Powered By Blogger

Saturday, October 18, 2025

வாங்க திளைப்போம்!!

நண்பர்களே,

Disclaimer : இது காமிக்ஸ் உலகுக்கு வெளிச்சமூட்ட வந்திருக்கும் பதிவெல்லாம் நஹி! So எங்கேயாச்சும் "மாடஸ்டி சந்தா அறிவிப்பு கீதா? ஸ்பெஷல் புக்ஸ் பற்றி ஏதாச்சும் இருக்கா?" என்ற ரேஞ்சுக்குத் தேட வேணாமே- ப்ளீஸ்? 

ஒவ்வொரு பண்டிகைப் பொழுதிலும், ஜாலியாய் பஜாருக்குள் நடை போடுவது, நிலவரங்களை அசை போடுவது என்பதெல்லாம் சமீப பத்தாண்டுகளின் வாடிக்கை. அதன் லேட்டஸ்ட் அத்தியாயமே இது - simply becos எங்க ஊரே முன்னெப்போதும் இல்லா விதத்தில் இம்முறை விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது! So இது ஜாலியான sivakasi musings மாத்திரமே!

Here goes : 

சமீபமாய் வந்த டின்டினின் "கேல்குலஸ் படலத்தில்'' ஒரு சீன் வரும்..! 'மார்லின்ஸ்பைக் மாளிகையில் டம்மு.. டம்முன்னு கண்ணாடிகளெல்லாம் சிதறுது.. அந்த ரோட்டிலே போகிற பால் வண்டி கூட சல்­லி  சல்லியா நொறுங்குது'' என்ற சேதி ஊருக்குள் பரவிய சற்றைக்கெல்லாம் 'கொய்'யென்று ஒரு பெரும் ஜனத்திரள் வாசலில் கூடி நிற்கும்! சாப்பாட்டுக் கடைகள், பொம்மைக் கடைகள், ப்ரெஸ் வேன் என்றுமே வெளியே களை கட்டியிருக்கும்... அந்த சீனை அப்படியே ஒரு ரெண்டாயிரத்தால் பெருக்கிக்கோங்க - இன்றைய சிவகாசி அது தான்! திரும்பிய திக்கெல்லாம் முகமெங்கிலும் ஒரு ஆழமான பரபரப்பு அப்பிய மனிதத்திரள் ஊரையே இந்தக் கடைசி ஒற்றை வாரத்தினில் படையெடுத்துள்ளது! ஊருக்குள் நுழையக் கூடிய ஒவ்வொரு வெளிவட்டப் பாதையிலுமே தடுக்கி விழுந்தால் கூட ஏதாச்சுமொரு பட்டாசுக் கடையின் மீதே விழ வேண்டியிருக்கும் என்ற சூழல் ; absolutely choc a bloc with retail fireworks outlets...!!

* 'புஸ்வாணம்லாம் சின்னது இல்லே- இந்த சைஸ் தான் இருக்கு'' என்று ஒரு சோழக்கருது உசரத்துக்கான வஸ்துவைக் காட்டி- "டஜன் இவ்ளோ...... xxxx" என்ற ஒரு டெக்ஸ் கலர் தீபாவளி மலரின் விலையைச் சொல்கிறார்கள்! "நாலு டஜனா கிடைக்குமாண்ணா?'' என்றே பதில் வருகிறது! 

* "எரியல் ஷாட்ஸ்லாம் காலி­! இது மட்டும் தானிருக்கு! பக்கத்து வீட்டுப் புளியமரம் உசரத்துக்குத் தான் எழும்பும்! பரால்­லியா?'' என்று மிரட்டியபடியே ஒரு Electric'80s சந்தாத் தொகையைக் குறிப்பிடுகிறார்கள்! "ஹைய்யோ.. புளியமரத்தைத் தொட்டாலே சூப்பர்ணா.. போடுங்க..போடுங்க!'' என்கிறார்கள்!

*"சரவெடில்லாம் செய்ய அனுமதி கிடையாது! இது சரவெடி மெரி இருக்கும்.., ஆனா சரவெடி இல்லே..! ஓ.கே தானா?'' என்றபடிக்கே நமது ஆன்லைன் மேளாவின் கொள்முதல் தொகைக்கு ஈடான ஒரு அமௌண்டை துண்டுத் தாளில் கிறுக்கித் தருகிறார்கள்! 1987-ன் லயன் தீபாவளி சூப்பர் ஸ்பெஷலை அதன் ஒரிஜினல் விலையான ரூ.10க்கே வாங்கிய புது வாசகரின் அதே குதூகலம் முகத்தில் தாண்டவமாட, கஸ்டமர் ஓ .கே. சொல்றார்!

* "மொத்தமா பார்த்தா.. இம்புட்டு! இதிலே GST அம்புட்டு..! கூட்டல், கழித்தல், பெருக்கல் போட்டு 90% டிஸ்கவுண்ட் கழிச்சிட்டா வர்ற தொகை இம்புட்டு!'' என குனிந்த தலை நிமிராமல் கடைக்காரர் சொல்லும் தொகைக்கு ரெண்டு பேருக்கான 2026-ன் சிங்கிள்ஸ் சந்தாத் தொகைகளை கட்டிவிட முடியும் தான்! But இம்மி கூட மலைக்காது - "Gpay  ஓ.கே.வா பிரதர்?'' என்கிறார்கள் - சந்தாவுக்கு மட்டுமே exclusive ஆக டெக்ஸின் ஆயிரம்வாலா கிடைத்தது போலான ஒரு குஷியுடன்!!

*சரி.. ரைட்டு! பட்டாசுக் கடைகள் as usual தெறிக்குது!" ஸ்கூட்டரை இந்தப் பக்கமா விடுடா தம்பின்னு இன்னும் உள்ளுக்குள் போனா- "அடடே.., ஏதோ வித்தை காட்டுறாங்களோ? அந்தத் தெரு முழுக்கக் கூட்டமா கீதே?''என்ற கேள்வி எழுகிறது! வண்டியை ஒரு மு.ச.வுக்குள் நிறுத்தி லாக் போட்டுப்புட்டு மொள்ள நடந்து போய்ப் பார்த்தால் - ஒரு கணிசமான பகுதி ஸ்வீட் கடைகளில் மண்டி நிற்கும் ஜனம்!

* தெரிஞ்ச கடை தானே? என்றபடிக்கே இங்கேயிருந்து கையைக் காட்டினா-நிமிர்ந்து பார்க்கும் ஓனரும், சிப்பந்தியும் சட்டித் தலையன் ஆர்ச்சியின் எக்ஸ்பிரஷனில் zombie-க்கள் போல் காட்சி தருகிறார்கள்! அல்வா மூணு கிலோ போடறியா- இல்லே சங்கை கடிக்கவா? என்ற ரேஞ்சுக்கு கஸ்டமர்ஸ் அலை மோதிங்ஸ்! "வுட மாட்டோம்டா - இந்தியாவை சீக்கிரமே உலகின் நீரழிவு நோயின் தலைநகராக்காம உட மாட்டோம்டா!' என்ற கங்கணத்தோடு, மக்கள் கருமமே கண்ணாய் தெறிக்க விட்டுக் கொண்டிருந்தனர்! "Ozempic, Wegovy ன்னு யார்னாலும் வாங்கடா செல்லம்ஸ்- உங்களுக்கு இந்திய சந்தையில் ஒளிமயமான எதிர்காலம் வெயிட்டிங்" என்று நினைத்துக் கொண்டேன்.

* நாம் போனதோ அங்கிருக்கும் பேக்கரியில் ஒரு கோதுமை ப்ரெட்டை வாங்கிட..! நம்ம குரல் நமக்கே கேட்காத நிலையில் கடைக்காரருக்கு எங்கே கேட்கப் போகுது? But அவரோ-"இவன் வேற எதுக்கு வந்திருக்கப் போறான்?'' என்ற யூகத்தில் - கலர் ஜேம்ஸ் பாண்ட் 2.0 ஐ நீங்கள் கோரிடும் சமயமெல்லாம் " முடியாது...முடியாது என நான் மண்டையை ஆட்டும் அதே வேகத்துடன் - "அடுத்த வியாழக்கிழமை வரைக்கும் ப்ரெட் ஐட்டங்களே போட மாட்டோம் ''என்கிறார்!

*மண்டையைச் சொறிந்தபடியே வெளியேறினால், ஒரு மாருதி ஆம்னி வேனுக்குள் குறைந்த பட்சமாய் அரை டன் மைசூர்பாகுகளை நெய் சொட்டச் சொட்ட பேக்டரியிலிருந்து கொணர்ந்திருந்தனர் - கடையில் இறக்க! அதைப் பார்த்தாலே நமக்கு சுகர் இன்னொரு 100 பாய்ண்ட் ஏறிடுமோ? என்ற பயத்தில் பரிச்சயமான சந்துக்குப் போனேன் - ஸ்கூட்டரைத் தேடி!

*அதுக்குள்ளாற சந்தை மறிச்சு வெளியே ஒரு மடக்குக் கட்டிலை விரித்து, அதில் கயிற்றைக் கட்டி ரோல் காப் வெடிக்கும் டுப்பாக்கிகளி­ருந்து, பொம்மைகள் ; பிங்க், பச்சை, இன்னபிற வர்ணங்களிலான கூலி­ங் க்ளாஸ்களைத் தொங்க விட்திருந்தனர்.  "ரைட்டு.. சந்துப் பக்கமா நாம எப்போ போனாலுமே, எந்த ஜோலியா போனாலுமே, கேட் போட்டுடுவாங்க போலிருக்கே....!! கிரகங்களின் சஞ்சாரத்திற்கேற்ப ராசிபலன்கள் மாறினாலும், இந்த "சந்திலே சலபுலஜங்க்' மட்டும் மாற்றம் கண்டிடாது போலும்!'' என்று நினைத்துக் கொண்டேன்!

"இன்னா சார்- இஸ்கூட்டர் உள்ளாற மாட்டிக்கிச்சா? என்று வினவிய வியாபாரியிடம், "ஒண்ணும் பிரச்சனையில்லே தம்பி! மழை வர்றதுக்கு முன்னே வியாபாரத்தைக் கவனி'' என்றபடிக்கே ஆராமாய் வீதியில் நடையைப் போட்டால், மாடஸ்டி ஸ்பெஷலின் விலைக்கு டி-ஷர்ட்கள்; ஸ்பைடர் ஸ்பெஷலி­ன் விலைக்கு லெக்கின்ஸ் என அனல் பறக்க பிசுனஸ் அரங்கேறுவதைப் பார்க்க முடிகிறது! "மாடாஸ்கா'' என்று இளவரசியை ஓட்டும் அணியே அவரது லேட்டஸ்ட் ஆல்பத்தை சிலாகித்து, ரசித்து, நெக்குருகிப் பாராட்டுவது போலானதொரு இனம்புரியா மகிழ்ச்சி உள்ளுக்குள் விரவுவதை உணர முடிகிறது!

*இன்னும் சித்தே தூரம் நகரும் போது- "டங்-டடட-டங்...'' என்ற ஓசை சீராகக் கேட்கிறது! பார்த்தால் - இயவரசரின் மத்தியப் பிரதேசத்துக்கு சவால் விடவல்ல சுற்றளவிலானதொரு குண்டாவி­லிருந்து  பிரியாணியை சுடச் சுட பேக் பண்ணிக் கொண்டிருக்கிறார் - மாஸ்டர்! ஒரு பார்சலுக்கும், அடுத்ததுக்கும் மத்தியிலான துக்கனூண்டு இடைவெளியில், சட்டுவத்தை ஸ்டிக்காக்கி, குண்டாவை ட்ரம்மாக்கி, சிவமணிக்கு அவர் தரும் போட்டியை ரசித்தவாறே பார்வையைச் சிதற விட்டால், பின்னே ஒரு மேஜையில் வியர்க்க விறுவிறுக்க ஒரு பையன் எதையோ, கெட்டியான நோட்டில் குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறான்! "இன்னாடா மேட்டரு.. ''சாம்ப­லின் சங்கீதத்திலே நாம பிசின்னா - புள்ளையாண்டன் இங்கே "பிரியாணியில் பகீர்'' என்று போட்டிக் கடை எதும் போடுறானோ? என்ற ஐயம் எழுகிறது! அப்புறமாய்ப் பார்த்தால் தான் தெரிகிறது- தீபாவளி தினத்துக்கான "பிரியாணி பக்கெட்" முன்பதிவுகள் அனல் பறக்க அரங்கேறி வரும் சமாச்சாரம்! "ஆங்.. அஞ்சு பேர் பக்கெட்லே சிக்கன் 2- மட்டன் 2..! சீரகச் சம்பாவிலே பத்து கிலோ பக்கெட் மூணா?" என்று பரபரப்பது கேட்கிறது! மேலே தொங்கும் போர்டில் எழுதப்பட்டுள்ள விலைகளைப் பெருக்கினால், ஒவ்வொரு ஆர்டருக்கும் குறைந்த பட்சமாய் 5 சாம்ப­லின் சங்கீதங்கள் தேறிடும்! "தம்பி.. நடையைக் கட்டிரு.. இல்லாங்காட்டி.. சபலத்திலே நீயுமே ஒரு பக்கெட்டுக்கு ஆர்டர் போட்டுட்டிருப்பே.. வேணாம்.. டேஞ்சரு..!'' என்று இக்கட்டான தருணத்தில், மாடஸ்டியிடம் கிசுகிசுக்கும் வில்­லி கார்வினைப் போல மண்டைக்குள் ஒரு குரல் கேட்க, வேகமாய் நடையைத் தொடர்ந்தேன்!

*ஹை.. இந்தக் கடையிலே நிக்கற கூட்டம் நிச்சயமா சாப்பாட்டு ஐட்டத்துக்கோ, பட்டாசுக்கோ நஹி- என்ற நம்பிக்கை மேலெழும்பியது! Becos எதிர்த்தாலே தென்பட்டதோ ஒரு எலெக்ட்ரானிக்ஸ் கடை! நடையை மெதுவாக்கி, பார்வையை ஓடவிட்டால்- அது Samsung -Vivo- Oppo செல்போன்களின் விற்பனைமுனை. போவோமே- சும்மா போய் தான் பார்ப்போமே என்றபடிக்கே உள்ளுக்குள் புகுந்தால் "அண்ணா... இந்த போன் என்ன விலைக்கு எக்ஸ்சேஞ் போகும்?'' என்று குரலை உயர்த்தும் யுவதியைப் பார்க்கிறேன்! செம-sleek ஆனதொரு சாம்சங் போனை நீட்டிக் கொண்டிருக்கிறாள்! V காமிக்ஸின் ஓராண்டுச் சந்தாவுக்கு நிகரானதொரு சன்னமான தொகையை கடைக்காரர் மனப்பாடமாய்ச் சொல்ல - புதுசாயொரு  போனை சுட்டிக்காட்டி "இது price எவ்ளோ?'' எனும் போது - 3 Family சந்தாக்களின் கிரயத்தை மனுஷன் சொல்கிறார்! லக்கி லூக்குக்கு ஜாலி­ ஜம்பரைப் போல, 2019 முதலாய் விசுவாசமான சகாவாய் இன்னமும் என்னோடு உலவி வரும் சாம்சங் போனை என்னையும் அறியாமல் பார்த்துக் கொள்கிறேன் "நம்மளை அசைச்சுக்க முடியாதுடா அம்பி'' என்றபடிக்கே நகர்கிறேன்!F

*Further down the road, அடடே.. மாமூலாய் கபாலத்தில் புல் செதுக்க நாம் ஒதுங்கும் பார்லரினில் ஏது இம்புட்டு கூட்டம்? அங்கே சிகை திருத்தும் பீகாரிப் பையன்கள் ஏதாச்சும் பேஜார் பண்ணிட்டாங்களா? என்றபடிக்கே நுழைந்தால், காத்துக் கொண்டிருப்போர் அனைவருமே ஏதேதோ services-களுக்காக வெயிட் பண்ணுபவர்கள் என்பது புரிகிறது! அழகுக்கு அழகு சேர்க்க அம்மணிகளுக்கு tough தர நம்ம ஆடவப் பசங்களும் இப்போதெல்லாம் பொங்கி நிற்பதை எப்போதுமே நான் வியப்போடு பார்த்திடுவதுண்டு! மூக்குக்குக் கீழே, உதட்டுக்குக் மேலே முளைத்து நிற்கும் கரப்பான் பூச்சி மீசையை ட்ரிம் பண்ணுவது தான் நம்ம காலத்து அழகூட்டும் முன்னெடுப்புகள்! நேற்றைக்கோ தலையில் ஒரு பாதியில் காரக் குழம்பையும், மீதியில் கருவாட்டுக் குழம்பையும் கொட்டினாற் போல ஒரு இளைஞன் குந்தியிருக்கிறான்- hair கலரிங்கின் பொருட்டு! சுவற்றில் ஸ்டைலாகச் சிரித்துக் கொண்டிருக்கும் ஒரு அம்மணியினருகே ப்ரிண்ட் செய்யப்பட்டிருந்த ஒவ்வொரு சர்வீஸுக்குமான கட்டணங்களை கண்கள் தன்னிச்சையாய் மேய்ந்தன! காரக் குழம்புக்கான சர்வீஸில் ஒரு "இரத்தம் படலம்" கலர் தொகுப்பை கிரே மார்க்கெட்டில் இன்னிக்கி வாங்கிடலாம்; டேவிட் பெக்கம் ஸ்டைலி­ல் க்ராப் வெட்டிக்க ஆகும் செலவில் ஒரு "மின்னும் மரணம்" கலர் தொகுப்பினை வாங்கிடலாம்'' என்று மண்டையும் தன்னிச்சையாய் கணக்குப் போட்டுச் சொல்லி­யது!

*"நான் கேட்டேனா? நான் உங்களைக்  கேட்டேனா?'' என்றபடிக்கே வெளியேறி நடந்தால்- எதிரே ஒரு சின்ன மகாலி­ல் ஒரு கிடாவெட்டுக்கு இணையான கூட்டம்! வெளியே இருந்தே பார்த்தால் - "எந்தத் துணி எடுத்தாலும் - எந்த ட்ரெஸ் எடுத்தாலும் கிலோ ரேட் தான்" என்று எழுதியிருந்தது! அட, 2020-க்கு முன்பான நம்ம பொஸ்தவங்களைக் கூட  இவங்க கிட்டே ஒப்படைச்சா விற்று இடத்தைக் காலி­ பண்ணித் தந்திடுவாங்களோ? என்ற கேள்வியை மண்டை உச்சரிக்கும் முன்பாக விறுவிறுவென ஸ்கூட்டர் நின்று கொண்டிருந்த அந்தச் சந்துக்கே திரும்பினேன்! அந்தத் தம்பி பிஸியாக இருந்த போதிலும், லைட்டாக இடம் ஒதுக்கித் தர, 'விடுடா ஜுட்' என வீட்டுக்கு ஓட்டமெடுத்தேன்! சந்திலி­ருந்து விடுதலை என்பது றெக்கைகளை ஸ்வீகாரம் செய்து கொள்ளும் வேளையல்லவா - ஒவ்வொரு தடவையுமே ? 

வீடு திரும்பும் வழியெல்லாம் மனசெல்லாம் 2013 ஜனவரியில் NBS இதழை உங்களிடம் ஒப்படைத்ததற்கு இணையான மகிழ்ச்சி அலையடிப்பதை உணர முடிந்தது! சிறு வணிகர்களோ, பெரும் முதலாளிகளோ- இம்மியும் பேதங்களின்றி, எங்களது குட்டி ஜப்பானில் உழைத்திடும் அந்த மும்முரத்தை மனதில் அசை போட்டேன்! எதிரே 'சர் சர்' என சீறிச் செல்லும் ஜூமாட்டோ, ஸ்விக்கி பசங்களும், பொண்ணுங்களும் எனது புன்னகையினை இன்னும் விசாலமாக்குகின்றனர்! Of course, ஆயிரம் பிக்கல்கள்; பிடுங்கல்கள் இருக்கும் போதிலும் - "தீபாவளி'' என்றதொரு மந்திரத் தருணத்தினில் ­மகிழ்ச்சி மாத்திரமே அனைவரின் தாரக மந்திரமாகிடுவது, ஈரோட்டு வாசக சந்திப்புக்கு செம ஆர்வமாய் நாமெல்லாம் குழுமிடுவதையே எனக்கு நினைவூட்டியது! 

And yes .. இந்த நொடியில் ஒவ்வொருவருக்குமே பணம் தண்ணீராய் ஒவ்வொரு ரூபத்தில் செலவாகிறது தான்! ஆனால், இது நம் அனைவருக்குமே நேரடியாகவோ- மறைமுகமாகவோ தொழில் வாய்ப்புகளை, வேலை வாய்ப்புகளை, சம்பாத்தியத்துக்கான கதவுகளைத் திறந்துவிடப் போவதை மறுக்கவே இயலாது தானே?! இதோ- இந்த தீபாவளி சீஸனின் அற்புத வெற்றி & விற்பனையினைத் தொடர்ந்து அடுத்த ஆறு மாதங்களுக்காவது எங்களது தொழில் நகரில் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே எங்கேயுமே இடமிராது! சுயநலமான பார்வையாய் இது இருக்கலாம் தான்; ஆனால், கண்முன்னே ஒரு நகரமே கொண்டாடும் அழகினை ரசிக்காது போக முடியுமா? 

"போச்சு.. ட்ரம்ப் வரி விதிப்பில் திருப்பூருக்கு சங்கு ஊதியாச்சு! கோவையில் தொழில் படுத்திடுச்சி...! மிடிலே...செயற்கை நுண்ணறிவு வந்த பிற்பாடு IT-ல் சகட்டு மேனிக்கு layoffs நிகழ்கின்றன ; வரும் பொழுதுகளில் அது தொடர்கதை ஆகிடும்..." என்றெல்லாம் ஒலிக்கும் நெகடிவ் சிந்தைகளின் மத்தியில் இந்தப் பண்டிகை உற்சாகங்கள் தாற்காலிகமாகவே இருப்பினும் - அவற்றுள் அடுத்த 3 நாட்களுக்காவாது பூரணமாய் திளைப்போமே folks? 

Bye all... ENJOY THE LONG WEEKEND! லீவில்லை ; வேலையாகவே இருப்பினும், தொடரவுள்ள 3 தினங்களின் பாசிட்டிவ்களை மட்டுமே சிலாகிப்போமே?! See you around!!

Happy Deepavali in advance folks!!

P. S: உங்க ஊர் நிலவரம்ஸ் + போட்டோஸ் முடிந்தால் நம்ம வாட்சப் கம்யூனிட்டி நம்பருக்கு அனுப்புங்களேன்? 96000 61755


99 comments:

  1. Replies
    1. Ai, me the first. Happy diwali நண்பர்களே :)

      Delete
    2. எல்லாம் சரி, வெடி எல்லாம் வாங்கியாச்சா 😊

      Delete
  2. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  3. // தீபாவளி சீஸனின் அற்புத வெற்றி & விற்பனையினைத் தொடர்ந்து அடுத்த ஆறு மாதங்களுக்காவது எங்களது தொழில் நகரில் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே எங்கேயுமே இடமிராது! //

    மகிழ்ச்சி

    ReplyDelete
  4. வணக்கம் நண்பர்களே.. 🙏🙏🫰🫰

    ReplyDelete
  5. நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. // அவற்றுள் அடுத்த 3 நாட்களுக்காவாது பூரணமாய் திளைப்போமே folks? //
    ரிலாக்ஸ் கார்னர்...

    ReplyDelete
  7. // Happy Deepavali in advance folks!! //
    எந்த அறிவிப்புமே இல்லாம தீபாவளி பதிவை இப்படி பொசுக்குனு முடிச்சிட்டிங்களே சார்...
    ஆசிரியர்,அலுவலகப் பணியாளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் முன்கூட்டிய இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. Happy Diwali- ங்கிறது தான் அறிவிப்பே சார் 😁

      Delete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. தீபாவளியை விட அதைக் கொண்டாடும் தங்கள் வார்த்தை ஜாலங்கள் அற்புதம் சார். அனைவரும் இனிய அட்வான்ஸ் தீயவளி வாழ்த்துக்கள். சாதாரணமாகவே உங்க வண்டி எப்பவும் பழக்க தோஷத்துல மு.ச. க்கு தான் போகும் போல..

    ReplyDelete
    Replies
    1. தண்ணித் தொட்டி தேடிப் போற கண்ணுக்குட்டி மெரி சார் 🥴🥴!

      Delete
    2. தீபாவளி தவறாக டைப் ஆகி விட்டது. நண்பர்கள் மன்னிக்கவும்.

      Delete
    3. ஆமாங் சார்,வர்ணனைகள்,ஒப்பீடுகள் எல்லாமே தோரணங்களாய் இருந்தது...
      கடைவீதியில் ஒரு சுற்று சுற்றிவிட்டு டீயும்,சமோசாவும் சாப்பிட்டு விட்டு வந்தது போல் இருந்தது...

      Delete
  10. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. பரோடா + கறி நன்றாக இருந்ததா சார் 😊

      Delete
    2. யாரு - நானா? நான்லாம் கறியை இப்போ பேப்பர்ல எழுதி மட்டுமே வாசிக்கும் ரகம் சார்!

      Delete
    3. சார், நம்ம பல்லடம் சரவணகுமார் கேரளா பக்கம் சென்று இருக்கிறார் சார்.

      Delete
    4. அடடே, அப்டியாக்கும்? 💪💪

      Delete
  11. அடுத்த வருஷம் சந்தா கட்டுறவங்களுக்கு தீபாவளிக்கு பட்டாசு கிஃப்ட் பாக்ஸ் தர்றேன்னு சொல்லியிருங்க ஆசிரியரே தீபாவளி அமர்க்களமாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. இது நடைமுறையில் சாத்தியம் இல்லாத விஷயம் சத்யா.

      Delete
    2. எதுக்கு - உள்ளாற ராக்கெட் இல்ல, புஸ்வானம் தான் இருந்துச்சுன்னு அடுத்து தூக்கிப்போட்டு மிதிக்கவா? அஸ்கு -பிஸ்கு!!

      Delete
    3. இந்த அட்டகாச தீபாவளி மலர்ல அட்டைல கொஞ்சம் பட்டாசு ராக்கெட்டை காட்டியிருக்கலாம் சார்

      Delete
    4. போதும், இருக்கத வெடிச்சுப்போம்!

      Delete
    5. போலே அது பழைய ஸ்டைல். உன் பையன வரைய சொல்லி ரசி

      Delete
  12. காமிக்ஸ் பற்றிய விஷயம் இல்லாத ஒரு பதிவு. சிறப்பு சார். ஆல் பாசிடிவ்ஸ் 😍

    ReplyDelete
  13. // செயற்கை நுண்ணறிவு வந்த பிற்பாடு IT-ல் சகட்டு மேனிக்கு layoffs நிகழ்கின்றன //

    ஆமாம் சார். இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கை சார்.

    ReplyDelete
  14. // வீடு திரும்பும் வழியெல்லாம் மனசெல்லாம் 2013 ஜனவரியில் NBS இதழை உங்களிடம் ஒப்படைத்ததற்கு இணையான மகிழ்ச்சி அலையடிப்பதை உணர முடிந்தது! //

    இந்த குண்டு புத்தகத்தை நீங்கள் ST கூரியரில் அனுப்பியதை மறுநாளே வாங்க வேண்டும் என்று கூரியர் ஆபிக்ஸ தேடி பிடித்து வாங்கி அங்கேயே அதனை பிரித்து பார்த்த தருணங்கள் மறக்க முடியாதவை.

    ReplyDelete
  15. அருமையான தீபாவளி பதிவு சார்
    புன்னகை ததும்ப செய்தது தங்களது வரிகள்

    ReplyDelete
  16. சார் எல்லாவற்றுக்கும் கடவுள் வழி வைத்திருப்பார்....கஷ்டம் கஷ்டம்னு யாரும் ஏதும் வாங்காமல் இருப்பதில்லை...தேவைக்கான வரவை கடவுள் யார் தலையிலும் எழுதாமல் இல்லை....வெற்றி நிச்சயம்....தொடர்வோம்...

    ReplyDelete
  17. இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள் சார்...

    😍🌹🔥♥️

    ReplyDelete
  18. அதெல்லாம் சரி சார்.. மத்த கடைகளுக்கு எல்லாம் போனீங்க சரி.. முடி வெட்டுற கடை பக்கம் எந்த தைரியத்துல போனீங்க? 😂

    மூணு நாள் லீவு.. பயணம், மாடஸ்டி ஸ்பெஷல், சிக்பில், கிங்ஸ் ஸ்பெஷல் எல்லாத்தையும் எடுத்து ரெடியா வச்சாச்சு. இன்னும் ஒரு மணி நேரம்தான்.. விட்டுப்போன எல்லாத்தையும் ஆசை ஆசையா படிக்க போறேன்.

    ReplyDelete
    Replies
    1. அது வந்துங்க சார் - franchise எடுத்திருக்க மக்கள கைதூக்கி விடணுமில்லியா?

      "வந்தாரை வாழ வைக்க தலையையே கொடுத்தான் விசயன்" ன்னு வீர வரலாறு சொல்லணுமில்லியா?

      Delete
    2. // இன்னும் ஒரு மணி நேரம்தான்.. விட்டுப்போன எல்லாத்தையும் ஆசை ஆசையா படிக்க போறேன்.//

      அப்படியே விமர்சனம் போடுங்க சார்.

      Delete
  19. எடிட்டர் சார்,
    ஒவ்வொரு கடை பொருட்களின் விலையை நம்முடைய காமிக்ஸ் உடன் ஒப்பிட்டு கூறும் உங்கள் வர்ணனை அருமை சார் !! Happy Diwali !!!

    ReplyDelete
    Replies
    1. நமக்கு மூக்கு கொஞ்சம் புடைப்பாச்சே சார் - ஏதாச்சும் கோக்கு மாக்கா பண்ண தோணும்லே.... அதான் 😁

      Delete

  20. //வேணாம்.. டேஞ்சரு..!'' என்று இக்கட்டான தருணத்தில், மாடஸ்டியிடம் கிசுகிசுக்கும் வில்­லி கார்வினைப் போல மண்டைக்குள் ஒரு குரல் கேட்க, வேகமாய் நடையைத் தொடர்ந்தேன்!//

    😂😂😂😂😂

    ReplyDelete
  21. சார் நானும் சிவகாசி தான் புரோட்டா கடைய விட்டு விட்டீர்களே

    ReplyDelete
    Replies
    1. அது தான் இப்போ ஊருக்கு ஊர் பரோட்டாவ போட்டுத் தாக்கிட்டு இருக்காங்களே சார் - இன்ஸ்டா பக்கமா போனா மருதையிலே இருக்க கடைகளை காட்டியே பொளக்குறாங்களே 🤕🤕! கோவைலே ஒரு மனுஷன் "செம தீனி "ன்னு நெடுக போய் உசுப்பேத்தி விடறாரு!

      Delete
    2. சிவகாசியில் சிறந்த பரோட்டா கடைகளை சொல்லுங்க சார், விஜயம் மெஸ் தெரியும். வேறு என்ன கடைகள் இருக்கு சார்.

      Delete
  22. டியர் விஜயன் சார், 

    அயல்நாட்டுப் பயணங்களின் போது, அங்கே விற்கப்படும் பொருட்களின் விலையை, நம்மூர் ரூபாய்க்கு மனக்கணக்கால் மாற்றிப் பார்த்து, அதிர்ச்சி அடைவதைப் போல....

    கடைத்தெருவில் பொரிகடலை, பொவண்டோ முதற்கொண்டு பட்டுப்புடவை வரைக்கும் - இன்னின்ன விலைக்கு இன்னின்ன புத்தகங்களைப் போட்டிருக்கலாம் என்று மனதுக்குள்ளேயே புலம்பித் தள்ளி இருக்கிறீர்கள் போல?! 🤣

    ரூபாவளி நல்வாழ்த்துக்கள்! 🙂

    ReplyDelete
    Replies
    1. Gpay அனுப்பி 4 புக் வாங்கிட்டு அவற்றை கூரியரிலே அனுப்பாம, லாரியில் புக்கிங் செஞ்சு அனுப்பினா ஏதாச்சும் மிச்சம் பிடிக்க முடியுமா? என்ற ரேஞ்சுக்கான வினாக்களை எழுப்பும் நண்பர்களை சந்தித்துப் பழகின பிற்பாடு, இந்த மெரியான ஒப்பீடுகளை தவிர்க்க மிடிலே கார்த்திக் 🥹🥹

      Delete
    2. அதற்கெல்லாம் நீங்க ஒரு பதிப்பக அதிகாரி மாதிரி கெடுபிடியாக இருந்து, கெத்து காட்ட வேண்டும் சார்! 

      "ஒண்ணாப்புல இருந்து நம்ம புக்கு படிச்சு வளர்ந்த பயபுள்ளங்களாச்சே" என்று - பிளாகிலும், வாட்சப்பிலும் எங்களோட சேர்ந்து கூடமாட விளையாடிக் கொண்டிருந்தால், ஓவர் உரிமையில் இப்படித்தான் ஆகும் - என்னையும் சேர்த்துத்தான் சொல்லிங்  🙂


      அதுல பாருங்க... "நான் இப்பல்லாம் யாருக்கும் விளக்கம் கொடுக்கறதில்ல, அந்த வயசை எல்லாம் தாண்டியாச்சு, ரொம்ப பட்டாச்சு பாத்தாச்சு" - என்று சொல்லிக் கொண்டே மறுபடி நாலு பக்கத்துக்கு முழுநீள விளக்கம் கொடுக்கறீங்க பாருங்க - உங்களை அடிச்சுக்க முடியாது சாரே! 😂

      Delete
    3. நம்ம டிசைனே அப்புடி 💪💪

      Delete
    4. // அதற்கெல்லாம் நீங்க ஒரு பதிப்பக அதிகாரி மாதிரி கெடுபிடியாக இருந்து, கெத்து காட்ட வேண்டும் சார்! //

      உண்மை

      Delete
    5. // "ஒண்ணாப்புல இருந்து நம்ம புக்கு படிச்சு வளர்ந்த பயபுள்ளங்களாச்சே" //

      இத இப்படி கூட சொல்லலாம்
      “அரை ட்ரௌசர் போட ஆரம்பித்த நாள்ல இருந்து நம்ம புக்கு படிச்சு வளர்ந்த பயபுள்ளங்களாச்சே ☺️”

      Delete
  23. ஆசிரியருக்கும்..நண்பர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...!

    பதிவின் கொண்டாட்டம் காமிக்ஸ் இதழிலும் தொடரட்டும் சார்...:-)

    ReplyDelete
  24. சூப்பர் சூப்பர் சார். உற்சாகம் துள்ளும் பதிவு. தீபாவளி என்றாலே எப்போதும் கொண்டாட்டம் தான் என்னை பொருத்தவரை.

    ReplyDelete
  25. ஸ்கூட்டரில் உட்கார வைத்து சிவகாசி வீதிகளை சுற்றிக்காட்டியதற்கு நன்றிகள் எடிட்டர் சார்!!
    கடைகளில் விற்கப்பட்ட பொருட்களின் விலையை காமிக்ஸ் புத்தகத்தின் விலையோடும், சந்தாவோடும் ஒப்பிட்டதெல்லாம் - நாடி நரம்புகளில் எல்லாம் காமிக்ஸ் ஊறிக் கிடக்கும் உங்களை போன்ற.. ம்ஹூம்.. உங்களால் மட்டுமே முடியும்!!💐💐💐

    விரிவான & ஜாலியான பதிவுக்கு நன்றிகள் பல!!🙏💐💐

    நாளைய பதிவில் மீண்டும் உங்களைச் சந்திக்கும் வரை நன்றி கூறி விடை பெறுவது...

    ReplyDelete
    Replies
    1. இதுதான் ஒரு வாரத்திற்கு, இளவரசரே

      Delete
    2. சுத்தி பார்க்கும் போது ஆசிரியர் உங்களுக்கு வாங்கி கொடுத்த இனிப்புகளை சொல்லல

      Delete
    3. அவர் எங்கே வாங்கிக்கொடுத்தார்? நான்தான் எடுத்துக்கிட்டேன்!🤪

      Delete
  26. No Holidays ...
    always on duty 24×7.....

    Waiting for Christmas ......

    ReplyDelete
  27. கூட்டம் ரோடுகளில் டிராபிக் மிரள வைக்கிறது.

    ReplyDelete
  28. ஆசிரியருக்கும் -
    அன்பான காமிக்ஸ் ரசிகர்களுக்கும்
    என் இனிய தீப ஒளித்திருநாள்
    நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  29. தீபாவளி நல்வாழ்த்துக்கள் சார்....
    என்ன சார்,
    "வாங்க காலாற எங்க ஊர சுத்தி பாக்கலாம்" னு, உங்க வீட்டுக்கு வந்த ஒரம்பறயாட்டம் எங்கள கூட்டிபோய் சிவகாசி கடவீதிகளை சுத்தி காமிஞ்சுட்டீங்க 👌❤️.
    இந்த பதிவை ஆழ்ந்து படிக்கறப்ப நேர்லயே சுத்தி பார்த்த உணர்வு.

    தீபாவளி மற்றும் பண்டிகைகள் என்பது மக்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியான விசியம்.
    ஆனா பொருளாதார சூழல் இல்லைனா ரெம்பவும் சோகமான விசியமும் அதான்.
    ஆனா இப்ப கொஞ்சம் சூழல் மாறிப்போச்சு,
    "செலவு வருசம்பூரா இருங்கறதுதான், அதுக்காக நோம்பி கொண்டாடாம இருக்க முடியுமா?" என ஜனங்க எந்த வேல,வெட்டி இல்லாத சூழலிலும் பண்டிகையை சமாளிக்க கத்துட்டாங்கங்கறத இந்த கூட்டமே சொல்லிரும்.
    திருப்பூரிலும் தீபாவளி களை கட்டிருச்சு.
    இந்த மழைதான் அப்பப்ப வந்து "நீ எப்டி பட்டாசு வெடிப்பினு பாக்கறேன்" என்கிறது.
    ஆனாலும் கிடைக்கும் கேப்பில் பசங்கள் பட்டாசும் புஸ்வாணமும் வைக்க கற்றுக் கொண்டார்கள்.

    1987 ன்னதும்,அன்றைய பலகாரங்களோட தீபாவளி மலர் படிச்ச காலம் நினைவுக்கு வருது.அந்ல 5ரூ சந்தோஷம் இன்று எத்தனை கொட்டி குடுத்தாலும் வரமாட்டேங்குது.
    வீட்ல செய்யும் பலகாரங்களோட,
    உறவுகள் சூழ, புத்தாடை உடுத்தி,
    4 நாளைக்கு பட்டாசு வெடிச்சி,
    கறிக்கொழம்போட தீவாளி கொண்டாடிய நாட்கள் பொற்காலம்.

    பெரிய பித்தளை வாணா போசியில் பாட்டி லட்டுக்கு கலக்கறத பாக்க ஆசையாக இருந்தது,
    இப்ப,
    "வீட்டு ஆம்பளைங்கள நாள் முழுக்க முறுக்கு புழிஞ்சு குடுக்கற வேல வாங்கி, எண்ணெ சட்டில உக்காந்துட்டு தீபாவளிக்கு சோர்ந்து போறதவிட, இந்த தடவ பலகாரங்கள கடைல வாங்கிக்கலாம்" என இல்லத்தார் முடிவு செய்வது வீட்டு ஆம்பளைங்களுக்கு பெரிய ஆறுதல்.

    தீபாவளி என்றால் பட்டாசு இல்லாமலா?
    "20 ரூ க்கு பட்டாசுகள் வாங்கினா 3 நாளுக்கு வெடிப்போம்" என்ற பழங்கதைகள் இன்று வேலைக்கு ஆவாது.
    இன்று 2000₹ பட்டாசு வாங்கினாலும் திருப்தியில்லை, ஆனாலும் ஒரு கட்டு செங்கோட்டை சரவெடி வாங்கி,
    தீபாவளி காலை வாசல்ல வெச்சு வெடிச்சு அந்த காகிதங்கள் நம்ம வீட்டு முன்னாடி பறக்கறத பாக்கற ஆனந்தம் இருக்கே அடடா...

    தீபாவளியப்ப கறி எடுத்து சுடசுட இட்லியோட சாப்டற சுகம் எந்த நாளும் வராது. 35,40 வருச பாட்டி வீட்டு பழக்கத்தை
    இன்று
    "தீபாவளிக்கு கறி எடுக்கலாமா? வேணாமா? " ஒரு பக்கம் விவாதிக்கிறார்கள்.
    என்ன கொடுமை.

    எப்படியோ தீபாவளி என்று ஒண்ணு வர்றதே மகிழ்ச்சிதான்

    லயன் குடும்பத்தார் & லயன் வாசகர்கள் மற்றும் லயன் அலுவலக ஊழியர்கள் என அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.💥💥💥💥💥❄️❄️❄️

    ReplyDelete
  30. எடிட்டர் ஐயா மற்றும் லயன் காமிக்ஸ் தோழர்கள் மற்றும் வாசக சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்🎆🎆🎇🎇🎇🧨🧨🧨🪔🪔🪔🪔

    ReplyDelete
  31. உங்க எழுத்து நடையை அடிச்சுக்கவே முடியாதுங்க..
    இத்தனை நேரம் சிவகாசி டவுனுக்குள்ளேயே இருந்த பீலீங்.. சூப்பர் சார்..

    அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. ///இத்தனை நேரம் சிவகாசி டவுனுக்குள்ளேயே இருந்த பீலீங்.. ///

      நான்லாம் நம்ம எடிட்டர் பிரெட்டு வாங்கப் போன பேக்கரியவிட்டே இன்னும் வெளிய வரலேன்னாப் பாருங்களேன்!!😋💧

      Delete
    2. பிரெட்டு வியாழக்கிழமை பின்பு தான் கிடைத்திடும் இளவரசரே
      அங்க நீங்க ஐலாவை தான் தேடிட்டு இருக்கீங்கன்னு தெரியும்

      Delete
  32. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    டெக்ஸ் 100 பக்கம் தாண்டியாச்சு. இம்முறையும் நேருக்கு நேர் இரண்டு டஜன் பேர் சுட்டும் ஒரு தோட்டா கூட டெக்ஸ் டீமை உரசி கூட பார்க்கவில்லை. ஹி ஹி.

    But மெக்சிகோ கணவாய் ரயில் பாதை, கை விடப்பட்ட சுரங்க ரயில் பாதை, அட்டகாச கலரிங் & சித்திரங்கள் என புல்லட் வேகத்தில் கதை பறக்கிறது

    ReplyDelete
    Replies
    1. ///இரண்டு டஜன் பேர் சுட்டும் ஒரு தோட்டா கூட டெக்ஸ் டீமை உரசி கூட பார்க்கவில்லை.///

      டெக்ஸை பார்த்தாலே தோட்டாக்களும் take diversion எடுக்குமே! 😇😇
      கதைக்கு எப்போ தேவையோ அப்போ டெக்ஸே தேடிப்போய் தோட்டாக்களை புஜத்திலோ, தோள்பட்டையிலோ வாங்கிக்குவார்!😄

      Delete
  33. இளவரசர் ஜி சும்மா இருக்கிற ரம்மிய சுரண்டி விடாதிங்க

    ReplyDelete
    Replies
    1. கவலைப்படாதீங்க ஜி.. அவர் டெக்ஸ் கதையை படிச்சுட்டு, பிரம்மிப்புல மயங்கிக் கிடப்பார்! 😁

      Delete
  34. இந்த பதிவை படிக்கும் போது சிறுவயது தீபாவளி ஞாபகங்கள் வந்து விட்டன.
    நேற்று இரவு ஜானியின் நினைவுகளை துரத்துவோம் போன்று நினைவுகளில் பின்னோக்கி சென்று அந்த நாள் ஞாபகம் வந்ததே என லயித்து இருந்தேன்
    மகிழ்வான தருணங்கள்

    ReplyDelete
  35. நாடி நரம்பெல்லாம் காமிக்ஸ் ரசனை ஊறிப் போனவருக்குத்தான், இப்படி எந்த வியாபாரத்தைப் பார்த்தாலும், காமிக்ஸோட ஒப்பிடத் தோணும்! 😯
    அடயெங்கப்பா! என்னா ரசனை! 😳👍

    ReplyDelete