நண்பர்களே,
வணக்கம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ரிலீஸ் ஆகும் புதுத் திரைப்படங்களின் பின்னணியில் இருப்பவர்களுக்கு அந்த முதல் ஒன்றிரண்டு நாட்களின் படபடப்பு எவ்விதமிருக்குமோ நானறியேன் -ஆனால் ஒவ்வொரு மாதத்து முதல் வாரத்திலும் நமது புது இதழ்கள் உங்களை வந்து சேரும் நாட்களில் எனது விரல்களை நான் தீர்க்கமாகவே cross செய்து வைத்திருப்பேன் ! ஒரு திரைப்படத்தை உருவாக்கும் அசுரப் பிரயத்தனத்தின் முன்னே நாம் செய்யும் தயாரிப்பு வேலைகள் வெறும் ஜூஜூபி தான் என்றாலும், நம்மளவிற்கு நம் டென்ஷன் ! அதிலும் இந்த டிசம்பரில் எனக்கு 'டென்ஷன் மீட்டர்' சற்றே ஜாஸ்தியாகிட காரணங்கள் நிறையவே இருந்தன !
இந்தாண்டின் இதுவரையிலான அத்தனை வெளியீடுகளின் இறுதிப் பணிகள் நடந்தேறும் வேளைகளிலும், டெஸ்பாட்ச் சமயங்களிலும் எனது இதர வேலைகளை ஓரம்கட்டி வைத்து விட்டு முழு மூச்சாய் காமிக்ஸ் வேலைகளுக்குள் தலைநுழைத்திட ஒருவித luxury கிட்டியிருந்தது ! ஆனால் கடந்த வாரம் எழுந்ததொரு அவசர வேலையால் சட்டிபெட்டிகளைத் தூக்கிக் கொண்டு செவ்வாய்க்கிழமை காலை அமெரிக்கா செல்லவேண்டியதொரு அவசியம் ! So நான் இல்லாமலே நம்மவர்கள் தாக்குப் பிடித்தாக வேண்டிய கட்டாயம் இம்முறை ! KING SPECIAL & "வானமே எங்கள் வீதி" இதழ்களின் அச்சுப் பணிகளை ஒரு வாரத்துக்கு முன்பாகவே முடித்திருந்தோம் என்பதால் மேஜிக் விண்ட் துவக்கப் பக்கங்கள் அச்சாவதை மட்டும் பார்த்து விட்டு நான் கிளம்பி விட்டேன் ! சென்னை வந்து சேர்ந்த சற்றைக்கெல்லாம் போன் ஒன்று தொடர்ந்தது - நமது பிரிண்டர் குமார் அச்சு இயந்திரத்திலிருந்து கீழே இறங்கும் சமயம் கால் பிசகி விழுந்து விட்டதாகவும், வலது கால் மூட்டில் ஒரு hairline fracture ஏற்பட்டுள்ளது என்றும் ! சமீப மாதங்களில் நமது அச்சுப் பிரிவின் தலைமைப் பொறுப்பை மேற்கொண்டிருக்கும் திறமைசாலி அவர் ! வலியில் தவித்த மனுஷனை மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று மாவுக் கட்டுப் போட்டு விட்டு, வீட்டில் கொண்டு சேர்த்து வர ஏற்பாடுகள் செய்தான பின்னர் தான் மேஜிக் விண்டின் இறுதி 16 பக்கங்கள் அச்சாக பாக்கி நிற்பது நினைவுக்கு வந்தது ! அவசரமாய் நமது மற்றொரு ப்ரிண்டரைக் கொண்டு வேலைகளை முடித்து பைண்டிங்குக்கு செல்ல முடிந்த போதே புதன் மாலையாகிப் போயிருந்தது ! 'வியாழன் காலையில் பிரதிகளை அனுப்பி விடுவோம் !' என்று நான் சென்ற பதிவில் கித்தாய்ப்பாய் சொல்லியிருந்ததால் - வழக்கம் போல் பைண்டிங் செய்து தரும் நண்பரின் அலுவலகத்தில் முற்றுகை போட்டு விட்டனர் நம்மாட்கள் ! இன்னொரு பக்கம் - 'இம்மாதம் முதல் புக்ஸ் அனைத்துமே அட்டைபெட்டியில் தான் !'என்று பந்தாவாய் அறிவித்திருந்தேன் ; ஆனால் பெட்டி செய்து தருபவர்களோ ஆண்டின் இறுதி மாதத்து rush-ல் நம் வேளைகளில் சுணக்கம் காட்ட, அதிலும் ஒரு தலைநோவு ! இங்குள்ளவர்களின் குடலை போனிலேயே உருவிடுவதைத் தாண்டி என்னால் அமெரிக்காவிலிருந்து செய்யக் கூடியது அதிகமிருக்கவில்லை என்பதால் வியாழன் மாலை "டெஸ்பாட்ச் முடித்து விட்டோம் !" என்று சேதி கிடைக்கும் வரை எனக்கு தூக்கம் பிடிக்கவில்லை அங்கே !
தயாரிப்பின் பல்டிகள் ஒருபக்கமிருக்க, இம்மாதத்து 3 கதைகளுக்கும் உங்களின் response எவ்விதமிருக்குமோ என்று என்னால் கணிக்க முடிந்திருக்கவுமில்லை ! TEX கதையைப் பொறுத்த வரை ஜாஸ்தி சிக்கலில்லை தான் ; மாறுபட்ட கதைக்களமாக இருப்பினும், 'தல' கரை சேர்த்திடுவார் என்பதில் எனக்கு ஐயமிருக்கவில்லை ! ஆனால் மற்ற இரு இதழ்களிலுமே எனக்கு அவ்வித உறுதி இருக்கவில்லை என்பது தான் நிஜம் ! In fact - - லார்கோவையும் ; ஷெல்டனையும் ரசிக்கும் நமது தற்போதைய ரசனைகளின் மத்தியில் "உயரே ஒரு ஒற்றைக் கழுகு" போன்றதொரு சிந்துபாத் பாணிக் கதைக்கு அர்ச்சனை கிட்டுமோ என்ற பயம் எனக்குள் நிறையவே இருந்தது ! செவ்விந்தியர்களை வெறும் கொலு பொம்மைகளாய் கொண்டிராமல் அவர்களது வாழ்க்கை முறைகளைக் கொஞ்சமாய் தரிசிக்க வாய்ப்புத் தரும் இந்தக் கதையில் நீங்கள் 'லாஜிக்' தேடினால் நான் அம்பேல் என்பது நிதர்சனம் ! ஆனால் கொஞ்ச நேரத்துக்கு லாஜிக் எனும் மூட்டைகளை இறக்கி வைத்து விட்டு அந்த மாந்த்ரீக உலகில் உலவிடும் அனுபவத்தை நீங்கள் வெகுவாய் ரசித்திருப்பதை உங்களின் initial reactions பறைசாற்றுவதை சந்தோஷத்துடன் கவனித்தேன் ! பத்தே நிமிடங்களில் படித்து முடிக்கக் கூடிய இந்தக் கதையில் மேலோட்டமாய் விட்டலாச்சார்யா சமாச்சாரங்களே மிகுந்து தெரிந்தாலும் - மாறுபட்ட பல மனித உணர்வுகளுக்கும் இடமிருப்பது அப்பட்டம் ! 'இது தான் களம் !' என்று நமக்கு நாமே ஒரு வரையறை போட்டுக் கொள்ளாது - கழுகின் கம்பீரப் பறக்கும் ஆற்றலைப் போலவே நமது காமிக்ஸ் வாசிப்புக் களங்களை விசாலமாக்கிக் கொள்ள இது போன்ற கதைகள் உதவும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை !
'வானமே எங்கள் வீதி' யைப் பொறுத்த வரை - அழுகாச்சியில்லா ஒரு அழகான கிராபிக் நாவல் என்ற போதிலும், சிறுவர்களை மையமாய்க் கொண்டு நகரும் அந்த வித்தியாசமான கதைக்கும் ; 'தொடரும்' என்ற tagline -க்கும் உங்களின் reactions எங்ஙனம் இருக்குமென்று யூகிக்க எனக்கு முடியவில்லை ! அதிலும் கிராபிக் நாவல்களைப் பற்றி வெகு சமீபமாய் வந்திருந்த நண்பரின் கடிதமொன்று என்னை நிறையவே சிந்திக்கச் செய்திருந்தது ! சென்னையைச் சார்ந்த இந்நண்பர் நமது தீவிர ரசிகர் ; ஒவ்வொரு மாதமும் தவறாது தன் எண்ணங்களைக் கடிதங்களில் நம்மோடு பரிமாறிக் கொள்பவர் ; சென்னைப் புத்தக விழாக்களின் போதும் ஆஜராபவர் ! இது அவரது கடிதத்தின் வரிக்கு வரியிலான நகல் அல்ல ; என் நினைவில் நின்ற சாராம்சம் மாத்திரமே :
'சமீபமாய் வந்த தேவ ரகசியம் தேடலுக்கல்ல ; இரவே.. இருளே.. கொல்லாதே ! போன்ற கிராபிக் நாவல்கள் பரவலாய் வரவேற்பு பெற்றிருப்பதை உணர்கிறேன் ! எல்லாத் தரப்பு வாசகர்களையும் திருப்தி செய்யும் கடமை உங்களுக்கு உள்ளது என்பது எனக்கும் புரிகிறது ; ஆனால் 7-77 வயது வரை அனைவருக்கும் காமிக்ஸ் எனும் போது - சுத்தமாய் புரியாத இது மாதிரியான கதைகளால் என் போன்ற வாசகர்களுக்கு என்ன பிரயோஜனம் இருக்க முடியும் ? இரவே..இருளே..கொல்லாதே கதையைப் படித்து விட்டு எனக்கு தலையும் புரியவில்லை ; வாலும் புரியவில்லை ! சரி..நண்பர்களிடம் கேட்டுப் புரிந்து கொள்வோம் என்று போன் அடித்துப் பார்த்தால் அவர்களில் முக்கால்வாசிப் பேருக்கும் கதையைச் சொல்லத் தெரியவில்லை ! 'புரியவில்லை' என்று சொன்னால் அது நன்றாகத் தோன்றாது என்பதால் நிறைய பேர் புரிந்தது மாதிரியே நடிக்கிறார்களோ என்று நினைக்கிறேன் ! ஏற்கனவே "சிப்பாயின் சுவடுகளில்" கதையின் விளக்கத்தை தேடி நான் நாக்குத் தொங்கிப் போனது நினைவில் உள்ளது ! ஆகையால் இது மாதிரிக் கதைகளை வெளியிடும் போதாவது - என் போன்ற வாசகர்களுக்காக கதைச் சுருக்கத்தை வெளியிடுங்களேன் ?! கதைச் சுருக்கத்தைப் போட்டால் படிக்கும் சுவாரஸ்யம் குறைந்து போய் விடுமோ என்று வாசகர்கள் சொல்வார்கள் என்றால் அந்த கதைச் சுருக்கத்தை மட்டும் கடைசிப் பக்கத்தில் தலைகீழாக அச்சிட்டு விடுங்கள் ; தேவைப்படுவோர் மட்டும் படித்துக் கொள்ளட்டும் ! '
தெற்கே, வடக்கே என்றெல்லாம் சுற்றி வளைக்காமல் மனதில் தோன்றியதை 'பளிச்' என நண்பர் எடுத்துரைத்த பாணி ரொம்பவே அழகு ! 'இது எனக்குப் பிடிக்கவில்லை!' என்று சொல்வதற்கும் - 'இது எனக்குப் புரியவில்லை !' என்று சொல்வதற்கும் உள்ள வேறுபாடு அவரது கடிதத்தில் தெளிவாய்ப் புரிந்தது ! கிராபிக் நாவல்களை விரும்பிடா நண்பர்களில் பெரும்பகுதியினரும் - ' டெக்ஸ் போதும் ; டைகர் போதும் ; லார்கோ போதும் ; எனக்கு எதுக்கு இந்த புது பாணிகள் ?' என்ற ரீதியிலேயே தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்திருந்த நிலையில் - ரசனை சார்ந்த விஷயங்களில் பொறுமை அவசியம் ; காலப்போக்கில் இது போன்ற வித்தியாசமான கதைகளையும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும் என்பதே எனது திடமான அபிப்ராயமாய் இருந்து வந்தது ! ஆனால் முதல்முறையாக - 'ஐயா..கதையே புரியவில்லை !' என்று நண்பரொருவர் கை தூக்கி இருக்கும் போது அதற்கு கவனம் தர வேண்டிய கடமை நமக்குண்டு நிச்சயமாய் ! அவரே சொல்லியிருக்கும் சுலபத் தீர்வை நடைமுறைக்குக் கொண்டு வர அதிக சிரமம் இராது தான் ; ஆனால் the bigger issue still remains to be addressed ! அனைவருக்கும் புரியும் சுலபமான வட்டத்துக்குள் வலம் வந்தால் போதும் தானா ? பரிசோதனைகள் ; வாசிப்புக் களங்களை விரிவாக்குதல் என்பதெல்லாம் அனைவருக்கும் ஏற்புடையதாய் கொண்டு செல்ல வழியேதும் உண்டா ? சிந்திக்க வேண்டிய விஷயங்கள் அல்லவோ இவை ? 2015-ஐப் பொறுத்த வரை யாருக்கும் இது போன்ற நெருடல்கள் நேர்ந்திட வாய்ப்பிராது ; தேர்வு செய்யப்பட்டுள்ள கிராபிக் நாவல்கள் ( 3 x BOUNCER + 2 x THORGAL ) மட்டுமன்றி புதுக் கதைகளான "விடுதலையே உன் விலையென்ன ?" ; "விண்ணில் ஒரு வேங்கை" ; "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா..!" என சகலமுமே ஆக்ஷன் அதகளங்கள் ! இங்கே மண்டையைப் பிய்த்துக் கொள்ள அவசியங்கள் இராது நிச்சயமாய் !
So இந்தப் பின்னணியில் இம்மாதம் ஒரு கிராபிக் நாவல் எனும் போது - உங்களின் அபிப்ராயங்கள் எப்போதையும் விட அதிக முக்கியத்துவம் பெற்றவைகளாகத் தோன்றுகின்றன ! 'ஐயோ..கிராபிக் நாவலா ?!' என்ற mindset -ல் இல்லாமல் சகஜமாய்ப் படித்துப் பார்த்து விட்டு - உங்கள் மனதில் தோன்றும் முதல் சிந்தனையைப் பகிர்ந்திடுங்களேன் - ப்ளீஸ்! 'விமர்சனம் செய்தாக வேண்டும் !' என்ற பார்வைகளை இரண்டாம் பட்சங்களாக்கிக் கொண்டு - உங்களின் initial reactions என்னவோ - அவற்றை பதிவிடுங்களேன் !
அமெரிக்காப் பயணம் என்றான பின்னே கொஞ்சமாவது அந்தப் புராணம் பாடாவிட்டால் தலை தான் வெடித்து விடுமே ?! இம்முறை எனக்குப் பணி இருந்தது கான்சாஸ் நகரில் ! டெக்சின் கதைகளிலும் ; டைகரின் சாகசங்களிலும் இது வரை வெறும் பெயர்களாய் இருந்து வந்துள்ள கான்சாஸ் ; டொபெகா ; மிசௌரி போன்றவற்றை நேரில் பார்க்கும் போது - 150 ஆண்டுகளுக்கு முன்பாய் நம் ஆதர்ஷ கௌபாய்கள் உலவிய பூமியல்லவா இது ? என்ற சிந்தை மட்டுமே நிலைத்து நின்றது ! எப்போதும் போலவே இம்முறையும் அமெரிக்க காமிக்ஸ் புத்தகக் கடைகளின் கதவுகளைத் தட்டவும் தவறவில்லை ! குவிந்து கிடக்கும் அந்தக் காமிக்ஸ் புதையல்களுக்கு மத்தியில் நம் நாட்டைச் சார்ந்த Campfire நிறுவனத்தின் படைப்புகள் ஒன்றிரண்டும் தலைகாட்டியது சந்தோஷமாய் இருந்தது ; நம்மவர்களும் உலக அரங்கினில் ஆஜராகும் நாள் புலர்கிறதே என்று ! மற்றபடிக்கு சூப்பர் ஹீரோக்களின் ராஜ்ஜியம் தங்கு தடையின்றித் தொடர்கிறது அமெரிக்காவில் ! அது மட்டுமன்றி APOCALYPSE எனப்படும் தீமில் ஏகப்பட்ட கதைகள் ! ஏனோ தெரியவில்லை - நிறைய காமிக்ஸ் படைப்பாளிகளுக்கு இதனில் பெரியதொரு ஆர்வம் எழுகின்றது ! ஒரு தூரத்து எதிர்காலத்தில் பூமியே நிர்மூலமாகிப் போய் மிகச் சொற்பமான ஜனத்தொகையே எஞ்சி நிற்கும் ஒரு களத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்படும் கதைகள் இவை ! அபரிமித வெற்றி பெற்றுள்ளன இவ்வகைத் தொடர்களில் சில ! இவற்றை நம்மால் ரசிக்க முடியும் என்று நினைக்கிறீர்களா guys ? 'ஆமாம்' எனில் - நாம் முயற்சிக்கக் கூடிய தொடர்கள் ஏராளம் உள்ளன !
டிசம்பரின் தொடரும் 2 வெளியீடுகளுக்கான பணிகளில் 'டைலன் டாக்' ரெடி ! " நள்ளிரவு நங்கை " இதழின் அட்டைப்படமும், உட்பக்க டீசரும் இதோ :
வண்ணத்தில் டைலன் எப்போதும் போல் இம்முறையும் கலக்குகிறார் ! And எப்போதும் போலவே இதுவும் ஒரு வித்தியாசமான கதை பாணி ! எந்தவொரு வட்டத்துக்குள்ளும் டைலனின் கதைகளை அடைக்கவே முடியாதென்பதற்கு இதுவும் ஒரு testimony ! இந்தக் கதையை விட, இதன் தயாரிப்புப் பின்னணியின் சுவாரஸ்யம் அதிகம் என்னைப் பொறுத்த வரை ! Yes - 'உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக' பாணியில் இக்கதையின் தமிழாக்கம் எனது தந்தையினுடையது ! 2005-ல் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டது முதலாகவே முழு ஒய்வு மட்டுமே அவரது அட்டவணையாக இருக்க வேண்டுமென்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம் என்பதால் - பொழுது போகா சில தருணங்களில் மாத்திரமே அவர் அலுவலகம் வருவது வழக்கம். ஆனால் ஒவ்வொரு மாதத்து நமது இதழ்களையும் ஒரு வரி விடாமல் படிக்கத் தவறுவதில்லை ! சமீபமாய் ஒரு நாள் - 'நான் ஏதாவது ஒரு கதையை தமிழில் எழுதிப் பார்க்கவா ?' என்று கேட்ட போது என்னால் மறுக்க முடியவில்லை ! 1972-ல் நமது முத்து காமிக்ஸ் துவக்கம் கண்ட நாள் முதலாய் சகலத்திலும் ஆர்வம் காட்டி வந்த என் தந்தை எப்போதாவது ஒன்றிரண்டு "கபிஷ்" கதைகளைத் தாண்டி வேறு மொழிபெயர்ப்புப் பொறுப்புகளை கையில் எடுத்துக் கொண்டதே கிடையாது ! சமீப வருஷங்களில் நான் வண்டி வண்டியாய் எழுதுவதைப் பார்த்தோ என்னவோ ; நமது இதழ்களின் எண்ணிக்கைகள் கூடிக் கொண்டே செல்வதைப் பார்த்த உற்சாகமோ என்னவோ - இம்முறை பேனாவைக் கையில் எடுக்கும் ஆர்வம் அவருக்குள் உதயமாகியது ! So ஒரு சுபயோக சுபதினத்தில் "நள்ளிரவு நங்கையை" எழுதத் தொடங்கினார் ! டைலனுக்கான பாணி எவ்விதமிருக்க வேண்டுமென்று மேலோட்டமாய் டியூஷன் எடுத்தது ஒருபக்கமிருக்க, டைப்செட்டிங் பணி செய்பவர்களுக்குப் புரியும் விதமாய் கட்டங்களை நம்பரிடுவது ; பலூன்களுக்கு நம்பரிடுவது எப்படி ? என்பது தான் முக்கிய பாடமாய் அமைந்தது ! அதன் பின்னே ஒரு நாலைந்து நாட்களில் rough copy ஒன்றை எழுதித் தந்திட அதனைப் படித்து விட்டு நான் உதட்டைத் தான் பிதுக்கினேன் ! காலமெல்லாம் காமிக்ஸ் ரசிப்பதென்பது வேறு - அதன் பின்னணியில் பணியாற்றுவது வேறு என்பதை இத்தனை அனுபவம் கொண்ட என் தந்தைக்கு புரியச் செய்வது ஒரு embarrassing அனுபவமாய் எனக்கு இருப்பினும், துளியும் ஈகோ பார்த்திடாமல் நான் சொன்ன விஷயங்களைக் கேட்டுக் கொண்டு மீண்டுமொருமுறை புதிதாய் தமிழாக்கம் செய்து கொடுத்தார் ! இதிலும் நிறையவே மாற்றங்கள் அவசியப்பட்டதெனினும், முதல் தடவைக்கு இந்த இரண்டாம் முயற்சி தேவலாம் என்று பட்டது ! முழுமையாய் அதைச் செப்பனிட திரும்பவும் அவரை சிரமப்படுத்த வேண்டாமே என்று - அந்த இரண்டாம் பிரதியின் மீதே திருத்தங்களைச் செய்து டைப்செட்டிங்குக்கு அனுப்பி வைத்தேன் ! So 42 ஆண்டுகளாய் காமிக்ஸ் உலகில் நிலைகொண்டிருக்கும் ஒரு 74 வயது இளைஞரின் கன்னி முயற்சியை இம்முறை காணவுள்ளீர்கள் !! Fingers crossed - for dad !!
அப்புறம் நமது சமீபத்திய updates :
- 2015-ன் நமது மறுபதிப்புகளின் பொருட்டு 2 அட்டைப் படங்களை - அயல்நாட்டு ஓவியர் தயார் செய்து வருகிறார் ! அவர் அனுப்பியுள்ள பென்சில் ஸ்கெட்ச் பட்டையைக் கிளப்பும் வண்ணம் உள்ளது ! வர்ணப் பூச்சும் அதே பாணியில் அமைந்து விட்டால் அட்டகாசம் தான் !
- மாடஸ்டியின் ஜனவரி மாத ராப்பரும் சூப்பர் டூப்பராய் அமைந்துள்ளது - சமீப நாட்களில் நம் ஓவியரின் பெஸ்ட் என்று சொல்லும் விதமாய் ! You will fall in love with the princess !
- மறுபதிப்புகளுக்கு மறு டைப்செட்டிங் செய்துள்ளோம் ; பழைய தமிழ் எழுத்துகளை மாற்றிடும் பொருட்டு ! பிழைத்திருத்தங்கள் செய்ய ஆர்வம் உள்ள நண்பர்கள் கரம் தூக்கிடலாமே - இம்முயற்சியில் ஒரு குட்டியான பங்களிப்பை வழங்கிடும் விதமாய் ?
- 2014-ன் final இதழாய் "நித்தமும் குற்றம்" தயாராகி வருகிறது - கூர்மண்டையர் டயபாலிக்கின் சாகசத்தோடு ! அடுத்த வாரம் அவரது அட்டைப்படம் இங்கே ஆஜராகும் !
- சந்தாக்களின் புதுபித்தல்கள் நடந்தேறி வருகின்றன ; இது வரையில் சுமார் 30% நண்பர்கள் புதுப்பித்து விட்டனர் ! இன்னமும் சற்றே கூடுதல் வேகம் காட்டினால் நலமாயிருக்கும் நண்பர்களே !
அப்புறம் - கடந்த வாரப் பதிவின் பின்னூட்டங்களின் இடையே நண்பர் ரம்மி - நமது இந்த "ஞாயிறுதோறும் பதிவு" பாணி போர் அடிப்பதாய்க் குறிப்பிட்டிருந்தார் ! Expect the unexpected என்பதெல்லாம் நமது முந்தய trademark ஆக இருந்த நாட்கள் மலையேறி - இன்று ஓராண்டுக்கு அட்வான்சாய் திட்டமிடும் சூழலில் உள்ளோம் ! LMS -க்கு முன்பாய் துவங்கிய இந்த "ஞாயிறு பதிவுகள்" பாணி எனக்கு நிறைய விதங்களில் சுலபமாய் உள்ளது ! வாரத்தின் இடைப்பட்டதொரு நாளை தேர்வு செய்தால் இதற்கென அரை நாளை செலவிட வேண்டி வருகின்றது ; இடையே வேறு வேலைகள் எழும் பட்சத்தில் எழுத்தில் ஒரு flow அமைந்திடச் சிரமமாகிப் போகின்றது ! நேற்று பின்னிரவில் ஊர் திரும்பிய நான் ஞாயிறு காலைத் தூக்கத்தை மட்டும் கொஞ்சமாய் ஒத்திப் போட்டுவிடும் போது சிரமங்களின்றி பதிவிட முடிகின்றது ; தவிரவும் ஞாயிறெனும் போது அன்றைய ஒரு நாளாவது நண்பர்களின் பின்னூட்டங்களோடு நானும் இணைந்திட சாத்தியமாகிறது ! Much as I would love to login more often - கிட்டத்தட்ட வாரமொரு இதழ் என்ற ஓராண்டு அட்டணையைக் கையில் வைத்துக் கொண்டு சிறிதும் அசட்டையாய் இருக்க இடம் இருப்பதில்லை ! So உங்கள் கருத்துக்கள் சகலத்தையும் படித்திடுவேன் ; நேரம்கிடைக்கும் போதெல்லாம் உள்ளே புகுந்திடுவேன் ! Hope for your understanding on this folks ! மீண்டும் சந்திப்போம் ! Have a glorious sunday and a great week ahead !!
Adade.
ReplyDeleteGood Morning Vijayan Sir :)
ReplyDeleteYippee 2nd :D
Deleteஅடடே... அடடே!!!
ReplyDeleteTop 5, good morning
ReplyDeleteDylan looking great in the dark background, i haven't started reading the books yet, i usually love to see and feel the books before start reading so no comments. I waited till 2 a.m for this post, it's become an addiction like reading comics.
DeleteMahesh : Sorry, but please look out for new posts on Sunday mornings ! Saturday nights would be 50-50 !
Deleteஇனிய காலை வணக்கம் நண்பர்களே :)
ReplyDeleteஅப்ப ஒரு வார தலைமறைவு பாணியை மாற்ற மாட்டீங்க ???:p
ReplyDeleteGood morning princess modesty... expecting u very much..
ReplyDeleteGood morning friends..
ReplyDeleteGood Morning Sankar
Deletetop 10
ReplyDelete@ Vijayan Sir
ReplyDeleteதங்கள் தந்தையின் காதலை டைலனில் டிசம்பர் இரண்டாம் பகுதியில் பார்க்க ஆவலோட காத்திருப்பேன்
Apocalypso is welcomed Sir
Happy Sunday wishes Sir
உயரே ஒரு ஒற்றை கழுகு ....
ReplyDeleteஅட்டகாசமான கதை. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ஜெட் வேக கதை.
சஸ்பெண்ஸ்,மிஸ்ட்ரி,அட்வென்சர்,சென்டிமெண்ட்,காதல்,காமெடி.. ஒரே கதையில்..
வண்ணங்களும் பிரமாதம்...இந்த கதையை பொருத்த வரையில் லாஜிக் ஒரு தடையே இல்லை...
இதுவரை படித்திராத சாகசம்.. வித்திசமானதொரு களத்தில்.
Dylan Dog அட்டைபடம் மிக நன்றாக உள்ளது
ReplyDeleteThriller Effect
sad to see 'graphics novel' a prestigious tag line got damaged so bad and creating terror and fear (!) in readers mind !
ReplyDeleteGood Morning Satish
Deletegood morning SeaGuitar! :)
Deleteபுத்தங்கள் கோயம்புத்தூர் இன்னும் வந்து சேரலை
ReplyDeleteஇன்றைக்கு கிடைக்கும் என்று எதிபார்க்கிறேன்
வல்லவர்கள் வீழ்வதில்லை...
ReplyDeleteஒரு மாறுபட்ட டெக்ஸ் கதை.. இம்முறை வழக்கமான "கும்" மற்றும் "சத்"களுக்கு பதிலாக ஏகப்பட்ட டுமீல்கள்... காது சவ்வு கிழிந்து விடும் அளவுக்கு. XIII ஏற்கனவே சிதற விட்ட மேக்ஸ்மில்லியன் தங்க புதையலுக்குகாக போராடும் கதை.ஐரிஸ் நாட்டுகாரர்களின் தேசப்பற்றும்,விடுதலை போராட்டமும் பின்னணியில் இருக்க உண்மையில் ஒரு வித்தியாசமான டெக்ஸ் கதை தான்... டெக்ஸ்ன் இளமை (!?) கால ரொமான்சு , ஏகப்பட்ட இச்சுகள் , அயர்லாந்து நாட்டுகாரர்களின் நாட்டு பற்று, தங்க புதையல், அட்டகாசமான போர் வியூகங்கள் (13 பேர் சேர்ந்து 150 பேர் கொண்ட ஒரு படையையே புரட்டி எடுக்கும் அளவுக்கு), ஐரிஸ் போராளிகளின் பின்ணணி , கார்ஸனின் தெறிக்கும் நக்கல்...
அநேகமாக ஆசிரியரின் அடுத்த பரிசு போட்டி வல்லவர்கள் வீழ்வதில்லை புத்தகத்தில் எத்தனை முறை "டுமீல்" என்று அச்சிடப்பட்டுள்ளது என்பதாக இருக்க கூடும்.
இவ்வளவு பெரிய கதையாக இருந்தாலும் சுவாராசியமாகவே செல்கிறது...!
இறுதியில் வல்லவர்கள் அனைவரும் வீழ்ந்தது தான் உறுத்தலாக உள்ளது.
காத்திருக்கிறேன்.இரு எடிட்டர்களின் கூட்டு கைவண்ணத்தை காண.சக்ஸஸ் ஆனால் தொடருமா இந்த கூட்டணி?எங்களுக்காக
ReplyDeleteabujack ravanan : எழுதுவதில் தோன்றும் ஆர்வம் ஆரம்பத்தில் இருப்பதைப் போலவே எல்லா நேரங்களிலும் தொடர்வதில்லை ! அந்த initial enthusiasm பின்னாட்களிலும் தொடர்ந்தால் சூப்பர் தான் !
Deleteஅட்டகாசம் தலைவா! நீங்கள் சொன்ன வாக்குறுதியை (திகிலின் அடுத்த கட்டம் வந்துவிட்டோம்) இவ்வருடம் அழகாக நிறைவேற்றி வைத்து விட்டீர்கள்! ஆயாவின் ஆசீர்கள்! ஹீ ஹீ ஹீ! நம்மளுக்கும் கலர்ல அவ்வப்போது ஒரு ஒரு கதையாவது போடலாமே....
ReplyDeleteJohn Simon C : "ஆயாக்கள் அடங்குவதில்லை " !!
Deleteசூப்பர் சார்! அப்பா கலக்கிட்டார்! இனிய இன்ப அதிர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி திக்கு முக்காட வைத்துள்ளார்!
Delete//நீங்கள் சொன்ன வாக்குறுதியை (திகிலின் அடுத்த கட்டம் வந்துவிட்டோம்) இவ்வருடம் அழகாக நிறைவேற்றி வைத்து விட்டீர்கள்! ஆயாவின் ஆசீர்கள்! ஹீ ஹீ ஹீ! நம்மளுக்கும் கலர்ல அவ்வப்போது ஒரு ஒரு கதையாவது போடலாமே....//
Delete+1
ஒரு ஒரு கதையாவது போடலாமே Edit sir!
ஒரே ஒரு ஆயா டைஜெஸ்ட் வெளியிடலாம்... நீண்ண்டடடடடடடடட நாள் கோரிக்கை. எடிட்டர் செவிசாய்க்க வேண்டும்
Deleteமேஜிக் விண்ட், டைலான் டாக், தோர்கல் கதைகள் கறுப்புக் கிழவி கதைகளுக்கு இணையாக உள்ளது.
Delete//ஒரே ஒரு ஆயா டைஜெஸ்ட் வெளியிடலாம்... நீண்ண்டடடடடடடடட நாள் கோரிக்கை. எடிட்டர் செவிசாய்க்க வேண்டும்//
Delete+1
கறுப்புக்கிழவி கதைகளுக்கு +99999999999999999999999
Deleteஹீ ஹீ ஹீ பேராண்டிகளா பேசாம ஒரு கட்சி தொடங்கி நெக்ஸ்ட் தேர்தல்ல நிக்கிலாம்னு பார்க்கிறேன்! பலத்த ஆதரவுக்கு நன்றிகள் + ஆசீர்கள்! ஆசிரியரே! கனவில் வந்து கதை சொல்லவா? ஹீ ஹீ ஹீ
Deleteஆக வரும் டைலான் கதையில் ஒரு வித்தியாசமான அனுபவம் காத்துள்ளது ... அனேகமாக ஆசிரியருக்கு வரும் காலங்களில் வேலை பளு குறையும் வாய்ப்பும் பிரகாசமாக இருக்கும் என்றே தோன்றுகிறது .
ReplyDeleteRummi XIII : //அனேகமாக ஆசிரியருக்கு வரும் காலங்களில் வேலை பளு குறையும் வாய்ப்பும் பிரகாசமாக இருக்கும் என்றே தோன்றுகிறது //
Deleteவாய்ப்பே இல்லை !! இன்னொருவரின் எழுத்தக்களை over write செய்வது ஒரிஜினலாய் எழுதுவதை விடவும் சிரமமானது !!
வாவ்! இது சௌந்திர பாண்டியரின் விஸ்வரூபம்!!!! வாழ்த்துக்கள்! வந்தனங்கள்! மீண்டும் தான் ஒரு சூப்பர் ஸ்டார் ஆப் தி காமிக்ஸ் என்பதை செய்தே காட்டி விட்டார்! அவருக்கு ஒரு ராயல் சல்யூட்! டமால்! டுமீல்! பூம் பூம் பூம்! வணங்குகிறேன் அவரை!
ReplyDelete+1
Deleteமாய வளி _மேஜிக் விண்ட் தனது பாணியில் அசத்தியுள்ளார். ஒரே கொடியில் பூத்த மலர்கள் இரண்டு! அவற்றில் ஒன்றின் இதயம் அகண்டு, மற்றதன் இதயம் அகன்று!!! கழுகையும் அன்பாய் அள்ளி அணைக்கும் மனம் ஒன்று, சொந்தத்தினையும் தின்றுவிடத் துடிக்கும் மனம் ஒன்று, வேறுபட்ட களத்தில் தன் அதிரடியால் மனம் ஈர்க்கிறார் மாய வளி! இறுதியில் தீமையை நன்மையாக மாற்றி தன் பாதைக்குத் திரும்பும் இடம் அட்டகாசம்!
ReplyDeleteதலை புக்கை படிக்க விடாமல் நண்பர் ஒருவர் அன்புக்கயிறால் கட்டி போட்டுவிட்டு வானமே எங்கள் வீதியென விமானத்தில் ஏறிப் பறந்து விட்டார் சார்! இனி டிஸ்கவரி புக் பேலஸ் முற்றுகை தொடர்கிறது! படிக்க விட மாட்றாங்க பாஸ்!
ReplyDeleteஎடிட்டர் சார் ,
ReplyDeleteதயவுசெய்து கிராஃபிக் நாவல் மாதிரியான experimental முயற்சிகளை நிறுத்தி விட வேண்டாம் .
Mohammed Harris : :-)
Delete//தயவுசெய்து கிராஃபிக் நாவல் மாதிரியான experimental முயற்சிகளை நிறுத்தி விட வேண்டாம் . //
Delete+1
///////// டியர் எடிட்டர் ///////////
ReplyDeleteஇந்த மாதம் வந்த 3 இதழ்களும் அட்டகாசம். ஒவ்வொன்றும் முத்திரை பதித்த கதைகள் என்றால் மிகையாகாது.
மேஜிக்விண்ட் வாவ். ரியலி சூப்பர். அமானுஸ்யமும், செவ்விந்திய வாழ்க்கை முறையும் கலந்து ஒரு அருமையான இதழாக இருந்தது. 2015ல் இவரின் முக்கியத்துவத்தை குறைத்தது மிகவும் வருத்தத்திற்குரியது.
வானமே எங்கள் வீதி இதுபோன்ற கதைகளைதான் எதிர்பார்த்து காத்திருந்தேன். 3 பாகம் வெளிவந்தவுடன் அதையும் சேர்த்து வெளியிட்டு இருக்கலாம். இதுபோன்ற தரமான இதழ்களை பிரித்து பிரித்து வெளியிடுவது ஜீரணிக்கமுடியவில்லை.
டெக்ஸ் வெகு நாட்களுக்கு பிறகு ஒரு தரமான டெக்ஸ் கதையை படித்த திருப்தி. டெக்ஸ் ரசிகர் அல்லாதவர்களை திருப்திபடுத்தும் நோக்கில் தாங்கள் இந்த கதையை தேர்வு செய்திருப்பது கண்கூடாக தெரிகிறது.
(டெக்சை போட்டுத்தள்ளும் அறிய வாய்ப்பை கோட்டைவிட்ட அந்த கும்பலை நினைத்தால்தான் பற்றிக் கொண்டு வருகிறது)
அது மட்டும் நடந்திருந்தால்............. நினைத்தாலே இனிக்கும்
2015 சந்தா, மின்னும் மரணம் இரண்டுக்கும் பணம் செலுத்தவில்லை. இந்த வாரத்திற்குள் நேரில் வந்து செலுத்த உள்ளேன்.
Mugunthan kumar : // 3 பாகம் வெளிவந்தவுடன் அதையும் சேர்த்து வெளியிட்டு இருக்கலாம்.//
Deleteஇந்தக் கதையை நாம் திட்டமிட்ட போது பாகம் 3 பற்றி எவ்விதத் தகவலும் கிடையாது ! முதல் பாகம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தொடரை சற்றே விரிவாக்கம் செய்துள்ளனர் ! பாகம் 3 அடுத்த மே மாதம் வரவுள்ளது ; அது வரை இந்த முதல் 2 பாகங்களையும் நான் hold -ல் போட்டிருந்தால் நண்பர்கள் அதற்கும் வருத்தம் கொண்டிருப்பது நிச்சயம் ! So தவிர்க்க இயலா சூழல் !
//(டெக்சை போட்டுத்தள்ளும் அறிய வாய்ப்பை கோட்டைவிட்ட அந்த கும்பலை நினைத்தால்தான் பற்றிக் கொண்டு வருகிறது) //
வல்லவர்கள் வீழ்வதில்லை !!
வெல்கம் பேக் ஜி... இவ்வளவு நாளா தனியாக போராட வேண்டியதாயிற்று ...
Delete//(டெக்சை போட்டுத்தள்ளும் அறிய வாய்ப்பை கோட்டைவிட்ட அந்த கும்பலை நினைத்தால்தான் பற்றிக் கொண்டு வருகிறது) //
Delete+1
:D
நமது ஆசிரியர் இன்று முதல் ‘அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன்’ என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுவாராக
ReplyDeleteகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : ஏன்..நல்லா தானே போயிட்டு இருந்தது ?
Deleteஇன்னும் புக் வரல சார்
Deleteஅதனாலதான் இப்படி போகுது
//‘அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன்’ என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுவாராக//
Delete:D
வணக்கம் சார் . ஒரு நாள் தாமதமாக நேற்று காலை தான் சேலம் ரசிகர்கள் அனைவருக்குமே புத்தகங்கள் கிடைத்தன . அட்டை பெட்டி பேக்கிங் அருமையான ஐடியா சார் . அதை தெரிவித்த நண்பருக்கும் தாமதமாகவேனும் செயல் படுத்திய உங்களுக்கும் நன்றிகள் சார் . கடந்த 3ஆண்டுகளில் ஓரிரு முறை மடங்கி வந்தவை இனி சேதாரம் இன்றி வரும் என்ற செய்தியே சிறு நிம்மதியை தந்து உள்ளது சார் . உங்களின் ஞாயிறு பதிவு ,அன்று முழுதும் பதிலிடல் முறையை தொடர்வதை விசில் அடித்து வரவேற்கிறேன் சார் . ஆனால் இடையில் ஒரு சார்ட் விசிட் கட்டாயம் வேண்டும்வேண்டும் சார் .
ReplyDeleteரொம்ப நாட்களுக்குப் பிறகு, ஒரு நிறைவான கதை உயரே ஒரு ஒற்றைக் ....
ReplyDeleteவித்தியாசமான கதைக் களம்.
சஸ்பென்ஸ்.. த்ரில்லிங்... பாசம்... எனக் கலவையான கதை. நன்றாக இருந்தது.
மேஜிக் விண்ட்.. ஒரு நல்ல தொடர் (டைலான் டாக்கை விட)...
/////////// மேஜிக் விண்ட்.. ஒரு நல்ல தொடர் (டைலான் டாக்கை விட)...////////
Delete+999
RAMG75 : இது வரைக்குமான ஸ்கோர் :
Deleteமேஜிக் விண்ட் : 2/2
டைலன் 1.5/2
பார்ப்போமே - தொடரும் நாட்களது நிலவரத்தை !
//மேஜிக் விண்ட்.. ஒரு நல்ல தொடர் (டைலான் டாக்கை விட)...//
Deletespecial +1
டைலானின் அடுத்த வருட கதை நிலைமையை தலை கீழ் ஆக்கக்கஆக்கக்கூடும்
Deleteடியர் விஜயன் சார் உங்க கஷ்டம் தெரியுது.கிராபிக் நாவல் ரசிகர்களுடன், மாயாவி ரசிகர்களையும் அரவணைத்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.,கிராபிக் நாவல்கள் காமிக்ஸ் ரசிகர்கள் எல்லோருக்கும் பிடிக்காது என்பது கண்கூடு. நீங்கள் அதன் கதைசுருக்கத்தை கொடுத்தாலும்,அது புரியுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி. மேலும் என்னை போல சோம்பேறிகள் கதை சுருக்கத்தை மட்டும் படித்துவிட்டு கிராபிக் நாவல் படிக்காமல் இருக்கம் அபாயமும் இருக்க வாய்புண்டு:-),சார்,தாரையில்தான் கிராபிக் நாவல் பிடிக்காத லெட்டர் பார்ட்டி இருக்கிறார்ன்னு நினைச்சிட்டு இருந்தேன். இப்போதுதான் தெரிகிறது, சென்னையிலும் இருக்காங்கன்னு:-)கிராபிக்நாவலுக்கு கதை சுருக்கம் கொடுப்பது இரண்டு மாறுபட்ட விளைவுகளை ஏற்படுத்தலாம். கதை சுருக்கத்தை படித்துவிட்டு முழுகதையையும் படிக்க ஆர்வம் ஏற்பட்டு படிக்கலாம்.இல்லை, கதைசுருக்கத்திலேயே கதை பிடிக்காமால் புத்தகத்தை படிக்காமலே போகலாம். ஒரு புத்தகம் என்பது ஒவ்வொரு முறை படிக்கும்போதும் மாறுபட்ட அனுபவத்தை தரவல்லது, எனவே கதைசுருக்கம் என்பது தேவையற்றது என்பது என் தாழ்மையான கருத்து.
ReplyDelete///// எனவே கதைசுருக்கம் என்பது தேவையற்றது ////////
Delete+1
Dr.Sundar, Salem : //கதை சுருக்கத்தை மட்டும் படித்துவிட்டு கிராபிக் நாவல் படிக்காமல் இருக்கம் அபாயமும் இருக்க வாய்புண்டு ; கதைசுருக்கத்திலேயே கதை பிடிக்காமால் புத்தகத்தை படிக்காமலே போகலாம் //
DeleteValid Point !
//அது மட்டுமன்றி APOCALYPSE எனப்படும் தீமில் ஏகப்பட்ட கதைகள் !
ReplyDelete'ஆமாம்' எனில் - நாம் முயற்சிக்கக் கூடிய தொடர்கள் ஏராளம் உள்ளன ! //
why not Edit sir, lets try some best of APOCALYPSE !
இம்மாத இதழ்களில் magic wind சிறிது ஏமாற்றம்! வானமே வீதி அடடே ! Tex Willer வழக்கம்போல ஜெயிசுடார்! வானமே எங்கள் வீதி 3ம் பாகம் எப்போது சார் ??
ReplyDeletesenthilwest2000@ Karumandabam Senthil : May'2015 - ஐரோப்பாவில் !
Deleteமேஜிக்விண்ட் புத்தகத்திலிருந்த அச்சுக் குறைபாடுக்கு காரணம் அறிந்து வருத்தமாக இருக்கின்றது. குமார் அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்.
ReplyDeleteமற்ற இரண்டு புத்தகங்களின் அச்சுத் தரம் அருமை.
பேக்கிங் நன்றாக இருந்தது. இன்னும் சிறிய பாக்ஸ் உபயோகப்படுத்தலாம். பெட்டியின் உள்ளே புத்தகம் ஆடாமல் இருக்கும்.
RAMG75 : //இன்னும் சிறிய பாக்ஸ் உபயோகப்படுத்தலாம். பெட்டியின் உள்ளே புத்தகம் ஆடாமல் இருக்கும்.//
Deleteசரியான அளவிலான பெட்டியெனில் pack பண்ணும் போது உள்ளே நுழைப்பது சிரமமாய் உள்ளது ! அதனால் தான் கொஞ்சம் ஓவர் சைஸ் !
காத்திருக்கிறேன்.இரு எடிட்டர்களின் கூட்டு கைவண்ணத்தை காண.சக்ஸஸ் ஆனால் தொடருமா இந்த கூட்டணி?எங்களுக்காக
ReplyDelete//எப்போதும் போலவே இம்முறையும் அமெரிக்க காமிக்ஸ் புத்தகக் கடைகளின் கதவுகளைத் தட்டவும் தவறவில்லை ! குவிந்து கிடக்கும் அந்தக் காமிக்ஸ் புதையல்களுக்கு மத்தியில் நம் நாட்டைச் சார்ந்த Campfire நிறுவனத்தின் படைப்புகள் ஒன்றிரண்டும் தலைகாட்டியது சந்தோஷமாய் இருந்தது ;//
ReplyDelete+1
i feel if you harden the search we can get some more சுதேசி cover designer too...
Hi !
ReplyDeleteHello Selvam :)
Delete*டைலனின் அட்டைப்படம் அசத்தல் ரகம்! அழகாகவும் உள்ளது!
ReplyDelete*சீனியர் எடிட்டரும் களத்தில் குதித்திருப்பது உற்சாகத்தைப் பனமடங்காக்குகிறது. தற்போது மூன்று தலைமுறை எடிட்டர்களும் காமிக்ஸ் பணிகளுக்காகக் களமிறங்கியிருப்பது அட்டகாசம்!
*அச்சுப் பணியாளர் குமார் காலை உடைத்துக்கொண்டது வருத்தமளிக்கிறது. தான் செய்யும் பணியை ரொம்பவே நேசித்திடும் அவர் விரைவில் குணமடைந்து பணிக்குத் திரும்ப பிரார்த்திக்கிறேன்!
*'கிராபிக் நாவல்' தொடர்பாக தனது கருத்துக்களை அழகாகப் பதிவிட்டுள்ள அந்தச் சென்னை நண்பருக்கு வாழ்த்துகள்! நயமாக எடுத்துரைத்திருப்பதோடு, அவர் வழங்கிய 'தலைகீழ் கதைச்சுருக்க' ஐடியாவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று! ( வார்த்தைகளால் வாள் சில வீசும் நண்பர்கள் இப்படிப்பட்ட 'தன்மையான' முறையைக் கடைபிடிக்கலாமே?)
*எடிட்டர் சார்! நீங்கமட்டும் கான்ஸாஸ், மிசெளரி'ன்னு நம்ம கெளபாய் ஹீரோக்கள் சுற்றியலைந்த ஊர்களை தனியா ரசிக்காமல், ஒரு நாள் எங்களையும் கூட்டிப்போய்க் காட்டுங்களேன்? இப்பவே உண்டியல்ல காசு சேர்த்த நான் ரெடி! நாம போறது இத்தாலிக்குன்னா எனக்கு ஒன்வே டிக்கெட் இருந்தாலே போதும்! :)
Happy Italy riding Vijay :)
Delete@ seaGuitar9
Deleteஇப்போதைக்கு மெரினா பீச்சில் ஒரு Horse riding செய்யுமளவுக்குத்தான் காசிருக்கு, கடல் கம்பிக்கருவி அவர்களே! ;)
Erode VIJAY : //நீங்கமட்டும் கான்ஸாஸ், மிசெளரி'ன்னு நம்ம கெளபாய் ஹீரோக்கள் சுற்றியலைந்த ஊர்களை தனியா ரசிக்காமல், ஒரு நாள் எங்களையும் கூட்டிப்போய்க் காட்டுங்களேன்?//
Deleteபூனைகளுக்கெல்லாம் எந்த category விசாவோ - தெரியலியே ?! அமெரிக்கத் தூதரகத்தில் ஒரு முறை 'மியாவிப்' பார்த்தால் தெரியக் கூடும் !
@Erode VIJAY
DeleteI wish and hope U get ur chance to Kansas and Italy Friend
பதிவு டாண்ணு வந்துடுச்சே! டைலான அட்டைப்படம் ஈர்க்கும் விதத்தில் இருக்கிறது. மீண்டும் பெரியவர் களத்தில் பேனாவைக் கையிலெடுத்திருப்பது ஆச்சரியமான இன்ப அதிர்ச்சி! வரவேற்கிறோம்.
ReplyDelete//மறுபதிப்புகளுக்கு மறு டைப்செட்டிங் செய்துள்ளோம் ; பழைய தமிழ் எழுத்துகளை மாற்றிடும் பொருட்டு ! பிழைத்திருத்தங்கள் செய்ய ஆர்வம் உள்ள நண்பர்கள் கரம் தூக்கிடலாமே - இம்முயற்சியில் ஒரு குட்டியான பங்களிப்பை வழங்கிடும் விதமாய் ?//
ReplyDeleteஇதோ, கைய தூக்கியாச்சு!!
எடிட்டர் சார் கிராபிக் நாவல் பற்றிய தவறான வாதங்களை சிறந்த தேர்வுகள் மூலம் உங்களால்தான் தகர்க்க முடியும்.
ReplyDeleteநமது முதல் கிராபிக் நாவல், வானமே எங்கள் வீதி போன்ற கதைகள் மீது யாரும் இருபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாது.
special +1
Delete//1972-ல் நமது முத்து காமிக்ஸ் துவக்கம் கண்ட நாள் முதலாய் சகலத்திலும் ஆர்வம் காட்டி வந்த என் தந்தை எப்போதாவது ஒன்றிரண்டு "கபிஷ்" கதைகளைத் தாண்டி வேறு மொழிபெயர்ப்புப் பொறுப்புகளை கையில் எடுத்துக் கொண்டதே கிடையாது //
ReplyDeleteநன் ஒரு கபிஷ் ரசிகன், பூந்தளிர் and கபிஷ் my ever green happy moments!
//So 42 ஆண்டுகளாய் காமிக்ஸ் உலகில் நிலைகொண்டிருக்கும் ஒரு 74 வயது இளைஞரின் கன்னி முயற்சியை இம்முறை காணவுள்ளீர்கள் !! Fingers crossed - for dad !! //
:)
bring him back full fledged(if possible) Edit sir,I am sure it will bring different dimension for our comics...
காத்திருக்கிறேன்.இரு எடிட்டர்களின் கூட்டு கைவண்ணத்தை காண.சக்ஸஸ் ஆனால் தொடருமா இந்த கூட்டணி?எங்களுக்காக
ReplyDelete@ Vijayan Sir
ReplyDeleteHowz Printer Kumar doing now Sir?
Give him our warm wishes for his full his healthy recovery Sir
+1
Deleteget well soon Kumar !
Hello Satish
DeleteU got this month Books?
This comment has been removed by the author.
DeleteYES SeaGuitar.. last Friday it self books reached home, but i am far from CBE :(
Deleteohhhhhhh... I haven't got call from the bookshop
DeleteBesides I went to friend's house this weekend, So didn't get time to check on the shop
Wil visit the bookshop tomorrow
//////// எடிட்டர் ////////
ReplyDeleteAPOCALYPSE எனப்படும் தீமில் ஏகப்பட்ட கதைகள் உள்ளன.
இதுபோன்ற தீமில் வெளியாகும் Hollywood திரைப்படங்கள் ரசிக்ககூடியவையாகத்தான் உள்ளது. அதனால் அதனை தாராளமாக முயற்சித்து பார்க்கலாம். கிராபிக் நாவலுக்கு கிடைத்த குட்டுகள் இதற்கு கிடைக்காமல் இருக்க அனைவரும் ரசிக்கும்விதமான கதைகளை தேர்வு செய்வது உங்கள் கைகளில்தான் உள்ளது.
Mugunthan Kumar: //இந்தக் கதையை நான் தேர்வு செய்ததன் பிரதானப் பின்னணிக் காரணம் இதுவே ! //
Deleteஒரு ஓய்வான நாளில் இதுவரையிலான கிராபிக் நாவல்களை என் கண்ணோட்டத்தில் அலசுகிறேன்....ஒவ்வொன்றின் தேர்விலும் இருந்த பின்னணிக் காரணங்களோடு ! அவை பெற்ற வெற்றி-தோல்விகளை அதன் பின்னே வேறொரு பார்வையில் பார்த்திடல் சாத்தியமாகக் கூடும் !
வல்லவர்கள் வீழ்வதில்லை படிச்சாச்சு!
ReplyDeleteகேப்டன் டைகரின் (பழைய கதைப்) பாணியிலானதொரு டெக்ஸ் கதை!! 3 அத்தியாயங்கள். வரலாற்றுச் சம்பவங்களுடன் பிணையப்பட்டதாலோ என்னவோ, முதலிரண்டு அத்தியாயங்களில் எல்லா கேரக்டர்களுமே வண்டி வண்டியாய் வசனம் பேசுவதாக ஒரு பிரம்மை! மூன்றாவது அத்தியாயத்திலும் வசனங்களே, ஆனால் பேசுவதோ துப்பாக்கிகள்! அம்மாடியோவ்!! முதலிரண்டு பாகங்களின் 'எஸ்டீடி'களால் ஏற்பட்ட லேசான மந்தநிலையை ஈடுகட்டும் வகையில் இறுதி அத்தியாயத்தின் பெரும்பகுதி ஆக்ஸன் அதகளத்தால் நிரம்பி வழிகிறது! எங்கு திரும்பினாலும் ஒரே டமால்-டுமீல் மயம்தான்!!
சீரியஸானதொரு கதையின் நடுவிலும் இயல்பாக அமைந்திருக்கும் காமெடி வசனங்கள் கிச்சுகிச்சு மூட்டுகின்றன! ('ஏய்... நம்மை சிரிப்புப் போலீஸ்னு நினைச்சுட்டானுகளா?").
நண்பர் டெக்ஸ் விஜயராகவன் ஆதங்கப்பட்டிருந்தபடி அத்தியாயங்களுக்கும் தலைப்பு இருந்திருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது!
வரலாற்றுப் பின்னணியுடன் வந்த 'நில்... கவனி... சுடு!'வின் அட்டகாச வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஒரு வரலாற்றுப் பின்னணி கொண்ட டெக்ஸ் குழுவினரின் ஆக்ஸன் கலாட்டா! 'அட்டையை கிழிச்சுப் போட்டுட்டா எல்லா டெக்ஸ் கதைகளுமே ஒரே மாதிரிதான்' என்று இனிமேல் யாராவது சொன்னா பிறாண்டிப்புடுவேன் பிறாண்டி! ;)
Erode VIJAY : //அட்டையை கிழிச்சுப் போட்டுட்டா எல்லா டெக்ஸ் கதைகளுமே ஒரே மாதிரிதான்' என்று இனிமேல் யாராவது சொன்னா பிறாண்டிப்புடுவேன் பிறாண்டி! ;)//
Deleteஇந்தக் கதையை நான் தேர்வு செய்ததன் பிரதானப் பின்னணிக் காரணம் இதுவே ! Glad it worked !
\\\\\\\ 'அட்டையை கிழிச்சுப் போட்டுட்டா எல்லா டெக்ஸ் கதைகளுமே ஒரே மாதிரிதான்' என்று இனிமேல் யாராவது சொன்னா பிறாண்டிப்புடுவேன் பிறாண்டி! ;\\\\\\\\\\\
Deleteஇல்லாத ஊருக்கு இனிக்கிற பூ எல்லாம் சர்க்கரை
ஒரு நல்ல கதை வந்தவுடன் இவ்வளவு ஆர்ப்பாட்டமா?
டைகர் கதைகள்போல் எல்லா கதைகளும் அபாரமாக இருந்தால், இந்த உலகம் தாங்காதுடா சாமி.
மிஸ்டர் மியாவ் .... இப்பவும் அட்டையை கிழித்து விட்டால் இது டெக்சின் கடந்த காலமாயிடும் ...:'(
Deleteகதாசிரியர் போனெல்லி மற்றும் ஓவியர் மார்செல்லோ கூட்டணில் வரும் படைப்புக்கள் சோடையாகாது போலிருக்கிறதே...? கடந்த முறை வந்த டெக்ஸ்-ன் கா. க. காலமும் இவர்களது கைவண்ணமே!
Deleteஉயிரோட்டமான கதைக்களமும், கண்ணுக்கு விருந்து படைக்கும் சித்திரங்களும் இணையும் போது வெற்றி நிச்சயம் தானே...!
இவர்கள் கூட்டணியில் வெளிவந்த டெக்ஸ்-ன் கதைகள் இன்னும் எத்தனை புதைந்துள்ளதோ..?
வல்லவர்கள் வீழ்வதில்லை..!
ReplyDeleteகதையை விவரிக்க வார்த்தைகளே இல்லை ; கதை அதகளம் செய்கிறது ; சிவகாசி பட்டாசுக்கு இணையான அதிரடி !
மிஸ்டர் மரமண்டை : The King...is the King !!
Deleteடியர் எடிட்டர்ஜீ!!!
ReplyDeleteAPOCALYPSE ...?
இந்த பெயரில் மார்லன் பிராண்டோ நடிப்பில் ஒரு படம் வந்ததாய் ஞாபகம். அதில் இடம்பெற்ற ஒரு தீம் மியூசிக்கை நம்ம இசைப்புயல் ஒரு படத்தில் "சுட்டிருப்பார்". மற்றபடி திரைப்படங்களில் வெற்றிபெற்ற இந்த ரக கதைகள் நம்ம காமிக்ஸ்களில் எடுபடுமா என்பது "ஒரு லட்சத்து எழுபத்தி மூணாயிரம் கோடி ரூபாய்" கேள்வி...?
saint satan : //திரைப்படங்களில் வெற்றிபெற்ற இந்த ரக கதைகள் நம்ம காமிக்ஸ்களில் எடுபடுமா என்பது "ஒரு லட்சத்து எழுபத்தி மூணாயிரம் கோடி ரூபாய்" கேள்வி...?//
Deleteதிரை -> காமிக்ஸ் -> வெற்றி : எல்லா நேரங்களிலும் நடைமுறை கண்டதில்லை தான் ; ஆனால் முடியாததும் அல்ல தான் !
நள்ளிரவு நங்கை..!
ReplyDeleteஅட்டைப் படம் அற்புதமாக இருக்கிறது ; இரு கைகளிலும் உள்ள பத்து விரல்களால் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொள்ளலாம் போல் அப்படி ஒரு பரவசம் ; அது அழகான அந்த நீல வண்ணங்களாலா அல்லது கதை மீதான என் எண்ணங்களாலா என்பதில் மட்டுமே சிறு குழப்பம் ! நான் டைலன் டாக் ன் தீவிர ரசிகன் என்பதால், நான் அடையும் இந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை சார் !
நேரமின்மையால் தங்கள் புதிய பதிவின் மீதான என் கருத்துகளை மாலையில் பதிவிடுகிறேன் சார்.. நன்றி !
அன்பு நண்பர் குமார் அவர்கள் விரைவில் நலம் பெற்று பணிக்கு திரும்ப பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteபணிச்சுமை காரணமாக இரவு வரை விடுமுறை வேண்டுகிறேன்.!
வணக்கம்,
ReplyDeleteகடந்த 05.11.2014 அன்று சன்சைனில் 3,000/-, பிரகாஷ் பப்ளிஷர்சில் 900/- TMB கட்டிவிட்டேன். MM சந்தாவில் என் பெயர் இல்லை. எனக்கு SMS வரவில்லை. ப்ளீஸ் ரிப்ளை ஸார். மெயில் அனுப்பியுள்ளேன் (date:01.12.2014).
உங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன். சார்
Deleteவணக்கம் ஆசிரியர் சார்,கிராபிக் கதைகள்,வாசிக்கவும்,கதையோட்டத்தை பிடிக்க சற்றே நேரம் பிடித்தாலும் அதை தவிர்ப்பது சரியில்லை என்றே நான் நினைக்கிறேன்.சற்றேனும் நமது வாசிப்பு தளங்களை விரிவு செய்தால் சிறப்பானதாக இருக்கும்.கிராபிக் நாவலை பொறுத்தவரை விரும்பியவர்கள் வாங்கி கொள்ளலாம் என்ற வகையில் இருப்பது சரியாக இருக்கும்.
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்டதுபோல் sunday பதிவுகளில் மட்டும் blog il -Post செய்வது போதும்,மற்றபடி நேரம் கிடைக்கும்போது தலையை காட்டுங்கள்.அப்படி செய்வதே சுவாரஸ்யமாக இருக்கும்.
ஆசிரியர் விஜயனுக்கு காலைவணக்கம்,
ReplyDeleteதமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் காமிக்ஸ் உலகஜாம்பவான்...
முத்துகாமிக்ஸ் பதிப்பாளரின் தமிழாக்க முயற்சியை முயற்சிக்கு வயதேது...? என "ஒரு 74 வயது இளைஞரின் கன்னி முயற்சியை இம்முறை காணவுள்ளீர்கள்.." என சிறிதும் ஈகோ பார்க்காமல் ஆர்வமுடன் வெளிபடுத்திய
விதம்,என்னைபொறுத்தவரையில் 'ஈகோவே இல்லாத துள்ளும் ஆர்வத்திற்கு ஒரு அளவுகோள்'...!
உயர்திரு 'சௌந்திரபாண்டியன்' ஐயா அவர்களுக்கு இங்கு ஒரு வேண்டுகோள் "லயன் 250 பற்றிய பயணத்தை கொஞ்சமேனும் தெரிந்துகொள்ள 'சிங்கத்தின் சிறு வயதில்...' இருப்பதுபோல முத்துவின் 350 ஐ தெரிந்துகொள்ள 'சிம்மாசனத்தின் சில நினைவுகள்' என அவ்வப்போது ஒரு தொடர் எழுதவேண்டும் என்பது என் விண்ணப்பம்"
'திட்டமிட தவறினால்,தவறுசெய்ய திட்டமிடுகிறோம்' என்ற வைரவரிகளுக்கு ஏற்ப ஞாயிறு பதிவை நியாயப்பைடுத்தியதற்கு நன்றிகள் சார்...! ப்ளாஷ் நியூசுக்கு ஒரு திடீர் பதிவு டபுள் ஓகே...ஒவ்வொரு பதிவுக்கும் நேரம் தெரியாமல் காத்திருப்பதை தாண்டி நாள்,கிழமை தெரியாமல் காத்திருக்கும் சங்கடத்தை பந்தாடி...எல்லோரும் கால்மேல் கால்போட்டுக்கொண்டு கொண்டாடும்விடுமுறை ஞாயிறுக்கு சொந்தமாக்கிய உங்களுக்கு, பல்வேறு விதமான பொறுப்பில் இருக்கும் பலதரப்பட்ட காமிக்ஸ் பிரியர்கள் சார்பாக ஒரு லாரி நிறைய likes...!
எடிட்டர் போயிட்டுவந்த kansas cityயின் வித்தியாசமான public library சுவரை பார்க்க...இங்கே'கிளிக்'
அச்சுப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் தீயா வேல செய்யனும் 'குமார்' ரிடம் ஒரு நேர்காணல் பார்க்க.....
Deleteஇங்கே'கிளிக்'
தற்போது குமாரின் முகத்தில் இருக்கும் வேதனையை நீங்கள் அப்போதே படம் பிடித்திருப்பது ஆச்சர்யம்தான் மாயாவி அவர்களே!
Deleteஉண்மையில் லார்கோ புத்தகத்திற்காக மூன்று நாட்கள் தொடர்ச்சியாக இரவு தூங்காமல் உழைத்த
Deleteகையேடு,கதிரேசன் வரமுடியாததால்...அண்ணாச்சியும் ஓய்வில் இருக்கும் சூழ்நிலையில், வேலைமுடித்த உடன்,உடனே கிளம்பி 10 மணிநேர 'குலுக்கல்' பயணத்தின் முடிவில் சேலம் வந்த களைப்பும் தான்...அந்த போட்டோவில் பிரதிபலிக்கிறது நண்பரே...!
நள்ளிரவு நங்கை அட்டை படம் நன்றாக உள்ளது.
ReplyDeleteMagic Wind கதை பிடித்துள்ளது. அமானுஷ்ய, ஆர்வத்தை தூண்டும் கதை ஆனாலும் ஏதோ ஒரு வெறுமை, அது என்ன வென்று சொல்ல தெரியவில்லை.
//'திட்டமிட தவறினால்,தவறுசெய்ய திட்டமிடுகிறோம்' என்ற வைரவரிகளுக்கு ஏற்ப ஞாயிறு பதிவை நியாயப்பைடுத்தியதற்கு நன்றிகள் சார்...! ப்ளாஷ் நியூசுக்கு ஒரு திடீர் பதிவு டபுள் ஓகே...ஒவ்வொரு பதிவுக்கும் நேரம் தெரியாமல் காத்திருப்பதை தாண்டி நாள்,கிழமை தெரியாமல் காத்திருக்கும் சங்கடத்தை பந்தாடி...எல்லோரும் கால்மேல் கால்போட்டுக்கொண்டு கொண்டாடும்விடுமுறை ஞாயிறுக்கு சொந்தமாக்கிய உங்களுக்கு, பல்வேறு விதமான பொறுப்பில் இருக்கும் பலதரப்பட்ட காமிக்ஸ் பிரியர்கள் சார்பாக ஒரு லாரி நிறைய likes...! //
ReplyDelete+1111111111111
சார் 2015க்கான மறுபதிப்பு சைத்தான் துறைமுகம் மட்டும்தானா இல்லை வேறு எதுவும் உண்டா .
ReplyDeleteவிஜயன் சார், நமது இந்த மாத புத்தகம்கள் இன்னும் எனக்கு வந்து சேரவில்லை. கடந்த இரண்டு நாட்களாக கொரியர் அலுவலகம் சென்று விசாரித்த போது அவர்கள் எனக்கு புத்தகம்கள் வரவில்லை என்று சொல்லிவிட்டார்கள். கடந்த 3 மாதம்களாக நமது புத்தகம்கள் எனக்கு 2-3 நாட்கள் தாமதமாகவே கிடைக்கிறது. இரண்டு விசயம்கள் உங்களிடம் எதிர் பார்கிறேன் 1. முடிந்தால் புத்தகம் அனுப்பிய உடன் சந்தாதார்களுக்கு கொரியர் ட்ராக்கிங் எண்ணை SMS செய்யவும். 2. அனைத்து சந்தாதாரர்களுக்கும் ஒரே நாளில் புத்தகம்களை அனுபவும் (தற்போது அனைவருக்கும் ஒரே நாளில்தான் அனுப்புவதாக ஏற்கனவே சொல்லி இருந்தீர்கள்)
ReplyDeleteவிஜயன் சார், அடுத்த மாதம் வெளி வர உள்ள நமது கருப்பு வெள்ளை நாயகர்களின் மறுபதிப்பு கதைகளில் பெயரை சொன்னால் சந்தோசமாக இருக்கும்? ஸ்பைடர் மற்றும் மாயாவி கதைகளின் பெயரை மட்டும் தெரிவித்து இருந்தீர்கள், மீதம் உள்ள இரண்டு கதைகளின் பெயர் சொன்னால் நன்றாக இருக்கும்.
ReplyDeleteசார் ஒரு சிறு விண்ணப்பம், 2013ன் இறுதியில், டாலருக்கு எதிரான நமது ரூபாய் மதிப்பு மிகவும் குறைந்துள்ளது அதனால் ராயல்டி தொகையின் கூடி விட்டது என்று சொன்னீர்கள். அதனால் ரூ 100 விலையுள்ள புத்தகங்கள் ரூ 120 க்கு விலை உயர்வு காண்பது தவிர்க்க முடியாது என்று சொன்னீர்கள். அதேசமயம் விலை கூடினாலும், பக்கங்கள் எண்ணிக்கை 114 ல் இருந்து 104 ஆக குறைந்தது. இப்போது நமது ரூபாய் மதிப்பு நன்றாக கூடி உள்ளது. அதனால் 2015 ல் விலை குறையும் or பக்கங்கள் எண்ணிக்கை கூடும் என்று எதிர்பார்த்தோம். 104 என்பது 100 ஆக குறைந்தது. அதேசமயம் 2013 தீபாவளி மலர் 466 பக்கம்விலை ரூ 100. இந்த மாதம் டெக்ஸ் கதை 338 பக்கம் விலை அதே 100 ரூபாய். தற்சமயம் நமது காமிக்ஸ் இதழ்கள் மிகவும் சிறப்பாக இருக்கும் சூழலில் இந்த ஒரு விஷயம் மட்டும் தான் வாசகர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. இந்த குறையை நீங்கள் மணது வைத்தால் சரி செய்து விட முடியும்.
ReplyDelete@ Srithar Chockkappa
Deleteஉங்கள் ஆதங்கம் நியாயமானவைதான்...ஆனால் குறிப்பிட்ட உதாரனங்கள் கொஞ்சம் முரணானவை...!
2013 முடிவிலும் சரி 2014 முடிவிலும் சரி INR vs USD 61/- ரூபாய்க்கு மேல் தான் உள்ளது, வருடத்திற்கு சில முறைமட்டும், அதுவும் குறிபிட்ட ஒரு சில மாதத்தில் மட்டுமே 'காபிரைட்' வாங்கும் பணிநடக்கும் என்பது என் கணிப்பு. மாத மாதம் INR மாறுதலுக்கும், வருடம் முழுதும் தேவையான காபிரைட்டை வாங்கிவைத்து
கொள்வதற்கும் உள்ள இடைவெளியை கணக்கில்கொள்ளவேண்டும் நண்பரே...!
2013 தீபாவளி மலர் 466 பக்க கதை ஏற்கனவே காபிரைட் வாங்கியவை மறுபதிப்புகள்...(அதாவது அதில் செலவு குறைவு, மேலும் சுமார் 30ரூபாய்கும் INR இருக்கும் காலத்தில் வாங்கியவை) 2014 king ஸ்பெஷல் 338 பக்க கதை இப்போது காபிரைட் வாங்கிய செலவும் சேர்க்கிறது என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும் இல்லையா நண்பரே...!
@ சேலம் சுற்றுவட்டார நண்பர்களுக்கு,
ReplyDeleteபுத்தக பார்சல் 'சேலம் பார்சல் ஆபிஸுக்கு' வந்து விட்டது, நாளை காலை தேசன் புக் ஷாப்பில்
வாங்கிகொள்ளலாம்.... :)
இன்று கடை விடுமுறை... :(
ஏங்க இப்போது தான் அவர் எனக்கும் போன் போட்டார் . மாலை 6மணிக்கு கடையை திறந்து விடுவார். சேலம் நண்பர்கள் மாலை 6க்கு மேல் தேசன் புத்தக நிலையம் சென்றால் தலை தரிசனம் உண்டு சாமியோவ்.
Deleteஒவ்வ்வ்...சூப்பர்...சூப்பர்...! (கடைக்கு தயார் செய்த போஸ்டகளுடன் 6 மணிக்கு கிளம்பிவிட்டுறேன் காத்திருந்து கடையில் வாங்கும் கடைசி ஐந்தில் மூன்று புத்தகங்கள்...ஜனவரி முதல் கொரியர் வந்துவிடுமே...ஹி..ஹி.. :)
Deleteதகவலுக்கு நண்றி நண்பரே :)
Delete•
Srithar Chockkappa : சின்னதாய் ஒரு திருத்தம் ! இந்திய ரூபாயின் மதிப்பு கூடும் போது லாபம் அடைவது ஏற்றுமதி செய்பவர்களே தவிர அன்னியச் செலாவணிகளில் பட்டுவாடா செய்யும் சூழலில் உள்ள நம் போன்றோர் அல்ல !
Delete2013-ல் ஒரு அமெரிக்க டாலரின் இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 53-50. So ஆயிரம் டாலர் அனுப்ப வேண்டுமெனில் அன்றைய செலவு நமக்கு ரூ.53,500.
இன்று ரூபாயின் மதிப்பு ரூ.62. அதே ஆயிரம் டாலருக்கு இன்று ரூ.62,000 தேவையல்லவா ?
இதில் நாம் இலாபம் ஈட்டுவதற்கு வழி எது ?
@ SALEM FRIENDS : உங்கள் ஆர்வம் தேசன் புத்தக நிலைய உரிமையாளருக்கும் ஒட்டிக் கொண்டு விட்டது ! ஆர்வமாய் செயல்படுகிறார் !
Delete\\\\\\\\\ இப்போது நமது ரூபாய் மதிப்பு நன்றாக கூடி உள்ளது. \\\\\\\\
ReplyDeleteதவறு. இன்று நமது ரூபாய் ஒரு டாலருக்கு 61.45 காசு என்று ரீதியில் உள்ளது.
நமது நாட்டில் தங்கத்தின் விலை குறைய, குறைய டாலரின் மதிப்பு சிறிது அதிகரிக்கத்தான் செய்யும்.
சார் ....தங்கள் பணியாளர் விரைவில் குணமடைய எனது வேண்டுதல்களை தெரிவித்து கொள்கிறேன் ...
ReplyDeleteஇந்த மாதம் ஒரு இதழ் மட்டுமே அதுவும் கிராபிக் நாவல் மட்டுமே எனது கைகளில் கிடைத்துள்ளதால் முதல் நாளே படித்து விட்டேன் .முதலில் சித்திர தரத்திற்கு பாராட்டுகள் .....ஒவ்வொன்றும் புகைப்படம் போல மின்னுகிறது .எனக்கு கதை பிடித்துள்ளது எனினும் தொடரும் என்று விட்டது மிக பெரிய குறை தான் .அயல் நாட்டிலும் இன்னும் வர வில்லை என்றாலுமே .மொத்த பாகமும் முடிந்த வுடன் இதை வெளி இட்டு இருக்கலாம் .அடுத்த குறை நீங்கள் குறிப்பிட்ட நண்பர் கூறிய படி இந்த வகை கிராபிக் நாவல்களை நாம் இப்போது படித்து ரசித்தாலும் (புரிந்தாலும் ..,புரியாவிட்டாலும் ) சிறு வயது நண்பர்கள் .....காமிக்ஸ் அறிமுக வாசக நண்பர் விரும்புவார்கள் என்பது ஒரு 5% மட்டுமே உண்மையாக இருக்க முடியும் .
அதே போல என்னதான் இப்பொழுது வரும் கிராபிக் நாவல் புரிந்தாலும் .....கதை பிடித்தாலும் .......ஒரு கமர்சியல் கதை ....துப்பறியும் கதை ...காமடி கதை ...கௌ -பாய் கதை என்று விரும்பி படிக்கும் ஆர்வம் ....படித்தவுடன் வரும் ஒரு இனம் புரியாத சந்தோசம்..... என்பது கிராபிக் நாவலில் இல்லை என்பது 100 % உண்மை .கௌ பாய் உலகில் கூடவே பயணிக்கும் உணர்வும்.......நாமும் குற்றத்தை துப்பறிவது போல பயணிக்கும் உணர்வும்.....அதிரடி ஹீரோக்கள் கூட எதிரிகளை நாமும் பந்தாடும் உணர்வும் .....வாய் விட்டு சிரிக்க வைக்க ஏற்படும் நகை சுவை உணர்வும் .......இந்த "கிராபிக் நாவல்" என சிலாகிக்கும் நமக்கு இந்த உணர்வுகளை ஏற்படுத்துகிறதா ....என்பது அவர் ...அவர்களுக்கே வெளிச்சம் ....எனக்கு கண்டிப்பாக இல்லை .....கதை பிடித்து இருந்தாலும் இந்த மாத காமிக்ஸ் படித்தாகி விட்டது ....ஓகே ...என்று தான் மனம் பாடுகிறதே தவிர மேல நான் குறிப்பிட்ட எந்த உணர்வும் இது வரை வந்த "கிராபிக் நாவல்கள் "எதுவுமே ஏற்படுத்த வில்லை .......
எனவே இனி வரும் காலங்களில் தனி கிராபிக் சந்தா என்பதை குறைத்து தனி கௌ பாய் சந்தா .....அல்லது தனி காமெடி காமிக்ஸ் சந்தா என அறிவித்தால் நூற்றுக்கு 95 சதம் நண்பர்கள் மாபெரும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதை இங்கே பகிரங்க படுத்துகிறேன் சார் ...
நன்றி ...
Paranitharan K : மெயின் சந்தாவே கௌபாய் + கார்ட்டூன் + ஆக்ஷன் கதைகளுக்குத் தான் எனும் போது அதற்கென தனிச் சந்தாவிற்கு அவசியம் தான் என்ன இருக்கப் போகிறது ??
Delete107th
ReplyDeleteதங்கள் தந்தையாரின் "மொழி ஆக்கத்தை " காண ஆவலுடன் காத்திருக்கிறேன் சார் ....
ReplyDeleteஅடுத்து உங்கள் மேல் சிறு கோபம் ....
இம்மாத டெக்ஸ் அட்டைப்படங்கள் பார்த்த அனைவருக்குமே பின் பக்க அட்டை சூப்பர் என எண்ணம் எழும் போது தங்களுக்கு அது தோன்றாமல் அதை பின் பக்கம் அனுப்பியது .....சுமாரான அட்டையை முன் பக்கம் கொண்டு வந்தது சரியா சார் . ?
எடீ ஸார் எழுத்துப் பாணிக்கு நான் ரசிகன்,உங்கள் முன்னுரை படித்த பின்பே கதை படிக்கும் அளவுக்கு ஓர் ஈர்ப்பு உண்டு.அந்த வரிசையில் இப்போது ஜூனியர் மற்றும் புதிதாக சௌந்திர பாண்டியன் சாரின் எழுத்துக்களையும் படிக்கக் காத்துள்ளேன் :)
ReplyDeleteAbisheg : :-)
Deleteவிஜயன் சார்,
ReplyDelete// மறுபதிப்புகளுக்கு மறு டைப்செட்டிங் செய்துள்ளோம் ; பழைய தமிழ் எழுத்துகளை மாற்றிடும் பொருட்டு ! பிழைத்திருத்தங்கள் செய்ய ஆர்வம் உள்ள நண்பர்கள் கரம் தூக்கிடலாமே - இம்முயற்சியில் ஒரு குட்டியான பங்களிப்பை வழங்கிடும் விதமாய் ? //
இதனை சந்தோசமாக செய்ய காத்துஇருக்கிறேன்!
// ஒரு 74 வயது இளைஞரின் கன்னி முயற்சியை இம்முறை காணவுள்ளீர்கள் ! //
ReplyDeleteஆர்வமுடன் காத்துகொண்டு இருக்கிறேன்!
மேஜிக் விண்டி அமைதியான ரசிகர்கள் பல உள்ளனர் என்பதை போகப்போக நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
நமது அச்சக பணியாளர் விரைவில் பூரண நலமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
சார், வானம் எங்கள் வீதி அருமை ! வந்த அன்றே படித்து விட்டேன் ! அற்புதமான கதைக்களம் . மூன்றாம் பாகம் எப்போது என ஏங்கும் வண்ணம் முடிவு அருமை ! காத்திருக்கிறேன் சுவாரஸ்யமுடன் அடுத்த பாகத்திர்க்காக !
ReplyDeleteஉயரே ஒரு கழுகு வ்துவக்கம் சாதாரணமாக ஆரம்பமாக நேரம் செல்ல செல்ல முழுவதும் கதையினூடே கரைந்து விட்டேன் என்றே சொல்ல வேண்டும் .
சிறு வயதில் தின மலர் சிறுவர் மலரில் உலக அழிவின் பின்னே கதைகளை படித்துள்ளேன் .அருமையாக இருந்தது . அது போன்ற கதைக்கலங்களுக்காக காத்திருக்கிறேன் . ஒரு சிகப்பு கம்பள விரிப்பை வழங்கலாமே அக்கதைகளின் பொருட்டு .
நள்ளிரவு நங்கை அட்டை படம் நீல வண்ண பின்னணியில் அருமை .வர வர அட்டை படங்களின் ஈர்ப்பு கூடி கொண்டே செல்கிறது.நண்பர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துகள் !
சார், வானம் எங்கள் வீதி அருமை ! வந்த அன்றே படித்து விட்டேன் ! அற்புதமான கதைக்களம் . மூன்றாம் பாகம் எப்போது என ஏங்கும் வண்ணம் முடிவு அருமை ! காத்திருக்கிறேன் சுவாரஸ்யமுடன் அடுத்த பாகத்திர்க்காக !
Deleteஉயரே ஒரு கழுகு வ்துவக்கம் சாதாரணமாக ஆரம்பமாக நேரம் செல்ல செல்ல முழுவதும் கதையினூடே கரைந்து விட்டேன் என்றே சொல்ல வேண்டும் .
சிறு வயதில் தின மலர் சிறுவர் மலரில் உலக அழிவின் பின்னே கதைகளை படித்துள்ளேன் .அருமையாக இருந்தது . அது போன்ற கதைக்கலங்களுக்காக காத்திருக்கிறேன் . ஒரு சிகப்பு கம்பள விரிப்பை வழங்கலாமே அக்கதைகளின் பொருட்டு .
நள்ளிரவு நங்கை அட்டை படம் நீல வண்ண பின்னணியில் அருமை .வர வர அட்டை படங்களின் ஈர்ப்பு கூடி கொண்டே செல்கிறது.நண்பர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துகள் !
சார், நிறுவனருக்கு சிங்கத்தின் சிறு வயதில் போல முத்துவின் நினைவுகளை கிளற வாய்ப்புதவி செய்யலாமே......!
Delete//சிறு வயதில் தின மலர் சிறுவர் மலரில் உலக அழிவின் பின்னே கதைகளை படித்துள்ளேன் .அருமையாக இருந்தது . அது போன்ற கதைக்கலங்களுக்காக காத்திருக்கிறேன் //
Delete+1
// உயரே ஒரு கழுகு வ்துவக்கம் சாதாரணமாக ஆரம்பமாக நேரம் செல்ல செல்ல முழுவதும் கதையினூடே கரைந்து விட்டேன் என்றே சொல்ல வேண்டும் .//
:)
+1
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : நவம்பர் மாத இதழ்களுக்கான உங்கள் விமர்சனக் கடிதம் பிரமாதம் ! அழகான கையெழுத்து ! சரள நடை !
Deleteவல்லவர்கள் வீழ்வதில்லை- நிறைகள்: தல கதையை பொறுத்தவரை வேகம்தான் அவரது ஸ்பெஷல்,அது இக்கதையில் சரியாக பொருந்தியுள்ளது.மேலும்,இக்கதையில் நிறைய கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் தந்தது சிறப்பு.தல தனி ஆவர்த்தனம் செய்யாமல் இருக்கிறார்.ஆர்ட் வொர்க் பிரமாதம்.புத்தகத்தை கையில் எடுத்தால் கீழே வைக்க மனம் மறுக்கிறது.தலயின் பங்களிப்பு இரண்டாம் அத்தியாயத்தின் மத்தியிலேயே தொடங்குகிறது.மொத்தத்தில் வரலாற்று பின்னணி கொண்ட ஒரு வித்தியாசமான,தலயின் கூட்டு சாகசம் இது.
ReplyDeleteகுறைகள்:முன் அட்டையை விட பின் அட்டை சிறப்பாக இருந்தது போல் தோன்றுகிறது.அதை சற்றே கவனித்திருக்கலாம்.
வானமே எங்கள் வீதி-அட்டை படம் நிறைவாக உள்ளது,கதைக்கான ஆர்ட் வொர்க் பிரமாதம் சார் சான்சே இல்லை.வித்தியாசமான ஒரு கதைக்களம்தான் இது .குறைகள் ஒன்றும் இதில் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை.இது போன்ற ஒரு மாறுபட்ட கதைக்களம் நமக்கு அவ்வப்போது அவசியம் என்று நான் நினைக்கிறேன்.பின்னணி வர்ண கலவைகள் சிறப்பாக உள்ளது.வரலாற்று கலவையை சரியான அளவில் கொண்டு இது போன்ற படைப்புகளை கொண்டு வந்தால் இப்போதைய குட்டி வாசகர்களுக்கும் நிறைய ஆர்வமும்,அறிவுத் திறனும் மேம்பட வாய்ப்புள்ளது.
ReplyDeleteArivarasu : //வரலாற்று கலவையை சரியான அளவில் கொண்டு இது போன்ற படைப்புகளை கொண்டு வந்தால் இப்போதைய குட்டி வாசகர்களுக்கும் நிறைய ஆர்வமும்,அறிவுத் திறனும் மேம்பட வாய்ப்புள்ளது//
Deleteநிஜம் தான் !!
டியர் சர்ர்,
ReplyDelete"நள்ளிரவு நங்கை" அட்டை படம் சூப்பர். பதிப்பகத்தை சேர்ந்த குமர்ர் விரைவினில் குணமடைய வேண்டுகிறேன். சர்ர், தங்கள் தந்தை திரு. சௌந்தரபரண்டியன் அவர்களின் மொழிபெயர்ப்பிற்கு என் வரழ்த்துக்கள். " முத்து " கரமிக்ஸில் எத்தனையோ முத்தரன முத்துகள் , வெளியிட்டவர் அவரல்லவோ? ஆனாலும், இதயசத்திரசகிச்சை செய்யப்பட்டவர் எனும் வகையில் அவருக்கு பூரண ஓய்வு தேவை சர்ர்.( மருத்துவமனையில் உள்ளவன் என்ற ரீதியில்). எனக்கு நீங்கள் அமெரிக்கா சென்றது தெரியரமல் இரவு பதிவுக்கரக கரத்திருந்து விட்டு தூங்க போனேன். ஞாயிறு பதிவிடுவது உங்களுக்கு+எங்களுக்கும் சௌகரியம் என்றே நினைக்கிறேன் .
டயர் சர்ர்,
ReplyDeleteAPOCALYPES நல்ல கதைகளை முயற்சி செய்வதில் தவறில்லையே? இன்னும் ஒரு மரதம் என்றரலும் மருத்துவமனையை விட்டு செல்ல பிடிக்கும்.
உயரே ஒரு ஒற்றைக்கழுகு-நிறைகள்:மொத்த அட்டை,நிறைவான ஆர்ட் வொர்க்,சிறப்பான கதையோட்டம்,காமிக்ஸ் படிப்பதே லாஜிக் இல்லாத குழந்தைத்தனம் என்று சிலர் கூருவதுண்டு.ஆனால்,நெருக்கடியான,கடினமான ஒரு வாழ்வியல் சூழலில் இருந்தாலும் நம்மில் நிறைய பேருக்கு பாண்டஸியை விரும்பும் குணம் ஆழ்மனதில் இயல்பாகவே உள்ளது என்று தோன்றுகிறது.அப்படி உள்ளவர்களுக்கு Magic Wind ஒரு அற்புத விருந்து.
ReplyDeleteகுறைகள்:சில பக்கங்களில் படங்கள் சற்றே கலங்கலாக அல்லது 3 D Effectil உள்ளது போல தோன்றுகிறது.
Arivarasu : //கடினமான ஒரு வாழ்வியல் சூழலில் இருந்தாலும் நம்மில் நிறைய பேருக்கு பாண்டஸியை விரும்பும் குணம் ஆழ்மனதில் இயல்பாகவே உள்ளது என்று தோன்றுகிறது.//
Deleteயதார்த்தத்தின் தற்காலிகப் புறக்கணிப்பே கற்பனை வடிவங்கள் எனும் போது - அவ்வப்போது அதனை நடைமுறைப்படுத்திப் பார்க்கலாம் தானோ ?
பதிப்பக நண்பர் குமார் விரைவில் குணமடைய பிராத்தனை செய்கிறேன்.
ReplyDeleteடியர் சர்ர்,
ReplyDelete"வரனமே எங்கள். வீதி" இப்போது 2 பரகமும் வெளியிட்டதை புண்ணியம் சர்ர். 3 பரகமும் 2015 நடுப்பகுதில்தரன் வெளிவரும் என்னும்போது, அது வரை கரத்திருக்க முடியரது .
ஆசிரியர் சார்,தல யின் The King Special லுக்கு ஏன் வெளியிட்டு எண் தரவில்லை.
ReplyDeleteஉயரே ஒரு ஒற்றைக்கழுகு-எண்-240 எனில் No:239 (OR) NO:241 ?????
சார், பக்கம் 6-ல் மேலே கொஞ்சம் உற்று நோக்குங்களேன்...!
Deleteபக்கம் 6-இல் (வெளியீடு நிர்: ) என்று மட்டுமே உள்ளது நண்பரே.
Deleteவிஜயன் சார், கிராபிக் நாவல் நன்றாக உள்ளது, ஆனால் அவற்றில் விறுவிறுப்பு குறைவு; அதனை படித்தவுடன் புரிவது இல்லை, அதற்கு என அதிக நேரம் செலவழித்து புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்; குடும்பத்துடன் அதிகநேரம் செலவிடும் இந்த கால கட்டத்தில், இதுபோன்ற கதைகளை படித்து விட்டேன் என்பதை தவிர மனதில் எதுவும் நிற்பது இல்லை. இத வருடம் வந்த கிராபிக் நாவல் பக்கம்கள் அதிகம், விறுவிறுப்பு குறைவு; சித்திரம்கள் ரசிக்கும் படி இருந்தன. முடிந்தால் 100 பக்கம்களுக்குள் முடியும் வண்ணம் விறு விறுப்பான கதைகளை நீங்கள் வெளி இட வேண்டும்.
ReplyDelete+1
Deleteவானமே எங்கள் வீதி ……
ReplyDeleteமுழுக்கதையாக வெளிவரும் 'கிராஃபிக் நாவல்'களையே சரிவரப் புரிந்துகொள்ள இயலவில்லையென்று நண்பர்களில் ஒரு பகுதியினர் தொடர்ந்து போர்க்கொடி தூக்குவது போதாதென்று, இப்படி கிராஃபிக் நாவல்களிலும் அந்தரத்தில் தொங்கித் 'தொடரும்' போடும் கதைக்களத்தை தேர்ந்தெடுத்திருக்கிறீர்களே எடிட்டர் சார்!!?! 'இரவே... இருளே... கொல்லாதே!' கதையைக்கூட தனித்தனி பாகங்களாக வெளியிட்டிருந்தால் இந்த அளவுக்கு வரவேற்புப் பெற்றிருக்குமா என்பது சந்தேகமே!
நல்ல அச்சுத்தரமும், அற்புதமான ஓவியங்களும், பிரம்மிக்கச் செய்திடும் வண்ணக்கலவைகளும் இருந்திட்டாலும் கூட 'தொடரும்' என்ற சொல் தாங்கி வந்ததாலும், இதன் இறுதிப்பாகம்(?) வெளியாக இன்னும் முக்கால் வருடங்கள் காத்திருக்க வேண்டுமென்பதாலும் இப்போதைக்கு 'ஙே' என்று முழிப்பதைத் தவிர வேறு வழியில்லை எங்களுக்கு!
Erode VIJAY : பாகம் 3 என்பது உங்களைப் போலவே எனக்கும் ஆச்சர்யம் தந்த விஷயம் ! இத்தொடரின் துவக்க ஆல்பத்திற்குக் கிட்டிய வெற்றி அவர்களே கணித்திரா விதம் இருந்திருக்கக் கூடும் என்பதால் இந்த விஸ்தரிப்பு என்பதே என் யூகம் !
DeleteAnyways, 30 வருடங்கள் ஜவ்வு மிட்டாயாய் இழுத்த நண்பர் XIII -ஐ ஏற்றுக் கொண்டு விட்டோம் ; இன்னும் ஆறே மாதங்களில் வரப் போகும் பாகம் 3-ஐ நிராகரித்தா விடப் போகிறோம் ?!
காத்திருக்கிறேன்.இரு எடிட்டர்களின் கூட்டு கைவண்ணத்தை காண.சக்ஸஸ் ஆனால் தொடருமா இந்த கூட்டணி?எங்களுக்காக
ReplyDeleteSunday Comics ! [1]
ReplyDeleteடியர் விஜயன் சார்,
ஒவ்வொரு ஞாயிறு மட்டுமே புதிய பதிவுகள் என்பதை மனமார வரவேற்கிறேன். இனி தங்கள் பதிவுகள் அனைத்துமே Sunday Comics என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுமாக..! வருங்காலத்தில் தமிழ் வலையுலம் முழுவதும் தங்களின் பதிவுகளை Sunday Comics என்ற பெயரில் மட்டுமே அறியப்பட வேண்டும் என்பது என் ஆவல் மட்டுமல்ல வேண்டுதலும் கூட !
//தவிரவும் ஞாயிறெனும் போது அன்றைய ஒரு நாளாவது நண்பர்களின் பின்னூட்டங்களோடு நானும் இணைந்திட சாத்தியமாகிறது ! Much as I would love to login more often - So உங்கள் கருத்துக்கள் சகலத்தையும் படித்திடுவேன் ; நேரம்கிடைக்கும் போதெல்லாம் உள்ளே புகுந்திடுவேன்//
இந்த வரிகளை தற்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே நான் கருதுகிறேன் சார். இனி போகப் போக மௌன பார்வையாளர்கள் பலரின் பதிவுகள் இடம் பிடிக்கும் என்பது என் நம்பிக்கை. வாசகர்களுக்கு எவ்வளவோ வேலைகள் ; எத்தனையோ சிரமங்கள் ; பிக்கல் பிடுங்கல்கள் என அனைத்தையும் நம் காமிக்ஸிற்காக ஒதுக்கி வைத்து விட்டு கொஞ்சமே என்றாலும் இங்குப் பதிவிடுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். மற்ற நண்பர்களின் வரவேற்பு எப்படியிருந்தாலும் அவர்களுக்கு அது முக்கியமானதாக நிச்சயம் இருக்கப்போவதில்லை. தத்தம் கமெண்டுகள் தன் அபிமான ஆசிரியரின் பார்வைக்குச் செல்கிறது என்ற இந்த உறுதிமொழி நிச்சயம் அவர்களை உற்சாகப்படுத்தும்.
300+ கமெண்டுகளில் காணாமல் போகக்கூடிய ஒரு விஷயத்திற்காக தம்முடைய விலை மதிக்க முடியாத நேரத்தை செலவிட்டு தம் சிந்தனையை இங்குச் செதுக்குவதில் என்ன பயன் தான் இருக்க முடியும் என்பதே பலரின் உள் மனக் கேள்வியாகக் கூட இருக்கலாம். அதற்கான விடையாகவே இந்த வரிகள் அழகாக உத்திரவாதம் அளிக்கிறது. என்னைப் பொறுத்தவரை நீங்கள் பதிலளிக்க வேண்டுமென்பதில்லை ; ஒவ்வொரு கோரிக்கையையும் ஏற்க வேண்டும் என்பதில்லை ; ஆனால், இங்கு பதிவிடப்படும் ஒவ்வொரு வாசகரின் கருத்துகளும் தங்களின் பார்வைக்கு தப்பாமல் இருப்பதே போதுமானது. காமிக்ஸ் வலையுலக வாசகர்கள் சார்பாக நன்றிகள் சார் !
//தம் கமெண்டுகள் தன் அபிமான ஆசிரியரின் பார்வைக்குச் செல்கிறது என்ற இந்த உறுதிமொழி நிச்சயம் அவர்களை உற்சாகப்படுத்தும். //
Delete//நீங்கள் பதிலளிக்க வேண்டுமென்பதில்லை ; ஒவ்வொரு கோரிக்கையையும் ஏற்க வேண்டும் என்பதில்லை ; ஆனால், இங்கு பதிவிடப்படும் ஒவ்வொரு வாசகரின் கருத்துகளும் தங்களின் பார்வைக்கு தப்பாமல் இருப்பதே போதுமானது. //
+1
Sunday Comics !
ReplyDelete[2] டியர் விஜயன் சார்,
தங்களின் சில பதிவுகளைப் படித்தவுடன் ஒரு ஆத்ம திருப்தி கிடைத்து விடும் ; அதுவே ஒரு வாரம் முழுமைக்கும் போதுமானதாக இருக்கும் ! தங்களின் சில பதிவுகளைப் படித்தவுடன் உடனே பதிவிடத் தோன்றும் ; ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போகும் போது மனம் ரொம்பவே கஷ்டப்படும் ! அது போல் எனக்குச் சில மாதங்களாகவே என் எண்ணங்களை இங்கு உடனடியாக பதிவிட முடியாமல் சில பல சிரமங்கள் காரணமாக அமைந்து விடுகிறது. ஒரு பதிவு கடந்தவுடன் அடுத்தப் பதிவில் அதற்கான பின்னூட்டங்கள் நிச்சயம் சுவாரசியம் ஏற்படுத்தப் போவதில்லை என்பதால், எண்ணங்கள் எழுத்துகளாக உருமாற்றம் அடைவதே இல்லை !
அதில் ஒன்று தான் இந்தப் பதிவும் ; அடுத்தவருட அட்டவணையில் தாங்கள் அறிவித்துள்ள கதைத் தொடர்கள் பற்றிய என் எண்ணங்கள் ! க்ரீன் மேனரில் தொடங்கிய ஒரு சிறு தொடக்கம், தேவ ரகசியம் தேடலுக்கல்ல ; இரவே.. இருளே.. கொல்லாதே - என்று வலிமைபெற்று இன்று பௌன்சர் ல் முழுமைப் பெறுகிறது. 2+3+2 என்று ஒரே வருடத்தில், ஒரே தொடரின் ஏழு கதைகள் ; Wow.. பாராட்ட வார்த்தைகளே இல்லை சார் ! இதற்கான காரணத்தை ஓரளவிற்கு யூகிக்க முடிந்தாலும், அதன் பயன் என்னவோ வாசகர்களாகிய எங்களுக்கு அபரிதமாக இருக்கிறது. இது போன்றே ஒவ்வொரு தொடரையும் நீங்கள் அணுக வேண்டும் என்பதே என்னுடைய நெடு நாள் ஆசை ; இந்த பாணி நிச்சயம் உங்களுக்கும், எங்களுக்கும், அனைவருக்கும் சந்தோஷம் தரும் முடிவாக அமைகிறது என்பதால், தங்களுக்கு நன்றிகள் சொல்ல மிகவும் கடமைபட்டுள்ளேன் சார் !
// இது போன்றே ஒவ்வொரு தொடரையும் நீங்கள் அணுக வேண்டும் என்பதே என்னுடைய நெடு நாள் ஆசை ; இந்த பாணி நிச்சயம் உங்களுக்கும், எங்களுக்கும், அனைவருக்கும் சந்தோஷம் தரும் முடிவாக அமைகிறது//
Delete+1
Sunday Comics !
ReplyDelete[3] டியர் விஜயன் சார்,
அடுத்த வருடம் 2015, சந்தா தொடர்பான என் எண்ணங்களையும் தாமதமாகவே பதிவிடுவதில் மிகவும் வருத்தம் அடைகிறேன். திரும்பிய திசை எல்லாம் இனி நம் காமிக்ஸ் கடைகளில் கிடைக்கும் என்பதால், சென்ற வருட சந்தா எண்ணிக்கையை விட இந்த வருடம் நிச்சயம் குறைவாகத் இருக்கும் என்பதை நீங்களே கணித்து இருப்பீர்கள். தீவிர காமிக்ஸ் வாசகர்களைத் தவிர மற்றைய வாசகர்களின் சந்தாவை, எண்ணிக்கையில் நாம் முழுமையாக கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என்பதே தங்களுக்கு முன் இருக்கும் மிகப் பெரிய சவால். அதையும் மீறி சந்தா எண்ணிக்கை சென்ற வருடத்தை விட உயர்ந்து விட்டால் காமிக்ஸின் பொற்காலம் இந்த வருடமே தன்னுடைய அஸ்திவாரத்தை ஆழமாக போட்டு விடும் என்பதில் ஐயமில்லை. அதே சமயம் விற்பனையைப் பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் புதிய உச்சத்தை அடையப் போகிறீர்கள் என்பதிலும் நிச்சயம் சந்தேகமே இல்லை சார் !
எல்லாமே ஒன்று தான் என்றாலும் A+B+C சந்தா 3950 என்று அறிவித்ததற்குப் பதிலாக, packing and forwarding chargesயும் சேர்த்து 2015ன் சந்தா தொகை 5000/- ; A+B+C (super subscription) என்று மூன்று சந்தா கட்டும் சூப்பர் சந்தாதாரர்களுக்கு மொத்தத் தொகையில் 20 சதவீதம் கழிவு என்று அறிவித்திருக்க வேண்டும் என்பதே என் மிகப்பெரிய ஆதங்கம் சார் ! அடுத்த வருடமாவது இந்த வழிமுறையை நீங்கள் பின்பற்ற வேண்டும் என்பதே என் கோரிக்கை !
//மூன்று சந்தா கட்டும் சூப்பர் சந்தாதாரர்களுக்கு மொத்தத் தொகையில் 20 சதவீதம் கழிவு என்று அறிவித்திருக்க வேண்டும் என்பதே என் மிகப்பெரிய ஆதங்கம் சார் !//
Deletegood thought man, for regular subscribers this kind of gimmicks(discount is kind of advantage, they will subscribe no matter what but with some displeasure ) not needed, but this thought might work like charm for getting new subscribers !
திரு. குமார் அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம். magic வின்ட் கதை இரசிக்கும்படி உள்ளது. ஒ.கே. Apocalypse கதைகள் ஏற்கனவே ராணி காமிக்ஸ் இல் வெற்றி பெற்ற கதைகள் தாம் . அருமையான கதைக்களன் உள்ள கதைகள் ஏராளம் . கிராபிக் நாவல் இல் வெளியிடலாம் . கிராபிக் நாவல்களை அமைதியான சூழலில் படிக்கும்போது நம்மால் கதைகளின் பிளாட்டில் எளிதாக ஒன்றிவிட முடியும் என்பது என் கருத்து . கிராபிக் நாவல் அவ்வளவாக விரும்பாதவர்கள் இந்த வழியை முயற்சிக்கலாம். let us try one or two issues in Apocalypse genre editor sir..... thank you..
ReplyDeleteleom : //கிராபிக் நாவல்களை அமைதியான சூழலில் படிக்கும்போது நம்மால் கதைகளின் பிளாட்டில் எளிதாக ஒன்றிவிட முடியும் என்பது என் கருத்து//
Deleteவித்தியாசமான பார்வை ! Worth a try !
டியர் சர்ர் ,
ReplyDelete"சர்ர் இன்னும் வடை வரல"
வயத்தில புகை.
உங்கள் உண்மையுள்ள
திருச்செல்வம் பிரபரனந்
திருச்செல்வம் பிரபரனந் : மேகமூட்டமாய் இருப்பதால் உங்கள் புகை சமிஞ்ஞைகள் தெளிவாகக் கிட்டவில்லை...ஓவர்..ஓவர்..!
Deleteஅட டா அந்த சிரித்த முகத்துடன் சேலம் விழாவில் அனைவரையும் அன்னாசி அன்னாசி என்று அழைத்து கலக்கிய குமார் தம்பியா காலை உடைத்து கொண்டது . அந்த சிரித்து வரவேற்பை தந்த முகம் இன்னும் என் கண் முன் நிற்கிறது . குமார் விரைவில் குணமாக அனைத்து சேலம் நண்பர்கள் சார்பாக பிரார்த்தனை செய்கிறேன் . முடிந்தால் சென்னையில் சந்திக்கலாம் குமார் .
ReplyDeleteசேலம் Tex விஜயராகவன் : கால் தவறிய உடன் சிகிச்சை எடுத்திடாமல் வெறும் சுளுக்காக இருக்குமென்று விட்டு விட்டார் மனுஷன் ; மதியம் வீட்டுக்குப் போய் சாப்பிட்டு விட்டு வந்த கொஞ்ச நேரத்துக்குப் பின் வலி அதிகரிக்க, அதன் பின்னே தான் அலுவலகத்தில் சொல்லியிருக்கிறார் !
DeleteSunday Comics !
ReplyDelete[4] டியர் விஜயன் சார்,
கிராபிக் நாவல்களைப் பொறுத்தவரை அனைத்து ரசிகர்களையும் தங்களால் திருப்திப் படுத்தவே முடியாது என்பது தான் நிதர்சனம். டெக்ஸ் வில்லரின் கதை template இப்படித்தான் இருக்கும் ; டைகரின் கதை template இப்படித்தான் இருக்கும் ; லார்கோ வின்ச் ன் கதை template இப்படித்தான் இருக்கும் - என்று கிட்டத்தட்ட அனைவருமே யூகிக்கக் கூடிய ஒன்று தான் என்பதில் யாரும் மாற்றுக் கருத்துத் தெரிவிக்கப் போவதில்லை. அதே நேரம் கிராபிக் நாவல்களைப் பொறுத்தவரை அது எப்படிப்பட்டதாக இருக்கும் என்று உங்களைத் தவிர வேறு யாராலும் யூகிக்கவே முடியாது என்பதும், வாசகர்களுக்கு மிகப் பெரிய சுவாரசியம் தான் அல்லவா ?
ஒவ்வொரு கதையும் ஒரு ரகம் ; ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாத தனி ரசம் ; கதையைப் படிக்கும் வரை நாம் பெறப்போகும் உணர்வுகள் எவ்விதமானவை என்று தெரியாமல் நம்மை பரிதவிக்க வைக்கும் கிராபிக் நாவல்களும் கூட காமிக்ஸின் ஓர் அங்கம் தானே சார் ?! எனவே எப்பொழுதும் போல் அது தனி ட்ராக்கிலேயே பயணிக்கட்டும், அதாவது, சந்தா A என்று இல்லாமல் சந்தா B யில் வருவது யாருக்குமே சங்கடம் தராத தீர்வாக அமையும் என்பதே என் அபிப்ராயம் !
அதே நேரம், கதைச் சுருக்கம் தரும் போது, கடைகளில் வாங்கும் காமிக்ஸ் வாசகர்கள், கதைச் சுருக்கத்தை மட்டும் படித்து விட்டு, அதை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கும் வாய்ப்புகள் மட்டுமே அதிகம் என்பதையும் தாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள் !
//அதே நேரம் கிராபிக் நாவல்களைப் பொறுத்தவரை அது எப்படிப்பட்டதாக இருக்கும் என்று உங்களைத் தவிர வேறு யாராலும் யூகிக்கவே முடியாது என்பதும், வாசகர்களுக்கு மிகப் பெரிய சுவாரசியம் தான்//
Delete:)
Graphics novel is a kind of dimension must needed for any comics brand to keep it with contemporary(generation now and X) world i feel....
I hoped to see more new genre comics too, but Its OK bouncer fitting most of new genre slot i could see...
மிஸ்டர் மரமண்டை : நேற்றைய "இரத்தப் படலம்" தொடரை இன்று நாம் வெளியிட்டிருக்கும் பட்சத்தில் அவை கூட கிராபிக் நாவலாகத் தான் classify ஆகியிருக்கும் ! அந்த இடியாப்பத்தையே 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே ரசித்து, ருசித்தவர்கள் நம்மவர்கள் ! Just a question of time...and the right choice of graphic novels !
DeleteSunday Comics !
ReplyDelete[5] டியர் விஜயன் சார்,
தற்போதைக்கு இறுதியாக ஒரே ஒரு பதிவு. இது சம்பந்தமாக ஏற்கனவே ஒரு முறை இங்கு பதிவிட்டதாக ஞாபகம். தற்போது தங்கள் உழைப்புக்கு அளவுகோல் எது என்பதை யாராலும் நிர்ணயிக்க முடியாது ; அந்தளவு கடுமையாக உழைக்கிறீர்கள் ; உழைப்பிற்கு உண்டான ஊதியம் தங்களுக்கு கிடைக்கிறதோ, இல்லையோ ஆனால் தங்களின் காமிக்ஸ் அர்ப்பணிப்பு யாராலும் குறை கூற இயலாதவாறு அமைந்துள்ளது என்பதில் யாருக்கும் ஐயமில்லை !
ஒவ்வொரு மாதமும் தவறாமல் காமிக்ஸ் வந்தாலே எங்களுக்குப் போதுமானது. இச்சூழலில் நீங்களாகவே ஒரு தேதியை நிர்ணயித்துக் கொண்டு, அதில் ஏற்படும் தடங்கல்களாலும், சிரமங்களாலும் ஏற்படும் மனஉளைச்சல் தங்களுக்கு அவசியம் தானா ? என்பதே என்னுடைய நெடுநாள் ஆதங்கம் சார்.. உதாரணமாக இந்த மாதத்துக்குரிய காமிக்ஸை 4 ஆம் தேதி அனுப்பி இருக்க இயலா விட்டால் 10 ஆம் தேதி அனுப்பி வையுங்கள் - இதில் எங்களுக்கு என்ன கெடுதல் நேர்ந்து விடப்போகிறது ?! அப்படியும் பணி முடியவில்லை என்றால் 15 ஆம் தேதி அனுப்புங்கள் - நாங்கள் சந்தோஷமாகவே காத்திருபோம் :-)
எனவே, இனி நீங்கள் இப்படி ஒரு அறிவிப்பை தாராளமாக அறிவிக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து - ''ஒவ்வொரு மாதத்திற்கு உரிய காமிக்ஸ் அனைத்தும், பிரதி மாதம் 15 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்படும் !'' அது மாதத்தின் முதல் தேதியாகவும் இருக்கலாம் அல்லது 15 ஆம் தேதிக்குள் ஏதோ ஒரு நாளாகவும் இருக்கலாம். புத்தகங்கள் அனைத்தும் அனுப்பியப் பிறகே அது சம்பந்தமாக இங்குப் பதிவிடப்படும் என்று தாங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என்பதே என் தாழ்மையான கோரிக்கை !
I feel its good to stay with scheduled date! its better to improve as a brand (just my opinion )!
DeleteSatishkumar S : //I feel its good to stay with scheduled date! its better to improve as a brand (just my opinion )//
Deleteநண்பரே, நம்முடைய காமிக்ஸ் வாரம் ஒரு முறை வரும் வாரப் பத்திரிக்கை அல்ல ; மாதம் ஒரு முறை வருவது மட்டுமல்ல, பத்து வருடம் கழிந்தப் பின்பும், அந்தக் காமிக்ஸ் படிக்காத அனைவருக்கும் அது புதிய காமிக்ஸ் ! scheduled date என்பது தற்போதும் கூட நடைமுறையில் இல்லை ; இந்த மாதம் 4 ஆம் தேதி அனுப்பட்ட புத்தகம் அடுத்த மாதம் 8 ஆம் தேதி அனுப்பப்படும். அதற்கு அடுத்த மாதம் 1 ஆம் தேதியே அனுப்பப்படும். இதற்கு முன்பு முந்தைய மாதத்தின் இறுதியில் கூட நமக்குக் கிடைத்தது. எனவே scheduled date என்பது இங்கு அர்த்தமிழந்து போகிறது :-)
என்னுடைய ஆதங்கம் பதிவிலேயே இருக்கிறது நண்பரே !
மிஸ்டர் மரமண்டை : காமிக்ஸிற்குள் தலை நுழைத்துள்ள இந்த 30+ ஆண்டுகளில் கிட்டத்தட்ட எண்பது சதவிகிதத்தை - ஒரு முறையான இலக்கின்றிக் கழித்து விட்டவன் நான் ! அவையனைத்தையும் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்ட நண்பர்கள் வட்டத்துக்கு காலம் கடந்தேனும் நான் செலுத்தும் நன்றியாக இன்றைய இந்த தேதி தவறாமையைப் பார்த்திடுகிறேன் !
Delete30 ஆண்டுகளின் கடனை மூன்றே ஆண்டுகளில் அடைப்பது சாத்தியமாகாதே ?! இயன்றவரை நடை போட்டுத் தான் பார்ப்போமே !
உங்கள் ஆதங்கம்(no question on that) என்னுடையதும் நண்பரே, but புத்தக கடைகாரரிடம் வினவும் வாடிக்கையாளருக்கு ஒரு தேதி தேவை என்பது opinion friend!.. nothing to differ I respect your point but its just my opinion.
Deleteலார்கோ.. ஓஹோன்னானாம் !
ReplyDeletesundaramoorthy j :
//என்னுடைய கேள்வியெல்லாம் , ஏன் இது போன்ற கார்ப்ரேட் ஜேம்ஸ் பாண்டுக்கெல்லாம் அவருடைய நிறுவனம் அபகரிக்கபடுவது மட்டுமே பிரச்சினையாக இருக்கிறது.? ஏன் அவருக்கு வேறு பிரச்னை வருவதில்லை// //ஒர் சாமான்யனின் வாழ்க்கையில் ஏற்படும் தடாலடி மாற்றம்...... ஏன் லார்கோ வாழ்க்கையிலும் ஓர் மாற்றம் வர கூடாது....?//
நண்பரே, நேரமின்மையின் சிரமத்தால், சென்ற பதிவில் தாங்கள் பொதுவில் முன்வைத்திருந்த விவாதத்தில் என்னால் பங்கு பெற இயலாமல் போய் விட்டது. இந்தப் பதிவிலும் தாங்கள் அந்தக் கருத்துகளில் உறுதியாக இருக்கும் பட்சத்தில், விவாதத்தில் என் பங்களிப்பையும் வழங்க என் பெயரை நானே முன் மொழிகிறேன் :-)
சுந்தரமூர்த்தி
ReplyDeleteலார்கோ பற்றிய உங்களின் கருத்தை தெளிவாக அற்புதமான முறையில் ஏற்கனவே பதிவிட்டுவிட்டீர்கள்.
நண்பரே தயவு செய்து அமைதியாக இருந்துவிடுடவும்.
இதற்கு மேல் சிலரின் மொக்கைகளை எங்களால் தாங்க முடியாது.
மூன்று புத்தகத்தையும் படித்து முடித்தாகிவிட்டது.
ReplyDeleteமுதலில் எனது ஆதர்ஸ நாயகனான டெக்சின் வல்லவர்கள் வீழ்வதில்லை. டைகர் கதைதான் டெக்ஸ் பெயரில் வந்துவிட்டதா என்ற சந்தேகம். வரலாற்றோடு பின்னி பிணைந்த கதை. சில சமயங்களில் கதையின் நாயகன் டெக்சா? ஸானா என்ற சந்தேகம் வேறு. ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே விறுவிறுப்பு. கார்சனின் கடந்த காலத்தை பின்னுக்கு தள்ளிவிட்டது.
இரண்டாவது வானமே எங்கள் வீதி ஒரு மனநிறைவை ஏற்படுத்திய கதை இது. 2 சிறுவர்கள், ஒரு சிறுமியின் நட்பை உலகப் போருடன் இணைத்து கதை சென்றவிதம் என்னை வெகுவாக கவர்ந்தது. காதல் கதையை எதிர்பார்த்தவர்களையும் இது திருப்தி செய்திருக்கும் என்று நினைக்கிறேன். கதையின் முடிவு மனதினை கனக்க வைத்து விடக்கூடாதே என்று திக்.... திக்.... மனதுடன் பக்கத்தை புரட்டினால் தொடரும் என்று போட்டு மனதை சங்கடப்படுத்தி விட்டீர்கள். தயவு செய்து அடுத்த வருடம் முடித்துவிடவும்.
காமிக்ஸ் தேடலில் கிடைத்த அறிய பொக்கிசம்தான் இந்த மேஜிக்விண்ட். இந்த மாதிரியான புதுமையான களங்கள் எப்பொழுதும் ரசிக்க வைக்ககூடியதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. கிராபிக் நாவல் வரிசையில் பவுன்சர் உடன் மேஜிக் விண்டையும் சேர்த்திருக்கலாம். ஒன்றுடன் இல்லாது சிறிது கூடுதல் எண்ணிக்கையில் வந்திருக்கும்.
Manogar Palanisamy : மேஜிக் விண்டின் கதைகள் அத்தனையும் இதே பாணியில் தொடரப் போவதில்லை ! சாகசம் # 3 - "ஆத்மாக்கள் அடங்குவதில்லை"யின் தொடர்ச்சியாக நகரும் கதை !
Deleteதவிர, இவற்றின் வண்ண ஆல்பம்கள் - அமெரிக்க (ஆங்கிலப்) பதிப்பிற்காகத் தயார் செய்யப்படுபவை ; இது வரை 4 ஆல்பங்கள் தான் வண்ணத்தில் வந்துள்ளன ! So இந்தத் தொடரை நாம் நிதானமாய்க் கையாள்வதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம் !
//4 ஆல்பங்கள் தான் வண்ணத்தில் வந்துள்ளன ! So இந்தத் தொடரை நாம் நிதானமாய்க் கையாள்வதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம் ! //
Deleteno worries Edit sir, plz do (slow and study) continue Magic wind in color...
கிராபிக் நாவல்களுக்கு கதைச்சுருக்கம்...
ReplyDeleteஇப்போது வருகிற காமிக்ஸ்களில் பின்னட்டைகளில் நாலு வரிகளில் ஒரு கதைச்சுருக்கம் வந்து கொண்டுதானே இருக்கிறது... (அதற்கும் கதைக்கும் உள்ள சம்பந்தம் பற்றி யாராவது விளக்க வேண்டும்) அது போலத்தான்
கி.க.சு.-வும் இருக்கும். என்ன சொல்ல வருகிறேன் என்றால் வாசனை பிரமாதமாக இருப்பதை வைத்து சுவையும் அட்டகாசமாக இருக்கும் என்று சாப்பிடாமலே முடிவு கட்டுவது போன்றது என்பதைத்தான்.
கி.நா. க்களைப் பொறுத்தவரை நான் ஒரு தெனாலிராமன் பூனை போல் ஆகிவிட்டேன். (வேறு பூனைகள் என்னை மன்னிப்பார்களாக...) வா.எ.வீ. மற்றும் பௌன்சர் இரண்டையும் வாங்குவதற்கு பீதி கண்டுள்ளேன். லயன் பேனரில் வரும் எந்த காமிக்ஸ் புத்தகத்தையும் யோசிக்காமல் வாங்கிக் கொண்டு இருந்த என்னை, இப்படி மாற்றிய பெருமை கி.நா. க்களுக்கே.
இந்த கிராபிக் நாவல்கள் பற்றி யோசிக்கும் போது, சிறு பிராயத்தில் பள்ளிக்கூட புத்தகத்தில் படித்த - நிர்வாண ராஜாவை, ஐயயே என சொல்ல ஒரு சிறு குழந்தைக்குத்தான் முடிந்தது - ஒரு கதை ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
அப்புறம்... பெரியவர் பற்றிய எடிட்டரின் சில வரிகள்... நான் வெகு காலம் முன்னரே கோரியது போல், அவரது நினைவுகளை நம்மோடு பகிர்ந்து கொள்ள வைத்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. முடியாவிட்டால், கோரிகை மறுக்கப்படுவதற்கான காரணத்தையும் கேட்டிருந்தேன். தற்போது காரணம் புரிகிறது. ஆனால் இப்போதைய சூழலில் ஏன் தயக்கம் எடிட்டர் சார்?
S.V. Venkateshh : //ஆனால் இப்போதைய சூழலில் ஏன் தயக்கம் எடிட்டர் சார்?//
Deleteதந்தையின் எழுத்து முயற்சிகள் பொழுது போகாத் தருணங்களின் ஒரு one-off முயற்சியாய் இருக்குமே தானேயன்றி தொடர்ந்திடப் போவதில்லை ! கண் பார்வை சார்ந்த பிரச்னைகளை நிறையவே சந்தித்து மீண்டுள்ளவரை எக்காரணம் கொண்டும் மீண்டும் ரிஸ்க் எடுக்க அனுமதிக்க ஆர்வமில்லை !
'எந்தவொரு முன்னறிவிப்புமின்றி நிகழ்காலத்துக்கும்-கடந்தகாலத்தும் மாறிமாறி பயணிப்பதே' கிராஃபிக் நாவல் என்ற அடையாளத்துடன் இதுவரையில் வெளியான எல்லாக் கதைகளுக்குமான ஒரு பொதுவான அம்சமாகக் கருதுகிறேன்!
ReplyDeleteஎடிட்டர் சார், மேற்கூறிய அம்சம் துளியுமின்றி ஒரு கிராஃபிக் நாவலை உங்களால் எதிர்காலத்தில் தர இயலுமா? :)
Erode VIJAY : இறந்த காலத்தின் களங்களே கௌபாய் கதைகள் !
Deleteநிகழ்காலத்தின் கதைகளே லார்கோவும் இத்தியாதியும் !
தனித்தனியாய் அவற்றை ரசிக்க முடியும் போது - கலவையான கி.நா.க்களையும் ரசிப்போமே ?!
சார் மூன்று கதைகளும் முத்துக்கள் ..அருமை..முதலிடம் வானமே எங்கள் வீதிதான் ..ஏன் ?
ReplyDeleteஎதிர் பார்க்க இயலாத கதையோட்டம் ..அற்புதமான சித்திரங்கள் ..இப்படியும் நடந்திருக்க வாய்ப்பு
இருந்திருக்கலாம் என்கின்ற கதை அமைப்பு நன்றி சார் டெக்ஸ் கதை சொல்ல தேவையே இல்லை
அடிதடி கும்மாளம் நல்ல கதை கருவுடன் சபாஷ் ..மூன்றாவது மேஜிக் வின்ட் போ வின் காமெடி
ககக போ...
VETTUKILI VEERAIYAN : டெக்சுக்கொரு கார்சன் என்றால்...டைகருக்கொரு ஜிம்மி என்றால்...லார்கோவிற்கொரு சைமன் என்றால் - மேஜிக் விண்டிற்கொரு போ - காமெடி செய்ய !
Deleteஆர்டினின் மலையோடு மல்யுத்தம் படித்தேன்.
ReplyDeleteசூப்பரான காமெடி விருந்து.
டாக்புல் மாட்டிக்கொண்டு கதறும் இடங்கள் அட்டகாச சிரிப்பு வெடிகள். ஆர்டின் கதைவரிசையில் இந்த கதைக்கு எப்போதும் ஒரு சிறப்பிடம் நிச்சயம் உண்டு.சின்ன கதைதான் என்றாலும் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது. எடிட்டர் சார் இதுபோன்ற கதைகளை அடிக்கடி வெளியிடுங்கள். சூப்பர்.
(என்னாச்சு.? கிரிக்கெட் வெளாட்னோம்.!)
கிட் ஆர்ட்டின் KANNAN : தலைப்பும், அட்டைப்படமும் மட்டுமே எனக்கு ஞாபகத்தில் உள்ளன !! நேரம் கிடைக்கும் போது திரும்பப் படித்துப் பார்க்க வேண்டும் !
Deleteஅருமை கண்ணன் அருமை...கிட ஆர்டின் முதலில் தோன்றிய ஜாம்பஜார்ஜக்கு கதை பிடிக்குமா
DeleteVETTUKILI VEERAIYAN : ஹை ! செமையாக உள்ளது உங்கள் லோகோ !!
Delete//...கிட ஆர்டின் முதலில் தோன்றிய ஜாம்பஜார்ஜக்கு கதை பிடிக்குமா.//
Deleteபடிச்சதில்லை சார். உங்ககிட்ட இருந்தா கொடுத்து உதவுங்களேன்.
அதுமட்டுமல்ல ஆரம்ப கால ஆர்டின் கதைகள் நிறைய படித்ததேயில்லை.(சேமிப்பிலும் இல்லை.)
ஜாம்பஜார்ஜக்கு கதை யாரிடம் இருந்தாலும் தயவு செய்து கொடுத்து உதவுங்கள் ..நானும் படிக்க ஆர்வம்
Delete
Deleteகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
நல்ல கதைகள் நன்றிகள் பல வல்லவர்கள் கதை படிக்கும்போது டைகரின் மின்னும் மரணம்
ReplyDeleteநினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை ..மேஜிக் வின்ட் ? இது ஒரு புது மாதிரியான கதை
என்று மனதை தேற்றி கொள்ள வேண்டியது தான் ...வானமே எங்கள் வீதி சிறுவர்கள் சம்பந்த பட்ட
கதையே அல்ல ..வித்தியாசமான அற்புதமான கதை ..மூன்றாம் பாகம் நான்காம் பாகம் என்றுதொடர நிறைய
வாய்ப்பு இருக்கிறது டிசம்பர் இன்னும் அதிசயங்கள் நிகழ்த்த காத்திருக்கும் மாதம் நன்றி சார் நன்றி
BAMBAM BIGELOW : பிடித்திருக்கும் விஷயங்களை பாராட்டுங்கள் சார் ; நன்றிகளுக்கெல்லாம் அவசியமேது ?
Deleteடியர் விஜயன் சார்,
ReplyDeleteசீனியர் எடிட்டரின் ஆர்வம் பாராட்டப் பட வேண்டிய ஒன்று! இதழ்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்வதைக் கண்டு உங்களுக்கு தோள் கொடுக்க எண்ணியிருப்பார் என நினைக்கிறேன்! மற்றபடி, புத்தகங்கள் இன்னமும் வந்து சேரவில்லை...
மிஸ்டர்... பில்டிங் கட்டுவீங்கன்னு பார்த்தா, ஒத்தை செங்கல்லை நட்டுவச்சுட்டு நடையைக் கட்டுறீங்க? இப்படியே போனா கொஞ்ச நாளுக்கப்புறம் நண்பர் Tex kit மாதிரியே நீங்களும் நம்பர்தான் போடுவீங்க போலிருக்கு! (இன்னிக்கு அவர் 107வது) ;)
Deleteதமிழ் கலைஞர் மிஸ்டர் மரமண்டை உங்கள் பதிவின் நோக்கம் எடிட்டர் சிரமப்படகூடாது என்பதே
ReplyDeleteஇதை வேறு யார் உணர்ந்தாலும் உங்கள் ரசிகன் நான் உணர்ந்து கொண்டேன் இதை தங்களிடம் அன்போடு
தெரிவித்து கொள்கிறேன்
ஆங்! இன்னொன்றை கேட்க மறந்துட்டேனே... எடிட்டர் சார், 'வல்லவர்கள் வீழ்வதில்லை' யில் கதை நெடுக வரும் பாடல் வரிகளை மொழிபெயர்த்தது நீங்களா? கருணையானந்தம் அவர்களா? எதுகை மோனையுடன் அழகாக அமைந்திருந்ததே!
ReplyDeleteஇறுதி அத்தியாயத்தில் சில/பல வரிகள் மொழிமாற்றம் செய்யப்படாமல் ஆங்கிலத்திலேயே இருந்ததும் 'ஏன்?' என்ற கேள்வியை எழுப்பியதே?
Deleteவிஜய் சார் முழுக்க முழுக்க இங்கிலீஷ் பாடல் கவித ..கவித ..ஒன்று இடம் பெற்றதே
Deleteமொழி பெயர்க்க மறந்து விட்டார்களோ
@ வெட்டுக்கிளி
Deleteமொழிபெயர்க்க முடியாத அளவுக்கு 'எசகுபிசகா' ஏதாவது வார்த்தைகள் இருந்திருக்கும்னு நினைக்கிறேன். இல்லேன்னா பாடல்களை மொழிபெயர்த்தவர் திடீர்னு அமெரிக்கா அண்டார்டிகா'னு கிளம்பியிருக்காம்! ;)
மாடெஸ் டிக்கே கோடு போட்ட சட்ட குடுத்தோம் எசகு பிசகுக் கா பயப் படுவோம் ..
Deleteவேறு ஏதோ காரணம் இருக்கும் சார்
வல்லவர்கள் வீழ்வதில்லை...ஒரு மாறுபட்ட அருமையான கதைக்களம். நெடு நாட்களுக்கு பிறகு முழு நிறைவை தந்த டெக்ஸ் கதை . கதையின் கடைசி பக்கத்தை படிக்கும் போது வரும் கண்ணீர் துளியை தவிர்க்க ஏனோ இயலவில்லை ...
ReplyDeleteவல்லவர்கள் வீழ்வதில்லை - 4.5/5
உயரே ஒரு ஒற்றை கழுகு - 1.5/5
வானம் எங்கள் வீதி =-4/5
//இப்போதைக்கு மெரினா பீச்சில் ஒரு Horse riding செய்யுமளவுக்குத்தான் காசிருக்கு, கடல் கம்பிக்கருவி அவர்களே! ;)//@விஜய் ......
ReplyDeleteபூ !!...இதென்ன பிரமாதம் !!! போன வாரம் நான் விசா ,பாஸ்போர்ட் இல்லாமல் அமெரிக்கா ,ஐரோப்பா எல்லாம் போய் வந்தேன் ...எங்கள் ஊர் அய்யனார் கோயில் குதிரை மேல் ஏறி உட்கார்ந்து இடது கையில் லார்கோ புக்ஸ் உடன் என் மனக்குதிரையையும் அய்யனார் குதிரை யையும் தட்டி விட்டேன் ....Europe ,usa tour செவ்வனே முடிந்தது ....(பூனையார்க்கு ஓர் எச்சரிக்கை !!!நீங்களும் இதுபோன்ற உலக பயணம் மேற்கொண்டால் "கான்கிரீட் கானகம் படிக்கிற போது நியூயார்க் நகர வீதிகளில் நாய்கள் அதிகம் ...கவனம் .....:)
அட்டையை கிழிச்சுப் போட்டுட்டா எல்லா டெக்ஸ் கதைகளுமே ஒரே மாதிரிதான்' என்று இனிமேல் யாராவது சொன்னா பிறாண்டிப்புடுவேன் பிறாண்டி! ;)//@விஜய் ......
ஹா !ஹா ஹா !....மனம் விட்டு சிரித்தேன் ....:).....(பூனைகளுக்கு nail clipping செய்யும்
manicure ,pedicure nail salon கள் ஈரோட்டில் உண்டா என விசாரிக்க வேண்டும் ....;)...)
டியர் காமிரேட்ஸ்,
ReplyDelete//Erode VIJAY7 December 2014 21:27:00 GMT+5:30
ஆங்! இன்னொன்றை கேட்க மறந்துட்டேனே... எடிட்டர் சார், 'வல்லவர்கள் வீழ்வதில்லை' யில் கதை நெடுக வரும் பாடல் வரிகளை மொழிபெயர்த்தது நீங்களா? கருணையானந்தம் அவர்களா? எதுகை மோனையுடன் அழகாக அமைந்திருந்ததே!
Reply
Replies
Erode VIJAY7 December 2014 21:31:00 GMT+5:30
இறுதி அத்தியாயத்தில் சில/பல வரிகள் மொழிமாற்றம் செய்யப்படாமல் ஆங்கிலத்திலேயே இருந்ததும் 'ஏன்?' என்ற கேள்வியை எழுப்பியதே?
VETTUKILI VEERAIYAN7 December 2014 21:34:00 GMT+5:30
விஜய் சார் முழுக்க முழுக்க இங்கிலீஷ் பாடல் கவித ..கவித ..ஒன்று இடம் பெற்றதே
மொழி பெயர்க்க மறந்து விட்டார்களோ
Erode VIJAY7 December 2014 21:43:00 GMT+5:30
@ வெட்டுக்கிளி
மொழிபெயர்க்க முடியாத அளவுக்கு 'எசகுபிசகா' ஏதாவது வார்த்தைகள் இருந்திருக்கும்னு நினைக்கிறேன். இல்லேன்னா பாடல்களை மொழிபெயர்த்தவர் திடீர்னு அமெரிக்கா அண்டார்டிகா'னு கிளம்பியிருக்காம்! ;)//
ஈரோடு விஜய் / வெட்டுக்கிளி வீரைய்யன்,
இந்த பாடல் மிகவும் புகழ்பெற்ற ஒரு புரட்சிப்பாடல் ஆகும். இதனை எழுதியவர் ( பீடர் ஷார்னை ) தான் அயர்லாந்தின் தேசியகீதத்தையும் இயற்றியவர். இந்த பாடலையும், எழுதியவரையும் பற்றி தெரிந்துகொள்ள விக்கிபீடியா வின் உதவியை நாடவும்.
அனேகமாக இந்த பாடலுக்கு மரியாதை தரும்விதமாகவே எடிட்டர் இதனை அப்படியே ஆங்கிலத்தில் நமக்கு அளித்திருக்கலாம். அதுவுமில்லாமல் இந்த பாடலின் நியாயம் ஒருவேளை மொழிமாற்றத்தில் கிடைத்திருக்காதோ என்னவோ?
ஒரு மாபெரும் புரட்சிப்படலை அப்படியே வழங்கியமைக்கு ஒரு ராயல் சல்யூட் எடிட்டர் சார்.
தேவை இல்லாத ஒரு பின் குறிப்பு: இந்த கதையானது அமெரிக்க வரலாற்றின் ஒரு மிக முக்கியமான சம்பவமான அலோமோ யுத்தத்துக்கு மரியாதை செய்யும் விதமாக எழுதப்பட்டுள்ளது. கூகிளாண்டவரிடம் The Alomo என்று கேட்டால் அவர் தேவையான தகவல்களை தருவார்.
இந்த அலோமோ பற்றிய திரைப்படங்கள் பல வந்துள்ளன.
பரிந்துரைக்கும் ஒன்று: அமெரிக்க வாத்தியார் ஜான் வெய்ன் இயக்கி, நடித்த தி அலோமோ (1960)
பார்க்கவே கூடாத ஒன்று: ஜான் லீ ஹான்காக் இயக்கிய தி அலோமோ (2004)
Seon Abbott »»bouncer delivery to »»Phillip Joel Hughes »»perfectly legal »»yet became lethal .
ReplyDeleteA friend 's letter about graphic novels »»to editor »»consummately correct opinion »»from his point of view »»reduced number of GN in future ??
எதிர்காலத்தில் கிராபிக் நாவல்களின் எண்ணிக்கை பற்றி என்னுடைய கவலை இப்படி வெளிப்படுகிறது .....