Powered By Blogger

Monday, December 23, 2013

"பி.தி.பா.ப." = பின் திரும்பிப் பார்க்கும் படலம் !

நண்பர்களே,

வணக்கம். நான் எத்தனை பெரிய ஞானி என்பதை அமெரிக்காவின் ஒரு குளிர் நடுக்கும் காலையில் தான் சுலபமாய் உணர்ந்திட முடிந்தது ! கொலம்பஸ் நகரிலிருந்து சிகாகோவிற்கான ப்ளைட்டை பிடிக்கக் காத்திருந்த அந்தப் பனிக் காலையில், அங்கே இங்கே என்று சுற்றித் திரிந்த எனது சிந்தனைகள் - நம்மை கடந்து செல்லக் காத்திருக்கும் 2013ன் மீதும் அது நமக்குக் கொணர்ந்துள்ள விதவிதமான அனுபவங்களையும் மெள்ள அசைபோடத் துவங்கியது ! NBSல் துவங்கி , திருவாளர் டயபாலிக்காரோடு நிறைவு கண்டுள்ள இந்தாண்டின் எக்கச்சக்கமான இதழ்கள் என் மனதில் ஒரு slide show ஆக ஓடத் தொடங்கிய சற்றைக்கெல்லாம் - "ஆஹா...அதை அப்படிச் செய்திருக்கலாமே ? ...இதை இப்படிச் செயலாக்கி இருக்கலாமே ?" என்ற hindsight ஞானம் பிரவாகமெடுக்கத்  தொடங்கியது ! இதே மோனநிலை தொடர்ந்தால் - ஞானிகளின் பட்டியல் ஒன்றால் கூடிடும் அபாயம் எழப் போகிறதே என்ற எச்சரிக்கையுணர்வு தலைதூக்கியதால்  - விமானத்தோடு எனது சிந்தனைகளும் தரையிறங்கின!ஊருக்குத் திரும்பும் சமயத்திலும் இந்தப் "பின்திரும்பிப் பார்க்கும் படலத்தை" ; 2013-ன் அனுபவங்களை நிதானமாய் அசைபோட்டுக் கொண்டு வந்த போதே- தொடரும் பதிவுகளுக்கு இதுவே வித்தெனத் தீர்மானித்தேன் ! ஆனால் எல்லாவற்றிற்கும் முன்பாய் ஒரு thanksgiving காத்துள்ளதையும் என் மண்டை சுட்டிக்காட்டியது ! 

"சிங்கத்தின் முதுவயதில்" என்றெல்லாம் என்றோ ஒரு நாள் எனது கச்சேரியை நீட்டிடும் வாய்ப்பினை ஆண்டவன் நல்கிடும் பட்சத்தில் - இந்த 2013-ஐ ஒரு அசாத்திய லேண்ட்மார்க் ஆண்டாய் நான் வட்டமிட்டு வைத்திருக்கப் போவது உறுதி ! பொதுவாய் கால் கட்டைவிரலை ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் வாய்க்குள் திணிக்கும் நான் - கிட்டத்தட்ட ஆண்டு முழுவதும் ஒற்றைக் காலிலேயே நடமாடியதோடு மட்டுமல்லாமல் - எங்களது சின்ன டீமையும் என்னோடு பாலே நடனம் பயிலச் செய்ததை 2013-ன் மறக்க இயலா highlight ஆகக் கருதிடுகிறேன் ! 
  • 12 மாதங்களில் - 24 இதழ்கள் !
  • அவற்றுள் 3 சிறப்பு வெளியீடுகள் (NBS ; ALL NEW : தீபாவளி )
  • மொத்தம் 45 கதைகள் !
  • ஏராளமான சிறுகதைச் சேகரிப்புகள் !
  • 3500+ பக்கங்கள் !
  • 48 அட்டை டிசைன்கள் (முன் + பின்)
இரண்டு பகுதி நேர மொழிபெயர்ப்பாளர்கள் + அடியேன் ; ஒரேயொரு டைப்செட்டிங் பணியாளர் ; ஒரு பகுதி நேர கிராபிக் டிசைனர் ; இவர்களை ஒருங்கிணைக்க மைதீன் என்ற எங்களது 5 Man army -யின் துணையோடு (சாரி -3 men +2 women army) - நமக்குள்ள limitations களின் மத்தியினில் இந்தாண்டு உற்பத்தி செய்திடச் சாத்தியமாகியுள்ள இந்தக் "காமிக்ஸ் கத்தையை"- மிஞ்சவோ ; மீண்டுமொருமுறை முயற்சிக்கவோ ஒரு பொழுது புலருமா என்றெல்லாம் எனக்குச் சொல்லத் தெரியவில்லை; ஆனால் பின்புலத்திலிருந்து இந்த ஐவரும் எனக்குத் தந்துள்ள உழைப்பின் நிஜப் பரிமாணத்தை firsthand உணர்ந்த ஒரே ஆசாமி என்ற விதத்தில் அவர்களுக்குத் தலைவணங்குவது எனது தலையாய கடமை !

French மொழிபெயர்ப்பினில் இன்னும் நளினம் கூடுதலாக இருக்கலாம் ; ஓரிரண்டு இடங்களில் புலமையில் குறைபாடு தென்பட்டிடவும் வாய்ப்புகள் இருக்கலாம் தான் ; ஆனால் ஒரு இல்லத்தரசியின் பகுதி நேரப் பங்களிப்பு என்பதோடு மட்டுமல்லாது - காமிக்ஸ் எனும் சுவைக்குப் பரிச்சயமற்றவர் என்ற ரீதியிலும் அவரது முயற்சிகளைக் கண்டு வியக்காதிருக்க இயலவில்லை ! ஓரிரண்டு பக்கங்களை ஒரு பொழுது போக்காய் ; காமிக்ஸின் மீதுள்ள காதலாய் நாம் எத்தனித்திட இயலும் தான் ;  அதனை ஜமாய்த்திடவும் வாய்ப்புகள் உண்டு தான் ! ஆனால் day in ; day out - பக்கம் பக்கமாய் அயல்  மொழியிலிருக்கும் ஒரு படக்கதையை அற்ரசனை அறவே இல்லாத போதிலும் ஒரு வேள்வியாய்ச் செய்திடுவது நிச்சயமாய் சுலபச் செயலல்ல - trust me on that folks ! வேற்று மொழிகளை ஆங்கிலத்திற்கோ ; தமிழிற்கோ மாற்றம் செய்து தரும் முறையான ஏஜென்சீஸ் - 'வார்த்தைக்கு இத்தனை ரூபாய்' எனக் கட்டணம் வசூலிக்கும் தேசம் இது எனும் போது நமது கதைகள் ஒவ்வொன்றையும் அவ்விதம் மொழியாக்கம் செய்திட முனையும்  பட்சத்தில் - நாம் ரிசர்வ் வங்கியில் பணத்தைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் கோமான்களாய் இருந்திடல் அவசியமாகி இருந்திருக்கும் ! 

இந்த 5 man army -ல் காமிக்ஸ் மீதான ஈடுபாடு கொண்ட ஒரே chainlink எங்களது திரு கருணைஆனந்தம் அவர்கள் என்பதால் - எப்போதும் போலவே அவரது தமிழாக்கங்கள் நமக்கொரு வரப்பிரசாதம் ! டைப்செட்டிங் பணிகளைப் பொறுத்த வரை 'இன்னமும் சிறப்பாகச் செய்திருக்கலாம்' ; 'இங்கே கவனம் போதாது' என்ற வகையிலான நண்பர்களது விமர்சனங்களில் வலு இல்லாதில்லை தான் ; ஆனால் முறையான கல்வி / பயிற்சி ஏதுமிலா ஒரு இளம் பெண் - வீட்டில் இருந்தபடியே நமது அவசரங்களைப் புரிந்து இரவோ / பகலோ தந்திடும் உழைப்பு என்றும் ன் மரியாதைக்குரியதே ! ' தேர்ந்த பணியாளர்களைக் கொண்டு இன்னமும் சிறப்பாய்ச் செய்திடலாமே ?" என்ற கேள்வியும் தொடரும் என்பதை உணரவே செய்கிறேன் ;  ஆனால் நிதர்சனம் என்னவென்பது இப்பக்கமிருக்கும் நான் மட்டுமே அறிந்த விஷயம் என்பதால் அது பற்றி சற்றே விரிவாய் சொல்லிட விழைகிறேன் !முறையாகப் பயிற்சியும் ; அனுபவமும் கொண்ட DTP operator கள் இன்று சிவகாசியில் குதிரைக் கொம்புக்குச் சமானம் ! வாரம் ஒரு பெருநகரிலிருந்து சிவகாசி வந்திறங்கி - ஊர் முழுவதும் 'DTP பணியாளர்கள் தேவை" என்று போஸ்டர் அடித்து ஒட்டி ; கேபிள் டி-வியில் விளம்பரம் செய்து இங்குள்ள திறமைசாலிகளைப் "பிள்ளை பிடித்துச்" செல்ல வரும் நிறுவனங்கள் ஏராளம் ! நாமும் இந்தகுதிரைப் பேரங்களில் ஈடுபடலாம் தான் - சிக்கனம் என்றதொரு கம்பி மேல் நடந்திடும் அவசியம் இல்லாத பட்சத்தில் ! நம்மிடமும் ஒரு பெரும் தயாரிப்பு பட்ஜெட் இருந்திடும் சமயம்  எல்லாமே சாத்தியமே ; ஆனால் அதற்கான நாள் புலரும் வரை நிதானம் அவசியம் தானே ? அவ்விதமே ஒரு "சொகுசான" நாள் உதயமாகிடும் போதும் கூட - நம்மோடு ; நம்மைச் சார்ந்து வளரும் ஒரு பணியாளரை "பட்"டென்று கழற்றி விட்டு திறமையில் அடுத்த நிலையில் இருப்பவரை நாடி ஓடுவது நிச்சயம் நமது பாணியாக இராது ! Loyalty என்பது ஒரு வழிப் பாதையல்ல என்பது எனது நம்பிக்கை ! ஒரு proffessional நிர்வாகிக்கு இது உகந்த அணுகுமுறையாய்த் தெரியாது இருக்கலாம் தான் ; ஆனால் எணிப்படிகளின் சகல நிலைகளையும் பார்த்து வந்த எனக்கு அது தவறாய்த் தெரியமாட்டேன்கிறது !  

டைப்செட்டிங் மட்டுமல்லாது, நமது அட்டைப்பட டிசைனிங் முயற்சிகளுக்குமே மேற்சொன்ன விளக்கங்கள் பொருந்துமென்பதொடு - நாம் சந்திக்கும் மிகப் பிரதானமான சவாலே இவர்களில் எவரும் காமிக்ஸ் காதலர்களல்ல என்பதே ! ஒரு வேலையினை - ரசனையோடு செய்வதற்கும் ; ஜீவனத்திற்கொரு வழியாய்ச் செய்வதற்கும் மலையளவு வேறுபாடு உண்டென்பதை நான் சொல்லிடவும் வேண்டுமா - என்ன ? அதனையும் மீறி இவர்கள் நமக்கு நல்கியுள்ள உழைப்பின் அளவு இத்தனை எனும் போது - அவர்களது குறைபாடுகள் என் கண்களுக்குப் பெரிதாய் மேலோங்கித் தெரிவதில்லை !5 Man army-ன் கடைசி ஆசாமியான மைதீனைப் பற்றி ஏற்கனவே நிறைய எழுதி விட்டேன் ; பத்தாம் வகுப்பு மாணவனாய் நம்மிடம் பணி செய்ய வந்தவன் ; இன்று எனது நிழலுக்குச் சமானமானவன் ! காமிக்ஸ் எதனையும் படிக்காமலேயே - ஒரு காமிக்ஸ் காதலனின் மனதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்ட பண்பாளன் !

இந்த ஐவரைத் தாண்டி நம்மிடம் பணியாற்றும் அச்சக ஊழியர்களும் , பைண்டிங் நபர்களும் நம் பொருட்டு நிறையவே வியர்வை சிந்துபவர்கள் ! அச்சில் குறைபாடுகள் நிறையவே தலைதூக்கி ; அவை இப்போது படிப்படியாய்க் களையப்பட்டு வருவதும் நான் மூடி மறைக்க விரும்பிடும் விஷயமல்ல ! இங்கு பின்னூட்டங்களில் அவற்றிற்கான பதில்களை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே செல்லும் பட்சத்தில் - "சப்பைக்கட்டு சமாச்சாரம்" என்ற முத்திரை பெற வல்லது என்பதால் பெரும்பாலும் அது விஷயத்தில்  நான் அமைதி காப்பது வழக்கம். ஆனால் நம் பணியாளர்களின் தரப்பு சங்கடங்களை ஒரு முறையேனும் நான் பதிவு செய்திடாவிடில் அது நான் அவர்களுக்குச் செய்திடும் அவமரியாதை ஆகும் ! அச்சின் நுணுக்கங்களைத் தெரிந்து வைத்திருக்கும் அவசியங்கள் உங்களில் அநேகருக்கு இருந்திடாது ! பெரிய சர்குலேஷன் கொண்ட பத்திரிகைகளுக்கும் ; நமக்கும் அச்சு முறையில் ஒரு பெரிய வேறுபாடு உண்டு !  பெரும்பாலான பெரிய பத்திரிகைகள் அச்சாவது Web Offset என்ற இயந்திரங்களில் - பேப்பர் ரீல்களில் இருந்து ! இவ்வகை இயந்திரங்களின் வேகம் சுலபமாய் மணி ஒன்றிற்கு 45,000 தாள்கள் வரை அச்சிடுவது ! So எண்ணிக்கையில் கூடுதலான தினசரிகள் ; வாராந்தரப் பத்திரிகைகள் சகலமும் அச்சாவது பல கோடிகள் பெறுமானமான இவ்வகை மிஷின்களில் ! இவற்றை இயக்குவது ; வண்ணங்களைக் கட்டுப்படுத்துவது சகலமும் கணினிகளே ! இயந்திரம் துவங்கி ஆரம்பத்துப் 10-15 நிமிட உற்பத்திகளைத் தூக்கிக் கடாசி விட்டால் - தொடரும் imprints சகலமும் ஒன்று போல அமைந்து விடும் ! ஒரே சமயத்தில் முன் + பின் பக்கங்களும் அச்சாகி - இயந்திரத்திலேயே மடிக்கப்படவும் செய்து - பைண்டிங்கிற்குத் தயாராகி வெளியே வரும் ! 
ஆனால் - சர்குலேஷனில் "குழந்தைப் பிள்ளைகள்" ஆன நமக்கு இந்த அசுர வேக அச்சு இயந்திரங்கள் அவசியமும் கிடையாது ; சாத்தியமும் கிடையாது! குறைவான பிரதிகளே அச்சிடப் போகிறோம் என்பதாலும் - நாம் பயன்படுத்துவது இரு பக்கங்களும் வளவளப்பான ஆர்ட் பேப்பர் என்பதாலும் நாம் பயன்படுத்துவது Sheetfed Offset இயந்திரங்களை ! இவ்வகையிலும் கம்ப்யூட்டர் controls கொண்ட மிஷின்கள் உண்டு தான் ; ஆனால் அவற்றின் விலைகள் 1 கோடியைத் தாண்டி விடும். அத்தனை பெரிய முதலீடு நம் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதால் நம்மிடம் புழக்கத்தில் இருப்பது நார்மலான ஆப்செட் இயந்திரங்களே  ! ஒரு நேரத்திற்கு 4 வண்ணங்களை முன்பக்கத்தில் அச்சிட்டுத் தரும் இந்த இயந்தரத்தினில் water + ink solvent + alcohol என்று மூன்று சங்கதிகளும் ஒரு ஸ்திர நிலையை எட்ட முடியும் போதே சீரான அச்சு கிட்டிடும். இயந்திரத்தை இயக்கத் துவங்கிய உடனேயே இது சாத்தியமாவதில்லை ; குறைந்த பட்சம் ஒரு 20-30 நிமிடங்கள் + ஒரு கணிசமான அளவு காகிதங்கள் பிரிண்ட் ஆகிய பின்னே ஒரு வித நிதானம் கிட்டிடும். இந்த நிலையில் பணியாளர்களின் திறமைகளும் ; அனுபவமும் மிக முக்கியம். துவக்கத்தில் வேஸ்ட் ஆன தாள்களின் சகலத்தையும் தூக்கிக் கடாசி விட்டு - சீராய் அச்சாகும் தாள்களை மாத்திரமே பைண்டிங் செய்ய அனுப்ப வேண்டுமென்பது எனது உத்தரவு. ஆனால் சில வேளைகளில் இயந்திரக் கோளாறுகளாலோ ; பணியாளர்களின் கவனக் குறைவுகளாலோ - அந்த ஆரம்ப wastage -க்குப் பின்னரும் கூட அச்சில் கொஞ்சமாய் பிசிறுகள் எழுவதுண்டு தான் ! நாம் உபயோகிக்கும் காகிதங்கள் மிக விலையுயர்ந்தவை என்பதால் - அது போன்ற சந்தர்ப்பங்களில் அந்த கூடுதல் wastage என் கவனத்திற்கு வரும் பட்சத்தில்- 'திட்டு வாங்க நேரிடுமே'  என்ற பயத்தில் ஓசையின்றி அந்த சுமாரான காகிதங்களையும் பைண்டிங் செல்லும் சரக்கோடு சத்தமில்லாமல் திணித்து விடுவது தான் இடையிடையே நீங்கள் பார்த்திடும் குறைபாடுகள். 'எதிர்பாராது வேஸ்ட் கூடுதலாய் ஆனாலும் பரவாயில்லை ; வாங்குபவர்கள் முகம் சுளிக்கலாகாது ' என்பதை சிறுகச் சிறுகச் சொல்லிப் புரிய வைத்து வருவதோடு - இதனைக் கண்காணிக்க ஒரு சூபர்வைசரையும் நியமித்துள்ளோம். 200,000 தாள்கள் அச்சிட 300-400 wastage sheets போதும் ; அதே சமயம் 2000 தாள்கள் அச்சிடவும் அதே 300-400 தாள்கள் அவசியம் என்பது தான் ஆப்செட்டின் சிக்கலே ! 
அச்சுப் பணிகள் நிறைவுற்று - பைண்டிங் செல்லுமிடத்தில் நமது தாள்களை மடிப்பது இயந்திரங்களல்ல ! கையால் மடிக்கும் போது ஒரு சில மழை வேளைகளில் உலராத மசிகள் சற்றே இழுவிடவும் வாய்ப்புண்டு. இதனை அறவே தவிர்த்திடவும்  பொருட்டு அச்சு இயந்திரத்திலேயே இப்போது ஒரு dryer வாங்கி இணைத்துள்ளோம் - அச்சாகிச் சென்றிடும் காகிதங்கள் சுத்தமாய் உலர்ந்திருப்பதை உறுதி செய்திட ! கடைசியாய் அச்சான "வேங்கையின் சீற்றம்" இதழினில் தெரிந்த முன்னேற்றம் - தொடரும் நாட்களில் அச்சுப் பிரச்னைகள் தொடராது என்ற நம்பிக்கையைத் தருகிறது ! விமர்சனம் செய்திடும் நண்பர்களைத் திருப்திப்படுத்துவதன் பொருட்டோ - எங்கள் மீதொரு பச்சாதாபப் பார்வைக்கு வழி வகுப்பதோ எனது இவ்விளக்கங்களின் நோக்கமல்ல ! முழுக்க முழுக்க human skills மட்டுமே பிரதானமாய் கோலோச்சும் அச்சுப் பணிகளின் பணியாளர்களின் தரப்பு நிஜங்களையும், அவர்களின் முன்புள்ள இடர்கள் / சவால்கள் பற்றியும் சற்றே விரிவாய் உங்களுக்குப் புரியச் செய்வதே எனது விருப்பம். ஒரு கோடிக்கு ஒரு கம்ப்யூட்டர் இயந்திரத்தை வாங்கி நானும் அவர்களது கையில் ஒப்படைத்தால் - அமெரிக்கத் தரத்தில் நிச்சயம் imprints தரவும் செய்வார்கள் ! அது சாத்தியமாகும் வரை - இயந்திரங்களையும் சரி ; பணியாளர்களையும் சரி - தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் பொறுப்பு எனக்குள்ளது !

 அப்புறமாய் - நமது முன் அலுவலகப் பணியாட்கள் ! இரண்டாண்டு அனுபவம் கொண்ட ஸ்டெல்லாவும் ; ஓராண்டை எட்டிடாத திருமதி தேவியும் தான் இன்று நமது காமிக்ஸின் குரல்கள். நமது மூத்த பணியாளர் ராதாக்ருஷ்ணன் இன்னமும் செயல்பாட்டில் உள்ள போதிலும், பெரும்பான்மையான பணிகளைப் பெண்களே பிரித்தெடுத்துக் கொண்டுள்ளனர் ! தினமும் சராசரியாய் ஆளுக்கு 60-70 போன்கால்களுக்குப் பதில் சொல்லும் பொறுப்பு ; எண்ணற்ற மின்னஞ்சல்களுக்குப் பதிலளிப்பது ; E -Bay விற்பனைகள் என சதா சர்வ காலமும் பிஸியாக இருந்திடும் இவர்கள் இன்னமும் சின்னச்சின்ன தவறுகள் ; குளறுபடிகளுக்கு விதிவிலக்குகள் ஆகவில்லை தான் ! ஆனால் - தங்கள் சக்திக்குட்பட்ட சகலத்தையும் நேர்மையோடு செய்கிறார்கள் என்பதை நித்தமும் பார்க்கும் போது எனக்கு அவர்களது சிற்சிறு தவறுகளைப் பெரிதாக்கிப் பார்க்கத் தோன்றவில்லை ! இந்த ஓராண்டில் உங்களின் பிரதிகளை அனுப்பிடுவதிலோ ; பாக்கிங் செய்வதிலோ ; உங்களுக்கு சரியான பதில்கள் வழங்குவதிலோ அவர்கள் சில-பல வருத்தங்களை / சிரமங்களை ஏற்படுத்தி இருக்கலாம். அவற்றிற்கு எனது sincere apologies களை சமர்ப்பிப்பதோடு - தொடரும் நாட்களில் இயன்ற எல்லா விதங்களிலும் குறைகளைக் களைந்திட முனைந்திடுவார்கள் என்ற உறுதியும் தருகிறேன் !

Last, but not the least - நமது இதழ்களின் இதர 2 எடிட்டர்கள் ! இதழ்களின் ஆக்கங்களில் எனது தம்பி பிரகாஷ் நேரடியாய் பங்களிப்பதில்லை என்ற போதிலும், விற்பனைக்கு ; அலுவலக நிர்வாகத்திற்கு ; அச்சக மேர்பார்வைக்கென செய்திடும் invisible உதவிகள் விலைமதிப்பற்றவை ! எல்லாவற்றிற்கும் மேலாய் - இந்த காமிக்ஸ் முயற்சிகளின் பிரதிபலனாய் அவ்வப்போது கிட்டிடும் சின்ன ஒளிவட்டங்கள் என் மீது மாத்திரமே விழுவதை பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்ளும் பக்குவம் ; நான் ஊர்-உலகமெல்லாம் சுற்றி வரும் வேளைகளிலும் அலுவலகத்தில் எனது நங்கூரமாய் இருந்திடும் அவனது presence - invaluable ! நீண்டு செல்லும் இப்பகுதிக்கு "மங்களம்" போடும் முன்பாய் நமது ஜூனியர் எடிடர் பற்றியும் சின்னதாய் ஒரு mention : காக்காய்கள் டி-நகர் நகைக் கடைகளுக்குச் செல்கின்றனவோ - இல்லையோ - நிச்சயம் அவற்றிற்கு தத்தம் குஞ்சுகள் பொன்குஞ்சுகள் தானே ! அந்த வகையில் எனது புதல்வன் விக்ரம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் தான் என்ற போதிலும் ; நம் முயற்சிகளுக்கு அவன் மார்க்கமாய் எனக்குக் கிட்டிடும் ஒரு புதுப்பார்வை விலைமதிப்பற்றது ! கல்வியை முடித்து விட்டு அவன் என் இருக்கையை இலக்காக்குவானா ? - அல்லது அவனது தேடல்கள் வேறு துறைகளில் இருக்குமா ? என்ற கேள்விக்கான விடை என் வசமில்லை : ஆனால் எனக்கு அவன் வலு சேர்க்கும் இந்த நாட்களை என்றுமே நாம் நேசிப்பேன் ! 

எங்கள் தரப்பு "thanksgiving " பட்டியலை ஒருவாறாக வாசித்தாகி விட்ட போதிலும் - எஞ்சி நிற்கும் ஒரே ராட்சச "தேங்க்ஸ்" நண்பர்களான உங்களுக்கே ! வெறும் பார்வையாளர்களாய் அமர்ந்திருந்து விட்டு எழுந்து சென்றிருக்கக் கூடிய வாய்ப்பிருந்தும் - ஆத்மார்த்த ஈடுபாடோடு ஒன்றிப் போய் ; நிறை / குறைகளை உரிமையோடு சுட்டிக் காட்டி - இதனை ஒரு மறக்க இயலா ஆண்டாய் செய்து கொடுத்து உங்கள் அனைவருக்கும் a thanks from the bottom of my heart ! ஆங்காங்கே மாற்றுக் கருத்துக்கள் ; அபிப்ராய பேதங்கள் எழுந்திருக்கும் நாட்களும் இந்த 2013-ல் உண்டென்ற போதிலும் - end of the day வெற்றி கண்டது நம் காமிக்ஸ் நேசம் தானே எனும் போது - நிறைவாய் உள்ளது ! Thanks ever so much guys ! அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் !!  
மீண்டும் சந்திப்போம் - 2013-ன் Highs & Lows பற்றிய தொடரும் (நாட்களின்) பதிவுகளோடு ...! 

188 comments:

  1. எடிட்டர் சார்,

    சென்ற பதிவின் கடைசி பின்னுடங்களின் விவாதங்களுக்கு இந்தப் பதிவின் மூலம் ஏற்றுக்கொள்ளும் படியான விளக்கத்தை அளித்துவிட்டீர்கள்.
    தங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் என் போன்ற வாசகர்கள் நிச்சயம் துணை நிற்போம்.
    2014 ஆம் ஆண்டை பல தங்களின் விரல் காதலுடன் காண ஆவலாக இருக்கிறேன் :-)

    ReplyDelete
    Replies
    1. Radja from France : இது ஒரு தன்னிலை விளக்கம் என்பதை விட நிதர்சனத்தின் தரிசனம் என்று சொல்ல நினைக்கிறேன். நிறைய நண்பர்கள் பணியாற்றும் இன்றைய MNC சூழல்களுக்கும், கணினி உலகுகளுக்கும், சிவகாசியில் பணிகள் நடந்தேறும் விதங்களுக்கும் ஒரு இம்மி கூட ஒற்றுமை கிடையாது எனும் போது - எங்களது "புராதன " வழிமுறைகளைப் புரிந்து கொள்வது சுலபமாகாது. எங்கள் பகுதி உலகினுள் ஒரு சின்ன பார்வை மாத்திரமே இது !

      Delete

    2. Vijayan Sir, Did you come to Columbus Ohio?? I missed see you :( I am living here only...

      Delete
  2. சார் சென்னை புக்பேரில் பங்கேற்பது முடிவாகி விட்டாதா?

    ReplyDelete
    Replies
    1. ranjith ranjith : நம்பிக்கையோடு விண்ணப்பித்துள்ளோம் - விரைவில் தெரிய வரும் !

      Delete
    2. கண்டிப்பாக நம்ம காமிக்ஸ்கள் புத்தகதிருவிழாவினை அலங்கரிக்கும் சார்! சென்னைக்கு அழகு புத்தக விழா! அவ்விழாவுக்கு அழகு நம்ம காமிக்ஸ் ரசிகர்களின் கலாட்டாக்கள்...ஹீ ஹீ ஹீ

      Delete
  3. நாங்கள் படித்து ரசிக்கும் புத்தகங்களுக்கு பின் இத்தனை பேரின் கடின உழைப்பு உள்ளதை எண்ணும்போது மலைக்க வைக்கிறது. A big thanks to your team!

    A suggestion for long term though (oh typing in tamil is such a pain!) - Please consider a long term strategy in bringing in a digital version of lion inline with the commerical market (as you can see the world transforms!). I know some publishers won't allow digital issues but many others does (beyond traditional publishers). We can consider a seperate line up for lion digital editions for the long term. I hope you are aware of how publishers like vikatan.com makes a big bussiness with traditional printing + digital issues

    ReplyDelete
    Replies
    1. Electron Karthick : ஏற்கனவே ஆங்காங்கே இது தொடர்பாய் எழுப்பப்பட்ட இதே கேள்விக்கு அதே பதிலை மீண்டும் ஒருமுறை பதிவிடுகிறேன் : Just Impossible !

      காமிக்ஸ் படைப்புகளின் டிஜிட்டல் உலக உரிமைகளை படைப்பாளிகள் எவருக்கும் வழங்கிடத் தயாராக இல்லை ! விகடனைப் போல காபிரைட் உரிமை கோரும் அவசியமிலா சொந்த ஆக்கங்களை நாமும் வெளியிடும் பட்சத்தில் உங்கள் suggestion தனை செயல்படுத்துவதில் சிரமிராது. ஆனால் நம் நிலையோ அவ்விதம் அல்லவே !

      Delete
  4. Dear Sir, Thanks for giving exciting comics in 2013. Wishing you and everyone a Merry Christmas and a very Happy New Year

    ReplyDelete
  5. Thanks a lot to you and your team for making the year 2013 as our golden year. In the new year 2014 and further years, we'll break our own records. சாதனைகள் முறியடிப்பதற்கே.

    Wish you and your team all the very best for successful years. Happy New Year 2014!

    We will be there to support you always in all ways.

    Keep rocking.

    ReplyDelete
  6. டியர் விஜயன் சார்,

    மீண்டும் ஒரு முறை - வாசகர்களை பதிவிடவே தடுமாறவைக்கும் அற்புதமான பதிவு ; வாசகர்களின் கருத்துகளுக்கு ஆதமார்த்தமான தங்களின் பங்களிப்பு ! உள்ளக்கிடங்கை அழகாய் விவரிக்கும் உங்கள் பதிவுகளின் ரகசியம் ; என்றுமே அது எங்களுக்கு திகட்டாத சுவாரசியம் ; நன்றி விஜயன் சார் !

    இன்றிலிருந்து 20 நாட்கள் விடுமுறையில் செல்வதால் தங்களுக்கு முன்கூட்டியே கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் ; இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ; பொங்கல் வாழ்த்துக்கள் ; தை திருநாள் வாழ்த்துக்கள் என வாழ்த்துக்கள் கூறி இங்கு பதிவிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் !

    தை பிறந்தால் வழி பிறக்கும் !!!

    ReplyDelete
    Replies
    1. மிஸ்டர் மரமண்டை : மனதில் உறுதி இருந்தால் எல்லா மாதங்களும் நமக்குத் தை ஆகிடாதா ? !

      20 நாள் விடுமுறையா ? ஜமாயுங்கள் !

      Delete
  7. பதிவுக்கு மிக்க நன்றி. இலட்சக்கணக்கில் பிரதிகள் விற்பனையாகும் மேற்கு காமிக்ஸ் உலகோடு ஒப்பிடுகையில், தமிழில் ஒரேயொரு காமிக்ஸ் வெளியீட்டாளரான உங்களது சிரமங்கள், எதிர்நோக்கும் சவால்கள், சரிவுகள், ஏற்றங்கள் - எப்போதும் நாம் புரிந்துகொண்டவையே! இவற்றையெல்லாம் கடந்து, 80-90கள் போல நிலையானதொரு விற்பனை, சந்தா எண்ணிக்கை 2014இல் கிடைத்திடவேண்டும், அதன் பயனாக - தற்போது சற்றே தடுமாற்றமாயுள்ள சில பணிகள் மேலும் துல்லியமாகிடவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

    வாசகர்களாக மட்டுமிருந்த என்னைப்போன்ற பலருக்கு, இந்த காமிக்ஸ் பயணத்தில் சிறு சிறு பங்களிப்புக்களைச் செய்ய வாய்ப்பை ஏற்படுத்திகொடுத்தமைக்கு விசேடமான நன்றிகள்! தொடரட்டும் உங்கள் பணி.

    //இந்தாண்டு உற்பத்தி செய்திடச் சாத்தியமாகியுள்ள இந்தக் "காமிக்ஸ் கத்தையை"- மிஞ்சவோ ; மீண்டுமொருமுறை முயற்சிக்கவோ ஒரு பொழுது புலருமா என்றெல்லாம் எனக்குச் சொல்லத் தெரியவில்லை//
    2014 ஆம் ஆண்டு, கடந்துபோகும் வருடத்தின் 'காமிக்ஸ் கத்தையை' மிஞ்சவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

    உங்களுக்கும் உங்களது அணியினருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ், புதுவருட வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. Podiyan : விற்பனை சீராகும் நாளும் - சிக்கல்கள் தீரும் நாளும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை என்பதை பதிவு செய்திடவே இம்முயற்சி ! வாழ்த்துக்களுக்கு நன்றிகள் !

      Delete
  8. மாதம் தவறாது காமிக்ஸ் வெளியிட்டு, எம்மை மகிழ்வித்த, மகிழ்விக்கப் போகும் எங்கள் ஆசிரியருக்கு முதற்கண் வணக்கம்! புலரும் புத்தாண்டில் எங்களை மகிழ்விக்கக் காத்திருக்கும் காமிக்ஸ் வரிசைகளின் வரவு நோக்கி காத்திருக்கின்றோம் ஆர்வத்தோடு, குறைகள் இன்றி வரும் என்னும் நம்பிக்கையோடு!

    கடந்த பதிவில் எம்மை வருத்திய எண்ணங்கள்:
    http://lion-muthucomics.blogspot.in/2013/12/blog-post_10.html

    BN USA@@
    //I usually keep away from this cesspool of a forum due to folks like ஆதி தாமிரா who attack the rights of others to express the problems//
    தங்களின் கூற்று முற்றிலும் சரியே! கருத்துச் சுதந்திரம் என்பதை, அவரவர் கருத்தைச் சொல்லிடும் சுதந்திரமாகவும், ஒவ்வாத கருத்துக்களை வெறுத்து ஒதுக்கிடும் சுதந்திரமாகவும் மட்டுமே பார்த்திடல் வேண்டும்! அதையே, பிறர் கருத்தை பறிக்கும் சுதந்திரமாகவும் சிலர் எண்ணுகையில் தான் சிக்கல் தலை தூக்குகின்றது.

    ஆயின், தோழர் ஆதி தாமிராவை மட்டும் தனிமைப் படுத்தி சுட்டிக் காட்டுவதில் எமக்கு ஒப்புதல் இல்லை. கடந்த பதிவில் அன்னாரது கருத்துக்கள் - எல்லைகளற்ற காமிக்ஸ் காதலின் வெளிப்பாடாகவே எம் கண்களிற்கு தெரிகிறது. தமது எண்ணத்தை பொதுவாய் கூறிச் சென்றிடாமல், பிறரின் பெயர்கள் எடுத்து மேற்கோள் சொன்னதில் அவர் தவறிழைத்து விட்டார்.

    தவறிழைத்தது அவர் மட்டுமா? தோழர் சாக்ரடிஸ் சில குறைகளை சுட்டிக் காட்டியதும், எவரோ ஒரு புண்ணியவானின் அறிவுரை என்ற போர்வையில், மீரான் இவ்வாறு மறைமுக விமர்சனம் செய்கின்றார்!

    //நீங்கள் என்ன செய்தாலும் சரி , ஒருசிலரை உங்களால் திருப்திப்படுத்தவே முடியாது. நீங்கள் எவ்வளவு சிறப்பான சேவையை அளித்தாலும், அப்படிப்பட்டவர்கள் உங்கள் பொருட்களையும் சேவையையும் மோசமாக விமர்சித்துக் கொண்டுதான் இருப்பார்கள்//

    //டயபாலிக் = வலியது வாழும் (அ) தகவுடையது தப்பிப் பிழைக்கும் !//

    சேவையில் திருப்தி இன்மையால், பிறர் விமர்சனம் செய்வது தவறாம்! அதையே இவர் செய்திடலாமாம்!

    //காதலியின் அழுக்கு முகமும் , கிழிந்த சேலையும் வறுமையினால் என்றால் சரி. அலட்சியத்தினால் என்றால்?//

    இவர் விமர்சித்தால் மட்டும் ஆசிரியர் மனம் நோகாதாம்!

    //உங்கள் மனதை வேண்டுமானால் நோக செய்திருக்கலாம். 16 வயதிலிருந்து தொழில் செய்து வரும் ஆசிரியர் இதை எல்லாம் தாண்டி பக்குவபட்டவர்//

    காமிக்ஸ் மீதான காதலினால், உரிமை மல்க பிறர் சுட்டிக் காட்டிடும் பிழைகள் பெரிதல்லவாம்!

    //குறை கூற வேண்டும் என்ற நோக்கில் பெரிய பூத கண்ணாடி கொண்டு தேடிப்பர்த்து அதோ அங்கே ''க்'' வரவேண்டும் நீங்கள் ''ச்'' என்று அச்சிட்டு உள்ளீர்கள் என்று னெற்றிக்கண் திறந்து குற்றம் சொல்ல எழுதப்பட்டதல்ல//

    அதையே இவர் செய்தால், அது உண்மையான காதலாம்!

    //''காமிக்ஸ் மீது காதல்'' என்பது என்னைப்பொருத்தவரை உண்மையானது.//

    மற்றவர்கள் செய்யும் விமர்சனங்கள் இவரை பாதிக்கின்றதாம்!

    //நமது இதழ்கள் குறித்து இங்கும் வெளியிலும் செய்யப்படும் விமர்ச்சனங்கள் எனது சொந்த முயற்சியில் உருவான காரியத்தைக்குறித்து செய்யப்படும் விமர்ச்சனங்கள் ஏற்படுத்தும் பாதிப்பையே என்னுள் ஏற்படுத்துகின்றன.//

    ஆயின், இவர் செய்யும் விமர்சனம் ஆதி தாமிராவை பாதித்தால் அது புரிதல் இன்மையாம், கற்பனையாம்!

    //புரிந்து கொள்ள சொல்லி நீங்கள் பதிவிட்டு இருப்பது யாருக்கு என்பதே இப்போது கேள்வி ? //
    //வாசகர்களின் வருத்தங்களை பதிவு செய்யாதீர்கள் அவ்வாறு பதிவு செய்தால் அது ஆசிரியரியரை வருத்தப்பட செய்யும் என்பது உங்கள் கற்பனை மட்டுமே//

    இவர் மட்டும் விமர்சிக்கலாம், விமர்சிப்பவர்களையும் விமர்சிக்கலாம்! ஆனால், தமது விமர்சனத்தை ஆதி விமர்சித்தால் மட்டும் கசக்கிறதாமா?

    ஆதியைப் பார்த்து கேட்கின்றார் பாருங்கள் ஒரு கேள்வியை... அதை முதலில் கண்ணாடி முன் நின்று, தம்மைத் தாமே வினவிக் கொள்ளட்டும்!

    //நீங்கள் னநியாயவாதியாக இருந்தால் உங்கள் மனமே இதை ஒத்துக்கொள்ளாது //

    காமிக்ஸ் மீது காதல் என்றான பின் அதில் சிறிதென்ன, பெரிதென்ன ஐயா?! கிராபிக் டிசைனருக்கு, லெட்டரிங் டிபார்ட்மெண்டில் நேரும் குறைகள் பெரிது! ஊன்றிப் படிப்பவருக்கு எழுத்துப் பிழைகளும், ஒற்றுப் பிழைகளும் பெரிது! மூலப் பிரதியைப் படித்தவருக்கு மொழிபெயர்ப்புப் பிழைகள் பெரிது! சித்திரங்களை இரசிப்பவருக்கு அச்சுப் பிழைகள் பெரிது!

    பழமை விரும்பிகளுக்கு, பழம் அபிமான நாயகர்களின் கதைகள் வாராதிருப்பது பெருங்குறை! வாழ்க்கையில் அடிபட்டவர்களுக்கு சோகம் தரும் கதைகள் காமிக்ஸிலும் வருவது ஒரு குறை! குண்டு புத்தக விரும்பிகளுக்கு, அறுபது ரூபாய் புத்தகம் ஒரு குறை! ஆசிரியரின் எழுத்துக்களை மட்டும் இரசிப்பவர்களுக்கு, சிங்கத்தின் சிறுவயதில் வெளிவராததும் ஓர் குறை! இன்னமும் சொல்லிக் கொண்டே போகலாம்...

    பூக்களை மட்டுமல்ல, பிறரின் கருத்துச் சுதந்திரத்தையும் பறிக்காதீர்கள் தோழமைகளே!

    வளரும்

    ReplyDelete
    Replies
    1. +1

      Its not fair for everybody to attack Adhi thamira, if anyone has problem mention it once and move on don't bicker about it non stop.
      I was so excited to receive 4 books next month, but after reading recent comments in the last post thala suthuthu.

      Hopefully todays editor post had answered all the skeptics.

      Delete
    2. ஆதி தாமிராவும் , நண்பர் மீரானும் விவாதித்ததில் தவறே இல்லை , நாம் மூன்றாவது ஆண்டை நோக்கி பயணிக்கும் போது அனைவரின் மனதில் உள்ள சின்ன குறைகள் ஏன் பதிலில்லை என்ற கேள்விகளை வைத்தது இருவருமே நமது காமிக்ஸ் மேல் உள்ள காதலால்தான் என்பது அனைவருக்கும் புரியும் ; மீரான் கேள்விகள் அலட்ச்சியமான பணியாளர்களே என நினைத்து முன் வைத்த கேள்வி , இதில் எந்த சாயமும் இல்லை ! ஆதியின் பதில்கள் ஆசிரியர் மேல் கொண்ட நம்பிக்கை ! இப்போது அனைத்துக்குமான விளக்கம் ஆசிரியர் அளித்து விட்டதால் நாம் மேற்கொண்டு பயணம் செய்வோம் , பயணத்தின் இடையே தவிர்க்க இயலாமல் .....தவிர்க்க இயலாமல் ...ஆங்காங்கே சிறிதாய் தட்டு படும் முட்களையும் ,பள்ளங்களையும் தாண்டி அழகை ரசித்தவாறே ! அடுத்த ஆண்டு பள்ளங்களும் , முட்களும் தட்டு படாது என எண்ணி கொண்டே !

      Delete
    3. @ வாசகர் வாய்ஸ் : நிறைய எழுதிட நேரமும், பொறுமையும் எடுத்துக் கொண்டதற்கு நன்றிகள் முதலில்...! இங்கும் சரி,பிற தளங்களிலும் சரி, அவ்வப்போது எழும் விமர்சனங்கள் என்பது நமக்குப் புதியதல்ல ! துவக்கத்தில் அவை ஒவ்வொன்றிற்கும் பதில் சொல்லிட நான் முனைந்து வந்த போதிலும், காலப்போக்கில் ஒரு விஷயத்தை தெளிவாகவே உணர்ந்திட முடிந்தது !

      காரணங்கள் எதுவாக இருப்பினும், நெருடல் என ஒன்று மனதில் தோன்றி விட்டால் அதனை உலகோடு பகிர்ந்திட வேண்டுமென்பது ஒரு பகுதி நண்பர்களின் அவா ! அதனை நாசூக்காய் பலரும், நெற்றியடியாய் சிலரும்,கையாள்கின்றனர். அதே நெருடல்களை ; குறைகளை கவனிக்க நேரிட்டாலும், அவற்றைப் பெரிதாகப் பார்த்திடாமலும் ; காலப்போக்கில் அவை சரி செய்யப்படும் என்ற நம்பிக்கையோடும் நகன்று சென்றிடும் நண்பர்கள் இன்னொரு பகுதி...... ! இருவரின் பார்வைக் கோணங்கள் தான் மாறுபடுகின்றனவே தவிர, காமிக்ஸ் நேசமல்ல என்பதை உணர முடிந்த நாளே எனது சலனங்களுக்கு நான் விடை கொடுத்த நாள் !

      அதற்காக விமர்சனங்கள் ; நையாண்டிகள் என்னை பாதிப்பதில்லை என்றெல்லாம் நான் அள்ளி விடப் போவதில்லை ; மாறாக அவற்றையே என்னை உந்தித் தள்ளிடும் ஆக்க சக்தியாய் பயன்படுத்திட பழகி வருகிறேன் ! ! So - என் பொருட்டு இங்கு மலரும் நட்புகள் வாடிட வேண்டாமே ?

      எது நடந்ததோ - அது நன்றாகவே நடந்தது என்று முன் செல்வோமே..!

      Delete
    4. வாசகர் வாய்ஸ்: // ...கிராபிக் டிசைனருக்கு, லெட்டரிங் டிபார்ட்மெண்டில் நேரும் குறைகள் பெரிது! ஊன்றிப் படிப்பவருக்கு எழுத்துப் பிழைகளும், ஒற்றுப் பிழைகளும் பெரிது! மூலப் பிரதியைப் படித்தவருக்கு மொழிபெயர்ப்புப் பிழைகள் பெரிது! சித்திரங்களை இரசிப்பவருக்கு அச்சுப் பிழைகள் பெரிது! //

      Ouch! வாசகர்வாய்ஸ், நீங்கள் வேறொரு விஷயத்தை விளக்க முயன்று இதை தெரிவித்திருப்பது புரிகிறது. ஆனால் இதில் புதைந்திருக்கும் "Nearly Dangerous" பகுதியை மற்றவர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன் :)

      தரம் / Quality என்கிற வார்த்தைகளை களைந்துவிட்டு வேறு பொருத்தமான வார்த்தைகளை உபயோகிக்கும் பொழுதுதான் சில விஷயங்களைப் புரிந்துகொள்ளவே முடியும். அவை Standards மற்றும் Excellence.

      Excellence இல்லை என்று குறைபடுவது நியாயமில்லைதான் - ஆனால் காலத்திற்கேற்ற Standards அத்தியாவசியம். நாம் வாழ்ந்துகொண்டிருப்பது 2014-ல் கொஞ்சம் Dangerous-ஆன Do or Die தலைமுறைக்கு நடுவில். இதில் சில Standards குறையும்பட்சத்தில் காமிக்ஸ் மட்டுமல்ல, நமது சந்தையில் நன்றாக வரவேற்பைப் பெற்ற பொருட்கள்கூட ஓரங்கட்டப்பட்டுவிடும். காரணம் Choice அல்ல; மக்கள் பொதுவாகவே ஒரு குறிப்பிட்ட அளவுக்கு உபயோகப்படும் தன்மையில் Easiness-ஐ எதிர்பார்க்கிறார்கள்.

      காமிக்ஸை பொருத்தவரையில் இதுவொரு பொழுதுபோக்குப் பொருள். இதில் அச்சு, வடிவமைப்பு, எழுத்து போன்ற விஷயங்களில் சராசரியாக எதிர்பார்க்கப்படும் Standards குறைந்தால் மிக எளிதாக "அயர்ச்சியூட்டும்" பொழுதுபோக்காக கருதப்பட்டுவிடும். 10-40 ஆண்டுகளாக காமிக்ஸூடன் பரிச்சயமானவர்களுக்கு (including myself) புத்தகம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. தொடர்ந்து வெளிவந்தாலே மனம் நிறைவாகிவிடுகிறது. ஆனால் இதுவரை பரிச்சையமில்லாதோரைத் தொடுவதற்கு நிச்சயம் தற்போதைய Standards பத்தாது - ஆனால் உயர்த்துவது சாத்தியம் - கவனம் அந்தத்திசையில் இருக்கவேண்டுமே தவிர எண்ணிக்கையில் அல்ல.

      // சித்திரங்களை இரசிப்பவருக்கு அச்சுப் பிழைகள் பெரிது! //
      தவறு. இதுவரையில் காமிக்ஸ் அறிமுகமில்லாத வாசகர்கள் முதல் முறையாகப் புத்தகங்களை புரட்டும்போது, வாங்கவைக்கும் சக்தி / Attraction தரமான (standard-ஆன? ) அச்சுக்கு உண்டு. மங்கலான அச்சில் வரும் புத்தகங்கள் காமிக்ஸின் மூலாதாரமான சித்திரங்களின் Attraction-ஐ ஒன்றுமில்லாமல் செய்துவிடும். அச்சுப்பிழைகளால் காமிக்ஸ் மீது ஆர்வம் குன்ற சாத்தியம் மிக மிக அதிகம்.

      // கிராபிக் டிசைனருக்கு, லெட்டரிங் டிபார்ட்மெண்டில் நேரும் குறைகள் பெரிது! //
      க்ர்ர்ர்... நானொரு Graphic Designer-தான் ஆனால் Designer point of view-ல் குறைகளை சொல்வதில்லை. Designer point of view-ல் தீர்வுகளை ஆராய்வேன், அவ்வளவுதான். புத்தகத்தை மேலோட்டமாகப் புரட்டும்போது எழுத்துக்கள் மற்றும் பலூன்கள் ஒரு disturbance-ஆகத் தெரியக்கூடாது. புதிதாக காமிக்ஸ் பக்கமாக ஆர்வம் காட்டுபவர்கள் புத்தகத்தை வாங்காமல் Stop ஆகும் இடங்களில் இது முக்கியமான ஒன்று.

      மொத்தத்தில் இங்கே வரும் பெரும்பாலான Complaints பொதுவான Standards-ஐ எதிர்பார்த்துதானே தவிர அவரவரின் அளவுகோள்களின் தன்மையால் மட்டுமல்ல.

      Delete
    5. @ ஸ்டீல்

      அழகாச் சொன்னீங்க ஸ்டீல்! எல்லோருக்குமே காமிக்ஸ் மீதான காதலே இங்கு பிரதானமாய் தெரிகிறது. வெளிப்படுத்தும் விதமும், அதன் அளவுகளும் மட்டுமே வெவ்வேறானவை.

      Delete
    6. எங்கள் அன்பிற்கினிய ஆசிரியர் திரு.விஜயன் அவர்களுக்கு,

      தங்களின் அன்பான பதிலும், பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட காமிக்ஸ் காதலர்களைப் பற்றிய உங்களின் பக்குவமான புரிதலும், நிதானமாக விமர்சனங்களை எதிர்கொள்ளும் அந்த சீரிய பாங்கும், உங்கள் மீதான எங்கள் அபிமானத்தை மென்மேலும் அதிகரிக்கவே செய்கின்றன!

      //என் பொருட்டு இங்கு மலரும் நட்புகள் வாடிட வேண்டாமே ?//

      இந்த வரிகளைப் படித்த பிறகேனும், உங்களுக்கு வரும் விமர்சனங்களை தமக்கு வந்ததாக வீண் கற்பனை செய்து, அவற்றிற்கு உங்கள் சார்பாக பதில்கள் அளிக்கும் அதிகாரத்தையும் தாமாக கையில் எடுத்து, தமக்குப் பிடிக்காத கருத்துக்களை முன் வைத்த வாசகர்களை சூடான வார்த்தைகள் மூலம் விமர்சித்து, அதன் மூலம் பிரச்சினைகளை கிண்டிக் கிளறி பெரிதாக்கும் போக்கினை தோழர்கள் கைவிட வேண்டும் என்பதே எமது அவா!

      ஆயினும், கடந்த பதிவின் விவாதத்தில் பங்கேற்ற மேலும் இருவரைப் பற்றி இங்கு குறிப்பிட்டுப் பேசியே ஆக வேண்டியுள்ளது... பொறுத்தருள வேண்டுகிறேன்!

      முதலாமவர் மிஸ்டர் மரமண்டை !

      //சேவையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டிய வாசகர்களை, பள்ளிப்பிள்ளைகள் என்று நய்யாண்டி செய்ய உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார் நண்பரே ?//

      சேவையில் உள்ள குறைபாடுகளை ஏனைய வாசகர்கள் சுட்டிக் காட்டிய போது, இங்கும், அவரது வலைத்தளத்திலும் நக்கலும், நய்யாண்டியும் செய்த அதே வாய் தான் இப்பொழுது வேதம் ஓதுகின்றது!

      //அதுசரி, 2014 முதல் நீங்களும் எங்களைப்போல் ஒரு சந்தாதாரர் ஆகிவிட்டால் நம் ஆசிரியருக்கு பேருதவியாக இருக்கும் அல்லவா..?! //

      ஆதி தாமிரா சந்தா கட்டவில்லை என்ற தமது யூகத்தையும், அவர் புத்தகம் வாங்கும் வழிமுறைகளையும் பொதுவில் அலசிடும் அதிகாரத்தை இவருக்கு யார் அளித்தது? நல்லவேளையாக தோழர் ஆதியின் சந்தா வந்து சேர்ந்த தகவலை தாங்கள் இங்கு பகிர்ந்ததின் மூலம் மண்டையாரின் வாயை அடைத்து விட்டீர்கள்!

      //உங்களின் பதிவு உங்களுக்கே ரொம்ப ஓவராக தெரியவில்லையா ? பராவயில்லை, உங்களுக்கு தெரியாவிட்டாலும் ஏனைய வாசகர்களுக்கு நிச்சயமாக தெரியும் ;)//

      மண்டையார் அவர்கள், தோழர் ஆதியிடம் கூறிய மேற்காணும் கருத்தை, முதலில் தமக்குத் தாமே அவர் கூறிக் கொள்ள வேண்டும்! தேவையின்றி இடையே நுழைந்து கலகம் செய்யும் இவரின் குறளிவித்தைகளைப் பற்றி இங்குள்ள ஒவ்வொரு வாசகர்களுக்கும் நிச்சயமாக தெரியும் ;)

      இரண்டாமவர் தோழர் ரமேஷ் குமார், அன்னாருக்கு பதில் அளிக்கும் விதமாக தனிப் பதிவாய் .

      Delete
    7. Ramesh Kumar@@
      //இதில் புதைந்திருக்கும் "Nearly Dangerous" பகுதியை மற்றவர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்//
      வேறு ஒருவருக்காக சொல்லப்பட்ட எமது எண்ணப் பகிர்வை இத்துனை ஆராய்சிகளுக்கு நீங்கள் உட்படுத்துவது ஏன் என்று விளங்கவில்லை! அடியேன் சொன்னதில் அப்படியொன்றும் அபாயகரமான பகுதிகள் புதைந்திருப்பதாக எமக்குத் தோன்றிடவில்லை! கிராபிக் டிசைனர் என்னும் உதாரணத்தைக் கண்டதும் உங்கள் சிரத்தில் சிவப்பு விளக்கு எரிந்து விட்டதோ என்னவோ?!

      // சித்திரங்களை இரசிப்பவருக்கு அச்சுப் பிழைகள் பெரிது! //
      //தவறு//
      முதலில் நீங்கள் கூறுவது மட்டும் தான் சரி, பிறர் கூறுவது தவறு என்ற அந்த எண்ணப் போக்கை விட்டொழியுங்கள் தோழரே!

      கிராபிக் டிசைனரான உங்களுக்கு, வாசகரொருவர் வடிவமைத்த இலச்சினையில் இருந்த ஒட்டு வேலைகள் சட்டென்று கண்களில் தட்டுப்பட்டன என்று கூறி இருந்தீர்களே? அதைப் போன்றதே இதுவும்! துறை சார் மட்டுமல்ல - அவரவர் இரசனைக்கேற்ப, திறமைக்கேற்ப, பார்வைக்கேற்ப சில குறைகள் சிறிதாகவும், சிலவை பெரிதாகவும் தோன்றும் - அது தான் இயல்பு!

      அக்கருத்துக்களும், விளக்கங்களும், "பிறர் கூறும் குறைகள் அற்பமானவை, நான் முன்னிறுத்தும் குறைகள் மட்டும் அர்த்தமுள்ளவை" என்ற எண்ணத்துடன் நடந்த கொள்ளும் தோழர் மீரானுக்காக சொல்லப் பட்டவை! யோசித்துப் பார்க்கையில் அவை உங்களுக்கும் கச்சிதமாகப் பொருந்துவது தெளிவு!

      அதே சமயம், Standards மற்றும் Excellence குறித்த தங்களின் கருத்துக்கள் பெருமளவு ஏற்றுக் கொள்ளக் கூடியவையே! தாங்கள் இங்கு முன்வைக்கும் பெரும்பாலான கருத்துக்கள் ஓரளவுக்கேனும் உபயோகமானவையே - அதில் எமக்கு எள்ளளவும் ஐயமில்லை!

      மீரானோ அல்லது தாங்களோ குறைகளை சுட்டிக் காட்டியதும் ஒரு தவறு அன்று! ஆயின், நீங்கள் செய்வது (அ) சொல்வது மட்டுமே சரி, அதையே ஏனையோர் செய்யின் அ) சொல்லின் தவறு என்று எண்ணும், அந்த உயர்வு மனப்பான்மையில் தான் புதைந்திருக்கிறது பிழை!

      //மொத்தத்தில் இங்கே வரும் பெரும்பாலான Complaints பொதுவான Standards-ஐ எதிர்பார்த்துதானே தவிர அவரவரின் அளவுகோள்களின் தன்மையால் மட்டுமல்ல.//
      பொதுவான Standard என்பதை நீங்கள் எந்த அளவுகோளின் அடிப்படையில் வரையறுக்கின்றீர்கள் தெரியுமா - உங்கள் மனதிற்கு சரியென்று தோன்றுவதை, ஆணித்தரமான கருத்துக்களுடன் முன்வைத்து அதையே Standard என்று அழைக்கின்றீர்கள்! இதையே பிறர் செய்தால், அதை தவறு என்று கடிந்து கொள்கிறீர்கள்!
      நீங்கள், எமது ஆசிரியரின் நேர்மையைக் குறித்து பொதுவில் விமர்சித்துள்ளீர்கள்! ஒரு மின்னஞ்சல் மூலம் கேட்கப் பட வேண்டிய கேள்விகளை, ஏற்கனவே பதில் தெரிந்த கேள்விகளை, ஆசிரியரை தர்மசங்கடத்தில் ஆழ்த்தக் கூடிய தொழில்முறைக் கேள்விகளை அனைவரின் பார்வைக்கும் வைத்துள்ளீர்கள்!
      //என்னைப் பொருத்தவரையில் நமது காமிக்ஸ்களில் Lettering / Balloon என்கிற Section-ல் காட்டப்படும் அலட்சியம், ஆச்சரியத்தை அளிக்கிறது - நேர்மையை சந்தேகப்படவும் வைக்கிறது obviously. அத்துடன் 1 அல்லது 2 புத்தகம் மட்டுமே கொள்ளும் என்று தெரிந்தும் 4 புத்தகங்களை திறமையாக ஒரே உறையில் insert செய்து அனுப்புவதெல்லாம் too much. Operation success but patient isn't taken care//

      //Lettering / Balloon / Proof reading இவையெல்லாம் ஆசிரியரின் மேற்பார்வைக்குப் பின்னரே அச்சுக்கு செல்லவேண்டியவை. அதை இரசித்து செய்யாவிட்டாலும் குறைந்தபட்சம் மேற்பார்வையாவது செய்யவேண்டுமல்லவா?//

      //எனது "திடீர்" சினுங்களுக்குக் காரணம் குறைகள் மட்டுமல்ல, குறைகளை களைவதற்கு தனக்குத்தானே வாய்ப்புக்களை தந்துகொள்ளாதது.//

      தங்களின் பழைய பதிவுகளை வெட்டி ஒட்டி, மேற்கோள் காட்ட மாட்டேன் என உறுதி அளித்திருந்தேன்! எனது வாக்கிற்கு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கிருப்பதால், சம்பவத்தை மட்டும் சுட்டிக் காட்டுகிறேன்! அண்மையில் தோழர் கார்த்திக் சோமலிங்கா, மொழிபெயர்ப்பில் நேர்ந்த பிழைகளை இங்கு பொதுவில் பகிர்ந்ததின் மூலம், நீங்கள் இப்போது செய்திருக்கும் அதே தவறை இழைத்திருந்தார்! அச்சமயம் நீங்கள் அவரிடம் "உங்களின் கருத்துக்களை மின்னஞ்சலாக அனுப்பி இருக்கலாமே" என்று அறிவுரை நல்கி, "தொழில்முறை பின்னணிகளை பொதுவில் பகிர, ஆசிரியரை நிர்பந்திப்பது நியாமில்லை" என்று அறநெறி பேசி இருந்தீர்கள்!

      அவ்வாறு இருக்கையில், ஆசிரியர் இங்கு அச்சுக் கோளாறு மற்றும் இதர சேவை குறைபாடுகளுக்கான காரணங்களை, ஏற்கனவே பன்முறை பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் சொல்லி விட்டிருக்கும் இந்நிலையில், அவரின் நேர்மையையே சந்தேகிக்கும் வகையில், ஒரு பொது இடத்தில், அதுவும் அவருக்கு சொந்தமானதொரு இடத்தில், அவர் தொழில் சார்ந்த கேள்விகளை எழுப்பி, அன்னாரது நேர்மையை கேள்விப் பொருளாக காட்சியில் வைக்க வேண்டிய அவசியம் தங்களுக்கு வந்தது ஏனோ?! ஒருக்கால், உங்கள் உபதேசங்கள் யாவும் ஊருக்கு மட்டும் தானோ?!

      Delete
    8. // ஒருக்கால், உங்கள் உபதேசங்கள் யாவும் ஊருக்கு மட்டும் தானோ?! //

      எனக்கும் சேர்த்துதான் - . கார்த்திக் சோமலிங்கா கூறியிருந்தது வேறுவிஷயம். அது "ஒ.சி.சு" புத்தகத்தில் அப்பட்டமாக lettering-ல் ஏகப்பட்ட குறைகளிருப்பதை பற்றி தெரிந்தும் - நன்றாகத் தெரிந்தும் - மொழிபெயர்ப்பையும் மற்ற சில விஷயங்களையும் குழப்பிக்கொள்வதாக இருந்தது (அதற்கு விளக்கமளிக்க ஆசிரியர் ஒருவேளை தனக்கு original பதிப்பாளர்கள் தந்த French versionஐக்கூட பகிரவேண்டி வரலாம். அது நமக்குப் புரியாது. இது தேவையா? அதனால்தான் "please private" என்று சொன்னேன்)

      நான் தெரிவித்த குறைபாடுகள் முழுவதும் 13 வயது சிறார்கள்கூட புரிந்துகொள்ளக்கூடியவை - அதைக்குறிப்பிட Designer அவசியமே இல்லை. உதாரணத்திற்கு எழுத்துக்கள் பலூனையோ கட்டங்களையோ விட்டு வெளியில் வருவது. நான் ஏதோ அழகுபடுத்த சொல்லவில்லை.

      லோகோ விஷயம்: நான் Designer point of view-ல் குறைகளை சொல்வதில்லை என்றுதான் கூறினேன். அந்த லோகோ சம்பந்தமான comment ஏன் பதிவிடப்பட்டது என்று உங்களுக்கு புரியவே இல்லை என்று தெரிகிறது. அது விமர்சனமல்ல. கண்ணில் பட்ட Evidence-ஐ பகிர்ந்தேன். Designer அல்லாதவர்களுக்கும் அது கண்ணில்படலாம்.

      உங்கள் Comment-க்கு சம்பந்தமில்லாதபோது நான் ஏன் இந்த Topic-ல் நுழைந்தேன்? காரணம், நீங்கள் அச்சுப்பிழை சித்திரங்களை இரசிப்பவர்களுக்கு மாத்திரமே பெரிதாகத்தோன்றுவதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். அது தவறு. காமிக்ஸ் படிப்பவர்கள் அனைவருமே ஒரு Standard-ஐ எதிர்பார்ப்பார்கள் (Unconscious-ஆக).

      "Standard என்றால் எது" என்ற சந்தேகம் வரும்பட்சத்தில்: Lettering-ஐ உதாரணமாககொண்டால், Speech பலூன்கள் Original-ல் நீள்வட்டமாக இருந்தால், நாம் வரையும் பலூனும் நீள்வட்டமாக இருப்பது (அந்தக்கதை முழுவதும்). Original-ல் வேறு வடிவமென்றால் நமது உபயோகமும் அதே வடிவம். காரணம் Consistency - புதிய வாசகர்கள் புந்துகொள்வதற்காக. அச்சு என்று வரும்போது 4 வண்ணங்களின் alignment-ம் ஒரு specified அளவுக்குமேல் பிழையாகமல் இருப்பது etc.

      :)

      Delete
    9. //ஆயின், தோழர் ஆதி தாமிராவை மட்டும் தனிமைப் படுத்தி சுட்டிக் காட்டுவதில் எமக்கு ஒப்புதல் இல்லை.//

      In general I do agree with you on this, but in this particular case his ad hominem tirade against my post was getting singularly tiresome and I felt the need to respond to him specifically.

      I used to be a a prolific poster in the old days, but of late I have gradually eased away from participating in this forum. I had posted my complaint to the editor in this forum only as a last resort since I did not receive a response to my emails.

      PS: Many thanks to the editor for explaining the realities of his position in such detail. I appreciate it.

      Delete
    10. @வாசகர் வாய்ஸ்: // ஆசிரியர் இங்கு அச்சுக் கோளாறு மற்றும் இதர சேவை குறைபாடுகளுக்கான காரணங்களை, ஏற்கனவே பன்முறை பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் சொல்லி விட்டிருக்கும் இந்நிலையில், அவரின் நேர்மையையே சந்தேகிக்கும் வகையில், ஒரு பொது இடத்தில், அதுவும் அவருக்கு சொந்தமானதொரு இடத்தில், அவர் தொழில் சார்ந்த கேள்விகளை எழுப்பி, அன்னாரது நேர்மையை கேள்விப் பொருளாக காட்சியில் வைக்க வேண்டிய அவசியம் தங்களுக்கு வந்தது ஏனோ?! //

      இந்த ஒருவிஷயத்தில் தங்களின் கேள்வி நியாயமானதே. ஆனால் இதற்கு பதிலளித்தால் மீண்டும் ஆசிரியரை குறைகூறுவதைப் போல தோன்றக்கூடும். அவ்வாறு எடுத்துக்கொள்ளாமல் என் விளக்கத்தை மட்டும் புரிந்துகொள்ள முயற்சியுங்கள்:

      Lettering மற்றும் கொரியர் Packaging விஷயத்தில் ஆசிரியரை கேள்வியோ விளக்கமோ கேட்கவில்லை. அதுவொரு நிதர்சனமான குறை என்பதால் நேரடியாகவே அதை பொதுவில் சொல்வதுதான் பொருந்தும். ஆனால் சந்தேகத்துக்கிடமான விஷயங்களை (Ex: மொழிபெயர்ப்புப் பிழையா அல்லது கதைசொல்லும் பாணியா போன்றவைகளை) பொதுவில் முன் வைப்பது நியாயமில்லை. காரணம் அது பொதுவாக அனைவரும் உணரப்பட்ட குறையல்ல - ஆசிரியருக்கு தனது Style-ஐ தேர்ந்தெடுக்கும் freedom உள்ளது, அதில் வேட்டுவைக்கக் கூடாது.

      நேர்மை - நிச்சயம் அதில் சந்தேகப்பட காரணம் உள்ளது (இது offensive அல்ல). உதாரணத்திற்கு தற்போது அனைவரும் சந்தாவுக்குபதிலாக நேரடி விற்பனையில் மட்டுமே நமது புத்தகங்களை வாங்குவதாக வைத்துக்கொள்வோம். கடையில் புத்தகத்தின் அட்டை மற்றும் ஓரம் மடிந்திருந்தால் வாங்கும் முன் வேறு Better-ஆன Copy இருக்கிறதா என்றுதான் பார்ப்போம். இல்லாவிட்டாலும் வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. ஒருவேளை அச்சு சரியில்லை என்றால்? பக்கங்களை புரட்டிப்பார்க்கையில் எழுத்துக்கள் சீராக இல்லாவிட்டால்? காமிக்ஸ் மீது அதீத ஈடுபாடுள்ளவர்கள் வாங்குவார்கள். மற்றவர்கள்?

      மேலே குறிப்பிட்ட அந்த "மற்றவர்கள்" சந்தா மூலம் வாங்கும்பட்சத்தில் அவர்கள் செலுத்தும் முன்பணம் அவர்களைப் பொருத்தவரையில் வீண் முயற்சியாகுமல்லவா? Wait... அதற்குத்தான் எப்பாடுபட்டாவது Minimum Standards-ஐ விட்டுக்கொடுக்காமல் ஒவ்வொரு புத்தகமும் வெளிவரவேண்டும். ஆசிரியரின் மற்றும் தமிழ் காமிக்ஸ் தயாரிப்பின் பின்னணியிலுள்ள சிக்கல்களை புரிந்தவர்கள் மட்டுமே நமது வாசகர்கள் என்கிற Boundary-ல் இருந்து வெளியில் வந்துதான் ஆக வேண்டும். புத்தகங்களின் எண்ணிக்கையை விட்டுக்கொடுத்தாவது minimum standards-ஐ கடைபிடிக்கவேண்டும்.

      Delete
  9. fact! fact !இருப்பினும் Packingல் இன்னும் சிறிது கவனம் செலுத்தினால் நலம்!:-)

    ReplyDelete
  10. Dear Vijayan sir, Lion family and friends...
    Merry Christmas and advance happy new year.
    Intha aandai engalukum marakka mudiyatha aandaga matriya Ungalukum engal ithayathin ullirunthu Nantrigal. "THANK YOU VERY MUCH SIR"

    ReplyDelete
    Replies
    1. ஓவியர் சாரதி தன் திறமையை நம் காமிக்ஸின் ஓரிரு பக்கங்களிலாவது வெளிப்படுத்தும் ஆண்டாக அடுத்த வருடம் அமைந்தால் மகிழ்வேன். :)

      Delete
    2. Nantry Nanpare! Pudhu varudam nichayam pudhu vishyangalai than kaigalil vaithirukum.

      Delete
  11. வணக்கம் விஜயன் சார்,

    பி.தி.பா.ப - அருமை, நமது லயன் முத்து டீம் அனைவரின் பங்களிப்பையும் நான் உணர்ந்து கொள்ள செய்து விட்டர்கள்.! நன்றி.

    ReplyDelete
  12. 0.29 million to reach the milestone of million hits and get the special book.. last 4 months we crossed 0.20 million so in this rate we will reach 1 million around june. so august special also we will get .:)

    ReplyDelete
    Replies
    1. tex kit : அடடா அடடா..!

      Delete
    2. @ tex kit

      அடுத்த வருட ஷெட்யூலில் எடிட்டர் இந்த 'மில்லியன் ஹிட்ஸ் ஸ்பெஷலை' எப்படி நுழைக்கப் போகிறார் என்றரிய நானும் ஆவலாய் இருக்கிறேன்.
      இந்த ஸ்பெஷல் குண்டாக இருந்தால் சந்தோஷம். குறைந்தபட்சம் பூசின மாதிரியாவது இருக்கணும். பார்ப்போம்! :)

      Delete
  13. அடுத்த வருடம் மேலும்...மேலும்....மென்மேலும் ....சிறப்பாய் வெளி வர உள்ள , மூன்றாவது வயதை எட்டி உள்ள லயனுக்கு புதிய பிறந்த நாள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  14. உங்கள் இந்த பதிவு பல நண்பர்களின் வருத்தங்களுக்கு மருந்தளிதிருக்கும். 2013 உண்மையில் காமிக்ஸ் ரசிகர்களுக்கு மிக பெரிய கொண்டாட்டமாக இருந்தது என்பது மறக்க முடியாத உண்மை .இந்த வருட சாதனையை தாங்கள் தாண்டுவீர்களோ ...,இல்லையோ ஆனால் கண்டிப்பாக இதே சாதனையை வரும் வருடம் முழுவதும் நிறைவேறவும் ..,ஒரு கோடி கம்ப்யூட்டர் இயந்தரத்தை விரைவில் தாங்கள் வாங்கி எங்களை இன்னும் மகிழ்வளிக்கவும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள் சார் .

    உங்கள் பணியாளர்களின் உழைப்பிற்கு எங்களின் ஒரு கோடி மதிப்பில் மிக பெரிய நன்றிகளை எங்கள் சார்பாகவும் சொல்லி விடுங்கள். உங்களை போன்று பணியாளர்களை வாழ்த்தி வெளிய சொல்லும் " BOSS "ஒரு சிலரே .நீங்கள் கொடுத்து வைத்தது போல அவர்களும் கொடுத்து வைத்தவர்கள் .

    ReplyDelete
    Replies
    1. Paranitharan K : சென்றாண்டு நாம் 2 கோடிக்கு இயந்திரம் வாங்குவதாய்க் கனவு கண்டீர்கள் ; அதை பொசுக்கெனப் பாதியாக்கி விட்டீர்களே...!! நியாயமா ?

      :-)

      Delete
  15. இரண்டாவது இன்னிங்க்சை அடித்து ஆடுவோம் தொடரும் ஆண்டுகளில் ; நிச்சயமாய் எனக்கு தொண்ணூற்று ஒன்பது சதம் திருப்த்தி இந்த ஆண்டில் ;ஒரு சதம் சில கதைகளால் மட்டுமே நெகடிவ் !
    அடுத்த ஆண்டு ஒரு கதை கூட எனக்கு பிடிக்கவில்லை என கூறும் வகையில் இல்லை ! சபாஷ் போட வைக்கிறது உங்கள் தேர்வுகள் !
    ஆனால் புத்தாண்டு இன்ப அதிர்ச்சியாய் சொல்லாமல் ஏதேனும் அதிக கதைகள் வைத்திருப்பீர்களே அவை என்ன என்று எனக்கு மட்டும் கூறுங்களேன்!

    ReplyDelete
    Replies
    1. புத்தக திரு விழாவிற்கு லாரன்ஸ் -டேவிட் கதைகள் அதிரடியாய் உண்டு என பட்சி கூறுவது உண்மையா !

      Delete
    2. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : புத்தக விழாவினுள் நம்மை நுழைய அனுமதிப்பார்களா என்பதை முதலில் உங்கள் பட்சியிடம் கேட்டு சொல்லுங்களேன் :-)

      Delete
    3. டிக்கெட்டெல்லாம் போட்டு வெச்சிருக்கேன். ஏமாத்திடுவாங்களோ......?????

      Delete
    4. கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) : நல்லதே நடக்குமென்று நம்புவோமே...!

      Delete
  16. டியர் விஜயன் சார்,

    கடந்த இரு வருடங்களாக, தமிழ் காமிக்ஸ் மீதான ஈடுபாட்டை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவிய உங்களுக்கும், உங்களது பணியாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! தொடரும் ஆண்டுகளில், இதை விட சிறப்பான சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்!

    //எங்கள் தரப்பு "thanksgiving " பட்டியலை ஒருவாறாக வாசித்தாகி விட்ட போதிலும்//
    அந்தப் பட்டியலில் ஓவியர் மாலையப்பரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!!! மேலும், இவ்வருடம் நிறைவான, விரைவான சேவை அளித்த Professional Courier நிறுவனத்திற்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்! கடந்த வருடம் சுமாரான, ஸ்லோவான சேவை அளித்த மற்றொரு நிறுவனத்திற்கு ஒரு சாதா தாங்க்ஸ்! ;-)

    //"ஆஹா...அதை அப்படிச் செய்திருக்கலாமே ? ...இதை இப்படிச் செயலாக்கி இருக்கலாமே ?" என்ற hindsight ஞானம் பிரவாகமெடுக்கத் தொடங்கியது ! இதே மோனநிலை தொடர்ந்தால் - ஞானிகளின் பட்டியல் ஒன்றால் கூடிடும் அபாயம் எழப் போகிறதே என்ற எச்சரிக்கையுணர்வு தலைதூக்கியதால் - விமானத்தோடு எனது சிந்தனைகளும் தரையிறங்கின!//

    சிறப்பான சிந்தனைகளை தரையிறக்கி வீணடிப்பானேன்?! அவற்றை வரும் ஆண்டில் சிறகடிக்கச் செய்து பயன்படுத்திக் கொள்ளலாமே?! ;-) :-D

    ReplyDelete
    Replies
    1. Karthik Somalinga : அட...ஆமாம் ! மாலையப்பனை மறந்தே விட்டேன் !!

      கூரியர் இல்லையேல் நாமில்லை என்ற நிலையில் - ST & Proff நம் நன்றிகளுக்கு உரியவர்களே ! அதிலும் ST நமக்கென சற்றே சலுகையான கட்டணங்களை சென்றாண்டின் முதல் பாதி வரை வழங்கி வந்ததும் ஒரு பெரும் உதவி !

      நாங்கள் ஒட்டு மொத்தமாய் பிரதிகளை ST -ல் ஒப்படைத்தாலும், பணியாளர் பற்றாக்குறையால் மறு நாள் - அதன் மறு நாள் என பிரித்து அவ்வப்போது அனுப்பும் ஒரே குறை தீர்ந்திடும் பட்சத்தில் ST க்கு எங்கள் செலவிலொரு சிலை எழுப்பத் தயார் !

      Delete
    2. // STக்கு எங்கள் செலவிலொரு சிலை எழுப்பத் தயார்//

      அந்த சிலை மேல் அமர்ந்து ஸ்டீல்-க்ளாவின் பட்சி 'சுச்சா' போகாதவரை சரிதான்! ;)

      Delete
  17. Commitment No .1

    கடந்த ஆண்டு நான் தவறுதலாக ரூ.1000/- ஐ Lion அக்கவுண்டுக்கு டிரன்சர் செய்து விட்டேன். கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பின்னர் தான் எனக்கு இந்த விஷயம் தெரிந்தது. சரி! ஒரு முறை கேட்டுதான் பார்ப்போமே என்று ஒரு ஈமெயில் தட்டிவிட்டேன். ஒரே வாரத்தில் நான் தவறுதலாக டிரன்சர் செய்த பணம் திரும்ப கிடைத்தது. இது ஒன்றே போதும் Commitment-க்கு

    Commitment No .2

    இந்த டிசம்பர் மதத்தின் இதழ்களை நான் என்னுடைய வேறு ஒரு முகவரிக்கு அனுப்பச்சொல்லி ஒரே ஒரு போன் கால் மட்டும் தான் செய்தேன். அலுவலக பணியாளர்கள் சிரத்தையுடன் மீண்டும் போன் போட்டு அட்ரஸ் கேட்டு தாமதமில்லாமல் அனுப்பி வைத்துவிட்டு, எனக்கு மீண்டும் தகவல் சொல்லவும் செய்தார்கள்!

    ReplyDelete
    Replies
    1. discoverboo : சந்தோஷமாய் உள்ளது ! இங்கு பகிர்ந்தமைக்கு நன்றிகள் !

      Delete
    2. என்னை பொறுத்தவரையும் அவர்கள் மிக சிறப்பாய் பணியாற்றுபவர்களே !

      Delete
  18. அனைவருக்கும் X-MAS வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  19. இந்த ஆண்டினை அருமையான ஒரு அனுபவமாக பரிசளித்த அன்பு ஆசிரியருக்கும், சக ஊழியர்களுக்கும், நெஞ்சுக்கினிய ரசிக நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  20. water + ink solvent + alcohol---கண்டுபிடிச்சிட்டேன் நான் கண்டுபிடிச்சிட்டேன் ஆகா ஆஹா ஆஹ்ஹா! நடுவுல ஒரு பொருளை தூக்கிட்டா கலக்கல் என்று சில பல நெஞ்சங்களின் இதய படபடப்பின் வீரியத்தை அதிகரித்து விட்டீர்கள் தலைவா! நம்ம பசங்க படிச்சிட்டு புத்தகத்தை தண்ணியில முக்கப் போவதாக தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன!!!!

    ReplyDelete
  21. "" வாரம் ஒரு பெருநகரிலிருந்து சிவகாசி வந்திறங்கி - ஊர் முழுவதும் 'DTP பணியாளர்கள் தேவை" என்று போஸ்டர் அடித்து ஒட்டி ; கேபிள் டி-வியில் விளம்பரம் செய்து இங்குள்ள திறமைசாலிகளைப் "பிள்ளை பிடித்துச்" செல்ல வரும் நிறுவனங்கள் ஏராளம் !"" காமெடியில் ரியல் கிங் நீங்கதான்னு அழுத்தமாகப் பதிவு செஞ்சிட்டீங்க வாத்யாரே!!!! ஹீ ஹீ ஹீ

    ReplyDelete
  22. 2013 was definetly a golden year for Tamil comics. A big thanks to all the staff, particularly front office staff – they talk very kind and friendly.
    Looking forward to 2014, happy that a will get more books but little hesitant regarding book size.

    ReplyDelete
  23. டியர் எடிட்டர்
    பின் திரும்பிப் (2013) பார்க்கும் படலம்
    மிக அற்புதமான இதழ்கள் நிறைந்ததாகவே இருந்தது.
    முன் நோக்கி (2014) பார்க்கும் படலம்
    மிக மிக அற்புதமான இதழ்கள் நிறைந்ததாகவே இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. Mugunthan kumar : நண்பர் முகுந்தனுக்கு ஒரு கிலோ சர்க்கரை பார்சல் !

      Delete
  24. சார் ...எங்கள் ஊர் ST கொரியர் அவர்களுக்கு நீங்கள் சிலை வைப்பீர்களோ..இல்லையோ நான் வைக்கலாம் .சண்டே கூட எனக்கு டெலிவரி பண்ணி விடுகிறார்கள் .வந்ததும் எனக்கு போன் போட்டும் சொல்லி விடுகிறார்கள் . :-)

    ReplyDelete
    Replies
    1. இன்ப அதிர்ச்சி தான் !

      Delete
    2. பின்னே? சரியான நேரத்துக்கு டெலிவரி பண்ணலேன்னா, ST கொரியரில் வேலை செய்யும் எல்லாருக்கும் ஆளுக்கு ஒரு கடுதாசி போட்டுடுவாரே! ;)

      Delete
    3. //பின்னே? சரியான நேரத்துக்கு டெலிவரி பண்ணலேன்னா, ST கொரியரில் வேலை செய்யும் எல்லாருக்கும் ஆளுக்கு ஒரு கடுதாசி போட்டுடுவாரே! ;)//

      +1

      Delete
    4. பரணிதரன்......எஸ்.டி குரியருக்கு ஃப்ரான்ச்சைஸ் எதுவும் எடுத்திருக்கிறீர்களா என்ன?

      பலமுறை என்ன வெறுப்பேற்றியதால் நொந்து போய் அதிக தொகை அனுப்பி புரொஃபஷனல் குரியர் மூலம் பெற்றுவருகிறேன்......

      Delete
  25. The most rhetoric writer of our times Mr.Vijayan who had in fact transformed / made to re-invent / to novitiate ourselves to be rhetoric too.. LOL... Who else can write a long work log ,yet interestingly and make us wait for it... A day might come when the blog will be more famous than our comics..

    Christmas and subsequent holiday wishes to all..

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் விஜய் : Rhetoric writer என்பதெல்லாம் கொஞ்சம் ஜாஸ்தி என்பேன் ; வேண்டுமெனில் Honest writer என்பது லேசாய் பொருந்தக் கூடும் !

      Delete
  26. Dear editor whatever problem is there we love you and our comics. The only thing is we need more books and more post from you

    ReplyDelete
  27. Nice to read story about your gems. How about ebay sales?. is there any improvement since 2012?.

    ReplyDelete
    Replies
    1. Ezhil Arasu : Yes ! 2013-ன் E-BAY விற்பனை ஒரு சந்தோஷ முன்னேற்றம் ! LANDMARK கடைகளின் விற்பனையும் கூடத் தான் !

      Delete
  28. எடிட்டர் மற்றும் பணியாளர்கள் , நண்பர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  29. ஊஹூம், செல்லாது, செல்லாது!!!!

    உங்களிடமிருப்பது என்ன பிரிண்டிங் மிஷின்? எந்த ஆண்டு வாங்கினீர்கள்? அதை ஒழுங்காக பராமரிக்கிறீர்களா? குறிப்பாக மூன்றாவது சிலிண்டரின் ஏழாவது ப்ளேட் ஹோலில் ஒழுங்காக கிரீஸ் போடுகிறீர்களா? அதற்கு எவ்வளவு செலவாகிறது? இதைப்போல இன்னும் ஆயிரம் கொஸ்டீன்ஸ் இருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லாமல் “அலட்சியமாக” தப்பித்துவிடலாம் என்று திட்டமிடுகிறீர்களா? யார்கிட்ட?

    ஆயிரம் கேள்விகள் அடங்கிய கொஸ்டீன் பேப்பர் உங்கள் சிவகாசியிலேயே வேறு அச்சகத்தில் அச்சடிக்க கொடுத்துள்ளோம். விரைவில் அனுப்பப்படும்.

    -அநீதிக்கெதிரான புதிய போராட்டக்குழு!

    :-))))))))))))))))))))

    ஜோக்ஸ் அப்பார்ட்!!

    “ஒரு தேங்ஸ்கிவிங்” என்ற வகையில் இதுவொரு அழகிய பதிவு! தங்கள் சேவைக்கு நன்றி! நன்றிக்கு நன்றி!!

    மற்றபடி, இந்தப்பதிவிலிருக்கும் தகவல்கள் எல்லாம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல தடவைகள் இங்கு ஏற்கனவே பதியப்பட்டவைதான் அல்லவா? தங்களுக்கும், அலுவலக ஊழியர்களுக்கும், இங்குள்ள காமிக்ஸ் ப்ரியர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பான புத்தாண்டு வாழ்த்துகள்!!

    ReplyDelete
    Replies
    1. ஆதி தாமிரா : "ஆயிரம் கேள்விகள் அடங்கிய கொஸ்டீன் பேப்பர்" !

      +2 தேர்வுகள் நெருங்கும் வேளையினில் - இது ஏதோ ஒரு புது வித மார்கெடிங் யுக்தியாய் மாணாக்கருக்கும் ; பெற்றோர்களுக்கும் தெரியப் போகிறது சார் - உங்கள் வீட்டு வாசலில் இப்போதே கூட்டம் கூடத் துவங்கி இருக்கும் ! Careful !

      Delete
  30. பர்சனலாக 2014 ஒரு ஒல்லி ஆண்டு என்பதில் வருத்தமே! :-)))))) 2015ல் நிச்சயம் விஜயன் ஸார் மனம் மாறுவார் என நம்புகிறேன். ஒல்லி புத்தகங்களில் சில நன்மைகள் இருப்பினும், அதன் மைனஸ் பாயிண்டுகளையும் சற்றே அலசிக்கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    2013ன் சாதனைகள் இனிவரும் ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு படியாவது விஞ்சப்படவேண்டும் என்பது என் ஆசை. அதற்காகவும் அனைவருக்கும் வாழ்த்துகள். ஒன்றிணைந்து செயல்படுவோம்.!

    ReplyDelete
    Replies
    1. டியர் ஆதி ...

      லயன் 3௦ ஆவது ஆண்டு மலரை மறந்து விட்டீர்களே ? குண்டு கமிங் :)

      Delete
    2. ஆதி தாமிரா : இன்று கிட்டிய உங்களின் சந்தாவினைக் கவனித்தேன் ; வேண்டுமெனில் உங்களுக்கு அனுப்பிடும் இதழ்களை மாத்திரம் ஒருங்கிணைத்து ஒரு பைண்டிங் போட்டு அனுப்பிடுவோமா - பருமனான feel தொடர்ந்திடும் பொருட்டு ? :-) :-)

      Delete
    3. டியர் சார் ...இன்று என் சந்தாவினை அனுப்பி விட்டேன் ....MONEY ORDER மூலம் .....நாளை நான் போன் செய்து உறுதி செய்யலாமா ........?

      Delete
  31. A Huge Salute to General VIJAYAN and his ARMY....

    ReplyDelete
  32. Great achievement sir.
    A Huge salute to VIJAYAN AND his TEAM MATE'S

    Sir,
    Still Now I did not receive my december month books.
    Kindly send me my s.t courier POD number. Plz

    ReplyDelete
    Replies
    1. Sabari Nathan : A replacement set has been sent today. Please check tomorrow. ST Courier have bungled on your shipment somewhere.

      Delete
    2. Thank you sir.
      I got it books...

      Here after send me books by register post only..

      Delete
  33. டியர் விஜயன் சார்..,
    ==எது நடந்ததோ - அது நன்றாகவே நடந்தது என்று முன் செல்வோமே..!==

    நிச்சயமாக சார்… இனி நடக்கவிருப்பதும் நன்றாகவே நடக்கும்!

    இனிமேல் இத்தளத்தில் வைக்கப்படும் விமர்சனங்கள் கதைகளின் தரத்தைப்பற்றியதாக இருக்கவேண்டுமேயன்றி புத்தகத்தின் தரத்தைப்பற்றியோ அது கையாளப்படும் விதத்தைப்பற்றியோ இருக்ககூடாது என்பது என் ஆசை.

    புத்தாண்டில் எந்தவிதமான குறைகளும் இன்றி புதுப்பொலிவுடன் நமது இதழ்கள் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    நமது காமிக்ஸ் பயணத்தில் உங்களுக்கு பக்கபலமாய் இருந்து வரும் ஒவ்வொருவருக்கும் நன்றிகள் பல.
    அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  34. Dear Vijayan Sir! A Great THANKS to You and the Team members behind our Comics!
    Let 2014 exceed in all Good things which we have seen in 2013.
    Our support is always with you!

    ReplyDelete
  35. ஆசிரியர் திரு.விஜயன்,
    திரு.பிரகாஷ்
    திரு.கருனையானந்தம்,
    திரு.ராதாகிருஷ்ணன்
    திரு.மைதீன்
    திரு.மாலையப்பன்
    திரு.பொன்னன்
    திரு.அமீன்
    செல்வி.அருணா தேவி,
    திருமதி ஸ்டெல்லா & தேவி
    பிரெஞ்சு மொழிபெயர்க்கும் இல்லத்தரசி
    & support staff ,ST COURIER

    நமது காமிக்ஸ் வரலாற்றில் நம்பமுடியாத, கனவுகளிலேயே இதுவரை சாத்தியப்பட்ட ஒரு மலைப்பான சாகச செயலை நிஜத்தில் சாத்தியமாக்கியுள்ளீர்கள். 2013 நமக்கு ஒரு சாதனை ஆண்டு. நிஜ உலக ஹீரோக்களான உங்களுக்கு, எங்களை முழுமையாக மகிழ்வித்தற்காக அனைவர் சார்பாகவும் ஆழமான நன்றிகள்!

    இங்கே தங்களது பணிச்சுமைகளுக்கிடையே ஆர்வமாக பின்னூட்டமிட்டு இந்த தளத்தை உற்சாகமாய், உயிரோட்டமாய் வைத்திருக்கும் அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்! :-)))

    2013 சாதனையை 2014 இல் முறியடிக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஐயய்யோ... செல்வியை திருமதியாவும், திருமதியை செல்வியாவும் மாத்திட்டீங்களே, வி-சு? :D (ஹைய்யா நானும் நாட்டாமை ஆகிட்டேன் :D )

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. // ஹைய்யா நானும் நாட்டாமை ஆகிட்டேன் :D //

      விஸ்கி-சுஸ்கியின் comment-ஐ copy paste செய்த நண்பர்கள் கூட கண்டுபிடிக்கத்தவறிய குறையை நீங்க திறமையா கண்டுபிடுச்சிட்டீங்களே! இன்று முதல் நீங்க மட்டும்தான் பாஸ் நாட்டாமை. நான் பதவி விலகிட்டேன் (அப்பாடி!)

      Delete
    4. நாட்டாமைக்கு நாட்டாமை செய்யும் நாட்டாமை !

      Delete
    5. ரெண்டு நாட்டாமை இருந்தாதான் தீர்ப்பு பட்டு பட்டுன்னு வரும் !

      Delete
    6. @ ஸ்டீல்

      ஒரு அரசமரத்தடியில் இரு நாட்டாமைகள் இருக்கவே முடியாது. 'எஜமான்' ரஜினி மாதிரி துண்டை சுழற்றி தோளில் போடும் வித்தைகள் 'உண்மையான நாட்டாமை'க்கு மட்டுமே சாத்தியம்! நாட்டமைகளின் அடையாளமான 'சொம்பு' கூட என்னிடம் கிடையாது என்பதே உண்மை! :D

      Delete
    7. // நாட்டமைகளின் அடையாளமான 'சொம்பு' கூட என்னிடம் கிடையாது என்பதே உண்மை! :D //

      இந்த காலத்தில் Water Bottle-தான் :D

      Delete
    8. அந்த வாட்டர் பாட்டில் சாயந்திர நேரத்தில் நாட்டாமைக்கு குவார்ட்டர் பாட்டிலாக மாறாதவரை சரிதான்! :D

      Delete
    9. //அந்த வாட்டர் பாட்டில் சாயந்திர நேரத்தில் நாட்டாமைக்கு குவார்ட்டர் பாட்டிலாக மாறாதவரை சரிதான்! :D//

      எந்த நாட்டாமைக்கு என்பதே கேள்வி ?

      Delete
    10. @விஜய்
      //ஐயய்யோ... செல்வியை திருமதியாவும், திருமதியை செல்வியாவும் மாத்திட்டீங்களே, வி-சு? :D //
      OOOPPS! அருணா தேவி திருமணம் ஆனவரா ??? அப்படியானால் நம்ம ஆசிரியர் அவரை "இளம் பெண்" என்று ஏன் கூற வேண்டும்??"இல்லத்தரசி" என்று குறிப்பிட்டிருப்பாறே?? எது எப்படியோ நான் குறிப்பிட்டது தவறாக இருந்தால் APOLOGIES!

      Delete
  36. ஆசிரியர் திரு.விஜயன்,
    திரு.பிரகாஷ்
    திரு.கருனையானந்தம்,
    திரு.ராதாகிருஷ்ணன்
    திரு.மைதீன்
    திரு.மாலையப்பன்
    திரு.பொன்னன்
    திரு.அமீன்
    செல்வி.அருணா தேவி,
    திருமதி ஸ்டெல்லா & தேவி
    பிரெஞ்சு மொழிபெயர்க்கும் இல்லத்தரசி
    & support staff ,ST COURIER

    Thanks Team - Keep up the Good Work !

    Looking ahead for the same kind of support next year !

    ReplyDelete
  37. ஆசிரியர் திரு.விஜயன்,
    திரு.பிரகாஷ்
    திரு.கருனையானந்தம்,
    திரு.ராதாகிருஷ்ணன்
    திரு.மைதீன்
    திரு.மாலையப்பன்
    திரு.பொன்னன்
    திரு.அமீன்
    செல்வி.அருணா தேவி,
    திருமதி ஸ்டெல்லா & தேவி
    பிரெஞ்சு மொழிபெயர்க்கும் இல்லத்தரசி
    & support staff ,ST COURIER

    Thank you All

    ReplyDelete
    Replies
    1. @ ALL FRIENDS : ஆத்மார்த்தமான நன்றிகள் !

      Delete
  38. கைநிறைய, கலர்ஃபுல்லாக புத்தகங்களை இந்த ஆண்டு நெடுகிலும் அள்ளித் தெளித்துச் சென்றிருக்கும் மரியாதைக்குரிய எடிட்டர் அவர்களுக்கும்,ப்ரகாஷ் குமார் மற்றும் விக்ரம் அவர்களுக்கும்,
    ஓயாது உழைத்திடும் பணியாள-நண்பர்களுக்கும்,
    பகுதி நேரமாய் பணியாற்றிடும் ஓவிய,
    மொழிபெயர்ப்பு, DTP நண்ப-நண்பிகளுக்கும்,
    இரவிலும் பணியாற்றிடும் அச்சுப் பணியாள நண்பர்களுக்கும்,
    இதுவரை எந்தவொரு புத்தகத்தையும் முனை மடங்காமல், கிழியாமல், தாமதப்படுத்தாமல் கொண்டுவந்து சேர்ப்பித்த ST/புரொஃபஷனல் கொரியர் பணியாளர்களுக்கும்,
    இந்த வலைப்பூவில் நாள்தோறும்/அவ்வப்போது கமெண்ட் இட்டு வரும் நண்பர்களுக்கும்,
    கமெண்ட் இடாமல் வேடிக்கை மட்டும் பார்க்கும் நண்பர்களுக்கும்,
    எண்ணிக்கையில் சொற்பமே என்றாலும் தொடர்ந்து காமிக்ஸ் படித்துவரும் வாசக-நண்பிகளுக்கும்,
    இங்கே பதியப்படும் விசயங்களில் குறை கண்டு மற்ற தளங்களில் நைய்யாண்டி செய்வதையே பொழுதுபோக்காகக் கொண்டிருக்கும் ஒரு சில நண்பர்களுக்கும்,
    கன்னாபின்னாவென்று திட்டியே காமிக்ஸ் வளர்ச்சிக்கு மறைமுகமாகப் பாடுபடும்(!) வேறு சில நண்பர்களுக்கும்,
    இங்கிருந்து ஊடலில் சென்று மெளனமாகியிருக்கும் மற்ற சில நண்பர்களுக்கும்,
    பழைய காமிக்ஸைத் தேடி ஊர் ஊராக அலையும் தீவிர  காமிக்ஸ் வெறியர்களுக்கும்,
    கடுதாசிகளில் காமிக்ஸ் நேசம் காட்டுபவர்களுக்கும்,
    காமிக்ஸை தன் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகவே கருதி வாழ்பவர்களுக்கும்,
    கடல் கடந்தும் காமிக்ஸ் வேட்கை கொண்டு சந்தா செலுத்துபவர்களுக்கும்,
    மொழி புரியாவிடினும் தங்களது காமிக்ஸ் காதலைக் காட்டிடும் வெளிநாட்டு காமிக்ஸ் வெறியர்களுக்கும்,
    அட்டைப்பட-விளம்பர டிசைன்களில் அசத்திவரும் வாசக நண்பர்களுக்கும்,
    மொழிபெயர்பில் பங்கு கொண்ட அனைத்து நண்பர்களுக்கும்,
    தமது சொந்த வலைப்பூவிலும் காமிக்ஸ் விமர்ச்சனங்கள் கொடுத்து காமிக்ஸ் வளர்க்கும் பதிவர்களுக்கும், சிக்கலான கதைகளின் பின்னணியை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேயும் புலனாய்வுப் பதிவர்களுக்கும்,
    நம் ரசிப்புத் தன்மையை இன்னும் மேம்படுத்திடும் 'ஓவியப் பார்வை' பதிவர்களுக்கும்,
    உரிமையோடு குறைகளை சுட்டிக்காட்டிடும் நண்பர்களுக்கும், சற்றே உணர்ச்சிவசப்பட்டு வாங்கிக் கட்டிக் கொள்ளும் நண்பர்களுக்கும்,
    புனைப் பெயரிலேயே தொடர்ந்து புகுந்து விளையாடிவரும் நண்பர்களுக்கும், நடுநிலைவாதிகளுக்கும்,
    மீடியா நண்பர்களுக்கும்,
    உள்ளூர் விற்பனையாளர்களாகி காமிக்ஸ் வளர்க்கும் நண்பர்களுக்கும்,
    கடைகளில் காமிக்ஸ் விற்பவர்களுக்கும்,
    துடிப்பாக இயங்கிவரும் முகவர்களுக்கும்...

    இந்த வருடத்தை ஒரு காமிக்ஸ் வருடமாக்கியதற்கு நன்றி நன்றி நன்றி!

    அனைவருக்கும் என் கிருஸ்துமஸ் மற்றும் புது வருட வாழ்த்துக்களும்!  :)

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : மைக் செட்டும் ; மேடையும் இல்லாமேலே பிளந்து கட்டும் உங்களுக்கு - தொடரும் தேர்தல் ஆண்டில் கடும் டிமாண்ட் எழுந்திடப் போகிறது ! பூனை சின்னத்தோடு ஒரு புதுக் கட்சி உதயமாகும் வாய்ப்புகள் எனக்குப் பிரகாசமாய்த் தெரிகிறது !!

      Delete
    2. ஹா ஹா ஹா! நன்றி சார்! :) கட்சி உருவாகிறதோ இல்லையோ, ஏற்கனவே உருவாகியுள்ள போராட்டக்குழு வலுப்பெறும். 2014ல் உங்கள் பாடு திண்டாட்டமாகிடும். :)

      Delete
    3. Hats off Vijay! எங்கேயோ போயிட்டீங்க :-) இது மாதிரி ஒரு வாழ்த்து மடலை இதுவரை படித்ததில்லை! எல்லோரையும் தொட்டுவிட்டீர்கள்! யாரும் உங்களிடமிருந்து தப்பியதாய் தெரியவில்லை! அட்டகாசம் !

      Delete
    4. ஹி ஹி! இவ்வளவு பெரிய list போட்டபின்பும் முக்கியமானவர்களை விட்டுட்டீங்களே... அதாவது

      வான் ஹாமே அவர்களுக்கும்,
      கோஸினி அவர்களுக்கும்,
      ...
      ...
      ...
      ...

      Delete
    5. @ Radja from France

      வாழ்த்துக்கே வாழ்த்துச் சொல்லயமைக்கு நன்றி நண்பரே! மேலே நாட்டாமை சுட்டிக் காட்டியதைப் பார்த்தீர்களா? பாட்டெழுதிப் பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்... குற்றம் கண்டுபிடித்தே... :D

      Delete
    6. // மேலே நாட்டாமை சுட்டிக் காட்டியதைப் பார்த்தீர்களா? பாட்டெழுதிப் பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்... குற்றம் கண்டுபிடித்தே... :D//

      ...அது வந்து Suggestion... :P

      Delete
    7. Superb ஈரோடு விஜய் ஜி!

      Delete
    8. Vijay ஆசிரியர் வெளியிட வேண்டிய மடலை நீங்கள் வெளியிட்டு விட்டீர்கள். அற்புதம்...

      Delete
  39. // நாம் சந்திக்கும் மிகப் பிரதானமான சவாலே இவர்களில் எவரும் காமிக்ஸ் காதலர்களல்ல என்பதே! ஒரு வேலையினை - ரசனையோடு செய்வதற்கும் ; ஜீவனத்திற்கொரு வழியாய்ச் செய்வதற்கும் மலையளவு வேறுபாடு உண்டென்பதை நான் சொல்லிடவும் வேண்டுமா - என்ன ? அதனையும் மீறி இவர்கள் நமக்கு நல்கியுள்ள உழைப்பின் அளவு இத்தனை எனும் போது - அவர்களது குறைபாடுகள் என் கண்களுக்குப் பெரிதாய் மேலோங்கித் தெரிவதில்லை!

    நம்மைச் சார்ந்து வளரும் ஒரு பணியாளரை "பட்"டென்று கழற்றி விட்டு திறமையில் அடுத்த நிலையில் இருப்பவரை நாடி ஓடுவது நிச்சயம் நமது பாணியாக இராது ! Loyalty என்பது ஒரு வழிப் பாதையல்ல என்பது எனது நம்பிக்கை! ஒரு professional நிர்வாகிக்கு இது உகந்த அணுகுமுறையாய்த் தெரியாது இருக்கலாம் தான் ; ஆனால் எணிப்படிகளின் சகல நிலைகளையும் பார்த்து வந்த எனக்கு அது தவறாய்த் தெரியமாட்டேன்கிறது! //

    @Vijjayan Sir சார், இம்மாதிரி குழப்பங்கள் பொதுவானவைதான். அந்த lettering பணியாளருக்கு நிச்சயம் தங்களுடைய interaction தேவைப்படுகிறது (ஒவ்வொரு கதைக்குமே). போதுமான அளவு கால அவகாசமும் கொடுங்கள்! Beginner-ஆக இருந்தாலும் ஒரு 6 மாத காலத்துக்குள் ஒரு Standard-ஐ தொட்டுவிடமுடியுமல்லவா.

    எனது வருத்தம் நமது காமிக்ஸ்களின் இரண்டாவது வருகை ஆரம்பித்து 2 ஆண்டுகள் ஆன பின்பும் Lettering/Balloons ஒரு Standard-ஐத் தொடாமலிருப்பது - மாதந்திர புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் இந்த தருணங்களிலும்.

    ReplyDelete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete
  41. அன்புள்ள சார்,

    ஒவ்வொரு முறையும் இங்கே வரும் போது இதழ்கள் தொடர்பில் உடன் கருத்து கூற முடியாத போதும் புதிதாக ஏதொ ஒன்றை அறிய முடிகின்றது. அவை தமிழக பேச்சு வழக்கு,காமிக்ஸ் பற்றிய தகவல்கள்.தங்கள் மற்றும் சக நண்பர்களின் எழுத்து நடை,வித்தியாசமான சிந்தனைகள் என பல.அவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு போல் அச்சு துறை பற்றி இன்று அறிய முடிந்தது.

    தடாலடியாக பிரின்டேரில் பிரிண்ட் எடுப்பதை போல் அல்லாது இப்படி காகித வேஸ்ட் சமாச்சாரம் எல்லாம் அச்சிடலில் உள்ளது தெரியா விடயம்.எத்தனையோ லாபமீட்டும் தொழில் இருந்தாலும் எம்மை போல் சிறு வட்டதுக்காக நீங்களும் டீமும் படும் கஷ்டங்கள் அசாத்தியமானவை.ஒவ்வொரு புதிய புத்தகமும் கிடைத்தால் உங்கள் முன்னுரையை படித்து விட்தே கதை படிக்கும் அளவுக்கு எம்மை கட்டி போட்டூள்ளிர்கள்.எனக்கு சிறுவயது தொட்டே SuperHero ரகம் அல்லாத கார்டூனே பிடிக்காது.ஆனால் உங்கள் இதழ்களில் லக்கி,சிக் பில் மற்றும் புதிய பிளூ கோட்ஸ் தரும் ஈர்ப்பே தனி.இவையே மானசீகமாக உங்களுக்கு செலுத்த முடிந்த நன்றிகள்.

    இம்முறை உங்கள் கருத்து ஞானி போல் உள்ளதோ இல்லையோ ஒரு சாதித்துகாட்டிய பெருமை தெரிகிறது.1992 ல் எட்டு வயதில் தொடங்கிய காமிக்ஸ் வாசிப்பில் காமிக்ஸ் மழை போல் பொழிந்த 1993-95 ஐ விடவும் நீங்கள் அர்புதங்கள் செய்து காட்டிய 2012-13 ஆண்டுகளே குறிப்பாக அட்டவனையுடன் தொடங்கிய "2013" சிறந்தது என்பது என் கருத்து.கௌபோய் , டிடெக்டிவ் உடன் நின்ற என் ரசனையில் இன்று புதிதாக பல்வேறு ரசனைகள் நுழைந்ததும் ஓர் காரணம்.நல்ல நண்பர்கள் பலர் வேறு கிடைத்தார்கள்.வாசகர் திறமைகள் காட்டிட களம் அமைத்து கொடுத்துள்ளீர்கள்.

    வரும் 2014 இதழ்களும்,சைசும் சுருங்கி விட்டபடியால் Lion-30 தவிர்த்து சுருதி குறைந்து விட்டது.கலக்கும் லார்கோ வேறு இனி சர்ச்சை வாசலை திறக்கும் நேரம் வந்ததால் என்ன ஆகப்போகிறதோ.எனவே என் காலத்தில் "2013" காமிக்ஸ் பிரியர்,வெறியர் எல்லோருக்கும் மறக்கமுடியா Best ஆண்டு.என் வார்த்தைகள் மிகை அல்ல.மிகவும் நன்றி.

    ஆசிரியர் சார்,ஜுனீயர் எடிடர்,Team மற்றும் வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  42. டியர் விஜயன் சார்,

    உண்மையிலேயே இந்த வருடம் நமக்கு மறக்க இயலாத ஆண்டாக அமைந்தது. நேற்றுதான் சென்னை புத்தக திருவிழாவில் NBS பெற்றது போல உள்ளது. இதோ அடுத்த புத்தக திருவிழா தயாராகி வருகிறது...

    இந்த வருடம் இவ்வளவு சிறப்பாக அமைய நீங்களும், நமது டீம் நண்பர்களும் எவ்வளவு சிரத்தை எடுத்து உள்ளீர்கள் என்பது கண்கூடு. உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள் ...


    இந்த வருடத்திய மறக்க இயலா நினைவுகள் சில ...
    ----------------------------------------------------------------------------------------

    * சென்னை புத்தக திருவிழா – நண்பர்கள் சந்திப்பு

    * NBS மற்றும்அதன் வெளியீட்டு விழா

    * ஈரோடு புத்தக திருவிழா – நண்பர்கள் சந்திப்பு

    * மின்னும் மரணம் – மெகா கலரில் அறிவிப்பு

    * தீபாவளி மலர்

    * போட்டிகளில் நண்பர்களது வெற்றிகள்

    * புதிய காமிக்ஸ் நண்பர்களின் அறிமுகம்

    * லயன் ஆண்டு மலர் பற்றிய அறிவிப்பு

    * நண்பர்களை திறமைகள் (டிசைன் & மொழிபெயர்ப்பு)

    * +6 வெளியீடுகள்


    வேலைப்பளு காரணமாக அதிகமாக கமெண்ட் இட முடியாதது வருத்தமாக உள்ளது. அதைப்போலவே இனிய நண்பர் ஒருவர் இனிமேல் எந்த போட்டியிலும் கலந்து கொள்ள போவதில்லை என்று சொல்லி இருப்பதும் கொஞ்சம் வருத்தமே (நேரம் இல்லாததால்). ஆனால் அவரால் சும்மா இருக்க முடியாது பாருங்க :)

    நேரம் கிடைக்கும் பொழுது புகுந்து விளையாடத்தான் போகிறார் ... Wait and see ...

    தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும், அலுவலக நண்பர்களுக்கும் மற்றும் இனிய காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

    இனி வரும் 2014 இதை விட சிறப்பாக எல்லோருக்கும் அமைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன் ...


    திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன்



    ReplyDelete
    Replies
    1. @ ப்ளூ

      நீங்க ஆஸ்திரேலியாவுக்குப் போயிருந்தபோது அங்கேயும் பழைய புத்தகக் கடையில் காமிக்ஸ் ஏதாச்சும் கண்ணுல படுதான்னு தேடினதைச் சொல்லாம விட்டுட்டீங்களே...?

      Delete
    2. @விஜய்,

      அங்கே கங்காரு குட்டிகளை பார்க்கவே நேரம் போதவில்லை :)

      Delete
    3. டியர் சாந்தன் !!!

      கங்காருவை பார்த்தீர்களா.....?இல்லை...."குட்டிகளை" பார்த்தீர்களா...?:-)

      Delete
    4. ஹி .. ஹி ... ஹி வாங்க புனித சாத்தான் .... ரொம்ப நாளாக இந்த பக்கம் காணோமே ?

      Delete
  43. தல நமக்குள்ள எதுக்கு நன்றி எல்லாம்?!!! எங்களுக்கு புதிய உலகங்களை அறிமுகபடுத்தியதற்காக நாங்கள் தான் உங்களுக்கு நன்றிகள் கோடி சொல்லணும். என்ன நான் சொல்றது??

    ReplyDelete
  44. Dear vijayan Sir and His Team,

    what you have achieved during Jan to Dec 2013 is phenomenal and have set an very high standards so far. This only makes us joy as you are going to raise the bar again in year 2014 compared to 2013 - which means - We, your friends ( or readers ) will have more fun and quality time spending reading your magazines.. !!!

    very touching review by vijayan sir on his Crew. this crew is marvellous and we are proud of you.

    cheers,
    Selva K
    Chennai

    ReplyDelete
  45. காமிக்ஸ் மீதான காதல்தான் இயங்கவைக்கிறது! - எஸ். விஜயன் சிறப்புப் பேட்டி
    - கட்டுரை படித்தேன் தமிழ் தி ஹிந்து-வில். http://tamil.thehindu.com/general/literature/காமிக்ஸ்-மீதான-காதல்தான்-இயங்கவைக்கிறது-எஸ்-விஜயன்-சிறப்புப்-பேட்டி/article5484456.ece

    ReplyDelete
  46. இயந்திரங்களைவிட மனித உழைப்பை நேசிக்கும் உங்கள் எட்டாத மனசுக்கு (அதாவது - உயர்ந்த உள்ளத்திற்கு) என் அன்பின் நன்றிகள்!

    ReplyDelete
  47. ஐயா முத்து 41வது அகவை மலர் பற்றி ஏதேனும் கருத்துக்களை கூறுங்கள்

    ReplyDelete
    Replies
    1. அடடா! முத்துக் காமிக்ஸின் 41வது ஆண்டு மலரை எப்படி மறந்தோம்! எடிட்டர் எஸ்கேப் ஆகிட்டாரோ?!

      Delete
  48. வாசக(ர்)ன் வாய்ஸ் :- என்னுடைய கேள்வியில் தவறு இருந்தால் அதைப்பற்றி அந்த விவாதத்தின் போதே கலந்து அதைப்பற்றி கேட்டிருக்க வேண்டும். மற்றவர்களின் சுட்டிக்காட்டும் கேள்விகளை நான் எதிர்கிறேன் என்கின்றீர்கள். அவர்களின் கேள்வி தவறு என்பதை என்னால் நிருபிக்க முடியும். அதனால் அதை தவறு என்கின்றேன். என் கேள்வியில் உள்ள தவறை முடிந்தால் நீங்கள் அப்பொழுதே நிருபித்து இருக்க வேண்டும். இப்போழுதும் இங்கே பதிய பட்டுள்ள கருத்துககளில் ஏதாவது தவறு என்று எனக்கு தோன்றினால் அதை நிருபிக்கும் விதத்தில் அதன் எதிர் கருத்தை பதிவேன். அதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. வாசக(ர்)ன் வாய்ஸ் ;- ஆதி தாமிரா நான் ஆசிரியரின் மனதை புண்படுத்தும் விதத்தில் பதிவிட்டுள்ளேன் என்றார். எவ்வாறு புண்படுத்துகின்றது என்று கேட்டால் அதற்கு நேரடியான விளக்கம் தரவில்லை.அந்த வார்த்தை ஒரு காரண வார்த்தை என்கிறேன். தொடர் விவாதத்தில் ஈடுபட்டால் என் விளக்கத்தை பதிவு செய்ய தயாராகவே உள்ளேன்.பொத்தாம் பொதுவாக முகத்தை மறைத்து ஒரு பதிவை போட்டுவிட்டு அதை பற்றி விளக்கம் கேட்டால் ''இங்கு எதையாவது கூறினால் அதை ஏதிர்கின்றார்கள் '' என்று வெளியில் புலம்பும் ஆள் நான் அல்ல. நீங்கள் அதை கேட்டீர்களே அதனால் எப்படி இதை கேட்கலாம் என்று என்னிடம் கேட்காதீர்கள் அந்த அந்த இடத்தில் நீங்கள் வழி மறித்தீரகள் என்றால் அதை நிருபிக்கும் விதத்தில்லேயே இருந்தேன். இப்பொழுது நிகழ் பிரச்சினைக்கு வாருங்கள். நான் போன பதிவில் இட்ட பின்னூட்டம் ஆசிரியரின் மனதை காயப்படுத்தும் விதத்தில் இருந்தது என்று ஆதி தாமிரா கூறுகிறார். நியாயம் பேசும் நீங்கள் அது எப்படி காயப்படுத்தும் என்பதை விலக்குங்கள் அல்லது அவர் கேட்டது தவ்று என்று பதிவு செய்யுங்கள். அப்புறம் நீங்கள் வாசகர் வாய்ஸ் அல்ல வாசகன் வாய்ஸ் தான் என்பதை நிருபிக்க என்னிடம் சில பதில்கள் இருக்கின்றன ,கேள்வி உங்களிடம் இருக்குமேயானால்.

      Delete
    2. இது வரை மற்றவர்களின் கருத்துக்கு எதிர் கருத்தை வைத்திருப்பேனே தவிர விமர்சனங்களை நான் தடுத்ததில்லை. நண்பர் கார்திக்குடன் முன்பு நடத்திய ஒரு உரையாடலின் போது கூட விமர்சனங்களை இங்கு வையுங்கள் வெளியில் செய்வதால் என்ன பயன் என்றுதான் பதிவு செய்திருந்தேன். உங்களைப் போன்ற முகம்மூடி ஆசாமிகளுக்கு பயந்துதான் இங்கு யாரும் பதிவிடுவதில்லை என்று பதில் வந்தது.

      Delete
    3. வரிக்கு வரி பதில் சொல்லாமல் மொத்தமாக என் நிலையை தெளிவு படுத்தி இருக்கிறேன். நீங்கள் மேலே பதிவிடுள்ள உங்கள் பினூட்டத்திற்கு வரிக்கு வரி பதில் சொன்னால் தான் நீங்கள் புரிந்து கொள்ளும் நிலையில் இருக்கின்றீர்கள் என்றால். என்னிடம் பதில்கள் உள்ளன.

      Delete
    4. அப்புறம் ஆதி தாமிராவிற்கு பதில்தான் அளித்து கொண்டிருந்தேனே தவிர அவர் என்னிடம் கேட்டது தவறு என்று பதிவு செய்யவில்லை. என் நிலையை தெளிவு படுத்துவதற்கான வார்த்தைகளைதான் பயன்படுத்தி இருந்தேன். எந்த வகையில் நான் வெறுப்பை உமிழ்ந்தேன். அவர் தான் என்னை பள்ளி பையனாக வர்ணித்திருந்தார். நான் அதை போன்று எந்த வார்த்தையை உபயோகப்படுத்தி இருந்தேன். ஆசிரியரின் மனம் நோகும் என்று கவலைப் படுபவர் மற்றவர்களின் மனம் நோகுமா என்பதை சிந்திக்கவில்லை. இதுவரையில் இங்கு நடந்துள்ள எந்த விவாதத்திலேயும் பதிலாகவேயன்றி நான் யாரையும் ஆட்சேபனைக்கு உரிய வார்த்தைகள் கூறி கசப்பை உமிழ்ந்ததில்லை.

      Delete
    5. [ஆதியைப் பார்த்து கேட்கின்றார் பாருங்கள் ஒரு கேள்வியை... அதை முதலில் கண்ணாடி முன் நின்று, தம்மைத் தாமே வினவிக் கொள்ளட்டும்!

      //நீங்கள் நியாயவாதியாக இருந்தால் உங்கள் மனமே இதை ஒத்துக்கொள்ளாது //]

      இதை கூறுவதற்கு உங்களுக்கு தகுதி இருக்கின்றதா ? ஏனெனில் இங்கு பல முகங்களுடன் நீங்கள் உலவுகின்றீர்கள். பல குண இயல்புகளை வெளிப்படுத்துகின்றீர்கள். சூழ்னிலைகேற்ப நடிக்கும் குணமுள்ள உங்களிடம் நியாயம் எப்படி இருக்க முடியும் ? உண்மையில் நீங்கள் நியாயவாதி என்றால் உங்கள் போலி முகத்தை களைந்து நிஜ முகத்தை வெளிப்படுத்துங்கள் அதுவே நியாயவான்ங்களுக்கு உள்ள அடையாளம்.

      //ஆயின், இவர் செய்யும் விமர்சனம் ஆதி தாமிராவை பாதித்தால் அது புரிதல் இன்மையாம், கற்பனையாம்!//

      இப்பொழுதைய ஆசிரியர் பதில் இல்லாத 22.12.2013 ல் நடந்த விவாதத்தை ஒட்டி இந்த கேள்வி என்பதால்., ஆசிரியரின் பதில் இல்லாத சூழ்னிலையை மனதில் கொண்டே இப்பொழுது நான் அளிக்கும் என் பதிலை கவனிக்க வேண்டுகிறேன்.

      ''வறுமையினால் என்றால் சரி . அலட்சியத்தினால் என்றால்.......?'' என்ற என் வாக்கியத்திற்கு பதில் அளிக்கும் விதமாக ஆதி தாமிரா பொருளாதார விசயங்களையே மேற்கோல் காட்டி இருந்தார்.

      அச்சில் கோளாறு என்பதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் ?

      தெளிவாக அச்சிட்டால் 10 ருபாய் அதிகமாகும் என்றும் மங்கலாக அச்சிட்டால் 20 ருபாய் கம்மியாகவா செலவு ஆகும் என்பது போலவா? . அச்சில் கோளாறு என்பது அலட்சியத்தினால் அன்று வேறு எதனால் இருக்கும்

      இதற்கும் பொருளாதாரத்துக்கும் என்ன சம்பந்தம்?.

      என் வாசகத்துக்கு அவர் கூறிய பதில் புரிதல் இன்மையும் , கற்பனையும் அன்றி வேறு எதுவென்று நான் பதிவு செய்ய முடியும் ?

      Delete
    6. மீரான்@@

      ஆதி தாமிராவின் கருத்துக்கள் சரியானவை என அடியேன் எங்குமே குறிப்பிடவில்லையே ?! உங்கள் கற்பனையை எம் மீது ஏன் திணிக்கின்றீர்கள் ? ஆதி இழைத்தது தவறு எனவன்றோ குறிப்பிட்டிருந்தேன்! அதே போன்று ரமேஷ் குமார் மற்றும் மீரான் குறைகளைச் சுட்டிக் காட்டியது தவறல்ல எனவுமன்றோ சொல்லி இருக்கின்றேன் ?

      உங்களுடைய கருத்துக்களால் ஆசிரியரின் மனம் நோகும் என்று நினைத்திடுவது ஆதியின் கற்பனை என்ற தங்களின் கூற்று சரியா தவறா என்பதை முடிவு செய்திட வேண்டியவர் ஆசிரியரே ! ஏனெனின் , அவர் உள்ளத்தைப் படித்திட ஏனையோரால் ஏலாது. ரமேஷ் குமார் ஆசிரியர் அவர்களின் நேர்மையை சந்தேகித்தாரே , அதுவே எமக்கு பெரும் கோபம் தந்தது !

      நான் முகம்மூடியாகவும், சூழ்நிலைக்கேற்ற நடிகனுமாகவுமே இருந்து விட்டுப் போகின்றேன் ! அடியேன் ஒன்றும் குற்றமற்றவனல்ல ! சித்திரக் கதைகளிலும், திரைப்படங்களிலும் நம் மனங்கவர் நாயகர்கள் அநியாயம் கண்டு பொங்கும் போது , நம் நாடி நரம்புகளும் முறுக்கேறிடுவது இல்லையா? அவர்களைப் போன்று நம்மை கற்பனை செய்து பார்த்து, நிஜத்தில் அவ்வாறு இருக்க இயலவில்லையே என வெம்புவதில்லையா? அதன் வெளிப்பாடுதான் இம் முகமூடி! அடியேன் ஒரே ஒரு வாசகன்(ர்) தான் - அதை நிரூபித்திட தாங்கள் மெனக்கெட்டிட வேண்டாம் !

      நியாயவான்கள் மட்டுமே நியாயம் பேசிட வேண்டுமோ? நீங்கள் நியாயம் பேசிடும் போது நான் பேசிடக் கூடாதோ ? இப்பூவுலகில், நூறு சதவிகித நியாயவான் நீங்கள் ஒருவர் தாம் என்னும் கற்பனையில் தாங்கள் சஞ்சரிப்பதாக தெரிகின்றது! அப்படியொரு களங்கமில்லா நியாயவான் இதுகாறும் பிறந்ததும் இல்லை , இனி பிறக்கப் போவதுமில்லை !

      தங்களையும் , ரமேஷையும், மண்டையாரையும் அடியேன் விமர்சித்ததன் காரணம் , ஊருக்கு செய்யும் உபதேசத்தை நீவிர் பின்பற்றுவதில்லை என்பதே!

      எமது கருத்துக்கள் யாவும் , பக்குவம் வாய்ந்த தோழர் BN USA அவர்களின் கருத்தை எதிரொலிக்கும் வண்ணமே அமையப் பெற்றது !

      //I usually keep away from this cesspool of a forum due to folks like ஆதி தாமிரா who attack the rights of others to express the problems//

      பேசுங்கள், பிறரையும் பேச விடுங்கள் ! ஆசிரியரின் பதிலை மட்டுமே எதிர்பார்த்து தமது எண்ணங்களைப் பகிர வரும் தோழர்களிடம் உங்களைப் போன்றோர் எதிர்வாதமும் , விதண்டாவாதமும் செய்து கொண்டே இருப்பின் , நியாய அநியாயங்களை பேசிக்கொண்டே இருப்பின் - தோழர் BN USA வைப் போன்றே , ஒவ்வொருவராய் இங்கிருந்து விலகிச் சென்றிடுவர்!

      ஆசிரியரின் காலணிகளுக்குள் உமது கால்களை நுழைக்காதீர்கள் அவை உமக்கு எந்நாளும் பொருந்தப் போவது கிடையாது ! ஏனெனின், அவரே இவ்வலைப்பூவின் நாயகர்! வாசகர்களின் வினவல்களுக்கு , பதிலளிக்க கடமைப் பட்டவர் அவர் ஒருவரே !

      Comment moderation அமைப்பதற்கு பதிலாக , முறையற்ற கேள்விகளைக் கண்டு புன்னகையுடன் ஒதுங்கிச் சென்றிடும் அசாத்தியமான முடிவையும், சங்கடப் படுத்தும் கேள்விகளை மென்மையாக எதிர்கொள்ளும் கடின முடிவையும் எடுத்தவர் அவர் தாம்! அதற்கான பின்விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டியவரும் அவரே தான் !

      இதனையே பலமுறை மறைமுகமாய் சொல்லி இருக்கின்றார், இப்போதும் சொல்கின்றார் :
      //என் பொருட்டு இங்கு மலரும் நட்புகள் வாடிட வேண்டாமே ?//

      அடியேன் உங்களிடம் சொன்னதையும்,
      //காமிக்ஸ் மீது காதல் என்றான பின் அதில் சிறிதென்ன, பெரிதென்ன ஐயா?!//
      // "பிறர் கூறும் குறைகள் அற்பமானவை, நான் முன்னிறுத்தும் குறைகள் மட்டும் அர்த்தமுள்ளவை"// என்பது தவறு//

      தோழர் V Karthikeyan சொன்னதையும் தானே,
      //if anyone has problem mention it once and move on don't bicker about it non stop//

      ஆசிரியரும் சொல்லி இருக்கின்றார் !

      //ரசனை சார்ந்த குறைபாடுகள் ஒவ்வொருவரது கண்ணோட்டங்களுக்கும் வேறுபடும் என்பதால் அதன் பொருட்டு நான் பெரிதாய் தலையைப் பிய்த்துக் கொள்வதில்லை//

      //தெரிவிக்கப்படும் ஒரு சிந்தனையில் நமக்கு ஒப்புதல் இல்லையெனில் கூட - ஒரு சிறு புன்முறுவலோடு சில வேளைகளில் அதனைக் கடந்து செல்வது நிறையக் கேசங்களுக்கும் ; நிறைய நிம்மதியான தூக்கங்களுக்கும் உதவிடும் என்பது எனது அனுபவப் பாடம் !//

      இன்னுமா புரியவில்லை தங்களுக்கு ?

      Delete
    7. மீரான்@@
      விவாத மேடையில் வெற்றி காணும் வரை தாங்கள் பின்வாங்குவதில்லை என்பதை கவனித்திருக்கின்றேன்! நேற்றும் கூட தோழர் ஆதி பின்வாங்கிய பின்னரே குட்நைட் சொன்னீர்கள்! அதற்கு முன்னாள் இரவில் , தூங்காது விழித்திருந்து எமது பதில்களுக்காக காத்திருந்தது போன்று , அதிகாலை ஆறு மணி வரை , அரைமணிக்கு ஒரு தரம் உங்கள் கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் இருந்த தங்கள் அமைதியற்ற நிலை கண்டு மிக்க வருத்தமுற்றேன்!

      இதைத்தான் ஆசிரியர் இப்படிச் சொன்னாரோ :

      //வாழ்க்கையின் நிஜமான priorities களை முறையாய் வரிசைப்படுத்திப் பார்க்கும் பக்குவம் வரும் நாட்களில் - ஒரு காமிக்ஸ் இதழ், வெறும் காமிக்ஸ் இதழாய் மாத்திரமே பார்க்கப்படுகிறது !அவ்வேளையினில் அவற்றிற்கொரு பெரும் விலைப்பட்டியலோ ; அவற்றின் ரசனைகளின் பொருட்டு பெரும் கோப தாபங்களோ பிரதானமாய்த் தெரிவதில்லை ! //

      எமது கருத்துக்களில் எள்ளளவேனும் நியாயம் இருப்பதாக நீங்கள் கருதுவீரானால் அருள் கூர்ந்து தூக்கத்தை அரவணையுங்கள் ! அல்லது இறுதியாக காய் நகர்த்தி சதுரங்க ஆட்டத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற உந்துதல் இருப்பின், அதை உடனே செய்து விட்டு , நிம்மதியாக உறங்கச் செல்லுங்கள்! தங்களின் இறுதி காய் நகர்த்தலை அடியேன் செக்மேட் என்றே எடுத்துக் கொள்ளப் போகின்றேன் ! ஏனெனின், மேற்கொண்டு பேசிட என்னிடம் வார்த்தைகள் மீதமில்லை !

      இரவு வணக்கங்கள் தோழரே !

      Ramesh Kumar@@
      //@ஆதி தாமிரா, இன்றிரவு நண்பர் (?) வாசகர்வாய்ஸ் என்னைப் பிண்ணி எடுக்க வாய்ப்புள்ளது (அந்தக் காட்சிகளை நீங்கள் கண்டு களிக்கவும்) - இப்பவே பயமா இருக்கு, நான் இரண்டுநாளைக்கு ஒளிந்திருந்துவிட்டு வருகிறேன்... :D //

      நண்பர் என்ற சொல்லுக்குப் பின்னே கேள்விக்குறி போட்டு இருக்கின்றீர்களே ?! எதிர் கருத்துக்கள் சிலவற்றை வைத்ததால் எம்மை எதிரியாய் பாவித்து விட்டீர்களோ ?! :D இதற்கு முன்னர் , ஏன் கடைசியாய் அளித்த பதிலில் கூட தங்களின் பல கருத்துக்களை ஏற்றுக் கொண்டிருந்தேனே ?!

      ஆசிரியரின் காலணிகளில் நுழைந்து நீங்கள் பதில்கள் அளித்திடாத வரை , நீ சொல்வது சரி --- நீ சொல்வது தவறு என்று ஏனையோரிடம் நியாய அநியாயங்கள் பேசிடாத வரை தாங்கள் எம் அனைவருக்கும் தோழரே ! பயமின்றி உறங்கச் செல்லுங்கள் அன்புத் தோழரே! :)

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. உதாரணமாக டெக்ஸ்வில்லர் கதைகள் எனக்கு பிடித்தமானது என்றால் அதை பிடிக்காத வேறொருவர் அது பிடிக்காமல் போனதற்கான காரணங்களை பட்டியலிட்டு ஆசிரியரின் மனதை மாற்றி அது வெளி வராமல் தடுக்க முயற்சி செய்வதாக வைத்துக்கொள்வோம், அது போன்ற சமயங்களில் நான் டெக்ஸ்வில்லர் கதைகள் எனக்கு பிடித்தமானது என்பதை தக்க காரணங்களுடன் பதிவிடுவது அவருடைய கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் என்பதால் என் ரசனையை விட்டு கொடுப்பதே சிறந்தது என்பதை உங்கள் பதிவில் இருந்து புரிந்து கொண்டேன். நன்றி !

      இரவு வணக்கம் !

      Delete
    10. @வாசகர் வாய்ஸ்:

      // நண்பர் என்ற சொல்லுக்குப் பின்னே கேள்விக்குறி போட்டு இருக்கின்றீர்களே ?! எதிர் கருத்துக்கள் சிலவற்றை வைத்ததால் எம்மை எதிரியாய் பாவித்து விட்டீர்களோ ?! :D இதற்கு முன்னர் , ஏன் கடைசியாய் அளித்த பதிலில் கூட தங்களின் பல கருத்துக்களை ஏற்றுக் கொண்டிருந்தேனே ?! //

      கேள்விக்குறி விளையாட்டுக்கு சேர்த்தது. ஒருவேளே நான் "நண்பர்" என்று யாரையாவது அழைத்தாலும் ஒருவகையில் சம்பிரதாயமானதே (அல்லது போலியாகவும் தெரியக்கூடும்). உண்மையில் internet-ல் தனிப்பட்ட Friendship என்ற விஷயத்தில் எனக்கு நம்பிக்கையே கிடையாது. ஆனால் பொதுவான/நிரந்தரமான Friendliness (நட்புணர்வுடன்) செயல்பட முயற்சிக்கிறேன் (அவ்வப்போது slip-ம் ஆகிவிடுகிறது - தவறுதான்) :D

      // ஆசிரியரின் காலணிகளில் நுழைந்து நீங்கள் பதில்கள் அளித்திடாத வரை , நீ சொல்வது சரி --- நீ சொல்வது தவறு என்று ஏனையோரிடம் நியாய அநியாயங்கள் பேசிடாத வரை தாங்கள் எம் அனைவருக்கும் தோழரே ! பயமின்றி உறங்கச் செல்லுங்கள் அன்புத் தோழரே! :) //

      ஆசிரியரின் காலணிகள் மட்டுமல்லாமல் அனைவரின் காலணிகளிலும் காலை நுழைத்து நடந்து செல்வதற்காகத்தான் Blog / Community என்ற இந்த ஏற்பாடே உதயமாகியுள்ளது. "பொதுவான" உண்மைகளை (of course உண்மை என்று உணர்ந்ததை) பகிறும்போது அதை ஆசிரியர்தான் செய்யவேண்டும் அல்லது தனிப்பட்ட வாசகர்தான் செய்யவெண்டும் என வரையறுக்க முடியாது. இதை நான் உரிமையுடன் கூறவில்லை; இதுதான் பொதுவாக Community-களின் நோக்கமே.

      நான் மேலே குறிப்பிட்ட காரியத்தைதான் தாங்களும், ஆதிதாமிரா, Meeran, கார்த்திக் சோமலிங்கா என கிட்டதட்ட அனைத்து Regular Commenters-ம் செய்கிறோம். (இதில்ஆதிதாமிரா மட்டுமே இந்த point-ஐப்புரிந்து செயல்படுவதாக உணர்கிறேன் - just my openion).

      எதற்கெடுத்தாலும் "டபக்கென்று" சட்டத்தை கையிலெடுக்காதே என்று கூறுவது தற்போதைய Fashion ஆகிவிட்டது. அப்படியென்றால் இங்கே Comment Section முழுவதும் ஒன்று வறட்சியான Consumer Feedback-ஆக மாறிவிடும் அல்லது Facebook அரட்டை வடிவத்தில் ஒரு Focus இல்லாமல் நீர்த்துவிடும்.

      எது எப்படி இருந்தாலும் நெருடல்களைத் தவிர்ப்பதற்காகவாவது நான் கொஞ்சம் அடக்கிவாசிப்பது அவசியம் என்பது - உலக உண்மை!

      Cheers! :)

      Delete
    11. Meeraan@@
      அடியேன் நா வறளப் பேசியும், தாங்கள் புரிந்து கொண்டிருப்பது இவ்வளவு தான் எனின் , மேற்கொண்டு விளக்கங்கள் ஏதும் அளித்திடும் எண்ணம் எமக்கு இல்லை ! எனினும், இறுதி நகர்த்தலை நடத்தியது தாங்கள் தாம் என்றதொரு மனத் திருப்தியுடன் நேற்றிரவு நன்கு உறங்கி இருந்திருப்பீர்கள் என்ற எண்ணம் ஒன்றே எமக்கு களிப்பு தருவதாய் அமைந்து உள்ளது!

      Ramesh Kumar@@
      சம்பிரதாய நிமித்தமாக தோழர் என்று அழைப்பதினாலேயே ஒருவர் தோழர் ஆகி விடுவதில்லை என்பதை அடியேனும் உணர்ந்தே இருக்கின்றேன்! தாங்கள் கூறியதைப் போன்று , உறுப்பினர்கள் யாவரும் இயன்ற அளவு தோழமை உணர்வுடன் பிறருடன் பழகிட வேண்டியது , பொதுவான தளங்களின் எழுதப்படாத விதிகளுள் ஒன்று !

      Blog / Community குறித்த தங்களின் இதர கருத்துக்களோடும் அடியேன் பெருமளவு உடன்படுகிறேன்! இவற்றைத் தாங்கள் எடுத்துச் சொல்லும் முன்னரே , இந்த எழுதப் படாத விதிகளை உணர்தே தான் அடியேனும் இயங்கி வந்திருக்கின்றேன் !

      இவ்விடம் எத்தனை எத்தனையோ அனல் பறக்கும் விவாதங்களும் , அடிதடிகளும் நடந்தேறி இருக்கின்றன ! ஒவ்வொரு சமயமும் அடியேன் முகமூடி பொருத்திக் கொண்டு , சட்டத்தைக் கையிலேடுக்காதீர் என்று புலம்பித் திரிந்ததில்லையே ஐயா ? இதுகாறும் , முகமூடி பொருத்திக் கொண்டு அராஜகம் செய்து திரிந்த ஒரு சிலரை மட்டுமன்றோ விமர்சித்து இருந்திருக்கின்றேன்? தங்களையோ மீரானையோ அல்லவே ? இருமாதங்களுக்கு முன்னர் தோழர் ஆதியை விமர்சிக்க நேரிட்டது கூட இன்னொரு முகமூடி மாயாத்மா விளைவித்த குழப்பத்தின் பொருட்டு தானே ?

      ஆதிதாமிரா, மீரான், கார்த்திக் சோமலிங்கா, ஸ்டீல் கிளா, ஈரோடு விஜய், விஸ்கி-சுஸ்கி, பரணிதரன் , பொடியன் , புனிதசாத்தான், மதியில்லா மந்திரி என நீண்டுச் செல்லும் தோழர்கள் பட்டியலில் , அனைவரது கருத்துகளையும் அமைதியாக ரசித்த வண்ணம் தான் இருக்கின்றேன் ! மரமண்டையாரின் சில கருத்துகளையும், வலைப்பதிவுகளையும் , கூட பெரிதும் ரசித்து இருக்கின்றேன் ! அன்னாரின் அழகுத் தமிழில் பலமுறை மெய் மறந்திருக்கின்றேன் !

      ஆயின், அடியேன் வலியுறுத்துவது ஒன்றே ஒன்றினைத் தான் ! பேசுங்கள் , பேச விடுங்கள் ! நீவிர் மட்டுமே நியாயவான்கள் , நீவிர் சொல்வது மட்டுமே சரி என்ற உயர் மனப்பாங்குடன் செயல் படாதீர்கள் ! ஏனையோரிடம் தோழமை உணர்வுடன் பழகிடுவதற்கு விட்டுக் கொடுத்தலும் கூட ஒரு அடிப்படைத் தேவையே ! பிறரின் கருத்துகளையும் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் ! அவர்கள் பேசுவதற்கும் இடம் கொடுங்கள் , ஒவ்வொரு முறையும் இடை மறித்துப் பேசாதீர்கள் ! முகத்தில் அடிதாற் போல் எதிர்வாதம் புரியாதீர்கள் - அது எவர் மனதையும் புண்படுத்திடும் வல்லமை பெற்றது !

      Virtual இணைய உலகம் என்பதாலும், முகம் தெரியாத தொலைவில் கணினுக்கு பின்னே அமர்ந்திருப்பதாலும் , கேள்வி கேட்டிட யாரும் இல்லை / கேட்பினும் மோசமில்லை என்பதாலும் தானே "டபக்கென்று" சட்டத்தை கையில் எடுக்கின்றீர்கள் ? இணையம் தாண்டிய நிஜ உலகில் எத்துனை பேர் சட்டத்தைக் கையில் எடுத்து அநீதிக்கு எதிரே போராடும் அந்த நெஞ்சுரத்தைக் கொண்டிருக்கின்றீர்கள் ? இயலாதுதானே ?

      இரும்பிலான வெளி வாயிற்கதவின் பின்னே நின்றிருக்கும் அந்தத் தைரியத்தில், தன்னெதிரே வேட்டை நாயே வந்து நின்றிட்டாலும், அதை எதிர்த்து உரக்கக் குரைக்கும் புசுபுசு பொமரேனியன் நாய்க்குட்டிக்கும் , கணினியின் பின் அமர்ந்து கொண்டு வீராவேசம் காட்டிடும் நமக்கும் இடையே பெரிதாக என்ன வித்தியாசங்கள் இருந்திடப் போகின்றது ?

      இவை தங்களுக்காக மட்டும் சொல்லப் பட்டவை அல்ல, அடியேன் உட்பட யாவருக்கும் பொருந்தக் கூடிய பொதுவான கருத்துக்கள் ! நாம் எவருமே முழுமை பெற்றவர் அல்ல ! தினம் தினம் எதையோ ஒன்றை கற்றுத் தேறிடும் வெற்று மாணாக்கர்களே ! இனிமேலாவது , விட்டுக் கொடுத்து , தோழமையோடு அனைவரும் ஒன்றாய் காமிக்ஸ் பயணம் மேற்கொள்வோம் !

      இன்றைய பொழுது(ம்) இனிதே அமையட்டும் , Cheers! :)

      Delete
    12. @வாசகர் வாய்ஸ், Surely agreed! :)

      // Virtual இணைய உலகம் என்பதாலும், முகம் தெரியாத தொலைவில் கணினுக்கு பின்னே அமர்ந்திருப்பதாலும் , கேள்வி கேட்டிட யாரும் இல்லை / கேட்பினும் மோசமில்லை என்பதாலும் தானே "டபக்கென்று" சட்டத்தை கையில் எடுக்கின்றீர்கள் ? இணையம் தாண்டிய நிஜ உலகில் எத்துனை பேர் சட்டத்தைக் கையில் எடுத்து அநீதிக்கு எதிரே போராடும் அந்த நெஞ்சுரத்தைக் கொண்டிருக்கின்றீர்கள் ? இயலாதுதானே? //

      +1, உண்மையில் இதே ரீதியிலான புரிந்துகொள்ளுதலைத்தான் நானும் எல்லோரிடமும் எதிர்பார்க்கிறேன் (ஆசிரியர் உட்பட). இங்கே புத்தகத்தின் ஓரம் மடிந்திருப்பதை குறையாகக் கூறுபவர்களில் எத்தனைபேர் ஒரு தனியார் மருத்துவமனையில் சுகாதாரம் இல்லாததைப்பற்றி முறையாக / முறையான இடத்தில் Complaint செய்திருப்பார்கள் / செய்வார்கள்? முகத்திற்கு நேராக, பொதுவில் குற்றம் கூற வாய்ப்பு கிடைத்துவிட்டது / அது எளிதாகவும் இருக்கிறது என்பதறகாகவே குற்றம்கூறுவது அநியாயமே.

      அதேநேரம் ஒரு Entertainment பொருளாக இருப்பினும், சந்தா / முன் பணம் என்கிற வழிமுறையில் நமது புத்தகங்கள் வெளிவருவதனால் ஆசிரியருக்கும் ஒருசில குறைந்தபட்ச தர அளவுகோள்களை தீர்மானித்து உறுதிப்படுத்திக்கொள்வது அவசியமாகிறது. காரணம், எல்லா சந்தாதாரர்களும் தயாரிப்புப் பின்னணியிலுள்ள சிக்கல்களைப் புரிந்தவர்களல்ல - அது அவர்களின் குறையுமல்ல. வாசகர் வாய்ஸ், இந்த ஒரு காரணத்தினால் மட்டுமே நான் மாற்றுக்கருத்துக்களை சொல்லவேண்டியிருந்தது - மற்றபடி ஆசிரியரின் ஒட்டுமொத்த முயற்சிகளுக்கும், ஆர்வத்தின்மீதும், நேர்மையின் மீதும் எந்த சந்தேகமுமில்லை.

      Thanks for your time! :)

      Delete
    13. வாசகன்(ர்) வாய்ஸ் :-

      நா வறளப் பேசியும், மேற்கொண்டு பேசிட உங்கள் வார்த்தைகள் தீர்ந்தபோதிலும் ! இவ்வளவு சிரமம் மேற்கொண்டு உங்கள் கருத்தை மற்றவர்கள் மீது ஆணித்தரமாக பதிய வைக்க முயற்சிப்பது. உங்கள் உயர் மனப்பான்மையின் செயல்பாடு இல்லையா ?

      இப்பொழுது உங்களுக்கு தெரிந்த நியாயத்தை நீங்கள் தான் என் மீது திணிக்க முயற்சிகின்றீர்கள் அல்லவா ?

      உங்கள் பொன்னான நேரத்தை இங்கு பதிவிடுவதில் அதுவும் பதிலுக்கு பதில் பதிவிடுவதில் செலவிடுது உங்களுக்கு வருத்ததை தராமல் போனது ஏனோ ?

      உங்கள் கருத்தை பதிந்தோமா என்றில்லாமல் அதை விளக்கும் வகையில் மீண்டும் மீண்டும் பதிவிடுவது ஏனோ நண்பரே ?! இது மற்றவர்களின் கருத்து சுதந்திரத்தில் தலை இடுவதாக ஆகாதா? அல்லது எங்கள் கருத்தை வழி மறிப்பதாக ஆகாதா ?

      உபதேசம் என்பது ஊருக்கு மட்டும்தானா நண்பரே !?

      Delete
    14. இன்னுமொன்றை சொல்ல மறந்துவிட்டேன் ., ''ஆசிரியரின் காலணி உங்களுக்கு மட்டும் மிக சரியாக பொருந்துகின்றது போலும்.''

      Delete
  49. ஆதி தாமிரா:---

    //பணியாளர்களின் கவனக் குறைவுகளாலோ - அந்த ஆரம்ப wastage -க்குப் பின்னரும் கூட அச்சில் கொஞ்சமாய் பிசிறுகள் எழுவதுண்டு தான் ! நாம் உபயோகிக்கும் காகிதங்கள் மிக விலையுயர்ந்தவை என்பதால் - அது போன்ற சந்தர்ப்பங்களில் அந்த கூடுதல் wastage என் கவனத்திற்கு வரும் பட்சத்தில்- 'திட்டு வாங்க நேரிடுமே' என்ற பயத்தில் ஓசையின்றி அந்த சுமாரான காகிதங்களையும் பைண்டிங் செல்லும் சரக்கோடு சத்தமில்லாமல் திணித்து விடுவது தான் இடையிடையே நீங்கள் பார்த்திடும் குறைபாடுகள். //

    ஆசிரியரின் இந்த வரிகளுக்கும் அலட்சியம் என்ற வார்த்தைக்கும் உள்ள வித்தியாசங்களை எனக்கு விளக்க முடியுமா ?

    ஆசிரியரே ஒப்புக்கொள்ளும் ஒரு விசயத்தை நான் இங்கே பதிவதால் அவர் மனம் நோகும் என்றும் , அநீதியான வார்த்தை என்றும் எப்படி கூறுகின்றீர்கள் ?

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியரின் இந்த வரிகளுக்கும் அலட்சியம் என்ற வார்த்தைக்கும் உள்ள வித்தியாசங்களை எனக்கு விளக்க முடியுமா?//

      நியாயப்படி நீங்கள் ஒரு நல்ல தமிழாசிரியரை அணுகுவதுதான் சரியாக இருக்கும். நானும் இப்போ சும்மாதான் ஈ ஓட்டிக்கொண்டிருப்பதால் விளக்க முற்படுகிறேன். ஹிஹி!

      ஆசிரியரின் அந்த வரிகளில்.. ‘ஒரு அச்சு வேலையின் துவக்கத்தில் நிகழும் நிகழ்வுகள், காகித விலை மாறுபாடுகள், ஒரு இதழாசிரியரின் கண்டிப்பு, ஊழியர்களின் பயம் பொருந்திய நடவடிக்கைகள், பணியாளர்களின் கவனக்குறைவுகள்’ போன்றன என் சிற்றறிவுக்கு விளங்குகின்றன. அலட்சியம் என்பதை எப்படித் தேடினாலும் கிடைக்கவில்லையே....

      ஒருவேளை கவனக்குறைவைத்தான் நீங்கள் அலட்சியம் என அர்த்தம் கொண்டிருக்கிறீர்களோ? பேப்பர் படிக்கும் ஆர்வத்தில் பக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை வழுக்கி விழுவதைக் கவனிக்காமலிருந்தது கவனக்குறைவு. வழுக்கி விழப்போவதைக் கவனித்த பிறகும் குழந்தைதானே விழுந்துதான் தொலைக்கட்டுமே, இப்ப என்ன? என்று மீண்டும் பேப்பரிலேயே மூழ்குவது அலட்சியம்! என்ன சரிதானா? இதுதான் எனக்குத் தெரிந்த தமிழ்!

      பிழையிருப்பின் பரிசு வேண்டாம்! :-)))))))))))))))))

      Delete
    2. கண்டிப்பிற்கு பயந்து ஓசையின்றி அந்த சுமாரான காகிதங்களையும் பைண்டிங் செல்லும் சரக்கோடு சத்தமில்லாமல் திணித்து விடுவது ''யாருக்கு என்ன ஆனால் நமக்கு என்ன ?! ''என்ற மன நிலைக்கு உங்கள் தமிழாசிரியர் என்ன பெயர் சொல்லி கொடுத்திருக்கின்றார் ?

      Delete
    3. மற்றவர்களுக்கு ஏற்படும் இழப்பை அலட்சியமாக நினைப்பவர்கள் செய்யும் குற்றம்.

      Delete
    4. குற்றம் எப்போது அலட்சியமாக இருப்பதில்லை.
      அலட்சியம் எப்போதும் குற்றமாகிறது.

      ஆசிரியர் அவர்தம் ஊழியர்களின் சிறப்புகளை/கடும் உழைப்பை பல சமயங்களில் இங்கு சொல்லியிருக்கிறார். இந்தப்பதிவே உங்களைப்போன்ற நண்பர்களுக்கான ஒரு மீள்பதிவுதான். அவர்களின் சிறப்புகள், அவர்களின் சிறு குற்றங்களைப் பொறுத்துக்கொள்ளும் மனப்பாங்கைத் தரவேண்டும். ஆசிரியரும் அதைத் தெரிந்தே அனுமதிப்பதில்லை. அந்நிகழ்வினை அறிய வருகையில் அதையும் திருத்த முயல்கிறார். ஆக, இப்போது நீங்கள் ’ஆசிரியரின் அலட்சியம் இது’ என்று முற்றிலும் தவறாக சாட்டிய குற்றச்சாட்டுக்குப் பதில் என்ன?

      Delete
    5. குற்றம் எப்போது அலட்சியமாக இருப்பதில்லை.
      அலட்சியம் எப்போதும் குற்றமாகிறது.//

      ஐ மீன்,

      அலட்சியம் குற்றமாக வரையறுக்கப்படலாம். ஆனால், குற்றத்தை அலட்சியமாக வரையறுத்துவிட முடியாது.

      Delete
    6. மற்றவர்களை அலட்சியமாக நினைப்பதிலிருந்தே குற்ற்ம் ஆரம்பம் ஆகுகிறது. குற்றத்தின் ஆரம்பமே அதுதான்.

      Delete
    7. ஆசிரியரின் அலட்சியம் இது’ என்று எப்போது குற்றம் சாட்டினேன் ?

      Delete
    8. ..மிடியல..

      குட்நைட்!

      @கார்த்திக் சோமலிங்கா,

      உங்க புத்தாண்டு சபதம் கொஞ்சம் மிச்சம் மிஞ்சாடி இருந்தா என்கிட்ட கொஞ்சம் தள்ளுங்க ப்ளீஸ்!!

      Delete
  50. டியர் எடிட்டர்
    சென்னை புத்தக திருவிழா சிறப்பு மலர் NBS போன்று வெளிவருகிறதா அல்லது அதைவிட பெரியதாகவா என்பதை தெளிவுபடுத்த கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தெய்வமே.....லயன் முத்து காமிக்ஸ் வாசகர்களிடமிருந்து எடிட்டர் விஜயனை காப்பாற்று !!!


      உஷ்ஷ் ....முடியல...

      Delete
  51. ஈரோடு விஜய் : ஏற்கனவே உருவாகியுள்ள போராட்ட குழு வலுபெறும் 2014 இல் உங்கள் பாடு திண்டாடமாகிடும் .#

    உண்மை ...உண்மை ...ஆம் ஆத்மி கட்சி போல ..

    எனவே ஆசிரியர் அதனை தவிர்க்க என்ன ..,என்ன ஏற்பாடு அமைக்க வேண்டுமோ ....அதனை உடனடியாக அமுல் படுத்தி போராட்ட குழு போராட்டத்தில் இருந்து தப்பிக்க நடவடிக்கை எடுக்கலாம்.

    ReplyDelete
  52. கார்சனின் கடந்த காலம் சென்னை புத்தக திருவிழாவிற்கு வெளிவரும் வாய்ப்புகள் உள்ளதா?

    ReplyDelete

  53. MUMBAI COMIC CON' 2013 DEC 21-22 பற்றி UPDATES உண்டா சார்?? நம்மால் கலந்து கொள்ள முடியாதது மிகப்பெரிய வருத்தம். : (!

    அடுத்த, 4th Annual Indian Comic Con, 7-9th February 2014, Thyagaraj Stadium (INA), New Delhi, யோசிங்க பாஸ்!

    ReplyDelete
    Replies
    1. விஸ்கி-சுஸ்கி : இங்கு பெங்களுருவில் அடுத்த முறை COMIC CON நடந்தால் கூட அதனில் பங்கேற்பதில்லை என்ற தீர்மானத்தில் உள்ளோம் ! முழுக்க முழுக்க இரு நாள் T-Shirt திருவிழாவாய் ; இளம் தலைமுறையின் இரு நாள் hangout spot ஆக மாறிப் போய் விட்டது ! தவிரவும், விற்பனைக்கும் - அங்கு இப்போது செலுத்த அவசியமாகும் கட்டணங்களுக்கும் ஏணி வைத்தாலும் இனி எட்டாது !

      Delete
  54. @Ramesh Kumar:
    குழப்பமில்லாத, தெளிவான சிந்தனை படைத்த நண்பர் ரமேஷ் குமார் அவர்களே... :-D

    //கார்த்திக் சோமலிங்கா கூறியிருந்தது வேறுவிஷயம். அது "ஒ.சி.சு" புத்தகத்தில் அப்பட்டமாக lettering-ல் ஏகப்பட்ட குறைகளிருப்பதை பற்றி தெரிந்தும் - நன்றாகத் தெரிந்தும் - மொழிபெயர்ப்பையும் மற்ற சில விஷயங்களையும் குழப்பிக்கொள்வதாக இருந்தது//

    //ஆனால் சந்தேகத்துக்கிடமான விஷயங்களை (Ex: மொழிபெயர்ப்புப் பிழையா அல்லது கதைசொல்லும் பாணியா போன்றவைகளை) பொதுவில் முன் வைப்பது நியாயமில்லை. காரணம் அது பொதுவாக அனைவரும் உணரப்பட்ட குறையல்ல - ஆசிரியருக்கு தனது Style-ஐ தேர்ந்தெடுக்கும் freedom உள்ளது, அதில் வேட்டுவைக்கக் கூடாது.//

    வீண் விவாதங்களில் இறங்குவதில்லை என்பது நான் சமீபத்தில் எடுத்த (புத்தாண்டுத்) தீர்மானங்களில் ஒன்று! ஆனால், என்னைப் பற்றிய உங்களின் இந்த விமர்சனங்களைக் கண்ட பிறகு, உங்களுக்காக கடைசியாக ஒரு முறை, மேலும் சில வார்த்தைகளை "வீணடிப்பதால்" ஒன்றும் மோசம் போய் விடாது என்று எனக்குத் தோன்றியது! ;-)

    தீர்மானத்தை மீறுவதற்கு என்னிடம் மூன்று சால்ஜாப்புகள் உள்ளன!
    1. புத்தாண்டு மலர முழுதாய் ஒரு வாரம் எஞ்சியிருக்கிறது! :-)
    2. எந்த ஒரு செயலுக்கும் / தீர்மானத்திற்கும் விதிவிலக்குகள் உண்டு! ;-)
    3. இது விவாதம் அல்ல; மாறாக, என் தரப்பிலான ஒரு final statement மட்டுமே! :-D

    கண்களுக்கு எளிதில் புலப்படக் கூடிய cosmetic பிழைகளை / குறைபாடுகளை நானும் இங்கு பல முறை முன் வைத்திருக்கிறேன்! அத்தோடு நில்லாமல், ஆழ்ந்து வாசித்தால் மட்டுமே தெரியக் கூடிய மொழிபெயர்ப்புக் குறைகளைப் பற்றியும் (ஓ.சி.சு.); புதிய வாசகர்களுக்கு அந்நியமாகத் தோன்றக் கூடிய, கடினமான தமிழ் நடையை (கிரீன் மேனர்) தவிர்க்கலாமே என்றும்; Repetitive ஆன சில சொற்களுக்குப் பதிலாக, அவற்றிற்கு இணையான வேறு சொற்களையும் பயன்படுத்தலாமே என்றும் - காமிக்ஸை நேசிக்கும் ஒரு வாசகனாக இங்கு ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறேன்!

    நீங்கள் லயன் ப்ளாகை கட்டிக் காக்கும் நீதிமானாக உங்களை முன்னிறுத்திக் கொள்வதிலும்; மற்றவர்கள் நியாமானவர்களா, இல்லையா என்று தீர்ப்புகளை அள்ளி வழங்குவதிலும் எனக்கு எந்த ஒரு ஆட்சேபணையும் கிடையாது! ;-) உங்கள் பார்வையில் நான் நியாயமற்றவனாக தெரிகிறேன் என்றால், அப்படி இருப்பதையே மிகவும் விரும்புகிறேன்! That's all, your honor! ;-)

    @விஜயன் சார்:
    உங்களுடைய வலைப்பூவில் இனிமேல் விமர்சனங்கள் செய்வதில்லை என்பதும், நான் எடுத்திருக்கும் புத்தாண்டுத் தீர்மானங்களில் ஒன்று! நண்பர் ரமேஷுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக, மொழிபெயர்ப்பு பற்றி மீண்டும் ஒருமுறை உங்கள் வலைப்பூவில் பேச நேர்ந்து விட்டது!

    இது எவ்வகையிலும் உங்களின் திறமையை குறைத்துப் பேசும் முயற்சி அல்ல! குறிப்பிட்ட அந்தக் கதையில் எனக்கு எழுந்த சில சந்தேகங்களிற்கான விளக்கத்தை உங்களிடம் கேட்கப் போய், நண்பர்களின் புண்ணியத்தில் மொழிபெயர்ப்பு பற்றிய விமர்சனங்கள் / விவாதங்கள் எல்லைகள் கடந்து நீண்டு விட்டன! அவை, உங்களை சங்கடத்தில் ஆழ்த்தியிருப்பின் - அதற்கு நான் வருந்தம் தெரிவித்துக் கொள்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. //@Ramesh Kumar:
      குழப்பமில்லாத, தெளிவான சிந்தனை படைத்த நண்பர் ரமேஷ் குமார் அவர்களே... :-D//

      உண்மையா சொல்லுங்க கார்த்தி, இத எழுதறதுக்கு கொஞ்சம் முன்னாடி தினத்ததியில புத்தாண்டு ராசிபலன் படிச்சீங்களா ???

      Delete
    2. நான் உங்களின் Blog-க்கே வந்து உங்கள் பக்கமிருக்கும் நியாயத்தை புரிந்துகொண்டதை தெரிவித்தும்விட்டேன். நெருடல்கள் தீர்ந்தேவிட்டதுதான் நிஜம்.

      வாசகர்வாய்ஸ் அவர்கள் அந்த ஒ.சி.சு பற்றிய தங்களின் முதல் Comment-க்கு நான் தெரிவித்திருந்த கருத்துக்கும் - தற்போது சென்ற Blog post-ல் பேசிக்கொண்டிருந்த Packing, lettering குறைபாடு சம்பந்தமாக நான் தெரிவித்த கருத்துக்கும் முரண்பாடிருப்பதை குறிப்பிட்டார். ஏன் அது முரண்பாடாகத் தெரிகிறது என்று விளக்குவதற்காக - நான் எந்த Point of viewல் கார்த்திக்கின் Comment-ஐ விமர்சித்தேன் என்று விளக்கினேன். அது தங்களுக்கு தவறாகத் தெரிந்தால் தங்களின் ஒ.சி.சு பற்றிய முதல் Comment-ஐ திரும்பப் படித்துப் பாருங்கள். Comment-ஆக இருந்தாலும் எழுதிய எழுத்துக்கள் நிரந்தரமானவை. அதை மற்றவர்கள் எப்படி புரிந்துகொள்வார்கள் என்கிற பார்வையிலும் நாம் கருதவேண்டும்.

      மேலே உள்ளதை புரிந்துகொள்வது ரொம்பக் கடினம். நிச்சயம் உங்களை நியாயமற்றவராக கருதவோ சுட்டிக்காட்டவோ இன்றைய நாளில் எனக்கு எந்தக்காரணமும் இல்லை.

      Delete
    3. // நீங்கள் லயன் ப்ளாகை கட்டிக் காக்கும் நீதிமானாக உங்களை முன்னிறுத்திக் கொள்வதிலும்; மற்றவர்கள் நியாமானவர்களா, இல்லையா என்று தீர்ப்புகளை அள்ளி வழங்குவதிலும் எனக்கு எந்த ஒரு ஆட்சேபணையும் கிடையாது! //

      மறுபடியுமா! :D

      ஒருத்தர் "சித்திரங்களை இரசிப்பவர்களுக்கே அச்சுப்பிழைகள் பெரிதாகத் தெரியும்" என்று சொன்னவுடன் நாடி நரம்புகள் புடைக்க நான் வெகுண்டெழுந்தது தவறாகிவிட்டது :D

      Delete
    4. @Ramesh Kumar:
      பொறுமையான விளக்கத்திற்கு நன்றி ரமேஷ்!

      //நான் எந்த Point of viewல் கார்த்திக்கின் Comment-ஐ விமர்சித்தேன் என்று விளக்கினேன்//

      உங்களின் முழுமையற்ற அந்த "Point of view" கமெண்டை, இதன் முழுப் பின்னணியும் அறியாத ஒரு வாசகர் படிக்க நேர்ந்தால், அவர் என்னைப் பற்றிய தவறான ஒரு முடிவுக்கு வரும் வாய்ப்பு இருக்கிறது அல்லவா?!

      //Comment-ஆக இருந்தாலும் எழுதிய எழுத்துக்கள் நிரந்தரமானவை. அதை மற்றவர்கள் எப்படி புரிந்துகொள்வார்கள் என்கிற பார்வையிலும் நாம் கருதவேண்டும்//

      நீங்கள் எனக்குச் சொன்ன இந்த வழிமுறையை நீங்களும் பின்பற்றி, வாசகர் வாய்ஸூக்கு விளக்கம் அளித்த கையோடு, "என் ப்ளாகில் வந்து என் தரப்பு நியாயத்தைப் புரிந்து கொண்டதாக" இப்போது எழுதியிருப்பதை, பின்குறிப்பாக அப்போதே இணைத்து எழுதி இருந்தால்.......

      1. எடிட்டர் ப்ளாகில் இன்னொரு LIC பில்டிங் கட்டிய அவல நிலைக்கு நான் தள்ளப் பட்டிருக்க மாட்டேன்! :-D

      2. என்னுடைய புத்தாண்டுத் தீர்மானங்களில் இரண்டை, புத்தாண்டு துவங்கும் முன்னரே கைகழுவிய பாவத்திற்கும் ஆளாகியிருக்க மாட்டேன்! :-D

      3. உங்களை மறுபடியும் நீதிக்காவலன் ஸ்பைடர் என்றும் அழைத்திருக்க மாட்டேன்! ;-)

      //நெருடல்கள் தீர்ந்தேவிட்டதுதான் நிஜம்//
      ஸ்ஸ்ஸ், அப்பாடா! :-) கார்த்தி ஹேப்பி! :-D

      @விஸ்கி-சுஸ்கி:
      //உண்மையா சொல்லுங்க கார்த்தி, இத எழுதறதுக்கு கொஞ்சம் முன்னாடி தினத்ததியில புத்தாண்டு ராசிபலன் படிச்சீங்களா ???//

      ஹா ஹா... பெங்களூரில், எங்கள் ஏரியா நியூஸ் ஏஜென்ட், தினகரன் தவிர்த்த மற்ற தமிழ் நாளிதழ்களை விநியோகிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை (கட்சி ஆளாக இருப்பாரோ?!). எனவே துலாராசி நண்பர் ரமேஷ் குமாரின் ராசிபலனை படிக்கும் வாய்ப்பு எனக்கு எப்போதும் கிட்டப் போவதில்லை! :-D

      துலாராசி: நீதி தேவதையின் (தேவனின்!) கையில் இருக்கும் தராசு என்ற கோணத்தில் மட்டும்! ;-)

      @Ramesh Kumar again...:
      //மறுபடியுமா! :D ஒருத்தர் "சித்திரங்களை இரசிப்பவர்களுக்கே அச்சுப்பிழைகள் பெரிதாகத் தெரியும்" என்று சொன்னவுடன் நாடி நரம்புகள் புடைக்க நான் வெகுண்டெழுந்தது தவறாகிவிட்டது :D //

      ஏற்றுக் கொள்ளக் கூடிய விளக்கங்களை நீங்கள் எனக்கு அளித்து விட்டதால், எனது நீதிமான் & துலாராசி கமெண்டுகளை ஜாலியாக மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள் ப்ளீஸ்! :-) அதில் உள்ள seriousness-ஐ நான் இப்போது censor செய்து விட்டேன்! :-)

      Delete
    5. // ஸ்ஸ்ஸ், அப்பாடா! :-) கார்த்தி ஹேப்பி! :-D //

      நானும் ஹேப்பி! :) நமது Comments-ஐ எல்லாம் படிப்பவர்கள்தான் பாவம்... :D

      Delete
    6. //கார்த்தி ஹேப்பி//
      கிர்ர்...

      // நானும் ஹேப்பி //
      கிர்ர்ர்ர்....

      //நமது comments-ஐ எல்லாம் படிப்பவர்கள்தான் பாவம்//
      ஹிக்! கிர்ர்ர்ர்ர்ர்... கிர்ர்ரா... உர்ர்ர்...

      இப்படி திடீர்னு 'சுபம்' போட்டுட்டா எப்படி? எடிட்டரின் அடுத்த பதிவுக்கு இன்னும் எத்தனை நாள் ஆகுமோ? கார்த்திக், நாட்டாமையின் கமெண்ட்டுகளை நல்லா படிச்சுப் பாருங்க, ப்ளீஸ்! :D

      Delete
    7. டியர் சூட்டுமாமொய் !!!

      //கார்த்தி ஹேப்பி//

      // நானும் ஹேப்பி //

      இருக்கட்டும்.குமுதா ஹேப்பியா ....? அத சொல்லுங்கப்பா மொதல்ல:-)

      Delete
    8. @saint satan,

      ரொம்ப தாமதமாகப் புரிந்தது... க்ர்ர்ர்.... :P

      Delete
    9. என்ன ஈ.விஜய்? இப்படி சப்புன்னு போயிடுச்சே!! நீங்க இருந்தும் இப்படி ஆகிடுச்சே!

      டக்குபுக்குனு அவங்களே சமாதானமாகிட்டா அப்பால நாம எதுக்கு இங்க ஃபிரெண்ட்ஸுன்னு இருக்குறோம்? என்ன அநியாயம் இது?

      :-)))))))))))))))

      Delete
    10. @ஆதி தாமிரா, இன்றிரவு நண்பர் (?) வாசகர்வாய்ஸ் என்னைப் பிண்ணி எடுக்க வாய்ப்புள்ளது (அந்தக் காட்சிகளை நீங்கள் கண்டு களிக்கவும்) - இப்பவே பயமா இருக்கு, நான் இரண்டுநாளைக்கு ஒளிந்திருந்துவிட்டு வருகிறேன்... :D

      Delete
    11. ஹிஹி.. இதெல்லாம் நமக்கென்ன புதுசா? நீங்கள் ரொம்ப தெம்பான ஆளுன்னு கேள்விப்பட்டேனே? புயல்காத்து அடிக்கும் போது பூரி சாப்பிடுவீங்களாமே? கார்த்திக்தான் இப்ப கொஞ்சம் ஸ்ட்ரிக்டா மவுன விரதம் இருக்கப்போறாரேமே, வேணும்னா நானும் அவர் சார்பா கொஞ்ச நேரம் களமிறங்கட்டுமா?

      :-))))))))

      போன பதிவு கடைசி பின்னூட்டத்திலும் நைஸா ஒரு செண்டி டயலாக்கை போட்டு தூண்டிப்பார்த்தேன். உங்களை, ஈ.விஜய், கார்த்திக், வி-சு மற்ற பிற நண்பர்களையும் உள்ள இழுக்கலாம்னு. அப்படியும் ஒருத்தரும் அசரலையேப்பா.. தெளிவாத்தான் இருக்கீங்க எல்லோரும்!!

      @ஈ.விஜய்,

      எப்பூடி நம்ப திட்டம்? :-))))))))))))

      Delete
    12. // புயல்காத்து அடிக்கும் போது பூரி சாப்பிடுவீங்களாமே? //

      அது தவறான தகவல். புயல்காத்து அஸ்ஸாமில் அடிக்கும்போது நான் எங்கவீட்டு பீரோவுக்குப் பின்னாடி மறைந்தபடி பூரி சாப்பிடுவேன்! :P

      Delete
  55. நண்பர் கார்த்திக் அவர்களின் புத்தாண்டு சபதம் இதே போல என்றும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துகள் .
    நண்பர்கள் அனைவரும் அதற்கு துணை புரியவும் :-)

    ReplyDelete
    Replies
    1. @பரணி:
      ஆஹா, இப்படியே ஒவ்வொருத்தரா கிளம்பினா, உங்க எல்லாருக்கும் பதில் சொல்லிச் சொல்லியே என்னுடைய மூன்றாவது தீர்மானத்தையும் சீக்கிரமாவே காலி பண்ணிடுவேன் போல?! (எடிட்டர் ப்ளாகில் பின்னூட்டங்களைக் குறைப்பது!). ரமேஷின் கமெண்ட் பற்றி என்னிடம் சொல்லி, அதிகாலையிலேயே என்னை உசுப்பி விட்ட அந்த "நண்பர்" மட்டும் என் கையில் சிக்கினால், அவர் கழுத்தில் உடனடியாக ஒரு மணியைத் தொங்க விட்டு விட வேண்டும்! ;-)

      இனி நான் ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும், ஆசிரியரின் அடுத்த பதிவு வரும் வரை தலைமறைவாக இருப்பது தான், என் புத்தாண்டுத் தீர்மானங்களுக்கு நலம் பயக்கும்!!! :-D

      Delete
    2. // அதிகாலையிலேயே என்னை உசுப்பிவிட்ட அந்த "நண்பர்"//

      நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க கார்த்திக். அந்த நபரின் பெயரை மட்டும் எனக்கு மெயில் பண்ணி வையுங்க, அந்தப் பயலை உண்டு இல்லைனு பண்ணிப்புடுறேன். கிர்ர்ர்....

      Delete
    3. Karthik Somalinga : New Year Resolutions !! உடைக்கப்படத் தானே அவை எடுக்கப்படுகின்றன !! :-)

      Delete
  56. அன்பரே ,

    யாருக்கு யார் நன்றி சொல்வது ...
    நாங்கள் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும் ...


    சரிதானே நண்பர்களே ....

    ReplyDelete
  57. @ FRIENDS :

    "திருவிளையாடல்" படத்தில் வரும் பாண்டிய மன்னன் முத்துராமனின் modulation -ல் இதனைப் படிக்கும் வேண்டுகோள் என் சார்பில் : "புலவர்களுக்குள் சர்ச்சை இருக்கலாம் - சண்டை ஆகாது !"

    Jokes apart - ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கு இத்தளம் எப்போதும் விரோதியல்ல என்பதை அழுத்தமாய்ப் பதிவு செய்திட விழைகிறேன் ! பொதுவாக - ரசனை சார்ந்த குறைபாடுகள் ஒவ்வொருவரது கண்ணோட்டங்களுக்கும் வேறுபடும் என்பதால் அதன் பொருட்டு நான் பெரிதாய் தலையைப் பிய்த்துக் கொள்வதில்லை ! (அங்கே பிய்க்கவும் ஜாஸ்தி இல்லை என்பது வேறு விஷயம் !)

    ஆனால் - மொழிபெயர்ப்பு சார்ந்த தவறுகள் ; எழுத்துப் பிழைகள் போன்ற விஷயங்கள் சுட்டிக்காட்டப் படும் போது அவற்றின்பால் எனது கவனம் நிரம்பவே செல்லும் ! பின்னூட்டங்களை நான் படிக்கத் தவறி இருந்தாலோ / தாமதம் நேர்ந்திருந்தாலோ - அதற்கான பதிலை அங்கு நான் பதிவிடத் தவறி இருப்பேனே தவிர - தொடரும் நாட்களில் அதே ரகப் பிழைகள் தொடர்ந்திடாதிருக்க மௌனமாய் என்னை நானே தலையில் குட்டி இருப்பேன். So factual shortcomings -ஐ சுட்டிக் காட்டும் பின்னூட்டங்கள் நமக்கொரு அத்தியாவசியமே ! பிழையில்லா ஒரு ஆக்கமென்பது லட்சியமே ; ஆனால் we are very much a work in progress என்பதை உணர்ந்திருக்கும் முதல் நபர் நான்.

    கடந்த பதிவிலும், இங்கும் கூடத் தெரிவிக்கப்பட்டிருக்கும் நண்பர்களின் ஒரு சில அபிப்ராயங்களில் எனக்கு உடன்பாடில்லை தான் ; ஆனால் ஒவ்வொரு முறையும் ரசனை சார்ந்த கருத்துகளுக்கு நானும் என் தரப்புப் பதில் சொல்லிக் கொண்டே செல்கிறேன் பேர்வழி என புறப்பட்டால் - இது ஒரு சர்ச்சைக்களமாய் மாத்திரமே இயங்கிடும் !

    தெரிவிக்கப்படும் ஒரு சிந்தனையில் நமக்கு ஒப்புதல் இல்லையெனில் கூட - ஒரு சிறு புன்முறுவலோடு சில வேளைகளில் அதனைக் கடந்து செல்வது நிறையக் கேசங்களுக்கும் ; நிறைய நிம்மதியான தூக்கங்களுக்கும் உதவிடும் என்பது எனது அனுபவப் பாடம் ! Give it a shot some time guys :-)

    ReplyDelete
  58. ஆசிரியரின் புதிய பதிவு வெளிவந்துவிட்டது

    ReplyDelete