Powered By Blogger

Wednesday, April 25, 2012

இடையே ஒரு தேர்தலும்..இடையே ஒரு தீர்மானமும் !


நண்பர்களே 

கொஞ்சம் பயணம் ; கொஞ்சம் பணிகள் என்று ஒரு வாரத்துக்கு இங்கே தலை காட்ட முடியாது போயிற்று ! Sorry!

புதிய இதழ்(கள்) சுறுசுறுப்பாய் தயாராகி வருகின்றன ! கனவுகளின் காதலர் நமது "சூப்பர் ஹீரோ ஸ்பெஷலுக்கு" ஆதரவு திரட்ட அணி அமைத்து அரும்பாடு பட்டுக் கொண்டிருப்பது கண்கூடாய்த் தெரியும் போது, அவரது வேகத்துக்கு நாமும் ஈடு கொடுத்தாகணுமே :-)

புதுக்கோட்டை இடைத்தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ள போதிலும் இங்கே நம் வலைப்பதிவில் நடந்தேறி வரும் online poll அமர்க்களமாய் ஓடிக் கொண்டிருப்பதைக் கவனித்தேன் !கள்ள ஓட்டுக்கள்..நல்ல ஓட்டுக்கள்...கடத்தப்பட்ட ஓட்டுக்கள் ...என்று பல விதமாய் நமது online poll க்கு வாக்களித்திருந்தாலும் - எதிர்பார்த்தபடியே கேப்டன் டைகர் கதைகள் தான் தூள் கிளப்பியுள்ளன ! 

கேப்டன் டைகர் கதைகளுக்கு உள்ள எதிர்பார்ப்பும் ; வரவேற்பும் நிஜமாகவே என்னை சிந்திக்கச் செய்தது ! மீண்டும் ஒரு முறை என்னிடமிருந்த டைகரின் வண்ண ஆல்பங்களைப் புரட்டினேன்...! பெரிய சைசில் ; வண்ணத்தில் ; டைகரின் தங்கக் கல்லறை கதையினை படிக்கும் போது எனக்குள்ளே - பதினேழு ஆண்டுகளுக்கு முந்தைய அதே பரபரப்பு ! 1995 -ல் சிங்கப்பூரில் இந்த இதழின் ஆங்கிலப் பதிப்பை வாங்கி - சென்னை திரும்பும் விமானத்தில் அரைத் தூக்கத்தில் படிக்க ஆரம்பித்தது ; படிக்கப் படிக்க தூக்கம் கரைந்தோடிட உற்சாகத்தில் துள்ளியது எல்லாமே நேற்றுப் போல் நினைவில் ஓடிட...இந்தப் பதிவின் துவக்கம் என் மனதில் முளை விட்டது !!

So - நம் மறுபதிப்புப் படலத்தின் திடீர் இடைச்சொருகலாக - நமது முத்து காமிக்ஸில் வெளியாகி நம்மை மெய்மறக்கச் செய்த - "தங்கக் கல்லறை - பாகம் 1 & 2  - வண்ணத்தில் ; உயர்தர ஆர்ட் பேப்பரில் ; பெரிய சைசில் ; ஒரே இதழாக வரவிருக்கின்றது ! இரு கதைகளையும் கொண்ட ஒரே ஆல்பத்தினை ஒரிஜினலின் அற்புதமான அட்டைப்படத்துடனேயே ஆகஸ்ட் நடுவில் நீங்கள் ரசித்திடலாம் ! 

தங்கக் கல்லறை

மறுபதிப்பு ஒருபுறமிருக்க..டைகரின் புதிய கதைகளும் இனி தொடர்ந்து வெளியிட்டிட ஏற்பாடுகளைத் துவக்கி விட்டேன் ! So அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் டைகர் கதைகளின் தொடர்ச்சிகள் சீக்கிரமே வெளிச்சத்தைப் பார்த்திடும் !



இவை தவிர புதிதாய் கொஞ்சம் கதைத் தொடர்களைப் பின்பற்றிடவும் முயற்சித்து வருகின்றேன் ...முயற்சிகள்  முழுமை அடையும் போது அறிவிப்பு வந்திடுவது முதலில் இங்கேயாகத் தானிருக்கும் !

அப்புறம் இன்னொரு விஷயமும் கூட...! வெகு விரைவிலேயே உங்களுக்கு ஒரு Surprise காத்துள்ளது ! அது என்னவென்ற யூகங்கள் உங்களில் ஓடிக் கொண்டிருக்கும் சமயமே நான் நடையைக் கட்டுகிறேன் - IPL மேட்ச் பார்த்திட !

அந்த Surprise தான் எனது அடுத்த பதிவாக இருந்திடும் !Take care guys !! See you around soon !


46 comments:

  1. சூப்பர் அறிவிப்பு! :) வெல்கம் பேக் டைகர்! :) அதே ஒரிஜினல் அட்டையை யூஸ் பண்ணுங்க சார்! அமர்களமா இருக்கு! :)

    ReplyDelete
    Replies
    1. அப்புறம் வழக்கம் போல, சின்னதா ஒரு விளம்பரம் :)

      உலகப் பதிவுகளில் கடைசி முறையாக, 'தலை வாங்கி குரங்கு' & 'சாத்தானின் தூதன் டாக்டர் 7' பற்றிய ஒரு விமர்சனம்!... பல புதிய தகவல்களுடன்!

      Delete
    2. அப்புறம், ஆண்டு மலர் பெயர் முடிவுகளை எப்ப அறிவிச்சு, வடை distribute பண்ணப்போறீங்க?

      Delete
    3. aha aahaaha we eagerly waiting for this for years ji. Thanks a lot.

      Delete
    4. >>>வெகு விரைவிலேயே உங்களுக்கு ஒரு Surprise காத்துள்ளது!<<<
      Avenger சீரிசுக்கு காப்பிரைட் வாங்கிட்டீங்களா என்ன? ;)

      பழைய சூப்பர் ஹீரோசை எல்லாம் விட்டுட்டு புது ஆளுங்களை தேடுங்க எடிட்டர் சார்! :)

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  2. விஜயன் சார்

    உங்களது இந்த அறிவிப்பு நிஜமாகவே ஒரு இன்ப அதிர்ச்சி ......

    அடிச்சு தூள் கிளப்புங்க சார் .....

    ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பே இதை வெளிக்கொண்டுவர முடியாதா சார் ?

    வழக்கமான பாணியில் சொன்னால் "ரொம்ப ஓவரா ஆசைபடுகிறோமோ :) "

    //வெகு விரைவிலேயே உங்களுக்கு ஒரு Surprise காத்துள்ளது ! //

    சீக்கிரம் சொல்லிடுங்க சார் !!! சஸ்பென்ஸ் தாங்க முடியல ..... !!!!

    நாகராஜன்

    ReplyDelete
  3. டைகர் கதைகளை கலரில் படிக்க மிகவும் ஆர்வமாக உள்ளது. அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.

    ReplyDelete
  4. விஜயன் சார்

    ஒரு சிறு விண்ணப்பம் :

    டைகரின் "மின்னும் மரணம்" - முழு புத்தகமாக வெளியிட முடியுமா ?

    நான் இதை மிஸ் செய்துவிட்டேன் மேலும் நிறைய பேர் இதை முழுவதுமாக படிக்க ஆவலுடன் இருப்பார்கள் என்பது என் கருத்து.

    நல்ல அறிவிப்பு ஒன்றை வெளியிடவும் .....

    நாகராஜன்

    ReplyDelete
    Replies
    1. டியர் சாந்தன் , அந்தரத்தில் தொங்கும் ஏனைய tiger கதையை (இரும்பு கை எத்தன்) ஆகியவற்றை முடித்து விட்டு அப்புறம் reverse போகலாமே. மற்றும் இன்னுமோர் செய்தி , மின்னும் மரணம் இறுதி பகுதி யாக வந்த புயல் தேடிய புதையல் க்கு பிறகு இன்னும் ஒரு பகுதி இருக்கிறது என்று என் நண்பர் ஒருவர் சொன்னார் .இதை எடிட்டர் தான் உறுதி செய்ய வேண்டும் .அப்படி இருந்தால் அந்த இறுதி பகுதியை கலர் ல் publish செய்தால், சிவகாசி ல் மட்டும் மின்தடை க்கு விலக்கு வேண்டும் என்று எல்லாம் வல்ல சதுர கிரி ஆண்டவரை வேண்டுகிறேன் .

      Delete
  5. § Comics mela
    comics vanthu
    kottuginra kalamithu§

    § nenchukkulla moodi vacha aasaiyellam muttuginra neramithu
    §

    ReplyDelete
  6. நல்ல வோட்டும்! கள்ள வோட்டும் போட்டு டைகரை முன்னிலைப்படுத்தி "தங்க கல்லறை" வரவைத்துவிட்டீர்கள்! நன்றி!

    ReplyDelete
  7. அப்பாடா… ஒரு வாரத்துக்கப்புரம் வந்த உங்க blogகே ஒரு சர்ப்ரைஸ் தான்… இதுல இன்னொண்ணா? நடத்துங்க, நடத்துங்க… தங்க கல்லறை? படிச்சா மாதிரியே ஞாபகம் இல்ல. மிஸ் பண்ணிட்டனோ? சீக்கிரம் புக்க கொண்டு வாங்க சார்… இப்பவே மண்டைக்குள்ள கிர்ர்ருங்குது… ஜூலை மாச கொண்டாட்டம், இதழ் தலைப்பு முடிவு… இதப்பத்தில்லாம் கவலை இல்லாம நீங்க பாட்டுக்கு IPL மேட்ச் பாக்க போயிட்டீங்களே… ஞாயமா இது?

    ReplyDelete
  8. இதுவரை வந்ததில் அட்டகாசமான செய்தி........

    ReplyDelete
  9. நீதி நேர்மை நியாயம் சத்தியம் உண்மை அறம் இவை எல்லாவற்றிற்கும் இலக்கணமாக இமயம் போல் எழுந்து நிற்பவை சூஹீசூஸ் க்கு விழுந்திருக்கும் பாசமான வோட்டுக்களே......

    இவற்றில் எதுவும் இல்லை என்பது கண்டிப்பாக மாயாசால மன்னர் மாண்ட்ரெக்கின் ரசிகசெல்லக்குஞ்சான்களின் விளையாட்டாகவே இருக்க வேண்டும்...

    காப்டன் டைகர் என அழைக்கப்படும் ப்ளுபெர்ரிக்கு அளிக்கப்பட்டவை நேர்மையான வோட்டுக்கள்தான் என்பதை இஸ்னோகுட் கூட நம்பமாட்டார் என்பதையும் அன்புள்ளங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.....

    எவரிற்கு ஒருவர் அதிக எண்ணிக்கையில் குத்தினார் என்பது முக்கியமில்லை...எவரிற்கு பலர் அதிக எண்ணிக்கையில் குத்தினார்கள் என்பதே முக்கியம்....

    சத்தியம் வெல்லும்....

    ஸ்ஸ்நமு......

    ReplyDelete
    Replies
    1. //எவரிற்கு ஒருவர் அதிக எண்ணிக்கையில் குத்தினார் என்பது முக்கியமில்லை...எவரிற்கு பலர் அதிக எண்ணிக்கையில் குத்தினார்கள் என்பதே முக்கியம்....// குத்தினது கள்ள வோட்டா நல்ல வோட்டா என்பது முக்கியமல்ல. எண்ணிக்கைதான் பேசும் Brother. We (The Blueberry's Die Hard Fans) Won it.

      Delete
    2. மைக்கு தொன்னவன் புல்லுப்பொரி அவர்களின் தங்க கல்லறை டீலக்ஸ் எடிசன், ஆகஸ்டில் வெளியாகிடும்போது பணியிடத்தில் அனுமதி பெற்று அரை நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு புல்லட் வேகத்துடன் பொடிநடையாய் ஓடி வரப்போகும் நண்பர் சவுந்தர் அவர்களிற்கு டீலக்ஸ் எடிசனை உடனே தந்துவிடாது இரண்டு மூன்று நாட்கள் இழுத்தடித்து லந்து பண்ணிடுமாறு லயன் அலுவலக ஊழியர்களிடம் உள்ளமுருகி அன்பு வேண்டுகோள் விடுக்கிறோம்.....:))))

      ஸ்ஸ்நமு.

      Delete
    3. கேப்டன் டைகர் ஜெயித்துவிட்டாரா என்ன? இன்னும் மூணு நாள் இருக்கே! ஆனால் ""பாவம் லார்கோ "

      Delete
  10. Thanga kallarai..... Ethan Irandam pagam mattum enaku palaya book kadayil kidaithathu. Ethil kodumai ennavendral nan varuvatharku sirithu neram munbu than yaro muthal pagathai vangi sendraram... Cowboy kathaigalil entha kathai mathiri allamanathu verondrumillai. Athuvum Luckner Valli-in shoevukul podum idamum, Pisasu pinathil palliyay katti Lucknarai ematrum idamum enaku migavum pidikum.

    ReplyDelete
  11. ஆஹா .அற்புதம் .மீண்டும் கலரில். அட்டகாசமான அட்டை படம் .அட்டகாசமான கலரிங் .மின்னும் மரணத்தையும் ,மற்றும் அணைத்து தொங்கி கொண்டிருக்கும் டைகர் கதைகளையும் மீண்டும் முதலிலிருந்தே கலரில் வெளி விடுங்களேன். கோடை அறிவிப்புகள் 1986 போலவே மீண்டும் களை கட்ட துவங்கி விட்டது .மீண்டும் கோடையின் வசந்தம் ஆஹா ஆஹா

    .
    உண்மையை சொன்னால் அன்றையே காலத்தின் அறிவிப்பை விட இன்று அதிக வேகத்தை காட்டி வருகிறிர்கள் .வாழ்க வளர்க .ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம் வசந்தமே வருக

    ReplyDelete
  12. Thalai vangi kurangu colouril pottu irukkalam.!

    ReplyDelete
  13. ஆஹா..என்ன ஒரு அருமையான செய்தி. Super
    இதேபோல் நிறைய இடைசொருகல்களை எதிர்பார்க்கிறோம்

    ReplyDelete
  14. Dear Sir,

    Hurray!!! Welcome Welcome 1000s of welcome. I am over the moon. Make it fast. Don't do late as usual. And sir think about the Hardbound Cover as well.

    ReplyDelete
  15. இனிப்பான செய்தி நான் முதல் முறையாக தங்க கல்லறை படிக்கும போது இறுதி திருப்பம் என்னை ஆச்சரியத்தில் ஆற்றியது.

    எதிர் பார்க்காத திருப்பம்.

    மீண்டும் வண்ணத்தில் பெரிய அளவில் படிகப்போவதை நினைய்கும் போது ..............

    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கும் ஒரு காமிக்ஸ் விரும்பி .

    ReplyDelete
  16. புத்துணர்ச்சி தரும் தகவல்.. தங்கக்கல்லறை ஒரு டிரென்ட்செட்டர். இதன் இத்தாலிய மூலம் என்னிடம் உள்ளது! அதை மிஞ்சும் அளவிற்கு வண்ணக்கலவை மற்றும் அட்டைப்படம் வர வேண்டும் என்பதே என் அவா. பொறுத்திருந்து பார்ப்போம்.

    இதனுடன் டைகரின் ஒரு பாக கதையான தோட்டா தலைநகரம் கதையையும் சேர்த்து வெளியிடலாம். ஒரு complete package ஆக டைகர் மறுபதிப்பு ஸ்பெஷல் இருந்திடும். எடிட்டர் சார் கவனிக்க :-)

    ReplyDelete
    Replies
    1. //இதனுடன் டைகரின் ஒரு பாக கதையான தோட்டா தலைநகரம் கதையையும் சேர்த்து வெளியிடலாம். ஒரு complete package ஆக டைகர் மறுபதிப்பு ஸ்பெஷல் இருந்திடும். எடிட்டர் சார் கவனிக்க :-) //


      MR. VIJAYAN =-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=> PLEASE NOTE THIS POINT

      :)

      NAGARAJAN

      Delete
    2. Dear Friend, I dont think three full color stories can accommodate in Rs.100/- collectors edition. Already our Editor giving 2 full color intl quality comics for Just Rs.100/-.
      But I do request our dear editor sir, can u please increase the size of the comingforth book to suit more to the originals like 1/4 of Demi Paper or A4(Like KolaiPadai, Sathivalai, Irumbumanithan. If it is possible then it is the great achievement.

      Delete
  17. ஆறு நாள் தாடி,குளிக்காதஉடம்பு ,சோப்பு வாசனை தெரியாத முகம், பய புள்ளைய பாத்து எவ்வளவு நாளாச்சு ..........வளந்து இருபான்லே ......

    ReplyDelete
  18. Grand Welcome to Blueberry! Pls publish "Minnum maranam" also!

    ReplyDelete
  19. அதிரடிக்கு பெயர் போன கதையை விரைவில் வெளியிடப் போகும் உங்களுக்கு ஒரு கிரேட் ஓ

    ReplyDelete
  20. புனித சாத்தானுக்கு ஒரு குழப்பம்.லெப்டினென்ட் ப்ளுபெர்ரி கதைகள் பிராங்கோ பெல்ஜியன் கூட்டு தயாரிப்பு தானே?பிரசன்னா இத்தாலிய மூலம் என்று குழப்புகிறாரே?

    ReplyDelete
    Replies
    1. புனித சாத்தான் அவர்கள் குழம்ப வேண்டாம்... ப்ளுபெர்ரி ஒரு அக்மார்க் பிராங்கோ பெல்ஜியன் தயாரிப்பு தான். ழான் மைக்கேல் சார்லியர் மற்றும் ஜிராட் ஆகிய இரு கலைஞர்களின் உன்னத உழைப்பில் உருவான காவியம்.
      இத்தாலிய மொழிபெயர்ப்பு என்னிடம் உள்ளது என்று நான் குறிப்பிட்டு இருக்க வேண்டும். தவறுக்கு வருந்துகிறேன். :-(

      Delete
  21. The real good news, Love to read our blockbuster hero,..... Blue berry rocks :)))))))

    ReplyDelete
  22. சார், தங்களின் இந்த அறிவிப்பு பல காமிக்ஸ் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவது நிச்சயம். நான் எதிர்பார்த்த அறிவிப்பு முழுமைப் பெறப்போவதில் ஆனந்தம் பல மடங்கு பெருகுகிறது! இப்போதே அடித்து சொல்லலாம், இந்த வருடம் வெளிவரும் கதைகளில் இதுதான் மாஸ்டர் பீஸ். உங்களுக்கு - வணக்கம் தலைவா! டைகர்ருக்கு சல்ஹுட்!
    அடுத்த பதிவு, SHSS பற்றிய முன்னோட்டம் தானே? surprise வேறு என்ன.....?

    ReplyDelete
  23. Welcome Blueberry, our tiger.
    Really this is a great news for all the comic-lovers.
    Vijayan Sir, Pls break the surprise today...

    ReplyDelete
  24. இனிப்பான செய்தி..
    ஒரு சிந்தனை.. தலைவரோட ஒரிஜினல் பெயரான ப்ளுபெர்ரியவே இந்த மறுபதிப்பு மூலமா கொண்டு வந்தால் என்ன ..

    ReplyDelete
  25. ஹ ஹ ஹ , என்ன ஒரு கண்கொள்ளா காட்சி. cap tiger ன் குதிரை நாலு கால் பாய்ச்சலில் ஓட ,spider ன் டப் பா ஹெலிகார் ன் சக்கரங்கள் எங்கோ பிடுங்கி கொண்டு ஓட , இரும்புக்கை மாயாவி தமிழ் நாட்டு மின்வெட்டு தெரியாமல் இங்கு வந்து மாட்டிகொண்டு தெரு தெரு வாக , எங்க மின் சாரம் ,எங்க மின் சாரம் ,என்று அலைய, இரும்பு மனிதன் ஆர்ச்சியின் துருபேரிய பாகங்களுக்கு டிங்கரிங் ஆயிலுக்காக விக்டர் &thomson அலைய , இதோ tiger வெற்றி கோட்டை நெருங்கி விட்டார் .சூப்பர் ஹீரோஸ் க்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .இப்படிக்கு CTAS (cap tiger அடிபொடிகள் சங்கம் )

    ReplyDelete
  26. This will be a master piece for this year, Welcome our Tiger

    ReplyDelete
  27. தங்க கல்லறை முழு வண்ணத்தில் மீண்டும் வெளியக போவது மகிழ்ச்சியான செய்தி. இது தலை வாங்கி குரங்கில் தொலைத்த காமிக்ஸ் கிளாசிக்ஸ் தரத்தை, சரிசெய்ய உதவும் என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete
  28. காப்டனின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  29. திடீர் உறக்கத்தில் இருந்து வெளியில் வருவது ஒரு புறம் என்றாலும் தடுமாறினால் விழுந்து விடுவோமே என்று எச்சரிக்கை உணர்வுடனேயே நீங்கள் பதிவுகளை எழுதி வருவதாக தெரிகிறது... anyhow reading about these baby steps is refreshing and motivating

    ReplyDelete