நண்பர்களே,
வணக்கம். 2 நாட்களுக்கு முன்னே மார்ச் புக்சின் பேக்கிங் பணிகள் மும்முரமாய் நடந்து கொண்டிருந்த பிற்பகல் வேளை அது ! 'பர்ரக்..சர்ரக்' என்று ப்ரவுண் டேப்பால் டப்பிகளுக்கு பிளாஸ்திரி ஓட்டும் ஓசை மட்டும் என் அறைக்கு வந்து கொண்டிருந்தது ! ஏப்ரலில் வரவுள்ள SODA இதழுக்கு பேனா பிடிக்க முயன்று கொண்டிருந்தவன், 'சித்தே உலாத்துவோமே' என்று எழ, முன்னாபீஸில் நம்மாட்கள் கூரியர்களுக்கான பைசா கோபுரங்களைக் கட்டிக் கொண்டிருப்பதை கண்ணாடி வழியாய்ப் பார்த்திட முடிந்தது ! கடந்த 100+ மாதங்களாய் இதுவொரு மாதாந்திரச் சடங்காகிப் போயிருக்கும் நிலையில் - ஏனோ தெரியலை, இம்மாதம் நடந்து கொண்டிருந்த yet another பேக்கிங் படலத்தை இமை தட்டாது பார்த்துக் கொண்டேயிருக்கத் தோன்றியது ! நமது செகண்ட் இன்னிங்ஸ் துவங்கிய பிற்பாடு, ஓராண்டின் திட்டமிடல் மறு ஆண்டின் மார்ச் வரையிலும் நீண்டு செல்வது இதுவே முதன்முறை என்பது தலைக்குள் லேசாய் ஓட்டமெடுக்க, 12 மாதங்கள் பின்னோக்கி, நினைவுகள் நகர்வதைத் தவிர்க்க இயலவில்லை ! 'எல்லாமே நலம்' என்று ஓடிக்கொண்டிருந்த நாட்டுக்கே - ஒரு கொடூரத்தின் துவக்கப்புள்ளியாய் ; மறக்கவியலா ரணங்களின் துவக்க மாதமாய், போன மார்ச் அமைந்து போன ஞாபகங்கள் நிழலாடின ! பெருமூச்சோடு அமர்ந்த போது, இத்தனை களேபரங்களுக்கு மத்தியிலும் நமது பயணம் தட்டுத் தடுமாறியேனும் தொடர்ந்திருப்பதை எண்ணி மேலிருப்பவரையும் ; முன்னிருப்போரையும் நோக்கிக் கரம் கூப்பத் தான் தோன்றியது ! இந்த கொரோனா சூறாவளியில் எண்ணற்ற ஆலமரங்களே தடம் தெரியாது மாயமாகிப் போயிருக்க, ஒடிசலான நாணலாய் நாமெல்லாம் தாக்குப் பிடித்து நிற்பதென்பது, nothing short of a miracle என்றுபட்டது ! புனித மனிடோவுமொரு காமிக்ஸ் காதலரே என்பதை இது நிரூபிக்காது போயின், வேறேது தான் நிரூபிக்கப் போகிறதென்று நினைத்துக் கொண்டேன் !!
Back to reality - மார்ச்சின் புக்ஸ் தினுசு தினுசாய் உங்கள் முன்னே இறைந்து கிடக்கும் இந்த வேளையில், அவற்றுள் புகுந்திட நிறையப் பேருக்கு இன்னமும் நேரம் கிடைத்திருக்காது என்பதில் no secrets ! அப்படியே நேரம் கிடைத்திடின் - வாசிப்புக்கென இந்த நான்கில் எதை முதலில் தேர்வு செய்வதென்ற கேள்வி உங்கள் முன்னிருப்பின், எனது suggestion இம்மாதத்தில் அறிமுகம் கண்டுள்ள புதியவரான ஸ்டெர்ன் தோன்றும் "வழியனுப்ப வந்தவன்" கிராபிக் நாவலாகத் தானிருக்கும் ! ரொம்பவே impress செய்துள்ள Maffre சகோதரர்களின் உருவாக்கமான இந்த ஆல்பத்தை நான் பரிந்துரைக்க இன்னொரு காரணமும் உண்டு ! ரூ.125 விலையிலான இந்த இதழ் வந்திருப்பது - ரூ.250 விலையிலான "பிரளயம்" கிராபிக் நாவலின் இடத்தினில் ! So நாம் இன்னமும் ரூ.125 விலைக்கான இன்னொரு இதழை 2020-ன் சந்தா நண்பர்களுக்குத் தரக் கடமைப்பட்டுள்ளோம் ! "வழியனுப்ப வந்தவன்" இதழையும், இந்தப் புது வரவு ஸ்டெர்னையும் நீங்கள் சடுதியாக வாசிப்புக்கு உட்படுத்தி, "இவர் ஓ.கே. தான் ; தேறிடுவார் !!" என்ற முத்திரை குத்தினீர்களெனில்,- இவரது ஆல்பம் # 2-ஐ கூடிய சீக்கிரமே வரவழைத்து ; தயார் செய்து,அதனை அந்தக் கடன் தீர்க்கும் ஆல்பமாக்கி விடலாமென்று நினைத்தேன் ! மாறாக, "ஸ்டெர்ன் அத்தினி ஷார்ப் இல்லே மாமூ ; இந்தாள் வோணாம் !!" என்றோ - "ஆசாமி ஓ.கே. தான் ; ஆனால் back to back அவர் ஆல்பங்களே என்பதுலாம் டூ மச்" என்றாலோ - கடன் தீர்க்க நம் முன்னே உள்ளே இதர options-களைக் கடை விரிக்க வேண்டி வரும் !
"அந்த options தான் என்னடாப்பா ?" என்று நீங்கள் கேட்டாலும் சரி, கேட்காவிடினும் சரி, சொல்லி வைக்கிறேன் guys !!
நம்மிடம் கையில் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு சகிதம் தயாராக உள்ள கிராபிக் நாவல்களின் லிஸ்ட் இது :
கதிரவன் கண்டிரா கணவாய்
விதி எழுதிய வெள்ளை வரிகள்
காலனின் கால்தடத்தில் !
தமிழாக்கத்துக்கு மட்டும் 'தம்' கட்டிடும் பட்சத்தில் இவற்றுள் ஏதேனும் ஒன்றை சட்டுப்புட்டென்று ரெடி செய்து விடலாம் தான் ; மூன்றுமே black & white கி.நா ஆல்பங்களே !!
'இல்லேடா தம்பி, வெய்ய காலம் ஆரம்பிக்குது ; நீ போடற மொக்கைக்கே தெறிக்குது, இதிலே மேற்கொண்டும் கி.நா படலம்லாம் தாங்காது'" என்று அபிப்பிராயப்பட்டீர்களெனில் - உங்கள் முன்னே நான் வைத்திடக்கூடிய அடுத்த சாய்ஸ் :
முழுவண்ணத்தில், ஆர்ட்பேப்பரில் -
இரும்புக்கை மாயாவியின் "கொரில்லா சாம்ராஜ்யம்" !
முதன் முதல் பதிப்பின் போது (maybe 1974 ??)கலரில் மிரட்டிய இந்த இதழானது, பின்னாட்களில் black & white-ல் மட்டுமே தலைகாட்டியிருந்தது ! புதுசாய் டிஜிட்டல் கலரிங் செய்யப்பட்டு, நம்மிடம் ஓராண்டுக்கும் மேலாகவே துயின்று வரும் இந்த இதழை அந்த கடன் தீர்க்கும் slot-க்கு நுழைப்பதெனில் செம ஈஸி நமக்கு !!
ரைட்டு, அதுவும் வேணாம்னா - கார்ட்டூன் பக்கமாய் கொஞ்சம் பார்வைகளை படரச் செய்தால் - this is what we have ready :
ஹெர்லாக் ஷோம்ஸ் - "அலாவுதீனும், ஒரு புலனாய்வுப் பூதமும் "
மெர்ச்சலூட்டும் காமெடி மேளா இது ; ரம்மி ஆடும் அலாவுதீன் விளக்குப் பூதத்துடன் !! இங்கிலாந்தின் டாப் டிடெக்டிவுக்கு இந்தத் தொங்கு மீசை பூதமானது செய்திடும் ஒத்தாசைகளை நீங்கள் ரசிக்கத் தயாரெனில், நாளைக்கே பேனாவில் மசியை நிரப்பி தமிழாக்கத்துக்குள் ரவுண்டடிப்பதே எனது ஜாலியாகிடும் ! 2021-ன் அட்டவணைக்கான இதழே இது ; but no worries at all , அந்த இடத்துக்கு ஹெர்லாக் ஷோம்ஸ் தொடரில் எஞ்சியிருக்கும் ஒற்றை ஆல்பத்தைப் போட்டு man for man நிரவல் செய்திடலாம் !
"அட...கார்டூன்லாம் என் பேரப்புல்லீங்கோ பட்ச்சுப்பாய்ங்க ; யூத்தான எனக்கு ஆவுறா மேரி ஏதாச்சும் சொல்லு வாத்தியாரே !" என்று ரவுண்டு கட்டுகிறீர்களா ? இருக்கவே இருக்காரு நம்ம 'தல' !!
"பொக்கிஷம் தேடிய பயணம் "
சும்மா கனகச்சிதமா அதே ரூ.125 விலைக்கு கலரில் ரெடியா கீது கையிலே ! எடிட்டிங் செஞ்சு, அட்டைப்படம் மட்டும் அச்சிட்டா - சும்மா 'ஜிலோ'ன்னு தாக்கிப்புடலாம் !
இவை தவிர, இன்னும் கொஞ்சம் புது ஆர்ச்சி கதைகள் ; இஸ்பய்டர் / மாயாவி b&w மறுபதிப்புகள் ; மார்ஷல் டிலான் கதை ; புயட்சி அம்மிணி அமாயா கதை ; காரிகன் கதை ; மாண்ட்ரேக் கதை என்றும் பீரோவில் உள்ளன ! ஆனால் இவர்களைக் கொண்டு ரூ.125 கடனை அடைப்பதாயின், நூத்திச் சில்லறைப் பக்கங்களுக்கான கூட்டணி இதழாய்த் தான் தயாரிக்க வேண்டி வரும் ! And அங்கே புராதன மணம் நாசியெல்லாம் அடைக்கும் என்பதிலும் ரகசியங்கள் நஹி ! So not an ideal option !!
தொடரும் நாட்களில் STERN உங்களிடம் ஈட்டிடும் விமர்சனங்களைக் கருத்தில் கொண்டு STERN ஆல்பம் # 2-ஐ களமிறக்குவதா ? வேண்டாமா ? எனத் தீர்மானிக்கவுள்ளேன் ! In the meantime இதர options-களுள் ஏதேனுமொன்று நம்மிடையே ஏகோபித்த ஆதரவைக் காணின், அப்டிக்கா வண்டியைத் திருப்பிட உத்தேசம் ! பார்க்கலாமே !
Before I sign out - பதிவில் நான் நீட்டி முழக்குவதை பாதி படித்து, பாதி படிக்கா நண்பர்களின் பொருட்டு - ஒரு செய்திச் சுருக்கம் போல recap :
1.2020-ன் சந்தா இம்மாதத்துடன் நிறைவுற்று விட்டது guys ! So ஏப்ரலில் புதுச் சந்தா இதழ்கள் களம் காணும் ! So இன்னமும் சந்தாக்கள் புதிப்பித்திரா பட்சங்களில், please do now !!
2.அப்புறம் "கழுகு வேட்டை" இதழில் போட்டோவினை இணைக்க விரும்பும் 2021 சந்தா நண்பர்கள் - please do rush ! மார்ச் 15 வரையே அதற்கான அவகாசம் !
3.மார்ச் இதழ்கள் ஆன்லைன் லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளன ! லிங்க்ஸ் இதோ :
https://lion-muthucomics.com/latest-releases/675-march-pack-2021.html
https://lioncomics.in/product/2021-march-pack/
4. சென்னைப் புத்தக விழாவின் கடைசி 3 நாட்கள் தொடரவுள்ளன !! நமது ஸ்டால் நம்பர்ஸ் 105 & 106 !! புது இதழ்கள் உட்பட - ஒரு வண்டி புக்ஸ் உங்களுக்கெனக் காத்துள்ளன ! Please do drop in !!
Bye all ; see you around !!
IMAGES :
![]() |
| காலனின் கால்தடத்தில்..! |
![]() |
| கதிரவன் கண்டிரா கணவாய் |
![]() |
| விதி எழுதிய வெள்ளை வரிகள் |
![]() |
| பொக்கிஷம் தேடிய பயணம் |
![]() |
| ஸ்டெர்ன் |






















