நண்பர்களே,
வணக்கம். நேற்றைய மாலை அக்டோபர் புது இதழ்கள் இரண்டும் கூரியரை நாடிக் கிளம்பி விட்டன ; அவை இன்று உங்கள் கைகளுக்கு வந்து சேர்ந்திட ST கூரியரின் கடாட்சம் நாடுவோம் ! பதிவுத் தபாலில் இதழ்களைப் பெற்று வரும் நண்பர்களுக்கு இன்று காலை தான் பிரதிகள் ship ஆகின்றன ....!
இதோ இரத்தப் படலம் - இன்னிங்க்ஸ் 2-ன் அட்டைப்படம் ! முன் + பின் அட்டைகளுக்கு ஒரிஜினல் டிசைன்களையே பயன்படுத்தியுள்ளோம் - எழுத்துச் சேர்ப்போடு ! பின்னட்டையில் சமீப மாதத்துப் பாணிகளைப் பின்பற்றி கதாசிரியர் + ஓவியர்களின் படங்களையும் ; சின்னதாய் கதையைப் பற்றியதொரு intro -வும் கொடுத்துள்ளோம் ! XIII -ன் தொடருக்கு நாலு வரியில் intro எழுதுவதெல்லாம் நாக்குத் தொங்கும் வேலை என்பதால் basic ஆக இந்தத் தொடரைப் பற்றிய outline மட்டும் தந்திருக்கிறேன் ! தவிர இது இரத்தப் படலம் தொடரின் இரண்டாம் இன்னிங்க்ஸ் என்பதால் - பாகம் 20 ; 21 என்றெல்லாம் அட்டையில் போடவில்லை ! புதியதொரு யாத்திரையை - புதியதொரு திசையில் ஆசாமி துவக்குவதால் முந்தைய தொடர்களை குறிப்பிட்டு அநாவசியமாய்ப் புது வாசகர்களை மிரளச் செய்ய வேண்டாமென்று தோன்றியது. சின்னதாய் ஒரு கதைச்சுருக்கம் உங்களின் நினைவுகளை refresh செய்திடவும் வருகிறது ! இங்கே சில சமீப காலத்து வாசகர்களின் பொருட்டு சின்னதாய் ஒரு clarification -ம் கூட ! 'இரத்தப் படலம் பாகம் 1-18 போட்டாச்சு ; ஒ.கே. ! ஆனால் இப்போது வெளியிடுவது பாகம் 20 & 21 என்றால் - part 19 என்னவாச்சு ?' என நிறைய கேள்விகள் வந்துள்ளன நமக்கு ! The making of XIII பாணியிலான ஒரு டாகுமெண்டரி இடையில் ஒரு பாகமாக பிரான்சில் வெளியிடப்பட்டது ; அதனைத் தான் "புலன்விசாரணை" என்ற பெயரில் நாமும் வெளியிட உத்தேசித்து அதற்கான உரிமைகளையும் வாங்கி பணிகளைத் துவக்கிப் பார்த்தோம் ; ஆனால் அது ஒரு காமிக்ஸ் கதை பாணியில் இல்லாது - ஒரு casefile போல் மிகவே dry ஆகப் பயணிப்பதால் விஷப்பரீட்சை வேண்டாமே என்ற எண்ணத்தில் அதை பரணுக்குப் pack செய்திட்டோம்.ஆகையால் இடைப்பட்ட நம்பர் இந்த (வெளி வரா) பாகத்திற்கே!
சென்ற மாதத்து அச்சுக் குறைபாடுகளை இம்முறை இயன்ற வரை களைந்துள்ளோம் என்று சொல்லத் தோன்றுகிறது. அச்சுப் பிரிவில் சீனியர் பிரிண்டர் ஒருவரை நியமித்து உள்ளதோடு - நான் ஊரில் இல்லா சமயங்களில் (அது தான் பெரும்பாலும் நடக்கும் சங்கதி!) அச்சினை monitor செய்ய நமது துவக்க காலத்து technician ஆன அமீன் பாயையும் பொறுப்பேற்கச் செய்துள்ளோம். இரத்தப் படலம் இதழினில் ஒரு 8 பக்கங்களில் black மங்கலாக அமைந்திருப்பது நீங்கலாக (apologies for that in advance!) - இரு இதழ்களிலும் மேஜர் flaws என ஏதும் இல்லையென்றே சொல்லத் தோன்றுகிறது !ஆகாயத்தில் அட்டகாசம் நிஜமாக சிறப்பாய் அமைந்துள்ளதாக எனக்குத் தோன்றியது.தொடரும் இதழ்களில் இன்னமும் perfectionக்கு எங்களால் ஆனதைச் செய்வோம் உறுதியாக !
KBT -3-ல் பங்கேற்க ஆர்வம் தெரிவித்திருந்த 39 நண்பர்களுக்கு 8 +6 பக்க லக்கி லூக் குட்டிக் கதைகள் இம்மாத இதழ்களோடு அனுப்பப்பட்டுள்ளன. உச்சமாய் 15 நாள் அவகாசம் எடுத்துக் கொண்டு இதனை சிறப்பாய் மொழியாக்கம் செய்து அனுப்பிடக் கோருகிறேன்! முதலில் சொன்னது போல் இரு வெவ்வேறு பாணிகளிலான கதைகளை அனுப்பிடும் பட்சத்தில் தேர்வு செய்திடும் பணி இடியாப்பம் ஆகி விடும் என்று மண்டையில் உதித்ததால் - ஒரே genre -ல் கதைகளை அனுப்பியுள்ளோம். உங்கள் முயற்சிகளின் தரம் எவ்விதம் இருப்பினும் தவறாது எழுதி அனுப்பிடுங்களேன் - ப்ளீஸ் ? வெற்றி பெறும் இரு மொழிபெயர்ப்புகளும் தொடரும் இதழ்களில் பிரசுரமாகும் என்பதோடு ஏற்கனவே நான் சொல்லி இருந்தது போல் "நாடோடி ரெமி" வண்ண இதழ் ஒன்றும் பரிசாக அனுப்பப்படும் ! Give it your best shot guys !
KBGD முயற்சியில் பங்கேற்க எண்ணும் நண்பர்களும் இப்போதே ஆர்வத்தைத் தெரிவிக்கலாம் ! வரும் வாரமே அதனைத் துவக்கிடும் பட்சத்தில் மட்டுமே அட்டைப்பட டிசைனை உரிய நேரத்திற்கு பூர்த்தி செய்திட இயலும் அல்லவா ?
சமீபமாய் இங்கே நம் பதிவுகளில் நண்பர்களின் பங்களிப்பு வெறும் பார்வைகளோடு நின்று வருவது அப்பட்டமாய்த் தெரிகிறது. தினமும் சராசரியாய் 1500 பார்வைகள் என்றாலும் பின்னூட்டங்களின் எண்ணிக்கை கணிசமாய்க் குறைந்துள்ளதில் இரகசியம் ஏதுமில்லை தானே ? வாரா வாரம் எனது பாணியை தொடர்ந்து வாசிப்பதில் எனக்கே கொட்டாவி எழும் போது உங்களிடமும் ஒருவித அயர்ச்சி எழுவதில் வியப்பில்லை என்றே தோன்றுகிறது ! பதிவுகளுக்கிடையிலான அவகாசத்தை சற்றே அதிகரிப்பதன் மூலம் தொடரும் மாதங்களது பணிச் சுமையையும் ; 2014-ன் திட்டமிடல்களையும் அணுகிட எனக்குக் கூடுதலாய் நேரம் கிடைக்கும் என்பதோடு - எழுத்தில் ஒரு staleness தலைதூக்கிடாது இருக்கவும் உதவும் என்று நினைக்கிறேன் ! முயற்சித்துப் பார்ப்போமே ?! See you around folks !
முதல்வன்
ReplyDeleteஅர்ஜுன் படமா இல்லை ராஜ் டிவி நிகழ்ச்சியா?
Deletexiii வருக வருக என வரவேற்கிறேன், இன்று வானவேடிக்கை தான்.
ReplyDeleteஹலோ! நான் 3 வது. இப்பவே கொரியர் ஆபீஸ் போக ரெடி!
ReplyDelete// சமீபமாய் இங்கே நம் பதிவுகளில் நண்பர்களின் பங்களிப்பு வெறும் பார்வைகளோடு நின்று வருவது அப்பட்டமாய்த் தெரிகிறது. தினமும் சராசரியாய் 1500 பார்வைகள் என்றாலும் பின்னூட்டங்களின் எண்ணிக்கை கணிசமாய்க் குறைந்துள்ளதில் இரகசியம் ஏதுமில்லை தானே//
ReplyDelete// பதிவுகளுக்கிடையிலான அவகாசத்தை சற்றே அதிகரிப்பதன் மூலம் தொடரும் மாதங்களது பணிச் சுமையையும் ; 2014-ன் திட்டமிடல்களையும் அணுகிட எனக்குக் கூடுதலாய் நேரம் கிடைக்கும் என்பதோடு//
நண்பர்களே! இதுக்கு சீக்கிரம் ஒரு பதில் சொல்லுங்க?
எடிட்டர் சார்,
ReplyDeleteவாராவாரம் உங்களது எழுத்துக்களைத் தொடர்ந்து படிப்பது எவ்விதத்திலும், எங்களில் யாருக்கும் அயர்ச்சியானதல்ல! மாறாக, வாரம் இரண்டு பதிவுகள் தேவை என்ற கோரிக்கைதானே சமீப காலங்களில் அதிகரித்துவருகிறது?
இங்கே பின்னூட்டங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருப்பது எனக்கும் சற்றே குழப்பம் தருகிற விசயம்தான் என்றாலும், அதை ஒரு விவாதப் பொருளாக எடுத்துக்கொண்டு இங்கே உலவும் நம் வாசக வல்லுநர்கள் இப்பதிவிலேயே விடை கண்டுபிடித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது!
தவிர, இங்கே பின்னூட்டமிடுபவர்களைவிட தினமும் பார்வையிடும் passive visitorகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என்பதும் தாங்கள் அறியாததல்லவே? வேண்டாமே அப்படியொரு எண்ணம்!!! :(
+1. // வாரம் இரண்டு பதிவுகள் தேவை என்ற கோரிக்கைதானே சமீப காலங்களில் அதிகரித்துவருகிறது? //
Delete+1
Delete+1
Delete@ Friends : இங்கு வருகை புரியும் சமயமெல்லாம் நண்பர்கள் பதிவிட வேண்டுமென்ற எதிர்பார்ப்பெல்லாம் நிச்சயமாய் எனக்குக் கிடையாது ! நம்மில் பெரும்பான்மை - பணி / குடும்பம் / தினசரித் தலைவலிகள் என ஓராயிரம் சங்கதிகளுக்குள் தாண்டவம் ஆடிடும் கலைஞர்கள் தானே ? So - நிறைய வேளைகளில் ஏதேனும் எழுதத் தோன்றினால் கூட அவகாசம் / பொறுமை இல்லாது போவது சகஜமே ! ஆனால் இவற்றையும் மீறி பொதுவாக ஒரு சின்ன தொய்வு நிலவுவது போல் மனதுக்குப் பட்டதால் பதிவுகளின் எண்ணிக்கையை தற்காலிகமாய் ரேஷன் செய்திடலாமே என்று நினைத்தேன் !
Deleteபின்னூட்ட எண்ணிக்கை குறையக் காரணம் 'சர்ச்சை'கள் குறைவாக இருப்பது தான் (நல்ல விஷயம் தானே). அதை விட இங்கு வள வள என பத்து இருபது பின்னூட்டம் போட்டு களை கட்டச் செய்யும் ஆத்மாக்களில் கூட சில பேர் மிஸ்ஸிங். மிகுதி அனைவரும் வெறும் பதிவுகளைப் படிப்பதோடு சந்தோஷப் பட்டுக் கொள்பவர்கள் தான் :)
Delete" மாதம் ஒரு முறை காணக்கிடைத்திடும் காமிக்ஸைவிட, வாரம் ஒரு முறையாவது உங்கள் எண்ணங்களையும் எழுத்துக்களையும் கண்டிடத்தானே நாள்தோறும் இங்கே தவமிருக்கிறோம்?" வேறென்ன சொல்ல?!
ReplyDeleteஇதைத்தானே நாள்தோறும் 1500 க்கும் மேற்பட்ட பார்வைகள் சொல்லாமல் சொல்லுகின்றன?
சரியாகச் சொன்னீர் நண்பரே! பார்வையாளர்கள் அதிகரித்துக்கொண்டே போகிறார்களாம். ஆனால் இவர் எழுத்து போரடிக்கிறதே என நாம் எண்ணிவிடக்கூடுமாம். என்ன லாஜிக் இது?
Deleteபின்னூட்டங்களில் விவாதங்கள், சண்டைகள், ஆந்தையாரின் பங்களிப்பு போன்றன இருந்தால் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் போவது இயல்பு. இல்லாதபட்சத்தில் நமது பின்னூட்ட எண்ணிக்கை நியாயமானதுதான் என்று நினைக்கிறேன்.
எனக்குத் தெரிந்து இத்தனை வருடத்தில் மிக அதிக பின்னூட்ட சராசரியைக் கொண்ட தமிழ் வலைப்பூ............ நமதுதான்!!!!!!
ஆதி தாமிரா : //பின்னூட்டங்களில் விவாதங்கள், சண்டைகள், ஆந்தையாரின் பங்களிப்பு போன்றன இருந்தால் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் போவது இயல்பு.//
Deleteகுஸ்திகளோடு பின்னூட்டங்கள் எகிறுவதை விட, நெருடல்களின்றி அவற்றின் எண்ணிக்கை கட்டுக்குள் இருந்தாலும் சந்தோஷமே !
ரத்தபடலம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வருகிறது.
ReplyDeleteதொடர்ந்து தரம் மேம்படுத்தப்பட்டு மீண்டும் 2012 தரத்தில் வர விரும்புகிறேன்.
நமது லயனில் வருவதால் ஆங்கிலத்தில் படிக்காமல் இருந்தேன்.
அப்படியே வரும் மாதங்களில் வரும் புத்தகங்கள் எத்தனை என்று கூறி விடுங்கள் சார்.
KBT 3 இல் பங்குபெறும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
பின்னுட்டங்கள் குறைந்ததற்கு பதிவின் வகையும் ஒரு காரணமாக இருக்கும்.
Deleteபொதுவாக பின்னுட்டங்கள் இடுவதற்கு காரணம் தங்களது கருத்து மற்றும் உங்களிடம் கேட்பதற்கு ஏதாவது இருந்தால் இருக்கும்.
2014 வரும் புத்தகங்கள் பற்றி அல்லது சந்தா பற்றி ஒரு பதிவு இட்டு பாருங்கள்.
கண்டிப்பாக பல பின்னுட்டங்கள் வரும் எனபது எனது கருத்து.
+1
Delete+1
Delete+3
Deleteகிருஷ்ணா வ வெ : +4 ! நியாயமான கருத்தே ! நண்பர்களது பங்களிப்புக்கு அதிக scope தந்திடா ரகப் பதிவுகள் சமீபத்தியவை என்பதை ஏற்றுக் கொள்கிறேன் !
DeleteDear edi we need minimum two post per week
ReplyDelete7th
ReplyDeleteஹையா! 2 புக்கும் வாங்கியாச்சு! ரத்த படலம் அட்டைபடம் நேரில் மிக பிரமாதம்! ப்ளூ கோட் புக் கிட் லக்கி போலவே உள்ளது.
ReplyDeleteகுடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்ததால் என்னால் கடந்த நான்கைந்து நாட்களாக (பின்னூட்டமிட இயலாத) ஒரு மெளனப் பார்வையாளனாகவே இருந்திட முடிந்தது. ஒரு குடும்பம் கொண்ட எனக்கே சில நாட்கள் இங்கே வர நேரம் கிடைத்திடாத நாட்கள் இருந்திடும்போது, பல குடும்பங்களை மெயிண்ட்டெய்ன் பண்ணிக் கொண்டிருக்கும் நம் நண்பர்கள் பலரது நிலைமையும் கஷ்டம்தானே? ;)
ReplyDeleteஉங்கள் சுற்றுலா குறித்த பயண அனுபவங்களை கொண்டு ஒரு பதிவிடலாமா,விஜய்? ( உங்களுக்கு விருப்பம் இருந்தால்?)
Delete// ஒரு குடும்பம் கொண்ட எனக்கே சில நாட்கள் இங்கே வர நேரம் கிடைத்திடாத நாட்கள் இருந்திடும்போது, பல குடும்பங்களை மெயிண்ட்டெய்ன் பண்ணிக் கொண்டிருக்கும் நம் நண்பர்கள் பலரது நிலைமையும் கஷ்டம்தானே? ;)// ஓ.கே ?!!1@#
@ Siva subramanian
Deleteதங்களது ஆர்வத்துக்கு நன்றி நண்பரே! ஆனாலும் அந்த சோகத்தையெல்லாம் சொல்லி இங்கே அழுவானேன்!! ;)
தவிர, கீழே நண்பர் காமிக்ஸ் கரடியின் 3வது பாயிண்டைப் படித்தீர்களா? ;)
@ Erode VIJAY
Deleteஅந்த பாயிண்டை படித்த பிறகு எனது கோரிக்கையை வாபஸ் வாங்க தான் நினைத்தேன்,நண்பரே! இருப்பினும் உங்கள் கருத்தையும் எதிர்பார்த்தேன். மன்னிக்கவும், நான் பெரும்பாலும் வெளியூர் செல்வதில்லை. எனவே ஒரு ஆர்வத்தில் கேட்டும் விட்டேன். இனி இவற்றை தவிர்த்து விடலாம்.
@ All : கரடியாரைக் கண்டு பூனையார் மிரள்வது காட்டில் வேண்டுமானால் லாஜிக் ஆக இருந்திட இயலும் ; இங்கே அதகளம் செய்யும் license பூனையாருக்கு உண்டன்றோ ?
Deleteசார் .....பதிவிற்கு "இடைவெளி " என்பதை மிக ,மிக கடுமையாக எதிர்கிறேன் .
ReplyDeleteஇதற்கு "மாற்று கருத்து "என்பது நண்பர்கள் இடையை வராது என்பது அடித்து சொல்ல படும் உண்மை .
Paranitharan K : :-)
Deleteதலைவா ...."பதிவிற்கு "இடைவெளி விட்டால் இந்த கரடி.... காடு உள்ளவரை "உண்ணாவிரதம் "இருப்பான் .
ReplyDeletecomicskaradi : நாட்டுக்குள்ளேயே இப்போது உண்ணாவிரத சீசன் தானே கரடியாரே ?! உங்கள் கானகத்து உண்ணாவிரதத்தைக் கவனிக்க ஆள் இல்லாமல் போய் விடப் போகிறது - risk வேண்டாம் !
DeleteDear Editor ,
ReplyDeletePlease DO NOT reduce the number of posts in our blog. I am one among the fans who checks our blog spot everyday for the new post , sometimes on hourly basis.
A request : Why not NADODI REMI reprint if possible. Kids will love that story. These type stories will reach our junior audience easily.
( I lost my copy :-( )
Mohamed Harris
Mohamed Harris : Best way to find a quick copy of NADODI REMI would be to participate & win KBT-3 :-)
DeleteThose were printed from age old negatives which would now be almost blank ! 30 years is a long long time indeed !
தலைவா ....கமெண்ட்ஸ் அதிகம் இங்கு இடபடாதன் காரணம் ...
ReplyDelete1) இப்பொழுது தோழர்களின் "கமெண்ட்ஸ் "கு தாங்கள் அதிகம் பதில் அளிப்பது இல்லை .
2)தோழர்கள் "மாறுபட்ட "கருத்து சொன்னால் வீண் விவாதம் ஏன் ?என்று ஒதுங்கி கொள்வது .
(உதாரணம் போன பதிவில் தோழர் பரணி இன் கருத்துக்கு விஸ்கி சுஸ்கி தவிர மற்றவர் அதிகம் அதிகம் பதில் அளிக்க வில்லை .)
3)கமெண்ட்ஸ் இல் நமது காமிக்ஸ் பற்றிய இடுகைககள் வருவதை விட இப்பொழுது சொந்த ,சோக கதைகள் தான் அதிகம் வருகிறது .
comicskaradi... உங்கள் ஆய்வின் முடிவுகள் # 1 & 2 கன கச்சிதம் !
Deleteஆனால் # 3 எல்லா வேளைகளிலும் சரியாகாது ; சில சொந்த / சோகக் கதைகள் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சம் வைப்பதில்லை !
2014 கதைகள் பற்றிய விளம்பரம் ப்ளூ கோட்-இல் வந்துள்ளது! விபரங்கள் விரைவில் - என்று! அதில் ஜில் ஜோர்டானின் (அலைகளின் ஆலிங்கனம்) போட்டோ உள்ளது. அவரின் அசிஸ்டன்ட்-இன் டைமிங் டயலாக்'ஸ் எனக்கு மிகவும் பிடித்தது. வெல்கம் அகைன் ஜில் ஜோர்டான் !
ReplyDeleteSiva Subramanian : ஜில் ஜோர்டான் நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார் என்றே சொல்லத் தோன்றுகிறது ! அந்த semi-cartoon ஸ்டைல் புது வாசகர்களுக்கும் ; சுட்டி வாசகர்களுக்கும் பிடிக்கக் கூடுமென்பது போனஸ் !
Deleteதாகபட்டு கிடந்த நேரத்தில் சில்லுனு பீர் கிடச்ச மாதிரி இருக்கு சார்.... எங்கே ஜில் ஜோர்டனை ஓரங்கட்டி விடுவீர்களோ என்று பயந்து கிடந்தேன்..
Deleteஜில்க்கு ஒரு ஜொள்ளர் பட்டாளமே இருக்கு தல !!
Deleteடியர் விஜயன் சார்,
ReplyDeleteவழக்கம் போல முன் & பின்னட்டை சூப்பர்! மற்ற கருத்துக்கள், இதழ் கையில் கிடைத்த பிறகு!!
சரி மெயின் மேட்டருக்கு வருவோம்! ;)
//தினமும் சராசரியாய் 1500 பார்வைகள் என்றாலும் பின்னூட்டங்களின் எண்ணிக்கை கணிசமாய்க் குறைந்துள்ளதில்//
1500 என்ற Hits எண்ணிக்கைக்கும், Unique Visitors-களின் எண்ணிக்கைக்கும் எள்ளளவும் தொடர்பு இராது!! இந்த 1500-ல் இடைவிடாது F5 அமுக்கிய விரல்கள் எத்தனையோ?! :) அதிலும், ஆக்டிவாக கருத்து இடுபவர்கள் நூறுக்கும் குறைவே! அந்த நூறிலும் ஒன்றுக்கு மேற்பட்ட பின்னூட்டங்கள் இடுபவர்கள் (நான் உட்பட) வெகு சொற்பமே! இந்த சொற்பத்திலும் ஒரு சிலர் அவ்வப்போது குட்டியாக ப்ரேக் எடுத்துக் கொள்வார்கள் எனும் போது, பின்னூட்டங்களும் அதற்கேற்ப குறையத்தானே செய்யும்? இதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை! பணிச்சுமை, குடும்பப் பொறுப்புகள் என்று ஏராளமான காரணங்கள் இருக்கலாம்!!!
தவிர, பணிச்சுமையின் காரணமாய் நீங்களே பல பதிவுகளின் பின்னூட்டங்களிற்கு பதில்கள் அளிக்காமல் Just like that கடந்து செல்லும் போது, நண்பர்களும் அவ்வாறே செய்வதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை! ;) இங்கு வருகை தரும் ஒவ்வொரு நண்பரும் குறைந்தது இருபது, முப்பது வயதுகளைத் தாண்டியவர்கள் என்பதால் அவர்களும் பலத்த பணி மற்றும் குடும்பச் சுமைகளுக்கு இடையே, இதற்கென நேரம் ஒதுக்கி எழுதுபவர்களே! அப்படி அவர்கள் சிரமப்பட்டு எழுதிய கருத்துகளுக்கு, உங்களிடம் இருந்து பதில்கள் கிடைக்காமல் போகுமானால், அவர்களுக்கு நேரும் ஏமாற்றத்தை தவிர்க்க முடியாது! ஒவ்வொருவருக்கும் பதில் சொல்வதென்பது தனி ஒருவரால் இயலாத காரியம் என்றாலும், பின்னூட்டங்களின் தொய்விற்கு இதுவும் ஒரு காரணம் என்பதையும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்!
//வாரா வாரம் எனது பாணியை தொடர்ந்து வாசிப்பதில் எனக்கே கொட்டாவி எழும் போது உங்களிடமும் ஒருவித அயர்ச்சி எழுவதில் வியப்பில்லை//
ஒரு விஷயம் அளவுக்கு மிஞ்சும் போது அதில் சலிப்பு ஏற்படுவது இயற்கையே! இங்கே ஆக்டிவாக பின்னூட்டங்கள் இடுவது, மற்றவர்களின் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வது, தீவிரமாக விவாதம் செய்வது - என்பதெல்லாம் ஒரு கட்டத்தின் மேல் சலிப்பு தட்டி விடும் சங்கதிகள்! எனக்கு அது நேரும் போது, நானும் சில நாட்கள் லீவ் எடுக்கத்தான் போகிறேன்! ;)
இது போன்ற தருணங்களில் பின்னூட்டங்கள் கூடவோ, குறையவோ தான் செய்யும்!! எனவே, பின்னூட்டங்களின் எண்ணிக்கையை வைத்து ஒரு பதிவின் வரவேற்பை கணிப்பது சரியான அணுகுமுறை அல்ல என்றே நினைக்கிறேன்!
//பதிவுகளுக்கிடையிலான அவகாசத்தை சற்றே அதிகரிப்பதன் மூலம் தொடரும் மாதங்களது பணிச் சுமையையும் ; 2014-ன் திட்டமிடல்களையும் அணுகிட எனக்குக் கூடுதலாய் நேரம் கிடைக்கும்//
"உங்களுக்கு வரும் மாதங்களில் நிறைய வேலை இருக்கிறது என்பதால் இங்கே அடிக்கடி பதிவிட முடியாது" - இதுதானே நீங்கள் சுற்றி வளைத்து சொல்ல வரும் மேட்டர்?! :D நோ ப்ராப்ளம் சார்!! ;)
குறிப்பிட்ட இடைவெளியில் சீராக - வாரம் ஒரு பதிவு, முடிந்தால் இரு பதிவு என்று இதை ஒரு ritual ஆகப் பார்த்திடாமல், உங்கள் பணிச்சுமை / இதர பொறுப்புகள் இவற்றிற்கேற்ப - நேரம் கிடைக்கும் போதெல்லாம் மற்றும் பதிவுக்கான மேட்டர் சிக்கும் போதெல்லாம் 'திடீர்' பதிவுகளைப் போட்டால் அதற்கான வரவேற்பே தனியாக இருக்கும்!
கொசுறு: Blogger Dashboard - Stats - Traffic Sources பகுதியில் Referring Sites / URL-களில் vampirestat DOT com மற்றும் இது போன்ற புதிரான பெயர்கள் கொண்ட வெப்சைட் பெயர்கள் பல இருக்கும்! ஹிட்ஸ் எண்ணிக்கை அதிகரிக்க இது போன்ற Spam தளங்களும் ஒரு காரணமே!!!
// //பதிவுகளுக்கிடையிலான அவகாசத்தை சற்றே அதிகரிப்பதன் மூலம் தொடரும் மாதங்களது பணிச் சுமையையும் ; 2014-ன் திட்டமிடல்களையும் அணுகிட எனக்குக் கூடுதலாய் நேரம் கிடைக்கும்//
Delete"உங்களுக்கு வரும் மாதங்களில் நிறைய வேலை இருக்கிறது என்பதால் இங்கே அடிக்கடி பதிவிட முடியாது" - இதுதானே நீங்கள் சுற்றி வளைத்து சொல்ல வரும் மேட்டர்?! :D நோ ப்ராப்ளம் சார்!! ;) // + 1
@ கார்த்திக்,
Deleteprofile picture - animated gif அருமை!
"உங்களுக்கு வரும் மாதங்களில் நிறைய வேலை இருக்கிறது என்பதால் இங்கே அடிக்கடி பதிவிட முடியாது" - இதுதானே நீங்கள் சுற்றி வளைத்து சொல்ல வரும் மேட்டர்?! :D நோ ப்ராப்ளம் சார்!! ;)
Deleteஅதே.. :-)))))))
Karthik Somalinga & friends : இது வரைக்கும் Jpeg files ஆக வெளியான நம் பதிவுகள் நீங்கலாய் பாக்கி அனைத்தையும் மாங்கு மாங்கென்று நானே டைப் செய்து நாக்குத் தள்ளிப் போவது வழக்கம் ; ஒரு தாளில் 'பர பர' வென எழுதித் தள்ளியே பழகிப் போன எனக்கு லொட்டு-லொட்டென கீ போர்டைத் தட்டிக் கொண்டே ; transliteration செய்திடும் சேஷ்டைகளை சமாளித்து ; சிந்தனையில் ஒரு flow கொண்டு வருவது - என்பதெல்லாம் நேரத்தை நிறையவே விழுங்கும் சமாச்சாரங்களாய் இருந்திடுகின்றன ! ஆனால் இனி மேற்கொண்டு அதனை நமது டைப்செட்டிங் பணியாளர்களின் பொறுப்புக்கு விடுவதெனத் தீர்மானித்துள்ளதால் எனக்கு செலவாகும் நேரம் நிறையவே குறைந்திடும். அதனை நண்பர்களது கருத்துகளுக்குப் பதில் சொல்லவாவது செலவழிக்கலாம் என்று உள்ளேன் !
Deleteதொடரும் பொழுதுகளில் எதிர்நிற்கும் பணிச்சுமை அதிகமாய் இருப்பதும் ஒரு விதத்தில் எனது எண்ணத்துக்குக் காரணமே ; ஆனால் பொதுவாய் நிலவியதொரு சோம்பலான அமைதியே என்னையும் தொற்றிக் கொண்டது என்று சொல்லுவேன் !
அப்புறம் தினசரி 1500 பார்வைகள் என்பது நம் நண்பர்களது Refresh உபயம் என்பது தான் நாடறிந்த ரகசியமாச்சே ?! நீங்கள் குறிப்பிடும் அந்த vampirestat தளம் சொல்லி வைத்தார் போல தினமும் 15 ஹிட்ஸ்-க்கு புண்ணியம் தேடிக் கொள்கிறது ! மற்றபடிக்கு கூகிள் செய்யும் சேவை நம்மைப் பொறுத்த வரை அசாத்தியமானது ! Latvia நாட்டிலிருந்து ரெகுலராக நம் தளத்தை பார்வையிடுவது யாரோ - தெரிய ஆவலாக உள்ளேன் !
டியர் விஜயன் சார், // பதிவுகளுக்கிடையிலான அவகாசத்தை சற்றே அதிகரிப்பதன் மூலம் தொடரும் மாதங்களது பணிச் சுமையையும் ; 2014-ன் திட்டமிடல்களையும் அணுகிட எனக்குக் கூடுதலாய் நேரம் கிடைக்கும் என்பதோடு - //
ReplyDeleteஉங்களது பணிச்சுமை அதிகம் என்பது உண்மையே! எவ்வகையிலாவது கூடுதல் நேரம் கிடைத்திட நீங்கள் விரும்புவதும் சரியே! ஆனால் உங்களின் பதிவிற்காக தினமும் காத்திருக்கும் நண்பர்களுடன் நீங்கள் செலவிடும் நேரத்தை குறைப்பது என்பதை என்னால் ஏற்க முடியவில்லை.
Siva Subramanian : மறுபதிப்புகள் ; +6 ஆகிய இரண்டுமே ஆண்டின் மையப் பகுதிக்குப் பின்னதாக kickstart ஆனதே பணிச்சுமைச் சிக்கலுக்கு பிரதான காரணம் என்று சொல்லலாம் ! தொடரும் ஆண்டில் சற்றே தெளிவோடு (!!) திட்டமிட இந்த அனுபவம் நிச்சயம் உதவிடும் !
Deleteஃபேஸ்புக்கில் 100 பேர் பார்த்தால் 10 பேர் தான் லைக் போடுவார்கள், ஒருவர் தான் கமென்ட் போடுவார். இவ்வளவு கமென்ட் வருதே. அதுக்கு சந்தோஷப்பட வேண்டியது தான்.
ReplyDeleteDr. அல்கேட்ஸ் : நிச்சயமாய் வருத்தங்கள் கிடையாதே !
Deleteஇந்த முறை இரண்டு புத்தகங்களின் அட்டைப்படங்களும் அருமையாக வந்துள்ளன! புத்தகங்களை கைகளில் பெரும் ஆவலுடன் உள்ளேன்! நீண்ட இடைவெளிக்கு பின் சந்திக்கும் நண்பனை காணும் ஆவல் XIII ஏற்படுத்துகிறது.
ReplyDelete//சென்ற மாதத்து அச்சுக் குறைபாடுகளை இம்முறை இயன்ற வரை களைந்துள்ளோம் என்று சொல்லத் தோன்றுகிறது. அச்சுப் பிரிவில் சீனியர் பிரிண்டர் ஒருவரை நியமித்து உள்ளதோடு - நான் ஊரில் இல்லா சமயங்களில் (அது தான் பெரும்பாலும் நடக்கும் சங்கதி!) அச்சினை monitor செய்ய நமது துவக்க காலத்து technician ஆன அமீன் பாயையும் பொறுப்பேற்கச் செய்துள்ளோம். //
சரியான சமயத்தில் எடுக்கப்பட்ட மிகசரியான முடிவு ! நமது தர மேம்பாட்டுக்கு இது ஒரு BIG LEAP! வாசகர்களின் விமர்சனங்களை POSITIVE வாக எடுத்துக்கொண்டு, P.A வை மிகச்சரியான DIRECTION னில் PROJECT செய்யும் உங்களை எப்படி பாராட்டுவது? வாசகர்கள் சார்பாக நன்றிகள் சார்!
//ரத்தப் படலம் இதழினில் ஒரு 8 பக்கங்களில் black மங்கலாக அமைந்திருப்பது நீங்கலாக (apologies for that in advance!) - இரு இதழ்களிலும் மேஜர் flaws என ஏதும் இல்லையென்றே சொல்லத் தோன்றுகிறது !//
ஜீரோ DEFECT எனபது சாத்தியப்படாத செயல்.ISO/ IS 2500 தர மேலாண்மை கொள்கையில் பிழைகளுக்குகென்றே ன்றே ஒரு BANDWIDTH உள்ளது. இது போன்ற சிறு நேருடல்களையும் சரிசெய்து NEAR PERFECTION னுக்கு வரும் காலம் அதிக தொலைவில் இல்லை சார்! "apologies" போன்ற வார்த்தைகளை தவிர்கலாமே!
//? வெற்றி பெறும் இரு மொழிபெயர்ப்புகளும் தொடரும் இதழ்களில் பிரசுரமாகும் என்பதோடு ஏற்கனவே நான் சொல்லி இருந்தது போல் "நாடோடி ரெமி" வண்ண இதழ் ஒன்றும் பரிசாக அனுப்பப்படும் !//
எனது முந்தய ஒரு பின்னூட்டத்தை இங்கே நினைவுபடுத்துகிறேன். வெற்றியாளருக்கு பரிசு என்பதை போல பங்கேற்பாளர்களுக்கு ஒரு சிறு participation certificate போல இனி வரும் ஏதாவது ஒரு புத்தகத்தில் ஒரு வாழ்த்து செய்தியோடு உங்கள் கையெப்பமிட்டு கொடுத்தால் எங்களுக்கு ஒரு பூஸ்ட் ஆகா இருக்கும் சார்! அதோடு பங்கேற்பாளர்களுடைய லிஸ்ட் டாவது வெற்றிபெற்ற கதை வெளியிடப்படும் புத்தகத்தில் வரலாமே . நமது படைப்பு வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் நமது உழைப்பும் நாம் செலவிடும் நேரமும் ஓன்று தானே ??அதற்க்கு ஒரு சிறு ACKNOWLEDGEMENT கொடுப்போமே
//KBGD முயற்சியில் பங்கேற்க எண்ணும் நண்பர்களும் இப்போதே ஆர்வத்தைத் தெரிவிக்கலாம் ! //
நானும் ரெடி சார்! :)
//சமீபமாய் இங்கே நம் பதிவுகளில் நண்பர்களின் பங்களிப்பு வெறும் பார்வைகளோடு நின்று வருவது அப்பட்டமாய்த் தெரிகிறது. தினமும் சராசரியாய் 1500 பார்வைகள் என்றாலும் பின்னூட்டங்களின் எண்ணிக்கை கணிசமாய்க் குறைந்துள்ள...//
இங்கே பின்னூட்டம் இடுவதில் நண்பர்களின் ஆர்வம் சற்றே குறைந்துள்ளது உண்மை. பதிவுகளை ஆர்வமாக படிக்கு நண்பர்கள் ஆங்கிலதிலானாலும் தமிழிலானாலும் ஒரு சிறு ACKNOWLEDGEMENT செய்யவேண்டியது மிக அவசியம். போன பதிவில் ஈமெயில் SUBSCRIPTION, கமெண்ட் இடுபவர்களுக்கு மட்டும் என மாற்றியுள்ளது நல்ல முயற்சி. இந்த பலன் இனி தெரியலாம்.
நமது சொந்த RESERVATIONகளை உடைதேறிந்துவிட்டு உங்கள் மனதில் தொன்றும் கருத்துக்களை வெளிப்படையாக இங்கே பதிவிடுங்கள் நண்பர்களே! நமது ஆசிரியர் தனது பல்வேறு பணிச்சுமைகளுக்கிடயே நமக்காக நேரம் ஒதுக்கி இங்கே பதிவிடுகிறார்.அதை நாமே ACKNOWLEDGE செய்யாமல் செல்வது அவ்வளவு நன்றாக இல்லை இதை போல எனக்கு தெரிந்த வரை எந்த புத்தகத்தின் எடிட்டரும் வாசகர்களுக்கு நெருங்கி வருவதில்லை. இந்த முயற்சியை மேலும் சிறப்பிக்க செய்யவேண்டுமோ தவிர குறைத்துக்கொள்ள கூடாது.
+1
DeleteSure Sir
Deleteவிஸ்கி-சுஸ்கி : //வெற்றியாளருக்கு பரிசு என்பதை போல பங்கேற்பாளர்களுக்கு ஒரு சிறு participation certificate போல இனி வரும் ஏதாவது ஒரு புத்தகத்தில் ஒரு வாழ்த்து செய்தியோடு உங்கள் கையெப்பமிட்டு கொடுத்தால் எங்களுக்கு ஒரு பூஸ்ட் ஆகா இருக்கும் சார்!//
Deleteநிச்சயமாய் செயல்படுத்தி விடுவோம் - KBT -3 முதற்கொண்டே ! Point well noted !
ஆஹா! எனக்குக் கிடைக்கவிருக்கும் participation certificateஐ காண இப்போதே ஆவலாய் இருக்கிறேன். ஹி ஹி!
Delete// இது போன்ற சிறு நேருடல்களையும் சரிசெய்து NEAR PERFECTION னுக்கு வரும் காலம் அதிக தொலைவில் இல்லை சார்! "apologies" போன்ற வார்த்தைகளை தவிர்கலாமே! // +1 vijayan,sir.
ReplyDelete//பதிவுகளுக்கிடையிலான அவகாசத்தை சற்றே அதிகரிப்பதன் மூலம் தொடரும் மாதங்களது பணிச் சுமையையும் ; 2014-ன் திட்டமிடல்களையும் அணுகிட எனக்குக் கூடுதலாய் நேரம் கிடைக்கும் என்பதோடு - எழுத்தில் ஒரு staleness தலைதூக்கிடாது இருக்கவும் உதவும் என்று நினைக்கிறேன்!//
ReplyDeleteபுதியபதிவுகளின் எண்ணிக்கை குறைவது, பணிகளை எளிதாக்கும்பட்சத்தில் அதுவே சிறந்தது. அதேநேரம் தங்களுடைய பின்னூட்டங்கள் / interaction-க்கு கொஞ்சம் அவகாசத்தை ஒதுக்க இயன்றால் பின்னூட்டமிடும் வாசகர்களுக்கும் திருப்தியாகிவிடும்!
//ஆகாயத்தில் அட்டகாசம் நிஜமாக சிறப்பாய் அமைந்துள்ளதாக எனக்குத் தோன்றியது.//
Great to hear!
// KBGD முயற்சியில் பங்கேற்க எண்ணும் நண்பர்களும் இப்போதே ஆர்வத்தைத் தெரிவிக்கலாம்! //
DeleteCount me in! Already sent email for entry.
Ramesh Kumar : KBGD - -க்கான files வரும் வாரத்திலேயே அனுப்பிடப்படும் !
Deleteவணக்கம் எடிட்டர் சார்,
ReplyDeleteஇந்த மாத ப்ளூ கோட் பட்டாளம் மற்றும் XIII இன் அட்டை படங்கள் பிரமாதமாக உள்ளது.
இந்த landmark -ல் புக்ஸ் உடனே கிடைக்க வழி ஏதும் இல்லையா, எங்களுக்கு புத்தகங்களை கண்ணால் பார்க்கவே 15 நாட்கள் ஆகிவிடுகிறது. என் விலாசத்திற்கு கூரியரில் ஆர்டர் செய்தால் அதில் உள்ள பிரச்னை என்னவென்றால், நான் வசிக்கும் இடம் பல வீடுகளும் அதில் பல வாண்டுகளும் கொண்ட குடியிருப்பு. நான் வேறு இருக்கும் இடம் கூட தெரியாமல் அமைதியாக வாழும் ஜீவன். என் பெயரை சொல்லி யாரவது கேட்டால் அப்படி யாரும் இந்த குடியிருப்பில் இல்லை என்று சொல்லி வீட்டுக்கு வந்த சரஸ்வதி (lion காமிக்ஸ்) யை திருப்பி அனுப்பி விடுவார்கள். மீறி போஸ்ட் man கொடுத்து விட்டு சென்றாலோ, அந்த parcel தமக்கே வந்ததாக கருதி பிரித்து மேய்ந்து விடுவார்கள்.மொத்தத்தில் புக் எனக்கு கிடைக்காது,கிடைத்தாலும் முழுதாக கிடைக்காது.அப்படிப்பட்ட ஒரு மந்திர மண்டலத்தில் தான் அடியேனின் பாசறை உள்ளது. எனவே தான் புத்தகத்தை கடையில் வாங்க ஆசைப்படுகிறேன்.
இது என் பிரச்னை. இனி பொது பிரச்சனைக்கு வருகிறேன். அதாவது நீங்கள் blog எழுதுவதை குறைப்பதாக கூறி இருந்தீர்கள் ,தாராளமாக செய்யுங்கள். எனக்கு மட்டும் அல்ல நிறைய பேருக்கு அதில் ஆட்சபனை இருக்காது ஆனால் அதற்க்கு முன்பாக நமது மாத இதழை வார இதழாக மாற்றி விடுங்கள். வார வாரம் உங்கள் எழுத்தை அதில் படித்து கொள்கிறோம். அப்புறம் சென்ற ஒரு சில பதிவுகள் மிகவும் slow வாக இருந்தது ஏனென்றால், நீங்கள் கேப்டன் விஜயகாந்த் போல புள்ளி விவரங்களை அள்ளி விட்டு இருந்தீர்கள் அதை நாங்கள் படித்து தெரிந்து கொண்டதோட சரி , மற்றப்படி அதனை விவாதிக்கவோ கேள்வி கேட்கவோ ஏதும் இல்லை, மற்றப்படி உங்கள் எழுத்து என்றுமே எங்களுக்கு தேன் தான். முடிந்தால் தினமும் ஒரு பதிவு இடுங்கள் நாங்களும் புது புது கமெண்ட்ஸ் இடுகிறோம். எப்பூடி? நன்றி வணக்கம்.
ஆனால் அதற்க்கு முன்பாக நமது மாத இதழை வார இதழாக மாற்றி விடுங்கள். வார வாரம் உங்கள் எழுத்தை அதில் படித்து கொள்கிறோம். //
Deleteஇது டீல்! :-))))
@ குற்றச்சக்கரவர்த்தி
Deleteஅருமையான டீல்! ;)
குற்றச் சக்கரவர்த்தி : Landmark நிறுவனத்தின் மத்தியக் கொள்முதல் கட்டுப்பாட்டு அலுவலகம் செயல்படுவது பூனாவில் இருந்து ! So அங்கிருந்து முறையாக ஆர்டர் பார்ம் போடப்பட்டு நமக்குக் கிடைத்த பின்னரே இதழ்களை அனுப்புவது சாத்தியமாகும். வரும் செவ்வாய் முதல் 4 ஸ்டோர்களிலும் புதிய இதழ்கள் கிடைக்கும் !
Delete//கேப்டன் விஜயகாந்த் போல புள்ளி விவரங்களை அள்ளி விட்டு இருந்தீர்கள் அதை நாங்கள் படித்து தெரிந்து கொண்டதோட சரி , மற்றப்படி அதனை விவாதிக்கவோ கேள்வி கேட்கவோ ஏதும் இல்லை,//
சரியான கருத்தே ! ஏற்றுக் கொள்கிறேன் வலை மன்னரே !
டக்கரான டீல்.. கண்டிப்பா இத நாங்க ஆதரிக்கிறோம்.. என நான் சொல்றது சரிதானே!!
Deleteஎனக்கு புத்தகங்கள் வந்துவிட்டன நண்பர்களே ! : ))))))! முதல் முறையாக இவ்வளவு விரைவாக ST கொரியர் அன்பர்கள் பட்டாசாக வேலை செய்துள்ளார்கள்! நன்றிகள் ST கொரியர் நண்பர்களுக்கு
ReplyDeleteXIII அட்டைப்படம் வாவ்! நேரல் பார்க்கும் போது கண்களை அள்ளுகிறது !அட்டைப்பட பிரிண்டிங் தரம் அற்புதம்
முன்னட்டையில் பிரிண்டிங் அவ்வளவு தெளிவு ! சித்திரத்தின் FG க்கும் BG க்கும் எந்த ஒரு நெருடலும் இல்லாத ஒரு FLUID கலர் MERGING! கலக்கல் சார்! ஏதாவது புதிய டெக்னாலஜி உபயோகப்படுத்தப்பட்டுள்ளதா ??
கீழேயுள்ள ரத்த டிசைன் மட்டும் இன்னமும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாம்! பின்னட்டை ஒரு CLEAN CUT RAZOR SHARP டிசைன். அழகுக்கு அழகு! நமது புத்தகமா இது என வியக்கவைக்கும் அட்டைப்பட தரம்!
முதல் முறையாக XIII புத்தகம் வண்ணத்தில் அசத்துகிறது.லார்கோவுக்கு இணையாக ஓவியங்கள் வண்ணத்தில் மிளிர்கின்றன .ஓவியங்கள் ஷார்ப் & CLASSICAL லுக்குடன் அதகளம் செய்கின்றன. வான்சின் படைப்புக்களை வண்ணத்தில் நாம் பார்க்காததால் இந்த ஓவியரை அவருடன் COMPARE செய்ய முடியவில்லை. லைன் DRAWINGகில் ஜிகுநோவ், வான்சுக்கு ஈடுகொடுக்கிறார். ஓவியர் மாறிவிட்டார் என்று சொல்லாவிட்டால் வித்தியாசம் தெரியாது! பிரிண்டிங் தரம் ஓவியங்களை ரசிக்கும் வகையில் சிறப்பாக வந்துள்ளது. புத்தகத்தின் உள்ளே ஒரு சில பக்கங்கள் மட்டும் ஆசிரியர் சொன்னது போல சற்றே DULL ஆகா உள்ளது. BUT NOT BAD!
ஓவியங்களை நமது அளவுகளுக்கு சற்றே RESIZE செய்தமாதிரி தெரிகிறது. இது ஓவியங்களின் SHARPNESS & DETAILS சை இன்னமும் கூட்டுகிறது.
இந்த புத்தகத்தின் ஆக்கதுக்காக உழைத்த ஆசிரியர் மற்றும் பதிப்பக தோழர்களுக்கு நன்றிகள்! அடுத்த ஆண்டுக்கான கதைகளை பற்றிய ஒரு சின்ன TEASER விளம்பரம் புத்தகத்தில் உள்ளது.
ஆகாயத்தில் அட்டகாசம் அட்டைபடம் சிம்ப்ளி SUPERB! EYE CATCHER! கடைகளில் பல சுட்டிகளை நிச்சயம் கவரும். கதையில் ஓவியங்கள் அருமை. அற்புதமான பிரிண்டிங் தரம். எந்த ஒரு குறையும் இல்லாத முழுமையான நிறைவை தரும் பிரிண்டிங் & BINDING தரம்.
கதையை படித்துவிட்டு வருகிறேன். மீண்டும் சிந்திப்போம் நண்பர்களே! : ) HAPPY CHERISHING & READING !
இந்த புத்தகத்திலேயே வான்ஸ்.. நட்புக்காக ஒரிரு பக்கங்கள் வரைந்திருப்பதாக எங்கேயோ படித்தேன். எந்த பக்கங்கள் என்று தெரியவில்லை
Deleteநீண்ட நாட்களுக்குப்பிறகு கடந்த 10 நாட்களாக சொந்த ஊர் பயணம். இணையமில்லா பெருவாழ்வு. அப்படியும் செல்போனில் மெயில்களையும், இந்தத் தளத்தின் பதிவுகளையும் படித்துக்கொண்டுதான் இருந்தேன். பின்னூட்டம்தான் இடமுடியவில்லை. இதை சொல்லலாம் என்று நினைத்துக்கொண்டு வரும்போதே.. இங்கேயும் பின்னூட்டப் பிரச்சினைதான் ஓடிக்கொண்டிருக்கிறது.. ஹிஹி!
ReplyDeleteநீங்கள் சொல்வதே எனக்கும் நேர்ந்தது. அதிக நேரம் செல்போனில் படிப்பதால், கமெண்ட் இட முடியவில்லை
Deleteஎனக்கும் புக்கு கைக்கு வந்து சேர்வதற்குள் போதும் போதும்னு ஆகிவிடுகிறது. நான் டிஸ்கவரி புக்பேலஸ் வாடிக்கையாளன். நண்பர் விஸ்கியின் அப்டேட் வரும்போதெல்லாம் செமை பொறாமையாகிவிடுகிறது. :-)))
ReplyDeleteme too
Deleteஆதி தாமிரா : Discovery Book Palace-ல் செவ்வாய் / புதனில் கிடைக்குமென்று நினைக்கிறேன் !
Deleteஎல்லாம் சரி, அடுத்த மாசம் தீபாவளி வேற.. என்னென்ன புக்ஸெல்லாம் வருது..? எனக்குத் தெரிஞ்சி ஒரு நாலைஞ்சி சேர்ந்து வரணும்னு நினைக்கிறேன்.
ReplyDeleteநியாபகம் இருக்கிறவங்க ஆந்தையாரின் கமிட்மெண்ட்ஸை கொஞ்சம் நினைவுகூர்ந்து லிஸ்ட் நம் வயிற்றில் பாலையும், ஆந்தையார் வயிற்றில் புளிக்கரைசலையும் ஊற்றமுடியுமா? ஹிஹி!!
@ஆதி
Deleteஆசிரியரின் ஹாட் லைனில் இருந்து, நவம்பர் வெளியீடுகள்...
#1 சன் ஷைன் லைப்ரரி தீபாவளி ஸ்பெஷல் மலர் 456 பக்கங்கள் டேச்வில்ளீர் சாகசம்
#2 சன் ஷைன் லைப்ரரி சிக்பில் ஸ்பெஷல் 100 பக்கங்கள்
#3 முத்து காமிக்ஸ் சிப்பாயின் சுவடுகள் 112 பக்கங்கள்
என்ன நண்பரே இவ்வளவுதானா? நல்லா யோசிச்சிப்பாருங்க.. வேற என்னென்னலாமோ அவர் சொன்னதா நியாபகம்.
Deleteநீங்க சொன்னது தவிர்த்து நவம்பர்ல..
112 பக்க ஜானி ஸ்பெஷல்
280 பக்க கலர் டைகர் ஸ்பெஷல்
340 பக்க பி&ஒ டயபாலிக்
அப்புறம் ஏதோ புது ஆக்ஷன் கதை ஒண்ணு
லக்கி ஸ்பெஷல் 2
இப்படியெல்லாம் ஏதேதோ எனக்கு ஞாபகம் வருது.. ஹிஹி.. எனக்கு ஞாபக சக்தி கொஞ்சம் கம்மி!!
//டேச்வில்ளீர் // டெக்ஸ் வில்லர் என்று படிக்கவும் : )
Delete@ ஆதி
//இப்படியெல்லாம் ஏதேதோ எனக்கு ஞாபகம் வருது.. !!//
+1 . : )
ஆஹா....நான் எங்கே இருக்கேன் ? என் பெயர் சஞ்சய் ராமசாமியா ?
Deleteஎடிட்டர் சார் இரத்த படலம் அட்டைசூப்பர், இந்த புத்தகத்தில் குறைகள் எதுவுமே இல்லை,மிக அருமையாக இருக்கிறது
ReplyDeleteranjith ranjith : Thanks ranjith ! குறை இல்லாவிட்டால் அதுவொரு சேதி என்ற நிலையை மாற்றிடுவோம் - ரொம்ப சீக்கிரமே !
Deleteஉங்களுடைய எழுத்து பாணி வசீகரிக்க கூடியதே... அதே நேரத்தில் எளிதாக imitate செய்ய கூடியதும்!!
ReplyDeleteRummi XIII - காக்காய் 'கா-கா-' வென்று கரைந்தால் தான் பொருத்தமாய் இருக்கும் சார் ! என் அடையாளத்துக்கு முகமூடி மாட்டி விடுகிறேன் பேர்வழி என்று புதுப் பாணிகளில் எழுதும் விஷப்பரீட்சைகளில் இறங்குவானேன் ?
Deleteமர்ம மனிதன் டைலான் டாக் 2014 வருகிறார் என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்
ReplyDeleteranjith ranjith : :-)
Deleteநண்பர் சேலம் 'டெக்ஸ் விஜயராகவன்' தனது மொபைலிலிருந்து கமெண்ட் செய்யும் வசதியில்லாததால் அவரது எண்ணங்களை எனது மொபைலுக்கு SMS மூலமாக டைப்பியிருந்ததன் தமிழாக்கம் இதோ! (KBT-3 க்கு ஒரு முன்னோட்டம் பார்த்த மாதிரியும் ஆச்சு, ஹி ஹி!)
ReplyDelete" புத்தகங்கள் கிடைக்கப்பெற்றன சார். இரண்டின் அட்டைகளுமே அட்டகாசம் சார். XIIIன் கெட்டியான அட்டைகள் என்னை மிகவும் கவர்ந்திருக்கின்றன. தயவுசெய்து இப்படியே தொடரவும். என் சிறுவயது நண்பனைப் போன்ற XIIIஐ மீண்டும் சந்தித்ததில் ஏக மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். அச்சுத் தரத்தை உயர்த்த உங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுப்பீர்களென்று நம்புகிறேன். அடுத்து வரயிருக்கும் 'டமால்-டுமீல் தலைவர் ஸ்பெசல்'லில் தயவுசெய்து எந்த குறையும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டுகிறேன் சார். இனி நமது நண்பர் 'மியாவ்' ஈரோடு விஜய் மூலமாக அடிக்கடி பின்னூட்டமிடுகிறேன் சார். எங்களுக்கு வாரம் இருமுறை உங்கள் பதிவு வேண்டும் சார். "
- சேலம் டெக்ஸ் விஜயராகவன்
விஜய்
Deleteநானும் உங்களுக்கு SMS அனுப்பி விடுகிறேன். நீங்களும் அதை தமிழில் டைப் செய்து இங்கே அளிக்க முடியுமா?
@ M.S. குரு பிரசாத்
Deleteசெஞ்சுட்டாப் போச்சு! ஆனால் என்னிக்காச்சும் ஒருநாள் கொஞ்சம் விவகாரமான (உள்குத்து கொண்ட) ஒரு SMSஐ நானும் விசயம் புரியாம மொழிபெயர்த்து இங்கே பதிவிட "அய்யய்யோ நான் அப்படி எதுவும் மெசேஜ் அனுப்பவேயில்லையே!"ன்னு கவுத்திட்டீங்கன்னா, நான் அம்பேல்! :)
ஹா!ஹா! அப்படியெதுவும் நடக்காதுன்னு நம்பறேன். என் ப்ரொஃபைல் ஐடியிலிருக்கும் மெயில் ஐடிக்கு உங்க மொபைல் நம்பரை தட்டி விடுங்க! என்னால் முடிஞ்ச வரைக்கும் உங்களுக்கு உதவ தயாரா இருக்கேன்! :)
//அடுத்து வரயிருக்கும் 'டமால்-டுமீல் தலைவர் ஸ்பெசல்'லில் தயவுசெய்து எந்த குறையும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டுகிறேன்.//
Deleteசேலம் டெக்ஸ் விஜயராகவன் through Erode VIJAY : "தலைவர்" ஸ்பெஷல் என்ற பில்டப் நம் உடம்புக்கு ஆகாது !! "இரவுக் கழுகார் ஸ்பெஷல்' என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுவோமே ?
XIII அட்டைப்படம் அருமை. கெட்டியான அட்டை இந்த முறை. அதனால் படிக்க பாதுகாக்க நன்றாக இருக்கிறது. பின் அட்டை - வாவ்... மிக..மிக..மிக.. அருமை
Deleteப்ளூகோட்ஸ் பிரிண்டிங், மொழிபெயர்ப்பு, கதை என அனைத்தும் அருமை. மிகவும் நிறைவான கதை மற்றும் சிரிக்கவைக்கும் மொழிபெயர்ப்பு என மெகா ஹிட் இது.
நியாபகத்தை மறந்தவரை நாளை படிக்க வேண்டும் :-)
SMS அனுப்பியவர் : சேலம் டெக்ஸ் விஜயராகவன்
Deleteமொழியாக்கம் : ஈரோடு விஜய்
" வாவ்! முதன்முதலா எடியிடமிருந்து எனக்கு பதில் வந்திருக்கு! ஹேப்பி இன்று முதல் ஹேப்பி.... எனக்கு மட்டும் 20 நாள் முன்னாடியே தீபாவளி வந்துட்டமாதிரி இருக்கு சார்! அந்தப் பெருமாளே என் புரட்டாசி விரதத்துக்கு பலன் கொடுத்துட்டமாதிரி இருக்கே! ( மைன்ட் வாய்ஸ்: அடப்பாவி! கொலஸ்ட்ரால் ஏகத்துக்கும் ஏறிப்போச்சுங்கற பயத்துல 37 வயசுல முதல்மறையா மட்டன் சாப்பிடாம இருக்கறவனெல்லாம் விரதம்னு சொல்லுறானுங்களே!!)
#சேலம் டெக்ஸ் விஜயராகவன்
இப்போதான் கொஞ்ச நாளா கமெண்ட் எழுத ஆரம்பித்தேன் அதுக்குள்ள
ReplyDeleteஎடிட்டர் இப்படி எங்களுக்கு போர் அடிக்குது என்று சொல்லி விட்டாரே
தினமும் நமது ப்ளாக் பக்கம் போகாமல் இருந்ததேயில்ல , நான் சொல்ல வேண்டியத பிறர் சொல்லி விட ,போதும் கமெண்ட் என்று விட்டு விடுவேன், இனி கமெண்ட் கொடுத்து கொண்டே இருக்க வேண்டியது தான்
//நான் சொல்ல வேண்டியத பிறர் சொல்லி விட ,போதும் கமெண்ட் என்று விட்டு விடுவேன், இனி கமெண்ட் கொடுத்து கொண்டே இருக்க வேண்டியது தான்//
Deleteஎனக்கும் இதே எண்ணம்தான்
lion ganesh & M.S.குரு பிரசாத் : அட..ஆமாம்..இதுவும் ஒரு valid point தானே !
Deleteவணக்கம் வாத்யாரே!
ReplyDeleteகால்ல எய்ந்து நாஷ்டா துன்னுபுட்டு, பாஷ்ட்டா லேன்ட் மார்க்குல போய் வாத்தியாரு வுட்ட புக் வந்துச்சான்னு பாத்தா வரலையே. ஏன் வாத்தியாரே இந்த கொல வெறி? போன மாசம் கூட ரொம்ப நாள் தள்ளி தான் வந்துது இந்த மாசமும் அப்டி தானா? சொலுங்க வாத்யாரே சொல்லுங்க....
அப்பப்போ இதேமேரி சவுண்டு வுட்னே இர் தலீவா... நீ கூவசொல்லோ கேக்க குஜாலாகீது...
Delete:D
Deletechennaivaasi : கொஞ்சமா அண்ணாந்து பாத்தாக்கா - குற்ற சக்கரவர்த்தின்னு ஒரு தோஸ்த்துக்கும் இதே சந்தேகம் தலை ; அதுக்கான பதிலே எழுதி வுட்டிருக்கேன்பா !
Delete//அதுக்கான பதிலே எழுதி வுட்டிருக்கேன்பா!//
Delete@chennaivaasi
உன்க்காவ Translation-பா: எழுதி = எய்தி
காமிரேட்ஸ்
ReplyDeleteஇன்றைய டெக்கன் குரோனிக்கல் - சென்னை குரோனிக்கல் பத்திரிக்கையின் தலைப்பு செய்தியாக வந்து இருக்கும் காமிக்ஸ் கட்டுரையில் நமது எடிட்டரின் பிரத்யேக பேட்டி + இந்த மாதத்திய நமது காமிக்ஸ் வெளியீடுகளின் அட்டைப்படங்கள் (இரத்தப் படலம், ஆகாயத்தில் அட்டகாசம்) வந்துள்ளது.
வழக்கம் போல அதனையும் ஒரு காமிக் கட்ஸ் பதிவாக வலையேற்றியிருக்கிறேன். நேரமிருப்பின் படிக்கவும்.
+ 100
DeleteKing Viswa & லக்ஷ்மி நாராயணன் : சென்னையில் இல்லாததால் நானும் DC E -Paper -ல் தான் பார்க்க இயன்றது !
Deleteகாமிரேட்ஸ்
ReplyDeleteஇந்த மாதத்திய நமது காமிக்ஸ் வெளியீடுகள் eBay யில் லிஸ்ட் ஆகி, பிரமாதமாக விற்பனை ஆகியும் வருகிறது. 10க்கும் குறைவான பிரதிகளே இருப்பதாக லிஸ்ட் தகவல் தெரிவிக்கிறது.
முந்துங்கள்.
eBay வில் வாங்க: http://www.ebay.in/sch/thecomicsstores2012/m.html?_nkw=&_armrs=1&_from=&_ipg=&_trksid=p3686
eBay வில் எடிட்டர் குறைவான அளவிலேயே புத்தகங்களை அளிக்கிறாரோ?
DeleteAs of now the ebay listing says "More than" 10 available. Not less than 10 :)
DeleteSo no chance for shortages as of today! :D
@ friends : எப்போதுமே வார இறுதிகளில் E-Bay விற்பனை சூடு பிடிப்பது வழக்கம் ! அதிலும் புது இதழ்கள் வெளியாகும் வாரமென்றால் வேகம் ஒரு notch கூடிடும் !
DeleteWELCOME XIII...
ReplyDeleteMsakrates : இரண்டாம் சுற்றுக்குத் தயாராகி விட்டார் XIII !
Deleteஉங்கள் பதிவிற்காக காத்துக்கொண்டிருக்கும் நம்மை ஆடச்செய்துவிட்டது உங்களுடைய வார்த்தைகள்....
ReplyDeleteநண்பர்களின் பதிவுகள் இங்கு குறைந்து போனது சென்ற மாத அச்சுக்கோளாறின் காரணமாகத்தான் என்பது என்னுடைய யூகம்.
அன்றி ஆசிரியரின் மீதும் அவருடைய எழுத்துக்களின் மீதும் பற்று குறையவே குறையாது
AHMEDBASHA TK : //நண்பர்களின் பதிவுகள் இங்கு குறைந்து போனது சென்ற மாத அச்சுக்கோளாறின் காரணமாகத்தான் என்பது என்னுடைய யூகம்.//
Deleteஅதுவும் கூட ஒரு காரணமாய் இருக்கலாம் தான் ! நிச்சயம் அதைக் களைய முயற்சிகள் எடுத்திடுவோம் ! அன்புக்கு என்றும் நன்றிகள் சார் !
ப்ளூ கோட்ஸ் சந்தேகமில்லாமல் சூப்பர் ஹிட்....கையைக்கொடுங்கள் சார்....[ குலுக்கிவிட்டு திருப்பித்தந்துவிடுகிறேன் ]
ReplyDeleteநீண்ட இடைவெளிக்குப்பிறகு சந்தேகமில்லாமல் ஒரு கார்ட்டூன் ஹீரோ [ ஹீரோக்கள் ?] செட் ஆகி உள்ளனர்.......ஸ்டீல்பாடி ஷெர்லக் போன்ற தலைவலிகளை விட ரூபி & கோ அட்டகாசம்........ பல இடங்களில் மனம்விட்டு , வாய்விட்டு சிரித்தேன்......
கார்ட்டூன் ஹீரோக்களின் தீவிர ஆதரவாளனான நான் , புரட்டாசி சனியன்று கிடைத்த பெருமாள் கோயில் சர்க்கரைப்பொங்கலின் சுவை கொண்ட ப்ளூகோட் பட்டாளத்தை வாழ்த்திவரவேற்கிறேன்.......
மேலும் பதிவுகளின் குறைவுக்கான காரணமாக ,
//இப்பொழுது தோழர்களின் "கமெண்ட்ஸ் "கு தாங்கள் அதிகம் பதில் அளிப்பது இல்லை .//
காமிக்ஸ் கரடி அவர்களின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்..........
சிவ.சரவணக்குமார் : //கார்ட்டூன் ஹீரோக்களின் தீவிர ஆதரவாளனான நான் , புரட்டாசி சனியன்று கிடைத்த பெருமாள் கோயில் சர்க்கரைப்பொங்கலின் சுவை கொண்ட ப்ளூகோட் பட்டாளத்தை வாழ்த்திவரவேற்கிறேன்.......//
Deleteஇதற்கு மேலொரு வாழ்த்தா ? வாய்ப்பே இல்லை ! நன்றிகள் சார் !
பின்னூட்டங்களின் எண்ணிக்கை குறைய காரணங்கள் என்னென்ன? ஒரு அலசல் பார்வை:
ReplyDelete(1) மொபைல் Dataக்கான tarrif எல்லா ஆபரேட்டர்களாலும் உயர்த்தப்பட்டிருக்கிறது.
(2) சமீப காலமாக இந்த வலைப்பூ பிரச்சினைகள் ஏதுமின்றி ஒரு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. வளைத்து வளைத்து விரட்ட நம் நண்பர்களுக்கு முகம் தெரியாத யாராவது ஒருவர் எப்போதும் தேவைப்படுகிறார். ;)
(3) சற்று கடினமான பாணியில் எடிட்டரிடம் மல்லுக்கட்டும் சில நண்பர்களும் தற்காலிகமாக ஊடலில் இருப்பதால் இங்கே ரொம்பவே நிசப்தம் நிலவுகிறது.
(4) கொஞ்சம் எசகு-பிசகான கேள்வியைக் யாராவது கேட்டுவிட்டாலும் அல்லது கருத்துச் சொல்லிவிட்டாலும் உடனடியாக தீர்ப்பை மாற்றி எழுதச் சொல்லிட 24X7 சேவையில் ஒரிரு நண்பர்கள் செயல்பட்டு வருவதும் காரணமாக இருக்கக்கூடும். ;)
(5) இங்கே அடிக்கடி வந்துகொண்டிருந்த/வந்துகொண்டிருக்கும் வாசக நண்பர்கள் பலரும் தங்கள் மனதில் தோன்றிடும் சந்தேகங்களை எடிட்டரிடம் ஏற்கனவே கேட்டுத் தெளிவுபெற்று ஒரு 'திருப்தி-நிலை' அடைந்துவிட்டனர். பல சமயங்களில் மற்ற நண்பர்கள் கேட்டு அதற்கு எடிட்டர் அளிக்கும் பதிலே தங்களுக்கும் தேவையான தகவலாக அவர்கள் உணர்கிறார்கள்.
(6) ஒரு சீரான இடைவெளியில் தொடர்ந்து நம் காமிக்ஸ் வெளியாகி வருவதால் ஒரு stability ஏற்பட்டிருக்கிறது. நண்பர்கள் பலரும் 'அடுத்தமாசம் என்னென்ன கதைகள்' என்று கேட்டுத் தெரிந்துகொள்வதோடு திருப்தியடைகிறார்கள்.
(7) நண்பர்களுக்கு மாதாமாதம் சொல்லி வைத்தாற்போல் கிடைத்திடும் காமிக்ஸ் தாண்டி, பல பணிகளுக்கு நடுவே இங்கே வந்து தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்திட அவ்வப்போது எடிட்டரிடமிருந்து ஏதேனும் அதிரடி அறிவிப்புகள் தேவைப்படுகின்றன.
(8) இங்கே அடிக்கடி பின்னூட்டமிடும் நண்பர்கள் தற்போது பரஸ்பரம் தங்கள் மொபைல் நம்பரைப் பறிமாற்றிக் கொண்டு தங்கள் கருத்துக்களையும், ஆதங்கங்களையும் பேசித் தீர்த்துவிடுவதால் பின்னூட்டமிட விசயமில்லாமல் போகிறது.
(9) நண்பர்கள் பலருக்கும் அலுவலகங்களில் இன்டர்நெட் உபயோகிப்பதில் இப்போதெல்லாம் ஏக கெடுபிடி என்று கேள்விப்பட்டேன்.
மேற்கூறியவைகளுக்கான மாற்றுக் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. இன்னான்றீங்கோ? ;)
//நண்பர்கள் பலருக்கும் அலுவலகங்களில் இன்டர்நெட் உபயோகிப்பதில் இப்போதெல்லாம் ஏக கெடுபிடி என்று கேள்விப்பட்டேன். //
Delete100% உண்மை.
ப்ளாக்கர் தடை செய்யப்பட்டுள்ளது
Deleteவிஜய்;நான் மொபைல் முலமாகத்தான் இங்கு தமிழ் மொழியில் பதிவு செய்து வருகிறோன்
DeleteErode VIJAY : ஸ்டீல்பாடியார் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்ப நீங்கள் பிரமாதமான சாய்ஸ் ! என்ன ஒரு துல்லியமான, நேர்த்தியான அலசல் ! ஷெர்லாக் ஹோம்ஸ் (ஒரிஜினல் பார்ட்டி தான் !) பெருமை கொண்டிருப்பார் உங்களின் லாஜிக் நிமித்தம் !
Deleteஎடிட்டர் சார்.. நீங்கள் மற்றும் நான் - இவ்விருவரும் தான் ஸ்டீல்பாடியாருக்கு ரசிகர்கள்.. ஸ்டீல்பாடியார் பரண் ஏறியது பற்றி வருத்தமே.... ம்ம்ம்..
Deleteவாழ்த்துக்கள் விஸ்வா.
ReplyDeleteஅந்த கட்டுரை முழுக்க உங்களைப்பற்றியே அமைந்து இருக்கிறது :)
கடைசியில் தான் எடிட்டரே வருகிறார் (படங்களில் கெஸ்ட் ரோல் போல).
இதுபோன்ற தினசரிகளிலும், வார இதழ்களிலும் தொடர்ந்து நமது காமிக்ஸ் குறித்த அறிமுகங்களும் விமர்சனங்களும் வந்தால் அதனாலேயே நிறைய புதிய வாசகர்கள் கிடைப்பார்கள்.
ஜூனியர் விகடன் விளம்பரம் வந்ததும் என்னுடைய நண்பர்களிடம் காண்பித்து இரண்டு நாட்கள் இதைப்பற்றியே பேசிக்கொண்டு இருந்தேன்.
எடிட்டர் சார்,
ஞானவேல் என்கிற பெயரில் புதிய சந்தாதாரர் உருவாகி இருந்தால் என்னுடைய முயற்சி பலன் அளித்து உள்ளது என்று சந்தோஷப்படுவேன்
லக்ஷ்மி நாராயணன் : //ஞானவேல் என்கிற பெயரில் புதிய சந்தாதாரர் உருவாகி இருந்தால் என்னுடைய முயற்சி பலன் அளித்து உள்ளது என்று சந்தோஷப்படுவேன்//
Deleteஎந்த ஊரிலிருந்து என்றும் சொல்லுங்களேன் சார் ?
எடிட்டர் சார்,
ReplyDeleteபுத்தகங்களை பற்றிய என்னுடைய கருத்து:
அட்டைப்படம் - ஆகாயத்தில் அட்டகாசம்: அசலாக பிரெஞ்சு மொழியில் வெளிவந்த அதே அட்டைப்படம் என்றாலும் வண்ணகலவை மெருகூட்டப்பட்டு பிரம்மாதமாக இருக்கிறது. எனக்கு தெரிந்து இந்த வருட அட்டைப்படங்களில் இதுதான் டாப் அட்டைப்படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
(வருட முடிவில் நீங்கள் கண்டிப்பாக ஒரு தேர்தல் வையுங்கள், அட்டைப்படங்கள், கதைகள் ஹீரோக்கள் குறித்து - ஆனால் அது நவம்பர் மாத புத்தகத்தில் இருக்கட்டும், நூற்றி சொச்ச நபர்கள் கருத்திடும் இணையதளம் வேண்டாம்).
பெர்ஃபெக்ட் பைண்டிங் இல்லாமல் சென்டர் பின் அடித்துத்தானே இந்த புத்தகம் வரப்போகிறது? (இன்னமும் கைவரப்பெரவில்லை, அதனாலேயே இந்த கேள்வி). எனக்கு தெரிந்தவரையில் சுட்டிலக்கி போல இதுவும் சென்டர் பின் அடித்து இருந்தால் படிப்பதற்கு மிகவும் ஏதுவாகவும், வசதியாகவும் இருக்கும்.
கதை ஆசிரியர்களை பற்றிய அறிமுகம் தொடரட்டும். இதன் மூலம் ஒரு சர்வதேச பார்வை (international look என்பதை தமிழில் இப்படித்தானே சொல்ல வேண்டும்?) கிடைக்கிறது
லக்ஷ்மி நாராயணன் : //(வருட முடிவில் நீங்கள் கண்டிப்பாக ஒரு தேர்தல் வையுங்கள், அட்டைப்படங்கள், கதைகள் ஹீரோக்கள் குறித்து - ஆனால் அது நவம்பர் மாத புத்தகத்தில் இருக்கட்டும், நூற்றி சொச்ச நபர்கள் கருத்திடும் இணையதளம் வேண்டாம்).//
Deleteநீங்கள் நிச்சயமாய் ஒரு mindreader ! நமது நவம்பர் இதழ்களில் இவற்றை வடிவமைக்கும் பணி நேற்று முதல் தான் துவங்கியுள்ளது !அவசியம் வரும் !
லக்ஷ்மி நாராயணன் : //கதை ஆசிரியர்களை பற்றிய அறிமுகம் தொடரட்டும்.//
Deleteஇதன் பின்னணி மதிப்பிற்குரிய திரு ட்ராட்ஸ்கி மருது அவர்களே என்று தான் சொல்ல வேண்டும். பெங்களுரு COMIC CON -ல் நமது ஸ்டாலில் அவர் நேரம் செலவிட்ட போது 'கதைகளின் ஓவியரை முன்னிலைப்படுத்தி அவரைப் பெருமைப் படுத்துங்கள் !' என்று சொல்லி இருந்தார் !
அதை கொஞ்சமாய் develop செய்து - கதாசிரியர் + ஓவியர் என இருவரையுமே (நமது ) வெளிச்ச வட்டத்துக்குள் கொண்டு வரலாம் எனத் தீர்மானித்தேன் !
எடிட்டர் சார்,
ReplyDeleteகமெண்ட் போடும்போது ரெண்டு கருத்து சொல்லவேண்டுமேன்பது சங்க விதி என்பதால் இந்தாருங்கள் சில இலவச ஆலோசனைகள்:
1. இரத்தப் படலம் அட்டைப்படம் அருமையாக தெரிகிறது. உறுத்தும் ஒரே விஷயம் என்னவெனில் அட்டையின் அடியில் உள்ள அந்த இரத்தம் தெறிக்கும் டிசைன் மட்டும் ஏதோ ஸ்டிக்கர் கொண்டு ஒட்டியது போல பொருந்தாமல் இருக்கிறது.
2. அதைப்போலவே அட்டையில் இருக்கும் எழுத்துக்களில் படலம் மற்றும் ! (ஆச்சர்யக்குறி) இடையே இடைவெளி அதிகமாக இருப்பதாக தெரிகிறது. ஸ்கேல் வைத்து அளந்து வேறு பார்த்தேன். வேண்டுமென்றால் சொல்லுங்கள், ஆதாரங்களுடன் தனி பதிவு வேண்டுமானாலும் இடுகிறேன். ஆகையால் இனிமேல் இப்படி இருக்காமல் பார்த்துகொள்ளுங்கள்! :)
இங்கே ஒரு இறுக்கமான சூழல் நிலவுவதாக தெரிகின்றது. இந்த கமெண்ட் அந்த இறுக்கத்தை குறைக்கவே இடப்பட்டது. இதனால் தனியாக பிரச்சனை ஏதாவது எழுந்தால் அதற்க்கு சங்கம் பொறுப்பல்ல.
சார்,
ReplyDeleteஇரண்டு இதழ்களும் அட்டகாசம். அதிலும் ப்ளூகோட் பட்டாளத்தின் சாகசம் ஒரு அதிர்வேட்டு! எப்போதும் தலையங்கம் படித்துவிட்டு கதைக்குப் போகும் நான், சரி புது வரவை சும்மா இரண்டு பக்கங்கள் படிக்கலாம் என்று ஆரம்பித்தால் கதையை முடித்துவிட்டுதான் தலையங்கத்தையே படித்தேன் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்!
அந்த அளவிற்கு தூள் கிளப்பிவிட்டார்கள்.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல் 57 கதைகளின் வெற்றியைக் கணிக்க இந்த ஒன்றுப் போதும் அதைப் பறைச்சாற்ற!
கதையின் தலைப்போ ஆகாயத்தில் அட்டகாசம்!
கூரியரில் இன்று கிடைத்தவர்களுக்கோ கொண்டாட்டம்!
அது கைக்கு இன்னும் வரப்பெறாதவர்களுக்கோ திண்டாட்டம்!
தமிழில் வழங்கிய தாங்கள் தைரியமாக போடலாம் ஒரு குத்தாட்டம்!
MH Mohideen : புத்தகம் கிடைக்காதோர் கொட்டி விடுவர் வண்டாட்டம் !
Deleteதல எனக்கு இன்னும் புக் கிடைக்கல!! இவங்க வேற சும்மா அது சூப்பர் இது சூப்பர் அப்டின்னு வெறுப்பேத்தராங்க.. முடியல தல...
ReplyDeleteஎன்னையும் அந்த அணியில் சேர்த்துக்கொள்ளுங்கள் பாலாஜி
Deleteஎனக்கும் இன்னமும் புத்தகம் வரவில்லை.
நாளைக்கு இந்த பக்கமே வரமால் இருக்க வேண்டும்.
இல்லை எனில் ஆளாளுக்கு அது சூப்பர், இது அட்டகாசம் , பிரம்மாதம் என்று சொல்லியே கடுப்பேத்துவார்கள் (புத்தகம் வராதவர்களின் நிலையை எண்ணி பாருங்கள் தோழமைஸ்).
குரு எப்டி பாத்தாலும் எல்லாம் நம்ப பயலுவுக(comics lovers).. படிச்சிட்டு போறாங்க விடுங்க!!
Deleteபாலாஜி ராம்நாத் - அதுவும் அந்த 32 ஆம் பக்கத்துல இருக்குற காமெடிய என்னன்னு சொல்ல.. இது மாதிரி எங்கயுமே படிச்சதில்லீங்க... அந்த 43 ஆம் பக்கம் டாப் க்ளாஸ். அந்த 72 ஆம் பக்க முடிவு.. வாவ்.. ( ஹீ..ஹீ.. இது போதும்னு நினைக்கிறேன் :-) )
Deleteபிகு - 72ஆம் பக்கம் புத்தகத்திலேயே இல்லை. ஆனாலும் சூப்பர் :)
RAMG75 : ஆனாலும் இது டூ டூ மச் :-)
DeleteHa ha ha :)
Deleteஎப்படியோ ST கொரியர் தம்பிya டார்சர் செஞ்சு புக்ஸ வாங்கிடொம்ல!!
Deleteஆசிரியர் அவர்களே..2014 க்கான முன்னோட்டத்தில் டெக்ஸ் வில்லரின் வண்ணப்படம் இடம் பெற்றுள்ளதே...அப்படியென்றால் வரும் வருடம் டெக்ஸை வண்ணத்தில் எதிர்பர்க்கலாமா?
ReplyDeleteAHMEDBASHA TK : 2014-ன் ட்ரைலர் நவம்பரில் உங்களுக்கு முழுதாய் கிடைத்து விடும் ! அது வரை - the guessing games are on !
DeleteOk, அப்பன்னா அது முழுவண்ண டெக்ஸ்தான்னு Confirm ஆய்டிச்சி! :D
Delete@விஜயன் சார்:
ReplyDelete//சென்ற மாதத்து அச்சுக் குறைபாடுகளை இம்முறை இயன்ற வரை களைந்துள்ளோம்//
கை மீறிப் போன பிரிண்டிங் தரத்தை உங்கள் கட்டுக்குள் கொண்டு வர நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் இம்மாத இதழ்களில் தெளிவாக பிரதிபலிக்கிறது! மிக்க மகிழ்ச்சி!! & வாழ்த்துக்கள்! குறிப்பாக ஆ.அ.வின் தரம் ஆஹா! இரண்டு இதழ்களின் அட்டைப் படங்களும் டாப் கிளாஸ்!!! கதைகளை இன்னமும் படிக்கவில்லை! புதிய ஃபேஸ்புக் முகவரியை முதல் பக்கத்திலேயே தெள்ளத் தெளிவாக வெளியிட்டு இருக்கிறீர்கள் - வெரி குட்!
//KBT -3-ல் பங்கேற்க ஆர்வம் தெரிவித்திருந்த 39 நண்பர்களுக்கு 8 +6 பக்க லக்கி லூக் குட்டிக் கதைகள் இம்மாத இதழ்களோடு அனுப்பப்பட்டுள்ளன.//
எனக்கு ஒரே ஒரு எட்டு பக்க கதை தான் வந்துள்ளது! 20 பேருக்கு எட்டு பக்க கதை, மீத 19 பேருக்கு ஆறு பக்க கதை என அணி பிரித்து இருக்கிறீர்களா?! போட்டியில் வெல்பவர்களுக்கு பரிசு புத்தகத்தையாவது முழுதாக கொடுப்பீர்கள் தானே?! ;) அதே போல எனக்கு அனுப்பட்ட கதை, எந்த ஒரு முன்னறிமுகமும் இன்றி 'பொதக்கடீர்' என்று துவங்குவதுகிறது! :) ஒருவேளை, பல சிறுகதைகள் அடங்கிய லக்கி ஆல்பத்தின் இரண்டாவது பாகம் இதுவோ?!
//KBGD முயற்சியில் பங்கேற்க எண்ணும் நண்பர்களும் இப்போதே ஆர்வத்தைத் தெரிவிக்கலாம் !//
ஆர்வத்தை கடந்த பதிவிலேயே தெரிவித்தாகி விட்டது! பரிசு புத்தகத்தை அறிவிக்க வேண்டியது ஒன்றுதான் பாக்கி - அப்போதுதான் சூடு பிடிக்கும்! ;)
@Siva Subramanian:
//வெல்கம் அகைன் ஜில் ஜோர்டான் !//
+1 :)
@விஸ்கி-சுஸ்கி:
//profile picture - animated gif அருமை!//
நன்றி விசு! லயன் ஃபேஸ்புக் பேஜுக்காக முத்து, லயன் & சன்ஷைன் இவற்றின் லோகோக்கள் ஒரு செகண்டுக்கு ஒரு முறை மாறும் விதத்தில் ஒரு படத்தை profile picture-க்காக அனுப்ப எண்ணி இருந்தேன்! ஆனால், FB-யில் GIF சப்போர்ட் கிடையாது!
@குற்றச் சக்கரவர்த்தி:
//அந்த parcel தமக்கே வந்ததாக கருதி பிரித்து மேய்ந்து விடுவார்கள்.... அப்படிப்பட்ட ஒரு மந்திர மண்டலத்தில் தான் அடியேனின் பாசறை உள்ளது//
ஹா ஹா!! குற்றச் சக்கரவர்த்திக்கு இப்படி ஒரு சோதனையா?! :) உங்களுடைய முதல் பத்தி செம காமெடி! :)
@chennaivaasi:
//சொலுங்க வாத்யாரே சொல்லுங்க....//
இந்த டயலாக் மட்டும் சென்னை பைந்தமிழுக்கு கொஞ்சம் செட் ஆக மாட்டேன் என்கிறது! :)
@Ramesh Kumar:
//அப்பப்போ இதேமேரி சவுண்டு வுட்னே இர் தலீவா... நீ கூவசொல்லோ கேக்க குஜாலாகீது...//
செம! :)
@Erode VIJAY:
//மேற்கூறியவைகளுக்கான மாற்றுக் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. இன்னான்றீங்கோ? ;)//
டியர் விஜய் சார், என் கருத்துக்களை உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியுள்ளேன்! படித்து விட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கவும்! ;)
@லக்ஷ்மி நாராயணன்:
//அட்டையில் இருக்கும் எழுத்துக்களில் படலம் மற்றும் ! (ஆச்சர்யக்குறி) இடையே இடைவெளி அதிகமாக இருப்பதாக தெரிகிறது. ஸ்கேல் வைத்து அளந்து வேறு பார்த்தேன்.//
உண்மை தான்! நானும் அளந்து பார்த்தேன்! படலதிற்கும், ஆச்சரியக் குறிக்கும் இடையே முழுசாக ஒரு சென்டிமீட்டர் இடைவெளி உள்ளது! ;)
Karthik Somalinga : Oops...நேற்று மாலைய பரபரப்பில் இரண்டாம் கதையின் xerox களை சிலருக்கு இணைக்க மறந்து விட்டார்கள். தனியாய் ஒரு கூரியரில் அவை கிளம்பியுள்ளன ! (So much for my money saving formula :-) )
Deleteஅப்புறம் இவை அனைத்துமே லக்கி லுக்கின் சிறுகதைத் தொகுப்புகளின் கதைகள் ! ஒன்றுக்கொன்று தொடர்பில்லா independent stories !
சற்று முன்புதான் புத்தகங்கள் என் கைகளை அடைந்தன. இரு புத்தகங்களுமே அட்டைப்பட டிசைனில் (குறிப்பாக பின்னட்டைகள் படு அட்டகாசம்) அசத்துகின்றன!! வழக்கமான நமது 'பளீர்' பாணியிலான அட்டைகளிலிருந்து XIIIன் அட்டை முற்றிலும் மாறுபட்டு டார்க்காக இருப்பது ஒரு 'அடடே' மற்றும் 'ஆஹா' வித்தியாசம்! இப்படிப்பட்ட டார்க்கான அட்டைப்படத்தைத் தேர்வு செய்திடவும் ஒரு 'தில்' தேவைப்படுகிறது. அந்த 'தில்' பலனும் அளித்திருப்பதாகத் தோன்றுகிறது. கடைகளில் தொங்கவிடப்படும்போது இது எந்த அளவுக்கு பார்ப்பவர்களின் கண்களைக் கவர்ந்திடும் என்ற சிறு சந்தேகம் மட்டும் கொஞ்சமாய் எஞ்சி நிற்கிறது! இந்த தில்லான தேர்வின் பின்னணி பற்றி ஏதேனும் கதை இருந்தால் இங்கே பகிரலாமே எடிட்டர் சார்?
ReplyDeleteErode VIJAY : அட்டைப்படத்திற்கென நமக்கிருந்த சாய்ஸ் - கோட் சூட் மாட்டியவாறு லாப்டாப்பை வெறித்து நிற்கும் XIII - அல்லது சிறைக் கம்பிகளை எண்ணிடும் ஜோன்சின் சித்திரம் !
Deleteஜோன்சின் கண்களில் தெரிந்த ஒரு ஈர்ப்பு இந்த அட்டைப்படத்தை நிச்சயம் தூக்கி நிறுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது ! அவரது தலையில் அணிந்திருக்கும் ஸ்கார்ப் ஒரிஜினலில் காக்கி கலரிலேயே இருந்தது ; அதனை மாத்திரமே சிகப்பாய் மாற்றினால் போதுமென்று நினைத்தேன் ! தவிர பிரிண்டிங்கில் பின்னணியில் உள்ள கைதிகளின் முகங்கள் ஒரேடியாக இருளில் மூழ்கிடக் கூடாதே என்ற பயம் மட்டும் இருந்தது ; so பொன்னனிடம் சொல்லி background -ல் ப்ளூ & black depth கூடிட வேண்டாமே என்று கோரியிருந்தேன். கச்சிதமாய் அவரும் தன பங்கைச் செய்திட, அச்சிலும் கரை சேர்த்து விட்டார்கள் !
Editor and friends forgive me for this comment.............
ReplyDelete//வாரா வாரம் எனது பாணியை தொடர்ந்து வாசிப்பதில் எனக்கே கொட்டாவி எழும் போது உங்களிடமும் ஒருவித அயர்ச்சி எழுவதில் வியப்பில்லை என்றே தோன்றுகிறது ! //
மாதம் மாதம் புக் வருவதும் அந்த புக்ஸ் வாசிப்பதில் அயர்ச்சி எழுவதில் வியப்பில்லை என்றே தோன்றுகிறது so books ஐ வெளீடும் அவகாசத்தை சற்றே அதிகரிப்பதன் மூலம் தொடரும் மாதங்களது பணிச் சுமையையும் ; 2014-ன் திட்டமிடல்களையும் அணுகிட எனக்குக் கூடுதலாய் நேரம் கிடைக்கும் என்பதோடு - ஒரு staleness தலைதூக்கிடாது இருக்கவும் உதவும் என்று நினைக்கிறேன் என்று அர்த்தம் அப்பாடிதாநே எடிட்டர் சார்//
sorry to this line............ please dont stop posting new post.............. plz i beg u
everconstantine : Beg என்பதெல்லாம் பெரிய வார்த்தை ...ப்ளீஸ் வேண்டாமே ?!
Deleteசமிப காலத்தில் லக்கி லுக் கதைகள் படித்து வாராத சிரிப்பு ப்ளுகோட்ஸ் முலம் அக்குறையை நிவர்த்தி செய்து உள்ளிர்,
ReplyDeleteமுற்றிலும் உண்மை.. பறக்கும் பலூன் என வித்தியாசமான கதைக் களன். இந்தக் கதையை ( மற்ற கதைகளை க்கு முன்பு) வெளியிட்ட எடிட்டர், வெகுஜன ரசிக நாடி தெரிந்த சித்த வைத்தியர் என்பதனை மீண்டும் உணர்த்தி விட்டார் :-)
DeleteRAMG75 : இதன் credit Cinebooks ஆங்கிலப் பதிப்புகளையே சாரும் ; அழகான கதைகளை வெளிச்சம் போட்டுக் காட்டி நம் பணிகளை சுலபமாக்குகிறார்களே !
Deleteஇப்பொழுது தான் கவனித்தேன். - தொடரும் ஒரு தேடல் என்பது இந்தக் கதையின் டைட்டிலா ?. நான் கேப்ஷன் என நினைத்திருந்தேன்.
ReplyDeleteஹீரோவை விட்டு விட்டு.. ஏன் ஜோன்ஸ் இருக்கும் அட்டைப்படத்தை எடிட்டர் தேர்ந்து எடுத்ததன் பின்னணி என்ன என்று எடிட்டர் சொன்னால் நன்றாக இருக்கும்.
ReplyDeleteRAMG75 : இதே கேள்வியினை ஈரோடு விஜயும் எழுப்பியுள்ளார் - பாருங்களேன் எனது பதிலை !
Deleteவெகுஜன ரசிக நாடி தெரிந்த சித்த வைத்தியர்!!
ReplyDelete:-)
என்ன சார், உங்கள் எழுத்து போர் என்று யாராவது சொல்லுவார்களா? ஆனால் நீங்கள் அடிக்கடி இப்படி நினைத்து / எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். தயவுசெய்து உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். பலராலும் விரும்பி படிக்கப்படுவது உங்களின் பதிவுகள்.
ReplyDeleteநானும் கடந்த சில பதிவுகளில் பார்வையாளனாக கடந்து சென்று விட்டேன். மறுபதிப்புகளில் எனக்கு ஆர்வம் என்றுமே இருந்ததில்லை (ஒரே ஒரு முறை தவிர - detective ஸ்பெஷல்). ஆகையால் அதுபோன்ற விவாதங்களில் பங்கேற்காமல் சென்றுவிடுவேன்.
எது எப்படி இருந்தாலும் நாள் தவறாமல் நமது தளத்தில் புதிய செய்தி உள்ளதா என்று பலமுறை பார்ப்பது வழக்கம்.
Radja from France : புதிய வருடம், புதுக் கதைகள் என எதிர்நோக்கியிருக்கும் வேளைகளில் நிச்சயம் புதுச் சங்கதிகள் இருந்திடும் !
Deleteஆசிரியரின் பதிவு ஏதாவது புதியதாய் வந்திருக்கிறதா என்று வாரத்திற்கு மூன்று முறை ப்ளாக் கை பார்த்து செல்வேன்! ஆனால் கமெண்ட் இடுவது குறைவு தான்! இருந்தாலும் புதிய பதிவை பார்த்ததும் உண்டாகிற உற்சாகத்தோடு கூடிய ஆர்வம் நிச்சயம் அனைவருக்கும் உண்டென்று நம்புகிறேன் சார்! Please keep Updating as usual, Sir!
ReplyDelete:-)
Deleteடியர் எடிட்டர் ,
ReplyDeleteXIII - ஒரு புலன் விசாரணை , அதாவது பாகம் 19 இன் வேலைகள் எல்லாம் செய்து விட்டு அதை பரணுக்கு அனுப்பி விடுவது சரிதானா? "நல்லதோர் வீணை செய்து அதை நலன் கெட புழுதியில் எறிவதுண்டோ" அதை தூசு தட்டி மறுபடியும் வெளியிடும் வாய்ப்புள்ளதா சார் ?
தயவு செய்து தங்களின் பதிவுகளில் இடைவெளி அதிகரிக்கும் எண்ணத்தினை கைவிட இறைஞ்சி வேண்டிகொள்கிறேன் . உங்களின் பதிவினை எதிர்பார்த்து காத்து கிடப்போரில் அடியேனும் ஒருவன் . ஏற்கனவே வருவதே போதாது என்று பீல் செய்யும் வேளையில் , இப்படி ஒரு முடிவு வேண்டாமே ப்ளீஸ் ?
Thiruchelvam Prapananth : XIII - ஒரு புலன் விசாரணை - அத்தொடரின் hardcore வாசக ரசிகர்களுக்கு மாத்திரமே பிடிக்கக் கூடியதொரு பாணியல்லவா ? More of a collector's piece than of reading interest !
Deleteநிச்சயம் வேண்டும் சார் புலன்விசாரனைக்கு உத்தரவிடுங்கள்!
Deleteடியர் சார் .....இரண்டு புத்தகங்களும் இந்த முறை மிக சிறப்பாக வந்துள்ளது ....பதிவுகளை குறைப்பது என்ற உங்கள் முடிவு மிக வருத்தம் அளிக்கிறது .....மேலும் தீபாவளிக்கு இரு நாட்கள் முன்பேனும் புத்தகங்கள் கையில் கிடைக்க ஏற்பாடு செய்தல் நலம் .....ஏன்னா டெக்ஸ் வேற வர போறாரே அதான்....அடுத்த வருடம் ஒரு பத்து டெக்ஸ் கதைகளை எதிர் பார்க்கிறேன் ....
ReplyDeleteநண்பரே அதை நான் வழிமொழிகிறேன் ..
Deleteஇளம் பரிதி : கவலை வேண்டாம் - தீபாவளிக்கு உங்கள் கைகளில் நிச்சயமாய் பிரதிகள் இருந்திடும் !
Deletedear vijayan , எமனின் திசை மேற்கு புத்தக மதிப்பீடு , தமிழ் ஹிந்து பேப்பர் ல் கண்டு மகிழ்ச்சி உற்றேன் !
ReplyDeleteநாம் எந்த துறையில் இருக்கிறோமோ அந்த துறையில் மிக சிறப்பனவர்களாக திகழ வேண்டும் என்பது சான்றோர் கூற்று ! அதன்படி தமிழ் காமிக்ஸ் துறையில் no 1 ஆக
திகழ்ந்து வரும் நீங்கள் எங்களை போன்று பலருக்கு மானசீக குருவாக உள்ளீர் கள் என்றால் மிகை அல்ல - அதாவது நாங்களும் அந்தந்த துறையில் சிறப்பனவர்களாக மாறவேண்டும் என்ற உத்வேகத்தை உங்களிடம் இருந்து கற்று கொள்வதால் ...... அப்படிப்பட்ட நீங்கள் உங்களையே அடிக்கடி ஆந்தை விழியார் என்று சுய கிண்டல் செய்து கொள்வது கொஞ்சம் அல்ல நிறையவே குறைத்து கொள்ள லாமே சார் -அது ஜாலி யாக இருந்தாலும் கூட
இணையத்தில் அதிகம் எழுதாதற்கு வேலைபளுவே காரணம் ,நம் தளத்தில் ஒரு நண்பர் இணைய புதைகுழி என்றொரு பதத்தை உபயோகம் செய்து இருந்தார் .அது உண்மைதான் ...
டாக்டர் சார்,
Deleteஎன்ன ஆச்சர்யம்? காலையில் லேட்டாக எழுந்து இப்போதுதான் அந்த பக்கத்தை ஸ்கான் செய்து எடிட்டருக்கு அனுப்பி விட்டு வந்து இங்கே பார்த்தால் உங்களது இந்த கமெண்ட் அதே 11ம் பக்கத்தை பற்றி.
Remarkable coincidence.
Dr.Sundar, Salem : இது நாம் அனைவருமாய் சேர்ந்து கட்டிடும் ஒரு அழகான கூடு ; இதன் கிரெடிட் என் ஒருவனுக்கு சேர்வதெல்லாம் நிச்சயம் பொருத்தம் ஆகாது ! இங்குள்ள ஒவ்வொருவரும் தத்தம் விதங்களில் எத்தனை ஆற்றலாளர்கள் என்பது தான் நித்தமும் நாம் ரசிக்கும் ஒரு சங்கதி அன்றோ ?! "குரு" என்பதெல்லாம் நிச்சயம் பெரிய வார்த்தை ; அந்த ஸ்தானம் நம்மை இங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கும் ஆசான்களுக்கு பிரத்யேகமாய் இருந்திடட்டுமே ?
Deleteஉங்களின் பதிவை மட்டும் பார்த்து விட்டு நேரமின்மை காரணமாக பதிவிட முடியாமல் போகிறது !
ReplyDeleteமேலும் இணையத்தில் நேரம் செலவிடுவதை காட்டிலும் ,, "தங்கமணி " என்ஜாய் ன் போது அவிழ்த்த வேர்கடலையை அருகில் வைத்து கொண்டு டெக்ஸ் (பழிக்கு பழி ,இரத்த முத்திரை ,டிராகன் நகரம் குறைந்தது 50முறையாவது படித்து இருப்பேன் )மற்றும் மாடஸ்டி யுடன்(எவர்க்ரீன் கழுகு மலைகோட்டை ) மல்லு கட்டுவது - அது சொர்க்கம் யா (சாலமன் பாப்பையா வாய்ஸ் ல் படித்தால் சந்தோசபடுவேன் ) !
கண்டிப்பாக உங்களின் பழகிய எழுத்து நடையை பார்த்து நண்பர்கள் போர் அடித்து கருத்து பதிவிடுவதில்லை என்பதை நான் ஒருக்காலும் ஒத்துக்கொள்ள மாட்டேன் , writer சுஜாதா வின் எழுத்து மிகவும் பழகிய எழுத்து தான் -அது போர் அடித்ததா என்ன ..அவர் கடைசி வரை கொடி கட்டி பறக்க வில்லையா !
ஆமா உங்களின் எழுத்து போர் என்று எவன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் சொன்னான் (நற நற )
காமிரேட்ஸ்,
ReplyDeleteநேற்று ஆங்கிலம் என்றால் இன்று தமிழ்.
நேற்று டெக்கன் குரோனிக்கல் என்றால் இன்று தி இந்து தமிழ்.
நேற்று கட்டுரை என்றால் இன்று புத்தக விமர்சனம்.
ஆம், இன்றைய தி இந்து சென்னை பதிப்பிலும், கோவை மதுரை, திருநெல்வேலி மற்றும் திருச்சி ஆகிய ஐந்து பதிப்பிலும் நூல்வெளி (புல் வெளி மாதிரி) என்கிற புத்தக விமர்சன / மதிப்புரை பக்கத்தில் நண்பர் CM (சந்திர மோகன்) அவர்களால் பதிப்பிடப்பட்டு சிறப்பாக வெளிவந்துள்ளது. அவருக்கும், இந்த புத்தகத்தை விமர்சனமாக வெளியிட உதவிய நண்பருக்கும் நன்றி.
தி இந்து தமிழ் நாளிதழின் நிர்வாகத்திர்க்கும் நன்றி.
காமிரேட்ஸ்
ReplyDeleteமன்னிக்கவும், திருநெல்வேலியில் பதிப்பு (இப்போதைக்கு) இல்லையாம்.
ஆகையால் தமிழ் நாட்டில் மொத்தம் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி என்று நான்கு பதிப்புகள் தான்.
அதே சமயம் கேரளாவில் திருவனந்தபுரத்திலும், கர்நாடகாவில் பெங்களூருவிழும் தமிழ் பதிப்புகள் உண்டு.
So, மேலே குறிப்பிட்ட ஊரில் இருக்கும் நண்பர்கள் இன்றைய தி இந்து தமிழ் நாளிதழை வாங்கி இன்புறுங்கள் (ஐந்தே ஐந்து ரூபாய்தான், ஜென்டில்மென்).
நாளைக்கோ அல்லது பின்னரோ இந்த புத்தக விமர்சனம் வெளியிடப்படும்.
நமது காமிக்ஸ் பற்றிய செய்திகள் தொடர்ந்து 'இந்தியா டுடே', 'டெக்கான் க்ரானிக்கிள்', 'தி இந்து' போன்ற முன்னணி பத்திரிக்கைகளில் வெளியாகிவருவது மகிழ்ச்சியளிக்கிறது! தொடர்ந்து இம்முயற்சிகளில் ஈடுபட்டுவரும் கிங் விஸ்வா மற்றும் அவரது பத்திரிக்கையுலக நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும்!!
ReplyDeleteஇந்த பாராட்டு (தி இந்து குறித்து) செல்ல வேண்டியது அந்த புத்தக மதிப்புரையை எழுதிய நண்பர் வெற்றிவேல் சந்திரமோகன் அவர்களுக்கே.
Deleteஇந்த ஆண்டு சென்னை புத்தக திருவிழாவில் இந்த புத்தகத்தை வாங்கியதில் இருந்தே அதன்பால் ஈர்க்கப்பட்டு இருந்த அவர், சரியான நேரம் பார்த்து இப்போது அதனைப்பற்றி அழகாக எழுதி இருக்கிறார்.
நண்பர் வெற்றிவேல் சந்திரமோகன் அவர்களுக்கு காமிக்ஸ் உலகின் நன்றிகள் பல! 'எமனின் திசை மேற்கை' அனுபவித்து படித்ததாலோ என்னவோ, அனுபவித்து விமர்ச்சித்திருக்கிறார். விமர்ச்சனத்திற்காகக் கொடுக்கபட்ட சிறிய இடத்திற்குள் தேவையான தகவல்களைப் புகுத்தி நிறைவான விமர்ச்சன அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார்! வாழ்க வளமுடன்!!
Deleteயாராவது அந்த பக்கத்த அப்டேட் பண்ணுங்கப்பா!! உங்களக்கு புண்ணியம் கிடைக்கும்.. இங்க ஹிந்து பேப்பர் கிடைக்கல..
Deletebalaji ramnath : இங்கேயும் கூடக் கிடைக்கவில்லை !! எனினும் நமக்குப் பெருமை சேர்த்துள்ள டெக்கான் Chronicle & ஹிந்து இதழ்களுக்கு நமது நெஞார்ந்த நன்றிகள் ! Thanks Vishwa too
Deleteகணக்கரசருக்கு புத்தகங்கள் வந்துவிட்டதாம்.ஆனால்,ரஷ்ய சர்வாதிகாரிக்கும்,நல்ல பிசாசுக்கும் இன்னும் வரவில்லை.தாவாங்கட்டையை சொறிந்தபடி மோட்டுவளையை பார்த்துக்கொண்டு சோகத்துடன் புலம்புகிறாராம் நல்ல பிசாசு.
ReplyDeleteஇது "கிழக்கத்திய நாடுகளின் சதி"யாக இருக்குமோ...?என்று வேறு குற்றம் சாட்டுகிறாராம் பிசாசார்.ஒருவேளை ,அப்படியும் இருக்குமோ...?
கணக்கரசருக்கு எச்சரிக்கை! வெறும் கையோடு உங்கள் அலுவலகத்துக்குள் எட்டிப்பார்த்திடும் சாத்தான், திரும்பிச் செல்லும்போது கைகளில் கலர் புத்தகங்களையும் வாய்நிறைய நமுட்டுச் சிரிப்பையும் சுமந்து செல்லக்கூடும்! Beware of பிசாசுகள்! ;)
Deleteஇந்த சதிக்குப் பின்னணி ST கூரியரில் உள்ள ஆட்பற்றாக்குறை சாத்தான்ஜி !
Delete'எமனின் திசை மேற்கு' பற்றிய இன்றைய 'தி இந்து தமிழ் நாளிதழின்' விமர்ச்சனம் நேர்த்தியாக உள்ளது. க்ராபிக் நாவலுக்கும் காமிக்ஸுக்குமுள்ள வித்தியாசத்தில் துவங்கி, காமிக்ஸ் கற்றுக்கொடுக்கும் விசயங்கள், அவை உருவாகிடும் பின்புலங்கள், முத்துக்காமிக்ஸின் சாதனை, மொழிபெயர்ப்பில் எடிட்டர் கண்டிடும் சவால், 'எமனின் திசை மேற்கு' பற்றிய அழகான சுருக்கமான விமர்ச்சனம் ஆகியவற்றை உள்ளடக்கி, படித்து முடிக்கும்போது ஒருவகையான திருப்தியையும் தருகிறது! அருமை!!
ReplyDeleteYes, short n' sweet....
Deleteமை டியர் மானிடர்களே!!!
ReplyDeleteகாமிக்ஸை வாங்கினோமா ,படித்தோமா என்று மட்டும் இருந்திடாமல் அதன் வளர்ச்சிக்கு தன்னால் முடிந்த அத்தனை உதவிகளையும் பிரதிபலன் பாராமல் செய்துவரும் மரியாதைக்குரிய நண்பர் கிங் விஸ்வா அவர்களை பாராட்ட வார்த்தைகளில்லை.அவருடைய காமிக்ஸ் சேவை இன்றைய வர்த்தக சூழலில் நம்மை போன்ற சிறு பத்திரிக்கைகளுக்கு மிக பெரிய அனுகூலங்களை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.
கிங் விஸ்வா அவர்களை மனதார பாராட்டுகிறேன்!!!
வருடத்தின் இறுதியை நோக்கி வேகமாக நகரும் இந்த மாதங்கள் பலருக்கும் பணிச் சுமையை தூக்கி தலையில் வைத்துவிடுவதால் இங்கு வந்து பதிவைப் படித்துவிட்டு நகர்ந்துவிடுகிறார்கள் என்று நினைக்கிறேன் (நானும்கூட).
ReplyDeleteசட்டென்று பின்னூட்டமிடவேண்டிய செய்தி மனதில் ஒளிர்ந்தால் உடனே டைப் செய்து பதிந்துவிடலாம். அல்லது, 'நான் முதலாவது, ரெண்டாவது... வந்துட்டேன்.. ப்ரசண்ட் சார்...' என்பதுபோல ஒரு வரியில் பின்னூட்டமிடுவதாயினும் இலகுதான். ஆனால், பதிவிலிருந்து எழும் சந்தேகங்களை கேட்கவிரும்பும்போது அதற்கு பொறுமையும் சற்றே அதிக நேரமும் தேவைப்படுகிறது. அதனால் தான் பல நண்பர்கள் படித்துவிட்டு பிறகு வருவோம் என்று நகர்ந்து, அப்படியே நேரமின்மையால் பின்னூட்டமிடுவதை தவறவிட்டுவிடுகிறார்கள். பின்னர், அந்த கேள்வியோடு பதிவிடவரும்போது வேறு ஒருவர் அந்தக் கேள்வியைக் கேட்டு அதற்கு ஆசிரியரும் பதில் அளித்திருந்தால், பதிவிட வேறு விடயத்தை தேடவேண்டியிருக்கும்.
எனவே, பதிவைப் படிப்பவர்கள் பின்னூட்டமிடுவது சில காலப்பகுதியில் குறைவடைவதை தவிர்க்க இயலாது. அதே நேரம், ஆசிரியர் பதில்கள் அளிக்கும் பதிவுகளில் பின்னூட்டங்களும் அதிகரித்துச் செல்வதையும் அவதானிக்கலாம். 'இண்ட்டரக்ட்' பண்ணுவதற்கு வாய்ப்பிருக்கும்போது உரையாடல்களும் பிறப்பது வழமையே!
Podiyan : //'இண்ட்டரக்ட்' பண்ணுவதற்கு வாய்ப்பிருக்கும்போது உரையாடல்களும் பிறப்பது வழமையே!//
DeleteVery true...
டைலன் டாக் பற்றி நண்பர்கள் இங்கு பேசுவது எதைவைத்து என்பது புரியவில்லை. ஒருவேளை புதிய இதழ்களில் விளம்பரம் வந்திருக்கிறதா?
ReplyDeleteநண்பர் பொடியன் அவர்களே,
Deleteநண்பர் சௌந்தர் அவர்களுடைய 106 ஆவது பதிவை பார்த்த பின்புதான் எனக்கும் புரிந்த்தது. நீங்களும் பாருங்களேன் :)
http://tamilcomics-soundarss.blogspot.com.au/
உங்க வலைப்பூவில் முதல் பதிவிற்கு அப்புறம் எதுவும் இல்லையே நண்பரே ? Busy ?
டியர் எடிட்டர்ஜீ !!!
ReplyDeleteபுதிதாக வெளிவரும் "தி இந்து"நாளிதழில் நமது காமிக்ஸ் விளம்பரங்களை வெளியிடலாமே..?அரசியல் வார இதழ்களில் நமது விளம்பரங்கள் வருவதைவிட செய்தி தாள்களில் வெளியிடுவது கொஞ்சம் காஸ்ட்லியாக இருந்தாலும் "பலன்"சற்று பெரிதாக இருக்கும் என கருதுகிறேன்.
(அடியேன் தினகரனுக்கு பதிலாக இந்துவுக்கு மாறிவிட்டேன்.ஹிஹி!!!)
இன்றைய “ தி இந்து” தமிழ் நாளிதழில் நமது wild west special பற்றிய புத்தக மதிப்புரை வெளிவந்திருக்கிறது.
DeleteThis comment has been removed by the author.
Deleteஆதி தாமிரா , கார்த்திக் சோமலிங்கா போன்றவர்களுக்கு KBT , KBGD, போட்டிகள். என்னை போன்ற “ அல்லக்கை” களுக்கு தினமலர் சிறுவர்மலரில் வருவது போன்ற போட்டிகளல்லாம் வைக்கமாட்டீர்களா விஜயன் சார்?.
ReplyDeletesundaramoorthy j : அது ஏன் "அல்லக்கை" பட்டியலுக்குள் உங்களை கொண்டு செல்வானேன் ? தைரியமாய் முயற்சிக்கலாமே ? தவிர வாரமலர் போட்டிகளை குறைத்து எடை போடவும் வேண்டாமே - குட்டீஸ்களுகாக சின்னதாய் சவால்களை அமைப்பதும் சுவாரஸ்யம் தானே ?
Deleteவிஜயன் சார்,
ReplyDeleteபின்னூட்டங்களின் எண்ணிக்கை குறைவதற்கான காரணங்களை நண்பர்கள் பட்டியலிட்டு விட்டார்கள். நானும் கடந்த சில மாத காலமாக குறைவான பின்னூட்டம் தான் இட்டு உள்ளேன். காரணம்
1. நான் சொல்ல வந்த கருத்தை நண்பர்கள் சொல்லி விடுவது
2. பணிசுமை காரணமாக நேரம் குறைவாக கிடைக்கும் பொழுது, பதிவு மற்றும் நண்பர்களின் பின்னூட்டங்களை படிக்கவே நேரம் போதவில்லை ... (கடந்த 2 மாதமாக)
ஆகவே இங்கே யாருக்கும் உங்களது எழுத்து போரடிக்கவில்லை என்பதே உண்மை.
Dear Editor Sir, I'm a fan of Muthu/Lion comics for around 20+ years and residing at Chennai. Since I don't have proper permanent address. I used to order books via EBay. I used to purchase all the issues. Recently I noted that, even if two issues released in a month, you are posting them as individual listing, for which I need to pay courier charges twice (although its sent in single parcel). Why don't you provide an option for clubbing monthly issues together (Tex's two issues and Diabolique's issue was posted like that). Please provide with such options.
ReplyDeleteDomo : There are quite a few readers who opt to buy just the cartoon editions ; so clubbing them with Ratha Padalam is not going to suit them. Why not subscribe - you can still amend your address whenever needed ?!
Deleteசார் உங்கள் எழுத்துக்கள், நண்பர்களுடைய கருத்துக்கள்,அதகலபடுத்தும் அரட்டைகள் என இதனை விட பெரும் பேரு ஏதுமில்லை! பணி தொய்வால் உற்ச்சாகமாய் பங்கேற்க இயலவில்லை ,என்னை போன்றே சிலரும் இருக்கலாம்! எனக்கு புத்தகங்கள் வந்து சேரவில்லை , ஆனாலும் தளராமல் சுஸ்கி விஸ்கி இடமிருந்து லவட்டி கொண்டு வந்து விட்டேன்! ப்ளூ கோட் பட்டாளத்தை நான்கு பக்கங்கள் புரட்டிய பின்னர், ரத்தபடலம் படிக்க அமர்ந்தேன் ,சும்மா நான்கு பக்கங்களை புரட்டலாம் என்று, வைக்கவே இயலவில்லை! ஓவியதரம் பல இடங்களில் புகை படமோ என ஐயுருமளவிற்க்கு உள்ளது , ஓவியருக்கு மெகா சல்யூட். அட்டைபடங்களுக்கு ஒரு திருஷ்டி சுற்றி போடுங்கள் ,நீங்கள் கூறியது போல அந்த கண்கள் அட்டை படத்தில் சுண்டி இழுக்கும் வசீகரம் சேர்த்து விட்டன! வில்லியம் வான்சை விட அசத்துகிறார் ; அதனை வண்ணத்தின் காரணத்ததாலா என சொல்ல தெரியவில்லை ! நிச்சயம் அந்த கதைக்கு இது சளைத்ததல்ல ! முன் கதையோடு பின்னி சென்றாலும் செல்லும் திசை அருமை ! கதாசிரியரும் வான் ஹம்மே உடன் போட்டி போடுகிறார் ! மொழி பெயர்ப்பு சொல்லவே வேண்டாம்....... இதுவும் பதினெட்டு பாகங்கள் வந்தால் அடடா என எண்ணத்தோன்றுகிறது ! ஆனால் வருடம் ஒன்றுதான் எனும் போது போங்க சார்! , கதை முழுதும் நமது நண்பர் மற்றும் ஜோன்ஸ் அடுத்து என்ன நேருமோ என அவரவர் திசையில் நம்மை எங்கும் திரும்பாமல் மனதை கட்டி இழுத்து செல்கிறார்கள் குதிரையின் கண்களுக்கு திரை போட்டது போல ! இங்கும் விதியின் விளையாட்டு , கதாசிரியரின் மந்திர விரல்களால் நாயகனின் தலை எழுத்துக்களாய் விறுவிறுப்பாய் விரைவாய் ! இந்த கதை தொடரும் செம போடு போட போவது உறுதி !
ReplyDeleteப்ளூ கோட் இவ்வளவு நாள் ஏன் விட்டு வைத்தீர்கள் என கோபம் வருகிறது ! நமது ஸ்டார் வரிசை பெருகி வருவது சந்தோசமளிக்கிறது! உங்களது நகைசுவை மொழி பெயர்ப்பிற்கு தீனி கிட்டியிருக்கிறது என்றே நினைக்கிறேன், நிறைந்தது எனது வயிரல்லவா ! ஒவ்வொரு கட்டங்களும் வயிறை பதம் பார்க்கின்றன! நாலடி குதிரை மேல் சவாரி பண்றதுக்கும், நூறடி உசரத்திலே பலூனில் சவாரி பண்றதுக்கும் பெரிய வித்தியாசமில்லை எனும் வரிகளை படித்து விழுந்து விழுந்து சிரித்தேநென்றால் , நேற்று நண்பர் சுச்கியிடம் வாங்கியபோது இன்று படித்தால் என்ன நாளை படித்தால் என்ன , எல்லாம் ஒன்றுதான் எனக்கு கொடுடா என வாங்கியதை நினைத்தும் கூடத்தானோ !
ஆக மொத்தம் என் மன தொய்வை நீக்கிய இரண்டு முத்துக்கள், ஒன்று சிங்கமெனினும் நமது மணி மகுடத்திலே!
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : Welcome back :-)
Deletethank u sir
Deleteநல்வரவு இரும்புக் கையாரே! :)
Deleteவாழ்க்கை தன் சோக முகத்தைக் காட்டும்போது அதைக் கொஞ்சமாய் அனுபவிச்சுட்டு 'ஒரு கழுதையின் கதை'யை ஒருமுறை படிங்க! குறிப்பா ஷெரிப் டாக்புல்லின் முகபாவங்களைக் கவனிங்க; உங்க சோகமெல்லாம் காத தூரம் விலகி ஓடிடும்! :)
ஆனா தப்பித்தவறி 'அரக்கன் ஆர்டினி'யை படிச்சுத் தொலைச்சுடாதீங்க; அப்புறம் வாழ்க்கை மறுபடி சோகமாயிடும்! :D
அப்புறம் ஆசிரியை அந்த மெகா ச்பிடர் கதை கேட்பேன் , முடியாது என்பார் //அப்புறம் வாழ்க்கை மறுபடி சோகமாயிடும்! :D//
Deleteசாரி ஸ்பைடர் என படிங்க
DeleteXIII ஐய் வரவேற்காத உள்ளமும் உண்டோ !!!
ReplyDeleteநண்பர்களே இன்றைய தி ஹிந்து நாளிதழில் நமது காமிக்ஸ் பற்றிய செய்தி குறிப்பு வந்துள்ளது october 6th Sunday
ReplyDeleteடியர் எடிட்டர்
ReplyDeleteஎனக்கு இன்னும் புக் கிடைக்கவில்லை அதனால் தான் இந்த தாமதமான பதிவு.
ஒருவர் தன் கட்சியை வளர்ப்பதற்காக தள்ளாத வயதிலும் தனது தம்பிகளுக்கு தினமும் கடிதம் எழுதுகிறார்.
வெறும் 20 வயது இளைஞரான தாங்கள் நம் காமிக்ஸ் வளர்ச்சிக்கு உங்கள் தம்பிகளுக்கு வாரம் ஒரு பதிவிடவே மிகவும் யோசிக்கிறீர்கள் என்ன நியாயம் இது. எனவே எங்களுக்கும் தினமும் ஒரு பதிவு வேண்டும்.
(பி கு ) கருத்து கருத்தை மட்டும் எடுத்து கொள்ளவும்.
எடிட்டர் விஜயனுக்கு 20 வயது ஆகிறதா.....? ஆஹா....அவர் என்னைவிட 4 வயது மூத்தவரா...:-)
Deleteசாத்தான் ஜி,
Delete//எடிட்டர் விஜயனுக்கு 20 வயது ஆகிறதா.....? ஆஹா....அவர் என்னைவிட 4 வயது மூத்தவரா...:-)//
அப்போ உங்களுக்கு பதினாறு வயது ஆகிறதா? ஆஹா .......நீங்கள் என்னைவிட 2 வயது மூத்தவரா?
எனக்கு 14 வயதுதான் :)
அப்போ என்னோட வயசு (20/48)*34 = 14.1
Deleteங்கா... ங்கா... ங்...
Deleteவிஜய் அங்கிள்,
Delete//ங்கா... ங்கா... ங்...//
உங்க கொழந்தை அழறது பாருங்கோ...........
டியர் ஈரோடு விஜய் !!!
Deleteஎன்ன தாத்தா நீங்கள்...? பேரப்பிள்ளை அழுவதுகூட தெரியாமல்.போங்கள். போயி பேரப்பிள்ளையை தூக்கி கொஞ்சுங்கள் தாத்தா அவர்களே :-)
எது அசைந்தாலும் சுட உத்தரவு இடுகிறேன்.... அடேய் ய் ய் முகாமுக்கு வெளியே டா............ முடியலப்பா சாமி....
ReplyDelete