Powered By Blogger

Thursday, August 22, 2013

கடலோடு காதல் !

நண்பர்களே,

வணக்கம். இப்போதெல்லாம் பதிவுகள், பின்னூட்டங்கள், விமர்சனக் கடிதங்கள், நேர்முக சந்திப்புகள் என ஏராளமான feedback கிட்டுவதாலோ என்னமோ - 20 நாட்களுக்கு முன்பே வெளியானதொரு இதழ் கூட ஏதோ ஒரு யுகத்தில் பிரசுரமானது போல் எனக்குத் தோன்றுகிறது ! கிரீன் மேனர்களும் ; ஈரோட்டுத் திருவிழாக்களும் ; சுட்டி லக்கியாரும் பசுமையான நினைவுகளாய் மாத்திரமே எஞ்சி இருக்க, பர பரவென அடுத்த மாதத்தை நோக்கிய பயணம் தொடர்கிறது ! செப்டெம்பரில் நமக்குக் காத்திருப்பது   2 x  ரூ.100 இதழ்கள் ! இந்தப்  பதிவின் தலைப்பைப் பார்த்த போதே மறுபதிப்புப் படலத்தோடு வண்ணத்தில் அசத்தவிருக்கும் "கேப்டன் பிரின்ஸ் ஸ்பெஷல் " பற்றிய preview  இது என்பதை யூகிக்க பெரும் மதியூகம் அவசியமிருந்திருக்காது ! இந்தப் பரட்டைக் கும்பலோடு 1985-ல் துவங்கிய நமது பரிச்சயம் பற்றி "சிங்கத்தின் சிறு வயதில்" பகுதியில் ஏற்கனவே நிறையவே எழுதி விட்டதால், அதையே திரும்பவும் தொடர்ந்து உங்களை தூங்கச் செய்வது எனது நோக்கமல்ல ! ஆனால் - கேப்டன் பிரின்ஸ் நம் ராடாருக்குள் entry ஆகிடுவதற்கு முன்பாகவே இன்னுமொரு மாலுமியையும்   நாம் பரிசீலனை செய்ததைப் பற்றி உங்களுக்குச் சொல்லியது இல்லை என்றே நினைக்கிறேன் !

லயனின் துவக்க நாட்களில் பிரிட்டிஷ் காமிக்ஸ் ரவுண்ட் கட்டி அடித்துக் கொண்டிருந்த வேளையில் - பிரான்கோ - பெல்ஜியப் படைப்புகளின் மீது நமது கவனம் படிவதன் முன்பாகவே இத்தாலியக் கதைகளுடனான   காதல் தொடங்கி இருந்தது ! டெக்ஸ் வில்லர் & டயபாலிக் தான் எனது அன்றைய பிரதான ; பிரத்யேக இலக்குகள் ! அது தொடர்பாய் ஒரு இத்தாலிய ஏஜண்ட்டைப் பிடித்து அவரோடு மல்லுக் கட்டிக் கொண்டிருந்த சமயம், அவர்களது தேசத்து இதர பிரபல காமிக்ஸ் கதைகளின் மாதிரிகளையும் ஒரு பெரிய air parcel -ல் அனுப்பி வைத்திருந்தார் ! இந்த ஈ-மெயில் ; ஜி -மெயில் என்பதெல்லாம் ஏதோ மெயில் train -களின் பெயர்களாய் மாத்திரமே இருந்திடக் கூடிய அந்தப் புராதன நாட்களில் - தபால்காரரின் வருகை தினமும் ஒரு குட்டி தீபாவளிக்கு சமானம் ! (கூரியர் சர்வீஸ் கூட இல்லா நாட்கள் அவை !! நம்ப முடிகிறதா ?) அவர் கொண்டு வரும் கடிதங்களுள் வயிற்றுக்குப்  படியளக்கும் காசோலைகளும் ; மனதுக்குத் தீனி போடும் உங்கள் பாராட்டுக் கடிதங்களும் மட்டும் தான் என்றில்லாது, கதைகளின் ஒரிஜினல்கள்  ; புதிய நிறுவனங்களோடு கதைக் கொள்முதல் தொடர்பான கருத்துப் பரிவர்த்தனை தாங்கிய கடிதங்கள் பிளஸ் எப்போதாவது பார்சல்களில் கேட்லாக் ; sample books எனவும்  வந்திடுவதுண்டு !ஏதேனும் அரசு விடுமுறை என்று தபாலாபீஸ் பூட்டைப் போட்டு விட்டுப் புறப்பட்டு விட்டால் எனக்கு அன்றைய பொழுதே மூட் அவுட் ஆகி விடும் ! 

ஒரு சுவாரஸ்யமான காலையில் போஸ்ட்மன் கொண்டு வந்திருந்த மொக்கையான பார்சலில் இருந்த சில பல இத்தாலிய காமிக்ஸ் மாதிரிகளுக்குள் மூழ்கிய எனக்கு, கடவாயில் எச்சில் ஒழுகாத குறை தான் ! "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா ? என்ற கேள்வியைக் கொஞ்சமாய் மாற்றியமைத்து "எத்தனை கோடி காமிக்ஸ் உருவாக்கினாய் இறைவா?' என்றே கேட்க வேண்டும் போல் தோன்றியது ! மொழி துளியும் புரியவில்லை என்ற போதிலும் அந்தப் படங்களைப் பார்த்து சிலாகிப்பதே பரம சந்தோஷம் தந்தது ! அந்தக் கத்தையில் ஒரு ஒடிசலான கறுப்புக் கோட் அணிந்த கப்பல் காப்டனின் கதைத் தொடரும் இருந்தது ! "கார்டோ மால்டிஸ்" என்ற பெயர் கொண்ட அந்த இதழை ஏனோ கீழே வைக்க எனக்கு மனதே வரவில்லை ! மாமூலான துப்பறியும் கதைகள் + நமது மாயாவி / ஸ்பைடர் / ஆர்ச்சி கூட்டணியைத் தாண்டிச் சிந்திப்பதே மாபாதகம் என்று பயணித்த அந்நாட்களில் ஒரு கப்பல் கேப்டனின் கதையைப் பரிசீலனை செய்வது கூட சிந்திக்க இயலா சங்கதியே !சித்திரங்கள் வேறு கீச்சல் பாணியில் இருந்து தொலைத்ததால் எனக்கு அந்தத் தொடரை முன்மொழிய தைரியம் திரட்ட இயலவில்லை ! கடற் கொள்ளையர்கள் ; தீவுகளுக்குப் பிரயாணம் ; வழியில் சாகசங்கள் என  ஒரு புதுமையான பாணியாக நமக்கு அன்று  தென்பட்ட அத்தொடர் இத்தாலியில் மாத்திரமன்றி, ஐரோப்பாவிலும் 'ஹிட்' என்று கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது ! பெருமூச்சோடு அந்தப் படலத்தை பீரோவுக்குள் திணித்து விட்டு, டெக்ஸ் வில்லர் + டயபாலிக் வேட்டையை மாத்திரமே தொடரக் கோரி கடிதம் எழுதினேன். 

சில மாதங்கள் கழித்து frankfurt -ல் கேப்டன் பிரின்ஸ் தொடரை நாம் முதன் முறையாகப் பார்த்த போது - அந்த டப்பாத் தலை + சப்பை மூக்கு சித்திர பாணியைப் பார்த்தவுடன் 'என்ன கொடுமை சாமி - மாலுமிகளின் கதை என்றாலே சப்பையான artwork தானா ?' என்ற கேள்வி என்னுள் எழுந்தது ! எனினும் 'கார்டோ மால்டிஸ் ' தொடருடன் ஒப்பிடும் போது பிரின்சின் சித்திரங்கள் ரொம்பவே தேவலாம் என்று பட்டதால் - பிரின்ஸ் ஒ.கே.வானார் ! தொடர்ந்த நாட்களில் நமது திகில் இதழ்களின் ஒரு டாப் நாயகர் என்ற பெயரை ஈட்டியதுடன், அற்புதமான கதைகளை நமக்கு வழங்கிய சூப்பர் தொடர் என்ற பெருமையையும் பிரின்ஸ் பற்றிக் கொண்டதை தான் நாம் அறிவோமே !

இதோ - அன்றைய ஒரிஜினல் அட்டைப்படங்களும், இரு கதைகளின் சில உட்பக்கங்களின் மாதிரிகளும் உங்கள் நினைவுகளைப் பின்னோக்கிக் கொண்டு செல்ல :






உங்களில் எவரேனும் இந்தக் கதைகளை முதன்முறையாகப் படிக்கவிருக்கும் பட்சத்தில், உங்களுக்கொரு அட்டகாச அனுபவம் காத்துள்ளது என்பதை உறுதியாய்ச் சொல்லிடுவேன் !சாணித்தாளில், black & white -ல் படித்தே போதே அற்புதமாய்த் தென்பட்ட கதைகளை இன்று வண்ணத்தில், பெரிய சைசில் ரசிப்பது ஒரு போனஸ் என்று சொல்லலாம் ! 

இந்த இதழின் ஒரிஜினல்கள் உங்களில் எத்தனை பேரிடம் இன்னமும் உள்ளது ? ; இதனை முதலில் படித்த சமயங்களில்  நிஜார் பட்டன்களை தாமாகவே போட்டுக் கொள்ளும் வயதை எட்டி இருந்தோர் எத்தனை சதவீதத்தினர் ? - போன்ற உலகை உலுக்கும் கேள்விகளை இங்கு நான் எழுப்பியே தீர வேண்டுமே ! நினைவுகளில் பின்னோக்கிப் பயணம் செய்ய ; வாழ்க்கையின் சின்னச் சின்ன சந்தோஷங்களை மீட்டெடுக்க இது போன்றமையும் சொற்ப சந்தர்ப்பங்களை 'லபக்' கெனப் பற்றிக் கொள்வோமே ? Roll out the time machine folks ! 

204 comments:

  1. Me the First, all those F5 helped finally Hurrray

    ReplyDelete
  2. The colors and the art look great.Looking forward for the prince special.

    ReplyDelete
  3. நானும் 10-க்குள்ள வந்துட்டேன்!

    ReplyDelete
  4. எதிர்பார்க்கவைத்த ஒரு பதிவு. அதைப் பூர்த்திசெய்திருக்கிறது. இந்த இரு பிரின்ஸ் கதைகளுமே கைவசம் இல்லை. என் ஃபேவரிட்களில் ஒன்று - பற்றி எரியும் பாலைவனம்!

    ReplyDelete
  5. ஓவியங்களும், வண்ணக்கலவையும் அருமையாக உள்ளன.

    ReplyDelete
  6. Interesting background story.

    First time going to read these stories, so as editor had mentioned its going to be a big treat.

    ReplyDelete
  7. மூதல் 10க்குள் வந்து விட்டேன்

    ReplyDelete
  8. First time comment here... But a regular fan of Muthu, Lion comics

    All the best

    ReplyDelete
  9. அட்டை படமே அள்ளுதே,

    ReplyDelete
  10. "பற்றி எரியும் பாளைவனம்" மிகுந்த ஆவலை கிளப்புகிறது. பாளைவனம் கண் முன்னே தெரிகிறது.

    ReplyDelete
  11. ஆஹா! பற்றி எரியும் பாலை வனம் அட்டை படத்துடன் என்னிடம் உள்ளது! நரகத்தின் எல்லையில் படித்த நினைவே இல்லை! படித்தாலும் இந்த கதைகளிரண்டும் நினைவில் இல்லை ஆதலால் இப்போது படிக்கும் போதும் புத்திதாய் தோன்றும் வாய்ப்புகள் அதிகம்! திரைக்கடலில் நீல நிறத்தில் கரைந்து, கடலோடி நண்பர்களுடன் அலைந்து திரிய மனது துடிக்கிறது!ஏக்கம் தூக்கத்தினை தடுக்கிறது ! ஒன்றாம் தேதியே கிட்டுமா சார்?
    வியட்நாம் களத்திற்க்காகவும் காத்து கிடக்கும் விழிகள் இரண்டு!

    ReplyDelete
  12. 'கார்டோ மால்டிஸ் ' கதைதனை இப்போது வெளியிடும் எண்ணம் உண்டா சார்!

    ReplyDelete
    Replies
    1. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் & Karthik Somalinga & ஆதி தாமிரா & Raj Muthu Kumar S & கிருஷ்ணா வ வெ & parimel :

      'கார்டோ மால்டிஸ் 'கதைகளுக்கு பிரதானத் தடையாக நின்றது அதன் ஓவியப் பாணியே ! நாம் பழகி இருக்கும் இந்த சித்திர உச்சங்களோடு ஒப்பிடும் வேளையில் அந்தக் கிறுக்கலான பாணி விடுதலாய்த் தெரிவது நிச்சயம்....! எனினும் நம் ரசனைகளின் முதிர்ச்சி இதனை சரி செய்திடுமா என்பதும் சுவாரஸ்யமான கேள்வி தான் ! சிந்திப்போமே...

      Delete
    2. ஆஹா, அருமை காத்திருக்கிறோம்....தங்களது கீழ் கண்ட வரிகள் நிச்சயம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது!
      /// "கார்டோ மால்டிஸ்" என்ற பெயர் கொண்ட அந்த இதழை ஏனோ கீழே வைக்க எனக்கு மனதே வரவில்லை ! மாமூலான துப்பறியும் கதைகள் + நமது மாயாவி / ஸ்பைடர் / ஆர்ச்சி கூட்டணியைத் தாண்டிச் சிந்திப்பதே மாபாதகம் என்று பயணித்த அந்நாட்களில் ஒரு கப்பல் கேப்டனின் கதையைப் பரிசீலனை செய்வது கூட சிந்திக்க இயலா சங்கதியே !சித்திரங்கள் வேறு கீச்சல் பாணியில் இருந்து தொலைத்ததால் எனக்கு அந்தத் தொடரை முன்மொழிய தைரியம் திரட்ட இயலவில்லை ! கடற் கொள்ளையர்கள் ; தீவுகளுக்குப் பிரயாணம் ; வழியில் சாகசங்கள் என ஒரு புதுமையான பாணியாக நமக்கு அன்று தென்பட்ட அத்தொடர் இத்தாலியில் மாத்திரமன்றி, ஐரோப்பாவிலும் 'ஹிட்' என்று கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது ! //

      // கடற் கொள்ளையர்கள் ; தீவுகளுக்குப் பிரயாணம் ; வழியில் சாகசங்கள் //

      ஆகவே இந்த தொடர் சிறார்களையும் கவரலாம்!விரைந்து ஆவன செய்யுங்கள் சார்!
      அந்த நாட்களில் பொன்னி காமிக்ஸ் போன்ற ஏதோ ஒரு கிறுக்கலில் கடற்கொள்ளையர் கதை படித்து விட்டு ஏதேனும் அது போன்ற கதைகள் கிடைக்குமா என எண்ணி தவிப்புடன் அந்த ஞாயிறு முழுவதும்,பின் வந்த நாட்களிலும் தேடி திரிந்த நாட்கள் அதிகம்!

      Delete
  13. டியர் விஜயன் சார்,

    //"கார்டோ மால்டிஸ்" ... அந்நாட்களில் ஒரு கப்பல் கேப்டனின் கதையைப் பரிசீலனை செய்வது கூட சிந்திக்க இயலா சங்கதியே !//
    2014-ல் அறிமுகப் படுத்தலாமே?!

    பற்றி எரியும் பாலைவனத்தில், பார்னே ஒட்டகத்துடன் செய்யும் காமெடி (அல்லது ஒட்டகம் பார்னேவுடன் செய்யும் காமெடி?) சூப்பர்!

    பழைய பிரின்ஸ் கதைகள் அனைத்தும் அற்புதமானவைதான். ஆனால், இன்றளவும் என் மனதில் பசுமையாக நிற்கும் பிரின்ஸ் கதை எதுவென்றால், அது "நதியில் ஒரு நாடகம்"தான்!

    //இந்த ஈ-மெயில் ; ஜி -மெயில் என்பதெல்லாம் ஏதோ மெயில் train -களின் பெயர்களாய் மாத்திரமே இருந்திடக் கூடிய அந்தப் புராதன நாட்களில்//
    :) :)

    ReplyDelete
    Replies
    1. Karthik Somalinga : "நதியில் ஒரு நாடகம்" "சைத்தான் துறைமுகம் " ..."பயங்கரப் புயல்"...பனிமண்டலக் கோட்டை" என பிரின்சின் ஹிட்லிஸ்ட் ரொம்பவே நீளம் தான் ! இது போன்றதொரு consistent தொடர் கிடைப்பதே அபூர்வம் தான் !

      Delete
    2. Vijayan sir,

      சைத்தான் துறைமுகம் is one of favourite. If we get more requests, please do consider to re-print it in year 2014.
      Regards,
      Mahesh

      Delete
  14. இந்த இரண்டு பிரின்ஸ் கதைகளுமே நான் படிக்கவேல்லையே?? எந்த வருடம் வந்தது?

    ReplyDelete
    Replies
    1. Karthick Mohanram : பற்றி எரியும் பாலைவனம் - 1988 மார்ச்.....நரகத்தின் எல்லையில் - May 1989..

      Delete
    2. நன்றி தலைவரே! அதுதானே பார்த்தேன். பழைய புத்தக கடைகளில் கூட பார்த்த ஞாபகம் இல்லயேன்னு. இந்த இரண்டு புத்தகங்களை வைத்திருப்பவர்கள் உலக மகா காமிக்ஸ் கலெக்டர்கள் ஆக இருக்க வேண்டும்

      Delete
  15. Karthik Somalinga:
    //"கார்டோ மால்டிஸ்" ... அந்நாட்களில் ஒரு கப்பல் கேப்டனின் கதையைப் பரிசீலனை செய்வது கூட சிந்திக்க இயலா சங்கதியே !//
    2014-ல் அறிமுகப் படுத்தலாமே?!
    //

    ஆமா, படுத்தலாமே.. ரிப்பீட்டு!

    அப்புறம்,
    பிரின்ஸ் கதைகளின் வண்ணக்கலவை, லொகேஷன் ஆர்ட்ஸ் வேறெந்த எந்த கதையையும் விட மிகச்சிறப்பாக இருக்கிறது என எண்ணுகிறேன். ஆக, மிக மிக ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறேன் புத்தகத்தைக் காண..

    ஸ்டீல்கிளா:
    ஒன்றாம் தேதியே கிட்டுமா சார்? ///

    கிட்டணும் விஜயன் ஸார் கிட்டணும். அதான் போன மாசம் 8 ஆச்சே, பரவால்லங்கிற மாதிரி இஸ்துகினே போயிராதீங்க ப்ளீஸ். இல்லைனா அழுதுருவேன்.. பஞ்சுவாலிடி இஸ் இம்பார்டண்ட் யு நோ!! ஹிஹி!!

    ReplyDelete
    Replies
    1. ஆதி தாமிரா : ஆகஸ்ட் 3-ல் தான் புது இதழ்கள் தயாராகி விட்டனவே...

      Delete
    2. //பிரின்ஸ் கதைகளின் வண்ணக்கலவை, லொகேஷன் ஆர்ட்ஸ் வேறெந்த எந்த கதையையும் விட மிகச்சிறப்பாக இருக்கிறது என எண்ணுகிறேன்//
      உண்மை, கடைசி பிரின்சின் கதை என வந்த பிரின்சின் கதை வண்ணங்கள் அடடா.....

      Delete
    3. //Karthik Somalinga:
      //"கார்டோ மால்டிஸ்" ... அந்நாட்களில் ஒரு கப்பல் கேப்டனின் கதையைப் பரிசீலனை செய்வது கூட சிந்திக்க இயலா சங்கதியே !//
      2014-ல் அறிமுகப் படுத்தலாமே?!
      //

      ஆமா, படுத்தலாமே.. ரிப்பீட்டு!
      //

      உங்களுக்கெல்லாம் ஏன் சார் இந்த கொலை வெறி ??? இப்போதான் நம்ம ஆந்தைவிழியார் திரில்லர் கதைகள், கிராபிக் நாவல்கள் அப்படீன்னு கலர்புல்ல ஒரு FACELIFT கொடுக்க ட்ரை பண்றார். நீங்க என்னன்னா ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்னே பப்ளிஷ் ஆனா புராதன கருப்பு வெள்ளை கதைகள அறிமுகப்படுத்தசொல்லி கேட்கறீங்க??? நியாயமா இது??:( போன பதிவுக்கு முன்னே ஒரு பதிவுல சில ட்ரைலர் போட்டாரே..அந்த மாதிரி கதைகள அறிமுகப்படுத்தசொல்லுங்க BOSS !

      NOSTALGIA ரசிகர்களுக்காகே http://digitalcomicmuseum.com/. இங்கே ஆயிரக்கணக்கான COPYRIGHT FREE காமிக்ஸ் புத்தகங்கள் இலவசமா கிடைக்குது. எல்லாம பழைய ஆங்கில புத்தகங்கள்.ENYOY பண்ணுங்க.

      நம்ம காமிக்ஸ்'ல சமீபத்திய காமிக்ஸ் உலக படைப்புகள் வந்த கலக்கலாக இருக்கும்! : )

      Delete
  16. "கார்டோ மால்டிஸ்"

    இன்னும் இதை மாதிரி எதையெல்லாம் பீரோவுக்குள்ள வைச்சு பூட்டினீங்க.. முதல்ல அந்த அனுபவத்தையெல்லாம் சொல்லுங்க.. புக்ஸ் மெதுவா வந்தாலும்(?!?) அதைப் பத்தின கட்டுரைகளாவது புது கதைகளுக்காக, புது களங்களுக்காக ஆலாய் பறந்துகிட்டிருக்கும் என்னை மாதிரி ரசிகர்களுக்கு ஒரு ஆறுதலா இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. ஆதி தாமிரா : //இன்னும் இதை மாதிரி எதையெல்லாம் பீரோவுக்குள்ள வைச்சு பூட்டினீங்க.. முதல்ல அந்த அனுபவத்தையெல்லாம் சொல்லுங்க.//

      அது உண்டு நிறையவே...! ஒரு மழை நாள் பதிவுக்கு வைத்துக் கொள்வோமே... :-)

      Delete
  17. டெக்ஸ் தீபாவளி மலரில் உள்ள சர்ப்ரைஸ் என்னவென்றால் டெக்ஸின் காவல்கழுகு இலவசஇணைப்பாக வரும் என்று நினைக்கிறேன். பத்து ரூபாய் புத்தகவடிவக்கு இத்தாலியில் அனுமதி தற்போது தரப்பட்டிருக்கும் என்று .நினைக்கிறேன் .

    ReplyDelete
    Replies
    1. மஞ்சள் சட்டை மாவீரன் : ஊஹூம் ....அவர்களே அனுமதிப்பதாய் இருந்தாலும், இங்குள்ள காகித விலைகளும், விஷமாய் ஏறி வரும் டாலர் / யூரோ மதிப்புகளும் பத்து ரூபாயை கனவில் கூட அண்ட முடியா தூரத்துக்குக் கொண்டு சென்று விட்டன !

      Delete
    2. டெக்ஸ் தீபாவளி மலரில் உள்ள சர்ப்ரைஸ்.... அந்த புத்தகம் HARD COVER ருடன் வரப்போவது ! : )

      Delete
    3. அதற்கு ஏன் இத்தாலியில் அனுமதி பெறவேண்டும்.

      Delete
  18. டியர் எடிட்டர் ,
    முடிந்த அளவு விரைவாக பதிவிடத்துக்கு முதற்கண் நன்றிகள் ." பற்றி எரியும் பாலைவனம் ", "நரகத்தின் எல்லையில் "இரண்டு கதைகளின் சித்திர தரம் சூப்பர் . சிறு வயதில் "கப்டன் பிரின்ஸ் இன் " பற்றி எரியும் பாலைவனம் " படித்ததாக நினைவுள்ளது. "கார்டோ மால்டிஸ்" இன் தரமான கதைகளை நமது வாசகர்களுக்காக 2014 ம் ஆண்டாவது களம் இறக்குங்கள் . பிரின்ஸ் ஸ்பெஷல் உடன் சிப்பாயின் சுவடுகள் ??? செப்டம்பர் முதல் வாரத்தில் கிடைக்குமா சார்?

    சார், ரிப்போர்ட்டர் ஜானி இன் எத்தனை கதைகள் இதுவரை எமது காமிக்ஸ் இல் வெளிவந்துள்ளன? இன்னும் நிறைய கதைகள் வெளியிடாமல் இருந்தால் தயவு செய்து வரும் ஆண்டாவது வெளியிட முடியுமா ?

    ReplyDelete
    Replies
    1. Thiruchelvam Prapananth : 2014 - ரிபோர்டர் ஜானியின் மறு வருகை ஆண்டு !

      Delete
    2. இது வரை வெளி வந்த 93 கதைகளுள் , மறு பதிப்பு தவிர நிறைய கதைகள் மிகுதி உள்ளன என் எண்ணுகின்றேன் . ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறோம் .

      Delete
    3. Super sir, this is BIG news. I am a big fan of reporter Johnny

      Delete
  19. புதிய கார்ட்டூன் ஹுரோ blue coats /osterix obelix ஆக இருக்கலாம்

    ReplyDelete
  20. என் வீட்டில் தங்கை மற்றும் என் மனைவி காமிக்ஸ் வாசிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். லார்கோ அவர்களை கவர்ந்திருக்கிறார். தற்போது லக்கி/சிக்பில் SUGGEST செய்து .இருக்கிறேன். பிரின்ஸ் நிச்சயமாக புதிய வாசகர்களை கவர கூடியவர் பிரின்ஸ் பற்றி அவர்களிடம் நிறையவே சொல்லி இருக்கிறேன.

    ReplyDelete
  21. புது கதையையும் அறிமுகப் படுத்தலாமே. அட்டைக்கு ஒரிஜினலையே உபயோகிதிருக்கலாமே என்ற பழைய குருடி மீண்டும் ஒருமுறை . எப்போது வரும் என்று தெளிவு படுத்துங்கள் ப்ளீஸ்

    ReplyDelete
    Replies
    1. அட்டை படங்கள் நன்றாக இல்லை என்று சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒரிஜினல் போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பதே என் எண்ணம.

      Delete
    2. @Raj Muthu Kumar S:
      ராஜ், இவை இந்த இதழுக்கான அட்டைகள் அல்ல - இக்கதைகளின் பழைய அட்டைப் படங்களை ஒரு Nostalgia Effect-க்காக உட்பக்கங்களில் இணைத்திருக்கிறார்கள்! இந்த இதழுக்கான கவர் டிசைன், வழக்கம் போல புத்தகம் வெளியாகும் நாளன்று இங்கே வெளியாகும் என்று நினைக்கிறேன்.

      Delete
    3. Raj Muthu Kumar S : யெஸ், இவை உட்பக்கங்களில் வரும் முந்தைய அட்டைகளின் மறு ஒளிபரப்பே ...

      Delete
  22. சுட்டி லக்கி என் வீட்டில் காமிக்ஸ் கட்சிக்கு மெஜாரிட்டி பெற்று தந்து விட்டது. . என் மகனையும் கட்சியில் பொறுப்பு ஏற்று கொள்ள வைத்து விட்டது. என் மகள் கிரீன் மனோர் வாசிக்கும் பெண் இப்போது சாதாரண கதையை கூட லக்கி லுக் , முள்ளங்கி மண்டயன் , தர்ப்பூசணி தபிதா என்ற கேரக்டர் பேர் வைத்து சொன்னால் தான் கேட்கிறான். தர்ப்பூசணி தபிதா என்ற பேர் அவனுக்கு ரொம்ப பிடித்து விட்டது , கேட்க்கும் போது எல்லாம் சிரித்து மாளவில்லை அவனுக்கு. கேரக்டர்களுக்கு பேர் வைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான்.

    ReplyDelete
    Replies
    1. Raj Muthu Kumar S : கட்சியின் லேட்டஸ்ட் உறுப்பினரான குட்டிப் புலியாரின் சின்ன விரலார்களில், அடையாள அட்டையாரை திணித்து வரவேற்போமே...! Welcome onboard !

      Delete
  23. டியர் எடிட்டர்...
    இந்த பதிவு என் பழைய நினைவுகளை கிளறி விட்டதென்னவோ நிஜம்..

    அப்போது எனக்கு 10 வயது என்று நினைவு... என் தந்தை வெளியூர் செல்கிறார் என்றாலே எங்களுக்கு ஒரே குஷிதான் (அண்ணன், 2 அக்காள்கள் மற்றும் நான்), அவர் எப்போதடா வருவார் என வாசலிலே காத்திருப்போம். காரணம் அவர் வரும்போது காமிக்ஸ்களும் உடன் வரும். (அப்போதெல்லாம் தேனி, திண்டுக்கல் கூட நான் கண்டிராத அயல் தேசங்களே).

    தந்தையார் வந்தவுடன் அடிபிடி சண்டைதான். அப்படிபட்ட ஒரு நாள் காலையில் என் கைக்கு வந்த இதழ்தான் 'நரகத்தின் எல்லையில்', முதலில் அந்தே 'மெர்செலான' ஓவியங்களை பார்த்து ஜெர்க் ஆனது தான் ஞாபகம்.. பின் 'உடன் பிறப்புக்கள்' படித்து என் கைக்கு வர மேலும் சில நாட்கள் ஆனது. மெதுவாக சித்திரங்களை உள்வாங்கி கதையை படிக்க படிக்க ஆஹா இன்னும் அந்த நினைவுகள், அன்று கேட்ட இளையராஜா பாடல்களை போல் இனிமையாக பதிந்துள்ளது. இன்றும் இந்த இதழ் எங்கள் வீட்டு லைப்ரரியில் உள்ளது.. 100 முறைக்கு மேல் படித்திருப்போம்.

    அதன் பின் வந்த 'காணமல் போன கழுகு','எரிமலை தீவில் பிரின்ஸ்', 'பிரின்ஸ் இன் அப்பிரிக்கா', பிரின்சை காப்பாற்ற பார்னே போராடும் அந்தே சின்னஞ்சிறு சாகசம் என அனைத்துமே எங்கள் வீட்டில் 100 நாட்கள் ஓடிய 'block Busters' தான்.


    சார்.. வாழ்க்கையின் சந்தோஷ அனுபவங்களை அசை போடுவது என்பது ஒரு சுகமென்றால், அவற்றை மீண்டும் அனுபவிப்பது வரமன்றோ.. அந்தே வரம் எங்களுக்கு கிட்டியிருக்கிறது உங்களது தவத்தினால்.. (என்னே அன்று தந்தையாரின் வரவுக்கு காத்திருந்தோம், இன்று 'ப்ரொபெச்சிஒனல் courier' க்காக காத்திருக்கிறோம்.)

    ReplyDelete
    Replies
    1. Muthu Kumaran ://என்னே அன்று தந்தையாரின் வரவுக்கு காத்திருந்தோம், இன்று 'Proffesional courier' க்காக காத்திருக்கிறோம்//

      வாழ்க்கையே ஒரு காத்திருத்தல் தானே ? ( தமிழகத்தில் இருந்து கொண்டு பஞ்ச் டயலாக் விடவொரு சந்தர்ப்பத்தை நழுவ விடலாமா ?!!)

      Delete
    2. Sir..

      அன்று என் தந்தைக்காக நான் காத்திருந்தேன்,காமிக்ஸ் வாங்கி வருவாரா என...

      இன்று என் தந்தை காத்திருக்கிறார், எனக்காக.. e-Bay இல் வாங்கி வருவேனா என....

      'காத்திருத்தல் தான் வாழ்கை'

      கொசுறு தகவல்: இன்றும் என் தந்தை (65) காமிக்ஸ் நேசர்..

      Delete
    3. // வாழ்க்கையே ஒரு காத்திருத்தல் தானே ? ( தமிழகத்தில் இருந்து கொண்டு பஞ்ச் டயலாக் விடவொரு சந்தர்ப்பத்தை நழுவ விடலாமா ?!!) //

      ha ha ha LOL

      Delete
  24. விஜயன் சார், சிறுவயதில் பக்கத்து வீட்டில் காமிக்ஸ் வாங்கி படித்ததன் மூலம் நமது காமிக்ஸ் அனுபவம் எனக்கும் எனது அண்ணனுக்கும் கிட்டியது. பக்கத்து வீட்டில் நமது மாயாவி/ஸ்பைடர்/ஆர்ச்சி/லாரன்ஸ்/ போன்ற தெரிந்த ஹீரோ கதைகளை மட்டும் வாங்குவார்கள் எனவே இந்த இரண்டு கதைகளை படித்ததாக நினைவு இல்லை, எனது காமிக்ஸ் "Collection" இந்த இரண்டு புத்தகம்களும் இல்லை என்பது கூடுதல் செய்தி :-) இந்த கடல் கும்பல் "one of my favorite" amount other comics hero's.

    ReplyDelete
    Replies
    1. Parani from Bangalore : //எனது காமிக்ஸ் "Collection" இந்த இரண்டு புத்தகம்களும் இல்லை//

      சூப்பர் அனுபவம் காத்துள்ளது நண்பரே !

      Delete
  25. பற்றி எரியும் பாலைவனம் நான் படித்ததில்லை, ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

    நரகத்தின் எல்லையில் அட்டை மற்றும் சில பக்கங்கள் இல்லாமல் இருக்கிறது.
    மிகவும் அருமையான கதை.பர்தான வில்லன் வாங் சதியால் சிறையில் அடைபட்டு தப்பிக்க செய்யும் சாகசம் அருமையாக இருக்கும்.

    பற்றி எரியும் பாலைவனம் அட்டை படத்தில் பிரின்ஸ் அப்படியே நம்ம கமான்சே ரெட் போலவே இருக்கிறார்.

    ஒரு வருத்தம் மாதம் முழுவதும் புத்தகங்கள் இல்லாதது தான், பிரித்து அனுப்பலாம் என்றால் கொரியர் செலவுகள் அதிகரிக்கும். சேர்ந்து வந்தால் உடனே படித்துவிடுகிறேன்.
    என்ன செய்வது என்று தெரியவில்லை.

    "கார்டோ மால்டிஸ்" சித்திரங்கள் கலரில் இருந்தால் மற்றும் கதை கரு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. கிருஷ்ணா வ வெ : //ஒரு வருத்தம் மாதம் முழுவதும் புத்தகங்கள் இல்லாதது தான்//

      'எண்ணிக்கையைக் கூட்டுகிறேன் பேர்வழி ' என்று தரத்தில் compromise செய்திடும் நிலை வேண்டாமே !!

      Delete

  26. "கார்டோ மால்டிஸ் போல உங்கள் பீரோவுக்குள் உள்ள சில முத்துக்களை வெளியிடலாம். அதுபோல பழைய கதைகளை அதிகமாக வெளியிடுவது மீண்டும் காலத்தின் பின்னோக்கி செல்வதுபோன்ற பிரமையை ஏற்படுத்தும்.

    கேப்டன் பிரின்ஸ் லயன் “Come Back” ஸ்பெஷலில் அட்டை படமாக வந்ததையும் அதில் வந்த கதை “Come Back” ஸ்பெஷலை அலங்கரித்ததையும், இன்றைய பரினாமவளர்ச்சிக்கு உதவியதையும் மறக்க முடியுமா?

    பற்றி எரியும் பாலை வனம், நரகத்தின் எல்லையில் வண்ணத்தில், பெரிய சைசில் ரசிப்பது ஒரு சுகமான அனுபவத்தை ஏற்படுத்தும்.

    இந்த இதழின் ஒரிஜினல்கள் உங்களில் எத்தனை பேரிடம் இன்னமும் உள்ளது ? அட இப்பொழுது வந்த கேப்டன் பிரின்ஸ் லயன் “Come Back” ஸ்பெஷல்லே காணவில்லை! பழைய ஒரிஜினல்களுக்கு எங்கே போவது?

    ReplyDelete
    Replies
    1. parimel @ இந்த இதழின் ஒரிஜினல்கள் உங்களில் எத்தனை பேரிடம் இன்னமும் உள்ளது ? அட இப்பொழுது வந்த கேப்டன் பிரின்ஸ் லயன் “Come Back” ஸ்பெஷல்லே காணவில்லை! பழைய ஒரிஜினல்களுக்கு எங்கே போவது? -> ME tooo :-)

      Delete
  27. கேப்டன் பிரின்ஸ் கதைகள் தான் நம் ரஸனைகளை அடுத்த கட்டத்திற்க்கு கொன்டு சென்றவவை ...ஹ்ம்ம்ம்ம்...அது எல்லாம் பொற்க்காலm...

    ReplyDelete
  28. Sir. "Naragathin ellaiyil" oru vayathana oviyaridam irunthu vangi ippothuthan padithen. Ennidamthan ippothu irukirathu. Matham 2 puthgam enpathu yaanai pasikku solapori.. But ungal nilayum purikirathu. Yanaiyai katti theeni poduvathu kadinam. :-)

    ReplyDelete
  29. ஸார் ...மின்னும் மரணம் அட்வான்ஸ் புக்கிங் எப்போது ..?

    ReplyDelete
    Replies
    1. AHMEDBASHA TK : டி-நகரில் தங்கம் வாங்காது போனாலும் - பொறுத்தார் சுன்ஷைன் லைப்ரரியில் மின்னும் பொன்னை வாங்கிடத் தான் செய்வர் !

      Delete
  30. நரகத்தின் எல்லையில் என் அன்னை என்னக்கு படித்து காட்டிய முதல் திகில் காமிக்ஸ் புத்தகம் அதன் வித்தியாசாமான சைஸ்னால் அது ரொம்பவே பிடித்து போன புத்தகமானது... எந்த பிரச்சனை வந்தாலும் உயிரே போகும் தருவாயிலும் வாழ்க்கையை இழுத்து பிடித்து ஓட்ட உத்வேகமாக இருக்கும் கேப்டன் பிரின்ஸ் கதைகளில் நான் முதலில் படித்து இதுவே..

    கலரில் அதனை ரசிக்க மீண்டும் எனது சிருவயதிற்கே இட்டு செல்லும் தங்களுக்கு என்றென்றும் நான் கடன்பட்டிருக்கிறேன்...

    அந்த காலத்திலே தமிழ் தான் வராதே தவிர அப்போதே நான் பான்ட் தான் அணிவேன்.. so அரை நிஜாருக்கு பட்டன் போடும் வேலை இல்லை... ஹி ஹி ஹி ஒரு கொசுறு தகவல்...

    ReplyDelete
    Replies
    1. Modesty Blaise : 'பான்டில் ஜிப் வைத்துத் தைக்கவா ? - பட்டன் வைக்கவா ? என்ற டைலர்களின் வினவல்களுக்கு பிந்தைய தலைமுறை போலும் நீங்கள் !!

      Delete
    2. நான் ஒரு ரெடிமேட் தலைமுறை என நினைக்கிறன்.. பாண்டி ஸ்ரீ ராம் சில்க்ஸ் எனது பெயரில் இருபதாலோ என்னவோ.. அங்கே தான் ரெடிமேட் தான் வாங்கணும் என்பேன்... மோஸ்ட்லி ஜிப் தான்...

      Delete
  31. திரு விஜயன்,

    என் நண்பர்கள் இருவரின் சசிறுவர்களுக்கு பரிசாக நமது காமிக்ஸ் சந்தா செலுத்த எனக்கு எண்ணம். அவர்கள் வயது அபௌட் 7.

    அவர்கள் வயதிற்கு நமது கிராபிக்ஸ் காமிக்ஸ், லார்கோ, ஷெல்டன் அறிமுகபடுத்த எனக்கு விருப்பமில்லை. ஆனால் எனக்கு அவர்களும் நம்ம காமிக்ஸ் படிக்க வைக்க ஆசை.

    அதனால் லக்கி லுக், சிக் பில், மதியில்லா மந்திரி, ஸ்டீல் பாடி, மியாவி, garfield, புதிதாய் அறிமுகம் ஆகும் காமிக் கேரக்டர் , டெக்ஸ் வகை கதைகள், இதை போன்ற ரிப்ரிண்ட் ஈஸ்சுஸ், எந்த லோகோ கீழ் வரும் என்று தெரிய படுத்துங்கள். அதற்கு நான் subscription கிபிட் செய்கிறேன் .

    Lion ?
    முத்து ?
    Sunshine ?

    இவண்
    சத்யா

    ReplyDelete
    Replies
    1. நன்றி, சுன்ஷைன் சுப்ச்க்ரிப்ஷன் தொகை?
      1. டு சென்னை - ஸ்டி குரியர்
      2. டு மதுரை - ஸ்டி குரியர்

      Delete
  32. அமெரிக்காவில் கடந்த ஆண்டு (மறு)அறிமுகமாகி இருக்கிறார் கார்டோ மால்டிஸ். புதிய ஆங்கிலப் பதிப்பின் வடிவமைப்பு & (புதிதாக இணைக்கப்பட்ட) வண்ணம் இவை இரண்டும் சொதப்பி இருக்கின்றன என்ற கடுப்பில் ஒரு காமிக்ஸ் வாசகர் எழுதி இருக்கும் காட்டமான விமர்சனம், இங்கே:
    How to destroy a comics classic

    ஐரோப்பிய காமிக்ஸ் புத்தகத்தின் பெரிய அளவை, சிறிய அமெரிக்க காமிக்ஸ் format-க்கு மாற்ற முயற்சித்ததால் இந்த பிரச்சினை! ஆனால், ஐரோப்பிய காமிக்ஸ்கள் விதவிதமான அளவுகளில் வெளிவந்தது நமது இதழ்களில் மட்டும்தான் என நினைக்கிறேன். :) "நதியில் ஒரு நாடகம்" உள்ளிட்ட பல திகில் காமிக்ஸ் இதழ்கள், (அந்த கால) க்ரைம் நாவல் சைஸில் வெளியாகிக் கொண்டிருந்தன. தூரத்தில் இருந்து பார்க்கும் போது அவை நாவலா, காமிக்ஸா என்ற குழப்பம் பலமுறை ஏற்பட்டதுண்டு!

    ReplyDelete
    Replies
    1. அடடா...சூட்சுமம் புரியா நல்ல பிள்ளையாய் இருக்கிறீர்களே கார்த்திக் ! நாவல்கள் ஒரு மொத்தமாய் புகுந்து, மார்கெட்டில் அதகளம் புரிந்த நாட்கள் அவை ! சைசிலாவது அவர்களோடு ஐக்கியமாகிட முடிந்தால் - விற்பனைக்கு நல்லதே என்ற மகா சிந்தனையின் பலனே அந்த ஒடுங்கிய சைஸ் !

      Delete
    2. // சைசிலாவது அவர்களோடு ஐக்கியமாகிட முடிந்தால் - விற்பனைக்கு நல்லதே என்ற மகா சிந்தனையின் பலனே அந்த ஒடுங்கிய சைஸ் !//

      : ) : )

      Delete
  33. Attempting to install necessary tools to type in tamil. Meanwhile i want to say
    Sir, the cover photos of patri eriyum palaivanam are mesmerising. i have put it in my pc background image.
    Just imagining the grand old days, Summer in the may month in chennai, a lazy morning, nothing to do, no school, Hot sun, and the big fat kodai malar book from lion comics in my hand to read along with friends.

    ReplyDelete
    Replies
    1. :-) summer days are still very much there....lazy mornings too...!

      Delete
    2. Thank you sir and Yes, Almost everything is still there and that is why we the lion-muthu comics fans
      can proudly say that we are a bunch of lucky fellows.

      Delete
  34. My favorite childhood comics heroes.... are coming back to give me again those days happy moments.
    "பற்றி எரியும் பாலைவனம்" mesmerised me when i read that story (second hand) in 1989 i believe... I love that kind of artwork (it teached me a lot), Barne (equalent hero of this story), Medicine mission..., high temper climax... vow... the story beats any hollywood movie...)
    I am sure prince collections going to be all time hit.

    Dear Sir, Thanks for bringing them back with extraordinary quality...
    we need full collection of captain & co reprints in future...
    Highy recommended series for todays children too..

    Thanq so much...:)

    ReplyDelete
  35. எனக்கு மிகவும் பிடித்த பிரின்ஸ் கதைகள் இரண்டும் ஒரு சேர்ந்து ஒரே இதழில் வருவது மகிழ்ச்சி என்ற சாதாரண வார்த்தை யில் சொல்லுடன் முடிக்க முடியாது.
    இப்போது அந்த புத்தகம் என்னிடம் இல்லாவிட்டாலும்
    பழைய மொழிபெயர்ப்பு தான் என்பதை படத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

    (அட! அந்த டயலாக் முழுக்க வரிக்குவரி ஞாபகம் உள்ளது! என்ன ஆச்சரியம்.!)

    திகில் காமிக்ஸில் வெளிவந்த " பயங்கரப்புயல்" எப்போது சார்?

    ReplyDelete
    Replies
    1. COMICSPRIYAN@SALEM.AMARNATH : //" பயங்கரப்புயல்" எப்போது சார்?//

      ஒவ்வொரு படியாய் ரசித்து நடை போடுவோமே ? :-)

      Delete
  36. Attempting to install necessary tools to type in tamil. Meanwhile i want to say

    Sir, please publish at least once in a year in the big fat pocket book style format, B & W is also fine. There is some glamour and an addiction associated with it.

    ReplyDelete
  37. Hi Karthik

    அலிபாபா ஒரிஜினல் பெயர் தெரியுமா? வலையில் தேடுவதற்கு

    ReplyDelete
  38. விஜயன் சார், நமது காமிக்ஸ் புத்தகத்தில் "Commercial" விளம்பரம்கள் வரும் வாய்ப்பு உள்ளதா? இதில் தங்களின் நிலைப்பாடு என்ன? நமது காமிக்ஸ்-ல் சில பக்கம்களை விளம்பரத்திற்கு என ஒதுக்கினால் நமது காமிக்ஸ்-ன் விலை குறைய வாய்ப்புள்ளதா? நாம் யாரையாவது இது விசயமாக அணுக வாய்ப்புள்ளதா?

    "Commercial" விளம்பரம் கொடுபவர்கள் நமது வாசகர் வட்டத்தின் அளவை பொருத்தது முடிவு செய்வார்கள் என நெனைகிறேன்.

    இது வரை நமது காமிக்ஸ் புத்தகத்தில் "Commercial" விளம்பரம்களை பார்த்தது இல்லை மேலும் விளம்பரம் பற்றி நமது காமிக்ஸ்-ன் நிலைபாடு பற்றி தெரியாததால் இந்த பதிவு.

    ReplyDelete
    Replies
    1. I have posted the same in your previous post, since you are online I thought of bringing this into your notice. Please dont mistake.

      Delete
  39. எடிட்டர் சார்..

    செப்டம்பர் இதழ்கள் இரண்டும் என்று கிடைக்கும்..?

    ReplyDelete
  40. விஜயன் சார், நமது காமிக்ஸ் பற்றிய நோட்டீஸ்களை பேப்பர் போடும் பையன்களிடம் கொடுத்து தினசரி பேப்பர் உடன் இணைத்து போட சொன்னால் நமது காமிக்ஸ் வரும் விபரம் பலரிடம் சென்று அடையும். இதன் செலவு குறைவு என நினைக்கிறன். இதனை நாம் ஒவ்வொரு ஊராக ஆரம்பிக்கலாம்! இந்த யோசனை நமது காமிக்ஸ் நண்பர் "ராகவன்" ஏற்கனவே ஒரு பதிவில் கூறியதாக நினைவு.

    ReplyDelete
  41. //"எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா ? என்ற கேள்வியைக் கொஞ்சமாய் மாற்றியமைத்து "எத்தனை கோடி காமிக்ஸ் உருவாக்கினாய் இறைவா?'//

    உண்மை !!! உண்மை !!! உண்மை !!!!

    //உங்களில் எவரேனும் இந்தக் கதைகளை முதன்முறையாகப் படிக்கவிருக்கும் பட்சத்தில், உங்களுக்கொரு அட்டகாச அனுபவம் காத்துள்ளது என்பதை உறுதியாய்ச் சொல்லிடுவேன் ! //

    காத்திருக்கிறேன் சார், இன்னும் இந்த இரண்டு கதைகளையும் படித்ததில்லை ....



    ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி செய்ய முடியுமா சார் ?



    ReplyDelete
  42. பார்த்துக்கோங்க... பார்த்துக்கோங்க... நானும் ரௌடி நானும் ரௌடி.

    ஒண்ணும் இல்லே.. ரெண்டு புக்கும் என் கிட்டே இருக்கு.

    முழு வண்ணத்தில் படிக்க காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  43. டியர் சார்...
    கேப்டன் பிரின்ஸ் கதைகளை பல முறை ரசித்து படித்ததுண்டு. இதன் காரணத்தினாலே எனது வலைத்தளத்தில் ஆரம்ப நாட்களில் பிரின்ஸ் கதைகளைப் பற்றிய பதிவையே அதிகம் போட்டுள்ளேன். நரகத்தின் எல்லையில் புத்தகத்தின் பதிவை போட்ட போது தாங்கள் அதில் எனக்கு முதன் முதலாக ஒரு கமெண்ட் ஆங்கிலத்தில் போட்டுள்ளீர்கள். இன்றும் அது ஒரு பசுமை நினைவாக உள்ளது. கருப்பு வெள்ளையில் ரசித்த பிரின்ஸ் கதைகள் அனைத்தும் வண்ணத்தில் வருவது மிகுந்த மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. கலீல் @
      தங்களின் காமிக்ஸ் காதலை பாராட்ட வார்த்தைகள் இல்லை! தாங்கள் வாழ்கையில் எல்லாம் வளம் மற்றும் நலம் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்.

      Delete
    2. உங்கள் அன்புக்கும், வாழ்த்துக்கும் நன்றி பரணி சார்...

      Delete
  44. இரண்டையுமே நான் படித்ததில்லை...... இனிய அனுபவத்துக்காக காத்திருக்கிறேன்.....

    நண்பர் சிபியின் புண்ணியத்தால் தற்போது கார்சனின் கடந்த காலத்துடன் என் ஓய்வு நேரங்கள் இனிமையாக கழிகின்றன.....குறைந்தது ஐந்து முறையாவது படித்தபின்தான் திருப்பிக்கொடுப்பதாக உத்தேசம்......

    ReplyDelete
    Replies
    1. சிவ.சரவணக்குமார் @ புத்தகத்த திரும்ப கொடுக்க மாட்டேன் என்பத எப்படி அழகா சொல்லுறிங்க பாஸ் :-)

      Delete
    2. :D

      ஆமா! நாலுமுறை படிச்சுட்டு அதோட நிறுத்திடுவார்னு தோணுது! :)

      Delete
    3. @ சிபி

      'கார்சனின் கடந்த காலம்' இனி உங்களுக்கும் கடந்த காலம்தான்! :)
      சுருக்கமா சொல்லணும்னா, "ராமசாமிக்கு குடுத்த கடன் - ஊ ஊ ஊ.... " :D

      Delete
    4. ஆகா... அருமையான உதாரணம்...ஊஊஊஊ...
      சிபிக்காகவும் ஒரு தடவை மறுபதிப்பு கோரிக்கை வைக்கபடுகிறது...

      Delete
    5. tex kit @ கேப்புள்ள கடா வெட்டுறத விட மாட்டிங்க போல தெரியுது :-)

      Delete
    6. ச்...ச்...ச்...... நண்பர்களே.....இந்த பச்சப்புள்ளையப்போய் தப்பா நினைச்சுட்டீங்களே....... நமக்கு தெரிந்ததெல்லாம்..... நேர்மை......கருமை...... எருமை.......

      சிபி... நீங்க பயப்படாதீங்க......கண்டிப்பா கொடுத்திருவேன்.....[ இன்னும் எத்தனை புக் வாங்க வேண்டியிருக்கு....பொன் முட்டையிடும் வாத்தை அதுக்குள்ள அறுப்போமா?]

      Delete
  45. டியர் எடிட்டர்,

    உங்களின் இந்தக் 'குறும்பதிவு'க்கு நன்றி!

    'டபுள் த்ரில் ஸ்பெஷலோடு' பிரியா விடைபெற்றுச் சென்ற பிரின்ஸ் குழுவினரை மீண்டும் (மறுபதிப்பாக) சந்திக்கவிருப்பது, நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பனொருவனை சந்திக்கவிருப்பதைப் போன்ற  ஆவலை ஏற்படுத்துகிறது. அதுவும்,  அன்று கருப்பு-வெள்ளையில் கண்டவர்களை இன்று வண்ணத்தில்! ஆஹா!!

    ஒட்டகத்துடன் பார்னே படும்பாட்டை பார்க்கும்போது அந்தக் குறிப்பிட்ட காட்சிகள் நினைவுக்கு வந்தாலும், முழுக்கதையும் இப்போது நினைவிலில்லை. என்னிடம் பழைய புத்தகமுமில்லை. எனவே, வரவிருக்கும் பிரின்ஸ் குழுவினரை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.

    இந்த இதழின் அட்டைப்படம் எப்படியிருக்கப் போகிறது என்ற ஆவலும் அதிகரித்திருக்கிறது.

    புரிந்துகொள்ள பெரியதொரு மெனக்கெடல் அவசியமில்லாத இந்தமாதிரியான கதைகள், அன்றைய சிறுவர்களான எங்களைப் போலவே இன்றைய சிறுவர்களையும் வசீகரிக்கும் என்றே நம்புகிறேன்!

    இதற்குமேல் இரண்டு வரி எழுதினாலும் உங்களின் இந்தப் பதிவைவிட நீளமாகச் சென்றுவிடும் என்பதால், இத்துடன் இந்த கமெண்டை(மட்டும்) நிறைவுசெய்கிறேன். நன்றி! வணக்கம்! :)

    ReplyDelete
  46. பிரின்ஸ் கதைகளிலேயே எனது நம்பர் 1 favorite "நரகத்தின் எல்லையில்" தான்.
    சதுப்பு நில காடுகளில், மழை பெய்யும் வேளையில் பிரின்ஸ் குழுவினர் செய்யும் சாகசத்தோடு ஒன்றி நானும் அவர்களோடு பயணம் செய்யும் அனுபவத்தை ஒவ்வொரு முறையும் படிக்கும்போது ஏற்படும். இப்போதும் மழை நாட்களில் பச்சை பசேல் என்ற இடத்தில் இருந்தால் இந்தக் கதையின் ஞாபகம்தான் வரும். அந்ததளவுக்கு என்னுள் மாற்றத்தை ஏற்படுத்திய கதை.

    இந்தக் கதை வந்த நாட்களில் நான் புதுச்சேரியில் Alliance Français ல் பிரெஞ்சு படித்துக்கொண்டிருந்தேன். அந்த லைப்ரரியில் நமது குழுமத்தின் வெளியீடுகள் எல்லாம் ஒரிஜினலில் கிடைக்கும். அந்த வகையில், நான் இந்த "நரகத்தின் எல்லையில்" பிரெஞ்சு புத்தகத்தை எடுத்து வைத்து படம் பார்த்து நமது தமிழ் வசனத்துடன் படித்ததெல்லாம் ஞாபகம் வருகிறது.

    காமிக்ஸ் எப்படியெல்லாம் நம் வாழ்க்கையில் பின்னி பினைந்துவிட்டது! :-)

    ReplyDelete
  47. கேப்டன் பிரின்ஸ்-ன் இரண்டு கதைகளுமே என்னிடம் இல்லை! இரண்டும் வண்ணத்தில் பெரிய சைசில் படிக்கப்போவதை நினைத்தால் ஆனந்தமாய் இருக்கிறது!

    ReplyDelete
  48. ஒருமுறை என்னை பூனை கடித்துவிட்டது. அப்போது என்னுடைய அப்பா தினமும் டாக்டரிடம் ஊசி போட கூட்டிச்செல்வார். அப்போதெல்லாம் அந்த ஆஸ்பத்திரியின் நறுமணமும், ஸ்டெரிலைஸ் செய்யும் உபகரணங்கள் தரவிருந்த பீதியும் பிரின்ஸின் கதையில் மூழ்கியிருந்த காரணத்தால் குறைத்துவிட்டது!

    ReplyDelete
    Replies
    1. என்னது கிறுக்கும் பூனையார் கடித்து விட்டாரா!

      Delete
    2. வாய்ப்பில்லை, கிறுக்கும் பூனை கடிக்காது என்று என்று நினைக்கிறேன்!

      Delete
    3. // ஒரு முறை என்னை பூனை கடித்துவிட்டது //

      யுவர் ஆனர்,
      எதிர்தரப்பு வாதி கதையைப் பாதியிலிருந்து தொடங்கியிருக்கிறார். பூனை இவரைக் கடிக்கும் முன், பூனையை இவர் என்ன செய்தார் என்பதை சொல்லட்டுமே?
      பூனை ஒரு தனிமை விரும்பி; அது யாரையும் தேடிச் சென்று கடிப்பதில்லை - என்ற உண்மையை நீங்கள் அறியாதவரல்லவே?

      Delete
    4. கிறுக்கும் பூனைக்குட்டி, உங்கள் ஆதங்கம் புரிகிறது! நான் கடிவாங்கியது ஒரு ரௌடி பூனையிடம் யுவர் ஆனர்! எங்கள் வீட்டில் வளர்த்துவந்த அப்பாவி பூனைகளை இந்த ரௌடி (dotted gray) பூனை வீடுபுகுந்து துவம்சம் செய்துவந்தது. அப்படிப்பட்ட மதக்கலவரத்திற்கு நாடுவில்தான் அப்பாவியான நான் shelf-இல் ஏறிவிட்டு இறங்க முடியாமல் அல்லாடிய ரௌடியை கைகளால் தூக்கி கீழே விடுக்கும்போது கடிபட்டேன். :D

      Delete
    5. //shelf-இல் ஏறிவிட்டு இறங்க முடியாமல் அல்லாடிய //

      நம்புற மாதிரி இல்லையே? பூனை மொட்டை மாடியிலிருந்து குதித்து குருவி விஜய் மாதிரி ஓடுவதை பார்த்திருக்கிறேனே? எதும் உள் குத்து இருக்கோ?

      Delete
    6. பூனைகளைப்பற்றி பேச்சு வந்தாலே கொந்தளிப்பதை ஈரோட்டார் நிறுத்தாவிட்டால் , பெயர் மாற்றம் குறித்து பெயரியல் நிபுண‌ர் கார்த்திக் சோமலிங்காவுடன் கலந்து ஆலோசிக்கப்படும்.......

      Delete
    7. சிவ.சரவணக்குமார், அந்தப்பூனையின் பிரச்சனை shelf-இன் உயரமல்ல. அது வீட்டுக்குள்ளிருந்து வெளியேறி ஓட வழி தெரியாமல் shelf - ஐ விட்டு இறங்காமலேயே இருந்தது - நள்ளிரவு 1.30 மணிக்கு. :D

      Delete
    8. அப்படிக் கேளுங்க சிவ.சரவணகுமார்! பூனைகளால் 13 அடுக்கு மாடியிலிருந்துகூட குதித்து எந்தவித சிராய்ப்புமின்றி 'லேண்டு' ஆகிவிட முடியும் எனும்போது, இவர் shelfலேர்ந்து இறக்கிவிட்டு உதவினாராம்; அதுவும் ஒரு ரவுடிப் பூனையை! விட்டால் 'திண்னையிலிருந்து இறக்கிவிட்டு பூனையைக் காப்பாற்றினேன்'னு சொல்வார் போலிருக்கு! :D

      Delete
    9. ஐய்யய்யோ, ஆரம்பிச்சிட்டாங்கப்பா நெடுக்கு விசாரணையை! Escape! :D

      Delete
  49. Double special for the comings months.Next year onwards triple special per month..

    ReplyDelete
  50. நேற்று oxford book shop ல் லக்கி லுக்(english) 24 கதைகள் கிடைத்தன...euro kids publication..சுட்டி புயல் அந்த தொகுப்பில் இருந்தது..மற்றும் பல நமது
    இதழில் வந்த கதைகள் அதில் இருக்கின்றன...

    ReplyDelete
    Replies
    1. link please .. send it to my mail-id! I am interested to buy the same.

      Delete
    2. http://www.oxfordbookstore.com/dotcom/oxford/

      Mail is not going.failure message getting.4 stores in bangalore one in ITPL also.

      Delete
  51. This comment has been removed by the author.

    ReplyDelete
  52. விஜயன் சார், எனக்கு ஒரு டவுட்-டு; செப்டம்பர் மாசம் 2 புக்கா அல்லது 3 புக்கா? [1 கிராபிக் நாவல் +1 பிரின்ஸ் ஸ்பெஷல் + 1 புது காமெடி ஹீரோ (Sunshine Library Rs.50)]

    ReplyDelete
  53. பொதுவாக கேப்டன் ப்ரின்ஸ் கதைகளைப்பற்றி நண்பர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன் ஆனால் பழைய கதைகள் ஒன்று கூட படித்ததில்லை. இப்போது அவற்றை வண்ணத்தில் படிக்கபோவது ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும். ஆவலுடன் காத்திருக்கிறேன். அது போல "சைத்தான் துறைமுகமும்" அருமையான கதையாமே... இதுவும் விரைவில் வந்தால் நன்று...

    ReplyDelete
  54. முதலில் படித்த பிரின்ஸ் கதை "பிரின்ஸ் இன் ஆப்பிரிக்கா" .அந்த கதையிலெ வெகுவாக கவர்ந்து விட்டார்.ஆவலாக எதிர் பார்க்கிறேன் இந்த கதைகளை... செப்டம்பர் 2 தேதி கிடைக்குமா??

    ReplyDelete
  55. இந்த இருகதைகளும் என்னிடமுள்ளது...ஆனாலும் வண்ணத்தில், பழைய மொழிபெயர்ப்பிலேயே படிப்பதற்காக காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இதுவரை வந்த பிரின்ஸ் கதைகளின் தலைப்புகளை பகிரலாமே...என் நினைவில் உள்ளனவற்றை கீழே தந்துள்ளேன்.

      சைத்தான் துறைமுகம்,
      பயங்கர புயல்,
      கொலைகார கானகம்,
      நதியில் ஒரு நாடகம்,
      காணமல் போன கழுகு,
      பனி மண்டல கோட்டை,
      சாகச தலைவன் பிரின்ஸ்,
      எரிமலைத் தீவில் பிரின்ஸ்...

      Delete
  56. எனது நண்பன் நமது கிரீக் மேனர் படித்துவிட்டு வான் காமேயின் தோர்கல் இதைவிட நன்றாக இருக்கும் என்று சொல்கிறான். நமது புது முயற்சியில் தோர்கலையும் பயன்படுத்தி பார்க்கலாமே

    ReplyDelete
  57. ***
    @விஸ்கி-சுஸ்கி:
    //ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்னே பப்ளிஷ் ஆனா புராதன கருப்பு வெள்ளை கதைகள அறிமுகப்படுத்தசொல்லி கேட்கறீங்க??? நியாயமா இது??//
    கார்டோ மால்டிஸ் கதைகளை நான் படித்ததில்லை என்பதால் இது பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால், இணையத்தில் பார்த்த வரையில் இது ஒரு புகழ் வாய்ந்த க்ளாஸிக் கதைத்தொடர் என்று தெரிகிறது. 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் நடைபெறுவது போன்ற கதையமைப்பு, ப்ளூபெர்ரி & பிரின்ஸ் போல யதார்த்தமானதொரு கதாநாயகன், கடல், கப்பல், கொள்ளையர்கள், சாகசப் பயணங்கள், முதலாம் உலகப்போர் பின்னணி என்று சுவாரசியமாகத்தான் தெரிகிறது! மேலோட்டமாகப் பார்த்தால் கிறுக்கலாகத் தெரியும் அந்த ஓவியங்களிலும் ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கிறது - உதாரணத்திற்கு இது!

    தவிர சில கதைத் தொடர்கள் காலத்தை வென்று நிற்கும் - லக்கி லூக், ப்ளுபெர்ரி போல! இதுவும் அந்த வகையைச் சேர்ந்ததா இல்லையா என்பதை அனைவரும் படித்துப் பார்த்துதான் சொல்ல வேண்டும்! :)

    //நம்ம காமிக்ஸ்'ல சமீபத்திய காமிக்ஸ் உலக படைப்புகள் வந்த கலக்கலாக இருக்கும்! : )//
    நிச்சயமாக! புதிய படைப்புகள் அதிக அளவிலும், கிளாசிக் படைப்புகள் அவற்றின் வரவேற்பைப் பொறுத்தும் வெளியாகலாம்!

    ***
    @விஜயன் சார்:
    //அடடா...சூட்சுமம் புரியா நல்ல பிள்ளையாய் இருக்கிறீர்களே கார்த்திக் !//
    அப்ப நான் குட்டிப் பையன்கிறதுனால அவ்வளவா விவரம் பத்தாது சார், அவ்வ்! :) :) ஆனா, நீங்க சொல்ற மாதிரி அந்த காலத்துல இந்த (பாக்கெட்) நாவல்கள்தான் கொடிகட்டிப் பறந்துச்சு!. இப்ப நிலைமை தலைகீழ். அவங்க இன்னும் அதே நியூஸ் பிரிண்ட்டிலேயே வண்டியை ஓட்டுறாங்க! நாம கலர்புல்லா வளர்ந்து நிற்கிறோம்!

    ***
    @Sathya:
    //Hi Karthik, அலிபாபா ஒரிஜினல் பெயர் தெரியுமா? வலையில் தேடுவதற்கு//
    அதான் விஜயன் சாரே சொல்லிட்டாரே, (ஃப்ரொபைல் ஃபோட்டோல) அழுகையை நிறுத்துங்க! :)

    ***
    @சிவ.சரவணக்குமார்:
    //நண்பர் சிபியின் புண்ணியத்தால் தற்போது கார்சனின் கடந்த காலத்துடன் என் ஓய்வு நேரங்கள் இனிமையாக கழிகின்றன.....குறைந்தது ஐந்து முறையாவது படித்தபின்தான் திருப்பிக்கொடுப்பதாக உத்தேசம்...... //
    அஞ்சு மாசம் கழிச்சு கொடுத்தாலும் சிபி கோச்சுக்க மாட்டார்! ரொம்ப நல்லவர்ங்க! :) ஏண்டா அவரசப்பட்டு MDS-ஐ திருப்பிக் கொடுத்தோம்னு எனக்கு ஒரே ஃபீலிங்!

    ***
    @கிறுக்கும் பூனைக்குட்டி Erode VIJAY :
    //பூனை ஒரு தனிமை விரும்பி; அது யாரையும் தேடிச் சென்று கடிப்பதில்லை//
    என்னே ஒரு பூனாபிமானம்! ;) (கொள்ளைக்கார கார் - என்ன ஒரு காராபிமானம் நினைவிற்கு வருகிறதா?!)

    @சிவ.சரவணக்குமார்:
    //பூனைகளைப்பற்றி பேச்சு வந்தாலே கொந்தளிப்பதை ஈரோட்டார் நிறுத்தாவிட்டால் , பெயர் மாற்றம்//
    அதானே!!! பூனைன்னு பெயர் வச்சவுடன் இவருக்கு பூனைக் குணமான முன்கோபம் அதிகமாயிருச்சு! :)

    ReplyDelete
    Replies
    1. @ கார்த்திக்

      // என்னே ஒரு பூனாபிமானம் //

      இப்படி கொஞ்சம்கூட கரடியாபிமானம் இல்லாம பேச உங்களுக்கு எப்படித்தான் மனசு வந்ததோ?!! :D

      Delete
    2. கார்டோ மால்டிஸ் கதையின் ஓவிய தரம் நம்மை போன்ற காமிக்ஸ் பிரியர்களுக்கு ஓகே
      மற்றவர்களுக்கு?

      Delete
    3. விறுவிறுப்புக்கும், கதைக்கும் முக்கியத்துவம் தருபவர்கள் அதிகம்.....முதல் கதை வந்த பின்னர் வாசகர்கள் விருப்பத்தை பொறுத்து ஆசிரியர் முடிவெடுக்கட்டுமே,,,

      Delete
    4. @Mugunthan kumar:
      //கார்டோ மால்டிஸ் கதையின் ஓவிய தரம் நம்மை போன்ற காமிக்ஸ் பிரியர்களுக்கு ஓகே மற்றவர்களுக்கு?//
      உண்மைதான்! ப்ளூபெர்ரி கதைகளின் கொச கொச ஓவியங்களைப் பார்த்து 'தரமற்ற காமிக்ஸ்' என தவறாக எடை போட்டு, அதை படிக்காமல் தவற விட்டவர்கள் எத்தனை பேரோ?! இழப்பு அவர்களுக்கே! :)

      ***
      @கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்:
      //அருமை ! கதை பெரியதொடர் போலுள்ளதே!//
      ஆமாம்! ஆனால், பெரும்பாலான தகவல்கள் இத்தாலிய அல்லது வேறு மொழிகளில் இருப்பதால் மொத்தம் எத்தனை பாகங்கள் என்று சரியாகத் தெரியவில்லை. கார்டோ பற்றிய உருப்படியான ஒரு ஆங்கிலத் தளம்:
      http://cortomaltese.com/

      ***
      @Erode VIJAY:
      //இப்படி கொஞ்சம்கூட கரடியாபிமானம் இல்லாம பேச உங்களுக்கு எப்படித்தான் மனசு வந்ததோ?!! :D//
      ஒரு மனிதன் மேல் அபிமானம் வைத்து ஆதரவாக, அக்கறையாக இருந்தால் அதற்குப் பெயர் மனிதாபிமானம்! நீங்கள் பூனை மேல் அபிமானம் வைத்துப் பேசியதால் உங்களுக்கு இருப்பது பூனாபிமானம். நான் உங்களிடம் கரடியாபிமானம் இல்லாமல் பேசி விட்டேன் என்று வருத்தப்படுகிறீர்கள்! அப்ப நீங்க... நீங்க...?! ;)

      Delete
    5. // அப்ப நீங்க... நீங்க...?! //

      ஹம்... கரடி கந்தசாமிதான்!

      Delete
    6. ஒரே பூனை....கரடி நடமாட்டமா இருக்கு,......வண்டலூர் ஜூவுக்குள் வழி தவறி வந்துவிட்ட மாதிரி இருக்கு.........கொஞ்சம் காமிக்ஸ் பத்தி பேசுவோமா?

      Delete
    7. //மேலோட்டமாகப் பார்த்தால் கிறுக்கலாகத் தெரியும் அந்த ஓவியங்களிலும் ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கிறது - உதாரணத்திற்கு இது! //

      இது "நிலவொளியில் ஒரு நரபலி" மாதிரி சிறிய size page - ல் மட்டுமே எடுபடும் என்று தோன்றுகிறது - அதுவும் கதை வலுவாகஇருந்தால் பட்சத்தில் மட்டும்.

      Delete
    8. @karthi - mathitta pochi

      "கொள்ளைக்கார கார் - என்ன ஒரு காராபிமானம்"

      i think the story name is super car

      nathai road cross seyum podu super car sudden brake pottu nikkum appo nathai thirubi parthu inda dialogue adikkum

      nan padichadilayae for whatever reason en manadil aani aditha madri padintha oru dialogue

      ungalidam inda puthagam, MR Z edavudu irukkirada

      en kitta old books onnnu kuda illa

      comeback specail appo book exhibition stallil vangiya bundle irukku but namma kitta illadadu meladanae eppovumae oru kannu

      Delete
  58. சார்,

    அப்போதே நான் சில இதழ்களை இரண்டிரண்டாக வாங்கியதில் பற்றி எரியும் பாலைவனமும் ஒன்று. பிரின்சின் கதைகளும் சரி சித்திரங்களும் சரி வாசகனை ஒரு போதும் ஏமாற்றியதில்லை. (விதிவிலக்கு புரச்சிதலைவன் பிரின்ஸ் - கதை சொதப்பல், சித்திரம் சூப்பர்.) நரகத்தின் எல்லையில் நான் பார்த்ததும் இல்லை படித்ததும் இல்லை. (எனக்கும் காமிக்ஸ்க்கும் ஒரு நீண்ட இடைவெளி ஏற்பட்ட சமயத்தில் வெளிவந்ததால்.)
    இந்த முறை கிராபிக் நாவல் என் தலையை சொறியயிருப்பதால் பிரின்சின் மறுபதிப்பே என்னை பொறுத்தவரையில் முதல் பதிப்பாகக் கருதி படிக்கவிருக்கிறேன். பிரின்சின் மறுபதிப்பில் என்னுடைய அடுத்த சாய்ஸ் 'பயங்கர புயல் மற்றும் பனி மண்டலக் கோட்டை'.

    ReplyDelete
  59. sir, விரைவில் முதலை பட்டாளம் கதைகளை (மறு பதிப்பு / புதிய கதை) எதிர்ப்பார்க்கிறேன். நமது லயனின் மறு பிரவேசத்திற்குப் பிறகு இன்னும் வில்லியம் வான்ச் கைவண்ணம் பார்க்கவே இல்லை என்பதை நினைவு படுத்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்.. ஆமாம்... முற்றிலும் உண்மை ...
      வில்லியம் வான்ஸ் சித்திரங்களை, வண்ணத்தில் ,ஆர்ட் பேப்பரில்.. வாவ்..

      Delete
  60. Sir. Kardo Maldis 1 page aavathu inga upload pannungalen. Kirukkalana sketchy drawings a kooda sila neram rasikkumpafithane irukkirathu..

    ReplyDelete
    Replies
    1. @ சாரதி

      கார்த்திக் தனது பின்னூட்டத்தில் (கொஞ்சம் மேலே) 'உதாரணத்துக்கு இது' என்று ஒரு லிங்க் கொடுத்திருக்கிறாரே; கவனிக்கலையா நீங்க?

      Delete
    2. Ooos.. Kavanichutten Poonaiyare! Sila panelkal mattum rasikka mudikirarhu.Kathai nanraga irunthal mattume edupadum enru ninaikiren.

      Delete
  61. கார்த்திக் சோமலிங்கா :
    ப்ளூபெர்ரி கதைகளின் கொச கொச ஓவியங்களைப் பார்த்து 'தரமற்ற காமிக்ஸ்' என தவறாக எடை போட்டு, அதை படிக்காமல் தவற விட்டவர்கள் எத்தனை பேரோ?! இழப்பு அவர்களுக்கே! :)

    டைகர் கதையின் ஓவியங்களும் மால்டீஸ் ஓவியங்களும் ஒன்றா? டைகர் கதையின் ஓவியங்கள் கொச கொச என்று இருப்பதாக உங்களுக்குதான் தோன்றுவதாக நான் நினைக்கிறேன். நமது காமிக்ஸ் வருவது தெரியாமல் டைகர் கதைகளை தவறவிட்டவர்கள்தான் அதிகமே தவிர ஓவியத்திற்காக அல்ல. கலரில் படிக்க தொடங்கியவுடன் பழைய கருப்பு வெள்ளை காமிக்ஸ் ஓவியங்கள்தான் கொச கொசவென்று தெரிகிறது.

    ஒரு காமிக்ஸின் வெற்றிக்கு ஓவியத்தின் பங்குதான் அதிகம். அந்த தரம் மால்டீஸ் கதையில் இல்லை.
    சமீபத்தில் நடந்த புத்தக திருவிழாவில் லார்கோ அட்டைபட சித்திரம் நன்றாக இல்லை என்று பலர் அதை புறக்கணித்ததாக நண்பர் ஒருவர் நமது வலைதளத்தில் பதிவிட்டதாக நினைவு.

    சந்தா செலுத்தியவர்கள் வேண்டுமானால் மால்டீஸ் கதைகளை பெற்றுக் கொள்வார்கள். புது வாசகர்கள் மற்றும் புத்தக திருவிழாவிற்கு வருபவர்களை இது கவருமா என்பது சந்தேகம்தான்.

    ReplyDelete
    Replies
    1. @Mugunthan kumar:
      //டைகர் கதையின் ஓவியங்கள் கொச கொச என்று இருப்பதாக உங்களுக்குதான் தோன்றுவதாக நான் நினைக்கிறேன்//
      அதில் சந்தேகமே வேண்டாம்! நான் இங்கு சொல்வதெல்லாம் என்னுடைய கருத்துக்கள் மட்டுமே! ஆனால், டைகர் ஓவியங்கள் முதல் பார்வையில் பிடிக்காமல் போனது எனக்கு மட்டும்தானா என்றால் அது நிச்சயம் இல்லை. ஆசிரியர் கூட டைகர் ஓவிய பாணி முதல் பார்வையில் பிடிக்கவில்லை என்று பழைய இதழ் ஒன்றில் எழுதியதாய் ஞாபகம், எந்த இதழ் என்று நினைவில்லை! ஆனால், சமீபத்தில் தங்கக் கல்லறை மறுபதிப்பில் என்ன எழுதியிருந்தார் என்று பாருங்களேன்:

      காமிக்ஸ் டைமில் இருந்து:
      //கேப்டன் டைகர் கதைகள் பல காலமாய் பிரெஞ்சு, இத்தாலியன் போன்ற மொழிகளில் ஒரு Popular நாயகராக வலம் வந்த போதிலும், எனக்கு அவர் மீது அவ்வளவாக ஒரு அபிமானம் ஏற்பட்டிருக்கவில்லை! சவரம் செய்யா அந்த முகம்; மொச்சக்கொட்டை மூக்கு; காய்ந்து போன பாலைவனங்களில் பயணிக்கும் கதைக்களம் என்று எல்லாமே வறட்சியாக இருப்பது போல எனக்குப் பட்டது. So - நமது படைப்பாளிகள் டைகர் கதைகளைப் பரிந்துரை செய்திருந்த போதிலும் நான் அதனைக் காதில் சீரியஸாகப் போட்டுக் கொள்ளவில்லை.

      1994-ல் வேறு பணிகள் நிமித்தமாய் சிங்கப்பூர் பயணமாகியிருந்த போது வழக்கமாய் அங்கே நான் வேட்டையாடும் ஒரு கடையில் கேப்டன் டைகரின் ஆங்கில ஆல்பங்கள் 2 என் கையில் சிக்கின. The Lost Dutchman Mines என்ற அந்த ஆல்பங்களை இன்னும் பிற சேர்த்து வாங்கியிருந்தேன். அன்றிரவு சென்னை திரும்பும் விமானத்தில் கொட்டாவிகளுக்கு மத்தியில் புரட்ட ஆரம்பித்த முதல் இதழ் டைகரின் இந்த சாகசமே! படிக்க ஆரம்பித்த சற்றைக்கெல்லாம் என்னுள் ஒரு விவரிக்க இயலாத பரபரப்பு. கதையின் அசாத்திய விறுவிறுப்பு என்னை தடுமாறச் செய்தது. ஒரு block buster கதை வரிசைக்கு வெகு அருகாமையிலிருக்கிறோம் என்ற புரிதல் தந்த உற்சாகம், அதே சமயம் இத்தனை பிரமாதமானதொரு தொடரை இவ்வளவு காலமாய் miss பண்ணிவிட்டோமேயென்ற ஆதங்கம் என்று விதவிதமாய் எண்ணப் பிரவாகங்கள் என் தலைக்குள்//

      அப்புறம் என்ன நடந்தது என்பதையும் ஆசிரியர் விரிவாக எழுதி இருக்கிறார், அது எல்லோருக்கும் தெரிந்ததுதானே?! ஆசிரியருக்கு "கதை" மிகவும் பிடித்துப் போனதே டைகர் தமிழில் வர முக்கியக் காரணம்!

      //கலரில் படிக்க தொடங்கியவுடன் பழைய கருப்பு வெள்ளை காமிக்ஸ் ஓவியங்கள்தான் கொச கொசவென்று தெரிகிறது.//
      இது உங்களுடைய கருத்து! ஆனால், வண்ணத்தை விட கருப்பு வெள்ளையை அதிகம் விரும்பும் வாசகர்கள் சிலரும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள்..

      //ஒரு காமிக்ஸின் வெற்றிக்கு ஓவியத்தின் பங்குதான் அதிகம். அந்த தரம் மால்டீஸ் கதையில் இல்லை//
      ஒரு காமிக்ஸின் வெற்றிக்கு அதன் கதை, மொழிபெயர்ப்பு, அட்டை மற்றும் புத்தக வடிவமைப்பு, அச்சுத்தரம், மார்கெட்டிங் என பல அம்சங்கள் அவசியம் - அவற்றில் ஓவியமும் ஒன்று என்பது என் கருத்து!

      //சமீபத்தில் நடந்த புத்தக திருவிழாவில் லார்கோ அட்டைபட சித்திரம் நன்றாக இல்லை என்று பலர் அதை புறக்கணித்ததாக நண்பர் ஒருவர் நமது வலைதளத்தில் பதிவிட்டதாக நினைவு//
      எனது பார்வையில் லார்கோ தொடரின் ஓவியங்கள் மிக அருமையானவை. இருப்பினும் அட்டைப்படம் பிடிக்கவில்லை என்ற ஒரே ஒரு காரணத்தால் அந்த இதழ் புறக்கணிக்கப்படுகிறது என்றால், ஒரு காமிக்ஸ்க்கு அதன் ஓவியம் & கதையை விட அட்டைப்படமே பிரதானம் என்று அர்த்தம் கொள்ளலாமா?! அப்படியானால் கார்டோ மால்டிஸ்க்கு ஒரு அட்டகாசமான அட்டையை வடிவமைத்தால் மட்டும் போதுமே?!

      //சந்தா செலுத்தியவர்கள் வேண்டுமானால் மால்டீஸ் கதைகளை பெற்றுக் கொள்வார்கள். புது வாசகர்கள் மற்றும் புத்தக திருவிழாவிற்கு வருபவர்களை இது கவருமா என்பது சந்தேகம்தான்//
      சந்தா செலுத்துபவர்களிலேயே பல பேர், பல கதைகளை விரும்புவதில்லை - நான் உட்பட! அதே போல புது வாசகர்களும், புத்தக விழாவிற்கு வருகை தருபவர்களும் வெவ்வேறு விருப்பங்கள் கொண்டவர்களே!
      இக்கதை நமது காமிக்ஸில் வந்தே ஆக வேண்டும் என்று நான் சொல்லவில்லை, வராவிட்டாலும் வருத்தம் இல்லை! ஆசிரியருக்கு இந்தக் கதை பிடித்திருந்தும், 'நம்ம வாசகர்கள் ரசனைக்கு இந்த பாணி செட்டாகுமா' என்று தயங்குவதால், அப்படி என்னதான் அதில் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்பும் ஒரு curiosity அவ்வளவே! ;)

      இத்தொடரின் ஒரு கதையையாவது ஆங்கிலத்தில் படித்துப் பார்க்க உத்தேசித்துள்ளேன். மற்றபடிக்கு, கார்டோ மால்டிஸ் தமிழில் வருமா இல்லையா என்பது ஆசிரியரின் கைகளிலும், அப்படியே வந்தாலும் அது தொடர்ந்து வெளியாகுமா என்பது - கதை பற்றிய வாசகர்கள் கருத்துக்களிலும்தான் இருக்கிறது!

      @நண்பர்கள்:
      நேற்றிலிருந்து கார்டோ மால்டிஸ் பற்றி பேசிப் பேசி, இந்தப் பெயர் ஏதோ 'கார்வின் & மாடஸ்டி' என்பது போல மிகவும் பரிச்சயப்பட்ட பெயராக எனக்குத் தோன்றுகிறது! உங்களுக்கு? :) எனவே கார்டோ மால்டிஸ் பற்றிப் பேசுவதை இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்!! :D

      Delete
    2. @karthik Somalinga
      வரிக்கிவரி பதில் தருவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் :-)
      @Mugunthan kumar இன் பதிவை பார்த்தவுடன் நினைத்தேன், ஆகா கார்த்திக்குக்கு ஒரு பதிவு கிடைத்துவிட்டது வரிக்கிவரி கிழிக்க போகிறார் என்று :)

      ஆரோக்யமான விவாதம் தான்.

      Delete
    3. என்னுடைய கருத்து - மால்டிஸ் கதையின் ஓவியங்கள் எனக்கு அவ்வளவாக பிடிக்க வில்லை. கதை மிக வித்தியாசமாக நன்றாக இருந்தால் மட்டும் try பண்ணல்லாம்.

      Delete
    4. @V Karthikeyan:
      :) :) :) அப்படி எல்லாம் எதுவும் இல்லை கார்த்தி! நீங்கள் சொன்னது போல இது ஒரு ஆரோக்கியமான உரையாடல் மட்டுமே. எல்லாம் விஜயன் சாரால் வந்த வினை! ;) அவர்பாட்டுக்கு "நான் கார்டோ மால்டிஸ் கதைகளை 25 வருஷத்துக்கு முன்னமே படிச்சுட்டேனாக்கும்! கதை படு சூப்பராக்கும்! ஆனா, நீங்க 25 வருஷத்துக்கு முன்னாடி வந்த பிரின்ஸ் கதைகளை மட்டும் மறுபடியும் படிங்க பசங்களா.... கார்டோ எல்லாம் உங்களுக்கு புடிக்காது!!. நீங்க இன்னும் வளரணும் தம்பிகளா!"ன்னு சொல்லிட்டு ஒரு வாரம் ரெஸ்ட்ல போயிட்டாரு!

      //ஆகா கார்த்திக்குக்கு ஒரு பதிவு கிடைத்துவிட்டது வரிக்கிவரி கிழிக்க போகிறார்//
      என்னை இப்படி தனியா வரிக்கி வரிக்கி (வரிக்கு வரி) புலம்ப வெச்சுட்டாரே....!!! :D

      Delete
    5. @Karthik Somalinga
      LOL - வாய் விட்டு சிரித்தேன்...

      //வரிக்கிவரி (வரிக்கு வரி)// பள்ளியில், தமிழில் நுற்றுக்கு இருபது வாங்கிய பொழுது நினைக்கவில்லை பிற்காலத்தில் இப்படி பல்பு வாங்குவேன் என்று :) இதில் Google transliterate type பன்றதுகுல்ல நாக்கு thalliduthu (not able to write this word through tamil phonetic).

      HATS OFF to all the Tamil bloggers - including our editor, yourself and others.

      Delete
    6. கார்த்திக் நீங்கள் கூறிய அனைத்தும் சரியே, கதை நாம் படிக்கும் போதே அடுத்து என்ன என ஆவலாய் பக்கத்தை புரட்ட வைக்க வேண்டும். அட்டை படம் புத்தகத்தை புதிய வாசகர்களை புரட்டி பார்க்க வைக்க வேண்டும், ஓவியமும், மொழி பெயர்ப்பும்,கதையின் விறுவிறுப்போ, நம்மை கவனம் சிதற விடாத யுத்திகளோ மீண்டும் மீண்டும் நம்மை வாங்க தூண்ட வேண்டும் ......இவை அனைத்திலும் பொருந்தி வரும் லார்கோ போல .....................
      அது போல நம்மை உற்ச்சாக படுத்தியோ,படித்த பின்னர் அதே தாக்கத்தை சில நாட்களாவது நம் மனதில் நிறுத்தும் குறிஞ்சி பூக்கள் அரிதெனினும் அவையும் தொடரட்டும், ஆனால் மசாலாக்களுக்கு இணை மாசலாக்களே, ஆசிரியர் கூறும் இந்த மாலுமி கதையும் அவ்வாறே இருக்கும் என நினைக்கிறேன்,இவை மாபெரும் ஹிட் அடித்துள்ளதை நினைத்து பார்த்தால் .....லார்கோ அனைத்திலும் சேர்த்தி ...குறிஞ்சி மலர்,மசாலா .....அப்பாடா கார்வின் மாடஸ்டி நோக்கி செல்வதை தவிர்த்து விட்டேன்...

      Delete
    7. ஒரு காமிக்ஸின் வெற்றிக்கு அதன் கதை, மொழிபெயர்ப்பு, அட்டை மற்றும் புத்தக வடிவமைப்பு, அச்சுத்தரம், மார்கெட்டிங் என பல அம்சங்கள் அவசியம் - அவற்றில் ஓவியமும் ஒன்று என்பது என் கருத்து!//

      @கார்த்திக்,

      உங்கள் கருத்துகள் ஏற்புடையவை, இதைத் தவிர!

      காமிக்ஸ் என்பதே பேசும் ஓவியம்தான். நான் காமிக்ஸில், ஓவியமே பிரதான அம்சம் என்று கருதுகிறேன். மற்றவையெல்லாம் அதன் பின்புதான். நீங்கள் சொன்ன மற்ற அம்சங்களெல்லாம் எல்லா வகையான புத்தகங்களுக்கும் பொருந்தும். ஆனால் ஓவியம்? அது காமிக்ஸுக்கே உரிய தனித்துவமான அம்சமாகும்!

      ரியாலிஸ்டிக், கார்டூன், கோட்டோவியம் என்ன எந்த பாணியாக இருந்தாலும் வசீகரம் பொதுவானது. அதன் தரத்தை முடிவு செய்வது ஓவியரின் திறன் மட்டுமே!

      Delete
  62. எடிட்டர் சார்
    வாரத்திற்கு வலைதளத்தில் 2 பதிவுகள் வெளியிடலாம்.ஒன்று என்பது மிக நீண்ட இடைவெளி போல் தோன்றுகிறது.

    ReplyDelete
  63. I have read both stories but don't have the copy now. Thanks for reprint!

    ReplyDelete
  64. விஜயன் ஸார் இரண்டு பதிவுகளுக்கு முன் இன்னும் ஒரு மாதம் பொறுத்தால் புதிய கார்ட்டூன் ஹுரோவின் புத்தகத்தை கையில் தந்து விடுவதாக சொல்லி இருந்தீர்கள் sep2 புதிய ஹுரோ உதயமாவரா?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. அதானே? ஒரு காமெடி ஹீரோவின் அறிமுகப்படலம் இவ்வளவு மர்மமாக இருப்பது அநியாயமால்ல இருக்கு?

      Delete
  65. அடிக்கடி எலோரையும் போலவே எனக்கும், பழைய புத்தகடைகளில் காமிக்ஸ் கத்தை கத்தையா கிடைப்பது போல கனவு வரும். சந்தோசத்தில் என்ன செய்வதென்றே புரியாமல் முதல் புத்தகத்தின் ஒரு பக்கத்தை திருப்பும் போது கனவு மறைந்து விடும். என்னை ஒரு காமிக்ஸ் வெறியனாக உணரச்செய்த சந்தர்பங்கள் அவை.

    ஆனால், இம்முறை ஈரோடு புத்தக திருவிழா வின் இறுதி தினம் அன்று , எங்கள் நாட்டில் (இலங்கை) நடை பெறுகின்ற புத்தக விழாவில் ரத்த படலம் வண்ண மறுபதிப்பை (அது ரத்தபடலமா அல்லது மின்னும் மரணமா என்று நினைவில் illai ) vijayan அவர்களின் கையால் பெறுவது போல் ஒரு கனவு. என்னால் இந்தியாவில் நடக்கும் புத்தக விழாக்களுக்கு செல்ல முடியவில்லை என்ற ஆதங்கமே அந்த கனவுக்கு காரணம் என்று நினைக்குறேன்.
    சிலவேளை அந்த கனவு நிஜம் ஆகும் நாளும் வருமோ.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக உங்கள் கனவு நிறைவேறும்

      Delete
    2. அப்படியே இங்க NewYork கில் நடக்கும் புத்தக விழாவிளும் நாம் கலந்து கொண்டால் எப்படி இருக்கும் ஹ்ம்ம்ம்ம்ம்

      Delete
  66. புதிய காமெடி கார்டுன் character பற்றிய suspenseஐ எடிட்டர் அடுத்த வார பதிவுற்காக stockல் வைத்துள்ளார் என கருதுகிறேன்!;-)

    ReplyDelete
  67. அந்த suspense பற்றி நமக்கு packageஐ courierல் அனுப்பிய பிறகு பதிவிடுவார் என நம்புகிறேன்! அப்படிதானே எடிட்டர் சார்?:-D

    ReplyDelete
    Replies
    1. சர்ப்ரைஸ்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் .....பேஸ் பேஸ்

      Delete
    2. ஸ்டீல் சர்ப்ரைஸ்னா எனக்கும் ரொம்ப பிடிக்கும்

      நம்ம கிறுக்கும் பூனைக்குட்டிகளும் ,செந்தில்வெஸ்ட் சியாக்ஸ் கூட்டமும் விடாமல் படுத்துகீரார்கள்

      editor பொறுமை காத்தால் நன்றாய் இருக்கும்

      Delete
  68. ஸார் sep 2 புத்தகங்களா இல்லை 3 புத்தகங்களா

    ReplyDelete
    Replies
    1. மூன்று நண்பரே,,,,,இனி மூன்று புத்தகங்களில் நம் மூச்சிருக்கும்...

      Delete
    2. ஆனால் இந்த மாதம் 2*100 இதழ்கள் என்று சொல்லி இருக்கிறாரே

      Delete
  69. //
    உங்களில் எவரேனும் இந்தக் கதைகளை முதன்முறையாகப் படிக்கவிருக்கும் பட்சத்தில், உங்களுக்கொரு அட்டகாச அனுபவம் காத்துள்ளது என்பதை உறுதியாய்ச் சொல்லிடுவேன்
    //

    ஆர்வமாக காத்திருக்கிறேன் :)..

    ReplyDelete
  70. பலரையும் போலவே எதிர்கால வாசகர் எங்கள் வீட்டிலும் தயாராகி வருகிறார். கையில் வைத்துக்கொண்டே அலைந்ததால், சுட்டி லக்கியை விரித்து வைத்துக்கொண்டு ஒரே மூச்சில் உட்கார்ந்து கதை சொன்னேன். ஃபுல் சவுண்ட் எஃபெக்ட்ஸோடு!!

    டகடும், டகடும் என காட்டெருமைகள் துரத்த, அலறும் பன்றிக்குட்டியார், சகோதரனுடன் ஜாலி ஜம்பரில் பயணித்து கணவாயைச் சொய்ய்ய்ய்ய்ய்ங் என கடக்கும் இடம் கதையில் பிரதான ஆக்‌ஷன் களமாக இருந்தது. பலதடவைகள் இந்த இடம் ஒன்ஸ்மோர் செய்யப்பட்டது. விறுவிறுப்பும், சிரிப்புமாக மிகவும் என்ஜாய் செய்தான். வயது 5, ஒன்றாம் வகுப்பு! பெயர் சுபா.

    நேற்று மாலை அலுவலகத்துக்குப் போன், ‘அப்பா, பெர்ய லக்கி கத சொல்றேனு சொல்லிருக்கிங்க.. ஹோம் ஒர்க்குல்லாம் எழுதியாச்சி, குயிக்கா வாங்க.. சொல்லிட்டேன், சொல்லிட்டேன்.. நல்ல பொய் சொல்லிட்டு லேட்டா வராதிங்க.. வராதிங்க..’

    சூப்பர் சர்க்கஸ்ல வர்ற பச்சை பாட்டில்களெல்லாம் கூல்டிரிங்ஸா மாறிடுச்சு. ஷெரிஃப் இன்ஸ்பெக்டராகிட்டார்!இன்னும் என்னவெல்லாம் ஆகப்போகுதோ? இதுக்கே தனியா நேரம் ஒதுக்கணும் போலயிருக்கு. முடியல.. :-)))

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் நண்பரே....

      Delete
    2. @ஆதி

      நாலு வயதாகும் என் குழந்தைக்கு நானும் 'சுட்டி லக்கி'யின் ஒவ்வொரு பக்கத்தையும் ஒரு குட்டிக் கதையாக மாற்றி, கொஞ்சம் எக்ஸ்ட்ரா பிட் சேர்த்து (கதைக்கே கதை!) சொல்லிட்டிருக்கேன்.

      இன்னிக்கு சாயந்திரம் வீட்டிலேர்ந்து ஃபோன்; சுட்டி-லக்கி புத்தகத்தைப் பிரித்துவைத்து என் குழந்தை மற்றவர்களுக்குக் கதை சொல்லிக்கொண்டிருந்ததாம்!

      விரைவிலேயே இரண்டு சந்தா கட்டவேண்டியதிருக்கும் போலிருக்கே?! ஹம்ம்...

      Delete
  71. @ Karthi

    இப்போ எங்க ப்ரொஃபைல் ஃபோடோ பாத்தீங்களா - இது எப்படி இருக்கு

    இன்று முதல் மேன்மை பொருந்திய கதறி ஆழும் குழந்தையார்

    சிறிது வளர்ந்து கால்வின் என்ற மாறுவேஷத்தில் உலா வருவான்

    ReplyDelete
  72. விஜயன் சார்,


    செப்டம்பர் மாதம் வரவிருக்கும் கேப்டன் ப்ரின்ஸ் (பெர்னார்ட் ப்ரின்ஸ்) கதைகளை விரும்பி படித்தவன் நான். இதுவரையில் ஒரு கதையை கூட நான் மிஸ் செய்ததே கிடையாது. நெடுநாளாக இந்த கதைகளை வெளியிடுவீர்கள் என்று காத்திருந்தேன். இப்போதுதான் அதற்க்கான நேரம் வந்துள்ளது.

    தாமதம் தான் என்றாலும் அமிர்தம் எப்போது கிடைத்தாலும் அது அமிர்தம் தானேயன்றி வேறில்லை அல்லவா? அந்த வகையில் மிக்க மகிழ்ச்சி.

    // உங்களில் எவரேனும் இந்தக் கதைகளை முதன்முறையாகப் படிக்கவிருக்கும் பட்சத்தில், உங்களுக்கொரு அட்டகாச அனுபவம் காத்துள்ளது என்பதை உறுதியாய்ச் சொல்லிடுவேன் !சாணித்தாளில், black & white -ல் படித்தே போதே அற்புதமாய்த் தென்பட்ட கதைகளை இன்று வண்ணத்தில், பெரிய சைசில் ரசிப்பது ஒரு போனஸ் என்று சொல்லலாம் !

    இந்த இதழின் ஒரிஜினல்கள் உங்களில் எத்தனை பேரிடம் இன்னமும் உள்ளது ? ; //


    இந்த இதழின் முதல் பிரதிகள் என்னிடம் இப்போதும் இருக்கின்றன. அவற்றை பைண்டிங் செய்து விட்டதால் இன்னமும் பத்திரமாகவே இருக்கின்றன. அந்த இதழ்களை பற்றி எவ்வளவு சொன்னாலும் அவை குறைவாகவே தெரியும்.

    பற்றி எரியும் பாலைவனம்: ஆப்பிரிக்காவின் கடலோர நகரம் ஒன்றிற்கு ஐக்கிய நாடுகள் சார்பாக அத்த்யாவசிய மருந்துகளை கொண்டு சேர்க்க விரும்புகிறார் தன்னார்வ தொண்டர் ஒருவர். பெர்குசன் என்பது அவரது பெயர்.

    யாருமே மேற்கொள்ள தயங்கும் இந்த நல்லெண்ண பயணத்திற்கு வழக்கம் போல கேப்டன் ப்ரின்ஸ் ஒத்துக்கொள்கிறார். அவருடைய குழுவினருடன் பெர்குசனும் பயணம் செய்து இலக்கை அடைகின்றனர். அப்போது நடக்கும் ஒரு சிறு சம்பவத்தால் பெர்குசன் சுகவீனம் அடைய, மருந்துகளை ஒரு ஒட்டகத்தின் மேலே ஏற்றிக்கொண்டு பார்னே மட்டும் தனியாக பாலைவனத்தில் கிளம்புகிறார்.

    அவர் கிளம்பியவுடன் முழித்துக்கொள்ளும் பெர்குசன், அந்த மருந்துகளில் சிலவற்றை போதைக்காகவும் பயன்படுத்தலாம் என்றும், இந்த மருந்து சப்ளை வருவதை அங்குள்ள பயங்கரமான கொள்ளையர் கும்பலுக்கு தெரியும் என்றும் அவர்கள் பார்னேவை கொன்றுவிட்டு அந்த மருந்துகளை கைப்பற்றுவார்கள் என்றும் அபாய சங்கை முழங்குகிறார்.

    நண்பன் ஆபத்தில் இருப்பதை தாமதமாக அறியும் ப்ரின்ஸ் உடனடியாக பார்னேவை காப்பாற்ற துடிக்கிறான். ஆனால் கப்பலை அப்படியே விட்டுவிட்டு செல்லவும் முடியாது. பெர்குசனும் இன்னமும் முழுமையாக குணமடையவில்லை. ஆகவே பொடியன் ஜின்னை அவருக்கு துணையாக விட்டுவிட்டு, கப்பலை ஒரு மறைவிடமான இடத்தில் நிறுத்தி (நோ பார்க்கிங் ஏரியாவில் என்று வைத்துக்கொள்ளுங்களேன்) விட்டு பாலவனதிர்க்கு விரைகிறான்.

    இதற்க்கு மேலே என்ன நடந்தது என்பதை நான் இப்போதைக்கு சொல்லப்போவதில்லை. ஆனால் வழக்கமான ப்ரின்ஸ் கதைகளுக்கேயுரிய இடியாப்ப சிக்கல் கொண்ட சூழலும் இந்த கதையின் க்ளைமேக்ஸில் வருகிறது. என்ன நடந்தது என்பதை ஒரு பத்து நாள் பொறுத்திருந்து படித்து பாருங்கள்.

    இந்த கதையின் ஹைலைட் என்று நான் கருதுவதே ஒட்டகத்திற்கும் பார்னேவுக்கும் இடையேயான நட்புதான். அதை தாண்டி கடைசி கட்டங்களில் அந்த ரவுத்திரமான பாலைவன காட்சிகளை ஓவியர் ஹெர்மான் வரைந்துள்ள விதம் கண்டிப்பாக நம்மை மதி மயங்க வைக்கும். கருப்பு வெள்ளையில் படித்தே காதல் கொண்ட நாங்கள் கலரில் கண்டால் என்ன செய்வோம் எனது தெரியாமல் காத்திருக்கிறோம்.

    பாய்சன் கிடைத்தாலே அதை பாயாசம் கிடைத்தது போல சாப்பிடுவோம், இப்போது பாயாசமே கிடைக்கிறது. விடுவோமா என்ன?

    ReplyDelete
  73. விஜயன் சார்,


    நம்முடைய சிறு வயதில் படித்த பைகோ கிளாசிக்ஸ், பூந்தளிர் அமர் சித்திரக்கதை போன்றவை காமிக்ஸ் உணர்வோடு நம்முடைய இதிகாசங்களையும், உலக இதிகாசங்களையும் கதைகளையும் தெரிந்து கொள்ள உதவியது. எங்களுடைய பள்ளியின் தலைமை ஆசிரியரே இவற்றை படிக்க சொன்னதோடில்லாமல் பள்ளியின் நூலகத்திலும் அவற்றை இடம் பெற செய்தார்.

    காமிக்ஸ் என்கிற ஏணியுடன் எங்களால் ஷேக்ஸ்பியரையும், ஜூல்ஸ் வெர்னெவையும் இலகுவாக எட்ட முடிந்தது. இந்த சூழலில் நமக்கு அடுத்த சந்ததியினர் காமிக்ஸை படிக்க வைக்க இது போன்ற இதிகாசங்களை காமிக்ஸ் வடிவில் தமிழில் கொண்டு வந்தால் ஒரு படிக்கும் ஆர்வம் ஏற்படுமா?

    உதாரணமாக மகாபாரதம் இப்போது உலகத்தரத்தில் காமிக்ஸ் ஆக வந்துள்ளது. இன்றைய இளைய தலைமுறைக்கு பிடிக்கும் வகையில் அமைக்கப் பட்டிருக்கும் இந்த கதைகளை பற்றிய உங்கள் அபிப்ராயம் என்னவென்று தெரிந்து கொள்ள ஆவல்.

    இவற்றை தமிழில் வெளிக்கொணர முயல்வது கடினம் என்பது தெரிந்தே கேட்கிறேன். முடியுமா?

    ReplyDelete
  74. இரண்டுமே படித்திருக்கிறேன்.
    ப்ரின்ஸ் அன்ட் பார்னே & பொடியன் all time favorite.
    ஆனால் அட்டைப்படம் பழைய லயன் ஸ்டைலில் உள்ளது. lion new avatar quality and style அளவிற்கு இல்லையே? eg. green manor, இரத்தத் தடம், etc

    ReplyDelete
    Replies
    1. Hi those covers are of old books ,not new one.Editor will publish new covers very very soon

      Delete
  75. கடல் அமைதியா இருக்கே.....புயலுக்கு தயார் முன்னிலையோ!

    ReplyDelete
  76. எடிட்டர் சார்,

    கொஞ்சம் செலவானாலும் பரவாயில்லை; உங்களை மாதிரியே ஒரு க்ளோனிங் எடிட்டரை ரெடி பண்ணி பதிவுகள் போடறதுக்கும், பதில்கள் போடறதுக்கும் நியமிச்சுட்டீங்கன்னா நாங்களும் அவ்வப்போது வம்பிழுத்திட்டிருப்போமில்லையா? (வம்பு+இழுத்து+கொண்டு+இருப்போம்+இல்லையா?)

    ReplyDelete
  77. இன்னாப்பா இது செம போர்ரிங்கா கீதே?

    ReplyDelete
  78. எடிட்டர் சார், இந்த "நரகத்தின் எல்லையில்" ல தான ஓவர் ஹீட்ல பாட்டில்லாம் பறந்து பறந்து வெடிக்கும்ங்கிறதப் பத்தி ஒரு சீன் வரும்? அப்ப எனக்கு இது ஒரு புது விஷயம்..! (பற்றி எரியுற காட்டைக் கடந்து பிரின்ஸ் குழுவினர் போவதுதானே கதை??? - ஹி ஹி ஹி எனக்கு கொஞ்சம் ஞாபக மறதி ஜாஸ்தி..!)

    ReplyDelete
  79. இன்னும் எத்தனை நாள்தான் கப்பல்களே வந்துபோகாக இந்தத் தீவில் 'கடலோடு காதல்' பண்ணிட்டிருப்பது? எனக்கு sea-sickகே வந்துடுச்சு! :(

    ReplyDelete
  80. சார், டக்கு புக்குன்னு ஒரு பதிவை போடுங்க, இன்னும் இரண்டு நாட்கள்தானே உள்ளன.கப்பலை எப்போ அனுப்ப போறீங்க, கரையில நின்னு நின்னு சலிச்சுரிச்சு கிறுக்கும் பூனயாருக்கும்!

    ReplyDelete
  81. அப்போ அவர் கிறுக்கும் பூனையார்
    இப்போ அவர் கிறு கிறுக்கும் பூனையார்

    ReplyDelete
  82. when will we reach 1 million and will get mega special book....

    ReplyDelete
  83. சார்,

    உங்கள் லயன் முத்து காமிக்ஸ் மட்டுமல்ல நான் பூந்தளிர் , பார்வதி சித்திர கதைகள், ராணி காமிக்ஸ் போன்றவற்றிற்கும் ரசிகன் நான், பூந்தளிர் போன்ற இதழ்களை மறு பதிப்பு செய்ய உங்களால் இயலும்? copyright வாங்கி (from Amar Chitra Kathas) செய்யும் எண்ணம் இருக்கிறதா?

    ReplyDelete
  84. எப்பொழுது புத்தகம் வரும்...வெள்ளியன்று அனுப்பபடுமா...

    ReplyDelete
  85. ஆசிரியர் சொல்லி 1 மாதம் 50,000 hits தான் கடந்து இருக்கிறோம்.. இன்னமும் மீதி பயணத்தை கடக்க 9 மாதம் ஆகி விடுமோ...அப்படி பார்த்தல் மே மாதம் தான் 1 மில்லியனை அடைவோம்..அந்த சமயத்தில் லயன் 30 வது ஆண்டு மலர்,தீபாவளி மலர்,2015 மின்னும் மரணம்...இடையில் எங்கே புது வெளியீடுகளை அறிவிக்க முடியும்...அதனால் இப்பொழுதே 2014 கோடை மலர் (advance for reaching 1 million)என்று அறிவிப்பு வெளியிட்டு விட்டால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  86. //இப்போதெல்லாம் பதிவுகள், பின்னூட்டங்கள், விமர்சனக் கடிதங்கள், நேர்முக சந்திப்புகள் என ஏராளமான feedback கிட்டுவதாலோ என்னமோ - 20 நாட்களுக்கு முன்பே வெளியானதொரு இதழ் கூட ஏதோ ஒரு யுகத்தில் பிரசுரமானது போல் எனக்குத் தோன்றுகிறது !//

    எங்களுக்கு 4-5 நாட்களுக்கு முன்னைய பதிவே ஏதோ ஒரு மாமாங்கத்திற்கு முன்பு இட்டதாக தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. அருமையாச் சொன்னீங்க ராஜவேல்!

      Delete