Powered By Blogger

Sunday, May 24, 2026

ரெட் கன் !!

நண்பர்களே, 

வணக்கம்.ஆண்டின் மையப்பகுதியைத் தொட்டு நிற்கின்றோம். And ஒரு விதத்தில் நடப்பாண்டின் பயணத்தில் இது ஒரு முக்கியத் தருணமும் கூட. முன்செல்லும் பாதையில், புதியவர்கள் சார்ந்த தேடல்கள் தொடரத்தான் வேண்டுமா? அல்லது - 'உள்ளதைப் படிக்கவே நேரமில்லை - இந்த அழகில் புதுசாய் யாரை ரசிக்கப்போறோம்டா தம்பி?' என்ற கேள்வி பிரதானமாகிடுமா?பதில் காணக் காத்திருக்கிறார் புது அறிமுகமான ரெட் கன்.

இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் GEN Z பசங்கள் சந்தாவில் மாத்திரமே புது வரவுகள் வரிசையாகத் தலைகாட்டியிருந்தனர். ரெகுலர் தளத்திலோ ரெகுலர் நாயகர்களே இதுவரை வண்டியை ஓட்டிவந்துள்ளனர். So, ஒரு புது வருகைக்கான முதல் தருணமாய் காத்திருக்கும் ஜூன் அமைகிறது.

போன வருடமே அட்டவணை அறிமுகத்தின் போது இந்த ரெட் கன் பற்றி மேலோட்டமாய் சொல்லியிருந்தேனென்று ஒரு ஞாபகம். இப்போதெல்லாமே ஒரு புதுத்தொடரைத் தேர்வு செய்ய முயற்சிக்கும் போது நாம் பார்க்கும் முதல் சமாச்சாரமே —அங்கு வண்டி வண்டியாய் கதைகள் உள்ளனவா? அல்லது இன்றைய கேஸ் சிலிண்டர் நிலவரம் போல் ரேஷனில் தான் படைப்பாளிகள் உருவாக்கியுள்ளனரா? என்பதே. பத்துக்குள் மொத்த கதை எண்ணிக்கை இருக்கும் தொடர்களெனில், “ஆஹா இதுவே மதி!” என்று டிக் அடித்து வருகின்றோம். முன்னாட்களைப் போல 80, 100, 200 என்றெல்லாம் வண்டி வண்டியாய் கதைகள் வைத்துள்ள நாயகர்களுடன் அன்னம் தண்ணி புழங்குவதே கிடையாது.🥺அந்த வரிசையில் ரெட் கன் ரொம்பவே 'சிக் ' என்ற சிக்கனக்காரர். Becos, இதுவரையில் இரண்டே ஆல்பங்கள் தான் உருவாகியுள்ளன. ஆனால், படைப்பே வெகு சமீபமானது என்பதால் இத்தொடர் இன்னும் கொஞ்சம் பயணிக்கும் என்று நம்பலாம்.

நமக்கு நிரம்பவே ரசித்திடும் அந்த வன்மேற்குக் களம் தான் இங்குமே பின்புலம். ஆனால், மாமூலான நேர்கோட்டு ஆக்‌ஷன் கதையாக இல்லாது, ஒரு மெல்லிய மர்மம் கலந்த க்ரைம் த்ரில்லர் பாணியில் இந்த முதல் ஆல்பத்தை உருவாக்கியுள்ளனர்.

"டெரன்ஸ் நிக்கோலஸ்" என்பதே இந்த நாயகரின் பெயர். ரெட் கன் என்பது அவருக்கான காரணப்பெயர். மனுஷனோ முன்னாள் போர்வீரன்; இந்நாள் வெகுமதி வேட்டையன். நிறையவே flashbacks இவருக்கு இருக்கும் என்பதை ஆங்காங்கே குறிக்கிடும் பழம் நினைவலைகள் சுட்டிக்காட்டுகின்றன. Maybe தொடரக்கூடிய ஆல்பங்களில் அவற்றின் மீதும் கொஞ்சம் வெளிச்சம் விழலாமோ என்னவோ?!

கதைக்களமோ, வன்மேற்கில் ரயில் தடம் பதிக்கும் பணியாட்களின் ஒரு பெரும் முகாம். அங்கு ரவுண்டு கட்டி அரங்கேறி வரும் தொடர் கொடூரக் கொலைகளே ரெட் கன் வருகை புரிவதற்கான முகாந்தரம். உலகத்தைப் புரட்டிப்போடும் அசாத்திய மர்மங்களெல்லாம் இங்கு பொதிந்திருக்கவில்லை தான். ஆனால், சின்னச் சின்ன முடிச்சுக்களை ஆங்காங்கே போட்டுவிட்டு அவற்றை கிளைமாக்ஸில் சிறுகச் சிறுக கதாசிரியர் பிரமாதமாய் கையாண்டுள்ளார் என்றே சொல்வேன். And புதுயுக டிஜிட்டல் கலரிங்கும் இங்கு கவனத்தைக் கோருகின்றது. ஒருவித திகில் mood கதை நெடுகத் தொடர வேண்டும் என்பதால் பொதுவாக பளிச் கலர்களை தேர்வே செய்திருக்கவில்லை. இரவுப் பொழுதுகள், மங்கலான வெளிச்சத்திலான பொழுதுகள் என்பது போலவே கதை நெடுக backdrop அமைந்திட, அடர்வண்ணங்களில் அழகாய் பணியாற்றியுள்ளார் இந்த கலரிங் ஆர்டிஸ்ட். அப்புறம் படங்களின் அமைப்புகளும் அந்தப் பொதுவான பிரேமுக்குள், ஒரே டெம்ப்ளேட்டுக்குள் அடைபடாது திடீர் திடீரென்று சுற்றிலும் வெள்ளை பார்டரே இல்லாமல் முழுசாகவும் இடம்பிடிக்கின்றது.So, “இதென்ன திடீர்னு இங்கே நீண்டு கிடக்கு? இங்கே சுற்றிலும் வெள்ளை வருது? போச்சா சோணமுத்தா பைண்டிங்ல ஊத்திக்கிச்சா?” என்ற ரேஞ்சுக்கு சந்தேகங்கள் வேணாமே! இதோ மெருகூட்டப்பட்ட ஒரிஜினல் அட்டைப்படமும் உட்பக்க ப்ரிவியூவும் உங்கள் பார்வைக்கு.


"குருதியின் கூலி” பத்தோடு பதினொன்றாக எண்ணிக்கையினை அதிகரிக்கச் செய்யும் ஒரு இதழாக மாத்திரமே இருந்திடப் போவதில்லை. மாறாக, இனிவரும் நாட்களில் புதியவர்களுக்கான தேடல் அவசியமாகிடுமா? அல்லது கொஞ்ச காலத்திற்காவது தற்போதைய ஜாம்பவான்களே நமக்கு ஊழியம் செய்து வருவது போதுமா? என்ற கேள்விக்கான விடையினை இந்த இதழ் தாங்கி நிற்கும் என்று எனக்குப்படுகிறது. Please do read guys!

Moving on…இந்த மாதத்தின் நிஜமான ஹைலைட் என்று நான் கருதிடும் ஏஜென்ட் ராபின் 2.0 கிளைமாக்ஸ் த்ரில்லர்!!! ஒரு நெடும்பார்வை சகிதம் ஒரு திறமையான கதாசிரியர் களமிறங்கும்போது எத்தனை வீரியமான ஒரு படைப்பு சாத்தியமாகின்றது என்பதை ராபினின் இந்தத் தொடரின் சமீப ஆல்பங்களெல்லாமே சுட்டிக்காட்டி வருகின்றன.முதிர்ந்த ராபின் கதாபாத்திரம் ஒருவித கெத்தாக வலம் வர, கதையிலோ செம சமகால ஹைடெக் சங்கதிகளை உட்புகுத்தி ஒரு அசாத்தியமான க்ரைம் த்ரில்லரை இங்கு படைப்பாளிகள் உருவாக்கியுள்ளனர். இந்த க்ளைமாக்ஸ் பாகமான “எங்கேயோ கேட்ட குரல்” வாயிலாக முற்றுப்பெறுவது மட்டுமல்லாது, ஏஜென்ட் ராபின் 2.0 அவதாரே இத்தோடு இப்போதைக்காவது முற்றுப்புள்ளியைக் காண்கிறது. Maybe, வரும் நாட்களில் இத்தொடருக்கு இன்னொரு வாய்ப்பளிக்க படைப்பாளிகள் தீர்மானிப்பார்களோ என்னவோ தெரியவில்லை. Anyways 2025-ல் வெளியான இதன் முந்தைய பாகங்களை மறவாது தேடி எடுத்துக்கொண்டு, மெலிதாக ஒருவாட்டி புரட்டிவிட்டு இந்த க்ளைமாக்ஸ் பாகத்துக்குள் புகுந்தால் அந்த வாசிப்பு அனுபவம் இன்னும் மாஸாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம். And, 200 பக்கங்களுக்கு நீண்டு செல்லும் இந்த சாகசத்தைப் படிக்க கொஞ்சமே கொஞ்சமாய் நேரத்தை ஒதுக்கி வைத்துக்கொண்டு, ஏக் தம்மில் படிக்க முடிந்தால் இன்னும் சிறப்பு என்பது அபிப்பிராயம் நம்பர் 2! பரபரப்பாய் ஓடிக்கொண்டிருக்கும் கதையை கவிழ்த்துப் போட்டுவிட்டு ரீல்ஸ் பார்க்கப் புறப்பட்டீர்களெனில், மறுக்கா கதையோடு ஐக்கியமாகிடும்போது அந்த ஃபயர் சற்றே மட்டுப்பட்டுத் தெரியலாம். So, சமீப காலங்களின் ஒரு டாப் க்ரைம் த்ரில்லருக்கான மருவாதியாக உங்கள் நேரங்களை முழுசாய் தரமுடிந்தால், “எங்கேயோ கேட்ட குரல்” ரொம்ப நாட்களுக்கு நம்ம மத்தியில் எதிரொலிக்கும் என்று உறுதிபட நம்பலாம்!

And, ஏற்கனவே சொல்லியிருந்தது போல, மொழிபெயர்ப்புக்கான “முழிபிதுங்கிய படலம்” கடந்த மூன்று வாரங்களாகவே தொடர்ந்துள்ளது. நிறைய டெக்னிக்கல் சமாச்சாரங்கள் இருந்தாலும், ஓவராய் அவற்றை உங்களிடம் கடத்துகிறேன் பேர்வழி என்று கதையோட்டத்தின் மின்னல் வேகத்திற்கு ஸ்பீட் பிரேக்கர் போட்டுத் தடுக்கக் கூடாது என்ற எண்ணம் என்னுள் பிரதானமாய்க் குடிகொண்டிருந்தது. So இந்தப்பக்கமும் ரொம்ப சமரசம் செய்து கொள்ளாது, அந்தப்பக்கமும் விட்டுக் கொடுக்காது கம்பி மேல் நடக்கும் சாகசமாய் இந்த மொழிபெயர்ப்புப் பணி அமைந்துள்ளது என்று சொல்வேன்! கதையோடு பயணிக்கும்போது அந்த டெக்னிக்கல் சமாச்சாரங்கள் ரொம்பவே அந்நியமாய்த் தென்படாது, கதையோடு உங்களையும் அரவணைத்துச் செல்லும் பட்சத்தில், அண்ணாச்சி நிச்சயம் ஹேப்பி!ஜூன் முதல் வாரத்தில் இந்த ஆல்பம் உங்கள் கைகளில் இருக்கும் பொழுது, தினமும் இருமடங்கு ஆவலுடன் அலசல்களுக்காகக் காத்திருப்போம். Please guys.🙏


ஜூனில் காத்திருக்கும் தல சாகசமோ, சிங்கிள் ஆல்பமே! ஆனால், வெகு சமீப படைப்புமே. நமது இரவுக்கழுகார் - நவஹோக்களின் தலைவர் என்பதெல்லாம் நமக்கு பாலபாடங்கள். அவர் செவ்விந்திய ஏஜென்டாய் செயல்பட்ட நாட்களைப் பற்றியும், டைகர் ஜாக்குடனான பந்தம் வலுப்பெற்றது பற்றியும் அழகான சித்திரங்களில் சொல்லிடும் இந்த சிங்கிள் ஆல்பம் — “Yet another classic” என்பேன்!இதோ  டெக்ஸ் சிங்கிள் ஆல்பத்தின் original அட்டைப்பட ப்ரிவ்யூ :

On an aside, இந்த மே மாதம் வந்திருக்கும் “நித்திரை மறந்த நித்தியன்” சார்ந்து கலவையான விமர்சனங்கள் வந்திருப்பது நான் அறியாததில்லை. கையில் எடுக்கும் ஆல்பங்கள் அத்தனையுமே “தலைவாங்கிக் குரங்கு” ரேஞ்சிலோ, “பழிவாங்கும் புயல்” ரேஞ்சிலோ, “டிராகன் நகரம்” ரேஞ்சிலோ அமைய வேண்டும் என்பது நம் அனைவரின் அவாவுமே தான் ; no two ways about that at all!ஆயினும், 80 ஆண்டுகளின் கால ஓட்டத்தோடு, ஒரு நாயகரை அடிப்படைக் குணங்களில் துளி மாற்றங்களுமின்றி, அதே களத்தில் தொடர்ந்து பயணிக்கச் செய்ய படைப்பாளிகள் மெனக்கெடும் போது, உருவாக்கப்படும் ஒவ்வொரு கதையுமே ஒரு கிளாசிக்காக அமைந்திடும் என்ற எதிர்பார்ப்பு சற்றே மிகையாகிடாதா guys? மொக்கையாக இல்லாத வரையிலும் எல்லா படைப்புகளுமே ஏதோ ஒரு விதத்தில் ரசனைக்குரியவைகள் தானே?! ப்ளூ சட்டை மாறன்களாக நாள்தோறும் நம்மை பாவித்துக் கொண்டே வந்தோமெனில், ஒருவித நெகட்டிவ் சூழலே இந்த சிறு வட்டத்தை ஆட்படுத்தும் என்பது நான் சொல்லித்தானா நீங்கள் உணர வேண்டும்? 

Make no mistake guys; சுமாரான சரக்கை சூப்பரென்று தூக்கிப் பிடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பெல்லாம் எனக்கு இல்லை. ஆனால், சூப்பரான சரக்கு பற்றி வாயே திறக்காமல் மௌனமாய் கடந்துவிட்டு, மிதமான முதல் தருணத்தில் போட்டு மிதிக்க முதல் ஆளாய் முந்தி வருவதில்தான் எனக்கு லைட்டான நெருடலே! Of course, பணம் போட்டு வாங்கிடும் முதலாளிகளான நீங்கள் அதன் சாதக பாதகங்களைச் சொல்லும் உரிமை கொண்டோரே! எனினும், உலகெங்கும் முத்திரை பதித்து வரும் ஒரு legendary நாயகரையும் சாத்திப் பார்ப்பதில் ஒரு சுகம் இருக்கிறது தான் என்று கருதிடும் பட்சத்தில், “ரைட்டு... நடத்துங்கோ!” என்று தோள்களைக் குலுக்கியபடியே நகர்ந்திடுவதைத் தாண்டி நமக்கு வேறு மார்க்கம் இருக்கப் போவதில்லை.மஞ்ச சொக்காக்காரரே ஆனாலும், ப்ளூ சொக்கா தான் எமக்குச் சிறப்பு என்று  ஒரு சிறு அணி கருதிடும் பட்சத்தில் — more power to the men in blue 💙. உங்களது ஆதங்கம் புரியாதில்லை தான் ! 

இந்த மூன்று தவிர நமது குட்டி டிடெக்டிவ்ஸ் சாகசம் செய்யும் GEN Z இதழுமே இந்த ஜூனில் உண்டுதான்.And, இங்கும் எனக்கு ஒரு கேள்வி :

காத்திருக்கும் 2027-ல் இந்த GEN Z குட்டி புக்ஸ் தொடர்வது அவசியம்தானா folks?

சிறார்களை எட்டிப்பிடிக்க முயற்சிக்கும் இந்தத் தனித்தடமானது எந்த மட்டிற்கு தனது லட்சியத்தை பூர்த்தி செய்கின்றது என்பதில் சின்னதாய் கேள்விக்குறி எங்களுக்குள். Maybe இவையுமே உங்கள் இல்லங்களது பீரோக்களில் தேவுடு தான் காத்து வருகின்றன எனும் பட்சத்தில், தேவையின்றி மாதா மாதம் ஒரு 40 ரூபாய்க்கு வெடி வைத்த புண்ணியம் நமக்கெதற்கு ? என்ற எண்ணமும் மெது மெதுவாய் தலை தூக்குகின்றது. பொதுவாகவே கார்ட்டூன்கள் என்றாலே ரசிக்காது என்ற மனநிலையில் இருக்கக்கூடிய நண்பர்கள் இந்த இதழ்களுக்கான சந்தாவில் இணைந்து கொள்ளவே இல்லை எனும்போது அங்கேயே ஒரு சன்னமான சாத்து வாங்கியுள்ளோம். எஞ்சியிருக்கும் ஜென் சி சந்தாதாரர்கள் மெய்யாலுமே அவற்றினை GEN Z வசம் படிக்கத் தருகிறார்களா? அல்லது நமது வாசிப்புகளில் இந்த குட்டி புக்ஸ் முதல் படியாக அமைந்து விடுகின்றனவா? சொல்லுங்களேன் ப்ளீஸ்? Your honest feedbacks would help !!

இந்த வாரக் கேள்விகள் - மேலோட்டமாய் மட்டுமே பதிவினை லுக் விடும் நண்பர்களின் வசதிகளுக்காக :

1 இனியும் புது காமிக்ஸ் சார்ந்த தேடல்கள் நமக்கு அவசியம் தானா ?  Established ஆட்டக்காரர்களோடே பயணம் பண்ணுவதே கொஞ்ச காலத்துக்குப் போதும் என்பீர்களா ?  

2.ராபினின் "எங்கேயோ கேட்ட குரல்" க்ளைமாக்ஸ் பாகம் ! இதற்கு முன்பான அத்தியாயங்களை வாசித்துள்ளீர்களா மக்களே ? YES / NO ப்ளீஸ் ?

3.குட்டீஸ்களுக்கான GEN Z சந்தாவால் ஏதாச்சும் புண்ணியம் கிட்டுதா ? இல்லை பீரோவுக்குள் உறக்கம் மட்டும் தானா ?

ரைட்டு....ராபின் எடிட்டிங்கின் இறுதிக்கட்டங்களை நிறைவு செய்திட இப்போதைக்கு நான் கிளம்புகிறேன். Bye all... See you around! Have a wonderful Sunday!

P.S : Terrific Tex சந்தாக்களில் நல்லதொரு வேகம் !! And ஆச்சர்யமூட்டும் விதமாய் FAB 5 க்குமே சமீப நாட்களில் ஒரு விறு விறுப்பு  !! Great show மக்களே - let's keep it going !!








75 comments:

  1. Replies
    1. வாழ்த்துக்கள் சகோ

      Delete
    2. வாழ்த்துகள் தம்பி

      Delete
    3. எல்லாம் சரி கார்த்திக். அப்படியே இன்னும் ரெண்டு வரி எழுதினால் நல்லா இருக்கும்.

      Delete
  2. 1. புதிய தேடல்கள் தேவை 2. எங்கேயா கேட்ட குரல் கிளைமாக்ஸ் பாகத்திற்காக வெயிட்டிங் 3. GEN z ல் வேறு ஏதேனும் கதைகள் கொண்டு வரலாம்

    ReplyDelete
    Replies
    1. அந்த "வேறு ஏதேனும்" எவையென்றும் சொன்னால் தேவலாமில்லியா நண்பரே ?

      Delete
  3. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  4. வந்துட்டேன் வந்துட்டேன்.

    ReplyDelete
  5. போன மாதம் வெளியான "நித்திரை இல்லா நித்தியன்" புத்தகத்தில் பார்டர் இல்லாமல் படங்கள் இருந்தது மிகவும் சிறப்பாக இருந்தது அதேபோல் இன்னும் சில கதைகளையும் தாங்கள் போடலாம்!

    ReplyDelete
    Replies
    1. அவை நாம் பண்ணுவதே அல்ல நண்பரே - ஒரிஜினலாக அவ்விதமிருந்தால் இங்கும் அவ்விதமே வரும் !

      Delete
  6. காமிக்ஸ் ரசனையை வெறும் நினைவேக்கமாக மட்டும் மடை மாற்றி விடாதீர்கள்.புதிய ஹீரோக்களில் லார்கோவோ,xiiiஓ இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. வாசிங்க சாரே ; வாசிக்க ஊக்குவிக்கவும் செய்யுங்க சார் !!

      இன்று நடமாடிக் கொண்டிருக்கும் ஒரு லாரி லோடு பிராங்கோ-பெல்ஜிய நாயகர்களும், இத்தாலிய ஹீரோக்களும், பிரிட்டிஷ் ஸ்டார்களும், அமெரிக்கப் பார்ட்டிக்களும் நாம் தேடியதன் பலன்களின்றி அவர்களாய் நம் கரைகளில் வந்திறங்கியோர் அல்ல தானே ?

      இங்கு தேடும் முனைப்பிலோ, மெனக்கெடலிலோ, குறைபாடுகள் லேது - அவற்றை நேசிக்கக்கூடிய பொறுமைகளில் தான் ! அதற்கான தீர்வு என் கைகளில் கிடையாதே ?!

      Lemme repeat the first line : வாசிங்க சாரே ; வாசிக்க ஊக்குவிக்கவும் செய்யுங்க சார் !! அது ஒன்றே தீர்வு !

      Delete
  7. //And ஆச்சர்யமூட்டும் விதமாய் FAB 5 க்குமே சமீப நாட்களில் ஒரு விறு விறுப்பு //

    மகிழ்ச்சிகள் சார்

    ReplyDelete
  8. புது நாயகர்/நாயகர்கள்
    எப்போதும் அட்டவணை வெளியீடு போது புதுசு யாருப்பா வராங்க என தெரிந்து கொள்ளும் ஆவலுடன் காத்திருப்பேன்

    ஒரு வருடத்திற்கு ப்ரேக் குடுத்து பார்ப்போம் சார்
    ஏனெனில் எதோ ஒரு விதத்தில் யாரையாவது விட வேண்டி உள்ளது

    ஆனால், கண்டிப்பாக எதேனும் புது ஒன் ஷாட் கிராபிக் நாவல் வேண்டுங்க, சார்

    ReplyDelete
  9. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  10. ராபின் இதற்கு முன்பு வந்த பாகங்கள் அனைத்தும் படித்தாயிற்று, விமர்சனமும் போட்டாச்சுங்க, சார்

    "எங்கயோ கேட்ட குரல்" கதைக்கு வெயிடிங், சார்

    ReplyDelete
  11. சார் எப்போதுமே ஒரு புது நாயகர் வரும் போது இருக்கும் எதிர்பார்ப்பு இப்போதும் உண்டு. எப்போதும் எனக்கு உண்டு. எனவே இது தொடர வேண்டும் என்பது எனது கருத்து.

    But பெரும்பான்மையின் கருத்து எதுவோ அதற்கு கட்டுப் படுகிறேன்.

    ReplyDelete
  12. சூப்பர் ஈ சார்...ரெட் கண்ணுடன் ரெட் கன்னுக்காக ஆவலுடன்...அருமை உள்ளடக்கங்கள் அட்டை...ராபின் ஒட்டுக்கா படிக்க போகும் குடுத்து வைத்தவன்....டெக்ஸ் அட்டை வழக்கம் போல பேரழகு....டைகருடன் கதை ஆஹா அருமை

    ReplyDelete

  13. 1 இனியும் புது காமிக்ஸ் சார்ந்த தேடல்கள் நமக்கு அவசியம் தானா ? Established ஆட்டக்காரர்களோடே பயணம் பண்ணுவதே கொஞ்ச காலத்துக்குப் போதும் என்பீர்களா ?

    எப்போதும் புது காமிக்ஸ் தேடல் அவசியமே

    2.ராபினின் "எங்கேயோ கேட்ட குரல்" க்ளைமாக்ஸ் பாகம் ! இதற்கு முன்பான அத்தியாயங்களை வாசித்துள்ளீர்களா மக்களே ? YES / NO ப்ளீஸ் ?

    வாசித்து விட்டேன் சார். சோ eagerly waiting for எங்கேயோ கேட்ட குரல். இந்த வாரம் மறுபடி அந்த சீரிஸ் படிக்க முயல்கிறேன். மறு வாசிப்பு.

    3.குட்டீஸ்களுக்கான GEN Z சந்தாவால் ஏதாச்சும் புண்ணியம் கிட்டுதா ? இல்லை பீரோவுக்குள் உறக்கம் மட்டும் தானா ?

    கண்டிப்பாக உண்டு சார். I love it. Especially my niece loves it. பிளீஸ் Don't stop this now. புத்தக விழாக்களுக்கு வெயிட் பண்ணுங்க சார். வரவேற்பு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. // புத்தக விழாக்களுக்கு வெயிட் பண்ணுங்க சார். வரவேற்பு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். //

      குமார் மிகவும் சரி! பெரிய நகர புத்தக விழாக்களில் இதுதான் குழந்தைகளை கவரப்போகும் காமிக்ஸ் சாவி!

      Delete
    2. //புத்தக விழாக்களுக்கு வெயிட் பண்ணுங்க சார். வரவேற்பு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். //

      Same thought....

      Delete
  14. சகோதரர் ஒருவர் தன் பிள்ளைகளுக்கு Gen Z கதைகள் பிடித்துள்ளதாக கூறினார்.
    அவர் சந்தாவில் இல்லைங்க
    ஏப்ரல் வரை வாங்கி உள்ளார்
    நான்கு கதைகளையும் பிள்ளைகள் படித்து பாராட்டியதாக சொன்னார்

    ReplyDelete
  15. // Terrific Tex சந்தாக்களில் நல்லதொரு வேகம் !! And ஆச்சர்யமூட்டும் விதமாய் FAB 5 க்குமே சமீப நாட்களில் ஒரு விறு விறுப்பு !! Great show மக்களே - let's keep it going !! // மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  16. 1. Big yes. புது கதைகள் கண்டிப்பாக வேணும் சார். 2. Waiting for the final episode. 3. வாங்கவே இல்ல sir

    ReplyDelete
  17. // ஆச்சர்யமூட்டும் விதமாய் FAB 5 க்குமே சமீப நாட்களில் ஒரு விறு விறுப்பு !! Great show மக்களே - let's keep it going !! //

    மகிழ்ச்சி! நண்பர்கள் எல்லோரும் எப்போதும் போல உங்களுடன் பயணிப்போம் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள் சார்!!

    ReplyDelete
  18. // ஒரே டெம்ப்ளேட்டுக்குள் அடைபடாது திடீர் திடீரென்று சுற்றிலும் வெள்ளை பார்டரே இல்லாமல் முழுசாகவும் இடம்பிடிக்கின்றது.So, “இதென்ன திடீர்னு இங்கே நீண்டு கிடக்கு? இங்கே சுற்றிலும் வெள்ளை வருது? போச்சா சோணமுத்தா பைண்டிங்ல ஊத்திக்கிச்சா?” என்ற ரேஞ்சுக்கு சந்தேகங்கள் வேணாமே! //

    புரிந்து கொண்டேன் சார்!

    இனிவரும் காலம்களில் இது போன்ற விஷயம்களை bold font-இல் இங்கும் அப்புறம் புத்தகம் வரும் மாததில் ஹாட்-லயன் பகுதியிலும் எழுதிவிடுங்கள் சார்! "அப்படி போட்டாலும் நீங்க தான் கும்மி எடுப்பீங்களே" என்ற உங்கள் மைட் வாய்ஸ் இங்கு வரை கேட்கிறது சார்!

    ReplyDelete
  19. எடிட்டர் சார்!
    வணக்கம்.
    1. கண்டிப்பாக புது வரவு வேண்டும். இப்போது சக்ஸஸாக இருக்கும் பலரும் ஆரம்பத்தில் புதுவரவாக இருந்தவர்கள் தானே?
    2. அனைத்து கதைகளும் படித்தது. மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும்.
    3. Gen Z : எங்கள் வீட்டு சுட்டி (12+ age ) டெக்ஸ் வில்லரின் மந்திர மண்டலம், கார்சனின் கடந்த காலம் போன்ற கதைகளை ரசித்து படித்து விட்டு பாராட்டுகிறார். அவரைப் பொறுத்தவரை லக்கி, ப்ளுகோட், ஷெர்லாக் ஹோம்ஸ் இந்த மாதிரி கொஞ்சம் matured ஆக எதிர்பார்க்கிறார்.

    ReplyDelete
  20. *மஞ்ச சொக்காகாரர்* 😘,
    *தட்டை மூக்கார்* 🥰 மாதிரி
    புகழ் பெற👍 புதிதாக வந்திருக்கும் 😘😘*சிவப்பு துப்பாக்கியாரை* யும்
    வாழ்த்தி வரவேற்கிறோம் 💐🙏

    ReplyDelete
  21. ரெட் கன் - அட்டைப்படம் ரொம்ப வித்தியாசமாக, முன்பக்கம் துப்பாக்கியுடன் பின்புறம் ஒரு நிழல்வுருவம் கையில் கூர்மையான கத்தி என்று அமர்க்களமாக வாங்கி படிக்கும் ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது! உள்பக்க படங்கள் வித்தியாசமாக வசனமே இல்லாமல் செமையாக உள்ளது; எனக்கு வசனங்கள் குறைவான கதைகள் ரொம்ப பிடிக்கும் சார்.

    ரயில் பாதை அமைக்கும் பின்னனியில் உள்ள கதை என்பது சிறப்பு! லுக்கி, டெக்ஸ், டைகர் கதைகளில் இதுபோன்ற கதைக்களத்தில் வந்த கதைகள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது.

    ரெட் கன் - சிகப்பு கம்பளத்தை விரித்து இவரை வரவேற்க ஆர்வத்துடன் காத்துகொண்டு இருக்கிறேன் சார்.

    ReplyDelete
  22. Gen Z கதைகள் கண்டிப்பாக வேண்டும் சார். என் வீட்டு சுட்டியும் சரி, புத்தகத் திருவிழாவில் பரிசாக தெரிந்தவர்கள் வீட்டு குழந்தைகளுக்கு வாங்கித் தந்தவையும் சரி... நல்ல வரவேற்பை பெற்றுள்ளன... அதிலும் அவர்கள் ஸ்மரஃப் மாதிரியான கதைகளை மிகவும் ரசிக்கிறார்கள்... பொது தடத்தில் ஒதுக்கி வைத்துள்ள இத்தகைய காமிக் கேரக்டர்களை Gen Z தடத்தில் கொண்டு வந்தால் குழந்தைகளால் விரும்பப்படும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. // Gen Z கதைகள் கண்டிப்பாக வேண்டும் சார். என் வீட்டு சுட்டியும் சரி, புத்தகத் திருவிழாவில் பரிசாக தெரிந்தவர்கள் வீட்டு குழந்தைகளுக்கு வாங்கித் தந்தவையும் சரி... நல்ல வரவேற்பை பெற்றுள்ளன... அதிலும் அவர்கள் ஸ்மரஃப் மாதிரியான கதைகளை மிகவும் ரசிக்கிறார்கள் //

      Super! சரவணன் சார். மகிழ்ச்சி! தொடரட்டும் குழந்தைகளிடம் நமது காமிக்ஸை கொண்டு சேர்க்கும் பணி!!

      Delete
  23. // ஒரு டாப் க்ரைம் த்ரில்லருக்கான மருவாதியாக உங்கள் நேரங்களை முழுசாய் தரமுடிந்தால், “எங்கேயோ கேட்ட குரல்” ரொம்ப நாட்களுக்கு நம்ம மத்தியில் எதிரொலிக்கும் என்று உறுதிபட நம்பலாம்! //

    கண்டிப்பாக நேரம் ஒதுக்கி படித்து விடுகிறேன் சார். முதல் முதலாக இந்த கதையின் இரண்டு பாகம்கள் கடந்த வருடம் வந்த போது ரொம்ப ஆர்வமுடன் இருந்தேன், கதை புத்தகம் கைகளில் வந்த போது ரொம்பவே வித்தியாசமாக புதிய அனுபவத்தை கொடுத்தது! சமகால டிஜிட்டல் யுக கதை, அட்டகாசமாக இருந்தது! அலுவலகத்தில் நண்பர் ஒருவரிடம் கொடுத்து படிக்க செய்தேன்; அவர் நன்றாக இருக்கிறது என்றார்! “எங்கேயோ கேட்ட குரல்” அந்த மறைமுக எதிரியின் முகத்தை காண ஆர்வமுடன் உள்ளேன் சார்.
    ராபின் 2.0 ரொம்பவே வித்தியாசமாக இருந்தது, இந்த தொடரில் இதுதான் கடைசி கதை என்பது வருத்தமாக உள்ளது!

    ReplyDelete
  24. // இனியும் புது காமிக்ஸ் சார்ந்த தேடல்கள் நமக்கு அவசியம் தானா ? Established ஆட்டக்காரர்களோடே பயணம் பண்ணுவதே கொஞ்ச காலத்துக்குப் போதும் என்பீர்களா ? //

    எப்போதும் புது காமிக்ஸ் தேடல் அவசியமே!! தேடலே வாசிப்பை / வாழ்க்கையை சுவாரஸ்யமானதாக்கும் சார்!

    ReplyDelete
  25. டைகர் ஜாக்குடனான பந்தம் வலுப்பெற்ற கதை, அட சூப்பர் சார்! இதே போல இதற்கு முன்னால் இவர்கள் இருவரி நட்பை பற்றி வந்த கதை ரொம்பவே நன்றாக இருந்தது சார்! சீக்கிரம் வரட்டும் !

    ReplyDelete
  26. // மொக்கையாக இல்லாத வரையிலும் எல்லா படைப்புகளுமே ஏதோ ஒரு விதத்தில் ரசனைக்குரியவைகள் தானே?! //

    கண்டிப்பாக சார்!

    // ப்ளூ சட்டை மாறன்களாக நாள்தோறும் நம்மை பாவித்துக் கொண்டே வந்தோமெனில், ஒருவித நெகட்டிவ் சூழலே இந்த சிறு வட்டத்தை ஆட்படுத்தும் //

    உண்மைதான் சார்!

    எனக்கு இந்தக்கதை உண்மையில் வித்தியசமாக இருந்தது; ரொம்பவே ரசித்து படித்தேன்! அதே போல டெக்ஸ் கதைக்கு தேவையான எல்லாமும் இருந்தது! எனக்கு முழு திருப்தி!

    சார், இன்னும் இரண்டு மாதத்தில் இந்த கதை முழுமையாக விற்று, மறுபதிப்பு எப்போது என்று கேட்கும் நிலை விரைவில் வரும் சார்!

    ReplyDelete
  27. // தேவையின்றி மாதா மாதம் ஒரு 40 ரூபாய்க்கு வெடி வைத்த புண்ணியம் நமக்கெதற்கு //

    சார், ரொம்ப யோசிக்காதீங்க சார்! இன்றைய சூழ்நிலையில் எது எதற்கோ பணத்தை மக்கள் செலவு செய்கிறார்கள், இதில் நல்லது இல்லாத சிலவும் அடங்கும் (அவர்களுக்கு அவை நல்லதாக தெரியலாம், எனக்கு தவறாக தெரியலாம்) !

    புத்தகம் என்றும் எங்கள் வாழ்க்கையில் மிக பெரிய செலவு கிடையாது, நல்ல விசயசத்திற்கு தானே செலவு செய்கிறோம்! நீங்கள் ஏதோ கெட்டதை எங்களுக்கு விற்பனை செய்வது போல யோசிக்க வேண்டாமே இனிமேலும்! இது போன்ற சிந்தனை உங்களை இன்னும் கட்டிப்போடும், நம்து காமிக்ஸ் வட்டம் இன்னும் சுருங்கி விடும் சார்!

    ReplyDelete
  28. ரெட் கன் - வெல்க.. வளர்க..

    ReplyDelete
  29. // "எங்கேயோ கேட்ட குரல்” வாயிலாக முற்றுப்பெறுவது மட்டுமல்லாது, ஏஜென்ட் ராபின் 2.0 அவதாரே இத்தோடு இப்போதைக்காவது முற்றுப்புள்ளியைக் காண்கிறது. //

    அச்சச்சோ.. மீண்டு(ம்) வா..!! தலைவா.

    ReplyDelete
  30. 3. For GEN Z
    We give the break. Manga generations not interested in this

    2. We already read that books. If required we can re read it

    1. We can proceed with very selective new commers.
    We can. Travel with our favourites get bored some times latter.

    Better. We try selected new. Commers in alternative months.



    ReplyDelete
  31. குருதியின் கூலி அட்டைப்படம் அருமை
    எழுத்துருவ ஆக்கமும் அருமை

    ReplyDelete
  32. // "நித்திரை மறந்த நித்தியன்” சார்ந்து கலவையான விமர்சனங்கள் வந்திருப்பது நான் அறியாததில்லை //

    கலவையான விமர்சனம் என்பது சமநிலையின் ஒரு அங்கம் தான்.

    ReplyDelete

  33. 3. ஜென் Z தலைமுறைக்கு
    நாம் ஒரு இடைவெளி கொடுக்கலாம். மங்கா தலைமுறையினருக்கு இதில் ஆர்வம் இல்லை.

    2. நாம் ஏற்கனவே அந்தப் புத்தகங்களைப் படித்துவிட்டோம். தேவைப்பட்டால் மீண்டும் படிக்கலாம்.

    1. மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய படைப்புகளுடன் நாம் தொடரலாம்.

    முடியும். நமக்கு பிடித்தமானவற்றுடன் பயணித்தால், சில சமயங்களில் பின்னர் சலிப்பு ஏற்படும்.

    சிறந்தது. நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய படைப்புகளை ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் முயற்சிப்போம்

    ReplyDelete
  34. // எல்லா படைப்புகளுமே ஏதோ ஒரு விதத்தில் ரசனைக்குரியவைகள் தானே?! ப்ளூ சட்டை மாறன்களாக நாள்தோறும் நம்மை பாவித்துக் கொண்டே வந்தோமெனில், ஒருவித நெகட்டிவ் சூழலே இந்த சிறு வட்டத்தை ஆட்படுத்தும் என்பது நான் சொல்லித்தானா நீங்கள் உணர வேண்டும்? //

    டெக்ஸ் வில்லர் என்பதால். ஒரு கதைக்கு இவ்வளோ ஆதங்கம்

    இரும்பு கை மாயாவி விஷயத்தில் நேவி ப்ளூ, ஸ்கை ப்ளூ, ராயல் ப்ளூ சட்டைகளில் விதவிதமான ப்ளூ சட்டை மாறன்கள் உலவி வருகிறார்களே/வந்தார்களே. அப்பொழுதெல்லாம்..

    எங்கே அந்த பாசிட்டிவ் ?

    அதே சிறு வட்டத்திற்குள்.. குறுகிய கிளாசிக் வாசகர் மன ஓட்டத்தை எண்ணி பார்க்கிறேன்.

    ReplyDelete
  35. // காத்திருக்கும் 2027-ல் இந்த GEN Z குட்டி புக்ஸ் தொடர்வது அவசியம்தானா folks? //

    கண்டிப்பாக வரவேண்டும். கேள்விப்பட்ட வரை பெரும்பாலானோருக்கு பிடித்துள்ளது.

    ReplyDelete
  36. // இனியும் புது காமிக்ஸ் சார்ந்த தேடல்கள் நமக்கு அவசியம் தானா ? Established ஆட்டக்காரர்களோடே பயணம் பண்ணுவதே கொஞ்ச காலத்துக்குப் போதும் என்பீர்களா ? //

    என்னுடைய ஆதரவு எப்போதும் உண்டு. நன்றாக இருந்தால் ஆரவாரமான வரவேற்பு தொடர்ந்து நல்குவேன்.

    // ராபினின் "எங்கேயோ கேட்ட குரல்" க்ளைமாக்ஸ் பாகம் ! இதற்கு முன்பான அத்தியாயங்களை வாசித்துள்ளீர்களா மக்களே ? YES / NO ப்ளீஸ் ? //

    Yes. செம்மையான கதை.

    // குட்டீஸ்களுக்கான GEN Z சந்தாவால் ஏதாச்சும் புண்ணியம் கிட்டுதா ? இல்லை பீரோவுக்குள் உறக்கம் மட்டும் தானா ? //

    நேரடி தகவல் என்னிடம் இல்லை. கேள்விப்பட்ட தகவல் வரவேற்பு உள்ளதாக தெரிகிறது.

    ReplyDelete
  37. கோலியாத்தை காணோம் (1961) —-> என் இனிய இயந்திரா(சுஜாதா) —-> எந்திரன். எப்பா என்ன ஒரு கற்பனைதிறன் இந்த கதையின் ஆசிரியருக்கு.

    ReplyDelete
  38. 1. யாசகனின் காயம்

    மறுபதிப்புகள் மற்றும் பழைய யுகத்து கதைகள் பற்றி எனது எதிர்ப்பு நிலைப்பாடு இரு கழகங்கள் இணைந்து ஆட்சி அமைக்க முற்பட்டது குறித்து எல்லோருக்கும் தெரிந்து விட்டது போல் வெளிப்படையான உண்மை.

    திரும்பிப் பார்த்தால் எடிட்டர் சாரின் நவீன கதைகளுக்கான முயற்சிகள் தற்போதைய தமிழக அமைச்சரவை போல புதுமையானவை.

    புதிய திசை நோக்கி புதிய கதைகளை நோக்கி அவர் எடுத்த எண்ணில் அடங்கா முயற்சிகளை
    பற்றி வாழ்த்த விரும்பினால் திருமதி லீமா ரோஸ் முதல்வர் விஜய் அவர்களின் கைகளை பற்றி வணங்கியது போல் வணங்க முடியாவிட்டாலும் திரு வைகோ அவர்களின் இல்லத்து பெண்கள் முதல்வர் விஜய்க்கு திருஷ்டி கழித்தது போல் எடிட்டர் சார் அவர்களுக்கும் திருஷ்டி கழிக்க மனம் விரும்புகிறது.

    வேறு யாரும் எண்ண கூட துணியாத சில அடிகளை அவர் துணிச்சலுடன் எடுத்து வைத்திருக்கிறார்.

    இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுனா ஒரு உதாரணம் ஒன்றை சொன்னார்.
    யாசகனின் காயம். அவர் சொல்லியிருந்த கருத்தின் உட்பொருள் வேறுவாக இருந்தாலும் நமது களத்திற்கும் அது பொருந்தும்.

    ஒரு யாசகன் தனது காயத்தை ஆறவிடாமல் செய்வது போல அது ஆறிவிட்டால் யாசகம் பெற முடியாது என்பது போல நாஸ்டால்ஜியாவும் பழமை வாத சிந்தனை கதைகளும் வாசகர்களின் இதயத்தில் இடம் பெற்று விட்டது வருத்தத்திற்குரிய விஷயம்.

    புதுமையான சிந்தனைகளும் புதுமையான கதைகளும் புதுமையான கதை ஓட்டங்களும் லயன் முத்து காமிக்ஸ்சில் இடம்பெற வேண்டியது அவசியம்.

    தனிப்பட்ட கருத்தாக சொல்லுவது

    லயன் முத்து காமிக்ஸ் வெளியிட்ட வெளியீடுகளிலேயே ஆகச்சிறந்த தொடராக கருதுவது தாத்தாக்களின் கதை தான்.

    சமகாலத்திய அரசியல், பொருளாதாரம், பல்நோக்கு வியாபார நிறுவனங்களின் நிறுவனங்களின் குயுக்திகள் இன்னும் பல சமுதாயம் சார்ந்த சிந்தனைகளை நகைச்சுவையாகவும் பொழுதுபோக்கு நடையுடனும் கொண்டு செல்லும் கதை தொடர்.

    எடிட்டர் சார் மேல் ஒரு துளியும் குறையில்லை. தேரை அவர் வெளியில் கொண்டு வருகிறார். அனைவரும் சேர்ந்தால்தானே
    இழுக்க முடியும்?

    மாற்றம் தேவைப்படும்போது பெரும்பான்மையான வாசகர் நெஞ்சங்களில் தான்.

    வணிக ரீதியாக வெற்றி பெறுவதைத் தானே எடிட்டர் சார் வெளியிட முடியும்?

    ReplyDelete
    Replies

    1. 2. ஆம்.ராபின் வாசித்துள்ளேன்.
      முந்தைய கேள்விக்கான மிகச் சிறப்பான பதில் ராபினின் நவீன யுக கதை தான். ராபின் பழைய நாயகர் தானே என்பது வெறும் முலாம் பூசுவது போன்றது தான்.
      வேறு நாயகர் புதியவர் ஒருவர் கொண்டு வெளியிடப்பட்டிருந்தாலும் இந்த கதை மகத்தான வெற்றி பெற்றிருக்கும் என்பது தான் உண்மை.

      Delete

    2. 3.GEN Z கதைகள் கண்டிப்பாக தொடர்ந்து வெளியிடப்பட வேண்டும்.

      முதலில் வெளியிடப்பட்ட சாலையோரம் ஒரு பேய் குழந்தைகள் மத்தியில் பேய் என்ற ஒரு மூடநம்பிக்கையை நயமாக உடைக்க துணிந்த ஒரு கதை.

      தாத்தாவுக்கும் பேத்திக்கும் ஆன நவீன யுக உறவுகளை மிகவும் இயல்பாக சித்தரிக்கும் கதைகள் மிகவும் வரவேற்கத்தக்கவை


      பட்டாபட்டி போட்ட ஓநாய் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் படிக்க வேண்டிய ஒரு அற்புதமான கதை.
      உண்மைக்கும் வதந்திக்குமான வேறுபாட்டை நகைச்சுவையாக சொல்ல முனைந்திருக்கும் இக்கதை ஒரு வதந்தி ஒரு பொருளாதார சாம்ராஜ்யத்தை உருவாக்க வல்லது என்பதை ஆணித்தரமாக சொல்லுகிறது.


      கிளாசிக் கதைகளில் பல குறைகள் உண்டு. ஏற்கனவே வெளியிட்டவை இப்போது வெளிவர இருக்கும் ராபின் ஹுட் கதை இரண்டுமே நவீன யுகத்திற்கு பொருத்தமற்றவை.

      இப்போது வெளியிடப்பட்டு கொண்டிருக்கும் GEN Z கதைகள் நஷ்டமே வந்தாலும் எதிர்கால முதலீடாக கருதி இதே ரக கதைகளை கண்டிப்பாக வெளியிட வேண்டும்.

      Delete
    3. //லயன் முத்து காமிக்ஸ் வெளியிட்ட வெளியீடுகளிலேயே ஆகச்சிறந்த தொடராக கருதுவது தாத்தாக்களின் கதை தான்.//

      👌👌👌

      Delete
    4. //பட்டாபட்டி போட்ட ஓநாய் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் படிக்க வேண்டிய ஒரு அற்புதமான கதை.
      உண்மைக்கும் வதந்திக்குமான வேறுபாட்டை நகைச்சுவையாக சொல்ல முனைந்திருக்கும் இக்கதை ஒரு வதந்தி ஒரு பொருளாதார சாம்ராஜ்யத்தை உருவாக்க வல்லது என்பதை ஆணித்தரமாக சொல்லுகிறது.//

      +9

      Delete
  39. 1 இனியும் புது காமிக்ஸ் சார்ந்த தேடல்கள் நமக்கு அவசியம் தானா ? Established ஆட்டக்காரர்களோடே பயணம் பண்ணுவதே கொஞ்ச காலத்துக்குப் போதும் என்பீர்களா?: I would always like to explore new comics. Some times it might not get right, but its part of comics love. I would encourage that sir.
    2.ராபினின் "எங்கேயோ கேட்ட குரல்" க்ளைமாக்ஸ் பாகம் ! இதற்கு முன்பான அத்தியாயங்களை வாசித்துள்ளீர்களா மக்களே ? YES / NO ப்ளீஸ்?: My answer is Yes. But I'm really frustrated to go and search the book which released few months back and recall. Hope I would be the part of the bigger community which collects books (at least) since 2013. Searching in Two big containers with 2000+ books will be really tough sir. Also, now a days our memory is also too poor, we might tend to lose the content what we read earlier. Even a interesting book make us irritated while published after a specific time interval. Even if we raised this many times, this is being ignored. Being a comics lover, I'm frustrated here sir.
    3. Gen Z: I'm not into it sir (I'm in subscription and Buying all regular and other books, but Gen Z is not a part of mine and I leave it here)

    ReplyDelete
  40. 1. புது காமிக்ஸ் சார்ந்த தேடல்கள் நமக்கு நிச்சயமாக அவசியம் தான், இப்போது நாம் சிலாகிக்கும் Established ஆட்டக்காரர்கள் அனைவரும் ஒரு காலத்தில் மாயாவி ஸ்பைடர் ஆர்ச்சி போன்ற Oldie legends முன் சாதிப்பார்களா என்று பயந்து பயந்து நீங்கள் அறிமுகப்படுத்தியவர்கள் தானே?

    2. அந்தந்த மாதம் முந்தைய பாகங்கள் வர வர படித்து விட்டேன், எனினும் முழு சுவாரஸ்ய அனுபவத்துக்காக "எங்கேயோ கேட்ட குரல்" க்ளைமாக்ஸ் பாகம் வரும் முன் இதற்கு முன்பான அத்தியாயங்களை மறுவாசிப்பு செய்ய உத்தேசம்

    3. என் வீட்டு எட்டு வயது வாலு குட்டி புத்தக பார்சல் வந்தவுடன் GEN Z புத்தகத்தை எடுத்து அவனது தனி சேமிப்பு கிடங்கில் வைத்து விடுவான், பிறகு ஓரிரு நாளில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து படிக்கும் மகிழ்ச்சிக்கு நிகரேதுமில்லை, மறு வாசிப்பு கூட செய்வோம், so definitely இந்த தடத்தை நிறுத்தும் எண்ணமே வேண்டாம் please, it's the best for the bang for buck it offers, please do consider it as an investment for our future generation

    ReplyDelete
    Replies
    1. // அவனது தனி சேமிப்பு கிடங்கில் வைத்து விடுவான், பிறகு ஓரிரு நாளில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து படிக்கும் மகிழ்ச்சிக்கு நிகரேதுமில்லை, மறு வாசிப்பு கூட செய்வோம், //

      மகிழ்ச்சி சார்.

      Delete
  41. ஆம் சார், தற்போதைய காலத்தில் வாசகர்களிடம் தொடர்ந்து தொடர்புடையதாக இருக்க புதிய கதாபாத்திரங்களும் புதிய வகை கதைகளும் மிகவும் அவசியமாகிறது.

    முடிந்தால், Gen Z இளைஞர்களை அதிகமாக ஈர்க்கும் பிரபலமான ஜப்பானிய மாங்கா கதாபாத்திரங்கள் அல்லது மாங்கா தொடர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு உரிமைகளை பெற முயற்சி செய்யலாம். தற்போது anime மற்றும் manga கலாசாரம் இளைஞர்களிடம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

    இதன் மூலம்:

    * புதிய தலைமுறை வாசகர்களை காமிக்ஸ் உலகிற்கு கொண்டு வரலாம்
    * தமிழ் காமிக்ஸ்க்கு மீண்டும் பெரிய வரவேற்பு கிடைக்கலாம்
    * ஆன்லைன் மற்றும் சமூக வலைதளங்களில் அதிக பேசுபொருளாக மாறலாம்
    * பழைய வாசகர்களுடன் சேர்த்து புதிய ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கலாம்

    குறிப்பாக manga style கதைகள் வந்தால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete

  42. // இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுனா ஒரு உதாரணம் ஒன்றை சொன்னார்.
    யாசகனின் காயம். அவர் சொல்லியிருந்த கருத்தின் உட்பொருள் வேறுவாக இருந்தாலும் நமது களத்திற்கும் அது பொருந்தும்.

    ஒரு யாசகன் தனது காயத்தை ஆறவிடாமல் செய்வது போல அது ஆறிவிட்டால் யாசகம் பெற முடியாது என்பது போல நாஸ்டால்ஜியாவும் பழமை வாத சிந்தனை கதைகளும் வாசகர்களின் இதயத்தில் இடம் பெற்று விட்டது வருத்தத்திற்குரிய விஷயம். //

    புதிய கதைகளை எதிர்பார்க்கும் முற்போக்குவாதிகள் புதிய புதிய தேடல்களுக்கும், புதிய கதைகளுக்கான வரவேற்பு மந்த நிலைக்கான உண்மைக் களநிலவரம் அறியாமல் , போகிற போக்கில் இன்று வரை உவமை சொல்வதற்கு எளிதான இலக்கான கிளாசிக் நேசத்தை காரணமாக சுட்டிக் காட்டுவது ஆச்சரியமாக உள்ளது.

    உண்மை நிலவரத்துடன் சொல்கிறேன் வெளிப்படையாக.. ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வந்த "லை" (பழைய லை ) என்ற பிளாக் பதிவுக்கு பின்பு 99 % கிளாசிக் நண்பர்கள் கிளாசிக் கதைகளையோ மறு பதிப்பு கதைகளையோ கேட்பதை அறவே விட்டு விட்டார்கள்.

    விருப்பம் இல்லை என்றால் வெளியிடுவதை தாராளமாக போர்க்கொடி உயர்த்தி தடுத்துக் கொள்ளுங்கள். வேண்டவே வேண்டாம். இருப்பதே போதும். ஆச்சுங்க நான் வழி விட்டுட்டேன்

    இதை இன்னமும் புரிந்து கொள்ளாமல் எளிதான இலக்கையே குறி வைத்து குதறி கொண்டே இருப்பது. ஏன் ? கிளாசிக் கதைகளை தடுங்கள், தீவிரமாக தடுங்கள் அதிதீவிரமாக போர்கால அடிப்படையில் தடுத்துக் கொள்ளுங்கள். இன்னும் எப்படி உங்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது. ஏதாவது ஒரு ரூபத்தில் கிளாசிக் கதைகளை மட்டம் தட்டுவது முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, உங்கள் புதிய தேடல்களை வெற்றி பெற செய்யுங்கள். அதற்கான ஒற்றை வழி கூட உங்களால் தேட முடியாது என்பது பரிதாப உண்மை.

    முழுமை இல்லாத "யாசகனின் காயம்" வாக்கியத்தைக் கொண்டு கீழ்மையான உவமை. பரிதாபம்.

    அப்படி ஒரு மோசமான மட்டமான யுக்தியை பயன்படுத்திக் கொண்டு கிளாசிக் கதைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வாசகன் நான் இல்லை. நான் அறிந்த வரை எவரும் இருக்க மாட்டார்கள்.

    முற்போக்கு வாதிகள் தங்கள் நேசத்தை உயர்த்தி பிடிக்க வார்த்தைகளில் கவனம் வேண்டும் "எவராக இருப்பினும்".

    தேவையில்லாத கருத்துகளாலும் , பொருத்தம் இல்லாத உவமைகளாலும் கடுப்பான பல கிளாசிக் வாசகர் நண்பர்கள் பதிவுகளில் காணாமல் போவது இதன் காரணமாக தான் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

    இறுதியாக ஒரு தகவல், நான் எப்பொழுதும்.. ஒரு கருத்துக்கு தான் மாற்று கருத்தாளனே தவிர எந்த ஒரு நபருக்கும் எதிரானவன் அல்ல.

    யாசகர் பற்றி ஒரு தகவலுடன் மீண்டும் வருகிறேன்.

    ReplyDelete
  43. கமான் ரெட் கன்.. நீ ஜெயித்தே ஆக வேண்டும்.. ராபின் முந்தைய கதைகள் குறித்து நண்பர்களைக் கேட்டு வாசித்துக் கொண்டே தொடர்வோம்.. சிறுவர் கதைகள் ஏற்கனவே அருமையாக இந்திய மரபு சார்ந்த பல கதைகளை பகிர்ந்து உள்ளீர்கள்.. அது போன்ற அருமையான காலம் இனி திரும்புமா என்பது தெரியவில்லை. எப்போதாவது ஒரு சிறுவனின், ஒரு சிறுமியின் கவனம் காமிக்ஸ் பக்கம் திரும்பும் என்றால் தாங்கள் இப்போதும் தொடரும் சிறார் கதைகள் அதற்கு நிச்சயம் உதவும். ஆகவே அந்த லைனை பராமரித்தால் நன்றாக இருக்கும் சார். அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete