Powered By Blogger

Saturday, January 03, 2026

சந்தோஷமெனும் 2025 !!

 நண்பர்களே,

வணக்கம்! புத்தாண்டு நல்வாழ்த்துகள்! டெக்ஸ் வில்லரின் ஆரோக்கியமும், தளபதி டைகரின் மதியூகமும், லக்கி லூக்கின் அதிர்ஷ்டமும், லார்கோவின் குன்றா செல்வமும் இந்தாண்டு முழுக்க உங்களோடு பயணிக்க புனித தேவன் மனிடோ அருள்புரிவாராக!

2026.. ஒரு புது வருஷம்... yet another புதுப் பயணம்!

நிஜத்தைச் சொல்வதானால் இந்த நொடியில் என்ன எழுதுவதென்றே தெரியவில்லை! 2025 எனும் ஒரு அசாத்திய ஆண்டு இதோ- ஓரிரு நாட்களுக்கு முன்னர் தான் முற்றுப் பெற்றிருக்க, மண்டையினுள் கலீடாஸ்கோப்பில் தெரிவது போல கலர் கலராய் ஏதேதோ காட்சிகள் கரணமடித்து வருகின்றன! 

பாக்ஸிங் போட்டிகளில் உடல் எடைக்கேற்ப வெவ்வேறு பிரிவுகள் இருப்பதுண்டு!

* 53 கிலோ எடை வரையிலும் உள்ள குத்துச்சண்டை வீரர்கள் பங்கேற்கும் பிரிவுக்கு Bantamweight என்று பெயர்!

* 61 கிலோ எடை வரை உள்ளோர் Lightweight பிரிவில் மோதுவர்!

* 90 கிலோக்களுக்கு மேலே இருப்போருக்கு Heavyweight பிரிவு!

ரொம்ப ரொம்பச் சொற்பமான போட்டிகளில், கம்மியான எடைப்பிரிவில் உள்ள வீரர்கள் தம்மை விடக் கூடுதல் எடை கொண்ட வீரர்களோடு மோதி வெற்றியும் காண்பதுண்டு! பாக்ஸிங்கில் இதனை "Punching above your weight'' என்பார்கள்! இந்த நொடியினில் எனக்கு அது தான் நினைவுக்கு வருகிறது!

* எலி­க்குட்டி போலானதொரு நிர்வாகக் கட்டமைப்பு...!

* பூனைக்குட்டி போலானதொரு மிதமான பொருளாதார அமைப்பு..!

* சுண்டைக்காய் போலானதொரு விற்பனை அமைப்பு..!

* ஆனால், ஆசைகளும், லட்சியங்களுமோ வானளவு..!

நம்மை நாமே சுருக்கமாய் வர்ணித்துக் கொள்வதாயின் மேற்படி நான்கு வரிகளே போதும்! ஆனாலும், எலி­க்குட்டியாய், பூனைக்குட்டியாய், சுண்டைக்காயாய் இருந்து கொண்டே, கடந்துள்ள 2025-ல் நமது அணி செய்துள்ள சாதனைகளை நெருங்கிட பதிப்புலக ஜாம்பவான்களே தண்ணீர் குடிக்க வேண்டி வருமென்று சொன்னால் மிகையாகாது! Our team has punched way beyond it's weight என்பதே 2025-ஐ நிதானமாய் அசைபோடும் போது மனதில் எழும் முதல் சிந்தனை! இதைக் கொஞ்சம் மனதில் அசைபோட்டுப் பாருங்களேன் : 

"ஒரேயொரு குருக்கள் வர்றார்" - என்ற கதையாக.... 

-ஏப்ரல் முதலே, நமது DTP டீமில் பணியாற்றுவது ஒரேயொரு பெண்மணி   !

-ஊரெல்லாம் சுற்றி வரும் புத்தக விழா கேரவனில் இருப்பதும் ஒரேயொரு பெண்மணி !

-Front office-ல் உங்களது ஆர்டர்களையும், அப்புகளையும் ஒருசேரக் கையாள்வதும்  again ஒரேயொரு பெண்மணி !

-தயாரிப்பிலிருந்து, அச்சிலிருந்து , பைண்டிங்கிலிருந்து சகலத்தையும் ஒருங்கிணைக்க இம்மி கூட formal படிப்போ, பயிற்சியோ இல்லாத ஒரு நபர் !

_இவர்களோடு ஒரேயொரு திறன்கொண்ட, முறையான கல்வி கற்ற ஜூனியர் எடிட்டர் !

-And இவுகளுக்கெல்லாம் பாஸூ என்று சொல்லிக் கொள்ள, இன்னிக்கே ரிட்டையர்மென்ட்டுக்கு ரெடியானதொரு  ஆந்தை விழியன் - இளமை எனும் ஊஞ்சலில் ஆடியபடியே !

இந்த amateur டீம் ஒன்றிணைந்து தயாரித்துள்ள வானவில்லே 2025-ன் ஜாலங்கள் என்பதை எனக்கே நம்ப முடியலை இந்த நொடியினில் ! பீப்பீ ஸ்மர்ஃப் போல இது நம்ம  பீப்பீயை நாமே  ஊதிக் கொள்வது போலி­ருக்கலாம் தான் - ஆனால், 2025-ல் வெளியான 56 இதழ்களும் என் மேஜையில் இறைந்து கிடக்கும் இந்த நொடியில் ஒரு மெலி­தான பெருமிதம் உள்ளாற விரவுவதைத் தவிர்க்க இயலவில்லை! இத்தனை ஆல்பங்களை, இந்த அவகாசத்தினுள், இந்தத் தரத்தில், இந்த சொற்ப சர்குலேஷனோடு, இந்த விலைகளில், இந்த variety சகிதம் வெளியிட எந்தவொரு பிராந்திய மொழிப் பதிப்பகத்திற்கும் "possible நஹி' என்பதை காதுக்குள் ஒரு பட்சி சொல்கிறது!

* கௌபாய்* ஆக்ஷன் * டிடெக்டிவ் * ஹாரர் * கார்ட்டூன் * Fantasy* இருள் களங்கள்* மென்சோகம்  * வரலாறு* சர்வதேச பிசுனஸ் களங்கள்

என இந்தாண்டினில் நாம் அடித்திருக்கும் பல்டிகளின் பரிமாணங்கள் பற்பல..! And அவை ஒவ்வொன்றையுமே ஆரவாரமாய் ரசித்து, நெஞ்சோடு அணைத்துக் கொண்டிருக்கும் சிறுவட்டமான உங்களிடம் பீற்றிக் கொள்வதில் தப்பேயில்லை என்றே தோன்றுகிறது- simply becos இது பரஸ்பரம் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளும் தருணமாச்சே?!

* வேறு எந்த இந்திய மொழியில் ஒரு வரலாற்று ஆவணத்தை சங்கீதத்தை ரசிக்கும் முனைப்புடன் கொண்டாடுவார்களோ?

* வேறு எந்த இந்திய மொழியில் ஒரு பொழுதுபோக்கு இதழில் - Bitcoin; cryptocurrency என்று எக்னாமிக்ஸ் பாடமெடுப்பதை சகித்துக் கொள்வார்களாம்?

* வேறு எந்த இந்திய மொழியில் ஒரு பரபரப்பான ஆக்ஷன் காமிக்ஸ் நாயகரை Futures Trading; Derivatives என்ற கிறுகிறுக்கும் களங்களில் இறக்கி விடும் லாவகத்தை ஆர்வமாய் உள்வாங்குவார்களாம்?

* வேறு எந்த இந்திய மொழியில் இரும்புக்கை மாயாவியைக் கொண்டாடும் அதே மூச்சினில் சமுராய்களின் vintage காலகட்டத்துக் கதைகளையும் சிலாகித்த கையோடு, "மூன்றாம் தினம்'' என்ற சிண்டைப் பிய்க்கச் செய்யும் இருண்ட களத்தினுள் நடமாடத் துணிவார்களாம்?

So யாருக்கும் கிட்ட வாய்ப்பில்லாத ஒரு unique வாசக வட்டம் நமக்குக் கிட்டியிருக்கும் போது, அவர்கள் முன்னே தைய்யா- தக்கா என்றேனும்  சிக்கிய சிக்கிய டான்ஸ்களையெல்லாம் 56 தபாக்கள்  அவிழ்த்து விட்ட மகிழ்வை உரக்கப் பகிர்வதில் சாமி குற்றமில்லை என்று நினைத்தேன்! So Cheers to us & 2025 folks...! 

இதில் பெரும் கூத்து என்னவென்றால்- ரெகுலர் தடத்திலான 32 புக்ஸ் தவிர்த்த பாக்கி எல்லாமே on the go தீர்மானமானவைகளே! உங்களது உற்சாகங்கள் அசாத்திய ஊக்க சக்திகளாய் செயல்பட்டிட - ஒவ்வொரு "ஆட்றா ராமா.. தாண்ட்றா ராமா'' படலமுமே சித்திரைத் திருவிழாக்களாகிப் போயின! And இந்த நொடியில் நம் முன்னே ""டங்கடி.. டங்கடி..'' என ஆட்டம் போடும் கேள்வியே- ''WHAT NEXT?'' என்பதே! ரெண்டு பந்துகளை சிக்ஸருக்குச் சாத்தின மறுநொடியே அடுத்த பந்தையும் ஸ்டேடியத்தை விட்டே வெளியே சாத்தத் துடிக்கும் பேட்ஸ்மேனின் புஜங்களைப் போல உள்ளுக்குள் அலைபாய்கிறது மனசு! ""இந்த ரோட்டை வாங்கிப் போட்டுப்புடலாமா?'' "இந்த தெருவை வாங்கிப்புடலாமா?'' என பாடாய்ப்படும் கவுண்டராகத் தான் கண்ணுக்கு முன்னே தென்படும் அம்புட்டு மெகா காமிக்ஸ் படைப்புகளையும் பார்வையிடத் தோன்றுகிறது! "அடங்குடா கைப்புள்ள' என்று உள்ளாற ஒரு மூ.ச. அனுபவஸ்தனின் குரல் மட்டும் சன்னமாய் ஒலி­ப்பதால், எனக்கு நானே "தடா' போட்டுக் கொண்டிருக்கிறேன்!

"கைப்புள்ள'' என்ற தலைப்பிலி­ருக்கும் போது, இந்த ஒற்றை விஷயத்தை உட்புகுத்தி விடுகிறேனே folks? 2026-ன் சென்னை புத்தகவிழா ஸ்பெஷல்களுள் ஒன்றாக வரவுள்ள "கைப்புள்ள ஜாக் ஸ்பெஷல்' - மூன்று தினங்களுக்கு முன்னே தான் அச்சாகி என் மேஜைக்கு வந்துள்ளது! சமீப காலங்களில், இதற்கு இணையானதொரு கலர் படைப்பை நாம் பார்த்திருக்கவே மாட்டோம் என்பது தான் என் மண்டைக்குள் ஓடிய முதல் சிந்தனை! லேட்டஸ்ட் லார்கோவோ; டேங்கோவோ; லக்கி லுக்கோ கூட இந்த அரை ஜாண் வெகுமதி வேட்டையனிடம் பிச்சை எடுத்திட வேண்டியதிருக்கும் என்பேன்! சித்திரங்களும்.. கலரிங்கும் வேறொரு லெவலுக்கு இதை இட்டுப் போயிருப்பதாக நினைக்கிறேன்! "கார்ட்டூன் தானே ?" என ஓரம் கட்டினால், நிச்சயமாய் ஒரு அற்புதத்தை மிஸ் செய்தவர்களாகி விடுவீர்கள் !! 

And காத்துள்ள "கர்மாவின் சாலையில்'' கிராபிக் நாவலுமே ஒரு ரவுசான வாசிப்பு அனுபவத்தினை நல்க இருப்பதாய் மனுசுக்குள் ஒரு பீ­லிங்! குறும்படங்கள்; OTT தளங்களில் ரிலீஸ் ஆகும் சில பரீட்சார்த்தத் திரைப்படங்களை Roomcom என்பார்கள்! அதாவது ஒட்டுமொத்தப் படமுமே ஒற்றை அறைக்குள் இருக்கும் மனிதர்களோடே அரங்கேறி முடிந்துவிடும்! இங்கேயோ இதனை Carcom எனலாம் - becos இருளுக்குள், தனிமையில் சீறிச் செல்லும் ஒற்றைக் காருக்குள் அமர்ந்திருக்கும் ஆசாமியே கதையின் சகலமும்! அந்த ஆளரவமற்ற சாலையில் அரங்கேறிடும் பயணத்தில் மனுஷனது வாழ்க்கையே என்னமாய் ரோலர் கோஸ்டராட்டம் ஊசலாடுகிறது என்பதே இந்த ஆல்பத்தின் களம்!! லைட்டாக ஒரேயொரு பக்கத்தினை இங்கே ப்ரிவ்யூ செய்திடும் ஆசையைத் தவிர்க்க இயலவில்லை- so here goes :


இந்த ஆல்பத்தினை "திசைகள் நான்கு'' தனித்தடத்தில் முயற்சித்திடவே எண்ணியிருந்தேன்! ஆனால், அந்த "வாய்க்குள்ளாற கால்'' முயற்சிக்கென ஒரு iconic கதைத் தொடரை shortlist செய்து அவற்றின் உரிமைகளுக்காக வெயிட்டிங்! சொல்லப் போனால் ஒப்புதல் எல்லாம் வந்தாச்சு தான்; ஆனாலும் நமது ரெகுலர் (லக்கி லூக்) சைஸில் அவற்றைப் பிரசுரிக்க கதாசிரியர்+ ஓவியரின் இசைவைத் தெரிந்திடவே வெயிட்டிங்! Maybe.. just maybe இந்த சைஸுக்கு அவர்கள் தயங்கினால், MAXI சைஸில் அந்தத் தொடரினை களமிறக்கிடவும் நாம் தயங்க மாட்டோம்!  கோக்குமாக்கான ஒரு முயற்சிக்கு இதை விடவும் செம பொருத்தமான ஈரோவோ / தொடரோ அமையாது என்பேன் ! Fair chances are that - "இன்னா மேன் தொடர் இது?'' என்று நீங்கள் திகைக்கவும் செய்யலாம் தான்! ஆனால், மதிப்பெண்களையும், விமர்சனங்களையும் எதிர்நோக்கியே பரீட்சை எழுதிப் பழக்கப்பட்ட template-க்கு டாட்டா காட்டிவிட்டு, "நேக்கு புடிச்சது.. நோக்கும் புடிக்குமென்ற நம்பிக்கையில் கொண்டு வந்திருக்கேனாக்கும்!'  என்று "திசைகள் நான்கு'' ரூட்டில் வண்டியை விட எண்ணியுள்ளேன்! So கொஞ்சமே கொஞ்சமாய் வெயிட்டிங் ப்ளீஸ்!

புத்தாண்டு...புத்தாண்டின் முதல் மாதம்

வழக்கம் போலவே 'தல' டெக்ஸ் & டீம் ஆட்டத்தைத் துவக்கித் தருகின்றனர் நமக்கு ! இந்த ஆல்பம் 2024-ல் வந்திருக்க வேண்டியது ; ஏதேதோ காரணங்களால் தள்ளிப் போய் நடப்பாண்டில் ஆஜராகியுள்ளது ! செம breezy read என்பதோடு - சித்திரங்களும், மிரட்டும் டிஜிட்டல் கலரிங்கும் இதன் highlights என்பேன் ! அடுத்த மாதம் முதலாய் 224 பக்க டெக்ஸ் டபுள் ஆல்பம் என்ற தடத்துக்குத் திரும்பிடவுள்ளோம் ! 

And காவியத் தலைவன் தோர்கல் - எதிர்பாரா ஹார்ட்கவரில் கச்சிதமாய் உருவாகி இருப்பதாய்த் தோன்றியது ! இது நார்மலான பைண்டிங்கில் வந்திருக்க வேண்டிய இதழே ; moreso ஆண்டின் ஆக பிஸியான தருணத்தில் ஹார்ட்கவர் பைண்டிங் பணிகள் செமத்தியான தாமதம் கண்டிடக்கூடும் எனும் காரணத்தினால் ! ஆனால் தோர்கலின் ஒரு புனர்ஜென்ம முயற்சியானது, பத்தோடு பதினொன்றாய் இருந்திட வேணாமே - என மனசுக்குப் பட்டது ! நமது பைண்டிங் நண்பரும் "நீங்க போடுங்க...எப்படியோ சமாளித்து விடலாம்" என தைரியமூட்டிட - "விடைகொடு ஆரிசியா" அழகாய் அமைந்தே விட்டது ! இதே வரிசையில் உள்ள அடுத்தடுத்த oneshot தோர்கல் சாகசங்களை தொடரவுள்ள ஆண்டுகளில் முயற்சிக்கலாமா - வேணாமா ? என இனிமேல் decide பண்ண வேண்டியது நீங்களே folks !! நிதானமாய் வாசித்து முடித்த பிற்பாடு ஒரு தீர்ப்பைச் சொல்லிப் போடுங்களேன் நாட்டாமைஸ் ?!

என்னைப் பொறுத்தமட்டில் இம்மாதம் ரொம்பவே எதிர்பார்த்திருந்தது GEN Z சந்தாவின் முதல் இதழினையே ! கம்பர் காலத்திலிருந்தே காமிக்ஸ் போட்டு வருவதாக உள்ளாற பீலிங் இருப்பினும், ஒரு புது target audience-க்கு ; ஒரு புது ரூட்டில் ஒரு தனித்தடத்தினை உருவாக்குவது கொஞ்சம் மறந்தே போயிருந்த routine ! நாம் சுட்டு வரும் மாமூலான  தோசைகளிலிருந்து, எல்லா விதங்களிலுமே இந்தப் புது முயற்சியானது மாறுபட்டுத் தெரிந்திட வேணுமே என்பதே எனது பிரதான எண்ணமாக இருந்தது ! அந்தப் படுக்கை வசத்திலான புக் அமைப்பு அதை நோக்கிய முதல் படி ! அப்புறம் பிரெஞ்சு காமிக்ஸ் சமுத்திரத்தினுள் பொறுமையாய் முத்துக் குளித்தால் - ஆதாம் ஏவாளுக்கே சுவாரஸ்யம் தரக்கூடிய கதை வரிசைகள் கிட்டாது போகாதென்ற எனது நம்பிக்கை அடுத்த படியாகிப் போனது ! 'சவ சவ' என நீண்டு செல்லும் கதைகளைத் தந்து, புது வாசக வரவுகளின் பொறுமைகளைச் சோதிக்கலாகாது என்பதில் ஆரம்பம் முதலே தெளிவாக இருந்தேன் ! அதே சமயம் ஒற்றைப் பக்க சுட்டி லக்கி gags ; லியனார்டோ தாத்தா gags போலான சமாச்சாரங்களும் இதற்கு சரிப்படாது என்பதிலும் தெளிவாய் இருந்தேன் ! சிம்பிளான கதைக்களங்களும் அவசியம் ; ஒரு தெளிவான storyline-ம் இருக்கணும் ; எடுத்தால் ஒரே தம்மில் வாசித்து முடிக்கச் செய்யும் ஈர்ப்பும் இருந்திட வேணும் - என்பதே தேவைகள் ! 

"உள்பக்கம் 4 கரண்டி நெய்...வெளிப்பக்கம் மழைச் சாரலாட்டம் பொடி தூவி, ரெட்டு கலர்ல முறுகலா ஒரு ஊத்தப்பம்" என சொல்வது சுலபம் ; ஆனால் அதற்கேற்ப நிஜத்தில் தேடிப் பிடிப்பது சுலபமே அல்ல என்பது களமிறங்கிய பிற்பாடே புரிந்தது ! அமெரிக்க வால்ட் டிஸ்னி கதைகள் ; டாம் & ஜெரி கதைகள் போலானவை இதற்கு கச்சிதமாய்ப் பொருந்திடும் என்பது புரிந்தது ; so அவர்களது கதவுகளை மருவாதியோடு தட்டிப் பார்த்தோம் ! "இன்னா மேன் மேட்டரு ..?" என வினவியோரிடம் நமது கோரிக்கைகளை முன்வைத்தோம் ! "அல்லாம் பண்ணிக்கலாம் மேன்.....வருஷத்துக்கு இத்தினி பொஸ்தவம் மினிமம் போடணும்....இத்தினி லகரங்கள் ராயல்டியாக கட்டணும் ! காண்டிராக்ட் போட்றலாமா ?" என பதிலளித்தனர் ! "இதோ - தெருக்கோடியில் உள்ள ATM க்கு முழியாங்கண்ணன் போறான் ; லகரங்களை டிரா பண்ணி எடுக்கிறான் ! பொட்டலம் போட்ட கையோடு திரும்பி வர்றான் !" என்று எடுத்தேன் பாருங்க ஒரு ஓட்டம் - உசைன் போல்ட் பொறாமைப்பட்டிருப்பார் ! So அமெரிக்க தேசத்துக்கு 'கா' விட்ட கையோடு, நமது ஆதர்ஷ ஆடுகளமான பிரெஞ்சு உலகினுள் புகுந்து கதைகளைத் துளாவ ஆரம்பித்தேன் ! Trust me guys - குறைந்த பட்சம் 40 வெவ்வேறு தொடர்களையாவது பரிசீலித்திருப்பேன் ! இந்தப் பொண்ணு உசரம் கம்மி ; அந்த மாப்பிள்ளைக்கு மண்டையிலே கேசம் கோவிந்தா - என்ற ரேஞ்சுக்கு ஒவ்வொன்றையும் கழித்துக் கொண்டே போனது தான் மிச்சம் ! இறுதியில் கிட்டிய TEAM ஜு.டி.நிறைய பெட்டிகளை டிக் அடித்தது போலிருக்க - 'பச்சக்' என லாக் செய்தேன். நாம் ஏற்கனவே பணியாற்றி வரும் Bamboo நிறுவனமே என்பதால் உரிமைகளை கோரிப் பெற்ற கையோடு பணிகளை ஆரம்பித்தோம் ! நான் அந்நேரம் இருந்ததோ சாம்பலின் சங்கீதம் + லார்கோ இதழ்களின் பணிச் சுனாமிகளுக்குள் !! ஒரு பக்கம் டாக்டர் சில்லார்ட் சங்கிலித் தொடர்வினை பற்றிப் பேசிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் புரஃபஸர் பேங்கிராப்ட் பங்குச் சந்தையின் பொருளாதாரப் பாடம் எடுத்துக் கொண்டிருக்க, நானோ மூணாப்புப் பசங்க ரேஞ்சுக்கு இறங்கி "குச்சி குச்சி ராக்கம்மா" என்று பூதத்துக்கு டப்பிங் கொடுக்கவும்  வேண்டியிருந்தது ! நிஜத்தைச் சொல்வதானால் இந்த ஜாலியான variety தான் இன்னமும் இந்தப் பணிக்குள் என்னை உயிர்ப்போடு உலவ அனுமதிக்கின்றது ! பாலேயும் ஆடிக்கலாம் ; குச்சிப்புடியையும் கதிகலங்கடிக்கலாம் ; பேட்ட ராப் என்று குத்தும் குத்திக்கலாம் இங்கே ! அவ்விதம் ஜாலியாய் உருவானதே "சாலையில் ஒரு பூதம் !" Early days yet - ஆனால் துவக்கத்து reviews அனைத்துமே செம பாசிட்டிவ் ! தொடரும் நாட்களில் மெய்யாலுமே பாலகர்ஸ் இதனை வாசித்து அபிப்பிராயம் சொல்லல் சாத்தியமானால் would be great to know their reactions !!

அப்புறம் சந்தா நண்பர்களுக்கான அந்த கலர்புல் (சிண்ட்ரெல்லா) காலெண்டர் முழுக்க முழுக்க ஜூனியர் எடிட்டரின் கைவண்ணமே ! டிசைன் ; திட்டமிடல் - என சகலமும் விக்ரம் பார்த்துக் கொள்ள, கீழே வரும் அந்த வஜனங்கள் மாத்திரமே நம்ம கைவண்ணம் ! காலெண்டர் அழகாய் அமைந்து விட்டதில் ஹேப்பி ! 
Looking ahead, சென்னைப் புத்தகவிழா இதோ- அடுத்த வாரத்துக்கென நெருங்கிவிட்டது! And இம்முறை புது நிர்வாகம் BAPASI-ல் பொறுப்பேற்றிருக்க, முன் எப்போதும் இல்லாத அளவில் ஸ்டால்கள் கேட்டு ரஷ்ஷோ ரஷ்! ஆக, சங்கத்தின் உறுப்பினர் அல்லாதோர் அனைவருக்குமே சிங்கிள் ஸ்டால் தான் என்று சொல்லி­ விட்டார்கள்! Which means நமக்கும் இம்முறை சிங்கிள் ஸ்டால் தான்! So சும்மா பட்டணம் பார்க்க பஸ் ஏறி, நந்தனம் YMCA-வுக்குப் போயும், வந்துமாய் இருக்கக் கூடிய கமான்சே ; LADY S ;  ப்ரூனோ ப்ரேசில் போன்றோரெல்லாம் இம்முறை ஊரிலேயே குந்தியிருக்கப் போகிறார்கள்! போணியாகும் குதிரைகளை மட்டுமே பட்டியி­லிருந்து வெளியேற்றி இட்டுச் செல்வதாகவுள்ளோம்! வழக்கம் போல குடும்பத்தோடு வருகை தந்து இந்த முறையும் தெறிக்க விடுவீர்களென்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்! நமது ஸ்டால் நம்பர் 240 and அடியேன் ஜனவரி 10 சனி மாலையிலும், 11 ஞாயிறு மாலையிலும் புத்தகவிழாவில் தான் சுற்றிக் கொண்டிருப்பேன்! இயன்றால் would love to catch up ! Please do visit with family !! 

நாளை  "2025- The Year in Review'' என்று 2025-ன் பயணத்தை சற்றே விரிவாய் பார்வையிடும் முயற்சியினை வீடியோ பதிவில் செய்திடவிருக்கிறேன்! So ஞாயிறு பக­லில் அதனை நமது YouTube சேனலி­ல் பார்த்திடலாம்!

Bye all... and thanks again for the wonderful memories of 2025. See you around! Have a great weekend !

சந்தா ரயிலில் இன்னமும் இடம்பிடித்திடவுள்ள நண்பர்களுக்கு - சன்னமாய் ஒரு நினைவூட்டலுமே...!! 

P. S : கேள்விகள் உங்களுக்கு :

1.உங்களின் TOP 3 புக்ஸ் of 2025 எவையோ?

2.TOP 3 அட்டைப்படங்கள்?

3.டப்சா 3 of 2025?

64 comments:

  1. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  2. "சாலையில் ஒரு பூதம்"
    லயன் மினி வெளியீடு.

    வந்திருக்கும் ஜனவரி இதழ்களில், என்னதான் இருக்கும்? என்று ஆர்வத்தோடு படித்த முதல் புத்தகம்.

    வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு - என்றார்கள். இப்போதைக்கு நான்தான் இங்கு குழந்தை.
    'அந்த குழந்தையே நான்தான் சார்! ' - moment. 😆

    3 ஸ்கூல் பசங்க. படிக்கும் நேரம் போக துப்பறிவது அவர்களது பொழுது போக்கு.
    ஜூனியர் டிடெக்டிவ் - ஜு.டி என்று பெயர்

    ஸ்கூலில் படிக்கும் ஜோஸ் என்ற சிறுவன் சாலையில் பூதத்தைப் பார்த்ததாக சொல்கிறான். மூவரும் துப்பறிகின்றனர்.
    அந்த பூதத்தை,
    முட்டைக் கோஸ் தெரு, காலி பிளவர் தெரு, புரோகோலி தெரு ஆகிய இடங்களில் பார்த்ததாகச் சொல்கிறார்கள்.
    அந்த பூதம் ஸ்கூலில் படிக்கும் ரீட்டாவின் பெரியண்ணா மாதிரி இருந்தது என்று ஜோஸ் சொல்ல, ரீட்டா இருக்கும் பட்டர்பன் தெருவுக்கு போகிறார்கள் மூவரும்.
    வீட்டில் நுழைந்தால்.... 😲
    நீங்களே நுழைந்து பார்த்துக் கொள்ளுங்கள்! 😴

    குழந்தைகளுக்கேற்ற சின்னக் கதை. சுவாரசியமான சம்பவ உருவாக்கம் மற்றும் எளிய, இயல்பான சிறுவயது வசனங்கள்!

    ஆக, குழந்தைகளுக்கேற்ற கதைதான்!
    Good starting!
    Keep it up Lion mini! 👍

    ReplyDelete
  3. "விதி எழுதிய வெற்றி வரிகள்"
    லயன் காமிக்ஸ் வெளியீடு.

    ஆரம்பத்தில் பாலைவனக் காட்சிகளும், flashback உத்தியில், மாறி மாறி சொல்லப்பட்ட காட்சிகளும், கெட்ட கனவுகளும் வித்தியாசமான திரைக்கதையாய் அமைந்திருந்தது.

    அம்மை நோய்த் தொற்று கொண்ட போர்வைகளை, நவோஹா இனமக்களுக்குக் கொடுத்து, அவர்களை அழிக்கின்றனர் சில வெள்ளையர்கள். இறந்தவர்களில், Texன் மனைவியும் அடக்கம்.
    மனைவியைக் கொன்றவர்களைப் பழிவாங்க Texம், செவ்விந்திய குடிமக்களின் அழிவுக்குப் பழிவாங்க ஜேக்கும் வஞ்கர்களைப் பழிவாங்கும் கதைதான் இது.

    அருமையான வழவழ காகிதம்.
    அருமையான வண்ணச் சித்திரங்கள் என கண்ணைக் கவர்கிறது புத்தகம்.
    அதுவும், பாலைவனம், ரயில் சீன்கள், சூறாவளி காட்சி என ஓவியம் அதகளப் படுத்துகிறது.

    வழக்கம் போல சுவாரசியமான action காட்சிகளும் உண்டு.

    வழக்கம் போலான பழிவாங்கும் கதையானாலும், கதை ஓட்டம் நன்றாகவே இருந்தது.

    உதவிக்கு நல்ல வண்ண ஓவியங்கள் உதவியுள்ளன.

    "விதி எழுதிய வெற்றி வரிகள்"
    கண்களுக்கு நலம்!

    ReplyDelete
  4. விடைகொடு ஆரிசியா

    விடைகொடா தோர்கல்.

    ReplyDelete
  5. அனைவருக்கும் வணக்கம்.

    ReplyDelete
  6. 😘💐We will meet in the CBF Sir😘🥰👍

    ReplyDelete
  7. வணக்கம் சார்

    சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஒரு விரிவான review (2025 ஒரு பார்வை) உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி உள்ளேன். நேரம் கிடைத்தால் பாருங்கள்

    ReplyDelete
  8. 1. முதலில் படித்து சாலையில் ஒரு பூதம்.
    2. ரெண்டாவது விதி எழுதிய வெற்றி வரிகள்.
    3. விடை கொடு ஆரிசியா.

    கதை முழுவதும் ஆரிஸியா. ஆனால் அட்டையில் மட்டுமே ஆரிசியா

    கதை முழுவதும் ஆரிஸியா ஆ

    ReplyDelete
  9. வணக்கம் சார். 2026 ஆம் ஆண்டின் முதல் பதிவில் எனது முதல் பின்னூட்டம்.

    ReplyDelete
  10. முதலில் உங்க டீமிற்கு பெரிய கரகோஷங்கள் சார்
    2025 வருஷத்தை அதகளமாக்கி உள்ளீர்கள்

    ReplyDelete
  11. புத்தாண்டு நல்வாழ்த்துகள் Sir !

    ReplyDelete
  12. // இதே வரிசையில் உள்ள அடுத்தடுத்த oneshot தோர்கல் சாகசங்களை தொடரவுள்ள ஆண்டுகளில் முயற்சிக்கலாமா - வேணாமா ? //

    கண்டிப்பாக தொடரலாம். நிறைய அழகான சித்திரம்கள், குறைவான வசனம்கள், விறுவிறுப்பாக கதையை நகர்த்தி செல்கிறது. எனவே தோர்கல் தொடரலாம்.

    ReplyDelete
  13. // Our team has punched way beyond it's weight என்பதே 2025-ஐ நிதானமாய் அசைபோடும் போது மனதில் எழும் முதல் சிந்தனை! //

    100% அக்ரீடு. நமது அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியும் பாராட்டுக்களும் சார்.

    ReplyDelete
  14. அடடே சூப்பர் பதிவு சார்.

    ReplyDelete
  15. விடை கொடு ஆரிசியா - முதல் பக்கத்திலேயே ஆரிசியாவை வயதான தோர்கல் இறுதியாக வழியனுப்ப, என்னடா இது ஆரிசியா இல்லாமல் கதையா என்று அடுத்த பக்கங்களுக்கு நகர்ந்தால் அடுத்தடுத்த காட்சிகள் நம்மை முழுமையாக ஆக்கிரமிக்க புத்தகத்தை ஒரே நாளில் படித்து முடித்தேன். இரண்டு தோர்கல், சிறுவயது + 70 வயது என்று ஒரே நேரத்தில், அந்த வயதுக்குரிய அவர்களின் சாகசங்களை வேறுபடுத்தி காண்பித்தது புதுமை.

    ReplyDelete
  16. // "கைப்புள்ள ஜாக் ஸ்பெஷல்' - மூன்று தினங்களுக்கு முன்னே தான் அச்சாகி என் மேஜைக்கு வந்துள்ளது! சமீப காலங்களில், இதற்கு இணையானதொரு கலர் படைப்பை நாம் பார்த்திருக்கவே மாட்டோம் //

    ஆகா ஆகா. சீக்கிரமாக அனுப்புங்க சார். ஆர்வத்தை அடக்க முடியல.

    ReplyDelete
  17. ///TOP 3 அட்டைப்படங்கள்///

    என்னை பொறுத்தவரை அட்டைப்படங்களின் சித்திரங்கள் நம்மிடம் கதை பேசிட வேண்டும்.
    நமது ஆர்வத்தை ஈர்த்திட தூண்டிலாய் பல நேரங்களில் வேலை செய்பவே அட்டைப்படங்கள்.
    ஆதலால் அவைகள் எப்போதும் ஸ்பெஷல்

    இந்த வருடத்தின் அனைத்து அட்டைப்படங்களும் அருமை, பின்னைட்டைகளிலும் டிசைனிங்களும் மிக அருமையாக இருந்தது
    எழுத்துருவ ஆக்கங்கள் ஒவ்வொன்றிலும் மாறுபட்டு புதுமையாய் இருந்தன

    எனது டாப் 3 என்றால்

    சிரிக்கும் விசித்திரம்
    வதம் செய்வோம் வேங்கைகளே
    புயலில் ஒரு சூறாவளி

    ReplyDelete
  18. //ஒரு பக்கம் டாக்டர் சில்லார்ட் சங்கிலித் தொடர்வினை பற்றிப் பேசிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் புரஃபஸர் பேங்கிராப்ட் பங்குச் சந்தையின் பொருளாதாரப் பாடம் எடுத்துக் கொண்டிருக்க, நானோ மூணாப்புப் பசங்க ரேஞ்சுக்கு இறங்கி "குச்சி குச்சி ராக்கம்மா" என்று பூதத்துக்கு டப்பிங் கொடுக்கவும் வேண்டியிருந்தது ! நிஜத்தைச் சொல்வதானால் இந்த ஜாலியான variety தான் இன்னமும் இந்தப் பணிக்குள் என்னை உயிர்ப்போடு உலவ அனுமதிக்கின்றது ! //


    ❤💛💙💚💜❤💛💙💚

    ReplyDelete
  19. டாப் 3 புத்தகம் எதுவென்று கேட்டால் , பதில் சொல்வது கடினம் தான்

    ஒவ்வொரு புத்தகமும் தனக்கான பாணியில் மனதுக்கு பிடித்தவை

    மனதை மிகவும் நெருக்கமானது என்றால்

    சாம்பலின் சங்கீதம்
    பயணம்
    உதிரம் பொழியும் நிலவே
    கேல்குலஸ் படலம்
    ராபின் தீபாவளி மலர்

    ReplyDelete
  20. வந்தேன் அய்யா...:-)

    ReplyDelete
  21. முதலில் நமது வயதுக்கேற்ற இதழை முதலாக வாசித்து விடலாம் என மினிலயன் லோகோவில் வந்த லயன் மினி இதழை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்..சில நிமிடங்கள் தான் ஆனால் உண்மையாகவே ரசித்து வாசிக்க வைத்தது இந்த சாலையில் ஒரு பூதம் கொஞ்சம் கூட போரடிக்காமல் மனதினுள் சிரிக்க கூட வைத்து விட்டது இந்த கதை...என்னை போன்ற சிறார்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் இது ரசிக்கும் என்பது நூறு சதவீதம் உறுதி சார்...


    ********

    "விதி எழுதிய வெற்றி வரிகள்.."

    இந்த மாதம் ( பெரிய..) இதழ்கள் இரண்டு தானா என்ற ஏக்கத்துடன் டெக்ஸ் வில்லரும் பருமனாக இல்லையே என்ற ஏக்கமும் இணைந்து தான் வருகை தந்தன என்பதையும் முதலில் தெரிவித்து கொள்கிறேன் சார்..

    அந்த ஏக்கத்தை கொஞ்சம் மட்டுப்படுத்தியது டெக்ஸ்வில்லரின் அட்டைப்படமும் ..உள்ளே வண்ணத்தில் அதகளமான சித்திரத்தரமும் என்பது மறுக்க முடியாத உண்மை..எப்பொழுதும் மெயின் வில்லனை தேடி செல்லும் நமது குழுவினர் இந்த முறை மெயின் வில்லனின் அடுத்த கட்ட நபரை தேடி செல்வதும்...வழக்கமான நால்வர் கூட்டணியில் மேலும் ஒருவர் இணைந்து ஐவர் கூட்டணியாகவும் வில்லனை தேடி செல்வதுமாய் இருந்தாலும் வழக்கமான அதே பரபரப்பு அதே விறுவிறுப்பு கூடவே டெக்ஸ் ன் முன்வந்த சாகஸத்தின் அதுவும் தனது மனைவியின் மரணத்திற்கு காரணமான வில்லனை பழிவாங்குவதான கதை களன் என்பதால் கதையின் கனமும் அழுத்தமாக பதிகிறது.. க்ளைமேக்ஸில் பழிவாங்குவது டெக்ஸாக இருக்குமோ என நினைக்கும் பொழுது செவ்விந்திய வீரர் மிஸ்டர் ஜேக் எனும் பொழுது சிறிது ஆச்சர்யமும் கூட.. இந்த கதையை வாசிப்பிற்கு முன்னரும் சரி பின்னரும் சரி சார் தாங்கள் டெக்ஸ் ,லிலித் சம்பந்தப்பட்ட அந்த மூன்று பாக கதையை விரைவில் மறுபதிப்பாக வெளியிடுங்கள் கண்டிப்பாக இந்த விதி எழுதிய வெற்றி வரிகள் இன்னமும் வாசகர்களுக்கு மனதினுள் நெருக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை...

    ReplyDelete
  22. Most beautiful sir... ❤️❤️❤️👍👍🙏🙏🙏...

    ReplyDelete
  23. விடை கொடு ஆரிஸியா இதை படித்தவர்கள் கண்டிப்பாக தோர்கலுக்கு விடை கொடுக்க மாட்டார்கள் வயதான தோர்கல் இளம் தோர்கல் கதையில் ஒன்றாக தோன்றுவது வேற லேவல் கூஸ்பம்ஸ்

    ReplyDelete
  24. சாலையில் ஒரு பூதம்

    அந்த ஊரில் இரவில் ஒரு பயங்கரமான உருவம் (அட்டை படத்தில் நடுவில் இருக்கும் அந்த விசித்திரமான மனிதர் போன்ற தோற்றம்) நடமாடுவதாக மக்கள் பயப்படுகிறார்கள். அது ஒரு பேயோ, அல்லது பூதமோ என்று ஊரே அஞ்சுகிறது. இந்த சிறுவர் குழு அந்தப் பயத்தைப் போக்க களமிறங்குகிறது.

    இந்த கதையில் வரும் மூன்று சிறுவர்களும் வெவ்வேறு திறமைகள் கொண்டவர்கள். ஒருவர் தேடுவதில் வல்லவர், ஒருவர் வரைபடம் வரைவதில் புலி, மற்றொருவர் தர்க்கரீதியாகச் சிந்திப்பவர். இவர்கள் மூவரும் இணைந்து அந்த "இரவின் மர்மத்தை" ஒரு த்ரில்லர் பாணியில் உடைக்கிறார்கள்.

    படங்களை பார்த்துவிட்டு புத்தகத்தை எடுத்து வைத்து விடாமல் ஒருமுறை படித்து பார்த்தால் நன்றாக இருக்கும்.

    இதன் அடுத்த பாகத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன். புத்தக வடிவமைப்பு சிறுவர்களை ஈர்க்கும் விதமாக உள்ளது.

    ReplyDelete
  25. சூப்பர் சார்...எப்படிடா பயணம்...அணுகுண்ட ஈடு செய்வீங்களோ இந்த வரும்னு நெனச்சேன்...ஆனா அள்ளுறீங்க நாலு திசையும் வசப்படட்டும்

    ReplyDelete
  26. சூப்பர் சார்...எப்படிடா பயணம்...அணுகுண்ட ஈடு செய்வீங்களோ இந்த வரும்னு நெனச்சேன்...ஆனா அள்ளுறீங்க நாலு திசையும் வசப்படட்டும்

    ReplyDelete
  27. விதி எழுதிய வெள்ளை வரிகள்

    நடந்து முடிந்தது:-

    நவாஜோ கிராமத்திற்குள், எதிரிகளால் நயவஞ்சமாக நோய் பாதித்த போர்வைகளை அனுப்பி வைக்கப்பட்டு 'பெரியம்மை' (Smallpox) .இதில் லில்லித் ,Tex willer மனைவி உட்பட பல பழங்குடியினர் உயிரிழக்கின்றனர்.

    அந்தத் துயரமான சம்பவத்திற்குப் பின்னால் இருந்த வில்லன்களைத் தேடி டெக்ஸ் சம்பவம் செய்கிறார்.
    அத்தோடு முடிந்தது என்று பார்த்தால்,

    விதி எழுதிய வெள்ளை வரிகள்


    இந்தக் கதையில் அந்தச் சதியில் தப்பித்த கடைசி சில குற்றவாளிகளைப் பற்றிய புதிய தகவல் டெக்ஸிற்கு கிடைக்கிறது.

    உண்மைக் குற்றவாளிகள்,
    தனது மனைவி மற்றும் அவரது மக்களின் மரணத்திற்குப் பின்னால் இருந்தது வெறும் வியாபாரிகள் மட்டுமல்ல, சில அதிகாரமிக்க மனிதர்களும் தான் என்பதை டெக்ஸ் கண்டுபிடிக்கிறார். அவர்கள் அனைவரும் தங்களின் பழைய குற்றங்கள் மறைந்துவிட்டன என்று நம்பிக்கொண்டிருக்கும் வேளையில், டெக்ஸ் ஒரு புயலைப் போல அங்கு வந்து சேர்கிறார்.

    டெக்ஸ் தனது நண்பர்களுடன் சேர்ந்து தன் மனைவி மக்களுக்கு கொடூர இறப்புக்கு காரணமாக இருந்த மருத்துவ உரிமம் ரத்து செய்யப்பட்ட ஒரு டாக்டர் மற்றும் ஒரு உயர் மட்ட சட்டமன்ற உறுப்பினரை சம்பவம் செய்வதே கதை.

    இந்த கதைக்கு மிக அழகான அட்டைப்படம் அமைந்துள்ளது, மற்றும்
    120 பக்கங்களும் வண்ணமயமாக கிராஃபிக் நாவல் போல இருக்கிறது .

    ReplyDelete
  28. எறும்பே தன்னை விட அம்பது மடங்கு எடையை தூக்குமே. நாம சிங்கமாச்சே? அதை விட தூக்கிட மாட்டோம்.

    டெக்ஸ் 200 = டெக்ஸ் 1000!! வரும் ஜனவரியில் லயனில் டெக்ஸ் 200 வது இதழ் அமைய நிறைய வாய்ப்புகள் இருப்பதாக மாம்ஸ் சொன்னான். அந்த முக்கியமான மைல் ஸ்டோனை கொண்டாட ஆயிரம் பக்க டெக்ஸை விட வேறு பெட்டரான ஆப்சன் எது இருக்க முடியும். ஆயிரம் பக்க இதழுக்கு டெக்ஸைத் தவிர எந்த மாஸ் ஹீரோ பெட்டரான ஆப்சனாக இருக்க முடியும். எடிட்டர் சம்முவம் விரைவில் ஆயிரம்பக்க கால் கட்டை விரலை வாய்க்குள் விட வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் 2026ல் அடி எடுத்து வைக்கிறோம். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete
    Replies
    1. T1000-க்கு இப்போதிலிருந்து ரெடி

      Delete
    2. ஆளாளுக்கு ஒரு கணக்கு ; ஒரு லிஸ்ட்ன்னு போட்டு வைச்சிருக்காங்க சார் - இந்த நம்பர்ஸ் ஆட்டமெல்லாம் ஆளுக்கு ஆள் மாறுபடுது! So அதையெல்லாம் கணக்கிலே எடுத்துக்காம சந்தர்ப்பம் -சூழலுக்கு ஏற்ப பிரீயா தீர்மானிப்பதே நலம்!

      Delete
    3. T200=T1000 வண்ணத்தில் வேண்டும்.

      Delete
    4. அப்ப T1000 இந்த வருடம். T200 அடுத்த வருடம்னு கனவு காண ஆரம்பித்து விடுகிறோம்.

      Delete
    5. இரண்டு இளையராஜா-க்களும் விட மாட்டாங்க போல

      Delete
    6. சகோதரர்களுடன் T1000-க்கு கனவு காண ரெடி

      Delete
    7. டெக்ஸ் 1000 பக்க இதழ் காலத்தின் கட்டாயம். அது reprint போட்டாலும் சரி. புது கதைகளாக போட்டாலும் சரி.

      Delete
    8. ///அப்ப T1000 இந்த வருடம். T200 அடுத்த வருடம்னு கனவு காண ஆரம்பித்து விடுகிறோம்//

      இது நல்ல டீலா இருக்கு.. 💜💜💜

      Delete
  29. டாப் 3: 1. சாம்பலின் சங்கீதம் 2. பயணம். 3. மெக்சிகோ மேஜிக் ஸ்பெசல்கள்

    ReplyDelete
  30. போன வருடம் எனக்கு தேவையான காமிக்ஸ் அத்தனையும் திருச்சி புத்தக திருவிழாவில் வாங்கினேன். இந்த அதைத்தான் செய்யலாம் என்று இருந்தேன். ஆனால் புத்தக திருவிழா நடக்கவில்லை.

    அதனால் இப்போது தான் 4750 ரூபாய்க்கு online ல் ஆர்டர் செய்துள்ளேன்.
    வந்த பிறகு தான் போன வருட காமிக்ஸ் களை படிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. @Ganeshkumar : நீங்கள் பெங்களூருவில் இருந்தீர்கள் தானே சார்?

      Delete
    2. இப்போது திருச்சியிலா சார்?

      Delete
    3. தற்போதும் பெங்களூர் தான் சார். ஆனால் திருச்சியில் தான் சொந்த வீடு மற்றும் எனது குடும்பம் உள்ளது.

      Delete
  31. Top அட்டைகள்
    1. பயணம்
    2. சாம்பலின் சங்கீதம்
    3. டெக்ஸ் தீபாவளி மலர்
    Top புத்தகங்கள்
    1. சாம்பலின் சங்கீதம்
    2. வதம் செய்வோம் வேங்கைகளே
    3. ராபின் தீபாவளி மலர்

    ReplyDelete
    Replies
    1. சில Special Mentions உண்டு
      Tintin இரண்டு புத்தகங்களும் அட்டகாசமான adventure கதைகள், பயணம் for that Size itself, மைனாவோடு மஞ்சு விரட்டு மொழிபெயர்ப்புக்காகவே, சிரிக்கும் விசித்திரம், சிவப்பு ஏரி, இன்று போய் நேற்று வா அந்த டைம் லூப். Wow

      Delete
    2. மேலும் போன வருடம் வந்த அனைத்து டெக்ஸ் கதைகளுமே அருமை. மெக்சிகோ மேஜிக் ஸ்பெசல், தீபாவளி டெக்ஸ் ரெண்டுமே அருமை. ஒரு ப்ளாப் கூட இல்லாத டெக்ஸ் வருடம். I'm delighted Sir.

      Delete
  32. 1.உங்களின் TOP 3 புக்ஸ் of 2025 எவையோ?

    1. போன வருடம் வந்த அனைத்து டெக்ஸ் கதைகளுமே அருமை ..

    2.largo , BLUECOATS

    3.robin , Mr . No , Zagor ..

    still havent read சாம்பலின் சங்கீதம் ..

    2.TOP 3 அட்டைப்படங்கள்?

    1.பயணம்
    2.catamount
    3.Sirikkum vichithiram zagor

    3.டப்சா 3 of 2025?

    1. MOONDRAM DHINAM ..

    2. SPOON AND WHITE

    3. SAGUVERA .. NOT BAD.. BUT V HAVE BETTER HEROES LIKE SODA , CISCO WAITING FOR A SLOT ..

    ReplyDelete
  33. *காவிய தலைவன் தோர்கல்...*

    "விடை கொடு ஆரிஸியா.."

    இதழும் ...அட்டைப்படமும் ..வண்ண சித்திரங்களும் எப்பொழுதும் போல அசத்த இதழை வாசிக்க ஆரம்பித்தேன்...ஆரம்பத்திலேயே ஆரிஸியா மரணம்..மிக வயதான தோர்கல் என கதை ஆரம்பிக்க என்னடா இது விவேக் சொன்னது போல்..." எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் " என்பது போல எப்படி இருந்த தோர்கல் இப்படி ஆயிட்டாரே இது வாசகர்களை கவருமா என நினைத்த படி தொடர்ந்தால் மாயமோதிரத்தின் மகிமையால் சிறுவன் தோர்கலின் சாகஸம் அரங்கேற கூடவே வயதான தோர்கலும் இணைய நாயகர்கள் இரைட்டை வேடங்களில் என திரைப்படங்களில் வருவது போல இதிலும் தோர்கல் சிறுவன்., வயதானவர் என இருவேடங்களில் ஆரிஸியாவை தேடி தோர்கல் குழு வேகவேகமாக விரைய நாமும் கதையில் விறுவிறுப்பாக தோர்கலை தொடர வைக்கிறது...இந்த முறை தோர்கல் ஏமாற்றவில்லை சார்...காவியதலைவன் தோர்கலை தாராளமாக தொடரலாம்...

    ReplyDelete
  34. டாப் 3 ன்னு எத சொல்றதுன்னு தெரியவில்லை சார்...போன வருடம் வருகை தந்த டெக்ஸ் இதழ்கள் அனைத்தும் டாப் என்பதை மட்டும் உறுதியாக சொல்லலாம்..

    ReplyDelete
  35. 1.வதம் செய்வோம் வேங்கைகளே
    2.இரத்தமின்றி யுத்தம்(ராபின்.தீபாவளி சிறப்பிதழ்)
    3.போர் கண்ட சிங்கம்

    ReplyDelete