நண்பர்களே,
வணக்கம். 'கல்யாணத்தைச் செஞ்சு பார்...வீட்டைக் கட்டிப் பாரு...! ' என்று முதன்முறையாக பெருமூச்சு விட்டுக் கொண்ட புண்ணியவான் யாரோ தெரியாது ; ஆனால் அவர் அனுமதித்தால் - 'வருஷத்தின் இறுதி மாதங்களில் ஒரு வண்டி காமிக்ஸ் இதழ்களைத் திட்டமிட்டுவிட்டு ; தொடரும் நாட்களுக்கும் ஒரு அம்பாரப் புத்தகங்களை அட்டவணைக்குள் நுழைத்து விட்டு முழி பிதுங்கிப் பாரு !' என்ற வரிகளையும் சேர்ப்பதில் தப்பில்லை என்று சொல்லுவேன் ! தினுசு தினுசாய்க் கூத்துக்கள் கட்டுவதற்கு நாம் புதியவர்கள் அல்ல தான் ; ஆனால் டிசம்பர் '14 + ஜனவரி 15 -க்கான அட்டவணைகள் நமது அளவுகோள்களின்படிக் கூட ஓவரோ ஓவர் ! என்பதில் ஐயமில்லை ! So - ஒரு வழியாய் இந்தாண்டின் இறுதி வெளியீட்டின் பணிகளை முடிக்கும் இந்தத் தருவாயில் அந்நாட்களது ரயில் இன்ஜினைப் போல 'உஸ்ஸ்ஸ்' என்ற பெருமூச்சு விடுவதைத் தவிர்க்க இயலவில்லை ! இதோ 'நித்தமும் குற்றம்' செய்யும் இத்தாலிய anti -hero டயபாலிக்கின் அட்டைப்படத்தின் முதல் பார்வை !
முன்னட்டையில் கதைத் தலைப்பின் லெட்டெரிங்க் பாணியிலும், அளவிலும் கொஞ்சம் மாற்றங்கள் செய்துள்ள போதிலும், அந்த revised file வெளியூரில் சுற்றித் திரியும் என்னிடம் தற்சமயம் கையில் இல்லை ; நாளை ஊர் திரும்பியவுடன் அதனை replace செய்கிறேன் ! ஒரிஜினல் பதிப்பின் அட்டைப்பட டிசைனை லேசான பின்னணி வர்ண மாற்றங்களோடு அப்படியே பயன்படுத்தியுள்ளோம். பின்னட்டையோ நமது ஓவியரின் தயாரிப்பு ! சொல்லப் போனால் மாலையப்பனின் ஓவியத்தை முன்னேவும், ஒரிஜினலைப் பின்னேவும் போடத் தான் திட்டமிட்டிருந்தேன். ஆனால் KING ஸ்பெஷல் அட்டைப்படத்தில் எழுந்த - 'முன்னாடி தேவலை -பின்னாடி தேவலை ! ' பாணிச் சர்ச்சைக்கு திரும்பவும் இடம் தரப் பிரியப்படாமல் ஓசியான ஒரிஜினலை முன்னேவும், காசு கொடுத்துப் போட்டு வாங்கியதை பின்னேவும் இடம்பெயர்த்து விட்டேன் ! கதைப் பக்கங்களின் இத்தாலிய மொழிபெயர்ப்பு ரொம்பவே தாமதம் ஆகிப் போனதால் - இதர பணிகள் நிறைவு பெற்றிட இன்னும் இரண்டல்லது, மூன்று நாட்கள் ஆகிடும் !
ஒரு மாதிரியாய் 2014-ன் இதழ்களை பெரியதாய்ப் பல மாற்றங்களின்றி வெளிக்கொணர முடிந்ததில் நிம்மதி மேலோங்குகிறது. கடந்து வந்துள்ள நாட்களை அசை போடும் முயற்சியில் தலைக்குள் எஞ்சி நிற்பது ஒரு வண்ணமயமான blur மாத்திரமே ! வருஷத்தின் முதல் மாதத்தை சுருக்கம் விழுந்த செவ்விந்தியனின் முகத்தோடும் (யுத்தம் உண்டு ; எதிரி இல்லை !) ; மடிப்புக் கலையா ப்ரூனோ பிரசிலோடும் சென்னைப் புத்தக விழாவினில் துவங்கியது நேற்றைய நிகழ்வு போல் பட்டாலும், தொடர்ந்துள்ள 365 நாட்களில் சுமார் 42 கதைகளை தரிசித்திருக்கிறோம் எனும் போது நாட்களின் வேகம் வாய் பிளக்கச் செய்கிறது ! முன்னே ஒரு புத்தாண்டும் , இன்னும் விசாலமானதொரு அட்டவணையும் காத்திருக்கும் போதிலும், கொஞ்சமே கொஞ்சமாய் நேரம் எடுத்துக் கொண்டு கடந்து வந்துள்ள இந்தாண்டின் அனுபவங்களை அசை போடுவதில் தப்பில்லை என்று தோன்றியது ! So 2014-ன் நம் இதழ்களை நீங்களும், நானுமாய் rate செய்திடும் வாரமாய் இதனை அமைத்துக் கொள்வோமே ?!
எடுத்த உடனேயே மனதில் எழுந்து நிற்கும் முதல் கேள்வியானது - 2014-ன் டாப் 3 இதழ்களாக எவை இருந்திட முடியும் என்பதே...! LMS எனும் முரட்டு இதழை இங்கே ஒரு மொத்த இதழாகப் பார்த்திடாமல் - அதனில் வெளியாகியிருந்த 9 கதைகளையும் தனித்தனியாய் ஒரு ஆக்கமாய்க் கருத்திடலாம் என்ற கோரிக்கையோடு - இந்தாண்டின் சில சிலாகிக்கப்பட்ட கதைகளை இங்கே பட்டியல் போடுகிறேன் - உங்கள் நினைவலைகளை தட்டிக் கொடுக்கும் விதமாய் :
டாப் 3 எவை ? என்ற கேள்வி அடங்கிய மறு கணமே எழுந்திடுவது - இந்தாண்டின் டாப் 3 சொதப்பல்கள் எவை ? என்ற கேள்வி தானே ? நிச்சயமாய் இங்கே நான் suggestions எடுத்துக் கொடுக்கும் அவசியம் பெரிதாய் இராதென்பது உறுதி ; வெவ்வேறு காரணங்களுக்காய் அவரவர் மனதுகளில் வெவ்வேறு boo-boos மேலோங்கி நிற்பது நிச்சயம்! So 2014-ன் மொக்கை பீஸ்கள் எவையோ - உங்கள் பார்வைகளில் ? And more importantly - why ?
Moving onto QUESTIONS # 3 & 4 : 2014-ன் பிரமாதமான அட்டைப்படம் எதுவென்றும் ; படு சுமாரான அட்டைப்படம் எதுவென்றும் தேர்ந்தெடுப்போமா ? Again, ரசனை சார்ந்த இந்தத் தேர்வுகளுக்கு எனது prompts அவசியமாகாதென்று நினைக்கிறேன் !
அதே போல 2014-ல் நிறையவே அறிமுகங்களை நாம் சந்தித்துள்ளோம் ! டைலன் டாக் ; டிடெக்டிவ் ஜூலியா ; ரிண்டின் கேன் ; மேஜிக் விண்ட் ; தோர்கல் என்று ! ஒருவர் திகில் நாயகர் ; இன்னொருவர் கிரிமினாலஜிஸ்ட் ; இன்னொன்றோ ஒரு மொக்கை நாய் ; மற்றவர் செவ்விந்தியக்/ கௌபாய் என்ற ஈதியில் ஒவ்வொரு அறிமுகமும், வெவ்வேறு genre -ன் பிரதிநிதி என்பதால் ஒருவருக்கொருவர் எவ்வித ஒற்றுமையோடும் இருக்கப் போவதில்லை ! ரசனைகளின் அடிப்படையில் யாரை 2014-ன் சிறந்த புதுமுகமாய்த் தேர்வு செய்வீர்கள் folks ? (QUESTION # 5)
இவையனைத்தும் ஜனவரி 2-ல் டெஸ்பாட்ச் செய்யப்படும் !
ஜனவரி 9-ல் புறப்படப் போகும் பாக்கி 5 இதழ்களும் இதோ :
நமக்குச் சென்னைப் புத்தக விழாவினில் ஸ்டால் கிடைக்கும் பட்சத்தில் - சனிக்கிழமையன்று (10-ஜனவரி) இந்த 5 இதழ்களும் ஸ்டாலில் விற்பனைக்குக் கிடைக்கும். So 5+5 என்ற பார்முலாவொடு தொடங்கக் காத்திருக்கும் புத்தாண்டின் முதல் டீசர் இதோ :
வழக்கம் போலவே லக்கியின் வண்ண சாகசம் செம 'பளிச்' வர்ணங்களில் அமைந்துள்ளது ! கதையும் சுவாரஸ்யமாய் ; இதுவரையிலான லக்கி பாணியில் இல்லாது அமைந்துள்ளது highlight ! ஆங்கிலத்தில் இதனைப் படித்திருகா நண்பர்களுக்கு நிச்சயம் ஒரு சுவாரஸ்யமான இதழாக அமையுமென்பது உறுதி ! ஒரிஜினல் முன் + பின் அட்டைகள் லேசான வர்ண மாற்றங்களோடு மாத்திரமே ! சந்தா புதுபித்தல்களை இனியும் தாமதமின்றிச் செய்ய இதுவொரு அழகான காரணம் என்பேன் !
மின்னும் மரணம் முன்பதிவுகளும் ஒரு second wind பிடித்துக் கொண்டு மீண்டும் விறுவிறுப்பு அடையத் தொடங்கியுள்ளது சந்தோஷச் சமாச்சாரம் ! காதல் பித்துப் பிடித்து தடுமாறும் கேப்டன் டைகரைப் பார்த்திடக் காத்திருக்கும் நண்பர்களுக்கு - இதோ அதன் லேட்டஸ்ட் ட்ரைலர் !
அப்புறம் புதுவையில் துவங்கியுள்ள புத்தக விழாவில் 'அட்டகாசம்!' என்ற ரீதியில் இல்லாவிடினும், "pretty decent " என்று சொல்லும் விதமாய் வரவேற்பும், விற்பனையும் அமைந்துள்ளது இன்னுமொரு சந்தோஷ update ! அங்கும் 'இரும்புக்கை மாயாவி இல்லியா-இல்லியா? ' என்ற கானமே ஓங்கி ஒலிப்பதாய் நம்மவர்கள் சொன்னார்கள் ! தவிர, நமது இதழ்களைப் பார்த்து விட்டு விழாவின் அமைப்பாளர்களே மகிழ்ந்துள்ளனராம் ! நமது ஸ்டால் # 48-ஐக் குறிப்பிட்டு குட்டியாய் போஸ்டர்கள் தயார் செய்து விழாவின் அரங்கில் அத்தனை இடங்களிலும் ஒட்டி வைக்குமாறு அவர்களே நமக்கு suggest செய்துள்ளனராம் ! வரும் ஜனங்கள் அனைவருக்கும் நமது ஸ்டால் ஒரு stopover ஆக அமைந்திட வேண்டுமென அவர்களே விரும்பியுள்ளது மிகவும் சந்தோஷமாய் உள்ளது ! See you soon folks ! Bye for now !
ஒரு மாதிரியாய் 2014-ன் இதழ்களை பெரியதாய்ப் பல மாற்றங்களின்றி வெளிக்கொணர முடிந்ததில் நிம்மதி மேலோங்குகிறது. கடந்து வந்துள்ள நாட்களை அசை போடும் முயற்சியில் தலைக்குள் எஞ்சி நிற்பது ஒரு வண்ணமயமான blur மாத்திரமே ! வருஷத்தின் முதல் மாதத்தை சுருக்கம் விழுந்த செவ்விந்தியனின் முகத்தோடும் (யுத்தம் உண்டு ; எதிரி இல்லை !) ; மடிப்புக் கலையா ப்ரூனோ பிரசிலோடும் சென்னைப் புத்தக விழாவினில் துவங்கியது நேற்றைய நிகழ்வு போல் பட்டாலும், தொடர்ந்துள்ள 365 நாட்களில் சுமார் 42 கதைகளை தரிசித்திருக்கிறோம் எனும் போது நாட்களின் வேகம் வாய் பிளக்கச் செய்கிறது ! முன்னே ஒரு புத்தாண்டும் , இன்னும் விசாலமானதொரு அட்டவணையும் காத்திருக்கும் போதிலும், கொஞ்சமே கொஞ்சமாய் நேரம் எடுத்துக் கொண்டு கடந்து வந்துள்ள இந்தாண்டின் அனுபவங்களை அசை போடுவதில் தப்பில்லை என்று தோன்றியது ! So 2014-ன் நம் இதழ்களை நீங்களும், நானுமாய் rate செய்திடும் வாரமாய் இதனை அமைத்துக் கொள்வோமே ?!
எடுத்த உடனேயே மனதில் எழுந்து நிற்கும் முதல் கேள்வியானது - 2014-ன் டாப் 3 இதழ்களாக எவை இருந்திட முடியும் என்பதே...! LMS எனும் முரட்டு இதழை இங்கே ஒரு மொத்த இதழாகப் பார்த்திடாமல் - அதனில் வெளியாகியிருந்த 9 கதைகளையும் தனித்தனியாய் ஒரு ஆக்கமாய்க் கருத்திடலாம் என்ற கோரிக்கையோடு - இந்தாண்டின் சில சிலாகிக்கப்பட்ட கதைகளை இங்கே பட்டியல் போடுகிறேன் - உங்கள் நினைவலைகளை தட்டிக் கொடுக்கும் விதமாய் :
- நில்..கவனி.. சுடு! ( டெக்ஸ் )
- எஞ்சி நின்றவனின் கதை (ஷெல்டன்)
- விரியனின் விரோதி..! (மங்கூஸ்)
- ஆத்மாக்கள் அடங்குவதில்லை ! (மேஜிக் விண்ட்)
- கட்டத்துக்குள் வட்டம் (மர்ம மனிதன் மார்டின )
- அந்தி மண்டலம் (Dylan Dog)
- கார்சனின் கடந்த காலம் (டெக்ஸ்)
- ஒரு நிழல் நிஜமாகிறது (லார்கோ)
- இரவே..இருளே..கொல்லாதே...(கிராபிக் நாவல்)
- வானமே எங்கள் வீதி...! (கிராபிக் நாவல்)
டாப் 3 எவை ? என்ற கேள்வி அடங்கிய மறு கணமே எழுந்திடுவது - இந்தாண்டின் டாப் 3 சொதப்பல்கள் எவை ? என்ற கேள்வி தானே ? நிச்சயமாய் இங்கே நான் suggestions எடுத்துக் கொடுக்கும் அவசியம் பெரிதாய் இராதென்பது உறுதி ; வெவ்வேறு காரணங்களுக்காய் அவரவர் மனதுகளில் வெவ்வேறு boo-boos மேலோங்கி நிற்பது நிச்சயம்! So 2014-ன் மொக்கை பீஸ்கள் எவையோ - உங்கள் பார்வைகளில் ? And more importantly - why ?
Moving onto QUESTIONS # 3 & 4 : 2014-ன் பிரமாதமான அட்டைப்படம் எதுவென்றும் ; படு சுமாரான அட்டைப்படம் எதுவென்றும் தேர்ந்தெடுப்போமா ? Again, ரசனை சார்ந்த இந்தத் தேர்வுகளுக்கு எனது prompts அவசியமாகாதென்று நினைக்கிறேன் !
அதே போல 2014-ல் நிறையவே அறிமுகங்களை நாம் சந்தித்துள்ளோம் ! டைலன் டாக் ; டிடெக்டிவ் ஜூலியா ; ரிண்டின் கேன் ; மேஜிக் விண்ட் ; தோர்கல் என்று ! ஒருவர் திகில் நாயகர் ; இன்னொருவர் கிரிமினாலஜிஸ்ட் ; இன்னொன்றோ ஒரு மொக்கை நாய் ; மற்றவர் செவ்விந்தியக்/ கௌபாய் என்ற ஈதியில் ஒவ்வொரு அறிமுகமும், வெவ்வேறு genre -ன் பிரதிநிதி என்பதால் ஒருவருக்கொருவர் எவ்வித ஒற்றுமையோடும் இருக்கப் போவதில்லை ! ரசனைகளின் அடிப்படையில் யாரை 2014-ன் சிறந்த புதுமுகமாய்த் தேர்வு செய்வீர்கள் folks ? (QUESTION # 5)
சென்றாண்டும் கேட்டகேள்வி தான் இது ; தொடரும் ஆண்டிலும் கேட்க வேண்டிய அவசியத்தை உருவாக்கப் போகும் கேள்வியும் கூடவே...! இருந்தாலும் கேட்காமல் இருப்பது நியாயமாகாது என்பதால் - here goes :
இந்தாண்டிலும் நமது 'தல' யின் ஆக்கிரமிப்பே ஜாஸ்தி நமது இதழ்களில்..! விற்பனையில் துளியும் திகட்டல் தரா நாயகர் ; அதிரடிகள் நிறைந்த கதை பாணிகளில் இன்றைய # 1 என்றாலும் டெக்சின் கதைகளை ஓவராய் போட்டு வருவதாய் நினைக்கத் தோன்றுகிறதா ? டெக்ஸ் கதைகளின் மீது லேசாகவேணும் சலிப்புத் தோன்றுகிறதா ? 'தல-தளபதி' தரப்புகளும் மிகைப்படுத்தல்களின்றி QUESTION # 6-க்குப் பதில் சொன்னால் மகிழ்வேன் !
QUESTION # 7 : 'இவரது கதைகள் நன்றாக இருப்பினும், இவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன ; அல்லது திறமைகேற்ற அளவிற்கு வாய்ப்புகள் தரப்படவில்லை !' என்ற ரீதியில் 2014-ன் நாயகர்கள் யாரைப் பற்றியேனும் நினைக்கத் தோன்றுகிறதா ? அல்லது திறமை-வாய்ப்பு விகிதம் சரியாகவே உள்ளதா சகலருக்கும் ?
QUESTION # 8 : முந்தய ஆண்டோடு ஒப்பிடுகையில் நாம் ரசனைகளில் எங்கே நிற்கிறோம் ? நிஜமாய் முன்னேறி இருக்கிறோமா எவ்விதங்களிலாவது - அல்லது அரைத்த மாவையே இன்னும் கலர் கலராய் அரைத்து வருகிறோமா ? மாற்றம் ஏதேனும் உண்டென்று சொல்வதாயின் - அது எதுவாக இருக்கும் ? கொஞ்சம் பொறுமையாய் இதற்கு பதில் ப்ளீஸ் ?
QUESTION # 9 : மேலோட்டமாயின்றி - இந்தாண்டின் 45+ கதைகளையும் கொஞ்சமாய் தலைக்குள் ஒரு slideshow போல ஓட விட்டுப் பாருங்களேன்...2014-ன் HIGHLIGHT என்று சொல்லத் தோன்றும் கணம் எதுவாக இருக்கும் ? ( இது முதுகை சொறிந்து விடக் கோரும் கேள்வியல்ல guys ; நிஜமாக உங்களை மகிழ்வித்த தருணம் எதுவென்று தெரிந்து கொள்ளும் முயற்சி மட்டுமே)
QUESTION # 10 : THE YEAR IN TOTAL - இந்தாண்டின் ஒட்டு மொத்த அனுபவம் எவ்விதம் இருந்துள்ளது என்று நினைக்கிறீர்கள் ? விறுவிறுப்பு ; சுவாரஸ்யம் ; value for money ; variety ; புதுமைகள் போன்ற முக்கிய அம்சங்களில் இந்தாண்டின் நமது performance-ஐ எவ்விதம் ரேட் செய்வீர்கள் ? இங்கே சின்னதாய் ஒரு கோரிக்கை ப்ளீஸ் : 'பளிச்' என மனதில் தோன்றும் முதல் அபிப்ராயங்களைப் பதிவிடுங்களேன் ? விமர்சகர் என்ற தொப்பிகளைத் தேடிப் பிடித்து மாட்டிக் கொண்டு பகிர்ந்திடும் சிந்தனைகளை விட, உங்களின் அந்த முதல் அபிப்ராயங்களுக்கு ஒரு freshness அதிகம் என்பது எனது நம்பிக்கை ! (குட்டுக்கள் வைக்காதீர்கள் என்ற அர்த்தத்தில் நிச்சயமாய் நான் இதைச் சொல்லவில்லை !!)
QUESTION # 11 : இந்தக் கேள்வியானது வலைக்குள் உலவும் நம் நண்பர்களுக்கு மாத்திரமே ! இந்தாண்டிலும் நெருக்கி 65+ பதிவுகளைப் போட்டு உங்களைத் தாக்கித் தள்ளியிருப்பதை வலப்பக்கமுள்ள போஸ்ட்ஸ் எண்ணிக்கை பறைசாற்றுகிறது ! இந்த ஒட்டு மொத்த பட்டியலில் பெரும்பான்மை மாமூலான மாதாந்திர வெளியீட்டு முன்னோட்டங்களும், அறிவிப்புகளுமே என்பது நமக்குத் தெரியும் தான் ! அந்த routine சமாச்சாரங்களைத் தாண்டி சுவாரஸ்ய மீட்டரில் டாப் இடத்தைப் பிடித்த பதிவாய் எதைச் சொல்லுவீர்கள் ? Care to share ? (இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுவது optional மட்டுமே ; பாக்கி 10-க்கும் விடை தெரிந்தால் மகிழ்வோம் ! )
Shifting focus - ஜனவரியின் முதல் batch -ல் கீழ்க்கண்ட இதழ்கள் உங்களைத் தேடி வந்திடும் :
- டைலன் டாக் - "நள்ளிரவு நங்கை !"
- டயபாலிக் - "நித்தமும் குற்றம்"
- லக்கி லுக் - "ஒரு ஜென்டில்மேனின் கதை"
- ப்ளூ கோட்ஸ் - "சிறைக்குள் ஒரு சடுகுடு"
- மாடஸ்டி - "நிழலோடு நிஜ யுத்தம்"
இவையனைத்தும் ஜனவரி 2-ல் டெஸ்பாட்ச் செய்யப்படும் !
ஜனவரி 9-ல் புறப்படப் போகும் பாக்கி 5 இதழ்களும் இதோ :
- பௌன்சர் - ரௌத்திரம் பழகு
- நயாகராவில் மாயாவி
- ஸ்பைடர்
- பெய்ரூட்டில் ஜானி
- வான்வெளிக் கொள்ளையர்
நமக்குச் சென்னைப் புத்தக விழாவினில் ஸ்டால் கிடைக்கும் பட்சத்தில் - சனிக்கிழமையன்று (10-ஜனவரி) இந்த 5 இதழ்களும் ஸ்டாலில் விற்பனைக்குக் கிடைக்கும். So 5+5 என்ற பார்முலாவொடு தொடங்கக் காத்திருக்கும் புத்தாண்டின் முதல் டீசர் இதோ :
வழக்கம் போலவே லக்கியின் வண்ண சாகசம் செம 'பளிச்' வர்ணங்களில் அமைந்துள்ளது ! கதையும் சுவாரஸ்யமாய் ; இதுவரையிலான லக்கி பாணியில் இல்லாது அமைந்துள்ளது highlight ! ஆங்கிலத்தில் இதனைப் படித்திருகா நண்பர்களுக்கு நிச்சயம் ஒரு சுவாரஸ்யமான இதழாக அமையுமென்பது உறுதி ! ஒரிஜினல் முன் + பின் அட்டைகள் லேசான வர்ண மாற்றங்களோடு மாத்திரமே ! சந்தா புதுபித்தல்களை இனியும் தாமதமின்றிச் செய்ய இதுவொரு அழகான காரணம் என்பேன் !
மின்னும் மரணம் முன்பதிவுகளும் ஒரு second wind பிடித்துக் கொண்டு மீண்டும் விறுவிறுப்பு அடையத் தொடங்கியுள்ளது சந்தோஷச் சமாச்சாரம் ! காதல் பித்துப் பிடித்து தடுமாறும் கேப்டன் டைகரைப் பார்த்திடக் காத்திருக்கும் நண்பர்களுக்கு - இதோ அதன் லேட்டஸ்ட் ட்ரைலர் !
அப்புறம் புதுவையில் துவங்கியுள்ள புத்தக விழாவில் 'அட்டகாசம்!' என்ற ரீதியில் இல்லாவிடினும், "pretty decent " என்று சொல்லும் விதமாய் வரவேற்பும், விற்பனையும் அமைந்துள்ளது இன்னுமொரு சந்தோஷ update ! அங்கும் 'இரும்புக்கை மாயாவி இல்லியா-இல்லியா? ' என்ற கானமே ஓங்கி ஒலிப்பதாய் நம்மவர்கள் சொன்னார்கள் ! தவிர, நமது இதழ்களைப் பார்த்து விட்டு விழாவின் அமைப்பாளர்களே மகிழ்ந்துள்ளனராம் ! நமது ஸ்டால் # 48-ஐக் குறிப்பிட்டு குட்டியாய் போஸ்டர்கள் தயார் செய்து விழாவின் அரங்கில் அத்தனை இடங்களிலும் ஒட்டி வைக்குமாறு அவர்களே நமக்கு suggest செய்துள்ளனராம் ! வரும் ஜனங்கள் அனைவருக்கும் நமது ஸ்டால் ஒரு stopover ஆக அமைந்திட வேண்டுமென அவர்களே விரும்பியுள்ளது மிகவும் சந்தோஷமாய் உள்ளது ! See you soon folks ! Bye for now !
First...??
ReplyDeleteFirst time...? !
Delete2nd ...
ReplyDeleteSecond
ReplyDeleteI hope there will be another post remaining in this calendar year. I wish to answer for questions posted in this post later in the day after going through all the books published in this year. It's like dream come true to get 10 books in a month, hope to see more varieties in coming years. To avoid the feeling of overdose. Keep up the Good work Sir.
Deleteஅப்போ நான்தான் செகண்டு.
ReplyDeleteHai
ReplyDeleteஜனவரி 10 புத்தகமா
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் அன்பு ஆசிரியரே ...
ReplyDeleteபத்துக்குள் ! படித்து விட்டு வருகிறேன்...!
ReplyDeleteஐய்யா.!
ReplyDeleteசார் டிசம்பரில் மீதமுள்ள இதழ்கள் எப்பொழுது வரும் ...?
ReplyDeleteAHMEDBASHA TK
Delete//
Shifting focus - ஜனவரியின் முதல் batch -ல் கீழ்க்கண்ட இதழ்கள் உங்களைத் தேடி வந்திடும் :
டைலன் டாக் - "நள்ளிரவு நங்கை !"
டயபாலிக் - "நித்தமும் குற்றம்"
லக்கி லுக் - "ஒரு ஜென்டில்மேனின் கதை"
ப்ளூ கோட்ஸ் - "சிறைக்குள் ஒரு சடுகுடு"
மாடஸ்டி - "நிழலோடு நிஜ யுத்தம்" //
////////// டியர் எடிட்டர் /////////
ReplyDeleteஇன்று நான் சந்தா செலுத்த தங்கள் அலுவலகம் வருகிறேன். இந்த பதிவை பற்றிய கருத்துகள் மாலை பதிவிடலாம் என்று எண்ணியுள்ளேன்.
Mugunthan Kumar : தாமத பதில் தான்...! ஞாயிறு அலுவலகம் கிடையாதே சார் !
Deleteவந்து ஏமாந்தேன். ஆனால் காரியம் வெற்றிகரமாக முடிந்தது. நமது அலுவலகத்திற்கு எதிரே உள்ள நசீர் ஆப்செட் உரிமையாளர் நசீர் அகமதுவிடம் சந்தா தொகையை கொடுத்துவிட்டு வந்திருந்தேன். அவரும் நமது அலுவலகத்தில் கொடுத்துவிட்டார்.
Deleteபுது நண்பர் நசீர் அகமதுவிற்கு நன்றிகள் பல
Dear Editor,
ReplyDeleteMy top three picks:
a) அந்தி மண்டலம்
b) கார்சனின் கடந்த காலம்
c) Steve Roland Story - XIII Mysteries (விரியனின் விரோதி very close to this)
Rest later during my vacation period ...!
Raghavan : 'அந்தி மண்டலம் ' - இந்தாண்டின் எனது டாப் கதைப் பட்டியலில் இடம்பிடிக்கும் ஒரு சாகசமும் கூட !
Delete'மின்னும் மரணம்' ட்ரைலரில் வெளியாகப் போகும் மாதம் பற்றிய விவரம் ஏதும் குறிப்பிடப்படவில்லை!
ReplyDeleteஹைய்யா!! 'என்னவோ திட்டமிருக்கு...'
டைகர் "பொங்கல்" வைக்க சான்ஸ் இருக்கு நண்பரே
Delete'மின்னும் மரணம்' 15-Apr-2015 ல் வெளியாகும் என்று அறிவித்திருந்தார்களே...ஒருவேளை அதற்கு முன்பே வெளிவருகிறதோ...?
DeleteErode VIJAY & FRIENDS : ஜனவரியில் 10 இதழ்கள் பற்றாதென்று இன்னுமொரு 536 பக்கத் தொகுப்பையும் நான் பணிப்பட்டியலில் சேர்த்துக் கொண்டால் கிழியப் போவது கிருஷ்ணகிரியாக மாத்திரமே இராது...!
Deleteடியர் எடிட்டர்...
ReplyDeleteபரீட்சை எழுதும் மாணவனை போல கேள்வியின் எண்களும் அதற்குரிய பதில்களும்...
1. கட்டத்துக்குள் ஒரு வட்டம்
வல்லவர்கள் வீழ்வதில்லை
விரியனின் விரோதி
2. காவல் கழுகு
எதிவீட்டில் எதிரிகள்
ரிண்டின்கேன்
3. பி.அ.ப - தேவ ரகசியங்கள் தேடலுக்கல்ல
4. சு.அ.ப - வல்லவர்கள் வீழ்வதில்லை
5. மேஜிக் விண்ட்
6. இதுவரைக்கும் சலிப்பு வரவில்லை
7. மர்ம மனிதன் மார்டின்
8. ரசனையில் முன்னேறிக்கொண்டு இருக்கிறோம்
9. LMS பெட்டியினை திறந்து அந்த HARD COVER அட்டையை தடவி, முகர்ந்து, அணைத்து, புல்லரித்த அந்த தருணம்
10. Satisfied in a five point scale.
#9 same for me.
DeleteThe day I saw LMS parcel on my front porch gave me goose bumps.
Muthu Kumaran : Top choice - கட்டத்துக்குள் ஒரு வட்டம் !
Deleteவித்தியாசமான ரசனை தான் !
//LMS பெட்டியினை திறந்து அந்த HARD COVER அட்டையை தடவி, முகர்ந்து, அணைத்து, புல்லரித்த அந்த தருணம்// :-)
சார் .....அப்படி என்றால் டிசெம்பர் இறுதியில் எந்த புத்தகமும் கிடையாதா ....?
ReplyDeleteஇனி அடுத்த வருடம் தானா ....?
டிசம்பருக்கு மாமா பிஸ்கோத்து தான்.
Delete2014 -ல் கிராஃபிக் இதழ்கள் வலுக்கட்டாயமாக வாங்கி அலமாரியில் ஜோடித்தேன் என்பதை தவிர அனைத்தும் அருமையான கதைகள் .ஒவ்வொரு மாதமும் புத்தகங்கள் வரும் நாட்களில் காத்திருக்கும் சுகம் .(பிரின்டிங் வலி வேறு டிபார்ட்மெண்ட் )
ReplyDeleteஅதுக்கள்ளயே இத்தனை பதிவா ? படிச்சட்டு வர்றேன்
ReplyDelete//அந்த routine சமாச்சாரங்களைத் தாண்டி சுவாரஸ்ய மீட்டரில் டாப் இடத்தைப் பிடித்த பதிவாய் எதைச் சொல்லுவீர்கள் ? //
Deletesir
சந்தேகம் இல்லாமல் மின்னும் மரணம் மறுபதிப்பு பற்றிய பதிவு தான்
சாரி ...சார் .....ஒரு மீள் பதிவு வினா ....
ReplyDeleteஆசிரியர் சார் .....பில்லர் பேஜ் பற்றிய என்னுடைய தாமதமான ஒரு சிறு யோசனை ....
பில்லர் பேஜ் பக்கங்களில் .....பலரும் கேள்வி பட்டிராத......கேள்வி பட்டு இருந்தாலும் .....படித்திரதா....படித்து இருந்தாலும் .....பலர் கை வசம் இல்லாத ..,நமது முத்து மினி காமிக்ஸில் வந்த இந்திய சிறு கதைகள் ஆன....இன்ஸ்பெக்டர் விக்ரம் ..கருடா ...போன்றோரின் கதைகளை வெளி இடலாமே சார் .....பழைய வாசகரும் அந்த கதைகளை படித்த திருப்தி உடன் .....புது சிறு வயது அறிமுக ரசிகர்களுக்கும் .....அந்த எளிமையான கதை ஓட்டத்தால் காமிக்ஸ் ரசனை அவர்கள் பால் இழுக்கலாம் ....இதை தாங்கள் வண்ணத்தில் வெளி இட வேண்டிய அவசியம் இல்லை .கருப்பு ...வெள்ளை புத்தங்களில் மட்டும் வெளி இடலாம் .இன்னமும் கண்ணில் பார்த்து இராத முத்து மினி லயனை இப்படியாவது தரிசிக்கிறோம் சார் ...மனது வையுங்கள் ...
இன்ஸ்பெக்டர் கருடா கூட சுவாரஸ்யமானவர் தான்.
Deleteடியர் விஜயன்சார், இந்த ஆண்டு வந்த கதைகளில் டெக்ஸ் கண்டிப்பாகஏமாற்றவில்லை. கிராபிக்நாவல் எல்லோரையும் கவரவில்லை என்பது நிதர்சனம்.அது ஒருசாரரையே திருப்திபடுத்தியுள்ளது.இந்தஆண்டு ரோஜருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்திருக்கலாமோ என்ற எண்ணம் வருவதை தவிர்க்கமுடியவில்லை. காலத்தின்கால்சுவடுகளில் கதை சுமார் என்றாலும் சித்திரங்கள் அக்மார்க் அற்புதம்.பட் பிரிண்டிங் சொதப்பியதால் சித்திரத்துடன் ஒன்ற முடியவில்லை என்பதே உண்மை. பிரிண்டிங் சொதப்பலால் ஒரு அற்புதமான ஹீரோ காவு வாங்கப்பட்டாறோ என்ற எண்ணம் வராமல் இல்லை. மேலும் மதியில்லா மந்திரிக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கலாம். செல்லபூனை சிறியபுத்தகமாக வெளியிட்டதுபோல் மந்திரியையும் வெளியிட்டிருக்கலாமோ ?,லார்கோ வழக்கம்போல் பட்டை கிளப்பினாலும், வேட்டை நகரம் வெனீஸில் சித்திரங்களைவிட எழுத்துகள் அதிகமாக இருந்தது போல் பிரமை.சென்சார் தேவைதான்சார்,பட் இப்படி கதறகதற சென்சார் செய்வது கதையுடன் ஒன்றுவதை சிறிதளவாவது தடைசெய்கிறது சார்.மேலும் பிரிண்டிங் தரம் பொற்கால 2012ன் தரத்தை எட்டவேண்டும் என்பதே பலரின் ஆசை சார். பல பெரும் பத்திரிக்கைகளே தங்கள் சுயத்தை இழந்து நடிகைகளின் கவர்ச்சிபோசை போட்டு ஒப்பேற்றும் இந்த காலகட்டத்தில், வாசகர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து, விற்பனையில் சிறிய இடத்தில் இருந்தாலும் எங்களை போன்றவர் மனதில் பெரிய இடத்தை பிடித்துள்ளீர்கள் சார். 2015யை நோக்கி ஆவலுடன்,,,
ReplyDelete//கிராபிக்நாவல் எல்லோரையும் கவரவில்லை என்பது நிதர்சனம்//
Delete+1
// பல பெரும் பத்திரிக்கைகளே தங்கள் சுயத்தை இழந்து நடிகைகளின் கவர்ச்சிபோசை போட்டு ஒப்பேற்றும் இந்த காலகட்டத்தில், வாசகர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து, விற்பனையில் சிறிய இடத்தில் இருந்தாலும் எங்களை போன்றவர் மனதில் பெரிய இடத்தை பிடித்துள்ளீர்கள் சார். 2015யை நோக்கி ஆவலுடன்,,, //
DeleteVery true.
// மேலும் பிரிண்டிங் தரம் பொற்கால 2012ன் தரத்தை எட்டவேண்டும் என்பதே பலரின் ஆசை சார். //
Deleteஉங்களின் ஆதங்கத்தோடு என்னையும் சேர்த்து கொள்ளவும்.
gn ஏமாற்றவில்லை !
Deleteஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.
ReplyDelete2014 ல் வெளிவந்த அனைத்து கதைகளையும் நண்பர்கள் யாராவது ஒரு பட்டியல் போட்டுத் தந்தால் புண்ணியமாக இருக்கும்.!
ReplyDelete(எனக்கு ஞாபக சக்தி கம்மி.:))
இன்று. மாலை வரை பொறுங்கள் நண்பரே ......
Deleteஇந்த வலைதளத்தில் பழைய வெளியீடுகளை ஓரளவுக்கு பார்க்கலாம்..
Deletehttp://lion-muthucomics.com/en/6-all-available-comics
//2014 ல் வெளிவந்த அனைத்து கதைகளையும் நண்பர்கள் யாராவது ஒரு பட்டியல் போட்டுத் தந்தால் புண்ணியமாக இருக்கும்.!//
Delete+1
@Editor: சார் எனது நீண்ட நாள் கோரிக்கை...
நமது காமிக்ஸ் வெளியீடுகளில் 'வெளியீடு எண்:' குறிப்பிடுவது போலவே 'வெளியீடு மாதமும், வருடமும்' (at least அட்டையின் sideல்) குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்...
அதேபோல், நமது 'http://lion-muthucomics.com/ta/' website லும் '2015 அட்டவணை 46 இதழ்கள்' (இதில் கூட வெளியிடும் மாதம் இல்லை சார்) என்று உள்ளது போல் '2014' க்கும் (இனி வரும் எல்லா வருடங்களுக்கும்) இருந்தால் நன்றாக இருக்கும்...
//இந்த வலைதளத்தில் பழைய வெளியீடுகளை ஓரளவுக்கு பார்க்கலாம்..
Deletehttp://lion-muthucomics.com/en/6-all-available-comics.//
தகவலுக்கு மிக்க நன்றி.
விஜயன் சார்,
ReplyDeleteஇந்த வருடத்தில் நான் அதிகம் எதிர் பார்த்தது தோர்கல் மற்றும் magic wind கதைகளே. magic wind இரண்டு கதைகள் மட்டும் வெளிஇட்டது சிறிது வருத்தமே, ஆனால் அதன் உண்மையான காரணம் சில பதிவுகளுக்கு முன் குறிப்பிட்ட போது புரிந்து கொள்ள முடிந்தது. தோர்கல்அடுத்த வருடம் முதல் "collector edition" ஆக வருவது சந்தோசமே; ஆனால் இன்னும் சில கதைகளை முழு தொகுப்பாக வெளி இட்டால் நன்றாக இருக்கும்.
dylan - அந்தி மண்டலம் தவிர மற்றவை ரொம்ப சுமார் தான். மேலும் இது வரை வந்த கதைகளில் இவர் பெரிதாக ஒன்றும் சாதித்தது போல் தெரியவில்லை; இவரை சுற்றி உள்ளவர்கள்தான் இவரின் கதையின் நாயகர்கள்.
இந்த வருடத்தில் அதிக சந்தோசத்தை கொடுத்த பதிவு என்றால் நமது ஆதர்ச நாயகர்களின் (2015) மறுவருகை பற்றிய பதிவுதான் என்னை தலைகீழாக புரட்டிய நாள் முழுவதும் சந்தோசமாக இருக்க செய்த பதிவு.
இந்த வருடத்தில் ஒரு சிறந்த கதை என்றால் டெக்ஸ்ன் "வல்லவர்கள் வீழ்வதில்லை". மிகவும் மாறுபட்ட அனைத்து விதம்களிலும் என்னை திருப்திபடுத்திய சிறந்த கதை. அடுத்த இடம் மங்கூஸ் கதையான விரியனின் விரோதி மற்றும் ஆத்மாக்கள் அடங்குவதில்லை ! (மேஜிக் விண்ட்) .
இந்த வருடம் வெளி வந்த இரவே..இருளே..கொல்லாதே மற்றும் தேவ ரகசியம் தேடலுக்கு அல்ல, சிறந்த முயற்சி (ஓவியம், மொழி பெயர்ப்பு, வண்ணகலவை அருமை); ஆனால் இதன் நீளம் மிகுந்த அயர்ச்சியை உண்டாகியது. வரும்காலம்களில் பக்கம்களுக்குள் அடங்கும்படி சிறந்த விறுவிறுப்பான கதைகளை கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
இந்த மாதம் மீதம் வர இருந்த 2 புத்தகம்களை அடுத்த வாரம் எதிர் பார்த்த எனக்கு, இவைகளை அடுத்த ஆண்டு 2 தேதிக்கு தள்ளி போட்டது மிகவும் வருத்தமாக உள்ளது.
ஆண்டுக்கு குறைந்த (10) புத்தகம்களை வெளி இட்டு வந்த நாம் இன்று ஆண்டுக்கு சுமார் 40 புத்தகம்களை வெளி இடுவது மிக சிறந்த சாதனை. இதற்கு பக்க பலமாக இருந்து இந்த ஆண்டு முழுவதும் நமது புத்தகம்களை தயார் செய்து அனுப்பிய நமது அலுவலக அன்பர்களின் கடின உழைப்புக்கு எனது நன்றி.
2014 சொதப்பல் கதை - இறந்தகாலம் இறப்பதில்லை
Deleteஇனிய காலை வணக்கம் நண்பர்களே!!!
ReplyDeleteஇனிய காலை வணக்கம் எடிட்டர் சார்!!!
It would be nice to publish classics like Lawrence David or Athiradi Twins. Again not sure if it is feasible - acquiring Vandumama's works would add much more child audience
ReplyDeleteHi....!!!!.....:)
ReplyDeleteஆசிரியர் சார்,இந்த ஆண்டின் மகிழ்ச்சியான பதிவு எனில் அது நமது பழைய ஆதர்ச நாயகர்கள் மீண்டும் 2015-il I Am Back என்ற தருணம்தான்.உண்மையாகவே அந்த வாரம் முழுவதும் கனவிலும்,நிஜத்திலும் அந்த நினைவுதான்.
ReplyDeleteநண்பர்களே ஒரு வருடமாக போட்டு வந்த சீட்டு முடிந்து இம்மாதம் பணம் கிடைத்தது . இந்த வாரம் புதிய டூவீலர் வாங்கி உள்ளேன் . tvs zest 110 இன்று குல தெய்வம் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு இப்போது தான் வந்தேன் . இவ்வளவு நாளாக ஓட்டி வந்த வண்டியை கசின் வீட்டு செட்டில் விட்டுவிட்டு வரும் போது , மனதில் லேசாக ஒரு பாரம். பதிவை படித்து விட்டு வருகிறேன் .
ReplyDeleteவாழ்த்துக்கள் சொன்னேங்க
Deleteஅனைவருகும் வணக்கம்
ReplyDeleteஅட்டைபடம் தூள்
ReplyDeletetop 3 are vallavarkal veelvadhillai
irave irulai kolladhe
vetai nagaram venis
டெக்ஸ் கதைகள் மாதத்திற்கு ஒன்று வெளியிட்டாலும் சலிப்பு தட்டாது
ReplyDeleteஆசிரியர் சார்,
ReplyDelete1.Top 3: A) வல்லவர்கள் வீழ்வதில்லை. B) விரியனின் விரோதி. C) கார்சனின் கடந்த காலம்.
2.சுமார் ரகம் 3:A) ரின் டின் கேன். B) ஜில் ஜோர்டான்-காவியில் ஒரு ஆவி. C) புளு கோட்டின்-கப்பலுக்குள் களேபரம்.
3. பிரமாதமான அட்டை படம் - தேவ ரகசியங்கள் தேடலுக்கல்ல.
4.சுமாரான அட்டை படம் - டெக்ஸ்-காவல் கழுகு.
5.டைலன் டாக், மேஜிக் விண்ட் , தோர்கல்-என மூவரையும் பிடித்தாலும், பெஸ்ட்- மேஜிக் விண்ட் தான்.
6.அய்யா அப்படி நாங்க என்றுமே சொல்லவே மாட்டோம்.தல என்றும் திகட்டாதவர்.
7.மர்ம மனிதர் மார்ட்டின் மற்றும் சகச வீரர் ரோஜர்-இருவருக்கும் இன்னும் சில வாய்ப்புகள் தந்து இருக்கலாம் என தோன்றுகிறது.
8.சரியான பாதையில் சரியான திட்டமிடலுடன் சென்று கொண்டிருக்கிறோம்.ஆனாலும் சில சிறு மாற்றங்கள் செய்யலாம். (அ).குறைந்த விலை புத்தகங்களை அவ்வப்போது வெளியிடுவது. (ஆ).ஆண்டின் ஆரம்பத்தில் குறிப்பிடும் சந்தவை மட்டும் பெற வேண்டும்.இடையில் திடீர் சந்தாவை திணிக்க வேண்டாம்.
9.வேறு என்ன வெளி வந்த தருணம்தான்.
10.சுவாரஸ்யமாக,மற்றும் விறுவிறுப்பாக இருந்தது.மார்க்-90/100.
11.இந்த ஆண்டின் மகிழ்ச்சியான பதிவு எனில் அது நமது பழைய ஆதர்ச நாயகர்கள் மீண்டும் 2015-il I Am Back என்ற தருணம்தான்.உண்மையாகவே அந்த வாரம் முழுவதும் கனவிலும்,நிஜத்திலும் அந்த நினைவுதான்.
என்னால் Type செய்ய முடியவில்லை எனவே இதையே நானும் வழிமொழிகிறேன். ஸாரி நண்பா இப்படி ஒட்டிகிட்டதுக்கு
Delete// என்னால் Type செய்ய முடியவில்லை எனவே இதையே நானும் வழிமொழிகிறேன். ஸாரி நண்பா இப்படி ஒட்டிகிட்டதுக்கு //
Deleteha ha ha!
ஓகே,ஓகே.
DeleteFootboard ல் இடம் இருக்கா....ஆனா டிக்கெட் மட்டும் கேட்க ௯டாது....
Deleteநமது இதழ்களைப் பார்த்து விட்டு விழாவின் அமைப்பாளர்களே மகிழ்ந்துள்ளனராம் ! நமது ஸ்டால் # 48-ஐக் குறிப்பிட்டு குட்டியாய் போஸ்டர்கள் தயார் செய்து விழாவின் அரங்கில் அத்தனை இடங்களிலும் ஒட்டி வைக்குமாறு அவர்களே நமக்கு suggest செய்துள்ளனராம்.
ReplyDelete// எல்லா இடத்திலும் காமிக்ஸ் காதலர்கள் இருப்பது மகிழ்ச்சியான விஷயம்.//
எடிட்டர் அவர்களே 2015ல் 46+1மி.ம மொத்தம் 47 இதழ்கள் வெளிவருகிறது. இன்னும் 3ரன் எடுத்தால் 50 ஐ தொட்டு விடலாமே இது ஒரு மைல் கல்லாக இருக்குமே. இக்கறையை போக்கவும். +4;+6 இந்.த வருடம் உண்டா. 2016ல் கண்டிப்பாக சதமடிக்க வேண்டும்
ReplyDeleteநிறைய கேள்விகள்... பதில்கள் சொல்வதற்குப் பதிலாய் ஒரு விஷயம் சொல்லலாம் என்று தோன்றுகிறது.
ReplyDeleteடிசம்பர் மாத 3 இதழ்களும் எனது அலுவலக மேசையில் இருந்ததை, வழக்கமாய் வருகை தரும் நண்பர்கள் (அவர்கள் யாரும் படிப்பதில்லை... குட்டீஸ்களுக்காக) எடுத்துச் செல்வது காரணமாயும், நான் இன்னும் படிக்காத காரணத்தாலும், இன்னொரு செட் புத்தகங்கள் வாங்க தேசன் புக்ஸ் நேற்று (20-12-2014) போனேன்.
டெக்ஸ்வில்லர் ஒரு புத்தகம் மட்டும் இருந்தது. உயரே ஒரு கழுகை, புத்தக கடையில் பணியாற்றும் சகோதரி தனியே ஒரு இடத்தில் இருந்து (கிட்டத்தட்ட ஒளித்து வைத்திருந்தார்...) எடுத்துக் கொடுத்தார். வா.எ.வீ. நிறைய புத்தகங்கள் இருப்பு இருந்தது.
அவ்வளவுதான் நான் சொல்ல வந்தது.
அப்புறம் ஒரு சுவாரசியம் என்னவென்றால், நமது மாயாவி சிவா, தேசன் புத்தக நிலையத்தில், சிவா என்று இல்லாமல் மாயாவி என்றே அறிமுகம் ஆகியுள்ளார். சிவா என்று விசாரித்தால் தெரியவில்லை. மாயாவி என்றால் மட்டுமே தெரிகிறது.
@ S.V.VENKATESHH
Deleteஎனக்கே தெரியாத தகவல்...ஹா...ஹா...!
This comment has been removed by the author.
ReplyDelete1. Top 3
ReplyDelete- சட்டம் அறிந்திரா சமவெளி
- செங்குருதிச் சாலைகள்
- விரியனின் விரோதி
2. Disliked
- இறந்தகாலம் இறப்பதில்லை
- காதலிக்கக் குதிரையில்லை!
- கப்பலுக்குள் களேபரம்
3. அட்டை Good: வானமே எங்கள் வீதி (Front & Back)
4. அட்டை Bad: செங்குருதிச் சாலைகள் (Front)
5. புதுமுகம் Best: தோர்கல்
6. டெக்ஸ் வில்லர்:
Selective stories only please... Never risk with new attempts like "Vallavargal Veezhvathillai" as that differs from usual flavour (heavy history) as well as this will miss to attract new readers, possible new Tex Willer fans too.
7. More chance please:
கமான்சே
8. நாம் ரசனைகளில் எங்கே நிற்கிறோம் ? நிஜமாய் முன்னேறி இருக்கிறோமா:
Many things got bright this year - Reasonably!
9. 2014-ன் HIGHLIGHT
The month before LMS release. Really pleased with quality stories and number of books delivered on time without getting any excuses while preparing LMS
10. இந்தாண்டின் ஒட்டு மொத்த அனுபவம்
Lot of Surprises and varieties! Sufficiently enough to carry the reading habit of comics!
எஞ்சி நின்றவனின் கதை என் இதயத்துக்கு நெருக்கமான இதழ்! டெக்ஸ் வழக்கம் போல அவரது இடத்தைப் பிடித்துக் கொண்டார்! இரும்புக்கை மாயாவியாரின் கிரேஸ் அப்படியே டெக்ஸ் கதைக்கு மாற்றமாகிவிட்டது. ஆகவே கொஞ்சம் காலம் கழித்து டெக்ஸ் கதைகள் இருக்கா என இன்னொரு தலைமுறை கேள்விகளைக் கேட்கும்! ஆனால் இன்றுள்ள நிலவரப்படி இன்னும் நீடித்து நிற்கும் வல்லமை டெக்ஸ் கதைகளுக்கு உண்டென்பதால் புத்தம்புது வடிவங்களில் மீண்டும் மீண்டும் இவர் ஆட்சி நிலைக்கும்! காமிக்ஸ் பேரரசர் நமது டெக்ஸ் வில்லர்!
ReplyDeleteடைகர் கதைக்கு இன்னும் சரியான கதை ஆசிரியர்கள் அமைந்திட்டால் அவரது ராஜ்ஜியம் நிலைத்து நிற்பதில் தடுமாற்றங்களே வராது என்பது நிச்சயம். அதிரடி லார்கோ_அமானுஷ்ய மார்ட்டின்_விசித்திர டைலன் ஆகியோருடன் குற்றவியல் கரண்ட் மன்னன் டேஞ்சர் டயபாலிக் ஆகியோர் அவரவர் பங்குக்கு அதிரடிக்கின்றனர். ஒட்டு மொத்தத்தில் அதிரடி ஆண்டாக இந்த ஆண்டு நிறைவானதொரு அனுபவத்தைக் கொடுத்தது சார்!
நகைச்சுவை நாயகர்கள் லக்கி, நீலச்சட்டை மாவீரர்கள், ரின் டின், சிக் பில் குழுவினர் என அவரவர் இடம் அட்டகாசமாக பொருந்தி வந்ததும் மறக்கமுடியாத நிகழ்வு சார். மங்கூஸ் இன்னொரு கதையில் வரமாட்டாரா என்கிற அளவு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டார். நமது பார்வையே எதிர்வரும் காமிக்ஸ்கள் என்கிற விதத்தில் ஐ ஆம் பேக் என்கிற அடுத்த வருட மறுபதிப்புகளைப் பற்றிய அறிவிப்பே தலையாய பதிவாகக் கொள்கிறேன்! மொத்தத்தில் லயன்+முத்து+சன் ஷைன்= கலக்கல் காமிக்ஸ் வருடம்!
அப்போ ஜனவரி மாச காமிக்ஸ் மொத்தம் பத்தா ..தப்பா ?எத்தனை கொடுத்தாலும் நம்ம ரசனைக்கு
ReplyDeleteபத்தாதப்பா .....
டியர் எடிட்டர் சர்ர்,
ReplyDeleteநரன் 55 வஅது? கரலை வணக்கங்கள்.
மைலே போய் விட்டு வருகிறேன்.
தங்கள் உண்மையுள்ள
திருச்செல்வம் பிரபரனந்
நண்பர்களே ......இந்த வருடம் வந்த மொத்த இதழ்கள் எத்துனை ....மொத்த கதைகள் எத்துனை ....அதில் எத்துனை லயன் காமிக்ஸ் ...முத்து காமிக்ஸ் ...சன்ஷைன் கிராபிக் ...சன்ஷைன் லைப்ரரி ....என்ன ..என்ன கதைகள் .... ?
ReplyDeleteவிடைகள் அறிய வேண்டுமா ..?...வருகை தாருங்கள்
baraniwithcomics.blogspot.com
நன்றி பரணி.!
Deleteசூப்பரு.!
இன்று ஒரு சிறு தவறை திருத்திய பட்டியலுடன் நாயகர்களின் பெயரும் இணைத்து ....
Delete(நன்றி மாயாவி சிவா அவர்கள் )
டியர் எடிட்டர் சர்ர்,
ReplyDelete" நித்தம் குற்றம்" அருமை. மரலையப்பன் சர்ரின் பின் அட்டை ஒருயினலை விட அருமை. லக்கிலூகின் "ஒரு யென்டில்மரனின் கதை" ஒரு சூதரடியின் கதை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன் . அட்டை படம் அருமை என்று நினைக்கின்றேன்.
தங்கள்உண்மையுள்ள
திருச்செல்வம் பிரபரனந்
டியர் எடிட்டர் சர்ர்,
ReplyDeleteடரப் 3 மட்டும்தரனர? நரன் 4 சொல்லுகிறேன்.
1) கர்ர்சனின் கடந்த கரரத்த
2) நில் கவனி சுடு
3) எஞ்சி நின்றவனின் கதை
4) ஒரு நிழல் நிஐமரகிறது
2014 ன் மொத்த வெளியீடுகளும் நினைவில் வரவில்லை...என் நினைவில் நின்றவைகளை வைத்து எனது பதில்கள்...
ReplyDelete1. டாப் 3 Hit கதைகள்
1. நில் கவனி சுடு (சந்தேகமேயில்லாமல்)
2. கார்சனின் கடந்த காலம்
2. காலனின் கைக்கூலி
3. இரவே இருளே கொல்லாதே
3. எஞ்சி நின்றவனின் கதை
3. ஒரு நிழல் நிஜமாகிறது
2. டாப் 3 சொதப்பல் கதைகள்
1. முகமற்ற கண்கள்
2. தோர்கல் (பனிக்கடலில் ஒரு பாழும் தீவு)
3. கப்பலுக்குள் களேபரம்
3. 2014-ன் பிரமாதமான அட்டைப்படம்
1. விரியனின் விரோதி
2. வீதியெங்கும் உதிரம்
2. உயரே ஒரு ஒற்றைக் கழுகு
3. தேவ ரகசியம் தேடலுக்கல்ல
4. 2014-ன் படு சுமாரான அட்டைப்படம்
1. வல்லவர்கள் வீழ்வதில்லை
2. எஞ்சி நின்றவனின் கதை
3. கப்பலுக்குள் களேபரம்
5. 2014-ன் சிறந்த புதுமுகம்
மேஜிக் விண்ட்
6. டெக்சின் கதைகளை ஓவராய் போட்டு வருவதாய் நினைக்கத் தோன்றுகிறதா ?
நிச்சயமாக இல்லை...
7. இவரது கதைகள் நன்றாக இருப்பினும், இவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன
சிக்பில்&கோ and ஜில் ஜோர்டன்
8. முந்தய ஆண்டோடு ஒப்பிடுகையில் நாம் ரசனைகளில் எங்கே நிற்கிறோம் ?
நல்ல முன்னேற்றம் கண்டுள்ளோம்...(குறிப்பாக Graphic novel ரசிப்பதில்)
9. 2014-ன் HIGHLIGHT என்று சொல்லத் தோன்றும் கணம் எதுவாக இருக்கும் ?
வேறென்ன...நமது லயனின் 30 வது ஆண்டு மலர் வெளியீடும், அதே ஈரோடு புத்தகத் திருவிழாவில் முதல் முறையாக தங்களையும்,
கூடவே ஜூனியர் எடிட்டரையும் சந்தித்தது :)
(சரியான நேரத்தில் இதைப்பற்றி தகவல் அளித்து என்னை அங்கு வரச்செய்த 'ஈரோடு' விஜய் அண்ணனுக்கு, இந்த நேரத்தில் நான் நன்றி
சொல்லியே ஆக வேண்டும்...Thnkssss a lot Vijay anna:))
10. இந்தாண்டின் ஒட்டு மொத்த அனுபவம் எவ்விதம் இருந்துள்ளது என்று நினைக்கிறீர்கள் ?
நமது காமிக்ஸ் பழைய ஃபார்முக்கு வருவதும்,Media க்களின் கவனம் நம் மீதும் அவ்வப்போது விழுவதும் மிக மிக மகிழ்ச்சியளிக்கறது...:)
11. அந்த routine சமாச்சாரங்களைத் தாண்டி சுவாரஸ்ய மீட்டரில் டாப் இடத்தைப் பிடித்த பதிவாய் எதைச் சொல்லுவீர்கள் ? Care to
share ?
இரும்புக்கை மாயாவி,மாடஸ்டி etc. ஆகியோர்களின் re-print பற்றிய பதிவும்,மின்னும் மரணம் வெளியீட்டுத் தேதியின் அறிவிப்பும்...
//இவையனைத்தும் ஜனவரி 2-ல் டெஸ்பாட்ச் செய்யப்படும் !
ஜனவரி 9-ல் புறப்படப் போகும் பாக்கி 5 இதழ்களும் இதோ//
எடிட்டர் சார்...ஜனவரியில் 10 இதழ்களா!!! woooow!!!
நிஜமாகவே January-2015 நமக்கு தீபாவளி,பொங்கல்,தமிழ்ப் புத்தாண்டு,ரம்ஜான்,கிறிஸ்துமஸ் எல்லாமே....
எனக்குத் தெரிந்த வரை நமது காமிக்ஸ் ஒரே மாதத்தில் 10 வெளிடயீடுகள் வந்தது இல்லை என்று நினைக்கிறேன்...
மினி லயன்,திகில் போன்றவைகள் வெளிவந்தபொழுது இப்படி ஒரே மாதத்தில் 10 வெளிடயீடுகள் ஏதேனும் வந்துள்ளதா நண்பர்களே?!!!
Deleteஅன்புத் தம்பி சத்யாவை சந்திக்க நேர்ந்ததும், அவரது அளவிலா காமிக்ஸ் காதலை உணர்ந்து வியந்ததும் இந்த ஈரோட்டு அண்ணன் செய்த பாக்கியமில்லையா?
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க!
@Erode Vijay Anna: :):):)
Deleteசார் அட்டை படம் இப்போதைய வழக்கம் போலவே பளிச் ! டயபாளிக் விஸ்வரூபம் அருமை ! லக்கியும் சூப்பர் !
ReplyDeleteடாப் அனைத்துமே என்றாலும் லார்ர்கோ. செல்டன் ,விரியன் ,13, கார்சனின் கடந்த காலம் ....
சொதப்பல் ஏதுமில்லை ஆனால் டெக்ஸ் lms வண்ண த்தில் வந்ததால் மட்டுமே என்னை தாக்கு பிடிக்க வைத்தது ... புரட்ட வைத்தது .கதை சிறிதே சிறிது சொதப்பல் .
அட்டைகள் குறையில்லை
ஜூல்யா , மேஜிக் விண்ட், தோர்கல் வரிசைப்படி
டெக்ஸ் குறித்து இவ்வாறு கேட்பதுதான் கொஞ்சம் ஓவர்
ஷேல்டனுக்கு , டயபாளிக்கிர்க்கு வாய்ப்புகள் குறைவு .பதிமூன்றின் கிளை கதைகளுக்கும் வாய்ப்பு குறைவே !
முன்னேற்றம் அருமை
விரியனின் கதை அருமை ....
சார் போவது உறுதி !
மின்னும் மரணம் சீக்கிரமாய் பிப்ரவரிக்கு தந்தாள் இன்னும் சூப்பர்
டியர் எடிட்டர் சர்ர்,
ReplyDelete2014 இன் சொதப்பல்கள் என்று நரன் நினைப்பது :-
1) கரலத்தின் கரல் சுவடுகளில்
2) கரவியில் ஒரு ஆவி
3) கரவல் கழுகு ( டெகஸ் -கதைகளில் சுமர்ர் என பெயர் போனது)
டியர் எடிட்டர் சர்ர்,
ReplyDeleteஎன்னைப் பொறுத்தவரை டெக்ஸ் ஓவர் "டோஸ்" இல்லை. எவ்வளவு வெளியிட்டரலும் தகும்.
லர்ரன்ஸ்& டேவிட், மர்ம மனிதன் மர்ர்டின் சரன்ஸ் கொடுத்து பர்ர்க்கலரமே சர்ர். (வரும் ஆண்டில்)
"மிலேனியம் ஸ்பெஷல்" வெளியிட்ட தருணம்தரன் சர்ர்.
தங்கள் உண்மையுள்ள
திருச்செல்வம் பிரபரனந்
டியர் எடிட்டர் சர்ர்,
ReplyDeleteஇவ்வரண்டு ஒட்டுமொத்தமரய் " சுவரஸ்யம். அடுத்த ஆண்டோ "விறுவிறுப்பு". என்ன சர்ர் சரிதரனே?
தங்கள் உண்மையுள்ள
திருச்செல்வம் பிரபரனந்
டியர் எடிட்டர் சர்ர்,
ReplyDelete"வலைபூவில்" உங்கள் திறமையரன பதிவு "மும்மூர்த்திகளின்" மறுபதிப்பு வெளியீடு தரனே சர்ர்?
இந்த மரதம் வெளியீடு எதுவும் வர்ரதர சர்ர்? ஐனவரியில்தரனர? 2ம் திகதியும், 9ம் திகதியும் மட்டும்தரனர?
தங்கள் உண்மையுள்ள
திருச்செல்வம் பிரபரனந்
1,வல்லவர்கள் வீழ்வதில்லை
ReplyDelete2,எஞ்சி நின்றவன் கதை
3,இறந்தகாலம் இறப்பதற்கு இல்லை
சிறந்த புதுமுகம் -மேஜிக் விண்ட்.
ReplyDeleteசிறந்த அட்டைப்படம்
ReplyDelete1,LMS
2,காலத்தின் காலச்சுவடுகலில்
3,உயரே ஒரு ஒற்றைகழுகு
வாங்க வாங்க யுவா கண்ணன் நல்வரவு . இங்கேயும் அசத்துங்கள் . மனதில் பட்டதை ஓப்பன் ஆக எழுத தயங்க வேண்டாம்.
Deleteவெல்கம் கண்ணன் ....
Deleteயுவா.! சொல்லவேயில்ல.!
Deleteசெம்ம ஆச்சர்யம்.!
வாங்க வாஙக.! கலக்குங்க.!
நன்றி நண்பர்களே
Deleteஇங்கே'கிளிக்'
Deleteமாயாவி சார் நன்றி.
Deleteஹல்லோ கண்ணன்!!! வெல்கம் நண்பரே! :)
Deleteசென்னை புத்தக கண்காட்சியில் எப்போது கடை உறுதியாகும்?
ReplyDeleteடியர் எடிட்டர் சர்ர்,
ReplyDeleteஷெல்டனுக்கு முன்னுரிமை கொடுக்க முடியுமா சர்ர்? எல்லரம் வெளியிட்டு முடிந்து விட்டதர சர்ர்?
"போனல்லி" நிறுவனத்தின் எல்லர வெளியீடுகளையும் வெளியிட்டு விட்டீர்களர சர்ர்?
எப்போதும் லீவு இல்லரமல் வெளியில்தரனர சர்ர்? நீங்களும் எமக்கு நல்லவையாக தரவேண்டும் என்று வெளியில் அலைவது புரிகிறது.
தங்கள் உண்மையுள்ள
திருச்செல்வம் பிரபரனந்
திருச்செல்வம் பிரபரனந் : இந்தாண்டில் தான் ஷெல்டனுக்கு 3 கதைகள் உள்ளனவே ?! போனெல்லி குழுமத்தின் வெளியீடுகள் சகலத்தையும் தமிழுக்குக் கொண்டு வர ஒரு ஆயுள் போதாது !!
Deleteடியர் எடிட்டர் சர்ர்,
Deleteஇப்போதுதரன் கரப்டன் வந்துள்ளர்ர். இனி சூடு பிடிக்கும். அப்பரடர. ஏதோ என்னரல் முடிஞ்சது. 2016 இன் கரட்லரக் இல்லரத்தரல் வந்த வினை. அமோகமரக "ஷெல்ரனின்" கதைகளை வெளியிடுங்கள் சர்ர். அவ்வளவு பெரிய ஆசை சர்ர். பர்ரம்பரியம் மிக்க " போனல்லி" நிறுவன எல்லர வெளியீடுகளை இல்லர விட்டரலும் நல்ல வெளியீடுகளை விடரதீர்கள் சர்ர்.
தங்கள் உண்மையுள்ள
திருச்செல்வம் பிரபரனந்
1. டாப் 3
ReplyDelete- வல்லவர்கள் வீழ்வதில்லை
- ஒரு நிழல் நிஜமாகிறது
- உயரே ஒரு ஒற்றை கழுகு
2. சொதப்பல்
- ரின்டின்கேன்
- விண்வெளியில் ஒரு விபரீதம்
- செங்குருதிச்சாலைகள்
3. பெஸ்ட் அட்டை: தேவ ரகசியம் தேடலுக்கல்ல,உயரே ஒரு ஒற்றை கழுகு
4. சுமாரான அட்டை: எஞ்சி நின்றவனின் கதை
5. சிறந்த புதுமுகம்: மேஜிக் வின்ட்
6. டெக்ஸ் வில்லர் டைஜெஸ்ட் வேண்டும்,மாதம் இரண்டு கதைகள்.....
7. அதிக கதைகள் வேண்டும்....
டயபோலிக்,ஜில் ஜோர்டான்,மர்ம மனிதன் மார்ட்டின்
8. நாம் ரசனைகளில் கண்டிப்பாக முன்னே நிற்கிறோம்... .
9. 2014-ன் HIGHLIGHT
மின்னும் மரணம் கலக்டர்ஸ் ஸ்பெஷல் அறிவிப்பு மற்றும் லயன் 25௦ஆவது மலர் அறிவிப்பு.....
10. இந்தாண்டின் ஒட்டு மொத்த அனுபவம்
மன நிறைவு
பழைய நாயகர்களின் மீள் வருகை பற்றிய பதிவு சுவாரசியம்....
Thirumavalavan p : Top 3 தேர்வுகளும் நவம்பரின் இதழ்களா ? ஆஹா !
Deleteசிறந்த புதுமுகம் :- மேயிக் விண்ட் என்று சொல்லவும் வேண்டுமர சர்ர்?
ReplyDeleteஆண்டிற்கு பத்து இதழ்கள் வெளியட்ட காலம் போய்,மாதத்திற்கு பத்து இதழ்கள் வெளியிடும் அளவிற்கு நமது காமிக்ஸ் முன்னேறி இருப்பது மனதிற்கு நிறைவாக உள்ளது.இந்த மகிழ்ச்சி என்றும் நிலைக்கட்டும்.
ReplyDeleteArivarasu @ Ravi : நன்றிகள் நண்பரே ! ஆண்டுக்குப் பத்தே இதழ்கள் வெளிவந்த அந்த நாட்களின் சுவாரஸ்யங்களை தக்க வைத்துக் கொள்ள முடிந்தால் சூப்பர் தான் !
Delete//அந்த routine சமாச்சாரங்களைத் தாண்டி சுவாரஸ்ய மீட்டரில் டாப் இடத்தைப் பிடித்த பதிவாய் எதைச் சொல்லுவீர்கள் ? Care to
ReplyDeleteshare ?//
Kannan Ravi. என்று ஒருவர் கமெண்ட் போட ஆரம்பித்தாரே.!?
அதுதான் டாப் இடத்தை பிடித்த பதிவு.
லக்கிலூக் ,மாடெஸ் டி ,புளு கோட் பட்டாளம் வரவேற்கிறேன்.ஜனவரியின் பத்து கதைகளும்
ReplyDeleteபொங்கல் விருந்தாக அமையப்போவது நிச்சயம் .
BAMBAM BIGELOW : மறுபதிப்புக் கதைகளை முதன்முறையாய்ப் படிக்கப் போகிறீர்களா நண்பரே ?
Deleteடியர் எடிட்டர் சர்ர்
ReplyDelete"கிர்ரபிக்ஸ் நரவல்கள் சூப்பர்" . இன்னும் " வரனமே எங்கள் வீதி" , " வல்லவர்கள்
வீழ்வதில்லை", மேயிக் விண்ட் கதை இன்னும் வரவில்லை. வடிவேல் சொன்ன மரதிரி " அண்ணை இன்னும் வடை வரல" . " புகை மூட்ட சமிக்ஞை" இன்னும் கிடைக்கல." "ஓவர், ஓவர்" ஹ ஹ ஹ
தங்கள் உண்மையுள்ள
திருச்செல்வம் பிரபரனந்
திருச்செல்வம் பிரபரனந் : வடையை காக்காய் தூக்கிட்டுப் போகாத வரைக்கும் சந்தோஷமே !
Deleteடியர் எடிட்டர் சர்ர்,
Deleteநரியெல்லரம் இப்ப ரொம்ப உஷர்ர். தன் கரலுக்கு கீழே வடையை வைத்துக்கொண்டு "கர, கர" என கத்திக்கொண்டு உள்ளனவரம் சர்ர்.
தங்கள். உண்மையுள்ள
திருச்செல்வம் பிரபரனந்
// இந்தாண்டின் ஒட்டு மொத்த அனுபவம் எவ்விதம் இருந்துள்ளது என்று நினைக்கிறீர்கள் ? //
ReplyDeleteசூப்பர் 6 அறிவித்தது LMS என இந்த ஆண்டு நன்றாகவே முடிந்தது.
புதிய வேலையில் சேர்ந்த காரணத்தினால் புதுச்சேரி புத்தக விழாவில் இரண்டு நாள் கலந்து கொள்ள இயலவில்லை. இன்று மதியம் நமது ஸ்டாலுக்கு சென்றேன். விற்பனை செய்யும் நண்பர்களிடம் வினவியதில் விற்பனை சீராக உள்ளதாக தெரிவித்தனர். அப்பொழுது ஒரு சிறுவன் தன் தந்தையோடு வந்து ஒரு தேடுதல் மேற்கொண்ட பின் ஆங்கில காமிக்ஸ் இல்லையா என்று கேட்டு சென்றான். ஒரு முதியவர் வந்து ப்ளுகோட் பட்டாளத்தின் ஒரு கதையை வாங்கிச்சென்றார். நண்பருக்காக சில காமிக்ஸ் புத்தகங்களை வாங்கித்தந்தேன். பின்பு மதிய உணவிற்காக வீடு திரும்பினேன். விற்பனை இன்னும் சிறப்பாக அமையவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteWillerFan@RajaG : மிதமான விற்பனை புதுவையில் ! அந்தப் பகுதிகளில் நமக்கொரு விளம்பரமும் கூட என்ற ரீதியில் சேர்த்துப் பார்க்கும் போது ஏமாற்றமில்லை !
Deleteசொதப்பல்கள்
ReplyDelete1,பனிக்கடலில் ஒரு பாலும் தீவு.
2,முகமற்ற கண்கள்.
3,வின்வெளியில் ஒரு விபரீதம்.
kannan s : விண்வெளியில் ஒரு விபரீதம் - சொதப்பல் பட்டியலிலா ? ஆவ்வ் !!
Deleteவல்லவர்கள் வீழ்வதில்லை - இது வரை இந்த கதையை பாராட்டி நண்பர்கள் இட்ட பதிவுகள் அனைத்தையும் தொகுத்து அதை என்னுடைய பதிவாக படித்து கொள்ளவும்.
ReplyDeletesundaramoorthy j : பிள்ளையார்...அம்மையப்பர்.. ...மாம்பழம்....! திடீரென்று நினைவுக்கு வருவது ஏனோ தெரியவில்லை !! :-)
Deleteஇதுவரை படித்ததில் டாப் 3- விரியனின் விரோதி, வானமே எங்கள் வீதி , தேவ ரகசியம் தேடலுகள்ள
ReplyDeletesenthilwest2000@ Karumandabam Senthil : Top 3 - கிராபிக் நாவல்கள் !
Deleteசொதபல்கள் டாப் 3- உயரே ஒரு ஒற்றை கழுகு , முகமற்ற கண்கள்
ReplyDeleteதோர்கல் (பனிக்கடலில் ஒரு பாழும் தீவு)
//.2014-ன் HIGHLIGHT என்று சொல்லத் தோன்றும் கணம் எதுவாக இருக்கும் ? //
ReplyDeleteLMS மற்றும் KING SPECIAL ஐ கையில் பிடித்த கணம்.
//முந்தய ஆண்டோடு ஒப்பிடுகையில் நாம் ரசனைகளில் எங்கே நிற்கிறோம் ?//
உண்மையை சொல்வதாயின் முன்னேறியதாய் நினைத்துக்கொண்டு இருக்கிறேன். (கவனிக்க. இருக்கிறேன்.)
//திறமைகேற்ற அளவிற்கு வாய்ப்புகள் தரப்படவில்லை !'//
ReplyDeleteசிக்பில் (ஹிஹிஹி)
ஜோர்டான்.
ரின்டின் (அப்புடியா.!!!?)
//டெக்சின் கதைகளை ஓவராய் போட்டு வருவதாய் நினைக்கத் தோன்றுகிறதா ? //
ஆண்டிற்க்கு ஆறு டெக்ஸ் கணை(தை)கள் அதிகமாக தெரிவதில்லை.
வ.வீ.போல குண்டாய் மூன்று கா.க.கா.போல கலரில் மூன்று.
முடிந்தால் தீபாவளி மலரென்று குண்ண்ண்டாய் ஒன்று.
அதற்க்கு மேல் டெக்ஸ் வேண்டாம்..,
கிட் ஆர்ட்டின் KANNAN : //வ.வீ.போல குண்டாய் மூன்று கா.க.கா.போல கலரில் மூன்று.
Deleteமுடிந்தால் தீபாவளி மலரென்று குண்ண்ண்டாய் ஒன்று.
அதற்க்கு மேல் டெக்ஸ் வேண்டாம்..,//
அடடா..என்னவொரு அடக்கமான ஆசை !!
Today visited Pondy book fair...Paid subscription for 2015.
ReplyDelete
ReplyDelete1) டாப் 3 இதழ்கள்
விரியனின் விரோதி
எதிர் வீட்டில் எதிரிகள்
கட்டத்துக்குள் வட்டம்
ஒரு நிழல் நிஜமாகிறது
2) 2014-ன் மொக்கை பீஸ்கள்
சாக மறந்த சுறா
காலத்தின் கால் சுவடுகளில்
3) 2014-ன் பிரமாதமான அட்டைப்படம் – LMS
4) படு சுமாரான அட்டைப்படம் – no idea
5) 2014-ன் சிறந்த புதுமுகம் – ரின் டின்
6) டெக்ஸ் கதைகளின் மீது லேசாகவேணும் சலிப்புத் தோன்றுகிறதா ? - நிச்சயமாக இல்லை
7) வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன- no idea
8 ) ரசனைகளில் எங்கே நிற்கிறோம் ? – நிச்சயமாக நமது பயணம் முன்னோக்கியே உள்ளது ... ஸ்பெஷல் தேங்க்ஸ் டு ஜூனியர்
9) 2014-ன் HIGHLIGHT – LMS ரிலீஸ்
10) THE YEAR IN TOTAL – இந்த வருடம் நமது காமிக்ஸ் பயணத்தின் முக்கியமான ஆண்டுகளில் ஒன்று. உங்களுக்கும், நமது சின்ன டீம் (!) க்கும் நன்றிகள். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பதை போல ...
11) டாப் இடத்தைப் பிடித்த பதிவாய் - தல தளபதி திருவிழா .... எத்தனை எதிர்பார்ப்பு அந்த அட்டை படத்தை பார்ப்பதற்கு ...
///6) டெக்ஸ் கதைகளின் மீது லேசாகவேணும் சலிப்புத் தோன்றுகிறதா ? - நிச்சயமாக இல்லை///
Deleteஎன்னா ஒரு பெருந்தன்மை!! மனதில் வைத்துக்கொள்ளப்படும்! :)
கிர்ர்ர் கிர்ர்ர் ...
Deleteதிருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் : //டாப் இடத்தைப் பிடித்த பதிவாய் - தல தளபதி திருவிழா .... எத்தனை எதிர்பார்ப்பு அந்த அட்டை படத்தை பார்ப்பதற்கு //
Deleteகாத்திருப்பு வீண் போகவில்லை என்ற மட்டிற்கு நிம்மதி எனக்கு !! அவ்வளவு பில்டப்புக்குப் பின்னே லேசாக சொதப்பியிருப்பினும் சங்கடமாகிப் போயிருக்குமே !
சூப்பர் விஜயன் சார்
ReplyDeleteஇந்த புத்தாண்டு (5புக்)கோலாகலமாக தொடங்கி
பொங்கல் சமயத்தில் (7 புக்)கலக்க போகிறது என்று சொல்லுங்கள்
மொத்தத்தில் 2015ம் வருடம்
ஆரம்பமே அமர்ககளமாக ஆரம்பிக்கிறது
SUPER sir
.
Prabakar T : :-)
Delete//ரசனைகளின் அடிப்படையில் யாரை 2014-ன் சிறந்த புதுமுகமாய்த் தேர்வு செய்வீர்கள் folks ? //
ReplyDeleteரின்டின்கேன்
டைலன்டாக்
மேஜிக் விண்ட் (இருந்துட்டு போகட்டும்.)
// 2014-ன் பிரமாதமான அட்டைப்படம் எதுவென்றும் ; படு சுமாரான அட்டைப்படம்.//
பி.அ.
வானமே எங்க வீதி
தே. ர. தேடலுக்கல்ல.
LMS 1 மட்டும்.
சு.அ.
வ.வீழ்வதில்லை.(முன் அட்டை.)
LMS 2 (முன் அட்டை)
//2014-ன் மொக்கை பீஸ்கள் எவையோ - உங்கள் பார்வைகளில் ? And more importantly - why ?//
ReplyDeleteமொக்கைன்னு சொல்ல முடியாது. சுமார்னு வேணா சொல்லலாம்.
வி.ஒ.விபரீதம்.(ஜூலியா.)+ வீதியெங்கும் உதிரம்.
மு.கண்கள்+சாக ம. சுறா.(புருனோபிரேசில்.)
நித்தமும் குற்றம். (எப்புடி இப்புடி எல்லாம்னு தயவுசெஞ்சி கேக்காதிங்க.:):))
//இந்தாண்டின் நமது performance-ஐ எவ்விதம் ரேட் செய்வீர்கள் ? //
4.5/5
ஆனால் 2015க்கு 3/5.
///2014-ன் டாப் 3 இதழ்களாக எவை இருந்திட முடியும் ///
வல்லவர்கள் வீழ்வதில்லை + அ.தரும் அண்ணாத்தே
நில் கவனி சுடு + பூம்பூம் படலம் +அந்தி மண்டலம்.
கா.க.காலம்+பைங்கிளி படலம்.+வி.விரோதி+கா.குதிரையில்லை.
உஸ்ஸ்ஸ்ஸ் யப்ப்பா.! ஒருவழியா எக்ஸாம் எழுதிட்டேன்.
(ஏதாவது மறந்திருந்தா மறுபடி வருவேன். அலைகள் ஓய்வதில்லையாமே.!!!)
மறுபடியும் " நவீன ராமானுஜர் ".....????????........:-)
Delete// நித்தமும் குற்றம். (எப்புடி இப்புடி எல்லாம்னு தயவுசெஞ்சி கேக்காதிங்க.:):)) //
DeleteToo advanced!
கிட் ஆர்ட்டின் KANNAN : //உஸ்ஸ்ஸ்ஸ் யப்ப்பா.! ஒருவழியா எக்ஸாம் எழுதிட்டேன்.//
Deleteமூன்றே பதில்கள் கோரும் கேள்விக்கு 9 பதில்களை எழுதி வைத்தால் பெருமூச்சு தான் வரும் !!
1. டாப் 3 Hit கதைகள்
a. நில் கவனி சுடு (2014-ன் மிக சிறந்த பொழுதுபோக்கு கதை)
b. இறந்த காலம் இறப்பதில்லை(LMS)
c. தேவ ரகசியம் தேடலுக்கல்ல...........
2.. டாப் 3 சொதப்பல் கதைகள்
a. முகமற்ற கண்கள்.....கதையின் அப்போதைய .நவீனத்துவம் மங்கி பொலிவு குன்றி விட்டது.
b.பயங்கர புயல்.......சாரமில்லாத கதை......திருப்பங்கள் என்று கூட ஏதுமில்லை.......
c.காலத்தின் கால் சுவடுகளில்.... சித்திரங்கள் மட்டுமே ஆறுதல்.......
3. 2014-ன் பிரமாதமான அட்டைப்படம்....
வானம் எங்கள் வீதி
4. 2014-ன் படு சுமாரான அட்டைப்படம்
ஆத்மாக்கள் அடங்குவதில்லை
5. 2014-ன் சிறந்த புதுமுகம்
டைலன் டாக் ....அந்தி மண்டலம்
6. டெக்சின் கதைகளை ஓவராய் போட்டு வருவதாய் நினைக்கத் தோன்றுகிறதா ?
ஹி.....ஹி......ஹி......ஆமாம்......
7. இவரது கதைகள் நன்றாக இருப்பினும், இவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன
சிக்பில்..... ( டிஜிட்டல் பைல் விளக்கம் புரிகிறது)
மார்ட்டின்........
ஜில் ஜோர்டான்
8. முந்தய ஆண்டோடு ஒப்பிடுகையில் நாம் ரசனைகளில் எங்கே நிற்கிறோம் ?
எப்போதும் போல் பழமை சார்ந்துதான்நாங்கள் நிற்கிறோம்..... வேறு ஒரு கட்டத்திற்கு நீங்கள்
விடாப்பிடியாக எங்களை இழுத்து செல்ல முயல்வதை முனகலுடன் அங்கீகரிக்க எத்தனிக்கிறோம்.
9. 2014-ன் HIGHLIGHT என்று சொல்லத் தோன்றும் கணம் எதுவாக இருக்கும் ?
LMS-வெளியீட்டு தருணம்தான்
10. இந்தாண்டின் ஒட்டு மொத்த அனுபவம் எவ்விதம் இருந்துள்ளது என்று நினைக்கிறீர்கள் ?
சறுக்கல்கள்....
a.கார்சனின் க. காலம்.....சித்திரங்கள் குறித்து ஏகோபித்த அதிருப்தி....
b.சிறப்பான முயற்சிக்கு பின்னும் அச்சுத்தரம், வண்ணகலவை குறித்து சிலசமயம் நெடுநாள்
வாசகர்களும் மன வருத்தம் அடைய நேரிட்டது...
புளகாங்கிதம் அடையவோ ஏகப்பட்ட விஷயங்கள்.....
LMS -ன் பெருமிதம்
காலம் தவறாத இதழ்கள்
புது கதை மாந்தர்கள்
துணிச்சலான மின்னும் மரணம் முயற்சி இன்னும் எவ்வளவோ..........
11. அந்த routine சமாச்சாரங்களைத் தாண்டி சுவாரஸ்ய மீட்டரில் டாப் இடத்தைப் பிடித்த பதிவாய் எதைச் சொல்லுவீர்கள் ?
பரண் மேல் உட்கார்ந்து கொண்டு நீங்கள் எழுதிய பதிவு
///8. முந்தய ஆண்டோடு ஒப்பிடுகையில் நாம் ரசனைகளில் எங்கே நிற்கிறோம் ?
Deleteஎப்போதும் போல் பழமை சார்ந்துதான்நாங்கள் நிற்கிறோம்..... வேறு ஒரு கட்டத்திற்கு நீங்கள்
விடாப்பிடியாக எங்களை இழுத்து செல்ல முயல்வதை முனகலுடன் அங்கீகரிக்க எத்தனிக்கிறோம். ///
ரசணையான வரிகள்!! :)
selvam abirami : //டெக்சின் கதைகளை ஓவராய் போட்டு வருவதாய் நினைக்கத் தோன்றுகிறதா ?
Deleteஹி.....ஹி......ஹி......ஆமாம்......//
//எப்போதும் போல் பழமை சார்ந்துதான்நாங்கள் நிற்கிறோம்..... வேறு ஒரு கட்டத்திற்கு நீங்கள்
விடாப்பிடியாக எங்களை இழுத்து செல்ல முயல்வதை முனகலுடன் அங்கீகரிக்க எத்தனிக்கிறோம்.//
மனதில் தோன்றுவதை அப்பட்டமாய் ; மிகைப்படுத்தலின்றிச் சொல்லும் வரிகள் !
ஹாய் விஜயன் சார்,
ReplyDeleteஇன்னும் டிசம்பர் வெளியீடுகள் கிடைக்காததால் முழுமையான/சரியான முடிவுகளை தர இயலவில்லை.இருந்த போதிலும் ஏதோ முயற்சி எடுத்துள்ளோம்.
1. டாப் 3 கதைகள்
கார்சனின் கடந்த காலம்
இரவே இருளே கொல்லாதே
தேவரகசியம் தேடலுக்கல்ல
2 டாப் 3 சொதப்பல் கதைகள் என்று குறிப்பிடும்படி எதுவும் தோணல்ல..சாரி
3தேவரகசியம் தேடலுக்கல்ல
4எதிர் வீட்டில் எதிரிகள்
5மேஜிக் விண்ட்
6டெக்ஸ் கதைகள் என்றுமே போரடிப்பதில்லை.(வெரைடியா தந்தால் இன்னும் செமையா என்ஜாய் பண்ணுவோம்..Like மரணமுள்..செவ்விந்திய கதைகள்..காடுகளில் நடக்கற கதைகள் இப்படி வேறுபட்ட கதைகளங்களில் டெக்ஸின் அட்டகாசங்கள் தொடரவேண்டும் என்பதே எங்கள் ஆசை!)
7காமடி கதைகளின் குறைவு தான் ஒரே குறை.லக்கி,சிக்பில்..(மதியில்லா மந்திரி எங்கே?)
8அழுகாச்சி அல்லாத விதம்விதமான நல்ல கிரபிக்ஸ் நாவல்கள் ரசனைகளின் எல்லைகளை விரிவு படுத்துகின்றன.(இ.இ.கொ,தே.தே)
9LMS தான்.
10வெரைட்டி&கலர் புல்
11 பழைய புக்ஸ் 39 கையில் கிடைச்சுடுச்சுன்னு சொன்ன பதிவுதான் THE BEST ..!
சந்தோஷமான தருணங்கள் என்றால் மறுபதிப்புக்கள் வரப்போவதாய் சொன்னது,மின்னும் மரணம் வரவிருப்பதை அறிந்தது,LMS இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஜனவரியில் வரவிருக்கும் இதழ்களின் பட்டியலில் தங்க கல்லறை மற்றும் மற்றவையை காணவில்லையே சார்..அவை சந்தாவிலடங்காதவை என்ற போதும் சும்மா ஒரு தடவை சொல்லுங்களேன். சந்தோஷமாக இருக்கும். :D
நம்ம காமிக்ஸ் வரலாற்றிலேயே முதல்முதலாக ஒரு மாதத்தில் 10 ற்கும் மேற்பட்ட புக்ஸ் வரப் போறது..அட்டகாசமாக தொடங்கப் போறது அடுத்த வருஷம்.
suji jeya : //ஜனவரியில் வரவிருக்கும் இதழ்களின் பட்டியலில் தங்க கல்லறை மற்றும் மற்றவையை காணவில்லையே //
Deleteகவலையே வேண்டாம்...அவை நிச்சயம் ஜனவரியில் உண்டு ! புது இதழ்களின் அச்சு ; பைண்டிங் பணிகள் முடிந்தான பின்னே அவை வெளியாகும் !
1. டாப் 3 Hit கதைகள்
ReplyDelete1. விரியனின் விரோதி & நில் கவனி சுடு
2. இறந்தகாலம் இறப்பதில்லை & இரவே இருளே கொல்லாதே
3. கார்சனின் க.கா , உயரே ஒரு ஒற்றைக் கழுகு & பூம்பூம் படலம்
2. டாப் 3 சொதப்பல் கதைகள்
1. காலத்தின் கா.சு
2. காவியில் ஒரு ஆவி
3. முகமற்ற கண்கள், சட்டம் அறிந்திரா சமவெளி(!)
3. 2014-ன் பிரமாதமான அட்டைப்படம்
1. தேவ ரகசியம் தேடலுக்கல்ல
2. LMS -1
3. நில் கவனி சுடு , உயரே ஒரு ஒற்றை கழுகு , கார்சனின் க.கா & எதிர் வீட்டில் எதிரிகள்
4. 2014-ன் படு சுமாரான அட்டைப்படம்
1. காலனின் கைக்கூலி
2. நினைவுகளைத் துரத்துவோம்
3. ஆத்மாக்கள் அடங்குவதில்லை
5. 2014-ன் சிறந்த புதுமுகம்
ரின்டின்கேன்
6. டெக்சின் கதைகளை ஓவராய் போட்டு வருவதாய் நினைக்கத் தோன்றுகிறதா ?
மாசத்திற்கு நாலு டெக்ஸ் கதைகளைப் போட்டுட்டு அப்புறம் வேணா கேளுங்க இந்தக் கேள்வியை! (நல்லா கேட்கறாங்கப்பா டீட்டெய்லு...)
7. இவரது கதைகள் நன்றாக இருப்பினும், இவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன
ரின்டின்கேன், (கொஞ்சமாய்) டயபாலிக்
8. முந்தய ஆண்டோடு ஒப்பிடுகையில் நாம் ரசனைகளில் எங்கே நிற்கிறோம் ?
Graphic novel ரசிப்பதில் நிறையவே முன்னேற்றம் கண்டுள்ளோம். இன்னும் கொஞ்சமே கொஞ்ச பேர் மாறவேண்டியிருக்கிறது. அது நடந்துவிட்டால் அப்புறம் 'தனி சந்தா' என்று கி.நா'களை ஒதுக்கவேண்டியதிருக்காது.
9. 2014-ன் HIGHLIGHT என்று சொல்லத் தோன்றும் கணம் எதுவாக இருக்கும் ?
EBFல் LMS வெளியீட்டு தினத்தன்று எடிட்டர் மற்றும் நண்பர்களோடு ஒருநாள் முழுக்க கழிந்த பொழுதுகள்!
10. இந்தாண்டின் ஒட்டு மொத்த அனுபவம் எவ்விதம் இருந்துள்ளது என்று நினைக்கிறீர்கள் ?
* குறித்த நேரத்தில், ஒவ்வொரு மாதமும் கைநிறையக் கிடைத்த இதழ்கள்
* சுமார் 5% பிசகினாலும் 95% திருப்திபடுத்திய அச்சுத்தரம்
* பிரம்மிக்க வைத்த LMSம், துளியும் எதிர்பாராமல் கிடைத்த அதன் Hardbound அட்டையும்
* சிங்கத்திற்குத் துணையாக 'குட்டிச் சிங்கமும்' நடைபோட்டு வருவது
* மீண்டும் கடைகளில் விற்பனையைத் தொடர்வதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளும், அதில் கண்ட வெற்றிகளும்
* எதிர்பாராமல் அசத்திய சேலம் புத்தகத் திருவிழாவும், நண்பர்களின் அசாத்திய ஆர்வமும்
* மி.ம மூலமாக customized imprint'ன் அறிமுகம்
* Packing முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றம்
* சந்தாதாரர்களுக்கு நியாயம் செய்திடும் 2015க்கான சந்தா packages.
* இவ்வாண்டு தாராளமாகவே கிடைத்த மீடியாக்களின் வெளிச்சப் பார்வை (அதற்கு உதவிய நண்பர்களுக்கு சிறப்பு நன்றிகள்)
மேற்கூறியவைகளோடு இந்த ஆண்டு அமர்க்களமாக அமைந்திருக்கிறது.
குறைகள் களையப்பட்ட , நிறைகளால் நிறையப்பெற்ற மற்றுமொரு வெற்றிகரமான ஆண்டாக 2015 அமைந்திட எனது அட்வான்ஸ் வாழ்த்துகள்! :)
Erode VIJAY : Top 3 கதைகள் என்று கேள்வி வைத்தால் - 7 பெயர்களை எழுதுவது போங்கு ஆட்டம் ! பற்றாக்குறைக்கு டாப் 3 அட்டைப்படங்களுக்கு - ஆறு தேர்வுகள் !!
Deleteஆனால் இவையனைத்தையும் - 'போனால் போகட்டும் !' என மறக்கச் செய்வது - டாப் 3 சொதப்பல்கள் பட்டியலில் டெக்சின் "சட்டம் அறிந்திரா சமவெளியை" போட்டு ஹானஸ்ட் ராஜாக காட்சி தருவது !
காலை வணக்கங்கள் நண்பர்களே,
ReplyDelete" சுறுசுறுப்பாக பல தகவல்களுடன், எல்லோரும் ரசிக்கும்படியான பதிவை சட்டென்று நிறுத்தினால் எப்படி...? முக்கியமான விஷயத்தையும், சில சந்தேகங்களையும் விளக்கி முடியுங்கள்..."என நண்பர்கள் பலரும் விரும்புவதால்...நானும் எவ்வளவோ முயன்றும், ஒரு பதிவில் அதிரவைக்கும் பல தகவல்களை சுருக்க முடியாததால்...இன்னும் இரண்டு பதிவில் முடித்துவிடுகிறேன்....இன்று கதைக்கான முக்கிய பின்னணி பற்றி இரண்டு பக்கங்கள்.... இங்கே'கிளிக்'
113
ReplyDeleteசார் ..என்னுடைய இந்த வருட டாப் 3....
ReplyDelete1) நில் ..கவனி ..சுடு
2)எஞ்சி நின்றவனின் கதை
3) கட்டத்திற்குள் வட்டம்
சொதப்பல் 3...
1)காலத்தின் கால் சுவடுகளில்
2)அட்லாண்டாவில் ஆக்ரோஷம்
சிறந்த அட்டைபடம் ...
1) தி மேக்னம் ஸ்பெஷல்
2)காவல் கழுகு
மோசமான சாரி சுமாரான அட்டைபடம் ...
1)ஆத்மாக்கள் அடங்குவதில்லை
2)பனிக்கடலில் ஒரு பாலும் தீவு
3) வல்லவர்கள் வீழ்வது இல்லை
சிறந்த புது முகம்
டைலன் டாக்
டெக்ஸ் கதைகள் இந்த வருடமும் பற்ற வில்லை ...அடுத்த வருடமும் பற்ற வில்லை சார் ...
டயபாளிக் அவர்களுக்கு ஒரு சான்ஸ் கொடுத்து இருக்கலாம்
ரசனையில் நான் முன் வந்து விட்டேனா என்பது எனக்கு புரிய வில்லை சார் ...
2014 ஹை லைட்...
ஈரோட்டில் நமது ஆண்டு மலர் பார்த்த சந்தோஷமும் ...தங்களிடம் ....நண்பர்களிடம் உரையாற்றிய சந்தோஷ தருணம்.....
பதிவில் சந்தோஷ படுத்தியவை ...
மறுபதிப்பு பற்றிய அறிவிப்பு
Paranithara K : //ரசனையில் நான் முன் வந்து விட்டேனா என்பது எனக்கு புரிய வில்லை சார் ...//
Deleteகுழந்தை மனதுப் பட்டியலில் முன்வந்திருப்பது போதாதா பரணி ; ரசனை, என்ன பொல்லாத ரசனை ?!
டாப் 3 :
ReplyDeleteவிரியனின் விரோதி,இரவே இருளே கொல்லாதே,வானமே எங்கள் வீதி!
டாப் அட்டைபடம் - விரியனின் விரோதி,தேவ ரகசியம் தேடலுக்கல்ல!
பெஸ்ட் புதுமுகம் - தோர்கல்,மேஜிக் வின்ட்
டெக்ஸ் வில்லர் - டெக்ஸ் கதைகள் அதிகம் என்றோ , சலிப்போ என்றுமே தோன்றியதில்லை!
வாய்ப்புகள் கொடுக்கலாமே - எனக்கு பிடித்தமான ஹீரோக்கள் - மர்ம மனிதன் மார்டின் + டயபாலிக் இருவருக்கும்!
ஈரோடு புத்தக திருவிழாவில் நண்பர்களை சந்திக்க முடிந்தது+LMS.மின்னும் மரணம், பழைய ஹீரோக்கள் மீண்டு வந்தது,
இந்த ஆண்டில் புதுமையில் வெரைட்டியில் விறுவிறுப்பு, சுவாரஸ்யம், பணத்திற்கான மதிப்பில் - அனைத்திலும் சிறப்பாகவே இருந்தன உங்கள் செயல்பாடுகள்.
ஈரோடு புத்தக திருவிழா+LMS. மின்னும் மரணம், பழைய ஹீரோக்கள் மீண்டு வந்தது,லார்கோ மறுபதிப்பு!
Siva Subramanian : Top 3-ன் பட்டியல் முழுக்கவே கிராபிக் நாவல்கள் ! Awesome !!
Delete1. டாப் 3 Hit கதைகள்
ReplyDelete1.நில் கவனி சுடு
2.கார்சனின் கடந்த காலம் 3.பூம்பூம் படலம்
2. டாப் 3 சொதப்பல் கதைகள்
1. காலத்தின் கா.சு
2. காவியில் ஒரு ஆவி
3. விண்வெளியில் ஒரு விபரீதம்
3. 2014-ன் பிரமாதமான அட்டைப்படம்
1. தேவ ரகசியம் தேடலுக்கல்ல
2.நில் கவனி சுடு
3.கார்சனின் க.கா.
4. 2014-ன் படு சுமாரான அட்டைப்படம்
1. காலனின் கைக்கூலி
2. நினைவுகளைத் துரத்துவோம்
3. ஆத்மாக்கள் அடங்குவதில்லை
5. 2014-ன் சிறந்த புதுமுகம்
மேஜிக் விண்ட்
6. டெக்சின் கதைகளை ஓவராய் போட்டு வருவதாய் நினைக்கத் தோன்றுகிறதா ?
ஏன் இப்படி ? நெ1ஐப் பார்த்து எப்படி இந்த கேள்வி கேட்க தோன்றியது சார் ?
7. இவரது கதைகள் நன்றாக இருப்பினும், இவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன
டயபாலிக்
8. முந்தய ஆண்டோடு ஒப்பிடுகையில் நாம் ரசனைகளில் எங்கே நிற்கிறோம்?.
நிறையவே முன்னேற்றம் கண்டுள்ளோம். கி.நா.வுக்கு ஆதரவு பெருகுவது மகிழ்ச்சி .
9. 2014-ன் HIGHLIGHT என்று சொல்லத் தோன்றும் கணம் எதுவாக இருக்கும்?
LMS வெளியீட்டு விழா . நண்பர்கள் , ஆசிரியர் மற்றும் ஜூனியர் உடன் ஒருநாள் முழுவதும் ,தொடர்ந்து 2ம் ஆண்டாக ஒரு நாள் முழுதும் ஆட்டம் போட்டது . அன்று இரவு நண்பர் சிபியின் பிறந்த நாள் செலிப்ரேஷன் . முதல் முறையாக சேலம் புத்தக விழாவில் 10நாட்கள் உற்சாகத்துடன் நண்பர்கள் உடன் பணியாற்றி மகிழ்ந்தது. நண்பர்கள் அளித்த நினைவு பரிசு , என மறக்க இயலாத நினைவுகள்.
10. இந்தாண்டின் ஒட்டு மொத்த அனுபவம் எவ்விதம் இருந்துள்ளது என்று நினைக்கிறீர்கள் ?
பெஸ்ட் : lms தரம், மின்னும் மரணம் வெளியீட்டு தேதி அறிவிப்பு , மீண்டும் வர இருக்கும் மும்மூர்த்திகள் , நேரம் தவறாமல் இதழ்கள் கிடைத்தது.
கவனம் தேவை : பிரிண்டிங் தரம் , புதிய அறிமுகங்களின் போது ஜூலியா போன்றவை தவிர்ப்பது.
11. பரண் உருட்டும் படலம் பதிவு & மார்கண்டேய நால்வர் .
சேலம் Tex விஜயராகவன் : //கவனம் தேவை : புதிய அறிமுகங்களின் போது ஜூலியா போன்றவை தவிர்ப்பது. //
Deleteஅதிரடிகள் செய்தாலன்றி ஒரு நாயகனோ / நாயகியோ நம் அகராதியில் 'ஹிட்' ஸ்டார் ஆகத் தோன்றுவது சிரமமே என்பதை உங்கள் அபிப்ராயம் சொல்கிறது ! ஆனால் நிஜ வாழ்க்கையில் அரங்கேறும் புலனாய்வுகள் ; துப்புத் துலக்கல்கள் எல்லா நேரங்களிலும் ஜேம்ஸ் பாண்ட் பாணிகளில் இருப்பதில்லை ! ஜூலியாவின் முதல் கதையில் ஆர்ப்பாட்டங்கள் அதிகமில்லாவிடினும் - தெளிந்த நீரோடை போன்ற கதையும், யதார்த்தமும் மிளிர்ந்தன தானே ? அந்த பாணிகளையும் ஒரேடியாய் மூலை சேர்ப்பது - மசாலாக்களுக்கு ஓவர் முக்கியத்துவம் தந்தது போலாகுமன்றோ ?
ஜூலியாவின் கதைகள் 2015-ல் தொடராது போனதற்குக் காரணம் அத்தொடரின் மீது எனக்கிருந்த அவநம்பிக்கை அல்ல ! இத்தாலிய மொழிபெயர்ப்புகளில் நேர்ந்திடும் தாமதங்களால் - டெக்ஸ் ; மர்ம மனிதன் மார்டின் போன்ற established நாயகர்களின் கதைகளை மொழிமாற்றம் செய்யவே பொழுது சரியாக உள்ளது ! அதற்கொரு மாற்று ஏற்பாடு செய்யும் வரை வேறு இத்தாலிய மொழிக் கதைகளை அதிகம் இழுத்து விட வேண்டாமே என்று தான் ஜூலியா ஓய்வில் உள்ளார் !
அமைதியும் சில தருணங்களில் அழகு தானே ?!
This comment has been removed by the author.
Delete@editor
DeleteDetective Julia was very mediocre not just because it lacks action.
Story moves very very slow
There were some expectations set during the start of the story but all those expectations went waste as they didn't turn into anything special
Some of the pluses were
Drawings
Realism
As we have so many better leads why waste time/energy on julia.
///. இவரது கதைகள் நன்றாக இருப்பினும், இவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன
ReplyDeleteடயபாலிக்//
+1
Dasu Bala : டயபாலிக் கதைகளில் எனக்கு வேலைகள் ரொம்பவே லேசு - பெரியதாய் குழப்பங்களோ ; தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் பாங்குகளோ அதனில் கிடையாதென்பதால் ! So உங்களில் பெரும்பான்மைக்கு அவர் பிடித்தவராகிப் போனால் எனக்கு சந்தோஷமே ! அதனில் சிக்கல் நேர்வதால் தான் கூர்மண்டையர் (தற்காலிக ) ஓய்வில் இருக்க நேரிட்டுள்ளது !
Deleteடியர் எடிட்டர் சர்ர்,
ReplyDeleteஎப்போது சர்ர் ஊர் திரும்புவீர்கள்?
ஒன்றுமில்லை. நீங்கள் பதிலளிக்கரமல் களை இழந்தது போல் தோன்றுகின்றது.(எனக்குத்தரனோ தெரியவில்லை)
தங்கள் உண்மையுள்ள
திருச்செல்வம் பிரபரனந்
கேப்டன் இல்லாமல் எவ்வளவு நேரம் நாமே ஃபீல்டிங் செய்துவிட்டு இருக்கரது ?. அதுவும் இந்த ஆண்டின் மிக முக்கிய பதிவுகளில் ஒன்றான நேற்று ஆசிரியர் இல்லாதது நிச்சயமாக குறைதான் திருச்செல்வம் சார் . அவசர வேளை என்றால் இந்த பதிவை வரும் வாரம் வலையேற்றம் செய்திருக்கலாம்.
Deleteஉண்மைதான் tex விஐயர்ரகவன் சர்ர்.,
ReplyDeleteநரம் பொறுத்து இருப்போம் சர்ர்.
தங்கள் உண்மையுள்ள
திருச்செல்வம் பிரபரனந்
எடி சார், எங்க போனாரு,வலை நண்பர்கள் அனுபவங்களை கொட்டி முடித்தவுடன் தான் எட்டி பார்ப்பாரோ ?
ReplyDeleteநாம் எழுந்து நின்று கைதட்டுவதை அமைதியாக ரசித்து, ஆத்மார்த்தமாய் ஏற்றுக்கொள்ளும் தருணமில்லையா இது?
DeleteArivarasu @ Ravi & ALL : ரொம்ப ரொம்ப நாட்களுக்கு அப்புறமாய் வீட்டோடு ஒரு குட்டி விடுமுறை சென்ற வார இறுதியினில் சாத்தியமானது ! ஞாயிறு காலைப் பதிவைக் கூட கோழி கூவும் முன்பாய் எழுந்து டைப்படித்து விட்டு திரும்பவும் விடுமுறை routine -க்குள் தலை நுழைத்தேன்.
Deleteதிங்கள் காலை அலுவலகம் திரும்பிய பின்னே இங்கு புகுந்திட நேரமே கிட்டவில்லை என்பதால் - இதோ பிசாசுகளுக்குப் பிரியமான வேளையில் ஆஜர் !!
டியர் எடிட்டர் சர்ர்
Delete,//- இதோ பிசாசுகளுக்குப் பிரியமான வேளையில் ஆஜர் !!//
நரனும் tex ம் வலைப்பக்கம் நீங்கள் இல்லரமல் களை இழந்துள்ளது என ஆதங்கப்பட்டோம் சர்ர்.இப்போ ஹப்பி!
தங்கள் உண்மையுள்ள
திருச்செல்வம் பிரபரனந்
No 1 : Anthi mandalam, No 2 : Viriyanin Virothi 3. Engi Nindravanin kathai. Best New comer : Dylon Dog- his stories are different, Unique and unbelivable.
ReplyDeleteRam Kumar : Glad Dylan has made an impact !!
Deleteபரீட்சை என்றாலே எனக்கு அலர்ஜி
ReplyDeleteகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : யாருக்குத் தான் பரீட்சைகள் மேல் காதல் இருந்திருக்க முடியும் ?! :-)
Deleteகாலை வணக்கங்கள் நண்பர்களே,
ReplyDeleteஇது விமானப்போர் பற்றிய கதை என்பதால்...அதுபற்றிய சில தகவல்கள் இன்று..! பார்க்க.....
இங்கே'கிளிக்'
Please don't tag me, my friends !
ReplyDeleteநண்பர்களே வணக்கம். இந்த வார இறுதியில் எனக்கு விடுமுறை தொடங்குவதால், இனி அடுத்த மாதம் 27 ஆம் தேதி வரை இந்த வலைதளத்திற்கு என்னால் வர இயலாது. அடுத்த மாதம் 10 காமிக்ஸ் ; மறுபதிப்புகள் ; புத்தக விமர்சனங்கள் ; சென்னை புத்தகத் திருவிழா ; எடிட்டரின் உற்சாகமான பதிவுகள் - என அடுத்த மாதம் முழுவதும் இந்த வலைதளம் களை கட்டப்போகிறது ! ஜனவரி மாத காமிக்ஸ் அனைத்தும் எனக்கு பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரம் தான் கிடைக்கும். எனவே பிப்ரவரி மாதமும் என்னால் இங்கு வர இயலாது என்றே நினைக்கிறேன் !
காமிக்ஸ் எனும் அற்புத கலையின் பரிமாணத்தால், ஒவ்வொரு நாளின் விடியற் காலைகள் தன் இயற்கையான களையை இழந்து விடாமல் இருக்க - அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்த வலைதளத்திற்கு Notify me கொடுக்கப் போவதில்லை. இயல்பான வாழ்க்கையை கொஞ்சமேனும் வாழ்ந்துப் பார்க்க இது ஒரு சந்தர்ப்பமாக அமைவதில் எனக்கும் சந்தோஷமே ! அதற்கு முன், பாதியில் இருக்கும் ''வல்லவர்கள் வீழ்வதில்லை'' கதை விமர்சனத்தை என் வலைதளத்தில் பதிவிட்டுச் செல்லலாம் என்றும் நினைகிறேன். இது ஒரு வகை கலாயத்தல் ரக காரசாரமானப் பதிவாக இருக்கும் என்பதால், அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் உள்ள நண்பர்கள் மட்டுமே படிக்க வேண்டுகிறேன். மற்றவர்கள் தவிர்த்து விடுவதே நலம் :))
நன்றி !
டியர் விஜயன் சார்,
ReplyDeleteஇன்னும் நான் 2015 - சந்தா செலுத்தவில்லை. அடுத்த மாதம் முழுவதும் ஊரில் இருக்க மாட்டேன் என்பதால், பிப்ரவரி முதல் மாதம் வாரத்தில் என்னுடைய சந்தாவை செலுத்தி விடுகிறேன். இல்லாவிட்டால் கூரியர் வாங்க ஆள் இல்லாமல் சிவகாசிக்கே திரும்பி வந்து விடும். தமாதத்திற்கு மன்னிக்கவும் !
மிஸ்டர் மரமண்டை : அடடா..மன்னிப்பெல்லாம் அவசியமா- என்ன ? பிப்ரவரியும் கூப்பிடு தொலைவில் தானே உள்ளது ?
Deleteவிஜயன் சார், 2 கோரிக்கைகள்
ReplyDelete1. அடுத்த வருடம் மறுபதிப்பாக வரவுள்ள நமது ஆதர்ச நாயகர்கள் கதைகளை தேர்வு செய்யும் போது இது வரை நமது "காமிக்ஸ் கிளாச்சிக்" வெளி வராத கதைகளை மட்டும் தேர்வு செய்து வெளி இட வேண்டும் என கேட்டுகொள்கிறேன்.
2. நமது மிண்ணும் மரணம் வெளி ஈடும் விழாவை சனிக்கிழமை மாலையில் வைத்தால் என்னை போன்ற வெளி ஊர் நண்பர்கள் இந்த விழாவில் பங்கு பெற்றுவிட்டு இரவோடு இரவாக அவரவர் சொந்த ஊர் போய் சேர்த்துவிட்டு, மறுநாள் ஓய்வு எடுத்துவிட்டு திங்கள் அன்று அலுவலகம் செல்ல வசதியாக இருக்கும்.
Parani from Bangalore : //அடுத்த வருடம் மறுபதிப்பாக வரவுள்ள நமது ஆதர்ச நாயகர்கள் கதைகளை தேர்வு செய்யும் போது இது வரை நமது "காமிக்ஸ் கிளாச்சிக்" வெளி வராத கதைகளை மட்டும் தேர்வு செய்து வெளி இட வேண்டும் என கேட்டுகொள்கிறேன். //
Deleteஎல்லா நேரங்களிலும் நமது அபிலாஷைகளுக்கு பதிப்பகங்கள் தலையசைப்பார்களென எதிர்பார்த்தல் சாத்தியமாகாது ! மறுபதிப்புத் தொடர்கள் எனும் போது அதன் அத்தனை கதைகளையும் நாம் வெளியிட்டாக வேண்டியது அவசியம். So 'இது மட்டும் போதும் ; இவை வேண்டாம் !' என்ற pick n ' choose உரிமை நமக்கிராது ! கிளாசிக்சில் வெளியாகா கதைகளை மட்டுமாய் நாம் முதல் ஆண்டினில் வெளியிட்டு முடித்து விட்டால் தொடரும் வருஷங்களில், மீதமுள்ள இதழ்களை வாங்குவது தான் யாராக இருக்க முடியும் ? பழமையை நாடும் போது - அதனை முழுமையாய் அரவணைத்துக் கொள்வது தவிர்க்க இயலா அவசியமே !
அப்புறம் 'விழா' எடுக்கும் அளவுக்கு நாம் வளர்ந்து விட்டோமோ இல்லையோ - வெளியீட்டை சனிக்கிழமைக்கு திட்டமிடுவதில் சிக்கலிராது !
அன்புள்ள எடிட்டர்,
Delete//..மறுபதிப்புத் தொடர்கள் எனும் போது அதன் அத்தனை கதைகளையும் நாம் வெளியிட்டாக வேண்டியது அவசியம்...//
ஆஹா ... ... இவ்வருடத்தின் இரண்டாவது மிக மிக மிக மிக மகிழ்ச்சியான செய்தி .. ... அவ்வளவும் திரும்பக் கிடைக்குமென நினைத்துக்கூடப் பார்க்கவில்லை .. ஆனால் கிடைக்கப் போகிறது ... சூப்பர்
மிக்க நன்றி!
Periyar : மும்மூர்த்திகள் + ஸ்பைடர் ஒட்டு மொத்தமாய் ஆஜராகப் போகிறார்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் ! So தயாராகிக் கொள்ளுங்கள் !
Deleteஅன்புள்ள எடிட்டர்,
Deleteமறுபடியும் நன்றி! நன்றி ! இதை நிஜமாகவே எதிர்பார்க்கவில்லை ..... இந்த ஆங்கிலப் புத்தாண்டு மிக சூப்பராக ஆரம்பமாகப் போகிறது
//அடுத்த வருடம் மறுபதிப்பாக வரவுள்ள நமது ஆதர்ச நாயகர்கள் கதைகளை தேர்வு செய்யும் போது இது வரை நமது "காமிக்ஸ் கிளாச்சிக்" வெளி வராத கதைகளை மட்டும் தேர்வு செய்து வெளி இட வேண்டும் என கேட்டுகொள்கிறேன்///
ReplyDeleteநியாயமான, எடிட்டர் ஏற்றுகொள்ளக்கூடிய கோரிக்கைதான் நண்பரே
இந்த வார இறுதியில் எனக்கு வேலை தொடங்குவதால் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் வரை என்னால் இங்கு வர முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். கம்பனுக்கு சவால்விடும் என்னுடைய எழுத்துநடைக்கு அடிமையாக இருக்கும் ஆசிரியர் உள்பட இங்கு வரும் அனைத்து காமிக்ஸ் வாசகர்களும், இங்கு பார்வையாளர்களாக மட்டும் இருக்கும் மௌன வாசகர்களும் என்னுடைய பிரிவால் எந்த ஒரு விபரீத முடிவையும் எடுத்துவிட வேண்டாம் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteஇதேபோலதான் ஒவ்வொரு தடவையும் சொல்லிட்டு, அப்புறம் இன்னொரு பெயரில் முகமூடி மாட்டிக் கொண்டு வந்து எங்கள் உயிரை எடுப்பதே உங்கள் வேலையாக போய்விட்டது.
Deleteஎப்பவுமே பித்துக்குளி வீரப்பா என்ற முகமூடியில் வந்துதானே உங்கள் எழுத்துநடையை நீங்களே புகழ்ந்து கொள்வீர்கள். இப்ப என்ன நீங்களே புகழ்ந்து கொண்டுள்ளீர்கள். ரொம்ப முத்திருச்சுன்னு நினைக்கிறேன்.
ஒரு சொலவடை
தன்னை மெச்சிக் கொண்டதாம் தவிட்டுக் கோழி
ஹா........... ஹா............ ஹா........... ஹா..............
Deleteநையாண்டி மேளம் அடிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்
@ ALL : வேண்டாமே...ப்ளீஸ் !
Deleteஎடிட்டர் சார்,
ReplyDeleteமேற்கூறிய உங்களது கேள்விகளை நாங்கள் உங்களிடமே திசைதிருப்பிவிட்டால் , உங்களின் தேர்வுகள் என்னவாக இருந்திடும் என்றரிந்திட ஆசை! நீங்கள் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?
Erode VIJAY : செய்வேன்..நிச்சயமாக !
Deleteஇந்தக் கேள்விகள் இம்மாதத்து இதழிலும் வெளியாகின்றன ! வலைக்கு அப்பாலுள்ள நண்பர்களும் தங்கள் எண்ணங்களை பதிவு செய்தான பின்னே - எனது தேர்வுகளைப் போட்டுத் தாக்கினால் போச்சு !
ஒரு தனிப் பதிவாகவே போட்டுத் தாக்கிடும் எண்ணமிருக்கும் போலிருக்கிறதே! சூப்பர் சார்!
DeleteErode VIJAY : படிக்க நீங்கள் ரெடி என்றால் - எழுத நான் எப்போதுமே ரெடி தானே !
Deleteஆசிரியர் வைத்துள்ள பரீட்சைக்கு என்னுடைய பதில்கள்
ReplyDeleteடாப் 3 கதைகள்
1. இறந்தகாலம் இறப்பதில்லை & வல்லவர்கள் வீழ்வதில்லை
2. எஞ்சி நின்றவனின் கதை & வானமே எங்கள் வீதி
3. அந்தி மண்டலம் & கட்டத்துக்குள் வட்டம்
டாப் 3 சொதப்பல் கதைகள்
ஜில் ஜோர்டான், ப்ளுகோட்ஸ் கதைகள்
2014-ன் பிரமாதமான அட்டைப்படம்
1. தேவ ரகசியம் தேடலுக்கல்ல
2. LMS
2014-ன் படு சுமாரான அட்டைப்படம்
அப்படி எதுவும் இல்லை
2014-ன் சிறந்த புதுமுகம்
1. மேஜிக்விண்ட்
2. தோர்கல்
டெக்சின் கதைகளை ஓவராய் போட்டு வருவதாய் நினைக்கத் தோன்றுகிறதா ?
அப்படியெல்லாம் இல்லை.
இவரது கதைகள் நன்றாக இருப்பினும், இவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன
1. மேஜிக் விண்ட்
2. கமான்சே
முந்தய ஆண்டோடு ஒப்பிடுகையில் நாம் ரசனைகளில் எங்கே நிற்கிறோம் ?
உங்கள் ரசனையோடு 99 சதவீதம் எங்களதும் ஒத்துப்போவதால் உங்கள் அனுகுமுறையே தொடரட்டும்
2014-ன் HIGHLIGHT என்று சொல்லத் தோன்றும் கணம் எதுவாக இருக்கும் ?
மின்னும் மரணம் அறிவிப்பு
இந்தாண்டின் ஒட்டு மொத்த அனுபவம் எவ்விதம் இருந்துள்ளது என்று நினைக்கிறீர்கள் ?
மிகமிக பிரமாதமான வருடம். இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் இதேபோல் தொடர வேண்டுகிறேன்.
// மிகமிக பிரமாதமான வருடம். இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் இதேபோல் தொடர வேண்டுகிறேன். //
DeleteI too echo the same!
சுந்தர் உங்கள் பேப்பரை அப்படியே கொடுங்க நானும் கொஞ்சம் பிட் அடித்து கொள்கிறேன்.
Deleteஉங்கள் கருத்தும் என் கருத்தும் ஒன்றே
+1
சுந்தர்ராஜ்
Delete+9876543210
Sundar Raj : //உங்கள் ரசனையோடு 99 சதவீதம் எங்களதும் ஒத்துப்போவதால் உங்கள் அனுகுமுறையே தொடரட்டும்//
Deleteநான் பாட்டுக்கு ஒரு திசையில் நடைபோட..வேண்டாவெறுப்பாய் நீங்கள் பின்தொடரும் ஒரு சங்கட சூழல் பிறந்திடக்கூடாதே என்பதே எனது ஆதங்கங்களுள் தலையாயது ! நிலவரம் அவ்விதமில்லை என்பது பெரும் மகிழ்ச்சி தருகிறது ! என் மீதான அந்த நம்பிக்கைக்கும், தந்திருக்கும் அந்த சுதந்திரத்துக்கும் நன்றிகள் !
2014 சில சமாச்சாரங்கள்.:-
ReplyDeleteகா.க.காலம் கலரில் வந்தது மகிழ்ச்சி. ஆனால் அதற்காக சிக்பில் காவு கொடுக்கப்பட்டது வருத்தமானது.
வானமே எங்கள் வீதியின் வருகை மகிழ்ச்சி.
ஆனால் இன்னும் நான்கைந்து வருடங்கள் தொடரப்போகும் கதையை தெரிந்தோ தெரியாமலோ வெளியிட்டு அந்தரத்தில் ஊசலாட விட்டிருப்பது வருத்தம்.
தே.ர.தே அல்ல.,இ.இ.கொல்லாதே போன்றவற்றை பிரிக்காமல் ஒரே இதழாக வெளியிட்டதில் மகிழ்ச்சி.
லார்கோ கதைவரிசை மற்றும் மேஜிக் விண்ட் கதைவரிசைகளின் கலரிங் மற்றும் பிரின்டிங்.,இவற்றின் சொதப்பல் லேசான வருத்தம்.(உங்கள் சைடில் இதற்கு நியாயமான காரணம் இருக்கலாம். ஒரு வாசகனின் தரப்பில் என்னுடைய வருத்தங்களும் நியாயமானவை என்றே நினைக்கிறேன்.)
1) சிக்பில் வாசகர்களிடம் கருத்து கேட்டு பெரும்பான்மையான ஆதரவை பெற்றவுடன்தான் ஆசிரியர் இந்த முடிவை எடுத்தார்.
Delete2) வானமே எங்கள் வீதி ஆசிரியருக்கே தெரியாது இப்படியொரு நிலை வரும் என்று. நீண்ட நாட்கள் என்பது கடினம்தான். ஆனால் காத்திருந்து படிப்பதால் கிடைக்கும் சுகமே அலாதிதான். (உதாரணம் மின்னும் மரணம், இரத்த படலம்)
3) லார்கோ, மேஜிக் விண்ட் எனக்கு கிடைத்த புத்தகங்கள் எல்லாம் நல்ல நிலையில்தான் இருந்தது. இப்படி ஏதாவது ஒருசில புத்தகங்கள் தவறுதலாக வருவது இயற்கையே.
மேலே கண்ட குறைகள் எல்லாம் 100க்கு 000.000000001 சதவீத அளவே. ஆசிரியர் நமக்காக எடுக்கும் முயற்சிகளும், உழைப்பும் மிக மிக அதிகம் எனும்போது, இந்த மாதிரியான குறைகளை கண்டும் காணாமல் போவதே நல்லது.
+1
DeleteVinoth Kannan.
Deleteநீங்கள் கொடுத்திருக்கும் விளக்கங்கள் எல்லாமே ஏற்கனவே எனக்கு தெரிந்தவையே.!
இவற்றை நான் குற்றமாக கூறவில்லையே.?
என்னுடைய வருத்தம் என்றுதான் குறிப்பிட்டேன்.(இறுதி வரிகளை கவனிக்கவும்.)
2014 பற்றிய அலசல் போய்கொண்டிருக்கும்போது நான் என்னுடைய ஆங்கத்தை தெரிவித்தேன். எடிட்டர் ஏற்கனவே விளக்கம் கொடுத்து இருந்தாலும் இந்த வருடத்தின் சிறிய குறைகளாக இவற்றை கூறினேனே தவிர குற்றமாக கூறவில்லை.
எனக்காக நேரம் ஒதுக்கி விளக்கமளித்ததற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.!
கிட் ஆர்ட்டின் KANNAN : நிழல் ஒன்று..நிஜம் 2 (சிக் பில் மறுபதிப்பு) சென்றாண்டின் சந்தாவிலிருந்து கல்தா பெற்றிருந்தாலும், நம் அட்டவணையிலிருந்து முழுவதுமாய் விலகிடவில்லை ! ஏற்கனவே அந்தக் கதையினை கொள்முதல் செய்து ; அதனில் பணிகளும் செய்து முடித்து வைத்துள்ளோம். So ஜனவரியின் அமளி-துமளிகள் ஓய்ந்த பின்னே அச்சிடுவோம் - விரும்பிடும் வாசகர்கள் மாத்திரமே வாங்கிக் கொள்ளக்கூடியதொரு ஸ்டாக் இதழாக !
Deleteஎடிட்டர் சார்.
Deleteநடப்பாண்டின் நிறைகுறை நிகழ்வுகளை பற்றிய அலசல்கள் இந்த பதிவில் நடப்பதால் , இந் ஆண்டில் எனக்கு ஏற்ப்பட்ட மகிழ்ச்சிகளையும் சிறு மனக்குறைகளையும் தெரிவிக்கும் நோக்கிலேயே கடந்த பின்னூட்த்தை செய்தேன். நிச்சயம் குற்றம் சொல்ல அல்ல.!
ஏனெனில் குற்றம் சொல்ல எந்த முகாந்திரமும் ஏற்படாதவாறு தக்க தருணங்களில் தகுந்த விளக்கங்களை தாங்கள் தந்துவிட்டீர்கள்.!-
நி.ஒ.நி.இரண்டு வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி சார்.!
அந்த ஒரு இதழை மட்டும் தனியாக வெளியிடாமல் இன்னும் சில ஜூனியர் லயன் இதழ்களையும் சேர்த்து ஆப்ஷனலாக வெளியிட்டால் இன்னும் பிரமாதமாக இருக்கும் சார்.!
ஏற்கனவே அப்படி ஒரு திட்டம் தங்களிடம் இருந்தால் அதை வரவேற்கிறேன்.!
(திரும்ப திரும்ப ஒரே விசயத்தை பேசுவதாக நினைக்க வேண்டாம் சார்.! ஆசையை வெளிப்படுத்த இந்த ஒருவழிதான் இருப்பதாக தோன்றுகிறது சார்.!:):):):-)
என்னது... தளபதி புத்தக வெளியீட்டு விழாவா.... சொல்லவே இல்லை....தல க்கு கிடைக்காத பெருமையா... (ஏதோ நம்மால் முடிந்தது...)
ReplyDeleteகருவூர் சரவணன் : கருவூராருக்கு ஒய் திஸ் கொலைவெறி ?
Deleteநாமெல்லாம் பத்தாவது,பனிரெண்டாவது தேர்வை கூட இவ்வளவு சின்சிரியராக எழுதி இருக்க மாட்டோம்னு நினைக்கிறேன்.
ReplyDeleteயப்பா என்ன சின்சியாரிட்டி, என்ன சின்சியாரிட்டி.
Arivarasu @ Ravi : ஒரு வேளை பள்ளிக்கூடங்களிலும் காமிக்ஸை சிலபசாக வைத்திருந்தால் அந்தப் பரீட்சைகளையும் இதே போல் பின்னியிருப்போமோ ?
Deleteடாப் - 3
ReplyDelete-----
அந்திமண்டலம்
தேவ ரகசியம் தேடலுக்கு அல்ல
விரியனின் விரோதி
(லார்கோ எப்பவுமே டாப்)
டாப் சொதப்பல்
----------
வீதி எங்கும் உதிரம்
சாக மறந்த சுறா
காலத்தின் கால் சுவடுகளில்
முகமற்ற கண்கள்
பிரமாதமான அட்டைப்படம்
------------------
தேவ ரகசியம் தேடலுக்கு அல்ல
LMS
சாக மறந்த சுறா
காலத்தின் கால் சுவடுகளில்
படு சுமாரான அட்டைப்படம்
-------------------
காலனின் கை கூலி
சிறந்த புதுமுகம்
-----------
ரின் டின் கேன், மேஜிக் விண்ட், தோர்கல்
டெக்ஸ்வில்லர் அதிகமா ?
-----------------
போதுமான அளவு. இதற்கு அதிகமாக வேண்டாம். டாப் செல்லர் என்ற முறையில், வேறுமார்கம் இல்லை.
இதன் மூலம், புதிய முயற்சிகள் எடுக்கத் தேவையான விட்டமின் ப கிடைக்கும் :-) .
வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன
---------------------
ரின் டின் கேன் (மிகச் சிலருக்கு மட்டுமே பிடித்தவையாக இருக்கிறது. மிக வித்தியாசமான சுவாரசியமான கதை)
கில் ஜோர்டான்
ரசனை லெவல்
----------
நிச்சையமாக முன்னேற்றியிருக்கிறீர்கள் (எங்களின் ரசனை முன்னேற்றம் உங்களால் தானே. கிராஃபிக் நாவல் அலர்ஜி நிறைய இருக்கும் நிலையிலும், தாங்கள் நல்ல கதைகளை - விற்பனையைப் பற்றிக் கவலைப்படாமல் வெளியிடுவதற்கு HATS OFF)
HighLight
---------
LMS - Hardbound Cover
மின்னும் மரணம் அறிவிப்பு
கிளாசிக் ரீபிரிண்ட்
பவுன்சர் அறிவிப்பு (Jason Brice உண்டா சார் ? )
பேக்கேஜிங் முன்னேற்றம்
சரியான நேரத்திற்கு காமிக்ஸ் வெளியிடுவது (பணியாளர்களுக்கு சில/பல நேரங்களில் தொல்லை என்பது தான் பிரச்சினை)
lOW light
---------
printing பிரச்சினைகள் (2012 ஆம் ஆண்டு தரம் வேண்டும் சார்)
printing பிரச்சினைகள் (2012 ஆம் ஆண்டு தரம் வேண்டும் சார்)
printing பிரச்சினைகள் (2012 ஆம் ஆண்டு தரம் வேண்டும் சார்)
THE YEAR IN TOTAL
-----------------
E X C E L L E N T !!!!
சரியான நேரத்திற்கு காமிக்ஸ் வெளியிடுவது
புதிய (தொடரும்) முயற்சிகள்
தொடருங்கள்... தொடர்கிறோம்....
RAMG75 : //டெக்ஸ்வில்லர் அதிகமா ?
Delete-----------------
போதுமான அளவு. இதற்கு அதிகமாக வேண்டாம். டாப் செல்லர் என்ற முறையில், வேறுமார்கம் இல்லை.
இதன் மூலம், புதிய முயற்சிகள் எடுக்கத் தேவையான விட்டமின் ப கிடைக்கும் :-) .//
நூற்றில் ஒரு வார்த்தை ! "விட்டமின் ப" -க்கு வழியில்லாது போனால் தள்ளாடிப் போவோமே !!
//(Jason Brice உண்டா சார் ? )//
நமது தற்போதைய நிலவரப்படி - Jason Brice -ஐ ரசிப்பது இனி பெரியதொரு சிரமமாய் இராது என்றே தோன்றுகிறது ! 2016-ல் பார்ப்போமே !!
//தொடருங்கள்... தொடர்கிறோம்....//
My privilege !!
எடிட்டர் சார்,
ReplyDeleteஇன்று என்னுடைய ABC சந்தாவை செலுத்திவிட்டேன். அது குறித்து அலுவலத்துக்கு ஒரு மெயிலும் (மாயாவி சிவா வழியாக.) அனுப்பி, அலைபேசியிலும் தெரிவித்து விட்டேன்.வெரிஃபை செயௌது எஸ்எம்எஸ் அனுப்புவதாக தெரிவித்தார்கள். இன்னும் கிடைக்கவில்லை. மெஸேஜ் வந்துவிட்டால் நிம்மதியாக இருக்கும். ஹிஹிஹி..
கிட் ஆர்ட்டின் KANNAN : 'விடியும் வரைக் காத்திரு(ங்கள்) !
Delete