Powered By Blogger

Sunday, June 30, 2024

ஜூலையின் வாசலில் !

 நண்பர்களே,

வணக்கம். இப்போதெல்லாமே இது ஜுன் ரெண்டாவது வாரம்; மூணாவது வாரம் என்ற ரீதியில் ஞாபகங்கள் தங்கிடுவதில்லை! மாறாக – ”இது 1005-ம் பதிவு வாரம்; 1006-ம் பதிவு வாரம்!” என்ற ரேஞ்சுக்கே சிந்தனைகள் ஓட்டமெடுத்து வருகின்றன! And இதோ – பதிவு நம்பர் 1006 சகிதம் yet another வாரயிறுதியினில் அடியேன் ஆஜர்!

புதிதாய் ஒரு மாதம் ; அதுவும் நமது ஆண்டுமலர் மாதம் ; அதுவும் கூப்பிடு தொலைவிலிருக்க, அங்கிருந்து ஆரம்பிப்பது தானே முறையாகிடும் ?! So இதோ – சிலபல ஆண்டுகளாகவே நாம் தொடர்ந்து வரும் அந்த template-ன் பாணியில் லக்கி லூக் டபுள் ஆல்ப சாகசத்துடன் இந்த ஆண்டுமலரைக் கலர்ஃபுல்லாக்கிட வருகிறார்! And as always, இரு புது காமெடித் தோரணங்கள் இம்முறையும் :

- நடுவிலே கொஞ்சம் ஞாபகத்தைக் காணோம்!

&

- களமெல்லாம் கிழம்!

முதல் கதையானது டால்டன் சகோதரர்களுடனான மாமூல் கூத்துப் பட்டறை என்றால், இரண்டாவது கதையோ தலை நரைத்த ஒரு பெருசு கும்பலோடு லக்கி நடத்தும் ஒரு சாகஸப் பயணம்! And இது லக்கி தொடரின் பொற்காலமாய் அறியப்படும் கோசினி & மோரிஸ் கூட்டணியின் காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. இங்கே சின்னதாக ஒரு விஷயமுமே நமது கவனங்களுக்கு அவசியமென்பேன்!

- லக்கி லூக் தொடர் இன்னமுமே தடதடத்து வரும் ஒரு live தொடரே!

-இது வரையிலும் 82 ஆல்பங்கள் (சீனியர்) லக்கி லூக் தொடரில் வெளிவந்துள்ளன!

- சுட்டி லக்கி ஒரு தனித்தடத்தில் – ஒற்றைப் பக்க gags சகிதம், 5 ஆல்பங்களில் சுமாரான வரவேற்போடு பயணம் செய்திருக்கிறார்!

- இவை தவிர லக்கி லூக்கை கிராபிக் நாவல் பாணியிலும் 4 ஆல்பங்களில் சித்தரித்துள்ளனர்!

- மெயின் தொடரில் நாம் இதுவரையிலும் 48 ஆல்பங்களை வெளியிட்டு முடித்து விட்டோம்! இவற்றில் பெரும் பகுதி, தொடரின் பொற்காலத்து இதழ்கள்!

- எஞ்சியிருக்கும் ஆல்பங்களில் – தொடரின் துவக்க நாட்களில், சுமாரான சித்திரங்களுடன் லக்கி வலம் வரும் கதைகள் ஒரு 40% இருக்குமென்றால் – பாக்கி 60% கதைகளோ புதுத் தலைமுறைப் படைப்பாளிகளின் கைவண்ணங்களில் உருவான ஆல்பங்கள்! என்ன தான் புதியவர்கள் ‘தம்‘ கட்டி முயன்றாலும் கோஸினி & மோரிஸின் கதைத் தரங்களை எட்டிட ரொம்பவே திணறுகின்றனர் என்பது தான் யதார்த்தம்! So இனி வரும் காலங்களில் லக்கி கதைகள் வெளிவரும் வேளைகளில் நமது ஒப்பீட்டு மீட்டர்களை சற்றே ஓரம் கட்ட வேண்டியிருக்கலாம்!

- அதிலும் வெகு சமீபமாய் ஒரு ஜெர்மன் படைப்பாளியின் கைவண்ணத்தில் உருவாகியிருக்கும் லக்கி லூக் கிராபிக் நாவலை நாம் பார்த்தோமேயானால் கிறுகிறுத்துப் போய் விடுவோம் என்பது உறுதி! ஏகமாய் மாற்றங்கள் சித்திர பாணிகளில் மட்டுமன்றி, லக்கியிடமுமே செய்துள்ளனர்! So நாம் 37 ஆண்டுகளாய்ப் பார்த்து, ரசித்து வரும் ஒல்லிப் பிச்சானை காத்திருக்கும் புது யுகத்தில் கணிசமான மாற்றங்களோடே தான் பார்க்க முடியும் போலும்! Sighhhhh!

சரி, நமது ஆண்டுமலருக்கே திரும்பிடுவோமா folks? இதோ – ஒரிஜினல் அட்டை டிசைன்களோடான ராப்பரும், உட்பக்க பிரிவியூக்களும் :



இரு கதைகளுமே தொடரில் இதற்கு முன்பான ஆல்பங்களை நினைவூட்டக் கூடும் தான்; ஆனால் ஜாலியான கதை நகர்த்தலில் அவையெல்லாம் ஒரு பொருட்டாகவே தென்படாது பக்கங்கள் பறக்கின்றன! புதுயுகக் கதாசிரியர்கள் ஸ்கோர் செய்கிறார்களோ, இல்லையோ ; ஓவியர்களும் டிஜிட்டல் கலரிங் ஆர்ட்டிஸ்ட்களும் பட்டையைக் கிளப்பி வருகின்றனர்! இந்த ஆல்பமும், சமீப மாதங்களைப் போலவே ப்ரிண்டிங்கில் தெறிக்க விடுகின்றது! சித்திரங்களையும், ஒவ்வொரு frame-ல் ஓவியர்கள் செய்துள்ள ஜாலங்களையும் ரசித்தபடியே பக்கங்களைப் புரட்டினால் நிச்சயமாய் ஒரு புதுப் பரிமாணம் புலப்படும்!

ஆண்டுமலரின் இரண்டாவது கலர் ஆல்பத்தில் காத்திருப்பது டெக்ஸ்! கதாசிரியர் மௌரோ போசெலியின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள ஒரு செம breezy read – ”குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை!” பழைய தமிழ் சினிமாவின் தலைப்பைப் போல இந்தக் கதைக்குப் பெயரிட்டிருப்பதற்கொரு காரணமும் உள்ளது! அதை இம்மாத அலசல்களின் சமயத்தில் நீங்களே புரிந்து கொள்ள இயலும்! 


அப்புறம் ஆண்டுமலரில் மலையளவுக் கதையாகத் திட்டமிட்டிராது, மடு சைஸிலான டெக்ஸ் சாகஸத்தை மாத்திரமே slot in செய்திருப்பது தான் டெல்லி விமான நிலையத்தில் கூரை பெயர்ந்து விழுந்தது முதலாய், ரிஷாப் பந்த் மொக்கை போட்டு வருவது வரைக்குமான காரணமென போன பதிவினில் நண்பர் பொரிந்திருந்ததை பார்த்தேன்! பணிப் பளுவினால் அங்கேயே பதிலளிக்க இயலாது போயிருந்தது! So இங்கே கொஞ்சமாய் பதில் சொல்ல நேரமெடுத்துக் கொள்கிறேனே folks ?

ஒரு அட்டவணையினில் 12 மாதங்ளுக்கும் இதழ்களைத் திட்டமிடுவது ஒரு பணியென்றால் – எதை? எங்கே? எப்போது நுழைப்பதென்ற திட்டமிடல் இன்னொரு tough task! ஒரு ஸ்பெஷல் வெளியீட்டினை உட்புகுத்துவதென்றால் அதற்கு முந்தைய மாதத்தில், பிந்தைய மாதத்தில் என்ன வரலாம்? அவற்றின் விலைகள் எவ்விதம் அமையும்? என்பதைக் கணக்கில் எடுக்க அவசியமாகிடும்! சேர்ந்தாற் போல கூடுதல் விலைகளில் இதழ்கள் அணிவகுப்பதை இயன்றமட்டிலும் தவிர்க்க முனைவோம்!

- ஜுலையோ ஆண்டுமலர் மாதம்!  தொடர்ந்திடும் ஆகஸ்ட்டோ ஈரோட்டுப் புத்தக விழா மாதம்! And ஆகஸ்டில் டின்டின் டபுள் ஆல்பம்ஸ் தலா ரூ.300/- விலைகளில் - என்பதை ஆண்டின் ஆரம்பத்திலேயே நிர்ணயித்து விட்டாயிற்று - which means Rs.600 ! ப்ளஸ் ”ஈரோடு ஸ்பெஷல்” என குறைந்தபட்சமாய் ஐநூறு, அறுநூறு ரூபாய் பட்ஜெட்டில் திட்டமிடலும் இருக்கும்! ஆக ஜூலையிலும், ஆகஸ்டிலும், back to back ஆயிரத்துச் சொச்ச பட்ஜெட்கள் போடல் சுலபமல்லவே – moreso ஒன்னரை மாசத்துக்கு முன்பான ஆன்லைன் மேளாவினில் ரூ.999/-க்கு வேட்டு வைத்துள்ளோமெனும் போது!

- எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு மைல்கல் தருணமென்றால் ஒரு முரட்டு இதழ் வெளிவந்தே ஆகவேண்டுமென்பது, நாமே விதித்துக் கொள்ளும் கட்டாயமன்றி வேறென்ன? இதோ – டெக்ஸின் 75-வது ஆண்டிற்கென இத்தாலியில் போனெல்லி என்ன திட்டமிட்டிருக்கிறார்கள்? என்பதை தெரிந்து கொள்ள பேராவலோடு போன வருஷத்தில் எதிர்பார்த்துக் காத்திருந்த நொடி தான் நினைவுக்கு வருகிறது! சிம்பிளாக ஒரேயொரு 120 பக்க கலர் சாகஸத்தோடு முடித்துக் கொண்டார்கள்! And எண்ணற்ற மறுபதிப்புகளை கலரில் அள்ளித் தெளித்து அந்த ஆண்டினை நிரவல் செய்து விட்டார்கள்! மாதமொன்றுக்கு டெக்ஸ் மட்டும் சில லட்சம் பிரதிகள் விற்பனை காணும் ஒரு பிரதம மார்கெட்டில் உள்ள படைப்பாளிகளே “இவ்வளவு போதும்” என்று தீர்மானிக்கும் போது, பெருச்சாளி சைஸிலான நாமோ புல்லெட் சவாரிகளை செஞ்சே தீரணும் என்ற ஒவ்வொரு தபாவும் அடம் பிடிப்பது ஒரு luxury தானேயன்றி – கட்டாயமல்லவே!

- தவிர, வரும் காலங்களில் crisp வாசிப்புக் களங்களே சரிப்படுமென்ற policy decision எடுத்துள்ள ஒரு ஆண்டினில் அதனை இயன்ற தருணத்தில் நடைமுறைப்படுத்த எண்ணிடுவது தெய்வ குற்றமாகுமா – என்ன?

அப்புறம் இந்த 40-வது ஆண்டின் திட்டமிடல் + ஓட்டம் தடுமாறி வருவதாகவும் நண்பர் கருத்துச் சொல்லியிருந்தார்! சின்னதாய் ஒரு தகவல் சொல்கிறேனே நண்பரே :

நமது இரண்டாவது இன்னிங்க்ஸ் துவங்கிய இந்தப் 12 ஆண்டுகளில் – “கொரோனாவுக்கு முன்னே” ; ”கொரோனாவுக்குப் பின்னே” என்று 2 வித காலகட்டப் பிரிவுகளைச் சொல்லலாம்! “கொ.மு.”வில் இருந்த வேகமும், பணப்புழக்கமும் much better ! ”கொ.பி.” காலகட்டத்தில் விலைவாசிகள் தெறிக்கத் தொடங்கியது மட்டுமன்றி, ஏகமான ஒரு தளர்ச்சி மார்க்கெட்டில் விரவிக் கிடந்ததை மறுப்பதற்கேயில்லை! ஆனால் – இந்த 2024, புனித மனிடோவின் அருளால் விற்பனைகளில், உற்சாகங்களில் இதுவரையிலும் கண்களில் காட்டி வரும் சகலமுமே புதுப்புது உச்சங்களையே!

- சென்னைப் புத்தக விழா 2024 – was a chartbuster!

- டின்டின் அதகள வெற்றி;

- லார்கோ; பௌன்சர்; டெட்வுட் டிக்; மார்டின்; மிஸ்டர் நோ; இளம் டெக்ஸ்; சிக் பில்; டேங்கோ; க்ரே தண்டர்; துணைக்கு வந்த மாயாவி – என ஒவ்வொரு மாதமும் சூப்பர் ஹிட் அடித்துள்ள இதழ்களின் எண்ணிக்கையும் much more than before - இது வரையிலுமாவது !

- ஆன்லைன் மேளா – தெறிக்கச் செய்த மெகா வெற்றி!

So நண்பர் குறிப்பிடும் தடுமாற்றமானது இத்தகைய விளைவுகளைத் தருமெனில் “தடுமாற்றம் வருஷா வருஷம் நல்லது” என்பேன்!!

-அப்பாலிக்கா இப்போதெல்லாம் தியேட்டரில்  குலேபகாவலி & மலைக்கள்ளன் சினிமாக்கள் தான் ஓடி வருவதான குற்றச்சாட்டு பற்றி : இது காதில் உதிரம் கசியுமளவிற்கு ஏற்கனவே நாம் அலசிவிட்ட matter தான்! ஆனால் ஒவ்வொரு க்ளாஸிக் தடம் அறிவிக்கப்படும் தருணத்திலும் இந்த விசாரமும் தலைதூக்குவதால். சம்பிரதாயமான அந்த விளக்கத்தையும் தந்திடல் அவசியமாகிறது! 

-  ‘ஜம்‘னு AC தியேட்டர் கட்டியாச்சு ; Dolby Surround சவுண்ட் சிஸ்டமும் போட்டாச்சு! படம் பார்க்க அற்புதமானதொரு களம் ரெடி! ஆனால் எந்தப் படத்தை ஜனம் பார்ப்பது? எதை ஆதரிப்பது? எதை மூலை சேர்ப்பது? என்ற தீர்மானங்களை அந்தத் தியேட்டர் ஓனர் ஒண்டியாளாய் எடுக்கவாவது முடியுங்களா? Oh yes – புதுசாய், ஃப்ரெஷ்ஷாய் ஒரு டைரக்டர் எடுக்கும் படத்தைத் திரையிடலாம் ; ஆனால் end of the day பார்வையாளர்களுக்கு அது ரசித்தாலொழிய – பாப்கார்ன் ஸ்டாலில் கட்டும் கல்லா கூட தியேட்டர்காரருக்கு சாத்தியமாகிடாதே ?! Re-release காணும் ”கில்லி” படம், சமகாலத்துப் புது முயற்சிகளை விடவும் பிரமாதமாய் ஓடினால் அதற்கு தியேட்டரைக் குறைகண்டு பிரயோசனம் தான் இருக்க முடியுங்களா?

- வாசிப்புகளிலும், ரசனைகளிலும் இதுவே தானே நிலவரம்? “எனக்கு MYOMS சந்தா அத்தினி முக்கியமாப் படலேடா தம்பி; ஆல்ஃபாவோ; ப்ளூகோட்டோ; சிஸ்கோவோ எனக்குள் ஒரு பரபரப்பை உண்டு பண்ணலைடா தங்கம்!” என்று நண்பர்கள் சொல்லும் போது, அதை ஏற்றுக் கொள்வதைத் தானே நான் செய்திட இயலும்? அதே நண்பர்கள் – இந்த Electric ‘80s சந்தாவினை மூன்றே வாரங்களுக்குள் MYOMS எண்ணிக்கையினைத் தாண்டச் செய்திடும் போதுமே நான் பராக்கு மட்டும் தானே பார்த்திட இயலும்?! Of course, "இந்தப் பழம் பார்ட்டிகள் எனக்குள் ஒரு கொள கொள பீலிங்கையே உண்டு பண்ணுதுக !" என்ற விசனங்களை மறுக்கவே மாட்டேன் தான் ; ஆனால் இந்த அணி vs அந்த அணி எனும் போது - கெலிப்பது யாரென்பதை ELECTRIC '80s ஈட்டி வரும் முன்பதிவுகளே சொல்லி விடுகின்றனவே  !

- And it’s not like we don't give slots to new heroes! சாதித்துக் காட்டுபவர்கள் நிலைத்திடப் போகிறார்கள் – மிஸ்டர் நோ போல! ஆனால் கிடைக்கும் வாய்ப்புகளைக் கோட்டை விடுவோர் ‘சடக்‘கென்று ஓரம் கட்டப்படுகின்றனர் என்பதே இன்றைய நடைமுறை!

- முன்பெல்லாம் ஒரு நாயகருக்குக் கணிசமான வாய்ப்புகள் தரும் குஷன் நமக்கிருந்தது – அவர் தேறிட மாட்டாரா? என்று பரிசோதித்துப் பார்க்க! கமான்சேவை நாம் ஓரம் கட்ட நேர்ந்தது 9 ஆல்பங்களுக்குப் பின்பாகத் தானே? ஆனால் இன்றோ ஒரு I.R.$ தொடரை அசிரத்தையோடு பார்த்திட ஒரேயொரு ஆல்பமே போதுமென்றாகிப் போச்சே? இது தான் இந்த ஆகச்சிறிய வட்டத்தின் பலமும், பலவீனமுமே! 

- So ஒற்றை வரியில் சொல்வதானால் – டெக்னிகலரில் remaster செய்யப்பட்டு ஓடும் “ஜக்கம்மா” படம் ஈட்டித் தரும் வருவாய்களுக்கும் இந்த தியேட்டரின் ஓட்டத்தினில் ஒரு முக்கிய பங்குள்ளது   !  "தடுமாற்றம் தந்திடாத புதுத் திட்டமிடல்கள்" மாத்திரமே அரங்கை முழுசுமாய் finance பண்ணுவதாகயிருப்பின் – போன வாரம் குப்புசாமி கொட்டிப் போன கோன் ஐஸும் ; பத்து நாட்களுக்கு முன்னே பரிமளம் போட்டுப் போன பாப்கார்னும் அதனதன் இடங்களில் இன்றைக்குமே பத்திரமாய் இருந்திடுமே?! So எனக்குப் பிடித்தாலும், பிடிக்காவிடினும்,  பழமை மோகமற்ற நண்பர்களுக்கு எரிச்சல் மூட்டினாலும், கடுப்பேற்றினாலும் - the classic heroes are very much a part of our journey என்பதே bottomline!

And – போன வாரத்தில் அறிவிக்கப்பட்ட “கபிஷ்” மீள்வருகை கூட இதன் நீட்சியே! And இங்கே முக்கியமாக 2 ஆதாயங்கள் இருப்பதாக நான் நினைத்தேன்!

#1: புத்தக விழா சமயங்களில் மட்டும் வெளிவரக் காத்துள்ள இந்த இதழ்(கள்) சிம்பிளான வாசிப்புக் களங்களை தமது இல்லத்துக் குட்டீஸ்களுக்குத் தந்திட நினைப்போருக்கு ரசிக்கக்கூடுமென்று நினைத்தேன்!

#2: Of course ‘80sகளின் நம்ம தொந்தி வளர்த்த kids-களுக்கு இந்தச் சுட்டிக் குரங்கு செம நோஸ்டால்ஜியா தந்திடும் என்பதிலும் ஐயமில்லை !

ஆனால் இது தேவை தானா? இன்றைய இளம் தலைமுறையினர் எதை ரசிப்பார்களென்று லயோலா மாணாக்கரைக் கொண்டு ஒரு கருத்தாய்வு எடுத்தால் தான் தெரியுமென்று நண்பர் செனா.அனா அபிப்பிராயப்பட்டிருந்தார்! சில தருணங்களில் சிம்பிளான விஷயங்களையுமே நாம் overthink செய்கிறோமோ? என்று எண்ணத் தோன்றியது ! ஏனென்கிறீர்களா ?

Hi-tech ; fast movements கொண்ட CocoMelon போன்ற புது யுக  கார்ட்டூன் வீடியோக்களெல்லாம், சிறார்களின் வளர்ச்சிக் குறைபாட்டோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன ; நார்மலான துரிதத்தில் பிள்ளைகளுக்குப் பேச்சு வராது போகக் காரணமாகி நிற்கின்றன என்ற சர்ச்சை உலகெங்கும் ஓடி வருகிறது ! So “ஒரு ஊரிலே ஒரு காக்கா இருந்துச்சாம். அது பாட்டிகிட்டே வடை திருடிச்சாம்” என்று இன்றளவும் குட்டீஸ்களுக்கு  கதை சொல்வதில் சிக்கல்களில்லை  ! And பாட்டி கதை சொல்வதாலேயே நாம் பழமையில் ஊறிப் போனதாய் கொள்ள இயலாதே - becos -

இது மாற்றங்களின் யுகம் என்பதற்காக - ”13.0843’‘N, 80.2705.E இலக்கிலே ஒரு அஸடிராக்டா இண்டிகா மேலே ஒரு கார்வஸ் இருந்துச்சாம்! அதுகிட்டேயிருந்த சப்வே பர்கரை ஒரு வுல்பெஸ் உல்பெஸ் ஆட்டையைப் போடப் பார்த்துச்சாம்!” என்று நவீனங்களுடன் யாரும் கதை சொல்லப் போவதில்லியே?!

P.S :

13.0843’‘N, 80.2705.E : சென்னை இருக்கும் இலக்கின் GPS co-ordinates !

"அஸடிராக்டா இண்டிகா"  : வேப்ப மரத்தின் விஞ்ஞானப் பெயர் !

கார்வஸ்  : காக்காயின் விஞ்ஞானப் பெயர் !

உல்பெஸ் உல்பெஸ் : நரியின் விஞ்ஞானப் பெயர் !

So ஒரு வால் நீட்டும் குரங்கை – அதன் intended target audience-ன் பார்வைக் கோணங்களிலிருந்து பார்த்து விட்டுப் போனால் லயோலா மாணாக்கரைத் தொந்தரவு செய்திடத் தேவைகளின்றிப் போகுமே?! ரைட்டு – ஒரு சர்வே எடுக்கவே செய்கிறோம் என்றே வைத்துக் கொண்டு ; அதன் முடிவில் “Manga தான் இன்றைய தலைமுறையின் தேடல்” என்ற பதில் கிட்டுகிறதென்றும் வைத்துக் கொள்வோமே – what next ? நம்மால் வாசிக்க முடியாத அந்தக் கதை பாணிகளை தடாலடியாய் வெளியிட்டு – எங்கே? எவ்விதம் சந்தைப்படுத்த இயலும்? என்ற கேள்வி தொக்கி நிற்குமன்றோ? “நாம படிக்கிறோமோ – இல்லியோ, நம்ம வீட்டு பிள்ளைங்களை இதுக்குள்ளாற இறக்கிவிட்டே தீரணும்! ஆகையால் ஆளுக்கு 2 சந்தா கட்டணும் மக்கா!” என்று நான் அறிவித்தால் - மூத்திரச் சந்தே எனது நிரந்தர ஜாகையாகிடாதா?

கபிஷ் – குட்டிகளுக்கு! நமது நோஸ்டால்ஜியா பிரியர்களுக்குமே அது லயித்திடும் பட்சத்தில் சிறப்பு! Let's keep it simple as that please ! And புரிகிறது - முன்செல்லும் பாதையில் அடுத்த தலைமுறைக்கு இன்னமும் சிறப்பான கதைகளை ஊட்டிட வேண்டியதன் அவசியமும், முக்கியத்துவமும் புரிகிறது ! But கபிஷின் வருகையால் அந்தத் தேடல் ஓய்ந்திடப் போவதும் கிடையாது, வீரியம் குறைந்திடப் போவதும் கிடையாது என்பதை தைரியமாய் நம்பிடலாம் ! இதோ போன வாரம் கூட, வால்ட் டிஸ்னியின் கதைகளை தமிழுக்கு கொணர முடியுமாவென்று முயற்சித்து முரட்டு பல்பு வாங்கியிருக்கிறேன் ! அதற்காக இந்த விக்ரமாதித்தன் ஓய்ந்து மூலையில் குந்திடப் போவதில்லை ; இவனது தேடல்கள் தொடர்கதையாகவே இருந்திடும் - எந்தவொரு சூழலிலுமே !!

ரைட்டு, கபிஷுக்கு வால் நீளுமோ - இல்லையோ; இந்தப் பதிவின் நீளம் செமத்தியாய் நீண்டு விட்டது! So நான் கிளம்பும் முன்பாக இதோ – இம்மாதத்து V காமிக்ஸ் update folks : 

ஏஜெண்ட் ராபினின் சாகஸப் பயணம் தொடர்கிறது – இம்முறையுமே அட்டகாசமான சித்திரங்களுடன் !! And சின்னதொரு நினைவூட்டல் ப்ளீஸ் : இது V காமிக்ஸின் அடுத்த அரையாண்டுச் சந்தாவின் இதழ் ! So அதற்கான தொகையினை அனுப்பியாச்சா? என்று ஒருவாட்டி சரிபார்த்துக் கொள்ளுங்களேன் – ப்ளீஸ்?!


Before I sign out - ஈரோட்டில் காத்துள்ள நமது லயன் 40 கொண்டாட்டம் சார்ந்த news !! குடும்ப சகிதம் ஆஜராகிடவுள்ள நண்பர்களுக்கும், இந்த வருடம் தங்களது நாற்பதாவது பிறந்த நாட்களை கொண்டாடிடும் நண்பர்களுக்கும், தங்கிட ஏற்பாடுகள் நடந்தேறி வருகின்றன ! அது ஈரோட்டுப் புத்தக விழா தருணமும் கூட என்பதால் இப்போதே அங்கே ரூம்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாய் இருந்து வருகிறது ! So ஏற்கனவே அறிவித்தது போல, ஜூன் 30-ல் நாம் ஏற்பாடு செய்திடவுள்ள புக்கிங்கள் நிறைவு பெறுகின்றன ! 

அப்புறமாய் நமது லயன் சார்ந்த நினைவுகளை, நேரில் வர இயலா நண்பர்கள் பகிர்ந்திடும் testimonials கிட்டத் துவங்கியுள்ளன ! இன்னமும் கணிசமான அவகாசமுள்ளதே என்று எண்ணிடாது, உங்களின் வீடியோக்களை ஜல்தியாய் அனுப்பிட்டால், அவற்றை எடிட் செய்திடவுள்ள நண்பர்களின் பணி சற்றே சுலபமாகிடும் ! Please guys - let's show some speed !! 

அப்புறம் காமிக்-கான் பாணியில் நாமுமே ஒரு Cosplay நடத்தினாலென்ன ? இயன்றோர், பிடித்தமான காமிக்ஸ் நாயக / நாயகியரின் வேஷங்களில் ஆஜராகிடட்டுமே ? என்று நண்பர்களில் சிலர் suggestion தந்திருந்தனர் ! ஒரு ஜீன்ஸையும், டி-ஷர்ட்டையும் போட்டுக்கினு "ஞான் லார்கோவாக்கும் !!" என்று சொல்லாத வரைக்கும் Cosplay ஓ.கே. தானென்றுபட்டது !! So அதனில் ஆர்வம் உள்ள நண்பர்கள் இருப்பின் - most welcome !!

Bye all! See you around! Have a cool Sunday! நாம் உலக சேம்பியன்கள் என்ற குஷியோடு கண்ணயரப் போகிறேன் ! 😍😍😍😍😍😍😍😍

P.S : திங்களன்று புக்ஸ் டெஸ்பாட்ச் இருந்திடும் folks ! 

123 comments:

  1. உலக சேம்பியன்கள் என்ற குஷியோடு கண்ணயரப் போகிறேன் ! Me tooo sir

    ReplyDelete
  2. படித்துவிட்டு வருகிறேன்..

    ReplyDelete
  3. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  4. அனைவருக்கும் வணக்கம்.

    ReplyDelete
  5. // நடுவிலே கொஞ்சம் ஞாபகத்தைக் காணோம்!

    &

    - களமெல்லாம் கிழம்!
    //

    Waiting for my favorite cartoon hero ❤️

    ReplyDelete
  6. // மெயின் தொடரில் நாம் இதுவரையிலும் 48 ஆல்பங்களை வெளியிட்டு முடித்து விட்டோம்! //

    Super

    ReplyDelete
  7. வாங்க ஆந்தை விழியார் எடிட்டர் அவர்களே மேட்ச் பாத்தீங்களா 😭🔥😇

    ReplyDelete
  8. பாதி பதிவை படித்து விட்டேன். மீதி பதிவு காலை படிக்கிறேன் சார்

    ReplyDelete
    Replies
    1. நான் முழுவதும் படித்து விட்டேன் 😇

      Delete
  9. டெக்ஸ் கதை ஏற்கனவே வந்த கதை போல் உள்ளதே. கதை குற்றம் பார்க்கின் (பிளாக் அண்ட் வொயிட் )

    ReplyDelete
  10. கபீஷ் பையனும் நமக்கு வேணும் அதே நேரத்தில் மாங்காவையும் ஒதுக்கி விடாதீர்......காமிக்கானில் அதன் வரவேற்பை கண்டிருப்பீர் தாங்கள் அறியாதது ஏதும் இல்லை.....பெரிய தொடர்களாக வெளியிட தயக்கம் இருந்தாலும் "Your name" போன்ற ஃபீல் குட் சிறிய மாங்காவை முயற்சிக்கலாம்....கண்டிப்பாக சொடை போகாது 💯❤️

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட் கார்த்திக். வரிக்கு வரி ஆமோதிக்கிறேன்.

      Delete
  11. இது மாற்றங்களின் யுகம் என்பதற்காக - ”13.0843’‘N, 80.2705.E இலக்கிலே ஒரு அஸடிராக்டா இண்டிகா மேலே ஒரு கார்வஸ் இருந்துச்சாம்! அதுகிட்டேயிருந்த சப்வே பர்கரை ஒரு வுல்பெஸ் உல்பெஸ் ஆட்டையைப் போடப் பார்த்துச்சாம்!” என்று நவீனங்களுடன் யாரும் கதை சொல்லப் போவதில்லியே?!

    😂😂😂😂 செம சார்.
    Understood.

    ReplyDelete
  12. Lion 40 லக்கி லூக் அட்டைப்படம் டிசைன் அட போட வைக்கிறது ஐயா! மஞ்சள் வெயில் ராத்திரியிலே... வாவ்... அருமை...


    //வரும் காலங்களில் crisp வாசிப்புக் களங்களே சரிப்படுமென்ற policy decision எடுத்துள்ள ஒரு ஆண்டினில் அதனை இயன்ற தருணத்தில் நடைமுறைப்படுத்த எண்ணிடுவது தெய்வ குற்றமாகுமா – என்ன?//

    இதைப்பற்றி எழுத வேண்டும் என எண்ணியிருந்தேன். எனக்கு ஒவ்வொரு மாதமும் ரிலீஸ் ஆக புத்தகத்தை அந்த மாதங்களிலேயே படிப்பது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாகவே, அந்த பழக்கத்தை முழுமையாக பின்பற்ற இயலவில்லை.

    அதன் காரணமாக ஒரு மாதம் வெளியாகும் புத்தகத்தை எப்பாடுபட்டாவது அந்த மாதத்திற்குள் படித்து முடிக்க வேண்டும் என்ற போராட்டம் இருக்கும். அப்பாடா படித்து முடித்தாயிற்று என்று நினைக்கும் போது அடுத்த மாத இதழ்கள் ஜம்மு என்று வந்து நிற்கும். இதன் காரணமாக இனம் புரியாத ஒரு அயர்ச்சி ஏற்பட்டது எனக்கு மட்டுமா என்று தெரியவில்லை.

    இந்த ஆண்டு சுலப வாசிப்பு, crisp வாசிப்பு களங்களே என்று நீங்கள் அறிவித்த போது கூட எனக்கு ஏதோ பத்தோடு பதினொன்றாக அறிவிப்பாகவே அது தோன்றியது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கம் முதலேயே வந்த புத்தகங்களை படித்து முடித்துவிட்டு கடைசியாக குறைந்தது ஒரு வாரம் ஆவது படித்த புத்தகங்களை பற்றியோ அல்லது வரக்கூடிய புதிய கதைகள் பற்றியோ அசை போடுவது சாத்தியமாகி இருந்தது.

    இப்பொழுது கூட ஸாகோரின் அறிமுக கதையை அசை போட்டுக் கொண்டிருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் சுலப வாசிப்பு களங்களை தேர்ந்தெடுத்தது தான்.

    குண்டு புத்தகங்களின் மேலாக காதல் இருந்தாலும், ஒவ்வொரு மாதமும் 400 500 பக்கங்கள் படிப்பது கடினம். 40 பிளஸ் வயதுகளில் நிறைய பொறுப்புகளை சுமந்து கொண்டிருக்கும் என் போன்ற வாசகர்களுக்கு இதுவே நிதர்சனம்!

    நன்றி!

    ReplyDelete
  13. கபீஷ், பண்டிலா, பீலு, சீகல், மோத்து, ரங்கையா, பிந்து, திரும்ப வராங்களா வரட்டும் வரட்டும்..... அறிவிப்பே என்னை கடந்த காலத்துக்கு என்னை time travel செய்ய வச்சாச்சு 😍🥰👍🤝

    ReplyDelete
  14. Nostalgia கதைகள் மார்கெட்டில் எப்போதும் மவுசு அதிகம்

    ReplyDelete
  15. சூப்பர் பதிவு சார்.....இன்று கிளம்பும்னு இறுதி வரிகள் சொல்லும்னு பாத்தா ...நாளை மறுநாள்னு உறுதி வரிகள் சொல்ல....பெரிய பதிவுன்னாலும் பதிவு தடாலென சடன் பிரேக் போட்ட பின் நகராமல் நின்ற ஃபீலிங்...தாத்தாக்கள் ...படிக்க படிக்க நெசமாவே மறந்துட்டேன்....இப்பதான் நினைவு வருது ...விண்வெளி பிசாசு காரணமோ...தெரியல...அட்டைப்படம் டெக்ஸ் தலைவாங்கிய தேடி நீரில் இறங்கும் டெக்சயும்...அப்பாவிகள் தேடி நீரில் மூழ்கும் கார்சனையும் நினைவு படுத்த...செம சூப்பரான அட்டைப்படத்துல இதுதான் பெஸ்டுன்னு நினைவுறுத்த தவறில்லை...40 ம் பிறந்த நாளுக்கு வாழ்த்துகளை சொல்லிய கையோடு....வால் டிஸ்னி முயற்சிகள் வெற்றியடைய செந்தூரானின் உதவியையும் நாடிக் கொண்டு...40ம் ஆண்டு லயனோடு கரம் கோர்க்க வாய்ப்பு தந்த ஆசிரியருக்கும் நன்றிகளை கூறிக் கொண்டு தொடர்கிறேன் கலகல செவ்வாயினில்...

    ReplyDelete
  16. Sir,augest book fairபுத்தகங்களுக்கு பட்ஜெட் ப்ளீஸ் .

    ReplyDelete
    Replies
    1. பதிவ படிச்சதும் கேக்க பயமாருக்கே எனக்கே...செம தில்தா உங்களுக்கு...ஆனாலும் கேப்பமே ...யார்ட்ட கேக்க போறோம்...


      சார் இதுதான் பெரிய கொண்டாட்டம்.40 தாமாண்டில் ஈரோடு பாத்து பன்னுங்க...வருமாண்டு முதல் சிகர விழாக்கள் ஏதுமில்லை பெருசா...அதானால அகஸ்டின் நண்பர் கேட்ட இதழ் பிரம்மாண்டமாருக்கனும் கார்சனின் கடந்த கால ரேஞ்சுக்கு பட்ஜெட்ல

      Delete
  17. Disney series tamil பேச வைத்து விடுங்க ஜி

    ReplyDelete
  18. பழையதை ஆரவாரமாக வரவேற்பவர்கள் புதியதைக் குறை சொல்வதில்லை. ஆனால் புதியதை மட்டும் ரசிப்பவர்கள் சிலர் பழசைக்குறை சொல்லத் தவறுவதில்லை.

    ReplyDelete
  19. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  20. அடேங்கப்பா இந்த மாதம் வரும் அனைத்து இதழ்களின் அட்டைப்படமும் ஒன்றுக்கொன்று போட்டி போடுகிறது சார்..செம மாஸாக..,அழகாக அனைத்தும் அமைந்து உள்ளது..அட்டைப்பட ஓவியர்களுக்கும்..வடிவமைப்பாளர்களுக்கும் ஒரு பெரிய பூங்கொத்து பார்சல் சார்..

    ReplyDelete
  21. சார் குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை ஏற்கனவே பிளாக் அண்ட் ஒயிட்டில் வந்த அதே கதை தானே.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...அப்படி இருக்க வாய்ப்பில்லையே நண்பரே...

      சார்..தெளிவுபடுத்தி விடுங்கள்..?!

      Delete
    2. தலைப்பு ஒரே மாதியாக இருக்க கன்பியூஸ் ஆகும் நண்பர்களுக்கு & மதன்குமார்@

      "குற்றம் பார்க்கின்"--- கதை 2016ஆம் ஆண்டு லயனில் வெளியானது... அது இத்தாலியில் அதற்கு சில ஆண்டுகள் முன்பு வந்திருக்கும்.

      இப்ப வரப்போகும் "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை""-- கதை ஒரிஜினலாக டெக்ஸ்75 கொண்டாட்டமாக சென்றாண்டு 2023ல தான் இத்தாலியிலயே ரிலீஸ் ஆன ஒன்று..

      அப்படியிருக்கு இது எப்படி பழைய கதையின் மறுபதிப்பாக இருக்க இயலும்.??😉

      இது முற்றிலும் புதிய கதை..உருவாக்கம் பண்ணபட்டதே முழு வண்ணத்தில்...

      புதிய கதைதான் வாசிக்க பெறும்..செயல் அப் ப்ரெண்ட்ஸ்

      Delete
    3. சார், ஏற்கனவே பாயாச பார்ட்டி ஒருத்தர், அட்டையை எடுத்துட்டா எல்லாமே ஒரே கதை தான்னு சொல்லுவாரு... நீங்க வேற எடுத்து கொடுக்கிறீங்களே...

      Delete
    4. எதற்கும் அந்த உட் பக்க சித்திரத்தை எடுத்து குற்றம் பார்க்கில் புக்கையோடு ஒப்பிட்டு பார்த்து சொல்லவும் நண்பரே... 🙏🙏🙏🙏

      Delete
  22. ஆஹா...டிஸ்னியிடம் பேச்சு வார்த்தையா ..சூப்பர் சார்..இப்பொழுது அது தோல்வியில் முடிந்தாலும் "டின்டின்" போல அதுவும் ஒரு நாள் வெற்றி கோட்டை தொடும் என்று நம்பிக்கை உள்ளது சார்....காத்திருப்போம்..

    ReplyDelete
  23. கபிஷ் இதழ்களில் எவரது பெயரையும் மாற்றாமல் அன்றைய பெயர்களையே பயன்படுத்துமாறு நண்பர்களின் சார்பாக வேண்டிக்கொள்கிறேன் சார்..:-)

    ReplyDelete
    Replies
    1. Also, pls reprint our Muthu comics earlier days Kanis even it is not colored.

      Delete
    2. ஆமா தலீவரே....வழி மொழிகிறேன்...

      குட்டி புயல் "கபீஷ்" ,
      முயல் “மோத்தி",
      அதன் அத்தை "காரணி",
      மான் "பிந்து" ,
      புலி "பீலு",
      நரி "ஸீகல்",
      யானை "பந்திலா",
      மயில் "மயூர்",
      கரடி "பபூச்சா",
      கழுகு "பாஞ்சா",
      வேட்டைக்காரன் "தோப்பையா"...
      என ஒவ்வொரு கதாபாத்திரங்களும் இன்றும் இந்த தொடரை விரும்பியவர்களுக்கு மனப்பாடம்...

      அந்த நினைவுகள் தான் இந்த கபீஷ் தொடரை பெரிய வெற்றியாக்கப் போவுது...


      Delete
    3. தொப்பையா பேத்தி பெயர் என்ன? மறந்து விட்டது.

      Delete
    4. PfB@ தோப்பையாவின் சகோதரி மகள் தான் சிறுமியாக உள்ளாள்..அவளது பெயர் லீலா...!! பெற்றோர் இல்லாத அவளை தோப்பையாவும் அவனது தாயாரும் வளர்க்கிறார்கள்.

      மொத்தம் உள்ள 5கபீஷ் தொகுப்புகளில் என்னிடம் உள்ள 3ல் இதுதான் உள்ளது...மற்ற இரு புத்தகங்களில் ஒருவேளை தோப்பையாவின் பேத்தி இருக்க கூடும்..

      Delete
    5. சரியாக ஞாபகம் இல்லை எனக்கு. நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். நன்றி விஜயராகவன்

      Delete
  24. டியர் எடி,

    அது எப்படி டி20 உலக கோப்பை வெற்றியை பற்றி பதிவில் எழுதாமலே இத்தனை நீள பதிவை போட்டீங்கண்ணு யோசிச்சா... கடைசியில் ஒரு லைன் போட்டு கடமையை முடிச்சிட்டீங்க...

    நமக்கு தான் சந்தோசத்தில் தூக்கம் போய் கொட்ட கொட்ட விழித்து விடிஞ்சே போச்சு...

    பதிலையும் முழுக்க படிச்சாச்சு... ஆனா, இன்னும் கொஞ்ச நேரத்துல தூக்கம் வரலைன்னா வந்து விரிவா கருத்து போடுறேன்.

    Short and Sweet until then... Those which generate sales numbers are the ultimate winners, no matter whether they are advised to be classics overdone.

    What's important is that the New characters continue to be published with the support of classic comics sales. Period.

    ReplyDelete
    Replies
    1. Agree to the last two points said by Rafiq - sales matter and new lines as supported by sales and not the other way round. You don't have to lament this much Editor Sir. Dr Selvam knows the realities of sales. He had mentioned it as well - the rest of his outpour is perhaps from his heart. We all want the new but here sales is paramount with a small circle.

      Delete
    2. ராஜா.. கிரிக்கெட் வெற்றி
      பற்றி அவர் ஏன் சொல்லவில்லை... என்றால்.. அந்த விளையாட்டு, வெற்றி.. நிஜமல்ல..virtual reality.. என்று அவர் நினைத்திருக்கலாம்..
      நீங்களுமா கிரிக்கெட் ஐ
      நம்பறீங்க..? 😄😄😄
      நண்பர்கள் நாம் விளையாடுவது போல்
      உண்மையான கிரிக்கெட்
      அதுவல்ல என்பதை
      80% அன்பர்களுக்கு
      புரியல... 😄

      Delete
    3. தவறு Eashwar ! Rafiq, Editor, நான் உட்பட இங்கே பலர் T20 கிரிக்கெட் ரசிகர்களே ! இது virtual reality அல்ல - இந்த காலச்சூழலுக்கான வேகப்படுத்தப்பட்ட விளையாட்டு. டெஸ்ட் போல .. one dayers போல .. இதுவும் சவால் நிறைந்ததே !

      15 பேர் சேர்ந்து நாட்டுக்கு வென்று கொடுக்கும் கோப்பையை ஒரு கமெண்ட் மூலம் புறம் தள்ளுவது ஏற்புடையது அல்லவே ! எடிட்டர் நாம் உலகக்கோப்பை வென்ற மகிழ்ச்சியுடன் தான் உறங்கச் சென்றார் !

      Delete
  25. ///இதோ போன வாரம் கூட, வால்ட் டிஸ்னியின் கதைகளை தமிழுக்கு கொணர முடியுமாவென்று முயற்சித்து முரட்டு பல்பு வாங்கியிருக்கிறேன் ! ////

    அட்டகாசம் எடிட்டர் சார்! 😍😍😍😍🌹🌹🌹🥰🥰

    ReplyDelete
    Replies
    1. ஆமா சார்....வாங்குன பல்பு செம அட்டகாசம் தான் 🤕

      Delete
    2. Sir, one day you will succeed... Eagle Man, Uncle Scrooge, Champ? càrtoons also much expected.

      Delete
    3. //ஆமா சார்....வாங்குன பல்பு செம அட்டகாசம் தான் ///

      டோன்ட் வொரி சார்.. நிறைய பல்புகள் கிடைச்சா சிவகாசில நம்ம ஆபீசுக்கு பக்கத்துலயே 'பிரகாஷ் பல்பு கம்பெனி'னு ஒன்னு ஆரம்பிச்சுடலாம். 😜😜

      Delete
    4. குட் ஐடியா விஜய் 🤣

      Delete
  26. 50வது.... வணக்கம் சார்...

    ஹாய் தோழர்ஸ்..

    ReplyDelete
  27. ///”13.0843’‘N, 80.2705.E இலக்கிலே ஒரு அஸடிராக்டா இண்டிகா மேலே ஒரு கார்வஸ் இருந்துச்சாம்! அதுகிட்டேயிருந்த சப்வே பர்கரை ஒரு வுல்பெஸ் உல்பெஸ் ஆட்டையைப் போடப் பார்த்துச்சாம்!” என்று நவீனங்களுடன் யாரும் கதை சொல்லப் போவதில்லியே?!///

    பின்றீங்க எடிட்டர் சார்! அப்படியே அந்த பாட்டிம்மா கேரக்டர்க்கும் விஞ்ஞானப் பெயர் என்னன்னு சொல்லிட்டிங்கன்னா கதை கம்ப்ளீட் ஆனமாதிரி இருக்கும்.😜

    ReplyDelete
  28. அட்டைப்படங்கள் எல்லாமே அருமை! ஏற்கனவே 'குற்றம் பார்க்கின்' என்ற தலைப்பில் டெக்ஸ் கதை வெளியாகி இருப்பது வாசகர்களிடயே ஒரு சிறு குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும்.

    ReplyDelete
  29. And for kids, English comics are much needed. Have seen many kids choices are English comics in our book stalls.

    ReplyDelete
  30. சென்ற பதிவின் கடைசியில் போட்ட என் கமெண்ட் மறுபதிப்பாக...😉 கபீஷின் வருகையை மீண்டும் மீண்டும் கொண்டாட மனம் விழைகிறது...😍😍😍😍

    💞💕💞💕💞💕💞💕💞💕💞💞💕💞

    *ஒரு குட்டிப் புயலின் வருகை*

    *கபீஷ்....இந்த குட்டி புயலின் அறிமுகம் கிடைத்தது 1995/96களின் கல்லூரி கோடை விடுமுறைகளின் போது.....*

    *சேலம் கோட்டை மைதான பழைய புத்தக கடையில் டெக்ஸ் புத்தகங்களின் தேடலின் போது அகஸ்மாத்தாக கண்ணில் பட்டது இந்த கபீஷ் தொகுப்பு 1*

    *அதுவரை பூந்தளிரில் ஒரிரு பக்கங்களில் பார்த்ததாக மட்டுமே நினைவு....*

    *ஒவ்வொரு முறையும் தம் நண்பர்களைக் காக்க கபீஷ் செய்யும் தந்திரங்கள் ரொம்பவே ரசிக்க வைத்தன*

    *பந்திலா, பீலு, சீகல், பிந்துனு ஒவ்வொரு விலங்கும் அழகான பெயரில்....*

    *கபீஷை பிடிக்கப் பார்க்கும் வேட்டைக்கார தோப்பையா...அவனது நைச்சியங்கள்..அதை கபீஷ் தன் மந்திரவாலின் துணை கொண்டு முறியடிப்பது என ரொம்ப ஜாலியான கதையமைப்பு*

    *இந்த கபீஷ் தோழனும் என்னை வசீகரிக்க அவனது மற்ற தொகுப்புகளை தேடத்துவங்கினேன்...இன்னும் இரு தொகுப்பை கைப்பற்றவும் செய்தேன்*

    *பைகோவில் இரு தொகுப்புகளாக கபீஷ் அசத்தியவை ஒரு அடர் பச்சை நிறத்தில் மனதை வசீகரிக்கும்..எத்தனை முறை வாசித்தாலும் இன்னும் ஒருமுறை வாசிக்க வைப்பான் தோழன் கபீஷ்*

    *பார்வதி சித்திரக்கதையில் இவனது கதைத் தொகுப்பும் ஒன்று கிடைத்தது... மற்ற இரு தொகுப்புகள் என்ன தேடியும் அகப்படவில்லை*

    *கிட்டதட்ட மறந்தே போயிருந்தான் தோழன் கபீஷன்....லயன் காமிக்ஸ் ஆசிரியர் Vijayan S விஜயன் சாரின் இவ்வார பதிவில் மீண்டும் கபீஷைப் பார்த்து பேருவுகை அடைந்தேன்*😍😍😍

    *சிறு வயது வாசிப்பாளர்கள் இடையே சித்திரக்கதை வாசிப்பை கொண்டு சேர்க்க கபீஷனின் மந்திரவால் நிறையவே உதவும்*

    *ஆகஸ்ட் விழாவில் லயன் பேனரில் தோழனைக்காண வெகு ஆவலுடன்....*

    *கபீஷனை காண பெருமுயற்சிகள் எடுத்த அன்பு ஆசிரியர் சார்& நண்பன் ரஃபிக் & ஜதராபாத் ரசிகருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🙏🙏

    *கடுமையான வேலைப்பளு காரணமாக இங்கே தலைகாட்ட இயலவில்லை நண்பர்களே...ஆடி 1முதல் ரெகுலராக ஆஜர் ஆகிடுறேன்...ஈரோடு விழா வருது முந்தைய விழாக்களை ஒரு சூறாவளி பயணமாக சென்று பார்த்திடலாம்..
    10ஆண்டுகளில் நாம் அடித்த கூத்துகள், ஆடல் பாடல்லாம் ரொம்பவே ஜாலியானவை...

    ------STV

    ReplyDelete
    Replies
    1. கபீஷனோடு என் மகிழ்ச்சியைக் காண இங்கே ஒரு பார்வை பாருங்க நண்பர்களே...😍😍😍😍

      https://www.facebook.com/share/p/D3zW5z4QuB1kMon3/?mibextid=oFDknk

      Delete

    2. //கபீஷ்....இந்த குட்டி புயலின் அறிமுகம் கிடைத்தது 1995/96களின் கல்லூரி கோடை விடுமுறைகளின் போது.....*//

      *தலைவாரி பூச்சூட்டி உன்னை
      பாடசாலைக்குப் போ என்று சொல்வாள் உன் அன்னை* என்ற பள்ளி பருவ காலத்திலேயே கபிஷின் அறிமுகம் கிடைத்துவிட்டது. அன்னைக்குப் பதில் நடு அக்கா. காலை பள்ளிக்கு செல்லும் முன் விபூதியை பட்டையாக இட்டு நீரில் நனைத்த நூலால் அதை செவ்வகம் ஆக்கி நடுவில் இரண்டு மெல்லிய கோடுகள் இட்டு குங்குமமும் வைத்துவிடுவார்கள். அதை சரிபார்க்க கண்ணாடியில் பார்க்கும்போது கண்ணாடியில் கபிஷின் முகம் தெரியும். உண்மை தெரியாமல் கபீஷை பற்றி எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பதால் அப்படி தெரிவதாக நினைத்துக் கொள்வேன் 😊

      நீங்கள் கல்லூரி கோடை விடுமுறையில் தான் கபிஷின் அறிமுகம் கிடைத்திருப்பதாக சொல்லி இருக்கிறீர்கள். கல்யாணம் ஆன இரண்டு நாளுக்கு பிறகு அழகான கன்னிப் பெண் ஒருத்தி தனியாக கடைத்தெருவில் இருக்கும் போது காதல் கடிதம் கொடுத்தது போல் இருக்கிறது 😄.

      Delete
    3. அன்பு செனா😍

      எல்லோரும் காமிக்ஸ் டூ நாவல்னு பதின்ம பருவத்தில்..

      இங்கிட்டு ரிவர்ஸ் காமிக்ஸே பதின் பருவத்தில் தான் வாசிக்க வாய்ப்பு கிடைத்தது..

      அந்த காதல் கடுதாசி மேட்டர், நெஞ்சில் ஜில் ஜில்னு இருக்கு..💞💕💞💕💕💞

      Delete
    4. அபிராமி சார், உங்கள் பின்னூட்டம் பல கதைகளை சொல்கிறது.

      Delete
  31. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  32. சார், எங்க ஊர் தியேட்டர் ஒன்றில் புது படம் ரிலீஸ் ஆகி இருக்கு. Mgr நடித்த "சிரித்து வாழ வேண்டும்"..

    ReplyDelete
  33. // P.S : திங்களன்று புக்ஸ் டெஸ்பாட்ச் இருந்திடும் folks ! //
    மகிழ்ச்சி சார்...

    ReplyDelete
  34. "லக்கிலூக் - " - அட்டைப் படம் . அட்டகாசமாக உள்ளது.
    டால்டன் சகோதரர்களை அட்டையில் பார்த்தாலே இதழ் வசீகரித்து விடுகிறது..
    டெக்ஸ் - க்கும் அட்டைப் படம் ஆக்ஷனுடன் அமர்களமாக உள்ளது..
    கபீஷ் - நிச்சயம் சேகரிக்க வேண்டிய கதம்பம் தான்..
    சிறுவர்களுக்கு மொழி நடையில் உள்ள நகைச்சுவையை அனுபவிக்க ஏற்ற கதைக்களம்..
    குறிப்பாக - ஸுகலும் - பீலுவும்
    உரையாடலில் உள்ள நகைச்சுவைதான் - புரிந்து கொள்ளும் போதுதான்
    கிட் ஆர்டின் - டாக் புல் & லக்கிலூக் - டால்டன்ஸ் என்று விரிவடைகிறது..
    எனவே, கபீஸ் - ஸை விட்டுவிடாதீர்கள்..

    ReplyDelete
  35. // இதோ போன வாரம் கூட, வால்ட் டிஸ்னியின் கதைகளை தமிழுக்கு கொணர முடியுமாவென்று முயற்சித்து முரட்டு பல்பு வாங்கியிருக்கிறேன் ! //
    வால்ட் டிஸ்னி தமிழில்,சூப்பரு...

    ReplyDelete
  36. Beautiful sir... அட்டாஹாச பதிவு..
    பாட்டி வடை சுடும் கதை ... 😄❤️👍

    ReplyDelete
  37. //!சிலபல ஆண்டுகளாகவே நாம் தொடர்ந்து வரும் அந்த template-ன் பாணியில் லக்கி லூக் டபுள் ஆல்ப சாகசத்துடன் இந்த ஆண்டுமலரைக் கலர்ஃபுல்லாக்கிட வருகிறார்! ///

    ---தங்களின் முதல் குழந்தையான லயனுக்கு 40வது பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சார்🎂🎂🎂🎂🎂💐💐💐💐💐

    ReplyDelete
  38. ///- எஞ்சியிருக்கும் ஆல்பங்களில் – தொடரின் துவக்க நாட்களில், சுமாரான சித்திரங்களுடன் லக்கி வலம் வரும் கதைகள் ஒரு 40% இருக்குமென்றால் – பாக்கி 60% கதைகளோ புதுத் தலைமுறைப் படைப்பாளிகளின் கைவண்ணங்களில் உருவான ஆல்பங்கள்! /!!

    கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரின்னேன்...😉🤣

    ReplyDelete
  39. //இந்த ஆல்பமும், சமீப மாதங்களைப் போலவே ப்ரிண்டிங்கில் தெறிக்க விடுகின்றது! சித்திரங்களையும், ஒவ்வொரு frame-ல் ஓவியர்கள் செய்துள்ள ஜாலங்களையும் ரசித்தபடியே பக்கங்களைப் புரட்டினால் நிச்சயமாய் ஒரு புதுப் பரிமாணம் புலப்படும்!//

    ஆம் சார்.. சமீபத்திய மாதங்களில் பிரிண்டிங் தரம் ரொம்பவே பிரமாதமாக உள்ளது...

    ஜனவரியின் டின்டின், லார்கோவில் ஆரம்பிச்சது தொடர்ந்து அசத்தது..

    ReplyDelete
  40. புதுமை:பழமை

    என்றும் இந்த டெபேட் ஓடிட்டே தான் இருக்கும்...

    பழமையில்லாமல் புதுமையில்லைனு பல தடவை நிரூபணம் ஆகிட்டது...

    பழையன புகுதலும்
    புதியன கழிதலும்
    காலத்தின் கட்டாயங்கள்....

    கபீஷ், விண்வெளிப் பிசாசுகளின் வெற்றிகள் எப்போதும் புரியாத புதிர் அல்லவே!!!

    ReplyDelete
  41. ///அப்புறம் காமிக்-கான் பாணியில் நாமுமே ஒரு Cosplay நடத்தினாலென்ன ? இயன்றோர், பிடித்தமான காமிக்ஸ் நாயக / நாயகியரின் வேஷங்களில் ஆஜராகிடட்டுமே ///

    --- எனக்கு ஸ்பைடர் வேசந்தான் நல்லா பொருந்துதுங்கோ....

    ஸ்பைடர் உடுப்புகளை இரவல் வாங்கி தந்தா அப்படியே வந்திடலாமுங்கோ..🤣

    ReplyDelete
  42. ///திங்களன்று புக்ஸ் டெஸ்பாட்ச் இருந்திடும் folks ! //!

    ஊய்....ஊய்...ஊய்....

    செவ்வாய் 40ஆம் ஆண்டு கொண்டாட்டம் ஆரம்பம்...😍😍😍

    விண்வெளி பிசாசு தான் முதல் சாய்ஸ்.... லக்கியை விட தூள் கிளப்பும்ல காமெடியில..
    😉

    ReplyDelete
    Replies
    1. துப்பாக்கிய தூக்குறதுல டெக்சையும் கட்டிப் போடுவாரே...முதல் குண்டு தீரா துப்பாக்கிக்கு சொந்தக்காரராச்சே...டெக்ஸ் கூட சில கதைகளுக்கு நடுவே ரவை ரொப்புவார்...நம்மாள் ரொப்பி பாத்த கதை இருந்தா சொல்லும் நண்பர்களுக்கு ஆசிரியர் கையால் ரவுண்டு பன்னு பட்டர் பார்சல்

      Delete
  43. கௌ பாய்கதைகளும் காட்டு விலங்குகள் சம்பந்தப்பட்ட கதைகளும் என்றுமே புதிய கதைகளே. 1960,70,.காலகட்ட கதைகளைப் போல் இந்த வகை கதைகளில் பழமை நெடி வீசாது.

    ReplyDelete
  44. @கரூர் சக்தி ஜி..😍😘😃😀

    Erode Book fair books சிறப்பு வெளியீடுகள்..

    1)டின்டின் -டபுள்தமாக்கா ரூ.600

    2) மாண்டிரெக் ஸ்பெஷல் 2- (Hardbound B&W) - ரூ.450

    3)சுட்டிக்குரங்கு கபீஷ் (ஆல்பம் 1) -ரூ.200

    4)எடிட்டர் ஸ்பெஷல் - (முத்துகாமிக்ஸ் வாரமலர் தொகுப்பு -1) ரூ.250..

    (வந்தா நல்லாதான் இருக்கும்)

    பதிவை இப்ப பண்ணுங்க..
    புக்ஸை விழாவில நேரில வாங்கிக்கங்க..😃😍

    நேரில வரமுடியாதவங்க விழா முடிந்தபிறகு கூரியர் ல வாங்கிக்கங்க..👍👌

    ReplyDelete
    Replies
    1. ஜம்பிங் தலைவரே டின்டின் சந்தாவில் வந்து விடும். எனவே இப்போதைக்கு அறிவித்து உள்ள ஆகஸ்ட் புத்தக விழா இதழ்கள்
      1. மாண்ட்ரேக்
      2. கபீஷ்

      Delete
    2. இது கூட ஆசிரியர் சர்ப்ரைசா வைத்திருக்கும்...அந்த நானூறு ரூவா கதை...ஈரோடுல நாப்பதாம் ஆண்டுன்னா சும்மால்லயே...
      இனி வருங்கால விழா மலர்கள் வழக்கமான தீவாளி...கோடை ...ஈரோடு...மே மேளா தவிர பெருசா சர்ப்ரைசா ஏதுமில்லயே

      Delete
    3. ஆன்லைன் புத்தகத் திருவிழாவை சும்மா அதிர விட்ட ஆசிரியர் ஈரோடு புத்தகத் திருவிழாவை சும்மா விட்டு விடுவாரா 🤣 முடிஞ்ச அளவுக்கு நம்ம பொன்ராச ஏத்தி விட்டு அடிவாங்க வைக்கலாம் 🤩

      Delete
    4. // ஆசிரியர் சர்ப்ரைசா வைத்திருக்கும்...அந்த நானூறு ரூவா கதை... //

      ஆசிரியருக்கு தெரியாதது எல்லாம் உனக்கு தெரிந்து இருக்குல 😂

      Delete
  45. சார் ஒரு வேண்டுகோள்

    மேகி காரிசன் இன்னும் ஒரு கதை மட்டும் பாக்கி உள்ளது அதை ஈரோட்டில் வெளியிட வாய்ப்பு உள்ளதா?

    ReplyDelete
    Replies
    1. அப்படி இல்லை என்றால் சேலத்தில் புத்தக விழா சமயத்தில் இரட்டை வேட்டையர், ஜான் மாஸ்டர் உடன் வெளியிடலாமே?

      Delete
    2. அருமையான யோசனை....ஜான் மாஸ்டர் கதைக்கு செம்ம டிமாண்ட் 💯

      Delete
    3. ஈரோட்டுக்கு இரட்டை வேட்டையர்கள் வந்தால் அதை மகிழ்ச்சி வேறு என்ன இருக்க போகிறது ஆசிரியர் மனது வைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏

      Delete
  46. புதுமையை ரசிக்கும் பலர் பழமையும் ரசித்து ஆதரவு தருவது போல் பழமையை ரசிப்பவர்கள் புதிய கதைகளுக்கு ரசித்து ஆதரவு தந்தால் நமக்கு நிறைய புதிய கதைகளை படிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் நண்பர்களே. 🙏

    ReplyDelete
  47. 100..

    First first நூறு..😍😘😃😀👍👌

    ReplyDelete
  48. // டெக்னிகலரில் remaster செய்யப்பட்டு ஓடும் “ஜக்கம்மா” படம் ஈட்டித் தரும் வருவாய்களுக்கும் இந்த தியேட்டரின் ஓட்டத்தினில் ஒரு முக்கிய பங்குள்ளது ! //

    ஒத்துக்கொள்கிறேன் சார். உண்மை.

    ReplyDelete
  49. ராபின் அட்டைப்படம் அமர்க்களம் சார்.

    ReplyDelete
  50. டெக்ஸ் உள்பக்க சித்திரங்கள் வண்ணத்தில் உள்ளத்தை அள்ளுகிறது சார்.

    ReplyDelete
  51. இன்னைக்கு Despatch நாளைக்கு புக்

    ReplyDelete
  52. // மாதமொன்றுக்கு டெக்ஸ் மட்டும் சில லட்சம் பிரதிகள் விற்பனை காணும் ஒரு பிரதம மார்கெட்டில் உள்ள படைப்பாளிகளே “இவ்வளவு போதும்” என்று தீர்மானிக்கும் போது, பெருச்சாளி சைஸிலான நாமோ புல்லெட் சவாரிகளை செஞ்சே தீரணும் என்ற ஒவ்வொரு தபாவும் அடம் பிடிப்பது ஒரு luxury தானேயன்றி – கட்டாயமல்லவே! //

    Agreed sir. I like this move.

    ReplyDelete
  53. ஆண்டு மலர் லக்கி உடன் ரின் டின் கேன் 😁 சூப்பர். ஐ ஜாலி. வீட்டில் குழந்தைகளுக்கு கதை சொல்ல தயாராக வேண்டியதுதான் 😍

    ReplyDelete
  54. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!🤩

    ReplyDelete
  55. Understood sir. But I am personally bored with oldies.

    ReplyDelete