Powered By Blogger

Sunday, November 09, 2014

மார்க்கண்டேய நால்வர் !!

நண்பர்களே,

வணக்கம். ஒன்றரை மாதத்தை ஸ்வாஹா செய்த 2015-ன் அட்டவணையை ஒரு வழியாய் உங்களிடம் ஒப்படைத்து  - பெரிதாய் நெருடல்கள் ஏதுமின்றி அனைவரையும் குஷி கொள்ளச் செய்ததில் மெய்யாக பெரியதொரு relief எனக்கு ! 'இதைச் சேர்த்திருக்கலாம் ; இதை காலி பண்ணியிருக்கலாம் !" என்ற ரீதியில் நிறைய அபிப்ராயங்கள் சென்றாண்டு கூட வந்திருந்தன  ! இம்முறை இயன்றளவுக்கு அனைவரின் ரசனைகளோடும் நான் ஒத்துப் போக அடித்த பல்டிகள் பலன் தந்துள்ளதைக் கண்டு சந்தோஷமாய் உள்ளது ! தேர்வுகள் பற்றி ; புது அறிமுகங்கள் பற்றி ; சில கதைகளை நிராகரித்தது பற்றியெல்லாம் இதழ்களில் ஆங்காங்கே வண்டி வண்டியாய் எழுதிக் குவித்துள்ளதால் மீண்டுமொருமுறை அந்த மாவையே அரைக்கப் போவதில்லை !


'குறைகள்' - என நண்பர்களில் சிலர் சுட்டிக் காட்டியுள்ளது  :டேஞ்சர் டயபாலிக் இடம் பிடிக்காது போனதையும்  ; டெக்ஸ் கதைகள் சற்றே ஜாஸ்தி என்றதையுமே! 2014-ன் அட்டவணையிலேயே இத்தாலியக் கூர்மண்டையருக்கு இடம் இல்லை எனும் போது - தொடரும் ஆண்டினில் அவருக்கு வாய்ப்புக் கிட்டுமென்ற  எதிர்பார்ப்பு  சற்றே optimistic என்று தான் சொல்லத் தோன்றுகிறது ! 300+ கதைகள் கொண்ட இத்தொடரில் நிறைய episodes ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்து  கிடப்பதும், நிமிஷத்தில் தினுசு தினுசாய் முகமூடி செய்து முகத்தில் ஒட்டிக் கொண்டு சுற்றியுள்ளோருக்கு அல்வா கொடுக்கும் அந்தப் பாணிகளும் கொஞ்சம் நெருடலாய் தோன்றுவதே இவர் ஓரமாய் அமர நேர்ந்ததன் பின்னணி ! Anyways - நம்மிடம் இன்னமும் ஒரு டயபாலிக் சாகசம் துயில் பயின்று வருவதால் அதனை இடையில் ஒரு தருணத்தில் களம் இறக்கிடுவோம் !

TEX ஓவர்டோஸ் என்பதை நான் மட்டுமன்றி நண்பர்கள் அனைவருமே பெரியதொரு பிரச்னையாகக் கருதப் போவதில்லை என்பது நிச்சயம் ! 46 இதழ்களைக் காணவிருக்கும் ஓராண்டில் - லயன் # 250-ஐத் தாண்டி மொத்தமே 2 இதழ்கள் தான் TEX-க்கு எனும் போது இதனில் அயர்ச்சி நேரும் ஆபத்துக்கள் கிடையாது என்றே நினைக்கிறேன் ! அது மட்டுமன்றி இம்முறை நாம் தேர்வு செய்ய முனைந்திருக்கும் TEX கதைக்களங்களும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவைகளாய் இருக்கும் ! So ஒரே ஸ்டீரியோடைப் அடிதடிக் கதைகளாய் இராது என்பது நிச்சயம். தவிர, விற்பனைக்குத் துளியும் சிரமம் தரா ஒரு box office நாயகரை கொஞ்சம் தாராளமாகவே பயன்படுத்திக் கொள்வதில் தப்பில்லை தானே ?  இப்போது சேலத்தில் நடைபெறும் புத்தக விழாவினில் கூட நம் ஸ்டாலில் முதலில் காலியாகியுள்ளது - "கார்சனின் கடந்தகாலம்" தான் !! நேற்றைக்கே TEX பிரதிகள் அத்தனையிலும் இரண்டாவது ரவுண்ட் pack பண்ணி அனுப்பியுள்ளோம் ! 

இங்கே சின்னதாய் ஒரு விஷயத்தையும் குறிப்பிட விரும்புகிறேன் ! "எனக்குப் பிடிக்காத கதைகளை நீங்கள் தலையில் தூக்கிக் கொண்டு சிலாகிப்பதால் உங்களையும் பிடிக்கவில்லை !" என்ற ரீதியில் அவ்வப்போது கடிதங்கள் பக்கம் பக்கமாய் வந்து சேர்வதும் தற்போதைய நடைமுறையில் உள்ளது ! எல்லாரிடமும் நல்ல பிள்ளையாவது  அந்த ஈசனுக்கே இயலாக் காரியமென்ற நிலையில் - சுண்டைக்காய் நானெல்லாம் எம்மாத்திரம் ? என்பது புரியாமலில்லை !   ஆனால் - சில வேளைகளில் இந்த டெக்ஸ் - டைகர் ; மும்மூர்த்திகள் - புதியவர்கள் தொடர்பான  உராய்வுகளை ஒரு சில வாசகர்கள் ஓவராய் தலைக்குக் கொண்டு செல்கின்றனரோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது ! தவிர, "மூத்த வாசகர்கள் ; நெடுநாள் வாசகர்கள் - எங்கள் பேச்சுக்கு பெரியதொரு மதிப்பில்லை ; புதுசாய் வந்தவர்கள் இன்று சொல்லும் கருத்துக்களுக்குத் தான் காரியம் ஆகிறது !" என்ற புகார்களையும் இது போன்ற கடிதங்களில் பார்க்க முடிகிறது ! சொல்லப்போனால் சமீபமாய் வந்திருக்கும் ஒரு கடிதத்தில் : "புதிய வாசகர்களுக்கு அறிவுரை" என்றதொரு பக்கமே உள்ளது !! எனக்குக் கேள்விக்குறியாய் நிற்பது ஒன்றே ஒன்று மட்டுமே !  True - அபிப்ராயங்களைக் கோரிப் பெறுகிறேன் தான் ; அவற்றைப் பரிசீலிக்கவும் செய்கிறேன் தான் ; சொல்லப்படும் கருத்தில் பொருள் இருப்பதாய்த் தோன்றும் பட்சங்களில் எனது சிந்தனைகளை மாற்றிக் கொள்வதும் உண்டு தான் ! ஆனால் ஒருபோதும் கருத்து வெளிப்படும் வாசகரின் தொன்மையை (!!) கணக்கில் கொள்பவனல்லவே நான் ! தவிரவும் அடிப்படையில் கோவேறு கழுதையைப் போன்ற பிடிவாத சிந்தனைக்காரன் நான் என்பதையோ ;  எனக்கென்று ஒரு முடிவெடுக்கும் ஆற்றல் உண்டென்பதையோ புகார் கடிதங்களை பக்கம் பக்கமாய்  அனுப்பும் நண்பர்கள் மறந்து விடுவதாய்த் தோன்றுகிறது ! தங்கள் சிந்தனைகளோடு ஒத்துப் போகும் வேளைகளில் நானொரு மதியூகியாகவும் ; உடன்பாடில்லா தருணங்களில் வில்லனாகவும் நான் காட்சி தருவது  புரிகிறது ! மாறுவது பார்வைகளின் கோணங்களே தவிர, நானல்ல என்பதை என்றோ ஒரு நாள் நண்பர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புவதைத் தாண்டி நான் செய்யக் கூடியதாக  வேறென்ன இருக்க இயலும் ? Anyways ஒரு அவசியத்துக்குக் கூட கடிதம் எழுத மறந்திருக்கும் இந்நாட்களில் நம் பொருட்டு இத்தனை சிரமம் மேற்கொள்ளும் நண்பர்களை பாராட்டவும் தேவை தான் ! 

Moving on to lighter things : நமது 2015-ன் அட்டவனையை ஓரளவிற்கு யூகிக்கும் நண்பருக்கு 2015-ன் சந்தா நம் அன்பளிப்பு என்று எப்போதோ நான் இங்கே பதிவு செய்திருந்தது நினைவுள்ளது ! பல நண்பர்கள் தங்கள் தேர்வுகளை எழுதியிருந்த போதிலும், closest & the earliest was பெங்களூரு பரணி ! வாழ்த்துக்கள் நண்பரே ! சந்தா உங்களுக்கு நமது பரிசு என்பதால் - நீங்கள் அனுப்பியிருக்கும் தொகையை திங்களன்று திரும்ப அனுப்பிடுகிறோம் !!

புதன் முதலாய் உங்களின் சந்தாக்கள் உற்சாகமாய் வரத் தொடங்கியுள்ளது சந்தோஷச் சேதி ! அதிலும் கிட்டத்தட்ட அனைவருமே சந்தாக்கள் ABC என மூன்றையும் தேர்வு செய்திருப்பது icing on the cake ! So இம்முறை இந்த reprint படலம் மண்ணைக் கவ்வாது என்பது நிச்சயம் ! இந்த இதழ்களுக்கு உங்களின் பங்களிப்பாய் ஏதேனும் இருக்க முடிந்தால்  -  we would be delighted ! 128 பக்க புக்கில் - 120 பக்கக் கதைகள் நீங்கலாய் 8 பக்கங்கள் காலி இருக்கும் ! அவற்றினில் 4 பக்கங்கள் விச்சு & கிச்சு ஜோடிக்கு ஒதுக்கியான பின்னே பாக்கியுள்ள 4 பக்கங்களில் உங்களின் 'மலரும் நினைவுகளைப்' பகிர்ந்திட ஆசையா ?  அந்தக் கதைகள் வெளியான ஒரிஜினல் நாட்களில் உங்கள் பால்ய சந்தோஷங்களைப் பகிர்ந்திட இப்பக்கங்களை ஒதுக்குவோமா ?


மறுபதிப்புகள் என்ற பேச்சு ஓடிக் கொண்டிருக்கும் சமயத்திலேயே இன்னுமொரு சேதியும் கூட ! ஜனவரி 2015-ன் சென்னைப் புத்தக விழாவின் போது 2012-ல் வெளியாகி  ; இன்று நம்மிடம் ஸ்டாக் இல்லாது போன நிறைய இதழ்களும் கிடைத்திடும் ! அந்தந்த இதழ்களோடு பின்னால் இருந்த black & white பக்கங்களுக்குக் கல்தா கொடுக்கப்பட்ட நிலையில் "என் பெயர் லார்கோ " ; டபுள் த்ரில் ஸ்பெஷல் ; தங்கக் கல்லறை : WILD WEST SPECIAL ஆகியன January'15-ல் தயாராகி இருக்கும் ! And before  forget : ஜனவரி புத்தக விழாவினில் நமக்கு ஸ்டால் கிடைக்கும் பட்சத்தில் - துவக்க 2 நாட்களின் மாலைகளிலும் (ஜனவரி 9 & 10) ; தொடரும் வார இறுதியினிலும் நானும், ஜூ.எ.வும் நமது ஸ்டாலில் ஆஜராகி இருப்போம் உங்களை சந்திக்கும் பொருட்டு ! So இப்போதே ரயில் டிக்கெட்டுகளைத் தயார் செய்திட நினைக்கும் நண்பர்கள் can do so !  "மின்னும் மரணம்" மொத்த collection-ன் வெளியீட்டை  நண்பர்கள் அபிப்ராயப்படுவது போல 2015 ஏப்ரலில் சென்னையில் நடக்கும் (இரண்டாவது) புத்தக விழா சமயத்தில் வெளியே எங்கேனும் ஒரு சின்ன ஹாலில்  வைத்துக் கொள்ளலாம் ! பெரிய பந்தாக்கள் ஏதுமின்றி - நண்பர்களை சந்திக்க இதுவொரு வாய்ப்பாகிடும் பட்சத்தில் - புத்தக விழாக்களுக்குள் யாரையும் தொந்தரவு செய்யாமலே நம் பாட்டைப் பார்த்தது போலவும் ஆகிடும் ! மாலை வேளையில் சந்திப்பை வைத்துக் கொண்டால்  ஒரு டின்னரோடு மின்னும் மரணத்தைச் சுவைக்க சாத்தியமாகும் ! What say all ?  

2015-ன் கதைகளைத் தேர்வு செய்வதை விட அவற்றிற்குப் பெயர் வைக்கும் படலம் தான் டப்பா டான்ஸ் ஆடச் செய்யும் வேலையாக அமைந்தது ! 'பளிச்' என்று தலைக்குள் உதிக்கும் முதல் பெயரானது - தெலுங்கு டப்பிங் படத்தின் டைட்டில் போல காரசாரமாய் இருந்து நிறைய கடுப்பேத்திய நாட்களும் கணிசமாய் உண்டு !"மரணம்" என்ற சொல்லை முடிந்தளவு ஓரம் கட்ட முயற்சித்தாலும் 2 இதழ்களின் பெயர்களின் ஓரங்களில் அது தொற்றிக் கொள்வதைத் தவிர்க்க இயலவில்லை ! வண்டி வண்டியாய்க் கதைச் சுருக்கங்களை எத்தனை தான் படித்தாலும் - வெறுமனே கதைகளின் outline -ஐ மாத்திரமே பிடித்துக் கொண்டு ஒரு decent பெயரைத் தேர்வு செய்வது சுலபமாகவே இருப்பதில்லை  ! "விடிய விடிய விஞ்ஞானி " ; "ஒற்றை நொடி ஒன்பது தோட்டா.." போல சில பெயர்கள் நொடியில் உதித்த போதும், ஒரு சிலவற்றிற்கு மொக்கை தான் போட வேண்டியிருந்தது ! தொடரும் மாதங்களில் அந்தந்த கதைகளின் மீது பணியாற்றும் சமயத்தில் இன்னமும் பொருத்தமாய்க் கதைகளுக்குப் பெயர்கள் சிக்கிடும் பட்சத்தில் - "பூ"வுக்குப் பதிலாய் "புய்ப்பம்" இடம் பிடிக்கக் கூடும் ! (அது சரி...இம்மாத லார்கோவின் கதைக்கு இன்னொரு பெயர் வைப்பதாக இருப்பின் - நீங்கள் தேர்வு செய்யும் பெயர் என்னவாக இருக்கும் ? Alternate Name Game ஒன்றினை அவ்வப்போது செயல்படுத்திப் பார்ப்போமே ?  )

 சரி, சந்தா குறித்தான சில வினாக்களுக்கு இனி என் பதில்கள் :

அயல்நாட்டுச் சந்தாக்கள் பற்றி : ஒவ்வொரு முறையும் நமது இதழ்களின்  எடைகள் மாறி வருவதால் ; சரியான தபால் கட்டணங்களை முன்கூட்டியே கணிக்க சாத்தியமாவதில்லை ! நேற்றுக் கூட நவம்பரின் 3 இதழ்களையும் தபாலில் அனுப்ப என்னென்னமோ கட்டணக் குளறுபடிகள் நேர்ந்து இறுதியில் ரூ.920 கட்டிடத் தேவையானது ! So 2015-ன் சந்தாவுக்கு மொத்தமாய் ஒரு தொகை வசூலித்து விட்டு - அதனிலிருந்து கணக்கு வைத்துக் கொள்வதே சுலபம் என்று தீர்மானித்துள்ளோம் ! இந்தியப் பணத்துக்கு ரூ.10,000 கிடைக்கும் விதமாய் பணம் அனுப்பிடுங்களேன் ப்ளீஸ் ! 
------------------------------------------------------------------------------------------------------------
ப்ரொபசனல் கொரியர் - தமிழகத்துக்கு வெளியே - 4400/- (A+B+C)
ப்ரொபசனல் கொரியர் - தமிழகத்துக்குள் (A+B+C) - ???

தமிழக ST கூரியர் கட்டணங்களை விட ரூ.225 ஜாஸ்தியாய் !
----------------------------------------------------------------------------------------------------------------------------------

அதே போல சந்தாக்களில் அல்ஜீப்ரா பார்முலாக்கள் பணிகளில் AB : AB  ; ABC என்றெல்லாம் இருக்கும் நிலையில் - தனியாக C மட்டும் போதும் என்ற தேர்வுகள் நம்மவர்களின் பணிகளை சிக்கலாக்கி விடும் ! தவிரவும், மெயின் சந்தா A இல்லாத பட்சத்தில் - கூரியர் கட்டண சலுகைகள் சாத்தியமாகாது ! So மறுபதிப்பு மட்டுமே போதுமென்று நினைக்கும் நண்பர்கள் அவற்றை அவ்வப்போது நமது ஆன்லைன் தளத்தில் வாங்கிக் கொள்ளலாம் ! 

----------------------------------------------------------------------------------------------------------------------------------

சந்தா C -ன் பாக்கி 8 மறுபதிப்புக் கதைகள் எவை ? 

அடுத்த batch of 4 books வெளியாகும் வேளை நெருங்கும் போது அறிவிப்புகள் வந்திடும் ! அது வரை களம் யூகங்களின் வசம் ! 

----------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒற்றை நொடி ஒன்பது தோட்டா.!

சார் ரொம்ப நீநீநீளமா தொடர வேண்டாம் சார்.!
பயம்மா இருக்கு.!!
க்ரைம் த்ரில்லர்., ரொம்ப gap விட்டா புஸ்ஸுன்னு போயிடும்.!
அடுத்தடுத்து போட்டு முடிச்சிட்டா நல்லாருக்கும் சார்.!//

No fears...! .இதுவொரு 3 பாகத் தொடர் மாத்திரமே ! வரும் மார்ச்சில் இரண்டாம் பாகமும் ; 2015-ன் இறுதிக்குள் இறுதிப் பாகமும் உருவாகிடும் பிரெஞ்சில் ! நாம் இதனைக் கையாளப் போவதே 2015-ன் செப்டெம்பர் வாக்கில் என்பதால் 2016-ன் துவக்க மாதங்களில் பாக்கி 2 பாகங்களையும் போட்டு சூட்டோடு சூடாய் முடித்து விடலாம் !

---------------------------------------------------------------------------------------------------------------------------------
//ஒரு திடீர் திருப்பமாய் - 2 புதிய படைப்பாளிகள் நமது பல நாள் கோரிக்கைகளுக்கு ஒரு மார்க்கமாய் தலை அசைக்கத் தயாராகும் ஒரு சூழல் உருவாகி வருகிறது !!//
புதிய படைப்பாளிகள் என்பதால், கதைகளும் இதுவரை நமக்கு தமிழில் பரிச்சயமில்லாதவையாகத்தான் இருக்குமென்று தோன்றுகிறது. //

நமக்குத் தான் இரண்டே கியர்கள் தானே..? "தொற தொற" வென உதறும் முதல் கியர் - அல்லது நேரடியாக டாப் கியர் !! நானும் இதற்கு இடைப்பட்டதொரு கியரில் செட்டில் ஆக வேண்டுமென என்ன தான் முயற்சித்தாலும் சபலங்கள் பல ரூபங்களில் தோன்றத் தான் செய்கின்றன  ! அவற்றுள் லேட்டஸ்ட் தான் இந்தப் புது பதிப்பகங்களின் - புதுக் கரிசனப் பார்வைகள் ! என்றோ ஒரு காலத்தில் நான் விக்கிரமாதித்தனைப் போல விடா முயற்சியாய் போட்டு வைத்த துண்டுகளின் பலன் தாமதமாய் துளிர் விடுவது போலொரு சூழ்நிலை ! ஒன்றுக்கு மூன்றாய் புதிய படைப்பாளிகள் நம் பக்கமாய் காதல் கணைகளை வீசிட - அவர்களுடன் ஒரு ஒப்பந்தம் உறுதியாகிடும் பட்சத்தில் இந்த அட்டவணையிலேயே புதியவர்களைப் புகுத்தி விடுவதென ஓசையின்றிக் காத்திருந்தேன் ! But நம் அவசரத்தின் பொருட்டு - அவர்களை 'நை-நை' என்று அரிக்க மனமின்றி பேச்சு வார்த்தைகளை அதன் போக்கிலேயே செல்ல விட்டு விட்டேன் ! மூன்றில் ஒன்று click ஆனால் கூட ஒரு சந்தோஷமான சங்கடம் நமக்குக் காத்துள்ளது என்பது மட்டும் உறுதி !! Fingers...toes...all crossed !! 
---------------------------------------------------------------------------------------------------------------------------------

காமிக்ஸ் புதையலா...? அலிபாபா வின் புத்தக சுரங்கமா ...? காலயந்திரம் ஒன்று இருந்தால்
அதில் ஏறி 2015 டிசம்பர் சென்று எல்லா கதைகளையும் இந்நேரம் படித்து முடித்திருப்பேன்
ABC மட்டும் போதாது D ஒன்றும் வேண்டும் பழைய மினி லயன் ,JUNIOR LION புத்தகங்களின்
தொகுப்புக்காக ..எடிட்டர் மனம் வைப்பாரா .....?
English-ல் உள்ள சகல எழுத்துக்களையும் ஆக்கிரமிக்க சரக்கெல்லாம் உண்டு தான் ; ஆனால் முட்டையிடும் வாத்தை 'யெவ்வ்வ் '' என்று ஏப்பம் விட்ட கதையாகிடக் கூடாது என்பதும் முக்கியம் தானே ? கோடிகளில் உள்ள ஜனத்தொகையின் மத்தியில் நான்கிலக்க எண்ணிக்கையாய் மாத்திரமே உலவி வரும் இந்த காமிக்ஸ் காதலர் குழுவின் எண்ணிக்கை மேன்படும் நாளில் வானமே எல்லை !    
----------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்புறம் நமது சேலம் புத்தக விழாவின் News : முதல் இரு நாட்களிலுமே உற்சாகம் தரும் விற்பனை + சந்தா முன்பதிவுகள் நடந்து வந்துள்ளன ! பெரியதொரு எற்பாடுகளின்றி தனியார் நிறுவனம் நடத்தும் விழா - எவ்விதம் இருக்குமோ ? என்ற லேசான தயக்கம் எனக்குள் இருந்தது ; ஆனால் சேலம் மக்களின் ஆர்வம் + நமது நண்பர்களின் அதி உற்சாக உதவிகள் ஒன்றிணைந்து இந்த விழாவை  நமக்கொரு புது விற்பனை outlet -ஐ உருவாக்கியுள்ளது என்று நினைக்கத் தோன்றுகிறது ! Thanks ever so much all !!!






இந்தப் பதிவை நிறைவு செய்யும் முன்பாக சின்னதொரு snippet -ம் கூட :  :

சென்ற ஞாயிறின் மறுபதிப்பு அறிவிப்பைத் தொடர்ந்து இங்கு நாம் கண்ட அதகள response-ஐ லார்கோ + புது அட்டவணை கூட ஈட்டவில்லை எனும் போது OLD IS STILL VERY MUCH THE GOLD TO CRAVE FOR  - என்பது புரிகிறது !! இந்த பிரிட்டிஷ் படைப்புகளை அவர்கள் தேசத்தில் கூட இத்தனை கொண்டாடியிருக்க மாட்டார்களென்பது நிச்சயம் !! 'கூடிய சீக்கிரமே சட்டித் தலையன் அர்ச்சியையும் உள்ளே நுழைத்து விடுவோமே !' என்று ஜூனியர் வலுவாய் சிபாரிசு செய்து வரும் நிலையில்  - அந்தப் புண்ணியவானையும் 2016-ன் பட்டியலுக்குள்ளே இழுத்து வந்தால் ஆச்சர்யம் கொள்ளாதீர்கள் !! 



நம் பால்யங்களை பெருமளவில் வசீகரித்த இந்த 3 பிரிட்டிஷ் சூப்பர் ஹீரோக்கள் இன்றைய சூழலில் அவர்களுக்குள் பேசிக் கொண்டால் என்ன மொக்கை போட்டிருப்பார்களோ ? அந்தக் கற்பனைக் குதிரைகளைத் தறி கெட்டு ஓட விடலாமே ?! 



திருவிழாக் கூட்டத்தில் தொலைந்து போன சிறு பிள்ளைகளாய் லார்கோவும், ரிப்போர்டர் ஜானியும் கடந்த பதிவினில் ஓரம் கட்டப்பட நேர்ந்ததால் - இந்நேரத்திற்குக் கதைகளைப் படித்திருக்க நேரம் கிடைத்திருக்கும் பட்சத்தில் உங்களின்  விமர்சனங்களைக் கொஞ்சமாய் பதிவிடலாமே ? see you around next week folks ! Bye for now !

P.S: உடல்நலமின்றி இருப்பினும், காமிக்ஸ் காதலைக் கைவிடாது நம் பதிவுகளை போனில் தொடர்ந்து பார்த்து வரும் நம் நண்பர் பிரான்சைச் சார்ந்த திருச்செல்வம் ப்ரபானந்த் நலம் பெற வேண்டிக் கொள்வோமே !! GET WELL SOON !! WE ARE ALL WITH YOU !! 

339 comments:

  1. //
    Moving on to lighter things : நமது 2015-ன் அட்டவனையை ஓரளவிற்கு யூகிக்கும் நண்பருக்கு 2015-ன் சந்தா நம் அன்பளிப்பு என்று எப்போதோ நான் இங்கே பதிவு செய்திருந்தது நினைவுள்ளது ! பல நண்பர்கள் தங்கள் தேர்வுகளை எழுதியிருந்த போதிலும், closest & the earliest was பெங்களூரு பரணி ! வாழ்த்துக்கள் நண்பரே ! சந்தா உங்களுக்கு நமது பரிசு என்பதால் - நீங்கள் அனுப்பியிருக்கும் தொகையை திங்களன்று திரும்ப அனுப்பிடுகிறோம் !!//

    congrats பரணி !

    ReplyDelete
  2. //மறுபதிப்புகள் என்ற பேச்சு ஓடிக் கொண்டிருக்கும் சமயத்திலேயே இன்னுமொரு சேதியும் கூட ! ஜனவரி 2015-ன் சென்னைப் புத்தக விழாவின் போது 2012-ல் வெளியாகி ; இன்று நம்மிடம் ஸ்டாக் இல்லாது போன நிறைய இதழ்களும் கிடைத்திடும் ! அந்தந்த இதழ்களோடு பின்னால் இருந்த black & white பக்கங்களுக்குக் கல்தா கொடுக்கப்பட்ட நிலையில் "என் பெயர் லார்கோ " ; டபுள் த்ரில் ஸ்பெஷல் ; தங்கக் கல்லறை : WILD WEST SPECIAL ஆகியன January'15-ல் தயாராகி இருக்கும் !//

    sir will this books("என் பெயர் லார்கோ " ; டபுள் த்ரில் ஸ்பெஷல் ; தங்கக் கல்லறை : WILD WEST SPECIAL ) be available in world mart too?

    ReplyDelete
  3. Waiting for the Chennai Book festival....to buy the comics that i missed during the 2012 to 2014 period...thanks sir

    ReplyDelete
  4. I have been waiting to see this post

    ReplyDelete
  5. one request behalf of our onshore,offshore(no access to book via book shop, new followers via world mart, blog, website) friends,

    kindly upload entire 2015 book list booklet as PDF,(if possible in all three places world-mart, blog, and Lion website), it may help some of our friends who don't have immediate access to the booklet/no access at all to the booklet, to view the list and decide about subscribing soon.

    ReplyDelete
  6. Replies
    1. Superb poster Mayavi :)
      If there is a chance will make in this week to the Salem book festival

      Delete
    2. சிவா, முடிந்தால் நமது ஆதர்ச நாயகர்களில் மறு (பதிப்பு) வருகை பற்றி நீங்கள் ஒரு போஸ்டர் தயார் செய்து நமது ஸ்டாலில் தொங்க விட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

      Delete
    3. சேலம் புத்தகத்திருவிழாவில் மறுபதிப்பை கொண்டாடும் விதத்திலும், பழைய வாசகர்களை கவரும் படியும் வைத்துள்ள போஸ்டர்கள்...
      பொக்கிஷம்-1
      பொக்கிஷம்-2
      பொக்கிஷம்-3
      பொக்கிஷம்-4

      Delete
  7. சண்டே போஸ்ட்...ஆனால் சனிக்கிழமையே....Interstellar எபக்டு...!?

    ReplyDelete
  8. நள்ளிரவிலிருந்து காத்திருந்த நண்பர்களுக்கு நல் விருந்தாய் ஒரு பதிவு. என் பெயர் லார்கோ அட்டையை பார்க்கும்போது 100 ரூபாவுக்கு இத்தனை பக்கத்தில் அட்டகாசமாய் ஒரு இதழ்வந்ததே என்ற சிந்தனை எழுவதோடு வயிற்றிலும் எரிவு தெரிகிறதே! எனக்கு மட்டும்தானா?

    ReplyDelete
  9. 7th...
    இனிய காலை வணக்கம் எடிட்டர் சார்!!!
    இனிய ஞாயிறு காலை வணக்கம் நண்பர்களே!!!

    ReplyDelete
    Replies
    1. இனிய காலை வணக்கம் Sathiya!

      Delete
  10. //அந்தந்த கதைகளின் மீது பணியாற்றும் சமயத்தில் இன்னமும் பொருத்தமாய்க் கதைகளுக்குப் பெயர்கள் சிக்கிடும் பட்சத்தில் - "பூ"வுக்குப் பதிலாய் "புய்ப்பம்" இடம் பிடிக்கக் கூடும் !//

    one புய்ப்பம் suggestion:
    personally didnt like "Lion not out" Edit sir, my suggestion for Lion 250 : Lion 250 Milestone special !

    ReplyDelete
  11. மிக நீண்ட பதிவு !!!மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும் ...

    ReplyDelete
  12. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )8 November 2014 20:12:00 GMT+5:30
    நண்பர்களே வணக்கம்

    அடுத்த வருடத்தில் மின்னும் மரணம் ,மற்றும் லயன் 250 என்ற சிறப்பிதழ்களோடு மற்றுமொரு சிறப்பிதழ் வர வாய்ப்புகள் அதிகம்.
    எதுவென்றால் இந்த மாத லார்கோ புக் , முத்துவின் 332 வது புக், அடுத்த வருட ரெகுலர் முத்து 14, மின்னும் மரணம் 1, ரீ பிரிண்டில் 9 . ஆக மொத்தம் 24 .

    332+24=356

    அப்போ முத்து 350 வது இதழ் எப்போது













    ReplyDelete
    Replies

    Erode VIJAY8 November 2014 21:51:00 GMT+5:30
    @ ஷல்லூம்

    தகவலுக்கு நன்றி!

    ஐடியா ரெடி!
    முத்துவின் சொத்தாகக் கருதப்படும் பத்து கதைகள் அப்படியே கொத்தாக ரீபிரிண்ட் - 350 ரூபாயில் - கண்ணைப் பறிக்கும் கருப்புவெள்ளையில் - தீபாவளி மலர்2015 - சந்தா 'D'

    நான் சரியாத்தானே பேசிக்கிட்டிருக்கேன்?


    Parani from Bangalore8 November 2014 23:32:00 GMT+5:30
    விஜய், நீங்க சரியாதான் பேசுறிங்க ஆனா நமது ஆசிரியர் இத சரியா ரெடி பண்ணி நம்பகிட்ட அடுத்த வருடம் கொடுப்பாரன்னு சந்தேகமாக இருக்கிறது.


    Erode VIJAY8 November 2014 23:58:00 GMT+5:30
    @ Parani from Bangalore

    நம்பும்கள் பரணி! ஆசிரியர் நிச்சயமாக நியாயம்கள் செய்வார்.

    ReplyDelete
    Replies
    1. தம்பி கருத்தா பேசுவாப்ல

      Delete
    2. அதானே முத்து 350 வது இதழ் எப்ப்ப்ப்ப்ப்ப்போ.

      Delete
    3. நம்ம எடியின் மர்மப் புண்ணகையைப்பார்த்தால் ஒரு வேளை அப்படி இருக்குமோ. "மிண்ணும் மரணம் " 350 வது இதழாக வந்து விடுமோ. நண்பர்களே நமக்கு "மிண்ணும் மரணம் " collector Edition ஆக மட்டுமே வேண்டும். முத்து - 350 தனியாக வேண்டும். இதற்கு அணைத்து நண்பர்களும் குரல் தர வேண்டும்.

      Delete
    4. Srithar Chockkappa @ நீங்க நம்ப ஆசிரியருக்கு நல்லாவே எடுத்து கொடுக்கிறிங்க :-)

      Delete
  13. ஆசிரியரியருக்கு ஒரு சவால் ... இல்லை போட்டி னுக்கூட சொல்லலாம்... சவால்ன்னே போட்டுக்கங்க...

    ஒற்றை வார்த்தையில் பெயர் வைக்க முடியுமா????

    பழைய பெயர் ஏதாவது இருக்கிறதா????

    ReplyDelete
    Replies
    1. Rummi XIII : பெயர்கள் நாமாய் வைத்துக் கொள்ளும் விஷயங்கள் தான் எனும் போது ஒற்றை வார்த்தை என்ன - ஒற்றை எழுத்தில் கூட சூட்டிக் கொள்ளலாமே !
      "நரகத்திற்கொரு நெடுஞ்சாலை" - "பயணம்' என்ற பெயரோடும் ஓடத் தான் செய்யும் ; "ஒரு நிழல் நிஜமாகிறது " - "நிழல்" என்றால் கூட ஒ.கேவாகத் தானிருக்கும் ! ஈர்ப்பு குறைவாக இருக்குமே தவிர a rose by any other name will be equally fragrant !

      Delete
  14. As Mr. S. SATISHKUMAR requested / asked please make the 2012 -2014 books in the Worldmart / online your websites also....It will help the others who are unable to visit the Book Fair....If possible you can post the titles and buy options a month advance so that it may also help you to decide on number of prints...Thank you

    ReplyDelete
  15. ஹைய்யா...இரும்புத் தலையன் ஆர்ச்சி வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி!!!
    அதே நேரத்தில் இந்த அடியேனின் கோரிக்கையான "இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர்,லாரன்ஸ்,ஜானி" கதைகளின் re-print களை "முழு வண்ணத்தில்" try பண்ணலாமே please....

    At least ஒவ்வொரு நாயகர்களின் 3 கதைகளில் 2 ஐ B&W லும் மற்ற ஒன்றை color ரிலும் வெளியிட்டுப் பார்க்கலாமே...
    இதற்கு வாசகர்களின் response எவ்விதமிருக்குமென்றும் தெரிந்து கொள்ளலாம்...அதற்கேற்றாற் போல் 2016 re-print ஐ B&W அல்லது color ah என்று தீர்மானிக்கவும் அது உதவியாக இருக்குமே...

    அட்டைப்படத்தில் பொன்னிறமாக மின்னும் மாயாவின் அந்த இரும்புக்கையை கதை முழுவதும் தரிசித்திட நீண்ட நாள் ஆசை....
    மேலே தங்களின் பதிவில் கூட "ஸ்பைடரும்,இரும்புத்தலையனும்" வண்ணத்தில் ஜொலிக்கிறார்களே!!!

    ReplyDelete
    Replies
    1. sathiya : சாத்தியமில்லா இலக்குகளின் மீது கவனத்தை சிதறச் செய்ய வேண்டாமே ?

      Delete
    2. ok...லார்கோவும், ஜானியும்,2015 ன் அட்டவணையும் காத்துள்ளது...படித்துவிட்டு வருகிறேன்....:)

      Delete
  16. என் பெயர் லார்கோ,டபுள் த்ரில் ஸ்பெசல் மீண்டும் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.அதே போல் கம் பேக் ஸ்பெசலும் மறுபதிப்பு செய்யுங்கள்.

    ReplyDelete
  17. ரிப்பிரிண்டு திரும்ப வருவது மிக்க மகிழ்ச்சி சார்.

    ReplyDelete
  18. சேலம் புத்தக விழாவின் News : முதல் இரு நாட்களிலுமே உற்சாகம் தரும் விற்பனை + சந்தா முன்பதிவுகள் நடந்து வந்துள்ளன ! பெரியதொரு எற்பாடுகளின்றி தனியார் நிறுவனம் நடத்தும் விழா - எவ்விதம் இருக்குமோ ? என்ற லேசான தயக்கம் எனக்குள் இருந்தது ; ஆனால் சேலம் மக்களின் ஆர்வம் + நமது நண்பர்களின் அதி உற்சாக உதவிகள் ஒன்றிணைந்து இந்த விழாவை நமக்கொரு புது விற்பனை outlet -ஐ உருவாக்கியுள்ளது என்று நினைக்கத் தோன்றுகிறது ! Thanks ever so much all !!!------- அப்பாடி என்று நிம்மதி இப்போது தான் வந்தது சார். இங்கே நாங்கள் சேலம் நண்பர்கள் உங்களை தூண்டி விட்டுவிட்டு , கடை போட வைத்து மாட்டி விட்டு விட்டமோ என்று பயந்து கொண்டே இருந்தோம். விற்பனை இருக்குமோ என நான் என்னை மறந்து யோசனையில் மூழ்கிய பல முறை நண்பர் ஸ்பைடர் ஶ்ரீதர் ,"நிகழ்காலம் வாங்க டெக்ஸ் நிச்சயமாக விற்பனை ஆகும் " என கூறிய வார்த்தைகள் சற்றே உண்மையாகி விட்டது கண்டு மகிழ்ச்சி. நண்பர்கள் அனைவரும் உற்சாகத்துடன் ஸ்டாலில் இருந்து விற்பனையை அதிகரிக்க செய்ய முயல்கிறார்கள் ,அவர்கள் அனைவருக்கும் நன்றி. மேலே என்னுடன் போட்டோவில்(உயரமாக இருப்பவர் ) நண்பர் யுவா ரெடிமேட்ஸ் கண்ணன். தன்னுடைய கடையை திறக்காமலேயே இங்கே , நம் ஸ்டால் இரவு 9மணிக்கு மூடும் வரை ஸ்டாலிலேயே இருந்து ,நமக்காக பணி செய்து வருகிறார்.அவருக்கு நம் நண்பர்கள் அனைவரின் சார்பாக ஒரு ஸ்பெசல் நன்றி. நேற்று பெங்களூரு தலை நண்பர் ஶ்ரீராம் நம் ஸ்டாலுக்கு வந்திருந்து மின்னும் மரணம் முன்பதிவை இங்கே ஆரம்பித்து வைத்தார். அவரை சந்திக்க 2மணிக்கு வந்து மாலை 8வரை காகாகாத்திருந்து உற்சாகமாக உரையாடி மகிழ்ந்தார் நாமக்கல் நண்பர் பழனிவேல். நெட் ஊத்திக் கொண்டதால் சில நண்பர்கள் வரவு பற்றி அப்டேட் செய்ய இயலாமைக்கு சிறு மன்னிப்பு கோருகிறேன். இன்று ஞாயிறு சந்திப்பிற்கு உற்சாகத்துடன் கிளம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சூப்பரு! நண்பர்களின் உற்சாகத்தில் பங்குகொள்ள இன்று மதியப்பொழுதுக்குப் பிறகு நானும் அங்கே இணைந்துகொள்கிறேன்.

      Delete
    2. சேலம் Tex விஜயராகவன் : //நாங்கள் சேலம் நண்பர்கள் உங்களை தூண்டி விட்டுவிட்டு , கடை போட வைத்து மாட்டி விட்டு விட்டமோ என்று பயந்து கொண்டே இருந்தோம். //

      லாபமென்றால் எங்களுக்கு - கஷ்டமென்றால் உங்களுக்கு ! என்றெல்லாம் நினைக்கத் தோன்றுமா சார் ? விற்பனையே இல்லாது போனாலும் , இம்முயற்சி நமக்கொரு விளம்பரம் என்று எடுத்துக்கொள்ள மாட்டோமா - என்ன ? இராமநாதபுர புத்தக விழாவிலேயே தலை தப்பித்த நாம் - சேலத்தில் நிச்சயமாய் சொதப்ப மாட்டோமென்ற எனது நம்பிக்கை பொய்யாகவில்லை !

      Delete
    3. விளம்பரம் நிச்சயம் சார். கூடவே இன்று காலை முதல் விற்பனையும் நன்றாக போய்க்கொண்டுள்ளதுங் சார். இங்கே உள்ள குறை நீங்கள் வரவில்லை என்பதேயாகும் சார். ஆனாலும் தங்கள் தந்தையார் மற்றும் தாங்கள் உள்ள போஸ்டர் மூலம் அந்த குறையை மாயாவி ஓரளவு போக்கியுள்ளார் சார். நிறைய நண்பர்கள் உடன் ஒரே கலகலப்பு உங்களுக்கு தான் தெரியமே. மாலை மற்றொரு அப்டேட் செய்கிறன் சார்.

      Delete
  19. 2015 ல் ஏகப்பட்ட குண்டு புக் வரும் என்று ஒரு பட்சி சொல்லுது. என்னைப் போன்ற குண்டு புக் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்து காத்திருக்கிறது.

    ReplyDelete
  20. கூர்மண்டையரை நடுவில் களம் இறக்குவது மகிழ்ச்சியளிக்கின்றது

    ReplyDelete
  21. டியர் எடிட்டர்,

    சந்தா packages தனித்தனியாய் குறிப்பிடப்பட்டு வந்தது நன்று. சந்தா செலுத்துவோருக்கும் discount அளிக்கப்பத்ததை வரவேற்கிறேன்.

    சந்தா A-வில் மசாலா நெடி சற்றே அதிகம் தான் - எனினும் சந்தா -B அதனை சரி செய்துவிடும்.

    ஏதோ ஒன்று குறைந்தாற்போல் தோன்றுகிறது - என்ன என்று சொல்லத் தெரியவில்லை - இத்தாலியக் கதைகள் - LMSல் வந்த மாதிரி நிறைய எதிர்பார்த்தேன் - அவ்வகை கதைகள் சற்று குறைவு போல தோன்றுகிறது. ஜூலியாவும் ஒன்று எதிர்பார்த்தேன் ! டயபாலிக் தனியாய் அறிவிக்கப்படாதது எனக்கும் வருத்தமே.

    ReplyDelete
    Replies
    1. Raghavan : //டயபாலிக் தனியாய் அறிவிக்கப்படாதது எனக்கும் வருத்தமே.//

      நம்மவர்களுக்கு ஒரிஜினல் கூர்மண்டையரைப் பிடித்துப் போன அளவிற்குப் புதிய கூர்மண்டையரைப் பிடிக்காது போனது துரதிர்ஷ்டம் தான் !!

      Delete
  22. தொடருகிறேன்........

    ReplyDelete
  23. * இது சாகஸ நேரம்! *
    இம்மாதம் வெளியான லார்கோ, ஜானி,
    திகில் த்ரில்லர், மூன்றும்
    மூன்று விதமான விறுவிறுப்பான
    வாசிப்பு அனுபவத்தை தந்து சாகஸங்களின்
    உற்சாகத்தில் திளைக்க வைத்தது!
    லார்கோவின் கதையமைப்பும் ஆக்ஷனும்
    சித்திரங்களும்
    இத்தொடருக்கு இணை ஏது என எண்ண
    வைக்கின்றன!["சங்கதி"ய விட
    மாட்டீங்களா எடிட்?]
    ஜானி நன்றாக உள்ள போதிலும் இன்னும்
    திகிலை எதிர் பார்த்தேன்![முதல்
    பதிப்பை படித்தது இல்லை!]
    இரவே இருளே கொல்லாதே செம்ம சூப்பர்
    த்ரில்லர்![நள்ளிரவு 12 மணிக்கு படிக்க
    ஆரம்பித்து 2.30க்கு முடித்தேன்!]
    இந்தக் கதை ஏன் சிலருக்குப்
    பிடிக்கவில்லை என்று புரியவில்லை.
    டெக்ஸ்வில்லரின் அரைத்த
    மாவுகளுக்கு இது எவ்வளவோ மேலானதும்
    உன்னதமாகவும் உள்ளது!"
    இரவே இருளே கொல்லாதே" கதையின்
    சுருக்கத்தை ஒரு பதிவாக இட
    எண்ணியுள்ளேன்!

    ReplyDelete
  24. I wan TeX willer reprints beginning stories.

    ReplyDelete
  25. Msakrates Sak
    * இரவே இருளே கொல்லாதே! *
    [Full story]
    நிகழ்காலம், இறந்த காலம், மனப்பிரமைகள், என
    மாறி மாறி பயணிக்கும்
    இக்கதையை புரிந்து கொள்ள அதிக கவனம்
    தேவைப்படுகிறது.
    என்னால் முடிந்தவரை ஒரு தெளிவான
    கதைச்சுருக்கம் தர முயற்சித்துள்ளேன்.
    புத்தகத்தை படித்த பின்
    இப்பதிவை வாசித்தால் கதை எளிதாகப்
    புரியும் என நம்புகிறேன்!
    ***
    எச்சரிக்கை!
    இப்பதிவில் இ.இ.கொ. வின் முழுக்கதையும்
    விவரிக்கப்பட்டு உள்ளதால் இக்கதையை இன்னும்
    வாசிக்காதவர்கள் இப்பதிவை வாசிக்காமல்
    தவிர்த்து விடும்படி கேட்டுக்
    கொள்கிறேன்.
    மீறி வாசித்தால் பின்னர்
    புத்தகத்தை வாசிக்கும் போது உங்கள்
    சுவாரஸ்யம் குறைய வாய்ப்புள்ளது.
    ***
    START:
    "கிரீப்பிள் கீரீக்" எனும்
    சிறு கிராமத்தின் செல்வந்தரான "டக்ளஸ்
    ஷெர்மான்" உள்ளூர் அழகி "மேரி"
    மீது மோகம் கொள்கிறான்
    அவர்களது பழக்கத்தில்
    மேரி கர்ப்பமடைகிறாள்.
    மேரியை திருமணம் புரிந்து கொள்ள
    விரும்பாத டக்ளஸ் அவளிடம்
    கர்ப்பத்தை கலைக்கும்படி கூறுகிறான்.
    மேரி மறுத்து விடுகிறாள்.
    அவளுக்குப் பிறக்கும் குழந்தையான
    "பில்லி" மன வளர்ச்சி குறைந்தவனாக
    இருக்கிறான்.
    உள்ளூர் சிறுவர்களால் ஒதுக்கப்படும்
    "நோரீஸ்" எனும் சிறுவன் மேரி மற்றும்
    பில்லியுடன் பாசமாகப் பழகுகிறான்!
    ஒரு ஹாலோவீன்
    தினத்தன்று குறும்புக்கார சிறுவர்கள்
    ஐவரால் கடத்திச் செல்லப்படும்
    பில்லி படுகொலை செய்யப்படுகிறான்.
    அக்கொலையை காணும் நோரீஸ் தன்
    கோழைத்தனத்தால் ஏதும் செய்ய இயலாமல்
    போய் விடுகிறது. ஆனால் அக்கொலையில்
    சம்பந்தப்பட்டவர்கள் அவன் மனதில் ஆழப்
    பதிந்து விடுகின்றனர்.
    மகனை காணாமல் தேடியலையும்
    மேரி டக்ளஸ் மீது சந்தேகம் கொள்கிறாள்.
    டக்ளஸை மேரி விசாரிக்கும்
    போது ஏற்படும் வாக்கு வாதத்தில் டக்ளஸ்
    மேரியை கொன்று விடுகிறான்.
    உள்ளூர் ஃபாதரின்
    ஆலோசனைப்படி அவளது வீட்டிலேயே அவளது உடலை தற்கொலை போல்
    தொங்க விடுகிறான் டக்ளஸ்.
    ஆனால் அதை பார்னே எனும்
    தெருவாசி பார்த்து விடுகிறான்.
    பார்னே குடிகாரன் என்பதாலும்
    மேரியை உள்ளூர் மக்கள்
    வெறுத்து வந்ததாலும் அவனது சாட்சியம்
    எடுபடாமல் போகிறது...
    25 ஆண்டுகள் கழித்து...

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள் பரணீ ..........

    ReplyDelete
  27. 25 ஆண்டுகள் கழித்து...
    "பெட்ஸி மகோர்ன்" எனும் ஹாலிவுட்
    நடிகை கிரீப்பிள் கிரீக்கின் வழியாக
    பயணம் செய்கையில் விபத்து ஒன்றில்
    சிக்குகிறாள்.
    [பெட்ஸி தன் சிறு வயதில் தன் அங்கிள்
    செஸ்டரின் பாலியல் வக்கிரங்களுக்கு
    பலியானவள். வளர்ந்த பின்னும்
    அச்சிறு வயது நினைவுகள்
    அவளது மனதிலிருந்து மறையாமல்
    அவ்வப்போது பிரமைகளில்
    சிக்குகிறாள். ]
    விபத்திலிருந்து அவளை மீட்கும் இன்றைய
    போலீஸ் டெபுடியான நோரீஸ் அவள்
    மேரியைப் போலவே உருவ ஒற்றுமையுடன்
    இருப்பதைக் காண்கிறான்.
    பழைய நினைவுகள் கிளர்ந்தெழவே அவனுள்
    பில்லியை கொன்றவர்களை பழி வாங்கும்
    வெறி ஏற்படுகிறது.
    தொடரும் நாட்களில்
    பில்லியை கொன்றவர்களை ஒவ்வொருவராக
    தீர்த்துக் கட்டுகிறான்.
    இடையில் பெட்ஸியிடம் ஜொள்ளு விடும்
    பேஸி எனும் இளைஞனும் நோரீஸால்
    கொலை செய்யப்படுகிறான்!
    நோரீஸ் பெட்ஸியின் உருவத்தில் மேரியைக்
    கண்டான் அவள் மீது அபிமானம் கொண்டான்.
    பெட்ஸியை காணும் டக்ளஸுக்கும் அவள்
    மேரியாகவே தென்படுகிறாள்.
    பிரமையில் தடுமாறும் டக்ளஸ்
    பெட்ஸியை விருந்துக்கு அழைக்கிறான்.
    இதை அறியும்
    பார்னே பெட்ஸியை சந்தித்து அவள்
    மேரி போல் உள்ளதையும் டக்ளஸ்
    மேரியை கொலை செய்ததையும்
    கூறி எச்சரிக்கிறான்!
    அதையடுத்து பார்னே டக்ளஸால்
    கொலை செய்யப்படுகிறான்!
    பார்னே கொலை செய்யப்பட்டதை அறியும்
    பெட்ஸி ஷெரீப்பை சந்தித்து டக்ளஸ்
    மீது புகார் செய்கிறாள்.
    தன்னை கைது செய்ய வந்த
    ஷெரீப்பை தாக்கிவிட்டு பெட்ஸியை மேரியின்
    வீட்டில் தூக்கிலிட முயற்சிக்கிறான்
    டக்ளஸ்.
    அப்போது அங்கே வரும் நோரீஸ்
    பெட்ஸியை காப்பாற்றி டக்ளஸை தூக்கில்
    தொங்க விடுகிறான்!
    அதன்பின் பில்லியைக் கொன்றவர்களில்
    எஞ்சியிருக்கும் புட்ச்
    கார்னெட்டை பெட்ஸியின் கண்
    முன்னாலேயே தீர்த்துக்கட்ட முயல்கிறான்.
    தடுக்க முயலும்
    பெட்ஸியை தாக்கிவிட்டு இறுதிப்பலியை நிறைவேற்றி விடுகிறான்!
    அப்போது அங்கே வருகிறான்
    "வெஸ்லே டோட்"
    [ இவன் முன்னர் மன நோயாளிகள்
    விடுதியில் சிகிச்சை பெற்றவன்,
    பெற்றோர்
    கண்ணெதிரே எரிந்து போனதை கண்டதால்
    பாதிப்புக்குள்ளான மன நிலையில்
    அவ்வப்போது வெறித்தனமாக
    நடந்து கொள்பவன்,
    சினிமாப் பைத்தியம்,
    நடிகை பெட்ஸி மீது பெரும் அபிமானம்
    கொண்டவன், நிகழ்ந்த கொலைகளுக்கு இவன்
    மீது சந்தேகப்படுவதாக நோரீஸ் சிறையில்
    அடைத்து வைத்திருந்தான்.
    ஆனால் நோரீஸ்தான்
    கொலையாளி என்பதை டோட்
    ஊகித்து விடுகிறான்!
    சிறையிலிருந்தும்
    தப்பி விடுகிறான் ]
    பெட்ஸியை நோரீஸ் தாக்குவதை காணும்
    வெஸ்லே டோட் நோரீஸை தாக்குகிறான்
    ஆனால் அவனையும் தீர்த்துக்கட்டும் நோரீஸ்
    பெட்ஸியிடம் வருகிறான்.
    அக்கணத்தில்
    தனது சிறு வயது சித்திரவதைகளின்
    பிரமைக்கு ஆளாகும் பெட்ஸி நோரீஸின்
    வடிவத்தில் தன் அங்கிள் செஸ்டரை கண்டாள் தன்
    உணர்வற்ற நிலையில்
    நோரீஸை சுட்டுத்தள்ளுகிறாள்...
    அக்கணத்தில் அவளது பிரமைகளும்
    நிரந்தரமாக மறைந்து போகின்றன!
    ***
    பூச்சாண்டி இனி இங்கே வரமாட்டான்...
    வரவே மாட்டான்...
    அவன் ஒழிந்து விட்டான்...
    ஒரேயடியாக...
    முற்றும்!

    ReplyDelete
    Replies
    1. good reviews friend, do continue...!

      Delete
    2. Msakrates : செல்போனில் இத்தனை டைப்பிங்கா ?? அப்பாடி !!

      Delete
  28. டர் ஒரு ஜானீ ஒரு மாயாவி ஓரு லாரன்ஸ் ஒரு டெக்ஸ் இவர்கள் அனைவரும் ஒரே இதழில் நம்மை சந்திக்க வருவர்கள் என்று நம்புகிறேன் (muthu350)வழியாக

    ReplyDelete
  29. /என் பெயர் லார்கோ " ; டபுள் த்ரில் ஸ்பெஷல் ; தங்கக் கல்லறை : WILD WEST SPECIAL ஆகியன January'15-ல் தயாராகி இருக்கும்//

    சார் ..போனவாரம் சந்தோஷ இடி மின்னல் ........இந்த வாரம் சந்தோஷ ஹூத் ஹூத் .........உள்ளம் களிக்கூத்தாடுகிறது ........

    ReplyDelete
    Replies
    1. சார் .....இவற்றையும் இப்போதே முன்பதிவு செய்யமுடியுமா ....?

      Delete
    2. //சார் .....இவற்றையும் இப்போதே முன்பதிவு செய்யமுடியுமா ....?//
      +1

      if possible plz make it properly via world mart, so some queue will be maintained, or i can(forced to) transfer some bulk amt today it self and wait for your announcement to avoid disappointment like last week sale!

      Delete
    3. selvam abirami : முன்பதிவெல்லாம் வேண்டியதில்லை நண்பர்களே ! தாராளமாய்க் கிடைக்கும் நம்மிடம் !

      Delete
  30. விஜயன் சார், அடுத்த வருட (C) மறுபதிப்பில் முடிந்தால் வைரஸ்-X கதையை வெளிஇடுங்கள். என்னை போன்றவர்கள் மிகவும் சந்தோஷபடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : நண்பரே : மாற்றங்கள் காணா முதல் அட்டவணை என்ற பெயரை இம்முறை நான் தவற விடக்கூடாதென்று உள்ளேன் !! So சாரி !!

      Delete
    2. எதையும் மாற்றவேண்டாம்.. நடுவில் ஒரு சிறப்பு மறுபதிப்பாக வெளி இடலாமே.. நிறைய நண்பர்கள் மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்க்கும் மற்றும் தேடி கொண்டு இருக்கும் ஒரு கதை இது!

      Delete
    3. கட்டாயம் தேவை சார்.

      Delete
  31. //பெங்களூரு பரணி ! வாழ்த்துக்கள் நண்பரே ! சந்தா உங்களுக்கு நமது பரிசு //
    ஹாஹாஹா.!

    என் ஆருடம் பலித்துவிட்டது.! நான்தான் சொன்னேனே .!

    இனி என்னிடம் குறி கேட்க "அப்பாயிண்ட்மெண்ட் " வாங்க வேண்டும்.! ஹிஹிஹி.!

    வாழ்த்துக்கள் பரணி.!

    ReplyDelete
  32. tex reprint (old) கண்டிப்பாக வேண்டும்

    ReplyDelete
  33. //இந்நேரத்திற்குக் கதைகளைப் படித்திருக்க நேரம் கிடைத்திருக்கும் பட்சத்தில் உங்களின் விமர்சனங்களைக் கொஞ்சமாய் பதிவிடலாமே ?//
    பழையே புத்தகங்கள் 29 வந்துள்ளதால், லார்கோ ஓரங்கட்டபட்டுவிட்டார். So விமர்சனம் தாமதமாக தான் வரும்.

    ReplyDelete
  34. //இந்த பிரிட்டிஷ் படைப்புகளை அவர்கள் தேசத்தில் கூட இத்தனை கொண்டாடியிருக்க மாட்டார்களென்பது நிச்சயம் !! //
    +1

    //'கூடிய சீக்கிரமே சட்டித் தலையன் அர்ச்சியையும் உள்ளே நுழைத்து விடுவோமே !' என்று ஜூனியர் வலுவாய் சிபாரிசு செய்து வரும் நிலையில் - அந்தப் புண்ணியவானையும் 2016-ன் பட்டியலுக்குள்ளே இழுத்து வந்தால் ஆச்சர்யம் கொள்ளாதீர்கள் !!//
    +1 I am expecting Archie a lot...

    ReplyDelete
  35. @ Parani from Bangaluru

    விலையில்லா சந்தாவைப் பெற்றிருப்பதற்கு வாழ்த்துகள் நண்பரே! பெரியதொரு ஆச்சர்யம் இல்லைதான்; நீங்களாகத்தான் இருக்குமென்பது ஏற்கனவே கணிக்கப்பட்டதுதான்! :)

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : விலையில்லா சந்தாவை நண்பருக்கு அன்பளிப்பாய் வழங்க முன்வந்திருக்கும் பரணியை இன்னுமொருமுறை வாழ்த்துவோமே !!

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  36. செம அப்டேட்ஸ்!!

    அழுகிற பிள்ளைக்கு பால் என்பது போல, ஆர்ச்சி, டயபாலிக் போன்றோருக்கு உடனடியாக வழி பிறக்கிறது.

    நானும் என் குறைகளை சொல்லிக்கொள்கிறேன். லக்கிக்கு ஒரு கதை நிச்சயம் போதாது. அதோடு இ.இ.கொ போன்ற ஒன் ஷாட் கதைகள் மிகவும் குறைவாக உள்ளன. 3 வரவேண்டிய இடத்தில் பவுன்சர் ஒன்றே இடம்பிடித்துக்கொண்டதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. :-)) ஆகவே மேலும் 2 கதைகள் வேண்டும்.

    மீண்டும் இது போல பல கோரிக்கைகள் உள்ளன. நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது வந்து சொல்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. //அதோடு இ.இ.கொ போன்ற ஒன் ஷாட் கதைகள் மிகவும் குறைவாக உள்ளன. 3 வரவேண்டிய இடத்தில் பவுன்சர் ஒன்றே இடம்பிடித்துக்கொண்டதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. :-)) ஆகவே மேலும் 2 கதைகள் வேண்டும்.//
      +1

      Delete
    2. //நானும் என் குறைகளை சொல்லிக்கொள்கிறேன். லக்கிக்கு ஒரு கதை நிச்சயம் போதாது. அதோடு இ.இ.கொ போன்ற ஒன் ஷாட் கதைகள் மிகவும் குறைவாக உள்ளன//

      ஆதி +1

      Delete
    3. விஜய், அதான் சுட்டி லக்கி உள்ளாரே!

      Delete
    4. //நானும் என் குறைகளை சொல்லிக்கொள்கிறேன். லக்கிக்கு ஒரு கதை நிச்சயம் போதாது. அதோடு இ.இ.கொ போன்ற ஒன் ஷாட் கதைகள் மிகவும் குறைவாக உள்ளன//
      +1

      Do we have separate supper six waiting(for such stories?) in line for 2015 Edit?

      Delete
    5. ஆதி தாமிரா : //நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது வந்து சொல்கிறேன்//

      குஜராத்தில் தொடர்ந்து பணிகள் தொடர்ந்திட வேண்டிக் கொள்வேன் !! :-)

      Delete
  37. Thank you sooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooopo much Sir
    For going to making the trio SPL available in Chennai book revival
    I missed "Thanga Kallarai, Enn Peyar Largo n Wild west SPL"
    On Sundays U know how to make a day,
    I was dancing in happiness after reading that
    I started buying lion n muthu after a break from may of 2014, last month I bought all the comics in stalk
    When I learned that I have missed these books, I was regretting daily that I didn't start earlier in 2012 or 2013, especially after reading Largo actions n Learning how I missed Things Kallarai, the regret was getting day by day
    Didn't expect this big announcing
    Like last Sunday ,this is a big day for me
    Thank in millions to You Sir :)

    ReplyDelete
    Replies
    1. //I missed "Thanga Kallarai, Enn Peyar Largo n Wild west SPL"//
      //Like last Sunday ,this is a big day for me//
      +1

      big day for me too!

      Delete
    2. SeaGuitar9 : Glad to have brightened your day !!

      Delete
    3. @ SeaGuitar9

      என்னா ஒரு உற்சாகம்!! :)

      Delete
  38. //Anyways - நம்மிடம் இன்னமும் ஒரு டயபாலிக் சாகசம் துயில் பயின்று வருவதால் அதனை இடையில் ஒரு தருணத்தில் களம் இறக்கிடுவோம் !//
    +1

    ReplyDelete
  39. dear vijayan sir, தங்க கல்லறை போன்ற புத்தகங்கள் மீண்டும் 2015 புத்தக விழாவில் வருவது மகிழ்ச்சி . சென்ற முறை வந்த தங்க கல்லறை மொழி பெயர்ப்பில் பெரிய விமர்சனத்தை சந்தித்தது எல்லோரும் அறிந்ததே .மேலும் சில பல கட்டங்களில் வசன பலூன் களும் இடம் மாறியது நெருடலை ஏற்படுத்தியது . இப்போது வரும் தங்க கல்லறையும் பழையதின் copy paste ஆக இல்லாமல் , மொழிபெயர்ப்பில் சிறிதளவாவது மாற்றம் செய்ய வாய்ப்பு இருக்கிறதா? நம் சாத்தனின் தங்க கல்லறை "சாம்பார் " விமர்சனம் மீண்டும் வந்து விடுமோ என்ற பயமும் வருகிறது :-)

    ReplyDelete
    Replies
    1. Dr.Sundar, Salem : ஒரு சலனமில்லா மழைநாளில் தலைக்குள் சுமைகள் ஏதுமின்றி தங்கக் கல்லறையின் வண்ண இதழைத் திரும்பவும் படியுங்கள் நண்பரே..! நொடிக்கொரு முறை பின்னோக்கிச் செல்லும் சிந்தனைகளைக் கட்டுக்குள் வைத்துக் கொண்டு படிக்கும் போது சாம்பாரோ ; ரசமோ முன்னிற்காதென்பது நிச்சயம் !

      Delete
  40. @ Vijayan Sir
    One small request if possible Can U make Largo's Concrete Kanagam available too
    Only if possible, not making a compelling request

    ReplyDelete
  41. வாழ்த்துக்கள் பரணி சார்.

    சேலம் புத்தக திருவிழாவிற்கு நேற்று (சனிக்கிழமை) மாலை சென்றிருந்தேன். நமது ஸ்டாலிற்கு வருபவர்களை பப்பாஸிகாரர்கள் ஆள் வைத்து அடித்தாலும் அடிக்கலாம்... என்ற ரேஞ்சிற்கு ஆசிரியர் பதிவிட்டிருந்ததால், சத்தம் காட்டாமல் சென்று நான் பல்பு வாங்கியது தான் மிச்சம்.

    டெக்ஸ் விஜயராகவன், மாயாவி சிவா, கண்ணன் ஆகியோர் அமர்க்களம் செய்து கொண்டிருந்தார்கள். மாயாவி சிவாவின் போஸ்டர்கள் மிகவும் கலக்கல் ரகம். அவருக்கு ஒரு தனி பாராட்டுக்கள். ஓரிரண்டு புத்தகங்கள் வாங்கிக் கொண்டு கிளம்பினேன். இன்று ஞாயிறு எனக்கு விடுமுறை தினமல்ல. வியாபார தினமே. ஆகவே இன்று செல்ல முடியாது... ஆனால் நிறைய நண்பர்கள் வருவார்கள்...ஹ்ம். யாராவது அப்டேட் செய்யட்டும்.

    அப்புறம் ஆசிரியர் அவர்களுக்கு ஒரு தாக்கல்...

    நிறைய புத்தகங்களை வெளியிட ஆரம்பித்து விட்டீர்கள். ஒரேமுட்டாக மாதா மாதம் என்பதற்குப் பதிலாக, 15 நாட்களுக்கு ஒரு முறை என்று ஏதாவது முயற்சிக்கலாமே... நிறைய விதங்களில் பலனுள்ளதாக இருக்கும் (எங்களுக்கும் + உங்களுக்கும்) என்று தோன்றுகிறது.

    அப்புறம் ஃபில்லர் பேஜ்களில், வாசகர்கள்தான் மலரும் நினைவுகள் எழுத வேண்டுமோ? உங்கள் தந்தையார் எழுதினால் படிக்க மாட்டோம் என்றா சொன்னோம்? பரிசீலியுங்கள் சார்ஜ்...

    அப்புறம் இன்னொன்று... நேற்று சேலம் புத்ததக ஸ்டாலில் எனக்கு பில் கொடுத்தார்கள். எந்த விபரங்களும், பதிவுகளும் இன்றி. முறையாக வாங்குபவரின் முகவரி, தொடர்பு எண் கொண்டு பில் போட்டால், புதிய வாசகர்களாயிக்ககும் பட்சத்தில் விபரங்கள் உதவியாக இருக்குமே?

    ReplyDelete
    Replies
    1. //நிறைய புத்தகங்களை வெளியிட ஆரம்பித்து விட்டீர்கள். ஒரேமுட்டாக மாதா மாதம் என்பதற்குப் பதிலாக, 15 நாட்களுக்கு ஒரு முறை என்று ஏதாவது முயற்சிக்கலாமே... நிறைய விதங்களில் பலனுள்ளதாக இருக்கும் (எங்களுக்கும் + உங்களுக்கும்) என்று தோன்றுகிறது.//

      +1

      Delete
    2. S.V.Venkateshh //ஒரேமுட்டாக மாதா மாதம் என்பதற்குப் பதிலாக, 15 நாட்களுக்கு ஒரு முறை என்று ஏதாவது முயற்சிக்கலாமே...//

      நம் புண்ணியத்தில் கூரியர்வாலாக்கள் கோமான்களாகிடும் வாய்ப்புகள் தான் இதில் பிரகாசமாய் இருக்க முடியும் ! முன்பு போல் தபாலில் அனுப்ப வழிகள் இருப்பின் நீங்கள் சொல்லும் ஐடியா டபுள் ஒ.கே. ! But அது தான் வேலைக்கு ஆகப் போவதில்லையே !

      Delete
  42. பரணிக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  43. விஜயன் சார்,

    // இதுவொரு 3 பாகத் தொடர் மாத்திரமே ! வரும் மார்ச்சில் இரண்டாம் பாகமும் ; 2015-ன் இறுதிக்குள் இறுதிப் பாகமும் உருவாகிடும் பிரெஞ்சில் ! நாம் இதனைக் கையாளப் போவதே 2015-ன் செப்டெம்பர் வாக்கில் என்பதால் 2016-ன் துவக்க மாதங்களில் பாக்கி 2 பாகங்களையும் போட்டு சூட்டோடு சூடாய் முடித்து விடலாம் //
    இது போன்ற தொடர்கள் முழுமையாக வெளிவந்த பின் அதன் அனைத்து பாகம்களும் நன்றாக இருந்தால் வெளி ஈடலாமே? குறிப்பாக அடுத்த இரண்டு பாகம்கள் நன்றாக இல்லை எனில் அவைகளை நீங்கள் ஒதுக்கி வைத்தால் இது போன்ற கதைகள் அந்தரங்கத்தில் தொங்க வாய்ப்புகள் அதிகம். மற்றவை உங்கள் கைகளில்.

    அடுத்த ஆண்டை (2015) நாம் காமிக்ஸ் கௌபாய் வருடம் என கொண்டாடலாம், ஆம் டெக்ஸ் மற்றும் டைகர் (மிண்ணும் மரணத்தையும் சேர்த்து) நமது காமிக்ஸ் அட்டவணையில் அதிக கதைகள் மற்றும் அதிக பக்கம்களில் வெளி வர உள்ளனர்.

    காமிக்ஸ் நண்பர்கள், எனக்கு வாழ்த்து தெரிவித்த மற்றும் தெரிவிக்க உள்ள அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : கவலையே வேண்டாம்...இதுவொரு crackerjack சாகசம் !

      Delete
  44. அன்பு விஜயன் சார் , என் மனதில் நெடுநாளாகவே உறுத்தி வந்த ஒரு விஷயம் இது . இதனை விரிவாக எழுதி பலரை தர்மசங்கடபடுத்த விரும்ப வில்லை .மேலும் எல்லாவற்றையும் பொதுவில் பந்தி வைத்தல் அழகு இல்லை .சில நண்பர்கள் பால்யத்தை மீட்கிறோம் என்று சொல்லி பழைய காமிக்ஸ் சேகரித்து கொண்டு ,எப்போது பார்த்தாலும் காமிக்ஸ் பற்றியே பேசி ,தங்கள் நிகழ் காலத்தையும் ,எதிர் காலத்தையும் இழப்பது தெரியாமல் , 40 வயதிலும் பால்யத்தை தேடி அலைவது ..எந்த விதத்திலாவது நியாயம் என்று படுகிறதா சார் .நண்பர் ஈரோடு விஜய் போன்று மத்திய அரசு employ ஆக இருந்தாலும் பரவாயிலை . இன்று வேலை செய்தால்தான் நாளை சாப்பாடு நிச்சயம் மாதிரியான குடும்பத்தில் இருப்பவர்கள் ,. காமிக்ஸ் தேடி கொண்டே ,காமிக்ஸ் சுவாசித்து கொண்டே ,பார்ட் டைம் ஆக உழைக்கிறார்கள் .விஜய்யை உதாரணம் காட்டியது அவர் நிரந்தரமான மாத வருமானம் உள்ளவர் என்பதால் .விஜயன் சார் ,நீங்கள் காமிக்ஸ் விற்று கல்லா கட்டும் ஆசாமியாக மட்டும் இருந்தால் இந்த கேள்வியே முன்வைத்து இருக்க மாட்டேன் .வாசகர்கள் மீது நீங்கள் வைத்து உள்ள அன்பின் காரணமாகதான் இந்த கேள்வியை முன்வைக்கிறேன் .காமிக்ஸ் லவர் ஆக இருந்தால் பிரச்னை இல்லை.பட் ,குடும்பத்தை கவனிக்காமல் குடும்ப வருமானத்தை பெருக்காமல் ,காமிக்ஸ் வெறியராக உள்ளவர்களை பற்றி உங்கள் கருத்து எதாவது உள்ளதா சார் ? நான் அப்படிப்பட்ட சில நண்பர்களின் குடும்பத்தை சந்தித்து உள்ளேன் . அந்த நண்பர்கள்ன் இல்லத்தரசிகள் காமிக்ஸ் யை வெறுப்பது கண் கூடு .பழைய காமிக்ஸ் விற்று கல்லா கட்டும் நபர்களை பற்றியதல்ல என் கவலை .பால்யத்தில் திளைத்து ,நாளையை மறபவர்களை பற்றியது ... உங்களின் பதில் அதில் ஒரிருவர்களை திருத்த முடிந்தால் அகம் மகிழ்வேன் .

    ReplyDelete
    Replies
    1. உத்தம புத்திரன் : காமிக்ஸை சுவாசமாய் ; நேசமாய்க் கருதும் நண்பர்கள் பலரை நானறிவேன் தான் ; ஆனால் நீங்கள் சொல்வதைப் போல 'சர்வமும் காமிக்ஸ் !' ரகத்தில் யாரும் இருப்பதாய் இதுவரையிலும் நான் உணர்ந்ததில்லை ; அவ்விதம் இருத்தல் சாத்தியமா ? என்றும் கூட யோசிக்கத் தோன்றுகிறது ! குடும்பமும், வாழ்வின் அடிப்படைகளும், நிச்சயமாய் பொழுதுபோக்கு அம்சங்களைத் தாண்டி முன்னுரிமை பெற்றிடல் அவசியமென்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது ! ரீல் நாயகர்கள் ரியல் வாழ்வின் சிக்கல்களுக்கு பதில் சொல்ல முன்நிற்கப் போவதில்லை என்பதைப் புரியாதோர் யார் தான் இருக்க முடியும் ??

      ஆனால் கடந்த வாரத்தில் எங்களிடமிருந்த அந்தப் பழைய புத்தகங்களின் விற்பனையின் போது நண்பர்களின் பதட்டம் கலந்த அவசரம் எனது கவனத்தை சங்கடமாய் ஈர்த்தது என்பதை சொல்லித் தான் ஆக வேண்டும் ! படிக்காத இதழ்களாகவே இருந்து விட்டுப் போனாலும் கூட, அதன் பொருட்டு ஒவ்வொரு வாசகரும் எடுத்துக் கொண்ட பதைபதைப்பும், கோபதாபங்களும் நிஜமாகவே என்னை திகைக்கச் செய்தன !

      'பழைய இதழ்களை விற்று கல்லா கட்டுகிறார்கள் ?' என்று ஒரேடியாய் அந்த முகமில்லா மாந்தர்களை நோக்கி விரல்களை நீட்டுவதை விட - நாம் காட்டும் இந்த உச்சபட்ச பதட்டம் தானே அவர்களது தொழில்களின் மூலதனமாகிப் போகிறது என்பதைப் புரிந்து கொண்டாலே பிரச்னையை மட்டுப்படுத்தும் முதல்படியில் கால் வைத்தது போலாகி விடும் ! பழசுகளை சேகரிப்பது ஒரு சுகமான hobby தான் ; ஆனால் அதனையே ஒரு முனைப்பாகக் கொண்டு சிரமப்படுத்திக் கொள்ளாதீர்களேன் guys ! நிதானமாய் தொடருவோம் - தொடரும் நாட்களில் உங்களின் தேவைகள் அத்தனையும் மறுபதிப்புகளாய் மெள்ள மெள்ள நியாயமான விலைகளில் கிடைக்க ஒரு தனித் தடத்தை உருவாக்கிடுவோம் ! இதன் பொருட்டு இன்று பண விரயம் செய்யாதீர்களேன் - ப்ளீஸ் !

      தவிர இங்கு துளிர் விடும் ஆரோக்கியமான நட்புகள் வளர்ந்திடும் நாட்களில் பரஸ்பர புத்தகப் பரிமாற்றங்கள் சாத்தியமாகிப் போகும் போது உங்கள் தேடல் வேட்டைகளின் தீவிரம் மட்டுப்பட்டு விடும் வாய்ப்புகளும் உண்டு !

      Delete
    2. அப்புறம் அரசாங்கப் பணியாளர்கள் - நிரந்தர வருமானத்துக்கு வழியுள்ளவர்கள்-ஆதலால் வாழ்க்கையின் வலி தெரியாதவர்கள் என்ற ரீதியிலான சிந்தனை நியாயமற்றது என்பதை நான் சுட்டிக் காட்டித் தானா நீங்கள் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள் ?! வாழ்க்கை அத்தனை பேரையும் ஒரே விதமாய்த் தானே பாவிக்கிறது நண்பரே..! இந்தப் பாகுபாடுகளெல்லாம் நாமாய், நம் கண்ணோட்டங்களில் உருவாக்கிக் கொள்பவைகள் தானன்றோ ?

      Delete
    3. //ஆனால் கடந்த வாரத்தில் எங்களிடமிருந்த அந்தப் பழைய புத்தகங்களின் விற்பனையின் போது நண்பர்களின் பதட்டம் கலந்த அவசரம் எனது கவனத்தை சங்கடமாய் ஈர்த்தது என்பதை சொல்லித் தான் ஆக வேண்டும் ! படிக்காத இதழ்களாகவே இருந்து விட்டுப் போனாலும் கூட, அதன் பொருட்டு ஒவ்வொரு வாசகரும் எடுத்துக் கொண்ட பதைபதைப்பும், கோபதாபங்களும் நிஜமாகவே என்னை திகைக்கச் செய்தன ! //


      me too, i felt like one billion sale effect, its created psychological race to get it fast(because of limited number)!

      //நிதானமாய் தொடருவோம் - தொடரும் நாட்களில் உங்களின் தேவைகள் அத்தனையும் மறுபதிப்புகளாய் மெள்ள மெள்ள நியாயமான விலைகளில் கிடைக்க ஒரு தனித் தடத்தை உருவாக்கிடுவோம் ! இதன் பொருட்டு இன்று பண விரயம் செய்யாதீர்களேன் - ப்ளீஸ் ! //

      +1 thanks Edit

      Delete
    4. @உத்தம புத்திரன்,

      காமிக்ஸ் மட்டுமல்லாமல் எந்தவொரு ஹாபியும் குடும்பத்திலிருப்போரை வெறுக்கச் செய்யுமளவுக்கு செல்வது தவிர்க்கவேண்டிய விஷயமே. In fact நாமே நம்மை எடைபோட்டுக்கொள்ள உதவும் அடையாளம் - Limit எதுவென்றால் குறைந்தபட்சம் குடும்பத்திலுள்ளவர்களை திகிலாக்காத வரம்புக்குள்ளேயே காய்களை நகர்த்துவதுதான்.

      ஆனால் இன்னொரு விஷயமும் உள்ளது. நான் பார்த்தவரையில் இணையதளம், Facebook, Social Media' க்களில் இன்றைய இளைஞர்கள் செலவு செய்யும் நேரம் இழக்கும் Productivity மற்றும் உபயோகமில்லா தன்மையையும் பார்க்கும்போது காமிக்ஸ் சேகரிப்பு, ஆர்வத்திலுள்ளவர்களை மட்டும் இதில் குறிப்பாக சுட்டிக் காட்டத்தோன்றுவதில்லை.

      அதாவது காமிஸுக்காக தொழிலை கோட்டைவிடுவோர் (extreme cases) கண்டிப்பாக காமிக்ஸ் இல்லாவிட்டாலும் வேறு ரூபத்தில் தொழில் / குடும்பப்பொறுப்புகளை உதறக்கூடியவர்கள் என்பது என் கருத்து.

      Delete
    5. என்னை பொறுத்த வரைக்கும் இது போன்ற விமர்சனங்களை கண்டு, ரோட்டில் கிடக்கும் கழிவை பார்த்து ஒதுங்குவது போல் ஒதுங்கி கொள்ள வேண்டும்.

      பெயரின் பக்கத்தில் உள்ள படம் சூரியனை பார்த்து குறைப்பது போல் எனக்கு தோன்றுகிறது

      மேலும், பெயரினை பார்க்கும் போது தற்போது கமல் ஹாசன் நடித்து வரும் புதிய படம் தான் நினைவுக்கு வருகிறது

      Delete
    6. @Mohammed Roseleen, உத்தம புத்திரன் என்ற ஐடியில் வந்தவரின் (ஹும்...) கூற்று உண்மையாக இல்லாமலிருக்கலாம் ஆனால் பகிர்ந்ந்த கருத்து ஆரோக்யமானதே.

      Delete
    7. //கூற்று உண்மையாக இல்லாமலிருக்கலாம் ஆனால் பகிர்ந்ந்த கருத்து ஆரோக்யமானதே.//
      +1

      Delete
  45. Sir .. I dont know whether i can make it to chennai book fair .. But i need those 2 books என் பெயர் லார்கோ , டபுள் த்ரில் ஸ்பெஷல்
    which i missed .. Is it possible for me to get it thro world mart or it is only available alone for chennai book fair ..

    ReplyDelete
    Replies
    1. same quiestion? me need all 4 books (என் பெயர் லார்கோ " ; டபுள் த்ரில் ஸ்பெஷல் ; தங்கக் கல்லறை : WILD WEST SPECIAL) i can transfer the money if its allowed(let me know prize with delivery charge) ?, kindly make it available for other readers(beyond channai book fair ) also Edit sir !

      Delete
    2. @ FRIENDS : No fears...மறுபதிப்புகள் சென்னையின் வேளையில் தயாராகி இருக்குமே தவிர அவை சென்னைக்கு மாத்திரமே என்றல்ல ! எப்போதும் போல நம்மிடம் ஜனவரி முதல் ஸ்டாக்கில் கிடைக்கும

      Delete
    3. //Vijayan//

      :)

      wow.... no race to get the book ! thanks a ton Edit sir.........!

      Delete
  46. விஜயன் சார், நமது மிண்ணும் மரணம் வெளிஈட்டை தனியாக ஒரு அரங்கில் இரவு உணவுடன் ஏற்பாடு செய்ய உள்ளது நல்ல விஷயம். இதனை ஒரு சனிகிழமை வருமாறு பார்த்து கொண்டால் வெளி ஊரில் இருந்து வரும் நண்பர்களுக்கு வசதியாக இருக்கும்.

    // என் பெயர் லார்கோ " ; டபுள் த்ரில் ஸ்பெஷல் ; தங்கக் கல்லறை : WILD WEST SPECIAL ஆகியன January'15-ல் தயாராகி இருக்கும் //
    பாராட்டுதலுக்கு உரிய விஷயம். இந்த கதைகளை இன்னும் வாங்க விருப்படும் நண்பர்களுக்கு சரியான பரிசு.

    ReplyDelete
    Replies
    1. ஹிந்து நாளிதழில் நமது கடந்த மாத (கிராபிக் நாவல்) காமிக்ஸ்ன் விமர்சனம் வந்தது சந்தோஷமான விஷயம், இதன் பின்னால் உள்ள நமது காமிக்ஸ் மீடியா நண்பர்களுக்கு எனது நன்றிகள்.

      நமது எதிர் காலம் மிகவும் பிரகாசமாக உள்ளது (our future is very bright)

      Delete
  47. Satishkumar S, BAMBAM BIGELOW, S.V. Venkateshh, Erode VIJAY, Modern Mangoose @ உங்கள் வாழ்த்துகளுக்கு எனது நன்றி.
    எனது வாழ்க்கையில் இது போன்ற ஒரு போட்டியில் முதன் முறையாக வெற்றி பெற்றது மிகவும் சந்தோசமாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. selvam abirami @ நன்றி செல்வம்!

      Delete
    2. //எனது வாழ்க்கையில் இது போன்ற ஒரு போட்டியில் முதன் முறையாக வெற்றி //

      always there is first time Parani!

      :)

      Delete
    3. //Edit: விலையில்லா சந்தாவை நண்பருக்கு அன்பளிப்பாய் வழங்க முன்வந்திருக்கும் பரணியை இன்னுமொருமுறை வாழ்த்துவோமே !!//

      wow! Parani for silent work, silent வாழ்த்துகள் !

      Delete
    4. Mahendran Paramasivam, SeaGuitar9, நன்றி நண்பர்களே! என்னால் முடிந்த ஒரு சிறு பங்களிப்பு நமது காமிக்ஸ் உலக நேசத்திற்கு!

      Delete
  48. ஸ்பைடர் : ஹோ ஹோ ஹோ... ஏமாந்துட்டியா கிராண்டேல்? நாம இப்ப இருக்கறது தமிழ்நாட்டுலன்றது மறந்துடுச்சா உனக்கு? கடைசியா அந்தக் கம்பிகள்ல கரெண்ட் வந்தே பல மாசங்கள் ஆகிடுச்சேப்பா...

    மாயாவி: எனக்கு மட்டும் அது தெரியாதா ஸ்பைடர்? நிழற்படைத் தலைவர் துணி காயப்போட கம்பி ஏதாவது கிடைக்குமான்னு கேட்டிருந்தாரு... அதான் இந்தக் கம்பி சரிப்பட்டுவருமான்னு பாத்துக்கிட்டிருக்கேன்!

    ReplyDelete
    Replies
    1. குட் ஒன்! உங்ககிட்ட இருந்து இன்னும் எதிர் பார்கிறேன்!

      Delete
    2. வாழ்த்துக்கள் பெங்களூர் பரணி சார்.மோதிர கையால் குட்டு வாங்குவதே பெருமை,பரிசு கிடைச்சா சொல்லவா வேண்டும்.

      Delete
    3. அறிவரசு, அந்த அளவுக்கு நான் வொர்த் இல்ல பாஸ்!

      Delete
    4. @ Parani
      //குட் ஒன்! உங்ககிட்ட இருந்து இன்னும் எதிர் பார்கிறேன்!///

      பரிசில்லாம அறிவிக்கப்படும் போட்டிகளுக்கு இவ்வளவுதாங்க யோசிக்கமுடியும்! ;)

      Delete
    5. விஜய் @ இப்படி எல்லாம் சொல்லி தப்பிக்க பார்காதிங்க!

      Delete
  49. @ ALL : உடல்நலமின்றி இருப்பினும், காமிக்ஸ் காதலைக் கைவிடாது நம் பதிவுகளை போனில் தொடர்ந்து பார்த்து வரும் நம் நண்பர் பிரான்சைச் சார்ந்த திருச்செல்வம் ப்ரபானந்த் நலம் பெற வேண்டிக் கொள்வோமே !! GET WELL SOON !! WE ARE ALL WITH YOU !!

    ReplyDelete
    Replies
    1. get well soon திருச்செல்வம் ப்ரபானந்த் sir!

      Delete
    2. கண்டிப்பாக ஆசிரியர் சார்.

      Delete
    3. My Prayers n warm wishes to U Mr.Thiruchelvam Prabananth
      Get well Sir

      Delete
    4. பூரண நலம் பெற்று சீக்கிரமே இங்கு பதிவிட வரவேண்டும் ப்ரபானந்த் சார்!

      Delete
  50. // No fears...! .இதுவொரு 3 பாகத் தொடர் மாத்திரமே ! வரும் மார்ச்சில் இரண்டாம் பாகமும் ; 2015-ன் இறுதிக்குள் இறுதிப் பாகமும் உருவாகிடும் பிரெஞ்சில் ! நாம் இதனைக் கையாளப் போவதே 2015-ன் செப்டெம்பர் வாக்கில் என்பதால் 2016-ன் துவக்க மாதங்களில் பாக்கி 2 பாகங்களையும் போட்டு சூட்டோடு சூடாய் முடித்து விடலாம் !//
    :|

    thanks for answer Edit sir!

    // ஒன்றுக்கு மூன்றாய் புதிய படைப்பாளிகள் நம் பக்கமாய் காதல் கணைகளை வீசிட - அவர்களுடன் ஒரு ஒப்பந்தம் உறுதியாகிடும் பட்சத்தில் இந்த அட்டவணையிலேயே புதியவர்களைப் புகுத்தி விடுவதென ஓசை//யின்றிக் காத்திருந்தேன் ! But நம் அவசரத்தின் பொருட்டு - அவர்களை 'நை-நை' என்று அரிக்க மனமின்றி பேச்சு வார்த்தைகளை அதன் போக்கிலேயே செல்ல விட்டு விட்டேன் ! மூன்றில் ஒன்று click ஆனால் கூட ஒரு சந்தோஷமான சங்கடம் நமக்குக் காத்துள்ளது என்பது மட்டும் உறுதி !! Fingers...toes...all crossed !! //
    உங்களுக்கு அந்த சந்தோஷமான சங்கடம் கிடைக்க நாங்கள் இறைவனை வேண்டுகிறோம் ;)


    //கோடிகளில் உள்ள ஜனத்தொகையின் மத்தியில் நான்கிலக்க எண்ணிக்கையாய் மாத்திரமே உலவி வரும் இந்த காமிக்ஸ் காதலர் குழுவின் எண்ணிக்கை மேன்படும் நாளில் வானமே எல்லை ! //
    +1

    will happen Edit sir! soon...

    one most asked question not answered Edit "do we have '2015-supper six' ?"

    ReplyDelete
  51. மீண்டும் தங்கக்கல்லறையா- wow super-surprise மேல spurprisea இருக்கே.இந்த ஜில் ஜில் அறிவிப்பால இன்னும் கொஞ்சம் ஜலதோஷம் பிடிக்கப் போகுது.

    ReplyDelete
  52. My heartily wishes to Mr. parani sir...

    ReplyDelete

  53. டியர் எடிட்டர்,

    புக்கு தலைப்புதான் அப்பப்போ பீதியை கிளப்புதுன்னு பார்த்தா [சாஸ்வதத்தின் சாவி, கொலையும் செய்வார் கோமான், வாராதோ ஒரு விடியலே ... :-)] இப்போ பதிவின் தைலப்புமா ? [மார்க்கண்டேய நால்வர் ... :-)]. அடுத்தது ..? பிரகலாத பிரயத்தனம்' - ??? :-) :-)]

    ஹி ஹி :-) :-)

    ReplyDelete
  54. ***சார், தங்கக்கல்லறை மறுபதிப்பில்

    பழைய கருப்பு வெள்ளையில் வந்த அதகளமான வசனங்கள் மீண்டும் வருமா?***

    ReplyDelete
  55. இன்னும் கொஞ்சம் லக்கியும் , டயபாலிக்கும் இருந்மஇருந்தால் நல்லா இருக்கும் ...

    ReplyDelete
  56. டியர் எடிட்டர்,

    லார்கோ மறுபதிப்பினை வரவேற்கிறேன். ஒரு வருடத்திற்கு முன்னர் நண்பர் ஒருவரை சந்தித்து உரையாடிக்கொண்டிருந்த போது இப்புத்தகம் Rs.1500/-க்கு கள்ளச்சந்தையில் விற்றுக்கொண்டிருப்பதை அறிந்து வியந்தேன் ...!

    Your decision will help a lot of folks to get it at a reasonable price.

    இரு யோசனைகள் :

    1) இந்த additional ப்ரிண்ட்ஸ் வேறு அட்டையுடன் வருதல் சாத்தியமா? கிராபிக் வேலைகள் மட்டுமே மாறும் என்பதால் இக்கேள்வி - just for a difference.

    2) NBS விற்று தீர்ந்த நிலையில் - concrete கானகம் நியூ யார்க் - இரு பாகங்களையும் தனியே பதிப்பிக்கலாமே - அது ஒரு சிறந்த சாகசம் - பிய்த்துக்கொண்டு போகும் - விற்பனையில்.

    ReplyDelete
    Replies
    1. //Your decision will help a lot of folks to get it at a reasonable price.//
      +1

      //2) NBS விற்று தீர்ந்த நிலையில் - concrete கானகம் நியூ யார்க் - இரு பாகங்களையும் தனியே பதிப்பிக்கலாமே - அது ஒரு சிறந்த சாகசம் - பிய்த்துக்கொண்டு போகும் - விற்பனையில்.//
      +1
      question with anxiety is it possible for NBS reprint(sure it will sell out in week) Edit sir...? :X

      Delete
    2. //2) NBS விற்று தீர்ந்த நிலையில் - concrete கானகம் நியூ யார்க் - இரு பாகங்களையும் தனியே பதிப்பிக்கலாமே - அது ஒரு சிறந்த சாகசம் - பிய்த்துக்கொண்டு போகும் - விற்பனையில்.//

      +1

      Delete
    3. //
      1) இந்த additional ப்ரிண்ட்ஸ் வேறு அட்டையுடன் வருதல் சாத்தியமா? கிராபிக் வேலைகள் மட்டுமே மாறும் என்பதால் இக்கேள்வி - just for a difference///

      +1
      ஏற்கனவே வைத்திருப்பவர்கள்கூடபுதிய அட்டைக்காகவே மறுபடியும் வாங்கும் வாய்ப்பிருக்கிறது!

      Delete
    4. Erode VIJAY @ // ஏற்கனவே வைத்திருப்பவர்கள்கூடபுதிய அட்டைக்காகவே மறுபடியும் வாங்கும் வாய்ப்பிருக்கிறது! //
      தெரிந்தும் தெரியாமலும் வாங்கும் வாய்ப்புகள் அதிகம்.

      Delete
    5. //தெரிந்தும் தெரியாமலும் வாங்கும் வாய்ப்புகள் அதிகம்.///
      புரிந்தும் புரியாமலும் காமிக்ஸ் படிப்பவர்கள் இல்லையா? அத்மாதிரிதான்! ;)

      Delete
  57. ஏப்பா ஸ்பைட ரு ..இன்னுமா இந்த காமிக்ஸ் உலகம் நம்மளை நம்புது..?
    அதென்ன ஸ்டீல் அப்படி சொல்லிபுட்டே..சிம்பல சிம்பா பாட்டுபாடி நம்மளை வரவேற்க
    துடிச்சுகிட்டு இருக்காகப்போவ் ..
    ம்ஹ்ம் ..இப்படி உசிப்பே த்தி உசிப்பேத் தியே எடிட்டர் உடம்பை ரணகளப் படுத்திட்டாங்க..
    இந்த தடவை எப்படியோ ..பொறுத்திரு ந்து பாப்போம்

    ReplyDelete
  58. சமூகம் » இளமை புதுமை: Published: November 7, 2014 13:34 IST

    அச்சில் ஒரு த்ரில்லர்

    இரவே.. இருளே.. கொல்லாதே!
    மூலம் : Comptine D’ Holloween (Delcourt, France, Part 1 - 2000, Part 2 - 2001 & Part 3 - 2002.
    கதை : ஜோயல் கல்லெட்
    ஓவியம் : டெனிஸ் க்விஸ்ட்ரெபர்ட்
    தமிழாக்கம் : எஸ். விஜயன்
    வெளியீடு : லயன் காமிக்ஸ் இதழ் எண் 238, நவம்பர் 2014.
    விலை : 150 ருபாய் (மூன்று பாகங்கள்)
    வகை : அமானுஷ்ய த்ரில்லர் (18 +)
    கதைக் கரு : தொடர் கொலைகளைச் செய்வது யார்? எதிர்பாராததை எதிர்பாருங்கள்.

    ஹாலிவுட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது நேரிடும் ஒரு விபத்தால் ஒரு சிறிய நகரில் தங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறாள் ஒரு துணை நடிகை. அவளது வருகை ஒரு தூண்டுகோலாக மாறித் தொடர்கொலைகளுக்கு வித்திட, மரணத்தின் நிழல் அந்நகரில் படர்கிறது. சந்தேகத்தின் வித்து ஒவ்வொருவரின் மீதும் தூவப்பட, விரைவிலேயே வேட்டையாடுவது யார், வேட்டையாடப்படுவது யார் என்பது புரியாத ஒரு மரண விளையாட்டு ஆரம்பிக்கிறது.

    குழந்தைப் பருவ பாலியல் வன்முறைக்கு ஆளாகி அதனால் மனப்பிறழ்வு நிலையிலிருக்கும் கதைநாயகி, கையாலாகாத ஒரு காவல் தலைவர், 25 வருடங்களாகத் தலைதூக்கக் காத்திருக்கும் ஒரு துரோகம், ஊரையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு பணக்காரன், பேய்ப் படங்களை மட்டுமே திரையிடும் ஒரு சினிமா தியேட்டர், அந்த தியேட்டர்காரனின் மர்மமான கடந்த காலம், அந்நகரத்தின் மர்மங்களுக்கு மவுன சாட்சியாக இருக்கும் ஒரு தெருக்கிழவன், மன்னிப்பு வழங்க முடியாத பாவங்களுக்குத் துணைபோன ஒரு பாதிரியார், 25 வருடங்களாக அழுத்தி வைக்கப்பட்டிருந்த பழிவாங்கும் உணர்வைக் கட்டுப்படுத்த முடியாத எதிர்நாயகன் என்று விசித்திரமான கதாபாத்திரங்கள் நிறைந்த இக்கதையின் முடிவு "வெளிப்படையாகத் தெரிவதை நம்பாதே" என்ற கருத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறது.

    அலசல் பார்வை: புகழ்பெற்ற பேய்க்கதை எழுத்தாளர் ஸ்டீபன் கிங்கின் இரண்டு அதி தீவிர ரசிகர்கள் சேர்ந்து ஒரு கிராஃபிக் நாவலை உருவாக்கினால், அதன் கரு என்னவாக இருக்கும் என்பதை யூகிக்கத் தேவையே இல்லை.

    ஜோயல் கல்லெட் எழுதி, டெனிஸ் ஓவியம் வரைந்திருக்கும் ‘இரவே... இருளே... கொல்லாதே!' ஒரு அமானுஷ்ய த்ரில்லர் கிராபிஃக் நாவல். இதில் குறியீடாகப் பல விஷயங்கள் உணர்த்தப்படுவதாலும், கதை நான்-லீனியராகச் சொல்லப்பட்டு இருப்பதாலும் ஆழ்ந்து, கூர்ந்து படிப்பது அவசியமாகிறது. மேலும் பிரபல ஹாலிவுட் டிவி தொடர்களுக்கும், சினிமாக்களுக்கும் சமர்ப்பணம் செய்யும் வகையில் இடை யிடையே காட்சிகள் பின்னப் பட்டுள்ளதால், அதைப் பற்றியும் ஓரளவுக்கு விவரம் தெரிந்திருந்தால் வாசிப்பின் சுவை கூடும்.

    ஆசிரியர் பயிற்சியைப் பாதியில் கைவிட்டுவிட்டு கதை எழுதுவதையே முழுநேர பணியாக்கிக்கொண்ட ஜோயலின் சிறப்பு அம்சமே அவரது கதாபாத்திரங்களின் குறைபாடுகளும், அவர்கள் எதிர்நோக்கும் வித்தியாசமான, அசாதாரண சூழ்நிலைகளும்தான். யாரும் நல்லவர்களும் இல்லை, யாரும் கெட்டவர்களும் இல்லை என்ற ஜோயலின் டெம்ப்ளேட்தொடங்கியது இந்தக் கதையில்தான்.

    பின்தொடரும் நிழலாக வரும் கடந்த காலத்தின் இருண்ட பக்கங்களை மறக்க நினைக்கும் கதாபாத்திரங்களும், கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவற்றை நினைவூட்டும் சம்பவங்களும் நிறைந்த இக்கதையில் வன்மமும் குரோதமும் ஒரு தேர்ந்த வழிப்பறிக் கொள்ளையனைப் போலச் சரியான நேரத்துக்காக காத்துக் கிடக்கின்றன.

    உயிருடன் இருப்பதால் மட்டுமே வாழ்வதாகக் கருதும் கதாபாத்திரங்கள், சொல்லப்படாத சோகங்களைத் தாங்கி, நம்பிக்கையை இழந்து, தொலைந்துபோன மனிதர்களுக்கு இடையே மெல்லத் தலைதூக்கும் மனிதத்தன்மை... வலி ஒன்றே மொழியாகவும், இருள் மட்டுமே ஒளியாகவும் இருக்கிற கதையில் ஆங்காங்கே சில குறியீடுகள் உண்மையாகவே சிலிர்க்க வைக்கின்றன.

    இணையம், ஸ்மார்ட் போன்கள் மூலம் தேடுதல் மலிந்துவிட்ட சமகாலத்தில் ஒரு த்ரில்லர் கதையை கடைசிவரை சுவாரஸ்யத்துடன் எழுதுவதைப்போலப் பெரிய சிரமம் வேறெதுவும் இல்லை. அதைச் சரியாகப் புரிந்துகொண்டு, மொழியாக்கம் செய்வது எளிதான வேலையில்லை. அதைச் செம்மையாகச் செய்துள்ளார் எடிட்டரும், மொழிபெயர்ப்பாளருமாகிய விஜயன்.

    ReplyDelete
    Replies
    1. முதல் இரண்டு பாகங்களும் தேர்ந்த மந்திரவாதியின் ஜாலங்களைப் போல வேகமாக நகர்கின்றன. கடந்த இருபது வருடங்களாக வெளிவரும் ஹாலிவுட் பேய் / த்ரில்லர் படங்களை பார்த்தவர்களுக்கு மூன்றாம் பாகத்தையும், கதையின் எதிர்நாயகனையும் கணிப்பது சிரமமான வேலையே அல்ல.

      ஒரு நேர்கோட்டில் விவரிக்கையில் மிகவும் சாதாரணமான B Grade ஹாலிவுட் படத்துக்கு இணையான இக்கதையை திறமையான நான்-லீனியர் எடிட்டிங் மூலம் விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார் கதாசிரியர் ஜோயல்.

      தமிழில் காமிக்ஸ் / கிராபிஃக் நாவல் படிப்பவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, இதுபோன்ற பரிட்சார்த்த முயற்சிகளை லயன் காமிக்ஸ் மேற்கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. அதேநேரம், அடுத்து எந்தக் கட்டத்தை படிக்க வேண்டும் என்பதை உணர்த்தப் போடப்பட்டு இருக்கும் அம்புக்குறிகள், காமிக்ஸ் படித்து வருபவர்களின் அறிவுத்திறனைக் குறைத்து மதிப்பிடுவதாகத் தெரிகிறது.

      தீர்ப்பு: நான்கு தோட்டாக்கள் (4/6).

      Delete
    2. anyone read this?

      this appeared in yesterday's news paper.

      Delete
    3. +
      :)
      yes Arun! see the previous post Vijay shared the same info !

      Delete
  59. லார்கோ ஜானி இருவரையும் படித்தாகிவிட்டது.

    லார்கோ - எப்போதும் போல அதகளம். எதார்த்தமான கனமான கதைக்களத்தில் சூப்பர் ஆக்‌ஷன் த்ரில்லர்!! மொழிபெயர்ப்பு சிறப்பு. வசனங்கள் இந்த முறை முடிந்தளவுக்கு கட்டத்துக்குள் அடங்கியிருக்கிறது ! சைமன் 'அப்பனே' என்று சொல்லும்போது டெக்ஸ் ஞாபகத்திற்கு வருவது தவிர்க்க முடியவில்லை.

    லார்கோ போன்ற சமகால கதைகளில் முடிந்த அளவு அப்பனே சங்கதி போன்ற வார்த்தைகள் தவிர்க்கப்படுதல் நலம்.

    கதையில் எனக்கு ஒரே ஒரு சந்தேகம். 32ம் பக்கத்தில் கோக்ரேன் அவரது அறையில் உள்ள கம்ப்யூட்டரில் CAYMAN TRUST LTD தளத்தில் CODE NAME - SHADOW என்று டைப் செய்திருப்பார். கதையில் இதற்கு விளக்கம் இருந்ததாக தெரியவில்லை. புரிந்த நண்பர்கள் யாரேனும் விளக்கமுடியுமா, ப்ளீஸ்?

    மேலும் 26வது பக்கத்தில் கீழே வசனங்கள் மாறியுள்ளதாக தெரிகிறது!

    ReplyDelete
  60. சைத்தான் வீடு - இதுவும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர்! லார்கோ படித்துமுடித்த கையுடன் படித்ததாலோ என்னவோ ஜானியின் கதை அவ்வளவாக பாதிக்கவில்லை !

    ReplyDelete
  61. ஒற்றை நொடியில் ஒன்பது தோட்டா - CLASS!!


    ReplyDelete
  62. Dear Editor,
    ஜானி கதை மகவும் நன்றாக இருந்தது. Printing, Artwork, Colouring ஒன்றுக்கொன்று சளைக்காமல் அழகாக வந்துள்ளது. லார்கோ இன்னும் படிக்கவில்லை. Colouring மிகவும் dullஆக வந்துள்ளது. நீங்கள் புதிய முறையில் colouring செய்ததாக கூறியிருந்தீர்கள், starting troubleஆக இருக்கும் என எண்ணுகிறேன். விரைவில் பழைய மெருகுடன் லார்கோவை தரிசிக்க விழைகிறேன்.

    ReplyDelete
  63. விஜய் .......புக்ஸ் வந்து விட்டதா ?........காமிக்ஸ் ஜோதிடர் பவுன்சரானந்தா -விடம் உங்கள் பேர். ராசி பலன் கேட்டேன் ......ஏன் பூனையாருக்கு புக்ஸ் லேட்டா வருகிறது என்று ...?;????
    யாரையோ நீங்கள் துரு பிடித்த துப்பாக்கி -யால் சுட்டதால் உங்களுக்கு "பிரம்ம சைமனோ குட்டிப்பா "என்ற ஸ்திரீ தோஷம் வந்து விட்டதாம் ...அதனால்தான் புக்ஸ் லேட்டா வருகிறதாம் ....தோஷ நிவர்த்தி ஏதும் இல்லையா என கேட்டேன் .....2000-க்கு முன் வந்த கையில் உள்ள காமிக்ஸ் இதழ்களை யாராவது "காமிக்ஸ் ஏழை "-க்கு தானமாக தந்தால் எல்லாம் சரியாகி விடுமாம் .....ஆனால் பாருங்களேன் ....அந்த ஏழையின் பெயர் செல் என ஆரம்பித்து மி என்று முடிய வேண்டுமாம் ......என்னமோ உங்க நன்மைக்காக சொன்னேன் ....

    ReplyDelete
    Replies
    1. @ E.V.

      I will change my name to selmi so you dont hvae to really search for someone with that name. (:

      Delete
    2. // யாரையோ நீங்கள் துரு பிடித்த துப்பாக்கி -யால் சுட்டதால் //

      இதுக்குதான் "வீட்ல" பகைச்சிக்கக் கூடாதுங்கறது. அப்பரம் கொரியர் மிஸ்ஸாகும் படலமெல்லாம் ஆரம்பித்துவிடும் :P

      Delete
    3. @ செல்...மி, Selmi

      :))) என்மேல்தான் என்னா ஒரு அக்கறை!

      Delete
  64. Sir,

    We are not getting any response via email on sales related questions. I can understand complicated questions. No response for even simple questions. Anyway we can improve this?

    ReplyDelete
  65. Simon Kuttippa n Benni duo bike ride was unexpected
    First time liked Ms.Benni's character
    She was action star in this

    ReplyDelete
  66. ஹலோ விஜயன் சார்! நான் காட்பாடியில் இருக்கும் ஒரு ஊனமான இளைஞன். ஆகஸ்ட் மாதம் ஈரோடு புத்தக விழாவுக்கு வந்திருந்தேன். wheelchair உருட்டிக் கொண்டு அவ்வளவு தொலைவு வந்திருந்த என்னை பார்த்து ஷங்கர்ராஜனும், ஈரோடு விஜய் அவர்களும் ஆச்சர்யப்பட்டனர். எல்லாம் தங்கக் கல்லறை புத்தகத்திற்காகத்தான் சார். இன்றைய பதிவில் சென்னை புத்தக விழாவில் தங்க கல்லறை மற்றும் பிற நான்கு
    புத்தகங்களும் கிடைக்கும் என்று பதிவிட்டு என்னை இன்பக் கடலில் மூழ்கடித்து விட்டீர்கள். ஆனால் ஈரோட்டிற்கு வர முடிந்த எனக்கு அருகிலிருக்கும் சென்னைக்கு வர இயலாது. காரணம் சென்னை சென்ட்ரல் தவிர சென்னையிலிருக்கும் பிற ரெயில் நிலையங்களில் ஊனமுற்றோர் வந்து செல்ல ஈஸியான platform வசதிகள் இல்லை. அதனால் எனக்காக மட்டும் அந்த நான்கு புத்தகங்களை கூரியரில் அனுப்ப இயலுமா?
    சரியென்றால் நாளையே நான் முன்பணம் அனுப்பி வைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. //அவ்வளவு தொலைவு வந்திருந்த என்னை பார்த்து ஷங்கர்ராஜனும், ஈரோடு விஜய் அவர்களும் ஆச்சர்யப்பட்டனர். எல்லாம் தங்கக் கல்லறை புத்தகத்திற்காகத்தான் சார். இன்றைய பதிவில் சென்னை புத்தக விழாவில் தங்க கல்லறை மற்றும் பிற நான்கு புத்தகங்களும் கிடைக்கும் என்று பதிவிட்டு என்னை இன்பக் கடலில் மூழ்கடித்து விட்டீர்கள்.//

      :)

      +1

      Edit said books will be available in world mart Jagath Kumar, so you can do account transfer and get the books too i guess friend!

      Delete
    2. indeed Edit's reprint announcement is as big as last weeks announcement for us friend !

      Delete
    3. Jagath Kumar @ வரவு நல்வரவு ஆகட்டும்

      Delete
  67. பெரும்பான்மையான காமிக்ஸ் அன்பர்கள் Subscribtion OptionABC தேர்ந்துடுத்து இருப்பது ஆரோகியமான விஷயம். ஏனெனில் அரைத்த மாவையே அரைக்காமல் புது முயற்சிகளை எடுக்க நிச்சயமாக உதவும்.Graphics novelக்கு பழைய கதாநாயகர்களின் கதைகள் புது கட்டிடத்தை பழைய அஸ்திவாரம் தாங்குவதுபோலவும் புராதன், structures இன்றைய technologyல் இப்போதுள்ள நவீன வசதிகளை கொண்டிருப்பது போல ABC சந்தா கண்டிப்பாக உதவும்

    ReplyDelete
  68. பிரான்சைச் சார்ந்த திருச்செல்வம் ப்ரபானந்த் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்!

    ReplyDelete
  69. திருச்சியில் வெளியாகா விட்டாலும் Intersellarய் திண்டுக்கல் சென்று இன்று பார்த்தாகிவிட்டது!Friends miss செய்ய கூடாத திரைப்படம் சில இடங்களில் புரியாவிட்டாலும் கூட!

    ReplyDelete
    Replies
    1. Intersellar படம் பக்கவா இருக்கு நண்பரே.அறிவியலும்,புனைவும் இணைந்த படைப்பு இது.இன்றுதான் நானும் பார்த்தேன்.நோலன் திரைக்கதை பாணியில் ஒரு வித்தகர் எனில் அது மிகையல்ல.காமிக்ஸ் நண்பர்களுக்கு குறிப்பாக அறிவியல் படைப்பை விரும்பி படிப்பவர்களுக்கு கண்டிப்பாக இப்படம் பிடிக்கும்.இப்படம் குறித்து நீங்கள் கூறியது மகிழ்ச்சியானது.

      Delete
  70. ஆசிரியர் சார் இந்த மாதம் வந்த குட்டி புக்தான் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன்.2015 புதையல் அதுதானே.

    ReplyDelete
  71. intersellar ஒரு படம்...
    சுகமோ சுகம் ..அச்சா அச்சா
    பகவத்கீதை பாகவதம் ராமாயணம்
    கக்கத்தில் வைத்து கதைபடித்தாலும்
    பக்கத்தில் பருவ பெண்ணை பார்த்து பல்லிளித்து இருந்தேன்
    என்ன அயோக்கியத்தனம்
    இன்று பிறந்தது ஞானம்
    இனி விட்டு விட போகிறேன்
    பக்தி நூல் படிப்பதை
    என்னய்யா சம்பந்தம்.. சப்ஜெக்டுக்கு வாங்கைய்யா

    ReplyDelete
    Replies
    1. சட்டென வெட்டி பேசாதீர்-வெட்டிகிளியாரே

      Delete
    2. novel,comics லருந்துதான் திரைப்படம் எடுக்கவேண்டுமா? திரைப்படமாக வந்து பின் graphic novelஆக உருமாற்றம் நடைபெறவும் வாய்ப்பு உள்ளது!Intersellar அத்தகைய திரைப்படம் !

      Delete
  72. லார்கோ வழக்கம் போல சூப்பர்,ரிப்போர்ட்டர் ஜானியின் சைத்தான் வீடு ஓகே ரகம்.

    ReplyDelete
  73. This comment has been removed by the author.

    ReplyDelete
  74. 2015ன் அட்டவனை சூப்பர், ஆனால் மறுபதிப்பில் கலரில் சிக் பில் மற்றும் ரிபோர்டர் ஜானிக்கும் ஒரு ஸ்லாட் ஒதுக்கி இருக்கலாமே?

    ReplyDelete
  75. இனிய இரவு அப்டேட் சார் . சேலத்தில் இவ்வளவு காமிக்ஸ் ரசிகர்களா என்று சற்றே நண்பர்கள் அனைவரும் மலைத்துப்போனோம் என்றுதான் சொல்ல வேண்டும் சார். அவ்வளவு புதிய ரசிகர்கள் அறிமுகங்கள் சார். மீண்டும் காமிக்ஸ் வர ஆரம்பித்து விட்டதா என ஆச்சர்யம் கலந்த பரபரப்புடன் புத்தகங்களை வாங்கி சென்றனர். குடும்பத்துடன் வந்தவர்கள் ஏராளம் சார். நல்ல அறிமுகம் என்ற வகையில் இது நிச்சயமான வெற்றி சார். இன்று விற்பனையும் நல்ல விதமாக இருந்தது சார். சென்னை மற்றும் ஈரோடு க்கு அடுத்த இடம் பெருமளவு விற்பனை ஆகும் என்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று சார். காலை முதலே நண்பர்கள் கூட்டம் உற்சாகத்துடன் எஞ்சாய் செய்தோம் சார். மற்ற ஸ்டால்களில் 2பேர் மட்டுமே இருக்க நம் ஸ்டாலில் விற்பனைக்கு 2பேர் , பேக்கிங் செய்ய 2பேர் , வாசகர்கள் உடன் பேச 2பேர் என ஒரு டீம் ஒர்க்காக நண்பர்கள் ஒத்துழைப்பு நல்கினார்கள். அந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் ஒரே வார்த்தையில் நன்றி சொல்ல இயலாது. காலை முதல் மாலை வரை இருந்த நண்பர்கள் ஸ்பைடர் ஶ்ரீதர் , மாயவி சிவா , யுவா கண்ணன் , கார்த்தி மற்றும் மதியம் முதல் இணைந்து கொண்டு உதவிய சேலம் சுசி , ஈரோடு விஜய் கடை மூடும் வரை உற்சாகத்துடன் அனைத்து பணிகளையும் செய்தனர். இவர்கள் அனைவர்க்கும் ஸ்பெசல் நன்றி நம் அனைவரின் சார்பாக. காலையில் நண்பருடன் வந்த மாடர்ன் மங்கூஸ் , மேச்சேரி ஜெயக்குமார் , டாக்டர் சுந்தர் , மகனுடன் வந்திருந்த ரங்கராஜ் , தர்மபுரி கிரிதரன் , குலவை செந்தில் குமார் , பெங்களூரு சுப்பிரமணி , டிரைவர் குமார் , சேலம் குமார் , ஆட்டையாம்பட்டி ராஜ்குமார் , திருப்பூர் டெக்ஸ் சம்பத், வீமன் பனமரத்துப்பட்டி , தியாகராஜன் மற்றும் தேசன் புத்தக நிலையம் ராஜசேகர் , குடும்பத்துடன் வந்திருந்த உடையாபட்டி சண்முகசுந்தரம் மற்றும் பல நண்பர்கள் வந்திருந்தனர். பேஸ் புக் நண்பர் பொன்வேல் பூபாலன் ஒரு பெரிய பார்சலில் அள்ளி சென்றார். அடுத்த ஒரு மாதம் அவருக்கு நல்ல வேட்டை . சிறப்பான கவரிங் செய்ததன் காரணமாக சில மின்னும் மரணம் முன்பதிவுகள் கிட்டின.

    ReplyDelete
    Replies
    1. சேலம் Tex விஜயராகவன் @ சந்தோசமாக உள்ளது! தொடரட்டும் நண்பர்களின் காமிக்ஸ் பணி! நண்பர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

      Delete
    2. சேலம் நண்பர்களின் உற்சாகமான பங்களிப்பும், பல புதிய நண்பர்களின் அறிமுகங்களும் 'அடடா! சேலத்தில் இவ்வளவு காமிக்ஸ் ரசிகர்களா!!' என ஆச்சர்யப்பட வைத்தது!

      நாள்முழுக்கக் களப்பணியாற்றிவரும் டெக்ஸ் விஜயராகவன் & ஸ்பைடர் Sridhar, கார்த்திக் & 'யுவா' கண்ணன், மாயாவி சிவாவும் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்! வாழ்த்துகள் நண்பர்களே!!

      நண்பர்களின் உற்சாகமும், புதிய நண்பர்களின் அறிமுகமும், குடும்பம் குடும்பமாக காமிக்ஸ் வாங்கிச் சென்ற காட்சிகளும் இன்றைய என் பொழுதை நிறைவாக உணரவைத்தன! :)

      Delete
    3. எனக்கு தெரிந்து சேலத்தில் நமது வாசகர் வட்டம் அதிகம்! 1998 நமது காமிக்ஸ் வாசகர் ஒருவர் தன்னிடம் உள்ள சில புத்தகம்களை எனக்கு விலைக்கு கொடுப்பதாக சொன்னதால் சேலம் வந்து அவரை தேடி அவரது (நண்பர் ஒருவருடன் luna-வில்) கிராமம் சென்றது அவர் வீட்டில் இல்லை என்பதால் அவர் படிக்கும் கல்லூரி சென்று அவரை கண்டு பிடிக்க முடியாமல் திரும்பியது, எல்லாம் பசுமையான நினைவுகளாக உள்ளது. அதன் பின் எனது சேலம் நண்பர் சில நாட்கள் கழித்து அவரை கல்லூரியில் சென்று சந்தித்து அந்த புத்தகம்களை எனக்காக வாங்கி வந்தது எல்லாம் மறக்க முடியாத அனுபவம்.

      Delete
  76. முடிந்த அளவு கடையின் உள்ளே கூட்டம் போடாமலும் மற்ற கடைக்காரர்கள் பொறாமை படாமல் இருக்க சத்தம் குறைந்து கொண்டும் நண்பர்கள் ஒத்துழைப்பு நல்கினார்கள். ப ப்பாசி பிரச்சினை இங்கே இருக்காது என்பது நிச்சயம் சார். நண்பர்கள் உரையாடி மகிழ மூலையில் கடை கிடைத்தது நம்முடைய நல்ல காலம் சார் . அந்த கார்னர் இடத்தை தேர்வு செய்ததற்கு சேலம் நண்பர்கள் சார்பில் நன்றி சார்

    ReplyDelete
  77. டெக்ஸின் முதல் வண்ணப் புத்தகமான 'நிலவொளியில் ஒரு நரபலி'யின் கடைசி சில பிரதிகள் இன்று சேலத்தில் விற்றுத் தீர்ந்தது. சிவகாசியிலும் இப்புத்தகம் ஸ்டாக் இல்லையென்று நாங்கள் கேள்விப்பட்டது உண்மையா எடிட்டர் சார்?

    ReplyDelete
  78. இந்தமாதப் புத்தகம்கள் (Parani's syndrome) இன்னும் வந்து சேரவில்லையென்று புத்தகத் திருவிழாவில் நண்பர்களிடம் நான் புலம்பியதையடுத்து, "உங்களுக்கு இல்லாததா விஜய்?" என்று சொல்லி இரண்டு புத்தகம்களையும் வாங்கி என் கையில் திணித்தார் மாயாவி சிவா! நண்பர்களின் அன்பை என்னவென்று சொல்ல!! நன்றி மாயாவி நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. இங்கு எனக்கு புத்தகம் வரவில்லை, எனது புத்தகம் கடந்த நான்கு நாட்களாக S.T கொரியர் டெலிவரி நபர் கைகளில் உள்ளது, அவர் விடுமுறையில் உள்ளதால் புத்தகம்கள் கைக்கு கிடைக்கவில்லை :-(

      Delete