நண்பர்களே,
YEAR 42 and Counting....👍
வணக்கம்! இறக்கை கட்டிப் பறப்பது அண்ணாமலை சைக்கிள் மட்டுமல்ல (no அரசியலுங்கோ)– காலச் சக்கரமும் தான்! தேய்ந்து, ஓய்ந்து போன cliche-களை உவமானத்துக்கு நான் இங்கே இரவல் வாங்கப் போவதில்லை! மாறாக, டெக்னாலஜியில் நாம் கண்டுள்ள மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் கொஞ்சமாய் நினைவு கூர்ந்தாலே – கடந்து சென்றிருக்கும் இந்த 500+ மாதங்களின் பரிமாணம் சுயமாகவே புரியும்!!
1984-ல் "கத்திமுனையில் மாடஸ்டி"க்கு அச்சுக் கோர்ப்பு செய்த வேளைகளில் கிட்டத்தட்ட 240 தனித்தனி சிறு டப்பிகள் கொண்டதொரு பெரிய மர கேஸை நிறுத்தி வைத்து, ஒவ்வொரு டப்பிக்குள்ளும் ஈயத்தினாலான தமிழ் எழுத்துக்களை போட்டு வைத்திருப்பார்கள்! 'யா' எங்கே உள்ளது? 'டீ' எங்கேயுள்ளது என்றெல்லாம் நினைவில் வைத்திருக்கும் கம்பாஸிட்டர்கள் அந்த எழுத்துக்களை சேகரித்து வரிகளை உருவாக்குவார்கள்! அதன் பின்னே அந்த ஈய எழுத்துக்களில் கருப்பு மசி பூசப்பட்டு பிரிண்ட் எடுக்கப்படும்! இன்றைக்கோ – லொடடு லொடடு லொடடென்று தட்டினால் சகல பாஷைகளிலும் ஸ்கிரீன் ரெடி!
அந்த நாட்களில் பிரிண்ட் போடப்படும் தமிழ் ஸ்கிரிப்ட்டை நமது ஆர்டிஸ்ட் டீம் கர்ம சிரத்தையாய் வெட்டி, ஒட்டி, ஓரம்-சாரங்களில் படங்களை நீட்டித்துத் தருவார்கள்! இன்றைக்கோ – again கொஞ்சம் லொட்டு.. லொட்டு.. லொட்டு!! பக்கம் ரெடி! அட, அதுவே இப்போது பூமர் ஸ்டைல் என்றாகிப் போய்விட்டது; செயற்கை நுண்ணறிவு அண்ணாத்தேயிடம் சொன்னால், கதையே எழுதி, படமும் வரைந்து, அதுவே வாசித்து, விமர்சனமும் செய்து விடும்!
அந்த நாட்களில் ஐரோப்பிய படைப்பாளிகளிடம் பேச வேண்டுமெனில் ‘இன்டர்நேஷனல் ட்ரங்க் புக்கிங்’ என்ற பெயரில் ஒரு நான்கு மணி நேரங்களுக்கு முன்பாகவே புக்கிங் பண்ணிவிட்டு, போனின் அருகிலேயே புளிசாதத்தோடு காத்திருக்க வேண்டியிருக்கும்! அப்புறமாய் டெலக்ஸ் வந்தது; அதைத் தொடர்ந்து fax வந்தது ; பின்னே pager என்றார்கள்; next செங்கக்கட்டி போலொரு மொபைல் போன் என்றார்கள்; பிற்பாடு ஸ்மார்ட்போன் என்றார்கள் ....வாட்சப் என்றார்கள்... Wi-Fi என்றார்கள்... 3G..4G...5G என்று பற்பல G-க்கள் தகவல் தொலைத்தொடர்பை உள்ளங்கைக்குள்ளேயே கொணர்ந்து விட்டனர்!
அட, அவ்வளவு போவானேன் folks? இரண்டு ரூபாய், மூணு ரூபாய் என்று தெருமுனைப் பெட்டிக்கடைகளில் தொங்கிய அந்த மெல்லிய நியூஸ்பிரிண்ட் காமிக்ஸ் புத்தகங்கள், இன்று பளபளக்கும் ஆர்ட் பேப்பரில், அட்டகாசமான வண்ணங்களில், ஹார்ட் கவர் பைண்டிங்கில் உங்கள் புத்தக அலமாரிகளை அலங்கரிப்பது கூட மாற்றங்களின் ஒரு மாயாஜாலம் தானுங்களே?
பள்ளி முடிந்து வந்ததும், கையில் இருக்கும் சில்லறைகளை சேர்த்துக் கொண்டு, புத்தகக்கடைக்கு ஓட்டமும் நடையுமாகச் சென்ற அந்த மாலைப் பொழுதுகள் நினைவிருக்கிறதா? 'லயன் காமிக்ஸ் புதுசு வந்துருச்சாண்ணா?' என்று கேட்டு, அந்த ஸ்பைடரையோ, ஆர்ச்சியையோ வாங்கியவுடன், வீட்டுக்கு வரும் வழியிலேயே வாசித்த அந்தத் தருணங்கள் நேற்றைய நினைவுகள்! And கச்சிதமாய் வாங்கியவற்றை அம்மாவின் கண்ணில் படாமல் வீட்டுக்குள் கொண்டு செல்வது பற்றாதென, ஸ்கூல் பைக்குள் அவற்றைப் பதுக்கி எடுத்துப் போய் நண்பர்களோடு ஷேர் விட்டதெல்லாம் அலாதி! இப்போதோ – கிரெடிட் கார்டைத் தேய்த்து சில ஆயிரங்களிலான சந்தாவைக் கட்டிப்புட்டு வீடு தேடி கொரியர் வரும் போது 'நண்பன் கொடுத்த கிப்ட்மா...!' என்று புளுகியபடிக்கே , வாசக சந்திப்புகளுக்கெல்லாம் 'ஆபீஸ் டூர்' என்று பீலா விட்டுக் கிளம்புவது இப்போதைய சாகசங்கள்!!
இந்த நான்கு தசாப்தங்களில் நம்முடன் தான் எத்தனை எத்தனை நாயக/நாயகியர் பயணித்திருக்கிறார்கள்! ஆனால், நம் கற்பனை உலகை ஆக்கிரமித்திருந்த யாருக்கும் வயதாகவே இல்லை என்பது தான் மேட்டரே! டெக்ஸ் வில்லர் இன்றும் அதே சீற்றத்துடன், அதே நவஹோ செவ்விந்தியர்களுடன் குதிரையில் சீறிப் பாய்ந்து கொண்டிருக்கிறார்! நமக்குத் தான் ஓரத்தில் ஒயிட் எட்டிப் பார்த்துவிட்டது ; கண்களில் ரீடிங் கிளாஸ் ஏறிவிட்டது; தொப்பைகளின் விஸ்தீரணங்களும் செழிப்பாகியுள்ளன! ஆனாலும், கூட மாதத்தின் முதல் தேதிகளில் காமிக்ஸின் பார்சல் வீட்டுக்கு வரும் போது நம்முள் ஒளிந்திருக்கும் அந்தப் பாலகன் உள்ளுக்குள்ளாவது லைட்டாகத் துள்ளி குதிக்கிறான் தானே? இந்த 42 ஆண்டுகளில் நமது லயனுடனான பயணத்தின் மெய்யான சாதனையாய் அதையே பார்க்கத் தோன்றுகிறது!
எத்தனையோ ஏற்ற-தாழ்வுகள் இந்தப் பயணத்தில் உண்டென்றாலும், நீங்கள் தந்துள்ள நிபந்தனைகளற்ற ஆதரவுகளே இந்தச் சிங்கத்தின் கர்ஜனைக்கு ஆதாரங்கள்! மாதம் ஒரு black & white சாணிக் காகிதப் புத்தகம் என்ற நிலையிலிருந்து, இன்று 'சாம்பலின் சங்கீதம்...' 'பயணம்' போலான பிரம்மாண்டமான கிராஃபிக் நாவல்களை ஐரோப்பிய தரத்திற்கு இணையாக வெளியிடுமளவுக்கு நாம் வளர்ந்திருக்கிறோம் என்றால், அதற்குக் காரணம் உங்களின் தணியாத காமிக்ஸ் தாகம் மட்டுமே!
நாம் ஒரு விசித்திரமான, அழகான குடும்பம் என்பேன் guys! சாதி, மதம், வயது, அனுபவம், அரசியல், என அனைத்தையும் தலையைச் சுற்றி தூர வீசி விட்டிருக்கும் நம்மை, சின்னச் சின்ன கட்டங்களுக்குள் வரையப்பட்டிருக்கும் சித்திரங்களும், அவற்றில் உள்ள வசனங்களும் ஒற்றைப் புள்ளியில் இத்தனை காலமாய் இணைத்திருக்கின்றன ! புத்தகத் திருவிழாக்களில் நாம் சந்திக்கும் போது, நீங்கள் காட்டும் அந்த ஆர்ப்பாட்டமில்லாத அன்பும், உரிமையோடு நீங்கள் வைக்கும் விமர்சனங்களும்தான் இந்தப் பயணத்தின் பெட்ரோல்.... டீசல்... LPG என எல்லாமே!! சந்துகள் பல கண்டு, சந்தடியே இல்லாது சாத்துக்கள் பல வாங்கினாலும் - ‘ அந்த சிக்-பில் க்ளாஸிக்கை மறுக்கா போடுங்க; MAXI சைஸில் XIII எப்போது? ‘டைகருக்கு இன்னும் ஒரு ஸ்லாட் கூடுதலா குடுங்க’ என்றெல்லாம் நீங்கள் உரிமையோடு கேட்கும் ஒவ்வொரு தருணத்திலும், குணா கமல் போல - ‘உண்டான காயமெல்லாம் தன்னாலே ஆறிப் போன மாயமென்ன – பொன்மானே..பொன்மானே?’ என்றே பாடத் தோன்றுகிறது!
42 ஆண்டுகள்!
வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான மைல்கல் - வாழ்க்கையின் தத்துவத்தைப் புரிந்து கொள்ளும் பருவம்! ஆனால், (தமிழ்) பதிப்புலகின் சவலைப் பிள்ளையான ஒரு காமிக்ஸ் நிறுவனத்திற்கோ - இந்தக் கால அவகாசமானது ஒரு நீண்ட, உணர்வுபூர்வமான சகாப்தம்! என்னோடு இந்த நெடிய பயணத்தில் ராப்பகலாகத் துணை நின்ற ஓவியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், அச்சுக்கூட நண்பர்கள், பைண்டிங் தொழிலாளர்கள்; front ஆபீஸ் உதவியாளர்கள், விற்பனை முகவர்கள் மற்றும் லயன் காமிக்ஸின் ஆணிவேரான உங்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் என்றென்றும் உரித்தாகட்டும் ! நீரின்றி லயன் இல்லை; இந்தப் பயணமும் இல்லை!
நாளை என்ன நடக்கும்? தொழில்நுட்பம் நம்மை எங்கு கொண்டு செல்லும்? என்று ஆருடம் சொல்ல சத்தியமாய்த் தெரில்லீங்கோ ! ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம்! காகிதத்தின் வாசனையும், கற்பனையின் வீச்சும், இந்த பொம்ம பொஸ்தவங்களை ரசிக்கும் உங்களைப் போன்ற காதலர்களும் இருக்கும் வரை, நம் காமிக்ஸ் உலகம் உயிர்ப்போடு இருக்கும்! And அந்தச் சித்திரக் கட்டங்களுக்குள் நம் நாயகர்கள் உங்களுக்காக மறுக்கா மறுக்கா பிஸ்டல்களை தோட்டாக்களால் நிரப்பிக் கொண்டே இருப்பார்கள்!
Yet another ஆண்டினுள் அடியெடுத்து நடை போடுகிறோம் - நமது மாமூலான லக்கி லூக்கின் ஆண்டுமலரோடும், 'தல' டெக்ஸின் அதிரடியோடும்!! இம்மாமாதம் GEN Z தடத்தில் ஒரு தாத்தாவும், பேத்தியுமென்றால், கிராபிக் நாவல் தனித்தடத்தில் ரவுசு பண்ணும் தாத்தாஸ் trio!! இந்த variety தானே நமது அடையாளமே folks? இந்தியாவில் வேறெந்த மொழியிலோ, மாநிலத்திலோ நாம் ரசிப்பனவற்றை ரசிக்கவல்ல வாசகர்கள் யாருமே கிடையாது என்ற பெருமிதத்தில் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டே முன்செல்வோம்!! You have been an absolutely fabulous audience & உங்கள் துணைகளுடன் இன்னும் பற்பல மைல்கற்களை எட்டிப் பிடிக்க புனித மனிடோ அருள்புரிவாராக!!
இதோ ஜூலை இதழ்களின் அட்டைப்படம்ஸ் & பிரிவியூஸ் !!
ONLINE LISTING : https://lion-muthucomics.com/latest-releases/1472-2026-july-pack.html
இம்முறை தொடரின் ஒரு துவக்க நாட்களின் சாகசமும், பின்னாட்களின் சாகசமும் காம்போவாகி உள்ளன ! அதனில் அந்த லேட்டஸ்ட் சாகசமே ஹைலைட் - என் பார்வையிலாவது !! அந்தக் காலத்தில் வன்மேற்கில் வாழ்ந்த பெல் ஸ்டார் எனும் அடாவடி அம்மணியே இந்தப் படைப்பின் துவக்கப் புள்ளி என்பது கொசுறுத் தகவல் !!
And இம்மாத 'தல' சாகசத்திலுமே ஒரு ரியல் லைப் பார்ட்டி உண்டு - நமக்குத் பரிச்சயமான ஜட்ஜ் ராய் பீன் ரூபத்தில்..! (லக்கி லூக்கின் - "நிதிக்குத் தலைவணங்கு" நினைவுள்ளதுங்களா ? So வன்மேற்கின் முக்கிய புள்ளிகளை இம்முறை இரு மஞ்சள் சொக்காய்க்காரர்களுமே உள்ளடக்கியுள்ளனர் !! இரண்டுமே absolute must reads என்பேன் !!
And GEN Z சந்தாவினில் இம்முறை தாத்தா & பேத்தி சிறுகதை + டீம் ஜு.டி சிறுகதை என்ற அழகான காம்போ !
மேற்கொண்டு இன்னும் கொஞ்சம் எழுதணும் folks - முடிந்தால் இப்போவே ; இல்லாங்காட்டி நாளைக்கு காலையில்... ! So catch you again ! Bye for now !













Present sir..
ReplyDeleteFirst ❤️
ReplyDeleteGood Night Sir
ReplyDelete2nd 😂
ReplyDeleteஆஜர்
ReplyDeleteSuper
ReplyDeleteபத்துக்குள்ள வந்தாச்சு..!
ReplyDeleteHappy birthday to the Lion.
ReplyDeleteHappy birthday to our lion
ReplyDelete**பள்ளி முடிந்து வந்ததும், கையில் இருக்கும் சில்லறைகளை சேர்த்துக் கொண்டு, புத்தகக்கடைக்கு ஓட்டமும் நடையுமாகச் சென்ற அந்த மாலைப் பொழுதுகள் நினைவிருக்கிறதா? 'லயன் காமிக்ஸ் புதுசு வந்துருச்சாண்ணா?' என்று கேட்டு, அந்த ஸ்பைடரையோ, ஆர்ச்சியையோ வாங்கியவுடன், வீட்டுக்கு வரும் வழியிலேயே வாசித்த அந்தத் தருணங்கள் நேற்றைய நினைவுகள்! And கச்சிதமாய் வாங்கியவற்றை அம்மாவின் கண்ணில் படாமல் வீட்டுக்குள் கொண்டு செல்வது பற்றாதென, ஸ்கூல் பைக்குள் அவற்றைப் பதுக்கி எடுத்துப் போய் நண்பர்களோடு ஷேர் விட்டதெல்லாம் அலாதி**.
ReplyDeleteஒவ்வொரு ஆண்டும் கடந்த காலத்தை லயன் காமிக்ஸ் உடன் நினைவுபடுத்தும் போதெல்லாம் காமிக்ஸ் மீது கூடுதலான வாஞ்சை எழாமலில்லை. சூழலுக்கு ஏற்ப இயந்திரத்தனமாக போன வாழ்க்கையில் சற்றே தென்றலாய் வருடிக் கொண்டிருப்பது இந்த காமிக்ஸ் சார்ந்த நினைவுகளே.
அந்த பொற்காலத்தை இன்றுவரை தொடர்வது கொடுப்பினை.
தங்கள் அன்புக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் ஈடாகாது.
அனைவருக்கும் வணக்கம்.
ReplyDelete42nd ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....
ReplyDeleteநானு இங்க உள்ளே...
ReplyDeleteவணக்கம்
ReplyDelete14...
ReplyDeleteMy locky number...
நம்ம லயனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
ReplyDelete42nd ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..... LIon comics !!
ReplyDeleteHappy Birthday
ReplyDeleteLion Comics. பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....
ReplyDeleteவந்துட்டேன்
ReplyDelete