Powered By Blogger

Saturday, July 20, 2024

நெருங்குது ஈரோடு!

 நண்பர்களே,

வணக்கம். “விஷம்“ தவணை முறையில் பருக சுகப்படாதென்பதை ‘பளிச்‘சென்று சொல்லி விட்டீர்கள்! அடிக்கப் போவது ஒரே ‘கல்ப்‘பிலோ; சாவகாசமாகவோ ; மாமாங்கம் கழித்தோ - ஆனால் ‘ஏக் தம்மில்‘ பரிமாறியே தீரணும் என்ற உங்களின் அவா loud and clear ஆகி காதில் விழுகிறது! இங்கே எனக்கொரு மாளா வியப்பு நூத்திச் சொச்சமாவது தபாவாக எழுவதைத் தவிர்க்க இயலவில்லை! And அது தான் - ஐரோப்பிய ரசிகர்களுக்கும், நமக்கும் மத்தியிலான வேற்றுமைகள்!

- உள்ளதைச் சொல்வதானால் “விஷம்“ உரிமைகளுக்கு நாம் துண்டை விரித்து வைத்தது சமீபத்திலெல்லாம் நஹி! 2018-ன் இறுதியிலேயே “இந்தக் கதைக்கான உரிமைகள் வேணுமுங்கோ!” என்று மின்கடுதாசி தட்டி விட்டிருந்தோம். தொடர்ந்த வாரத்தில் அதற்கான ஒப்புதலோடு, கான்டிராக்டும் வந்த போது தான் ஜெர்க் அடித்தேன் - becos நான் நினைத்துக் கொண்டிருந்ததோ இதுவொரு one-shot என்று! ஆனால் காண்டிராக்ட் 5 அத்தியாயங்களுக்கும் சேர்த்து இருந்தது! அந்த நொடியில் தான் எனக்கே தெரிய வந்தது – இது நீண்டு ஓடப் போகும் ரயில் வண்டியென்பது!

- So “தொடர் முடியட்டும்; அப்புறமாய் பேசிக்குவோம்” என்று அன்றைக்கு தீர்மானித்திருந்தோம்! And இதோ – கண்மூடித் திறப்பதற்குள் 5 ஆண்டுகள் ஓடியிருக்கின்றன!

- ஆக ப்ரெஞ்சில் – முழுசாய் ஐந்து வருடங்கள் காத்திருந்திருக்கின்றனர் – விஷத்தை நிதானமாய் உருவாக்கிடும் வரையிலும்! பாகம் - பாகமாய்; ஆண்டாண்டாய் வாசிப்பதிலும் – சுவாரஸ்யங்களைத் தங்கச் செய்ய அவர்களுக்கு சாத்தியாமிடுகிறது! அந்தப் பொறுமை நமக்கெல்லாம் எட்டாக்கனியாய் இருப்பது தான் சிக்கலே!

- இத்தாலியில் கூட டெக்ஸின் சில மெகா நீள சாகஸங்கள் அடுத்தடுத்த மாதங்களில் ஓட்டமெடுத்தாலுமே மூன்றோ – நான்கோ மாதங்கள் நீள்வதும் உண்டு! பட்டாசாய்ப் பரபரக்கும் ஒரு ஆல்பத்தக்கு திடுமென “தொடரும்” போடும் போது, அந்த வாசகர்கள் எவ்விதம் சமாளிக்கிறார்கள் என்பது தான் Million Euro கேள்வியே!

- அட, லார்கோ போலான high voltage ஆல்பங்களில் கூட காத்திருப்பு ஒரு தொடர்கதையே! முதல் பாகம் வெளியான 18-24 மாதங்கள் கழித்தே க்ளைமேக்ஸ் ரெடியாகிறது! அத்தினி மாதங்கள் கழியும் போது முதல் அத்தியாயமே நமக்கெல்லாம் மறந்து போயிருக்கும்! But அங்குள்ள மக்கள் சமாளிப்பது எவ்விதமோ - அறியில்லா!!

எது எப்படியோ – நமது பாணி நமக்கே நமக்கானது என்பதால், உங்களது தீர்ப்பே இந்த காமிக்ஸ் அரசாணையாகிறது!

- So “விஷம்” ஒரே சமயத்தில் 5 பாகங்களுடனும் வெளிவந்திடும்!

- 5 தனித்தனி இதழ்களாகவே – ஒரு ஸ்லிப் கேஸில் இடம்பிடித்திடும்!

- “இரத்தப்படலம்” கலர் தொகுப்புகளுக்குத் தந்தது போலான slipcases இப்போதெல்லாம் நெருக்கி ரூ.100 விலையாகிடுவதால் – அத்தனை பணத்தை விரயம் செய்திடாது, economy case-களில் தந்திடத் திட்டமிடுகிறோம்.

- கூடிய சீக்கிரமே அந்த economy case-க்கு ஒரு வெள்ளோட்டமும் பார்த்திடவுள்ளீர்கள்! So அதன் பின்பாய் ”விஷம்” சார்ந்த planning அறிவிக்கப்படும்.

- ‘இல்லேடா தம்பி... எனக்கு ஸ்லிப்லாம் ஆகாது....அப்புறமா கேசு..கோர்ட்டும் புடிக்காது ; so நான் மஞ்சப் பையிலேயே போட்டு பொஸ்தவத்தைப் பத்திரப்படுத்திகிறேன்‘ என்று எண்ணிடக்கூடிய நண்பர்களின் வசதிகளுக்கேற்ப – slipcase இல்லாமலேயுமே புக்ஸ் மட்டும் வழக்கம் போல கிடைத்திடவும் செய்யும்.

- இதற்கான முன்பதிவுகளை இந்த வாட்டி சற்றே வித்தியாசமாய் செய்திட இருக்கிறோம். இம்முறை எங்களது பணிகளை முதலில் சத்தமின்றி துவக்கி, சில மாதங்களில் நிறைவு செய்திடவுள்ளோம். அப்பாலிக்கா முன்பதிவுகளை அறிவித்து, சூட்டோடு சூடாய் நான்கே வாரங்களில் புக்ஸை ரிலீஸ் செய்திட உள்ளோம்! So ”இதை புக் பண்ணினோமா – இல்லியா?” என்பதையே மறக்கும் ‘சவ சவ‘ படலங்கள் இதனில் இராது! ஈரோட்டு விழா சார்ந்த பணிகளை முடித்த பிற்பாடு – “விஷம்” நமது ரேடாரில் இடம்பிடிக்க ஆரம்பிக்கும்!

ரைட்டு, ”ஈரோடு” என்ற topicல் உள்ள போதே – அது சார்ந்த தகவல் பகிரல்களைப் பண்ணி விடுகிறேனே:

1. குடும்பத்தோடு வருகை தந்திடவுள்ள நண்பர்களுக்கான ஹோட்டல் புக்கிங்கள் – ஏற்கனவே குறிப்பிட்டது போல ஜுன் 30-ம் தேதியோடு நிறைவு பெற்றுவிட்டன. அதே போல தொலைவிலிருந்து வரவுள்ள சிங்கிள் நண்பர்கள் ரூம் கேட்டு குறிப்பாய் கோரிக்கை எழுப்பியுள்ள பட்சத்தில் மட்டுமே அவர்களுக்குமான ஏற்பாடுகளையுமே செய்திருக்கிறோம். Again the date cut-off stays at June 30. 

Please note : எவ்வித செய்தியுமின்றி blank ஆக வந்திருந்த மின்னஞ்சல்களை அட்டெண்டன்ஸ் போடும் தகவல்களாக மாத்திரமே கருதியுள்ளோம் and அவற்றிற்கு தங்கும் ஏற்பாடுகள் செய்திருக்கவில்லை ! ஜூன் 30 வரைக்குமான தெளிவான திட்டமிடல்களுக்கான ரூம்களை மொத்தமாய் ‘புக்‘ செய்திடவே “TEAM ஈரோடு” நாக்குத் தொங்க ரவுண்டடித்துக் கொண்டிருக்கிறார்கள்! ஈரோட்டுப் புத்தகவிழா தருணம் என்பதால் பல ஹோட்டல்களில் மொத்தமாய் ரூம் தர மறுக்கிறார்கள். தர ரெடியாக உள்ள சில ஹோட்டல்களோ சுமாராக உள்ளன! ஒரு வழியாய் உருண்டு புரண்டு உருப்படியாய் ரூம்ஸ் இன்று இரவு புக்கிங் செய்தாச்சு! So உரிய நேரத்தில், தெளிவாய் கோரிக்கை அனுப்பியிருந்த நண்பர்கள் அனைவருக்கும் ரூம்கள் காத்திருக்கும்! And நமது விருந்தினராய் வரவிருக்கும் அகவை 40-காரர்களுக்கும் ரூம்ஸ் ஏற்பாடாகியாச்சு! உங்கள் புரிதல்களுக்கு முன்கூட்டிய நன்றிகள் folks!

2. போன தபா போல மதிய உணவில் குளறுபடிகள் நடந்து விடலாகாது என்பதால், வெளியில் கேட்டரிங் ஏற்பாடுகள் செய்திடவுள்ளோம். அங்கு போன முதல் நொடியில் கேட்பது! ”எத்தினி பேருக்கு சமைச்சாகணும் நைனா?” என்பதே! கொஞ்சமாய் சொல்லிப்புட்டு, நிறைய நண்பர்கள் வருகை தந்திடும் பட்சத்தில், ஆளுக்கொரு ரவுண்ட் பன்னை மட்டும் தட்டில் நீட்டும் அவலம் நேர்ந்திடலாகாது! அதே சமயம் ‘கொடி புடிச்சிட்டு, ஆரவாரமா கூட்டம் கூட்டமா வர்றாங்க‘ என்று நாமாய் ஒரு கற்பனையைப் பண்ணிக்கினு – அண்டா, குண்டாவையெல்லாம் சாப்பாட்டால் நிரப்பி விட்டு, அப்புறமாய் வீண் பண்ணிடவும் கூடாது! So ப்ளீஸ் guys – ஏற்கனவே பகிரப்பட்டுள்ள இந்த லிங்க்கில் உங்களது வருகை சார்ந்த தகவலைப் பதிவிடக் கோருகிறேன்! ப்ளீஸ்?!

https://forms.gle/5GDpbs1he1CbyFSN9

3. அப்புறம் கீழ்க்கண்ட சமாச்சாரங்களுககுப் பெயர் தந்திட விரும்புவோர் – ஜல்தியாய் ஈ-மெயிலில் (lion40erode@gmail.com) விபரம்ஸ் ப்ளீஸ் : 

-தனித்திறமைகளை வெளிப்படுத்துதல்!

-5 நிமிட அவகாசத்தில் ஆகக் கூடுதலான பன்களை உள்ளே தள்ளும் "பண்"பாளரை அடையாளம் காணும் போட்டி!

-பட்டிமன்றத்தில் இடம் பிடிக்க விரும்புவோர்! 

இந்த வாரமே இவை சகலத்தினையும் final செய்திட வேண்டியிருப்பதால் – சற்றே வேகம் ப்ளீஸ்!

4. And இதோ – உத்தேசமான நிகழ்ச்சி நிரல்!

- “கதை சொல்லும் சித்திரங்கள்” – ஓவியக் கண்காட்சியில் முழியாங்கண்ணனுடன் ஒரு டூர்!

- வாசகர்கள் சுய அறிமுகங்கள்!

-லயனின் 40-வது பிறந்த நாள் கேக் வெட்டிடும் வேளை!

- ஒரு மினி மேஜிக் ஷோ!

-ஹாலிவுட்டை நடுநடுங்கப் பண்ணப் போகும் ஒரு குறும்பட ரகளை!

-லயன் சார்ந்த உங்கள் நினைவுகள் கொண்ட வீடியோக்களின் தொகுப்பு!

- IPL என்ன பொல்லாத ஐ.பி.எல்...? நம்ம CPL கிளப்பப் போகும் க்ரிக்கெட் ரகளைகள் சார்ந்த வீடியோ க்ளிப்!

- தனித்திறமைகளுக்கான மேடை!

-சீனியர் எடிட்டர் & கருணையானந்தம் அங்கிளின் உரைகள்!

- “40 ஆண்டுகள்!” ஆந்தை அண்ணாத்தே ஆத்தப் போகும் ராகி மால்ட்!

-காமிக்ஸ் பட்டிமன்றம்!

- “மரத்தடி பஞ்சாயத்து” – எடிட்டருக்கு மு. ச. & மூ. ச. க்களை சுற்றிக்காட்டும் வைபவம்!

-காமிக்ஸ் க்ரிக்கெட் லீக் வெற்றியாளர்களுக்கு சுழற்கோப்பை & மற்ற அணிகளுக்கு மெடல்கள் வழங்குதல்!

So ஒரு ஜாலியான தினத்துக்கு ரெடியாகிக்கலாமா folks? இன்னமும் வேறேதேனும் நிகழ்ச்சிகளை இணைத்திட உங்களிடம் suggestions இருந்தால் அவற்றையுமே நிச்சயம் பரிசீலித்திடலாம்!

Before I sign out – சில மினி updates :

❤️-கோவை புத்தக விழாவில் ஸ்டால் # 191-ல் (ஏழாவது வரிசை) ஒரு காமிக்ஸ் குவியலோடு எப்போதும் போலக் காத்திருக்கிறோம்! கோவை & இதர சுற்றுப்பகுதிகளைச் சார்ந்த நண்பர்கள் குடும்பத்தோடு விசிட் அடிக்கலாமே ப்ளீஸ்? முதல் நாளின் விற்பனை மிதமாகயிருக்க, இன்று (சனி ) பட்டையைக் கிளப்பியுள்ளது சேல்ஸ் 😁😁😁😁!!!!

❤️அப்புறம் Sunday காலையில் சேலத்தையே திரும்பிப் பார்க்க வைக்கவுள்ள நமது க்ரிக்கெட் போட்டிகள் அரங்கேறிடவுள்ளன! அங்கிருக்கும் நண்பர்கள் தவறாது போட்டிகளை உற்சாகப்படுத்திடக் கோருகிறேன்! சிறு துளிகள் தான் பெரு வெள்ளங்களாகிடும் என்பதை நாமறிவோம்! ஒரு அட்டகாசமான விருட்சமாய் கிளைவிடக் காத்துள்ள சமாச்சாரத்திற்கு நம்மால் இயன்ற ஊக்கங்களை உரமாக்கிடுவோமே?! Go well guys! May the best team win!

❤️கபிஷ் பணிகள் ஆரம்பிச்சாச்சு ; சேலத்தில் எதிர்பார்த்திடலாம்!

❤️2025 அட்டவணை பணிகளுமே தட தடத்து வருகின்றன! அது சார்ந்ததொரு quick question : SODA-வா? ரிப்போர்ட்டர் ஜானியா?

❤️ஒரு மாதமாய் வாட்சப்பிலும் ஒரு community துவங்கி வாரயிறுதிகளை கலகலப்பாக்கிட முயன்று வருவது தெரிந்திருக்கலாம்! இதோ - அதனில் இணைந்து கொள்வதற்கான லிங்க் : https://chat.whatsapp.com/IQFYKCvdGxADE8GfljKTko

Bye all,,, have a great weekend! See you around!




178 comments:

  1. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  2. அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
  3. 2025 அட்டவணை பணிகளுமே தட தடத்து வருகின்றன! அது சார்ந்ததொரு quick question : SODA-வா? ரிப்போர்ட்டர் ஜானியா?

    ரிப்போர்ட்டர் ஜானி

    ReplyDelete
  4. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  5. ##2025 அட்டவணை பணிகளுமே தட தடத்து வருகின்றன! அது சார்ந்ததொரு quick question : SODA-வா? ரிப்போர்ட்டர் ஜானியா? ##

    ஜானிக்கே எங்கள் ஓட்டு..😍👍

    ஜானி வா நீ..👍👌

    Soda ..நீ போடா..😏😏😏

    ReplyDelete
  6. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  7. Sir - please consider thick slipcase as it helps in storing the book for long - case in point the XIII slip case. You may take a poll for a slip-case charge of 100 or ordinary slip-case. If the polling is higher for thicker slip-case you may price it as an option based on pre-booking ! Happens with FREW all the time !!

    ReplyDelete
    Replies
    1. +1 for the thick slip case.

      Slip case என முடிவு செய்த பிறகு அதனை மிகச் சிறந்த தரத்தில் கொடுங்க சார்.

      Delete
    2. Economy case-ஐ மொதல்ல பாருங்க சார் ; அப்புறமா தீர்மானிப்போமே!

      Delete
  8. பரிதாப நிலை...

    என் ஓட்டு ரிப்போர்ட்டர் ஜானி

    ReplyDelete
  9. ரிப்போர்ட்டர் ஜானி

    ReplyDelete
  10. ரிப்போர்ட்டர் ஜானி

    ReplyDelete
  11. அடுத்த வருடம்

    "ரிப்போர்ட்டர் ஜானி - க்கு எனது வோட்டு

    ReplyDelete
  12. அந்தோத்யா எக்ஸ்பிரஸ் ல், மனசு 5 & 6 க்கு ஆசைப்பட்டாலும், சீட் 12 🤩😍தான் வேணும்

    ReplyDelete
  13. வெல்லும் அணிக்கே கப்பு
    கபீஸ் வருமீரோடு சிறப்பு
    அந்த புதிதழ் சஸ்பென்சுப்பு
    கோவை வெற்றி சிறப்பு
    கிரிக்கெட்டில் நண்பா தூள் கிளப்பு

    ReplyDelete
  14. // முதல் நாளின் விற்பனை மிதமாகயிருக்க, இன்று (சனி ) பட்டையைக் கிளப்பியுள்ளது சேல்ஸ் 😁😁😁😁!!!! //

    Wow good hear.

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. "நச் நறுக் சுருக்"
    இன்றைய பதிவு👌.
    "விஷம்" ரெடியாகிற கையோடு அந்த மீதமுள்ள, "ரோட்-66" மற்றும் "பயணம்"கதைகளையும் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் சார்..

    ReplyDelete
    Replies
    1. ஆழமாய் ; ரொம்பவே ஆழமாய் உங்கள் பாக்கெட்களுக்குள் கை விட அடிக்கடி வேண்டிப் போகும் சார் - அதான் கொஞ்சம் வண்டிய மொள்ளமாவே விட வேண்டியிருக்கு!

      Delete
    2. ஆம் sir... அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் தான்... ❤️👍🙏

      Delete
  17. டியர் எடி,

    இரு மாதங்களாக வாட்டி எடுத்து கொண்டிருக்கும் வேலைப்பளு, மற்றும் தொடர் பயணங்கள், இந்த வார இறுதியில் தான் மூச்சு விட விட்டிருக்கிறது.

    இடைபட்ட வாரங்களில் இங்கே டண் கணக்கில் நீங்கள் பதிவுகளை இட்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது... முக்கியமாக 999, 1000 பதிவுகளை கூட மிஸ் பண்ணிருக்கிறேன், இந்த இடைவேளையில். ஞாயிறு காலை எப்போது எந்திரிப்பேனோ, இவற்றையெல்லாம் படித்து தனி தனி கருத்து இட்டு விட்டு தான் மறு வேலை.....

    அப்புறம்.. அந்த #விஷம்... ஸ்லிப்கேஸில் தனி தனி கதைகளாகவே வரட்டும்.. ஆனால் ஸ்லிப்கேஸுக்கு 100 ரூபாய் தனியாக சார்ஜ் செய்தாலும் பரவாயில்லை.. கெட்டியாகவே போட்டு விடுங்க.. கடைசியாக கார்டூண்தொகுப்பிற்கு இட்ட ஸ்லிப்கேஸ் ஒல்லி தரம் பாதுகாக்க முடியாமல் போய் விடும் என்பதால்....

    பின்ன, அந்த லாஸ்ட் ஸ்லாட் தேர்தல் பற்றி.... நம் ஓட்டு #இடியாப்பஜானி க்கே.... நம்ம பால்ய கால நண்பரை விட்டுவிட முடியுமா...

    #பாடிசோடா வுக்கு 2025 ல் களம் காட்டிடலாம்.. ஆசாமி கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துகிடட்டும்.

    சேலம் நண்பர்கள் கிரிக்கெட் போட்டி களைகட்டட்டும்... வழக்கம் போல ஈரோடு விழா மேடையில் அதை காட்சிகளாக கண்டுகொள்கிறேன். அடுத்த வாரம் ஈரோடுக்கு என் தரப்பில் இருந்து உறுதி அளித்திருக்கும் லிஸ்ட்டை முடிப்பது தான் எனக்கு இருக்கும் இமாலய வேலை... அலுவல் பணி நடு நடுவே இதை முடித்து விட கங்கணம் கட்டிக்கொண்டு இப்போது தூங்க விடைபெறுகிறேன்.

    Happy Sunday for Everyone 🥳

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. சார் தயவு செய்து நான் சொல்லப் போவது கேட்டு ஓடி விடாதீர்கள்...
    அட்டப்படமில்லாத பிளைன் ஸ்லிப் கேஸ் ரெடி பண்ணி கொடுங்கள் விற்பனைக்கு...

    ReplyDelete
    Replies
    1. அதன நாங்கள் விரும்பும் புத்தகத்துக்கு பயன்படுத்திக் கொள்ள முடியுமே... கனிசமாகவே தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள் விற்பனைக்காக, pls...

      Delete
  21. ஜானி நீ வா(சோடா நீ வாடா என்ற அணிதான் நான் ).ஆனால் கடைசியாக வந்த ஜானிக்கொரு தீக்கனவு தூள் கிளப்பி மெகா ஹிட் அடித்ததை தொடர்ந்து ஜானி. நீ வா அணிக்கு மாறி விட்டேன்.

    ReplyDelete
  22. ஈரோடு காமிக்ஸ் திருவிழா நிகழ்ச்சி நிரல் அபாரம் சார்...
    ஒவ்வொரு நிகழ்ச்சியும் interesting ஆக உள்ளது👌👌👌💐💐💐

    5 part புத்தகங்களும் ஒரே ஸ்லிப் கேஸில் வரும் ஐடியா சூப்பர்👏👏👏

    அப்புறம்,
    என் வானிலே ஒரே வெண்ணிலா பாட்டு ரொம்ப பிடிக்கும் சார்...
    படம் பேரு ஜானி😜
    சோடா தயவு செய்து நீ கிளம்பிருடா😀

    ReplyDelete
  23. Replies
    1. சார் EBF புத்தக விழா ஸ்பெஷல் இதழ்கள் பற்றி இன்னும் எந்த அறிவிப்பும் வரவில்லையே ஏன்?

      Delete
  24. ஜானி with சோடா OK. ஜானி 1st Choice.

    ReplyDelete
  25. My Choice - ரிப்போர்ட்டர் ஜானி

    ReplyDelete
  26. Visam single Hard bound please sir.

    ReplyDelete
  27. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
  28. சோடா நீ போடா. ஜானிக்கே ஓட்டு

    ReplyDelete
  29. வணக்கம் நண்பர்களே ..
    முதல்முறையாக நான் தளத்தில்

    ReplyDelete
  30. சோடாவானாலும் சரி, ரிப்போர்ட்டர் ஜானினாலும், அவர்களுக்கு கிடைக்க போவது ஒரு ஸ்லாட்டே
    ஆகையால் இருவருக்குமே வாய்ப்பு தருமாறு கேட்டு கொள்கிறேங்க, ஆசிரியரே

    ஒருவரை தேர்வு செய்வது கட்டாயம் என்றால், என் ஓட்டு சோடா-வுக்கு

    ReplyDelete
  31. இதுவரை ஒரு ஸ்லிப் கேசை கூட நான் வைத்துக் கொள்ளவில்லை சார்...

    ReplyDelete
    Replies
    1. அதனால் தான் அதுக்கோசரம் நூறு ரூபாய் பணத்தை விரயம் பண்ண மனசு ஒப்ப மாட்டேங்குது சார்!

      Delete
    2. தேவையில்லீங்க sir... ❤️👍...

      Delete

  32. அந்தோத்யா எக்ஸ்பிரஸ்

    சீட் நம்பர் மூணு.( ட்ரெயின் கிளம்புவதற்கு முன் நான்காவது சீட் சோடாவுக்கு போதுமான பேதி மாத்திரைகள் கொடுத்த பின் )

    என் தூரப் பயணம் தனில் செந்தூரப்பூ ஒன்று 😍

    ( இந்த மடியில உட்கார்ந்திட்டு போற மாதிரி ஆப்ஷன் எல்லாம் எதுவும் கிடையாதா. சீட்லே தான் உட்காரணுமா? 😊)

    ReplyDelete
    Replies
    1. டாக்புல் மடியிலே இடமிருக்காம் சார் - வாரீயளா?

      Delete
    2. //டாக்புல் மடியிலே இடமிருக்காம் சார் - வாரீயளா?//

      அதுக்கு நான் டிரெயின் பின்னாலேயே ஓடி வந்துடுவேன் 😅

      Delete
  33. மாடஸ்டி : மாயா டிரஸ் எல்லாம் ஏன் கிழிஞ்சு தொங்குது?

    அமாயா : நேத்திக்கு நைட்டு இந்தியன் 2 செகண்ட் ஷோ பார்த்தப்ப கிழிச்சுகிட்டது அப்படியே தூங்கிட்டேன்

    ReplyDelete
    Replies
    1. கிழிஞ்சது 🤕 போன்னு சொல்றது இதைத்தானோ?

      Delete
  34. Me seat number 12 Sir..
    😍😘

    With My Evergreens வேதாள மாயாத்மா & Tex .. 😍😘😃😀

    அப்படியே வேதாளரின் லவ்ஸ் ❤, திரில்ஸ்@ டெங்காலி கானக வாழ்க்கை பற்றியும்..😍

    டியர் டெக்ஸ் உடன்
    அந்த துரத்தல்ஸ்,
    ஒரு புல்லட் கூட மேலே படாம எப்படி opponents பசங்கள போட்டு தள்றது..😃

    இப்படி பலதையும் பேசனும்..😃😍
    பேசி தீர்க்கணும்..

    டைம் பத்தலேன்னா..
    ரிட்டன் டிக்கட் எங்க மூணு பேருக்கும் ஆன்லைன்ல போட்டுகிட்டு மறுபடியும் பேசிகிட்டே வரணும்..😍👍👌

    முக்கியமா.. ஆளுக்கு ஒரு கேள்வி கேட்பேன்..

    😍வேதாளர்கிட்ட..

    "டெங்காலி கானகத்துக்கு எப்படி வர்ரது?.. எப்ப வர்ரது? Mr.வேதாள மாயாத்மா"


    😘டெக்ஸ்கிட்ட..

    " இந்த பயபுள்ள இளம் டெக்ஸ்க்கு கண்ணாலம் கிண்ணாலம் பண்ற உத்தேசம் எதுவும் கீதா?.. இல்லேன்னா அவனையும் இப்படியே காஞ்ச கருவாடாட்டம் ஒரு பேண்ட மாட்டிட்டு கடைசி வரைக்கும் அலைய வுட்டுருவீங்களா Mr.டெக்ஸ்"..
    😃😃😃


    அப்படியே.. சீட்டுக்கு பின்னாடி திரும்புனா..
    நம்ப "ச்செல்லாக்குட்டி இரும்பு கை மாயாவி"..
    😍😃😘😀

    அவருகிட்டே
    இந்த பவர்கட் டைம்ல UPS ல சார்ஜ் போட்டுக்கலாமா? ன்னு கேட்கணும்..

    அப்படியே
    அந்த இரும்பு கைய கொஞ்ச நாளைக்கு கடன் தருவாரா.. ன்னு கேட்கணும்..😃😀😃😀

    வீட்டுல மாமி தொல்லை தாங்கல..
    😃😃😃

    தலை மறைவாயிடலாம்னுதான்...😶😶😶😶

    ReplyDelete
  35. // 2025 அட்டவணை பணிகளுமே தட தடத்து வருகின்றன! அது சார்ந்ததொரு quick question : SODA-வா? ரிப்போர்ட்டர் ஜானியா? //
    எப்போதும் உங்கள் வினாதாள் கடினமானதாகவே உள்ளது சார்...
    ரிப்போர்ட்டர் ஜானி...

    ReplyDelete
    Replies
    1. ஒரு வினாவுக்கே இப்புடின்னா - நம்ம மேசையிலே கீறது அல்லாமே இதுக்கு அண்ணன்களான வினாக்கள் தானே சார்?!

      Delete
  36. "ஆகஸ்டு 4 - ஓட்டல் ஓயாஸிஸ் - ஈரோடு#

    @லயன் 40 😍😘கொண்டாட்ட திருவிழா 💐💐

    A: Welcome to லயன் 40 திருவிழா மாடஸ்டி டியர்..😍

    B: Lovely Welcome dear அமயா..😘

    A:இன்னைக்கு My dear darling Erode விஜய பாத்துட்டு முக்கியமான இன்னொருத்தரை பார்த்தே ஆகனும்னுதான் இந்த பங்சனுக்கே வந்தேன் மாடஸ்டி..😍

    B: Me too அமயா..
    நானும் என்னோட darling Dr.AKK ராஜா வ பாத்துட்டு முக்கியமான ஒருத்தர பார்த்தே ஆகணும்னுதான் இந்த பங்சனுக்கு வந்தேன்..😃

    A: ஈஸிட் மாடஸ்டி..
    யாரந்த VVIP ..😉 ஸாகோர் ஸ்ரீபாபுஜி ன்னு மட்டும் சொல்லிடாதே.. என் மனசு தாங்காது..😍😍

    B: ஓ..மை காட்..😶
    நானும் ஸாகோர் ஸ்ரீபாபுஜிய பார்த்தே ஆகணும்னுதான் இங்கே வந்தேன்..😍😘

    A&B:
    அப்ப நம்ப ரெண்டு பேருடைய உள்ளங்களையும் கவர்ந்த கள்ளன் ஸாகோர் ஸ்ரீபாபு ஜி தானா..😍😘😍😘

    Ok..👍
    நம்ப ரெண்டு பேரும் சண்டை போட்டுக்க வேணாம்..😍😍

    ஸாகோர் ஸ்ரீபாபுஜியோட பக்கத்துல லெப்ட்ல ஒருத்தர், ரைட்ல ஒருத்தர் உட்கார்ந்துக்கலாம்.. OK..😘👍👍👌❤💛

    ReplyDelete
    Replies
    1. பணால் 💥 ன்னு ஒரு சத்தம்!" இன்னான்னு பார்த்தாக்கா, அது கோடாரி மாயாத்மா வீசிய ஐட்டம் ஜம்பிங் செயலாளரோட கபாலத்தை சந்திச்ச ஓசைன்னு சொல்றாங்க!!

      Delete
    2. அய்யா என் மண்டையை ஏன் சந்தித்தது? நான் பாவம்

      Delete
  37. // கபிஷ் பணிகள் ஆரம்பிச்சாச்சு ; சேலத்தில் எதிர்பார்த்திடலாம்! //
    சிறப்பு...

    ReplyDelete
  38. // So “விஷம்” ஒரே சமயத்தில் 5 பாகங்களுடனும் வெளிவந்திடும்! //
    அருமை,அருமை...

    ReplyDelete
  39. // “இரத்தப்படலம்” கலர் தொகுப்புகளுக்குத் தந்தது போலான slipcases இப்போதெல்லாம் நெருக்கி ரூ.100 விலையாகிடுவதால் – அத்தனை பணத்தை விரயம் செய்திடாது, economy case-களில் தந்திடத் திட்டமிடுகிறோம். //
    சத்திய சோதனை...!!!

    ReplyDelete
  40. // கூடிய சீக்கிரமே அந்த economy case-க்கு ஒரு வெள்ளோட்டமும் பார்த்திடவுள்ளீர்கள்! So அதன் பின்பாய் ”விஷம்” சார்ந்த planning அறிவிக்கப்படும். //
    கெட்டி அட்டையில் சாத்தியமில்லைங்களா சார் ???

    ReplyDelete
    Replies
    1. நூறு ரூபாய்க்கு மேல் கிரயம் வருமென்கிறார்கள் சார் - அவற்றை தயாரிப்போர்!

      Delete
    2. Sir...slip case cost no problem for us sir. Always ensure the quality pls. No thin slip case. It would be better if its like thick RP slip case quality.

      Delete
  41. // “மரத்தடி பஞ்சாயத்து” – எடிட்டருக்கு மு. ச. & மூ. ச. க்களை சுற்றிக்காட்டும் வைபவம்! //
    ஹா,ஹா,ஹா...

    ReplyDelete
  42. // இன்று (சனி ) பட்டையைக் கிளப்பியுள்ளது சேல்ஸ் 😁😁😁😁!!!! //
    மகிழ்ச்சி சார்...

    ReplyDelete
  43. //2025 அட்டவணை பணிகளுமே தட தடத்து வருகின்றன! அது சார்ந்ததொரு quick question : SODA-வா? ரிப்போர்ட்டர் ஜானியா?//

    SODA ..

    ReplyDelete
  44. ஜானி ஜானி எஸ் பாப்பா...

    சோடா சோடா நோ பாப்பா...

    ReplyDelete
  45. // தொடர் முடியட்டும்; அப்புறமாய் பேசிக்குவோம்  ............. ஆக ப்ரெஞ்சில் – முழுசாய் ஐந்து வருடங்கள் காத்திருந்திருக்கின்றனர் //

    வெளியாகாத ஒன்றிக்காக காத்திருப்பதற்கும், ஏற்கனவே முடிந்து போன ஒரு தொடருக்காக மெனக்கெட்டு காத்திருப்பதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளதே சார்! அங்கே முதல் ஓரிரு பாகங்கள் வேலைக்கு ஆகவில்லை என்றால், மொத்தத் தொடரையும் கிடப்பில் போட்டு விடுவார்கள் என்று நினைக்கிறேன். அது போன்ற ஒரு நிலையை நீங்கள் தவிர்க்க எண்ணுவதும் ஒரு காரணமாக இருக்கலாம்! :-)

    நீங்களும், நண்பர்களும் லயன்-40 விழாவிற்காக செய்து கொண்டிருக்கும் தடபுடல் ஏற்பாடுகளை, மோவாயை தடவிக் கொண்டே பார்த்துக் கொண்டிருக்கிறேன்! வர இயலாத ஒரு சூழல்... பார்க்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. //ஓரிரு பாகங்கள் வேலைக்கு ஆகவில்லை என்றால், மொத்தத் தொடரையும் கிடப்பில் போட்டு விடுவார்கள் என்று நினைக்கிறேன்//

      Nopes கார்த்திக் ; எனக்கு ஞாபகப்படுத்த முடிந்த வரைக்கும் ஒரு ப்ராஜெக்ட்டை பாதியில் கைகழுவியதாய் ஏதும் லேது! மிஞ்சிப் போனால் அந்தச் சுற்றுக்கு அடுத்த வாய்ப்பை மறுத்து விடுவார்கள்!

      Delete
    2. // எனக்கு ஞாபகப்படுத்த முடிந்த வரைக்கும் ஒரு ப்ராஜெக்ட்டை பாதியில் கைகழுவியதாய் ஏதும் லேது! //

      கமான்சே தொடர் அடுத்த வாய்ப்பு இல்லையா சார்..

      Delete
  46. Replies
    1. 👌🏻👌🏻👌🏻ரிப்போர்ட்டர் ஜானி... 🔥🔥

      Delete
  47. வணக்கம்நண்பர்களே..😍😍

    ReplyDelete
  48. ரிப்போர்ட்டர் ஜானி🔥🔥

    ரிப்போர்ட்டர் ஜானி🔥🔥

    ரிப்போர்ட்டர் ஜானி🔥🔥

    ரிப்போர்ட்டர் ஜானி🔥🔥

    ரிப்போர்ட்டர் ஜானி🔥🔥

    ரிப்போர்ட்டர் ஜானி🔥🔥

    ரிப்போர்ட்டர் ஜானி🔥🔥

    ReplyDelete
  49. ❤️❤️❤️ 🇼 🇴 🇼 .. 🇰 🇦 🇧 🇮 🇸 🇭  ❤️❤️❤️❤️

    ReplyDelete
  50. ரிப்போர்ட்டர் ஜானியின் இதுவரை மறுபதிப்பில் வராத கதைகளை ஏக்தம்மில் ஒரே குண்டு புக்காக.... 🇵 🇱 🇪 🇦 🇸 🇪 .. 🇸 🇮 🇷  🙏🏻🙏🏻

    ReplyDelete
  51. விசத்தை நாங்க மஞ்சள் பையிலேயே வாங்கிக்கிறோம்.

    ReplyDelete

  52. மாடஸ்டி : சென்னை சில்க்ஸ்ல ஆடி தள்ளுபடி. போலாமா?

    அமாயா : உங்களுக்கு பரவால்லக்கா. என்னோட கிரியேட்டர் ஏற்கனவே எனக்கு நிறைய ஆடைத் தள்ளுபடி பண்ணிட்டார். எனக்கு தள்ளுபடி எவ்வளவு கிடைக்கப் போகுது?

    ReplyDelete

  53. Amaya: sis! Is it true he was shot and injured? Donald the duck?

    Modesty: True. But some prefer to call him Donald the presidential candidate.

    ReplyDelete
  54. எனது ஓட்டு ஜானிக்கு

    ReplyDelete
  55. நானும் ஈரோட்டுக்கு வருகிறேன். எனக்கு அந்த ஹோட்டலுக்கு வழி தெரியாது. யாராவது எனக்கு உதவுங்கள். எனது போன் எண்
    9345107385
    9788640543

    ReplyDelete
    Replies
    1. @Sadhasivam ji..

      Please contact the EBF 2024 - LION 40 function co ordinators
      👍👍

      1)Thiru. M.Stalin
      2)Thiru.Vijay
      3)Selvi.Ramya

      Delete
    2. அவர்களின் தொலைபேசி எண் எனக்கு கொடுக்க முடியுங்களா

      Delete
  56. ஒரே நாளில் அதிகாரி அணி இரண்டு முறை அடி பிளக்கப்பட்டது..

    ReplyDelete
    Replies
    1. ஏ இப்படி எல்லாரு, ஒரே கொலை வெறியில இருக்கீங்க.
      நல்லவேளை நா இங்க நல்ல பிள்ளையா, கிரிக்கெட் டூர்னமெண்டுக்கு வராம ஆத்திசூடி படிச்சுகிட்டு இருந்தேன்.
      ஒரு டீமு ஜெயிக்கிறதுக்காக,
      மூணு டீம தோக்கடிக்கிறது
      எவ்வளவு பெரிய சோகம்.
      11 பேருக்காக ,
      33 பேரை கஸ்டப்படுத்தி இருக்கீங்க.
      புழுதியில
      புரள வைச்சிடீங்க.

      Delete
    2. என்னாது,
      கழுகுக்கே இந்த நிலைமையா.
      அப்ப கார்சன் அங்க இல்லை போலிருக்கு.
      அடுத்தவாட்டி,
      டெக்ஸ் & கோ -வுக்கு மட்டும் சுக்கா ரோஸ்ட் ஒரு புல் ப்ளேட் கொடுத்தா மேட்டர் கிளீயர்.

      Delete
  57. ரிப்போர்ட்டர் ஜானி

    ReplyDelete
  58. ஆரம்பகாலத்திலிருந்தே நம் வாசகர்களுக்கு. விறு விருப்புடனும் துடி துடிப்புடனும் கதையின்கடைசி. வரை குற்றவாளி யார் என்றேதெரியாத. எதிர்பார்ப்பு டனும் இடியாப்பசிக்களுடன் வரும் ஒரே கதாநாயகன் நம் ஜானி. மட்டுமே ஆகையால் நிறுத்த கூடாது

    ReplyDelete
  59. SODA Super Thaan....But Reporter Johnny story SODA vai Vida super ah Irukae Sir...

    ReplyDelete
  60. Innoruthavarukku special release iruntha Nala irukkum

    ReplyDelete
  61. Remaining old type ric hochet tales can be sold as 5 in 1 hard covers once a year. SODA can be in main subscription line.

    ReplyDelete
    Replies
    1. 5 in 1..? வாய்ப்பே இல்லை சார் ! ஒற்றை ஆல்பம் கரை சேர்வதே பெரும்பாடு !

      Delete
  62. Went to our stall in cbe book fair. Shared photo via whatsapp. Met Mrs.jothi

    ReplyDelete
  63. Replies
    1. அண்ணா இந்த எண்ணுக்கு உங்கள் தொடர்பு எண்ணை வாட்ஸ் அப் செய்யவும். ஈரோடு புத்தக விழாவுக்கு வருகிறேன்.அந்த ஹோட்டலுக்கு எனக்கு வழி தெரியாது. ஆகவே 9345107385 என்ற எண்ணுக்கு உங்கள் எண்ணை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

      Delete
    2. வாட்ஸ்ஆப்பில தொடர்பு கொள்கிறேன் சதா!

      Delete
    3. நன்றி அண்ணா காலையில் தான் உங்கள் வாட்ஸ் அப்பை பார்த்தேன்.

      Delete
  64. எதுக்கு இந்த ஸ்லிப்கேஸ் சலசலப்பு..? எப்போதும்போல ஒரே புத்தகமாக ஹார்ட்பவுண்டில் கொடுக்கலாமே..?

    ReplyDelete
  65. தாங்கள் செல்லியபடி மான்ட்ராக்ட் 2 எப்பொழுது வருகிறது?

    ReplyDelete
    Replies
    1. ஈரோட்டுக்கென அறிவித்தது ஈரோட்டின் விழா வேளைக்குக் கிடைக்கும் நண்பரே !

      Delete
    2. சார் மாண்ட்ரேக் உடன் வரும் சூப்பர் ஹீரோ ஸ்பெஷல் 2 அல்லாது வேறு என்ன சர்ப்ரைஸ் ஈரோட்டுக்கு?

      Delete
    3. மிக்க நன்றி சார்

      Delete
  66. Hi Editor sir, My Choice is reporter Johnny.
    கபிஷ் பணிகள் ஆரம்பிச்சாச்சு ; சேலத்தில் எதிர்பார்த்திடலாம்!
    Eagerly waiting for this

    ReplyDelete
  67. Any chance for Thigil stories republished sir?

    ReplyDelete
  68. அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.. முதன் முறையாக நானும் உங்களுடன்.. பார்வையாளன் பங்கேற்பாளனாய்...

    ReplyDelete
  69. So far confirmed books at EBF
    1. Tintin
    2. Montrake 2
    3. Kapish
    Guesses
    1. Siruthai or Tiger (rs.30 book)
    2. Any TeX willer/lucky reprint storey
    3. Mayavi or lawrance reprints..
    Fingers crossed sir...

    ReplyDelete
  70. அமாயா : என்னா மாடஸ்டி கறுப்பு கலர்ல உடம்ப புல்லா கவர் பண்ணி ட்ரெஸ் போட்டிருக்க ? மாடஸ்டி :அடிக்கடி ஆக்சன் ல இறங்கறேன் இதுதான் வசதியா இருக்கு . அமாயா : (மனசுக்குள்) க்கும். இவுகள பார்த்தாலேஎடிட்டர் கருப்பு மைய தூக்கிக்கிட்டு வற்றாரு.இதுல இவுகளே கருப்பு கலர் ட்ரெஸ் ல வந்தாச்சாம் ஓட்டறத பாரு

    ReplyDelete
  71. @ Edi Sir..😍😘

    சென்ற ஆண்டு போல ஆகஸ்டு மாத புத்தகங்கள் சந்தாதாரர்களுக்கு எடிட்டர் சார் கையினால் வழங்கிட வாய்ப்பு உண்டுங்களா சார்..💐😄👍

    ReplyDelete
  72. @Edi Sir..😍😘

    இன்னைக்கு பதிவுகிழமைன்னு இந்த கோயமுத்தூர், சேலம்,நாமக்கல், தேனி..
    இங்கெல்லாம் பரவலா பேசிக்கிட்டாங்க சார்..😍😘😶😶

    ReplyDelete
  73. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
  74. இன்றைய பதிவு வருட அட்டவணை வெளியாவது போன்ற எதிர்பார்ப்பில்.லயன் 40 விழா சிறப்பு வெளியீடுகள் பற்றி ஆசிரியர் இன்று தெளிவு படுத்துவாரா?

    ReplyDelete
    Replies
    1. ஆமா சார் நானும் ரொம்ப நாளாக கேட்டுக் கொண்டு இருக்கேன்.

      Delete
    2. ஆசிரியர் தெளிவுபடுத்தி விட்டார். நீங்கள் தான் இனி தெளிவாக வேண்டும் 😃

      Delete
    3. உங்களுக்கு தனியாக தெளிவு படுத்தினாரா பரணி?

      Delete
  75. சார் .இன்னும் ஒரு வாரமே இருப்பதால் இன்று தெளிவுபடுத்தி விடுவார் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  76. This comment has been removed by the author.

    ReplyDelete
  77. This comment has been removed by the author.

    ReplyDelete
  78. 30
    😍ஈரோடு விழாவிற்கு 4.8.2024 -ஞாயிற்றுகிழமை வருகை தர உள்ள நண்பர்கள் சிரமம் பாராமல் காலை 9.00 மணிக்கு முன்னதாகவே விழா நடைபெற உள்ள ஓட்டல் ஓயாசிஸ் அரங்கிற்கு வருகை தர வேண்டுகிறேன்.🙏🙏🙏

    முன்னதாகவே வந்தால் விழா நிகழ்வுகளை குறித்த நேரத்தில் 9.00 AM க்கு ஆரம்பித்து மாலை 4.30 PM க்கு முடித்துவிட்டால் வெளியூர் ஆட்டக்காரர்கள் அனைவரும் பிரியாவிடை பெற்று நீங்க நினைவுகளுடன் பத்திரமாக வீடு திரும்ப ஏதுவாக இருக்கும்..
    🙏🙏

    ReplyDelete
    Replies
    1. நான் காலை 7 மணிக்கு தான் காங்கேயத்திலிருந்து பஸ் ஏற வேண்டிய சூழ்நிலை. எனவே நீங்கள் விழாவை தொடங்கி விடலாம்

      Delete
    2. @சதாசிவம் ஜி..😍

      50 கி.மீ தானே..

      7.00 மணிக்கு கிளம்பினால் தாராளமாக 1-1.30 மணி நேரத்தில் வந்துவிடலாமே ஜி..👍

      Delete
  79. எனக்கு காலையில் தான் பதிவு தெரியும் ஆகவே காலையில் வருகிறேன்.

    ReplyDelete
  80. @சதாசிவம் ஜி..

    நீங்கள் 2,3 நாட்களுக்கு முந்தைய பதிவில் ஓட்டல் ஓயாசிஸ்க்கு வழி கேட்டிருந்தீர்களே..😶

    ReplyDelete
  81. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே 😍

    ReplyDelete