Powered By Blogger

Friday, April 04, 2025

மே 1......?

நண்பர்களே,

வணக்கம்! கா­லில் சக்கரம் கட்டிக் கொண்டு சீறிப் பாய்கின்றன நாட்கள்! இதோ ஒரு முழு வாரம் ஓடிவிட்டது, அப்பாவின் அஸ்தியை விசையாய் ஓடும் ஆற்றில் கரைத்து! And வழக்கம் போலவே பொழுதுகள் விடிகின்றன... நேரத்துக்குப் பசியெடுக்கிறது.. இருட்டும் வேளைகளில் உறக்கமும் லாத்துகிறது! ஒரு மனுஷன் முழுசாய் காற்றில் கரைந்து போன பின்னருமே பூமி எப்போதும் போலவே சுழல்கிறது! வாழ்க்கை எனும் காட்டாறு யாருக்காகவும், எங்கேயும் தயங்கிடாதென்பது தெரியும் தான் - ஆனால், அதனை கண்முன்னே பார்க்க நேரிடும் போது, அடிவயிற்றில் ஒரு இனம்புரியா சலனம் குடியேறுவதை உணர முடிகிறது!

But சுனாமியே சுழற்றியடித்தாலும் the show must go on என்பதால் பணிச்சூழலுக்குள் ஆழ்த்திக் கொண்டு, வழக்கத்தை விடவும் கூடுதல் ஜா­லியாய், மாமூலை விடவும் அதிக சுறுசுறுப்பாய் இருப்பது போல் ட்ராமா போட்டபடியே பொழுதுகளை நகர்த்தி வருகிறேன்! And எதிரே அசுரப் பரிமாணத்தில் ஆன்லைன் மேளாவின் ஸ்பெஷல் இதழ்கள் காத்திருப்பதால்- நம்மையும் அறியாமலே பணி மும்முரங்களில் இன்ன பிற சிந்தனைகளைப் பின்தள்ளப் பழகியும் விடுகிறது! என்ன டிசைனோ- இந்த வாழ்க்கை எனும் பெரும் பயணம்?! Phewww!!

And yes - அப்பாவின் ஈமக்கிரியைகளின் போது, கலந்து கொள்ள முடியவில்லையே? என்ற ஆதங்கம் நண்பர்களின் ஒரு சாராரிடம் இருப்பதை நானறிவேன்! ஆனால், நிறைய நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்க்கவும்; இதன் பொருட்டு புதுசாய் சில நெருடல்கள் நம் சிறு அணிக்குள் தலைதூக்கிட அனுமதிக்க வேணாமே என்ற எண்ணமும் சேர்ந்து கொள்ள- நண்பர்களின் அவாவுக்குத் தடை போட வேண்டிப் போனது! ஏற்கனவே அப்பாவின் காரியங்கள் முடிவதற்கு முன்பாகவே அவசர அவசரமாய் அரங்கேறியிருக்கும் "me.. the first" சம்பவங்களையெல்லாம் பார்க்கும் போது- நிதானமாய், பெரும் சிரமங்களின்றி நாம் எங்கேனும் சந்தித்து, சீனியர் எடிட்டருக்கான நினைவஞ்சலி­யை நடத்திடல் நலம் என்ற எனது சிந்தனை சரி தான் என்றேபடுகிறது! So அப்பாவின் முப்பதாவது நாள் காரியங்களையும் முடித்த பிற்பாடு - உழைப்பாளர் தினமான மே-1ல் சேலத்தில் சந்திக்க இயன்றால் சிறப்பு!

*ஏதேனும் ஒரு மித அளவிலான அரங்கினை ஏற்பாடு செய்து காலை பத்து மணிக்கு அங்கே கூடிடத் திட்டமிடலாமா folks?

*சீனியர் எடிட்டருடனான உங்களது நினைவுகளைப் பகிர்ந்திடலாம்..

*சீனியர் எடிட்டரின் பங்களிப்புகளைப் பற்றி உரையாடிடலாம்..

*And எப்போதும் போல கடைசி அரை மணி நேரத்தினை நான் எடுத்துக் கொள்ளலாம்!

*மதியம் ஒரு மணிக்கு சிம்பிளாக லஞ்ச் & 2 மணிக்கு விடை பெற்றிடலாம்!

So காலையில் சீக்கிரம் கிளம்பினால், மாலை வீடு திரும்பிடும் வசதி நமது வாசக நண்பர்களின் கணிசமானோர்க்கு சாத்தியமாகிடலாம்! Of course சென்னையிலிருந்தோ; என்னைப் போல தென்மாவட்டங்களிலிருந்து வருவோருக்கோ பயணம் கொஞ்சம் கூடுதலாக இருக்கலாம் தான்; but சிவகாசி வரைக்கும் அலுப்புத் தட்டப் பயணிக்கும் நோவுகள் இராது! ஆக, எனது கேள்வி இது மட்டுமே folks?

ஈரோட்டுச் சந்திப்புக்கு 240 பேர் வருகை தந்திருந்தனர் & it was a much bigger place! ஆனால், சேலமும், சந்திப்பும் நமக்குப் புதுசு என்பதால் உங்களில் எத்தனை பேருக்கு அன்றைக்கு வருகை புரிந்திடத் தோதுப்படுதோ என்று யூகிக்கத் தெரியவில்லை! சின்னதாய் ஹாலைப் பிடித்து விட்டு, கூடுதலாய் attendance  இருக்க நேரிட்டால் பேந்தப் பேந்த முழித்தது போலாகிவிடும். & தேவைக்கதிமாய் பெரிய அரங்கை ஏற்பாடு செய்திடும் பட்சத்தில் வீண் விரயமே பலனாகிடும்!

So மே 1 ?

Sure ✔️

என்றோ

Sorry ✖️

என்றோ பதி­லிட்டாலே திட்டமிடலுக்கு உதவிடும் guys! இதோ - உங்களுக்கு நெருடல்களின்றிப் பதிவு செய்திட வோட்டிங் தளத்தின் ­லிங்க்: https://strawpoll.com/LVyK2wz88Z0

And please:  அன்றைக்கு ஆஜராக முடியாத நண்பர்கள் அது குறித்து சங்கடம் கொள்ளத் தேவையில்லை! இன்றைய பிஸியான நமது உலகினில் இவையெல்லாமே சகஜமே என்பதை சர்வநிச்சயமாய்ப் புரிந்திருப்போம்! So இயன்றால், வருகை தாருங்கள் ப்ளீஸ்; இயன்றிடாதோர் மானசீகமாய் அஞ்சலி செய்தாலே அது விண்ணுலகைச் சென்றடைந்து விடுமென்று நம்பிடுவோம்!

கொசுறாய் ஒரு தகவலுமே! 

எந்தவொரு சந்திப்பாக இருந்தாலும் ஏதேனும் ஒரு ஸ்பெஷல் இதழை அந்நேரத்துக்கென நாம் வெளியிடுவது தெரிந்த சமாச்சாரம் தானே? இம்முறையோ அது தேவையா? தேவையில்லையா? என்ற யோசனை உள்ளுக்குள்! இறுதியாய் ஒரு சமரச ஏற்பாட்டில் settle ஆகிப் போனேன்! காத்திருக்கும் ஆன்லைன் மேளாவின் புக் ­லிஸ்டிலி­ருந்து ஒற்றை இதழை மட்டும் மே-1 தேதிக்கான ரிலீஸ் என்று அறிவிக்க வேண்டியது! And அந்த இதழ் அப்பாவுக்கான tribute ஆக இருந்திடட்டும்! தமிழ் காமிக்ஸ் உலகுக்கே "இரும்புக்கை மாயாவி''எனும் அமரஜோதியை ஏற்றி வைத்தவருக்கான farewell இதழாகவும் மாயாவியே இருந்தால் சாலப் பொருத்தமென்று தோன்றியது!

So கலரில் "ஒற்றைக்கண் மர்மம்'' MAXI சைஸிலான இதழை ஆன்லைன் மேளா ஸ்பெஷல் இதழ்களின் லி­ஸ்டில் இணைத்த கையோடு, இதனை மட்டும் மே முதல் தேதியன்று ரிலீஸ் செய்திடலாமா folks? பாக்கி இதழ்கள் உரிய வேளைகளில்..! இதோ - அந்த இதழுக்கான அட்டைப்பட பிரிவியூ + உட்பக்கம் ! Irandume இன்னமும் Works in progress தான்!

WORK IN PROGRESS

And yes - இந்த அட்டைப்படமானது ரொம்ப முன்னே ஸ்பேனிஷ் மொழியில் மாயாவி கதைகள் வெளியான தருணத்தில் அவர்கள் போட்ட அட்டைப்படத்தின் தழுவலே! Fresh ஆக, புதுசாய் டிசைன் செய்துள்ளோம்! உட்பக்கங்களும், இயன்றமட்டிலும் ஜிங்குச்சா.. என்ற பாணியில் கலரிங் இராதவாறு பார்த்துக் கொண்டிருக்கிறோம்!

தமிழ்ப் புத்தாண்டு வேளையினில் ஆன்லைன் மேளாவின் ஸ்பெஷல் இதழ்களின் லி­ஸ்ட் வெளிவந்திடும்! "ஒற்றைக்கண் மர்மம்'' ஆல்பமும் அந்த லி­ஸ்டின் ஒரு அங்கமாகிடும்!

So மொத்தமாய் எல்லாவற்றிற்கும் புக்கிங் பண்ணினாலும் சரி, மாயாவிக்கு மட்டுமே துண்டு போட்டு வைத்தாலும்  சரி,we'd be fine with it!

மீண்டும் சந்திப்போம்    folks! Bye for now! Have a lovely weekend!

68 comments:

  1. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  2. கொளுத்தும் வெயிலில் ஒரு பதிவு...

    ReplyDelete
  3. ஒற்றைக்கண் மர்மத்தில் கலரிங் அருமையாக உள்ளது

    ReplyDelete
    Replies
    1. ரொம்பவே tough சார் - கதையின் பெரும் பாகம் நடப்பது இருளில்... So சித்திரங்களில் எக்கச்சக்க கருப்பு!

      Delete
    2. Be it day or night Jesus Blasco's artwork is full of black shade

      Delete
  4. வாரமலர் மொத்தமாக போடுவீர்கள் என நினைத்தேன் சார் மாயாவி மட்டும் தனியே போட்டால் வாரமலர் இல்லையென்கிறது தானே உண்மை ஆசிரியரே

    ReplyDelete
  5. ////தமிழ் காமிக்ஸ் உலகுக்கே "இரும்புக்கை மாயாவி''எனும் அமரஜோதியை ஏற்றி வைத்தவருக்கான farewell இதழாகவும் மாயாவியே இருந்தால் சாலப் பொருத்தமென்று தோன்றியது!///

    அருமையான ஏற்பாடு....சீனியர் ஐயாவின் ஆன்மா கண்குளிர ஆனந்தப்படும்.

    *இரும்புக் கை மாயாவி*--னு அழைத்தவருக்கு இதைவிட சிறப்பான farewellஐ செய்திட இயலாதுதான்...

    ReplyDelete
  6. // So மொத்தமாய் எல்லாவற்றிற்கும் புக்கிங் பண்ணினாலும் சரி, மாயாவிக்கு மட்டுமே துண்டு போட்டு வைத்தாலும் சரி //
    ஓகே சார்...

    ReplyDelete
  7. // மே முதல் தேதியன்று ரிலீஸ் செய்திடலாமா folks //
    தாராளமாய் செய்யலாம் சார்,சீனியருக்கு இதைவிட சிறந்த அஞ்சலி இருக்க முடியுமா என்ன ?!

    ReplyDelete
  8. நிச்சயமா அருமையான நினைவஞ்சலி சார்...அழகாய் வந்திருக்கிறது...அட்டை படமும் ப்ரம்மாதம்...இது வரை வந்ததிலே டாப்...கலரிங்குக்காகவே வாங்கலாங்கும் போது டாப் கதைன்னா சும்மாவா...இந்த அட்டய தந்தையாரிடம் நேரில் காட்டியிருந்தீர்களா...முதன்முறையாக படிக்கப்போறேன்

    ReplyDelete
  9. நினைவு மலர்ங்ற வார்த்தை முன்னட்டையிலும் அவர் படம் பின்னட்டையிலும் அந்த இரும்புக்கையோடு காட்சியளித்தால் நலம் சார்

    ReplyDelete
    Replies
    1. //அவர் படம் பின்னட்டையிலும் அந்த இரும்புக்கையோடு காட்சியளித்தால் நலம் சார்//

      இதை வரவேற்கிறேன்

      Delete
  10. ////தமிழ் காமிக்ஸ் உலகுக்கே "இரும்புக்கை மாயாவி''எனும் அமரஜோதியை ஏற்றி வைத்தவருக்கான farewell இதழாகவும் மாயாவியே இருந்தால் சாலப் பொருத்தமென்று தோன்றியது!///
    இதுதான் அவருக்கு சிறந்த அஞ்சலி

    ReplyDelete
  11. வணக்கம் நண்பர்களே! ஒறறைக்கண் மர்மம் சீனியர் எடிட்டருக்கு சிறப்பான டிரிபியூட் ஆக அமையும்.

    ReplyDelete
  12. சீனியர் எடிட்டரின் அஞ்சலி தினத்தை சிறப்பாக செய்வோம் சார்.
    மேலும் அவரின் தலைநாயகனான இரும்புக் கை மாயாவியின் கதையை வெளியீடு சரியான பொருத்தம்.
    ❤️👍❤️❤️❤️❤️❤️❤️

    ReplyDelete
  13. சீனியர் எடிட்டரின் நினைவஞ்சலியில் அவர் முதலில் அறிமுகப் படுத்திய இரும்புக்கை மாயாவி கலந்து கொள்வது மிகுந்த நெகிழ்ச்சியான ஒன்று. மாயாவியும் அஞ்சலி செலுத்துவார் எனறு நம்புகிறேன். வணக்கம்.

    ReplyDelete
  14. ஒற்றைக்கண் மர்மம்.. சிறந்த தேர்வு சார்.

    ReplyDelete
  15. @Edi Sir 😘🥰

    Me in😘🥰💐

    ...

    May 1..🙏
    உழைப்பாளிகளின் தோழனுக்கு உற்ற துணையாக விளங்கியவருக்கு அஞ்சலி செலுத்த.. 💐🙏

    சேலம் வருவதைவிட எனக்கு வேறு எந்த வேலையும் இல்லை Sir.. 💐🙏

    முக்கியமாய் என் lovely இரும்புகை மாயாவியின் "ஒற்றை கண் மர்மம்"😘🥰
    புத்தகத்தை கையில் ஏந்துவதை நான் நேரில் அனுபவிக்க விரும்புகிறேன் 😘💐🙏🥰😘

    ReplyDelete
  16. அப்பாவின் ஆசியோடு அவர் செய்த ஒ.க.மர்மம் வெளியீடு அவர்க்கு மரியாதை செய்வதாக இருக்கட்டும் டியர் எடி ..

    புத்தகத்தின் முன் பக்க பகுதியில் அப்பாவின் புகைப்படத்தினுடன் அவர் பற்றி சிறு தொகுப்பும் இருந்திட்டால் நலம் சார் ..

    கலரிங் அட்டகாசமாக உள்ளது ..

    நேரில் வர நீங்கள் தடா போட்டிருந்தமையால்
    நான் சேலம் வருவேன் 🙏🙏

    ReplyDelete
  17. Hi Editor sir, nice to see Irumbukai Mayavi in color and greatest way to tribute Senior editor . I couldn’t make it for May 1st meet up and definitely miss it . But soon I will come and meet you in person .

    ReplyDelete
  18. சீனியர் எடிட்டர்க்கான சிறப்பு இதழ் சரியான ஒன்று சார்....தவறாமல் கலந்து கொள்வேன்....

    ReplyDelete
  19. முதன்முறையாக ஆவலுடன் waiting for Louis Crandell...

    இரும்புக் கையாரை வெளியிடுவதை விடச் சிறந்த காணிக்கை நமது அன்பிற்கினிய ஸீனியர் எடிட்டர் சாருக்கு எதுவும் இருக்க முடியாது...

    ReplyDelete
  20. சீனியர் எடிட்டர் அவர்களின்
    நினைவு அஞ்சலிக்கு
    இ.கை. மாயாவியின் "ஒற்றைக்கண் மர்மம்" - சிறப்பான தேர்வு சார்...
    இதையும் .. "மாயாவிக்கோர் மாயாவி " -யையும் இணைத்து
    லக்கிலூக் - இதழ் சைஸில் கணமாக வெளியிடச் சொல்லி கேட்க எண்ணியிருந்தேன்..
    ஆனால் - Maxi சைஸ் என்பது சூப்பர். மிகவும் நன்றாக இருக்கும் ...
    பின் அட்டையில் - சீனியர் எடிட்டரின் புகைப்படம் வருவது போல் டிசைன் செய்யுங்களேன் -
    மிகவும் தரமாய் இருக்கும் ...

    ReplyDelete
  21. ஜனவரியில் சென்னை புத்தகத்திருவிழா - எனும் போது..
    சீனியர் எடிட்டர் - அவர்களின் பிறந்த தினமாகிய டிசம்பர் 24-யில்
    இ கை மாயாவி - கதையோ
    லாரன்ஸ் & டேவிட்
    ஜானி நீரோ கதையோ
    வெளியிடும்படி ஏற்பாடு செய்யுங்களேன்...
    அல்லது தற்போதைய Ele - 80 யில் வரும் குண்டு கதம்ப இதழை டிசம்பர் மாதம் சாரின்
    பிறந்தநாள் மலராக சமர்ப்பிக்கலாமே சார்..
    பரிசீலியுங்கள் சார்..

    ReplyDelete
  22. ஒன்றை கண் மர்மம் இது வரை படிக்கவில்லை. முதல் முறையாக படிக்க மிகுந்த ஆவலுடன் உள்ளேன் சார்.

    ReplyDelete
  23. Instead of a book, opening a framed photo or a statue or releasing stamp would be apt I think.

    We can make it a year long function and celebrate his legacy by writing about senior editor in social media (like what writer jeyamohan did), newspapers, magazines, make videos about him.

    Or releasing a malar on his life with excepts from friends, family, comics lovers.

    Just a suggestion only sir. No harm intended.

    ReplyDelete
  24. நிச்சயம் சந்திப்போம் sir.. ❤️👍🙏

    ReplyDelete
  25. **** சாபங்கள் சாவதில்லை ****

    மழைக்காக ஒதுங்க போன ஊரில் சில அமானுஷ்ய மர்மச் சாவுகளை எதிர்கொள்கிறார்கள் நம் வில்லரும், கார்சனும்! சின்னதாய் ஒரு நாடகம் நடத்தி கொலையாளி யார் என்பதை கண்டுபிடிப்பது தான் மீதக் கதை! கூடவே, ஒரு நல்ல காதல் ஜோடியையும் சேர்த்து வைத்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருக்கிறார்கள்!

    ஒரே ஒரு முறை கூட துப்பாக்கியை உபயோகிக்காமல் வில்லரும் கார்சனும் ஒரு கதையில் பெர்பாமான்ஸ் காட்டி இருப்பது எனக்கு தெரிந்து இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன்! ஆனாலும் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் பரபரப்பாக கதையை நகர்த்தி முடித்திருப்பது பொனெல்லி டீமின் மேஜிக்! குறிப்பாக ஓவியர் சிவிடெல்லியின் படைப்பாற்றலை ஒவ்வொரு ஃபிரேமிலும் ரசிக்காமல் இருக்கவே முடியாது - அத்தனை அழகு.. அத்தனை நேர்த்தி!

    கதையின் ஆரம்ப பக்கங்களிலேயே கொலையாளி யார் என்பதை உங்களால் யூகிக்க முடிந்தால் தாராளமாக உங்கள் பெயருக்கு முன்னால் 'CID' என்று சேர்த்துக் கொள்ளலாம் தான்!

    இப்படிக்கு,
    CID இளவரசர்
    Crime branch section,
    அந்தப்புரம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கங்கள் அந்தப்புரத்தின் இளவரசரே

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. செயலரே 🙏, டைனமைட் இல்லா தலை 🐎யும், வெள்ளி முடியார் இல்லா கதையும், பெருந் 👹தலைகள் இல்லா வன்மேற்கும், துப்பாக்கி சண்டை இல்லா சலூனும் முழுமை பெற்றதா வரலாறு இல்லை 😂🤣

      Delete
    4. @KS
      //What a man EV//

      What a man EV is! னு எழுதியிருந்தீங்கன்னா மிகப் பொருத்தமா இருந்திருக்கும். ஹி ஹி!😁

      @கடல்யாழ்
      வணக்கம் சகோ 🙏😊

      @ஸ்வாமிநாதன் சார்.. 😂😂😂😂

      Delete
  26. R.I.P. senior editor sir, ....pls listen this track by YANNI the soundtrack named FAREWELL
    it is resemblance and memories with senior editorhttps://www.youtube.com/watch?v=t_487Jr3DvU

    ReplyDelete
  27. Dr Hariharan's idea sounds good. Postal department has the possibility of releasing personalised stamps as "My Stamp". I can help if required

    ReplyDelete
  28. வணக்கம் இளவரசரே , .c.i.d.மீன்ஸ் .சிவில் இந்தியன் டிபார்ட்மெண்ட் தானேங்க.அதுல க்ரைம் ப்ராஞ்ச்லாம் இருக்குங்களா சார் .ஜெய் சங்கர் மாதிரி துப்பாக்கி லாம்எடுத்துகிட்டு போவாங்களா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ராஜசேகர் ஜி..🙏 😁😁😁

      Delete
  29. நான் சாதாரண ரசிகன் நான். எனக்கு, உங்களுக்குள் இருக்கும் உறவுமுறை தெரியாது. தலைவன் செயலாளர் மற்றும் இதர உங்கள் நட்பு உறவுமுறை எனக்கு தெரியாது. எனக்கு அது அவசியமும் இல்லை. இந்த பொறுப்பு முறை சாதாரண என்னை போன்ற நபர்களுக்கு தேவை இல்லை. என்னால் என்னால் முடிந்த நல்லதை, லயன் காமிக்ஸ்க்கு, என்னால் முடிந்ததை செய்ய முடியும். இதற்காக நான் கனவு காண எனக்கு அவசியம் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. 😮
      அர்த்தராத்திரியில் இப்படி புலம்பற அளவுக்கு அப்படி என்னாச்சுங்க புன்னகை ஜி?

      'தேவை இல்லை', 'அவசியம் இல்லை' - போன்ற பதங்களெல்லாம் உங்களைப்போன்ற.. கடவுளால் அனுப்பப்பட்ட இறைதூதர்களின் வாயிலிருந்து வெளிப்படலாமா?

      Delete

  30. சாண்டா கிளாசைப் பார்த்தேன்

    இங்கே

    மொட்டை அடித்து காது குத்த

    அங்கே

    ஞானஸ்நானம் கொடுத்து பெயரிடும் விழா

    இங்கே

    "பொக்க பல்லு ரேடியோ பொண்ணு பார்க்க போறியோ "

    என பள்ளியில் படிக்கும் போது (துவக்க பள்ளியில் ) பால் பற்கள் விழுந்து விட்டால் மேலே குறிப்பிட்ட கிண்டலுக்கு பயந்து மண்ணில் குழி தோண்டி பல்லைபுதைத்து அதன் மேல் உச்சா விடுவது சீக்கிரம் பல் முளைக்க வழி வகுக்கும் என சீனியர் மாணவர்கள்( அஞ்சாம்ப்பு) சொல்வதை செய்வது.

    அங்கே

    பால் பற்கள் விழுந்து விட்டால் அதை தலையணைக்கு அடியில் வைத்து இரவில் உறங்கினால் நடு இரவில் டூத் பேரி வந்து அந்த பல்லை எடுத்துக்கொண்டு ஒரு சிறிய பரிசு பொருளை வைத்து செல்லும். விழுந்த பல்லும் சீக்கிரம் முளைத்து விடும் என்ற நம்பிக்கை.

    இங்கே

    மாலையில் ஆபியம் விளையாடிவிட்டு தாமதமாக வீடு வந்து சேர்ந்தால் அம்மா இப்படியே நீ பெத்தவங்க பேச்சைக் கேட்காம இருந்தா சித்ரகுப்தன் உன் பாவத்தை எல்லாம் பாவ கணக்கு நோட்டில் எழுதி வைப்பான். உனக்கு தண்டனை கிடைக்கும் என சொல்லி வளர்ப்பார்கள்


    அங்கே

    மேல் உலகம் செல்லும் போது வாசற்கதவில் செயின்ட் பீட்டர் நின்று கொண்டிருப்பார். பாவ புண்ணிய பலன் அங்கே பார்க்கப்படும் என சொல்லி வளர்க்கிறார்கள்.


    சாண்டா கிளாஸ் ஐ பற்றி 12 வது படிக்கும் போது தான் தெரியும்.

    அதனாலயே என்னவோ இந்த மார்ட்டின் புக் மனதில் நெருக்கமாக ஒட்டவில்லை. ஆனாலும் முதல் முறையாக கதையின் இறுதியில் நகைச்சுவை இழையோடுவதால் அதற்காகவே படிக்கலாம். நகைச்சுவை அதுவும் மார்ட்டின் கதையில்?😁.

    8.75/10






    ReplyDelete
  31. சாபங்கள் சாவதில்லை

    தற்செயலாய் டெக்ஸ் ஒரு துப்பறிவாளராக அவதாரம் எடுப்பது என்பது அபூர்வமாக நடக்கும் நிகழ்வுதான். கதை சொல்லப்பட்ட விதமும் சித்திரங்களும் அற்புதமானவை.
    வன் மேற்கில் ஒரு ஷெர்லாக் ஹோம்ஸ் 😅.

    9.25/10

    ReplyDelete
  32. சாய்கான் புதையல்.

    மனதில் புதைந்திருக்கும் சில புதையல் நினைவுகள்.

    நெப்போலியன் பொக்கிஷம் தான் முதன் முதலில் படித்த புதையல் சம்பந்தப்பட்ட கதையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    சமீபத்தில் வந்த நெப்போலியன் பொக்கிஷம் மற்றும் அதன் முன் கதை இரட்டை கதைகளையும் சமீபத்தில் படித்த போது தான் கதை நினைவுக்கே வந்தது.

    அப்போது படிக்கும்போது பல விஷயங்கள் புரியவில்லை அல்லது மறந்துவிட்டது.


    பின்பு பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது நான் டீடைலாக படித்த தி கவுண்ட் ஆப் மாண்டி கிரிஸ்டோ. அந்த வயதில் மிகவும் மனதை கவர்ந்து இழுத்தது.

    இதனோடு தொடர்புடைய கதைகள் என்ற வகையில் போட்டிருந்த டிரஷர் ஐலண்ட் -ஐ படிக்க ஆவல் எழுந்தது.

    அப்போது விடுதிவாசி என்பதால் வெளியே செல்ல அனுமதி இல்லை. பள்ளி மாலை விடும்போது மெயின் கேட் வழியாக செல்ல முடியாது. வடக்கு புறமுள்ள சிறிய இரும்பு கேட் வழியாக மாணவர்கள் வெளியேறும் போது வெளியே சென்று விட்டால் என் எஸ் பி ரோடு வழியாக சாரதாசை கடந்து உச்சிப் பிள்ளையார் கோயில் வாசலுக்கு நேர் எதிர்புறம் இருக்கும் பெரிய கடை வீதியை அடைந்து தைலா சில்க்ஸை கடந்து சென்றால் இடது புறமாக இருக்கும் பழைய புத்தக கடையை அடையலாம். ஆறு மணிக்கு ரோல் கால் என்பதால் கெடுபிடியான வார்டனிடம் மாட்டிக் கொள்ள வாய்ப்புகள் அதிகம்.( தெப்பக்குளத்தின் கிழக்குப் பகுதியில் இருக்கும் நந்தி கோவில் தெருவில் அப்போது ஒரு ஹிக்கின் பாதம்ஸ் இருந்தது. மாணவச் சூழ்நிலையில் அங்கு புதிய புத்தகத்தின் விலை இப்போது ட்ரம்ப் வியட்நாமுக்கு வைத்திருக்கும் டாரிப்பை விட பல மடங்கு அதிகம்.)

    ReplyDelete
    Replies

    1. எனவே பள்ளி விளையாட்டு மைதானத்தின் ( முதல்வராக இருந்தபோது எம்ஜிஆர் வந்து பேசிய மைதானம். விடுதி மாணவர்களுக்கு அனுமதி இல்லை. விடுதி மாடியில் இருந்து பார்த்தோம். கேட்டோம் ) கிழக்குப் பகுதியில் பராந்தக சோழன் தஞ்சையில் இருந்தபோது இருந்த அரண்மனை சுவரை போல் நெடி துயர்ந்திருந்த வளாக சுவர். அதில் ஒரு இடுக்கின் வழியாக நுழைந்து போனால் சிங்கார தோப்பை அடையலாம். ( இப்போது வணிக வளாகங்களும் கார் பார்க்கிங்கும் )

      அதைக் கடந்து வடிவேலு போன்றவர்கள் அடி
      வாங்குவதற்காக இருக்கும் ஒரு உச்சா சந்தை கடந்து போனால் எளிதில் பெரிய கடை வீதியை அடையலாம்.( இப்போது கோட்டை காவல் நிலையம் உச்சா சந்தின் முடிவில் இருப்பதால் முன்னிரவு பொழுதுகளிலும் பெண்கள் இந்த சந்தை கடந்து செல்வதை பார்க்க முடிகிறது )

      அங்குதான் பழைய புத்தகக் கடைகள் நிறைய இருந்தன அப்போது. ( இரும்பு கை மாயாவியின் புகழை போல இப்போதும் பல கடைகள் இன்னமும் ஜீவித்திருக்கின்றன )

      அங்குதான் ட்ரஷர் ஐலண்ட் புக்கை வாங்கினேன். ஆர்வத்துடன் ஆஸ்திரேலியாவில் இருந்து அருந்தமிழை கற்க வந்த ஒருவரிடம் ஆறே நாளில் சாண்டில்யனின் யவன ராணியை கொடுத்து படிக்க சொன்னது போல் ஆகிவிட்டது என் நிலைமை. நான் வாங்கியது டிரஷர் ஐலண்ட் -ன் மூல வடிவம். அதன் கரடு முரடான ஆங்கில வரிகள் விடுதி பொங்கலை சாப்பிட்டதை போல் மயக்கத்தை வரவழைத்தது.
      வந்த நாட்களில்
      டிரஷர் ஐலண்ட், கோரல் ஐலண்ட் இரண்டின் எளிமையான பதிப்புகளை வாங்கி படித்தேன்.

      பிளஸ் டூ முடித்த பின்பு நுழைவுத் தேர்வுக்காக REC நுழைவுத் தேர்வு மையமாக எனக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. முதல் நாளே செல்ல விடுதியில் தங்க பணமும் கொடுத்து அப்பா அனுப்பி வைக்க
      நண்பன் சபியுல்லா உடன் திருச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் அப்போது இருந்த பிளாசா தியேட்டரில் பார்த்தது தான் மெக்கனாஸ் கோல்ட். புதையல் பற்றி பார்த்த முதல் படம் என்று நினைக்கிறேன். பஸ் ஸ்டாண்டிலேயே பழைய பேப்பரை பிரித்து படுத்து இருந்து காலையில் அவசரமாக நுழைவுத் தேர்வு மையத்துக்கு 20 நிமிடம் தாமதமாக போனோம் 😂.

      Delete
    2. கல்லூரி நாட்களில் புதையல் பற்றி படித்த முதல் புத்தகம் கலைஞர் மு கருணாநிதியின் புதையல். வெகு விரைவிலேயே இந்த படத்தையும் பார்த்து விட்டேன்.

      எழுவானுக்கும் தொழுவானுக்கும் இடையிலே
      கள்வர் செல்லும் வழியிலே
      காக்கை மூக்கு நிழலிலே கண்டாலும் கம்மாளர் கண்ணிலே
      எழுபது கோடி பசும்பொன்.

      என்ற விடுகதையை அடக்கிய ஒரு புதையல் கதை.

      பின்பு வந்தது மியான்மரை தாக்கிய ஒன்பது ரிக்டர் அளவு போல வாசகர்களின் மனதில் பூகம்பத்தை ஏற்படுத்திய தங்க கல்லறை.

      பின்பு புலி தேடிய புதையல் வந்து உள்ளத்தை கொள்ளை கொண்டது.

      தானாக தேடிப் போக விட்டாலும் அவ்வப்போது இரவு கழுகாரை புதையல் பற்றிய சாகசங்கள் தாமாக தேடி வந்திருக்கின்றன.

      சமீபத்தில் வந்தது சாபம் வாங்கிய சுரங்கம்.

      சமீபத்தில் ஒரு நண்பர் ஞாபகப்படுத்திய போது தான் நினைவுக்கு வந்தது ரத்தப் படலத்திலும் லட்டுக்குள் கற்கண்டாய் ஒரு சின்ன புதையல்.

      இப்போது இறுதியாக சாய்கான் புதையல். கதை விறுவிறுப்பாகவும் இரு கதாநாயகிகள் இருந்தாலும் அதிக கவர்ச்சி இல்லாமல் இயல்பாகவும் இருந்தது.

      நீண்ட இடைவெளிக்குப் பின்பாக வந்த ஷெல்டன் நிறைவளிக்கவே செய்கிறார். தெளிவான ஓவியங்கள் அருமை.

      9/10

      Delete
    3. இளவரசர் : என்னங்க இது? இப்படியாபட்ட தென்னை மரத்துல
      பசு மாடு கட்டியிருந்தாங்க கதையா சாய் கன் புதையல்னு சொல்லிட்டு ஒரே சொந்த கதையா எழுதி இருக்கீங்க? கடைசி நாலு வரி மட்டும் தான் சாய் கான் புதையல் பத்தி எழுதி இருக்கீங்க.

      செ அ : வேற என்ன பண்றது இளவரசே? கதையை பத்தி எல்லாரும் எழுதிட்டாங்க.. வியட்நாம் போர் பற்றி எழுதலாம்னா அதை மங்கலா செய்ற மாதிரி ரஷ்யா- உக்ரைன்,
      இஸ்ரேல் -பாலஸ்தீனம், அமெரிக்கா -ஹௌதி அப்படின்னு போர்கள் நடந்துட்டு இருக்கு.

      சரி கிளைமாக்ஸ் பத்தி எழுதலாம்னு நினைச்சா 2030 மே மாசம் இந்த புத்தகத்தை படிக்கலாம்னு நான் நினைச்சுகிட்டு இருந்தேன் அதுக்குள்ளார கிளைமாக்ஸ் பத்தி எழுதிட்டிங்க அப்படின்னா ரஃபிக் ராஜா சண்டைக்கு வருவாரு 😅. அதான் இப்படி.. 😅

      Delete
    4. ///சரி கிளைமாக்ஸ் பத்தி எழுதலாம்னு நினைச்சா 2030 மே மாசம் இந்த புத்தகத்தை படிக்கலாம்னு நான் நினைச்சுகிட்டு இருந்தேன் அதுக்குள்ளார கிளைமாக்ஸ் பத்தி எழுதிட்டிங்க அப்படின்னா ரஃபிக் ராஜா சண்டைக்கு வருவாரு 😅. அதான் இப்படி.. 😅///


      அல்ட்டிமேட் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

      Btw, நீங்க நுழைவுத் தேர்வுக்கு முந்தைய நாளில் நைட் ஷோ படம் பார்த்ததையும், பஸ் ஸ்டாண்டிலேயே படுத்து தூங்கியதையும் தான் நம்ப முடியல!😁😁

      Delete

    5. இளவரசே! இதையே நீங்கள் நம்பவில்லை என்றால்+2 கெமிஸ்ட்ரி பரீட்சைக்கு முதல் நாள் ஈவினிங் ஷோ நான் போனேன் என்பதையோ அதே ஷோவுக்கு என்னுடைய கெமிஸ்ட்ரி ஆசிரியர் சந்தன பொட்டு பன்னீர்செல்வம் அவர்கள் எதேச்சையாக வந்திருந்தார்கள் என்பதையோ இடைவேளையில் என்னை பார்த்து என்ன எல்லாம் படிச்சு முடிச்சிட்டியா? என்று கேட்டதோடு நிறுத்திக் கொண்டார் என்பதையோ நீங்கள் நம்ப போவதில்லை தான்... 😂(199/200)

      ( அதே ஷோவில் எனக்கு முன் அமர்ந்திருந்த 35 வயது பெண்மணியின் சவுரி முடி படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே நழுவி என் காலில் விழுந்தது. சிரிப்பை என்னால் அடக்கவே முடியவில்லை )

      என்னுடன் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பேப்பரில் படுத்து உருண்ட சபியுல்லா தஞ்சாவூரிலேயே டி ஃபார்ம் என்னுடன் சேர்ந்து படித்து பின்பு அப்கிரேட் ஆகி கால்நடை மருத்துவம் படித்து இப்போது அரசு பணியில் இருக்கிறார்..

      Delete