Powered By Blogger

Sunday, July 13, 2014

வரவு எட்டணா..செலவு பத்தணா !

நண்பர்களே,

வணக்கம். கடந்த மூன்று / நான்கு பதிவுகளாய் LMS முன்னோட்டங்கள் ; ஜாலியான சேதிகள் என்று பயணித்த நமக்கு இந்தப் பதிவு கொஞ்சமாய் sober ஆக இருக்கப் போகிறது ! ''ஆஹா..குண்டைத் தூக்கிப் போடுறானே...LMS -ல் ஏதேனும் தாமதமோ ; சிக்கலோ ?' என்ற பயங்களுக்கு அவசியமில்லை ; சொல்லப் போனால் அடுத்த ஓரிரண்டு நாட்களுக்குள் LMS - புக் # 1 -ன் (இத்தாலிய குண்டூஸ் !) முதல் பிரதி என் கையில் இருந்திடும் !! சரியான நேரத்தில் தயாராகிட வேண்டுமே ; தாமதங்கள் நேர இடம் தந்திடக் கூடாதே என்று கிட்டத்தட்ட 3 மாதங்களாய் மண்டையின் ஒரு ஓரத்தில் விரவிக் கிடந்த படபடப்பு நேற்றோடு கரைந்து போய் விட்டது !! இதில் பெரிய கொடுமை என்னவென்றால்  - தினமும் விடிந்து முழித்ததுமே எதையாவது எழுதிக் கொண்டோ ; திருத்தம் செய்து கொண்டோ, சமீப நாட்களைச் செலவழித்துப் பழகி விட்டு - தற்போது கிட்டியுள்ள சின்னதொரு ஓய்வை எவ்விதம் handle செய்வதென்று தெரியாமல் சுவரைப் பிறாண்டிக் கொண்டிருக்கிறேன்  ! So LMS -ன் தயாரிப்புப் பக்கமாய் சிக்கல்கள் ஏதும் கிடையாது ! இடியாப்பங்கள் துவங்குவதே விற்பனை முகத்தினில் தான்..............

'சூப்பர் 6 சந்தாவினுள்ளேயே LMS இதழும் சேர்த்தி !' என்ற திட்டமிடல் அத்தனை சுகப்படவில்லை என்பதே இதுவரையிலான bottomline ! அது மட்டுமன்றி ஆண்டின் நடுவாக்கில் மீண்டுமொரு set of books-ன் அறிவிப்பு ;  மீண்டுமொரு சந்தா என்பதை நாம் நிஜமாய் மறுபரிசீலனை செய்தாக வேண்டும் போல் தான் தெரிகிறது ! சென்றாண்டின் நடுவினில் மறுபதிப்புகளின் பொருட்டு நாம் கோரி இருந்தது ரூ.540 மாத்திரமே என்பதாலும் ; அவை அனைத்துமே பரிச்சயமான கதைகள் என்பதாலும் அங்கே பெரிதாய் சிக்கல்கள் தோன்றவில்லை போலும் ! ஆனால் இம்முறை சூப்பர் 6-ன் சந்தாத் தொகை (ரூ.1420) சற்றே ஜாஸ்தி என்பதாலோ ; அதனில் இடம்பிடிக்கும் கதைகளின் பெரும்பான்மை (LMS & டெக்ஸ் நீங்கலாக) கிராபிக் நாவல் பாணியிலானவை என்பதாலோ - சூப்பர் 6  has just not taken off ! இப்போது வரை சூப்பர் 6 -க்குக் கிட்டியுள்ள சந்தாக்களின் எண்ணிக்கை தட்டுத் தடுமாறி 310-ஐத் தான் தொட்டுள்ளது ! நமது முகவர்களின் ஒரு பகுதியினர் வழக்கமான லயன் - முத்து காமிக்ஸ் இதழ்களை மட்டுமே வாங்குகின்றனர் என்பதாலும் ; புதிதாய் நாம் சேகரித்துள்ள ஏஜெண்ட்களுக்கும் விற்பனை நிதானம் கிட்டும் வரை ஒரே நேரத்தில் எல்லா இதழ்களையும் தலையில் கட்டி விடுவது சரிப்படாது என்பதாலும் - சூப்பர் 6 இதழ்கள் நமது கிட்டங்கியை நிரம்பவே நேசிக்கப் போவதாய்த் தோன்றுகிறது ! 'சரி, வழக்கமான ரூ.60 ; ரூ.35 இதழ்கள் கொஞ்சமாய் ஓய்வெடுத்தால் ஒன்றும் மோசமில்லை' என்று மனதைத் தேற்றிக் கொள்ளலாம் தான் ; ஆனால் ரூ.500 விலையிலான LMS 300+ பிரதிகள் சந்தாவின் பொருட்டு விற்பனையான பின்னே ; ஈரோடு விழாவினில் இன்னும் கொஞ்சம் விற்றான பின்னே - செமையாய் கையில் தங்கப் போவதை நினைத்தால் இப்போதே வியர்க்கிறது! 

இதில் புதிதாய் இன்னுமொரு மண்டை நோவும் எழுந்துள்ளது ; கூரியர் கட்டண மாற்றத்தால் ! முழு இதழும் தயாராகி விட்டபடியால்  LMS -ன் 2 புக்குகளையும் இணைத்து எடை பார்த்து விட்டு - அவற்றை Proffessional கூரியர் மார்க்கமாய் அனுப்பக் கட்டணங்கள் என்னவென்று மீண்டும் ஒரு முறை விசாரித்தோம்! தமிழகத்தினுள் சின்னதொரு ஏற்றமும், வெளி மாநிலங்களுக்கு தலைசுற்றச் செய்யும் மாற்றமும் உள்ளதாகச் சொல்லியுள்ளனர் ! சமீபமாய்க் கூட்டியுள்ள கட்டணங்களின்படி இந்த ஒற்றை மாதப் பார்சலை வெளி மாகாணம் அனுப்ப மட்டுமே அவர்கள் கேட்பது  ரூ.240 !! (4 மாதங்களுக்கு முன்பாக LMS இதழின் ஆரம்ப நாட்களின் போது  விசாரித்த சமயம் இது ரூ.130 அக இருந்தது !! ) So சூப்பர் 6-ன் கட்டணங்களில் ஒட்டு மொத்தமாய் திரும்பவும் ஒரு மாற்றம் செய்வதற்குப் பதிலாய் - Proff கூரியரில் அனுப்பக் கோரியுள்ள  வெளி மாநிலங்களில் வசிக்கும் நண்பர்கள் வசம் மட்டும் கூடுதலாய் ரூ.110 வசூலிக்க வேண்டிய சங்கடமான சூழல் உருவாகியுள்ளது ! Hope you understand guys ! 

சங்கடங்களின் தொடர்ச்சி என்னவெனில் - இத்தனை குறைச்சலான முன்பதிவெனும் போது LMS-ன் costing ; திட்டமிடல்கள் என சகலமும் தலைகீழாய் புரண்டு போய் விடுகின்றன  ! கிட்டத்தட்ட 3 மாதங்களின் வெளியீட்டு முதலீட்டை இந்த ஒரு இதழிலேயே முடக்கிட நேர்வதால் - இது வரை தவழ்ந்தேனும் ஓரளவிற்குப் பெரியதொரு பிடுங்கலின்றிச் சென்று கொண்டிருந்த நமது கையிருப்பு  - திடீரென புயல் எச்சரிக்கையின் முதல் சின்னத்தை ஏற்றியுள்ளது ! ஆன்லைன் விற்பனைகளில் ; இடைப்படும் சிறு நகரப் புத்தக விழாக்களில் - என சன்னம் சன்னமாய் பின்னாட்களது விற்பனை வழியாக LMS -ன் முதலீடு திரும்பக் கிடைத்திட்டாலும் கூட - ஒரு மொத்தமாய்ப் பணத்தை பல லட்சங்களில் முடக்கி விட்டு, பின்னர்  அது ஆயிரமும், ரெண்டாயிரமுமாய்த் திரும்ப வரும் போது உருப்படியாய் எதற்கும் பயனாவது நடைமுறை சாத்தியமாகாது ! So வேறு வழியின்றி தற்காலிக ஏற்பாடாய் - முன்பதிவுகளுக்கு நீங்கலாய் - இனி வரும் ஆர்டர்களுக்கோ ; நேரடி விற்பனைக்கோ - இதழின் விலையினை 10% அதிகப்படுத்துவது என்று தீர்மானித்துள்ளோம் ! ஆகையால் LMS-ன் இத்தாலிய புக் # 1-ன் விலையாக ரூ.400 + புக் # 2 -ன் விலையாக ரூ.150 - ஆக மொத்த விலை ரூ.550 என்று நிர்ணயம் செய்துள்ளோம் ! (இவை பிரித்து தனித்தனியே விற்பனை செய்யப்படமாட்டாது !) Of course - ஏற்கனவே சூப்பர் 6 சந்தாக்கள் கட்டியுள்ள நண்பர்களுக்கு இந்த விலையேற்றம் பாதிப்பினைத் தராது). 

(கதைகளில்) மாற்றங்கள் ஏதும் செய்யாமல் முதன்முறையாக ஒரு மெகா இதழைத் தயாரித்த திருப்தி எனக்குள் லேசாய் ஓடிக் கொண்டிருந்த வேளைதனில் இந்த திருஷ்டிப் பரிகாரம் பிரச்சனமாகிறது ! சுத்தமாய் வேறு மார்க்கமே புலப்படவில்லை என்பதால் மட்டுமே இந்த விலையேற்றம் ; our sincere apologies guys ! மெல்லவும் முடியாது, விழுங்கவும் வழி இல்லாது  இந்தப் பதிவினைப் போட சங்கடப்பட்டுக் கொண்டே இந்த வாரம் முழுவதுமாய் நான் போட்ட மொக்கை எனக்கு மட்டுமே தெரியும் ! Awfully embarrassing to say the least....!

LMS மட்டுமே போதும் என முன்பதிவு செய்ய விரும்பிடும் நண்பர்கள் இனி கீழ்க்கண்டவாறு ஆர்டர் செய்திடலாம் :
  • தமிழகத்துக்குள்ளே : ரூ.625 (ST கூரியர்)   ; ரூ.665 (Proff கூரியர்)
  • பதிவுத் தபாலில்      :  ரூ.640
  • தமிழகத்துக்கு வெளியே : ரூ. 665 (ST கூரியர்) ; ரூ.815 (Proff கூரியர்)
சரி, விலை கூடுதலானதொரு இதழின் தற்காலிகத் தேக்க நிலையாக மட்டுமே இதைப் பார்ப்பது சரி தானா ? அல்லது இதனில் இன்னமும் கூடுதலாய் சிந்தனையைச் செலவிட முகாந்திரம் உள்ளதா ? என்ற ஒரு வித குழப்பம் என்னுள் உள்ளது ! How much is too much ? சின்னதொரு ஆர்வமான வட்டத்தைத் தாண்டி ; வாங்கும் திறன் படைத்த காமிக்ஸ் காதலர்களின் எண்ணிக்கை இன்னமும் கூடிட அவகாசம் தேவை தானோ ? என்ற எண்ணங்களை எல்லாம் தவிர்க்க இயலவில்லை ! சமீபமாய் நான் சந்தித்ததொரு பதிப்பக நிர்வாகியும், புத்தக மொத்த விநியோகம் செய்திடும் நிறுவனத்தின் தலைவரும், ஒருமித்துச் சொன்னதொரு சங்கதி தான் என் தலைக்குள் இந்நேரம் ஒலிக்கிறது ! 'குறைவான விலைகளைத் தாண்டிய முயற்சிகளில் customized imprints மட்டுமே வரும் நாட்களில் தாக்குப் பிடிக்க முடியும் ! ' என்று அவர்கள் அபிப்ராயப்பட்டனர் ! "500 பிரதிகள் தான் விற்க முடியுமா ? சரி...அந்த 500 மட்டுமே தயாரிக்க ஆகும் செலவும் இது தான் ; அதற்கான விலையும் இது தான்" என்று limited editions ஆக வெளியிடும் முயற்சி அது ! சர்வதேசப் பதிப்பக ஜாம்பவான்களில் பலர் தங்களது இந்தியக் கிளைகளை இவ்விதமே செயல்படச் சொல்லிப் பணிக்கிறார்களாம் !  வரும் நாட்களில் ஸ்பெஷல் இதழ்கள் எனும் போது நாமும் கூட  இது போன்ற பாணியையே கடைபிடிக்க வேண்டுமோ ? என்ற சிந்தனை எனக்குள் துளிர் விடுகின்றது ! 

எல்லாவற்றையும் விடப் பெரியதொரு கேள்விக்குறி எழுவது ஜனவரி 2015-ல் என நாம் மனதில் திட்டமிட்டு வைத்துள்ள "மின்னும் மரணம் " முழு collection பற்றியே ! 9 கதைகள் ; வெவ்வேறு நாயகர்கள் ; அத்தனையும் புதுக் கதைகள் என்ற LMS -க்கே தள்ளாட்டமெனில்   - மறுபதிப்பு - ஒரே கதை ; ஒரே நாயகர் ; இன்னமும் கூடுதல் விலை (ரூ.650 ?) எனும் போது மின்னும் மரணம் சாதிக்குமா ? சோதிக்குமா ? சொல்லத் தெரியவில்லையே ! ஒன்று மட்டும் நிச்சயம் - ஆண்டின் துவக்கத்தின் போதே திரும்பவும் ஒரு மெகா முதலீடு ; சுமார் விற்பனை எனில் சொந்தக் காசில் சூன்யம் வைத்துக் கொண்டதே பலனாக இருக்கும் ! We seriously need a re-think folks ! முன்பதிவுக்கு இப்போதே வாய்ப்புகளைத் துவக்கி, டிசம்பருக்கு முன்பாக  குறைந்த பட்சம் 800-900 முன்பதிவுகள் கிட்டிடும் பட்சத்தில் - ரூ.600 / ரூ.650 விலையினில் மின்னும் மரணம் சாத்தியமாகிடும் ! எதிர்பார்க்கும் முன்பதிவுகள் கிட்டிடா சூழலில் நம் முன்னே இருக்கப் போவதோ - இரண்டே options ! 

OPTION # ! :  'சிவனே' என்று 2015-ல் மாதம் ஒரு பாகம் (மறுபதிப்பு) ! 11 மாதங்களில் - 11 இதழ்களில் "மின்னும் மரணம்" முழுவதுமாய் வண்ணத்தில் கிட்டி இருக்கும் என்ற திருப்தி ! 

OPTION # 2 : Customized imprints - மொத்தமே 1000 பிரதிகள் தானா ? அதன் விலை இது தான் ! என்று நான்கு இலக்கத்தில் (!!)  ஒரு விலை நிர்ணயம் செய்தாக வேண்டும்  ! எது தேவலை ? ; எது தேவை ? என்ற தீர்மானம் உங்களிடமே folks ! 

Sorry to sound depressing guys...but this is how it is ! சங்கடங்களை எங்களளவில் சமாளிக்க சாத்தியமாகும் வரை உங்களை வீணாய் தொந்தரவு செய்பவனல்ல நான்...! But கொஞ்சமாய் சுமைகளை இறக்கிடாவிடின் ஒட்டகத்தின் முதுகெலும்பு முறிந்திடும் நிலை எனும் போதும் அமைதி காப்பது விவேகம் ஆகாது அல்லவா ? 

சரி...பஞ்சப் பாட்டு போதும், let's move on to brighter things ! விற்பனை எவ்விதம் இருப்பினும், LMS -ன் தயாரிப்புத் தரங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளையும் மிஞ்சி இருக்கும் என்பதை மட்டும் உறுதியாய் சொல்ல முடிகிறது ! பெல்ஜிய சாக்லேட் இதழில் "தங்கத் தலைவர்" டைகரின் கதையினில் மட்டுமே வேலைகள் நிறைவுற வேண்டியுள்ளது  ! தொடரும் வாரத்தில் அதுவும் முடிந்திடும் எனும் போது, ஒட்டு மொத்தமாய்ப் பிரிண்ட் செய்து, பைண்ட் செய்யும் வேலைகள் மட்டுமே மீதமிருக்கும் . So இம்மாத இறுதிக்கு வெகு முன்பாகவே மொத்தமாய் வேலைகளை முடித்து விட்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதியை எதிர்நோக்கிக் காத்திருக்க வேண்டியதே வேலை ! இதோ டைகர் ரசிகர்களின் பொருட்டு - மௌனத்தையும் உரக்கப் பேசச் செய்யும் வான்சின் தூரிகைக்கு சாட்சியாக மார்ஷல் டைகரின் பக்கம் # 1 ! 

இன்னொரு  'பளிச் ' சேதிக்குமொரு வாய்ப்பு உங்கள் கைகளில் இப்போது உள்ளது ! 2014-ன் அட்டவணையில் -  "கார்சனின் கடந்த காலம் "  black & white -ல் ரூ.60 விலையில் மறுபதிப்பாக வெளியாவதாகவும் ; இன்னுமொரு (வண்ண) இதழில் சிக் பில்லின் - "நிழல் எது ? நிஜம் எது ?" மறுபதிப்பு ரூ.60 விலையில் வரக் காத்திருப்பதாகவும் சொல்லி இருந்தோமல்லவா ?  'சிக் பில்லின் சமீப வெளியீடான "நி.எ ? நி.எ ?" இத்தனை சீக்கிரமாய் மறுபதிப்புப் பட்டியலில் வேண்டாமே ! 'என ஏகமாய் அபிப்ராயங்கள் எழுந்ததையும் ; "கார்சனின் கடந்த காலம் - வண்ணத்தில் ப்ளீஸ் ! " என்ற கோரிக்கை பரவலாய் எழுந்ததையும் நான் மறக்கவில்லை ! இம்மாதம் வண்ணத்தில் 'தக தக' வென மின்னும் டெக்சைப் பார்த்தான பின்னே, எனக்கே லேசாய் சபலம் தட்டுகிறது "கா.க.கா."வை வண்ணத்திலேயே ரூ.120 விலையில் போட்டால் என்னவென்று ?! ஒ.கே. எனில் பட்டியலில் உள்ள சிக் பில் மறுபதிப்பைக் காலி செய்து விட்டு அந்த இடத்தினில் டெக்சின் இந்த classic அதிரடியை வண்ணத்தில் மிளிர அனுமதிக்கலாம் ! What say folks ? 

நமது ஆன்லைன் விற்பனைத் தளத்திலும் LMS -க்கான முன்பதிவு ஏற்பாடுகள் துவங்கப்பட்டு உள்ளன !  http://lioncomics.worldmart.in/index.php?categoryID=36

Catch you again soon folks ! Bye for now ! 

512 comments:

  1. Replies
    1. நான் இரண்டாவது !ஹய்யா !

      Delete
    2. yesssssssssssssssss sir! we neeeeeeeeeeeeed karsonin kadantha kaalam immediately! thankssssssss for considering! thanks a lot sir!

      Delete
  2. தோ வந்துட்டேன் !

    ReplyDelete
  3. பெருந்தலை...கார்சனின் கடந்தகாலம் வண்ணத்தில் அதுவும் 120 ரூபாயில் பளா பளா ..

    ReplyDelete
  4. புதிய பதிவுக்கு காத்திருந்து... ஒரு வழியாக...

    ReplyDelete
  5. விஜயன் சார், எனக்கு எப்போதும் போல் புத்தகம்களை S.T கொரியர்ல் அனுப்ப வேண்டுகிறேன். எனக்கு தயவு செய்து Professional கொரியர்ல் அனுப்ப வேண்டோம். இதற்கு ஆகும் கூடுதல் கட்டணத்தை இந்த வாரம் அனுப்புகிறேன். என்னை பொறுத்தவரை S.T கொரியர் அனுப்பும் செலவு குறைவு மற்றும் சேவை நன்றாக உள்ளது.

    நமது புத்தகம் விற்பனை பற்றி கவலை படவேண்டாம் அனைத்தும் விரைவில் விற்று தீர்ந்துவிடும்.

    ReplyDelete
  6. மின்னும் மரணம் குறைந்தது 650 ரூபாயாம் சொக்கா பூரா பணமும் எனக்கே கிடைக்க அருள் புரிய மாட்டியா

    ReplyDelete
  7. நிழல் எது நிஜம் எது வை தூக்கி தூரபோட்டுவிட்டு கலர் கார்சனை கண்ணில் காட்டுங்க தலைவா

    ReplyDelete
  8. மின்னும் மரணம் full digest has been expected for more than one year ... So don't postpone it sir ... You can split it into two (5+6) issues and publish one for chennai book fair and another for erode book fair ... கார்சனின் கடந்தகாலம் can replace chick bill if it can be published in colour ....

    ReplyDelete
    Replies
    1. Mks Ramm : //You can split it into two (5+6) issues and publish one for chennai book fair and another for erode book fair ..//

      சிந்தனைக்கு தீனி !

      Delete
    2. Suggestions:

      மின்னும் மரணம் தை, இரண்டு அல்லது மூன்று பாகங்களாக பிரித்து, ஒவ்வொரு பாகத்தோடும், இரண்டு அல்லது மூன்று புதிய கதைகளை இணைத்து வெளியிட்டு முயற்சி செய்யலாமே

      அல்லது, Tiger + Tex combination ல் மூன்று தொகுப்பாக வெளியிடலாமே`

      மின்னும் மரணம் ஒரே புத்தகமாக வருவதை தான் நான் விரும்புகின்றேன் ஆனால் மேலே கூறிய suggestions விற்பனை நிமித்தமாகவே

      Delete
    3. Dear Vijayan Sir,

      You can split Minnum Marnam into Two parts as suggested by Mks Ramm!

      Regards,
      Boopathi L

      Delete
  9. கடுகளவும் கவலைப்பட தேவையில்லை..காமிக்ஸ் காதலர்கள் கைவிட்டுவிட மாட்டார்கள்..என்ன தோழர்களே நான் சொல்வது சரிதானே ...

    ReplyDelete
    Replies
    1. \\கடுகளவும் கவலைப்பட தேவையில்லை..காமிக்ஸ் காதலர்கள் கைவிட்டுவிட மாட்டார்கள்\\
      +1

      Delete
    2. மிகவும் சரி.

      Delete
  10. //சங்கடங்களின் தொடர்ச்சி என்னவெனில் - இத்தனை குறைச்சலான முன்பதிவெனும் போது LMS-ன் costing ; திட்டமிடல்கள் என சகலமும் தலைகீழாய் புரண்டு போய் விடுகின்றன ! கிட்டத்தட்ட 3 மாதங்களின் வெளியீட்டு முதலீட்டை இந்த ஒரு இதழிலேயே முடக்கிட நேர்வதால் - இது வரை தவழ்ந்தேனும் ஓரளவிற்குப் பெரியதொரு பிடுங்கலின்றிச் சென்று கொண்டிருந்த நமது கையிருப்பு - திடீரென புயல் எச்சரிக்கையின் முதல் சின்னத்தை ஏற்றியுள்ளது ! ஆன்லைன் விற்பனைகளில் ; இடைப்படும் சிறு நகரப் புத்தக விழாக்களில் - என சன்னம் சன்னமாய் பின்னாட்களது விற்பனை வழியாக LMS -ன் முதலீடு திரும்பக் கிடைத்திட்டாலும் கூட - ஒரு மொத்தமாய்ப் பணத்தை பல லட்சங்களில் முடக்கி விட்டு, பின்னர் அது ஆயிரமும், ரெண்டாயிரமுமாய்த் திரும்ப வரும் போது உருப்படியாய் எதற்கும் பயனாவது நடைமுறை சாத்தியமாகாது ! So வேறு வழியின்றி தற்காலிக ஏற்பாடாய் - முன்பதிவுகளுக்கு நீங்கலாய் - இனி வரும் ஆர்டர்களுக்கோ ; நேரடி விற்பனைக்கோ - இதழின் விலையினை 10% அதிகப்படுத்துவது என்று தீர்மானித்துள்ளோம் ! ஆகையால் LMS-ன் இத்தாலிய புக் # 1-ன் விலையாக ரூ.400 + புக் # 2 -ன் விலையாக ரூ.150 - ஆக மொத்த விலை ரூ.550 என்று நிர்ணயம் செய்துள்ளோம் ! (இவை பிரித்து தனித்தனியே விற்பனை செய்யப்படமாட்டாது !) Of course - ஏற்கனவே சூப்பர் 6 சந்தாக்கள் கட்டியுள்ள நண்பர்களுக்கு இந்த விலையேற்றம் பாதிப்பினைத் தராது). //

    இதனை அப்படியே இதழின் ஒரு பக்கத்தில் பதிவிடுங்கள் !
    வந்த பிறகு வாங்கி கொள்ளலாம் என சாவகாசமாய் இருக்கும் நண்பர்களை உத்வேக படுத்த உதவலாம் !

    அப்படியும் ஒத்து வரவில்லையா கீழே உங்களுக்கு அந்த பதிப்பகத்தார் சொன்னதே சரியான ஆலோசனையாக இருக்கும் !


    //சமீபமாய் நான் சந்தித்ததொரு பதிப்பக நிர்வாகியும், புத்தக மொத்த விநியோகம் செய்திடும் நிறுவனத்தின் தலைவரும், ஒருமித்துச் சொன்னதொரு சங்கதி தான் என் தலைக்குள் இந்நேரம் ஒலிக்கிறது ! 'குறைவான விலைகளைத் தாண்டிய முயற்சிகளில் customized imprints மட்டுமே வரும் நாட்களில் தாக்குப் பிடிக்க முடியும் ! ' என்று அவர்கள் அபிப்ராயப்பட்டனர் ! "500 பிரதிகள் தான் விற்க முடியுமா ? சரி...அந்த 500 மட்டுமே தயாரிக்க ஆகும் செலவும் இது தான் ; அதற்கான விலையும் இது தான்" என்று limited editions ஆக வெளியிடும் முயற்சி அது ! சர்வதேசப் பதிப்பக ஜாம்பவான்களில் பலர் தங்களது இந்தியக் கிளைகளை இவ்விதமே செயல்படச் சொல்லிப் பணிக்கிறார்களாம் ! வரும் நாட்களில் ஸ்பெஷல் இதழ்கள் எனும் போது நாமும் கூட இது போன்ற பாணியையே கடைபிடிக்க வேண்டுமோ ? என்ற சிந்தனை எனக்குள் துளிர் விடுகின்றது ! //

    //OPTION # 2 : Customized imprints - மொத்தமே 1000 பிரதிகள் தானா ? அதன் விலை இது தான் ! என்று நான்கு இலக்கத்தில் (!!) ஒரு விலை நிர்ணயம் செய்தாக வேண்டும் ! எது தேவலை ? ; எது தேவை ? என்ற தீர்மானம் உங்களிடமே folks ! //

    turn ஓவர் குறைவென்றால் இதுவே சரியான முயற்சி ! விரும்பி படிப்பவர்களை சென்றடயட்டுமே ! ரெகுலராக வாங்குபவர்கள் நிச்சயம் வாங்கி விடுவார்கள் ! இதுவே சரியான முயற்சி !





    ReplyDelete
  11. சார் !சுமையை பகிர்ந்து கொள்ள நான் ரெடி !
    பொருளாதார ரீதியாக கஷ்டம் ஏதும்
    இல்லாதவர்கள் ஒருங்கிணைந்து
    செயல் படலாம் !
    நல்ல யோசனை எவரேனும் முன்
    வைக்கலாம் !படித்தவுடனே எழுதுவதால்
    தீர்வு எதுவும் யோசிக்க முடியவில்லை !
    விரைவில் மறுபடியும் எழுதுவேன் !

    ReplyDelete
    Replies
    1. +6 சந்தா கட்டியோர்க்கும் விலையை
      உயர்த்துவது முதல் வழி !எனக்கு
      ஆட்சேபனை ஏதும் இல்லை !
      மற்ற நண்பர்களும் ஒத்துழைப்பு
      தரலாம் !இது வேண்டுகோள்தான் !

      Delete
    2. //+6 சந்தா கட்டியோர்க்கும் விலையை
      உயர்த்துவது முதல் வழி !எனக்கு
      ஆட்சேபனை ஏதும் இல்லை !//

      +1

      Delete
    3. Sir,
      I will order two more copies of LMS (other than my original Super Six Subscription)

      Delete
  12. விஜயன் சார், மின்னும் மரணம் போன்ற மறுபதிப்புகளை இப்போது கையில் எடுப்பது சரியாக படவில்லை, அதுவும் முழு பாகத்தையும் ஒரே இதழாக வருவதை, இந்த இதழின் முன் பதிவை கொண்டு திட்டமிடல் நலம். என்னை பொறுத்தவரை மின்னும் மரணம் இதழை இன்னும் ஆறு மாதமோ அல்லது L,M.S நமது விற்பனையை பொருத்து முடிவு செய்வது நலம் (அல்லது மின்னும் மரணம் இதழை 3 மூன்று பாகம்களாக வெளி இடலாம்). இது போன்ற இதழ்களை இணைய தள நண்பர்கள் தவிர மற்றவர்களில் ஆர்வத்தையும் தெரிந்து கொண்டு முடிவெடுப்பது நலம்.

    சிக்-பில் மறுபதிப்பு கதையை ஓரம் கட்டுவது நல்ல முடிவு. கா.க. வண்ணத்தில் எனும்போது நிறைய வாசக நண்பர்கள் சந்தோசமாக வாங்குவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. //மின்னும் மரணம் இதழை இன்னும் ஆறு மாதமோ அல்லது L,M.S நமது விற்பனையை பொருத்து முடிவு செய்வது நலம் //
      நிச்சயமாக எழுதி வைத்து கொள்ளுங்கள் நவம்பருக்கு மேல் lms யாருக்கும் வாங்குவதற்கு வாய்ப்பிருக்காது !

      Delete
    2. ஸ்டீல், நம்பிக்கைதான் வாழ்கை, அப்படி நடந்தால் சந்தோசமே. நிற்க:-சில வாசகர்கள் சூப்பர் 6+ போன்ற இதழ்களுக்கு சாந்த கட்டாத காரணம் அவர்களுக்கு பிடித்த கதைகளை மட்டும் வாங்கி கொள்வோம் என்ற ஒரு காரணமும் உண்டு; ஒரு சிலர் தான் காமிக்ஸ் என்று எது வந்தாலும் வாங்க வேண்டும் என முன் பணம் செலுத்துகிறார்கள் (அவர்களில் வாங்கும் திறனையும் பொருத்தது) இது போன்ற சமயம்களில் வரும் காலம்களில் கையை கடிக்கும் விஷயம்களை முன் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றால் போல் திட்டமிடுவது நலம்.

      இப்பொது தான் நமது காமிக்ஸ் தட்டு தடுமாறி எழுந்து வந்து கொண்டு இருக்கும் நேரத்தில், இது போன்ற விஷயம்களை ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செய்வது நலம்; என்னை பொறுத்தவரை சற்று நிதானமாக அதே நேரம் உறுதியாக அடி எடுத்து வைப்பது நமக்கு தொடர்ந்து காமிக்ஸ் கிடைக்க ஒரு வாய்ப்பாக அமையும்..

      Delete
    3. //நிச்சயமாக எழுதி வைத்து கொள்ளுங்கள் நவம்பருக்கு மேல் lms யாருக்கும் வாங்குவதற்கு வாய்ப்பிருக்காது !//
      +1111

      Delete
    4. //என்னை பொறுத்தவரை சற்று நிதானமாக அதே நேரம் உறுதியாக அடி எடுத்து வைப்பது நமக்கு தொடர்ந்து காமிக்ஸ் கிடைக்க ஒரு வாய்ப்பாக அமையும்..//
      +1

      Delete
    5. Parani from Bangalore : //சில வாசகர்கள் சூப்பர் 6+ போன்ற இதழ்களுக்கு சாந்த கட்டாத காரணம் அவர்களுக்கு பிடித்த கதைகளை மட்டும் வாங்கி கொள்வோம் என்ற ஒரு காரணமும் உண்டு; ஒரு சிலர் தான் காமிக்ஸ் என்று எது வந்தாலும் வாங்க வேண்டும் என முன் பணம் செலுத்துகிறார்கள்//

      Very True !

      Delete
    6. //Very True !// Vijayan, I don’t believe subscribers can accept anything in the name of comics, we subscribe because we know Lion brings best of it in the name special issues. Lion shown its worth for such belief.

      These are tough times, and we all are with lion for sure.

      Delete
  13. For minnum maranam I go with option B. pls don't split...

    ReplyDelete
  14. சார் அருமை ! எப்படி ஈடு செய்ய போகிறீர்களோ என திணறி கொண்டிருந்தேன் ! சிக் பில்லை ஓரம் கட்டி விட்டு வாய்ப்பிருந்தால் இந்த மாதமே ,......சும்மா இருக்காமல் கார்சனின் கடந்த காலத்தை வெளியிட்டால் ஓரளவு விற்னையும் , அந்த கதை வாங்கும் புதிய வாசகர்களையும் ஈர்க்க வாய்ப்பை அமையும் !விழா களை கட்டுமே !
    பரணி இது ஆசை மட்டுமே !

    ReplyDelete
    Replies
    1. சிக்க்பில்லை ஓரம் காட்டுவதென்ன கடாசி விட்டு ஒரு குண்டு வண்ண புத்தகமும் பெறலாமே !

      Delete
  15. Thanga Thalaivan is going to break all sales records... pls dont split!

    ReplyDelete
    Replies
    1. Rummi XIII : ரெக்கார்டுகளை எந்தப் பக்கமாய் உடைக்கப் போகிறாரோ தங்கத் தலைவர் ?!! சாதனைகளின் பக்கமாகவா ? சோதனைகளின் திசையிலா ? தெரியவில்லையே !!

      Delete
  16. விஜயன் சார், என்னை பொறுத்தவரை நமது L,M.S இதழில் விலையை முன் பதிவு செய்தவர்களுக்கும் கொஞ்சம் அதிகரித்தால் நலம்; முடிந்தவர்கள் மட்டும் இந்த அதிக விலையை செலுத்தலாம் என அறிவிக்கலாம். இது எனது தனி பட்ட கருத்து.

    ReplyDelete
    Replies
    1. \\\இதழில் விலையை முன் பதிவு செய்தவர்களுக்கும் கொஞ்சம் அதிகரித்தால் நலம்; முடிந்தவர்கள் மட்டும் இந்த அதிக விலையை செலுத்தலாம் என அறிவிக்கலாம். இது எனது தனி பட்ட கருத்து.\\\
      +100

      Delete
  17. Dear Editor Sir,

    I am senthil from Pune. This year beginning When I was in bangalore I paid for professional courier. After coming to Pune I am getting my books through register post only. Not through professional courier. Please clarify since I am getting books through register post whether I also need to pay 110 more or how.

    Warm regards,
    Senthil

    ReplyDelete
    Replies
    1. Senthil Kumar : No, you don't need to ! Registered Post costs are the same !

      Delete
  18. ஆசையும் ஆர்வமும் வானத்தைவிட பெ..ரியது .ஆனால் இறைக்கை சிறியதாக ஆண்டவன் படைத்து விட்டான்..மன்னித்து கொள்ளுங்கள் நண்பர்களே என்னால் யோசனை மட்டுமே சொல்ல இயலும்..ப..ளா
    ப..ளா

    ReplyDelete
    Replies
    1. VETTUKILI VEERAIYAN : மூன்றெழுத்துக்களே - பணம்" என்பதற்கும் "அன்பு" என்பதற்கும் ! So இரண்டிற்கும் வேற்றுமை பார்க்கத் தேவை கிடையாதே - குறைந்த பட்சம் இங்காவது !!

      Delete
  19. லயன் காமிக்ஸில் ஆர்ச்சி ,லாரென்ஸ் -டேவிட் ,இரும்புக்கை நார்மன் , போன்றோரின் படங்களை காணோமே ! அவர்குக்கும் இடம் கொடுத்திருக்கலாம் ! ஆங்காங்கே காலியாக தெரியும் இடங்களை நிறைத்திருக்கலாமே !
    ஈகிள் மேன் ..கராத்தே டாக்டர் ....

    ReplyDelete
    Replies
    1. // லயன் காமிக்ஸில் ஆர்ச்சி ,லாரென்ஸ் -டேவிட் ,இரும்புக்கை நார்மன் , போன்றோரின் படங்களை காணோமே ! // +1

      Delete
  20. சார் கார்சனின் கடந்த காலம் ஒரு பக்கம் அருமை ! lms ஐ விட அதிகம் இதனைத்தான் எதிர்பார்க்கிறேன் !

    ReplyDelete
  21. கார்சனின் கடந்த காலம் b &W ல் இன்னும் தெளிவாக இருந்தது

    ReplyDelete
  22. விஜயன் சார், எங்களின் இந்த காமிக்ஸ் தடை இல்லாமல் வர எங்களால் முடிந்த உதவிகளை செய்ய தயார், தயங்க வேண்டாம்.

    ReplyDelete
  23. To: Editor,

    'மெகா' இதழ்கள் என்பது விற்பனையில் ஆரம்பத்தில் இழுபறியாக இருக்கும் என்பது கடந்த கால வரலாறு சொல்லும் தரவுகளிலிருந்தே தெரிகிறதே சார். 'மெகா' இதழ்களுக்கு நான் எதிர்ப்பாளன் அல்ல என்ற போதிலும் தனிப்பட சில நண்பர்களுக்கு இந்த இதழ்களை வாங்கிட இருக்கும் ஆற்றல் எல்லோருக்குமே இருக்குமா? என்பது சந்தேகம்தானே?

    அண்மையில் ஒரு நண்பரோடு பேசியபோது, ரூ.500 க்கு காமிக்ஸ் ஆ? என்று அதிர்ச்சியானார். அவர்கள் இன்னும் நமது ரூ.120 விலையிலான புத்தகங்களையே முழுமையாக ஜீரணிக்க ஆரம்பிக்கவில்லை என்பதுதான் உண்மையாக இருக்கிறது.

    மெல்ல மெல்ல, இன்னும் பல வாசகர்களிடத்தில் நமது, ரூ.60, 120 இதழ்களை அறிமுகப்படுத்தி ஒரு ரூ.200, ரூ.300 ஸ்பெஷல் இதழ்களை கொண்டுவந்து சகஜமாக்கிவிட்டு பின்னர் இப்படியான மெகா ஸ்பெஷல்கள் பற்றி சிந்திப்பதுதான் பெரிய விற்பனை எண்ணிக்கையை ஏற்படுத்தித்தரும் என்பது எனது எண்ணம்.

    ReplyDelete
  24. சிலருக்கு கசப்பாக இருந்தாலும் யதார்த்த நிலையை ஆசிரியர் சொல்லிவிட்டார்.
    பணம்- மனம் இரண்டும் எப்போதுமே இரண்டு துருவங்கள்தான்

    ReplyDelete
  25. Welcome back Sir...We missed u lot for past 7 days....

    ReplyDelete
  26. வெளிமாநில வாசகர்களின் சுமையை நாங்களும் பகிர்ந்து கொள்ள, Super 6 விலையா 100 or 150 சமமாக உயத்தி விடுங்கள் sir. இது அனைவருக்கும் பொதுவாய் அமைந்து, அனைவரும் சேர்ந்து தேர் இழுப்து போல் ஒரு உணர்வை தரும்.
    மின்னும் மரணம் ஒரே புத்தகமாக இருந்தால் நல்லது. விலை என்ன என்பதை LMS இல் அறிவித்து விட்டு, 500 புத்தகங்களுக்கு முன்பதிவு முடிந்த பிறகே வெளியிடும் தேதி அறிவிக்கப்படும் என்று அறிவித்துவிடுங்கள்..இன்னும் 5 மாதங்கள் உள்ளது, அதற்குள் மின்னும் மரணம் எதிர்பார்ப்பவரின் எண்ணிக்கை தெரிந்து விடும்.

    ReplyDelete
    Replies
    1. Dasu Bala : நிறைய நடைமுறை சிக்கல்கள் உள்ளன இந்தத் திட்டமிடலில் :

      1.இதழின் விலையை பிரதானமாய் நிர்ணயிப்பது அச்சிடும் பிரதிகளின் எண்ணிக்கை ! So எவ்வளவு அச்சிடப் போகிறோமென்பது பற்றியதொரு உறுதி இல்லாத பட்சத்தில் அறிவிக்கும் விலையில் தொடர்வது impossible !

      2.வெளியீட்டுத் தேதி இல்லா முன்பதிவுகள் எப்போதுமே 'சவ சவ' வென்று இழுத்திடும் - இரத்தப் படலத்தின் வெளியீட்டின் முன்பாக இருந்ததைப் போல ! So தூரமாகவேனும் ஒரு இலக்கை நிர்ணயிக்காமல் செய்யும் அறிவிப்புகள் ஆர்வங்களைத் தூண்டாது !

      செய்யக் கூடியது ஒன்றே : குறிப்பிட்ட அளவு முன்பதிவுகள் கிட்டினால் இந்த விலை ; அந்த எண்ணிக்கையை தொட்டிட இயலாப்பட்சத்தில் கூடுதலானதொரு limited editions விலை என்ற நிர்ணயம் ! ஆனால் இது எத்தனை தூரம் நடைமுறை சாத்தியம் கொண்டதோ தெரியவில்லை !

      தவிரவும் ரூ.1000 - 1200 என்றெல்லாம் விலைகள் வைப்பது 'காமிக்ஸ் என்றாலே செல்வந்தர்களின் ராஜ்ஜியம் மாத்திரமே !' என்பது போன்றதொரு பொதுவான எண்ணத்தை விதைக்கவும் வாய்ப்புகள் கொண்டதே ! நிச்சயமாய் அது ஆரோக்கியமானதல்ல என்றும் ஒரு பயம் உள்ளது !

      Delete
    2. //செய்யக் கூடியது ஒன்றே : குறிப்பிட்ட அளவு முன்பதிவுகள் கிட்டினால் இந்த விலை ; அந்த எண்ணிக்கையை தொட்டிட இயலாப்பட்சத்தில் கூடுதலானதொரு limited editions விலை என்ற நிர்ணயம் ! ஆனால் இது எத்தனை தூரம் நடைமுறை சாத்தியம் கொண்டதோ தெரியவில்லை !//
      முயற்சி செய்து பார்க்கலாமே sir

      Delete
    3. //தவிரவும் ரூ.1000 - 1200 என்றெல்லாம் விலைகள் வைப்பது 'காமிக்ஸ் என்றாலே செல்வந்தர்களின் ராஜ்ஜியம் மாத்திரமே !' என்பது போன்றதொரு பொதுவான எண்ணத்தை விதைக்கவும் வாய்ப்புகள் கொண்டதே ! நிச்சயமாய் அது ஆரோக்கியமானதல்ல என்றும் ஒரு பயம் உள்ளது ! //

      எப்போதாவது வருவதுதானே ! வேண்டியவர்கள் மட்டும் வாங்க போகிறார்கள் ! இதில் ஏதும் பிரச்சினை இருக்கும் என தோன்றவில்லை ! பிற ரெகுலர் இதழ்கள் வழக்கம் போல வர போகின்றன ! அச்சிடும் எண்ணிக்கை குறைவெனில் ப்ரீமியம் அதிக படுத்துவதே சரியான தீர்வு !

      Delete
    4. அதற்க்கு
      இதுவும் சரியே !
      ////செய்யக் கூடியது ஒன்றே : குறிப்பிட்ட அளவு முன்பதிவுகள் கிட்டினால் இந்த விலை ; அந்த எண்ணிக்கையை தொட்டிட இயலாப்பட்சத்தில் கூடுதலானதொரு limited editions விலை என்ற நிர்ணயம் ! ஆனால் இது எத்தனை தூரம் நடைமுறை சாத்தியம் கொண்டதோ தெரியவில்லை !//
      முயற்சி செய்து பார்க்கலாமே sir//

      Delete
  27. காமிக்ஸ் வாசகர்கள் அனைவரும் "கார்சனின் கடந்த காலம்" வண்ணத்தில் தான் வர வேண்டும் என்று வாக்களிக்கும்படி (இப்பக்கத்தில் வலது புறத்தில் மேலேயுள்ள vote) கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete
  28. விலை உயர்வை .....தரத்தின் உயர்வை உணர்ந்தும் பேசும் நண்பர்களுக்காக ....
    காமிக்ஸ்கல் என்பதுகளில் கோடி கட்டி பறந்து கொண்டிருந்த போது ராணி காமிக்ஸ் , பொன்னி காமிக்ஸ் போன்றவை விலை ஒன்று ஐம்பது , நமது இதழ்கள் இரண்டு ரூபாய் ....ஆனால் சைஸ் சிறியது ....ஆனால் இதுவே பெரிதும் ஈர்த்தது ....அற்புதமான நாயகர்கள் அணிவகுக்க ....சிறிய பெட்டி கடைகளில் கூட தொங்கி கொண்டிருக்கும் ! ஆனால் ராணி காமிக்ஸ் எங்கு வேண்டுமென்றாலும் கிடைக்கும் ! லயன் சில கடைகளில் கிடைக்காது ! ஆனால் காமிக்ஸ் சுவை அறிந்த நண்பர்கள் மட்டுமே வாங்கி படித்ததால் பெரும் போட்டிகளோடு வெற்றிகரமாய் வலம் வந்தது !

    நாளடைவில் பிற நிறுவனங்கள் கையை பிசைந்து கொண்டு வெளியேறி விட்டன ! இதற்க்கு ஒரு காதலும் வேண்டும் ! அந்த காதலால் ஆசிரியர் தொடர்ந்து பல மாறுதல்களை கொண்டு வந்து வெளி விடுகிறார் ! லயன் என்பதே அப்போதிருந்தே அற்புதமான கதைகளை விரும்புவோருக்கென வந்த இதழ் ! இடையில் சுனக்கத்திர்க்கு காரணம் கூட ஸ்டார்கள் இல்லாததே ! டெக்ஸ் ஒருவரே தொடர்ந்து இழுத்து வந்தார் என்றால் மிகை அல்ல !

    பின்னர் மீண்ட பொழுது அற்புதமான தரம் , சிறந்த நாயகர்கள் என வளம் வந்து கொண்டிருக்கும் நிலையில் விலை அதிகம் என கூறுவோர் நாளை வரை இதைதான் கூறி கொண்டிருப்பார்கள் ! சிறிது சிறிதாக அவர்களை மாற்ற இயலாது ! இப்போதைய விலை சரியே ! அறுபது ரூபாய் !

    வேண்டுவோர் வாங்கும் வண்ணம் லார்கோ போன்ற கதைகள் வந்து கொண்டிருக்கின்றன ! இப்போதைய டெக்ஸ் நூறு ரூபாய் குண்டு புத்தகம் விற்பனை கண்டதற்கு டெக்ஸ் என்பதுதான் காரணமாயிருக்கும் ! எதோ ஓரிருவர் விலை அதிகம் என்று கூறுகிறார்கள் என்பதற்கு செவி சாய்ப்பதை விட அதிகம் பேர் விரும்புகிறார்கள் என்பதை பார்க்கலாமே !

    சார் , ஐநூறு ரூபாய் போன்ற குண்டு புத்தகங்கள் வெளி விடும் பொது முன் பதிவுக்கு மட்டுமே ! வேறு எங்கும் கிடைக்காது என்று சொல்லி மிக சிறந்த கதைகளை வெளி விடுங்கள் இரண்டு முறை , புத்தகம் கிடைக்காது என்று உணர்ந்தவர்கள் அடுத்த முறை வாங்குகிறார்களா இல்லையா என்று பாருங்கள் !

    ReplyDelete
    Replies
    1. இப்போது வாங்குவோர் காமிக்ஸ் சுவை அறிந்தோர் மட்டுமே ! ஆனால் சோம்பல் காரணமாய் வரட்டும் பார்க்கலாம் என செயல் படுவோரே அதிகம் !

      Delete
  29. ஓவர் பாய்ச்சல் நமக்கு ஆகாதுன்னு அப்பவே நான் நினைச்சேன்.சரி பரவாயில்லை விடுங்க சார்.இனியாவது நாம் நிதானமாக அடியெடுத்து வைப்போம்.எங்களால் முடிந்த உதவியை நாங்கள் கண்டிப்பாக செய்வோம்.எது எப்படியோ நமது காமிக்ஸ் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளிவரவேண்டும். சீக்கிரமா LMS யும்,கார்சனின் கடந்த காலத்தையும் கண்ணுல காட்டுங்க சார்.

    ReplyDelete
  30. //..இனி வரும் ஆர்டர்களுக்கோ ; நேரடி விற்பனைக்கோ - இதழின் விலையினை 10% அதிகப்படுத்துவது என்று தீர்மானித்துள்ளோம் ! ..//

    Dear Editor, முன்பதிவு செய்தவர்களுக்கும் (நான் முன்பதிவு செய்துவிட்டேன் :) 10% விலையை உயர்த்துவது நலம்.. இதுவே அனைவரையும் சமமாகவே பாவிப்பதாக அமையும்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. //10% விலையை உயர்த்துவது நலம்.. இதுவே அனைவரையும் சமமாகவே பாவிப்பதாக அமையும்//
      +1

      Delete
    3. //10% விலையை உயர்த்துவது நலம்.. இதுவே அனைவரையும் சமமாகவே பாவிப்பதாக அமையும்//
      +1

      Delete
    4. @ Periyar & Friends : Nopes...எப்போதும் நம் மீது நம்பிக்கை கொள்ளும் நண்பர்களிடமாவது credibility -ஐத் தக்க வைத்துக் கொள்ளும் கடமை நமக்குப் பிரதானம் !

      Delete
    5. Editor is Correct, in long term perspective he is spot on this. +1

      Delete
  31. //கா.க.கா."வை வண்ணத்திலேயே ரூ.120 விலையில் போட்டால் என்னவென்று ?! ஒ.கே. எனில் பட்டியலில் உள்ள சிக் பில் மறுபதிப்பைக் காலி செய்து விட்டு அந்த இடத்தினில் டெக்சின் இந்த classic அதிரடியை வண்ணத்தில் மிளிர அனுமதிக்கலாம் ! What say folks ? //

    நாங்கள் கொடுத்த குரலுக்கு செவி மடுத்தமைக்கு மிக்க நன்றி சார். நிழல் எது? நிஜம் எது? அண்மையில் வந்த இதழ் என்பது மட்டுமல்லாமல், நமது அலுவலகத்திலும் அண்மைகாலம் வரை ஸ்டாக்கில் இருந்த இதழ்தானே? அதனை மீள் பிரசுரம் செய்வதை தவிக்க எடுத்த முடிவு மிகச் சரியானதே!

    கார்சனின் கடந்தகாலம் பல நண்பர்களிடமும் இல்லாத இதழ் என்பதால் அதனை மீள் பதிப்பு செய்வது ஏற்கத்தக்கது. அதே நேரம் அட்டகாசமான சித்திரங்கள் கொண்ட கதை என்பதால் வர்ணத்திலேயே.. ப்ளீஸ்!

    Note: மீண்டும் மீண்டும் நாம் முன்வைக்கும் கோரிக்கை: ஒரு இதழ் டிஜிட்டல் வடிவில் ஆக்கப்பட்டுள்ளது என்பதற்காக அதனை வர்ணத்தில் மீள் பதிப்பு செய்ய முயலாமல், க்ளாசிக் கதைகளை கறுப்பு-வெள்ளையில் ரீப்பிரிண்ட் செய்யவேனும் முயற்சி செய்யுங்கள் சார்....!

    ReplyDelete
    Replies
    1. Podiyan : //ஒரு இதழ் டிஜிட்டல் வடிவில் ஆக்கப்பட்டுள்ளது என்பதற்காக அதனை வர்ணத்தில் மீள் பதிப்பு செய்ய முயலாமல், க்ளாசிக் கதைகளை கறுப்பு-வெள்ளையில் ரீப்பிரிண்ட் செய்யவேனும் முயற்சி செய்யுங்கள் சார்....!//

      ???

      என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரியவில்லையே ? "கா.க.காலம் " - வண்ணத்தில் வேண்டுமென்று சொன்ன மூச்சிலேயே - b &w -ல் போடக் கோருவது எந்தக் கதைகளை ?

      Delete
    2. முன்பு சில நண்பர்கள் சில கதைகளை மறுபதிப்பு செய்யும்படி (உதாரணமாக சிக்-பில் கதைகள்) கேட்டபோது, அவை இன்னும் பதிப்பாளர்களால் டிஜிட்டல் வடிவுக்கு கொண்டுவரப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தீர்கள். நான் சொல்ல வந்தது என்னவென்றால் - டிஜிட்டல் வடிவில் இருக்கிறது என்பதற்காக அண்மையில் நமது காமிக்ஸ்களில் வந்த கதைகளை (உதாரணம்: நிழல் எது? நிஜம் எது?) மீள் பதிப்பிக்கத் தேவையில்லை. ஒரு பனி மலைப் பயங்கரம், வைகிங் தீவு மர்மம் - போன்ற கதைகளின் கலர் டிஜிட்டல் இன்னும் தயாராகாவிட்டாலும், அவற்றை கறுப்பு - வெள்ளையிலாவது வெளியிடலாமே என்பதுதான் எனது கோரிக்கை!

      Delete
  32. yes, it is a depressing post.
    surprised to know the low super 6 subscrption number.
    Announcing super 6 in the middle of the year is definetly a factor, as i (out of country) struggled to find somebody to send money.
    i had paid 2 super 6 subscriptions and will try to send some more money for next year subscription, hopefully these things help you out.
    Single story Minnum Maranam minimum rs 650, not a good idea right now - tiger lost his star power after "ratha thadam". Even though minum maranam is a very good story, recent tiger stories brought a displeasure towards tiger. A tex special or kadamba special makes sense.
    ,

    ReplyDelete
  33. To Editor: ஆண்டு மலரின் திடீர் விலை அதிகரிப்பானது, கடல் கடந்திருக்கும் எம்மைப் போன்ற வாசகர்களுக்கு அதிர்ச்சியான தகவலே!

    ReplyDelete
    Replies
    1. Podiyan : 310 சந்தாக்களில் நிற்கும் நமது அதிர்ச்சிக்கும் ; உங்களது அதிர்ச்சிக்கும் - "சபாஷ் ! சரியான போட்டி ! " என்றே சொல்லிட வேண்டும் போலத் தோன்றுகிறது தற்போதைக்கு !

      Delete
  34. //சூப்பர் சிக்சின் சந்தாக்கள் 1000 எனும் மேஜிக் எண்ணைத் தொடும் ஒரு அதிசய தருணம் புலரும் பட்சத்தில் - குட்டிக் கரணம் அடித்தாவது விலை மாற்றம் ஏதுமின்றி - LMS -ல் 1000 பக்கங்களை உருவாக்கிடுகிறேன் ; that's a promise !//

    இவை நமக்காக ஆசிரியர் முன்பு கூறியவை, ஆனால் சந்தா குறிப்பிட்ட இலக்கை எட்டாத காரணத்தினால், ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலையில் ஆசிரியர் உள்ளார். இவ்வாறு பெருந்தன்மையுடன் கூறிய ஆசிரியற்காக, அவரின் விடாமுயற்சி காமிக்ஸ் பணிக்காக, நாம் அனைவரும் அவருடன் ஒன்றாக கைகோர்க்கும் நேரமிது.
    அதிகப்படியான சுமையால், ஆசிரியர் விலையை உயர்த்தி அனைவரையும் சங்கடதத்திற்குள்ளாக்க விரும்பாமல், வெளிமாநில கூறியர் உயர்வை மட்டுமே கோரீயுள்ளார்...ஆகையால், நமது விருப்பத்திற்காக உருவாக்க பட்ட இந்த LMS, விற்பனையிலும் வெற்றி பெற நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உதவி புரிய வேண்டும்....
    என்ன சொல்கிறீர் நண்பர்களே?.....

    ReplyDelete
    Replies
    1. ============================================================================================
      +++++++++++++++++++++++++++++++++
      =============================================================================================

      Delete
    2. Dasu bala & friends : அன்பிற்கு நன்றி ; ஆனால் ஏற்கனவே சந்தா செலுத்தியுள்ள எவருக்கும் கட்டண உயர்வுகள் எனும் சிரமத்தைத் தர மாட்டோம் ! அந்த மட்டிலும் உறுதியாக உள்ளேன் !

      Delete
  35. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தோள் குடுக்க வாசகர்கள் நாங்கள் இருக்கிறோம். எனவே மிண்ணும் மரணம் ஒரே புத்தகமாகவே வரட்டும். விலை பற்றி கவலை இல்லை. ஒரே,புத்தகம் நல்ல தரமாகவும் இருந்தால் போதும்.

    ReplyDelete
  36. Some friends were asking to increase the price of super 6 for existing subscribers, thats not fair. These people belived our editor and as a comics fan paid the subscription on time.
    If our subscribed friends want to pay the increase on their own then nothing is stopping from doing that.

    ReplyDelete
    Replies
    1. V Karthikeyan : No worries...the present subscribers will not be put to any hardships whatsoever !

      Delete
  37. @ FRIENDS : நண்பர்களே, உதவிட எண்ணும் உங்கள் உள்ளங்களுக்கு எனது நன்றிகள் என்றும் உண்டு ; ஆனால் ஏற்கனவே சூப்பர் 6 சந்தா செலுத்தியுள்ள நண்பர்களை எவ்விதத்திலும் கூடுதலாய்க் கட்டணம் செலுத்தச் சொல்லும் அபிப்ராயம் இல்லவே இல்லை !

    Proff கூரியரில் இதழ்களைப் பெற்றிடக் கோரியுள்ள வெளிமாநில நண்பர்கள் 30-க்கு சற்றே அதிகம் ; அவர்களுக்கு மாத்திரமே ரூ.110 உயர்வு - கூரியர் கட்டணத்தின் பொருட்டு !

    பதிவுத் தபால்களின் கட்டணம் ரூ.70 தான் என்பதால் அதனை ஒரு option ஆகக் கொள்ள விரும்பும் வெளிமாநில நண்பர்கள் இந்த ரூ.110 அனுப்பிடத் தேவை இராது !

    ReplyDelete
  38. இந்தாண்டின் கசப்பு மருந்து ! ஆனால் தளர்வை நீக்க மருந்து சாப்பிடத்தான் வேண்டும் வேறு வழியில்லை ! LMS 300+ தான் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது பெரிய ஏமாற்றமே ! மின்னும் மரணம் கண்டிப்பாக வேண்டும் ! ஒரே இதழாக சாத்தியமில்லை என்றால் B&Wல் வந்த மின்னும் மரணம் வெளிவந்த orderல் தனிதனி இதழ்களாக வெளியிட முயற்சிக்கலாமே !

    ReplyDelete
    Replies
    1. senthilwest2000@ Karumandabam Senthil : Option # 1 (or) Option # 2 ? தேர்வு உங்கள் ஒவ்வொருவரிடமே !

      Delete
    2. சார் மீண்டும் கொத்து கரி போடா வேண்டாம் ! ஏற்கனவே காத்திருந்தது அதிகம் ! ஆகவே தயவு செய்து முன் பதிவு செய்தோருக்கு மட்டுமே என்பதில் உறுதியாக நில்லுங்கள் ! அப்படி முன் பதிவு அதிகரிக்க வில்லையா option 2 வை செயல் படுத்துங்கள் ! அப்புறம் பாருங்கள்.....

      Delete
    3. குண்டு புக் வேண்டும் என்ற கொள்கையில் 1 இதழாக ஆதரித்தாலும் practicalஆக வியாபார ரீதியில் பார்த்தால் option-1best! வார இதழ் ஜாம்பவானாக இருக்கும் கல்கி வார இதழ் கூட பொன்னியின் செல்வன் நாவலை இன்று வரையில் புது ஓவியர்களின் கைவண்ணத்தில் தொடர்கதையாக தான் வெளியிடுகிறது !

      Delete
  39. lms சந்தாவே 310 தானா ..ஒவ்வொரு காமிக்ஸ் காதலரும் கொள்கை பரப்பு செயலாளர் ஆக மாறுவதே ஒரே வழி..முடிந்தவரை கான்வாஸ் பண்ணுவோம் பளா பளா ..

    ReplyDelete
    Replies
    1. VETTUKILI VEERAIYAN : Amway விற்பனையாளர்களைக் கண்டாலே சொந்த பந்தமெல்லாம் காத தூரம் ஓடுவதைப் போல வெட்டுகிளியைப் பார்த்தும் தலை தெறிக்க ஓடப் போகிறார்கள் !! Watch out !!

      Delete
  40. மிண்னும் மரணத்தை கூறு போட வேண்டாம் சார்,சென்னை புக்பேர் சமயத்தில் விற்பனைக்கு வரும்போது அது தங்கள் கையை கடிக்காது என நம்புகிறேன் சார் கார்சணின் கடந்த காலம் கலரில் வருவது மகிழ்ச்சி சார்

    ReplyDelete
    Replies
    1. ஒரே இதழாக என்றால் விலை 4 இலக்கத்தில் எனும்போது எத்தனை பேரால் afford செய்ய முடியும் என்பது மிக பெரிய ????

      Delete
    2. ranjith ranjith : நாமும் ஒரு 'பதிப்புலகப் பெரும்புள்ளியாகும்' நாள் புலரும் வரை எதனையும் taken for granted எனக் கருதும் சொகுசு கிடைப்பதில்லையே !

      So சென்னைப் புத்தக விழாவினில் இடம் பிடிக்கத் துண்டைப் போட்டு வைப்பதே பிரதான வேலை சார் ! நெய்வேலியில் போல் மூக்கோடு சேர்த்து கதவை அறைந்து சாத்தி விட்டார்களெனில் போச்சு !

      Delete
  41. மின்னும் மரணத்தை பொறுத்தவரை option -1 safe! "கார்சனின் கடந்த காலம் " வண்ணத்தில் என்றால் கேட்கவாவேண்டும் Rs.120/-வெளியிடலாம் !

    ReplyDelete
  42. மின்னும் மரணம் பற்றி விரைவில் ஒரு நல்ல அறிவிப்பாக இறுதி முடிவை எடுத்திடுங்கள் சார் !

    ReplyDelete
  43. ஒவ்வொரு மாதமும் உங்களிடம் குறை சொல்வதாக நினைக்க வேண்டாம்.
    இம்மாதம் வந்த பூம் பூம் படலம் புத்தகத்தின் அட்டை மற்றும் நடுப்பக்கம் இரண்டும் பிரிண்டிங் வேஸ்டெஜில் இருந்து தப்பித்து வந்து எனது புத்தகத்தில் சேர்ந்துள்ளது.

    அதனை போஸ்ட் ஆபிஸ் தேடி பின்னர் சாதா தபாலில் அனுப்பி பின்னே நீங்கள் அதற்கு மாற்றும் அனுப்பும் பெரிய பிராசசை நினைக்கையில் பெருமூச்சுதான் வருகிறது.

    இன்னுமொரு பெரியகவலை எனது LMS சந்தா பிரதி எப்படி இருக்கும் என்பதே.
    தங்களிடம் ஒரு சிறு வேண்டுகோள் V.V .KRISHNA , Chennai ..என அனுப்பும் ப்ரெதியை ஒரு முறைக்கு மறுமுறை பார்த்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    மற்றபடி எனக்கு போன மாதம் வந்த அனைத்து கதைகளும் பிடித்திருந்தது.
    இவ்வாறு மாதம் ஒரு மாற்றம் என நடைமுறையில் நிகழும் நிலையில் உங்களது நிலை புரிகிறது.

    நான் ஒரு புத்தகத்திற்கு பணம் செலுத்தி இருந்தாலும் மற்றொரு புத்தகத்தை ஏதாவது புத்தக விழாவில் வாங்கிக்கொள்ள நினைத்துள்ளேன்.இது போல இன்னும் பலர் நினைத்திருக்கலாம்.

    கண்டிப்பாக மீண்டும் சகஜ நிலை திரும்பும்.
    கார்சனின் கடந்த காலம் கலரில் வர சிக்பில்லை தியாகம் செய்வதை கண்டிப்பாக வரவேற்க்கிறேன்.

    எனக்கு மின்னும் மரணம் எப்படி வந்தாலும் பரவாயில்லை.
    இப்பொழுதே முன்பதிவை ஆரம்பித்து எவ்வளவு சேர்க்கிறது என்று பார்த்து முடிவு செய்வது சரியாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  44. ஹலோ சார் இந்த தடவை வந்த மூன்று புத்தகங்களின் பிரிண்ட் நன்றாக இருந்தது ஒரு சில பக்கங்களை தவிர :). வர்ணங்கள் அங்கே அங்கே சிதறி இருந்தது. மற்றபடி பழைய தரத்தோடு இருந்தது :)

    விரியனின் விரோதி அருமை :) வெகு நாட்களுக்கு பிறகு அட்டகாசமான த்ரில்லெர்...
    காவல் கழுகு வழக்கம் போல் அதிரடி பட்டாசு.
    பூம் பூம் படலம் நகைச்சுவை விருந்து. மறு மொழி பெயர்ப்பு பண்ணி இருந்தால் இன்னும் அட்டகாசமாக இருந்திருக்கும்..

    மின்னும் மரணம் ஒரே புத்தகமாக வெளி இடுங்கள்.
    கார்சனின் கடந்த காலம் வண்ணத்திலேயே வெளி இடுங்கள்.
    LMS நீங்கள் நினைப்பதை விட விரைவாக விற்று தீர்ந்து விடும். பார்த்து கொண்டே இருங்கள் :).



    ReplyDelete
  45. கார்சனின் கடந்தகாலம் வண்ணத்தில்....

    ReplyDelete
  46. டியர் எடிட்டர்ஜீ!!!

    எல்.எம்.எஸ்.முன்பதிவு பற்றிய உங்கள் ஆதங்கம் தேவையற்ற ஒன்றோ என்று தோன்றுகிறது.எங்களில் பலர் சந்தாவில் இருப்பினும் கூடுதல் புத்தகங்களையும் வாங்குபவர்கள்.ஒவ்வொரு இதழுக்கும் நான்கைந்து பிரதிகள் வாங்குபவரும் உளர்.ஆகையால் முன்பதிவு எண்ணிக்கையை பற்றிய கவலையை விடுங்கள்.தீபாவளி பண்டிகைக்குள் எல்.எம்.எஸ்.அனைத்தும் விற்று தீர்ந்துவிடும் வாய்ப்பிருக்கிறது.Don,t worry!

    மின்னும் மரணம் மறுபதிப்பை பொறுத்தவரை இரண்டாவது ஆப்சனான Customized imprints தேவலாம்.அதாவது ஸ்பெசல் வெளியீடுகளுக்கு மட்டும்.
    ஒரு நல்ல பலகாரத்தை அப்போதே சாப்பிட்டு விடவேண்டும்.
    கொஞ்சம் கொஞ்சமாக 11 மாதங்கள் வரை வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தால் கெட்டுப்போய் நாறிவிடும்!!

    எழுத படிக்க தெரியாத பாமரனாகிய அடியேன் வாங்கப்போகும் எல்.எம்.எஸ்.பிரதிகளின் எண்ணிக்கை-5. படிக்கத்தெரியாத நானே ஐந்து புத்தகங்கள் வாங்கும்போது , படித்த நல்ல வசதி வாய்ப்புள்ள காமிக்ஸ் வாசகர்கள் இதைவிட கூடுதல் பிரதிகள் வாங்கமாட்டார்களா...என்ன? இம்மாதிரி டைஜஸ்ட் இதழ்களை கூடுதலாக வாங்கிவைத்தால் வருங்கால புதிய காமிக்ஸ் வாசகர்களுக்கு அதை அப்போதைய மார்க்கெட் விலைக்கு( அதாவது நியாயமான விலைக்கு) விற்கலாமே...? அல்லது புக் எக்ஸ்சேஞ் செய்து கொள்ளவும் பயன்படுமே...? ரத்த படலம் விற்று தீர 18 மாதங்கள் ஆனது. NBS விற்று தீர 8 மாதங்களே ஆனது. எல்.எம்.எஸ்.மூன்று மாதங்களில் முழுவதுமாய் விற்று தீர்வது நம் கைகளில் தான் இருக்கிறது.குறைந்த பட்சம் கூடுதலாய் ஒரு பிரதியாவது வாங்குங்கள் நண்பர்களே!!!

    ReplyDelete
    Replies
    1. / / எழுத படிக்க தெரியாத பாமரனாகிய அடியேன் // இது சுத்த பொய் :-)

      // ல்.எம்.எஸ்.மூன்று மாதங்களில் முழுவதுமாய் விற்று தீர்வது நம் கைகளில் தான் இருக்கிறது.குறைந்த பட்சம் கூடுதலாய் ஒரு பிரதியாவது வாங்குங்கள் நண்பர்களே!!! // +1

      Delete
    2. //மின்னும் மரணம் மறுபதிப்பை பொறுத்தவரை இரண்டாவது ஆப்சனான Customized imprints தேவலாம்.அதாவது ஸ்பெசல் வெளியீடுகளுக்கு மட்டும்.
      ஒரு நல்ல பலகாரத்தை அப்போதே சாப்பிட்டு விடவேண்டும்.//
      +++++++++++++++++++

      //எல்.எம்.எஸ்.மூன்று மாதங்களில் முழுவதுமாய் விற்று தீர்வது நம் கைகளில் தான் இருக்கிறது.குறைந்த பட்சம் கூடுதலாய் ஒரு பிரதியாவது வாங்குங்கள் நண்பர்களே!!!//

      நானும் ஒரு பிரதி அதிகமாய் வாங்கத்தான் போகிறேன் ! ஆனால் இது பெரிய ஆரோக்கியமாக இராது !

      //

      Delete
  47. கண்டிப்பாக நிறைய வாசகர்கள் இரண்டு L M S வது வாங்குவார்கள்.கவலைய விடுங்க எடிட்டர் சார்.ஒரு லெஜண்ட் காமிக்ஸ்க்கு இப்படி ஒரு சோதனை வர வேண்டுமா.நல்ல விஷயங்களுக்கு எப்போதும் சோதனை வரும்,ஆனால் கண்டிப்பாக நல்லது ஜெயிக்கும்.நம் வாசகர்கள் நிச்சயம் நல் ஆதரவு தருவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. //.நல்ல விஷயங்களுக்கு எப்போதும் சோதனை வரும்,ஆனால் கண்டிப்பாக நல்லது ஜெயிக்கும்.நம் வாசகர்கள் நிச்சயம் நல் ஆதரவு தருவார்கள்.//

      காத்திருக்கும் வாசகர்கள் முன் பதிவை வேக படுத்துங்கள் !

      Delete
  48. இதுவரை இல்லாத அளவு 500+10%lms என்னும்போது,அதனுடைய விற்பனையை பார்த்துவிட்டு

    மின்னும் மரணம் பற்றி தீர்மானிக்கலாமா ....

    ReplyDelete
  49. present sir.

    ennai pondra santha kattaatha vaasagargalin ennathai naalai marunaal tamilil sollividugiren sir.

    aannal ondrai mattum uruthiyaga solgiren sir.erottil neengal edirpaarkaatha alavil LMS virpanaiyil soodu kilappi sivakaasi meendum sellum poluthu thangal ennam ivvaaru irukkum.

    ini nanbargal Lms puthagam anuppa sonaal eppadi anupavathu.kaiyil stock illaiye...

    idhu kanavalla sir. NİJAM.

    ReplyDelete
  50. இந்த பதிவின் மண்டையின் அடிக்கும் மற்றுமொரு வருந்தக்க உண்மை இனி NBS,LMS, old கோடை மலர்கள் போன்ற கதம்ப இதழ்கள் பெருன்பான்மையானவர்களை வாங்ககூடிய விலையில் சென்றடைய சாத்தியமில்லை !

    ReplyDelete
  51. Don't worry sir. Satan sonnadhu pola book release aanadhum rendu, moonu endru vaangum hardcore comics vaasagargal niraya namidayeh ular. Rathapadalam adharkul maranduvithadha?

    ReplyDelete
  52. நமது N.B.S முன் பதிவு கூட இப்படிதான் இருந்தது என நினைக்கிறன், தற்போது நமது வாசகர் வட்டம் (கடந்த ஆண்டை விட) சற்று கூடி உள்ளதால் நமது L.M.Sவிரைவில் விற்று தீர்ந்து விட வாய்புகள் அதிகம். மலை போல் தெரியும் இந்த பிரச்னை கடுகு போல் விரைவில் சிறியதாகி போகும்.

    ReplyDelete
  53. மின்னும் மரணம் பற்றி ஒரு மின்னல் அறிவிப்பு முதலில் சார்...

    ReplyDelete
  54. டியர் எடிட்டர்

    என்னால் முடிந்தது 1 subscription + 3 EXTRA COPY @ Erode [ மொத்தம் 4 லட்டு :`) ]

    சார்... ரொம்ப யோசிக்காம நேரிய புக் எடுத்து வாங்க....நாங்க இருக்கோம்

    ReplyDelete
  55. மின்னும் மரணம்....

    எல்லோரும் வாங்குவார்கள் என்று சொல்ல முடியாது (like Tex)... tiger ரசிகர்கள் மட்டும் கண்டிப்பாக வாங்குவார்கள்...so my personal preference Option #2

    but i am ok with option 1 if everyone prefer

    ஆனா மின்னும் மரணம் கண்டிப்பா வேணும்... :)

    ReplyDelete
  56. டியர் விஜயன் சார்,

    ******************************* LMS *************************************************

    சற்றே கவலைப்படக் கூடிய விஷயம் கொண்ட பதிவே. நண்பர்கள் அனைவரும் கூறுவது போல நிச்சயம் LMS புத்தகங்கள் அனைத்தும் கூடிய விரைவில் விற்று விடும் என்பதில் ஐயமில்லை ... ஆனால் ...

    //ஒரு மொத்தமாய்ப் பணத்தை பல லட்சங்களில் முடக்கி விட்டு, பின்னர் அது ஆயிரமும், ரெண்டாயிரமுமாய்த் திரும்ப வரும் போது உருப்படியாய் எதற்கும் பயனாவது நடைமுறை சாத்தியமாகாது ! //

    இது வரை LMS / சூப்பர் 6 சந்தா கட்டாத நண்பர்கள் (பின்பு வாங்கி கொள்ளலாம் என நினைத்து) உடனடியாக கட்டலாம். ஆசிரியரின் தற்போதைய சுமையை குறைக்க இது உதவும்.

    ****************************************** மின்னும் மரணம் *************************************************

    //முன்பதிவுக்கு இப்போதே வாய்ப்புகளைத் துவக்கி, டிசம்பருக்கு முன்பாக குறைந்த பட்சம் 800-900 முன்பதிவுகள் கிட்டிடும் பட்சத்தில் - ரூ.600 / ரூ.650 விலையினில் மின்னும் மரணம் சாத்தியமாகிடும் ! //

    மின்னும் மரணத்திற்கான முன்பதிவை ஈரோடு புத்தக திருவிழாவில் தொடக்குவது நன்றாக இருக்கும். குறிப்பிட தகுந்த முன்பதிவுகள் ஈரோடு புத்தக திருவிழாவில் கிடைக்கும் என்பது நிச்சயம்,


    திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன்

    ReplyDelete
    Replies
    1. //மின்னும் மரணத்திற்கான முன்பதிவை ஈரோடு புத்தக திருவிழாவில் தொடக்குவது நன்றாக இருக்கும். குறிப்பிட தகுந்த முன்பதிவுகள் ஈரோடு புத்தக திருவிழாவில் கிடைக்கும் என்பது நிச்சயம்,
      //

      Delete
    2. நான்கு இலக்கத்தை முன் வைத்தே துவங்குங்கள் ! அதில் சந்தா அதிகரித்தால் விலையை குறைத்து விடுங்கள் ! மீதி தொகையை அடுத்த வருட சந்தாவுடன் இணைத்திடுங்கள் !

      Delete
    3. இதுக்கு தனியா ஒரு SOFT WARE கூட போடலாம்

      Delete
  57. டியர் எடிட்டர்,

    இந்த பதிவைப் பற்றிய சில எண்ணங்கள்:

    a) கார்சன் கலரில் ஓகே - ஆனால் அதற்காக ஏற்கனவே அறிவித்த சிக்-பில் இதழை ஒதுக்க வேண்டாம். Reprint-கள் அறிவித்துபின்வாங்குவது இது இரண்டாம் முறை - நம் மறுவரவில். முதல் முறை இப்படி நேர்ந்த போது அதிகம் ஏமாற்றம் அடைந்தவர்களில் நானும் ஒருவன் - எனவே நோ repeats of cancellation ப்ளீஸ். மேலும் நீங்கள் அறிவித்த reprints தீவிர ரசிகர்களிடம் வேண்டுமானால் ஏற்கனவே இருக்கலாம் - கடந்த இரு ஆண்டுகளில் வந்த reprints எதுவுமே என்னிடத்தில் இல்லை என்பது தான் நிஜம். நமது இதழ்கள் படிக்க மீண்டும் வந்த பலரின் நிலையம் இதுவாகத்தான் இருக்கும் !

    b) ஐநூறு - ஐநூற்றம்பது என்ற எண்ணம் நம் போன்ற காமிக்ஸ் காதலர்களுக்கு கண்டிப்பாய் ஓகே தான் - அதையும் தாண்டிய ஒரு சுற்றத்தைச் சென்றடைய வேண்டுமெனில் கொஞ்சம் திட்டமிடல் அவசியமே - சாதாரண வாசிப்பாளர்களுக்கு - ஐநூறு ரூபாய் காமிக்ஸ் என்பது சிந்திக்கவியலா விஷயம் - மற்றபடிக்கு நண்பர்கள் கூறியது போல LMS கண்டிப்பாய் விற்றுவிடும் - NBS உங்களுக்கு proof !

    c) படிக்க ஆயிரம் புதுக்கதைகள் இருக்கும்போது 'மின்னும் மரணம்' collect of eleven books within six months of LMS is simply off-track. தனியாக அறிவித்தாலோ, சந்தாக் கூட்டணியில் அறிவித்தாலோ - எப்படி இருப்பினும் 'மின்னும் மரணம்' வாங்குவது பற்றி எனக்கு தனிப்பட்ட முறையில் இன்னும் யோசனை உண்டு. எனவே இது தமிழ் Blueberry (டைகர்) விசிறிகளின் collector's edition ஆகா வருவது நலம்.

    d) மொத்த காமிக்ஸ் எண்ணிக்கை பற்றி - தற்போது வருவது சற்றே அதிகம் - இரண்டு முதல் மூன்று புத்தகங்கள் நன்று. மேலும் லயன் மற்றும் முத்து காமிக்ஸ் brand-ல் மட்டும் வருவது இன்னும் சில ஆண்டுகளுக்கு நலம் பயக்கும்.

    மேலும் கருத்துக்கள் நாளை உங்கள் e-mail தேடி வரும் !

    ReplyDelete
  58. எடிட்டர் சார்,

    LMSன் விற்பனை முகம் சற்றே பயம் கொடுப்பதாய் உங்களால் சொல்லப்பட்டாலும், இது தாங்கள் எதிர்பாராத ஒன்றல்லவே? "LMSஐ ஈரோடு புத்தகத் திருவிழாவில் வாங்கிட்டாப் போச்சு. அப்படியே அண்ணாச்சியிடம் அடுத்த வருடத்துக்காக ஒரு தோராயமான சந்தா தொகையையும் கட்டிட்டாப் போச்சு" என்ற இறுமாப்பிலிருக்கும் என் போன்ற தீவிர(!) வாசகர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்? தவிர, புத்தகத் திருவிழாவில் டிஸ்கவுண்டு விலையில் சில பல எண்ணிக்கையில் வாங்கி வைத்துக் கொள்ள ஆசைப்படும் நண்பர்களும் இங்கே கணிசமான எண்ணிக்கையில் இல்லாமலில்லையே? வாங்கும் திறன் இல்லாத ஒரு சாதாரணக் காமிக்ஸ் வாசகரைக் கூட 'குண்ண்டான' இதழ்கள் கவர்ந்திழுத்து, நாவில் எச்சில் ஊறச் செய்யும் சக்தி படைத்தவையாயிற்றே! தினக்கூலிக்குச் சென்று கஷ்டப்பட்டு சம்பாதித்து மாதம் தவறாமல் காமிக்ஸ் வாங்கிப் படிக்கும் சில நண்பர்களையும் நான் அறிவேன்; அவர்களிடம் கடன் வாங்கிப் படிக்கும் ஒரு உயர்தொழில் புரியும் ந(ண்)பரையும் நானறிவேன். இதில் - வாங்கும் திறன் என்பது எங்கே ஒளிந்திருக்கிறது? ஆசையும், தேவையும் அளவு கடந்து பெருகும்போது, அதை அடைவதற்கான வழிமுறையையும் மனம் தானே தேடிக் கொள்ளும் என்பது நாம் அறியாததல்லவே? (ஏற்கனவே காமிக்ஸ் அறிமுகமில்லாவர்களுக்கு ரூ.550 என்பது மலைக்கச் செய்யும் விசயமே! - நண்பர் ராகவனின் கூற்றோடு ஒத்துப்போகும் சமாச்சாரமிது)

    300+ எண்ணிக்கையிலான சந்தா என்பது மிகச் சொற்பமான அளவே என்றாலும், LMS வெளியான பின்பு நிச்சயம் பட்டையைக் கிளப்பும் என்ற நம்பிக்கை தற்போது உங்களைவிட வாசகர்களான எங்களுக்கு அதிகம் உள்ளது!! இங்கு பலரும் சொல்லியிருப்பது போல, LMS மிகச் சில மாதங்களிலேயே வரலாறாக மாறும் என்பதும் உறுதி! உறுதி!! உறுதி!!!

    கா.க.காலம் - வண்ணத்தில் வரயிருக்கும் செய்தி மிகுந்த உற்சாகமளிக்கிறது. வண்ணத்தில் அதைப் படித்து மகிழ வேண்டும் என்பதற்காக (நிஜமாகவே) கதையை வலுக்கட்டாயமாக மறந்துவிட்டிருக்கிறேனாக்கும்! சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க சார்!

    'ஆண்டின் துவக்கத்திலேயே ஒரு பெரும் தொகையை முடக்கிவிடும்' என்ற 'மின்னும் மரணம்' பற்றிய தங்களது கவலையும் நியாயமானதே! இதில் option-2ஐ நான் தெரிவு செய்கிறேன். விலையைப் பற்றிக் கவலையில்லை சார்; ஏனென்றால் நியாயமற்ற விலைக்கு நீங்கள் விற்கப் போவதும் இல்லை. இங்கே நண்பர் ப்ளூபெர்ரி சொல்லியிருப்பதைப் போல 'மின்னும் மரணத்திற்கான முன்பதிவை ஈரோடு புத்தகத் திருவிழாவிலேயே துவங்குங்களேன்?' நிச்சயம் இதுவொரு நல்ல துவக்கமாகவே அமையும்! ன்னான்றீங்க?

    ReplyDelete
    Replies
    1. அக்காங்னுகோ...........(அக்கா .........னுங்கோன்னு வாசிகாதீங்கோ)

      Delete
    2. //ஆண்டின் துவக்கத்திலேயே ஒரு பெரும் தொகையை முடக்கிவிடும்' என்ற 'மின்னும் மரணம்' பற்றிய தங்களது கவலையும் நியாயமானதே! இதில் option-2ஐ நான் தெரிவு செய்கிறேன். விலையைப் பற்றிக் கவலையில்லை சார்; ஏனென்றால் நியாயமற்ற விலைக்கு நீங்கள் விற்கப் போவதும் இல்லை. இங்கே நண்பர் ப்ளூபெர்ரி சொல்லியிருப்பதைப் போல 'மின்னும் மரணத்திற்கான முன்பதிவை ஈரோடு புத்தகத் திருவிழாவிலேயே துவங்குங்களேன்?' நிச்சயம் இதுவொரு நல்ல துவக்கமாகவே அமையும்! ன்னான்றீங்க?///

      நிச்சயமாய்

      Delete
  59. This comment has been removed by the author.

    ReplyDelete
  60. //கட்டி விடுவது சரிப்படாது என்பதாலும் - சூப்பர் 6 இதழ்கள் நமது கிட்டங்கியை நிரம்பவே நேசிக்கப் போவதாய்த் தோன்றுகிறது ! 'சரி, வழக்கமான ரூ.60 ; ரூ.35 இதழ்கள் கொஞ்சமாய் ஓய்வெடுத்தால் ஒன்றும் மோசமில்லை' என்று மனதைத் தேற்றிக் கொள்ளலாம் தான் ; ஆனால் ரூ.500 விலையிலான LMS 300+ பிரதிகள் சந்தாவின் பொருட்டு விற்பனையான பின்னே ; ஈரோடு விழாவினில் இன்னும் கொஞ்சம் விற்றான பின்னே - செமையாய் கையில் தங்கப் போவதை நினைத்தால் இப்போதே வியர்க்கிறது! //

    நாம், நமது நீண்ட கால வெற்றிப்பயணத்துக்கு இப்போது சில சரியான முடிவுகளை எடுக்க வேண்டிய தருணம் என படுகிறது. காமிக்ஸ் மேல் உள்ள அளவுகடந்த passion ஆசிரியர் உட்பட நம்மை எல்லோரையும் இங்கே ஆடிப்படைக்கியறது என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இருக்கமுடியாது.இந்த இன்பத்தை இன்னமும் நீண்ட நாட்கள் அனுபவிக்க, தற்போதைய சூழ்நிலையில் ஒரு சில கட்டுப்பாடுகள் அவசியம் எனப்படுகிறது. எத்தகைய , எவ்வளவு, எதில் கட்டுப்பாடுகள் என்பதை முடிவு செய்வது ஆசிரியர் ஒருவரால் மட்டுமே முடியக்கூடியது. வாசகர்களான நம்மால் முடிவது அவர் எடுக்கும் முடிவுக்கு முழுவதுமாக support செய்வது மட்டுமே.

    ஒரு நபர் ஐந்து புத்தகங்களை வாங்குகிறார் என்பதை விட ஐந்து நபர்கள் தலா ஒரு புத்தகம் வாங்குகிறார்கள் எனபது மேலும் சிறப்பு. நமது die-hard நண்பர்கள், LMS புத்தகத்தை புதிய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த முயற்சிக்கலாம்.

    இந்த பதிவை முழுமையாக படித்துமுடித்த போது ஆசிரியரின் நிர்வாக நிதிச்சுமை இது போன்ற ஸ்பெஷல் வெளியீடுகளின் போது கடுமையாக உள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இது ஒரு தற்காலிகமான நெருக்கடி என்பதும் விரைவில் உற்சாக நிலைமை திரும்பும் என்பதில் ஐயமில்லை. இதை சமாளிக்க அடுத்த வருடத்துக்கான உத்தேச சந்தா தொகையை தற்போதே அறிவித்து, அதை முன்பே செலுத்துபவர்களுக்கு ஸ்பெஷல் discount அறிவித்தால், நிதிநிலைமை சற்றே உற்சாகம்கொள்ளும் எனப்படுகிறது. இன்னமும் ஆறு மாதத்துக்குள் lms காலியாகிவிடும் என்பதால் அப்போது அது சந்தா தொகையை offset செய்துவிடும்.

    FIFA பைனலுக்கு காத்திருக்கும் வேலையில் சிந்தனை குதிரை அநியாயத்துக்கு வேகமெடுத்து ஓடுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த ஐடியா அபத்தமாக பட்டால் SORRY GUYS! CATCH YOU ALL LATER !

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் ஐடியா பாஸ்

      Delete
  61. எடிட்டர் சார் ! மின்னும் மரணம் வண்ண பதிப்பை பொறுத்தவரை option B -யையே
    தேர்ந்த்தெடுப்பேன் .லிமிட்டெட் எடிஷன் என்ற முறையை நீங்கள் பின்பற்றலாம் !
    100-copies --மட்டுமே .ஒரு இதழின் விலை 1500-அல்லது 2000₹ல்.3 மாதம் டெட்லைன்
    முன்பதிவுக்கு .75_காப்பிகளுக்காவது கண்டிப்பாக முன்பதிவு அவசியம் !அதன் பின்னரே
    அச்சு வேலைகள் துவங்கும் .இதழ் கிடைக்க 2 அல்லது 3 மாதம் கால அவகாசம் .போதுமான
    குறைந்த அளவு முன்பதிவுகள் இல்லையெனில் குறிப்பிட்ட இதழை கைவிட்டு பணத்தை
    திரும்பி தருவது (m.o கமிஷன் போக).ரசிகர்களை வாங்கும் வசதி உள்ளோர் அது
    இல்லாதவர் என பிரித்து பார்க்கிறோமா என்ற குற்ற உணர்வு இல்லாமல் செயல்படுவது !
    டாடா விஸ்டா வாங்குவோர் ஒரு பக்கம் இருக்கையில் ஜாகுவார் ,மெர்சிடஸ் பென்ஸ் ,BMW
    ரோல்ஸ் ராய்ஸ் வாங்குவோர் மறுபக்கம் இருக்கத்தான் செய்வர் .முதலீடு உங்கள் பையில்
    இருந்து வருவதால் குறைந்த பிரதிகள் அதிக விலை நஷ்டம் வராவண்ணம் குறைந்த பட்ச
    முன்பதிவுகள் என செய்யலாம் .எல்லோரையும் ஸ்பெஷல் லிமிடெட் எடிஷன் சென்றடைய
    வாய்ப்புகள் குறைவு என்பதாலேயே அதை கைவிட கூடாது .பாகப்பிரிவினை செய்த
    சகோதரர்கள் போல ஏற்கனவே மி.ம (b&w)பிரிந்து கிடப்பது போல வண்ண பதிப்பையும்
    பிரித்து விடவேண்டாம் .உங்களது பர்ஸை சேதாரம் செய்யாவண்ணம் ஒரே இதழாக மட்டுமே .
    ரெகுலர் இதழ்கள் குறைந்த விலையில் கிடைப்பதால் காமிக்ஸ் வசதி படைத்தோர்க்கு
    மட்டுமே என்ற எண்ணம் தோன்ற வாய்ப்பில்லை !அதிக விலை கொண்ட இதழ்கள் என்ற
    கான்செப்ட் -ஏ தவறு என்ற எண்ணம் மேலோங்குவது சரியான முடிவல்ல !உங்களது
    wallet பத்திரமாயிருக்கும் என்ற உத்தரவாதம் தரும் எந்த ஒரு பெரிய முயற்சியும் நல்லதே !
    லயன் வளர்ச்சிக்கும் அத்தகைய முயற்சிகள் வழிவகுக்கும் !

    ReplyDelete
  62. மின்னும் மரணம் வண்ண பதிப்பை 11மாதங்களில் வெளியிடும் "கொத்து கறி "முயற்சி
    தயவு செய்து வேண்டவே வேண்டாம் சார் !

    ReplyDelete
  63. டியர் எடிட்டர் ,

    இந்த பதிவு என் போன்ற வாசகர்களை , இன்னும் இன்னும் கூடுதலாக சிந்திக்க தூண்டுகின்றது . "எண்ணி துணிக கருமம் . துணிந்தபின் எண்ணுவது இழுக்கு " என்னும் வள்ளுவர் வாக்குப்படி இவ்வளவு கஷ்டப்பட்டு நீங்களும் சரி, தங்களின் டீமும் சரி , இரவு பகலாக உழைத்து LMS இனை உருவாக்கி கையில் தவழும் நேரம் , இதழின் விற்பனையினை எண்ணி கவலை கொள்ள வேண்டாம் . நிச்சயம் எமது வாசகர்கள் கை கொடுப்பார்கள் . இது உறுதி . நான் முன்பே ஆர்டர் செய்தது LMS இரு இதழ்கள் . இன்னுமொன்று கூடுதலாக 3 ஆக அனுப்ப முடியுமா சார் .( ஒன்று அனுப்பவே கூரியர் செலவு கூடுதலாக வரும் என்னும்போது ; 3 எவ்விதம் அனுப்ப இயலும் என்று கேட்காதீர்கள் சார் ?) ஏதோ என்னால் முடிந்தது . சூப்பர் 6 சந்தா கட்டியவர்கட்கும் கூடுதல் சந்தா வசூல் செய்தல் எனும் ஆலோசனை எனக்கு சரியானதாகவே படுகிறது . நான் இன்னும் எவ்வளவு அனுப்ப வேண்டும் என்று தயவு செய்து கூற முடியுமா சார்? 'சிக் பில் இன் நிஜம் எது நிழல் எது' இதழுக்கு கல்தா கொடுத்து , "கார்சனின் கடந்த காலம்" வர்ணத்தில் வெளியிடுவது , சரியான முடிவுதான் சார். "சரி...அந்த 500 மட்டுமே தயாரிக்க ஆகும் செலவும் இது தான் ; அதற்கான விலையும் இது தான்" என்று limited editions ஆக வெளியிடும் முயற்சி" இந்த முடிவினை நானும் ஆதரிகின்றேன் . இல்லது விடில் , சந்தா தொகை இனை அதிகரியுங்கள் சார் . கவலையில்லை . எது எப்படியோ சார் , நீங்கள் மட்டும் உங்களின் தடத்தில் தொடர்ந்து பயணிக்க நாம் வழி சமைத்து தருவோம் .

    சார், தயவு செய்து ஒரே குண்டு புக் ஆக வர வேண்டிய "மின்னும் மரணம் " இனை கொத்து பரோட்டா போடாமல் வெளியிட முயற்சி செய்யவும் . I know . Its too hard for you . ஆனால் இப்போதே அதற்கான முன்பதிவுகளின் தொடங்கி விடலாமே சார் ?அப்போதுதான் 2015 தொடக்கத்தில் குறித்த சந்தா வராது விடில் limited edition எனும் மாற்று யுக்தியினை கையாள முடியும் . சார் , LMS இனை பிரான்ஸ் இற்கு அனுப்ப ஆகும் பார்சல் கட்டணம் எவ்வளவு என அறிய தருவதுடன் , நான் மேற்கூறிய 3 LMS அனுப்ப எனது கணக்கில் போதிய அளவு பணம் , இன்னும் எவ்வளவு பணம் நான் அனுப்ப வேண்டும் என அறிய தருவீர்களா ?

    ReplyDelete
  64. # கா.க.கா வண்ணத்தில் என்பது நிச்சயம் மகிழ்ச்சி (என்னுடைய அன்பளிப்பு வீண் போகவில்லை....ஹி ஹி)

    ## மின்னும் மரணம் நிச்சயமாய் ஒரு சஹாப்தம். எனவே option #2 is my choice. 'முன்பதிவிற்கு மட்டுமே' என்னும் tagline-உடன் ஒரு poster-க்கு இப்போதே ஏற்பாடு செய்துவிடுங்கள், புத்தக திருவிழாவில் இடம் பெறுவதற்கு. எனவே இனிவர இருக்கும் மெகா project-களில் (LMS, மின்னும் மரணம்...) அதற்குரிய தபால் கட்டணமும் சேர்ந்தே இருக்கும்படி அறிவிப்புகள் வரவேண்டும்.

    ### முன்பதிவு செய்தும், ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு வருபவர்கள், திருவிழாவிலேயே கூடுமானவரை புத்தகங்கள் வாங்கிகொள்ளவும். (கொரியர் கட்டணம் மிச்சமாகும்). அவர்களை நேரில் சந்தித்து பெற்று கொள்ள முடிந்த வாசகர்கள், அவர்களிடமே பெற்று கொள்ளலாம்.

    ==> மேலும் இது உங்கள் தகவலுக்கு, நான் கேள்விப்பட்டவரை, தமிழ் இலக்கியத்தின் 'அதிதீவிர வாசகர் வட்டமே' 1000-தான். எவ்வளவு அழகிய காவியமானாலும் இன்றைய சூழலில், மிக நல்ல புத்தகங்கள் 'நூலக சந்தா' தவிர்த்து, மொத்தமே ஆயிரம் பிரதிகள் மட்டுமே விற்பனையாவதை மதுரை 'சர்வோதய இலக்கிய பண்ணையில் ஒரு பதிப்பக உரிமையாளரிடம் பேசியபோது அறிந்தேன். நாமும் அந்த 'அதிதீவிர' கூட்டத்தின் மறு கரையில் இருக்கும் அங்கத்தினர்கள் என நினைக்கும் போதே பெருமையாக இருக்கிறது.

    ReplyDelete
  65. lms ன் மெகா விற்பனையை பொறுத்தே அடுத்த மெகா பட்ஜெட் என்னும்போது இதைமுதலில் வெற்றிகரம்
    ஆக்குவோம்..பளா பளா

    ReplyDelete
  66. OPTION B.................. எனது POTION............ஹி ஹி OPTION.............

    ReplyDelete
    Replies
    1. +2படிச்சப்ப மல்டிபிள் சாய்ஸ் கேள்வி ஃபேஸ் பண்ணினோம் !இவ்வளவு கேப்
      கழிச்சு மறுபடியும் விஜயன் சார் அதே மாதிரி கேள்வி கேட்கவும் குளறுதா
      மந்திரியாரே:-))

      Delete
    2. காமிக்ஸ் பொறுத்தவரை எனக்கு OPTION நும் ..........POTION நும் ஒன்னு தான் மிஷ்டர்ர்ர்ரர் selvam abirami(எம்புட்டு மரியாதையை )

      Delete
  67. குண்டு புத்தகங்களின் முன்பதிவு எண்ணிக்கை, எந்தவிதத்திலும் அடுத்த ஆண்டு 60 ரூபாய் Routine இதழ்களின் திட்டமிடல்களை பாதிக்காதவரையில் நிம்மதி சார். மாதம் 2-3 புத்தகங்கள் 60 ரூபாய் விலையில் தொடர்வதே நாம் சந்தோஷப்படவேண்டிய / Celebrate செய்யவேண்டிய விஷயம்.

    பெரிய சைஸ் மெகா பட்ஜெட் இதழ்கள் தயாரிப்பில் கடின உழைப்பை அவசியமாக்குவதோடு தங்களுக்கு மன உளைச்சளையும் தருவது யோசிக்கவேண்டிய விஷயம். சிலர் கூறியதுபோல வெளியானபின் சில மாதங்களில் விற்றுத்தீரும் வாய்ப்பிருந்தாலும், ஏற்கெனவே அனைத்தும் Tight Budget'ல் செல்லும் போது தங்களுடைய Financial Safety மதிக்கப்பட வேண்டிய விஷயம்.

    மின்னும் மரணம், நிச்சயம் Booking செய்தவர்களை தவிர புதியவர்கள் வாங்கும் வாய்ப்பு குறைவு (As a single digest as well as separated volume version).

    ஜூலை மாத 4 புத்தகங்கள் தந்த உற்சாகமேகூட, என்னைப்பொருத்தவரையில் ஒரு ஆண்டுமலருக்கு ஈடானது! Thanks again for the variety in stories per month achieved so far!

    ReplyDelete
    Replies
    1. எங்க நாட்டாமை சொன்ன சொன்னது தான்.............

      Delete
  68. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. அன்புடன் பாசக்கார மந்திரி

      Delete
    2. // நாங்கெல்லாம் இருக்கோம்ல //........
      +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

      Delete
    3. (தேவர் மகன்)

      தம்பி LMS பார்த்து பயப்படுறீகளோ ........

      ஆமாங்க அய்யா..........

      இத்தன நாளா ........1........1.25.....5......10....20.......25..........100.......... 200 ............புக் படிச்ச ..........பயலுவ .........

      ஈரோட்டு புக் FAIR ல LMS ரிலீஸ் பண்ணுறேன்னு சொன்ன பிறகு சந்தா கட்டுவாய்ன்களா ..............

      உம்ம முகத்த பாத்துட்டு............
      உம்ம கையெழுத்து வாங்கிபுட்டு...............
      தானே சந்தா கட்டுவாய்ங்க ............

      காலங்காலமா இதானே ஊர் வழக்கம்..........

      லயன் காமிக்ஸ்.........முத்து காமிக்ஸ் ...........திகில்........... ஜூனியர்............ மினி லயன்.......... படிச்ச பயலுவ.......... மெதுவாத்தான் வருவாய்க.......

      பழக்கிப்புட்டு இப்பிடி பச்ச புள்ளயா நிக்கிறியே ............


      போ ராசா ..........போய்.ரெண்டு மிடறு தண்ணிய குடிச்சுப்புட்டு ......மின்னும் மரணம் பணிய தொடங்கு ராசா ...........நாங்கெல்லாம் இருக்கோம்ல ............

      உங்களைத்தான் நம்புது பூமி
      வண்ணத்தில மின்னுவத காமி

      ஏ எவன்லே தேவர் மகன் TEASER ல எஜமான் பாட்டு போடுறது ............

      Delete
    4. ஹி ஹி கை தவறி ...........அழிச்சுபுட்டேன் ................

      Delete
    5. +++++++++++++++TRAIN விட்டதற்கு நன்றி

      Delete
  69. LMS விற்றுத் தீரும் வரையும் மின்னும் மரணம் மறுபதிப்பை ஒத்திப் போடலாம். டைகர் ரசிகர்கள் ஒத்துக் கொள்ளாமல் போனாலும் டெக்ஸ் அளவுக்கு விற்பனையில் டைகர் சாதிப்பதாகத் தெரியவில்லை. எனவே மி. ம. மறுபதிப்பு என்பது கொஞ்சம் ரிஸ்க் தான். யோசித்துச் செய்யவும். எப்படி இருந்தாலும் சிறப்பு இதழை அடுத்த கோடை வரையோ தீபாவளி வரையோ ஒத்திப் போடலாம். LMS ஸ்டாக் மீதி இருந்தால் சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்றுக் கொள்ளலாம். அதற்குள் மி. ம வும் வந்து விட்டால், இரண்டும் தேங்கிப் போய் விட்டால் காமிக்ஸ் வருவதே நின்று போக வேண்டி வந்தாலும் வரலாம். நிதானமாக நடை போடவும்.

    ReplyDelete
    Replies
    1. // LMS விற்றுத் தீரும் வரையும் மின்னும் மரணம் மறுபதிப்பை ஒத்திப் போடலாம். //
      +1

      Delete
    2. அடுத்த பௌர்ணமி அருகில் தானே இருக்கு

      Delete
  70. OPTION # 2 : Customized imprints !

    ( விரிவான பதிவு ஊர் திரும்பிய பிறகு. நன்றி சார் ! )

    ReplyDelete
  71. • சிக் பில்லின் நிழல் எது ? நிஜம் எது ? மறுபதிப்பு வேண்டாம் !

    • கார்சனின் கடந்த காலம் - வண்ணத்தில் வேண்டும் !

    ReplyDelete
  72. ஏற்கனவே சூப்பர் 6சந்தா கட்டியவர்களுக்கு விலை ஏற்றம் கிடையாது என்பது ஆசிரியரின் பெருந்தன்மையை காட்டுகிறது. ஆனால் அதற்காக நாம் அதை அப்படியே ஏற்க கூடாது என்பது என் கருத்து நண்பர்களே. ஏற்கனவே சூப்பர் 6 சந்தா கட்டிய என்னை போன்றவர்கள் இன்னும் எவ்வளவு அதிகம் கட்ட வேண்டும் என்று சொல்லுங்கள் சார். நான் செலுத்த தயாராக உள்ளேன். அனைத்து நண்பர்களும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொள்கிறேன். தயவுசெய்து யாரும் வம்புக்கு வரவேண்டாம். மின்னும் மரணத்தை பொருத்த வரை ஆப்சன் 2 நன்று சார். கார்சனின் கடந்த காலம் கலரில் என்பதை மகிழ்ச்சி உடன் வரவேற்கிறேன் சார் .

    ReplyDelete
  73. எடிட்டரை உசுப்பேத்தவும்வேண்டாம் ரணகளப் படுத்தவும் வேண்டாம்..பொறுமை காப்போம்
    lms வெற்றி கரமாக முடிந்தபின் மரணம் மின்னட்டும்..பளா பளா

    ReplyDelete
  74. எல்லோருமே உணர்ச்சி வசப்பட்டு இருப்பதால் மார்சல் டைகர் teaser ஐ யாரும் பார்க்கவில்லையா ..

    கடைசி படத்தில்வெட்டுக்கிளி யின் எதிரிகள் ஏராளம் ..

    ReplyDelete
    Replies
    1. திரு வெ.வீ! மிகவும் சங்கடங்கள் என்றாலே தவிர ஆசிரியர் இது போன்ற
      விஷயங்களை அவருடைய பதிவுக்கு கொண்டு வருவதில்லை !அதனால்தான்
      எல்லோரும் உணர்ச்சி வசப்படுகிறோம் !ஆசிரியர்க்கு சிரமமான நேரத்தில் தோள்
      கொடுக்க வேண்டும் என நினைப்பது பதிவுகளில் இருந்து தெரிகிறது !டீஸர்
      படங்கள் blind spot -க்கு பலியாகி விட்டன !

      Delete
  75. அடங்குதலே ஆனந்தம் ! இந்த வார்த்தை யாருக்கு சொந்தமோ அவருக்கு வெட்டுக்கிளி
    தன் சிறகுகளை முழுவதும் விரித்து பாராட்டு சொல்கிறது நன்றி நன்றி பளா பளா

    ReplyDelete
  76. கொள்கை நமக்கெல்லாம் லட்சியமாக இருந்தால் அவருக்கு இதயமாகவே இருக்கிறது..நாடோடி மன்னன்
    வசனம் ..அது போலதான் காமிக்ஸ் மற்றவர்களுக்கு பொழு து போக்காய் இருந்தாலவெட்டுகிளிக்கு
    உயிர் மூச்சாகவே இருக்கிறது..

    ReplyDelete
  77. After reading this post I feel Reprint of ‘Minnum Maranam’ is a unnecessary burden now. Rather than going for big project in single reprint issue, we can try the same in new issues. Or we can bring more than 10 reprints of other ‘real old’ stories. (For me ‘minnum maranm’ reprint not drawing much interest due to color, quality may be new But not the story)

    ReplyDelete
  78. டியர் எடிட்,

    உற்சாகம் கரையோடும் இத்தளத்தில், நிதர்சனங்கள் உதாசினபடுத்தபடுவதன் விளைவே, தற்போதைய முடக்க நிலை., ஒவ்வொரு முறை ஸ்பெஷல் இதழ் என்ற அறிவிப்பு வரும்போதும், அதுவும் முறையான திட்டமிடல் இல்லாமல், நடுவே நுழைக்கபடும் போதும், - வாசகர்கள் என்ற கட்டத்தை தாண்டிய Fanboy ஆசைகளுக்கு, ஒரு சிறு பதிப்பகம் தீனி போட நினைப்பதற்கு, வினை இதுவாக தானே இருக்கும் என்ற மினநிலைக்கு வலு சேர்க்கும் சங்கதியாக தானே எடுத்து கொளள முடியும்.

    சிறு வாசகர் வட்டத்தை கொண்ட ஒரு நிறுவனத்திற்கு, 200, 300, 400, 500 ரூபாய் ஸ்பெஷல் இதழ்கள் ஒரு விஷபரீட்சை, என்பதை நான் பலமுறை வலியுறுத்தியிருக்கிறேன்.... ஆனால், அவைகள் தீவிர வாசகர்களின் ஆரவார சத்தத்தின் நடுவே தொலைந்து போனது தான் நடந்தது.

    குண்டு புத்தக ஆர்வலர்கள், வியாபார ரீதியாக அவை தள்ளாடும் முதலீடு என்பதை இனியாவது புரிந்து கொண்டால் சரி.... வெளிநாட்டு காமிக் ஜாம்பவான் நிறுவனங்களே முயல்வதற்கு தயங்கும் ஒரு முயற்சி / சரளமாக மாதம் ஒரு புத்தகம் வர வேண்டும் தமிழில் என்ற குறைந்தபட்ச எண்ணத்திற்கு மூடுவிழா நடத்தாமல் இருந்தால் சரி தான்.

    என்னை பொறுத்த வரை லயன், முத்து இதழ்கள் தலா மாதம் 1 வர வேண்டும் என்பதே முக்கியமான குறிக்கோளாக எடுத்து கொள்ளபட வேண்டும். அதனுடன் மறுபதிப்பாக ஒரு இதழோ, இல்லை கிராபிக் நாவலாகவோ இன்னொரு இதழ் வந்தால் பெரியது. இதழின் விலை 60 என்ற தற்போதைய பாணி தொடர வேண்டும். சிறு இதழ்களுக்கான 35 ரூபாய் விலை, ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்... அதையும் கைவிட வேண்டாம்.

    வருடம் 1 அல்ல 2 ஸ்பெஷல் இதழ்கள் முன்கூட்டியே போதிய அவகாசத்தில் விளம்பரம் செய்து, முன்பதிவுகள் கேட்டு பெற்றுகொள்ள வேண்டும். கூடவே +6 சூப்பர் 6 போன்ற, வருட சந்தா அறிவிப்பு செய்தபின்பு நடக்கும் இடைசொறுகல்களை தவிர்த்தால், எல்லாம் சுகமே.

    லயன் முத்து வின் 2011 மறுவருகைக்கு பிறகு ஒரு முக்கிய காலகட்டமாக நான் இதை கொள்வேன், அதை எடியும் உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். தீர்க்க பார்வையுடன் கொண்ட சீரான முடிவுகள் எடுக்கபட வேண்டிய கட்டம் இது என்பது காலத்தின் கட்டாயம்.

    ReplyDelete
    Replies
    1. பதிவின் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான எனது அபிப்பிராயங்கள் :

      1. சந்தா பிரதிகளுக்கு விலைவாசி உயர்வு இல்லை என்பது வரவேற்கதக்க செய்தி. விலைவாசி உயர்வுகள் சந்தாதரர்களை பாதிக்க கூடாது என்பது அனைத்து பதிப்பாளர்களுமே தொடர நினைக்கும் ஒரு Gentleman Agreement. நமது பதிப்பகமும் அதை தொடர்வதில் சந்தோஷம்.

      2. மின்னும் மரணம், மாதம் ஒரு பாகம் என்று 11 மாதங்கள் வெளிவருவதே சிறந்தது... இவ்வழியில் தனி தனி அட்டைகள், சேகரிப்பிற்கு உகந்த மேற்கத்திய பாணி முறை, என்று சிறப்பாக இருக்கும். இது மின்னும் மரணத்திற்கு மட்டுமல்,, வருங்கால சேகரிப்பு மறுபதிப்புகள் இப்பாணியில் வருவதே சிறப்பு என்பது என் கருத்து.

      3. கார்சனின் கடந்த காலம் வண்ணத்தில் மட்டுமே வர வேண்டும். அதற்காக சிக்பில்லை பலி கொடுப்பதில் (அதுவும் அது சமீபத்திய இதழ் என்னும் விஷயத்தையும் கணக்கில் கொண்டு விட்டால்) தப்பே இல்லை.

      4. வருங்கால ஸ்பெஷல் இதழ்கள், அல்லது குண்டு புத்தகங்கள் முன்பதிவிற்கு மட்டுமே, சந்தாவில் இணைப்பு இல்லை என்பதை அறிவித்து விட்டு, இத்தனை முன்பதிவு வந்தால் இந்த விலை என்று முன்பே அறிவித்து, அதற்கு பிறகு வரும் எண்ணிக்கையை கொண்டு அது சாத்தியமா என்று முடிவெடுப்பதே சிறந்தது. ஒரு இரு ஸ்பெஷல் பதிவுகள் ஓராண்டிற்கு முன்பே இத்திட்டபடி நடந்து விட்டால், நிதர்சனத்தை பொறுத்து, மற்ற ஸ்பெஷல்கள் திட்டங்களை செலுத்தலாம், இல்லை முறறிலும் மாத இதழ்களாகவே தொடரலாம். வருடம் ஒன்று அல்ல இரண்டு ஸ்பெஷல்கள் என்னை பொறுத்த வரை ஓகே.... ஆனால், அது தேவைபட்டால் மட்டுமே என்ற நிலையில் இருக்க வேண்டும், என்னும் வேண்டுகோளுடன்.

      Delete
    2. அதே.. அதே.. சீரான வேகமே பாதுகாப்பானதும் ஆரோக்கியமானதும். பேருந்துக்கு விமான பெட்ரோல் போட்டால் அது ஆபத்துக்கு வழிவகுக்கலாம்.

      புதிய பரீட்சார்த்த ;முயற்சிகளுக்கு நான் எதிர்ப்பாளன் அல்ல. ஆனால், அவை ஆசிரியரின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாகி மனமுடையச் செய்வதைவிட சீரான வெளியீடுகள் தொடர்ந்து வருவதே நல்லது அல்லவா...?

      Delete
    3. திரு ரபீக் ! தெளிவான சிந்தனை !சீரிய எழுத்துக்கள் !நம் காமிக்ஸ் மேல் உள்ள
      அக்கறை உங்களது எழுத்தில் தெரிகிறது .குண்டு புத்தகங்கள் குறித்து உங்களோடு
      முரண்படவே விரும்புகிறேன் !ஆனால் வணிக ரீதியாக நிறைய இடர்பாடுகள்
      இருப்பதாக தெரிவதால் மனம் சஞ்சலத்தில் ஆழ்கிறது !₹400 விலையில் வந்த NBS
      இவ்வளவு சிரமங்களை சந்திக்க வில்லையே .

      Delete
    4. //400 விலையில் வந்த NBS
      இவ்வளவு சிரமங்களை சந்திக்க வில்லையே .//
      =================================================
      +++++++++++++++++++++++++++
      =================================================

      Delete
    5. டியர் ரபீக் !!!


      ///மின்னும் மரணம், மாதம் ஒரு பாகம் என்று 11 மாதங்கள் வெளிவருவதே சிறந்தது... இவ்வழியில் தனி தனி அட்டைகள், சேகரிப்பிற்கு உகந்த மேற்கத்திய பாணி முறை, என்று சிறப்பாக இருக்கும்.///

      மின்னும் மரணம் ஒரே புத்தகமாக வருவதைவிட இது கூடுதல் சிக்கல்.இடைப்பட்ட மாதங்களில் டாலருக்கு எதிரான நமது ரூபாயின் மதிப்பு வீழ்ந்தால் ரெகுலர் இதழ்களின் விலையேற்றத்தில் மின்னும் மரணம் "மரணமடைய" வாய்ப்பிருக்கிறது ஸார்...!

      Delete
    6. ஸ்பெசல் இதழ்களின் print run -1000 என்ற ஒரு அளவுகோலை செயல்படித்திட்டால் இப்போதைய பிரச்னையை சுலபமாக தீர்க்கமுடியும்.

      Delete
    7. // 400 விலையில் வந்த NBS
      இவ்வளவு சிரமங்களை சந்திக்க வில்லையே . //

      Good point, குண்டு புத்தகங்கள் தகுந்த திடத்துடன் வெளியிட்டால் நிச்சயம் வெற்றிபெறும். மேலும் குண்டு புத்தகங்கள் ஒருவித உற்ச்சாகத்தை தருகின்றன.

      Delete
    8. ஸ்பெசல் இதழ்களின் print run -1000 என்ற ஒரு அளவுகோலை செயல்படித்திட்டால் இப்போதைய பிரச்னையை சுலபமாக தீர்க்கமுடியும்.
      +9999999999999999999

      400 விலையில் வந்த NBS இவ்வளவு சிரமங்களை சந்திக்க வில்லையே
      +9999999999999999999

      Delete
  79. விஜயன் சார், வெளிமாநிலங்களுக்கான கட்டண உயர்வை தெரிவித்தீர்கள்...அப்படியானால் வெளிநாடுகளிற்கும் விலை அதிகரித்திருக்கின்றதா? ஆமெனில்,நான் செலுத்தவேண்டிய தொகையை அறியத்தாருங்கள்.ப்ளீஸ். ஆனால் ,இங்கிருந்து சிறிய தொகையை அனுப்புவது சிரமமென்பதால் தயைகூர்ந்து அடுத்தவருட சந்தா தொகையை குறிப்பிட்டீர்களெனில் அதனையும் இணைத்தே அனுப்பிவிடுகின்றேன்.மின்னும் மரணத்தை பொறுத்தவரையில் option # 2 ஐ தான் நான் மிக விரும்புகின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் எவ்வளவு அனுப்ப முடியுமோ அவ்வளவு அனுப்பலாம். ஆசிரியர் கணக்கு வைத்துக் கொள்வார். நான் அப்படித்தான் செய்கிறேன். ஒவ்வொரு முறை பணம் அனுப்பும் போதும் "current balance" எவ்வளவு என்று அவர்களே அறியத் தருகிறார்கள்.

      பி.கு: நான் இருப்பது அமெரிக்காவில்.

      Delete
  80. சந்தாவினுள் நுழைத்தது எனக்கும் விருப்பம் இல்லை. எல்லோரும் தனியே கடையில் கிடக்கும்போது வாங்கி கொள்ளலாம் என்று நினைத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

    கார்சனின் கடந்த காலம் கலரிலேயே போடலாம். மின்னும் மரணம் வேணும் என்பவர்களை கன்பார்ம் பண்ண சொல்லலாம். அந்த நம்பர் ரூ 500/600 க்கு ஒத்து வந்தால் ஓகே இல்லை என்றால் தனித்தனியே போடுங்கள்.

    ReplyDelete
  81. அருமை நண்பர் Rafiq Raja அவர்களின் ஆழ்ந்த கருத்துக்களை வெட்டுக்கிளி வரவேற்கிறது..welcome welcome
    பளா ..பளா

    ReplyDelete
  82. இப்போதைய பயணம் சீரான ஒன்றே என்பதை சென்னை புத்தக கண்காட்சி வரை பொறுத்திருந்தால் உணர முடியும் ! சார் உங்களது அதிரடிகள் இப்போதைய option 2 வை தேர்வு செய்ய உதவி செய்கின்றன ! இதில் வெற்றி பெற்றால் புத்தகம் கட்டாயம் வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சந்தா தாரர்கள் உயரும் (அந்த குறிப்பிட்ட இதழ்களுக்காவது )வாய்ப்பு உண்டு ! மின்னும் மரணம் அறிவிப்பு ஒரு வருடங்கள் ஆகி விட்டதையும் கணக்கில் சேர்த்தால் .....lms இதழ்கள் விற்று காலி ஆனவுடன் மின்னும் மரணத்தை துவங்கி விடலாம் !

    குண்டு புத்தகங்கள் எப்போதும் கை விட்டதில்லை ! மேலே நண்பர் கூறியது போல ரத்த படலம் ஒன்றரை வருடங்கள் , nbs எட்டு மாதங்கள் , lms ஐந்து மாதங்கள் போதும் !

    ReplyDelete
    Replies
    1. மறுபடி மறுபடி இந்த விஷயத்தில் பாஸிட்டிவ் ஆக நீங்கள் எழுதுவது சற்று
      சோர்ந்து போயிருக்கும் மனதிற்கு உற்சாக டானிக் போலிருக்கிறது !

      Delete
  83. டியர் விஜயன் சார்,

    தயவு செய்து இந்த வாரம் முழுவதும் வாசகர்களின் அபிபப்ராயத்திற்காக தாங்கள் காத்திற்க வேண்டுகிறேன். இங்கு சில வாசகர்கள் குறிப்பிடுவதைப் போல் எந்தவித அபாயமும் ஏற்பட வாய்ப்பே இல்லை.


    மாறாக ஒளிமயமான எதிர்காலம் நம் கண்முன்னே தெரிகிறது. தடங்கல் என்பது இன்பத்திற்கான பூட்டாக இருக்கலாம் ; அதன் திறவுகோல் எதுவென்று தெரிந்து விட்டால், அந்த சுவர்க்க பூமி நம்முடைய ஆளுகைக்கு உட்பட்டதாகி விடும்.

    எனவே நமக்கு ஏற்படும் தடைகள் யாவும் அடுத்த கட்ட சாதனைக்காக மட்டுமே, என்பது வெற்றியின் இரகசியம்.

    எனவே என்னுடைய விரிவான பதிவை வியாழன் அன்று படித்து விட்டு இறுதி ஆலோசனை செய்யவும் சார். ப்ளீஸ்...

    அன்புடன்,
    தற்போது அயலூரில் இருக்கும் மரமண்டை !

    ReplyDelete
    Replies
    1. நல்ல வார்த்தைகளை சொல்கிறீர்கள் !சீக்கிரமே வேலையை முடித்து வந்து
      எழுதுங்க !

      Delete
    2. //ஒளிமயமான எதிர்காலம் நம் கண்முன்னே தெரிகிறது.//
      //நமக்கு ஏற்படும் தடைகள் யாவும் அடுத்த கட்ட சாதனைக்காக மட்டுமே,//

      Delete
  84. டியர் விஜயன் சார்,

    மாத இதழ்கள் தடையின்றி வெளிவருவதும், மாத இதழ்களின் சந்தா அதிகரிப்பதுமே ('ஒரு வாசகர் பல சந்தாக்கள்' அல்ல... புதிய வாசகர்கள்!) தற்போதைய அவசியத் தேவைகள். அடுத்த ஆண்டில் இருந்து, ஆண்டுக்கு ஒரு சந்தா மட்டும் அறிவியுங்கள்.

    இடையே, சேகரிப்பாளர் (குண்டு) சிறப்பிதழ்களை, "வரவேற்பைப் பொறுத்த விலை" நிர்ணயித்து வெளியிடுங்கள். ஆனால், அத்தகைய இதழ்களை - ஆண்டு மலர், தீபாவளி ஸ்பெஷல், கோடை மலர், புக் ஃபேர் ஸ்பெஷல் போன்ற வழக்கமான "ஸ்பெஷல்" பெயர்களின் கீழ், ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத கதைகளின் (குண்டுத்) தொகுப்பாக வெளியிடாமல், 'நிஜமான' Collector's edition-களாக வெளியிடுங்கள்!

    உதாரணத்திற்கு:
    * ப்ளூபெர்ரி - மின்னும் மரணம் (and other story arcs)
    * டெக்ஸ் - ஒன்றுக்கு மேற்பட்ட கதைகளின் தொகுப்புகள்
    * தோர்கல் - முழுமையான கதைத் தொகுப்புகள் (story arcs)
    * Metabarons / Incal போன்ற science fiction-கள் மற்றும் இதர வகைக் கதைகள்
    * Bouncer போன்ற ராயல்டி தொகை அதிகமான காமிக்ஸ்கள்!

    இவை சந்தாவில் அடங்காத (விலையுயர்ந்த) Limited edition-கள் என்பதால், நீங்கள் இரும்புக்கை மாயாவி அல்லது ஸ்பைடர் கதைகளின் தொகுப்புகளையே வெளியிட்டாலும் கூட யாரும் குறை கூறப் போவதில்லை - வேண்டியவர்கள் மட்டும் வாங்கிக் கொள்ளட்டும்!

    தவிர, சிறப்பிதழ்களின் விலையை நிர்ணயிக்கும் போது Amazon, Flipkart, Ebay போன்ற இணைய வர்த்தக நிறுவனங்களின் கமிஷன் தொகையையும் மனதில் கொண்டு நிர்ணயிக்கவும்! நீங்கள் என்னதான் வேர்ல்ட் மார்ட்டில் விற்றாலும், புதிய வாசகர்களை சென்றடைவதில் அது மேற்சொன்ன நிறுவனங்களுக்கு ஈடாகாது!

    உதாரணத்திற்கு, சில மாதங்கள் முன்னர் வரை, அமேசான் Top selling Comics & GNs பட்டியலில் நமது இதழ்களும் இடம் பெற்றிருந்தன! Ebay-ல் Comics என்று தேடினால், கீழே related search-ல் "tamil comics" என்றும், "Tamil Comics" என்று தேடினால் "muthu comics, lion comics" என்றும் - இன்றளவும் காட்டுகிறது!!!

    கார்சனின் கடந்த காலம் - நீங்கள் இப்போது B&W-ல் வெளியிட்டால், எப்படியும் சில மாதங்கள் / வருடங்கள் கழித்து வண்ண மறு-மறு-பதிப்புக்கான கோரிக்கைகள் வரத் தான் போகின்றன... ஆகவே... ;-)

    மின்னும் மரணம் - தனித்தனி அட்டைகள் கொண்ட 11 இதழ்களாக ஒரே மாதத்தில் வெளியிட்டாலும்; அல்லது ஒவ்வொரு மாதமாக பிரித்துப் பிரித்து நவம்பர் 2015 வரை வெளியிட்டாலும் எனக்கு ஓகே தான் எ.எ.க. :-D

    //Proff கூரியரில் இதழ்களைப் பெற்றிடக் கோரியுள்ள வெளிமாநில நண்பர்கள் 30-க்கு சற்றே அதிகம் ; அவர்களுக்கு மாத்திரமே ரூ.110 உயர்வு//
    மீ த 31 ;-)

    //நமது ஆன்லைன் விற்பனைத் தளத்திலும் LMS -க்கான முன்பதிவு ஏற்பாடுகள் துவங்கப்பட்டு உள்ளன//
    ரொம்பவே குழப்பமான லிஸ்டிங்! "தமிழ்நாடு, பெங்களூரூ தவிர்த்து எமக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை" என்று சொல்வது போல இருக்கிறது! :)

    நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்கு விரிவான ஒரு கருத்தைப் பகிர்ந்திருக்கிறேன்... ரொம்பவே preachy ஆக இருப்பதாக எனக்கே தோன்றுவதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்! (hindsight) அட்வைஸ் மழை பொழிவதும், கருத்து சொல்வதும் எளிதான காரியங்கள் தான் ... இல்லையா?! :)

    ReplyDelete
    Replies
    1. குறைந்த அளவு வாசகர்கள் மட்டுமே வாங்கக் கூடிய Limited Edition-கள் பற்றி நான் unlimited ஆக எழுதி இருப்பது போல எனக்குத் தோன்றுவதால் - என் முதல் பின்னூட்டத்தின், முதல் பத்தியை மீண்டும் ஒரு முறை இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்! அதிகம் பேரை சென்றடையக் கூடிய 25 / 35 / 60 / 65 / 120 விலையிலான மாத இதழ்களை தொடர்ந்து வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்! :)

      Delete
    2. கார்த்திக் உங்களின் முதல் 4 பாராக்களில் உள்ள கருத்துகள் அருமை.

      Delete
  85. Dear Editor sir,

    The only reason i didnt subscribed for any of the issues is because i dont like to buy superhero books. I can choose the books and buy it on world mart. I just want to let you know that you should understand comic fans like me. Please consider releasing tex willer every month. Colour is not a big deal, content is the real pleasure.

    ReplyDelete
  86. I checked in world mart and found a new category called "Magnum special". Somebody please explain me what it is and what stories it contains.

    Thanks in advance

    ReplyDelete
    Replies
    1. "MAGNUM SPECIAL "-A SPECIAL ISSUE PERTAINING TO LION COMICS 30TH
      ANNIVERSARY CELEBRATION .TOTAL 900 PAGES .568COLOUR +332B&W,3NEW
      CHARACTERS .FOR YOUR KNOWLEDGE TEX IN COLOUR NEW STORY 228PAGES
      WILL BE AVAILABLE FROM AUGUST 2ND (LAUNCH DATE ).KINDLY PLACE ADVANCE
      ORDER FOR YOUR COPY

      Delete

  87. 1. கார்சனின் கடந்த காலம் - வண்ணத்தில்.... மிகவும் மகிழ்ச்சி!!! வேறு அபிப்ராயங்கள் வேண்டாம்...
    2. மின்னும் மரணம் - ஒரே தொகுப்பாக வெளியிடவும்... அதற்கான முன் பதிவினை இம்மாத முதற்கொண்டே தொடங்கலாம்... சந்தா செலுத்தி உறுதி செய்திட நான் தயார்....
    3. Limited / Unlimited Edition -- எதுவாகினும் நலம். (ஆனால் வாசக நண்பர்களுக்கு ஓர் நினைவூட்டம்- இரத்தப்படலம் பிரதிகள் தீர்ந்தவுடன் அதிகம் பேர் அப்புத்தகம் கிடைக்காமல் இன்னமும் வருத்தத்தில் உள்ளனர். எனவே Limited edition - ல் முந்திக் கொள்ளல் வேண்டும்.

    ReplyDelete
  88. டியர் விஜயன் சார் ,lms தயாரிப்பு செலவு சில லகரங்களை முழுங்கி இருப்பதால் ,உங்களின் பயம் நியாயமான ஒன்றே !, but ,lms கண்டிப்பாக சாதனை படைக்கும் என்று தங்களுக்கு தெரிந்திருந்தும் ,அதை எங்கள் வாயால் (கையால் )சொல்ல (எழுத ),வைக்கவேண்டும் என்றே தாங்கள் இந்த பதிவை இட்டுள்ளதாக எனக்கு தெரிகிறது :-)
    கண்டிப்பாக erode bookfair ல் நானே கண்டிப்பாக 10 பிரதிகள் lms வாங்கி நண்பர்களுக்கு பரிசளிக்க வேண்டும் என்று நினைத்து உள்ளேன் !என்ன erode bookfair ல் 10%கழிவு போக lms rs .450 க்கு கிடைக்கும் என்று இருந்தேன் ,பட்,அங்கும் rs 500 என்பதால் , சந்தாதாரர்கள் முகத்தில் மௌவுன புன்னகை பூக்ககூடும் :-),
    மின்னும் மரணம் புத்தகத்தை முன்பே அறிவித்ததை போல் ஒரே புத்தகமாக வெளியிடுங்கள் சார் !ப்ளாக் ல் கூவும் ஒரு சிலருக்காக தங்கள் முடிவை மாற்றவேண்டாம் .ப்ளாக் ல் எழுதாமலும் ,லெட்டர் எழுதாமலும் உள்ள ,மின்னும் மரணம் ஒரே புத்தகமாக வரும் என்று நினைக்கும் மௌன பரிதாப வாசகர்களை நினைத்துபாருங்கள் !!
    மேலும் இந்த தளத்தின் மேற்பகுதியில் கார்சனின் கடந்த காலம் கலரில் வேண்டுமா என்று வோட்டிங் வைத்து உள்ளீர்கள் , கடந்த கால வோட்டிங் தில்லுமுல்லுவை பற்றி உங்களுக்கு நன்றாக தெரிந்திருந்தும் , ஏன் சார் மறுபடி மறுபடி வோட்டிங் வைக்கிறீர்கள் ! நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் எங்களுக்கு சம்மதம் ! இந்த ப்ளாக் ல் ஒருசிலர் கள்ளவோட்டு போட்டு கா .க .கா .கலரில் வேண்டாம் என்று வந்தால் பெரும்பாலான வாசகர்களின் மனதுக்கு நெருக்கமாக உள்ள கா .க .கா . கலர் புத்தகத்துக்கு ஆப்புதானா ??????? தயவு செய்து அந்த வோட்டிங் சிஸ்டத்தை எடுத்து விடுங்கள் சார் !!!!

    ReplyDelete
  89. மேலும் மின்னும் மரணம் புத்தகத்தை தன்னுடைய ஒரே கையால் தாங்கி பிடிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு நண்பர் தாரை பரணி ,வீட்டில் தினந்தோறும் ,பஸ்கி ,தண்டால் ,எல்லாம் எடுத்து வருகிறார் :-)
    சென்ற வாரத்தில் கிளினிக் முடித்து விட்டு on the way ,தாரை க்கு பரணியை சந்திக்க அவர் வீட்டுக்கு சென்ற போது ,வீட்டுக்கு வெளியே ,அய்க் ,அய்க் ,என்று காரத்தே சத்தம் கேட்டதால் ,வந்த சுவடின்றி திரும்பி விட்டேன் !! ஒருவேளை பழைய காமிக்ஸ் இரவல் கேட்க வந்தவர்களை விரட்டும் வழியா இதுவென்று தெரியவில்லை :-)...

    ReplyDelete
  90. நமது காமிக்ஸ் வாசகர்கள் அனைவரின் மனதிலும் Heroவாக காட்சியளிக்கும் தாங்களிடம் இருந்து இதுபோன்ற தன்னம்பிக்கை குறைவான வார்த்தைகளை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே வெளியான புத்தகங்கள் எல்லாம் தேங்கியா உள்ளது, இல்லையே. அப்படி இருக்க இப்போது ஏன் வீண் கவலை. வாசகர்களுக்கு ஏற்படும் சில நடைமுறை சிக்கல்கள் மற்றும் சோம்பேறித்தனத்தால்தான் சந்தா எண்ணிக்கை குறைகிறதே ஒழிய, மற்றபடி வேறு காரணங்கள் எதுவும் இல்லை. LMS நிச்சயம் சாதனை படைக்கும். அதைபற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். மாதம் ஒரு இதழ் என்று 11 மாதங்கள் தொடர்சியாக, தனித்தனியாக மின்னும் மரணம் தயவு செய்து இந்த காரியத்தை செய்துவிட வேண்டாம். LMS பாதிக்கும் மேல் விற்பனை ஆனவுடன் மின்னும் மரணம் பணியை ஆரம்பிக்கவும். OPTION # 2 : அருமையான யோசனை. அதை உடனடியாக செயல்படுத்தலாம். மேலே மதியில்லா மந்திரியின் தேவர்மகன் கமெண்ட் 100/100 உண்மை. இந்த பணப் பற்றாக்குறை ஒரு தற்காலிக தடுமாற்றமாகத்தான் இருக்கும். கார்சனின் கடந்த காலம் வண்ண மறுபதிப்புக்கு என் முழு ஆதரவு.

    ReplyDelete
  91. மின்னும் மரணம் நமது ரெகுலர் வெளியீடுகளை பாதிக்கும் என்றால் அதை 2016க்கு .........ஐயோ அம்மா . . . ஆ ஆ ஆ டமார் மடார். . . . . ( ரத்தம் வழிய வழிய ஓட்டம் ஓடு...)

    ReplyDelete
  92. எனது கருத்துக்கள்

    1.மின்னும் மரணம் ஒரே புத்தகமாக வேண்டும்,(விலை அதிகமானாலும் பரவாயில்லை)

    2.மெகா புத்தகங்களின் முன் பதிவை தனியாக அறிவிப்பதே நலம்,

    3.நிழல் 1 நிஜம் 2-ஐ கலர் கா.க.காலத்திற்காக பலி கொடுக்கலாம்,(நண்பர்களே , நிழல் எது நிஜம் எது சிக் பில் கதை அல்ல)

    4.LMS -ஐ சீக்கிரமா வாங்கிடுங்கோ, அப்புறம் கிடைக்காது.

    5.தபால் செலவை காரணம் காட்டி சந்தா கட்டாத நண்பர்கள் தங்கள் முடிவை மாற்ற முயற்சி செய்யலாமே,





    ReplyDelete
  93. டியர் எடிட்டர்,

    மின்னும் மரணம் collectors edition குறித்து எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் உண்டெனும் போதும், நண்பர்கள் பலர் ஆவலாய் இருப்பதால் ஒரு யோசனை:

    இந்த ஈரோடு புத்தக விழா முதல் அடுத்த ஈரோடு புத்தக விழாவிற்கு மூன்று மாதங்களுக்கு முன் வரை - அதாவது 9 மாதங்கள் இதற்கான முன்பதிவு window திறந்து வைக்கலாம். நீங்கள் நினைக்கும் அளவு முன்பதிவுகள் சேர்ந்தால் முழுத் தொகுப்பாக வெளியிடலாம். இல்லாத பட்சத்தில் இரு தனி தொகுப்புக்களை ஈரோடு 2015 மற்றும் 2016 சென்னை கண்காட்சி சமயத்திலும் வெளியிடலாம். (ஆங்கிலத்திலும் இரு-தொகுதிகளாய் தான் வந்துள்ளது).

    ஒரு large window கொடுத்த மாதிரியும் இருக்கும் - புத்தகம் பர்சை பதம் பார்க்காமலும் இருக்கும்.

    Note: ஒரு வேளை ஒரே குண்டாய் வேண்டும் நண்பர்கள் இரு தொகுதிகளையும் சேர்த்து bind செய்து கொள்ள குண்டு புக்கின் குரியர் மிச்சப் பணம் உதவிடும் :-)

    ReplyDelete
  94. சார் !ஒரு கனிவான நினைவூட்டல் !தொடராக வந்த கதைகளில் விஸ்வரூபம் எடுத்து ஒரே
    குண்டு கதை புத்தகமாக வந்தது ரத்தபடலம் மட்டுமே !என் ஞாபகத்தில் 3பகுதிகளாக வந்த
    டெக்ஸ் கதைகள் கூட ஒரே புத்தகமாக மறுபதிப்பு செய்யப்படவில்லை !
    ரத்தபடலம் சாகா -ஒரு தனித்துவம் பெற்றிருந்தது !எந்த வகையில் என்றால் அதன் முழு
    கதையும் தனி இதழாகவோ சிறப்பு மலர்களின் ஒரு அங்கமாகவோ வெளியாகவில்லை !
    வெள்ளிகடிகாரங்கள் பகுதிக்கு முன் வரை மட்டுமே அவ்வண்ணம் வெளியாயிற்று !
    இறுதி பகுதி அறிய விரும்புவோர் இரத்தபடலம் சாகா வாங்குவது அவசியமாயிற்று !

    மின்னும் மரணம் வண்ண பதிப்பாயினும் இந்த அனுகூலம் இல்லாதது !
    ஒரே இதழாக வருவதே அதன் பலம் !(அதன் முழு கதையும் வெளியாகி உள்ள நிலையில் )
    அலங்காரம் செய்த அழகிய மணப்பெண் போட்டோ என்றாலும் கையிது ,காலிது ,முகமிது
    கழுத்திது என தனித்தனியாக வெட்டி தருவது தகுமோ ?

    ReplyDelete
  95. Dear Karthick,
    You have hit the nail on the head !! Each one of your point is very valid, hope the editor reads your comment. I really want our Comics to last long, I'm not interested in the increasing number of books each month if it threatens its very existence. The Editor must make sure of his financial independence before acceding to the demands of the fanboys like me...this is a good thing to have happened now.. its a reality check.. I think going thro such a crisis will make us stronger...it will define the path we need to take in the future.. I have all the confidence in our little tight knit group to come out with flying colors...friends try to reduce the Editors burden by purchasing more issues of LMS so that you can gift it to friends birthdays, marriages etc...etc...

    ReplyDelete