிட்ட டெக்ஸ் மரண தண்டனை விதிக்க பட தலைவரின் மகள் லிலித் தான் சிறிதும் நேசிக்காத டெக்ஸை சாவின் பிடியில் இருந்து காப்பாற்ற அவரை மணம் புரிகிறாள் ...

      பின்னர் காலப்போக்கில் மனமொத்த தம்பதியாகின்றனர் ...

      வல்லவர்களும் வீழ்வதுண்டு ...உண்மையான அன்பின் முன்னால் ....

      Delete
    3. // நவஜோ தலைவர் ரெட் ஆரோ கிட்ட தனியா மாட்டி கிட்ட டெக்ஸ் மரண தண்டனை விதிக்க பட தலைவரின் மகள் லிலித் தான் சிறிதும் நேசிக்காத டெக்ஸை சாவின் பிடியில் இருந்து காப்பாற்ற அவரை மணம் புரிகிறாள் ... //
      இது என்ன கதாபா? பேர சொல்லுங்க? நான் படிச்ச மாதிரி ஞாபகம் இல்லை!

      Delete
    4. @ Parani from Bangalore
      அது ஒரு மூன்று பாக கதை.
      இரத்த ஒப்பந்தம்
      தணியாத தணல்
      காலன் தீர்த்த கணக்கு

      (கதைகளின் பெயர்களை ஞாபகத்தை வைத்து சொல்லி இருக்கிறேன். சரியாக இருக்கும் என்றே நினைக்கிறேன்)

      Delete

    5. Lilith compare per la prima volta nella'avventtura "Il patto di sangue" (nn° 7/8)
      la notizia della sua morte viene data nella storia pubblicata immediatamente dopo "La banda dei Dalton", dove apprendiamo che è avvenuta un anno prima.
      Lilith riappare in flashback nella storia "Il giuramento" (nn° 104/106) in cui apprendiamo le esatte circostanze della sua morte (prima di allora sapevamo solo, genericamente, che era morta durante un'epidemia)
      Riappare ancora in "Furia Rossa" (nn° 384/386, ovvero la storia del primo incontro tra Tex e Tiger Jack, ambientata prima de "Il giuramento".
      L'ultima volta che è apparsa è stato nella storia "Il sentiero dei ricordi", ambietanta non molto dopo "Il patto di sangue"

      Tralascio le non poche volte in cui è stata semplicemente menzionata. La più rilevante è "La grande invasione", ambientata subito dopo la nascita di Kit, ma in cui né lui né Lilith appaiono.

      La sequenza cronologica delle apparizioni di Lilith è, quindi, per ora, la seguente:

      "Il pattto di sangue"
      "Il sentiero dei ricordi"
      "Furia rossa"
      "Il giuramento"

      Delete
    6. I feel very archivist when I answer envi tipoi of questions. Lilith appears for the first time nella'avventtura "The blood pact" (nos 7-8) the news of his death is given in the story published immediately after "The gang of Dalton " , where we learn that took place a year before. Lilith reappears in flashbacks in the story "The Oath" (nos 104/106) in which we learn the exact circumstances of his death (before then we only knew, generically, that she was dead during an outbreak) reappears again in "Red Fury" (nos 384/386, or the story of the first meeting between Tex and Tiger Jack, set before de "The Oath" . The last time he appeared was in history "Stealing Home" , ambietanta not long after "The blood pact" not omit the few times that was just mentioned. The most important is "The great invasion" , set just after the birth of Kit, but where neither he nor Lilith appear. The chronological sequence of the apparitions of Lilith is, therefore, for now, the following: "The pattto blood" "Stealing Home" "Red Fury" "The Oath"trapper.gif

      Delete
    7. டெக்ஸ் வில்லர் ஃபோரத்திலிருந்து ..இத்தாலி ,ஆங்கில டைட்டில்ஸ்

      Delete
    8. கிட் ஆர்ட்டின் KANNAN @ அப்ப இந்த புத்தகம்கள் என்னிடம் உள்ளது! இந்த மாதம் (மீண்டும்) படித்து விட வேண்டியதுதான்!

      Delete
    9. selvam abirami @ சாரி! கொஞ்சம் தமிழ்ல சுருக்கமா சொன்ன படிக்க எளிதாக இருக்கும்!

      Delete
    10. சரி பரணி !...நேரமின்மையின் போதுதான் இந்த காப்பி பேஸ்ட் வேலை செய்ய நேருகிறது ..தமிழில் எழுதுவதையே நான் விரும்புகிறேன் ....இனி இங்கு தமிழில் மட்டுமே ...:-)

      Delete
  38. வணக்கம் எடி சார்,தளபதியின் அட்டைப்படம் சூப்பர்,கதையும் கலக்கும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  39. 2016 க்கு இரத்தக் கோட்டையை வண்ணத்தில் அறிவியுங்கள் சார்.!
    மொத்த கலெக்ஷன் எல்லாம் நமக்கு சரிபட்டு வருமா என தெரியவில்லை.
    ஏற்கனவே டைகர் இந்த வருடம் ஓவர் டோஸாக தெரிகிறது.
    அதுவும் சுட்ட பலகாரத்தையே மீண்டும் மீண்டும் சுடுவது போல் இருக்கிறது.
    (ஒரு கட்டத்தில் பலகாரம் கருகிப் போய்டுமே என்ற நல்ல எண்ணம்தான் நம்புங்கள் சார். ஹிஹிஹி.)

    ReplyDelete
    Replies
    1. // சுட்ட பலகாரத்தையே மீண்டும் மீண்டும் சுடுவது போல் இருக்கிறது. //
      அப்படி செய்தால் பலகாரம் கண்டிப்பாக கருகி போய்விடும். அதனால இரத்தக் கோட்டையை ஒரு 2 வருடம் தள்ளி போட்டா நல்லா இருக்கும் என்பது எனது எண்ணம்!

      Delete
    2. // 2016 க்கு இரத்தக் கோட்டையை வண்ணத்தில் அறிவியுங்கள் சார்.! //

      உங்க மன தைரியத்த கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும் கண்ணன் ஜி :)
      .

      Delete
    3. கிட் ஆர்ட்டின் KANNAN : //அதுவும் சுட்ட பலகாரத்தையே மீண்டும் மீண்டும் சுடுவது போல் இருக்கிறது. //

      Given a choice - அந்த இரும்புச் சட்டியையே குப்புறப் போட்டு விட்டு, "மறுபதிப்புப் பலகாரக் கடைக்கு" லீவு விட்டு விடுவேன் ! ஆனால் பஜ்ஜியும், வடையும் போல மறுபதிப்புகளும் நமக்கு இன்றியமையா விஷயங்களே என்றான பின்னே, கடை தொடர்வது அவசியமாகிறதே !! இப்போதைக்கு வேறு மெகா மறுபதிப்புத் திட்டங்கள் ஏதும் நிச்சயமாய்க் கிடையாது என்பது மட்டும் உறுதி !

      Delete
    4. // சுட்ட பலகாரத்தையே மீண்டும் மீண்டும் சுடுவது போல் இருக்கிறது. //
      அப்படி செய்தால் பலகாரம் கண்டிப்பாக கருகி போய்விடும். அதனால இரத்தக் கோட்டையை ஒரு 2 வருடம் தள்ளி போட்டா நல்லா இருக்கும் என்பது எனது எண்ணம்!//
      +1

      Delete
  40. எடி சார்,ஒரு சிறு வேண்டுகோள் தளபதியின் மி.மரணம் வெளியிடு சென்னையில் ஏப்ரலில் எந்த தேதியில் என்று முன்னரே கூறி விட்டால் தொலைவில் இருந்து வருபவர்களுக்கு பயணப்பதிவு மேற்கொள்ளவும்,பயணத் திட்டமிடலுக்கும் சௌகர்யமாக இருக்கும்.

    ReplyDelete
  41. Thala Thalapathy pathi getha pesumpothelam......LARGOvum SHELDONum anga enama sathamnu vadivelu comedy tonela kekura mari irukura feeling enaku mattum thana???? Chumma pesitrunthom MAMA???

    ReplyDelete
  42. விஜயன் சார், எனக்கு என்னமோ மெகா மறுபதிப்புகளை சரியான இடைவெளி இட்டு வெளி இடுவது நலம்; என்னை பொருத்தவரை 2 வருடத்திற்கு ஒரு மெகா மறுபதிப்பு என திட்டமிடலாம்.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : மெகா மறுபதிப்புகளுக்கு உகந்த கதைகள் இருந்தாலொழிய அதற்குள் கால் விடுவதாய் நிச்சயமாய் எண்ணமே இல்லை ! "மின்னும் மரணம்" அதற்குத் தகுதியான தேர்வு என்பதால் ஒ.கே. ஆனது ; மற்றபடிக்கு மறுபதிப்பு என்பது நமது தற்போதைய ரூ.50 பாணிகளிலேயே தொடரும் !

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. விஜயன் சார், நல்ல முடிவு! இதனை நான் வரவேற்கிறேன்! நாம் சரியான திசையில் பயணிக்கிறோம்!

      Delete
  43. //எடி சார்,ஒரு சிறு வேண்டுகோள் தளபதியின் மி.மரணம் வெளியிடு சென்னையில் ஏப்ரலில் எந்த தேதியில் என்று முன்னரே கூறி விட்டால் தொலைவில் இருந்து வருபவர்களுக்கு பயணப்பதிவு மேற்கொள்ளவும்,பயணத் திட்டமிடலுக்கும் சௌகர்யமாக இருக்கும்.//- நானும் கேட்க நினைத்தேன் சார் . நாங்கள் நண்பர்கள் பலரும் வர ப்ளான் சார் . ட்ரெயின்ல டிக்கெட் போட விழா தேதி வேண்டும் சார் .

    ReplyDelete
  44. அறிவரசு ரவி & விசயராகன் சார்
    இதை படியுங்களேன்

    //
    Parani Parani from Bangalore15 February 2015 at 11:36:00 GMT+5:30
    விஜயன் சார், மின்னும் மரணம் வெளி ஈடும் தேதி பற்றி முடியுமா? வெளியூரில் இருந்து வரும் நமது காமிக்ஸ் வாசகர்கள் தங்கள் பயண சீட்டை முன்பதிவு செய்ய வசதியாக இருக்கும்.

    Reply
    Replies

    Vijayan15 February 2015 at 20:02:00 GMT+5:30
    Parani from Bangalore : தயாரிப்புப் பணிகளை ஓரளவுக்கு முடித்துக் கொண்டு சொல்கிறேனே..ப்ளீஸ் !from Bangalore15 February 2015 at 11:36:00 GMT+5:30
    விஜயன் சார், மின்னும் மரணம் வெளி ஈடும் தேதி பற்றி முடியுமா? வெளியூரில் இருந்து வரும் நமது காமிக்ஸ் வாசகர்கள் தங்கள் பயண சீட்டை முன்பதிவு செய்ய வசதியாக இருக்கும்.

    Reply
    Replies

    Vijayan15 February 2015 at 20:02:00 GMT+5:30
    Parani from Bangalore : தயாரிப்புப் பணிகளை ஓரளவுக்கு முடித்துக் கொண்டு சொல்கிறேனே..ப்ளீஸ் ! ///

    ReplyDelete
    Replies
    1. தேங்யூ ஜெயசேகர் . தேதி மற்றும் விழா இடம் தெரிந்து கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்கிறோம.

      Delete
  45. காமிக்ஸ் விடுகதை
    கடல் தடுப்பு சுவற்றில் ஒரு பாம் ..............வெடிக்கிறது ....
    கடல் ஊருக்குள் ஊழி தாண்டவம் ஆடுகிறது ...........
    ஒரு சிறுவனும் கதாநாயகனும் ......வில்லன்களிடம் இருந்து தப்பிக்க நொடிக்கு நொடி போராட்டம் .......
    அந்த கதை என்ன ....?
    விலை என்ன ...?

    ReplyDelete
    Replies
    1. என்ன ..என்ன ..என்ன ..காமிக்ஸ் கே பி எஸ்

      :-) பழைய புக் லாம் படிச்சிருந்தா படக் னு பதில் சொல்லி புடுவேன் ..ஹூம் .....

      Delete
    2. கேக்கோணும்..........வேணும் ஆசாநேன்னு............. கேக்கோணும்

      Delete
    3. மந்திரி அவர்களே அந்த கதை
      ஆக்சன் ஹீரோ சைமன் தோன்றும் சாவதற்கு நேரமில்லை திகிலில் வந்த கதை
      எனக்கு மிகவும் பிடித்த கதை அது
      ஆரம்பம் முதல் கடைசி வரை only non stop action :))
      .

      Delete
    4. மதியில்லா மந்திரி : Jean Valhardi என்றதொரு நாயகரின் பிரான்கோ-பெல்ஜியக் கதை அது ! அந்த அட்டைப்படமும், நாயகரின் (ஒரிஜினல்) பெயரும் மாத்திரமே ஏன் மண்டையில் தங்கியுள்ளன ! கதை - ஊஹும் !!

      அப்புறம் அதுவொரு பாக்கட் சைஸ் இதழ் என்பதும் நினைவில் உள்ளது !

      Delete
    5. சார்....................... நீங்க............. உலகம் சுற்றும் அலிபாபா வில் வரும் கிப் கிப் பூதம் மாதிரி ..............
      VHF கருவி வெடிக்குது...
      கடல் ஊருக்குள்ள வருது .....
      சர்கஸ் கூடாரத்தில் மேலே ஓடும் சைமன் புலி துரத்தும் காட்சி.....
      கிளைடர் விமானம் முலம் துரத்தும் வில்லன்ஸ் ......
      மாங்க்ரூவ் காடுகளில் நடக்கும் படகு துரத்தல் ..............

      இது எதுவுமே உங்கள் நினைவு பேழையில் கழன்று விட்டால் இருக்கவே இருக்கு மறுபதிப்பு ,..ஹீ ஹீ

      Delete
    6. Prabakar T..........வாழ்த்துக்கள் ......

      Delete
    7. http://a404.idata.over-blog.com/600x531/1/96/55/28/2008/Follet_couleur/folletcouleur_11_valhardi.jpg

      Delete
    8. மதியியுள்ள மந்திரி அவர்களே...
      உங்கள் நினைவுகளை கிளற இது உதவுமா பாருங்கள்......இங்கே'கிளிக்'

      Delete
    9. mayavi. siva @ எப்படி, இது எல்லாம் முடியுது! என்ன ஒரு ஞாபக சக்தி!!

      Delete
    10. மாயாவி .....சார்
      அட பாட்டாவே படிச்சுடீங்க.........
      இந்த புக் என்கிட்டே இருக்கு ........
      பத்திரமா .... பத்திரமா .... பத்திரமா ....

      Delete
  46. ஷேவிங் பண்ண சிங்கம் என்னைக்கு வருது சார் .........?

    ReplyDelete
    Replies
    1. மதியில்லா மந்திரி : ஷேவிங் செய்த வேங்கையும் (2 ஆல்பம்) ; ஒற்றைக் கரத்தானும் (3 ஆல்பம்) இணைந்து மொத்தம் 280 பக்கங்கள் ! இவர்களோடு ராபினின் இதழும் கூட !

      So மார்ச்சின் துவக்கத் தேதிகளை இப்போதைக்கு நிர்ணயம் செய்துள்ளோம் !

      Delete
    2. ரின்டின் பசியோடு காத்து கிடக்கிறோம்

      Delete
  47. விஜயன் சார், போன மாதம் அதிகபடியான புத்தகம்களை கொடுத்து எங்களை திக்குமுக்கு ஆட வைத்த நீங்கள் இந்த மாதம் வெறும் 3 புத்தகம்களை கொடுத்தது, அடுத்த மாதம் எப்போது வரும் என இந்த மாதத்தின் முதல் வாரம் முதல் ஏங்க வைத்து விட்டது! படிக்க புதிய கதைகள் இல்லாததால் பழைய கதைகளை படித்து வருகிறேன் :-(

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : "மின்னும் மரணம்" என்ற மதிலை தாண்டி விட்டால் அப்புறமாய் தடைகள் எது ? இப்போதைக்கு அதன் பணிகளுள் நமது டீம் முழுவதும் மூழ்கிக் கிடப்பதால் வேறு எதிலும் கவனம் செலுத்த இயலவில்லை ! இன்னமும் ஒரே மாதம் தான் !

      Delete
  48. நமது முன் அட்டை மிக அருமை ( ஒரிஜினலைவிட )
    ஒரிஜினலில் தண்ணீரை கடந்து செல்வது மட்டும் தான் தெரிந்துகொள்ள முடிகிறது
    நமது படத்தில் பின்புலம் மிக அருமையாக உள்ளது

    மாலையப்பன் சார் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய வாழ்த்துக்கள் சார் :))
    .

    ReplyDelete
    Replies
    1. Prabakar T : இது ஓவியர் வான்சின் ஒரிஜினல் சித்திரம் நண்பரே...! நமது டிசைனர் பொன்னனின் கைவண்ணத்தில் சற்றே மெருகூட்டியுள்ளது மட்டுமே நமது பங்களிப்பு !

      Delete
  49. யாரையும் காணோம்

    மார்ஷலோட மூஞ்சிய பாத்ததும் பயந்திட்டீங்களா டெக்ச்ஸ் ரசிகர்களே

    ReplyDelete
  50. அட்டைப்படம் அட்டகாசமாக வந்துள்ளது. அதிலும் பின்னட்டையில் வான்ஸ்சின் கைவண்ணத்தில் தளபதி சும்மா பளிச், பளிச். அந்த Costume செம்ம.

    'தலை' முத்தங்களைப் பற்றி கனவில் மட்டுமே நினைக்கும் ஒரு சங்கதியாகி விட்டது ஒரு புறமிருந்தாலும், மற்றொரு விஷயத்தை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இதுவரையில் 600+ சாகசங்களிலும் வெறும் 2 ஜோடி மஞ்சள் சட்டையும், நீலக் குழாயும் (டமால், டுமீல்க்கு மத்தியில் சலவைக்கு போடக் கூட நேரமிருக்கிறதோ என்னவோ...) மட்டுமே வைத்துக்கொண்டு எதிரிகளை எல்லாம் 'தலை' என்றாலே தலைதெறிக்க ஓட வைத்ததெல்லாம் (நம்மளையல்ல) வரலாறு தானே...?

    படைப்பாளிகள் ஏதேனும் மனது வைத்து தளபதியைப் போல் அட்டகாசமான Costume-ல் உலவ விடுவதற்கு வரவிருக்கும் தலை கதைகளில் ஏதேனும் ட்விஸ்ட்சை நுழைக்காத வரை, இதுவும் கனவில் மட்டுமே நினைக்கும் ஓர் சங்கதி 2, தலையைப் பொருத்தவரையில்...

    ReplyDelete
    Replies
    1. MH Mohideen : 'மாற்றங்கள் வேண்டாமே..!!' என்ற அபிப்பிராய ஒற்றுமையில் இத்தாலியர்கள் நம்மைப் போன்றவர்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது....!!

      45 ஆண்டுகளுக்கு முன்பான கதைகளை, அதே மொழியாக்கத்தோடு நாம் இன்றைக்கும் ரசிக்க விரும்புவதைப் போலவே 1948-ல் நடை போடத் துவங்கிய 'தலைக்கு ' உடுப்பில் கூட துளி மாற்றம் கொண்டு வர விரும்பாது உள்ளனர் போலும் !

      தளபதி இந்த மார்ஷல் காஸ்டியூமில் சூப்பர் என்பதில் சந்தேகமே கிடையாது !!

      Delete
  51. விஜயன் சார், ஒரு வழியாக நமது மின்னும் மரணம் ஏப்ரல் என்பது உறுதி செய்யபட்ட நிலையில் சிறுவர்களுக்கான (lion junior special) சிறப்பிதழை கோடை விடுமுறையில் (மே அல்லது ஜூன் முதல் தேதியில்) வெளி இட்டால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  52. சார் முன்னட்டை அருமை அதகளம் . அட்டை படம் .இர்னண்டாவது கதை அட்டை பீன்பக்கம் அட்டையாக உபயோகித்திருக்கலாம் .

    ReplyDelete
  53. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்2 February 2015 at 10:33:00 GMT+5:30

    saar,அட்டை படம் இரண்டுமே தூள் . இருந்தாலும் வண்ணச்சேர்க்கை அவர்களது சற்றே தூக்கல் நாமத்தை விட .ஷேல்டனும், லார்கோவுள் ,பதிமூன்றும் குறைந்து வருவது பகீர்.இப்போதே சிறுக சிறுக ஸ்பைடர் மென் , சூப்பர் மேன்களை திணித்து எங்களை தயார் படுத்தலாமே .
    ReplyDelete
    Replies

    கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்2 February 2015 at 10:36:00 GMT+5:30

    ஆனால் ளார்கோ., ஷேல்டனுக்கு இணையாய் யாரேனும் வேண்டும் .அன்று ஸ்பைடரை இழந்தது போல ....ஏதோ வெறுமை தெரிகிறது ....வான் ஹாம்மேயின் பிற வெளியீடுகளை தொடரலாம்.
    Delete
    Prabakar T2 February 2015 at 12:26:00 GMT+5:30

    வாங்க ஸ்டீல் கிளா ஜி

    ரொம்ப நாளைக்கு அப்புறம்

    களத்துல இறங்கியிருக்கீங்க :))
    .
    Vijayan2 February 2015 at 22:21:00 GMT+5:30

    கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : THORGAL கூட வான் ஹாம்மேவின் படைப்பு தானே !
    saar மரணம் மறந்த மனிதர்கள் ....லேடி s வெளிட்லாம் . நண்பர்கள் சிலர் பிடிக்கவில்லை என கூரீனாலும் நாம் தமிழில் ரசிக்கும் வாய்ப்பு நிச்சயம் .ஸ்பைடர் போல

    ReplyDelete
  54. //மெகா மறுபதிப்புகளுக்கு உகந்த கதைகள் இருந்தாலொழிய அதற்குள் கால் விடுவதாய் நிச்சயமாய் எண்ணமே இல்லை ! "மின்னும் மரணம்" அதற்குத் தகுதியான தேர்வு என்பதால் ஒ.கே. ஆனது ; மற்றபடிக்கு மறுபதிப்பு என்பது நமது தற்போதைய ரூ.50 பாணிகளிலேயே தொடரும் !//
    கேட்டீர்களர நண்பர்களே! மறுபதிப்புக்கு உகந்த கதைகளரக கொஞ்சம் சொல்லுங்களேன் பிளீஸ்? உங்கள் புண்ணியத்தில் கொஞ்சம் மறுபதிப்புகள் வரட்டுமே? கோல் இல்லரத பயணமர? தடைகள்தரனே எமது பயணத்துக்கு வலுவூட்டுபவை.

    ReplyDelete
  55. 1.C.I.D. லாரன்ஸ் 2.பனிக்கடலில் பயங்கர எரிமலை 3. இமயத்தில் மாயாவி 4.உறைபனி மர்மம் 5.தலைகேட்ட தங்கபுதையல் 6.குரங்கு தேடிய கொள்ளையர் புதையல் 7.வழிப்பறிக் கொள்ளை 8.மூளைத்திருடர்கள் 9.சதிகாரர் சங்கம் 10.காணாமல் போன வாரிசுகள் .................

    ReplyDelete
  56. மார்ச் மாத புத்தகத்தில் நம்ப கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் ஆசிரியருக்கு எழுதிய கடிதம் வாசகர் கடிதம் பகுதியில் வர போகுதுன்னு நினைக்கிறன்!

    விஜய் எதுக்கும் நம்ப ஸ்டீலோட கடிதத்த படிக்க உங்கள தயார் செய்துகொங்க!

    ReplyDelete
    Replies
    1. @ Parani from Bangalore

      எதிர்காலத்தை கணிப்பதில் உங்களை அடிச்சுக்க ஆள் கிடையாது நண்பரே! அப்படிக் கணிச்சுதானே விலையில்லா சந்தாவையும் வென்றிருக்கிறீர்கள்!

      அதெல்லாம் சரி... நம்ம ஸ்டீலின் கடுதாசிய படிச்சதுக்கப்புறம் என்னோட நிலைமை என்னவாகும்னும் கொஞ்சம் கணிச்சுச் சொல்லீட்டிங்கன்னா அதற்குத் தகுந்தமாதிரி என்னைத் தயார் பண்ணிக்குவேன்... :D

      Delete
    2. Erode VIJAY @ என்ன அந்த கடிதத்த படிச்ச பிறகு இந்த பக்கம் வர ஒரு வாரம் ஆகலாம், அதான் படிச்சி புரிய... அப்பறம் .... புரிந்தது செரிமானம் ஆக! :-)

      Delete
  57. Edi sir-Whether there is any chance for Reprint for the following TEX Classics like 1. Dragon Nagaram, 2.Iratha muthirai , 3.Maranamul etc.....

    ReplyDelete
  58. வணக்கங்கள் நண்பர்களே,

    வெகுநாட்களாக செய்ய நினைத்த ஒரு முறைபடுத்தும் முயற்சி. முதல் கட்டமாக, சன்சைன் லைப்ரரி & கிராபிக்ஸ் நாவல் ஆகிய இரண்டிலும் வெளிவந்த காமிக்ஸ் புத்தகங்களின் அட்டைபடங்கள்,வெளிவந்த ஆண்டு, அளவு,பக்கங்கள் என சின்ன தகவல்களுடன் ஒழுங்கு படுத்தியுள்ளேன்.

    பின் வரும் காலங்களிலோ, புதிய வாசகர்களுக்கோ வெளிவந்துள்ள புத்தங்களின் வரிசைகள் தெரிந்துகொள்ள உதவும் ஒரு சின்ன முயற்சி தான் இது. இதன் பயன் கூட்ட வேறு எந்த வகையில் மாற்றங்கள்,தகவல் சேர்க்கலாம் என உங்கள் கருத்துக்களை தெரிவித்தால், என்னால் முடிந்த முயற்சிகள் செய்வேன்...!

    அடுத்து வரும் நாட்களில் லயன்,முத்துகாமிக்ஸ் பட்டியல்கள் தனித்தனி பதிவாக என்றும் பயன்படும்படியான முயற்சிகள் மேற்கொள்ளயுள்ளளேன்...! இப்போதைக்கு முதல் கட்டம் பார்க்க....இங்கே'கிளிக்'

    ReplyDelete
    Replies
    1. பல நூற்றாண்டுகளூக்கு பிறகு இங்கே வந்து, இங்கே க்ளிக் போட்டுள்ள காமிக்ஸ் களஞ்சியம், கலியுக கண்ணன் ,எங்கள் ஆருயிர் அண்ணன் மாயாவி சிவா அவர்களை வரவேற்று இங்கே மட்டுமல்ல வேறு எங்கேயும் க்ளிக் போட தெரியாத காரணத்தால் இங்கேயே வரவேற்று வாழ்த்தி வணங்குகிறோம். மேலும் அண்ணன் பலஇங்கே க்ளிக்குககளை போட்டு கூடிய விரைவில் ஆயிரமாவது இங்கே க்ளிக்கை போட வேண்டி பிரியாணி சாப்பிட்டு பிரார்த்திக்கிறோம்.


      இப்படிக்கு

      அண்ணனின் விழுதுகள்.
      சேலம் கிளை.

      Delete
    2. @ கிட் ஆர்ட்டின் KANNAN

      அடாடா...என்ன ஒரு நகைசுவையான பாராட்டுகலந்த கிண்டல்,நையாண்டி வசனம்...! மனம் நோகாத சிரிப்புட்டும் இந்த திறமை மிக அறியவிஷயம் நண்பரே...! உங்களுக்காகவே....இங்கே'கிளிக்'

      Delete
  59. டியர் எடிட்டர் சர்ர்,
    நேற்று இரவு, உங்கள் பர்ர்ஷல் வந்து கிடைத்தது. இந்த மரத 3 இதழ்களுடன் சேர்த்து இந்த வருட கரட்லரக்குடன் சேர்த்து " கரவல் கழுகு" உம் சேர்த்து மிகச்சரியரன முகவரிக்கு அனுப்பி உள்ளர்ர்கள். தரங்ஸ் ஸர்ர்! சூப்பர். இந்த வருட கரட்லரக் ஆனதும் ஒவ்வொன்றும் கதை பேசுகின்றன .

    ReplyDelete
  60. புதிய பதிவை நாளைக்கே போட்டுவிடுங்கள் சார்.
    சண்டே சிட்னியில் ஒரு சின்ன வேலை இருக்கு.
    அதுமட்டுமின்றி இந்த வாரம் ப்ளாக்கே ரொம்ப டல்லா இருக்கு. காரணம் என்னவா இருந்தாலும் பரவாயில்லை. ஆனா டைகர்தான் காரணம் என்று தயவு செய்து யாரும் சொல்லிடாதிங்க.
    இந்த சோம்பலை போக்க நாளைய பதிவில் பௌன்சரின் "சர்ப்பங்களின் சாபம் " டீஸர் மற்றும் தகவல்களை வெளியிட்டு தளத்தை சுறுசுறுப்பாக்குங்கள்.
    அப்படியே ராபினைப் பற்றியும் ஒன்றிரண்டு வரிகளை தூவி பதிவை போடுங்கள்.
    கார்ட்டூன் ஷ்பெசல் மற்றும் டைகர் ஷ்பெசல் சந்தா மற்றும் வெளியீட்டு தேதிகள் போன்றவற்றையும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. அலோ மிஸ்டர்... விட்டா பதிவையும் நீங்களே போட்டுடுவீங்க போலிருக்கே...

      ஏன் நாளைக்கு? இன்னிக்கே ஒரு பதிவு போட்டால் படிக்கவா மாட்டோம்? ;)

      Delete
    2. ஹலோ மிஸ்டர் நாளைக்கு மெல்பேர்ண் மைதானத்தில் தானே மேட்ச் ? சிட்னி யில் கிடையாது . இன்றைய இரவு பதிவு போட்டால் பரவாயில்லை . இந்த வாரம் மட்டும் . அடுத்து ஞாயிற்று கிழமை ல இந்தியாவுக்கு மேட்ச் கிடையாது . பைன்ல் போனாத்தான் .......உண்டு

      Delete
    3. ஹலோ சிஸ்டர்., நான மேட்சு பாக்கப்போறதா சொல்லவே இல்லையே.!
      அப்புறம் மெல்போர்னா இருந்தா என்ன, , பெர்த்தா இருந்தா என்ன.?

      மைண்ட் வாய்ஸ்.:-
      ஸ்ஸ்ஸ் யப்பா, தப்பிச்சோம். மீசைல மண் ஒட்டலே.:)

      Delete
  61. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!

    ReplyDelete