Powered By Blogger

Friday, April 04, 2025

மே 1......?

நண்பர்களே,

வணக்கம்! கா­லில் சக்கரம் கட்டிக் கொண்டு சீறிப் பாய்கின்றன நாட்கள்! இதோ ஒரு முழு வாரம் ஓடிவிட்டது, அப்பாவின் அஸ்தியை விசையாய் ஓடும் ஆற்றில் கரைத்து! And வழக்கம் போலவே பொழுதுகள் விடிகின்றன... நேரத்துக்குப் பசியெடுக்கிறது.. இருட்டும் வேளைகளில் உறக்கமும் லாத்துகிறது! ஒரு மனுஷன் முழுசாய் காற்றில் கரைந்து போன பின்னருமே பூமி எப்போதும் போலவே சுழல்கிறது! வாழ்க்கை எனும் காட்டாறு யாருக்காகவும், எங்கேயும் தயங்கிடாதென்பது தெரியும் தான் - ஆனால், அதனை கண்முன்னே பார்க்க நேரிடும் போது, அடிவயிற்றில் ஒரு இனம்புரியா சலனம் குடியேறுவதை உணர முடிகிறது!

But சுனாமியே சுழற்றியடித்தாலும் the show must go on என்பதால் பணிச்சூழலுக்குள் ஆழ்த்திக் கொண்டு, வழக்கத்தை விடவும் கூடுதல் ஜா­லியாய், மாமூலை விடவும் அதிக சுறுசுறுப்பாய் இருப்பது போல் ட்ராமா போட்டபடியே பொழுதுகளை நகர்த்தி வருகிறேன்! And எதிரே அசுரப் பரிமாணத்தில் ஆன்லைன் மேளாவின் ஸ்பெஷல் இதழ்கள் காத்திருப்பதால்- நம்மையும் அறியாமலே பணி மும்முரங்களில் இன்ன பிற சிந்தனைகளைப் பின்தள்ளப் பழகியும் விடுகிறது! என்ன டிசைனோ- இந்த வாழ்க்கை எனும் பெரும் பயணம்?! Phewww!!

And yes - அப்பாவின் ஈமக்கிரியைகளின் போது, கலந்து கொள்ள முடியவில்லையே? என்ற ஆதங்கம் நண்பர்களின் ஒரு சாராரிடம் இருப்பதை நானறிவேன்! ஆனால், நிறைய நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்க்கவும்; இதன் பொருட்டு புதுசாய் சில நெருடல்கள் நம் சிறு அணிக்குள் தலைதூக்கிட அனுமதிக்க வேணாமே என்ற எண்ணமும் சேர்ந்து கொள்ள- நண்பர்களின் அவாவுக்குத் தடை போட வேண்டிப் போனது! ஏற்கனவே அப்பாவின் காரியங்கள் முடிவதற்கு முன்பாகவே அவசர அவசரமாய் அரங்கேறியிருக்கும் "me.. the first" சம்பவங்களையெல்லாம் பார்க்கும் போது- நிதானமாய், பெரும் சிரமங்களின்றி நாம் எங்கேனும் சந்தித்து, சீனியர் எடிட்டருக்கான நினைவஞ்சலி­யை நடத்திடல் நலம் என்ற எனது சிந்தனை சரி தான் என்றேபடுகிறது! So அப்பாவின் முப்பதாவது நாள் காரியங்களையும் முடித்த பிற்பாடு - உழைப்பாளர் தினமான மே-1ல் சேலத்தில் சந்திக்க இயன்றால் சிறப்பு!

*ஏதேனும் ஒரு மித அளவிலான அரங்கினை ஏற்பாடு செய்து காலை பத்து மணிக்கு அங்கே கூடிடத் திட்டமிடலாமா folks?

*சீனியர் எடிட்டருடனான உங்களது நினைவுகளைப் பகிர்ந்திடலாம்..

*சீனியர் எடிட்டரின் பங்களிப்புகளைப் பற்றி உரையாடிடலாம்..

*And எப்போதும் போல கடைசி அரை மணி நேரத்தினை நான் எடுத்துக் கொள்ளலாம்!

*மதியம் ஒரு மணிக்கு சிம்பிளாக லஞ்ச் & 2 மணிக்கு விடை பெற்றிடலாம்!

So காலையில் சீக்கிரம் கிளம்பினால், மாலை வீடு திரும்பிடும் வசதி நமது வாசக நண்பர்களின் கணிசமானோர்க்கு சாத்தியமாகிடலாம்! Of course சென்னையிலிருந்தோ; என்னைப் போல தென்மாவட்டங்களிலிருந்து வருவோருக்கோ பயணம் கொஞ்சம் கூடுதலாக இருக்கலாம் தான்; but சிவகாசி வரைக்கும் அலுப்புத் தட்டப் பயணிக்கும் நோவுகள் இராது! ஆக, எனது கேள்வி இது மட்டுமே folks?

ஈரோட்டுச் சந்திப்புக்கு 240 பேர் வருகை தந்திருந்தனர் & it was a much bigger place! ஆனால், சேலமும், சந்திப்பும் நமக்குப் புதுசு என்பதால் உங்களில் எத்தனை பேருக்கு அன்றைக்கு வருகை புரிந்திடத் தோதுப்படுதோ என்று யூகிக்கத் தெரியவில்லை! சின்னதாய் ஹாலைப் பிடித்து விட்டு, கூடுதலாய் attendance  இருக்க நேரிட்டால் பேந்தப் பேந்த முழித்தது போலாகிவிடும். & தேவைக்கதிமாய் பெரிய அரங்கை ஏற்பாடு செய்திடும் பட்சத்தில் வீண் விரயமே பலனாகிடும்!

So மே 1 ?

Sure ✔️

என்றோ

Sorry ✖️

என்றோ பதி­லிட்டாலே திட்டமிடலுக்கு உதவிடும் guys! இதோ - உங்களுக்கு நெருடல்களின்றிப் பதிவு செய்திட வோட்டிங் தளத்தின் ­லிங்க்: https://strawpoll.com/LVyK2wz88Z0

And please:  அன்றைக்கு ஆஜராக முடியாத நண்பர்கள் அது குறித்து சங்கடம் கொள்ளத் தேவையில்லை! இன்றைய பிஸியான நமது உலகினில் இவையெல்லாமே சகஜமே என்பதை சர்வநிச்சயமாய்ப் புரிந்திருப்போம்! So இயன்றால், வருகை தாருங்கள் ப்ளீஸ்; இயன்றிடாதோர் மானசீகமாய் அஞ்சலி செய்தாலே அது விண்ணுலகைச் சென்றடைந்து விடுமென்று நம்பிடுவோம்!

கொசுறாய் ஒரு தகவலுமே! 

எந்தவொரு சந்திப்பாக இருந்தாலும் ஏதேனும் ஒரு ஸ்பெஷல் இதழை அந்நேரத்துக்கென நாம் வெளியிடுவது தெரிந்த சமாச்சாரம் தானே? இம்முறையோ அது தேவையா? தேவையில்லையா? என்ற யோசனை உள்ளுக்குள்! இறுதியாய் ஒரு சமரச ஏற்பாட்டில் settle ஆகிப் போனேன்! காத்திருக்கும் ஆன்லைன் மேளாவின் புக் ­லிஸ்டிலி­ருந்து ஒற்றை இதழை மட்டும் மே-1 தேதிக்கான ரிலீஸ் என்று அறிவிக்க வேண்டியது! And அந்த இதழ் அப்பாவுக்கான tribute ஆக இருந்திடட்டும்! தமிழ் காமிக்ஸ் உலகுக்கே "இரும்புக்கை மாயாவி''எனும் அமரஜோதியை ஏற்றி வைத்தவருக்கான farewell இதழாகவும் மாயாவியே இருந்தால் சாலப் பொருத்தமென்று தோன்றியது!

So கலரில் "ஒற்றைக்கண் மர்மம்'' MAXI சைஸிலான இதழை ஆன்லைன் மேளா ஸ்பெஷல் இதழ்களின் லி­ஸ்டில் இணைத்த கையோடு, இதனை மட்டும் மே முதல் தேதியன்று ரிலீஸ் செய்திடலாமா folks? பாக்கி இதழ்கள் உரிய வேளைகளில்..! இதோ - அந்த இதழுக்கான அட்டைப்பட பிரிவியூ + உட்பக்கம் ! Irandume இன்னமும் Works in progress தான்!

WORK IN PROGRESS

And yes - இந்த அட்டைப்படமானது ரொம்ப முன்னே ஸ்பேனிஷ் மொழியில் மாயாவி கதைகள் வெளியான தருணத்தில் அவர்கள் போட்ட அட்டைப்படத்தின் தழுவலே! Fresh ஆக, புதுசாய் டிசைன் செய்துள்ளோம்! உட்பக்கங்களும், இயன்றமட்டிலும் ஜிங்குச்சா.. என்ற பாணியில் கலரிங் இராதவாறு பார்த்துக் கொண்டிருக்கிறோம்!

தமிழ்ப் புத்தாண்டு வேளையினில் ஆன்லைன் மேளாவின் ஸ்பெஷல் இதழ்களின் லி­ஸ்ட் வெளிவந்திடும்! "ஒற்றைக்கண் மர்மம்'' ஆல்பமும் அந்த லி­ஸ்டின் ஒரு அங்கமாகிடும்!

So மொத்தமாய் எல்லாவற்றிற்கும் புக்கிங் பண்ணினாலும் சரி, மாயாவிக்கு மட்டுமே துண்டு போட்டு வைத்தாலும்  சரி,we'd be fine with it!

மீண்டும் சந்திப்போம்    folks! Bye for now! Have a lovely weekend!