Powered By Blogger

Thursday, December 05, 2013

இனி எல்லாம் சுகமே...!

நண்பர்களே,

வணக்கம். கடந்த 3 மாதங்களாய் என்னைச் சுற்றி DTS சவுண்ட் effect -ல்  நடிகர் தனுஷின் earthy குரலில் ஒரே பாடல் திரும்பத் திரும்ப ஒலிப்பது போலவே ஒரு பிரமை.. !

'ஓட ஓட தூரம் குறையலை..! 
பாட பாட பாட பாட்டும் முடியலை..! 
போக போக ஒண்ணும் புரியலை !
ஆக மொத்தம் ஒண்ணும் வெளங்கலை !"

ஆண்டின் கடைசி மூன்று மாதங்கள் வரைத் தள்ளிச் சென்ற மறுபதிப்புகள் ; +6 இதழ்கள் ; புது வெளியீடுகள் என  சகலமும் ஒட்டு மொத்தமாய் முறைக்க - ஒன்றன் பின் ஒன்றாய் அவற்றிற்குக் கதவுகளைத் திறந்தாகும் பணியில் திருவாளர் நாக்கார், நண்பர் தரையாரைக் குசலம் விசாரிக்காத குறை தான் ! முடிக்க, முடிக்க முளைத்துக் கொண்டே வரும் வேலைகளைச் செய்திடுவது ஒரு பக்கமெனில் - திருவாளர் சலவை நோட்டாரை மொத்த மொத்தமாய்ப் புரட்டுவதென்பது மறு பக்கத்து பூதாகரமான சவாலாய் நின்றது ! ராயல்டி பணங்களைக் கடைசி நொடியில் செலுத்தினாலும் முகம் சுளிக்காத படைப்பாளிகளும் ; நம் வார்த்தைக்கு மதிப்புத் தந்து - சின்ன அவகாசத்திற்குக் கடனில் பேப்பர் சப்ளை செய்த நிறுவனங்களும் கை கொடுக்க, கொடுத்த வாக்கை எப்படியும் நிறைவேற்றியாக வேண்டுமென்ற நமது வைராக்கியம் சொதப்பிடாது தப்பியது !'All's well, that ends well' என்பதற்கேற்ப - 2013-ன் இந்த ஓட்டப் பந்தயத்தின் முடிவினில் மூச்சிரைக்க எல்லைக்கோட்டில் நிற்க நேரிட்டாலும், ஒட்டு மொத்தமாய் 4 இதழ்களை இன்று  நம் பணியாளர்கள் despatch செய்திடுவதைப் பார்வையிட முடிந்த போது மனதுக்குள் ஒரு சின்ன ரம்யம் நிலவியது ! ஒரு கௌபாய் கதை ; ஒரு கார்ட்டூன் கலாட்டா ; ஒரு டிடெக்டிவ் தொகுப்பு ; ஒரு ஆக்ஷன் ஹீரோ சாகசமென டிசம்பர் நமக்குத் தயார் செய்துள்ள இந்த அட்டகாச combo நாளைக் காலை உங்கள் அனைவரையும் எட்டிட வேண்டும் - கூரியர் நண்பர்களின் கடாட்சத்தோடு ! இதோ - இந்தாண்டின் இறுதி மறுபதிப்புத் தொகுப்பின் அட்டைப்படம் :


ஏராளமான குளறுபடிகளைச் சந்தித்த சிக் பில் கதை வரிசைகள் பற்றி ஏற்கனவே நிறைய எழுதி விட்டேன் என்பதால் - மீண்டும் முதலில் இருந்து blade போடுவதைத் தவிர்த்திடப் போகிறேன் ! So முதன் முறையாக நம் Top Comedy Cowboys இணைந்து ஒரே இதழில் அட்டகாசம் செய்கிறார்கள் - புரட்சித் தீ + விற்பனைக்கு ஒரு ஷெரீப் மார்க்கமாய் ! (For obvious reasons - இது தவிர்க்க இயலாக்கூட்டணி என்பதால் இதன் பொருட்டு மீண்டுமொருமுறை கேள்விகள் வேண்டாமே - ப்ளீஸ் ?! )அட்டைப்படங்கள் இரண்டுமே (முன் + பின்) ஒரிஜினல் டிசைன்கள் - துளியும் மாற்றங்களின்றி ! லக்கி லூக் கதைகளை நாம் வெளியிட்டு வந்த நாட்களில் சிக்சர் அடித்த கதைகளுள் ஒரு முக்கிய இடம் "புரட்சித் தீ"க்கு உண்டு ; இத்தனை காலம் பின்னே அழகாய், பெரிய சைசில் அந்தக் கதையினை திரும்பப் படிக்க நேரிட்ட போது என்னுள் ஏராளமான flashbacks ! கூடவே சின்னதாய் 2 நெருடல்களும் தான்..!தற்போது இது போன்ற கதைகள் கிடைப்பதில்லையே என்பது நெருடல் # 1 என்றால் ; இதே கதையினை தற்போது மொழியாக்கம் செய்திட நேரம் கிட்டிடும் பட்சத்தில் இன்னமும் பிரமாதப்படுத்தி இருக்கலாமே என்பது நெருடல் # 2 !  ஆனால் நம்மில் பெரும்பான்மைக்கு - படித்துப், பழகிப் போன அதே பழைய ஸ்கிரிப்ட் தான் ரசிக்கின்றதெனும் போது என் முன்னே உள்ள choices மிகக் குறைவாகிப் போகின்றன ! Anyways , அற்புதமானதொரு கதை - so let's make the most of it ! 
இம்மாத 2 நூறு ரூபாய் இதழ்களுமே மறுபதிப்புகள் தான் என்ற போதிலும், அவற்றினுள் நமக்கு அதீத ஆவலைத் தூண்டிடும் 2 கூடுதல் சங்கதிகள் புதைந்துள்ளன ! சில மாதங்களுக்கு முன்பாய் நடந்த நமது KBT -3 போட்டியில் - இரு லக்கி லூக் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு வாய்ப்பு நண்பர்களுக்குத் தரப்பட்டிருந்தது அல்லவா ? ஒரு வழியாய் அப்போட்டியின் முடிவுகள் அரங்கேறும் நேரம் இப்போது  நெருங்கி விட்டது !  அதற்கு முன்பாக போட்டிக் களத்தினில் காத்திருந்த 2 கதைகளின் தன்மையைப் பற்றி இங்கு நான் சொல்லியாக வேண்டும் ...! இரண்டுமே மாமூலான லக்கி லூக் சிறுகதைகள் தான் என்ற போதிலும், இரண்டிலுமே வரும் பிரதான பாத்திரங்கள் வழக்கமான கௌபாய் ரகத்தினர் கிடையாது ! முதல் கதையில் லக்கியோடு குப்பை கொட்டுவது ஒரு இடுங்கிய கண் கொண்ட சீன ஆசாமி ; கதை # 2-ல் வருவதோ ஒரு அராபிய நாட்டவன். So இரு கதைகளிலுமே வசன நடை தென் துருவம்-வட துருவம் போல் துளியும் தொடர்பில்லா வகைகள் ! இவற்றை கையாள்வதென்பது ஒரு பெரும்  சவாலான விஷயம் என்பதில் துளியும் சந்தேகம் கிடையாது ! அதனைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது - போட்டியில் கலந்து கொண்ட நண்பர்கள் அனைவருமே தூள் கிளப்பியுள்ளார்கள் ! Hats off guys - you have all given it an awesome shot ! அதே சமயம் போட்டி என்று வரும் போது சின்னச் சின்ன விஷயங்களையும் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிப் பார்க்கும் கட்டாயம் நேர்வதால் - நிறைய சிந்தனைக்குப் பின்னே ; நிறைய வாசிப்புக்குப் பின்னே - ஒன்றுக்கு   இரண்டாய் வெற்றியாளர்களைத் தேர்வு செய்துள்ளேன் ! Yes, we have 2 winners this time ! 

சீன ஷெரீப் கதையினை அமர்க்களமாய் எழுதி வெற்றியைத் தட்டிச் செல்வது வேறு யாருமல்ல - நமது நாலு கால் + ஒரு புசு புசு வால் கொண்ட மட்டன் பிரியாணிப் பிரியரான ஈரோடு விஜய் தான் ! இந்தப் பூனை பால் குடிக்கும் பூனை மட்டுமல்ல - பாயசம் செய்யத் தெரிந்த பூனையும் கூட என்பதை ரிப்போர்டர் ஜானி ஸ்பெஷல் இதழில் வெளியாகியுள்ள "ஒரு சீன  ஷெரீப்பின் கதை" வெளிச்சம் போட்டுக் காட்டக் காத்துள்ளது ! இதோ அதன் முதல் பக்கம்...!! 
Great Show Vijay !! சின்னதாய் ஒன்றிரண்டு எழுத்துப் பிழைகள் இக்கதையின் proof reading -ல் தலை காட்டுவது ஒரு சிறு நெருடல் !! Sorry in advance !

இரண்டாம் கதையின் மொழியாக்கத்தில் கலக்கி இருப்பது நமக்குப் புதியவர் அல்லவே....! பெங்களூரு கார்த்திக் சோமலிங்காவின்  கைவண்ணத்தில் "மேற்கே ஒரு ஒட்டகம்" - "புரட்சித் தீ" இதழினில் அட்டகாசமாக வரவிருக்கிறது ! கதையினைப் படிக்கும் போது இதன் பொருட்டு கார்த்திக் எத்தனை சிரத்தை எடுத்துள்ளார் என்பது தெளிவாய்ப் புரியும் ! பாருங்களேன் - அதன் முதல் பக்கத்தை : 
Congrats again Karthik ! வெற்றி பெற்ற நம் நண்பர்கள் இருவருக்கும் நம் வாழ்த்துக்களோடு - ஒரு "நாடோடி ரெமி" இதழ் + "யார் அந்த மாயாவி ?" இதழும் பரிசாக அனுப்பிடப்படும் ! போட்டிகள் ..வாசகர்கள்  பங்களிப்புகள்  என்ற தலைப்பு ஓடிக் கொண்டிருக்கும் போதே - நமது சன்ஷைன் கிராபிக் நாவலின் லோகோ டிசைன்களையும் கொஞ்சம் பார்த்திடுவோமே என்று நினைக்கத் தோன்றியது ! இதோ பாருங்களேன், நம் நண்பர்களின் கைவண்ணங்களை :  
Arunachalam's work...

Srirangam Siva's design
Super Vijay's creation-1
Karthik Somalinga's effort..
Ramesh Kumar, Kanchipuram !!
Srirangam Siva again...
Karthik Somalinga with another creation ! 
Super Vijay-2
நண்பர்களின் ஆர்வம் + ஆற்றல் எனை 'ஆ'வென வாய் பிளக்கச் செய்கிறது ! பள்ளியில் டிராயிங்கில் நூற்றுக்கு நாற்பது மார்க் எடுக்கத் தத்து பித்தென தடுமாறும் என் போன்றோருக்கு இந்த ஆற்றல் பிரவாகம் நிஜமாய் ஒரு அதிசயமாகவே தெரிகிறது ! இப்போது இங்குள்ள படைப்புகளில் இருந்து அழகான ஒன்றினைத் தேர்வு செய்திடும் பொறுப்பையும் உங்களிடமே விட்டு விடப் போகிறேன் ! ஜனவரியில் அரங்கேற்றம் காணவிருக்கும் நமது கிராபிக் நாவல் வரிசைக்கு இதில் எந்த லோகோ தேர்வு செய்வோம் guys ?

திறமைகளின் வெள்ளப்பெருக்கு இன்னும் ஓய்ந்த பாடில்லை...! KBGD -2 போட்டிக்கு நேற்றிரவு தான் நான் டிசைன்களையே அனுப்பி இருந்தேன் ; அதற்கு முன்பாகவே நண்பர் கனகராஜன் (பொள்ளாச்சி) டிசைன் செய்து அனுப்பியுள்ள அட்டையைப் பாருங்களேன்..!

"சைத்தான் துறைமுகம்" கதையினை நாம் மறுபதிப்பு செய்திடும் போது இந்த அட்டைப்படத்தை பயன்படுத்திடலாம் என்று எண்ணத் தோன்றுகிறது ! Real cool work !! திரும்பிய திக்கெங்கும் தென்படும் நண்பர்களின் திறமைகளும், காமிக்ஸ் மீதான அளப்பரிய நேசமும் என்னை நிஜமாய் பிரமிக்கச் செய்கிறது ! இத்தனை காதலுக்கு மத்தியினில் வசிக்கும் இந்த சுகம் எங்களது அந்த மூச்சிரைக்கும் ஓட்டத்தை ஒரு மார்கழி மாதத்து இளம் காலை சுக நடை அனுபவமாய் மாற்றிடுவதில் வியப்பேது ? This is bliss...! Take care folks ! Catch you soon ! 
P.S: நண்பர்களே, விளம்பர இடைவேளை போலானதொரு (மறு) அறிவிப்பு : உங்களின் 2013-க்கான சந்தாக்கள் தற்போதைய இப்புத்தகங்களோடு நிறைவாகிறது ! மறவாமல் இன்றே 2014-க்கான சந்தாக்களை செலுத்திடலாமே - ப்ளீஸ் ? 

273 comments:

  1. புரட்சி தீ...உண்மையிலேயே ஒரு இன்ப அதிர்ச்சி

    ReplyDelete
  2. வெற்றி பெற்ற நண்பர்கள் ஈரோடு விஜய் மற்றும் கார்த்திக் சோமலிங்கா - வாழ்த்துக்கள் ....

    ReplyDelete
    Replies
    1. enthan vaalthukkalaum thozhargale!

      Delete
    2. @ ப்ளூ

      நன்றி நண்பரே! நடு இரவில் மெசேஜ் அனுப்பி வாழ்த்துச் சொல்லி என் தூக்கத்தைக் கலைத்ததற்காக (கர்... புர்...) எனது ஸ்பெஷல் நன்றிகள்! :)

      Delete
    3. Erode VIJAY வாழ்த்துகள். உங்களுக்கு நாடோடி ரெமிக்கு பதிலாக இரண்டு துண்டு நெய் மீன் கருவாடு அனுப்பி இருக்கலாம் :)

      Delete
  3. Suuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuppppppppppppppppppppppperrrrrrrrrrrrrrrrrrrrrr!

    ReplyDelete
    Replies
    1. தம்பி எந்த ஸ்கூல் இவ்ளோ எழுத்து பிழை ...................

      Delete
  4. நண்பர்கள் ஈரோடு விஜய் மற்றும் கார்த்திக் சோமலிங்கா இருவருக்கும் என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இருவருக்கும் என் வாழ்த்துக்கள்!

      Delete
    2. இருவருக்கும் வாழ்த்துகள் . மற்றும் பங்கு பெற்ற அனைவருமே வெற்றியாளர்களே..

      Delete
  5. vetri petra_muyarchiththa anaiththu nanbargalukkum en valthukkal!

    ReplyDelete
  6. சன் ஷைன் கிராபிக் நாவல் லோகோ-வை நண்பர்கள் அனைவரும் அற்புதமாக உருவாக்கியுள்ளனர்!
    எனினும் நான்காவதாக உள்ள கார்த்திக் சோமலிங்காவின் சிங்கமுகம் உடைய லோகோ எனது தேர்வு!

    ReplyDelete
  7. Congrats guys - Erode Vijay and Karthik Somalinga - Read few translated panels, really good work.

    Logo Design -
    My vote is for any one of the "Ramesh Kumar, Kanchipuram !!" designs.

    ReplyDelete
  8. நமது வாசகர்களின் திறமைகள் மலைக்க வைக்கின்றன!! என்னே creativity என்னே humor sense! வாவ்!! கம்முனு lion வாசகர் made காமிக்ஸ்னு தனியாக ஒரு lineup துவக்கி விடலாம் போல இருக்கே.

    கார்த்திக் somalinga வின் sunshine லோகோ best fit என்று தோன்றுகிறது

    ReplyDelete
  9. டியர் எடிட்டர்,

    * 'புரட்சித் தீ' எனக்கும், நண்பர்கள் அனைவருக்கும் ஒரு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி! ஒரு வழியாய் இந்த இதழ் சர்ச்சையிலிருந்து விடுபட்டிருப்பதும் நிம்மதிப் பெருமூச்சு விடவைக்கிறது.

    * ஒரு வழியாக, பல இன்னல்களுக்கு நடுவிலும் சொல்லியபடியே இந்த வருடத்திற்காக அட்டவனைப்படுத்தியிருந்த அத்தனை இதழ்களையும் 95 சதவீதம் காலம் தவறாமல் சொன்ன தேதிக்கு (அதற்கு முன்பாகவும்) புத்தகங்களைக் கொடுத்து அசத்தியிருக்கும் உங்களுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது. லயன்-முத்து காமிக்ஸ் வாசகர்கள் அனைவருமே பெருமைப்பட்டுக் கொள்ளும் (தங்களைத் தாங்களே கிள்ளிப் பார்த்துக்கொள்ளும்) நேரமிது. இந்த நேரம் தவறாமையும், அர்ப்பணிப்பும், அசுர உழைப்பும் நிச்சயம் பலன் கொடுக்கும் சார்!

    * KBT-3ன் வெற்றியாளர்களில் நானும் ஒருவனா?!! என் எழுத்துக்களும் நம் இதழில் இடம்பெறுகிறதா?!! என் நீண்ட நாள் ஆசை நிறைவேறுகிறதா?!! என்னால் நம்பவே முடியவில்லை சார்! ஏதோ சாதித்ததைப் போன்ற ஒரு மகிழ்ச்சி எனக்குள்! உங்கள் வாழ்த்துக்கும், என் மொழிபெயர்ப்பைத் தேர்வு செய்ததற்கும் நன்றிகள் சார்! கார்த்திக், புதுவை செந்தில், ஆதி தாமிரா, சூப்பர் விஜய் போன்றவர்களின் வரிசையில் இனி நானும் பெரிய ரவுடிதான் என்று தைரியமாக என் சட்டைக் காலரைக் கிழித்துவிட்டுக்கொள்ளலாம் நான்! ஆஹா!! :) ['சக ரவுடி' கார்த்திக்குக்கும் எனது வாழ்த்துக்கள். மற்றும், பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்திருக்கும் சகபோட்டியாளர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்]

    * லோகோ டிசைனின் நண்பர்களது படைப்புகள் அனைத்துமே ஆச்சர்யப்படுத்துகிறது என்றாலும், ஒன்றை மட்டுமே தேர்வு செய்யவேண்டுமென்றால் என் நல்ல ஓட்டு, கள்ள ஓட்டு இரண்டுமே கார்த்திக்கின் அந்தப் 'பிடரி முடியுடன் கூடிய சிங்கத்திற்கே'! பார்க்கும்போதே என்னவோ செய்வதுபோன்றிருப்பதே காரணம்!

    * பொள்ளாச்சி கனகசுந்தரம் அவர்களின் அசுரவேக அட்டைப்படம் ஆச்சர்யப்படுத்துகிறது. (வாழ்த்துக்கள் நண்பரே!)

    இன்னும் சில மணிநேரங்களில் புலரவிருக்கும் பொழுதையும், கொரியர் பாயின் வரவையும் ஆவலுடன் எதிர்பார்த்து,

    ஈரோடு விஜய். :)

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் விஜய்.....

      நம்பி - நினைவு இருக்கிறதா? உங்களுக்கு மின்னஞ்சல் இருமுறை செய்து இருந்தேன். ( profile மின்னஞ்சல்)..

      Delete
  10. புரட்சித் தீ + விற்பனைக்கு ஒரு ஷெரீப்= தற்செயலாக நடந்த விஷயம் என்றாலும் இதே போல் மற்ற கதைகளுக்கும் செய்தால் நன்றாக இருக்கும் உதாரணம்
    ஜானி + பிரின்ஸ்
    டைகர் + டெக்ஸ் வில்லேர்
    ப்ருனோ பிரேசில் + டையாபோலிக்

    ReplyDelete
  11. KBT போட்டியில் வெற்றி பெற்ற கார்த்திக் மற்றும் விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். போட்டியில் கலந்துகொண்ட விஜய் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று நினைத்தேன். பின்ன பின்னுட்டத்திலேயே இப்படி கலக்குறாரே !

    Sunshine லோகோ வில் எனது ஓட்டு - கார்த்திக்கின் முதல் லோகோவிற்கும் மற்றும் அருணாச்சலம் லோகோவிற்கும் (இரண்டு ஒட்டு போடலாம் தானே :-) )

    ReplyDelete
  12. டியர் எடிட்டர் ,

    KBT 3 போட்டியில் வெற்றி ஈட்டிய ஈரோடு விஜய் , கார்த்திக் சோமலிங்கா இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகுக . இம் மாதம் 4 வெளியீடுகள் எனும்போது , எதை முதலில் படிப்பது என சிண்டை பிய்த்து கொள்ள போவது (மகிழ்ச்சியில் ) உறுதி . இதற்கு பின் உங்களினதும் மொத்த டீம் இனதும் அர்பணிப்பு எவ்வளவு ? Hats off சார் எனக்கு கார்த்திக் இன் பிடரி சிலிர்த்த சிங்க லோகோ , மற்றும் சிறுத்தை லோகோ இரண்டுமே பிடித்துள்ளது

    ReplyDelete
  13. I like Arunachalam's logo (non-standard size and looks different). But it is in English. So my vote goes to Karthik's first logo (the one with red background).

    ReplyDelete
  14. dear vijayan sir... oru avzhiyaaga books ready aanathu mikka santhosham.... nanbaragal ERODE VIJAY and KARTHICK Somalinga- iruvarukkum manamaarnthna vaazhthukkal...... my choice of LOGO is KArthick Somalinga's SINGA design.... second choice ARUNACHALAM's.... singathai parthale summa athiruthilla..... best wishes team.. thanks editor...:) Happy moments all.

    ReplyDelete
  15. KBT -போட்டியில் வெற்றி வாகை சூடிய கிறுக்கும் பூனையாருக்கும்,அறுக்கும் கத்தியாருக்கும் நல்ல பிசாசாரின் நல்வாழ்த்துக்கள் !!!

    சன்ஷைன் லோகோ டிசைன் அனுப்பியுள்ள அனைவரது படைப்புகளும் அற்புதம்.
    அடியேனின் சாய்ஸ் அறுக்கும் கத்தியாரின் படைப்பு !!!

    புத்தகங்கள் எப்போது வரும் என்று கடந்த மூன்று நாட்களாக குரியர் அலுவலகத்தில் தவமிருக்கும் பூனையார்,கத்தியார்,நீல பழத்தார், இரும்புக்கையார்,சூட்டு மாமோய்,மற்றும் இதர ஆர்வக்கோளாறு நண்பர்கள் இன்றாவது தங்கள் சொந்த அலுவலகத்திற்கு சென்று "வேலை" என்று ஏதாவது இருந்தால் அதை பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:-) ;)

    ReplyDelete
    Replies
    1. // நண்பர்கள் இன்றாவது தங்கள் சொந்த அலுவலகத்திற்கு சென்று "வேலை" என்று ஏதாவது இருந்தால் அதை பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:-) //

      ஹி ஹி, என்னுடைய ஆபீஸ் விட்டிலிருந்து 0 KM...

      Delete
    2. // என்னுடைய ஆபீஸ் வீட்டிலிருந்து 0 KM...//

      அடடா! அப்படீன்னா ஆபீஸிலேயேவா குடியிருக்கீங்க? :D

      Delete
    3. ஹி ஹி! வீட்டுக்குள்ளேயே ஆபீஸ். இப்பதான் கொஞ்சம் பாத்திரங்களைக் கழுவி வைச்சிட்டு, காய்கறிகளை திறமையாக நறுக்கிக் கொடுத்துட்டு, திரும்பி வந்தேன் - வேலைக்கு! ;)

      Delete
  16. பழகுவதற்கு இனியவர்,

    பண்பாளர்,

    நேர்மையாளர்,

    வெள்ளந்தி,

    அனைவரிடமும் ஒரே மாதிரியாக பழகுபவர்,

    அவருடைய மகனைப்போலவே அவரும் ஒரு குழந்தையாகவே இருப்பவர்,

    எங்கள் அனைவருக்கும் அண்ணன்,

    இன்றி பிறந்த நாள் காணும் இனிய நண்பர் JSC ஜானி அவர்களை வாழ்த்த வயதில்லை. இருந்தாலும் .......

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் (ஒரு சாம்பிரதாயம் கருதி......)

    இந்த ஆண்டு எல்லா வளமும் பெற்று சிறப்பாக அமைய வேண்டுகிறேன்.

    இந்த நன்னாளில் ...........................

    உதிப்பவை எல்லாம் உன்னதம் ஆகட்டும்,

    நீங்கள் விரும்பியது எல்லாம் உங்கள் வசம் ஆகட்டும்.

    எல்லா வளமும் பெற்று இந்த ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

    என்றும் போல இன்றும் உங்கள் எண்ணங்கள் சிறக்கட்டும்.


    Many Many Happy Returns of the Day.

    May God give everything you deserve and many more.

    Have a Fantastic year Ahead.

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு எவ்வளவு வயது என்று கேட்பவர்களுக்கு:

      2007ம் ஆண்டு நடந்த முதல் Twenty 20 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரானா மேட்சில் ஒரு ஓவரில் 6 சிக்சர்களை அடித்து யுவராஜ் அந்த ஓவரில் எவ்வளவு ரன் எடுத்தாரோ..........



      அதுதான் அண்ணன் Jsc ஜானி அவர்களின் வயது.

      இந்த ஆண்டு ஜனவரியில் வெளியான "சிவப்பாய் ஒரு சொப்பனம்" இதழில் இவரைப்பற்றிய முழு குறிப்பும் வெளியாகி இருக்கிறது. தேவைப்படின் மறுபடியும் படிக்கவும்.

      Delete
    2. நண்பர் ஜானிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

      Delete
    3. நண்பர் ஜான் சைமனுக்கும், அருண் பிரசாத் அவர்களுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! :)

      Delete
    4. ஜான் சைமன் சார்! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

      Delete
    5. Many more returns of the day..Jsc

      Delete
    6. இனிய நண்பர் ஜான் அவர்களுக்கும் , அருண் பிரசாத் அவர்களுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

      Delete
    7. To The Birthday Boys : Hearty wishes ! Have a wonderful year ahead !

      Delete
    8. பாசக்கார நண்பர் பழகுதற்கு இனிய ஜானிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

      Delete
    9. Birthday wishes to John Simon and Arun Prasad!

      Delete
    10. Happy Brithday John Simon & Arun Prasad!

      @King Viswa,
      சார் என்றைக்காவது நீங்கள் வாழ்த்து சொல்லும்போது, ஆரம்ப வரிகள் கொஞ்சம் வித்யாசமாக "பழகுவதற்குக் கடினமானவர்" என்று ஆரம்பிக்குமா என்று பார்க்கிறேன், இதுவரை இல்லை. Still waiting! :D

      Delete
    11. //@King Viswa,
      சார் என்றைக்காவது நீங்கள் வாழ்த்து சொல்லும்போது, ஆரம்ப வரிகள் கொஞ்சம் வித்யாசமாக "பழகுவதற்குக் கடினமானவர்" என்று ஆரம்பிக்குமா என்று பார்க்கிறேன், இதுவரை இல்லை. Still waiting! :D //

      ரமேஷ் சார்,

      நான் எப்படிப்பட்ட ஆள் என்றால்.....

      ஒன்று 100% நட்பு பாராட்டுவேன் (நம்ம Wave Length க்கு Set ஆனால்)

      அல்லது 0% - அந்த பக்கமே எட்டி பார்க்கமாட்டேன் ((நம்ம Wave Length க்கு Set ஆகவில்லையெனில்).

      பழகுவதற்கு கடினமானவர்கள் என்று தெரிந்தால் நான் எதற்கு போய் அந்த பாழுங்கிணற்றில் விழப்போகிறேன்? வீண் பிரச்சினைகளை வளர்ப்பானேன்?

      வேண்டா வெறுப்பாக பிள்ளையை பெற்றுவிட்டு அதற்க்கு காண்டாமிருகம் என்று பெயர் வைப்பானேன்?

      நீங்கள் ஜாலியாக கேட்ட கேள்விக்கு சீரியஸ் ஆகா பதில் சொன்னதற்கு மன்னிக்கவும்.

      ஆனால் என்னுடைய பிறந்த நாள் அன்று கண்டிப்பாக "பழகுவதற்கு கடினமானவர்" என்று சொல்லலாம் :)

      Delete
    12. // என்னுடைய பிறந்த நாள் அன்று கண்டிப்பாக "பழகுவதற்கு கடினமானவர்" என்று சொல்லலாம் :) //

      உங்களுடைய பிறந்தநாளுக்கான wording: பாதுகாப்பாகப் பழகுபவர்! ;)

      Delete
    13. ரமேஷ்குமார் சார்,

      //பாதுகாப்பாகப் பழகுபவர்! ;) //

      இதை இரண்டாவது தடவையாக படிக்கும்போது "வேறு ஏதோ" அர்த்தம் வருகிறதே? :)

      Delete
  17. இன்று இன்னுமொரு காமிரேட்டுக்கும் பிறந்த நாள்.


    அவர்,

    மதுரை மண்ணின் மைந்தர்,


    சென்னையில் சில வருடங்கள் தன்னுடைய பொன்னான சேவையை தொடர்ந்து இப்போது ஆந்திரா ஹைதராபாத்தில் கணிப்பொறி துறையில் பணிபுரிந்து வரும்

    அதி தீவிர காமிக்ஸ் ரசிகர்,

    http://arunandprasad.blogspot.in/ என்ற காமிக்ஸ் ப்ளாக்கின் பெருமைமிகு உரிமையாளர்


    நண்பர் அருண் பிரசாத் அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    ஒரே ஒருமுறைதான் இவரை சந்தித்து இருந்தாலும் இன்றும் நினைவில் பசுமையாக இருக்குமளவுக்கு இவரது நினைவு சுவடுகளை பதிந்துவிட்டவர்.

    நண்பருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் அருணுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

      Delete
    2. நண்பர் அருண் பிரசாத் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

      Delete
    3. many more happy returns of the day Arunprasad

      Delete
  18. சார் முடியல ....தூள் பண்ணீட்டீங்க ......ஹேராஸ் போல நீங்களும் தூள் கிளப்ப போவது உறுதி ......அட்டகாசம் ...அட்டயும்தான் ....நமது இரண்டு சூப்பர்ஸ்டார்களும் இணைந்து தூள் கிளப்புவது தூள்.....இரு நாயகர்களுக்கும் வாய்ப்பு ...என்ன ஒரு இன்ப அதிர்ச்சி ! அருமை!
    ஜானி வேறு....கலக்குற சந்த்ரு !
    நண்பர் பூனையாரும், கார்த்திக்கும் தூள் கிளப்ப போவதை புத்தகத்தில் படித்து கருத்து தெரிவிக்கிறேன் ! வாழ்த்துக்கள் விஜய் ! ஆசிரியரை மயக்கிய உங்கள் எழுத்து நடை எங்களை மயக்காமல் விடுமா ? நெட்டிலிருத்து புத்தகத்திற்கு அற்புதமான நடை பயணம் தோழா ! சூப்பர் !
    நண்பர் கார்த்திக் அடுத்த முன்னேற்றம் , இரண்டு நண்பர்களின் பயணம் என கொள்வோமா ! புரட்ச்சி தீ , விற்பனைக்கு ஒரு ஷெரிப் இணைந்து அத கல படுத்துவது போல ; இரண்டு காமெடி பீசுகள் கலக்க இணைந்துள்ளீர்கள் அங்கேயும் ; வாழ்த்துக்கள் நண்பா !
    சார் சிவாவின் முதல், கார்த்திக்கின் முதல் , ரமேசின் தொகுப்புகள் இவற்றில் எதனை போட்டாலும் அருமை ! ஆனால் மூன்று லோகோக்கள் ஒரே இதழுக்கு போட வாய்ப்புள்ளதா !
    அருணாச்சலம் உங்களது லோகோவும் அருமை ! பங்கு பெற்று எங்களை களிப்புற செய்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் !
    அனைத்துக்கும் மணி மகுடம் சூட்டியது போல தூள் கிளப்பி நிற்கிறார் கனகராஜ் ! பேச வார்த்தை இல்லை ! இது வரை எந்த அட்டை படமும் இந்த அளவு கச்சிதமாய் அமைந்ததில்லை ; கண்களை வெளியே எடுக்க முடியவில்லை ! அட்டை படமென்றால் எப்படி இருந்தால் ஈர்க்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்! என் கண்களை நம்ப முடியவில்லை ....தொடர்ந்து கலக்குங்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆனால் வருந்த வேண்டிய ஒரு விஷயம் இதில் ஒளிந்துள்ளது நண்பர்களே !
      //திருவாளர் சலவை நோட்டாரை மொத்த மொத்தமாய்ப் புரட்டுவதென்பது மறு பக்கத்து பூதாகரமான சவாலாய் நின்றது ! ராயல்டி பணங்களைக் கடைசி நொடியில் செலுத்தினாலும் முகம் சுளிக்காத படைப்பாளிகளும் ; நம் வார்த்தைக்கு மதிப்புத் தந்து - சின்ன அவகாசத்திற்குக் கடனில் பேப்பர் சப்ளை செய்த நிறுவனங்களும் கை கொடுக்க, கொடுத்த வாக்கை எப்படியும் நிறைவேற்றியாக வேண்டுமென்ற நமது வைராக்கியம் சொதப்பிடாது தப்பியது !'All's well, that ends well' என்பதற்கேற்ப - 2013-ன் இந்த ஓட்டப் பந்தயத்தின் முடிவினில் மூச்சிரைக்க எல்லைக்கோட்டில் நிற்க நேரிட்டாலும்,//

      ஆகவே புரட்ச்சிதீ படித்த பின்பாவது நண்பர்கள் அதே நிலையில் உள்ள ஆசிரியரை உணர்ந்து சந்தா கட்டினால் நலம் பயக்கும் ! நிச்சயம் புரட்ச்சி தீ படித்த பின்னர் நண்பர்கள் சந்தா எகிறுவது உறுதி !

      Delete
    2. ஸ்டீல்... நச்சுனு சொல்லிட்டீங்க..

      Delete
    3. சரியாச் சொன்னீங்க, ஸ்டீல்!
      கையில் காசிருக்கும் (மாதத்தின் ஆரம்ப) நாட்களிலேயே சந்தாச் செலுத்தி எடிட்டரின் அடுத்தடுத்த திட்டமிடல்களுக்கு உறுதுணையாய் இருப்போம் நண்பர்களே!

      Delete
    4. //கையில் காசிருக்கும் (மாதத்தின் ஆரம்ப) நாட்களிலேயே சந்தாச் செலுத்தி எடிட்டரின் அடுத்தடுத்த திட்டமிடல்களுக்கு உறுதுணையாய் இருப்போம் நண்பர்களே! // +1

      Delete
    5. ஆசிரியர் அவர் வேலையை சரியாய் செய்யும் போது நாம் நம் பங்கிர்க்கு துணையாய் இல்லாவிட்டால் எப்படி?

      நேற்று ஒரு கை ஒசை
      இன்று பல கை ஒசை
      நாளை பல நூரூ கை ஒசை எழுப்பி ஆசிரியரை ஊக்குவிப்போம்

      அது என்ன ஒசைங்ரிங்களா

      நம் ஒரு ஒரு சந்தாவும் ஆசிரியரின் முயர்சியை அங்கிகரித்து முதுகில் தட்டி அவரை ஊக்குவிக்கும் ஒசை

      அப்புறம் யாருக்காவுது(graphic novel rasigar paranitharan, gundu book rasigar AAdhi etc., ) ஆசிரியர் முதுகை ஒங்கி தட்டனும்னா forceukku எத்த மாதிரி நீங்க ரெண்டு மூன்று என்று சந்தாவை கூட்டி கொள்ளுங்கள் :-)


      Delete
  19. :-)

    :)

    :D

    இனி எல்லாம் சுகமே...!

    ReplyDelete
    Replies
    1. இது பத்தாது, உங்க கிட்டயிருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம்... :D

      Delete
  20. KBT 3 போட்டியில் வெற்றி ஈட்டிய ஈரோடு விஜய் , கார்த்திக் சோமலிங்கா இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
    லோகோவில் முதலில் உள்ள அருணாசலம் லோகோ மற்றும் 4/வதாக உள்ள சிங்கம் உள்ள கார்த்திக் லோகோ அற்புதமாக உள்ளது.

    ReplyDelete
  21. I like Srirangam Siva's second logo, it's really so cute :)

    ReplyDelete
  22. @ ஜான் சைமன், willerfan, கார்த்திகைப்பாண்டியன், v.karthikeyan, Electron karthik, Radja from France, Thiruchelvan prabananth, Jude Roshan BLUTCH, varada desigan, steel claw, saint satan, Mugunthan kumar மற்றும் நண்பர்கள்

    அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பர்களே! :)

    ReplyDelete
  23. சார் இரண்டு புத்தகங்கள் வந்து விட்டன புரட்ச்சிதீ ! வேங்கையின் சீற்றம் மிஸ்ஸிங் !

    ReplyDelete
  24. டயபாளிக் அட்டை சும்மா நச்! அனைத்து அட்டைகலுமே தூள் !

    ReplyDelete
  25. சிறிய மனம் கவர் பரிசுமுண்டு ! அனைத்தும் வாங்கி தெரிந்து கொள்ளுங்கள்!

    ReplyDelete

  26. வாழ்த்துக்கள் ஈரோடு விஜய்! மற்றும் கார்த்திக் சோமலிங்கா!

    உங்கள் எழுத்து நடையில் வந்துள்ள கதையை படிக்க ஆர்வமாக உள்ளேன்.

    நான்காவதாக உள்ள கார்த்திக் சோமலிங்காவின் சிங்கமுகம் உடைய லோகோ எனது தேர்வு!

    எனது "ஆபரேஷன் கூரியர் சேஸ்" ஆரம்பம்.

    ReplyDelete
  27. // சிறிய மனம் கவர் பரிசுமுண்டு ! அனைத்தும் வாங்கி தெரிந்து கொள்ளுங்கள்!// super. நன்றி நண்பரே!

    ReplyDelete
  28. டியர் விஜயன் சார்,

    என்னுடைய மொழிபெயர்ப்புகளில் ஒன்றை தேர்வு செய்ததிற்கு மிக்க நன்றி! எனது இந்த சிறிய முயற்சியை, லக்கி லூக்கின் லாண்ட் மார்க் கதைகளில் ஒன்றான "புரட்சித் தீ"-யுடன் இணைத்து வெளியிடுவதற்கு இரட்டிப்பு நன்றிகள்! :)

    "மேற்கே ஒரு ஒட்டகம்" கதையின் முதல் பக்கத்தில் இடம்பெறும் அந்த தொழுகைக் காட்சியில் பயன்படுத்துவதற்காக, புனிதத் தொழுகை வரிகளின் தமிழ் எழுத்து வடிவத்தை நண்பர் அப்துல் பாஸித்திடம் கேட்டுப் பெற்றிருந்தேன்! அவருக்கும் இங்கே நன்றி தெரிவிக்க வேண்டியது என்னுடைய கடமை!

    ஒரு சீன ஷெரிப்பின் கதையை, தனது பாணியில் சொல்லப் போகும் ஈரோட்டுப் பூனைக்கு எனது மனமார்ந்த மியாவ்கள்! :) இங்கே ஒரு ரகசியத்தை சொல்லலாமா வேண்டாமா என்று தெரியவில்லை.... ;-) சொல்லாமலும் இருக்க முடியவில்லை.... மனிதர் ஒட்டகக் கதையில்(லும்) பின்னிப் பெடலெடுத்து இருப்பார் எ.எ.க! :-)

    என்னுடைய இரண்டு மொ.பெ. முயற்சிகளில், ஒன்று தான் தேர்வானதா என்ற (பேராசை கலந்த) வருத்தம் ஒருபுறம் இருந்தாலும்.... ;-) ஒன்றுக்கு இரண்டாய் அரிய முத்து காமிக்ஸ்கள் பரிசாகப் கிடைக்கப் போகின்றன என்ற அறிவிப்பு அதை ஈடுகட்டி விடுகிறது! :-)

    உண்மையில், ஒட்டகத்திற்கு பதிலாக, இட்-லீ (லிச்-சீ) கதைக்கான எனது மொழிபெயர்ப்பு தேர்வாகி இருந்தால் அது மகிழ்ச்சியை இரட்டிப்பு ஆக்கி இருந்திருக்கும்; நான் ரசித்து மொழிபெயர்த்த கதை அது - ஆனால், ஏகத்துக்கும் வட்டார / கலாச்சார கலப்புடன் வசனங்களை அமைத்தது, இக்கதை தேர்வாகாததின் பின்னணியில் இருக்கலாம் என நினைக்கிறேன்!

    4 * 7 = 28!!! லயன் ப்ளாகிற்கு மட்டும் அல்ல, சுத்துப் பட்டு இருபத்தெட்டு லோகோ பட்டிகளுக்கும் தான் தான் நாட்டாமை என்பதை ரமேஷ் குமார் அழுத்தமாக நிரூபித்து இருக்கிறார்!!! :-D Jokes apart, அதன் பின்னணியில் எத்தனை மணி நேரங்களை அவர் செலவழித்து இருப்பார் என்பதை நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது! மற்ற நண்பர்களின் முயற்சிகளும் சிறப்பாக உள்ளன!

    லோகோ டிசைன் பற்றி, சிறியதாக ஒரு குறிப்பு! அந்த சிங்கமும் சரி, சிறுத்தையும் சரி - அவற்றை நான் வரையவில்லை என்பதை யாரும் எளிதில் யூகித்து விடலாம்! இணையத்தில் இவற்றை விட அழகான, கம்பீரமான சிங்க & சூரிய உருவங்கள் காணப் பட்டாலும் அவற்றை Commercial உபயோகத்திற்காக அனுமதியின்றி உபயோகிப்பது சரியல்ல என்பதால் - "Royalty Free" & "Free for Commercial Use" - Vector இமேஜ்களை மட்டும் தேர்வு செய்ய வேண்டி இருந்தது!

    நாமெல்லாம் வளர்ந்து வாலிபர்களாக(!!!) நிற்பதைப் போல, லயன் காமிக்ஸ் லோகோவில் இருக்கும் அந்த சிறுவயது சிங்கமும் வளர்ந்து நின்றால் - அதன் முகம் எப்படி அறிவு கலந்த முதிர்ச்சியுடன் வசீகரமாகக் காணப்படும் என்பதை மனதில் கொண்டு, இதை தேர்வு செய்தேன்! மாறாக, இந்த வளர்ந்த சிங்கம் கிராஃபிக் நாவல் படித்து, ஆழ்ந்த சிந்தனையில் (அல்லது குழப்பத்தில்) இருப்பது போல உங்கள் கண்களுக்குத் தோன்றினால் அதற்கு நான் பொறுப்பல்ல! ;-) சன்ஷைன் என்ற பெயருக்கு நியாயம் கற்பிக்க வேண்டும் என்பதால், பின்னணியில் அந்தச் சூரியக் கதிர்களின் ஒளிர்வும் இடம் பெறுகிறது! மேலும், லோகோவை சிறிய அளவில் பிரிண்ட் செய்தாலும், "சன்ஷைன் கிராஃபிக் நாவல்" என்ற பெயர் தெளிவாக தெரிய வேண்டும் என்பதற்காக, பெரிய அளவு எழுத்துக்களைப் பயன்படுத்தி இருந்தேன்! இத்துடன், ஒரு லோகோவின் கதை முடிந்தது!

    வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி! :-)

    ReplyDelete
    Replies
    1. //நண்பர் கனகராஜன் (பொள்ளாச்சி) டிசைன் செய்து அனுப்பியுள்ள அட்டையைப் பாருங்களேன்..!//
      அசத்தலான டிசைன்! அதிலும், பின்பக்கத்தில் ஓவியங்களை collage செய்த விதம் மிக அருமை! வாழ்த்துக்கள் கனகராஜன்!

      Delete
    2. //அதிலும், பின்பக்கத்தில் ஓவியங்களை collage செய்த விதம் மிக அருமை! வாழ்த்துக்கள் கனகராஜன்!//
      பின்னட்டை எடுப்பாக
      உங்களது லோகோ பிரம்மாதம் !
      விஜய் கதையா பார்த்து அசந்து போன நான் உங்கள் நடையில் அந்த கதை எப்படி இருக்கும் என நினைத்து .....

      Delete
    3. // Jokes apart, அதன் பின்னணியில் எத்தனை மணி நேரங்களை அவர் செலவழித்து இருப்பார் என்பதை நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது! //

      Thanks, சுமார் இரண்டரை மணிநேரம். உண்மையில் அவை 28 கிடையாது, அதிகபட்சம் 2 வகைகளின் 28 shape variations - தான்! ஒரு uniformity-க்காக சன்ஷைன் லைப்ரரியின் concept-லிருந்து அதிகம் வேறுபடாமலிருக்க முயற்சி செய்தேன்!

      Delete

    4. லோகோவிற்கு என் ஓட்டு

      - கம்பீரமான சிங்கம் + சூரிய வெளிச்சம் - கார்த்திக்கின் முதல் ஆக்கம்.

      நமது லயன் வாலைச் சுருட்டிக்கொண்டு சிறுபிள்ளை என்றால், இந்தச் சிங்கம் அனுபவத்தில் முதிர்ந்த ஆனால் கம்பீரம் குலையாமல் இருக்கின்றது. க்ராஃபிக் நாவல் கதைகளின் தன்மையும் வைத்துப் பார்த்தால், எனது ஓட்டு இதற்கே
      Reply

      Delete
  29. வாழ்த்துக்கள் கார்த்திக்!!

    ஈரோடு விஜய் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  30. நண்பர் கனகராஜன் (பொள்ளாச்சி) டிசைன்!!!

    வாவ்... என்ன ஒரு அற்புதமான டிசைன்!!! வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறேன்! அவசியம் இதை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என ஆசிரியரை கேட்டுக்கொள்கிறேன்!

    நண்பர் கனகராஜன் அவர்களுக்கு இப்போதே என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  31. ஜான் சைமன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  32. புத்தகங்களை சொன்ன தேதிக்கு தயார் செய்து அனுப்பிய ஆசிரியருக்கும் ,
    பணியாளர்களுக்கும் ( அதற்காக கதவுகளைத் திறந்தாகும் பணியில் திருவாளர் நாக்கார், நண்பர் தரையாரைக் குசலம் விசாரிக்காத குறை தான் !? )
    மொழிபெயர்ப்பு போட்டியில் வெற்றி பெற்ற கார்த்திக், விஜய் ,மற்றும் அட்டை வடிவமைப்பில் அசத்திய கனகராஜன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. * பிறந்த நாள் கொண்டாடும் நண்பர் ஜானி,அருண் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள் .

    * விற்பனைக்கு ஒரு ஷெரிப் +புரட்சி தீ " தவிர்க்க முடியாத சூழ்நிலை என்பதால் இதனை பற்றிய வினாக்கள் வேண்டாமே # வினாக்கள் வேண்டாம் ..ஆனால் பாராட்ட உரிமை உண்டு அல்லவா ...
    "வெரி வெரி சூப்பர் சார் "அட்டகாசம் ..,அமர்க்களம் ..வாழ்த்துகள் ...

    *இந்த மின் வெட்டு சூழ்நிலையிலும் குறித்த நாளில் நான்கு புத்தகம் அனுப்பிய உங்களுக்கும் ,உங்கள் பணியாளர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள் ..

    * நண்பர் கனகராஜன் அவர்களுக்கு ... சூப்பர் சார் ..மனமார்ந்த பாராட்டுகள் ...

    * மொழி ஆக்க பந்தயத்தில் வெற்றி பெற்ற சங்க செயலாளர் விஜய் மற்றும் கார்த்திக் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் ... (ஆனால் படித்து முடித்து தீவிர விமர்சனம் அளிப்பேன் .ஜாக்கிரதை நண்பர்களே .. :-)

    *லோகோ போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களும் கலக்கி விட்டார்கள் .ஆனால் ஒன்றை மட்டுமே எடுத்து கொள்ளும் படி இருப்பதால் எனது ஓட்டு கார்த்திக் அவர்களின் "முதல் டிசைன் " (பெயரில் தான் "லயன் "இல்லை .லோகோவில் ஆவது "லயன் " வருட்டுமே )..

    * இம்முறை எங்கள் சங்க செயலாளர் விஜய் அவர்களே வெற்றி பெற்று உள்ளதால் எங்கள் போராட்ட குழுவின் சார்பாக அவருக்கு எங்கள் சங்கத்தின் சார்பாக "ஆளுயர மாலை " அளிக்க ரெடி யானோம் . ஆனால் சங்கம் ஏற்கனவே "அபராதத்தில் " ஓடி கொண்டு இருப்பதை செயலர் அறிந்து வைத்திருப்பதால் "வாழ்த்து " மட்டும்... ( மேலும் பரிசாக பெற்ற இரண்டு புத்தங்களை அவர் சங்கத்திற்கு சமர்ப்பணம் அளிப்பதால் "இரண்டு வாழ்த்துகளை " சொல்லி இன்னும் நிறைய புத்தங்கள் வாங்கி சங்கத்திற்கு அனுப்புமாறு பணிவோடு வேண்டி கொள்கிறோம் .)

    * அடுத்து .இந்த 2013...ம் ஆண்டை சூப்பர்... காமிக்ஸ் ஆண்டு ஆக மலர வைத்த எங்கள் ஆசிரியர் அவர்களுக்கு மனமார்ந்த ..,உளமார்ந்த பாராட்டுகளை கூறி கொண்டு ...இன்னும் சந்தா கட்டாத நண்பர்கள் 2014 ஸ்டார் காமிக்ஸ் ஆண்டாக மாற்ற நினைக்கும் நமது ஆசிரியர்க்கு உறுதுணை யாக நிற்க உடனடி சந்தா கட்டி எங்கள் போராட்ட குழுவில்..இணைந்து இலவசமாக "பதவி "யை வாங்கி செல்லுமாறு கூறி கொண்டு விடை பெறுகிறேன் நண்பர்களே ....

    நன்றி ....வணக்கம் ......

    ReplyDelete
    Replies
    1. @ பரணிதரன்

      நன்றி தலைவரே! // சங்கம் ஏற்கனவே அபராதத்தில் ஓடிக்கொண்டிருப்பதால்// ஹா ஹா!

      என் மொழி பெயர்ப்புக்கு உங்கள் விமர்ச்சனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஆனால், பிடிக்கவில்லை என்றால் நாலு பக்கத்துக்கு கடுதாசி ஏதாவது போட்டு விடாதீர்கள். எடிட்டருடையதைப்போல என் மனம் அவ்வளவு உறுதியானதல்ல! ;)

      Delete
    2. கடிதம் என்பது கடமை பரணீதரன், நீங்கள் கடமை தவறாத கண்ணியவான் என்பதை நிரூபிக்கவேண்டிய தருணம் இது. எந்தப் பூனையின் மியாவுக்கும் நீங்கள் அஞ்சக்கூடாது. :-))))))))

      Delete
  34. வெற்றி பெற்ற நண்பர்கள் ஈரோடு விஜய் மற்றும் கார்த்திக் சோமலிங்கா - வாழ்த்துக்கள்

    ReplyDelete
  35. பிறந்த நாள் கொண்டாடும் நண்பர் ஜானி,அருண் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள் .

    வெற்றி பெற்ற நண்பர்கள் ஈரோடு விஜய் மற்றும் கார்த்திக் சோமலிங்கா - வாழ்த்துக்கள்

    s.jayakanthan, punjai puliampatti

    ReplyDelete
  36. விஜய் அருமை ! ஆசிரியரின் தலையங்கம் படித்த பின்னர் தேடி படித்தது உங்களது மொழி பெயர்ப்பே ! லக்கியில் ஆரம்பித்து லக்கிலே முடியும் அற்புதமான கதை உங்களுக்கும் எங்களுக்கும் ! தாலாட்டிசெல்லும் தமிழிலே விளையாடி இருக்கிறீர்கள் தமிழன்னை களிப்புறவே ! அருமை இது வரை வந்த ஃபில்லர் கதைகலிலே இதுவே சிறப்பு ! கதையை படித்து ரசிக்க சில நிமிட துளிகளை அதிகம் பயன் படுத்தினேன் என்றால் மிகை அல்ல ! அனுபவித்து ரசித்து தாங்கள் எழுதியதை அனுபவித்து ருசிக்க நான் செலவளித்த அந்த நேரங்கள் அருமை !
    அழகு தமிழுக்கு ஒரு மகுடம்!

    ReplyDelete
  37. புத்தகங்கள் 4-ம் கிடைத்து விட்டது.
    டயபாலிக் கதை 2014 அட்டவணையில் இடம் பெறாதது குறித்து எடிட்டர் சார் கூறி இருக்கும் பதில் "Wait and Watch Guys!" இது எனது எதிர்பார்ப்புகளை எகிற செய்கின்றது.

    ReplyDelete
    Replies
    1. ஆனால் நான் முதலிலே எதிர்பார்த்தேன் நண்பரே !

      Delete
    2. @ ஸ்டீல் க்ளா!
      ஆபீஸ்ல புக் படிச்சா பின்னிடுவாங்க, லஞ்ச் டைம்-ல படிச்சா தான் உண்டு.

      காலை'ல வாங்கின புக்-ஐ இப்ப வரைக்கும் சுகர் பேசன்ட் ஸ்வீட்ட பார்த்த மாதிரி பர்த்துடே இருக்க மட்டும் தான் முடியுது,ஸ்டீல் க்ளா!

      Delete
  38. லோகோவிற்கு என் ஓட்டு

    - கம்பீரமான சிங்கம் + சூரிய வெளிச்சம் - கார்த்திக்கின் முதல் ஆக்கம்.

    நமது லயன் வாலைச் சுருட்டிக்கொண்டு சிறுபிள்ளை என்றால், இந்தச் சிங்கம் அனுபவத்தில் முதிர்ந்த ஆனால் கம்பீரம் குலையாமல் இருக்கின்றது. க்ராஃபிக் நாவல் கதைகளின் தன்மையும் வைத்துப் பார்த்தால், எனது ஓட்டு இதற்கே

    ReplyDelete
  39. Congrats கார்த்திக் & ஈ.விஜய் !!!!! நான் தேர்வாக வில்லையே என்று வருத்தம் இருந்தது, உங்கள் மொழிபெயர்ப்பை படித்ததும் புரிந்தது, உங்களுடன் போட்டி போடுவது கஷ்டம் என்று. மண்ணை கவ்வபோறேன் சொல்லி சொல்லி எங்க எல்லாத்தையும் மண்ண கவ்வ வச்சிட்டிங்களே ஈ.விஜய்!!!!!

    ReplyDelete
    Replies
    1. @ சூப்பர் விஜய்

      நன்றி விஜய்! பெருந்தன்மையானவர் நீங்களென்பதை வெளிப்படையான உங்கள் வார்த்தைகள் அடையாளம் காட்டுகின்றன. :)

      Delete
  40. And my vote for logo goes to Somalinga's Singam...

    ReplyDelete
  41. இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தா அனுப்பிவிட்டேன் (கிராஃபிக் நாவலுக்கும் சேர்த்து). லயன் அலுவலகத்தின் அஞ்சலுக்கு காத்திருக்கிறேன். புத்தகம் அனுப்புவதில் பிஸியாக இருக்கிறார்கள் என நினைக்கின்றேன்

    ReplyDelete
  42. Editor Sir, அப்பறம் போனவாட்டி மாத்ரி ரெண்டாவது இடம் மூணாவது இடம் பிடிச்சவங்களுக்கு (KBT3 இல்) எதாவது கரிசனம் உண்டா... ?????

    ReplyDelete

  43. பிறந்த நாள் கொண்டாடும் நண்பர் ஜானி,அருண் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள் .

    வெற்றி பெற்ற நண்பர்கள் ஈரோடு விஜய் மற்றும் கார்த்திக் சோமலிங்கா - வாழ்த்துக்கள

    லோகோவிற்கு என் ஓட்டு

    - கம்பீரமான சிங்கம் + சூரிய வெளிச்சம் - கார்த்திக்கின் முதல் ஆக்கம்.

    நமது லயன் வாலைச் சுருட்டிக்கொண்டு சிறுபிள்ளை என்றால், இந்தச் சிங்கம் அனுபவத்தில் முதிர்ந்த ஆனால் கம்பீரம் குலையாமல் இருக்கின்றது. க்ராஃபிக் நாவல் கதைகளின் தன்மையும் வைத்துப் பார்த்தால், எனது ஓட்டு இதற்கே

    by palanivel

    ReplyDelete
  44. மொழிபெயர்ப்பில் முதலிடம் பிடித்த ஈரோடு பூனையாருக்கும் , பெங்களூரு ப்ளேடு பீடியா கார்த்திக்குக்கும் வாழ்த்துக்கள்.

    லோகோவைப் பொறுத்த வரை அருணாச்சலத்தின் முதல் லோகோ மற்ற எந்த லோகோவையும் விட தனியே தெரிகிறது. அதுவே என் தேர்வும் கூட.

    ReplyDelete
  45. 2013-ன் கடைசி மாதத்தில் 4 புத்தகங்கள், 6 weight-ஆன கதைகள், சூப்பர்! :)

    Congrats கார்த்திக் & விஜய்! புத்தகம் கிடைத்தவுடன் ஹாட்லைனுக்குப் பிறகு ஆர்வத்துடன் வாசிக்கத்தூண்டுவது உங்களுடைய ஆக்கங்கள்தான்! KBT-3ல் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    சன்ஷைன் கிராபிக் நாவல் லோகோவிற்கு அருணாச்சலம் அவர்களின் design நன்றாக இருக்கிறது - போதுமான அளவுக்கு சன்ஷைன் லைப்ரரியில் இருந்து வேறுபட்டும், context relevant ஆகவும் உள்ளது. தமிழைவிட ஆங்கில எழுத்துக்களில் இருப்பதே நன்றாகப் பொருந்தும் என்றும் தோன்றுகிறது (மூன்று வார்த்தைகளுமே ஆங்கிலம் என்பதால்).

    ReplyDelete
    Replies
    1. கவனிக்கவும்: அருணாச்சலம் அவர்களின் லோகோவில் சூரியன் பிரதானமாக இருந்தாலும் சிங்கத்தின் உருவமும் சேர்ந்திருக்கிறது - Super! :)

      Delete
    2. வசிஷ்டர் வாயால பிரம்ம ரிஷி பட்டம்.

      உங்கள் பாராட்டுக்கு நன்றி நண்பரே

      Delete
  46. ஒரு மணி நேரம் பெர்மிசன் கேட்டு குரியர் ஆபீஸ் போய் பார்த்த புக் வரல, ஆனா என் வீடு பக்கத்துக்கு ஏரியா ராமமூர்த்தி சார்க்கு மட்டும் வந்திருக்கு , அத தான் என்னால தாங்கமுடியல!! :-(

    ReplyDelete
    Replies
    1. நண்பரே பாலாஜி!

      ஆபீஸ்ல புக் படிச்சா பின்னிடுவாங்க, லஞ்ச் டைம்-ல படிச்சா தான் உண்டு.

      காலை'ல 9 .40-க்கு வாங்கின புக்-ஐ இப்ப வரைக்கும் சுகர் பேசன்ட் ஸ்வீட்ட பார்த்த மாதிரி பர்த்துடே இருக்க மட்டும் தான் முடியுது.

      என்னோட நிலைமைய பாருங்க!

      Delete
    2. ரொம்ப சந்தோசம் நண்பரே!!

      Delete
    3. அதெப்படி பாலாஜி, இதை சும்மா விடலாமா? நைஸாக ராமமூர்த்தி சார் வீட்டுக்குப் போய் பார்சலைப் பிடுங்கிட்டு வந்துடறதுதானே.. எனக்கும் வந்தப்பிறகுதான் பார்சலைத் தருவேன்னு டார்ச்சர் பண்ணலாம்ல.. என்ன நீங்க.. :-))))))))))))))))

      Delete
  47. congrats karthi and vijay . congrats to karthi,arunachalam ,srirangam siva and super vijay for your amazing logos.Editor we miss mathiilla manthiri .what happen ?

    ReplyDelete
  48. காமிக்ஸ் பதிவர்களுக்கு.... ஒரு முக்கிய வேண்டு கோள்.....

    இந்த மாதம் வரும் நான்கு புத்தகங்களும் வாங்கி பார்த்து .,படித்த பின்னர் இந்த வருட (2013) நமது இதழ்கள் வரிசை ,சிறந்த கதை ,சிறந்த அட்டைபடம் மற்றும் உங்கள் பார்வையில் "காமிக்ஸ் 2013 " பற்றிய பதிவை இடுமாறு பணிவுடன் வினவுகிறோம் .



    ReplyDelete
  49. @Erode Vijay & Karthik Somalinga - Well deserved wins - படித்து ரசிப்பதர்கு ஆர்வமாய் புத்தகத்திர்க்கு வைட்டிங்க்

    Logo choice - Karthik Somalinga's 1st

    ReplyDelete
  50. 2013/ம் வருட சிறந்த கதை எமனின் திசை மேற்கு
    2013/ம் வருட சிறந்த அட்டை படம் டைகர் ஸ்பெசல்
    2013/ம் வருட சிறந்த மறுபதிப்பு கதை தங்க கல்லறை
    2013/ம் வருட சிறந்த அறிமுக நாயகன் கமான்சே

    ReplyDelete
  51. @Karthik Somalinga - one small request

    சிங்கத்த எப்படியாவுது straigha pakka வைங்க, sun rays நம்ம லயன் traditional yellow pottu please share pannunga,
    காலா காலத்துக்கும் இருக்க போற Logo adhan
    eppadiyavudu சிங்கத்த straighta pakka வைங்க plzzzz

    ReplyDelete
    Replies
    1. @சத்யாவுக்கு கால்வின் பிடிக்கும்:
      //@Karthik Somalinga - one small request; சிங்கத்த எப்படியாவுது straigha pakka வைங்க//
      நானும் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்துட்டேன், கொஞ்சியும்(!) பார்த்துட்டேன் சத்யா! ஆனா, தலைவர் நேரா பாக்கவே மாட்டேங்கிறார் :-D நீங்க வேணா அவரை கொஞ்சம் திரும்பி நின்னு பாருங்களேன்! ;-) கோச்சுக்காதீங்க, சும்மா தமாஷூ! :)

      நான் ஏற்கனவே சொல்லி இருந்தபடி:
      //அந்த சிங்கமும் சரி, சிறுத்தையும் சரி - அவற்றை நான் வரையவில்லை என்பதை யாரும் எளிதில் யூகித்து விடலாம்! இணையத்தில் இவற்றை விட அழகான, கம்பீரமான சிங்க & சூரிய உருவங்கள் காணப் பட்டாலும் அவற்றை Commercial உபயோகத்திற்காக அனுமதியின்றி உபயோகிப்பது சரியல்ல என்பதால் - "Royalty Free" & "Free for Commercial Use" - Vector இமேஜ்களை மட்டும் தேர்வு செய்ய வேண்டி இருந்தது!//

      எனக்கு மட்டும் இப்படி எல்லாம் அழகா வரையத் தெரிஞ்சு இருந்தா, நான் ஏங்க ராயல்டி ஃப்ரீ இமேஜ்களை இணையத்தில் தேடப் போறேன்?! :-D நேரா பாக்குற சிங்கம், கர்ஜிக்கிற சிங்கம், சிங்க முக சூரியன், முடி சூடிய சிங்கம், முடி கொட்டிய(!) சிங்கம் இப்படி எல்லாம் நிறைய இருக்கு :-D ஆனா அவற்றை எல்லாம் யூஸ் பண்ணனும்னா முறையா லைசென்ஸ் வாங்கணும், கொஞ்சம் பணம் செலவாகும்! :-( பொழுது போகாத ஒரு சமயத்தில் ஷட்டர் ஸ்டாக் இணைய தளத்தில் Lion, Sunshine போன்ற keyword-களை தேடிப் பாருங்கள்!
      http://www.shutterstock.com/

      இருந்தாலும், உங்களுக்காக சில முயற்சிகள்...

      முதலில், ஆசிரியருக்கு நான் அனுப்பி இருந்த இறுதி டிசைனை பாருங்கள் (பார்டர் மற்றும் Font அளவு மாற்றப் பட்ட படம்!). ஆசிரியர் இங்கே பிரசுரித்து இருப்பது வெர்ஷன் ஒன்!
      சிங்கம் II

      மஞ்சளாய் ஒரு சிங்கம்:
      சிங்கம் III

      கலர் கலராய் ஒரு சிங்கம்!
      சிங்கம் IV

      Delete
  52. kaarththik உங்களது மொழி பெயர்ப்பில் கதை சூப்பர் ! கதையும் வெகு ஜோர் !
    ஆஹ மொத்தம் அற்புதமான இரு மொழி பெயர்ப்பாளர்கள் நம்மிடையே இருப்பது பெருமையான விஷயம் !

    ReplyDelete
  53. இனி போட்டிக்கு அறிவிக்கப்படும் அட்டைபட டிசைனுக்கு தேவையான படங்கள், லோகோ மற்றும் விவரங்களை போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு மட்டும் தனியாக அனுப்பாமல் பொதுவான இந்த தளத்திலேயே போட்டால் போட்டியில் கலந்து கொள்ள பதிவு செய்யாமல் இருக்கும் என்னை போன்றவர்களுக்கும் பயன்படும்.

    ReplyDelete
  54. KBT3ல் வெற்றிபெற்ற நண்பர்கள் கார்த்திக் சோமலிங்கா மற்றும் ஈரோடு விஜய் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள். இருவரின் ஆக்கங்களும் நம் வயிற்றைப்பதம் பார்க்கப்போவது நிச்சயம்!

    “மேற்கே ஒரு ஒட்டகம்” - தலைப்பு சூப்பர் கார்த்திக்!

    Sunshine Graphic Novel Logo வில் அருனாச்சலம் மற்றும் கார்த்திக்கின் முதல் லோகோ இரண்டுமே எனக்குப்பிடித்திருக்கிறது.

    //நண்பர் கனகராஜன் (பொள்ளாச்சி) டிசைன் செய்து அனுப்பியுள்ள அட்டையைப் பாருங்களேன்..!//
    அசத்தலான டிசைன்! அதிலும், பின்பக்கத்தில் ஓவியங்களை collage செய்த விதம் மிக அருமை! வாழ்த்துக்கள் கனகராஜன்! +1

    புரட்சித்தீ – இன்ப அதிர்ச்சி!

    ReplyDelete
  55. சேலம் டெக்ஸ் விஜயராகவனிடமிருந்து...
    ----------------------------------------------------------------------------------

    வெற்றி பெற்ற 'வெள்ளாடு' விஜய்க்கும், 'கரடி' கார்த்திக்கும் என் வாழ்த்துக்கள்! கோட்டை விட்ட ரன்னர் 'ரத்தக்களறி' ரமேஷ், 'பழைய செம்பு' ஆதி தாமிரா, புதுவைப் புயல் செந்தில் மற்றும் பல நண்பர்களுக்கும் என் ' Better luck next time'.
    எனது ஓட்டு நண்பர் அருணாச்சலத்தின் லோகோவிற்கே!
    'புரட்சித் தீ'யை வரவேற்க்கிறேன். இந்த வருடத்தின் ரசிக்கத்தக்க மாற்றம் இதுவே என்பேன். 2014 நமக்காக காத்திருக்கிறது நண்பர்களே! வரயிருக்கும் புத்தாண்டுக்கான பரிசாக முன்கூட்டியே இப்புத்தகங்களை கொடுத்திருக்கும் எடிட்டர் சாருக்கு என் நன்றிகள் பல!

    # சேலம் டெக்ஸ் 'வில்லர்' விஜயராகவன்

    ReplyDelete
  56. @ Uday, RAMG75, Palanivel Arumugam, Siva subramanian, Tex kit, p karthikeyan, Kanagasundaram, postal phoenix Raja, Jeyakanthan, Raj muthu kumar, நாட்டாமை Ramesh kumar, Kabdhul, சத்தியாவுக்கு கால்வின் பிடிக்கும், புதுவை செந்தில், மதியில்லா மந்திரி

    வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பர்களே! (கார்த்திக் சார்பாகவும்) :)

    ReplyDelete
    Replies
    1. // நாட்டாமை Ramesh kumar //

      உங்க ஞாபகசக்தியில் இடி விழ! நற நற...

      Delete
  57. சற்று முன் இந்த வருடத்தின் இறுதியான கனமான பார்சலை மிகுந்த ஆர்வத்துடன் பெற்றுக்கொண்டேன். : )! நான்கு புத்தகங்களை ஒரு மாதத்தில் வெளியிட்ட ஆசிரியருக்கும் அவரது குழுவுக்கும் நன்றிகள்.

    நான்கு புத்தகங்களின் அட்டைப்படங்களுள் ஜானியின் அட்டைப்படம் சிம்ப்லி SUPERB ! ( CONGRATS ரமேஷ்! CRISP & CLEAR, அப்படியே துடைத்து வைத்ததை போல ஒரு PERFECTION மிளிர்கிறது,அதன் மூலத்தை பார்த்தவன் என்ற வகையில், இந்த PERFECTION கொண்டுவருவது, எவ்வளவு பெரிய கடினமான காரியம் என்பதை முழுமையாக உணர முடிகிறது) ) லக்கியின் அட்டைப்படம் அருமை. SHARPNESS குறைவாக உள்ளது. மற்றதை பற்றி NO COMMENTS ! : )

    அடுத்து ஆர்வமாக படித்தது விஜயின் மொழிபெயர்ப்பு. "ஒரு சீன ஷெரிப்பின் கதை" , ஒரு TEXT BOOK மொழிபெயர்ப்பு. நகைசுவைக்கு இது ஒரு DRY ஆனா கதை என்றாலும் , நீதி வழுவாமல்( மூலத்தின் கதையை விலகாமல் )இதை இவ்வளவு சுவையாக மொழிபெயர்க்க முடியும் என்று நான் எதிர் பார்க்கவில்லை. நானும் போட்டியில் (இந்த ஒரு கதைக்கு மட்டும் ) கலந்துகொண்டு வெற்றிகரமாக மூன்றாவது முறை மண்ணை கவ்வியுள்ளேன். : )! வாழ்த்துக்கள் விஜய்! : )!

    அடுத்து தாவியது "மேற்கே ஒரு ஒட்டகம்" கதைக்கு. வாவ்! அந்த "பார்கே," "ஒட்டகத்தை கட்டிக்கோ" CREATIVE WRITING AT ITS BEST ! FULLY ENJOYED BOSS ! முடிக்கும் போது அந்த குறிப்பு "அட அப்படியா" சொல்ல வைக்கிறது. இத, இதத்தான் உங்ககிட்ட ஏதிர்பார்தேன். எனக்கு ஒரு சந்தேகம். உங்க மெடுல்ல ஒப்லாங்கேட்டா வையும் இணையத்தின் விக்கிபீடியா கூகிள் பண்றவற்றையும் EXCLUSIVE வாக ஒரு 1 MBps DEDICATED LINE LINK ஏதாவது செஞ்சு வச்சிருக்கீங்களா ???கலக்கிபுட்டீங்க கார்த்தி! : )!

    மீதி விமர்சனம் புத்தகங்களை படித்து முடித்த பிறகு!

    ReplyDelete
    Replies
    1. *பிறந்த நாள் கொண்டாடும் நண்பர் ஜானி,அருண் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள் .

      Delete
    2. @ வி-சு
      //TEXT BOOK மொழிபெயர்ப்பு //

      உண்மை! அந்தச் சீனப் பயபுள்ளையினன கவிதைத்துவமான, நீளநீளமான வசனங்களுக்கு சற்றே தூய தமிழ் நடைதான் ஒத்துப்போகும் என்று உணர்ந்தேன்.

      // நகைச்சுவைக்கு இது ஒரு DRY ஆன கதை என்றாலும் //
      சீரியஸான கதை என்றுகூட சொல்லலாம் தான். ;)

      வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே!

      Delete
    3. கலந்துகொண்டு வெற்றிகரமாக மூன்றாவது முறை மண்ணை கவ்வியுள்ளேன்.//

      பூனைக்குட்டிய துரத்தியாச்சு. வாங்க வி-சு, இனி நாமதான் ஃபிரெண்ட்ஸ்!!! ஓகேயா?

      Delete
  58. வெற்றி பெற்ற ஈரோடு விஜய், கார்த்திக் சோமலிங்கா அவர்களுக்கும் வாழ்த்துகள் ! மின்வெட்டு காலத்திலும் புத்தகங்கள் சரியான நேரத்தில் கிடைக்க பாடுபட்ட எடிட்டர் மற்றும் team membersக்கும் பாராட்டுக்கள் !

    ReplyDelete
  59. @ ஈரோடு விஜய்!

    உங்க பூனைக்குட்டி கமெண்டை கொரியர் ஆபீஸ்ல இருந்து KBT வின்னிங் கமெண்ட்-க்கு மாத்திடலாமே?

    ReplyDelete
    Replies
    1. @ Siva subramanian

      நினைவூட்டலுக்கு நன்றி! இதோ மாத்திட்டேன்! :)

      @ Karumandapam senthil
      நன்றி நண்பரே! :)

      Delete
    2. @Erode VIJAY
      ஹலோ! நீங்க மட்டும் தனியா பார்ட்டி கொண்டாடுறேங்க? நம்ம நண்பர்கள் எல்லாம் எங்கே?

      Delete
  60. அன்புள்ள நண்பர்களுக்கு 2013 ன் சிறந்த தேர்வு என் பார்வையில் :
    சிறந்த கதை -எமனின் திசை மேற்கு
    சிறந்த புதுவரவு - ஆகாயத்தில் அட்டகாசம்
    சிறந்த மறுபதிப்பு - தங்க கல்லறை
    சிறந்த அட்டைபடம் - ஜானி இதழ் ( டிசம்பர் )
    சிறந்த புதுஹீரோ - வேயின் ஷெல்டன்
    சிறந்த action - துரத்தும் தலைவிதி
    சிறந்த முயற்சி - மனதில் மிருகம் வேண்டும்
    சிறந்த" விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி "- கர்சனின் கடந்த காலம்
    சிறந்த இனிய பதிவர்கள் - ஈரோடு விஜய் ,பரணிதரன் ,திருச்செல்வன் ,ஸ்டீல் ,சாத்தான் மற்றும் ஆதி
    சிறந்த திறமையாளர்கள் - கார்த்திக் ,ரமேஷ் ,அருணாசலம் ,விஸ்கி மற்றும் சூப்பர் விஜய்
    சிறந்த பதிவு - எட்டும் துரத்தில் NBS


    ஆசிரியர் அவர்களுக்கு நன்றி எங்களை காமிக்ஸ் கடலில் 2013 இல் நனைய வைத்ததற்கு,2014 இலும் நனைய வைக்க போவதற்கு ?!

    ReplyDelete
  61. சின்ன திருத்தம் நண்பர்களே ,சிறந்த மின்சார கண்ணன் - ஆசிரியர் விஜயன் அவர்கள்

    ReplyDelete
  62. Sir, Is there anychance you post individual listings of Dec package in Ebay?

    ReplyDelete
  63. 1. காலையிலேயே பதிவைப் படித்துவிட்டேன். பின்னூட்டமிடுவதற்குள் மின்சாரம் போய்விட்டது. இன்று முழுநாள் பவர் கட்!! அதான் இந்த லேட்!!

    2. அப்பாடி, ஒரு வழியாக KBT-3 முடிவுகள் வெளியாகிவிட்டனவா? இனி அக்கடாவென்று இருக்கலாம். அநியாயத்துக்கு இவ்வளவு நாட்கள் சஸ்பென்ஸில் வைத்திருந்தமைக்கு எடிட்டருக்கு ஒரு சின்ன கண்டனம் முதலில்.

    தோல்வி தரும் வழக்கமான ஏமாற்றம் ஒருபுறம் இருந்தாலும், இரண்டிலும் இந்தத் தளம் அறிமுகமான பின்பு கிடைத்த இரண்டு அன்பு நண்பர்களிடமேதான் தோற்றிருக்கிறேன் என்பதில் ஆச்சரியமும், மகிழ்ச்சியும்! புத்தகம் வழக்கம்போல கைக்குக் கிடைத்து முழு கதையையும் படிக்க ஒரு வாரம் ஆகுமெனினும், விஜய், கார்த்திக்கின் ஒரு பக்க சாம்பிள்களே போதுமானதாக இருக்கின்றன, அவர்கள் ஏன் போட்டியில் வென்றார்கள் என்பதை எடுத்துக்கூற. அட்டகாசம் என்றே சொல்லலாம். தவறோ சரியோ, ஒரு ஆர்வத்தில் ஒரு நடுவராக என்னைக் கற்பனை செய்துகொண்டு என் படைப்பை நான் அவர்களுடையதுடன் ஒப்பிட்டுப்பார்த்தேன். ஒரு பக்கத்தின் சராசரியான 10 பேனல்களில் ஒன்றிரண்டில் மட்டுமே அவர்களை விட பெட்டராக எனது படைப்பு இருப்பதாக தோன்றியது. மூன்று நான்கு பேனல்கள் சம மதிப்பைப் பெறுகின்றன. ஆனால் சந்தேகத்துக்கிடமில்லாமல் மீதமிருக்கும் மூன்று நான்கு பேனல்களில் வெற்றிவாகை சூடுகிறார்கள்!

    வட போய்விட்டது!! அவ்வ்வ்!!

    குறிப்பாக, இரண்டு கதைகளின் தலைப்புகளுமே என்னுடயதை விட மிகச்சிறப்பாக அமைந்துள்ளதை நினைத்து சிறிது வெட்கமே வந்துவிட்டது. ஒரு சீன ஷெரீப்பின் கதைக்கு நான் தந்த தலைப்பு, ‘ஒரு சீன கௌ-பாயின் கதை’! எங்கேயோ இடித்துக்கொண்டுதான் இருந்தது. இந்தத் தலைப்பைப் பார்த்ததும்தான் அந்த விடை கிடைத்தது. இரண்டாவது கதைக்கு நான் தந்த தலைப்பு ‘ஒட்டகம் காட்டிய புதையல்’. இதற்கு பல தலைப்புகள் யோசித்தும் எதுவுமே பிடிக்கவும் இல்லை, பொருந்தவும் இல்லை. திருப்தியில்லாமல்தான் இந்தத் தலைப்பை வைத்தேன். எழுதும் நமக்கே திருப்தியில்லாத ஒன்று எப்படி நடுவரைக் கவரும்? ‘மேற்கே ஒரு ஒட்டகம்’ இந்தக்கதையின் ஆகச்சிறந்த தலைப்பாக எனக்குப் படுகிறது.

    மேற்கே ஒரு ஒட்டகத்தின் அரபுத் தொழுகை, ஒரு மிக சுவாரசியமான சவால். முதலில் அதை இஸ்லாமிய நண்பர்களிடம் கேட்டு, மொழிபெயர்த்துவிடலாம் எனத் தோன்றியது. பின்னர் மூலத்திலேயே அது அரபு என்றிருக்கையில் தமிழிலும் அவ்வாறே இருக்கட்டுமே என நினைத்து அப்படியே விட்டுவிட்டேன். ஆனால் அதை மொழிபெயர்ப்பதுதான் சரி என்று இப்போது தோன்றுகிறது. மூலத்திலும் கூட அவர்கள் அதை ஆங்கிலத்திலேயே எழுதியிருக்கலாம் என்றும் தோன்றுகிறது. ஆனால், இன்று சட்டென நமக்குப் பொருத்தமான டைமிங் விஷயம் ஒன்று தோன்றியது. முதலில் கார்த்திக் அதைத்தான் செய்திருக்கிறாரோ என ஆச்சரியப்பட்டுப் போய்விட்டேன். அந்த டயலாக்குகள், ’பிஸ்மில்லாஹிர்’ எனும் நிஜ டயலாக்காக இல்லாமல், ‘ரப்பனாதிதாஃப்’ எனத்துவங்கும் விஸ்வரூப டயலாக்காக இருந்தால், லக்கி அதிர்ச்சியடைந்து என்ன ஏது என திரும்பிப்போய் விசாரிப்பதற்கு செமை பொருத்தமாக இருந்திருக்குமல்லவா!! :-))))))))

    வாழ்த்துகள் விஜய், கார்த்திக்! யு ரியலி டிஸர்வ்ட் இட்!

    3. புரட்சித் தீ: நண்பர்களின் ஆரவாரம் என்னையும் தொற்றுகிறது. இந்த காம்பினேஷன் நிச்சயம் சர்ப்ரைஸ் மகிழ்ச்சிதான். நன்றி. அட்டைப்படமும் அழகு. நீட்&க்ளீன்!

    4. நல்லவேளையாக லோகோ போட்டியில் கலந்துகொள்ளவில்லை நான். (என் வாய்க்கும் மண்ணுகவ்வுவதிலிருந்து கொஞ்சம் ரெஸ்ட் வேண்டாமா?)

    அட்டகாசமாக, சந்தேகத்துக்கிடமின்றி மனதைக் கவர்வதாகவும், அர்த்தபுஷ்டியோடும் இருக்கும் கார்த்திக்கின் சிங்க லோகோவுக்கே என் முதல் ஓட்டு!! அல்லது, கொஞ்சம் லோகோ பாரம்பரியத்தை தொடர விரும்பினால் ரமேஷ்குமாரின் லோகோக்களில் ஒன்று, குறிப்பாக இரண்டாவது வரிசையில் இரண்டாவது எனது சாய்ஸ்! யாராயினும் காலாகாலத்துக்கும் சன்ஷைன் அட்டையில் இடம்பெறப்போகும் விஷயத்தை உருவாக்கியவர் என்ற வகையில் வெற்றிபெறப்போகிறவர் பெருமைகொள்ளலாம்.

    5. நெட்டில் ரெபரன்ஸுக்காக தேடுகையில்தான் தெரிகிறது ப்ரின்ஸின் கதை அட்டைப்படங்கள் ஒரே சதசத வகையைச் சார்ந்தவை என. அப்படிப்பட்ட ப்ரின்ஸுக்கு ஒரு நீட்டான, பளிச் அட்டை எனும் வகையில் கனகராஜின் அட்டை கவர்கிறது. அழகு.

    6. இது ஆசிரியருக்கு: சரி, சரி.. வாயைத்துடைத்துக் கொண்டாயிற்று.. கண்ணையும் துடைத்துக்கொண்டாயிற்று. அடுத்து KBT-4-ஐ கையோடு அறிவிக்கிறதுதானே.? ஹிஹி!!

    ReplyDelete
    Replies
    1. ஆதி சார், என்னயிது சின்னபுள்ளயாட்டம் கண்ணைக் கசக்கிக்கொண்டு, இன்று எல்லோருக்கும் வாழ்த்து சொல்லிக் கொண்டிருக்கும் உங்களுக்கு ஒரு நாள் கண்டிப்பாக மற்றவர்கள் வாழ்த்து சொல்லும் நாள் வராதா என்ன...? சளைக்காமல் கல்லை மட்டும் எரிந்துக் கொண்டேயிருங்கள்..!?

      Delete
  64. thanks for posting "Lion Comics December '13 Package" few of us like me is easy to buy this type of package
    because we all buy our all comics but when individual it cost too much for us
    but few of our friends like ezhil arasu ..... :( like to buy individual book .....what to say......
    its hard for u to make every one satisfied but plz think about ebay buyers
    thanks for the 4 books and thanks for the package

    ReplyDelete
  65. மை டியர் மானிடர்களே !!!

    மதியம் புத்தகங்கள் வந்ததும் முதலாவதாக அடியேன் படித்தது நம்ம இத்தாலிய ஆண்டி-ஹீரோ டயபாலிக்கின் ஆபரேசன் சூறாவளி .சும்மா சொல்லக்கூடாது.கதை ஜெட் வேகத்தில் பறக்கிறது.நம்ம ஊரு "அரஸ்"பாணியிலான ஓவியங்களும்,பிரேம் செட்டிங்கும் அற்புதம்.தெளிவான கதை.சரளமான மொழிபெயர்ப்பு.
    மொத்தத்தில் JASON STATHAM நடித்த அனல்பறக்கும் ஆக்சன் படத்தை பார்த்த திருப்தி!

    அடுத்த ஆண்டும் டயபாலிக் வெற்றிகரமாக வலம்வருவார் என்று உறுதியாக நம்புகிறேன்.கட்டை விரலார் அதற்கான உறுதிமொழியையும் அளித்துள்ளார்.நிச்சயம் நிறைவேற்றுவார்.

    வாழ்க டயபாலிக். வளர்க அவர் புகழ்.

    இப்படிக்கு,

    டேஞ்சர் புனித சாத்தான்,

    தலைவர்,டேஞ்சர் டயபாலிக் ரசிகர் மன்றம்,

    பள்ளிபாளையம்.

    ஆங்....சொல்லமறந்துவிட்டேன்.இன்று பிறந்தநாள் கொண்டாடிய அருமை நண்பர் ஜான் சைமன்,நண்பர் அருண் பிரசாத் ஆகியோருக்கு வேறென்ன சொல்லப்போகிறேன்.மெனி மெனி ஹேப்பி ரிடர்ன் ஆப் த டே !!!

    ReplyDelete
    Replies
    1. டேஞ்சர் டயபாலிக் லயன் 30-வது ஆண்டு மலரில் மீண்டும் தலைக்காட்டப் போவதாக, பட்சிச் சொன்னதாக கேள்வி....?

      Delete
    2. டியர் மொஹைதீன் !!!

      பட்சி தவறாக சொல்லிவிட்டது என்று நினைக்கிறேன்.லயன் 30-ஆவது ஆண்டு மலரில் மிக சமீபத்திய புது வரவான டயபாலிக் இடம்பெறும் வாய்ப்பு மிக குறைவே.
      மேலும் டயபாலிக்கின் படைப்பாளிகள் தங்கள் ஹீரோ தனி இதழில் வரவே விரும்புவார்கள்.கூட்டத்தோடு "அல்லேலூயா" போடவிரும்ப மாட்டார்கள்.(எத்தனை நாளைக்குதான் "கோவிந்தா"என்றே சொல்லுவது....?ஹிஹி!!!)

      Delete
    3. சாத்தான்ஜி,

      டெக்ஸ் கூட சிங்கம் போல தனியாகதான் வரணும்னு rules, ஆனால் ஸ்பெஷல் வெளியீடுகளில் இந்த விதிமுறைகள் பொருந்தா.. டேஞ்சர் டயபோலிக் மட்டும் விலக்கா என்ன..? Break the rules for pleasure - sometimes.

      Delete
    4. இதுவரை வந்த 1980 முதல் வந்த வெளியீடுகளில் கருப்பு வெள்ளை நடுவே வண்ண கதை ஒன்று இடம் பெரும் ! காலம் செய்த கோலமாய் நாளை வண்ண இதழின் நடுவே சிறிது கருப்பு வெள்ளை இடம் பெறுமோ !
      கருப்பு வெள்ளை தொகுப்பொன்றும், வண்ணத்திலே தொகுப்பொன்றும் கனவின் வாயிலாக நினைவிலாடுகின்றது !

      Delete
  66. அன்பின் ஆசிரியருக்கு,

    2013 - நமது காமிக்ஸின் வரலாற்றில் மிக முக்கியமானதொரு காலகட்டம். நேரந்தவறாமல் மாதாமாதம் வெளியான புத்தகங்கள், புதிய ஜானர்கள், மொழிபெயர்ப்பு + டிசைன் போட்டிகள், அடுத்த வருடத்துக்கான ஆயத்தங்கள் என மிகச் சரியானதொரு பயணத்தில் நாங்களும் உங்களுடன் உடன்வர முடிந்ததில் மகிழ்ச்சி. வரும் வருடம் நமது சந்தாக்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் ஆயிரத்தைத் தொட வேண்டும் / தொடும் என நம்புகிறேன். அடுத்த பதிவில் ஆசிரியர் நமது லயன் - முத்து வாசகராக இருந்து கடந்து போன வருடத்தை விமர்சனம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இதெல்லாம் ஏன் சொல்றேன்னா - இங்க மதுரைக்கு இன்னும் புக்கு வந்து சேரல. நாளைக்கு வந்துட்டா கதைகளைப் படிச்சிட்டு அதைப்பத்திப் பேசலாம். நன்றி.

    (அப்புறம், இந்த KBT-3ல ஜெயிச்ச நண்பர்களுக்கு 2 புத்தகம் அனுப்புறீங்க சரி. கலந்துக்கிட்ட மத்த நண்பர்கள் எல்லாரையும் கொஞ்சம் உற்சாகப்படுத்துற மாதிரி அந்த நாடோடி ரெமி மட்டுமாவது அனுப்பி வைக்கலாமே.. ஹி .ஹி.. பக்கத்து இலைக்குப் பாயாசம்.. ஏதோ கொஞ்சம் பார்த்து செய்யுங்க..)

    பிரியமுடன்,
    கார்த்திகைப்பாண்டியன்

    ReplyDelete
  67. 4 புக்கும் அட்டகாசம், NBS இதழை கைகளில் வாங்கியப் போது என்ன ஒரு உற்சாகம், துள்ளல் ஏற்பட்டதோ, அதைப்போல் இந்த 4 இதழ்களும். (NBS-ன் பாதியளவு பக்கங்களைக் கொண்டுவிட்டதே இப்போது வந்துள்ள வண்ணயிதழ்கள்)

    1. புரட்சித் தீ ஒரு surprise package. (2014 அட்டவணையில் இல்லாதபோதே டவுட்?)
    2. கேப்டன் டைகர் தூள்!
    3. ஜானி சான்சே இல்ல, வண்ணத்தில் செம, நிறைய மிஸ் பண்ணிட்டோம்?
    4. டேஞ்சர் டயபோலிக் இந்தப் போடுப்போட்டால் நாளொருமேனி, பொழுதொரு வண்ணமாக fan பேஸ் ஏன் இப்படி சகட்டுமேனிக்கு எகிறாது?

    அப்புறம், போட்டியில் வெற்றிப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்! Fantastic.

    ReplyDelete
  68. ஜானியின் ஓநாய் வேட்டை , இந்த கதை வருகிறது விளம்பரம் பார்த்து மிகவும் ஏங்கி கிடந்தேன் ! இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு ! மாயாஜால கதைதான் என நினைத்து ; அந்த வகையில் அன்று ஏமாற்றம்தான் ! ஆனால் கதை என்னை ஈர்த்தது ;அந்த வகையில் ஏமாறவில்லை !
    இப்போது படித்த போது ,முன்பொரு காலத்திலேயே படித்தேன் என துவங்கலாம் என்று பார்த்தால் , சிறிதும் நினைவில் இல்லை கதை, ஏன் ஒரு கட்டம் கூட ; புதிதாய் படித்தது போல இருந்ததது ; ஆகவே சார் நீங்கள் என்னை பார்த்தும் பொறாமை கொள்ளலாம் , அற்புதமான கதையை மீண்டும் மீண்டும் அளித்த தங்களுக்கு மீண்டும் நன்றிகள் ! அருமை ............
    தொடர்வேன்!

    ReplyDelete
  69. டியர் எடிட்டர் சார்,

    Coincidence என்பது எதேச்சையாக நடக்கும் ஒன்றே. இருவேறு மாவட்டங்களில் வசிக்கும் இருவர் ஒரே கவிதையை எழுதியதை மைய்யமாக வைத்தே நண்பர் மாரிமுத்து அவர்களின் "கண்ணும் கண்ணும்" படம் உருவானது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.. (என்னது? அப்படி ஒரு படம் வந்ததே தெரியாதா? சரி, விடுங்க).

    ஆனால் சம்பந்தப்படாத இருவர் ஒரே நேரத்தில் அச்சு அசலாக ஒரே மாதிரி சிந்திப்பது உண்டு. இது காலம் காலமாக நடக்கும் ஒரு விஷயம். இதில் நான் எப்போதுமே Benefit Of Doubtஐ மட்டுமே அளிப்பேன், சந்தேக கண்ணோட்டத்தை அல்ல.

    இவ்வளவு பீடிகை எதற்கு என்று கேட்கிறீர்களா? விஷயத்திற்கு வருகிறேன்.

    இந்த சன்ஷைன் லோகோ என்ட்ரி'கள் அனைத்துமே பிரம்மாதமாக இருக்கின்றன.

    ஆனால் முதலில் இருக்கும் லோகோ அச்சு அசலாக "இந்த நிறுவன" லோகோ போலவே இருக்கிறது. ஆகவே நமது லோகோவை பற்றிய முடிவெடுக்கும்போது சற்றே யோசித்து செயல்படுங்கள்.

    நண்பர்கள் கவனத்திற்கு: இதுபோல பல Coincidenceகளை நான் பார்த்துள்ளேன். ஆகவே இதனை Copy என்று உடனே முத்திரை குத்தாதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. உடனே அப்படி முத்திரை குத்த முடியாதுதான். அத்தோடு பெரிது படுத்திப் பார்க்கும் போது 'RAPHIC NOVEL' (G தவிர்த்து பிற எழுத்துக்கள்) என்ற எழுத்துக்கள் மட்டும் ஒரு வெள்ளைப் பட்டை போட்டு அதன் மேல் எழதியது போல் உங்கள்/எனது கண்களுக்குத் தெரிந்தால் அது வெறும் மனப் பிரமை என்று தான் கொள்ள வேண்டுமே தவிர குறை சொல்லக் கூடாது.

      Delete
    2. // நண்பர்கள் கவனத்திற்கு: இதுபோல பல Coincidenceகளை நான் பார்த்துள்ளேன். ஆகவே இதனை Copy என்று உடனே முத்திரை குத்தாதீர்கள். //

      @King Viswa sir, பொதுவாக Designer-களுக்கு சில aspects எளிதாகத் தட்டுப்படும். பார்த்தவுடன் எனக்குப்புரிந்தது, அது copy மட்டும் செய்யப்படவில்லை, original-ல் இருக்கும் ஆங்கில எழுத்துக்கள்கூட புதிதாக type செய்யப்படாமல் இயன்றவரை அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது. கவனிக்கவும்: "Sunshine G" வரை அதே font உள்ளது. "eneration" என்ற எழுத்துக்களுக்கு பதிலாக "raphic Novel" என்ற வார்த்தை தனியாக type செய்யப்பட்டது ஒரு white patch போல தெரிகிறது.

      நானும் இதனை இங்கே emphasize செய்ய விரும்பவில்லை. நமது நண்பர்கள் professional designer-களாக இருப்பார்களென சொல்லமுடியாது, அதனால் அவர்களுக்கு copyright-ல் உள்ள சிக்கல்கள் பற்றி தெரியாததனால் இம்முயற்சிகள் நடக்கக்கூடும்.

      ஆனால் benefit of doubt-ஐ இதில் தருவதும் தவறான முன்னுதாரணமாவிடக்கூடும் என்பதால் இதனை சுட்டிக்காட்ட விரும்பினேன். இம்மாதிரி முயற்சிகள் பல நேரங்களில் யார் கண்களுக்கும் தட்டுப்படாமல் போகும் என்பதால் பாதிப்பு பின்னாட்களில் நிறுவனத்திற்கே ஏற்படும். நம்மளுடையது ஒரு light hearted community-ஆக இருந்தாலும் copyright விஷயத்தில் மட்டும் நண்பர்களிடம் 100% genuine ஆக இருக்கும்படி கோரிக்கையை வைப்பது அவசியம்.

      Delete
    3. உண்மை தான். அருணாச்சலம் ஒரு காமிக்ஸ் ரசிகர். அவருக்கு copyright சட்டங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது நியாயம் இல்லை. எனவே இணையத்தில் கிடைத்த ஒரு லோகோவை மாற்றியமைத்தது ஒரு தவறு என்று சொல்ல முடியாது. என்ன, நாம் அதனை உபயோகித்தால் copyright சிக்கல் எழும். எனவே அது இனி உபயோகப் படாது. ஒரு நல்ல முயற்சி என்ற வகையில் அருணாச்சலம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நிச்சயம் உண்டு. நமது காமிக்ஸ் இதழுக்கு லோகோ, தானே டிசைன் செய்ய வேண்டும் என்கின்ற ஆர்வம் நிச்சயம் பாராட்டுக்குரியது. எனது முன்னைய பின்னூட்டம் கொஞ்சம் நகைச்சுவைக்காக எழுதியதே தவிர குத்திக் காட்ட அல்ல.

      Delete
    4. நண்பர்கள் அனைவருக்கும்,

      அடிப்படையில் Creativity க்கு சற்றும் சம்மந்தம் இல்லாத Textile Machinery துறையில் இருப்பவன் நான். இப்பொழுதுதான் Photoshop ல் வேலை செய்ய கற்றுக்கொண்டு வருகிறேன்.

      இன்டர்நெட் ல் work செய்யும் பெரும்பாலானோருக்கு என்னுடைய லோகோ டிசைன் ஒரு குழந்தைகள் குழு வினுடைய லோகோ வை Inspiration ஆக கொண்டு வடிவமைக்கப்பட்டது என தெரிந்து இருக்கும்.

      Copy Right லா பற்றி எல்லாம் அதிகம் சிந்திக்க வில்லை. காரணம் ஓன்று, இவை இரண்டும் வெவ்வேறு category ல் உள்ள துறைகள். இரண்டு, Copy Right Law மிக மிக சிக்கலான சட்ட நுணுக்கம் கொண்டது. என்னுடைய அறிவிற்கு இதல்லாம் ரொம்ப அதிகம்.

      என்னை போன்ற கத்துக்குட்டி designer, பொதுவாக இன்டர்நெட் ல் இருந்து ஏதாவது ஐடியாக்களை பின்பற்றி செய்வது சகஜம். அதற்காக நான் செய்தது சரி என்று சொல்லவில்லை. எனக்கு அந்த டிசைன் பிடித்திருந்தது. அதை inspire செய்து அனுப்பினேன். அவ்வளவுதான்.
      தவறு இருந்தால் நண்பர்கள் மன்னிக்கவும்

      Delete
    5. @அருணாசலம், இது குறித்து பொதுவில் பேசுவது வருத்தமான விஷயம் என்றாலும், துவங்கிவிட்டதால் நானும் பேசுமாறு அமைந்துவிட்டது. மற்றபடி தங்களின் ஆர்வம்தான் பிரதானமே தவிர usability பிரச்சனையே இல்லை! வேறு துறையிலிருக்கும் போதும் இந்தளவுக்கு design செய்ய இயல்வது - highly appreciatable! Design முயற்சிகளில் தொடர்ந்து பங்கேற்றுக்கொள்ளுங்கள் ;)

      ஹா ஹா! உண்மையில் அந்த லோகோ பலவகையிலும் நமக்குப் பொருத்தமாக தோன்றுவது ஆச்சர்யமான விஷயம். உதாரணத்திற்கு அதில் மறைந்துள்ள சிங்க உருவம்! :D

      (கடவுளே என்னுடைய நாட்டாமை Factor நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது... என்னை என்கிட்டர்ந்து காப்பாத்து...)

      Delete
  70. பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி (விஜய் சார்பாகவும்!)! :-)

    @விஸ்கி-சுஸ்கி:
    நன்றி விஸ்கி! உண்மையில் போட்டியில் கலந்து கொண்ட மற்ற நண்பர்கள் அனைவரது மொழிபெயர்ப்யுகளையும் படித்திட ஆவலாக உள்ளது! ஆசிரியர் மற்ற போட்டியாளர்களின் படைப்புகளை இங்கே பிரசுரித்தால் அல்லது அவற்றின் இணைப்புகளை அளித்தால் நன்றாக இருக்கும்!

    //"ஒரு சீன ஷெரிப்பின் கதை" , நகைசுவைக்கு இது ஒரு DRY ஆனா கதை//
    உண்மையில் இந்த இரண்டு லக்கி லூக் கதைகளுமே வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டவை! சில மாதங்களுக்கு முன்னர் நீங்கள் கோவைத் தமிழில் அந்த திகில் கதையை மொழிபெயர்த்ததாகச் சொல்லி இருந்தீர்கள் அல்லவா?! நகைச்சுவையை சேர்ப்பதற்காக, "சீன ஷெரிஃப்பின் கதை"-யில் கோவை, சென்னை, திருநெல்வேலி, பிராமணத் தமிழ் என்று பலவகைத் தமிழ்களை கலந்து கட்டி அடித்திருந்தேன் (எனக்குத் தெரிந்த அளவு)! :-D ஆனால், ஆசிரியர் சென்னைத் தமிழைத் தவிர, வேறு பாணித் தமிழ்களை நமது காமிக்ஸில் நுழைத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்பது மட்டும் நன்றாகத் புரிகிறது! ;-) பிரசுரமான ஒட்டகக் கதையிலும், வட்டார வழக்குகளை 'லைட்டாக' சென்சார் செய்து இருக்கிறார்! :-) எனவே, ஓரிரு இடங்களில் திருநெல்வேலி மற்றும் பிராமணத் தமிழ் இவற்றோடு, வழக்கமான பேச்சுத் தமிழ் சொற்களும் இணைந்து - கலவையாக காணப்பட்டால் குழம்பிட வேண்டாமே, ப்ளீஸ்! :-D அந்த குடிகாரக் கிழவர் பேசும் மதுரைத் தமிழ் மட்டும் தப்பித்து விட்டது! :-) :-)

    //முடிக்கும் போது அந்த குறிப்பு//
    புத்தகத்தில் இருப்பது ஹாஜி அலியின் சமாதிக்கான படத்தின் இணைய முகவரி! இடப்பற்றாக் குறையால் ஆசிரியர் அந்தப் படத்தை பிரசுரிக்கவில்லை என நினைக்கிறேன்! உண்மையில் அந்தக் கட்டுரைக்கான சரியான இணைப்பு இது தான்: Hi Jolly

    @சூப்பர் விஜய்:
    //பெருந்தன்மையானவர் நீங்களென்பதை வெளிப்படையான உங்கள் வார்த்தைகள் அடையாளம் காட்டுகின்றன//
    ஈரோடு விஜயின் வார்த்தைகளை வழிமொழிகிறேன்! All the best for KBT4!!

    @ஆதி தாமிரா:
    //அநியாயத்துக்கு இவ்வளவு நாட்கள் சஸ்பென்ஸில் வைத்திருந்தமைக்கு எடிட்டருக்கு ஒரு சின்ன கண்டனம் முதலில்//
    நீண்ட காத்திருப்புக்கு பின் வெளியாகும் முடிவுகள், ஏமாற்றத்தை அதிகரிக்கும் என்பதால் - உங்கள் கருத்துக்கு ஒரு ப்ளஸ் ஒன்! :-)

    //இந்தத் தளம் அறிமுகமான பின்பு கிடைத்த இரண்டு அன்பு நண்பர்களிடமேதான் தோற்றிருக்கிறேன் என்பதில் ஆச்சரியமும், மகிழ்ச்சியும்!//\
    நட்புக்கு நன்றி நண்பரே! இந்தத் தளம் காமிக்ஸ் பேசும் நண்பர்களிடையே நல்லதொரு நட்புறவை ஏற்படுத்தும் பாலமாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை! ஆனால், தோல்வி என்பது மிகப் பெரிய வார்த்தை! ஏனெனில், மொழிபெயர்ப்பு நன்றாக இருக்கிறது / இல்லை என்பதெல்லாம் ஒவ்வொருவர் பார்வையிலும் மாறுபடக் கூடிய விஷயங்கள்! நான் மேலே கேட்டிருந்த படி, ஆசிரியர் மற்ற நண்பர்களின் படைப்புகளுக்கும் இங்கே இணைப்பு வழங்குவாரானால் - நிச்சயம் அவையும் வாசகர்களால் விரும்பப் படும்!

    //‘மேற்கே ஒரு ஒட்டகம்’ இந்தக்கதையின் ஆகச்சிறந்த தலைப்பாக எனக்குப் படுகிறது//
    நன்றி... ஆசிரியருக்கு! "மேற்கே ஒரு மாமன்னர்" நினைவிருக்கிறதா?! ":)

    //பிஸ்மில்லாஹிர்’ எனும் நிஜ டயலாக்காக இல்லாமல், ‘ரப்பனாதிதாஃப்’ எனத்துவங்கும் விஸ்வரூப டயலாக்காக இருந்தால்//
    ஒருவேளை அது சுவாரசியத்தைக் கூட்ட உதவி இருக்கலாம்! ஆனால், விஸ்வரூபத்தோடு முடிச்சு போடுவது தெரிந்தோ தெரியாமலோ இஸ்லாமிய நண்பர்களை புண்படுத்தி விடக் கூடாது அல்லவா?! அந்த காட்சி / படம் குறித்த ஏகப்பட்ட மாற்றுக் கருத்துக்களை இணையத்தில் பார்த்த நிலையில், அப்படி ஒரு ரிஸ்க்கை நிச்சயம் எடுத்திருக்க மாட்டேன்!

    @கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்:
    //உங்கள் நடையில் அந்த கதை எப்படி இருக்கும்//
    "எலா என்ன சொல்லுதிய?! அப்படி ஒரு ரிஸ்க்கு எடுக்காதியும்!" என்றெல்லாம் படு பயங்கரமாக இருந்திருக்கும்! :-D

    ReplyDelete
    Replies
    1. ஆஹா விரைவில் (உலக தமிழ்/தமிழுலகை )அந்த இணைப்பை ஆசிரியர் இங்கே வழங்குவார் என நினைக்கிறேன் !

      Delete
    2. //உண்மையில் போட்டியில் கலந்து கொண்ட மற்ற நண்பர்கள் அனைவரது மொழிபெயர்ப்யுகளையும் படித்திட ஆவலாக உள்ளது!//

      இதுக்கு என்கிட்ட ரெண்டு யோசனை இருக்கு. முதலாவதா அப்படியே அவங்கவங்க ஸ்கிரிப்ட் ட ஏதாவது தளத்துல upload செய்ஞ்சு இங்கே இணைப்பை கொடுக்கலாம்.

      இதையவே கொஞ்சம் innovative வ பண்ணனுமுன்ன ரெண்டாவது ஐடியா.

      எல்லோராலும், எல்லா கதையிலும், எல்லா aspects சையும் அனைவரின் ரசிப்புத்திறனுக்கு ஏத்தமாதிரி கொடுக்க முடியாது. ஒவ்வொருவரோட மொழிபெயர்ப்பிலும் ரசிக்கும்படியா ஒரு அம்சம் இருக்கும்.(பெயர் வைக்கறது,வட்டார மொழி வழக்கு,நகைசுவை...) இப்படி ஒரே வெற்றியாளர் அப்படின்னு இருக்கறதால சிலரோட சின்ன creative shots சை மிஸ் பண்றோம். அதனால நான் என்ன சொல்ல வர்ரேன்னா ஆசிரியர் எல்லாரோட படைப்புகளையும் கலந்து கட்டி ஒரு கலக்கு கலக்கி பெஸ்ட் of the பெஸ்ட் பேனல்களை செலக்ட் செய்து அதை typeset செய்து, அனைவருக்கும் credits கொடுத்து இங்கே வெளியிட்டால்....அமர்களமாக இருக்காதா ???

      //உண்மையில் இந்த இரண்டு லக்கி லூக் கதைகளுமே வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டவை!//
      நா, ஓவர் வொர்க் load காரணமா, முதல் கதைய மட்டும் மொழிபெயர்ப்பு செஞ்சேன். தி making of சொல்ல வேண்டாமுன்னு நினைச்சேன். but இந்த discussion னுக்கு அது தேவை படுது.

      இது போன்ற filler கதைகளுக்கு மூலத்தை கெட்டியா தாவி கட்டிபிடிக்கனுமான்னு முதல்ல ஒரு debate எனக்குள்ள ஓடுச்சு. நகைசுவையும் dry யா இருந்தது அதுக்கு சப்போர்ட் பண்ண "hell with the original script " டுன்னு முடிவுபண்ணி கதைக்கு ஒரு 360 டிகிரி ட்விஸ்ட் கொடுத்தேன். அதற்கான objective ஒன்றே. படிக்கும் அனைவரும் ரசிக்க வேண்டும். panel to panel நகைசுவை இருக்க வேண்டும். மூலத்துக்கும் இதற்கும் சமந்தம் இல்லைன்னு யாரும் கேஸ் போடப்போறதில்ல! : ). ஆனா இந்த முயற்சி இரண்டாவது முறையும் ஊத்திகிச்சு! : ).( கிரீன் மனோர் ரில் நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபீசர். : )) . இந்த approach சில் இருந்து மற்றதா ஐடியா இல்ல. நம்மோட உழைப்புல கொஞ்சம் ஆவது கிரியேடிவிட்டி இல்லன்னா போட்டியில பங்கேற்கறதுல என்ன கிக் இருக்க முடியும்???

      இத பத்தி ஆசிரியர் என்ன நினைகறாருன்னு தெரிஞ்சுக்க ஆவல்.

      Delete
  71. ஏ மக்கா இன்னும் புத்தகம் கைக்கு வரலேல ................................சும்மா இருக்காம எல்லாரும் என்ன ச்சூடு ஏத்தி பாக்காதீக

    ReplyDelete
  72. Editor: //சின்னதாய் ஒன்றிரண்டு எழுத்துப் பிழைகள் இக்கதையின் proof reading -ல் தலை காட்டுவது ஒரு சிறு நெருடல் !! Sorry in advance !//

    சின்னதாய் இல்ல சார், நிறைய.. eg: சீனர்கள் கொண்டாட்டம் வரும் கட்டத்தில் banneriல் வரவேண்டிய வார்த்தைகள் பலூனில் வந்துள்ளன . பல இடங்களில் பலூனுக்கு வெளியே வரும் கட்சி விவரிப்பு டயலாக்கள் பிராக்கெட்க்குள் வந்துள்ளன. proof readingingஇல் தவறு இல்லை proof reading பண்ணவே இல்லாதது போல் உள்ளது .

    ReplyDelete
  73. சார் எனக்கு இன்னும் புத்தகம் வரலேல? என்ன கூரியர் அனுப்பிங்க? rajaganesh அரியலூர்

    ReplyDelete
  74. மணி ஒண்ணாச்சு இன்னும் புக் வரலை ....................................
    யாராவது பார்த்து சொல்லுங்க ............


    எனது கண்ணுல தண்ணி வருதா .............
    யாராவது பார்த்து சொல்லுங்க ............

    ஐயகோ நான் என் செய்வேன் .......

    ReplyDelete
  75. மணி ஒண்ணு இருபத்தியிரண்டு ஆச்சு ...................ஒரு மண்டை ஓடு........ஒரு மின்னல்.................ஒரு கசமுசா ........

    (இப்பிடி தானே எல்லா புக்குளையும் வருது)

    ReplyDelete
  76. நண்பர்களே, ரவுடிகளே, நாட்டாமைகளே!

    இன்றைய 'புதிய தலைமுறை' இதழில் நமது விளம்பரம் வண்ணத்தில் வெளியிடப்பட்டு அசத்தலாக வந்திருக்கிறதாமே? யாராவது கண்டுகளித்தீர்களா? (நன்றி: கிங் விஸ்வா)

    ReplyDelete
  77. @Ramesh Kumar:
    இந்தத் Topic-கிற்கு நேரடித் தொடர்பில்லாத ஒரு பொதுவான விஷயம் :-)

    //கடவுளே என்னுடைய நாட்டாமை Factor நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது... என்னை என்கிட்டர்ந்து காப்பாத்து...//
    ஹா ஹா... இது பொதுவாக, அதிக பின்னூட்டங்கள் இடும் அனைவரும் கடந்தே தீர வேண்டிய "கருத்து கந்தசாமி" நிலை தான் ரமேஷ்! :-D நானும் ஒரு கட்டத்தில், ஓவராக அலம்பு பண்ணி இருக்கிறேன்! ;-) இப்போதெல்லாம், "நானாக" பிறரின் விஷயத்தில் / கருத்துக்களில் மூக்கை நுழைப்பதில்லையாக்கும்! :) ஓரளவுக்கு பழகிய நண்பர்களிடம் மட்டும் தயக்கமின்றி பேசுவது / விவாதிப்பது உண்டு! இந்த கமெண்ட் கூட, நீங்கள் இதை தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள், புன்சிரிப்புடன் கடந்து செல்வீர்கள் என்ற நம்பிக்கையில் தான்! :-)

    ReplyDelete
    Replies
    1. +1 ஹா ஹா! உண்மைதான், இன்றுமுதல் தீர்ப்பு எழுதுவதில்லை என்ற முடிவுக்கும் வந்துவிட்டேன். என் உள்ளேயிருந்து ஆட்டிப்படைக்கும் நாட்டாமையை இன்றோடு dismiss செய்கிறேன்!

      // நீங்கள் இதை தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள், புன்சிரிப்புடன் கடந்து செல்வீர்கள் என்ற நம்பிக்கையில் தான்! :-) //

      அதே! :)

      Delete
    2. @Ramesh Kumar:
      //உண்மைதான், இன்றுமுதல் தீர்ப்பு எழுதுவதில்லை என்ற முடிவுக்கும் வந்துவிட்டேன்//
      :) :) :)

      @ஈரோடு விஜய்:
      //என் உள்ளேயிருந்து ஆட்டிப்படைக்கும் நாட்டாமையை இன்றோடு dismiss செய்கிறேன்!//
      உடனே ஓடி வாங்க விஜய், உங்களுக்கு ஒரு வேலை வந்தாச்சு!!! :-) நம்ம ரமேஷுக்கு, புதுசா, கலக்கலா ஏதாவது பேர் வைங்க பார்ப்போம்! :-D

      Delete
    3. சுத்துபட்டி 18 கிராமத்துக்கும் தவறாம (தவறான?) தீர்ப்புச் சொல்லிட்டிருக்கும் ஒரே ஒரு நாட்டாமையையும் 'அவ்வளவுதான், இனி பிரச்சனைல மாட்டி பேஜார் ஆகப் போறீங்க' என்ற ரேஞ்சுக்கு பயமுறுத்தி, அவரை இனி ஆலமரத்தடிக்கே வரவிடாமல் செய்வதெல்லாம் அராஜகம்! அட்டூழியம்!

      நாட்டாமை சில சந்தர்ப்பங்களில் காட்டாமையா கூட இருந்திடலாம்; ஆனா வீட்டாமையா மட்டும் முடங்கிப் போயிடக்கூடாது.

      நாட்டாமே பாதம் பட்டா... இங்க வெள்ளாமை வெளையுமுங்க...
      நாட்டாமை கையசச்சா... இங்க நாலு மழை பொழியுமுங்க... ோ
      ஓ.ஓ.ஓ.ஓ...

      Delete
    4. ஹா ஹா, சூப்பர் விஜய்!!! நோ நோ, பெங்களூர் சூப்பர் விஜயைச் சொல்லவில்லை - உங்க கமெண்டை சொன்னேன்! :) நீங்க சொல்றதும் 100% வாஸ்தவம் தான்!!! :)

      ஆனால்.......
      ...
      ...
      ...

      //நாட்டாமை கையசச்சா... இங்க நாலு மழை பொழியுமுங்க...//
      உங்கள் பாட்டில் குற்றம் இருக்கிறது! மும்மாரி கேள்விப் பட்டிருக்கேன்! அது என்ன நாலு மழை?! :D ஒருவேளை, மாலை நாலு மணி அளவில் பெய்யும் மழையோ?! ;)

      சரியான பாடல்:
      நாட்டாமை பாதம் பட்டா!, எங்க வெள்ளாண்மை விளையுமடி!
      நாட்டாமை கை அசைத்தா!, அந்த சூரியனும் மறையுமடி!
      ஆ... ஆ... அ ஆ ... ஆ... ஆ... ஆ...

      (நாட்டாமை திரைப்படப் பாடல் வரிகள் உதவி - கட்டற்ற கலைக்களஞ்சியம் தமிழ் விக்கிபீடியா!)

      இவற்றில் எவை சரியான பாடல் வரிகள்?! இனி நம்ம "நா.ரமேஷ் குமார்" வந்து தீர்ப்பு சொல்ல வேண்டியது தான் பாக்கி! :)

      Delete
    5. @ கார்த்திக்

      வருவார். அவர் வருவார்! அநியாயங்கள் எங்கே நடந்தாலும் உடனே வந்து கண்கள் சிவக்க, கழுத்து நரம்பு புடைக்கத் தீர்ப்புச் சொல்லாம எந்த நாட்டாமையாலும் இருக்க முடியாது. தீர்ப்புச் சொல்றதும், அந்தத் தீர்ப்பில் பிழை ஏற்பட்டால் இரட்டைக்குழல் துப்பாக்கியால சுட்டுக்கிட்டு சாவறதும் நாட்டாமைகளின் இரத்தத்தில் ஊறிய விசயங்கள். ;)

      ஆனா, பெரும்பாலான நாட்டாமைகள் கைநாட்டு ஆமைகள் என்பதால், இந்த பின்னூட்டங்களை (வழக்கம்போல) தன் அல்லக்கைகளின் உதவியால் படித்தறிந்து கொண்டு, வெற்றிலையைக் குதப்பிபடியே சிவப்புத் தெறிக்க இங்கே தீர்ப்புச் சொல்ல விரைந்தோடி வருவார்!

      நாட்டாமை வருவார்... :)

      Delete
    6. என்றா பசுபதி அந்த அட்ட கத்திய எடுத்து அந்த translator பூனையை ............

      Delete
  78. டயாபாளிக் எனும் பேர் எப்படி நம்மிடையே போதையை ஏற்படுத்துகிறதோ, அது போல க்ளர்வில் என்று கேட்டாலே பரவசம் ! கதை ஒரே சூறாவளிதான் பெயருக்கு ஏற்றார் போல ,ஆனால் கலக்கியதோ இரண்டு சூறாவளிகள் ! டயபாளிக் அற்புதமான திட்டமிடல்கள் ! அனைத்துமே மனிதரின் சிந்தனையின் போக்கிலே சுவாரஸ்யமாக செல்வதுதான் ....., ஸ்பைடரை தொடர்ந்து நினைவுறுத்துகிறார் மனிதர் ! அவரது தொடரலும் அது போலவே ! கதையின் முடிவு அக்மார்க் ஸ்பைடரின் கதை போலவே ......கதையை சொல்லி விட கூடாதே என்றே சொல்லவில்லை ! படித்து கொண்டாடுங்கள் நண்பர்களே !
    ஆசிரியர் ஏன் இவ்வளவு காலமாக ஒரு சிறந்த நாயகரை வெளிபடுத்தாமல் இருந்தார் என்று நினைக்கிறேன் ! இவரின் கதைகள் முன்பே தொடர்ந்திருந்தால் காமிக்ஸ் பிரியர்கள் பலர் காமிக்ஸ் படிப்பதை நிறுத்தி இருக்க மாட்டார்கள் !
    இப்போதும் குறைவில்லை , அற்புதமான படைப்புகள் அடுத்த ஆண்டிற்கு காத்திருக்கும் போதிலும் இவருக்கென +6 என ஒன்று வந்தால் புதிய தலைமுறைதனை மலிவு விலையாலும் ,அற்பயுத கதையாலும் கட்டி போட முடியும் ! டயபாளிக் கதை மொழி பெயர்ப்பெனில் ஒரு துள்ளல் வந்து விடுகிறது , நமது அருமை மொழி பெயர்ப்பாளருக்கு !
    அதே போல லக்கியின் அந்த மூன்றாவது சிறு கதையும் அருமை ! ஃபில்லராய் வந்த மூன்று கதைகளுமே அருமை !

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் ஏன் இவ்வளவு காலமாக ஒரு சிறந்த நாயகரை வெளிபடுத்தாமல் இருந்தார் என்று நினைக்கிறேன் ! இவரின் கதைகள் முன்பே தொடர்ந்திருந்தால் காமிக்ஸ் பிரியர்கள் பலர் காமிக்ஸ் படிப்பதை நிறுத்தி இருக்க மாட்டார்கள் !
      இப்போதும் குறைவில்லை , அற்புதமான படைப்புகள் அடுத்த ஆண்டிற்கு காத்திருக்கும் போதிலும் இவருக்கென +6 என ஒன்று வந்தால் புதிய தலைமுறைதனை மலிவு விலையாலும் ,அற்புத கதையாலும் கட்டி போட முடியும் !

      +1

      Delete
  79. வணக்கம் நண்பர்களே சிறிது நாட்களாய் ப்ளாக் பக்கம் வர முடியவில்லை இன்றுதான் வரமுடிந்தது ப்ளாக் ஒரே கொண்டாட்டமாய் இருக்கிறது.

    பிறந்த நாள் கொண்டாடும் நண்பர் ஜானி,அருண் அவர்களுக்கு தாமதமான இனிய நல் வாழ்த்துகள் .

    வெற்றி பெற்ற நண்பர்கள் ஈரோடு விஜய் மற்றும் கார்த்திக் சோமலிங்காவுக்கு வாழ்த்துக்கள் சும்மா பிச்சு உதறி இருப்பாங்க போலிருக்கிறதே இல்லாவிடில் ஆசிரியர் தேர்வு செய்திருப்பாரா? விஜய்க்கு கதை வசனம்கூட எழுதத்தெரியுமா! இந்தப்பூனையும் பால் குடிக்குமா என்கிறமாதிரியான முகம் விஜைக்குங்க

    அப்படியே சினிமாவுக்கும் எழுதுங்க விஜய் அப்படியே ஹீரோவாகவும் வாய்ப்பு இருக்கிறது

    சமீபத்தில் கோவை சென்றிருந்தேன் நண்பர் ஸ்டீல் க்ளாவை மதிய நேரம் சந்தித்தேன் நட்புக்கு ஸ்ட்ராங்கான மனிதர் நல்ல நண்பர். சாப்பிட சொல்லி வற்புறுத்தினார். சாப்பிட்டுவிட்டுத்தான் வந்தேன் நண்பரே என்றேன் இல்லையில்லை ஏதாவது சாப்பிட்டே ஆகவேண்டும் என்று அருகில் இருந்த கடையில் குளிர்பானமும்,காளிப்ளவர் ப்ரையும் வாங்கி தந்து அசத்திவிட்டார்

    அடுத்த முறை நான் வரும்போது உங்களது காமிக்ஸ் கலெக்சனையும் காட்டுங்கள் நண்பரே

    ReplyDelete
  80. எனக்கு இன்னும் புத்தகம் கிடைக்கவில்லை.அனைவருக்கும் புத்தகம் கிடைக்கும் வரை யாரும் புத்தக விமர்சனம் செய்து என்னை போன்றவர்களை வெறுப்பேற்ற வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கண்ணீரிலே முகம் தெரியதே......

      இப்படியா கத்தி அழறது

      Delete
  81. மனசு வலிக்குது

    ReplyDelete