நண்பர்களே,
வணக்கம். பீத்தல் பரமசிவம் அவதார் நமக்கு என்னிக்குமே செட் ஆனது இல்லைதான். ஆனாலும், எப்போதாவது ஒரு முறை நம்ம வீரப் பிரதாபங்களைப் பற்றி நமக்கு நாமே பிபி ஊதிக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை. இதோ இந்த "சா.வா.ச.ப.ச." பதிவு கூட அந்த மகா சிந்தனையின் தொடர்ச்சிதான். “என்னப்பா, அந்த காலத்து லாரன்ஸ் டேவிட் கதைகளிலே வர்ற ஆ.கொ.தீ. க. மாதிரி நீட்டமா அடுக்கிட்டு போறீயே?” என்கிறீர்களா? சொல்றேன், சொல்றேன்.
துவக்க நாள் முதலாகவே நமது அடையாளமே — in particular, லயனின் அடையாளமே — நமது அணிவகுப்பில் உள்ள அந்த அசாத்திய வெரைட்டிதான் என்பேன்.ரொம்ப சமீபத்தில் கூட ஒரு பெல்ஜியப் பதிப்பகம் புதிதாய் நம்மோடு தொடர்பு கொண்டிருந்தபோது, மாமூலாய் குசலம் விசாரித்துக் கொண்ட பிற்பாடு, ஒரு ஆச்சரிய ஈ-மெயில் அனுப்பியிருந்தார்.“உங்க வெப்சைட்டுக்கு போய் பார்த்திருந்தேன். இத்தனை இத்தனை ஐரோப்பிய, அமெரிக்க கதாபாத்திரங்களா? ஒற்றைக் குழுமத்தில் இத்தனை பேரை அறிமுகம் செய்திருக்கிறீர்களா?” என்று ரொம்பவே வியந்து சிலாகித்திருந்தார்.
நானும் ஆண்டுதோறும் எதற்கு காலரைத் தூக்கி விட்டுக் கொள்கிறேனோ இல்லையோ, நம் மத்தியில் உலவிடும் நாயகர்களின் லிஸ்ட்டைப் பார்த்து புளகாங்கிதம் அடைந்து கொள்வதுண்டு தான். அதே சமயம், நாம் அறிமுகப்படுத்திய கையோடு கழற்றியும் விட்டுள்ள நாயகர்களின் லிஸ்ட்டுமே செம நீளம்தான். பஸ்ஸிலிருந்து பாதி வழியிலேயே நாம் இறக்கிவிட்டுள்ள நாயகர்களை மட்டுமே ஏற்றிக் கொண்டு கொண்டாட ஒரு டஜன் எடிட்டர்கள் தயாராக இருப்பர் என்பது நிஜமே. ஆனால், விராட் கோலியும், ரோஹித் சர்மாவும், சச்சின் டெண்டுல்கரும், பும்ராவும் ஆடும் டீமுக்குள் ஒரே ஒரு மிடறு குறைச்சலான ஜாலம் கொண்ட ஆட்டக்காரர்கள் நுழைவது எத்தனை அசாத்தியமோ, அத்தனை அசாத்தியமே "சாத்து வாங்கி சந்துக்குள் பதுங்கியுள்ளோர் சங்கம் " நம் அட்டவணையில் இடம்பிடிப்பதும் என்பது புரிகிறது. So, இந்த வாரம் நாம் ஜாலியாய் பார்க்கப் போவதே நாம் கழற்றிவிட்டுள்ள "பாதி வழிப் பயண ஹீரோ / ஹீரோயின்களை மட்டுமே.
2012-க்கு பிற்பாடு நமது இரண்டாம் வருகை துவங்கிய நாளே, புதியதொரு திக்கில் வண்டியை இட்டுச் செல்ல வேண்டும் என்ற உறுதி உள்ளுக்குள் கணிசமாகவே இருந்தது. ஆரம்பத்தில் வழக்கம் போல் மாயாவி, ஸ்பைடர், ஆர்ச்சி என்று வண்டியை விட்டாலுமே எனது long term பார்வையானது சமகாலத்து கதைகள் மீதே இருந்து வந்தது. அன்று சிறுகச் சிறுக மாதத்தின் புத்தக எண்ணிக்கைகளை அதிகரிக்க சாத்தியமாகிக் கொண்டே போன போது, களங்களும் விரிவு கண்டு கொண்டே போவதை சந்தோஷமாய் புரிந்து கொண்டேன். சொல்லப்போனால் 10 ஆண்டுகளுக்கு முன்பான இதே காலகட்டத்தில் கதை தேடல்களுக்கு நான் அடித்த லூட்டிகள் சொல்லி மாளாது.
உட்புகுந்து சாதித்துக் காட்டியோர் லார்கோ, ஷெல்டன், டின்டின், டாங்கோ, ரூபின், Blue Coats என்று அடுக்கிக்கொண்டே போகலாம். In fact, ரெகுலர் தடத்தில் பழைய நாட்களின் நீட்சியாக தொடர்ந்திடுவோர் அனேகமாய் மாடஸ்தியும் கார்வினும் மாத்திரமே. பாக்கி அனைவருமே கிளாசிக் தடங்களில் exclusive ஆக தலைகாட்டி வருகின்றனர். So, 10-20 ஆண்டுகளுக்கு முன்பான நாயகர்களுக்கும் இன்றைய ஜாம்பவான்களுக்கும் இடையே துளியும் சம்பந்தமே இராது தான். ஆனால் இந்த முயற்சியினில் “வந்தோம், நின்றோம், ஓட்டமாய் ஓடினோம்” என்ற லிஸ்ட்டுமே நீளம். 10, 12 ஆண்டுகளின் அட்டவணையை முழுசுமாய் கையில் எடுத்து வைத்துக்கொண்டு புரட்டினால், maybe இன்று நான் குறிப்பிடப்போகும் நாயகர்களைக் காட்டிலும் கூடுதலாய் பெயர்கள் இருக்கவும் வாய்ப்புண்டு தான். ஆனால் நான் இப்போது இங்கு எழுதப் போவதெல்லாமே top of the head எனது நினைவுக்கு வந்துள்ள நாயகர்கள் மாத்திரமே.
ஸ்மர்ஃப்ஸ் :
மிகுந்த எதிர்பார்ப்போடு, மிகுந்த பிரயாசைகளோடு, மிகுந்த பொருட்செலவோடு வாங்கிவிட்டு ரொம்ப சீக்கிரமே மைசூர்பாகு என்று நினைத்துவிட்டு ஃபெவிகாலை வாய்க்குள் போட்டுக்கொண்டவனைப் போல் முழித்த அனுபவம் கிட்டியது நமது ஸ்மர்ஃப்ஸ் தொடரில் தான். ரொம்பவே பிரசித்தி பெற்ற, ரொம்பவே கெத்தான பதிப்பகம் - பிரத்தியேகமாய் ஸ்மர்ஃப்ஸ் கதைகளை தயாரித்து வெளியிட்டு வரும் நிலையில், அவர்களை எட்டிப்பிடித்து கையில் காலில் விழுந்து, நமது சர்குலேஷன்களை ஏற்றுக்கொண்டு கதைகளின் உரிமைகளை தரச்செய்வதற்கு அடித்த லூட்டிகளை பற்றியெல்லாம் முன்நாட்களில் பதிவு செய்திருக்கிறேன் தான். So, மறுக்கா அதே பிளேடை போட அவசியம் இராது என்றே நினைக்கிறேன். எக்கச்சக்க fanfare சகிதம் வரவழைத்த கதையானவை ஆரம்பத்தில் என்னவோ பெரிதாய் நெகட்டிவ் ரியாக்ஷன்களை வரவழைக்கவில்லை. அதற்கு முன்பாகவே இவை ஸ்கேன்லேஷன்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சுற்றிக் கொண்டிருந்தவை என்பதால் ஆரம்பம் பெரிய அளவில் பிசுறு தட்டவில்லை தான். ஆனால் ரொம்ப சீக்கிரமே “கார்ட்டூன்களே பிடிக்காது” என்ற அணியினருக்கு இந்த நீலப்பொடியர்கள் வேப்பங்காயாய் கசக்கத் துவங்கிவிட்டனர். பற்றாக்குறைக்கு அந்தப் பொடி பாஷை என்று ஒரு கட்டாயம் இருந்திட, இந்தத் தொடரினை ண்பர்களால் பெரிய அளவில் ரசித்திட முடியவில்லை.
'ஏக் தம்'மில் எட்டு ஆல்பங்களுக்கான உரிமைகளையும் வாங்கியிருந்ததால் வேறு வழியே இன்றி இரண்டோ மூன்றோ ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாய் ஸ்மர்ஃப்ஸ் வெளியிட்டு வந்தோம். ஆனால் துவக்க ஒன்றிரண்டு ஆல்பங்களுக்கு பிற்பாடு விற்பனை செம சுமார்தான். In fact, போன வருஷம் வரை ஸ்மர்ஃப் இதழ்கள் ஸ்டாக்கில் இருந்ததாய் எனக்கு ஞாபகம். இன்று நிதானமாய் யோசிக்கும்போது maybe அந்த பொடி பாஷையே இல்லாமல் நார்மலான கார்ட்டூன் ஸ்டைலில் அந்தக் கதைகளைக் கையாண்டிருந்தால் இன்னும் கொஞ்சம் தேவலாமாக இருந்திருக்குமோ என்றும் தோன்றுகிறது. ஆனால் “கார்ட்டூனே வாணாமே ” எனும் அணிக்கு இந்த நீல பொடி உலகம் எவ்விதம் கையாண்டிருந்தாலும் ரசித்திருக்காது என்பதே எனது gut feel.
ஜீனியஸ் லியோனார்டோ :
எத்தனை விதமான ஜானராக்களில் பயணித்தாலும் சகலத்தையும் முயற்சித்துப் பார்க்கும் ஒரு நெகிழ்வுத்தன்மை இன்றைக்கு சற்றே குறைந்திருந்தாலும், கொஞ்ச காலம் முன் வரைக்கும் நம் மத்தியில் சரளமாய் இருந்ததை மறக்கவே இயலாது. But எத்தனை பரீட்சார்த்தங்களுக்கு நீங்கள் தயாராக இருந்தீர்களோ, அதேபோல - பழகியதைத் தாண்டிய வேறெதற்குள்ளும் கால் பதிக்கவே மாட்டோம் என்ற பிடிவாதமும் அன்றும் இன்றும் வேரூன்றி இருப்பதுமே நிஜம். நான் குறிப்பிடுவது சிறுகதைகள் கொண்ட தொகுப்புகளின் மீது நமக்கிருக்கும் ஒருவித துவேஷப் பார்வை. ஒரு கதை என்றாலே முழு நீளமாய் 44 பக்கங்களுக்கு ஓடியாக வேண்டும். ஆரம்பம், கதையோட்டம், கிளைமாக்ஸ் என்றெல்லாம் பயணிக்க வேண்டும் என்பது காலமாய் ஆக்ஷன் கதைகளோடு நாம் பழகியிருந்த ஒரு template. ஆனால் ஐரோப்பாவிலோ நிலவரம் சற்றே மாறானது. அங்கே 44 பக்கங்களுக்கும் ஒற்றைப் பக்கக் கார்ட்டூன்களைக் கூட தொகுத்து ஆல்பங்களாக்கி பெரிய வெற்றியும் காணச் செய்து வருகிறார்கள். அவ்விதமிருக்க இரண்டு பக்கங்கள், நான்கு பக்கங்கள், ஐந்து பக்கங்கள் என்று வெவ்வேறு நீளங்களிலான லியோனார்டோ கதைத்தொடர் நமக்கு அழகானதொரு கார்ட்டூன் அடிஷன் ஆகிடும் என்று நிரம்பவே நம்பியிருந்தேன். சொல்லப்போனால் ஜூனியர் எடிட்டருக்கு லியோனார்டோ செம ஃபேவரைட். So, அவரின் ஸ்ட்ராங்கான பரிந்துரையின் பேரில் “ஜீனியஸ் உறங்குவதில்லை”, “விடிய விடிய விஞ்ஞானி” என்று இந்த பஞ்சுமிட்டாய் தாடித் தாத்தாவை தமிழுக்குக் கொண்டு வந்தோம். And கதைகளும் சரி, இதழின் தயாரிப்பும் சரி, இன்றளவில் புரட்டிப் பார்க்கும்போது பிரமாதமாய் இருப்பதாகவே படுகிறது.
ஆனால்…“இது என்ன மேன்? குடுகுடுப்பாண்டியின் சட்டை போல துண்டும் துக்கடாவுமாய் ஒவ்வொரு கதையும் உள்ளது. இதை ஒரு முழு இதழாக எப்படி படித்துத் தொலைப்பது?” என்று நீங்கள் கடுகடுக்கத் தொடங்கியதன் தொடர்ச்சியாக, இரண்டே இதழ்களோடு சுபம் போட்டு, தாத்தாவையும் அவரது அல்லக்கை அசிஸ்டென்ட்டையும் அவுக ஊருக்கே பேக்கப் பண்ணி அனுப்பிவிட்டோம். புத்தக விழாக்களில் லியோனார்டோ தாத்தா ஓரளவுக்கு பாப்புலர் தான். அவ்வப்போது “இதில் வேறு புது கதைகள் போடவில்லையா?” என்று வாசகர்கள் கேட்பதும் உண்டு தான். மந்தகாசமாய் சிரித்து வைத்துவிட்டு நகர்ந்து விடுவோம்.
சுட்டிப் புயல் பென்னி :
இங்கு பெரிதாய் யாரையும் குறை சொல்ல நான் மாட்டேன். Becos இந்த பென்னி கதைகளானவை இரண்டுமே decent-ஆக விற்றன தான். So, விற்கவில்லை என்ற காரணம் காட்டி இவரை ஓரம் கட்டியதாகச் சொல்ல முடியாது. Maybe ரெகுலர் தடத்தில் இவருக்கு பெருசாய் மவுஸ் இல்லாது போகலாம். ஆனால் பள்ளிகளுக்கும் புத்தக விழாக்களுக்கும் பென்னி செம செல்லப் பிள்ளை தான். இங்கே சிக்கல் என்னவெனில், இதுவுமே ஸ்மர்ஃப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பே. So, “இந்த வருஷத்துக்கு ஒரு புக் போட்டுக்கிறோம், இரண்டு புக் போட்டுக்கிறோம்” என்ற விதத்தில் இவர்களிடம் பேசவே இயலாது. எட்டு ஸ்மர்ஃப்ஸ் கதைகளை மொத்தமாய் வாங்கிய போது, கெஞ்சிக் கூத்தாடி பென்னியில் இரண்டும் சேர்த்து வாங்கி இருந்தேன். So, அந்த இரண்டை போட்டு முடித்த பின்னே, அடுத்த ரவுண்ட் ஸ்மர்ஃப்ஸ்க்கு ஆர்டர் கொடுத்திருக்கும் பட்சத்தில் பென்னியினையும் வாங்கி இருந்திருக்கலாம். ஆனால், முதலுக்கே மோசம் என்ற நிலையில் சைடாக வந்த பென்னியை அப்படியே கை கழுவ நேர்ந்தது. Sad !!
ரின்டின் கேன் :
அது ஏனோ தெரியவில்லை — சாத்து வாங்கிய சந்துப் பார்ட்டிகளில் பெரும்பான்மை கார்ட்டூன் பார்ட்டிகளே. இம்முறையோ நமது நாலுகால் ஞானசூனியம் ரின்டின் கேன். லக்கி லூக் கதைகளில் குறுக்கும் நெடுக்கும் கூமுட்டையாய் வலம் வந்து கொண்டிருந்த இந்த மங்குணி நாயை நமக்கு நல்ல பரிச்சயம் உண்டு. அங்கே வலுவானதொரு உப கதாபாத்திரமாய் சுழன்று வந்த ரின்டின் கேன்னை ஒரு பிரத்யேகத் தொடரில் spin-off நாயகராக்கி இருந்த போது, நமக்கு நிரம்பவே ரசிக்கும் என்று தான் எதிர்பார்த்திருந்தேன். And, இதன் மொழியாக்கத்திற்கு உயிரைக் கொடுத்து பணியாற்றவும் செய்திருந்தேன். ஆனால், லக்கியோடு ஜாலி ஜம்பரோடு வந்த நாட்களில் ஏற்றுக்கொள்ள முடிந்த நமக்கு, இந்த solo performance-ஐ ஏனோ அங்கீகரிக்க முடியவில்லை. வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு படிக்கக் கொடுக்கவும், காமிக்ஸ் எனும் சுவையை அறிமுகப்படுத்தவும் ரின்டின் கேன் பிரமாதமானதொரு தேர்வு என்பதில் எனக்கு ஐயங்களே கிடையாது. ஆனால், பொதுவான “கார்ட்டூன் பிடிக்காது” மூவ்மென்டில் ரின்டின் கேன் தடம் தெரியாமல் தொலைந்தே போய்விட்டது.
கர்னல் கிளிப்டன்
அடுத்த புலம்பலுமே இன்னொரு கார்ட்டூன் நாயகரைப் பற்றியானது. இம்முறையோ அவர் ஒரு கேரட் மீசைக்காரர். Oh yes! நான் குறிப்பிடுவது கர்னல் கிளிப்டனைத்தான். Personal-ஆக எனக்கு இந்த மொச்சைக்கொட்டை மூக்கு ஹீரோவை ரொம்பவே பிடிக்கும். அந்தக் கதை பாணி, அந்த பிரிட்டிஷ் பின்புலம், அந்த வறண்ட நையாண்டிகள் என எல்லாமே ரசிப்புக்குரியவையாகவே எனக்கு தோன்றும். தம் கட்டி அவரை தமிழுக்குக் கொணர்ந்தது “7 நாட்களில் எமலோகம்” சாகசம் வாயிலாக. அந்த 44 பக்கங்களது மொழிபெயர்ப்பையும் ஒற்றை நாளில் எழுதி, போட்டோவாய் எடுத்து வாட்ஸப்பில் ஊருக்கு அனுப்பிய கூத்தெல்லாம் இன்னமும் பசுமையாக நினைவில் நிற்கின்றது. ஆனால் நாலைந்து ஆல்பங்களுக்கு மேலாக கிளிப்டனால் தாக்குப் பிடிக்க முடியாது போனதே பெரும் துயரம். இங்கே முழுக்கவே anti-cartoon sentiment-ஐ நான் குறை காண மாட்டேன். ஏனெனில் பின்னே செல்லச் செல்ல கதைகளுக்குள் பெருசாய் சாரமின்றி சும்மா ஒப்புக்கு நகைச்சுவை ஒட்டு போட்டிருப்பது போல் தோன்ற ஆரம்பித்தது. அங்கெல்லாம் வலுக்கட்டாயமாய் எக்கச்சக்க extra numbers-ஐ dial பண்ணி நானாக சிரிப்பு மூட்ட முயன்றிருந்தேன். So, ஒரு கட்டத்தில் விற்பனை ரொம்பவே தொய்வு கண்டபோது மீசைக்காரரை கொஞ்ச காலத்துக்கு ஜார்கண்ட் பக்கமாய் அனுப்பி வைக்கத் தீர்மானித்தோம்.
மேக் & ஜாக் :
இவர்களுமே கார்ட்டூனுக்கு எதிரான சுனாமியில் சிதறிப்போன yet another கூட்டணி. இதுவரை கார்ட்டூன்களில் நாம் கண்டிராத ஒரு செம வித்தியாசமான பின்புலம் இந்தக் கதைத் தொடர்களுக்கு !! 1920களிலும் '30களிலும் சிகாகோ நகரில் நிலவிய மாஃபியா அமர்க்களங்களுக்கு மத்தியில் இந்த டிடெக்டிவ்கள் கிச்சுக்கிச்சு மூட்டியபடியே வலம் வருவது எனது நெடுநாளைய favorite. In fact, இவர்களது ஆல்பங்களை 25 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே புரட்டிப் புரட்டிப் பார்த்து நானாக ஃபயர் விட்டுக் கொள்வேன். ஒரு மாதிரியாக இவர்களை நம் மத்தியில் இறக்கிவிட காலம் கனிந்துவிட்டது என்று நம்பிக்கை துளிர் விட்டபோது, ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு அட்டவணையில் நுழைத்துவிட்டேன். அதிலும் அந்த “நட(ன)மாடும் கொரில்லாக்கள்” கதையெல்லாம் இன்றைக்கும் நினைத்தாலே கெக்கபிக்க என்று சிரித்து, உருள வைக்கும் கதைக்களம். ஆனால் உங்களது பார்வைக்கோணங்கள் மாறுபட்டு அமைந்துவிட, “சரிடா பா தம்பிகளா… சிகாகோவுக்கே பொட்டிகளை கட்டுங்கள்!” என்று pack up பண்ணிவிட்டோம்.
மதியிலா மந்திரியார்
தொடரும் கார்ட்டூன் சாத்து சங்கத்தில் அடுத்த பேரானது மதியிலா மந்திரியார். இவரும் எனக்கு செம ஃபேவரிட் தான். அதுவும் அந்த ஜால்ரா பாய் சகிதம் ஒரு பக்கெட்டில் ஒரு பூதத்தை பிடித்துக்கொண்டு சுற்றும் கதையெல்லாம் all-time classic என்பேன். இவர் நமது இரண்டாம் வருகைக்கு பிற்பாடான அறிமுகம் அல்ல தான். முன்நாட்களில் இருந்தே நமக்கு பரிச்சயம் தான். So, கலரில் உயர்தரத்தில் வெளியானபோது நியாயப்படிப் பார்த்தால் உங்களது darling-ஆக இருக்க வேண்டும் தான். ஆனால், “வார்டன் என்றாலே அடிப்போம்… கார்ட்டூன் என்றாலே கடிப்போம்…” என்ற உங்களது strict சுடலைமுத்து அவதாரின் முன்னே மந்திரியார் காணாமலேயே போய்விட்டார்.
Spoon & White :
இன்னொரு பெயர் from the cartoon list — ஸ்பூன் & ஒயிட்.
இரண்டே ஆண்டுகளுக்கு முன்பாய், “சரி… இதுவும் கொஞ்சம் வித்தியாசமான பாணியாகத் தெரிகிறதே!” என்ற எண்ணத்தில் களம் இறக்கியது. சந்தானம் கலாய்க்கும் slapstick பாணியில் நெடுக இந்தக் குள்ளவாத்து டிடெக்டிவ் லந்து பண்ணிக்கொண்டே போவது ரசிக்காமல் போகாது and, களங்களுமே செம சமகால பிரதிபலிப்புகளாய் இருப்பதால் சோடை போகாது என்ற நம்பிக்கையில் வேகவேகமாய் உரிமைகளை வாங்கி இருந்தோம். வெளியான இரு கதைகளிலுமே மொழிபெயர்ப்புக்கென ஏகமாய் மெனக்கெட்டிருந்தேன். In fact, இந்தக் கதைகளை மேலோட்டமாய் படிக்கும் போது அதன் பின்னே அவசியப்பட்டு இருந்த உழைப்பு பற்றித் தெரிந்திட வாய்ப்புகள் வெகு சொற்பமே. ஆனால், பிரெஞ்சிலான இதன் ஸ்கிரிப்ட் ரொம்பவே complicated. அவர்கள் அதில் பயன்படுத்தி இருந்த நையாண்டி வசனங்கள், அவர்களது திரை உலக லந்துகள் சார்ந்த குறியீடுகள், ஹாலிவுட் படங்களை செய்திடும் பகடிகள் என்று பல விஷயங்கள் புதையுண்டு இருந்தன. நான் பாட்டுக்கு மேலோட்டமாய் அவற்றை தாண்டி போய்விட்டால் ஏதாச்சும் முக்கிய விஷயம் விடுபட்டு போய்விடுமோ என்ற பயத்தில், இடறும் ஒவ்வொரு இடத்திலும் விரிவாய் தேடித் தேடி “இங்கே என்ன சொல்ல வருகிறார்கள்?”, “இது எந்த context-ல் பேசப்பட்டுள்ளது?” என்பதை எல்லாம் அவதானிக்க ஏகமாய் முயற்சித்திருந்தேன்.
And, எனக்கு தெரிந்த மட்டிலும் இரு கதைகளிலுமே translation decent-ஆகவே அமைந்திருந்தது.
ஆனால், விற்பனையின் அளவுகோலில் ஆக பெரிய பூஜ்ஜியத்தை இவர்களுக்கு பரிசாக நாம் வழங்கியபோது, “ஙே…” என்ற மொழியோடு நானும் அந்த குட்டை-நெட்டை கூட்டணியோடு முழிக்க மட்டுமே சாத்தியப்பட்டது.
சுஸ்கி & விஸ்கி :
கார்ட்டூன் லிஸ்டில் இன்னொரு பேரும் உள்ளதுதான் — சுஸ்கி அண்ட் விஸ்கி ரூபத்தில். ஆனால், இங்கு இவர்களது மிக மித வெற்றியானது எனக்கு பெரும் ஆச்சரியமாக இருக்கவே இல்லைதான். முதல் ஆல்பத்தை ஆரவாரமாய் அரவணைத்தீர்கள். ஆனால் அதன் பின்னே இருந்தது முழுக்க முழுக்க உங்களது nostalgia மாத்திரமே என்பதில் எனக்கு முதல் நாளிலேயே புரிந்திருந்தது. இந்தக் கதைக்களங்கள் நாம் original-ஆய் ரசித்த 1987-88க்கு பிரமாதமாகத் தோன்றியிருக்கலாம். ஆனால் “லக்கி லூக்கைத் தவிர வேற யாரையும் இன்று கார்ட்டூன் லிஸ்டில் தீண்டக்கூட மாட்டேன்” என்ற பிடிவாதத்தில் இருக்கும் இந்நாட்களில் சுஸ்கியும் விஸ்கியும் ரொம்பவே குழந்தை பிள்ளைகளாய் நமக்குத் தோன்றுவர் என்றே எனது gut-feel சொல்லியது. இரண்டாம் ஆல்பம் முற்றிலும் புதிய கதைகளுடன் வெளிவந்தபோதே அந்த gut-feel நிஜம்தான் என்பது உற்ஜிதமானது. ரொம்ப ரொம்ப ரொம்ப சுமார் sales. So, “பழைய நினைப்புடா பேராண்டி” என்ற எண்ணத்தில் நீங்கள் கோரியிருந்ததும் புரிந்தது. இவற்றை இன்றைய காலகட்டத்தில் நமக்கு ரசிக்க சுகப்படாது என்பதுமே புரிந்தது.
சோடா
சிரிப்பு பார்ட்டிகள் பக்கமிலிருந்து கொஞ்சம் serious பார்ட்டிகள் பக்கம் போவதானால், முதலில் கைதூக்கி நிற்பவர் SODA. Again, எனக்கு மிகுந்த ஏமாற்றத்தைத் தந்த அனுபவம் இது. அட்டகாசமான கதைக்களம், அசாத்தியமான பாத்திரப்படைப்பு, செம dark-ஆன கதை சொல்லல் என்று சமகால அமெரிக்காவில் பயணிக்கும் இந்தத் தொடரை நியாயப்படிப் பார்த்தால் பெரிய அளவில் நாம் கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் அந்த கார்ட்டூன் பாணி ஒரு ஆக்ஷன் நாயகருக்கு செட்டாகவில்லையா? அல்லது அந்த dark-ஆன கதை சொல்லல் பிடிக்கவில்லையா? அல்லது பிஸ்டல் எடுத்தவன் pastor ஆவது ரசிக்கவில்லையா? சத்தியமாய் காரணம் தெரியவில்லை.மெய்யாலுமே கொண்டாடியிருக்க வேண்டிய தொடரை கோட்டை விட்டுவிட்டோமே என்ற வருத்தம் இன்றளவும் என்னுள் கணிசம்.
ஆல்பா & சிஸ்கோ
The same goes with ஆல்பா and சிஸ்கோ. இருவருமே செம சமகால நாயகர்கள். ஒருத்தர் அமெரிக்க CIA உளவுத்துறையிலும், இன்னொருவர் French Secret Service-இலும் இருக்கும் ஏஜென்டுகள், ஆக்ஷன் நாயகர்கள். அதிரடிகளுக்கோ, சித்திர ஜாலங்களுக்கோ, புதுயுக கதை சொல்லல்களுக்கோ, ஓவிய அதகளங்களுக்கோ, digital coloring-க்கோ எவ்விதத்திலும் குறையே வைக்காத நாயக பெருமக்கள்தான். ஆனால் ஆல்பாவில் “வசனங்கள் ஜாஸ்தி, கதையோட்டத்தில் வேகம் மிதம்” என்கின்ற ரீதியில் புகார்கள். ஏஜென்ட் சிஸ்கோவிலோ ஒருவித negative streak இருப்பதாக வருத்தங்கள்.
இரண்டுமாய் சேர்ந்து தலைதூக்கிய சமயமோ “crisp reading” என்ற தாரக மந்திரத்தை நாம் கையில் எடுக்கத் துவங்கிய நாட்கள். இம்மி பிசகினாலும் சீட்டு கிழிந்துவிடும் என்ற சூழலில் அத்தனை நாயகர்களையும் கம்பி மேல் நடக்கவிட்டிருந்த போது, கொஞ்சமே கொஞ்சமாய் தடுமாறிய ஆல்ஃபாவையும் சிஸ்கோவையும் அப்படியே பொத்துனா போல் இறக்கிவிட்டு ஓரமாய் குந்தச் செய்துவிட்டோம். நிஜமான வருத்தம் எனக்கு இந்த இருவரும் நம் மத்தியில் நெடுங்காலம் உலவாது போனதில்தான்.
மேஜிக் விண்ட் & ஜூலியா
அதே வருத்தம் மேஜிக் விண்ட் மற்றும் ஜூலியா நம்மோடு தொடர்ச்சியாய் travel செய்திட முடியாது போனதிலுமே. பொதுவாய் போனலியின் கதைகளும் சரி, கதை நாயகர்களும் சரி — சொல்லியடிக்கும் கில்லிகள். டெக்சில் துவங்கி மார்ட்டின், டைலன் டாக், சாகோர், ராபின், டெட்வுட் டிக் என்று அவர்களது ஒவ்வொரு படைப்புமே, பெயர் சொல்லி நிற்கும் சாஸ்வதங்கள். இதோ சமீபமாய் நாம் அறிமுகம் செய்துள்ள சகுவாரோ, சமுராய் தாத்தா கூட போனலியின் அசாத்தியப் படைப்புகளே. நியாயப்படி அந்த வரிசையில் மேஜிக் விண்டும் இடம் பிடித்திருக்க வேண்டும் தான். அதிலும் கலரில் ஒருவித fantasy plus அமானுஷ்யம் கலந்த கதைகளங்கள் என்றபோது. ஆனால் அந்த சித்திரங்கள் அவ்வளவாய் ரசிக்கவில்லையா? அல்லது அந்த fantasy சற்றே ஓவராக இருந்ததும் பிடிக்கவில்லையா? சொல்ல தெரியவில்லை. “ஆத்மாக்கள் அடங்குவதில்லை” மூலம் அமர்க்களமாய் அறிமுகமான மேஜிக் விண்ட் மூன்றோ நான்கோ சாகசங்களோடு மூலை சேர்ந்துபோனது ஒரு தீரா வருத்தம் எனக்கு. நடிகை ராகுல் ப்ரீத் சிங் கையில் இந்த புக் தென்பட்டது மட்டுமே ஆறுதல் !!
Same goes for கொடியிடை ஜூலியா too. குறிப்பாக அந்த “நின்றுபோன நிமிடங்கள்” சாகசமெல்லாம் இன்றைக்கும் நினைவில் நின்றுவிட்ட ஒரு படைப்பு.
லேடி எஸ்
புதிராய் தொடரும் இன்னொரு பெண் புலி நமது LADY S.
கதாசிரியர் ஷான் வான் ஹாம் என்ற பேரைக் கேட்டாலே நம் களங்கள் அதிர்வது வாடிக்கை தான். So, அவர் உருவாக்கிய கதாபாத்திரம் அட்டகாசமான சித்திரங்களுடன் களம் காணும்போது நாயகி பட்டையை கிளப்பி இருக்க வேண்டும் நியாயப்படி. “விடைகொடு ஷானியா” என்ற முதல் double album-ஐ வெளியிட்ட போதெல்லாம் எனக்குள் ஓராயிரம் எதிர்பார்ப்புகள் இருந்தது நிஜமே. ஆனால் கதையில் லைட்டாக fire குறைச்சல் என்ற உணர்வு பின்னே போகப்போக தலை தூக்கியதும் நிஜமே. நீங்கள் தான் அன்னப்பறவைகளுக்கு அங்கிள்களாச்சே...? பாலில் அரைக்கால் சொட்டு கலப்படம் இருந்தாலும் நொடியில் இனம் கண்டு விடுவீர்களே. லேடி S-ன் பருப்பு உங்களிடம் வேகாமல் போயே விட்டது. ஒரு வேளை "விடைகொடு ஷானியா"ன்னு தலைப்பு வைச்சது தான் தப்போ ? அம்புட்டு சடுதியில் மெய்யாலுமே ஷானியாவுக்கு நீங்களே விட தந்திடுவீங்கன்னு எதிர்பார்க்கலை ! அடுத்த தபா - "ரா...ரா... சரசுக்கு ரா..ரா..! "என்று தலைப்பு வைத்து முயற்சிக்கலாமோ ?
அமாயா
இன்னொரு நாயகியையும் சொல்லலாம். ஆனால் அவரை சொன்னால் என்னை விளக்கமாற்றால் சாத்துவீர்கள் என்பதால் “அமாயா” என்று உச்சரித்துவிட்டு நடையைக் கட்டி விடுகிறேன். அவரை தொடராது விட்டவன் நானே. So, அமாயாவுக்கு சாத்து வாங்கிய சங்கம் இடமே தராது.
தாத்தாஸ் அணி :
இந்தச் சந்தில் பதுங்கிக் கிடப்போரில் எனக்கு உச்சபட்ச வருத்தத்தை தருவது ஒரே ஒரு அணி தான் — அந்த அணி மொத்தமாய் பல் போன தாத்தாஸ் அணி.
நமது இத்தனை ஆண்டுகால காமிக்ஸ் பயணத்தில், இத்தனை ஆயிரம் ஆல்பங்களுடனான travel-ல், இந்த தாத்தாக்களின் பின்புலத்துடன் இத்தனை ரம்யமானதொரு, ஆழமானதொரு, அசாத்தியமானதொரு, ஆரவாரமானதொரு தொடரை பார்த்திருக்கவே கிடையாது என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. எந்தத் தொடர் தோற்றாலும் இவர்கள் தோற்கவே கூடாது. என்றே விழைந்தேன் ! "இந்தியாவுக்குள் எந்த ஒரு மொழியிலும், எந்த ஒரு எடிட்டரும் இவர்களை சுட்டுவிரலால் கூட தொட மாட்டார்கள். ஆனால், எங்கள் தமிழ் வாசகர்கள் இவர்களை ரசிக்க தவறுவதில்லை" என்று எண்ணற்ற முறைகள் காலரை தூக்கி விடவும் இந்த தாத்தாக்கள் காரணமாக இருந்திருக்கின்றனர். ஆனால் இன்றைக்கோ ஐந்து ஆல்பங்கள் கண்டுள்ள இந்தத் தொடரை வம்படியாய் இந்த ஆண்டு இழுப்பதற்குப் பிற்பாடு, தொடர்ந்திட ஜீவன் இருக்குமா என்று சத்தியமாய் சொல்ல தெரியவில்லை. Maybe, எனது வயதில் எனக்கு இவர்களது கதைகள் ரசிப்பதற்கும், என்னை விட 20-25 ஆண்டுகள் குறைச்சலான வயதில் உள்ளோர் ரசிப்பதற்கும் மத்தியில் ஏகமாய் வேறுபாடுகள் இருக்கக் கூடும். So, எனக்கு தங்கமாய் தெரிந்திருக்கும் சமாச்சாரம் அவர்களுக்குத் தகரமாய் தெரிவதிலும் நியாயம் இருக்கலாம். ஆனாலும், தாத்தாக்களை முழுமையாய் தொடர முடியாது, அந்தரத்தில் தொங்கவிட்டு விடுவோமோ என்ற பயம் மெய்யாலுமே வருத்துகிறது.
இந்தப் பட்டியலில் கமான்ச்சேவையும் குறிப்பிடலாம். இன்னும் எனக்கு மறந்து போயிருக்கக்கூடிய சில பல நாயக, நாயகியரையும் இணைக்கலாம் தான்.
ஆங்கிலத்தில் சொல்வார்கள் : “Absence makes the heart grow fonder.” என்று .நீண்டதொரு இடைவெளி விடும்போது...... நிறைய நாட்கள் பார்க்காமலே இருக்கும் போது, நெஞ்சுக்குள் ஒரு நேசம் துளிர்விடுமாம். அதுபோல, என்றோ ஒரு தூரத்து நாளில் நாம் கழற்றி விட்டுள்ள இந்த புண்ணியவான்களில் யாரையேனும் மறுக்கா பார்க்கும் ஆவல் நமக்குப் தோன்றிடும் பட்சத்தில், சந்திலிருந்து கூட்டுவர நானாச்சு. Of course, “நாளைக்கே எல்லாரையும் அழைத்து வந்து விடுங்கள்… தூள் கிளப்பி விடுவோம்!” என்று குரல்கள் எழும் என்பது தெரியாதில்லை. ஆனால், the proof of the pudding is in the eating என்று சொல்வார்கள். கண்ணுக்கு முன்னே மேகி காரிசனும், தாத்தாக்களும், FAB 5 கதைகளும் அல்லாடும் நிலையில், இந்த லிஸ்ட்டை பார்த்த மறுநொடியில் “பொங்கலோ பொங்கல்” என்று பொங்குவது இந்த நொடியின் reactions-ஆக மாத்திரமே இருந்திடக்கூடும். பார்க்கலாம் guys… நாட்களின் ஓட்டத்தோடு இவர்களை மறுக்கா பார்க்கும் ஆவலும் மெய்யாகவே நம் மத்தியில் பரவலாகிடுமா என்று. நெம்ப பெரிய டீயா ஆத்தி இருக்கேன் - கொஞ்சம் பாத்து கடைக்கு ஆதரவு கொடுங்கோ - ப்ளீஸ் !!
Bye now, See you around ! "குருதியின் கூலி"யோடு போராடப் புறப்படுகிறேன். Have a great Sunday.
P.S : The TERRIFIC TEX சந்தா - நாற்கால் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது !! கதைகள் சகலமும் வந்தாச்சு - so பணிகளைத் துவங்கப் போகிறோம் !! இயன்ற மட்டுக்குத் துரிதமாய் சந்தாவில் இணைந்து கொள்ளுங்களேன் ப்ளீஸ் ? Icing on the cake - ரெகுலர் சந்தாவில் அல்லாத பல நண்பர்களும் இம்முறை இணைந்திருப்பது !! Welcome guys !!







வணக்கங்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழி
Deleteவாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐
Deleteநன்றி தோழரே 😊
Deleteநன்றி கார்த்திக் சகோ 😊
சூப்பர் அக்கா 👍🎉
Deleteநன்றி சசி தம்பி 😊💐
Deleteபின்றீங்க அக்கா!!👏👏💐💐
Deleteஇளவரசரே 😝😝😝
Delete🙏
ReplyDeleteHai.
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கங்கள்
ReplyDeleteTop 10
ReplyDeleteஆஹா
ReplyDeleteகாலை வணக்கம் சார்
ReplyDeleteவந்துட்டேன்
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeletePresent sir
ReplyDeleteI too...
ReplyDeleteடுரங்கோ... வருவார் என்ற நம்பிக்கையில்
ReplyDelete//இத்தனை ரம்யமானதொரு, ஆழமானதொரு, அசாத்தியமானதொரு, ஆரவாரமானதொரு தொடரை பார்த்திருக்கவே கிடையாது என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை//
ReplyDeleteAgreed Sir
தாத்தாஸ் கதையினை படிக்காமலே அதனிலிருந்து விலகி நிற்போர் ஏராளம்.
என் பார்வையில் தாத்தாஸ் அருமையா களம்
இவங்க எல்லாருக்குமே இன்னொரு சான்ஸ் குடுத்து பார்க்கலாம்னு தான் தோணுது பேசாம "சா. வா. ச.ப.ச."னு ஒரு தனி தடம் சந்தா வே அறிவிச்சு வெளியிடலாங்க சார்.
ReplyDeleteஅதன் அறிவிப்பையே மூ.ச.விலே வைச்சுக்கிட்டா இன்னும் வசதியா இருக்கும் சார் !
Deleteஅனைவருக்கும் வணக்கம்
ReplyDeleteடெக்ஸ் கிராபிக் நாவல் நித்திரை அறிய நித்திரய்யன் சுமார் ரகம் தான்.
ReplyDeleteதலையில்லாத போராளி அளவுக்கு எதிர்பார்த்தேன் ஆனால் அப்படி இல்லை இது ஆக்சுவலா டெக்ஸ் கதை இல்லை அந்த கதையில் டெக்ஸ் அண்ட் கார்சன் இருக்கிறார்கள் அவ்வளவுதான்.
220 பக்கங்களில் சொல்லும் கதையையும், 52 பக்கங்களில் சொல்லும் கதையினையும் ஒப்பிடுவது என்ன லாஜிக் சார் ? முந்தையது டெஸ்ட் மேட்ச் நீளம் ; பிந்தையது T -20
Delete23rd
ReplyDeleteபதிவைப் படிச்சிட்டு மனசு கனத்துப் போச்சுங்க சார்.. 😟😟
ReplyDeleteபதிவை டைப்படிச்சிட்டுவிரல்கள் காய்ச்சுப் போச்சு சார் !
Deleteஒவ்வொரு தொடரின் உரிமைகளுக்கும் பின்னே ஒரு முழுநீளக் கதையுண்டு சார் ; ஒரு நூறு எதிர்பார்ப்புகளுமே ! புதியவற்றை லெப்டுக்கா டீல் செய்து, நம்மவர்கள் கடாசி விட்டுப் போகும் போது வலிக்காத மெரியே காட்டிக்கணும் !!
Deleteஅதே போல பிரமாதமா வந்திருக்கக்கூடிய கதைகளை பற்றி ஒற்றை வார்த்தை கூட உச்சரிக்காமலும் விமர்சக ப்ளூ சட்டைஸ் கடந்து போவார்கள் ! அதையுமே நாம கண்டுக்கப்படாது !!
This comment has been removed by the author.
Deleteவலி மிகுந்த வேலை தான் சார்! 😔 ஏதோ நீங்கன்றதால தான் எல்லாத்தையும் தாங்கிட்டு சிரிச்சா மாதிரியே முகத்தை வச்சு ஓட்டிக்கிட்டிருக்கீங்க! 😤
Deleteநான் ரொம்பவே மிஸ் பண்ணும் லிஸ்ட் :
ReplyDelete1. Smurfs
2. தாத்தாஸ்
3. லியனார்டோ
4. மதியில்லா மந்திரி
5. கர்னல் கிளிப்டன்
6. ஜூலியா
7. மேக் &ஜாக்
8.சோடா
இவங்க எல்லாம் மறுபடியும் ஒரு ரவுண்டு வருவார்கள் என்று நம்பிக்கை இருக்குங்க சார்!
ஆங்.. மறந்துட்டேன்!
Delete9. தொப்ளா செல்லம் ரின்டின்கேன்
Me too ஈவி ஜி 😘💐👍
Deleteகுமார் @ வெற்றி வெற்றி.
ReplyDeleteவார இறுதி பதிவுக்கு நன்றி விஜயன் சார் 🙏🏻
// Icing on the cake - ரெகுலர் சந்தாவில் அல்லாத பல நண்பர்களும் இம்முறை இணைந்திருப்பது !! Welcome guys !! //
ReplyDeleteவாரே வா. பவர் ஆப் டெக்ஸ்
Me in Sir💐👍😘
ReplyDeleteஉண்மைதான். பல கதை நாயகர்கள் முக்கியமானவர்களே. எப்படி தவிர்க்க நேரிட்டது எறு எண்ணினால் மீத முடியும் போய்விடும் போலிருக்கு சார். அட்லீஸ்ட் ரின் டின் கேனை சீக்கிரமா கொண்டு வாருங்கள்.. ராராரா
ReplyDeleteஆமாங்க சார் . என்ன ஆனாலும் சரி மூ.ச.லயே அறிவிச்சு இவங்களுக்கு மறுபடி ஒரு சான்ஸ் தந்து பார்க்கலாங்க சார்
ReplyDeleteஎன்னைப் பொருத்தவரை...
ReplyDelete1. மேக் & ஜாக்
2. ஸ்மர்ஃப்ஸ்
இரண்டுமே தாங்க முடியவில்லை..
மற்றவை அனைத்துமே மிகவும் பிடித்த தொடர்களே...
மேக் & ஜாக் மிக ஆர்டினரி lowbrow காமெடியாகத் தோன்றியது.
ஸ்மர்ப்ஸ் தோல்விக்கு முழுக்காரணம் (என்னைப் பொருத்தவரை) அதன் பொடி பாஷை மட்டுமல்ல... அதன் மிகவும் cartoon ish கதைக்களம்..
"என்னைப் பொருத்தவரை"
Hi..
ReplyDeleteசுஸ்கி விஸ்கி
ReplyDeleteரின்டின்கேன்
ஸ்மர்ப்ஸ்
பென்னி
கர்னல் கிளிப்டன்
மதியில்லா மந்திரி
&
ஜில் ஜோர்டான்
என்றும் உங்கள் நினைவில் வாடும்
KiD ஆர்டின் KannaN
இன்னொரு நாயகியையும் சொல்லலாம். ஆனால் அவரை சொன்னால் என்னை விளக்கமாற்றால் சாத்துவீர்கள் என்பதால் “அமாயா” என்று உச்சரித்துவிட்டு நடையைக் கட்டி விடுகிறேன். ///
ReplyDeleteதொழிதிபர்கள் அணி...
மருத்துவர்கள் அணி...
முன்நெற்றி விசாலமான மூத்தோர் அணி...
இவற்றோடு இப்போது இளம் என்ஜினியர்ஸ் அணியும் அந்த இன்னொரு நாயகியின் பக்கம் கைகோர்த்து நிற்பதாகக் கேள்வி சார்.
😝😝😝
DeleteEager to see Cisco, Alpha and Lady S again.
ReplyDeleteYep
Deleteபென்னி...மதியில்லா மந்திரி...
ReplyDeleteஎனக்கு பிடித்த நாயகர்கள் ..இவர்கள் தொடர்வார்கள் என நினைத்து இருந்தேன்...பட்...
Just leave our rejected Heros as it is
ReplyDeleteDon't try them again
சிஸ்கோ...ஜெயிலுக்கு போன சிஸ்கோ வெளில வருவார்னு காத்திருக்கிறோம்... கூடவே ஆல்ஃபா தோளில் கை போட்டு
ReplyDeleteஆமாங்க ஸ்டீல் 😑😑😑
Deleteசுஸ்கி விஸ்கி...ஸ்மர்ஃப்ஸ்....என்ன ஒரு உலகம்....
ReplyDeleteஇதிலா உலவ முடியலை!
Deleteமிடிலியே ஸ்டீல் !
Deletehttps://m.youtube.com/watch?v=C_Zb-ZJvprQ&pp=ygULRm9ydCBuYXZham8%3D
ReplyDeleteFort Navajo Trailer
ReplyDeletehttps://m.youtube.com/watch?v=C_Zb-ZJvprQ&pp=ygULRm9ydCBuYXZham8%3D
ReplyDeleteஅமாயா மறுவருகை புரிய வாய்ப்பு இருக்கிறதா
ReplyDeleteஅது அண்டசராச்சர அமாயா பேரவையின் கையில் உள்ளது சார் !
Deleteசார்
ReplyDeleteசோடா
சிஸ்கோ
ஆல்பா
இதெல்லாம் அட்டகாசமான கதைக்களம்.
இவை இப்போது வராதது பெரிய ஆச்சரியமே.
இப்போதான் இவங்க பெயர்களை டைப்படித்து வைத்திருந்தேன்
Delete1) thathas
ReplyDelete2) smurfs
3) rintican
Are favourite
4) soda
5) Julia
6) mak and jack
7) mathilla manthri
Are Good
கார்ட்டூனில் நீங்கள் சொன்னது எல்லாமே எனக்கு பிடித்தது தான்.
ReplyDeleteமேக் அண்ட் ஜாக்
ரின் டின்
மதியில்லா மந்திரி
கிளிப்டன்
ஜில் ஜோர்டன்
Smurfs
சார் Fab 5 வருமா?
ReplyDeleteகோட்டச்சாமி குதிக்காம விட மாட்டான் சார் 💪💪
Deleteஜூன் - மேகி
ஜூலை - தாத்தாஸ் & Fab 5 - புக் 1
ஆகஸ்ட் - Terrific Tex
சூப்பர் சார்
Deleteஅடடே super சார். பெரிய விருந்து காத்து இருக்கு.
Deleteநன்றி நன்றி
//கோட்டச்சாமி குதிக்காம விட மாட்டான் சார் 💪💪
Deleteஜூன் - மேகி
ஜூலை - தாத்தாஸ் & Fab 5 - புக் 1
ஆகஸ்ட் - Terrific Tex//
🤗🤗🤗
// கோட்டச்சாமி குதிக்காம விட மாட்டான் சார் 💪💪 //
Deleteஅது அது.
யாருகிட்ட.
சூப்பர். இத இத தான் எதிர்பார்த்தேன் சார்.
❤️❤️❤️❤️❤️❤️❤️
லேடி S & ஜூலியா இருவரும் வராமல் போனதில் வருத்தங்கள் பல
ReplyDeleteபுதுசா எந்த கதாநாயகி வந்தாலும் மாடஸ்டி போன்று எதிர்பார்ப்பது ஏற்று கொள்ள இயலாது
ரூபின் கேரக்டர் அதிரடி நாயகியாக இருப்பதால் பலரால் ஏற்று கொள்ளப்பட்டுள்ளார்,
ப்ளஸ் ரூபினும் மாடஸ்டியோட ஒப்பிடும் செய்யப்படுகிறார்
புது கதாநாயகர்கள் யாரும் டெக்ஸ் உடன் ஒப்பிடு செய்யப்படுவதில்லை
இவர்களுள் சிஸ்கோ எடுபடாமல் போனது தனிப்பட்ட முறையில் எனக்கு ரொம்ப வருத்தம் முதல் கதையிலேயே ஆக்சனில் கலக்கியிருந்தார்
ReplyDeleteLady S தொடர முடியாதது வருத்தம்
ReplyDeleteசிஸ்கோ, ஆல்பா not bad ரகமே
ReplyDeleteமதியில்லா மந்திரி,ஜூலியா,லேடி s மீண்டுமொருமுறை முயற்சிக்கலாம்.
ReplyDeleteநா ரொம்ப மிஸ் செய்வது சோடா & ஆல்பா
ReplyDeleteLady S Van Hamme எழுதிய பாகங்கள் வரையாவது வந்திருக்கலாம்
ஒரு ப்லொவ்லே "சோடா & அல்வா"ன்னு வாசிச்சுட்டேனா - இன்னாடா இது புது காம்பினேஷனா இர்க்கேன்னு தோணுச்சு 🥹🥹
Delete🥺🥺🥺
Delete❤️👍🙏... வாழ்த்துக்கள்.. நன்றிங்க sir... 🙏
ReplyDeleteநான் ரொம்பவே மிஸ் பண்ணும் லிஸ்ட் :
ReplyDelete1.SODA
2. CISCO
3.ALPHA
4.MAK AND JAK
5.மதியில்லா மந்திரி
6 கர்னல் கிளிப்டன்
7 ஜூலியா
8. சுட்டிப் புயல் பென்னி
9.மேஜிக் விண்ட்
10. JEREMIAH
11. COMMANCHE
AT LEAST சோடா மற்றும் சிஸ்கோ மீண்டும் வந்தால் நன்றாக இருக்கும் ..
லேடி-ஸ் முதல் கதை வரும்போது ரொம்பவே எதிர் பார்த்தேன் ஆனால் இந்த அம்மணியின் ஆக்சன் கதையில் வேறு விதமாக இருந்ததால் அம்மணியை ஒதுக்கிவிட்டேன் 😊
ReplyDelete