நண்பர்களே,
வணக்கம். "இன்று பதிவுக் கிழமை". இந்த வரியை blog-லும் சரி, வாட்சப் குழுக்களிலும் சரி, வாரந்தோறும் சனியன்று பார்த்து வருகிறோம் தான். And சமீப வாரங்களாகவே "போதுமே இந்தப் பதிவுப் பக்கம்" என்று நான் சண்டித்தணம் செய்து வருவதும் தெரிந்த விஷயமே. In fact ஒரு ஈரோடு வாசக சந்திப்புக்குப் பிற்பாடு பதிவினைப் போட நான் முனையாதது இதுவே முதல்முறை. So எந்த அளவிற்கு ஆளில்லா டீக்கடையில் ராகி மால்ட் ஆத்தும் பணியானது அலுத்துவிட்டது என்பது புரிந்திருக்கும். But "நாங்க பதில் போடாட்டியும் படிக்கத்தான் செய்யறோம்பு . So எழுதுவதைத் தொடரு...!" என்று நண்பர்கள் ஆங்காங்கே பதிவிடுவதையும் பார்க்கத்தான் செய்கிறேன்.
என் பார்வையில் நிலவரம் ரொம்பவே simple folks. உலகமே இன்றைக்கு fast forward-ல் இயங்கிக் கொண்டிருக்கும் போது, காமிக்ஸ் சார்ந்த எல்லாவுமே ஒரு time loop-ல் சிக்கி அதே இடத்தில் நிலைகொண்டிருப்பது சாத்தியமே அல்ல என்பதை நான் கொஞ்ச நாட்களுக்கு முன்பாகவே உணர்ந்தும் புரிந்தும் கொண்டேன். And இது குறித்து எவ்வவித வருத்தங்களும், விசனங்களும் என்னுள் கிடையாது. ஏனெனில் காதில் தக்காளி சட்னியைக் கசிய விடும் அந்தப் பழமொழி சொல்வது போல "மாற்றம் ஒன்றே மாறாதது" அல்லவா ? So 2012 முதலாய் நாம் கூடி, கும்மியடித்து வரும் இந்தப் பதிவுப் பக்கத்தில், நாட்களின் ஓட்டத்தோடு சற்றே அயர்வும், நேரமின்மை கொணரும் பொறுமையின்மையும் குடி புகுந்தது வியப்பு தரும் சமாச்சாரம் அல்ல தானே? ஒரு பதிவை எழுதிட, டைப் அடித்திட ஆகும் நேரமானது கிட்டத்தட்ட ஒரு 48 பக்க லக்கி லூக் கதையை எடிட் செய்வதற்கு அவசியமாகும் அவகாசத்திற்கு இணையானது. And இந்த உழைப்பு புஸ்ஸாகிப் போகும் போது - "போதுமே இந்த மெனக்கெடல் !" என்று தோன்றுவது இயல்பு தானே ? நண்பர்களோடு ஒரு bus பயணம் போகும்போது பேசிக்கொண்டே போவதைப் போலானது இந்தப் பதிவு என்பது எனது பலகாலத்து அபிப்பிராயம். உடன் பயணிப்போரும் பேசிக் கொண்டே வரும் வரைக்கும் நடுவில் இருப்பவனுக்கு அலுப்புத் தட்டாது தான் ! ஆனால் அருகே அமர்ந்திருப்போர் கண் அயர்ந்து விட்டால் லூசாட்டம் ஒண்டியாய்ப் பேசிக்கொண்டே போவது சுகப்படாது அல்லவா? எனது நிலையும் exactly the same guys. நானாகவே சிரித்து, நானாகவே வருந்தி, நானாகவே சிலாகித்து, நானாகவே வீட்டில் போய் கட்டையைக் கிடத்துவதற்குப் பதிலாய் கம்யூனிட்டியில் உங்களோடு கரம் கோர்த்து, கும்மியடித்துவிட்டுப் போகலாமே என்பதே எனது எண்ணமாக இருந்து வந்துள்ளது. இதோ - கடந்த ஓரிரு நாட்களிலேயே கணிசமான முக்கிய வினாக்களை அங்கு முன்வைத்து உங்களின் பதில்களையும் பெற்றுக்கொள்ள முடிந்திருந்ததே ? அந்த விதத்தில் blog கொஞ்சம் பழைய அம்பாஸடர் வண்டியைப் போலானது தான் - மறுப்பதற்கில்லை !
"சரி... ரைட்...! புரியுது உன் நிலைப்பாடு. அப்புறம் இந்த பதிவு எதுக்குடா தம்பி ?" என்ற உங்கள் மைண்ட்வாய்ஸ் கேட்காதில்லை ! ஆபிஸில் ஒரு சமீப மதிய பொழுதில் நிகழ்ந்ததொரு சமாச்சாரம் has a role in this. வழக்கம் போல நம்மவர்கள் போனில் பிஸியாகியிருக்க, நான் உலாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது பரபரவென சைக்கிளில் ஒரு பரிச்சயமான உருவம் வந்திறங்கியது. அது வேறு யாருமல்ல நமது மூத்த வாசகரும், சிவகாசியின் மூத்த மருத்துவர்களில் ஒருவருமான டாக்டர் பாலசுப்பிரமணியன் அவர்களே. கிட்டத்தட்ட நாம் கடை திறந்த 1984 முதலாய், லயனின் அதிதீவிர அபிமானி அவர் என்று சொல்வது ஒரு understatement தான். நமது துவக்க நாளது டவுன் ஆபீஸ் அவரது கிளினிக்கிற்கு ரொம்பவே அருகே என்பதால் தவறாமல் அவரது கம்பவுண்டர் உதவியாளர் மாதாமாதம் நம்ம ஆபீஸில் ஆஜராகி விடுவார் - டாக்டருக்கான இதழ்களை வாங்கிச் செல்ல ! இதழ்களை வாங்கிப் போன மறுவாரமே, நீல நிற இன்லண்ட் லெட்டரில் டாக்டரின் அலசல் கடிதமானது, நுணுக்கி நுணுக்கி எழுதப்பட்ட எழுத்துக்களில் வந்து சேரும் ! And அந்தக் கடிதத்தில் இம்மி வெற்றிடமும் இன்றி, ஓரஞ்ச்சாரம் வரை நிறைத்திருக்கும். .நாம் சாணித்தாளில் b&w-ல் வெளியிட்டுக் கொண்டிருந்த நாட்களிலேயே மாய்ந்து மாய்ந்து சிலாகிப்பவர், பின்நாட்களில் கலரில், உயர்தரத்தில், தயாரிக்கத் தொடங்கிய பிற்பாடு, ரெகுலராய் அவரே நேரில் வந்து பெற்றுச் செல்வதும் நடைமுறையாகிப் போனது. மாதம்தோறும் ரெகுலராக அவர் வந்தாலும், சில சமயங்களில் தான் அந்நேரம் நான் ஆபீஸில் இருப்பதுண்டு. அவ்விதம் பார்க்கும் போதெல்லாம், அற்புதமான வார்த்தைகளால் மனதை நிறைப்பது நிகழத் தொடங்கியது. "சாரி விஜயன் தபால் எழுத இப்போதெல்லாம் நேரமில்லை...! புக்ஸ் சூப்பர்... தொடருங்கள்.!" என்று அவர் சிரித்த முகத்தோடு சொல்லும்போது, கடுதாசி நின்று போனது ஒரு குறைபாடாகவே எனக்குத் தோன்றவில்லை தான். இரு வாரங்களுக்கு முன்பாக நிகழ்ந்ததும் மிகச் சரியாக அதுவேதான். பென்ஸ் கார் ஓட்டும் வசதி இருந்தும் அதே சைக்கிளில் இன்னமும் பவனி வரும் டாக்டர் சார் அதே புன்னகையோடு, அதே போல இதழ்களை சிலாகித்துபடி, அதேபோல பாராட்டுக்களையும் தெரிவித்துவிட்டு விடைபெற்றுச் சென்றார். அந்த நொடியில் ஏதோவொரு பணிக்குள் நான் புகுந்திருந்த, அது அந்நேரம் பெரிதாய் sink in ஆகி இருக்கவில்லை. ஆனால் நேரமின்மை காரணமாய் அவரது அலசல்கள் மட்டுமே தொடரவில்லையே தவிர - வாசிப்பின் மீதிருந்த நேசம் குறையவில்லை என்பது இன்று யோசிக்கும் போது மண்டையில் உரைக்கிறது. And கிட்டத்தட்ட இந்தப் பதிவு பக்கத்தில் நீங்கள் சொல்லி வருவதும் அதையே தானே ? So கலந்தரையாடல்களில் நீங்கள் கலந்துகொள்ளாவிட்டாலுமே, வாசிக்கத்தான் செய்கிறீர்கள் எனும் போது, மொத்தமாய் கடையைச் சாத்துவது சரியல்ல என்பது புரிகிறது. அதே சமயம் - முன்போலவே வாராவாரம் பதிவுகளைப் போட்டுத் தாக்குவது என்பதுமே இந்த fastforward யுகத்தில் ஓவர்கில் ஆகிவிடும் என்று நெருடுகிறது ! So மாதத்தின் இரு வாரங்களில், பதிவுகளை சனியோ, ஞாயிறோ அன்று போடுவதென்று உத்தேசித்துள்ளேன். And maybe ஏதேனும் ஒரு இடைப்பட்ட வாரத்தில், பகிர்ந்து கொள்ள எனக்கு வேறு தகவல்கள் இருப்பின், பட்டென்று ஒரு பதிவைப் புகுத்தி விட்டால் போச்சு.தானே ? So இந்த நொடியில் இதுவே திட்டமிடல்..!
And பதிவு... பதிவு பற்றிய ஒரு அளவளாவலின் போது, வாடகைச் சைக்கிளை எடுத்துக்கொண்டு சேரனைப் போல பின்னோக்கிப் போவது தவிர்க்க முடியா ஒரு காரியமாகிறது Becos 13 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தப் பதிவு என்ன மாதிரியானதொரு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது என்பது அந்நாட்களின் veterans-களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். So சமயம் கிடைக்கும் போது, சந்தர்ப்பம் வாய்க்கும் போது, "பதிவுகளின் பாதையில்..." என்று flashback படலத்தோடு மொக்கை போடுவதாகவும் இருக்கிறேன்.
இங்கு எல்லாமே வேகம் எடுத்தது 2012-ன் மத்தியில் இருந்து தான் என்பது நினைவுள்ளது அதிலும் "என் பெயர் லார்கோ" இதழ் முதற்கொண்டு கலரில் முற்றிலும் புதுமையான கதை ஜான்ராவினில் நாம் பயணிக்கத் துவங்கிய போது, அது குறித்து எழுதியதெல்லாம் நேற்றைய நிகழ்வு போல் நினைவில் உள்ளது. அந்நாட்களின் ஆகப்பெரிய வில்லன் மொக்கையிலும் மொக்கையான 2G Internet தான். சென்னையில் சகோதரியின் வீட்டில் அமர்ந்து கொண்டு laptop-ல் ஒரு வார்த்தையை டைப் செய்துவிட்டு, அதன் தமிழுரு தலைகாட்டுவதற்குள் பக்கத்துத் தெருவில் போய் குல்பி ஐஸ் வாங்கிச் சாப்பிட்டு விட்டே வந்து விடலாம் என்றொரு சூழ்நிலை!! அந்தப் பதிவுக்கு மட்டுமே கிட்டத்தட்ட 9 மணி நேரங்கள் மல்லு கட்டியதெல்லாம் நமது வீர சரித்திரத்தின் ஒரு பக்கம். And அந்நாட்களில் ராக்கூத்து என்பது ஒரு ரெகுலரான சமாச்சாரம் அடுத்த மாதம் வரவிருக்கும் இதழ்களுக்குப் பெயர் சூட்டும் படலம் அரங்கேறியதெல்லாம் இங்கே தான் என்பது எத்தனை பேருக்கு நினைவுள்ளதோ ? லக்கியுடனான ஆண்டுமலருக்கு "The New Look Special" என்று பெயர் தந்தீர்கள் ! கேப்டன் ப்ரின்ஸ் & ரிப்போர்ட்டர் ஜானி கதைகள் இணைந்து வெளிவந்த டபுள் ஆல்பமுக்கு Double Thrill Special என்று பெயரிட்டீர்கள் ! எமனின் திசை மேற்கு அப்புறம் கேப்டன் டைகரின் சாகசம் இணைந்து வந்ததற்கு The Wild West Special என்றெல்லாம் இங்கு நம்மவர்கள் பெயர் சூட்டி ரகளை செய்தது ஒரு பொற்காலம். And yes, கையைப் பிடிச்சு இழுத்தியா ? என்று தொட்டதுக்கெல்லாம் சட்டைக் கிழிப்புகள் அரங்கேறியதுமே அந்நாட்களின் மறக்க இயலா ஜாகஜங்களே !!
உள்ளதைச் சொல்லப் போனால் துவக்க நாட்களில் சமூக வலைத்தளத் திசைக்கு முற்றிலும் புதியவனான எனக்கு தலையும் புரியவில்லை - தூரும் புரியவில்லை. எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக இருக்கத் தானே நினைக்கிறோம்.....? அப்புறமும் மூத்திரச் சந்தின் இரு பக்கங்களுமே சதா காலத்துக்குத் திறந்தே கிடக்கின்றனவே - why ? என்று மண்டையைச் சொறிந்து கொண்டே பாதி நாட்களைக் கடந்திருப்பேன். ஒரு பதிவெல்லாம் வெளியான சற்றைக்கெல்லாம், சட்டசபைக்கு tough தரும் பாணியில், பாட்டில்கள் பறக்காத குறையாக அமளிகள் அரங்கேறிட, கிட்டத்தட்ட 175 பின்னூட்டங்கள் பதிவான பிற்பாடும் அந்தப் பதிவையே, முழுசுமாய்த் தூக்க நேர்ந்ததும் இன்னமும் நினைவில் உள்ளது.
But பக்காவான சிமெண்ட் கூரையெல்லாம் போடப்பட்டு மூத்திரச் சந்து பிரமாதமாய் கிரகப்பிரவேசம் கண்டதோ - தங்கக் கல்லறையின் கலர் வார்ப்பு அக்டோபர் 2012-ல் வெளியான நாளில் தான். "இன்னாமா நீ ஒரிஜினல் மொழிபெயர்ப்பை மாத்தப் போச்சு ??? இப்போ எழுதியிருப்பது அதே கருணையானந்தமாக இருந்தாலும் சரி - ஒன்ன வெளுக்காமல் விடமாட்டோம் !" என்று தெளிய வைத்துத், தெளிய வைத்துச் சாத்தியதெல்லாம் மறக்கத்தான் முடியுமா? அதுநாள் வரையிலும் கம்பளத்தில் நம்ம கிட் ஆர்டின் பறப்பது போலவே, நானும் ஒரு தனி லெவலில் பறந்து கொண்டிருந்தேன் என்பது தான் நிஜம். "ஆஹா இந்த ராஜவாழ்க்கையை இத்தனை காலமாய் தவற விட்டுவிட்டோமே...!!" என்ற மிதப்பு கணிசமாய் உள்ளுக்குள் குடியிருந்தது. ஆனால் தங்கக் கல்லறையில் ஒரு புது ஸ்கிரிப்ட் களமிறங்கிய நொடியில் விழுந்த சாத்துக்கள் சலூன் சண்டையில் டெக்சிடம் எதிராளிகள் வாங்கும் குத்துக்கள் எப்படி இருக்கும் ? என்பதை எனக்குக் கண் முன்னே கொணர்ந்து காட்டின. ஓஹோ.... இது முழுக்க முழுக்க பறக்கும் பயணம் மட்டுமல்ல - விஜயகாந்த் பாணியில் பறந்து பறந்து லெப்டு கிக் விடும் நம்மாட்களைச் சமாளிக்க வேண்டிய பயணமுமே கூட என்பதை உணர்ந்த நொடியில் ரெண்டு நாட்களுக்கு ராவெல்லாம் தூக்கம் பிடிக்கவில்லை ! பேசாம ஏதாச்சும் சாக்குப்போக்கு சொல்லிப்புட்டு பிளாக்கை மொத்தமாகவே காலி பண்ணிப்புடலாமா ? என்றெல்லாம் நினைக்கத் தோன்றியது.
அதேபோல இன்னொரு மறக்க இயலா "செவிளோடு சாத்துப் படலம்" அரங்கேறியது நமது மதியில்லா மந்திரியின் உபயத்தில்.உங்களில் எத்தனை பேருக்கு அது நினைவுள்ளதோ again தெரியவில்லை ஆனால் ஒரு 16 பக்க மதியில்லா மந்திரி சிறு கதையைத் தந்துவிட்டு அதனைத் தமிழாக்கம் செய்து அனுப்பும்படி போட்டி ஒன்றை அறிவித்திருந்தோம். அந்நாட்களில் ரவுண்டு கட்டி பங்கேற்றோர் எக்கச்சக்கம். ஆனால் எனக்கோ - "இது சூத்தை..... இது நொள்ளை ... இது சரிப்படாது.... இது சுகப்படாது...." என்று அத்தனையையும் கழிக்கும் மனப்பாங்கே ஓங்கி இருந்தது. இன்று யோசித்துப் பார்க்கையில், 'என்னடா இத்தனை பெரிய பேமானியா இருந்திருக்கே ?' என்று என்னை நானே கேட்டுக்கொள்ளத் தான் தோன்றுகிறது. ஆனால் அன்றைக்கோ ஒட்டுமொத்தமாய் அத்தனை பேரது முயற்சிகளையும் தூக்கிக் கடாசிவிட்டு, "எதுவும் சரியில்லை - so இதோ நானே எழுதிவிட்டேன் !" என்று எனது வார்ப்பை பப்ளிஷ் செய்திருந்தேன். "ஏண்டா டேய்..... மானாட மயிலாட போட்டிக்கு மேடையில வந்து டான்ஸ் ஆடுறது சுமார் என்றால் நடுவராக இருப்போரே டான்ஸையும் போட்டுவிட்டு, மெடலையும் நெஞ்சில் குத்திக் கொள்வார்களா ?"என்று குமுறிக் குமுறி எடுத்தது மூத்திரச் சந்தின் வீர வரலாற்றில் இன்னொரு அத்தியாயம். அதன் நீட்சியாக இன்னொரு போட்டியும் நடத்தி, அதில் நம்ம இயவரசர் ஏதோவொரு பரிசை வென்றதெல்லாம் சன்னமாய் ஞாபகமுள்ளது !
ஆனால் எல்லாமுமே அனலாய்த் தெறிக்கத் தொடங்கியது 2013 ஜனவரிக்கு வெளியாகவிருந்த நமது Never Before ஸ்பெஷல் சார்ந்த பிரவ்யூக்களை நான் போடத் துவங்கிய பிற்பாடே. 400 ரூபாய் விலையில், ஐந்தோ ஆறோ ஏழோ கதைகளுடன் ஆன ஒரு கதம்ப இதழை அட்டகாசமாய் அறிவித்திருந்து அதற்குள் பேயாய் பணியாற்றிக் கொண்டிருந்தோம். அன்றைக்கெல்லாம் எனக்கு வீட்டில் யாரும் கிடையாது. பையன் சென்னையில் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்க, வீட்டம்மாவும் அவனுக்கு சமைத்துப் போட சென்னையில் செட்டில்ட். நான் மட்டும் இரு வாரங்களுக்கு ஒருமுறை வார இறுதிகளில் சென்னைக்கு ஷண்டிங் அடித்துக் கொண்டிருப்பேன். So ஆபீஸில் வேலை முடித்துவிட்டு நைட் ஒன்பது மணிவாக்கில் வீட்டுக்குப் போனால் - இன்றைய ரீல்ஸோ, இன்ஸ்டா ஷார்ட்ஸோ, OTT தளங்களோ கிடையவே கிடையாது - பொழுதை ஒப்பேற்ற. ஆக அங்கேயும் கம்ப்யூட்டரை ஆன் செய்துவிட்டு blog-ல் குடியிருப்பதே அந்நாட்களது எனது வாழ்க்கையின் ஒரு முழுமூச்சான அங்கம். And கண்ணிமைக்கும் நொடிக்குள் refresh கொடுத்தால் - ஐந்தோ பத்தோ நண்பர்கள் கமெண்ட்ஸ் போட்டுருப்பார்கள் ! அதற்குப் பதில் சொல்கிறேன் பேர்வழி என்று அடுத்த புதைகுழிக்குள் காலை விடுவது ; அப்பாலிக்கா அதை வெளியே எடுத்து என் வாய்க்குள் திணித்துக் கொள்வது என்று செம ஜிலோவென இரவுகள் நகர்வது வாடிக்கை.
அந்த மாதிரியான சூழலில்தான் NBS சார்ந்த பிரிவியூக்களை வாராவாரம் ஒரு நாயகன் என்ற வீதத்தில் போடத் துவங்கியிருந்தேன். And ஒரு பதிவெல்லாம் இரவு இரண்டரை மணிக்கு பூர்த்தி செய்தேன் என்பதும் நினைவில் உள்ளது. அதைவிடப் பெரிய கொடுமை - இரண்டரை மணி வரை முழித்திருந்து சீனியர் எடிட்டர் அந்தப் பதிவை வாசித்ததுதான். ஏனெனில் ஒன்றே முக்காலுக்கு எனக்கு ஒரு மெசேஜ் வந்திருந்தது - "என்ன பதிவை இன்னும் காணோம் ?" என்று. சொ 2012 -ன் அந்த நாட்களெல்லாம் முழுநீள ஆக்ஷன் மேளாக்களாகத் தெறிக்கவிட்டுக் கொண்டிருந்தாலும், வாசிப்பினை முற்றிலும் இன்னொரு உச்சத்துக்கு இட்டுச் செல்ல, இந்த பிளாக் சார்ந்த activities எந்தளவிற்கு உதவின - என்பதை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. Those were simply unbelivably aweesome days. உங்களுக்கெல்லாம் டிரவுசர் போட்ட பால்யங்களை எண்ணி நோஸ்டால்ஜியா தலைதூக்குகிறதெனில், எனது நோஸ்டால்ஜியா நிலை கொண்டிருப்பதெல்லாமே 2012-க்கு பிற்பாடான தினங்களில்தான்.
சென்னையில் ஜனவரியில் புத்தக விழாவில் NBS ரிலீஸ் என்று நாம் அடித்த லூட்டிகளும், அந்த இதழை நீங்கள் சிலாகித்த அற்புதங்களும், அதில் வெளியாகியிருந்த ஜில் ஜோர்டன் கதையில் ஏதோ ஒரு பிழை உள்ளது என்று பிரான்சிலிருந்து நண்பர் ஒருவர் ரவுண்டு கட்டிக் குமுறியதும் 13 ஆண்டுகள் கழிந்தும், நினைவில் தொடர்கின்றன. நேரம் கிடைத்தால் 2012-ன் இரண்டாம் பாதி சார்ந்த பதிவுகளையும் NBS ரிலீஸ் பதிவினையும் மேய்ந்திட முயற்சி செய்துதான் பாருங்களேன். சர்வநிச்சயமாய் ஒரு அதிரடி டெக்ஸ் சாகசத்தை உடனிருந்து அனுபவித்தது போன்றதான உணர்வு உத்தரவாதம்.
ஒவ்வொரு பதிவுக்கும் அந்நாட்களில் அடித்த லூட்டிகளும், ஷண்டிங்குகளும், பல்டிகளும், ஆயுட்கால நினைவுகள். இன்டர்நெட் இணைப்புகளுக்கு டாங்கிள் ஒன்றை லேப்டாப்பில் சொருகிக் கொண்டு வானம் வழியாய் இன்டர்நெட் சிக்னல் பாய்ந்து நம்மைக் கரை சேர்த்து விடாதா ? என்ற ஏக்கத்தில் தாம்பரம் ரயில் நிலையத்தில், பெங்களூருவில், கும்பகோணத்தில், திருச்சியில், தேவுடு காத்திருந்திருக்கிறேன். அமெரிக்க, ஐரோப்பிய விமான நிலையங்களின் அநேகங்களில் தவம் கிடந்திருக்கிறேன். அட, ரூமுக்குள் லைட்டைப் போட்டு டைப்படித்தால் பையன் தூங்க முடியாதே - என்று சென்னை ஹோட்டலில் பாத்ரூமுக்குள், வாஷ்பேசின் ஸ்லாப் மீது ஏறி அமர்ந்தபடிக்கே அதிகாலை 4 மணிக்கு டைப்படித்திருக்கிறேன் ! 2013 முதல் இஷ்டத்துக்கு ஒவ்வொரு கிழமையில் வெளிவந்து கொண்டிருந்த பதிவுகள், சீராய் ஞாயிறுதோறும் - என்ற discipline தலைதூக்கியது LMS வெளியீட்டுக்கு முன்பாகத்தான். அதுபற்றி இன்னொரு வாரம் சாவகாசமாகப் பார்ப்போமே ?
Back to the ground and back to reality - ஆகஸ்ட் மாதத்தின் இதழ்கள் அத்தனையுமே அட்டகாசமாய் விற்பனை கண்டுள்ளது உள்ளமெல்லாம் மகிழ்வூட்டும் சமாச்சாரம். டெக்ஸும், டைகரும் ஒரே மாதத்தில் வெளிவரும்போது பட்டாசுகளுக்குப் பஞ்சமே இருப்பதில்லை என்பது yet again நிரூபணமாகியுள்ளது. And இம்முறையோ - டெரிஃபிக் டெக்ஸ் தனித்தடத்தின் உபயத்தில், "எல்லையில் ஒரு யுத்தம்" இரு ஆல்பங்களாய் வெளிவந்திருந்தாலுமே, have been absolute blockbusters. 2000 வருஷத்தில் வெளியான இந்த சாகசம், 26 ஆண்டுகள் கழிந்திருக்கும் நிலையில், நம்மில் நிறையப் பேருக்கு முற்றிலுமாக மறந்திருந்தது obvious. எனக்கெல்லாம் அந்த மில்லினியம் சூப்பர் ஸ்பெஷல் என்ற பெயரையும், அட்டைப்படத்தையும் தாண்டி சுத்தமாய் எதுவுமே ஞாபகத்தில் தங்கியிருக்கவில்லை. So இதனுள் பணியாற்றும்போது துளி அயர்வும் இன்றி செம ஜாலியாக ரவுண்டடிக்க முடிந்தது. And அந்நாட்களில் டெக்ஸ் கதைகளில் எக்ஸ்டரா நம்பர்கள் போடும் பழக்கம் இருந்ததில்லை ! டெக்ஸ் & கார்சன் மத்தியிலான உரையாடல்கள் தட்டையாகவே இருப்பதுண்டு ! ஆனால் 2012 முதலாகவே இதை மாற்றியமைக்க ஆரம்பித்து விட்டதால் தயக்கமின்றி மூக்கை உள்ளே புகுத்தியிருந்தேன் & பாராட்டுக்களே பலனாகியிருப்பதில் ஹேப்பி அண்ணாச்சி !
Moving on - இதோ செப்டம்பரிலும் டெக்ஸ் ஒரு யுத்தமிடுகிறார் - இம்முறை எமனுடன் !! 96 பக்கங்களே கொண்ட செம crisp சாகசம் & இந்த நொடியில் அதனுள்ளே தான் பயணம் பண்ணி வருகிறேன். இதெல்லாம் 1990-களில் தம்மாத்துண்டு சைசில் வெளியான black & white ஆல்பம் என்பதால் - கலரில், மினுமினுப்பாய்ப் பார்ப்பது ஒரு அட்டகாச அனுபவமாக இருக்குமென்பது உறுதி !! இதோ - ஒரு பிரிவியூ :
இங்கும் கார்சனுக்கு கோட் நம்பர்ஸ் போடும் வாய்ப்பு அமைந்துள்ளது - நிச்சயம் ரசிக்குமென்ற நம்பிக்கை உள்ளது ! இங்கொரு சுவாரஸ்ய கொசுறுத் தகவல் - துவக்கத்தில் கொஞ்சம் மித வேகமே காட்டிய TERRIFIC TEX சந்தாத்தடம் - "எல்லையிலொரு யுத்தம்" 2 இதழ்களினையும் பார்த்தான பின்னே சிட்டாய்ப் பறக்கத் துவங்கிவிட்டது ! காத்திருக்கும் இந்த சிங்கிள் ஆல்பம் அந்த வேகத்துக்கு உரமூட்டும் என்ற நம்பிக்கை நிறையவே உள்ளது !
ரைட்டு... காத்திருக்கும் மீதப் பணிகளைக் கவனிக்கப் புறப்படுகிறேன் folks ! நேரம் கிட்டின் - please do write something here ....! Bye all...see you around ! And have a great weekend !



❤️
ReplyDeleteவாழ்த்துகள் தம்பி 🥳🥳🥳
Deleteவாழ்த்துக்கள் தம்பி
Deleteவாழ்த்துக்கள் கார்த்திக். அண்ணா....
Delete😂😂😂
Deleteவணக்கங்கள்
ReplyDeleteGood Evening Sir
ReplyDeleteமீ
ReplyDeleteஅடடா வடை போச்சே
Delete😁😁😁
Deleteவந்துட்டோம் ல 🥳😎
ReplyDelete🥳😎
Delete10th
ReplyDeleteMe also present
ReplyDelete10 kulla vanthachuu
ReplyDeletehi
ReplyDeleteசனிக்கிழமை டீ கடை ஓபன் பண்ணியதற்கு நன்றிகள் சார்
ReplyDeleteமிக்க மிக்க நன்றி சார்
Deleteநானும் வழிமொழிகிறேன் சார்...
Deleteமிக்க நன்றி சார்
ReplyDeleteHi
ReplyDeleteசூப்பர் பதிவு சார். இந்த இரண்டு வாரத்துக்கு ஒரு முறை பதிவு ok தான். ஆனால் ரெகுலர் ஆக தொடருங்கள் சார்.
ReplyDelete+1
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகொஞ்சமாய் சலிப்பாகறப்பெல்லாம் நீங்க போடும் பதிவுகள் தான் உற்சாகமாய் இயங்க வைக்கும்.
ReplyDeleteஆனா நீங்களே இப்படி பேரா பேராவாய் கண்ணீர் விடும்போது நாங்க சொல்றதுக்கு எதுமில்லை.
சொல்ல போனா பதிவுகள் இல்லாட்டியும் கூட "சரி அப்பப்ப கம்யூனிட்டி பக்கம் எட்டி பாத்துட்டு""ஆங்..சார் இருக்காரு"" நாம வேலய பாப்போம்" என்ற மனநிலைக்கு கிட்டத்தட்ட வந்தாகிவிட்டது.
எதையும் ரெம்ப எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.ஆகவே நீங்க பதிவு போடறப்ப போடுங்க, போட்டா படிச்சுக்கறேன்.
எமனுடன் ஒரு யுத்தம் அட்டபடம் தூக்கல் 👏👏👏👏🔥
ஏனுங்....? சங்கிலி முருகன் பஞ்சாயத்து தான் நினைவுக்கு வருது....! இதிலே எந்த பாராவிலே கண்ணீரை பாத்தீங்கோன்னு புரிலியே...?! 13 ஆண்டுகளுக்கு முன்பான நினைவுகளுக்குள் பயணம் போயிருந்தேன் - அவ்வளவே!
Deleteகண்ணீர்த்தீவில் மாயாவி படிக்கிறப்போ இது குறுக்கே புகுந்திடுச்சோ சார் 🤔?
பதிவு போட முடியலைங்கறீங்களே.
Deleteவாசிங்க சார் முழுசா...!
Deleteஇந்த மாதம் இந்த அராத்துகள் டெக்ஸ் & டைகர் போன்ற பசங்களை அந்த பக்கம் போய் ஓரமாக விளையாடுங்கள் என்று சொல்லி விட்டார்கள்
ReplyDelete😊😊😊
Delete***டாக்டர் பாலசுப்பிரமணியன்***
ReplyDeleteபழைய இதழ்களில் கடிதம் பகுதியில் இவரது பெயர் பார்த்து உள்ளேங்க
அதுவும் நம்ம ஈரோடு டாக்டர் பாலசுப்ரமணியம் சகோ அறிமுகம் ஆன பின்னர் இவர்தானா அவரா என சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது
கடிதம் எழுதிய சகோதரரை பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சிங்க, சார்
அருமையான நினைவு பகிர்வுகள் சார்
ReplyDelete//சட்டசபைக்கு tough தரும் பாணியில், பாட்டில்கள் பறக்காத குறையாக அமளிகள் அரங்கேறிட,//
ReplyDelete😂😂😂😂😂
Missed it
//இம்முறையோ - டெரிஃபிக் டெக்ஸ் தனித்தடத்தின் உபயத்தில், "எல்லையில் ஒரு யுத்தம்" இரு ஆல்பங்களாய் வெளிவந்திருந்தாலுமே, have been absolute blockbusters//
ReplyDeleteGood News Sir
//ஒவ்வொரு பதிவுக்கும் அந்நாட்களில் அடித்த லூட்டிகளும், ஷண்டிங்குகளும், பல்டிகளும், ஆயுட்கால நினைவுகள்.//
ReplyDelete💛💙💚💜
எமனுடன் ஒரு யுத்தம்
ReplyDeleteஅட்டைப்படம் சூப்பர் சார்
//டெக்ஸும், டைகரும் ஒரே மாதத்தில் வெளிவரும்போது பட்டாசுகளுக்குப் பஞ்சமே இருப்பதில்லை என்பது yet again நிரூபணமாகியுள்ளது//
ReplyDelete🔥🔥🔥🔥🔥
Yamanudan oru yudham second volume wrapper awesome sir
ReplyDeleteஇது சிங்கிள் புத்தகம் சகோ
Deleteஅது ஒற்றை புக் மட்டுமே நண்பரே..!
Deleteசார்...
ReplyDeleteஎன்னைப் பொருத்தவரை நமது Blog ஒரு காமிக்ஸ் வேடந்தாங்கல்...
2011 முதல் இந்த blogஐ படித்து வருகின்றேன்... ஒரு பதிவை கூட miss பண்ணியதில்லை... தாமதமாக கூட படித்திருப்பேன் ஆனால் தவிர்த்ததே கிடையாது...
2012-16 காலகட்டங்களில் நமது bogல் கமெண்ட் செக்ஷ்னை படிப்பதே ஒரு அலாதி சுகம்... அவ்வளவு involvedஆன நண்பர்கள் இருந்தனர்... அவர்களுடன் நான் நேரில் பேசியதில்லையே ஒழிய இன்றுமே அவர்கள் என் நினைவில் உள்ளார்கள்...
என்னைப் பொருத்தவரை நான் ஒரு பெரிய introvert மற்றும் கடைந்தெடுத்த சோம்பேறி... So பதில் எழுதுவதோ, டைப் செய்து பதிவிடுவதோ எனக்கு வேப்பங்காய்...
கோவிட் காலங்களில் இந்த blog மட்டும் இல்லையென்றால் எனக்கு பைத்தியமே பிடித்திருக்கும்..
எனது தாழ்மையான வேண்டுகோள், தயவு செய்து வாரப் பதிவுகளை நிறுத்த வேண்டாம்... என்னால் இயன்ற அளவு புத்தக ரிவ்யூஸ் பதிவிட முயல்கிறேன்...
நன்றி...
//2012-16 காலகட்டங்களில் நமது bogல் கமெண்ட் செக்ஷ்னை படிப்பதே ஒரு அலாதி சுகம்...//
Deleteஆமாங்க சகோ
பதிவை படித்தேனோ இல்லையோ கமெண்ட்ஸ்களை படிப்பது சுவராசியமானது
எனது தாழ்மையான வேண்டுகோள், தயவு செய்து வாரப் பதிவுகளை நிறுத்த வேண்டாம்... என்னால் இயன்ற அளவு புத்தக ரிவ்யூஸ் பதிவிட முயல்கிறேன்...
Delete####
எஸ் சார்...நூறு சதவீதம் வழிமொழிகிறேன்..
H sir ,
ReplyDeleteவலைப்பதிவு பதிவுக்கு மிக்க நன்றி, சார். இங்கே இருக்கும் அனைவரையும் போலவே நானும் ஒவ்வொரு சனிக்கிழமையும் உங்கள் வலைப்பதிவு பதிவை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். ஒரு சனிக்கிழமை உங்கள் பதிவு வரவில்லை என்றால், ஏதோ ஒரு வெறுமை ஏற்பட்டது போல உணர்கிறேன். அதே நேரத்தில், நீங்கள் சொல்லியிருக்கும் காரணத்தையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. உங்களால் முடிந்தபோதெல்லாம் தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.
நான் 2023-ஆம் ஆண்டிலிருந்து லயன் முத்து காமிக்ஸ் படித்து வருகிறேன். அந்தக் காலகட்டத்தில் நீங்கள் எழுதிய புத்தகங்கள் மற்றும் கதைகள் பற்றித் தெரிந்துகொள்வதற்காக, உங்கள் பழைய வலைப்பதிவு பதிவுகளையும் அடிக்கடி திரும்பிப் படிப்பேன்.
இந்த காமிக்ஸ் உலகத்தை இன்றும் உயிரோடு வைத்திருப்பதற்கு மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றி, சார். நான் படிக்கும் ஒவ்வொரு பழைய அல்லது புதிய புத்தகத்துடனும், உங்கள் மீதான என் அன்பும் மரியாதையும் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
மிக்க நன்றி, சார்.
//ஒரு சனிக்கிழமை உங்கள் பதிவு வரவில்லை என்றால், ஏதோ ஒரு வெறுமை ஏற்பட்டது போல உணர்கிறேன்//
Deleteஉண்மை சகோ
+1
Deleteகடந்த மூன்று ஆண்டுகளாக சரிவர புத்தகங்கள் படிக்க முடியவில்லை. 100 க்கும் மேற்பட்ட காமிக்ஸ்களை படிக்காமல் வெறுமனே வாங்கி மட்டுமே வைத்திருந்தேன். அதற்கு மேலும் இந்த நடைமுறை தொடரலாது என்று முடிவெடுத்து கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து படித்து ஏறத்தாள முடித்துவிட்டேன். புத்தகங்கள் அனைத்தையும் படிக்காமல் 2026 சந்தா கட்டுவதில்லை என்று மனதை கல்லாக்கிக் கொண்டு முடிவெடுத்தேன். இந்நிலையில் தான் ஈரோடு புத்தகத் திருவிழாவில் இந்த ஆண்டுக்கான சந்தாவோடு சேர்த்து எட்டாயிரம் ரூபாய்க்கு புத்தகங்களை வாங்கினேன்.இந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு 10-15 கதைகளை படித்து முடித்துவிட்டேன்.நான் இந்த வாசிப்பு பழக்கத்தை இடையில் இரண்டு மூன்று ஆண்டுகளாக நிறுத்தியது சரியான நடைமுறையாக எனக்கு படவில்லை. இப்பொழுது திரும்பவும் வாசிக்கும் பொழுது அது ஒரு நல்ல ஒரு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறது. 2026-இல் படிக்காமல் விட்ட கதைகளை எல்லாம் அடுத்த ஒரு மாதத்தில் முடித்து விடுவேன். பிறகு வரும் கதைகள் அனைத்தையும் தொடர்ந்து பெண்டிங் வைக்காமல் படிக்கலாம் என திட்டமிட்டு இருக்கிறேன்.
ReplyDeleteவெல்கம் பேக் சார் 👍
DeleteGOOD that blog s back .. இந்த இரண்டு வாரத்துக்கு ஒரு முறை பதிவு ok தான் sir .. but dont discontinue ur posts in blog sir ..
ReplyDeleteFlash back நான் இன்னமும் வாசகன் தான் போலயே என்று பறைசாற்றுகிறது. எனினும் நீங்கள் உருவாக்கிய real arts ஓவியம் கொண்ட "எமனுடன் ஒரு யுத்தம்!" முதல் பதிப்பு அட்டையை தவறவிட்டது ஏனோ சார்.?
ReplyDeleteவணக்கம் நண்பர்களே.. 🙏🙏🙏
ReplyDeleteகம்யூனிட்டி ஆரம்பித்தான பின்புதான் இந்தத் தளம் காத்தாடிக் கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.. 🙏🙏
ReplyDeleteவாட்சப் தரும் வசதிகள் இப்போதெல்லாம் வாழ்க்கையின் ஒரு பகுதி ஆகி விட்டன சார் - so பிளாகுக்கும், கம்யூனிட்டிக்கும் - அதே செல், அதே நெட், அதே டைப்பிங் தான் தேவை என்றாலும், ஆட்டோமேட்டிக்காய் அங்கே தான் வண்டி இழுக்கிறது ...!
Deleteஇந்த தளத்தில் நீங்கள் பதிவிடுவதை நான் தொடர்ந்து வாசித்துக் கொண்டு தான் இருக்கிறேன். என்னைப் போல நிறைய நண்பர்களும் தொடர்ந்து வாசிப்பார்கள் என்று நினைக்கிறேன். சில பல சொந்த காரணங்களினால் கமெண்டுகள் போட முடியாமல் இருந்தாலும் தொடர்ந்து இந்த பதிவுகளை படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் புத்தகங்கள் வாசிக்காத கடந்த மூன்று ஆண்டுகளில் கூட ஒரு முறை கூட இந்த பதிவை படிப்பதை நிறுத்தவில்லை. ஒரு ஆசிரியரின் அனுபவத்தை கேட்பது என்பது அது ஒரு தனி ஆனந்தம். முடிந்த மட்டிலும் இதை தொடருங்கள் சார்.
ReplyDeleteஇப்பொழுது கூட நான் பதிலளித்து பதிவிடலாம் என்று நினைத்த பொழுது முன்பு போல போனில் எழுத்துக்களை தேடி தொலாவி டைப் அடித்துக் கொண்டிருந்த வேலையில், பழைய ஞாபகத்தில் செய்து கொண்டிருந்த வேலையில், திடீரென ஏஐ பற்றிய ஞாபகம் வந்தது. ஏனென்றால் இப்பொழுதெல்லாம் டைப் பண்ணி பதிலளிப்பதே இல்லை. எல்லா இடத்திலும் ஏஐயில் வாய்ஸில் பேசி அதை காப்பி பேஸ்ட் பண்ணி விடுகிறேன். அதையே இங்கும் செய்தால் நேரம் மிச்சமாகுமே என்று தோன்றியதனால் இப்பொழுது இந்த பதிவை கூட ஏஐயில் பேசித்தான் பதிவிடுகிறேன். 😄
ஹி. ஹி... நீங்க மட்டுமில்ல சார் 😎
Deleteதல அட்டைப்படம் கொல மாஸ் சாரே... தெறிக்குது.. 💥💥💥
ReplyDeleteஅன்புள்ள லயன் காமிக்ஸ் குழுவினருக்கு,
ReplyDelete2026 சென்னை புத்தகக் கண்காட்சியிலிருந்து லயன் காமிக்ஸ் புத்தகங்களைச் சேகரிக்கத் தொடங்கினேன். மேலும், “Singles சந்தா” (Booking No. 262)-விலும் சந்தாதாரராக இணைந்துள்ளேன்.
இரண்டு விஷயங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
கடந்த வாரம் Terrific Tex புத்தகம் தொடர்பாக உங்கள் Front Desk-ஐ WhatsApp மூலம் தொடர்புகொண்டேன். முதலில் ₹2,100 என்று விலை தெரிவிக்கப்பட்டது. நான் ஏற்கனவே சந்தாதாரர் என்றும், சந்தாதாரர்களுக்கான விலை ₹1,800 என்றும் குறிப்பிட்ட பிறகு, அதற்கு மேல் எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனவே, சந்தாதாரர்களுக்கான சரியான விலை என்ன என்பதையும், அந்த விலையில் புத்தகத்தை எவ்வாறு ஆர்டர் செய்வது என்பதையும் தயவுசெய்து தெளிவுபடுத்தவும்.
மற்றொரு விஷயம் கூரியர் கட்டணம் தொடர்பானது. இதற்கு முன்பு நான் சில புத்தகங்களை ஆர்டர் செய்திருந்தேன். அவற்றை ஆகஸ்ட் மாத சந்தா புத்தகங்களுடன் சேர்த்து அனுப்புமாறு குறிப்பாகக் கேட்டிருந்தேன். ஆனால், அந்தப் புத்தகங்கள் தனியாக கூரியர் செய்யப்பட்டதால், கூடுதல் கூரியர் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
குறிப்பாக ஏமாற்றமளித்த விஷயம் என்னவென்றால், ஆகஸ்ட் மாத சந்தா பார்சலில் ஒரே ஒரு சந்தா புத்தகம் மட்டுமே இருந்தது. நான் ஏற்கனவே ஆர்டர் செய்திருந்த புத்தகங்களையும் அதே பார்சலில் எளிதாகச் சேர்த்து அனுப்பியிருக்கலாம். இதனால் தவிர்க்கக்கூடிய கூடுதல் கூரியர் செலவு எனக்கு ஏற்பட்டுள்ளது.
ஒரு சந்தாதாரராகவும், ஒப்பீட்டளவில் புதிய காமிக்ஸ் சேகரிப்பாளராகவும், இந்த இரண்டு விஷயங்களையும் தயவுசெய்து பரிசீலித்து, குறிப்பாக கூடுதலாக வசூலிக்கப்பட்ட கூரியர் கட்டணம் மற்றும் Terrific Tex சந்தாதாரர் விலை தொடர்பாக உரிய தீர்வை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தயவுசெய்து இந்த விஷயங்களைப் பரிசீலித்து, எவ்வாறு தீர்வு காண முடியும் என்பதைத் தெரியப்படுத்துங்கள்.
உங்கள் நேரத்திற்கும் உதவிக்கும் நன்றி.
https://lion-muthucomics.com/tex-willer/1460-for-current-subscribers-the-terrific-tex-.html
Deleteகூரியர் விஷயத்தில் உங்களுக்குக் கையைப் பிடிக்காத வகையில் பார்த்துக் கொள்வார்கள் நண்பரே..
Delete*ரெகுலர் சந்தா
*சிங்கிள்ஸ் சந்தா
*லைட் சந்தா
*FAB 5 முன்பதிவு
*Graphic Novel Twins முன்பதிவு
Terrific Tex சந்தா முன்பதிவு
*இவை தவிர AI புக்ஸ்
ஆக ஆகஸ்ட் மாத டெஸ்பாட்சில் மட்டும் 7 வெவ்வேறு entities....!சின்னதாய் ஒரு கணக்கு போடச் சொல்லுங்கள் AI தம்பியை - இங்கு எத்தனை காம்பினேஷன்ஸ் சாத்தியமென்று! கிறுகிறுக்க வைக்கும் டெஸ்பாட்ச் இம்முறை - so ஓரிரு பிழைகள் inevitable. அந்தக் கூரியர் இரட்டிப்புச் செலவுகளை நாமே ஏற்றுக் கொள்வோம்! So no worries..
உண்மை சார்...போன முறை எனக்கு 20 ரூபாய் மதிப்பு உள்ள சிறுவர் இதழ்களை மாத சந்தாவில் அனுப்ப மறந்துவிட்டார்கள்..அதை நினைவுபடுத்தி அலுவலகத்திற்கு தெரிவித்து விட்டு நீங்கள் அடுத்த மாத சந்தா இதழ்களோடு கூட அனுப்பி விடுங்கள் என்று சொல்லியும் இல்லை சார் அடுத்த மாதம் என தள்ளி கொண்டே சென்றால் மறந்து விடுவோம் என அடுத்த நாளே எனக்கு இதழ்களை கொரியரில் அனுப்பி விட்டார்கள் எனக்கு எந்த கொரியர் செலவும் இன்றி...
Delete//ஆனால் தங்கக் கல்லறையில் ஒரு புது ஸ்கிரிப்ட் களமிறங்கிய நொடியில் விழுந்த சாத்துக்கள் சலூன் சண்டையில் டெக்சிடம் எதிராளிகள் வாங்கும் குத்துக்கள் எப்படி இருக்கும் ? என்பதை எனக்குக் கண் முன்னே கொணர்ந்து காட்டின. //
ReplyDelete😂😂😂😂😂
அந்நாட்களில் பற்பல வீர சாகஸங்கள் செய்துள்ளீர்கள், சார்
ReplyDelete😊😊😊😁😁
Sir
ReplyDeleteதங்கள் பதிவுக்கு
மிக்க நன்றிகள்
இப்பொழுது அராத்துகள் அடங்குவதில்லை. பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. 😄
ReplyDeleteதாத்தாஸ் 😍
Deleteஎமனுடன் ஒரு யுத்தம், அட்டைப்படம் பார்த்ததோடு சரி, fab ஃபைவ் sept என்ன சாகசம் என்று சொன்னீர்கள் என்றால் சந்தோஷமாக இருக்கும்
ReplyDeleteஇந்த மாதம் FAB 5 இல்லாமலே 5 புக்ஸ் நண்பரே ; அக்டோபரில் தான் அடுத்த புக் அதனில்!
Deleteஸ்டெர்ன் அட்டைப்படம் ப்ரிவ்யூ எப்போதுங்க சார்
ReplyDelete🙋🏻♂️🙋🏻♂️🙋🏻♂️
ReplyDeleteகடந்த கால நிகழ்வுகளை மீண்டும் கண் முன் கொண்டு வந்ததற்கு நன்றி சார். நான் இங்கு பதிவுகள் போட வில்லையென்றாலும் உங்கள் பதிவுகளையும் நண்பர்களின் பதிவுகளையும் படிக்காமல் இருந்ததில்லை. உலகமே கொரோனாவுக்கு அஞ்சி நடுங்கிய சமயம் நம்முடைய ப்ளாக் மட்டும் கொண்டாடாட்டமாய் காட்சியளித்ததெல்லாம் மறக்க இயலாது. ஒரு பதிவுக்கு நண்பர்கள் விடிய விடிய ஆயிரம் பின்னூட்டங்கள் வரை கொண்டு போன நிகழ்வெல்லாம் மறுபடி வரப்போவதில்லை. உங்களுடைய வெளிநாட்டு பயண அனுபவங்கள் எத்தனை முறை படித்தாலும் சலிக்காது. சுயபகடியுடன் கூடிய நகைச்சுவையும் த்ரில்லான நிகழ்வுகளும்(கொரில்லா!?) என்றும் மறக்காது. உங்களுக்கு தெரியாது. உங்கள் எழுத்தின் வலிமை. வற்றாத ஜீவநதி யாக உங்கள் பதிவுகள் என்றும் தொடரவேண்டும்.
ReplyDeleteவெல்கம் பேக் ஏடிஆர் சார்..நல்லாருக்கீங்களா...:-)
Deleteநலம் தான் தலீவர் சார்.
Deleteநீங்கள் நலமா சார்?
Deleteஎத்தனையோ கதைகள் சொல்லியிருக்கிறேன் - பச்சே அந்த கொரில்லா அனுபவத்தை சிறப்பாய் ஞாபகம் வைச்சிருக்கீங்களே சார் - இது நியாயமா 🥹....?
Deleteபதிவை வாசிக்க வாசிக்க நகைப்புடன் பழைய நினைவுகள் ஏற்படுகிறது சார்...அது ஒரு கலவர காலம் என்றாலும் இப்பொழுது அதனை நினைத்தால் கலவரகாலமும் பொற்காலமாக தெரிகிறது...:-)
ReplyDeleteதலீவரே சூப்பர்
Deleteதங்கள் கமெண்ட்ஸ்கள் பிரமாதமாக போஸ்ட் ஆகிறதுங்க
டெக்ஸ் அட்டைப்படம் ஆக்ஷன் எதுவும் இல்லாவிட்டாலும் மிக நன்றாக உள்ளது சார்...
ReplyDeleteபதினெட்டு பட்டில இருக்குற எல்லா சனங்களும் வந்து அட்டென்ஸ் போடுங்க மக்களே...ஆசிரியர் வாரத்துக்கு ரெண்டு பதிவு போட வச்சுரலாம்...:-)))
ReplyDeleteதலீவரே - என்ன இது நடுச்சாமத்தில் முழிச்சி 🥹...?
Deleteஅரத்தைகள் அடங்குவதில்லை. தாத்தாக்களின் அட்டகாசம்...!
ReplyDeleteசமூக பொருளாதார பிரச்சனைகளை வெறும் அரசியல் பிரச்சாரமாக இல்லாமல் நட்பு, காதல், முதுமையின் தனிமை, இழப்பு, கடந்த கால ரகசியங்கள், இன்றைய இளைய தலைமுறையின் சூழலியல் போராட்டங்கள் என மனித உணர்வுகளின் அத்தனை ஆழங்களையும் தொட்டுச் செல்லும் ஒரு கதை போக்கு.
வயதான கதாபாத்திரங்களை வைத்து இவ்வளவு விறுவிறுப்பாக தீவிரமான சமூக கருத்துக்களை இத்தனை ரசனை மிகுந்த விதத்தில் சொல்லுவது அவ்வளவு எளிதானது அல்ல.
என்னுடைய பார்வையில்
10/10
- Mithunan
பெருசுகளை lead கதாப்பாத்திரங்களாய் கொண்டிருப்பதே இந்தத் தொடரின் முதல் சிக்ஸர் சார்!
Deleteபகடி செய்யவும், உபதேசம் செய்யவும் ஆட்டோமேட்டிக்காய் அவர்களுக்கொரு அருகதை வாய்த்து விடுகிறதல்லவா?
Me the first!!😍😍😍
ReplyDeleteண்ணா... விடிஞ்சிடுச்சி!
Delete