நண்பர்களே,
மொக்கையானதொரு இன்டர்நெட் லிங்க் கடுமையானதொரு எதிரி என்பதை அனுபவப்பூர்ணமாய் உணர்ந்து கொண்டே இப்பதிவை எழுதுகின்றேன் ! என் சிந்தனைகள் சீராய் ஓடிடும் சமயம், எனது வயர்லெஸ் நெட் கோபித்துக் கொள்ள....அது நிதானத்துக்கு வந்திடும் தருணத்தில் நான் மோட்டு வளையத்தை முறைத்துப் பார்த்த கதை தான் !! எனினும், here goes ... !
எனது கடைசிப் பதிவில், உங்கள் பக்கமாய் ஒரு Surprise வரக் காத்துள்ளதெனக் குறிப்பிட்டிருந்தது நிச்சயம் நினைவிருக்கும் ! அந்த surprise இதோ..இங்கே..!
நமது schedule படி இப்போது "லயன் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்" உங்களை சந்திக்கத் தயாராகி இருந்திருக்க வேண்டும்...! (முதல் பிரதியினை தாளா தாகத்தில் காத்திருக்கும் கனவுகளின் காதலருக்கு அனுப்பிட ஏற்பாடு கூட ஆச்சு !)ஆனால்...வழமை போல் எதாச்சும் உல்டா வேலை பார்த்திடாவிட்டால் அதில் நம் முத்திரை இருந்திடாதே !! "சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்" இதழின் பணிகள் அனைத்தும் 15 நாட்கள் முன்னரே முடிவு பெற்று விட்ட போதிலும் ; இறுதி எடிட்டிங் பணிகளில் எனக்குக் கொஞ்சம் திருப்தி ஏற்படவில்லை. மனோஹரா பாணியில் ஸ்பைடரும் ; மாயாவியும் பேசும் வசனங்களை நிறையவே trim பண்ணாவிட்டால் பலூனுக்குள் சங்கதிகளை அடக்கிடும் முயற்சியில் எழுத்துக்கள் அளவில் ரொம்பவே சிறிதாகப் போய்விடுவதை பார்த்திட முடிந்தது ! மீண்டும் ஒரு முறை உங்கள் கண்களை சோதித்திட பிரியப்படாத காரணத்தால் - சூப்பர் ஹீரோக்களை சீராட்டி பாராட்டி இன்னுமொரு மாதத்திற்கு எங்கள் கைக்குள்ளே வைத்திருந்து ஜூன் நடுவில் ரிலீஸ் செய்திடலாமெனத் தீர்மானித்தேன் ! (யாரோ விசில் அடித்து ஆரவாரம் செய்வது கேட்கிறதே ?!!)
முந்தைய ஏற்பாட்டின்படி ஜூன் மாதம் வரவிருந்த லார்கோ வின்ச் பாகம் 1 & 2 இன்னொரு பக்கம் பாதி முடிந்த நிலையில் இருந்தது நினைவுக்கு வந்திட ...அவ்விரு கதைகளையும் ஒருங்கே வெளியிட்டு..ஒரு ஸ்பெஷல் இதழாக ஆக்கினால் என்னவென்று தோன்றியது ! விளைவு - முத்து காமிக்ஸ் SURPRISE ஸ்பெஷல் !!
இந்த திடீர் மாற்றம் என் மண்டைக்குள் உதித்ததே வெகு சமீபமாய் என்பதால் - லார்கோவின் பணிகளை முடித்திட இரவும் பகலும் நிறையவே பிரயத்தனப்பட்டோம் ! வெறுமனே லார்கோவின் இரு கதைகளை மட்டும் வெளியிட்டு மங்களம் பாடிடாமல் கூடுதலாக வேறு என்ன சேர்த்திடலாமென மண்டையைப் பிராண்டிய போது - மறுபதிப்பாக வெளியிட்டிடத் தயாராகி இருந்த திகில் பாகம் 1 நினைவுக்கு வந்தது ! So - லார்கோவின் அறிமுகக் கதைகள் - "என் பெயர் லார்கோ" & "யாதும் ஊரே...யாவரும் எதிரிகள்" அட்டகாசமான ஆர்ட் பேப்பரில், முழுவண்ணத்திலும் ; திகில் இதழின் பாகம் 1 பிரமாதமான வெள்ளைத்தாளில் black & white ல் எனத் தீர்மானித்தேன் !
பரபரப்பாய் பணிகள் நடந்தேறி இன்று காலை அச்சுப் பணிகள் முழுவதும் நிறைவடைந்து விட்டன ! லார்கோ வின்ச் நிஜமாகவே சர்வதேசத் தரத்தில் வந்திருப்பதாய் எனக்குத் தோன்றியது ; சீக்கிரமே உங்கள் கரங்களில் இந்த இதழ் ஐக்கியமாகிடும் போது உங்களின் reactions என்னவாக இருந்திடுமெனத் தெரிந்திட ஆவல் தாளவில்லை!வழக்கமாய் லயனில் எழுதிடும் ஹாட்லைனில் நான் நிறைய எழுதி நீங்கள் பார்த்திருப்பீர்கள்...ஆனால் முத்து காமிக்ஸில் காமிக்ஸ் டைம் பகுதியில் அவ்வளவு விரிவாய் நான் எழுதிய நினைவே இல்லை ! அந்தக் குறையை (?!!) நிவர்த்தி செய்திட இம்முறை ஒன்றுக்கு..இரண்டு முழுப் பக்கங்கள் எழுதியுள்ளேன் ! இந்த இதழுக்கு நான் Surprise ஸ்பெஷல்" எனப் பெயரிட்டதன் முழுக்காரணங்களும் இதில் பார்த்திடப் போகிறீர்கள் !
அட்டைப்படத்தினைப் பொறுத்தவரை முதலில் புதிதாய் நாமாக ஒரு டிசைன் செய்திருந்தோம் ; ஆனால் லார்கோவின் கதைகளுக்கு முடிந்த மட்டிற்கு ஒரிஜினல் டிசைன்களையே பின்பற்றிடும்படி படைப்பாளிகள் கருத்துத் தெரிவித்திட, வேறு வழியின்றி அவர்கள் உருவாக்கிய அதே சித்திரத்தை சற்றே வண்ணங்கள் மெருகேற்றி ..பின்னணியில் சில்வர் கலர் சேர்த்து சற்றே improved look கொடுத்திடப் பிரயாசை எடுத்துள்ளோம் ! இது நமது வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்டுத் தெரியும் ஸ்டைல் என்ற போதிலும் - ஆளை அடிக்கும் சிவப்பு..நீலம் என்ற சங்கதி இல்லாமல் அமைதியானதொரு பாணியாக எனக்குப் பட்டது ! தனுஷ் சொல்லும் வசனம் இதற்கும் பொருந்துமென நினைக்கிறேன்.."இந்த பாணி ஓவியத்தைப் பார்த்தால் புடிக்காது...பார்த்துகிட்டே இருந்தால் தான் புடிக்கும்!"
அச்சுப் பணிகள் நிறைவு பெற்றுவிட்டன ....இனி பைண்டிங் வேலைகளே ! வரும் சனிக்கிழமை (மே 5 ) கூரியர் மூலம் இதழ்கள் உங்களைத் தேடித் புறப்பட்டிட - எங்களால் முடிந்த முயற்சிகள் அனைத்தையும் எடுத்திடுவோம் ! தமிழக அரசின் சமச்சீர் பாடநூல்களின் பணிகள் சிவகாசியில் பரவலாய் நடந்தேறி வருவதால் பைண்டிங் வேலைகள் எக்கச்சக்கமான நெருக்கடியில் உள்ளது ! அரசு கொடுத்திட்ட முப்பது நாள் காலக்கெடுவிற்குள் புத்தகங்களை முடித்து ஒப்படைக்காவிட்டால் நாள் ஒன்றிற்கு பில் தொகையில் ௦0.5 % தண்டம் விதிக்கப்படும் என்பது அரசின் விதி ; so சிவகாசியில் பல அச்சக அதிபர்களின் தற்காலிக ஜாகை பைண்டிங் செய்து தந்திடும் நிறுவனங்களின் திண்ணைகளிலே தான் ! அந்த திண்ணையில் காத்திருக்கும் பட்டியலில் நாமும் சேர்ந்து கொள்ள போர்வை, தலையணை சகிதம் தயார் ! Hopefully not too long a wait .....for me...for you !
காரணம் எதுவாக இருப்பினும் சவாலானதொரு கதைத்தொடரை விரைவாகவே உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்திடுவதில் எனக்கு மகிழ்ச்சியே ! XIII முழுத் தொகுப்பிற்குப் பின் எனக்கு சிரமமானதொரு பணியாக ஏதும் இருந்திடவில்லை என்பதே நிஜம் ! லார்கோ தொடர்கள் பெண்டு நிமிர்த்திடுவதில் XIII -க்கு கொஞ்சமும் சளைத்தவர் அல்ல என்பது தொடரும் அத்தியாயங்கள் தெளிவாகவே சொல்லுகின்றன !
சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் பட்டி..டிங்கரிங் பணிகள் முடிவு பெற்று ஜூன் 20 -ல் தயாராகிடும் ! அதனைத் தொடரவிருப்பது நமது "லயன் நியூ லுக் ஸ்பெஷல்" ஜூலை 15 -ல் !! சற்று தொலைவில் இன்னொரு நூறு ரூபாய் இதழாக கேப்டன் டைகரின் "தங்கக் கல்லறை" மறுபதிப்பு வேறு !
ஓவராய் நூறு ரூபாயில் ஸ்பெஷல் இதழ்கள் வந்திடுவதும் ஒ.கே. தானா என்ற சின்னதொரு கேள்வி என் மனதுக்குள் உள்ளது !அதை ஆமோதிக்கும் விதமாய் நம் நண்பர் R .T .முருகன் இரண்டொரு நாட்களுக்கு முன்னே ஒரு கடிதமாய் எழுதியுள்ளார் ! பாக்கெட்டுக்கு சேதாரம் உண்டாக்கிடக் கூடாதென்பது அவரது caution ! இதுவும் நிச்சயம் கவனத்தில் கொண்டிட வேண்டிய சங்கதியே !! What say folks ?
Me the first! Super! :)
ReplyDeleteஅன்புள்ள விஜயன்,
Deleteநீண்ட நாட்களுக்கு பிறகு இது நிஜமாகவே ஒரு அட்டகாசமான அறிவிப்புதான! சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் தாமதம் ஆவதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்! :) நீங்கள் எனது இந்த பதிவை பார்த்து ஆளை அடித்திடும் வண்ணக்கலவையை குறைத்தீர்களோ, இல்லை உங்களுக்கே தோன்றியதோ - எது எப்படி இருப்பினும் இது மிகவும் வரவேற்கப் படவேண்டிய ஒரு சங்கதி!
>>>முடிந்த மட்டிற்கு ஒரிஜினல் டிசைன்களையே பின்பற்றிடும்படி படைப்பாளிகள் கருத்துத் தெரிவித்திட<<<
அவர்களுக்கு நமது வாசகர்களின் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவியுங்கள்!
முதன் முதலாய் சர்வதேச தரத்தில் ஒரு முன்னட்டை! அப்படி என்றால் பின்னட்டை? - மன்னிக்கவும் அந்த பச்சை பிசாசு எனக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை :( இருந்தாலும் ISBN code-ஐ நமது இதழில் காண்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது!
ஒரே ஒரு குறை! லார்கோ கதைகளை தனியாகவே வெளியிட்டு இருக்கலாம்! வேண்டுமென்றால் அவரது இன்னொரு கதையையும் இணைத்திருக்கலாம்! :(
>>>சனிக்கிழமை (மே 5 ) கூரியர் மூலம் இதழ்கள் உங்களைத் தேடித் புறப்பட்டிட<<<
கடைசியாக வெளிவந்த இதழ்கள் யாவும் என்னை மிகக் மிக கடைசியாக வந்து சேர்ந்ததில் மனம் நொந்து போன நிலையில் அவ்விதழ்களுக்கான ஒரு விமர்சனம் எழுதினேன்! :( இம்முறையாவது முதல் batch-இல் book அனுப்பி வைத்து என்னைப் போன்ற புதிய காமிக்ஸ் பதிவர்களை ஊக்குவியுங்கள்!
உங்களுடைய கடந்த ஓரிரு பதிவுகளின் பின்னூட்டங்கள் குறைந்த பட்சம் 50 கூட தாண்டவில்லை. இந்த பதிவு அடி பின்ன வாழ்த்துக்கள்! :)
அன்புடன்,
கார்த்திக்
AD: புத்தம் புது தோற்றத்தில் உங்கள் அபிமான ப்ளேட்பீடியாவை இன்றே வாசியுங்கள்!
வாசகர்களின் பின்னூட்டங்களுக்கு பதில் இடுவதை தங்கள் பணிச்சுமை காரணமாய் தவிர்த்து வருகிறீர்கள் என நினைக்கிறேன்! இருப்பினும் அவ்வப்போது பதிலளித்தால் நன்றாக இருக்கும்! நன்றி!
Deleteநண்பரே ,
Deleteவண்ணமயமான அட்டைப்படங்களுக்கு நான் ஆதரவாளனும் அல்ல ; அமைதியான வண்ணச் சேர்க்கைகளுக்கு எதிரியும் அல்ல !
நமது அட்டைப்படங்கள் பெரும்பாலும் strong ஆன வண்ணங்களில் வந்திடுவதற்கு Simple ஆனதொரு வியாபார லாஜிக் பின்னணியில் உள்ளது....! கடைகளில் ; தோரணங்களில் - வெயிலினில் ஒரு மாதம் வரை தொங்கிடத் தேவை கொண்டவை நமது இதழ்கள்.( At least இந்த நேரடி விற்பனைப் பெரும்பான்மை அமலுக்கு வந்திடும் வரை) ! வெயிலில் தொங்கும் போது வண்ணங்கள் வீரியம் குறைந்து போய்விடும் என்பது தான் ஆப்செட் மைகளின் தன்மை. So பளிச் என்ற வர்ணங்கள் கூடுதல் நாட்கள் தாக்குப் பிடித்திடும். எங்களிடம் கைவசம் உள்ள முந்தைய பிரதிகளில் ஒரு பகுதி சென்னை போன்ற பெருநகர விற்பனையாளர்கள் வாபஸ் அனுப்பிட்ட சரக்குகள். அவற்றின் அட்டைப்படங்களை பார்த்தாலே தெரியும் இவை கடைகளில் தொங்கி களை இழந்தவை என்று !
இந்த இதழுக்கு படைப்பாளிகள் ஒரிஜினல் சித்திரத்தை கடைபிடித்திடச சொன்னார்களே தவிர,color combination நமது தேர்வே ! விரும்பி இருந்தால் இதனைக் கூட நான் வழமையான வண்ணங்களில் அமைத்திருக்கலாம்...!ஆனால் கதையின் தன்மையும், அதன் மூடும் மாறுபட்டவை என்பதால் அட்டைப்படத்திலும் அது reflect ஆகிட வேண்டுமென்ற வேட்கையில் தான் subtle கலர்கள் பயன்படுத்தியுள்ளோம்.
பின்னட்டையில் உள்ள பச்சைப் பிசாசு தான் ஒரிஜினல் திகில் இதழின் முதல் அட்டைபடம் ; so பிடித்தாலும்,பிடிக்காவிட்டாலும் - அதனை தவிர்த்திடுவது இயலாக் காரியம்.
இதழ்களை அனுப்பிடுவதற்கு முதல் batch என்றோ ; தாமதமான batch என்றோ ஏதும் கிடையாது ; பதிவர் ; பதிவர் அல்லாதவர் என்ற பாகுபாடும் கிடையாது. சந்தாவில் உள்ள seniority தான் பிரதிகள் அனுப்பப்படும் வரிசையினை நிர்ணயிக்கும்.
அப்புறம் சின்னதாய் ஒரு suggestion : இங்கே நீங்கள் இட்டிடும் கருத்துக்களின் பெரும்பான்மையில் உங்களது வலைப்பதிவினை விளம்பரம் செய்திடும் உத்வேகமே மேலோங்கித் தெரிவது போல் இருந்திடுவது - நீங்கள் சொல்ல வரும் கருத்தை சற்றே மழுங்கிடச் செய்வதாய் எனக்குப்பட்டது . ஒரு பதிவின் தாக்கத்தைத் தீர்மானிப்பது அதன் content மற்றும் எழுத்து நடையே என்பதை நான் சொல்லி நீங்கள் உணர அவசியம் இல்லை என்பதை நானறிவேன் ; எனது கடைசி இரு பதிவுகளும் மந்தமான பின்னூட்டங்களைப் பெற்றிருப்பதே அதற்கு மிக அண்மையான உதாரணமாக இருந்திடும் ! தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாமே ப்ளீஸ் ; மனதில் பட்டதைச் சொன்னேன் !
>>>வெயிலில் தொங்கும் போது வண்ணங்கள் வீரியம் குறைந்து போய்விடும்<<<
Deleteஹ்ம்ம்... ஒத்துக்கொள்ள வேண்டிய லாஜிக்தான்! இனிமேல் subtle வண்ணங்கள் தொடர்ந்தால் மகிழ்ச்சியே!
>>>சந்தாவில் உள்ள seniority தான் பிரதிகள் அனுப்பப்படும் வரிசையினை நிர்ணயிக்கும்<<<
அப்ப இந்த வடையும் அம்பேல்தானா! :(
>>>இங்கே நீங்கள் இட்டிடும் கருத்துக்களின் பெரும்பான்மையில் உங்களது வலைப்பதிவினை விளம்பரம் செய்திடும் உத்வேகமே மேலோங்கித் தெரிவது போல் இருந்திடுவது<<<
ஆமாம்! :) காமிக்ஸ் பற்றிய ஒரு தளத்தை விளம்பரப்படுத்த இதை விட சிறந்த தளம் வேறில்லை என நான் நினைத்ததால்!
>>>நீங்கள் சொல்ல வரும் கருத்தை சற்றே மழுங்கிடச் செய்வதாய் எனக்குப்பட்டது<<<
இனிமேல் உங்கள் தளத்தில் அந்த முயற்சியை நிறுத்தி விடுகிறேன்! ஆனாலும், எனது (மொக்கை) கருத்துக்கள்(!) தேவைப்பட்டால் ஈ-மெயில் மூலமாக உங்களை வந்தடையும்! ;)
>>>ஒரு பதிவின் தாக்கத்தைத் தீர்மானிப்பது அதன் content மற்றும் எழுத்து நடையே என்பதை நான் சொல்லி நீங்கள் உணர அவசியம் இல்லை என்பதை நானறிவேன்<<<
உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது விஜயன் சார்! :)
>>>தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாமே ப்ளீஸ் ; மனதில் பட்டதைச் சொன்னேன் !<<<
ச்சே ச்சே, அப்படி எதுவும் இல்லை! விவேக் ஒரு படத்தில் DGP-யை எனக்கு தெரியும் என சொல்லி ஒரு சிறிய இடைவெளி விட்டு, ஆனா அவருக்குதான் என்னைத் தெரியாது எனக் கூறி மொத்து வாங்குவார்! சின்ன வயதில் இருந்து தெரிந்தவராயிற்றே, (அதாவது விவேக்கின் பாணியில்!) என்ற உரிமையில் கொஞ்சம் அதிகமாகவே ஆடி விட்டேன் போலிருக்கிறது! முன்னமே சொல்லி இருந்தால் எப்போதோ நிறுத்தியிருப்பேன் :)
இனி நடக்காது! :) எனது (profile) பெயரளவில் கூட!
முதல் முதலாய் உங்கள் தளத்தில் எனது பின்னூட்டத்திற்கு பதில் அளித்ததிற்கு மிக்க நன்றி விஜயன்! Keep Rocking...!
அன்புடன்,
-கார்த்திக்
Dear Editor & Staff,
ReplyDeleteright now i am working in my office(12:30AM)fixing a brocken VOIP server.whole day i was under lot of pressure.i just want to check the blog and you gave me a real boost.thanks for your surprices.i dont know why people think 100RS is a big deal.any english magazine which cost more than 100RS.which we are throwing it after reading.we are talking about our comics which always goes to my chest after reading.
Dear Readers i dont want to hurt anybody saying that 100RS is not a big deal.publishers also be encourged to continue with new comics and we also very happy to keep collecting our dear comics.
Regards
Aldrin Ramesh from Oman
hi...ramesh
Deletewhat surprise you from oman..me too from muscat, i want to say hai to you :) :)
yes really 100rs worth in such a book
thank you vijayan.
Senthil
அட்டை படம் அட்டகாசம் .கனவுகளின் காதலருக்கு முதல் பதிப்பு .ம்ம்ம்மம்மம்ம்ம்ம்.ஒ.கே .ஆனால் முதல் பேட்சிலேய இரும்பு கைக்கும் அனுப்பி விடுங்களேன் .எப்போதும் கடைசியிலே வருகிறது. அட்டை படம் வெகு ஜோர்ர்.அட்டை படமே தரத்தை உறுதி படுத்துகிறது. ஸ்பெஷல் எப்போதுமே தொடரலாமே.
ReplyDelete//அட்டைப்படத்தினைப் பொறுத்தவரை முதலில் புதிதாய் நாமாக ஒரு டிசைன் செய்திருந்தோம் ; ஆனால் லார்கோவின் கதைகளுக்கு முடிந்த மட்டிற்கு ஒரிஜினல் டிசைன்களையே பின்பற்றிடும்படி படைப்பாளிகள் கருத்துத் தெரிவித்திட, வேறு வழியின்றி அவர்கள் உருவாக்கிய அதே சித்திரத்தை சற்றே வண்ணங்கள் மெருகேற்றி ..பின்னணியில் சில்வர் கலர் சேர்த்து சற்றே improved look கொடுத்திடப் பிரயாசை எடுத்துள்ளோம் ! இது நமது வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்டுத் தெரியும் ஸ்டைல் என்ற போதிலும் - ஆளை அடிக்கும் சிவப்பு..நீலம் என்ற சங்கதி இல்லாமல் அமைதியானதொரு பாணியாக எனக்குப் பட்டது ! தனுஷ் சொல்லும் வசனம் இதற்கும் பொருந்துமென நினைக்கிறேன்.."இந்த பாணி ஓவியத்தைப் பார்த்தால் புடிக்காது...பார்த்துகிட்டே இருந்தால் தான் புடிக்கும்!" ///
இல்லை பார்த்தவுடனே பிடித்து விட்டது.உடனே வாபஸ் பெறுங்கள் .உண்மையாகவே வெகு அற்புதம் .பொருத்தமான தலைப்பு.சித்திரை கொண்டாட்டம் அற்புதமாய் துவங்கி விட்டது.கோடைக்கு குழு குழு பனிகலரில் அட்டை ஆஹா அற்புதம் .இந்த சர்ப்ரைஸ் எனக்கு ரொம்ப பிடித்து விட்டது,
அடுத்தடுத்த பந்துகளில் சிக்ஸ் ,four, என அடிக்கும் விஜயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.ஆனால் இது ஒரே பந்தில் சென்சுரி அடித்து விட்டிர்கள் . அபாரம்.அற்புதம் .வர்ணிக்க முடியலிங்க .எப்படியோ எதிர்பார்க்க தயாராகி விட்டேன் .
ஏமாற்றம் ஸ்பெஷல் .
சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் ஐ இரு வண்ணத்தில் கொலை படை, பறக்கும் பிசாசு போல வெளியிடலாமே .
black & white ல் சூப்பர் ஹீரோக்கள் வந்திடுவதற்கே கறுப்புக் கோடி காட்டும் போராட்டம் தயாராகி வரும் நிலையில் - இரு வண்ணங்கள் என்றால் - அது ரயில் மறியல் ரேஞ்சுக்குப் போய் நிற்கப் போகிறது ! வேண்டாமே :-)
Deleteஆஹா .எப்படியோ எனது கேள்விக்கு முதல் முறையாக
Deleteபதில் வங்கி விட்டேன்.நமது வெகு வாசகர் விருப்ப படியே வெளி விடுங்கள் .
மேலும் எனக்கு கடைசியாக சாத்தானின் தூதன் ,அனுப்பினார்கள்.நான் போன் செய்த பொது ஏற்கனவே தலைவாங்கி வந்து விட்டதை குறிப்பிட்டேன்.அனால் அவர்கள் கூரியரில் இரண்டு புத்தகத்தையுமே அனுப்பி விட்டார்கள் .அதே நேரம் சாதா தபாலில்
சாத்தானின் தூதனும் வந்து விட்டது.எனவே மேலும் இந்த இரண்டு புத்தகத்துக்கும் சேர்த்து எனது சந்தாவிலிருந்து கழித்து விடுங்கள்.
ச. பொன்ராஜ் ,கோயம்புத்தூர்.
உண்மையிலேயே ஒரு Surprise தான்.
ReplyDeleteமிக மகிழ்ச்சியாக உள்ளது.
சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் தள்ளி போவதில் சிறு வருத்தம் இருந்தாலும் அது தரத்திற்காக தான் என நினைய்கும்போது சமாதானம் ஆகிறது.
நான் Come back spl வாங்கிவிட்டேன் அதனால் இனி வரும் கதைகளுக்கு மட்டும் சந்தா செலுத்த நான் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்.
கூறினால் நான் money transfer செய்துவிடுவேன்.
நன்றிகளுடன்
கிருஷ்ணா வ
IravukKalugu : தற்சமய சந்தாத் தொகை நாம் இவ்வருடத்திற்கு வெளியிட எண்ணியுள்ள இதழ்களுக்கு நிச்சயம் பற்றிடப் போவதில்லை. அது பற்றியும் இந்த Surprise ஸ்பெஷலில் எழுதி உள்ளேன். விரைவில் இங்கேயும் modified subscription tariff பற்றி எழுதிடுவேன். தற்சமயம் நீங்கள் மேற்கொண்டு Rs 500 அனுப்பினால் போதும்.
DeleteSir
Deleteபதிலளித்ததற்கு நன்றி
நான் 600 ருபாய் Money Transfer செய்துவிட்டேன்.
முகவரியை மெயில் அனுப்பிவிட்டேன் .
எனது மெயில் id krishnavv1983 @gmail .com .
மீண்டும் நன்றிகளுடன்,
கிருஷ்ணா வ வெ
ஹைய்யா, எங்க ”புதிய(இளைய)தளபதி” லார்கோ வுக்கு ஒரு ஜே! :) உலக(சுற்றும்)நாயகன் டைகரை பார்க்கபோறோம்ங்கற ஆர்வம் இன்னும் அதிகமாயிடுச்சு விளம்பரத்தை பார்த்ததும்! வாழ்த்துக்கள் ஸார்! (ஓவர்)நடிகர்திலகம் மாயாவி, (பில்டப்)புரட்சிதலைவர் ஸ்பைடர் லேட்டா வந்தாலும் ரொம்பப்பா லேட்டா வர வாழ்த்துக்கள்! :)
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநேத்துதான் நாலு நண்பர்கல்ட்ட சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் பத்தி சொன்னேன். அதில் முருகவேல், அலங்கா நல்லூர் (அடிப்படையில் அவர் ஒரு விவசாயி) அவர்கள் நம் ஆசிரியரை பத்தி உங்களுக்கு தெரியாது என்னத்தையாவது மதிகிட்டே இருப்பாரு அப்படின்னு சொன்னார். அவருக்கு உங்க சார்பில் நான் ஒரு கிலோ சர்க்கரை பார்சல்! அனுப்பிடுகிறேன்! தலைவா! எங்க ஆயாவை சந்திக்க ஆவலாய் இருக்கிறேன். லார்கோ என்னிக்குமே சுப்ரீம் ஸ்டார்தான்! தமிழ் கூறும் நல்லுலகிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு நல்குகிறோம்! அட்டை படமா அவர் கலக்கலா தான் சார் இருக்காரு! அப்புறம் ஒரு சின்ன வேண்டுகோள்! பாக்கெட் பதம் எல்லாம் ஆகாது சார்! மனைவி முறைத்தாலும் கவலை கொள்ளாத ஜென்மங்கள் உங்க வாசகர்கள் அய்யா!
ReplyDeleteஒரு லக்கி லூக் சினி புக் இதழினை 200௦௦ குடுத்து ஒரு சின்ன முணுமுணுப்பு இன்றி வாங்கும் வாசகர்கள், ஒரிஜினல் லார்கோ வின்ச் இதழி க்ற்கென 450௦ செலவு செய்ய சற்றும் தயங்காத நமது வாசகர்கள் நமது தமிழ் காமிக்ஸ் இதழிற்கு மட்டும் ரூபாய் 100 ஆ? என்று மிகைபடுத்தி சொல்லுவது சிறிதும் ஏற்புடையதாக இல்லை. விலைவாசி விண்ணில் இறக்கை கட்டி பறந்து உயர்ந்து கொண்டே செல்லும் இந்த காலகட்டத்தில், 20௦ நாட்கள் கடந்து நாம் காண செல்லும் ஒரு சினிமா டிக்கெட் இன் விலையினை நாம் கருத்தில் கொண்டோம் எனில் நமது காமிக்ஸ் இதழின் விலை மிக மிக நியாமாக வே படும். இந்த விஷயத்தையும் நமது வாசகர் கருத்தில் கொண்டால் இதன் பொருள் புரியும். புத்தக ப்ரியன்
ReplyDeleteThis is exactly what i was thinking too. Last week went for a hair cut and it was 100Rs (that too in chidambaram not in chennai) and i can see very middle class ppl comming there and paying 100rs without any fuss. So 100Rs comics is a very reasonable rate particularly for a color comics.
Deletethanks, karthikeyan
me too . ஒரு nv ஹோட்டெல்கு just 2 பேர் போனாலே 500 rs ஆகிறது . நம் ஆ யுள் முழுக்க நம் கூடவே வரும் காமிக்ஸ் இற்கு இந்த தொகையே குறைவு என்றுதான் நான் fell செய்கிறேன் .மேலும் இப்பொது காமிக்ஸ் படிக்கும் 95 % 30 -35 வயது உள்ளவர்கள் தான்.so , money is not a problem of our people
DeleteThere are saloons in chennai which charges as low as 40 for a haircut, the point is there are people who can't afford for that also, u and i can pay 200 for a haircut, but editor is thinking about the people who can't afford Rs.40 for a hair cut. No hard feeling please for the comment.
Deleteமுந்தைய உங்கள் இரு பதிவுகளும் அந்த அளவு சுவாரஸ்யமாக இல்லையே சார். வேலை பளுவோ? ஆனால் இந்த பதிவு உங்கள் பழைய ஸ்டைல் இல் மிகவும் ரசிக்கும்படி இருந்தது. புத்தக ப்ரியன்
ReplyDeleteமொக்கையானதொரு இன்டர்நெட் லிங்க் கடுமையானதொரு எதிரி என்பதை அனுபவப்பூர்ணமாய் உணர்ந்து கொண்டே இப்பதிவை எழுதுகின்றேன் ! என் சிந்தனைகள் சீராய் ஓடிடும் சமயம், எனது வயர்லெஸ் நெட் கோபித்துக் கொள்ள....அது நிதானத்துக்கு வந்திடும் தருணத்தில் நான் மோட்டு வளையத்தை முறைத்துப் பார்த்த கதை தான் !! பாக்கெட் இன்டர்நெட் யூஸ் பண்ணும் அடியேனுக்கும் இதே கதிதான் சார்!
ReplyDeleteஅப்புறம் ஒரு வேண்டுகோள் திகில் ஸ்பெஷல் தனியே கருப்பு கிழவியின் மற்ற கதைகளோடு வெளியிட மட்டும் மறக்க வேண்டாம்! அது கொஞ்சம் மதங்கள் தாண்டி போனாலும் சரியே!
எங்க ஆயா ஸ்பெஷல் கண்டிப்பா வேணும் ஜி!
There has been too many promises and confusing delivery schedules. As you could see you have been bulding up a successful readership base and it is time now to streamline your operation.
ReplyDeleteThe responses from your office is now good and have always been friendly. But despite being a subscriber, the delivery of subscription copy is always delayed. I am yet to receive Dr 7, even though Prakash Publishers have indicated that they have sent it on 24th. If they have sent by courer (for which we are being charged) it should not take so long.
Please look into the same and make the supplies reader friendly. Any way it is nice to see new exciting happening in your single minded dedicated venture.Beneficiaries are you, me and every one. Keep it up.
tgopalakrishnan
திட்டத்தை மாற்றினாலும் அதிரடி அறிவிப்பை வரவேற்கிறோம்.
ReplyDeleteஇந்தக் காலத்தில் 100 ரூபா என்பது மிகச் சொற்பமான தொகையாகத் தோன்றினாலும், அந்தத் தொகையைக் கொடுத்து எத்தனைபேர் புத்தகங்களை வாங்கிப் படிப்பார்கள் என்பது சந்தேகமே. 'ப்ளாக்கில்' - வர்ணத்தில் காமிக்ஸ்களை அதிக விலைகொடுத்து வாங்கி நட்டப்படும் நண்பர்களுக்கு இது சந்தோஷமான செய்திதான்.
இடைக்கிடையே இப்படி ஸ்பெஷல்கள் வந்தால் ஓ.கே. ஆனால் அடுத்தடுத்து ஸ்பெஷல்கள் வரும்போது -அதுவும் எங்களது கரன்ஸிக்கு கன்வர்ட் பண்ணிப்பார்த்தால் ரூபா 260 ஆகிறது. அத்தோடு தபால், ட்ரான்ஸ்போர்ட் செலவும் சேர்ந்தால்?
ஆனாலும், பரீட்சார்த்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடாமல் வாழ்த்துக்களோடு வரவேற்போம். தரம் உயரும்போது அதற்கேற்ற விலையைக் கொடுத்துத்தானேயாகவேண்டியிருக்கிறது. ஆனால், வெளிநாடுகளில் பணியாற்றும் சில நண்பர்கள் சொல்வதுபோல இந்தத் தொகை ஒன்றும் இலகுவானதல்ல என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.
வாங்க லார்கோ - தமிழ் காமிஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்வீர்களா? (விஜயன் ஸார், கத்தரியை ரொம்ப அதிகமாப் பாவிக்கவில்லைத்தானே?)
-Theeban (SL)
கோகுலம் வாசகர் வட்டம் எனும் அமைப்பு லாபநோக்கமற்ற வகையில் வாசிப்பை ஊக்குவிக்கும் முகமாக தலைவாங்கு குரங்கு இதழின் 100 பிரதிகளை பெற்று இலங்கையில் 350 ரூ விலைக்கு சிறிய நஷ்டத்தில் வினியோகம் செய்திருக்கிறது.... நிச்சயமாக அவர்கள் மனது வைத்தால் இலங்கை தமிழ் காமிக்ஸ் வாசகர்களிற்கு நியாய விலையில் இந்திய விலை 100 நிர்ணயிக்கப்பட்ட காமிக்ஸ்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது....இதையும் அவர்கள் வாசிப்பை ஊக்குவிக்கும் லாபநோக்கமற்ற முயற்சியாக தொடர்வார்கள் என கண்டிப்பாக நம்புகிறேன்......
Deletehttp://www.facebook.com/pages/Tamil-Comics-Lion-Muthu-Classics/312096298840069
லார்கோ வின்ச், கருத்து கணிப்பில் பின்னில் இருந்தாலும், முதலில் வந்துவிட்டார்... வெற்றி! வெற்றி! இன்னும் சில நாட்களுக்கு கருத்துக்கணிப்பினை நீடிக்கலாமே?
ReplyDeleteகருத்துக்கணிப்பா? அட போங்க பாஸ் கள்ள வோட்டு நிறைய விழுகிறது!! கடைசியாக பார்க்கும்போது 12 மணி நேரம் இருந்த நிலையில் 90 ஆக இருந்த கேப்டன் டைகர் முடியும் போது 150..
Deleteஅதனால்தான் கருத்துகணிப்பை நீட்டிக வேண்டும் என்றேன்... லார்கோவுக்கு பின் வாசகர்களின் கருத்து மாறலாம் இல்லையா? லார்கோ வரவேற்பு பெறவில்லை என்றால்!!!..... சினிபுக் தான் கதி... புதியதை நாம் வாசகர்கள் ஏற்றுகொல்வர்களா என்று தெரியவில்லை... பார்க்கலாம்...
Deleteசார் இந்த காலத்தில் அனைத்து பொருட்களின் விலைகளும் புயலாய் ஏறிக்கொண்டிருக்கும்போது நமது காமிக்ஸ் விலை ஏற்றமும் தவிர்க்க முடியாத ஒன்று என்பது எனது கருத்து. எனவே நமது இதழ்கள் நல்ல தரத்துடனே வரட்டும் விலை அதிகமானாலும் பரவாயில்லை.
ReplyDeleteடியர் எடிட்டர்,
ReplyDeleteலார்கோ மற்றவர்களை அனைவரையும் பின்னே தள்ளி முன்னே வந்தது கண்டு மகிழ்ச்சி. அதுவும் ஒரிஜினல் அட்டைபடத்தை தமிழில் பார்ப்பதில் இன்னும் சந்தோஷம்.
கடைசியாக வெள்ளை வெளேன்னு லயன் முத்து அட்டை பார்த்தது எப்போனு நியாபகம் இல்ல... அனேகமா வந்ததே இல்லேன்னு நினைக்கிறேன்...... ஆனாலும், நீங்கள் சொல்றபடி, சுண்டி இழுக்கும் விதமா இந்த வெள்ளை இள்ளேங்கறது நல்லா தெரியுது.
அதுவும் பின்னாடி திருஷ்டி பரிகாரம் போல ஏதோ பூசனிக்கா பேய், அவருவருப்பா இருக்கு. திகில் ஸ்பெஷல் 3 இதழ்கள் பிளான் அப்போது பணால் தானான ?
அடுத்து வரும் அனைத்தும் 100 ரூபாய் ஸ்பெஷல்கள், அதுவும் மாதம் ஒரு முறை என்பதை பார்க்க நன்றாக இருந்தாலும், நமது புத்தகங்கள் புதிய வாசகர்களை சென்றடைய, இப்படி பல 100 ரூபாய் இதழ்கள் தொடர்ந்து வருவது வழிவகுக்குமா என்பது தெரியவில்லை.
10 ரூபாய் இதழ்களை தவிர்த்து விட்டு, நல்ல ஆர்ட் பேப்பர் (கலர் இதழ்களுக்கு), மற்றும் நல்ல வைட் பேப்பர் (ப்ளாக் அண்ட் வெயிட் இதழ்களுக்கு) என்று 25 ரூபாய் விலையில் நடுவே நடுவே சில இதழ்களை வெளியிட்டு விட்டு பிறகு 100 ரூபாய் இதழ்களை அணி சேர்க்கலாம். யாரால் எது வாங்க முடியுமோ அவற்றை மற்றும் வாங்க இது வழிவகுக்கும்.
லயன் முத்துவின் இந்த உத்வேக பிரவேசிப்பு தருணத்தில் சந்தா விபரங்கள் மாறுவது எதிர்பார்த்த ஒன்றே. ஆனால், வருடம் முழுவதற்கும் சந்தா பணம் இவ்வளவு என்று பணம் கட்டியவர்களுக்கு, நீங்கள் மீண்டும் இவ்வளவு அனுப்ப வேண்டும் என்று கூறுவது சரியாக படுமா தெரியவில்லை. நெடுநாள் வாசகர்கள் தவிர மற்றவர்கள் விலகி ஓட வாய்ப்பு உண்டு.
இணையத்தில் அல்லாத பெருவாரி நண்பர்களின் கருத்துகளையும் அறிந்து கொள்ள இது சரியான வாயப்பு. அவர்கள் கடிதங்கள் அதற்கு பதில் சொல்ல கூடும்.
பி.கு.: லயனின் பின் அட்டையில் ISBN கோட் வர போவது அறிவதில் பெருமையாக இருக்கிறது. இனி இணையத்தில் உள்ள அனைத்து புத்தக தளங்களிலும், நமது இதழ்கள் விற்பனை செய்ய வசதியாக இருக்கும். பார் கோடு கூடவே, எண் இலக்கத்தில் கோட்டையும் இடுங்கள்... அவற்றையும் புத்தக விரவங்களுடன் பதிந்து வைத்து கொள்ளும், என் கண்கள் இன்னும் பார் கோட் படித்து புரிந்து கொள்ளும் சக்தியை எட்டவில்லை. சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் ஒரு வேளை அதற்கு உதவலாம். :P
சற்று கூர்ந்து அட்டையை கவனித்த போது தான் தெரிந்தது, அதில் முழு வெள்ளை அல்லாமல், சுதர்ஷன சக்கரம் போன்ற டிசைன்கள் சப்டில்லாக இருப்பது. இப்படி தான் அச்சு பிரதி இருக்குமா... இல்லை இது, வெறும் டிஜிட்டல் உதாரணம் மட்டும் தானா ?
ReplyDeleteRafiq Raja : இன்றைய நமது சர்குலேஷன் நம்பர்களைக் கொண்டு 25 ரூபாயில் கலர் என்பது துளியும் சாத்தியப்படா சமாச்சாரம். Black & white கதைகள் (டெக்ஸ் வில்லர் ; ராபின் ; மர்ம மனிதன் மார்டின் ; இத்யாதிகள்) இந்தப் பாணிக்கு சரிப்படும். அதற்கான ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடந்தேறித் தான் வருகின்றன ! இன்னும் மீதமுள்ள 4 x Rs.10 இதழ்கள் வெளியான பின்பு இவை வந்திடும். அதிக விலையில் தொடர்ந்து வெளியிடுவதென்பது நிச்சயம் வாசகப் பெரும்பான்மையினரின் ஆதரவு இருக்கும் பட்சத்தில் மட்டுமே !
Deleteஅட்டைப்படத்தில் பின்னணியில் தெரிந்திடும் டிசைன் சில்வர் வண்ணத்தில் அட்டையில் உண்டு...பதிவினில் கூட இதைக் குறிப்பிட்டுமிருந்தேனே !
டியர் எடிட்டர்,
Delete25 ரூபாய் விலையில் கலர் வெளியீடுகள் இடுவது நடவாத காரியம் என்பது நன்றாக தெரிகிறது. எனவே கலர் வெளியிடுகளை ஸ்பெஷல்களில் மட்டும் இவ்வருடம் தொடருவதே சாத்தியமாக இருக்கும் என்ற உங்கள் கூற்று சரியானதே.
ஏற்கனவே இந்த வருடத்திற்கான பெரும்பாலான இதழ்கள் அறிவிக்கபட்டு விட்ட நிலையில், நீங்கள் முன்பே அறிவித்திருந்தபடி, அடுத்த ஆண்டு முதல் 50 ரூபாய் விலைக்கு கலர் வெளியீடுகள், 25 ரூபாய் விலையில் கருப்பு வெள்ளை நல்ல வைட் பேப்பர் என்று நீங்கள் தொடர வேண்டும் என்பதே என் அவா. அவ்வப்போது 100 ரூபாய் ஸபெஷல்கள் களைகட்டலாம்.
டாக்டர் 7 இதழ் பேப்பர் கூட இரத்தபடலம் கலெக்ஷன் தரத்தை விட பரவாயில்லை என்றாலும், நியூஸ்பேப்பர் தரத்தில் கருப்பு வெள்ளை சித்திரங்கள் அவ்வளவாக ஜொலிக்கவில்லை என்பது உண்மையே. அதே நேரத்தில் நல்ல ஆர்ட் பேப்பரில் வெளியிடபடும் கருப்பு வெள்ளை சித்திரங்கள், சிறப்பான தரத்தில் இல்லாத போது எவ்வகையில் சொதப்பும் என்பதற்கு சமீபத்திய உதாரணம், தலை வாங்கி குரங்கு.
எனது LCD திரையில் லார்கோ அட்டை வடிவமைப்பை ஒரு கோணத்தில் வைத்து பார்த்த போதே அந்த சில்வர் உருவம் கண்ணில்பட்டது. பதிலளித்தமைக்கு நன்றி.
முத்துவின் மிக பெரிய ஸ்பெஷல் இதழாக லார்கோ அமைய போவது சிறப்பு. கடைசியாக வெளியான 25 ரூபாய் சிறப்பு இதழை இது தூக்கி சாப்பிட போகிறது.
வெள்ளை வண்ண அட்டையுடன் வெளியாகும் முதல் முத்து லயன் இதழ் இதுதான், என்னும் கூற்று சரிதானா ?
லயன் டாப் 10 ஸ்பெஷல் இதே போல வெள்ளை வண்ண அட்டையுடன் வந்திருக்கிறது ;-)
Delete.
அதிக நாட்கள் அடைபட்டு கிடந்த தண்ணீரை, அணை மூலம் திறந்துவிட்டால், அதன் பிரவாகம் அதிகமாகவே இருக்கும். அந்த வேகம், தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் இருக்கும் நிலத்திற்கு தேவையே. அதுபோல, கம்பேக் செய்திருக்கும் லயன்+முத்துவுக்கு இந்த மாதிரி ரூபாய் 100 இதழ்கள் தேவையே. அதுவே பலரின் கவனத்தை ஈர்க்க வழிசெய்யும்.
ReplyDeleteசில மாதங்கள் கழித்து, இந்த வேகத்தை ரூபாய் 25 இதழ்கள் மூலம் மட்டுப்படுத்தலாம். அதனால் ரூ100 இதழ்கள் காலத்தின் கட்டாயமே :)
நேற்று டொனால்ட் டக் இதழை (டைமண்டு பதிப்பகம்) வாங்கினேன். 30 பக்கங்களே இருக்கும் இதழின் விலை ரூ25.
நெடு நாளைக்குப் பிறகு காமிக்ஸ் பிரியர்கள் வாழ்வில்(!) மீண்டும் வசந்தம் (இல்லை சூறாவளியோ!) வீசுவது உற்சாகமாக இருக்கிறது!
ReplyDeleteவிலையைப் பற்றி இங்கு பதிவு செய்யும் அன்பர்கள் ஒன்றைக் கவனிக்க வில்லை! முன்பணம் செலுத்தி பெறுவதால் ரூ.10/- அல்லது ரூ.25/- அனுப்பி வைப்பவர்கள் அநேகமாக இருக்கமாட்டார்கள்! பெரிய தொகை அனுப்புபவர்களும் கூட செலுத்திய தொகையும் வந்தவையும் சரியாக இருக்கிறதா என்றுதான் சரி பாரிக்க வாய்ப்பு அதிகம்!"அதீத விலை ஓரளவு புதிய வாசகர்கள் வரைவை பாதிக்க மட்டுமே வாய்ப்பு உண்டு! கடைகளில் நேரடியாக வாங்கினால் மட்டுமே அது விலையையும் முக்கியமான காரணி ஆக்கும் (காமிக்ஸ் வெறியர்கள் தவிர்த்து)! எனவே திரு. விஜயன் முயற்சியில் தவறு இல்லை என்பது எனது கருத்து!
தங்கள் லயனின் சுனாமி வரவு (தொய்வடையாமல்) தொடரட்டும்!
rajeshkanna
தமிழ் காமிக்ஸ் மீண்டு வந்திருக்கும் இந்த தருணத்தில் 100 ரூபாய் விலையில் வரும் புத்தகங்களை நாம் கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும். மேலும் மற்ற ஆங்கிலகாமிக்ஸ்கள் விலையோடு இதை ஒப்பிட்டு பார்த்தால் நம் காமிக்ஸ் விலை கம்மி என்பதே என் அபிப்பிராயம். சூப்பர்! எனக்கு பிடித்த மார்ட்டின் கதைகளை நீங்கள் வெளியிட போகிறீர்களா?! விஜயன் சார், அப்படியே இரண்டாம் உலக போரை மையமாக கொண்ட காமிக்ஸ்களை நீங்கள் மீண்டும் கொண்டுவருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்!
ReplyDeleteவாக்களிப்பில் கடைசியாக வந்திருப்பவர் 'லார்கோ'!. ஆனால், அவர்தான் முதலாவதா ரிலீஸ் ஆகிறார். கடைசிக்கு முதலா இருப்பவர் லக்கி லூக் - அவர் அடுத்ததாக வருகிறார். ஸோ, அதுக்கு அடுத்ததாக இருக்கும் - 'இவற்றில் எதுவும் இல்லை!' எப்ப ஸார் ரிலீஸ்? :)
ReplyDelete-Theeban (SL)
Editor Sir,
ReplyDeleteGreatly disappointed for the delay of Super Hero Special.
At the same time the new surprise special compensating that sadness.
1. வரவேற்கப்பட வேண்டிய செய்தி இது. லார்கோ 1&2 க்கே Rs.100 சரியாக போய்விட்டது. திகில் கதைகள் என்னைப் பொருத்தவரை இலவசம் தான்.
ReplyDelete2. தங்கக் கல்லரை காமிக்ஸ் கிளாஸிக்கில் அல்லவா வெளிவர வேண்டும். இங்கு முத்து காமிக்ஸ் என விளம்பரப் படுத்தப்பட்டுள்ளதே.
3. //ஓவராய் நூறு ரூபாயில் ஸ்பெஷல் இதழ்கள் வந்திடுவதும் ஒ.கே. தானா என்ற சின்னதொரு கேள்வி என் மனதுக்குள் உள்ளதுஓவராய் நூறு ரூபாயில் ஸ்பெஷல் இதழ்கள் வந்திடுவதும் ஒ.கே. தானா என்ற சின்னதொரு கேள்வி என் மனதுக்குள் உள்ளது//
விலை மற்றும் விற்பனை முறை பற்றி இங்குள்ள வாசகர்களின் எண்ணம் கிட்டதட்ட ஒரே மாதிரி தான் இருக்கும். அதனால் இணையம் பயன்படுத்தாத வாசகர்களின் கருத்துக்களையும் கேட்டறிவது மிக முக்கியம்.
(தனிப்பட்ட முறையில் அடிக்கடி 100 ரூபாய் இதழ்கள் வெளிவருவதை நான் வரவேற்கிறேன்)
Dear Editor,
ReplyDeleteJust wanted to know, how much do we owe you in price(*) for the three (or is it four now?) back to back specials? Please let us know so we can send you the money and wait for the gifts. I have already paid Rs 600 as the revised subscription charges -- but that cost will only cover the regular books, right?
(*)We can only pay you for the price of the books. IMO, the services rendered by you to the Tamil speaking community for nearly three decades, by "localising" so many of these wonderful English comics is priceless!
// ஓவராய் நூறு ரூபாயில் ஸ்பெஷல் இதழ்கள் வந்திடுவதும் ஒ.கே. தானா என்ற சின்னதொரு கேள்வி என் மனதுக்குள் உள்ளது ! etc...etc... //
My response:
You can please some of the people, most of the time.
You can please most of the people, some of the time.
You can never please all the people, all the time.
I wish you lot of health and good will to continue with your efforts on this topic.
P.S: When I find more time, I might play with the transliteration.
P.P.S: Look forward to the Blueberry/Captain Tiger chronicles. I don't have all of them, and would like to read them in leisure. I love the way "Guffie Palmer", "Captain Rojas", "Jimmy McLure" and other such exotic names are rendered in Tamil.
Having said all that, I have a love-hate relationship with the Blueberry stories. He is both amoral and a "Cat on the Wall" with regards to his sympathies and his allegiances. The comic series itself is a sad and poignant chronicle of the fate of the American Indians in the hands of the White settlers. On the same count, I feel sad that our own "Amar Chitra Kathas" with similar rendering of our own History doesn't have the same amount of audience as it rightly should.
நான் தமிழ் காமிக்ஸ் ரசிகன். நான் இங்கே ஒரு முக்கிய குறையைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ReplyDeleteமுதல் தரம் சந்தா செலுத்துவது எப்படி என்று எங்கு தேடினாலும் தகவல் கிடைக்கவில்லை. நான் பெங்களூரில் வசிக்கிறேன். தயவு செய்து எப்படி,யார் பெயருக்கு D.D அனுப்புவது என்று சொல்லுங்கள். எனக்கு கடந்த கால இதழ்களில் ஸ்டாக் உள்ளவையும் தேவை. யார் பெயருக்கு D.D எடுக்க வேண்டும் என்று தெரிந்தால் நல்லது.
நண்பரே,
Deleteஅவற்றிற்கான விவரங்கள் இங்கே தனி தனி பதிவாக இடபட்டிருந்தது. உங்கள் வசதிக்காக இங்கே
பழைய புத்தக ஸ்டாக் விவரம் மற்றும் பணம் அனுப்பும் முறை
புதிய இதழ்களுக்கான சந்தா விவரம்
சந்தா விவரம் இலங்கை வாசகர்களுக்கு
எடிட்டர், இந்த இரு சுட்டிகளையும் தனி பக்கங்களாக இணைத்து, அவற்றிற்கான லிங்கை இந்த ப்ளாக் முகப்பில் போட்டு விட்டால், இந்த கேள்விகள் பல முறை எழாது என நம்பலாம்.
we are agree with ஆங்கிலகாமிக்ஸ்கள் விலையோடு இதை ஒப்பிட்டு பார்த்தால் நம் காமிக்ஸ் விலை கம்மி.....
ReplyDeletewaiting with fingers crossed
வடையை எனக்கு கொடுத்துவிட்டு கனவுகளின் காதலருக்கு அல்வா கொடுத்துவிட்டீர்களே சார்.இது நியாயமா?கனவுகளின் காதலருக்கு புனித சாத்தான் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொல்கிறான்(ஹிஹி சாரி)கொள்கிறான்
ReplyDeleteபாச நெஞ்சங்களே, ரத்த சூரியன்களே, சூப்பர் ஹீரோ ரசிக சுனாமி மின்மினிகளே.....
ReplyDeleteஉங்கள் ஈடற்ற ஆதரவால் சூப்பர் ஹீரோக்களிற்கு கிடைத்திருக்கும் சத்தியமான வோட்டுக்களின் எண்ணிக்கை 45. மூன்றாவது இடம். எம் பால்யகால நாயகர்களிற்காக நான் பிரச்சாரத்தில் இறங்கியபோது இத்தனை வோட்டுக்கள் கிடைக்கும் என நம்பியே இருக்கவில்லை.... மிக்க நன்றி.... கண்களில் வழியும் கண்ணீரை சூப்பர் ஹீரோக்களுடன் சேர்ந்து நானும் துடைத்துக் கொள்கிறேன்.
இந்த சுபவேளையில், முன்னனியில் திகழும் ப்ளுபெர்ரி, இவற்றில் ஏதுவும் இல்லை [ மாண்ட்ரெக், ப்ளாஷ் கோர்டன் ரசிக செல்லங்கள்] ஆகிய் பிரிவுகளை ஆதரித்து முன்னனிக்கு இட்டு [ என்ன வழியாகவும் :)) ] வந்த காமிக்ஸ் ரசிக அன்பர்களிற்கு நன்றிகளுடன் பாராட்டுக்கள்... நல்ல போட்டிதான் ஆரோக்யமான இயக்கம் ஒன்றிற்கான அறிகுறி என்பதில் நான் நம்பிக்கை வைக்கிறேன்... லார்கோ ஒரு இனிய ஆச்சர்யம்.....லார்கோவின் ரசிகர்களிற்கு இப்பதிவைப் போலவே... கண்டிப்பாக புதிய நாயகர் லார்கோ சிறப்பான வரவேற்பையும் வெற்றியையும் பெற்றிட நான் மனதார விரும்புகிறேன். லார்கோ பாத்திரம் தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் மனதில் சொல்லக்கூடிய இடத்தை பிடித்திடும் வண்ணமே அவரின் ஆரம்பகால கதைகள் அமைந்திருக்கின்றன.. அற்புதமான அழகிகளின் ஆடையில்லாக் காட்சிகளை தமிழில் எதிர்பார்க்க இயலாது என்பது தெரிந்த போதிலும் :)).... ஆசிரியர் அவர்களின் இவ்வேகமான செயற்பாட்டிற்கு என் பாராட்டுக்களை இத்தருணத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.....
மிகவும் ஆர்வமாகவும், குஷியாகவும் கழிந்த இத்தேர்தல், சூப்பர் ஹீரோக்களின் பால்யகால ரசிகர்கள் மத்தியில் அவர்கள் நினைவுகள் நீக்க முடியா எழுத்துக்கள் என்பதை உணர வைத்திருக்கிறது அதே சமயத்தில் அதன் பின்பாக வந்த புதிய தலைமுறைக்கு அவர்களை விட வேறுநாயகர்களை மிகவும் பிடித்திருக்கிறது என்பதையும் புலனாக்குகிறது. இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளின் வேறுபட்ட ரசனைக்கு ஏற்ப ஆசிரியர் கதைகளை வெளியிடுவது என்பது சிரமமாண பணிதான்.... இருப்பினும் பழையதை நாங்கள் மறுக்க வேண்டாம் புதியவர்களிற்கும் புதியனவற்றிற்கும் முன்பாக தடையாகவும் நிற்க வேண்டாம் என்றே நான் எண்ணுகிறேன்...
ஒவ்வொரு நண்பரிற்கும் திறந்த மனதுடன் தம் கருத்தை ஆசிரியரிடம் தெரிவிக்கும் முழு உரிமையும் இருக்கிறது. விலை அதிகமாக தோன்றுகிறது என எழுப்பப்படும் கருத்துக்களை நான் மதிக்கிறேன் ஆனால் நண்பர்களே..... தலைவாங்கி குரங்கில் குறைகள் இருந்தாலும் அதன் நிறைகளை கண்டபோது நான் உண்மையிலே மகிழ்ச்சியுறேன்.. காமிக்ஸ் கிளாசிக் இப்படி வரும் என நான் என் அழகிய சிட்டுக்கள் வரும் கனவில் கூட கண்டதில்லை.... இன்றைய நுகர்வோர் உலகில் தரம் என்பது விலையுடன் சம்பந்தப்பட்டது. தமிழ் காமிக்ஸ் என்பது நுகர்வுப் பொருள் என்பதை தாண்டியும் எம் மனதின் அருகில் இருக்க வேண்டிய ஒன்றல்லவா... அதன் தர மேம்பாட்டிற்காக ஒரு சிறு விலையேற்றத்தை அன்பு நண்பர்கள் தாங்கிக் கொள்ள மாட்டீர்களா.... என்னைக் கேட்டால் 100 ரூக்கு இரு லார்கோ கதைகள் ஆர்ட்பேப்பரில் என்பதை விலை குறைவே என்பேன்... இது என் கருத்து நண்பர்களே.... தயவுசெய்து தரமான முயற்சிகளை ஆதரியுங்கள், தமிழில் காமிக்ஸ் வருவது ஒரு அரிதான நிகழ்வு எனும் வகையில், ஆசிரியர் ஒரு பெருநிறுவன முதலீட்டாளர் இல்லை என்ற வகையில் தரமான காமிக்ஸ் முயற்சிகளின் விலைகளை நண்பர்கள் பொறுத்துக் கொள்ள முடியாதா எனும் கேள்வியையும் நான் முன்வைக்கிறேன்.... எவருமே பொருள் இழப்புடன் ஒரு தரமான வெளியீட்டை தொடர்ந்து கொண்டுவர இயலாது என நான் நம்புகிறேன்.....எனவே சற்று சிந்தியுங்கள் அன்புள்ளங்களே...
பழைய திரைப்படங்களில் ப்ளாஷ்பேக் காட்சிகள் என்பதை அறிவிக்கும் வகையில் திரையில் ஒரு மெஸ்மரிஸ சுருள் சுழலும், அந்த சுழற்சியுடனேயே கதை காலத்தில் பின்னோக்கி பயணிக்கும்.... லார்கோ அட்டையின் மெஸ்மரிஸ சுருள்கள், முன்னைய காமிக்ஸ் அட்டைகளை நோக்கி எம்மை காலத்தில் கடத்தி செல்லும் ஒரு குறியீடு..... அதிரடியான வண்ணங்கள் இல்லாத சாந்தமான மாற்றம்... இருப்பினும் சிவப்பு இல்லை என்பது மனதில் ஒரு சிறு ஏக்ககோட்டை இட்டுச்செல்கிறது....:))
சூஹீசூஸ் வரவு பின்னால் சென்றது அன்னிய சக்திகளின் சதி என்பதை நாம் அறிந்தே இருக்கிறோம்.... அது என் கைக்கு வரும் வரையிலும் நான் தமிழ் காமிக்ஸ் எதனையும் தொடப்போவதில்லை என ஆர்ச்சியின் ரிமோட் கண்ட்ரோல் மீது சத்தியம் செய்கிறேன்....
மேலும் சூஹீசூஸ் இதழின் வரவையொட்டி நாம் கோலாகலமாக ஏற்பாடு செய்திருந்த கவர்ச்சி நடிகை ஜலஜாஸ்ரீ அவர்களின் ரெக்கார்ட்டு டான்ஸூ கலைவிழா பின்னொரு திகதிக்கு காலவரையரையன்றி பிற்போடப்பட்டுள்ளது என்பதை கண்ணீருடன் அறியத்தருகிறோம்.....
கனவுகளின் காதலன் : ரம்யமான உங்களின் பதிவுகள் வானவில்லின் வர்ணஜாலங்கள் போல்!
Deleteசந்தோஷப் பச்சை...காரமான சிகப்பு...சாந்தமான நீலம்....கலகலப்பான மஞ்சள் என்று ரசித்திட வர்ணங்கள் ஏராளம் !
மாற்றங்கள் காலத்தின் கட்டாயங்கள் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருந்திட முடியாது ; நம் காமிக்ஸ் நாயகர்களும் அதற்கு விதிவிலக்காக இருந்திட முடியாதென்பது (ஒரு காலத்து) முடிசூடா மன்னர்களான ஸ்பைடரும் ; ஆர்ச்சியும் இன்று திருவிழாவில் காணாமல் போன குழந்தைகள் போல் தடுமாறிடுவதே சான்று ! சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் எண்பதுகளின் நம் ஜாம்பவான்களுக்கு ஒரு last hurray என்று சொல்லுவேன் ! பார்ப்போமே !!
விஸ்கியும் பீரும் கலந்த கலவை (திகில் + முத்து) சூப்பர் இப்பவே கிக்கு தூக்குது
ReplyDeleteநூறு ரூபாய் கம்மி தான் சார் லக்கி லுக் இங்கிலீஷ் புக் நானூறு ரூபாய்க்கு மேல்
ReplyDeleteஎன்னது... அப்ப அந்த மாதிரி காட்சியெல்லாம் நம்ம "லார்கோ விஞ்ச்"ல எதிர்பார்க்கமுடியாதா? கத்திரிதானா? "அதிரடி வீரர் ஹெர்குலஸ்" மூஸாவைபோல் கனவுகள் எல்லாம் கண்டேனே . why நாம் ஜேம்ஸ்பான்டு படங்களெல்லாம் பார்ப்பதில்லையா?
ReplyDeleteஇதை தட்டி கேட்பார் யாரும் இல்லையா?..
TAIGAR meendum munnaniyil!...
ReplyDeleteஆஹா… உண்மையிலேயே சர்ப்ரைஸ் தான்… இப்பவே காமிக்ஸை படிக்கணும்னு கை பரபரங்குது…
ReplyDeleteஅட்டைப்படம் தூள்… என்னதான் நீங்க சல்ஜாப்பு சொன்னாலும் அந்தப் பின்னட்டை பச்சைக் கிழவி… ம்ஹூம்… திருஷ்டிப்பொட்டு! பார்கோட் எல்லாம் போட்டு… அய்யோ… என் கண்ணே பட்டுடப்போகுது… யாருக்கும் அனுப்புறதுக்கு முன்னாடி திருஷ்டி சுத்திப் போடுங்க…
லார்கோ வின்ச்சோட திகில் காமிக்ஸ்ங்க்றது இஸ்கிரீம்ல டீ ஊத்தி சாப்பிடற மாதிரி ஒரு கலவை… பரவால்ல, அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.
அது சரி… சந்தா கட்டி ரொம்ப நாள் ஆனா மாதிரி ஞாபகம்… நீங்க பாட்டுக்கு புக் அனுப்பிட்டே இருக்கீங்க… விலைவாசி இருக்குற நிலைமைல கட்டுப்படி ஆகுதா சார்? தயவு செஞ்சு என் சந்தா நிலவரம் என்னனு பாத்து சொல்லுங்க… உடனே மணிஆர்டரோ… டிடி-யோ அனுப்பிடறேன்.
அடுத்த வாரம் லீவுக்கு ஊருக்கு வற்றேன்… படிக்க புக் இருக்கணும்… சொல்லிப்புட்டேன்.
தலிவா , சூப்பர் நியூஸ் . நீ அடி பின்னு தலிவா .நாங்க தாரை தபடையோட பின்னாடி வரோம் . பணம் கொஞ்சம் சிரமம்தான் . ஆனா பார்ட் டைம் பார்த்தாவது பணம் ரெடி பண்ணிகறேன் . எங்க எல்லாரோட ஒரே ஆசை என்ன னா, நாங்க பணம் அனுப்பி கிட்டே இருபமாம் நீங்க எங்களுக்கு காமிக்ஸ் அனுப்பி கிட்டே இருக்கணுமாம். ரெடி ஜூட்.
ReplyDeleteவிஜயன் சார்
ReplyDeleteமிக அருமையான பதிவு என்பதை விட எதிர்பாராத இன்ப அதிர்ச்சி தந்த பதிவு என்பதே சரியாக இருக்கும்.
குறிப்பாக தலைவர் டைகரின் "தங்க கல்லறை" ட்ரைலர் - சூப்பர் ...
நூறு ரூபாய் இதழ்கள் என்பது வரவேற்க்ககூடிய விசயமே. நண்பர்கள் அனைவரும் கூறியது போல நூறு ரூபாய் என்பது இந்த நாளில் ஒரு விசயமே இல்லை என்பதே உண்மை.
//சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் எண்பதுகளின் நம் ஜாம்பவான்களுக்கு ஒரு last hurray என்று சொல்லுவேன் ! பார்ப்போமே !!//
எனக்கு டைகர், டெக்ஸ் கதைகள் மிகவும் பிடிக்கும். எனவே நூறு ரூபாய் இதழ்களில் இந்த கதைகள் வரும்பொழுது மனம் மகிழும். எனவே டைகர், டெக்ஸ் போன்ற கதைகளை வெளியிடலாம். (எனது தனிப்பட்ட விருப்பம்)
லார்கோ வின்சு - புதிய அறிமுகம். எனவே இந்த புத்தகத்தை படித்தவுடன் எனது கருத்தை தெரிவிக்கிறேன்.
நன்றி
நாகராஜன் S
திகில் மறுபதிபிற்கு தனியாக இதழ்கள் ஒதுக்காமல், இவ்வாறாக இணைப்பு இதழாக வெளியிடுவதை நான் வரவேற்கிறேன். லார்கோ வருகைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteWhen can we see our comics at Flipkart?? While we sell for 100+ INR, why can't we?
ReplyDeletevendor@flipkart.com
புதிய ஹீரோக்களுக்கு வரவேற்பு.
ReplyDeleteபுதிய கதை மற்றும் மறுபதிப்பு கதை ஒரே இதழில் என்பது புதிய முயற்சி என நினைக்கிறேன். படித்து பார்த்த பின்னரே அமைப்பு பற்றி சொல்லமுடியும். "comeback special" மாதிரி ஆர்ட் காகிதம், சாதாரண காகிதம் என பாதிபாதியாக இருப்பது நெருடலாக உள்ளது. ஒரு இதழ் முழுவதும் ஒரே காகித தரத்தில் இருந்தால் நலமாக இருக்கும்.
பெரும்பாலான தமிழ் வார மாத பத்திரிகைகள் ரூபாய்.10 முதல் 15 வரை வெளிவருகின்றன. அதுவே சாமான்ய மக்கள் எதிர்பார்க்கும் விலை. புதிய கதைகள் லயன் காமிக்ஸ்ல் இந்த விலையில் இடைவெளி இல்லாமல் வெளியீடு செய்யலாம். ரூபாய்.100 விலையில் சில இதழ்கள் தொடர்ச்சியாக சுவாரஸ்யம் இல்லாமல் போனால் வாங்கும் ஆர்வம் குறையும். சிறிய விலையில் இந்த பாதிப்பு இல்லை. மேலும் சிறிய விலையில் புதிய வாசகர்கள் அதிகரிக்க வாய்ப்புண்டு.
காமிக்ஸ் கிளாஸிக்ல் வெளிவந்த தலைவாங்கி குரங்கு தரத்திலும் அளவிலும் அருமை (குறைகள் நிவர்த்தி செய்யப்படலாம்) ரூபாய்.25 விலையில் காமிக்ஸ் கிளாஸிக் வரலாம். பழைய கதைகளை திரும்ப படிக்கும் சுகமே அலாதி.
தரமான காகிதம் வண்ணம் கதை விலை! என்று ரூபாய் 50 விலையில் (ஆப்பிள் கம்பெனி மாதிரி ) முத்து காமிக்ஸ் வெளியீடு செய்யலாம். ஹை டெக் வாசகர்களை மகிழ்விக்கலாம்.
சிறப்பான சமயங்களில் மட்டும் ஸ்பெஷல் இதழ்கள் ரூபாய் 100 விலையில் வெளி வரலாம். விடுமுறை நாட்களை சிறப்பாக கழிக்கலாம்.
இது எல்லா தரப்பினரையும் ஓரளவு திருப்திபடுத்தும் என நினைக்கிறேன்
நீங்கள் கூறிய படியே பார்த்தாலும், ஒரு வாரப் பத்திரிக்கையின் ஒரு மாத விலை சுமார் 60. ஆ.வி மற்றும் குமுதம் வாங்கினால் ஒரு மாதத்திற்கு ரூ100 வருகிறது. அதே போல நம் காமிக்ஸ் ஒரு மாதத்திற்கு ரூ100 சரியே. எனினும், எடிட்டர் சொன்னது போல இன்னும் 4 இதழ்கள் கழித்து ரூ100 இதழ்கள் மாதம் தோறும் வெளிவரப் போவது இல்லை. அதனால் கொஞ்சம் கடினமாக இருந்தாலும் இந்த 4 இதழ்களை அனைவரும் வாங்கிவிட வேண்டும்.
DeleteYou are also forgetting the number of people that buy those magazines. The print runs are in several lakhs, which compensates for lower book price.
Deleteஎடிட்டர் சார், ஒரு சிறிய யோசனை எனது மனதில் பட்டது,
ReplyDeleteஇங்கு வெளியாகி உள்ள அறிவிப்பு, கதைகள், சந்தா தொகை மறு சீரமைப்பு போன்றவை ஒரு கலவையாக உள்ளது. லார்கோ கதைகளை ஒரே இதழாக அமைதத்து, அத்துடன் திகில் இதழையும் சேர்த்து பக்கங்களை கூட்டி ருபாய் நூறு விலையில் வெளியீடு செய்வது, வியாபார ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய ஒன்றே.
ஆனால் பொதுவாக பார்த்தால், பெராரி காரின் பின்னால் ஆயில் எஞ்சின் கட்டி இழுத்த மாதிரி இருக்கும். இருந்தாலும் தற்பொழுது நிலவி வரும் சூழல், மற்றும் அசைக்க முடியாத நமது வாசகர் வட்டம் போன்றவை உங்கள் மனதில் இவ்வாறான முடிவுகளை எடுக்க தூண்டியிருந்தால் அதில் வியப்பேதும் இல்லை. மேலும் சந்தா தொகை மறுசீரமைப்பு பற்றிய அறிவிப்பு, தாங்கள் புத்தக வெளியீடுகளில் சரியான planning இல்லாமல் இருப்பதையே காட்டுகிறது.
மறுபதிப்பு இதழ்களை நான் வரவேற்கிறேன். ஆனால் கர்ணன் பட மறு வெளியீடுக்கு கிடைத்திட்ட அதே வரவேற்ப்பு தளபதி படத்திற்கோ அல்லது பாட்ஷா படத்திற்கோ கூட கிடைப்பது சந்தேகமே. அவ்வாறாகவே ப்ளூ பெர்ரி மறுபதிப்பை நான் பார்கிறேன். இப்பொழுது தங்களின் நான் எதிர்பார்ப்பது பல புதிய கதைகளையும் அத்துடன், மிக பழைய கதைகளின் மறுபதிப்பையும் மட்டுமே.
மேலும் நமது புத்தகங்களுக்கு ஒரே சீரான விலை, தரம் , வெளியிடும் நேரம் இவற்றை கொண்டுவந்தால் நன்றாக இருக்கும்.
For example,
Regular books : 12 * 100 = 1200
Special Edition : 2 * 250 = 500
Courier expense : = 300 (jst an example)
Almost the cost comes around 2000 rupees. for 14 books.
இதில் இரண்டு டைகர் கதைகள், இரண்டு டெக்ஸ் கதைகள், இரண்டு லக்கி லூக் கதை, இரண்டு சிக்பில் கதை, இப்படியாகவும் ஸ்பெஷல் இதைகளில் கலவையான கதைகளையும் பிளான் செய்யலாம். இவ்வாறாக ஒரு வருட முடிவு எடுக்கும் பொழுது, தேவையான கதைகளின் உரிமைகளை வாங்கிடவும் தங்களுக்கு வசதியாக இருக்கும்.
But if comes up to a plan like this, then there should not be any compromise in size, design and quality. Also I feel this may bring up some kind of brand image to our comics.
இது வெறும் எனது தனிப்பட விருப்பம் மட்டுமே. இது போல் ஏதாவது நடக்க வாய்ப்பு இருந்தால் மிக்க சந்தோசம்.
தங்களின் பெரும்பால கருத்துக்களுக்கு நான் உடன்படுகிறேன். ஆனால் கேப்டன் டைகரின் தங்கக் கல்லறை மறுபதிப்பு மிகவும் வரவேற்கப்படவேண்டிய ஒன்று. காரணங்கள்
Delete1. முதன் முறையாக டைகரின் கதை கலரில்
2. அதிக வாக்குகள் வாங்கி முதலிடத்தில் இருப்பவர் டைகர்
3. மிக அதிக வாசகர்களிடம் இல்லாத புத்தகம் இந்தத் தங்கக் கல்லறை (என்னிடமும் இல்லை :) ) மேலும் பலர் இந்த புத்தகம் கிடைக்குமா ? என்று கேட்டிருக்கிறார்கள்.
4. டைகரின் ஒரு பெரிய கதை முழுத் தொகுதியாக வரப்போவது இதுவே முதல் (??) முறை என நினைக்கிறேன்
நண்பரே டைகருக்காக கள்ள ஓட்டு போட்டவர்களில் அடியேனும் ஒருவன். இதுவரை வெளிவந்த அவரது கதைகளை வாரம் ஒருமுரைய்நும் படித்து விடுவேன். சொல்லபோனால் அவரது கதைகள் அனைத்தும் மனப்பாடமாக உள்ளது... இருந்தாலும் வண்ணக்கலவையில் டைகர் கதைகளை படிக்க நானும் மிக ஆர்வமாக உள்ளேன்.
Deleteசில நேரங்களில் சில விதிவிலக்கு உண்டல்லவா, அது டைகருக்கு மட்டும் பொருந்தும் :)
புதிய ''லார்கோ''வும் பழைய ''கார்கோ''வும் அட்டகாசமான கூட்டணி சார் .
ReplyDeleteeditor Sir,
ReplyDeletePlease publish a poll for pricing of the books here and as well as our comics book, so that every one can have a say in the pricing. So that you can have a clear picture.
தங்க கல்லறை இரண்டு பாகமாக வந்த சூப்பர் ஹிட் கதை.ஆனால் நண்பர் பின்னோக்கி குறிப்பிட்டதுபோல் மிக பெரிய கதை அல்ல.லெப்டினென்ட் ப்ளுபெர்ரி கதைகளில் மிக பெரிய தொடர் எனக்கு தெரிந்து மின்னும் மரணம்,மற்றும் ரத்த கோட்டை (fort navajo )என நினைக்கிறேன்.வேறு ஏதாவது மிக பெரிய தொடர் உள்ளதா என எடிட்டர் அவர்கள் குறிப்பிட்டால் மகிழ்வேன்.
ReplyDeleteசாத்தான் அவர்களே, தங்கக் கல்லறை வந்தால், இதுவரை வந்த டைகர் கதைகளில், ஒரே இதழில் வந்த பெரிய கதை என்ற பெருமையைப் பெரும் என நினைக்கிறேன். நீங்கள் கூறியது போல டைகரின் பெரிய கதைகள் நிறைய உண்டு. XII போல மிகப்பெரிய டைகரின் புத்தகம் வருவது காலத்தின் கட்டாயம் :). எப்பொழுது என்று தான் தெரியவில்லை.
Deleteவிஜயன் சார்,
ReplyDeleteஇனி மேல் பத்து ரூபாய் இதழ்கள் என்பது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது எனது கேள்வி ?
என் மனதில் உள்ள ஐடியா :
ஐடியா 1:
--------
மாதம்தோறும் ரூபாய் இருபத்தி ஐந்து ரூபாய் விலையில் ஒரு புத்தகம். (Rs.25 X 12)
வருடத்தில் நான்கு முறை ரூபாய் ஐம்பது விலையில் நான்கு புத்தகங்கள் (Rs.50 X 4)
வருடத்திற்கு இரண்டு முறை ரூபாய் நூரு விலையில் இரண்டு புத்தகங்கள் (Rs.100 X 2)
இருபத்தி ஐந்து ரூபாய் விலையில் = 12 புத்தகங்கள் = Rs. 300
ஐம்பது ரூபாய் விலையில் = 4 புத்தகங்கள் = Rs. 200
நூரு விலையில் = 2 புத்தகங்கள் = Rs. 200
ஆக மொத்தம் : 300+200+200 = Rs. 700 + Courier Charges
ஐடியா 2:
--------
மாதம்தோறும் ரூபாய் இருபத்தி ஐந்து ரூபாய் விலையில் ஒரு புத்தகம். (Rs.25 X 12)
வருடத்தில் நான்கு முறை ரூபாய் நூரு விலையில் நான்கு புத்தகங்கள் (Rs.100 X 4)
வருடத்திற்கு ஒரு முறை ரூபாய் இருநூரு விலையில் ஒரு புத்தகம் (Rs.200 X 1)
இருபத்தி ஐந்து ரூபாய் விலையில் = 12 புத்தகங்கள் = Rs. 300
நூரு ரூபாய் விலையில் = 4 புத்தகங்கள் = Rs. 400
இருநூரு விலையில் = 1 புத்தகம் = Rs. 200
ஆக மொத்தம் : 300+400+200 = Rs. 900 + Courier Charges
இருநூறு ரூபாய் புத்தகம் XIII போல பெரிய ஸ்பெஷல் (வருடத்திற்கு ஒரு முறை என்கின்ற பொழுது) புத்தகமாக அதாவது காமிக்ஸ் பொக்கிசமாக அமைய வேண்டும்.
2013 முதல் நமது காமிக்ஸ் புத்தகங்கள் சரியான திட்டங்களுடன், எந்தவொரு குறையும் யாரும் சொல்லாதவாறு சரியான தேதிகளில் வெளிவர வேண்டும் என்பது எனது ஆவா ...
நன்றியுடன்
நாகராஜன்
மேலே கூறியது அருமையான ஐடியா.
Deleteவருடத்திற்கு 3 ரூ100 இதழ்கள்
வருடத்திற்கு 6 ரூ25 இதழ்கள்
வருடத்திற்கு 3 ரூ50 இதழ்கள்.
3x100 + 6x25 + 3 x 50 = Rs. 600 + Courier Charges
இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் எதாவது ஒரு காமிக்ஸ் நமக்குக் கிடைக்கும்.
டியர் எடிட்டர் சார் , தாங்கள் அறிமுகம் படுத்திய , காமிக்ஸ் charecters எதுவுமே சோடை போனதில்லை .அப்படித்தான் லார்கோவின்ச் ம் சோடை போகமாட்டார் என்றுதான் நினைக்கிறேன். அவரை பற்றி தெளிவாக intro கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும் . அவர் எப்படிப்பட்ட charector ரிப்கிர்பி மாதிரியா இல்லை 007 மாதரிய என்று . எப்படியும் என்னை மாதாரி கடை நிலை சந்தா தாரறிற்கு லார்கோவின்ச் கையில் கிடைக்க 2 வாரம் ஆவது ஆகும் .அதுவரை அந்த பதிவை யாவது ரசித்து கொண்டு இருப்போம் அல்லவா?
ReplyDeleteநமது விஜயன் சார் இன் தனித்துவம் என நான் எண்ணியது இங்கே பதிவாய். நம் அனைவரிடமும் நீங்கள் படிக்க துடிப்பது என்ற கருத்து கணிப்பு முதலில் நடத்தி, பின்னர் அதில் கடைசியில் வரும் ஹீரோ வின் கதையினை முதலில் விடும் தடாலடி பாணி. அநேகமாக யார் கணிப்பில் முதல் என்று பாராமல் லாஸ்ட் ஆ யார் முதல் என்று எண்ணமோ? (உபயம் :சிம்பு டயலாக்) எது முன்ன பின்ன வந்தாலும் நாங்க எப்பவும் படிக்க ரெடி, வெளியிட நீங்க ரெடியா சார்? அதனால சட்டு புட்டுன்னு ஒரு புக் அ தள்ளி விட்டுடுங்க, இல்ல னா அடுத்து பதிவுகளும் இதே ரீதியில் தொடரும் :-) (இதில் ஏதும் பாலிடிக்ஸ் பண்ணி விடாதிர்கள் நண்பர்களே, just i kidded) புத்தக ப்ரியன்
ReplyDelete"அறுசுவையுடன் தடபுடலா சாப்பாடு தயாரா இருக்கு, பரிமாரவேண்டியதுதான் பாக்கி, கரண்டி வாங்க ஆள் அனுப்பி இருக்கேன், கொஞ்சம் பொறுங்க" அப்படின்னு சொல்றீங்க, ஒகே விஜயன் சார் பசியோட வெயிட் பண்றோம் அதைமட்டும் மறந்துடாதீங்க . நன்றி
ReplyDeleteவாசகர்களின் வரவேற்பு அகமகிழ வைக்கிறது! எடிட்டருக்கும் அதே நிலைதான் என்று நினைக்கிறன்! இங்கு தங்கள் ஐடியாக்களை கொட்டியிருக்கும் நண்பர்கள்/காமிக்ஸ் நல விரும்பிகள், அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்! எடிட்டர் எடுக்கும் நல்ல முடிவுகள் நம்மை பரவசத்தில் ஆழ்த்தட்டும்!
ReplyDeleteஎன்பங்குக்கு நானும் கொஞ்சம் ஆசிரியரை கொழப்புறேன் ....
ReplyDelete1 Jan , Apr , Jul , Oct - Rs . 50 விலையில் (ஒரு ஆண்டுக்கு 4 புத்தகங்கள் வீதம் 200 ரூபாய்)
2 Feb , May , Aug , Nov - Rs . 25 விலையில் (ஒரு ஆண்டுக்கு 4 புத்தகங்கள் வீதம் 100 ரூபாய்)
3 Mar , Jun , Sep , Dec - Rs . 100 விலையில் ௦ (ஒரு ஆண்டுக்கு 4 புத்தகங்கள் வீதம் 400 ரூபாய்)
ரூபாய் 50 மற்றும் 100 விலையில் முழு வண்ணத்திலும்
ரூபாய் 25 விலையில் கருப்பு, வெள்ளையிலும்
ஆக மொத்தம் ஆண்டுக்கு 700 ரூபாயில் (கொரியர் கட்டணம் தனி) லயன் , முத்து மற்றும் கிளாசிக்ஸ் வெளியிடலாம் என்பது இந்த சிறியவனின் தாழ்மையான கருத்து.
வருடத்திற்கு 3 ரூ100 இதழ்கள்
Deleteவருடத்திற்கு 6 ரூ25 இதழ்கள்
வருடத்திற்கு 3 ரூ50 இதழ்கள்.
3x100 + 6x25 + 3 x 50 = Rs. 600 + Courier Charges
இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் எதாவது ஒரு காமிக்ஸ் நமக்குக் கிடைக்கும்.
மாதம் RS 100 விலை என்பது மற்ற வார மாத இதழ்களை விட குறைவுதான் சார் .
ReplyDeleteலார்கோ வின்ச் ஐ நான் வரவேற்கின்றேன்
சார் இது கண்டிப்பாக ஒரு surprise எங்களுக்கு
ReplyDeleteவெல்கம் லார்கோ :))
.
Muthu Comics Surprise Special ஒரு கோடை மலர்
ReplyDeleteபோனசாக திகில் முதல் இதழ் சூப்பர் விஜயன் சார் :))
.
// நமது schedule படி இப்போது "லயன் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்" உங்களை சந்திக்கத் தயாராகி இருந்திருக்க வேண்டும்...! (முதல் பிரதியினை தாளா தாகத்தில் காத்திருக்கும் கனவுகளின் காதலருக்கு அனுப்பிட ஏற்பாடு கூட ஆச்சு !) //
ReplyDeleteஹ்ம்ம்ம் பாவம் காதலர் ;-)
.
//
ReplyDelete1 Jan , Apr , Jul , Oct - Rs . 50 விலையில் (ஒரு ஆண்டுக்கு 4 புத்தகங்கள் வீதம் 200 ரூபாய்)
2 Feb , May , Aug , Nov - Rs . 25 விலையில் (ஒரு ஆண்டுக்கு 4 புத்தகங்கள் வீதம் 100 ரூபாய்)
3 Mar , Jun , Sep , Dec - Rs . 100 விலையில் ௦ (ஒரு ஆண்டுக்கு 4 புத்தகங்கள் வீதம் 400 ரூபாய்)
ரூபாய் 50 மற்றும் 100 விலையில் முழு வண்ணத்திலும்
ரூபாய் 25 விலையில் கருப்பு, வெள்ளையிலும் //
I AGREE WITH THAT ...
NAGARAJAN
இது நீண்ட காலமாய் என் மனதில் உள்ள ஒரு எண்ணம. இதை பற்றி உங்கள் கருத்து தெரிந்து கொள்ள விருப்பம். இது விளம்பர யுகம். லயன் காமிக்ஸ் மட்டும் ஏன் விளம்பரங்களை பயன்படுத்த தயங்குகிறது. இந்த பத்திரிகை உலகத்தில் அனைத்து பத்திரிகைகளுமே விற்பனை வருவாயை விட விளம்பர வருவாயை முக்கியமாக கொண்டுள்ளன. இடையில் நீங்கள் சில இதழ்களில் விளம்பரங்களை அனுமதித்தீர்கள்.(Black widow spider based கதை ஒன்றென்று நியாபகம். ஆனால் அதை என் தொடரவில்லை என்று தெரியவில்லை. மற்ற பத்திரிகை போல 5 பக்கத்துக்கு ஒரு விளம்பரம் வேண்டாம். ஆனால் விளம்பரமே வேண்டாம் என்று ஒதுக்குவது ஏன். அதை பயன்படுத்தினால் புத்தக விலை குறைக்கலாமில்லையா.
ReplyDelete(இது நான் படித்து வளர்ந்த இதழ் என்ற அக்கரையில் கேட்கிறேன். Pls Dont mistake)....
avudaiappan sankaran : விளம்பரங்கள் என்பது இன்றைய வியாபார உலகில் இன்றியமையா அங்கம் என்பதை நான் ஒத்துக் கொள்ளுகிறேன் ! ஆனால் ஆரம்பம் முதலே நாம் இதனை நோக்கி சீரியஸ் ஆன முயற்சிகள் எடுத்ததில்லை ! Decent ஆனதொரு சர்குலேஷன் இருந்திட்ட காலகட்டத்தில் கருப்பு வெள்ளை அச்சு ; நியூஸ்பிரிண்ட் பேப்பர் என்று சுமாரான தரம் மட்டுமல்லாது வேளைக்கு ஒரு சைஸ் என்ற நமது பாணியும் சேர்ந்து விளம்பரங்களை நாடிச் செல்வதை சிரமமான காரியமாக்கிட்டன !
Deleteஇன்றைக்கு சர்வதேசத் தரத்தை எட்டிப் பிடிப்பது அத்தனை சிரமமல்ல எனும் போது நமது சர்குலேஷன் அத்தனை பெரிதல்லவே ! இன்னும் சில காலம் consistent ஆக தரமாய் ; பொறுமையாக தொடர்ந்திட்டால் விளம்பரங்கள் வேட்டை சாத்தியமே !
எந்தவொரு பத்திரிகையும் விளம்பரத்தை வெறுக்காதுங்க. ஆனா, விளம்பரம் கொடுப்பவங்க குறிப்பிட்ட காலத்துல விளம்பரம் பத்திரிகைல வெளிவர்றததான் விரும்புவாங்க. அதுதானே நம்மகிட்ட இருக்கற வீக் பாயிண்ட்டு. சீஸன் விளம்பரங்களை கொடுத்துட்டு சீஸன் முடிஞ்சப்புறம் பத்திரிகை வந்தா அவங்க என்ன பண்ணுவாங்க? இப்பகூட சூஹீசூஸ் க்கு பதிலா லார்கோ முந்திக்கிட்டாரு. சூஹீசூஸ் க்கு விளம்பரம் யாராவது கொடுத்திருந்தா என்ன ஆவறது? இதாவது பரவால்லே - 100 ரூபாக்கு 100 ரூபா புக்கே வருது. ஆனா, 100 க்கு பதிலா 10 வந்திருந்தா? இப்ப கொஞ்சம் டைமிங்ல கரெக்ட் பண்ண எடி ட்ரை பண்றாமாதிரி இருக்கு.இதையே கண்டினியூ பண்ணா, விளம்பரங்கள் கெடைக்க வாய்ப்பிருக்கு. எடி யும் விளம்பரங்கள போட ஒத்துக்கணும், பணம் கொடுத்து புக் வாங்குற நம்ம வாசக மகா ஜனங்களும் ஏத்துக்கணும். எவ்ளவு ப்ராப்ளம் இருக்குங்க. அதவிட, சிவகாசீலே இருந்து வர்ற சின்னப்புள்ள (காமிக்ஸ்னாலே சின்னப்புள்ள சமாச்சாரம்னு நெனைக்கிறவங்கதான் அதிகம்) புக்குக்கு ஆட் கொடுக்க சென்னைல இருக்கற பார்ட்டிங்க முன்வர்றது கஷ்டம். இப்படி சிக்கல்கள் ரொம்ப்ப்ப. ஆனா ஒண்ணு பண்ணலாம்ங்க. நீங்க ஒரு ஒண்ணரைப் பக்கத்துக்கு உங்க ஏரியாவுல இருந்து விளம்பரம் புடிச்சுச் கொடுங்க! அத உதாரணமாக்கிக்கிட்டு வேற ஆட்களும் வருவாங்க. எப்படிங்க நம்மா யோசனை?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletehttp://johny-johnsimon.blogspot.in/2012/05/comics-i-have.html
ReplyDeleteஆசிரியர் வருத்தப்பட்டது போல விளம்பரம் பண்ணி ஒரு ப்ளாக் நடத்த கூடாதுதான்!
ஆனா எங்க அஸ்திவாரமே நீங்கதானே தலைவா!
அதனால இந்த ஒரு பதிவுக்கு மட்டும் .. ப்ளீஸ்!
காமிக்ஸ் புத்தகங்கள் என்பவை மனதுக்கு மகிழ்ச்சி தரும் ஒன்றல்லவா? அதனால்தான் இந்த பதிவு! அப்படியே அந்த புக் மார்கெட் பத்தி கொஞ்சம் யோசியுங்களேன்! இது ஒரு வேண்டுகோள்தான்!
//ஆசிரியர் வருத்தப்பட்டது போல விளம்பரம் பண்ணி ஒரு ப்ளாக் நடத்த கூடாதுதான்!//
Deleteநாம் தவறாக புரிந்து கொண்டதாகவே நினைக்கிறேன். ஓவரான விளம்பரத்தை குறைக்கவே அவ்வாறு தெரிவித்து இருப்பார் என்று எதிர்பார்கிறேன் கண்டிப்பாக தவறாக தெரிவித்திருக்க மாட்டார் . மற்றபடி ஒரு ப்ளாக் மூலமாகத்தான் மற்றதை அறிந்துகொள்ள முடியும் . சொலப்போனால் ஆரம்பத்தில் கிங் விஸ்வா ப்ளாக் மூலமாகத்தான் நமது லைன் ப்ளாக் எனக்கு அறிமுகமானது .
இன்னும் ஒரு முக்கியமான விடயம் அணைத்து காமிக்ஸ் ப்ளாக்களும் நமது LION காமிக்ஸ் தளத்தை ஏதேனும் ஒருவிதத்தில் அறிமுகபடுத்துகின்றது . இது நமக்கு கூடுதல் விளம்பரம்தான் .
நண்பர்களே,
Deleteநிச்சயம் உங்களது எழுத்துத் திறமைகளை நம் தளத்தில் விளம்பரப் படுத்திடுவதில் எனக்கு எவ்வித ஆட்சேபணையும் கிடையாது ! எழுத்துக்கும் விளம்பரத்திற்கும் இடையே உள்ள இடைவெளி குறுகலாகிடும் போது மட்டுமே சின்னதாய் ஒரு முறை அதைச் சுட்டிக் காட்ட நினைத்தேன் ! மற்றபடிக்கு காமிக்ஸ் தொடர்பான எந்தப் பதிவிற்கும் எனது முழுமனதான ஆதரவு எப்போதும் உண்டு !
நன்றி விஜயன்
Deleteஉங்களின் உணர்வு பூர்வமான அனுகுமுறைக்கும் பெருந்தன்மைக்கும்
தலைவா யூ ஆர் கிரேட்!
Deleteஐய, என்ன ஆச்சி நம்ம பசங்களுக்கு ? கமெண்ட்ஸ் ஒன்னும் விறு விறு ப்பா இல்லையே ? சும்மா சவ சவ ன்னு. சந்தா பற்றி ஒருத்தர் எழுதினா அதையே எல்லாரும் மொக்கயே போட்டா எப்படி பிரதர் . அக்கட கத்திரி வெயில் அதிகமோ ? கொஞ்சம் சுறுசுறுப்பா எழுதுங்க சாமி .
ReplyDeletehi...
ReplyDelete"தங்கக் கல்லறை" மிக ஆவலுடன் எதிர் பார்கிறேன்
நன்றி விஜயன்
செந்தில்
"எதிர்பாராததை மிக ஆவலுடன் எதிர்பாக்கிறேன்"
Deleteதிகில் முதல் இதழை ஆவலுடன் எதிர் பார்கிறேன் ; 1986 ல் அதை கையில் வைத்திருந்த தருணங்களை நினைத்தால் இனம் புரியாத சோகமும் , சந்தோசமும் உண்டாகுது .
ReplyDeleteஎனக்கும்தான்
DeleteI forget the title. Story line is laying railway track to connect northern & southern part of america. The competition between two companies is theme. Hero is captain tiger. Friends, can anyone remember me the title? I want that story and "irumbu kai ethan" to be republish.
ReplyDeleteபரலோக பாதை ஏனுங் கரெக்ட் ங்களா ?
DeleteYeah absolutely correct!
Deleteபுயலுக்கு முன் அமைதி .
ReplyDelete" மைக் 1 எங்க இருக்கெ ?" "கனவுகளின் காதலர் வீட்டு முன்னே தல ",
"மைக் 2 எங்க இருக்கெ ?","லயன் ஆபீஸ் முன்னாடி தல."
"பீகேர்புல் முதல் புக்கு இன்னைக்கு ரிலீஸ் ஆகுது ",மைக் 1 வாசல்லேயே அத கடத்திரனும் புரியுதா?"
"மைக் 2 " , "எஸ் பாஸ் "," மைக் 1 மிஸ் பண்ணுனா காதலர் வீடு முன்னாடி இருந்து அவர் பேர சொல்லி கொரியர்காரர்
கிட்டேர்ந்து கடத்திரனும்,இதுல எதாவது தப்பு நடந்தா பிச்சி போடுவேன் .பீகேர்புல் "
"ஓகே தல "
ஹே. ஸ்டீல்,
ReplyDeleteநல்ல வசனம்..... :) :)
செந்தில்.
வசனம் இல்லை செந்தில் என்னோட விசனம்
Deleteலார்கோ விஞ்ச் முதல் பாகமான Heir and W group பட்டைய கிளப்புவதாகவும், இரண்டாவது பாகமான Take over bid and Business blues ஆலமாக RIS பற்றி அலசுவதாகவும் மற்றும் டேஞ்சர் டயபாலிக் ரேஞ்சில் இருப்பதாகவும் கேள்வி, மேலும் விஜய் நடிக்கும் "யோவன்" லார்கோ விஞ்சை தழூவியதாம்...
ReplyDeleteI just called to our office. They told still work is going on. They are going to start dispatching Muthu Surprise Special in next week only. :-(
ReplyDeleteWhy am I not surprised ? :) :P
Deleteடியர் எடிட்டர் சார் , இன்றாவது ஒரு புது பதிவு போடுங்க . இன்று காலை ஆவலுடன் ப்ளாக் யை open செய்தால் 5 நாட்களுக்கு முன் என்ற இந்த பதிவு தான் இருக்கிறது . இன்று ஒரு புது பதிவு போட்டால் சண்டே உற்சாகமாக கழியும் . what say folks ?
ReplyDeleteஆமாம்.........லார்கோவை பாக்கணும் உடனே .....
Deleteஎனக்கு பழனி வின்ச் தான் தெரியும் ....யாருப்பா அது லார்கோ வின்ச்
ReplyDeleteகதைய வச்சு டைட்டில் கண்டுபிடிச்சா மட்டும் போதுமா ...டியர் லூசு பையன் .....இந்த டயலாக் எதுல வருதுன்னு சொல்லுங்க பாப்போம் ....."வாலை விடுடா முட்டாள்'' CLUE லயன் காமிக்ஸ் வெளியீடு
ReplyDeleteஅயங்! இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் நான் அழு திடு வேன். ரொம்ப கேள்வி கேட்கறாங்க என்றுதான் நான் ஸ்கூல் கே மட்டம் போட்ட நல்ல பையன் நானு . வேணும்னா எங்க அண்ணாத்தே jolna பையன் யை கேட்டு கொஞ்ச நாளில் சொல்லி டறேன் .அவர்தான் palaya புத்தக கடையில் பிட்டு பேப்பர் கூட விடாமல் அட நான் காமிக்ஸ் யை சொன்னேன் ங்க. சின்ன துண்டு பேப்பர் ல் காமிக்ஸ் இருந்தாலும் வாங்கிடுவார் .
Deleteதலிவா , லார்கோ விக்கு அப்பாலே , நம்ப கேப் tigar யை உட்டா சூப்பர் ஆ இருக்கும் . சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் யை 2 மாசம் கழித்து ஆயில் டிங்கரிங் செய்து நிதானமாக வெளியிட லாமே ? கேப் tigar யை கலர் ல் காண ஆவலாக உள்ளோம் . இப்ப டிக்கு CTAS (cap tigar அடிபொடிகள் sangam ) கனவு களின் கள்வன் சாரி சாரி கனவு களின் காதலன் காது களுக்கு வேண்டுமானால் 2 பூக்களை இங்கிருந்தே பார்சல் அனுப்பி விடலாம் ,just kidding சாரே
ReplyDeleteஅனுப்புறத ஒரு 10 ரெட் ரோஸா அனுப்பி வைங்கப்பா தேவைப்படுது...அப்பாலிக்கா ஆய்ல் டிங்கரிங் இன்னா.... பைன் ஆலிவ் ஆய்ல் டிங்கரிங்கே செய்துகிட்டு ஒரு 2014 லே சூப்பர் ஹீரோக்கள் வந்தால்கூட பரவா இல்ல....ஆனா இடிச்சபுளி கேப்டன் டைகரு கதைக 3012 ல்கூட வெளிவராம இழுத்தடிக்கப்பட்டுகிட்டே இருக்கனும்கிற நம்ப ஆசையை பணிவா முன்னு வெக்கிறேன்... லூஸ் பாய்.. மன்னிச்சிடுங்க மன்னிச்சிடுங்க லூஸ் பையன் அவங்களிற்கு இன்னிக்கு நீல மாத்திரைங்கிறது மறந்துடப்படாது.....
Delete10 redrose மட்டும் போதுமா ? தேவை பட்டால் சூப்பர் ஹீரோஸ் க்கு மலர் வளையமே வய்து விடலாமே ? இப்படிக்கு கௌ பாய் காதலர்கள் @ CTAS .இரும்பு கை மாயாவி என க்கு பிடிக்கும் பட் பரட்டை தலையன் tiger யை ரொம்ப பிடிக்குமே என்ன செய் வது? அப்புறம் நீல மாத்திரை னா என்னது புரிய லையே ? நான் சின்ன பையன் பாருங்க ! ஹி ஹி .
Deleteநீல மாத்திரைங்கிறது.... சிவப்பு மாத்திரைக்கு அடுத்த நாளு போட்டுக்கற மாத்திரை...... சின்னப் பையன் ... லூஸ் பையன் எங்கிற பாகுபாடெல்லாம் மாத்திரைக்கு கிடையாதுங்க.... மலர் வளையம் வைக்கிற அளவு தோட்டத்தில பூ இருக்கா... அப்படின்னா ரெண்டு மலர் வளையம் செய்திடுங்க.....ஹிஹிஹி
Deleteதினமும் கலர் கலரா நிறைய மாத்திரை சாப்பிடு விங்க போல் இருக்கே? கொஞ்சம் health யை பார்த்துகிங்க பிரதர் . சூப்பர் ஹீரோஸ் என் ற கனவு உலகத்திலேயே இருக்காதிங்க ! நனவுகளின் நாயகன் நம்ப அழுக்கு பையன் tiger யை யும் ரசிக்க பாருங்க. உங்க ப்ளாக் பார் த்தேன். நிறைய matter gather செய்து நல்லா செய்து இருந்தீங்க. hats off .அப்புறம் மலர் வளையம் கேட்டு இறுந்தின்களே , உங்களுக்கா இல்லை சூப்பர் ஹீரோஸ் கா என்று சொல்லவில்லையே ? ஹி ஹி ஹி ..........................
Deleteஅடடா!! நீங்க மாத்திரை சாப்பிட மாட்டீங்களா!!! உங்க நனவு நாயகன்கூட கற்பனை எனும் கனவில் இருந்துதாங்க உருவாகனும்....மலர் வளையம் யாரிற்காக வேணுமானாலும் இருக்கலாம் எனக்காக ஏன் உங்களிற்காககூட.....ஹிஹிஹி
DeleteDear mr. Vijayan,
ReplyDeletePlease tell me about subscription details.
I am searching your comics for a very long time.
Please do reply
http://lion-muthucomics.blogspot.in/2012/02/blog-post_23.html
Deleteஏய் லார்கோ! எங்கப்பா இருக்க சீக்கிரம் தலைய காட்டுப்பா..சைமன் என்ன பன்றார்? சைக்கில் கேப்ல சிந்து பாடுறாரா?
ReplyDeleteலார்கோ வந்துவிட்டாராம். வாங்கிவிட்டாராம் http://soundarss.blogspot.in/ இங்கே பாருங்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றிவிட்டாரா எடி?
ReplyDeleteவாழ்த்துக்கள் விஜயன் சார் , சொன்னபடியே வெளியிட்டமைக்காக.
ReplyDeleteஎனக்கும் விரைவில் கிடைக்கும் என நம்புகிறேன்.
மற்றபடி புத்தகம் சூப்பர் என நண்பர் கூறிய படியே நானும் நம்புகிறேன்.
வானவில் ஜாலங்கள் நிகழ்த்தும் புத்தகத்தை எதிர்நோக்கி மேகங்கள் சூழ்ந்தும் மழை தவறி செல்லும் கோவையில் இருந்து
நண்பர் எதையும் குறிப்பிடவில்லை
நீங்களே படித்து அனுபவியுங்கள் என விட்டு விட்டார்
நன்றிகள் பல பல
அருமையான பதிவு
எதிர்பாராததை எதிர்பாருங்கள்
ReplyDeleteஎதிர்பார்த்து ஏமாந்து
ஏமாற்றமின்றி எம்மாற்றமுமின்றி
இன்று வெளிவந்தது போல மென் மேலும் சிறப்பாய் வெளி வர வாழ்த்துகள் .
தாமத பேயை விழுங்கி விட்டது திகில் பேய் (கருப்பு (கிழவி )பேய் )
ReplyDeleteசித்திரை திருவிழா முடிந்துவிட்டது.. ஆபிஸிற்கு விடுப்பு போட்டு எங்கள் ஊரிலுள்ள ஆற்றோரம் அல்லது ஏதாவது ஒர் மாமரத்தின் கீழ் உட்கார்ந்து லார்கோவை தரிசிக்க போகிறேன்... நிழலார உட்கார்ந்து உலகத்தை மறந்து லார்கோவை படிப்பதே ஓர் சுகம். லார்கோவை சொல்லவே வேண்டாம் ஆக்சன். அட்வென்சர் மற்றும் திரில்லர் நிறைந்தது என்று.
ReplyDeleteஉங்களுக்கு புத்தகம் கிடைத்து விட்டதா ?
Deleteஇப்ப தமிழ் நாட்டுல இருக்கிற ஆத்துல தண்ணி ய்க்கு பதிலா மண்ணு லாரி தான் ஓடு து . ரொம்ப மெய் மற ந்து லார்கோ வை படிக்கும்போது பக்க துல மண்ணு லாரி வந்து நிக்க போகுது . அதனால வீட்டிலேயே பத்திரமா படிங்க!
DeleteThis comment has been removed by the author.
Deleteஇன்னும் கிடைக்கவில்லை, இன்று எதிர்பார்க்கிறேன், but planning first.
Deleteஆற்றோரம் இல்லையென்றால் ஏதேனும் ஓர் மலையோரம், ராணி காமிக்ஸின் அழகியை தேடி என்ற புத்தகத்தையும் மிஞ்சி விடுவார் நம் லார்கோ.
லார்கோவைபற்றி தெரியாதவற்களுக்கு:
ReplyDeletePhilippe Francq இவருடைய அசாதாரமான ஆர்ட் ஒர்க்கும், Vanhamme கதை அமைப்பும் நிச்சயம் நம்மை வியக்க வைக்கும்.
லார்கோ விஞ்ச்: உலகின் மிகப்பெரிய பில்லியனராக இருந்தும், தனக்கென்று ஒர் பாதுகாவலின்றி தெருவில் உலா வருவதும், Business பற்றி கவலை படாமல் உலகை சுற்றி வருவதும் இவரது பொழூதுபோக்கு, இதன் பயனாக எதிரிகள் இலகுவாக முலைத்து விடுவதும், அவர்களை லார்கோவும் அவரது நண்பரும் சேர்ந்து முறியடிப்பது இவர்களது கை வந்த கலை.
எச்சரிக்கை: இக்கதை தொடரில் படுபயங்கர stunt காட்சிகளெல்லாம் உண்டு( எ.டு-கத்தி எரிதல், கராத்தே குங்ஃபு, பைக் ரேஸிங்),ஜேம்ஸ் பாண்ட் பட காட்சிகள் அனைத்தும் உண்டு, அதை கண்டு வாசகர்கள் யாரும் முயற்சியில் இறங்கிவிட வேண்டாம் என்று எச்சரிக்கபடுகிறார்கள். வீட்டில் சிறு பிள்ளைகள் இறுப்பின் அவர்கள் தங்கள் பெற்றோர்களின் அனுமதியுடன் படிக்கலாம், ஏனென்றால் இதன் பயனாக நானும் லார்கோவை போல் கத்தி எறியவும், பைக் சேஸிங்கையும் முயன்றுகொண்டிருக்கிறேன்.
இப்படிக்கு- லார்கோ நலப்பணி இயக்கம்.
லார்கோ நற்பணி இயக்க தலைவரே உங்க தலைவர் படம் எப்ப வெளியீடு செய்வதாக உத்தேசம் ..... சரியான தேதியை ஆசிரியரிடம் கேட்டு சொலுங்க
Deleteலார்கோ இன்று Release.. மற்ற விபரங்கள் மிக விரைவில்... சுட சுட....இன்றே படியுங்கள் ...
Deleteமற்ற பாகத்திற்கான தலைப்புகள் இப்பொழூதே ஆரம்பிக்கப்படுகின்றன-
செல்வத்தின் மறுபெயர் லார்கோ
அழகை மிஞ்சும் வேகம்
இழப்புக்கு இல்லை இழப்பீடு
வேகத்தை மிஞ்சும் விவேகம்
பரபரப்பாய் சில நிமிடங்கள்
பரவசமாய் சில நொடிகள்
முடிவும் நானே முதல்வனும் நானே
இனிமையாக ஓர் இளமை
இங்கே இளமை இராஜ்யம்
வறுமையாய் ஒர் இளமை
மிரட்டலடியும், லார்கோ in Burma, இனைந்த கைகள், லார்கோவும் விண்சேரும், வேகம்
This comment has been removed by the author.
Deleteஎங்கே இருந்துப்பா வராரு இந்த Jolna paiyan நம்ம எல்லோருடைய பொலப்பயும் காலி பண்ணிடுவாரு போலிருகே ..... லார்கோ வேகம் இவருடைய எழுத்திலேயே தெரிதே.....
DeleteWarm welcome to Largo winch! Waiting for you!
ReplyDeleteஅன்பு ஆசிரியருக்கு,
ReplyDeleteலக்கி லூக் & இரத்தப்படலம் கலர் காமிக்ஸ் பற்றிய வீடியோவை எனது ப்ளாக்கில் நான் இணைத்துள்ளேன். நீங்களும் நமது மற்ற காமிக்ஸ் நண்பர்களும் பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள். வீடியோ YOU TUBE -ல் இருந்து டவுன்லோட் செய்யப்பட்டது. இதில் எனது சொந்த விருப்பு வெறுப்பு ஏதும் இல்லை. ஆசிரியருக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே என் நோக்கம். மற்ற உண்மையான காமிக்ஸ் நண்பர்களும் இதனை ஆதரிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
இது சட்டவிரோத வெளியீடா? இல்லை பதிப்புரிமை பெற்று வெளியிடுகிறாரா? அந்த வீடியோவில் ரகுலன் என்ற பெயரில் வருபவரும் ஒரு ப்ளாக்கரா? என்ன பெயரில் பதிவிடுகிறார்?
DeleteMr.Ragulan is attitude may be good. But How is it possible? Its violation to copyrights act.
DeleteThis comment has been removed by the author.
Deleteபோன் செய்தேன் இன்னும் இரண்டு நாட்களுக்குள் (யுகங்கள் ) வந்து விடும் என்றார்கள்.
ReplyDeleteஓஓஓஓஓஓஓஓஓ
லக்கி லுக் மற்றும் ரத்த படலம் கலர் காமிக்ஸ்கள் பற்றிய வீடியோ புனித சாத்தானுக்கு அதிர்ச்சியும்,பிரமிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து எடிட்டர் அவர்கள் என்ன விளக்கம் அளிக்க போகிறார் என்றறிய அனைவரும் காத்திருக்கிறார்கள்.
ReplyDeleteவேறு யாருக்கும் புத்தகம் கிடைக்கவில்லையா.சௌந்தர் மட்டுமே பதிவிட்டிருக்கிறார்
ReplyDeleteநண்பரே அந்த வீடியோவில் அப்படி என்னதான் இருக்கிறது? கொஞ்சம் எழுத்தில் சுருக்கமாக சொல்லுங்களேன்? ப்ளீஸ்?
ReplyDeleteGuys
ReplyDeleteI got the surprise special today(thats a surprise and good news)
Editor Sir,
Hats off for the book and release of time on time.
The book quality and the images are really very good. Yet to read the story..
We are ready for any number of 100rs special books in a year.
Dear friends,
ReplyDeleteSurprise Special not yet received.
i think he was the guy who publish star comics from karur. i also hear some unoffical translation of comics are available, but the rates are high.
ReplyDeleteஹுர்ர்ரே எனக்கு புக் கிடைத்து விட்டது .இன்று வந்துள்ளது .எனக்கு 8 மணிக்குதான் தெரிந்தது.
ReplyDeleteமிக மிக நன்றி விஜயன் சார் .குறிப்பிட்ட நேரத்தில் கிடைத்து விட்டது .எனது சந்தோசத்தை வர்ணிக்க வார்த்தைகள்
இல்லை .நான் படிக்க செல்கிறேன் .வண்ணங்கள் அருமையாக ஒத்துளைத்துள்ளன .மீண்டும் நன்றி
Expect the Unexpected, Yes I got Largo and completed the story also,, to begin with a word then I would use Excellent.
ReplyDeleteFull comments later again :)
புக் கிடச்சவங்கேல்லாம் நரகத்துல ஆயிரம் வருஷம் தலை கீழா தொங்க தான் போறீங்க ......ஊ .ஊ .ஊ .ஊ .ஊ .ஊ .ஊ .ஊ .......ஆ ம் மாஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ எனக்கு லயன் காமிக்ஸ் வேணும் ஊ .ஊ .ஊ .ஊ .ஊ .ஊ .ஊ .ஊ
ReplyDeleteமதியில்லா மந்திரி dont worry, naa venaa ungalukaaga konjamaa kathai sollataa :)
ReplyDeleteஅட அது முத்து காமிக்ஸ்ங்க. 100 ரூபா வுக்கு புக் விட்டா உடனே அது lyan காமிக்ஸா? எனக்கும் இன்னும் வரலே ! முக்கியமான ஆளுக்கு எல்லாம் லேட் ஆகத்தான் அனுபறாங்க லாம். அதனால ஜோல்னா மாதிரி முதல்ல spot ,ரெடி பண்ணிக்கலாம் (ஜோல்னாவுக்கு ஒரு மலை குகை மாதிரி ) ,அட படிக்கற துக்கு ங்க! fingers crossed .சீக்கிரம் புக் கிடைக்கணும் என்று .
ReplyDeleteமுதல் கதை படித்து விட்டேன்.பின்னிட்டாங்க.
ReplyDeleteவண்ணங்களில் விளையாடி இருக்கிறார்கள்.
அற்புதம் .அற்புதம் .அற்புதம்.
வேகம் வேகம் வேகம்
தெளிவான கதை
பலூனில் எழுத்துகள் மட்டும் சிறிது பெரிது என ஒரே அணியில் இல்லை
ஆனால் எதாவது குறை கண்டு பிடித்தால் வாசகர்கள் என்னை துளைத்து விடுவார்கள்
இதோ சிங்கம் சிங்க நடை போட்டு கிளம்பி விட்டது
ரசிக்க ,பாத்து காக்க தயாராகுங்கள்.
அருமை அருமை அருமை
தெளிவான கதையோட்டம்
அருமையான மொழி பெயர்ப்பு .
தெளிவான சித்திரங்கள்
மதிப்பெண்
தொண்ணூற்றி ஒன்பது அல்ல
நூற்றி ஒன்றும் அல்ல
சரியாக நூறு
சத்தியமாக ஷர்ப்ரைஸ் ஸ்பெஸல்தான்.
இதனை நாள் ஏன் வெளிவிடவில்லை
ஆனால் காத்திருந்தது போல் அற்புத வண்ண சித்திர கதை விருந்து .
இலை போடாமலே சாப்பிடலாம் .
ஆனால் தட்டிலே வைத்து இலை போட்டு பரிமாறி இருக்கிறிர்கள்
நண்பர்களே மீண்டும் நாந்தான் ,எனது பிதற்றல்களை நீங்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை .
ReplyDeleteரெண்டாவது கதையும் படித்து விட்டேன் .அட்டகாசமான ஆக்சன் விருந்து.அதிலும் மீண்டும் வண்ணங்கள்
சொல்லியே ஆக வேண்டும்,வின்ச் நண்பர் கூறுவது போல ,சொர்க்கம் நிறங்களில் ,வின்ச் சிறு வயது ,மற்றும்
அவரது மாமா எர்னெஸ்ட் சந்திக்கும் இடங்களில் வண்ணங்கள் அழகாய் கை கோர்த்துள்ளன.மேலும் நண்பர்களின் நாடகம் அற்புதம்.நாவல்களில் வருவது போல அடுத்தடுத்து நான்கைந்து கட்டங்களில் கதையை சிக்கலில்லாமல் நகர்த்தி சென்றுள்ளது பாராட்ட பட வேண்டிய விசயமே.
இனி நீங்கள் கதையை படித்த பின் விமர்சிக்கலாம்.
ஆசிரியரின் மிக அற்புதமான செலேக்சனில் இதுவும் ஒன்றே .
சமீபத்தில் இணையத்தில் தேடும் போது, ISBN எண்ணை வாங்குவதற்கு ஒரு இதழுக்கு சுமார் $125 பிடிக்கும் என தெரிந்தது! (மொத்தமாக வாங்கினால் பெரிய discount!). Circulation சிறிதளவே என்றாலும் நமது இதழ்களிலும் இந்த முறையை அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅட 151ஆம் பதிவு நானா? ஸூப்பர்!!! நேற்று அலுவலகத்துக்கு செல்லும் பொழுது புத்தகம் கிடைத்தது...இன்று படிக்கலாம் என்றால், அப்பா படித்து கொண்டுள்ளார்...ஹ்ம்ம்ம்!!! Any way குறித்த நேரத்தில் புத்தகத்தை அனுப்பிய எடிட்டர் சாருக்கு நன்றிகள் பல :)
ReplyDeletehey....
ReplyDeleteஆர்வத்தை தூண்டுகிர்கள், என் உணர்வுகளை நீங்கள் அனாவசியமாக உசுப்பு எத்ரிங்க....
partially i am in out of india.ayo ayo nan yenanga panradhu?
senthil
This comment has been removed by the author.
ReplyDeleteDear Vijayan Sir, "Surprise Special" story really surprised me on how powerful a comics can be. அட்டை படத்தில் லார்கோ அக்கடான்னு உட்கார்ந்து இருப்பது போல் படிக்க உட்கார்ந்த நான், இரண்டு பக்கங்களில் நிமிர்ந்து உட்கார்ந்தேன். இரவு இரண்டு மணி வரை படித்து,வியந்து, ரசித்து முடித்தபின் காலை எழுந்தவுடன் இரண்டாவது முறை லார்கோவைச் சந்திக்க புத்தகத்தினுள் புகுந்துள்ளேன். Thank you very very much for such a story & presentation.
ReplyDeleteஆம்.. இதுவரை வந்த படைப்புகளில் இது ஒர் மைல்கல். இன்னும் இரண்டாம் மூன்றாம் பாகமும் பட்டைய கிளப்பும், ஆகையால் ஆசிரியர் அவர்கள் இதன் தொடர்ச்சியை அடுத்தடுத்து வெளியிடவும்.
Deleteலார்கோ நற்பணி இயக்கம்.
//அன்பு ஆசிரியருக்கு,
ReplyDeleteலக்கி லூக் & இரத்தப்படலம் கலர் காமிக்ஸ் பற்றிய வீடியோவை எனது ப்ளாக்கில் நான் இணைத்துள்ளேன். நீங்களும் நமது மற்ற காமிக்ஸ் நண்பர்களும் பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள். வீடியோ YOU TUBE -ல் இருந்து டவுன்லோட் செய்யப்பட்டது. இதில் எனது சொந்த விருப்பு வெறுப்பு ஏதும் இல்லை. ஆசிரியருக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே என் நோக்கம். மற்ற உண்மையான காமிக்ஸ் நண்பர்களும் இதனை ஆதரிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.//
லக்கி லுக் கலர் காமிக்ஸ் விற்பனை செய்தவர்கள் இப்படி ஓபனா பேட்டியளித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. கண்டிப்பாக விஜயன் சார் நடவடிக்கை எடுக்க வேண்டும். லையன் காமிக்ஸை நேசிப்பவர்கள் அனைவரும் இந்த விசயத்தில் குரல் கொடுக்க வேண்டும். (விவரமறிய - http://tamilcomics143.blogspot.in/)
விஜயன் சார் வழக்கம் போல உங்கள் எழுத்து நடை சூப்பர் இதனை ஆங்கிலத்தில் படித்திருந்தாலும்
ReplyDeleteதமிழிலில் அதுவும் உங்களது மொழி மாற்றத்தில் படிப்பது என்பது ஒரு சுகமே
அடுத்த பாகங்களையும் விரைவில் /அடுத்தடுத்து வெளியிடுங்களேன் சார் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறோம் :))
.
கருரை சேர்ந்த ரகுலன் அனுமதியுடன்தான் கலர் காமிக்ஸ் விற்பனை செய்தாரா? நண்பர்கள் சேர்ந்து செய்தார்கள் என்றால் அந்த நண்பர்கள் யார்? இந்த புல்லுருவிகளை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் தீவிர காமிக்ஸ் ரசிகர்களை இவர்கள் ஏமாற்றுவார்கள்.
ReplyDeleteபாபு, நங்கநல்லூர்
சில பதிவுகளுக்கு முன் ஆதாரம் கேட்ட ஒலக காமிக்ஸ் ரசிகர் இதற்க்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்? எடிட்டர் தக்க நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம்.
ReplyDeleteசையத், சென்னை
எனக்கு இன்னும் புத்தகம் வந்தபாடில்லை?
ReplyDeleteநரகத்தில தலை கீழாழை தொங்குரவுங்க இறங்கிக்கலாம்... எனக்கு புக் வந்துடுச்சு ...கதை சொல்ல முன் வந்த சிம்பாவுக்கு நன்றி .....நானும் மஸ்தானும் படிக்கணும் வர்ட்டா..
ReplyDeleteஇறக்கி விட்டமைக்கு நன்றி நண்பரே
Deleteநான் படிக்க்க பிளான் பண்ணிய முறை ..DAY 1.அட்டை போடணும் ..DAY 2,3,4,திடீரென்று நடுவால பத்து பக்கத்தை படிக்கணும் ,DAY 5,அப்பால கிளைமாசுக்கு முந்தின பக்கத்த படிக்கணும் ,பிறவால...DAY 7 திகில் படிக்கணும் DAY 10 கடசில லார்கோ படிக்கணும் அப்பதான ஒரு பதினஞ்சு நாளாவது படிக்க முடியும் ..அதுக்குல்ள்ளார அடுத்த காமிக்ஸ் வந்துடும்
ReplyDeleteஎனக்கும் புத்தகம் நேற்று வந்துவிட்டது! கொரியரில் வந்தது ஆச்சரியம் அளித்தது. :-)
ReplyDeleteஒரு சம்பந்தம் இல்லா செய்தி:
லேண்ட்மார்க் தற்போது குறிப்பிட்ட காமிக்ஸ் புத்தகங்களுக்கு 60% தள்ளுபடி அளிக்கிறார்கள். அதில் சுமாராக 4 -5 லக்கி லூக் புத்தகங்கள் ருபாய் 78க்கு கிடைக்கிறது.! நமது கோட் நேம் மின்னல் கூட முதல் பாகம் 78 ரூபாய்க்கும் இரண்டாம் பாகம் 140 ரூபாய்க்கும் கிடைக்கிறது.
நான் அனைத்தையும் ஆர்டர் செய்து விட்டேன். ஆங்கில பிரதிகளை படிக்க விரும்புவோர் தங்கள் பிரதிகளுக்கு முந்துங்கள்.
நல்ல செய்தி பிரசன்னா! நன்றிகள் பல!
ReplyDeleteபின்னூட்டம் இட்டதற்கு நன்றிகள் பல ஜானி அவர்களே..
Deleteவலைத்தள முகவரி கொடுக்காமல் விட்டுவிட்டேன். மற்ற நண்பர்களின் வசதிக்காக இதோ:
http://www.landmarkonthenet.com/page/dc-comics-at-60-off/
இதில் லக்கி லூக் புத்தகங்கள் ஐந்து. அவை: டால்டன் சிட்டி, அடிதடி ஜேன், பயங்கர பொடியன் மற்றும் இரண்டு வெளிவராத (ஆனால் விரைவில் லயனில் வெளிவரப்போகிற) தரைக்கு கீழே தங்கம், வில்லனுக்கொரு வேலி (பார்க்க: லயன் கம் பேக் ஸ்பெஷல்!) ஆகியவை 78 ரூபாய்க்கு கிடைக்கின்றன.
இது தவிர இன்னுமொரு சுவாரசியமான விஷயம்: லார்கோ வின்ச் மூன்றாம் பாகமான டச் கனெக்ஷன் 140௦ ரூபாய்க்கும், ஐந்தாம் பாகமான சீ வெனிஸ் 78 ரூபாய்க்கும் கிடைக்கின்றன.
இவை அனைத்தும் சினிபுக் நிறுவனத்தாரால் முறைப்படி இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு இதழின் சாதரணமான விலை 195 முதல் 359௦ வரை. இந்த விலைக்கு புத்தகம் கிடைப்பது கடினமே. ஆகவே வாசகர்கள் தாரளமாக வாங்கலாம் :-)
கவனிக்க: இது நமது சக காமிக்ஸ் வாசக நண்பர்களுக்காக ஒரு செய்தி மட்டுமே! எனக்கும் லேண்ட்மார்க்க்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது. :-)
//விலை 195 முதல் 359௦ வரை//
Delete359 அல்ல 395. மன்னிக்கவும் :-)
Thanks Prasanna I bought 5 lucky luke books @ Rs.78
DeleteI got Surprise Special Today, Thanks a lot
ReplyDeleteDear Vijaya sir,
ReplyDeleteI would be grateful to see a collector's edition in good paper quality at a reasonable price consisting of archie, spider, reported johnny, captain prince stories published in previous issues to preserve and stories.
Every hero's issue can be published in a single book every year as a special collector's edition.
Vijayan Sir, I would like to hear your thoughts
Thanks & Regards
Mahesh.
just like in 2024 largo was preferred for the planned book.. hmmm interesting
ReplyDelete