நண்பர்களே,
வணக்கம். மழை பெய்து ஓய்ந்ததொரு feeling கடந்த ஒரு வாரமாய் ! தீபாவளி எப்போதுமே பரபரப்பிற்குப் பஞ்சமில்லா பண்டிகை தான் என்றாலும், எங்கள் நகரில் அந்நேரம் ஒரு extra buzz இருப்பது வாடிக்கை ! பட்டாசு மொத்த விற்பனை களை கட்டுவது ஒரு பக்கமெனில் - தீபாவளி கொணரும் 2 மாதத்து போனஸ் பட்டுவாடா - ஊர் முழுவதிலும் சிகப்பு & பச்சை நோட்டுகளில் புன்னகைக்கும் காந்தித் தாத்தாவைப் பரவலாய்ப் புளங்கச் செய்ய, அனைத்து மக்களிடமும் ஒரு துள்ளல் இருப்பது வழக்கம். (அந்த 2 மாத போனஸ் பணத்தைப் புரட்ட விழி பிதுங்கி நிற்கும் தொழிலதிபர்களின் பிலாக்கனம் தனிக் கதை !!)
இந்தப் பரபரப்பிற்கு மத்தியில் "தீபாவளிக்கு 3" என்ற மார் தட்டலோடு செய்த வாய் ஜாலங்கள் - செயலாகிடும் வேளை வந்த போது பேய் முழி முழிக்கச் செய்தது ! புரட்டப் புரட்ட வந்து கொண்டே இருந்த இரவுக் கழுகார் குழப்பமின்றி ஒரு பக்கம் பெண்டை நிமிர்த்த ; வியட்நாமில் தெருத் தெருவாய் சுற்றிடும் வாலோன் "சிப்பாயின் சுவடுகள்" புண்ணியத்தில் மறு பக்கம் மென்னியைத் திருகிக் கொண்டிருந்தார் ! பற்றாக்குறைக்கு 2014-ன் அட்டவணையில் இறுதிச் சுற்று நகாசு வேலைகள் ரொம்பவே 'பஸ்கி' எடுக்கச் செய்து விட்டது ! அதற்கு மத்தியில் அமெரிக்கப் பயணம் ; ப்ராசசிங்கில் ; அச்சுப் பணிகளில் தாமதம் ; அட்டைப்பட டிசைன்களை பூர்த்தி செய்வதில் சுணக்கம் என B.P -ஐ எகிறச் செய்ய அவ்வப்போது சங்கதிகள் அரங்கேறி வந்தாலும் - தட்டுத் தடுமாறி 2 இதழ்களையாவது தீபாவளிக்குக் கரை சேர்த்திட முடிந்தது ஆண்டவன் செயலே ! So - ஒரு வழியாய் இதழ்களை despatch செய்து விட்டு, பணியாளர்களை போனசோடு வழியனுப்பி விட்டு, 3 நாள் விடுமுறையில் புறப்பட்ட போது சன்னமாய் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்தது !
ஆனால் டி-விக்குள் மூழ்குவதையும், அதிரசம், முறுக்குகளைப் பதம் பார்ப்பதையும் அரை நாளுக்கு மேலாய் செய்திடப் பொறுமை இருந்திடவில்லை என்பதே நிஜம் ! பரபரப்பாய் வேலை செய்து பழகி விட்டு, 'அக்கடா' வென விட்டத்தை வெறித்துப் பார்ப்பது கொஞ்ச நேரத்திற்கு மேலாகத் தொடர்ந்திடச் சாத்தியமில்லா செயல் என்பது புரிந்தது ! So உங்களின் பின்னூட்டங்களை மொபைலில் பார்த்திடுவது ; அந்த அபிப்ராயங்களை ; சிந்தனைகளின் பின்னணிகளை அசை போடுவது என்பதற்கு இடையே - தீபாவளியின் 2 இதழ்களையும் கொஞ்சம் சாவகாசமாய்ப் புரட்ட எத்தனித்தேன் ! ஒரு இதழின் பணிகள் நிறைவுற்ற பின்னே அந்த புக்கை சும்மா மேலோட்டமாய்ப் புரட்டுவதைத் தாண்டி எப்போதுமே அதனுள் புகுந்திட முயற்சிப்பது எனது வழக்கமல்ல ; ஆனால் டி-வி யில் ஓடிய மொக்கைகளைத் தவிர்த்து பொழுது போக வேறு மார்க்கம் தென்படவில்லை என்பதால் இம்மாத இதழ்களைப் புரட்டினேன் ! ஒரு வாசகனாய் ; காமிக்ஸ் ரசிகனாய் எனக்கு மனதில் தோன்றிய சிந்தனைகளை - இங்கு நண்பர்களின் கருத்துக்களோடு ஒப்பிட்டுப் பார்த்தேன் ! இதே வலைப்பூவில் நானும் ஒரு வாசகனாய் இந்த இதழ்களைப் பற்றி விமர்சனம் செய்திருப்பின் - என்ன எழுதி இருப்பேன் ? என என்னை நானே கேட்டுக் கொண்டதன் விளைவு தான் இந்தப் புதிய பதிவு ! (ஒரு பதிவுக்காக என்னவெல்லாம் டக்காடி வேலை பண்றான் ? என உங்களின் mind voice ஒலிக்கும் பட்சத்தில் தவறு அதன் மீதல்ல தான் !!)
எல்லோரையும் போலவே நான் முதலில் கையில் எடுத்தது டெக்ஸ் வில்லரையே...! அட்டைப்படத்தில் ரொம்ப நாள் கழித்து solo -வாக டெக்ஸ் இடம் பிடிக்க - நம் ஓவியரின் புண்ணியத்தில் ஒரு நெருங்கிய நண்பனை அழகாய்த் தரிசித்த உவகை கிட்டியது. புக்கின் கனமும் பழைய நினைவுகளைக் கிளறி விடும் விதத்திலிருக்க - பக்கங்களைப் புரட்டுவதில் சிக்கல் தோன்றிடவில்லை ! (இப்போது ) பழகிப் போன ஹாட்லைன் அன்றைய அந்த அவசர ஈர்ப்பைத் தரவில்லை என்பதால், புதிதாய் அறிவிப்புகள் ஏதும் உள்ளனவா ? என்ற ஒரு மேலோட்டமாய் glanceக்குப் பின்னர் பக்கத்தைப் புரட்டினேன். "டெக்ஸ் சாம்ராஜ்யத்தின் அதிபதியோடு 4 பக்கப் பேட்டி" என்பது நம் இதழ்களின் பாணிக்கு முற்றிலும் புதிதானது என்பதால் படிக்க ஆர்வம் தோன்றியதில் வியப்பில்லை. டேவிட்டின் பேட்டியில் புதிதாய் விஷயங்கள் அதிகம் இல்லை என்றாலும், டெக்ஸ் பற்றிப் பேசக் கேட்டதில் சந்தோஷமே ! அதிலும் டெக்ஸ் ரசிகர்களின் எண்ணிக்கைகளில் நாம் ஒரு சிறுபான்மையாக இருந்தால் கூட நமது ஆர்வமும், நேசமும் கவனிக்கப்படாது போகவில்லை என்பது மனதுக்கு நிறைவாக இருந்தது ! அடுத்து வந்த பக்கங்களில் டெக்சின் படைப்பாளிகளைப் பற்றிய அறிமுகம் ; முதல் கதையின் ஒரிஜினல் அட்டைப்படம் - பின்னர் "மரண தேசம் மெக்ஸிகோ" கதை என விரிந்தன. கதையில் எனக்கு முதலில் 'பளிச்' எனத் தோன்றியது ஓவியப் பாணியே ! நிறைய ஓவியர்கள் பணியாற்றும் தொடர் இது என்று நமக்குத் தெரிந்திருந்தாலும், :நிலவொளியில் ஒரு நரபலி" பாணியில் டெக்சைப் பார்க்க நேரிடும் போது கவலையாக இருப்பது நிஜமே ! ஆனால் இம்முறை புதிய பாணி என்றாலும் டெக்ஸ் அழகாய் ; இளமையாய்த் தோற்றம் தருவதில் ஒரு சந்தோஷம் ! டெக்ஸ் எப்போதுமே இடியாப்பங்களுக்குள் கால் வைப்பதில்லை என்பதால் - பெரிய குழப்பங்கள் இன்றி அவரது கதைகளில் ஒன்றிடுவது சுலபமே ! இரவுக் கழுகார் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் கூட நம்மை வசீகரிப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம் என்பது எனது அபிப்ராயம். ஆனால் அந்த பலமே - சில வேளைகளில் பலவீனமாகவும் உருவாகிடக் கூடும் என்பதை "மரண தேசம் மெக்சிகோ " கொஞ்சம் கொஞ்சமாய் எனக்குப் புகட்டியது ! தெளிந்த நீரோடையாய் கதை செல்வது ஒ.கே. தான் என்றாலும் இது போல் துளியும் சஸ்பென்ஸ் இல்லாது, கதை பயணிக்கும் போது நம்மையும் அறியாது ஒரு சின்ன ஆயாசம் உள்ளுக்குள் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. கார்சன் இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் சந்தானம் செய்யும் வேலையினைக் கச்சிதமாய்ச் செய்து வருவது புரிகிறது ; அவருக்கெனப் பிரத்யேகமாய் எழுதப்பட்டுள்ள வசனங்களும் அதை நன்றாகவே பிரதிபலிக்கின்றன !வீரத்தில் வெள்ளி முடியாரும் யாருக்கும் சளைத்தவரல்ல எனும் போது, அவருக்கு இன்னும் வீரியமானதொரு role தந்திட படைப்பாளிகள் தயங்குவது ஏனோ ? I miss Carson the dasher !! மெக்சிகோவினுள் புகுந்த பின்னே அதகளம் காத்துள்ளது என நினைக்கத் தோன்றினாலும், கதையின் simplicity அதற்குப் பெரியதொரு வாய்ப்பளிக்கவில்லை ! சரளமான வசனநடை படிக்க இயல்பாய் இருந்தாலும் , கதையில் ஒரு punch இல்லாது போகும் பட்சத்தில் பெரிதாய் ஒரு தாக்கத்தைத் தரவில்லை என்பதே நிஜம். ரொம்ப காலம் முன்னே வந்த "துயில் எழுந்த பிசாசு" கதையின் அளவுக்கு இந்த சாகசம் 'பப்படம்' அல்ல என்றாலும் - எனது டெக்ஸ் வில்லர் அளவுகோல்களுக்கு இது 'just pass' தான் என்பேன் ! ஆனால் எது எப்படியோ - consistent ஆன சித்திரப் பாணியைப் பாராட்டாது இருக்க முடியாது ; 224 பக்கங்களுக்கும் ஒரு வசீகரத்தை தொடர்ந்திட்ட ஓவியர் தான் இக்கதையின் நிஜ ஹீரோ ! தீவிர டெக்ஸ் ரசிகர்களுக்கு எனது கருத்தில் உடன்பாடில்லாது போகலாம் ; ஆனால் "தலைவாங்கிக் குரங்கு " ; டிராகன் நகரம் ; சைத்தான் சாம்ராஜ்யம் ; மரண முள் ; "மரணத்தின் நிறம் பச்சை " போன்ற கதைகளில் நாம் பார்த்த டெக்ஸ் இங்கு நிச்சயமாய் absent தானே ?
ஒரு சின்ன பிரேக் எடுத்து விட்டு, கதை # 2-ஐப் புரட்டத் துவங்கினேன். இந்தக் கதையின் ஓவியர் வேறொருவர் ; இதனில் டெக்ஸ் சற்றே வித்தியாசமாய்த் தான் காட்சி தருவார் என்பதை ஏற்கனவே விளம்பரங்களின் மூலம் தெரிந்து வைத்திருந்ததால் பெரிதாய் ஒரு திகட்டல் தோன்றவில்லை. கதை கொஞ்சம் வித்தியாசமான பாணியில் புறப்பட்டதால் சுவாரஸ்யமாய்ப் படிக்கத் தொடங்கினேன். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் கார்சன் retired hurt என வீடு திரும்பும் போது கொஞ்சம் நெருடலாய் இருந்தது. கார்சன் ; டைகர் ஜாக் ; டெக்சின் மகன் கிட என யாரும் இல்லாத டெக்ஸ் solo சாகசம் என்பதை symbolic ஆகச் சொல்லிடத் தான் அட்டைப்படத்தில் இரவுக் கழுகாரை தனியாளாய் நிறுத்தி உள்ளனரோ ? இதுவும் கூட பெரியதொரு twists இல்லாத சீரான action கதை மட்டுமே என்பதை யூகிக்க அதிக நேரம் பிடிக்கவில்லை. "கடமை கண்ணாயிரமாய்" நமது ரேஞ்சர் காடு, மலை, சதுப்பு என அந்த ஸ்கௌட் ஆசாமியை விடாது விரட்டும் போது அவரது singleminded dedication பாராட்டுகளைப் பெறுவதோடு ஒன்றிரண்டு கொட்டாவிகளையும் சேர்த்தே நம்மிடம் சம்பாதிக்கின்றது ! எவர்க்லேட்ஸ் சதுப்புக் காட்சிகள் ; செமினோல் இந்தியர்களின் வித்தியாசமான கெட்டப் என புதுமைகள் இல்லாது போயின் இதுவும் கூட ரொம்பவே flat ஆனதொரு சாகசமாய் அமைந்து போயிருக்கும். ஒற்றை ஆசாமியாய் கதை முழுவதிலும் டெக்ஸ் பயணித்தாலும், அவரது அதிர்வேட்டு பார்முலா இந்தக் கதையைக் கரை சேர்த்து விட்டது என்பது என் அபிப்ராயம் ! அவசரத் தேவை : முறுக்கேற்றும் ஒரு இடி-மின்னல் ரக டெக்ஸ் சாகசம் !!
'சிங்கத்தின் சிறுவயதில்" தற்போது ' லயனின் golden age-ல் பயணம் செய்து கொண்டிருப்பதால் படிக்க ரம்யமாக இருந்தது. 1987-ல் வெளிவந்த அந்தக் கதைகள் ஒவ்வொன்றும் தத்தம் பாணிகளில் blockbuster ஹிட்டாக அமைந்ததை நினைவுபடுத்திப் பார்ப்பது ஒரு சுகானுபவம் ! அவை இப்போது வண்ணத்தில் மறுபதிப்புகளாய் வருவது சந்தோஷமே !
நூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்கக் கடைக்குச் சென்றால் நாலு ரோல் cap மட்டும் தான் கிடைக்கும் எனும் வேளையில், ஒரு 10,000 வாலாவை கொழுத்திப் போட்டுள்ள வகையில் டெக்ஸ் செய்துள்ளது சாதனையே ; ஆனால் இன்னும் வீரியமான கதைகளோடு இந்த வெடிச் சத்தம் கேட்டிருப்பின் அதன் சுகமே அலாதியாக இருந்திருக்காதா ? TEX கதைத் தேர்வில் இன்னும் கொஞ்சம் கவனம் தேவை சார் !
அடுத்து என் கைகளில் புரண்டது "ஒரு சிப்பாயின் சுவடுகளில்" ! கொக்கு வேட்டைக்காரன் போல் அட்டைப்படத்தில் ஒருவன் போஸ் கொடுத்து நிற்க, பின்னணியில் 1970's முத்து காமிக்ஸ் அட்டைப்படங்களை நினைவூட்டும் விதமான டிசைன் இருந்தது ! "அட்டகாசம்" என்ற பாராட்டுக்கோ ; 'சொதப்பல்' என்ற கண்டனத்திற்கோ இடம் தரா ஒரு மத்திமமான அட்டைப்படம் என சொல்லுவேன். "வியட்நாம் யுத்தப் பின்னணியில் ஒரு கிராபிக் நாவல்" என்ற பீடிகையோடு துவங்கிய இதழை எவ்வித எதிர்பார்ப்புமின்றி புரட்டத் துவங்கினேன். "நீ -ள-மா-ன " காமிக்ஸ்டைம் பகுதி வரவேற்றது முதலில் ! 2014-ன் அட்டவணை ; புதுச் சந்தா பற்றிய அறிவிப்புகள் ; கதைத் தேர்வுகளின் பின்னணிகள் என ஏகப்பட்ட விஷயங்கள் பற்றிய பகுதி இது என்பதால் அந்த நீளத்தைப் புரிந்து கொள்ள முடிகின்றது ! '2014-ன் அட்டவணை பற்றிய அபிப்ராயங்களை கடைசியில் வைத்துக் கொள்வோம் ; கதையைப் படிப்போம்' எனப் புரட்டத் த்வங்கினேன். முதல் பக்கத்திலேயே நிறைய முதியவர்கள் ; பத்தி பத்தியாய் சோக நெடியடிக்கும் தத்துவப் பின்னணி வசனம் என்பதை சந்தித்த போது - 'அப்டிக்கா ஜூட் விட்டால் என்ன ?' என்ற கேள்வி எனக்குள் எழாமல் இல்லை. ஆனால் அந்த கரடு முரடான சித்திரங்கள் + மாறுபட்ட வண்ணக் கலவை இன்னும் கொஞ்சம் பொறுமையாய் இருப்போமே என்று சமாதானம் சொல்லியதால் தொடர்ந்து படிக்கத் தொடங்கினேன். வித்தியாசமான கதைக் களம் ; டெக்ஸ் வில்லரில் காணோமே எனத் தேடிய அழுத்தம் இங்கு அபரிமிதமாகவே விரவிக் கிடப்பதை கொஞ்ச நேரத்திற்கெல்லாம் உணர்ந்திட முடிந்தது ! வழக்கமான கதை நகற்றல் பாணியில் இருந்து மாறுபட்டு இது ஒரு தினுசாய் வளைந்து நெளிந்து செல்வதையும் புரிந்திட முடிந்தது. பிரான்சின் குக்கிராமங்கள் ; அந்த இயற்கைச் சூழல்கள் ; எந்த அதிரடிக்கும் தயாரில்லா ஒரு நரை மண்டை நாயகன் ; ஆங்காங்கே வரலாற்றோடு பின்னிப் பாயும் கதை பாணி என முதல் 20 பக்கங்கள் சொல்லிய சேதி - THIS IS DIFFERENT என்பதே ! விறுவிறுப்புக்கும் அதிரடிகளுக்கும் நிறையவே பழகிப் போய் விட்ட நமக்கு இது போன்ற நத்தை வேகக் கதைகளோடு ஒன்றிடுவது சுலபமல்ல தான் என்றாலும் - ஒரு இனம் புரியா ஈர்ப்பைக் கொண்டுள்ள கதை இது என்ற சிந்தனை தலைக்குள் குடி கொண்டு விடுவதால் அதனை தூக்கிப் போட சாத்தியமாகவில்லை. கொஞ்சம் கொஞ்சமாய்க் கதையோடு ஒன்றிப் படிக்கத் துவங்கிய போது முதல் பாதி முடிந்திருந்தது ! பிரான்சில் துவங்கிய களம் வியட்நாமின் அன்ன வயல்களுக்குச் செல்வதை லேசான மிரட்சியோடு தான் பார்த்தேன். "வியட்நாம் வீடு " படத்தின் தலைப்பைத் தாண்டி அந்த நாட்டோடு நமது பரிச்சயம் பூஜ்யம் என்பதால் அந்த மஞ்சள் தோல் மனிதர்களின் உலகிற்குள் கொஞ்சம் உஷாராகவே நுழைந்தேன். வான்சின் துல்லியமோ ; ஜிராடின் நுணுக்கமோ ; பிலிப் பிரான்க்கின் நவீனமோ இல்லாவிட்டாலும், இந்த ஓவியரின் ஒரு முரட்டு stroke ஓவியப் பாணியில் ஒரு மந்திரம் இருப்பதை பக்கங்கள் நகர நகர புரிந்திட முடிந்தது. அவ்வப்போது கதையில் வரலாற்றுக் குறிப்புகள் இணையும் போது பல்லெல்லாம் லேசாய் ஆடுவதைத் தவிர்த்திட முடியவில்லை என்றாலும், மொத்தமாய் பல்செட் கட்ட அவசியம் தராமல் மொழிபெயர்ப்பில் சமாளித்துள்ள விதம் புரிகிறது ! இறுதியில் அந்த சிப்பாயின் கதி என்ன ; அந்த விசாரணைக்கு முட்டுக்கட்டைகள் போடப்பட்டது ஏன் என்ற பகுதிகள் இன்னும் கொஞ்சம் புரியும் விதமாய் இருந்திருக்கலாம் என்று தோன்றியது. 'புதிதாய் ஒரு தலைப்புச் செய்தி கிட்டி விட்டால் - ஒரு மணி நேரத்திற்கு முந்தைய சமயம் கூட வரலாறே !" என்பதை உணர்த்தும் விதத்தில் கிளைமாக்ஸ் அமைந்திருப்பது படு யதார்த்தம். கதையை முழுவதுமாய்ப் படித்து முடித்த போது தோன்றிய முதல் கேள்வி : "நாம் இதற்குத் தயாராகி விட்டோமோ ? என்பதே ....!
ஒரு லார்கோவை ; ஒரு லக்கி லூக்கை ; ஒரு டயபாலிக்கை ரசிக்கும் நம் பாணிகளுக்கு - இத்தனை கனமான ; அந்நியமான கதைக்களம் ஒ.கே. தானா ? தேவை தானா ? ஒரு ப்ளூ கோட் பட்டாளத்தை அறிமுகம் செய்த கையோடு இத்தனை கனமானதொரு ஆக்கத்தையும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியுமென எடிட்டர் கருதுவதை நம் ரசனைகளின் மேல் வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையாய் எடுத்துக் கொள்வதா - அல்லது குருவி தலையில் வைக்கப்பட்ட பனங்காயாய் பார்த்திடுவதா ? தலைக்குள் இந்த சிந்தனை ஓடிய அதே வேளையில் "ஒ.சி.சு." ஏற்படுத்திய தாக்கம் என்னுள் ரீங்காரமிட்டதும் நிஜமே. கதையை மனதுக்குள் மெள்ள அசை போட்ட போது, புரியாமல் நின்ற சில சங்கதிகள் கூட பொருள்படத் துவங்கியது போல் தோன்றியது. இந்தக் கதையின் ஆக்கத்தில் அவசியமாகி இருக்கக் கூடிய ஆராய்ச்சிகள் ; வரலாற்றுப் புரட்டல்கள் ; பிரான்சின் அரசு இயந்திரத்தை பழிக்கும் ஒரு கதையினை பிரான்சிலேயே வெளியிடும் பொருட்டுத் தயாரிக்க நினைத்த படைப்பாளிகளின் அந்த தைரியம் என நிறைய விஷயங்களும் மனதில் நிழலாடின ! இது ஒரு வெற்றியா ? தோல்வியா ? என்பதையெல்லாம் காலம் தான் நிர்ணயம் செய்யும் என்றாலும் பிரான்சுக்கு வெளியே - உலகிலேயே முதல் முறையாக நாம் தான் இந்தக் கதையினை படிக்கிறோம் எனும் போது - நம் ரசனைகளில் நிச்சயம் ஒரு quantum leap நிகழ்ந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை ! ரிசல்ட் : "விஷப் பரீட்சை தான்....ஆனால் எப்போதாவது ஒரு முறை என்ற ரீதியில் இதுவும் அவசியமே !" என்று சொல்லத் தோன்றுகிறது !
எஞ்சி நிற்பது 2014-ன் அட்டவணையே ! மிகுந்த எதிர்பார்ப்புகள் ; அவரவருக்கு ஒரு ஆதர்ஷ நாயகர் ; ஆளுக்கொரு wish list ; மறுபதிப்பினில் ஆளுக்கொரு அபிப்ராயம் என்ற சூழலில் அனைவரையும் ஒருங்கே குஷி கொள்ளச் செய்வது சிரமமே என்ற புரிதலோடு அட்டவணையைப் புரட்டினேன். இரண்டு கதைகள் இணைந்து ரூ.100 விலைக்கு வந்து கொண்டிருந்த பாணிக்கு கூடிய மட்டில் டாடா காட்டி விட்டு, singles இதழ்களாய் வெளியிடத் திட்டமிட்டிருப்பது பார்த்த உடன் கவனத்தை ஈர்த்த விஷயம். விற்பனைக்கு ஏதுவாக இருப்பின் நமக்கும் ஒ.கே. + கூடுதலாய் ஒரு அட்டைப்படம் என்பதால் no problems here ! அதே போல கௌபாய் கதைகளின் ஆக்கிரமிப்பை தளர்த்தும் விதமாய் ஆக்ஷன் ; டிடக்டிவ் கதைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருப்பது obvious ! ப்ருனோ பிரேசில் ; சாகச வீரர் ரோஜர் ; ரிப்போர்டர் ஜானி ஆகியோரின் புது சாகசங்கள், வண்ணத்தில் வரவிருப்பதால் கௌபாய் கதைகளுக்கு backseat தரப்பட்டதில் பெரிதாய் வருத்தமில்லை. ஆனால் டெக்ஸ் வில்லர் (புதிய) கதைகளுக்கு ஒரே ஒரு சான்ஸ் மட்டுமே என்பதை சரி செய்ய - லயன் 30 -வது ஆண்டுமலரில் இடம் தரப்படும் என்பது எனது எதிர்பார்ப்பு. மற்றபடிக்கு இப்போதைய சூப்பர் ஸ்டார் லார்கோ ; காமெடி புது வரவுகளான ப்ளூகோட் பட்டாளம் ; கேப்டன் டைகர் ; ஷெல்டன் ; லக்கி லூக் ; சிக் பில் ஆகியோரது தேர்வுகளில் பெரிதாய் ஆச்சர்யம் ஏதும் இல்லை தான். மர்ம மனிதன் மார்ட்டின் தலை காட்டக் காணோம் ; அதற்குப் பதிலாய் "டைலன் டாக்" அறிமுகமாவது - ஒரு freshness தேவை என்ற ரீதியில் இருந்திருக்கலாம் என்பது எனது அபிப்ராயம் . ஜில் ஜோர்டன் ஒரு குட்டியான surprise ! மறுபதிப்புகளைப் பொறுத்த வரை "பூம்-பூம் படலம்" முதல் முறை வெளியானது 2 வண்ணத்தில் + ஒரு நீளமான வாசகர் spotlight படைப்போடு என்பதால் அந்த சமயம் நிறைய பேரால் சரி வர ரசித்திடப்படவில்லை. இப்போது பெரிய சைசில், வண்ணத்தில் வருவது பளிச் ரகத்தில் இருக்கும் என்று நினைக்கிறேன். அதே போல் பிரின்ஸ் ; ப்ருனோ பிரேசில் கதைகள் மறுபதிப்புப் பட்டியலில் இருப்பதில் மகிழ்ச்சியே ! சந்தாத் தொகையினைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென்ற நோக்கில் மறுபதிப்புகளின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளதும் நிதர்சனம். No comments on that...! Sunshine Graphic Novels ???? :-)
இறுதியாய் நண்பர்கள் அனைவரும் எழுப்பியுள்ள அதே கேள்வியும் கூட : "கார்சனின் கடந்த காலம் " வண்ணத்தில் ?? பதில் கிடைக்குமா ?
இவை எடிட்டரின் வரிகள் :ஆளுக்கொரு அபிப்ராயமென்பது வாழ்க்கையின் ஒரு இன்றியமையா அங்கமாய் இல்லாது போயின் அதன் சுவாரஸ்யம் பெரிதும் குன்றி விடும் என்பது நிச்சயம் ! So மிகச் சின்னதொரு வாசக வட்டத்தைக் கொண்ட நமது காமிக்ஸ் காதலினுள்ளும் அந்த அபிப்ராய பேதங்கள் எழுவது சகஜம் தானே ? பெரிதாய் பீடிகைகள் போடாமல் - சமீபத்திய சர்ச்சைக்கு இடம் தந்துள்ள இந்த "கார்சனின் கடந்த காலம் - வண்ணத்தில் "விஷயத்துக்கு நேரே வருவது தேவலை எனப் படுவதால் here goes :
ஆரம்பத்திலேயே ஒரு சின்ன விஷயத்தை நண்பர்களது கவனத்திற்குக் கொண்டு வருவது அவசியம் என்று படுகிறது ! இணையத்திலும், ஆங்காங்கே டெக்ஸ் ரசிகர்களின் FB பக்கங்களிலும் இந்தக் கதையின் வண்ணப் பக்கங்களைப் பார்த்து அவ்வப்போது ஏக்கப் பெருமூச்சுக்கள் பரிமாறப்படுவது நான் அறிந்திருக்கா விஷயமல்ல. உங்களின் ஆதங்கங்களை இன்னமும் கூடுதலாக்கிட வேண்டாமே என்ற சிந்தையில் தான் 'டெக்ஸ் - வண்ணத்தில்' என்ற விஷயத்தில் உங்களில் பலரும் அறிந்திருக்க இயலா ஒரு தகவலை நான் உரக்கச் சொல்லிடப் பிரியப்படவில்லை ! சமீபத்தில் இத்தாலியில் போனெல்லி நிறுவனத்தாரோடு நான் பேசிக் கொண்டிருந்த போது தான் இவ்விஷயம் எனக்கே தெரிய வந்தது. டெக்ஸ் கதைகளின் சகலமும் black & white -ல் உருவாக்கப்பட்டவை தான் என்ற போதிலும் - சில ஆண்டுகளுக்கு முன்பாக இத்தாலிய பிரதான செய்தித்தாள் ஒன்றோடு அவர்கள் செய்து கொண்ட ஏற்பாட்டின்படி - அந்நாளேட்டின் சந்தாதாரர்களுக்கு வாரம் ஒரு வண்ண டெக்ஸ் இதழ் வழங்கப்பட்டது !! இதன் பொருட்டு b & w -ல் இருந்த கதைகளையும் வண்ணமாக்கி விட்டனர் ! So இன்றைய தேதிக்கு சுமார் 500 டெக்ஸ் இதழ்கள் வண்ணத்தில் தயாரே ! ஆகையால் - "கார்சனின் கடந்த காலம் " வண்ணத்தில் வெளிவந்த சொற்பப் பொக்கிஷங்களில் ஒன்று" ; "இதனை இன்று வண்ணத்தில் வெளியிட இயலாது போயின் அது பெரியதொரு பிழையாகிடும்" என்ற ரீதியிலான அபிப்ராயங்கள் சரியன்று - கிட்டத்தட்ட டெக்சின் முழுமையும் வண்ணமயமாக்கப்பட்டு விட்ட நிலையில் - this is just another story amongst that long colorful list !
'சரி - சகலமும் வண்ணத்தில் கிடைக்கும் போது - அவற்றை வண்ணத்திலேயே வெளியிடுவதில் என்ன சிக்கல் ?' என்ற கேள்விக்கு இப்போது வருகிறேன் ! ஒரு கதையின் ராயல்டி பற்றிய பேச்சு வார்த்தைகள் நடந்தேறும் போது பிரதானமாய் கவனிக்கப்படுவது இதழின் விலையும் ; விற்பனை எண்ணிக்கையுமே ! டெக்ஸ் கதைகளுக்கு நமது தற்போதைய விலை ரூ.50 ; (இனி ரூ.60) எனும் போது நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் ராயல்டி ஆனது இவ்விலையின் அடிப்படையிலேயே ! டெக்ஸ் ஒரு சூப்பர் ஸ்டார் கதாப்பாத்திரம் என்பதால் - இதர தொடர்களை விட costly ஆனவர் ! இந்நிலையில் ஒரு 224 பக்க டெக்ஸ் சாகசத்தை நாம் திடுதிடுப்பென வண்ணத்தில் - ஆர்ட் பேப்பரில் வெளியிடவிருக்கும் பட்சத்தில் - cover price ரூ.175 என்றாகி விடும் ! கிட்டத்தட்ட மூன்று மடங்கு விலை எகிறும் போது அதன் ராயல்டியும் அதே போல் கூரையைத் தொட்டு விடும் !! 'சரி - அது கூடப் பரவாயில்லை - ஒரே ஒரு மாதத்து ஆசைக்குத் தானே இதெல்லாம் - ஒரு முறை அந்தக் கட்டணத்தை செலுத்தி விட்டால் போச்சு !' என நாம் தீர்மானிக்கலாம் தான் ! ஆனால் கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதையாக - 'ரூ.175-க்குப் போட்டாலும் உங்கள் மார்கெட்டில் டெக்ஸ் கதைகள் விற்பனையாகிடும் பட்சத்தில் - ரூ.60 விலையில் இதர மாதங்கள் டெக்ஸ் கதைகளை ஏன் வெளியிடுகிறீர்கள் ? சகலத்தையும் இதே போல் வண்ணமயமாக்கி - இதே ராயல்டிகளை தொடர்ந்து செலுத்துங்கள் !' என்று சொல்வது தான் அவர்களது உடனடிப் பதிலாக இருந்திடும் ! இதில் இன்னுமொரு beauty என்னவெனில் - டெக்ஸ் கதைகளை நாம் எந்த மாதத்தில் வெளியிட்டாலும் சரி, அதற்கான ராயல்டிகளை ஆண்டின் துவக்கத்திலேயே 50% - அடுத்த மூன்று மாதங்களுக்குள் பாக்கி 50% என்ற விகிதத்தில் பைசல் செய்தாக வேண்டும் . எகிறி இருக்கும் இன்றைய யூரோ மதிப்பில் - உண்டான normal ராயல்டிகளை அனுப்புவதே விழி பிதுங்கும் சிரமம் என்றான நிலையில் 3 மடங்கான ராயல்டிக்கு நாமே ரூட் போட்டுக் கொடுத்து விட்டு அந்தப் பாரத்தைச் சுமக்க யாருக்குச் சாத்தியப்படும் ?? இரவுக் கழுகாருக்கு சர்வ வல்லமை இருக்கலாம் தான் ; ஆனால் சாமான்யனான இந்த ஆந்தை விழியானுக்கு அதில் நூற்றில் ஒரு பங்கு பலமிருப்பதே பெரும் விஷயம் என்பதை கணக்கில் கொள்ளல் அவசியமாகாதா ? தவிரவும், வெளியிடும் அனைத்து டெக்ஸ் கதைகளும் ரூ.175 விலை எனும் பட்சத்தில் - சந்தாத் தொகை எங்கே எகிறி நிற்கும் ?
'சரி - இதெல்லாம் உன் பிரச்னை - எப்படியோ உருண்டு பிறண்டு தீர்வு கண்டு கொள் ; வண்ணத்தில் தான் "கார்சனின் கடந்த காலம் " வேண்டுமென்று ' நீங்கள் சொல்வதற்கு நான் தலை ஆட்டுகிறேன் என்றே வைத்துக் கொள்வோம் ; அதன் பின்னருமே ஒரு முக்கியமான இடர் இடையில் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும் ? நம்மிடம் தற்போது உள்ள அச்சு இயந்திரமானது கையாளக் கூடிய சைஸ் 78 செ.மீ. வரையில் தான் ! டெக்ஸ் கதைகளுக்கு நாம் தற்போது பயன்படுத்தும் காகிதத்தின் அளவோ 91 செ.மீ. ! நமது அச்சுப் பிரிவில் இவற்றை அச்சிட வேண்டுமெனில் காகிதத்தை இரண்டாய் வெட்டி - குட்டித் தாளாக்கி - அதனில் தான் அச்சிட்டாக வேண்டும். அவ்விதம் செய்யும் போது - அச்சிடும் அவகாசம் ; செலவுகள் ; ப்ராசசிங்கில் இரட்டிப்புச் செலவு ; பைண்டிங்கில் இரட்டிப்புச் செலவு என வழி நெடுக விரய மழை தான் ! ஐநூறு ரூபாய் மிச்சம் பிடிக்க அரை மணி நேரம் ரூம் போட்டு யோசிக்க அவசியப்படும் இவ்வேளையில் - அவசியமில்லா இத்தனை விரயமெனில் அது சகலமும் விடியப் போவது இதழின் விலையில் தானன்றோ ? நீங்களே கூடுதலாய் அந்த விலையைத் தரத் தயாராக இருக்கும் பட்சத்தில் கூட - என் கண் முன்னே நிகழக் கூடிய தண்டச் செலவுகளை நியாயப்படுத்த நிச்சயம் என் மனம் ஒவ்வாது ! இத்தனை சிக்கல்கள் பின்னணியில் இருப்பதால் தான் டெக்ஸ் - வண்ணத்தில் வேண்டுமென்ற பேச்சு எழும் போதெல்லாம் நான் நாசூக்காய் நழுவிட முயல்வது ! சில மௌனங்களின் பின்னணியில் இருப்பது பதிலின்மையோ ; ஒத்துழைக்கப் பிரியப்படாததொரு மனமோ அல்ல ...!
சரி - இதற்கு தீர்வு தான் என்ன ? அதையும் நானே சொல்லி விடுகிறேன்..! டெக்ஸ் வண்ணத்தில் தான் வேண்டுமெனில் - முதல் இடர் அந்த விலை ! அது கொஞ்சமேனும் கட்டுக்குள் இருந்திட வேண்டுமெனில் - 'நிலவொளியில் நரபலி' சைசில் (சின்னதாய் ) கொணரத் திட்டமிட வேண்டும். 'இந்த சைசா ? இது ரொம்ப குட்டியாச்சே ? என்ற ஆதங்கத்துக்கு மருந்து நிச்சயம் இருக்காது என்ற புரிதல் இங்கு பிரதானமாய் அவசியமாகும். அவ்விதம் சின்ன சைசுக்கு நாம் தயாராகி விடும் பட்சத்தில் விலை ரூ.120 என இருந்திடும் ! So மூன்று மடங்கு உசத்தி விலை எனும் இடத்தினில் இரட்டிப்பு மாத்திரமே என்றாகும். அதன் பின்னே ராயல்டி பற்றிய பேச்சு வார்த்தைகளை நடத்தும் சமயம் - நெடுஞ்சாண்கிடையாக அவர்களிடம் சரணாகி - இயன்றளவுக்கு பேரம் பேசிட முயற்சிக்க வேண்டும். இது ஒன்றே வண்ணத்தில் டெக்ஸ் என்பதற்கான தீர்வு ! இதை "கார்சனின் கடந்த காலம்" இதழுக்கு மாத்திரம் செயல்படுத்தும் யுக்தியாகச் சொல்லிடாமல் - ஒட்டு மொத்த டெக்ஸ் தொடருக்கும் ஒரு வண்ணத் தீர்வாக எடுத்துக் கொள்ளலாம் ! ஆனால் தற்சமய டெக்ஸ் சைசில் உள்ள லாவகம் ; கம்பீரம் அந்த சின்ன சைசில் காணாமல் போய் விடும் என்பதும் ; காலப்போக்கில் - அந்த b & w பாணியினை நாம் miss செய்திடும் வாய்ப்புகளும் அதிகம் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை ! தவிரவும், விலைகளை 50 / 60 ரேஞ்சில் வைத்திருந்து கூடுதலாய் வாசகர்களை எட்டிப் பிடிக்கும் முயற்சிகளை நாமே முழங்காலில் சுட்டுக் கொள்ளும் சங்கதியாகவும் இது அமைந்திடும். Last but not the least, படைப்பாளிகளே இன்னமும் டெக்ஸ் கதைகளை சுவைப்பது கருப்பு - வெள்ளையினில் மாத்திரமே என்பதை மறந்திட வேண்டாமே ? இது தான் கடந்த 2 மாதங்களாய் எனக்கும் - ஜூனியர் எடிடருக்குமிடையே நடந்து வரும் லடாயும் கூட ! 'வண்ணத்திலேயே டெக்ஸ் போடுவோம்' என அவன் சொல்லி வரும் போதிலும், நான் தொடர்ந்து மறுத்து வருவது இத்தனை காரணங்களுக்காகவுமே !
சரி - குட்டியானாலும் பரவாயில்லை - டெக்ஸ் வண்ணத்தில் தான் வேண்டுமென்று இங்கு ஒரு தரப்பின் குரல் ஒலிக்கும் பட்சத்தில் கூட அதனை உடனே நடைமுறைப்படுத்துவது அத்தனை சுலபமல்ல ! அடுத்தாண்டின் அட்டவணை + சந்தாத் தொகைகள் என அத்தனையும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் வேளையில் இது போன்ற அந்தர்பல்டி முயற்சிகள் - இங்கு நடக்கும் விவாதங்களுக்கு அப்பால் நிற்கும் இதர வாசகர்களிடம் நம் திட்டமிடல்களை நகைப்புக்குரியதாக்கும் அன்றோ ? சிறிது சிறிதாய் ஒரு நம்பகத்தன்மையை வளர்த்திட நாம் முனையும் வேளையினில் - தேர்ந்தெடுத்த பாதையினில் சந்தேகங்களின்றி நடந்திடுவது அவசியமாகாதா ? தீர்மானங்களை மாற்றிடுவதில் எனக்கு ஈகோ என்றைக்குமே ஒரு தடையாக இருந்திட்டதில்லை - அதே சமயம் விஷயத்தின் பரிமாணங்களை கொஞ்சம் நிதானமாய் நோக்கிடும் பக்குவமும் கை கோர்த்தால் தவறில்லை தானே ? உங்களை சந்தோஷப்படுத்தும் விதமாய் instant அறிவிப்பு செய்திட இயலாது போனதில் எனக்கும் வருத்தமே - ஆனால் கட்டை விரலை வாய்க்குள் வைப்பதற்கும் - தொண்டைக் குழிக்குள் நுழைத்திட முனைவதற்கும் வேறுபாடுகள் உண்டு தானே ? எனது பக்கத்து பிரச்னைகளை துளியும் ஒளிவின்றி ; இம்மியும் மிகைப்படுத்தாது சொல்லி விட்டேன் - reactions எவ்விதம் இருக்குமென்ற பெரியதொரு யோசனைகளை செய்திடாமல் ! உங்களின் எரிச்சல்களோ ; அனுசரணைகளோ - இங்கு பிரதிபலிக்கப்படும் போது நிச்சயம் நான் புரிந்து கொள்வேன் !
இப்போதைக்கு ஆறுதலாய் ஒரே ஒரு சேதி மட்டும் : லயன் 30-வது ஆண்டுமலரில் ஒரு டெக்ஸ் சாகசம் வண்ணத்தில் வந்திடும் - that's a promise folks ! Take care ! See you again soon !
ஆரம்பத்திலேயே ஒரு சின்ன விஷயத்தை நண்பர்களது கவனத்திற்குக் கொண்டு வருவது அவசியம் என்று படுகிறது ! இணையத்திலும், ஆங்காங்கே டெக்ஸ் ரசிகர்களின் FB பக்கங்களிலும் இந்தக் கதையின் வண்ணப் பக்கங்களைப் பார்த்து அவ்வப்போது ஏக்கப் பெருமூச்சுக்கள் பரிமாறப்படுவது நான் அறிந்திருக்கா விஷயமல்ல. உங்களின் ஆதங்கங்களை இன்னமும் கூடுதலாக்கிட வேண்டாமே என்ற சிந்தையில் தான் 'டெக்ஸ் - வண்ணத்தில்' என்ற விஷயத்தில் உங்களில் பலரும் அறிந்திருக்க இயலா ஒரு தகவலை நான் உரக்கச் சொல்லிடப் பிரியப்படவில்லை ! சமீபத்தில் இத்தாலியில் போனெல்லி நிறுவனத்தாரோடு நான் பேசிக் கொண்டிருந்த போது தான் இவ்விஷயம் எனக்கே தெரிய வந்தது. டெக்ஸ் கதைகளின் சகலமும் black & white -ல் உருவாக்கப்பட்டவை தான் என்ற போதிலும் - சில ஆண்டுகளுக்கு முன்பாக இத்தாலிய பிரதான செய்தித்தாள் ஒன்றோடு அவர்கள் செய்து கொண்ட ஏற்பாட்டின்படி - அந்நாளேட்டின் சந்தாதாரர்களுக்கு வாரம் ஒரு வண்ண டெக்ஸ் இதழ் வழங்கப்பட்டது !! இதன் பொருட்டு b & w -ல் இருந்த கதைகளையும் வண்ணமாக்கி விட்டனர் ! So இன்றைய தேதிக்கு சுமார் 500 டெக்ஸ் இதழ்கள் வண்ணத்தில் தயாரே ! ஆகையால் - "கார்சனின் கடந்த காலம் " வண்ணத்தில் வெளிவந்த சொற்பப் பொக்கிஷங்களில் ஒன்று" ; "இதனை இன்று வண்ணத்தில் வெளியிட இயலாது போயின் அது பெரியதொரு பிழையாகிடும்" என்ற ரீதியிலான அபிப்ராயங்கள் சரியன்று - கிட்டத்தட்ட டெக்சின் முழுமையும் வண்ணமயமாக்கப்பட்டு விட்ட நிலையில் - this is just another story amongst that long colorful list !
'சரி - சகலமும் வண்ணத்தில் கிடைக்கும் போது - அவற்றை வண்ணத்திலேயே வெளியிடுவதில் என்ன சிக்கல் ?' என்ற கேள்விக்கு இப்போது வருகிறேன் ! ஒரு கதையின் ராயல்டி பற்றிய பேச்சு வார்த்தைகள் நடந்தேறும் போது பிரதானமாய் கவனிக்கப்படுவது இதழின் விலையும் ; விற்பனை எண்ணிக்கையுமே ! டெக்ஸ் கதைகளுக்கு நமது தற்போதைய விலை ரூ.50 ; (இனி ரூ.60) எனும் போது நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் ராயல்டி ஆனது இவ்விலையின் அடிப்படையிலேயே ! டெக்ஸ் ஒரு சூப்பர் ஸ்டார் கதாப்பாத்திரம் என்பதால் - இதர தொடர்களை விட costly ஆனவர் ! இந்நிலையில் ஒரு 224 பக்க டெக்ஸ் சாகசத்தை நாம் திடுதிடுப்பென வண்ணத்தில் - ஆர்ட் பேப்பரில் வெளியிடவிருக்கும் பட்சத்தில் - cover price ரூ.175 என்றாகி விடும் ! கிட்டத்தட்ட மூன்று மடங்கு விலை எகிறும் போது அதன் ராயல்டியும் அதே போல் கூரையைத் தொட்டு விடும் !! 'சரி - அது கூடப் பரவாயில்லை - ஒரே ஒரு மாதத்து ஆசைக்குத் தானே இதெல்லாம் - ஒரு முறை அந்தக் கட்டணத்தை செலுத்தி விட்டால் போச்சு !' என நாம் தீர்மானிக்கலாம் தான் ! ஆனால் கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதையாக - 'ரூ.175-க்குப் போட்டாலும் உங்கள் மார்கெட்டில் டெக்ஸ் கதைகள் விற்பனையாகிடும் பட்சத்தில் - ரூ.60 விலையில் இதர மாதங்கள் டெக்ஸ் கதைகளை ஏன் வெளியிடுகிறீர்கள் ? சகலத்தையும் இதே போல் வண்ணமயமாக்கி - இதே ராயல்டிகளை தொடர்ந்து செலுத்துங்கள் !' என்று சொல்வது தான் அவர்களது உடனடிப் பதிலாக இருந்திடும் ! இதில் இன்னுமொரு beauty என்னவெனில் - டெக்ஸ் கதைகளை நாம் எந்த மாதத்தில் வெளியிட்டாலும் சரி, அதற்கான ராயல்டிகளை ஆண்டின் துவக்கத்திலேயே 50% - அடுத்த மூன்று மாதங்களுக்குள் பாக்கி 50% என்ற விகிதத்தில் பைசல் செய்தாக வேண்டும் . எகிறி இருக்கும் இன்றைய யூரோ மதிப்பில் - உண்டான normal ராயல்டிகளை அனுப்புவதே விழி பிதுங்கும் சிரமம் என்றான நிலையில் 3 மடங்கான ராயல்டிக்கு நாமே ரூட் போட்டுக் கொடுத்து விட்டு அந்தப் பாரத்தைச் சுமக்க யாருக்குச் சாத்தியப்படும் ?? இரவுக் கழுகாருக்கு சர்வ வல்லமை இருக்கலாம் தான் ; ஆனால் சாமான்யனான இந்த ஆந்தை விழியானுக்கு அதில் நூற்றில் ஒரு பங்கு பலமிருப்பதே பெரும் விஷயம் என்பதை கணக்கில் கொள்ளல் அவசியமாகாதா ? தவிரவும், வெளியிடும் அனைத்து டெக்ஸ் கதைகளும் ரூ.175 விலை எனும் பட்சத்தில் - சந்தாத் தொகை எங்கே எகிறி நிற்கும் ?
'சரி - இதெல்லாம் உன் பிரச்னை - எப்படியோ உருண்டு பிறண்டு தீர்வு கண்டு கொள் ; வண்ணத்தில் தான் "கார்சனின் கடந்த காலம் " வேண்டுமென்று ' நீங்கள் சொல்வதற்கு நான் தலை ஆட்டுகிறேன் என்றே வைத்துக் கொள்வோம் ; அதன் பின்னருமே ஒரு முக்கியமான இடர் இடையில் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும் ? நம்மிடம் தற்போது உள்ள அச்சு இயந்திரமானது கையாளக் கூடிய சைஸ் 78 செ.மீ. வரையில் தான் ! டெக்ஸ் கதைகளுக்கு நாம் தற்போது பயன்படுத்தும் காகிதத்தின் அளவோ 91 செ.மீ. ! நமது அச்சுப் பிரிவில் இவற்றை அச்சிட வேண்டுமெனில் காகிதத்தை இரண்டாய் வெட்டி - குட்டித் தாளாக்கி - அதனில் தான் அச்சிட்டாக வேண்டும். அவ்விதம் செய்யும் போது - அச்சிடும் அவகாசம் ; செலவுகள் ; ப்ராசசிங்கில் இரட்டிப்புச் செலவு ; பைண்டிங்கில் இரட்டிப்புச் செலவு என வழி நெடுக விரய மழை தான் ! ஐநூறு ரூபாய் மிச்சம் பிடிக்க அரை மணி நேரம் ரூம் போட்டு யோசிக்க அவசியப்படும் இவ்வேளையில் - அவசியமில்லா இத்தனை விரயமெனில் அது சகலமும் விடியப் போவது இதழின் விலையில் தானன்றோ ? நீங்களே கூடுதலாய் அந்த விலையைத் தரத் தயாராக இருக்கும் பட்சத்தில் கூட - என் கண் முன்னே நிகழக் கூடிய தண்டச் செலவுகளை நியாயப்படுத்த நிச்சயம் என் மனம் ஒவ்வாது ! இத்தனை சிக்கல்கள் பின்னணியில் இருப்பதால் தான் டெக்ஸ் - வண்ணத்தில் வேண்டுமென்ற பேச்சு எழும் போதெல்லாம் நான் நாசூக்காய் நழுவிட முயல்வது ! சில மௌனங்களின் பின்னணியில் இருப்பது பதிலின்மையோ ; ஒத்துழைக்கப் பிரியப்படாததொரு மனமோ அல்ல ...!
சரி - இதற்கு தீர்வு தான் என்ன ? அதையும் நானே சொல்லி விடுகிறேன்..! டெக்ஸ் வண்ணத்தில் தான் வேண்டுமெனில் - முதல் இடர் அந்த விலை ! அது கொஞ்சமேனும் கட்டுக்குள் இருந்திட வேண்டுமெனில் - 'நிலவொளியில் நரபலி' சைசில் (சின்னதாய் ) கொணரத் திட்டமிட வேண்டும். 'இந்த சைசா ? இது ரொம்ப குட்டியாச்சே ? என்ற ஆதங்கத்துக்கு மருந்து நிச்சயம் இருக்காது என்ற புரிதல் இங்கு பிரதானமாய் அவசியமாகும். அவ்விதம் சின்ன சைசுக்கு நாம் தயாராகி விடும் பட்சத்தில் விலை ரூ.120 என இருந்திடும் ! So மூன்று மடங்கு உசத்தி விலை எனும் இடத்தினில் இரட்டிப்பு மாத்திரமே என்றாகும். அதன் பின்னே ராயல்டி பற்றிய பேச்சு வார்த்தைகளை நடத்தும் சமயம் - நெடுஞ்சாண்கிடையாக அவர்களிடம் சரணாகி - இயன்றளவுக்கு பேரம் பேசிட முயற்சிக்க வேண்டும். இது ஒன்றே வண்ணத்தில் டெக்ஸ் என்பதற்கான தீர்வு ! இதை "கார்சனின் கடந்த காலம்" இதழுக்கு மாத்திரம் செயல்படுத்தும் யுக்தியாகச் சொல்லிடாமல் - ஒட்டு மொத்த டெக்ஸ் தொடருக்கும் ஒரு வண்ணத் தீர்வாக எடுத்துக் கொள்ளலாம் ! ஆனால் தற்சமய டெக்ஸ் சைசில் உள்ள லாவகம் ; கம்பீரம் அந்த சின்ன சைசில் காணாமல் போய் விடும் என்பதும் ; காலப்போக்கில் - அந்த b & w பாணியினை நாம் miss செய்திடும் வாய்ப்புகளும் அதிகம் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை ! தவிரவும், விலைகளை 50 / 60 ரேஞ்சில் வைத்திருந்து கூடுதலாய் வாசகர்களை எட்டிப் பிடிக்கும் முயற்சிகளை நாமே முழங்காலில் சுட்டுக் கொள்ளும் சங்கதியாகவும் இது அமைந்திடும். Last but not the least, படைப்பாளிகளே இன்னமும் டெக்ஸ் கதைகளை சுவைப்பது கருப்பு - வெள்ளையினில் மாத்திரமே என்பதை மறந்திட வேண்டாமே ? இது தான் கடந்த 2 மாதங்களாய் எனக்கும் - ஜூனியர் எடிடருக்குமிடையே நடந்து வரும் லடாயும் கூட ! 'வண்ணத்திலேயே டெக்ஸ் போடுவோம்' என அவன் சொல்லி வரும் போதிலும், நான் தொடர்ந்து மறுத்து வருவது இத்தனை காரணங்களுக்காகவுமே !
சரி - குட்டியானாலும் பரவாயில்லை - டெக்ஸ் வண்ணத்தில் தான் வேண்டுமென்று இங்கு ஒரு தரப்பின் குரல் ஒலிக்கும் பட்சத்தில் கூட அதனை உடனே நடைமுறைப்படுத்துவது அத்தனை சுலபமல்ல ! அடுத்தாண்டின் அட்டவணை + சந்தாத் தொகைகள் என அத்தனையும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் வேளையில் இது போன்ற அந்தர்பல்டி முயற்சிகள் - இங்கு நடக்கும் விவாதங்களுக்கு அப்பால் நிற்கும் இதர வாசகர்களிடம் நம் திட்டமிடல்களை நகைப்புக்குரியதாக்கும் அன்றோ ? சிறிது சிறிதாய் ஒரு நம்பகத்தன்மையை வளர்த்திட நாம் முனையும் வேளையினில் - தேர்ந்தெடுத்த பாதையினில் சந்தேகங்களின்றி நடந்திடுவது அவசியமாகாதா ? தீர்மானங்களை மாற்றிடுவதில் எனக்கு ஈகோ என்றைக்குமே ஒரு தடையாக இருந்திட்டதில்லை - அதே சமயம் விஷயத்தின் பரிமாணங்களை கொஞ்சம் நிதானமாய் நோக்கிடும் பக்குவமும் கை கோர்த்தால் தவறில்லை தானே ? உங்களை சந்தோஷப்படுத்தும் விதமாய் instant அறிவிப்பு செய்திட இயலாது போனதில் எனக்கும் வருத்தமே - ஆனால் கட்டை விரலை வாய்க்குள் வைப்பதற்கும் - தொண்டைக் குழிக்குள் நுழைத்திட முனைவதற்கும் வேறுபாடுகள் உண்டு தானே ? எனது பக்கத்து பிரச்னைகளை துளியும் ஒளிவின்றி ; இம்மியும் மிகைப்படுத்தாது சொல்லி விட்டேன் - reactions எவ்விதம் இருக்குமென்ற பெரியதொரு யோசனைகளை செய்திடாமல் ! உங்களின் எரிச்சல்களோ ; அனுசரணைகளோ - இங்கு பிரதிபலிக்கப்படும் போது நிச்சயம் நான் புரிந்து கொள்வேன் !
இப்போதைக்கு ஆறுதலாய் ஒரே ஒரு சேதி மட்டும் : லயன் 30-வது ஆண்டுமலரில் ஒரு டெக்ஸ் சாகசம் வண்ணத்தில் வந்திடும் - that's a promise folks ! Take care ! See you again soon !
i am the first??,
ReplyDeletei am 2nd ... wow super....
ReplyDeleteSir,
ReplyDeleteExcellent Selections for 2014, except B/W "கார்சனின் கடந்த காலம்".
I'm also waiting like other friends about any news about "கார்சனின் கடந்த காலம்" in Color.
Is there a reason behind the naming "Sunshine Graphic Novels" instead of "Sunshine Graphic Comics".
-Prem
Prem : "கிராபிக்" என்றாலே "சித்திரங்கள் சார்ந்த " எனப் பொருள்படும் போது - "கிராபிக் காமிக்ஸ்" என்றால் - "சித்திரங்கள் சார்ந்த சித்திரக் கதைகள்" என அர்த்தமாகாதா ?
Deletesuper.. லயன் 30 -வது ஆண்டுமலரில் டெக்ஸ் . முறுக்கேற்றும் ஒரு இடி-மின்னல் ரக டெக்ஸ் சாகசம் !! ..supero super...
ReplyDeleteஅட! மிகவும் வித்தியாசமான பதிவு. 2014 ன் அட்டவனையை எப்படி நினைத்து வடிவமைத்தீர்கள் என்பதை அழகாக விளக்குகிறது இந்தப் பதிவு.
ReplyDeleteமுதல் முறையாக புத்தகங்கள் பற்றி உங்களின் நேர்மையான நீண்ட விமர்சனமும் சூப்பர் ! ஒரு சிறு திருத்தம் : Hotline எப்போதுமே எங்களுக்கு ஈர்ப்பு தான் :-)
Radja from France : :-)
Deleteடியர் எடிட்டர் ,
ReplyDeleteநவம்பர் மாத இதழ்கள் பற்றிய உங்களின் வெளிப்படையான விமர்சனம் சூப்பர் . சிம்போலிக்காக கார்சனின் கடந்த காலம் வண்ணத்தில் வரவிருப்பதை சிகப்பு வர்ணத்தில் போட்டு உணர்த்தி உள்ளீர்களா சார்?
Thiruchelvam Prapananth : பொறுமை - ப்ளீஸ் :-)
Deleteசிறகுகள் இரவல் வாங்குவோமா என கேட்டு விட்டு "அதன் சிறு ஓசைகூட வராமல் உள்ளதே சார் ? எப்போது அதை வெளியிட உள்ளீர்கள் ? 2014 அட்டவணையில் கூட அறிவிப்பை காணோமே . மர்ம மனிதன் மார்டின் இக்கு கூட வாய்ப்பில்லையே .
ReplyDelete//சிறகுகள் இரவல் வாங்குவோமா என கேட்டு விட்டு "அதன் சிறு ஓசைகூட வராமல் உள்ளதே சார் ? //
DeleteKkk in colour great
ReplyDeleteஎப்பூடி ?
Delete10
ReplyDeleteசார் , அருமை நீங்களும் நீண்ட நெடும் நாட்களுக்கு பின்னர் வாசகராய் மாறி இருப்பது மீண்டும் நம்மை 1980களுக்கு அழைத்து செல்ல உதவும் ! அருமை யதார்த்தத்தை பிரதிபலித்துள்ளீர்கள் ! நீங்கள் கூறிய அனைத்தும் உண்மையே !
ReplyDelete// நீங்கள் கூறிய அனைத்தும் உண்மையே ! //
Deleteஎன்னை பொறுத்தவரை !
சிப்பாயின் சுவடுகள் முதியவர்களின் புலம்பலோடு துவக்கம் அருமை !
Deleteஅட்டைபடம் டெக்ஸ் வண்ணத்தில் பாயட்டுமா என கேட்பது போல தோன்றுவது எனக்கு மட்டும்தானா ?
ReplyDeleteஎடிட்டர் சார்,
ReplyDeleteநீங்களே வாசகராய் மாறி விமர்சனம் பண்ணறதையெல்லாம் இந்த ஒரு தபா வேணும்னா நாங்க அலவ் பண்றோம்.
ஏதேது, எங்க வேலைக்கு உலை வச்சுடுவீங்க போலிருக்கே?
Erode VIJAY : 'உங்கள் வேலைகளைச் செய்கிறேன் பேர்வழி ' என்று ஆரம்பித்து, இறுதியில் நானே தயாரித்து, நானே படிக்கும் நிலை வந்து விட்டால் அம்பேல் !! So இது நிச்சயம் ஒரு one off மட்டுமே :-)
Deleteஏதேது, எங்க வேலைக்கு உலை வச்சுடுவீங்க போலிருக்கே?//
Deleteஇறுதியில் நானே தயாரித்து, நானே படிக்கும் நிலை வந்து விட்டால் //
:-))))))
ஒரு காமிக்ஸை வாசிக்கும் போது நாம் சிறுப்பிள்ளைகளாகி குதூகளிப்பதுப் போல், ஒரு ஆசிரியர் ஒரு வாசகனின் பார்வையில் வீசிச் சென்றிருக்கும் ஒரு வித்தியாசமா பதிவு, ஒரு புது முயற்சியின் ஆரம்பமோ?
ReplyDelete1. டெக்ஸின் தீபாவளி ஸ்பெஷல் ஒரு நிறைவான இதழாகவே அமைந்துள்ளது. தீபாவளி ஸ்பெஷல் என்று தாங்கி வந்து நம்மை பின்னோக்கி பழைய நினைவுகளை கிளறியதால், இது ஒரு தனிதுவமானயிதழ்! (ஒ. சி. சு. க்கு எவ்வளவோ தேவல)
2. ஒ. சி. சு. நிசமாக சொல்வதென்றால் என்னால் இன்னும் இரண்டு பக்கங்களுக்கு மேல் புரட்டமுடியவில்லை. வருத்தமா? துக்கமா? சோகமா? வலியா? வேதனையா? சோதனையா? துன்பமா? துயரமா? கண்ணீரா? இவைகளில் ஏதொவொன்று கைகளைக் கட்டிப்போடுகிறதே? இனிமேல் வரும் GN கள் ஒரு சஸ்பென்ஸ்/க்ரைம் த்ரில்லராயிருந்தால் தேவலை.!
கார்சனின் கடந்தக் காலம் வண்ணத்தில் வெளியிடாதுப் போனால் பின்னால் வருத்தப்படுவது தவிர்க்க முடியாதொரு தலைவலியாகிவிடும்? ஏனென்றால் கீழே உள்ள சில பக்கங்களை பாருங்களேன், சும்மா கலக்குது...
http://i865.photobucket.com/albums/ab218/mhmohid/TexWiller-I_zpsbf5155b1.jpg
http://i865.photobucket.com/albums/ab218/mhmohid/TexWiller-II_zps1e88e582.jpg
http://i865.photobucket.com/albums/ab218/mhmohid/TexWiller-IV_zps1247e054.jpg
http://i865.photobucket.com/albums/ab218/mhmohid/TexWiller-V_zpsbec827eb.jpg
+1 wow super sir
Deleteதூள் , வண்ணத்தில் வந்த கௌ பாய் கதைகளை அடித்து துவைத்து விடும் போலுள்ளதே !
Deleteஎடிட்டர் தவறவிட்ட மற்றொரு அம்சம். கடந்தமுறை மறுபதிப்பு குறித்து வாசகர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
ReplyDeleteநமது official பேஸ்புக் கணக்கு ஓருவழி தகவல் தொடர்பாக மட்டுமே உள்ளது.
ReplyDeleteESS : துவக்கம் முதலே அதன் நோக்கம் அது தானே ? என்னால் நேரடியாய் ஈடுபட சாத்தியமாகா முயற்சிகளில் நான் ஒரு போதும் கால் வைத்திட விரும்புவதில்லை !
Deleteஇங்கு நம் வலைப்பதிவில் தலை காட்டுவதே tight ஆனதொரு சங்கதியாக இருந்திடும் போது FB -யிலும் நான் ஒரு ரவுண்ட் வருவேன் என்று சொன்னால் அது எனது சக்திக்கு மிஞ்சிய செயலாகிப் போகும் ! FB will be a bulletin board for us...and the blog the communicative medium !
டியர் எடிட்டர்..
ReplyDeleteதீபாவளிக்கு ஸ்பெஷலில் வெளி வந்த இரண்டு டெக்ஸ் வில்லர் கதைகளும் நன்றாகவே இருந்தன. புது பாணி ஓவியமாகட்டும், simple ஆன கதைகளமாகட்டும், தங்களது மொழிபெயர்ப்பு அனைத்தும் குறை சொல்லாவிதத்தில் இருந்தது. இரண்டு கதைகளின் கிளைமாக்ஸ்ம் இருக்கையின் நுனிக்கே கொண்டுவந்ததென்பது என்னவோ நிஜம்.. Tex always rocks.. Sir..
ஒ. சி.சு. முதலில் படிக்க தோணவில்லை.. பக்கத்தை புரட்டும்போதே ஒரு அயர்ச்சி வந்தது.. தங்களுடைய காமிக்ஸ் டைம் மட்டும் வசித்து விட்டு வைத்து விட்டேன்.. நேற்று இரவு தான் கதையை படிக்க துவங்கினேன். நீங்கள் சொன்னது போல் ஒரு ஈர்ப்பு உண்டானது சத்தியம். வைக்க மனசு வரவில்லை. படித்து முடித்த பின் ஒரு சந்தோசம் உண்டானது.. 'ஒரு குத்துப்பட்டு', 'மொக்க காமெடி', 'பஞ்ச் டயலாக்ஸ்' இல்லாத ஒரு தரமான தமிழ் படம் பார்த்த சந்தோசம்.. என்னுடைய ரசனையும் improve ஆனதோ.. தெரியவில்லை. அட்டை படம் மட்டும்தான் கண் திருஷ்டி.
சந்தோஷமான தீபாவளி சார்.. வெகு நாட்களுக்குபிறகு.
அப்புறம் 'கார்சனின் கடந்த காலம்' கலரில் தான் வேண்டும். என்னிடம் இரண்டு கா.கா.கா கருப்பு கலரில் கனிவாக (எத்தன க ) இருக்கின்றன.
என்னுடைய ஒட்டு வண்ண மறுபதிப்பிற்க்கே.
@ Muthukumaran
Delete+1
Dear editor
ReplyDeleteTimetable for 2014 is ok
except lucky luke and chick bill
1.
2.
Sir the rate for the 2014 is ok
But think about E-bay buyers
If I buy Rs.60 book it cost RS-60 + 30 = RS-90
If I buy Rs.120 book it cost RS-120 + 50 = RS-170
If I buy both book I will pay RS-260 but I will get one parcel only
If u can each month just post both book as one issues so ebay buyers have to pay less fee
(after 10 or 15 days remove it and post has regular issues but first few days post combined issues for each month book it will help those who buy every book think about us )
Giri : I have said this time and again...E-Bay is definitely not a sales platform that we would love to thrive on.
DeleteThey charge us fees ; and there is no option to charge separate for couriers within the state and couriers for the rest of the country. We ship to buyers in Gurgaon as well as Gobichettipalayam and rates are drastically different for each. So when we have just a single option, we have no alternative but to charge on the higher side. Last but not the least, payments are credited to our account only 10- 15 days after books are shipped. And in some cases, impatient buyers initiate refund procedures if they do not have the books in hand within the stipulated timeframe. Books shipped by Registered Post take their own sweet time and there is no way that we can control that ; yet we end up having to refund money on such cases.
E-Bay is just a platform for readers who do not want the hassle of subscribing ; but honestly subscriptions are our oxygen and they take top priority any day ! If a majority of our readers chose not to opt for subscriptions - we simply would cease to exist. Simple as that ...!
thanks for the reply
Deletei start to buy our books from ebay
"come back special " to last issues "tex special" i am buying the books in ebay
i agree "honestly subscriptions are our oxygen"
but think about those who cant spend much money one time
spending 100 or 200 for month is not huge one but subscription is take took much money
In 2014 every month we have 2 books
i just request you to post 2 books at single package in ebay for few days
so it make easy to buy books in ebay
----------
i try my best to make subscription
Kkk in colour?
ReplyDeleteகாக்கா கதை.............. கலரில் வேண்டும் ...............
ReplyDeleteகாக்கா.................. காக்கா கலரில் வேண்டாம் ......
காக்க காக்க..............
பார்க்க துடிக்குது ..........நெஞ்சம்
சார் ...
ReplyDeleteஉங்கள் விமர்சன பார்வை க்கு நன்றி .
எனது மாறு பட்ட கருத்தை தவறாக நினைக்க மாட்டீர் என்ற எண்ணத்தில் ......
என்னை பொறுத்த வரை இரண்டு டெக்ஸ் கதையும் ஓகே .விரும்பி படித்தேன் .டெக்ஸ் ஏமாற்ற வில்லை .அட்டை படம் இணையத்தில் வந்ததை விட கலர் சிறிது மங்கலாக வந்தது இம்முறை .(எப்பொழுதும் இணைய புகைப்படைத்தை விட புத்தகத்திலே "டார்க் "ஆக அமைந்து அட்டகாசபடுத்தும் .இம்முறை அது மிஸ்ஸிங் .
ஒரு சிப்பாயின் சுவடுகள் அட்டை படமும் அவ்வாறு தான் .நின்று கொண்டு இருக்கும் சிப்பாயின் தோற்றம் மிகவும் மங்கலாக இருந்து .(இணையத்தில் அவ்வாறு இல்லை என்பதை கவனிக்கவும் ).
கதையை பொறுத்த வரை நான் எதுவும் சொல்ல விரும்ப வில்லை .ஆனால் எங்களிடம் நீங்கள் பொய் உரைத்தது தான் ஏன் என விளங்க வில்லை .இணையத்திலும் சரி ,ஹாட் லைன் லும் சரி இது "அழுகாச்சி "காவியம் அல்ல என்று அடித்து சொன்னிர்கள் .ஆனால் இது "அழுகாச்சி காவியமா ,இல்லையா என்பதை படிப்பவர்களின் முடிவிற்கே விட்டு விடுகிறேன் .
இப்பொழுது முன்னை விட அதிகமாக "கிராபிக் நாவலை " வெறுக்கிறேன் .நான்கு பேர் கதையை பாராட்டியதால் "கிராபிக் நாவலை " தனி புத்தகமாக அதிகம் கொண்டு வந்ததையும் எதிர்கிறேன் .எத்தனை பேர் டெக்ஸ் க்கு தனி இதழையும் ,மினி லயன் போன்று காமெடி க்கு தனி இதழையும் வேண்டி இருந்தார்கள் .அதை தாங்கள் கவனத்தில் கொள்ளாது யாருமே வேண்டாத "கிராபிக் நாவலுக்கு " என்று தனி புத்தகம் கொண்டு வந்ததை என்னால் ஏற்று கொள்ள முடிய வில்லை .
அதே போலே பழைய பதிவில் மாதம் தோறும் லயன் .முத்து இனி வரும் என்றவுடன் எவ்வளவு சந்தோசம் வந்தது . அதை 60 ரூபாய் ஆக பிரித்து ஒரே புத்தகத்தை இரண்டாக பிரித்து விட்டர்கள் .அவ்வளவு தான் .தயவு செய்து லயனை 100 ரூபாயில் ,முத்துவை 50 ரூபாய் க்கும் கூட வெளி இடலாம் .(லயன் ,முத்துவை விலை மாற்றி ,மாற்றி கூட இப்படி வெளி இடலாம் .)
2014 கதை களம் ஓகே .ஆனால் மறு பதிப்பில் நிழல் 1 நிஜம் 2 யாருமே விரும்ப வில்லை என்பது நிழல் அல்ல ...நிஜம் ...
நன்றி ....
+1000
DeleteEspecially for this statement,
//...எத்தனை பேர் டெக்ஸ் க்கு தனி இதழையும் ,மினி லயன் போன்று காமெடி க்கு தனி இதழையும் வேண்டி இருந்தார்கள் .அதை தாங்கள் கவனத்தில் கொள்ளாது யாருமே வேண்டாத "கிராபிக் நாவலுக்கு " என்று தனி புத்தகம் கொண்டு வந்ததை என்னால் ஏற்று கொள்ள முடிய வில்லை ...//
ஈ.விஜய், கார்த்திக், ரமேஷ்குமார்,
Deleteதுணைக்கு வரவும். தனிமடல் கணையை மெயிலுக்கு அனுப்பாமல் இங்கேயே போட்டு பரணி தன் வேலையை ஆரம்பித்துவிட்டார். ஆசிரியர் எஸ்கேப்!!
பரணி,
டெக்ஸுக்கு தனி இதழ், காமெடிக்கு தனியிதழ்னு என்னாவேணா கேளுங்க.. எங்களுக்கும் லாபம்!! ஆனா, வருசத்துக்கு மூணேஏஏஏஏஏஏ இதழ்கள்தான் கிராபிக்ஸ்னு சொல்லியிருக்கார். அதுல ஏம்ங்க உங்களுக்கு காண்டு? அதையும் சோலிய முடிக்கப்பாக்குறீங்களே?
:-)))))))))
இவ்வளவுக்கும் அது தனிச்சந்தாதானே ஐயா?
Delete@ friends : கிராபிக் நாவல் தனி வரிசைக்கான கதைத் தேர்வுகளே வெளியாகாத போது - சற்றே நிதானம் நமக்கு நிச்சயம் நலம் தரும் !
Deleteகிராபிக் நாவல் வருவது நல்லது தான்.. எப்பவுமே அதிக காமிக்ஸ் அதிக மகிழ்ச்சி... but with what price?
Deleteஏற்கனவே, 2014-ல் mainstream (especially our favourite heros முக்கியமாக டெக்ஸ் வில்லர் :) காமிக்ஸ்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது என்று வருத்தத்தில் இருக்கும்போது, தனியாக, புதிதாக கிராபிக் நாவல் ..?
அத்தோடு மறுபதிப்பு ஹீரோக்கள் & எண்ணிக்கையும் அதிகரித்தால் நன்று ;) :)
Delete@ பரணிதரன்
Delete+1
@ பெரியார்
+1
@ ஆதி
+1
@ எடிட்டர்
+1
(எல்லார்க்கும் ஒரு வோட்டு. ஹி ஹி)
ஓட்டு அல்ல அதிர் வேட்டு ! சும்மா அதிருதுல்ல .....
Deleteஅந்நியன் படம் பார்த்தது போல உள்ளது... அம்பியின் டயலாக் தான் நிறைய இருக்கிறது.போகிற போக்கில் சில பல ஊகங்களையும் தெளித்து விட்டு உள்ளீர்கள்...உள்ளுக்குளே பதுங்கி கிடக்கும் அந்நியனையும்
ReplyDeleteஎதிர்பாக்கிறேன்...ஆனாலும் காரிகன் , மின்னல் படையினர் இல்லாத ஏமாற்றம் இன்னும் போகவில்லை...
கார்சனின் கடந்த காலம் வண்ணத்தில் தான் என்பதும், 30 வது ஆண்டு மலர் பற்றிய planning ஊற்று அடிக்க ஆரம்பித்து விட்டதையும் பொய் என்று சொல்லுவது உண்மை இல்லை தானே....
கிராபிக் நாவல்களின் சோக நெடி பீதியை கிளப்பும் வகையிலேயே உள்ளது... திகில் , சாகசம் , ப்ளாக் காமெடி , கடல் சாகசங்கள் இது மாதிரி ஏதேனும் தளத்தில் இருந்தால் சந்தா கட்ட இன்னும் ஆர்வம் இருக்கும்...சோகங்களை தாங்கி ஓவிய ரசனைக்காக மட்டுமே க்ராஃபிக் நாவல் என்பது ஆர்வத்தை பதம் பார்ப்பதாகவே உள்ளது...
Rummi XIII : மின்னல்படையினரோ ; காரிகனோ நம் திட்டமிடல்களின் விளிம்புகளில் கூட இருக்கவில்லையே.... 2014-ன் அட்டவணையில் இடம் பிடித்திட ??
Deleteஅப்போ நான் இன்னும் வளரணும்னு நினைக்கிறேன்.... anyway thanks for the reply..
Delete34
ReplyDeleteஓர் ஆசிரியர் வாசகராயின், என்னென்ன எண்ணுவாரென வாசித்தறிந்தோம்! அஃதாந்த வாசகர், ஆசிரியராயின் அவர் தம் எண்ணங்கள் என்னவாய் இருந்திடக் கூடும்?
ReplyDeleteகா.க.கா. கருப்பு வெள்ளை என அறிவித்ததில், வாசகர்களின் கவனம் அதன் பால் லயித்து விட்டது. விலையேற்றம், பக்கக் குறைப்பு, கதைத் தேர்வில் மார்ட்டின்-ராபின் இல்லாமை, மறுபதிப்புத் தேர்வில் பழம் அபிமான நாயகர் இல்லாமை, கிராபிக் நாவல்ஸ் தனி இதழ் தேவையா - என அலை அலையாய் எழுந்த வினாக்கள், கார்சன் சுனாமியில் சுவடின்றி அடித்துச் செல்லப் பட்டனவே! கா.க.கா. - ஆகா, ஓகோ!
நவம்பர் நாயகன் பதிவுக்கு இன்றிரவு பதில் தருவேன், நாளை பகலில் பதில் தருவேன் எனச் சொல்லிச் சொல்லி தட்டிக் கழித்தாயிற்று. வாசகர்களும் மறந்தே விட்டனர் அதனை! கார்சனின் மகிமையே மகிமை..... ஆகா, அருமை!
வாரம் இரு பதிவு கேட்டு நச்சரிக்கின்றனரே, என் செய்ய? ஆங், ஒரே பதிவை இரட்டிப்பாக்கினால் என்ன? எமது நேரமும் மிச்சமாகிடுமே? பதிவினை ஒரே தினத்தில் முடிக்காமல்..... அட்டை நாளை மதியம் வெளிவரும், கூடுதல் விபரங்கள் மறுநாள் மாலை இணைக்கப்படும் என எதையாவது சொல்லி அலைய வைப்போம் இவர்களை! மதியம் வந்து பார்க்கட்டும், மாலையில் வந்து பார்க்கட்டும், ஏன் இரவிலும் பலமுறை விசைப் பலகை அமுக்கிப் பார்க்கட்டும்! நள்ளிரவு வரை இழுத்தடிப்போம் இவர்களை! எம் வலையில் கூடுகிறதே ஹிட்ஸ் அலை, வாசகர் தம் நேரம் வீணானால் எமக்கென்ன கவலை?
கா.க.கா. கருப்பா கலரா? மதியம் வருவீர், முடிவை அறிவீர்! இன்று மதியமா, நாளை மதியமா என்பதே எஞ்சியிருக்கும் கேள்வி!
வாசகர் வாய்ஸ் : ஆதங்கக் குவிப்பை பதிவு செய்த நண்பர் விற்பனைகளின் புள்ளி விபரங்களையும் சற்றே தெரிந்து வைத்திருக்க மெனக்கெட்டு இருப்பின் மார்டின் - ராபின் கதைகள் 2014-ன் பட்டியலில் இணைக்கப்படாததன் "ரகசியத்தை" அறிந்திருப்பாரோ - என்னவோ ? ரூ.10 விலைகளில் வந்தும் 15 ஆண்டுகளாய் நமது கிட்டங்கிகளை அவர்கள் அலங்கரிப்பது தான் நிதர்சனம் என்பதை மாதந்தோறும் வெளியாகும் நம் முந்தைய இதழ்களின் பட்டியல் சொல்லுகிறதே ? "பழம் அபிமான நாயகர்கள்" 2014-ன் திட்டமிடலில் இடம் பிடிக்கக் காத்துள்ளனர் என எங்கெல்லாம் நான் அறிவித்தேன் - அதனை செயல்படுத்த முடியாது போனதன் பொருட்டு குற்றவாளிக் கூண்டில் நின்றிட ? ப்ருனோ பிரேசில் ; சாகச வீரர் ரோஜர் ; பிரின்ஸ் ; ரிபோர்டர் ஜானி ஆகியோர் நிச்சயமாய் இன்றைய இளைஞர் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் அல்ல தானே ? அதே போல கிராபிக் நாவல்களின் தனி வரிசையின் கதைகளின் அறிவிப்பே வந்திராத போது அவை என்னவாக இருக்குமென்ற உங்களின் யூகங்களின் அடிப்படையில் உருவாகும் சலிப்புக்கு யார் தான் காரணமாகிட முடியும் ? அதன் சந்தாவை தேர்வு செய்வதும், உதறித் தள்ளுவதும் அவரவர் ரசனை சார்ந்த விஷயம் என்பதை பதிவு செய்திருக்கும் போது சிக்கல் எழுவது ஏனோ புரிந்திடவில்லை !
Deleteஇங்கு ஹிட்களின் எண்ணிக்கை கூடுவதன் மூலம் நான் சாதிக்கப் போவது என்னவாக இருக்குமோ - சத்தியமாக நானறியேன் ! நிர்பந்தத்தின் பெயரில் இங்கு எவரும் வருகை புரிவதுமில்லை ; அவ்விதம் நேரும் முதல் கணத்தில் இந்த வலைப்பூ வரலாறாகிப் போய் இருக்கும் என்பதையும் நான் உணராது இருக்கவில்லை !
// நிர்பந்தத்தின் பெயரில் இங்கு எவரும் வருகை புரிவதுமில்லை ; அவ்விதம் நேரும் முதல் கணத்தில் இந்த வலைப்பூ வரலாறாகிப் போய் இருக்கும் என்பதையும் நான் உணராது இருக்கவில்லை ! //
Deleteஉண்மை !
// மார்டின் - ராபின் கதைகள் 2014-ன் பட்டியலில் இணைக்கப்படாததன் "ரகசியத்தை" அறிந்திருப்பாரோ - என்னவோ ? ரூ.10 விலைகளில் வந்தும் 15 ஆண்டுகளாய் நமது கிட்டங்கிகளை அவர்கள் அலங்கரிப்பது தான் நிதர்சனம் என்பதை மாதந்தோறும் வெளியாகும் நம் முந்தைய இதழ்களின் பட்டியல் சொல்லுகிறதே ? //
நிச்சயமாய் அவை பரவா இல்லை ரக கதைகளே ! ஆஹா ஓஹோ வரிசை அல்ல ! தங்களது தற்போதய தேர்வு எங்கும் சோடை போகவில்லை ! புதிய நாயகர்கள் கலக்கல் !
இருந்தாலும் லக்கி , சிக் பில்லுக்கு பதில் சுஸ்கி, ஜானியின் பிற கதைகள் , அலிபாபா , காமெடி கர்னல் போன்ற அற்புதமான கதைகள் உள்ளனவே ! அவற்றை முடியும் என்றால் முயற்சி செய்யுங்கள் சார் !
Deleteதிருத்திக்கொள்ளுங்கள் தயவுசெய்து......
Delete...லக்கி , சிக் பில் கதைகள் + "உடன்" + சுஸ்கி, ஜானியின் பிற கதைகள் , அலிபாபா , .....முயற்சி செய்யுங்கள் சார் !
KKK color...
ReplyDeleteஆஹா நீங்களே விமர்சனப் பதிவு போட்டுடீங்களா?. எங்களுக்கு ஒரு வேலை மிச்சம் :D
ReplyDeleteஒரு சிப்பாயின் சுவடுகள் எனக்கு பிடித்திருக்கிறது. யதார்த்தமான கதை என்பதாலும், ஹீரோ என்று தனியாக ஒருவர் பிறப்பதில்லை, அவரவர் செய்யும் நல்ல செயல்களே அவர்களை ஹீரோ ஆக்குகிறது என்ற வகையில் நரை மண்டை நிருபரும் ஒரு ஹீரோவே. யாரும் சுத்த மோசம் என்று சொல்ல மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் :)
ReplyDeleteகா.க கதை கலரில் நன்றாக இருக்கும். டெக்ஸ் கதைகளை கலரில் போடுங்கள் ப்ளீஸ்
+1
Deleteசார் மூணுல ரெண்டு தான் வந்திருக்கு. தீபாவளிக்கு வர்றேனுட்டு வராமல் போன, ஜானி சித்தப்பா எப்போ வருவார்?
ReplyDeleteRaj Muthu Kumar S : சித்தப்பா சொந்த பந்தங்களோடு டிசெம்பரில் வந்திடுவார் ! காத்துள்ளன 4 இதழ்கள் !!
Delete4 இதழ்கள்???
Delete1) ஜானி ஸ்பெஷல்
2) வேங்கையின் சீற்றம்
3) டேஞ்சர் டயபாலிக்
4) ??? சிக் பில் ஸ்பெஷல்?????
நான்காவது இதழா ! ஆஹா ......
DeleteREPOSTING FROM PREVIOUS POST:
ReplyDeleteஏற்கனவே நம்மிடம் கிடப்பில் கிடக்கும் பெயர்களை விடுத்து புதிதாக சன்ஷைன் லைபிரரி, சன்ஷைன் கிராபிக் நாவல் என புதிதாக பெயர் வைப்பது எதற்காக SIR?
லயன்/ முத்து காமிக்ஸ் என்பது நமது அடயாளம், ஒரு பாரம்பரியம், அதற்கு துளியும் இந்த பெயர்கள் நீதி செய்ய வில்லை, இந்த பெயர்களுக்கு ஒரு ஈர்ப்பு இல்லை, ஒரு individuality இல்லை.
மினி லயன் - கார்டூன் கதைகளுக்கு
கிளாச்சிக் காமிக்ஸ் - ரீ-பிரிண்ட்ஸ்களுக்கு
ஜூனியர் லயன் காமிக்ஸ் or முத்து காமிக்ஸ் - கிராபிக் நாவல்.
கடையில் லயன் காமிக்ஸ் / முத்து காமிக்ஸ் இருக்கா என்று ஈஸியா கேட்கலாம், ஆனால் சன்ஷைன் லைப்ரரி?
மார்கட்டிங் உலகில் பிரண்ட் வேல்யு என்பதற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று எல்லாருக்கும் தெரிந்திருக்கும், சமீபத்தில் கூட Coca-Cola Apple இடம் முதலிடத்தை இழந்தது பிரண்ட் வேல்யுவில் என்று நியூஸ் வந்தது.
அதுபோல கண்டிப்பாக பிரண்ட் வேல்யு உள்ள ஒரு லோகோவை / பெயரை விடுத்தது புதிதாக ஒரு பெயரை தேர்வு செய்வது கண்டிப்பாக மார்கடிங்க்கு உதவாது. அப்படியே புது பெயரை தேர்வு செய்ய வேண்டுமெனில் நமது legendary brand ஐ நினைவு படுத்த வேண்டும். எனக்கு என்னவோ இந்த பெயர்கள் ரொம்பவும் அன்னியமாக இருக்கின்றன..
If you think sentimentally about use of unsuccessful logos, we can try something like Lion comics library for re-prints? lion comics - graphic novels
http://tinypic.com/r/11rydqd/5
http://tinypic.com/r/15wjxuf/5
இது எப்படி இருக்கு!!! அதிகப்ரசிங்கிதனம் என்று நினைக்க வேண்டாம், just my thoughts. (These pics are just spin-offs of Dark horse comics )
சூப்பர் விஜய் : 'காமிக்ஸ்' வந்து விட்டதா என்பதைத் தாண்டியதொரு கேள்வி கடைகளில் நிச்சயமாய் இருந்திடப் போவதில்லை எனும் போது - இந்த பெயர் சூட்டல்கள் ஒரு சம்பிரதாயத்துக்கு மாத்திரம் தானே ? தவிர இன்று நம் இதழ்களின் விற்பனை என்பது முன்பைப் போல் தெரு முனையின் பெட்டிக் கடைகளிலும், பஸ் ஸ்டாண்ட் கடைகளிலும் அல்லவே ; பெரும்பாலும் bookstores -களில் தான் எனும் போது நீங்கள் குறிப்பிடும் சிக்கல்கள் எழுந்திடும் வாய்ப்புகள் வெகு சொற்பமே.
Deleteஒரு அடையாளமானது நம்மோடு என்றைக்குமே இணைந்து வருவதில்லையே - காலப்போக்கில் நேர்ந்திடும் பரிச்சயம் தானே அதை நம்முடன் ஒட்டிக் கொள்ளச் செய்வது ? இதற்கும் அவகாசம் கொடுப்போமே - அந்த பந்தத்தை உருவாக்கிக் கொள்ள ?
கடையில் கேட்டு வாங்குவதில் உள்ளது ஒரு பிரச்சினை அல்ல சார்,
DeleteBRAND VALUE என்பதை தான் வலியுறுத்த நினைக்கிறேன்.
அட்லீஸ்ட் we should mention வெளியிடுவோர் லயன்/ முத்து காமிக்ஸ் குழுமம் instead of only prakash publishers.
http://tinypic.com/r/11rydqd/5 (இந்தமாதிரி ஒரு லோகோ கிராபிக் நாவலுக்கு எவ்ளோ பவர்புல் ஆஹ இருக்கும், சிரிக்கும் சூரியன்இல் அந்த பஞ்ச் இல்ல சார் )
ஒரே கல்லுல பல மாங்காய்! :)
ReplyDeleteநீங்களே விமர்சணம் எழுதி, நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதில் சொல்லிட்டீங்க! சூப்பர்!!
எனக்கு தோன்றிய ஒரு ஐடியா சார்!
நிழல் 1 நிஜம் 2 மற்றும் பூம் பூம் படலம் இந்த இரண்டையும் நீக்கிவிட்டு “கார்சனின் கடந்தகாலம்” கலரில் கொண்டுவரலாமே சார்?
சந்தா தொகையும் அதிகமாகாது, வாசகர்களின் கோரிக்கையையும் நிறைவேற்றியது போல் இருக்கும்!
அதெல்லாம் முடியாது ... எனக்கு கா க கா வண்ணத்தில் வேண்டும், அத்துடன் இந்த ரெண்டும் வேணும் .. வேணும்னா அந்த இரு கதைகளுக்கு பதில் வேறு சிக் பில் & லக்கி லூக் கதைகள் வெளியிடலாம்
Deleteஏற்கனவே 2014-ல் புத்தகங்கள் குறைந்து விட்டது என்று வருத்தத்தில் இருக்கேன்
கார்சனின் கடந்த காலம் இப்போதைக்கு வேண்டாம்! பேசாம டெக்ஸ் புது கதை 100 ரூபாய்ல தீபாவளி ஸ்பெஷல் போல போடுங்க சார்!! இது எப்படி இருக்கு? :)
Delete// நிழல் 1 நிஜம் 2 மற்றும் பூம் பூம் படலம் இந்த இரண்டையும் நீக்கிவிட்டு “கார்சனின் கடந்தகாலம்” கலரில் கொண்டுவரலாமே சார்?
Deleteசந்தா தொகையும் அதிகமாகாது, வாசகர்களின் கோரிக்கையையும் நிறைவேற்றியது போல் இருக்கும்! //
இதனையே நானும் நினைத்தேன் !+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆனால் கதைகள் குறைவு என்பது அடுத்த இடி ! என்ன செய்ய ....
ஆஹா ! இது நல்ல இருக்கே ! : ). ஒரு வாசகரின் கோணத்தில் எடிட்டரின் பார்வை இருவருக்கும் பல உண்மைகள புரிய வைக்கும்.
ReplyDelete"சிப்பாயின் சுவடுகளில்" போன்ற கதைகள பதிப்பிக்க நம்மிடையே இன்னமும் கொஞ்சம் மெசுரிட்டி வளரனும். "இது போல எப்போதாவது தானே" எனபது சரியான முடிவாக படவில்லை. THIS IS TOO EARLY! இது போன்ற கதைகள் தனி TRACK கில் வருவது சரியான முடிவு. நமக்கு அதிரடி/action/கலாட்டா கதைகளுக்கு அப்படியொன்றும் காமிக்ஸ் வறட்சி இல்லையே??எனத்தான் ரசனை எதார்த்தம் என்று ரசிக்க சில விசயங்கள் இருந்தாலும் காமிக்ஸ் என்ற ஒரு ஊடகத்தால் மட்டுமே அதிக அளவில் ULTRA - HYPER
IMAGINATIVE FICTION கதைகளை படிப்பவர்கள் ரசிக்கும் வகையில் தர முடியும்.சினிவாவில் இவ்வகைகள் எப்போதாவது வரும். தற்காலத்தில் எதார்த்தம் பாணியில் சினிமாக்கள்/நாவல்கள் ஏராளமாக வருகின்றன. SO எதார்த்தம்,வித்தியாசம் என்பதை அவர்களுக்கு விட்டுவிட்டு நாம் ஏன் நமது EXCLUSIVE ADVANTAGE சை அதிக அளவில் EXPLOIT செய்ய கூடாது ?? இந்த எதார்த்தமான முயற்சி "ஒரு திணிப்பு" என்கின்ற பாணியில் ஒரு பிம்பத்தை வாசகர்கள் மத்தியில் உருவாக்காமல் இருந்தால் மகிழ்ச்சியே!
"சிப்பாயின் சுவடுகளில் " என் மனதில் ஏதோ ஒரு இடத்தில தனது சுவடுகளை பதித்து விட்டது எனபது எனது தனிப்பட்ட கருத்து!
டெக்ஸ் கதைகளுள் நீதியின் நிழலில் அருமையான கதை.படிப்பதற்கு போர் அடிக்கவில்லை. கதை SELECTION னில் அதிக கவனம் தேவை உண்மை தான்!
"கார்சனின் கடந்த காலம்" மீண்டும் பதிப்பிப்பது தேவையற்ற முயற்சியாக தெரிகிறது. COME-ON நண்பர்களே இந்த இடத்தை நாம் FREE செய்தால் நிச்சயமாக ஒரு புதிய அருமையான கதை கிடைக்கும். நாம் ஏற்கனவே படித்த கதையை மீண்டும் படிப்பதில் என்ன கிக் இருக்க முடியும்?? இந்த இடத்தில டெக்ஸ் சின் அறிமுக கதைகளோ (அந்த வாழ் வீரனோடு டெக்ஸ் இரண்டாம் ஹீரோவாக அறிமுகமான கதை) போன்ற கதைகள், கா.க.கா கதையா விட சுவராஸ்யமாக இருந்தால்??? ஏன் கருத்து பெரும்பாலான நண்பர்களின் கருத்துக்கு முரண் படுகிறது. SORRY! யாருமே இதை வேண்டாம் என சொல்லாதது ஆச்சர்யமே!
2014 அட்டவணையில் பளிச்சென்று படுவது தலைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள ஒரு வறட்சியே. சில தலைப்புகள் ரொம்பவே மொக்கையாக உள்ளது. OFF-COURSE THERE IS TIME TO CHANGE. "முகமற்ற கண்கள் " போன்ற கிக்கான தலைப்புகளை பாத்து ரொம்ப நாள் ஆச்சு! கதை SELECTION னில் ஆசிரியரின் முடிவு அருமை.
SUNSHINE GRAPHIC NOVELS ஆவலுடன் ஏதிர்பார்கிறேன். நல்ல முயற்சி. அந்த லோகோவுக்கு மட்டும் கொஞ்சம் சீரியஸ் லுக்
கொடுங்க சார்!
//"கார்சனின் கடந்த காலம்" மீண்டும் பதிப்பிப்பது தேவையற்ற முயற்சியாக தெரிகிறது.//
Delete@விஸ்கி-சுஸ்கி
உங்கள் கருத்தை நான் ஆதரிக்கிறேன்
// இந்த இடத்தில டெக்ஸ் சின் அறிமுக கதைகளோ (அந்த வாழ் வீரனோடு டெக்ஸ் இரண்டாம் ஹீரோவாக அறிமுகமான கதை) போன்ற கதைகள், கா.க.கா கதையா விட சுவராஸ்யமாக இருந்தால்??? //
DeleteKKKக்கு மாற்றாக இதைத்தான் நானும் சுட்டிக்காட்டலாமா என்று யோசித்தேன். ஆனால் முழுவண்ண Format-க்கு வந்துவிட்ட நாம் இயன்றவரையில் B&W கதைகள் மற்றும் Digital Version கிடைக்க வாய்ப்புக்குறைந்த அரதப்பழசுகளை கேட்டு ஆசிரியரை தொல்லைபண்ண வேண்டாமென்ற நல்லெண்ணத்தால் விட்டுவிட்டேன்! அதனால் Color KKK - வையே திரும்பக் கேட்போம்! :D
// "சிப்பாயின் சுவடுகளில் " என் மனதில் ஏதோ ஒரு இடத்தில தனது சுவடுகளை பதித்து விட்டது எனபது எனது தனிப்பட்ட கருத்து! //
பொதுவாக கிராபிக் நாவல்களின் Specialty, அவை நிச்சயம் ஒரு குறிப்பிட்ட வகை வாசகர்களையாவது அபரிமிதமாகக் கவருமளவுக்கு இருக்கும்!
// "கார்சனின் கடந்த காலம்" மீண்டும் பதிப்பிப்பது தேவையற்ற முயற்சியாக தெரிகிறது. COME-ON நண்பர்களே இந்த இடத்தை நாம் FREE செய்தால் நிச்சயமாக ஒரு புதிய அருமையான கதை கிடைக்கும். நாம் ஏற்கனவே படித்த கதையை மீண்டும் படிப்பதில் என்ன கிக் இருக்க முடியும்??//
Deleteதம்பி வீதி பக்கம் வரணும்ங்ர எண்ணமில்லையோ ? உணர்ச்சிவச படாதப்பா !
புதிதாக அதற்க்கு இணையாக எங்க தேடுனாலும் கிடைக்காது ! இது என்னோட சேலஞ் !
Deleteகாதல் எப்படியெல்லாம் வேலை செய்யுது.... அதிலும் வெள்ளி முடியாரின் காதல்... ;)
Deleteநேர்மையான உண்மையான விமர்சனம் வாசகரின் பார்வையில் ! பாராட்டுகள்!
ReplyDeleteஅகில உலக காமிக்ஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக
Delete//நேர்மையான உண்மையான விமர்சனம் வாசகரின் பார்வையில் ! பாராட்டுகள்!//
வணக்கம் எடிட்டர் சார்,
ReplyDeleteஉங்கள் விமர்சனம் எற்றுகொல்லும்படியாக இருந்தது.ஆனால் என்னை பொறுத்தவரை "மரண தேசம் மெக்சிகோ" ஒரு சூப்பர் ஹிட் தமிழ் படம் போல் அருமையாக இருந்தது. குறிப்பாக செண்டிமெண்ட், மெல்லிய சோகம்,திருப்புமுனை, கடைசியில் என்ன ஆகுமோ என்ற பரபரப்பு எல்லாம் சரி விகிதத்தில் கலந்து அருமையாக அமைந்துள்ளது.
என்ன ஒரு குறை என்றால் இந்த சாகசம் டைகருக்கு உரியது. டெக்ஸ் வில்லருக்கே உரிய ஆர்பாட்டம் மிஸ்ஸிங்.
இரண்டாவது கதை நீயா நானா TYPE ஸ்டோரி. அனாலும் முதல் கதையை விட இது ஒருபடி மேலே தான் என்பதை ஒப்புகொள்கிறேன். நீங்கள் சொல்வது போல் 2 கதைகளையும் முடித்தபின் ஏனோ "TRAGAN நகரம்" மற்றும் "பழிக்குபழி" போல் ஒரு கதை எப்பொழுது வரும் என்ற ஏக்கம் எழுகிறது.
சிப்பாயின் சுவடுகள் ம்ம்... நல்ல கதை பட் இந்தமாதிரி சீரியஸ் TYPE கதை காமிக்ஸில் தேவையா?
உங்களுக்குள் இருக்கும் வாசகர் சொன்ன கருத்துகளெல்லாம் ஓகே ஸார், ஒன்றைத் தவிர..
ReplyDelete// singles இதழ்களாய் வெளியிடத் திட்டமிட்டிருப்பது பார்த்த உடன் கவனத்தை ஈர்த்த விஷயம்// இல்லையில்லை, அவர் பொய் சொல்றார். ஸ்டேப்ளர் பின் அடித்த காத்தாடும் ஒல்லி இதழ்கள், குழந்தைகள் ஏபிசிடி புக், கலரிங் புக் போல ஒரு உணர்வை ஏற்படுத்துகின்றன, ப்ளீஸ், ஒரே ஜானர் கதைகளை கம்பைன் செய்து பர்பெக்ட் பைண்டிங்கில் குறைந்தபட்சம் 120 இதழ்களாக மாற்றுங்கள்!! உண்மையில் இதைவிட அதிக பக்கங்கள்தான் ஒரு தனி கவர்ச்சியை ஏற்படுத்துகின்றன. சரியான தடிமன் என்பது லயன் கம்பேக் ஸ்பெஷல்தான் என் கருத்து. விலை ஒரு பெரிய பிரச்சினையாகும் என்பது புரிகிறது. ஆனால் 120, 150 என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு சாதாரண தொகைதான். நலிவான நினையிலிருப்பவர்களுக்கு எட்டாமல் போய்விடுமோ என்ற உங்கள் கவலை நியாயமானதுதான். ஆனால்12, 60 ரூபாய் இதழ்களுக்கும், 6, 120 ரூபாய் இதழ்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது? ஒரே அளவிலான பணம்தானே!! பாதிக்கும் மேல் கமர்ஷியல் விளம்பரங்களால் நிரப்பப்பட்டிருக்கும் விகடன் போன்ற வெகுஜன வார இதழ்கள் கூட 20 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளலாம்.
கதைத்தேர்வு, நாயகர் தேர்வு, கலர்/பி&ஒ பிரச்சினை எதுவுமே எனக்குப் பெரிதாக தோன்றவில்லை. கலரோ-பி&ஒயிட்டோ, புது கதையோ- பழசோ, ஆக்ஷனோ- கலைப் படைப்புகளோ, டெக்ஸோ-டைகரோ, ஆர்ச்சியோ-லார்கோவோ எல்லாமே ‘காமிக்ஸ்’ என்ற ஒரே குடையின் கீழ் என் முழுமையான காதலை அள்ளிக்கொள்பவைதான். அவற்றை கொஞ்சம் புஷ்டியாக தரும்படி மட்டும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
// ஸ்டேப்ளர் பின் அடித்த காத்தாடும் ஒல்லி இதழ்கள், குழந்தைகள் ஏபிசிடி புக், கலரிங் புக் போல ஒரு உணர்வை ஏற்படுத்துகின்றன //
Deleteமன்னிக்கவும்... அதுதான் அகில உலக காமிக்ஸ்களின் Format! :D பெரியகதைகளெல்லாம் பெரும்பாலும் 4-5 பக்கத் தொடராக வந்தவைகளின் தொகுப்பு மட்டுமே! நான் பார்த்தவரையில் டெக்ஸ் வில்லர் கதைகளைத்தவிர மற்ற அனைத்து கதைகளின் Original-ம் 48 பக்கங்களுக்கு மேலே செல்வது ஆபூர்வம். இந்த limit-ஐ எதற்காக கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் கடைப்பிடிக்கின்றன என்பதை நாம் கவனிக்காமலிருப்பது மிகப்பெரிய தவறு.
// அவற்றை கொஞ்சம் புஷ்டியாக தரும்படி மட்டும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். //
கொஞ்சம் Grand-ஆக பெரிய சைஸ் & 100+ பக்கங்கள் என்கிற Format வெகுஜனங்களுக்கு என்றுமே பொருந்தாது. இதுவே காமிக்ஸ் மீது புதிய வாசகர்களுக்கு Permanent-ஆன அலர்ஜியை உண்டுபண்ணிவிடும். அயல்நாடுகளில் வெற்றிகரமாக உள்ள Fromat-ஐ இங்கே முயற்சிகூட செய்யாமல் இருந்தால்தான் மிகப்பெரிய Risk! மேலும் ஒவ்வொருமாதமும் குறைந்தது 2 புத்தகங்கள் என்கிற Guarantee-க்கு நாம் வந்துவிட்டதால் இது ஒரு குறையே இல்லையே?!
நம்மூரில் காமிக்ஸ் என்பது ஏதோ உயர்வகுப்பு ஜனங்களின் luxury product, என்ற நிலை மாறவேண்டுமெனில் ஓரளவுக்காவது நாம் Middle Class மற்றும் வெகுஜன தேவைகளின் பக்கமாக இறங்கிவர வேண்டும் (atleast for commercial success). குறைந்தபட்சம் Original வெளியீடுகளின் Formatஐ பின்பற்றுமளவுக்காவது நாம் இறங்கிவர வேண்டுமென்பது என்னுடைய ஏழ்மையான கருத்து! :P
// ஸ்டேப்ளர் பின் அடித்த காத்தாடும் ஒல்லி இதழ்கள், குழந்தைகள் ஏபிசிடி புக், கலரிங் புக் போல ஒரு உணர்வை ஏற்படுத்துகின்றன, ப்ளீஸ், //
Deleteஆதியின் எண்ணமே எனதும். இந்த முறை டெக்ஸ் புத்தகம் கையில் எடுத்தவுடன் கிடைத்த ஆனந்தம் சொல்லி மாளாது. அவ்வாறு இல்லாவிடில் கூட , 100+ பக்கங்கள் கொண்ட தற்சமைய வெளியீடுகள் ஓகே. இதில் பாதி என்றாகிடும் பொழுது,.....
அல்லது tinkle digest போல் , டெக்ஸ் புத்தகம் போல், சைஸ் குறைத்து , பக்கங்கள் அதிகரித்து, நல்ல bind மூலம் வெளியிட்டால், மிகவும் அருமையாக இருக்கும்.
//சரியான தடிமன் என்பது லயன் கம்பேக் ஸ்பெஷல்தான்// இருக்கும் கரம் அனைத்தையும் கூப்பி வரவேற்கிறேன். இதே இதே எனது எண்ணமும். தொடர்ந்து மாதம் ஒரு புத்தகம் , அதே அளவில், கிடைத்தால், வானத்தில் சிறகடித்து பறப்பேன் நான்.
200 விலையில், ஒரே அளவில், மாதம் ஒரு புத்தகம், (டெக்ஸ் , டயபாளிக் தவிர ) நெவெர் பிபோர் ஸ்பெஷல் போல், வருடத்திருக்கு ஒரு மெகா ஸ்பெஷல் இதழ். 13 இதழ்களில் சிம்பிள் பிளான். (13 நமக்கு ராசியான நம்பர்).
Delete//மன்னிக்கவும்... அதுதான் அகில உலக காமிக்ஸ்களின் Format! :D /
DeleteBUT நம்ம ஸ்டைல் அது இல்லையே ரமேஷ் சார்! : D ! முன்னொரு காலத்தில் ராணி காமிக்ஸுக்கும் லயன் காமிக்ஸுக்கும் வெளிப்படையான ஒரு வேறுபாடு நம்மது PERFECT பைண்டிங் என்பதே. இந்த ஸ்டைலை பாக்கும்போதே எந்த ஒரு புத்தகமாக இருந்தாலும், அது ஒரு QUALITY ஆனா புத்தகமாக SUBCONSCIOUS ஆகா மனதில் பதிகிறது. பின் அடித்த புத்தகத்தில் அந்த ஒரு உணர்வு வருவதில்லை, உள்ளே என்னதான் சரக்கு இருந்தாலும்! இப்படி தோன்றுவது எனக்கு மட்டும் தானா?? காமிக்ஸ்
புத்தகங்களுக்கு மட்டும் தானா???IT BEATS ME !
//இந்த limit-ஐ எதற்காக கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் கடைப்பிடிக்கின்றன என்பதை
நாம் கவனிக்காமலிருப்பது மிகப்பெரிய தவறு. //
இது பெரும்பாலும் ஒரு படைப்பின் ஒரிஜினல் COPY RIGHT HOLDER களின் முதல் பதிப்பாக இருக்கும் போது கடைபிடிக்கப்படுவது. நாம் அவ்வாரல்லவே! அவர்கள் அவ்வாறு கடைபிடிப்பதற்கு FINANCIAL IMPLICATION னை தாண்டி ஒரு கதை உருவாக்க பிடிக்கும் கால அளவு பெரும் பங்கு வகிக்கிறது. நமக்கு
அந்த கஷ்டம் இல்லை. வாழைபழ தாரே நம்முன்ன சாப்பிடுவதற்கு தயாராக உள்ளது. பிறகு ஒவ்வொன்றாக பிய்த்து சாப்பிடுவான்னேன்?? இங்கே இன்னொரு விஷயம் நாம் சற்று FAST TRACK கில்
சென்றால் மட்டுமே உலக காமிக்ஸ்சின் சமகால சாகசங்களை எட்டிப்பிடிக்க முடியும். FACTS இவ்வாறிருக்க, 48 என்ற FORMAT நமக்கு சரிப்படுமா ??இரண்டு ஒரே GENREஉள்ள கதைகளை தடிமனாக தற்போதுள்ள FORMAT டில் பதிப்பிப்பது நமக்கு ஏற்றதாக எனக்கு படுகிறது. : )!
//கொஞ்சம் Grand-ஆக பெரிய சைஸ் & 100+ பக்கங்கள் என்கிற Format வெகுஜனங்களுக்கு என்றுமே பொருந்தாது. //
ஹ்ம்ம்...உண்மை தான் சார்! BUT ஐந்து ஆயிரம் வாசகர்களுக்கு 120 எனும்போது இன்னமும் SUBSCRIPTION கூடினால் விலை குறையக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறதல்லவா?? 60 /120 விலைகள்
அப்படியொன்றும் வெகுஜன விரோத விலையாக எனக்கு படவில்லை!
//குறைந்தபட்சம் Original வெளியீடுகளின் Formatஐ பின்பற்றுமளவுக்காவது நாம் இறங்கிவர வேண்டுமென்பது என்னுடைய ஏழ்மையான கருத்து! :P//
தற்போது நாம் கடைபிடிக்கும் வழிமுறை நமக்கு சிறந்த வழிமுறை எனபது என் கருத்து. : )
// ஹ்ம்ம்...உண்மை தான் சார்! BUT ஐந்து ஆயிரம் வாசகர்களுக்கு 120 எனும்போது இன்னமும் SUBSCRIPTION கூடினால் விலை குறையக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறதல்லவா?? 60 /120 விலைகள்
Deleteஅப்படியொன்றும் வெகுஜன விரோத விலையாக எனக்கு படவில்லை! //
மாதாந்திர இதழ்களை விற்பனை செய்யும் கடைகளில் ஓரளவுக்காவது கண்டுகொள்ளப்படும் சாத்தியம் நமக்குத்தேவையெனில், ஒரு கதை / ஒரு புக் / ஒரே விலை என்கிற Format-க்குள் நுழைய வேண்டும். இரண்டு தனித்தனி புத்தகங்களாக இரண்டு கதைகள் ஒரே மாதத்தில் வெளிவரும்போது இது எளிதாகிவிடுகிறது. அறிமுக வாசகர்களுக்கு எளிதாகவும், அதேநேரம் பழகிய வாசகர்களுக்கு எந்த பாதிப்புமில்லாமலும் உள்ளதல்லவா? மேலும் பெரும்பாலான Original கதைகளின் அளவுகளும் இதற்குப் பொருத்தமாகவே உள்ளது!
Pin அடித்த அல்லது Binding செய்த என்பது மாதிரியான விஷயங்கள் (Physical aspects) நமக்கு எந்தவகையிலும் முக்கியமில்லை. கடைகளில் விற்பனைக்கு / வாங்குவதற்கு எந்தெந்த விஷயங்கள் உதவியாக உள்ளனவோ அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கட்டுமே!
// தற்போது நாம் கடைபிடிக்கும் வழிமுறை நமக்கு சிறந்த வழிமுறை எனபது என் கருத்து. : ) //
என்னைப் பொருத்தவரையில் சூழ்நிலைகளின் காரணமாக இரண்டு மூன்று கதைகளை ஒன்றாக சேர்த்து வெளியிடுவதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் அதே காரியத்தை "கனமான புத்தகங்கள் கௌரவமான Format" என்ற உந்துதலோடு செய்வதில் பயனில்லை என்றே சொல்வேன். இரண்டு கதைகள் இரண்டு தனிப்புத்தகங்களாக வருவது புதிய வாசகர்களுக்கு ஒரு நல்ல Choice.
//இரண்டு கதைகள் இரண்டு தனிப்புத்தகங்களாக வருவது புதிய வாசகர்களுக்கு ஒரு நல்ல Choice//
Deleteமிகச்சரி ரமேஷ்! நானும் மாதம் இரண்டு புத்தகங்களை (லயன் + முத்து ) ஆவலுடன் வரவேற்கிறேன். இரண்டு 120 விலையில் 100 + பக்கங்களுடன். அப்படி முடியாவிட்டால் ஒரே குண்டு புக் வருவதை விட இரண்டு 60 ரூபாய் புத்தகங்கள் நல்ல சாய்ஸ்.
// நமக்கு எந்தவகையிலும் முக்கியமில்லை//
பின் அடிப்பதா அல்லது PERFECT பைண்டிங்கா ?? I DO CARE ! : ) .முக்கியமே !
//மன்னிக்கவும்... அதுதான் அகில உலக காமிக்ஸ்களின் Format! :D பெரியகதைகளெல்லாம் பெரும்பாலும் 4-5 பக்கத் தொடராக வந்தவைகளின் தொகுப்பு மட்டுமே! நான் பார்த்தவரையில் டெக்ஸ் வில்லர் கதைகளைத்தவிர மற்ற அனைத்து கதைகளின் Original-ம் 48 பக்கங்களுக்கு மேலே செல்வது ஆபூர்வம். இந்த limit-ஐ எதற்காக கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் கடைப்பிடிக்கின்றன என்பதை நாம் கவனிக்காமலிருப்பது மிகப்பெரிய தவறு. //
DeleteIm sorry but I dont think thats right. all the graphic novels I owe are more than 100 pages. Such as Conan, Heaven Sword and Dragon Sabre and so. Maybe because they are called graphic novels!! Even the mangas I owe also got around 100 pages or so.
கிராபிக் நாவலில்
ReplyDeleteநரகத்தைப்பார்த்தேன். மறுபதிப்பு கலரில் வருமா?
ஸாரி பரணி சார்.
ReplyDeleteநமது சி.சி.வயதில் மறுபதிப்பு போராட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
இந்த வாரமும் வாழைப்பூ சாப்பிடும் போராட்டம் தானா?
டைலான்டாக் வேண்டாமே.
ReplyDeleteபரணிசார் கிராபிக் நாவலே மேல் என்று கூறுமளவிற்கு அதில்
சோகம் உள்ளதே
Dear Sir,
ReplyDeleteநிழல் 1 நிஜம் 2 - Ippothaikku vendave vendaam. Atharku pathilaaga veru pazhaiya kadhaigalai reprint seyyungal pls.
"கடமை கண்ணாயிரமாய்" // TEX-kku nalla pattap peyar :-) :P
Karsanin Kadantha Kalam - Color-il vendum enapathe nanbargal palarin aaval.
எடி சார், இந்த மாத இதழ்களின் எனது எண்ணங்கள் தனியாக உங்களுக்கு, அதற்கு முன் சந்தா அமைப்பில் ஒரு சின்ன நெருடல்,
ReplyDeleteஅதாவது SGN இதழ்கள் சந்தா அவர் அவர் விருப்பம் என்று சொல்லி விட்டீர்கள். ஒரு வேலை எதிர்பார்த்த அளவு சந்தா கிடைக்காவிடில்??? இது ஒரு சின்ன சந்தேகம் மட்டுமே, ஏற்கனவே இதழ்களை பிரித்து ஒல்லி ஆக்கி விட்டீர். இந்த ஆண்டு போல் இல்லாமல், அடுத்த வருடம், மிகவும் குறைவான பக்கங்களே வருவது போல் உள்ளது...
// அதாவது SGN இதழ்கள் சந்தா அவர் அவர் விருப்பம் என்று சொல்லி விட்டீர்கள். ஒரு வேலை எதிர்பார்த்த அளவு சந்தா கிடைக்காவிடில்??? //
Deleteஅவ்ளோதான்! :D
(இப்ப சந்தோஷமா டெக்ஸ் மாத இதழ் கேட்போர் சங்க உறுப்பினர்களே?! )
உண்மை நண்பரே...this is the practical truth. நான் , நமது வெளியீடுகளை என்றுமே தனியா பிரித்து பார்பதில்லை, +5, +6 என்று அறிவித்த போதும், இப்பொழுது SGN என்று இருக்கும் பொழுதும், நான் பார்ப்பது முழுமையான எண்ணிக்கையே. ஒரு வேலை இவ்வாறு நடந்தால், நமக்கு கிடைக்க வேண்டிய ஒரு ஐந்து புத்தகங்களின் எண்ணிக்கை குறையும். that will be too bad up to me. I like to read as much as books as possible.
DeleteAlso Ramesh bro, I just wish to ask you one thing. Are you the same Ramesh Kumar(பெருங்களத்தூர் ), who is used to send vaasagar spot light stories??? (eg in Top 10 Special)
Delete// Are you the same Ramesh Kumar(பெருங்களத்தூர் ) //
DeleteYes! ;)
wow that's great...தொடர்ந்து கிராபிக் டிசைன் நீங்கள் அசத்தி வரும்பொழுதே நினைத்தேன். வாசகர் ஸ்பாட் லைட் என்பதை தாண்டி, தனி அடையாளமாக பத்து கதைகளில் ஒன்றாக வெளிவந்தது , உங்களது (உங்கள் சகோதரருடன்) ஆக்கம் மட்டுமே.
Deleteஎதிரிக்கு எதிரி = எதிரி அருமையான முயற்சி... மிகவும் தாமதம் என்றாலும் கூட, இன்றாவது சொல்லி விடுகிறேன், That was a wonderful creativity from you. Convey my reg to you bro also :) Cheers
இதுவரை உருப்படியாக எதையுமே செய்யாமல் "ந்தாப்பா, எல்லாரும் பார்த்துகங்க - நானும் பெரிய ரவுடிதேன்" னு சொல்லிக் கொண்டு திரிகிற என்னைப் போன்றவர்கள் உலவும் இவ்விடத்தில் நிஜமான ரவுடி தன்னை வெளிக்காட்டாமல் பவ்யமாக இருப்பது அந்த ரவுடியின் பெருந்தன்மையையும் காட்டுகிறது.
Deleteநீங்க உண்மையான ரவுடிதான் ரமேஸ் குமார் அவர்களே! :)
Thanks சிம்பா!
Delete@Erode VIJAY, நாம எல்லாருமே ஏதாவது ஒருவிதத்தில் ரௌடிகள்தான் (அடப்பாவமே.. இப்படியே பேசிப்பேசி எங்க வீட்டுக்கு போலீஸ் வந்துரப்போகுது)
RAMESH ஒரே கலக்கு கலக்கிருப்பீங்க போல ! தொடர்ந்து உங்களிடமிருந்து வெளிப்பட உள்ள அற்புதங்களுக்காக காத்திருக்கிறேன் !
Delete@ Ramesh Kumar
Deleteஎதிரிக்கு எதிரி = எதிரி அசத்தலான படைப்பு ரமேஷ்... அட்டகாசம்..
நீங்கள்தானா அது... வாழ்த்துக்கள்..
உங்க கிட்ட இருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம்.. ஏமாற்றி விடாதீர்கள்..
கா ர் ச னி ன் கடந்த காலம் வண்ணத்தில் வேண்டும் . நமது எடி எவ்வளவோ எக்ஸ்பெரிமென்ட் செய்கிறார் . ஆனால் நமது வேதாளருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க மாட்டேங்கிறார் . நான் ரொம்ப நாளாக வேதாளரை கேட்பதற்கு காரணம் நமது எடியின் டிரான்ஸ்லேஷன் மூலம் வேதாளரை படிக்க வேண்டும் என்ற ஆசைதான். சார் ஏதவாது வாய்ப்பு இருக்கிறதா?
ReplyDeleteகாமிக்ஸ் பிரியன் அவர்களுக்கு :
ReplyDeleteசிங்கத்தின் சிறு வயதில் தொகுப்பு வேண்டி போராட்டம் நடந்து கொண்டு தான் இருக்கிறது .30 வது ஆண்டு மலர் விளம்பரம் வந்தவுடன் போராட்டம் தீவிரம் அடையும் .
டைலன் டாக் கதை "கிராபிக் நாவலை " விட சோகம் என்றால் அதையும் எதிர்ப்பேன் . (நான் நமது காமிக்ஸ் கதைகளை மட்டுமே அறிவேன் ).
ஆதி தாமிரா அவர்களுக்கு :
# டெக்ஸ் க்கு தனி இதழ் ,காமெடிக்கு தனி இதழ் என்று வாங்கி கொள்ளுங்கள் .கிராபிக் நாவலுக்கு 3 புத்தகம் தான் .அதுவும் தனி சந்தா தான் .அதை ஏன் கெடுகிரிர் #
காரணம்... கேட்டு வாராத புத்தகத்திற்கு யாருமே வேண்டாத "தனி இதழ் புத்தகம் "எதற்கு என்பது தான் எனது வினா ?வேண்டுமானால் டெக்ஸ் அல்லது காமெடி க்கு என்று தனி இதழ் கொண்டு வந்து "கிராபிக் நாவலை "வருடத்தில் ஒன்றோ ,இரண்டோ வெளி இடுங்கள் என்பது எங்கள் பலரின் உணர்வு .இப்படி விளம்பரம் வந்திருந்தால் நண்பர்கள் இடையை எவ்வளவு கொண்டாட்டம் இன்னேரம் வந்திருக்கும் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன் .தனி சந்தா வாக இருந்தாலும் நமது ப்ராண்டுக்காக வாங்க தான் படும் .நான் வாங்கும் காரணத்தை போன பதிவிலே கூறி விட்டேன் .( கிராபிக் நாவலுக்கு என்று இல்லா விட்டாலும் ஆசிரியரின் ஹாட் -லைன் காக அதற்கும் சந்தா கட்டுவேன் .)
ஆசிரியர் அவர்களுக்கு :
# கிராபிக் நாவலுக்கு என்று கதை வரிசை சொல்லாத போது நிதானம் தேவை #
அது எந்த கதை வரிசை என்றாலும் கிராபிக் நாவல் ..,கிராபிக் நாவல் தானே ...
இன்னமும் முன்னர் வெளி இட்ட "கிராபிக் நாவலை " படிக்காமல் வைத்திருக்கும் நண்பர்கள் பலரை அறிவேன் .
எனக்கு தாங்கள் பதில் அளிக்க மாட்டிர்கள் என்ற நம்பிக்கை கண்டிப்பாக உண்டு .எனவே நேரிலும் ,போனிலும் "கிராபிக் நாவலை " எதிர்க்கும் நண்பர்கள் தயவு செய்து உள்ளே வாருங்கள் .
மீண்டும் முக்கிய குறிப்பு :
கிராபிக் நாவல் " கதையை எதிர்க்க வில்லை (ஆதி தாமிரா கவனத்திற்கு ) கிராபிக் நாவல் என்ற தனி புத்தகத்திற்கு தான் .எங்கள் பயம் அந்த இதழ் புத்தகத்தை உங்களை போன்ற சிலர் பாராட்டி ,பாராட்டி அதை அதிகரித்து வழக்கமான இதழை வரும் வருடங்களில் குறைத்து விட்டால் ...)
ஈரோடு விஜய் மற்றும் நண்பர்கள் தங்கள் மன சாட்சியை தொட்டு ஓட்டு போடவும் .
//எனக்கு தாங்கள் பதில் அளிக்க மாட்டிர்கள் என்ற நம்பிக்கை கண்டிப்பாக உண்டு .எனவே நேரிலும் ,போனிலும் "கிராபிக் நாவலை " எதிர்க்கும் நண்பர்கள் தயவு செய்து உள்ளே வாருங்கள் .//- +10000
Deleteபோராட்டக்குழு தலைவர் பரணிதரன் அவர்களுக்கு,
Deleteகடுதாசி மட்டும்தான் என்றில்லாமல் சமீப காலமாக பின்னூட்டத்திலும் பின்னி எடுக்கிறீர்கள் என்பது போராட்டக்குழுவுக்கு வலு சேர்த்திடும் மகிழ்வானதொரு விசயமே!
சமீபத்திய க்ராபிக் நாவலான 'ஒ.சி.சு' உங்களது 'க்ராபிக் நாவல் எதிர்ப்புக் கொள்கை'யை அதிதீவிரமாக்கியிருப்பது துரதிரஷ்டவசமானது! எனினும், 'அடுத்த வருடத்தில் வரவிருக்கும் க்ராபிக் நாவல்கள் அழுவாச்சிக் காவியம் என்பதைத் தாண்டி வித்தியாசமானவை' என்று எடிட்டர் கொடுத்திருக்கும் உறுதிமொழிக்கு கொஞ்சம் மதிப்பளிப்பது நமக்கு நன்மை பயக்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது.
ஆயினும், 'இந்த க்ராபிக் நாவல்களுக்குப் பதிலாக ஒரு தனிப்பட்ட டெக்ஸ் புத்தகவரிசையை களமிறக்கலாமே' என்ற உங்களின் & மற்ற நண்பர்களின் கருத்தோடு 1000% ஒத்துப் போகிறேன். இந்த விசயத்தில் 'இன்னும் எத்தனை நாளுக்குத்தான் அந்தப் பாலைவனத்தையும், அழுக்கு கெளபாய்களையும் வைத்தே காய் நகர்த்திக் கொண்டிருப்பது? ஒரு மாற்று வேண்டாமா?' என்ற எடிட்டரின் எண்ணவோட்டமும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். (பெண்கள் உள்ளிட்ட பல ரசிகர்களையும், என்றைக்குமே சோடை போகாத விற்பனை அளவையும் வைத்திருக்கும் நாயகன் இந்த 'டெக்ஸ்' என்றபோதிலும் நம் எடிட்டர் அதிலிருந்து கொஞ்சம் விலக நினைப்பதும் சற்றே புரியாத புதிர்தான்!). இத்துடன் வித்தியாசமானவைகளை களமிறக்கிப் பார்த்திடும் அவரது 'தேடலும்' காரணமாயிருக்கலாம். என்ன செய்தாலும் குறைந்தபட்சம் ஒரு 90 சதவீதமாவது நல்லதையே செய்வார் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை அவரிடம் எனக்குத் தொடர்வதாலோ என்னவோ, நானும் அவர் செய்யப்போகும் புதுமைகளை ஆவலுடன் (அதிக எதிர்ப்பின்றி) எதிர்பார்க்கிறேன்.
மற்றபடி இவைகளெல்லாம் மனசாட்சியைக் கேட்டு ஆதரவு கொடுக்குமளவுக்கு பெரிய விசயங்களாக எனக்குத் தோன்றவில்லை! :)
இது வரை வந்த கிராபிக் நாவல்கள் மோசமில்லை ! சூப்பர் என சொல்லும் வந்த ஒரு கதை அந்த முதல் நாவல் ! ஆனால் அது அனைவரையும் கவர்ந்தது ! சோகம் என்றால் கார்சனின் கடந்த காலமும் கூடத்தான் ! ஆனால் மனதில் பதிய வேண்டும் ! படித்த சந்தோசத்தை தருவதில் சோக கதைகளும் இணையற்றவயே ! ஆகவே சுவைகளை எதிர்க்காமல் கதைகளை மட்டுமே எதிர்ப்போமே ! எனக்கும் கொலை செய்வீர் கனவான்களே கதையின் முதல் பாகம் கவர்ந்த அளவு இரண்டு மூன்று இல்லை ! நீதியின் நிழலில் மட்டுமே தற்போது வந்த டெக்ஸ்சில் சூப்பர் ! பார்ப்போம் இனிவரும் நாவல்களை ;.......
Deleteஆகவே டெக்ஸ் கதைகளும் சிறந்ததாய் தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் வேண்டும் !
Deleteமோசமான கதைகள் என சென்ற வருடம் ஏதுமில்லை ! கொலை செய்வீர் கனவான்களே இரண்டும் மூன்றும் என்னை கொட்டாவி விட வைத்தன !
Delete//....இந்த க்ராபிக் நாவல்களுக்குப் பதிலாக ஒரு தனிப்பட்ட டெக்ஸ் புத்தகவரிசையை களமிறக்கலாமே' ..//
Delete+10001
க்ராபிக் நாவல்களுக்கு நான் எதிரியல்ல .. in fact, I love the books - எமனின் திசை மேற்கு, கொலை செய்வீர் கனவான்களே & மனதில் மிருகம் வேண்டும் except ஒரு சிப்பாயின் சுவடுகள்
ஆனால், பெரும்பான்மையான வாசகர்களுடைய எதிர்பார்ப்பான டெக்ஸ்வில்லர் மற்றும் பிற காமெடி (மினி லயன், ஜூனியர் லயன்) கதைகளுக்கு தனிப் புத்தகம் இல்லாத போது, கிராபிக் நாவல்களுக்கு எதற்கு தனி புத்தகம் வரிசை என்பதே கேள்விக்குறி?
// கிராபிக் நாவல்களுக்கு எதற்கு தனி புத்தகம் வரிசை என்பதே கேள்விக்குறி? //
Deleteவேண்டியவர்கள் வாங்கி கொள்ளட்டும் என்றே நண்பரே !
//டெக்ஸ்வில்லர் மற்றும் பிற காமெடி (மினி லயன், ஜூனியர் லயன்) கதைகளுக்கு//
இவைகளை அனைவரும் வாங்கி விடுவர் ! ஆகவே மெயின் சந்தாவில் இவர்கள் இடம் பிடிப்பார் !
நாவல்களில் எதிர்ப்பலை பத்து சதம் , அவர்கள் எதிர்ப்பு உறுதியானது ! ஆகவே அவர்களுக்கு ஒதுக்க ஒரு வாய்ப்பு என நினைக்கிறேன் !
ஆதி தாமிரா :# எந்த காமிக்ஸ் ஆக இருந்தாலும் "புஷ்டியாக " தாருங்கள் .#
ReplyDeleteஇந்த கருத்தில் ஆவது என்னுடைய கருத்துடன் தாங்கள் ஒத்து போவதில் மிக்க ..,மிக்க நன்றி .
ஆனால் அதனாலாய அது நடக்க போவது இல்லை என்பதை நினைத்தால் உங்கள் மேல் "பரிதாபம் "தான் வருகிறது . :-)
hahaahaa.. :-)))))))
Deleteபுஷ்டி என்பது பக்கங்களின் எண்ணிக்கையில் மட்டுமில்லை. அது எவ்வளுவுபேரை வாங்கிப்படிக்க வைத்தது என்பதிலும் உள்ளது. சமீபத்தில் வந்த புஷ்டியான இதழ்கள்: சுட்டி லக்கி & நிலவொளியில் நரபலி!
Delete:D
சமீபத்தில் வந்த புஷ்டியான இதழ்கள்: சுட்டி லக்கி & நிலவொளியில் நரபலி!+ஆகாயத்தில் அட்டகாசம்
Deleteகதைகளை பற்றிய விமர்சனங்களை நீன்களே கூறிவிட்டதால்,வேறு தனியாக என்ன சொல்வது தெரியவில்லை.←
ReplyDeleteஎனக்கு டெக்ஸின் இரண்டு கதைகளுமே பிடித்திருந்தது.
சிப்பாயின் சுவடுகள் ஆரம்பத்தில் பிடிக்காவிட்டாலும் முடிவில் பிடித்துவிட்டது.
ஒரு சந்தேகம் தனி சந்தாவின் சேர்க்கை குறைவாக இருந்தால் நிறுத்தப்படுமா?
⇾
அட்டைப்படங்கள் தளத்தில் பார்க்கும் பொழுது நன்றாக இருந்தன ஆனால் புத்தகத்தில் சற்றே மங்கலாக இருந்தது.
டெக்ஸ் கதையின் பக்கங்களின் தரம் பெரிதும் ஏமாற்றம் அளித்துவிட்டது அதற்க்கான காரணத்தை நீங்கள் கூறிவிட்டாலும் எனது கருத்தை கூறுகிறேன்.
கார்சனின் கடந்த காலம் கலரில் என்பதற்கு நீங்கள் கூறிய காரணங்கள் அனைத்துமே ஏற்புடையாதாக இல்லை.
அதுவும் மின்னும் மரணம் கலரில் வரும்பொழுது இதனை நீங்கள் மறுப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.
அடுத்து பாக்கிங் முறையில் ஏதேனும் முன்னேற்றம் செய்ய முடியுமா?←
ஒவ்வொரு மாதமும் புத்தகம் மடங்கியோ அல்லது அட்டையின் ஏதேனும் ஒரு பகுதி கிழிந்தோ தான் வருகிறது எனக்கு.
முன்பே ஒரு முறை ப்ளிப்கார்டில் பயன்படுத்துவது போல கண அட்டை பயன்படுத்த முடியுமா என்று கேட்டிருந்தேன் அதற்கு உங்களிடம் எந்த பதிலும் இல்லை.⇂
நீங்கள் சந்தா செலுத்தினால் அதில் 15% கழிவு உண்டு என்று போன முறை கூறி இருந்தீர்கள் அவ்வாறு எதுவும் இவ்வருடம் கொடுக்காமல் இதற்க்கு பயன் படுத்த முடியுமா?
இல்லை அதற்கு சற்றே விலை உயர்த்தினால் சாத்தியமாகுமா?
இந்த ஒரு காரணத்திற்காக தான் இன்னும் சந்தா செலுத்தவில்லை.
ஈபேயில் வாங்கினால் இந்த பிரச்சனை இருக்காதா?
@ கிருஷ்ணா
Deletee-bay ல் வாங்கினாலும் அந்த பிரச்னை உண்டு.. ஆனால் அது rare case தானே.. கடந்த ஒரு வருடமாக e-bay ல் தான் நான் வாங்கி கொண்டுருந்தேன், சில இதழ்கள் மட்டுமே அவ்வாறு அட்டை கிழிந்து கிடைத்தன.
மற்றபடி ஒரு ரகசியம், காதை கொடுங்கள், சந்தா கட்டிவிட்டால் கொரியர் செலவு பெருமளவு மிச்சம்.
சந்தா என்பது நமது காமிக்ஸின் வருகைக்கு ரத்த ஓட்டம் பாய்ச்சுவது போல ! சந்தாவை முடிந்த அளவு தவிர்க்க வேண்டாம் நண்பரே !
Delete@ ஸ்டீல்...
Deleteஅதே.. அதே..
இப்போது எனக்கு புத்தி வந்து சந்தா செலுத்திவிட்டேன்.. சில நாட்களுக்கு முன்.. நண்பரே..
//அடுத்து பாக்கிங் முறையில் ஏதேனும் முன்னேற்றம் செய்ய முடியுமா?←
Deleteஒவ்வொரு மாதமும் புத்தகம் மடங்கியோ அல்லது அட்டையின் ஏதேனும் ஒரு பகுதி கிழிந்தோ தான் வருகிறது எனக்கு.//
VERY UNFORTUNATE!புதிய புத்தகங்கள் மடங்குவது ரொம்பவே சங்கடமாக இருக்கும் .
எனக்கு வந்த புத்தகங்கள் எல்லாம் இதுவரை PERFECT ஆகவே வருகின்றன. அதற்காக தற்போதைய பேக்கிங் முறை அருமை என சொல்ல வரவில்லை. இங்கே ஒரு சில நண்பர்களும் பேகிங் குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
நமது எடிட்டருக்கு உங்களுடைய குறையை தனியாக ஈ-மெயில் செய்தால், ஒரு GENERAL SOLUTION தருகிறாரோ இல்லையோ உங்களுக்காக ஒரு PERSONALIZED SOLUTION நிச்சயம் கிடைக்கும் எனபது எனது எதிர்பார்ப்பு.PLEASE GIVE IT A TRY கிருஷ்ணா !
"ஸ்பெசல பாக்கிங் "( ஹார்ட் CORRUGATED SHEET COVER LIKE FLIPKART WITH EXTRA COST ) என்று ஒரு முறையை செயல்படுத்த வாய்ப்புகள் உள்ளதா தெரியவில்லை.
நான் பேங்கிற்கு செல்ல முடியவில்லை ! இந்த வார இறுதிக்குள் நானும் அனுப்பி விடுவேன் நண்பரே !
Delete@ ஸ்டீல்..
Deleteசீக்கிரம்.. அப்போதுதான் சென்னை புத்தக திருவிழாவின்போது 'ஸ்பெஷல் தோசை' ஒன்று கிடைக்கும்..
@Muthu Kumaran
Deleteநண்பரே பெரிய 'ஊத்தப்பம்' கேட்பீர்கள் என பார்த்தால் 'தோசை' கேட்கிறீர்களே ?
@ திருப்பூர் ப்ளுபெர்ரி:
Delete'ஊத்தப்பம்'தான் கிடைத்து விட்டதே.. எடிட்டரின் update படித்து விட்டீரா..
ஓ நன்றி நண்பரே ! படித்து விட்டு வருகிறேன் !
Deleteஅல்வா குடுத்துடுவாரோ !
Deleteதிகில் நகரில் டெக்ஸ் ?????????????????
ReplyDelete@Thilagar, Madurai : 2015 ? லயன் ஆண்டு மலர் ?
Deleteகவலைப்படாதீர்கள் மானிடர்களே !!!
ReplyDeleteகார்சனின் கடந்த காலத்தை "கண்ணியத்துக்குரிய கட்டை விரலார்"கலரில்தான் வெளியிடுவார் என அடியேனின் எட்டாம் அறிவு சற்று முன் சூசகமாக கூறியது.
கட்டை விரலாரின் கனவில் ஊடுருவி அவருடைய ஐடியாவை களவாடி பெற்ற தகவல்கள் படி ஜனவரி மாதமே வெளியிட ஆயத்தமாகிறார் என்றும் தெரிய வருகிறது.
ஆகவே,போராட்ட குழுவினர் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று வழக்கம்போல் அலுவலகம் சென்று ஓய்வு எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் :-)
எத்தன க... :)
Delete// அலுவலகம் சென்று ஓய்வு எடுக்குமாறு //
Deleteஹா ஹா ஹா! சரியாச் சொன்னீங்க சாத்தான்ஜி! :D
ha ha ha! :D
Deleteடியர் முத்து குமரன் !!!
Delete"க"கர முதல எழுத்தெல்லாம் கட்டை
விரலார் முதற்றே உலகு.(குறள் :1341)
// // அலுவலகம் சென்று ஓய்வு எடுக்குமாறு //
Deleteஹா ஹா ஹா! சரியாச் சொன்னீங்க சாத்தான்ஜி! : //
நண்பர் புனித சாத்தான், பூனையாரை மனதில் வைத்து சொன்னது தானே இது ? :)
@ saint satan:
Delete'க'லக்குறீங்க போங்க..
This comment has been removed by the author.
ReplyDeleteநாம் எல்லோரும் கா.. கா.. என்று காக்கை போன்றோ கழுதை (செல்லமா) போன்றோ கத்தியது, 'கட்டை விரலாரின்' காதில் விழுந்து அவரும் கா. க. கா. கலரில் கொடுக்க, கட்டிளம் காளைகள் (நாம தாங்க) கட்டவிழ்த்து விட்ட களிப்புடன் 'கடை'ஏறும் காலம் கனிய போகிறது..
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகட்டை விரலாரை நம்பினோர் கைவிடப்படார் !!!
Deleteவாழ்க கட்டை விரலார் !!! ஓங்குக அவர் புகழ் !!!
கட்டை விரலாரின் பெருமை சொல்லவும் பெரிதே !!!
கடவுள் ஒருவரே. அவரே கட்டை விரலார் !!!
இப்படிக்கு ,
புனித சாத்தான்.
காக்காய் பிடித்து காரியம் சாதிப்போர் சங்கம்.
பள்ளிபாளையம்.(எமக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை :-)
சங்கத்தின் ஆயுள் சந்தா எவ்வளோவோ நண்பரே ? :)
DeleteKKK in color pls
Deleteபூவ பூவுஇன்னு சொல்லலாம் புஷ்பம் என்று சொல்லலாம் புஇபம் என்று சொல்லலாம் அது போல kkk கலர் வந்தாலும் ஓகே தான் பிளாக் அண்ட் ஒய்ட்இல் வந்தாலும் ஓகே தான் சைஸ் மாறி வந்தாலும் ஓகே தான்
ReplyDeleteடியர் எடிட்டர்ஜீ !!!
ReplyDeleteஉங்கள் தரப்பு வாதங்கள் புரிகிறது.அதே சமயம் எங்களை போன்ற அதிதீவிர டெக்ஸ் அபிமானிகள் (ஜூனியர் எடிட்டர் உட்பட)வேண்டுவது என்னவெனில் ...
வருடத்திற்கு இரண்டு டெக்ஸ் கதைகள் மட்டும் முழு வண்ணத்தில் ஸ்பெசல் வெளியீடாக ...பொங்கல் மலர்...தீபாவளி மலர் !!!("நிலவொளி" சைஸில் வேண்டாமே..!)
இதன் மூலம் டெக்ஸ் கதைகளில் நல்ல கதைகளை (600+கதைகளிலிருந்து) தேர்ந்தெடுக்க உரிய அவகாசம் கிட்டும். ஓவர் டோஸ் ஆகும் அபாயம் துளியும் இராது !!!
நடுவில், டெக்ஸ் கதைகள் வேண்டும் என்று நாங்கள் அடம் பிடிக்க மாட்டோம் :-)
உண்மையை சொல்வதென்றால் பெரும்பாலான வாசகர்களுக்கு டெக்ஸ் வில்லரை கருப்பு வெள்ளையில் பார்த்து (படித்து) சலித்துவிட்டது !!!
உலகமே வண்ணமயமாகிவிட்டபின் நாம் மட்டும் கருப்பு வெள்ளையில் பயாஸ்கோப் பார்க்கவேண்டுமா....? வேண்டாமே....!!!
டெக்ஸ் கதைகள் இனி வண்ணத்தில் மட்டுமே (பெரிய சைஸில்)என்ற தீர்மானத்தை இந்த மன்றத்தில் ஓட்டெடுப்பிற்கு விடுகிறேன் !!!
வண்ணத்தில் டெக்ஸ் --இதுவே நமது முழக்கமாக இருக்கட்டும் !!!
கட்டை விரலாரின் அருள் கடாட்சம் நம் அனைவர் மீதும் இருப்பதாக.ததாஸ்து !!!
வருடத்திற்கு இரண்டு 'டெக்ஸ்' இதழ்கள் என்பது கொஞ்ஞ்ஞ்சம் நியாயமான கோரிக்கைதான். ஆனால் கருப்பு-வெள்ளையிலும் டெக்ஸின் அட்டகாசமான கதைகள் இருக்கின்றதே? அவைகளை வேண்டுமானால் இந்த வருட தீபாவளி ஸ்பெஷல் போலவே ஒவ்வொரு வருடமும் விடலாமில்லையா? ஆதி, என்னைப் போன்ற 'குண்டு புக் க்ளப்' மெம்பர்களுக்கும் குதூகலம் அளிக்குமில்லையா? :)
Delete+1
Delete+1
Deleteடியர் எடிட்டர்..
ReplyDeleteதங்களின் கஷ்டமும், பொறுப்பும் புரிகிறது..
ஒரு தந்தையினதை போல..
பிள்ளைகளது ஆசைகள் ஒரு பக்கம்.. அதை நிறைவேற்ற ஆனது செய்வதால் வரும் சங்கடங்கள் ஒரு பக்கம்.. மொத்தத்தில் பாவம் நீங்கள்..
எங்களுக்கு என்ன தரவேண்டும் எப்படி தரவேண்டும் என்று உங்களிடம் விட்டு விடுகிறோம்.. நீங்க பாத்து எதாவது செஞ்சா சரி..
ஆனால் ஒன்று.. நீங்கள் எது செய்தாலும்.. நாங்கள் உங்கள் பக்கம்..
இதோ, நானும் வந்திட்டேன்!
Delete// மொத்தத்தில் பாவம் நீங்கள்.. //
Delete:D
@ Erode Vijay:
Deleteவாங்க.. வாங்க..
@ Ramesh Kumar
Deleteஎதிரிக்கு எதிரி = எதிரி அசத்தலான படைப்பு ரமேஷ்... அட்டகாசம்..
நீங்கள்தானா அது... வாழ்த்துக்கள்..
உங்க கிட்ட இருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம்.. ஏமாற்றி விடாதீர்கள்..
+1
Deleteகார்சனின் கடந்த காலம் வேண்டாமுன்னு யாருனாச்சும் சொன்னிங்கான அழுதுடுவேன்.. எனக்கு ஏனோ டெக்ஸ் , டைய போலிக், ரீபோர்ட்டர் ஜானி புக்ஸ் கருப்பு வெள்ளையில் பார்த்தாதான் பிடிக்குது.. இது என்ன வியாதியோ?!!
ReplyDeleteதல தயவு செய்து நிழல் 1 நிஜம் 2 கதை வேண்டாமே!! அப்படி சிக் பில் கதை தான் வேண்டுமெனில் இரும்பு கவ்பாய் அல்லது விண்வெளியில் ஒரு எலி போடுங்க ப்ளீஸ்..
ReplyDelete+1
DeleteYes. Yes.
Delete+
Delete+1
Delete+1111
Delete+1
Delete+1
Deleteசில நேரங்களில், சில இடங்களில் விளக்கமெல்லாம் சரிப்பட்டே வராது. ’மற்றதெல்லாம் கேட்காதீங்க, 2016லிருந்து டெக்ஸ் வண்ணத்தில் வருவார்’ (அது 2015 இறுதியில் முடிவு பண்ணவேண்டிய விஷயமல்லவா? அப்போதைய காரணிகள், நம் மனவோட்டம் எப்படியிருக்குமோ? நிஜமாகவே வண்ண இதழ்கள் நிலைக்கு நாம் உயர்ந்திருக்கவும் செய்யலாம், இல்லாத சூழலை புரிந்துகொள்ளும் நிலையும் வந்திருக்கலாம்) என்று சொல்லி சட்டுபுட்டுனு இந்த டாபிக்கை மூட்டை கட்டியிருந்தால் என்னவாயிருக்கும் என நினைத்துப் பார்க்கிறேன்.
ReplyDeleteஇருப்பினும் நீங்கள் விளக்க முயன்றிருப்பது, உங்களின் ஒளிவு மறைவற்ற தன்மையைக் காட்டுகிறது. உங்களின் செம்மையான இந்தப்பாதையில் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துகள். என்றும் உடனிருப்போம்.
//உங்களின் செம்மையான இந்தப்பாதையில் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள். என்றும் உடனிருப்போம்//
Delete+1 நானும்!
+1 million.
Deleteஅப்படியே இந்த ஒல்லி புக் பிரச்சினைக்கும் ஒரு ஆறுதல் சொன்னீங்கன்னா, கேட்டு கொஞ்சம் அழுகையை அடக்கிக்கொள்வேன். ஹிஹி!
ReplyDeleteஹிஹி!...
DeleteDear Editor,
ReplyDeleteடெக்ஸ் வண்ணப்பதிப்புகளுக்கான தங்களது விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி
ஆனால் "கார்சனின் கடந்த காலம்" என்பது once in a blue moon story.. இதற்கு மட்டும் விதிவிலக்கு வேண்டும். இந்த ஒரு முறை மட்டும் எப்படியாவது போனெல்லி நிறுவனத்துடன் சிறப்பு அனுமதி பெற்று, எங்களுக்கு வண்ணத்தில் தந்து விடுங்கள் .. ரூபாய 200 விலையிலாவது
//...லயன் 30-வது ஆண்டுமலரில் ஒரு டெக்ஸ் சாகசம் வண்ணத்தில் வந்திடும் ...//
மிக மகிழ்ச்சியான செய்தியே...
எம்புட்டு செலவானாலும் பரவாயில்லை, கா க கா வை பெரிய அளவிலேயே வண்ணத்தில் வெளியிடவும் .. தயவுசெய்து சின்ன size வேண்டாம்
Delete//...லயன் 30-வது ஆண்டுமலரில் ஒரு டெக்ஸ் சாகசம் வண்ணத்தில் வந்திடும் ...//
Deleteமிக மகிழ்ச்சியான செய்தியே... //
+1
To: Editor,
ReplyDeleteஉங்களது 'அப்டேட்' படித்தேன் சார்.
இங்கிருக்கும் பல நண்பர்களிடம் 'கார்சனின் கடந்தகாலம்' கைவசமிருக்கிறது. வண்ணத்தில் வந்தாலே தவிர, அதன் மீள்பதிப்பு பெரியதொரு விதத்தில் அவர்களை இம்ப்ரெஸ் செய்யப்போவதில்லை. அதனை வாங்குவதில் அவர்கள் ஆரவமும காட்டப்போவதில்லை. எனவே, இப்படியொரு ஓரளவு அண்மைய காலத்தில் வந்த கதையை மீள் பதிப்பிப்பதற்குப் பதிலாக, டிராகன் நகரம் போன்றதொரு அரிய இதழை வெளியிடலாமே? அல்லது முன்னைய ஸ்பெஷல் இதழ்களில் மற்றைய கதைகளோடு வந்து, பலராலும் படிக்க கிடைக்காமல் தவிக்கும் ஏதேனுமோர் டெக்ஸ் கதையை வெளியிடலாமே?
உங்களிடம முன்வைக்கும் இன்னுமொரு முக்கிய கோரிக்கை, ''நிழல் 1 - நிஜம் 2 '' கதையை தயவுசெய்து மீள்பதிப்பித்து வெறொரு அரிய கதையின் மீள் பதிப்பு வெளிவரும் வாய்ப்பை தடுக்கவேண்டாம். ''நிழல் 1 - நிஜம் 2'' கதை இங்கே இப்போதும் கடையில் கிடைக்கிறது!!!!
இவற்றை மீள்பதிப்பு செய்வதால் மீள்பதிப்புகள் மீதான சலிப்புதான் அதிகரிக்கும்.
//.. அதனை வாங்குவதில் அவர்கள் ஆரவமும காட்டப்போவதில்லை. எனவே, இப்படியொரு ஓரளவு அண்மைய காலத்தில் வந்த கதையை ...//
Deleteநமது வாசகர்கள் ஆர்வம் காட்டாமலா இவாளவு பின்னூட்டமும், வேண்டுகோள்களும் இங்கே நிறைந்துள்ளன?
கார்சனின் கடந்த காலமும் பழைய கதையே... பெரும்பான்மையான வாசகர்களிடம் இல்லை .. Its one of the most wanted story by our thamil comics readers .. இது கண்டிப்பாக பெரிய அளவில் வண்ணத்தில் வேண்டும்
டிராகன் நகரம் பழைய/சிறந்த க்தை என்பதை மறுக்கவில்லை
நண்பரே, தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். முழுமையாக பாருங்கள்.
Delete//வண்ணத்தில் வந்தாலே தவிர, அதன் மீள்பதிப்பு பெரியதொரு விதத்தில் அவர்களை இம்ப்ரெஸ் செய்யப்போவதில்லை. அதனை வாங்குவதில் அவர்கள் ஆரவமும காட்டப்போவதில்லை//
என்றுதான் எழுதியிருக்கிறேன். 'வர்ணத்தில் மட்டுமே அது வேண்டும்' என்பதே என் கோரிக்கை!
Where can I buy nizhal 1 nijam 2 in srilanka,pls let me now?
Deleteசார் நீங்கள் சொல்வது அனைத்தும் ஏற்று கொள்கிறேன் ! நீங்கள் உறுதி அளித்த படி நமது முப்பதாவது ஆண்டு மலரில் இதனை வெளி விடலாமே ! அங்கே கலரில் தருவதாய் வாக்களித்துல்லீர்களே ! அந்த கலர் கதை இந்த கதையை வண்ணத்தில் மிஞ்சும் என்றால் , கதையின் சுவையில் இதற்க்கு மேல் என்றால் ஏற்று கொள்கிறேன் ! சார் இது டெக்ஸ் கதையில் டாப் அல்லவா ! நண்பர் மொஹிதீன் மேலே காட்டிய பக்கங்கள் பார்த்த போது காதலன் காதலியிடம் கூறும் இப்படியே நான் .த்து விட்டால் கூட சந்தோசம் எனும் வரிகளே நினைவுக்கு வருகிறது ! அந்த கதைக்கு நீங்கள் கூறிய ராயல்டி பிரச்சினை தியாகம் செய்யலாம் எனும் போது இந்த ஒரு கதையை முயர்ச்சிக்கலாமே !
ReplyDeleteமேலும் சிறிய சைசில் வேண்டவே வேண்டாம் ! இந்த கதையை நீங்கள் ப்ரீமியம் விலை வைத்து கூட விடலாம் !
நிச்சயம் எல்லா கதைகளும் வண்ணத்தில் இட முடியாது என அவர்களிடம் கூறினால் நிச்சயம் ஏற்று கொள்வார்கள் என்றே நினைக்கிறேன் !
Deleteஇது எனது எண்ணமே , பிரச்சினையின் ஆழம் உங்களுக்கே தெரியும் ! ஆகவே முடியாது என உங்கள் மனதிற்கு பட்டால் நிச்சயம் ஏற்று கொள்கிறேன் கருப்பு வெள்ளை எனினும் !
ஆசிரியரின் KKK பற்றிய update-ஐ இப்போதுதான் படித்தேன். பின்னணியில் இருக்கும் சிக்கல்களைப் பார்க்கும்போது டெக்ஸுக்கு மட்டும் கருப்பே அழகு காந்தலே ருசி என்று தோன்றுகிறது.
Deleteஆண்டுமலரில் மறுபதிப்பு கதையை சேர்ப்பதைவிட Fresh-ஆன கதையை சேர்ப்பதே நல்லது. உண்மையில் KKK-ன் மறுபதிப்புக்கு பதிலாக டெக்ஸின் புதிய கதை வந்தால்கூட தேவலாம்தான்! (கார்சன்தான் பாவம்!)
When i received the books, i felt really happy that it takes me to my younger days memories. After seeing the Tex book so many times, i started reading the first story from yesterday. I have the habit of not reading at a stretch. Rather i will read some 30-40 pages at a time & when i started reading subsequent pages, i will read some 4-5 pages before & then continue. Still i didn't finish my first story in Tex. Once I had completed the story, I was emotional after reading the dialog between Tex & Carson. That tells the character & commitment of those two
ReplyDeleteOne more thing i want to tell you is. Since the Tex book has "Deepavali" in its cover, i had placed that book along with sweets and other cooked materials, dress materials in front of the pooja shelf as padayal to god. Then afternoon only i had taken the Tex book & started reading. I shared this to my brother’s yesterday evening (every deepavali day's evening we will have a get together in our elder brother's house along with our mother). We will bring all the remaining crackers from each family (3 out of 4 brothers - one brother house is in Coimbatore & one cousin brother families will have a get together & enjoy finishing all the crackers & sweets from each families). I had shown our Tex book (incidentally all 3 brothers are comics readers right from our school age) & they were exited. Mostly they will buy thro eBay or go to landmark.
The first Tex story is so far great. The struggle our hero along with Carson undergoing for those children’s, their energy level in honoring their commitment to that child's mother were the qualities one should have in our day to day life also.
Your decision of splitting the specials as separate book & make it in Rs.60 is a good decision considering we want to sell more books. So far you are a great decider for our comics. Go a head.. we will always extend our cooperation eternally (at least until my life)
Thanks
Kuberan
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
ReplyDelete2014 ஆம் வருட நமது காமிக்ஸ் அட்டவணை பார்த்தேன்...... கதை தேர்வுகள் , கலவையான ஹீரோக்கள் ...... எல்லாம் ok..... ஆனால் இவையல்லாம் உயர் வருவாய் பிரிவினருக்காக உருவாக்கபட்டது போல் இருக்கிறது. சாதாரண , மத்தியதர ரசிகனை திருப்திபடுத்த எதுவும் இல்லை. விலை ஏற்றம்... பக்கங்கள் குறைப்பு..... வலை தளத்தில் அதிகம் உலவும் நண்பர்களை திருப்திபடுத்திவிட்டீர்கள்....... வலைதளத்திற்க்கு அப்பார்பட்ட ரசிகனை நீங்கள் கண்டுகொள்ளவில்லை.
வழுவழுப்பான ஆர்ட் பேப்பரில்தான் வெளியிடவேண்டும் என்றில்லை...... பூதவேட்டை வெளிவந்த காகிதத்தில் வண்ணத்தில் வெளியிடலாம். நமது மக்களின் மனோநிலை எப்படி என்றால்...... ஒரு பொருளை அதிக விலை கொடுத்து ஒரு முறை வாங்குவார்கள். அதை உபயோகிக்க மாதம் தோறும் அதிக செலவு செய்ய யோசிப்பார்கள். அடிக்கடி மாற்றவேண்டும் என்கிற காரணத்தினாலேயே பிலிம் போடும் கேமராக்கள் அதிகம் விற்பனையாகவில்லை. டிஜிட்டல் கேமராக்கள் வந்தவுடன் நடுத்தர மக்களும் கேமரா வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். பிலிம் போடும் கேமராதான் தயாரிப்பேன் என்று அடம் பிடித்த KODAK நிறுவனம் இன்று இருந்த இடம் தெரியவில்லை.
உயர்தர வெள்ளை காகிதத்தில் வண்ணத்தில் , குறைந்த விலையில் மாதம் இரண்டு புத்தகம், வருடத்திற்க்கு ஒரு முறை வழுவழுப்பான ஆர்ட் பேப்பரில் அதிக விலையில் ஒரு ஸ்பெஷல் இதழ். இந்த வருடம் சந்தா கட்டாமல் அவ்வபோது பிடித்த இதழ்கள் மட்டும் வாங்கலாம் என்று இருக்கிறேன். சொல்ல கஷ்டமாக இருந்தாலும் இதுதான் எனது இன்றைய நிலை.
தீபாவளி ஸ்பெஷல் இரண்டும் கிடைத்தன, tex willer - as usual unusual. இரண்டு டெக்ஸ் கதைகளும் சூப்பர். சிப்பாயின் சுவடுகள் - தெளிந்த நீரோட்டம் போன்ற கதை , ஒரு படைப்பு யதார்த்ததிர்க்கு மிக அருகில் செல்லும் போது இலக்கியம் ஆகிறது . அந்த வகையில் சி.சு. ஒரு சிறந்த இலக்கிய படைப்பு. படித்துகொண்டிருக்கும் போதே கண்ணில் இருந்து வழியும் கண்ணீரை கட்டுப்படுத்தமுடியவில்லை. ஜானி எப்போது வருகிறார்?
ReplyDeleteபரணிதரன் ஏன் கிராபிக் நாவலை பார்த்து பயப்படுகிறார் என்று தெரியவில்லை.
அப்படியே மேலோட்டமாக இங்குள்ள பல்வேறு வகையான எண்ணச் சிதறல்களை நுனிப்புல் மேய்ந்ததில் கடைசியாக எனக்குத் தோன்றியது இதுதான்:-
ReplyDeleteநம்மையெல்லாம் வாசகர்களாக வச்சிக்கிட்டு நம் எடிட்டர் படும் பாடு இருக்கே... ஐய்யய்யய்யய்யோ...!
'புரட்சித் தீ' கதையில் வரும் அந்த பத்திரிக்கை ஆசிரியர் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை! :)
காலம் அந்த 80களிலேயே உறைந்து நின்றிருக்கலாம்.... நாமும் டவுசரை மாட்டிக்கிட்டு கிடைச்சதை எல்லாம் சந்தோசமா படிச்சிருப்போம்... ஹீம்ம்ம்ம்....
// அப்படியே மேலோட்டமாக இங்குள்ள பல்வேறு வகையான.. //
Deleteகீழே ஒரு LIC building Comment உள்ளதே இதைப்பார்த்தீர்களா! :D
@ Ramesh kumar
Delete//கீழே ஒரு LIC building comment உள்ளதே இதைப் பார்த்தீர்களா!//
பார்க்கிறதாவது? அதைப் படிச்சுட்டு என் மொட்டை மண்டையிலிருக்கும் நாலு மில்லிமீட்டர் முடிகளும் இந்த நடு ராத்திரியிலும் நட்டுக்கிட்டு நின்னதையெல்லாம் நீங்க பார்த்திருக்கணுமே...
ஒரு வழியா சுதாரிச்சுக்கிட்டு நானும் ஒரு குடிசை வீடு கட்டியிருக்கேனே, அதை நீங்க பாத்தீங்களா? :)
டியர் விஜயன் சார்,
ReplyDelete//முதல் பக்கத்திலேயே நிறைய முதியவர்கள் ; பத்தி பத்தியாய் சோக நெடியடிக்கும் தத்துவப் பின்னணி வசனம் என்பதை சந்தித்த போது - 'அப்டிக்கா ஜூட் விட்டால் என்ன ?' என்ற கேள்வி எனக்குள் எழாமல் இல்லை//
பிரெஞ்சில் ஒரு சில வரிகளில் இருந்த தத்துவ வசனங்களை, பத்தி பத்தியாக விரித்து எழுதியதே நீங்கள் தானே சார்?!
பொதுவாக ஒரு மொழிபெயர்ப்பு காமிக்ஸை படிக்கும் போது, அதன் மூலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து என் மண்டையை நான் உடைத்துக் கொள்வதில்லை; தமிழில் படிக்கவே நேரம் இல்லாத போது, அதன் மூலத்தை தேடித் பிடித்து டவுன்லோட் செய்து, ஆன்லைன் ட்ரான்ஸ்லேட்டர்கள் உதவியுடன் மொழிபெயர்த்து புரிந்து கொள்ள முயற்சிப்பது எல்லாம் ரொம்பவே தலைவலி பிடித்த வேலை என்பது தான் காரணம்.
அதே சமயம், வாசகனுக்கு ஒரு மொழிபெயர்ப்பு உறுத்தலாகத் தெரிய, அவன் அதன் மூலப் பிரதியை படித்திருக்க வேண்டிய / புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் அனைத்து சமயங்களில் இருப்பது இல்லை. இதற்கு சிறந்த உதாரணம், நீங்கள் KBT3 போட்டிக்காக அனுப்பி வைத்த - Eurobooks பதிப்பகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த - லக்கி லூக்கின் கதைகள். படிக்கும் போதே பல இடங்களில் உறுத்தியது! அந்த சந்தேகத்தில், அதன் ஒரிஜினலுடன் ஒப்பிட்டுப் பார்த்த போது பல இடங்களில் பிழைகள் தென் பட்டன!
இனி, "ஒரு சிப்பாயின் சுவடுகள்" இதழைப் பற்றிப் பார்ப்போம். பிரெஞ்சில் இருந்து ஆங்கிலத்தில் இல்லத்தரசி ஒருவரால் மொழிபெயர்க்கப்பட்டு, பிறகு கருணையானந்தம் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டு, இறுதியாக உங்களிடம் வந்து சேர்ந்த அதன் ஸ்க்ரிப்டை, பல மாதங்கள் கழித்து, நமது ரசனைக்கு ஏற்ப மாற்றி எழுதியதாக நீங்கள் எழுதிய போதே சற்று கலக்கமாகத் தான் இருந்தது. மூன்று பேரால், வெவ்வேறு காலகட்டங்களில் மொழி / உருமாற்றம் செய்யப்பட்ட ஒரு ஸ்க்ரிப்ட் மூலத்துடன் எவ்வளவு சதவிகிதம் ஒத்துப் போகும் என்ற அச்சம் தான் காரணம்.
அதற்கு வலுச் சேர்க்கும் வகையில், நீங்கள் வெளியிட்டிருந்த preview page-ல் காணப்பட்ட தமிழாக்கம் மூலத்தோடு சற்றே மாறு பட்டிருந்தது. ஆனால், அதன் மையக்கருத்து மூலத்தில் இருந்து வெகுவாக விலகி இருக்கவில்லை என்பது சற்று ஆறுதல் தந்தது.
நீள நீளமான வசனங்கள், வியட்நாம் யுத்தக் குறிப்புகள், ஆங்காங்கே கவிதைகள், தத்துவங்கள் என்று பயணிக்கும் கதையை தமிழில் படிக்கையில், சில இடங்களில் நெருடத் தான் செய்தது. ஆனால், முன்பே கூறிய காரணங்களின் படி முழுக்கதையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பொறுமை எனக்கில்லை என்பதால், முதல் மற்றும் கடைசிப் பக்கங்களை மட்டும் மூலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தேன்.
பிரெஞ்சில் முதல் பக்கத்தின், முதல் பேனலில் எந்த ஒரு வசனமும் இருக்காது. தத்துவங்களும் ஒரு சில வரிகளிலேயே இருக்கும். வியட்நாம் பற்றிய ஒரு சிறிய டீசர் குறிப்பு மட்டுமே அதில் இருக்கும். ஆனால், தமிழிலோ கதை பற்றிய ஏகப்பட்ட விளக்கங்கள் முதல் பக்கத்திலேயே நிறைந்திருக்கும்!
அதே போல, கடைசி பக்கம் முழுவதும், பின்னணியில் ஒரு பாட்டு ஒலித்துக் கொண்டு இருக்கும். அது வரிக்கு வரிக்கு பிரெஞ்சோடு ஒத்துப் போகவில்லை என்பதல்ல என் பிரச்சினை.
பிரெஞ்சில், கடைசி பக்கத்தின் முதல் பேனலில் தொடங்கும் அந்தப் பாடல்; இரண்டாம் பேனலில் ரேடியோவில் இருந்து ஒலிப்பதாக வாசகனுக்கு காட்டப் பட்டு, பிறகு அந்தப் பக்கம் முழுக்க தொடர்ந்து பின்னணியில் ஒலித்துக் கொண்டே இருக்கும். மூலக் கதைப்படி, வலோனின் சீரியலை, அவர் வேலை செய்யும் டிவி சானல் உடனே வெளியிடத் தயங்குவதாக மட்டுமே இருக்கும்.
ஆனால், தமிழில் கடைசிப் பக்கத்தில் நாம் காணும் க்ளைமேக்ஸ் என்ன?! எனக்கு மிகவும் நெருடலாகத் தெரிந்த இடம் இது தான்!!!
முதல் இரு பேனல்களில், பாட்டுக்குப் பதிலாக, வலோன் பற்றிய செய்தியறிக்கை ரேடியோவில் ஒலிபரப்பாகிறது! வலோனின் சாதனை பாராட்டுக்குரியது என்றாலும், இராணுவ மேலிடம் அவரின் சீரியலை ஒளிபரப்ப மறுத்து விட்டதாக அறிகிறோம்! இப்படி ஒரு முக்கியத் தகவல், ரேடியோ செய்தியாக ஒலிபரப்பப் பட்டால் மற்ற மீடியாக்களும், டிவி சானல்களும் சும்மா இருக்குமா என்ன?! அதைத் தோண்டித் துருவி உண்மைகளை வெளிக் கொணராதா?
2ம் பேனலில், செய்தித்தாளின் முதல் பக்கத்தை வாசிக்கும் வலோன் (பத்திரிக்கையின் பெயர் தெரிவதை வைத்து முதல் பக்கம் என்கிறேன்!) - எட்டாம் பக்கத்தில், பண்ணிரண்டே வரிகளில் அவரைப் பற்றிய செய்து வெளியாகியிருப்பதாக தனக்குத் தானே அலுத்துக் கொள்கிறார்! இதுவும் மூலக் கதையில் இல்லை! பிரெஞ்சில் இருப்பதெல்லாம், வலோனின் புலனாய்வு வெளியுலகுக்கு தெரியாத நிலையில், அவருக்கு நேரவிருக்கும் கோர முடிவு மட்டுமே!
சீரியலை டிவியில் ஒளிபரப்ப தடைவிதித்த இராணுவம், அந்தத் தகவலை ரேடியோ செய்தியாக ஒலிபரப்பவும், செய்தித் தாள்களில் வெளியிடவும் அனுமதி அளிக்குமா என்ன?!
(தொடரும்)
(முந்தைய பின்னூட்டத்தின் தொடர்ச்சி!)
Deleteஅடுத்ததாக, வீட்டின் அழைப்பு மணி - ட்ர்ர்ரிங் ட்ர்ர்ரிங் என டெலிபோன் மணி போல(!) அழைக்க, எழுந்து சென்று கதவைத் திறக்கும் வலோன், அங்கே நிற்கும் நபரைப் பார்த்து ஏற்கனவே தெரிந்தவர் போல "சார்!" என வியப்பு மேலிட அழைக்கிரார்! ஆனால், பிரெஞ்சில் இருப்பதோ அன்னியர் ஒருவரைப் பார்த்த அதிர்ச்சியில், "மிஸ்டர்?" என்று அவர் பெயரை அறிந்து கொள்ள, வலோன் கேட்ட ஒரு கொக்கிக் கேள்வி!
'இரண்டு பக்கங்களிலேயே இத்தனை பிழைகள் இருக்கிறதே, முழுக் கதையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் என்ன ஆகும்?' என்று நினைத்தாலே கவலையாக இருக்கிறது.
வரிக்கு வரி மூலத்தில் இருக்கும் வார்த்தைகள், அதே அர்த்தத்துடன், அதே வரிசையில் - தமிழிலும் வர வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. அப்படிச் செய்தால் அது ஒரு தட்டையான மொழி பெயர்ப்பாகவே இருந்திடும்!
ஆனால், தேவையற்ற வசனங்களைச் சேர்க்காமலும், கதையின் போக்கையும், முடிவையும் மாற்றி அமைக்காமலும் இருக்கலாமே?! கூடுதல் வசனங்களும், விளக்கங்களும் வாசிப்பவருக்கு ஒரு வேகத் தடையாகவே அமையும்!
உங்களிடம் வந்த தமிழ் / ஆங்கில ஸ்க்ரிப்ட்களிலேயே இப்படித் தான் இருந்ததா அல்லது இந்தக் கதையை விளக்கிச் சொன்னால் தான் தமிழ் வாசகர்களுக்குப் புரியும் என்று நீங்களாக இப்படி ஒரு முடிவை வைத்தீர்களா?! இப்படி கதையின் போக்கையே நீங்கள் மாற்றி அமைத்தது எதனால் என்று எனக்கு விளங்கவில்லை!!! சென்சார் செய்திடவும், வசனங்களை மாற்றி அமைத்திடவும் இது ஒன்றும் நமது கலாசாரத்திற்கு புறம்பான கதை அல்லவே?! மேலதிக யூகங்களுக்கு வாய்ப்பளிக்காமல், இது பற்றிய உங்கள் தரப்பு விளக்கத்தை கேட்டு அறிய விரும்புகிறேன்!
டியர் கார்த்திக் !!!
Delete///கதவைத் திறக்கும் வலோன், அங்கே நிற்கும் நபரைப் பார்த்து ஏற்கனவே தெரிந்தவர் போல "சார்!" என வியப்பு மேலிட அழைக்கிரார்! ///
ஒருவேளை அந்த நபர் "மிட்டரண்டுக்கு" வேண்டப்பட்ட பிரபல பத்திரிக்கையாளராக இருந்திருப்பாரோ ....?
இருந்தும் அடியேனுக்கும் அந்த இடம் நெருடலாகத்தான் இருக்கிறது !!!
@Erode VIJAY:
Delete//அந்த கடைசி பக்கத்திலிருக்கும் "சார்"ஐ பல கோணங்களில் யோசித்து பார்த்தே ஒருவழியாய் உள்ளதைப் புரிந்துகொண்டேன்//
முதலில் வாசித்த போது என்னுடைய நிலையும் அது தான் விஜய்! அந்த ரேடியோ செய்தியும் துருத்திக் கொண்டு தெரிந்தது.
//பல நிலைகளில் செய்யப்படும் மொழிபெயர்ப்பு இந்தமாதிரியான நெருடல்களுக்கு காரணமாகிவிட்டிருக்கலாம்//
உண்மை! குறிப்பாக பிரெஞ்சில் இருந்து நேரடியாக தமிழாக்கம் செய்யப் படும் கதைகளில், மூன்று கட்ட மொழியாக்கம் நடைபெறுகிறது!
@காமிக்ஸ் ரசிகன் (எ) புதுவை செந்தில்:
//விஷயம் வெளியே தெரிந்தபின் வலோன் கொல்லப்படுவதும் சரியாக இல்லை. இது கதையில் அவர் கூறும் "நாம் பூதத்தை கட்டவிழ்த்து விட்டபின் நம் மீது கை வைக்க யாருக்கும் துணிச்சல் வராது" என்ற கூற்றுக்கு முரணாக உள்ளது//
மிகச் சரியான கருத்து செந்தில்! செய்தி வெளியான அதே நாளில், சந்தேகத்திற்கிடமாக வலோன் கொலை செய்யப் பட்டால், அவர் கூறிய கருத்துக்கள் உண்மையே என்று ஆகிறது! ரேடியோ மற்றும் செய்தித்தாள் வாயிலாக உண்மை வெளியில் தெரிந்த பின், அப்படி ஒரு விபரீத முடிவை ஜெனரல் கார்பின் எடுக்கத் துணிய மாட்டார்.
//கடைசியில் வலோன் "மிஸ்டர், நீங்கள்?" என்று மட்டும் கேட்பதாக இருந்தால் கதையின் முடிவை சுலபமாக யூகித்திருக்கலாம். அது நம் மனதையும் அழுத்தியிருக்கும்.//
+1
@சாத்தான் ஜி:
//ஒருவேளை அந்த நபர் "மிட்டரண்டுக்கு" வேண்டப்பட்ட பிரபல பத்திரிக்கையாளராக இருந்திருப்பாரோ ....?//
அந்த மர்ம நபர் ஜெனரல் கார்பினின் வேலைக்கு அமர்த்திய தொழில்முறை கொலையாளி என்றே நினைக்கிறேன். அல்லது, வியட்நாம் படுகொலை சம்பவத்தில் கார்பினுக்கு துணை நின்ற கீழ்மட்ட இராணுவ அதிகாரியாகவும் இருக்கலாம்! ஏனெனில், அந்தக் கொலையாளி வயதானவராகவும், மிடுக்கானவரகாவும் காணப் படுகிறார். தவிர, பக்கம் 98 - கடைசி சில பேனல்களில் காணப் படும் வசனங்களை கவனியுங்கள். புஜால் பற்றிய தொலைபேசி செய்தியை ஒட்டுக் கேட்டதும், அந்தக் கொலையாளி - "இந்தப் பெயரைக் கேட்டதும், பாஸ் என்னை முடுக்கி விடுவார் என்பதில் சந்தேகமே இல்லை" என்கிறார்! அந்த பாஸ், கார்பினாகத் தான் இருக்கும் என்பது என் அனுமானம்.
இருந்தாலும், நீங்கள் சொன்ன கோணத்திலும் இப்போது யோசித்துப் பார்த்தேன்! இந்தக் கதையில் வரும் மற்றுமொரு பத்திரிக்கையாளர், பக்கம் 19-ல் வலோனோடு அறிமுகம் செய்து கொள்ளும் கேப்ரியல். ஆனால், அவர் முக அமைப்பும், கொலையாளியின் முக அமைப்பும் வெவ்வேறானவை. தவிர, கொலையாளி ஒரு பத்திரிக்கையாளர் என்பதற்கான அறிகுறிகள் கதையின் எந்த இடத்திலும் கொடுக்கப் படவில்லை! மாறாக, கதையில் கொலை நடக்கும் இடங்களில் எல்லாம், அதே ப்ளூ கார் சகிதம் அவர் ஆஜர் ஆகிறார்!
@கார்த்திக்
Deleteநாம் இங்கே வரலாறு படிக்க குழுமியிருக்கும் மாநாக்கர்களோ அல்லது நமது ஆசிரியர் நமக்கு வரலாற்று பாடம் நடத்த வந்த புரபசரோ அல்ல.நாம் இங்கே இணைத்திருப்பது காமிக்ஸ் என்ற ஊடகத்தின் வாயிலாக நாம் படிக்கு கதைகளை பற்றி விமர்சிக்க அல்லது விவாதிக்க. நமது ஆசிரிய வெளியிடும்
புத்தகங்கள் எந்த பள்ளியிலும் / கல்லூரியிலும் பாடப்புத்தகமாக வைக்கப்படபோவதில்லை.
அப்படி இருந்தால் IT NEEDS A CRITICAL SCRUTINY JUST LIKE WHAT YOU HAVE DID .நமது காமிக்ஸ் பெரும்பாலான வேலைகளில் பொழுதுபோக்கு சர்ர்ந்த நமது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக
படைக்கப்படுபவை. இங்கே பெரும்பாலோனோருக்கு காமிக்ஸ் எனபது ஒரு ஹோப்பி அல்லது பொழுதுபோக்கு. இப்படி இருக்க WHY CANT WE KEEP THINGS SIMPLE? (I STILL ENJOYED YOUR COMMENTS, GREAT INSIGHT! : ))
மொழிபெயர்ப்பில் மொழிபெயர்ப்பாளர் தமது SEGMENT READERS காக தமது ஆக்கத்தில் தேவைப்படும் இடத்தில IMPROVISE செய்வது கட்டாய தேவை. அப்படி செய்யாவிட்டால் RESULT கிடைக்காது. கூடுமானவரை CORE PLOT டுக்கு அதிகம் முரண்படாமல் ஒரு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டால் அதுவே
அங்கே வெற்றி. தமது SEGMENT வாசிப்பாலர்களுக்காக சில இடங்களில் CORE PLOT ட்டை விட்டு முரண்பட்டாலும் அது பெரும் தவறாக பார்க்கப்பட மாட்டாது. நமக்கு இங்கே முக்கிய தேவை RESULTS. இங்கே அவருக்கு நிச்சயம் சுதந்திரம் தேவை. அதை பிழை என்று கூறுவது தவறு.
சரி நம்ம விஷ்யத்துக்கு வரலாம்.
கதையின் தொடக்கத்தில் மூலத்தில் இல்லாதது வர்ணனையாக வருவது இது ஒன்றும் முதல்
முறை கிடையாதே? பெரும்பாலான வேலைகளில் ஒரு EXTRA சுவை சேர்க்க ஆசிரியர் பயன்படுத்தும் யுக்தி. இதில் என்ன தவறு ? நமது வாசிப்பு அனுபவத்தை அது ENHANCE செய்கிறது. இது போன்ற SPICE
நிச்சயம் தேவை.
இரண்டாவது அந்த ரேடியோ வர்ணனை. ஏன் உங்களுக்கு கடைசி பக்கத்தின் முதல் பேனல்
ரேடியோ வர்ணணையாக தோன்றியது என்று புரியவில்லை. அது ஒரு பேனலுக்கு கொடுக்கப்படும் BACK GROUND MESSAGE.அதே பக்கத்தில் இரண்டாவது பைனலில் உள்ளதும் BACK GROUND MESSAGE.ஜே!
இங்கே ஓவியத்தில் ரேடியோ வை நோக்கியுள்ள அம்புக்குறி அவ்வளவு பளிச் சென்று இல்லை. அதே புத்தகத்தில் 36 ம் பக்கம் மேல் இருந்து கீழாக ஐந்தாம் ஓவியத்தில் கூட BACK GROUND MESSAGE.
யாரோ சொல்வது போல பலூன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சாதாரண OVERLOOK ஆகவே எனக்கு படுகிறது. இங்கே மூலத்தில் ரேடியோவில் உண்மையாகவே செய்தி வாசிப்பது போல காட்டப்பட்டிருந்தால், அப்போது நமது ஆக்கத்தில் வசனங்களை மாற்றி PLACE செய்தது ஒரு சிறு பிழை.
இதற்கு முன் கூட வசனங்கள் பலூன் மாறி சென்றுள்ளது. இதுவே FACT ஆகா இருக்க முடியும். ஆசிரியர் முடிவை வேண்டுமென்ற மாற்றினார் எனபது WILD ACCUSATION.
அடுத்து "சார்" என்கிறாரே, அவர் அதற்கு முன் அறிமுகமானவரா எனபது உங்கள் கேள்வி.நமது நாட்டில் யாரும் "மிஸ்டர்" என்ற வார்தையை பொதுவில் பயன்படுத்துவதில்லை. ஒரு ஹோட்டலில் கூட அறிமுகமில்லாத நபரை "சார்" யென்றே சப்ளையர் விளிக்கிறார்
.இது இப்படி இருக்க அந்த கொலையாளியும் நமது நாயகரும் ஏற்கனவே சந்தித்துக்கொண்டுள்ளனர் என்பதை நீங்கள் எப்படி மறந்தீர்கள் கார்த்திக்?? சைக்கிள் ரிக்சாவில் நடக்கும் அந்த விபத்தின் போது இருவரும் முகம் பார்த்து மூன்று நான்கு வசனங்களை பேசிக்கொள்கின்றார்கள். அந்த அறிமுகத்தில் கூட அவர் ஆச்சர்யத்தில் "சார்" என்ற வார்த்தையை வெளிப்படுத்தியிருக்கலாமே ! :)
இடியாப்பச் சுற்று 4: நான் என்ன நினைத்தேனென்றால் அந்த Blue Car மனிதர் நிஜமாகவே ஹென்றியாக இருந்து (நரைமுடி தவிர்த்து, சற்று உருவ ஒற்றுமையும் உள்ளது), அவர் கொல்லப்பட்டதாக வலோனுக்கு கிடைத்த தகவல்கள் உண்மையாக இல்லாமலும் இருந்திருக்கலாம்... "சார்" என்றழைத்ததன் காரணம் அடையாளத்தைப் புரிந்துகொண்டதாலும் இருக்கலாம் மொழி பெயர்ப்பின் accuracy பற்றிய உங்கள் கேள்விகளைத் தவிரவும் கதைக்குள்ளே assumption-க்கு நிறையவே Space உள்ளது! :D
Delete@Karthik இம்மாதிரி Technical doubts உள்ள (மற்றும் Climax-ஐப் போட்டு உடைக்கும்) கருத்துக்களை நேரடியாக email-ல் ஆசிரியருக்கு அனுப்பிவிடலாமே. இல்லாவிட்டால் Original-உடன் ஒப்பீடு செய்வதே Blog-களின் புதிய வழக்கமாகிவிடவும் வாய்ப்புள்ளது!
டியர் விஸ்கி சுஸ்கி,
Delete//நாம் இங்கே இணைத்திருப்பது காமிக்ஸ் என்ற ஊடகத்தின் வாயிலாக நாம் படிக்கு கதைகளை பற்றி விமர்சிக்க அல்லது விவாதிக்க//
அதைத் தானே நானும் செய்திருக்கிறேன்! இதுவும் ஒரு விமர்சனம் தானே?! :) இதில் வரலாற்று ஆசிரியர், மாணவர் என்ற குழப்பம் எங்கிருந்து வந்தது?! :) இதை Criticism என்று ஏன் பார்க்கிறீர்கள்?! இதற்கு முன், லார்கோ, சுட்டி லக்கி, ப்ளூகோட்ஸ், XIII என்று தொடர்ச்சியாக ஆசிரியரின் மொழிபெயர்ப்பை பாராட்டிப் பேசி இருக்கிறேனே? ஒரே ஒரு முறை குறை சொன்னதால், உடனே நான் அவரை criticize செய்கிறேன் என்று அர்த்தம் கொள்வதா?!
ஒரு சிப்பாயின் சுவடுகள் பற்றி பல பதிவுகளிலும், காமிக்ஸ் டைமிலும் எடிட்டர் அவர்கள் வெகுவாக சிலாகித்து எழுதி இருந்ததை கவனித்தீர்களா?! இந்தக் கதையை முழுவதும் படித்த பிறகும், 'இது ஒரு பொழுது போக்குக் கதை மட்டுமே' என்று நீங்கள் திடமாக நம்புகிறீர்களா?!
லார்கோ / XIII போன்ற பக்கா கமர்சியல் கதைகளில் காணப்படும் லாஜிக் குளறுபடிகளைப் பற்றி நான் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை! பல இடங்களில் உறுத்தினாலும் அவற்றை நீங்கள் சொல்வது போல SIMPLE ஆக எடுத்துக் கொண்டு, ஜாலியாக கடந்து போய் விடுவதுண்டு! ;)
அதே சமயம், காமிக்ஸ் என்பது சிறு குழந்தைகளுக்கானது மட்டும் அல்ல, கிராபிக் நாவல்களில் இலக்கியத்திற்கு நிகரான, யதார்த்தத்திற்கு அருகேயான படைப்புகள் வெளிவருகின்றன என்று மற்றவர்களிடம் வலியுறுத்திப் பேசுவதில் உவகை கொள்ளும் நாம் - உண்மையில் அவ்வாறாக நினைக்கிறோமா என்ற கேள்வியே உங்கள் நீண்ட பதிலைப் பார்த்ததும் எழுகிறது! ஜாலியாக படித்துவிட்டு கடாசுவதற்கு மட்டும் தான் காமிக்ஸா?!
//மொழிபெயர்ப்பில் மொழிபெயர்ப்பாளர் தமது SEGMENT READERS காக தமது ஆக்கத்தில் தேவைப்படும் இடத்தில IMPROVISE செய்வது கட்டாய தேவை//
அது கதையின் முடிவையே மாற்றும் அளவுக்கு இருக்கக் கூடாது என்பது என் கருத்து! தவிர, நீங்கள் சொன்னது போன்ற ஒரு கருத்தைத் தானே நானும் சொல்லி இருக்கிறேன்?! (கீழே)
//வரிக்கு வரி மூலத்தில் இருக்கும் வார்த்தைகள், அதே அர்த்தத்துடன், அதே வரிசையில் - தமிழிலும் வர வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. அப்படிச் செய்தால் அது ஒரு தட்டையான மொழி பெயர்ப்பாகவே இருந்திடும்!//
//தமது SEGMENT வாசிப்பாலர்களுக்காக சில இடங்களில் CORE PLOT ட்டை விட்டு முரண்பட்டாலும் அது பெரும் தவறாக பார்க்கப்பட மாட்டாது//
உங்களுடைய மேற்கண்ட கருத்துடன் பெரிதும் முரண்படுகிறேன்!
//பெரும்பாலான வேலைகளில் ஒரு EXTRA சுவை சேர்க்க ஆசிரியர் பயன்படுத்தும் யுக்தி//
சித்திரக் கதை என்பது சித்திரங்களுடன் சேர்த்துப் படிக்க வேண்டிய / புரிந்து கொள்ள வேண்டிய கதை என்பதால் கூடுதலாக சேர்க்கப் படும் நீளமான வசனங்கள் வாசிப்பு வேகத்திற்கு தடையாகவே அமைகின்றன என நான் எண்ணுகிறேன். பல நண்பர்கள் கிராபிக் நாவலை தவிர்க்க, இது போன்ற நீளமான வர்ணனைகளும் ஒரு காரணமாகி விடக் கூடாதல்லவா?!
//இரண்டாவது அந்த ரேடியோ வர்ணனை. ஏன் உங்களுக்கு கடைசி பக்கத்தின் முதல் பேனல் ரேடியோ வர்ணணையாக தோன்றியது என்று புரியவில்லை//
இரண்டாம் பேனலில் காணப்படும் செய்திக்கு தொடக்க வரிகளாக அமைந்துள்ளது என்ற அடிப்படையில்!
//அதே பக்கத்தில் இரண்டாவது பைனலில் உள்ளதும் BACK GROUND MESSAGE.ஜே!//
No comments ;)
//இங்கே ஓவியத்தில் ரேடியோ வை நோக்கியுள்ள அம்புக்குறி அவ்வளவு பளிச் சென்று இல்லை//
இந்தக் கதை முழுக்கவே பல அம்புக் குறிகள் பளிச்சென்று பெரிதாக இல்லை தான்! அதற்கு என்ன செய்வது?! ஆனால், ரேடியோ அம்புக் குறியும் சரி, மின்னலைகள் போன்ற அந்த வசனப் பெட்டியும் சரி தெளிவாகவே உள்ளது!
//அதே புத்தகத்தில் 36 ம் பக்கம் மேல் இருந்து கீழாக ஐந்தாம் ஓவியத்தில் கூட BACK GROUND MESSAGE. யாரோ சொல்வது போல பலூன் வடிவமைக்கப்பட்டுள்ளது//
தவறு! அங்கே அம்புக் குறிகள் ஏதும் கிடையாது! தவிர அது நீங்கள் சொல்வது போல ஒரு பேக்கிரௌண்ட் மெசேஜ் மட்டுமே!
ஆனால், முதல் பக்கத்தின் இறுதிப் பேனலில் - ஒரிஜினலில் - எந்த ஒரு அம்புக் குறியும் இன்றி, பேக்கிரௌண்ட் மெசேஜாக மட்டுமே இருந்த ஒரு தகவல் - தமிழில் ஸ்பீச் பலூனாக மாற்றப் பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்! :)
//இது ஒரு சாதாரண OVERLOOK ஆகவே எனக்கு படுகிறது//
இதையும் சாதரணமான OVERLOOK என்றே சொல்லப் போகிறீர்களா?!
//இங்கே மூலத்தில் ரேடியோவில் உண்மையாகவே செய்தி வாசிப்பது போல காட்டப்பட்டிருந்தால்//
மூலத்தில் ரேடியோ செய்தியும் இல்லை; செய்தித்தாளின் எட்டாம் பக்கம், பனிரெண்டாம் பத்தியில் - வலோன் பற்றிய செய்தித் துணுக்கும் இல்லை!
//இதுவே FACT ஆகா இருக்க முடியும்//
நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால், ஒரிஜினலுடன் நீங்கள் சரி பார்த்துக் கொள்ளலாம்!
---> LIC Building தொடரும் ;)
(முந்தைய பின்னூட்டத்தின் தொடர்ச்சி!)
Delete//ஆசிரியர் முடிவை வேண்டுமென்ற மாற்றினார் எனபது WILD ACCUSATION.//
அது போன்ற யூகங்களுக்கு இடம் தர வேண்டாம் என்று தானே ஆசிரியரிடம் நேரடி விளக்கம் கேட்டுள்ளேன்?!
//நமது நாட்டில் யாரும் "மிஸ்டர்" என்ற வார்தையை பொதுவில் பயன்படுத்துவதில்லை//
இதற்கு புதுவை செந்தில் அளித்த விளக்கத்தைப் பார்க்கவும்! குறைந்த பட்சம் "சார், நீங்க?" என்று இருந்திருக்கலாம்?!
//சைக்கிள் ரிக்சாவில் நடக்கும் அந்த விபத்தின் போது இருவரும் முகம் பார்த்து மூன்று நான்கு வசனங்களை பேசிக்கொள்கின்றார்கள்//
நல்ல பாய்ண்ட்! ஆனால், அங்கே சுய அறிமுகங்கள் ஏதும் நடக்கவில்லை! கொலையாளியின் முகமும் தொப்பி, கறுப்புக் கண்ணாடி சகிதம் ரொம்பவே மாறுபட்டுத் தெரியும்!
ஆனால், ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் XIII போன்ற ஒரு பக்கா ஆக்ஷன் கதையில் எல்லாம் லாஜிக் பார்த்த நீங்கள், அதன் ஆங்கில / பிரெஞ்சு மூலம் படித்தவர்களின் எண்ணங்களை அறிய ஆவல் காட்டிய நீங்கள் - அதையே நான் ஒரு கிராபிக் நாவலில் செய்யும் போது மட்டும் ACCUSATION / CRITICAL SCRUTINY என்று என்னென்னவோ சொல்கிறீர்கள்! :) :) :)
//XIII னை படித்து முடித்தவர்களுக்கு இதுவரை கதையின் கடைசி பக்கத்தில் ஒரு நெருடல் ஏற்படாதது ஆச்சர்யம்! அதை இப்போது இங்கே விளக்கிச்சொன்னால் படிக்காதவர்களின் ஆர்வத்தை SPOIL செய்துவிடும். BUT மேலோட்டமாக சொல்லவேண்டுமென்றால் அந்த பக்கத்தில் ஒரு ACTION SEQUENCE MISSING என சொல்லலாம்.: ( . அங்கே கதாசிரியர் படிப்பவர்களை என்ன நடந்திருக்கும் என்பதை யுகிக்கவிட்டுவிட்டார் எனக்கொண்டால் அது வாசகர்களின் ரசனையில் விளையாடும் ஒரு WILD & BRUTAL DECISION ஆகா எனக்கு தெரிகிறது! ஆங்கிலத்தில் அல்லது பிரெஞ்சு சில் படித்தவர்களின் எண்ணங்களை அறிய ஆவல்!/
//I STILL ENJOYED YOUR COMMENTS, GREAT INSIGHT! : ))///
Same goes here! :)
@Ramesh Kumar:
Deleteநல்லவேளை அந்த ஹென்றியே நமது ரிபோர்ட்டர் வலோன் தான் என்று சொல்லாமல் விட்டீர்கள்! :D
இவர் ஹென்றியாக இருக்கலாமோ என்று ஒருவர் மீது கதையின் ஆரம்ப கட்டத்தில் சந்தேகம் எழுந்தது - முதியோர் விடுதியில் இருந்த நியூரித்! அவரது நண்பரான, புஜால் மரணத்தின் விளிம்பில் இருந்து மீண்ட நிலையில் - வலோனிடம் பொய் சொல்ல வேண்டிய அவசியங்கள் ஏதும் இருப்பதாய்த் தெரியவில்லை!
//@Karthik இம்மாதிரி Technical doubts உள்ள (மற்றும் Climax-ஐப் போட்டு உடைக்கும்) கருத்துக்களை நேரடியாக email-ல் ஆசிரியருக்கு அனுப்பிவிடலாமே//
கிளைமேக்சை எனக்கு முன்பே பலரும் போட்டு உடைத்து விட்டார்கள்! ;) தவிர பாராட்டுகள் ப்ளாகில், டவுட்டுகள் மற்றும் குறைகள் மின்னஞ்சலில் என்ற கான்செப்டில் எனக்கு நம்பிக்கை இல்லை.
//இல்லாவிட்டால் Original-உடன் ஒப்பீடு செய்வதே Blog-களின் புதிய வழக்கமாகிவிடவும் வாய்ப்புள்ளது!//
இதில் தவறேதும் இருப்பதாகத் தோன்றவில்லை! அட்டைப்படம் அருமை, கதை அருமை, பதிவு அருமை என்றே இடப்படும் பெரும்பாலான கருத்துக்களுக்கு நடுவில், சலிப்பு நேராமல் இருக்க உதவுவது இது போன்ற ஆரோக்கியமான விவாதங்களே என்பது என் கருத்து! தவிர, மற்ற வாசகர்களின் கருத்துகளையும் இதன் மூலம் அறியலாமே?!
ஆசிரியர், இது போன்ற கருத்துக்களில் இருந்து சரியென்று அவருக்குத் தோன்றுபவற்றை பரிசீலனை செய்து, அதற்கேற்ப சில நல்ல மாற்றங்களை கொண்டு வந்தாரானால் பயனடையப் போவது நாம் தானே?! :)
pls we want kKK sir. Dont change the schedule.if not possible in color also ok.
ReplyDelete@ கார்த்திக்
ReplyDeleteகொஞ்ச நாளா இந்தப் பக்கம் அதிகமா தலைகாட்டாம இருக்கீங்களே, ஆபீஸ் வேலை அதிகமோன்னு நினைச்சேன். ம்ஹூம்! :)
ஆனாலும், 'என்னா ஒரு ஆராய்ச்சி!!'னு உங்களை வியக்காமல் இருக்க முடியலை! நானும்கூட அந்த கடைசி பக்கத்திலிருக்கும் "சார்"ஐ பல கோணங்களில் யோசித்து பார்த்தே ஒருவழியாய் உள்ளதைப் புரிந்துகொண்டேன். 'மிஸ்டர்...?" அல்லது "நீங்க..." என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் கனமான ஒரு கிளைமாக்சில் தேவையில்லாமல் யோசிக்க வைத்திருக்காது என்று இப்போது உணர்கிறேன். பல நிலைகளில் செய்யப்படும் மொழிபெயர்ப்பு இந்தமாதிரியான நெருடல்களுக்கு காரணமாகிவிட்டிருக்கலாம். எனினும், உங்களைப் போலவே நானும் எடிட்டரின் விளக்கத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்...
@கார்த்திக்
ReplyDelete==ஆனால், தமிழில் கடைசிப் பக்கத்தில் நாம் காணும் க்ளைமேக்ஸ் என்ன?! எனக்கு மிகவும் நெருடலாகத் தெரிந்த இடம் இது தான்!!!==
எனக்கும்! உண்மையைச்சொல்வதென்றால் உங்களின் கமெண்டைப்படித்த பின்தான் எனக்கு கதையே தெளிவாக புரிங்துள்ளது!
கடைசிப்பக்கத்திற்கு முன்பக்கம் வலோன் வெறுப்புடன் அந்தப்புகைப்படத்தை கிழித்து எறியும்போதே கதை முடிந்து விட்டது என்றே நினைக்கிறேன்.
ஆனால் கதையில் மரணம் சம்பவிக்கும் இடங்களில் எல்லாம் தென்பட்ட அந்த ஆசாமியைப்பார்த்து கடைசிப்பக்கத்தில் வலோன் 'சார்' என்று கூப்பிடும்போது இவருக்கு முன்னரே அறிமுகம் ஆனவரோ என்ற எண்ணம் எழுகிறது. அதனாலேயே வலோன் அந்த ஆசாமியால் கொல்லப்பட்டாரா இல்லையா என்ற சந்தேகமும் எழுகிறது.
பிறகு நானாகவே கதைப்படி வலோன் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று யூகித்துக்கொண்டேன்!
அப்படி அவர் கொலைசெய்யப்பட்டிருந்தாலும் புத்தகத்தில் அந்த முடிவு நம்மை பாதிப்பதாக இல்லை. ஏனெனில் அவர் கஷ்டப்பட்டு கண்டறிந்த உண்மைதான் உலகிற்குத்தெரிந்து விட்டதே! டி.வியில்தானே ஒளிபரப்பாக வில்லை!
விஷயம் வெளியே தெரிந்தபின் வலோன் கொல்லப்படுவதும் சரியாக இல்லை. இது கதையில் அவர் கூறும் "நாம் பூதத்தை கட்டவிழ்த்து விட்டபின் நம் மீது கை வைக்க யாருக்கும் துணிச்சல் வராது" என்ற கூற்றுக்கு முரணாக உள்ளது
மாறாக நீங்கள் குறிப்பட்டுள்ளது போல் கடைசியில் வலோன் "மிஸ்டர், நீங்கள்?" என்று மட்டும் கேட்பதாக இருந்தால் கதையின் முடிவை சுலபமாக யூகித்திருக்கலாம். அது நம் மனதையும் அழுத்தியிருக்கும்.
மேலே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களின் விளக்கமான கமெண்டைப்படித்தும் எனக்கு புரிந்தவை. நன்றி!! ஆசிரியரின் கருத்துக்காக நானும் காத்திருக்கிறேன்.
டியர் எடிட்டர்,
ReplyDelete"கார்சனின் கடந்த காலம் " வர்ணத்தில் வேண்டும் என்ற எங்களின் கோரிக்கை எவ்வளவு இலகுவானது என்றும் , ஆனால் அதை நடைமுறை படுத்த நீங்கள் முயலும் போது எவ்வளவு பெரிய பல சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று உங்களின் நேர்மையான விரிவான விளக்கத்தில் இருந்து புரிகின்றது.ஆனாலும் தயவு செய்து கருப்பு வெள்ளையில் என்றாலும் அந்த காவியத்தினை வெளியிடுங்கள் .ப்ளீஸ் ! என்னிடம் அதன் முந்தய வெளியீடு இல்லை . இருந்தும் சிறு வருத்தம் தொனிக்காமல் இல்லைதான் . பரவாயில்லை . நான் எனது கனவில் ஈஸ்ட்மன் கலர் கொடுத்து வெள்ளி முடியாரின் காவியத்தினை , ஆந்தை விழியாரின் புண்ணியத்தில் பார்த்து கொள்கின்றேன் .
நண்பர்களே.. என்னிடம் சில பழைய இதழ்கள் உள்ளன...
ReplyDelete1. சைத்தான் சாம்ராஜ்யம் - டெக்ஸ் வில்லரின் அதிரடி சாகசம் (அட்டையும் முதல் இரு பக்கக்கங்களும் இல்லாத நிலையில்)
2. சாத்தான் வேட்டை - டெக்ஸ் வில்லர் (புதியதாக )
3. பிரின்ஸ் in ஆப்பிரிக்கா - 2 பிரதிகள் என்னிடம் உள்ளன அட்டையுடன்.
4. எரிமலை தீவில் பிரின்ஸ் (அட்டையின்றி, சற்று சிதிலமடைந்து ஆனால் முழுமையாக)
இவற்றிக்கு மாற்றாக கீழே உள்ள பிரதிகள் கிடைத்தால் பிறவிப்பயன் அடைந்து விடுவேன்...
1. டிராகன் நகரம்
2. கழுகு மலை கோட்டை
3. மரண முள்
மேலே கண்ட இதழ்களை, மேலே கண்ட இதழ்களுடன் மாற்றி கொள்ள விரும்பும் நண்பர்கள், muthudvp@yahoo.co.in முகவரிக்கு ஒரு மெயில் தட்டிவிடும்படி அன்பும் ஆசையுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
டியர் எடிட்டர்,
ReplyDelete30வது ஆண்டு மலரில் டெக்ஸ் வண்ணத்தில் வரவிருக்கும் செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பின்னே? எங்கள் 'தல' இல்லாமல் ஒரு லயன் சிறப்பிதழா? :)
ஆனால், தயவுசெய்து லயன்-30வது ஆண்டு மலரின் மொத்தப் பக்கங்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு மிகாமலும்; அதில் டெக்ஸின் கதை 500 பக்கங்களுக்கு மிகாமலும் பார்த்துக்கொள்ளவும்! ;)
'கா.க.கா' வண்ணத்தில் வெளிவரும் அந்த நாளொன்று புலர்ந்திடும்வரை இலவு காத்த பூனை போல் நானும் அடுப்படியில் படுத்தபடியே காத்திருப்பேன்.....
// இலவு காத்த பூனை போல் //
Deleteஇது என்னவோ இலவு காத்த கிளியைச் சாப்பிட்ட பூனை போல இருக்கே? :)
// இலவு காத்த பூனை போல் //
Deleteவிட்டத்தில் இருக்கும் தயிர் பானைக்கு ஏங்கும் பூனை என்றும் சொல்லலாம்.
நி 1நி 2 ஐ கேன்சல் செய்துவிட்டு க.க.கா ஐ சிறிய சைஸ் ல் 120 க்கு வெளியிட்டு இப் பிரச்சனையை தீர்த்து வைக்கவும். சந்தா தொகையும் மாறாது. க.க.கா உம் வண்ணத்தில் கிடைக்கும். உஸ்ஸ் படிக்க உடுங்கப்பா....
ReplyDelete+1
DeleteTrichy Vijay நீங்கள் Trichyல் எந்த area? நான் Trichyல் கருமண்டபத்தில் வசிக்கிறேன் !
DeleteTrichy Vijay நீங்கள் Trichyல் எந்த ஏரியா ? நான் திருச்சியில் கருமண்டபத்தில் வசிக்கிறேன் !
Deleteநண்பர்களே KKK வண்ணத்தில் கேட்கிறோம் பேர்வழி என்று ஒட்டு மொத்தமாக Tex கதைகளுக்கே ஆப்பு வைத்து விடாதீர்கள் ! KKK தீவிர வாசகர்கள் தவிர பெருபான்மை வாசகர்களிடம் இருக்க வாய்ப்பில்லை ஆகவே B&W or Colour வெளிவந்தால் சரிதான் ! நண்பர்களே எடிட்டர் யதார்த்த நிலையையும் கணக்கில் கொள்ளுங்கள் !
ReplyDelete