நண்பர்களே,
நெடுந்தொலைவு ஓட்டப் பந்தயங்களில் - முன்னணி வீரர்களை இன்னும் அதிகமாய் சாதிக்கச் செய்வதற்கென்றே pace setters உண்டு ! மூச்சு விடும் தூரத்தில் தொடர்ந்திடும் அவர்கள் இருக்கும் வரை, முன்னே ஓடும் ஆசாமி லேசாகக் கூட வேகத்தைக் குறைத்திட முடியாது ! உங்களின் புயல் வேகத்துக்கு ஈடு கொடுக்க நானும் இயன்ற வரைக்கும் 'தம்' புடிக்கும் முயற்சியின் லேட்டஸ்ட் பலன் இதோ !!
"இதோ வர்றார்..அதோ வர்றார்' என்று நான் உதார் விட்டுக் கொண்டே இருந்த லார்கோ வின்ச் - தனது முதல் ஆட்டத்தை June 1-ல் துவக்குகிறார் !
முத்து காமிக்ஸில்..முழு வண்ணத்தில்..பெரிய சைசில் ..அயல்நாட்டு ஆர்ட் பேப்பரில்..லார்கோவின் முதல் சாகசம் ரூபாய் 50 விலையில் வரவிருக்கிறது.
ஆங்கிலத்திலும், பிரெஞ்சிலும் லார்கோவை ஏற்கனவே படித்துள்ள நண்பர்களுக்கு அல்லாது நமது இதர நண்பர்களுக்காக இங்கே ஒரு சின்ன intro படலம் !
"உலகத் தொலைக் காட்சிகளில் முதன்முறையாக " என்று நிரம்பவே பில்டப்களுக்குப் பரிச்சயமாகிட்ட ஜீவன்கள் நாமெல்லாம் - இன்றைய வியாபார உலகினில் ! So ஒவ்வொரு புது சங்கதி அறிமுகமாகும் போதும் (அது சோப்பாக இருந்தாலும் சரி ; சீப்பாக இருந்தாலும் சரி) "ஆஹா..ஓஹோ " என்று அதன் க்ரியாக்கள் வர்ணிப்பதைப் பார்த்துப் பழகிப் போச்சு நமக்கு ! ஆனால் - எல்லா சமயங்களிலும் எல்லா அறிமுகங்களுக்கும் அந்த பில்டப் ; அந்த விளம்பரம் அவசியப்படுவதில்லை ! லார்கோ வின்ச் கூட அந்த ரகத்தைச் சேர்ந்தவர் தான் என்பது என் எண்ணம் !
லார்கோ ஒரு வித்தியாசமான ஆசாமி ! வழக்கமாய் நாம் சந்தித்திடும் "நல்லவர்..வல்லவர்..அப்பழுக்கற்றவர்.." ரகக் காமிக்ஸ் நாயகரே அல்ல இவர். XIII -ஐப் போல பழிவாங்கப் பட்டதொரு பரிதாப ஜீவனோ ; ஸ்பைடர் போல ஒரு anti -hero வும் கிடையாது. இளமை ; ஆண்மை ; சமயோசிதம் ; ஆற்றல் ஒருங்கே கலவையானதொரு playboy தான் லார்கோ ! விவரிக்க இயலா இவரது வசீகரம் பெண்களைக் கவர்ந்திழுக்கும் ஒரு காந்தம் ! பெண்களின் அண்மையைத் துறக்கும் கூச்ச சுபாவ ஆசாமியும் அல்லர் லார்கோ ! உலகெங்கும் உருண்டோடி வரும் லார்கோ எனும் இந்த நாடோடியின் சாகசங்கள் எல்லாமே electrifying ரகம் !
நாம் ஏகப்பட்ட காமிக்ஸ் நாயகர்களை சந்தித்து ; ரசித்து ; சிலாகித்துள்ளோம் தான் - ஆனால் ...1984 -ல் ஸ்பைடரை அறிமுகப்படுத்திய போது எனக்குள் எழுந்ததொரு excitement ; 1986 -ல் XIII ன் இரத்தப் படலம் கதைகளை படித்திட்ட போது எழுந்த விவரிக்க இயலா மெல்லிய உணர்ச்சிகள் ; 1996 -ல் கேப்டன் டைகரை கொண்டு வந்திட்ட பொது ஏற்பட்ட உற்சாகம் - எல்லாமே இம்முறையும் என்னுள் ! லார்கோ நிச்சயம் 'பத்தோடு பதினொன்று' ரகமல்ல !
18 கதைகள் வெளிவந்துள்ள லார்கோ தொடர் 1990 -ல் ஐரோப்பாவில் துவங்கியது. 'அப்போதே அவரை அறிமுகப்படுத்திடாமல் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்குத் தாமதிக்க அவசியமென்ன ?' என்று தோன்றிடலாம் ! நமது ரசனைகளிலும் சரி ; வயதுகளிலும் சரி ; தயாரிப்புத் தரத்திலும் சரி, லார்கோவை ரசிக்கும் பக்குவம் இன்று வந்திட்டதான நம்பிக்கை என்னுள் , முழுமையாக ! So - லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வருவார் லார்கோ !
முதல் இதழினைத் தொடர்ந்து 15 நாள் இடைவெளியில் லார்கோ - அத்தியாயம் 2 -ம் வந்திடும் என்பது கொசுறு சேதி ! இன்னொரு விஷயமும் கூட இங்கே நான் குறிப்பிட்டாக வேண்டும் ! சென்ற மாதம் "புயலாய் ஒரு அறிமுகம்" என்ற தலைப்பில் லார்கோவின் வருகை பற்றியும்..முதல் இரு இதழ்களின் தலைப்புகளையும் அறிவித்து எழுதி இருந்தேன் !
June 15 ! |
"வேங்கையாய் ஒரு வாரிசு" & "செல்வத்தின் நிறம் சிவப்பு" என்று பெயர் வைத்திருந்தேன் ! நண்பர் கார்திக் - இதழ்களின் பெயர்களிலும் கொஞ்சம் புதுமை கொண்டு வந்திடலாமே என்று இங்கே நமது வலைப்பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார் ! (மார்ச் 6)
நான் அப்போது பதில் ஏதும் பதிவு செய்திடவில்லை என்ற போதிலும் நண்பரது சிந்தனை என் தலைக்குள் ஓடிக் கொண்டே தான் இருந்தது ! லார்கோவின் கதைகள் ஒரு வழியாக உறுதிப்படுத்தப்பட்ட இந்த வேளையில் - சற்றே வித்தியாசமான தலைப்புகளோடு களம் இறக்கிடுவோமே என்று தோன்றியது.
So இதழ் # 1 : "என் பெயர் லார்கோ" என்ற தலைப்போடும் ; இதழ் # 2 : "யாதும் ஊரே..யாவரும் எதிரிகள் !" என்ற பெயரோடு வந்திடும் ! Thanks for the thought karthik!
கதையில் ; பாணியில் ; தலைப்பில் மட்டும் அல்லது மொழி நடையிலும் லார்கோ கதாப்பாத்திரத்தின் ஒரிஜினல் தன்மை மாறிடக் கூடாது என்பதில் முடிந்தளவு கவனம் செலுத்தியுள்ளேன் ; நமது எல்லைகளையும் மதித்தாக வேண்டியது அவசியம் என்ற ஜாக்கிரதையோடு ! ஒரு சவாலான பணியாகவே இந்த மொழிமாற்றம் இருக்கிறது !இதழைப் படித்து உங்களது விமர்சனங்கள் வந்திடும் போதே புலனாகும்..அடியேனின் முயற்சி எத்தனை தூரத்துக்கு வெற்றி என்று ! Fingers crossed !
இனி புலரவிருப்பது கோடை காலமோ..இலையுதிர் காலமோ அல்ல.."லார்கோ காலம்" தான் ! Take Care folks !
எதிர்பார்த்திருந்த பதிவு வந்துவிட்டது.
ReplyDeleteவாசகர்களின் கருத்துக்களுக்கு ஆசிரியர் தந்திடும் முக்கியத்துவம் இந்தப்பதிவில் 'பளிச்'!
நல்ல கருத்துகளுக்கு எப்போதுமே செவி கொடுப்போமே !! இந்த சமாச்சாரங்களில் எனது ஈகோ ஒரு முட்டுக்கட்டையாக என்றுமே நின்றிடாது !
Deleteசூப்பர் சார்
Deleteதங்களின் பெரிய மனதுக்கு தலை வணங்குகிறோம் ;-)
.
லார்கோ வின்சின் அன்பு தம்பி விஜயன் வாழ்க
Deleteபடித்துவிட்டீர்களா?! இப்போது பரபரப்பாக சொடுக்கபட்டுக்கொண்டிருக்கிறது!
Deleteகாமிக்ஸ் வேட்டை - அத்தியாயம் மூன்று!
Cibiசிபி ; Anonymous : ஜாலியானதொரு சமாச்சாரத்தை நாம் இங்கே பகிர்ந்து செய்கின்றோம் ; இதில் நான் பெரிய மனது பண்ணிடவோ ; நீங்கள் அதற்க்கு நன்றிக் கடன் பட்டிடுவதோ நிச்சயம் தேவையே இல்லை !!
DeleteAll the best!!!
ReplyDeleteRK
ஏப்ரல் - சாத்தானின் தூதர் டாக்டர் செவன் (லயன் காமிக்ஸ்)
ReplyDeleteமே மாதம் - கோடை மலர் (சூப்பர் ஹீரோ ஸ்பெஷல்)
ஜூன் - ளார்கோ வின்ச்.
சூப்பர். இப்படியே தொடருங்கள்.
உங்கள் செகண்ட் இன்னிங்க்ஸ் சூப்பர் ஆக ஆரம்பித்துள்ளது என்பதற்கு இது சான்று.
கிங் விஸ்வா
Carpe Diem.
தலை வாங்கி குரங்கு - ஒரு (மறு) பார்வை
Viswa
DeleteMay month "Classic Special".... You missed it ....
Regards
Nagarajan S
இது நிஜம்தானா?! வாசகர் கருத்துக்கு மதிப்பளித்து, அட்டகாசமான தலைப்புக்களில் லார்கோவை களமிறக்க போவதற்கு மிக்க நன்றி!
ReplyDeleteI feel honored :)
-கார்த்திக்
Bladepedia
அதான் நம்ம ஆசிரியரின் காந்த மந்திரம் வாழ்த்துக்கள் கார்த்திக் முந்தைய தலைப்புகளை விட உங்க அபிப்பிராயத்தினால் வந்துள்ள தலைப்புக்கள் மிக நன்றாக உள்ளன
DeleteVijayan Sir,
ReplyDeleteAll the best. We don't have any doubt about your selection.
Also we are waiting for Mr. LARCO WINCH :)
Your continuous announcements making us very happy MR.VIAJAYAN :)
Good Work ... Keep it up ....
Regards
NAGARAJAN
இது உண்மையில் ஒரு நல்ல செய்தி. அதவும் back to back ரிலீஸ். எனவே. கதையின் தொடர்ச்சி விடுபடுவிடது... நல்ல தொடக்கம்...
ReplyDeleteமுதல் பகுதியை ஆங்கிலத்தில் படித்து விட்டேன்...மற்றவை நமது காமிக்ஸில் வர இருப்பதால், தொடர்ந்து படிக்காமல் waiting-இல் உள்ளேன். So thanks a ton for putting a stop to my wait.
ReplyDeleteலார்கோ விஞ்ச் தமிழிற்கு அறிமுகமாகும் நாள் தொலைவில் இல்லை என்பதை அறிந்ததில் மகிழ்ச்சி. கூடவே, தலைப்புகளில் ஒரு ஸ்டீரியோ டைப் போன்ற வட்டத்தில் சிக்கி இருந்ததை தவிர்த்து, வித்தியாசமான பெயர்களுடன் ஆரம்பித்திருப்பதும் வரவேற்கத்தக்கது. முழு வண்ணத்தில் 50 ரூபாய் விலை என்பதும் ஆச்சர்யப்பட கூடிய விலை நிர்ணயிப்பே. விலையும், சைஸும், தரமும், சேர்ந்து முத்துவின் செகண்ட் இன்னிஸிற்கு அதை முறையே தயார்படுத்தும் என்று நம்பலாம்.
ReplyDeleteஎன்ன வழக்கம் போல, இரு புத்தகங்கள் ஒரே மாதத்தில், என்ற அறிவிப்பு தான் தடாலடியாக தெரிகிறது. மின்சார விடுமுறை, மற்றும் நாள் தோறும் மின் துண்டிப்பு போன்ற அவலங்களை தாண்டி வெளியீடுகளை இட்டு வருவதாக பல முறை தாமதததிற்கு காரணம் கூறியிருக்கிறீர்கள். அவற்றை இம்முறை எதிர்பார்ப்புடன் கொண்டு தான் வெளியீட்டு மாத அறிவிப்பு நடந்திருக்கும் என்று நம்புகிறேன்.
பி.கு.: ஏற்கனவே விளம்பரம் செயதிருந்து 10 ரூபாய் முத்து இதழ்கள், அப்போது ஜுன் முன்பே வெளியாகி விடுமா... இல்லை அவைகள் லார்கோவிற்கு பிறகு தானா ?
Rafiq Raja : லார்கோவின் முதல் கதையின் மொழிமாற்றம் முடித்த கையோடு தான் இதழின் வெளியீட்டுத் தேதியினை நிர்ணயம் செய்தேன்! அட்டைப்படமும் ஒரிஜினலில் உள்ள அதே பாணியைப் பின்பற்றிடலாமென இருப்பதால், மொத்தத் தயாரிப்புக்கு அதிக நேரம் எடுத்திடாது !
DeleteTouch wood...சரியான சமயத்திற்கு வெளி வருவார் லார்கோ !
பத்து ரூபாய் இதழ்களில் லயன் காமிக்ஸ் : டாக்டர் 7 க்கு அப்புறம் ஒரு சின்ன break ! ரிபோர்ட்டர் ஜானியின் "மரணத்தின் நிசப்தம்" ஜூன் மாதமே...
நன்றி எடிட்டர். வெளியீடு தேதி அறிவிப்புகள் இனி தாமத காரணிகளை முன்பே கனக்கில் கொண்டுதான் நிர்ணயிக்கபடுகிறது என்பதை அறிந்ததில் மகிழ்ச்சி.
Deleteபத்து ரூபாய் தலைப்புகளுக்கு ப்ரேக் கொடுப்பது சரியான எண்ணமே. அவைகள் ஏற்கனவே அச்சிடபடாமல் இருப்பேனின், அதையும் ஏதாவது சிறப்பு இதழின் போது, நல்ல பேப்பர் தரத்தில் வெளியிட்டு விடலாமே? டாக்டர் 7 மற்றும் ரிப்போர்டர் ஜானிக்கு பிறகு இனி சாணி பேப்பர் வாசமே அடிக்காமல் இருந்தால் தேவலம்.
முந்தைய தலைப்புகளை விட பிந்தைய தலைப்புகள் சற்றே புதிய பாணியில் இருந்தாலும், பழைய தலைப்புகள் இதை விட சிறந்தது என்றே என் அபிப்பிராயம். கூடவே, லார்கோவை உங்கள் பிரியமான லயனில் அறிமுகம் செய்யாமல், முத்துவில் வெளியிட எண்ணியுள்ளது, வாசகர்கள் அதிகம் எதிர்பார்த்தபடி இப்போது நீங்கள் முத்து மீதும் லயனுடான அதே ஆர்வத்தை கொண்டிருப்பது மகிழ்ச்சி. என்னை விட முத்துவின் லாங் டைம் ரசிகர்களுக்கு இது நிச்சயம் நல்ல செய்திதான்.
லார்கோ விஞ்சின் ஒரிஜினல் அட்டைபடங்கள் நமது ஓவியரின் வண்ண தெரிவில் எவ்வாறு வரும் என்பதை காண ஆவலுடன் இருக்கிறேன்.
ஒரு கேள்வி : முன்பெல்லாம் கலர் அட்டைபடங்கள் வெளி அச்சகங்களில் அடித்து வாங்கி கொள்வதாக கேள்விபட்டிருக்கிறேன். கம்பேக் ஸ்பெஷலுக்கு பிறகு கலர் பிரதிகள் நமது அச்சகத்திலேயே அடிக்கபடுகிறதா.. ? அதற்குன்டான அச்சு இயந்திரங்கள் கொண்டு நமது அச்சகம் நவீனபடுத்தபட்டிருக்கிறும் என்று நம்புகிறேன்.
எடிட்டர் சார், லார்கோ வின்ச் இதழ்#1 என் பெயர் லார்கோ என்பதை விட "நான்;லார்கோ" என்ற தலைப்பு பொருத்தமானதாக உள்ளதாக எண்ணுகிறேன்.....
Deleteலார்கோ வின்ச் தமிழில் வெளிவரப்போகிறது என்ற செய்தி அறிந்தவுடன் என் மண்டையில் உதித்தது இது..... லார்கோ வின்ச் பயணத்தில் அத்தியாயம்-1 "நான்;லார்கோ"
Rafiq Raja : சாணி பேப்பர் வாசத்தை மறந்திட இன்னும் இரண்டு இதழ்களுக்குக் காத்திருக்க அவசியமே இல்லை...! இப்போது தயாராகி இருக்கும் லயன் டாக்டர் 7 இதழே நல்ல பேப்பரில் தான் அச்சாகி உள்ளது ! (Art paper அல்ல )
Deleteலார்கோ கதைகளின் தலைப்புகளைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கருத்திருக்குமென்பது நான் எதிர்பார்த்ததே ! புதிதாய் அறிவித்துள்ள தலைப்புகள் 'பளிச்' என்று இருக்கின்றனவோ இல்லையோ ...ராசியானவைகளாகவே உள்ளன என்று தான் சொல்ல வேண்டும் ! பணிகள் நிஜம்மாகவே படு துரிதமாய் நடந்தேறி வருகின்றன !புதிய அட்டைப்பட டிசைன் தயார்..மொழிமாற்றம் முதல் பாகத்திற்கு முடிந்தாகி..தட்டச்சு நிலையில் உள்ளது ! So "என் பெயர் லார்கோ" - சுறுசுறுப்பாய் இருப்பாருங்கோ !
அப்புறம் முத்து..லயன் என்ற பாரபட்சமெல்லாம் பார்த்திட எந்த அவசியமும் என்றைக்குமே இருந்ததில்லையே ! சாதித்தாலும், சொதப்பினாலும் , இரண்டிலுமே பின்னணி டீம் ஒன்று தானே ! இன்னும் சொல்லப் போனால் முத்துவில் உள்ள star cast எந்த விதத்திலும் சோடை அல்லவே..! கேப்டன் டைகர் ; ரிப்போர்டர் ஜானி ; மர்ம மனிதன் மார்ட்டின் ; detective ராபின் ; இப்போது லார்கோ என்று இது ஒரு quality line-up !
அச்சுப் பணிகளைப் பொறுத்த வரை நம்மிடம் இல்லாத ஆப்செட் இயந்திரங்களே கிடையாது என்று சொல்லலாம்...! நமது பிரதான தொழிலே பலவண்ண ஆப்செட் இயந்திரங்களை இறக்குமதி செய்து ..பின்னர் அவற்றை சர்வீஸ் செய்து விற்பனை செய்திடுவதே ! So எந்த நேரமும் நம்மிடம் நிறைய மிஷின்கள் இருந்திடும். இது தவிர நமது பிரஸ்சில் job work செய்திடுவதற்காகவும் மிஷின்கள் உண்டு ! ஆகையால் நமது இதழ்களை நாமே அச்சிடுவது சுலபமே !
சில நேரங்களில் ஏதாவது அவசரப் பணிகள் நமது அச்சகத்தில் நடந்தேறி வரும் பட்சத்தில் வெளியில் கொடுத்து அச்சிடுவதும் உண்டு ! ஆனால் இப்போதெல்லாம் சிவகாசி ரொம்பவே களையிழந்து காட்சியளிக்கின்றது --10 மணி நேர மின்வெட்டால் !
sridhar.ramamoorthy : மேலே உள்ள எனது பதிவிலேயே உங்களுக்கான பதிலையும் சொல்லி இருக்கிறேன் !
Deleteசர்வதேச அச்சு இயந்திரங்களை மற்றவர்களுக்கும் விநியோகம் செய்யும் நமது நிறுவனம், ஏன் வெளியே அச்சிட கொடுக்கிறார்கள் என்ற எனது கலர் அட்டைபடங்கள் பற்றிய நெடுநாள் சந்தேகத்திற்கு பதிலளித்தமைக்கு நன்றி.
Deleteகம்ப்யூட்டர் டிசைனிங்குடன் நடைபெறும் நமது புதிய இதழ் அட்டைகள், இனி நமது அச்சு இயந்திரங்களின் முழு திறனையும் சோதிக்கும் கட்டம் காண இனி ஆவல் தான்.
superb and a extra ordinary news, mr vijayan sir innum nalla promotion kudunga yellaam booksum superhit aagum and facebook twitter ellaam kaaladi yeduthu vaiyungal, melum ihuman24@gmail.com yendra emailukku chennai yil books yenga kidaikkum yendru infoirmation anuppungal urimayudan ketkkiraen thanks
ReplyDeleteலார்கோ காலத்தில் வாழ்வதற்கு பெருமையே.
ReplyDeleteகலர் காமிக்ஸ் பற்றிய ஒரு வெற்றிடம் இருப்பதால் காமிக்ஸ் வியாபாரிகள் அதனை சிறப்பாக உபயோகப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.தலை வாங்கி குரங்கை ருபாய் ஐந்தாயிரம் கொடுத்தால் கலரில் படிக்கலாம். முழு புத்தகமும் கலரில் உள்ளது என்று ஒரு பெரிய கும்பல் கிளம்பியுள்ளது. வாசகர்கள் ஜாக்கிரதை.
மேல் விவரங்களுக்கு: தலை வாங்கி குரங்கு - ஒரு ஆசையான பார்வை
ஆர்வக் கோளாறில் இது போன்ற முயற்சிகளில் வாசகர்கள் ஈடுபட வேண்டாமெனக் கோருகிறேன் ! தயவு செய்து இவற்றை ஆதரிக்கவும் வேண்டாமே ...!
Deleteஒலக காமிக்ஸ் ரசிகருக்கு ...
Deleteநீங்கள் சொல்வது சரிதான் . இந்த கலர் காமிக்ஸ் வியாபாரிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான்.
ஆனால் இந்த கலர் காமிக்ஸ் மோகத்திற்கு அடித்தளம் போட்ட கிங் & கோ வினரை
ஏன் தாங்கள் எதுவும் சொல்ல வில்லை? அவர்கள் அடித்த கொள்ளையில் உங்களுக்கும் பங்கு தந்தனரா?
நமது எடிட்டர் ஐயா. இரத்தப் படலம் 18 பாக புத்தக வேலையை தொடங்குவதற்கு முன்பாகவே?
இரத்தப் படலத்தை 12 பாகத்தை கலரில் போட்டு, ஒரு செட் 20.000 ரூபாயிக்கு விற்பனை செய்ததையும்,
லக்கி லுக்கின் தமிழில் வெளி வராத கதைகள்..
1.எண்ணெய் வயல படலம்
2.மோசடி நாடகம்
3.புள் வெளியில் ஒரு முள்வேலி
4.நாடோடி மன்னன்
5.ஒரு இம்சை இசை பயணம்
6.பிசாசு நகரம்
7.ஒரு கேரவனின் கதை
8.நாடோடிகள் நால்வர் இவை அணைத்து கதைகளையும் கலரில் போட்டு அதிக விலைக்கு விற்பனை செய்து கல்லா கட்டியதையும், முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் மறைத்து விட்டிர்களே?
கலர் காமிக்ஸ் என்று நீங்கள் சொல்வது - அச்சில் வந்ததா? இல்லை சிடியில் போட்டார்களா?
Deleteஅச்சில் வந்தது என்றால் எப்படி சாத்தியமாயிற்று?
கிங் குழுவினருமா இந்த மோசடியில்? நம்ப முடியவில்லை.
புருஷோத்
டியர் ஒலக காமிக்ஸ் ரசிகன் ,தகவலுக்கு நன்றி .இங்கே பழைய முத்து காமிக்ஸ் ஐ கலரில் 200 ,300 என்று விற்று கொண்டு உள்ளார்கள். எடிட்டரின் உழைப்பை மற்றவர்கள் திருடுவது வருத்தமாக உள்ளது.வேறு என்ன சொல்ல?
ReplyDeleteதலைவா,
Deleteவெறும் இருநூறு ருபாய் முன்னூறு ருபாய் என்றால் நான் வாங்க தயார். தயவு செய்து உங்கள் மின் அஞ்சல்; முகவரியை கொடுங்களேன். என்னுடைய மினஅஞ்சல் முகவரி greatestevercomics@gmail.com
இதுல கொடுமை என்னன்னா என் ஊர் மணலூர் பேட்டை அரசு நூலகத்துக்கு நான் காவல் துறையில் சேர்ந்த புதிதில் நிறைய புத்தகங்களை நம்ம மக்கள் கொஞ்சமாவது காமிக்ஸ் சுவையை அறிந்து கொள்ளட்டும் என்று அன்பளிப்பாக கொடுத்து விட்டதுதான். ஒரு வேலை இதை படிக்கும் என் ஊர் நண்பர்கள் தாரளமாக உங்க கருத்தை கொட்டலாம்.
Deleteஅதே நேரம் மணலூர் பேட்டை நூலகத்தை முற்றுகை இட்டு விடாதீர்கள் நண்பர்களே நான் கொடுத்தது 1999 ல் ஹி ஹி ஹி நல்ல நூலகம்! என் ஊரில் கிட்டத்தட்ட 3 வாடகை நூல் நிலையங்களும் அப்போது இயங்கி வந்தன. அது ஒரு கனா காலம்
Deleteடியர் சுந்தர் சார்,வணக்கம் உங்களோட இ மெயில் அட்ரஸ் ப்ளீஸ்... என்னோட டாக்டர் நண்பர்களை சந்தா கட்ட கேட்டுள்ளேன்..... மேலும் என்னோட உறவினர் வீட்டிற்கும் நானே சந்தா அனுப்பி உள்ளேன் .ஒரு நாள் outing செலவு தானே........
Deleteதொடர்ந்து பதிவிடுங்கள் விஜயன். காமிக்ஸ் அறிவிப்புகள் மட்டுமல்ல, உங்கள் அனுபவங்களையும் எழுதுங்கள். பல ஆண்டுகளுக்கு முன் படித்த உங்கள் ஷார்ப்பான எழுத்து நடை இன்றைக்கும் மாறாமல் அதே போல் இருப்பது வியப்பே...
ReplyDeleteசெந்தழல் ரவி, தில்லி.
படையப்பா ரஜினி போல, கூடவே பிறந்தது. மாறாது.
Deleteஇப்படி எழுதுவது கடவுளின் பரிசு. அது காலத்தே மாறாது. மாறாக மெருகு ஏறும்.
அதனால்தான் தம்பி அவர் இன்னும் தமிழ் காமிக்ஸ் சிகரத்திலேயே இருந்து கலக்குகிறார்
DeleteSenthazhal Ravi ; Jolly Jumper ; John Simon : உங்களின் அன்பான பாராட்டுகளுக்கு என்றும் எனது நன்றிகள் !! தமிழிலும் சரி..எழுத்திலும் சரி..நம் வாசகர்கள் அனைவருமே அசகாய சூரர்கள் என்பது கண்கூடு !So உங்களோடு ஈடு கொடுக்கும் பொருட்டாவது நானும் எழுதும் திறனை தீட்டிக் கொண்டே இருக்க வேண்டுமே !!
Deleteஇங்கே ஒரு கொசுறு சமாச்சாரத்தை பதிவிட்டால் பொருத்தம் என்று நினைக்கிறன் ! எழுதுவது எனக்கு இஷ்டமானதொரு விஷயமாக இருந்த போதிலும், வலை உலகிற்குள் அடி எடுத்து வைக்கும் வரையில் நமது காமிக்ஸ்களில் ஒன்றோ இரண்டு பக்கங்களைத் தாண்டி பெருசாய் எதையும் நான் எழுதியதாய் நினைவில்லை !
என்னை ஒரு வலைப்பதிவு துவக்கிடச் செய்ததும் சரி ; எனக்கு தமிழில் டைப் செய்யக் கற்றுக் கொடுத்ததும் சரி ...எனது மகனே ! So இன்று இங்கே என் எழுத்துக்களுக்குக் கிடைக்கும் பாராட்டுகளில் ஒரு சிறு பகுதி அவனையே சாரும் !
வாவ்! எனது சின்னஞ்சிறு மகன் வளர்ந்திடும் வேளையில், உங்கள் மகன் வெளியிடப்போகும் காமிக்ஸ் படித்து வளர்வான் என்று நம்புகிறேன்! அதற்காக உங்களை சீக்கிரம் ரிடையர் ஆக சொல்லுவதாக அர்த்தம் கொள்ள வேண்டாம்! ;)
Deleteவேங்கையாய் ஒரு வாரிசு!!!
Deleteparimel : வார்த்தை ஜாலம் நம் வாசகர்களுக்குக் கை வந்த கலை ஆச்சே !! கலக்குறீங்க !!
Deleteஉங்க மகனுக்கு என் வாழ்த்துக்கள் என்றும் உண்டு சார் அவன் இன்னும் கலக்குவான் பாருங்கள்
DeleteThis comment has been removed by the author.
Delete8 feet 16 feet next...?
Deleteலார்கோ கலக்க போறார்
ReplyDeleteலார்கோ வின்ச் ஒரு கலக்கல் ஹீரோ என்பதில் எனக்கு இம்மியளவும் சந்தேகமில்லை. இந்த காமிக்ஸ் கதைகள் வெற்றியடைந்ததை தொடர்ந்து இரண்டு படங்களும் எடுக்கப்பட்டன. ஆனால் அவை அவ்வளவாக எடுபடவில்லை.
ReplyDeleteநம்ம அணில் இப்போ கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார். போஸ்டர் இதைப்போலவே இருக்கு. பார்க்கலாம் படம் ஊத்திக்குமா இல்லை ஓடுமா என்று?
Welcom largo
ReplyDelete'Ulaga comics rasikan' antha mathiri nabarkalidam book vangi avarkalai aatharikka vendam!..
ReplyDeleteவருக லார்கோ வருக…
ReplyDeleteமுத்து காமிக்ஸில், புகழ் வாய்ந்த ஒரு புதிய (relatively) காமிக்ஸ் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்வதன் மூலம், முத்து மேல் உங்கள் ஆர்வம் குறையாதிருப்பதை நிருபித்து விட்டீர்கள்.
ReplyDeleteடயல் M பார் லார்கோ!
Great news sir...U rock!!!
ReplyDeletevery good news sir. லார்கோவின் புது தலைப்புகள் கலக்கலாக உள்ளது. நமது திரைஉலகத்தினர் தலைப்புகள் வைப்பதில் உங்களிடம் இருந்து கற்று கொள்ள நிறைய உள்ளது.
ReplyDeleteஇந்த இதழ்களை land mark போன்ற கடைகளில் கிடைக்குமாறு ஏற்பாடு செய்ய முடிந்தால் சிறப்பாக இருக்கும்.
//அட்டைப்படமும் ஒரிஜினலில் உள்ள அதே பாணியைப் பின்பற்றிடலாமென இருப்பதால்//
ஒரிஜினல் கதையின் அட்டைப்பட பாணியை அப்படியே பின்பற்றுவது சில நேரங்களில் ஒகே. ஆனால்
நமது local made அட்டைப்படங்களுக்கு என்னைப் போல் தீவிர ரசிகர்கள் உள்ளார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். அதே போல் பின்னட்டைகளை விளம்பரங்கள் போடுவதை விட கதை சம்பந்தமான ஓவியங்கள் இடம் பெற்றால் நலம்.
SIV : இனி வரவிருக்கும் நமது இதழ்களின் பெரும்பான்மை ஒரு அயல்நாட்டு ஆல்பம் பாணியிலேயே இருந்திடும்...! So பின்னட்டையில் கதை சம்பந்தப்பட்ட படங்களே இடம் பெற்றிடும் ! தலைவாங்கிக் குரங்கிலிருந்தே இந்தப் பாணியை துவக்கியாச்சு ! Thanks for the suggestions...much appreciated !
Deleteநண்பர்களே,
ReplyDeleteஇது எனது இரண்டாவது பின்னூட்டம் என்றாலும், கொஞ்சம் முன்னூட்டம் (!) சொல்ல ஆசை. இங்கே இருக்கின்ற பெரும்பான்மையான நண்பர்களைப் போலவே என்னிடமும் ஒரு நீண்ட நெடிய flashback இருந்தாலும் அது எவ்வளவு தூரம் உங்களுக்கு சுவாரஸ்யம் கொடுக்கும் என்பது எனக்கு நிச்சயமாக தெரியவில்லை. என்றாலும் நான் உங்களை விடுவதாக இல்லை. நமக்குள் எங்கோ புதைந்து இருக்கின்ற சின்ன வயது ஞாபக பூதங்களை தேய்த்து எடுக்கும் அலாவுதீன் விளக்கு போல இந்த blog எனக்கு படுகிறது.
ஒரு வெய்யில் காலத்தில்-என் எட்டாவது வயதில் ஒரு வீட்டின் படிக்கட்டிலிருந்து எனக்கு அறிமுகம் ஆனது காமிக்ஸ். (பாஸ், கொட்டாவியை control பண்ணுங்க....!) அதை படித்துக்கொண்டிருந்த நபர் என்னை விட வயதில் மூத்தவர். சிறுவர்மலர் மூலமாக சித்திரக்கதைகள் முன்பே அறிமுகம் என்றாலும், அன்றுதான் சித்திரங்கள் மட்டுமே நிரம்பி ததும்பும் ஒரு முழு புத்தகத்தைப் பார்க்கிறேன். அவருடனே அந்த புத்தகத்தை நடுவில் இருந்து வாசிக்கிறேன். அந்த அண்ணன் வாசித்து முடிக்கும்போது நானும் முடித்து விட்டேன். இருந்தாலும் அவருடன் போட்டியிட்டு படித்ததால் மனநிறைவாக படிக்கவில்லை. புத்தகத்தை என்னுடன் எடுத்து சென்று படிக்க அவர் அனுமதிக்கவில்லை. அப்புறம் கெஞ்சி கூத்தாடி அவர் திண்ணையிலேயே வாசிக்க அனுமதி தந்ததும், மறுபடி ஒருமுறை முதலில் இருந்து வாசித்து முடித்த பிறகுதான் என் தாகம் தீர்ந்தது. (வெய்யில் காலம் பாஸ், follow பண்ணுறீங்களா?). அவரோடு பேசியதில், அவரிடம் அது போல இன்னும் சில காமிக்ஸ் இருப்பதை தெரிந்து கொண்டு, அடுத்து வந்த சில தினங்களில் மெதுவாக அவருக்கு நண்பனானேன். அதன் பிறகு அவர் அனுமதியோடு பல புத்தகங்களை வீட்டிற்கு எடுத்து சென்றும், வீட்டில் என்னை மோப்பம் பிடித்ததால் பள்ளிக்கு எடுத்து சென்றும், உங்கள் எல்லோரையும் போலவே நானும் அந்த பட்டத்தை ('காமிக்ஸ் பைத்தியம்') வாங்கினேன்.
வீட்டில் அடக்குமுறை கையாண்ட போது புத்தகத்தை மறைத்து எடுத்துச் செல்ல ட்ரவுசருக்குள் -சட்டையின் உள்ளே புதைத்து, சிசுவை சுமப்பது போல புத்தகத்தை வைத்து அலைந்ததை இப்போது நினைத்துக்கொள்கிறேன். வீட்டில் மற்றும் பள்ளி வகுப்பில் பாடபுத்தகங்கள் காமிக்ஸ் புத்தகங்களை அடை காத்தன. அந்த காமிக்ஸ் அண்ணனோடு அலைந்து திரிந்த போது, எங்கள் கிராமத்தில் இருந்த காமிக்ஸ் trading - ஐ அடையாளம் கண்டு கொண்டேன். அத்துடன் அவர் கடனாக கொடுத்த சில புத்தகங்களை முதலீடாக வைத்து காமிக்ஸ் trading -ல் வெற்றிகரமாக இணைந்தேன். எவ்வளவு புத்தகங்கள் படித்தேன் என்பது கணக்கில்லை. ஆனால் சொந்தமாக வாங்கி படிக்கும் அளவிற்கு வீட்டில் வாய்ப்புகள் இல்லை. மேலும் நான் காமிக்ஸ் படிப்பதில் வீட்டில் யாரும் உடன்படவேயில்லை என்பதால் வேறு வழியே இல்லாமல் அப்பாவின் சட்டைப்பையிலும் அம்மாவின் அஞ்சரைபெட்டியிலும் கை வைக்க ஆரம்பித்தேன். (தொடர்ச்சி அடுத்த பின்னூட்டத்தில்)
அன்புடன்,
இராம. ஆனந்த்
*King viswa*
ReplyDeleteunka listla
"thigil collection" I
vittu vittirkalea...
(தொடர்ச்சி....)
ReplyDeleteகாசு வந்து விட்டாலும் காமிக்ஸ் வாங்குவது அவ்வளவு சுலபமாக இல்லை. நான் இருந்தது கிராமம். புத்தகம் வாங்க 5 km தொலைவில் இருக்கும் டவுனுக்கு போக வேண்டும். வருடம் ஓரிருமுறைதான் (அப்பா, எப்பொழுதாவது சினிமா பார்க்க குடும்பத்துடன் கூட்டிச்செல்வார்)எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். பஸ் ஏறிச் செல்வது சாத்தியமில்லை, ஏனென்றால் எப்படியும் வீட்டிற்கு தெரிந்து விடும். அப்புறம் அடி பின்னிவிடுவார்கள். அதோடு பஸ் டிக்கெட் காசை மிச்சம் செய்து அதிலும் ஒன்றிரண்டு பழைய வெளியீடுகளை வாங்கலாம் என்பதால் நடந்தே சென்று காமிக்ஸ் வாங்கி வருவேன். தார் ரோட்டில் சென்றால் பஸ்ஸில் போகும் எதாவது கண் தெரியும் பெரிசு, வீட்டில் போட்டுகொடுக்க வாய்ப்புண்டு என்பதால், ரோட்டை விட்டு ஒதுங்கி விளைச்சளில்லாத நிலங்களின் வழியே, மனதில் தவறு செய்து கொண்டிருக்கிறோம் என்ற குற்றம் கலந்த திகில் உணர்வோடு (சில சமயங்களில் கண்ணில் நீரோடு) வேகவேகமாக நடந்து செல்வேன்.
கஷ்டப்பட்டு வாங்கி வந்த பிறகு அதை வீட்டில் மறைக்க நான் படும் பாடு இருக்கிறதே அது மற்றும் ஒரு துயரம். காமிக்ஸ் trading -ல் இந்த சொந்த புத்தகங்கள், அதுவும் புதிய வெளியீடுகள் நம்மை கொஞ்ச நாட்கள், இந்த பைத்தியங்கள் நடுவில் ஹீரோவாக்கி விடும். அதனால் நிறைய பழைய புத்தகங்கள் படிக்க கிடைக்கும். ஒரு உற்சாகமான பொழுதில் எனக்கு என் அப்பா பரிசளித்த ஒரே ஒரு காமிக்ஸ் முன் அட்டையின் புகைப்படம் இன்னும் என் கண்ணில் இருக்கிறது. காமிக்ஸின் பெயர்தான் கொஞ்சம் கலங்கலாக நினைவில் வருகிறது, 'வில்லாதி வில்லன்' என்று நினைக்கிறேன் (ராணி காமிக்ஸ்).
தற்போது நான் ஒரு மிகப்பெரிய இந்திய மருந்து நிறுவனத்தில் (பன்னாட்டு நிறுவனம் வாங்கி விட்டது) ஆராய்ச்சியாளன். என்னை இந்த நிலைக்கு உயர்த்தியதில் காமிக்ஸ் புத்தகங்களின் பங்கு மிகவும் இன்றியமையாதது. காமிக்ஸ் என்ற ஜன்னலின் வழியே எனக்கு அறிமுகம் ஆன பல்வேறு விஷயங்களில் மிக முக்கியமானது "மனிதம்". என் மனிதநேய சிந்தனைகளின் பிறப்பிடமாக நான் நினைப்பது நான் படித்த புத்தகங்கள்தான். நான் ஏறி வந்த ஏணிகளில் காமிக்ஸ்தான் மிகப்பெரிய ஏணி. இதற்கு பின்னணியில் இருந்து வருகின்ற, திரு. விஜயன் அவர்களைப் போன்ற நல்ல உள்ளங்களுக்கு எனது ஈரமான நன்றிகள்....!!!
இந்த முன்னூட்டத்தை முடிப்பதற்கு முன்னால்: தற்போது அலுவல் காரணமாக ஜப்பானில் இருக்கின்ற எனக்கு, இங்குள்ள மக்களின் காமிக்ஸ் காதல் இவர்கள் மேல் பொறாமையைத் தருகிறது. வயது வித்தியாசமில்லாமல் பொடிசுகள் முதல் பெரிசுகள் வரை கையில் காமிக்ஸுடன்தான் எப்போதும் அலைகிறார்கள். ம்ம்ம்ம்... எப்போது இந்த நிலை என் மக்களிடமும் வருமோ...!!!???
அன்புடன்,
இராம. ஆனந்த்
Sillain (இராம. ஆனந்த்) : அவ்வப்போது வலைப்பதிவின் வருகையாளர்கள் பற்றி settings -ல் check செய்திடும் போது - இந்தியா ; அமெரிக்கா ; இலங்கை ; ஓமன் ; சிங்கபூர் ; பிரான்ஸ் ; இங்கிலாந்து என்பதோடு "ஜப்பான்" என்ற பெயரும் பதிவாகி இருப்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன் ...! அவை உங்களது கண்ணோட்டங்கள் என்பது இப்போது தெளிவாகிறது ! நமது வாசகக் குடும்பம் உலகெங்கிலும் பரவிக் கிடப்பதை பற்றித் தெரிந்து கொள்ளும் போது நிறைய சந்தோஷமும் ; பெருமிதமும் - மனசெல்லாம் !
Deleteஎங்கிருந்தாலும் ; எத்தனை உயரங்களுக்குக் சென்றிட்டாலும் காமிக்ஸ் மீதான அந்தக் காதல் இன்னமும் குறைந்திடவில்லை என்பது உங்கள் அழகான பிளாஷ்பேக்கில் அப்பட்டமாய்த் தெரிகிறது ! Thanks & Good Luck in life இராம. ஆனந்த் !!
Thank you for your kind words and blessings, Sir.
Deleteஉங்கள் அனுபவ பகிர்வுக்கு நன்றி நண்பரே!
Deleteஉங்களுடன் பகிர்ந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி, நண்பரே.
DeleteLion comics ku
ReplyDeleteXIII
Muthu comicsku
LARGO
super...
லார்கோ வின்ச் - முழு வண்ணத்தில்! அதுவும் இரண்டு மாதத்தில். கலக்குங்க சார்.
ReplyDeleteஇந்த வருடம் கோடையின் வெப்பம் காமிக்ஸ் பிரியர்களை - ரசிகர்களை ஒன்றும் செய்யபோவதில்லை என்பது மட்டும் நிச்சயம், காரணம் விஜயன் சார் அவர்களின் தென்றலாய் வருடும் குளு குளு அறிவிப்புகள்.
ReplyDeleteDear Mr. Vijayan,
ReplyDeleteSo happy to see this announcement about Largo Winch.
One request: Please do not compress the artwork width horizontally (like it was done for 'Thalaivangi Kurangu' and one of the 'Mayavi' stories in the comeback special. I can understand that it was done to fit the page into the available paper width. But it is spoiling the pictures making the figures unnaturally thin and disproportionate. Please do something to avoid this problem.
Another problem to be avoided: The copy of 'Thalaivangi Kurangu' I got last week is filled with grey printing instead of black! Is it because of the art paper that the black ink is not getting printed properly, or something else? If so, for b/w comics atleast art paper can be avoided and some good higher gsm paper can be used. Kindly look into these things in the future issues as we are collecting these issues to be treasured for the future.
Thanks
Raja
அவர் சொல்வது முற்றிலும் சரி. டெக்ஸ்சோட முகம் கோணலாய் உள்ளது ...கண்டிப்பாக கவனிக்கவும் ப்ளீஸ்
Deletesome good higher gsm paper can be used.Kindly look into these things in the future issues as we are collecting these issues to be treasured for the future.
Deleteஆமாம் சார் உண்மையான கருத்துக்கு என்றுமே மதிப்பளிப்பார். அதெப்படி சார் யாதும் ஊரே யாவரும் எதிரிகள் என்கிற பளிச் தலைப்பு செலக்ட் செய்தீர்கள்? மிக மிக மிக அருமையான தலைப்பு.
Komixkreate ; Drsureshkumarraju ; John Simon C : நிச்சயம் இந்தக் குறை மீண்டும் ஒருமுறை தலைதூக்கிடாது !
DeleteThanks, Mr. Vijayan, for your positive and understanding response.
DeleteADVT: நேற்று இன்று நாளை! :)
ReplyDeleteஒரு/இரு வேண்டுகோள்.
ReplyDelete1. மறு பதிப்பு செய்யும் போது, முன் அட்டையை மேம்படுத்தப்பட்டதாக/புதியதாக வடிவமைக்கும் அதே சமயம், பின் பக்க அட்டையை, பழைய அதே அட்டைப் படத்தையே உபயோகித்தால் நன்றாக இருக்கும்.
2. ஒரு லக்கிலூக் ஆங்கில புத்தகம் 200 ரூபாய் விற்கும் இக்காலத்தில் மூன்று கதைகளை (சூப்பர் சர்க்கஸ், புரட்சித்தீ, பயங்கரப் பொடியன்), தரமான ஆர்ட் பேப்பரில், ஸ்பெஷல் புத்தகமாக வெளியிடலாம்.
nan yedirparkiren LARGO's dialogue in Tamil
ReplyDeleteThanks Vijayan.
Dear Mr. Vijayan,
ReplyDeleteOne more request from me...!
In your letter in 'Thalaivangi Kurangu' , you have mentioned not to ask for reprints of old Muthu Comics like Mayavi and others. I strongly feel disappointed after reading this. I joined the subscription prog seeing the 'Kolaikara Kalaignan' ad in this blog, as it rekindled my young age reading passions. I did buy one or two of your CC reprints of these classics earlier, but there were 2 stories in a book and the pictures were all in small size, and I did not get the satisfaction of reading a 'complete' comic. Because, though the story was there, the visual treat of yore was sadly missing. The new 'Kolaikara Kalaignan' is excellent, and similar to the original Muthu, and this is how we want the other olden goldies too. So please reprint these too in regular intervals along with Lion and Mini Lion.
Thanks
I too of the same opinion. Please dont forget to reprint the 3 muthu comics heroes.
DeleteThalai vangi kuranku enakku vanthu vitdathu!
ReplyDeleteMikavum
Tharamaka ullathu...
We are eagerly waiting for the next book release.
ReplyDeleteவாவ் மிக மிக சந்தோசமான செய்தி :))
ReplyDelete.
என்ன கொடும சார் இது
ReplyDeleteஒரே நாளில் ஐம்பது கமெண்டுகள் போட்டு தாக்கியுள்ளார்கள் இதே போல போனால் விஜயன் சார் சொன்னது போல இவ்வருடத்தின் பின்பாதியில் தூள் தான்
பட்டாசு கிளப்புங்க விஜயன் சார்
நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் :))
very good news sir. லார்கோவின் புது தலைப்புகள் கலக்கலாக உள்ளது. நமது திரைஉலகத்தினர் தலைப்புகள் வைப்பதில் உங்களிடம் இருந்து கற்று கொள்ள நிறைய உள்ளது.
ReplyDeleteஇந்த இதழ்களை land mark போன்ற கடைகளில் கிடைக்குமாறு ஏற்பாடு செய்ய முடிந்தால் சிறப்பாக இருக்கும்
அருமையான யோசனை.
நானும் இதை வழி மொழிகிறேன்.
உங்களது தீவிர வாசகர்களில் நானும் முக்கியமானவன்.
புதிய வசதியான தலைமுறைகளை சென்றடைய அருமையான வாய்ப்பு
நன்றி சிவா அவர்களே.கோயம்புதூரிளிருந்து ஸ்டீல் க்ளா
Innoru covikarar....
Deleteyenna kodumai sir idhu...
ReplyDeleteyenaku innum "thalaivangi kurangu" varave illa...
Me tooooooooooooooooooooooooooooooooooooooooooo :(
ReplyDeletedear suresh my email id tharunsundar @gmail .com dear ஒலக மகா காமிக்ஸ் கொல வெறி ரசிகரே ,just joking .சாரி friend current cut i will msg u tommorow
ReplyDeleteடியர் ஒலககாமிக்ஸ் , இதை டைப் அடி க்கும் போது time nearly 11 pm .எனக்கு 2 yrs back சேலம் புக் exhibitionil cap பிரின்ஸ் பனி மண்டல கோட்டை in colour 100 rs ய்க்கு கிடை ய் தது.அது mostly உங்களிடம் கூடஇருக்கும் என நினைகிறேன் .பிறகு பழைய காமிக்ஸ் friend in சேலம் ,sorry name குறிப்பிட விருப்பம் இல்லை .ரத்தபடலம் in கலர் in தமிழ் நம்ம விஜயன் சார் translation 12 part vari ,each one part 1000 rs ,for private circulation வேண்டுமா ? என கேட்டார் .நான் interest காட்டவில்லை .not because of money .இது அடுதவரின் உழைப்பை திருடுவது ஆகும் .இப்போதும் அவர்தான் set சேர்ந்து கொண்டு செய்வதாக தெரிகின்றது .அவர் உடன் இப்போது contact கிடையாது .சாரி friend .அவர்களை encourage செய்ய வேண்டாமே , pls .......
ReplyDeleteநல்லா சொன்னீங்க சார் இது போன்று உண்மை நிகழ்வுகளை அவ்வப்போது நம் வாசகர்களுக்கு அட்லீஸ்ட் ப்ளாக் மூலமாவது சொல்லி கொண்டே இருந்தால்தான் இந்த மாதிரி தப்பு செய்யும் பெரிய மனிதர்கள் கொஞ்சம் பயம் கொள்வார்கள். well said ji
Deleteநமது இணைய தளத்தை அவ்வப்போது புதுப்பிக்கும் எண்ணம் இல்லையா? அதற்கு நேரம் அனுமதிக்கவில்லை என்றால் , குறைந்த பட்சம் உங்களுடைய வலைப்பதிவின் சுட்டியையாவது அங்கே முகப்பில் இடுங்கள்! இல்லையென்றால், புதிய வாசகர்கள், குழம்பி போக வாய்ப்புள்ளது!
ReplyDelete-கார்த்திக்
Bladepedia
Yes agree
Deleteஆமாம் சார் நானும் இதை ஆமோதிக்கிறேன்
Delete100% true
Deleteமறுபதிப்பு பற்றிய பதிவுகளுக்கு மட்டும் தான் நிறைய கமெண்டுகள் வருவதாக ஆசிரியர் உட்பட பலர் அபிப்ராயப்படுகிறார்கள். இந்த பதிவிற்கு ஏன் நாம் 100 கமெண்டுகள் மேல் டிரை செய்ய கூடாது.
ReplyDeletewow...ஏகப்பட்ட சந்தோஷம் "லார்கோ வின்ச்" புத்தகம் வரவதற்கு.
ReplyDeleteநன்றி விஜயன் அவர்கள்.
Hi! I am from Sri Lanka and I am a die hard fan of Lion/Muthu comics. We, Sri Lankan readers are facing trouble getting latest releases from the stores. Is there any way to directly get new and old comics from you by post?
ReplyDeleteRead this post for your info:
Deletehttp://lion-muthucomics.blogspot.com/2012/02/for-our-sri-lankan-friends.html
Vs
Now you can get the latest "Thalaivangi kurangu" in Sri Lanka.
DeleteFor More Details: http://lion-muthucomics.blogspot.com/2012/02/for-our-sri-lankan-friends.html
படித்துவிட்டீர்களா?! இப்போது பரபரப்பாக சொடுக்கபட்டுக்கொண்டிருக்கிறது!
ReplyDeleteகாமிக்ஸ் வேட்டை - அத்தியாயம் மூன்று!
நன்றி விஜயன் சார்
ReplyDeleteடியர் சார் ,த லை வாங்கி இன்னும் எனக்கு வரலை .போன வாரம் தான் சந்தா கட்டினேன் . இன்னும் late ஆகுமா ?
ReplyDelete100% true Vijayan Sir!
ReplyDeleteNow it is the right time for us to read Largo Winch Graphic Novels in tamil. I am sure you will do the best editing and translation work to suit our traditional values. Thanks a ton.
கலர் காமிக்ஸ் என்று நீங்கள் சொல்வது - அச்சில் வந்ததா? இல்லை சிடியில் போட்டார்களா?
ReplyDeleteஅச்சில் வந்தது என்றால் எப்படி சாத்தியமாயிற்று?
கிங் குழுவினருமா இந்த மோசடியில்? நம்ப முடியவில்லை.
புருஷோத்
முத்து விசிறி ,பதிப்பில் பார்த்தால் ஆம் .கலரிலும் சிறப்பாகவே உள்ளது .எனவே கலரில் வந்தால் மிக சிறப்பாக இருக்கும் .இல்லையா?
ReplyDeleteவிஜயன் சார் தயவு செய்து டெக்ஸ் கதைகளை கலரில் ஒன்று பிரிண்ட் செய்யுங்கள் .சரி இல்லையெனில் விட்டு விடலாம்.
இவை அனைத்தும் நமது பொக்கிசங்கள். ஆங்கிலத்தில் கிடைக்கும்.ஆனால் உங்களது மொழி பெயர்ப்பை அடிக்க முடியாது.ஆகவே தயவு ,கருணை காட்டி இனிவரும் டெக்ஸ் கதைகளை கலரில் விடவும்.அணைத்து வாசகர்களும் இதனை ஏற்று கொண்டு உங்கள் கருத்துகளை வெளி விடவும் .
கோயம்புதூரிளிருந்து ஸ்டீல் க்ளா
"லார்கோ வின்ச்" பதிவுக்காக நான் எதிர்பார்கிறேன்.....மிக மகிழ்ச்சி.
ReplyDeleteநன்றி விஜயன்.
செந்தில்
புக்கு இன்னும் வரலே!
ReplyDelete-Karthik
Bladepedia-வில்: 'தல' வாங்கிய குரங்கு!
நேற்று போன் செய்து கேட்டேன். தாமதம் இன்னும் 10 நாட்களில் தலை வாங்கி குரங்கு அனுப்பப்படும் என்று சொன்னார்கள்.
Delete...
ReplyDelete...
எஞ்சியிருக்கும் சொற்ப வாசகர்களிலும், பலர் காமிக்ஸ் இதழ்களை ஏதோ மஞ்சள் பத்திரிக்கை வாசிப்பது போல மற்றவர்களிடம் இருந்து மறைத்து படிப்பது இன்னொரு வேதனை தரும் சங்கதி!
...
...
to read more on this, click on: பிருந்தாவனமும் ப்ளேட்பீடியாவும்!
dear friends ,நேற்று night super கனவு ஒன்று கண் டேன்.2013 சென்னை book fair -ல் ,நம்ப எடிட்டர் ரத்த படலம் full colour ல் ,rs 1000 க்கு, release செய்வதாக ! இப்படி கனவு கண்டுதான் அவர் உடம்ப ரணகளம் ஆகுகிறோம் .
ReplyDeleteஒருவாறாக தலைவாங்கி நேற்று எனக்கு கிடைக்கப்பெற்றது. சம்மர் வேகசன் காரணமாக வெளியூர் செல்ல இருப்பதால் கொஞ்சம் சீக்கிரம் கிடைக்குமா என நமது அலுவலக ஊழியரிடம் கோரிக்கை வைத்தேன். எனது வேண்டுகோளை உடனடியாக நிறைவேற்றியதற்கு அவர்களுக்கு நன்றிகள் பல.
ReplyDeleteஇனி புத்தகம் பற்றி. அட்டைபடம் அருமை. வள வள பேப்பர். ஆனால் சித்திரம் சொல்லும்படி இல்லை. தலைவாங்கி குரங்கு படிப்பது இதுதான் முதல் முறை. இந்த புத்தகத்தை ஆசிரியர் வடிவமைத்தில் எதோ ஒரு அவசரம் தெரிகிறது. சித்திரங்கள் ஒருவாறாக stretched type ஆக உள்ளது. பேஜ் லேஅவுட் முதலில் வடிவமைத்து அதற்கு ஏற்றவாறு சித்திரங்களை விரித்தது போல் உள்ளது.
Fonts கொஞ்சம் வித்தியாசமாக உள்ளது. மரண முள் , கார்சனின் கடந்த காலம் சித்திரங்களுடன் பார்க்கும் பொழுது, இது சொல்லும்படி இல்லை. மொத்தத்தில் ஒரு புல் மீல்ஸ் எதிர்பார்த்த எனக்கு அளவு சாப்பாட்டை விட கம்மியாகவே கிடைத்துள்ளது.
அரை வயற்று பசியுடன்,
அருண்.
//ஒலக காமிக்ஸ் ரசிகருக்கு ...
ReplyDeleteநீங்கள் சொல்வது சரிதான் . இந்த கலர் காமிக்ஸ் வியாபாரிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான்.
ஆனால் இந்த கலர் காமிக்ஸ் மோகத்திற்கு அடித்தளம் போட்ட கிங் & கோ வினரை
ஏன் தாங்கள் எதுவும் சொல்ல வில்லை? அவர்கள் அடித்த கொள்ளையில் உங்களுக்கும் பங்கு தந்தனரா?
நமது எடிட்டர் ஐயா. இரத்தப் படலம் 18 பாக புத்தக வேலையை தொடங்குவதற்கு முன்பாகவே?
இரத்தப் படலத்தை 12 பாகத்தை கலரில் போட்டு, ஒரு செட் 20.000 ரூபாயிக்கு விற்பனை செய்ததையும்,
லக்கி லுக்கின் தமிழில் வெளி வராத கதைகள்..
1.எண்ணெய் வயல படலம்
2.மோசடி நாடகம்
3.புள் வெளியில் ஒரு முள்வேலி
4.நாடோடி மன்னன்
5.ஒரு இம்சை இசை பயணம்
6.பிசாசு நகரம்
7.ஒரு கேரவனின் கதை
8.நாடோடிகள் நால்வர் இவை அணைத்து கதைகளையும் கலரில் போட்டு அதிக விலைக்கு விற்பனை செய்து கல்லா கட்டியதையும், முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் மறைத்து விட்டிர்களே?// & ALSO TO VISWA
பதில் சொல்ல முடியவில்லையா . இல்ல வழக்கம் போல (நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பாக இடப்படவேண்டிய இந்த பதிவு, கிட்டதட்ட பத்து நாட்களுக்கு முன்பே இந்த இதழை கைவரப் பெற்றிருந்தாலும் பதிவிடாமல் இருந்ததற்கு இரண்டு காரணங்கள்:) என்று அடுத்தவங்க போஸ்ட பார்த்து விட்டு அல்லது அவர்களிடமே விபரங்களை சேகரித்து , ஏதோ மிகவும் கஷ்டப்பட்டு கண்டுபிடித்தது போல தாமதமாக பதில் வருமா?
(http://tamilcomicsulagam.blogspot.in/ & ஒலக காமிக்ஸ் ரசிகர் ரெண்டுமே ஒரே ஆள்தானே. தூ..... இது ஒரு பொழைப்பு)
SHANKAR, VIRUDHUNAGAR
Shankar,Virudhunagar : விஷ்வாவும், ஒலக காமிக்ஸ் ரசிகனும் ஒருவரே என்று உங்களுக்கு ஏன் சந்தேகமென்று எனக்குப் புரியவில்லை!இருவரையும் நான் சந்தித்து உள்ளேன்! நன்கு அறிவேன் !
Deleteபிரச்னைகள் எதுவாக இருந்தாலும், தயை கூர்ந்து அடிப்படை மரியாதையில் compromise செய்திட வேண்டாமே !! இது நான் எழுதி வரும் தளம் என்பதால், இங்கு நடந்திடும் நல்லது, கெட்டதுகளுக்கும் நான் பொருப்பேற்றிடுவது தான் முறையாக இருக்கும் !
முறையற்ற வார்த்தைகளுக்காக உங்கள் சார்பில் விஷ்வா & ஒ.கா.ர விடம் நான் மன்னிப்புக் கோருகிறேன் !
விருதுநகர் ஷங்கர் (என்கிற பெயரில் அனானிமஸ் கமென்ட் இட்டு இருப்பவருக்கு),
ReplyDeleteஅனானிமஸ் என்ற ஒரு முகமூடிக்கு பின்னே இருந்துக்கொண்டு என்னவேண்டுமென்றாலும் பேசுவது, ஆதாரமில்லாமல் குற்றச் சாட்டுகளை அடுக்குவது இப்போதைக்கு தமிழ் காமிக்ஸ் உலகில் ஒரு ஃபேஷனாகி விட்டது போலும். இந்த ப்ளாக் ஆரம்பிக்கப்பட்ட புதிதில் இதனை இயக்குவதே நான்தான் என்றெல்லாம் ஒரு கும்பல் பேசியது. இப்போது அடுத்த கட்டமா? இருந்தாலும் ஏற்கனவே இந்த கமெண்ட்டை அனானிமஸ் ஆக இட்டபோதே உங்களின் அனைத்து அவதூறுகளுக்கும் You Are Barking Under the Wrong Tree என்று ஒரே பதில் கூறிவிட்டு போய்விடலாம். இப்போது என்னுடைய பெயரை வெளிப்படையாக கூறி இருப்பதால் இந்த பதில்.
இரத்தப்படலம் கலர் காமிக்ஸ் வெளியிட்டது யார் என்று தெரிந்து கொண்டு பேசுங்களேன்? அந்த வெளியிட்டிற்க்கும் எனக்கும் அந்தவிதமான சம்பந்தம் என்று தெளிவுபடுத்தினால் நான் சந்தோஷப்படுவேன். அதைத்தவிர மேற்கூறிய அனைத்து காமிக்ஸ் கதைகளையும் தமிழாக்கம் செய்து, வெளியிட்டது யார் என்று சொல்லுங்கள். சமீபத்தில் லக்கி லுக் கதைகளை பற்றி பேசிக்கொண்டு இருக்கும்போது இப்படி ஒரு முயற்சி நடந்துள்ளது என்பதை எடிட்டரிடமும் விவாதித்தேன். அப்படி இருக்கையில், ஏதோ நான் அந்த புத்தகங்களை அச்சிட்டு விற்றதுபோல பேசுவது நல்லதொரு நகைச்சுவை.
இரண்டாவதாக, நீங்கள் எந்த பதிவை பற்றி கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் எந்த ஒரு பதிவையும் பார்த்து தான் தமிழ் காமிக்ஸ் குறித்தான சங்கதிகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்று எனக்கு ஒரு தேவையுமே இல்லை. இதற்கும் ஏதேனும் ஆதாரம் இருந்தால் நல்லது.
மூன்றாவது, என்னுடைய விவரங்கள் லயன் காமிக்ஸ் ஆபீசில் போன் செய்து கேட்டாலே கிடைக்கும். அது போலவே ஒலக காமிக்ஸ் ரசிகர் குறித்தான விவரங்களும். சென்னையில் தி. நகரில் தனியாக ஒரு மீடியா நிறுவனத்தை இயக்கி வருபவர் அவர். இப்போதுதான் ஒரு டிவி சேனலையும் துவக்கியுள்ளார். மே மாதம் சென்னையில் ஒரு காமிக்ஸ் வெளியீட்டு விழாவை திட்டமிட்டுக்கொண்டு இருக்கிறார்.
இருவரையும் ஒருங்கே சென்னை புத்தக கண்காட்சியில் பார்த்தவர்கள், தி.நகர் ஆபீசில் பார்த்தவர்கள் பலர். ஏன் நம்முடைய எடிட்டரே அவருடைய தி.நகர் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார். அப்படி இருக்க, ஆதாரமே இல்லாமல் இருவரும் ஒருவரே என்று நீங்கள் கூறுவதைப்பார்த்தால் எனக்கு நீங்கள் குற்றம் சாட்டவே பின்னூட்டமிட்டுள்ளீர்கள் என்றே தோன்றுகிறது. ஆதாரம் இல்லாமல் பேசுவதே தவறு, இதில் ஆதாரம் இல்லாமல் ஏசுபவர்களை என்னவென்று சொல்வது?
டியர் ஷங்கர், எடிட்டர் friendly யாக எழுதி வரும் இந்த blog ல் சண்டை வேண்டாமே! நம் சிறு வயதில் நம்மிடம் பணம் அதிகம் இல்லாதபோது நிறைய ஹீரோஸ் introduce செய்த சிங்கம் , இடையில் நாம் நன்கு earn செய்யும் போது தூங்கி விட்டது .சோ,காமிக்ஸ் வியபரிகள் ,விரித்த valiyil நாம் விழுந்தோம் .இப்பதான் சிங்கம் சில்லுபுகிச்சே!so , dont worry brother .
ReplyDeleteநண்பர்களே
ReplyDeleteஇங்கே விவாதங்கள் இடம்பெறட்டும், அது நேர்மையாகவும், நமது எடிட்டருக்கு உறுதுணையாகவும், தமிழ் காமிக்ஸ் வளர்ச்சிக்காகவும் இருக்கட்டுமே...
விபரிதங்களுக்கும், சண்டை சச்சருவுகளும், கற்பனையான குற்றச்சாட்டுகளும் இடம்பெறாமல் பார்துகொள்ளலாமே.
"வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைத்த" கதையாகிவிடபோகிறது ப்ளீஸ்...
This blog is only for comics galatta.Not for quarrels please.
ReplyDeleteஎடிட்டர் சார்,
ReplyDeleteதயவுசெய்து இந்த பிரச்சனைகளுக்கு வளரவிடாமல் உடனே முற்றுபுள்ளி வையுங்கள்.
உங்களால் மட்டுமே அது முடியும்... நன்றி
கோவை மற்றும் திருப்பூர் நண்பர்களே,
ReplyDeleteநேற்று நான் கோவையில் உள்ள கடையில் சுமார் ஐம்பது லயன் / முத்து காமிக்ஸ் வாங்கினேன். உங்களுக்கு தேவையான காமிக்ஸ் புத்தகங்கள் அங்கு உள்ளது
முக்கியமாக சிம்பா (எ) அருண், ஆதவன் மற்றும் ஈரோடு ஸ்டாலின் ஆகியோரின் கவனதிர்ற்கு.
முகவரி
READERS PARK,
TOWNHALL,
COIMBATORE.
phone - 0422-2399934
Thanks
NAGARAJAN
மிகவும் பழைய புத்தகங்களா? அல்லது லயன் அலுவலகத்தில் கைவசம் இருக்கும் பிரதிகளா?
Deleteதிரு நாகராஜன் சாந்தன்,
Deleteபுத்தகங்கள் வாங்க நீங்கள் உதவமுடியுமா. என் மனைவியின் ஊர் சத்தியமங்கலம், இருந்தாலும் என்னால் உடனே வரமுடியாது
பெ. கார்த்திகேயன்
பாண்டிச்சேரி
நமது லயன் அலுவலகத்தில் கிடைக்கும் புத்தகங்கள் என்றால் வேண்டாம். ஏற்கனவே சென்னை புத்தக கண்காட்சியில் ஒரு செட் வாங்கிவிட்டேன்.
Deleteநண்பர்களே
Deleteபாதி புத்தகங்கள் லயன் அலுவலகத்தில் உள்ளவைதான்
ஆனால் பாதி லயன் அலுவலகத்தில் இல்லாதவை ...
நான் இப்போது சென்னையில் உள்ளதால், மீண்டும் சென்று வாங்க முடியாத நிலை பெ. கார்த்திகேயன்
நாகராஜன்
மிகவும் பழைய புத்தகங்கங்கள் என்றால் எனக்கும் உதவிட முடியுமா நண்பரே? நெய்வேலி நகரைச் சார்ந்தவன் நான்.
Deletekrkumaar1@gmail.com
Guys,
DeleteAvailable books @ Readers Park, Coimbatore
Please visit for more details @
http://tamilcomicsulagam.blogspot.in/2009/03/news-15-times-of-india-comics-on.html
but they told me so many books already sold
few books from my purchase list
Mandrake - Karril Karaintha Palakarkal
Tex Willer - Throkiyin Mugam
Tex Willer - Thaniye Oru Venkai
Tex Willer - Rattha Oppantham
Tex Willer - Payankara Payanikal
Tex Willer - Thuyleluntha Pisasu
Tex Willer - Onai Vettai
Tex Willer - Erintha Kaditham
Micro Alaivarisai 840 (CC)
Sorry Guys .. not able to type all 50 books (I bought books only i don't have)
Regards
Nagarajan S
Contact Person: எஸ். எஸ் மணியன்
DeleteAddress: ரீடர்ஸ் பார்க், என் 285, N.H ரோடு, Town Hall, கோவை 1.
Phone Number: 0422 - 2399934.
News: Most These books are available in Prakash Publishers office itself.
Tomorrow i will post some new pics of this shop.
விஸ்வா.. இந்தக் கடையில், பப்ளிஷரிடம் இல்லாத காமிக்ஸ்களும் இருக்கிறது என்கிறார்களே ?? உண்மையா.. விரைவில் வெளியிடவும். என் நண்பர்களை இந்தக் கடைக்கு அனுப்பவேண்டும் :)
Deleteநன்றி நாகராஜன். உண்மையிலேயே இது ஒரு இனிப்பான செய்தி. இவ்வளவு டெக்ஸ் கதைகளை மொத்தமாக வாங்க கண்டிப்பாக ஒரு லக் வேண்டும். தற்பொழுது நான் வெகேசன் ட்ரிப்பில் உள்ளபடியால் உடனடியாக கோவை செல்வது இயலாத காரியம். நான் அங்கு போகும் வரை ஸ்டாக் இருந்தால் I ill be happy :)
Deleteநண்பர்களே,
ReplyDeleteபொதுவானதொரு தளத்தில் எவரை நோக்கியும் விரல் நீட்டுவது சரியான செயலாக இருக்க முடியாது !
விருதுநகர் ஷங்கர் : நம் படைப்புகள் மீதும், நம் உழைப்பின் மீதும் நீங்கள் கொண்டுள்ள மரியாதைக்கு எனது நன்றிகள் என்றும் உண்டு ! நீங்கள் விவரித்திடும் விஷயங்கள் நடந்தேறி இருக்கும் பட்சத்தில் ; அதற்கான ஆதாரங்கள் உங்கள் வசம் இருக்கும் பட்சத்தில் - எனக்கு அப்போதே தெரிவித்திருக்கலாமே?
இப்போதும் கூட உங்களின் ஆதங்கங்களை எழுத்தாக்கி ஈ-மெய்லாக எனக்கு அனுப்பினால் நலமே! Let's not have a mud slinging contest in here please ?!!
பொதுவாக நான் கவனித்த;என்னை சங்கடத்தில் ஆழ்த்திடும் ஒரு விஷயம், நம் வாசகர்களிடையே ஒரு விதமான கோஷ்டி பூசல் நிலவுவதே! இதன் காரணங்கள்....நதி மூலம்..ரிஷி மூலம் பற்றியெல்லாம் நான் ஆராய்ந்திட முனைந்ததும் இல்லை ; இதனை ரசித்ததும் இல்லை !
நம்மிடையே பொதுவான சங்கிலி - காமிக்ஸ் மீதான காதல் என்பதே..! நம் ஈகோக்களை ஓரம் கட்டி விட்டு ஆரோக்கியமாய் ஒரு நட்பை உருவாக்கிட முயற்சிக்கலாமே !
முகமே அறியா என் மீது பிரியமும், அபிமானமும் வைத்திட உங்களால் இயலும் போது - நம் வாசகக் குடும்பத்தினுள்ளும் பாசிட்டிவான உறவுகளை வளர்திடுவது அத்தனை பெரிய கஷ்டமாக இருந்திடக் கூடாதே ?? ப்ளீஸ் guys ?
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,
Deleteதங்களது ப்ளாக்கிற்கு அவமரியாதை ஏற்படுத்தும் நோக்குடன் நான் எனது பின்னூட்டத்தை இடவில்லை. கடந்த இருபது வருடங்களாக நமது காமிக்ஸை படித்து வரும் வாசகன் என்ற முறையில் என்னால் இவர்களது செயலை பொறுத்துக்கொள்ள முடியவில்லை மிகவும் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். தயவு செய்து நீங்கள் யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டாம். மிக விரைவில் இவர்களைப் பற்றி தங்களுக்கும் உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெறும்.
இவர்கள் நமது lion காமிக்ஸ்-ல் வெளிவர இருக்கும் (நான் மற்றும் முதலில் உண்மையை தெரிவித்த, lion காமிக்ஸின் வளர்ச்சியில் உண்மையான அக்கறை உள்ள James Nila என்ற நண்பரும்) ஏற்கனவே குறிப்பிட்ட கதைகளை உரிமையின்றி பிரிண்ட் செய்து விற்பனை செய்திருக்கிறார்கள் என்பது உறுதி.
நீங்கள் வேண்டுமானால் நமது ஆரம்ப கால சந்தாதாரர்கள், வாசகர்கள் மற்றும் சேகரிப்பவர்களிடம் விசாரித்தால் இவர்களைப்பற்றி தெரிந்து கொள்ளலாம். அவர்கள் உங்களுக்கு அனைத்து தகவல்களையும் "தெளிவாக" தெரிவிப்பார்கள்.
தற்பொழுது நான் எனது வேலையின் காரணமாக வெளியூரில் இருப்பதால் இன்னும் ஒரே வாரத்தில் நீங்கள் கேட்ட ஆதாரங்களை அனுப்பி வைக்கிறேன்.
கடைசியாக //நம் வாசகர்களிடையே ஒரு விதமான கோஷ்டி பூசல் நிலவுவதே!// அதற்க்கு முழு முதற் காரணமே அவர்கள் குரூப் தான். நானறிந்தவரை இரண்டு கோஷ்டி இருப்பது உண்மைதான்.
1 எங்களைப்போன்ற உண்மையான காமிக்ஸ் வாசகர்கள்
2 உங்களை மற்ற வாசகர்கள் சரியான முறையில் அணுக விடாமல் தடுக்கும், "நிறைய ஜால்ரா கோஸ்டிகளை வைத்துக்கொண்டு திரியும்" அவர்கள் குரூப். (ஏதோ அவர்களால்தான் lion காமிக்ஸ் உயிர் பெற்றது போல் வெளியே சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.)
SHANKAR, VNR
Please give me some shop address in Chennai to buy comics new and old - Thanks / ezhilnarasu@gmail.com
ReplyDeleteDiscovery Book Palace,
DeleteNo 6, Mahavir Complex, Munusamy Salai,
K.K. Nagar West,
Chennai 600078.
Mail id: discoverybookpalace@gmail.com
News: You can get Comeback special and Kolaikara Kalaignan/Vinnil oru Kullanari over there.
Thlai Vangi Kurangu is not available, yet.
விஸ்வா.. இந்தக் கடையில், பப்ளிஷரிடம் இல்லாத காமிக்ஸ்களும் இருக்கிறது என்கிறார்களே ?? உண்மையா.. விரைவில் வெளியிடவும். என் நண்பர்களை இந்தக் கடைக்கு அனுப்பவேண்டும் :)
Deleteடியர் santhan கண்டிப்பாக நாளை கோவை அலற போகிறது .காமிக்ஸ் வெறியர்கள் எங்கே காமிக்ஸ் எங்கே காமிக்ஸ் என்று vampiers blood க்கு அலை வதை விட மோசமாக அலைய போகிறார்கள் . நானும் கோவை இல் உள்ள என் நண்பனை சென்று பார்க்க சொல்லுகிறேன் .anyway தேங்க்ஸ்.
ReplyDeletecaptan tiger-in mega special ondrai indha varudam veliyidavum . lucky luke in super circus-um bayangara podiyan-um 2012-il edhir paarkirom
ReplyDeleteit would be more appropriate if all of us know this.
ReplyDeletesome or many of us have done this except a few who have developed a passion for it as narrated below.
they visit each & every town's old buk shops and bribe them, poison their mind with a 4 digit advance and see that any comics not being sold to the resident of that town. paavam la!!! they never mind about the rate and r ready to provide any, repeat ANYthing to get d buks from d old buk shops.
instead of being a hobby now its a matter of pride for some to collect all d buks irrespective of d fact they do have it already or not!!!
reason might be to post a scan of them in their blog or god alone knows it...
the ultimate reason of the hike in d rates of the old issues r due to their behaviour.
ithanal vaazhnthathu ennovo "pazhaya puthaga vyabaarigal thaaan" + some collectors who arent aware of the present scenario :(
ippothum oru buk colour il endral ethanai aayiram? enakku 1 copy endru ketkathoor nammil ethanai per? bathil unmaiyaga irukattum. plz recall that old but true saying "Emaarugiravan irukkum varaiyil emaatrubavanum iruppan".
vijayan sir, its just 2 make others know thats all, nothing personal... thanks all.
why dont u come out with their names directly?
Deleteசிலர், அவர்கள் கம்ப்யூட்டர் தெரிந்தவர்கள் அல்லது தெரியாதவர் ஆனாலும் வெறும் ஆயிரம் ரூபாய் முதலீட்டில் பல ஆயிரங்கள் சம்பாதிக்கும் வழியை காட்டிய காமிக்ஸ்'க் கு என்றும் நன்றி கடன் பட்டு இருக்க வேண்டும் என்றால் அது மிகை ஆகாது. நன்றி: scanner பிரிண்டர்...
ReplyDeleteஏமாறுகிறவன் இருக்கும் வரையில் ஏமாற்றுபவனும் இருப்பான்
ReplyDeleteமதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,
ReplyDeleteதங்களது ப்ளாக்கிற்கு அவமரியாதை ஏற்படுத்தும் நோக்குடன் நான் எனது பின்னூட்டத்தை இடவில்லை. கடந்த இருபது வருடங்களாக நமது காமிக்ஸை படித்து வரும் வாசகன் என்ற முறையில் என்னால் இவர்களது செயலை பொறுத்துக்கொள்ள முடியவில்லை மிகவும் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். தயவு செய்து நீங்கள் யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டாம். மிக விரைவில் இவர்களைப் பற்றி தங்களுக்கும் உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெறும்.
இவர்கள் நமது lion காமிக்ஸ்-ல் வெளிவர இருக்கும் (நான் மற்றும் முதலில் உண்மையை தெரிவித்த, lion காமிக்ஸின் வளர்ச்சியில் உண்மையான அக்கறை உள்ள James Nila என்ற நண்பரும்) ஏற்கனவே குறிப்பிட்ட கதைகளை உரிமையின்றி பிரிண்ட் செய்து விற்பனை செய்திருக்கிறார்கள் என்பது உறுதி.
நீங்கள் வேண்டுமானால் நமது ஆரம்ப கால சந்தாதாரர்கள், வாசகர்கள் மற்றும் சேகரிப்பவர்களிடம் விசாரித்தால் இவர்களைப்பற்றி தெரிந்து கொள்ளலாம். அவர்கள் உங்களுக்கு அனைத்து தகவல்களையும் "தெளிவாக" தெரிவிப்பார்கள்.
தற்பொழுது நான் எனது வேலையின் காரணமாக வெளியூரில் இருப்பதால் இன்னும் ஒரே வாரத்தில் நீங்கள் கேட்ட ஆதாரங்களை அனுப்பி வைக்கிறேன்.
கடைசியாக //நம் வாசகர்களிடையே ஒரு விதமான கோஷ்டி பூசல் நிலவுவதே!// அதற்க்கு முழு முதற் காரணமே அவர்கள் குரூப் தான். நானறிந்தவரை இரண்டு கோஷ்டி இருப்பது உண்மைதான்.
1 எங்களைப்போன்ற உண்மையான காமிக்ஸ் வாசகர்கள்
2 உங்களை மற்ற வாசகர்கள் சரியான முறையில் அணுக விடாமல் தடுக்கும், "நிறைய ஜால்ரா கோஸ்டிகளை வைத்துக்கொண்டு திரியும்" அவர்கள் குரூப். (ஏதோ அவர்களால்தான் lion காமிக்ஸ் உயிர் பெற்றது போல் வெளியே சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.)
SHANKAR, VNR
dear ஷங்கர்,நீங்கள் பட்டியல் இட்ட காமிக்ஸ் என்னிடமும் sales ற்கு வந்தது .ஆனால் இதற்கு யார் காரணம் என்று தெரியாமல் தனிப்பட்ட மனிதெரெய் குற்றம் சாட்ட வேண்டாமே? pls friend .
ReplyDeleteTo: Dr.Sundar,Salem.
Deleteஅப்படி நீங்கள் சொல்வதுபோல் அப்பாவிகள் பெயர் கெடக்கூடாது என்றால், உங்களுக்கு புத்தகங்களை விற்பனைக்கு கொண்டுவந்தவர் மற்றும் தொடர்பு கொண்டவர்கள் பெயர்களை வெளியிடுங்கள். அவ்வாறு வெளியிடாவிட்டால் இந்தக் குற்றச் செயலுக்கு (நிச்சயம் இந்த மோசடியும் கிரிமினல் குற்றம்தான்) நீங்களும் உடந்தையாக இருக்கிறீர்கள் என்று அர்த்தப்பட்டுவிடும்.
"யாரோ தொடர்புகொண்டார்கள், எனக்கு அவர்களைத் தெரியாது" என்று தயவுசெய்து மழுப்பாதீர்கள்.
புல்லுருவிகளை அடையாளம் காண உங்களைப்போன்ற படித்த பெரிய மனிதர்கள் நிச்சயம் துணிச்சலாக முன்வரவேண்டும்.
இது எமது காமிக்ஸ்களுக்கும், விஜயன் ஸாருக்கும் நாங்கள் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும்.
--------------------
நண்பர்களே!
உங்களை இவ்வாறு மோசடிப் புத்தகங்களோடு தொடர்புகொண்டவர்களது பெயர் விபரம், மின்னஞ்சல், தொலைபேசி இலக்கம், முகவரி என எல்லா விபரங்களையும் பகிரங்கப்படுத்துங்கள்.
இது எமது காமிக்ஸ்களின் உயிர் மூச்சைத் தக்கவைக்க உதவும்.
மனிதருக்கு இரத்த தானம் செய்வதுபோல இது எமது காமிக்ஸ்களுக்கு நீங்கள் செய்யப்போகும் உயிர்க்கொடை.
செய்வீர்களா?
மோசடிக்கும்பல்களை விரட்டி ஒழிக்கும் எமது காமிக்ஸ் கதாநாயகர்களைவிடவும் உயர்ந்த கதாநாயகர்களாக உங்களுக்கு இது ஒரு முக்கிய கட்டம்.
வாருங்கள்; வாருங்கள்!
பகிரங்கப்படுத்துங்கள். மோசடிக்கும்பலை சட்டத்தின் பிடியில் சிக்கவைக்க உதவுங்கள்.
ANANDH.RS
இந்த மோசடிக் கும்பலை சட்டத்தின் பிடியில் கொண்டுவர john simon போன்ற அதிகாரிகள் உதவவேண்டும்.
ReplyDeleteANANDH.RS
i had not read any comics involving largo winch but photos are interesting
ReplyDeletedear friend ,கண்டிப்பாக கலர் காமிக்ஸ் (சட்ட விரோத ) தண்டிக்க படவேன்டியர்வர்களே. என்னிடம் எந்த கலர் காமிக்ஸ் ம் இல்லை. இதை உறுதியாக சொல்லுகிறேன் .என்னிடம் கலர் காமிக்ஸ் விற்பனிக்கு கேட்டவர் பழைய புத்தக ஷாப் ல் introduce ஆனவர் .அவர் govt கடைமட்ட தொழிலாளி .அவர் montly earning 10 ,௦௦௦.ஓவர் டைம் பார்த்து அதில் வரும் 2 ,௦௦௦.முழுமை யாக காமிக்ஸ் ற்கு செலவு செய்கிறார் .nan காமிக்ஸ் யய் லவ் செய்கிறேன் .பட் அவர் காமிக்ஸ் வெறியர் .அவரிற்கும் இந்த கேவலமான கலர் காமிக்ஸ் சேல்ஸ் கும் சம்பந்தம் கிடையாது .அவர் வாங்கும் போது என்னையும் கேட்டார் .பட்,நான் interest காட்டவில்லை.நம் நண்பர்கள் interest காட்டவில்லை என்றால் கலர் காமிக்ஸ் வியா பாரிகள் கடையை காலி செய்து விடுவார்கள் .அவர் பெயரை solli avarai தர்மசங்கடம் ஆக்குவதில் எனக்கு விரு ப்பம் கிடையாது.இத்துடன் இந்த problem க்கு முற்று புள்ளி வை ப்போமே.பழைய கதை யை கிளறாமல், இன்னிமேல் நடக்க வேண்டியதை பார்ப்போமே .லார்கோவின்ச் 5 copy வாங்கி friends க்கு distribute செய்யலாம் என இருக்கிறேன்.இப்படியாவது காமிக்ஸ் ய் வளர்ப்போம் . .
ReplyDeleteநண்பர் சொல்வதுபோல் அதிக பிரதிகள் வாங்குவது நல்லதொரு வழிமுறை.
Deleteநாங்கள் சில நண்பர்களோடு இணைந்து மீண்டும் எமது காமிக்ஸ்கள் வெளிவருவதை விளம்பரப்படுத்த முயற்சித்துவருகிறோம். விரைவில் அதன் ஓர் முயற்சியை புகைப்படத்தோடு நண்பர்களுக்கு அறியத்தர முயற்சிக்கிறேன்.
-Theeban (SL)
Eagerly awaiting for Largo whinch
ReplyDeleteலார்கோவை வெளியிட்டதால் மிக மகிழ்ச்சி IN 2024
ReplyDelete