நண்பர்களே,
வணக்கம்! ஜென் தத்துவத்தில் ""புடோ-ஷின்'' என்றொரு கோட்பாடுண்டு! அதாவது "அளப்பரிய ஆற்றல் கொண்ட மனது'' என்பதாக அதற்கு அர்த்தம் கொள்ளலாம்! அதன்படி ஒரு மலையானது நமக்குத் தடையே கிடையாதாம்; மாறாக அதுவொரு ஆசானாம்! ஒரு மலை போலான பணியை வெல்ல வேண்டுமெனில் மலைகளின் குணங்களையே நாம் உள்வாங்கிக்க வேணுமாம்! "ஐயையோ.. மழை கொட்டுதே; ஆத்தாடி.. பனி பொழியுதே; யப்பப்பா.. வெயில் தாக்குதே'' என்று மலைகள் ஒருபோதும் புலம்புவதில்லை தானே? அதே போல பணியின் கடுமையைக் கண்டு மிரளப்படாதாம்; இதைச் செய்து முடிக்க நிச்சயமாய் நேரம் எடுக்கும் என்பதை மனசளவில் ஏற்றுக் கொள்ளணுமாம்! பாறைகள் நிரம்பிய தடாகத்தில் நெளிந்து ஓடும் நீரைப் போல நமது முயற்சிகள் பணிகளினூடே பயணிக்க வேணுமாம்!
"ஹை.. உள்ளூர் தத்துவம்லாம் போரடிச்சிப் போயிட்டது போல.. தொர ஜென் தத்துவம்லாம் பேசுது!'' என்ற உங்களின் மைண்ட்-வாய்ஸ் கேட்குது மக்களே! இந்த ஜென் சமாச்சாரங்களை சமீபமாய் எங்கேயோ வாசிச்சுப் போட்டேன்; அதை உங்ககிட்டே இறக்கி வச்சு பீப்பீ ஊத உருப்படியாய் ஒரு சான்ஸ் கிடைக்காமலே போய்க்கிட்டிருந்தது! And மிகச் சரியாக "சாம்பலின் சங்கீதம்'' வெளியாகி உங்களை வசீகரித்துக் கொண்டிருக்கும் இந்த நொடியில் சீன் போட இது சூப்பரா பொருந்தும் என்றுபட்டது! So here we are!! "நான் என்னிக்கு நியூஜிலாந்து பாக்குறது?'' என்று விவேக் கேட்பது போல, "நான்லாம் வேற எப்போ ஜென் தத்துவம் பற்றி பேசுறதாம்?''
"சாம்பலின் சங்கீதம்!''
சந்தேகமின்றி நமது குழுமத்தின் ஆகக் "கனமான'' இதழ் இது தான்! Of course தராசில் எடை போடும் "கனம்'' பற்றிப் பேசிடும் பட்சத்தில்- ஸ்லிப்கேஸ் சகிதம், 3 ஹார்ட் கவர் ஆல்பங்களில், 852 பக்கங்களோடு ஆர்ட்பேப்பரில் கலரில் வெளியான "இரத்தப் படலம்'' (2018-ன்) வண்ணத் தொகுப்பானது இதை விட செம கூடுதல் கனம்! ஆனால், "கனம்" என்ற பதத்தை - ஆழம்; அடர்த்தி; பிரம்மாண்டம்; கடுமை போன்ற சமாச்சாரங்களோடு தொடர்புபடுத்திப் பார்த்திடும் பட்சத்தில்- without an iota of doubt- "சாம்பலின் சங்கீதம்'' தான் முதலிடம் பிடிக்கின்றது!
பத்துப் - பதினொறு மாதங்களுக்கு முன்பாய் உங்கள் விழிகளை என்னது போல அகலமாக விரிந்திடச் செய்ய ஏதாச்சும் பல்டி அடிச்சா தேவலாமே?! என்ற மகா வேட்கை எழுந்த நொடியில் மனசுக்கு வந்த முதல் ஆல்பம்- இந்த "music from the ashes'' தான்! இதன் பணி எவ்விதம் கடுமையாய் இருக்குமென்பது பற்றிய புரிதல்களெல்லாம் முழுமையாய் தலைக்குள் இருந்தன தான் and so வேலைக்குள் உட்புக வேண்டிய தருணத்தில் பெப்பெப்பே என்று மலைக்கலாகாது என்றுமே எனக்கு நானே சொல்லியும் வைத்திருந்தேன் தான்! ஆனால், நெட் பிராக்டிஸில் என்ன தான் பந்தை பொளேர்.. பொளேர்.. என்று சாத்தித் தள்ளினாலும், மேட்சில் 70.000 ஜனத்துக்கு முன்னே, 150.கி.மீ. ஸ்பீடில் நம்மை நோக்கிப் பறக்கக் கூடிய பந்தை எதிர்கொள்வதென்பது முற்றிலும் மாறுபட்ட விஷயமாச்சே?! அதுவே தான் நிகழ்ந்தது சாம்பலின் சங்கீதம் பணிகளின் போதும்! And அந்த ஜென் தத்துவம் எத்தனை சரியானதென்று உணர முடிந்தது! Simply becos பணியாற்றிய ஒவ்வொரு பக்கமுமே எனக்கு எண்ணற்ற பாடங்களை நடத்தத் தவறவில்லை! நண்பர் கார்த்திகை பாண்டியனுக்கு நெடும் பணிகள் புதிதாக இராதிருக்கலாம் தான்; ஆனால், நமக்கோ 200 பக்கங்கள் என்பதே மெகா சீரியல் ரேஞ்ச். So 442 பக்கங்களுக்கு இத்தனை அடர்த்தியான களத்தினில் செய்திட அவசியமான இந்தப் பணி has been a real eye-opener! வடிவேல் பாணியில் சொல்வதானால் இனிமே எம்புட்டு சாத்தினாலும் தாங்கும் போலும் ; இதற்கும் மேலாக பெண்டை நிமிர்த்தக் கூடிய பணியாக எதுவுமிருக்குமென்று தோணலை! But யாருக்குத் தெரியும் - புனித மனிடோ நமது பாதையில் அடுத்ததாக எதை அனுப்பிடவுள்ளார் என்பதை?
இந்த நொடியிலோ அவர் நமக்கென ரெடி செய்யத் தீர்மானித்திருப்பவை - ஒரு வண்டி சென்னை ஸ்பெஷல் இதழ்களை!ஒவ்வொரு வருஷத்து ஜனவரியிலும் நடந்திடும் சென்னைப் புத்தகவிழா தான் ஒவ்வொரு தமிழ்ப் பதிப்பகத்தையும் ஜீவிக்கச் செய்திடும் நீரூற்று என்பதில் இரகசியங்களே நஹி! ஆண்டின் துவக்கத்தை அமர்களமாக்கிட இயன்றால் வருஷமே சிறப்பாகிடுவதை பல தடவைகள் பார்த்துள்ளோம்! And இம்முறை கிட்டத்தட்ட ஆயிரம் ஸ்டால்களுள் நாமும் பங்கேற்கிறோம் எனும் போது- மெய்யாலுமே "ஆயிரத்தில் ஒருவன்'' என்று காலரை உசத்திக் கொள்ளலாம் போலும்!
சென்னை விழாக்களின் முதல் தாரக மந்திரமே - "மாயாவியோடு வா.. இல்லாங்காட்டி முட்டிங்காலுக்குக் கீழேயுள்ள பகுதிகளை மறந்துவிடு!'' என்பதே! ஏதோவொரு தபா சுத்தமாய் மாயாவி கையிருப்பே இல்லாது "ஸ்ப்ரிங்ரோல் ... கபாப்.. டக்கிலோ..'' என்று பந்தாவாய் கடைவிரிக்க, அப்போது வாங்கிய சாத்துக்கள் நமது வீர வரலாற்றில் ஒரு மறக்க இயலா அத்தியாயம்! So ரொம்பச் சீக்கிரமே சுதாரித்துவிட்டோம் இந்த ஜனவரிக்கென ! ஆகஸ்ட்வாக்கிலேயே நமது கிட்டங்கி விசிட் அடித்த போது, மாயாவி இருக்கும் ஷெல்ப்கள், நமது வங்கியிருப்பைப் போல காற்றாடிக் கொண்டிருந்தன! "பாதாள நகரம்'' & ""யார் அந்த மாயாவி?'' மட்டுமே black&white-ல் ரொம்பச் சொற்பமான எண்ணிக்கையில் அமர்ந்திருந்தன! அவை தவிர்த்து "ஒற்றைக்கண் மர்மம்'' கலர் இதழ் மட்டுமே! பாதாள நகரம் & யார் அந்த மாயாவியில் கூட தலா 30 பிரதிகளுக்குக் கீழே தான் ஸ்டாக் இருந்தது! முதல் நாள் மாலைக்குக் கூட அவை பற்றாதென்பது புரிந்தது! அந்த நொடியே அடிச்சுப் பிடித்து பணிகளுக்குத் துவக்கம் தந்தோம்- சமீபமாய் மறுபதிப்பு கண்டிராத ஆல்பங்களையாய் தேர்வு செய்து ரெடி பண்ணிட! So shortlist ஆனவை கீழ்க்கண்ட சாகஸங்கள்!
* மந்திர வித்தை
* தவளை மனிதர்கள்
* மாயாவிக்கோர் மாயாவி
* களிமண் மனிதர்கள்
இவை தவிரவும் இன்னும் சில மாயாவி ஆல்பங்களையும் "டிக்'' அடித்திருந்தோம் தான் - ஆனால் overkill ஆகிடவும் கூடாது; பணியாற்றுவதில் நாக்குத் தொங்கிடவும் கூடாதென்பதால் இந்த நான்கே மதி என்று தீர்மானித்தோம்!
அதைத் தொடர்ந்த சைஸ் சார்ந்த நோவு தான் "ஜிங்கு'ஜிங்கென்று தலைவிரித்தாடி மிரட்டியது! மேற்படி நான்கு கதைகளுமே ஒரிஜினலாய் இங்கிலாந்தில் VALIANT வாராந்திர இதழில் மேக்ஸி சைஸில் தொடராக வந்தவை..! So அவற்றை இயல்பாக வெளியிடுவதாயின் "யார் அந்த மாயாவி?''இப்போது வெளியான அதே சைஸில் தலா 48 பக்கங்களில் வெளியிட வேண்டியிருந்திருக்கும்! ஆனால், சிக்கல் என்னவெனில், க்ளாஸிக் ரசிகர்களுக்கு- பக்கத்துக்கு இரண்டே சித்திரங்கள் என்ற பாணியிலான பட அமைப்பே ரசிக்கிறது! அந்த லக்கி லூக் சைஸில் வெளியான "நியூயார்க்கில் மாயாவி!'' ''யார் அந்த மாயாவி?'' ஆல்பங்களெல்லாமே விற்பனையில் சோபிக்கவில்லை! "ஆஹா.. மாயாவியும் வேணும், காம்பாக்டாகவும் வேணும்" என்ற ஞானோதயம் புலர்ந்த மறுநொடியே, பக்க அமைப்புகளை மாற்றி செட் பண்ணும் பணிகளைத் துவங்கினோம்! இந்தக் குரங்குக் கூத்துக்களெல்லாமே அரங்கேறியது செப்டம்பரில்! ஒரு பக்கம் "சாம்பலின் சங்கீதம்'' இசைத்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கமோ "மாயாவி மாமாவின் கச்சேரி''களும் நம்ம கான சபாவில் ஓடிக் கொண்டிருந்தன!
"அட்டைப்படங்கள் எல்லாமே fresh ஆக இருந்தால் தேவலாமே!'' என்ற அடுத்த மகாசிந்தனை தலைதூக்கியது! நம்ம யுனிவர்ஸ் டைரடக்கரின் புண்ணியத்தில் இரும்புக்கை மாயாத்மாவை இன்றைக்குத் தேடுவோரின் எண்ணிக்கைகளும் அதிகமாகியிருப்பதால், பழைய மாவில் மறுக்கா தோசைகளை சுட்டு அடுக்க வாணாமே என்று தோன்றியது! அப்புறமென்ன- நமது கடல் கடந்த ஓவியை பிசியானார் அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு and இதோ- கீழ்க்கண்ட ராப்பர்கள் பலனாகின! So இந்தத் தபா மாயாவியார் ஒன்றுக்கு நான்காய் ஸ்லாட்களைப் பிடித்திருப்பினும், முற்றிலுமாய் ஒரு புது லுக்கோடு, அமைந்திருப்பதைப் பார்க்கப் போகிறீர்கள்! Worth a read & worth the collection too என்பேன்!
மாயாவியின் நான்கு புக்ஸ் ரெடியானதில் கொஞ்சம் தெம்பு ஏற- புத்தகவிழாக்களின் அடுத்த டார்லிங் பக்கமாய் பார்வைகளை நீளவிட்டோம்!
கடந்த இரண்டரை ஆண்டுகளாகவே எல்லாப் புத்தகவிழாக்களிலுமே இரும்புக்கை மாயாவிக்கு செம டஃப் போட்டி தந்து கொண்டிருப்பவர் டெக்ஸோ; டைகரோ; லார்கோவோ அல்லவே அல்ல! மாறாக வேதாள மாயாத்மா தான் ஸ்டாலுக்கு வருகை தருவோரை வசீகரித்து வருகிறார்! அதுவும் கலரில் Phantom அதிரடிகள் எனும் பட்சத்தில் ஆர்வ மீட்டர்கள் எகிறிடுகின்றன! பின்னென்ன- க்ளாஸிக் Sy Barry கதையான "சூனியக்காரியின் சாம்ராஜ்யம்'' இதழினையும் களமிறக்கத் தீர்மானித்தோம்! அட்டகாசமான கலரில், ஒரிஜினல் மொழியாக்கத்தோடு இந்த இதழும் "நச்' என தயாராகிவிட்டது! Again - அட்டைப்படம் தீயாய் வந்துள்ளது பாருங்களேன்!
க்ளாஸிக் அதிரடி ஜாம்பவான்கள் புத்தக விழாக்களைக் கலகலப்பாக்கி வருகிறார்களெனில் - அதிரடிகள் செய்திடா வேறொரு க்ளாஸிக் பார்ட்டியுமே தன் பங்குக்கு ரவுண்டு கட்டி அடித்து வருவதை நடப்பாண்டில் பார்த்து வருகிறோம்! அவர் வேறு யாருமல்ல - நம்ம கபிஷன் தான்! 2025-ன் புத்தகவிழாக்களில் மாயாவிக்கும், டெக்ஸுக்கும் செம போட்டி தந்திருக்கும் கபிஷ் ஸ்பெஷலின் பாகம் -3 இதோ ரெடியாகிவிட்டது! வழக்கம் போல அழகான கலரில், அம்சமான ஒரிஜினல் ஓவியரின் அட்டைப்படத்துடன்! இதோ- அட்டைப்படம் + உட்பக்க preview :
கலரில் அடுத்ததாகக் கலக்கக் காத்திருப்பவரோ சற்றே சீரியஸான பார்ட்டி! And ஒருவிதத்தில் அவர் கூட புத்தகவிழா பெசலிஸ்ட் தான்- ஆனால், ஹாரர் ஜான்ராவின் பிரதிநிதியாய் !
டைலன் டாக்கின் "The குட்.. பேட் & அக்ளி'' தான் இம்முறை சென்னையில் தலைகாட்டவுள்ள ஹாரர் ஆல்பம்! இது ஒரிஜினலாகவே வண்ணத்தில் உருவாக்கப்பட்ட டைலன் டாக் சிறுகதைகளின் தொகுப்பே! 32 பக்கங்கள் வீதம் மூன்று கதைகள்- ஆக 96 பக்கங்கள் என்பதே ஒரிஜினல் அமைப்பு! நாம் இதனை தனித்தனி இதழ்களாக்கிடலாமென்ற எண்ணத்தில் தான் வாங்கியிருந்தோம் ! ஆனால், இனியும் அதற்கு அனுமதி இல்லையென்றான பிற்பாடு, தொகுப்பாக சேலம் ஸ்பெஷலாக வெளியிட எண்ணியிருந்தோம்! ஆனால், சேலத்து விழா 2025-ல் லேது என்றாகிப் போன பிற்பாடு, டைலனை சென்னைக்கென slot in செய்தோம்! இங்கே தான் அடுத்த ட்விஸ்டே!
மூன்றுமே சிறுகதைகள் தான் என்பதால் V காமிக்ஸின் எடிட்டரிடம் இவற்றின் மொழிபெயர்ப்புப் பொறுப்பை ஒப்படைத்திருந்தேன்! விக்ரமும் neat ஆக பணி செய்து DTP-ல் தந்திருக்க, டைப்செட்டிங் முடிந்து ரெடியாக மேஜையில் பக்கங்கள் துயில் பயின்று வந்தன ! ஒருவழியாக சாம்பலின் சங்கீதம்.. லார்கோ... போன்ற heavyweights-களுடனான மல்யுத்தமெல்லாம் ஓய்ந்த பிற்பாடு டைலனோடு அமானுஷ்ய உலகுக்குள் புகுந்து துளாவத் தொடங்கினேன்! முதல் கதை செம ஸ்பீடு; இரண்டாம் கதை பரக்க பரக்க முழிக்கச் செய்தது; ஆனால், மூன்றாவது கதை தான் பேந்தப் பேந்த விழிக்கச் செய்தது! கதையின் அடித்தளமே ஒரு இளம் பெண்ணுக்கு டைலன் மீது எழும் அதீத காம இச்சை தான் & கதையே அதனைச் சுற்றித் தான் பயணிக்கிறது! நம்ம ஈரோவும் "கடமை தவறமாட்டான் இந்தக் கந்சாமி' என செயல்பட, இதை வெளியிட்டால் நம்மளைத் துரத்தித் துரத்தி, துடைப்பத்தாலேயே சாத்துவார்களென்பது புரிந்தது! Of course "நாங்கள்லாம் பென்குவினுக்கே பாரசூட் போட்டு விடற ஆட்களாக்கும்?! இந்தக் கதையெல்லாம் எங்களுக்கு சப்பை மேட்டர்'' என்று ஒரு யூத் அணி சொல்லக் கூடுமென்பதை யூகிக்கவும் முடிந்தது தான்! ஆனால், ரசனைகளில் நாம் என்ன தான் முன்னேறியிருந்தாலும், இன்னமும் ஐரோப்பிய அளவீடுகளை எட்டிடவில்லை என்ற நிதர்சனம் புரிந்தது..! So அந்தக் கதை # 3-ஐ வேண்டாமெனத் தீர்மானித்து விட்டு, புக்கின் பக்கங்களையும், விலையினையும் மட்டுப்படுத்தத் தீர்மானித்தேன்! 2 கதைகள் & 64 பக்கங்கள்!
அப்புறமாய் எடிட்டிங்குள் புகுந்தால் அந்த தெறி ஸ்பீடிலான முதல் ஆல்பத்தில் கதாசிரியர் என்ன சொல்ல வருகிறாரென்பதைச் சுத்தமாய் புரிந்து கொள்ள இயலவில்லை! அசுரத்தனமாய் டைலனை வேட்டையாட முனையும் எதிராளியை இனம் காணவே முடியவில்லை! "ஆஹா.. நமக்கு மெய்யாகவே வயசாகிடுத்து.. 32 பக்கக் கதையைக் கூடப் புரிஞ்சுக்கத் தடுமாறுதே !'' என்றபடிக்கே ஜுனியர் எடிட்டரோடு கதையின் knot பற்றி விவாதித்தேன்! குறிப்பாக எனது சந்தேகப் புள்ளிகளை எழுப்பிய போது Nopes - விக்ரமிடமும் திருப்தியான பதிலில்லை! நெட்டில் அலசினாலோ இந்தக் கதை பற்றி ஒற்றை வரியைத் தாண்டி எவ்விதத் தகவல்களுமே கண்ணில்படலை! So புரிஞ்சா மெரியே பீலா விட்டு கதையை அப்படியே வெளியிடுவதா? அல்லது வம்பே வாணாம்... மொத்தமாய் அந்த புக்கையே ஓரம்கட்டிவிடுவோமா? என்ற ரேஞ்சில் சிந்தனைகள் ஓடின! அட்டைப்படமெல்லாம் ரொம்பவே முன்கூட்டித் தயாராகியிருக்க, கதைக்கும் ராயல்டி செலுத்தியிருக்க, எல்லாமே விரயமாகிப் போகுமே என்ற குறுகுறுப்பு மேற்கொண்டு என்னை இந்த முடிச்சின் பின்னணி தேடித் தோண்டச் செய்தது! ஜுனியர் சொன்ன அவுட்லைனை மண்டைக்குள் ஒரு ஓரமாய் அமரச் செய்துவிட்டு, கதையையே நம்ம அண்ணாத்தே AI சகிதம் அங்குலம் அங்குலமாய், பக்கம் பக்கமாய் அலச ஆரம்பித்தேன்! சத்தியமாய் நம்ப மாட்டீர்கள்- இந்த நுண்ணறிவுச் சமாச்சாரமானது ரொம்பச் சீக்கிரமே நம்மளையெல்லாம் "அப்படி ஓரமாய் போயி வெளயாடிக்கோ தம்பி!'' என்று sideline செய்து விடுமென்பதில் துளியும் ஐயங்களில்லை! எங்களது வாசிப்பில் ஒரு குழப்பமான புள்ளியாக நின்ற சமாச்சாரத்தை சூப்பராய் முடிச்சவிழ்த்து ஒரு முழுநீள ரங்கோலியாக்கி, எனது சந்தேகங்கள் சகலத்துக்கும் ஸ்பஷ்டமான விடைகளை இந்தா வாய்ங்கிக்கோ என விட்டெறிந்துவிட்டது! "WOW'' என்றபடிக்கே கதையில் மறுக்கா பணி செய்தேன்! And பட்டவர்த்தனமாய் விடையை நான் அங்கே போட்டும் உடைத்திருக்கவில்லை folks! அதேசமயம் மண்டையைப் பிய்த்துக் கொள்ள "அம்போ'வென உங்களை விட்டு விடவுமில்லை! கொஞ்சமாய் கவனம் தந்தீர்களெனில் நிச்சயம் பிடித்து விடுவீர்கள்! So good luck people 👍!
சிண்டைப் பிய்த்த டைலனிடமிருந்து நெக்ஸ்ட் ஸ்டாப்- நம்ம கைப்புள்ள ஜாக் பக்கமாய்! இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வாங்கியிருந்த இந்த ஆல்பத்தின் சகலமுமே ஒற்றைப் பக்க gags தான்! முதல் ஆல்பத்து சாகஸங்கள் சற்றே நீளம் ஜாஸ்தியாக இருந்ததால் அவற்றை 2022 or 2023-ல் சந்தாக்களோடு விலைகளில்லா இணைப்புகளாய்த் தந்திருந்தோம்! And இந்த இரண்டாம் ஆல்பத்தை தொங்கலிலேயே வைத்திருந்தோம் - வாகான ஒரு வாய்ப்பு அமையட்டுமே என்றபடிக்கு! சென்னைக்கென கார்ட்டூன் கோட்டாவில் நிச்சயம் ஒரு ஆல்பம் இருக்குமென்று நான் சந்தா அறிவிப்புத் தருணத்தில் சொன்னது நினைவிருந்தது! ஒரு டுபுக்கு ரோமியோவின் ஒற்றைப் பக்க gags-களைத் தான் களமிறக்கத் தீர்மானமும் செய்திருந்தேன்! ஆனால், ஒற்றைப் பக்க லொள்ளு சபாக்களைத் தான் போடுவது என்றான பிற்பாடு, கைவசமுள்ள கைப்புள்ள ஜாக்கையே வெளியிட்டாலென்ன? புதுசாய் ஒரு ஆல்பத்தை பேசி முடித்து, பணம் அனுப்பி வாங்கிடும் நோவுகள் இந்த நொடியில் மிச்சமாகுமே?! என்று தோன்றியது! So டகாரென கைப்புள்ள ஜாக் ரெடியாகத் துவங்கினார்! நண்பர் மேச்சேரி ரவிக்கண்ணன் பேனா பிடிக்க, வழக்கம் போலவே நான் உட்புகுந்து அதன் மீது எழுத்தாணி கொண்டு எழுதிட, இந்த ஜாலியான ஆல்பம் செம க்யூட்டாய் ரெடியாகி வருகிறது! ரொம்பவே லேட்டஸ்ட் படைப்பு என்பதால் சித்திரங்கள் & கலரிங் பட்டாசாய் பொரிகிறது! And ஒவ்வொரு பக்கத்துக்குமே ஒரு தலைப்பு தந்துள்ளேன்- சுவாரஸ்யத்தை அதிகமாக்கிட! மெய்யாலுமே decent ஆக வந்துள்ள இந்த இதழை முயற்சித்துப் பாருங்கள் folks -நிச்சயமாய் நமக்கு ரசிக்கும் & நம் வீட்டு ஜுனியர்களுக்கும் செம ஜாலியான கதை சொல்லலுக்குப் பயன்படும் என்று தோன்றுகிறது! இது ஓ.கே.யாகிடும் பட்சத்தில், சுட்டி லக்கி ஆல்பங்களை இதே போல இறக்கிடலாம்! இதோ - அட்டகாசமான கலரில் previews!!
"இப்போவே மாயாவி 4 + வேதாளர்-1 + கபிஷ் -1 + டைலன் -1 + கைப்புள்ள ஜாக்-1 = ஆக, மொத்தம் 8 ஆச்சு! போதும்டா சொட்டையா! என்று உள்ளாற ஒரு குரல் கேட்டது! ஆனால், கிரகங்கள் ஒன்பது; மனித உடலில் துவாரங்கள் ஒன்பது; நவராத்திரியின் கொலு நாட்கள் ஒன்பது; So நாமளும் அந்த நம்பரிலேயே செட்டில் ஆகிப்புடலாமென்று தோன்றியது! அப்புறமென்ன- கைவசமுள்ள எக்கச்சக்க ஆல்பங்களிடையே இன்க்கி- பிங்க்கி- பாங்க்கி போட்டுப் பார்த்தேன்- black & white-ல் ஒரு வித்தியாசமான கதைபாணியுடனான "கர்மாவின் சாலையில்..'' தான் தேர்வானது! சில பல மாதங்களுக்கு முன்பாகவே இந்த ஆல்பம் பற்றி நமது வாட்சப் கம்யூனிட்டியில் நான் முன்னோட்டம் தந்திருந்தது நினைவிருக்கலாம் :
- ஆளில்லாத ஒரு தனிமையான அமெரிக்க நெடுஞ்சாலை!
- ஒற்றைக் கார்
- அதனுள்ளே ஒற்றை ஆசாமி
- அவனிடம் ஒரு செல்ஃபோன்!
And மொத்தக் கதையிலுமே இது மட்டும் தான் பிரதானம்..and சித்திரங்களில் தான் செம ட்விஸ்டே! கதையின் முதல் கட்டம் முதல், முற்றும் போடும் frame வரை அந்தக் காருக்குள் இருக்கும் புள்ளையாண்டனை வெவ்வேறு கோணங்களில், வெவ்வேறு பாவனைகளில் மட்டுமே காட்டியிருக்கிறார்கள்! செல்போனை ப்ளூடூத்தோடு கனெக்ட் பண்ணியபடியே பேசிக் கொண்டே போகும் போது, அவனது வாழ்க்கையே அந்த இரவுப் பயணத்தினில் மாறிப் போகிறது! செம வித்தியாசமான முயற்சி & black & white-ல் காத்துள்ளது இந்த கி. நா.! இன்னமும் இதனை மொழிபெயர்க்க ஆரம்பிக்கவே இல்லை & திங்கட்கிழமை நம்மாட்கள் பணிக்கு வருவதற்கு முன்பாக முடித்துத் தந்துவிடுவதாக வாக்குத் தந்திருக்கிறேன்! So ஜெய் பாகுபலி தான் இன்றிரவும், நாளைய பகலும்!
And வித்தியாசமானதொரு முயற்சிக்கு நம் பங்கில் வித்தியாசமான வாசகப் பங்களிப்பினையும் கோரினாலென்ன? என்ற மகாசிந்தனை எழுந்தது! And சன்னமாய் கதையின் அவுட்லைனை மாத்திரமே சொல்லிவிட்டு அண்ணாத்தே AI சகாயத்துடன் அட்டைப்படங்கள் உருவாக்கி அனுப்பக் கோரி நமது வாட்சப் கம்பூனிட்டியில் கேட்டிருந்தேன்! ஏகப்படட முயற்சிகளும் வந்து சேர்ந்தன & சென்னையைச் சேர்ந்த நண்பர் S.கார்த்திக்கின் ஆக்கத்தில் நாம் நிறைய பட்டி-டிங்கரிங் செய்த பிற்பாடு- படைப்பாளிகளுக்கே அனுப்பியிருந்தோம்! அவர்களும் ஓ.கே. என்று சொல்லியிருக்க, இதோ- இந்த ராப்பரை சீக்கிரமே நமது இதழின் மேலட்டையாகப் பார்க்கப் போகிறீர்கள்! வாழ்த்துக்கள் நண்பரே!
ஆக, 9 சென்னை ஸ்பெஷல்களின் பின்னணி இதுதான்! இதோ- ஒன்பது இதழ்களுக்கான ஒட்டுமொத்த விளம்பரமும்!
And சென்னைப் புத்தகவிழாவில் எல்லோருக்கும் தர அவசியமாகிடும் 10% டிஸ்கவுண்ட் உங்களுக்குமே புத்தக விழா காலத்துக்கு இருந்திடும் folks! கூரியர் தொகைகளையும், புக்ஸ் விலைகளோடு இணைத்து, மொத்தத்திற்கு நாமொரு டிஸ்கவுண்ட் தந்தாலும், அதனைப் புரிந்து கொள்ளாது ஆங்காங்கே விமர்சனங்கள் எழுதுவதே நடைமுறையாகி வருவதைக் காண முடிகிறது ! So இனியும் அந்தப் பிழைகளைச் செய்வதாகயில்லை! புத்தக விலைகள் & அவற்றில் நாம் தரக் கூடிய டிஸ்கவுண்ட் பற்றிச் சொல்லி விட்டு- இன்னொரு பக்கத்தில் கூரியர் கட்டணங்களைத் தனியாகத் தெரிவித்து விடவுள்ளோம்! உங்களுக்கு எந்த ஊருக்கு; எந்த சர்வீஸில் தேவையோ- அதற்கான கூரியர்/ பதிவுத் தபால் கட்டணங்களை இணைத்துக் கொண்டு; தேவையான புக்ஸிற்கு ஆர்டர் செய்திடலாம்! அல்லது நமது ஆன்லைன் ஸ்டோரில் எப்போதும் போலவே ஆர்டரும் போட்டிடலாம்! அங்கே கூரியர் கட்டணங்கள் ஆட்டோமேடிக்காக கணக்கிடப்பட்டுவிடும்!
மேஜர் சுந்தர்ராஜனாட்டம் மறுக்கா விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறேன் folks!
* 9 புக்ஸ் சேர்ந்து கிரயம் = ரூ.975/-
* Less : 10% டிஸ்கவுண்ட் = ரூ,100/-
* ஆக, புக்ஸ் கிரயம் = ரூ.875/-
* கூரியர் கட்டணங்களில் எவ்வித டிஸ்கவுண்டும் லேது. So ரூ.875/- என்ற தொகையோடு உங்களுக்கு எந்தச் சேவையில் ; எங்கே புக்ஸ் தேவைப்படுமோ; அதற்கான தொகையினை விளம்பரத்தில் பார்த்துக் கணிக்கிட்டுக் கொள்ளுங்கள் ப்ளீஸ் 🙏
*திங்கட்கிழமை இதுகுறித்து நம்மாட்களுடன் ஒரு விளக்கப் படலம் கோர வேணாமே- ப்ளீஸ்?!
*சென்னை ஸ்பெஷல்ஸ் தொடரும் நாட்களில் ரெடியாகிடும் & ஜனவரி 7 முதல் டெஸ்பாட்ச் செய்திடுவோம்!
Bye all.. 2025-ஐ திரும்பிப் பார்க்கும் படலத்தை ஒரு Youtube பதிவாக்கிடலாமென்று எண்ணியிருக்கிறேன் ! டிசம்பர் 31-க்கு முன்பாக அதனை செயல்படுத்திட முயன்றிடுவேன்! |












வணக்கம்
ReplyDelete💐💐💐
Deleteவாழ்த்துகள் சகோ 💐💐💐
Delete🫰🫰🫰🫰
Deleteவணக்கம்
ReplyDeleteஹாய்...
ReplyDeleteMe 2
ReplyDeleteMe
ReplyDeleteஉலக வரலாற்றில் முதன்முறையாக... 🫰🫰🫰🫰🫰🫰🫰🫰
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteவணக்கம் நண்பர்களே
ReplyDeleteவணக்கம் நண்பர்களே
ReplyDeleteHi all!
ReplyDeletePresent Sir
ReplyDelete13th
ReplyDeleteவணக்கங்கள்
ReplyDeleteஆஜர்
ReplyDeleteவணக்கம் ...
ReplyDeleteசூப்பர் 9
ReplyDeleteவணக்கம் நண்பர்களே...
ReplyDelete// கிரகங்கள் ஒன்பது; மனித உடலில் துவாரங்கள் ஒன்பது; நவராத்திரியின் கொலு நாட்கள் ஒன்பது//
ReplyDelete😂😂😂
ROFL.. படிக்கும் போது வாய் விட்டு சிரித்து விட்டேன்...
Deleteவணக்கம் ஆசிரியர் சார்
ReplyDeleteMe in Sir😘💐👍
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteவாழ்த்துக்கள் கார்த்திக் சகோ
ReplyDeleteசூப்பர் சார்...இரும்புக் கை முதலிரண்டு அட்டை டாப்....கடைசி இரண்டு சுமார்...எல்லாத்தையும் தூக்கிச் சாப்பிடுது கர்மாவின் சாலையில்...இது வரை வந்ததிலே டாப் பென ...850 அனுப்பியாச்...அதகளமாதத்திற்காக ஆவலுடன்
ReplyDelete875
Deleteடைலர் டாக் ஆர்வத்தை தூண்ட ஜாக் ஒத்தை பக்கம் சூப்பரோ சூப்பர்
Deleteதெய்வமே... பொஸ்தக கிரயத்தை மட்டுமே அனுப்பினா, புறா காலிலே கட்டித் தான் அனுப்ப முடியும் - கூரியரில் முடியாது 🤕 கோயமுத்தூர் பக்கமா போற புறாக்களுக்கு சொல்லி வைக்கணும்!
Deleteகொரியர் எவ்ளோ சார்...சேந்து விடுகிறேன்
Deleteபொறுமையா படிங்க கவிஞரே
Delete🙂🦁....ஆஹா கபீஷ்
Deleteகைப்புள்ள ஜாக் வருவது மகிழ்ச்சி. லியானர்டோ தாத்தா கதைகளை வெளியிடுங்கள் சார்..
ReplyDeleteஏன் சார் - 2040 வரை தாத்தா ஸ்டாக்கில் இருக்கவா?
Deleteசார் லக்கி லூக் மறுபதிப்புகள் இல்லைங்களா?
ReplyDeleteNopes
Deleteகர்மாவின் சாலை வருவது Awesome
ReplyDeleteதிசைகள் நான்கு குறித்து சஸ்பென்ஸ் இன்னும் தொடர்கிறது
@Edi Sir 😘🙏👍
ReplyDeleteCBF specials க்கு இப்போ புக்கிங் பண்ணிட்டு நேரடியா CBF ல வந்து வாங்கிக்கலாமா சார் 😘
பேஷா
Delete😄👍😘
Deleteசூப்பர் ஜம்பிங் தல, இந்த தடவை சென்னை விசிட்டா, சகோ
Deleteஆமாம் சகோ 😄
Deleteவிழுப்புரத்துல இருந்து சென்னை பக்கம்தான் சகோ 💐😄😘
வந்துட்டேன்...
ReplyDeleteசென்னை புத்தக விழா ஸ்பெசல் எல்லாமே அருமை சார். எனக்கு ஒரு full set parcel.
ReplyDeleteகர்மாவின் சாலை அட்டைப்படம் செமயாக வந்துள்ளது
ReplyDeleteகண்டிப்பாக புத்தகவிழாவிற்கு வருவோரை ஈர்த்திடும்
இமேஜ்கள காணலியே சார்..
ReplyDeleteஎனக்கு மட்டும் என நினைத்தேன்
Deleteஇப்போ சார்?
Delete👍👍😘டபுள் ஓகே Sir😘💐
Deleteஇப்ப ஓகே சார்.. இமேஜ்கள் தெரிகிறது.. 🥰🥰🥰🥰🥰
Delete@Edi sir😘💐
ReplyDeleteCBF விளம்பரம்.. அப்புறம் மத்த previews படங்கள் எதுவுமே டிஸ்பிளே ஆகலேயே சார் 🤔🤔🤔
எனக்கு தெரிது 🤔🤔
Deleteஇப்போ தெரியுது Sir😘😘💐😄👍
Deleteகபிஷ் preview page மட்டும் லைட்டா கிளார் அடிக்கிது சார் 😘😘💐
Deleteமத்தபடி எல்லாமே ஓகே சார் 😘
கூ.லா.கூ கொடுஞ்சூலிய
சந்திக்க ரெடி சார் 😘💐👍
அது புக்கிலிருந்து எடுத்த போட்டோ சார் ; கோப்புகளை வாங்க மறந்துப்புட்டேன்!
Delete💐🙏👍😘
Deleteவெரைட்டி ஆஃப் Stories. Classics, Horror, Cartoon, கபீஷ், கி. நா எல்லாம் சேர்ந்து செம்மையாக இருக்கும் போலவே
ReplyDeleteவணக்கம் சார் சென்னை வெளியீடு புத்தகங்கள் அருமை சார் வாழ்த்துக்கள் சார் 💐💐💐
ReplyDeleteசரியாகி விட்டதுங்க
ReplyDeleteஅது இரும்புக்கை மாயாவி நாலு அட்டைப்படங்கள் பகிர்ந்ததினால் என நினைக்கிறேங்க
மாயாவி மாமா மின்சாரத்த அதிகமா யூஸ் பண்ணதால மாயமா மறைஞ்சிடுச்சு போல.. இப்ப பவர் கொறைஞ்சதும் மறுபடி கண்ணுக்கு புலப்படுது.. 😁😁😁
Delete😁😁😁
Delete*** ஜென் தத்துவத்தில் ""புடோ-ஷின்'' என்றொரு கோட்பாடுண்டு! அதாவது "அளப்பரிய ஆற்றல் கொண்ட மனது'' என்பதாக அதற்கு அர்த்தம் கொள்ளலாம்! அதன்படி ஒரு மலையானது நமக்குத் தடையே கிடையாதாம்; மாறாக அதுவொரு ஆசானாம்! ஒரு மலை போலான பணியை வெல்ல வேண்டுமெனில் மலைகளின் குணங்களையே நாம் உள்வாங்கிக்க வேணுமாம்! "ஐயையோ.. மழை கொட்டுதே; ஆத்தாடி.. பனி பொழியுதே; யப்பப்பா.. வெயில் தாக்குதே'' என்று மலைகள் ஒருபோதும் புலம்புவதில்லை தானே? அதே போல பணியின் கடுமையைக் கண்டு மிரளப்படாதாம்; இதைச் செய்து முடிக்க நிச்சயமாய் நேரம் எடுக்கும் என்பதை மனசளவில் ஏற்றுக் கொள்ளணுமாம்! பாறைகள் நிரம்பிய தடாகத்தில் நெளிந்து ஓடும் நீரைப் போல நமது முயற்சிகள் பணிகளினூடே பயணிக்க வேணுமாம் ***
ReplyDeleteவார்த்தைகளே இல்லை சார் .. Exactly what I needed .. மணிக்கு (May be எப்பவெல்லாம் பதிவிடுறீர்களோ )ஒரு தரம் ஆசிரியர் என்பதை நிரூபித்து கொண்டு இருக்குறீர்கள் சார்..
அருமை.. Particularly in my low point of life.. Great motivation for 2026.. நன்றிகள் பல சார்..
👍👍👍💪💪
DeleteGpay number 90003964584-ன்னு 11 நம்பர் advt ல இருக்கு சார் 🤔🤔🤔
ReplyDeleteதிருத்தியாச்சு சார் 👍
Delete9003964584
Delete💐💐💐🙏
Delete😘😘😘நான் 9003964584-க்கு Gpay Rs. 875/- பண்ணிட்டேன் சார் 💐😘👍
ReplyDeleteCBF ல நேர்ல வந்து வாங்கிக்கிறேன் சார் 💐😄😘
👍👍👍
Deleteஇது காப்மேயரின் ராக்கெட் தியரியை போல..
ReplyDeleteஒரு ராக்கெட் தான் தவறான திசையை நோக்கி போய் கொண்டால் அது வெட்கமோ அவமானமோ படுவதில்லை.. மாறாக அது தன் இலக்கை நோக்கி தன் திசையை. மாற்றவே முழு முயற்சி செய்யும்..
முணுக்கு முணுக்குன்னு மூ.ச. க்கு போய்ட்டு வர்றதுக்கே நான் வெட்கப்படறதில்லே, தம்மாதுண்டு ராக்கெட் எதுக்கு அவமானம்னு நினைக்கப் போகுது?
Deleteநாலு முகங்களில் ஒரு புன்னகையைக் கொண்டு வர முடிஞ்சா நாம சரியான தடத்தில் தான் இருக்கோம் என எடுத்துக் கொள்ளலாம்! Chill bro!
சிக்கல்கள் எதுவாக இருப்பினும் புத்தாண்டில் தீர்வுகள் பிறக்கும் என நம்புவோமே 👍
DeleteMore than chilled Sir..
Deleteநன்றி for motivations Sir..
//2025-ஐ திரும்பிப் பார்க்கும் படலத்தை ஒரு Youtube பதிவாக்கிடலாமென்று எண்ணியிருக்கிறேன்//
ReplyDeleteவெயிடிங் சார்
Sir
ReplyDeleteChennai book fair your visit date?
முதல் வாரத்தின் சனி + ஞாயிறு சார்!
Deleteஜனவரி 10 & 11 சார்..
Deleteகைப்புள்ள கோழி 😘😘😘😄😄
ReplyDeleteசெம்ம ஜாலியா இருக்கு சார் 😄
CBF ல சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க போறான் சார் 😘 இந்த கைப்புள்ள 😄😄💐😘👍🙏
முதற்கண் சென்னை புத்தக விழாவிற்கும், சென்னை ரசிகர்களுக்கும் நன்றி. 🙏
ReplyDeleteஅவர்களால்தானே மாயாவியின் கதைகள் மறுபதிப்பாய், அட்டகாச அட்டையோடு நமக்குக் கிடைக்கிறது. 😃🔥
கூடவே மறுபதிப்பு வராத லாரன்ஸ் டேவிட், ஜானி நீரோ கதைகளில் ஒவ்வொன்றாகவேனும் வெளியிட்டால், என்னை மாதிரி கிளாசிக்ஸ் காமிக்ஸ் ரசிகன் சந்தோசப்படுவேன்.
எடிட்டர் தான் மனது வைக்க வேண்டும். 😴
இருந்தாலும், எங்களுக்கும் 10%discount கொடுத்தமைக்கு நன்றியும், மகிழ்ச்சியும்! 👏😁
(ஆகா! 2026 starting சூப்பரப்பு! 💐)
நான் சென்னை ஸ்டாலில் வாங் கிக் கொள்வேன் சார்
ReplyDelete👍👍
Deleteசேலம் புத்தக விழா தகவல் ஏதாவது
ReplyDeleteபயணம், லார்கோ அதனுடன் டெக்ஸ் சிறப்பு இதழ், சாம்பலின் சங்கீதம், ஜனவரி மாத இதழ்கள், சென்னை புத்தக விழா சிறப்பு இதழ்கள் இப்படி அடுத்தடுத்த மாதங்களில் இனிப்புகளாக வாரி வழங்கினால் HBA1C உச்சத்துக்குப் போய்விடுமே 😂.
ReplyDelete2025-ன் இறுதியும் 2026 இன் துவக்கமும் வழங்கிய, வழங்கப் போகும் மகிழ்ச்சிக்கு இணை எதுவுமே இல்லை சார்.❤️.
GEN Z சந்தா இதழையும் சேர்த்துக்கோங்க சார் - "சாலையில் ஒரு பூதம் " அட்டகாசமாய் வந்துள்ளது 😁😁
Deleteஆஹா
DeleteCBF க்கு 9 ஸ்பெஷல் புத்தகங்கள் என்பது அபாரம் சார்! அதுவும் இவ்வளவு குறுகிய காலத்தில்.. இத்தனை வெரைட்டியாய் - செம!!👏👏👏💐💐💐💐
ReplyDeleteஆக, ஜனவரியில் வெளியாக இருக்கும் மொத்த புத்தகங்களின் எண்ணிக்கை 12 என்றாகிறது!!😯😯😯👏👏👏💐💐💐 'திசைகள் நான்கில்' ஏதேனுமொரு திசையை சேலத்தில் காட்டினர்களேன்றால் 13!😍😍
எல்லா அட்டைப்படங்களுமே அருமை! குறிப்பாய் நண்பர் சென்னை கார்த்திக்கின் AI அட்டைப்படம் - வேற லெவல்!! அந்த எழுத்துருவும் அட்டகாசம்!!
எல்லோருக்குமே 10% discount என்று பிரகடனப் படுத்தியிருப்பது சிறப்பு!! 💐💐💐
நாளை காலையில் பணம் அனுப்பிடுவேன்!😇😇🙏
Beautiful sir.... ❤️❤️❤️🙏🙏
ReplyDelete❤️
ReplyDelete90th
ReplyDeleteவணக்கம் சார்
ReplyDeleteகைப்புள்ள ஜாக் - எதிர்பாராத அறிவிப்பு. மிக்க மகிழ்ச்சி சார்.
ReplyDeleteமாயாவி கதைகள் தவளை மனிதர்கள் தவிர அனைத்தும் படித்து இருகிறேன். அதே நேரம் இந்த கதைகள் எல்லாம் சூப்பர் சாய்ஸ்.
ReplyDeleteடைலனின் இந்த கதை தலைப்பு ஆர்வத்தை தூண்டுகிறது.
ReplyDeleteபுத்தாண்டில் 2 கார்ட்டூன் கதைகள், கபீஷ் + கைப்புள்ள ஜாக். சூப்பர். I am happy 😃
ReplyDeleteஅடேங்கப்பா 9 புத்தகங்கள், சென்னை புத்தகத் திருவிழாவுக்கு. செம ஆரம்பம்.
ReplyDelete