Powered By Blogger

Sunday, December 14, 2014

கடிவாளமில்லாக் குதிரைகள் !

நண்பர்களே,

வணக்கம். மங்கலான வெளிச்சக் காலைகளில் தட்டுத் தடுமாறிக் கண் திறந்த சற்றைக்கெல்லாம்  ப்ளூகோட் பட்டாளத்தோடு மொழிபெயர்ப்பு ரோந்து  ; பூவா ஆன பிற்பாடு நயாகராவில் பல்டியடிக்கும் மாயாவியின் பிழைத்திருத்தங்கள் ; ஆபீசுக்குப் போன பின்னே 'அட்டைப்பட டிசைன் தாமதம் ஆகுதே !' என்ற அங்கலாய்ப்பு ; மதியமாய் மொட்டைத்தலை டேவிடும், C.I.D லாரன்சும் துணையிருக்க அவர்களோடு ஒரு சுற்று ; மாலையில் மாலயப்பனோடு ஒரு sitting ; அந்தி சாயும் வேளையில் பௌன்சரின் இறுதி நகாசு வேலைகள் ; ராவினில் கூலிங் கிளாஸ் ஜானி நீரோவும், 'பளிச்' ஸ்டெல்லாவும் பெய்ரூட்டில் செய்யும் சாகசங்களை நினைவூட்டிக் கொள்ளுதல் ; பிசாசு உலாற்றும் பின்னிரவில் கூர்மண்டயர் ஸ்பைடரோடு சண்டித்தனம் ! இது தான் கடந்த 10 நாட்களாய் என் அட்டவணை ! ஜனவரியில் 8 இதழ்கள் + இந்த டிசம்பரில் பாக்கியிருப்பது இரண்டு = ஆக மொத்தம் 10 ! என்ற நினைவூட்டலை நொடிக்கொருதரம் என் மண்டை செய்து வர -  'இதற்கு மேலே தொண்டைக்குழிக்குள் கால்விரலை நுழைத்துக் கொள்ளவே முடியாதுடா சாமி !!' என்று தான் நினைக்கத் தோன்றியது ! இந்தக் களேபரங்கள் ஒரு பக்கமிருக்க - ஏப்ரலின் "மின்னும் மரணம்" முழுநீள ஆல்பம் குறித்தான பணிகளும் இன்னொரு தண்டவாளத்தில் சத்தமில்லாது துவங்கியுள்ளன ! கிட்டத்தட்ட 430 முன்பதிவுகள் எனும் போது சுளையாய் 4 இலட்சம் ரூபாயை உங்களிடம் வசூலித்து விட்டு 'தேமே' என நான் அமர்ந்திருப்பது சரியாகப்படவில்லை ! So - 'பத்தோடு ஒன்று - 11 ' என்ற கணக்காய் - 10+1 பாகங்களோடு வரக் காத்திருக்கும் தளபதியாரின் மி.மி.பணிகளையும் தேர்திருவிழாவோடு இணைத்து விட்டேன் ! இழுப்பது தேர் என்றான பின்னே இதையும் சேர்த்து இழுத்துத் தான் பார்ப்போமே ?! ஏற்கனவே வெளியான முதல் 10 பாகங்களிலும் எனக்குப் பெரிதாய் வேலைகள் கிடையாதென்பதால் தற்போது நமக்காகப் பணியாற்றும் 5 தனித்தனி டைப்செட்டிங் டீம்கள் தத்தம் வீட்டுக் கீபோர்டுகளை 'ததும்..ததும்' என்று தட்டிக் கொண்டிருக்கிறார்கள் - ராப்பகலாய் ! இந்த ஐவர் அணியில் உள்ள ஒரே ஒரு ஆண் நீங்கலாக  ; பாக்கி சகலருமே வீட்டிலிருந்தபடி நமக்காகப் பணிசெய்யும் இல்லத்தரசிகள் ! குறைவான அவகாசத்திற்குள்ளாக நாங்கள் தயார் செய்துள்ள இந்தப் புதிய அணி எனக்குக் கைகொடுப்பதால் மாத்திரமே என் தலைதப்பிக்கின்றது ! இல்லையெனில் நண்பர் XIII -ஐப் போல பேந்தப் பேந்த முழித்துக் கொண்டு தான் சுற்றி வந்திருப்பேன் ! நமது அலுவலகத்திலும் காமிக்ஸ் பிரிவினில் இன்று பணியாற்றுவது பெரும்பாலும் பெண்களே எனும் போது - girl power - flexing their muscles என்று தான் சொல்லத் தோன்றுகிறது ! 

புதிய கதைகள் ;  பழைய கதைகள் ; புதிய பாணி ; புடலங்காய் பாணி ; மறுபதிப்புகள் ; கிராபிக் நாவல் ; ஒல்லிப்பிச்சான் ; மொக்கை ரூபி  ; இளவரசி ;இரும்புக்கரம் ; குற்றச் சக்கரவர்த்தி ; என்று  சுற்றிச் சுற்றி ஒரே வட்டத்துக்குள் சுழன்று வரும் இந்த நேரத்தில் இன்றைய பதிவையும் அதே ரூட்டில் எடுத்துச் செல்லாமல் -  'ஹாயாக' வேறு திசையில் போவோமே என்று தோன்றியது ! So இது ஒரு unplugged ரகப் பதிவென்று வைத்துக் கொள்ளுங்களேன் ! எவ்விதக் கோர்வைகளையும் முக்கியமென  மண்டைக்குள் ஏற்றிக் கொள்ளாமல் - கடிவாளங்கள் இல்லாக் குதிரைகளாய் என் எழுத்துக்களை இந்த ஒருமுறை மாத்திரமே ஓட அனுமதிக்கிறேனே ?! 

இந்த வாரம் துவங்கியது தினத்தந்தி டி.வி.யினரின் சிவகாசி வருகையின் போது நமது அலுவலக விஜயத்தோடு ! ஒவ்வொரு வட்டர்ரத்திலும்  உள்ள சுவாரஸ்யமான சுற்றுலாத் தளங்களை ; ஆங்காங்கே உள்ள வித்தியாசமான தொழில்களை ; ஒவ்வொரு ஊரின் விசேஷங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்நிகழ்ச்சியில் இம்முறை "காமிக்ஸ்" தயாரிப்பின் மீது focus செய்திட விரும்பினர் ! வழக்கமாய் கேட்கப்படும்  "இரும்புக்கைமாயாவி ரகக் கேள்விகளை" இயன்றளவுக்கு தவிர்த்து விட்டு, நமது புது முயற்சிகள் ; இன்றைய ரசனைகளின் பக்கமாய் கவனத்தைத் திருப்பிட முயன்றேன் ! (என் தந்தையைப் பேட்டி கண்ட போது - 'மலரும் நினைவுகள்' புகுந்திடுவதைத் தவிர்க்க வழியில்லாது போனது வேறு விஷயம் ! ) டிசைனிங் பணிகள் ; அச்சுப் பணிகள் என அவற்றின் மீதும் கொஞ்சம் ஒளிவட்டம் விழுந்திட - நம்மவர்களும் டி-வி.காமெராக்களுக்குள் சந்தோஷமாய் ஐக்கியம் ஆகினர் ! பிரோக்ராம் எடிட் ஆகி வெளியாகும் சமயத்தில் அவர்களது segment எத்தனை நொடிகள் / நிமிடங்கள் இடம்பிடித்திடுமோ  - நானறியேன் ; ஆனால் பணியாளர்களின் முகங்களில் அன்று நிலவிய சந்தோஷம் - made my day !! 

டி.வி.ஆட்களுக்கு நமது அந்நாட்களது அட்டைப்பட ஓவியங்களைப் பார்க்க இயன்ற போது தாங்க இயலா வியப்பு ! 'கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பான ஓவியங்களில் இன்னமும் இத்தனை உயிரோட்டம் எஞ்சி உள்ளதே !' என சிலாகித்தனர் ! அவர்களிடம் காட்டும் பொருட்டு கிட்டங்கியிலிருந்த பழசைக் கிளறிக் கொண்டிருந்த போது நாசியில் ஏறிய தூசோடு ஏகப்பட்ட மலரும் நினைவுகளும் ஒட்டிக் கொண்டன என்று தான் சொல்ல வேண்டும் ! வாடகைச் சைக்கிளில் ஏறிக் கொண்டு புறப்பட்ட நினைவுகளின் பின்னோக்கிய பயணம் - "அடடே ...பாதாளப் போராட்டம்" இதழின் அட்டைப்படம் அல்லவா இது ? இந்தக் கதையை டெல்லியில் ஏஜெண்டின் அலுவலகத்தில் வாங்கிய கணம் முதல் சென்னை திரும்பும் வரை ஒரு டஜன் தடவையாவது படித்திருப்பேனே !!' என்று துவங்கி ; "தோ பார்டா... மாஸ்கோவில் மாஸ்டர் இதழுக்கான அட்டைப்படத்தில் தான் என்னவொரு தேஜஸ் !!" ; "அந்நாட்களது கறுப்புக் கிழவி ராப்பர்களில் தான் என்னவொரு திகில்" ; "உலகம் சுற்றும் அலிபாபா டிசைன் செமப்பா " !! என்ற ரீதியில் எங்கெங்கோ பிரயாணம் செய்தன !  தோண்டத் தோண்ட உள்ளிருந்து வந்த முந்தைய இதழ்களும் ; ஆங்கில இதழ்களும் ; இன்னமும் நாம் பயன்படுத்தியிரா மாண்ட்ரேக் ; ரிப் கிர்பி ; காரிகன் கதைகளின் ஒரிஜினல்களும் என ஒரு வண்டி தேறும் !  "பெய்ரூட்டில் ஜானி நீரோ " கதையினில் - லாரன்ஸ் & டேவிட் தோன்றும் "விண்ணில் மறைந்த விமானங்கள்" இதழின் ஒரு பக்கமும் தவறுதலாய் அச்சாகியிருந்ததொரு அதிசய FLEETWAY ஆங்கில இதழும் கூட கையில் சிக்கியது ! இன்றைக்கு அந்த இதழின் மதிப்பு மலைக்கச் செய்யும் ஒரு தொகையாக இருக்குமென்பது நிச்சயம் ! FLEETWAY-ன் நமது ஜனவரி மறுபதிப்புகளைப்  (முதல் ரவுண்ட்) பிழைதிருத்தம் செய்து கொண்டிருந்த சமயம் - கதைகளில் அந்நாட்களது சுலபத் தமிழ்நடை அப்பட்டமாய்த் தெரிந்தது ! இன்றைக்கு நாம் பழகிப் போயிருக்கும் பாணிகளில் இருந்து சற்றே விலகித் தோன்றும் இந்த மொழிநடைகளை இந்தாண்டின் பிற்பகுதியின் பாக்கியுள்ள 8  மறுபதிப்புகளில் செப்பனிட முயற்சித்தால் என்னவென்று தோன்றியது ! ஆனால் ஒவ்வொரு பக்கத்து  வரியையும் ; புள்ளியையும், கோட்டினையும் மனப்பாடம் செய்து வைத்திருக்கும் நண்பர்களுக்கு இது அபச்சாரமாய்த் தோன்றுமோ ? என்ற கேள்வியும் எழாமலில்லை ! What say guys ? 

Fleetway-ன் இங்கிலாந்திலிருந்து ஒரு 'ஜம்ப்' செய்து அமெரிக்காவில் கரை சேர்ந்தால் - சமீபமாய் மார்வெல் நிறுவனத்தோடு மேலோட்டமாய் பேச்சுவார்த்தைகள் நடத்திடும் வாய்ப்புக் கிட்டியது நமக்கு ! மார்வெல் நிறுவனம் பிரசித்தி பெற்ற ஸ்பைடர்மேன் கதைகளையும் ; இன்னும் ஏராளமான சூப்பர் ஹீரோ கதைகளையும் வெளியிட்டு வரும் ஒரு அமெரிக்க மெகா நிறுவனம் ! கிட்டத்தட்ட 75 ஆண்டுப் பாரம்பரியம் கொண்ட இப்பதிப்பகத்தின் ALL TIME TOP 10 இதழ்களை அங்குள்ள வாசகர்கள் சமீபத்தில் தேர்வு செய்திருந்தனர் ! அவற்றில் நமக்கு ஒத்துப் போவது போல் தோன்றும் தொடர்களுக்கான உரிமைகளை வாங்கிட முயன்று தான் பார்ப்போமே  என்ற நப்பாசையில் அந்தப் பட்டியலைப் புரட்டினேன் !  X-Men ; Fantastic Four ; Spiderman ; Daredevil என்ற பெயர்களே அந்தப் பட்டியலில் முன்னணியில் நின்றன ! அவையனைத்தும் அங்கே சக்கைபோடு போடும் தொடர்கள் ; ஆனால் நாம் இந்த சூப்பரோ-சூப்பர் ஹீரோக்களை  ; அந்த  எதிர்காலத்துக் கதை பாணிகளை ஏற்றுக் கொள்ளுவோமா ? என்பது million bucks கேள்வியாகவே நிற்கின்றது ! உலகின் காமிக்ஸ் விற்பனையில் நம்பர் 1 இடத்திலிருக்கும் ஒரு தேசமே மட்டுமல்லாது ; அவர்களது உரிமைகளைப் பெற்று உலகில் ஆங்காங்கே  மறுபதிப்புகள் செய்து வரும் பதிப்பகங்களும் சிலாகிக்கும் அந்தக் கதை வரிசைகள் நமக்கு மட்டும் அன்னியமாய்த் தெரிவது ஏனோ ? என்ற கேள்விக்கு எனக்கு விடை தெரியவில்லை ! நாம் மூழ்கித் திளைக்கும் பிரான்கோ-பெல்ஜிய நாடுகளில் கூட - அமெரிக்கக் காமிக்ஸ் நாயகர்களின் வருகை ஆண்டுதோறும் வீரியம் அடைந்து வருகின்றது ! 2014-ன் விற்பனைகளில் மிகத் துரித முன்னேற்றம் கண்டுள்ளது அமெரிக்கக் காமிக்ஸ் தொடர்கள் தானாம் !!  'கலாச்சார வேறுபாடு ' தான் இர்ரகக் கதைகளை நாம் ரசிக்கத் தடையாக நிற்கிறது என்று பதில் சொல்லிக்கொள்ள முயன்றால் - நமக்கும் இத்தாலிக்கும் ; பிரான்சுக்கும் தான் என்ன ஒற்றுமை இருந்திடக்கூடும் ? என்ற கேள்வி 'சொய்ங்' என தலைதூக்கி நிற்கின்றது ! அதற்காக 'நாளைக்கே X-Men இத்யாதிகளை வெளியிடப் போகிறேன் என்றோ ; அதனை ரசிக்கப் பழகிக் கொள்ளுங்கள் !' என்றோ நான் இங்கே சொல்ல வரவில்லை ; அமெரிக்க முக்கியப் பதிப்பகங்களின் ராயல்டி எதிர்பார்ப்புகளின் கிட்டத்திலாவது நாம் இருக்கிறோமா என்பதே கேள்விக்குறி ! என் கேள்வி - why does the american genre of comics seem so alien to us ? (மேஜர் சுந்தர்ராஜன் பாணியில்) - அமெரிக்கக் காமிக்ஸ் ரசனைகள் நமக்கு ரொம்பவே தூரத்து ரசனைகளாய்த் தெரிவதன் காரணம் தான் என்னவாக இருக்கும் ? கடந்த ஞாயிறின் பதிவின் பின்பகுதிகளில் உலக யுத்தம் பற்றியும் ; நாஜிக்களின் யுத்த முறைகள் பற்றியும் ; பாரதியாரைப் பற்றியும் (!!!) பின்னூட்டங்களில் தூள் கிளப்பிய நமக்கு இது சின்னதொரு விவாத மேடை என்று வைத்துக் கொள்வோமே ?! 

கதை பாணிகள் பற்றிய தலைப்பிலேயே, சமீபமாய் நான் எங்கோ படிக்க நேர்ந்த சின்னதொரு சேதியும் கூட ! கௌபாய் அல்லாத கதைகளுள் இன்றைய  நமது டாப் ஸ்டார் லார்கோ தான் என்பதில் ஐயமே இராது ! ஒரு தொழில் அதிபரை இது போன்றதொரு ஆக்ஷன் template -க்குள் நுழைத்து வெற்றி காண கதாசிரியர் வான் ஹாம்மேவிற்கு எவ்விதம் சாத்தியமானதோ - அதுவும் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பாகவே (லார்கோ தொடர் துவங்கியது 1990-ல்) என்ற கேள்வி அவ்வப்போது எனக்குள் எழுவதுண்டு ! ஆனால் இந்தக் கதைகளை வான் ஹாம்மே அதற்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே எழுதி முடித்து வைத்திருந்தாராம் ! 1980-கள் இந்தக் கதை பாணிகளுக்கு சற்றே too early என்று கருதினாரோ - என்னவோ ; எழுதிய கதைகளை ஒரு பத்தாண்டுகளுக்கு வெளியே கொணர முயற்சிக்கவே இல்லையாம் ! So  (ஜேம்ஸ் பாண்ட்) பாணியிலான துப்பறியும் கதைகளும் ; கார்ட்டூன்களுமாய் மார்கெட் நிரம்பி வழிந்த 1980-களிலேயே மனிதர் இத்தனை தொலைநோக்கோடு ஒரு தொடரை உருவாக்கி வைத்திருந்தார் எனில் -  hats off !! 
பிரான்சில் வசிக்கும் நம் இளம் வாசகர்கள் சுஜி & ஜெயந்த் அனுப்பிய போட்டோ ! 
ஆங்காங்கே படிக்க இயன்ற காமிக்ஸ் செய்திகளுள் சற்றே sober ஆனதொரு விஷயமும் கூட உண்டு ! காமிக்ஸ் எனும் மீடியத்தின் நிஜமான ஆற்றலுக்கும் கூட இதுவொரு வெளிப்பாடு என்று சொல்லலாம் ! சுபான் புக்ஸ் என்றதொரு டெல்லி பதிப்பகம் - 'ப்ரியா' என்றதொரு ஹீரோயினை மையமாகக் கொண்டு ஒரு புதிய காமிக்ஸ் தொடரை உருவாக்கியுள்ளது ! இதில் விசேஷம் என்னவெனில் - கதாநாயகி ப்ரியா பாலியல் பலாத்காரத்தின் ஒரு துரதிர்ஷ்ட பலியாடு ! அந்தக் கொடூரத்தைத் தாண்டி வர முற்படும் பெண்ணுக்கு  கடவுள்கள் துணை புரிவது போலவும், அந்த சண்டாளர்களை ப்ரியா பழிவாங்குவது போலவும் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம் ! 2012 டிசம்பரின் டில்லியில் ஓடும் பஸ்ஸில் நிகழ்ந்த அந்தக் கொடூரத்தின் பிற்பாடு  இந்தியாவே கூனிக் குறுகிப் போன வேளைதனில் இந்தக் கதையினை உருவாக்கிட தனக்குத் தோன்றியதாக அதன் படைப்பாளிகள் சொல்லியுள்ளனர் ! உலகெங்கும் டிஜிட்டல் பிரதிகளாய் இலவசமாய்க் கிடைக்கப் போகும் இந்தக் கதை(கள்) இம்மாதத்து மும்பை COMIC CON -லும் கிடைக்கும் ! Great initiative indeed ! 
இந்தியாவின் காமிக்ஸ் தலைநகராய் டெல்லி உருவாகி வருவதும் இங்கே நாம் குறிப்பிட்டாக வேண்டியதொரு விஷயமே ! நிறையத் திறமையான புதுயுகப் படைப்பாளிகள் ; புதுப் பதிப்பகங்கள் அழகான பல படைப்புகளை உருவாக்கி வருகின்றனர்  ! ஹிந்தி ; இங்கிலீஷ் எனும் பரந்ததொரு மார்கெட் அவர்களுக்கு சாத்தியம் ஆவதால் விற்பனைக்களம் நம்மதைப் போல் குறுகிய  ஒன்றாய் இல்லாதிருப்பது கண்கூடு ! இருப்பினும் அதனை அழகாய்ப் பயன்படுத்தும் திறமை இன்றைய டெல்லி காமிக்ஸ் பதிப்பகங்களுக்கு நிரம்ப இருப்பது ஒரு சந்தோஷ விஷயம் ! இதோ பாருங்களேன் - அங்கு நடந்ததொரு காமிக்ஸ் பயிலரங்கத்தின் போட்டோ ! காமிக்ஸ் கதைகள் எழுதுவது எப்படி ; சித்திரங்கள் போடுவது எப்படி ? என்றெல்லாம் வார இறுதிகளில் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன !! 
More from the stuff I got to read - நமக்கு சுவாரஸ்யம் தரக்கூடிய சில புள்ளிவிபரங்கள் இப்போது : 
  • சென்றாண்டின் இறுதிப்பகுதியில் வெளியான புதிய Asterix & Obelix சாகசமானது விற்பனை சாதனைகள் படைத்துள்ளது! 'ஸ்காட்லாந்தில் Asterix ' என்ற தலைப்போடு வந்த இக்கதை பிரெஞ்சில் மாத்திரம்  24,80,000 பிரதிகள் விற்பனை கண்டுள்ளதாம் !!!! (ஊர்ஜிதம் செய்திடத் தேவைப்படும் ஒரு எண்ணிக்கையே இது !! )
  • வரலாற்றில் இது வரை அதிகப் பிரதிகள் விற்றுள்ளதும் இவர்களது காமிக்ஸ் தொடரே ! இது வரை 350 மில்லியன் பிரதிகள் விற்றுள்ளனவாம் (பல்வேறு மொழிகளில் ) இவர்களது அனைத்துக் கதைகளும் கூட்டாக !! (ஒரு மில்லியன் என்றால் 10 இலட்சம் எனும் போது - 350 மில்லியன் என்றால் ???? ஆஆஅவ்வ்வ்வ்வ்வ் !!! ))
  • லார்கோ வின்ச் - 600,000 பிரதிகள் (பிரெஞ்சில்) 
  • தோர்கல் - 200,000 பிரதிகள் !
  • நாம் வெளியிட்டு வரும் "இரவே..இருளே..கொல்லாதே.." ; "தேவ இரகசியம் தேடலுக்கல்ல" போன்ற கதைகளை உருவாக்கிய டெல்கோர்ட் நிறுவனமே சென்றாண்டின் டாப் பிரெஞ்சுப் பதிப்பகம் ! உலகின் இரம்டாவது பெரிய மார்கெட்டின் நம்பர் 1 & 2 இடங்களில் உள்ள இரு கூடங்களோடும் நல்லுறவு உள்ளது நமக்கு பெரியதொரு பெருமிதம் தரும் விஷயம் ! 
  • உலகெங்கும் சராசரியாய் 2600 இதழ்களில் ; 120 நாடுகளில் குண்டுப் பூனை GARFIELD வெற்றிகரமாய் சுற்றித் திரிகிறது ! (நமக்கு மட்டும் இதனை ரசிக்க இயலாது போனது பெரும் மர்மமே !!) 
இலட்சங்களையும், கோடிகளையும் பிரெஞ்சு காமிக்ஸ் மார்கெட் துளாவிக் கொண்டிருக்கும் வேளையில் நமது ஒருகாலத்துத் தாய்வீடான' இங்கிலாந்தில் காமிக்ஸ்கள் எவ்விதம் குப்பை கொட்டுகின்றன ? என்பதையும் சமீபமாய் அங்குள்ள பதிப்பக நண்பர்கள் வாயிலாக அறிந்து கொள்ள முயற்சித்தேன் ! இன்னமும் விற்பனை எண்ணிக்கைகளில் இங்கிலாந்தில் முதலிடம் பிடித்து வருவது பள்ளி செல்லும் சிறுவர்களை வாசகர்களாய்க் கொண்டிருக்கும் கார்டூன் ரகக் கதைகளே என்று சொல்கிறார்கள் ! இவையும் கூட ஒரு இலட்சத்துக்கு மிகக் கீழே தான் விற்பனை காண்கின்றனவாம் ! BEN 10 போன்ற சமீப ஆக்கங்கள் 70,000 பிரதிகள் விற்கின்றனவாம் - ஒவ்வொரு சாகசத்திலும் ! இப்போதெல்லாம் அமெரிக்க இறக்குமதி காமிக்ஸ்கள் உள்ளூர் பதிப்பகங்களைப் பின்தள்ளும் நிலை மெதுவாய்ப் புலர்ந்து வருவதாய் சொன்னார்கள் ! எப்படியிருந்ததொரு மார்கெட் - இன்று இப்படியாகிப் போனதே ! என்ற ஆதங்கம் அவர்கட்கு மாத்திரமல்ல ; எனக்குமே ! 

Back to home, sweet home : புதுவை புத்தக விழாவினில் நாம் பங்கேற்பது உறுதி என்ற நிலையில் ; 2015-ன் சென்னை புத்தக விழாவிற்கு விண்ணப்பித்து ஆவலோடு காத்திருக்கிறோம் ! சென்னையில் நமக்கென பிரத்யேக ஸ்டால் கிடைக்கும் பட்சத்தில் - 8 இதழ்கள் கொண்ட ஜனவரிக்கு மட்டுமன்றி 2015- க்கே ஒரு சூப்பர் ஆரம்பம் கிட்டியது போலாகும் ! ஸ்டால் கிடைக்கும் பட்சத்தில் முதல் மூன்று நாட்களும் (ஜனவரி 9 ; 10 ; 11) அடியேனின் ஜாகை சென்னையாகத் தானிருக்கும் ! 

'பெரியவர்கள்' இம்முறை re-entry ஆகிறார்கள் எனும் போது அவர்களுக்கென இனி ஒவ்வொரு விழாவிலும் தனியாக banner அமைத்திடுவது அவசியமாகிடும் ! நமது டிசைனர்கள் அனைவரும் கழுத்து முட்ட பணிகளோடு இருப்பதால் - இம்முறை உங்களின் உதவி நமக்கு ரொம்பவே தேவை ! அதே போல ஜனவரி முதற்கொண்டு ஜூனியர் விகடன் (அரைப்பக்கம் - black & white ) ; புதிய தலைமுறை (முழுப் பக்கம் - வண்ணத்தில்) போன்ற இதழ்களில் நாம் செய்து வந்த விளம்பரங்களைத் தொடர்வதாக உள்ளோம் ! அவற்றிற்கும் சென்ற முறை போலவே உங்களின் டிசைன் உதவிகள் கிடைத்தால் புண்ணியங்கள் ஒரு கோடி சாரும் !! Please guys - spare some creative time for us !!

நமது உள்ளூர் ஆர்டிஸ்ட்களை பிசியாக வைத்திருப்பது பற்றாதென - ஐரோப்பிய ஓவியர் ஒருவரையும் நம் பொருட்டு களத்தில் இறக்கியுள்ளோம் ! நம்மூர் மாலையப்பன் ஒரு ஐரோப்பிய முகத்தை ; உடுப்பை வரைவதற்கும் அந்நாட்டவர் அதனை வரைவதற்கும் உள்ள வேற்றுமைகளைப் பாருங்களேன் - இந்தப் பூர்வாங்கப் பென்சில் sketch-ல் ! வர்ணங்கள் பூசி விரைவில் அனுப்பவதாய் சொல்லியுள்ளார் ஓவியர் ; பார்ப்போமே end product எவ்விதமுள்ளதென்று !  

2015-ன் இதழ்களில் filler pages களில் ஏதேனும் புதிதாய் முயற்சித்தால் தேவலை என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது ! வழக்கம் போல் அதே மாவை நான் அரையோ அரை என்று அரைப்பது எனக்கே போர் அடிக்கிறது ! So அந்த 4 பக்கங்களைப் புதிதாய்  எதைக் கொண்டு நிறைக்கலாம் என்பது பற்றியும் கொஞ்சம் சிந்தித்துச் சொல்லுங்களேன் ? ஏதேனும் சுவாரஸ்யமான கார்டூன் தொடர்கள் நினைவுக்கு வரும் பட்சத்தில் அவற்றை suggest செய்திடலாம் ; அல்லது ஏதேனும் தொடர்கதைகளை அங்கே நுழைத்துப் பார்க்கலாமா ? Get your best thinking caps out folks !! 

சமீபமாய் ஒரு தம்பதியினர் என்னை சந்தித்த சமயம் - அழகாய் ஒரு வேண்டுகோள் வைத்தனர் ! சிறு வயதில் தான் படித்த சுஸ்கி & விஸ்கி கதைகள் இன்னமும் நினைவுகளில் பசுமையாய் உள்ளதாகவும், அதனை போல சுலபமான கதைகளாக இன்றைய இளம் தலைமுறைக்கு நம்மிடம் வேறு சரக்கே இல்லை எனும் போது - திருவாளர்கள் சு.வி.யை நம் அணிவகுப்பிற்க்குக் கொணர வாய்ப்பேதும் உண்டா ? என்று வினவினர் ! இதே போன்ற அவாவினை சில காலம் முன்பாக நமது இராஜபாளையம் வாசக நண்பரின் சகோதரியும் கூட முன்வைத்திருந்தார் ! சுஸ்கி & விஸ்கி இன்றைய நம் வயதுகளுக்கு ; ரசனைகளுக்கு ரொம்பவே மழலைத்தனமாய் தோன்றிடுமே என்பது எனது ஆதங்கம் ! அனால் உங்களின் சிந்தனைகள் என்னவோ - இதனில் ? சொல்லுங்கண்ணே..சொல்லுங்க...! 

And again - the vital reminder ! சந்தாப் புதுப்பித்தல்களை இன்னமும் ஜரூராய் செய்திடலாமே நண்பர்களே ? சென்றாண்டின் 40%-ஐ இப்போது தான் தட்டுத் தடுமாறி எட்டிப் பிடித்திருக்கிறோம் ! மீதமுள்ள நண்பர்கள் தொடரும் நாட்களில் பணம் அனுப்பி உதவிட்டால் 2015-ன் தேர்த்திருவிழா களை கட்டிடாதா ? Please do chip in guys ?! மீண்டும் சந்திப்போம் !  Bye for now !! 

282 comments:

  1. அன்பு ஆசிரியரே..
    ஜனவரியில் வரும் மறுபதிப்புகளில் லயன்/முத்து லோகோ இருந்தால் சந்தோஷமாக இருக்கும் .இந்த லோகோ இல்லாத சமீப புத்தகங்களை ரசிக்கவே முடியவில்லை .
    லயன் லோகோவை பார்த்தாலே ஒரு சிலிர்ப்பு .
    அனேக வாசக நண்பர்களும் இதை விரும்புவார்கள் என நினைக்கிறேன் ..

    ReplyDelete
  2. I am Third- 3 வந்துட்டோம்ல

    ReplyDelete
  3. //ஏற்கனவே வெளியான முதல் 10 பாகங்களிலும் எனக்குப் பெரிதாய் வேலைகள் கிடையாதென்பதால் தற்போது நமக்காகப் பணியாற்றும் 5 தனித்தனி டைப்செட்டிங் டீம்கள் தத்தம் வீட்டுக் கீபோர்டுகளை 'ததும்..ததும்' என்று தட்டிக் கொண்டிருக்கிறார்கள் - ராப்பகலாய் ! இந்த ஐவர் அணியில் உள்ள ஒரே ஒரு ஆண் நீங்கலாக ; பாக்கி சகலருமே வீட்டிலிருந்தபடி நமக்காகப் பணிசெய்யும் இல்லத்தரசிகள் ! //


    woooo !

    good morning friends ! :)

    ReplyDelete
  4. ஆசிரியர் சார்,நான் கடந்த 9 நாட்களுக்கு முன்பே (06.12.14) ஆண்டு சந்தா அனுப்பி விட்டேன்.ஆனால் எனக்கு சந்தா வந்து விட்ட S M S வரவே இல்லயே.????????????

    ReplyDelete
  5. வந்து விட்டேன் ..

    ReplyDelete
  6. //பிரோக்ராம் எடிட் ஆகி வெளியாகும் சமயத்தில் அவர்களது segment எத்தனை நொடிகள் / நிமிடங்கள் இடம்பிடித்திடுமோ - நானறியேன் ; ஆனால் பணியாளர்களின் முகங்களில் அன்று நிலவிய சந்தோஷம் - made my day !! //

    wwow ...! waiting to see Edit sir!

    ReplyDelete
  7. //why does the american genre of comics seem soalien to us ? (மேஜர் சுந்தர்ராஜன் பாணியில்) - அமெரிக்கக் காமிக்ஸ் ரசனைகள் நமக்கு ரொம்பவே தூரத்து ரசனைகளாய்த் தெரிவதன் காரணம் தான் என்னவாக இருக்கும் ? கடந்த ஞாயிறின் பதிவின் பின்பகுதிகளில் உலக யுத்தம் பற்றியும் ; நாஜிக்களின் யுத்த முறைகள் பற்றியும் ; பாரதியாரைப் பற்றியும் (!!!) பின்னூட்டங்களில் தூள் கிளப்பிய நமக்கு இது சின்னதொரு விவாத மேடை என்று வைத்துக் கொள்வோமே ?! //

    liking its state of mind, may be for 30+ years used to cowboy style, i feel its better go generously with American supper hero's to get the grab of (Indian)generation now!

    ReplyDelete
  8. காலை வணக்கம் எடிட்டர் சார்!!! காலை வணக்கம் நண்பர்களே!!!

    ReplyDelete
  9. //நாம் வெளியிட்டு வரும் "இரவே..இருளே..கொல்லாதே.." ; "தேவ இரகசியம் தேடலுக்கல்ல" போன்ற கதைகளை உருவாக்கிய டெல்கோர்ட் நிறுவனமே சென்றாண்டின் டாப் பிரெஞ்சுப் பதிப்பகம் ! உலகின் இரம்டாவது பெரிய மார்கெட்டின் நம்பர் 1 & 2 இடங்களில் உள்ள இரு கூடங்களோடும் நல்லுறவு உள்ளது நமக்கு பெரியதொரு பெருமிதம் தரும் விஷயம் ! //

    :)

    //2015-ன் இதழ்களில் filler pages களில் ஏதேனும் புதிதாய் முயற்சித்தால் தேவலை என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது ! வழக்கம் போல் அதே மாவை நான் அரையோ அரை என்று அரைப்பது எனக்கே போர் அடிக்கிறது ! So அந்த 4 பக்கங்களைப் புஹிதாய் எதைக் கொண்டு நிறைக்கலாம் என்பது பற்றியும் கொஞ்சம் சிந்தித்துச் சொல்லுங்களேன் ? ஏதேனும் சுவாரஸ்யமான கார்டூன் தொடர்கள் நினைவுக்கு வரும் பட்சத்தில் அவற்றை suggest செய்திடலாம் ; அல்லது ஏதேனும் தொடர்கதைகளை அங்கே நுழைத்துப் பார்க்கலாமா ? Get your best thinking caps out folks !! //

    consider our dark grand maa( if no digest possible in 2015 then ) for fillers if possible Edit sir!

    ReplyDelete
  10. டியர் எடிட்டர் சார்,
    சுஸ்கி-விஸ்கி க்கு a huge thumbs up... மறுபடியும் ஆர்ட் பேப்பரில் வாசிக்க ஆர்வமாக உள்ளது. என் ஜூனியர் செமயாக என்ஜாய் பண்ணிய கதை வரிசை இது..... please do bring the reprints ....

    ReplyDelete
    Replies
    1. +1, would love to read stories similar to பயன்கர பயணம்

      Delete
  11. 1st position just miss.... :(
    காலை 9.15 am வரை ஆசிரியர் பதிவுக்காக wait செய்துவிட்டு சாப்பிட போய்விட்டேன்...ok...always a next time :)

    ReplyDelete
  12. முதலில் குடீஸ் க்கு ஒரு காமிக்ஸ் ....

    சோட்டா பீம் .,ஸ்பைடர் மான் .,,,இது போல

    ஏற்கனவே தமிழ் படிக்கும் திறன் குறைந்து வருகிறது .....

    அடுத்த தலை முறைக்கு நாம் விட்டு செல்லும் ஒரு மூச்சு காற்று தமிழ் காமிக்ஸாக இருக்கட்டும்.......

    அரே ஜல்தி பாய் .....

    ReplyDelete
  13. கிட்டங்கி கிளறல் படலத்தில் எங்களுக்கு. வழங்க ஏதேனும் புதையல் கிடைத்திருக்குமே சார்.

    ReplyDelete
  14. operation மி.மி started. I am waiting..

    ReplyDelete
  15. சுஸ் கி விஸ் கி மீண்டும் வந்தால் சந்தோசமே

    ReplyDelete
  16. Filler pages ல் கிங் டெக்ஸ் அவர்களின் தொடர்கதையினை கொண்டு வாருங்கள் சார். திகில் நகரில் டெக்ஸ் கதை. how many of you supporting this friends?

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் ஐடியா, கண்டிப்பாக ஆசிரியர் இதை கவனத்தில் கொள்வார் என்று நம்புவோம்.

      Delete
    2. நோ பிச்சிங் ப்ளீஸ்

      Delete
    3. Sankar.R : ஒரு 240 பக்கக் கதை சுமார் 5 ஆண்டுகள் ஓடும் -தொடராய் !! ஹாஆவ்வ்வ்வ் !!

      Delete
    4. திகில் நகரில் டெக்ஸ் A+B+C சந்தா கட்டிய நண்பர்களுக்கு 2015 தீபாவளிக்கு இனிய அதிர்ச்சியாக அளிக்க ஆசிரியர் முடிவு செய்திருப்பதாக ஒரு பட்சி சொன்னது உண்மையா ........??!!










      தொம்ம்ம்ம்.......




      ஆசிரியர் ஒரு கால் விரலை வாயில் வைத்திருப்பது தெரியாமல் அடுத்த காலையும் தூக்கி விட்டது யாரப்பா ....

      Delete
    5. ஷல் பாவமா இல்லையா அவரை பார்த்தால் ?. ( ஆனாலும் ஒரு பக்கம் எச்சில் ஒழுகுது . )

      Delete
  17. டியர் விஜயன் சார், ப்ளூகோட் பட்டாளத்தை விட விஸ்கி சுஸ்கி பல மடங்கு தேவலை என்பது என் தாழ்மையான கருத்து. இந்த தளம் ஆரம்பித்ததில் இருந்து பலபேர் விஸ்கி சுஸ்கியை கேட்டுள்ளனர். அதேபோல்தான் கருப்புகிழவி டைஜஸ்ட்டும். இந்த மாதம் வெளிவந்த வானமே எங்கள் வீதி பிடித்திருந்தது, டெக்ஸ் கதையை விட என்றால் மிகையல்ல. முதலில் டெக்ஸ் கதையைதான் முதலில்படித்தேன். வானமே எங்கள் வீதி நான் படித்தது கடைசியாகத்தான். பட்,மனதில் முதலிடம் பிடித்துவிட்டது. பிறகு, ஸ்பைடர் கதை என்றாலே காதில் டன் கணக்கில் பூ கதைதான்.விண்வெளிபிசாசு கதையை நிறைய பேர் மறுபதிப்பு கேட்கும்போது, அது காதில் பூ சமாசாரம் என நீங்கள் ஒதுக்குவது ஏனோ சார். அதனை மறுபதிப்பில் வெளியிடலாமே சார். பொன்னியின் செல்வன் படித்து முடித்து விட்டு, வாகனத்தில் செல்லும்போது குதிரை மீது செல்வது போன்று பிரமை. அதேபோல் நீங்க வண்டி எடுக்கும்போது ஸ்பைடரின் ஹெலிகார் ஏதாவது நின்றிருந்ததா என அறிய அவா.:-)

    ReplyDelete
    Replies
    1. Dr.Sundar,Salem. : //.விண்வெளிபிசாசு கதையை நிறைய பேர் மறுபதிப்பு கேட்கும்போது, அது காதில் பூ சமாசாரம் என நீங்கள் ஒதுக்குவது ஏனோ சார்.//

      கொஞ்ச காலமாவது ஸ்பைடரின் மறுவருகை தொடரட்டுமே..? சடுதியில் விண்வெளிப் பிசாசைக் கொண்டு வந்து கூர்மண்டயரையே வதம் செய்வானேன் ?! :-)

      Delete
    2. சார் ஸ் பைடரின் கதைகளிலே அற்புதம் விண்வெளி பிசாசே !

      Delete
  18. சார் ......சுஸ்கி விஸ்கி யை மனமார வரவேற்கிறேன் .அது புது கதைகளாக இருந்தாலும் சரி .....மறுபதிப்பாக இருந்தாலும் சரி ......

    அமெரிக்க காமிக்ஸ் பற்றி சொல்ல வேண்டுமென்றால் "ஸ்பைடர் மேன் "மட்டும் முயற்சி செய்து பாருங்கள் சார் ...

    ReplyDelete
  19. / X-Men ; Fantastic Four ; Spiderman ; Daredevil என்ற பெயர்களே அந்தப் பட்டியலில் முன்னணியில் நின்றன ! /- 2016-ம் ஆண்டிலாவது நாம் இதை முயற்சி செய்யலாம் ஆசிரியர் சார்.

    ReplyDelete
    Replies
    1. Arivarasu @ Ravi : ஆனாலும் உங்களுக்கு திட மனசு தான் !!

      Delete
  20. என்னையும் கண்டுகொங்க Friends

    ReplyDelete
    Replies
    1. வாங்க .. வந்து. ஜோதியிலே ஐக்கியம் ஆயிடுங்க ..

      Delete
  21. என் இனிய தமிழ் மக்களுக்கும் காமிக்ஸ் உலகின் மூவேந்தருக்கும் காமிக்ஸ் காதலர்களுக்கும் வணக்கம்.

    ReplyDelete
  22. Pencil drawingல் உள்ள Character யார் சார் ? ஒரு ரகசியம் சொல்கிறேன் எங்கள் அலுவலகத்திலும் girl power - flexing their muscles நானும் எங்கள் Auditor மட்டுமே ஆண்கள்! மின்னும் மரணம் பணிகள் தொடங்கியமைக்கு மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete
  23. //என் கேள்வி - why does the american genre of comics seem so alien to us ? (மேஜர் சுந்தர்ராஜன் பாணியில்) - அமெரிக்கக் காமிக்ஸ் ரசனைகள் நமக்கு ரொம்பவே தூரத்து ரசனைகளாய்த் தெரிவதன் காரணம் தான் என்னவாக இருக்கும் ? //

    நான் அறிந்தவரை அமெரிக்கக் காமிக்ஸ்கள் பெரும்பாலும் super hero கதைகளை முன்னிறுத்தி வருபவையே...உதாரணமாக X-MEN, Avengers, Spider-man,Batman etc. etc.
    இது போன்ற கதைகளை நாம் காமிக்ஸாக விரும்பாமல்,ஆனால் படமாக வெளிவரும்போது மிகவும் ரசிப்பதற்குக் காரணம்,
    இவையெல்லாம் கதையில் எந்த ஆழம் இல்லாதுபோயினும் (ஏன் 'கதை' கூட இல்லாதுபோயினும்) பிரமிக்கச்செய்யும் graphics, stunts, visual effects etc.என பல நகாசு வேலைகளுடன் சினிமாவாக வெளிவருவதால் நாம் ரசித்துவிடுகிறோம்...

    ஆனால், இக்கதகளை ஒரு புத்தகமாக படிக்கும்பொழுது, நாம் அதில் முக்கியமாக எதிர்பார்ப்பது ஆழமான கதையினையும்,போரடிக்காமல் செல்லும் அடுத்த அடுத்த பக்கங்களையினை மட்டுமே...
    அனைவரும் போலவே,நானும் X-Men,Batman,Spiderman படங்களின் அதிதீவிர ரசிகன்...ஆனால் அவற்றை காமிக்ஸ் வடிவங்களாக ஆங்கிலத்தில் படிக்கும்பொழுது, ஏனோ படமாக திரையில் ரசித்த அளவுக்கு என்னை காமிக்ஸ் ஈர்க்கவில்லை...

    ReplyDelete
    Replies
    1. But anyway நல்ல கதையுள்ள காமிக்ஸ் ஒன்றை try செய்து தான் பார்ப்போமே!!!

      Delete
    2. @ Sathiya...என்னுடைய கருத்தும் இதுவே. கதை நிகழும் உலகினுள் சற்றே compromised லாஜிக்குகளுடன் என்னை பொருத்திக்கொள்ள முடிந்தால்தான் அந்த கதையை படிக்கவே முடிகிறது. நம்முடைய அனைத்து கதை தேர்வுகளிலும் இதனை பார்க்கமுடியும்.

      Delete
    3. //அனைவரும் போலவே,நானும் X-Men,Batman,Spiderman படங்களின் அதிதீவிர ரசிகன்...ஆனால் அவற்றை காமிக்ஸ் வடிவங்களாக ஆங்கிலத்தில் படிக்கும்பொழுது, ஏனோ படமாக திரையில் ரசித்த அளவுக்கு என்னை காமிக்ஸ் ஈர்க்கவில்லை..//
      +1

      Delete
  24. வணக்கம் சார் . நாங்கள் பலமுறை சுஸ்கி -விஸ்கி மறுபடியும் வேண்டும் வேண்டும் .............என கேட்பதிலியே அந்த சிறுவயது நினைவுகளை நாங்கள் எவ்வளவு வேண்டி விரும்புகிறோம் என்று தங்களுக்கு தெரிய வந்திருக்கும் சார் . உடனடியாக அடுத்த ஆண்டு பிரின்ஸ் மறுபதிப்புக்கு பதிலாக முயற்சி செய்யுங்கள் சார் . அந்த 4பக்கங்களில் ஏற்கெனவே தொடராக வந்து ஆரம்ப நிலையில் நின்று போன தலை கதையை மீண்டும் தொடருங்களேன் சார் .

    ReplyDelete
    Replies
    1. @ சேலம் Tex விஜயராகவன்...சுஸ்கி -விஸ்கி மறுபடியும் வேண்டும் வேண்டும்.. டும்.

      N+1 times.

      Delete
    2. சேலம் Tex விஜயராகவன் : ஒன்று மட்டும் சர்வ நிச்சயமாய்ப் புரிகிறது ! பால்யங்களில் காமிக்ஸ் படித்து வளர்ந்த இந்தத் தலைமுறை திடமாய் இருக்கும் காலம்வரை நான் மறுபதிப்புகள் போட்டே கூட என் நரை நாட்களைக் கடத்தி விடலாம் போலுள்ளது ! ஷப்பா !! என்னவொரு பால்யக் காதல் !

      Delete
    3. சார் உங்கள் பேரன் வெளியிட எங்கள் பேரன்கள் படித்து மகிழ, அப்போதும் நாங்கள் யாராவது இப்போது வரும் கதைகளில் சிலவற்றை எங்கள் பேரன்களிடம் சொல்லி சொல்லி அவர்கள் உங்கள் பேரனிடம் ரீரீரீ ப்ரின்ட் கேட்பார்கள் சார் . அப்போது ஓய்வாக உள்ள உங்களிடம் , "என்ன கதை தாத்தா அப்போது வெளியிட்டீர்கள் இப்போதும் இவர்கள் வந்து அவற்றை கேட்கிறார்கள்" என கூறுவார் . அதுவரை நாங்கள் கேரண்டி தருகிறோம் சார் .

      Delete
    4. //..பால்யங்களில் காமிக்ஸ் படித்து வளர்ந்த இந்தத் தலைமுறை திடமாய் இருக்கும் காலம்வரை நான் மறுபதிப்புகள் போட்டே கூட என் நரை நாட்களைக் கடத்தி விடலாம் போலுள்ளது ..//

      அன்புள்ள எடிட்டருக்கு,

      உங்கள் நரை நாட்களில், முக்கியமாக அனைத்து ஆண்டு, கோடை, தீபாவளி, பொங்கல் மலர்களை ( லயன், முத்து, திகில், மினி லயன் - மலர்கள்) மறுபதிப்பு (அதே size-ல்) செய்யவேண்டியது தான் முதல் வேலை அப்புறம் மற்ற மறுபதிப்பு பற்றி பார்க்கலாம் .. நீங்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி ;) :)

      Delete
    5. //ஒன்று மட்டும் சர்வ நிச்சயமாய்ப் புரிகிறது ! பால்யங்களில் காமிக்ஸ் படித்து வளர்ந்த இந்தத் தலைமுறை திடமாய் இருக்கும் காலம்வரை நான் மறுபதிப்புகள் போட்டே கூட என் நரை நாட்களைக் கடத்தி விடலாம் போலுள்ளது ! ஷப்பா !! என்னவொரு பால்யக் காதல் !//
      our support is there forever...

      Delete
  25. மறுபதிப்பு 12 என்பது சநதோஷமே. அதுபோல் முந்தைய ஸ்பெஷல் இதழ்களையும் மறுபதிப்பு செய்யலாமே

    ReplyDelete
    Replies
    1. ricky_tbm Ramesh : நிறைய முறை அலசப்பட்டுவிட்ட தலைப்பன்றோ இது ; திரும்பவும் அதையே focus செய்வதில் சுவாரஸ்யம் இராதே !

      Delete
    2. அடுத்த தலைமுறை வாசகர்களுக்காக முயற்சி செய்யலாமே சார்

      Delete
  26. அய் ! விஸ்கி சுஸ்கி !!!!! நான் பாத்ததே இல்லை ! வேணும் ....வேணும் .....

    ReplyDelete
    Replies
    1. selvam abirami : பார்த்து விட்டும் துள்ளினீர்கள் என்றாலாவது தேவலையே !! இது கள்ளாட்டை !

      Delete
  27. Rip kirby unreleased versions can be released again. Actually largo winch stories and all creating awareness about corporate gamblingwell done forecasting largo stories

    ReplyDelete
    Replies
    1. Senthil Kumar : ரிப் கிர்பிக்கும், லார்கோவுக்கும் ஆறு வித்தியாசங்களைக் கண்டுபிடிப்பது சுலபமாக இருந்திடும் ; ஓரிரண்டு ஒற்றுமைகளைக் கண்டறிவதே சிரமக் காரியமாய் அமைந்திடும் ! Completely different ends of the spectrum !

      Delete
  28. வெல்கம் காமிரேட் ....:)

    ReplyDelete
  29. சுஸ்கி விஸ்கி அவசியம் வேண்டும் சார்.! ராஜா ராணி ஜோக்கர் மறக்க முடியாத கதை.
    சு.வி. மட்டும்இல்லாமல் ஆரம்ப கால மினிலயனின் நிறைய கதைகளை மறுபதிப்பு செய்ய வேண்டும் சார்.!
    புதியவை யஹாரி, ரின்டின், இவற்றோடு ஆல்டைம் பேவரீட் ஆர்டின், லக்கி ஆகியோரையும் சேர்த்து சில சு.வி.யும் சேர்த்து கூட ஒரு தீபாவளி மலரும் சேர்த்து ஒரு சந்தா D யை இப்போதே அறிவித்து விடுங்கள் சார்.!
    (நீ முதலில் சந்தா ABCயை கட்டு தம்பி.! என்ற உங்கள் மைண்டுவாய்ஸ் கேட்கிறது.! ..:) இதோ சிலநாட்களில் கட்டிவிடுவேன் சார்.)

    ReplyDelete
  30. //சென்றாண்டின் இறுதிப்பகுதியில் வெளியான புதிய Asterix & Obelix சாகசமானது விற்பனை சாதனைகள் படைத்துள்ளது! /

    நம்முடைய லயனில் எப்போதேனும் வரும் வாய்ப்பு இருக்கா சார்.?

    ReplyDelete
    Replies
    1. கிட் ஆர்ட்டின் KANNAN : நிறைய காம்ப்ளான் தேவைப்படும் நமக்கு !! தவிரவும் அக்கதைகளின் ஜீவநாடியே பெயர்களிலும், சூழ்நிலைகளிலும் எழுந்திடும் நகைச்சுவைகளே ! மொழிமாற்றத்தின் போது அவற்றை துல்லியமாய்த் தமிழுக்குக் கொண்டு வருவது பிரம்மப் பிரயத்தனமாய் இருந்திடும் ! And அந்த மொழிமாற்றங்களில் ; பெயர்மாற்றங்களில் படைப்பாளிகள் பூரணமாய் திருப்தியடைந்தால் தவிர ஒப்புதல் வழங்கவே மாட்டார்கள் ! A huge mountain to climb !

      Delete
  31. //விற்பனை எண்ணிக்கைகளில் இங்கிலாந்தில் முதலிடம் பிடித்து வருவது பள்ளி செல்லும் சிறுவர்களை வாசகர்களாய்க் கொண்டிருக்கும் கார்டூன் ரகக் கதைகளே என்று சொல்கிறார்கள் //
    நானும் கார்ட்டூன் கதைகள் நிறைய வேண்டுமென கேட்டு சலித்துவிட்டேன் சார்.!

    தோர்களுக்கு கிடைத்த மரியாதையில் நாலில் ஒரு பங்குதான் ஆர்டினுக்கும் லக்கிக்கும் 2015ல் கிடைத்திருக்கிறது (அதற்காக தோர்கள் வேண்டாமென சொல்லவில்லை.). லக்கி வசூலில் இரண்டாமிடம் என்றூ வேறு அடிக்கடி கூறுகிறீர்கள்.ஆனால் அதற்கேற்ற கௌரவம் அவருக்கு தரப்படவில்லையே சார்.

    ReplyDelete
    Replies
    1. //லக்கி வசூலில் இரண்டாமிடம் என்றூ வேறு அடிக்கடி கூறுகிறீர்கள்.ஆனால் அதற்கேற்ற கௌரவம் 2015 ல் அவருக்கு தரப்படவில்லையே சார். //
      +1
      'லக்கியும், சுட்டி லக்கியுமே' இந்த தலைமுறை சிறார்களை கவர்வதற்கு சாரியான choice என்பது அடியேனின் கூற்றும் கூட...

      Delete
    2. கிட் ஆர்ட்டின் KANNAN : நிறைய முறை நானும் விளக்கிவிட்ட தலைப்பு இது நண்பரே ! சிக் பில் தொடரின் பெரும்பகுதிக் கதைகள் இன்னமும் டிஜிட்டல் கோப்புகளாய் உருமாற்றம் கண்டிடவில்லை ! இந்தாண்டில் நிறையக் கதைகள் பூர்த்தியாகி விடும் என்று சொல்லி இருந்தார்கள் ; ஆனால் அப்பணிகள் இப்போதுவரை நிறைவாகவில்லை ! இந்நிலையில் நான் செய்யக்கூடியது தான் என்னவாக இருக்க முடியும் ?

      நிறைய நேரங்களில் - எங்கள் தரப்பு practical difficulties என்னவென்பதை நீங்கள் உணர்ந்திட வாய்ப்பில்லை என்பதை நான் ஏற்றுக் கொள்வது போலவே - எடுக்கப்படும் ஒவ்வொரு தீர்மானத்தின் பின்னணியிலும் சில inevitable காரணங்கள் இருக்கக் கூடுமென்பதை நீங்களும் உணர்வது என் வேலையை சற்றே சுலபமாக்கிடாதா ?

      Delete
  32. // இன்றைக்கு நாம் பழகிப் போயிருக்கும் பாணிகளில் இருந்து சற்றே விலகித் தோன்றும் இந்த மொழிநடைகளை இந்தாண்டின் பிற்பகுதியின் பாக்கியுள்ள 8 மறுபதிப்புகளில் செப்பனிட முயற்சித்தால் என்னவென்று தோன்றியது ! ஆனால் ஒவ்வொரு பக்கத்து வரியையும் ; புள்ளியையும், கோட்டினையும் மனப்பாடம் செய்து வைத்திருக்கும் நண்பர்களுக்கு இது அபச்சாரமாய்த் தோன்றுமோ ? என்ற கேள்வியும் எழாமலில்லை ! What say guys ? //

    @ விஜயன் சார்...நிச்சயமாய் அபச்சாரமே... மொழிநடையில் கொஞ்சம் கூட மாற்றமில்லாமல் அட்சரசுத்தமாய் அப்படியே இருந்து விட்டு போகட்டுமே. அன்றைய இதழ்களை அப்படியே மறுபதிப்பு மட்டுமே செய்யுங்கள்...மறு(டப்பிங்)பதிப்பு வேண்டாமே.

    'மின்னும் மரணம்-செம்பதிப்பிற்கும்' எனது வேண்டுகோள், பழைய மொழிநடையே...'தங்கக்கல்லறை' நிகழ்வுகளை சற்றே நினைவில் கொள்ளலாமே.

    ReplyDelete
    Replies
    1. மேற்கிலிருந்து ம. ராஜவேல். //நிச்சயமாய் அபச்சாரமே... மொழிநடையில் கொஞ்சம் கூட மாற்றமில்லாமல் அட்சரசுத்தமாய் அப்படியே இருந்து விட்டு போகட்டுமே. அன்றைய இதழ்களை அப்படியே மறுபதிப்பு மட்டுமே செய்யுங்கள்...மறு(டப்பிங்)பதிப்பு வேண்டாமே.//

      சமைக்கக் கற்று வரும் நேரங்களில் உப்பு. புளி. காரம் சற்றே தூக்கலாகவோ ; குறைவாகவோ அமைவதில் தவறில்லை தான் ! ஆனால் ஓரளவு தேர்ச்சி பெற்ற பின்பும் - 'பழகிப் போன சுவை... அப்படியே தொடரட்டுமே ! ' எனச் சொல்லத் தோன்றிடுமா நண்பரே ?

      Delete
    2. If you are reprinting these books for people who are going to buy for nostalgia effect then don't change the dialogues.
      If you think even new readers will also buy them then retouching dialogues it's ok.

      Delete
  33. சார், விண்வெளியில் ஓரு எலி எப்போது....

    ReplyDelete
    Replies
    1. //சார், விண்வெளியில் ஒரு எலி எப்போது....//
      +infinity
      ஒரு முறை சிவகாசியில் தங்களின் அலுவலக விஜயத்தின் போது (இதுவரையிலுமே நான் ஒரு முறை தான் உங்கள் அலுவலகத்துக்கு வந்துள்ளேன் என்பது வேறு விஷயம்!!!) stock ல் இருந்த பழைய புத்தக புத்தகங்கள் வாங்கினேன்...அவற்றில் "விண்வெளியில் ஒரு எலி" புத்தகமும் ஒன்று...
      ஆனால், அந்த ஒரு புக் தான் தங்களிடமே உள்ளது என்றும், பின்வரும் நாட்களில் 'மறுபதிப்பு' செய்யும் பொழுது இந்த ஒரு புக் பிரதியும் தேவைப்படுமென்று...இராதாகிருஷ்ணன் அண்ணாச்சி திருப்பி எடுத்துக் கொண்டார்...
      இது நடந்தே கிட்டத்திட்ட பத்து வருடங்கள் ஆகிவிட்டன சார்...

      So, 'விண்வெளியில் ஒரு எலி' மறுபதிப்பு எப்பொழுது சார்...?

      இதே நேரத்தில், 'இராதாகிருஷ்ணன் அண்ணாச்சி' தற்பொழுது பூரண நலம் தானே?
      'சென்னை புத்தக திருவிழாவிற்கு' தங்களுடன் அவரும் வருகிறாரா?

      Delete
    2. ESS & Sathiya : பார்க்க - மேலேயுள்ள பதிலை - சிக் பில் தொடர்பாக !

      இராதாகிருஷ்ணன் நலமே ; ஆனால் ஓய்வே இனி அவரது அட்டவணையாக இருக்கும் !

      Delete
    3. //இராதாகிருஷ்ணன் நலமே ; ஆனால் ஓய்வே இனி அவரது அட்டவணையாக இருக்கும் !//
      :)

      Delete
  34. 'பெரியவர்கள்' இம்முறை re-entry ஆகிறார்கள் எனும் போது அவர்களுக்கென இனி ஒவ்வொரு விழாவிலும் தனியாக banner அமைத்திடுவது அவசியமாகிடும் ! நமது டிசைனர்கள் அனைவரும் கழுத்து முட்ட பணிகளோடு இருப்பதால் - இம்முறை உங்களின் உதவி நமக்கு ரொம்பவே தேவை ! அதே போல ஜனவரி முதற்கொண்டு ஜூனியர் விகடன் (அரைப்பக்கம் - black & white ) ; புதிய தலைமுறை (முழுப் பக்கம் - வண்ணத்தில்) போன்ற இதழ்களில் நாம் செய்து வந்த விளம்பரங்களைத் தொடர்வதாக உள்ளோம் !//

    My small suggestion/request...ஜூனியர் விகடனைவிட budget ஒத்துவருமாயின் ஆனந்த விகடன்,குமுதம்,சுட்டி விகடன் போன்றவற்றில் எதாவது ஒன்றில் try செய்யலாமே?
    ஜூனியர் விகடனின் வாசகர்களிவிட இந்த வாசகர்களிடம் சென்று அடைவது தான் நமது காமிக்ஸ்க்கு நல்ல விளம்பரம் கிடைக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து...


    // அவற்றிற்கும் சென்ற முறை போலவே உங்களின் டிசைன் உதவிகள் கிடைத்தால் புண்ணியங்கள் ஒரு கோடி சாரும் !! Please guys - spare some creative time for us !!//
    நிச்சயமாக...எடிடட் சார்...(Graphics Design போட்டியின்போதே ஆர்வமாக இருந்த 'மாயாவி சிவா', 'பொடியன்' மற்றும் பல நண்பர்களின் கவனித்திற்கு இது...)

    ReplyDelete
    Replies
    1. Sathiya: ஆனந்த விகடனும், குமுதமும் பட்டு மாளிகைகளுக்கும், நகைக் கடைகளுக்குமே விளம்பரம் செய்திடக் கூடியதொரு பட்ஜெட்டில் உள்ள வெளியீடுகள் ! பயர் சர்வீசின் ஏணி வைத்தாலும் நமக்கு எட்டா உயரங்கள் அவை !

      Delete
    2. //பயர் சர்வீசின் ஏணி வைத்தாலும் நமக்கு எட்டா உயரங்கள் அவை ! //
      தங்களின் நிலைமை புரிகிறது சார்...
      'புதிய தலைமுறை' கூட ஓ.கே.தான். ஆனால், 'ஜூனியர் விகடனில்' விளம்பரம் செய்து ஏன் காசை கரியாக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன்...
      இது தான் நமக்கு சரியான தருணம், குறிப்பாக January யில் சென்னை புத்தகத் திருவிழாவும், அதே நேரத்தில் நமது டாப் நாயகர்களான 'இரும்புக்கை மாயாவி','மாடஸ்டி','ஸ்பைடர்' etc. போன்றவர்களின் மறுபதிப்பும்...
      'லக்கி லூக்கின்' கதை என்று சரியான நேரத்தில், சரியான கதைகளுடன் தான் நாம் சென்னை புத்தகத் திருவிழாவில் ஐக்கியமாகிடப் போகிறோம்...

      So, இந்த தருணத்தில் நமது காமிக்ஸ்க்குத் தேவை சரியான விளம்பரமே...'குட்டீஸ்களை தத்தமது அவர்களின் அம்மாக்களோடும்', 'நமது காமிக்ஸின் தற்போதைய வெளியீடுகள் பற்றி தெரிந்திராத பழைய வாசகர்கள்', 'காமிக்ஸ் மீது விருப்பம், ஆனால் அதைப்பற்றி அதிகம் அறிமுகம் இல்லாதவர்களை' நமது ஸ்டால் பக்கம் கொண்டு வந்தோமேயானால் கூட போதும்...மற்றதை 'டெக்ஸும்,டைகரும்,லார்கோவும்' (கூடவே நாங்களும் :p) பார்த்துக் கொள்வார்கள்...

      அதற்கு நமக்குத் தேவை...பெரிய பதிப்பகங்களின் பார்வை நம் மீது படுவதே...விளம்பரம் மட்டும் தான் என்றில்லை...
      ஆனந்த(சுட்டி) விகடனிலோ,குமுதத்திலோ,தினகரனிலோ,தி ஹிந்து விலோ, புதிய தலைமுறை டி.வி. யிலோ நமது காமிக்ஸ் பற்றி ஒரு கட்டுரையோ,நிகழ்ச்சியோ..புத்தக திருவிழாவின் பொருட்டு, அச்சமயத்தில் நடக்குமாயின் நலம்...

      சரி..ஓ.கே...சார்...நான் ஏதோ ஏதோ என் பாட்டுக்கு சொல்லிவிட்டேன்...ஆனால் இதில் எத்தனை நடைமுறை சிக்கல்கள் உள்ளன என்பது தாங்கள் மட்டுமே அறிந்தது...Anyways lets hope for nice things to happen in every new year!!!

      Delete
  35. You can try Batman....this has lot of interesting stories and different villains and stories within stories......and will definately fit our comics circle for a very long time....

    ReplyDelete
    Replies
    1. Comic Rider Arul : Will definitely fit our circle ; but the question is - will it fit our pockets too ?!!

      Delete
    2. hahahaha..:) ......You are the Best Judge on that....... (I think it should)

      Delete
  36. எடிட்டர் சார்,
    நீங்க பேட்மேன போடுங்க, போடாம போங்க,
    நீங்க சூப்பர்மேன போடுங்க போடாம போங்க
    ஆனா எங்களுக்கு ஆர்டினும் லக்கியும் அதிகமா போட்ட்டே ஆகனும்., போட்ட்டே ஆகனும்..,ஆங்,.!.!

    By, வருத்தப்படாத வாலிபர் சங்க உள்ளூர் பிரதிநிதி..

    ReplyDelete
  37. // அமெரிக்கக் காமிக்ஸ் ரசனைகள் நமக்கு ரொம்பவே தூரத்து ரசனைகளாய்த் தெரிவதன் காரணம் தான் என்னவாக இருக்கும் ? //

    நமது ஊரில் கற்பனைக்கதை என்றால்கூட "முன்பு ஒரு காலத்தில் நடந்தது", "ஒரு ஊர்ல.." , "கேள்விப்பட்டது..", "இது உண்மை" என்ற பாணியிலேயே சொல்லி (ரசித்துப்) பழகிவிட்டோமோ என்னவோ, Futuristic Fantacy தூக்கலாக இருந்தால் வாசிப்பில் சுணக்கம் ஏற்படுகிறது. இதுவே கான்க்ரீட்டான Visual மூலமாக (Movies) கிடைக்கும் போதுதான் Thrill'உடன் நமக்கு ஒன்ற முடிகிறது. வரலாறும், பழங்கதைகளும் இளம் வயதில் பாதிக்க வாய்ப்பில்லாத (புதிய?) நாடுகளில் Futuristic Fantacy நன்றாக எடுபடுகிறதோ.. [ என்பது என் குழப்பமான கணிப்புகளுள் ஒன்று! ]

    ReplyDelete
    Replies
    1. Ramesh Kumar : அட..குழப்பக் கணிப்பாவது ஒன்றாவது ! Sound logic என்றே நினைக்கத் தோன்றுகிறது !

      Delete
  38. //// இன்றைக்கு நாம் பழகிப் போயிருக்கும் பாணிகளில் இருந்து சற்றே விலகித் தோன்றும் இந்த மொழிநடைகளை இந்தாண்டின் பிற்பகுதியின் பாக்கியுள்ள 8 மறுபதிப்புகளில் செப்பனிட முயற்சித்தால் என்னவென்று தோன்றியது ! ///
    தவறில்லை சார்.
    அன்றைய மொழிநடையை இன்று ரசிக்க முடியும் எனத் தோன்றவில்லை.தவிரவும் அன்றைய மொழிபெயர்ப்பு அந்த காலகட்டத்திற்கு சரியாக இருந்திருக்கலாம். இன்றைய நறுக்கு தெறிக்கும் வசனங்கள் அன்றைய மொழிபெயர்ப்பில் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. " இன்றைய நறுக்கு தெறிக்கும் வசனங்கள் அன்றைய மொழிபெயர்ப்பில் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்"/- தவறான முடிவு கிட் ஆர்டின் . அன்று தெரித்த நறுக்குத்தான் இன்றைய இத்தனை மறுபதிப்பு வெற்றிகளுக்கும் , மறுபதிப்பு வேண்டுகோள்களுக்கு காரணம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வில்லை . சரி ஆசிரியர் எப்படி தவற விட்டார் , என எனக்கு ஆச்சரியமாக உள்ளது. அந்த பழைய எழுத்துக்கள் தான் எங்கள் பால்யங்களை ஜீவிக்க செய்யும் சார் . வேண்டுமானால் ஒரு சில திருத்தங்களை (மற்ற நண்பர்கள் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் மட்டுமே ) ஏற்றுக்கொள்ள சம்மதிக்கிறோம. சார் .

      Delete
    2. சேலம் Tex விஜயராகவன் : பால்யங்களை திரும்பவும் வாழ்ந்து பார்க்கிறோமென்று சொல்வதெல்லாம் சரி தான் நண்பரே ; ஆனால் கண்முன்னே உள்ள நிதர்சனங்களை கண்ணாடிகளால் மறைத்துக் கொள்ள விரும்பிடும் பட்சங்களில் அது அவரவர் தேர்வுகளாக மட்டுமே இருக்க முடியும் !

      அன்றைய நடைகளை இப்போது படிக்கும் போது பல்லெல்லாம் ஆடாத குறை தான் எனக்கு ! அதிலும் ஆங்கில ஒரிஜினல்களைக் கையில் வைத்துக் கொண்டு பார்க்கும் போது - உஷ்ஷ்ஷ் !

      Delete
    3. Tex விஜயரே.:-
      தவறான. முடிவு என்னுடையதல்ல.
      உதாரணம்,
      "கும்மென்று ஒரு குத்து விட்டார் மாயாவி "
      "மயிரிழையில் உயிர் பிழைத்தார் ஜானி "
      "ஸ்பைடர் வலைத் துப்பிக்கியை பிரயோகித்தார்."
      லாரன்ஸும் டேவிட்டும் ஜூடோ வெட்டு கொடுத்தார்கள்."
      இதுபோன்ற சிறுபிள்ளை சூழ்நிலை விளக்ககங்கள் மற்றும் மிகவும் சம்பிரதாயமான சம்பாஷனைகள் போன்றவை இன்றைய வாசிப்புக்கு சங்கடமாக இருக்கும்.
      அதற்காக அனைவரும் வட்டார தமிழ் பேசவேண்டும் என்று அர்த்தமில்லை.
      எடிட்டரின் கைவண்ணத்தில் நமது ஆதர்ஷ நாயகர்கள் இன்றைய நிலவரத்துக்கு ஏற்றார் போல் பேசவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.!

      Delete
    4. "உன்னைச் சுட்டதற்கு மிகவும் வருந்துகிறேன் பறவையே , உன்னுடைய மரணம் இங்கு அனேகரின் மரணத்தை தவிர்க்கக்கூடும்."- இது வைகிங் தீவு மர்மத்தில் தலை டயலாக் . இதில் மாடர்னஸ் இல்லை என்றாலும் தேவையான டெப்த் இருக்கிரதல்லவா?.இதை இன்றைய நிலவரத்துக்கு ஏற்றார் போல மாற்றுங்கள் ஆர்டின் . நல்ல மாற்றங்களை ஏற்க நான் எப்போதும் தயங்க மாட்டேன் .

      Delete
    5. @Tex விஜயர்,
      வாதம் டெக்ஸ் கதைகளை பற்றி அல்ல மாமா அவர்களே.!
      கா.க.காலத்தில் வந்த பாடலை மாற்றியதற்க்கே வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு புலம்பியவன் நான்.
      டைகர்.,டெக்ஸ் மறுபதிப்பில் வசன மாற்றங்களை எதிர்பார்க்கவே இல்லை.
      மீண்டும் என்னுடைய பின்னூட்டத்தை கொஞ்சம் கவனமாக படியுங்கள் மாமா அவர்களே.!
      ஆரம்ப கால முத்து காமிக்ஸ் மொழிபெயர்ப்பில் இருக்கும் சூழ்நிலை விளக்கங்களும் சராசரியான சலிப்பூட்டும் விதத்தில் இருக்கும் வசனங்களையும்தான் மாற்றுவதற்க்கு ஆதரவு கொடுத்தேன்.
      ஜானி சிரித்தார், ஸ்பைடர் இளித்தார்., லாரண்ஸ் குனிந்தார்., மாயாவி நிமிர்ந்தார் போன்ற பட விளக்கங்கள் இன்றைய கி.நா. வாசிப்பு காலத்திற்க்கு காமெடியாக இருக்கும் என்பது என் கருத்து.
      இதில் டெக்ஸை நுழைக்க வேண்டாம் மதியூக மாமா அவர்களே.!!

      Delete
    6. //கா.க.காலத்தில் வந்த பாடலை மாற்றியதற்க்கே வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு புலம்பியவன் நான். //

      :-)

      Delete
    7. எனக்கு 'பலே பாண்டியா" பார்த்தது போலவே ஒரு பீலிங்கு !!

      Delete
    8. ச்சேசே வாதம் எல்லாம் செய்ய நான் தயார் இல்லை . அந்த டயலாக் இப்போது எப்படி இருக்கும் என பார்க்கும் ஆசை மட்டுமே . எனக்கு தெரியாதவற்றை பற்றி நான் எப்படி உதாரணம் காட்ட முடியும் .இங்கே என்னைப்போல் ஒவ்வொரு , மாயவி , ஜானி, ஸ்பைடர் , லாரன்ஸ் & டேவிட் , ஆர்ச்சி ........ஹூரோவுக்கும் உயிர் ரசிகர்கள் இருக்கிறார்கள் . ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்ட மாதிரி அவர்கள் ஒவ்வொரு டயலாக்கையும் மனப்பாடம் செய்திருப்பார்கள் . மாற்றத்தை அவர்கள் யாரேனும் நிச்சயமாக எதிர்க்கக்கூடும். யாரேனும் மீண்டும் சாம்பார் வைக்கக்கூடும்.

      Delete
    9. //எனக்கு 'பலே பாண்டியா" பார்த்தது போலவே ஒரு பீலிங்கு !!//
      ஹாஹாஹா.!

      ~₹`•¶\√{€ (மியூசிக்)
      துதி பாடும் கூட்டம் உனை நெருங்காததைய்யா.?
      வெறும்
      தூபத்தில் உன் இதயம் மயங்காதைய்யா.!
      துதிபாடும் .....டும்....டும்..,டும்…√¢₹€¢€π} (மறுடியும் மியுசிக்.) D

      Delete
    10. There is nothing wrong in modifying it ...and infact it will reach very well.....

      Sometime back I am also one of the person who requested Editor not to make any changes in Minnum Maranam. This is based on my own assumption that the old one was better in terms of writing......The assumption is nothing but I was proud of my childhood time story reading ...

      But recently I got some very old collections of Spider and Steel claw and others, and after reading it I really find Mr. Vijayan's suggestion of slight modification is really really valid and it will reach a lot...

      Delete
  39. Sir....
    வல்லவர்கள் வீழ்வதில்லை ...முன் அட்டையின் பின் பக்கத்தில் மின்னும் மரணம் விளம்பரம் அருமையாக வந்துள்ளது .மிக துல்லியமான அச்சு தரம் .

    ReplyDelete
  40. இனிய காலை வணக்கம் விஜயன் சார் மற்றும் நண்பர்களே

    // இன்றைக்கு நாம் பழகிப் போயிருக்கும் பாணிகளில் இருந்து சற்றே விலகித் தோன்றும் இந்த மொழிநடைகளை இந்தாண்டின் பிற்பகுதியின் பாக்கியுள்ள 8 மறுபதிப்புகளில் செப்பனிட முயற்சித்தால் என்னவென்று தோன்றியது ! ஆனால் ஒவ்வொரு பக்கத்து வரியையும் ; புள்ளியையும், கோட்டினையும் மனப்பாடம் செய்து வைத்திருக்கும் நண்பர்களுக்கு இது அபச்சாரமாய்த் தோன்றுமோ ? என்ற கேள்வியும் எழாமலில்லை ! What say guys ? //

    ஒரு வாக்கெடுப்பு நடத்தலாமா சார் :))

    // அதற்காக 'நாளைக்கே X-Men இத்யாதிகளை வெளியிடப் போகிறேன் என்றோ ; அதனை ரசிக்கப் பழகிக் கொள்ளுங்கள் !' என்றோ நான் இங்கே சொல்ல வரவில்லை //

    Batmen கொண்டு வரலாமே சார் நமது நண்பர்கள் பலமுறை கேட்டிருக்கிறார்கள் :))

    // சுஸ்கி & விஸ்கி இன்றைய நம் வயதுகளுக்கு ; ரசனைகளுக்கு ரொம்பவே மழலைத்தனமாய் தோன்றிடுமே என்பது எனது ஆதங்கம் ! அனால் உங்களின் சிந்தனைகள் என்னவோ - இதனில் ? சொல்லுங்கண்ணே..சொல்லுங்க...! //

    சார் அப்படியானால் லக்கியையும் சுட்டி லக்கியையும் எந்த ரசனையில் வாங்குகிறார்கள்
    என்னை பொறுத்தவரையில்
    பேரிக்காய் போராட்டம் - ஒரு காமெடி சதிராட்டம்
    பயங்கர பயணம் - ஒரு காமெடி பயணம்
    ராஜா ராணி ஜாக்கி - இப்பொழுது படித்தாலும் வாய்விட்டு சிரிப்பது நிச்சயம்

    ஆகையால் எனது முழு ஆதரவும் நிச்சயமாக உண்டு சார் :))

    அப்ப அடுத்த ஏப்ரலில் மின்னும் மரணம் கூட சுஸ்கி & விஸ்கி உண்டு தானே சார் ... :))
    .

    ReplyDelete
    Replies
    1. Prabakar T : //அப்ப அடுத்த ஏப்ரலில் மின்னும் மரணம் கூட சுஸ்கி & விஸ்கி உண்டு தானே சார் .//

      நம் ரீல் கௌபாய்களுக்குக் குதிரைகளை விரட்டுவது சுலபமாய் இருக்கலாம் ; நிஜத்திலும் நாம் அதை முயற்சித்தால் சத்தியமாய் பல்டி தான் சாத்தியம் !! பொறுமை ப்ளீஸ் !

      Delete
  41. // தோண்டத் தோண்ட உள்ளிருந்து வந்த முந்தைய இதழ்களும் ; ஆங்கில இதழ்களும் ; இன்னமும் நாம் பயன்படுத்தியிரா மாண்ட்ரேக் ; ரிப் கிர்பி ; காரிகன் கதைகளின் ஒரிஜினல்களும் என ஒரு வண்டி தேறும் ! //
    இன்னமும் பயன்படுத்தாத அந்தப் புதையல்களை அவ்வப்போது வெளியே எடுத்து
    காமிக்ஸ் காதலர்களின் உள்ளங்களை குளிர்விக்கலாமே சார் ..உண்மையை சொன்னால்
    அந்த காலத்து கதைகள் மனதில் நின்றது போல் போன இரண்டு மாதத்திற்கு முன்வந்த
    LMS ல் என்னஎன்ன கதைகள் இருந்தன என்பது கூட இப்போது நினைவில் இல்லை என்பதே
    நிதர்சனம் ..சுஸ் கி விஸ்கி யின் ஒரு பயங்கரப் பயணம் மறக்க முடியுமா ...

    ReplyDelete
    Replies
    1. BAMBAM BIGELOW : //அந்த காலத்து கதைகள் மனதில் நின்றது போல் போன இரண்டு மாதத்திற்கு முன்வந்த
      LMS ல் என்னஎன்ன கதைகள் இருந்தன என்பது கூட இப்போது நினைவில் இல்லை என்பதே
      நிதர்சனம் //

      செல்போன்கள் வந்திருக்கா நாட்களைச் சார்ந்தவராக நீங்கள் இருப்பின், எத்தனை பேர்களது போன் நம்பர்களை நம் தலைக்குள் சுமந்து அந்நாட்களில் திரிந்தோம் என்பது நினைவுக்கு வரும் ; ஆனால் இன்றோ நம் அத்தியாவசியங்களைக் கூட செல்லின் contacts பட்டியலில் ஐக்கியம் ஆக்கிடுவது தானே நிதர்சனம் !

      அன்றும், இன்றும் கதைகள் -கதைகளாகவே இருந்து வந்துள்ளன நண்பரே ; மாறியுள்ளது நமது அகவைகளும், நமது ரசனைகளும் ; நமது சூழல்களுமே !

      Delete
    2. true...

      reading books when we were kids.....it remains in our heart and mind, not only that, we were also reading the same book many times....

      Delete
  42. உண்மையை சொல்ல போனால் விஸ்கி -சுஸ்கி நான் படித்தபடித்ததே இல்லை ..( அந்த பெயரில் முதல் பகுதியுடன் மட்டுமே அறிமுகம் உண்டு )
    ஆணால் சந்தையில் ஏக கிராக்கி என்று கேள்வி ..
    என்னை பொறுத்த வரையில் இலகு ரக கதைகள் இளம் வாசகர்களுக்கு ஏற்றது .ஜில் ஜோர்டான் , சுட்டி லக்கி வகையறா சரியாக இருக்க கூடும் .லக்கிக்கு இன்இன்னும் இடம் வேண்டும் .

    ReplyDelete
    Replies
    1. Rummi XIII : //லக்கிக்கு இன்இன்னும் இடம் வேண்டும் .//

      எனக்கும் இதனில் உடன்பாடே ! ஆனால் இங்கு practical சிக்கல் நம் நண்பர்களின் எதிர்பார்ப்புகளின் ரூபத்தில் தான் எழுகிறது ! படிக்கும் ஒவ்வொரு லக்கியின் கார்டூன் கதையும் ஒரு 'புரட்சித் தீ"யாகவோ ; ஒரு "பொடியன் பில்லி"யாகவோ ; ஒரு "சூப்பர் சர்க்கசாகவோ" அமைந்திடவேண்டுமென்ற அவாக்கள் சற்றே unrealistic ஆகிடாதா ?! பக்கத்துக்குப் பக்கம் ; சம்பவத்துக்கு சம்பவம் - சிரிப்பு வெடிகள் உதயமாகா பட்சத்தில் அந்தக் கதை சுமார் என்ற முத்திரை பெறுகிறது ! அதனாலேயே லக்கியை ரேஷன் செய்ய வேண்டியாகிறது !

      சமீபமாய் வந்த "எதிர் வீட்டில் எதிரிகள்" ஒரு ரசிக்கக்கூடிய சாகசம் என்றே நான் நினைத்தேன் ; ஆனால் so-so ரகம் தான் என்பதே நண்பர்களின் தீர்ப்பு !

      Delete
  43. டியர் எடிட்டர்ஜீ !!!

    ஃபில்லர் பேஜ்களை நிரப்ப முன்பு வெளிவந்த "நரகத்தை பார்த்தேன்"மற்றும் இரண்டாம் உலக போர் பற்றிய புகைப்பட குறிப்புகள் அடங்கிய "தலை கேட்ட தசாப்தம்" கௌபாய் அமெரிக்கா பற்றிய "ரத்த பூமி"போன்ற சூப்பர் ஹிட் தொடர்களை வெளியிடலாமே ஸார் ?

    ReplyDelete
    Replies
    1. saint satan : நான் ரெடி தான் சாத்தான்ஜி ; ஆனால் "இச்டரி " என்றாலே ரிவர்ஸ் கியர் போடும் நண்பர்களும் உண்டன்றோ ?!

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. இத் தருணத்தில்,எனக்கு ஹிஸ்டரி பாடத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தி உலகமகா யுத்தத்தை, ஹிட்லரை (நாஜிக்கள்) ஆர்வமாக படிக்க வைத்து பாஸாக்கி கரையேற்றியதற்கான முக்கிய தூண்டுகோள் இத்தொடர்கள் என்பதை இக்கணம் நன்றியுடன் நினைவுகூர விரும்புகிறேன்.அதற்காக அவற்றை இன்றும் தொடரச் சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.அவற்றை போலவே வேறு ஏதோ ஒன்று, இன்றைய சிறியவாசகர்களையும் கவரும் வகையில் செய்யலாம் சார்(SOMETHING USEFUL & INTERESTING),இல்லை
      இரத்த வெறியன் ஹேகர்....,மிஸ்டர் மியாவ் போன்ற வேறு ஏதேனும் புதிய ,எல்லாரும் ரசிக்க கூடிய ஒரு பக்க நகைச்சுவை கதைகள் இருப்பின் பக்கங்களை அவற்றால் நிரப்பலாமே சார்..? கிரீன் மேனர் கதைகள் சிறுசிறு கதைகளாக அமைந்திருந்ததே..அவற்றை போன்ற குட்டி குட்டி கதைகள் கூட பக்கங்களை அற்புதமாக நிரப்பும் என்று தோன்றுகின்றது. இப்போது எங்கள் தலைக்குள் முளைத்த ஜடியாக்கள் இவையே...! :D

      Delete
    4. suji jeya : இம்மாதத்து KING SPECIAL ஒரு வரலாற்றுப் பாடமே நடத்தாத குறை தான் ; மெக்சிகப் புரட்சியில் ; அயர்லாந்தின் பங்களிப்பு ; அயர்லாந்தின் விடுதலை வேட்கை ; அமெரிக்க - மெக்சிக உறவுகள் என வரலாற்றின் பல அத்தியாயங்கள் இந்தக் கதையோடு பின்னிப் பிணைந்திருப்பதைப் பார்க்கப் போகிறீர்கள் - பிரெஞ்சில் இக்கதையை ஏற்கனவே நீங்கள் படிக்காதிருப்பின் ! வானமே எங்கள் வீதியும் கூட உலக யுத்தத்தின் மீது ஒரு மாறுபட்ட பார்வையை செலுத்தும் ஆக்கம் !

      Delete
    5. எப்படா புக் கையில கிடைக்கும்னு ஆர்வத்தை கிளறிவுட்டுடீங்க..:)

      Delete
  44. //Vijayan14 December 2014 at 13:40:00 GMT+5:30
    Rummi XIII : //லக்கிக்கு இன்இன்னும் இடம் வேண்டும் .//

    எனக்கும் இதனில் உடன்பாடே ! ஆனால் இங்கு practical சிக்கல் நம் நண்பர்களின் எதிர்பார்ப்புகளின் ரூபத்தில் தான் எழுகிறது ! படிக்கும் ஒவ்வொரு லக்கியின் கார்டூன் கதையும் ஒரு 'புரட்சித் தீ"யாகவோ ; ஒரு "பொடியன் பில்லி"யாகவோ ; ஒரு "சூப்பர் சர்க்கசாகவோ" அமைந்திடவேண்டுமென்ற அவாக்கள் சற்றே unrealistic ஆகிடாதா ?! பக்கத்துக்குப் பக்கம் ; சம்பவத்துக்கு சம்பவம் - சிரிப்பு வெடிகள் உதயமாகா பட்சத்தில் அந்தக் கதை சுமார் என்ற முத்திரை பெறுகிறது ! அதனாலேயே லக்கியை ரேஷன் செய்ய வேண்டியாகிறது ! //

    Dear Editor,
    மினி லயனைக் களத்தில் இறக்கிவிட்டால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கிட்டிவிடுமே? லக்கிலூக் கதை ஒன்று, சுட்டி லக்கி ஒன்று, சுஸ்கி விஸ்கி ஒன்று - என்று ஆரம்பத்தில் ஏதாவது ஒரு புத்தக விழாவை மையப்படுத்தி (சென்னையில் நடைபெறும் இரண்டாவது விழா) மினி லயனைக் கொண்டுவாருங்கள் சார்.

    இது மாத இதழாகவோ, வருடத்துக்கு 6 என்றோ இல்லாமல் வரவேற்பைப் பொறுத்து, அவ்வப்போது வரட்டுமே!

    இந்த இதழ்களின் ஃபில்லர் பக்கங்களை குண்டன் பில்லி, விச்சு - கிச்சு, இரத்த வெறியன் ஹேகர், கார்ஃபீல்ட் கொண்டு நிரப்பிடுங்கள். பால்ய காலத்தை நாடும் நம் நண்பர்களுக்கு ஒரு வடிகால் கிடைத்திடும். இளைய தலைமுறைக்கு எதை வாங்கிக் கொடுத்து காமிக்ஸ்ஐ அறிமுகப்படுத்துவது? என்ற கேள்விக்கும் விடை கிடைத்துவிடும்.

    பள்ளிகளை டார்கெட் செய்து அவற்றுக்கு பக்கமாக உள்ள கடைகளில் விற்பனைக்கு விட்டால்..... (அடங் கொய்யால... ஏற்கனவே கட்டைவிரலை வாய்க்குள்ளிருந்து எடுக்க முடியல... இதுல முழங்கால் வரை வுடச்சொல்றாப்ல - என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்குதுதான்... ஆனாலும் என்ன செய்ய.. காமிக்ஸ் காதல்ல இதெல்லாம் சகஜமோல்லியோ..?)

    ReplyDelete
    Replies
    1. Podiyan : ஆசையெல்லாம் நிறையவே உண்டு நமக்கும் ; ஆனால் சந்தாத் தொகைகள் உயர்ந்து கொண்டே செல்வதையும் சற்றே கவலையோடே பார்க்க நேரிடுகிறதே !

      Delete
    2. Dear Edit,
      ஏனைய வார இதழ்கள் போல நமது காமிக்ஸ்களும் (80 களில் நடந்தது போன்று) எல்லாப் பத்திரிகை, புத்தக நிலையங்களிலும் விற்பனையாகும் காலம் நிச்சயம் வரும் சார். அப்போது எதுவும் சாத்தியமாகும். நான் நிச்சயம் நம்புகிறேன்!

      Delete
  45. Dear Editor,
    ஐரோப்பிய ஓவியர் பென்சில் ஸ்கெட்ச் போட்டிருக்காரே... அந்த அட்டை எந்தக் கதைக்கு சார்? யார் அந்த அட்டையிலுள்ள ஹீரோ? (யாருமே இதப்பத்தி கேக்கலையே...? என்னாச்சு..??)

    ReplyDelete
    Replies
    1. ஒற்றை நொடியில் ஒன்பது தோட்டா ?????

      Delete
    2. இல்லை நண்பரே! இது ஏதோ ஒரு ரீப்ரிண்ட் கதைக்குரிய அட்டை என்பது என் எண்ணம்!

      Delete
    3. இந்தக் கேள்விக்கென்ன பதில்...

      Delete
  46. சார் ... காரிகன் கதைகளை பரணிலிருந்து தோண்டி எடுத்த பின்பும் ஏன் தாமதம் ...??? களத்தில் இறக்குங்க ....

    ReplyDelete
    Replies
    1. Rummi XIII - களம் முழுக்க இந்தாண்டுக்கான நெல் காய்ந்து கொண்டிருப்பதால் புதுசாய் சரக்கைக் காய வைக்க இடமில்லையே !!

      Delete
  47. //..சிறு வயதில் தான் படித்த சுஸ்கி & விஸ்கி கதைகள் இன்னமும் நினைவுகளில் பசுமையாய் உள்ளதாகவும், அதனை போல சுலபமான கதைகளாக இன்றைய இளம் தலைமுறைக்கு நம்மிடம் வேறு சரக்கே இல்லை எனும் போது - திருவாளர்கள் சு.வி.யை நம் அணிவகுப்பிற்க்குக் கொணர வாய்ப்பேதும் உண்டா ? என்று வினவினர் ! இதே போன்ற அவாவினை சில காலம் முன்பாக நமது இராஜபாளையம் வாசக நண்பரின் சகோதரியும் கூட முன்வைத்திருந்தார் ! சுஸ்கி & விஸ்கி இன்றைய நம் வயதுகளுக்கு ; ரசனைகளுக்கு ரொம்பவே மழலைத்தனமாய் தோன்றிடுமே என்பது எனது ஆதங்கம் ! அனால் உங்களின் சிந்தனைகள் என்னவோ - இதனில் ? சொல்லுங்கண்ணே..சொல்லுங்க...! ..//

    அன்புள்ள எடிட்டர்,

    நாங்களும் இதைத்தானே இத்தனை (சுஸ்கி & விஸ்கி) நாளா கேட்டுகிட்டு இருக்கோம்..... தயவுசெய்து ஏற்கனவே வெளிவந்த அனைத்து சுஸ்கி & விஸ்கி கதைகளை முதலில் மறுபதிப்பு செய்துவிட்டு, புதியவற்றைத் தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்

    சுஸ்கி & விஸ்கி மட்டுமல்ல, அலிபாபா (Ali Beber) கதைகளும் பெரிய size-ல் மறுபதிப்பு வேண்டும்

    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. Periyar : அலி பாபா (Ali Beber ) கதைகளுக்கு வண்ண டிஜிட்டல் பைல்கள் இல்லை ; அதனை அவர்கள் உருவாக்குவதாகவும் இல்லை என்பதால் அங்கே வாய்ப்பில்லாது போகிறது !

      சு.வி. யைப் பொறுத்த வரை சிந்திப்போமே - இன்டர்நெட்க்கு அப்பாலுள்ள நம் வாசகர்களின் கருத்துக்களையும் அறிந்த பின்னர் !

      Delete
    2. //...அலி பாபா (Ali Beber ) கதைகளுக்கு வண்ண டிஜிட்டல் பைல்கள் இல்லை ; அதனை அவர்கள் உருவாக்குவதாகவும் இல்லை என்பதால் அங்கே வாய்ப்பில்லாது போகிறது ! ..//

      அன்புள்ள எடிட்டர்,

      நீங்கள் முன்பே இதைக் குறிப்பிட்டுள்ளீர்கள் .. இருந்தாலும் ஒரு நப்பாசை :) நாம் முன்பு தமிழில் வெளியிட்ட புத்தகத்தை வைத்து ஏதாவது (நாமே scan or create புதிய digital file?) செய்து எப்படியாவது மறுபதிப்பு செய்ய இயலுமா? மொத்தமே மூணு (நான்கா?) கதை தானே ??

      ரொம்ப ஓவராத் தான் யோசிக்கிறேனோ? :)

      Delete
    3. Periyar : //ரொம்ப ஓவராத் தான் யோசிக்கிறேனோ? :)//

      :-)

      Delete
  48. டியர் எடிட்டர் சர்ர்,
    இரவு கரத்து இருந்து அலுத்து போய் தூங்கப் போனேன். நரன் 97 ஆவது சர்ர். மேலே போய் விட்டு வருகிறேன்.
    தங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
  49. டியர் எடிட்டர் சார்
    1. கருப்பு கிழவி கதை களை பில்லெர் ஆக பயன் படுத்தலாம் .
    2.லக்கி லுக் In the Shadow of the Derricks இன்னும் தமிழ் வரவில்லை.நல்ல கதை.

    ReplyDelete
    Replies
    1. RAMG75 : கறுப்புக் கிழவியின் கதைகளின் உரிமைகளை வாங்கிடுவது அந்நாட்களுக்கே பெண்டு நிமிர்த்தும் பணியாக இருந்தது ; இன்றைக்கு இன்னமும் பெரிய கஷ்டமாகவே இருக்கும். அந்தச் சிக்கல் ஒரு பக்கமிருக்க - நிச்சயமாய் அவற்றை வெறும் filler pages -கென வெளியிட அனுமதிக்க மாட்டார்கள் !

      Shadow of the Derricks will follow...in 2016 !

      Delete
    2. //Edit: Shadow of the Derricks will follow...in 2016 !//

      :)

      +1

      Delete
  50. டியர் எடிட்டர் சார்
    1. கருப்பு கிழவி கதை களை பில்லெர் ஆக பயன் படுத்தலாம் .

    +11111111

    எனக்கு தோன்றியது என்னானா ... கருப்பு கிழவி மிகச் சரியான ஒரு பில்லர் பேஜ் ... இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காதென்றே நினைக்கிறேன் ...

    ReplyDelete
    Replies
    1. Super Idea +11111
      ஏதோ ஒன்ன கண்ணுல காட்டுங்கப்பா.
      நாங்கல்லாம்,சுஸ்கி-விஸ்கி,கருப்பு கிழவி கதைகளை எல்லாம் எப்பதான் கண்ணுல பாக்கறது.
      ஆசிரியர் சார், அவ்வவ்வ்வ்வ் முடியல,கொஞ்சம் கருணை காட்டுங்க.
      இல்ல போராட்டக்குழு தலைவரோட (ஹி,ஹி,ஹி) களத்துல இறங்கிருவோம்.

      Delete
    2. உயரே ஒரு ஒற்றை பதில்...லேசாய் அண்ணாந்து பார்த்துக் கொள்ளுங்களேன் நண்பர்களே..!

      Delete
  51. எனக்கு XIII ன் காத்திருப்புக்கு அப்புறம் என்னை நிலை கொள்ளாமல் செய்த விசயங்கள் 2 தான் .. 1 என் மகளின் பிறப்பு ... 2 வது மின்னும் மரணம் முழு தொகுப்பு ...

    ReplyDelete
    Replies
    1. Rummi XIII : தளபதியின் பிரசவத் தேடி குறித்தாச்சே...கவலையை விடுங்கள் ! தலைப் பிள்ளை (customized imprints ) என்பதால் தேதி பிந்தாது - முந்திடவே வாய்ப்புகள் ஜாஸ்தி !

      Delete
    2. சுக பிரசவ ப்ராப்தி ரஸ்து !!!! :-)

      Delete
    3. //Edit: தேதி பிந்தாது - முந்திடவே வாய்ப்புகள் ஜாஸ்தி ! //

      wow ... +1

      //S.A: சுக பிரசவ ப்ராப்தி ரஸ்து !!!! //

      :)

      Delete
  52. எடிட்டர் சார்,

    ரிப் கெர்பி, காரிகன், மாண்ட்ரேக் ஆகியோரின் புதிய கதைகள் நிறைய இருப்பதாக அடிக்கடி சொல்லி என் போன்ற diehard fans வயிற்றில் பாலை வார்க்கிறீர்கள்.

    இவற்றை digest முறையில் புத்தக திருவிழாவில் வெளியிட எவ்வளவு நடைமுறை சிக்கல்கள் உங்களுக்கு உள்ளது என்று தெரியவில்லை . ஆனால், என்றாவது ஒரு நாள் இவையெல்லாம் தங்களிடமிருந்து வெளிவரும் என்ற நம்பிக்கை இருக்கிறது :-)

    ReplyDelete
    Replies
    1. Radja : உங்கள் வயிற்றில் பாலை வார்க்கும் அதே விஷயமானது நண்பர்களின் நிறையப் பேர்களது வயிற்றில் புளியையும் கரைப்பது தானே பிரச்சனையே !

      Delete
  53. Sunday comics - 14 Dec 14 !

    [1] டியர் விஜயன் சார்,

    //2015-ன் இதழ்களில் filler pages களில் ஏதேனும் புதிதாய் முயற்சித்தால் தேவலை என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது//

    இந்த மாற்றத்தை நான் சொன்னால் நிச்சயமாக யாருமே செவிக் கொடுத்து கேட்கப் போவதில்லை தான், இருந்தாலும் என் ஆத்ம திருப்திக்கு என்னுடைய எண்ணங்களையும் இங்கே பதிவிடுகிறேன். ஒவ்வொரு புத்தகத்திலும் filler pages என்பது.. ..

    இன்றைய நிலையில் அவசியம் தானா சார் ?!

    என்னைக் கேட்டால், கதைகள் எத்தனைப் பக்கங்களில் முடிந்தாலும் அந்த அளவே போதுமானது. வேறு எந்த filler pagesம் வேண்டாம் சார்.. மதியில்லா மந்திரி, கறுப்புக் கிழவி, சுஸ்கி & விஸ்கி, etc., etc., போன்ற கதைகளை தனிப் புத்தகமாக மட்டுமே வெளியிட வேண்டும் என்பதே என் கருத்து. நாளை என்றோ ஒரு நாள் செய்யப்படும் மாற்றத்தை இன்றே செய்வதில் உள்ள சுகம் ரொம்பவே அலாதியானது ஸார் :-)

    வானமே எங்கள் வீதி..! காமிக்ஸில் வெளிவந்துள்ள filler pages - சிரிப்பின் நிறம் சிகப்பு, இரத்த வெறியன் ஹேகர் - இரண்டின் font design, எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. படிக்க படிக்கவே தலைவலி வரும் போல் இருக்கிறது. கதைகளில் உபயோகப்படுத்தும் font யே இதற்கும் உபயோகப் படுத்தியிருக்கலாம் என்பது என் கருத்து. இந்த இரண்டு filler pages கதைகளையும் இன்னும் நான் படித்து முடிக்கவே இல்லை, எனக்குப் பிடிக்கவில்லை, அவ்வளவு அயர்ச்சியாக இருக்கிறது சார் :-(

    ReplyDelete
  54. Sunday comics - 14 Dec 14 !

    [2] டியர் விஜயன் சார்,

    //நம்மூர் மாலையப்பன் ஒரு ஐரோப்பிய முகத்தை ; உடுப்பை வரைவதற்கும் அந்நாட்டவர் அதனை வரைவதற்கும் உள்ள வேற்றுமைகளைப் பாருங்களேன்//

    நிச்சயமாக நிறையவே வித்தியாசம் இருக்கிறது சார் ! ஐரோப்பிய ஓவியர்கள், அவர்கள் நாட்டினரை வரையும் போது, அந்த ஓவியத்தில் உள்ள கம்பீரம் திரு.மலையப்பன் அவர்கள் வரையும் போது ரொம்பவே மிஸ்ஸிங். உதாரணமாக சென்ற மாதம் வெளிவந்த ''சைத்தான் வீடு'' காமிக்ஸின் புதிய பழைய அட்டைப் படங்களைக் கூறலாம். சிறிய அளவே வித்தியாசம் என்றாலும், அட்டைப்படத்தில் சிரிக்கும் ஜானியின் முக பாவத்தில் தான் எத்தனைப் பெரிய வித்தியாசம் ?!

    ReplyDelete
    Replies
    1. //அந்த ஓவியத்தில் உள்ள கம்பீரம் திரு.மலையப்பன் அவர்கள் வரையும் போது ரொம்பவே மிஸ்ஸிங். //

      MR .M ....திரு மாலையப்பன் அவர்கள் வரையும் ஓவியத்தில் தங்களுக்கு அபிப்பிராய பேதம் இருக்கலாம் !!!! அதற்காக அவர் "காலை"யா உடைத்து தூக்கி போட்டு விடுவது ????....;-)

      Delete
    2. selvam abirami :

      ஹா ஹா.. தவறாகப் புரிந்து கொண்டீர்கள் நண்பரே.. அவரின் ஓவியத் திறமை ''மலையளவு'' என்பதையே சிம்பாலிக்காக மலையப்பன் என்று எழுதி உள்ளேன். இதன் மூலம் அவர் திறமை அளப்பரியது என்பதை தாங்களும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே என் அவா ;))

      Delete
  55. Sunday comics - 14 Dec 14 !

    //காமிக்ஸ் எனும் மீடியத்தின் நிஜமான ஆற்றலுக்கும் கூட இதுவொரு வெளிப்பாடு என்று சொல்லலாம் ! சுபான் புக்ஸ் என்றதொரு டெல்லி பதிப்பகம் - 'ப்ரியா' என்றதொரு ஹீரோயினை மையமாகக் கொண்டு ஒரு புதிய காமிக்ஸ் தொடரை உருவாக்கியுள்ளது. இதில் விசேஷம் என்னவெனில் - கதாநாயகி ப்ரியா பாலியல் பலாத்காரத்தின் ஒரு துரதிர்ஷ்ட பலியாடு ! 2012 டிசம்பரின் டில்லியில் ஓடும் பஸ்ஸில் நிகழ்ந்த அந்தக் கொடூரத்தின் பிற்பாடு இந்தியாவே கூனிக் குறுகிப் போன வேளைதனில் இந்தக் கதையினை உருவாக்கிட தனக்குத் தோன்றியதாக அதன் படைப்பாளிகள் சொல்லியுள்ளனர் !//

    இதுவரை TRP Rate ற்காக டிவி மீடியாக்கள் செய்து வந்ததைப் பார்த்ததும் சுபான் புக்ஸ் நிறுவனத்தாருக்கும் நாக்கில் ஜலம் கொட்டி விட்டது என்றே தோன்றுகிறது. நாட்டில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் தினம் தினம் நடந்து கொண்ட தான் இருக்கிறது. அதையெல்லாம் குப்பையில் கிடத்தி விட்டு, எங்கோ தூரத்தில் துரதிர்ஷ்டவசமாக நடந்து முடிந்து விட்ட ஒரு கேடுக் கெட்டச் செயலுக்கு, காலமெல்லாம் காமிக்ஸ் வடிவில் புத்துயிர் கொடுக்கப் போகிறார்கள். 122 கோடி மக்கள் தொகையில் ஒரு துர்ச்செயல் நடந்த போது, இந்தியாவே கூனிக் குறுகிப் போனது உண்மை தான், அதன் பிறகு அக்கொடியவர்களை தண்டித்து, அக் கறையை கொஞ்சமாவது நம் தேசம் கழுவிக் கொண்டது. இனி உலகமெங்கும் டிஜிட்டல் பிரதிகளாய் இலவசமாய்க் கிடைக்கப் போகும் இந்தக் கதைகளால், இந்தச் சரித்திரம் அழியாமல் பொக்கிஷமாக பாதுகாக்கும் செயல் செவ்வனே நடைபெறப் போகிறது..

    எங்கோ ஒரு மூலையில் நடந்த ஒரு சிறு விஷயமாக பார்க்கப்பட்டு, அடுத்த நாள் உலகமே மறந்துப் போன ஒரு நாள் விஷயத்தை, இப்படி ஒரு காமிக்ஸை உருவாக்குவதன் மூலம் அதற்கு ரிஷி மூலம், நதி மூலம் சொல்லி, விக்கி பீடியாவிலும் ஆழமாக பதிவிட வைத்து நம் தேசத்தின் மானத்தைக் கப்பலில் ஏற்றப் போகிறார்கள் :(

    அப்படியே அக்கதையில், இரவு 11.30 மணிக்கு, யாருமே இல்லாத ஒரு பஸ்சில், தன்னுடைய ஆண் துணையுடன், 'ப்ரியா' உற்சாகமாக பயணம் செய்யும் கட்சியையும், படைப்பாளிகள் உள்நுழைத்தால் மிகவும் நன்றாக இருக்கும். அதைப் படித்தப் பிறகாவது, இளம் பெண்கள், தன்னுடைய boy friend உடன் late nightல் தனியாக ஊர்ச் சுற்ற மாட்டார்கள். அதன் பிறகு கடவுள் வந்து காப்பாற்ற வேண்டிய அவசியம் கூட இருக்காது :P

    ReplyDelete
  56. ஏகப்பட்ட தகவல்
    ஜனவரி - 8 புத்தகம் wow.

    நன்பர்கலே சந்தாவை கட்டி புத்தகங்கலை படித்து மகிழுங்கல்

    ReplyDelete
  57. @ ஆசிரியர் விஜயனுக்கு,

    //அமெரிக்கக் காமிக்ஸ் ரசனைகள் நமக்கு ரொம்பவே தூரத்து ரசனைகளாய்த் தெரிவதன் காரணம் தான் என்னவாக இருக்கும் ? கடந்த ஞாயிறின் பதிவின் பின்பகுதிகளில் உலக யுத்தம் பற்றியும் ; நாஜிக்களின் யுத்த முறைகள் பற்றியும் ; பாரதியாரைப் பற்றியும் (!!!) பின்னூட்டங்களில் தூள் கிளப்பிய நமக்கு இது சின்னதொரு விவாத மேடை என்று வைத்துக் கொள்வோமே ?! //

    DC காமிக்ஸ் நாயகர்களை நம்மால் ரசிக்கமுடியாததற்கான காரணங்களை
    ஒரு பட்டியல் போடலாம்,மேலைநாடவர்களின் வளர்ப்பு,வாழ்க்கை முறையும் நம்முடைய வாழ்முறைகளில் இலக்கணங்களும் வேறு வேறாக உள்ளன.

    எனது பட்டியலில் கடைசியில் உள்ளதை முதலில் சொல்கிறேன்...
    1.வாழ்க்கையில் முடிந்தவரையில் லவுதிக ஒழுக்கத்தை கடைபிடித்து விட்டு, நம்மை ஆளும் நபர்களை ஒழுக்கம்தவறியவர்களாக பார்த்து தேர்ந்தெடுக்கிறோம்.ஆனால் அமெரிக்காவில் ஒழுக்கம் தவறிய வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு,தங்களை ஆள ஒழுக்கத்தில் சிறந்தவர்களை தேர்ந்தெடுக்கும் மனோபாவம் ஒரு முக்கிய காரணமாக சொல்லலாம்.
    2.எல்லா கண்டுபிடிப்புக்கும் காபிரைட் வாங்குவது,கண்டுபிடிப்பதும் அவர்கள் மனோபாவம் என்றால்...நாம் எல்லா கண்டுபிடிப்பையும் முதலில் வாங்குவது, யோசனையே இல்லாமல் பயன்படுத்துவது நம் இயல்பாக உள்ளது.
    இங்கு கணக்கில் கொள்ளவேண்டியது கற்பனைதிறன்...! கற்பனையை முழுமையாக்கிய திரைபடங்கள் ஓடுகின்றன. கற்பனையை தூண்டும் காமிக்ஸ்கள்...அவர்கள் மனத்திரையில் ஓடும் கற்பனை...நமக்குள் ஓடுவதில்லை என்பதே யதார்த்தம்...!

    ReplyDelete
    Replies
    1. mayavi.siva : Beg to differ all the way..! "மேலை நாட்டவர் " என்ற பட்டியலுக்குள் அமெரிக்கர்கள் மட்டுமன்றி பிரான்சைச் சேர்ந்தோரும், இத்தாலியைச் சேர்ந்தோரும், இங்கிலாந்தைச் சேர்ந்தோரும் சேர்த்தி தானே ?! அப்படியிருக்கையில் எவ்விதங்களில் வளர்ப்பு ; வாழ்க்கை முறைகள் பற்றிய உங்களின் கண்ணோட்டம் பொருந்தும் இந்த context-ல் ?!

      தவிர அமெரிக்க வாழ்க்கை முறைகள் ஒழுக்கமற்றவை என்பதோ ; நம்மவை கறைகளற்றவை போன்ற sweeping statements-ம் நியாயமாகாது !

      Delete
  58. ஆசிரியர் அவர்களுக்கு,
    நான் சிறுவயது முதல் காமிக்ஸ் படித்து வருகிறேன். முதன்முதலில் படித்தது Archie Comics (சட்டித்தலையன் அல்ல Evergreen American teen), பிறகு நமது கூர்மண்டையர் என்னை ஆக்கரமித்தார். நடுவில் சிறிது காலம் Batmanஐ விரும்பினாலும், Bernard Prince, முதலை பட்டாளம், Blueberry etc.. அனைவரும் என்னை American Comicsஐ விட்டு துறத்தி விட்டனர்.
    என்னை பொறுத்தவரை, ஒவியமே முதலில் கவர்கிறது. பின்னர்தான் கதை..American Comicsகளில், உள்ள ஒவியங்கள் European Comicsல் உள்ள உயிர்ப்போடு எனக்கு தெரிவதில்லை. மேலும் அங்குள்ள எந்த கதையும் ஒரிரு இதழ்களோடு முடிவதில்லை. எனக்கு எந்த ஒரு கதைக்கும் ஒரு closure இருக்க வேண்டும்...அது XIII போல decades கடந்து கிடைத்தாலும் சரி. ஆனால் நான் அறிந்தவரை American Comicsல் முடிவுரை என்பதே கிடையாது. கதை மாந்தர்களும் Europen Comics வரும் down-to-earth ரக மனிதர்களே என்னை கவர்கிறார்கள். Costumes & Capesஐ கண்டாலே எனக்கு ஒரு allergy.
    நான் எந்த ஒரு சந்தாவும் கட்ட தயார்... ஆனால் கண்டிப்பாக X-Men, Spiderman..இத்தியாதிகளை தொடக்கூட மாட்டேன்

    ReplyDelete
    Replies
    1. AKK : //நான் எந்த ஒரு சந்தாவும் கட்ட தயார்... ஆனால் கண்டிப்பாக X-Men, Spiderman..இத்தியாதிகளை தொடக்கூட மாட்டேன்//

      நம் முயற்சிகளுக்குத் தொடர் ஆதரவு உண்டு என்று உணர்த்தியமைக்கு நன்றிகள் ; அதே சமயம் - நாம் கல்லா கட்டுவது மாத்திரமே ஒரு இதழின் nett result ஆக இருப்பின் அதனில் நிச்சயமாய் எங்கள் மனங்கள் லயிக்காது என்பது உறுதி ! உங்கள் ரசனைகளும் மகிழ்ந்து, அதனில் நமக்கு வண்டி ஓடினால் அதுவே நிஜமான திருப்தி தரும் !

      Delete
  59. சார் அடுத்த மாதம் களை கட்ட போவது உறுதி !
    நமது பால்ய நாயகர்களுடன் மின்னும் மரணமுமா ஆஹா தூக்கம் போச்சே !

    ReplyDelete
    Replies
    1. சுஸ்கி நிச்சயம் வேண்டும் !
      ஸ்பைடர் மேன் போன்றவை வந்த பிறகே அனுமானிக்க முடியும் என்றாலும் வித்தியாசமான கதைகள் வந்தால் சூப்பர் !

      Delete
  60. Sunday comics - 14 Dec 14 !

    [3] டியர் விஜயன் சார்,

    // X-Men ; Fantastic Four ; Spiderman ; Daredevil என்ற பெயர்களே அந்தப் பட்டியலில் முன்னணியில் நின்றன ! அவையனைத்தும் அங்கே சக்கைபோடு போடும் தொடர்கள் ; ஆனால் நாம் இந்த சூப்பரோ-சூப்பர் ஹீரோக்களை ; அந்த எதிர்காலத்துக் கதை பாணிகளை ஏற்றுக் கொள்ளுவோமா ? என்பது million bucks கேள்வியாகவே நிற்கின்றது//

    நம் வாசகர்கள் ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் இரண்டாம் பட்சமாக வைத்து கொண்டு பார்த்தோமானால், தற்போது தங்கள் கைவசம் உள்ள தொடர்கள் 'ஏராளம், ஏராளம்' ! உதாரணமாக டெக்ஸ் வில்லரை தவிர்த்து, 1985 ல் தாங்கள் வெளியிட்ட லக்கி லூக் கதைகள் கூட இன்று காத்திருப்பில் உள்ளது. இதன் ஹாஸ்யம் குறைந்தக் காரணம், இந்த மிகப்பெரிய கால இடைவெளி என்பது மட்டுமே. எனவே தற்போது வெற்றிநடை நடை போடும் அனைத்து தொடர்களையும் எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக வெளியிட்டு முடித்து விட முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு நம் வாசகர்களும், புதிய genre நோக்கி பயணிக்க ஆரம்பித்து விடுவார்கள்..

    //கௌபாய் அல்லாத கதைகளுள் இன்றைய நமது டாப் ஸ்டார் லார்கோ தான் என்பதில் ஐயமே இராது ! ஒரு தொழில் அதிபரை இது போன்றதொரு ஆக்ஷன் template -க்குள் நுழைத்து வெற்றி காண கதாசிரியர் வான் ஹாம்மேவிற்கு எவ்விதம் சாத்தியமானதோ - அதுவும் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பாகவே (லார்கோ தொடர் துவங்கியது 1990-ல்)//

    சென்ற பதிவில் நண்பர் சுந்தரமூர்த்தி அவர்கள் எழுப்பிய கேள்விக்கு விடையாகக் கூட, இந்த வரிகளை எடுத்துக் கொள்ளலாம். 1990+ நடைமுறையில் இருந்த காலகட்டத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட ஒரு கதைத் தொடர், 2014 ல் சில வாசகர்களிடையே ''ஏன், ஏன், அது ஏன் ? என்ற கேள்வியை எழுப்புவதில் நிச்சயம் ஆச்சரியம் இருக்கப் போவதில்லை. அதுபோலத்தான் அன்றைய ஹாஸ்யம் நிறைந்த லக்கி லூக், இன்று கொஞ்சமாக அலுப்புத் தட்டுகிறது. எனவே இருக்கும் தொடர்களை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடித்து விட்டு, நீங்கள் எந்த genre கதை வெளியிட்டாலும் அது சக்கைப்போடு போடும் என்பது என் அபிப்ராயம் !

    அதற்கு சமீபத்திய உதாரணம், பௌன்சர் THE BOUNCER ! மொத்தம் ஒன்பது ஆல்பங்களே உள்ள இத்தொடரில், முதல் வருடமே 7 கதைகளை வெளியிட்டு அதகளம் செய்யப் போகிறீர்கள். 2016ல் மீதம் இரண்டும் முதல் மாதமே முடிந்துப் போனவுடன், யார் சொன்னாலும் சொல்லா விட்டாலும் நீங்கள் எங்களுக்கு புதியத் தொடரை அறிமுகப்படுத்தி தானே ஆக வேண்டும் ?! எனவே The Bouncer Style என்ற புதிய பாணியை நீங்கள் இனி கடைப்பிடிக்க வேண்டும் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள் !!

    ReplyDelete
    Replies
    1. அதற்கு சமீபத்திய உதாரணம், பௌன்சர் THE BOUNCER ! மொத்தம் ஒன்பது ஆல்பங்களே உள்ள இத்தொடரில், முதல் வருடமே 7 கதைகளை வெளியிட்டு அதகளம் செய்யப் போகிறீர்கள். 2016ல் மீதம் இரண்டும் முதல் மாதமே முடிந்துப் போனவுடன், யார் சொன்னாலும் சொல்லா விட்டாலும் நீங்கள் எங்களுக்கு புதியத் தொடரை அறிமுகப்படுத்தி தானே ஆக வேண்டும் ?! எனவே The Bouncer Style என்ற புதிய பாணியை நீங்கள் இனி கடைப்பிடிக்க வேண்டும் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள் !!
      +1
      Reply

      Delete
    2. ஏழு titles மூன்று ஆல்பம் என்றல்லவா நினைத்தேன்

      Delete
    3. //ஏழு titles மூன்று ஆல்பம் என்றல்லவா நினைத்தேன்//

      ஏழு ஆல்பங்கள், மூன்று புத்தகங்கள் !

      ''நான்... எனது... 2015..!'' என்ற பதிவை எழுதும் போது நானும், லார்கோ வின்ச் தொடரை, இவ்வாறே தவறாக நினைத்து பதிவிட்டு விட்டேன் :)

      Delete
    4. மிஸ்டர் மரமண்டை : //மொத்தம் ஒன்பது ஆல்பங்களே உள்ள BOUNCER தொடரில், முதல் வருடமே 7 கதைகளை வெளியிட்டு அதகளம் செய்யப் போகிறீர்கள்.//

      BOUNCER -ன் கதைக்களமும் வேறு ; அதனை நாம் வெளியிடும் சூழலும் வேறு ; எங்கள் தரப்பினில் அதற்குள்ள அவசியங்களும் வேறு ! So BOUNCER பாணி அத்தனை சமயங்களிலும், பிற தொடர்களுக்கும் சாத்தியமாகாது ! ஆண்டுக்கு 8 லக்கி லூக்கைப் போட்டேன் என்றால் அடுத்தாண்டே நண்பர்கள் சிதறி ஓடி விடுவார்கள் ஒல்லிப் பிச்சானைப் பார்க்க நேரிட்டால் !

      Bouncer is an one-off & எல்லாவற்றிற்கும் மேலாக அதற்கான வரவேற்போ ; விளக்குமாற்றுப் பூசைகளோ என்னவென்பதைப் பார்த்திடாமல் "பௌன்சர் ஸ்டைல்" பற்றிய சிலாகிப்பு நியாயமாகாது என்பதும் நினைவில் கொள்ள வேண்டியதொரு விஷயமன்றோ ?!

      Delete
    5. //Edit: விளக்குமாற்றுப் பூசைகளோ என்னவென்பதைப் பார்த்திடாமல் //

      :D :! :D :! :D :!

      Delete
  61. Sunday comics - 14 Dec 14 !

    [5] டியர் விஜயன் சார்,

    //உலகெங்கும் சராசரியாய் 2600 இதழ்களில் ; 120 நாடுகளில் குண்டுப் பூனை GARFIELD வெற்றிகரமாய் சுற்றித் திரிகிறது ! (நமக்கு மட்டும் இதனை ரசிக்க இயலாது போனது பெரும் மர்மமே !!) //

    ஒரு ஜாலியான விமர்சனம் :) மேலைநாட்டு மக்கள் தங்களின் pet animals களுடன் மட்டுமே உண்மையாக வாழ்கிறார்கள். தங்களுடைய உண்மையான அன்பையும், நேசத்தையும் - கணவன்,மனைவி, மகன், மகள் என குடும்பத்தில் காட்டுவதற்குப் பதிலாக நாய், பூனை, கார்ஃபீல்ட் ஆகியவற்றில் காட்டுகிறார்கள். எனவே 120 நாடுகளில் குண்டுப் பூனை GARFIELD வெற்றிகரமாய் சுற்றித் திரிவதில் எந்த ஆச்சரியமும் இல்லை சார்..

    ஆனால் நம் தேசத்திலோ, குழைந்தைக்குச் சோறு ஊட்டியப் பிறகு தான் , பூனைக்குப் பால் ; கணவன் சாப்பிட்டு எழுந்தப் பின்பு தான் நாய்க்குச் சோறு ; அம்மா என்று கட்டித் தழுவியப் பிறகு தான் மியாவ் பூனைகள் ; அப்பா என்று ஆசைத் தீர சத்தமாய் கத்திப் பேசியப் பின்பு தான் 'ஹாய் பப்பி' - அதனால் தான் அந்தக் குண்டுப் பூனையை பார்த்தாலே டென்ஷன் ஆகிறார்களோ என்னமோ :P

    ReplyDelete
    Replies
    1. //உலகெங்கும் சராசரியாய் 2600 இதழ்களில் ; 120 நாடுகளில் குண்டுப் பூனை GARFIELD வெற்றிகரமாய் சுற்றித் திரிகிறது !//
      120 நாடுகளில் சுற்றி திரியும் Garfield பூனையை எனக்கு பிடிக்கும் ......

      ஈரோடு ,சேலம் என சுற்றி திரியும் மற்றுமோர் பூனையை மிகவும் பிடிக்கும் ....:-)

      இதுவும் ஜாலியான பதில்தான் .....:)

      Delete
    2. +1-1

      டாம் & ஜெர்ரி போன்ற அட்வென்ச்சர் ரகங்கள் நம்மூரில் GARFIELD ஐ விட நல்ல வரவேற்பு பெறும். (So the problem is not only due to our reception of "cat")

      GARFIELD;ஐப்பொருத்தவரையில் 'வலுவான கதையில்லையே' என்ற உணர்வுதான் இப்போதுவரை எனக்கும்கூட தோன்றியது. Soft Life Style related கதைகள் நம்மூரில் எடுபடாது. மிஸ்டர் மரமண்டை கூறுவதுபோல பூனை வளர்ப்பு மற்றும் அதன் Behaviour'களை Watch பண்ணும், ரசிக்கும் Luxury'ல் நம்மூர் மக்கள் இல்லை என்பது கண்டுகொள்ளவேண்டிய காரணம்.

      தவிர தந்திரம் + அட்வென்ச்சர் செய்தால்தான் (Ex: காக்கை காளி, கபீஷ், பரட்டை) விலங்குகள்கூட இங்கே வரவேற்பு பெறும் எனத் தோன்றுகிறது :D

      // ஒரு ஜாலியான விமர்சனம் //
      // குழைந்தைக்குச் சோறு ஊட்டியப் பிறகு தான் , பூனைக்குப் பால் //
      ம்க்கும்.. ஆனால் மீன் செய்யும் நாளில் மட்டும் பூனையை முதலில் கவனிக்காவிட்டால் வீட்ல யாரையும் சாப்பிட விடாது... இப்படி பல கடுப்புகளை பூனையினம் நம்மூரில் உண்டுபண்ணினால் GARFIELD'ஐ யார்தான் ரசிப்பார்கள்? :P

      Delete
    3. //ஈரோடு ,சேலம் என சுற்றி திரியும் மற்றுமோர் பூனையை மிகவும் பிடிக்கும் ....:-) ///

      :)

      Delete
  62. டியர் விஜயன் சார்,

    //என் கேள்வி - why does the american genre of comics seem so alien to us ?//
    Simple... இதில் ஆச்சரியப் பட ஏதும் இல்லை... அமெரிக்க காமிக்ஸ்கள் இங்கு பரவலாக (தமிழில்) வெளியாகாததே காரணம் ("தமிழ் கோதம்" காமிக்ஸை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது!) நான் சமீப காலமாகத் தான் அமெரிக்கக் கதைகளைப் படித்து வருகிறேன்... ஐரோப்பிய காமிக்ஸ்கள் படித்து வளர்ந்த எனக்கு, இவையும் பிடித்தே தான் இருக்கிறது! (பேட்மேன், திகிலில் வெளியான போதும் பிடித்தே தான் இருந்தது).

    அதற்காக எல்லா பேட்மேன் கதைகளும் எல்லோருக்கும் பிடிக்கும் என்றில்லை. Reader Level 1 என்ற முத்திரையுடன் நர்சரி குழந்தைகளுக்கான "பெரிய எழுத்து, எளிய வசனம்" கொண்ட புத்தகங்களில் துவங்கி, சிறாரைக் கவரும் 'சிம்பிள்' கதைகளும்; 16+ ஐக் குறிவைக்கும் மசாலா (கா)மிக்ஸ்களும்; பல முறை படித்தாலும் பிடிபடாத "காவியங்களும்"; பழைய கதைகளின் "குண்டு தொகுப்பு"-களாக Classic பிரியர்களை திருப்தி படுத்தும் விதத்திலும் - ரக வாரியாக பேட்மேன் வெளிவந்து கொண்டிருக்கிறார்! "அவரவர் ரசனைக்கேற்ற பேட்மேனை" தேர்ந்தெடுத்துப் படிப்பது, இன்றைய இணைய யுகத்தில் அப்படி ஒன்றும் கடினமான காரியம் இல்லை!

    மேற்சொன்ன உதாரணம் பேட்மேனுக்கு மட்டுமல்ல, மற்ற சூப்பர் ஹீரோ / அமெரிக்க காமிக்ஸ்களுக்கும் பொருந்தும்! நேற்று "Superman: Earth One" படித்துக் கொண்டிருந்தேன்... கிளார்க் கென்ட் சூப்பர்மேனாக எப்படி (மனதளவில்) தயாராகிறார் என்பதை, புதிய தலைமுறை வாசகர்களுக்காக, காலத்திற்கேற்ற மாற்றங்களுடன், அசத்தலான ஓவியங்கள் + அட்டகாசமான வசனங்கள் கைகோர்க்க - சுவாரசியமாகச் சொல்லி இருக்கிறார்கள்!

    // (மேஜர் சுந்தர்ராஜன் பாணியில்) - அமெரிக்கக் காமிக்ஸ் ரசனைகள் நமக்கு ரொம்பவே தூரத்து ரசனைகளாய்த் தெரிவதன் காரணம் தான் என்னவாக இருக்கும் ?//
    அதாவது அவை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று சொல்ல வருகிறீர்களா?! :)

    ReplyDelete
    Replies
    1. Karthik Somalinga : 3 முரட்டுப் பெட்டிகள் நிறைய BATMAN சாம்பிள்கள் நமக்கு DHL -ல் வந்தன ; கணிசமானதொரு கட்டண வெடியை DC-க்கு வைத்து விட்டு ! என் வீட்டில் திரும்பிய திசையெல்லாம் கடந்த 2 மாதங்களாய் சிதறிக் கிடப்பவை இவையே என்பதால் ஜூனியரும், நானும் அதற்குள்ளே தான் முங்கு நீச்சல் அடித்து வருகிறோம் !

      சிக்கல் எழுவதெல்லாம் கட்டணங்களில் ....! பற்றாக்குறைக்கு அமெரிக்க டாலரும் ஒரு முடிவோடு தினமும் உச்சாணிகளைத் தேடித் தேடித் பறப்பது வயிற்றில் புளியைக் காரசாரமாய்க் கரைத்து வருகிறது ! எனினும் திருவாளர் வௌவால் தமிழ் பேசும் நாள் நிச்சயமாய் தூரத்தில் இராது ! (மேஜர் சுந்தர்ராஜன் பாணியில்) - the day or the night won't be too far away !

      Delete
    2. அய்யய்யோ... இந்த இன்ப அதிர்ச்சியில் இதயம் நின்றுவிடும் போலுள்ளதே! என்னுடைய மோஸ்ட் ஃபேவரிட் மறுபடி தமிழ் பேசப்போறாரா? ஆ...வ்...

      Delete
    3. Podiyan :Miles to go...miles & miles !

      Delete
    4. @ Karthik Somalinga: // ஐரோப்பிய காமிக்ஸ்கள் படித்து வளர்ந்த எனக்கு, இவையும் பிடித்தே தான் இருக்கிறது! //

      இத ஒத்துக்க முடியாது.. கார்த்திக்குக்கு பிடிக்காத காமிக்ஸ் தொடர்கள் (என்று ஏதாவது இருந்தால்) முதலில் அதை லிஸ்ட் போடவும், அப்பதான் நம்பமுடியும்! :P

      Delete
    5. @Ramesh Kumar:
      //கார்த்திக்குக்கு பிடிக்காத காமிக்ஸ் தொடர்கள் (என்று ஏதாவது இருந்தால்) முதலில் அதை லிஸ்ட் போடவும்//

      உங்களுக்கான பதில், என் முந்தைய பின்னூட்டத்தின் 2ம் பத்தியில் உள்ளது! கடைசி பத்தியில் நான் கேட்ட கேள்விக்கு, ஆசிரியர் நேரடி பதில் தரவில்லை என்றாலும், அவருக்கும் அமெரிக்கக் காமிக்ஸ்கள் பிடித்தே தான் இருக்கின்றன, ஆனால் அவற்றின் ராயல்டி தொகை தான் பிடிக்கவில்லை என்பதை ஓரளவுக்கு கணிக்க முடிகிறது! இருந்தாலும், கூடிய விரைவில் ஓரிரு தொடர்களை (Road to Perdition, Batman) வெளியிடும் எண்ணத்தில் இருக்கிறார் என்பதும் தெரிகிறது!

      அப்படி இருக்கையில், "அமெரிக்க காமிக்ஸ் எல்லாம் நம்மவர்கள் ரசனைக்கு ரொம்ப தூரம்" என்பது போன்ற பொதுவான ஸ்டேட்மென்ட்களால் - கிராஃபிக் நாவல் அலெர்ஜி லிஸ்டில், அமெரிக்க காமிக்ஸ்களும் இணைந்து விடக் கூடாது என்பதே என் பின்னூட்டத்தின் உள்நோக்கம், வெளிநோக்கம் எல்லாம்!!! :P

      //அப்பதான் நம்பமுடியும்! :P//
      இது சீரியஸ் பதில் இல்லை என்பதை ":P" மூலம் உணர்த்தி இருக்கிறேன்! இதையாவது நம்புறீங்களா?! ;)

      @எடிட்டர்:
      //திருவாளர் வௌவால் தமிழ் பேசும் நாள் நிச்சயமாய் தூரத்தில் இராது//
      வௌவ், சூப்பர்! ! :)

      //3 முரட்டுப் பெட்டிகள் நிறைய BATMAN சாம்பிள்கள் - என் வீட்டில் திரும்பிய திசையெல்லாம் கடந்த 2 மாதங்களாய் சிதறிக் கிடப்பவை இவையே//
      படித்து முடித்ததும் சொல்லுங்கள்... அங்கே சிதறிக் கிடப்பவற்றை, இங்கே சீராக அடுக்கி வைத்துக் கொள்ள நான் ரெடி! :D

      பி.கு: அவற்றில் Venom இருந்தால் படித்துப் பாருங்களேன்? கழுகு மலைக் கோட்டையை 'லேசாக' நினைவு படுத்தியது... இங்கே சூப்பர் ஹிட் அடிக்கக் கூடும்!

      @மேற்கிலிருந்து ம. ராஜவேல்:
      The Day (f)or the (K)night...!?
      Nice! :)

      Delete
    6. // கிராஃபிக் நாவல் அலெர்ஜி லிஸ்டில், அமெரிக்க காமிக்ஸ்களும் இணைந்து விடக் கூடாது என்பதே என் பின்னூட்டத்தின் உள்நோக்கம், வெளிநோக்கம் எல்லாம்!!! //

      நல்நோக்கம்!

      Delete
    7. // கிராஃபிக் நாவல் அலெர்ஜி லிஸ்டில், அமெரிக்க காமிக்ஸ்களும் இணைந்து விடக் கூடாது என்பதே என் பின்னூட்டத்தின் உள்நோக்கம், வெளிநோக்கம் எல்லாம்!!! //

      +1

      Delete
  63. டியர் எடிட்டர்,

    டேர்டெவில் மற்றும் ஸ்பைடர்மேன் - முதல் இரு வருடத்திய தொகுப்புக்கள் (அறுபது எழுபதுகளில் வெளிவந்தவை) - இப்போது OMNIBUS தொகுப்புக்களாய் கிடைக்கிறது - black and white. படித்துப் பாருங்களேன். அந்த ஹீரோக்களின் personality formation அமர்க்களமாய்க் கையாண்டிருப்பார்கள் - அந்த காலத்திலேயே.

    Comic Lover

    ReplyDelete
    Replies
    1. Raghavan : நிச்சயம் படித்துப் பார்ப்பேன் ! நம்மவர்களை கொஞ்சம் கொஞ்சமாய்த் தான் அசைத்தாக வேண்டுமெனும் போது சிறுகச் சிறுக முயற்சிகளைத் துவக்க வேண்டியது தான் !

      Delete
  64. டியர் எடிட்டர் சர்ர்,
    அமெரிக்க பதிப்பகத்தின் x-Men, spider-Men, He-man, Iron-man என சூப்பர் டூப்பர் ஹீரோ எல்லரம் மொழிபெயர்க்கும் றைச்ட் எல்லரம் கட்டரவிடரல் பரவரயில்லை." Batman" மொழிபெயர்பெயர்ப்பு உரிமை உங்களிடம்தரனே உள்ளது. மறுபதிப்பு எனும் பெயரிலோ? இல்லை வேறு பெயரிலோ வெளியிட முடியுமா சர்ர்?

    தங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
  65. டியர் எடிட்டர் சர்ர்,
    8 வெளீயீடுகள் என்றரல் கஷ்டம்தரன். "மின்னும் மரணம்" தொடங்கி விட்டீர்கள் என்றரல் எமக்கு குதூகலம்தரன் சர்ர்.
    ஆனரல்பரவம் நீங்களும் உங்கள் ரீமும்தரன் பரவம்.
    "என் பெயர் லர்ர்கோ" கண்டிப்பரக உண்டுதரனே சர்ர்?
    தங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
    Replies
    1. திருச்செல்வம் பிரபரனந் : என் பெயர் லார்கோவும், DOUBLE THRILL SPECIAL -ம் நிச்சயம் உண்டு ; பாக்கி 2 பிப்ரவரிக்கு !

      Delete
    2. டியர் எடிட்டர் சர்ர்,
      உங்கள் அறிவிப்பு என்னை மருத்துவமனை என்றும் பர்ரரமல் கட்டிலில் இருந்து துள்ளி கூத்தரட வைத்து விட்டது. " சுஸ்கி-விஸ்கி" கட்டாயம் வெளியிடுங்கள் சர்ர்.We are waiting.
      //எனினும் திருவாளர் வௌவால் தமிழ் பேசும் நாள் நிச்சயமாய்
      தூரத்தில் இராது //
      பிந்தி வந்தாலும் , இவ்வறிப்பு என்கரதில் தேன் பரய்தது போல்உள்ளது .//4 முரட்டு பெட்டி நிறைய Batman samplesகளை DC கரமிக்ஸ் அனுப்பி உள்ளது. நரனும் யூனியர் எடிட்டரும் அதை படித்து வருகிறோம்//
      அமெரிக்க கரமிக்ஸ் "ர்ரயல்ரி" அதிகம் இருக்கும் என்பதோடு, சித்திரங்கள் கதை இல்லரமலிருக்கும் வரய்புள்ளது. ஆனரல் " பிர்ரங்கொ-பெல்ஸிய இதழில் கதைக்கு முக்கியம் தரப்படுவதுடன், முடிவும் இருக்கும் சர்ர். அடுத்தது 4-5 சூப்பர் ஹீரோக்கள் சேர்ந்து கலக்கி வருவது வழக்கம். நரம் இப்போதுதான் மும்மூர்த்திகளின் கதைகளை மறுபதிப்பு செய்கிறோம் என்றரல் பர்ர்த்துக் கொள்ளுங்கள் சர்ர்.

      Delete
  66. Sir let us know other reprints of Jan 2015

    ReplyDelete
  67. வல்லவர்கள் வீழ்வதில்லை.:-

    டெக்ஸ் கதைவரிசையில் டாப் டென்னில் இடம்பிடிக்கும் அனைத்து தகுதிகளும் கொண்ட அட்டகாச காவியம்.
    ஹீரோ டெக்ஸ் குரூப்பாக இருந்தாலும் என்னை பொருத்தவரை இக்கதையின் உண்மையான ஹீரோ வேறு ஒருவர். தீவிர தேசபக்தி,. கொண்ட லட்சியத்தை அடைய எவ்வளவு ஆபத்தான பணியையும் அசால்ட்டாக ஏற்றுக் கொள்ளும் திடம், நட்பை மதிக்கும் நற்பண்பு, துரோகத்தால் வஞ்சிக்கப் படும்போது பரிதாபம் என கதை முழுக்க என் மனதை கொள்ளை கொண்ட. வ.வீழ்வதில்லையின் ரியல் ஹீரோ....................

    "ஷான் ஓ டான்னெல்."

    மிடுக்கான தோற்றம்., எதிரிகளை பந்தாடும் லாவகம், துப்பாக்கியை கையாளும் வேகம்
    என ஷான் கதை நெடுக கலக்கி எடுக்கிறார். தன் லட்சியத்தில் கிட்டத்தட்ட வெற்றியடைய இருக்கும் தருணத்தில் துரோகத்தால் ஷான் வீழ்த்தப்படும் போது உண்மையிலேயே நெஞ்சு கனத்துவிட்டது.

    ReplyDelete
  68. வல்லவர்கள் வீழ்வதில்லை.:-
    அடுத்த இடம் அந்த பெண் டோலொரெஸ்..
    உளவு பார்ப்பதற்காக எதிரியிடம் தன்னையே அர்ணித்து தகவல் திரட்டி அடாஅடா லட்சிய மங்கை.இக்கதையில் என் மனதை பாதித்த இரண்டாவது பாத்திரம் டோலொரெஸ்.
    சரியான சமயத்தில் கார்ரோஸ்கோவை சுட்டு விட்டு "அந்தச் சொறிநாய் இனி எந்த மெக்ஸிகன் மங்கை மீதும் கை வைக்க மாட்டான் இல்லையா." என்று கேட்கும் போது, அவள் அவனிடம் எவ்வளவு வெறுப்புடன் உறவாடியிருப்பாள் என்று தெளிவாக புரிகிறது.
    கடமைக்காக தன்னையே அர்பணித்த டோலொரெஸ் காதலையும் காதலன் ஹட்சையும் கைப்பிடிக்கும்போது கைதட்ட தோன்றுகிறது.
    மங்கையரின் மனமறியும் மார்க்கம் மனிதருக்குண்டோ.!!!

    ReplyDelete
  69. வல்லவர்கள் வீழ்வதில்லை.:-
    ஐரிஷ் குழு.,
    பரிதாபத்திற்குரி ஜீவன்கள். அனைத்து திறமைகளும் இருந்தாலும் ஏதோ லட்சியத்தில் தொடங்கி.,யார்யாருக்காகவோ யார்யாருடனோ மோதி வாழ்நாள் முழுவதையும் போராட்டத்திலேயே தொலைத்து உயிர்விட்ட துரதிஷ்டஷாலிகள்.(இதில் ஹட்ச் மட்டும் விதிவிலக்கு.)
    டெக்ஸ் வழக்கம்போல் அதகளப்படுத்துகிறார். கார்சன் நக்கல் வசனங்களாலும் தோட்டா இசையாலும் நம்மை கவர்ந்திருக்கிறார். டைகர் கிட்.,நவஜோ டைகர்., பாக்ஸர் பாட்,கோழை மோரன் மற்றும் ஈசல் கூட்டம்போல் செத்து விழும் மெக்ஸிகன் சிப்பாய்கள் என நீண்ட நாட்களுக்கு நினைவைவிட்டு அகலாமல் இருக்கப் போகும் அற்புதமான காவியம் ....
    "வல்லவர்கள் வீழ்வதில்லை ''

    எடிட்டர் சார்,
    ச.அ.சமவெளி போன்ற சராசரி ஆக்சன் கதைகளோடு அவ்வபோது இதுபோன்ற அழுத்தமான ஆழமான கதையம்சம் கொண்ட டெக்ஸ் காவியங்களையும் வெளியிடுவதற்க்கு நன்றி சார்.!!

    ReplyDelete
    Replies
    1. நன்றியெல்லாம் தேவையா - என்ன நண்பரே ?

      ஒரு அமர கதாப்பாத்திரத்தின் சகலப் பரிமாணங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டியது எங்கள் கடமையாகாதா ?

      Delete
    2. @ ரவிக்கண்ணன்

      'வல்லவர்கள் வீழ்வதில்லை' விமர்சனம் அருமை! அனுபவித்துப் படித்திருக்கிறீர்கள். உங்கள் ரசணை வாழ்க!

      Delete
  70. டியர் எடிட்டர் சர்ர்,
    ஐரோப்பிய ஓவியர் போட்ட பென்சில் ஸ்கெச் அழகரக உள்ளது. நண்பர் "பொடியன்" கூறியது போல் மறுபதிப்பு அட்டைப்படம் என்று நரன் நினைக்கவில்லை. பின்ணணியை அடிக்கடி பர்ர்க்கின்றதரல் இம்மிபிசகரமல் வரையக்கூடியதரக உள்ளத போலும்.
    தங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
  71. டியர் சர்ர்,
    சைரனுடன் கூடிய போலீஸ்கர்ர் சரன்ஸே இல்லை போங்கள். ஒரு ஐரோப்பிய ஓவியர்ரல் மட்டுமே இப்படி முடியும் என்பது என் தரழ்மையரன கருத்து.
    தங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
  72. வல்லவர்கள் வீழ்வதில்லை..!

    இப்படி ஒரு டெக்ஸ் வில்லர் கதையை எதிர்பார்க்கவில்லை.. பரிட்சைக்கப் படிப்பது போல ஆரம்பத்திலிருந்தே கவனமாகப் படித்தால்தால்தான் பின்பகுதி புரியும் என்ற பயம் 110 பக்கங்களைத் தொடும்போதே வந்து -- இப்போதைக்கு வேண்டாம் என மூடி வைக்க வைத்துவிட்டது...

    க்ராபிக் நாவல்களுக்கு நிறைய கவனம் கொடுத்து படிப்பதனால் கொஞ்சம் ரிலாக்ஸேஸனுக்கு டெக்ஸை படிக்கலாம் என நினைத்தால் இந்தக்குறிப்பிட்ட கதையை மட்டும் நாடமுடியாது போலும்! (ஆனாலும் சித்திரங்களின் Clarity எளிதில் மூடிவைக்க விடமாட்டேன்கிறது)

    ReplyDelete
    Replies
    1. +1.... i have already joined this club !!

      Stopped reading .....இது வரை வந்த டெக்ஸ் கதைகளில் "sui generis "என தயங்காமல். சொல்லி விடலாம் ......

      Delete
  73. காலை வணக்கங்கள் நண்பர்களே,
    இன்றைய வரலாறு செய்தியில்,உலககையே நடுநடுங்கவைத்த ஹிட்லரின் வெறியாட்டம்... பார்க்க.....
    இங்கே'கிளிக்'

    ReplyDelete
  74. // X-Men ; Fantastic Four ; Spiderman ; Daredevil என்ற பெயர்களே அந்தப் பட்டியலில் முன்னணியில் நின்றன ! அவையனைத்தும் அங்கே சக்கைபோடு போடும் தொடர்கள் ; // மார்வெல் ஹீரோக்கள் தமிழ் பேச முடிந்தால் பெருமையே! ஐ லவ் சுப்பர் ஹீரோஸ்! (ஆனால் பர்ஸ் விஷயம் தான் உதைக்கின்றது?!! )

    // எனினும் திருவாளர் வௌவால் தமிழ் பேசும் நாள் நிச்சயமாய் தூரத்தில் இராது // என் வார்த்தைகளையே நண்பர் Podiyan சொல்லி விட்டார்!
    // அய்யய்யோ... இந்த இன்ப அதிர்ச்சியில் இதயம் நின்றுவிடும் போலுள்ளதே! என்னுடைய மோஸ்ட் ஃபேவரிட் மறுபடி தமிழ் பேசப்போறாரா? ஆ...வ்...//

    ReplyDelete
  75. ஹையா.........பேட் மேன்....வரார்.....

    விஸ்கி &சுஸ்கி .....வர்றாங்க.......

    சூப்பர் சார் ....சந்தோசத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை ...

    இந்த வருடமே வந்தாலும் சந்தா -க்கு நாங்கள் ரெடி சார் ......

    ReplyDelete
  76. காண வில்லை .......

    அவர் ....

    ஈரோடு....சேலம் .....பகுதியில் காணப்படுவார்...

    பார்பவர்களை சில சமயம் "கிர் ..கிர் .." என பிராண்டுவார் .....

    இங்கே கிளிக் - என்று திடீர் என உங்கள் முன் குதிப்பார் ....


    போராட்ட குழுவின் "செயலாளர் " அவர் ......

    கண்டு பிடிபவர்களுக்கு அவர் கையாலயே "பரிசு " அளிப்பார் .....

    ReplyDelete
    Replies
    1. தலீவரே,

      தொலைதொடர்புத் துறை தன் சேவையை விரிவுபடுத்த அவசியப்படாத வனாந்திரப் பகுதியில் நண்பர்களுடன் கடந்த இரண்டு நாட்களாய் சுற்றியலைந்து கொண்டிருந்ததால் இங்கே எட்டிப்பார்க்க முடியவில்லை!

      //இங்கே கிளிக் - என்று திடீர் என உங்கள் முன் குதிப்பார் ....///

      நீங்கள் குறிப்பிடும் 'இங்கே கிளிக்' பார்ட்டி வேதாள மாயாத்மா! ;)

      அப்புறம்... CBFன் போது நீங்கள் எடிட்டரின் ககைகளில் தரயிருக்கும் அந்த 48 பக்க கோரிக்கைமனு தயார் தானே தலீவரே?

      Delete
  77. எடிட்டர் சார்,

    இம்முறை உங்களுடைய பதிவு ஏற்படுத்திய உற்சாகத்தைவிட, நண்பர்களின் கேள்விக்கு நீங்கள் அளித்துள்ள 'பேட்மேன் மீண்டும் விரைவில் தமிழ்பேச இருக்கிறார்', 'மின்னும் மரணம்- குறித்த காலத்திற்கு முன்பே வெளியாகும்' போன்ற பதில்களே பெரும் உற்சாகமளிக்கின்றன.
    'மி.ம'வைப் பொருத்தவரை, அது களம் கண்டிட ஏற்ற இடம் 'ஜ௬னவரி CBF' மட்டுமே! இதை நீங்கள் அறியாவரல்ல எனினும், பாழாய்போன மனதின் பதைபதைப்பை இங்கே (மீண்டும்) பகிரங்கப்படுத்துதில் தவறொன்றுமில்லைதானே! முன்பொரு சமயம் " டிசம்பருக்குள் மி.ம முன்பதிவு எண்ணிக்கை 430ஐத் தொட்டுவிட்டால் தலைகீழாக நின்றேனும் ஜனவரி புத்தகத் திருவிழாவில் மி.ம-ஐ உங்கள் கைகளில் தவழச் செய்திடுவேன். இது சத்தியம்' என்று நீங்கள் உறுதியளித்ததை இப்போது நினைவுகூர்கிறேன்! (பொய்மையும் வாய்மையிடத்த... ஹிஹி!).

    ReplyDelete
    Replies
    1. எப்போதும் சர்ப்ரைஸ் தருவது தானே ஆசிரியர் வழக்கம் விஜய் . அப்புறம் மாற்றம் ஒன்றே மாறாதது . நீங்கள் முன்பே சொன்னதை தக்க சமயத்தில் விஜய் நினைவு படுத்தி உள்ளார் சார் . (நாராயண நாராயண.....)

      Delete

    2. //டிசம்பருக்குள் மி.ம முன்பதிவு எண்ணிக்கை 430ஐத் தொட்டுவிட்டால் தலைகீழாக நின்றேனும் ஜனவரி புத்தகத் திருவிழாவில் மி.ம-ஐ உங்கள் கைகளில் தவழச் செய்திடுவேன். இது சத்தியம்' என்று நீங்கள் உறுதியளித்ததை இப்போது நினைவுகூர்கிறேன்////பொய்மையும் வாய்மையிடத்த... //

      +1 :D

      Delete
    3. @விஜய்.
      //டிசம்பருக்குள் மி.ம முன்பதிவு எண்ணிக்கை 430ஐத் தொட்டுவிட்டால் //

      எடிட்டர் நவம்பருக்குள் என்று சொன்னதாக ஞாபகம்.

      பரவாயில்லை டைகரின் மின்னும் "மரணம் " ஜனவரியிலேயே ஏற்ப்பட்டாலும் நல்லதுதானே.! ஹீஹீஹீ.!

      Delete
    4. //(பொய்மையும் வாய்மையிடத்த... ஹிஹி!).//

      ஓவ்.! சாரி நான் இதை சரியா கவனிக்கலே.!!!

      Delete
  78. "மின்னும் மரணம்" தலைவர் மரதிரி. "லேட்டர வந்தாலும் லேட்டஸ்டர" வரும் போலும். " விடுங்க சர்ர். வருவதே பெரிய விசயம். ஆசிரியருக்கு என்ன நடைமுறை சிக்கலோ? ஆனரல் tex விஐயர்ரகவன் சொன்ன மரதிரி ஆசிரியர் இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் .
    தங்கள் உண்மையுள்ள
    திருச்செல்வம் பிரபரனந்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக மின்னும் மரணம் ஜனவரியில் வருகிறது திருச்செல்வம் சார் . X111டாலர் பந்தயம் டைகர் மேல் . (தலை மன்னிப்பாராக )

      Delete