நண்பர்களே,
வணக்கம். ஞாயிறு காலை பதிவிட்டு விட்டு மதியம் எட்டிப் பார்க்கும் போதே பின்னூட்டங்களின் எண்ணிக்கை 100-ஐத் தாண்டி இருந்தததை மின்னும் மரணத்தின் வசீகரத்திற்கொரு முன்னோடியாகப் பார்க்க முடிந்தது ! Thanks indeed guys ! பற்றாக்குறைக்கு அன்றே 3 பிரதிகளுக்கு நண்பர்களில் சிலர் ஒரு தோராயமான தொகையினையும் அனுப்பி உள்ளனர் !! கரை புரண்டோடும் இந்த ஆர்வத்தின் இடையே புதிது புதிதாய் வேண்டுகோள்களுடன் சில மின்னஞ்சல்களும் வந்த வண்ணம் உள்ளன ! 'அடுத்ததாக இந்த நாயகரின் தொகுப்பை இதே போல் வெளியிடுங்கள்' ;'அந்தக் கதைத் தொடரினை இன்னொரு Collector's Edition-ஆக வெளியிடுங்கள்' என்ற விண்ணப்பங்களோடு ! Let's be clear on one thing guys....இத்தனை விலையிலான வெளியீடுகளைத் தொடர்ச்சியாய் வெளியிடும் உத்தேசம் நமக்கு நிச்சயமாய்க் கிடையாது ! ஏற்கனவே ரூ.60 ; ரூ.120 என்ற விலைகளில் காமிக்ஸ் வாசிப்பை ஒரு costly ஆனதொரு மேடையில் அமரச் செய்திருக்கும் நிலையில் - அடுத்தடுத்து ரூ.500 ; ரூ.1000 என்ற விலைப்பட்டியல்கள் நம்மை சராசரி வாசகர்களின் அண்மையிலிருந்து ஒட்டு மொத்தமாய்க் கொண்டு சென்று விடும் !
எங்களைப் பொறுத்த வரை இந்த print on demand ரகத்திலான வியாபாரம் மிக மிக சுலபம் ; முன்பணம் வாங்கியான பின்னே தான் அடுப்பையே பற்ற வைப்போம் என்ற முறையில் முதலீடோ, 'கையில் இதழ்கள் தேங்கி விட்டன' என்ற சிக்கல்களோ இதனில் தடையாக நிற்கப் போவதில்லை ! ஆனால் 1000 பேரை மாத்திரமே எட்டக் கூடியதொரு முயற்சிக்குள் ராப்பகலாய் நாங்கள் உழைப்பது எவ்வித சுவாரஸ்யத்தையும் நல்கப் போவதில்லை என்பதோடு உங்களின் பட்ஜெட்களை தொடர்ச்சியைப் பதம் பார்த்ததொரு தோற்றத்தையும் ஏற்படுத்தி விடும் ! தவிர இது போன்ற மெகா இதழ்கள் நித்தமும் உண்டு எனில் அவற்றின் பிரத்யேகத்தன்மை குன்றிடும் வாய்ப்புகளும் இல்லாதில்லையே ! Customized Imprints என்றொரு பாதை உள்ளதென்பதை அடையாளம் பார்த்துள்ளோம் எனினும் நம் பயணம் அப்பக்கமாய் இருக்கப் போவதில்லை என்பது திண்ணம் ! ஒரே இதழை உயர்தர hardcover பதிப்பாகவும் ; குறைவான விலையில் நார்மல் இதழாகவும் ஒரே வேளைதனில் வெளியிடும் வசதியும், வாய்ப்பும் புலரும் ஒரு தூரத்து நாளைக்கு இவற்றைப் பற்றி மீண்டும் சிந்திப்போம் ! அதன் முன்பாக இந்த முயற்சி நிச்சயம் தொடரப்படமாட்டாது ! So "மின்னும் மரணம்" நிச்சயமாய் ஒரு one -off மாத்திரமே ! And that's final ! இப்போதைய மி.மி. இதழுக்கும் கூட இரு தவணைகளாய் முன்பதிவு செய்யும் வசதியும் செய்திட எண்ணியுள்ளோம் ! வாங்கும் திறன் கூடியுள்ள இந்நாட்களிலுமே ரோஸ் நிற காந்தித் தாத்தா நோட்டு ஒரு விலைமதிப்பற்ற காகிதம் என்பதில் எனக்குத் துளியும் ஐயமில்லை !
ஞாயிறு மாலை சென்னையில் மத்தியகைலாஷ் விநாயகர் கோவிலுக்கு வீட்டோடு சென்றிருந்தேன். அங்கே கோவிலுக்கு வெளியே நடைபாதையில் நான் பார்த்த காட்சி பணத்தின் நிஜமான இன்னொரு பரிமாணத்தை சம்மட்டியாய் உணரச் செய்தது ! ஒரு 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் தனது மூன்று மாதத்துக் கைக்குழந்தையை ஒரு பழைய துணியில் தன்னருகே படுக்க வைத்துக் கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார் ! நெற்றியிலும், கன்னத்திலும் வைக்கப்பட்டிருந்த கறுப்புப் பொட்டுக்கள் மாத்திரமே அந்தப் பச்சைக் குழந்தையின் மேனியின் மேலிருந்தவை ; அதுவோ எதையும் உணராது சிரித்துக் கொண்டே கையையும், காலையும் ஆட்டிக் கொண்டு படுத்துக் கிடந்தது. அதன் அருகே அம்மணமாய் நின்று விளையாடிக் கொண்டிருந்தது 1 வயது மதிக்கத்தக்க இன்னொரு குழந்தை ! உறங்கும் வேளையில் அந்த மூத்த பிள்ளையானது எங்கும் ஓடி விடக் கூடாதே என்ற ஆதங்கத்தில் ஒரு கந்தல் துணியை எடுத்து அந்த மழலையின் இடுப்பைச் சுற்றிக் கட்டிவிட்டு, அதன் மறுமுனையை நடைபாதையின் கைப்பிடியில் முடிச்சுப் போட்டு வைத்திருந்தாள் அந்தத் தாய் ! வானம் தான் அவர்களது குடை ; வறுமை மாத்திரமே கடவுள் தந்த கொடை என்பதை உணர்ந்த வேளையில் ஒரு வித வெறுமை மனதுக்குள்...! வறுமை நம் நாட்டுக்கு அந்நியமல்ல தான் ; இது போன்ற சங்கடமான வாழ்வுகளே பலருக்கும் அன்றாட நிகழ்வுகள் என்ற போதிலும் கண்ணில்படும் இது போன்ற காட்சிகள் பணத்தின் நிஜமான அருமையை மௌனமாய் சொல்வது போல் தோன்றியது எனக்கு ! 2015-ல் நம் வெளியீடுகளின் ஒரு சின்னதொரு இதழை Helpline Special என்று உத்தேசித்து அதனில் கிடைக்கும் பணத்தை நம் அனைவர் சார்பாகவும் 'உதவும் கரங்கள்' போல் ஏதாவதொரு அமைப்பிற்கு கொடுக்கலாம் என்ற நினைப்பு மனதில் தோன்றியது ! அடுத்தாண்டின் திட்டமிடலின் போது இது பற்றி இன்னும் கொஞ்சம் பேசுவோமே ?
Moving on to brighter things - மின்னும் மரணம் ஒரு மறுபதிப்பு என்பதால் அதன் முதல் 10 அத்தியாயங்களில் எனது பணிகள் புதிதாய் / பெரிதாய் ஏதும் இருக்கப் போவதில்லை . So இம்முறை அதன் முக்கிய வேலைகளைக் கவனிக்கும் பொறுப்புகளை நண்பர்களாகிய நீங்களே ஏற்றுக் கொண்டாக வேண்டும் ! அட்டைப்படத் தயாரிப்பில் துவங்கி ; proof reading வரை அதன் பணிகளை நண்பர்கள் இணைந்து செய்திட ஒரு நெருடல் தரா வழிமுறையை தேடிப் பிடிப்போமே ?! கதையின் இறுதிப் பாகமான ARIZONA LOVE மாத்திரமே புதிது என்பதால் அதனை நான் கவனித்துக் கொள்கிறேன் ; பாக்கி 440 பக்கங்களை உங்களிடமே ஒப்படைப்பதாய் உள்ளேன் ! What say folks ? அதற்கு முன்பாக மின்னும் மரணம் இதழுக்கு "மி.மி" என்ற பெயர் சொல்லிக் கூப்பிடுவதை விட 'பளிச்' என்றதொரு நாமகரணத்தைச் சூட்டினால் தேவலையே என்று பட்டது ! எனது தேர்வு - SPARKLER SPECIAL ! இதை விட catchy ஆன பெயர்கள் உங்கள் மனதில் தோன்றிடும் பட்சத்தில் இங்கே பதிவிடுங்களேன் ? சிறப்பானதைத் தேர்ந்தெடுத்து விடுவோம் !
முன்பதிவு செய்யும் நண்பர்களுக்கு மி.மி. இதழின் விலை ரூ.900 ! (கூரியர் கட்டணம் தனி). அதன் cover price ரூ.1000 என்று நிர்ணயிக்கப்படும் ! So - புத்தக விழாக்களில் 10% கழிவு போக வாங்கினாலும் கிரயம் ரூ.900 என்றாகிடும். அதே போல இதழுக்கு hard cover தான் ; ஏற்கனவே அதனைத் திட்டமிடலில் இணைத்தாகி விட்டேன் என்பதால் அதன் பொருட்டு கவலைகள் கிடையாது ! ஈரோடு புத்தக விழாவிலிருந்தே மி.மி. முன்பதிவுகளைத் துவக்கிடப் போகிறோம் ! நண்பர் V கார்த்திகேயன் suggest செய்திருப்பது போல - முன்பதிவு செய்திடும் நண்பர்களுக்கு கூடுதலாய் ஒரு incentive எனும் விதமாய் ஆர்ட் பேப்பரில் ஒரு முழு வண்ண கேப்டன் டைகர் போஸ்டர் ப்ரீயாகத் தந்திடுவோம் ! உடைந்த மூக்கரை உங்கள் கேபினில்...உங்கள் மேஜையில் ஒட்டி அழகு பார்க்கும் வாய்ப்பிது !! :-) முன்பதிவுகளின் பட்டியல் ஒவ்வொரு மாதமும் நமது இதழில் வெளியாகும் ; so அதன் துரிதத்தையோ ; சுணக்கத்தையோ நாம் அவ்வப்போது கவனித்துக் கொண்டே செல்லலாம் ! 'ஹீரோ ரெடி...ஹீரோயின் ரெடி...லொகேஷன் ரெடி... கதை ... கதை...மட்டும் தான் தேவை ! ' என்று காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் சுற்றுவது போல இனி நானும் சுற்றும் நிலை ! இப்போது பாக்கி இருப்பது உங்கள் முன்பதிவுகள் மாத்திரமே என்பதால் start music !
அதற்கு முன்பாய் LMS எனும் ஒரு மேளாவை மறந்திட வேண்டாமே ?! ஈரோட்டில் ஆகஸ்ட் 1-ல் துவங்கும் புத்தக விழாவில் நமது ஸ்டால் எண் 153. அதிர்ஷ்டவசமாய் சென்றாண்டைப் போலவே இம்முறையும் ஒரு emergency exit பாதையை ஒட்டிய ஸ்டால் நமக்கு என்பதால் நடைபாதையை ஆக்கிரமிக்காது நமது அரட்டைக் கச்சேரிகளை நடத்த இடமிருக்கும் ! LMS இதழினை முன்பதிவு செய்த நண்பர்களுக்கு வெள்ளியன்று இங்கிருந்து கூரியர்களில் அனுப்பிடுவோம். 2-ஆம் தேதி காலையில் நமது ஸ்டாலில் LMS -ன் விற்பனையைத் துவங்கிடுவோம் என்பதால் அனைவருக்கும் ஒரே சமயத்தில் இதழ் கிட்டிடும் ! சனிக்கிழமை காலையில் உங்களை சந்திக்க ஆவலாய்க் காத்திருப்போம் folks ! The welcome mat's out !!!! நமது மூத்த பணியாளர் இராதாகிருஷ்ணன் இம்முறை ஈரோட்டில் இருக்க மாட்டார் என்பதால் சமீப வரவான ஷங்கர்ராஜனும், செல்வமும் நம் சார்பில் அங்கிருப்பர். வயதிலும், அனுபவத்திலும் குறைவான இவர்களுக்கு உதவிட நமது ஈரோடு நண்பர்களைத் தான் பெரிதும் நம்பியுள்ளோம் ! சென்றாண்டைப் போலவே இம்முறையும் தூள் கிளப்புவார்கள் என்று நிச்சயமாய்த் தெரியும் என்பதால் அதன் பொருட்டு நாங்கள் கவலை கொள்ளவே போவதில்லை !! இம்முறை நமது ஸ்டாலில் சின்னதொரு ஆச்சரியமும் காத்திருக்கும் guys ! வந்து தான் பாருங்களேன்...!
இன்று மதியம் நேரம் ஒதுக்கி ஞாயிறு பதிவில் பதில் எதிர்நோக்கியுள்ள பின்னூட்டங்களுக்கு இங்கே பதில்கள் எழுதுகிறேன். இப்போதைக்கு adios amigos !
IAM FIRST
ReplyDeleteha haa
ReplyDeleteI am 3! Happy ramzan to all expect you all n erode
ReplyDeleteHappy Ramalan bai! :)
Delete.இத்தனை விலையிலான வெளியீடுகளைத் தொடர்ச்சியாய் வெளியிடும் உத்தேசம் நமக்கு நிச்சயமாய்க் கிடையாது !
ReplyDeleteஎடிட்டர் இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டுகிறேன்..
வருடம் ஒன்றாவது ! சார் ரத்தபடலத்தை கை விட்டுறாதீங்க !
Delete//சார் ரத்தபடலத்தை கை விட்டுறாதீங்க//
Delete+1111111
சார் ரத்தபடலத்தை மறந்துடாதிங்க.
DeleteIn top 10 again :`)
ReplyDeleteOne and only special ,comics king special,Mega dream special
ReplyDeleteVijayan sir, Erode book fairukku enna time varuvirgal? Augest 2nd dhaaney?
ReplyDeleteTiger in சல்லிகட்டு! Tiger in மரணத்துடன் மஞ்சு விரட்டு! (consider the book release timing is tai thirunal) .
ReplyDeleteCAPTAIN TIGER - MEGA GOLDEN EDITION
DeleteCAPTAIN TIGER - GOLDEN edition
Deleteமரணத்துடன் மஞ்சு விரட்டு நடத்தும் Captain Tiger in 1st ever Collectors Golden Edition :P
Delete//அடுத்தடுத்து ரூ.500 ; ரூ.1000 என்ற விலைப்பட்டியல்கள் நம்மை சராசரி வாசகர்களின் அண்மையிலிருந்து ஒட்டு மொத்தமாய்க் கொண்டு சென்று விடும் ! //
Delete+1
sir try to reprint the captain prince in low price B/W editions(the one's you already released in color for 100/ new prints) i hope such a story art work should reach mas audience. will bring more Tamil comics readers as well.
if possible try reprint best of stories in B/W for low price, lets reach mass readers with best stories!
my humble opinion, food for though!
Top ten
ReplyDeleteஈரோடுக்கு கண்டிப்பாக வரவேண்டும் நண்பர்கள் அனைவரையும் ஒருசேர பார்க்கும் வாய்ப்பு மிக அரிதானது
ReplyDeleteஅல்லவா?
Sir,
ReplyDeletePls tell about the courier charges if possible.
Happy Ramzan.....
ReplyDeletesir no word on million hits special ? any hint on story list, release date it should be this year i guess since it part of 2014 supper six subscription
ReplyDelete//sir no word on million hits special ? //+1
Deleteரமலான் நல்வாழ்த்துகள் :)
ReplyDeleteஎன்றும் பதினாறு !
ReplyDelete///2015-ல் நம் வெளியீடுகளின் ஒரு சின்னதொரு இதழை Helpline Special என்று உத்தேசித்து அதனில் கிடைக்கும் பணத்தை நம் அனைவர் சார்பாகவும் 'உதவும் கரங்கள்' போல் ஏதாவதொரு அமைப்பிற்கு கொடுக்கலாம்///
ReplyDeleteஉயர்ந்த நோக்கம்....அனைவரும் முழு மனதாய் செயல்படுவோம்...
2015 வரை இந்த நல்ல விஷயத்தை தள்ளி போட வேண்டுமா? sir...
Yes,Its 100% true.
Deleteசார் , அருமை !
ReplyDeleteஆனால் free poster டெக்ஸ், கார்சனாய் இருந்திடும் பட்சத்தில் சந்தா குவிவது உறுதி ! போஸ்டர்கள் அழகாய் இருக்க வேண்டாமோ ! அழகு பார்க்கும் விதத்தில் கொடுத்தால் நன்றாய் இருக்குமே ! இயற்கை காட்சிகளான மலைகளுக்கும் ,குன்றுகளுக்கும் இடையே கம்பீரமாய் இரவுக் கழுகார் நண்பர்களுடன் யோசியுங்களேன் !
முடிந்தால் அட்டை படத்தில் கூட டெக்ஸ் கரம் பிடித்து டைகர் வருவது போல போடலாமே !
Deleteதலைப்பு டெக்ஸ்சை நம்பினோர் கை விட படார் ஸ்பெசல் !
Deleteஇதை நான் விசிலடித்து வரவேற்கிறேன்.
DeleteHope million hits will be reached before erode book fair.....
ReplyDeletedefinitely...definitely...definitely....
Deleteஅந்த மூன்று புதிய தொடர்கள் எது என குழம்பி இருக்கும் வேளையில் , ஈரோட்டு புத்தக திருவிழாவில் மற்றுமொரு இன்ப அதிர்ச்சி ! முடியல சார் ! கார்சனின் கடந்த காலமா ?
ReplyDeleteஆசிரியருக்கு எனது சந்தேகங்கள் கொஞ்சம் .....
ReplyDelete+ 6 சந்தா நான் இன்னும் கட்டாதாதால் அங்கே லயன் ஆண்டு மலர் மற்றும் புக் பேர் ஸ்பெஷல் 1 வாங்கியது போக மீதம் +6 சந்தா தொகை எவ்வளவு கட்ட வேண்டும் சார் ?
மின்னும் மரணம் ரூபாய் 900 ( கூரியர் செலவு தனி )எனில் தபால் செலவுடன் மின்னும் மரணத்திற்கு ஈரோட்டில் முன் பதிவு தொகை எவ்வளவு கட்ட வேண்டும் சார் ..? ( தபால் செலவுக்காக மீண்டும் ஒரு முறை பணம் அனுப்புவது சிரமம் சார் )
நாங்கள் டெக்ஸ் சாகச வெறியர்கள் என்றாலும் எங்களால் டைகர் ரசிகர்களான அவர்களின் காவியமான " மின்னும் மரணம் " தாமதம் ஆக வேண்டாமே என்ற நல்ல எண்ணத்தில் முன் பதிவு தொகையை அனுப்புகிறோம் சார் . :-) ஆனால் அதற்க்கு தண்டனையாக எங்களுக்கு டைகர் போஸ்டரை அனுப்பி தண்டிக்க வேண்டாம் .எனவே ஒரு 500 இதழுக்கு டெக்ஸ் ப்ளோ அப் தயாரித்து வைத்து டெக்ஸ் ரசிகர்களுக்கு அந்த இதழை அனுப்புங்கள் சார் :-)
1000 விலையில் வரும் மின்னும் மரணம் ஒன் ஆப் மட்டுமே என்றாலும்
இனி வரும் வருடத்தில் LMS போல 500 விலையில் ஆவது ஒரு புத்தகம் வருடம் ஒன்று தாங்கள் கண்டிப்பாக வெளி இட வேண்டும் சார் .ப்ளீஸ் .( புது கதைகள் அல்லது முழு டெக்ஸ் சாகசங்கள் )
இதை நான் விசிலடித்து வரவேற்கிறேன்
Delete//இனி வரும் வருடத்தில் LMS போல 500 விலையில் ஆவது ஒரு புத்தகம் வருடம் ஒன்று தாங்கள் கண்டிப்பாக வெளி இட வேண்டும் சார் .ப்ளீஸ்//
ReplyDelete+10000000000000
//2015-ல் நம் வெளியீடுகளின் ஒரு சின்னதொரு இதழை Helpline Special என்று உத்தேசித்து அதனில் கிடைக்கும் பணத்தை நம் அனைவர் சார்பாகவும் 'உதவும் கரங்கள்' போல் ஏதாவதொரு அமைப்பிற்கு கொடுக்கலாம்//
ReplyDeleteசார் மன்னிக்கவும் எனக்கு இதில் உடன்பாடு இல்லை. அவரவர் தனித்தனியாக தங்களுக்கு உரிய வழியில் ஏதாவது உதவி செய்யட்டும்
எமக்கு தொழில் காமிக்ஸ்
எடிட்டர் சார்,
ReplyDeleteபுத்தகத் திருவிழாக்களில் பங்கேற்பது, கடைகளில் விற்பனை, ஆன்லைன் விற்பனை என்று நம்முடைய வியாபார முனைகளின் எல்லைகள் சற்றே விரிவடைந்து வந்தாலும், பழைய வாசகர்களில் இன்னும் ஒரு பகுதியினர் பளபளா வண்ணங்களில் ரொமான்ட்டிக் லுக் விடும் லார்கோக்களையும், ஷெல்ட்டன்களையும் தங்களுடைய ஹீரோக்களாக ஏற்றுக் கொள்ள மனமின்றி, புத்தகத் திருவிழாக்களில் மாயாவிகளையும், ஸ்பைடர்களையும் தேடிப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கி ஏமாற்றத்தை உணர்த்திவிட்டு, தளர் நடையுடன் அடுத்த ஸ்டாலுக்கு செல்பவர்களின் ஏக்கம் தீர இம்முறையாவது வழியுண்டா சார்?
சென்ற சென்னைப் புத்தகக் கண்காட்சியிலும் 'பழைய நாயகர்களை மறுபதிப்பிலாவது காட்டுங்களேன்' என்ற ரீதியல் உங்களிடம் குவிந்த கோரிக்கைகளையும் நீங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லையே!
எனவே,
'மெடிக்கல் மிராக்கிள்' போல ஏதேனும் காமிக்ஸ் மிராக்கிள் நடந்து, ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஸ்பைடர்-மாயாவி ரசிகர்களின் முகத்தில் பரவசம் ஏற்படுத்திப் பார்த்து ரசித்திடும் வாய்ப்பிருக்கிறதா சார்?
Please send names with address to my email id: j.suresh@spi-global.com...
ReplyDeleteமுதல் ரெண்டு நண்பர்க்கு, அவர்களின் சார்பாக மின்னும் மரணம் (SPARKLER SPECIAL) புத்தகத்திற்கு நான் பணம் செலுத்துகிறேன்....
ஒரு சிலருக்கு டைகர் ஸ்பெஷல் இந்த மாதிரி வருவது பொறாமைப்பட வைக்குது போல
ReplyDeleteஎன்ன பண்றது டெக்ஸ் கொடுப்பினை அப்படி
ஒரு சிலருக்கு டைகர் ஸ்பெஷல் இந்த மாதிரி வருவது பொறாமைப்பட வைக்குது போல
Deleteஎப்ப பாத்தாலும் வெளாட்டுத்தான்.
THUNDER TIGER SPECIAL (TTS )
ReplyDeleteஇல்லாத தங்கம்
Deleteபொல்லாத டைகர்( ITPT SPECIAL )
தங்க தலைவன் டைகர் ஸ்பெஷல் (TTTS)
Delete////////// இல்லாத தங்கம் பொல்லாத டைகர் //////////
Deleteஆங்கில டப்பிங் படம் அதிகம் பார்ப்பீங்கன்னு நினைக்கிறேன்.
SPARKLER SPECIAL.
ReplyDeleteஆகஸ்ட்டில் முன்பதிவு
ஜனவரியில் வெளியீடு
ஆண்டவா அடுத்த மாதமே ஜனவரியாக மாற அருள் புரியமாட்டாயா.?
(எண்ணி எண்ணி பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே
என்னையறியாமல் உள்ளம் துள்ளி விளையாடுதே.)
எடிட்டர் சார் !
ReplyDeleteஸ்பார்க்லர் என்ற வார்த்தை நேரடியாக தீப்பொறிகளையும் மறைமுகமாக வைரத்தையும்
குறிப்பதாக காண்கிறது ........
டைகர் தீப்பொறி அல்லவே ?
கனல் கக்கும் எரிமலை பிழம்பு .....
சிலசமயங்களில் மட்டுமே சூழ்ச்சி வலையில் அகப்பட்ட புலி ....
மதியூகத்தில் பிரகஸ்பதி ......
அரிஸோனாவின் ஆண் புலியை வெறும் பொறி என சொல்வதா ?
தங்க தலைவனின் போஸ்டருக்குக்காகவே !!!!!!!!
ReplyDeleteடியர் விஜயன் சார்,
ReplyDelete//மின்னும் மரணம் இதழுக்கு "மி.மி" என்ற பெயர் சொல்லிக் கூப்பிடுவதை விட 'பளிச்' என்றதொரு நாமகரணத்தைச் சூட்டினால் தேவலையே//
NBS, LMS போன்ற 'மிக்ஸ் மசாலா' இதழ்களில், பல நாயகர்களின் கதைகள் இடம் பெறுவதால் - மேக்னம் ஸ்பெஷல், நெவர் பிஃபோர் ஸ்பெஷல், ஆல் நியூ ஸ்பெஷல் போன்ற "Umbrella" பெயர்கள் அவசியப் படுகின்றன!
ஆனால், ஒரே நாயகரின் கதைகள் அடங்கிய கலெக்டர் எடிஷன்களுக்கு இத்தகைய சங்கடங்கள் இல்லையே?! ஆகவே, "Sparkler Special" என்ற பொதுவான பெயருக்கு பதிலாக, பொருத்தமான வேறு பெயர் வைத்தால் சிறப்பாக இருக்கும்.
சில உதாரணங்கள் இதோ:
* மின்னும் மரணம் - Collector's Edition (MMCE)
* மின்னும் மரணம் - Ultimate Collection (MMUC)
* மின்னும் மரணம் - Omnibus (MMO)
* மின்னும் மரணம் - Jumbo Special (MMJE)
அல்லது, "மின்னும் மரணம்" என்ற தலைப்புடன், Blueberry பெயர் தாங்கிய ஒரு உபதலைப்பு:
* Blueberry Ultimate Collection (BUC)
* Blueberry Giant Special (BGS)
இன்னும் கொஞ்சம் மசாலா சேர்க்க வேண்டும் என்றால் ;-)
* Terrific Tiger Super Special (T2S2)
சுருக்கமாகச் சொல்வதென்றால், வாசகர்களிடையே பிரபலமாகி இருக்கும் "மின்னும் மரணம்" என்ற கவர்ச்சியான தலைப்பை, புத்தகத்தின் அட்டையில் இருந்து தவிர்க்க வேண்டாமே?!
// T2S2 //
Deleteஇந்த பெங்களூருகாரங்க மட்டும் எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கறாங்களோ? :)
'மின்னும் மரணம் - Collector's special ' - நச்!!
Deleteநண்பர் பெங்களூர் கார்த்திக் ...
Deleteஎப்படி உங்களால் மட்டும் இப்படி ...?
பாராட்டுகள் ....
( இதை சீரியஸாக சொல்கிறேன் நண்பரே ...காரணம் சில சமயம் சீரியஸ் ஆக சொல்வதை காமெடியாக எடுத்து கொள்கிறார்கள்....காமெடியாக சொல்வதை சீரியஸ் ஆக எடுத்து கொள்கிறார்கள் .உங்களை சொல்ல வில்லை. என் நேரம் .. :)
// மின்னும் மரணம் - Omnibus //
Deleteஆம்னி பஸ் என்ற term பலருக்கும் காமெடியாவே தெரியும்! :D
@ஈ.விஜய்:
DeleteT2S2 - ஹிந்திப் பட டைட்டில்களின் பாதிப்பு! :)
@பரணிதரன்:
//சில சமயம் சீரியஸ் ஆக சொல்வதை காமெடியாக எடுத்து கொள்கிறார்கள்....காமெடியாக சொல்வதை சீரியஸ் ஆக எடுத்து கொள்கிறார்கள்//
ஒரு மாற்றத்திற்கு, சீரியஸாக காமெடி செய்து பார்க்கலாமே?! பயங்கரமாக குழம்பிப் போய் விடுவார்கள்! :P
( இதை நான் சீரியஸாக சொல்லவில்லை நண்பரே :-D )
@ரமேஷ் குமார்:
//ஆம்னி பஸ் என்ற term பலருக்கும் காமெடியாவே தெரியும்! :D//
அட ஆமாம்ல!! :D அடுத்த டெக்ஸ் கலெக்ஷனுக்கு "ஏர் பஸ்" என்று பெயர் சூட்டி விடலாம்! :P
/////////// மின்னும் மரணம் - Collector's Edition (MMCE) ///////////
Deleteசூப்பர்
//////////// அடுத்த டெக்ஸ் கலெக்ஷனுக்கு "ஏர் பஸ்" என்று பெயர் சூட்டி விடலாம்! //////////////
அடிக்கடி ஏர்பஸ் தீப்பிடித்து எரிவது வாடிக்கையான ஒன்று.
KCS ( காவிய காமிக்ஸ் ஸ்பெஷல் )!!!
ReplyDeleteD1&1ly special
ReplyDeleteநண்பர் அன்பு ..
ReplyDeleteஒரு சிலருக்கு டைகர் ஸ்பெஷல் இந்த மாதிரி வருவது பொறாமைப்பட வைக்குது போல
என்ன பண்றது டெக்ஸ் கொடுப்பினை அப்படி #
அது அப்படி அல்ல நண்பரே ....
டெக்ஸ் புத்தகத்திற்கு எந்த இலவச இணைப்பும் இல்லாமலே 1000 ரூபாய்க்கு ஒரு வெளியீடு வந்தால் எந்த எண்ணிக்கை கட்டுப்பாடும் இல்லாமல் முன் பதிவு பட்டையை கிளப்பும் .இந்த "டைகருக்கு " ஆயிரம் புத்தகம் மட்டுமே என்றும் ஒரு ப்ளோ அப் என்றும் சில " ஜிகினா " வேலை செய்தால் தான் 500 முன் பதிவு ஆவது தட்டு தடுமாறி வந்து நிற்கும் .
என்ன செய்வது " டைகர்" கொடுப்பினை அப்படி ? :-)
நல்ல விளக்கம் தலைவரே! :)
Deleteஇருக்கலாம் நண்பரே ஆனா இந்த அளவுக்கு தனிப்பட்ட ஒரு ஹீரோவுக்கு என்று ஒரே புத்தகமாக வருவது டைகருக்கு பெருமை தான் எங்களுக்குமே
Deleteவாழ்க டைகர் புகழ்
பட்ட பகலிலேயே டிம்மாகத் தெரியும் ஒரு பரட்டைத் தலையனுக்கு SPARKLER SPECIALனு பேர் வைப்பது அப்படியொன்னும் பொருத்தமாக இல்லையே எடிட்டர் சார்? பேசாம 'மின்னும் மரணம் -பரட்டை ஸ்பெஷல்'னே வச்சுடுங்களேன்? தலைப்பைப் பார்த்தவுடனேயே குழந்தைகூட ஹீரோ யார்னு கண்டுபிடிச்சுடுமில்லையா?
ReplyDelete'SPARKLING SPECIAL'னு இந்த வருட தீபாவளி மலருக்கு பெயர் வச்சுடலாம். ன்னான்றீங்க?
// 'மின்னும் மரணம் -பரட்டை ஸ்பெஷல்'னே வச்சுடுங்களேன்? //
Deleteபார்த்து... டைப் செட்டிங் செய்பவர் "பரட்டை மரணம் - மின்னும் ஸ்பெஷல்" னு போட்டுவிட போராறு!
// பரட்டை மரணம் //
Deleteஆஹா!!! இந்தப் பதிவிலேயே நான் மிகவும் ரசித்த அழகான வார்த்தை இதுதான்!! :)
// பரட்டை மரணம் //
Deleteஆஹா!!! இந்தப் பதிவிலேயே நான் மிகவும் ரசித்த அழகான வார்த்தை இதுதான்!! :)
நானும் .... :-)
நற நற ..............
Deleteநா சொன்னது உண்மையாயிடுச்சுங்கோ
Deleteஇதை நான் வழிமொழிகிறேன்.
Delete//..மின்னும் மரணம் -பரட்டை ஸ்பெஷல்'னே வச்சுடுங்களேன்? ...//
Deleteபரட்டைக்கு இதை விட சிறந்த title சிக்காது ;) :P
Dear Editor,
Jokes apart, "மின்னும் மரணம் - Collector's Special" தான் BEST
அத்துடன் ஒரே தடிமனான புத்தகமாக வருவதை விட, மூன்று (4+3+4) அல்லது நான்கு (3+3+3+2) புத்தகமாக, ஆனால் ஒரே set (முடிந்தால் BOX set)-ல் வந்தால் படிக்க, பாதுகாக்க வசதியாக இருக்கும்
டெக்ஸ்ஐ நம்பி 1000 ரூபாய் புக்கா?? நீங்க காமெடி பண்ணலியே???
ReplyDeleteநண்பரே ....ஆசிரியர் மட்டும் 1000 விலையில் ஒரு டெக்ஸ் ஸ்பெஷல் என்றும் முன் பதிவு நாளையே என்றும் அறிவிக்கட்டும் ......
Deleteஇந்த மாதம் முடிவதற்குள் ( இன்னும் இரண்டு நாள் ) முன் பதிவு எவ்வளவு என்று பாருங்களேன் .. :-)
சும்மா அதிரும்ல ...
நாங்க ரெடி...ஆசிரியர் ரெடியா ....?
டெக்ஸ்ஐ நம்பி 1000 ரூபாய் புக்கா?? நீங்க காமெடி பண்ணலியே???........................
Deleteகாமெடியே தான்
ஹி ஹி ...
Deleteடெக்ஸ் ஸ்பெஷல் 1000/- என்ன 1500/- கூட வைக்கலாம்.இப்பவே நான் 2 புக் ஆர்டர் தருகிறேன்.தல ஸ்பெஷல்னு பெயர் பேர் வைங்க.
Deleteகெளம்பு ...........கெளம்பு .......சாமி ............டைகர் வருதுல்ல...........
Deleteமந்திரியாரே
Deleteஓடு......ஓடு .......தலைதெறிக்க ஓடு ......டைகர் வருதுன்னு சொல்லிபாருங்க
சார் !
ReplyDeleteஹெல்ப் லைன் பற்றி ........
விற்கும் இதழ்களின் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை தொண்டு நிறுவனங்களுக்கு
அளிக்கலாம் .....
நான் கூறுவது எல்லா இதழ்களுக்குமே .....
ஒவ்வொரு இதழின் முன் ,பின் அட்டைகளில் இதை அச்சிடலாம் ........
"நீங்கள் வாங்கும் ஒவ்வொரு இதழும் 1 ரூபாய் திக்கற்றவர்க்கு கொடுக்கிறது
என்பதாக .........
விலை அதற்கு ஏற்றாற்போல் சிறிதளவு உயர்த்தலாம் .....
ஆண்டு முழுதும் சீரான தொகை அளிக்க இயலும் .....
ஹெல்ப் லைன் ஸ்பெஷலை விட இந்த முறை உத்தரவாதமானது என்பது
என் எண்ணம் ...
காமிக்ஸ் ரிலீஃப் ஃபண்ட் தொண்டு நிறுவனம் இந்த வகையில்தான்
ஆர்ச்சி கார்ட்ஸ் மற்றும் ஜே கே ரோலிங் மூலம் நன்கொடை பெற்றது ...
தீபாவளி ஸ்பெஷல் முடிக்கறததுக்கு உள்ளேயே நாக்கு தள்ளிருச்சு... !!!
ReplyDeleteஆனா ....முடிச்சவுடன் பரட்டையை கிளப்பி விட்டுட்டு " பட்டையை " கிளப்புச்சு நண்பரே ...:-)
Delete"சித்திர சக்கரவர்த்தி சிறப்பிதழ்."
ReplyDelete(எப்புடியும் தமிழ்பேர் வைக்க போவதில்லை.ஏதோ நாமும் ஒரு பெயர் சொல்லிவிட்டோம் என்று திருப்தி..........போதும்.)
தப்பு நண்பரே ....
Delete" சித்திர சிப்பாய் ஸ்பெஷல் "
இது தான் சரி ....:-)
பேசாம மின்னும் மரணம் புதகத்திற்கு உடைந்த மூக்கார் ஹீரோ என்பதால்....
ReplyDelete“ NOSE CUT SPECIAL " னு வையுங்களேன் பொருத்தமா இருக்கும்! :D
haaa haa ...
DeleteNOSE CUT SPECIAL
Deleteமின்னும் மரணம் விற்பனையை பார்த்து டெக்ஸ் ரசிகர்களுக்கு SPECIAL NOSE CUT விழப்போவது நிச்சயம்.
அருமையாக சொன்னீர்
Deleteசில்லி மூக்கர் ஸ்பெஷல் என்று வைப்போமா.
Deleteஹ ஹ ஹா ....ncs அருமை !
Deleteஎன்ன சார் நடக்குது இங்க.?
ReplyDeleteகவலை பட வேண்டாம் நண்பரே ....
Deleteஎல்லாம் ஜாலி யாக எடுத்து கொள்ளுங்கள் ...
தனி பட்ட நபர்களை தாக்காதவரை....:-)
//எல்லாம் ஜாலியாக எடுத்து
Deleteகொள்ளுங்கள்
தனி பட்ட நபர்களை
தாக்காதவரை.....:-.)//
சூப்பருங்க . ..
நான் நென்ச்சேன்
நீங்க சொல்ட்டிங்க
திருந்தவே மாட்டாங்க பா
Delete// தனி பட்ட நபர்களை தாக்காதவரை //
Deleteதனி பட்ட நபர்களையும் தாக்கக்கூடாது, ஜாலியன் வாலாபாக் படுகொலை போல ஒரு கூட்டத்தையும் தாக்கக்கூடாது :D
நான் ரஜினி வெறியன்...என் உயிர் நண்பனோ கமல் வெறியன் ....இருவரையும் மாற்றி ..மாற்றி மட்டம் தட்டி பேசுவோம் .....ஆனால் அவனும் ரஜினி படத்திற்கு வந்து விடுவான் .நானும் கமல் படத்துக்கு போய் விடுவேன் ஒன்றாக சேர்ந்து ....அது போல தான் இங்கே நண்பர்களின் ஆட்டமும் ..கவலை வேண்டாம் ...
ReplyDeleteநம்ப வில்லை என்றால் ஈரோட்டில் " மின்னும் மரணத்திற்கு "முன் பதிவு செய்யும் டைகர் ரசிகர்களை விட "டெக்ஸ் " ரசிகர்கள் செய்யும் முன் பதிவுகள் தான் அதிகம் இருக்கும் என்பதை அங்கே வந்து காண்பீர்கள் .
காரணம் மின்னும் மரணம் பட தயாரிப்பாளர்கள் மாபெரும் வெற்றி பெற்ற " பிரகாஷ் மூவிஸ் " நிறுவனத்தார் .அவர்கள் எந்த "ஹீரோவை " வைத்து படம் எடுத்தாலும் ரசிகர்களுக்கு சிறந்ததையை தருவார்கள் .எனவே நம்பி படத்திற்கு போகலாம் .
+100000000000000001
Deleteபரணீதரன் சார் பதிவின் ஒவ்வொரு வரியும் உண்மை ..........
Deleteஆமாம் ...ஆமாம் ....ஆமாம் ....
என்ன சார் நடக்குது இங்க.?
Deleteஇதுவும் ஜாலியான கேள்விதான் Mr.பரணி.
(பிராக்கெட்ல வில்லு பட வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்னு போட்ருக்கனுமோ.?)
// நான் ரஜினி வெறியன்...என் உயிர் நண்பனோ கமல் வெறியன் ....இருவரையும் மாற்றி ..மாற்றி மட்டம் தட்டி பேசுவோம் //
Deleteஇதிலே ஒரு சிக்கல் என்னவென்றால், என்னைப்போன்ற பூர்ணம் விஸ்வனாதன் ரசிகர்கள் இதையெல்லாம் தூர இருந்து பார்த்துவிட்டு ஓடியேவிடுவார்கள்!
சரியாச் சொன்னிங்க தலைவர் அவர்களே!
Delete(ஆகஸ்டு-2ல் எடிட்டரிடம் கொடுக்க நம்ம போராட்டக்குழு சார்பில் பலப்பல கோரிக்கைகள் அடங்கிய கடுதாசியை தயார்படுத்திட்டீங்க தானே? படிச்சுட்டு ஸ்பாட்லயே கதறி அழுகறாப்ல இருக்கணும்)
சூப்பர் நண்பரே.
Deleteடைகர் ரசிகர்களின் துணை வேண்டும் என பரணி கூறியிருப்பது நூற்றுக்கு இருநூறு சதம் உண்மை !
Delete//காரணம் மின்னும் மரணம் பட தயாரிப்பாளர்கள் மாபெரும் வெற்றி பெற்ற " பிரகாஷ் மூவிஸ் " நிறுவனத்தார் .அவர்கள் எந்த "ஹீரோவை " வைத்து படம் எடுத்தாலும் ரசிகர்களுக்கு சிறந்ததையை தருவார்கள் .எனவே நம்பி படத்திற்கு போகலாம் .//
ReplyDelete+1.
// 1000 பேரை மாத்திரமே எட்டக் கூடியதொரு முயற்சிக்குள் ராப்பகலாய் நாங்கள் உழைப்பது எவ்வித சுவாரஸ்யத்தையும் நல்கப் போவதில்லை என்பதோடு உங்களின் பட்ஜெட்களை தொடர்ச்சியைப் பதம் பார்த்ததொரு தோற்றத்தையும் ஏற்படுத்தி விடும் ! தவிர இது போன்ற மெகா இதழ்கள் நித்தமும் உண்டு எனில் அவற்றின் பிரத்யேகத்தன்மை குன்றிடும் வாய்ப்புகளும் இல்லாதில்லையே ! Customized Imprints என்றொரு பாதை உள்ளதென்பதை அடையாளம் பார்த்துள்ளோம் எனினும் நம் பயணம் அப்பக்கமாய் இருக்கப் போவதில்லை என்பது திண்ணம்! //
ReplyDeleteGreat to hear. It would be a big relief since this confirmation will avoid protests against low price versions. :D
+1
Delete//ஏற்கனவே ரூ.60 ; ரூ.120 என்ற விலைகளில் காமிக்ஸ் வாசிப்பை ஒரு costly ஆனதொரு மேடையில் அமரச் செய்திருக்கும் நிலையில் - அடுத்தடுத்து ரூ.500 ; ரூ.1000 என்ற விலைப்பட்டியல்கள் நம்மை சராசரி
ReplyDeleteவாசகர்களின் அண்மையிலிருந்து ஒட்டு மொத்தமாய்க் கொண்டு சென்று விடும் ! //
//தவிர இது போன்ற மெகா இதழ்கள் நித்தமும் உண்டு எனில் அவற்றின் பிரத்யேகத்தன்மை குன்றிடும் வாய்ப்புகளும் இல்லாதில்லையே //
மிகச்சரியான கருத்து. என்னதான் வாங்கும் திறன் அனைவரிடத்திலும் கூடியிருந்தாலும், கேட்டதெல்லாம் கிடைக்கிறது எனும் நிலையில், கிடைத்ததின் மேலும், இவ்வழியில் கிடைக்கப்போவதின் மேலும் தற்போதிருக்கும்
அதீத ஆர்வம் வரும் காலத்தில் குன்றுவதற்கு வாய்ப்புகள் அதிகம். என்னதான் எங்கள் காமிக்ஸ் ஆர்வம் "அதையும் தாண்டி புனிதமானது" என நண்பர்கள் சொல்ல வந்தாலும், மனித சமூக ஏதார்த்தம் இதுவரையும், இனியும் அதன் வழியே நடக்கப்போகிறது.
தவிரவும் காமிக்ஸ் எனும் மாய உலகத்தின் ஸ்பரிசத்தை மாதமாதம் "எனக்கே எனக்கு" எனும்படியாக அனுபவிக்க நமது வருமானத்தில் நாம் செலவிடவிரும்பும் தொகையும் ஒரு சதவீதத்திற்குள் இருக்கவேண்டியது அவசியம். தற்போது மாதம் தோராயமாக முந்நூறு ரூபாய் காமிக்ஸ் புத்தகத்துகென்றே செலவிடுகிறோம். நமது வாசகர்களின் average மாத வருமானம் பத்தாயிரம் என எடுத்துக்கொண்டாலும் அவர்கள் வருமானத்தில் மூன்று சதவீதம் காமிக்ஸ் புத்தகங்களுக்கு செலவிடப்படுகிறது. average ஆக ஒவ்வொரு வீட்டின் மருத்துவ செலவை விட இது கூடுதல் என்பது உண்மை. அதையும் மீறி நம்மிடம் அதிக பணம் spending காக இருந்தால் அதை இன்னமும் சிறப்பான வழிகளில் பயன்படுத்துவது நமது சமூக பொறுப்பு.
காமிக்சுக்கான செலவிடும் தொகையை பொருளாதார உயர்வை ஒட்டி படிப்படியாகத்தான் உயர்த்த வேண்டுமோ
தவிர all-of-a-sudden கூட்டுவது ஆரோக்யமானது அல்ல. உனக்கு பிடித்திருந்தால் வாங்கு என்பதும் தவறான
வாதம். மக்களுக்காக அரசாங்கம் போல அனைத்து தரப்பு வாசகர்களுக்காக பதிப்பக நிறுவனம். அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டியது கட்டாயம். ஆசிரியர் இதை மிகச்சரியாக உணர்ந்துள்ளார்.
//ஈரோட்டுக்கு வாங்க !! //
அழைப்புக்கு நன்றி சார்! நிச்சயம் ஏதாவது ஒரு நாளில் attendance போடா முயற்சிக்கிறேன் .
அழகான கருத்துகள். வருடத்திற்கு இரண்டு (ஈரோடு மற்றும் சென்னை புத்தக திருவிழாவிற்காக) வருவதும் நன்றாகத்தான் இருக்கும்.
Deleteமிக சரியான கருத்து ஸார்... முன்பு போல் அனைத்து தரப்பினரும் காமிக்ஸ் வாசிக்க வேண்டும்.
Deleteமிக யதார்த்தமான கருத்து! MNC இல்லாத மற்ற பணிகளில் இருக்கும் நபர்கள் கிட்டதட்ட 6 சதம் காமிக்ஸ் பற்றுக்கு செலவு செய்கிறார்கள் !
DeleteLooking forward to LMS, July books came within 10 days (to US). So hopefully LMS also follows the same timeline for shipping.
ReplyDeleteTiger poster is a welcome addition for MM, and I believe "Minnum Maranam" is the apt title for this series.
நண்பரே...எப்பொழுதும் எனக்கு 10-14 நாட்களுக்குள் வரும் பிரதிகள், இந்த முறை 26 நாட்கள் எடுத்துக்கொண்டது. இங்கிருக்கும் அனைவருக்கும் இப்படிதான் என நினைத்தேன்.
DeleteHmmm, Sorry to hear that. I live in New Jersey not sure whether that made any difference.
Deleteஈரோட்டு காப்பாளருமான.....சங்க செயலாளர் மான ஈரோட்டு விஜய் அவர்களே .....
ReplyDeleteநமது உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்று கூட்டி நாம் தூக்கி போட்ட அந்த "சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பு வேண்டிய "பதாகைகளை " தூசு தட்டி எடுத்து வைக்கவும் .இந்த முறை எந்த நண்டு வருவலுக்கும்...,கீரை வடைக்கும்..,மயங்காத நபர்களை முன் நிறுத்தி போராட்டத்தை துவக்க வேண்டும் .அப்படியே சாப்பிட்டாலும் அதை உடனே மறந்து மீண்டும் போராட்டத்தில் குதிக்க உறுப்பினர்களை தயார் படுத்தவும் .
நான் உடனடியாக ஒரு இரண்டு குயர் நோட்டை வாங்கி வந்து விடுகிறேன் .கடிதம் எழுத ......சிங்கத்தின் சிறு வயதில் தொகுப்பு எப்பொழுது வேண்டுமானாலும் வரட்டும் .ஆனால் நிச்சயம் வரவேண்டும் என்ற உறுதி மொழியை ஆசிரியர் தரும் வரை சிவகாசி செல்லும் பேருந்துகளை நமது நண்பர்களை கொண்டு தடை பண்ணுவோம் .
வெற்றி வேல் .....
சிங்கத்தின் வேல் .....
போராடுவோம் ......
வெற்றி பெறுவோம் .....
சிங்கத்தின் கர்ஜனையை கொண்டு இந்த "புலிகளை " விரட்டுவோம் .
// நான் உடனடியாக ஒரு இரண்டு குயர் நோட்டை வாங்கி வந்து விடுகிறேன் //
Deleteஇப்பல்லாம் நீங்க எழுதுறதை ரொம்பக் குறைச்சுட்டீங்க தலைவரே! :(
Sparkler Special என்பது அன்னியமாக உள்ளது. மின்னும் மரணம் - Collector's Edition என்பதே சரியாக இருக்கும்.
ReplyDelete+1
DeleteDEFINITE ஆ யெஸ்
Delete+1, Agree
Deleteஒரு காலத்தில் பரட்டை, மெண்டல் என்று ஏளனம் செய்யப்பட்டவர்தான் இன்றைய நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
ReplyDelete+1 as Rajini fan
Deleteரஜினி பரட்டை எனில்,கமல் சப்பாணி.
Delete//ரஜினி பரட்டை எனில்.,கமல் சப்பாணி.//
Deleteசப்பாணி மட்டுமல்ல "சகலகலா வல்லவன்."ம் கூட.
from :-kamal fan
LMS என்ற ஒன்று சமீபமாக விற்பனைக்கு வரப் போகிறது. எல்லோரும் அதை மறந்துவிட்டு டைகர்.... டைகர்..... என்று புலம்புகிறீர்களே (வாழ்த்தியோ.... தாழ்த்தியோ.....) அதுவே டைகருக்கு கிடைத்த இமாலய வெற்றி.
ReplyDeleteஉண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
Deleteடைகர் ன்னா கொக்கா ..........???
Deleteஇல்ல கொ எடுத்த புளி !!
Delete/டைகர் ன்னா கொக்கா ........???//
Deleteமந்திரியாரே கொக்குக்கு "மூக்கு " நீளமாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.!???!
////////////// மின்னும் மரணம் முழு வெளியீடு ஒரு அற்புதமான படைப்பு. இதில் எடிட்டராகிய உங்களின் முழு பங்களிப்பு இருந்தால் மட்டும் நன்றாக இருக்கும். வாசகர்களின் கைவண்ணத்தை வேறு ஏதாவது ஒரு இதழுக்கு பயன்படுத்தி கொள்ளலாமே. என்னுடைய சிறு யோசனை பின்னட்டையில் கதை மற்றும் ஆசிரியர், ஓவியர் பற்றிய குறிப்புகளுடன் ஓரத்தில் முழு நீளத்தில் ஒரு பெண்ணை அணைத்து கொண்டதுபோல் உள்ள டைகர் படத்தை வைக்கலாமே./////////////////
ReplyDelete/////////////// நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் /////////////////
சிலர் எழுத்தை போல்டாக எழுதுகிறீர்கள் அது எப்படி என்பதையும், படங்களை இணைத்து அனுப்புவது எப்படி என்பதையும் இங்கே தெரியப்படுத்தினால் எனக்கு உதவியாக இருக்கும். நன்றி.
மின்னும் மரணம் முழு வெளியீடு ஒரு அற்புதமான படைப்பு. இதில் எடிட்டராகிய
Deleteஉங்களின் முழு பங்களிப்பு இருந்தால் மட்டும் நன்றாக இருக்கும். வாசகர்களின் கைவண்ணத்தை வேறு ஏதாவது ஒரு இதழுக்கு பயன்படுத்தி கொள்ளலாமே.
மிகவும் நியாயமான கருத்து.
இதோ என்னுடைய. +1
முகுந்தன் குமார் !
Delete1.போல்டு லெட்டரில் எழுதுவது எப்படி என மிஸ்டர் மரமண்டை சில
பதிவுகளுக்கு முன் தெளிவாக பதில் அளித்திருக்கிறார் .
2.இமேஜ் லிங்க் கொடுப்பது எப்படி என திரு கிங் விஸ்வா புனித சாத்தான்
அவர்களுக்கு முந்தைய பதிவினில் க்ளாஸே எடுத்துள்ளார் .
பழைய பதிவுகளை கடந்த 3 மாத பதிவுகளுக்குள் தேடவும் .
பின் குறிப்பு : இமேஜ் லிங்க் கற்று கொண்ட பின் புனித சாத்தானின்
குலை நடுங்க வைக்கும் பேய் இமேஜை பார்க்க தவற வேண்டாம் ;)
ம் ம் ......நல்ல பிசாசின் ....ம் ..வந்து .....சென்சார் சிவகாசி பதிவை பார்ப்பதும்
பார்க்காமல் இருப்பதும் உங்கள் இஷ்டம் ...;)..:)
(இஸ்ரேல் -பாலஸ்தீன பிரச்சினை குறித்து நல்ல பிசாசு எழுதி உள்ள
பூம் பூம் படலம் இமேஜ்கள் பற்றி எழுதாமல் சென்சார் சிவகாசி பற்றி
எழுதுவது பற்றி ஏதேனும் நினைக்க வேண்டாம் திரு புனித சாத்தான் :-)
வெகு ஜன ரசனை அப்படி ;-)
Deleteபின் குறிப்பு : இமேஜ் லிங்க் கற்று கொண்ட பின் புனித சாத்தானின்
குலை நடுங்க வைக்கும் பேய் இமேஜை பார்க்க தவற வேண்டாம் ;)
ம் ம் ......நல்ல பிசாசின் ....ம் ..வந்து .....சென்சார் சிவகாசி பதிவை பார்ப்பதும்
பார்க்காமல் இருப்பதும் உங்கள் இஷ்டம் ...;)..:)//
செல்வம் அபிராமி @
டீஸர் மட்டுமாவது இங்கே வெளியிட முடியுமா.?
(திகில் காமிக்ஸ் படித்து ரொம்ப நாளாகி விட்டது!!?!!)
கண்ணன் ரவி !
Deleteஆசிரியர் பதிவின் தலைப்பு
ஸ்பைடர் மண்டையனா சட்டி தலையனா ...
புனித சாத்தான் (saint satan )ஜூன் 18 19.53 நேர பதிவு
நெஞ்சுரம் கொண்டோர் மட்டுமே பார்க்க கூடிய பேய் இமேஜ் ....
நான் கூட "கார்சனின் கடந்த கால"த்திற்கு பிறகு தான் "மின்னும் மரணம்" என்று நினைத்துக் கொண்டிருந்தேன்
ReplyDeleteஆனால் இப்போது இதை பார்த்ததும் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.ஆயிரமாயிரம் நன்றிகள் சார்.
ஹ ஹ ஹா ....நண்பரே இன்னும் மகிழ்ச்சியை அதிகபடுத்த மின்னும் மரணத்திற்கு முன்னரே வருகிறது கார்சனின் கடந்த காலம் . சாரி, காமிக்ஸின் வேத புத்தகம் )
Deleteபோனாப்போகுது பரட்டைக்கு மூக்கு வேற ஒடஞ்சிபோச்சி, அவருக்காக இல்லனாலும் தல ஜிம்மிக்காகவாவது என் பங்குக்கு சில டைட்டில்......
ReplyDelete1. மின்னும் மரணம் - ACTION UNLIMITED SPECIAL
2. மின்னும் மரணம் - ULTIMATE ACTION SPECIAL
3. மின்னும் மரணம் - “ LIFE-TIME FESTIVAL SPECIAL “
Delete4. BLOOD STONE HUNTER SPECIAL!
Deleteநீங்க என்ன பேர வேணா வச்சுக்கங்ககககக
ReplyDeleteஎங்களுக்கு புக் வந்தா சரி
LOL :-)
Deleteவிஜயன் சார், மின்னும் மரணம் - "collector special" என் பெயர் வைப்பதே சரியாக இருக்கும்.
ReplyDeleteஇன்னும் L.M.S. அட்டை படத்தை கண்ணில் காட்டாமல் பதிவு போடுறது போங்கு ஆட்டம்.. சிக்கிரம் L.M.S அட்டை படத்தை காண்பிக்கவும்.
வேண்டாம் நண்பர்களே நாம் L M S ன் அட்டை படத்தை ஈரோட்டிலியே காண்போம்.காத்திருந்து ரசிப்பது தான் உண்மையான த்ரில்.அதனால்தான் ஆசிரியரும் அமைதி காக்கிறார் போலும்.
DeleteTiger in mexico gold
ReplyDeleteகார்சன் கடந்த காலம்.................... காலம் தள்ளி போவதால் ஒப்பாரி வைக்க அன்புடன் அழைக்கிறேன்
ReplyDeleteகார்சன்...........
சாரி மை சன்...........
கார்சனின கடந்த காலம் "இயர் என்ட் ஸ்பெஷல் " ஆ வருகிறது நண்பரே!
Deleteபாவம் விட்ருங்க..
Deleteஒரு பழைய பொஸ்தகத்த தூசு தட்டி போடும்போதே...... ம்ம்ம் என்னத்த சொல்ல! :D
Deleteஅலிஸ்டர் அம்பேல் ஸ்பெசல்
ReplyDeleteArizona love -ம் வெளியாவதால் கொஞ்சம் ரொமாண்டிக் தலைப்பு
Deleteவைத்தால்தான் என்ன கெட்டு போச்சு ;).......
அரிஸோனாவின் ஃப்ளூபெர்ரியும்
சிகுகுவாவின் ஸ்ட்ராபெர்ரியும் .......
:) ;)
/அரிஸோனாவின் ஃப்ளூபெர்ரியும்
Deleteசிகுகுவாவின் ஸ்ட்ராபெர்ரியும் .......
:) ;)//
எனக்கென்னமோ இந்த டைட்டில் புடிச்சிருக்கே.!!!!
இதையும் Consider பண்ணுங்க
""பரட்டை தலையும்
பளிங்கு சிலையும்.""
""ஒரு மயிலும்
மூன்று பரட்டைகளும்.""
@ FRIENDS : சென்ற பதிவில் பதில்கள் எதிர்நோக்கி நின்ற வினாக்களுக்கு இதோ சற்றே தாமதமான எனது response :
ReplyDelete------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
//Parani from Bangalore
L,M.S அட்டை படத்தை எப்போது எங்கள் கண்ணில் காட்ட போகிறீர்கள்? L.M.S இலங்கை அயல் நாட்டு சந்தா எவ்வளவு? கடந்த வருடம் விமானம் படம்களுடன் பற்றிய ஒரு பதிவு இருந்தது, அந்த கதையை சிக்கிரம் கண்ணில் காட்டினால் சந்தோஷபடுவேன்.//
1.சனிக்கிழமைக் காலையில் இங்கு பதிவில் அட்டைப்படங்கள் தலை காட்டும் ! 2.இலங்கைக்கு ஏற்கனவே LMS பிரதிகள் அனுப்பும் ஏற்பாடுகள் நடந்து வருவதால் அங்கேயே இதழை வாங்கிக் கொள்வது சுலபமாய் இருக்குமே !
3.நீங்கள் குறிப்பிடும் கதையான "வானமே எங்கள் வீதி - பாகம் 1 (2014)நவம்பரில்...பாகம் 2 - டிசம்பரில்..!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
//மிஸ்டர் மரமண்டை : புத்தகத் திருவிழாவில் கொடுக்கப்படும் 10 % discount யும் கணக்கில் கொண்டு மின்னும் மரணம் Collectors Edition விலையை 1000 என்று நிர்ணயித்திருக்கலாம் //
முன்பதிவு செய்வோர்க்கும் ; புத்தக விழாக்களில் கொள்முதல் செய்வோர்க்கும் இனி வரும் காலங்களில் ஒரு சமமான களம் இருந்திடவேண்டும் என்பது நமது top priority ! So மி.மி. இதழுக்கு மட்டும் தான் என்றில்லாது 2015-ன் சந்தாக்களில் கூட இதற்கான ஏற்பாடுகளை செய்யவிருக்கிறோம் !
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
//KUBERAN : Apart from LMS, what are the other issues in August? I think this is the first month where you have not posted cover pictures & inner pages.//
ஆகஸ்டில் LMS நீங்கலாக வேறு ரெகுலர் இதழ்கள் ஏதும் கிடையாது ! ஆகஸ்டின் இறுதி வாரத்தில் செப்டெம்பர் இதழ்கள் (3) வெளி வந்திடும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
//Karthik Somalinga : மின்னும் மரணம்: ஹார்ட் கவர், தொடர் பற்றிய பின்னணித் தகவல்கள், ஒவ்வொரு அத்தியாயம் துவங்கும் முன்னரும் அதன் ஒரிஜினல் அட்டைப் படம் தாங்கிய பக்கம் - இவற்றுடன் வரும் என நம்புகிறேன்.//
தைரியமாய் நம்பலாம் ...எல்லாமே திட்டமிடலில் உள்ளன !
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
//Kannan Ravi : தொடர்ச்சி இல்லாத தரமான கதைகள் மட்டுமே Graphic. Novel என்ற வார்த்தைக்கு பொருத்தமாக இருக்கும் என்பது சிறியேனின் தாழ்மையான கருத்து. 2015லாவது மேற்கூறியவை போன்ற தரமான கதைகளை தனி வரிசையாக வெளியிடுவீர்களா சார்.?//
அடுத்த இரு ஆண்டுகளுக்காவது லயன் + முத்து தவிர வேறு பிரத்யேகத் தடங்கள் ஏதும் இராது ! 'கிராபிக் நாவல்' என்றாலே அந்தர் பல்டி அடித்து மிரண்டு ஓடுவது இங்குள்ள நண்பர்களில் சிலர் மட்டுமல்லாது - முகவர்களும் கூடத் தான் என்பதே இன்றைய யதார்த்தம் ! So திரும்பவும் கிராபிக் நாவல் வேறொரு லேபிலில் என்பது பயன் நல்கப் போவதில்லை ! நல்ல கதைகள் ; மாறுபட்ட offbeat படைப்புகள் ஏதேனும் கண்ணில் பட்டால் அவை அந்நேரத்தைய லயனில் தலைகாட்டிடும் !
Continued...
This comment has been removed by the author.
Delete// 3.நீங்கள் குறிப்பிடும் கதையான "வானமே எங்கள் வீதி - பாகம் 1 (2014)நவம்பரில்...பாகம் 2 - டிசம்பரில்..! //
Deleteநன்றி விஜயன் சார்!
அற்புதம் ! என்னும் பெரிய எதிர்பார்ப்பை விதைத்துள்ள இந்த கதை ....இந்த வருடமே ஆஹா !
DeleteTex. Tiger காமிக்ஸ்
ReplyDeleteபேசுவோம் நண்பர்களே,!
வேறு களங்களுக்கு வேண்டாம்
I also sorry
//மாறுபட்ட offbeat படைப்புகள் ஏதேனும் கண்ணில் பட்டால் அவை அந்நேரத்தைய லயனில் தலைகாட்டிடும் ! //
ReplyDeleteஅது போதும் சார்
(பிறவி பெருங்கடல் நீந்திவிடுவேன்.)
ஏழைகளுக்கு உதவுதல் நல்ல விஷயமே, ஆனால் அதை நாமே நேரடியாக செய்யலாம். தொண்டு நிறுவனங்கள் மூலம் வேண்டாமே, தனிப்பட்ட முறையில் பல முறைகேடுகளை கண்டவன் என்ற முறையில் சொல்கிறேன்.
ReplyDelete+1
DeleteMMBlockbuster Speical :)
ReplyDelete//தைரியமாய் நம்பலாம் ...எல்லாமே திட்டமிடலில் உள்ளன ! //
ReplyDelete+1
//மாறுபட்ட offbeat படைப்புகள் ஏதேனும் கண்ணில் பட்டால் அவை அந்நேரத்தைய லயனில் தலைகாட்டிடும் ! //
+1
அடுத்த இரு ஆண்டுகளுக்காவது லயன் + முத்து தவிர வேறு பிரத்யேகத் தடங்கள் ஏதும் இராது ! 'கிராபிக் நாவல்' என்றாலே அந்தர் பல்டி அடித்து மிரண்டு ஓடுவது இங்குள்ள நண்பர்களில் சிலர் மட்டுமல்லாது - முகவர்களும் கூடத் தான் என்பதே இன்றைய யதார்த்தம் ! So திரும்பவும் கிராபிக் நாவல் வேறொரு லேபிலில் என்பது பயன் நல்கப் போவதில்லை ! காமிக்ஸ் காதலர்களுக்கு இது நல்ல சேதியே அல்ல.. எடிட்டர் அனுபவம் அவரை பேச வைக்கிறது..
ReplyDeleteஎன்ன செய்ய போகிறோம் நாம் ,,
VETTUKILI VEERAIYAN. sir
Deleteநாம் என்ன செய்ய முடியும்.?
காலம் வரும் என்று காத்திருக்க மட்டுமே முடியும்
டியர் எடிட்டர்ஜீ!!!
ReplyDeleteஎங்களின் நெடுநாள் கனவு விரைவில் நிறைவேறப் போவதை இந்த பதிவு கட்டியம் கூறுகிறது.மின்னும் மரணம் வண்ண மறுபதிப்பு "HARD COVER" உடன் 2015 சென்னை புத்தக விழாவில் விற்பனைக்கு வரும் காட்சி இப்போதே என் மனக்கண்ணில் விரிகிறது.தமிழ் காமிக்ஸை விடுங்கள்.தமிழ் பதிப்பு துறையில் இப்படி ஒரு புத்தகம் இதற்கு முன் வந்ததில்லை என அனைவரையும் நிச்சயம் வியக்கவைக்கும் வகையில் அதன் தயாரிப்பு தரம் இருக்கும் என்பதில் அடியேனுக்கு துளியும் சந்தேகமில்லை.
//"மின்னும் மரணம்" நிச்சயமாய் ஒரு one -off மாத்திரமே ! And that's final !//
அவசரப்படாதீர்கள் ஸார்.நம்மிடமுள்ள மெகா தொடர்கள் என்பது இரண்டு மாத்திரமே.ஒன்று "மின்னும் மரணம்".மற்றொன்று "ரத்த படலம்."இந்த இரண்டு தொடர்களை மட்டுமாவது முழுமையாக வெளியிட்டுவிடுங்கள்."ரத்தக் கோட்டை" வெறும் ஐந்து பாக கதை என்பதால் அதை தனி தனி இதழ்களாக வெளியிட்டாலும் ஸேமமே!
அப்புறம் அடியேனின் மண்டையில் உதித்த பெயர்கள் ;-)
1.AVENGERS SPECIAL.
2.DIE HARD SPECIAL.
3.TERMINATOR SPECIAL.
4.WESTERN GENRE SPECIAL.
5.NATIVE AMERICAN SPECIAL.
6.GOLD HUNDER SPECIAL.
7.CHILLAX SPECIAL.
8.TREASURE HUND SPECIAL.
9.MILLION DOLLAR SPECIAL.
10.ADVENTURE SPECIAL.
ஹிஹி...அம்புட்டுதேங் :-D
.//."ரத்தக் கோட்டை" வெறும் ஐந்து பாக கதை என்பதால் அதை தனி தனி இதழ்களாக வெளியிட்டாலும் ஸேமமே!//
ReplyDeleteபுனித சாத்தான் அவர்களே
இரத்த கோட்டை Collector special.ஆக வந்தால் மட்டுமே சிறப்பாக இருக்கும்.!
தனித்தனியாகத்தான் ஏற்கனவே படித்திருக்கிறோமே.!
அந்த கதையை முழு வண்ணத்தில் ஒரே இதழாக பார்க்கவே விரும்புகிறேன்.,,,,,,,,,,,,,,
Tiger......
ReplyDeletehttps://plus.google.com/u/0/117937753039052441772/posts/ZQ7vsee6mxx?pid=6041520939417936274&oid=117937753039052441772...
Image in the above link is drawn by me around in 1997 or 98...I dont remember the story name....
இரும்புக்கை எத்தன் நண்பரே !
Deleteநல்ல முயற்சி! வரைந்து முடித்தவுடன் குளிர்-ஜுரம் கண்டிருக்குமே? ;)
DeleteTiger......
ReplyDeletehttps://plus.google.com/u/0/117937753039052441772/posts/ZQ7vsee6mxx
Image in the above link is drawn by me around in 1997 or 98...I dont remember the story name....
Replies from the previous post :
ReplyDelete//Mahesh : MULTIPLE QUESTIONS //
உங்கள் கேள்வி-பதில் பாணி பின்னூட்டத்தின் பெரும்பாலான வினாக்களுக்கு ஏற்கனவே ஆங்காங்கே பதில்கள் சொல்லியுள்ளேன். தவிர, ஒரு காமிக்ஸின் விற்பனைக் களமானது வழக்கமான business models களுக்குள் அடைபடா ஒரு unique பிறவி. So அதன் நடைமுறைச் சிக்கல்கள் பலதரப்பட்டது ! Rest assured, we are trying our best within our limitations !
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
//மிஸ்டர் மரமண்டை : கேப்டன் டைகரின் Die-hard fans மற்றும் காமிக்ஸ் collectors என குறைந்தப்பட்சம் ஒரு 70 வாசகர்களாவது 5 பிரதிகள் முன்பதிவு செய்தால் மட்டுமே 500 என்ற இலக்கை இரண்டே மாதத்தில் நாம் எட்ட முடியும் என்பதாகும். அதாவது 350 என்ற எண்ணிக்கையை இவர்கள் சொந்தம் கொண்டாடினால் மீதம் உள்ள 150+ முன்பதிவுகள் ஒவ்வொன்றாக அரங்கேறி தம் இலக்கை எளிதாக அடைந்து விடும்.
ஆர்வமான சிந்தனைக்கு நன்றிகள் ; ஆனால் ஆளுக்கு 5 பிரதிகள் என்பதெல்லாம் ஓவரோ ஓவர் ! கேப்டன் டைகர் கதைகளை ரசிப்பதற்கொரு அபராதம் விதித்தது போலாகி விடாதா இம்முயற்சி ? வேண்டாமே - இது போன்ற பண விரயங்கள் !
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
//திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் : அடுத்த வாரம் சனியன்று புத்தக வெளியீடு என்று கூறி விட்டீர்கள்
ஆனால் எந்த நேரத்தில் ? மாலையிலா ? நீங்கள் எப்பொழுது வருகிறீர்கள் ?
வெள்ளி மாலையே இதழை வெளியிடலாம் தான் ; ஆனால் வெளியூர் வாசகர்களுக்கு காலைப் பொழுதே சௌகர்யம் என்பதால் சனிக்கிழமை காலையில் துவக்குவோமே LMS விற்பனையை ?! அன்று காலையே நான் ஈரோட்டில் இருப்பேன் !
இந்த பதிவு 3 காரணக்களுக்காக பாராட்டுதலுக்கு உரியது ! 1. தாமதமின்றி FLASHING DEATH அதாங்க மின்னும் மரணம் முன்பதிவினை ஈரோடு புத்தக விழாவிலேயே துவக்குவது!2. நேர்மையாகவும் துணிச்சலாகவும் customised imprints மின்னும் மரணம் collectors editionக்கு மட்டுமே என்று முடிவேடுததிற்கு ஒரு சபாஷ்! 3. 2015ல் Helpline special மூலமாக எளியோருக்கு நம் காமிக்ஸ் காதலர்கள் உதவிட ஒரு வாய்ப்பு ஏற்படுதிகொடுதத்திற்கு ஒரு Royal Salute! Helpline special ஒவ்வொரு வருடமும் தொடர வேண்டும் !
ReplyDeleteBoss what out the production cost every year?
DeleteMore Replies from the Previous Post :
ReplyDelete//Kannan Ravi27 : கூடவே சிகுவாகுவா சில்க்கும் வருமா சார்.?(தெரிஞ்சிகிட்டா மேக்கப்போட தூங்கலாம் பாருங்க.)//
Full makeup போட்டுக் கொண்டு விடுங்கள் ; ஒரு பாகத்தின் அட்டையினை அம்மணி அலங்கரிக்க உள்ளார் !
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
//saint satan : கருப்பு&வெள்ளை இதழ்களை அனைவரும் விரும்பும் வண்ணம் முந்தைய க்ளாஸிக் நாயகர்களின் (மாயாவி,ஸ்பைடர்,விங் கமாண்டர் ஜார்ஜ்,மாடஸ்டி உள்ளிட்டோர்) மறுபதிப்புக்கு ஒதுக்கீடு செய்யுங்கள்.குறைந்த விலை இதழ்கள் மூலம் வாசகர்களை அதிக அளவு சென்றடைய க்ளாஸிக் நாயகர்களால் மட்டுமே சாத்தியம்!
ஆண்டின் துவக்கமே மறுபதிப்பின் மொத்தத் தொகுப்போடு (மி.மி.) என்பது போன்றதொரு சூழலில் - மேற்கொண்டு கதைகளிலும் ஆதி காலத்து நாயகர்களின் உலா எனில் 'இரண்டடி முன்னே - நாலடி பின்னே !' என்ற கதையாகிப் போகும் ! தேடுவோம் ...புதிதாய் படைப்புகளை நாடுவோம்...! அந்தத் தேடலின் உற்சாகமே இப்பயணத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் ! ஓய்வாய் நான் அமரும் நாளொன்று புலரும் சமயம் 'புளியோதரையைச் சூடு செய்யும் படலத்தைப்' பற்றி சிந்திப்போமே ?!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
//Kannan Ravi27 :டைகரின் இரத்த கோட்டை கூட குறைந்த விலையில் 5 பாகங்களாக வெளிவந்து ஏகப்பட்ட மாயாஜாலங்களை நிகழ்த்தியதாக ஞாபகம். நாராயண..,நாராயண,,,,,//
கோவிந்தா..கோவிந்தா !!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
//selvam abirami : அரிசோனா லவ் கடுமையான சென்சார் கெடுபிடிக்கு உள்ளாக வேண்டி இருப்பதால் ஆசிரியர் MM-ல் இடம்பெற செய்ய போவதில்லை என்றல்லவா எண்ணியிருந்தேன் ?!//
கவலையே வேண்டாம் ; லார்கோவின் வெனிஸ் படலத்தையே சமாளித்த நமக்கு அரிசோனாப் படலம் ஒரு விஷயமா ?
அது சரி - சின்னதாய் ஒரு கேள்வி guys : கதையின் சகல பாகங்களையும் உங்களில் பெரும்பாலானோர் படித்துப் பரிச்சயமாகி இருக்கும் நிலையில் மி.மி. மீது இன்னமும் மோகம் தொடர்ந்திடுவது ஏனோ ?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
//கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) :நண்பர்களே நமது தங்க தலைவன் கேப்டன் டைகரின் “மின்னும் மரணம்” ஒரே தொகுப்பாக வெளிவர டெக்ஸ் ரசிகர்கள் உதவினது போல், டெக்ஸின் 500+ பக்க அந்த மெகா கதை வெளிவர நாமும் உதவுவோமா................???????????
ஷப்பா..இப்போவே கண்ண கட்டுதே !!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
//மிஸ்டர் மரமண்டை : ஆகஸ்டு முதல் வாரத்திற்குள் மில்லியன் ஹிட்ஸ்/ஐ அடைந்து விடுவோம்..
மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷலில் வரப்போகும் கதையை அறிய மிகவும் ஆவலாக இருக்கிறேன்..!//
LMS - ல் பார்த்திடலாமே !
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
//அது சரி - சின்னதாய் ஒரு கேள்வி guys : கதையின் சகல பாகங்களையும் உங்களில் பெரும்பாலானோர் படித்துப் பரிச்சயமாகி இருக்கும் நிலையில் மி.மி. மீது இன்னமும் மோகம் தொடர்ந்திடுவது ஏனோ ? //
Deleteஇந்த புத்தகமும் , இரத்தபடலமும் ,கார்சனின் கடந்த காலமும் ஒரு காவியம் என்னை பொறுத்தவரை !
சார் வண்ணத்தில் ஒரே தொகுப்பாய் மீண்டும் மீண்டும் எடுத்து வாசிக்க எளிதாய் இருக்கும் ! இனிக்குமே !
//
//மிஸ்டர் மரமண்டை : ஆகஸ்டு முதல் வாரத்திற்குள் மில்லியன் ஹிட்ஸ்/ஐ அடைந்து விடுவோம்..
மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷலில் வரப்போகும் கதையை அறிய மிகவும் ஆவலாக இருக்கிறேன்..!//
LMS - ல் பார்த்திடலாமே ! //
lms படுத்தும் பாடு !
I would have read nearly 10 times all the parts, the binding was torn and in a shabby condition, may be i am not going to read it 10 more times in colour, but I would be delighted to have this book in my collection.
DeleteParani from Bangalore : 'காத்திருப்பதிலும் ஒரு சுகம் உண்டென்ற ஞானோதயமாக இருக்குமோ ?' அந்தப் புதிய பெவிகாலின் பெயர் ?!
Delete//மிஸ்டர் மரமண்டை : ஆகஸ்டு முதல் வாரத்திற்குள் மில்லியன் ஹிட்ஸ்/ஐ அடைந்து விடுவோம்..
Deleteமில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷலில் வரப்போகும் கதையை அறிய மிகவும் ஆவலாக இருக்கிறேன்..!//
LMS - ல் பார்த்திடலாமே !
LMS expectation meter suddenly went UP :)
ஜிகர்தண்டா ஸ்பெசல் !
ReplyDeleteமின்னும் தங்கம் ஸ்பெசல் !
தங்க வேட்டை மலர் !
தங்கம் தேடிய வீரன் !
மரணத்தின் பரிசு தங்கம் !
தங்கம் தேடிய வீணர்கள் !
சிரிக்கும் தங்கம் எரிக்கும் மரணம் !
தகர கோட்டை தங்க வேட்டை !
தனியா தங்க தாகம் !
Deleteதங்கம் கொணர்ந்த மரணம் !
ஸ்டீல், தூங்க போங்க, பேர் சொல்லுறேன்னு கீ-pad-அ அழவச்சுடாதிங்க.
Deleteஇன்னும் ஒரு விஷயம் மின்னும் மரணம் - Collector Special இன்னு பேர முடிவு செஞ்சிட்டாக :-)
:-) :-) :-) :-)
Deleteசிரிப்பை அடக்கவே முடியவில்லை ஸ்டீல் !:-)
Deleteமுகுந்தன் குமார் !
Deleteஇல்லாத தங்கம் ...பொல்லாத டைகர் என எழுதியதுக்கே டப்பிங்
பட டைட்டில் என்று சொன்னீங்க ........
தயவுசெய்து ஸ்டீலின் உற்சாக டைட்டில்ஸ் -களை படியுங்கள் .....
தகர கோட்டை ...தங்க வேட்டை ..ஹா ..ஹா ..ஹா ....
ஜிகர்தண்டா ஸ்பெஷல் படித்த போதே சிரிப்பினால் வயிற்றுவலி
ஆரம்பித்து விட்டது ......
ஸ்டீல் ! காமிக்ஸ் படிக்க ஆரம்பித்து போது இருந்த அதே ஆர்வம்
உற்சாகம் உங்களிடம் இப்போதும் இருப்பதை என் மனம் நன்கு
உணர்கிறது .......
செம ஸ்பிரிட் .............
selvam abirami @ ஸ்டீல் கஷ்டபட்டு புதிய தலைப்பு சொன்ன உங்களுக்கு சிரிப்பு சிரிப்பா வருதா.
Deleteஸ்டீல், போதும் நிறுத்துங்க இல்ல ஈரோடு வந்து நான் அழுதுவிடுவேன் என்பதை புன்சிரிப்புடன் தெரிவித்து கொள்கிறேன் :-)
// காமிக்ஸ் படிக்க ஆரம்பித்து போது இருந்த அதே ஆர்வம் உற்சாகம் உங்களிடம் இப்போதும் இருப்பதை என் மனம் நன்கு உணர்கிறது ..//
Deleteஉண்மை selvam abirami.
நமது வாசக அன்பர்கள் ஒரு பெரிய இதழ் வெளி இட்ட உடன் அடுத்து இது வேண்டும், இந்த கதையும் ஒரே இதழாக வெளி இட வேண்டும் என கேட்பது வழக்கமாக உள்ளது; கேட்பது நமது உரிமை அது தவறு இல்லை. இன்னும் ஒரு வருடம் இது போன்று கோரிக்கைவைக்காமல் மாதம் தவறாமல் நமக்கு தொடர்ந்து 2-3 புத்தகம்கள் வெளிவரட்டும், நமது வாசகர் வட்டம் அதிகமாகட்டும், விற்பனை உயரட்டும்; அதன் பின் இது போன்ற மெகா இதழ்களுக்கு கோரிக்கை வைக்கலாமே? நமது ஆசிரியர் மேல் தேவை இல்லாமல் அதிகமான பிரசர் போட வேண்டாம் என்பது எனது எண்ணம்.
ReplyDeleteSir,
ReplyDeleteHelpline Special should carry a price tag of Rs.500 - 1000
மின்னும் மரணம் - DAZZLING DANGER SPECIAL
ReplyDelete/அது சரி - சின்னதாய் ஒரு கேள்வி guys : கதையின் சகல பாகங்களையும் உங்களில் பெரும்பாலானோர் படித்துப் பரிச்சயமாகி இருக்கும் நிலையில் மி.மி. மீது இன்னமும் மோகம் தொடர்ந்திடுவது ஏனோ ?
ReplyDeleteசார்,.,
அந்த மோகம் தொட்ர்வது ஏன் என்றால் --.:-
"முழு வண்ணம்." (FullஆColour.)சார்.
Yet more replies from previous post :
ReplyDelete//Raghavan : LMS சனிக்கிழமை எங்களுக்கும் கிடைக்குமாறு செய்தால் நன்று !//
கூரியர் புண்ணிய ஆத்மாக்கள் நம்மைக் கரை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது ! வெள்ளிக்கிழமை சிவகாசியிலிருந்து இதழ்கள் புறப்பட்டு விடும் !
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
//ஆதி தாமிரா : சமீபமாக டிஸ்கவரி சென்றிருந்தேன். டெக்ஸ், லார்கோ போன்றோர் ஒரு இதழ்கள் கூட இல்லை. மற்றவர்கள் போனால் போகிறது என்று சில இதழ்களில் இருந்தார்கள். சிப்பாயின் சுவடுகள்தான் கஷ்டம்.. ஒரு பஞ்ச் அப்படியே ஷெல்பில் இருந்தது! பர்சனலாக வருத்தம்தான், ஆனாலும் உண்மை! //
சுடும் உண்மை !! எனினும் கொஞ்சம் கொஞ்சமாகவேனும் முயற்சிப்போம் ; ரசனைகளில் ஒரு புதுச் சன்னல் என்றாவது ஒரு நாள் திறக்காதா போய் விடும் ?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
//Kannan Ravi : காமெடி கதைளுக்கென்று Special வெளியீடுகள் எதுவும் இதுவரை எதுவும் வந்ததில்லை.எனக்கு அது ஒரு பெரிய மனக்குறையாகவே இருக்கிறது.நம்மிடம் இருக்கும் Cartoon நாயகர்கள்
லக்கி லூக்
சிக்பில்
புளுகோட்
சுட்டி லக்கி
ரின் டின் கேன்,
இப்போது இவர்களோடு யகாரியும்.,
இத்தனை பேர்களை வைத்துக்கொண்டு இவர்களை கௌரவிக்க ஒரு Special வெளியீடு இல்லை என்பதை ஜீரணிக்க முடியவில்லை.... !
உங்கள் அஜீரணத்தைப் போக்க வாகாய் சூழல் ஒன்று அமைகிறதா பார்ப்போம்..! அது வரை ஜெலுசிலே ஜெயம் தாராதா ?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
//Ramesh Kumar : 1. ரெகுலர் சந்தாவில் ஆண்டுக்கு 6 கார்ட்டூன் கதைகள் (6 ஜுனியர் லயன். Only லக்கி + சிக்பில்Stories)
2. ரெகுலர் சந்தாவில் வராத 6 கார்ட்டூன் கதைகள் (6 ஜுனியர் லயன். Only ரின்டின் + யகாரி Stories)//
துவக்கத்தில் சின்னதொரு correction : YAKARI தொடரானது கார்டூன் பாணியிலானதொரு தொடரே தவிர, நகைச்சுவையின் சங்கமம் அல்ல ! ஒரு சிறுவனின் கற்பனைகள் ; கொஞ்சமாய் மாயாஜாலம் ; எளிமையான கதைக் களம் என இதுவொரு குட்டீஸ் action கதை எனச் சொல்லலாம் ! So இதனை நகைச்சுவைக் கதைகள் பட்டியலில் இணைப்பது சரியாகாது !
லேபில்கள் எதுவாக இருப்பினும், ஆண்டுக்கு 12 கார்டூன் கதைகள் வெளியிடும் அளவிற்கு நம்மிடம் top notch கதைகள் இருப்பதாய் நான் நினைக்கவில்லை ! சுட்டி லக்கியில் உள்ளதே மொத்தம் 4 ஆல்பம்கள் தான் எனும் போது - லக்கி லூக் & ரின் டின் கேன் உதவியோடே பாக்கி நாட்களை ஒப்பேற்ற வேண்டியாகும் ! சிக் பில் வரிசையில் டிஜிட்டல் கோப்புகள் தயாராக உள்ள கதைகள் மிகச் சொற்பமே என்பதால் அத்தொடரைப் பெரியதொரு திட்டமிடலுக்குப் பயன்படுத்துவது சரி வராது ! And ப்ளூகோட் பட்டாளம் isn't exactly material for a kid's read !
Dear Editor ,
ReplyDelete"TIGER BUSTER SPECIAL " ???
விஜயன் சார், வர வர நீங்க ஒரு தகவலையும் கசிய விடுவதில்லை, ஏன் சார் பெவிகாலுக்கு பதிலாக புதிய பிராண்ட் ஏதும் கிடைத்து விட்டதா? :-) எப்படி இருந்த நீங்க இப்படி ஆகிவிட்டிங்க! தவறாக நினைக்க வேண்டாம்.
ReplyDeleteCarried on from the previous post :
ReplyDelete//parthiban : You can consider Hosur Book festival also.Yesterday visited Book fair, majority of the stalls for Ananda vigatan Publishers and Kids session.We can give try next festival also.//
நெல்லையும், ஹோசுரும் ஒரே தேதிகள் என்பதால் சிக்கல் ! இரண்டு இடங்களிலும் ஸ்டாலில் அமரும் அளவுக்கு நம்மிடம் பணியாளர்கள் கிடையாதே !
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
//Periyar : Arizona Love - பாகமும் இந்த Collectors Edition-ல் இருக்கும் என்று நம்புகிறேன். அப்படியெனில், தயவுசெய்து censor அல்லது கறுப்புக் கோடு/பெயிண்ட் அடிக்கும் உந்துதலைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன் ;) :)//
கதைகள், களங்கள், காலங்கள் மாறினும் நம் அளவுகோல்களில் மாற்றம் இராதென்பதால் இப்போதே டைலரிடம் ஆர்டர் கொடுத்தாகி விட்டது ; மேற்கத்திய பாணிகளில் உடுப்புகள் தயாரிக்க !! :-) :-)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
//Erode Vijay : ஹா ஹா ஹா! அப்படிக் கேளுங்க ரவி. அதுவும் தல போன்ற மாவீரனை வாத்துடன் ஒப்பிடுவது கொஞ்சமும் ரசிக்கலை. முட்டையிடும் ஃபினிக்ஸ், முட்டையிடும் நெருப்புக் கோழி இப்படி ஏதாவதுன்னா கூட ஓகே தான். 'முட்டையிடும் இரவுக் கழுகு'னு கூடச் சொல்லலாம்தானே? கிர்ர்ர்...//
அது சரி...வாத்து வீரமில்லா பிறவி என்று பூனையாருக்கு சேதி வந்தது எவ்விதமோ ? சீண்டிப் பார்த்தால் விரட்டோ விரட்டென்று விரட்டும் வாத்துக்களை பார்த்ததில்லையா ?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
//Paranitharan K : ஆண்டுக்கு graphic novels இரண்டு இதழ்கள் தான் எனும் போது இதை சந்தாவில் இணைப்பது தவறு இல்லை என்பது என் கருத்து .//
புல்லரிக்கச் செய்கிறீர்கள் பரணி !!! :-) :-) :-)
Dear Vijayan,
ReplyDeleteவெளிநாட்டு வாசகர்களுக்கு (US, Europe) LMS எப்போது கிடைக்கும். இப்போதே அனுப்ப முடிந்தால், அனுப்பி விடுங்களேன்.
+1
DeleteGreat suggestion, it will take minimum 10 days [ maximum infinity :) ] to reach us.
// அது சரி - சின்னதாய் ஒரு கேள்வி guys : கதையின் சகல பாகங்களையும் உங்களில் பெரும்பாலானோர் படித்துப் பரிச்சயமாகி இருக்கும் நிலையில் மி.மி. மீது இன்னமும் மோகம் தொடர்ந்திடுவது ஏனோ ? //
ReplyDeleteI have all the parts of Minum Maranum and i read it yearly once - every time it hooks you up similar to Ponniyin Selvan. Even though i have all the parts my motivation is to keep the book as a collectors edition.
ஈரோடுல நம்ப கடை பக்கம் கூட்டம் நிறைய வரணும் விற்பனை அதிகமாகனும், அதனால இந்த முறை "போஸ்டர் டிசைன்" பண்ண வேண்டாம்னு முடிவு எடுத்து இருக்கேன் :-)
ReplyDelete///////// ////////////// ///////////////// //////////////////// /////////////
ReplyDeleteமின்னும் மரணம் முன் பதிவுக்கும் நமது இணைய தளத்திலேயே
ஆப்ஷன் தரலாமே.
///////// ////////////// ////////////// //////////////////// ////////////////
மின்னும் மரணம் - "collector special" மிகவும் அருமை... பொருத்தமான தலைப்பும்கூட.
ReplyDeleteஎனக்குப் பிடித்த தலைப்பு
Delete/// LION COLLECTORS SPECIAL - 2 /////
நண்பர்களுக்கு ஒரு நினைவூட்ட
X111 COLLECTORS SPECIAL என்ற பெயருடன் பிரம்மாண்டமாக வெளிவந்த்தை எல்லோரும் அறிவர்.
எனவே /// LION COLLECTORS SPECIAL - 2 /////
என்று பெயர் வைப்பதால்
நல்ல விளம்பரமாக அமையும்.
(அப்ப /// LION COLLECTORS SPECIAL - 3 ??? ///// ) 2016?
வாசகர் சா(வா)ய்ஸ்.....
மின்னும் மரணம். பிறகு 'இரத்தக்கோட்டை' ஜந்து and 'mister blueberry' ஜந்து பாக தொடர்களையும் complete collection'க வந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்
ReplyDeleteGolden tiger special- Gts
ReplyDeletetiger golden special- tgs
Tiger marathon spl
ReplyDeletemega golden spl
golden glittering spl
நண்பர்களே வணக்கம்.
ReplyDeleteடெக்ஸ் மன்ற பிரச்சார பீரங்கிகளான. நாம் டைகர் கதைக்கு பேர் வைக்கிறோம் பேர்வழி என்று பேயோட்டிவிட்டோம்.கலாய்ச்சி கலாய்ச்சி (டைகர்.)கண்ணுல தண்ணி வரவெச்சிட்டோம்.
டைகர்.. ,ஜிம்மிய விடுங்க.,
"சில்க்." அந்த புள்ள என்னங்க பண்ணுச்சு அ.,.,அது பச்ச மண்ணுங்க..!
நாளைக்கு அந்த புள்ள என் கனவுல வந்து."கூடவே சுத்துறயே செவ்வாழ. நீயாவது சொல்ல கூடாதா."ன்னு கேட்டா நான் .....நான்...,என்ன பேச முடியும்.?
கே.பாக்யராஜ் படங்கள் நிறை
ய பார்த்திருப்போம். அவர் அவரையே கிண்டல் செய்து சில காட்சிகள் கட்டாயம் வைத்திருப்பார். அதன் மூலம் அவரது புகழ் அதிகரித்ததே தவிர குறையவில்லை.
அதுமட்டுமன்றி Opposite teamஐ பேட் செய்ய விட்டால்தானே Chase செய்ய வேண்டிய Score தெரியும்.
எனவே என்னுடைய அடுத்த பதிவை காமெடியா மட்டுமே எடுத்துகொள்ளும்படி டெக்ஸ் மன்றாத்தாரை கேட்டுகொள்கிறேன்.
ஒரு வேளை கார்சனின் கடந்த காலத்திற்க்கும் புது பெயர் வைக்க சொல்லி எடிட்டர் கேட்கிறார் என்று வைத்து கொள்வோம்.(கேட்கமாட்டார்.ஒரு கற்பனைக்கு.)
ReplyDeleteஎன்னுடைய தேர்வுகள்
1.ஆட்டுதாடி தாத்தாவின் ஆரம்ப காலம்.
2.பல்செட் பாட்டனாரின் பழைய காலம்.
3.பென்சன் வாங்கும் பெருசுகள் தோன்றும் "நாங்கல்லாம் அப்பவே அப்புடி."
(போர்வாள்கள் இதை பயண்படுத்தி கொள்ளும்படியும் பீரங்கிகள் ஃபிரீயாக விடும்படியும் கேட்டுகொள்ளபடுகிறார்கள்.)
இந்த பதிவால் அறியப்படும் நீதி
"ரெண்டு கையும் தட்டினாத்தான் சத்தம் வரும்."
2.