நண்பர்களே,
வணக்கம். கார்த்திகை மாதங்கள் எப்போதுமே ரம்யமானவை ; வாசல்தோறும் அகல்விளக்குகள் ; அந்தப் பொரிகடலை உருண்டைகள் ; மப்பும் மந்தாரமுமான வானிலை என்று ரசிக்க நிறைய விஷயங்களைத் தன்னில் கொண்டது ! இம்முறையும் பொரிகடலை உருண்டைகளும், அகல்விளக்குகளும் இருந்தன தான் ; ஆனால் அந்த அகல்விளக்குகள் வாசலுக்கு மட்டுமல்ல - வீட்டுக்கும் சேர்த்தே ஒளி தர ஓவர்டைம் உத்தியோகம் பார்க்க வேண்டிப் போய் விட்டது தான் பரிதாபமே ! சுருக்கமாய்ச் சொன்னால் - நித்தமும் 10 மணி நேர மின்வெட்டு ; அதிலும் பணி செய்திடக் கூடிய பகல் வேளைகளில் 6 மணி நேரங்கள் சுத்தமாய் மின்சாரம் கிடையாது ! மாலைகளில் ஆறு முதல் நள்ளிரவு வரை ஒரு மணிக்கொரு தடவை கண்ணாமூச்சி ஆட்டம் - மின்சாரத்தோடு ! எங்கே அடித்தாலும் தாக்குப் பிடிக்கும் ஆற்றல் சிவகாசிக்கு உண்டு என்ற ஒரு வித இறுமாப்பு எங்கள் நகரத்துக்கு உண்டென்பதில் ரகசியம் கிடையாது தான் ; ஆனால் பிராண வாயுவை நெரிக்கும் போது எங்களுக்கும் மரண பயம் நேருமென்பதை கோடையின் 16 மணி நேர மின்வெட்டு உச்சங்கள் அப்பட்டமாக்கின என்றால் - தற்சமய இருள் போர்வைகள் அதனை மீண்டுமொருமுறை பூதாகரமாக்கி வருகின்றன ! நம்மிடம் ஜெனரேடர் வசதி உண்டென்ற போதிலும், இதர பணிகள் சகலமும் வெளியிலுள்ள வெவ்வேறு துறைகளில் இருந்து பூர்த்தி ஆகிட வேண்டும் எனும் போது அங்கெல்லாம் சொல்லி மாளா சுணக்கங்கள் ! தட்டுத் தடுமாறி டிசம்பரை கரை சேர்க்கும் முன்பாக எங்கள் டீமின் அனைவருக்கும் திடுமென்று தலை நரைத்திடும் போலொரு பிரமை ! (அடடே --கேசத்தின் வெண்மைக்கு இப்படியும் ஒரு விளக்கம் தரலாமோ ?)
ரிப்போர்டர் ஜானி ஸ்பெஷல் + டைகரின் "வேங்கையின் சீற்றம்" + சிக் பில் ஸ்பெஷல் அச்சுப் பணிகள் முடிந்து வாரம் ஒன்றுக்கு மேலாகி விட்டது ; பைண்டிங்கில் பணி முடிக்க தாமதம் ஆகி வரும் போதிலும் இவ்வார இறுதியினில் மூன்றுமே நம்மிடம் வந்து சேர்ந்திருக்க வேண்டும் ! இதழ் # 4 - கூர்மண்டையர் டயபாலிக் தோன்றும் "OPERATION சூறாவளி " வரும் செவ்வாய்க்குள் எப்படியேனும் தயார் ஆகி விடும். So டிசம்பர் 4 தேதிக்கு அனைத்து இதழ்களையும் despatch செய்திடுவோம். அருள் கூர்ந்து அது வரை பொறுமை காத்திடக் கோருகிறேன் ப்ளீஸ் ?! கோடையின் உச்ச பட்ச மின்வெட்டு வேளைகளில் கூட, பகலில் 6 மணி நேர மின்சாரம் இருந்து வந்தது ; ஆனால் இம்முறையோ அந்தக் கருணைக்கும் வழி இல்லை என்பதால் - காலை முதல் மாலை வரை ஆபீசில் ஈயோட்டும் வேலை மட்டுமே சாத்தியமாகிறது ! Anyways, 2013-ன் இறுதி black & white இதழின் preview இதோ :
முன்னட்டை நம் ஓவியரின் கைவண்ணம் - டிஜிட்டல் சேர்க்கைகள் ஏதுமின்றி ! பின்னட்டையோ - சில மாதங்கள் முன்பாக நமது வாசக நண்பர் சண்முகசுந்தரம் தயார் செய்து அனுப்பி இருந்ததொரு டிசைன் ! அந்த metalic வண்ணம் அச்சிடச் சிரமம் தரக் கூடியதென்பதால் இதனை பயன்படுத்திடாது இருந்தோம் ; but this is too good a design to hibernate என்று தோன்றியதால் பின்னட்டையிலாவது போடுவோமே என நினைத்தேன் ! நண்பருக்கு நமது நன்றிகள் ! வழக்கம் போல் டயபாலிக் பரபரப்பானதொரு action மேளாவோடு உங்களைச் சந்திக்கக் காத்துள்ளார் ! 'நொடிக்கொரு முகமூடி' - என்ற அந்த டயபாலிக் முத்திரை இக்கதையில் அ-ழு-த்-த-மா-க பதிந்திருப்பதைப் பார்த்திடப் போகிறீர்கள் ! சித்திரத் தரம் as always awesome ! பாருங்களேன் ஓவியரின் மாயாஜாலங்களை !!
Creativity பற்றிய தலைப்பில் நாமிருக்கும் போதே நம்மிடையே உறையும் திறமைகளுக்கு லேட்டஸ்ட் மாதிரி ஒன்றினை உங்களுக்குக் காட்டியே தீர வேண்டும் நான் ! "புதிய தலைமுறை" இதழினில் முழுப்பக்க வண்ண விளம்பரம் செய்திட திட்டம் இருப்பதாக நான் கடந்த பதிவில் எழுதி இருந்தேன் அல்லவா - இதோ அதற்கென நண்பர் ரமேஷ் குமார் தயார் செய்து அனுப்பி இருக்கும் அட்டகாசம் !
சென்னை புத்தக விழாவினில் நமக்கொரு ஸ்டால் கிட்டிடும் பட்சத்தில் அங்கு display செய்திடக் கூடிய banner களில் இந்த டிசைனும் ஒன்றாக இருந்திடும் ! Wonderful job sir ! Thanks a ton ! அதே மூச்சோடு - நண்பர்களின் creativity -க்கு இன்னமும் ஒரு சவாலை முன்வைக்கப் போகிறேன் ! "சன்ஷைன் கிராபிக் நாவல்" இதழ்களுக்கென ஒரு பிரத்யேக logo டிசைன் பண்ணி அனுப்பிடுங்களேன் ? அழகாய் அமைந்திடும் logo ஜனவரி முதலாய் துவங்கிடவிருக்கும் இந்த கிராபிக் நாவல் இதழ்களின் அட்டைப்படங்களை அலங்கரிக்க உதவிடுமே ?
கிராபிக் நாவல்கள் பற்றிய mention எழும் போது அதனில் தலை காட்டிடக் காத்துள்ள இன்னுமொரு ஆசாமியை அறிமுகம் செய்திடும் கடமை எனக்குள்ளது ! இவர் நமக்கு ரொம்ப காலமாகவே தெரிந்தவர் தான் ...ஆனால் இவருக்கென ஒரு தனி இதழ் ஒதுக்கிடப்படும் என்று நிச்சயமாய் நாம் எதிர்பார்த்திருக்க மாட்டோம் - ஏனெனில் ஆசாமியின் தொழில் அத்தகையது ! Yes , "இரத்தப் படலம்" கதைத் தொடரில் ஜனாதிபதி ஷெரிடனை சுட்டு வீழ்த்தும் ஒரிஜினல் கொலையாளியான ஸ்டீவ் ரோலாண்ட்டின் கதை "காலனின் கைக்கூலி " என்ற பெயருடன் ஒரு single shot album ஆக முழு வண்ணத்தில் வரவிருக்கிறது ! சதித் திட்டத்தில் இவனது பங்கு பற்றிய சித்தரிப்பு மிக சுவாரஸ்யமாய்ச் சொல்லப்பட்டுள்ளதை இந்த ஆல்பம் நமக்குக் காட்டவுள்ளது. ! Don't miss it !
2013-ன் சகல இதழ்களும் ஒரு வழியாய் நிறைவு காண்பதால் - எங்களின் focus ஏற்கனவே 2014-க்குத் தாவியாகி விட்டது ! ஜனவரியில் வெளிவரக் காத்துள்ள இதழ்களின் பட்டியல் இதோ :
- லயன் காமிக்ஸ் : "யுத்தம் உண்டு...எதிரி இல்லை" (கமான்சே) - ரூ.60
- முத்து காமிக்ஸ்: "சாக மறந்த சுறா" (ப்ரூனோ பிரேசில் ) - ரூ.60
- சன்ஷைன் லைப்ரரி : "பயங்கரப் புயல் "(கேப்டன் பிரின்ஸ்) - ரூ.60
- சன்ஷைன் கிராபிக் நாவல் : "பிரபஞ்சத்தின் புதல்வன் " - ரூ.60
இவற்றிற்கான பணிகள் ஏற்கனவே பாதிக்கும் மேல் நிறைவாகி விட்டன ! தொடரும் நாட்களும் இதே இருளில் தான் தொடர்ந்திடக் காத்திருக்கும் பட்சத்தில் - மாதாமாதம் 'டிரௌசரைக் காணோம் நண்பர்களே !' என கானம் பாட நிச்சயம் எனக்கு உத்தேசம் இல்லை ! உங்களின் சந்தாக்களை ஆவலாய் நாங்கள் எதிர்பார்க்கும் வேளை இதுவே என்பதால் - இம்மாத பட்ஜெட்டில் நம்மையும் கணக்கில் இணைத்துக் கொள்ளுங்களேன் - ப்ளீஸ் ?
Before I sign off - இதோ இன்னுமொரு போட்டி - KBGD 2 (Kaun Banega Graphic Designer 2) ! ஜனவரியின் "பயங்கரப் புயல்" மறுபதிப்புக்கு அட்டைப்படம் டிசைன் செய்திட ஆர்வம் கொண்ட நண்பர்கள் விண்ணப்பிக்கலாம் ! டிசம்பர் 10 தேதிக்குள்ளாக உங்களின் ஆக்கங்கள் நம்மைச் சேர்ந்திட வேண்டும் ! இம்முறை வெற்றி பெறும் போட்டியாளரின் போட்டோ அந்த இதழினில் பிரசுரமாகும் ; ரூ.1000 கிப்ட் செக் எனும் கொசுறோடு ! Give it a shot guys ? KBT -3 (மொழிபெயர்ப்புப் போட்டி )-ன் முடிவுகளை டிசம்பர் இதழ்களை despatch செய்திடும் காலையில் இங்கு அறிவிக்கிறேன் ; நிச்சயம் அதனில் சுவாரஸ்யங்கள் காத்துள்ளன என்பது மட்டும் உறுதி ! Bye for now....see you soon folks !
1st
ReplyDeletesir, vanakkam
ReplyDeleteமுதலாவது
ReplyDeleteyaarathu?
Deleteappada.. oru valiya..
ReplyDeletenaan first
Deleteநிறைய நாள் காக்க வச்சுட்டீங்க.... சார்...
Delete@ Steel Claw:
Delete//naan first// வட போச்சே...
vidunga aduththamurai paaththukkalaam
Deleteமுதல் 10க்குள் நானும் ;-)
ReplyDelete"பிரபஞ்சத்தின் புதல்வன் " ஆங்கில மூலம் பெயர் என்ன ?
ReplyDeleteரூ 1000 மா ? போட்டோ ஷாப் கத்துக்காதது எவ்வளவு தப்பு. சொக்கா ஆயிரமும் எனக்கே கிடைக்க கூடாதா?
பிரபஞ்சத்தின் புதல்வன் " ஆங்கில மூலம் Thorgal Les Archers ?
Delete// சொக்கா ஆயிரமும் எனக்கே கிடைக்கக் கூடாதா?//
Deleteஹா ஹா! :D
ஆயிரம் +1 ;)
Raj Muthu Kumar S : //பிரபஞ்சத்தின் புதல்வன் " ஆங்கில மூலம் Thorgal Les Archers ?//
DeleteNopes ! ...ஜனவரி அதிக தொலைவில் இல்லையே ! சற்றே காத்திருப்போமே ப்ளீஸ் ?
// ..ஜனவரி அதிக தொலைவில் இல்லையே ! சற்றே காத்திருப்போமே ப்ளீஸ் ?// ஹாய் ....நீங்க சொல்லலைன்னா நாங்க கண்டுபிடிக்கமட்டோமா?? புலனாய்வு புலிகள் சார் நாங்க ! : )
DeleteLa Magicienne Trahie (1980) / Child of the Stars (ISBN 9781905460236)
கரெக்டா ??? : )
@ விஸ்கி-சுஸ்கி
Delete//புலனாய்வு புலிகள் சார் நாங்க //
பத்து நாட்களா எடிட்டரைக் காணாமல் இங்கே பலரும் பரிதவிச்சுட்டு இருந்தபோது எங்கே போயிருந்ததாம் அந்தப் 'புலனாய்வுப் புலி'? கிர்ர்ர்... :)
அது குறித்தும் புலனாய்வு செய்யத்தான் ...
DeleteThis comment has been removed by the author.
Delete//நண்பர் ரமேஷ் குமார் தயார் செய்து அனுப்பி இருக்கும் அட்டகாசம்//
ReplyDelete@ ரமேஷ் குமார்: உண்மையிலேயே அட்டகாசமான மனிதர் தானய்யா நீர்.. what a talent!
வாழ்த்துக்கள்.
//"காலனின் கைக்கூலி "//
வாவ்... சூப்பர் சார்.. அதிரடி தான் போங்கள். 2014 க்காக இப்பொழுதே ஏங்க வைத்துவிட்டீர்கள்.
//ரூ.1000 கிப்ட் செக் எனும் கொசுறோடு//
பார்ரா.... கரும்பு தின்ன கூலி வேறா..
அ , ஆ , இ , ஈ .......ஆஹா மீண்டும் தமிழ் எழுத வந்து விட்டது ....சுஸ்கிக்கு நன்றி
ReplyDeleteWaiting for diabolic
ReplyDeleteஒரு வழியா டையபோலிக் வரபோர்றார்!!!
DeleteWelcome back
ReplyDeletein first 15
ReplyDeleteசார் கார்த்திகை உங்களுக்கு அழகாய் உங்கள் நிலையை வி(ள)க்க வைத்ததற்கு நன்றிகள் ! என்னதான் உருண்டாலும் புரண்டாலும் ஒட்டுவதுதான் ஓட்டும் என்பார்கள் ! அதனை இப்போது காலம் செல்ல செல்ல மேலும் மேலும் ஓட்டும் என மாற்றலாம் போலுள்ளதே !
ReplyDeleteமாற்றங்கள் இந்த வருடம் தாமதமின்றி வந்த நமது காமிக்ஸ்கள் ,அற்புதமான சித்திர கதைகள் என ஏறத்தாள அனைத்துமே இந்த வருடம் எனது வாழ்வில் சந்தோசத்தை பெருமளவு பங்கிட உதவின என்றால் மிகை அல்ல !
இதே கண்ணா மூஞ்சி அடுத்த வருடம் இன்னும் பிரம்மிப்பாய் தொடர உள்ளது என்பது அந்த ராலண்டு மூலம் உறுதி ஆகிறது! அப்போது பதின்மூன்றின் கதை வரிசையில் என்னை மிக ஈர்த்த பெயர் இந்த ராலாண்டு எனும் தேட பட்ட குற்றவாளியே ! இவனுக்கென தனி கதை என நான் ஏங்கி காத்திருந்தது வீண் போகவில்லை ! தொடர்ந்து ஒட்டட்டும் !
operation சூறாவளி அட்டை படம் கலக்கல் .....அந்த காலம் கண் முன்னே ! கபாலர் கழகம் அட்டை நினைவில் ஆடுகிறது ! உங்களுக்குமா ..... பின்னட்டை இது நன்றாக இருக்குமே என நான் ஏங்காத நாளில்லை ! அருமை அதனை அளித்த நண்பருக்கும் தங்களுக்கும் நன்றிகள் என்றென்றும் !
ரமேஷ் குமார் பின்னுறீங்க ! அந்த புத்தக்கத்தை விரித்து வைத்தது அழகு!
அடுத்த வருடம் ஆண்டு மலர் குறித்து ஏங்கி நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டுமோ என அஞ்சினால் அடுத்த ஜனவரி மேலும் எகிற வைக்கிறது ஏக்கங்களை ! ஆக தொடரும் மாதங்கள் சுவாரஸ்யம் சேர்த்திடும் எனும் நம்பிக்கை அதிகரிக்கிறது
,,,,,சென்ற வாரம் நானும் சந்தா செலுத்தி விட்டேன் ;;;;;;;;தாமதத்திற்கு மன்னிக்கவும் .....
,,,,,சென்ற வாரம் நானும் சந்தா செலுத்தி விட்டேன் ;;;;;;;;தாமதத்திற்கு மன்னிக்கவும் .....
,,,,,சென்ற வாரம் நானும் சந்தா செலுத்தி விட்டேன் ;;;;;;;;தாமதத்திற்கு மன்னிக்கவும் .....
// ரமேஸ் குமார் பின்னுறீங்க! அந்தப் புத்தகத்தை விரித்து வைத்தது அழகு//
Deleteஅதே! அதே!
காலனின் கைக்கூளிக்காக அனைவரும் காத்திருக்கிறோம்...சிலர் மட்டுமே அந்த புத்தகத்திற்காக காத்திருக்கிறோம்; அதில் நானுமொன்று
ReplyDeleteநானும் தான் !
Delete//காலனின் கைக்கூளிக்காக அனைவரும் காத்திருக்கிறோம்...சிலர் மட்டுமே அந்த புத்தகத்திற்காக காத்திருக்கிறோம்; அதில் நானுமொன்று//
Delete:-)
இந்தக் கைக்கூலி, அல்லக்கைகளுக்காக எல்லாம் நான் காத்திருக்க முடியாது. தில் இருந்தால் காலனே நேரில் வரட்டும்; யோசிப்போம்! ;)
Delete!
Delete//இந்தக் கைக்கூலி, அல்லக்கைகளுக்காக எல்லாம் நான் காத்திருக்க முடியாது. தில் இருந்தால் காலனே நேரில் வரட்டும்; யோசிப்போம்! ;) //
DeleteNight 12 மணிக்கு ஏதாவதொரு பேய்க்கதையைப் படிக்கும்போது இதை சொல்லமுடியுதான்னு try பண்ணிப்பாருங்க... போன வாரம் ஒரு திகில் கதையைப் படிச்சிகிட்டே எல்லா சாமியையும் துணைக்கு கூப்டேனாக்கும். நாம வீக்கா இருக்கும்போதுதான் பூதகணங்கள் நம்மை நெருங்கும் - என்ற வரியைப் படிச்சதும் பீதியில புக்கையும் கண்ணையும் மூடிக்கிட்டேன் :D
சில வருடங்களுக்கு முன்பு வரை நானும் அப்படித்தான் இருந்தேன். ஆனால், கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்குப் பிறகு இப்போல்லாம் நான் எந்த பூதகணங்களுக்கும் பயப்படுறதில்லை! :)
Deleteஏன் கல்யாணத்துக்கு முந்தி கண்ணாடி பாக்கலையோ !
DeleteGreat news!
ReplyDeleteWaiting curiously for december as well January isues...
Diabolique artwork and cover reminding us ancient days of Lioncomics.
Johny and Prince reprints make us to feel the joy of those wonderful moments of childhood..
udhay : Artwork on this DIABOLIK album is fabulous !
Deleteசொல்ல வார்த்தைகளே வரவில்லை; இருந்தாலும் சொல்கிறேன் ! ஏதோ ஒரு உணர்வு என்னைத் தாலாட்டுகிறது ; ஆனந்த மயமாக உணர்கிறேன்; மனம் இலகுவாகியது மட்டுமல்லமால் இறக்கை இல்லாமல் பறக்க நினைக்கிறது !
ReplyDeleteஅதற்கு காரணம் ஜனவரியில் வரவிருக்கும் நான்கு இதழ்கள்; கதை தேர்வுகள்; அதற்கான பணிகள் தற்போதே பாதிக்கு மேல் நிறைவாகி விட்டன என்ற ஆசிரியரின் வரிகள்; அற்புதம் விஜயன் சார், சொல்ல வார்த்தைகளே இல்லை !
மீண்டும் தமிழ் காமிக்ஸ் பொற்காலம் திரும்பி விட்டது என்பதில் சந்தேகமே இல்லை ; வாழ்த்துகள் விஜயன் சார் !
மிஸ்டர் மரமண்டை : நன்றிகள் !! தொடரும் ஒவ்வொரு நாளும், நேற்றைய தினத்தை விடச் சிறப்பாய் அமையுமென்ற நம்பிக்கை தானே நம்மை வழிநடத்திச் செல்வது !
Deleteஎடிட்டர் = கோடையின் உச்ச பட்ச மின்வெட்டு வேளைகளில் கூட, பகலில் 6 மணி நேர மின்சாரம் இருந்து வந்தது ; ஆனால் இம்முறையோ அந்தக் கருணைக்கும் வழி இல்லை என்பதால் - காலை முதல் மாலை வரை ஆபீசில் ஈயோட்டும் வேலை மட்டுமே சாத்தியமாகிறது !
ReplyDeleteஅந்த சமயத்தில் இவ்வளவு இடைவெளி விடாமல் ஒரு பதிவிட்டிருக்கலாமே சார். ரொம்ப காக்க வச்சிட்டீங்க போங்க
தோர்கலை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். காலனின் கைக்கூலி, தோர்கல் இரண்டுமே காமிக்ஸ் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும்.
ரமேஸ் குமாரின் விளம்பர டிசைன் மிகவும் அருமை. பாராட்ட வார்த்தைகள் இல்லை.
ReplyDeleteஒரே குறை ரஜினி இல்லாத தமிழ் படம் மாதிரி டைகர் இல்லாத விளம்பரமா?
//ரஜினி இல்லாத தமிழ் படம் மாதிரி டைகர் இல்லாத விளம்பரமா?//
Deleteஇதை நான் வன்மையாக ஆமோதிக்கிறேன். +1
//ரஜினி இல்லாத தமிழ் படம் மாதிரி டைகர் இல்லாத விளம்பரமா?//
Deleteஇதை நான் கடுமையாக ஆமோதிக்கிறேன். +1000000.....
பதிமூன்றை காணோம்;ஸ்பைடரை காணோம் ; டயபாளிக்கை காணோம்......
Deleteவிடுபட்ட ஹீரோக்களை கொண்டு இன்னுமொரு விளம்பர டிசைன் செய்து விடுங்களேன் ரமேஷ் குமார்,சார்?
Delete//பதிமூன்றை காணோம்;ஸ்பைடரை காணோம் ; டயபாளிக்கை காணோம்......//
Deleteசரோசாவை காணோம்! சொப்பன சுந்தரியை காணோம் !?...இது என்ன குரூப் போட்டோவா ஸ்டீல்??? : |
@ரமேஷ்,டிசைன் அருமை.அதன் மேல் படரும் யாருடைய கண்களையும் ஒரு கணம் தன்னகத்தே பிடித்துவைக்கும் வசீகரம் கொண்டுள்ளது. IT SCORES 100/100
இந்த விளம்பர டிசைனின் அடுத்த படியாக, இப்படி GENERALலாக டிசைன் செய்யாமல், ஒரு SPECIFIC EVENT/THEME/BOOK/HERO சார்ந்த டிசைன் செய்தால் EFFECTIVENESS இன்னமும் கூடும். உதாரணமாக தோர்கல் அறிமுகமாகும் இந்த வேலையில் அந்த கதைகளில் வரும் CHARACTER / EVENT சார்ந்த டிசைன், ஒரு சினிமா விளம்பரம் மாதிரி செய்தால் , அதை படிப்பவர்களுக்கு அந்த புத்தகத்தை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் கூடும். புதிய வாசகர்களை கூட்ட தற்போதைய வழிமுறையை காட்டிலும் இது EFFECTIVE வழிமுறையாக எனக்கு படுகிறது.
விஸ்கி-சுஸ்கி : தொடரும் விளம்பரங்களில் அந்த முயற்சிகளையும் செய்து பார்ப்போமே !
Deleteடெக்ஸ் வந்திருக்காஹ...
Deleteசிக் பில் வந்திருக்காஹ...
லார்கோ வந்திருக்காஹ...
ப்ளூ கோட்ஸ் வந்திருக்காஹ...
மற்றும் சுட்டி கூட வந்திருக்காஹ...
ஆனா ஆனா .........மின்னலு ;;;;;;;;;;
// டைகர் இல்லாத விளம்பரமா //
Deleteஇடப்பற்றாக்குறை! ஏற்கெனவே 3 Cowboy மற்றும் 3 குதிரைகள் அதனுள்ளே வந்துவிட்டதால் நல்ல மனிதரான டைகர் தனது கர்ச்சீஃபை எடுத்துவிட்டார்! :D
மேலும் புதிய வாசகர்களுக்கு கிட்டதட்ட நமது எந்த ஹீரோவும் பரிச்சயமாக இருக்காதென்பதால் just interesting-ஆன variety இருந்தாலே தேவைப்படும் attraction-ஐ தந்துவிடும்!
// இந்த விளம்பர டிசைனின் அடுத்த படியாக, இப்படி GENERALலாக டிசைன் செய்யாமல், ஒரு SPECIFIC EVENT/THEME/BOOK/HERO சார்ந்த டிசைன் செய்தால் EFFECTIVENESS இன்னமும் கூடும். உதாரணமாக தோர்கல் அறிமுகமாகும் இந்த வேலையில் அந்த கதைகளில் வரும் CHARACTER / EVENT சார்ந்த டிசைன், ஒரு சினிமா விளம்பரம் மாதிரி செய்தால் , அதை படிப்பவர்களுக்கு அந்த புத்தகத்தை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் கூடும். புதிய வாசகர்களை கூட்ட தற்போதைய வழிமுறையை காட்டிலும் இது EFFECTIVE வழிமுறையாக எனக்கு படுகிறது. //
DeleteGreat idea!
http://tinypic.com/r/11rydqd/5
ReplyDeleteசன்ஷைன் கிராபிக் நாவல் 2014 ல் வரவிருக்கும் அத்தனை கதைகளும் கலக்கலான தேர்வுகள்; 2014 - காமிக்ஸ் வாசகர்களுக்கான வசந்தகாலம் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமே இல்லை !
ReplyDeleteநண்பர் ரமேஷ் குமார் அவர்களின் முழுப்பக்க வண்ண விளம்பரத்தை பார்த்தவுடனே, எங்கிருந்தோ வரும் புத்துணர்ச்சி நம்மையும் ஆட்கொள்வதாக உணர்கிறேன். புதிய தலைமுறை யில் வெளிவரவிருக்கும் இந்த விளம்பரம் நமக்கு புதிய தலைமுறை வாசகர்களை நிச்சயம் கொண்டு வருவதாகவே கற்பனைகள் விரிகின்றன. ஒளிமயமான காமிக்ஸ் எதிர்காலம் நமக்கு தொடங்கி விட்டதாகவே உணர்கிறேன் !
அற்புதம் ரமேஷ் குமார் !
25th
ReplyDeleteடியர் விஜயன் சார்,
ReplyDeleteXIII - காலனின் கைக்கூலி - ஒரு சிங்கிள் ஷாட் ஆல்பம் என்பதால் அதை நானும் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்! கிராஃபிக் நாவல் முத்திரையுடன் வெளிவரப் போகும் 'இரத்தப் படலம்' கதை என்பதால், இது "கிராஃபிக் நாவல்" என்ற பெயருக்கு ஏற்பட்டிருந்த அவப் பெயரைத் துடைக்க உதவும் என்றே நம்புகிறேன்! :D
ஷண்முக சுந்தரத்தின் அட்டை டிசைனை உபயோகப் படுத்தியது நல்ல முடிவு! ரமேஷ் குமாரின் விளம்பர டிசைனும் அருமை!
@Ramesh Kumar:
KGBD2-விலும் வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள், ரமேஷ்! :)
@ கார்த்திக் சோமலிங்கா
Delete// XIII - காலனின் கைக்கூலி - ஒரு சிங்கிள் ஷாட் ஆல்பம் என்பதால் அதை நானும் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்! கிராஃபிக் நாவல் முத்திரையுடன் வெளிவரப் போகும் 'இரத்தப் படலம்' கதை என்பதால், இது "கிராஃபிக் நாவல்" என்ற பெயருக்கு ஏற்பட்டிருந்த அவப் பெயரைத் துடைக்க உதவும் என்றே நம்புகிறேன்! //
"சிங்கள் ஷாட் ஆல்பம்"அப்படினா என்ன'ன்னு எனக்கும் புரியம்படி சொல்லாமா நண்பரே ?
Siva Subramanian : ஆஞ்சநேயர் வால் போல் நீண்டு செல்லாமல் - ஒரே இதழில் துவங்கி ; அதே இதழில் நிறைவு கொள்ளும் கதைகளை single shots என்று சொல்லுவதுண்டு !
Delete@Siva Subramanian:
Delete//"சிங்கள் ஷாட் ஆல்பம்"அப்படினா என்ன'ன்னு//
விஜயன் சாரே விளக்கி விட்டதால் எனக்கு வேலை இல்லை! :) உங்களுக்கு ஏற்கனவே இது தெரிந்திருக்கும் என்றாலும், சின்னதாய் ஒரு இடைச் செருகல்!
XIII - ஸ்டீவ் ரோலாண்டின் கதை, இப்படி தனியே ஒரு ஆல்பமாக வருவதை Spin-Off Album என்றும் அழைக்கலாம்! பிரபலமான தொடர்களின் உப பாத்திரங்களை வைத்து, அல்லது மெயின் கதையின் ஒரு சில நிகழ்வுகளை வைத்து, தனி ட்ராக்கில் இன்னொரு கதையை வெளியிடுவது இந்த வகையில் அடங்கும்!
அந்த Spin-Off கதை பெருத்த வரவேற்பைப் பெற்றால், அதற்கென்று தனியாக ஒரு தொடரையே டெடிகேட் செய்து விடுவார்கள்! :D Spin-Off மூலம் தனியே வந்து ஹிட் அடித்த பிறகு, மெயின் நாயகர்களையே தூக்கி முழுங்கிய ஆசாமிகளும் உண்டு!!! ஆனால், நமக்கெல்லாம் இது ஜூஜூபி - ராமாயாணம், மகாபாரதம் போன்ற காவியங்களில் நாம் பார்க்காத ஸ்பின்-ஆஃப்களா?! :D
@saint satan:
//அடுத்த மாதம் வெளிவரும் நான்கு இதழ்களின் மொத்த கதை ஆறு.ஆனால் நாம் படிக்க போவதோ ஏழு கதைகள். எப்படி....?//
நான்கு இதழ்களில், டயபாலிக் மட்டும் கருப்பு வெள்ளை இதழ் - எனவே, அதில் ஃபில்லர் கதைகள் இருக்காது! வண்ண இதழ்கள் ஒவ்வொன்றிலும், ஆறு அல்லது ஏழு பக்கங்களுக்கு ஃபில்லர் கதைகள் வெளியாகும் (ஒரு பக்க ஃபில்லர் கதைகளை கணக்கில் சேர்க்கவில்லை) :-)
KBT3-க்கான இரண்டு லக்கி லூக் கதைகள் + இன்னும் ஒரு ஃபில்லர் கதை! ஆக மொத்தம் 7 கதைகள்! சரிதானே சாத்தான் ஜி?!
//சரியான விடை அளிக்கும் முதல் நபருக்கு கிறுக்கும் பூனையாரும்,அறுக்கும் கத்தியாரும் தலா ரூ.1000 பரிசளிப்பார்கள்//
இந்த கடைத் தேங்காய், வழிப் பிள்ளையார்னு ஏதோ ஒரு பழமொழி சொல்லுவாங்களே? அது இது தானா?! ;) சரி சரி, பரிசுத் தொகையை உடனே அனுப்பி வைக்க ஆவன செய்யுங்கள்! :D
டியர் கார்த்திக் !!!
Deleteஇது அழுகுணி ஆட்டம்.பரிசளிக்க போகிறவரே போட்டியில் கலந்துகொள்ளக் கூடாது.பிறகு யார் பரிசு தருவார்களாம்...?:-)
இருந்தாலும் ,உங்கள் விடை தவறு.நன்றாக யோசித்து பதிலை மனதுக்குள்ளே மட்டும் வைத்துக்கொள்ளவும்.ஹிஹி!!!
டியர் சாத்தான் ஜி,
Deleteஜானி மற்றும் சிக்பில், இவை இரண்டும் ஸ்பெஷல் இதழ்கள் என்பதை தற்காலிகமாக மறந்து விட்டேன்! :P "ஸ்பெஷல்" என்ற சொல்லைக் கேட்டாலே எனக்கு செலக்டிவ் அம்னீஷியா ஏற்பட்டு விடுகிறது! :D அப்படிப் பார்த்தாலும் கணக்கு தப்பு தப்பாய் வருகிறதே?! ;)
நண்பர் ரமேஷ் குமாரின் கை வண்ணம் மிக அருமை ...
ReplyDeleteபாராட்ட வார்த்தைகள் இல்லை நண்பரே ... என்ன நம்ம டைகரை கண்டுக்காம விட்டுடீங்களே :(
திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் ; "புதிய தலைமுறை" க்கான விளம்பரம் என்பதால் டைகரைப் பழைய தலைமுறையில் சேர்த்து விட்டாரோ நண்பர் ? :-)
Delete@ ப்ளூ
Deleteஉங்க பரட்டைத் தலைவருக்கு இப்படியொரு கதியா? :D பேசாம 'எவர்-க்ரீன் சூப்பர் ஸ்டார் டெக்ஸ்' மன்றத்துல சேர்ந்துடுங்க. மெம்பர்ஷிப் கட்டணம் எதுவுமில்லை (விழாக் காலச் சலுகை. குறைந்த நாட்களுக்கு மட்டுமே) ;)
@Erode VIJAY
Deleteசிங்கம் எப்பவும் சிங்கிளா தான் வரும்!
:-)
@விஜயன் சார்,
Delete//"புதிய தலைமுறை" க்கான விளம்பரம் என்பதால் டைகரைப் பழைய தலைமுறையில் சேர்த்து விட்டாரோ நண்பர் ? :-)//
எங்கள் டைகர் எல்லா தலைமுறைக்கும் பொதுவானவர் :)
@விஜய்:
நண்பர் விஸ்கி-சுஸ்கி பதில் சொல்லிவிட்டார் :) ஆமா, உங்க பூனைக்கு ஏன் மௌஸ் பிடிக்கல :)
@விஸ்கி-சுஸ்கி:
அருமை. மின்னும் மரணம் வரட்டும் நண்பரே :)
விஸ்கி-சுஸ்கி: // சிங்கம் எப்பவும் சிங்கிளா தான் வரும்! //
Deleteதிருப்பூர் புளுபெர்ரி: // அருமை. மின்னும் மரணம் வரட்டும் நண்பரே :) //
அதே! இலேசான திருத்தம்: டைகர் கூட single-ஆதான் வருது. ஆனா ஒரு வருஷம் முன்னாடியே announce பண்ணிட்டு வருது... :D
புலி வருது கதையால்ல இருக்கு
Deleteநண்பர் ரமேஷ்குமாரின் கைவண்ணம் அற்புதம்..
ReplyDeleteதோர்கல் கதையை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...
(ஹைய்யா! தொலைஞ்சு போன எடிட்டர் திரும்பக் கிடைச்சுட்டார்!!)
ReplyDeleteஎடிட்டர் சார்,
* இந்தப் பதிவு பல நாட்கள் தாமதத்திற்குப் பிறகு வந்திருப்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 10 மணிநேர பவர்கட்டில் பெரும்பாலான நேரங்கள் ஆபிஸில் ஈ ஓட்டிக் கொண்டிருந்ததாக நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்களே? அந்த நேரத்தில் ஒரு பதிவோ/சில பின்னூட்ட பதில்களோ அளித்திருந்தால் கூட 'உங்களைக் காணாமல்' இங்கு நிலவிய பரிதவிப்புகளுக்கும், அதைத தொடர்ந்த கடுப்புகளுக்கும் ஒரு நிவாரணம் கிட்டியிருக்குமே?
* ஜனவரியில் வெளிவர இருக்கும் (ஆஹா! மீண்டும் நாலு புத்தகங்கள்) கதைகள் பற்றிய அறிவிப்பு குதூகலத்தை ஏகத்துக்கும் அதிகரிக்கிறது. கமாண்சே, தோர்கள், பிரின்ஸ், முதலைப்பட்டாளம் -ரகளையான காம்பினேஸன் தான் போங்கள்!!
* மகாபாரதத்தின் கிளைக் கதை மாதிரியே நம் XIIIக்கும் கிளைக் கதைகள் கிராபிக் நாவல் வரிசையில் வரயிருக்கும் செய்தி மகிழ்ச்சியோடு ஆச்சர்யப்பட வைக்கிறது. காத்திருக்கிறோம்...
* நண்பர் ரமேஷ் மிகுந்த ஆச்சர்யமளிக்கிறார். இவரது ஆக்கம் 'புதிய தலைமுறை' இதழிலும், புத்தகக் கண்காட்சியிலும் மிகுந்த வரவேற்பைப் பெறப் போவது உறுதி! (ரமேஸ் குமார், போராட்டக்குழுவின் சார்பாக உங்களுக்கு ஒரு விழாவே எடுக்கலாம் போலிருக்கிறதே?! அமர்களப்படுத்தியிருக்கிறீர்கள். அட்டகாசம்!!)
* டயபாலிக் அட்டைப்படம் அசத்தலாக வந்திருக்கிறது. நண்பர் சண்முக சுந்தரத்தின் பின் அட்டை டிசைன் நேர்த்தியான வடிவமைப்பால் இதழின் மொத்த அழகும் ஏகத்துக்கும் கூடப்போவது உறுதி! (அட்டகாசம் சண்முக சுந்தரம் சார்!)
* டயபாலிக்கின் இந்த அட்டைப்படம் இங்கு வெளியாவதற்கு முன்பே ஒரு இத்தாலிய FB groupல் வெளியாகியிருப்பதன் மர்மம் என்னவோ?!
லேட்டா வந்தாலும், லேட்டஸ்டான விசயங்களுடன் இந்தப் பதிவை கொடுத்து அசத்தியிருப்பதால், லேசான 'கிர்ர்...' மட்டும்! :)
// * டயபாலிக்கின் இந்த அட்டைப்படம் இங்கு வெளியாவதற்கு முன்பே ஒரு இத்தாலிய FB groupல் வெளியாகியிருப்பதன் மர்மம் என்னவோ?!//
Deleteஅதே கேள்வி தான் என்னிடமும் ?
Erode VIJAY & Siva Subramanian : ஒவ்வொரு அட்டை டிசைனையும் நாம் முன்கூட்டியே இத்தாலியப் பதிப்பகங்களில் காட்டி அவர்களது சம்மதத்தைப் பெற்றிடுவது அவசியம் ! So மூன்று வாரங்களுக்கு முன்பாய் அவ்விதம் நாம் அனுப்பிய டிசைனை அவர்களே ரசித்து, ஒப்புதல் தந்ததோடு - அங்குள்ள டயபாலிக் ரசிகர்கள் மத்தியில் circulate செய்துள்ளனர் ! காலரைத் தூக்கி விட்டுக் கொள்வோம் !
Delete//அவர்களே ரசித்து, ஒப்புதல் தந்ததோடு - அங்குள்ள டயபாலிக் ரசிகர்கள் மத்தியில் circulate செய்துள்ளனர் !//
Delete: )
// So மூன்று வாரங்களுக்கு முன்பாய் அவ்விதம் நாம் அனுப்பிய டிசைனை அவர்களே ரசித்து, ஒப்புதல் தந்ததோடு - அங்குள்ள டயபாலிக் ரசிகர்கள் மத்தியில் circulate செய்துள்ளனர் ! காலரைத் தூக்கி விட்டுக் கொள்வோம் ! // நிச்சயமாய்.
Deleteவாவ்
Delete// காலரைத் தூக்கி விட்டுக் கொள்வோம் //
Deleteநிச்சயமாக! முடிந்தால் கிழித்தே விட்டுக்கொள்ளலாம்! :)
//நிச்சயமாக! முடிந்தால் கிழித்தே விட்டுக்கொள்ளலாம்! :)// :)
Delete// நிச்சயமாக! முடிந்தால் கிழித்தே விட்டுக்கொள்ளலாம்! :) //
Deleteஅப்படியும் கிழிக்க முடியலன்ன விஜயோட பூனையை விட்டு பிராண்ட சொல்லலாம் :)
Delete// காலரைத் தூக்கி விட்டுக் கொள்வோம் //
// நிச்சயமாக! முடிந்தால் கிழித்தே விட்டுக்கொள்ளலாம்! :) //
வீட்டுப் பூனையின் பாணியில்: கழுத்தில் கட்டப்பட்டுள்ள belt-ஐ தூக்கி விட்டுக் கொள்வோம்
This comment has been removed by the author.
ReplyDeleteMy Logo Designs
Delete1. http://tinypic.com/r/egsp7d/5
2. http://tinypic.com/r/35lgju1/5
3. http://tinypic.com/r/cxmc/5
4. http://tinypic.com/r/so4q3t/5
அப்பாடி முடிந்தது எடிட்டர் அவர்களின் பதிவுக்கு காத்திருப்பு !
ReplyDeleteநியாயப்படி இந்தப் பதிவின் தலைப்பை 'காமிக்ஸ் எடிட்டரும்...கண்ணாமூச்சியும்!' - அப்படீன்னுதான் வச்சிருக்கணும்... நைசா நழுவிட்டார்! :)
Delete// 'காமிக்ஸ் எடிட்டரும்...கண்ணாமூச்சியும்!'// +1.
Delete@ friends : வேலைகள் நடந்தேறிக் கொண்டிருந்தால் பரிமாற சேதிகள் இருந்திருக்கும் ; காமிக்ஸ் எடிட்டரும் ஆஜராகி இருப்பார் ; மாறாக கொசுக்களின் ஜனத்தொகையினையும் ; மோட்டு வளையத்தின் உறுதியினையும் கணக்கெடுத்துக் கொண்டிருக்கும் வேளைகளில் - 'சுவற்றில் முட்டிக் கொள்ளும் விளையாட்டு' மட்டுமே சுவாரஸ்யமாய்த் தோன்றுகின்றதே..!
Deleteஹா! ஹா!
Deleteஆனால் இங்கே அனைவரும் முட்டி கொண்டோமே ! ஒருவர் முட்டி கொள்வது பெரிதா ....அனைவரும் ...
Delete@ ஸ்டீல்
Deleteஇப்படியெல்லாம் கேட்க உங்களுக்கு என்ன அருகதை இருக்கு? பல நாட்களாய் (பிறந்தநாள் உட்பட) இந்தப் பக்கமே எட்டிப்பார்க்காமல் இருந்துட்டு, இப்போ எடிட்டரை குறை சொல்ல வரிஞ்சு கட்டிட்டு வர்றது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை? கிர்ர்...
என்னோட சிஸ்டத்துல hard disk போச்சு நண்பரே ....அதான்
Delete@steel,
Deleteநண்பர் விஜயோட பூனை வந்து தூக்கிட்டு போயிடுச்சா ?
இருக்கலாமோ !
Deleteஇங்கே அனைவரும் முட்டி கொண்டோமே ! ஒருவர் முட்டி கொள்வது பெரிதா//
Deleteஅதானே!
Power cut- Same blood.. :-(
ReplyDelete4 puthagangal january kaga aavalodu ethiparkka vaithtirukirathu.
Pin attai & Vilampara design super nanpargale!
சிக் பில் ஸ்பெஷல் கதை பெயர்கள் ???
ReplyDeleteGiri : காத்திருப்போம் டிசம்பர் வரை !
Deleteதல டிசம்பர் வந்தாச்சுல?!!!!
Deletehttp://thumbs.dreamstime.com/z/sunshine-logo-set-isolated-line-art-33131962.jpg
ReplyDeleteகிராபிக் நாவல்களுக்கு தனி இதழ் என்றவுடன் கொஞ்சம் ஷாக் ஆகித்தான் போனேன். ஆனால் தற்போதைய கதைத் தெரிவுகள் (thorkal, ராலண்ட்) நன்றாகத்தான் இருக்கிறது.
ReplyDeleteSIV : மாறுபட்ட கதைகள் இன்னமும் காத்துள்ளன... ! Keep watching !
Deletesteel, is this your work?
ReplyDeleteha ha ha அப்படியே காப்பி பேஸ்ட்
DeleteAgatha christie graphic novels என்று லண்ட்மார்க்இல் பார்த்தேன். யாராவது படித்திருக்கிரீர்களா? நாம் இன்னும் அதை பற்றி யோசிக்கவில்லையே என்று கேட்டேன்...
ReplyDeleteசூப்பர் விஜய் : சற்றே வறட்சியான காமிக்ஸ் ஆக்கங்கள் இவை என்பது எனது அபிப்ராயம் ! ஒரிஜினல் நாவல்களின் விறுவிறுப்பிற்கு நியாயம் செய்ததாய் எனக்குப் படவில்லை !
Deletefrom spider,
Deletehello vijay i have tried agatha christies graphic novels but they disappointed me.the artwork level in most of those books is not up to the mark
தமிழகம் முழுதும் சென்னை நீங்கலாக 10 மணிநேர power cutதான்! XIII ல் கிளை கதையாக காலனின் கைக்கூலி வருவது மகிழ்ச்சியான செய்தி ! நண்பர்களே Graphic Novelக்கு அழுகாச்சி காவியம் என்று சந்தா கட்டாமல் இருந்தால் கட்டி விடுங்கள் ! 2014 முதல் graphic novelகாண இலக்கணம் மாறுகிறது !
ReplyDeleteநண்பரே
Deleteஉடனே செயல்படுத்துகிறேன் !!
very good news for me sir xiii is back
ReplyDeletevery good news for me sir xiii is back
ReplyDelete//சன்ஷைன் கிராபிக் நாவல் : "பிரபஞ்சத்தின் புதல்வன் " //
ReplyDeleteதோர்கல் புத்தகங்களுக்கு அதன் ஒரிஜினல் அட்டைப்படங்களை உபயோகிக்குமாறு தாழ்மையுடன் கோரிக்கை வைக்கிறேன். : )
+1
Delete+100
Deleteடியர் மாறன் மணி !!!
Deleteஆதி தாமிரா ப்ளஸ் ஒன் படிக்கிறார்.சரி.நீங்க ப்ளஸ் நூறு படிக்கிறீங்களா...?அது எந்த ஸ்கூல்ல சொல்லித் தராங்கா.....?:-)
டியர் எடிட்டர்ஜீ !!!
ReplyDeleteவெல்கம் பேக் !!! சந்தோச சமாச்சாரங்கள் நிறைய !!! டிசம்பர் மாதம் நான்கு.ஜனவரி மாதமும் நான்கு.காமிக்ஸின் பொற்காலம் மீண்டும் மலர்கிறதா என்ன...?
அடுத்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் குறைந்த பட்சம் மூன்று இதழ்கள்.அதிக பட்சம் நான்கு இதழ்கள் வெளிவர எல்லாம் வல்ல பவர் ஸ்டாரை வேண்டிக்கொள்கிறேன்:-)
டயபாலிக் அட்டை படம் படு ஜோர்.அண்ணாருக்கு ஆதரவு பெருகும் நேரத்தில் அடுத்த ஆண்டு லிஸ்டில் அவர் பெயர் இல்லாததற்கு அடியேனின் கடும் கண்டனத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.
ஸ்டீவ் ராலாண்டுக்கு தனி கதையா...பலே பலே.அப்படியே அந்த கருப்பழகி மேஜர் ஜோன்ஸுக்கும் தனி ட்ராக் கதை இருந்தால் வெளியிடலாமே ஸார் ?
சரி உங்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் ஒரு புதிர்.
"அடுத்த மாதம் வெளிவரும் நான்கு இதழ்களின் மொத்த கதை ஆறு.ஆனால் நாம் படிக்க போவதோ ஏழு கதைகள். எப்படி....?
சரியான விடை அளிக்கும் முதல் நபருக்கு கிறுக்கும் பூனையாரும்,அறுக்கும் கத்தியாரும் தலா ரூ.1000 பரிசளிப்பார்கள் என்பதை தெரிவித்து கொள்ள கடமை பட்டிருக்கிறேன்.ஹிஹி...!!!
இப்போ நீங்க விட்டீங்களே அந்த கதையும் சேர்த்தா ஏழுதானே
Deleteஅனைவருக்கும் உண்டு நண்பரே
Deleteமங்கூசுக்கு கூட
Delete//எல்லாம் வல்ல பவர் ஸ்டாரை வேண்டிக்கொள்கிறேன்:-)//
Delete:-) :-)
XIII - மிஸ்ட்ரி-ல் இதுவரை வந்துள்ள 6 வெளியீடுகளில் ஒவ்வொருயிதழ்களும்
Deleteவெவ்வேறுக் கதாசிரியர்கள்/ஓவியர்களின் கைவண்ணத்தில் உருவாகப்பட்டுள்ளன!
1. மங்கூஸ், 2. இரினா, 3. லிட்டில் ஜோன்ஸ், 4. கலோனல் அமோஸ், 5. ஸ்டீவ் ரோலாண்ட் மற்றும் பில்லி ஸ்டாக்டன்
சாத்தன்ஜி உங்க ஆளு நம்ம இதழில் தலைகாட்டுவாரா ...? இல்லையென்றால் போராட்டக் குழு ஆரம்பிக்க வேண்டியதுதான்!
டியர் மொஹைதீன் !!!
Deleteபோராட்டக்குழு தயார்.உடல் மண்ணுக்கு.உயிர் மேஜர் ஜோன்ஸுக்கு...ஹிஹி!!!
டியர் சாத்தான்ஜி,
Deleteநானும் தயார் தான்! ஆனால், உடலையும் உயிரையும் மட்டும் கொஞ்சம் இடம் மாற்றிக்கறேனே, ப்ளீஸ்? ;)
// நானும் தயார் தான்! ஆனால், உடலையும் உயிரையும் மட்டும் கொஞ்சம் இடம் மாற்றிக்கறேனே, ப்ளீஸ்? ;) //
Deleteஉயிர் மண்ணுக்கு - ஆஹா, என்ன ஒரு தேசப்பற்று?! :D
அதாவது .....மானிடர்களே....கிறுக்கும் பூனையார் என்ன சொல்ல வந்தார் என்றால்....அதாவது...வந்து.....உயிர் மண்ணுக்கு.....உடல் ...அதாவது ....வந்து ....உடல் வந்து.....ஹிஹி ......போராட்டக் குழுவுக்கு..!
Deleteஉஸ்ஸ்ஸ்ஸ் ....அப்பாடா....எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு.தாங்கலெ:-)
@ சாத்தான்ஜி
Deleteஹா ஹா ஹா! :D
மேஜர் ஜோன்ஸ் ...............கருப்பு தான் எனக்கு புடுச்ச கலரு ..................
Deleteஉயிர் மண்ணுக்கு, பிணம் போராட்டக் குழுவுக்கு!
Deletelol :D
// பிணம் போராட்டக் குழுவுக்கு //
Deleteஹா ஹா ஹா! என்னா ஒரு வயிற்றெரிச்சல்!! :)
கோவிச்சிகிட்டு ஒரு நாள் இருக்கலாம்னு பாத்தா, அதுக்குள்ள பதிவையும் போட்டு பின்னூட்ட களேபரமும் நடந்துகிட்டிருக்குதுப்பா.. :-))))))))))
ReplyDeleteஅடிக்ஷன் என்று நேற்று நான் குறைபட்டுக்கொண்டதுக்கு இந்த பதிவே கூட ஒரு நல்ல உதாரணம்தான்..
1. முதலில் சக நண்பனைப்போல ஏதோ ஒரு பிரச்சினையைப் பற்றி (இம்முறை மின்தடங்கல்) ஒரு ஜாலி புலம்பல்!
2. பிறகு எதிர்பார்ப்பை எகிற வைக்கும்படியான ஒரு டீஸர் (அட்டைப்படம், ஸாம்பிள் பக்கங்கள்).
3. அடுத்துக் கொஞ்சம் சர்ப்ரைஸ் அறிவிப்புகள். (ஸ்டீவ் ராலண்ட் + ஜனவரி இதழ்கள் அறிவிப்பு)
4. அடுத்ததாக வாசகப்பங்களிப்பு, போட்டிகள் பற்றிய செய்திகள்.
5. இறுதியாக நீட்டித்துக்கொண்டே போகும் சஸ்பென்ஸ் பாயிண்ட் ஒன்று (KBT-3 முடிவுகள்).
இவ்வளவு திறமையாக வாசகர்களைக் கொக்கிப்பிடி பிடித்துவைத்திருப்பது எத்தனை சாகசமான செயல். அடிக்ஷன் ஆகாமல் என்ன செய்ய?
இனி கருத்துகள்:
டயபாலிக் இதழில் சண்முக சுந்தரத்தின் டிஸைன் முகப்பு அட்டையாக இருந்தால் இன்னும் டாப்பாக இருந்திருக்கும் (என்பது என் எண்ணம்). தீந்தமிழ் வேண்டுமென நான் சொல்லாவிட்டாலும் கதைத் தலைப்புகளை, அதுவும் அட்டையில், தமிழில் அதாவது Operation என்பதற்குப் பதிலாக ’ஆபரேஷன்’ எனும் படியாவது அமைக்கலாம். தமிழ் தெரியாத பிறமொழி வாசகர்கள் மேலோட்டமாக பார்க்க நேர்கையில் ஒருவேளை இது ஆங்கிலப் புத்தகமோ என எண்ண நேரலாம். அல்லது ஒரு தமிழ் இதழில் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்குமளவுக்கு இருக்கும் நம் சூழலை அட்லீஸ்ட் அவர்களிடமிருந்தாவது சற்று மறைக்கலாமே! :-)))))))
டிஸம்பர்+ஜனவரி என 8 இதழ்கள் செமை எதிர்பார்ப்பை, காத்திருக்க இயலாக் குறுகுறுப்பை ஏற்படுத்துகின்றன. ப்ளீஸ், டென்ஷனாகி நான் அழத்துவங்குவதற்குள் சீக்கிரமாக அடுத்தப்பதிவில் ஜனவரி இதழ்கள் பற்றிய முன்னோட்டங்களை ஓடவிடுங்கள்.
தொடரும் போட்டிகள் உற்சாகமளிக்கின்றன (அதுவும் பரிசோடு!). ரமேஷ்குமாரின் விளம்பரம் அட்டகாசம். கச்சிதமாக இருக்கிறது. அதுவும் தமிழகமெங்கும் விற்பனையாளர்கள் தேவை அறிவிப்பு, நேர்த்தி!! கடந்தவாரம் நேரமின்மையால் அவரோடு போட்டிபோடமுடியவில்லை. KBGD-2 வில் அவரோடு போட்டியிட களமிறங்கிவிடவேண்டியதுதான். (பி.கு: போட்டியை ஏதும் சுத்தமான மணற்பாங்கான இடத்தில் வைக்கவும். ஹிஹி! மண்ணுகவ்வ வசதியாக இருக்குமல்லவா?)
// போட்டியை ஏதும் சுத்தமான மணற்பாங்கான இடத்தில் வைக்கவும்//
Deleteஹா ஹா ஹா! :D
:-))))))))
Delete// KBGD-2 வில் அவரோடு போட்டியிட களமிறங்கிவிடவேண்டியதுதான். (பி.கு: போட்டியை ஏதும் சுத்தமான மணற்பாங்கான இடத்தில் வைக்கவும். ஹிஹி! மண்ணுகவ்வ வசதியாக இருக்குமல்லவா?) //
DeleteKBGD-2 வில் நான் பங்கேற்கவில்லை! அதற்கு அடுத்தமுறை நிச்சயம் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது! :)
ஆனாலும் மண்ணின் தன்மையை நீங்கள் சோதித்து அறிந்துகொள்வது அவசியம்! Safety first, duty next! :D
// KBGD-2 வில் நான் கலந்துகொள்ளவில்லை //
Deleteம்... KBGD-2 வில் நான் கலந்துகொள்ளவிருக்கும் செய்தி எப்படியோ உங்கள் காதுககளை எட்டியிருக்கிறது என்றாகிறது. புத்திச்சாலிதான் நீங்கள்!
விஜய், நீங்க கலந்துக்கறத பார்த்ததும் எனக்கும் ஆசையாதான் இருக்கு...ஹி ஹி! முடிவை மாத்திக்கலாமான்னு பார்த்தா time இல்லை! Grrrr... :D
Deleteஏதேது.. இம்முறை இரண்டு சிங்கங்கள் மோதப்போகிறது போலிருக்கிறதே..
Delete(பயப்புடாதிங்க ஈ.விஜய். நம்ப ரெண்டு பேரையும்தான் அப்படிச்சொன்னேன். ஹிஹி!)
@ ஆதி
Delete:D என்னை சிங்கம்னு சொன்னதுக்கு தேங்ஸ்ங்க! ( அந்த விஸ்கி-சுஸ்கியின் காதில் விழறமாதிரி நல்லா சத்தமாச் சொல்லுங்க. கிர்ர்ர்...)
சிங்கங்கள் ரெண்டும் மோதப்போகுதோ இல்லையோ; இரண்டும் தோளில் கைபோட்டுக்கிட்டு நல்ல மணற்பாங்கான இடத்தைத் தேடிச் செல்ல, அதற்கு ஒரு பனங்காட்டு நரி (1000 ரூபாய் செக்கை வாயில் வைத்தபடி) வழிகாட்டாத வரை சரிதான்! :)
டிசம்பர் 4 க்குள்ள அனுப்பிடுங்க தல.. கிராபிக் நாவெல்க்கு சந்தா கட்டவேண்டாம் என்ற எனது முடிவை திரும்ப பெற்றுகொள்கிறேன்!!
ReplyDeleteஇன்னும் யாரெல்லாம் இருக்கீங்க? (அட என்னையும் சேர்த்துதான்பா!)
Deleteஏகப்பட்ட பரணிதரன்கள்!
DeleteGN-ல இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறேன்? GN-ல வரைமுறைகளில்லாமல் புதுப்புதுக் கதைக்களாக நுழைக்கின்றனவே..! GN-ல XIII-ஸ்டீவ் ரோலாண்ட்? அப்படியென்றால் இதுவரை வந்த அனைத்துக் XIII series-சும் GN-களா...? அல்லது +6-ன் புது அவதாரமா இந்த GN...? ஒன்றும் புரியலையே..ஒரே confusion!
DeleteSteve Rowland-ன் கதையை கிராபிக் நாவலில் சேர்த்தது master stroke. Eagerly Awaiting !!!
ReplyDelete2013 ஜனவரிக்கு பத்து கதைகள் 2014 ஜனவரிக்கு நான்கு தானா - Anymore special surprises for Chennai book fair விஜயன் சார்?
பொங்கல் ஸ்பெஷல் ஆக வேறு ஐடியா உள்ளதா sir , இனி வரும் காலங்களில் பிரின்ஸ் கதைகளை இரண்டு கதைகளாக வெளி இடவும்
ReplyDeleteஇனிமையான தகவல்கள் அடங்கிய பதிவு! நீண்ட காத்திருப்பிற்கு பலன் கிடைத்துள்ளது! கிராபிக் நாவலில் XIII-னா? ஜனவரியில் 4 புத்தகங்களா? ஆஹா, ஒரு காக்டைல் விருந்து காத்துள்ளது!
ReplyDeleteரூபாய் 60 என்கிற குறைவான விலையில் வெளியிடும்போது புதியவர்களும் அதிகம் வாங்கக்கூடிய வாய்ப்பு நிச்சயம்!
நண்பர் ரமேஷ்குமார் அசத்துகிறார்! சண்முகசுந்தரம் சாரை எங்கே சமீப நாட்களாக கமெண்ட் களில் காணவில்லை?
டியர் எடிட்டர் ,
ReplyDeleteபிந்திய பதிவு என்றாலும் , உங்களின் பதிவு பல பல இன்ப அதிர்ச்சிகளை தந்து அசத்தி விட்டது போங்கள் . சூப்பர் ! அதிலும் டிசம்பர் இல் 4 வெளியீடுகளும் , ஜனவரிக்கு 4 வெளியீடுகளும் எனும்போது , இதை விட வேறு என்ன வேண்டும் எனக்கு ? கிறீஸ்துமஸ் மற்றும் பொங்கல் ஆகிய இரு பண்டிகைகளும் உங்களின் வெளியீடுகளினால் எமக்கெல்லாம் சிறப்புறப்போவது உறுதி. இவற்றுக்கென மின்வெட்டுடன் நீங்கள் நடத்தும் போராட்டம் புரியாமல் இல்லை. இருப்பினும், நண்பர் ஆதிதாமிரா கூறி உள்ளது போல் உங்களின் எழுத்து நடைமுறைக்கு எம்மை "அடிக்ட்" ஆக்கி விட்டீர்கள் . இது எமது தவறு இல்லை . தயவு செய்து கிழமைக்கு ஒரு முறையாவது பதிவிட மறக்காதீர்கள் . ப்ளீஸ் ???
XIII இன் தொடராக mystery இனையும் வெளியிட உள்ளது அருமையான முடிவு . அதுவும் "ஸ்டீவ் ராலண்ட்" இன் கதை முதலில் வருவது சிறப்பு . அமெரிக்க ப்ரெசிடெண்ட் "ஜான் ஒப் கென்னடி " இது போலவே ஒரு கறுப்பு சூரியன் தினமன்றுதான் வெவ்வேறு திசைகளில் இருந்து சுட்டு படுகொலை செய்யப்பட்டார் . சார் , இது போலவே மற்றைய மங்கூஸ் , இரினா , ஜோன்ஸ் , கர்னல் அமோஸ் ஆகியோரின் mystery களினையும் தயவு செய்து வெளியிடுங்கள் .
இங்கு பிரான்ஸ் இல் XIII இன் அடுத்த பாகம் வெளியாகி விற்பனையில் சக்கை போடு போடுகிறது . அருமையான திருப்பங்கள் .எமது லயனில் எப்போது சார் வெளியாகும்? அடுத்த பாகமும் வெளியான பின்பா ??? என்னதான் பிரெஞ்சு மொழியில் படித்து விட்டாலும் , எமது தாய் மொழியில் உங்களின் மொழிபெயர்ப்பில் அள்ளி பருகுவது போல் வருமா ?
நேற்றுதான் எனக்கு "ஒரு சிப்பாயின் சுவடுகள் " வந்து கிடைத்தது . எப்படி இப்படி ஒரு அருமையான கிராபிக்ஸ் நாவலினை தெரிவு செய்தீர்கள் ?? சார் , இந்த கதையினில் கூறப்பட்டுள்ளது ,உண்மையான ஒரு சம்பவத்தின் தழுவலா?? வியட்நாம் யுத்தத்தில் பலியான பிரெஞ்சு சிப்பாயின் உடல் எச்சங்கள் 30 வருடங்களின் பின் திருப்பி கையளிக்க பட்டனவா ??
நண்பர் ரமேஷ் குமார் இன் கைவண்ணம் அருமை . டயபாலிக் இன் "opration சூறாவளி " சித்திரங்கள் அட்டை படம் இரண்டுமே அருமை . மெட்டாலிக் லுக் வரும் என்பது உறுதி .
ஒரே மாதத்தில் நான்கு இதழ்களா? .............................கோடை மழைதான்!
ReplyDeleteoperation சூறாவளியா?.......................................................அட்டைப்பட சூறாவளி!
விற்பனை விளம்பரமா?....................................................வண்ணங்களின் ஜாலம்!
ஏற்கனவே நான் கூறியபடி வண்ணத்தில் விளம்பரங்கள் ஒரு தூக்கலாகவே இருக்கும்.
XIII-க்கு எத்தனை முகங்கள்? அந்த புலன் விசாரணையை கூட வெளியிட்டுவிடலாம்.
இதுவரை Hardbound இதழ்கள் வெளியிடப்படவில்லை. லயன் 30-வது ஆண்டு மலரை Hardbound இதழாக வெளியிட்டு சாதனை படைக்கலாம். “Lion Hard Punch Special” என்றுகூட பெயர் வைத்துவிடலாம். அல்லது அதை கேப்டன் டைகர் மின்னும் மரணம்-The full collection-ல் பரிசித்து பார்க்கலாம்!
ஒரே மாதத்தில் நான்கு இதழ்கள் என்று கொண்டாடுபவர்களுக்கு, ஒன்று சொல்லிக் கொள்கிறேன்: இது உண்மையில் ஒரே மாதத்தில் இரண்டு இதழ் தான் :( என்ன இரண்டையும் நடுவில் பிய்த்து நான்காக மாற்றி விட்டார் நமது எடி :P அது தானே கசப்பான உண்மை ;-) குண்டு புக் கிளப் அங்கத்தினர்களே, எங்கே இருக்கிறீர்கள்? :)
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... பச்சப்புள்ள மாதிரி நானும் ஏமாந்தகோழியாகிட்டேனே!! சாதா (ரூ.120) புக்குக்கே வழியில்ல.. இனிமே எங்க குண்டு.? சில ஸ்பெஷல் இதழ்களைத் தவிர்த்து சான்ஸே இல்லை..
Deleteஎல்லாம் ஒல்லிதான் இனி! அடுத்த வருசமாவது விடியுமானு பார்த்தா, அடுத்து இன்னும் விலை கூடத்தானே சான்ஸ் அதிகம். ஆக, 2013 இனி திரும்பப்போவதில்லையோனு கவலை பீடிக்கிறது.
4 புத்தகங்களும் வெவ்வேறு ஹீரோக்களின் கதைதானே! அப்படி இருக்கும்போது தனித்தனி புத்தகமாக வருவதில் problem இல்லையே! ஸ்பெஷல் மூலமாகக் கிடைத்தாலும் தனித்தனி புத்தகமாகக் கிடைத்தாலும் ஒரே கதையைதானே நாம் வாசிக்கிறோம்?! :)
Deleteமேலும் ஒவ்வொரு புத்தகத்துக்கும் அதற்கே உரிய அட்டைப்படம் வேறு..
Deleteபிரிப்பதில் பிராக்டிகலாக சில நன்மைகள் இருக்கின்றனதான். ஆனால், குண்டு புக் ஏற்படுத்தும் ஒருவகையான மகிழ்ச்சியை, ஒரு பெருமித உணர்வை ஒல்லி புத்தகங்களால் ஏற்படுத்தமுடியாது. இதை எப்படி விளக்குவது என புரியவில்லை. கவிதை மாதிரி அது ஒரு அனுபவம், அவ்வளவுதான். மாதம் 4 புத்தகங்கள் வருவதை விட அவை இணைந்து ஒரே புத்தகமாக ரூ. 240க்கு வந்தால் என் ஓட்டு நிச்சயமாக இரண்டாவதுக்குதான்! :-)))
Delete// இதை எப்படி விளக்குவது என புரியவில்லை. கவிதை மாதிரி அது ஒரு அனுபவம், அவ்வளவுதான் //
Deleteஅழகாச் சொன்னீங்க போங்க! :)
கூட்டமாக வரும் பட்டாம்பூச்சிகள் போல... கொழுகொழு குழந்தைகள் போல... ஒரு விவரிக்க முடியாத சிலிர்ப்பு அது!
இந்த ஒல்லிப்பிச்சான் புத்தகத்தை எடுத்துப் படுக்கையின் மேல் வச்சுட்டு, பத்தடி தள்ளி நின்னு அதைப் பாருங்களேன்... சட்டை போடாத காச நோயாளி மாதிரியே இருக்கும்!
(கார்த்திக் கண் சிவப்பினும்) குண்டு குண்டுதான்! :)
ஹி ஹி! இதுக்கு ஒரு வழி இருக்கு. எல்லா புத்தகங்களையும் சேர்த்து பைண்டிங் பண்ணி, school stationary கடையில் கிடைக்கும் sticker label வாங்கி ஒட்டி, அதிலே குண்டு ஸ்பெஷல்னு Title-ம் ரூ240/- என்று விலையையும் எழுதீட்டு...
Deleteஅதுக்கப்புறமா கதைகளைப் படிக்கலாமே... :D
குண்டு புக் ரெகுலரா இல்லையென்றாலும், ஸ்பெஷல் occasion-ல் வெளியிடலாம்! அதாவது, 4 புக்கையும் சேர்த்து Rs.240/- கோடை மலர் மற்றும் Rs.240/- தீபாவளி மலர். குண்டு புக் வெளியிட்ட மாதிரியுமாச்சு & சிறப்பு மலர்கள் வெளியிட்ட மாதிரியுமாச்சு!
Deleteகுண்டு புக் இல்லை என்றாலும் பரவாயில்லை, perfect binding பண்ணியது என்றால் சரிதான். ஆனால் 60 ரூபாய் என்றால் stapler pin போட்டு தானே வரும் :( காமிக்ஸ் மீது இருந்த எனது மோகம் கொஞ்சம் குறைந்து விட்டது இதனால் :(
Deleteரமேஸ்குமார் = இடப்பற்றாக்குறை! ஏற்கெனவே 3 Cowboy மற்றும் 3 குதிரைகள் அதனுள்ளே வந்துவிட்டதால் நல்ல மனிதரான டைகர் தனது கர்ச்சீஃபை எடுத்துவிட்டார்! :D
ReplyDeleteவிற்காத பொருளுக்குத்தானே விளம்பரம். தனக்கு அது தேவையில்லை என்ற எண்ணத்தில் டைகர் கர்ச்சீப்பை எடுத்துவிட்டார் என்று நினைக்கிறேன்.
விரைந்து வந்து ..,பதிவை இட்டதற்கு மிக்க நன்றி சார் ..(இன்றும் வாராமல் இருந்திருந்தால் கண்டிப்பாக நாளை உங்கள் கையில் ஒரு கடிதம் இருந்திருக்கும் .தப்பித்து விட்டர்கள் :-) )
ReplyDeleteமுதலில் நண்பர்கள் சன்முக சுந்தரம் மற்றும் ரமேஷ் குமார் அவர்களுக்கு அட்டகாசமான ,அதிரடியான படைப்புகளுக்கு மாபெரும் வாழ்த்துகள் .
இந்த மாதம் நான்கு ,அடுத்த மாதம் நான்கு ...வாவ் ...மனம் துள்ளி விளையாடுகிறது . ஒல்லியான புத்தகம் தானே என்ற வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும் நான்கு அட்டை படங்கள் ,நான்கு விரிவான ,பெரிய்ய ஹாட் -லைன் என களை கட்ட போவதால் எதிர் பார்ப்பு ஏகத்துக்கும் ....அனைத்து காமிக்ஸ் ரசிகர்கள் சார்பாகவும் ,போராட்ட குழுவின் சார்பாகவும் மிக பெரிய நன்றி சார் ...
கிராபிக் நாவலில் இனி வரும் கதைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் "ஒரு கிராபிக் ரசிகன் "உருவாகும் சூழ்நிலையை கொண்டு வருவதன் அறிகுறி இப்பொழுதே ... ( ஒரு ரசிகன் மட்டுமா ... )
சன்ஷைன் கிராபிக் நாவல் புத்தக தலைப்புக்கு லயன் கிராபிக் நாவல் ,முத்து கிராபிக் நாவல் அல்லது கிராபிக் காமிக்ஸ் என வைக்க கூடாதா சார் ... அந்த புத்தக தலைப்பு காமிக்ஸ் க்கு (மனதில் ) அன்னியமாய் படுகிறது . (இது எனது கருத்து மட்டுமே ).
ஏண்டா ....பரணி .....
Deleteஇப்படி ஏதாவது "குண்டை " தூக்கி போடறதே உனக்கு பொழப்பா போச்சு...இப்படிய போனா உன்னை போராட்ட குழுவில் இருந்து தூக்காம விட மாட்டாங்க ...ஜாக்கிரதை..
//லயன் க்ராபிக் நாவல்//
Delete+1
+2
Deleteப்ளஸ் ஒன் படிக்கும் கிறுக்கும் பூனையாருக்கும்,ப்ளஸ் டூ படிக்கும் இரும்புக்கையாருக்கும் ஒன்னாப்பு படிக்கும் நல்ல பிசாசின் வணக்கங்கள் :-)
Deleteவணக்கம் சாத்தான்ஜி!
Deleteஉங்கள் பாணியில் ஒரு கிசுகிசு போடலாமே? ரொம்ப நாளாச்சு, இல்லையா?
அங்கே, 'ஒரு சிப்பாயின் சிவடுகள்'ஐ கையில் வைத்துக்கொண்டு ஆடிட்டர் ராஜா செய்யும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகப் பரவலாகப் பேசப்படுகிறதே?...
பத்து வருடங்களாக நன்றியோடு அந்த ஆசிரியரை விட்டு பிரிய மனமில்லாது ஒன்றாவதே படிக்கும் நல்ல பிசாசுவிர்க்கு அன்பு கலந்த வணக்கங்கள்!
DeletePresent
ReplyDeleteமுப்பதாவது ஆண்டு மலருக்கு பெயர் வைக்கும் படலம் என்ன ஆயிற்று
Delete@ ஷல்லூம்
Deleteமேலே இருக்கும் உங்க கேள்வியை உடனே delete பண்ணிடுங்க, ப்ளீஸ்! இ..இல்லேன்னா, மறுபடியும் ஆரம்பிச்சிடுவாங்க. நெனச்சாவே பயங்கரமா இருக்கு! :)
எனக்கும்தான் .ஹிஹி !!!
Deleteஏதோ என்னால முடிஞ்சது:
DeleteLion Thirty Thirsty Special
Lion Thirty Thirty Special
Lion Thirty Dirty Special
Lion Thirty Duty Special
Lion Dates Special Neeya Naana, presented by Gopinath.
:P
ஐய்யோ... நான் பயந்தபடியே ஆகிடுச்சே...
Deleteஎடிட்டர் சார், Operation DryClean - season2 க்கு நேரம் வந்துடுச்சுன்னு இன்னுமா உங்களுக்குப் புரியலை? அவ்வ்வ்...
இதோ உங்கள் ஸ்பெசல்
Deleteஸ்பெசலே ஸ்பெசல்
ஸ்பெசலின் ஸ்பெசல்
ஸ்பெசலாய் ஸ்பெசல்
ஸ்பெசலோ ஸ்பெசல்
அசலாய் ஸ்பெசல்
உங்களுக்கே ஸ்பெசல்
உங்களின் ஸ்பெசல்
ஸ்பெசலாய் ஒரு ஸ்பெசல்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeletewaiting 4th december
ReplyDeleteஏம்பா இந்த லோகோ போட்டில ........பூனையாரோட லோகோவை ஏன் பேரு போட்டு அனுபிட்டா 1000 ருபாய் கிடைக்கும் தானே .........
ReplyDeleteசுலப முறையில் 1000 பெற நாடுவீர் அடுத்தவர் லிங்க் ...................
Delete:D
Deleteஈரோட்டை சேர்ந்த "மியாவ் மியாவ்" ஆசாமியும்,"ஓல்ட் காப்பரும்" இப்போதெல்லாம் பயங்கர தோஸ்த் ஆகிவிட்டார்களாம்.இணையத்தில் மேற்படியார்களின் அட்டகாசம் தாங்கவில்லையாம்.தோஸ்த்கள் இருவரின் கொட்டத்தை அடக்குவதை பற்றி "தூய பேயாரும்","கர்னாடக கத்தியாரும்" ஐந்து நட்சத்திர ஓட்டலில் ரூம் போட்டு யோசித்து வருகிறார்களாம்.இதைப்பற்றி நமது நிருபரிடம் பேசிய "அறிவில்லாத அமைச்சர்" கூடிய விரைவில் தோஸ்த்களின் அளப்பரைகளுக்கு ஆப்பு வைக்க ஆவன செய்யப்பட்டுள்ளதாக கூறி தனக்கே உரிய வில்ல சிரிப்புடன் கண்சிமிட்டினாராம்.
ReplyDeleteஇந்த விஷயம் எதுவும் பட்டாசு ஊர்காரருக்கு தெரியாதாம்.விஷயம் தெரியும்போது அதிர்வேட்டு நிச்சயம் என்று ஆளாளுக்கு வதந்தி கிளப்புகிறார்களாம்.
இந்த அக்கப்போர் எப்ப முடியுமோ என்று "சிங்கமுத்து" விசுவாசிகள் கவலையோடு இருக்கிறார்களாம்.
ஓல்ட் காப்பர்... ஹா ஹா!
Deleteஅட்டகாசம். ஒரு அழகான பெயரை 'ஓல்ட் காப்பர்' என்று மாற்றியதற்கு திரு. ஓல்ட் காப்பர் இன்னொரு பாட்டம் அழப் போகிறார் பாருங்கள் :)
Deleteஹ ஹ ஹா .....பட்டாசு ஊர்காரர் அணுகுண்டுடன் தூய பேயார் தொங்கும் மரத்தை தேடி அலைவதாய் கேள்வி ! ஆவிகள் ஜாக்கிரதை ; நல்ல ஆவி, கெட்ட ஆவி என பார்க்க போவதில்லையாம் ! நல்ல ஆவியால் கே(கெ)ட்ட ஆவிகளும் கிலி கொண்டலைவதாய் கேள்வி !
Deleteஹா ஹா ஹா! புனித சாத்தானின் நகைச்சுவை உணர்வுக்கு பள்ளிபாளையத்தையே எழுதிக் கொடுக்கலாம்.
Delete'ஓல்டு காப்பர்' - சூப்பர்! :D
//திரு. ஓல்ட் காப்பர் இன்னொரு பாட்டம் அழப் போகிறார் பாருங்கள் :)//..............
Deleteஓல்ட் காப்பர் சரி அதென்ன காப்பர் பாட்டம் ..............?
//நமது நிருபரிடம் பேசிய "அறிவில்லாத அமைச்சர்" கூடிய விரைவில்................//
Deleteநைசா நம்பளையும் போட்டு தாக்ராரே ...........புளிச்ச சாத்தான் ...............!!!!!
டியர் புளிச்ச சாத்தான்............ஏன் கிட்ட ஒரு ''அதிர்ஷ புக்'' இருக்கு...........சிப்பாயின் சுவடுகளில் ..........யாருமே என்கிட்ட இருந்து வாங்கிக்க மாட்டேன்குறாங்க .......ப்ளீஸ் நீங்களாவது வாங்கிக்க படதா ...................ஹலோ புளி புளி ........ஓடாதீங்க............ரூம் போட்டு படிங்க
@மதியில்லா மந்திரி: "புளிச்ச சாத்தான்"... அருமையான பெயர்கள்.. எனக்கும் யாராவது பெயர்வைத்து சிறப்பியுங்களேன்...
Deleteஇப்படிக்கு,
சொந்த செலவில் சூனிய மெம்பர் #13
@saint satan:
Delete'ஓல்ட் மாங்க்' கேள்விப் பட்டிருக்கிறேன்!அது என்ன 'ஓல்ட் காப்பர்'?! :D நண்பர் ஆதி தாமிரா, நம்மை* விட கொஞ்சம் ஓல்ட் தான் என்றாலும், குணத்தில் "கோல்ட் காப்பர்" ஆவார்! ;-) ஆனால், அவர் அடிக்கடி குண்டு ஸ்பெஷல் கேட்டு இங்கு அளப்பரை செய்வதால்; இனிமேல் அவரை, 'குண்டு தாமிரா' என்று அழைக்கலாமா என்று, 'கனத்த' யோசனையில் இருக்கிறேன்! :D
அவர் என்னதான் 'குண்டு', 'குண்டு' என்று தனியே புலம்பினாலும், இனி அவருக்கு 'பைண்டு' செய்த 'பைண்டிங் ஸ்பெஷல்(கள்)' மட்டுமே கிடைக்கும் என்பது (எனக்கு) ஆறுதலான சேதி! ;-)
பி.கு: "நம்மை*" - சாத்தான் ஜி, அந்த நட்சத்திரக்குறி உங்களுக்குக்காகத் தான்! ;) என்னை விட ஆதிக்கும், அவரை விட உங்களுக்கும் வயது அதிகம் என்பது, அகிலம் அறிந்த உண்மை தானே?! ;)
@Ramesh Kumar:
//எனக்கும் யாராவது பெயர்வைத்து சிறப்பியுங்களேன்//
ஏற்கனவே சில பெயர்கள் வைத்திருந்தேனே? அவை பிடிக்கவில்லையா?! ;) சரி சரி, அவற்றை விட அருமையானதொரு பெயர் வைத்து விடுவோம்! :D
உங்களது ப்ரொஃபைல் படத்தில் இருக்கும், நான் விரும்பும் நாயகர்களில் ஒருவரான "Rib Kirby"-ஐப் போல - எந்த ஒரு விஷயத்தையும் நிதானமாக அணுகி, தெளிவாக புலனாய்வு செய்து, ஆன் தி ஸ்பாட் தீர்ப்புக்கள் வழங்குவதால், இன்றிலிருந்து நீங்கள் "நீதிக் காவலர் ரமேஷ் குமார்" என்றே அனைவராலும் அன்புடன் அழைக்கப் படுவீர்களாக! :-) :-)
// நீதிக் காவலர் ரமேஷ்குமார் //
Deleteஹா ஹா! 'நாட்டாமை' ரமேஷ் என்பது கூட கச்சிதமாக இருக்கும் எ.எ.க! ;)
@கார்த்திக், ஊஹும்... எனக்கு ஓல்டு காப்பர் மற்றும் புளிச்ச சாத்தான் மாதிரி converted பெயர்தான் வேண்டும்! நீங்கள் வைத்த மற்ற பெயர்கள் அந்தந்த நேரத்தில் பொருத்தமாகதான் இருந்தது, வேறுவிஷயம்! :D
Deleteஒரு சிறிய correction, தீபாவளி மாதிரி பலகார நாட்களில் என் பெயர் "தீனிக் காவலன்" :D
@Ramesh Kumar:
Delete//ஓல்டு காப்பர் மற்றும் புளிச்ச சாத்தான் மாதிரி converted பெயர்தான் வேண்டும்//
Converted பெயர் வைக்க முதலில் ஒரு Clean ஆன பட்டப் பெயர் அவசியமில்லையா?! ;-) "நீதிக் காவலர்" என்று இலை மறை காயாக நான் சொன்னவுடன், விஜய் அதை கப்பென்று "நாட்டாமை" ஆக convert செய்து விட்டார் பார்த்தீர்களா?! :D
@Erode VIJAY:
நம்முடைய வழக்கமான Encryption algorithm-ஐப் பயன்படுத்தி, கீழே உள்ள ரகசிய செய்தியை decode செய்து படிக்கவும்! ;-)
ஏற்கனவே நாம வச்சுக்கிட்ட பேசி நான் மாதிரியே போட்டதும் கமெண்டு பேரை அந்த பண்ணி கன்வெர்ட் ரொம்ப போட்டதிற்கு விஜய் நன்றி ! ;-)
கனவான்களே! சொந்த செலவில் எவ்வாறு சூனியம் வைத்துக்கொள்வது என்பது பற்றிய எனது live demo-வை மேலே பார்த்தீர்களா?! :D
Deleteஅவ்வ்வ்....
டியர் ரமேஷ் குமார் !!!
Deleteஉங்களுக்கு இல்லாத பட்ட பெயரா...? இதோ பிடியுங்கள் !
"சூட்டு மாமோய்"
எப்பூடி...? ஹிஹி!!!
டியர் கார்த்திக்,
DeleteEncryption - decoding - இதெல்லாம் எதற்கு? நீங்கள் சாதாரணமாக எழுதினாலே இங்கு யாருக்கும் புரியாதே?! :D
நாட்டாமை + சூட்டு மாமோய் + அட்ட கத்தி = சூட்டு போட்ட அட்ட கத்தி நாட்டாமோய்! :P
Deleteஎத்தர் கும்பல் 8 என்ற தலைப்பில் ஒரு புத்தகம் நண்பர் ஒருவரிடம் இருப்பதை பார்த்தேன். யாரிடம் எத்தர் கும்பல் 1 முதல் 7 வரை இருக்கிறது
ReplyDeleteடியர் ஷல்லூம் !!!
Deleteநீங்கள் குறிப்பிட்ட ஏழு புத்தகங்களும் அடியேனிடம் உள்ளது.உங்களிடம் உள்ள இரத்தப்படலம் குண்டு புக்கை கொடுத்தால் எக்ஸ்சேஞ் செய்து கொள்ளலாம்:-)
@ ஷல்லூம்
Deleteஅப்போ... 'வருஷம்-16' படம் பார்த்தீங்கன்னா, மீதி 15 வருஷப் படம் எங்கேன்னு கேப்பீங்களா? கிர்ர்ர்... உங்களையெல்லாம் வாசகரா வச்சுக்கிட்டு நம்ம எடிட்டர் படும் பாடு இருக்கே...
8 பாகங்களுடன் முடிந்துவிட்டதாக நினைக்காதீர்கள். XIII எப்படி 13 பாகங்களுக்கு மேலே வளர்கிறதோ அதே போல இதுவும் 8 பாகங்களுக்கு மேல் வளர்ந்துள்ளது. Exchange செய்யும்போது வெளிவந்துள்ள latest பாகமான எத்தர் கும்பல் 80 வரை கேட்டு வாங்குங்கள்!
Delete// எத்தர் கும்பல் 80 வரை கேட்டு வாங்குங்கள் //
Delete:D
யாரந்த மிச்ச 79 பேர்
Delete@ம. ம
Deleteதலைவருக்கே தொண்டர்களை தெரியவில்லையா
@Ramsey Kumar
தகவலுக்கு நன்றி
@பு. சா
டீல் ok
@E. V
நான் வருஷம் 38 வரை பார்த்து விட்டேன்
டியர் ஷல்லூம் !!!
Deleteவருஷம் -16 ஐ விடுங்க.ஆயுசு நூறு-ன்னு ஒரு படம் வந்துச்சு.நல்ல வேலை நீங்க அந்த படத்தை பாக்கலேன்னு நெனைக்கறேன்:-)
ஆயிரம் ஜென்மங்கள்
Deleteஆயிரத்தில் ஒருவன்
கோடீஸ்வரன்...
அப்பப்பா... நினைச்சுப்பார்க்கவே பயமா இருக்கு...
:-)))))))))))))))))))))))))))))))))))
DeleteDiabolik cover art is excellent, not sure why diabolik was missing in 2014 schedule?
ReplyDeleteDon t know why there is no diabolik, detective robin and martin in 2014.... Try to publish at least any one of them ....
ReplyDeleteஅட்டை படங்களை கத்திரி போட்டு கொத்தி குதறுவதால்......அட்டகத்தி ரமேஸ் என்று அழைக்கப்பட கடவ
ReplyDeleteHa Ha Ha!
Delete