Powered By Blogger

Wednesday, November 12, 2014

சங்கடத்தோடு ஒரு எச்சரிக்கை !

நண்பர்களே,

வணக்கம். இன்னுமொரு இடைச்செருகல் பதிவிது ; துளியும் சந்தோஷம் தராப் பதிவும் கூட  ! நம் கவனத்துக்கு வந்திருக்கும் சில விரும்பத்தகா நிகழ்வுகள் பற்றியும் நமது உறுதியான சிந்தனைகளையும்  இங்கே பகிர்ந்தாக வேண்டிய சூழலில் உள்ளேன் !

புதிதாய் நாம் திட்டமிடும் தொடர்களை அவசரம் அவசரமாய் தமிழில் மொழிபெயர்த்து - ஆங்கிலத்திலோ ; பிற மொழிகளிலோ உள்ள ஒரிஜினல்  சித்திரங்களின் மீது பதித்து - இணையத்தில் பதிவிறக்கம் செய்யும் விதமாய் உலவ விடும் வேலையை ஒரு சிலர் செய்து வருவது நமக்கு ஆதாரங்களோடு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது ! மொழிபெயர்ப்பின் தங்கள் புலமைகளை பறைசாற்றிக் கொள்வது நோக்கமாக இருந்தாலும் சரி  ;  'நாங்கள் தான் இந்தக் கதைக்கு முன்னோடிகளே ; இதைச் சுட்டிக் காட்டியிருக்கா பட்சத்தில் எடிட்டருக்கே இந்தக் கதை பற்றித் தெரிந்திருக்காது !' என்று பீலா விட்டுக் கொள்ளுவது தான் இலட்சியமாக இருந்தாலும் சரி - இந்த விளையாட்டுத்தனங்களை இனியும் நாம் அமைதியாய் சகித்துக் கொள்வதாக இல்லை ! ஒரு புதுத் தொடரின் பிரதான ஈர்ப்பே அதனை நீங்கள் முறையாகப் படிக்கத் துவங்கும் போது தோன்றுகின்ற அந்த freshness தான் எனும் போது - இது போல் அரையணா செலவின்றி செய்யப்படும் வேலைகள் அதற்கொரு உலை வைக்கும் சமாச்சாரம் ! ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கதைத்தொடருக்கும் உரிமைகள் பெற நாம் பணம் புரட்டப் படும் பாடு ஆண்டவனுக்கு மாத்திரமே தெரிந்த விஷயம் ! இந்நிலையில் இது போன்ற amateurish முயற்சிகள் நம் பொறுமையைச் சோதிக்கும் விதத்தில் அமைகின்றன !

தவிர, ஒவ்வொரு கதைத்தொடருக்குமான காண்ட்ராக்டுகளைப் போடும் போது அதனில் ஒரு முக்கிய ஷரத்து இப்போதெல்லாம் உண்டு : அது நாம் பதிப்பிடும் தமிழ் மொழியிலும், தமிழ் மார்கெட்டிலும் இது போன்ற 'உட்டாலக்கடி ' வேலைகளிலிருந்து  அவர்களது கதைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு நம்மைச் சேர்ந்தது என்று !  So இது போன்ற முறையற்ற வேலைகளை அனுமதிப்பது கூட சட்டப்படித் தவறே !

புதியதொரு கதையைத் துவங்கி அதனை upload செய்து விட்டு , தன பெயரிலேயே அதற்கான லின்க்கும் கொடுத்துள்ள நண்பர் தயவு செய்து அதனை இன்றே அகற்றும்படிக் கேட்டுக் கொள்கிறேன் ! 'ஆஹ்..உனக்குத் தெரிந்ததைப் பார்த்துக் கொள் !  " என்ற அலட்சியமே இந்த எச்சரிக்கைக்குப் பதிலாய் இருக்கும் பட்சத்தில் நிலவரம் நிச்சயமாக சங்கடமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் ! இந்த வேலைகளைச் செய்திருக்கும் நண்பர் (!!) இங்கும் எப்போதாவது கலந்து கொள்பவரே  என்ற முறையில் நம் பதிவுகளைத் தவறாது படிப்பவர் என்பது நிச்சயம் ! So - இதனையே ஒரு அதிகாரபூர்வமான எச்சரிக்கையாய்க் எடுத்துக் கொள்ளலாம் ! Please - நீங்கள் செய்யத் துவங்கியிருக்கும் பணியின் நோக்கம் எதுவாக இருப்பினும், கடுமையான சிக்கல்களை விளைவுகளாய்க்  கொண்டு வரக் கூடிய காரியமிது என்பதை உணர்ந்திடுங்கள் ! We are just not going to sit back any longer & just pray for better sense to prevail !

அப்புறம் இது போன்ற வேலைகளை உற்சாகப்படுத்தி ; தவறென்று தெரிந்தும் கூடத் தொடர்ந்திட ஊக்குவிக்க வேண்டாமே ?!! தற்காலிகமாய் நீங்கள் சந்தோஷப்பட்டுக் கொள்ளும் பொருட்டு - அந்த வேலையைச் செய்யும் நபரை சிக்கலுக்குள் இறக்கி விட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணர்ந்திடுவது உங்களுக்குச் சிரமம் இல்லை தானே ? தம் வேலைகளை ஓரம்கட்டி வைத்து விட்டு, விடிய விடிய நாம் செல்லும் ஊர்களிலெல்லாம் நமக்காக ; நம் விற்பனைக்காக ; அதன் மூலம் நம் சிரமங்கள் சற்றே மட்டுப்பட வேண்டுமென்ற நோக்கோடு உதவிடும் வாசக குடும்பம் ஒரு அற்புத உதாரணமாய் நிற்கும் போது - யாருக்கும் பிரயோஜனப்படா இது போன்ற முயற்சிகளை ஊக்குவிப்பதில் என்ன இலாபம் இருந்திடக்கூடும் ? இது போன்ற முறையற்ற செயல்களை நம் கவனத்துக்குக் கொண்டு வந்தால் மூச்சு விடவே திணறிக் கொண்டிருக்கும் நம் போன்ற சிறு நிறுவனங்களுக்கு  நீங்கள் செய்யும் பெரும் உதவியாக இருக்கும் !  Please let's not permit things to go out of hand !! இதனை நம் கவனத்துக்கு கொண்டு வந்துள்ள நண்பர்கள் அனைவருக்கும் நம் நன்றிகள் !


தகவல்கள் கோரி...!

நிறைய சந்தர்ப்பங்களில் நமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாகப் பணம் அனுப்பியதோடு நண்பர்கள் ஓய்ந்து அமர்ந்து விடுகின்றனர் ! சரியான பெயரின்றி ; reference நம்பர்களுடன் மட்டுமே வரும் தொகைகளை யார் கணக்கில் வரவு செய்வதென்று தெரியாமல் நம்மவர்கள் விழி பிதுங்கிப் போகிறார்கள் ! அருள் கூர்ந்து உங்களின் ஒவ்வொரு payment களோடும் ஒரு மின்னஞ்சல் அனுப்பினால் மிக மிக உதவியாக இருக்கும் ! நமது சந்தாப் பட்டியலில் நீங்கள் ஏற்கனவே இருப்பினும் கூட, முகவரி ; தொலைபேசி எண்கள் போன்ற அத்தியாவசியங்களைச் சரி பார்க்க அது பெரிதும் உதவுமே..! 

கீழ்க்கண்ட தேதிகளில் பெறப்பட்டுள்ள இந்த நான்கு தொகைகளும் யாரது பட்டுவாடாக்கள் என்று எங்களால் இனம் காண முடியவில்லை ! அனுப்பிய நண்பர்கள் முழு விபரங்களோடு ஒரு மின்னஞ்சல் அனுப்பிடலாமே - ப்ளீஸ் ! 

நவம்பர் 5 : ரொக்கம் - ரூ.3000

நவம்பர் 6 : வங்கி மூலம் டிரான்ஸ்பர் : ரூ..4000

நவம்பர் 6 : வங்கி மூலம் டிரான்ஸ்பர் : ரூ.3250

நவம்பர் 10: வங்கி மூலம் டிரான்ஸ்பர் : ரூ.3850

நவம்பர் 10 : இராதாகிருஷ்ணன்           : ரூ.3850 


போனில் அழைத்து விபரங்களைச் சொல்லிடும் நண்பர்களும் நிறைய உள்ளனர் ; ஆனால் ஒரு லைனில் பேசிக் கொண்டிருக்கும் போதே அலறும் அடுத்த போன்களின் மீதும் பாதிக் கவனத்தைச் செலுத்தி நிற்கும் சந்தர்ப்பங்களில் உங்கள் தகவல்கள் விடுபட்டுப் போக வாய்ப்புண்டல்லவா ? So பணம் அனுப்பும் வேளைகளில் அதனைக் குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சலை சிரமம் பாராமல் அனுப்பி உதவிடலாமே   ? 

அப்புறம் நமது ஆன்லைன் விற்பனைத் தளத்திலும் (WORLDMART ) 2015-ன் சந்தாக்கள் லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளன ! கிரெடிட் / டெபிட் கார்டுகள் வழியாக சந்தா செலுத்து என்னும் நண்பர்கள் அதனை பயன்படுத்திடலாம் !  Catch you on Sunday folks ! Bye for now ! 

148 comments:

  1. யாருப்ப்பா அது... சீக்கீரம் வந்து புக்கு வாங்கிக்கிங்க!!இல்லேனா பூசணிகள் விகாரமாக சிரிக்க ஆரம்பித்து விடும்!!!

    ReplyDelete


  2. இன்னும் கொஞ்சம் பெருசா போட்ருக்கலாம்.! ஹூம்.!

    ReplyDelete
  3. சேலம் ,ஈரோடு இரு ஊர்களிலும் கலக்கும் விஜய் இன்று முதல் சேரோடு விஜய் என் எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாராக

    ReplyDelete
    Replies
    1. @ கிறுக்கலானந்த கிறுக்கனார்
      திரும்ப திரும்ப பேசுறிங்க
      திரும்ப திரும்ப பேசுறிங்க
      திரும்ப திரும்ப பேசுறிங்க.

      Delete

  4. ஒரு மீள் பதிவு...


    AKK5 November 2014 15:37:00 GMT+5:30
    அன்புள்ளஆசிரியர்க்கு,
    ஒரு தாழ்மையான வேண்டுகோள். தாங்கள் சந்தா தொகையை பெற்றுக்கொண்டவுடன் ஒரு நன்றி smsஒ, emailஒ, சந்தா அனுப்பியவருக்கு அனுப்பிவைத்தால், சந்தா சரியாக சேர்ந்துவிட்டது என்று அனுப்பியவரும் நிம்மதி அடைவர், ஒரு personalized touchஆக மகிழ்ச்சியும் நல்கும். முடிந்தால் 2015ல் செய்து பாருங்கள். நன்றி
    Reply

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பர்களே...

      நேற்று காலையில் நண்பர் ஜெகத்குமார் காட்பாடியில் இருந்து மூன்று சக்கர ஸ்கூட்டியில் அதிகாலையில் கிளம்பி, தனியாகவே சேலம் புத்தகத்திருவிழா நடக்கும் இடத்திற்கு சேர்ந்தார். வண்டியுடன் செக்யூரிட்டி அனுமதிக்காததால் அவர் தடுமாறியபோது பெரிய மழை. கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்துகொண்டே வெளியில் நின்றுகொண்டு போன் செய்தார். ஓடிசென்று அவரை வாகனத்துடன் உள்ளே அழைத்து வந்தோம். அவருக்காக நண்பர்கள் கார்த்திக்,யுவா கண்ணன்,குமார் அண்ணாமலை,ஆட்டியாம்பட்டி ராஜ்குமார்,நெல்லை விஜய்குமார்,கடை மேனேஜர் குமாரசாமி, உதவியாளன் செல்வம், நான் என காத்திருந்து வரவேற்றது நேற்றைய நெகிழ்ச்சியான சம்பவம். 2 வருடங்களாக ஒரு ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டிதிருந்த அவர் போராடி அங்கிருந்து கிளம்பி தன் கையிருப்பு காமிக்ஸ்களை பையில் போட்டு வண்டியிலேயே கையோடு கொண்டுவந்து... " நா நனஞ்ச்சது பத்தி கவலையிலிங்க...பைல என்னோட காமிக்ஸ் புக் இருக்குங்க...அது நனஞ்ச்சிடுச்சான்னு தான் கவலையா இருக்கு..." என உடல் நடுங்க அவர் கூறிய வார்த்தைகளை பல நண்பர்களின் மனதை கனமாக்கியது. இரத்தபடலம் அவர் பைண்டிங் செய்து வைத்திருந்த அழகும், அவருடைய காமிக்ஸ் மேல் உள்ள காதலும், "...'தங்ககல்லறை' எனக்கு கிடைக்குதானே...அந்த புக் 4000 ரூபாய் சொல்றங்க...இந்த விலைக்கு என்னால வாங்க முடியாது எடிட்டர் கிட்ட சொல்லி ஒரு புக் வாங்கிகுடுங்க சார்...பழைய ஸ்டாக் தீந்தமாதிரி இதுவும் தீந்திட்ட நா எங்க போறது..." என்ற ஏக்கம், ஒட்டுமொத்தமாக எங்கள் அனைவரையும் புருவங்களை உயர்த்தி, விழிகளை விரியச்செய்தது.
      நண்பர் கார்த்திக், அவருக்கு குடிநீர், மழைக்கு ஜவ்வு காகிதம் பேக் செய்தது, புதிய புத்தகங்கள் கொண்டுவந்து காட்டியது, தங்ககல்லறை உங்கள் இருப்பிடத்திற்கே நான் கொண்டுவந்து தருகிறான் என உறுதி கூறியது,
      வீடு போய் சேர்ந்ததும்( சேலம் to வனவாசி 35 கி.மீ மீண்டும் 2-1/2 மணிநேரபயணம்) எங்களுக்கு தகவல் தாருங்கள்...என்ற பல அக்கறையான கவனிப்பு பார்க்க..பார்க்க என்ன எழுதி புரியவைப்பதென்றே தெரியவில்லை.
      ஜெகத்குமார் இடையில் பல முறை " மாயாவி சார்...உங்கள அறிமுகம் செஞ்சா ஈரோடு விஜய் வருவாரா...வருவாரா..." என கேட்டுக்கொண்டே இருந்தார். மழை காரணமாக அவரால் நேரத்திற்கு வரமுடியவில்லை. நேரமாகிவிட்டது கிளம்புங்கள்...ஞாயிறு வாருங்கள், நிறைய நண்பர்களை சந்திக்கலாம் என சமாதான படுத்தி அனுப்பிவைத்தோம்.
      சில நிமிடம் நானும் கார்த்திக்கும் அவர் நம் கண்களில் இருந்து மறையும்வரை பார்த்து கொண்டே கண்களாலேயே பேசிக்கொண்டோம்.

      நண்பர்களே முடிந்தால் ஞாயிறு அன்று சேலம் காமிக்ஸ் வேடந்தாங்களுக்கு வாருங்கள்...!

      நண்பர் ஜெகத்குமார் & கார்த்திக் போட்டோ பார்க்க...இங்கே'கிளிக்' செய்யுங்கள்...!

      Delete
    2. நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வு .....ஆனால் காமிக்ஸ் -க்காக என்று மட்டும் அல்ல ..வேறு எந்த காரணம் குறித்தும் டிரைவீலரில் மழைநாளில் நெடுந்தொலைவு பயணம் செய்வது பாதுகாப்பான செயல் அல்ல என ஜெகத்குமாரை கடிந்து கொள்ள எண்ணம் எழுகிறது ..

      Delete
    3. நேற்றைய நிகழ்வை மாயாவி சிவா அவர்கள் தத்ரூபமாக கூறி உள்ளார். மாலை வரை மந்தமாக இருந்த சேல்ஸ் 7மணிக்கு பிறகு ஒரளவுக்கு பிக்கப் ஆனது. நண்பர் காட்பாடி ஜெகத்குமாருக்கு பிடித்த முகமூடி வேதாளர் போஸ்ட்டரை மாயவி சிவா பரிசளித்து அவரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். நீங்களும் உங்களுக்கு பிடித்த பேவரைட் ஹீரோவின் போஸ்டர் வேண்டுமானால் சேலம் ஸ்டால் வாருங்களேன் .

      Delete
    4. @ selvam abirami

      ஆம் நண்பரே...நேற்று இரவு 8:30 க்கு கிளம்பியவர் நடுஇரவு 11:30 வீடு போய் சேர்ந்துவிட்டதாக fb யில் தகவல் வந்தது. காலை முதல் போன் செய்கிறேன், அப்படி ஒரு எண் இல்லை என அறிவிக்கிறது. தொடர்ந்து முயன்று கொண்டுள்ளேன், தொடர்புகிடைக்காதது கவலையாக உள்ளது..!

      Delete
    5. எந்த காரணம் குறித்தும் டிரைவீலரில் மழைநாளில் நெடுந்தொலைவு பயணம் செய்வது பாதுகாப்பான செயல் அல்ல என ஜெகத்குமாரை கடிந்து கொள்ள எண்ணம் எழுகிறது ..

      +1

      Delete
    6. "வணங்குகிறேன் "
      ஜெகத் குமார்.!

      Delete
    7. நண்பர் ஜெகத்குமாரின் காமிக்ஸ் காதல் வியக்கவைத்தாலும், செல்வம் அபிராமியின் கருத்துக்கு பலமாகத் தலையாட்டுகிறேன்.

      Delete
  6. ஆசிரியர் அவர்களுக்கு,

    ஒரு சங்கடமான சூழ்நிலை...old books பற்றி தாங்கள் பதிவு செய்தது இரவு 1 மணி அளவில். நான் உடனடியாக அனைத்து புத்தகங்களும் வேண்டி 2:45 மணிக்கு e-மெயில் அனுப்பினேன். மொத்தம் 900 ரூபாய் விலை என்ற reply வந்த உடனே பணமும் transfer செய்தேன் (39 ஓல்ட் புக்ஸ் + இ.இ.கொ + நவம்பர் books).

    3-4 நாட்கள் எந்த reply-ம் இல்லை. நானும், 'சரி, எல்லாம் சரியாக செய்துவிட்டோமே, disturb பண்ண vendam' என்று விட்டு விட்டேன். ஆனால் 4 நாட்கள் கழித்து, 13 புக்ஸ் மட்டுமே உள்ளன என்று reply வந்தது.

    நான் முன்பே குறிப்பிட்டது போல, இரவு 2 மணிக்கு அலாரம் எல்லாம் வைத்து எழுந்ததுக்குப் பயன் இல்லாமல் போய் விட்டதே? நள்ளிரவில், 1 மணி நேரத்தில் 26 புத்தகங்கள் விற்றுத் தீர்ந்து விட்டன என்றால், அது ஏற்றுக் கொள்ளும்படி கண்டிப்பாக இல்லை.

    ஒருவேளை அப்படி விற்று தீர்ந்து இருந்தால், என்னிடம் 900 ரூபாய் கேட்டு அதே நாள் மெயில் அனுப்பியது ஏன்? கண்டிப்பாக புக்ஸ் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் தான் சென்ற வாரம் முழுதும் போன்-மெயில் எதுவும் செய்யாமல் இருந்தேன். கடைசியில் ஏமாற்றம் தான் மிச்சம்.

    I was pretty confident that the books will be allotted on a first-come-first-served basis. But, நான் அனுபவித்தது வேறு. இதைப் பற்றி ஈ-மெயில் அனுப்பினேன், reply இல்லை. எனவே இங்கே நேரடியாகப் பதிவிடுகிறேன்.

    இதன் பின்னும் நான் இருக்கும் புத்தகங்களை அனுப்பி விடுங்கள் என்று கூறினேன். 'மரணத்தை முறியடிப்போம்' 2 புக்ஸ் வந்துள்ளன. 2015 அட்டவணை வரவே இல்லை. நான் அனுப்பிய 900 ரூபாய் தொகையில் மீதம் எவ்வளவு உள்ளது என்று கேட்டு இருந்தேன்; அதற்கும் பதில் இல்லை.

    இது போன்ற குளறுபடிகளால் சந்தா கட்டுவது பற்றி மறுயோசனை செய்ய வேண்டி உள்ளது. தாங்கள் சில நிமிடங்களை செலவு செய்து, மேலே உள்ள வினாக்களுக்கு பதில் அளித்தால் it will definitely help reinstate my confidence.

    நன்றி...

    ReplyDelete
  7. நண்பர்களே எனக்கு இந்த சந்த புரியவில்லை இன்று வோர்த்மர்ட் இல் PC சந்த RS .5450 என்று உள்ளது இது யாருக்கு நான் ஈரோடீற்கு எவ்வளவு கட வேண்டும் a +b +c ?

    ReplyDelete
    Replies
    1. இந்த தொகை உண்மையிலேயே குழப்பமான ஒன்று ......world mart -ன் வழக்கமான 5% கமிஷன் தொகைக்கும் பொருந்தவில்லை ......அனைத்துமே வெளிமாநில புரொபஷனல் கூரியர் +5% கமிஷன் என்றாலும்கூட கூடுதல் தொகைதான் ....
      (மத்திய அரசு வெளியிட்ட ஸ்விஸ் பாங்க் a/c லிஸ்ட் -ல் புரொபஷனல் கூரியர் சேர்மன் பெயர் இருக்கிறதா என பார்க்க வேண்டும் ;) .....]

      Delete
  8. நான் போன் செய்த போது ரிசீவரை எடுத்து கீழே வைத்து விட்டார்கள். நான் ரு600 பணம் அனுப்பியது கிடைத்ததா என கேட்க தான் போன் செய்தேன். மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து விபரத்தை சொன்னேன்

    ReplyDelete
  9. Sir I have credit card. Is it possible to pay by credit card from srilanka in world mart?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Jude roshan BLUTCH : You can try ; if the gateway accepts payments in Rupees - great !

      Delete
    4. @ jude roshan BLUTCH: if it successful please mention here. ....!

      Delete
  10. @Edi

    "நவம்பர் 6 : வங்கி மூலம் டிரான்ஸ்பர் : ரூ.3250"

    - Looks like mine. Immediately after transfer i have sent a detailed mail to your id. I have forwarded that mail again now.

    As of now for all announced future books i have paid the subscription. If it is otherwise please let me know.

    ReplyDelete
  11. "தாங்கள் சந்தா தொகையை பெற்றுக்கொண்டவுடன் ஒரு நன்றி smsஒ, emailஒ, சந்தா அனுப்பியவருக்கு அனுப்பிவைத்தால், சந்தா சரியாக சேர்ந்துவிட்டது என்று அனுப்பியவரும் நிம்மதி அடைவர், ஒரு personalized touchஆக மகிழ்ச்சியும் நல்கும்"

    +999

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    நான் (from Sri Lanka.)+6 கு மட்டுமே சந்தா செலுத்தி உள்ளேன்.
    செப்டம்பர் மத்தியில், எனக்கு செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியான மில்லியன் ஸ்பெசல் கிடைக்கவில்லை (எனது நாட்டில் உள்ள மற்ற நண்பர்களுக்கு கிடைத்ததால் ) என்று கூறியதுக்கு என்னும் konjam காத்திருக்க சொன்னீர்கள். நானும் அடுத்து வந்த ஒவ்வொரு 2 வாரத்துக்கும் ஒரு முறை இங்கும், மெயில் லயும் போட்டும், புத்தகமும் வரவில்லை ; பதிலும் வரவில்லை. சிலசமயம் இங்கு தபால் பரிமாற்றங்களில் தொலைந்திருக்கும் என்று விட்டு விட்டேன். அதுக்கு பிறகு "தீபாவளி ஸ்பெஷல்" ம் கிடைக்காது போகவே, அலுவலகத்துக்கு தொடர்பு கொண்ட போது, இன்னமும் உங்களுக்கு 2 புத்தகங்களும் அனுப்பவில்லை. கிங் ஸ்பெஷல் ம் வெளியான பின்பு ஒன்றாக அனுப்பப்படும், தபால் செலவை குறைக்க என்று கூறினார்கள். அந்த சமயத்தில் தொலைதொடர்பில் ஏற்பட்ட பிழையால், மீண்டும் 2 நாட்கள் கழித்து கடந்த சனிக்கிழமை தொடர்பு கொண்ட போது, மில்லியன் ஸ்பெசல் + தீபாவளி ஸ்பெஷல் அன்றய தினம் மாலை அனுப்புவதாக சொன்னார்கள். என்னும் 3-4 நாட்களில் வந்துவிடும் என்று நம்புகிறேன் .

    தபால் செலவு காரணத்தை நான் ஏற்று கொள்கிறேன். புத்தகங்களை தபால் செலவு காரணமாக ஒன்றாக அனுப்புவோம் என்று நான் கேட்ட போது இங்கோ / மெயில் லையோ நீங்களாவது சொல்லி இருந்தால், (கேக்காமலேயே சொல்லி இருக்க வேண்டும் ) நான் அமைதியாக இருந்திருப்பேன். இன்று வருமா, இன்று வருமா என்று தினமும் எதிர்பார்த்திருக்க மாட்டேனே. வீட்டில் எந்நேரமும் புத்தகம் வந்தால் வான்குவதுக்கு குடும்பத்தில் ஒராளை காவலுக்கு வைத்து விட்டு சென்று இருக்கமாட்டேனே.

    இவளதுக்கும் மத்தியிலும் மின்னும் மரணம் சந்தா செலுத்தியாயிற்று. :)
    Still feeling hopeful :)
    ..........................................................................................................................
    niru14 September 2014 09:21:00 GMT+5:30

    Sir
    I hav not received million special yet. I paid only for +6 books. Cn u pls chk and tell me
    Name : K. Nirujan
    From sri lanka
    Reply
    Replies

    Vijayan14 September 2014 13:54:00 GMT+5:30

    niru : All airmail parcels were sent on 3rd Sep'14. Please do wait a bit more !
    ...............................................................................................................

    12 November 2014 19:50:00 GMT+5:30

    ReplyDelete
  14. தினமும் நமது ஸ்டாலுக்கு சென்று கலக்கிவரும் நண்பர்களை நினைத்தால் பொறாமையா இருக்கு. என்னால் அதுபோல் கலந்துகொள்ள முடிவதில்லையே.!
    எண்ணமெல்லாம் அந்த திருவிழாவைப் பற்றியே.!
    மாமா டெக்ஸ் விஜயர்
    மாயாவி சிவா
    கார்த்திக்
    யுவா கண்ணன்
    சேரோடு விஜய் (அப்பப்போ போறிங்களாமே.)
    குமார் அண்ணாமலை
    "சிலந்தி " ஸ்ரீதர்
    இன்னும் என் சின்ன மூளையில் நினைவில் கொள்ளாத உன்னத நண்பர்கள் அனைவருக்கும் (லேசான ஸ்டொமக் பெயினுடன்.) வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
    Replies
    1. என்னை மாதிரியே எட்டிப்பார்த்த Dr.சுந்தரையும் வயிற்றுவலி இல்லாமல் பாராட்டுகிறேன்.
      சில நல்ல நண்பர்களின் பெயர்கள் சட்டென்று நினைவுக்கு வரவில்லை.(வயசாகிட்டே போகுது பாருங்க.) எனவே ஸ்டாலில் நிறைய நேரம் செலவிட்டும் நான் பெயர் குறிப்பிட மறந்த நண்பர்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். (உரிமையோடு போன் போட்டு திட்டுனீங்கன்னா எனக்கு நிம்மதியா இருக்கும்.)

      Delete
  15. ஒரு நிழல் நிஜமாகிறது.:-

    கொஞ்சம் கிளுகிளு
    நெறய்ய குளுகுளு
    கொஞ்சம் விருவிரு
    நெறய்ய சுருசுரு

    சதுரங்கம் :-
    கிளுகிளு குளுகுளு ஜிகுஜிகு
    விர்விர் டமால்டுமீல்
    மறுபடியும் கிளுகிளு குளுகுளு
    கொஞ்சம் சேர்போரு அப்புறம் ஜிவ்வ்வ்வு.,!
    முடிஞ்ச்சு.!

    ஸாரா கருப்பழகி -ப்ளேர் வெள்ளை அழகி
    ஆனா ரெண்டு பேரும்
    பழுப்பழகிகளா தெரியறாங்களே.!,?

    லார்கோ கதைகளில் தற்போது நிறவேற்றுமையே தெரிவதில்லையே.!
    ரொம்ப அடர்த்தியான வண்ணங்கள் ரசிக்கும்படி இல்லை.! (இல்ல நாந்தான் இலவச கண் சிகிச்சை முகாமுக்கு போகோணுமா.?)

    ஆனால் கதை வழக்கமான விறுவிறு லார்கோ சாகசம்.!

    ReplyDelete
    Replies
    1. \\ஸாரா கருப்பழகி -ப்ளேர் வெள்ளை அழகி
      ஆனா ரெண்டு பேரும்
      பழுப்பழகிகளா தெரியறாங்களே.!,?\\

      நாம் எந்த "கலரை ""பார்க்காமல் விட்டோம் ??...;)

      //தற்போது நிறவேற்றுமையே தெரிவதில்லையே.! //

      நிற வேற்றுமை ஒழிக்க லார்கோவின் contribution மங்கூஸ் ..;)

      //அடர்வண்ணம் குறித்து எடிட்டர் ஏற்கெனவே பத்தி பத்தியாய் விளக்கி இருக்கிறாரே மங்கூஸ் //.......ஆமாம் ...stomach ache ...எதனால் ?..சிரிப்பினாலா ...?அல்லது "உள்ளே "போன முட்டை போண்டா -க்களால் ???;)

      Delete
    2. செல்வம் அபிராமி,
      எடிட்டர் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் கலர்ஸ வகைவகையா பாக்க முடியலியேன்னுதான் வருத்தம்.! இந்த இடத்துல கலருன்னா கதையில வரும் கேர்ள்ஸ்ன்னு நீங்களாவே நெனச்சிக்கிட்டா நான் பொருப்பில்லை.!
      அப்புறம் வயிற்றுவலிக்கு காரணம் முட்டைபோண்டா அல்ல.! ஹிஹிஹி மட்டன் பி(பெ)ரியாணி வித் லெக்பீஸ்.!

      Delete
    3. சாப்பிட வாங்க ,சாப்பிட வாங்கனு பல முறை கூப்பிட்ட போதும் இல்லை நான் சாரதிக்கோ சரவண பவணுக்கோ போரன்னுட்டு பிரியாணி போட்டுவிட்டு வந்தீர் அல்லவா. வலிக்காம வேறு என்னா செய்யும் . அதுக்குத்தான் பாருங்கள் என்னைப்போல் நாட்டுக்கோழி பிரியாணி சாப்பிட்டு இருந்தால் தப்பித்து இருக்கலாமே மாமா .

      Delete
  16. //BAMBAMMU .,மங்கூஸ் ,ஆதி தாமிராவோ தங்கமோ அவங்கதான்
    நிக்க வச்சி கேள்வி கேட்கிறோம் ஏன்யா பரிசுன்னாதான் உங்க மூழை வேலை செய்யுமா மத்த நேரத்திலே
    வேலை செய்யாதா ன்னு கேட்கிறோம்.//

    நல்லா கேளுங்க வெட்டுக்கிளியாரே.!
    உங்க பாணில சொல்லணும்னா ,

    ரேசன் கடையில நாம க்யூவுல மண்டைவெயில்ல நின்னு காஞ்சிட்டு இருக்கும்போது ஒருத்தன் ஹாயா குருக்க பூதும்போது அவன கேப்பமே., அதுமாதிரி சகட்டுமேனிக்கு கேளுங்க.!

    ஆனா மங்கூஸ மட்டும் உக்கார வெச்சி கேட்டிங்கன்னா பராவல்லன்னு தோணுது.ஏன்னா, மாயாவி சிவாவோட "அன்பு "கட்டளைக்கு அடிபணிஞ்சி மங்கூஸ் ரெண்டு டயலாக்கு எழுதியிருக்காப்போல.!

    ReplyDelete
    Replies
    1. நண்பர்கள் ஜோவியலாக எடுத் து கொள் வீர்கள் என்ற நம்பிக்கையில் ....

      Delete
  17. நேயர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் ஒலிக்கவிருக்கும் அந்தப்பாடல்....

    சேலம் புத்தகத் திருவிழாவில்
    "பறந்துவரும் தோட்டாக்களும்... எகிறிவரும் எதிர்பார்ப்புகளும்..." இங்கே 'க்ளிக்'குங்க பாஸு!

    ReplyDelete
  18. Piracy... எங்கும், எதிலும்!!!

    ReplyDelete
  19. நேற்று இங்கே காலை முதல் மாலை வரை மழை பெய்து கொண்டே இருந்தது. மாலை வேளையில் நண்பர்கள் வரவும் விற்பனையும் சற்றே சூடு பிடித்தது. அப்புறம் வெளியூர் நண்பர்கள் ஞாயிறு இங்கே வர இருந்தால் உங்களுக்கு பிடித்த ஹீரோவின் பெயரை சொன்னீர்கள் என்றால் ,மாயவி சிவா அந்த ஹீரோவின் 4படங்களையும் உங்கள் பேரையும் போட்டு ஒரு ப்ளோ அப் போஸ்டர் அடித்து அன்பளிப்பு ஆக தருவார் . வெள்ளிக்கிழமை இரவுக்குள் முன்பதிவுக்கு முந்துங்கள் . நீங்கள் வர இருக்கும் நேரம் , பெயர் மொபைல் எண் என என்னுடைய நம்பர் 9629298300க்கோ அல்லது viji.comics@Gmail.com க்கோ மெசேஜ் தட்டுங்கள். தலை ரசிகர்கள் மட்டும் காதை குடுங்கள் ஒரு ரகசியம். தலை ரசிகர்கள் என்றால் சனிக்கிழமை இரவு வரை ஒரு நாள் எக்ஸ்ட்ரா டைம் அவரிடம் பேசி வாங்கி உள்ளேன். தலை ரசிகர்கள் அழையுங்கள் சனிக்கிழமை இரவு 10மணிவரை.

    ReplyDelete
  20. எடிட்டரின் updated பதிவு "சங்கடத்தோடு ஒரு எச்சரிக்கை" ரெடி நண்பர்களே!

    ReplyDelete
  21. Who is that Black Sheep, any guess guys?

    ReplyDelete
  22. காமிக்ஸ் கதை திருட்டை கடுமையாக கண்டிக்கிறேன்

    ReplyDelete
  23. கெ ட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே ங்கிறதுக்கு நீதான் உதாரணம் ஸ் பைடரு
    ஏன் ஸ்டீலு ...
    கஷ்டப்பட்டு வாங்கின ஒரு சிக்கன் பிரியாணியிலே இருந்த லெக்பீசை எனக்கு கொடுத்து
    இருக்கியே

    ReplyDelete
  24. இங்கு தளத்தில் எப்போதாவது பதிவிட்டாலும் குறிப்பிட பட்ட" நண்பர் "அறியாமையாலோ ஆர்வ கோளாறு காரணமாகவோ இப்படி செய்து விட்டார் என நம்புவோம் ...எடிட்டர் -ன் எச்சரிக்கை உணர்ந்து பிழையை திருத்தி கொள்ளவும் .....எடிட்டர் -க்கு வருத்தம் தெரிவித்து ஈ-மெயில் அனுப்பி விட்டால் இனி எல்லாம் சுகமே ...காப்பிரைட் ,சைபர் க்ரைம் சட்டங்கள் இப்போது கடுமையாக்க பட்டுள்ளன .......

    ReplyDelete
  25. என்ன இருந்தாலும் எடிட்டருக்கு நம்மளை விட அந்த ரத்தபடல பசங்க மேலேதான் மதிப்பு ஜாஸ்தி
    ஏன் ஸ்டீலு
    அவங்களை பத்தி எழுதினா caption ஆம்..நாமன்னா மொக்கையாம்

    ReplyDelete
  26. ஆர்ச்சி கண்ணீர் விட்டு நீ பார்த்திருக்கியா ஸ் பைடரு ..?
    இல்லியே..
    த்ரிச்யம் படத்தை DVD யிலே போட்டு காட்டினேன்..மீனாவுக்கு இவ்வளவு வயசாயிடுச் சான்னு
    ஒரே அழுகை ..

    ReplyDelete
  27. //புதியதொரு கதையைத் துவங்கி அதனை upload செய்து விட்டு , தன பெயரிலேயே அதற்கான லின்க்கும் கொடுத்துள்ள நண்பர் தயவு செய்து அதனை இன்றே அகற்றும்படிக் கேட்டுக் கொள்கிறேன் !//

    who ever it is if its done unknowingly plz do correct it friend!

    ReplyDelete
  28. To: Edit,

    காமிக்ஸ் பைரேட் செய்வது சட்ட விரோதமானது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆயினும் ஆங்கிலத்தில் அனைத்து காமிக்ஸ்களும் இணையத்தில் தாராளமாய்க் கிடைக்கின்றன. அதனை தடுப்பது இயலாத காரியமாகவே உள்ளது. அதே நேரம், நமது லயன், முத்து, காமிக்ஸ்களை ஸ்கேன் செய்து வைத்துள்ளோம் என்றும் விலைக்கு வேண்டுமா என்றும் இந்தியாவிலிருந்து எனக்கும் மின்னஞ்சல், அழைப்புக்கள் வந்திருந்ததை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கலர் காமிக்ஸ் வெளியிட்டவர்களையும் சில நண்பர்கள் அம்பலப்படுத்தியிருந்தார்கள். இது விடயத்தில் ஆசிரியர் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதை இங்கு குறிப்பிட்டால் நல்லது. மற்றவர்களுக்கும் அது ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.

    அதேவேளை, ஆசிரியர் 'இந்தக் கதையை வெளியிடவுள்ளோம்' என்று தெரிவித்ததை தொடர்ந்து இணையத்தில் குறித்த கதை தொடர்களை மொழி மாற்றுவதை நண்பர்கள் எந்தவித எச்சரிக்கை அல்லது கோரிக்கைகள் இன்றியே நிறுத்திவிடுவதே வழமையாக உள்ளது. எனவே இந்த விடயத்தில் ஆசிரியர் பதட்டமடையவேண்டியது இல்லை என்பதே எனது கருத்து.

    குறித்த கதையை பகிர்ந்த நண்பர்கூட முன்னரே தமிழில் மொழிமாற்றப்படுகிறது என்பதை அறிவித்திருந்தார். தமிழில் கதை வருகிறதாம் என்று தெரிந்ததும் முயற்சியை இடையில் கைவிட்டதாகவும் அறிவித்துள்ளார். ஆயினும் அவர் அதனை வலையேற்றாமலிருந்திருக்கலாம் என்பதும் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

    தமிழில் வெளிவரும் எந்த நூல்களையும், வார இதழ்களையும் பாரபட்சமின்றி இணையத்தில் ஏற்றும் பல தளங்கள் இருக்கும்போதும். எமது இதழ்கள் இதுவரை இணையத்தில் ஏற்றி பகிரப்படவில்லை என்பதும், இது தொடர்பில் நண்பர்கள் தமக்குள்ளேயே கட்டுப்பாட்டோடு இருப்பதும் (ஒரு வேளை வெளியில் நல்ல விலை கிடைப்பதும் காரணமாக இருக்கலாம்!) கவனிக்கத்தக்கது.

    ReplyDelete
    Replies
    1. நமது லயன், முத்து, காமிக்ஸ்களை ஸ்கேன் செய்து வைத்துள்ளோம் என்றும் விலைக்கு வேண்டுமா என்றும் இந்தியாவிலிருந்து எனக்கும் மின்னஞ்சல், அழைப்புக்கள் வந்திருந்ததை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.!??!!!?!?!? அவர்கள் ஏன் வெளிநாட்டில் உள்ள தங்களது பணத்தினைக் குறிவைக்கிறார்கள்? கண்டிப்பாக ஆராய வேண்டிய விஷயம்! விளையாட்டாக ஆரம்பித்து அந்நிய செலாவணி வரை சிக்கலாகிவிடும் என்பதனை அவர்களுக்கு எடுத்துக் கூறி அவர்களது கோரிக்கையைப் புறம் தள்ளி விடுங்களேன்? உங்களைப் போன்ற அயல் நாடு வாழ் தமிழர்களை எப்போதுமே ஒரு கூட்டம் குறி வைத்துக் கொண்டே இருப்பது தாங்கள் அறியாததல்லவே? காமிக்ஸ் மட்டுமல்ல இன்ன பிற விஷயங்களையும் சேர்த்தே சொல்கிறேன். இங்குள்ளவர்களை வெளிநாட்டுக்கு நல்ல வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்து அங்கே ஒட்டகம் மேய்க்க விடும் அவலமும் இது போன்ற துயரம் நிறைந்ததுதான் நண்பரே! பணத்தினை முன்னிலைப்படுத்துபவர்கள் நிலைத்து நிற்க முடியாது என்பது கடந்த காலம் காட்டும் உண்மை! அது இங்குமே பொருந்தும்! அந்த மின்னஞ்சல் மாயாவிகளை அடையாளம் காட்டுவதில் தயக்கம் காட்டினீர்கள் எனில் உங்கள் பர்ஸ் மட்டுமல்லாமல் நமது மற்ற காமிக்ஸ் நேய நண்பர்கள் கூட தப்பிப்பார்கள் அல்லவா? யோசித்து செயல்படுங்கள் நண்பரே| இது பணம் நோக்கிய கூட்டம் அல்ல_நமது ஆசிரியரின் வழியில் அன்பை நாடிடும் நேசக் கரங்களின் கூட்டணி என்பதனை மீண்டும் நிலை நாட்டலாம் வாருங்கள்! (ரொம்பப் பேசிட்டேனோ? ஹீ ஹீ ஹீ )

      Delete
  29. அன்புள்ள ஆசிரியருக்கு,


    பல நாடுகள் மற்றும் பதிப்பகங்களிலிருந்து பலவிதமாய் காமிக்ஸ் படித்திருந்தாலும் - லயனில் வெளிவரும் முன்பே பிரான்கோ - பெல்ஜியன் வகையறாக்களுக்கு வழக்கப்படிருந்தாலும் (Tintin - as early as 1983, while still in Third standard) எனது மனதுக்கு நேசமான, நெருக்கமான காமிக்ஸ் நமது லயன் கமிக்ஸ்தான் என்பது நீங்கள் அறியாததல்ல. அந்த உரிமையில் இந்த மடல். உரத்த சிந்தனைகள் சில சமயங்களில் பின்னோக்கியும் இருக்க வேண்டும்.

    Knowing piracy kills creativity I had stopped watching pirated DVDs since 2003. As a result with my lack of time - I end up watching 1-2 movies a year in theatre and less than a handful in TV every year.

    Given this background:

    தமிழில் scanlation செய்பவர்கள் உங்களுக்கு போட்டியாகவோ, உங்களுக்கு ஒரு point prove செய்யவோ இவற்றை செய்வதில்லை. Bluecoats ஆரம்பித்து நீங்கள் வெளியிடுகிறீர்கள் என்ற உடனே நிறுத்தி விட்டார்கள். லக்கி லூக்கும் அவ்வாறே. Dylan Dog was stopped the same way. இப்போதும் Bouncer நிறுத்தப்பட்டுவிட்டது என்பதை அந்த நபரே அறிவித்துள்ளார். Scanlation is for fans, by fans - and is not printed and sold - neither is it easy to print and circulate those copies given the cost it incurs.

    இது இவ்வாறு இருக்க, தற்போது உங்களுக்கு மீடியாவிலும், கண்காட்சியிலும் பக்க பலமாய் இருக்கும் 'நண்பர்கள் (!)' சிலர் - நீங்கள் இடைக்காலத்தில் சோர்ந்து காமிக்ஸ் வெளியிடாமல் இருந்த பொழுது குழு அமைத்து காமிக்ஸ் கள்ளத்தனமாய் பதிப்பித்து அவற்றை அநியாய விலைக்கு விற்றதை அறிவீர்கள்தானே ? சிவகாசிக்கு அருகில் இருக்கும் நாம் அறிந்த பொது நண்பர் மேலும் விவரம் அறிவார். அப்போதைய சமயத்தில் வாய் திறக்காமல் இப்போது ஆர்வக்கோளாறினால் செய்யப்பட்டு - தாங்கள் தொடங்குகிறீர்கள் என்ற மட்டில் நிறுத்தப்படும் முயற்சிகள் மீது மட்டும் கை நீட்டுவது நியாயமல்லவே !

    அருள் கூர்ந்து இவ்விஷயங்களில் ஒரு consistency கொணருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இம்மடல் மூலம் உங்களது சிறிய டீமின் அயராத முயற்ச்சியை downplay செய்வதல்ல என் நோக்கம் - உங்களின் முயற்சிகளால் எனக்கும் மகிழ்ச்சியே - எனினும் as we scale up and grow, so should be our consistency !

    Thanks for time,

    Comic Lover

    ReplyDelete
    Replies
    1. @Raghavan: // அருள் கூர்ந்து இவ்விஷயங்களில் ஒரு consistency கொணருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். //

      கம்பரிசன்கள் அனைவரையும் இக்கட்டுக்குதான் அழைத்துசெல்லும் - No one gains. எடிட்டரின் கீழ்க்கண்ட விளக்கம் சற்று முக்கியமானது என நினைக்கிறேன்:

      Vijayan: // தவிர, ஒவ்வொரு கதைத்தொடருக்குமான காண்ட்ராக்டுகளைப் போடும் போது அதனில் ஒரு முக்கிய ஷரத்து இப்போதெல்லாம் உண்டு : அது நாம் பதிப்பிடும் தமிழ் மொழியிலும், தமிழ் மார்கெட்டிலும் இது போன்ற 'உட்டாலக்கடி ' வேலைகளிலிருந்து அவர்களது கதைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு நம்மைச் சேர்ந்தது என்று ! So இது போன்ற முறையற்ற வேலைகளை அனுமதிப்பது கூட சட்டப்படித் தவறே ! //

      Delete
    2. Ramesh Kumar - I am pointing at the same thing - XIII many volumes and Thangak Kallarai have been produced in color long ago by this gang of 'friends' :-) Some of them had Lion translated dialogues !

      I am against piracy - but zoning out a single person when especially in the past, such measures had been circumvented is what is not acceptable.

      Delete
  30. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. Podiyan : அருள் கூர்ந்து நண்பர்கள் தத்தம் அபிப்ராயங்களை மாத்திரமே இங்கு பதிவிடக் கோருகிறேன்..! வெவ்வேறு தளங்களிலிருந்து cut & paste வேண்டாமே ! கருத்துக்கள் எதுவாகயிருப்பினும் நேரடியாய்ப் பதிவு செய்யும் வேளைகளில் நான் பதில் சொல்வது பொருத்தமாய் இருக்கும் ; proxy பின்னூட்டங்களுக்கு அல்ல !

      Delete
    2. நீங்கள் அந்தப் பதிவை டெலீட் செய்துவிட்டாலும், அது தொடர்பாக ஒரு விடயத்தை குறிப்பிடவேண்டியிருக்கிறது. பிற இடங்களிலிருந்து காப்பி பேஸ்ட் செய்யும் வழக்கத்தை நான் இதுவரை கொண்டிருந்ததில்லை. நண்பர் சிவகுமார், தனது ஜிமெய்ல் ஐடியை இணைத்ததில் ப்ளாக்கில் பதிவிடுவது இயலாதிருப்பதாக தெரிவித்ததால் அவருக்கு உதவிடவே அதனை இங்கே பதிவிட நேர்ந்தது. அதனை நீக்கியது பொருத்தமானது என்று நீங்கள் நினைத்தால் அதற்கும் நிச்சயம் செவிசாய்க்கிறேன்.

      Delete
    3. ஆனால், இதற்கு முன்னரும் பல நண்பர்கள் இவ்வாறு பல பதிவுகளை காப்பி பெஸ்ட் செய்திருந்ததையும் அவை டெலீட் செய்யப்படாததையும் நினைவூட்ட விரும்புகிறேன்.

      Delete
    4. முதன் முதலில் இந்த தளத்தில் cut & paste செய்த ஆசாமியையும் அதை அப்பொழுதே தட்டிக்கேட்ட நபரையும் நினைவிருக்கிறதா? வாக்குவாதத்தில் ஜாலியாக பொழுது போன நாட்கள் அவை!

      Delete
  31. லார்கோவின் அடுத்த ஆல்பம் நாளை வெளியாவதை முன்னிட்டு, நேற்று பிரான்சின் முதன்மை சானலில் (TF1) அதற்க்கான Making of video வை ஒளிபரப்பினார்கள். அதனுடையை லிங்க் இதோ . TV இலிருந்து ரெகார்ட் செய்யப்பட்டதால் quality கொஞ்சும் சுமாராகத்தான் இருக்கும்.

    பின் குறிப்பு : வீடியோ பிரெஞ்சு மொழியில் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. வீடியோ இணைப்பு எரர் காட்டுகிறது நண்பரே!

      Delete
  32. // ஒரு புதுத் தொடரின் பிரதான ஈர்ப்பே அதனை நீங்கள் முறையாகப் படிக்கத் துவங்கும் போது தோன்றுகின்ற அந்த freshness தான் எனும் போது - இது போல் அரையணா செலவின்றி செய்யப்படும் வேலைகள் அதற்கொரு உலை வைக்கும் சமாச்சாரம் ! ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கதைத்தொடருக்கும் உரிமைகள் பெற நாம் பணம் புரட்டப் படும் பாடு ஆண்டவனுக்கு மாத்திரமே தெரிந்த விஷயம் ! இந்நிலையில் இது போன்ற amateurish முயற்சிகள் நம் பொறுமையைச் சோதிக்கும் விதத்தில் அமைகின்றன ! //

    நமது உள்ளூர் காமிக்ஸ் மற்றும் சமூக வலைதள கலாச்சாரத்தின் சோகமான பகுதி - படைப்பார்களின் வியாபாரம், உரிமம் சம்பந்தமான கண்ணோட்டத்தையும் உணர்வுகளையும் கண்டுகொள்ளாமல் படைப்புகளை பகிர்வதில் தீவிர உழைப்பை செலவிடுவது. நாம் Blame பண்ணவேண்டியது இம்மாதிரி விஷயங்களுக்கு பலர் தரும் அறியாமை கலந்த ஆதரவை மாத்திரமே.Friends Circle, Group Activities போன்றவற்றின் Tragedy'ஆன மறுபக்கம்.

    ReplyDelete
  33. ஒண்ணுமே புரியலே உலகத்திலே என்னமோ நடக்குது
    மர்மமா இருக்குது ஒண்ணுமே புரியலே உலகத்திலே

    ReplyDelete
    Replies
    1. @VETTUKILI VEERAIYAN, உங்கள் ஒரிஜினல் ஐடி என்ன?

      இதற்கு நேர்மையான பதிலளித்தால் இன்றைக்கு தேதிக்கு கொஞ்சம் மர்மம் நீங்கும், உலக நடப்பு கொஞ்சமாவது புரியும்..

      Delete
    2. ரமேஷ்குமார் ..மனிதர்களை புரிந்து கொள்ள id தேவை இல்லை
      பல பேரிடம் திட்டு வாங்கியும் உங்கள் மூக்கை நுழைக்கும் குணம் போகவில்லை வேஸ்ட்

      Delete
    3. // ரமேஷ்குமார் ..மனிதர்களை புரிந்து கொள்ள id தேவை இல்லை
      பல பேரிடம் திட்டு வாங்கியும் உங்கள் மூக்கை நுழைக்கும் குணம் போகவில்லை வேஸ்ட் //

      மர்மமான ஆசாமிகளிடம் திட்டுவாங்குவது ஒரு கௌரவம்!

      Delete
    4. சரியா தப்பா தெரியவில்லை எங்கே ஆரம்பித்தோமோ அங்கேதான் முடிக்க வேண்டும்
      இதுவரை எ ன் வாழ்க் கையில் யார் மனமும் புண் பட பேசியதில்லை காமிக்ஸ் எனக்கு பிடிக்கும்
      வாங்கினேன் படித்தேன் அவ்வளவே ..என்னுடைய வயதுக்கும் தகுதிக்கும் இங்கே காமெடி பண்ணியிருக்க தேவையில்லைதான் ரமேஷ் குமார் போன்றவர்களால் எ ன் மனம் திரும்ப திரும்ப புண் படுவதால்
      நன்றி நண்பர்களே குட் bye டு ஆல்

      Delete
    5. கிர்ர் கிர்ர் கிர்ர்ர் மரமண்டையாரின் modified வெர்ஷன் ////// எத்தனை காலம்தான்???? கிறுக்குப் பிடிக்கிறது ஓய்! அதனால்தான் இந்தப் பக்கம் வருவதே அச்சத்தை விளைவிக்கிறது!

      Delete
  34. அய்யா நேத்தும் சரி இன்னிக்கும் சரி நாளைக்கும் சரி எங்களுக்கு கா மிக்ஸ் மட்டுமே தெரியும் ..இதிலே இவ்வளவு
    உள்குத்து இருக்கா தெரியாது சாமி .. தயவு செய்து யாராய் இருந்தாலும் சரி எங்க எடிட்டரை தொழில் செய்ய விடுங்க .. அவர் மனசை நோகடிக்காதீங்க ப்ளீஸ் நாங்க எல்லாம் காமிக்ஸ் காதலர்கள் அவ்வ ளவு தான்யா

    ReplyDelete
  35. 2015 இதழ்கள் பற்றிய எனது எண்ணங்கள். 4000 ரூபாய் ஆண்டு சந்தா என்பது கண்டிப்பா அதிகம். டெகஸ், மேஜிக் வின்ட், ரிப்போர்டர் ஜானி போன்ற கதைகளை கருப்பு வௌ்ளையிலே தரலாம். வண்ணம் தேவையில்லை. அதுவும் 50 ரூபாய் மறுபதிப்புகளில் value for money factor கண்டிப்பாக திருப்தியாக இல்லை.
    மற்றபடி கதை தேர்வுகள் சிறப்பாக நன்றாக balance செய்யப்பட்டு உள்ளது. சிக் பில் ஓரிரு கதைகள் சேர்த்திருக்கலாம.

    ReplyDelete
    Replies
    1. SIV : //50 ரூபாய் மறுபதிப்புகளில் value for money factor கண்டிப்பாக திருப்தியாக இல்லை. //

      "சைத்தான் துறைமுகம்" ஒற்றை இதழைத் தாண்டி அட்டவணையில் வண்ண மறுபதிப்பு எது - கவலை கொள்ளச் செய்ய ??

      Delete
    2. சார் நான் குறிப்பிடுவது நம் மும்மூர்த்திகளின் மறுபதிப்பை. சமீபத்திய 'கொள்ளைகார பிசாசு' சைஸிலான ஒரு இதழுக்கு 50 ரூபாய் அதிகம் என நான் எண்ணுகிறேன்.

      Delete
  36. அப்ப ஸ்கான்லேஷன் செய்ஞ்சு, ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்தவங்கள மட்டும் அந்த ஐரோப்பிய காமிக்ஸ் நிறுவனங்கள் கண்டுகாதமா? நீங்க காமிக்ஸ்களை ஆன்லைன்ல வேர்வை சிந்தி உட்கார்ந்த இடத்துலேந்தே வித்தியாசமான கதையா இருக்கேன்னு சிலாகிச்சு படிச்சு பார்த்து ஒப்பந்தம் போட்டு காசு ஆக்குறீங்க. எங்கள் நண்பர்கள் அதையே இலவசமா செய்து கொடுக்கிறார்கள். அதுவும் உங்களுக்கு நஷ்டம் ஏற்படாதவாறு. கவனிக்கவும், ப்ளூகோட்ஸை ஆங்கிலத்தில் படித்த நண்பர்கள் உங்களிடம் வலியுறுத்தியபோது ”அதே அமெரிக்க உள்நாட்டு போர் கதைகள், நகைச்சுவை கம்மி, நம்மால் ரசிக்கமுடியாது” என்று என்னவெல்லாமோ காரணங்கள் நீங்கள் சொன்னபோது, இந்த கதைகளை தமிழில் இப்போதைக்கு எதிர்பார்ப்பது வீண் என, அவர்களே அதை தமிழில் முயற்சித்துபார்த்து வெளியிட்டனர். இணையத்தில் அந்த ப்ளூகோட்ஸ் பட்டாளத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்த நீங்கள், அந்தர் பல்டி அடித்து நீங்களே தமிழில் வெளிவரும் என்றீர்கள். அச்சில் வெளிவர ஆரம்பிக்க இருப்பது தெரிந்தவுடன் மகிழ்ச்சியுடன் தங்கள் மொழிமாற்று வேலைகளை இங்கே நண்பர்கள் நிறுத்தினார்கள். , இணையநண்பர்கள் பலபேர் மொழிமாற்றம் நல்லா இருக்கு, இன்னும் வெளியிடுங்கள் என்று சொன்னபோதும், நம் காமிக்ஸ் உலகின் விற்பனை பாதிக்ககூடாதே என்று அந்த மொழிமாற்று வேலைகளை நிறுத்தியவர்கள்தான் நம் நண்பர்கள். அப்படிபட்ட நம் நண்பர்களை ஏதோ போட்டி தொழில் நிறுவனத்தார் போல நீங்கள் எச்சரித்தது வேதனை அளிக்கிறது. :(

    ReplyDelete
    Replies
    1. cap tiger : அடிப்படையில் சின்னதாய் ஒரு சந்தேகம் எனக்கு !

      உங்கள் ஆதங்கம் நான் விடுத்த எச்சரிக்கையா ? அல்லது நாங்கள் காமிக்ஸ் போட்டு "காசு ஆக்கிடுவதா" ? தவிரவும், இது போன்ற scanlation முயற்சிகளால் எனக்கு நஷ்டம் ஏற்படுத்துவதால் தான் நான் இங்கு இதைச் சுட்டிக்காட்டுவதாய் உங்களை நினைக்கச் செய்வதும் எதுவோ ?

      சொல்லப் போனால் இந்த ஸ்கான்லேஷன் சமாச்சாரங்களில் இரு தரப்பு மொழிபெயர்ப்புகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பொருட்டு நம் இதழ்கள் சற்றே ஜாஸ்தியாக விற்கவும் வாய்ப்புள்ளது என்பது எனக்கும் தெரியுமே !

      மார்கெட்டில் கடன் கொடுத்து வசூல் செய்யும்முன் மூன்றில் ஒரு பங்கை சேதாரமாய் இழந்து நாக்குத் தொங்கும் சிரமங்களையும் ; சொத்துப் பத்திரங்களை அடமானம் வைத்து கடன் வாங்கி மாதம் முதல் தேதி பிறந்தால் பாங்கிற்கு வட்டி கட்ட வேண்டிய நோவுகளையும் ; ஒரு வருஷத்துக்கான முழு ராயல்டிகளையும் காண்டிராக்ட் கையெழுத்துப் போடும் நாளைக்கே பட்டுவாடா செய்யத் தேவையாகும் தலைவலிகளையும் விடவா பிழைப்பைச் சிரமமாக்கும் விஷயமாகிடப் போகிறது - இந்த ஸ்கேன்லேஷன் ?

      ஒரு குழுவினுள் பரிமாறப்படும் இவ்விஷயங்களின் பொருட்டு அந்தக் குழுவினர் அத்தனை பேருமே நம் இதழ்களை வாங்காமல் விட்டால் கூட அதன் இழப்பின் எண்ணிக்கை என்னவாக இருக்குமென்று உங்களுக்கோ ; எனக்கோ தெரியாதா ? ஆண்டுக்கு சுமார் 5 இலட்சம் வியாபாரம் செய்து வந்த லேன்ட்மார்க் திடீரென ஒரு நாள் 2 கிளைகளை மூடிய கையோடு ஆர்டரும் தரவில்லை ! ஒரே நாளில் பெருநகர முகவர் மூட்டையைக் கட்டிய போது நாங்கள் இழந்தது ரூ.38,000 மட்டுமல்ல ; மாதந்தோறும் ஒவ்வொரு ரகத்திலும் சுமார் 75 பிரதிகளின் விற்பனையை ! இவற்றை விடத் தானா scanlation காரணமாய் நேரக் கூடிய இழப்பு - அளவில் / தொகையில் என்னைக் கவலை கொள்ளச் செய்யும் விதத்தில் பெரிதாக இருந்திடப் போகிறது ? பணத்தை மனதில் வைத்துக் கொண்டு தானா காலையில் முதல் வேலையாய் இப்படியொரு பதிவை நான் எழுதப் போகிறேன் ?

      சரி, அப்படியே உங்கள் எண்ணப்போக்கின்படி - 'எனக்கு நஷ்டம் ஏற்படுகின்றது !' என்ற ரீதியில் நான் பதிவிட்டால் கூட அதனில் தவறு தான் என்னவோ ? ஓராயிரம் அல்லல்களைத் தாண்டித் தான் இந்தத் தொழிலில் ஜீவித்து வருகிறோம் என்பதில் துளியும் ஒளிவு மறைவு கிடையாது தானே ?! இதனில் நேர்ந்திடும் இடர்களை சுட்டிக்காட்டும் உரிமையை நான் இழக்க வேண்டியதன் தேவை புலப்படவில்லையே ?!

      பணத்தையும் தாண்டியதொரு உலகம் உள்ளது என்பதையும் ; எனக்கொரு தம்மாத்துண்டு அடையாளத்தையேனும் சாத்தியாக்குவது இந்தக் காமிக்ஸ் நேசமே என்பதையும் - 200 கிலோமீட்டர் தூரங்களை துளித் தயக்கங்களுமின்றிக் கடந்திட நினைக்கும் அன்பு உள்ளங்கள் அவ்வப்போது நினைவுபடுத்திக் கொண்டேதானுள்ளன ! So மனிதர்களை இழந்து ; காந்தித் தாத்தா நோட்டுக்களை சேர்ப்பது ஒரு போதும் என் இலக்காக இராது !

      யாரையும் நோகச் செய்வது நம் எண்ணமல்ல ; அதே சமயம் நாம் தற்போது நிற்பது கத்தியின் மேலே என்பதால் எனது முன்ஜாக்கிரதை அளவுகோல்களுமே எப்போதையும் விட இப்போதும் / இனிமேலும் உயரமாகவே தான் இருந்தாக வேண்டும் ! முன்பு நான் விழுந்த ஒவ்வொரு சமயத்திலும் என் தாடைக்குச் சேதத்தோடு தப்பித்தேன் ; ஆனால் இனியொருமுறை விழுந்தால் தலை தேறாது ! தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் !

      Delete
    2. @எடிட்டர் .....மனதை வருத்திய பதிவு சார் .....

      Delete
    3. Dnt worry sir, all friends will be understand your thoughts in your's view sir.....

      Delete
  37. டியர் எடிட்,

    நீங்கள் சொல்வது ...

    *** புதிதாய் நாம் திட்டமிடும் தொடர்களை அவசரம் அவசரமாய் தமிழில் மொழிபெயர்த்து - ஆங்கிலத்திலோ ; பிற மொழிகளிலோ உள்ள ஒரிஜினல் சித்திரங்களின் மீது பதித்து - இணையத்தில் பதிவிறக்கம் செய்யும் விதமாய் உலவ விடும் வேலையை ஒரு சிலர் செய்து வருவது நமக்கு ஆதாரங்களோடு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது ! ***

    ....போல் வேண்டுமென்றே நடந்த விஷயம் இது அல்ல என்பதை தெரிவித்துகொள்கிறேன். அந்த கதையை மொழிபெயர்த்த நண்பர் அக்கதையை பல மாதங்களுக்கு முன்னரே அதாவது நாம் உரிமை வாங்கும் முன்னரே பாதி கதையை மொழிபெயர்த்து விட்டார்.

    அந்த பாதியை தான் போட்டுள்ளார். அதுவும் தாங்கள் அதனால் எதுவும் பாதிப்படையபோவதில்லை மேலும் நீங்கள் வருந்தபோவதில்லை என நினைத்தே போட்டுள்ளார். மேலும் இது உங்களை தாழ்த்த்துவதற்கோ, எங்கள் மொழிபெயர்ப்பு எப்படி இருக்கு பார் என்ற தலைகனத்திலோ அல்ல. மேலும் நமது லயன் காமிக்ஸ் போடும் கதைகளை யாரும் போடுவதில்லை வேண்டுமென்றே மொழிபெயர்க்கவில்லை அதை செய்யபோவதும் இல்லை.

    அந்த பதிவு நீக்கப்பட்டுவிட்டது. பாதி கதைதானே அதனால் என்ன என்று தான் அந்த லிங்க் கொடுக்கப்பட்டது. மேலும் நீங்கள் சொல்வது போல் யாரவது நமது லயன் காமிக்ஸ் போடும் கதைகளை மொழிபெயர்த்து போடுவதாக இருந்தால் அது இந்த கதையை போட்ட நண்பரோ, நாங்களோ அல்ல என்பதையும் இங்கே கூறிகொள்கிறேன்.

    -லக்கி லிமட்


    ReplyDelete
    Replies
    1. மேலும் அவற்றைப் பிரின்ட் செய்ய வீணாக யாரும் பணம் செலவு செய்யப் போவதில்லை. அப்படியே செலவழித்தாலும் அது தாங்கள் நிர்ணயிக்கும் விலையைப் போன்று பத்து மடங்கு ஆகும் என்பது அப்படி பிரின்ட் செய்து பார்த்த நண்பர்கள் (தாங்கள் விரும்பும் கதையினை எப்படியாவது படித்தே தீர வேண்டும் என்கிற தணியா தாகத்தில் ) நன்றாகவே அறிவார்கள். மேலும் தமிழின் தனித்தன்மை மிகுந்த, தொலைத்தொடர்பு சுனாமியிலும் ஆட்டம் காணாமல் நீடித்து நிற்கும் நமது லயன் காமிக்ஸ் குடும்பத்தை நேசிக்கும் ரசிக நெஞ்சங்கள் அப்படி ஒரு தப்பான முயற்சியில் இறங்குவது சந்தேகமே! வாழும் நீடித்து லயனின் பிரபஞ்சம்! வாழ்க வளமுடன்!

      Delete
  38. @VETTUKILI VEERAIYAN

    உங்கள் கமெண்ட்டுகளை ரசிக்கவும் காமிக்ஸ் காதலை புரிந்துகொண்டு நட்பு பாராட்டவும் நாங்கள் நிறைய பேர் இருக்கும்போது., சில சின்ன விசயங்களுக்காக நீங்கள் தளத்தைவிட்டு விலகுவது மிகவும் சங்கடமாக இருக்கிறது.!

    உற்சாகமாக பின்னூட்டங்களை தொடர்ந்து அழகாக செய்து கொண்டு இருக்கும்போது சில தடங்கல்கள் ஏற்படத்தான் செய்யும். அவற்றை புறந்தள்ளிவிட்டு நீங்கள் எப்போதும் போலவே கலகலப்பாக பின்னூட்டமிட வேண்டுமென்பதே என்னுடைய விருப்பம்.

    ReplyDelete
    Replies
    1. // உற்சாகமாக பின்னூட்டங்களை தொடர்ந்து அழகாக செய்து கொண்டு இருக்கும்போது சில தடங்கல்கள் ஏற்படத்தான் செய்யும். அவற்றை புறந்தள்ளிவிட்டு நீங்கள் எப்போதும் போலவே கலகலப்பாக பின்னூட்டமிட வேண்டுமென்பதே என்னுடைய விருப்பம். //
      +1

      Delete
    2. @ VETTUKILI VEERAIYAN

      ///ஆர்ச்சி கண்ணீர் விட்டு நீ பார்த்திருக்கியா ஸ் பைடரு ..?
      இல்லியே..
      த்ரிச்யம் படத்தை DVD யிலே போட்டு காட்டினேன்..மீனாவுக்கு இவ்வளவு வயசாயிடுச் சான்னு
      ஒரே அழுகை ..///

      மேற்கண்ட உங்களது கமெண்ட்டைப் படித்து காலையில் உ.பு.சிரித்தேன்!

      புனைப்பெயரில் இங்கு பதிவிட்டாலும் இதுவரையில் உங்களது கமெண்ட்ஸ் எல்லாமே ஜாலியாய் எழுதப்பட்டவையே அன்றி யாரையும் காயப்படுத்தியதாக நான் அறியவில்லை!

      நீங்கள் உங்களுடைய வழக்கமான பாணியில் தொடர்வதையே விரும்புகிறேன். மேலே மா.மங்கூஸின் கருத்துக்களுக்கு மேலிருந்து கீழாகத் தலையாட்டிட விரும்புகிறேன்!

      Delete
  39. நமது ஆசிரியர் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டவிதம் சரியா தப்பா, சிலரை, அவர்களின் செயலை கண்டித்தது சரியா தப்பா, கண்டனம் செய்ய எடுத்துக்கொண்ட நாளும் கிழமையும் சரியா தப்பா, சிலரின் தவறுகளை கண்டிக்க/ எச்சரிக்க எடுத்துக்கொண்ட அவகாசம் சரியா தப்பா, etc... ஆகியவற்றை விவாதிக்கும் உரிமை யாருக்கும் இங்கு இல்லை.மேலும் இப்படி ஒரு பதிவிட ஆசிரியரை உந்தித்தள்ளிய காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். அதை முழுமையாக உணராமல் விமர்சிப்பதும் புத்திசாலித்தனமாகாது!

    ஒரு நிறுவனம் தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட அவ்வப்போது சில கடினமான நிலைப்பாட்டை எடுக்க வேண்டியது நிறுவனத்தலைவரின் கடமை. அவரின் உரிமை. அதில் தலையிட நாம் யார்??

    "நாங்க தானே, கொஞ்சம் ப்ரீயா விட்ட என்ன? டேக் இட் ஈசி சார்!, அப்போ இதுக்கு முன்னாடி நடக்கலியா?, எங்க தான் நடக்கல?ஒரு பத்து பக்கம் போடுக்கறோமே! ", போன்ற கேள்விகளை எழுப்புவது நியாயம் அற்றது. infact childish!

    ஆசிரியரின் நிறுவனத்தின் கஷ்ட நஷ்டங்களில் நாம் எவ்வகையிலும் பங்கேர்ப்பதில்லை என்பதையும், அவரின் நாற்காலியில் அமர்ந்து பார்க்கும் போது, தினம் தினம் சமாளிக்கப்படவேண்டிய ஆயிரம் சிக்கல்களுள் நாம் அறிந்தது ஒன்றோ அல்லது இரண்டோ என்பதையும் மனதில் கொள்ள வேண்டும் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. // இப்படி ஒரு பதிவிட ஆசிரியரை உந்தித்தள்ளிய காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். அதை முழுமையாக உணராமல் விமர்சிப்பதும் புத்திசாலித்தனமாகாது! //
      உண்மை!

      // "நாங்க தானே, கொஞ்சம் ப்ரீயா விட்ட என்ன? டேக் இட் ஈசி சார்!, அப்போ இதுக்கு முன்னாடி நடக்கலியா?, எங்க தான் நடக்கல?ஒரு பத்து பக்கம் போடுக்கறோமே! ", போன்ற கேள்விகளை எழுப்புவது நியாயம் அற்றது. //
      +1

      Delete
  40. தமிழ் ஸ்கான்லேஷனை அதன் தோற்றம் முதல் அறிந்தவன் என்ற முறையில் ஸ்கான்லேஷனால் புத்தக விற்பனை குறையும் வாய்ப்புகள் இல்லை என எண்ணுகிறேன்!

    புத்தகமாக வாசிக்கும் அனுபவத்தை கணிப்பொறிகளும் கைபேசிகளும் தந்து விடாது!

    ReplyDelete
    Replies
    1. Msakrates : //புத்தகமாக வாசிக்கும் அனுபவத்தை கணிப்பொறிகளும் கைபேசிகளும் தந்து விடாது!//

      நிச்சயமாக !

      Delete
    2. அப்படியே ஆமோதிக்கிறேன்!

      Delete
  41. வீரையன், உங்கள் மனதில் உள்ளதை தயங்காமல் தொடர்ந்து பதிவிடுங்கள், பிறருக்காக இல்லாமல் உங்கள் மனதிருப்திகாக இந்த தளத்தில் பதிவிடுங்கள் தொடருங்கள். போது தளம்களில் இது போன்ற சில விசயம்களை மனதிற்குள் எடுத்து செல்லவேண்டாமே :-)

    ReplyDelete
  42. //புத்தகமாக வாசிக்கும் அனுபவத்தை கணிப்பொறிகளும் கைபேசிகளும் தந்து விடாது!//
    +1

    //ஆசிரியரின் நிறுவனத்தின் கஷ்ட நஷ்டங்களில் நாம் எவ்வகையிலும் பங்கேர்ப்பதில்லை என்பதையும், அவரின் நாற்காலியில் அமர்ந்து பார்க்கும் போது, தினம் தினம் சமாளிக்கப்படவேண்டிய ஆயிரம் சிக்கல்களுள் நாம் அறிந்தது ஒன்றோ அல்லது இரண்டோ என்பதையும் மனதில் கொள்ள வேண்டும் நண்பர்களே!//
    +

    //மற்றபடி கதை தேர்வுகள் சிறப்பாக நன்றாக balance செய்யப்பட்டு உள்ளது. சிக் பில் ஓரிரு கதைகள் சேர்த்திருக்கலாம.//
    ×(+)11111111111111111111111
    ஹிஹிஹி.!

    ReplyDelete
  43. Just thought why the title is different from the one I saw ystrdy
    Hmmmmmm, usually I don't get into these comments
    I show my comics love by supporting our lion comics, buying them through vendors of lion comics despite the cost(never bought any from black market, got to know about it only reading comments here), and I treasure the comics I bought, this post disturbed me
    After reading the post by all two dfrnt thoughts occurred in my mind
    1)The guy who did the scanlation is wrong
    2)No he is not, The Person did this because of comics love n he had done this way before Editor noted the stories

    Then I thought did that person who translated the stories got rights or paying royalties
    I don't know,but it seems he is not
    The thing is its not right thing to do when the stories published by the foreign authors is not free n have to pay royalties
    If the comic friend wanted to do it, should have gotten rights

    Its nice of him that he has stopped when he knewed they r coming in Tamil with rights
    I could notice that he didn't mean any harm, but its a serious issue

    Last year a big american gaming company who were millionaires in the 90s went bankrupt because of the piracy by the Asians,especially by Chinese n Indians

    ReplyDelete
  44. இந்த பதிவை படித்தவுடன் தோன்றிய கமெண்ட்:
    "ஆஹா நம்ம கைப்புள்ள அரிவாளோட கிளம்பிட்டார்யா... இன்னிக்கு எத்தன தல உருள போகுதுன்னு தெரியலையே!!!!" அட போங்க பாஸ்... நம்ம ஆசான் போட்ட போடுல அப்படியே இந்த பொம்ம படம் போட்ட புஸ்தகத்த படிக்குற (பெரிய்ய்ய்ய்ய்ய்ய) பசங்க பயந்து நடுங்கி அப்படியே உச்சா போயிருக்க மாட்டாங்க???? கடைசில ஒரு டெரர் ஸ்மைலி போட்டு இருந்தால் இன்னும் தோதாக இருந்திருக்கும் அல்லவே??? இப்போ மட்டும் நடையில் வழமையான சாத்வீகம், சாஸ்வதம், சமஸ்க்ருதம், மிருதங்கம் போன்றவை துளியூண்டும் இல்லையே!!!! அடடே... ஆச்சர்ய குறி!!! :P

    ReplyDelete
  45. வணக்கம் நண்பர்களே!!!

    சில personal பிரச்சனைகளால் என்னால் சேலம் புத்தகத் திருவிழாவிற்கும், நமது காமிக்ஸ் வலைப் பக்கத்திற்கும்(சில நாட்களாக) வர முடியாமல் போய்விட்டது... :(

    சேலம் புத்தகத் திருவிழாவில் கலந்து கொண்ட நண்பர்களுக்கும், அனுதினமும் நமது ஸ்டாலுக்குச் சென்று நமது காமிக்ஸ் விற்பனைக்கு ஊட்டமளிப்போதோடு, நாள்முழுக்கக் களப்பணியாற்றிவரும் டெக்ஸ் விஜயராகவன் & ஸ்பைடர் Sridhar, கார்த்திக் & 'யுவா' கண்ணன், மாயாவி சிவா, ஈரோடு விஜய் அண்ணா மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்....நன்றிகள் நண்பர்களே!!!...A big thanks for your love on our comics frnds!!!

    இந்த சந்தோஷமான தருணத்திலும் சில மன சங்கடங்கள்(ஆசிரியரின்-"சங்கடத்தோடு ஒரு எச்சரிக்கை") பதிவு...

    //புதிதாய் நாம் திட்டமிடும் தொடர்களை அவசரம் அவசரமாய் தமிழில் மொழிபெயர்த்து - ஆங்கிலத்திலோ ; பிற மொழிகளிலோ உள்ள ஒரிஜினல் சித்திரங்களின் மீது பதித்து - இணையத்தில் பதிவிறக்கம் செய்யும் விதமாய் உலவ விடும் வேலையை ஒரு சிலர் செய்து வருவது நமக்கு ஆதாரங்களோடு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது !//

    நோக்கம் எதுவாயிருப்பினும், இதுபோல செயல்கள் நமது காமிக்ஸ்கிற்கு மிகவும் பின்னடைவைத் தருபவையே...
    ஏற்கனவே சிலர் நமது காமிக்ஸ்களை ஸ்கேன் செய்து pdf ஃபைல்களாக மாற்றி இன்டெர்நெட்டில் உலவ விட்டபோதும், நமது ஆசிரியர் அது பற்றி வருத்தப்பட்டதும் இன்னும் என் நினைவில் உள்ளது...

    //ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கதைத்தொடருக்கும் உரிமைகள் பெற நாம் பணம் புரட்டப் படும் பாடு ஆண்டவனுக்கு மாத்திரமே தெரிந்த விஷயம் !//
    இந்த மாதிரி தருணத்தில், இது போன்ற செயல்கள் ஆசிரியரின் மனதை மிகவும் சங்கடத்திற்குள்ளாக்கும் என்பதுடன், காமிக்ஸ் மீது உள்ள ஆர்வத்தைக் குறைக்கவும் செய்யலாம் அல்லவா...
    அவ்வளவு ஏன், அனுமதியில்லாமல் மற்றவரின் ஓவியங்கள் மீது நமது மொழிபெயர்ப்பினையைச் சேர்த்து வெளியிடுவது copyright போன்ற பிரச்சனைகளையும் சந்திக்க நேரும் என்பது தாங்கள் அறியாததா....So please stop this guys....

    என்னடா இவன் எதற்கெடுத்தாலும் பெரிய இவன் மாதிரி ஒரு பதிவைப் போட்டுக்கிட்டு இருக்கானே என்று யாரேனும் நினத்தால்...sorry
    friends...உங்கள் அளவுக்கு அனுபவமோ அல்லது உங்கள் அளவுக்குக் காமிக்ஸ் பற்றியும் நமது blog பற்றியும் அறிந்தவனோ அல்ல நான்...

    ஆனால், கடந்த 12 வருடங்களுக்கும் மேலாக காமிக்ஸ் படித்து வருகிறேன் என்கிற முறையில் ஒன்று மட்டும் உணர்ந்துள்ளேன்...

    தினத்தந்தி (ராணி காமிக்ஸ்) போன்ற ஜாம்பவான்களே தாக்குப்பிடிக்க முடியாத காமிக்ஸ் என்னும் உலகில், நமது ஆசிரியிர் இன்னும் விடாப்படியாக (பல சிரமத்திற்குப் பின்னும்) காமிக்ஸ் வெளியிட்டுக் கொண்டிருப்பது, காமிக்ஸ் மீது அவர் கொண்ட காதலே என்பது மட்டும் நிஜம்...

    ஆகையால் இத்தகைய செயல்களில் இனி யாரும் ஈடுபட வேண்டாமே...It's my Humble request....Please...
    நன்றி....

    ReplyDelete
    Replies
    1. //தினத்தந்தி (ராணி காமிக்ஸ்) போன்ற ஜாம்பவான்களே தாக்குப்பிடிக்க முடியாத காமிக்ஸ் என்னும் உலகில், நமது ஆசிரியிர் இன்னும் விடாப்படியாக (பல சிரமத்திற்குப் பின்னும்) காமிக்ஸ் வெளியிட்டுக் கொண்டிருப்பது, காமிக்ஸ் மீது அவர் கொண்ட காதலே என்பது மட்டும் நிஜம்...//

      +1

      Delete
  46. பலர் பற்பல முறை ஆதாரத்துடன் நமது லயன்/முத்து ஸ்கேன் மற்றும் விற்பனை பற்றி புகார் செய்தும் அப்போதெல்லாம் அந்த அளவுக்கு ரியாக்ஷன் காட்டாமல் இப்போது இந்த அளவு பதறி வெகுண்டு எழுவதன் மர்மம் என்ன அன்பின் ஆசானே??? அவங்க என்ன தான் ஸ்கேன்லேஷன் பண்ணினாலும் நம்ம பிரிண்டிங்/மொழிபெயர்ப்புல பின்னிட மாட்டோமா என்ன??? எனவே நாம் சாத்வீகமாய் இருப்பதே சாஸ்வதம்... நம்ம பிரிண்டிங் குவாலிட்டி சப்பான் குவாலிட்டி அல்லவே!!! :P
    எனவே அன்பர்களே நண்பர்களே ஆசானின் கோபம் தீர, அவர் வதனத்தில் புன்னகை மலர, சீக்கிரம் நமது 2015 சந்தாவை சிவகாசி பக்கம் அதி விரைவாக படைஎடுக்க செய்து நமது அன்பின் ஆசானை குஷிப்படுத்துமாறு உங்களை அன்புடன் வேண்டி கொள்கிறேன்... இதுவே நமது காமிக்சிற்கு நாம் ஆற்றும் தொண்டு... அதுவரை நமது ஆசானையும் ஜூ.ஆசானையும் ஆங்கில கதைகளை ஆன்லைன்ல வேர்வை சிந்தி உட்கார்ந்த இடத்துலேந்தே வித்தியாசமான கதையா சிலாகிச்சு படிச்சு பார்த்து ஒப்பந்தம் போட அனுமதித்தால் மட்டுமே நமக்கு காமிக்ஸ் அறுசுவை விருந்து கிட்டும்...
    /cap tiger- இணையத்தில் அந்த ப்ளூகோட்ஸ் பட்டாளத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்த நீங்கள், அந்தர் பல்டி அடித்து நீங்களே தமிழில் வெளிவரும் என்றீர்கள்/ அட விடுங்க பாஸ்... அது அப்போ... சர்க்கஸில் பல்டிகள் புதிதல்லவே...
    /cap tiger- அப்படிபட்ட நம் நண்பர்களை ஏதோ போட்டி தொழில் நிறுவனத்தார் போல நீங்கள் எச்சரித்தது வேதனை அளிக்கிறது/ கைப்புள்ள டயலாக் தெரியாதா பாஸ் உங்களுக்கு???
    /ஆசான்: சொல்லப் போனால் இந்த ஸ்கான்லேஷன் சமாச்சாரங்களில் இரு தரப்பு மொழிபெயர்ப்புகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பொருட்டு நம் இதழ்கள் சற்றே ஜாஸ்தியாக விற்கவும் வாய்ப்புள்ளது என்பது எனக்கும் தெரியுமே ! / அடடே... அப்போ இங்க இருக்குற எல்லாரும் ஸ்கேன்லேசன் பண்ணுங்க... தீர்ப்பு யார் பக்கம் வருதுன்னு பார்த்துடலாம்... நமக்கு டபுள் காமிக்ஸ் அறுசுவை விருந்து கிடைக்குமே என்ற நப்பாசை தான்... :P
    /ஆசான்:பணத்தை மனதில் வைத்துக் கொண்டு தானா காலையில் முதல் வேலையாய் இப்படியொரு பதிவை நான் எழுதப் போகிறேன் ? / ஓஹோ... நாங்கல்லாம் அப்படி தானோன்னு நெனச்சுடோம் அன்பின் ஆசானே... எங்களை மன்னித்தருளும்...
    /msakrates:புத்தகமாக வாசிக்கும் அனுபவத்தை கணிப்பொறிகளும் கைபேசிகளும் தந்து விடாது!/ அதனால் தான் ஆசானே, புத்தகம் எப்புடி வந்தாலும் வாய பொத்திக்கிட்டு வாங்கிடுறோம்... யார் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை எங்களுக்கு இன்னும் அதிகமான புத்தகங்கள் தேவை... தேவை... தேவை...
    வேண்டும் வேண்டும் எங்களுக்கு ஒரு புதிய பதிவு.பதிவு (இப்படியும் சிலர் பதிவு போட்டாலும் போடலாம்... உஷார்...)..

    ReplyDelete
  47. இனி சங்கடங்களைத் தவிக்கப் பார்க்கிறேன் சார்! என் சார்பில் எந்த தவறு நேரிட்டு இருப்பினும் எனது மன்னிப்பைக் கோருகிறேன். சாரி!

    ReplyDelete
  48. சங்கடத்தோடு ஒரு எச்சரிக்கை இந்த பதிவுவை எழுதிய ஆசிரியருக்கும், படிக்கும் நமக்கும், சம்மந்தபட்ட நண்பர்கள் மற்றும் சம்மந்தபடாத நண்பர்கள் அனைவருக்கும் ஒரு மன வருத்தத்தை தரும் விஷயம். இது போன்ற விசயம்களை இனி வரும் நாட்களில் நாம் அனைவரும் நடக்காமல் பார்த்து கொள்வோமே.

    ReplyDelete
  49. சுமார் ஒரு 6 மாதங்களோ அல்லது அதற்க்கு முன்பாகவோ இருக்கலாம் என்று நினைக்கிறேன்... வழக்கமான ஒரு வெட்டி பொழுதில் இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது ஒரு டைலான் கதையை படிக்க நேர்ந்தது... தமிழில்!!! (நான் படித்த முதல் டைலான் கதையும் கூட.. அடுத்த வருட அட்டவணையில் இடம்பிடித்துள்ளது) . ஆனால் அப்போது டைலான் குறித்த அறிவிப்பு வந்திருந்ததா என்று ஞாபகம் இல்லை...
    பொதுவாக கணினியில் படிக்க எனக்கு ஆர்வம் இல்லாதபோதும் கதையின் விறுவிறுப்பு காரணமாக படித்து முடித்தேன்!!!எனக்கு உண்மையில் அப்போது இல்லீகல் என்பது எனக்கு தெரியாது... இன்னும் சொல்ல போனால் டைலான் குறித்த அறிவிப்பு வந்தவுடன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது... ஆனால் அதன் பின்னணியில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்குமென்ற எண்ணம் துளியும் இல்லை.
    ஆசிரியரின் புலம்பலாக எண்ணி சிலர் சொல்லும் கருத்துகளில் எனக்கு சுத்தமாக எனக்கு உடன்பாடில்லை!!
    காபி ரைட் பற்றிய வெளிநாட்டுகாரர்களின் பார்வைக்கும் நம் பார்வைக்கும் இருக்கும் வித்தியாசங்கள் எப்போதும் எட்ட முடியாத ஒன்று தான்..
    புதிதாக ஒரு தொடருக்கான ஒப்பந்தத்தில் உள்ள piracy சம்பந்தமான கருத்துககளை ஒட்டியே அவரின் கருத்துக்கள் இருப்பதாகவே எண்ணுகிறேன்..
    ஆகவே தமிழ் கூறும் காமிக்ஸ் நல்லுலகம் அதை ஏற்றுகொள்ளும் என்று நம்புகிறேன்...
    scalation க்கு ஆதரவு அளிக்கும் நண்பர்கள் கூறும் கருத்துக்கள் நிச்சயம் நியாயமற்றது !!

    ReplyDelete
  50. thanks Edit for uploading 2015 schedule- booklet

    http://lion-muthucomics.com/themes/lioncomics/img//Comics_upcoming.pdf

    ReplyDelete
  51. நண்பர்களுக்கு : இது ஒரு piracy ஆதரவுப் பதிவு கிடையாது - just a welcome to digital world பதிவு. இங்கு நமக்கான சவால்கள் நேற்றையது அல்ல !

    டியர் எடிட்டர்,

    இந்த இடம் திடீர் என்று ஒரு அறிவுரை அரங்கமாகவும், ஆத்திச்சூடி வகுப்பறையாகவும் மாறி வருவது வேடிக்கையே.

    உங்களின் சிறிய டீமின் கடினமான பணிகள் பொறுத்து நீங்கள் விட்ட எச்சரிக்கை தவறல்ல - சரிதான் எனினும் அது ஒருவரை சார்ந்து இருந்தது - has rubbed a lot of fans wrong.

    நிதர்சனம் என்னவெனில் : In the age of digital media, piracy is here to stay ! Only sustained quality of production can minimize it and it can never be erased in totality.இதனை அனைவரும் உணர்வது நலம்.


    சரி உனக்கென்ன தெரியும் என் சங்கடம் என்றால்:

    நூறு-இருநூறு பேர்கள் சேர்ந்து ஆறு முதல் எட்டு மாதங்கள் நிரல் எழுதி மில்லியன் டாலர் கணக்கில் வெளியிடப்படும் எங்களது நிறுவன மென்பொருள்கள் அவை காப்புரிமை பெற்றிருந்தாலும் வேறு நாடுகளில் இருக்கும் கம்பெனிகளால் சில வாரங்களில் களவாடப்பட்டு விற்பனைத் தொகைக்கு 20% மதிப்பிலான தொகையில் விற்கப்படுகிறது - நாங்கள் வருடா வருடம் சந்திக்கும் சங்கடம் இது. இதிலிருந்து மீள ஒரே வழி தரம் உயருதலே - மற்றும் புதிய மென்பொருள் சார்ந்த சேவைகள் - அப்போதும் முழுமையாய் நீக்கவியலாது.

    சரி உனக்கு சம்பளம் மாதாமாதம் வருகிறதே என்றால் :

    வரும் - எல்லா வருடமும் ஒரே போல இல்லை - ஒரு மென்பொருள் உற்பத்தி நிறுத்தப்பட்டால் அந்த department மூடப்பட்டு 4000 பேர்கள் நடுவீதிக்கு வந்தார்கள் மூன்றே வாரத்துக்கு முன்பு எங்கள் பன்னாட்டு நிறுவனத்தில். அதில் எங்கள் ஆபீசில் வேலை செய்த 500ல் 100 பேர் இன்று வேலை இல்லாமல்.

    வேறு departmentக்கு பாதி சம்பளத்திற்கு சென்றவரும் உண்டு.

    இவற்றை மீறி நாம் நிலைத்திருப்பது தான் சாதனை.

    உங்களின் காமிக்ஸ் காதல் நாடறிந்த விஷயம் - ஒரு சில scanlationகளால் அது குறையாது - நீங்கள் வெளியிடும் கதைகளின் ஸ்கேன்லஷன் நிறுத்தப்பட்டு விட்டது - நீங்கள், நான் - நாம் எல்லாரும் கவனம் கொள்ள வேண்டியது நம் முகத்திற்கு முன் உத்தமராய் நடிக்கும் சில உள்ளடிகளிடமே !

    இங்கு scanlation ஆதரவு தவறு என்று கூறுபவர்களில் திருட்டு DVD பார்க்காதவர் நியாயங்களை எடுத்துக் கொள்ளலாம். ஒரு முறையேனும் திருட்டு DVD பார்த்தவர் (என்னையும் சேர்த்துதான்) அடுத்தவருக்கு அறிவுறுத்துவது நியாயமல்ல :-D

    Comic Lover

    ReplyDelete
    Replies
    1. //இந்த இடம் திடீர் என்று ஒரு அறிவுரை அரங்கமாகவும், ஆத்திச்சூடி வகுப்பறையாகவும் மாறி வருவது வேடிக்கையே.//

      i accepts that for some extend Raghavan sir, but friends expressing their thoughts as a moral support to Edit i guess.

      //இங்கு scanlation ஆதரவு தவறு என்று கூறுபவர்களில் திருட்டு DVD பார்க்காதவர் நியாயங்களை எடுத்துக் கொள்ளலாம். ஒரு முறையேனும் திருட்டு DVD பார்த்தவர் (என்னையும் சேர்த்துதான்) அடுத்தவருக்கு அறிவுறுத்துவது நியாயமல்ல //

      its true its impossible to conquer digital world..if any one talks against piracy should come clean!

      but Edit's fear's are fear of entire Tamil comics community, as he said we cant take any chance..

      //Edit:
      தவிர, ஒவ்வொரு கதைத்தொடருக்குமான காண்ட்ராக்டுகளைப் போடும் போது அதனில் ஒரு முக்கிய ஷரத்து இப்போதெல்லாம் உண்டு : அது நாம் பதிப்பிடும் தமிழ் மொழியிலும், தமிழ் மார்கெட்டிலும் இது போன்ற 'உட்டாலக்கடி ' வேலைகளிலிருந்து அவர்களது கதைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு நம்மைச் சேர்ந்தது என்று ! //
      //Edit: யாரையும் நோகச் செய்வது நம் எண்ணமல்ல ; அதே சமயம் நாம் தற்போது நிற்பது கத்தியின் மேலே என்பதால் எனது முன்ஜாக்கிரதை அளவுகோல்களுமே எப்போதையும் விட இப்போதும் / இனிமேலும் உயரமாகவே தான் இருந்தாக வேண்டும் ! முன்பு நான் விழுந்த ஒவ்வொரு சமயத்திலும் என் தாடைக்குச் சேதத்தோடு தப்பித்தேன் ; ஆனால் இனியொருமுறை விழுந்தால் தலை தேறாது ! தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் ! //

      Delete
    2. @Raghavan, பொதுவான பார்வையில் நீங்கள் குறிப்பிடுவது நடைமுறை யதார்த்தமாக இருந்தாலும், இந்நாளைய நடைமுறையின் இன்னொரு பகுதியையும் சுட்டிக்காட்டுவது அவசியம் எனக்கருதுகிறேன்:

      பெரிய நிறுவனங்கள் முதல் தனிநபர் படைப்பாளர் வரை அனைவரும் Illegal Sharing சம்பந்தப்பட்ட தளங்களுக்கு DMCA takedown notice அனுப்பி Share link'களை களையும் வழக்கம் தினசரி Routine ஆகவும் உள்ளது. இந்த Routine'களை மீறிதான் Sharing நிலைத்திருக்கிறது என்பது வீறுவிஷயம். கவனத்தில் கொள்ளுங்கள் Share link'களை களையும் முறையான முயற்சிகள் அவசியமே.

      நமது சிறிய வட்டத்தில் பிரச்சனை வேறுமாதிரியானது. ஒரு புதிய தொடர் வெளிவரும் சமயத்தில் உரிமம் பெறாத வேறு Versions பகிரப்படுவது, ஒரு கதையின் வரவேற்பைக்கூட பாதிக்கக்கூடும்.

      Delete
    3. @ ALL : வெளிப்படையாய் இருப்பது இரட்டை முனை கொண்ட கத்தியைக் கையாள்வதற்குச் சமம் என்பது நாம் அறிந்ததே ! பல நேரங்களில் எனது நிலைப்பாடுகளை பகிர்ந்து கொள்ள தான் தயங்கியதில்லை என்றாலும் ; என் பக்கத்து நிகழ்வுகள் சகலத்தையும் நான் ஒப்பிப்பது நடைமுறை சாத்தியமாகாது !

      சமீப நிகழ்வுக்குப் பின்னணி என்னவென்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனும் போது அனுமானங்களை மட்டுமே முன்வைக்க சாத்தியமாகும். அவரவர் பார்வைகளில் அனுமானங்கள் வலுவான வாதங்களாய்த் தோன்றினாலும் - அவை வெறும் அபிப்ராயங்கள் மாத்திரமே என்பதை அறிந்தவன் நானாகத் தானிருக்க முடியும் !

      So திரும்பவும் ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் வரிக்கு வரி விளக்கம் சொல்லி என் நிலைப்பாட்டை நான் நிலைநாட்டும் முயற்சிக்குப் பதிலாய் - முடிந்து போனதொரு விஷயத்தை கடந்து செல்வதே சாலச் சிறந்தது என்பதால் பிந்தைய option -ஐத் தேர்வு செய்வோமே !

      Delete
    4. "வெளிப்படையாய் இருப்பது இரட்டை முனை கொண்ட கத்தி"
      -நிதர்சனம்

      "பல நேரங்களில் எனது நிலைப்பாடுகளை பகிர்ந்து கொள்ள தான் தயங்கியதில்லை"
      -ஃப்ஃடு(factu!)

      "என் பக்கத்து நிகழ்வுகள் சகலத்தையும் நான் ஒப்பிப்பது நடைமுறை சாத்தியமாகாது ! " -
      -இப்போது ஒப்பிப்பதே இன் மை ஒபினியன் கொஞ்சம் அதிகம் தான்

      "சமீப நிகழ்வுக்குப் பின்னணி என்னவென்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனும் போது அனுமானங்களை மட்டுமே முன்வைக்க சாத்தியமாகும் "
      -1000% agree

      "அவரவர் பார்வைகளில் அனுமானங்கள் வலுவான வாதங்களாய்த் தோன்றினாலும்"
      - உங்கள் எண்ண ஒட்டதை மிக சுரூக்கமாக தெளிவாக வெளிபடுத்தி உள்ளிர்கள்

      இது வரை நீங்கள் எழுதியதிலேயே என்னை மிகவும் கவ்ர்ந்த கமெண்ட். சொல்ல வர்ரதை தெளிவாக அதிலேயும் சுரூக்கமா சொல்ரது ரொம்ப ரொம்ப கஷ்டங்க்க.

      P.S: என் தேர்வு ஆப்ஷன் பி

      Delete
    5. @ Ramesh Kumar: The editor has every right to defend his copyrights - and to delink any leads to piracy!

      I am talking about moral policing by fellow commentators on this blog - before they adopt moral high grounds on comic piracy (aka scanlation) - they must ensure they are clean on other media copyright violations (as in pirated "TAMIL" DVD).

      Moral high ground, unfortunately does not depend or size of the business - rather it depends on the intent of business !

      Delete
    6. @Ragavan sir......shall i take the liberty to intervene?.....you are reminding me JOHN 8:7...but when they continued asking him he lifted himself up and said unto them He that is without sin among you,let him first cast a stone at her...
      so you are implying '' none but the sinless should condemn"".....perhaps you are right......

      but the perusal of the phrase " moral policing by fellow commentators"? ......now you are reminding me of MATTEW 7:1

      do not judge , or you too will be judged.............

      you have stopped watching pirated dvds since 2003.....are you using original windows version in your system at home?....


      P.S......answer not a fool according to his folly,lest you also be like to him ........old proverb

      Delete
    7. Selvam Abirami - I do use original windows at home - and fellow commentators - I include myself too - did you not read?

      /* ஒரு முறையேனும் திருட்டு DVD பார்த்தவர் (என்னையும் சேர்த்துதான்) அடுத்தவருக்கு அறிவுறுத்துவது நியாயமல்ல */

      P.S: I am aware of what Arignar Anna said "when you point a man with a finger, three fingers point at you - which is why the bracketed words above [(என்னையும் சேர்த்துதான்) அடுத்தவருக்கு அறிவுறுத்துவது நியாயமல்ல */ ] - don't jump too quick dude - read fully or read not :-)

      Delete
    8. // are you using original windows version in your system at home? //

      What if he uses mac or Linux? :P In such case, his answer would become "No" :D

      Just kidding!

      Delete
    9. நமது ஆசிரியர் அவரோட நிலைபாட்டை அழுத்தம் திருத்தமாக சொன்ன பின்னாடியும் சிலர் தொடர்ந்து SCANLATION நபர்களுக்கு ஆதரவ இங்கே பதிவிடுவது வருத்தம் அளிக்குது.

      சினிமா துறையும், மென்பொருள் துறையும், மேலை நாட்டு காமிக்ஸ் துறையும், பல லட்சம் கோடிகள் புழங்கற மேலடுக்கு தொழில் துறைகள். அவங்க 1000 CC பைக்ல , இந்த போட்டியில ஓடிட்டு இருக்காங்க. நம்ம ஆசிரியர் TVS50 ல ஒரு ஓரமா ரிசர்வ்'ல போட்டுகிட்டு வண்டிய ஓடிட்டு இருக்கார்.

      அங்கே நடைபெறுகிற பைரசி லெவல் வேற, எவ்வளவு அடிபட்டாலும் சமாளிச்கிடுவாங்க, நம்ம வண்டி தாங்காது. இது அவங்களுக்கு புரியுதான்னு தெரியல.


      // பல நேரங்களில் எனது நிலைப்பாடுகளை பகிர்ந்து கொள்ள தான் தயங்கியதில்லை என்றாலும் ; என் பக்கத்து நிகழ்வுகள் சகலத்தையும் நான் ஒப்பிப்பது நடைமுறை சாத்தியமாகாது ! //

      //மேலும் இப்படி ஒரு பதிவிட ஆசிரியரை உந்தித்தள்ளிய காரணங்கள் ஆயிரம் இருக்கலாம். அதை முழுமையாக உணராமல் விமர்சிப்பதும் புத்திசாலித்தனமாகாது!//

      ஆசிரியரோட ஒவ்வொரு செயலுக்கும் காரணம் கேட்டு, அவர கார்னர் பண்ண ட்ரை பண்ணாதீங்க! சில நபர்கள் எப்போதும் இங்கே ஓவர் ADVANTAGE எடுத்துக்கறது வாடிக்கையா நடக்குது. இப்போ ஓடிக்கிட்டிருக்கற நம்ம வண்டி பெட்ரோல் தீந்தாலும், தள்ளிகிட்டு வந்தாவது இடம் சேர்ந்தரறார். அதுக்கும் ஆப்பு வைக்க ட்ரை பண்ணாதீங்க ப்ளீஸ்!


      அப்புறம் அரசியல் வாதிகள் ஊழல் வழக்குகள்ள வாய்தா வாங்கறதுக்கு காரணங்கள தேடிபப்டிச்சு சொல்ற மாதிரி இருக்கு இந்த திருட்டு DVDக்கு -SCANLATION ன சம்மந்தப்படுத்தறது.

      ஒரு அரசாங்கம் கொடுக்கற சலுகைகள அனுபவிச்சுட்ட, அதுக்கப்புறம் அந்த அரசாங்கம் பண்ற தப்ப சுட்டிக்காட்டக்கூடதா என்ன? " நீ இலவச மிக்ஸி, கிரைண்டர் வங்கிடயில்ல, உனக்கு மத்த தப்ப தட்டி கேக்கற உரிமை இல்லை" ன்னு சொன்ன ஒத்துக்குவாங்களா??

      ஓட்டு போட்டா தான் நாட்டுல நடக்கற ஊழல்கள தட்டி கேட்கணுமுன்னு அவசியம் இல்ல.

      திருட்டு DVD பாக்கறவங்க SCANLATON நடந்த கம்முன்னு இருந்தரனுமா? அத சொல்ல இவங்களுக்கு உரிமை கொடுத்தது யாரு?

      Delete
    10. /* திருட்டு DVD பாக்கறவங்க SCANLATON நடந்த கம்முன்னு இருந்தரனுமா? அத சொல்ல இவங்களுக்கு உரிமை கொடுத்தது யாரு?*/

      /* நீ இலவச மிக்ஸி, கிரைண்டர் வங்கிடயில்ல, உனக்கு மத்த தப்ப தட்டி கேக்கற உரிமை இல்லை */



      Not that mate: If you sell your vote for 1000 rupees, you lose your right to question :-) Media piracy does not differentiate comics vs DVD vs VCD :-P

      Delete
    11. @Raghavan, பதிவுக்கு சம்பந்தமில்லை என்றாலும், இன்று சனிக்கிழமை (நாளை புதிய பதிவு) என்பதனால் இந்த அரட்டை இந்த பதிவில் மட்டும் OK என்ற கணிப்புடன் ஒரு விளக்கம்:

      தண்டனை என்ற சிந்தனை வரும்போதுதான் பைபிளின் அதிகாரங்கள் ஜான் 8:7 மற்றும் மத்தேயு 7:1 குறிப்பிடும் விஷயங்கள் கணக்கில் வரும். தண்டனை நோக்கமில்லாமல், ஒரு காரியத்தில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை சுட்டிக்காட்ட யாரும் கடவுள் அளவுக்கு Perfect'ஆக இருக்கவேண்டிய அவசியமில்லை. (பில்கேட்ஸும், ஸ்டீவ் ஜாப்ஸும் கூட திருட்டு VCD, DVD, VCR, VCP பார்க்கவில்லை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை)

      கூட்டமான பஸ்ஸில் ஒருவர் மற்றவரிடம் "நீங்கள் என் காலை மிதித்துக்கொண்டிருக்கிறீர்கள்" என்று சொல்லும் பட்சத்தில் பதிலடியாக "இதுவரையில் யார் காலையும் மிதிக்காதவர்கள் இதை சொல்லட்டும்" என்று சொன்னால்...

      எல்லோரும் சிரிப்பார்கள்! :D

      Delete
    12. //தண்டனை நோக்கமில்லாமல், ஒரு காரியத்தில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை சுட்டிக்காட்ட யாரும் கடவுள் அளவுக்கு Perfect'ஆக இருக்கவேண்டிய அவசியமில்லை. //

      +1
      //கூட்டமான பஸ்ஸில் ஒருவர் மற்றவரிடம் "நீங்கள் என் காலை மிதித்துக்கொண்டிருக்கிறீர்கள்" என்று சொல்லும் பட்சத்தில் பதிலடியாக "இதுவரையில் யார் காலையும் மிதிக்காதவர்கள் இதை சொல்லட்டும்" என்று சொன்னால்...//

      ஹா ...ஹா ..ஹா ...RK ...You too have amazing sense of humor .....:)

      Delete
    13. @rameshkumar,

      யாரும் கடவுள் அளவு பெர்பெக்ட் இல்லைதான் - நான் அப்டீன்னு சொன்னேனா ? :-)

      ஒரு திருடன் இன்னொரு திருடன பார்த்து திருடாதே - இந்த வீட்ல கொஞ்சம் காசுதான் இருக்குன்னு சொன்னா சிரிக்க மாட்டாங்களா ரமேஷ் :-) :-D

      லாஜிகலா பேசறேன்னு நெனச்சு சம்பந்தமில்லாமே compare பண்ணுறீங்களே தல :-) கூட்டத்துல காலை மிதிப்பது தவறு - mistake. கூட்டத்துல ஜேப்படி அடிக்கிறது? Crime :-) :-)

      வீடு புகுந்து பத்தாயிரம் திருடுறவனும் லட்ச ரூபாய் பேங்க் கொள்ளை அடிக்கிறவனும் திருடன் தான் ! ஒருத்தன மன்னிச்சு இன்னொருத்தன காட்டிக் கொடுப்போமா ?

      Delete
    14. lets see the issue beyond investigating/questioning individuals/friends credibility(by raising the question whether they can talk about scanlation or not). lets realize Edit's fear's raised by Edit in his words they are fear of entire Tamil comics community as well, as he said we cant take any chance.

      since friends realized the mistake and Edit himself self express his thoughts its better to move on friends.

      Delete
  52. Replies
    1. //நண்பர்களே நேற்றும் லஞ்ச டைமில் ///

      ஆனாலும் உங்களுக்கு தில் அதிகம்ங்க! ;)

      Delete
    2. ஒரு புள்ளி மிஸ் ஆகிவிட்டது . லஞ்ச் டைம் என்று படிக்கவும்

      Delete
    3. ஆனாலும் விவகாரமான புள்ளி தான் ...!! விடுபட்ட புள்ளி !! :-)

      Delete
    4. ஒருவகையில் லஞ்ச டைம் தான் விஜய் . இந்த புத்தக விழாவின் 10நாட்களிலும் நான் லஞ்ச் டைமில் 2to4, நான் வீட்டிற்கு செல்லாமல் நமது ஸ்டால் செல்லவும் , மற்றும் 1:45pmக்கே சாப்பிடும் வகையில் உணவு சமைத்து தரவும் என் வீட்டுக்காரிக்கு லஞ்சமாக 1புடவை , 1சினிமா &1ஹோட்டல் டின்னர் என 3க்குமாக ஒப்பந்தம் போட்டுள்ளேன். ( கம்பனி ரகசியத்தை சொல்ல வச்சுட்டார்பா நம்ம பூனையார்)

      Delete
    5. @ tex vijay

      ரொம்பவே காஸ்ட்லியான ஒப்பந்தம் தான்! :)

      Delete
    6. விஜய் : 2 ஞாயிறு தினங்களிலும் கிடைக்கும் முழு சுதந்திரத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் "காஸ்ட்லி " ஒப்பந்தம் என்ற தங்களின் கருத்தை நிச்சயம் மாற்றிக்கொள்வது சுலபம்.

      Delete
  53. ///முடிந்து போனதொரு விஷயத்தை கடந்து செல்வதே சாலச் சிறந்தது///

    இயலுமெனில், ஒரு புதிய பதிவைப் போட்டு இத்தளத்தில் நிலவும் ஒருவகையான இறுக்கத்தையும் கடந்து செல்வோமே எடிட்டர் சார்?

    ReplyDelete

  54. நண்பர்களே நேற்றும் லஞ்ச்(உணவு இடைவேளை ) டைமில் நமது ஸ்டால் சென்று வந்தேன். மதியம் முதலே ஒரளவு கூட்டம். மழையின் காரணமாக மிதமான விற்பனை. நேற்று Chief Judicial Magistrate , karur , Honarable A.Mohammed Jiyaputheen அவர்கள் சேலம் புத்தக விழாவற்கு வருகை தந்து , நம்முடைய ஸ்டாலுக்கும் வந்திருந்தார்கள் . அவரும் சிறு வயதில் முத்து காமிக்ஸ் படித்து வளர்ந்தவர் என்றும் , இப்போதும் காமிக்ஸ் வருவது கண்டு மகிழ்ச்சி என்றும் தெரிவித்தார்கள். தன்னுடைய 3வது படிக்கும் குழந்தைக்காக சில லக்கி லூக் புத்தகங்களை ஐயா அவர்கள் வாங்கி சென்றார்கள். புத்தக விழா நடத்தும் ரெயின்போ ஈவன்ஸ் திரு பர்வீன் அவர்களும் கூடவே வந்திருந்தார்.

    ReplyDelete
    Replies
    1. :)

      +1

      //அவரும் சிறு வயதில் முத்து காமிக்ஸ் படித்து வளர்ந்தவர் என்றும் , இப்போதும் காமிக்ஸ் வருவது கண்டு மகிழ்ச்சி என்றும் தெரிவித்தார்கள்.//

      :)

      Delete
    2. ஒரு திறமை மிக்க பத்திரிக்கையாளர் போன்று தொடர்ந்து அதிரடிக்கிறீர்கள் தோழரே!

      Delete
    3. அய்யோ ஜி ஏன் ? யாராவது நிஜ பத்திரிகையாளர் நம் தளத்தில் பார்வையாளராக இருந்து ,தலை ஸ்டைலில் "கவனித்து" விடப் போகிறார்கள். உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி ஜி. நீங்கள் தான் ஒரு திறமையான பத்திரிகையாளர் போல , சேலம் புத்தக விழா பற்றி நான் எழுதிய முதல் பதிவை பாராட்டி தங்கள் தளத்தில் சிறப்பாக விமர்சனம் செய்து உள்ளீர்கள் . http://johny-johnsimon.blogspot.in/2014/11/blog-post_11.html?m=1 இங்கே ஜியின் சிறப்பான அறிமுகத்தை படித்து விட்டு என்னை "கவனிக்க " வரும் உங்களை வருக வருக என வரவேற்கிறேன் நண்பர்களே.

      Delete
  55. Dear Friends...I remember reading Batman and Magician Mandrake Comics long back (may be 25 - 27 years back)...can any one tell who was the publisher of those comics? Thank you

    ReplyDelete
  56. வணக்கம் நண்பர்களே. நேற்று வரை பயமுறுத்தி வந்த மழை வெள்ளி மதியம் முதல் சுத்தமாக ஓய்ந்தது . நேற்று மதியத்திற்கு மேல் சில வெளியூர் நண்பர்கள் விஐயம் , மின்னும் மரணம் புக்கிங் என விற்பனை நல்ல விதமாக இருந்தது. ஈரோடு நண்பர் சங்கர் , பரமத்தி நண்பர் செந்தில் குமார் மற்றும் கோவை நண்பர் பாலமுருகன் -க்காக அவர் துணைவியார் பலமான பர்சேஸ் என நடந்தது .

    ReplyDelete
  57. அப்ப அடுத்த பதிவு ரெடியா ??? தலைப்பு இப்படி இருக்குமோ...
    சங்கட மேகங்களும்.. சந்தோசு சாரல்களும் ...

    ReplyDelete
  58. என் இன்றைய நாளில்...

    ஒரு சந்தோசம்: இந்தமாதப் புத்தகம்கள் ஒருவழியாக இன்று என் கைகளில் வந்து சேர்ந்தது! :)

    ஒரு வருத்தம் : மாயாவி சிவாவிடம் படிக்க ஓசி வாங்கிய இந்தமாதப் புத்தகம்களை நேரமின்மை காரணமாக இன்னும் படிக்கவில்லை. :(

    ஒரு சிந்தனை : எப்படியாவது மாயாவியின் புத்தகத்திலேயே படிச்சு முடிச்சுட்டா , என்னோட புத்தகம்களைப் புதுசாவே வச்சிக்கலாமில்ல! ;)


    ( Courtesy : Parani from Bangalore, for his "புத்தகம்கள்" template) ;)

    ReplyDelete
    Replies
    1. ஒரு சந்தேகம் ...பூனையார் செல்ஃபி எடுக்க மேக்கப் போட எடுத்து கொண்ட நேரத்தில் சைத்தான் வீடு படித்து இருக்கலாமே ....:-)

      Delete
    2. பாருங்க எடிட்டர் சார் இந்த செல்வம் அபிராமிய... நான் லார்கோ படிச்சிட்டிருக்கும்போது நடுவால நடுவால கேள்வி கேட்டு என்னை டிஸ்டப் பண்றார்...

      Delete
  59. சங்கட மேகங்கள் விலகி , சந்தோஷ சாரல்கள் ஆரம்பித்துள்ள ,கிளைமாக்ஸ் ஞாயிறுக்கு சேலம் மற்றும் சுற்றுப்பற காமிக்ஸ் ரசிகர்கள் மற்றும் நண்பர்களை வருக வருக என நண்பர்கள் அனைவரின் சார்பாக அழைக்கிறேன். வாருங்கள் நண்பர்களே அதகள ஞாயிறன்று குதூகளிப்போம்.

    ReplyDelete
  60. It's Sunday already, where it's the new post sir?

    ReplyDelete
  61. எடிட்டரின் பதிவை எதிர்பார்த்திருக்கும் இவ்வேளையில், அப்படியே சேலம் புத்தகத் திருவிழாவுக்கு ஒரு இலவச விசிட் அடிக்கணும்னா...
    இங்கே 'க்ளிக்'குங்க பாஸு!

    ReplyDelete
  62. Just 150 comments for this post ?? :-(

    ReplyDelete
  63. போராட்டக்குழுத் தலைவர் பரணிதரனின் நீண்ட மெளனம் கவலையளிக்கிறது. சேலம் புத்தகத் திருவிழாவுக்கு அவர் இதுவரை ஒருமுறைகூட வருகைதரவில்லை என்பதோடு, அவரது தொடர்பு எண்ணும் இருவாரங்களாக ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. :(

    'என்ன நண்பர்களே நான் சொல்வது சரிதானே' - புகழ் 'சேலம் கர்ணன்'னும் 'காணவில்லை' லிஸ்ட்டில் சேருகிறார். :(

    ReplyDelete
  64. அம்மா என்றால் அன்பு...test

    ReplyDelete