Powered By Blogger

Tuesday, October 22, 2013

எங்கள் வீதியில் ஒரு வானவில் !

நண்பர்களே,

வணக்கம். ஒவ்வொரு மாதமும்,இதழ்களை உங்களுக்கு despatch செய்திடும் நாள் வரையில் அட்டைப்படங்களை இங்கே உங்கள் கண்ணில் காட்டாது வைத்திருப்பதன் மூலம் ஒரு குட்டியான எதிர்பார்ப்பு + சுவாரஸ்யத்தை பில்டப் செய்திட முடியும் என்பது எனது எண்ணமாக இருந்து வந்துள்ளது ! ஆனால் இந்த ஒரு முறை அந்தக் கட்டுப்பாட்டிற்கு விலக்குத் தரலாமெனத் தோன்றியது ! இந்த "தயாள" சிந்தைக்குப் பின்னணிக் காரணங்கள் 4 ...!

ஒன்றுக்கு மூன்றாய் இம்மாதம் நம் இதழ்கள் வரவிருப்பதும் ; அவற்றில் ஒரு இதழுக்கு cover வடிவமைக்கும் பணியானது வாசகர்களின் கைகளில் என்பதும் நாம் அறிந்ததே ! So நண்பர்களின் அட்டைப்பட டிசைன் முயற்சிகள் ஒரு பக்கம் ; பாக்கி 2 இதழ்களுக்குமான நமது டிசைனிங் வேலைகள் மறுபக்கமென - கடந்த நாலைந்து நாட்களாய் நிறையவே ஜானிகளையும், இரவுக் கழுகாரையும் ; வியட்நாமின் மஞ்சள் முகத்தவர்களையும் பார்த்திட முடிந்ததால் - கொஞ்சமேனும் உங்களோடு அனுபவங்களைப்  பகிர்ந்தால் தேவலை என்று தோன்றியது ! So இது காரணம் # 1 !

இதழ்கள் வெளியாகும் சமயம் வரை KBGD (KAUN BANEGA GRAPHIC DESIGNER ) போட்டியின் வெற்றியாளரை அறிமுகப்படுத்தாது இருக்கும் பட்சத்தில் - 3 இதழ்களின் வருகை + விமர்சனங்கள் + தீபாவளிப் பண்டிகையின் களேபரங்களில் அந்தத் திறமையாளரின் மீதான ஒளி வட்டம் முறையாய் பாய்ந்திட வாய்ப்புக் குறைந்திடக் கூடும் என்று மனதுக்குத் தோன்றியது ! 'ஆகையால் இப்போதே வெற்றியாளரையும், அவரது ஆக்கத்தையும் அறிமுகப்படுத்துவோமே !' என மண்டைக்குள் தோன்ற - அது காரணம் # 2 ஆனது !

இம்மாத டெக்ஸ் ஸ்பெஷல் பொருட்டு நண்பர்களிடையே நிறையவே எதிர்பார்ப்புகள் நிலவுவது புரிந்திட முடிகிறது ! இந்த இதழுக்கு முன் + பின் அட்டைகளை வடிவமைக்கும் பணியை நமது ஓவியர் மாலையப்பனிடம் ஒப்படைத்து இருந்தோம். துவக்கம் முதலே சின்னச் சின்னதாய் 2 டிசைன்களிலும் மாற்றங்கள் அவசியப்பட்டுக் கொண்டே இருந்தது ஒரு பக்கமெனில், அவரது பணி நிறைவுற்று - நமது டிசைனர் பொன்னனிடம் மெருகூட்டும் வேலைக்காக 2 படங்களும் சென்ற பொது, அங்கும் மந்த நிலையே ! முதல் சில முயற்சிகளில் எனக்குக் கொஞ்சமும் திருப்தி ஏற்படவில்லை ! இறுதியாக நானே சில-பல மாதிரிகளைக் குடைந்து எடுத்துக் கொடுத்து - அந்த வண்ண சேர்க்கையை முன்னட்டைக்குப் பயன்படுத்திப் பார்த்தோம் ; 'பளிச்' என பலன் தெரிய - நமது டெக்ஸ் தீபாவளி ஸ்பெஷலின் அட்டைப்பட flashback இது !  So அதைச் சொல்லி கொஞ்சமாய் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாமே என்ற ஒரு நப்பாசை காரணம் # 3 ! 

4-வதும் , பிரதான காரணமும் - இம்மாத இதழ்களோடு வரக் காத்திருக்கும்  2014-க்கான அட்டவணையே ! தொடரும் 12 மாதங்களது schedule ; நாயகர்கள் பட்டியல் ; என 2014-க்கான நமது பயணத் திட்டம் அதனில் இருக்கும் ! அந்த அறிவிப்புகள்  கொண்டு வரவிருக்கும் விவாதங்கள், அபிப்ராயங்கள், கலந்துரையாடல்கள் et al நிச்சயம் வண்ணமயமாய் இருந்திடும் என மனதுக்குத் தோன்றுவதால் - அந்த வேளையில் இந்த அட்டைப்படங்கள் ஓரம் தள்ளப்பட வாய்ப்புண்டு என்று நினைக்கத் தோன்றியது ! So இப்போதே அட்டையினை (at least 2 cover களை மட்டுமாவது)  unveil செய்வதில் தவறில்லை எனத் தீர்மானித்தேன் ! 

முதலில் KBGD போட்டியில் பங்கேற்ற நண்பர்களுக்கு ஒரு மிகப் பெரிய நன்றி சொல்லியாக வேண்டியது எனது கடமை ! நிறையப் பேர் இதனில் பங்கு கொள்வது சாத்தியமாகாது என்றாலும், கலந்து கொண்டோர் மிகுந்த ஆர்வத்தோடு தங்கள் திறமைகளைக் காட்டியது ரொம்பவும் நிறைவாக இருந்தது ! இதோ பாருங்களின் நண்பர் கர்ணனின் படைப்புகள் :



இது தவிரவும் இன்னும் 2 டிசைன்களை ஏக துரிதமாய் அனுப்பி இருந்தார் நண்பர் !! இதற்கென அவர் எத்தனை நேரத்தையும், உழைப்பையும் செலவு செய்தாரோ - தெரியவில்லை !! Thank you ever so much sir !!!

தொடர்வது நண்பர் Podiyan அவர்களது அற்புதமான  கைவண்ணம் ! Great job !!


தொடர்வது நண்பர் ஆதி தாமிராவின் கைவண்ணம் ! ரொம்பவே வித்தியாசமான முயற்சிகள் !! Really really cool stuff...!




And இது நண்பர் கொமாரபாளையம் அருணாச்சலத்தின் ஆக்கம் ! Beautiful work - குறிப்பாகப் பின்னட்டை !! Great work !!


இறுதியாக - நண்பர் ரமேஷ் குமாரின் கைவண்ணம்


முன் + பின் அட்டைகள் ஒரு சேரப் பார்க்கும் போது நண்பர் ரமேஷ் குமாரின் கைவண்ணம் - மற்றவர்களின் படைப்புகளை விடக் குட்டியானதொரு வித்தியாசத்தில் முன்னே நிற்பதை எனக்கும், எங்களது டீமுக்கும் தோன்றியதால் - KBGD -ன் வெற்றியாளராக ரமேஷ் குமார் தேர்வு செய்யப்படுகிறார் ! வாழ்த்துக்கள் நண்பரே - உங்களுக்கொரு சிவகாசிப் பட்டாசு பார்சல் பரிசாகக் காத்துள்ளது ! அட்டகாசமான முயற்சிகள் எடுத்துக் கொண்ட இதர நண்பர்கள் அனைவருக்கும் நம் நன்றிகளோடு - அன்பின் அடையாளங்களாய் ஒரு சின்ன wrist watch பரிசாக அனுப்பிடப்படும் ! Thanks a ton all !! 

இறுதியாய் - நமது இரவுக் கழுகாரின் அட்டைப்பட டிசைன் இதோ ! 

Back cover's original !
முன்னட்டையில் நிற்கும் டெக்ஸ் + பின்னட்டை - இரண்டுமே மாலையப்பனின் கைவண்ணங்கள் ! முனட்டையினில் வண்ணச் சேர்கை + மெருகூட்டல் - பொன்னனின் பங்களிப்பு ! பினட்டையை இன்னும் கொஞ்சம் fancy ஆக்குவதை விட - ஒரிஜினலை ஒத்த அதே look தேவலாம் எனத் தோன்றியது எனக்கு ! ஆகையால் பின்னட்டையில் மாலையப்பன் all the way ! விடை பெறும் முன்னே - ஒரே ஒரு குறிப்பு மட்டும் ! 

இரவுக் கழுகாரின் இதழின் முதுகு கனத்தைக் கவனித்தீர்களா guys ? :-) Take care all !! See you soon ! 

331 comments:

  1. வந்தோம்ல ஃபர்ஸ்ட்டு! :)

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : இரவுக் கழுகாரின் காதலர் இரவுப் பூனையாரா ?!

      Delete
  2. வாழ்த்துக்கள் ரமேஷ்.


    போட்டியில் கலந்து கொண்ட நண்பர்கள் அனைவருமே வெற்றி பெற்றவர்களே.

    அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. King Viswa : நிஜமே ! அத்தனை முயற்சிகளும் அட்டகாசம் !

      Delete
    2. Yes Viswa,

      All the wrapper designs (designed by Karnan, Podiyan, Adi Thamira, Arunachalam) are good and worth to be printed....

      Hats off to the KBDG winner Ramesh, you are great visualizer..

      Hats off to our great and elder artist Shri. Malaiyappan...
      Diwali special cover beats all best work of his tex willer covers I beleive.

      Vijayan Sir,
      Hats off to you too for creating this much enthusiasm in us

      Delete
    3. வெற்றிபெற்ற நண்பர்களே உங்கள் அனைவர்க்கும் வாழ்த்துகள்.. நான் சொல்லிக்குடுத்த மாதிரி டிசைன்பண்ணி கலக்கிடிங்க!! ( என செய்ய எதோ நம்பளால முடிஞ்சது.. ஒரு விளம்பரம் மட்டும் தான்)

      Delete
  3. எடிட்டர் சார்,


    //இரவுக் கழுகாரின் இதழின் முதுகு கனத்தைக் கவனித்தீர்களா guys?//

    இதை.....



    இதை.......



    இதைத்தான் நாங்க ரொம்ப காலமாக எதிர்பார்த்தோம்.

    ReplyDelete
    Replies
    1. King Viswa : ஒரு முதுகின் கனமேற...இங்கு பல முதுகுகள் 'மூவ்' நாடி நிற்கின்றன !

      அடடே ..கவிதை !

      Delete
    2. எடிட்டர் சார்,

      ஏற்கனவே கமெண்ட்டுகள் வாயிலாக நீங்கள் சொன்ன இந்த மாதிரி கவிதைகளை தொகுத்து வருகிறேன்.

      இந்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியில் உங்களின் கவிதை தொகுப்பை நானே வெளியிட்டு கல்லா கட்டிவிட வேண்டியது தான்.

      Delete
    3. @ King Viswa
      // உங்களின் கவிதைத் தொகுப்பை நானே வெளியிட்டு//

      நீங்களே வெளியிட்டு, நீங்களே வாங்கிக்குவீங்களாக்கும்? :D

      Delete
    4. ப்ளீஸ் Note த நெக்ஸ்ட் Point ஈரோடு விஜய்.


      //கல்லா கட்டிவிட வேண்டியதுதான்//

      அப்படியிருக்க நானே ஏன் வாங்க வேண்டும்? சரியான முறையில் விற்றால் ......... நிஜம்மாகவே கல்லா கட்டிவிடுவேன்.

      Delete
    5. // கல்லா கட்டிவிட வேண்டியதுதான்//

      அர்த்தம் நெ.1 : பக்கத்து ஸ்டாலின் கல்லாவைக் கட்டிவிட வேண்டியதுதான்.

      அர்த்தம் நெ.2 : கல்லா(க) கட்டித் தொங்கவிட வேண்டியதுதான்! :)

      Delete
    6. ஈரோடு விஜய்,


      உங்க வீட்ல ரசம் வைக்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      நான் நிஜம்மாவே எடிட்டரின் கவிதை தொகுப்பை வெளியிட்டு நம்ம ஸ்டால் கல்லாவை கட்டிவிடுவேன். அதாவது செம கலெக்ஷன் பார்த்துவிடுவேன்.


      நம்ம ஸ்டாலில், நம்ம புக்கு வித்து, நான் காசு பார்ப்பேன்.


      யெப்பா, பத்து இருவது கமெண்ட் எல்லாம் போட்டுட்டு நெறைய பேர் நிம்மதியாக இருக்காங்க.


      ஒரே ஒரு கமென்ட்டை போட்டுட்டு நான் படுற பாடு இருக்கே??????????????

      Delete
    7. மக்களே, எல்லாரும் மேலே இருக்கும் வரிய நல்லாப் படிங்க; ஈரோடு விஜயும் பெரிய ரவுடிதான்! பெரிய ரவுடிதான்! :D

      Delete
    8. நன்றி, பெரிய ரவுடி ஈரோடு விஜய் அவர்களே!


      (இனிமே இந்த அடைமொழி இல்லாம நான் உங்களை அழைக்கவே மாட்டேன். எப்படி "தீவிர காமிக்ஸ் அபிமானியும், காமிக்ஸ் களப்பணி போராளியுமான" என்பது சேலம் பரணி சாரின் அடைமொழியாக மாறியதோ, இதுவும் உங்களுக்கு !!!!!!!!!!!!!!!!!!!!!!!).


      இப்போதைக்கு நல்ல வணக்கம் & இனிப்பு கனவுகள் (அதாங்க Good Night & Sweet Dreams).

      Delete
    9. //ஒரு முதுகின் கனமேற...இங்கு பல முதுகுகள் 'மூவ்' நாடி நிற்கின்றன !//
      After long time we are seeing this spine in our comics... Really Superb sir!

      Please don't feel for this sir!

      Delete
    10. udhay : the fruits of labour are always worth the pain... :-)

      Delete
    11. Though all couldn't understand the practical problem of comics book making,
      there are always some people will salute for your sweet impulsions, Vijayan Sir!

      Delete
  4. இந்த வருடத்தின் மிகச்சிறந்த அட்டைப்படமாக ..........................................................................................................



    டெக்ஸ் வில்லரின் தீபாவளி மலர் அட்டைப்படம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும்

    ReplyDelete
  5. எடிட்டர் சார்,


    இந்த டெக்ஸ் வில்லர் அட்டைப்படம் எதனை இன்ஸ்பிரேஷன் ஆக கொண்டு வரையப்பட்டது?


    எனக்கு எங்கேயோ பார்த்த ஒரு ஜான் வெய்ன் போஸ்டரும், ஃப்ளீட்வே இதழில் வெளிவந்த கிட் கார்சன் அட்டையும் நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. முன் அட்டைப்படம்?

      Delete
    2. King Viswa : எல்லாப் புகழும் பொனெல்லிக்கெ ....!

      Delete
  6. வெற்றிபெற்ற நண்பர் ரமேஸ் குமாருக்கு வாழ்த்துக்கள்!!! உண்மையாகவே அசத்தியிருக்கிறீர்கள் ரமேஸ்! குறிப்பாகப் பின்னட்டையில் நீங்கள் காட்டிய தெளிவு (ஷார்ப்பான ஓவியங்கள்) ரொம்பவே அசத்தல்!!

    பங்குகொண்ட மற்ற நண்பர்களும் மிகக்குறைந்த மார்ஜினில்தான் 'ரிஸ்ட் வாட்சு'க்கு தகுதியாயிருப்பார்கள் என்று நினைக்கிறேன். எல்லோருமே அசத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் நண்பர்களே!!! :)
    (அதுல ஒரு விசயம் பாருங்க, பட்டாசு பரிசா வாங்கப்போறவர் அமதயெல்லாம் வெடிச்சுப் புகையாக்கிடுவார். ஆனா கைல கட்டுற வாச்சு காலத்துக்கும் ஓடும் பாருங்க! அந்த ரமேசுக்கு அவ்வளவா விவரம் போதாதுங்க! )
    :)

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : வில்லங்கமான பூனை தானய்யா நீர் !

      Delete
    2. //அந்த ரமேசுக்கு அவ்வளவா விவரம் போதாதுங்க! )
      :)//

      பத்த வச்சுட்டுட்டியே பூனை....!

      Delete
    3. //அந்த ரமேசுக்கு அவ்வளவா விவரம் போதாதுங்க! //

      பத்த வச்சுட்டுட்டியே பூனை....!

      Delete
    4. Cellphone வந்ததிலிருந்து கைக்கடிகாரத்தைக் கைவிட்டவர்களுள் நானும் ஒருவன். பட்டாசு வெடிப்பதையும் கூட பலவருடங்களாக நிறுத்திவிட்டேன். அதனால் கடிகாரமாக இருந்தாலும் பட்டாசாக இருந்தாலும் அது இருக்கப்போகும் இடம்: பீரோ! :D

      Delete
  7. டெக்ஸின் அட்டைப் படம் அசத்தல் அசத்தல் அசத்தல்!!! ஐயோ எனக்கு இன்னிக்கே தீபாவளி வந்துட்டமாதிரி இருக்கே!!! :)

    ReplyDelete
  8. போதாது... போதாது... போதாது எடிட்டர் சார்! அட்டைப்படத்தின் முதுகு ரொம்பச் சின்னதால்ல இருக்கு! அந்த முன் அட்டையின் மொத்த சைசுக்கும் முதுகு பரந்து விரிஞ்சிருந்தா நல்லா இருந்திருக்குமே.... ;)

    ReplyDelete
    Replies
    1. //அந்த முன் அட்டையின் மொத்த சைசுக்கும் முதுகு பரந்து விரிஞ்சிருந்தா நல்லா இருந்திருக்குமே.... ;)//

      உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியலையா, நண்பா! :)

      Delete
    2. அவ்வளவு பெரிய முதுகு என்றால் அதற்குப்பெயர் Book இல்லை, Box!

      Comics Box! :D

      Delete
    3. @ Udhay

      பார்த்தீங்களா, ரமேஸ்குமார் சொன்னதை? ஓவரா இருந்தா அதுக்குப் பெயர் 'COMICS BOX' :)

      அப்புறமென்ன?; எங்களுக்கு 'காமிக்ஸ் பாக்ஸ்' வேணும்னு கேட்டு எடிட்டர்கிட்ட ஒரு போராட்டம் அறிவிச்சுட வேண்டியதுதான்! :)

      Delete
  9. Great releases for diwali! Thank you Thank you Thank you!

    ReplyDelete
  10. Congratulations for KBGD winner and runners!

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் ரமேஷ்.


    போட்டியில் கலந்து கொண்ட நண்பர்கள் அனைவருமே வெற்றி பெற்றவர்களே.

    அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. வாழ்த்துககள் ரமேஷ்குமார், கலக்கிட்டீங்க.

    கொமாரபாளையம் அருணாச்சலத்தின் ஆக்கம் பிரம்மிக்கிறது அதுவும் பின்னட்டை "World Class"

    podiyan ஆக்கம் நமது lion-muthu அட்டை வடிவத்தை ஒத்து உள்ளது, மிக அருமை.

    ஆதி தாமிரா மற்றும் கர்ணனின் படைப்புகள் 'simple and beautiful'

    @karthik Somalinga - எங்கே உங்கள் படைப்பு ?

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே, சிறந்ததில் சிறந்தது வெற்றிபெற்றுள்ளது . நம்பர் ரமேஷ்குமாருக்கு வாழ்த்துக்கள்

      Delete
  13. கர்ணன்ஜி,

    சத்தமில்லாம பல போட்டிகள்ல பங்கெடுத்திட்டிருப்பீங்க போலிருக்கே? ;)

    ReplyDelete
    Replies
    1. அவரோட பேருக்கு ஏத்த மாதிரி, எடிட்டர் அட்டைப்பட டிசைன் கேட்டவுடனே, வாரிக்கொடுத்துவிட்டார் கர்ணன்.

      காமிக்ஸ் உலக கர்ணன், அண்ணன் கர்ணன் வாழ்க.

      Delete
  14. @Editor
    Tex Willer முன் அட்டையில் "தீபாவளி ஸ்பெஷல்" இந்த ஒரு வாசகத்திற்காகவே 100 Rs கொடுக்கலாம் :)
    பின்னட்டை original விட நமது படைப்பு மிக அருமையாக உள்ளது.
    Coloring and attention to the detail (shawl end threads) were amazing.

    ReplyDelete
    Replies
    1. V Karthikeyan : சிறு விஷயங்களையும் கவனிக்கும் நண்பர்கள் இருக்கும் போது அவற்றின் மீதும் நாங்கள் கவனம் செலுத்த வேண்டுமல்லவா ? நம் ஓவியருக்கு இந்தப் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன் - நிச்சயம் மனம் மகிழ்வார் !

      Delete
  15. KBGD-யில் வெற்றி பெற்ற நண்பர் ரமேஷ் குமாருக்கு வாழ்த்துக்கள். பங்கு பெற்ற மற்ற நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்.

    பொன்னில் பொறிக்கப்பட்ட 'தீபாவளி'யுடன் டெக்ஸ் வில்லரின் முன்னட்டை அட்டகாசம். மிக அற்புதமாக வந்துள்ளது. நூறுசதவீத தீபாவளி போனஸ் பெற்றது போல் உள்ளது. இந்த முன்னட்டை மட்டும் ஒரு போஸ்டராக கிடைக்குமா ?. இல்லாவிடில் கூடுதலாய் ஒரு இதழ்வாங்கி இந்த முன்னட்டையை ஒரு frame செய்து கொள்ள தோன்றுகிறது.

    பின்னட்டை nostalgic. பார்த்த உடனேயே டிராகன் நகரம், இரத்த முத்திரையின் அட்டைப்படங்கள் நினைவில் வந்து போனது.

    மொத்தத்தில் அட்டை படங்கள் தீபாவளிக்கான சிவகாசி சரவெடியின் நுனியில் பற்றிய தீப்பொறி.

    ReplyDelete
    Replies
    1. சொல்ல நினைத்தேன், ஒரு நிமிடத்தில் முந்திக்கொண்டுவிட்டீர்கள் ராஜவேல்.. டெக்ஸின் முன்னட்டை நிச்சயமாக பெரிய சைஸ் போஸ்டராக வேண்டும்!!

      போராட்டக்குழு ஆயத்தமாகுமாறு கேட்டுக்கொள்கிறேன். சங்கநாதம் முழங்கட்டும்!!

      Delete
    2. @ friends : போராட்டக் குழுவிற்கும், நண்டு பொரியலுக்கும் லேசாய் ஒரு சம்பந்தம் இருப்பதாய் ஊர்ஜிதப்படுத்தப்படா தகவல்கள் வெளியான நாள் முதலாய் போராட்டங்களின் வீரியம் ஒரு மாற்று குறைந்து விட்டதை நீங்கள் அறிந்திருக்கவில்லையா ? :-)

      Delete
    3. @ ஆதி

      த்சோ! நான்தான் அப்போவே சொன்னேன்ல? கடைவாயில தெரியும் நண்டு காலை உள்ளே தள்ளுங்கன்னு! ;)

      Delete
    4. // கடைவாயில தெரியும் நண்டு காலை உள்ளே தள்ளுங்கன்னு! ; //

      LOL - Super Timing

      Delete
  16. @எடிட்டர்,

    //இரவுக் கழுகாரின் இதழின் முதுகு கனத்தைக் கவனித்தீர்களா guys?//

    அதை சற்று நேரம் ரசித்துவிட்டு, எத்தனை குண்டாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டே கீழே வருகிறேன். உங்கள் வார்த்தைகள்! நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. கோ-இன்ஸிடெண்ட்!!

    @விஸ்வா,

    இரண்டாவது கோ-இன்ஸிடெண்ட்!

    டெக்ஸ் வில்லரின் முன்னட்டை இந்த வருடத்தின் பெஸ்ட் முன்னட்டையா என்பதையெல்லாம் விட, இதுவரை வந்த டெக்ஸ்கதைகளின் மிக சிறந்த அட்டையாக இருக்கும் என நான் கருதுகிறேன். மிஸ்டரியான டார்க் பேக்ரவுண்ட், துல்லியமான டெக்ஸ், கச்சிதமான முக அமைப்பு, இம்மி பிசகாத அனாடமி, டெக்ஸுக்கும், எழுத்துகளுக்கும் சரியான வண்ணத்தேர்வு என இது மாலையப்பன்+பொன்னன் கூட்டணியின் மாஸ்டர் பீஸ்!!

    ReplyDelete
    Replies
    1. அதுவும் பூத வேட்டை அட்டையில் டெக்ஸின் சொதப்பலுக்கு, காத்திருந்து “பாருங்கடா இதை”னு ரெண்டு பேரும் சொல்லிவைச்சு அடிச்சதைப்போல இருந்தது..

      கிரேட் ஒர்க் கைஸ்!

      Delete
    2. // டெக்ஸ் வில்லரின் முன்னட்டை இந்த வருடத்தின் பெஸ்ட் முன்னட்டையா என்பதையெல்லாம் விட, இதுவரை வந்த டெக்ஸ்கதைகளின் மிக சிறந்த அட்டையாக இருக்கும் என நான் கருதுகிறேன்.... இது மாலையப்பன்+பொன்னன் கூட்டணியின் மாஸ்டர் பீஸ்!! //

      மிகச்சரியாக கூறியுள்ளீர்கள். இப்பொழுதே கணிணி மற்றும் மொபைல்-ன் வால்பேப்பர்-ஆக மாற்றிவிட்டேன்.

      Delete
    3. @ friends : இதில் விசேஷம் என்ன தெரியுமா ? ஒவ்வொரு டெக்ஸ் அட்டையினையும் போனெல்லி நிறுவனம் approve செய்தான பின்னே நாம் அச்சிட வேண்டும் ! இந்த டிசைனைப் பார்த்த மூன்றாவது நிமிடத்தில் அவர்களது OK கிட்டியது !

      Delete
    4. // இதில் விசேஷம் என்ன தெரியுமா ? ஒவ்வொரு டெக்ஸ் அட்டையினையும் போனெல்லி நிறுவனம் approve செய்தான பின்னே நாம் அச்சிட வேண்டும் ! இந்த டிசைனைப் பார்த்த மூன்றாவது நிமிடத்தில் அவர்களது OK கிட்டியது !//
      இது தான் ரியல் அவார்ட் சார்!

      Delete
    5. // மூன்றாவது நிமிடத்தில் அவர்களது ok கிட்டியது!//

      த்சொ! இந்த அட்டைப்படத்துக்கு முதல் நிமிடத்திலேயே ok கிட்டியிருக்கணுமே?! too late!! :)

      Delete
  17. போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள், அனைவரது படைப்புகளும் அருமையாக இருக்கின்றன!

    @ரமேஷ் குமார்:
    அட்டகாசமான வடிவமைப்பு! குறிப்பாக முன்னட்டையில், ஜானியின் முகத்தை ஷார்ப்பாக மாற்றியதில் உங்கள் உழைப்பு தெரிகிறது! வாழ்த்துக்கள் ரமேஷ்!

    @விஜயன் சார்:
    இம்முறை திரு.மாலையப்பன் அவர்கள், உயிரோட்டம் மிக்க ஓவியங்களை தீட்டியுள்ளார்! முன்னட்டையில் டெக்ஸ், தத்ரூபமாக டெக்ஸ் போலவே உள்ளார்! பொதுவாக ஒரு அட்டையின் மாதிரியை வைத்து, அதே போல வரைய முயலும் போது, நாயகரின் முக அமைப்புகள் லேசாக மாறினாலும், ஆளே மாறிவிடும் அபாயம் உள்ளது. (உதாரணம்: பின்னட்டை டெக்ஸ், ரொம்பவே இளமையாகத் தெரிவது!). இருந்தாலும் பின்னட்டையும் சூப்பர் ரகம் தான்!!! குறிப்பாக அந்த கனைக்கும் குதிரை, அதன் மேல் அமர்ந்திருக்கும் அந்த மெக்ஸிகன் ஆசாமி - அற்புதம். மாலையப்பன் அவர்கள் எத்தனை நாட்களை செலவிட்டாரோ?!!! அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    சிறு குறைகள் என்று பார்த்தால், "டெக்ஸ் வில்லரின் தீபாவளி ஸ்பெஷல்" என்ற வாக்கியம் கொஞ்சம் நெருடலாகத் தெரிகிறது! இதிலாவது ஸ்பெஷலை பார்சல் செய்து விட்டு, மலரை மலர விட்டிருக்கலாமே?! ;) அப்புறம், கம்பீரமான டெக்ஸ்க்கு அருகில் அந்த சிரிக்கும்... சரி விடுங்கள்.... :)

    @V Karthikeyan:
    //@karthik Somalinga - எங்கே உங்கள் படைப்பு ? //
    மின்னஞ்சலில் விருப்பத்தை தெரிவித்தவர்களுக்கு, அட்டை ஸ்கேன்களை மின்னஞ்சல் செய்யப் போவதாக எடிட்டர் சென்ற பதிவில் குறிப்பிட்டு இருந்தார்! கமெண்டு மூலமாக விருப்பம் தெரிவித்திருந்த எனக்கு, பின்னூட்டம் மூலம் attachments-ஐ அனுப்பி வைக்கும் வசதியை தற்சமயம் Google வழங்காததால், எடிட்டரால் அவற்றை எனக்கு அனுப்பி வைக்க இயலவில்லை போலும்! ;) அதிலும் நான் பழைய லயன் / முத்து காமிக்ஸ் மற்றும் புதிய சினிபுக்களை பரிசாக அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டதில் பயங்கர டென்ஷன் ஆன எடிட்டர், நைஸாக எஸ்கேப் ஆகி விட்டார் என நினைக்கிறேன்! ;)

    இருந்தாலும், இப்படி எல்லாம் டைமிங்காக பட்டாசு பார்சலை பரிசாக கொடுப்பார் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை! :D கூரியர் மூலம் "பட்டாசை" பாதுகாப்பாக எப்படி ரமேஷுக்கு அனுப்பி வைப்பார் என்ற சந்தேகத்தில், என் தலையே "வெடித்து" விடும் போலிருக்கிறது! :D

    ReplyDelete
    Replies
    1. கார்த்திக் உங்கள் பங்களிப்பு இல்லாததற்கு பின்னே இவ்வளவு காரணங்களா ! விடுங்கள் பார்த்து கொள்ளலாம்!
      மலரை மலர விடவில்லையே எனும் ஏக்கம் இருந்தாலும் , அந்த தங்க நிறத்திலே தக தகக்கும் எழுத்துக்கள் ஏனோ மலரை மறக்கடித்து விட்டது!

      Delete
    2. Karthik Somalinga : சாரி கார்த்திக்....நீங்கள் இங்கு நண்பர் ரமேஷ் குமாருக்கு அட்வான்சாக KBGD வெற்றிக்கு வாழ்த்துக்கள் சொன்னது மாத்திரமே நினைவு உள்ளது ; போட்டியினில் நீங்களும் பங்கேற்க விரும்பியிருந்ததை எப்படி கவனிக்கத் தவறினேனோ - தெரியவில்லை !

      போட்டிகளுக்கு ஒவ்வொரு முறையும் நண்பர்கள் விண்ணப்பித்து அனுப்பிடும் மின்னஞ்சல்களை ஒரு தனி folder -ல் சேமித்து வைத்தால் - பின்னாளில் files களை அனுப்புவது சுலபமாக உள்ளது ; நான் ஒவ்வொரு முறையும் மின்னஞ்சல் அனுப்பிடக் கோருவது இதன் பொருட்டே ! எனது நினைவாற்றலை மாத்திரமே நம்பிக் கொண்டிருந்தால் இது போன்ற சொதப்பல்கள் நேரத் தான் செய்யும் !

      Delete
    3. @விஜயன் சார்:
      அட நான் விளையாட்டாகத்தான் மேலே உள்ள கமெண்டைப் போட்டு உள்ளேன் சார், இதற்கெல்லாம் சாரி சொல்லி என்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்தாதீர்கள்! உண்மையில் நீங்கள் சென்ற பதிவில் மின்னஞ்சல் பற்றி குறிப்பிட்ட போதே நானும் விருப்பம் தெரிவித்து இருக்கலாம் தான்!!! வேண்டும் (வேண்டாம்) என்றே தான் கலந்து கொள்ளவில்லை! :D அப்படியே கலந்து கொண்டிருந்தாலும், ஒரிஜினலை அப்படியே விட்டு வைத்து, மொக்கையாக தலைப்பு எழுத்துக்களை மட்டுமே டிசைன் செய்து இருந்திருப்பேன்! நண்பர் ரமேஷ் குமார் அளவுக்கு ஓவியங்களில் பிசிறுகளைக் களைந்து, வண்ணங்களை திறமையாக கலந்து, ஷார்ப்னெஸ் கூட்டி மெருகேற்றும் வித்தை என்னிடம் சுத்தமாக கிடையாது! கிரேட் ஜாப்!!! ரமேஷ், லயன் லோகோ மற்றும் விளம்பர டிசைனில் தனது திறமையை காட்டிய போதே அவர் தான் KBGD-ல் வெல்வார் என்ற நம்பிக்கை உறுதியாக இருந்தது, அந்த அட்வான்ஸ் வாழ்த்துக்கள் அதற்காகவே! :)

      @கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்:
      //கார்த்திக் உங்கள் பங்களிப்பு இல்லாததற்கு பின்னே இவ்வளவு காரணங்களா ! விடுங்கள் பார்த்து கொள்ளலாம்! //
      நன்றி ஸ்டீல்! அண்ட் பிலேடட் வெல்கம் பேக்! :)

      Delete
  18. இனி நம்ப விஷயம்!

    ஈ.விஜய் அவர்களே, கையில் வாட்ச் கட்டிக்கொண்டு மண்ணுகவ்வுவதை இதுவரை நான் பிராக்டீஸ் செய்திருக்கவில்லையாதலால், எடிட்டர் பெரிய மனது செய்து அதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.. பார்த்தீர்களா? :-))))))))))))))))

    ஜஸ்ட் ஃபார் ஃபன்!!

    அவையடக்கமாய் சொல்லவில்லை, உண்மையில் தேர்வுக்குழுவில் இருந்திருந்தால் நானும் ரமேஷ்குமாருக்கே ஓட்டளித்திருப்பேன். எனக்குப் பிடித்த டார்க் பேக்ரவுண்ட், எழுத்து, படங்களின் கச்சிதமான அமைப்பு, குறிப்பாக எடிட்டர் எனுப்பியிருந்த படத்தில் அவர் செய்திருக்கும் மேஜிக், எத்தனை உழைப்பை, நேரத்தை விழுங்கியிருக்கும் எனப் புரிகிறது. ரியலி அ குட் ஒன்!

    கர்ணன், பொடியனின் படைப்புகள் கலர்புல்! பிடித்திருந்தன!

    அருணாச்சலத்தின் படைப்பு நன்று எனினும், எடிட்டர் சொன்னதைப்போல பின்னட்டை எனக்கு வியப்பேற்படுத்தவில்லை. எடிட்டர் அனுப்பிய படம் அப்படியே பயன்படுத்தப்பட்டிருப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. இருப்பினும் அதில் குறிப்புகளும், லோகோவும் இணையும்போது ஒரு தனி அழகு உண்டாவதை மறுக்க இயலவில்லைதான்.

    மொத்தத்தில் சிறப்பான ஆக்கங்கள், வாழ்த்துகள் அனைவருக்கும்!

    என் படத்தில் என்ன பிரச்சினை என எனக்கு நன்கு புரிகிறது, ஒரு குறிப்பிட்ட நேர தயாரிப்புக்குப் பின், எழுத்துகளில்லாத படத்தில் திருப்தியடைந்தேன், ஆசிரியர் குறிப்புகளுக்கான இடமும் விட்டிருந்தேன். அதன் பின்புதான் சிக்கல், ஜானி ஸ்பெஷலில் இடம்பெறப்போகும் கதைகளின் பெயர்கள் கூட எனக்கு உறுதியாகத் தெரியவில்லை, அதையும், ஆசிரியர் குறிப்புகளையும் சற்றே கலர்ஃபுல் குட்டி பேனர்களில் சரியான இடத்தில் பொருத்தியிருந்தால் இன்னும் சில புள்ளிகள் அதிகம் பெற்றிருக்கலாம். பரவாயில்லை என விட்டுவிட்டேன். போட்டியில் பரவாயில்லை என்ற நினைப்பு வந்தால் ”கவ்வுக மண்” நடக்குமென்பதில் ஐயமேது? :-))))))))))))))

    மற்றபடி பல லேயர்களில் நகாசு வேலைகள் பார்த்தது, ஆசிரியர் அனுப்பிய படத்தின் பேக்ரவுண்ட் பிடிக்காமல் காரெக்டர்களைத் தனியேப் பிரித்து நெருக்கி அமைத்தது, குறிப்பாக அந்த லீடருக்கு வலது காலை வரைந்தது என ரொம்ப நாளைக்குப் பின் ஃபோட்டோஷாப்பில் கொஞ்ச நேரம் ரசித்து வேலைபார்க்க வைத்த ஆசிரியருக்கு நன்றி! (வாட்சுக்கு கூடுதல் நன்றி)

    ஆசிரியர் அனுப்பிய படத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறோம் என என்னைப்போலவே பேய்முழி முழித்திருக்கிறார்கள் நண்பர்கள் என்பது புரிகிறது!! கூகுளில் தேடிய போது சிக்கிய ரிப்போர்டர் ஜானின் இரண்டு உருப்படியான படங்களில் ஒன்றை ரமேஷ், கர்ணன், அருணாச்சலம் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். மற்றதை நான் தேர்ந்தெடுத்தேன். பொடியன் ரெண்டையுமே தேர்ந்தெடுத்திருக்கிறார். :-)))))))))))))))

    ஆசிரியர் அனுப்பிய படத்தைச் சரியாக பயன்படுத்திய விதத்தில் ரமேஷ் தனித்து நிற்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. ஆதி தாமிரா : //ஈ.விஜய் அவர்களே//

      அதென்ன ஈ.விஜய் ? அவரது புன்சிரிப்பைச் சுட்டிக் காட்டும் முயற்சியா - அல்லது உள்குத்து வேறு ஏதும் இருக்கிறதா இதனில் ?

      நாங்களும் பத்த வைப்போம்லே... :-)

      Delete
    2. @ ஆதி

      இப்ப சந்தோசமா உங்களுக்கு? உங்க திட்டம் பலிச்சுட்டுதா? கிர்ர்... :) (ஐயோ... ஸ்மைலி கூட போட முடியாது போலிருக்கே... )

      Delete
    3. @ ஆதி
      // மற்றபடி பல லேயர்களில் நகாசு வேலைகள் பார்த்தது, ஆசிரியர் அனுப்பிய படத்தின் பேக்ரவுண்ட் பிடிக்காமல் காரெக்டர்களைத் தனியேப் பிரித்து நெருக்கி அமைத்தது, குறிப்பாக அந்த லீடருக்கு வலது காலை வரைந்தது என ரொம்ப நாளைக்குப் பின் ஃபோட்டோஷாப்பில் கொஞ்ச நேரம் ரசித்து வேலைபார்க்க வைத்த ஆசிரியருக்கு நன்றி! //

      After reading your comment, went back and saw your cover - now i can appreciate your hours in photo shop.

      @rameshKumar , @podiyan, @Arunachalam, @Karnan

      Please share your design stories here that will give more insight to us.

      Delete
  19. இப்படி ஒரு கனத்த டெக்ஸ் தீபாவளி இதழை கையில் வாங்க நாங்கள் கண்ட கனவினை நிஜமாக்கிய தங்களுக்கு முதல் வாழ்த்துகள்.... டெக்ஸ் அட்டைபடம் சுப்பர் !!! போனெல்லி பெட்டி வேறு உள்ளே.. சூப்பரோ சூப்பர்...

    இனிய தீபாவளி வாழ்த்துகள் சார்..

    ReplyDelete
  20. நண்பர்களின் டிசைன் -கள் அனைத்தும் கண்ணில் ஒற்றிக்கொள்ளவேண்டும் போல் இருக்கிறது! சூப்பர் சூப்பர்!
    அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!
    டெக்ஸ்-இன் அட்டைப்படம் அமர்க்களம்! Hats off to மாலையப்பன் and பொன்னன்!
    இந்த இதழ்களோடு 2014 அட்டவணையும் வருகிறதா? ஆஹா அருமை!
    Thank you so much Sir!

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களின் டிசைன் -கள் அனைத்தும் கண்ணில் ஒற்றிக்கொள்ளவேண்டும் போல் இருக்கிறது! சூப்பர் சூப்பர்!
      அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!
      டெக்ஸ்-இன் அட்டைப்படம் அமர்க்களம்! Hats off to மாலையப்பன் and பொன்னன்!
      இந்த இதழ்களோடு 2014 அட்டவணையும் வருகிறதா? ஆஹா அருமை!


      copy paste

      Delete
  21. இம் முறை KBGD இல் பங்குபெற்ற அனைத்து நண்பர்களும் கலக்கி விட்டனர் . கர்ணன் , பொடியன் , நண்பர் ஆதி தாமிரா , அருணாச்சலம் சார் , ரமேஷ்குமார் அனைவருக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள் . நண்பர் ரமேஷ்குமாரின் படைப்பில் ஏதோ தனித்தன்மை உள்ளது கூடுதல் சிறப்பு . ஆனால் கர்ணன் மற்றும் பொடியனின் படைப்புகள் வர்ண சேர்க்கையில் அழகு சேர்கின்றன .

    இம் முறை தீபாவளிக்கு டெக்ஸ் இன் அதகளம் ஆரம்பமாக உள்ளதை ஓவியர் மாலையப்பனுக்கு நமது எடிட்டர் முன் கூட்டியே தெரிவித்துள்ளதை அவரது அபார படைப்பின் ஊடாக எம்மால் உணர முடிகிறது . சூப்பர் . அதிலும் நண்பர் ஆதி தாமிரா கூறியுள்ளது போல் முன்னட்டை டெக்ஸ் அவ்வளவு அழகு . பின்னட்டையிலும் டெக்ஸ் இளமையாக தெரிகிறார் . பயன்படுதபட்டிருக்கும் வண்ண சேர்க்கையும் அழகுக்கு அழகு சேர்கின்றது .

    ReplyDelete
  22. டியர் எடிட்டர் ,

    இன்றுதான் எனக்கு ரத்த படலம் XIII , ப்ளூ கோட் படையினரின் "ஆகாயத்தில் அட்டகாசம் " இரண்டும் வந்து கிடைத்தது . சும்மா சொல்ல கூடாது சார் . பின்னிடிங்க . ரத்த படலம் செம விறு விறுப்பு . ஓவியங்கள் அருமை . அதிலும் கலரில் கேட்டகவே வேண்டாம் . வாசிக்க தொடங்கி முடித்த பின்பும் , பாகம் ஒன்றில் இருந்து மறுபடி தொடங்குவோமா என எண்ண வைத்து விட்டது . ரொம்ப நன்றி சார். "ஆகாயத்தில் அட்டகாசம் " சூப்பர் தெரிவு . எனது ரயில் பயணத்தில் அதை படித்து குலுங்கி குலுங்கி சிரித்தபடி நான் வர, எனது முன் இருக்கையில் இருந்த பிரெஞ்ச்காரர் , முதலில் என்னை விநோதமாய் பார்த்தபடி இருப்பினும் , பின் எனது சிரிப்புக்கு காரணம் ப்ளூ கோட் பட்டாளம் அடிக்கும் லூட்டி என நான் விளக்கியதும், புன்முறுவல் பூத்ததுடன் இத்தொடர் தமிழ் மொழியில் வருவது பற்றி வியந்து பாராட்டினர் . இந்த பாராட்டு முழுக்க முழுக்க உங்களையே சாரும் எடிட்டர் சார் . Hats off .

    ReplyDelete
    Replies
    1. Thiruchelvam Prapananth : பாராட்டுக்கள் முழுக்க கௌவின் & லாம்பில் ஜோடிக்கன்றோ சேர வேண்டும் ? :-)

      Delete
  23. Excellent work guys. I really enjoyed the covers art work. Wishes to the winner.

    In my point of view all are winners. :-)

    This Diwali will be rocking one for us. Thanks to editor & team for their efforts.

    ReplyDelete
  24. எல்லா நண்பரிகளின் அட்டை படங்கள் அருமையாக உள்ளது.

    ReplyDelete
  25. // 4-வதும் , பிரதான காரணமும் - இம்மாத இதழ்களோடு வரக் காத்திருக்கும் 2014-க்கான அட்டவணையே ! தொடரும் 12 மாதங்களது schedule ; நாயகர்கள் பட்டியல் ; என 2014-க்கான நமது பயணத் திட்டம் அதனில் இருக்கும் ! //
    சூப்பர்! 2014 அட்டவணை பல எதிர்பார்புகளை பூர்த்தி செய்யும் என நினைக்கின்றேன். டெக்ஸ் அட்டைபடம் அருமை.

    வாழ்த்துக்கள் ரமேஷ்குமார்.
    போட்டியில் கலந்து கொண்ட நண்பர்கள் அனைவருமே வெற்றி பெற்றவர்களே.கலந்து கொண்ட நண்பர்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. ரிப்போர்ட்டர் ஜானி அட்டைகள் அனைத்துமே எனக்கு பிடித்துள்ளது.. So, எல்லாத்துலேயும் ஒரு copy பார்சல் எனக்கு :)

    டெக்ஸ் முன்னட்டை சூப்பர்.

    ReplyDelete
  27. KBGD போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள், எல்லாருடைய படைப்புக்களும் அருமை, எனக்கும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசைதான் ஆனால் என்னுடய கணினி சென்னையில் இருப்பதால் எதிலும் பங்கேற்க இயலவில்லை :(. நிச்சயம் ஒருநாள் KBGD பங்கேற்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
    இரவு கழுகின் அட்டைப்படம், அந்த கதைகளை படிக்கும் ஆவலை தூண்டுகிறது. டெக்ஸின் இறுகி போன அந்த சலனமற்ற முகம் அட்டைக்கு வலு சேர்க்கிறது. மொத்தத்தில் இந்த தீபாவளி ஒரு கலர்புல் தீபாவளிதான் டெக்ஸின் வின்செஸ்டர் ராகத்தோடு :)

    ReplyDelete
  28. @ ஆதி

    அதென்ன பின்னட்டையில் பன்னிக் குட்டிகளையும், பாம்புகளையும் மசமச எஃபெக்ட்டுல ஓட விட்டுருக்கீங்க? ரெண்டு பூனைகளைப் போட்டாத்தான் என்னவாம்? கிர்...

    ReplyDelete
    Replies
    1. "எவர்கில்ட்ஸ் "சதுப்பு நிலத்துல பூனைகள் இருக்குமா என்ன? பர்மிய பாம்புகள்,முதலைகள் தான் இருக்கும்னு டிஸ்கவரி தமிழ்-இல் சொன்னங்க,நண்பரே! :)

      Delete
    2. @ Siva Subramanian

      எதுக்கும் டிஸ்கவரி-மலையாளம் சானல்ல கேட்டுப் பாருங்களேன்?! :)

      Delete
    3. எனக்கு மலையாளம் தெரியாது,ஈரோடு விஜய்.
      அதோட எடிட்டர் சார்,"எவர்கில்ட்ஸ்" என்ற பெயரை இங்கு பதிவிட்ட அதே நாளின் இரவில் தான் அந்த நிகழ்ச்சியை பார்த்தேன்.

      Delete
    4. ''மொட்டை போட்ட e பூனை'' நான் பார்த்ததே இல்ல ..................டிச்கவேரி சானலில் காட்டு வாங்களா ......?

      Delete
    5. @ மந்திரி

      ஈரோட்டுப் பக்கம் வந்தீங்கன்னா நடுத்தெருவில் நின்னுட்டிருக்கும்; பார்த்துட்டுப் போங்க! கிர்... :)

      Delete
    6. அய் மொட்ட பூனை பேசுது .............!

      Delete
    7. யாருப்பாது பூனைக்குட்டிகளை பன்னிக்குட்டின்னு சொல்றது? உங்களைப் பூனைகள் சங்கத்திலிருந்து Dismiss செய்கிறோம்..!

      Delete
    8. அலோ ஈ பிரதர், அந்தப்பூனைகளை நான் வரையவில்லை. அது அந்தப்படத்திலிருந்த சிலைகளின் படங்கள்தான், அவற்றை தனியே உலவவிட்டிருக்கிறேன். அது பன்னிக்குட்டிகள் மாதிரி உமக்குத் தெரிந்தால் நான் என்ன செய்ய? :-)))))))))))

      Delete
    9. விஜய்க்கு யாரோ சூன்யம் வைத்து பன்னியாக காட்சி தரும் படி செய்து விட்டாகள் ஆதி ....விடுங்கள் சூன்யம் விலகி பூனை புலப்படும் நாள் தொலைவில் இல்லை ! விஜெய் கோவை வாருங்கள் மந்திரிக்க அழைத்து செல்கிறேன்!

      Delete
    10. தினத்தந்தி அக்டோபர்-24

      "பூனை பிராண்டியதால் வாலிபர்கள் படுகாயம்"
      உடல் முழுக்க கீறல்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதி.

      தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வாலிபர்கள் சிவசுப்ரமணியன், மதியில்லா மந்திரி, ஆதி, ரமேஸ்குமார் மற்றும் ஸ்டீல்-க்ளா. இவர்கள் நேற்று மதியம் தூங்கிக் கொண்டிருந்த பூனை ஒன்றை வம்புக்கிழுத்து சீண்டி விளையாடியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மிகுந்த சினம்கொண்ட அப்பூனை...

      கிர்ர்...

      Delete
    11. @ நண்பர் ஈரோடு விஜய் அவர்களே! உங்களை நேரில் சந்திப்பதானால் உடல் முழுக்க எவ்வளோ காயங்கள் வேண்டுமானாலும் ஏற்க நான் தயார். எங்கள் செல்ல பூனையாரின் தூக்கத்தை கலைத்து விளையாடியதற்கு மன்னிக்கவும்.

      Delete
    12. இதுகெல்லாம எங்கள் செல்ல பூனைக்கு கோவம்?!!

      Delete
    13. கோவை அசோகா பிளாசா அருகே உள்ள முனியப்பன் கோயில்ல மந்திரிச்சா எல்லாம் சரியாகிடும் !

      Delete
    14. @ Siva subramanian

      ம்மியாவ்... ர்... ர்... SLURRPP... SLURPP...

      @ ஸ்டீல்
      //கோவை அசோகா பிளாசா அருகே உள்ள முனியப்பன் கோயில் மந்திரிச்சா எல்லாம் சரியாகிடும்//

      அங்கே நீங்க ரெகுலர் கஸ்டமரா, ஸ்டீல்-க்ளா? :D

      Delete
    15. நண்பரே ஸ்டீல் க்ளா! கோவத்தில் கிட் வெர்சஸ் கேட் போல இருக்கும் நம் நண்பபரை டாம் கேட்-ஆக மாற்ற வழி சொல்வீர்களா? மறுபடியும் மந்திரிக்க கூப்புடுரது நியாமா?

      Delete
    16. பூனை பிராண்டிகள் ...............நாங்கள் !

      Delete
    17. சிவா , அப்படியே கூட்டிட்டு போய் ஏமாற்றி நீங்கள் விரும்பிய வண்ணம் மாற்றிடுவோமே !
      விஜய் எல்லாம் தங்களை போன்ற நண்பர்களுக்காகவே!

      Delete
  29. டெக்ஸ் அட்டையை விட மற்றவை பிரமாதம். அந்த ஃபினிஷிங் டெக்ஸ் அட்டைப்படத்தில் இல்லை

    ReplyDelete
  30. அடுத்த தபா நானும் KBGDல கலந்துக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன். விண்டோஸ்ல 'paint brush' னு ஒரு tool இருக்கு; அதை use பண்ணி ரெண்டே நிமிஷத்துல அட்டகாசமான ஒரு அட்டைப்பட டிசைனை உருவாக்கி அனுப்பிட முடியும்! குறைஞ்சபட்சம் ஒரு ரிஸ்ட் வாட்ச்சாவது கிடைக்குமில்லையா? (எனக்கு முதல் பரிசு வேணாம் எடிட்டர் சார், புஸ்வானம் புஸ்ஸ்ஸுனு போயிடுமில்லையா? ) :D

    ReplyDelete
    Replies
    1. Erode VIJAY : பட்டாசு வெடிக்கப் பயம் என்பதை மறைக்க ஒரு மனுஷன் எப்படி எல்லாம் யோசிக்க வேண்டி வருது -பாருங்களேன் !

      Delete
    2. ஹம்... எவ்வளவு பில்ட்-அப் கொடுத்தாலும் எப்படியோ கண்டுபிடிச்சுடறாங்களே....!

      Delete
  31. அன்பு எடிட்டர் சார். திரு. விஜயன் அவர்களுக்கு, எனக்கு ஒரு பழக்கம் இருக்கு... அதாவது (இப்ப நான் படிச்சுட்டிருக்கிற IIIE-ல Exam அட்டெண்ட் பண்றனோ இல்லையோ ஃபீஸ் கட்டிருவேன்..! எப்படியும் அடுத்த தடவை எழுதிருவோம்னு நம்பிக்கைதான்..! அதே மாதிரி, நம்ம KBT2 &3-க்கு என்ட்ரி ஆகிட்டு, அப்புறம் எக்ஸாம் எழுதலை ( படைப்பு அனுப்பலை..!)!!! எப்படியும் அடுத்ததடவை கலந்துகிட்டு பரிசு வாங்கிடுவோம்னு நம்பிக்கைதான்..! அப்புறம் எனக்கு ஃபோட்டோஷாப் பத்தி ஒண்ணுமே தெரியாது... ஆனாலும், அடுத்த தடவை KBGD-2ல கலந்துக்கிட்டு அட்லீஸ்ட், ஒரு படமாவது இங்க வரணும்..! அதுக்காக கண்டிப்பா முயற்சி பண்ணுவேன்..! ஏன்னா,

    நம்பிக்கை தானே வாழ்க்கை..!

    ReplyDelete
    Replies
    1. Arun Kamal : கவலையே வேண்டாம் - அவ்வப்போது இது போன்ற போட்டிகள் வந்திடும் ; so நிச்சயம் உங்களுக்கு ஒரு சான்ஸ் உண்டு !

      Delete
  32. Congratulations for KBGD winner and runners!

    ReplyDelete
  33. சார் என்ன சொல்லி விட்டீர்கள் ! நான் அந்த டேசில் கனத்தை கவனித்தே குதித்தேன் ! அதிலும் அட்டை படம் இரண்டுமே வண்ணம் ,எழுத்துக்கள் அமைப்பு என அனைத்திலுமே டக்கர் ! எப்படா வரும் தீபாவளி ,காத்திருக்க முடியவில்லை தவிப்புடன் ! சார் புத்தகங்கள் தயாரெனில் இந்த வாரமே அனுப்புங்களேன் ! நண்பர்கள் மேல் ஒளிவட்டம் பாய்ச்ச நீங்கள் எடுத்த முயற்சி போல ,தீபாவளி மேல் ஒளி பாய்ச்சி, தீபாவளியை கொண்டாட நாட்கள் கிடைக்குமே எங்களுக்கும் !

    ReplyDelete
    Replies
    1. அப்புறம் எண்பதுகளின் கோடை மலரை நினைவு படுத்துகிறார் நமது டெக்ஸ்

      Delete
    2. // சார் என்ன சொல்லி விட்டீர்கள் ! நான் அந்த டேசில் கனத்தை கவனித்தே குதித்தேன் ! // +1.
      "இன்று புத்தகங்கள் 3 -ம் அனுப்பியாச்சு-ன்னு எடிட்டர் சொல்லும் வரை இந்த ஏக்கம் தொடருமே!"

      Delete
    3. சிவகாசியில் பிறந்திருக்க கூடாதா என சிறு வயதில் ( மதுரையில் முன்னரே புத்தகங்கள் கடைகளை அலங்கரித்த போது ) தோன்றிய அதே உணர்வுகள் நண்பரே!

      Delete
    4. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : சிவகாசியிலேயே பிறந்திருந்தால் - உங்கள் இரும்புக் கரத்திற்கு சார்ஜ் ஏத்திட ஒரு UPS உங்கள் பைக்கில் நிச்சயமாய் தொங்கிக் கொண்டிருக்க வேண்டி இருந்திருக்கும் ! இன்னமும் கண்ணாமூச்சி ஆடி வரும் மின்வெட்டால் மாயமாவதெல்லாம் ஒரு கணவாய் மட்டுமே இருந்திருக்கும் !

      Delete
    5. ஹ ஹ ஹா ....நமது இதழ்களை முதலில் தரிசிக்க இதனை கூட செய்ய மாட்டேனா !

      Delete
  34. நண்பர் கர்ணனின் முன்னட்டை அருமை ! பின்னட்டை இரண்டாவது பரவாயில்லை ! சிறு கட்டங்களில் அட்டை சுருக்கபடுவது ஏனோ என்னை ஈர்க்கவில்லை! வண்ணங்கள் சேர்க்கை அருமை கர்ணன்!
    நண்பர் பொடியனின் அட்டை படமும் கலக்கல்!
    நண்பர் ஆதி தாமிரா உங்களிடம் இன்னமும் அதிகமாய் எதிர்பார்க்கிறேன்!
    ஆசிரியர் கூறியது போல அருணாசலத்தின் பின்னட்டை அருமை!
    நண்பர் ரமேஷ் குமாரின் வண்ண அட்டை பிரம்மாதம் சிறந்த தேர்வே இரண்டிலும் ,ஆனால் பின்னட்டை அருணாச்சலத்தின் பங்களிப்பை உபயோகித்திருக்கலாம் ! இருந்தாலும் ரமேசின் பின்னட்டயும் ஏனோ வெகுவாக ஈர்க்கிறது விலக்க இயலவில்லை! ஒரு வேலை இரண்டு அட்டைகள் உபயோகிக்க வேண்டி வந்தாலும் வரலாம் நண்பர்கள் தூள் கிளப்புவதை பார்க்கும் போது!
    நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் இந்த அற்புதங்களை ரசிக்க உதவியமைக்கு!

    ReplyDelete
    Replies
    1. உங்க 'back to form' சந்தோசமளிக்கிறது ஸ்டீல்!! இந்த தீபாவளி தீபாவளி நம் எல்லோருக்குமே மகிழ்ச்சிகரமாய் அமையட்டும், வரவிருக்கும் புத்தகங்களின் துணையோடு!! :)

      Delete
    2. டெக்ஸ் அட்டை படத்தை தாண்டி உள்ளே செல்வோமா என மலைப்பாக இருக்கிறது , மாலையப்பன் அவர்கள் புண்ணியத்தில்!

      Delete
    3. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் உங்கள் அன்புக்கு நன்றி. நான் இன்னும் சிறப்பாக செய்திருக்க வேண்டும். ரொம்ப Detail லா பண்ணவேண்டாம்னு நினைச்சதும், நேரக்குறைவும் தான் காரணம். அடுத்தமுறை கலக்கிடுவோம். உண்மையில் நண்பர் ரமேஷ் குமார் அற்புதமாக செய்திருக்கிறார்.

      Delete
    4. அடுத்த உங்களது பிரம்மாதமான பங்களிப்பிற்காக காத்திருக்கிறேன் நண்பரே ! அடுத்த முறை நிச்சயம் அட்டையில் இடம் பிடிப்பீர்கள் என நினைக்கிறேன்!

      Delete
    5. ஆதி தாமிரா உங்களிடம் இன்னமும் அதிகமாய் எதிர்பார்க்கிறேன்! // செஞ்சிட்டாப்போச்சு!! :-)))))))

      Delete
  35. SMS from TEX Vijayaragavan
    --------------------------------------
    "வாவ்! வாவ்! வாவ்! எல்லா அட்டைப்படங்களுமே கலக்கல் சார்! வெற்றி பெற்றிருக்கும் அட்டைப்படம் அசத்தல் ரகம்! வாழ்த்துக்கள் மிஸ்டர் ரமேஸ்! கலந்துகொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! குறிப்பாக, என் அருமை நண்பர் கர்ணனும் கலக்கியிருக்கிறார்! இந்த நண்பர்களுக்கெல்லாம் தீபாவளி தொடங்கிவிட்டது போலிருக்கிறதே?!
    வழக்கம்போலவே இம்முறையும் டெக்ஸின் அட்டைப்படம் படு அசத்தல்!! லேசாக 'ரத்த வெறியர்கள்' அட்டைப்படத்தை நினைவுபடுத்தினாலும், இதுவே இந்த ஆண்டின் மிகச் சிறந்த அட்டைப்படம் என்று உறுதியாய் கூறலாம்!! ஆனால் 'முதுகு' பிரதேசம் 'மினி லட்சுமி வெடி' மாதிரி இருக்கு சார்!
    2014 பட்டியலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் சார்!"

    # சேலம் 'டெக்ஸ்' விஜயராகவன்

    ReplyDelete
    Replies
    1. // ஆனால் 'முதுகு' பிரதேசம் 'மினி லட்சுமி வெடி' மாதிரி இருக்கு சார்! //+1.

      Delete
  36. KBGD ல் கலந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
    நண்பர் ரமேஷ் குமாரின் அட்டைபடம் தேர்வு சரியானதே! அவருக்கு வாழ்த்துக்கள்!

    டெக்ஸ் தீபாவளி ஸ்பெஷல் இதழின் அட்டைபடங்கள் நன்றாகவே உள்ளது!

    //இம்மாத இதழ்களோடு வரக் காத்திருக்கும் 2014-க்கான அட்டவணையே ! தொடரும் 12 மாதங்களது schedule ; நாயகர்கள் பட்டியல் ; என 2014-க்கான நமது பயணத் திட்டம் அதனில் இருக்கும்//

    இந்த அறிவிப்புதான் தீபாவளி இதழ்களின் எதிர்பார்ப்பைவிட மிக ஆவலை தூண்டுகிறது! பார்ப்போம்!

    ReplyDelete
    Replies
    1. // இந்த அறிவிப்புத்தான் தீபாவளி இதழ்களின் எதிர்பார்பைவிட மிக ஆவலைத் தூண்டுகிறது //

      உண்மை! உண்மை! தீபாவளி இதழ்களின் வருகையை இரு மடங்கு எதிர்பார்க்க வைத்திருக்கிறது!

      Delete
  37. டியர் மச்சான்ஸ் ,
    அட்டி படம் அல்து !
    மஞ்ச சட்ட நல்து ,
    ரமேஸ் படம் ஜில்து ,
    எவண்டா இடுப்பை கில்து .............
    ஒரு நடிகையின் எக்காளம்

    ReplyDelete
    Replies
    1. வட நாட்ல் இருந்து தென்னாட்க்கு வந்த குண்டு நடிகை பற்றி நான் ஒண்ம் சொல்து இல்லை .......

      Delete
    2. மந்திரிக்கு இளமை துல்து....
      விஜிக்கு தான் நாக்கு தல்து...

      Delete
  38. ஆகா ....ஆகா ....ஆகா .....

    நண்பர்களின் அட்டைபடம் ஒவ்வொன்றும் அட்டகாசம் .அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் .

    "டெக்ஸ் "அட்டைபடம் வாவ் .சூப்பர் சார் .

    எங்கள் டெக்ஸ் இன் அட்டை படம் பார்த்த வுடன் எனக்கு ஆடி ,பாடி கொண்டாட சொல்கிறது .

    நான் மட்டுமா ? யார் ..யார் பாடி ,ஆடுகிறார்கள் என்று நீங்களே அடுத்து பாருங்கள் .

    ReplyDelete
  39. வெற்றி பெற்ற ரமேஷகுமாருக்கும், போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்..!!!

    தீபாவளி மலரின் அட்டைப் படம் சூப்பரோ, சூப்பர்..!!

    ReplyDelete
  40. அட்டைபட டிசைன்கள் அனைத்தும் மிக அருமை.

    எல்லோரும் டெக்ஸ் மற்றும் ஜானி கதைகளை பற்றி பேசுகிறீர்கள். என் மனது 2014 அட்டவணை மற்றும் கிராபிக் நாவலுக்குதான் ஏங்குகிறது.

    ReplyDelete
  41. நன்றி நண்பர்களே! KBGD-ல் பங்கேற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ஹி ஹி! கொஞ்சநாளாக அட்டைப்பட Design-ல் மூழ்கியிருந்ததால் இப்போதெல்லாம் நமது காமிக்ஸ்களின் அட்டையை பார்க்கும் விதமே மாறிவிட்டது! KBGD-ல் பங்கேற்ற அனைவருக்கும் நிச்சயம் இதே Side effect இருக்கும்! :D

    @Vijayan Sir, Thanks for the selection! ஒரேவொரு சந்தேகம்... பட்டாசுகளை Parcel-ல் அனுப்பதை Courier-காரர்கள்அனுமதிப்பார்களா சார்? :D

    ReplyDelete
    Replies
    1. ஏய் மிஸ்டர் உண் அட்ட படம் ஷோக்காகீதுப்பா. ஆமா.. நீ பெருங்கலதூர்ல இருந்தியே அந்த ரமேஷா நீ?

      Delete
    2. நா அதே பெருங்கள்த்தூர் ரமேச் தாம்பா! இப்போ ஒரு 3 வர்சமா காஞ்சிவர்த்துல கீறேன்பா!

      Delete
  42. KBGD ல் கலந்துகொண்ட அனைவர்க்கும் வாழ்த்துக்கள். நண்பர் ரமேஷ் குமாரின் ஆக்கம் பிரம்மிப்புட்டுகிறது. நம்மளோடது ரொம்ப சுமரால்ல இருக்கு ! வெற்றி பெற்ற நண்பருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  43. @Vijayan,

    சார், தீபாவளி ஸ்பெஷலில் சன்ஷைன் லோகோ உள்ளதே? டெக்ஸ்வில்லரின் B&W பதிப்புக்கு லயன் காமிக்ஸ்தானே அனைவரும் எதிர்பார்க்கும் label?!

    ReplyDelete
    Replies
    1. @ ரமேஷ் குமார்

      "நம்பர்களும் நண்பர்களும்" பதிவில் இருந்து

      // லயன்-முத்து சந்தாத் தொகை ரூ.1320 என்று சொல்லி வைத்தேன் முதலில் ; அப்புறமாய் காமிக்ஸ் க்ளாசிக்ஸ் பிரதிகளுக்கென ரூ.540 வரும், அதனையும் சந்தாக்களில் இணைத்துக் கொள்ளுங்கள் என்றேன் ; தொடர்ந்த மாதங்களில் - காமிக்ஸ் க்ளாசிக்ஸ் என்பன இனி சன்ஷைன் லைப்ரரி என்ற லேபிலோடு வருமென்று தெரியப்படுத்தினேன் ; அப்புறமாக +6 உதயம் - ரூ.375 சந்தாவோடு என்றும் சொல்லி வைத்தேன் ! நமது காமிக்ஸ் 'கலாச்சாரங்களுக்கோ' ; செல்லும் பாதையில் ஒரு நூறு புது சிந்தனைகளுக்கு இடமளிக்கும் பாங்குகளுக்கோ - நம்மவர்கள் பரிச்சயமற்றவர்கள் என்பதால் ஒவ்வொரு முறையும், ஏதாவதொரு மாற்றத்தையும் அவர்களுக்குத் தெரிவிக்கும் சமயங்களில் அவர்களது மிரண்ட விழிகள் எனக்குள் சின்னதாய் ஒரு சங்கடத்தை உருவாக்கும் ! -இந்நிலையில், 'தீபாவளி மலர்' ; இதற்கென புது புக்கிங் ; புது பண வரவுகள் என்று சொல்லி அவர்களிடத்தில் - 'இவரென்ன பாஸா ? இல்லே லூசா ?" என்ற சந்தேகத்தை ஏற்படுத்திட வேண்டாமே என்ற சிந்தனை ஓடியதால் - ஆபத்பாந்தவனாய் உதவிக்கு வந்தது நமது +6 !//

      // எந்தவொரு அழுத்தமான திட்டமிடலும் இல்லாது அவ்வப்போது மனதில் தோன்றுவதைச் செயலாக்கிட ஒரு மார்க்கமிருந்தால் தேவலை என்பதே +6-ன் பின்னணி என்பதால் இந்தத் திடீர் தீபாவளி மலர் ஆவலைப் பூர்த்தி செய்யக் கச்சிதமாய் அது suit ஆகுமென்று புரிந்தது ! //

      எனவே இந்த டெக்ஸ் வில்லர் சாகசம் சன் ஷைன்-நின் கீழ் வெளிவருகின்றது,நண்பரே!

      Delete
    2. ஆவ்... இப்போது புரிகிறது. Thanks Siva Subramanian!

      Delete
  44. KBGD யில் நண்பர்களின் முயற்சிகள் செம கலக்கல்! : ) ! வாழ்த்துக்கள் தோழர்களே! FONT ஸ்டைல் கள் ரொம்பவே BASIC ஆகா இருக்கு. OFF COURSE நாம் யாரும் PROFESSIONALS கிடையாது என்பதால் நம்மிடம் அதிக COLLECTION இருக்க வாய்ப்பில்லை! அடுத்தமுறை நமது ஆசிரயரிடமே ஆட்டையை போட்டுவிட வேண்டியதுதான்.

    நான் விண்ணப்பித்திருந்தும் என்னால் குறித்த நேரத்தில் அனுப்ப முடியவில்லை. MY SINCERE APOLOGIES TO EDITOR! என்னுடைய வீட்டு BROAD BAND இணைப்பு கடந்த 12 நாட்களாக பளுதடைந்திருப்பதாலும் (இதன் பொருட்டு ரிலையன்ஸ்சுடன் இமெயிலில் E-WAR நடந்துகொண்டுள்ளது) அலுவலகத்தில் இது போன்ற வேலைகளை செய்தால் பலருடைய GLARING பார்வையை தவிர்க்க முடியாது என்பதாலும் ITS STILL IN THE STARTING STAGE. OFF-LINE னில் டிசைன் செய்வது மண்டையை காயவைக்கும் வேலையாக உள்ளது. : (! லேட் ஆனாலும் முடித்துவிட்டு நிச்சயம் அனுப்பி வைக்கிறேன் சார்!

    டெக்ஸ்சின் அட்டைப்படம் நன்றாக உள்ளது.இது போன்ற பெரிய புத்தகங்களுக்கு BOOKMARK வைத்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. விஸ்கி-சுஸ்கி : //டெக்ஸ்சின் அட்டைப்படம் நன்றாக உள்ளது.இது போன்ற பெரிய புத்தகங்களுக்கு BOOKMARK வைத்தால் நன்றாக இருக்கும்.//

      அடடே..இது கூட நல்ல ஐடியா தானே ?! செய்து விட்டால் போச்சு !

      Delete
  45. டெக்ஸ் ரசிகர்கள் : "அடிடா மேளம் ,புடிடா தாளம் ,
    இனி மேல் தான் கச்சேரி ஆரம்பம் ........இனி மேல் தான் கச்சரி ஆரம்பம் ......"


    சங்கத்தின் மைண்ட் வாய்ஸ் : ( கூட சிவகாசி பட்டாசை கொளுந்துங்கடா ...)

    டெக்ஸ் வில்லர் : "என் கிட்ட மோதா தே ...நான் ராஜாதி ராஜனடா ....
    "வம்புக்கு இழுக்காதே ...நான் வீராதி வீரனடா ...."

    சங்கத்தின் மைண்ட் வாய்ஸ் : ( இது உன் எதிரிக்கும் புரியும் தலைவா ...)

    கார்சன் : "........ பாசம் வைக்க நேசம் வைக்க
    தோழன் உண்டு வாழ வைக்க ...அவனை தவிர உறவு காரன் யாரும் இங்கில்லை ..."

    சங்கத்தின் மைண்ட் வாய்ஸ் : ( நண்பேண்டா ....)

    டெக்ஸ் மகன் கிட் : " தாயிற் சிறந்த கோவிலும் இல்லை ...
    தந்தை சொல் மிக்க மந்திரமில்லை "..
    சங்கத்தின் மைண்ட் வாய்ஸ் : ( தம்பி ...வடை ரொம்ப பழசு )
    டைகர் ரசிகர்கள் :" எங்களுக்கும் காலம் வரும் ..காலம் வந்தால் வாழ்வு வரும் ...
    வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே .."
    சங்கத்தின் மைண்ட் வாய்ஸ் : ( முதலில் உங்களை நண்பி வந்த " செவ்விந்தியரை " வாழ வையுங்கப்பா ..)

    டைகர் : " சோதனை மேல் சோதனை ...போதுமடா சாமி ....
    வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி ...தாங்காது பூமி ..."

    சங்கத்தின் மைண்ட் வாய்ஸ் :( "நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா சட்டத்தை மீறி பழகு ..
    அப்ப தான் உனக்கு வாழ்க்கை )

    ஆசிரியர் : " பொதுவாக எம் மனசு தங்கம் ..
    ஒரு போட்டீன்னு வந்து விட்டா சிங்கம் ...
    உண்மைய சொல்வேன் ..நல்லதை செய் வேன் .....
    வெற்றி மேல் வெற்றி வரும் ..."
    சங்கத்தின் மைண்ட் வாய்ஸ் : ( இது பச்சை குழந்தைக்கும் தெரியும் பாஸ் ....)...

    ஆசிரியர் போட்டில பெஸ்ட் என்பதால் அவருக்கும் ,எனக்கும் ஒரு போட்டி ..நமது ஆண்டு மலரில் அவர் "சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பு புத்தகத்தை இணைப்பாக "கொடுக்க மாட்டார் " என்று நான் சொல்கிறேன் . என்னது ....ஆசிரியர் கொடுப்பார் என்று சொல்கிறாரா.....சரி ....பார்க்கலாம் ...அவரா ..நானா என்று ....

    ( ஆண்டவா ....இந்த போட்டில நான் தோதுட்டா பழனி மழைக்கு பாத யாத்திரையா வந்து பத்து தே ங்கா உடைப்பாரு நம்ம சங்க செய லாளரு .....)









    ReplyDelete
    Replies
    1. ஒரே ஒரு வரி மிஸ்ஸிங்
      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !

      Delete
    2. சந்தோஷத்தால் சின்ன தடுமாற்றத்தால் மைன்ட் வாய்ஸ் ஸ்லிப்பாகி தொங் வாய்சாகிட அரோகரவும் கேட்டிட

      டைகர் துப்பாக்கியை உருவி [சோகத்தில் தண்ணியில் மூழ்கி இருந்ததால் முழுமையாக கவனிக்காது]

      - "..ஹிக்....இன்னாது? 2014 லும் புட்டு கிட்டா..ஹிக்.... என் தலைல பத்து தே ங்கா உடைப்பாரா?..ஹிக்... இதில் சரி .......அவரா ..நானா பார்க்கலாம் என்று ..ஹிக்.....போட்டி வேறா?மூச்!
      யோவ் ,தங்கத்த வாங்கிட்டு இந்த பசும்பொன் தங்கத்த மறந்து கிழவன்கள் ஜிம்மி,ரெட் எனக்னு இருந்த சங்கதை கலைச்சுபுட்டாங்கன்னு தானே பச்சபுள்ள என்னய குனிய வச்சு கும்றிங்க?மம்மி..ஹூம்ஹும் ..... ஏங்கிட்த ரீசன் இருக்கானு யாராச்சும் ஒரு வார்த்தை கேட்டீங்களா?


      1] என்ன கொடும ஸார், யாருய்யா லாம்பு தலையன் ஜெத்ரோவை செவ்விந்தியர் கிட்ட போய் மாட்ட சொன்னது?..ஹிக்..ஹிக்

      2]அலோ பாஸு,டெக்ஸ்ஷூம் டயபாலிக்கும் என்னைக்காச்சும் சேர்ந்து வருவாங்களா?இல்லைல? பின்னே என்னய மட்டும் ஏன்யா கிராபிக் நாவலில் கோர்த்து வுட்டிங்க?சாகசம் என வரக்க உடைந்த மூக்கு பெருசா?ஒற்றைக்கை பெருசா?..ஹிக்

      3]அலிஸ்டரோடு இப்புடியெல்லாம் செய்து காப்பாற்ராமா பின்னே எப்புடி நான் ஜனாதிபதிய காப்பாற்றி ஃபில்ம்,பில்டப் எல்லாம் காட்றது?நான்சென்ஸ்...ஹிக்

      4]அப்புடீன்னா எப்புடி நீங்க 2015ல முழுவன்ண மின்னும் மரணம் 11 பாக ஸ்பெசல் படிப்பீங்க? கொன்சமாவது காமன் சென்ஸ் வேணாம்? ..ஹிக்

      5]அதென்ன செவ்விந்தியரிடம் நல்ல பெயர்? டெக்ஸ் கூட அப்பாச்சி, யாகை போன்றோருக்கு வில்லன் தானே?பிறவு நம்மள வச்சு புதுசா டெரரா புதுக்கதை உருவாக்க வேணாம்?..ஹிக்

      Delete
    3. அலோ பரணி, என்ன ரொம்ப ஆட்டம்போடுறீங்களா? பழச மறக்கூடாது!! இதென்ன பெரிய பிஸ்கோத்து தீபாவளி மலர்? நெவர் பிஃபோர் ஸ்பெஷலின் தகதப்கான அட்டைப்படம் நினைவிலிருக்கிறதா? ஜாக்கிரதை!

      -டைஹார்ட் டைகர் ஃபேன்ஸ் சங்க உறுப்பினர்!

      Delete
    4. // அலிஸ்டரோடு இப்புடியெல்லாம் செய்து காப்பாற்ராமா பின்னே எப்புடி நான் ஜனாதிபதிய காப்பாற்றி ஃபில்ம்,பில்டப் எல்லாம் காட்றது?நான்சென்ஸ்...ஹிக்//
      டைகர் வந்து நம்மளை காப்பதுற மாதிரி அகிடுசேன்னு அலிஸ்டர்-க்கு ஒரு வெறி இருந்துட்டே இருந்திருக்கும். "புயல் தேடிய புதையல்" கதையில் டைகரை கொண்டே மீண்டும் தான் ஜெயிக்க திட்டமிடுவார் ,அவர்.

      Delete
    5. Paranitharan K : அது எப்படி சாமி இத்தனை ரகளை அந்தப் பால் வடியும் வதனத்தின் பின்னே மறைந்து நிற்கிறது ?!! கலக்கல் தான் !

      Delete
  46. அனைவரின் எல்லா அட்டை டீசைன்களும் அருமை.வாழ்த்துக்கள் அனைவருக்கும்!
    களம் அமைத்து கொடுத்த எடிடர் அவர்கள் நிச்சயம் தூங்கி கொண்டிருந்த அல்லது ஒரு சிறு வட்டத்தில் சுருங்கி கிடந்த பலரின் திறமைகளை மொழிபெயர்ப்பு, ஓவியம்,டீஷைன் என ஒவ்வொன்றாக தட்டீ எழுப்புவதுடன் பலரும் துணிந்து முயட்சிக்க தூண்டுகோலாக அமைந்தது உறுதி என்பதாலும் ,
    மற்றும் இங்கு உருவாகி உள்ள ரசிக்க வைக்கும் நையாண்டி செய்வோர் சங்கம்,கலவரம் செய்வோர் சங்கம் என சங்கங்கள் உருவாக இடமளித்ததட்கும் எல்லா புகழும் எடிட்டரு அண்டு கோ விட்கும் சமர்ப்பணம் .

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் , இப்போ நம்மக்கிட்டே ஓவியர் இருக்காங்க, கலரிங் ஆர்டிஸ்ட் இருக்காங்க, மொழிபெயர்பாளர் இருக்காங்க, கிராபிக் designers இருக்காங்க, இந்த கதை , கதை மட்டும் தான் இல்லை. விரைவில் ஒரு கதாசிரியர் உருவாகுங்கப்பா. அப்படி ஆகிட்டா தமிழில் இருந்து காமிக்ஸ் பெல்ஜியத்திற்கு ஏற்றுமதி ஆகும் நாள் தொலைவில் இல்லை.

      Delete
    2. அருணாசலம் : சீனாவிலிருந்தெல்லாம் காமிக்ஸ் படைப்புகளை பெல்ஜியம் இறக்குமதி செய்யும் போது - நாமென்ன சளைத்தவர்களா ? திறமைகளில் எவருக்கும் நாம் குறைச்சலானவர்கள் அல்ல என நிலைநாட்டிடும் ஒரு நாள் புலராது போகாது !

      Delete
  47. வணக்கம் எடிட்டர் சார்! பிரமாதமான அட்டை படங்கள். எனக்கு அனைவரின் அட்டை படங்களும் மிகவும் அருமையாக உள்ளது. குறிப்பாக டெக்ஸ் வில்லரின் அட்டை படம் மிக மிக அருமை. வெகு நாட்களுக்கு பிறகு பட்டையை கிளப்பும் பட்டாசு சத்தத்துடன் தீபாவளி கொண்டாட போகும் அணைத்து லயன் காமிக்ஸ் ரசிகர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சிலந்தியாரே !

      Delete

  48. //சரி ....பார்க்கலாம் ...அவரா ..நானா என்று ....
    ( ஆண்டவா ....இந்த போட்டில நான் தோதுட்டா பழனி மழைக்கு பாத யாத்திரையா வந்து பத்து தே ங்கா உடைப்பாரு நம்ம சங்க செய லாளரு .....) //
    //வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !//

    மைன்ட் வாய்ஸ் ஸ்லிப்பாகி தொங் வாய்சாகிட அரோகரவும் கேட்டிட

    டைகர் துப்பாக்கியை உருவி [சோகத்தில் தண்ணியில் மூழ்கி இருந்ததால் முழுமையாக கவனிக்காது]

    - "..ஹிக்....இன்னாது? 2014 லும் புட்டு கிட்டா..ஹிக்.... என் தலைல பத்து தே ங்கா உடைப்பாரா?..ஹிக்... இதில் சரி .......அவரா ..நானா பார்க்கலாம் என்று ..ஹிக்.....போட்டி வேறா?மூச்!

    யோவ் ,தங்கத்த வாங்கிட்டு இந்த பசும்பொன் தங்கத்த மறந்து கிழவன்கள் ஜிம்மி,ரெட் எனக்னு இருந்த சங்கதை கலைச்சுபுட்டாங்கன்னு தானே பச்சபுள்ள என்னய குனிய வச்சு கும்றிங்க?மம்மி..ஹூம்ஹும் ..... ஏங்கிட்த ரீசன் இருக்கானு யாராச்சும் ஒரு வார்த்தை கேட்டீங்களா?


    1] என்ன கொடும ஸார், யாருய்யா லாம்பு தலையன் ஜெத்ரோவை செவ்விந்தியர் கிட்ட போய் மாட்ட சொன்னது?..ஹிக்..ஹிக்

    2]அலோ பாஸு,டெக்ஸ்ஷூம் டயபாலிக்கும் என்னைக்காச்சும் சேர்ந்து வருவாங்களா?இல்லைல? பின்னே என்னய மட்டும் ஏன்யா கிராபிக் நாவலில் கோர்த்து வுட்டிங்க?சாகசம் என வரக்க உடைந்த மூக்கு பெருசா?ஒற்றைக்கை பெருசா?..ஹிக்

    3]அலிஸ்டரோடு இப்புடியெல்லாம் செய்து காப்பாற்ராமா பின்னே எப்புடி நான் ஜனாதிபதிய காப்பாற்றி ஃபில்ம்,பில்டப் எல்லாம் காட்றது?நான்சென்ஸ்...ஹிக்

    4]அப்புடீன்னா எப்புடி நீங்க 2015ல முழுவன்ண மின்னும் மரணம் 11 பாக ஸ்பெசல் படிப்பீங்க? கொன்சமாவது காமன் சென்ஸ் வேணாம்? ..ஹிக்

    5]அதென்ன செவ்விந்தியரிடம் நல்ல பெயர்? டெக்ஸ் கூட அப்பாச்சி, யாகை போன்றோருக்கு வில்லன் தானே?பிறவு நம்மள வச்சு புதுசா டெரரா புதுக்கதை உருவாக்க வேணாம்?..ஹிக்

    ReplyDelete
    Replies
    1. Abisheg : KBT-3 க்கு பெயர் கொடுத்திருக்க தேவையானதொரு எழுத்து நடை :-)

      Delete
  49. @ அருணாச்சலம்

    ஈரோட்டிலிருந்து கூப்பிடும் தொலைவிலிருக்கும் குமாரபாளையத்திலிருக்கும் ஒரு கிராஃபிக் வித்தகரை இத்தனை நாளும் நான் சந்திக்காமலிருக்கிறேனே? ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு வந்தீங்களா இல்லையா?!!

    ReplyDelete
    Replies
    1. இம்முறை வர இயலவில்லை விஜய். ஏகப்பட்ட பிளான் போட்டு சொதப்பிடுச்சு. கடந்த முறை இருநாட்கள் வந்து இருந்தேன். அடுத்த தடவை உங்க தொண்டர் படையில் ஒரு இடம் ஒதுக்கி வையுங்கள்.

      Delete
  50. Congrats Ramesh sir,u hv done a great job,dear friends note reporter Johnny's foto,he has cleared some lines and coloured it well.tex front page-amazing no word other than that,convey my regards to Mr.Malayappan and Ponnan.also editor sir,please achive same quality in printing.

    ReplyDelete
  51. ஒரு அரை நாள் gap விட்டு இங்கு வருவதற்குள் ஆசிரியரின் பதிவும் மற்றும் 135 பின்னூட்டங்களும்! என்னே ஒரு வேகம் !

    உண்மையில் திரு ரமேஷ்குமாரின் design சூப்பர் ! பின்னணியில் தெரியும் நிலாவில் இரத்த தீற்றல்கள், ஜானியின் காலரில் உள்ள shadow வை நீக்கியது என மிக நுனுக்கமாக உள்ளது. ரமேஷ் குமார் அவர்களின் உழைப்பு ஜானியின் முகத்தில் "பளிச்சென" தெரிகிறது. Hats off

    டெக்ஸ் சும்மா வந்து நின்னாலே அதிரும். அதிலும் இந்த முறை அட்டைப்பட design மிக மிக sharp ஆக வந்துள்ளது. "பூத வேட்டையில்" வந்த அதே background கலர் என்பது இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்று. உங்கள் design team குழுவுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

    இப்படி டெக்ஸ் ஐ அட்டைப்படத்தில் பார்த்தவுடன், "சிப்பாயின் சுவடுகளை" ஒதுக்கி வைத்துவிட்டு முதலில் டெக்ஸ் ஐ படிக்க வேண்டும் என்று தோன்றுவது எனக்கு மட்டும் தானா ? :-)))

    ReplyDelete
    Replies
    1. //இப்படி டெக்ஸ் ஐ அட்டைப்படத்தில் பார்த்தவுடன், "சிப்பாயின் சுவடுகளை" ஒதுக்கி வைத்துவிட்டு முதலில் டெக்ஸ் ஐ படிக்க வேண்டும் என்று தோன்றுவது எனக்கு மட்டும் தானா ? :-)))//
      நம்மளையும் சேர்த்து கொள்ளுங்கள்!
      போன பதிவில் சிப்பாயின் சுவடுகளை நினைத்தேன்!
      அதற்க்கு முன்னர் ஓநாய் மனிதனை நினைத்தேன்!
      வர வர ஒன்றை ஒன்று மிஞ்சினால் நாம் என்ன செய்ய!
      நாளை அதிரடி தீபாவளி வெளியீடு என ஏதேனும் இதை விட சிறப்பாய் வந்தாலும் வரும் ஆகவே அவசர படாதீர்கள் நண்பரே, புத்தகம் கைக்கு கிடைத்தவுடன் தெரிவிப்போம், எதனை முதலில் படிப்பதென !

      Delete
    2. Radja from France & கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : தலையணை சைசுக்கு உள்ள டெக்சை பரபரப்பான பகல் வேளையிலும் , 'ஒ.சி.சு.' இதழை சலனமற்ற இரவிலும் படித்துப் பாருங்களேன்..?!

      Delete
  52. Dear edi,aadaipadam super i am eagerly waiting for the book as well as time table .well done Aadhi,Ramesh,Arunachalam and karnan.

    ReplyDelete
  53. @ALL, அட்டை படங்கள் அருமை

    இப்போதைக்கு பில்லெர் பக்கங்கள் தான் நம்மக்கு சரியாய் செட் ஆகாமல் இருக்கு, மதியில்லா மந்திரி தவிர இந்த ஏரியா தாங்கி பிடிக்க வேறு எவரும் இலர். அதே சமயம் பில்லெர் கதைகள் இல்லாமல் வரும் புத்தகத்தில் ஒரு திருப்தி இல்லை


    @EDITOR

    சினிபூக்கில் கிழ் உள்ளவற்றை பரிசிலிக்கமே
    Billy and Buddy
    Cedric
    Ducoboo

    I have not read these but if any body has any opinion plz tell

    டெக்ஸ் அட்டையில் நீங்கள் பார்டர்களில் பட்டாசு சரங்களையும், ROCKETAIYUM போன்ற இமேஜ்கள் போட்டிருக்கலாம்,

    மேலும் மலர் என்ற வார்த்தையை ப்ரியோகிக்காததை நான் வன்மையாய் மேன்மையாய் மென்மையாய் எப்படி வேண்டுமென்றாலும் எடுத்து கொள்ளுங்கள் பட் கண்டிக்கிறேன்

    நீங்கள் டெக்ஸ் வில்லரின் என்று போட்டதால் தான் ஸ்பெஷல் என்று ப்ரியோகிக்கிரீர்கள் என்று புரிந்தது.

    இன்னும் பிரிண்டிங் போக வில்லை என்றால் இந்த ஒரு முறை மட்டும் மலர் என்று மாற்றுங்களேன் tEX WILLER BELOW THAT தீபாவளி மலர் ..

    முடியவே முடியாது என்றால் அட்லீஸ்ட் அடையாளமாக பட்டாசு போர்டர் போடவும்..

    இதுவும் முடியாது என்றால் அட்லீஸ்ட் தீபாவளி பதிவில் பட்டாசு தோரணங்கள் நாலா பக்கமும் வெடிக்கட்டும்..

    இதுவும் முடியாது என்றால் சொல்லுங்கள் மறுபடியும் ரூம் போட்டு யோசித்து வருகிறேன்:-)

    ReplyDelete
    Replies
    1. //டெக்ஸ் அட்டையில் நீங்கள் பார்டர்களில் பட்டாசு சரங்களையும், ROCKETAIYUM போன்ற இமேஜ்கள் போட்டிருக்கலாம், //
      //இன்னும் பிரிண்டிங் போக வில்லை என்றால் இந்த ஒரு முறை மட்டும் மலர் என்று மாற்றுங்களேன் tEX WILLER BELOW THAT தீபாவளி மலர் .. //

      Delete
    2. அதுவும் முடியாதாம் கால்வின், நல்லா ரூம் போட்டு யோசிச்சிட்டு வாங்க. ஏதும் போராட்டம்னாலும் பண்ணுவோம், வாங்க.. இங்க நாலு பேரு ரெடியா இருக்கோம்.

      Delete
    3. சத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் : கல்யாண முஹுர்த்தங்கள் இல்லாத நாட்களிலும் நாட்டில் ஹோட்டல் ரூம்கள் ஹவுஸ்புல் ஆகும் ரகசியம் இப்போது புரிகிறது ! 'ரூம் போட்டு யோசிப்போர் சங்க' சந்தா எவ்வளவோ ?

      Delete
  54. KBGD ல் வெற்றி பெற்ற நண்பர் ரமேஷ் மற்றும் பங்கேற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அனைவரின் ஆக்கங்களும் நன்றாக இருந்தன.

    டெக்ஸ் அட்டைப்படம் சூப்பர்

    ReplyDelete
  55. டெக்ஸ் ஸ்பெஷல் அட்டைப்படமே அதன் வெற்றிக்கு சான்று!! இந்த வருசத்தின் பெஸ்ட் செல்லெர் இதுதான்!! தல அப்படியே புதுவருசத்துக்கு ஸ்பெஷல் புக் என்னானு சொல்லிடிங்கான நாங்க கொண்டாட தயாரகிடுவோம்!!

    ReplyDelete
    Replies
    1. //இந்த வருசத்தின் பெஸ்ட் செல்லெர் இதுதான்!!//
      காலையில் இதையே நினைத்தேன் ,இரண்டு புத்தகங்கள் வாங்கி விட வேண்டும் .....
      பிரம்மிப்பாய் இருக்கிறது புத்தகம்!

      Delete
    2. ஒன்று படிக்க!
      இன்னொன்று எக்காலமும் கெடாமல் பாடம் செய்து வைக்க பின்வரும் தலை முறையினர் ரசிக்க ,திகைக்க!

      Delete
    3. நல்வருகை ஸ்டீல்

      Delete
    4. balaji ramnath : படிகளை ஒவ்வொன்றாய் கடப்போமே..? '

      'லாங் ஜம்ப் செய்கிறேன் பேர்வழி ' என்று மூக்குக்குச் சேதாரம் விளைவிக்க வேண்டாமே என்று நினைத்தேன் !

      Delete
  56. டெக்ஸ் இன் முழு வண்ண போஸ்டர் வேண்டும்!!! இந்த கோரிக்கைய ஏன் எல்லாரும் லூஸ்ல விட்டுட்டிங்க ??????

    இல்லைனா ஸ்டிக்கர் ? கார் பின்னாடி கண்ணாடில ஒட்டுனா சும்மா நச் ன்னு இருக்காது ????

    ReplyDelete
    Replies
    1. // டெக்ஸ் இன் முழு வண்ண போஸ்டர் வேண்டும்!!! இந்த கோரிக்கைய ஏன் எல்லாரும் லூஸ்ல விட்டுட்டிங்க ??????

      இல்லைனா ஸ்டிக்கர் ? கார் பின்னாடி கண்ணாடில ஒட்டுனா சும்மா நச் ன்னு இருக்காது ???? //+1. ஸ்டிக்கர் ஐடியா சூப்பர்!

      Delete
    2. சூப்பர் விஜய் & friends : ஏனோ தெரியவில்லை - போனெல்லி நிறுவனம் தங்களின் கதைகளின் உரிமைகளைத் தாண்டி - வேறு எவ்வித லைசென்சிங் செய்திடவும் தயங்குகிறார்கள் !

      பின்லாந்தில் டெக்ஸ் ரொம்பப் பிரபலம் ; அங்குள்ள பதிப்பகம் டெக்ஸ் படங்களைக் கொண்டு ஒரு காலெண்டர் உருவாக்க உரிமைகள் கோரியிருந்தது எனக்குத் தெரியும் ! But - அதற்கும் no சொல்லி விட்டனர் ! So இது சிரமமான வேண்டுகோள் - நடைமுறைபடுத்த வாய்ப்புகள் சொற்பமே !

      Delete
  57. பொடியன், அருணாசலம், கர்ணன், ஆதி அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

    ரமேஷ் கலக்கிடீங்க... (இப்போதான் அடொபே போடோ ஷாப் software request அனுப்பியிருக்கேன் [ஆனாலும் கொஞ்சம் காஸ்ட்லி தான் 50 லயன்/முத்து சந்தா கட்டலாம் போல] , வந்தவுடன் கத்துக்கிட்டு KBGD-Season-8 ல கலந்துகிட்டு உங்களுக்கு டப் குடுக்குறேன், )

    வரிசையா pictures பாத்துட்டு வரும் போது லாஸ்ட்ல கார்த்திக் உங்கள எதிர்பார்த்தேன்..

    ReplyDelete
    Replies
    1. சாப்ட்வர் நண்பர்களே வேற low cost version இருந்தால் சொல்லவும்..

      Delete
    2. // சாப்ட்வர் நண்பர்களே வேற low cost version இருந்தால் சொல்லவும்..//
      எனக்கும்

      Delete
    3. Adobe Software-ன் Creative Cloud முன்பைவிட தற்போது எளிதாக வாங்கக்கூடிய அளவில் Monthly Subscription-ல் கிடைக்கிறது: http://www.adobe.com/in/products/photoshop.html

      Creative Cloud-க்கு முந்தைய (CS6 வரை) Versions-தான் வாங்குவதற்குக் கடினம். ஒருவேளை Ebay-ல் முறையாக License Transfer செய்யக்கூடிய விற்பனையாளர்கள் மூலம் வாங்கினால் விலை குறையலாம்.

      Photoshop-க்கு மாற்றாக சில இலவச வெளியீடுகள் உள்ளன, ஆனால் அவை எல்லோராலும் பயன்படுத்தப்படுவதில்லை என்பதால் Photoshop ஒரு கட்டத்தில் தவிற்க இயலாததாகிறது.

      Delete
  58. அன்பின் ஆசிரியருக்கு,
    ஜானி ஸ்பெசலின் அட்டைப்படம் அதகளம் செய்கிறது. நண்பர் ரமேஷ்குமாருக்கு மனதார்ந்த வாழ்த்துகள், போட்டியில் பங்கு கொண்ட அத்தனை நண்பர்களுக்கும். பூத வேட்டை + நிலவொளி இரண்டும் அத்தனை ஜொலிக்காத நிலையில் தீபாவளி மலர் பழைய டெக்சாய்ப் பிளந்து கட்டும் என நம்புகிறேன். நண்பர்கள் சொல்லி இருப்பது போல டெக்ஸ் போஸ்டராய் வந்தால் பட்டாசு கிளப்புவார்.

    அட்டைப்படங்கள் தயாராகி விட்டதைப் பார்த்தால் புத்தகங்கள் அடுத்த வார ஆரம்பத்தில் பயணம் தொடங்கி விடுவதற்கான அத்தனை வாய்ப்புகளும் பிரகாசமாய் உள்ளது தானே?

    திரில்லர் (ஜானி), ஆக்சன் (டெக்ஸ்), யதார்த்தம் (சிப்பாயின் சுவடுகளில்) என இந்தத் தீபாவளி உண்மையிலேயே மிக அற்புதமாக அமைய நமது வாசக நண்பர்களுக்கு வாழ்த்துகள்.

    பிரியமுடன்,
    கா.பா

    ReplyDelete
    Replies
    1. திரில்லர், ஆக்‌ஷன், யதார்த்தம், பதார்த்தம் எல்லாம் ஓகே, ஆனா காமெடி இல்லையே.. இத நான் சொன்னா என்னைய அடிக்க வருவாரு ஒர்த்தர்!!

      -ஆதி.

      ------

      நானும் எம்மா நேரம்தான் நல்லவன் மாதிரியே பொறுமையா இருக்குறது? புடிங்கடா அவனை!! புடிச்சு காதை கடிச்சி வைங்க!! 3 புக்கு குடுக்கவே நாக்கு தள்ளிப்போச்சு, இதுல நாலாவது புக்குக்கு அடிபோட்டுகிட்டு இருக்கான்!!

      -எடிட்டர்.

      --------

      நாஞ்சொல்லல.. திரும்பிப்பாக்காம ஓடுடா கைப்புள்ள.......

      -ஆதி.

      Delete
  59. தம்பிகளா................ புக் எப்ப வரும்னு சட்டு புட்டுன்னு கேட்டு சொல்லுங்க ? அம்புட்டுதேங் ........

    ReplyDelete
    Replies
    1. இந்த மாசம் டிஸ்கவரியில வர்ற வரைக்கும் பொறுமையெல்லாம் இல்ல, தீபாவளிக்கி ஊருக்குப்போர வழியில வண்டிய சிவகாசிக்கு விட்டுற வேண்டியதுதான். புக்கு ரெடியாவலன்னா, ஆபீஸ்லயே இருந்து, தங்கி, சாப்ட்டு, தீபாவளி கொண்டாடிட்டு ரெடியாவனப்புறவு புக்கை கையோட வாங்கிட்டுதான் மறுவேலை.. எத்தனை நாளானும் பரவால்ல. ஹிஹி!!

      ஈ.விஜய்: லயன் ஆபீஸ்ல கேண்டின் இருக்குதா? இருந்தாலும் மீன் குழம்பு கிடைக்குமானு விசாரிச்சி வைக்கவும்!!

      Delete
    2. நீங்க குடுக்கிற சந்தாவுக்கு...............
      புக் குடுத்து ........
      தட்டு நிறைய சோறு போட்டு காய் வச்சு ,.........
      20% ஆக விலை உயர்வு கொடுத்து.......
      பத்தாதுக்கு வெடியும் கொடுத்தா .........
      ஆசிரியருக்கு வேட்டு வச்சுட்டு தான்.......
      இடத்த காலி பண்ணுவீங்க போல........


      ஜால்ரா பை ஸ்டார்ட் தி கம்பளம் .......follow AAthiiiiiiiiiiiiiiii................
      ஹலோ ஆதி இருங்க நாங்களும் வந்துக்கிறோம்........

      Delete
    3. ஆதி தாமிரா : ஒரு வாரம் ஆனாலும் ஊசிப் போகாப் புளியோதரைகளின் புராதன recipe ஓலைச்சுவடிகளை தேடச் சொல்லி சேதி வந்தது ! யாரோ 'ஈ.விஜய்' என்ற உத்தமரின் ஆலோசனையாம் அது !

      Delete
    4. புக் எப்ப வரும்னு ????????????

      Delete
  60. Sir,

    Can you publish a blog about 2014 planned books once this book is released. I haven't yet received bluecoats and it will take atleast another 25-30 days after you send for me or anyone here to receive it

    ReplyDelete
    Replies
    1. Prem : A blog about the comprehensive editions of 2014 would be close to impossible - as I would need to write on forever. Maybe we can put on the scan of my editorial page...

      Delete
  61. Have you fixed the US subscription price for 2014? Can you brief about that?

    ReplyDelete
    Replies
    1. Prem : Overseas subscription is never a set figure ; the postal charges vary very frequently even if there is a 5% variation in weights.. So it will always be a round amount where books will be shipped and charges debited to your account.

      The Annual overseas subscription for 2014 will be Rs.4500 !

      Delete
  62. டெக்ஸ் வில்லர் என்றாலே புல்லரிக்கிறது...
    ஆசிரியரே....இனிமேல் அனைத்து டெக்ஸ் கதைகளையும் வண்ணத்தில் வெளியிடலாமே...
    ஃபேஸ் புக்கில் ஓரிரு பக்கங்களை வண்ணத்தில் பார்க்கையில் மனம் தவித்துவிடுகிறது..

    ReplyDelete
    Replies
    1. AHMEDBASHA TK : இம்மாதத்து டெக்ஸின் பக்க எண்ணிக்கை 464 ! இன்று ரூ.100 விலைக்கு black & white -ல் வெளியிடும் இதே இதழை 2014-ல் முயற்சிக்கும் பட்சத்தில் அதன் விலை நிச்சயமாய் ரூ.125-க்குக் குறைவாக இராது !

      இதனையே நாம் முழுவதுமாய் வண்ணத்தில் வெளியிட நினைத்திடும் பட்சத்தில் விலை என்னவாக இருக்கும் என்று சின்னதாய் ஒரு கணக்குப் போட்டுப் பாருங்களேன் சார் ? தலை சுற்றி விடும் !

      Delete
  63. என்னை பாராட்டிய ஆசிரியருக்கும், அன்பு நண்பர்களுக்கும் உளம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி! நன்றி! நன்றி!.
    டெக்ஸ் வில்லர் அட்டைப்படம் வாவ் சூப்பர். 450 பக்க டெக்ஸ் வில்லர் அம்மாடியோவ்! நினைக்கும் போதே ஏதோ வானத்தில் பறப்பதுபோல ஒரு உணர்வு ஆஹா நீண்ட நாட்களுக்கு பின் ஒரு சந்தோசமான/நிம்மதியான/திருப்தியான ஒரு தூக்கம் வரப்போகிறது டெக்ஸ் வில்லர் புத்தகத்தை மார்பின் மீது வைத்து தூங்கப்போகிறேன்.
    அந்த அளவுக்கு வெறி. இப்போதே என் கை பரபரக்கிறது நண்பர்களே. இந்த சந்தோஷத்தை தந்த ஆசிரியரே நீவீர் வாழ்க பல்லாண்டு!
    என்ன எனக்கும் தீபாவளிக்கு முன்பே புத்தகம் வந்தால் என் வாசக நண்பர்களுக்கும் கொடுத்து அவர்களையும் சந்தோஷப்பட வைப்பேன் செய்வீரா ஆசிரியரே?

    ReplyDelete
    Replies
    1. Karnan L : நிச்சயம் முயற்சிப்போம் !

      Delete
  64. தீபாவளி வந்திடுச்சா இனிமே என் வீட்டுக்காரரை கைல புடிக்க முடியாதே

    ReplyDelete
    Replies
    1. ஜூலியட் சோஃபியா : நீங்களும் காமிக்ஸ் படிக்கத் தொடங்கினால் பிரச்னை தீர்ந்து விடாதா ? :-)

      Delete
  65. டியர் எடிட்டர்ஜீ !!!
    ரிப்போர்ட்டர் ஜானியின் அட்டைப்படம் மிகவும் அருமை.உங்கள் தேர்வு சோடை போகவில்லை.(சபாஷ் ரமேஷ் குமார் ஸார்.உங்களை போன்ற திறமைசாலிகள் நமது காமிக்ஸ்களுக்கு நிச்சயம் தேவை.பாராட்டுக்கள்.)
    டெக்ஸ் வில்லர் அட்டைப்படம் நமது காமிக்ஸ்களின் பொற்காலமான 80-களை நினைவூட்டுகிறது.அப்போது பாக்கெட் சைஸ்.இப்போது பெரிய சைஸ்.மற்றபடி டெக்ஸ் வில்லர் கதைகள் எங்களை பொறுத்தவரை சிறுவர்களாக பின்னோக்கிய ஒரு நோஸ்டால்ஜியா பயண அனுபவத்தை நிச்சயம் தரும்.
    அப்புறம்....கேட்க மறந்துவிட்டேன்.நவம்பர் 2ஆம் தேதி ,அடியேனின் அருமை நண்பர் நரகாசுரனின் நினைவுநாள்.சோகத்தை மறக்க எனக்கு காமிக்ஸ்கள் தேவை.
    ஆகவே ...அதற்கு முன்பாகவே நீங்கள்.....ஹிஹி!!!

    ReplyDelete