Friday, June 01, 2012

ஒரு ஜூன் மாத டைம் டேபிள் !


நண்பர்களே,

புதியதொரு மாதம் ! பள்ளி / கல்லூரி செல்லும் மாணாக்கருக்குப் புதியதொரு துவக்கமும் கூட !  

'பலித்த மட்டிற்குப் பார்ப்போமே' என்று அம்மாமார்களின் உடும்புப் பிடியினிலும் அழுது ஆர்ப்பாட்டம் செய்திடும் குழந்தைகள் !  நேற்று வரை IPL மேட்ச்கள் பார்த்து விட்டு, மறு நாள் விட்டம் வரை விரியும் கொட்டாவிகளோடு பணிக்குச் சென்று வந்த தந்தைமார்கள்,இன்று பரபரப்பாய் டூ-வீலர்களிலும், சைக்கிள்களிலும், தத்தம் சிறார்களை பள்ளிக்குக் கூட்டிச் செல்லும் நேர்த்தி!....2 மாதங்களாய் sudoku  போட்டுக் கொண்டிருந்த கடைக்காரர்கள் இப்போது நிமிர்ந்து பார்க்க நேரமின்றி நோட்டுக்களும் , புத்தகங்களும் விற்பனை செய்திடும் லாவகம் - என ஒரே நாளில் தான் எத்தனை மாறுபட்ட காட்சிகள் !! 

சுறுசுறுப்பாய் துவங்கியுள்ள இந்த ஜூன் மாதம் ஒரு காலத்தில் நமக்கு ரொம்பவே 'கடுப்பேற்றும் மாதம்'  என்ற ரகமாய் இருந்து வந்தது நிஜம் ! ஏப்ரல், மே இரு மாதங்களும் பள்ளி விடுமுறைகள் என்பதால் காமிக்ஸ் விற்பனை அட்டகாசமாய் இருந்திடும் -ஆனால் ஜூன் வில்லங்கமான மாதமாய் இருந்திடும் - உங்களில் பெரும்பான்மை பள்ளி செல்லும் மாணவர்களாய் இருந்து வந்த காரணத்தினால் !! காலம் தான் எத்தனை துரிதமாய் பயணித்து விட்டது !! 

புதிதாய் டைம் டேபிள் போட்டு வகுப்புகள் துவங்கிடும் இப்புது மாதத்தில், சின்னதாய் நாமும் ஒரு டைம் டேபிள் போட்டால் என்னவென்று எனக்குத் தோன்றியது ! உங்களில் பலர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதில் சொன்னது போலவும் ஆகிடும்..சின்னச் சின்னதாய் புதிய சங்கதிகளையும் உங்களுக்குத் தெரிவித்த திருப்தியும் இருக்குமென நினைத்தேன் !அதன் பலனே இப்பதிவு ! 

June 15 releases ! 
ஜூன் 15 -ல் முத்து காமிக்ஸ் - black & white இதழ்களான "சிவப்புக் கன்னி மர்மம்" & "தற்செயலாய் ஒரு தற்கொலை" ஒரே சமயத்தில் வெளிவந்திடும் ! தலா ரூபாய் பத்து விலையிலான டிடெக்டிவ் ஜெரோம் சாகசங்கள் இவை !  ஒரே முழுநீளக் கதை இரு பாகங்களாய் உள்ளதால், இவற்றை இரண்டு இதழ்களாக பிரித்து வெளியிடும் எண்ணத்தில், சுமார் 2  வருடங்கள் முன்னரே இந்த அட்டைப்படங்கள் அச்சாகின ! ஆனால் அவற்றிற்கு விடியல் வந்திட இத்தனை காலமாகுமென சத்தியமாய் நான் எதிர்பார்த்திடவில்லை ! Anyways, better late than never I guess ! 

July 15 release 
அதனைத் தொடர்ந்து ஜூலை 15 -ல் நமது "லயன் நியூ லுக் ஸ்பெஷல் " - ரூபாய் 100 விலையில் - முழு வண்ண லக்கி லூக் சாகசங்களுடன் ! இரு லக்கி லூக் கதைகள் முழு வண்ணத்தில், ப்ளஸ் ஒரு black  & white கதை வந்திடும் ! (இந்தப் பக்கங்களில் நிச்சயம் மறுபதிப்புக் கதைகள் இருந்திடாது ...!!) 

ஆகஸ்ட் மாதம் ரிப்போர்டர் ஜானியின் குத்தகையில்..! ரூபாய் 100 விலையில் - "பனியில் ஒரு பரலோகம்' முழு வண்ணத்தில் ! அத்தோடு கேப்டன் பிரின்சின் "பரலோகப் பாதை பச்சை" முழு வண்ணத்தில். So ஜானி & பிரின்ஸ் என்று நமது "பழைய கைகள் " ஒன்று சேர்கிறார்கள் ! இந்த "இடைத்தேர்தல் கூட்டணிக்கு" என்ன பெயர் சூட்டலாம் ? இந்த இதழுக்குப் பொருத்தமாய் ஒரு பெயரை உருவாக்கிடுவோமா ?!  (இம்முறை பரிசாய் வடை இல்லாங்காட்டி ஒருபஜ்ஜியாவது நிச்சயம் உண்டு !! )  

August'2012


அதே ஆகஸ்ட் 15ல், ரூபாய் 10 விலையிலான ஜானியின் "மரணத்தின் நிசப்தம்" black  & white  சாகசமும் கூட வெளி வந்திடும் ! So, ஜானியை வண்ண அவதாரத்திலும் சரி..கருப்பு வெள்ளையிலும் சரி..ஒரே சமயம் ரசித்திடப் போகிறீர்கள் ! உங்களின் எண்ணங்களைத் தெரிந்து கொள்ள ஆகஸ்டில் எப்போதையும் விட அதிக ஆர்வமாய் காத்திருப்பேன் ! ஒரு டெஸ்ட் போட்டியும், ஒரு T20 மாட்ச்சும் ஒரே சமயம் பார்த்திடும் effect நிச்சயம் இருந்திடப் போகின்றது !!

September'12
செப்டெம்பரில் ஒரு மாறுபட்ட combo காத்துள்ளது ! கேப்டன் டைகர் தோன்றும் "மரண நகரம் மிசூரி"  முழு வண்ணத்தில்..பிளஸ் "எமனின் திசை மேற்கு" graphic novel - இரு அட்டகாசமான கௌபாய் சாகசங்களும் கரம் கோர்த்து வரவிருக்கின்றன ரூபாய் 100  விலையினில்!இரு கதைகளும் வண்ணத்தில் வந்திடும் !இரு கதைகளும் பிரெஞ்சு காமிக்ஸ் உலக ஜாம்பவான்களின் அசாத்தியப் படைப்புகள் !! பெயர் சூட்டிடும் அன்பர்களே..ஆர்வலர்களே...மீண்டும் உங்கள் சேவைக்கு வேலை வந்து விட்டது !இந்த மாறுபட்ட இதழுக்குப் பொருத்தமாய் ஒரு பெயர் உருவாக்கிடும் நண்பருக்கு ஒரு சிவகாசிப் பட்டாசு பார்சல் அந்த இதழோடு அனுப்பிடப்படும் !  So, get cracking guys..please !  

October'12 - Diwali Special ! 
அக்டோபர் மாதம் நமது "சூப்பர் மூவர்" ; "சாகச Trio " தோன்றிடும் "லயன் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்" ரூபாய் 100 விலையினில் தீபாவளி மலராய் வந்திட உள்ளது ! இதில் எந்த மாற்றமோ ; ஒத்திவைப்போ ; நிச்சயம் இருந்திடாது guys ! ஸ்பைடர் & சட்டித் தலையன் ஆர்ச்சி கதைகளில் பட்டி டிங்கரிங் செய்திட இன்னும் சற்றே கூடுதலாய் எனக்கும் அவகாசம் கிட்டியுள்ளது !
November'12


நவம்பர் மாதம் திரும்பவும் டைகர் மாதமே ! இம்முறை "தங்கக் கல்லறை" பாகம் 1 & 2 இணைந்த முழு வண்ண மறுபதிப்பு...ரூபாய் 100  விலையில் ! இந்த இதழின் பின் பகுதியில் black & white -ல் - திகில் இதழ் # 2 மறுபதிப்பாக வந்திடும் ! So இது முழுக்கவே மறுபதிப்பு சமாச்சாரம் !   

டிசம்பர் மாதம் ரொம்ப காலமாய் hibernation -ல் இருந்திட்ட நமது டாப் ஸ்டார் டெக்ஸ் வில்லரின் "காவல் கழுகு" - ரூபாய் 10  விலையில், black  & white -ல் !  இந்தப் பாணியில் ; இந்த விலையினில் இதன் பின்னர் இன்னொரு (புது) இதழ் வந்திடாது என்பதால், நமது black& white சகாப்தத்திற்கு விடைதந்திடும் இதழாய் இது அமைந்திடும் ! மாற்றங்களுக்கு நமது லயனும் விதிவிலக்கல்ல என்பது அப்பட்டம் என்ற போதிலும், இத்தனை காலமாய் நாம் பரிச்சயப்பட்டு வந்ததொரு பாணியினை முழுவதுமாய் புறந்தள்ளிடும் வேளை வரும் போது லேசான கனம் மனதில் !
Dec'12
டைம் டேபிள் போட்டாகி விட்டது இவ்வாண்டிற்கு ! இனிமேல் "பீஸ் கட்டும் படலம்" துவங்கிட வேண்டுமே!! ஆகஸ்ட் மாத இறுதியோடு உங்களின் சந்தா ரூபாய் 620 நிறைவடைந்திருக்கும் ! இதோ அதற்கான கணக்கு :


Rs .100  + (கூரியர் கட்டணம்) 25 = Rs .125  வீதம் x 4 இதழ்கள் =       Rs 500 

  • லயன் Comeback ஸ்பெஷல் 
  • முத்து காமிக்ஸ் Surprise ஸ்பெஷல் 
  • லயன் நியூ லூக் ஸ்பெஷல் 
  • ஆகஸ்ட் மாத ஜானி + பிரின்ஸ் ஸ்பெஷல் Rs.10 + (தபால் கட்டணம்) Rs .5 வீதம் = Rs.15 வீதம் x 6  இதழ்கள் = Rs .90 

  1. விண்ணில் ஓரு குள்ளநரி 
  2. கொலைகாரக் கலைஞன்
  3. சாத்தானின் தூதன் Dr .7 
  4. சிவப்புக் கன்னி மர்மம்
  5. தற்செயலாய் ஒரு தற்கொலை
  6. மரணத்தின் நிசப்தம் 
தலைவாங்கிக் குரங்கு - Rs .25  + தபால் கட்டணம் Rs 5 =                  Rs 30 

ஆக மொத்தம் : Rs .620 

இந்தாண்டின் துவக்கத்தின் போது சந்தாத் தொகை நிர்ணயம் செய்திட்ட போது - ஸ்பெஷல் இதழ்கள் நான்கிற்கு மேல் நம்மால் முடியுமென நான் நிச்சயம் எதிர்பார்த்திடவில்லை ! உங்களின் அசாத்திய உற்சாகம் என்னையும் தொற்றிக் கொண்டதன் பலனே இந்த அதிசயம் என்று நான் சொல்வேன் !  Thanks for the awesome support guys !

செப்டம்பர் ; அக்டோபர் ; நவம்பர் & டிசம்பர் 2012 மாதங்களுக்கான இதழ்களுக்குக் கட்டணம் Rs .400 ஆகின்றது ! (3  x ரூபாய் 100 இதழ்கள் + 1 x  Rs .10 + கூரியர் & தபால் கட்டணங்கள்). So ஜூலை மாதத்திற்குள் இந்தத் தொகையினை எங்களுக்கு அனுப்பிட்டால், தொடர்ச்சியாய் இதழ்களை இந்தாண்டின் இறுதி வரை அனுப்பிட ஏதுவாய் இருக்கும். Please make some time to transfer Rs.400 to our account guys ! பணம் அனுப்பிய பின்னர் lioncomics@yahoo.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு "சந்தா நீட்டிப்பு" என்று தலைப்பிட்டு ஒரு இ-மெயில் ; உங்களின் செல் நம்பரோடு அனுப்பிடக் கோருகிறேன் ! இதோ -எங்களின் வங்கிக் கணக்கிற்குப் பணம் அனுப்பிடத் தேவையான விபரங்கள் :


2013 -க்கான புது இதழ்கள் பற்றிய சிந்தனை என் மண்டைக்குள்ளே ஓடிய வண்ணம் உள்ளன ! God willing அடுத்த ஆண்டு இன்னும் எக்கச்சக்கமான hi tech கதைகள் ; அற்புத அறிமுகங்கள் என்று உங்களை அசத்திட என்னால் இயன்றதை செய்வேன் !  

இந்தப் பதிவிற்கு சுப மங்களம் போட்டிடும் முன்னே, சின்னதாய் ஒரு சேதி ! ஜூலை 15 -ல் வரவிருக்கும் "லயன் நியூ லுக் ஸ்பெஷல்"-ல் ஒரு அட்டகாச அறிவிப்பு காத்துள்ளது ! Keep guessing folks ! Bye for now !     

113 comments:

  1. ரொம்ப நாளைக்கு பிறகு, me the first :)

    ReplyDelete
    Replies
    1. //"மரண நகரம் மிசூரி" & "எமனின் திசை மேற்கு" - இந்த மாறுபட்ட இதழுக்குப் பொருத்தமாய் ஒரு பெயர்?//

      சீரியஸ் தலைப்புக்கள்: கிராபிக் நாவல் ஸ்பெஷல்! (or) ரைஃபிள் ஸ்பெஷல்! (or) தோட்டா ஸ்பெஷல்!

      'சிரி'யஸ் தலைப்புக்கள்: பட்டாசு ஸ்பெஷல்! (or) மேற்கே ஒரு மரணம் ஸ்பெஷல்! ;)

      Delete
  2. //"பனியில் ஒரு பரலோகம்' & "பரலோகப் பாதை பச்சை" - ஜானி & பிரின்ஸ் என்று நமது "பழைய கைகள் " ஒன்று சேர்கிறார்கள் ! இந்த "இடைத்தேர்தல் கூட்டணிக்கு" என்ன பெயர் சூட்டலாம் ? //

    லயன் பரலோக ஸ்பெஷல்! :)

    ReplyDelete
    Replies
    1. மேற்கண்ட 'சிரி'யஸ் தலைப்பை கண்டு கொள்ளாதீர்கள்! ;) இதோ கொஞ்சம் சீரியஸான தலைப்பு! :)
      லயன் ஆக் ஷன் ஸ்பெஷல்! (ஆக் ஷன் - Action without gap of course, literally!)

      Action என்று தமிழில் டைப் பண்ணினால், ரொமான்டிக்காக ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு ஆக்ஷன் என்று உயிர் எடுக்கிறது! :)

      Delete
  3. ஹாய் எடிட்டர் சார்!
    பள்ளி காலத்தில் புதிதாக Time-table தரும்போது free-time slotஉம் PT time உம் தேடுவோம். ஆனா இடைவெளியே இல்லாத இந்த Time-table கூடின மகிழ்ச்சி தருகிறது.

    அந்த western தொகுப்புக்கான தலைப்பாக "வெஸ்டர்ன் டுமீல் ஸ்பெஷல்" என்று முன்மொழிகிறேன்.

    ReplyDelete
  4. நம் லயன்&முத்து காமிக்ஸ்களின் உறக்கம் கலைந்து கர்ஜனை ஆரம்பித்தது மிக்க மகிழ்ச்சி..ஜூலை15 splல் என்னங்க அறிவிப்பு..சஸ்பென்ஸ் தாங்கலப்பா..மாதமிரு முறை ரூ.100 விலையில் வந்தாலும் வாங்க நாங்க ரெடி..நீங்க ரெடியா?

    ReplyDelete
  5. ஜானி+பிரின்ஸ் ஸ்பெஷலுக்கு " லயன் அட்வென்ச்சர் ஸ்பெஷல்" என்ற பெயரை முன் மொழிகிறேன்..சரியா தல..?

    ReplyDelete
  6. //நவம்பர் மாதம் திரும்பவும் டைகர் மாதமே ! இம்முறை "தங்கக் கல்லறை" பாகம் 1 & 2 இணைந்த முழு வண்ண மறுபதிப்பு...ரூபாய் 100 விலையில் ! இந்த இதழின் பின் பகுதியில் black & white -ல் - திகில் இதழ் # 2 மறுபதிப்பாக வந்திடும் ! So இது முழுக்கவே மறுபதிப்பு சமாச்சாரம் ! //

    இதை 'காமிக்ஸ் க்ளாசிக்ஸ்' பிராண்ட் மூலம்தானே வெளியிடுவீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. //ஜூலை 15 -ல் வரவிருக்கும் "லயன் நியூ லுக் ஸ்பெஷல்"-ல் ஒரு அட்டகாச அறிவிப்பு காத்துள்ளது! Keep guessing folks!//

      ரொம்ப ஈஸி! Asterix & Obelix பற்றிய அறிவிப்புதானே! :)

      Delete
    2. புதிதாக ஒரு காமிக்ஸ் ஆரம்பிக்க போகிறீர்களா?

      Delete
    3. ஒருவேளை 'மினி-லயன்' தொடர்பான ஏதாவது ரீ-பிரிண்ட் அறிவிப்பு?
      -Theeban (SL)

      Delete
    4. சார், பில்டப் ரொம்ப அதிகமா கொடுத்து விட்டீங்க. ஆகையால 'அந்த' அறிவிப்பு எதுவானாலும் நாங்க பெருசா எதாவது எதிர் பாக்குறோம்

      Delete
    5. I reckon it is re birth of minilion or thigil comics again :)

      Delete
    6. ஊஹும்....இவற்றில் எதுவுமே இல்லை guys!

      Delete
    7. அதை இங்கு சொல்லிவிட்டால் surprise இருக்காது இருபினும்
      ( டிராகன் நகரம் முழு வண்ணத்தில் ஒரே புத்தகமாக!! கரெக்டா )!!!

      Delete
    8. Shriram : இது கூட நல்ல யோசனை தான் ; but இப்போதைக்கான முயற்சி இதுவல்லவே !

      Delete
  7. காலை எழுந்தவுடன் இனிப்பான செய்தி.
    இனி ஒவ்வொரு மாதம் 15 தேதிக்கு எனது கண்கள் courier காரரை தேட ஆரம்பித்து விடும்.

    மிகவும் நன்றி சார்.

    சார் ஒரு சிறு விண்ணப்பம் நான் flipcart இணையத்தளத்தில் புத்தகம் வாங்கினேன்.
    எனக்கு அவர்கள் pack செய்த முறை மிகவும் பிடித்திருந்தது.

    நாமும் அது போல் அட்டைகள் பயன்படுத்தினால் புத்தகம் பத்திரமாக வந்து சேரும் என்பது எனது கருத்து.
    இதற்காக ஒரு சிறு தொகையை packing charges என வாங்கினால் கூட நாங்கள் தர தயாராக இருக்கிறோம்.

    மற்றொரு விஷயம் சார் spl புத்தகங்களை hard coveril வர ஏற்பாடு செய்யுங்கள் சார்.
    இதனை பற்றி நமது நண்பர்களிடம் கேட்டறியலாம் சார்.

    கிருஷ்ணா வ வெ.

    ReplyDelete
  8. கலக்கலான டைம்டேபிள்தான்! (இடைநடுவில் ஏதாவது மாற்றம் செய்து - சூ.ஹீ.சூ.ஸ் ஐ அடுத்தவருடத்துக்கு கொண்டுபோயிடாதீங்க ஸார்.) 'தீபாவளி ஸ்பெஷல்' என்பது எமது இதழ்களின் ஒரு அடையாளம். அந்தப் பெயரையே சூட்டிடுங்களேன்? (லயன் - அசத்தல் ஸ்பெஷல் - தீபாவளி மலர்!). 'தோர்கல்' தயாராவதாக மூக்கில் லேசாக வாசனை.... ???? :)
    Theeban (SL)

    -----------------------------------------------------------
    இலங்கையில் புதிய காமிக்ஸ்கள் கிடைக்குமிடங்கள் நண்பர்களுக்காக,:
    http://lion-muthucomics.blogspot.com/2012/02/for-our-sri-lankan-friends.html

    ReplyDelete
  9. தடியான புத்தகத்தில் கொட்டை எழுத்துகளில் "தீபாவளி மலர்" என்ற எழுத்துக்களை பார்த்து ரொம்ப நாட்களாகி விட்டது.

    ReplyDelete
    Replies
    1. SIV : இந்தாண்டு அந்தக் குறை இருந்திடாது உங்களுக்கு !

      Delete
  10. சிக் பில், ராபின், மார்டின் - இவர்களையும் அவ்வப்போது கவனிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. SIV : 2013 புலரட்டுமே..இவர்களுக்கு நிச்சயம் ஒரு re-entry காத்துள்ளது !

      Delete
    2. டியர் சார் , ஆகஸ்ட் ல் வரும் பரலோக ஸ்பெஷல் -jhony & கேப் பிரின்ஸ் ல் நம்ப பாவப்பட்ட சிக்பில் இன் 20 or 30 பக்க கலர் கதைகள் இருந்தால், publish செய்வது பற்றி consider செய்யலாமே ?......

      Delete
  11. Dear Sir,

    Super News. Thank You Very Much for your response to the lion fans. Pls execute the schedule soon. Delay on Thanga Kallarai is very very bad news for me.

    //சிக் பில், ராபின், மார்டின் - இவர்களையும் அவ்வப்போது கவனிக்கவும்.// I also raise my hands for this.

    And thanks we will always encourage your works.

    Expecting the releases.

    My Title for the Tiger and Graphic Novel is "WILD WEST SPECIAL"

    ReplyDelete
    Replies
    1. Very nice title... Will suit the stories perfectly..

      Delete
  12. ___________________________________________

    இந்தப் பாணியில் ; இந்த விலையினில் இதன் பின்னர் இன்னொரு (புது) இதழ் வந்திடாது என்பதால், நமது black& white சகாப்தத்திற்கு விடைதந்திடும் இதழாய் இது அமைந்திடும் !
    _____________________________________________

    So there will be no more Tex Willer Stories?

    Also, the only reason I started subscribing since 2001 was because of the reissue of the old Mayavi/Lawrence/Johnny Nero stories as comics classics. On the way I got introduced to other heroes like Spider, Blueberry, Tex whose stories I had never read before, and became a fan of those as well. But my main interest is in those old stories only.

    I have been patiently waiting for the entire series of comics classics to be reissued all these years. I am very disappointed by this post.

    ReplyDelete
    Replies
    1. tex never fails ji but in big size!!!

      Delete
    2. BN USA : Life needs to go on ; we need to acknowledge that at some point of time.

      Yes, I agree the Mayavi, Lawrence David ; Johnny Nero stories are classics - but we cannot keep living in the past forever. The world of comics has so much exciting new stuff to offer these days and the longer we stay in the past, the more we are depriving ourselves of contemporary quality. Of course there would be the occasional reprint - but that wouldn't be our staple diet for sure.

      Tex Willer will of course be there in our galaxy ; but not in the current format.

      Delete
  13. Sir, I am excited by your announcements. However, I have to agree with BN USA as the B&W works have a nostalgic element and also some are better that way. Please do not discontinue them altogether and bring them out occasionally.

    Also,paid the subscription as soon as I saw this post.

    ReplyDelete
  14. வெஸ்டர்ன் சினிபுக்கில் வாங்கலாம் நினைச்சிட்டு இருந்தேன், செப்டம்பரில் தமிழில் வரப்போறதினால் வாங்கவில்லை. உங்களுடைய புது அறிவிப்பு தோர்கள்தானே? அல்லது வேறு எதாவது புதியா அறிமுகமா? அல்லது மினி லயன் மறுபிறப்ப? எதுவானாலும் அட்டகாசம இருக்கவேண்டும். சில நாட்களுக்குமுன்தான் ஒக்லஹோமா நில ஓட்டம் பற்றிய லக்கி லுக் கதை படித்தேன் அப்பொழுது சங்கர் அவர்களின் டெக்ஸ் வில்லரின் கட்டுரை ஞாபகம் வந்தது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்த கதையை நீங்கள் தமிழில் வெளிடுங்கள்...

    ReplyDelete
  15. 1.சீறும் சிங்கங்கள்!
    2.ஒரு அதிரடி படலம்!

    ReplyDelete
  16. டியர் சார் , jhony & prince கதை க்கு இணை ந்த கைககள் ஸ்பெஷல் என்று பெயர் இட் டால் என்ன ? ............அப்புறம் லயன் நியூ லுக் ஸ்பெசல் ல் புதிய அறிவிப்பு என்ன என்று கோடி காட்டிவிடுங்கள்.........., புதிய ஹீரோவா ? .........or புதிய காமிக்ஸ் ஆ ?( மினி லயன் or திகில் )................. இல்லை என்றால் பய பிள்ளைங்க உங்களுக்கே தோணாத ஐடியா எல்லாம் இங்கே கடை பரப்பி விடுவார்கள் ...........டேக் கேர் குய்ஸ் sorry,,, guys ...........

    ReplyDelete
    Replies
    1. லூசு பையன் : ஒன்றுக்குப் பத்தாக சிந்தனைக் குதிரைகள் ஓடிடும் போது நிச்சயம் லாபம் நமக்குத் தான் ! So "யூகிப்புப் படலம்" தொடரட்டுமே !

      Delete
  17. athiradi vedi!
    kowbai kalakkal special!

    ReplyDelete
  18. 1. லயன் இணைந்த கைகள் (அ) லயன் கூட்டணி ஸ்பெஷல்
    2. லயன் கௌபாய் ஸ்பெஷல் (அ) கலக்கல் கௌபாய் ஸ்பெஷல் (அ) சீறும் சிங்கங்கள்

    எப்பூடி…

    ReplyDelete
  19. புனித சாத்தானின் பஜ்ஜி வேட்டை ஆரம்பித்துவிட்டது.1 .லயன் ஓல்ட் ஹீரோ ஸ்பெசல்.2 .லயன் த்ரில்லர் ஸ்பெசல் .3 .லயன் ஜென்டில் மேன் ஸ்பெசல்.4 .லயன் சஸ்பென்ஸ் ஸ்பெசல்.5 .லயன் ப்ரீ டைம் (free time )ஸ்பெசல்.புனித சாத்தானின் பட்டாசு வேட்டை.1 .லயன் வெஸ்டெர்ன் ஸ்பெசல்.2 .லயன் கேப்டன் ஸ்பெசல்.3 .லயன் ஆர்மி மேன் ஸ்பெசல்.4 .லயன் வின்செஸ்டர் ஸ்பெசல்.5 .லயன் பிராங்கோ அமெரிக்கன் ஸ்பெசல்.(பின் குறிப்பு;பஜ்ஜியை சூடாக அனுப்பிவைக்கவும்)எக்ஸ்ட்ரா பின் குறிப்பு;புனித சாத்தானுக்கு பட்டாசு என்றாலே பயம்.(ஹிஹி ஹி ). ..

    ReplyDelete
    Replies
    1. saint satan : விடா முயற்சி ; விஸ்வரூப வெற்றி !!

      Delete
  20. விஜயன் சார் , பரதேசம் வந்த எங்களை மறந்துடீங்களே ... அயல்நாட்டுச் சந்தாவை நீட்டிக்க இன்னும் எவ்ளோ அனுப்பனும் ?

    ReplyDelete
    Replies
    1. ரெஜோ : நிச்சயம் மறந்திடவில்லை ! அயல்நாட்டுக்கு இதழ்கள் அனுப்பிடுவதென்பது தினமும் ஒரு தினுசான தபால் கட்டணங்களோடு என்ற கதையாகிப் போய் விட்டது ! So ஒரு round figure தொகையினை அனுப்பிட்டால், உங்கள் கணக்குகளில் வரவு செய்து கொண்டு ஒவ்வொரு இதழ் அனுப்பிடும் போதும் அதற்கான கட்டணங்களை கழித்துக் கொண்டே வந்திடலாம் ! தற்சமயம் சந்தா நீட்டிப்பு செய்திட ரூபாய் 1800 அனுபிடுங்களேன் - please !

      Delete
  21. டியர் சார் ,,,,,,தயவு செய்து இந்த பச்சி, வடை போட்டி எல்லாம் வேண்டாமே ,,,,,,,,,,, ஜஸ்ட் fun ஆக இருந்தாலும் ,,,,,,,,அதற்கு பதில் சரியான பெயர் சூட்டு பவர்க்கு ,, முதல் பிரதியை இலவசமாக அனுப்பியும் ,,,,,,,hot லைன் ல் அ வர் பெயர் யை கிரெடிட் செய்தும் போட்டி வைக்கலாமே ?...........இது ஒரு யோசனை தான்............இறுதி முடி வு உங்கள் கைலதான் ...........anyway நானும் போட்டியில் ............ஹி ஹி ஹி ........1 ,லயன் இ ரட்ட யர் ஸ்பெஷல் ,,,,,,,,,,2 ,லயன் சுதந்தர தின சிறப்பிதழ் ,,,,,,,,,,,,3 ,லயன் ரெட்டை வெடி சிறப்பிதழ் ,,,,

    ReplyDelete
    Replies
    1. லூசு பையன் : நல்லதொரு suggestion ! நிச்சயம் இதனை செயல்படுத்திடலாம் ! 'லயன் நியூ லுக் ஸ்பெஷலில்' நண்பர் புனித சாதானின் பெயரினை குறிப்பிடுவதோடு இம்முயற்சியின் பிள்ளையார் சுழி போட்டால் போச்சு !

      Delete
  22. நெஜமாவே பஜ்ஜி, வடை எல்லாம் விநியோகம் ஆவுதான்னு ஒரு சின்ன டவுட் ;) புனிதசாத்தான்(!) பஜ்ஜி சாப்பிடும் போட்டோ, பாஸ்போர்ட் சைஸ்ல உங்க ப்ளாக்ல வரும்னு சொன்னீங்க - இன்னும் வரலியே? :) குரியர்காரரே (அல்லது போஸ்ட்மேனே) பசி தாங்காம வடையை லவட்டிட்டாரா? :D

    ஆனா என்கிட்டே ஒரு டக்கர் ஐடியா! பஜ்ஜி எல்லாம் வேணாம்! டைட்டில் வச்சவரோட, ஒரு சுமாரான போட்டோ + சுய தம்பட்டம் சின்னதா முழுப்பக்கத்துல(!), அவர் டைட்டில் வச்ச புக்குலேயே வெளிவந்தா நல்லா இருக்கும்! ;) நான் இதுக்காகவே ஸ்டாம்ப் சைஸ் போட்டோ எடுத்து ரெடியா வச்சுருக்கேன்! :D

    ReplyDelete
    Replies
    1. டியர் எடிட்டர் sir ,நம்ம லுசுபயன் மற்றும் கார்த்திக் சொன்னது போல் , வடை தராமல் , அவர் பெயர் வைக்கும் புக் ல் அவர் பெயர் மற்றும் intro வந்தால் நன்றாக இருக்கும் .consider செய்வீர் களா?

      Delete
    2. நன்றிகள் ஸார்! :)

      Delete
  23. புனித சாத்தானின் பஜ்ஜி வேட்டை தொடர்கிறது.6 .லயன் எக்ஸ்பிரஸ் ஸ்பெசல்.7 .லயன் டபுள் ட்ராக் ஸ்பெசல்.8 .லயன் சூப்பர் சாய்ஸ் ஸ்பெசல்.9 .லயன் டேஞ்சரஸ் ஸ்பெசல்.10 .லயன் ஹைகிளாஸ் ஸ்பெசல்.புனித சாத்தானின் பட்டாசு வேட்டை.6 .லயன் நியூ வேர்ல்ட் ஸ்பெசல்.7 .லயன் டெசெர்ட் ஸ்பெசல் .8 .லயன் fighter ஸ்பெசல்.9 .லயன் டமால் டுமீல் ஸ்பெசல்.10 .லயன் செயின்ட் சாட்டான் ஸ்பெசல்.(ஐயோ .அடிக்காதீங்க.அடிக்காதீங்க)பின் குறிப்பு .பஜ்ஜியோடு கெட்டி சட்னியும் சேர்த்து அனுப்பவும்(ஹிஹி ஹி)

    ReplyDelete
  24. Johnny+captain prince = Lion thriller Special

    Tiger+ graphic novel = Lion Tombstone Special, Lion Gunfight Special, Lion Convoy Special

    ReplyDelete
  25. எடிட்டர் இங்கே நாசூக்காகச் சொல்லியிருக்கும் விசயங்களைப் பார்த்தால் - தீபாவளி மலர் உறுதி என்று தெரிகிறது.

    ஆகவே, அன்பு உறவுகளே!! ஆசிரியர் சொன்ன 'அந்த' அறிவிப்பு - தீபாவளி மலரேதான்! :) ஆனால், உதைக்கும் விசயம் என்னவென்றால், இந்த வருடத்துக்குரிய மிகுதி சந்தா பற்றிய தகவல்களை எடிட்டர் சொல்லிவிட்டார். அப்போ, வரப்போகிற ஏதோ ஒரு இதழ் - அநேகமாக, நவம்பரில் வரவிருக்கும் 'தங்கக் கல்லறை' தான் தீபாவளி ஸ்பெஷலாக வரப்போகிறது.

    டிசம்பரில் ரூ100 இதழ்கள் ஏதும் இல்லாததால் - ஜனவரியில் காத்திருக்கிறது ஓர் அதிரடி என்றும் எண்ணத்தோன்றுகிறது.

    எல்லாம் 'எடி' அவர்களுக்கே வெளிச்சம். (எங்கள் காமிக்ஸ்களின் பாரம்பர்யப்படி, நீங்கள் விடுத்திருக்கும் அறிவித்தல்களில் நிறைய மாற்றங்கள் வந்திடுமா ஸார்? )

    -Theeban (SL)

    ReplyDelete
    Replies
    1. Podiyan : யூகங்கள் முடிவதில்லை !

      Delete
    2. Dear Theeban,
      Can i have your email.

      Aldrin Ramesh (saramesh@zubairautomotive.com)
      From Oman

      Delete
  26. 1986 ஆம் ஆண்டு எனக்கு பத்து வயது. ஆங்கிலவழிக்கல்வி எனது தமிழறிவை மட்டுப்படுத்தி இருந்தது. எனது தந்தை எனக்கு வாங்கி கொடுத்தது லயன் காமிக்ஸ். அப்போது இரண்டு ரூபாய். மாதம் நான்கு ரூபாய் எனக்காக செலவழிப்பர் (முத்து +லயன்). தற்போது 35 வயது ஆகியபோதிலும் காமிக்ஸ் படிக்கையில் எனது வயது குறைந்து விடுகிறது. தற்போது மாதம் இருநூறு ரூபாய் என்றாலும் எனது வாக்கு லயன் முத்து கூட்டணிக்கு தான். பல புத்தகங்கள் கிழிந்து விட்டன அல்லது தொலைந்து விட்டன. மறு பதிப்பில் வரும்போது எனக்கு உற்சாகம் பீறிடுகிறது. நன்றி லயன் பப்ளிஷர்ஸ்.

    ReplyDelete
  27. அனைத்து மாதமும் 100 விலையில்,பின்னிட்டிங்க சார் .டிசம்பர் லார்கோ ஸ்பெஷல் வெளிவிடலமே .

    தோட்டா முழக்கம் ஸ்பெஷல்

    அதிரடி சித்திர மலர்

    மேற்கே உதித்த சூரியன் ஸ்பெஷல்

    மேற்கு படலம் ஸ்பெஷல்

    மேற்கே ஒரு மரண ராகம்

    மேற்கில் பூத்த மலர்

    கனவுலகம் மேற்கு மலர்

    லயன் கனவு மலர்

    லயன் தங்க மலர்

    கௌ பாய் நண்பர்கள் ஸ்பெஷல்

    குதிரைகளின் குளம்பொலி ஸ்பெஷல்

    தோட்டா பாதை ஸ்பெஷல்

    தோட்டாக்களின் மோதல் ஸ்பெஷல்

    நரகத்தின் பாதை ஸ்பெஷல்

    நரகத்தின் திசை மேற்கு

    மேற்கில் ஒலித்த தோட்டா முழக்கம்

    ஜானி ஜானி எஸ் பாப்பா

    ஜானி பிரின்ஸ் எஸ் பாப்பா

    லயன் ரிப்போர்ட்டர் ஸ்பெஷல்

    யுத்தம் ஸ்பெஷல்

    பிரிந்து செல்லும் கழுகு ஸ்பெஷல்

    யுத்தம் ஒரு ஸ்பெஷல்

    சீறும் தோட்டா மலர்

    சீறும் துப்பாக்கி மலர்

    துப்பாக்கிகளால் ஒரு தோரணம்

    ReplyDelete
    Replies
    1. ஷ்ஷ்ஷ் !!! யப்பா !!! ஒவ்வொரு பெயருக்காகவுமே இனி ஒரு ஸ்பெஷல் வெளியிடலாம் போல் உள்ளதே !!

      Delete
  28. "பனியில் ஒரு பரலோகம்' முழு வண்ணத்தில் ! அத்தோடு கேப்டன் பிரின்சின் "பரலோகப் பாதை பச்சை" முழு வண்ணத்தில். So ஜானி & பிரின்ஸ் என்று நமது "பழைய கைகள் " ஒன்று சேர்கிறார்கள் ! இந்த "இடைத்தேர்தல் கூட்டணிக்கு" என்ன பெயர் சூட்டலாம் ?

    1)பரலோகம் Vs பரலோகம் ஸ்பெஷல்
    2)கோல்டன் ஓல்ட் ஸ்பெஷல்
    3)எவர்க்ரீன் ஹீரோஸ் ஸ்பெஷல்

    கேப்டன் டைகர் தோன்றும் "மரண நகரம் மிசூரி" முழு வண்ணத்தில்..பிளஸ் "எமனின் திசை மேற்கு" graphic novel - இரு அட்டகாசமான கௌபாய் சாகசங்களும் கரம் கோர்த்து வரவிருக்கின்றன

    1)அதிரடி கௌபாய் ஸ்பெஷல்
    2)லயன் கௌபாய் மேளா
    3)மேற்கில் இரு மின்னல்கள் சிறப்பிதழ்

    ReplyDelete
  29. நில உச்ச வரம்புச் சட்டம் மாதிரி, டைட்டில் உச்ச வரம்புச் சட்டம் வந்தா நல்லா இருக்கும்… பின்னே என்ன… ஆளாளுக்கு டைட்டிலா அடுக்கிட்டே போனா எப்படி… அளவுக்கு மீறி டைட்டில் சேத்து வைச்சிருக்கும் அனைவரையும் ரைடு நடத்த உத்தரவு போட்டா நல்லது. போற போக்க பத்தா… எனக்கு பட்டாசு பார்சல் இல்ல, பிஜிலி கூட கிடைக்காது போல இருக்கே…

    ReplyDelete
  30. எனது கண்ட நேர அலுவலக பணியினை முடித்து இங்கு வந்து பார்த்தால் சந்தோஷம்....
    நமது Jean Van Hamme எழுதிய Blake & Mortiemer வருகிறார்களா?
    ஒரு surprise என்று சொல்லி எங்கள் ஆர்வத்தை கிளப்பி விட்டு விட்டீர்.....

    ReplyDelete
  31. Editor sir,
    My suggestion for the titles : Lion action adventure special and Lion cowboy classics

    Radja

    ReplyDelete
  32. hello sir i could not get the XIII ratha padalam in stores will it be possible for me to get by post if so please give me details. thank you

    ReplyDelete
    Replies
    1. http://www.ebay.in/itm/Lion-Comics-Rathap-Padalam-/221043493229?pt=LH_DefaultDomain_203&hash=item337738096d#ht_500wt_1156

      Delete
  33. //ஜூலை 15 -ல் வரவிருக்கும் "லயன் நியூ லுக் ஸ்பெஷல்"-ல் ஒரு அட்டகாச அறிவிப்பு காத்துள்ளது !//

    'முத்து காமிக்ஸ் 40 நாட் அவுட் ' ஸ்பெஷல் ரூபாய் 200 ௦- 500 விலையில் வெளியிடும் அறிவிப்பு எதாவது வரப்போகிறதா?
    அல்லது, 'லார்கோ' தொடர் முழுவதும் ஒரே புத்தகமாக வெளியிடும் அறிவிப்பா?

    ரொம்ப ஆர்வமாக இருக்கு சார், எனக்கு மட்டும் ரகசியமா சொல்லுங்களேன் ப்ளீஸ்.

    ReplyDelete
  34. எடிட்டர் சார்,

    ஒரே ஒரு விண்ணப்பம், யாருக்கு எந்த ஹீரோவுக்கு வேண்டுமானாலும் விடை கொடுங்கள். ஆனால், டெக்ஸ் வில்லர் ஐ மட்டும் ஓரம் கட்டிவிடாதிர்கள் ப்ளீஸ். கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் வருடத்திற்கு 3 அல்லது 4 டெக்ஸ் வில்லர் கதைகளாவது ரீப்ரின்ட் செய்யுங்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஒருவேளை 'டெக்ஸ் வில்லர்' கலர்ல கலக்க இருக்காரோ..... (அதானே, இப்போ வந்த சின்ன பசங்கல்லாம் கலர்ல கலக்கும்போது நம்ம ஹீரோவுகெல்லாம் ஹீரோ மட்டும் என்ன லேசுபட்ட ஆளா)

      Delete
    2. P.Karthikeyan : கவலையே வேண்டாம் ! 2013 -ல் நமது டாப் கௌபாய் டெக்ஸ் வில்லர் நிரம்பவே பிஸியாக இருந்திடப் போகிறார் !

      Delete
  35. "பனியில் ஒரு பரலோகம்' முழு வண்ணத்தில் ! அத்தோடு கேப்டன் பிரின்சின் "பரலோகப் பாதை பச்சை" முழு வண்ணத்தில். So ஜானி & பிரின்ஸ் என்று நமது "பழைய கைகள் " ஒன்று சேர்கிறார்கள் ! இந்த "இடைத்தேர்தல் கூட்டணிக்கு" என்ன பெயர் சூட்டலாம் ?

    திகில் ஹீரோ ஸ்பெசல்

    ReplyDelete
  36. எனது பஜ்ஜிக்கான தலைப்பு

    1 . "க்ரைம் vs கழுகு கலக்கல் ஸ்பெஷல்"
    2 . "க்ரைம் vs கழுகு கலர் கலக்கல் ஸ்பெஷல்"
    3 . "க்ரைம் vs கழுகு அதிரடி கூட்டணி ஸ்பெஷல்"
    4 . "க்ரைம் vs கழுகு அதிரடி ஸ்பெஷல்"

    எனது பட்டசுக்கான தலைப்பு

    1 . "கௌபாய் கலக்கல் ஸ்பெஷல்"
    2 . "கௌபாய் கலர் கலக்கல் ஸ்பெஷல்"
    3 . "old vs new அதிரடி கூட்டணி ஸ்பெஷல்"
    4 . "முத்து Not Out கௌபாய் ஸ்பெஷல்"

    போட்டில நாங்களும் இருக்கோமில்ல.....

    ReplyDelete
  37. பெயர் சூட்டும் படலம் துரள் பறப்பதை பார்க்கும் போது நமது ஐடியா டிப்போக்கள் அநியாயத்துக்கு லீவு போட்டுக்கொண்டு யோசிப்பதாக படுகிறது.

    லயன் டமால் டுமீல் ஸ்பெசல்
    இதை வைத்து லக்கிலுக்கிற்கு ஒரு அருமையான ஸ்பெசல் போடலாமே!

    ஜானி ஜானி எஸ் பாப்பா
    ஸ்டீல்க்ளா
    ஹை வோல்டேஜ; லைனில் விரலை நுலைத்து விட்டீரோ?

    இதுவரை வந்தவற்றுல் சுமாரான தலைப்பு
    1)லயன் சூப்பர் சாய்ஸ் ஸ்பெசல்
    2)லயன் கௌபாய் ஸ்பெசல்

    நமது மன்னருக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை தீர்க்கும் தலைப்பை யார் தருவார்களோ அவர்களுக்கு எண்ணை வளியும் பஜ;ஜpகள் நிரம்பிய பொற்கிழி காத்துள்ளது!!

    KEEP ROCKING GUYS

    நமது சூப்பர் ஹீரோக்கள் ஸ்பெஷல் இதழை ஆர்ட் பேப்பரில் வெளியிட முடியுமா?

    கருப்புவெள்ளை கதைகள் ஆர்ட் பேப்பரில் மிக துள்ளியமாக மிளிர்கின்றன.
    உம் தலைவாங்கி குரங்கு இதழில் சூப்பர் ஹீரோக்கள் ஸ்பெஷல் இதழின் விளம்பரத்தில் ஆர்ச்சி ஸ்பைடர் ஓவியங்கள் அவ்வளவு துள்ளியம். வைத்த கண் வாங்காமல் பார்த்து வியந்தேன். அதே சமயம் தலைவாங்கி குரங்கு ஓவியங்கள் மிக மிக சுமார் என்பதால் ஆர்ட் பேப்பரின் REAL POTENTIAL லை வெளிப்படுத்தாது போயிற்று.

    SO விளம்பரங்களில் வரும் ஓவியங்களின் தரத்தின் அடிப்படையில் பார்த்தால் சூப்பர் ஹீரோக்கள் ஸ்பெஷல் இதழை ஆர்ட் பேப்பரில் வெளியிட்டால் கடைசி கடைசியாக நமது ஆர்ச்சி ஸ்பைடர் கதைகளை கண்குளிர ரசித்து ஆனந்தப்பட்டு கண்கள் பணிக்க அவர்களுக்கு விடைகொடுத்திடலாமே!

    BY THE WAY
    நண்பர்களே நமது SUBSCRIPTION யை விரைவில் புதுப்பித்து லயன் அதிரடி ஆக்ஷன்கள் தாமதமில்லாமல் நமது கரங்களில் கனக்க செய்யவேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. இல்லை நண்பரே வேலைகள் வேதனை அளிக்கையில் நமது காமிக்ஸில் மூழ்கி முத்தெடுப்பது எனக்கு மிக பிடிக்கும் கைவசம் உள்ள எல்லாவற்றையும் படித்து தீர்த்து விட்டாயிற்று. வேலை பளு வேறு! இது உண்மை காரணம். உங்க கூடலாம் போட்டி இட்டு ஜெயிக்க முடியுமா என்ற பிரமிப்புதான் மற்ற காரணம்! பார்ப்போம்!
      ஒரு தனிமையின் பயணம் _வெஸ்டர்ன் காமிக்ஸ்
      ஒரு வேங்கையின் பயணம் _ நம்ம புலியருக்கு!
      ஜானி & பிரின்ஸ் அதிரடி மன்னன்கள் ஸ்பெஷல்
      (அய்யய்யோ வடை அவ்ளோதானா? ஒண்ணுமே தோன்ற மாட்டேங்குதே!)

      Delete
  38. vijayan sir,

    1. No new largo comics in 2012 ..?? It was there in your previous blog.pls clarify..

    2. can you provide a subscriber id for every subscriber? it will be easy for everyone to communicate.You can send the ID to the subscriber, when he/she sends the subscription extension email.

    3. Is there any possibility of a huge special(300/400/500 pages in full color) edition which has a mix of our famous heroes (new or reprint stories)..It might sound like a wishlist..if you initiate a poll on this, atleast you can find out the possibility of this and also on how many are ready to buy such a big edition? (are you going to have such similar thing in your surprise announcement? :) )

    ReplyDelete
    Replies
    1. lion fan :

      1.Largo has an active presence in 2013 ! Stay assured !

      2.Will do !

      3.Dreams do have a funny knack of coming true sometimes ! So let's keep those dreams..those guesses going !! Not too long a wait for the 15th.July'12 !!

      Delete
  39. விஜயன் சார் மெய்யாலுமே சூப்பர் சார் இத இதத்தான் இத்தன நாளா எதிர்பார்த்திருந்தோம்
    அதெல்லாம் சரி
    நம்ம லார்கோவுக்கு சூப்பரா தலைப்பு கொடுத்துவிட்டு இப்படி அம்போன்னு விட்டுட்டீங்களே அவரையும் கொஞ்சம் கவனிங்க சார் :))
    .

    ReplyDelete
  40. நமக்கு வடையும் கிடைக்காது பஜ்ஜியும் கிடைக்காது
    ஏகப்பட்ட தலைப்புகள் ஏற்கனவே படிக்கவே தல சுத்துது இதுல நாங்க எங்க யோசிச்சு ........... ஹ்ம்ம்ம்................ ;-)
    .

    ReplyDelete
  41. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத புனித சாத்தான்.பஜ்ஜி வேட்டை.11 .கிராண்ட் மாஸ்டர்ஸ் ஸ்பெசல்.12 .கிரேட் ஹீரோஸ் ஸ்பெசல்.பட்டாசு வேட்டை.11 .ஆங்ரி மேன்ஸ் ஸ்பெசல்.12 .ஹாட் சாட் ஸ்பெசல்.(பின் குறிப்பு;உஷ் ;அப்பாடா ;முடியல்ல;)

    ReplyDelete
  42. Wonderful News. This sets the expectation and i am all exicted -- will be looking forward for 15th.
    Editor sir -- Since, 100Rs books had become our normal issue please give some thought about "REAL SPECIALS" (like 250Rs, 500Rs or 1000Rs) books. Looking forward to your thoughts on this...

    - Karthikeyan

    ReplyDelete
    Replies
    1. Karthikeyan : Let's get into a groove first...the sky's the limit afterwards !!

      Delete
    2. Thanks for the reply. Typing answers to the readers @1:00 AM, hats off to your commitment. I am keep on refreshing to see all of your new replies....

      - Karthikeyan

      Delete
  43. Dear Vijayan Sir,
    I already sent Rs.500/ for purchase the books on last month. I got Largo Whinch book only. Then how much money I have to pay for the other forthcoming titles?
    Please confirm the amount I will send it by money order.
    Please inform at the earliest.

    Chezhian Babu

    ReplyDelete
  44. கேப்டன் டைகர் தோன்றும் "மரண நகரம் மிசூரி" பிளஸ் "எமனின் திசை மேற்கு" graphic novel கதைக்கு என்னுடைய தலைப்பு - "Wild / Western Realistic ஸ்பெஷல்" மற்றும் ஜானி & பிரின்ஸ் கதைக்கு - "sensible vs incredible ஸ்பெஷல்"

    ReplyDelete
  45. பாலைவன புயல் ஸ்பெசல்

    கௌ பாய் உலகம் ஸ்பெசல்

    தோட்டாக்கள் வரையும் ஸ்பெசல்

    யுத்த கள மலர்

    அதிரடி உலகம் மேற்கு ஸ்பெசல்

    தோட்டாக்கள் நெய்த மலர்

    பாலைவன அட்டகாசம் ஸ்பெசல்

    ReplyDelete
  46. பஜ்ஜி தலைப்பு

    "லயன் திக்... திக்... ஸ்பெஷல்"

    பட்டாசு தலைப்பு

    "முத்து கௌபாய் GUN ஸ்பெஷல்"


    தொடரும்.....

    ReplyDelete
  47. karsanin kadantha kaalam...plzzzz consider

    ReplyDelete
  48. everything happening here is like a dream...hope my sleep is not disturbed :-)

    ReplyDelete
  49. பரலோகப் பாதை பச்சை இக்கு படம் வரைந்தவர் ADANS அவர். படங்கள் HERMANN போல் இல்லாமல் சுமாராக தான் இருக்கும்.ஹெர்மன் வரைந்த பிரின்ஸ் காமிக்ஸ் கலர் இல் ஆசிரியர் விஜயன் போட்டாள் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  50. புதிய அட்டவனை பார்த்த உடன் ரொம்ப சந்தோசமா இருக்கு. வருஷம் 8 "SPECIAL Release", ஆஹா! சரியான காமிக்ஸ் விருந்து!! Professionals வேலை செய்கிறவர் எளிதாக வாங்கலாம்! ஆனால் நாம் NON-Professionals நினைத்து பார்க்கவேண்டும்! அவர்களால் இந்த மாதிரி வாங்கமுடியாது. நாம் அவர்கள் எளிதாக வாங்க திட்டமிட வேண்டும். So it will make them happy and stay with US!

    I don't believe your announcement unless and until you execute them successfully! But I wish you do them without fail.

    LARGO story is really good! I can understand why they are planning to make it as movie even in tamil.

    ReplyDelete
  51. தூங்காத துப்பாக்கிகளின் கதை

    துடிக்கும் துப்பாக்கி ஸ்பெசல்

    ReplyDelete
  52. 1.johnny prince spl, simply best spl
    2.cowboy galaxy spl, rangers spl

    ReplyDelete
  53. அமெரிக்காவின் கடந்த காலம்

    நேற்றைய அமெரிக்கா

    அமெரிக்க மண்ணில் அதிரடி

    துப்பாக்கி உலகின் வரலாறு

    துப்பாக்கி தூக்கிகள்

    அமெரிக்க மண்ணில் சிதறிய இரத்தம்

    ரத்தத்தின் விலை அமெரிக்கா

    ReplyDelete
  54. கௌ பாய் கால மலர்

    கௌ பாய் உலக மலர்

    அமெரிக்க மண்ணின் சரிதை

    ReplyDelete
  55. அமெரிக்காவின் கடந்த கால க்ளாசிக்ஸ்

    ReplyDelete
  56. I am sure we are going to get collectors special from our Editor
    am i correct?
    Aldrin Ramesh
    From Oman

    ReplyDelete
  57. கோடை குளிர்ச்சி ஸ்பெசல் .விஜயன் 2012 ஸ்பெசல்.தல தளபதி ஸ்பெசல் .சிவகாசி சூப்பர் ஸ்பெசல்

    ReplyDelete
  58. முத்து 40 நாட் அவுட்

    மற்றும் வேதாளர் கதைகளை மறு பதிப்பு செய்வதே அந்த சர்ப்ரைஸ் சரியா ?
    ஐயா நான் நூறாவது

    ReplyDelete
  59. My title option for Johny and Prince Special
    1) Crime Heroes Special
    2) Crime Stars Special
    3) Double Thrill Special
    4) Double Thigil Special
    5) Crime Thriller Special

    ReplyDelete
  60. Sir, does your plans include scifi and horror genre too in future?

    ReplyDelete
    Replies
    1. Horror : Yes
      Sci-fi : No...at least in the near future !

      Delete
  61. கௌ பாய்ஸ் கன் ஸ்பெசல்

    கௌ பாய்ஸ் துப்பாக்கி ஸ்பெசல்

    ReplyDelete
  62. is tat surprise is abt collectors spl or some new brand of comics

    ReplyDelete
  63. Lot many build ups sir! (eagerly) Waiting to see the success of your 'time table' announcement!

    "லயன் கர்ஜனை லவ்லி ஸ்பெஷல்"
    OR
    "சிம்ம கர்ஜனை சூப்பர் ஸ்பெஷல்"

    ReplyDelete
  64. மிசூரி க்கு 'மிசெளரி' தான் இந்திய-ஆங்கில உச்சரிப்பில் சரியானது என்று நினைக்கிறேன்!

    ReplyDelete
  65. sun of a gun spl...
    smoking guns special..
    western gilli's special..
    quick gun's special..

    guys pls vote for karsanin kadantha kaalam..cant wait to c that story in colour...

    ReplyDelete
  66. Ratha charithram...

    hey this looks opt..lets c how many of u like it

    ReplyDelete
  67. Shopaholi...! Get Designer OutFits For yourself,For Others & to gift Your Loved Ones......
    Salwar Suit

    ReplyDelete