நண்பர்களே,
வணக்கம். இப்போதெல்லாம் ஒரு வாரத்தின் பயணத்தை எனக்கு உணர்த்துவதே நம் பதிவுப் பக்கங்களே !'அடுத்த பதிவுக்கு நேரமாச்சு ' என்ற மணி மண்டைக்குள் ஒலிக்கும் போது தான் அதற்குள்ளாக 7 நாட்கள் ஓடி விட்டன என்ற உணர்தல் உதயமாகும் ! இம்முறை - ஈரோடு புத்தகத் திருவிழாவும் நமது அட்டவணையில் பிரதானமாய் இருப்பதால், தாமதமின்றிப் புதுப் பதிவை தயார் செய்திடுவது முக்கியமென்று பட்டது !
இம்முறை எழுதவிருப்பது ஒரு ஜாலியான கதையின் அறிமுகத்தைப் பற்றி என்பதால் பணி ரொம்பவே இலகுவாகி விட்டது !
இது நாள் வரை "கெத்தாக" உலவி வந்த மனுஷனை இப்போது "பப்பி ஷேம் " ஆகப் பார்க்கப் போவதும் ; அலட்டல் ஏதும் இல்லா, சிம்பிள் கதைக் களத்தில் ரசிப்பதும் ஒரு வித்தியாச அனுபவத்தைத் தரக் காத்துள்ளது ! வீட்டில் உள்ள பொடி டிக்கெட்களுக்கு கதை சொல்லி நாட்கள் பல ஓடி இருக்கும் பட்சத்தில், இம்முறை "மேற்கே ஒரு சுட்டி புயல்" உங்களைத் தப்ப விடாது ; இதைப் படித்த கையோடு "ஒரே ஒரு ஊர்லே " என்று நீங்கள் ஆரம்பிக்கும் அவசியம் நேர்ந்திடலாம் ! புது இதழ்கள் இரண்டுமே இன்றைய கூரியரில் கிளம்பியாச்சு ; என்பதால் நாளைய தினம் உங்கள் இல்லம் தேடி வந்திட வேண்டும் ! Happy reading in advance folks !
நாளைய காலை நமது ஈரோடு புத்தகத் திருவிழாவும் துவங்குகிறது ! "சுட்டி லக்கியின் " பெயரில் உள்ள அந்த "லக்" நமது விற்பனையிலும் பிரதிபலிக்கும் என்ற பிரார்த்தனைகள் எங்களுள் ! அப்புறம் ஈரோடில் நமது ஸ்டாலில் விளம்பரப்படுத்த நண்பர்களிடம் கோரியிருந்த banner + விளம்பர டிசைன்களைத் தயாரிக்கும் KAUN BANEGA GRAPHIC DESIGNER ' போட்டிக்கு நம் நண்பர்கள் அட்டகாசம் செய்து வந்துள்ளனர் ; இதோ பாருங்களேன் படைப்புகளின் சிலவற்றை !
கார்த்திக் சோமலிங்காவின் உருவாக்கம் இது ! |
இவை இரண்டும் நண்பர் (ஸ்ரீரங்கம்) சிவகுமாரின் படைப்புகள் ! |
நண்பர் சதீஷ் (கோவை) செய்த முயற்சி இது ! |
Karthik Somalinga again....! |
மேலே உள்ள 5 டிசைன்களும் : நண்பர் L .வெங்கடேஸ்வரன் , Avadi !!! இவை இரண்டுமே courtesy : நண்பர் "பொடியன்" பிரதீப், ஸ்ரீ லங்கா !! |
ஒவ்வொருவரும் காட்டியுள்ள ஆர்வம் ; திறமை ; மாறுபட்ட சிந்தனைகள் நிஜமான பிரமிப்பைத் தருகின்றன ! அனைத்துமே தூள் கிளப்பியுள்ளன எனும் போது இதில் யாருடைய ஆக்கத்தை முதலாவதாய்த் தேர்வு செய்வது ? ; யாருடையதை இரண்டாம் மூன்றாம் இடத்திற்கு அனுப்புவது ? மிச்சம் மீதியுள்ள கேசத்தைப் பிய்த்துக் கொண்டிருக்கிறேன் ! இன்னும் சில குட்டியான சந்தோஷ updates :
நமது "குற்றத் திருவிழா" இத்தாலியில் டயபாலிக் ரசிகர் அமைப்பினில் அதீத வரவேற்புப் பெற்றுள்ளதாம் - மேற்கொண்டு 30 பிரதிகளுக்குப் பணம் அனுப்பியுள்ளனர் !! மொழி புரியாவிடினும் தம் ஆதர்ஷ நாயகனை ரசிக்க அவர்கள் காட்டும் ஆர்வம் மலைக்கச் செய்கிறது !
TEX பதிப்பகத்தினர் நமது சமீபத்திய 2 இதழ்களையும் பாராட்டி, வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர் ! TEX தீபாவளி மலரில் ஒரு சந்தோஷ ஆச்சர்யம் இடம்பெறுமென்று ஏற்கனவே எழுதி இருந்தேன் அல்லவா ? அதுவும் தற்போது உறுதியாகி விட்டது ! அது என்னவாக இருக்குமென்ற உங்கள் யூகங்கள் நவம்பர் வரை தொடரட்டுமே ?!
சித்திரங்களும், creativity -ம் மௌனமாய் நிற்பினும், உரக்கப் பேசும் இந்தப் பதிவில் வார்த்தைகளின் பங்களிப்புக்கு அதிக அவசியமில்லை என்பதால் ஈரோடு திருவிழாவிற்கு நல்வரவு guys ; உங்களை சந்திக்கக் காத்திருப்போம் என்ற சேதியோடு இப்போதைக்குக் கிளம்புகிறேன் ! Take care all !
ஈரோடில் நமது ஸ்டால் - தயாராகி வருகிறது ! (போட்டோக்கள் உபயம் : நண்பர் ஸ்டாலின், ஈரோடு )
Arun Vrk : "எடிட்டர் அவர்களுக்கு வணக்கம்,
லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக திருப்பூர் ப்ளூபெர்ரி !
Arun Vrk : "எடிட்டர் அவர்களுக்கு வணக்கம்,
இன்று நமது இரு பிரதிகளும் வந்தடைந்தது.... நான் இன்னமும் படிக்க ஆரம்பிக்கவில்லை. ஆனால் ஒரு சந்தோசமான ஆச்சர்யம் எங்கள் வீட்டு சுட்டிக்கு நமது சுட்டி லக்கி மிகவும் பிடித்து விட்டது.... தமிழ் இன்னமும் படிக்க தெரியவில்லை, ஆனால் shame , shame puppy shame என்று சொல்லிக்கொண்டே , படங்கள் மட்டும் பார்த்து சிரித்துகொண்டிருந்தாள்....
இதுவரை அவளது படங்களை இணையத்தில் போட்டது இல்லை, ஆனால் இந்த மகிழ்ச்சியான தருணத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இரண்டு புகைப்படங்களை இந்த மினஞ்சலில் இணைத்து அனுப்பியுள்ளேன்....
நமது ஈரோடு பயணம் முழு வெற்றி அடைய இறைவனை வேண்டுகிறேன்.....!"
லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக திருப்பூர் ப்ளூபெர்ரி !
I am the First
ReplyDeleteபெயர்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது சார்.
Deleteஅலறும் பன்றி,சின்ன தவளை,தர்பூசணி தபீதா,முள்ளங்கி மண்டையன்.
ஜாலியின் சாகசம் அப்பொழுதே ஆரம்பித்துவிட்டது.
எனக்கு கார்த்திக்கின் பேனர்கள் இரண்டும் பிடித்திருக்கிறது.
அனைவரையும் கவர் செய்திருக்கிறார்.
மாற்றவர்களுடயதும் நன்றாக இருக்கிறது,ஆனால் ஒரு சிலரை தான் கவர் செய்திருக்கிறார்கள்.
நாளைய தினத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
ஈரோடு புத்தகதிருவிழாவிர்க்கு வாழ்த்துக்கள் சார்.
Waiting for tomorrow sir :)
ReplyDeleteme the 3rd
ReplyDeleteகிட் லக்கியில் பெயர்கள் அனைத்தும் நன்றாக உள்ளன (இதற்கெனவே ரூம் போட்டு யோசித்திருப்பீர்கள் போல இருக்கே- இன்ஸ்பிரேசன் யார் கௌண்டமணியா...!).
Deleteகார்த்திக்கின் போஸ்டர்கள் அருமை. ஹீரோக்களின் பெயர்கள் தமிழில் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
சிவகுமாரின் போஸ்டர்கள் nice. இரண்டாவது போஸ்டரில் "மேற்கே ஒரு சுட்டி புயல்"-ன் 'Front page' இடம் பெற்றிருக்கலாம்.
நண்பர் L . வெங்கடேஸ்வரனின் ஆக்கங்கள் கலக்கல். அவரின் போஸ்டர்களில் வரும் "Kalakkal comedy " சற்றே உறுத்துகிறது... 'கலக்கல் காமெடி" என்று தமிழில் இருக்கலாமே.
மேற்கிலிருந்து ம. ராஜவேல்.//கிட் லக்கியில் பெயர்கள் அனைத்தும் நன்றாக உள்ளன (இதற்கெனவே ரூம் போட்டு யோசித்திருப்பீர்கள் போல இருக்கே- இன்ஸ்பிரேசன் யார் கௌண்டமணியா...!).//
Deleteகவுண்டரின் inspiration இல்லாத காமெடி ஏது ? :-)
Kid lucky is one of my favourite. If you could remember, during last year Chennai book fair, I only insisted you to keep kid lucky in our radar. Anyways I am so happy to have the book in tamil which I liked very passionately in English. Thanks a lot sir :)
ReplyDeleteSmall correction. During this year Chennai book fair*
DeleteAll contents are superbe . 4th
ReplyDeleteWell set Karthik Somalinga, Srirangsm Sivakumar, Kovai Satheesh, L.Vengadeswaran. All your baners are supéribe. I am very sûre Érode Book festival Will be very colourfull and success.
Deleteசார் நான் சந்தா கட்டவில்லை சென்னையில் இருக்கும் டிஸ்கவரி புக் பேலஸ்சில் தான் மாதம் தவறாமல் புக் வாங்குவேன் ஆனால் அங்கு மிகவும் தாமதமாக தான் புக் வருகிறது சந்தாதாரர்களுக்கு நீங்கள் பிரதி அனுப்புவது
ReplyDeleteபோல் அங்கும் நீங்கள் அனுப்பலாமே...டிஸ்கவரி புக் பேலஸ்சில் கேட்டால் அவர்கள் தான் தாமதபடுத்துகிறார்கள் என்கிறார்கள்.சென்னை காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஏன் இந்த தண்டனை..? சீக்கிரம் புக் அனுப்புவதில் ஏதும் பிரச்சனை உள்ளதா...ப்ளீஸ் சார் நல்ல பதில் சொல்லுங்க..?
Guru Rajendran : இத்தனை மட்டும் சொல்கிறேனே : முன்பணம் அனுப்பிய 1 நாளைக்கு மேல் நமது ஏஜென்ட்கள் எவருக்கும் பிரதிகள் அனுப்பாது நாம் சுணங்கியது கிடையாது !
Deleteதவிர, ஓராண்டுக்கு முன்னதாய் சந்தா செலுத்தி நம் சக்கரங்கள் சுழல உதவும் நண்பர்களுக்கு 'முதல் மரியாதை' கிட்டுவதில் தவறு இருப்பதாகவும் எனக்குத் தோன்றவில்லை !
ஓராண்டுக்கு முன்னதாய் சந்தா செலுத்தி நம் சக்கரங்கள் சுழல உதவும் நண்பர்களுக்கு 'முதல் மரியாதை' கிட்டுவதில் தவறு இருப்பதாகவும் எனக்குத் தோன்றவில்லை.
Deletewell said sir.
புரிந்து கொண்டேன் சார். தங்கள் பதிலுக்கு நன்றி.. நன்றி..
Deleteஅருமை! திங்களன்று கிடைக்கும் என நினைத்த எனக்கு இன்ப அதிர்ச்சி ! நாளை புலரவிருக்கும் அற்புதமான பொழுதுக்காக .....நன்றி!
ReplyDeleteவாவ்! கிட் லக்கியின் bright color சித்திரங்கள் கண்களுக்கு ஈஸியாக உள்ளது! இந்த மாதிரி கதைகளை நிறைய தேடிப்பிடியுங்கள் சார்! :)
ReplyDeleteசுட்டி லக்கி அட்டை செம கியூட்! :) Pleasing color combination...
ReplyDeleteஎங்களின் போஸ்டர்களை இங்கே அறிமுகப்படுத்தியதிற்கு நன்றி! பொறுமையாக ரசித்து விட்டு பிறகு கமெண்ட் போடுகிறேன்! :)
அற்புதம் கார்த்திக் சார் .சிவகுமார் ,சதீஷ் ,வெங்கடேஸ்வரன் அனைவரும் நமது ஸ்டாலுக்கு அலங்கார தோரணம் கட்டி அழகான தனி அடையாளம் கொடுத்துள்ளீர்கள்
Deleteநன்றி அஹமத் பாஷா சார்!
Deleteகலக்குரிங்க கார்த்தி.. சந்தேகமே இல்ல, வின்னர் நீங்க தான்...
Deleteகொடுக்கப்பட்ட கால அளவு சற்றே குறைவெனினும், ரசணையான பேன்னர் டிசைன்களை வாரி வழங்கியிருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துக்களுடன் ஒரு ராயல் சல்யூட்! ஒருவரே ஒன்றிற்கு மேற்பட்ட படைப்புகளை அனுப்பியிருப்பதும் காமிக்ஸ் மீதான அவர்களுடைய அதீத ஈடுபாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!
ReplyDeleteநண்பர்களின் கலர்ஃபுல் படைப்புகள் 'சுட்டி லக்கி'யின் அட்டைப்பட டிசைனை சற்றே 'டல்'லாகக் காட்டுவதிலும் ஆச்சரியம் ஒன்றுமில்லையே!
+1
Deleteபோஸ்டர்களுக்கு என்று ஒரு தனி அழகு உண்டு. தமிழ் சினிமா உலகில் தற்போதைய Most Wanted போஸ்டர் டிசைனர் நண்பர் இந்த பதிவு அப்லோட் ஆனபோது என்னுடன் பேசிக்கொண்டு இருந்தார். அவரிடம் இந்த டிசைன்களை காண்பித்தேன். அப்போது அவர் சொன்ன கருத்துக்கள் சில (நண்பர்களுக்கு உபயோகப்படும் என்று நினைக்கிறேன்):
ReplyDeleteபோஸ்டர்கள் தூரத்தில் இருப்பவர்களை கவரும் வகையில் இருக்கவேண்டும்,
சிம்பிள் ஆக இருக்கவேண்டும் (கொச கொசவென்று இருக்கக்கூடாது)
ஒரு குறிப்பிட்ட தீம்'ஐ மைய்யப்படுத்தி இருக்கவேண்டும்.
பேசிக் ஆன வண்ணங்களையும், அடர்த்தியான வண்ணங்களையும் Contrast ஆக பயன்படுத்த வேண்டும்.
நிறைய விஷயங்களை ஒரே போஸ்டரில் வெளிப்படுத்த நினைக்கக்கூடாது.
strongly agree with you, viswa!
Deleteடிசைனிங்கில் தேசிய விருது (2009) பெற்ற அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் சாரின் போஸ்டர்களை காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
ReplyDeleteஎடிட்டர் சாருக்கு: பண்ருட்டி ராமச்சந்திரன் தற்போது இருப்பது சென்னையில் என்பதால் அவர் சென்னை ராமச்சந்திரன் ஆகிவிடமாட்டார் அல்லவா? அதைப்போலவே எங்கள் சிறுவர் இலக்கிய சிந்தனை சிற்பி அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்கள் தற்போது ஆவடியில் இருந்தாலும் அவரால் புகழ் பெற்ற (திருச்சி) அய்யம்பாளையம் என்கிற பெயராலேயே அவர் அழைக்கப்படவேண்டும் என்பது அவருடைய தற்கொலைப்படையின் வேண்டுகோள்.
அவரால் அய்யம்பாளையத்துக்கும், அய்யம்பாளையத்தால் அவருக்கும் புகழ் வருகின்றது என்பது உங்களுக்கு தெரிந்ததுதானே?
+1
Delete@ Friends : ஈரோட்டில் இரண்டாம் வாரம் நண்பர் வெங்கடேஸ்வரனின் banner ஒன்றும் நம் ஸ்டாலில் இடம் பிடிக்கும் !
Deleteஅட்டை படத்திற்த்திக்கு முதலில் திருஷ்டி பொட்டு வையுங்கள், எங்கள் கண்னே பட்டுவிடும் போல இருக்கிறது, கார்த்க்கின் டிசைன்கள் மிக அருமையாக அமைந்து உள்ளது. வெங்கடேஸ்வரன் படங்கள் நான்றாக உள்ளது,
ReplyDeleteReady to come sir. Tomorrow one visit. Next visit is on 11th. Eagerly waiting sir.
ReplyDelete@ sarathi
Deletewelcome! :)
அட்டை படம் முன்னட்டை அருமை! நண்பர்களின் ஆக்கங்களும் கலக்கல் . வாழ்த்துக்கள் நண்பர்களே!
ReplyDeleteடியர் விஜயன் சார்,
ReplyDeleteஆஹா, எங்க லக்கியை ஷேம் ஷேம் பப்பி ஷேமமா காட்டி இருக்கீங்களே?! ;) இந்த செவ்விந்தியர்களின் பெயர் சூட்டல்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும்! அதுவும் இந்தக் கதையில் வரும் ஒவ்வொரு செவ்விந்தியப் பெயரும் தூள்! இதை அடிப்படையாக வைத்து நம்ம ஈரோடு விஜய்க்கு "சிலேட்டில் கிறுக்கும் பூனை" என்ற செவ்விந்தியப் பெயரை வைக்கிறேன்! ;) (விஜய்: கண்ணாடியை துடைத்துக் கொண்டு "ம்" என்ற எழுத்தையும் சேர்த்துப் படிக்கவும்). இந்த வருட புதிய வரவுகளில் கிட் லக்கி நிச்சயம் முக்கியமான இடம் பெறுவார் என்பதை preview பார்க்கையிலேயே தெரிகிறது!
நண்பர்களின் அனைத்து போஸ்டர் டிசைன்களும் மிக அருமையாக உள்ளன! வாழ்த்துக்கள் நண்பர்களே!!!
இங்கே ஒரு சிறிய சுயபுராணத்தை குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது! நான் ஒரு ப்ரொபெஷனல் டிசைனரோ, போட்டோ ஷாப் புலியோ கிடையாது! நான் சென்ற வருடம் வாங்கிய Canon ஸ்கேனருடன் இலவசமாக கிடைத்த Photoshop Elements 8.0 என்ற பழைய பதிப்பை வைத்து அவ்வப்போது என் மகனின் போட்டோக்களை ஒன்றாக இணைத்து கொலாஜ் செய்து விளையாடுவதுண்டு! காமிக்ஸ் மீதான ஆர்வத்தில் எனக்கு தெரிந்த அளவில் போஸ்டர்களை வடிவமைத்துள்ளேன், மற்றபடிக்கு முழுநேர கிராபிக் டிசைனர் ஆகும் ஆர்வம் எல்லாம் எனக்கு துளியும் கிடையாது! கடந்த பதிவில் கிராபிக் டிசைனர்கள் பற்றி நான் கூறிய ஒரு கருத்து இந்த அனுபவத்தை வைத்துத்தான் அன்றி வேறெதுவும் இல்லை! போட்டோஷாப் கையில் இருந்தால் யார் வேண்டுமானாலும் ஒரு கத்துக்குட்டி கிராபிக் டிசைனர் ஆகலாம், என்னைப் போல! ;)
//நமது "குற்றத் திருவிழா" இத்தாலியில் டயபாலிக் ரசிகர் அமைப்பினில் அதீத வரவேற்புப் பெற்றுள்ளதாம்//
Deleteஇவங்க கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலியே சார்!!!! :) திருப்பூர்ல இருந்து எக்ஸ்போர்ட் ஆகுற துணிகளை, நம்மாளுங்க வெளிநாடு போறப்போ அங்க வாங்கி போட்டுக்கிட்டு, இது மேட் இன் அமெரிக்கான்னு சொல்றா மாதிரி ஒரே கன்பியூஷனா இருக்கு!!! :)
திருப்பூர்னு சொன்னதும் ஞாபகத்துக்கு வருது! சிபி சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை 'இங்கேயும்' சொல்லிக்கிறேன்! மனுஷனுக்கு தனியா மெயில்ல வாழ்த்துக்கள் சொன்னா பதில் போட மாட்டேங்குறார்! ;)
//TEX தீபாவளி மலரில் ஒரு சந்தோஷ ஆச்சர்யம் இடம்பெறுமென்று ஏற்கனவே எழுதி இருந்தேன் அல்லவா ?//
அது இத்தாலிய பதிப்பகத்தார் வழங்கும் ஒரு ஸ்பெஷல் கிஃப்ட் ஹாம்பர்தானே?
//இப்போதைக்குக் கிளம்புகிறேன்//
ஈரோடுக்கா சார்?! :)
PS:
நண்பர்களே, எதற்கும் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை பதிவை ரெப்ரெஷ் செய்து மீண்டும் மீண்டும் படியுங்கள்! ஆசிரியர் புதுசு புதுசாக மேட்டரை இணைத்துக் கொண்டே இருக்கிறார்!!! :) :)
பேனர் என்று எழுதாமல் போஸ்டர் என்று ஏன் நான் தவறாக எழுதிக் கொண்டிருக்கிறேன்?! :)
Delete@ Karthik
DeleteLOL. :D
நீங்கள் தார் பூசி, கழுதையில் ஏற்றியிருப்பது என்னைத்தான் என்றபோதிலும் என்னால் சிரிக்காமலிருக்க முடியவில்லை! ஹா ஹா ஹா!
ஆனால், கிடைத்திடும் முதல் வாய்ப்பை கனகச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டு உங்களுக்கு ஆற்றிட வேண்டிய 'தார்'மீகக் கடமையை செய்துமுடிப்பேன் என்று சூளுரைக்கிறேன்! ஹா ஹா ஹா!
(இப்படிச் சிரித்திடும்போதும், சூளுரைக்கும்போதும் ஏனோ 'அரக்கன் ஆர்டினி' கதை ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை)
ஹா ஹா ஹா! :)
@ஈரோடு விஜய் ஆர்டினி (ஆண்டனி அல்ல!):
Delete//கிடைத்திடும் முதல் வாய்ப்பை கனகச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டு உங்களுக்கு ஆற்றிட வேண்டிய 'தார்'மீகக் கடமையை செய்துமுடிப்பேன் என்று சூளுரைக்கிறேன்!//
எனக்கு செவ்விந்திய பெயர்கள் என்றால் ரொம்ப இஷ்டம் என்பதால் நீங்கள் எசகு பிசகாக பெயர் வைத்தாலும் கோபித்துக் கொள்ள மாட்டேன்! :) இரவுக் கழுகு மாதிரி அட்டகாசமாக இருந்தால் தேவலாம்! அதற்காக நேற்று மிட் நைட்டில் கமெண்ட் போடுவதால் "நடுநிசி நாய்" என்ற பெயர் மட்டும் வேண்டாமே ப்ளீஸ்! ;)
ஆஹா கலிலோடு சினிமா தியேட்டரில் - ஏதேச்சையாக எடிட்டர் பிளாக் வந்தால் ஆசிரியரின் சர்ப்பிரைஸ் போஸ்ட் சூப்பர் :)
ReplyDeleteபாண்டிச்சேரி கார்த்திகேயன் சார்,
Deleteநண்பர் கலீலை நன்றாக தெரியுமென்பதால் ஒரு Guess:
நீங்கள் பார்த்தது/பார்த்துக்கொண்டு இருப்பது The Man With Iron Fists படத்தின் தமிழ் டப்பிங் ஆன "இரும்புக் கை மாயாவி" தானே?
இல்லை நன்பரே
Deleteவுல்வொரின்.....
டப்பிங் படம் என்பதில் சரியாக இருந்த நான், நீங்க ஒரு வாரம் லேட் ஆக போவீங்க என்பது தெரியாததால் "சொதப்ஸ்".
Deleteமண் ஒட்டவில்லை :)
சுட்டி லக்கி அட்டைப்படம் அருமை. போஸ்டர்களும் சூப்பர்
ReplyDelete// TEX தீபாவளி மலரில்//
ReplyDelete// சந்தோச ஆச்சர்யம் //
// உறுதியாகி விட்டது //
யூகங்களுக்கு நவம்பர் வரை டைம் கொடுக்கப்பட்டிருப்பதால், இதோ ஆரம்பிக்கிறது எனது யூகக் கணைகளும்!
யூகம் நம்பர் 1:
// உறுதியாகிவிட்டது //
இந்த வார்த்தையில்தான் சூட்சுமம் ஒளிந்துள்ளது! அப்படியானால் இத்தனை நாளும் 'அது' உறுதியாகாமல் இருந்துள்ளது. அந்த 'உறுதியாகாதது' எது?
யூகம் 1(a): 'கார்ஸனின் கடந்த காலம்'
யூகம் 1(b): 'பவளச்சிலை மர்மம்'
அடுத்த வருட வண்ண மறுபதிப்பிற்கு மேற்கூறிய இரண்டில் எதைத் தேர்வுசெய்வதென்ற குழப்பம் நீங்கித் தற்போது 'உறுதி' ஆகியிருக்கிறது.
'உறுதி' செய்யப்பட்டது: 'கார்ஸனின் கடந்த காலம்'
காரணம் : சென்ற பதிவில் 'போராட்டக் குழு' செய்த ரகளை!
யூகங்கள் தொடரும்...
Erode VIJAY : போராட்டக் குழு + பிரியாணி பொட்டலம் + லெக் பீஸ் என்று ஏதோ எதேச்சையாய் நினைவுக்கு வந்தது ! இந்த வாரம் நண்டு ப்ரை வேறு உண்டென்று காற்று வாக்கில் சேதி வந்தது ! நிஜமோ..என்னவோ ..தெரியவில்லையே !
Delete'கார்ஸனின் கடந்த காலம்' - வண்ணத்தில்....அதுதானே.
Delete@ editor: what about us veggies?
Deleteநானும் கார்சனின் கடந்த காலத்தையே உறுதியாக நம்புகிறேன்!
Deleteஅந்த மாபெரும் சர்ப்ரைஸ் வண்ணத்தில்தானே!
Deleteநமது டெக்ஸ் தீபாவளியில் வரும் அந்த சஸ்பென்ஸ் நீங்கள் நினைப்பது போலே இல்லை நண்பர்களே .....
Deleteஅது எனக்கு மட்டுமே அறிந்த ரகசியம் ..இருந்தாலும் நம் நண்பர்களுக்காக அதை சொல்லி விடுகிறேன் .காதை கொடுங்கள் ...
....................
....................
.....................
அந்த புத்தகத்துடன் இனிப்பாக ..,இணைப்பாக
"சிங்கத்தின் சிறு வயதில் "தொகுப்பு புத்தகம் ...டோட்டடாங் ..... :-)
//அந்த புத்தகத்துடன் இனிப்பாக ..,இணைப்பாக
Delete"சிங்கத்தின் சிறு வயதில் "தொகுப்பு புத்தகம் ...//
சூப்பர்...சூப்பர்...சூப்பர்...
நண்பர்களின் யூக கணைகளான,
Delete// யூகம் 1(a): 'கார்ஸனின் கடந்த காலம்'// //அந்த மாபெரும் சர்ப்ரைஸ் வண்ணத்தில்தானே!//
// அந்த புத்தகத்துடன் இனிப்பாக ..,இணைப்பாக
"சிங்கத்தின் சிறு வயதில் "தொகுப்பு புத்தகம் ...டோட்டடாங் ..... :-)//
ஆகா !.. .எதிர்பார்ப்புகளை எகிற வைக்கின்றதே! தீபாவளி வரை தாங்குமா,என் மனது ?
//TEX தீபாவளி மலரில் ஒரு சந்தோஷ ஆச்சர்யம் இடம்பெறுமென்று ஏற்கனவே எழுதி இருந்தேன் அல்லவா ? அதுவும் தற்போது உறுதியாகி விட்டது ! //
DeletePAPER BACK கில் இருந்து HARD COVER க்கு மாறப்போறோம் ! : )
வணக்கம் எப்படியோ உள்ளே வந்தாச்சு, ஈரோடில் இருந்தாலும் புத்தக திருவிழா வர இயலாது என்பது கஷ்டமாக உள்ளது. அலுவல் நிமித்தமாக Calcutta செல்ல வேண்டும் அதுவும் 20 நாட்கள். I hate my boss:-(
ReplyDeleteபோஸ்டர்கள் அனைத்தும் அருமை.
ReplyDeleteசிறப்பான டிசைன்கள். நம்மில் பலரும் போட்டோஷாப் புலிகள் என்று தெரிகிறது.
ReplyDeleteகலந்துகொண்டு சிறப்பித்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
எடிட்டர் & ஈரோடு டீம்: புத்தக திருவிழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
சுட்டி லக்கி பற்றிய பதிவு ஒக்கே, வழக்கமான நூறு ருபாய் புத்தகமும் இதனுடனே வந்து விடும் அல்லவா? (மனதில் மிருகம் வேண்டும்)
சார்,
ReplyDeleteஇந்த பதிவில் ஒரு போஸ்டர் / பேனர் (நன்றி - கார்த்திக் சோமலிங்கா) ஐ வடிவமைத்தது கோவை சதீஷ் என்று இருக்கிறதே? அவர் கோவை டாக்டர் சதீஷா?
@Arun SowmyaNarayan:
Delete//இந்த பதிவில் ஒரு போஸ்டர் / பேனர் (நன்றி - கார்த்திக் சோமலிங்கா)//
:) :)
ஒட்டுனா போஸ்டர், கட்டுனா பேனர்! (அப்படிதான் நினைக்கிறேன்!!!) :D
//ஒட்டுனா போஸ்டர், கட்டுனா பேனர்!//....ஹாஹா அட்ட"ஹாஸ்யம்".
Delete@மேற்கிலிருந்து ம. ராஜவேல்:
Delete//அட்ட"ஹாஸ்யம்"//
உங்களோட இந்த சொல்லாடலும் அட்ட"ஹாஸ்யம்" :) :) :)
present sir/friends
ReplyDeleteநண்பர்களே பெருமைக்குறிய விசயம் நாளை குட்டி லக்கி தமிழில் பிறக்கப்போவது பகுத்தறிவு தந்தை பிறந்த ஈரோட்டில்தான்.
ReplyDelete* இன்று ராதாகிருஷ்ணன் அண்ணாச்சி மற்றும் வேலுவும் புத்தக திருழாவுக்கு இன்று ஆஜராகிவிட்டார்கள்
* நமது ஸ்டாலை அழகுபடுத்திக்கொண்டிருந்த பொழுது ஒவ்வொரு ஸ்டாலாக தேநீர் விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு நண்பர் நமது அரங்கத்திற்கு வந்த பொழுது கேட்ட முதல் கேள்வி மாயாவி(வேதாளர்) கதைகள் எல்லாம் நீங்கதான் போடுறீங்களா? அது இருக்கா என்றார்?
* அடுத்த நபர் அரங்கத்தின் உள்ளே பார்த்துவிட்டு இரும்புக்கை மாயாவி இப்பொழுது வருகிறா ? என வினவியபோது அனைத்து 30+ வயதை அடைந்த அனைவரும் கண்டிப்பாக இரும்புக்கையை இன்னும் மறக்கவில்லை என்பதனை உணர்த்தியது
* அடுத்து வந்த நபர் நமதுபோஸ்டர்களைப்பார்த்து பிரமித்து இதெல்லாம் எங்கிருந்து வருகிறது என்று கேட்ட பொழுது வாசகரின் கைவண்ணங்கள் என்றபோது "வாசகர்களா"ஆச்சரியப்பட்டார். விளக்கம் அளித்தபோது சந்தோஷப்பட்ட அவர் கேட்ட கேள்வியும் இரும்புக்கை மனிதரைப்பற்றியதுதான்
அனைத்து அரங்கத்திலிருந்தும் பிரகாஷ் பதிப்பகத்தின் அரங்கம்மட்டும் தனித்துவம் பெறப்போவது இப்போதே உறுதியாகிவிட்டது
அரங்கத்தின் புகைப்படம்:
http://tamilcomicskadanthapaathai.blogspot.in/2013/08/2013.html#comment-form
@Erode M.STALIN:
Deleteபகிர்வுக்கு நன்றி ஸ்டாலின்!!!
//அனைத்து அரங்கத்திலிருந்தும் பிரகாஷ் பதிப்பகத்தின் அரங்கம்மட்டும் தனித்துவம் பெறப்போவது இப்போதே உறுதியாகிவிட்டது//
நிச்சயமாக, இவ்வளவு பேனர்கள் யாரும் கட்டியோ ஒட்டியோ இருக்க மாட்டார்கள்! சுட்டி கட்டி ஒட்டி என்று ஒரே கலக்கல்தான் போங்கள்! :) தன்னார்வத்துடன் உதவி வரும் உங்கள் முயற்சிகள் பாராட்டுக்குரியது!
அடடே
Deleteசூடான அப்டேட்டுகளுக்கு நன்றி இசுடாலின் நண்பரே.
சூப்பர்! போஸ்டர்களில் மாயாவியோ,ஸ்பைடரோ, ஆர்ச்சியோ இல்லாதது நாம் அடுத்த கட்டத்திற்கு தாவி விட்டதை உணர்த்துகிறது! அவர்கள் தேவை இல்லை என என என்னும் நண்பர்களையும் காட்டுகிறது! எங்களுக்கோ என்ன செய்ய வரும் கதைகள் அனைத்தும் சிறப்பாய் உள்ளதால் இது ஒரு பிரச்சினையாக தெரியவில்லை ! ஆனாலும் ஓங்குக ஸ்பைடரின் புகழ்! போஸ்டரை பார்க்கும் ஒவ்வொரு கண்களும் நிச்சயமாய் ஸ்பைடரை தேடும் போது அவர்களது மன கண்களில் நிச்சயம் மின்னி மறைவார் நமது குற்றவியல் சக்கரவர்த்தி என்பது மட்டும் உண்மை!
Deleteஇதுதானே காலம் காலமாய் நடந்து வருகிறது!
கரீட்டா சொன்ன தல! இந்த கோயம்புத்தூர் பார்ட்டி கூட நம்ம கச்சி தான் வாத்யாரே நோட் பன்னிக்குனீங்கலா? சீக்கிரமா குற்றச்சக்ரவர்த்திய கொண்டாங்கோ!
Delete@ ஸ்டாலின்
Deleteஅப்டேட் களுக்கு நன்றி சார்!
லக்கிலுக்குக்கு போட்டியே கிடையாது என்று இதனால் வரை இருந்தேன். ஆனால் இந்த பக்கங்களை பார்க்கையில் தான் தெரிகின்றது - அவருக்கு அவரே போட்டி என்பது
ReplyDeleteலக்கீக்கு போட்டி சுட்டி லக்கியே.
ஐயா சாமி ST கூரியர் ஆளுங்களே, தயவு செய்து இந்த முறையும் (போன தடவை போல) சரியான நேரத்தில் குடுத்துடங்க, சிறப்பான வாரயிறுதிக்கு உங்களுக்கு நன்றி சொல்வேன்.
லக்கிக்கு போட்டி (டைம் மெஷினில் முன்னோக்கி வந்த) சுட்டி லக்கியே.
Deleteபுத்தக திருவிழா நடைபெறுகிறது .உங்களை எதிர்ப்பார்க்கின்றோம் comiclover @ராகவன் சார் .please join us ...
ReplyDeleteBest wishes for erode book fair....
ReplyDeleteநண்பர்களின் பேனர் டிசைன்கள் பிரமிக்கவைக்கிறது. கார்த்திக் சொன்னதுபோல எல்லாரும் டிசைனிங்கில் சாதிக்கமுடியும்!(ஆர்வமும், பொறுமையும் இருக்குமானால்) போட்டோஷாப் கொஞ்சம் உபயோகபடுத்தி நம் கற்பனைகுதிரையை இரவு 10மணிக்குமேல் தட்டிவிட்டோமேயானால் அருமையான ஓவியங்கள் உருவாகலாம்! :) நன்றி விஜயன் சார்! எங்கள் ஆக்கங்களை இங்கே அறிமுகபடுத்தியதற்கு! நன் வாசிக்கும், நேசிக்கும் ஒரு பதிப்பகத்தின் ஆசிரியரின் வலைப்பூவில் என் படைப்பை அறிமுகபடுத்தியுள்ளீர்கள்!இதுவே எனக்கு பெருமைதான்!
ReplyDeleteVaasagargalin padaipugal anaithum attakasam.
ReplyDeleteVALTHUGAL NANBARGALAY,,.
சுட்டி லக்கியின் அட்டை படம் அருமை... ஈரோடு புத்தக திருவிழாவில் கலந்துக்க போகும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். நண்பர்களின் பேனர் டிசைன்கள் அருமை அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பளித்த எடிட்டருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
ReplyDeleteவிஜயன் சார், நமது காமிக்ஸ்க்கு மேலும் பல வாசகர்களை கொண்டுவர இன்றைய மாணவ மற்றும் மாணவிகளை நமது காமிக்ஸ் சென்றடைய செய்துவிட்டால் நமது வாசகர் வட்டம் விரிந்துவிடும். ஆனால் இதில் உள்ள சிக்கல் சில கதைகளில் வரும் சித்திரம்கள் மாறுபட்ட எண்ணம்களை உருவாக்குவதால் (பலமுறை இதனை பலகோணம்களில் இதனை பற்றி விவாதம் செய்து விட்டோம் / செய்வோம்) , இதனை சரி செய்ய அப்படிபட்ட கதைகளை நமது 6+ வரிசையில் அடுத்த ஆண்டு முதல் கொண்டு வர முடியுமா?
ReplyDeleteஇதனை நடைமுறை படுத்தினால் நமது வாசகர்கள் (முடிந்தால்) அனைவரும் தாங்கள் படித்த பள்ளிகூடம்களில் உள்ள வாசகசாலைகளுக்கு 1 அல்லது 2 வருடம் நமது ரெகுலர் (12) இதழ்களை நன்கொடையாக கொடுத்தால் இன்னும் மிகப் பெரிய வாசகர் வட்டம் நமக்கு கிடைக்கும்.
+1
Delete@Parani from Bangalore:
Delete//இதனை சரி செய்ய அப்படிபட்ட கதைகளை நமது 6+ வரிசையில் அடுத்த ஆண்டு முதல் கொண்டு வர முடியுமா?//
agree!!
விஜயன்சார், ஈரோடு புத்தக திருவிழாவில் நமது காமிக்ஸ் வெற்றி பெறவும், மேலும் பல புதிய வாசகர்களை நமது காமிக்ஸ் குடும்பத்தில் இணைக்க ஆண்டவனை வேண்டுகிறேன்!
ReplyDeleteமுதல் முறை என்றாலும் நமது நண்பர்களின் போஸ்டர் டிசைன் சோடை போகவில்லை;
போஸ்டர்களை வைத்து அவர்களின் ஆதர்சன நாயகர்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம் :-)
போஸ்டர் டிசைன் போட்டியில் கலந்து கொண்ட நண்பர்கள் அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.
ஈரோடு புத்தகத் திருவிழாவில் எமது காமிக்ஸ் ஸ்டால் விற்பனையில் சாதனைபுரியவும், இன்று எமது காமிக்ஸ்கள் புதிய வடிவில், வர்ணத்தில் வருவதை அறியாத பழைய வாசகர்களை சென்றடைவதற்கும், புதிய பல வாசகர்களை ஈர்த்துக்கொள்ளவும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஈரோடு ஸ்டாலின் அவர்களின் வலைப்பூவில் தயாராகி கம்பீரமாகக் காட்சியளிக்கும் எமது ஸ்டாலின் அசத்தல் புகைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. போஸ்டர், பேனர் டிசைன்களில் அசத்தியிருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். 'பிரகாஷ் பப்ளிஷர்ஸ்' பெயருக்குப் பக்கத்திலேயே நமக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சி!
சுட்டி luckyக்கு warm welcome! Schinders listற்கு பிறகு பிரளயத்தின் பிள்ளைகள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது! secpia background colour பழமையை நன்றாக புலப்படுத்தியது. சரியான கதையை வெளியிட்ட editorக்கு BIG THANKS!
ReplyDeleteஇன்னும் வரலயாம்!
ReplyDeleteஎங்க வீட்டு சின்ன தவளை வழக்கம்போல "முடிய பிடிச்சு இழுக்கிறது..மூக்கிலயே குத்தறது" விளையாட்டுல பிசியா இருந்த வேலை லேம் ஹார்ஸ் சின்ன தவளைக்கு ஆயிரமாவது முறை பற்பசையாரோடு நட்புறவா போயிடனும்ன்னு விளக்கி சொல்ல, சின்ன தவளையாரோ "மண்டை தோலிய உரிச்செடுக்க மட்டுமே வெள்ளை பற்பசையார் லாய்க்கு " என்ற தனது கொள்கையில பிடிவாதமாக இருந்தார். லேம் ஹோர்ஸ் சின்ன தவளையார பிடிச்சு தூக்கிவரும்போது புமியார் மேல தன்ன விடசொல்லி சின்ன தவளை எவ்வளவு ஆர்பாட்டம் பண்ணியும் ஒன்னும் செல்லுபடியாகல. யுத்த களத்துல சின்ன தவளையாரோட பல்லாரும் உதட்டாரும் வாயாரும் ஒரு கூட்டனியமைக்க பற்பசயாரும்,ப்ரஷாரும்,தண்ணீராரும் மறு கூட்டணியில நிக்க லேம் ஹார்ஷ் துண்டசச்சு யுத்தத்தை துவக்கி வைச்சார். கடுமையான யுத்தத்துக்கு முடிவில பற்பசையார் உதட்டாரோட அரண உடைச்சு சின்ன தவளையாரோட பல்லாரின் பற்கள் மேல பஞ்ச் விட சின்ன தவளை வெள்ளை பற்பசையாரோட மண்டதொலிய உரிச்சுசேடுத்து, யுத்தகளத்துள்ள வெற்றி நடனம் ஆட்டினார். ஒளிஞ்சுக்கிட்டிருக்கற சோப்பாரையும் சாம்பூவாரையும் தேடிகிட்டிருக்கும்போது, உடைந்த மூக்கராகிப்போன லேம் ஹார்ஸ் பெரும் சிரமப்பட்டு சின்னதவளையார சமாதானப்படுத்திட்டிருந்தார்."
ReplyDeleteஎங்க வீட்டுல்ல தினமும் நடக்கற wild west காட்சிகள் அழகா கிட லுக்கியோட ஒத்து போகுது பாத்தீங்களா ?? சின்ன தவளையார் எவ்வளவுதான் லேம் ஹோர்ஸ்சோடா சண்டைபோட்டாலும் லேம் ஹோரஸ் குதிரையேற நேரத்துல்ல சின்ன தவளை பாஞ்சு வந்து லேம் மேல தொத்திக்கும் பூமியார் மேல விடசொன்னது இப்போ இல்லப்பா என்றபடி. ஆனா தர்பூசணி தபீதாவத்தன் அப்படி சொல்ல பயமா இருக்கு : ) : )!
கிட் லக்கி ஒரு ச்மேஷ் ஹிட் ஆகபோகுது சார். வழக்கமான பிரிண்ட் ரன் விட இதுக்கு இருமடங்கு அல்லது மூன்று மடங்கு தேவைப்படும். இல்லன்ன அடுத்த மாசமே ப்ளாக்'ல reprint request வருதா இல்லையா பாருங்க. BTW இந்ந்த சீரிஸ்'ல எவ்ளோ புத்தகங்கள் இருக்கு சார் ??? I'M IN DEEP LOVE WITH KID LUCKY! : ) : ).
போஸ்டர்கள் அருமை அருமை ! நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்!
ஈரோடு புத்தக திருவிழா வெற்றிபெற நல்வாழ்த்துக்கள் சார் !
@விஸ்கி-சுஸ்கி:
Deleteசின்ன தவளை & லேம் ஹார்ஸ் படலம் ரொம்ப சூப்பர் நண்பா, ரசித்தேன்!!! :) தினம் காலையில் பெங்களூர் போஸ்டர் ஒட்டியார் வீட்டிலும் இதே ரோதனைதான்! :D
ரசனையாக சொல்லியிருக்கிறீர்கள். எங்கள் வீட்டிலும் இதே கதைதான். குறிப்பாக ஷாம்பூவாரோடுதான் பெரிய போராட்டமே!! முடியல.. :-))
Delete//தர்பூசணி தபீதாவத்தன்...///
Deleteஏன்ப்பா ? உயிர் மேல ஆசை இல்லையா தம்பி....
BTW இந்ந்த சீரிஸ்'ல எவ்ளோ புத்தகங்கள் இருக்கு சார் ??? I'M IN DEEP LOVE WITH KID LUCKY!: It is 3 friend as per my knowledge. We can see kid Daltons in "Oklahoma Jim"
Deleteபொடியனின் இரண்டு போஸ்டர்கலுமே டாப்!
ReplyDeleteசார் ..நமது வாசகர்களின் பேனர் அனைத்தும் டாப் .உண்மையில் எது முதலிடம் என கண்டு பிடிப்பது கஷ்டம் தான் ..? அனைத்துமே அழகு .வாழ்த்துகள் நண்பர்களே .....
ReplyDeleteகிட் லக்கியின் அட்டை படமும் நன்று .புத்தகத்திற்கு காத்து கொண்டு இருக்கிறேன் .
ஈரோடு புத்தக கண்காட்சியில் நம் ஸ்டால் மாபெரும் சாதனை படைக்க வாழ்த்துகிறேன் .
super... any one got books already???
ReplyDeletewow.. posters are awesome..surely our bookstall will rock..as usual more persons will be there ...;)
ReplyDeleteErode புத்தக திருவிழா.. புது மற்றும் பழைய வாசகர்களை(who are not knowing our comics coming again) நமது குடும்பத்துக்கு கொண்டு வர வாழ்த்துக்கள்...
ReplyDeleteஹையா! 2 புக் கைக்கு வந்தாச்சு!
ReplyDelete// பொடியனின் இரண்டு போஸ்டர்கலுமே டாப்!//
இதோ மறுபடியும் போறேன்!
Deleteகிடைச்சுடுச்சா..ஸ்டீல்.கிளா..
Deleteபிம்பிலிக்கா பிளாபி ....
Deleteகார்த்திக் சோமலிங்கா அவர்களின் போஸ்டர்கள் சூப்பர். வாழ்த்துக்கள்,நண்பரே.
ReplyDelete@Siva Subramanian:
Deleteமிக்க நன்றி நண்பரே!
bangaloreல் யாருக்காவது புத்தகம் கிடைத்து விட்டதா??
ReplyDeletewaiting my friend :-)
Delete@tex kit: //bangaloreல் யாருக்காவது புத்தகம் கிடைத்து விட்டதா??//
DeleteProfessional courier - still not delivered!
just now called ST courier..--They have not checked yet..
Deleteகாலையிலேயே கிடைத்து விட்டது .அட்டைப்படங்களும் சரி ,சித்திரங்களும் பிரிண்டிங்கும் சரி ,கண்களில் ஒட்டிக்க வேண்டிய ரகம் ..
Deleteவெங்கு மாமா (L வெங்கடேஸ்வரன் ) போஸ்டேர்லாம் சூப்பரா இருக்குப்பா.. ஏம்ப்பா என் SPIDER படம் எங்கப்பா?
ReplyDeleteஈரோடு புத்தக திருவிழாவில் நமது காமிக்ஸ் வெற்றி பெற "வெறியோடு களவேலை" செய்துவரும் ஈரோடு நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சான்ற நன்றி... :-)
ReplyDeleteநமது ஸ்டால்-இல் நமது மும்மூர்த்திகள் போஸ்டர் கண்டிப்பாக இடம் பெறவேண்டும்! இது நமது பழைய காமிக்ஸ் காதலர்களை நமது காமிக்ஸ் குடும்பத்தில் இணைக்க வழி செய்யும்! நண்பர்களே நமது மும்மூர்த்திகள் போஸ்டர்-ஐ உடன் தயார் செய்து நமது ஈரோடு புத்தக ஸ்டால்-இல் உடன் தொங்க விட அன்புடன் கேட்டு கொள்கிறேன்!! நமது ஆசிரியர் மும்மூர்த்திகளை மறக்கலாம் நாம் அவர்களை மறக்கலாமா .... :-)
ReplyDeleteபரணி சாருக்கு ஒரு கிலோ சர்க்கரை பார்சல்.
Deleteடியர் விஜயன் சார்,
ReplyDeleteநான் வடிவமைத்த பேனருக்கு நமது ஸ்டாலின் நடுவில் பிரதான இடம் ஒதுக்கியதிற்கும், கீழே எனது பெயரை இணைத்ததிற்கும், இது போன்ற வாய்ப்புக்களை வாசகர்களுக்கு வழங்கி உற்சாகமூட்டுவதற்கும் மிக்க நன்றி!! நமது அலுவக கிராபிக் டிசைனர்கள் உருவாக்கி இருக்கும் ஸ்பாட்லைட் அடித்தது போன்ற பேனரும் மிக அருமையாக இருக்கின்றது!
கொஞ்சம் சுய புராணம்...
//நமது தற்சமய நாயகர்களைக் கொண்டு ஒரு colorful கதக்கழியை நடத்திக் காட்டுங்களேன் guys ?//
ரயில்வே ப்ளாட்பார்மில் கூட்டமாக நிற்பதைப் போல நம் டாப் நாயகர்கள் நிற்கும் 'சிவப்பு நிற' முதலாவது பேனரை வடிவைக்க தூண்டுதலாக இருந்தது உங்களின் மேற்கண்ட வார்த்தைகள்தானே தவிர, பழைய ஹீரோக்களை இருட்டடிப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கம் எல்லாம் எதுவும் இல்லை - நண்பர்கள் ஸ்டீல்க்ளா மற்றும் பெங்களூர் பரணி கவனத்திற்கு! :) :)
சிக்பில் குழுவினர், கேப்டன் பிரின்ஸ், ரிபோர்ட்டர் ஜானி, மார்ட்டின், கமான்சே இவர்களையும் இணைக்க விருப்பம் இருந்ததுதான்; ஆனால், தீபாவளிக்கு முண்டியடித்து ரயில் ஏறும் கூட்டம் போல நம் நாயகர்கள் தோன்றக் கூடாதே என்ற நல்லெண்ணத்தில் அதை தவிர்த்து விட்டேன்! :) நாயகர்களே பிரதானமாக காணப்படும் காமிக்ஸ் உலகில் ஒரு நாயகியாவது இடம் பெற வேண்டும் என்பதாலும், மாடஸ்டி என்றால் எப்போதுமே ஒரு சாஃப்ட் கார்னர் உண்டு என்பதாலும் அவர் பேனரில் இடம் பெற்றார் (அவர் பழைய நாயகி என்றாலும்)! லேடி எஸ் & கோட் நேம் மின்னலையும் முடிந்தால் களமிறக்குங்கள் சார்!
பேனரில் உள்ள அந்த 'ஆளை அடிக்கும்' சிவப்பு நிறம், நான் சிறு வயதில் மிகவும் ரசித்த நமது கிளாசிக் லயன் / முத்து காமிக்ஸ் "பளிச்" அட்டைகளுக்கு சமர்ப்பணம்! அந்த வண்ணத் தேர்வுக்கு இன்னொரு காரணமாக இருந்தது கீழ்காணும் டயபாலிக் கவர் டிசைன்தான்! அதில் உள்ள சிவப்பை கேன்வாஸ் முழுக்க நிரப்பி மற்ற நாயகர்களையும் இணைத்தேன்! இனி வெளியாகவிருக்கும் டயபாலிக் இதழ்களில் ஏதாவது ஒன்றிற்கு இந்த டிசைனை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்!
Danger RED Diabolik!
நண்பர் மேற்கிலிருந்து ராஜவேல் சொன்னது போல நாயகர்கள் பெயர்களை தமிழில் போட்டிருக்கலாம்தான்; ஆனால், ஒவ்வொரு நாயகருக்கும் உள்ள அந்த பிரத்தியேக title font-களை பயன்படுத்த எண்ணியதால் தமிழை தவிர்த்து விட்டேன். மாடஸ்டிக்கு சரியானதொரு டைட்டில் இமேஜ் கிடைக்கவில்லை என்பதால் அம்மணிக்கு மட்டும் பெயர் சூட்டவில்லை. :)
(to be continued!)
ஒரு பேனரின் கதை - தொடர்கிறது...
Deleteமுதலாவது டிசைனை அனுப்பி வைத்த உடன், கிராஃபிக் நாவல்கள்" என்பதை ஹைலைட் செய்து ஒரு பேனர் வைத்தால் அது பெரியவர்களையும் கவருமே என்று தோன்றியது! காமிக்ஸ் என்றாலே குழந்தைகளோடு மட்டுமே பொருத்திப் பார்க்கும் நம்மாட்களுக்கு இப்படியான gimmick-கள் அவசியமாகின்றன இல்லையா?! அடிப்படையில் கிராபிக் நாவல்கள், காமிக்ஸ்கள் இவற்றிற்கு இடையே பெரிய வித்தியாசம் ஏதும் இல்லையென்றாலும்; மேலை நாடுகளில் கிராபிக் நாவல்கள் என்றால் mature audience படிக்க, comics என்றால் குழந்தைகள் மற்றும் பொது வாசிப்புக்கு என்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் (கவனமான கதைத் தேர்வுகளின் மூலம்)! "காமிக்ஸ் என்பது குழந்தைகளுக்கு மட்டும்" என்று எண்ணுபவர்களின் மனத்தடையை தகர்க்க மற்றும் விற்பனையை அதிகரிக்க இது போன்ற மாற்றுப் பெயர்கள் அவசியப்படுகின்றன!
இந்த கிராபிக் பேனரை வடிவமைப்பதில் ஒரு சிக்கல் தலை தூக்கியது! அதில் உள்ள கடைசி இரண்டு கிராபிக் நாவல்கள் இன்னமும் விஜயன் சாரின் பரிசீலனையில் மட்டுமே உள்ளன; தலைப்புகளும் வைக்கப் படவில்லை - சரி எதையாவது பொத்தாம் பொதுவாக போட்டு வைப்போம் என்று முதல் கதைக்கு "இரும்புப் பறவைகள்" என்றும் (ஒரிஜினல் பிரெஞ்சு பெயர் Dent D'ours - கரடிப்பல்!) இரண்டாவதிற்கு "தாலாட்டிக் கொல்லவா" (பிரெஞ்சில் Berceuse Assassine) என்றும் வைத்தேன்! Google Image Search, Google Translator & Google Transliteration இவை இல்லாத வாழ்க்கையை இனியும் எண்ணிப் பார்க்க முடியுமா என்ன?!
அதே போல ஒரு சிப்பாயின் சுவடுகளுக்கான high resolution image-களும் எங்கே தேடியும் கிடைக்கவில்லை (ரொம்ப பழைய கதை என்பதாலோ என்னவோ?!). ஆனால், இந்த பேனரில் உள்ள முக்கிய பிரச்சினை என்னவென்றால், உட்புறத்தில் இருக்கும் "12 ஃபிரேம்களில்" உள்ள ஒவ்வொரு இமேஜும் அளவில் 1024x768-ஐ விட சற்று குறைவு என்பதால், என்லார்ஜ் செய்தால் அதில் உள்ள எழுத்துக்களும், சித்திரங்களும் தெளிவாக தெரியாமல் போகும் வாய்ப்பு உள்ளது! நான் அனுப்பிய அளவில் பிரிண்ட் செய்தால் மட்டுமே சரிவரும் (4350x2550)!
இந்த இரண்டு பேனர்களையும் முடிப்பதில் மிகப்பெரிய சவாலாக இருந்தது முத்து & லயனின் High-Resolution லோகோக்கள் கிடைக்காததுதான்! எடிட்டரின் பதிவுகளில் உள்ள அனைத்து அட்டை ஸ்கேன்களையும் டவுன்லோட் செய்து அவற்றில் அளவில் பெரியதாய் தெரிந்த லோகோக்களை சற்றே மேம்படுத்தி பயன்படுத்தினேன்! அப்படியும் லயனின் லோகோ மட்டும் சிறிதாகவே இருந்தது! கடைசியாக எடிட்டரிடம் லோகோக்களை மட்டும் நீங்களே பெரிதாக மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லி அப்படியே அனுப்பி வைத்தேன்! பெரிய லோகோக்களை இணைத்ததோடு இல்லாமல் "LION & MUTHU COMICS" என்று பெங்களூர் காமிக் கான் நினைப்பில் தவறுதலாக ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் மாற்றியும் இருக்கிறார், நன்றி!!! :)
சரி ரொம்பவே போரடித்து விட்டேன் என்று நினைக்கிறேன்! எனவே, "ஒரு பேனரின் கதை" இத்துடன் நிறைவுறுகிறது!!! :) :) :)
டியர் விஜயன் சார்,
Deleteலோகோக்களைப் பற்றி பேசியதில் என்னுடைய ஒரு பழைய பின்னூட்டமும், அதற்கான உங்களின் பதிலும் நினைவுக்கு வருகிறது!:
//Karthik Somalinga 21 December 2012 18:15:00 GMT+5:30
நமது காமிக்ஸ்கள் உயரிய தரத்தில், முழு வண்ணத்திற்கு பரிணாம வளர்ச்சி அடைந்து ஒரு வருடம் முடியப்போகிறது! அப்படியே, முத்து, லயன் & CC இவற்றின் Logo-களை சற்றே மெருகேற்றிட முடியுமா?! இப்போதைய முத்து & லயன் லோகோக்களில் எழுத்துக்கள் கைகளால் எழுதப்பட்டுள்ளன. மேலும் முத்து காமிக்ஸ் லோகோ மட்டும் சதுரமாக உள்ளது! :)
பார்டரில் வண்ணம் சேர்த்து, மூன்று லோகோக்களையும் ஒரே அளவில், ஒரே Font-இல் வடிவமைத்தால் மிகவும் நன்றாக இருக்குமே?! அப்படியே, லோகோக்களில் இடம்பெற்றுள்ள வடிவங்களில் / படங்களில் பிசிறுகள் களைந்தால் நன்றாக இருக்கும்!
முடிந்தால், நமது ஓவியரிடம் சொல்லி, இந்த வலைப்பூவிற்கும் ஒரு லோகோ அல்லது பேனர் வடிவமைத்து விடுங்கள்!!! :) //
>>>>>>
இதற்கு உங்களின் பதில்:
//Vijayan 21 December 2012 18:23:00 GMT+5:30
Karthik Somalinga : இப்போதைய இந்தப் பரபரப்பெல்லாம் சற்றே ஓய்ந்த பின்னே - லோகோக்களை மெருகேற்ற முயற்சிப்போமே ....பெரிதாய் மாற்றங்களின்றி !//
கார்த்திக் ஆனாலும் நீங்கள் பழைய நாயகர்களை மறக்க கூடியவர்(நியாபக மறதியால் அல்ல) என்பதால் எனக்கு உங்கள் மேல் கோபம் இல்லை! மேலும் புதிதாய் வருபவர்களும் பழைய நாயகர்களை கேட்டு ஆசிரியரை முடியை பிய்த்து கொள்ளுமளவிற்கு செய்யும் வாய்ப்புள்ளதால் மறந்து விடுகிறேன்! ஆனாலும் ஸ்பைடர் என்று மூன்று முறை சொல்லிப்பாருங்கள் வலை மன்னன் உங்களை மீண்டும் ஹிப்னாடிசம் செய்து , தனது வலை துப்பாக்கியால் இழுத்திடுவார்!
Deleteஎன்னை பொறுத்தவரை பழைய லோகோக்கள் நம் அது அடையாளம்! பல்ச மறக்க கூடாது தம்பி(லோகோவில் மட்டிலுமாவது)!
Deleteஆனாலும் மாடச்டிக்கு மட்டும் இடமளித்து உங்கள் மனதை காட்டி , எங்கள் மனதை வாட்டி விட்டீர்கள், அவ்வளவு உயர்ந்தவரா ஆர்ச்சி, ஸ்பைடரை விட ....
Deleteஉங்களது தரமான முயற்ச்சிகளுக்கு வாழ்த்துக்கள் ! உண்மை அந்த இளம் சிவப்பு நிற பின்னணி அருமை! ஸ்பைடர் இல்லாதது வெறுமை!
Deleteஅனைத்து துறைகளிலும் கலக்கும் நண்பர் கார்த்திக் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
DeleteDEDICATED EFFORT! வாழ்த்துக்கள் கார்த்திக்! "THE MAKING OF BANNERS/POSTERS" பின்றீங்க !
Delete//Google Image Search, Google Translator & Google Transliteration இவை இல்லாத வாழ்க்கையை இனியும் எண்ணிப் பார்க்க முடியுமா என்ன?!//
I'M A LITTLE BIT WORRIED ABOUT THIS! : (
அலுமினிய பறவைகள்!
Deleteஇரண்டாவதிற்கு "தாலாட்டிக் கொல்லவா" (பிரெஞ்சில் Berceuse Assassine) என்றும் வைத்தேன்!
Deleteகச்சிதமான டைட்டில்!!
எல்லோருடைய டிஸைன்களுமே மிக நன்றாக இருந்தது. குறிப்பாக வெங்கடேசனுடையது பேனருக்காக வடிவமைக்கப்பட்டவை போல கச்சிதமாக இருந்தன. வாழ்த்துகள் நண்பர்களே!
ReplyDeleteநண்பர்கள் பலரும் சொல்வதைப்போல சுட்டி லக்கி ஒரு பெரிய ஹிட்டாக அமையப்போகிறது. ரொம்ப ஆவலோடு புத்தகத்தைக் காண காத்திருக்கிறேன். முன்னட்டையும் பிரமாதம்.
ReplyDelete(பின்னட்டைதான் ஒரு மாற்று குறைவு!)
உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன் நண்பரே. ஆனால் முன் அட்டை அந்த குறைகளை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறது.
Deleteஇந்த வயசுக்கு இதெல்லாம் ரொம்பவே டூ மச்தான்! இருந்தாலும் சொல்லாமல் இருக்கமுடியல..
ReplyDeleteநேத்து ஒரு கனவு. நான் ஈரோடுக்கு வரேனாம். நம்ப ஸ்டால்ல புது புக்ஸ் ஒண்ணு இல்ல, ரெண்டு இல்ல, ஏழு புக்ஸ் ரிலீஸாயிருக்காம். மகிழ்ச்சியும், சர்ப்ரைஸும் தாங்காம ஆவலா ஏழு புக்ஸையும் (அதுல ரெண்டு குண்டு வேற) அள்ளிகிட்டுப் போறேனாம்!
ஹும் இது என்னைக்கு நடக்கப்போவுதோ? மாசா மாசம் ஒண்ணு, அதிகபட்சம் ரெண்டுக்கே இங்க வழியில்லாம இருக்குது.. கருமாத்தூர் காமிக்ஸம்மனுக்குத்தான் பொங்கல் வைச்சு கிடா வெட்டணும்!
கிடாவை தயார் பண்ணுங்கள்
Deleteகெடைக்கல கெடைக்கல புக்கு இன்னும் கெடைக்கல.....
ReplyDeleteபுடிக்கல புடிக்கல எந்த புக்கும் புடிக்கல....
வணக்கம்! நான் குற்றச்சக்கரவர்த்தி பேசுகிறேன். எனது பேனர் மற்றும் போஸ்டர் எதுவும் இல்லாமல் காமிக்ஸ் திருவிழா நடத்த துணிந்து விட்டீர்களா? முதலில் எனது சாகசத்தை தடை செய்தீர்கள்,தற்சமயம் எனது உருவம் முழுவதையும் தடை செய்து விட்டு காமிக்ஸ் திருவிழா நடத்துகிறீர்கள். இப்படியே போனால் வளரும் அடுத்த தலைமுறைக்கு நான் யார் என்றே தெரியாமல் போகும் ஆபத்து உள்ளது. ஐயா சிங்கமுத்து ஆசிரியரே தயவு செய்து எனக்கும் ஒரு வாய்ப்பு தாருங்களேன். நன்றி.
ReplyDeleteஇப்படிக்கு
உங்கள் உண்மையுள்ள முன்னால் நாயகன்
SPIDER
//ஐயா சிங்கமுத்து ஆசிரியரே தயவு செய்து எனக்கும் ஒரு வாய்ப்பு தாருங்களேன். நன்றி. //
Deleteநல்ல காமெடி! எங்க குற்றசக்ரவர்த்தி எப்போதிருந்து கெஞ்ச ஆரம்பிச்சார் ???ஹெலிக்கார் எடுத்திட்டு போய் ஸ்டாலினை வலைதுப்பாகி வைச்சு பிடிச்சுட்டு வாங்க ! அவரு தான் கண்காட்சிக்கு தலையாம் ! அவர வைச்சுக்கிட்டு பிணயதொகையா உங்க சிலைய கண்காட்சிக்கு முகப்புல வைக்க சொல்லிடலாம் !.
குற்ற சக்கரவர்த்தி கெஞ்சுவதா? நீதிக்காவலன் ஸ்பைடர் கதையில் கூட மரணம் முன்னே நிற்கும்போது கெஞ்சாமல் பேரம் பேசியவன் எங்கள் தலைவன். அப்படியிருக்க, இந்த மாதிரி கெஞ்ச வேண்டுமா என்ன?
Deleteசும்மா சொல்லகூடாது.ஒவ்வொரு டிசைனும் தூள் ரகம் ! வாழ்த்துக்கள்.
ReplyDeleteBruce wayne: You either die a hero or you live long enough to see yourself become the villain.
ReplyDelete- The dark knight (2008)
இந்த வசனத்தை உண்மையாக்குவது போல இருக்கிறது இப்போதைய ஸ்பைடரின் நிலைமை.
ஐயகோ, குற்ற சக்ரவர்த்திக்கு இந்த சோதனை தேவையா? இதை கேட்பாரில்லையா?
எடிட்டருக்கு ஒரு வேண்டுகோள்:
ReplyDeleteசார்,
நீங்கள் இதுவரையில் அச்சேறாத ஸ்பைடர் கதைகளை வெளியிட வேண்டாம். ஆனால் ஏற்கனவே எங்களிடம் இருந்து சென்ற ஆண்டு வாக்களித்த (சந்தா பெற்ற) ஸ்பைடர் டைஜெஸ்ட் கதைகளை வெளியிட்டால் இது போன்ற புத்தக சந்தைகளில் எங்களை போன்ற பழங்கதைகளை பேசி வாழும் ஆன்மாக்களுக்கு "நல நேர நஞ்சாக" இருக்குமல்லவா?
அந்த டைஜெஸ்ட்டில் லயன் தீபாவளி சூப்பர் ஸ்பெஷலில் வந்த கதையையும் விளம்பர படுத்தி இருந்தீர்கள். அந்த கதையை அப்போது படித்து இருந்தாலும் இப்போது புத்தகம் கைவசம் இல்லை. இரவல் கேட்டு படிக்கலாம் என்றால் நண்பர்கள் பலரிடமும் இல்லை.
ஆகையால் நீங்கள் தயை கூர்ந்து அந்த ஒரு டைஜெஸ்ட்'ஐ ஒரு ஐநூறு புத்தகங்கள் மட்டுமே கூட பிரிண்ட் செய்து இதுபோன்ற புத்தக சந்தைகள்/ சிறப்பு விழாக்களுக்கு அனுப்பலாமே? பழைய வாசகர்களை மறுபடியும் நெருங்க அது ஒரு திறவுகோலாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை அல்லவா?
ஒரே ஒரு முறை - எங்களை போன்றவர்களுக்காக- அந்த மூன்று டைஜெஸ்ட் புத்தகங்களை {வெறும் ஐநூறு பிரதிகள் மட்டுமே ஆனாலும் பரவாயில்லை} அச்சிடுங்கள் சார்.
இது உங்களின் நீண்ட நாள் வாசகனின் அன்பு கோரிக்கை.
கார்த்திக் சோமலிங்கா, ஆவடி வெங்கடேஸ்வரன், ஸ்ரீரங்கம் சிவகுமார், இலங்கை பொடியன், கோவை சதீஷ் - நண்பர்களே, உங்களது படைப்புகள் ஒவ்வொன்றுமே கண்ணை பறிக்கின்றது. சிறப்பாக அமைந்துள்ளது வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாசகர்களை வெறும் வாசகர்களாக மட்டும் இல்லாமல் அந்த படைப்புகளுடன் அடையாள படுத்திக் கொள்ளும்போது மட்டுமே ஒரு கிரியேட்டர் ஜெயிக்கிறார்.
அந்த வகையில் வாசகர்களை திறனாளிகளாக மாற்றி வரும் எடிட்டருக்கு ஒரு ஜே.
தொடர்ந்து இது போன்று (வாசகர் ஸ்பாட் லைட், புத்தகங்களுக்கு பெயரிடுவது, மொழியாக்கம் செய்வது, அட்டைப்படங்களை டிசைன் செய்வது, இப்போது போஸ்டர்கள் / பேனர்கள் தயார் செய்வது) எங்களை ஊக்குவிக்கும் உங்களுக்கு நன்றி சார்.
லக்கி போன்ற கார்டூன் கதைகளில் பெயர்கலும் நகைசுவை உணர்வை தரும் தான்.இருப்பினும் சமீபத்தில் என்னவோ தெரியவில்லை ஆல் ரவுண்டராக சுந்தரதமிழ் கையோங்கி வருவதாக ஒரு பீலிங்.அசத்தவும் செய்கிறது.இல்லாமலும் போகிறது.
ReplyDeleteஎது எப்படியோ ராணி காமிக்ஸ் பாணியில் முன்பு தொடர்ந்த ஒரே கதாபாத்தின் பெயர் கதைகொன்றாக வருவது [உ +ம் - விபரீத விதவை/கடலோர கொலை]
அடுத்து ஒரே பெயர் "அஸ்கு லஸ்கா" பாணியில் பெயர் ஒன்று ஆனால் மொழி மட்டும் வேறு [உ+ம் "ஸ்விப்ட் பியர்","சீறும் கரடி" ]
என்றெல்லாம் தொடர்ந்த சில மைனஸ்கள் காணாமல் போய் விட்டது மகிழ்ச்சியே..
விஜயன் sir,
ReplyDeleteமுதலில் கை கொடுங்கள். என்னுடைய மகனுக்கு தமிழில் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதைப் பற்றி நண்பர் ஒருவரிடம் விவாதித்துக்கொண்டு இருந்தபோது இந்த தளத்தையும் உங்களைப்பற்றியும் சொன்னார்.
கண்டிப்பாக இந்த புத்தகம் சிறுவர்களை ஈர்க்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.
கண்களை உறுத்தாத அந்த நீலவண்ண முன் அட்டை அட்டகாசம். ஆனால் பின் அட்டையில் இருக்கும் அந்த சட்டம் (பார்டர்) ஒரு மாதிரி இருக்கிறது. ஒருவேளை நேரில் பார்க்கையில் நன்றாக இருக்குமோ என்னவோ? (நண்பர்தான் இதனையும் சொன்னார்).
இதைப்போல பல கதைகளை அறிமுகப்படுத்துங்கள் சார். கண்டிப்பாக தமிழில் புத்தகம் படிப்பதில் ஒரு தலைமுறை மாற்றத்தை உருவாக்குவீர்கள்.
FROM MURUGAN,
ReplyDeleteEDITOR SIR i am subscribing fort our comics for more than 20 years but for the last 2 years i am not receiving the books on the first lot.i have complained about this matter so many times .NO USE.i have not received the book until now.is this the way u treat senior readers like me?
முடிந்தால் (முடிந்தால் மட்டுமே),
ReplyDeleteசிறுவர்களுக்காக பூந்தளிர், ரத்னபாலா போன்ற ஒரு இதழை ஆரம்பியுங்களேன்? கண்டிப்பாக பல பெற்றோர்களின் ஆதரவு உங்களுக்கு இருக்கும்
+1
Delete//முடிந்தால் மட்டுமே//
Deleteஉண்மையில் பூந்தளிர், ரத்னபாலா போன்ற இதழ்களின் வெற்றிக்கு காரணம் தரம் மட்டுமல்ல - காலத்தின் தேவைக்கு பொருத்தமான format. தற்காலத்தில் பூந்தளிர் மாதிரி இதழ்களின் format சிறுவர்களுக்குக்கூட time waste என்ற உணர்வைத்தந்துவிடும்.
Deleteகசப்பாக இருந்தாலூம் உண்மை என்னவென்றால் internet - search போன்ற தொழில்நுட்பத்தை taste பார்த்துவிட்ட generation, இலக்கியம், காவியம் போன்ற விஷயங்களுக்குக்கூட technologyஐ அண்டியிருக்கும் stageக்கு நகர்ந்துவிட்டோம்.
Past is past regardless of its glory! "Present" always comes with the bitterness of shaping ourselves to fit something! :)
புத்தகம் கைக்கு கிடைத்ததும் அவசர கதியில் படித்து , கருத்து சொல்லவில்லை என்றால் மண்டை பிச்சுக்கும்.... இன்று புத்தகம் கைக்கு கிடைத்தாலும் , என் கைக்கு வரவில்லை.....
ReplyDeleteசுட்டி லக்கியை கையில் வைத்துக்கொண்டு, எங்க வீட்டு வாண்டு,
மாமா இங்க பாரு,இந்த பாய் ஜட்டி போடலை,
மாமா எப்டி fire பண்றான் பாரு,
அது என்ன மாமா V shape (கவன் ) வச்சு snake அடிக்கிறான்,
அவங்க hut ஏன் குச்சி குச்சியா இருக்கு....
horse சூப்பரா பறக்குது பாரு மாமா.....
Buffalo nose லேர்ந்து white smoke வருது பாரு.....
இந்த புத்தகம் அவள் (பெயர் : போதனா) கையில் இருந்த வரை கார்டூன் நெட்வொர்க் பக்கம் போகவே இல்லை....
அடுத்த தலைமுறையும் தாவி வருகிறது! நமக்கு நிறைய கதைகள் கிடைப்பது உறுதி!
Deleteஉண்மை நண்பரே...வரும் காலங்களில் ஆங்கிலத்திலும் ஒரு சிறுவர் இதழ் வெளிவந்தால் நன்றாக இருக்கும்....
Delete//Buffalo nose லேர்ந்து white smoke வருது பாரு.....//
Deleteஹா ஹா ஹா! ஒருவேளை இது படிக்க தாமதமாவதால் வெறித்துப்பார்த்துக்கொண்டிருக்கும் உங்கள் முகத்தைப்பார்த்து சொன்ன வார்த்தையோ?!
Nevermind, sweet words! :)
ம்ம்ம் , ஒரு வேலை அந்த ஒரு புத்தகம் மட்டும் வந்திருந்தாள் , நிலைமை அது தான் நண்பரே.... :)
Deleteமேற்கே ஒரு சுட்டிப்புயல் அட்டைப்படம் நன்றாக உள்ளது. நண்பர்களின் படைப்புகள் ஒவ்வொன்றும் அருமையாக உள்ளது!
ReplyDeleteDear Sir,
ReplyDeleteIs the crabe fry is going to be "Karsanin Kadanthakalam" or "Singathin Siruvayathil" ? Any thing form you We are going to Happy.
@ கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ், chennaivaasi,ஸ்பைடர் குமார்!!!
ReplyDeleteஸ்பைடர் போஸ்டரை நாமே வடிவமைத்து விரைவில் அனுப்பலாம் (சென்னை புத்தக திருவிழாவிற்குள்ளாவது). ஆசிரியர் நிச்சயம் நிராகரிக்க மாட்டார்.
இங்கே இடம் பிடித்தாலே போதுமே! விரைந்து ஆவன செய்யுங்களேன்!
Deleteyes, i ll try my best steelclaw!
Deleteநான் மிஸ் ஈரோடு
ReplyDeleteவாசக நண்பர்களின் படைப்புகளைப்பற்றி:
ReplyDeleteகார்த்திக் சோமலிங்காவின் டிசைனை விட வார்த்தைகள் சிறந்தவைகளாக இருக்கின்றன... அவரின் எழுத்துப் படைப்புத்திறன் ஆழமானவை... ஸ்ரீரங்கம் சிவகுமாரின் சொல்லாக்கமும் அப்படியே!
மற்றவர்களின் டிசைன் முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள்.
ஆவடி வெங்கடேஸ்வரன் படைப்புகள் தொழில் ரீதியானது, கண்களை கொள்ளை கொள்கிறது. இதில் கார்த்திக் சோமலிங்கா மற்றும் ஸ்ரீரங்கம் சிவகுமாரின் எழுத்துகளை இணைத்திருந்தால் பட்டையை கிளப்பியிருக்கலாம்...
@ஸ்பைடர் குமார்,
"வாசகர்களை திறனாளிகளாக மாற்றி வரும் எடிட்டருக்கு ஒரு ஜே."
100 சதவிதம் உண்மையே!
குதுகலமான புத்தக திருவிழாஆரம்பமாகிவிட்டது.
ReplyDeleteமாலையில் ஆரம்பிக்க உள்ள புத்தக திருவிழாவிற்கு காலையிலேயே ஆஜராகிவிட்ட வெளியூர் நண்பர்கள் குழுமம்
ST கொரியரில் வந்திருந்த அனைத்து புதியஇதழ்களும் விழா ஆரம்பித்த உடனே விற்றுத்தீர்ந்துவிட்டன
பல புதிய நண்பர்கள் வெகுதூரத்திலிருந்து காமிக்ஸ் ஸ்டாலை பார்ப்பதற்காகவே வந்திருந்தது மிகவும் உற்சாகமாக இருந்தது . குடும்பத்துடன்வந்திருந்த நண்பர் ஒருவர் காமிக்ஸ் ஸ்டால என உள்ளே ஓடோடிவந்து அனைத்தையும் அள்ளியதை மறக்க முடியவில்லை . இவர்களைப்போல் அனைத்து குடும்பமும் இருந்தால் எப்படி இருக்கும் ?
புதிய நண்பர்களின் சில புகைப்படங்கள்: http://tamilcomicskadanthapaathai.blogspot.in/2013/08/blog-post.html#comment-form
இந்த முறை உங்கள் கற்பனையில் உதிக்க உள்ள, சிறப்பு கண்காட்சி எதுவோ!
Deleteநண்பர்களே,
ReplyDeleteஈரோடு புத்தகத் திருவிழாவில் சில...
* நமது ஸ்டால் பல வண்ண போஸ்டர்களினாலும், வண்ணமயமான பளபள இதழ்களாலும் நிரம்பியிருந்தது! குறிப்பாக, கார்த்திக் சோமலிங்காவின் படைப்பு அந்த ஈர்ப்பான சிவப்பாலும் பெரிய அளவினாலும் -பார்க்கும் யாரையும் ஓரிரு வினாடிகள் உறையச் செய்வதாய் இருந்தது! சிம்பிள் டிசைன் என்றாலும் சூப்பர் கார்த்திக்!
* நண்பர் ப்ளூ-பெர்ரியை முதன் முதலாய் நேரில் காணும் பாக்கியம் கிடைத்தது. ஆர்ப்பரிப்பான சந்தோஷம் எங்கள் இருவருக்கும்! (மந்தையிலிருந்த இரண்டு ஆடுகள்... )
* சென்ற வருடப் புத்தகத் திருவிழாவின்போது காய்ச்சலால் துவண்டிருந்த என்னை, இம்முறை சந்தித்தபோது மறக்காமல் அதை நினைவுகூர்ந்து 'இப்போ எல்லாம் சரியாகிடுச்சா விஜய்?' என்று நலம் விசாரித்த அண்ணாச்சி இராதாகிருஷ்ணனின் அன்பை நான் என்னவென்று சொல்ல?!
* கோவையிலிருந்து வந்திருந்த செல்வராஜ் என்ற வாசகர் ஒருவரிடம் நான் என்னை அறிமுகம் செய்து கொண்டபோது "அந்த ஈரோடு விஜய் நீங்கதானா?" என்றார். சற்றே பெருமையுடன் "யேஸ்" என்றேன். "உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா? எப்பப் பார்த்தாலும் லயன் பிளாக்கில் கமெண்ட்டாவே போட்டுத் தள்ளறீங்க?" என்று கேட்டு, சற்றே பசியிலிருந்த எனக்கு வாய் நிறைய பன் கொடுத்தார்! (அவரை தனியே அழைத்துச்சென்று சில விசயங்களை நெடுநேரம் விளக்கி, "பரவாயில்லை, நல்லாத்தான் எழுதறீங்க" என்று சொல்லவைப்பதற்குள் 'உஸ் அப்பாடா' என்றாகிவிட்டது! ) :)
* தீவிர காமிக்ஸ் ஆர்வம் கொண்ட என் பள்ளித் தோழன் ஒருவனை (மொய்தீன்) பல வருடங்களுக்குப் பிறகு கண்டு அளவளாவிடும் வாய்ப்புக் கிடைத்தது.
* நமது ஸ்டாலுக்கு வருகை புரிந்த எனது பள்ளிக்கூட ட்ராயிங் மாஸ்டருக்கு வித்தியாசமான ஓவியங்கள் நிறைந்த ALL NEW SPECIAL ஒன்றைப் பரிசாக அளித்து, இப்போதைய அவரது மாணவர்களிடம் நமது காமிக்ஸ் குறித்து பரிந்துரை செய்யும்படி வேண்டுகோள் விடுத்தேன். அவரும் அவ்வாறே செய்வதாக உறுதியளித்தார்!
* இதுவரை பரிச்சயமில்லாத, நிறைய எண்ணிக்கையிலான வாசகர்கள் பலர் "அட! முத்து காமிக்ஸா இது?" என்று ஆச்சரியப் பட்டதுடன் "இது வர்ரதில்லைனு நினைச்சுட்டிருந்தேனே?!" என்று சொல்லி நமது புதிய அவதாரத்தை மலைப்புடன் பார்த்ததும் நிகழ்ந்தது. இது-இதைத்தானே எதிர்பார்த்தோம்!
நாளைய முழுப் பொழுதும் அங்கேதான் செலவழிக்கப் போகிறேன் என்பதும், பல நண்பர்களைப் பார்க்கவிருப்பதுமாக ஒரு முழுநீளக் கொண்டாட்டம் காத்திருக்கிறது எனக்கு!
பின்குறிப்பு: இன்னும் நிறைய செய்திகளை ஈரோடு ஸ்டாலின் அவரது வலைப்பூவில் தொடர்வார்.
செவ்விந்தியச் சகோதரர் கிறுக்கும் பூனைக்குட்டி அவர்களுக்கு வணக்கம்! :)
Deleteஉங்களுடைய ஈரோடு புத்தக கண்காட்சி பற்றிய குறிப்புகள் அருமியாவ்!
//கார்த்திக் சோமலிங்காவின் படைப்பு .... பார்க்கும் யாரையும் ஓரிரு வினாடிகள் உறையச் செய்வதாய் இருந்தது//
மிக்க நன்றி! ஆனால், அவர்கள் அதிர்ச்சியில் உறைந்ததிற்கான உண்மைக் காரணம், பேனர் அருகில் நின்றிருந்த ஒரு ஆளுயர பூனைக்குட்டிதான் என்ற அதிர்ச்சித் தகவலை விக்கிலீக்ஸ் அமைப்பு நேற்றிரவு கசிய விட்டிருக்கிறது!
//மந்தையிலிருந்த இரண்டு ஆடுகள்//
மீண்டும் சந்தித்த போது மியாவ், மியாவ் என்றன! சரிதானே?! :)
//என்று நலம் விசாரித்த அண்ணாச்சி இராதாகிருஷ்ணனின் அன்பை நான் என்னவென்று சொல்ல?!//
இப்போதெல்லாம் காமிக்ஸ் காய்ச்சல் அதிகமாகி விட்டது என்று சொல்லியிருக்கலாமே?! ;)
//சற்றே பெருமையுடன் "யேஸ்" என்றேன்//
மியாவ் என்றல்லாவா சொல்லியிருக்க வேண்டும்?! :)
//உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா? எப்பப் பார்த்தாலும் லயன் பிளாக்கில் கமெண்ட்டாவே போட்டுத் தள்ளறீங்க?"//
நல்லவேளை நான் அங்கு வராமல் தப்பித்தேன்! எப்படி என் இராஜதந்திரம்?! :p
//"பரவாயில்லை, நல்லாத்தான் எழுதறீங்க" என்று சொல்லவைப்பதற்குள் 'உஸ் அப்பாடா' என்றாகிவிட்டது!//
சில ஆயிரம் ரூபாய் தாள்கள் இடம் மாறினவா?! ;)
//இப்போதைய அவரது மாணவர்களிடம் நமது காமிக்ஸ் குறித்து பரிந்துரை செய்யும்படி வேண்டுகோள் விடுத்தேன்.//
புத்தகத் திருவிழாவில் கிறுக்கும் பூனைக்குட்டி செய்திருக்கும் உருப்படியான காரியம் இது மட்டும்தான்! :)
//ஒரு முழுநீளக் கொண்டாட்டம் காத்திருக்கிறது எனக்கு!//
கொண்டாட்டம் மட்டுமா? வாசக நண்பர் செல்வராஜ் தனது இதர நண்பர்களுடன் வரவிருப்பதால் பல பன்களும் காத்திருக்கின்றன! என்ஜாய்! :) :)
விஜய் அட்டகாசம் , நாங்களும் வருவோமுல்ல !
Delete@ கார்த்திக்
Delete// அருமியாவ் //
ஹா ஹா ஹா! :D
@ ஸ்டீல்
அங்கே கோயமுத்தூரிலே என்ன பண்ணிட்டிருக்கீங்க ஸ்டீல்? சட்டுபுட்டுனு சீக்கிரம் கிளம்பி வாங்க!
வர்றோம் வர்றோம்
DeleteNantrikal Erode Vijayar avarkale!..
ReplyDeleteErode stalinarai mattum santhikka mudinthathu.
Next (11th) meet pannuvom...
Chutti lucky is Amazing! Alarum panriyar.. Sinna thavalai... Ha.. Ha..
Thaniyaka padikum pothu sirippai adakka mudiyavillai.
Kadasi 6 pakka kathayarum arumai. But Red color outline, yellow color.....!?!?
@ Sarathi T.P
Deleteஅடடே! நண்பர்களின் வருகைப் பதிவேட்டில் முதலாவதாக பெயர்பதித்திருந்த சாரதியார் நீங்கள்தானோ? உங்களை சந்திக்க முடியாமல் போனதில் எனக்கும் வருத்தமே; எனினும் 11ம் தேதி நீங்கள் மீண்டும் வரும்போது ஒரு கலக்கு கலக்குவோம்! :)
Yes.. Nanethan vijayare! 11 maniyilirunthu malai 5 mani (5.30?) varai Erode vasamthan. Motham 5 per vanthirunthom. Marubadi 11th varuvom.
DeleteAlarum panriyarin mozhinadaiyai matra mudiyavillai. Internettarin aamaiyar vega punniyathal niraya elutha mudiyavillai. Neril sanippom.
P.S. 1 Erode stalinar avarkaludaya anbana ubasarippuku nanrikal pala..
P.S. 2 Manathil mirugam vendum puthiya ulagathukku kondusenrathu. Puthiya pani sithirangal.. Kathaigal...
பல நண்பர்களுக்கான பதில்கள்...
ReplyDelete***
@கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்"
//ஸ்பைடர் என்று மூன்று முறை சொல்லிப்பாருங்கள்//
உங்களுக்காக ஸ்பைடர் ஸ்பைடர் ஸ்பைடர்! :)
//என்னை பொறுத்தவரை பழைய லோகோக்கள் நம் அது அடையாளம்! பல்ச மறக்க கூடாது தம்பி//
பழைய காமிக்ஸ்களில் உள்ள லோகோ, சமீபத்திய லோகோ & (எடிட் செய்யப்பட்ட) பேனர்களில் உள்ள லோகோ இவற்றின் நீள அகலங்களை ஒப்பு நோக்கினால் நான் சொல்ல வந்தது என்ன என்று உங்களுக்கும் புரியுங்ணா! :) தவிர எழுத்து & படங்களில் உள்ள பிசிறுகளை களைய மட்டுமே கேட்டு இருக்கிறேன்! மற்றபடிக்கு அதே லயன் "சிங்கம்" & முத்து "M" நிச்சயம் எப்போதும் தொடர வேண்டும்!
//உங்கள் மனதை காட்டி , எங்கள் மனதை வாட்டி//
//சிவப்பு நிற பின்னணி அருமை! ஸ்பைடர் இல்லாதது வெறுமை!//
வாரா வாரம் சூப்பர் குடும்பம் (TR ப்ரோக்ராம்) பார்க்கிறீர்கள், கரெக்டா?! :)
//உங்களது தரமான முயற்ச்சிகளுக்கு வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி நண்பரே!
//அலுமினிய பறவைகள்!//
முதலில் இந்தப் பெயரையும் யோசித்தேன் என்றாலும்; யுத்த விமானங்களை ஓட்டுபவர்கள் இரும்பு மனம் படைத்த விமானப்படை பைலட்டுகள் என்பதால் "இரும்புப் பறவைகள்"!
***
@Radja from France:
//நண்பர் கார்த்திக் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி நண்பரே!
***
@விஸ்கி-சுஸ்கி:
//Google - I'M A LITTLE BIT WORRIED ABOUT THIS! : (//
அப்படித்தானே ஆகி விட்டது நண்பா? ஆபிசில் கூட Google Search இல்லாமல் வேலை பார்க்க முடிகிறதா என்ன?! :(
***
@ஸ்பைடர் குமார்:
//நண்பர்களே, உங்களது படைப்புகள் ஒவ்வொன்றுமே கண்ணை பறிக்கின்றது. சிறப்பாக அமைந்துள்ளது வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி குமார்!!
***
@Ramesh Kumar:
//தற்காலத்தில் பூந்தளிர் மாதிரி இதழ்களின் format சிறுவர்களுக்குக்கூட time waste என்ற உணர்வைத்தந்துவிடும்//
ஆங்கிலத்தில் Tinkle, ACK போன்ற புத்தகங்கள் இன்னமும் நன்றாக விற்றுக் கொண்டுதான் இருக்கின்றன ரமேஷ் ஜி! பூந்தளிரின் உள்ளடக்கங்களில் பல இந்த இதழ்களில் இருந்து பெறப்பட்டவையே!
***
@udhay:
//கார்த்திக் சோமலிங்காவின் டிசைனை விட வார்த்தைகள் சிறந்தவைகளாக இருக்கின்றன//
நன்றி உதய்!
//
Deleteஉங்களுக்காக ஸ்பைடர் ஸ்பைடர் ஸ்பைடர்! //
ஹ ஹ ஹா .....முடியல அழுதுருவேன்
லோகோ மாறாவிடில் சரியே நண்பரே
நானும் இரும்பு பறவை என இப்படிதான் வைத்திருப்பீர்கள் என யூகித்தேன்
அந்த நீல வண்ணமும் அருமை....
//ஆங்கிலத்தில் Tinkle, ACK போன்ற புத்தகங்கள் இன்னமும் நன்றாக விற்றுக் கொண்டுதான் இருக்கின்றன ரமேஷ் ஜி! பூந்தளிரின் உள்ளடக்கங்களில் பல இந்த இதழ்களில் இருந்து பெறப்பட்டவையே!//
DeleteTinkleன் ஆங்கில circulationஐ வைத்து வட்டார மொழி பதிப்புகளின் possibilityஐ தீர்மானிக்க முடியாது. பொரும்பாலான பெற்றோர்கள் Tinkle மற்றும் ACK வாங்குவதன் முதன்மைக்காரணம் தங்கள் குழந்தைகளின் ஆங்கில வளர்ச்சிக்காகவும் நமது கலாச்சாரம் சார்ந்த அறிவுக்காகவுமே. இந்த காரணங்களை fullfill செய்யாதபட்சத்தில் நாம் ஒரு பூந்தளிர் cloneஐ செய்வது விற்பனைக்கு உதவாது.
அதை தவிர பூந்தளிரின் உயிர்நாடி comics மொழிபெயர்ப்பு மட்டுமல்ல. துணுக்குகள், அறிவியல், சரித்திர செய்திகள் மற்றும் கட்டுரைகள் - அந்த 80sன் speciality தற்காலத்தில் சாரமில்லாத information போல தோற்றமளிக்கும். Games, Animation, Discovery, NGC, History Channel போன்ற மீடியாக்களுக்கு மத்தியில் நாலுவரி துணுக்குகளும, பத்தி பத்தியான கதைகளும் சிறுவர்களுக்கு அதே 80sன் ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் தருமா என்பது சந்தேகம்தான்.
PS: மேலே நான் குறிப்பிட்டவை அனைத்தும் ஒரு கேள்வியை நோக்கியே. அது -
Deleteஒருவேளை நாம் கனவுகாணும் பழைய formatஐ பெற்றோர்களை concince செய்து repeat செய்துவிடலாம்; இன்றைக்கும் சிறுவர்மலர், கோகுலம் (recent சுட்டி விகடன்) போன்ற இதழ்கள் உயிரோடுதான் இருக்கின்றன. ஆனால் 80sல் எத்தனை தாக்கத்தை அவை குழந்தைகளிடம் உண்டுபண்ணியதோ அதை repeat செய்வது இயலாது. அதற்கு புது formats தேவைப்படலாம்!
@Ramesh Kumar:
Delete//பூந்தளிரின் உயிர்நாடி comics மொழிபெயர்ப்பு மட்டுமல்ல. துணுக்குகள், அறிவியல், சரித்திர செய்திகள் மற்றும் கட்டுரைகள்//
//அதே 80sன் ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் தருமா என்பது சந்தேகம்தான்//
மிக மிகத் தெளிவான கருத்துக்கள் ரமேஷ்!
//80sல் எத்தனை தாக்கத்தை அவை குழந்தைகளிடம் உண்டுபண்ணியதோ அதை repeat செய்வது இயலாது. அதற்கு புது formats தேவைப்படலாம்! //
32 முழு வண்ணப் பக்கங்களில் அப்படி ஒரு பரிசோதனை இதழை நமது ஆசிரியர் முயற்சித்துப் பார்த்தால் நன்றாக இருக்கும் (அவருக்கு ஆர்வமும், நேரமும் இருந்தால்!). நமது சந்தாதாரர்களில் பாதி பேராவது அதை நிச்சயம் வாங்குவார்கள்!
//32 முழு வண்ணப் பக்கங்களில் அப்படி ஒரு பரிசோதனை இதழை நமது ஆசிரியர் முயற்சித்துப் பார்த்தால் நன்றாக இருக்கும் (அவருக்கு ஆர்வமும், நேரமும் இருந்தால்!). நமது சந்தாதாரர்களில் பாதி பேராவது அதை நிச்சயம் வாங்குவார்கள்!//
DeleteYes! விஜயன் சார் தற்போது சற்று தாராளமாக experiments செய்து வருவதைப் பார்க்கும்போது உண்மையில் நம்பிக்கை துளிர்விடுகிறது! ;)
புக்ஸ் இன்னும் வரல!:-( திருச்சியில் யாருக்கேனும் புக் வந்துள்ளதா?
ReplyDeleteகாமிக்ஸ் என்னும் ஓர்மையில் இணைந்த நண்பர்களுக்கு நட்பு தின நல்வாழ்த்துக்கள்! என்றும் உங்கள் ஆர்வமும் அன்பும் காமிக்ஸோடும் காமிக்ஸ் நண்பர்களோடும் இணைந்திருக்க விரும்பும்...
ReplyDeleteஉங்களைப் போல் ஒருவன்.
@ Friends : 'இன்று அனுப்பும் ஒவ்வொரு SMS -க்கும் ஒரு ரூபாய் கட்டணம்' என்று விடியும் போதே தகவல் சொல்லி, இன்றைய தினம் "FRIENDSHIP DAY " என்பதை நினைவூட்டிப் புண்ணியம் சேர்த்துக் கொண்ட செல்போன் நிறுவனத்தினர் வாழ்க !
ReplyDeleteஎவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி ; நெஞ்சில் நிஜமான காமிக்ஸ் காதலையும், சக வாசகர்களின் மீதான அசாத்திய நட்பையும் மாத்திரமே சுமந்து நிற்கும் இங்குள்ள ஒவ்வொருவரும் இன்றைய தினத்துக்கு நம் வாழ்த்துக்களுக்கு உரித்தானவர்கள் ! நிஜமான நட்புக்கு ஒரு புதுப் பரிமாணம் வரையும் உங்களுக்கு ஒரு மெகா salute folks !!
ஒவொரு நண்பர்களும் தொடர்ந்து கலக்க தூண்டு கோலாய் இருக்கும் உங்களது பெயர் சூட்டல்கள், தலைப்புகளுக்கும் நன்றிகள்.....
Deleteகாமிக்ஸ் காதலர்கள் என்பதை விட காமிக்ஸ் நண்பர்கள் என்பதே சிறப்பாய் உள்ளதால், அனைத்து நண்பர்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் .....
@Vijayan Sir:
Delete// 'இன்று அனுப்பும் ஒவ்வொரு SMS -க்கும் ஒரு ரூபாய் கட்டணம்'//
இல்லை என்றால் மொக்கை SMS ஜோக்ஸ்களை Forward செய்தே நெட்வொர்க்கை choke பண்ணிவிடுவார்கள் நம்மவர்கள்! :) ம.மி.வே. இதழில் அந்த Garfield SMS ஜோக் சூப்பர் சார்! :) :)
***
காமிக்ஸ் வாசக நண்பர்கள் அனைவருக்கும், நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!
நண்பர்கள் தின சிறப்புக் கேள்வி:
எனது சுட்டி லக்கி இதழின் முன்னட்டை, 'சென்டர் பின்கள்' புண்ணியத்தில் "L" போர்டு கணக்காய் நெட்டுக்குத்தலாக நிமிர்ந்து நிற்கிறது! உங்கள் காப்பி எப்படி?! :)
ஆசிரியர் மற்றும் வாசக நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.
Deleteஆசிரியர் மற்றும் வாசக நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.
Delete@ Friends : கிறுக்கல் பூனைக்குட்டிகளும் ; போஸ்டர் ஒட்டியார்களும்; லேம் ஹார்சார்களும் ; சின்ன (செல்லத்) தவளைகளும் உலவும் இந்தப் பக்கங்களில் அடியேன் "முட்டை விழியானின்" காலை வணக்கங்கள் ! சின்னத் தம்பி அலறும் பன்றிகுட்டியாரின் சாகசம் உங்களில் நிறையப் பேருக்கு இன்னமும் கிடைக்கவில்லை என்றாலும், அவர் அதற்குள்ளாகவே நம் நட்பு வட்டத்துக்குள் ஐக்கியம் ஆகி விட்டது புரிகிறது ! விளையாட்டாய் முயற்சித்த இந்த எழுத்துப் பாணி "சித்திரக் கதை சிங்கங்களுக்குப் பிடித்துள்ளது கண்டு - ஒரு தட்டு "பெம்மிக்கன்" சாப்பிட்ட திருப்தி ! இதழ் கிடைத்த பின்னே, முழுமையாய்ப் படித்த பின்னே புகை சமிக்ஞைகள் மூலம் கருத்துக்கள் சொல்ல மறக்க வேண்டாமே - ப்ளீஸ் ?
ReplyDeleteஈரோட்டில் நமது காமிக்லாலாஸ் வீரர்கள் - நமது குடியிருப்பில் பெரும் உதவிகள் செய்து வருவதாய் தளபதி "சுருள்கேச சிங்காரனார்" தெரிவித்தார் ! நன்றிகள் வீரர்களே ! நேற்றைய மாலை விற்பனையும் உற்சாகம் தரும் எண்ணிக்கை என்று கேள்வி ! காமிக்ஸ் சந்தைக்கு நிறைய பொம்மனாட்டிகள் வருகை புரிந்ததும், ஆவலாய் குட்டி வீரர்களுக்கு புத்தகங்களை வாங்கிக் கொடுத்ததும் நேற்றைய நிகழ்வாம் !
அலறும் பன்றிக்குட்டியாரின் அலப்பறையில், உடன் வந்த "பச்சை மாளிகை " கதையைப் பற்றிய புகை சமிக்ஞைகளை மறந்திட வேண்டாமே ?
விஜயன் சார்,
Deleteதாங்கள் காமிக்ஸில் மட்டுமே எழுதி வந்த இந்த ஹாஸ்ய நடை முதல் முறையாக இந்த தளத்தில் எங்களுக்காக எழுதியது உண்மையிலேயே அருமையாக உள்ளது.
நண்பர்கள் ஈரோடு விஜய் மற்றும் கார்த்திக் அவர்களின் எழுத்துக்களில் கொப்பளிக்கும் நகைச்சுவை மிகவும் ரசிக்கதக்கதாக இருக்கிறது.
தங்கள் காமிக்ஸ் படிக்குபோது கிடைக்கும் உற்சாகம், மகிழ்ச்சி தற்போது இந்த தளத்திலும் தாண்டவமாடுகிறது. சூப்பர்! சூப்பர்! சூப்பர்!
@ ஈரோடு விஜய் : கிறுக்கும் பூனைக்குட்டி என்று சூப்பர் பெயரை சூட்டிய நண்பர் கார்த்திக் அவர்களுக்கு நீங்கள் என்ன பெயர் சூட்டப்போகிறீர்கள் என்றறிய ஆர்வமுடன் இருக்கிறேன்.
பின் குறிப்பு : ஆல் நியூ ஸ்பெஷல் படித்து முடித்தேன். ஒரே வாக்கியத்தில் சொல்வதென்றால் : லைன் காமிக்ஸில் வந்த ஒரு mile stone இதழ்.
முட்டை விழியான் ...?.ஹா ..ஹா ...great sense of humor editor Ji....
Deleteபெமிங்கானை நன்கு சவைத்து சாப்பிடவும்......
Deleteஅப்போ அந்த சர்ப்ரைஸ் கார்சனின் கடந்த காலம்தான் என பெமிங்கான் வாயிலாக மறைமுகமாக உணர்த்தியமைக்கு நன்றிகள்....
ஐயகோ, கிறுக்கல் கிறுக்கனுக்கு போட்டியாக ஒரு கிறுக்கல் பூனையாரா??? இந்த அநியாயத்தை கேட்க யாருமில்லையாஆஆஆஆஆஆஆஆஆஆஆ?
Deleteஉண்மையாக சுட்டி ஹீரோ எல்லோரது மனதிலும் நிறைந்து விட்டார்.... எனக்கு ஒரு சிறிய மகிழ்ச்சி , மொழி நடையினில் உண்டான மாற்றம். அருமை.... இத தானே எதிர்பார்த்தோம்... Also a Good Humor is alwayz better than the 'Black Humor'... ;)
DeleteRadja from France:
Delete// நண்பர் கார்த்திக் அவர்களுக்கு நீங்கள் என்ன பெயர் சூட்டப் போகிறீர்கள் என்றறிய ஆர்வமுடன் இருக்கிறேன் //
உலகிலேயே மிக மிக கேவலமான பெயர் ஏதாவது அகப்படுமா என்று நானும் கடந்த சில நாட்களாக யோசிக்காமலில்லை. ஆனால், 'கார்த்திக்' என்ற பெயரைத் தாண்டி என்னால் வேறு எதையும் யோசிக்கவும் முடியவில்லை! :D
ஏன் விஜய் என்ற பேர் கூட சரியாகத்தானே இருக்கும், அதனை சிந்தித்தீர்களா ....கையில் இருப்பதை விட்டு விட்டு...
Deleteஆசிரியருக்கும் எனது சக வாசக நண்பர்களுக்கும் , நண்பர்கள் தின நல் வாழ்த்துகள் . அலறும் பன்றிகுட்டியாரின் வருகைக்காக நானும் கூடவே எனது இரு சுட்டீசும் காத்துள்ளோம் சார். இந்த ஆரம்பம் வெகு விரைவில் அவர்களும் எமது மற்றைய நாயகர்களையும் விரும்பி ரசிக்கும் நாள் வெகு விரைவில் இல்லை.பிரான்ஸ் இல் எழுப்பும் புகை சமிக்கை சிவகாசி மற்றும் ஈரோடு வரை தெரியுமா?
ReplyDeleteதெரிய வாய்ப்பில்லை புத்தகம் கிடைக்காத எங்களை போன்றவர்கள் காதிலிருந்து வெளி படும் புகை , நண்பர்கள் விவரித்த பின்னர் அதுவே பன் மடங்காகி ஆகாய தடை ஒன்றை ஏற்படுத்தி உள்ளதால் தற்காலிகமாக உங்கள் புகை(ச்சல்) ஆசிரியரை எட்டுவது கடினமே! முரசு போன்ற ஏதேனும் ஒன்றை முயற்சி செய்து பாருங்களேன் எங்களுக்கு புத்தகம் கிடைக்கும் வரை....
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகிட்டாத தொலைதூர நட்புக்கும் பாலம் அமைத்து தந்த தங்களது வலைப் பூ நண்பர்களின் ராஜ்ஜியம். அன்பர்களின் கோட்டை, வம்பர்களின் குறும்பு, பாசக்காரப் பயலுகளின் சேட்டைகளுக்கு களம்! நண்பர்களில் தலைசிறந்தோர் கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் என்பர்! இங்கோ அது போன்று ஆயிரமாயிரம் நட்பு பூ பூக்கும் நந்தவனம் நம்ம வலைப்பூ!!! கிடைத்தற்கரிய புத்தகங்களும் இப்போது முகநூலிலும், வலைப்பூக்களிலும் காணக் கிடைக்கவும் படிக்கக் கிடைக்கவும் இந்த மேடை அமைத்துக் கொடுத்த வாய்ப்பு மறக்க முடியாத ஒன்று! ஆசிரியர் அவர்களுக்கும், அனைத்து நண்பர்களுக்கும் என் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்! கலக்குங்கள்!
ReplyDeleteபுளியந்தோப்பு காவல் நிலையம் மாற்றலில் சென்றுள்ளேன்! இயன்றவரை என் சக்திக்கு உட்பட்டு எளிய மனிதர்களுக்கு உதவுகின்ற அருமையான வாய்ப்பு கிடைத்தது என் நண்பர்களாலும் இறைவனது திருச்சித்தத்தாலும்தான் என்பதில் மிகையில்லை! நன்றிகள் பல நண்பர்களே! மீண்டும்மீண்டும் வலையில் மலர்வோம்! மணம் வீசுவோம்! சேற்றை வாரி இறைத்தாலும் செந்தாமரையாக விரிவோம்! என்றும் அன்புடன் -தங்கள் சேவையில் உங்கள் இனிய நண்பன் ஜானி
சுட்டி பயல் ஒரு மெகா ஹிட் இதழ் ...வரவேற்ப்பு அள்ளப்போகிறது .அதுவும் ஒரு புத்தக விழாவில் வெளியிடும் ஐடியா மிகச்சரியானது .மொழிநடை நாளுக்கு நாள் புது அத்தியாயங்களை படைத்து வருகிறது .பாராட்ட வார்த்தைகள் இல்லை
ReplyDeleteகுப் குப் குபுகுப் குப் குப் குப் குப் குபுகுப் குப் குப் குபுகுப் குப் குப் குபுகுப் குபுகுப் குப் குப் குப் குபுகுப் குப் குப் குப் குப் குபுகுப் குபுகுப் குப் குபுகுப் குப் குபுகுப் குப் குபுகுப் குபுகுப் குபுகுப்
ReplyDeleteஇது புகை சமிஞ்சைங்கோ.
எனக்கு இன்னும் புத்தகம் வந்து சேரல
ReplyDeleteவிஜயன் சாருக்கும்,சக காமிக்ஸ் வாசக நண்பர்கள் அனைவருக்கும், நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்!
ReplyDeleteHappy Friendship Day Friends!
ReplyDeleteஎப்போதுமே ஏறிக் கொண்டிருப்பது நம் நாட்டின் விலைவாசிதான் என்று இதுகாறும் எண்ணியிருந்தேன். "இல்லையில்லை", எப்போதுமே ஏறிக் கொண்டிருப்பது நம் காமிக்ஸின் தரமும் தான் என ஆணித்தரமாக பறைச்சாற்றுகிறது "மேற்கே ஒரு சுட்டி புயல்" அட்டைப்பட வடிவமைப்பு. முன்னட்டை பின்னட்டை இரண்டும் அருமையிலும் அருமை! மிதமான வண்ணச்சேர்க்கை, trendyயான லேட்டஸ்ட் டிசைன் ஸ்டைல் கலந்து சர்வதேச தரத்தில் வந்திருக்கிறது அட்டைப்படம்.
ReplyDelete(புத்தகம் இன்னும் கைக்கு வராததால் அச்சுத்தரம் எப்படியேன நானறியேன்)
முன்பு நீங்களே தயாரித்த (திரு மாலையப்பன் வரைந்திட்ட)"வில்லனுக்கு ஒரு வேலி" அட்டைப்பட ஓவியமும் பழைய ஸ்டைல் தான் எனினும் சிறந்த படைப்புத்தான்....
Hats off to Vijayan Sir!
நண்பர்களின் கமெண்ட்களை பார்க்கும்போது ஈரோடு புத்தக திருவிழாவை நிறைய மிஸ் பண்ணிட்டோமே என்று தோன்றுகிறது! 11ந்தேதி வருவதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்!
ReplyDeleteஈரோடு புத்தகத் திருவிழா இரண்டாம் நாள்:
ReplyDelete* இன்று ஞாயிறென்றாலும், பகல் பொழுதில் அரங்கம் முழுவதுமே எதிர் பார்த்த அளவுக்கு கூட்டமின்றி சற்றே டல்லடித்தது. எனினும் மற்ற ஸ்டால்களைவிட நம் ஸ்டாலில் மிதமான கூட்டம் இருந்துகொண்டே இருந்தது.
* இன்று 'உள்ளேன் ஐயா' போட்ட வலைத்தள/பிரபல நண்பர்கள் : பெங்களூர் சுப்ரமணியன், ப்ளூபெர்ரி, டெக்ஸ் விஜய ராகவன் (குடும்பத்துடன்), ஆட்டையாம்பட்டி ராஜ் குமார், தாரமங்கலம் பரணிதரன், டாக்டர் சுந்தர், டாக்டர் சுரேஷ்; இவர்களுடன் நமது ஈரோடு டீம் (ஸ்டாலின், ஆடிட்டர் ராஜா, புனித சாத்தான், கிறுக்கு(ம்) பூனைக்குட்டி)
* நிறைய எண்ணிக்கையில் இதுவரை அறிமுகமில்லாத பல வாசகர்களும் படு உற்சாகமாகத் தங்கள் காமிக்ஸ் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டது நிறையவே ஆச்சர்யப்படுத்தியது.
* மாலையில் கூட்டம் அதிகரித்து நம் ஸ்டாலிலும் நிரம்பிவழிய ஆரம்பித்தது. பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்து 'இதோ இந்த புத்தகங்களெல்லாம் நான் சின்ன வயசிலேர்ந்து படிச்சவை' என்று அறிமுகப் படுத்தி லக்கி-லூக், சுட்டி-லக்கிகளை தாராளமாக வாங்கிச் சென்ற சம்பவங்கள் நிறைய எண்ணிக்கையில் நடந்தன!
* பல சிறுவர்களும், சிறுமிகளும்கூட ஆர்வமாக சில நூறு ரூபாய் இதழ்களையும் வாங்கிச் சென்றது சற்றே குழப்பமான ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது. 50 ரூபாய் இதழ்களுக்கு சற்றும் சளைக்காமல் நூறு ரூபாய் இதழ்களும் விற்றது சற்று குழப்பமான ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது!
* சிறுவர்களின் சாய்ஸ் பெரும்பாலும் லக்கி, சுட்டி லக்கியாக இருந்தது!
* சிலர் -இந்த வருடம் வெளியான எல்லா இதழ்களிலிலும் ஒன்று வேண்டுமெனக் கேட்டு வாங்கி தூக்கமுடியாமல் தூக்கிச் சென்றதும் நிகழ்ந்தது.
* நான்குபேர் அடங்கிய குடும்பமொன்று சந்தோச ஆர்ப்பரிப்புகளோடு புத்தகத் தேர்வில் முழுவீச்சில் ஈடுபடவே, அருகில் சென்று விசாரித்ததில் அந்த இளைஞர் தன்னை கார்த்திக் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். நான் சட்டென்று சீரியஸாகி "பெங்களூரா?" என்றேன். "இல்லை. நான் சேலம்" என்றார். மனதில் குடிகொண்டிருந்த கொலைவெறி விலகி நான் சகஜ நிலைக்குத் திரும்பிட எனக்கு சில நிமிடங்களாகியது! அப்பா, அம்மா, சகோதரியுடன் வந்திருந்து சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாகத் தன் காமிக்ஸ் காதலை பேச்சில் வெளியிப்படுத்தி, காமிக்ஸ்களை படு ஆர்வமாக அள்ளிச் சென்ற அந்த நண்பர் - 'கார்த்திக்' என்று பெயர்வைத்தவர்களெல்லாம் அப்படியொன்றும் மோசமானவர்களில்லை என்று நிரூபித்துச் சென்றார். அவரது குடும்பம் மொத்தமும் காமிக்ஸ் மீது பயங்கர ஆர்வம் கொண்டிருந்தது நம் நண்பர்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது (கார்த்திக்கின் சகோதரி இதுவரை 3 முறை சிவகாசி அலுவலகத்திற்கு விசிட் அடித்திருக்கிறார் என்பது கொசுரு தகவல்)
* கோவையிலிருந்து வந்திருந்த டாக்டர் சுரேஷ் நமது எடிட்டரின் உருவத்தை ஒரு ஃப்ரேம் செய்யப்பட்ட கேன்வாஸில் ஓவியமாக வரைந்து கொண்டுவந்து கொடுத்துவிட்டு வந்த வேகத்திலேயே அவசரமாகச் சென்றுவிட்டார். அசத்தலான, அட்டகாசமான அந்த ஓவியத்தை நீங்களும் நண்பர் ஸ்டாலினின் வலைப்பூவில் பாருங்களேன்!
* ஈரோடு மட்டுமல்லாது, நாமக்கல், சேலம், கோவை, கரூர், கோபி, திருச்செங்கோடு, கொடுமுடி என்று பல ஊர்களிலிருத்தும் நம் வாசகர்கள் பலர் வந்திருந்தனர்.
'அடுத்த ஞாயிறன்று எடிட்டர் வருகிறார்' என்று அவர்களிடம் சொல்லப்பட்ட செய்தி பலருக்கு ஏக உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
//* மாலையில் கூட்டம் அதிகரித்து நம் ஸ்டாலிலும் நிரம்பிவழிய ஆரம்பித்தது. பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்து 'இதோ இந்த புத்தகங்களெல்லாம் நான் சின்ன வயசிலேர்ந்து படிச்சவை' என்று அறிமுகப் படுத்தி லக்கி-லூக், சுட்டி-லக்கிகளை தாராளமாக வாங்கிச் சென்ற சம்பவங்கள் நிறைய எண்ணிக்கையில் நடந்தன!//
Deleteஅப்போ சுஸ்கி-விஸ்கி, அலிபாபா, ......போன்ற கதைகளை ஆசிரியர் சிறுவர்கள் ஆர்வம் குறையாமளிருக்க தொடர்ந்து அதிரடியாய் அடுத்த வெளியிடுகளில் அதாவது +6ஐ +12 ஆக தரும் திட்டம் உடனடியாக நீடிக்கபட்டால் நல்லதென்று நினைக்கிறீர்களா ?
நல்ல வேலை எனது பெயர் கார்த்திக் இல்லை !
Thanks for the live updates Vijay!
DeleteMani 1.10 am.
ReplyDeleteAppada.. Ellarum thoongittanga pola. Nan reply pannina udane upload aguthu.
VIJAYAN sir.. Little Lucky is realy amazing. Antha mozhinadaiyai thaniya irukkumpothu ninaithal kooda thana sirippu varukirathu.
Thank you for chosing new stories.. Everything is great.
Manathil mirugam vendum, chutti lucky and filler pages also great.
I am exciting really.. !:-)
Manathil mirugam vendum குறித்து ஒரே ஒரே நண்பர்!
Deleteஈரோடு புத்தகத்திருவிழாவில் நம் காமிக்ஸ்:
ReplyDeleteசில குறைகளும் :
* லக்கி-லூக் நிறைய இதழ்களின் அட்டைப்படத்தில் இடம்பெற்றிருக்க, நம் வுட்சிட்டி கோமாளிகள் மட்டும் ஒரே ஒரு இதழின் அட்டைப்படத்தில்கூட இடம்பெறாமல் போனது கொடுமையில்லையா? சூப்பர் ஹிட்டான 'ஒரு கழுதையின் கதை' இலை மூடிய கனியாகிவிட்டதே!
* இம்முறை carry bag ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது மகிழ்ச்சிதான் என்றாலும் கொஞ்சம் பெரிசாய் அமைந்துவிட்டது. அதனால் புத்தகம் வாங்கியவர்கள் ஒன்னறை அடிக்கு தொங்கவிட்டு நடக்கும்படியாகிவிட்டது.
* மேசை விரிப்புகள் இல்லாததால், புத்தகம் கொண்டுவரப்பட்ட பிளாஸ்டிக் சாக்குகளே மேசை விரிப்பாக்கப்பட்டு புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தது ஸ்டாலின் (ஸ்டால்+இன்) அழகை சற்று குறைப்பதுபோலிருந்தது ( குறை கண்டது : ஈரோடு ஸ்டாலின்)
இலை மூடிய கனி .... எனது தமிழ் புலமை மேலிருந்த செருக்கு இன்றோடு ஒழிந்து விட்டது!
Deleteஎப்பிடி ஐயா !
அன்புள்ள ஆசிரியர் ;
ReplyDeleteபேனர்கள் தேர்வு செய்வதில் அடிப்படை விதிமுறைகள் ஏதாவது இருக்கின்றதா ? ஏனெனில் பின்வரும் காலங்களில் கலந்து கொள்ளும் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் .
எனக்கு பொடியனின் பேனர்கள் மிகவும் பிடித்துள்ளது . அதிலும் லக்கி லுக் அட்டகாசம் .
//லக்கி லுக் அட்டகாசம் //
Delete200
ReplyDeleteகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் @ இது எல்லாம் ஒரு கமெண்ட் ஆ! அடிக்க வராதிங்க :-)
Delete