Powered By Blogger

Sunday, January 13, 2013

ஒரு சந்தோஷ அத்தியாயம் !


நண்பர்களே,

நேற்றைய தினமும் இன்னொரு மறக்க இயலா பொழுதே - பல்வேறு காரணங்களுக்காக !

வார இறுதிகளில் காலை 11 முதல் விற்பனைகள் துவங்கிடும் என்பதால் நமது பணியாட்கள் சீக்கிரமே ஸ்டாலில் ஆஜராகிட...நான் மதியம் 2 மணி சுமாருக்கு 'உள்ளேன் அய்யா' போட்டேன். முதல் நாள் வந்தது போல் ஒரு மொத்தமாய்  ; ஒரே சமயத்தில்  நண்பர்கள் குழுக்களின் வருகை அமைந்திடவில்லை என்பது மாத்திரமே வேறுபாடு...மற்றபடிக்கு தொடர்ச்சியாக ஒருவர் பின் ஒருவராக வந்த நம் ஆர்வலர்களின் அணிவகுப்பு இரவு 8-30 வரை ஓயவில்லை ! முகமெல்லாம் ஆயிரம் வாட்ஸ் பல்பின் பிரகாசமும், கண்களில் அந்த ஆர்வத் தீயின் வெளிப்பாடும் வருகையாளர்கள் ஒவ்வொருவரிடமும்  இருந்ததைக் காண இயன்றது !இணையத்தில் நம் நண்பர்கள் பலரும் இது தொடர்பான தத்தம் பார்வைகளையும், புகைப்படங்களையும் நிறைய வலையேற்றம் செய்துள்ளதால், இடைச்செருகலான சங்கதிகளை மாத்திரம் மையமாக   இங்கே எழுதிட்டால் சுவாரஸ்யமாக இருக்குமென்று நினைக்கிறேன்...

நேற்றைய காமிக்ஸ் ஆர்வலர்களில் ஒரு striking feature என்று நான் குறிப்பிட்டிட நினைப்பது - நமது பெண் வாசகர்களின் உத்வேகத்தினை ! காலம் காலமாய் காமிக்ஸின் பெரும்பான்மை வாசக வட்டம் ஆண்களாலானதே என்பது தான் பரவலான எண்ணம். ஆனால் இனி  அந்த சிந்தனையினை பரணுக்கு அனுப்பிடலாமே என்ற புரிதல் எனக்குள் நேற்று முதல் வியாபிக்கின்றது ! சொல்லி வைத்தது போல , இரு இளம் அம்மாக்கள் - தங்களது டீனேஜ்     பெண்கள் சகிதம் - பத்து நிமிட இடைவெளிக்குள் வந்திருந்தனர் - முகமெல்லாம் ஒரு பரபரப்போடு ! இருவரின் தேடல்களும் ஒன்றே ! 'என் மகளுக்கு மாடஸ்டியை அறிமுகம் செய்திட வேண்டுமே ; வண்ணத்தில், பெரிய சைசில் ஏதும் இல்லையா ? ' என்றும் ; 'கழுகு மலைக்கோட்டை ஒரு புக் எப்படியாச்சும் வேண்டுமே ' என்றும் அவர்கள் கோரிய போது - நிறைய விஷயங்கள் மண்டைக்குள் உறைத்தது !   

சங்கதி # 1 : பெண்களும் இத்தனை தீவிரமாய் ; ஆர்வமாய் காமிக்ஸ்களை ரசிப்பவர்களே !

சங்கதி # 2 : தெரிந்தோ, தெரியாமலோ - இந்த பெரிய சைஸ் ; வண்ணம் ; நல்ல காகிதம் என்றதொரு அமைப்புக்கு நம்மைத் தயார்படுத்திக் கொண்டது நிச்சயம் காலத்தின் கட்டாயம் ! இந்தத் தரமின்றின் போயிருக்கும் பட்சத்தில் - இன்றைய இளம் தலைமுறைக்கு அருகாமையில் கூட நாம் போகிடுவது சாத்தியப்பட்டிடாது !  மாடஸ்டியின் black & white - குறைவு விலையிலான நமது முந்தைய இதழ்களைப் புரட்டக் கூட அந்த யுவதிகள் தயங்குவது கண்கூடாய் பார்த்திட முடிந்தது ! 

சங்கதி # 3 : ஒரு குடும்பத்தில் பெண்களுக்கும் காமிக்ஸ் படிக்கும் பழக்கம் இருந்திடும் பட்சத்தில், அடுத்த தலைமுறையும் காமிக்ஸ் காதலைத் தொடருவது கிட்டத்தட்ட உறுதி போலும் !

சங்கதி # 4 : மாடஸ்டிக்கும் ஒரு dedicated following உண்டென்பதும் புரிந்தது !!

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல - ஒரு நண்பரும் அவரது துணைவியாரும் வெகு ஆர்வமாய், நிறைய நேரம் நம் ஸ்டாலில் தங்கள் நேரத்தைச் செலவிட்டனர் ! காமிக்ஸ் ரசனைக்கு துணைவியாரும் ஒரு சமீபத்திய வரவு என்பதால், என்னிடம் அவரும் வெகு ஆர்வமாய் உரையாடினார் ! கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்களுக்குப் பின்னே புறப்படும் சமயம், நண்பர் ஒரு சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் இதழைத் திறந்து என் முன்னே நீட்டி - அதனில் என்னை கையெழுத்திடக் கோரினார் ! 'என் முதிய தாயார் நம் காமிக்ஸ்களின் அதி தீவிர ரசிகை ; நீங்கள் இங்கே இருப்பது தெரிந்திருந்தால் நிச்சயம் வர ஆசைப்பட்டிருப்பார் ! At least உங்களிடம் ஒரு கையெழுத்து வாங்கிய பிரதியை அவருக்குக் கொடுத்திட்டால் ரொம்ப சந்தோஷப்படுவார் ' என்று நண்பர் சொன்ன போது அத்தனை நேரம் சரளமாய் செயல்பட்டு வந்திட்ட என் தொண்டை திடீரென வறண்டு போனது ! "சந்திரா அம்மாவுக்கு அன்பான வணக்கங்கள் " என்று எழுதி கையெழுத்துப் போட்ட போது எனக்கு நிஜமாய் கை நடுங்கியது !  அம்மா..உங்களின் அன்பிற்கு தலை வணங்குகிறோம் ! நீங்கள் நலமாய் இன்னும் ஆண்டாண்டு காலங்கள் நம் காமிக்ஸ் இதழ்களைப் படித்திடவும், ரசித்திடவும் வேண்டும் ! 

சற்றைக்கெல்லாம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக் குழுவினர் அங்கே வந்திட்டனர் - காமிக்ஸின் மறு பிறவி குறித்து சின்னதாய் ஒரு பேட்டி எடுக்க ! அவர்கள் நிலையத்தில் பணி புரியும் தொழில்நுட்பக் கலைஞர்களில் நம் காமிக்ஸ் ரசிகர்கள் எக்கச்சக்கம் உண்டு என்றும் ;NBS வெளியிட்ட முதல் தினத்து மாலை அவர்களில் பெரும்பான்மையினர் நம் ஸ்டாலில் ஆஜராகி இருந்தனர் என்றும் தெரிந்து கொண்டேன் ! நன்றி நண்பர்களே !! அவர்கள் புறப்பட்ட சற்றைக்கெல்லாம் பாலிமர் தொலைக்காட்சியிலிருந்தும் வருகை தந்து - அவர்களும் பேட்டி கண்டனர் !  'மீடியாவின் வெளிச்சம் நம் மீது விழுந்தால் தேவலை' என்று நண்பர்கள் பின்னூட்டங்களில் இங்கே குறிப்பிட்டிருந்த அதே தினத்தில் அவை நிஜமாகிப் போனது ஒரு சந்தோஷமான coincidence ! அது மட்டுமில்லாது, இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா தினசரியின் இரண்டாம் பக்கத்தில் நமது NBS ரிலீஸ் பற்றியும், தமிழ் காமிக்ஸ் உலகின் எழுச்சியைப் பற்றியும் மிக அழகாக எழுதி இருந்தது ஒரு எதிர்பாரா போனஸ் நமக்கு ! நமது நெஞ்சார்ந்த நன்றிகள் - டைம்ஸ் பதிப்பகத்திற்கும் ; புதிய தலைமுறை + பாலிமர் டி.வி. நிறுவனங்களுக்கும்  !  

பேட்டிகள் முடிந்த பாடில்லை என்பதை உணர முடிந்தது, நண்பரும், பதிவருமான ரபீக் ராஜா - ஏராளமான கேள்விக் கணைகளோடு என்னை சந்தித்த போது !  நம் காமிக்ஸ்களைப் பற்றி ; அவற்றின் நிறை-குறைகள் பற்றி ; NBS ; 2013-ன் திட்டங்கள் ; புதிய கதைத் தொடர்கள் - என்று பலவகையான விஷயங்கள் தொடர்பான கேள்விகளை முன்வைத்தார் - இணையத்தில் வலையேற்றம் செய்திடும் பொருட்டு வீடியோ எடுத்துக் கொண்டே ! கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் தொடர்ந்த இந்தப் பேட்டி எனக்கு நிஜமான சுவாரஸ்யம் தந்தது ; எனது பதில்களும் அதே சுவாரஸ்யத்தைக் கொணர்ந்திருந்தால் மகிழ்ச்சியே ! 

சீராய், உற்சாகமாய் அது வரை பயணித்திருந்த நமது "தனி ஸ்டால்  ; NBS ரிலீஸ் சந்தோஷ அனுபவங்கள்  "  ஒரு speed breaker -ஐ சந்திக்கும் தருணமும் நேற்று மாலை வந்திட்டது !கலப்படமற்ற சந்தோஷத்தை வெளிப்படுத்தியவாறே திரளாய் நண்பர்கள் நம் ஸ்டாலில் கூடி இருப்பது நிறையவே உறுத்தல்களை ஏற்ப்படுத்தி இருப்பது புரிந்திட இயன்றது. அதன் உச்சமாக நேற்று புத்தகக் கண்காட்சியின் குழுவிலிருந்து வந்திருந்த மூத்த நிர்வாகி  - 'உங்கள்  ஸ்டாலின் வெளியே மட்டும் எந்நேரமும் கூட்டமாய் இருப்பது பற்றி complaints நிறைய வந்துள்ளன ;  'ஸ்டாலில் கூட்டம் கூடிடக் கூடாது ; புத்தக வெளியீடெல்லாம் இங்கே செய்திடக் கூடாது ; மீறினால் கடைக்கு சீல் வைத்து விடுவோம் ; அடுத்த ஆண்டு உங்களுக்கு ஸ்டாலும் தரப்பட மாட்டாது' என்று சீற்றமாய்ச் சொல்லி விட்டுச் சென்றார். அவர்களது பார்வையிலும் நியாயம் உள்ளதென்பதால் - மன்னிப்புக் கோரி , இது போல் இனி நிகழாதென்று உறுதி சொல்லிட்டேன் அவரிடம். அதற்குப் பின்னே வருகை தந்த நண்பர்கள் அனைவரையும் நடைபாதையில் நின்று பேசிட அனுமதிக்காது, ஸ்டாலின் உள்ளே வரச் செய்வதிலேயே  என் கவனம் மையப்பட்டு நின்றது ! முதல் நாளின் மாலை நம் நண்பர்களின்   அசாத்திய உற்சாகம் எத்தனை கவனத்தை ஈர்த்துள்ளது என்பதைப் புரிந்திட இயன்றது :-) இது போன்றதொரு மெகா இதழ் வெளியீட்டை இனி ஒரு முறை நாம் எத்தனிக்கும் பட்சம் - அது நிச்சயமாய் சிவகாசியினில் நம் அலுவலகத்தில் வைத்தோ ; அல்லது சென்னையினில் ஒரு நல்ல ஹோட்டலின் அரங்கில் தான் திட்டமிடல் வேண்டும் போலும் ! 



நேற்று சந்தித்த நண்பர்களின் பெரும்பான்மை - wayne shelton கதைகளை அசாத்தியமாய் ரசித்தோம் என்று சொன்னதைக் கேட்க முடிந்த போது மனசுக்குள் XIII -க்கு நன்றி சொல்லிக் கொண்டேன் ! அவர் காலி செய்த திண்ணையைத் தானே புது வரவான ஷெல்டன் ஆக்கிரமித்துள்ளார் ! இன்னொரு வலுவான கதைத் தொடர் நம் காமிக்ஸ் அணிவகுப்பிற்குக் கிட்டியுள்ளதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு ! 'புத்தகத்தைப் புரட்டிப் புரட்டி அழகு பார்த்துக் கொண்டே இருக்கிறோம் ' என்று சொல்லிய நண்பர்களுக்கெல்லாம் - சீக்கிரமாய்ப் படிக்கத் துவங்குங்களேன் என்ற வேண்டுகோளை வைக்கத் தவறவில்லை ! இந்நேரத்திற்குள் நீங்களும் இதழை ஓரளவிற்காவது படித்திருப்பீர்கள் என்ற எதிர்பார்ப்பில் - கதைகளின் review - ஐ இங்கே துவக்கிடுவோமா ? வரிசையினில் முதலில் வந்துள்ள லார்கோவிலிருந்து துவக்கிட்டால் என்ன ? 



நெடியதொரு சென்னை வாசத்திற்குப் பின்னே சிவகாசிக்கும், 12 மணி நேர மின்வெட்டுக்கும் திரும்பிடுகிறேன் ! கடந்த நான்கு மாதம் எங்களின் வாழ்க்கைகளில் ஒரு தினசரி அங்கமாகிப் போன NBS - இனி அழகான நினைவுகளின் கர்த்தாவாக மாத்திரமே இருந்திடப் போகின்றதென்பதால் - மனதுக்குள் சின்னதாய் ஒரு வெற்றிடம் தோன்றுவது போலொரு உணர்வு ! டெக்ஸ் வில்லரைத் தயார் செய்த கையோடு ; இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிடும் தருணம் வந்து விட்டது எங்களுக்கு ! Thanks NBS....thank you Chennai.... thank you people....and most of all thanks to The Good Lord ! வாழ்க்கையின் ஒரு சந்தோஷமான அத்தியாயத்தை புரட்ட இயன்றதற்கு உங்கள் அனைவருக்கும் எங்கள் நன்றிகள் என்றும் உண்டு ! See you soon !

334 comments:

  1. இரு நாட்களும் என்னால் புகைப்படங்கள் எதுவுமே எடுக்க முடியாது போய் விட்டது !! உங்களிடமுள்ள images மின்னஞ்சலில் அனுப்பிடுங்களேன் ப்ளீஸ் ?

    ReplyDelete
    Replies
    1. என் இனிய தமிழ்,தெலுங்கு,கன்னட,மலையாள,மலேசியன்,இந்தோனேசியன்,பாலினேசியன்,ஹவாய் -யன் இன மக்களே!!!!
      அடியேனுக்கு இன்னும் nbs வரவில்லை என்ற துயர செய்தியை கேள்விப்பட்டு,துக்கம் விசாரித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ,மலேரியா,சிக்குன் குனியா,டெங்கு போன்ற எந்த ஹிம்சைகளும் இல்லாமல் குத்துமதிப்பாக 99 ஆண்டுகள் வாழ எல்லாம் வல்ல ஏடிஸ் கொசுவை பிரார்த்திக்கிறேன்.

      // இது போன்றதொரு மெகா இதழ் வெளியீட்டை இனி ஒரு முறை நாம் எத்தனிக்கும் பட்சம் - அது நிச்சயமாய் சிவகாசியினில் நம் அலுவலகத்தில் வைத்தோ ; அல்லது சென்னையினில் ஒரு நல்ல ஹோட்டலின் அரங்கில் தான் திட்டமிடல் வேண்டும் போலும் ! //
      பள்ளிபாளையம் என்ற அருமையான நகரம் இருக்கிறது.நிறைய நல்ல பிசாசுகள்.....ச்சே ...ஸாரி ....நல்ல மனிதர்கள் வசிக்கிறார்கள்.அந்த புண்ணிய பூமியில் கூட புத்தகம் வெளியிடலாமே சார்?ஹிஹி!!!

      Delete
    2. sir send ok later originals come dvd ok sir?palanivel

      Delete
  2. எடிட்டர்ஜி!!!எனக்கு இன்னும் புக் வரவில்லை.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் வரல சார்...பதிவு தபால்ல புக் பண்ணி இருந்தேன் ...அது தப்பா போச்சு ....

      Delete
    2. அடடா!!நமக்கு ஒரு தோஸ்த் கெடச்சிட்டார். வாங்க இளம்பரிதிஜி!!ஒண்ணா சேந்து ஒப்பாரி வெக்கலாம்.

      Delete
  3. @vijayan sir,

    I still have not got the nbs book. my booking number was 24.

    I called twice to your office yesterday and the person said that she will call me back with the courier consignment number and till now no one has called.

    I am not sure what is the issue here and why a subscriber is treated like this? How many times I am supposed to call just to get a consignment number?

    Inspite of me advance booking the nbs, i have not received it.

    There are so many others in chennai who seem to have got the book, though their booking numbers are much later than mine.

    Inspite of subscribing for it, is it my responsibility to keep calling your office/courier office to know the status of delivery? The courier consigment number could be sms/emailed to the subscriber , once they are sent to courier.

    I feel it is easy to wait and get the books after their release either in the book stalls(landmark etc)/ebay or at the book fair.

    I paid 435 rs for advance booking of nbs(which I have not received till now) , wherein I bought another copy of NBS for 360rs(with 10% discount at book fair) easily.

    Of late,there are many people who have been raising this concern of not receiving the books in proper time, even though they are paying for the courier charges in addition.

    Please look into it and do something about it. If this continues, anyone would opt for waiting and buying at book store/ebay after the book release , instead of paying/subscribing in advance and keep waiting clueless to get his/her book.

    ReplyDelete
  4. பொங்கல் வாழ்த்துக்கள்! படித்து விட்டு வருகிறேன்! :)

    ReplyDelete
    Replies
    1. //இது போன்றதொரு மெகா இதழ் வெளியீட்டை ..... சென்னையினில் ஒரு நல்ல ஹோட்டலின் அரங்கில் தான் திட்டமிடல் வேண்டும் போலும் ! //
      இது அருமையான யோசனை! சென்னை என்றில்லை, பெங்களூரிலும் வைத்துக் கொள்ளலாம்! ;) அப்படியே buffet-ஐ மேய்ந்து கொண்டே - காமிஸ் பேசலாம் சரிதானே சார்?! :D

      NBS-ஐ இன்னமும் மேலோட்டமாக கூட படிக்க ஆரம்பிக்கவில்லை. முழுதாய் படித்து முடிக்க ஓரிரு வாரங்கள் ஆகலாம் என நினைக்கிறேன்! :) ஆனால், புத்தகத் தரம் (making) மிகவும் அருமையாக உள்ளது! :)

      Delete
    2. #அப்படியே buffet-ஐ மேய்ந்து கொண்டே# நல்ல யோசனை.

      Delete
    3. பெங்களூர்! பெங்களூர்!! வரும் காமிக்ஸ்-கான்க்கு "ஸ்பெஷல்" வெளியீடு ஏதாவது இருக்கா!! அப்படினா பெங்களூரில் ஏற்பாடு செய்யலாம்!!!

      Delete
    4. #அப்படியே buffet-ஐ மேய்ந்து கொண்டே#
      சொந்த காசுலதான :-) இல்லனா அசிரியர் ஓடிபோய் விடுவார் !!

      Delete
    5. @Parani:
      வேணும்னா சொல்லுங்க வீட்ல இருந்து ஆளுக்கு ஒரு சாப்பாடு ஐட்டம், சைட் டிஷ், தட்டு, கரண்டி, தண்ணி கேன் etc. etc. எல்லாம் தூக்கிட்டு வந்துருவோம்! ;)

      பெங்களூர்ல buffet வச்சா உங்க பர்ஸ் தாங்கும்! எங்க பர்ஸூ தாங்குமா?! ப ர ணி, ப ர ணி! :)

      Delete
    6. கூட்டாம் சோறு (pot-luck) நல்ல யோசனை தான்!! கையகடிக்காது!!

      Delete
  5. Largo as usual amazing sir wayne story going on..

    ReplyDelete
  6. //கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் தொடர்ந்த இந்தப் பேட்டி எனக்கு நிஜமான சுவாரஸ்யம் தந்தது ; எனது பதில்களும் அதே சுவாரஸ்யத்தைக் கொணர்ந்திருந்தால் மகிழ்ச்சியே ! //
    சார் 15 நிமிஷம் இல்ல மொத்தம் 45 நிமிஷம் :)

    ReplyDelete
    Replies
    1. கழுகு கண்களைய உமக்கு :D

      Delete
    2. @Giridharan V: அந்த பேட்டியை சீக்கிரமாக பதிவேற்றம் செய்யவும்...ஆவலுடன் காத்திருக்கிறேன்.

      Delete
    3. @மேற்கிலிருந்து ம. ராஜவேல்: அது தல ரபிக் கையில்தான் இருக்கிறது :)

      Delete
    4. @ Rafiq Raja: நண்பரே அந்த பேட்டியை சீக்கிரம் பதிவேற்றம் செய்யுங்களேன். @ Giri: தகவலுக்கு நன்றி நண்பரே.

      Delete
  7. நல்ல ஒரு மறக்க முடியாத நாள் நமது காமிக்ஸ் வெளியீட்டு நாள், 'என்னை போல் ஒருவன்' என்பது போல், என்னை போல் பல பேரை பார்க்க முடிந்ததில் மிகவும் மகிழுட்சி அளித்தது, யாரிடமும் அவ்வளவாக பேச முடியா விட்டாலும், அந்த இடத்தில் இருந்ததை பெருமையாக நினைகிறேன், நமது ஆசிரியர் அவர்கள் நிதானமாகவும் தெளிவாகவும் அனைவரது கேள்விகளுக்கும், சந்தேகத்துக்கும் பதில் அளித்தது இன்னமும் என் கண் முன்னே நிற்கின்றது, hats off to you sir. சில பேருக்கு மகிழ்ச்சியில் வார்த்தை கூட சரியாக வரவில்லை. அவர்களது மலர்ந்த முகங்கள் மீண்டும் என் கண் முன்னே நிழலாடுகிறது, சென்னை புத்தக கண்காட்சி நம்மை பொறுத்த வரை ஒரு NBD (Never Before Day)

    என்னுடைய டாப் கதைகள்

    #1 வேய்ன் ஷெல்டன்

    அருமையான கதையோட்டம், பெரிய சிக்கல் எதுவும் இல்லாத கதை, வண்ணத்தில் பாற்பதருக்கு கொள்ளை அழகு. Wayne rocks!

    #2 லார்கோ வின்ச்

    இதுவும் ஒரு அருமையான கதையோட்டம் உள்ள ஒரு தொடர், விரிவிருப்புக்கு பஞ்சமே இல்லாத கதை, Largo thrills!

    #3 மாடஸ்டி ப்ளைஸி+மாயாவி

    மாடஸ்டி கதை - கருப்பு வெள்ளை என்றாலும் 'old is gold', மாயாவி கதை - கடுகு சிறுத்தாலும் காரம் குறையவில்லை, Simply superb!

    #4 - சிக்பில் & கோ

    நகைச்சுவை சரவெடி, ஷெரிபும் கிட்டும் அடிக்கற லூட்டி தாங்கமுடியல, Comedy & Co!

    #5 கேப்டன் டைகர்

    இரண்டு கதைகளும் நல்ல கதைகளே, ஆனால் மற்ற கதைகள் இவரை விட ஒரு படி அசத்தலாக இருக்கின்றது, Evergreen Hero!

    #6 ஜில் ஜோர்டன்

    நகைச்சுவையுடன் ஒரு மெல்லிய suspense கலந்த நல்ல ஒரு கதை, comical illustration is a plus, மீண்டும் இவரை நமது காமிக்ஸில் எதிர்பார்கிறேன், Jill is Cool!

    ReplyDelete
  8. அன்பு எடிட்டர் சார் NBS ஐ முடித்து விட்டேன் அற்புதம் வேறொன்றும் சொல்ல தோன்ற வில்லை மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் உள்ளது 'உங்கள் ஸ்டாலின் வெளியே மட்டும் எந்நேரமும் கூட்டமாய் இருப்பது பற்றி complaints நிறைய வந்துள்ளன ; 'ஸ்டாலில் கூட்டம் கூடிடக் கூடாது ; புத்தக வெளியீடெல்லாம் இங்கே செய்திடக் கூடாது ; மீறினால் கடைக்கு சீல் வைத்து விடுவோம் ; அடுத்த ஆண்டு உங்களுக்கு ஸ்டாலும் தரப்பட மாட்டாது' கூட்டம் கூடுவதர்க்குதானே கண்காட்சியே ?

    ReplyDelete
  9. Still I didnt got the book but I booked very late only , so I am patiently waiting

    ReplyDelete
  10. இன்னும் புதிதாக வாசகர்கள் இணைகிறார்கள் என்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி.. வாழ்த்துகள்.. மாடஸ்டி போலவே சில காலங்களுக்கு முன்னர் விளம்பரப்படுத்திய Code Name மின்னலை அறிமுகப்படுத்தலாமே.

    ReplyDelete
  11. நான் முழுபேட்டியை தவற விட்டுவிட்டேன். நான் பார்த்தது கடைசி 5 நிமிடங்களை மட்டுமே...நண்பர்கள் யாரேனும் வைத்திருந்தால் பதிவேற்றம் செய்யவும்.

    ReplyDelete
    Replies
    1. 'புதிய தலைமுறை'யில் இன்று சுமார் ஏழுமணியளவில் ஒளிபரப்பானது.

      Delete
  12. // 'உங்கள் ஸ்டாலின் வெளியே மட்டும் எந்நேரமும் கூட்டமாய் இருப்பது பற்றி complaints நிறைய வந்துள்ளன ; 'ஸ்டாலில் கூட்டம் கூடிடக் கூடாது ; புத்தக வெளியீடெல்லாம் இங்கே செய்திடக் கூடாது ; மீறினால் கடைக்கு சீல் வைத்து விடுவோம் ; அடுத்த ஆண்டு உங்களுக்கு ஸ்டாலும் தரப்பட மாட்டாது' என்று சீற்றமாய்ச் சொல்லி விட்டுச் சென்றார்.//

    அப்படியெனில் அடுத்த முறை, இரண்டு ஸ்டால்கள் வாங்க வேண்டிய நேரம் வந்து விட்டது...ஒன்று நமது வெளியீடுகளுக்கும் மற்றது நம் விருந்தினர்களை வரவேற்கவும், உரையாடவும்.

    ReplyDelete
  13. நேற்று ஆசிரியருடன் கலந்துரையாடல் செய்தது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்ச்சி. கூடிய விரைவில் அனைவருக்கும் கிடைக்கும்படி ரபிக் செய்வார் என்று எதிர்பர்கின்றேன். இதுவரை படித்ததில், ப்ளுபெர்ரி (கேப்டன் டைகர்) கதை "இருளில் ஒரு இரும்புக் குதிரை" மிகவும் நன்றாக இருந்தது. பழைய ப்ளுபெர்ரியை காணமுடிகின்றது. ஒவ்வொரு பக்கத்திலும், ப்ளுபெர்ரி மதியுகம் தெரிகின்றது. சிக்பில் கதை முதன் முறையாக கலரில் படிக்கும்போது நன்றாக உள்ளது. கில் ஜோர்டன் கதை ஒரு வித்தியாசமான கதை, ரொம்பவும் எதிர்பார்க்கவில்லை, ஓகே ரகம். மீதி கதைகளை படித்துவிட்டு வருகின்றேன். கடந்த இரண்டு நாட்களில் நிறைய நண்பர்களை சந்திக்க முடிந்தது. சந்திக்காதவர்களை சந்திக்க ஆசை... நேரம், காலம் மற்றும் இடம் ஒத்துவந்தால் சந்திக்கலாம்.

    ReplyDelete
  14. டியர் எடிட்,

    NBS வெளியீடு நண்பர்களிடையே இமாலய வரவேற்ப பெற்றிருப்பதை கண்டு அகமகிழ்ச்சி. ஆரம்பத்தில் NBS அறிவிப்பு வெளியான நாள் முதல், அதற்கு என் கருத்துகளை எதிர்மறையாக நான் பதிந்து வந்ததே, சீராக மாதம் ஒரு இதழ் என்று தொடங்கி இருந்த நமது 2012 ன் தொடக்கத்தை, 400 ரூபாய் ஸ்பெஷல் என்ற ஒரு மசாலா மிக்ஸ் போன்ற இமாலய வேலையை எடுத்து, அதனால் 2013 க்கான தொலைநோக்கு பார்வையோ, தரம் மேம்படுவதையோ நாம் தொலைத்து விடுவோமா என்ற கவலைதான்.

    ஆனால், புத்தக கண்காட்சியில் ரசிகர்களின் ஆர்வம், மற்றும் உத்வேகத்தை பார்க்கையில், 40 வருட கால காமிக்ஸ் பயணத்திற்கு, ஏற்கனவே கடந்து வந்த 100 ரூபாய் அல்லது 200 ரூபாய் ஸ்பெஷல்கள் உண்மையான கொண்டாட்ட காரணியாக இருந்து இருக்கிறது என்பது நிதர்சனம். அவ்விதத்தில் 400 ரூபாய் ஸ்பெஷல் சரியான தேர்வே.

    காமிக்ஸ் டைமில் நீங்கள் தெரிவித்தபடி, இன்னும் அதிக எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய, அடுத்த ஸ்பெஷலாக, லயன் 25 வது வருட கொண்டாட்டத்தை, 500 ரூபாயில் அரங்கேற்ற சரியான வாய்ப்பு :D

    (contd...)

    ReplyDelete
    Replies
    1. லார்கோவில் இருந்து விமர்சனத்தை நானும் தொடர ஆசையே... ஆனால், கடந்த 2 நாட்களாக கிடைத்த விடுமுறைகளை சென்னை புத்தக கண்காட்சியில் வேட்டையிலும், நோவெடுக்கும் கால்களுக்கு ஓய்விலுமே கழிந்து போய் விட்டது. இடைபட்ட நேரங்களில் தூக்கங்களுடன் போட்டி போட்டு கொண்டு, நான் படிக்க முடிந்தது, ஆதி எடிட்டர், ஹாட் லைன், காமிக்ஸ் டைம், டாப் 5, சி. சிறுவயதில் போன்றவற்றையே... இன்றைய இரவில் லார்கோவையும் படித்து விட்டு கருத்துகளை பதிகிறேன்.

      பி.கு. 1: நல்ல வேளை, ஆர்வத்துடன் எங்கள் shoot interview க்கு நீங்கள் பதிலளித்ததில், நேரம் போனதை நீங்கள் கண்டு கொள்ளவில்லை என்று தெரிகிறது.. மொத்தம் எடுத்தது 60 நிமிடங்கள். கிரி நல்லா நோட்டம் போட்டிருக்கிறார்.

      பி.கு. 2: நான் கேள்விபட்ட வரை புத்தக வெளியீட்டுகளை சின்ன ஒரு கூடுதலாக ஒவ்வொரு ஸ்டாலிலும் நடத்திடுவதில் தடையேதும் இருப்பது போல தெரியவில்லை. ஆனால், கூடிய கூட்டம் தான் கண்ணை உறுத்தியிருக்க வேண்டும். இவற்றை தடுக்க சிவகாசியிலோ, இல்லை நகரத்தில் ஒரு ஹோட்டலிலோ வெளியீடை அமர்க்களமாக நடத்தி விட்டு பின்பு அடுத்த நாள் ஸ்டாலில் விற்பனை செய்வது சரியான யோசனையே... அப்படியே கார்த்தி வழிகாட்டியபடி.. பஃபே உணவுக்கும் சைடு கேப்பில் டிக்கெட் போட்டால் டபுள் ஓகே தான்.

      Delete
    2. //கிரி நல்லா நோட்டம் போட்டிருக்கிறார்// :)hahaha

      Delete
    3. ----------

      போன புத்தகக் காட்சியில், நான்கு ஸ்டால் அளவுக்கு ஒரு இடம் மற்றும் ஒரு 20 நாற்காலிகள் போடப்பட்டு இருந்தது. அதில் சில புத்தக வெளியீடுகளைப் பார்த்தேன்.

      அதனால் புத்தகக் காட்சி நிர்வாகிகள் அதற்கு ஏற்றார் போல இடம் ஒதுக்கவேண்டும். ஒரு பதிப்பாளராக நீங்கள் அதனைக் கேட்டுப் பெறும் உரிமை உங்களுக்கு உண்டு.

      இன்று ஸ்டாலுக்கு சென்றேன். அது என்னவோ தெரியவில்லை 3xx வரிசைகளில் இருந்த பல ஸ்டாலுக்கு கூட்டம் அதிகமே.. சில ஸ்டால்களின் வெளிய 4 நாற்காலிகள் போடப்பட்டு, நடக்கவே இடம் இல்லாத நிலை இருந்தது. இதனை நிர்வாகிகள் கவனிக்கத் தவறியது ஆச்சரியமே.

      ----------

      Delete
    4. ----------

      போன புத்தகக் காட்சியில், நான்கு ஸ்டால் அளவுக்கு ஒரு இடம் மற்றும் ஒரு 20 நாற்காலிகள் போடப்பட்டு இருந்தது. அதில் சில புத்தக வெளியீடுகளைப் பார்த்தேன்.

      அதனால் புத்தகக் காட்சி நிர்வாகிகள் அதற்கு ஏற்றார் போல இடம் ஒதுக்கவேண்டும். ஒரு பதிப்பாளராக நீங்கள் அதனைக் கேட்டுப் பெறும் உரிமை உங்களுக்கு உண்டு.

      இன்று ஸ்டாலுக்கு சென்றேன். அது என்னவோ தெரியவில்லை 3xx வரிசைகளில் இருந்த பல ஸ்டாலுக்கு கூட்டம் அதிகமே.. சில ஸ்டால்களின் வெளிய 4 நாற்காலிகள் போடப்பட்டு, நடக்கவே இடம் இல்லாத நிலை இருந்தது. இதனை நிர்வாகிகள் கவனிக்கத் தவறியது ஆச்சரியமே.

      ----------

      Delete
  15. திரௌபதி க்கு உடையளித்த கண்ணனுக்கு அடுத்து , இந்த கலியுகத்தில் காமிக்ஸ் நாயகிகளுக்கு உடையளித்த பெருமை உங்களுக்கே எடி சார்... :) :)... அதற்கு ஏற்ற மாதிரி கதையும் பீச் சைடு அமைந்துவிட்டது.. (மடஸ்தி கதை).... அநியாயத்துக்கு எங்க தானைய தலைவியை கோடு போட்ட சட்டை போட்டு வரிக்குதிரை போல மாதிடீங்க..

    ReplyDelete
  16. இதுவரை மூன்று நாட்கள் கண்காட்சிக்கு சென்று அங்கு நம் ஸ்டாலிலும் சிறிது நேரம் செலவிட்டேன். நான் கண்டதெல்லாம், நமக்கு இடப்புறமாகவும் வலப்புறமாகவும் நன்றாக ஈ ஒட்டிகொண்டிருக்கிரார்கள் :-) அவர்களின் காழ்ப்புணர்ச்சி கூட அந்த ஆசாமி வந்து அரற்றியதில் முடிந்திருக்கலாம். We got to take it with a pinch of salt ...! The crowd was huge but never unruly !!

    ReplyDelete
    Replies
    1. நண்பரே டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் மிக உண்மையாக எங்கே கூட்டம் இருந்தது என்று எழுதியிருந்தனர்.. ஒரு வேலை இந்த கண்காட்சியின் குழுவினருக்கு , அங்கு உள்ள புத்தகங்கள் மட்டுமலாமல் , அங்கு வரும் நபர்களும் காட்சி பொருளை போலவே ஜடமாக வந்து போக வேண்டும் என்று நினைப்பார்கள் போல... என்ன ஒரு உயிரோட்டமில்லா மனிதர்கள் இவர்கள்..

      Delete
    2. @Comic lover & Simba:
      //அங்கு உள்ள புத்தகங்கள் மட்டுமலாமல் , அங்கு வரும் நபர்களும் காட்சி பொருளை போலவே ஜடமாக வந்து போக வேண்டும் என்று நினைப்பார்கள் போல...//

      சரியாக சொன்னீர்கள்.

      Delete
  17. NBS வெற்றிக்குப்பின் ஆயிரம் ருபாயில் புத்தகம் வெளியிட ஐடியா இருக்குதுங்களா

    ReplyDelete
  18. டியர் சார்..
    உங்களையும்,மற்ற நண்பர்களையும் சந்தித்த அந்த பசுமையான நினைவுகள்
    இன்னும் உள்ளதால். nbs புத்தகத்தை வாசிக்க முடியவில்லை. இருந்தும் nbs புத்தகம் தரமாகவும், அழகாகவும் வந்துள்ளது. மற்றும் நீங்கள் கேட்டிருந்த பிரின்ஸ் கதையின் தலைப்பை நேற்றே sms செய்து விட்டேன். இருந்தாலும் இன்னொரு முறை அதை இங்கே கூறுகிறேன். l`otage இதுதான் பிரின்ஸ் கதையின்
    10 பக்க தலைப்பு. நீங்கள் கேட்டுள்ள புகைப்படங்களை எனது நண்பர் செந்தில்குமார் மூலமாக உங்களுக்கு
    அனுப்பி வைக்கிறேன் சார்.

    ReplyDelete
    Replies
    1. டியர் விஜயன் சார்..

      உங்களுடைய மின்னஞ்சலுக்கு புகைப்படங்களை அனுப்பியிருக்கிறேன்.

      Delete
  19. எடிட்டர் மற்றும் ரபிக் ராஜா சொல்வது நன்றாக இருக்கிறது.

    வருடா வருடம் சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு ஒரு புத்தகமும் சில டைஜெஸ்ட்களும் வெளியிடலாம். அவற்றை சிவகாசியிலோ அல்லது சென்னையிலோ செய்யலாம் - கூடவே ஒரு பப்பே டின்னர் டிக்கட் போடலாம். டின்னருக்கு முன் ஒரு மணிநேரம் காமிக்ஸ் பார்வை பற்றி எடிட்டர் பேசலாம். டின்னருக்கு பின் ஒரு மணி நேரம் கேள்வி நேரம் வைக்கலாம்.

    ReplyDelete
  20. Satanji & lion fan : please give me until tomorrow morning to sort out the problems!ST courier have given us just 80% of the courier booking receipts ; they are a small unit too - at least in Sivakasi.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் வரல சார்...பதிவு தபால்ல புக் பண்ணி இருந்தேன் ...அது தப்பா போச்சு ....

      Delete
    2. Thanks vijayan sir for the reply !! Let us know .

      Delete
  21. ஸ்டீல் க்ளாவிலிருந்து ஹி ஹி விச்சு கிச்சுவிலிருந்து துவங்கி விட்டேன்! டைகரின் இரண்டாவது கதையில் லயித்த நிலை! சின்னதான எழுத்துப்பிழைகளை மன்னிக்கலாமே நண்பர்களே! மொழிபெயர்ப்பு மிக தரம் வாய்ந்ததாக உள்ளது! மாடஸ்டி கதை ஆரம்ப நிலை! கிடைக்காத நண்பர்கள் பொறுமை ப்ளீஸ்!

    ReplyDelete
  22. sir am send mail photos in ur office .
    attakasam sir.

    ReplyDelete
  23. டியர் சார்,

    NBS வெளியீட்டு விழாவில் நானும் ஒரு மூலையில் இருந்தது பெருமையாக இருந்தது. தங்களையும், தங்கள் தந்தையையும் சந்தித்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது. நீங்கள் அனைவரின் கேள்விகளுக்கும் முகம் சுழிக்காமலும், சளைக்காமலும் பொறுமையாக பதில் தந்ததை பார்த்து உண்மையில் பிரமித்துவிட்டேன். இதையெல்லாம் (நீங்கள் என்னை கவனித்து இருக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்) அமைதியாக நீண்டநேரம் நின்று ரசித்துக்கொண்டிருந்தேன்.

    ReplyDelete
  24. டியர் விஜயன் sir , சென்னையில் இருந்து டைப் அடிக்கிறேன் . புத்தக கண்காட்சி மதியம் சென்று இருந்தேன் .போனில் மட்டுமே அறிமுகமான ராதாகிருஷ்ணன் அண்ணாச்சியை நேரில் சந்தித்தேன் , கனிவான உபசரிப்பு , வாசகர்களின் படையெடுப்பு ,நிறைய பேர் family யாக வந்தவர்கள் நம் ஸ்டால் யை கண்டவுடன் ,காமிக்ஸ் ஸ்டால் ஆ ,என்று ஆச்சரியபட்டவர்கள் ,நம் ஸ்டால் யை விட்டு அகலும்போது ,எல்லோர் கையிலும் தவறாமல் nbs இதழ் .இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ? என்பது போல் நாம் எல்லோரும் இதற்குத்தானே ஆசைப்பட்டோம் ! விஜயன் சார் ,நம் nbs உண்மையிலேயே சரித்திரம் படைத்தது விட்டது , மிகவும் சந்தோசமாக இருக்கிறது , பை நிறைய காமிக்ஸ் யுடன் , மனம் நிறைய சந்தோசத்துடனும் சேலம் கிளம்புகிறேன் , நம் போலீஸ் கார் jhony &jr jhony யை ஸ்டால் ல் பார்த்தேன் ,தன் குடும்ப விழா போல் ஓடி யாடி வேலை செய்து கொண்டு இருந்தார் . பழக்கம் இல்லாமல் பேச தயக்கமாக இருந்தது ! so ,friends இப்படை தோற்கின் எப்படை வெல்லும்

    ReplyDelete
    Replies
    1. வெல்கம் பேக் டாக்டர்ஜி!!!
      அடாடா!!! நம்ம நண்பர் ஜான் சைமனை சந்தித்தும் பேசாமல் வந்துவிட்டீர்களே.சும்மா "மப்டில" வந்த மகாலக்ஷ்மி.....ச்சே...ஸாரி....மகாதேவன் மாதிரி ரொம்ப டக்கரா இருப்பாரே.அவருடன் ஜாலியாக உரையாடிவிட்டு வந்திருக்கலாமே?
      அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்....ஈரோடு ஸ்டாலின் அவர்களின் ப்ளாக்கை தயவு செய்து பார்க்காதீர்கள்.அடியேனின் மானம் கப்பலேறிவிடும்.ஹிஹி!!

      Delete
  25. வேலைப்பளு காரணமாக புத்தகத்தை இன்னும் படிக்கமுடியவில்லை. ஒரே ஒரு கதை சென்னையில் படித்தேன் அது ஒரே கலாட்டா தான் போங்க.

    உலக வரலாற்றிலேயே முதல் முறையாக 3 தலைமுறை ஆசிரியர்களிடமும் NBS -ல் ஒரே பக்கத்தில் கையெழுத்து வங்கி விட்டேன் என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்

    அன்புடன்
    A.S.FERNANDAS

    ReplyDelete
    Replies
    1. வாங்கிய கையெழுத்திற்கு வாழ்த்துக்கள் நண்பரே! :)

      Delete
  26. "Wayne Shelton" ஓர் ஆச்சர்யமான ஆரம்பம், படித்த முடித்த பிரமிப்பு இன்னும் அகலவில்லை :). பிரமாண்ட truck கள் என் மனதை விட்டு அகல மறுக்கின்றன :).ஒரு முழுமையான Action Pack திரைப்படம் பார்த்த மாதிரி இருக்கின்றது :).
    "ஜில் ஜோர்டான்" ஒரு கலர்புல் கலாட்டா. Welcome "ஜில் ஜோர்டான்". இந்தனை கலர் புல்லாக எந்த ஒரு புத்தகத்தையும் படித்ததாக நினைவில் இல்லை :)
    "சிக் பில்" - சொல்லவே தேவையில்லை. சிம்ப்லி superp )
    இந்த வருட பொங்கல் நிஜமாலுமே மறக்க முடியாத பொங்கல்தான் :)
    புஸ்தகத்தை கையில் வைத்து வைத்து கை வலிப்பதால் கொஞ்சம் ரெஸ்ட் :) Hats Off to you sir :)

    ReplyDelete
  27. விஜயன் சார் ஐ பல மணி நேரம் வாசகர்கள் சுற்றி வளைத்து ஸ்டால் அர்ரெஸ்ட் செய்து விட்டார்கள்
    வெளியில் இருந்து பார்பதற்கு அவரை தீவிர விசாரணை செய்வது போலவே இருந்தது

    ReplyDelete
    Replies
    1. 'தீவிர விசாரணை' - (இந்த கூட்டத்திற்கு காரணமான லயன்/முத்து குழுமத்தினரையும், அதற்கு உடந்தையாய் இருந்த 1000திற்கு மேற்பட்டவர்களையும் 'வலை' வீசி தேடினர்...துருவி துருவி கேள்வி கேட்டனர்...இந்த விசாரணை சுமார் 3 மணிநேரத்திற்கு மேலாக நீடித்தது).... :-)

      Delete
  28. //திரளாய் நண்பர்கள் நம் ஸ்டாலில் கூடி இருப்பது நிறையவே உறுத்தல்களை ஏற்ப்படுத்தி இருப்பது புரிந்திட இயன்றது. அதன் உச்சமாக நேற்று புத்தகக் கண்காட்சியின் குழுவிலிருந்து வந்திருந்த மூத்த நிர்வாகி - 'உங்கள் ஸ்டாலின் வெளியே மட்டும் எந்நேரமும் கூட்டமாய் இருப்பது பற்றி complaints நிறைய வந்துள்ளன ; 'ஸ்டாலில் கூட்டம் கூடிடக் கூடாது ; புத்தக வெளியீடெல்லாம் இங்கே செய்திடக் கூடாது ; மீறினால் கடைக்கு சீல் வைத்து விடுவோம் ; அடுத்த ஆண்டு உங்களுக்கு ஸ்டாலும் தரப்பட மாட்டாது' என்று சீற்றமாய்ச் சொல்லி விட்டுச் சென்றார். //

    நிர்வாகியின் மிரட்டல் ஏற்கக்கூடியது. அவர் ரூல்ஸ் பேசியிருக்கிறார். ஆனால், இப்படியொரு விடயத்தைப் 'போட்டுக்கொடுத்த' பக்கத்துக் கடைக்காரர்கள் இருக்கிறார்களே - அவர்கள் 'உண்மைத் தமிழர்கள்'! பொறாமையாலும் எரிச்சலாலும் மற்றவனைக் காட்டிக்கொடுத்தே பழக்கப்பட்டுவிட்டவர்கள்தானே நம் 'தமிழ்க் குடிமக்கள்'! நான் நல்லா இருக்கிறேனோ இல்லையோ, பக்கத்திலுள்ளவன் நல்லாயிருக்கக்கூடாது என்பதுதானே எங்கள் 'தமிழர்களின்' பாரம்பரியம்!

    எம்மைப்பார்த்து பிறர் பொறாமையும் எரிச்சலும் படுகிறார்கள் என்றால், எங்கள் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது என்று அர்த்தம் - இல்லையா ஆசிரியரே?

    ReplyDelete
  29. sir times of india paper clip kedaikkuma...?

    ReplyDelete
  30. யாராவது தயவு செய்து புதிய தலைமுறை மற்றும் பாலிமர் தொலைக்காட்சி வீடியோ க்களை ஷேர் செய்யவும்.

    ReplyDelete

  31. சென்னை புத்தகத்திருவிழாவில் உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. திக்குமுக்காடிபோன நிலையில் அதிகம் பேசவில்லை, தவிர அதிகம் பேசி தொந்தரவு செய்ய விரும்பவில்லை.

    “Never Before ஸ்பெஷல்” அட்டைப்படம் படு சூப்பர். இதுவரை வந்த தமிழ் காமிக்ஸ் அட்டை படங்களில் இதுதான் டாப். வெளிநாட்டு தயாரிப்புக்கு இணையாக சிவகாசியில் தயாரிக்கப்பட்டதை நினைக்கும் பொழுது பிரமிப்பாக உள்ளது.

    கேப்டன் டைகர் உருவம் தனியாக லேமினேட் செய்யப்பட்டிருப்பது “3D” எபக்ட் உள்ளது. தொப்பி கனகச்சிதமாக பொருந்தியுள்ளது. வைலேட் கலர் சட்டை தேர்வு எடுப்பாக உள்ளது.

    “Never Before” எழுத்தின் அளவு சரியான அளவிலும் மின்னும் வகையிலும் “N” யும் “F” யும் நீண்டு இருபது Never Before என்று சொல்ல வைக்கிறது.

    கருப்பான முத்து காமிக்ஸ் லோகோவை இதுவரை என்னவோ என்று நினைத்தேன். லாமினேஷன் எபக்ட்-ல் இந்த லோகோவை அடிக்க வேறு லோகோ கிடையாது.

    கருப்பு வெள்ளை பக்கங்கள் இந்த புத்தகத்தின் திருஷ்டி பரிகாரம், கொஞ்சம் தடிமனான காகிதமாகவாது இருந்திருக்கலாம். முன்புற வெற்றிடத்தில் பின்புற ஓவியம், எழுத்து தெரிகிறது.

    மாடஸ்டிக்கும், புத்தகத்திற்கும் சட்டை போட்டு அழகு பார்த்துவிட்டீர்கள்.

    பணியாளர்களை கலரில், அட்டையில் போட்டு பார்க்கும் உள்ளம் யாருக்கு வரும்!!!

    ReplyDelete
  32. //சங்கதி # 2 : தெரிந்தோ, தெரியாமலோ - இந்த பெரிய சைஸ் ; வண்ணம் ; நல்ல காகிதம் என்றதொரு அமைப்புக்கு நம்மைத் தயார்படுத்திக் கொண்டது நிச்சயம் காலத்தின் கட்டாயம் ! இந்தத் தரமின்றின் போயிருக்கும் பட்சத்தில் - இன்றைய இளம் தலைமுறைக்கு அருகாமையில் கூட நாம் போகிடுவது சாத்தியப்பட்டிடாது ! மாடஸ்டியின் black & white - குறைவு விலையிலான நமது முந்தைய இதழ்களைப் புரட்டக் கூட அந்த யுவதிகள் தயங்குவது கண்கூடாய் பார்த்திட முடிந்தது !//
    உங்கள் கருத்துகளில் இந்த ஒன்றில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை. உங்களின் இந்த புதிய அத்தியாயத்திற்கு இத்தனை வரவேற்பு வர மிக முக்கிய காரணமாய் நான் கருதுவது மூன்று.
    1. நம் வலையுலகின் காமிக்ஸ் நண்பர்கள். இந்த வலைத்தளம் துவங்கும் முன் லயன் காமிக்ஸ் வருகிறதா என்பதே தெரியாத நாட்களில் பல காமிக்ஸ் அன்பர்களின் வலைதளங்களே ஆர்வங்களை தூண்டின. அவை சிறப்பாக அமைத்த ராஜப்பாட்டையில் வந்த அடுத்த காரணம்.
    2. உங்களின் இந்த தளம். காமிக்ஸ் மாதம் ஒன்றேனும் போது அதன் விபரங்களை அறிந்துக்கொள்ள மிகவும் உதவியது.
    3. மூன்றாவது மிக முக்கிய காரணம் - உங்களின் Punctuality. சந்தா கட்டியப்பின் வருமா வராதா என்ற சந்தேகத்தில் வைக்காமல் உடனுக்குடனே வர கையில் கிடைத்தது.
    மற்றபடி இந்த புதிய அவதாரம், தரம் எல்லாமே என்னைப் பொருத்தவரை போனஸ். இன்றும் உங்களின் இந்த Punctuality தொடருமேன்றால் பத்து ரூபாய் இதழ்கள் கூட வெற்றி பெறும். தரம் உங்கள் கதைகளில்,உங்களின் வாசகரை மதிக்கும் போக்கில், உங்கள் மொழிப்பெயர்ப்பில் தான் உள்ளது. அதுதான் இந்த வாசகர் அன்பிற்கு காரணம்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதைப் போல இணையம்.. கண்டிப்பாக ஒரு காரணம்.

      எனினும்...

      கலரில் லார்கோவைப் பார்க்கும் காமிக்ஸ் படிக்காத பலர் கண்களில் வியப்பு தென்படுவது.. கண்டிப்பாக கலர் மற்றும் உயர்தர காகிதத்தால் மட்டுமே.. லக்கிலூக் சிறிய புத்தகமும் (ரூ 10), பெரிய புத்தகமும் (ரூ 100) இருக்கும் போது என் மகன் எடுத்து புரட்டுவது பெரிய கலர் புத்தகத்தையே...

      Delete
  33. -----

    (இந்த வரிசை நான் கதைகளைப் படித்த வரிசை)

    1. சிக் பில்
    சூப்பர். வசனங்கள் டாப். பல இடங்களில் சிரிப்பை அடக்க முடியவில்லை. புத்தகத்தில் நகைச்சுவையைக் கொண்டுவருவது மிக மிக கடினம். கலரில் அருமையாக இருந்தது.

    2. லார்கோ

    அற்புதம். பிரம்மாதம். முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் முடியும் தறுவாய் வரை, பெரிய சண்டைக் காட்சிகள் இல்லை. இருப்பினும் பங்குச் சந்தை விவகாரங்கள் Wallstreet படத்தையும் மிஞ்சியது. அருமையான் த்ரில்லர்.

    ஒரு ஆங்கிலப் படத்தை பார்த்த உணர்வு.

    ”நீ ஒரு சண்டைக் கோழி லார்கோ” என்று வரும் வசனமும் அந்தக் காட்சியும், SIMPLY SUPERB...

    வழக்கம் போல.. சித்திரங்கள்.. இனி என்ன சொல்ல.. நியுயார்க் நகரமும், அந்த பெரிய கட்டிடங்களும், அமெரிக்க கொடியும், சுதந்திர தேவி சிலையும்... EXCELLENT

    3. ஜில் ஜோர்டான்

    வித்தியாசமான துப்பறியும் கதை. முதல் கதை என்பதால் பாதி கதை வரை கேரக்டர்கள் பற்றி சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. ஜில்லின் உதவியாளர் கேரக்டர் அருமை. கண்டிப்பாக இவரின் கதைகளைத் தொடர்ந்து வெளியிடுங்கள்

    4. ஷெல்டன்

    தொடக்கம் மட்டுமே படித்திருக்கிறேன்.. அசத்தலாக இருக்கிறது..

    -------

    ReplyDelete
  34. நம்ம X111 வழிவிட்டதால் வெய்ன் அவர்களுக்கு ஒரு அருமையான ஆரம்பம் கிட்டியது என்பதை நான் ஏற்க மாட்டேன்.. எனக்கு தெரிந்து 800 பக்கங்களுக்கு தனி ஒரு ஆளாக விளையாண்டு , அனைத்து பிரதிகளும் (கொஞ்சம் லேட் ஆனாலும் கூட) முழுவதும் விற்று தீர்ந்து சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் X111 , சோலோ கேம் ஆடுவதே சரியாக இருக்கும்... சிங்கம் சிங்கிளா தான் வரணும்.

    லார்கோ கதையோட்டம் பிரமிப்பாக இருக்கிறது. இணைத்தல் மற்றும் கையகப்படுத்ததல் போன்ற நடவடிக்கைகளை இவ்வளவு எளிதாக கையாள வான் ஹாம் அவர்களால் மட்டுமே முடியும். அதற்கு X111 வெற்றி அளித்த உத்வேகமா கூட இருக்கலாம். 40 வருட கொண்டாட்டம் என்ற ஒரு காரணத்துக்காக இவ்வகையான மாஸ் கதைகள் சேர்ந்து வந்தது ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் லார்கோ , ப்ளூ பெர்ரி இவர்களெல்லாம் தனியாக டைஜெஸ்ட் போட்டால் அழகு இன்னும் மிளரும். வெய்ன் இன்னும் படிக்கவில்லை.

    ஒன்று மட்டும் நிச்சயம், ஆசிரியர் அவர்கள் சென்ற வருடத்தை காட்டிலும் இரண்டு மடங்கு வேகத்தில் இந்த வருடம் பயணப்பட வேண்டி இருக்கும். அவர் நமக்கெதிரே பழனி மலையை காட்டினாள் கூட பரவாஇல்லை, இமையமலையை அல்லவா காட்டி உள்ளார். அத்துனை இன்பத்தையும் அள்ளிப்பருக மாதாம் மூன்று புத்தகங்களாவது தேவைப்படும்.ஆவன செய்ய ஆசிரியர் அவர்களை பணிவுடன் வேண்டுகிறேன்.

    சொல்ல மறந்து விட்டேன்... நண்பர்கள் , ஆசிரியர் மற்றும் நமது லயன் குழுமம், அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  35. ஆசிரியர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  36. //திரளாய் நண்பர்கள் நம் ஸ்டாலில் கூடி இருப்பது நிறையவே உறுத்தல்களை ஏற்ப்படுத்தி இருப்பது புரிந்திட இயன்றது. அதன் உச்சமாக நேற்று புத்தகக் கண்காட்சியின் குழுவிலிருந்து வந்திருந்த மூத்த நிர்வாகி - 'உங்கள் ஸ்டாலின் வெளியே மட்டும் எந்நேரமும் கூட்டமாய் இருப்பது பற்றி complaints நிறைய வந்துள்ளன ; 'ஸ்டாலில் கூட்டம் கூடிடக் கூடாது ; புத்தக வெளியீடெல்லாம் இங்கே செய்திடக் கூடாது ; மீறினால் கடைக்கு சீல் வைத்து விடுவோம் ; அடுத்த ஆண்டு உங்களுக்கு ஸ்டாலும் தரப்பட மாட்டாது' என்று சீற்றமாய்ச் சொல்லி விட்டுச் சென்றார். //

    காய்த்த மரம்தானே கல்லடி படும்
    நமது பாதையும் பயணமும் சரியாக உள்ளது என சொல்லும் ஒரு வரவேற்பாக இதை எடுத்து கொள்ளலாமே

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள்! நானும் இதையே நினைத்தேன்!

      Delete
  37. Dear Editor,

    While we all discuss about the NBS success here I have a concern w.r.t December 2012 release (Jhonny).
    I used to buy all the books online through e-bay as I have'nt subscribed for 2012. But strangely this
    december book alone is not discussed much and cannot be seen in e-bay, dont know why this step-motherly
    treatment for this year-end release ? Also in new NBS in the list of available books to buy this one
    is missing why ?

    Is that still available to get one ?

    ReplyDelete
    Replies
    1. சிறிய புத்தகத்துக்கு பெரிய கொரியர் சார்ஜ் வந்துவிடும் என்பதால் அதனை யில் போடவில்லை என்று ஆசிரியர் சொல்லியிருந்ததாக ஞாபகம். புத்தகத் திருவிழா நடக்குமிடத்துக்கு அருகிலேயே நீங்கள் இருப்பதால் ஒரு நடை போய் வாங்கிடலாம். வேறு பல முன்னைய வெளியீடுகளும் அங்கே இருப்பதாக தகவல்!

      Delete
    2. அதனை ebay யில் போடவில்லை

      Delete
  38. BTW I got my NBS (booked in advance) !! I really missed all the events and a chance to meet the editor even though I am living just 2 kms from the venue... :-(

    ReplyDelete
  39. மாயாவி
    சிறிய கதை என்பதால் பெரிய அளவில் ஈர்ப்பு இல்லை

    மாடஸ்டி
    வழக்கம் போல் நட்பின் உன்னதத்தை சொல்லும் கதை .மிகவும் அருமை . சித்திரங்கள்தான் சிறிது குளறுபடி செய்துவிட்டன . பின்குறிப்பு : மாடஸ்டி , வில்லி கார்வினின் தீவிர ரசிகர்களில் நானும் ஒருவன்

    கிட் ஆர்ட்டின்
    வயிறு குலுங்க சிரிக்க வைய்த்த கதை . சிறிது தடுமாற்றமுடன் கொஞ்சம் அவுட் ஆப் பார்மில் இருக்கும் லக்கி லுக்ககிற்கு பதில் எனக்கு அணியில் இடமளித்தது மிக சரியான முடிவே என கிட் ஆர்ட்டின் நிருபித்து விட்டார் .

    எடிட்டர் சார் இது வரை ஷெரிப் , கிட் ஆர்ட்டின்,சிக்புல் ,குள்ளன் ஆகியோர் ஒரே மாதிரியான உடையைத்தான் அணிந்து வருகிறார்கள் என நினைத்தேன் ஆனால் இப்போதுதான் தெரிந்தது அவர்கள் ஒரே உடையைத்தான் அணிகிறார்கள் என்று . (பார்க்க: ஷெரிப்-ன் உடை மாற்றம் )

    டைகர்
    கான்சாஸ் கொடூரன் மூலம் இவரும் சிறிது சமாளித்துவிட்டார் . புதியவர்களின் வருகைக்கு மதிப்பளித்து தான் சிறிது அடக்கி வாசிக்கிறேன் என்று சொல்வது போல் தோன்றியது. ஒவ்வொரு முறையும் இவர் கதையை ஏன் அந்தரத்தில் தொங்க விடுகிறீர்கள் என்பதுதான் புரியவில்லை .

    ஜில் ஜோர்டான்

    வரவேற்புக்கு உரிய அறிமுகம்தான் . வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கலாம் . அவரை விட அவர் உதவியாளர் கவர்ந்துவிட்டார்

    ஷெல்டன்
    இந்த காலகட்டத்தை சேர்ந்த ஒரு ஏண்டி ஹீரோ , சிறந்த அதிரடி மற்றும் லாஜிக்கலான ஹீரோ . எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டார்

    லார்கொ
    டைகர் சிறிது பின்தங்கும் நிலையில் இனி நான் தான் நம்பர் 1 என புரிந்து அதை நிருபிக்கும் வகையில் செயல் பட்டு உள்ளார் . பாராட்டுக்கள் . 2013 ல் இவருக்கு மீண்டும் இரு முறை வாய்ப்பளித்தது சரியே

    விச்சு கிச்சு
    டேய் பத்து கதைக்கு பதில் போனா போவுதுன்னு பதினோரு கதையா போட்டா அதையும் நீ விமர்சனம் பண்ணுவியா என நீங்கள் சொல்வது கேட்கிறது எனவே இத்துடன் முடித்து கொள்கிறேன்

    பின்குறிப்பு
    இதனால் அனைவருக்கும் நான் சொல்லவரும் நீதி என்னவென்றால் நான் NBS படித்து முடித்து விட்டேன்




    ReplyDelete
    Replies
    1. அட! ஆடிட்டர் ராஜாவிடமிருந்து முதன் முறையாக ஒரு முழுநீளப் பின்னூட்டம்!
      ராஜா சொன்னால் NBS மெஹா ஹிட்தான்!

      முதல் ஆளாக NBSஐ படித்துமுடித்ததும் அனேகமாக நீங்களாகத்தானிருக்கும். வாழ்த்துக்கள்!

      Delete
  40. NBS

    லார்கோவின் "கான்ங்க்ரீட் கானகம் நியுயார்க்" & "சுறாவோடு சடுகுடு" படித்து விட்டேன்!

    சூப்ப்ப்பர் கதை!
    தூள் ஆக்ஷன்!
    அருமையான சித்திரங்கள்!

    வசனங்களிலோ மொழிபெயர்ப்பிலோ எங்கும் எனக்கு எந்த நெருடலும் இல்லை!

    இது என் கருத்து.....

    ReplyDelete
  41. பக்கத்து கடைக்காரர் போய் வத்தி வட்சிட்டாரோ ?

    ReplyDelete
  42. ஆசிரியர், அவரது குடும்பத்தினர், நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர்கள், மற்றும் காமிக்ஸ்இனால் இணைந்துள்ள அனைத்து நண்பர்களுக்கும் உழவர் திருநாளாம் பொங்கல் திருநாழ் வாழ்த்துக்கள். துன்பங்கள் மறைந்து இன்பங்கள் அனைவர் வாழ்விலும் பொங்கட்டும்! பொங்கலோ பொங்கல்!!!!

    ReplyDelete
  43. நான் படித்துக்கொண்டிருக்கும் வரிசை.

    1.லார்கொ
    அருமையான த்ரில்லர்.ஒரு ஆங்கில படம் பார்த்தது போல இருந்தது.

    2.சிக்பில்:
    நல்லதொரு நகைச்சுவை விருந்து.

    3,ஜில் ஜோர்டன்:
    நல்லதொரு அறிமுகம்.சஸ்பென்ஸ்,காமெடி,ஆக்சன் என அனைத்தும் இருந்தது.

    4.வெய்ன் ஷெல்டன்:
    பர பர ஆக்சன் அட்டகாசம். மனுஷன் அதிகமா பயன்படுத்துவது கை தான்.எதுகெடுத்தாலும் ஒரே குத்து தான்.
    இறுதியில் தான் சற்றே சோகம்.

    5.மாடஸ்டி :
    ஆரம்பகால கதையாக இருக்கும் என நினைக்கிறன்.
    நெட்வொர்க் பற்றி அடிகடி வருகிறது.டிபிகல் மாடஸ்டி வில்லி கதை.

    இன்னும் மாயாவியும்,டைகரும் உள்ளனர்.
    நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  44. ஆசிரியர்கு ,NBS இல் ஒரே ஒரு வருத்தம் .எங்கள் tiger கதைகளை மீண்டும் மீண்டும் பிரித்து போடுவது தான் .இனிமேலாவது tiger இன் கதைகளை ஒவ்வொரு கதையாக முடித்து விட்டு அடுத்த கதைகளை தொடரலாமே சார்..ப்ளீஸ் ...அடுத்த குறை ...உங்கள் மொத்த டீமின் புகை படத்தை வெளியீட்டு எங்களை சந்தோஷ படுத்திய நீங்கள் உங்கள் படத்தை வெளி இட மறந்து விட்டீர் களே.வலை பதிவில் வராமல் இருக்கும் நண்பர்களுக்கு இது வருத்தமளிக்கும் விஷயம் .

    ReplyDelete
  45. அப்புறம் இன்னொரு குட் நியூஸ் சார்..நான் ஆர்டர் செய்த மூன்று புத்தககளும் எங்கள் ஊர் S .T .கொரியர் நேற்று சண்டே நாளில் கூட டெலிவெரி செய்து இன்ப அதிர்ச்சி அளித்து விட்டது. தேங்க்ஸ் S .T ...)

    ReplyDelete
    Replies
    1. புத்தகம் கிடைக்கப்பெற்றதற்கு வாழ்த்துக்கள் பரணி! :)

      Delete
  46. சில ​நேரங்களில் சில சந்​தோஷம்: நண்பர்கள் அ​ணைவருக்கும் தாமத ​பொங்கல் நல் வாழ்த்துக்கள். நான் தாமதமாக வாழ்த்து ​சொல்வதில் ஓர் காரணமுன்டு. 12.01.13 அன்று வ​ரை எனக்கு NBS கி​டைக்கவில்​லை என்பதால் மிகவும் ​சோகமாக இருந்​தேன் எனக்கு ​தெறிந்த ப​ழைய புத்தக
    க​டை நண்பர்களுக்கு ​பொங்கல் வாழ்த்து ​சொல்லலாம் என்று க​டை ​தெரு வ​​ரை ​​சென்றிருந்​தேன், அப்​போது ஓர் க​டைக்கார நண்பர் என்​னை ​செய்​கையால் அ​ழைத்தார் நானும் ​தே​மே என்று ​சென்று நலம் விசாரித்​தேன் அப்​போது அவர் "உன்​னை ஓர் வாரமாக ​தேடுகின்​றேன் எங்​கே ​சென்றாய்" என்று கூறியவர் க​டை ஊழியரிடம் காமிக்ஸ் கட்​டை எடுத்து வருமாறு கூறினார், எனக்கு ஓர் பக்கம் சந்​தோஷம் என்றாலும் இன்​னொறு பக்கம் சந்​தேகம் காரணம் இ​தே​போல் பலமு​றை என்​னை கூப்பிட்டு காமிக்ஸ் இருப்பதாக கூறிவிட்டு புதிய ராணி​யோ அல்லது தின பூமி காமிக்​​ஸோ எனது த​லையில் கட்டி விடுவார் நானும் அவரது நட்புக்காக அ​னைத்​தையும் வாங்கி விடு​வேன் அதுமட்டுமின்றி ​​வெளியூரிலிருந்து வரும் நமது ​நண்பர்கள் பலர் ஆர்வ மிகுதியால் முன்கூட்டி​யே அட்வான்ஸ் பணமாக ஆயிரம் இரண்டாயிரம் என்று தந்து புக்கிங் ​செய்து விடுவர் அதனால் எனக்கு சில வருடங்களாக ப​ழைய காமிக்ஸ் என்பது எட்டாக்கனியாக இருந்தது. ​​நேற்றும் அந்த
    க​டைகாரர் என்​னை அ​ழைத்து என்னிடம் ​சென்ற ஊழியர் வரும் வ​ரை காத்திருக்குமாறு கூறினார், நானும் நம்பிக்​கையுடன் இன்று நல்ல ​வேட்​டை என்று காத்திருந்​தேன்.... to bo cont...

    ReplyDelete
  47. புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மதிய செய்தியை பார்த்துகொண்டிருந்தேன்.புத்தக கண்காட்சி குறித்த செய்திப்பதிவில் நமது nbs புத்தகத்தையும்,நமது ஸ்டாலையும் சுமார் நாற்பது வினாடிகள்வரை காட்டினார்கள்.மகிழ்ச்சியில் துல்லிய நான் அருகிலிருந்த என் தாயாரிடமும் காட்ட கண்களில் வியப்புடன் நமது nbs புத்தகத்தை tv -யில் பார்த்தோம்.அதாவது tv யில் மட்டும் பார்த்து திருப்தி அடைந்தோம்.புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்திபிரிவினர் நமது இதழ்களின் தீவிர அபிமானிகள் என்பது சந்தோசமான விஷயம்.அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் உரித்தாகுக.
    nbs அநேகமாக நாளை எனக்கு கிடைக்கும் என பக்ஷி சொல்கிறது.(எந்த பக்ஷி என்று கேட்காதீர்கள்.ஹிஹி).

    ReplyDelete
    Replies
    1. சாத்தான்ஜி,
      நீங்களும், ஆடிட்டர் ராஜாவும் இருக்கும் அந்த போட்டோ அட்டகாச ரகம்!
      NBS வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பெருமிதம் கொண்ட முதலாளிகளே; NBS வாங்கிடாத ஒவ்வொருவரும் அடுத்தவரிடம் கையேந்தும் நிலையிலுள்ள பரிதாபத்திற்குரியவரே - என்ற உண்மையை உலகுக்குச் சொல்லும்படியான தேர்ந்த முகபாவங்களை இருவருமே காட்டியிருக்கிறீர்கள்.

      'அரைத்த மாவையே அரைக்காமல்' நீங்களெல்லாம் எங்காவது நடிக்கப் போகலாம்! :)

      Delete
    2. ஸாரி டியர் விஜய் !!!ஸ்பீல்பெர்க்,ரோமன் போலன்ஸ்கி,பீட்டர் ஜாக்சன் போன்றோர் படங்களில் மட்டும்தான் நாங்கள் நடிப்போம்.நம்ம ஊரு படங்களில் நடித்தால் எங்கள் இமேஜ் (!)கெட்டுவிடும்.ஹிஹி.

      Delete

  48. அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  49. வலையுலக நண்பர்களே,

    NBS சூப்பர்-டூப்பர் ஹிட் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்காது! அதை, கதைகளைப் படித்துக்கொண்டிருக்கும் நம் நண்பர்களின் விமர்சனங்கள் மூலமாகவும், புத்தகக் கண்காட்சியில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் நமது NBS ன் விற்பனை மூலமாகவும் தெளிவாகவே அறிய முடிகிறது. கிடைத்தற்கரிய இப்பொக்கிஷம் முழுவதும் விற்றுத் தீர்க்க வெகுநாட்கள் இல்லை என்பதை தொலைபேசியிலும், நேரிலும் நம் காமிக்ஸ் நண்பர்களிடம் உரையாடியபோது உணரமுடிந்தது. 

    வேறு என்ன வேண்டும்; இந்தப் பொங்கல் மிகச்சிறப்பான, நம் அனைவருக்கும் மறக்க முடியாத நன்னாளாய் அமைந்திட?!

    காமிக்ஸின் எல்லை தொடாத மற்றவர்களுக்கு இந்த நாள் சந்தோஷத்தை அள்ளித் தரும் 'தைத் திருநாளாய்' இருந்துவிட்டுப்போகட்டுமே; என்னைப் பொருத்தவரை மனம் முழுக்க மகிழ்ச்சியையும், நெகிழ்சியையும் ஒருசேர அள்ளித்தரும் இந்நாள் ஒரு 'NBS திருநாளே'!

    அனைவருக்கும் என் 'NBS திருநாள்' வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  50. ஐந்து கதைகள் மற்றும் கிச்சு விச்சு படித்துவிட்டேன்.

    *) மாயாவியில் தொடங்கினேன். Typical மாயாவி கதை. காதுல பூ சுத்திகிட்டே போனாலும் பதினாறு பக்கங்களில் நிறைவு பெறுவதால் - passable. இந்த மெகா இதழ் படிக்க இந்த சின்னக் கதை ஒரு நல்ல starting point. Also a short and sweet farewell to மாயாவி....!

    *) அடுத்தது மாடஸ்டி சாகஸம் - typical regular 32 page comic. மெதுவாக இந்த இதழின் முழு நீளக் action கதைகளுக்கு ஒரு நல்ல step up platform போல செயல்படுகிறது. உலகின் இந்தப் பகுதியில் பிறந்துவிட்டமையால் - Modesty-யை சில சமயம் modest-ஆகவும் சில சமயம் வரிக்குதிரை போலவும் பார்க்க வேண்டியிருக்கிறது :-)

    *) கிச்சு-விச்சு கதை அடுத்து ஒரு புன்முறுவலைத் தந்திட்ட கதை.

    *) அடுத்துப் படித்தது Largo Winch - இரு பாகங்களும். Fast and furious ரகம். Was a non-stop action masala that keeps the tempo set by the first two parts. சைமனின் எதிர்பாரா அதிரடிகள் நல்ல highlight - Simon seals the show with his cameos - இங்கு சிலருக்கு புத்தகம் இன்னும் வரவில்லை என்பதால் அந்த கட்டங்களை விவரிக்கவில்லை.

    *) அடுத்துப் படித்தது கன்சாஸ் கொடூரன் - இதன் முந்தைய பாகத்தினைவிட அதிக விறுவிறுப்பு கொண்டதாய் அமைந்தது நிஜம். க்வான்ட்ரிலின் கொடூரங்கள் - வாவ் போட வைக்கின்றன.

    இனிதான் மீதிக் கதைகளைப் படிக்க வேண்டும்.

    குறைகள் இல்லையா என்று கேட்பவர்களுக்கு: குறைகள் இல்லை - சில பிழைகள் உள்ளது. நம்மிடம் உள்ள பிழைகளைவிட இவை பெரியவைகள் இல்லை ஆதலால் குறிப்பிடும்படி இல்லை !! எனினும் இது போன்ற omnibus இதழ்களில் இனி தொடர் பாகங்களைத் தவிர்க்கலாம். முற்றிலும் முடிந்துவிடும் கதைகளை மட்டும் சேர்க்கலாம்.

    P.S: இதுவரை படித்த கதைகளின் வில்லன்களைப் பார்த்திடும் பொது இந்த புத்தகத்திற்கு 'சூப்பர் வில்லன் சூப்பர் ஸ்பெஷல்' என்பதும் பொருத்தம் மிக்க title :-)

    ReplyDelete
  51. முன்பக்கம் உள்ள இரண்டு (Tiger) அட்டை படம் அருமை!! முன் அட்டையுடன் பிரிண்ட் செய்யப்பட்ட உள்விவரம் (Index) ஐடியா அருமை!! மாடஸ்டி கதை சிறிது சேதம் அடைந்து உள்ளத :-( கதைகளை பற்றிய என்னது எண்ணம்களை பின் ஒருநாளில் எழுதுகிறேன்!

    ReplyDelete
  52. "வேய்ன் ஷெல்டன்"
    கதை சித்திரங்கள் அருமை
    ஆனால் லார்கோவின் வேகத்துக்கு இந்த கதை ஈடு கொடுக்கவில்லை!

    ReplyDelete
    Replies
    1. In future when we get to read them separately, Wayne Shelton will turn more interesting ...! Now since you are comparing with Largo may be you get that feeling.

      Delete
  53. Thanks for the NBS special. I subscribed to all our comics. Please check mail. Thanks

    ReplyDelete
  54. "Never Before Never Again Special"லை பரவசத்தினை விவரிக்க அடியேனுக்கு இந்த பின்னூட்டம் பத்தாது. இப்போதைக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் என் சார்பாக.
    ஆசிரியர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    "உங்கள் மொத்த டீமின் புகை படத்தை வெளியீட்டு எங்களை சந்தோஷ படுத்திய நீங்கள் உங்கள் படத்தை வெளி இட மறந்து விட்டீர்களே.வலை பதிவில் வராமல் இருக்கும் நண்பர்களுக்கு இது வருத்தமளிக்கும் விஷயம்."

    மெய் தான், ஆசிரியர் தன் புகைப் படத்தை "மனித எரிமலை"யில் வெளியிட்டதுக்கு பிறகு இன்றுவரை தன் புகைப்படம் நமது காமிக்ஸில் வருவதை தவிர்க்கிறார். இது அவரின் தன்னடக்கத்தை காண்பித்தாலும் ஆசிரியரை சந்திக்க இயலா வாசகர்கள் பொருட்டு தன் புகைப் படத்தை வெளியிட முன் வரவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. HAI UTHAY BOOK FAIRLA OTHUNGI VITTINGALE ITHU NIYAAYAMAA? ADUTHTHA THADAVai KANDIPPA MEET PANNANUM OK? ITHU ANBU KATTALAI!

      Delete
    2. Sorry Dear Friend John Simon C,
      in the midst of comics fan crowd, i missed you... I was there from 7.30 pm to 9pm both friday and saturday...

      Delete
  55. Doing book release with a buffet (for a price) is a very good idea.

    Trying to write in tamil, please bear with spelling mistakes.
    புத்தகம் கிடைக்காத வாசகர்களில் நானும் ஒருவன். பொங்கலுக்கு பிறகு முத்து அல்லுவலகதிருக்கு தொலைபேசியில் தொடர்ப்பு கொள்ள வேண்டும். மற்ற நண்பர்களுக்கு புத்தகம் கெடைததில் சந்தோசம்.

    ReplyDelete
  56. இப்போது 'Youtube 'ல் தேடியபோது கிடைத்த உரலி. நண்பர் 'Rafiq Raja' பதிவேற்றம் செய்திருந்தார். அவருக்கு நன்றிகள் பல. இந்த பேட்டியின் தொடர்ச்சி கிடைக்குமா நண்பரே.

    http://www.youtube.com/watch?v=5soVhde3OTU

    all credits go to friend 'Rafiq Raja'.

    ReplyDelete
  57. அடுத்தடுத்து பரபர சம்பவங்கள் நிகழும் டைகர் கதைகள்தான் NBSல் முதலிடமாக நான் கருதுகிறேன். கலரில் அழகிய தாளில் இத்தனை கதைகளைப் படிப்பதே ஒரு தனி இன்பமாக உள்ளது சார்… அடுத்தவருடம் பொங்கல் வெளியீடாக ஆயிரம் ரூபாய் இதழ் (அல்லது ஐநூறு ரூபாய் இதழ்கள் இரண்டு) கண்டிப்பாக வெளியிடுங்கள் சார்..
    வெளியீட்டை சிவகாசியில் நம் அலுவலகத்திலேயே வைத்தால் ரொம்ப நல்லது..பைக்கிலேயே வந்துவிடுவேன்..
    சிறுவர்களுக்காக எளிய நடையில் அலாவுதீன், விஸ்கி சுஸ்கி, மதியில்லா மந்திரி மேலும் பல ஃபேன்சியான கதைகளை தனி இதழாக ஐம்பது ரூபாய் இதழாகக் கொண்டுவந்தால் அசத்தலாக இருக்குமே சார்…ஆலோசியுங்களேன்..

    ReplyDelete
  58. ennaa kathai ayya jil jordan! i like it very much! pls consider him as an another super hit hero of the muthu!

    ReplyDelete
  59. நண்பர்கள் அனைவருக்கும் இனிய இனிக்கும் NBS பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
  60. Times of India article on our comics


    http://timesofindia.indiatimes.com/city/chennai/The-great-comic-revival-After-a-slump-in-the-mid-1990s-the-industry-is-seeing-a-boom/articleshow/18014466.cms

    -- Ram Kumar (Coimbatore)

    ReplyDelete
  61. சார் கன்சாஸ் கொடூரன் " க்வான்ட்ரில்ல போட்டு தள்ளியே ஆகனும், அவன் பண்ணிய கொலைகளுக்கு ஒரு முடிவு வேண்டும் அதற்கு நீங்கள்தான் அடுத்த பாகம் வெளியிட்டு எங்கள் மனம் சாந்தி அடைய உதவ வேண்டும் :) :) நானும் John Simon அவர்களும் கொலை வெறியோடு இருக்கோம் ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  62. வார்த்தை ஓன்று !
    அர்த்தம் இரண்டு !!
    பார்வைகள் மூன்று !!! மரமண்டை !!!

    1. ப்ளாக் வாசக நண்பர்களே! உங்களின் கவனிப்பு திறனுக்கு ஒரு விடயம். வழமையான போட்டி அல்ல இது, ஆனால் போட்டிக்கான சகல தகுதிகளையும் பெற்ற ஓன்று. அதனால் தான் இதற்கு போட்டியுமில்லை, அதற்கான பரிசுமில்லை! இதோ என் கேள்வி! நீங்கள் NBS படித்த போது எத்தனை இடங்களில் மரமண்டை என்று வந்துள்ளது! அதற்கான காரணம் என்ன! சரியான விடையை பலர் எழுதினால் அந்த விடை சரியான ஒன்றாக கருதப்படும்! அப்படி ஏதும் நடக்காமல் ஒரே ஒரு வாசகர் சரியான விடை எழுதி இருந்தால் பலரின் சரியான விடை தவறான ஒன்றானதாக கருதப்படும்! தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானதாகும்!!!

    2. Top 5 கதைகளில் என் தேர்வு உள்ளதா என்று ஆர்வத்துடன் தேடினேன்! என்றென்றும் போலவே அன்றும் ஏமாற்றமே! நினைவில் நின்றவை என்பதால் மேல்லிசையான கதை தேர்வுகளும், அதுவும் பின்னோக்கி நாம் ஆச்சர்யப்படும் வெளியீடுகளும் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் என்று உணர்ந்த போது மனம் இலகுவானது! அங்கே என் பெயர் இடம் பிடிக்க தவறியதால் மனம் இளகிய ஆசிரியர், கதைகளில் பல இடங்களில் என் பெயரை கதைகளில் இணைத்து எம்மை மகிழ்வுற செய்துவிட்டார்! ஆனந்தம் அளவில்லாமல் போகின்றது, ஆசிரியர் அவர்களின் அன்பின் அரவணைப்பால்!!!

    3. மின்னும் மரணம் கதையை நன்கு படித்து கைதேர்ந்த ஒரு வாசகர், அதுபோன்ற ஒரு சூழ்நிலையை எனக்கு உருவாக்கி துரோகி பட்டம் கிடைக்க பாடுபட்டு அவர் வெற்றி பெற்ற நேரமல்லவா அது! அதுவும் இந்த NBS தயாரிப்பு பணியின் மத்தியில் அல்லவா நடந்தேறியது! அப்படி என்றால் அந்த வாசகரும், அவரின் உற்றதுணைகளும் நினைத்ததை சாதித்து விட்டனரா? எடுத்த காரியத்தில் வெற்றி வாகை சூடிவிட்டனரா? தர்மம் தனை சூது சூழ்ந்தே விட்டதா? கடவுளே! என் இனிமையான பெயரை கதையின் இடையிடையே படிக்கும் போதெல்லாம் அங்கே அது திட்டும் சூழ்நிலைகளாகவே வருவது ஏன் என்றே எனக்கு தெரியவில்லை !!!

    அடுத்து வருவது,
    தமிழன் என்று சொல்லுவோம்!
    தலை நிமிர்ந்து வாழ்வோம்!

    வார்த்தை ஓன்று !
    அர்த்தம் இரண்டு !!
    பார்வைகள் மூன்று !!! வாசகர்களின் மாடஸ்டி !

    ReplyDelete
  63. வார்த்தை ஓன்று !
    அர்த்தம் இரண்டு !!
    பார்வைகள் மூன்று !!! வாசகர்களின் மாடஸ்டி !!!

    1. எனக்கு இன்னும் கூட ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த வாசக நண்பர் ஏன் இன்னும் ஆசிரியருக்கு தன் நன்றியை கூட தெரிவிக்கவில்லை என்று! நன்றி கூட வேண்டும் என்பதில்லை, அகமகிழ்ந்து தன்னுடைய கமெண்ட் ஐ கூட இன்னும் பதிவிடவில்லையே! நண்பரே இனி நீங்கள் தயங்காமல் தங்களின் மகளுக்கு ஆசிரியரின் காமிக்ஸ் புத்தகங்களை தாராளமாக கொடுத்து படிக்க வைப்பீர்கள்! இது போன்ற சின்னஞ் சிறு கலாச்சார உணர்வுகள் தானே நாம் தமிழர்களாகிய நம் தமிழ் பண்பாடு! வாழ்த்துக்கள் கர்ணன்.L அவர்களே!!!

    2. எல்லாவகையிலும் பெருமைக்கு உரியவர்கள் தான், தமிழர்களாகிய நாம்! இது நிற்க; உதாரணமாக தமிழ்நாட்டில் உள்ளது போன்று வருடம் முழுவதும் அளவான தட்பவெப்பநிலை உலகில் வேறெங்கும் கிடையாது என்றே நினைக்கின்றேன்! புரட்டும் புயல் இல்லை! உறைந்த பனி இல்லை! பாலைவன வெயில் இல்லை! மழை வெள்ளம் இல்லை! உள்ளாடை மேலாடை கொண்டதால் தமிழ்நாட்டு ரசனை தாழ்ந்து விட்டதா வாசகரே! விருந்தில் 16 வகை உணவுகள் காட்சி பொருளாக்கப்படலாம்!! ஆயின் அதுபோல் வீட்டில் சமைக்கத்தான் முடியுமா! சமைத்து பரிமாறினால் சுவைக்கத்தான் முடியுமா! தமிழ்நாடு எங்கள் தாய்வீடு! எங்கள் பண்பாடும் கலாச்சாரமும் நம் உள்ளத்தில் என்றும் ஒலிக்கட்டும்! ஒலித்தப்பின் திசை எட்டும் நம் தமிழர் புகழ் எட்டட்டும்!!!

    3. வரி உடை ரதி கொண்டதால் கதையின் சுதி குறைந்து விட்டதா! கலாச்சாரம் காமிக்ஸ் வழி கொண்டால் ரசனை காமெடியானதா வாசகரே! பரிசும் பாடமும் ஒன்றானதல்ல! பார்வையும் அர்த்தமும் வேறானதல்ல! வரிக்குதிரையும் மிக அழகுதான், வரிபோன்ற உடையை உடுத்துவதால் !!!

    மேலே உள்ள விடயங்கள் யாவும் கற்பனையே!
    எவரையும் புண்படுத்தாது! ஒருவரையும் குறிப்பிடாது!
    அப்படி எவரோ ஐவருக்கு அதுபோல் தோன்றினால்
    இந்த பதிவு, பதிவின் பயனை அடைந்து விட்டதாக அர்த்தம் !!!

    ReplyDelete
  64. தாமதமாக வெளிவருகிறது ! ஒரு பிப்ரவரி மாத வெளியீடு !

    1. Never Before கமெண்ட் !
    முற்றிலும் வித்தியாசமாக,
    இதுவரை வெளிவந்திராத கதை விமர்சனம்!
    வித்தியாசமானதெல்லாம் சுவாரசியமானதல்ல,
    சுவராசியமானதெல்லாம் வித்தியாசமான ஒன்றானதே !!!

    2. Vijayan16 December 2012 15:36:00 GMT+05:30 //நியாயமான சிந்தனைகளே ! ஏற்கனவே நம் நண்பர்களில் பலரும் முந்தையப் பதிவுகளில் இதனை எழுப்பியுள்ளார்கள் ! இதே சூழ்நிலையில் நானொரு பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கும் பட்சத்தில், இளையவர்களை target செய்து எப்போதோ இன்னுமொரு இதழைத் தயாரிக்கக் கச்சை கட்டி இருப்பேன். ஆனால் அந்த சிந்தனை வேகத்தை, செயலிலும்,விற்பனையிலும் sustain செய்திடுவதில் சிரமங்களை சந்தித்து, சொதப்பியும் இருப்பேன் நிச்சயமாய் !
    கொஞ்சமேனும் ஒரு திட்டமிடல் ; ஒரு ஒழுங்கு சமீப காலமாய் தான் தலைக்குள்ளே துளிர் விட்டு வருவதால், 'எடுத்தோம் ; கவிழ்த்தோம்' என்றில்லாது, செய்வது எதுவாகினும் திருத்தமாய் இருந்திட வேண்டுமென்ற தீவிரம் உருவாகி உள்ளது ! நிதானமாய் அசை போட்டு வருவோம் ; சரியான தருணம் நெருங்கும் போது நிச்சயம் அதனை தவற விட மாட்டோம்//

    ஆசிரியரின் நீண்ட நாள் விருப்பமான சிறுவர்களுக்கான
    காமிக்ஸ் தொடங்குவது பற்றிய அவரின் பார்வைக்கு ஒரு லயன் காமிக்ஸ்
    வாசகனாக என்னுடைய எண்ணங்கள் ! இடம், பொருள், ஏவல் பார்த்து பிறிதொரு சந்தர்ப்பத்தில்!

    காரணம்: ஒவ்வொரு பதிவிலும், ஒவ்வொரு முறையும்
    ஒரே ஒரு கருத்தை மையப்படுத்தி மட்டுமே என் பின்னூட்டங்கள்
    அமைந்தால் சொல்கின்ற கருத்தில் குழப்பம் தவிர்க்கப்படும் என்பதால் மட்டுமே!

    ஆசிரியருக்கு ஒரு திறந்த மடல் !

    ReplyDelete
  65. என்னை மறவாத நண்பர் மர மண்டை அவர்களே வணக்கம் ....nbs என் கையில் இல்லை...ஆனால் ஆர்வ மிகுதியால் நண்பரிடம் சென்று பார்த்தேன். மிக அற்புதமான தயாரிப்பு. இண்டியன் இன்க் ஓரிடத்தில் எடுக்க வேண்டி உள்ளது மேலும் ஸ்பெஷல் என்பது ஒரு முடிவு உள்ள கதையைத்தான் நான் எதிர்பார்த்தேன் தொடரை அல்ல (இரண்டு கதைகள் என்று நினைக்கிறேன் ) தொடர்கதை எப்படி ஸ்பெஷல் ஆகும். அதற்குத்தான் 100 ரூ இதழ் உள்ளதே. மேலும் புத்தகம் கைக்கு வந்தபின் ஏன் விமரிசனத்தை எதிர் பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. i agree with karnan........
      don’t include the spited stories in special issues

      Delete
  66. நண்பர்களே இது என்னுடைய தனிப்பட்ட கருத்து இவன் என்ன குற்றம் கூறுகிறான் என்று நினைக்கவேண்டாம். நண்பர் கலீல், செயின்ட் சைத்தான், விஜயராகவன் அவர்களே ஏன் போட்டோவில் இளமையாக இருக்கிறீர்கள் என்று கேட்டீர்களே இதோ தற்போதைய போட்டோ... 5 வருடங்களுக்கு முன்னால் எடுத்தது என்று எப்படி கண்டு பிடித்தீர்கள் .....ஏமாற்ற முடியவில்லையே ...... ஹும்ம்ம்ம்

    ReplyDelete
  67. அடடே.....

    // வரி உடை ரதி கொண்டதால் கதையின் சுதி குறைந்து விட்டதா! கலாச்சாரம் காமிக்ஸ் வழி கொண்டால் ரசனை காமெடியானதா//

    மாடஸ்டிக்கு வரி போட்டிருப்பது சித்திரங்களின் அழகை குறைத்து விட்டதாகவே தோன்றுகிறது!

    இன்றைய சினிமா பாடல்களில் இல்லாத கவர்ச்சியா?

    ReplyDelete
  68. NBS ல் வந்த கதைகள் அனைத்தும் முழு திருப்தி அளித்தன! மாயாவியை தவிர...

    இதுவரை வந்த மாயாவி கதைகளிலேயே இந்த கதை மிக சுமார் ரகம்...

    ReplyDelete
  69. அத்தியாயம் 1 ஒரு துயரம் :
    முதல் நாள் 1௦ மணிக்கு ஜோலார் பேட் வந்து வந்து விடலாம் ,ஆறு மணிக்குள் என விரைந்து வந்தேன் ரயில் நிலையத்திற்கு ஆனால் அந்த ஸ்பெசல் ரயில் இரண்டு மணி நேரம் தமதமாய்தான் வரும் என கூறியதால் கனவுகள் களைய திரும்பி வந்தேன் !

    ReplyDelete
    Replies
    1. அத்தியாயம் கடுப்பு :
      அடுத்த நாள் ஆசிரியரையும்,நண்பர்களையும் பார்க்கலாம் என கிளம்பினேன் !காலை எட்டு மணிக்கு சேலம் பஸ்ஸில் அமர்ந்தேன் !சேலம் வந்த்வுடந்தாம் பிரச்சனை ஆரம்பமானது !எக்ஸ்பிரஸ் என்ற பேரை பார்த்து அமர்ந்தேன் !பை பாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த அந்த வண்டி எந்த ரோடு சைடில் ஊருக்குள் புகுந்தாலும் சளைக்காமல் சென்று திரும்புவது என கங்கணம் கட்டி கொட்டு நேரத்தை தின்று கொண்டிருந்தது !ஒரு வழியாக இரவு எட்டு பத்துக்கு விரைந்து ஓடி சென்றேன் !ராதக்ரிஷ்ணன அண்ணாச்சியை பார்த்து விசாரிக்க ஆசிரியர் 5 நிமிடம் முன்னால்தான் சென்றார் என கூறி என்னை கடும் துயரில் ஆழ்த்தி விட்டார் !

      Delete
    2. பின்பு அங்கே முகமறியா அருமை நண்பர்கள் உதய்,பெர்னாண்டஸ் ,மாடஸ்டி,ரபீக் ஆகியோரை சந்தித்தேன் !உதய்,பெர்னாண்டஸ் ,மாடஸ்டி மூவரும் பிரிய மனமில்லாமல் பிரிந்து வந்தேன் !மேலும் விஸ்வா,ஜான் சைமன் ஆகியோரை கை பேசியில் தொடர்பு கொண்டதோடு சரி !அவர்கள் முகமும் காணவில்லை !ராகவன்,மற்றும் பாலாஜி சுந்தர் ,முருகன்,கலீல் ,.......என பிற நண்பர்களையும் காண யயொயலும் என நினைத்தேன் அனைத்தும் பாழ்......வருத்தமும் ,சந்தோசமும் ,ஏமாற்றமும் கலந்த கலவையாய் நான் !
      i really miss all of u friends

      Delete
    3. உதய்,பெர்னாண்டஸ் ,மாடஸ்டி வெறித்தனமான நேயர்கள் !அதிலும் மாடஸ்டி அவரது சில அற்புதமான முயர்ச்சிகளுக்காக காத்திருக்கிறேன் !குதிரை வீரரே !

      Delete
    4. உங்களை போன்ற நண்பர்கள் கிடைப்பதரிது கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்,
      உங்களை சந்தித்ததில் எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சி .
      நண்பர்கள் முத்து விசிறி, கலீல், கிங் விஸ்வா, காமிக்ஸ் லவர் ராகவன், பெர்னாண்டஸ், ஸ்ரீராம், பிரின்ஸ் தேசிகன், பிரபாவதி, ரபிக் ராஜா போன்றோர் அனைவரையும் சந்திக்க கிடைத்த வாய்ப்பு இந்த வெளியீடு விழா ஏற்படுத்தி தந்தது.

      Delete
  70. மும்மூர்த்திகளை ,ஸ்பைடரை,ஆர்ச்சியை பரணுக்கு அனுப்புவதில் எங்களுக்கு விருப்பம் இல்லை !ஆச்சரியமளிக்கிறது இந்த எதிர்ப்புகள்!பெரும்பாலான வாசகர்கள் குரல் கொட்டுக்கவில்லை என்றே நினைக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. "ஸ்பைடரை,ஆர்ச்சியை பரணுக்கு அனுப்புவதில் எங்களுக்கு விருப்பம் இல்லை! ஆச்சரியமளிக்கிறது இந்த எதிர்ப்புகள்! பெரும்பாலான வாசகர்கள் குரல் கொட்டுக்கவில்லை என்றே நினைக்கிறேன்!"

      நான் உடன்படுகிறேன்...

      இந்த கேள்வியை சர்வேயில் போட்டிருக்க வேண்டாம். (ஆசிரியர் மன்னிக்கவும்)
      எல்லா லயன், முத்து காமிக்ஸும் தேவையானதே. எல்லா லயன், முத்து காமிக்ஸ் நாயகர்களும் அபிமானவர்களே.
      ஆன்லைன் மூலம் எடுக்கப்படும் சர்வே /கருத்தினை தயவு செய்து நம்பவேண்டாம்.
      நாமெல்லாம் விவாதம் வேண்டாம் என்றே இது போன்ற எதிர்ப்புகளுக்கு நம் கருத்தை சொல்வதில்லை.
      ஸ்பைடர், ஆர்ச்சி இல்லாமல் லயன் காமிக்ஸ் இல்லை. மாயாவி இல்லாமல் முத்து காமிக்ஸ் இல்லை. இந்த கதைகளை ஆரம்ப முதலே படித்தவர் ஸ்பைடர், ஆர்ச்சி வேண்டாம் என்று சொல்வதில்லை. எல்லா காலத்திலும் படிக்கக்கூடிய கதைகள் தாம் இவைகள் .
      ஸ்பைடர், ஆர்ச்சி, மாயாவி கதைகள் பிடிக்காத நண்பர்கள் அக்கதைகளை வாங்காமல் தவிர்த்து விடலாமே. ஸ்பைடர், ஆர்ச்சி, மாயாவி கதைகள் வேண்டாம் என்று வலியுறுத்த செய்ய வேண்டாமே.. இந்த கதைகளை எதிர்பார்க்கும் எண்ணற்ற நண்பர்கள் மனதை புண்படுத்த வேண்டாமே .

      Delete
    2. நண்பரே இங்கே வெற்றி என்பது விற்பனை மூலம் மட்டுமே பிரதிபலிக்கும் !nbs போன்ற புத்தகங்கள் வெளி வர ஆசிரியருக்கு இந்த வெற்றி மேலும் முயல அதிக உற்ச்சாகத்தை அளிக்கும் !nbs இது வரை இரண்டு கதைகளே படித்துள்ளேன் !வெய்ன் ,மாயாவி இரண்டும் அற்புதம் !இன்னும் லார்கோவை மெதுவாக ரசிக்க வைத்துள்ளேன் !வெய்ன் கதையா அளித்த ஆசிரியருக்கு நன்றிகள் !தரமான புத்தகம் தர வேண்டும் என்ற அவரது முயற்ச்சிக்கு அழகு சேர்க்கும் கதைகள் பல உள்ளன என்பது அவரது பேச்சில் வெளி படுகிறது !கொண்டாட்டங்களுக்கு தயாராவோம் !காமிக்ஸ் கிளாசிக்ஸின் வெற்றி அதன் விற்பனையில் அடங்கி உள்ளது !ஆசிரியரே பல முறை இந்த பழைய நாயகர்கள் கதைகள் உண்டா என வினவியதாக அறிவித்துள்ளார் !இந்த பரணிற்கு அனுப்பும் முயற்சி என்பது வியப்பாய் இருக்கிறது !நிச்சயமாக இதன் வெற்றி/தோல்வி உண்மை நிலையை உணர்த்தும் !வெற்றி பெற்றால் நமது ஆரம்ப வெளியீடுகளில் உள்ள மனதை ஈர்த்த கதைகளை நிச்சயம் ஆசிரியர் வெளி விடுவார் !

      Delete
    3. நண்பர்களே பரணுக்கு செல்லவிருக்கும் பழைய நாயகர்களின் ரசிகர்கள் உங்கள் ஆதரவை இங்கேயோ இல்லை மற்று தவல் தொடர்பு வசதிகள் மூலமோ ஆசிரியருக்கு தெரிவித்தால் நலம்

      Delete
    4. எடிட்டர் உறுதியளித்தது போல, காமிக்ஸ் கிளாசிக்-ல் பழைய (Evergreen) ஹீரோக்களின் (ஸ்பைடர், இரும்புக்கை மாயாவி, ஆர்ச்சி, மாடஸ்டி ப்ளைசி, கேப்டன் பிரின்ஸ், ப்ருனோ பிரேசில்,லாரன்ஸ் & டேவிட்) கதைகள் தொடர்ந்து வரும் என நம்புகிறேன்.

      இக்கதைகளை விரும்பாதவர்கள் காமிக்ஸ் கிளாசிக் வாங்காமலிருக்கலாம்

      Delete
  71. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் :

    நண்பரே!
    உங்களுக்கு NBS ல் வந்த இரும்புக்கை மாயாவியின் எதிரிகள் ஏராளம் கதை பிடித்துள்ளதா?

    அந்த கதைக்கு பதிலாக ஒரு கார்ட்டூனோ சிறு திகில் கதையோ வந்திருந்தால் வரவேற்பீர்களா?

    யோசித்து பாருங்கள் நண்பரே :-D

    ReplyDelete
  72. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் :

    நண்பரே!
    உங்களுக்கு NBS ல் வந்த இரும்புக்கை மாயாவியின் எதிரிகள் ஏராளம் கதை பிடித்துள்ளதா?

    அந்த கதைக்கு பதிலாக ஒரு கார்ட்டூனோ சிறு திகில் கதையோ வந்திருந்தால் வரவேற்பீர்களா?

    யோசித்து பாருங்கள் நண்பரே :-D

    ReplyDelete
    Replies
    1. என் மனதிற்கு பட்டதை சொல்கிறேன் நண்பரே ,நிச்சயமாக அது மோசமில்லை !விறு விருப்பு இல்லை என்றால் அது யார் கதையாக இருந்தாலும் வேண்டாம் !ஆசிரியர் அதில் தெளிவாக இருப்பது அவரது பேட்டியில் இருந்தே புலப்படும்!ஆசிரியருக்கும் ,நண்பருக்கும் நன்றிகள் பல .....

      Delete
  73. சிறிய துக்கடா கதைகள் ,பல சமயம் எனக்கும் பிடிக்காது !ஆனால் இந்த கதை கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போலவே உள்ளது !

    ReplyDelete
  74. senthil kumar@

    நான் காத்திருந்​தேன் க​டை ஊழியர் ​பெரிய மூட​டையுடன் வந்தார் அவர் பிரிக்கும் வ​ரை எனக்கு ​பொறு​மை இல்​லை நானும் ​சேர்ந்து பிரித்​தேன், மூன்று ​​பெரிய கட்​​டை எடுத்து ​​வெளி​யே ​வைத்தார். முதல் கட்​டை பிரித்​தேன் ஏமாற்றம் எல்லாம் ப​ழைய ராணி காமிக்ஸ் சுமார் 50 புத்தகங்கள் அ​னைத்தும் ex-சுறா ​வேட்​டை, ​தே​வை​தை​யை ​தேடி, மந்திரி​யை கடத்திய மாணவி ​etc... ​வேகமாக இரண்டாவது கட்​டை பிரித்​தேன் ​பைண்டிங் ​செய்யப்பட்ட இந்திரஜால், அமர் சித்திர க​தை சுமார் 50 புத்தகங்கள் இந்த மு​றையும் ஏமாற்றம்.. அடுத்த கட்​டை பிரித்​தேன் என் கண்களால் நம்ப முடியவில்​லை ஆம் அ​ணைத்தும் ப​ழைய லயன் மற்றும் முத்து காமிக்ஸ் ex-​வேதாளனின் ​சொர்க்கம், இரத்த ​வெறியர்கள், விபரீத வித்​தை, ஆவியின் கீதம் மா​லைமதி-கு​கையில் ஒர் ​பெண், மா​லைமதி- அப்பாவி திருடன், முத்து
    ஸ்​பெஷல், இ​தே ​போல் சுமார் 130 புத்தகங்கள்..அ​னைத்​தையும் ​மொத்தமாக வாங்கிக் ​கொண்டு அ​ணைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் ​சொல்லிவிட்டு க​டை காரர்கள் அ​ணைவருக்கும் Bovonto and snacks treat தந்து விட்டு அழுக்கு படிந்த ப​ழைய சாக்கு மூட்​டை​யை முதுகில் சமந்து ​கொண்டு வீதியில் அ​ணைவரும் விசித்திரமாக என்​னை பார்க்க நான் பதிலுக்கு சிறு புன்முறுவலுடன்
    எ​தையும் ​பொருட்படுத்தாமல் ​பெரு​மையுடன் வீட்டுக்கு ந​​டை​யை கட்டி​னேன்.

    பி.கு- எனக்கு இன்னும் NBS வந்து ​சேரவில்​லை.

    ReplyDelete
    Replies
    1. ஜான் வில்பர்​னே-டெக்ஸாஸ்: தங்களுக்கு மட்டும் எப்படித்தான் இப்படி ஒரு அதிர்ஷ்டம் ஒவ்வொரு முறையும் அரவணைக்கிறது என்றே தெரியவில்லை! தங்கள் எண்ணங்களின் வலிமை அபரிதமானது என்றே தோன்றுகிறது! இசையோடு சேர்ந்த ராகம் போல் இயற்கையோடு சேர்ந்த இச்சையும் இன்பமானதே! இன்று போல் என்றும் வாழ்க என்று வாழ்த்துகிறேன் !!!

      Delete
  75. கம்பளத்தில் ஒரு கலாட்டா அற்புதமான காமெடி கலாட்டா !வழக்கம் போல கலக்கி உள்ளார்கள் கோமாளிகளுடன் சிக் பில்லும் !அசத்தலான வண்ண கதை !செகோஸ்லோவேகியா என்பதை சரியாக உச்சரிக்க கற்று கொண்டு படிக்க துவங்குங்கள் படிக்கா நண்பர்கள் !அபாரம் !

    ReplyDelete
  76. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் :

    தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  77. நன்றிகள் பல! பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு சூப்பர் ரிலீஸ் 10 வித விதமான கதைகள்!! இதில் இந்த கதைக்கு பதில் அந்த கதை இருந்தால் நன்றாக இருக்கும் என்ன சொல்வது எளிது, ஆனால் நடைமுறைக்கு முடியாது என நாம் புரிந்து கொள்ள வேண்டும்!ஆனால் ஓன்று மட்டும் உறுதி "அனைவரயும் திருப்த்தி செய்ய முடியாது". மீண்டும் நன்றிகள் பல 1980-1990 அனுபவித்த சந்தோசத்தை மீண்டும் கிடைக்க செய்தமைக்கு!!!

    ஜோர்டன்: அருமையான வரவு. தெளிவான கதை, குழப்பம் இல்லா திரைகதை (:-)), கதை முடிச்சுகளை அவிழ்த விதம் அருமை! அவரின் உதவியாளர் சரியான காமெடி பேர்வழி!! சிக்பில் கதையில் இல்லாத காமெடியை இந்த கதை தீர்த்து விட்டது!!

    சிக்பில்: முதல்முறையாக கலர்-இல் நமது காமெடி கூட்டம்!! கதையில் காமெடி கொஞ்சம் குறைவுதான்!! கதை முடிவு கம்பள வியாபாரி கையில் கொடுத்தது புதுமை ஆனால் முடிவு சப்பென்றுஉள்ளது!

    மாயாவி: கதை சுமார் தான்! வழக்கமான மாயாவின் "action" இல்லை! சிறிய கதை என்பதால் என நினைக்கறேன்!! கதையின் ஆரம்பம் அருமை!! "Bye Bye" மாயாவி!!

    மாடஸ்டி: வழக்கமான கதை! வழக்கமான படி தலைவி ஆபத்தில் இருக்கும் போது கார்வின் காப்பது அருமை!! வசனம்கள் அருமை! நீண்ட இடைவெளிக்கு பிறகு மாடஸ்டி கதையை கொடுத்ததுக்கு நன்றிகள்! அனைவரும் படிக்கும் வண்ணம் மாடஸ்டி டிரஸ் (நமது ஆர்டிஸ்ட்) போட்டது பாராட்டுஉரியது! இந்த வருடத்தில் மேலும் பல மாடஸ்டி கதைகளை வெளியிடும்கள்!!

    கருப்பு வெள்ளை கதைகளில் இரண்டு இடம்களில் பலூன் மாற்றி போட்டுள்ளது, மேலும் மிக சில இடத்தில் வார்த்தை பிழைகள் உள்ளன!! முண்ணனி நாளிதழ்களை ஒப்பிட்டால் நமது இதழில் இவை மிகக்குறைவு தான்!!

    ReplyDelete
  78. எட்டிப்பிடிதோம் NBS!:

    ஒரு ஹாரிபாட்டர் இதழ் எப்போது வெளிவதாலும் அதன் வெளியீடு பற்றிய
    செய்திகளை நாளிதழ்களில் தேடி தேடி படித்து அகமகிழ்ந்தபோதெல்லாம் என்
    மனதின் ஓரத்தில் ஒரு சிறு காம்ப்ளெக்ஸ் உருப்பெற்று உறைவதை
    தவிர்க்கமுடியாமல் தளர்ந்துள்ளேன்.

    கல்தோன்றா மண்தோன்றா காலத்தே வாளெடுத்து முன்தோன்றிய
    மூத்தகுடியின் முதுமொழியாம் தமிழ் மொழியில் வாசகர்களை வரிசையில்
    நிற்க வைக்கும் அப்படி ஒரு புத்தகம் வெளிவரும் நாள் என்னாலோ என
    ஏங்கிய நாட்கள் பல!

    இதோ அந்த கலையா கனவுகளை நோக்கி நாம் எடுத்து வைத்த முதல்
    அடி!
    தொலைக்காட்சிகளிலும் நாளிதல்களிலும் நம்மைப்பற்றிய
    செய்திகள்! இணைய தளங்களின் எண்ணற்ற பக்கங்களில் நம் புத்தகத்தை
    பற்றிய அலசல்கள் விமர்சனங்கள்!
    சாதித்து விட்டது NBS !

    எப்போழுதும் புத்தகங்களின் மீது மோகம் கொண்ட ஆர்வலனாய் தமிழ் காமிக்ஸ்
    மீது ஒரு பிரத்யோகமான பாசம் கொண்ட காதலனாய் என்னை மகிழ்வித்த NBS
    க்கு நன்றிகள் பல!ஆசிரியர் விஜயன் மற்றும் அவரது குழுவிற்கு வாழ்த்துக்கள்
    பலகோடி!தனியாத தனலாய் காமிக்ஸ் மேல் காதல்கொண்ட தோழர்கள்
    ஒவ்வொருவரும் இந்த வெற்றிக்கும் ஒரு காரணி என்றால் அது மிகையாகாது!
    நன்றி நண்பர்களே!

    நாற்பது ஆண்டுகள் கடந்து வீர நடை பயின்று வெற்றிவிழா காணும்
    முத்துவிற்கும் இந்த அறிய முத்துவை புத்தகக்கடலில் முழ்கி முத்தெடுத்து
    பெற்ரெடுத்த ஐயா உயர்திரு சௌந்தராபாண்டியனுக்கு வாழ்த்துக்களும்
    நன்றிகளும் இந்த கணிக்கையாக்குகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. உள்ளத்தின் உண்மையான வெளிப்பாடு!

      Delete
  79. "என்னையும் NBS சையும் சுற்றி"


    ஒரு சின்ன FLASH BACK PART -1 :
    இடம்: என் இல்லம்
    பொழுது: ஒரு விடுமுறை நாள் மாலைப்பொழுது!

    நான் : உனக்கு ஒன்னு தெரியுமாம்மா??NBS ன்னு ஒரு புக் வரப்போகுது!

    என் துணைவி: NBS சா ?? அப்படினா??

    நான் : (சற்று அழுத்தமாக) NEVER BEFORE SPECIAL !

    என் துணைவி: (சற்று சுவாரஸ்யம் இல்லாமல்) ஹோ! காமிக்சா??

    நான் : (சற்று கோபமாக ) என்ன "ஹோ! காமிக்சா?? " இதுவரைக்கும் இந்த மாதிரி
    ஒரு புக் வந்ததில்லை தெரியுமா ??

    என் துணைவி: (சற்று சலிப்புடன் ) சரிங்க! நான் அதை தெரிஞ்சு என்ன பண்ண போறேன் ?? புதுசா சமையல் குறிப்பு ஏதாவது இருக்குமா என்ன???
    வழக்கமான குதிரைக்கும் துப்பாகியும் தானே??

    நான் :(சற்று கடுப்புடன்) கர்ர்ர்! ஆனா NBS சை பத்தி நீ கட்டாயம் தெரிஞ்சுக்கணும்!

    என் துணைவி: (சற்று புருவத்தை சுருக்கி) சொல்லாம விடப்போறிங்களா என்ன!START MUSIC !

    நான் : (பிடிவாதமாய் தொடரும் நான்)நக்கலா ?? இருந்தாலும் பரவாயில்ல!NBS புத்தகத்தை நாங்க சென்னை யில ஜனவரி ரெண்டாம் தேதி நடக்கற புத்தக திருவிழாவுல ரிலிஸ் பண்ண போறோம்!

    என் துணைவி: (சற்று நக்கலாக)"என்ன நாங்க ரிலிஸ் பண்ணபோறோம்??" நீங்க என்ன அதோட பப்ளிஷரா??

    நான் : (சற்று சீரியசான குரலில்) உனக்கு சொன்ன புரியாது ! நான் சென்னை போறேன்!

    என் துணைவி: (சற்று ஜெர்க்காகி) என்னது? என்னது ? சென்னைக்கா?? நீங்க போறீங்களா ?? என்னைங்க சொல்றீங்க...??

    நான் :(ரொம்ப சிரியச்சாக) புரிஞ்சுக்கோம்மா! இது எவ்ளோ முக்கியமான நாள் தெரியுமா?? முத்து காமிக்ஸ் ஆரம்பிச்ச ஐயா சௌந்தரபாண்டியன் வர்றார்! அவர் கிட்ட நிறைய பேசனும்! வாழ்த்துக்கள
    சொல்லணும் ! அவர் கையில ஒரு புக் வாங்கணும்.அதுவும் அவரோட கையெலுத்தோட வாங்கணும்! இந்த சான்ஸ் இன்னொருக்க கிடைக்குமா சொல்லு ??

    என் துணைவி: (சற்று கெஞ்சும் குரலில்)
    NO WAY ! நான் தனியா குழந்தைய வைச்சுட்டு எவ்லோ கஷ்டப்படுவேன்னு உங்களுக்கே தெரியும்! போன வாரம் தான் மூணு நாள் ஹைத்ராபாத்
    போயிட்டு வந்தீங்க! எவ்வளவு தூரம் எனக்கு சிரமம்! இப்போ மறுபடியுமா?? PLEASE புரிஞ்சுக்கோங்க!

    நான் : (ஹஸ்கி குரலில்) ஒரே நாள் தானே! காலையில போயிட்டு அடுத்தநாள் காலையில வந்துடுவேன்! PLEASE ஒரு நாள் சமாளிமா! (குரலில் ஆச்சர்யம் கூட்டி) லேடஸ்டா
    சமையல் பத்தி நிறைய புக்ஸ் வந்திருக்காம்! கம்ப்யுட்டர் கோலம் பத்தி நிறைய புக்ஸ் வந்திருக்காம்!

    என் துணைவி:(கோபத்துடன்) கொன்னே
    போடுவேன்! எரிச்சலே கிளப்பாதிங்க! வேண்டான்னு சொன்ன கேக்கவா போரிங்கா?? போயிட்டு வாங்க!

    நான் :( உற்சாகத்துடன் ) யாஹூ !!!

    என் துணைவி: (தலையில் அடித்துக்கொண்டு ) கஷ்டம் ! கஷ்டம் !

    ReplyDelete
    Replies
    1. விஸ்கி சுஸ்கி, ஹஸ்கி குரலில் துணைவியாரை கெஞ்சும் காட்சி அருமை! :D

      Delete
  80. ஒரு சின்ன FLASH BACK PART -2 :

    இடம்: என் அலுவலகம்
    பொழுது: வழக்கமான ஒரு BUSY நாள்
    பின்காலைப்பொழுது!

    நான் : (சற்று நெளிந்துகொண்டு)ரெண்டாம் தேதி லீவ்வ CANCEL பண்ணிடுங்க சார்! பதினோராம் தேதி தான் லீவு வேணும்!

    MD : (சற்று ஆச்சர்யத்துடன்) கல்யாணம்
    ரெண்டாம் தேதின்னு தானே சொன்னீங்க ??

    நான் :( குரலில் சமாளிப்புகளை கூட்டி ) அதாவது சார் ரெண்டாம் தேதி கல்யாணம் ஆனா ரிசெப்சன் பதினோராம் தேதியாச்சே! நான் கட்டாயம் ரிசெப்சன்ல இருக்கணும் சார்! போலேனா FRIENDS
    எல்லாம் என்ன கொன்னே போடுவாங்க!

    MD : (சற்று யோசனையுடன் ) சரி AUDIT எப்போன்னு பாத்து சொல்லுங்க!

    நான் : (வேகவேகமாய் ) இப்போ சொல்றேன் BOSS !

    சற்று நேரம் கழித்து

    நான் : (சுரத்தை இல்லாத குரலில்) பதினோராம் தேதி BOSS!

    MD : (FLAT TONE ) இப்போ என்ன பண்ண போறீங்க?

    நான் : (FLAT TONE ) தெரியல BOSS!

    MD : (FLAT TONE ) சென்னைக்கு AUDIT முடிச்சுட்டு போங்க! நீங்க இல்லனா இங்கே சமாளிக்கறது கஷ்டம்!

    நான் : (உற்சாகமில்லாத FLAT TONE ) OK BOSS!


    இடம்: என் இல்லம்
    பொழுது: காலை ஏழு மணி
    நாள் :11/01/2013

    குளித்துகொண்டிருக்கும்போது கைபேசி ஒலிக்கிறது. என் துணைவியின் குரல் கேட்கிறது.

    என் துணைவி: அவர் குளிச்சுட்டு இருக்கார்ணா! என்ன விசயம் இந்நேரத்துக்கு கால் பண்ணியுருகீங்க??

    சற்று இடைவெளி விட்டு

    என் துணைவி: என்னது புக்க வாங்கிடீங்கன்னு சொல்லனும்மா?? உங்களையெல்லாம் திருத்தவே
    முடியாது!

    என் நண்பன் என்ன சொல்லியிருப்பான் என்பதை என்னால் சுலபமாக யூகிக்க முடிந்தது!

    ReplyDelete
  81. இடம்: என் அலுவலகம்
    பொழுது: காலை பத்து மணி
    நாள் :11/01/2013


    பிஸியான AUDIT வேலைகளுக்கு நடுவே பத்தாவது முறையாக COURIER & DISPATCH செக்சனுக்கு
    கால் செய்கிறேன்!

    STAFF :(சற்று சலிப்புடன் )என்னப்பா இன்னக்கு உனக்கு பிரச்சன ???

    நான் : (வேக வேகமாக)புக் வந்துடுச்சா ??

    STAFF :(சற்று சலிப்புடன் ) அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி தானே கூப்பிட்டு கேட்டே! இன்னமும் வரலே!

    நான் : (நம்பிக்கையான் குரலில்) நான் இப்போதானே கொரியர் ஆபிசுக்கு போன் போட்டு கேட்டேன்! புக்க ஒன்பது மணிக்கே அனுப்பிட்டதா சொல்றாங்க!இன்னமும் இங்கே வரலையா?

    STAFF :(கோபமாக) வாங்கி வெச்சுட்டு உனக்கு கொடுக்க மாட்டேன்னா சொல்றேன்! வந்தா கூப்பிடறேன்!

    நான் : (வேக வேகமாய் ) NO ! NO ! NO ! கொரியர் பையன் வந்தவுடன் நேர என்கிட்டயே அனுப்பிடு!

    STAFF :(சற்று சலிப்புடன் ) சரி ! சரி !


    இடம்: என் அலுவலக டைனிங் ரூம்
    பொழுது: மதியம்
    நாள் : 11/01/2013


    NBS சை நெஞ்சோடு அனைத்தபடி லஞ்ச பாக்ஸ் உடன் அறை உள்ளே நுழைகிறேன்!

    என் சகா நண்பர் 1 :(CURIOUS TONE ) என்ன ரவி கைல பார்சல்?

    நான் : (பெருமையாக ) NBS !!

    என் சகா நண்பர் 2 : NBS சா ??

    நான் : (மானை கண்ட புலியைப்போல ) அப்படி கேளு! இதோ வந்துட்டேன்!

    (அன்று மதிய உணவை சாப்பிட முடியாமல் மிஸ் செய்துவிட்டு, விட்டால் போது என்று ஓடியவர்கள் பலர். ஆனால் நான் அவர்கள் அனைவரையும் NBS சை படிக்கவைக்கப்போவதாக சவால் விட்டுள்ளேன்!)

    ReplyDelete
  82. இடம்: என் இல்லம்
    பொழுது: மதியம் பொங்கல் வழிபாடுகள்
    முடிந்து ஓய்வு வேலை
    நாள் : 14/01/2013

    வழக்கமாக NBS சும் கையுமாக நான்

    என் தந்தை : என்னடா அது புக் !

    என் துணைவி : (COMPLAINING TONE ) நீங்களே இந்த அநியாயத்த கேளுங்கபா.வீட்டுக்கு வந்தவுடன்
    ரெண்டு மூணு நாலா புக்கும் கையுமா சுத்தறார்!

    நான் : (என் துணைவியை இடை மறித்து, ஆர்வமாய் ) நானே உங்களுக்கு சொல்லனுமுன்னு நினச்சிருந்தேன்பா! முத்து காமிக்ஸ்சோட லேட்டஸ்ட் இஸ்யு. NBS

    என் தந்தை : (ஆர்வமாய்) எங்கே கொடு பாக்கலாம்

    நான் : (அவரின் கைகளில் புத்தகத்தை கொடுத்து புரட்டியபடி ) "மரண நகரம் மிசெளரி யோட அடுத்த பாகம் இதில் வந்திருக்குப்பா! " கன்சாஸ் கொடூரன்"

    என் துணைவி எங்களை ஒர கண்ணால் பார்த்துக் கொண்டே அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட அங்கே ஒரு வசதியான சூழ்நிலை உருவாகிறது! என் தந்தையும் அண்ணனும் என்னை போலவே
    காமிக்ஸ் படிப்பவர்கள்!


    இடம்: என் அண்ணன் இல்லம்
    பொழுது: மாலை வேலை
    நாள் : 14/01/2013


    நான் :(அண்ணன் குழந்தைகளை அணைத்தபடி) இந்தாங்க உங்களுக்கு கிப்ட். ஆதித்துக்கு "THE KARATE TWINS" எங்க வீடு சுட்கிக்கு "THE QUEEN CHUTKI"
    என்றபடி சோட்டா பீம் காமிக்ஸ் புத்தகத்தை இருவருக்கும் கொடுதேன்! இருவரும் மிக ஆர்வமாய் வாங்கிக்கொண்டு ஆளுக்கு ஒரு
    மூலையில் சென்று புத்தகத்தில் மூழ்கினார்கள்!

    நான் : (ஆர்வமாய் என் அண்ணனிடம் )
    நான் சொன்னேனில்லண்ணா ! NBS வந்திடுச்சு! இன்னமும் படிச்சு முடிக்கல! கதைகள் சூப்பர்!

    என் அண்ணன் : (ஆர்வமாய் ) சரி படிச்சுட்டு மறக்காம கொடு

    நான் :(உற்சாகத்துடன் ) உனக்காக இன்னொரு புக் E -BAY ல ஆர்டர் பண்ணிடறேன்!

    அத்தை : (கேள்விக்குறியுடன் ) என்ன புக் அது ??

    நான் : (ஜாக்கிரதையுடன்) அது வந்து... காமிக்ஸ் பத்தி பேசிட்டிருந்தோம்மா!

    அத்தை :(ஆர்வமாய்) காமிக்ஸ் சா !! நானும் சின்ன வயசில காமிக்ஸ் படிச்சிருக்கேன்! இரும்புக்கை மாயாவி கதை படிச்சுருக்கேன்...

    நான் :( ஆச்சர்யம் தாங்காமல் துள்ளி குதித்து ) என்னது உங்களுக்கு இரும்புக்கை மாயாவிய
    தெரியுமா ??? அப்போ லாரேன்ஸ் டேவிட் ???

    அத்தை :(ஆழமாக யோசித்தபடி)எப்பவோ படிச்சா மாதிரி நியாபகம் இருக்கு...

    நான் :( இதற்காக காத்திருந்தவன் போல)
    இங்க உக்காருங்க ! உங்க கிட்ட NBS ச பத்தி நிறைய சொல்லணும்...

    என் துணைவி ஆரம்பிச்சுடாங்கையா என்றபடி அவ்விடத்தை விட்டு எஸ்கேப் ஆனார்!

    மேற்கூறிய நிகழ்வுகள் என்னையும் NBS சை சுற்றியும், NBS வருவதற்கு முன்பும் பின்பும் நிகழ்ந்தவை!

    ReplyDelete
    Replies
    1. super... i have also waited the whole friday for the book..nothing going that day and frequently enquired home about the book whether it came or not...

      Delete
  83. இனி புத்தகத்தை பற்றி சிறிது பேசும்!

    புத்தக கவரை பிரிப்பதற்க்கு முன்னால்,எனக்கு முன்பு புத்தகத்தை கொரியர் ஆபீஸ் சென்று கைபற்றிய நண்பர் dust கவர் பற்றி சொல்லிவிட்டார்!அருமையான surprise! நமது
    புத்தகத்துக்கு ஒரு ரிச் லுக் கொடுக்கிறது!

    அட்டை படம் பற்றிய என் கருத்து மற்ற
    நண்பர்களிடம் இருந்து மாறுபடுகிறது. என் கருத்தை சொல்வதற்கு முன்னால் இது நாள் வரை அட்டைப்பட ஓவியங்களை தீட்டி எங்களை
    மகிழ்வித்த,லயன் முத்து காமிக்ஸ் கக்கு என்றே ஒரு trending ஸ்டைளை ஏற்படுத்திய ஐயா திரு.
    மாலையப்பனுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்!


    NBS ந் அட்டை படம் நமது பாரம்பர்யமான பிரத்யோகமான ஸ்டைல்லை கொண்டுள்ளதால் அதில் எந்த குறையும் வைக்காமல் முழுவதுமாக திருப்திப்படுத்துகிறது !

    நாம் அன்மை காலமாக நமது வெளியிடுகளில் பல OUT-OF-THE-BOX மாற்றங்களை செய்துவந்துள்ளோம்! அவற்றுள் ORIGINAL அட்டை படங்களை
    உபயோகிக்கும் வழிமுறையும் ஒன்று. அது ஏறக்குறைய அனைவராலும் வரவேற்கப்பட்ட ஒன்று! அதன் முக்கிய காரணம் ORIGINAL அட்டைப்படங்கள் HIGHLY PROFESSIONALலாக இருக்கும். நமது காமிக்ஸ் க்கு சித்திரங்களே முதுகெலும்பு! NBS போன்ற ஒரு இதழுக்கு ஒரு ரியாலிட்டி லுக் கொடுக்காத ஓவியத்தை
    அட்டைபடமாகியது மிகவும் சொதப்பலாக்கிவிட்டது! அதுவும் டைகர் கையில் பிடித்துள்ள துப்பாக்கியும்
    சாட்டையும்....என்ன சொல்வது....!தயவு
    செய்து நான் மன்றாடி கேட்டுக்கொள்வது
    என்னவென்றால் ORIGINAL அட்டைப்படங்களை உபயோகியுங்கள்!

    அப்படி வேண்டாம் நமது டச் கொஞ்சம் வேண்டும் என்றால் சற்று PROFESSIONAL ஆர்டிஸ்ட் ய்
    உபயோகியுங்கள்! HERE I WOULD RECOMMEND ILLUSTRATOR MANIKANDAN OF CAMPFIRE.
    DC/WESTERN காமிக்ஸ்களுக்கு இணையான ஓவியங்கள் இவர் படைப்புகளில்
    மிளிர்ந்துகொண்டிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. //NBS போன்ற ஒரு இதழுக்கு ஒரு ரியாலிட்டி லுக் கொடுக்காத ஓவியத்தை அட்டைபடமாகியது மிகவும் சொதப்பலாக்கிவிட்டது! அதுவும் டைகர் கையில் பிடித்துள்ள துப்பாக்கியும் சாட்டையும்....என்ன சொல்வது....!//

      @விஸ்கி-சுஸ்கி:
      முதலில் என்னுடைய கருத்தும் இப்படிதான் இருந்தது என்றாலும், NBS வெளியாகும் நாளன்று அதிகாலையில் ஆசிரியர் அளவு கடந்த மகிழ்ச்சியுடன் இந்த அட்டைப்பட ஸ்கேன்களை வெளியிட்டார் என்பதால் இதை உடனே 'நேரடியாக' சொல்லி அவரை மூட் அவுட் ஆக்க விரும்பவில்லை! :)

      PS: பிறகு, பார்த்துப் பார்த்து அந்த அட்டை படமே பழகி விட்டது!!! :D (நன்றி: கும்கி ஜோசியக்காரர்)

      Delete
    2. டைகரின் அந்த போஸை தவிர அட்டைப்படத்தின் மற்ற சங்கதிங்கள் (lamination, fonts, silver lining etc.) மிக மிக அருமை!!!

      Delete
    3. I also agree with விஸ்கி-சுஸ்கி on the Covers to be made from the original art work.

      I didn't mean to say that our current artist is not doing good work. I feel that it would be better if it is original cover.

      Delete
    4. கார்த்திக் & பெரியார் , உங்கள் கருத்துக்கு நன்றி!
      இது போன்ற அட்டை படங்கள் SHSS போன்ற இதழ்களுக்கு மிக பொருந்தும். INFACT என்னை பொறுத்தவரை SHSS இதழ்களுக்கு ஒரிஜினல் COVERரை விட நமது ஓவியரின் கைவண்ணம் அசத்தலாக இருக்கும்!COMICS CLASSICS இதழ்களுக்கு I WOULD STRONGLY recommend TO USE OUR OWN ARTIST FOR COVERS! இந்த இடத்தால ஓவியர் திரு.மாலையப்பன அடிக்க ஆள் கிடையாது! SERIOUSNESS & HUMOROUSNESS கலந்த ஒரு கலவை அது! நமது ஸ்டைல் அட்டைப்படங்கள் எப்போதும் ஒரு ஜாலியான காமெடி உணர்வையே என்னுள் ஏற்படுத்துகிறது!

      ஆனால் லார்கோ மற்றும் புதுமுகம் ஷெல்டன் போன்ற நாயகர்களுக்கு SOME REALLY SEROUS STUFF அட்டைபடத்தில் நிச்சயம் தேவை. இப்படி அட்டைப்படத்தில் காமெடி செய்தால் கதையின் SERIOUSNESS நிச்சயம் அடிபட்டுபோகும் !

      Delete

  84. நான் முதலில் படித்த கதை லார்கோவின் முதல் இரண்டு கதைகள்.அற்புதமான HIGHSPEED ACTION
    திரில்லர்!அற்புதமான மொழிபெயர்ப்பு! இருபதாம் பக்கத்தில் வரும் "பாட்டி மந்திரம்" வசனமும் அதன் பின் நிகழும் நிகழ்வுகளும் நான் மிகவும் ரசித்த
    மொழிபெயர்ப்பு கட்டங்கள், ஹோலிவுட்
    படங்களுக்கு இணையானவை. நான் கொடுத்த நானுறு ரூபாயின் மதிப்புக்கு இந்த இரு கதைகளுமே WORTH ஆகிவிட்டதால் இனி படிக்கப்போகும்
    மற்ற கதைகள் ஒரு SUPER DUPER BONUS ஆகவே எனக்கு படுகிறது!

    ReplyDelete
  85. விஸ்கி-சுஸ்கி :
    //Never Before கமெண்ட் !
    முற்றிலும் வித்தியாசமாக,
    இதுவரை வெளிவந்திராத கதை விமர்சனம்!
    வித்தியாசமானதெல்லாம் சுவாரசியமானதல்ல,
    சுவராசியமானதெல்லாம் வித்தியாசமான ஒன்றானதே// !!! வாசக நண்பர்களே இதைத்தான் எதிபார்த்தேன்! விஸ்கி-சுஸ்கி உங்களின் பதிவு வித்தியாசமானது அதனால் இங்கே சுவாரசியமானது! என்னால் இப்பொழுது இங்கே ஆட்டத்தில் பங்கேற்க முடியாது, அதனால் பவுண்டரிக்கு பின்னால் இருந்து பந்தை மட்டும் எடுத்து வீச வருகிறேன், சற்று பொறுங்கள், அதற்கான உடை கொண்டு மனதில் திடம் கொண்டு விரைவில் வருகிறேன்! கோட்டிற்கு வெளியே என்னை எதிர்பாருங்கள்!!!

    யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல !
    வாருங்கள் நண்பர்களே இது ஆசிரியரின் ஆட்டக்களம் !!
    ஆதலினால் நீங்கள் இங்கே அளவோடு அதகளம் செய்வீர்களாக !!!

    ReplyDelete
  86. கிரிக்கெட் உலககோப்பை Final ல் இந்திய பங்கேற்கும் நேரம், நம் பாரதமே வெறிச்சோடி போய்விடும்! நாட்டிற்கே இந்நிலை என்றால் அலுவலகத்திற்கோ இல்லை வீட்டிற்கோ உதாரணம் கூறவும் வேண்டுமோ! அதுபோல் பரபரப்பான NBS world cup ஆட்டகளத்தால் நம் வீடாகிய இந்த தளம் வெறிச்சோடி கிடப்பதாய் ஒரு உணர்வு! வீரர் கள் இல்லா ஆட்டக்களத்தில் அடித்து ஆடவும் முடியவில்லை! அழகாய் வீசி பந்து எறியவும் இயலவில்லை!

    NBS பரபரப்புக்கு ஒரு சிறு உதாரணம் சொல்லவேண்டும் என்று நினைத்தால் இது மட்டுமே என் முதற் காரணமாக இருக்கக்கூடும்! NBS ன் 10 கதைகளையும் முழுவதுமாக படித்து ரசித்து விட்டப்பின் தான், ஆசிரியரின் ஹாட்லைன் யே நான் படித்தேன்! இதுபோல் என்னைப்போல் சிலராவது NBS என்ற புது வெள்ளத்தில் அடித்து போயிருக்க கூடும்!

    அது மட்டுமில்லாமல் சில கதைகளில் ஒவ்வொரு பலூனிலும் கடைசி ஒரு வரியை கூட முடிக்க பொறுமையில்லாமல் அடுத்தடுத்த கட்டத்திற்கு நான் தாண்டிவிட்ட பரபரப்பை வார்த்தைகளால் எப்படி உங்களுக்கு புரியவைக்க முடியும் என்று தெரியவில்லை! சொல்ல வார்த்தைகளும், கோர்வையாக்கிட மனதின் பரபரப்பின்மையும் கைவர பெறாமையால் என்னுடைய NBS கண்ணோட்டத்தை பிப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைத்து விட்டேன்!

    அடுத்து வருவது,
    அடுத்த ஸ்பெஷல் வெளியீடு !!!

    ReplyDelete
  87. அடுத்த ஸ்பெஷல் வெளியீடு !!!

    NBS ன் மிகப்பெரிய வெற்றியை நான் சொல்லித்தான் ஆசிரியர் அவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதில்லை! ஆனால் ஒரே ஒரு விஷயம் மட்டும் ஆசிரியரின் பார்வைக்கு, இந்த வலைத்தளத்தில் பதிவிடும் மற்றும் பார்வை மட்டும் இடும் நம் மிகச்சிறிய அளவிலான வலைத்தள வாசகர்கள் மட்டுமே வாங்கிய NBS வெளியீடு நிச்சயம் 700-1000 த்தை தொட்டிருக்கும் என்பது என் கணிப்பு! அப்படி என்றால் வரும் காலமெல்லாம் நம் வெற்றி நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகவே கருதவேண்டும் அல்லவா!!! இதுபோல் 400+ பக்கங்கள் கொண்ட 'லயன் வயது முப்பது' ஸ்பெஷல் வெளியிடுவதற்கு பதிலாக..

    ஒரு Full set collection முழு வண்ணத்தில் வெளியிடலாம்! அதாவது,
    1. XIII இரத்தப்படலம்! இரண்டிரண்டு கதைகளாக 10 புத்தகங்கள்! அல்லது
    2. டைகர் 10 புத்தகங்கள் 115 பக்கங்களில்! அல்லது
    3. லார்கோ வின்ச் இரண்டிரண்டு கதைகளாக 10 புத்தகங்கள்! அல்லது
    4. வேய்ன் ஷெல்டன் இரண்டிரண்டு கதைகளாக 10 புத்தகங்கள்! அல்லது
    5. 5+5+5 = லார்கோ + வேய்ன் + டைகர் அல்லது
    6. கிராபிக் நாவல் இரண்டிரண்டு கதைகளாக 10 புத்தகங்கள்! அல்லது
    7. இதுபோல் சில..

    ஏனெனில்...!!!
    contd part 2.






    ReplyDelete
  88. லயன் வயது முப்பது ஸ்பெஷல்!
    400+ பக்க புத்தகமாக வெளியிடும்போது..

    1. பிடித்து படிக்கும் போது கை வலிக்கிறது!
    2. தொடர்கள் பின்தங்கி விடுகின்றன் !
    3. படிக்கும் பொழுது கிழியாமல் இருக்க கவனம் சிதறுகிறது!
    4. Full set 10 புத்தகங்கள் அழகாக இருக்கும்!
    5. படிக்க, பாதுகாக்க தொடர்கதைகளை தவிர்த்திட எளிமையானது!
    6. தங்களுக்கு ஒவ்வொன்றாக தயாரித்து மொத்தமாக வெளியிட ஏதுவானது!
    7. ஏதாவது ஒரு புதுமை வேண்டும் தானே !!!

    நன்றி! வணக்கம்!

    ReplyDelete
  89. ஸாரி சார்! மாடஸ்டியின் வரி உடை கண்டிப்பாக எனக்குப்பிடிக்கலை என்பதை சொல்லாவிட்டால் நான் மாடஸ்டி ரசிகர் என்பதே தவறாகி விடும்! நாங்கள் படித்த அந்தக்கால வெளியீடுகளை அந்தச்சின்னஞ்சிறு வயதில் ஆபாசப்படங்களுக்காக வாங்கவில்லை! அப்படி பார்க்கும் குறை கொண்ட எண்ணப்போக்கும் உருவாகவில்லை! கதையோட்டத்துடன் கூடிய படங்களை மிக மிக மிக கடுமையாக கத்தரி போட்டது ஜீரணிக்கக்கஷ்டமாக உள்ளது! அந்த நாட்டுக் கலாச்சாரம் கேலி செய்யப்படக் கூடியதல்ல! பனி படர்ந்த அந்த தேசத்தில் வெயிலைக் காண்பதே மிக அரிது! வெயில் குளியல் அங்கே சகஜம்! கத்தரியைக் குறைச்சுப் போடுங்க ஜி!

    ReplyDelete
    Replies
    1. @ நண்பர் ஜானி:
      NBS இன்னும் படிக்கவில்லை என்றாலும் அந்த கோடு போட்ட மாடஸ்டியைப் பார்த்தேன்! இனிமேல் அவர் 'கோடஸ்டி ப்ளைசி' என்று அழைக்கப்படுவாராக! :) இருப்பினும் மாடஸ்டிக்கு மட்டும் கோடு போட்ட செயல் உண்மையில் மிகவும் கண்டிக்கத்தக்கது, இது நமது ஆணாதிக்கப் போக்கையே காட்டுகிறது!!! கார்வினை அரைகுறை ஆடையில் காண நேரும் இளம் பெண்கள் /சிறுமிகள் மனம் கெட்டு விடக்கூடாது என்பதால் அவர் உடலிலும் இனிமேல் கோடோ அல்லது ரோடோ போட வேண்டும் என கார்வின் ரசிகர்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது!

      Delete
    2. HA HA HA! அதை தான் நானும் யோசிச்சிட்டு இருக்கேன்! இதோ இப்போ வர்ரேன் இதை பத்தி கொஞ்சம் பேசுவோம்!

      Delete
  90. வணக்கம் மரமண்டையாரே! தங்கள் ஞாபகம் அந்த சிக் பில் கதையை படிக்கும்போது வந்தது! மூன்று முறை என நினைக்கிறன்!

    ReplyDelete
  91. John Simon C:
    காவல் துறை அதிகாரி அவர்களுக்கு நன்றி! உங்கள் பதிவில் உள்ள உண்மையான ஆதங்கம் எனக்கும் புரியாமலில்லை! நானும் உங்கள் நிலையில் இருந்தால் நிச்சயம் ஆதரிப்பேன் ! ஆனால் கர்ணன் L - ஐ போன்ற வாசகர்களின் கருத்துக்களையும் தாங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்! நாம் பார்க்க கேட்க நம் ஆசைப்படி எத்தனையோ, அளவின்றி இவ்வுலகில் இருக்கலாம்! அத்தனையும் நம் குழந்தைகளுக்கு இப்பொழுதே பகிர்ந்து அளித்து விடுவோமா? வெறும் 10 பக்க வரி உடைகளால் கதையின் தாக்கமோ, NBS ன் அதிரடியோ நிச்சயமாக எங்கும் குறைந்து விடவில்லை! ஆனாலும் உங்களுக்காக ஆசிரியருக்கு ஒரு விண்ணப்பம்! மாடஸ்டி க்கு வரி உடை நன்றாக இல்லை என்பது சற்று உண்மையே, அடுத்த முறை கருப்பு வண்ணத்தில் மேற்கத்திய உடையை அழகாக அணிவித்து விடுங்கள்! சற்றும் வித்தியாசம் கண்டுப்பிடிக்க முடியாது!

    // 1.நாங்கள் படித்த அந்தக்கால வெளியீடுகளை அந்தச்சின்னஞ்சிறு வயதில் ஆபாசப்படங்களுக்காக வாங்கவில்லை! அப்படி பார்க்கும் குறை கொண்ட எண்ணப்போக்கும் உருவாகவில்லை! 2.அந்த நாட்டுக் கலாச்சாரம் கேலி செய்யப்படக் கூடியதல்ல! பனி படர்ந்த அந்த தேசத்தில் வெயிலைக் காண்பதே மிக அரிது! வெயில் குளியல் அங்கே சகஜம்//

    1.சிறு வயதில் சிறார்களாய் அம்மா அப்பா விளையாட்டு விளையாடியிருப்போம்
    அங்கே களங்கம் இருந்ததில்லை! அதனால் இன்றும் அப்படி விளையாட முடியுமா?

    2. அப்படி என்றால் இந்த நாட்டு கலாச்சாரம் கேலி செய்யப்படலாமா?
    அங்கே சகஜம் என்பதால் மட்டும் இங்கே தர்ம சங்கடம் மாறி விடுமா?

    ReplyDelete
  92. I got the NBS today by the STS courier. Courier Boy put leave on last Saturday, so this much delay happened... Since i got the extra copy on the day of release, I didnt take that much serious about the delay... One day this problem also will be sorted out.

    ReplyDelete
  93. டைகர் கண்சாசஸ்கொடூரன் வித்தியாசமான மனது வலிக்கும் ராணுவ கதை !பல விசயங்களை மனதில் கிளப்பி ஏதோ இனம் புரியாத சோகத்தினை மனதில் விதைக்க தவறவில்லை !பல விஷயங்கள் மனதை குதற தவறவில்லை !

    ReplyDelete
  94. மர மண்​டை@

    நண்ப​ரே இன்னும் சுவாரஸ்யமான சம்பவங்கள் நி​றைய உன்டு. காமிக்ஸ் என்று ​வரும் ​போது என் நண்பர்கள் பிரபு, இஸ்மாயில், நிஜாம்,
    க​ணேஸ் இவர்க​ளை பற்றியும் ​சொல்லி​யே ஆக​வேண்டும். வருடம் 1997: எ​தேச்​சையாக நான் புத்தகம் ஏதும் வந்துள்ளதா என்ரறிய ப​ழைய புத்தக க​டைக்கு ​சென்றிருந்​தேன் ஓர் முதியவர் சுமார் 300 புத்தகங்கள் புத்தக​மோ பலபலப்பாக மின்னியது, புத்தக வியாபாரி​யே காமிக்ஸ்
    க​லெக்டரும் கூட, எல்லா​மே ப​ழைய முத்து 1 to 100 ன்​(​பைன்டிங்) ​செய்யப்பட்டு ஒர் புத்தகம் ரு.10 என்று விற்றிருந்தார். ​சென்றிருந்த ​பொழுது நண்பர்கள் பிரபு, இஸ்மாயில், நிஜாம் ​போன்​றோர்களும் எனக்கு முன்​பே வந்து காத்திருந்தனர் என்னிட​மோ ​வெறும் பத்து ருபாய் எனக்கு பிடித்த இரத்த காட்​டேறி மர்மம் மட்டும் வாங்கிக் ​கொண்டு பணம் ​பெரட்டிக்​கொண்டு வருகி​றேன் என்று ​சொல்லிவிட்டு ​சென்றுவிட்​டேன், சுமார் ஒர் மணி ​நேரம் ​சென்று ரு. 50 நீட்டி​னேன். எனக்கு இருதய​மே நின்று விட்டது ஆம் எல்லாம் விற்று தீர்ந்து விட்டது என்றார். ​வெறுப்புடன் வீட்டிற்கு ந​டை​யை கட்டி​னேன்!

    ReplyDelete
  95. புனித சாத்தானுக்கு இன்னும் NBS வரவில்லையோ! அமைதியாக இருக்கிறாரே.....

    ReplyDelete
  96. NBS இதழில் பல இடங்களில் அதிகமாக கத்திரி போடப்படுள்ளதாகவும் MODESTY,வரிக்குதிரையாக மாற்றப்பட்டதை

    பற்றியும் நிறைய பின்னூட்டங்கள் பதியப்படுள்ளதால் இந்த INDIAN INK மனநிலை பற்றியறிய NBS சை A TO Z SCAN செய்ய முயற்சித்ததில் லேசாக ஒரு அதிர்ச்சி!
    லார்கோவில் பல இடங்களில் சென்சார் செய்யப்பட்டுள்ளது.
    26 -27 பக்கங்களில் லிஸ்ஸா லூவின் கவர்ச்சியான உடையை, ஓவியத்தை சிதைக்காமல் சற்று நாகரிகமாகுவதில் நமது டச்-அப் ஓவியர் ஏறத்தாழ வெற்றிபெற்றுவிட்டார். இதற்க்குகூடவா சென்சார் ??
    33 ஆம் பக்கம் செயப்படுள்ள சென்சார் சற்று ஓவர். மார்லினின் மினி ஸ்கர்ட்டை பெரிதாக்கிய அந்த டச்-அப்

    ஓவியத்தை சிதைக்காவிட்டலும் இதற்க்குகூடவா சென்சார் என்று திகைக்கவைத்த இடம்.

    34 ஆம் பக்க சில TOPLESS காட்சிகள் நமது இந்திய கலாச்சாரத்துக்கு ஏற்புடையதாக இல்லை என்பது உண்மை.
    AGAIN நமது டச்-அப் ஓவியர் இங்கே இன்னமும் சற்று மேனகேட்டிருந்தால் அவரது டச்-அப்கள் NATURALலாக ஒரிஜினல் ஓவியத்தில் BLEND ஆகி இருக்கும். EVENTHEN நல்ல முயற்சி!

    37 ஆம் பக்கம் ஒரு AGAIN ஒரு CLEAVAGEய் BLOCK செய்யும் முயற்சி.என்னத்த சொல்ல ...சில இடங்களில்

    அப்படியே விடப்பட்டுள்ள CLEAVAGEகள் சில இடங்களில் மட்டும் BLOCK செயப்பட்டுள்ளது.

    68 ஆம் பக்கம் செயப்படுள்ள சென்சார் சற்று NEAT ஆக செய்திருக்கலாம்.

    69 ஆம் பக்கதில செய்தது சரியான காமெடி.நிச்சயம் அந்த இடத்துக்கு சென்சார் தேவை தான். அதற்காக
    இப்படியா??உடையை யாரோ தூக்கி பிடித்துள்ளதை போலவா டச்-அப் செய்வது??

    லார்கோவை இதற்கு மேல் ஆராயாமல் அடுத்த சிக்-பில் கதைக்கு தாவினால் சிக்-பில் கதையில் உள்ள காமெடியை

    விட 115ஆம் பக்கம் பூதத்துக்கு ஜட்டி போட்ட காமெடி கதையின் காமெடியை விட HIGHLIGHT! இதற்கு நீங்கள் சிக் -பில் கதையையே தூக்கியிருந்தாலும் கூட பரவாயில்லை!


    SOME SERIOUS THINKING PROCESS IS REQUIRED HERE !
    சில இடங்களில் சென்சொர்ஷிப் சில வாசகர்களுக்கு ஆவசியமாகப்படுகிறது என்பதென்னவோ உண்மைதான்.அங்கே செய்யப்படும் டச்அப் கள் கூடுமானவரை ஓவியங்களில் NATURAL ஆக BLEND செய்யப்படவேண்டும், சென்சார் எவ்வளவு முக்கியமோ அது போல இதுவும் மிக மிக முக்கியம்.

    அடுத்து சிறு விஷயங்களுக்கு(ஒரு BIKINI /CLEAVAGE) டச்-அப்கள் ARTIFICIAL ஆக தெரியும் போதுதான் இதைகூட வக்கிரமாக பார்க்கும் மக்கள் நம்முள் உள்ளார்களா என்று எண்ணத்தோன்றுகிறது.
    இதை போன்ற காமிக்ஸ் காட்சிகள் நமது கலாச்சாரத்தை நமது குழந்தைகளை சிரழித்துவிடும் என்ற பயம் தேவையற்றது என்றே எனக்கு படுகிறது.இதை விட வக்கிரமமான காட்சிகள் நமது தொலைக்காட்சிவாயிலாக நமது இல்லம் தேடி வந்து நமது குழந்தைகள் மனதில் நஞ்சை விதைத்துவிட்டு செல்கிறதே??? இங்கே எதனை பேர் வீடுகளில் குழந்தைகளுக்கு முன்பு நாம் சீரியல்களை/வன்முறைகாட்சிகளை பார்ப்பதை AVOID செய்கிறோம்??
    இணையதளங்களில் எத்தனை தளங்களுக்கு உங்களால் INDIAN INK வைக்க முடியும்?? அப்படி முடியாவிட்டால் எத்தனை நாட்களுக்கு உங்கள் குழந்தைகளை இணையதளங்களில் இருந்து பிரித்து வைக்க முடியும்???

    நமது குழந்தைகளுக்கு நல்லது எது கேட்டது எது என்று பகுத்து ஆராயும் ஆறிவை புகட்டுவதில் நாம் முயற்சி மேற்கொள்ளுவதே இன்றைய காலத்துக்கு ஏற்புடைய முயற்சி. இதை செய்வதற்க்கு பல வழிமுறைகள் வகுக்கப்படுள்ளன. இவற்றை தேடி ஏன் நாம் முயற்சி மேற்கொள்ள கூடாது??இவற்றுள் நமது கலாசாரத்துக்கு ஏற்புடைய வழிமுறைகளை நாம் ஏன் தெரிந்த்கொண்டு முயற்சிக்ககூடாது ???

    ReplyDelete
    Replies
    1. Well Said. I second it.. any take?

      Delete
    2. @விஸ்கி-சுஸ்கி:

      ஒரு நீண்ட சென்சார்ஷிப் ஆய்வின் சில அதிர்ச்சியளிக்கும் முடிவுகள்!!! விரிவான தகவல்களுக்கு நன்றி விஸ்கி! நீங்கள் சொல்வதை அப்படியே வழிமொழிகிறேன்!

      நமது நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில், திருத்தலங்களில் உள்ள சிலைகளைப் பார்த்தாலே தெரிந்திடும் - நம் முன்னோர் நம்மை விட பரந்த மனப்பான்மை கொண்டிருந்தனர் என்று! திருக்குறள் தெளிவுரையை தமது குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் பெற்றோர் காமத்துப் பாலை கட் செய்து விட்டா கொடுக்கிறார்கள்?! பாட நூல்களிலேயே அது வருகின்றதே?! சினிமா, டிவி, பத்திரிக்கைகள், இணையம் இப்படி பல திசைகளிலும் நம்மால் கட்டுப் படுத்த முடியாத ஒன்றை சிறுபான்மை காமிக்ஸில் மட்டும் வலிந்து திணிப்பது நகைப்புக்குரியது! இது நம் குழந்தைகள் மீதான நம்பிக்கையின்மை, வீண் பயம்!

      இதைப் பற்றி இங்கே விரிவாக பேசினால் இன்னுமொரு புதிய சர்ச்சைக்கு அது அடிக்கல் நாட்டு விழாவாக அமைந்து என் நேரத்துக்கு மீண்டும் ஒருமுறை ஆப்படிக்கும் என்பதால், நான் மேற்சொன்னவை எல்லாம் என் சொந்தக் கருத்துக்களே என கூறிக்கொண்டு உங்களிடம் இருந்து இத்துடன் விடை பெறுகிறேன்; நன்றி, வணக்கம்! :)

      Delete
    3. எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே!
      அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பிலே!

      அவ்வளவு தானா வாசகர்களே உங்களின்
      வீறுகொண்ட எதிர்ப்பும், மாறுபட்ட கண்ணோட்டமும்?

      நேரமின்மை எமக்கு மிகப்பெரிய துன்பத்தைக் கொடுப்பதால் சில நேரங்களில் அல்லது சில நாட்கள் இந்த ப்ளாக் ஐ பார்க்க அல்லது படிக்க கூட முடிவதில்லை! உங்களுக்கான பதிலை இன்று இரவு நடு ஜாமத்திற்குள் பதிவேற்ற முயற்சிக்கிறேன்! அதற்குமுன் தங்களால் முடிந்த அளவு தங்களின் வலுவான கருத்தை தங்கள் சார்பாக பதிக்க முடியுமா? ஏனெனில் இதில் சிறிதும் வலுவில்லை! அதனால் தாங்கள் பதிந்ததில் சற்றும் பயனில்லை!

      உனக்கேன் இவ்வளவு அக்கறை !
      உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை !
      என்று உங்கள் உள் மனது கேட்பது எனக்கு புரியாமலில்லை!

      ஏனெனில் நாங்கள் இன்னும் ஆசிரியர் விஜயனின் தமிழ் காமிக்ஸ் படிக்கும்,
      தமிழ் பண்பாடு மறக்காத சாதாரண வாசகர்கள் என்பதால் தான்! எங்களுக்கு தெரிந்ததெல்லாம்

      1. தாயை சிறந்ததோர் கோயிலுமில்லை!
      2. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!
      3. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்!

      என்பதாய் தாய், தந்தை, குரு, இறைவன் என்ற வரிசை மட்டுமே !
      அதனால் எங்கள் மக்கள் செல்வம் மீது எங்களுக்கு மிகுந்த அக்கறை!
      கனியிருக்க காயை அவர்களுக்கு சுட்டிக்காட்டவோ, வாழ்க்கையாகவோ உணர்த்தமாட்டோம்!

      இது உங்களுக்கான வெளிப்படையான சவால்!
      முடிந்தால் கண்ணியம் தவறாமல் வென்று பாருங்கள்!

      Delete
    4. டைகர்: ஜிம்மி காவல் பணியில் இருக்கும் போது இனி நீ குடிக்கக்கூடாது!

      ஜிம்மி : டேய் செல்ல பாஸ்! மீண்டும் ஒருமுறை
      உனக்கு 'ஆப்படிக்கும்' நேரம் வரும், அதனால் நன்றி, வணக்கம்!

      வாசகர்களே! இது எப்படி உங்களுக்கு ஒருவித வெறுப்பை
      தருகிறதோ அதுபோல் எனக்கும் அந்த வார்த்தை வெறுப்பூட்டுகிறது!
      அதனால் இங்கே மட்டுமாவது தயவுசெய்து கண்ணியமாக பதிவிடுங்கள் வாசக நண்பர்களே!

      Delete
  97. முதலிலேயே சொல்ல மறந்ததற்கு ஆசிரியரிடம் மன்னிப்பு கோருகிறேன் SINCERE APOLOGIES !
    லார்கோ கதையின் 28ஆம் பக்கம் முதல் ஓவியத்தில் அந்த தாளில் உள்ள எழுத்துக்களை யாராவது கவனித்தீர்களா ???
    THANK YOU MR.VIJAYAN! ATTENTION TO SUCH SMALL THINGS MAKES A LOT OF DIFFERENCE TO THE QUALITY OF OUR BOOKS!!THANKS A LOT INDEED!!! :D

    ReplyDelete
  98. எனக்கேன்னமோ அந்த மாடஸ்தி கதை சிலமாதங்களாக எடிட்டரின் பீரோவில் தூங்கிகொண்டிருக்கவேண்டும். NBSல் பெண்களுக்கும் 13% இடஒதுக்கீடு?? கொடுக்கவேண்டும் என்ற கட்டத்தில் நல்ல கதையாக இது இருந்ததால் மாடஸ்தி கதையையும் சேர்திருக்கலாம். நமது முந்தைய கால காமிக்ஸ் ரசனை அவ்வாறே பார்க்கபட்டு விட்டது, அதனாலயே கோடுபோட்ட ஆடைகள். இப்போதைய வாசகர் ரசனை மாறிவிட்டது என்பதை தெரிந்துள்ள , நிறைய காமிக்கான்கள் பார்த்துவிட்ட ஆசிரியர் இனி இதுபோன்ற கத்திரி??( அது என்ன கத்திரி போட்டுட்டார்?, அரைகுறை சீன்களை போர்த்திவிடுகிறார்! :)) சீன்களை வைக்கமாட்டார். அதற்கு சாட்சி லார்கோவில் வரும் xxxadult தியேட்டர் வளாக காட்சிகள்(ஆனால்-இங்கே கவனிக்கவேண்டியது, மர்லின் ஆடையை கழட்டும் ஓவியத்தில் அவளுக்கு ஆடை அணிவிக்கப்பட்டுள்ளது., அதே பக்கத்தில் வரும் ஓவியந்தான் அதுவும். ஸோ, ஆசிரியர், நமது ரசனைகளையும், கலாசாரத்தையும் ஒரே சமநிலையில் எடுத்து செல்கிறார். எனவே பெண்கள், குழந்தைகளுக்காக இப்படி செய்கிறார் என்பதெல்லாம் இல்லை. அப்படி அது உண்மையாக இருப்பின் லார்கோ வெய்னே, வரவிருக்கும் கிராபிக் நாவல்களையோ அவர் தேர்தெடுத்திருக்கவே முடியாது.

    ReplyDelete
  99. hmm.. Largo winch super... Tiger as usual super but we have to wait for the remaining parts..(Instead of putting two parts we should have finished one story here...Wayne Shelton... started good...Jill Jorden okies...Biggest disappointment is Chik Bill...not expecting this kind of story in this special..(may be thirusti pottu..vera enna solla...ithu varaikkum chik bill padichatula comedy kammia irukura kathai...)
    Madasti before action started..ended...Mayavi...16 pagesla avarala enna panna mudiyumo panni irukkaruuu...
    PS: These are my own assessment of this NBS...

    ReplyDelete
  100. எனக்கு NBS சென்ற வெள்ளிக்கிழமையே கிடைத்து விட்டது....[ நண்பர் புனித சாத்தான் வயிறு புகையும் வாசம் வருகிறது ]108 திவ்ய தேசயாத்திரை செல்வதால் முழுமையாக படிக்க முடியவில்லை...... நேற்று இரவு வீடு திரும்பியவுடன் படிக்க ஆரம்பித்துவிட்டேன்........


    புத்த‌கம் பார்த்த‌வுடன் மனதை கொள்ளைகொண்டது..........


    லார்கோ அருமை.......சிக் பில் அருமை......

    மற்றவை படித்து முடித்தவுடன்.....

    ReplyDelete
  101. old comics available is reduced..if we see the last year available books and this year it reduced more...it is showing people started buying comics...

    ReplyDelete
  102. நண்பர்களே அன்று காமிக்ஸ் படித்த சிறுவர்கள் தாம் இன்றைய பெரியவர்களாகிய நாம். நமது ரசனைக்கு ஏற்ப படிக்கவேண்டுமானால் அதற்க்கு எத்தனையோ புத்தகங்கள் இருக்கின்றன. இது கண்யமான காமிக்ஸ். ஏன் மறைத்தீர்கள் அதனாலென்ன, ஏன் டச் அப் செய்தீர்கள்- என்ற கேள்வியே எனக்கு பிடிக்கவில்லை. எத்தனை பேர் கண்ணியமில்லாத காமிக்ஸை அவர்களுடைய அம்மாவிற்கும், மனைவிக்கும், மகளுக்கும் கொடுப்பீர்கள். எங்கே இதற்க்கு சப்போர்ட் செய்பவர்கள் லார்கோ விஞ்ச், மாடஸ்டி போன்ற வெளிநாட்டு காமிக்ஸ்களை எந்த சீனும் மறைக்காமல் கொடுங்கள் பார்க்கலாம் ... அவ்வளவுதான் அதன் பிறகு உங்கள் வீட்டில் எந்த காமிக்ஸ்ம் இருக்காது. பெண்களும், குழந்தைகளும், பெரியவர்களும் படிக்கிறார்கள் அதை கெடுத்து விடாதீர்கள். நீங்கள் சொல்வது போல் TV ல் காட்டுகிறார்கள் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அசிங்கமான சீன் வரும்பொழுது ஒருவருக்கொருவர் தர்மசங்கடமாக முகத்தை திருப்பிக்கொள்கிறோமா இல்லையா அதேபோல் அசிங்கமான படத்தை போட்டு பெண்களை பாருங்கள் என்று சொல்கிறோமா?. இல்லையே. நண்பர்களே அவர்களாக தெரிந்து கொள்வது வேறு-நாமாக கொடுப்பது வேறு. நாம் ஒரு பொறுப்புள்ள குடும்பத்தலைவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. இலை மறை, காய் மறை அவர்கள் தெரிந்து கொள்ளட்டும் நாமாக தெரியவைக்கக்கூடது காமிக்ஸ் மூலமாக. எனக்கு தெரிந்தவரை எங்கள் வீட்டில் காமிக்ஸ் எல்லோரும் படிப்பார்கள் அதில் பெரியவர்களும், பெண்களும் அடக்கம். நமது காமிக்ஸ் என்பது பொது சொத்து. அனைவராலும் விரும்பப்படுவது. அசிங்கங்கள் தான் இப்பொழுது நாடு முழுவதும் பரவிக்கிடக்கிறதே ....ஐயா எனக்குதெரிந்தவரை-வார இதழ், மாத இதழ், சினிமா, டிவி, நெட், விளம்பரம், உடை அனைத்திலும் அசிங்கங்கள் உள்ளன இல்லை என்று சொல்லவில்லை கமிக்ஸையும் அதற்குள் இழுத்துவிடுவானேன். நமது காமிக்ஸ் கண்ணியமாக இருந்துவிட்டு போகட்டுமே ...அனைவராலும் விரும்பப்படட்டுமே ..நம் வீடு நன்றாக இருக்கவேண்டும் என்றுதானே நினைக்கிறோம் எக்கேடோ கெட்டு போகட்டும் என்று நினைப்பதில்லையே. காமிக்ஸ் என்பதும் நம் வீடுதான் . நண்பர்களே நான் சொல்வது பிடிக்கவில்லை என்றல் மறந்து விடுங்கள் திட்ட வேண்டாம்...விஜயனுக்கு ஒரு நன்றி கலந்த வணக்கம் NBS பொறுத்தவரை.

    ReplyDelete
    Replies
    1. சங்கடம்தான் !என்ன சொல்ல !................காலத்தின் கையில் தீர்ப்பு உள்ளது .....வேறென்ன சொல்ல

      Delete
    2. லை கமிக்ஸையும் அதற்குள் இழுத்துவிடுவானேன். நமது காமிக்ஸ் கண்ணியமாக இருந்துவிட்டு போகட்டுமே ...அனைவராலும் விரும்பப்படட்டுமே ..நம் வீடு நன்றாக இருக்கவேண்டும் என்றுதானே நினைக்கிறோம் எக்கேடோ கெட்டு போகட்டும் என்று நினைப்பதில்லையே. காமிக்ஸ் என்பதும் நம் வீடுதான் -------> 100-ல் ஒரு வார்த்தை!! அருமையாக சொனிர்கள்!! உண்மை!!

      Delete
    3. என் கருத்தை ஆமோதித்த உங்களுக்கு ஏன் நன்றிகள்

      Delete
  103. ஜில் ஜோர்டான் ஜில்லென்ற வண்ணகலவை ,வண்ணங்கள் அழகை கூட்ட அதை பார்த்து கொண்டிருந்தாலே போதும் என்ற நிலையில் ,கதை விறுவிறுப்புடன் ,காமெடி கலந்து நகருகிறது ! அட்டகாசமான வில்லத்தனம் !இது வரை நான் படித்த கதைகள் அனைத்தும் அற்புதம் !அட்டகாசமான தேர்வுகள் ,ஆசிரியருக்கு நன்றி !இனி மாடஸ்டி,டைகரின் ஒரு கத்துடன் லார்கோ காத்து கொண்டிருக்கிறார்கள் !

    ReplyDelete
  104. எனக்கு இன்னும் டெக்ஸ் கதை வந்து சேரவே இல்லையே சார் !

    ReplyDelete
    Replies
    1. 19 என்று கூறினார்கள் !முன்பே நியாபகபடுத்துவோமே என்று .....

      Delete
    2. ஹ..ஹ..ஹா... :)
      கலக்குறீங்க ஸ்டீல் க்ளா!
      It reminds... “யாரோ தேங்காய்ல பாம் வெச்சுட்டாளாம்” காமெடி..

      Delete
  105. எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே!
    அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பிலே!

    அவ்வளவு தானா வாசகர்களே உங்களின்
    வீறுகொண்ட எதிர்ப்பும், மாறுபட்ட கண்ணோட்டமும்?

    நேரமின்மை எமக்கு மிகப்பெரிய துன்பத்தைக் கொடுப்பதால் சில நேரங்களில் அல்லது சில நாட்கள் இந்த ப்ளாக் ஐ பார்க்க அல்லது படிக்க கூட முடிவதில்லை! உங்களுக்கான பதிலை இன்று இரவு நடு ஜாமத்திற்குள் பதிவேற்ற முயற்சிக்கிறேன்! அதற்குமுன் தங்களால் முடிந்த அளவு தங்களின் வலுவான கருத்தை தங்கள் சார்பாக பதிக்க முடியுமா? ஏனெனில் இதில் சிறிதும் வலுவில்லை! அதனால் தாங்கள் பதிந்ததில் சற்றும் பயனில்லை!

    உனக்கேன் இவ்வளவு அக்கறை !
    உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை !
    என்று உங்கள் உள் மனது கேட்பது எனக்கு புரியாமலில்லை!

    ஏனெனில் நாங்கள் இன்னும் ஆசிரியர் விஜயனின் தமிழ் காமிக்ஸ் படிக்கும்,
    தமிழ் பண்பாடு மறக்காத சாதாரண வாசகர்கள் என்பதால் தான்! எங்களுக்கு தெரிந்ததெல்லாம்

    1. தாயை சிறந்ததோர் கோயிலுமில்லை!
    2. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!
    3. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்!

    என்பதாய் தாய், தந்தை, குரு, இறைவன் என்ற வரிசை மட்டுமே !
    அதனால் எங்கள் மக்கள் செல்வம் மீது எங்களுக்கு மிகுந்த அக்கறை!
    கனியிருக்க காயை அவர்களுக்கு சுட்டிக்காட்டவோ, வாழ்க்கையாகவோ உணர்த்தமாட்டோம்!

    இது உங்களுக்கான வெளிப்படையான சவால்!
    முடிந்தால் கண்ணியம் தவறாமல் வென்று பாருங்கள்!

    ReplyDelete
  106. டைகர்: ஜிம்மி காவல் பணியில் இருக்கும் போது இனி நீ குடிக்கக்கூடாது!

    ஜிம்மி : டேய் செல்ல பாஸ்! மீண்டும் ஒருமுறை
    உனக்கு 'ஆப்படிக்கும்' நேரம் வரும், அதனால் நன்றி, வணக்கம்!

    வாசகர்களே! இது எப்படி உங்களுக்கு ஒருவித வெறுப்பை
    தருகிறதோ அதுபோல் எனக்கும் அந்த வார்த்தை வெறுப்பூட்டுகிறது!
    அதனால் இங்கே மட்டுமாவது தயவுசெய்து கண்ணியமாக பதிவிடுங்கள் வாசக நண்பர்களே!

    ReplyDelete
  107. ஆப்பு ஒரு முக்கோண வடிவிலான கருவி. எடுத்துச் செல்லக்கூடிய ஒரு சாய்தளம் ஆகிய இது எளிய பொறி வகைகளுள் ஒன்று. இது பொருள்களைப் பிரிப்பதற்கும், ஒரு பொருளை இரு பகுதிகளாகப் பிரிப்பதற்கும், பொருளொன்றை உயர்த்துவதற்கும், ஒரு பொருளைக் குறிப்பிட்ட இடத்தில் தாங்கி வைத்திருப்பதற்கும் ஆப்பு பயன்படுத்தப்படுகிறது.

    உதாரண வாக்கியம்:
    சர்ச்சைக்குரிய விவாதங்களில் நீண்ட நேரம் ஈடுபட்டால் அது உங்களை ஆப்பு அடித்தாற் போன்று நகரவிடாமல் செய்து, உங்கள் நேரத்தை வீணடிக்கும்!

    ReplyDelete
  108. அந்த வார்த்தைக்கு அர்த்தம் மருவி அனர்த்தமாகி விட்டதால் நடைமுறையில் அதுபோல் நாம் உணர்வதில்லை! இதையும் மீறி தங்களுக்கு அந்த வார்த்தை மீது பிடிமானம் இருந்தால் ஆசிரியரின் காமிக்ஸ் வசனத்தில், இதை ஒன்றாக சேர்க்க சொல்லி உங்களால் இங்கே முன்மொழிய முடியுமா!

    ReplyDelete
    Replies
    1. அர்த்தமோ அனர்த்தமோ அது படிப்பவர் கண்ணோட்டத்தில்தான் இருக்கிறது! நான் மேற்சொன்ன ஆப்பு உதாரண அர்த்தத்தில்தான் அந்த சொல்லை சொன்னேன்! நமது காமிக்ஸில் பொருத்தமான ஒரு இடத்தில் அத்தகைய வசனம் வருமானால் அதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை!

      Delete
    2. இடம் பொறுத்தே வார்த்தைகளின் அர்த்தம் மாறுபடுகிறது!
      நீரின் அர்த்தம் இடம் பொறுத்தே குட்டை, குளம், கிணறு, ஏரி, ஆறு, அணை, அருவி, மழை, கானல், கடல்
      என மாறுபடுகிறது ! அதுபோல் உங்களின் வார்த்தை இங்கே இந்த வலைப்பூவில் அனர்த்தமாகவே தோன்றுகிறது!

      இதுபோல் 10 சதவிதம் களைகளான விதிவிலக்குகளை இந்ததளத்தில்
      உதாரணமாக எடுத்துக்கொள்வது நம் விசாலத்தன்மையை குறைப்பது போன்ற ஒன்றே ஆகும்!

      Delete
    3. ஐந்து சதவிகிதமோ, பத்து சதவிகிதமோ, குளமோ, குட்டையோ, அர்த்தமோ, அனர்த்தமோ - அது உங்களின் பார்வை! தவறான அர்த்தம் ஏதுமின்றி அந்த சொல்லை நான் உபயோகித்து இருப்பதால் இது குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை. உங்கள் கருத்துக்கு நன்றி!

      Delete
  109. Dear Sir, pls don't stop publishing spider, archie and mayavi books. They are all time favorite for many people like me who were in elementary school in mid 80's. Would love to see them all back in color.

    I am new to blogging - yet to learn typing in thamizh using computer.

    ReplyDelete