Powered By Blogger

Friday, January 11, 2013

கனவுகள் மெய்ப்படும் போது...!


நண்பர்களே,

வணக்கம். ஒரு 40 ஆண்டுப் பயணத்தில் ஒரு முக்கிய வழித்தடத்தை எட்டிடும் தருணம் இன்று புலர்கிறது !

சென்னையின் வீதிகளில் குதிரை வண்டிகளும், சிகப்பு நிற டவுன் பஸ்களும், திரை அரங்குகளில் கறுப்பு-வெள்ளைத் திரைப்படங்களும் ; வானளாவிய கட்டிடம் என்று சொல்லிக் கொள்ள ஒண்டிக் கட்டையாய் LIC பில்டிங்கும் மாத்திரமே இருந்திட்டதொரு புராதன யுகத்தில் (!!) ஒரு உலோகக் கர மனிதனின் தோள்களில் பத்தணா விலையில் துவங்கியதொரு சவாரி இது ! (ஒரு அணா எவ்வளவென்று இன்றைய நம் நண்பர்களில் எத்தனை பேருக்குப் பரிச்சயம் ?!!)

தினத்தந்தியின் உட்பக்க சிந்துபாத்தைத் தாண்டியும் காமிக்ஸ் எனும் ஒரு மந்திர லோகம் உண்டென்பதை என் தந்தை உணர்ந்திட்ட அந்த inspired பொழுதுகளை  14,600 நாட்களுக்குப் பின்னே  கொண்டாடிடும் இந்தத் தருணம் நாம் அனைவருமே கடந்த சில மாதங்களாய் எதிர்பார்த்து நின்றதொரு நொடி தானே !மைக் பிடித்துப் பேசிடுவதை விடவும் சில சந்தர்ப்பங்களில் மௌனத்திற்கு வலிமை ஜாஸ்தி என்பதால் இந்தப் பதிவினில் 'வள வள' வென்று நான் எழுதிடல் அவசியமிராது என்று தோன்றியது...! தவிரவும், NBS -ன்  சந்திலும், பொந்திலும் நான் பக்கம் பக்கமாய் எழுதியிருப்பேன் என்பதை    நீங்கள் நிச்சயம் யூகம் செய்திருப்பீர்கள் ! So - இதற்கு மேலும் உங்களை போட்டுத் தாக்கிடாமல் ; காக்க வைத்திடாமல் - இதோ NBS -ன் அட்டைப்பட டிசைன்!


NBS இதழினை உருவகப்படுத்தத் துவங்கிய போது அட்டையினில் யாரைப் போடுவதென்பது முதலில் எழுந்திட்ட கேள்வி..! சமீப நாட்கள் வரை - அதாவது லார்கோவின் பரிச்சயம் நமக்குக் கிட்டிடும் வரை - டைகர் தான் நமது undisputed ஹீரோ என்பதில் யாருக்கும் ஐயம் இருந்திருக்க இயலாது. தவிர லார்கோவின் சாகசங்கள் நமது NBS-ன் டாப் கதைகளுள் தலையாயன என்பதால் லார்கோவை முன்னட்டையினில் போடும் சபலம் நிறையவே இருந்தது..! ஆனால் லார்கோவின் கதைகளின் ஒரிஜினல் பதிப்புகளிலும் சரி ; உலகளவில் வேற்று மொழிகளில் வந்துள்ள லார்கோ தொடர்களிலும் சரி - இது வரை ஒரு அசாத்தியமான அட்டைபடம் என்று வடிவமைக்கப்பட்டதே இல்லை ! 'தேமே' என்று நாற்காலியில் உட்கார்ந்திருப்பதும், அப்பப்போ கோட்டும், சூட்டும் போட்ட வண்ணம் விறைப்பாய்  நிற்பதைத் தாண்டி லார்கோ அதிகம் மெனக்கெடுவதில்லை ! So தரமாய் ஒரு reference கிட்டிடுவது சிரமமாய் இருந்தது. தவிரவும் அந்த ultra-modern முகத்தை ஓவியத்தில் தத்ரூபமாய்க் கொணர்வது மிகச் சிரமம் என்பது மண்டைக்கு உறைத்தது! குளிக்காமல் ,சவரம் செய்யாமல் சண்டியர்த்தனம் செய்யும் இந்த மேற்கத்தியக் கௌ-பாய்கள் இதற்கு நேர் மாறு ! விதம் விதமாய் போஸ் கொடுப்பது ; ஆக்சனில் அதகளம் செய்வது என்று இவர்கள் ஒரு ஓவியரின் கனவு நாயகர்களாகவே இருப்பது வழக்கம் ! So - சில நாட்களின் சிந்தனைக்குப் பின்னே முன்னட்டையினில் சோலோவாக டைகரை சித்தரிப்பது என்று தீர்மானித்தேன்.

'டைகர் ஒ.கே.....ஆனால் ஆசாமியை என்ன செய்ய வைப்பது அட்டையில் ? ' என்பது அடுத்து எழுந்த கேள்வி ! இதற்கு விடை காண நிறையவே நாட்களும், பொறுமையான தேடல்களும் அவசியமானது ! எங்களது reference library -ன் பக்கங்களை விரல் ரேகைகள் தேயப்  புரட்டோ புரட்டென்று புரட்டினேன். கண்ணில் படும் காமிக்ஸ் ஒவ்வொன்றின் அட்டைப்படத்தையும் NBS -க்கு கற்பனையில் ராப்பராக   உருவகப்படுத்திட முனைந்தேன். இறுதியில் 3 வெவ்வேறு வித டிசைன்களைத் தேர்வு செய்து - அம்மூன்றையுமே நம் ஓவியரைக் கொண்டு சித்திரம் தீட்டச் செய்தேன் ! கிட்டத்தட்ட ஒரு மாத தொணத் தொணப்பின் முடிவினில் 3 ஓவியங்கள் என் மேஜைக்கு வந்து சேர்ந்தன ! மூன்றும் தத்தம் பாணிகளில் அழகாகவே தோன்றியது அடுத்த சிக்கலை ஏற்படுத்தியது. அந்த மூன்றில் ஒன்றைத் தேர்வு செய்திட மேற்கொண்டு ஒரு வாரம் எடுத்துக் கொண்டேன் ! இறுதியாக சாட்டையைச் சுழற்றும் 'எங்க வீட்டுப் பிள்ளை MGR ' பாணியிலான இந்த டிசைன் எனது இறுதித் தேர்வாய் அமைந்தது. இது தான் ultimate டிசைன் என்றோ ; இதனைத் தொனிக்க இயலாதென்றோ நான் மார் தட்டிடப் போவதில்லை..but எனக்கு டைகரின் அந்த கம்பீரமான தோரணை ரொம்பவே impressive ஆகத் தோன்றியது ! தவிர இம்முறை பச்சை பான்ட் ; ஆரஞ்ச் சட்டை என்று ராமராஜன் பாணியிலான வண்ணங்களைத் தவிர்க்கவும் ; பெயர் - எழுத்துக்களின் placement -ல் ஒரு சுலபத்தன்மையும் மேலோங்கி நிற்க வேண்டுமென்று பிரியப்பட்டேன்..! கண்ணை அதிகம் உறுத்திடக் கூடாது   என்பதே பிரதான நோக்கமாய் !


பின்னட்டையில் இதர பிரதான நாயகர்களைக் கொணர்வதென்று தீர்மானித்திட அதிக சிந்தனை அவசியப்படவில்லை ! திடுமென நண்பர் XIII -க்கு கல்த்தா கொடுத்து விட்டு புது முகம் வேய்ன் ஷெல்டன் உள்ளே புகுவதற்கு முன்பு - பின்னட்டையில் லார்கோ ; XIII + மாயாவி ' என்றே தீர்மானித்திருந்தேன்.  லார்கோவிற்கு திருப்தியாய் ஒரு reference தேடித் தருவதற்குள் நாக்குத் தொங்காத குறை தான் எனக்கு ! ஒரு வழியாய் ஒரு டிசைன் தேற்றிக் கொடுத்து அதனை தனிப்பட்டதொரு பெயிண்டிங் போடச் செய்தேன். அதன் பின்னே மாயாவியும், XIII -ம் இணைந்திருப்பது போல் இன்னொரு பெயிண்டிங் !  லார்கோவின் டிசைன் பிரமாதமாய் அமைந்திட்டது ; ஆனால் மாயாவி & XIII - ல் எனக்கு சிறிதும் திருப்தி கிட்டிடவில்லை. அதற்குள் கதையினில் மாற்றம் என்றதால்,  வேய்ன் ஷெல்டன் தனியாய் நிற்கும் இன்னொரு பெயிண்டிங் தயார் ஆனது ! இறுதியில் லார்கோ + ஷெல்டன் + கிட் ஆர்ட்டின் என்றதொரு combo எனக்கு சரியென்று பட, பின்னட்டை தயாரானது ! So முன் + பின் = மொத்தம் ஆறு பெயிண்டிங்குகளின் end product தான் நமது NBS ராப்பர் ! இது தவிர அச்சிலும்,பின்னணியிலும்  சிற்சில நகாசு வேலைகள் செய்துள்ளோம்; இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும் போது அவை புலப்படும் ! எங்களின் இந்த அந்தர் பல்டிகள் ; never before முயற்சிகள் உங்களுக்குப் பிடித்திருக்குமா என்பது தான் million dollar question ! Fingers crossed....!!

'இரும்புக்கை மாயாவியை அட்டையினில் போடலியா ?'  என்ற கேள்வியினை எழுப்பிடும் நண்பர்கள் நிச்சயம் இருப்பர் என்பது நான் அறியாதது அல்ல  ; ஆனால் யதார்த்தத்தை எத்தனை காலம் தான் பரண் ஏற்றிடல் சாத்தியமாகும் ? நம் நண்பர் ; பல காலத்து சாதனை வீரர் ; evergreen மாயாவி - ஒய்வு நாடும் வேளை வந்து விட்டதென்பதை நாம் உணர்ந்திடுவது சிரமமானதொரு காரியம் அல்லவே ?! சின்னதாய் ஒரு 16 பக்க சாகசத்தில் மாத்திரமே தலை காட்டும் நம் நண்பரை பின்னட்டையிலாவது நுழைத்திட முயற்சித்தேன்..ஆனால் அந்த டிசைன் சோபிக்கவே இல்லை !


சின்னதாய் சில வேண்டுகோள்கள் :


  1. சென்னையினில் இன்று (11-ஆம் தேதி) மாலை ஆறு மணி சுமாருக்கு தான் நமது NBS -ன் official release என்பதால், காலையிலேயே கூரியரில்  இதழ்கள் கிடைக்கப் பெற்றால் கூட, உங்களின் பொதுவான கருத்துக்களை மாத்திரம் வலையேற்றி விட்டு ; விரிவான பதிவுகளை ; ஆய்வுகளை (!!) ; பின்னூட்டங்களை மாலைக்கு மேல் வைத்துக் கொள்ளலாமே - ப்ளீஸ் ?
  2. அனைத்து முன்பதிவுகளுக்கும் அவரவர்தம் தேர்வுகளின்படி பதிவுத் தபாலில் ; STC கூரியரில் ; கூரியரில் 10-1-2013-ல் சிவகாசியிலிருந்து அனுப்பி உள்ளார்கள் ! ஒரு கத்தையாய் வந்து கிடக்கும் கூரியர் ரசீதுக் குவியலிலிருந்து உங்களது reference நம்பர்கள் தேடி எடுத்துச் சொல்லிட நம் அலுவலகத்தில் ஸ்டெல்லா மாத்திரமே உள்ளார்!சற்றே பொறுமை ப்ளீஸ்!
  3. பதிவுத் தபாலில் அனுப்பப்பட்டுள்ள பிரதிகளைத் துரிதப்படுத்திட வழிகள் ஏதும் கிடையாது ; so அவ்வகையினில் பிரதிகளைப் பெற்றிடும் நண்பர்கள் கூடுதல் பொறுமை காக்க வேண்டியது அவசியப்படலாம் !

மலையாய் வளர்ந்து நிற்கும் எதிர்பார்ப்புகள் ஒரு விதத்தில் சந்தோஷத்தையும்  ; மறுபுறம் வயிற்றினில் பட்டாம் பூச்சிகளைப் பறக்கச் செய்திடவும் காரணமாய் நிற்கின்றன ! காத்திருப்பது பாராட்டுக்களோ ; விமர்சனங்களோ  - அழகாய் ஒரு கனவு காண என்னை ஆசீர்வதித்ததற்காக  ஆண்டவனுக்கும் ; நான் கண்ட கனவை நனவாக்கப் பாடுபட்டதற்காக  நம் டீமுக்கும் நான் நன்றி சொல்லிடுவது தான் எவ்விதத்திலும் முறையாக இருக்கும் ! கடமையைச் செய்திட்டோம் ..எங்கள் சக்திக்குட்பட்ட விதத்தில் என்ற தலையாய சந்தோஷத்தோடு தூங்கச் செல்கிறேன் ! உங்களை சந்திக்கும் ஆவலோடு மாலை ஆறு மணிக்குக் காத்திருப்போம் நமது ஸ்டாலில் ! Please do drop in folks !




இதோ - NBS இதழோடு உங்களுக்கு வரக் காத்திருக்கும் புக் மார்க் + 2013-ன் முன்னோட்டங்கள் அடங்கிய 16 பக்க இதழின் முதல் பக்கம்!

317 comments:

  1. அட்டைப்படம் கலக்கல்! அற்புதம். வாழ்த்துக்கள் சார். 'முத்து'விஜயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்; முத்துவிற்கு 40ஆவது ஆண்டு நிறைவு வாழ்த்துக்கள். வெளியீடு சிறப்புற அமைய சிறப்பான வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. Podiyan : நன்றிகள் !

      Delete
    2. sir night la thoongurathe illaiyaa... 01:31 ku comment.. Rest eduthuttu ponga sir book stallukku..

      Delete
  2. Replies
    1. மஞ்சள் சட்டை மாவீரன் : ஒரு கிலோ சர்க்கரை காத்துள்ளது - உங்கள் கணிப்பு நிஜமாகிட்டால் !

      Delete
  3. Cover art is colorful and attractive. I can't wait to flip. Congrats Sir and please keep going.

    ReplyDelete
  4. என்னவென்று தெரியவில்லை ? நான் சாதித்ததை போல் எனக்கு பெருமையாக இருக்கின்றது.
    '' இந்த நாள் இனிய நாள்'' என்ற வாசகம் இன்றைய தினத்திற்கு மிகப்பொருத்தமானது.

    ReplyDelete
    Replies
    1. Meeraan : சந்தேகமே வேண்டாம்...இந்த முயற்சியில் நம் ஒவ்வொருவரின் பங்களிப்பும் ஏதோ ஒரு விதத்தில் கலந்துள்ளது ! உங்கள் பெருமிதம் நியாயமானதே !

      Delete
  5. அருமை....அட்டகாசம்...அதகளம்

    ReplyDelete
    Replies
    1. அருமை....அட்டகாசம்...அதகளம் அதை ஒரு கோடியால் பெருக்கிகோங்க! ஹா ஹா ஹா சந்தோசம் தாங்கலை தலைவா சிங்கத்தில் நீங்க ராஜ சிங்கம் அய்யா!

      Delete
  6. வாழ்த்துக்கள் அனைத்தும் உங்களுக்கும், உங்கள் தந்தையாருக்கும்.

    நிச்சயபடுத்தப்பட்ட வெற்றியை நோக்கி NBS.
    கருப்பு வெள்ளையில் ஆரம்பித்த சகாப்தத்திற்கு வண்ணத்தில் விழா!
    மகிழ்வான மிக மிக நெகிழ்வான தருணங்கள்.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் சார்!!! படித்து விட்டு வருகிறேன்! :)

    ReplyDelete
    Replies
    1. //NBS -ன் சந்திலும், பொந்திலும் நான் பக்கம் பக்கமாய் எழுதியிருப்பேன் என்பதை நீங்கள் நிச்சயம் யூகம் செய்திருப்பீர்கள்//
      ஹா ஹா ஹா! :)

      இம்முறை அற்புதமான Font தேர்வு! பின்னட்டை கண்ணைக் கவர்கிறது, லார்கோ படு ஸ்மார்ட்டாக தெரிகிறார்!!! பற்றி எரியும் 'டிராகன் வால்' போன்று தோற்றமளிக்கும் சாட்டையை டைகர் அநியாயத்துக்கு சுழற்றும் அந்த 'எங்க வீட்டுப் பிள்ளை' போஸ், டைகர் வெறியர்களை குஷிப்படுத்தும் என நினைக்கிறேன்! :) :) :)

      சென்னை புத்தக விழாவில் நமது காமிக்ஸ் விற்பனை சிறப்பாய் அமைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சார்... NBS = Never Before Sales!!! :) குறித்த நேரத்தில் NBS இதழை தயார் செய்து முடித்த உங்கள் டீமின் அசுர உழைப்புக்கு பிரத்தியேக வாழ்த்துக்கள்!

      Delete
    2. //டைகர் வெறியர்களை குஷிப்படுத்தும் என நினைக்கிறேன்//

      உண்மை ... உண்மை... உண்மையை தவிர வேறொன்றுமில்லை கார்த்திக் :)

      Delete
    3. @ திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன்:
      நான் ஒரு டைகர் வெறியன் அல்ல என்பதையும் இங்கே சொல்லிக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்! ;) :) :)

      Delete
  8. Dear Editor,

    வாழ்த்துக்கள்! முன் அட்டை பிரமாதம் Looks great

    Good start for 2013.

    ReplyDelete
  9. அப்படியே +6 சந்தா தொகை பற்றியஅறிவிப்பு புத்தக திருவிழாவில் அறிவித்தால் அருமையாக இருக்கும்

    ReplyDelete
  10. கதைகள் உங்கள் சாய்ஸ் காமிக்ஸ் மட்டுமே எங்கள் சாய்ஸ்

    ReplyDelete
  11. அருமையான அட்டைப்படம். சூப்பர் Sir! இன்று மாலை நண்பர் கலீல், நான் மற்றும் சில நண்பர்களும் இந்த பொக்கிஷத்தை பெற்றுக்கொள்ள வருகிறோம். NBS அட்டகாசமான வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. அட்டைப் படங்கள் மிகப் பிரமாதம். இந்த முறை கலர் combination கரக்ட்டாக பளிச்சென்று உள்ளது.
    நிச்சியம் NBS ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என்பதில் சந்தேகமே இல்லை. அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  13. எனக்கு ஒரு கனவு இருந்தது!
    "வேய்ன் ஷெல்டன்" தமிழுக்கு வரவேண்டும் என்று கனவு கண்டேன்!
    இன்று நிஜமாகி விட்டது!
    இன்னும் சில கனவுகள் உள்ளன.....

    "கனவுகள்
    மெய்ப்படும்போது" உலக சந்தோஷம்.....!!!

    நமது காமிக்ஸ் குடும்பத்துக்கு வாழ்த்துக்கள் சார்!

    ReplyDelete
  14. கனவு மெய்பட்டதற்கு இனிய வாழ்த்துக்கள்
    ஆசிரியர்,லயன் டீம் மற்றும் Lion universe நண்பர்கள் அனைவர்க்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
    இது ஒரு விபத்து மாதிரி தற்செயலான Never Before அனுபவம்.ஐந்து மணிக்கு செல்லவிருபதால் pizza படம் பார்த்து விட்டு இணையத்தில் சற்று உலவிய போது எதிர்பாராமல் ஏட்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீள்வது சிறிது கடினமாக இருந்தது.அதன் பாதிப்பு வார்த்தைகளில் தென்பட்டால் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
    தங்கலால் மட்டும் முடிந்த ஆனந்தத்தில் திக்கு முகாடவைக்கும் இவ்வாறான கொலவெறி தாக்குதல் நிச்சயம் வேறெந்த மொழியிலும் காண கிடைக்கும் என்று நம்பவில்லை.ஏனெனில் எந்த ஒரு சொந்தமாக கதை தயாரிக்கும் ,அல்லது மொழி பெயர்க்கும் நிறுவனமும் தனி ஒரு ஹீரோவை வைத்து ஸ்பெஷல் என அல்லது double size என வெளியிடுவார்களே தவிர பல்வேறு ரக பட்ட கதைகள் கொண்ட பாரிய ஸ்பெஷல் வெளியிட்டு இருப்பர் என நான் நம்பவில்லை.
    கொலவெறி என்றதும் பழைய சிந்தனை தோன்றுகிறது.ஒருமுறை இந்த முக்கிய தருணத்தை உலகில் உள்ள வாசகர் அனைவரும் கண்டு ரசிக NBS -ன் official release சும்மா செல் போன் அல்லது டிஜிட்டல் காமேராவால் வீடியோ எடுத்து you -tube இல்or வேறெதிலோ போட்டு பாருங்களேன்.Tc

    ReplyDelete
    Replies
    1. நல்ல ஐடியா.....யாரேனும் NBS release வீடியோவை Youtubeல் ஏற்றி இங்கு URL தாருங்களேன் ப்ளீஸ்.

      Delete
    2. பொங்கல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் நண்பரே! வெங்கட் சூப்பரா சொல்லி இருக்கீங்க!

      Delete
    3. namba comics TV newla vanthalum nalla irukkum...when they are talking about the book exhibition

      Delete
  15. Looks great best wishes for upcoming journey to our comics

    ReplyDelete
  16. Replies
    1. மின்னல் சாட்டையை இடது கையில் சுற்றிய படி டைகர் பிச்சு உதறுகிறார் இருளை கிழித்த படி ....வெற்றி முழக்கமிட்டவாறு பிஸ்டல் முழங்க அற்புதமான கற்பனை !
      நான் தேடியது இரும்பு கையையே நீங்களே கூறி விட்டீர்கள் தாவி செல்கிறேன் !
      பின்னட்டை அசத்துகிறது அற்புதமாய் மின்னலை கண்களில் பாய்ச்சிய படி லார்கோ ,எங்களை நோக்கி தாவி வரும் வெய்னே ,ஆர்ட்டின் அனைத்துமே அற்புதமான ஹார்ட்டிலிருந்து வெளிப்படும் ஆர்ட்டின் அற்புதமே .......
      மொத்தத்தில் முழுமையான அட்டை படம் !
      ட்ரைலெர்கள் கொண்ட அட்டைபடம் அசத்தல் !
      தமிழ் காமிக்ஸ் உலகின் இருளை கிளி கிளியென கிழித்து விட்டீர்கள் அட்டை படங்களால் !காத்திருக்க இயலாமல் காத்து கிடக்கிறேன் புத்தகத்தை கைப்பற்றும் அந்த பொன்னான தருனத்திர்க்காக !
      பொன்னொளி வீசிடும் ஆண்டாக நம் அனைவர் முன்பும் இன்றைய நாளின் துவக்கம் புலரவிருப்பது உறுதி எனும் நிலையில், மாபெரும் வெற்றியை இந்த புத்தகம் அளித்து தங்களை மேலும் உற்ச்சாக கடலில் திளைக்க வைக்க வேண்டும் என இறைவனை மனம் முழுவதும் நிறைத்து வேண்டி கொண்டு இந்த பதிவை இங்கே இடுகிறேன் !
      தமிழ் காமிக்ஸ் இருள் அகலட்டும் !nbs வெற்றி காலம் முழுதும் நிலைக்கட்டும் !
      வாழ்க வளர்க சிங்கத்தின் முத்துவின் புகழ் !

      Delete
    2. நினைத்ததை நடத்தியே முடிப்ப/ததவன் நீ நீ நீ .....துணிச்சலை மனத்திலே வளர்த்தவன் நீ நீ நீ...

      Delete
    3. வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெறித்தனமான வெற்றி...வெல்லட்டும் காலத்தை இந்த வெற்றி நிலைத்தபடி .....

      Delete
    4. அட்டை பட டிசைனை தயாரித்ததை கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள்,அந்த ஓவியங்கள் ஆறயும் இங்கே படைக்கலாமே !

      Delete
    5. காத்து கிடப்பதில் சுகம் உண்டு காக்க வைப்பதில் இன்பம் உண்டு ....

      Delete
  17. அமர்களப்படுத்தும் அட்டைப்படம் !
    இன்று நடைபெறும் இதழ் வெளியீட்டு விழா எல்லாம் வல்ல இறைவனின் அருளால் சிறப்புற வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஸ்டாலின் ஜி! கலக்குங்க!

      Delete
  18. அட்டைப்படம் தூள்! சூப்பரோ சூப்பர்! குறிப்பாக, பின் அட்டையின் லார்கோ ரொம்பவே வசீகரிக்கிறார். மின்னும் அந்தக் கண்களும், வசீகரமான அந்தப் பார்வையும் அட்டகாசம்!

    இன்று துவங்கும் புத்தகத் திருவிழா நமக்கு சூப்பர்-டூப்பர் வெற்றியாக அமைந்திட இவ்வுலகின் எல்லா சக்திகளையும் வேண்டிக் கொள்கிறேன்.

    NBS வெளியீட்டு விழாவில் நேரில் வந்து கலந்துகொள்ள முடிவில்லையென்றாலும் என் நினைவுகளை நம் ஸ்டால்களில் உலவவிட்டு, NBSஐ கட்டி அணைத்தபடி இங்கே மரக்கட்டையாய் கிடப்பேன்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க மியாவி, பேர் மாத்தப் போன பூனை திரும்பி வந்துருச்சு போல?! ;)

      //குறிப்பாக, பின் அட்டையின் லார்கோ ரொம்பவே வசீகரிக்கிறார். மின்னும் அந்தக் கண்களும், வசீகரமான அந்தப் பார்வையும் அட்டகாசம்!//
      இது பேச்சு! :)

      Delete
    2. @ Karthik:

      'மியாவி'னு பேர் வச்சதே நீங்கதானே! நீங்க வச்ச பேர் எங்கே display ஆகியிருக்கு என்பதை nbs கைக்கு வந்ததும் புரிஞ்சுக்குவீங்க! :)

      Delete
  19. 5 மணி ஆகியும் இன்னும் கொரியர் ஆபிஸ் திறக்கலையே?!  அப்படி என்ன தூக்கம் வேண்டிக்கெடக்கு? பொறுப்பில்லாத பசங்க. கர்...புர்...

    ReplyDelete
    Replies
    1. இங்க நாங்க ஆறு மணிக்கு பொய் பிடிப்போமுள்ள !

      Delete
    2. ஸ்டீல் க்ளா,

      NBSஐக் கைகளில் வாங்கும்போது உங்களால் குதிக்காமல், கூச்சல்போடாமலிருக்க முடியுமா? என்ன bet? :)

      Delete
    3. முடியும் !இங்கே வந்துதானே பிரிப்பேன் அவை அடக்கம் !சரி சரி !கிளம்பி விட்டேன் !

      Delete
    4. நண்பா வந்துருங்க சென்னைக்கு உங்க அன்பு தேவை!

      Delete
    5. கண்டிப்பாக நாளை வருவேன் நண்பரே ,எனது பணி ஒரே இரவில் மாறி விட்டது !இன்று வர இயலாத சூழ் நிலை !

      Delete
  20. இரும்புக்கை மாயாவியை commercial aspect க்காக compromise செய்திடாமல், அட்டைப் படத்திலிருந்து தூக்கிய நம் எடிட்டரின் எதார்த்தத்தை உணர்ந்த guts ரொம்பவே வியக்கவைக்கிறது!!!

    ReplyDelete
    Replies
    1. நான் இதை மகிழ்ச்சியுடன் வழிமொழிகிறேன்! :) இருந்தாலும் எனக்கே என்னமோ போல்தான் இருக்கிறது! :) For old times' sake, Rs.400/- என்ற சிறிய எழுத்துக்களை தாங்கிப் பிடிப்பதைப் போன்ற தோரணையில் குட்டியாய் ஒரு இரும்புக்கையை போட்டிருக்கலாமோ?!!!

      Delete
    2. @ Karthik

      வாவ்! '400ஐ தாங்கிடும் இரும்புக்கரம்' - அட்டகாசமான க்ரியேட்டிவிடி! NBSக்கு miss ஆகிடுச்சே! :(

      Delete
    3. //For old times' sake, Rs.400/- என்ற சிறிய எழுத்துக்களை தாங்கிப் பிடிப்பதைப் போன்ற தோரணையில் குட்டியாய் ஒரு இரும்புக்கையை போட்டிருக்கலாமோ?!!!
      //

      நல்ல யோசனை கார்த்திக். 40 வருடங்கள் முடிவதையும் ரூ 400 சாத்தியமானதையும் சொல்லாமல் சொன்ன மாதிரி இருந்திருக்கும்.

      Delete
    4. Karthik Somalinga-உங்கள் கையில் நிறைய "Idea" இருக்குது போல :-)

      Delete
    5. @Parani:
      ஐடியா சொல்வது, குறை சொல்வது, அறிவுரை சொல்வது - இவை எல்லாம்தான் நமக்கு கை வந்த கலை(!) ஆச்சே....!!! ;)

      btw, I've not received the book yet!

      Delete
  21. இந்திய அணி பங்கேற்கும் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியன்று இருக்கும் மன நிலையை ஒத்திருக்கிறது இப்போது என் மனநிலை!

    பதிவர்களே, நண்பர்களே, சென்னைவாசிகளே,
    புத்தகத் திருவிழாவில் நம் காமிக்ஸ் சார்ந்த அன்றாட நிகழ்வுகளை அவ்வப்போது பதிவிட்டோ, கமெண்ட்டிட்டோ என்னைப் போன்ற தூரதேச வாசகர்களை சந்தோஷப்படுத்திட வேண்டுமாய் தங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். If possible, ball-by-ball commentary please! :)

    மேற்கூறிய வேண்டுகோள் நம் எடிட்டருக்கும் பொருந்தும்! :)

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் விஜய் கலக்குங்க!

      Delete
    2. வணக்கம் சைமன் ஜி!

      உண்மையா கலக்கப்போவது சென்னைவாசிகளான நீங்கள்தான்! உங்க duty dressல் கையில் துப்பாக்கியுடன் அப்படியே நம்ம ஸ்டால் பக்கம் வந்தீங்கன்னா, NBS பின்புற அட்டையிலிருக்கும் வெய்ன் ஸெல்டனை நேரிலேயே பார்த்த மாதிரி கலக்கலா இருக்குமே! நம்ம ஸ்டாலுக்கும் ஒரு பப்ளிசிட்டி! :)

      Delete
    3. உண்மையா கலக்கப்போவது சென்னைவாசிகளான நீங்கள்தான்! உங்க duty dressல் கையில் துப்பாக்கியுடன் அப்படியே நம்ம ஸ்டால் பக்கம் வந்தீங்கன்னா, NBS பின்புற அட்டையிலிருக்கும் வெய்ன் ஸெல்டனை நேரிலேயே பார்த்த மாதிரி கலக்கலா இருக்குமே! நம்ம ஸ்டாலுக்கும் ஒரு பப்ளிசிட்டி! :)
      //

      கலக்குறீங்க விஜய்

      Delete
  22. சிலர் விடிந்தும் வெகுநேரம் தூங்கி கொண்டிருப்பார்கள்.இன்று NBS ரிலீஸ் என்பதால் விடிகாலை 7மணிக்கே எழுந்துவிட்டேன்.குளித்துவிட்டு புத்தாடை உடுத்தி சாப்பிட்டுவிட்டு கூரியர் boy -க்காக காத்திருக்க வேண்டியதுதான்.

    ReplyDelete
    Replies
    1. தீபாவளியை ஞாபகப் படுத்துகிறீர்கள். இன்று நம் எல்லோருக்கும் தீபாவளிதானே.

      Delete
    2. "saint satan" --> விடிகாலை 7மணிக்கே எழுந்துவிட்டேன். - ரொம்ப சீக்கிரமா எழுந்து விட்டிங்க போல !!

      Delete
  23. Replies
    1. வாங்க வணக்கம் கிரியார் அவர்களே!

      Delete
  24. NBS அட்டையில் வேய்ன் செல்டன் முகம் வசீகரிக்கவில்லை.என்றாலும் முழுமையாக அட்டைபடம் மிக பிரமாதமாக உள்ளதாக அடியேனின் மனதுக்கு படுகிறது.அதுசரி..........பின்னட்டையில் உள்ள லார்கோவையும் டைகரை போலவே பரட்டை தலையாக்கிவிட்டீர்களே!!!

    ReplyDelete
    Replies
    1. சாத்தான் ஜி புக்கு வாங்கிட்டிங்க போல வாழ்த்துக்கள்!

      Delete
    2. Profile கிராபிக்ஸ் ரொம்ப அதிகம்தான் புனிதரே!

      Delete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. NBS மாபெரும் வெற்றிபெற ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மனை பிரார்த்திக்கிறேன்.வாழ்க NBS !!!வெல்க NBS !!!

    ReplyDelete
  27. வாழ்க வளர்க! என்றும் நீடித்து நிலை பெற வாழ்த்துக்கள் ஜி! இன்னும் அதிகதிக புத்தகங்களை வெளியிட்டு வாசகர் ஊலகில் இன்னும் ஒரு புரட்சியை (ஏற்கனவே ஒரே புரட்சியாதான் பண்ணிகிட்டிருகிங்க) செய்ய வாழ்த்துகிறேன்! வணங்குகிறேன் ஜி!

    ReplyDelete
  28. வாங்கிட்டேன் !வாங்கிட்டேன் !! வண்டி தாமதமாகத்தான் வந்தது !முன்னட்டையை விட பின் அட்டை நேரில் அசத்தல் !

    ReplyDelete
    Replies
    1. சாமி கும்பிட்டு விட்டுதான் பிரித்தேன்!வெற்றி நம் கையில் !

      Delete
  29. from murugan,
    1 anna 8 paise.12 annas for 1 rupee.yes it was 96 paise for a rupee once.

    ReplyDelete
  30. அட்டைப்படம் சூப்பர் விஜயன் சார். இந்த இமாலய முயற்சி வெற்றி பெற்றதற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். NBS-ன் வருகையை ஆவலோடு வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  31. திரு விஜயன் அவர்களே


    நமது NBS அட்டைப்படம் பார்த்தவுடன் ஒரு நிமிடம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை ...

    // டைகர் வெறியர்களை குஷிப்படுத்தும் என நினைக்கிறேன் // -- நன்றி கார்த்திக்.

    இதுவரை வந்த டைகர் படங்கள் அனைத்தையும் தூக்கி சாப்பிட்டு விட்டது ...

    அருமை ... அருமை ....

    உங்களை சந்திக்க ஆறு மணிக்கு அங்கே இருப்பேன்

    NBS புதிய சகாப்தம் படைக்க வாழ்த்துக்கள்.

    திருப்பூர் ப்ளுபெர்ரி

    ReplyDelete
    Replies
    1. ஆஹா !௧௦ மணிக்கு காட்பாடி ட்ரைனை பிடிக்க விரைந்தேன் !இரண்டு மணி நேரம் தாமதம் என்பதால் வர இயலவில்லை !

      Delete
  32. நண்பர்களே ! கலர்புல் புத்தகம் !கனவுகள் கருப்பு வெள்ளைதான் என கூறுவார்; மெயப்படும்போது வண்ணமாக தெரிவதில் வியப்பில்லையே !ஆசிரியர் புத்தக வெளியீடு வரை அடக்கி வாசிக்குமாறு கேட்டு கொண்டதால் ,நீங்களும் கையில் வாங்கிய பின்னர் அந்த இன்பத்தை பகிர்ந்து கொள்வோம் !உற்ச்சாக கொண்டாட்டங்களுக்கு தயாராகுங்கள் !

    ReplyDelete
  33. கார்த்திக் பின்னிட்டீங்க போங்க !எல்லாம் மாலையில் வைத்து கொள்வோம் !

    ReplyDelete
    Replies
    1. @Steel Claw:
      நண்பர்களின் மாலைப் பொழுது மனதுக்கு மகிழ்வாய் அமைய வாழ்த்துக்கள்!!! பெங்களூரில் இருந்துகொண்டு என்னால் பெருமூச்சு மட்டுமே விட முடியும்! :)

      Delete
  34. திருவிழா உற்சாகம் என்பது இப்படி தான் இருக்குமோ. இத்தருணத்தில் சென்னை புத்தக திருவிழா பெரும் வெற்றி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

    NBS அட்டைபடம் அருமை. அந்த நெருப்பு சாட்டை ஆசிரியரின் இந்த மெகா முயற்சியை சுட்டுவது போலவே உள்ளது.. நமது புதுவரவையும் வெற்றியையும் பரைவது போல தோட்டா முழக்கம். அமர்க்களமாய் துவங்கட்டும், அதிரடியாய் வெற்றி அடையட்டும்.

    ReplyDelete
  35. வாழ்த்துக்கள் சார். அயல் நாடுகளில் புகழ் பெற்ற காமிக்ஸ்கள் வெளியிடப்படும் போது ரஜினி பட ரிலீஸ் போல களைகட்டும் என்று கேள்விபட்டிருக்கிறோம். இன்று அப்படித்தான் இருக்க போகிறது என நினைக்கிறேன்.

    அட்டைப்படம் அருமை. எங்கே 'டல்' கலர்களில் அட்டைபடம் போட்டு முத்து காமிக்ஸ் பீலிங் வராமல் செய்து விடுவீர்களோ என பயந்து கொண்டு இருந்தேன். நல்லவேளை அப்படியெல்லாம் இல்லாமல் பளிச் ரக அட்டையாக கலக்குகிறது.

    ReplyDelete
  36. iduvarai vantha anithu comics attaipadagalukum potti vaithal BEST OF THE BEST attaipadem namathu NBS in attaipadem thaan ena sollavum vanduma? SUPER..SUPER...SUPURO SUPER.....

    ReplyDelete
  37. வாழ்த்துக்கள் விஜயன் சார்! இந்திய/SOUTH ASIA காமிக்ஸ் உலகில் ஒரு TRENDSETTER இதழ் நமது NBS. இந்த இதழை முதலில் கைகளில் தவழப்பெரும் ஒருசில பக்கியவான்களுள் நானும் ஒருவன் என்பது எனக்கு பெருமை! நன்றிகள் பல விஜயன் சார் !

    ReplyDelete
  38. ஆஹா! அற்புதம் சார். டைகரின் அட்டைபட ஓவியம் கலக்கல். bottom angle viewல் ”விஸ்வரூபமாக” தெரிகிறார் எங்கள் அபிமான நாயகர்!”காமிக்ஸ்னா இதுதாண்டா ”என நம் கனவுலகின் பெருமையை கிண்டல் செய்யும் பிறருக்கு புரிய வைக்க சாட்டையை சுழற்றியபடி எங்கள் டைகர் முன் அட்டையில் பிரம்மாண்டமாக நிற்பது கண்கொள்ளா காட்சி!NBS புத்தகத்தை வாங்க ஆவலோடு காத்திருக்கும் வாசகர்களின் மனநிலையை காட்டுவது போல உள்ளது கிட் ஆர்ட்டினின் பறக்கும் கம்பள போஸ்! :) எப்படா வாசக நண்பர்கள் புத்தக கண்காட்சியை பற்றி, நம்ம NBS பற்றி பதிவுகளாக இணையத்தில் அள்ளி தெளிக்க போகிறார்கள் என காத்திருக்கும் அயல்தேச, அசலூர் வாசகர்கள் மனநிலையில் தேடல்கள் கொண்ட கண்களுடன் வெய்ன் ஷெல்டன்! “ என்ன மாமா! புக்கு எப்படி?” என வாசகரை நோக்கி 40 ஆண்டுகால பெருமையை கண்களில் தாங்கியபடி கேட்கும் லார்கோ அன அனைத்தும் அசத்தல். வாழ்த்துக்கள் சார்!உங்களுக்கும், உங்கள் டீமுக்கும்!

    ReplyDelete
  39. அனைவர்க்கும் வணக்கம். புத்தகம் வந்துவிட்டது.

    சாதித்துவிட்டோம். அமர்களமான வெற்றி
    Truly a world Class. அற்புதம்.

    ReplyDelete
  40. விஜயன் சார் மெய்யாலுமே நமது கனவு இதழ் இதுதான் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை

    இதனை மெய்யாக்கிய உங்களுக்கும் உங்கள் தந்தைக்கும் மற்றும் உங்களை இந்த வலைப்பூவுக்கு இழுத்து வந்த உங்கள் ஜூனியர் லயனுக்கும் எங்கள் நன்றிகள் பல :))
    .

    ReplyDelete
  41. வாங்கிட்டேன்! வாங்கிட்டேன்! கொரியர் ஆபிஸில் 'சமர்த்தாக' புத்தகத்தை வாங்கிக்கொண்டபின், அலுவலகம் வந்து சேரும்வரை வண்டியோட்டியபடியே வழிநெடுகக் கூப்பாடு போட்டுக்கொண்டே வந்தேன். ஆஹா! அருமையான அனுபவம்!

    ReplyDelete
    Replies
    1. Super apuu.. Courier officeleye nightla irunthu wait pannnuneengala boss...

      Delete
    2. வாங்கண்ணே வாங்க வந்து நம்ம ஜோதியில ஐக்கியமாகுங்க ;-)
      .

      Delete
    3. @ tex kit :

      அப்படியெல்லாம் இல்லை நண்பரே! ஆனால் கொரியர் பாய்க்கு அதிகாலையிலேயே ஃபோன் செய்து கேள்விகளால் துளைத்தெடுத்துவிட்டேன். :)

      @ சிபி:
      வர்ரோம், வர்ரோம்!
      இன்னிக்கு ஆபீசுக்கு லீவு போட்டுட்டு வீட்ல இருந்தா NBS படிக்க முடியாதுன்னு, ஆபீசுக்கே வந்துட்டேன். இனி நிம்மதியா படிக்கலாம். ஹிஹி! :-D

      Delete
  42. டியர் எடிட்,

    40 வருட பயணத்தின் மைல்கல்லாக இந்த இதழ் வெளியிடபட்டிருப்பது கண்டு மகிழ்ச்சி. அட்டை முன்பு எப்போதும் இல்லாத முறையில் இருப்பதை வரவேற்றாலும், ப்ளுபெர்ரி கையில் கொழுந்து எழும் சாட்டை என்பது அவரின் கதாபாத்திர பாணிக்கு ஒப்பாக இல்லை. சினிமாவுக்காக மிகைபடுத்துவது போல காமிக்ஸிலுமா ??

    மற்றபடி பின் அட்டையில் லார்கோ ஓவியம் தங்கள் ஓவியர் கைவண்ணம் என்று தெரிகிறது. இதோ லார்கோ மாதிரி போல அல்லாததால், வேறு எந்த கதாபாத்திரத்தை ஒட்டி தீட்டபட்டது என்று தெரிந்து கொள்ள ஆவல்.

    மொத்தம் 10 கதைகள் கொண்ட ஸ்பெஷல் இதழில் 4 கதாபாத்திரங்கள் மட்டும் அட்டையை ஆக்கிரமித்து கொண்டிருப்பது நெருடல். மாயாவி இடம்பெறாததற்கு காரணங்கள் ஏற்றுக்கொள்ளபட்டாலும் (பாராட்டபட கூடியது கூட), மற்ற கதாபாத்திரங்களையும் எப்படியாவது அட்டையில் இடம்பெற செய்திருக்கலாமோ ?

    NBS மற்றும் 2013 காட்டலோகை இன்று சென்னை புத்தக கண்காட்சியில் வெளியீட்டில் நேரடியாக காண ஆவலுடன் இருக்கிறேன். நண்பர்கள் அனைவரையும் சந்திக்கவும் இது ஒரு காரணியாக இருக்க போவது, கூடுதல் மகிழ்ச்சி.

    ReplyDelete
  43. Super...finally the day arrived..eagerly waiting to grab the book...

    ReplyDelete
  44. நண்பர்களே புத்தகம் வழக்கம் போல வந்துவிட்டது மிக அருமையாக உள்ளது
    அந்த டைகர் சாட்டையை சுழற்றுவது கோஸ்ட் ரைடர் கால பைரவனை நினைவுக்கு கொண்டு வருகிறார் சூப்பர் சார் :))
    .

    ReplyDelete
    Replies
    1. athukkulleye bosss vanthuduchaaa.... santosam...

      Delete
    2. நன்றி நண்பரே காலை 8.30க்கே வந்துவிட்டது :))
      .

      Delete
  45. Ebay யிலும் அதே நேரத்தில் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ebayயில் இப்போதைக்கு வராது என்று ஆசிரியர் முன்பே சொல்லியிருந்தாரே! வாய்ப்பிருக்குமோ தெரியாது. வந்தால் நல்லது.

      Delete
  46. ஹரே ராம்!!!நம்பள்கி இன்னும் புக்கு வரலே.பாப் ரே !!!பாப் ரே!!!நம்பள் ரொம்ப டென்சனா இருக்கறான்.கூரியர்காரன் பஹுத் லேட் பண்றான்.நம்பள் கூரியர் ஆபீசுக்கே ஜாத்தா ஹூம்.புக்கு மாங்க்த்தா ஹூம்.கர் வாபஸ் ஆத்தா ஹூம்.புக்கு பட்தா ஹூம்.பஹுத் பஹுத் குஷி ஹூம்.(எப்படி நம்ம தெலுங்கு.ஹிஹி).

    ReplyDelete
    Replies
    1. Satanji.. book varatha gobathula hindikkum telugukum vithiyasam therialaiya...

      Delete
    2. இன்னா பிரதர் சத்தான்ஜி , உனக்கே இந்த நெலமையா ,
      மெய்யாலுமே சொல்றேன் நைனா , ஜஸ்ட் 1 ஹவரு வெயிட் பண்ணுவேன்
      வரலேன்ன, நேரா போய் கொரிஎர் ஆப்பிசு பொய் பாட்டில் உடுவேன் இல்லே வீடு கட்டுவேன்

      Delete
    3. கரீட்டா சொன்னே நைனா.இந்த கொரியர்காரனுவ நம்மளான்டையே உதார் காட்ரானுவ.நம்ம பேட்ட வஸ்தாதுங்கள கூட்டிக்கினு போயி அவனுவள பாத்து இன்னா மேட்டரு தொரெ ன்னு கேட்டு வார்ன் பண்ணிட்டு அப்பாலிக்கா நம்ம புக்க வாங்க போறேன் நைனா.ஆனா பாரு தொரெ ...இன்னிக்கி அமாசை ஆச்சா.
      அமாசை அன்னிக்கு நானு வயலன்ஸ் பண்ணமாட்டேன்.மத்த நாலுன்னா சும்மா ஈரோ கணக்கா வூடுகட்டி அடிப்பேன் ராசா.!!

      Delete
  47. This year chennai book stall, one place will look different than others and that is our book stall...And definitely people who dont know about the comics also will become soon members after seeing the NBS..:)...

    ReplyDelete
    Replies
    1. உண்மையான வார்த்தைகள்!

      Delete
  48. NBS புக் வந்து விட்டது சூப்பர் விஜயன் சார் நன்றி

    ReplyDelete
  49. profile இமேஜில் அடியேனின் கிராபிக் லொள்ளை பார்க்கவும்.ஹிஹி.

    ReplyDelete
    Replies
    1. சிரஞ்சீவியிடம் கேட்கவும்.ஹிஹி.

      Delete
  50. This comment has been removed by the author.

    ReplyDelete
  51. Never Before Morning சார். இந்த நாளுக்காகதான் மணப்பெண்ணை கைபிடிக்க காத்திருக்கும் மணமகனின் இனிய அவஸ்த்தையுடன் காத்திருந்தோம் என்று சொன்னால் அது மிகை ஆகாது. அரை நாள் லீவ் சொல்லிவிட்டேன். உங்களை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    நீங்கள் போட்ட அட்டை இமேஜை மட்டுமே பார்த்தேன், புத்தகத்தில் இன்னும் பார்க்கவில்லை. என்னை பொறுத்தவரை அட்டை WWS ன் கிளாஸ்சிக் லுக் வரவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் டைகரை முன் அட்டையில் போட்டு விட்டதால் மனம் சாந்தி அடைகிறது. புத்தகம் வந்த பிறகு நன்றாக பார்த்து விட்டு சொல்கிறேன். இதுவும் என்னுடைய கருத்து தான். நிறைய நண்பர்களுக்கு அடிக்கும் வண்ணம்தான் பிடிக்கிறது. :D

    இரும்புக் கையாரை அட்டை படத்தில் சிறிய அளவிலாவது போட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். 40 வருடமும் நம்முடன் இருந்தவர் அவர் ஒருவர் தானே.

    எங்க வீட்டு அம்மிணி கிட்ட ரூ 400 க்கு புக்கு வாங்குறேன்னு சொல்லல. இன்னைக்கு வீட்டுக்கு போயிட்டு நாளைக்கு திரும்பி வர்றது அம்மிணி கைலதான் இருக்கு. :-D

    ReplyDelete
    Replies
    1. @ Raj muthu kumar

      400 ரூபாய் புத்தகத்துடன் கூட இன்னும் ஒரு 50 ரூபாய் செலவு செய்து கால் கிலோ ஸ்வீட் (preferably அல்வா) வாங்கிட்டு வீடுபோய் பாருங்க; அத்தனை அடியும் செல்ல அடி, செல்லக் கடியா மாறிடும்! :D

      Delete
    2. நண்பரே

      எனது deal வேறு. அவங்களுக்கும் 400 ரூபாய்க்கு (அவங்களுக்கு பிடித்த) புத்தகம் வாங்கிக்க சொல்லி கையிலே காசை கொடுத்திட்டேன் :)

      Delete
    3. Muthu, enjoy the day! I am missing this great event (NBS), not getting beaten by your wife :-)

      Delete
    4. ஹம்... வாழ்க்கைல எவ்வளவு compromise செய்யவேண்டியிருக்கு பாருங்க! இந்த வலி, வேதனையெல்லாம் காமிக்ஸ் படிக்கும்போதுதானே கொஞ்சமாவது குறையுது! :)

      Delete
  52. அடங்கொப்பரானெ !!!இப்பவே கமெண்ட்டுங்க நூற தாண்டிருச்சி.சாயங்காலத்துக்குள்ள நானூற தாண்டும் -னு நெனைக்கறேன்.ஜான் சைமன் அய்யா இன்னிக்கு
    டூட்டிக்கு டிமிக்கி போட்டுட்டாரு போலுருக்கு.அவரு புண்ணியத்துல கண்டிப்பா நானூற தாண்டும்.வெட்டியா ஒக்காந்துட்டுருக்கற நண்பர்கள் அனைவரும் உடனடியாக களமிறங்கவும்.(அடியேன் ஆல் டைம் வெட்டி.ஹிஹி).

    ReplyDelete
    Replies
    1. சாத்தான் ஜி , விதவிதமா கலக்கறிங்க. இந்த பின்னூட்டம் நிறைய சிரிப்பை வரவழைத்தது.

      Delete
  53. Thank you editor sir!

    The NBS looks awesome. A beautiful book with 'DUST JACKET'. Great!
    The Binding and Spine design is, what to say? WOW!

    A request:
    As you proved to provide a best book ever (speaking of book presentation, don't get me wrong guys!), is it possible to collect the 'Largo Winch' series in a HARDCOVER format? For those who interested only (we have a better material and better size, just need a 'better and ever lasting' format)..

    Thanks,
    Sankar

    ReplyDelete
  54. Just now. I got the call from courier boy. Its so exciting. But I can see tomorrow morning only :(. Coz I will reach my home town only by tomorrow. fingers crossed. Thanks Vijayan Sir.

    Waiting the day to visit the stall in book fair.

    ReplyDelete
  55. Dear Sir,

    ஆறு மணிக்குமேல் என் கருத்துக்களை சொல்கிறேன் சார். NBS மகத்தான வெற்றி பெற வாழ்த்துக்கள் சார்.

    நண்பர்களே 16 PAGE BOOKLET -ஐ பார்க்க:

    http://tamilcomics-soundarss.blogspot.in/2013/01/0085-muthu-comics-never-before-special.html

    ReplyDelete
  56. கடந்த இரண்டு மணி நேராமாக புத்தகத்தை கையில் வைத்து வெறுமனே பார்த்துக்கொண்டு இருக்கிறேன். கீழே வைக்க கூட மனது வரவில்லை... அதை விட பெரிய சிந்தனை, இந்த பொக்கிசத்தை எவ்வாறு அட்டைப்பக்கம் மடங்காமல் படிப்பது என தெரியவில்லை... திருஷ்டி சுத்தி போட வேண்டும் கண்டிப்பாக..

    ReplyDelete
    Replies
    1. Buy two copies :) Don't open one - that will solve the issue :) :)

      Delete
  57. இன்று Never Before Special காலை கிடைத்தது. அட்டை படம் Wow! குறிப்பாக கேப்டன் Tiger colour combination அசத்தல்! Comics நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்! இதுதான் தமிழில் எனது முதல் comment எழுத்து பிழை இருப்பின் மன்னிக்கவும்!

    ReplyDelete
    Replies
    1. வருக நண்பரே! இந்த கொண்டாட்டமான நாளில் உங்களது முதல் தமிழ் பின்னூட்டத்தை வரவேற்கிறோம். தொடர்ந்து கலக்குங்க! :)

      Delete
  58. சூப்பர் ...சூப்பர்..விலை ரூபாய் 400 இல் ரூபாய் 200 அட்டைபடதிற்கும் ,ரூபாய் 100 tralier bookletkum சரியாகி விட்டது .வெறும் 100 ரூபாய்க்கு வண்ணத்தில் 10 கதைகளை தரும் எங்கள் காமிக்ஸ் அரசர்க்கு ஒரு மிக பெரிய ஓ......

    ReplyDelete
  59. சூப்பர் ...சூப்பர்..விலை ரூபாய் 400 இல் ரூபாய் 200 அட்டைபடதிற்கும் ,ரூபாய் 100 tralier bookletkum சரியாகி விட்டது .வெறும் 100 ரூபாய்க்கு வண்ணத்தில் 10 கதைகளை தரும் எங்கள் காமிக்ஸ் அரசர்க்கு ஒரு மிக பெரிய ஓ......

    ReplyDelete
  60. "NBS" மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்! உங்கள் அலுவலக நண்பர்கள் அனைவர்க்கும் இரூகரம் கூப்பி நன்றி மற்றும் வாழ்த்துகள்!! உங்கள் கனவு மெய்பட உறுதுணையாய் இர்ருந்த நல்ல உள்ளம்களுக்கும் நன்றி!!!
    வாழ்வில் இந்தநாள் மறக்கமுடியாத நாள் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை!!! சிறுவயதில் அடைந்த சந்தோசத்தை மீண்டும் கிடைக்க செய்த உங்களுக்கு என் நன்றிகள்!!

    பெங்களூர் நண்பர்கள் யாருகாவது "NBS" கிடைத்ததா ? ST Courier ஆபீஸ்-இக்கு இன்னும் வரவில்லை!!நாளைதான் நமக்கு கிடைக்கும் என நினைக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. Hi Parani,I have received the book through ST courier.Can u check with them again?
      Finally relieved that we got book...

      Delete
    2. I talked to them today morning! I will check with them again!! Thanks!!

      Delete
    3. Tex Kit: Where do you stay in Bangalore? I stay in whitefield, the deliver may differ based on the area i guess.

      Delete
  61. Kuddos for Mr. Vijayan and Lion comics team

    I have received my copy of NBS and it looks awesome. The page designs, packaging all were awesome.

    I am loving the dust jacket cover and the trailer brochure in the book. I have seen many covers and have worked too. I must say this cover really impressed me. The packaging is awesome. I shows how much you value us.

    Great team effort and the output is awesome.

    Looking forward for this year comics. Wish you success in all your future endeavors.

    ReplyDelete
  62. இன்று "NBS" கிடைத்தவர்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள்! இன்று மாலை திரு சௌந்தரராஜன் அவர்களிடம் புத்தகம் வாங்குபவர்கள் மிக கொடுத்து வைத்தவர்கள்!!! நாளை வரை காத்திருக்கும் நாங்கள் எல்லாம் இதை எல்லாம் பொறுமையுடன் காண கொடுத்து வைத்தவர்கள்!!! எல்லாம் நன்மை-கே!

    ReplyDelete
  63. ஆத்தாடி ஆர்வத்தை அடக்க முடியவில்லை... விமர்சனகளுக்கு இன்று முன்னிரவு வரை தடை வேறு... அது 144 தடை என்றால் கூட பரவாஇல்லை, ஆசிரியரின் அன்பு கட்டளையும் மீறி, இங்கு நான் பதிய நினைப்பது ஜில் ஜோர்டான் கதை பற்றி... அட்டகாசம், டின் டின் மற்றும் ஆர்ச்சி (not robo archi) கதைகளை பின்னுக்கு தள்ளி விட்டது... A perfect choice for this saga...

    இன்று வானத்திலிருந்து யாரவது வந்து , நாளை உனக்கு இறந்தநாள் என்று சொன்னால் மிகுந்த மகிழ்வுடன் எதிர்கொள்வேன்... Friends I am not exaggerating anything, but I am not able to control my emotions... Im flying....

    ReplyDelete
    Replies
    1. சிம்பா, உங்கள் comment ஐ படித்து ஒரு கணம் ஸ்தம்பித்து விட்டேன். எந்த ஒரு மகிழ்ச்சியான மனநிலையில் நீங்கள் இதை எழுதியிருப்பீர்கள் என்று புரிகிறது.

      Delete
    2. சிம்பா - நானும் ஜில் ஜோர்டான் கதையைத் தான் முதலில் படிக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். உங்களின் ஆர்வம் படிப்பவர்களையும் தொற்றிக்கொள்கிறது :)

      Delete
  64. Another 3 hours for the event start...Those who attending the function share the photos...

    ReplyDelete
  65. போஸ்ட் ஆபீஸ் இரண்டு தடவை சென்று கேட்டுவிட்டேன். இன்னும் வரவில்லை என்றார்கள். பேசாமல் கூரியர்- option - ஐ தேர்ந்தெடுத்து இருக்கலாம்.

    ReplyDelete
  66. இன்று இந்த இடமே மிகுந்த கொண்டாட்டமாக இருக்கிறது. எங்கும் ஆனந்தம்.

    ReplyDelete
  67. ஆடிட்டர் ராஜா அவர்களே.உங்களுக்கும் புக் வந்துவிட்டதா?ஆக மொத்தத்துல எல்லாருமே அடியேனுக்கு வசிட்டாங்கய்யா ஆப்பு.
    திகு திகு திகு திகு திகு ........................ஒண்ணுமில்லை.பொறாமையில வயிறு எரியுது.

    ReplyDelete
    Replies
    1. What... Sattanji didnt receive the book...one option directly will go to Sivakasai/Chennai and buy the book...

      Delete
  68. இந்தியாவில் திருவிழா நடக்குது; இங்கிருந்து ஏக்கப் பெருமூச்சுத்தான் விடமுடியுது! எங்களுக்கு இன்னும் 10 நாளோ, 15 நாளோ...ஹ்...ம்..!!!!

    ReplyDelete
  69. NBS இதழோடு உங்களுக்கு வரக் காத்திருக்கும் புக் மார்க் --> SUPER!

    ReplyDelete
  70. நமக்கு புக் இன்னும் வரல!!

    ReplyDelete
    Replies
    1. achhhoo choo enna Parani sollureenga... Whitefield officekku call panni parungalen....marupadiyum...

      Delete
  71. மதராஸிவாலாக்கள் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியை உடனுக்கு உடன் பதிவேற்றவும்.கேமரா பாட்டரிகளை full charge செய்து கொள்ளவும்.மறக்காமல் ஷேவிங் செய்து கொள்ளவும்.இரண்டு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் நண்பர்கள் மாஞ்சா நூலிலிருந்து தப்பிக்க கழுத்தை பத்திரமாக வீட்டிலேயே கழற்றி வைத்துவிட்டு செல்லவும்.மனைவியரிடம் வழக்கமான பொய்யை சொல்லாமல் உண்மையை சொல்லிவிட்டு கிளம்பவும்.satan bless you my childs !!!

    ReplyDelete
  72. அநேகமாஹ இந்நேரம் புத்தஹம் வெளியிட பட்டிருக்கும் !கரகோஷங்கள் வானை பிளக்கும் வண்ணம் !

    ReplyDelete
    Replies
    1. வைனே வை படிக்க ஆரம்பித்து விட்டேன் !நண்பர்களை மெதுவாக படிக்கலாம் !

      Delete
  73. எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.....இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் ...

    ReplyDelete
  74. நண்பர்களே!
    புத்தக வெளியீடு இனிதாக நடந்தேறியது. தாத்தா வெளியிட பேரன் பெற்றுக்கொண்டதனை பார்த்த தருணங்கள் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது.
    வந்திருந்த நண்பர்களில் சிலர்: முத்து விசிறி, கிங்க் விஸ்வா, ரபிக் ராஜா, ஸ்ரீராம், கலீல், ஜான் சைமன், திருப்பூர் புளுபெரி, RT முருகன், ராஜ் முத்துகுமார்.... இன்னும் வந்து கொண்டிருக்கிறார்கள்.
    ஸ்டால் நிரம்பி வழிகிறது..... மீண்டும் வருகிறேன்

    இப்படிக்கு

    திருப்பூர் புளூபெரி ( அரங்கத்தில் இருந்து)

    ReplyDelete
  75. @Vijayan sir : i got the book today. no doubt it is one of the greatest book india would ever have seen. probably around the world over. But what is unattractive, i hate to say it, is back side cover. i dont know why you chose such a very ordinary selection but the back cover looks unpleasing to the sight particularly for the reason it has been our 40th anniversary edition. It could've been better. i mean, look at Thanga kallarai reprint both sides, we wanted it to look cool rather does it kinda look now. I sure hope you might have had better covers from foreign artists and foreign originals, you could've used them, sir. Anyway let's stick to the saying, 'dont judge a book by its cover'. But that aside, it's been an honour to have this book in my hands.

    ReplyDelete

  76. இப்பொழுது நமது நீண்ட பின்னூட்டமிடும் இனிய நண்பர் பாலாஜி சுந்தர் வந்துள்ளார்....

    மிக முக்கியமான மகிழ்ச்சிக்குறிய விசயம் அடுத்த சனிக்கிழமை (19-1-2013) டெக்ஸின் "சிகப்பாய் ஒரு சொப்பனம்" வெளிவருவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளதாக ஆசிரியர் அறிவித்துள்ளார்

    இப்படிக்கு

    அரங்கத்தில் இருந்து திருப்பூர் புளூபெரி

    ReplyDelete
    Replies
    1. Thanks Stalin for the updates...We are looking for the videos also. Please upload it as early as possible. Eagerly waiting...couldn't wait to type in Tamil.

      Delete
    2. தூள்! அப்படீன்னா லக்கி-லூக்?!!

      Delete
    3. கொஞ்சம் லேட் ஆனதால் பல நண்பர்களை இன்று சந்திக்க முடியவில்லை. முத்து விசிறி, ரபிக் ராஜா, உதய், கிறுக்கல் கிறுக்கன் ஆகியோரைச் சந்தித்தேன். Also met and talked to the Editor. நாளை மதியம் இரண்டு மணிக்கு மறுபடியும் செல்வதாய் உத்தேசம். இல்லத்திலிருந்து இரண்டு கிலோமீட்டரே தூரம் என்பதால் ... :-)

      விஜய், லக்கி லூக் பிப்ரவரி பாதம் தான் ...அதான் வேறு கௌ பாய் வந்துவிட்டாரே!

      Delete
    4. @ Comic lover :

      சந்தோஷமான இத்தருணங்கள் மீட்டெடுக்க முடியாதவை! கொண்டாடுங்கள்! அடுத்த சில நாட்கள் தினமும் ஆனந்தத்தை அள்ளிதரட்டும்! முடிந்தால் நீங்கள் அங்கே கண்டதை/கேட்டதை/ உணர்ந்ததை/உறுத்தியதை இங்கே அவ்வப்போது பதிவிட்டு எங்களையும் வியக்க வையுங்கள்!

      டெக்ஸ் முந்திக்கொள்வது இரட்டிப்பு மகிழ்ச்சியே! (240 பக்கங்களாச்சே) :)

      Delete
  77. ஒரு பயணத்தின் கதை
    தெளிவான ஸ்க்ரீன் ப்ளே!
    விறு விருப்பாய் நகரும் கதை அமைப்பு !
    டெக்ஸ் இடம் உள்ள முரட்டு குணம் ,
    மின்னலாய் துள்ளலாய் நாயகர் !
    அற்புத்தம்,தெளிவு ,நேர்த்தி ,துல்லியமாக எங்கும் சொதப்பாமல் நகரும் கதை அமைப்பு,தொய்வில்லாத ஓட்டமோ ஓட்டம்!

    ReplyDelete
  78. oh my... oh my.. waiting to lay my hand on the issue... come on STC.. move it! மொதல்ல பைண்டிங்க்கு குடுக்கணும்.
    விஜயன் சார், பழைய காமிக்ஸ்களை நம்ம ஊருல கிடைக்கிற பொருட்களை கொண்டு பராமரிப்பது எப்படின்னு ஒரு supplement இல்லனா ஒரு blog எழுதங்களேன்?

    ReplyDelete
  79. நண்பர்களின் பார்வைக்காக அரங்கத்திலிருந்து ஜான் சைமன், திருப்பூர் ப்ளூபெரி அனுப்பிவைத்த புகைப்படங்கள் சில.....
    http://tamilcomicskadanthapaathai.blogspot.in/

    ReplyDelete
  80. NBS received but without "16 page free issue" and "book mark". Please send it.

    ReplyDelete
  81. இன்று NBS வந்து விட்டது. பார்க்க அட்டகாசம் தான்… படிக்க வேண்டும்…

    ReplyDelete
  82. நாற்பது ஆண்டுகள் கடந்து சாதித்தமைக்கு பாராட்டுகள்.. இந்த வெளியீடு ஹிட் என்பது அட்டைப்படமே சொல்லி விடுகிறது.. இலங்கைக்கு நீங்கள் புத்தகம் அனுப்பும்வரை, சக-கமிரேடுக்களின் பதிவுகளை வாசித்து பெருமூச்சு விட வேண்டியதுதான்.. ஆனாலும் காத்திருக்கும் சந்தோசமே தனிதான் :-)

    ReplyDelete
  83. Cover page art is simply awesome. It was very traditional yet modern, i am sure the book will be sold out by end of chennai book fair. Anybody want to bet?? :-)

    ReplyDelete
  84. -----


    NBS வெளியீடு... புத்தகக் கவரை பிரிப்பதில் நேரமானதால் சின்ன வீடியோ..
    http://www.youtube.com/watch?v=4-e44Z6t2Q0

    ------

    ReplyDelete
  85. ---------

    ஒரு வாசகர், புத்தகத்தில் அது வெளியாகும் மாதத்தின் பெயரை பிரிண்ட் செய்யலாமே என்று எடிட்டரிடம் கேட்டார். அதற்கு எடிட்டரின் பதில்....

    http://www.youtube.com/watch?v=HZ9NI9h1DTY

    -----------

    ReplyDelete
  86. -----

    மாலை 5.30 மணியளவில் பெரிய கூட்டம் 343ஆம் நம்பர் ஸ்டாலில். கூட்டத்தை எட்டிப்பார்த்து என்ன ? என்று கேட்டவர்கள் பலர். அத்தனை ஸ்டாலை விட நம் ஸ்டாலில் தான் கூட்டம் அலை மோதியது.

    சுமார் 6 மணியளவில் எடிட்டர் வந்தார்.

    6.05க்கு சீனியர் வெளியிட ஜூனியர் பெற்றுக்கொண்டார். அதன் வீடியோ.. முன்னால் உள்ள கமெண்ட்டில்.

    பல நண்பர்களை முதல் முறை சந்தித்ததில் மகிழ்ச்சி. யாருக்கும் யார் பெயரும் தெரியாமல்.. அவர்களில் Web அடைமொழிகளைக் கூறி அறிமுகப்படுத்திக்கொண்டோம் :-)

    -----

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே! இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறோம். யானைப் பசி எங்களுக்கு!

      Delete

  87. HIT... HIT....NBS Release Super HIT...

    வந்திருந்த அணைத்து நண்பர்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  88. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள், sir !

    ஏறத்தாழ நேரடி ஒளிபரப்பும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்......!

    ReplyDelete
    Replies
    1. This is my first ever post .thank u for sucessful relesing of NBS.wishes for good sucess in 2013.all the best sir(editor)

      Delete
  89. Hai friends i got my 40th booking nbs, it is so so nice .1st success of nbs is,it leads me to post a command .l hope nbs will sold out in Chennai.once again l thank editor and his team for the titanic triumph .

    ReplyDelete
  90. நண்பர்களே,

    காலையிலிருந்தே குவிந்து வந்த சந்தோஷப் பதிவுகளும், வாழ்த்துக்களும் NBS -ன் பரபரப்பை உச்சத்திற்குக் கொண்டு சென்றிருந்த போதிலும்,இன்றைய மாலைப் பொழுதின் அதகளத்திற்கு நிச்சயம் நான் தயாராக இருந்திடவில்லை !!

    திடீரென நேர்ந்திட்ட புத்தகத் திருவிழாவின் தேதி மாற்றம் நிறைய நண்பர்களின் பயணத் திட்டங்களை சிரமமாக்கி இருக்குமென்பதோடு, இன்று காலையே பரவலாய் NBS இதழ்கள் அனைவருக்கும் கிட்டிவிட்டதென்பதாலும் - மிதமானதொரு எண்ணிக்கையிலான நண்பர் குழுமத்தை எதிர்பார்த்தே மாலை ஆறு மணி சுமாருக்கு நம் ஸ்டால் இருந்த பகுதிக்குச் சென்றேன்...!எனக்குக் கடைசியாக நினைவிருப்பது ஸ்டால் எண் 343-ன் முன்னே நின்ற திக்குமுக்காடச் செய்யும் ஒரு அன்புக் கடலுக்குள் அடியெடுத்து வைத்தது மாத்திரமே !

    தொடர்ந்த அடுத்த 3 மணி நேரங்கள் என்னைச் சுற்றி நடந்தவை எல்லாமே கனவுகளில் மாத்திரமே சாத்தியப்படும் சங்கதிகள் ! திரும்பிய பக்கமெல்லாம் முகம் முழுக்க சந்தோஷமும், அசாத்திய உற்சாகமும் ததும்பும் அன்பு நண்பர்களின் படையெடுப்பு ! ஒவ்வொருவரின் கண்ணிலும் இது 'எங்கள் வீட்டுப் பிள்ளை - இது எங்கள் வீட்டு வைபவம் ' என்ற பறைசாற்றல் ! இது நாள் வரை நம் வலைப்பதிவில் வெறும் பெயர்களாக மாத்திரமே பரிச்சயமாகியிருந்து வந்த நண்பர்கள் இப்போது பரந்த புன்னகையோடு முன்னே வந்து நின்று கை குலுக்கிட்டது அழகான தருணங்கள் என்றால் ; ஒவ்வொருவரோடும் இணைந்து நின்று சரமாரியாய் போட்டோக்கள் எடுத்துக் கொண்டது நினைவை விட்டு அகலா நொடிகள் ! பிரவாகமாய்க் கேள்விகள் ; நான் பதிலளிக்க எத்தனிக்கும் சமயம் சுற்றி நிற்கும் அத்தனை நண்பர்களும் ஒளிரும் கண்களோடு காதுகளைத் தீட்டிக் கொண்டு கவனம் சிதறாது நின்ற நிமிடங்கள் நம் காமிக்ஸ் காதலுக்கு ஒரு கல்வெட்டு ! டைம்ஸ் ஆப் இந்தியா தினசரியிலிருந்து நமது NBS வெளியீட்டைக் கவர் செய்திட வந்திருந்தனர் ; அவர்களது நிருபரால் என்னருகே நெருங்கிடக் கூட இயலா சூழ்நிலை ! அவர்களது புகைப்படக் கலைஞர் மாத்திரம் நம் காமிக்ஸ் குடும்பத்தின் அந்த உற்சாக வேளைகளை சரமாரியாய் படமெடுத்துத் தள்ளினார் ! contd.,

    ReplyDelete
    Replies
    1. பிரமாண்ட வரவேற்பிற்கு, வெற்றிக்கு வாழ்த்துக்கள்!!!

      ஆதலினால் அதகளம் செய்தீர்!!! :)

      Delete
  91. Part 2:

    ஞாயிறு வரவிருக்கும் பேப்பரில் நம்மைப் பற்றியதொரு article வந்திடுமென்று நினைக்கிறேன் :-)

    ஊர் திரும்பிட டிக்கெட்கள் கிடைக்காத பட்சத்திலும் - ஆர்வத்தின் உந்துதலில் ஆஜராகிய அன்பர்கள் ஏராளம் ! இன்னொரு புறமோ அமெரிக்காவிலிருக்கும் நம் வாசக நண்பர் ஒருவர், 'நீங்கள் புத்தகத் திருவிழாவிற்குச் சென்றே தீர வேண்டுமென்ற' அன்புக் கட்டளையிட்டு தன் தந்தையை கேமரா சகிதம் நம்மைத் தேடி வரச் செய்திருந்தார். பாசமான அந்தத் தந்தையும் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாற் வசிக்கும் மகனின் காமிக்ஸ் காதலுக்குத் தலை வணங்கி நம்மை நாடி வந்தது நெகிழச் செய்த ஒரு சந்திப்பு ! LANDMARK புத்தகக் கூடத்திலிருந்தும் நமது NBS வெளியீட்டின் தருணத்தில் கலந்து கொள்ள அவர்களது மூத்த விற்பனை மேலாளரை அனுப்பி நம்மை திக்குமுக்காடச் செய்தனர் !

    நான் ஒரு பக்கம் முற்றுகை இடப்பட்டேன் என்றால் என் தந்தையைச் சுற்றியும் ஒரு நண்பர்கள் படை ! அவருக்கு இவை அனைத்துமே புதுசு என்றாலும் - சிறிதும் சளைக்காமல் நண்பர்களின் கேள்விகளுக்குப் பதில் தந்து வந்தார். டைம்ஸ் ஆப் இந்தியாவின் நிருபரின் கேள்விகளுக்கும் ஆர்வமாய் பதில் தந்து வந்தார் ! தந்தையின் வருகையால் நமக்கு சந்தோஷம் அதிகமா ? அல்லது - உங்களின் அன்பு மழையால் அவர் பெற்ற சந்தோஷம் அதிகமா ? என்றொரு பட்டிமன்றமே வைத்திடலாம் ! தேங்க்ஸ் guys !!! Contd.,

    ReplyDelete
    Replies
    1. டியர் எடிட்டர்,

      இந்த இதழில் வந்திட்ட காமிக்ஸ் டைம் நான் வாசித்தவைகளுள் மிக்க நன்றான ஒன்று. நமது டீம் புகைப்படங்களும் குறிப்புக்களும் மிக அருமை. நாளை இரண்டு மணி வரை கூரியர் வரக் காத்திருப்பேன். இல்லை என்றால் இன்னொரு காப்பி வாங்கிடலாமா என்று யோசனை. வீட்டிலும் "வாங்கிட" வேண்டுமே என்ற கவலை. பார்ப்போம்!

      சரமாரியான கேள்விகளும் உங்களது சலிக்காத பதில்களும், பதிவிட இயலாத சில விளக்கங்களும் (உ.ம் : "ஒரு பத்திரிகையினில் விளம்பரம் செய்ய யத்தனித்தது ஏன் நடக்கவில்லை?" போன்றவை) ஒரு நேருக்கு நேர் நிகழ்ச்சியை ஞாபகப்படுத்தியது.

      நாளை மீண்டும் சிந்திப்போம் ...! ஸ்வீட் ட்ரீம்ஸ் !!

      Delete
  92. ஆசிரியரின் பதிவை படிக்கும்போதே உற்சாகம் ஏற்படுகிறதே அங்கு கலந்து கொண்டவர்களுக்கு எப்படி இருக்கும்? ம் ம்ம் கொடுத்து வைத்தவர்கள்.

    ReplyDelete
  93. ஆசிரியரின் அடுத்த பின்னூட்டத்தை எதிர்பார்த்து நொடிக்கொரு முறை Refresh செய்துகொண்டிருக்கிறேன். :-)

    ReplyDelete
  94. Part 3 :

    பாண்டிசேரியிலிருந்து நண்பர்கள் குழுவோடு - 'தமிழில் காமிக்ஸ்' எனும் ஆராய்ச்சி செய்திடும் மாணவி பிரபாவதியும் சேர்ந்து வந்திருந்தார் ! நம் நண்பர்களின் உற்சாக வெள்ளத்தை ரசித்துக் கொண்டிருந்தவர், அந்த அமளியின் மத்தியிலும் என் தந்தையிடம் கேட்க வேண்டிய கேள்விகளை கேட்டு பதில் வாங்கிடுவதில் வெற்றி கண்டிட்டார் ! முதன் முறையாக இது போன்ற வெறித்தனமான காமிக்ஸ் நேசத்தை பார்திட்டவருக்கு சொல்லி மாளா வியப்பு !

    இன்னொரு பக்கமோ ஒதுங்கி நிற்க முயற்சிக்கும் என் ஜூனியரையும் நம் நண்பர்கள் விட்டு வைப்பதாக இல்லை ! அவனையும் கேள்விகளால் போட்டுத் தாக்கி ; புகைப்படங்களில் இணைத்துக் கொண்டு ; அவனிடமும் ஆடோக்ராப் வாங்கி - இந்த சந்தோஷ மாலையின் ஒரு அங்கமாக்கிக் கொண்டனர் ! Thanks again people!

    பேசிடத் தயங்கிய நண்பர்கள் பலர் புகைப்படங்களை தூரத்தில் நின்று எடுத்துக் கொண்டதோடு சந்தோஷப்பட்டுக் கொண்டனர் ! அவர்களிடமும் பேசிட நான் விரும்பிய போதிலும் நேரம்பற்றவில்லை ! ஒன்பது மணிக்கு அத்தனை ஸ்டால்களும் திரையைப் போட்டு விட்டு மூட்டைகளைக் கட்டி விட்டுப் புறப்பட்ட போதிலும் நம் ஸ்டாலின் முன்னே கூட்டம் கரைவதாக இல்லை !! கிளம்பும் தருவாயில் மூத்த தலைவர் திரு பழ.நெடுமாறன் அவர்கள் நம் ஸ்டால் பக்கமாய் மெதுவாய் வந்திட நான் வணக்கம் சொன்னேன். பிரியமாய்க் கை குலுக்கி விட்டு - 'நாளை என் குட்டிப் பேத்தியைக் கூட்டி வருகிறேன்' என்று சொல்லிக் கிளம்பினார் ! மறக்க இயலா ஒரு மாலையை மேலும் சிறப்புறச் செய்தது அந்த சிறியதொரு சந்திப்பு ! இந்த மந்திர மாலைப் பொழுதில் நான் சந்தித்த அத்தனை நண்பர்களையும் இங்கே mention செய்திடுவது சாத்தியமில்லை என்பதால் - அவர்களது மலர்ந்த முகங்கள் அனைத்தையும் மீண்டுமொருமுறை என் மனதில் நிழலாடச் செய்கிறேன் !! Thanks from the bottom of my heart to every single comics lover !!

    வீட்டுக்குக் கிளம்பும் சமயம் இன்றைய விற்பனை + வசூலான சந்தாத் தொகை என என் கையில் நம் அலுவலர் திணித்த தொகை - என்னை வாய் பிளக்கச் செய்திட்ட ரூ.77,000 !! Good night folks !!

    ReplyDelete
    Replies
    1. டியர் எடிட்டர்,

      ரொம்ம்ம்ப்ப்ப சந்தோஷம் சார்! உங்களின் இந்த உற்சாகம் எங்களின் மகிழ்ச்சியை பலமடங்காக்குகின்றன. மகிழ்ச்சி! மகிழ்ச்சி!

      புத்தகத் திருவிழாவின் தேதி மாற்றம் எங்கள் பயணத்திட்டத்தை
      தவிடுபொடி ஆக்கியிராவிட்டால் ஈரோட்டிலிருந்து சில குடும்பங்கள் அங்கே கொண்டாட்டத்தில் பங்குபெற்றிருக்கும். கதைகளை இன்னும் படிக்கவில்லையென்றாலும் பத்துக் கதைகளை உலகத்தரத்தில் கொண்ட பொக்கிஷமாய் NBS ஒரு சூப்பர்-டூப்பர் ஹிட் என்பதை நம் நண்பர்களின் மனம் நிறைந்த உற்சாக எண்ணவோட்டத்தின் மூலமாகவே உணரமுடிகிறது. இன்று காலையிலிருந்தே NBSஐ கையில் வைத்துக் கொண்டு மகிழ்ச்சிக் கடலில் மிதந்துகொண்டிருக்கிறேன்.

      இவ்வளவு இடர்களின் மத்தியிலும் குறித்த நேரத்தில் NBSஐ அனுப்பி வைத்தது மாபெரும் சாதனையே! உங்களுக்கும், உங்களின் மொத்த டீமிற்கும் நன்றிகள் பல!

      புத்தகக் கண்காட்சியில் குறித்த நாட்களுக்குள்ளாகவே எல்லா புத்தகங்களும் விற்றுத் தீர்க்க இவ்வுலகின் எல்லா சக்திகளையும் வேண்டிக்கொள்கிறேன்.

      Delete