Powered By Blogger

Saturday, April 13, 2024

தூங்கும் அழகிகள் !

 நண்பர்களே,

வணக்கம். முன்கூட்டிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! காத்திருக்கும் குரோதி ஆண்டானது, நலமும், வளமும், நட்பும் ஒங்கச் செய்ய புனித மனிடோ அருள்புரிவாராக ! 

ஏப்ரலின் நடுவாக்கில் நிற்கிறோம் - பெளன்சர் அடித்துள்ள சிக்ஸரை ரசித்தபடிக்கே ! இப்போதெல்லாம் மீள்வருகை நாயகர்கள் செமையாய் ஸ்கோர் பண்ணுகிறார்கள் - ஜனவரியில் லார்கோ ஆரம்பித்து வைத்த அமர்க்களத்தை, இதோ, இப்போது பெளன்சர் தொடர்ந்திடுகிறார் ! நிஜத்தைச் சொல்வதானால், பிதாமகர் Jodorowski இல்லாத இந்த ஆல்பம் எத்தனை தூரத்துக்கு ரசிக்குமோ ? என்ற சின்னஞ்சிறு ஐயம் எனக்குள் இருக்கவே செய்தது ! எதையுமே சுலபமாய்ச் ; சுமூகமாய்ச் சொல்வது Jodorowski-க்குப் பிடிக்கவே பிடிக்காத சமாச்சாரம் ; சகலத்திலும் ஒரு shock factor சேர்ப்பதே  அவரது ஸ்டைல். So இதற்கு முன்பான ஆல்பங்களில் நாம் பார்த்த ராவான ஒற்றைக்கர ஹீரோவுக்கும், இங்கு களமாடும் சற்றே நிதானமான நாயகருக்கும் மத்தியிலான அந்த மாறுதல்கள் நெருடுமோ ? என்ற 'டர்' எனக்கிருந்தது ! ஆனால் கதைப்பொறுப்பினையும் கையில் இம்முறை எடுத்திருக்கும் ஓவியர் Boucq - உறுத்தல் தரா ஒரு crisp த்ரில்லரை உருவாக்கியிருப்பதால், "சாபம் சுமந்த தங்கம்" பௌன்சரின் இரண்டாவது இன்னிங்க்ஸுக்கு ரூட் போட்டுத்தந்துள்ளது ! அடுத்த டபுள் ஆல்பத்தில் Jodoroswki திரும்பிடுகிறார் ; so அங்கே என்ன மாதிரியான ட்ரீட்மெண்ட் காத்துள்ளதென்பதைப் பார்க்க ஆவலாய் வெயிட்டிங் ! ஒற்றைக்கரத்தாரை 2025-க்கும் டிக் அடித்து விடலாமுங்களா ? 

இம்மாதத்து காரிகன் ஸ்பெஷலும் செம brisk சேல்ஸ் - - ஆன்லைனிலும் சரி, முகவர்களிடமும் சரி ! சொல்லப்போனால், இம்மாதத்து ஆன்லைன் ஆர்டர்களின் மிகுதியே பெளன்சர் + காரிகன் காம்போ தான் ! Of course - கலர் வேதாளர் பற்றிச் சொல்லவே வேண்டாம் - நடப்பாண்டின் புத்தக விழாக்கள் circuit-ஐத் தாண்டி "வேதாளருக்குத் திருமணம்"  கையிருப்பில் இருக்குமா ? என்பது சந்தேகமே ! ஜனவரியில் வந்த "வீரனுக்கு மரணமில்லை" கடைசி 2 கட்டுக்கள் மட்டுமே கிட்டங்கியில் உள்ளன என்ற நிலவரத்தில் இருக்க, விற்பனைகளில் டெக்ஸுக்கு tough தர வேதாளர் ரெடியாகிவிட்டார் என்பது புரிகிறது ! ஏற்கனவே வந்த வேதாளர் ஸ்பெஷல் - 1 & 2 முழுசுமாய்க் காலி ! So நமது கொடௌனை ஊருக்குள்ளானதொரு கபாலக் குகையாய் மாற்றிடும் அவசியங்கள் எழாதென்றே தோன்றுகிறது !

Looking ahead, மே மாதத்தின் ரெகுலர் தடத்துப் பணிகள் on track ஓடிக்கொண்டிருக்க, காத்துள்ள ஆன்லைன் மேளா சார்ந்த பணிகளும் ஓசையின்றி ஓடி வருகின்றன ! அவை பற்றிய கொஞ்சமே கொஞ்சமான தகவல்கள் : 

*4 முழுநீள புக்ஸ் & 4 குட்டி புக்ஸ் என்பதே இப்போதைய திட்டமிடல்

*4 குட்டி புக்சினில், ஒரு செம ஜாலியான சர்ப்ரைஸ் இதழும் காத்துள்ளது !  Trust me guys, இது மெய்யாலுமான ஜாலி இதழ் ! 

*4 பெரிய புக்சினில் கூட ஒரு சர்ப்ரைஸ் புது வரவு வெயிட்டிங் ! 

*And சர்ப்ரைஸ் இதழ்கள் இரண்டுமே கலரில் !  

*இவை அனைத்துமே சிலபஸில் இல்லாத சமாச்சாரங்கள் என்பதால், குறைவான பிரிண்ட்ரன் மட்டுமே கொண்டிருக்கும். But still, விலைகளை நார்மலாகவே அமைத்திட நிச்சயம் மெனெக்கெடுவோம் !

*ஒரேயொரு மறுபதிப்பு ; பாக்கி அனைத்துமே புதுசுகள் ! 

*And இன்னொரு action நாயகர் கூட தனது மீள்வருகைக்கு பிரமாதமானதொரு ஆல்பத்தோடு வெயிட்டிங் !

இப்போதைக்கு இந்த preview போதுமென்பதால் அடுத்த சமாச்சாரங்களுக்குள் புகுந்திடலாமா ? 

சமீபமாய், லேப்டாப்பை நோண்டிக் கொண்டிருந்தேன் - பொழுது போகாத ஒரு ராப்பொழுதினில் ! பரிசீலனைக்கென நாம் வாங்கிக் குவித்துள்ள புதுத்  தொடர்கள் / one shots என டன் டன்னாகக் குவிந்து கிடப்பது ஒரு பக்கமெனில், ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு வேகத்தில் வாங்கிப் போட்ட, இன்னமும் பகலைப் பார்த்திருக்கா கதைகள் ஒரு லோடு இருப்பதையும் காண முடிந்தது ! அவற்றை என்ன செய்வதென்று சற்றே உரக்க சிந்திக்க நினைத்தேன் - இந்த வாரப் பதிவினில் ! 

1.விண்வெளி வேங்கை - Lady Spitfire !!

விரைவில்.....மிக விரைவில்...இந்த அம்மணியின் ஆல்பம்ஸ் # 2 & 3 நம் பீரோவில் குடியேறி ஆண்டுகள் 10 ஆகப் போகின்றன ! அதனைக் கொண்டாட ஒரு கேக் வெட்டாட்டியும் கூட, கருப்பட்டி ஆப்பத்தை வாங்கியாச்சும், celebrate செய்திட உத்தேசம் !! சமீபத்தைய நண்பர்களுக்கு இவர் யாரென்று பெரிதாய் நினைவிலிருக்க வாய்ப்புகள் குறைவு - becos முதல் ஆல்பத்துக்கு நீங்கள் வழங்கிய விளாசலில், இந்த World War II யுத்த காலத்துப் பெண் பைலட்டின் மீத சாகசங்கள் மீது அப்டியே ஒரு கூடையைப் போட்டு மூடி விட்டிருந்தோம். பிரமாதமான சித்திரங்களும், கலரிங்கும் இந்த தொடரின் பலங்கள் என்ற பெரும் நம்பிக்கையில், கொள்முதல் பண்ணும் போதே - ஒன்றுக்கு மூன்றாய் ஆல்பங்களை ஏக் தம்மில் வாங்கி விட்டிருந்தோம் ! And எனக்கு அந்த முதல் ஆல்பம் நன்றாக வந்திருந்ததாகவே தோன்றியது ! ஆனால் மூ.ச.க்களில் "பழகிப் பார்க்கும் படலங்கள்" அரங்கேறிய அந்தத் துவக்க நாட்களில், சும்மா சகட்டு மேனிக்கு மொத்துக்கள் விழுந்ததைத் தொடர்ந்து உடனடி VRS தந்திருந்தோம் - இந்த அம்மையாருக்கு ! But இது takeoff ஆகிடாததன் காரணத்தை இன்றளவில் யூகிக்க இயலவில்லை ! 

மொத்தம் 4 அத்தியாயங்கள் கொண்ட இந்தத் தொடர் தலா 2012 ; 2013 ; 2014 & 2015-ல் வெளியாகி நிறைவு கண்டது !!  Phewwww !!


2.பிரளயம் - PANDEMONIUM !! 

ஆர்வக் கோளாறு இருக்கலாம் - - தப்பில்லை ; ஆனால் கோளாறான ஆர்வம் இருக்கலாகாது - என்பதை நான் உணர்ந்த சமீபத் தருணங்கள் 2 ! முதலாவது தருணம் - ஜம்போவில் வெளியான "காலவேட்டையர்" ஆல்பத்துக்கென நான் புரண்ட பொழுதுகளில் ! எப்படியென்று  நினைவில்லை ; ஆனால் இந்த ஆக்கத்தின் இங்கிலீஷ் பதிப்பினை ஏகப்பட்ட ஆண்டுகளுக்கு முன்னமே வாசித்த சமயத்தில் எனக்குத் தாறுமாறாய் பிடித்துப் போயிருந்தது ! So இதன் உரிமைகளுக்கென பல்டிக்கள் அடிக்க அவசியமான போதும் - 'ஆட்றா ராமா...தாண்ட்றா ராமா !!' என்று சளைக்காது அடித்திருந்தேன் ! ஆனால் கதையினை வெளியிட வேண்டிய சமயத்தில் எடிட்டிங்கில் அமர்ந்தால் கிறுகிறுத்துப் போனது ! எங்கெங்கிருந்தெல்லாமோ காதில் சரம் சரமாய் புய்ப்பங்களைக் கோர்ப்பது போலவே தோன்றிட, "இதுக்கு தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா ?" என்று வினவிக் கொள்ளத் தோன்றியது ! 

And அதே போலான இன்னொரு தருணம் தான் PANDEMONIUM என்ற முப்பாக ஆல்பத்துக்கு ரைட்ஸ் வாங்கிய வேளையிலும் நிகழ்ந்தது ! 

செம டெரரான ராப்பர்களையும், கதை பிரிவியூக்களையும் நெட்டில் பார்த்ததை தொடர்ந்து, இது செமத்தியான திகில் கதை போலும் ; அமானுஷ்ய ஐட்டங்கள் தூக்கலாக இருக்கும் போலுமென்று எண்ணியிருந்தேன் ! ஆனால் கதையும் வந்து, மொழிபெயர்ப்பினையும் தொடங்கிய போது தான், இங்கே தூக்கலாக இருந்த சமாச்சாரங்களே வேறு என்பது புரிந்தது ! இது ஒரு திகில் கதையல்ல ; மாறாக ஒரு காசநோய் மருத்துவமனையில் அரங்கேறிய அவலங்கள் சார்ந்த மிகையான கற்பனைகள் என்பது புரிந்தது ! நிஜமாகவே அமெரிக்காவில் இருந்த / இருக்கும் காசநோய் மருத்துவமனை தான் இந்தக் கதையின் பின்னணி ! இதோ விக்கிப்பீடியாவில் பாருங்களேன் : https://en.wikipedia.org/wiki/Waverly_Hills_Sanatorium 

இந்த முப்பாக ஆல்பத்துக்கு ஹாரர் கதை ஸ்பெஷலிஸ்டான Christophe Bec (இவர் யாரென்று தெரிகிறதா guys ?) தான் கதாசிரியர் என்பதால், எனது அனுமானம் கொஞ்சம் பிசகாகி விட்டது ! So பரணில் துயிலும் பார்ட்டிகளில் இது வெயிட்டானது - in more ways than one !!

3.ட்யூக் - அத்தியாயம் 3 : 

ஓவியர் ஹெர்மனை நாம் 1985 முதலே அறிவோம் - பரட்டை மண்டை கேப்டன் பிரின்ஸ் உபயத்தில் ! பின்னாட்களில் ஜெரெமியா அறிமுகமான பொழுதுகளில் மீண்டும் அவரோடு கை குலுக்கும் வாய்ப்பு கிட்டியது ! And அந்த நொடியில் எனக்குள் எழுந்த வேகம் தான் "ட்யூக்" தொடரை இட்டு வரக் காரணமாகியது ! 2017-ல் தொடங்கிய இந்த வன்மேற்குத் தொடருக்கு ஹெர்மன் ஓவியங்கள் போட, அவரது புதல்வர் Yves H கதை இலாக்காவினைப் பார்த்துக் கொண்டிருந்தார் ! இந்தக் குடும்பத்தொடர் இன்று வரையிலும் பிரெஞ்சில் டீசெண்டாய் வண்டி ஒட்டிக் கொண்டே செல்கிறது - 2023-ல் ஆல்பம் # 7 வெளியாகியுள்ளது ! நம் மத்தியில் "ஒருமுறை கொன்று விடு !" என்று டபுள் ஆல்பமாய் ட்யூக் அறிமுகம் ஆனார் ! And தொடரின் கதை # 3 இன்னமும் பரணில் ஸ்லீப்பிங் ! இதோ - அவரை நினைவூட்ட ஆல்பம் # 2-ன் அட்டைப்படம்  ! 



4.சட்டித் தலையன் ஆர்ச்சி:

மூன்றோ – நான்கோ ஆண்டுகளுக்கு முன்பாக ரூ.40/- விலையில் – எல்லோரும் வாங்கும் விதமான புக்ஸ் போட எண்ணி, அதற்கொரு பிரத்தியேக சந்தாத் தடமும் உருவாக்கியிருந்தோம் – நினைவிருக்கிறதா? க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட்; பெரிய சைஸில் டயபாலிக்; மாடஸ்டி; ஆர்ச்சி என்றெல்லாம் அதில் போட்டிருந்தோம்! ஆனால் மிகச் சரியாக கொரோனா லாக்டௌன் புலர, அந்த முயற்சி பிசுபிசுத்துப் போனது! தவிர, விலை நாற்பதோ – நானுாறோ; வாங்குவது சுற்றிச் சுற்றி அதே வட்டம் தான் என்றான பின்னே, புராதனம் சொட்டிய அந்தக் கதைகள் எதுவுமே பெருசாய் ரசிக்கவில்லை! So அந்தத் திட்டமிடலை மொத்தமாய் மூட்டை கட்டியிருந்தோம்! அந்நேரம் வாங்கிப் போட்டிருந்த கதைகளில் ஒரு சட்டித் தலையன் கதையும் உள்ளதென்பது ஞாபகத்துக்கு வருகிறது! நம்மாளை மறுக்கா களமிறக்கினால் எதைக் கொண்டு சாத்துவீர்கள்? என்ற யோசனையில் மோவாயைத் தடவிக் கொண்டிருக்கிறேன்!


5.  மேட் டில்லன்:


அதே தனித்தடம்; அதே நாற்பது ரூபாய் தொடருக்கென வாங்கியிருந்த இன்னொரு கதை இது! ஆனால் அண்ணாச்சியை ராணி காமிக்ஸில் ஏற்கனவே போட்டு விட்டார்களென்பதை நீங்கள் சொல்லித் தான் தெரிந்து கொண்டேன்! So ‘அப்பாலிக்கா பார்த்துக்கலாம்‘ என்று கிடத்திய கதை இன்று வரை கரை சேர்ந்தபாடில்லை!



 6. வைகறைக் கொலைகள்!


சித்திரங்களைப் பார்த்து மயங்கியே வாங்கிப் போட்ட b&w கிராபிக் நாவல் இது! வழக்கமான கோட்டோவியங்களாய் அல்லாது, அற்புதமாய் wash டிராயிங்க் பாணியில் இதனை ஓவியர் Rene Follet வரைந்திருக்கிறார்! And கதையோ 1952ல் பிரான்சில் நிஜமாகவே நடந்ததொரு கொலைச் சம்பவம் சார்ந்தது! இங்கிலாந்திலிருந்து விடுமுறைப் பயணமாய் ப்ரான்ஸிற்கு வந்திருந்ததொரு குடும்பத்தின் மூன்று பெண் பிள்ளைகள் சுடப்பட்டு இறந்து விடுகிறார்கள்! அது சார்ந்த விசாரணையில் ஒரு உள்ளுர் பெரியவரும் கைதாகுகிறார்! ஆனால் நீண்டு சென்ற விசாரணையின் முடிவில் ஆதாரங்கள் வலுவாக இல்லையென்று அவர் விடுவிக்கப்படுகிறார்! ப்ரெஞ்சில் திரைப்படமாகவும் வெளிவந்த இந்த விவகாரத்தின் காமிக்ஸ் வார்ப்பு தான் நான் குறிப்பிடும் மேற்படி ஆல்பம்! ஜம்போவில் அறிவிக்கவும் செய்து, ப்ரெஞ்ச் மொழி to இங்கிலீஷ்; பின்னே இங்கிலீஷ் to தமிழும் மொழிபெயர்க்கப்பட்டு, DTPம் முடிந்து என் மேஜைக்கு வந்த புண்ணியத்தையும் இது தேடிக் கொண்டது! ஆனால் 15 பக்கங்கள் தாண்டுவதற்குள்ளாகவே புரிந்து விட்டது; பேனா பிடித்திருந்த கருணையானந்தம் அங்கிளுக்கு இந்தக் கதையின் களம் சார்ந்து நிறையவே gaps இருப்பது! இங்கிலீஷ் ஸ்க்ரிப்டுமே ரொம்பவே சுமாராக இருக்க, அந்நேரத்து அவசரத்துக்கு வேறு கதை எதையோ களமிறக்கி விட்டு, “வை.கொ”வை பீரோவில் வை! என்று மைதீனிடம் சொல்லியிருந்தேன்! வேறு பணிகள் சார்ந்த பிரஷர் இல்லாததொரு நாளில் இதனை fresh ஆக அணுகிட எண்ணியுள்ளேன். அந்த pressure free நாள் தான் ஏதோ?


7. உலகத்தின் கடைசி நாள்!

அந்த நாளைத் தேடும் முனைப்பில் கண்ணில் பட்டது தான் ”உலகத்தின் கடைசி நாள்”! போன பத்தியின் வரிகளை அப்படியே இங்கே copy-paste பண்ணிக்கலாம்! அப்படியே களத்திற்குள் மர்ம மனிதன் மார்டினையும், அமானுஷ்யங்களின் துப்பறிவாளரான டைலன் டாக்கையும் இழுத்துப் போட்டுக் கொண்டால் கச்சிதமாக முடிந்தது! அதே மிதமான ஆங்கில ஸ்க்ரிப்ட்; புரிதலில் ஏகமாய் பிசகுகள் கொண்டதொரு தமிழாக்கம் & மண்டையை ஏகமாய் பிய்த்துக் கொள்ளச் செய்யும் கதைக்களம்! போன பத்தியின் கடைசி வரியையே இங்கேயும் போட்டுக்கலாம்! அட்டைப்படமெல்லாம் பிரிண்ட் ஆகி ரெடியாக உள்ள இதழிது!

 

8. கதிரவன் கண்டிரா கணவாய்:


Black & White கிராபிக் நாவல்களில் பரீட்சார்த்தம் செய்து வந்த பொழுதுகளில் வாங்கிப் போட்ட கிராபிக் நாவல்களுள் இதுவும் ஒன்று! கொஞ்சம் கவர்ச்சி; கொஞ்சம் ஆக்ஷன்; கொஞ்சம் ஹாரர் என்று பயணிக்கும் 150+ பக்க ஆல்பமிது! கி.நா.க்கள் மொத்து வாங்கிய பின்னணியில் பீரோவுக்குப் பின்னே போன கதையில் இதுவும் ஒன்று!


9. கைப்புள்ள ஜாக்-புக் #2 :

விலையில்லா இணைப்பாய், சின்னச் சின்ன கதைகளோடு வந்த இந்தச் சுள்ளானை நினைவுள்ளதா folks? இவனது ஆல்பம் # 2 முழுசாய் பெரும் தூக்கம் துயின்று வருகிறது பீரோவுக்குள்!



10.
நெவாடா # 2&3 :

2023-ல் அறிமுகமான தொடரிது என்பது நினைவிருக்கலாம் guys! ஹாலிவுட்டிலிருந்து காணாமல் போகும் சூப்பர் ஸ்டாரை தேடிப் பிடித்து மீட்டு வரும் ஆல்-இன்-ஆல் அழகுராஜாவாக அறிமுகமானவர்! அத்தனை பிரமாதமான வரவேற்பினைப் பெற்றிருக்கவில்லை இவரது முதல் ஆல்பம்! And ஏற்கனவே மெயின் தடத்திலிருந்த SODA; ஆல்பா; சிஸ்கோ; ப்ளுகோட்; போன்றோரே ‘அப்டிக்கா‘ ஓரமாய்ப் போய் விளையாடும் அவசியம் இந்த 2024ல் எழுந்திருக்க “நெவாடா – சித்தே சும்மா கிடடா!” என்று சொல்ல வேண்டிப் போச்சு! தொடரின் ஆல்பம்ஸ் # 2 & 3 கைவசமுள்ளன!



11. தரைக்கு வந்த வானம்!


கதை சார்ந்த previews; நெட்டில் தட்டுப்பட்ட சிலாகிப்புகளால் நாம் பாய்ந்த ஆல்பம் இது! ஆனால் அப்புறமாகத் தான் புரிந்தது முதல் ஆல்பத்துக்கு ஒரு open end தந்து கதையை இரண்டாம் & மூன்றாம் பாகங்கள் வரை இழுத்துச் சென்றுள்ளனர் என்பது! So அவற்றையும் வாங்கியான பிற்பாடு ‘ஏக் தம்மில்‘ வெளியிட்டாக வேண்டும்!

 

12. நீதி தேவன் நம்பர் #1 :



இவரது மினி சாகஸங்கள் நிறையவே கையிருப்பில் உள்ளன! ஏகமாய் அந்த british ஹ்யூமர் இழையோடும் வசனங்களுக்குப் பொருத்தமான தமிழாக்கம் தந்திட, ஆராமான பொழுதுகள் அவசியம்! அந்தப் பொழுதுகள் கிட்டிடும் சமயம் இவர் மறுபடியும் நீதி பரிபாலனம் செய்ய குட்டி விலைகளிலான புக்குகளில் ஆஜராவார்!

Phew!! அதற்குள்ளாகவே ஒரு டஜன் வந்து விட்டது எண்ணிக்கை! இன்னமும் கொஞ்சம் உருட்டினால் – ஓராண்டுச் சந்தாவுக்குப் போடும் அளவிற்கான கதைகள் கிட்டினாலும் வியப்பிராது! இந்த பீரோ பார்ட்டிகளை சிறுகச் சிறுக வெளிச்சத்தைப் பார்க்கச் செய்வதானால் உங்களின் dos & donts அறிவுரைகள் என்னவாகயிருக்குமோ folks? கொஞ்சம் சொல்லுங்களேன்?! 

 

And இந்த ஒற்றை டஜனிலிருந்து மூன்றை தேர்வு செய்வதாக இருப்பின் - what would be your choices ?


Bye for now... Have a fun weekend! See you around! 

175 comments:

  1. Replies
    1. சூப்பர் சகோ
      வாழ்த்துகள்

      Delete
    2. அதுக்கென்னா இப்போ??

      Delete
    3. /// First ///

      யோவ் மிலிட்ரி.. இங்க என்னய்யா பண்ற.. 😂

      Delete
  2. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்💐💐

    ReplyDelete
  3. Hi guys, first time I top ten😀😀😀

    ReplyDelete
  4. Replies
    1. எனது சாய்ஸ்கள்:
      வைகறைக் கொலைகள்
      உலகத்தின் கடைசி நாள்
      கதிரவன் கண்டிரா கணவாய்

      இந்த வாய்ப்பினை விட்டால் கிராபிக் நாவல்களை வேறெப்பொழுது கிடைக்கும். இன்னொரு குற்ற நகரம் கொல்கத்தா.. விதி எழுதிய வெள்ளை வரிகளுக்கு வெயிட்டிங் சார்.

      Delete
  5. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  6. // ஒற்றைக்கரத்தாரை 2025-க்கும் டிக் அடித்து விடலாமுங்களா ? //

    ஓ எஸ்

    ReplyDelete
  7. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நமது அன்பு ஆசிரியருக்கும், அன்பு நண்பர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      Delete
  8. //உங்களின் dos & donts அறிவுரைகள் என்னவாகயிருக்குமோ folks? கொஞ்சம் சொல்லுங்களேன்?!//

    Print on demand try செய்யலாம் சார். Costly factor தான் ஆனால் கருப்பு வெள்ளை கதைகளுக்கு இந்த முயற்சியை திட்டம் பார்க்கலாம் சார்

    ReplyDelete
  9. கதிரவன் கண்டிரா கணவாய்
    தரைக்கு வந்த வானம்!
    Intha 2 kum marana waiting

    ReplyDelete
  10. நீதி தேவன் நெ. 1., கைப்புள்ள ஜாக், ஆர்ச்சிபுத்தகவிழா மாணவர்களுக்கான சூப்பர் சாய்ஸ்.எங்களுக்குமே.

    ReplyDelete
  11. சார் எனது கருத்து. அப்படியே இரண்டு இரண்டு புத்தகங்களாக புத்தக விழாவில் இந்த புத்தகங்களை வெளியிட்டு விடலாம்.

    ReplyDelete
  12. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  13. சட்டித் தலையன் ஆர்ச்சி மீண்டும் சாகசம் செய்தால் மகிழ்ந்திடுவேன்.

    பாண்டோனியம் தொடர் ரசனையில் முடிந்தவர்களுக்கு என்ற முத்திரையுடன் வெளியாகலாம்.

    லேடி ஸ்பிட் பையர் ஒன்று இரண்டு மட்டுமே மிச்சம் இருந்தால் வெளியிட்டு விடலாமே...

    அப்படியே அந்த லேடி S கதைகளையும் நீல பொடியர்கள் கதைகளையும்...

    ReplyDelete
  14. //And இந்த ஒற்றை டஜனிலிருந்து மூன்றை தேர்வு செய்வதாக இருப்பின் - what would be your choices ?//

    விண்வெளி வேங்கை - Lady Spitfire !!
    நெவாடா # 2&3 :
    வைகறைக் கொலைகள்!

    (முதல் preference தரைக்கு வந்த வானம். எப்படியும் வந்து விடும் என்பதால் லிஸ்டில் சேர்க்கவில்லை சார்)

    ReplyDelete
  15. நீதி தேவன் கடேசி ; ஆர்ச்சி லாஸ்ட் பட் ஒன் என வைத்துக் கொண்டு மற்றவற்றை வெளியிடலாம்.

    1. உலகத்தின் கடைசி நாள்

    2. வைகறை கொலைகள்

    3. நெவாடா.

    முதல் மூன்று.

    ReplyDelete
  16. கோடை புத்தக விழா preview சும்மா அருமையாக உள்ளதே. 8 புத்தகங்கள், 2 கலர், புதுசு 7, மறுபதிப்பு 1, 2 சர்ப்ரைஸ். ஒரு ஆக்சன் நாயகர் மீள் வருகை. அடடா அடடா . எப்போ சார் முழு படமும் வரும்?

    ReplyDelete
    Replies
    1. மூன்று தேர்வுகள்

      1. பிரளயம்
      2. வைகறை கொலைகள்
      3. கதிரவன் காண்டிரா கணவாய்

      Delete
    2. எனக்கு 3மே கி நா தான்.

      Delete
  17. 1.Mat Dillon
    2.தரைக்கு வந்த வானம்
    3.Archie

    ReplyDelete
  18. ஆன்லைன் மேளா புத்தகங்கள் பற்றிய தகவல்கள் அருமை. ஆவலுடன்.

    ReplyDelete
  19. 1. Robot Archie
    2. Kaippulla Jack
    3. Mat Dillon
    No Terror - No Horror-No Apocalypse adventures sir !

    ReplyDelete
  20. // And இந்த ஒற்றை டஜனிலிருந்து மூன்றை தேர்வு செய்வதாக இருப்பின் - what would be your choices ? //

    கைப்புள்ள ஜாக்-புக் #2

    சட்டித் தலையன் ஆர்ச்சி

    தரைக்கு வந்த வானம்!

    ReplyDelete
  21. My choices:
    1. கதிரவன் கண்டிரா கணவாய்
    2. வைகறைக் கொலைகள்!
    3. Lady Spitfire

    ReplyDelete
  22. இரவு வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  23. ஏனோ "சட்டி தலையன் " என்னால் படிக்க முடியலங்க சார். 😔

    ReplyDelete
  24. பாவம்... என்ன கொடுமை..3 பெண்களை கொன்ற அந்த கொடூர கொலைகாரன் யாரென்று கண்டுபிடித்தார்களா..
    தண்டனை கிடைத்ததா அவனுக்கு... சொல்லுங்க சார்... 😔

    ReplyDelete
  25. 1.குட்டி சர்ப்ரைஸ் மெய்யாலுமே ஜாலியான இதழ் என்றால்... ஒரு வேளை ஜாலி ஜம்பர் ஹீரோ போல கலக்கும் கதையோ?🤔🤔😀

    2. மீள் வருகை புரிய இருக்கும் action hero டியூராங்கோ வாக இருக்குமோ?🤔😎😉

    ReplyDelete
  26. இரவு வணக்கம், இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  27. // ஒற்றைக்கரத்தாரை 2025-க்கும் டிக் அடித்து விடலாமுங்களா ? //

    Double Yes

    ReplyDelete
  28. 1. Lady Spitfire
    2. Nevada
    3. கைப்புள்ள ஜாக்
    4. ட்யூக்
    5. ஆர்ச்சி

    இவர்களில் எவராயினும் ஓகே சார்

    ReplyDelete
  29. ச்சை..எனக்கு இந்த சர்ப்ரைசே பிடிக்காது

    ஸ்மர்ஃப்ஸ் மாடுலேஷனில் படிக்கவும்.

    சீக்கிரம் என்னென்ன சர்ப்ரைஸ் என்று சொல்லுங்கள் சார்

    ReplyDelete
  30. //ஆதியோட 'மடாலய மர்மம்' மெரி இவ்ளோ தெளிவா இருக்குதே ?//

    -- லயன் காமிக்ஸ் பிளாக் last post

    எஸ் சார், முன்பின் பக்கமில்லா அது தான் 'மடாலய மர்மம்' என்று கண்டறிய வருடங்கள் பல ஆனது...

    ராணி காமிக்ஸ் மாடஸ்டி கதைகள் பார்த்து தான் நமது லயன் காமிக்ஸ் பெஞ்ச் மார்க் என்னவென தெரிந்து கொண்டேன்...

    அது மிஸ் ஆகும் போதெல்லாம் நெஞ்சம் பொறுப்பது இல்லையே... சார்...

    ReplyDelete
  31. "விண்வெளி வேங்கை - Lady Spitfire !!" அது ஏனோ தெரியல, நான் படிக்கும் காமிக்ஸ் ஏதும் இங்கே டேக் ஆஃப் ஆகிறதில்லை...

    ஆர்ச்சி most welcome... Pls try to.bring ஆர்ச்சி in 2 panel பாக்கெட் சைஸ்.

    ReplyDelete
  32. எனது தேர்வு
    1.ஆர்ச்சி
    2.உலகத்தின் கடைசி நாள்
    3.கதிரவன் கண்டிராத கணவாய்

    ReplyDelete
  33. கௌபாய் கதையே எனக்கு அலர்ஜி என்றாலும் தில்லான். கதைகள் நன்று, கொண்டு வாருங்கள், கூடுமானவரை குண்டு கதம்ப வரைட்டி இதழ்களில் கொண்டு வரலாம். அழுத்தமான வெஸ் ஸ்லேட் கதைகள் கூட வரலாமே.

    ReplyDelete
  34. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  35. //இந்த ஒற்றை டஜனிலிருந்து மூன்றை தேர்வு செய்வதாக இருப்பின் - what would be your choices?//

    1.வைகறைக் கொலைகள்
    2. கதிரவன் கண்டிரா கணவாய்
    3.உலகத்தின் கடைசி நாள்

    ReplyDelete
    Replies
    1. தரைக்கு வந்த வானம் ; மீதி ஆல்பங்கள் வந்ததும் வெளியிடலாம்..
      லேடி ஸ்பிட்பயர்: இதை சிங்கிள் ஆல்பமாக வெளியிட்டதால் சொத்தென முடிந்துவிட்டதைப் போல இருந்ததுங்க சார்...இரண்டிரண்டாக வெளியிட்டிருக்கலாம். நாயகி ஆண்வேடமிட்டு பைலட் ஆலதுடன் முடிந்துவிட்டது...

      Delete
  36. Pandemonium
    Nevada
    உலகத்தின் கடைசி நாள்/கதிரவன் கண்டிராத கணவாய்

    ReplyDelete
  37. காமிக்ஸ் காதலர்கள் அனைவருக்கும் இரவு வணக்கம்.

    ReplyDelete
  38. டில்லன் + ஆர்ச்சி +டியூக் வந்தால் நன்றாக இருக்கும்.

    பீரோவில் முடங்கியுள்ள மீதி அனைவரையும் ஒரு வாகான தருணத்தில் வெளியிடலாம்.

    ReplyDelete
  39. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். Sir உங்க ரிவ்யூவே சொள்ளுதே ஒன்னும் சொல்லற மாதிரி இல்லைனு

    ReplyDelete
  40. //And இந்த ஒற்றை டஜனிலிருந்து மூன்றை தேர்வு செய்வதாக இருப்பின் - what would be your choices ?//

    1. ஆர்ச்சி
    2. நீதி தேவன் நம்பர் #1

    என்றேனும் ஒருநாள் தலைவன் ஆர்ச்சியின் "அதிசய தீவில் ஆர்ச்சி!" யை மறுபதிப்பு செய்ய வாய்ப்புள்ளதா sir?

    ReplyDelete
  41. சூப்பர் சார்....மே மேளாவுக்காக பரபரப்பாய்....ஆர்ச்சி...விண்வெளி வேங்கை காட்சிகள் பார்க்கலாமே என ஏங்க வைக்குது...முதல் பாகம் எனக்கும் சூப்பராய் பட்டதாயே நினைவு...

    ப்ரளயம் அட்டைப்படம் மனதை கொள்ளையடிக்குது....


    ட்யூப் மழையில் அட்டைப்படம் மனதை கொள்ளையடிக்க...இன்னோர் சான்ஸ் என கேட்டாலும் வித்தியாசமான இவர் கதைகள் இன்னொருக்கா படித்து பாத்த பின் முடிவை கூறச் சொல்ல...

    மார்ட்டின் எப்படியும் வந்திடும்....

    வைகைக் கொலைகள் எதிர்பார்க்க வைக்குது உங்க வரிகள்...வேட்பாளர்களை அறிமுகம் செய்த நம்பிக்கை தரும் தலைவனைப் போல

    நெவாடா மனதைக் தொட்ட கதை ...சான்ஸ் தந்து பாக்கலாமே

    ReplyDelete
  42. பௌன்சர படிக்க உக்காந்தா முதலிரண்டு பக்கமும் அரசல்புரசலாய் அசத்த தொடர நேரமில்லை...நிச்சயமா வேண்டும்

    ReplyDelete
  43. ஒற்றைக்கரத்தார்...


    அடுத்த வருடத்தில் கண்டிப்பாக கொண்டு வாருங்கள் சார்..

    ReplyDelete
  44. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  45. யாரோட கதையின் இருந்தாலும் தொகுப்புக் வெளியிட்டால் நலம். ஒரு கதை தெய்வீக இருந்தாலும் இன்னொரு கதை தூக்கலாக இருக்கும்.

    ReplyDelete
  46. /// இந்த ஒற்றை டஜனிலிருந்து மூன்றை தேர்வு செய்வதாக இருப்பின் - what would be your choices ?///
    உங்களுக்குஆட்சேபணை இல்லையென்றால் (எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை ) பன்னிரண்டையுமே வெளிய எடுத்து விடுங்க.
    ஆனால் நீங்க மூன்று தான் கேட்பதால்,
    டியூக் ,
    பிரளயம்,
    உலகத்தின் கடைசி நாள்,
    இந்த மூன்றும் என்னுடைய சாய்ஸ்.

    ReplyDelete
  47. ஆசிரியருக்கும் அவர் குடும்பத்திற்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    நம் லயன்-முத்து-வி காமிக்ஸ் அலுவகத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    காமிக்ஸ் சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  48. வைகறை கொலைகள்... அவசியம் போடுங்க சார்.. அப்புறம்.. பௌன்சர்.. ❤️👍..

    ReplyDelete
  49. @Edi Sir..😍😘

    Me in..😍😘

    இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அய்யா 🙏💐💐

    ReplyDelete
  50. உள்ளேன் ஐயா..!!

    1.வைகறைக் கொலைகள்
    2. கதிரவன் கண்டிரா கணவாய்
    3.உலகத்தின் கடைசி நாள்

    4.வைகறைக் கொலைகள்
    5. கதிரவன் கண்டிரா கணவாய்
    6.உலகத்தின் கடைசி நாள்

    7.வைகறைக் கொலைகள்
    8. கதிரவன் கண்டிரா கணவாய்
    9.உலகத்தின் கடைசி நாள்

    10. வைகறைக் கொலைகள்
    11. கதிரவன் கண்டிரா கணவாய்
    12.உலகத்தின் கடைசி நாள்

    ReplyDelete
    Replies
    1. ஒரு தடவை தான் எடுத்துக்குவோம்

      Delete
  51. காமிக்ஸ் அறிந்த நல்லோர்க்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..💐💐💐

    ReplyDelete
  52. My choices. 1.பிரளயம் (மேக்ஸி சைஸில்-ஆபாச பக்கங்களை முடிந்தவரை எடிட் செய்து வெளியிட்டால் மிரட்டலாக இருக்கும்.) 2.தரைக்கு வந்த வானம். 3.கதிரவன் கண்டிரா கணவாய். மீள்வருகை நாயகர் ஜெஸ்வாங்? முதலைப்பட்டாளம் ப்ரின்ஸ்?சாகச வீரர் ரோஜர்?

    ReplyDelete
  53. //And இந்த ஒற்றை டஜனிலிருந்து மூன்றை தேர்வு செய்வதாக இருப்பின் - what would be your choices ?//

    1.நெவடா

    இவரது முதல் புத்தகம் கதை நன்றாகவே இருந்தது
    Bckground டார்க் ஆகினதுனால பகலில் மட்டும் படிக்க முடிந்த பக்களினால் எடுபடாமல் இருந்திருலாம்
    என்னோட முதல் தேர்வு இவர்தான்

    2. உலகத்தின் கடைசி நாள்

    கதை எப்படி இருந்தாலும், டைலன் டாக் + மார்டின் மிஸ்ட்ரி கூட்டனியை காண ஆவலுடன்

    3. வைகறை கொலைகள்

    கதைக்கரு ஆர்வப்படுத்துகிறது, படிக்க மிக ஆவலுடன்

    ReplyDelete
    Replies
    1. உலகத்தின் கடைசி நாள்

      கதை எப்படி இருந்தாலும், டைலன் டாக் + மார்டின் மிஸ்ட்ரி கூட்டனியை காண ஆவலுடனன்



      அதே அதே சூப்பரா சொன்னிங்க தோழி

      Delete
  54. அனைவருக்கும் என் அன்பிற்கினிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. எனது வரிசை நீதிதேவன் நெம் ௦1, டியூக், நெவாடா.. அந்த நீதிதேவன் நெம் ஒன் சூப்பரான தலைப்பு.. அதற்கே அவரை பதிப்பில் பார்க்க ஆவல்..

    ReplyDelete
  55. அதேசமயம் அந்த கிராபிக் நாவல்கள் பட்டியல் கண்ணைக் கட்டுகிறது.. அவ்வ்..

    ReplyDelete

  56. 1.வைகறைக் கொலைகள்
    2. கதிரவன் கண்டிரா கணவாய்
    3.உலகத்தின் கடைசி நாள்

    ReplyDelete
  57. காரிகன், விங் கமாண்டர் ஜார்ஜ் இவர்களுக்கு டைஜஸ்ட் போட்டது போலவே பழைய ஜேம்ஸ் பாண்ட், இன்ஸ்பெக்டர் கருடா ஆகியவர்களுக்கு டைஜஸ்ட் போடலாமே சார்

    ReplyDelete
  58. எனது சாய்ஸ்
    1. கதிரவன் கண்டிரா கணவாய்
    2. வைகறை கொலைகள்
    3. டியூக்

    ReplyDelete
  59. நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐💐💐

    ReplyDelete
  60. 1.ஆர்ச்சி
    2.மேட் டில்லன்
    3.லேடி ஸ்பிட்பயர்

    ReplyDelete
  61. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐💐

    வைகறைக் கொலைகள்
    கதிரவன் கண்டிரா கணவாய்
    உலகத்தின் கடைசி நாள்

    ReplyDelete
  62. அன்பிற்கினிய ஆசிரியர், அவர்தம் குடும்பத்தார்க்கும், லயன் அலுவலக நண்பர்களுக்கும் , அவர்கள் குடும்பத்தார்க்கும் ,தளத்தில் உலவும் அனைத்து நண்பர்களுக்கும், அவர்களது குடும்பத்தினர்க்கும், எனது இனிய மனம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  63. எச்சூச் மீ, இந்த அமேசான், பிளிப்கார்ட்டில் எல்லாம் எக்சேஞ் வசதி இருப்பது போல, நீங்கள் பட்டியலிட்டிருக்கும் கதைகளின் உரிமைகளை அந்தந்த பதிப்பகத்தாரிடமேதிருப்பிக் கொடுத்து விட்டு, அவற்றுக்குப் பதிலாக வேறு கதைகளை வாங்கிக் கொள்ள முடியுமா என்று, சும்மாவேனும்  விசாரித்துப் பாருங்களேன் சார்! :-)

    ReplyDelete
  64. ஆசிரியருக்கும் லயன் குழும நண்பர்களுக்கும், அருமை வாசக நண்பர்களுக்கும் இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள் ❤️.

    ஜனவரியில் வெளியான லார்க்கோவையும் மிஞ்சிவிட்டார் தங்கம் தேடிய ஒற்றைக்கையர்.
    அவரை 2025 வரை காக்க வைப்பானேன் சார்?, இந்தவருடமே ஏதாவது ஒரு வகையில் வெளியிடலாமே சார்?.

    ஸ்டாக்கில் உள்ள 2 தவிர மற்றதெல்லாம் போடாலமே சார்.
    டியூக் அன்றே ரெம்ப சோதித்தார்,
    நெவாடா பிரச்சனை இல்லதான் ஆனா ரெம்மவுமே டார்க் பக்கங்கள்.
    ஆர்ச்சியை ஏதாவது ஒரு ஸ்பெஷல் புக்கில் துணைக் கதையாக நுழைத்து கொடுங்கள் சார்.
    மூன்று மட்டுமே சாய்ஸ் என்றால்...
    1) கதிரவன் கண்டிரா கணவாய்.
    2)வைகறைக் கொலைகள்.
    3)மேட் டில்லன்.

    ஏப்ரல் மாத வாசிப்பில் முதலிடம் பிடிப்பது
    பெளன்சர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. முதலிரண்டு ஆல்பங்களுக்குப் பின் எதிர்பார்த்த வேகம் மற்றும் அதிரடிகளுக்கு கொஞ்சமும் சளைக்காமல் வந்துள்ள ஆல்பம்
    இந்த வருடத்தின் ப்ளாக்பஸ்டர்.

    2) பாதியோடு நின்றாலும், படித்தவரைக்கும்
    சுவாரஸ்யத்துக்கு எந்த குறையும் இல்லாது இருந்தது "பகைவருக்கு பஞ்சமேது?".
    இந்த தொடரை முழுமையாக்க ஏதாவது செய்யுங்கள் சார்.
    இப்படி பாதியோடு நின்று பூரணமாகாமல் உள்ளது வருத்தமே.

    3)வேதாளர் திருமணத்தை தவிர ஒன்றுமில்லை என்றாலும், பழைய க்ளாசிக் எனும் பட்சத்தில் படிக்க வைத்தது "வேதாளருக்கு திருமணம்".
    கலரிங், முந்தைய வேதாளருக்கு இது ஓகே.
    பேனல்களை மட்டும் இன்னும் சிறிதாக போட்டிருந்தால் மாஸ்.

    ஆன்லைன் ஸ்பெஷல் வெளியீடுகளை எதிர்பார்த்து ஆவலுடன்....

    ReplyDelete
  65. 7,8&10 மட்டுமே... மற்றவற்றை அமிர்தாஞ்சனோடு தான் அணுக வேண்டுமோ?

    ReplyDelete
  66. ஸ்பிட்பயருக்கு 'எஸ்' எவ்வளவோ பரால்ல.....

    ReplyDelete
  67. "ஒற்றைக்கரத்தாரை 2025-க்கும் டிக் அடித்து விடலாமுங்களா ? "

    'சூப்பரபூ'.... மரண மாஸ் ++++

    ReplyDelete
  68. பகைவருக்கு பஞ்சமேது: காஃபின் என்பவனை பிடித்து சென்றால் டெக்ஸ் வில்லர்தான் குற்றமற்றவர் என நிரூபிக்கலாம் என்று செல்லும் கதை. காஃபின் யார் அவன் தொழில் என்ன, ராணுவத்திற்கும் இவனுக்கும் உள்ள தொடர்பு என்ன, உண்மையில் கொஞ்சம் வில்லங்கமான வில்லன்தான். டெக்ஸ் தனது நண்பன் குதிரை திருடன் ஜிம்மி உடன் காஃபினை தேடி பயணிப்பது போகும் வழியில் சந்திக்கும் சொலிடட் கதையின் முக்கிய பாத்திரமாவது சிறப்பு! ஆங்காங்கே சில அடிதடிகள், திருப்பங்கள் என சுவாரசியமாக சென்ற கதை முக்கியமான இடத்தில் தொடரும் என போட்டது முழுமையான வாசிப்பு அனுபவத்தை கொடுக்கவில்லை :-(

    கதையின் ஆரம்பத்தில் ரேஞ்சர்கள் சந்திப்பு அங்கு கிட் கார்சன், பக், மற்றும் டெக்ஸ் வில்லரின் இந்நாள் நண்பர்களை காட்டியது சிறப்பு! டெக்ஸ் மேல் உள்ள தவறான அனுமானம் அவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக விலக உள்ள காரணத்தை கோடிட்டு காட்டியது சிறப்பு.

    இளம் டெக்ஸ் கதைகளை மாதம் ஒன்றாக (பிரித்து வெளியிட) எனது ஆதரவை கடந்த வருடம் தெரிவித்து இருந்தேன்! இந்த கதையை படித்த பின் அந்த முடிவை மாற்றி விடுகிறேன்! ஆமாம் இனிவரும் நாட்களில் இளம் டெக்ஸ் கதைகளை பிரிக்காமல் முழு கதையையும் ஒரே புத்தகமாக வெளியிடுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. //இளம் டெக்ஸ் கதைகளை பிரிக்காமல் முழு கதையையும் ஒரே புத்தகமாக வெளியிடுங்கள் சார்//

      +9

      Delete
    2. ///இனிவரும் நாட்களில் இளம் டெக்ஸ் கதைகளை பிரிக்காமல் முழு கதையையும் ஒரே புத்தகமாக வெளியிடுங்கள் சார்.///

      இது பேச்சு!!

      Delete
    3. இது தான் பேச்சு!

      Delete
  69. 1. சார்.. நான் கி.நா'க்கள் எல்லாவற்றையும் ஆதரிப்பேன்
    2. மேட் டில்லன் - ஆதரிப்பேன்
    3. கைப்புள்ள ஜாக் - ஆதரிப்பேன்

    நீதிதேவனை இதற்குமுன்பு படித்த ஞாபகம் இல்லை.

    ஆர்ச்சி கதைகள் கூட ஓகே தான்!!

    'ட்யூக்' கதையைப் படித்த பிறகு இப்போல்லாம் நான் Dukes பிஸ்கட் சாப்பிடுவதைக் கூட நிறுத்திவிட்டேன் சார்!

    ReplyDelete
    Replies
    1. // Dukes பிஸ்கட் சாப்பிடுவதைக் கூட நிறுத்திவிட்டேன் சார்! //

      LOL

      Delete
    2. @கடல்
      //So sad///
      நான் பிஸ்கட் சாப்பிடறதை நிறுத்திட்டேன்றதுக்காக வருத்தப்படற அந்த மனசு இருக்கே... அதான் சகோ கடவுள்!

      Delete
  70. My Choice

    1. Lady Spitfire
    பிரமாதமான சித்திரங்கள், வாய் பிளக்க வைக்கும் கலரிங், நாம் அதிகம் கண்டிராத வான்வெளி சாகசங்கள். நிச்சயம் சோடை போகாத கதை வரிசை இது. எனக்கு பிடித்து இருந்தது. நண்பர்கள் தவற விட வேண்டாம். வேறு வாய்ப்பு இல்லை. பயன்படுத்தி கொள்வோம்.

    2. பிரளயம்
    நமது எடிட்டரே சொல்லி விட்டார், இருப்பதிலேயே இது தான் weight ஆனதென்று. தயக்கத்தை ஓரம் கட்டி விட்டு வெளியிடுங்கள் சார்.

    3. வைகறை கொலைகள்
    வித்தியாசமான கதை மற்றும் ஓவியம்.

    Next 3
    4. உலகத்தின் கடைசி நாள்
    5. தரைக்கு வந்த வானம்
    6. கதிரவன் கண்டிரா கணவாய்

    அடுத்த சாய்ஸ்
    7. நேவேடா

    வந்தாலும் ok வராவிட்டாலும் ok
    8. கைப்புள்ள ஜாக்

    பீரோவுக்கு உள்ளேயே இருக்கட்டும், வேறு வழி இல்லாமல் போகும் போது பயன்படுத்தி கொள்ளலாம்
    9. டியூக்
    10. டில்லான்

    முடிந்தால் பீரோவில் இருந்து பரண் அல்லது ஏதாவது கண்ணில் படாத இடத்திற்கு மாற்றி விடுங்கள்
    11. ஆர்ச்சி
    12. நீதி தேவன்

    இந்த நீதி தேவன் வேறு அடிக்கடி வந்து பயமுறுத்துகிறார். இடைவெளி விட்டு இரண்டு முறை வந்தும் சாதிக்க தவறியவரை இனி மறப்பதே நலம்.

    ReplyDelete
    Replies
    1. // நீதி தேவன் வேறு அடிக்கடி வந்து பயமுறுத்துகிறார். இடைவெளி விட்டு இரண்டு முறை வந்தும் சாதிக்க தவறியவரை இனி மறப்பதே நலம். //

      +1

      Delete
    2. நீதிதேவன் கதைகளை மட்டும் ஏன் துண்டு கதைகளாக வெளியிடுகிறார் என தெரியவில்லை.ஒரு முழுநீள கதையை வெளியிட்டால்தான் அவருடைய தனித்தன்மை என்னவென்று தெரியும்.ஏனென்றால் கதையின் நடப்புகள் எதிர்காலத்தில் நடப்பவை. நிறைய டெக்னாலஜிகள்,ஸ்பைடரின் வலைத்துப்பாக்கி போல ஆயுதங்கள்,வாகனங்கள் என விதவிதமாக இருக்கும்.நீதிதேவனின் ஆக்ஷன் ஸ்டைல் எந்த கதையிலும் காட்டப்படவில்லை.எனலே ஒரு முழுநீள சாகத்தை வண்ணத்தில் வெளியிட்டு பார்க்கலாம்.2K கிட்ஸ்களுக்கு பிடிக்க வாய்ப்புண்டு.(துண்டு துக்கடா கதைகளாவே வெளியிட்டுவிட்டு வாசகருக்கு பிடிக்குமா என்றால் ஒருவேளை டெக்ஸ் கதைகளைகூட இப்படி போட்டிருந்தால் நிச்சயம் டெக்ஸையும் வெறுத்திருப்போம்.

      Delete
  71. 1.நெவாடா (1st கதை ok)

    2. மேட் டில்லன் (கேள்விப் பட்டுள்ளேன், படித்தது இல்லை)

    3.கைப்புள்ள ஜாக் (for cartoon)

    ReplyDelete
  72. 1. வைகறைக் கொலைகள்
    2. பிரளயம் - PANDEMONIUM !!
    3. நெவாடா # 2&3

    ReplyDelete
  73. நண்பர் "மகேந்திரன் பரமசிவம்" அவர்களின் சாய்ஸ்...
    1. வைகறை கொலைகள்
    2. உலகத்தின் கடைசி நாள்
    3. தரைக்கு வந்த வானம்
    4. கதிரவன் கண்டிரா கணவாய்.

    ReplyDelete
    Replies
    1. அட...தபால் ஓட்டோ ?

      Delete
    2. Thank you Sri...Phone Problem Editor sir. Unable to post in blog

      Delete
  74. ////ஒற்றைக்கரத்தாரை 2025-க்கும் டிக் அடித்து விடலாமுங்களா ? ///

    101% யெஸ் சார்...

    ReplyDelete
  75. ///வேதாளருக்குத் திருமணம்" கையிருப்பில் இருக்குமா ? என்பது சந்தேகமே ! ஜனவரியில் வந்த "வீரனுக்கு மரணமில்லை" கடைசி 2 கட்டுக்கள் மட்டுமே கிட்டங்கியில் உள்ளன என்ற நிலவரத்தில் இருக்க, விற்பனைகளில் டெக்ஸுக்கு tough தர வேதாளர் ரெடியாகிவிட்டார் என்பது புரிகிறது //

    ----போட்டிக்கு நாங்க ரெடி!!

    ReplyDelete
  76. *4 முழுநீள புக்ஸ் & 4 குட்டி புக்ஸ் என்பதே இப்போதைய திட்டமிடல் !.///

    போடுங்க வெடியை சார்...2024ல 8புக்கு....எல்லாம் 8.... புக்கும் 8,வருடமும் 2+0+2+4=8..

    பட்டையை கிளப்ப வாழ்த்துகள் சார்💐

    ReplyDelete
    Replies
    1. சந்தா அறிவிப்புக்குப் பின் இப்பலாம் கோடை விழா அறிவிப்பே அதிக எதிர்பார்ப்பை கிளறுது...😍

      Delete
    2. // சந்தா அறிவிப்புக்குப் பின் இப்பலாம் கோடை விழா அறிவிப்பே அதிக எதிர்பார்ப்பை கிளறுது...😍 // உண்மை

      Delete
    3. மண்டையைப் பிளக்கும் வெயில்காலமாக இல்லாதிருப்பின், எதேனுமொரு நகரின் புத்தகவிழாவில் இவற்றை ரிலீஸ் செய்திருக்கலாம் ! But still, this is fun too !

      Delete
    4. காலனின் கால்தடம் மாதிரி ஜில்லுன்னு ரெண்டு புக்கு இருந்தா வகயில் தெரியாதுங்களே

      Delete
  77. ///ஒரேயொரு மறுபதிப்பு ; பாக்கி அனைத்துமே புதுசுகள் ! //..

    1+7....அந்த ஒண்ணு தலையாத்தான் இருக்கும்...

    1994FIFA Quarter finalists...

    Brazil+7Euro teams...

    And the winner is Brazil..foodball தல...

    இங்கும் தல சொல்லி அடிப்பாரு என்பது நிச்சயம்💪💪💪💪

    ReplyDelete
    Replies
    1. இப்போ 2024 நடக்குது

      Delete
    2. மே மாதத்து ரெகுலர் தடத்தில் 'தல' இல்லை என்பதே ஒரு giveaway !

      Delete
    3. அப்போ ஓநாய் வேட்டை Confirm. நன்றி சார்.

      Delete
  78. //And இன்னொரு action நாயகர் கூட தனது மீள்வருகைக்கு பிரமாதமானதொரு ஆல்பத்தோடு வெயிட்டிங் !//

    007 V2.0 ???

    ReplyDelete
    Replies
    1. //007 V2.0 ???//
      BOND 2.0 வந்தா நல்லா தான் இருக்கும் .. ஆனா அது புருனோ பிரேசில் தானு நினைக்கிறேன் அண்ணா ..

      Delete
  79. My 3 from 12...

    1.கதிரவன் கண்டிரா கணவாய்:
    2.வைகறைக் கொலைகள்!
    3.ட்யூக் - அத்தியாயம் 3

    ReplyDelete
  80. நீதிதேவன் கதைகளை மட்டும் ஏன் துண்டு கதைகளாக வெளியிடுகிறார் என தெரியவில்லை.ஒரு முழுநீள கதையை வெளியிட்டால்தான் அவருடைய தனித்தன்மை என்னவென்று தெரியும்.ஏனென்றால் கதையின் நடப்புகள் எதிர்காலத்தில் நடப்பவை. நிறைய டெக்னாலஜிகள்,ஸ்பைடரின் வலைத்துப்பாக்கி போல ஆயுதங்கள்,வாகனங்கள் என விதவிதமாக இருக்கும்.நீதிதேவனின் ஆக்ஷன் ஸ்டைல் எந்த கதையிலும் காட்டப்படவில்லை.எனலே ஒரு முழுநீள சாகத்தை வண்ணத்தில் வெளியிட்டு பார்க்கலாம்.2K கிட்ஸ்களுக்கு பிடிக்க வாய்ப்புண்டு.(துண்டு துக்கடா கதைகளாவே வெளியிட்டுவிட்டு வாசகருக்கு பிடிக்குமா என்றால் ஒருவேளை டெக்ஸ் கதைகளைகூட இப்படி போட்டிருந்தால் நிச்சயம் டெக்ஸையும் வெறுத்திருப்போம்

    ReplyDelete
  81. 1. விண்வெளி வேங்கை
    2. மேட் டில்லன்
    3. கதிரவன் கண்டிரா கணவாய் & தரைக்கு வந்த வானம்

    ReplyDelete
  82. Replies
    1. என்னதான் சொல்ல வறீங்க ஒளீரய்யா?...
      ஒண்ணுமே புரில.

      Delete
    2. என்ன உங்களுக்கு பிரச்னை? யார் என்ன சொன்னது?

      Delete
  83. Replies
    1. ஆத்தா…நான் பாசாயிட்டேன..!

      Delete
    2. வெற்றி வெற்றி

      Delete
    3. //ஆத்தா…நான் பாசாயிட்டேன..!///


      நம்பமாட்டோம்...

      எங்க... நாலுவரி பிழையில்லாம எழுதிக்காட்டு பாக்கலாம்.!

      Delete
    4. //நம்பமாட்டோம்...

      எங்க... நாலுவரி பிழையில்லாம எழுதிக்காட்டு பாக்கலாம்.!/.

      ஷெரீஃப் be like

      " மடஸ்டி பாட்டி''
      தோ எழுதிட்டேன். :-)

      Delete
  84. பிரளயம் - PANDEMONIUM !! தங்களது மொழி பெயர்ப்பில் வந்தால் கண்டிப்பாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறேன் சார். எனது ஓட்டு பிரளயத்திற்கு

    அடுத்து நெவாடா மற்றொரு வாய்ப்பு கொடுக்கலாம்

    ReplyDelete
  85. * விண்ணில் ஒரு வேங்கை - Lady Spitfire
    தொங்களில் இருக்கும் கதைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம். சித்திரங்கள் சூப்பரா இருக்கு, கதையும் மனதில் இருக்கு.
    * நெவாடா - நல்ல தொடக்கம் ஒரு மூன்று சான்ஸ் தந்து பாக்கலாம்.
    * தரைக்கு வந்த வானம் or கதிரவன் கண்டிராத கனவாய்
    கி.நா ரசிகன் நான்

    ****No பிரளயம்****
    சொல்வதை வச்சி பார்த்தால் வேண்டாம் அழுகாச்சி

    *** Duke படித்ததாக மட்டுமே நியாபகம் இருக்கு, வேறு எதுவும் சுத்தமாக நினைவில் இல்லை ***

    கைப்புள்ள & நீதிமான் ஒரே புக்காக மாத்தி மாத்தி வந்தால் எப்படி இருக்கும்????

    ReplyDelete

  86. சாபம் சுமந்த தங்கம்....

    அலெக்சாண்டர் ஓடரவ்ஸ்கியின் செல்லபிள்ளை பெளன்சரின் இரு பாக ஹார்ட் பவுண்டு இதழ் சாபம் சுமந்த தங்கம், பெளன்சரின் புதிய அவதாரில் ஜொலிக்கிறது...

    முந்தைய இரு பாக சாகசத்தின் முடிவில் பெளன்சரின் பாதுகாப்பில் வந்து சேரும் செவ்விந்திய சிறுமி பான்சிடாவை சுற்றி சுழலும் கதை, மெக்சிகோவுக்கு பயணப்படுது.

    மெக்சிகோ பயணப்பட்டாலே கதை ஹிட்டு என்பதை நாம் நிறைய முறை பார்த்துள்ளோம்....

    ஆஸ்திரிய இளவரசர் மேக்சிமிலியன் மெக்சிகோ அரியணையை இழக்கும் சமயத்தில் திரட்டிய புதையலே இக்கதையின் ஜீவநாடி...

    பான்சிடாவின் தலையில் டாட்டூவாக புதையல் மேப், அதை அடைய அவளைக் கடத்தும் எல் குச்சீலா ஒரு பக்கம்; கொடூரன் எல் குச்சீலாவிடம் இருந்து பான்சிடாவை மீட்க விரையும் பெளன்சர்& ஜாப் ஒரு பக்கம்; பெளன்சருக்கு உதவ செல்லும் யீன் லீ இன்னொரு பக்கம்னு ஆடுகளம் சூடுபிடிக்க......

    மெக்சிக மலைத் தொடர்கள், சுட்டெரிக்கும் பாலை, டிராகன் குகை, அடுத்து மணல் குன்றுகள்னு மெக்சிகன் பகுதிகளில் நடக்கும் மற்றொரு மெக்கன்னாஸ் கோல்டாகவே காட்சிகள் நம்முன்னே ஓடுகிறது....

    பெளன்சரை மற்றொரு குதிரையில் தொடர்ந்து நாமும் சென்று, புதையலை தேடியலைந்த அனுபவம் மெக்சிகோ மண்ணில் நமக்கும் கிடைக்கிறது....

    ஓவியங்கள் முந்தைய 9பாகங்களை காட்டிலும் ஒருபடி கூடுதலாக கவர்கிறது.... வசனங்களில் பல இடங்களில் ஆசிரியர் விஜயன் சார் ஈடு செய்கிறார்....

    பல காட்சிகள் ஈர்த்தாலும் குறிப்பிடத்தக்க சில காட்சிகள் மீண்டும் மீண்டும் காண வைக்கின்றன பக்கங்களை திருப்பி திருப்பி....

    பெளன்சரும் அவனது குருவும் உரையாடும் கனவு காட்சிகள், ரியோ கிராண்டேவை ஒவ்வொரு கும்பலும் கடக்கும் காட்சிகள், புதையலின் பின்னணி, ஸ்கல்ஸின் நயவஞ்சக வலை விரிப்புகள், செவ்விந்தியரிடம் இருந்து தப்பும் யுக்தி, ட்ராகன் குகை, பிராந்தன் கணவாய் மர்மம், மணல் குன்றுகள், புதையலை மீட்கும் பெளன்சரின் தீட்சண்யம், ஆண்களை இனவிருத்திக்காக மட்டுமே உபயோகித்து உடனடியாக தலையை கொய்யும் அமேசான் அரக்கிகள் கூட்டம், மணல் குன்றுகளில் சேஸிங், வானவில் பாலம், பாலத்தில் பெளன்சருக்கு செயற்கை கையோடு உயிரையும் அளிக்கும் காட்சிகள், தங்கத்தை உருக்கும் படலம்னு நிறைய பக்கங்கள் நம் நினைவிடுக்குகளில் தேங்குகின்றன..

    ஓவியங்களும் கதைக்களமும் பல இடங்களில் போட்டி போட்டு ஒன்றையொன்று விஞ்சுகின்றன கதை நெடுகிலும்....ஒரு சிலவற்றை குறிப்பிடுவது ஓவியர் Francois Boucq கின் ஆளுமைக்கு ஞாயம் செய்ததாக இருக்கும்...

    #பக்கம் 9ல வரும் பர்ரோ சிடியின் லாங் ஷாட்....

    #பக்கம் 14ல பெளன்சரின் பர்ரோ எண்ட்ரி....

    #பக்கம் 28ல டாட்டூவில் புதையல் பாதை..நாம் இதுவரை காணாத புதுமை...

    #பக்கம் 37ல வரும் செவ்விந்திய பூமி...

    #பக்கங்கள் 60,61ல வரும் நீர்நிலையை விசமிடும் காட்சி...செவ்விந்தியர் வெறுக்கும் இதை பலமுறை பார்த்திருந்தாலும் இம்முறை கூடுதல் அழுத்தமாக...

    #பக்கம் 77ல் ரியோ கிராண்டே... சான்ஸேயில்லை தி பெஸ்ட் போர்ட்ராய்டு இது.... சைடு வியூ& பேர்டு வியூனு அடுத்தடுத்து பேனல்களில்...டைகரின் மின்னும் மரண வர்ணசேர்க்கையை விட வெகு பொருத்தமாக....

    #பக்கம் 83ன் ட்ராகன் மலை, கற்றாலை செடிகள்னு டீடெயிலாக....

    #பக்கம் 96ல வரும் இரவில் மெக்சிகோ மலை தொடரில் முகாமிடும் இடம்...

    #பக்கம் 102ல வரும் ப்ராந்தன் கணவாய் மர்மம், வியப்பில ஆழ்த்தும் ஓவியம்...

    #பக்கம் 106ல மர்மம் நீக்கபட்ட ப்ராந்தன் கணவாயில் பெளன்சர் குழு தேடும் இடம்..தங்க கல்லறை குத்துபாறை நுழைவு, மெக்கன்னாஸ் கோல்டு நிழல் விழும் நுழைவாயில்- இரண்டின் பிரதிபலிப்பு...

    #பக்கம் 111ல வரும் மூச்சடைக்கச் செய்யும் ட்ராகன் குகை...

    #பக்கம் 124ன் ருத்ரதாண்டவம் ஆடிய மணல் புயல் குன்றின் அமைதி தழுவும் சாந்தம்...சீமாட்டியின் நிரந்தர அமைதியை சொல்லியபடி...

    #பக்கங்கள் 149முதல் 155 முடிய வரும் வானவில் பாதாளம்...பெளன்சரின் உயிரோடு ஊசலாடுவது நம்ம பக் பக்னு துடிக்கும் நம்ம லப்டப்புமே..

    #பக்கம் 158ல வரும் சேத்& டெபோராவின் இருப்பிடத்தின் கழுகு பார்வை...மயக்கும் அந்த சிற்றோடை....

    *திருஷ்டி பொட்டுகள்....

    1.இத்தனை அற்புதமான தயாரிப்பு இன்னும் சிலநாள் எடுத்திருந்தால் அட்டைகள் வளையாமல் வந்து சேர்ந்திருக்கும்...ஆவன செய்யவும் அடுத்த ஹார்ட் பைண்டு இதழில் சார்.

    2.பக்கம் 92ல வரும் வசனத்தில் "ஸ்கல்ஸின் நகங்கள் சாரைப்பாம்பின் விசத்தில் தோய்த்தவை"-- என உள்ளது.. சாரைப்பாம்புகள் விசமற்றவை...இங்கே ராட்டில் ஸ்நேக்கின் தமிழாக்கம் இடம் பெற்று இருக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. @STV ji..
      அருமையான விமர்சனம்..😍😘💐💐

      ஒவ்வொரு குழு தேடுதல் வேட்டைக்கு செல்கின்ற போது ஒவ்வொரு குழுவிற்கும் வெவ்வேறு பின்ணனி கலர்..😍😘

      அட்டகாசமான அந்த மெனக்கெடலுக்கு நன்றிகள் பல..😃😍👍👌

      Delete
    2. அற்புதமான விமர்சனம்.
      ரசிகர் அய்யா நீவிர்!

      Delete
    3. ஜம்பிங்கார் & பொருளர் ஜி@ தேங்யூ,..... மை ஆல்டைம் ஃபேவரைட்ல பெளன்சர் சீரியஸ்ம் உண்டு....

      ஏப்ரல் டைட் ஷெட்யூல் மட்டும் இல்லனா டைனமைட் ஸ்பெசல் புயலுக்கொரு பிரளயம் மாதிரி 3,4பதிவுகளாக முன் கதை, கதை வசனம், சீக்குவன்ஸ், ஓவியங்கள் னு விரிவாக எழுதியிருக்கலாம்...

      அத்தனை சரக்கு உள்ளது இந்த இருபாக நெடிய்யயயய சாகஸத்தில்....😍

      Delete
  87. 1.உலகத்தின் கடைசி நாள்!
    2.கதிரவன் கண்டிரா கணவாய்
    3.வைகறைக் கொலைகள்!

    ReplyDelete
  88. டியர் எடி, என்னுடைய மூன்று சாய்ஸ் :

    1. வைகறைக் கொலைகள் மற்றும் 2. உலகத்தின் கடைசி நாள்.... இரண்டும் உங்கள் முன்னுரை மற்றும் ஒரு சாம்பிள் என்ற விதத்தில் கவனத்தை ஈர்க்கிறது.... கண்டிப்பாக வெளியிடுங்கள்.

    3, நீதி தேவன் நம்பர் #1 - சிறுகதைகளாக இல்லாமல் ஜட்ஜ் ட்ரெட் முழு நீள கதை ஒன்றை வெளியிட்டால், இவர் மீதான அந்த கிளாசிக் நாயகர் என்ற பிம்பம் உடையும். அதுக்கு துணை போக நவீன கால ஜட்ஜ் ட்ரெட் முளுநீள கதைகள் தான் தயாராக இருக்கிறதே.. ஆங்கிலத்தில்... முயன்று பாருங்கள்.

    ReplyDelete
  89. பிரளயம் , லேடி ஸ்பிட் பயர் வெளியிடலாம். வானம் எங்கள் வீதி என்று ஒரு கதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. அந்த தொகுப்பு முடிவு பெற்றதா

    ReplyDelete
  90. Hi @Editor sir , My choices are 1. Matt Dillon 2. Vaigarai Kolaigal 3. Spitfire .

    ReplyDelete
  91. பௌன்சர்: சா. சு. த.

    கதை:(Spoiler Alert)
    மேக்ஸ்மில்லியன் எனும் மெக்ஸிகோ பேரரசர், தான் படுகொலையாவதற்கு முன் தன் படை கேப்டனின் பாதுகாப்புடன் அரசாங்கத்திற்கு சொந்தமான 1 மில்லியன் பெறுமானமுள்ள பெசோ பொற்காசுகள் கொண்ட பெட்டகத்தை ஐரோப்பாவிற்கு அனுப்புகிறார். இந்த பாதுகாப்பு அணியுடன் இணையும் கூட்டுக் களவாணிகள் எல் லோபோ & எல் குச்சீலோ-வும், கேப்டன் குழுவிற்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டு பெட்டகத்தை கொள்ளையடிக்கின்றனர். ஒரு கட்டத்தில் எல் லோபோ, எல் குச்சீலோ கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, அந்த பெட்டகத்தை சொனோராக் பாலைவனத்தில் புதைத்து விடுகிறான். புதையல் இருக்கும் இடம் பற்றிய மேப்பை தன் மகளின் ஸ்கல்லில் டாட்டூ வாக வரைந்து விடுகிறான். பின் தன் பாதுகாப்பிற்காக டீப் எண்டு சிறையில் தஞ்சமடைந்து பௌன்சரின் பாதுகாப்பில் சிறுமி பான்சிடா-வை விட்டு விட்டு மாண்டு போகிறான். சிறுமியின் முகத்தில் டாட்டூ போட்ட தன சக கூட்டாளி மூலம் இந்த ரகசியத்தை அறியும் எல் குச்சீலோ, சிறுமி பான்சிடா-வை தூங்குகிறான். பௌன்சர் சிறுமியை மீட்டாரா...? எல் குச்சீலோ புதையலை அடைந்தானா...? என்பது மீதி…

    ஹோடொரொஸ்கி-யின் பௌன்சர் கதாபாத்திரத்தை இந்த முறை தான் கையில் எடுத்துக் கொண்டு, அதற்கு வலுசேர்க்கும் புதையல் தேட்டைக் கதையை அமைத்து, அதற்கு தன்னுடை வழக்கம் போல் மிரட்டலான சித்திரத்துடன் படைத்துள்ளார் FRANCOIS BOUCQ..
    வில்லன் எல் குச்சீலோ கதாபாத்திரம் ரொம்ப வீரியமாகவே படைக்கப்பட்டுள்ளது. கதையில், அவள் தாய் சொல்வதுப் போல, அவன் செல்லும் வழி எல்லாம் மற்றவர்களின் ரத்தக் கறைகளை தெளிக்காமல் செல்ல தவறுவதேயில்லை.....சுருக்கமா சொல்ல வேண்டுமென்றால், உண்மையைச் சொல்ல மறுக்கும் ஒரு கிழவியின் சுருங்கிப் போன 2 மார்பங்களையும் தன் கத்தியால் அறுத்தெறியும் கொடூரன். வில்லன் என்பவன் எப்போதும் நாயகனிடம் அடிவாங்கி சாவது என்கிற மரபு இங்கு சுக்கு நூறாக நொறுக்கப்பட்டுள்ளது. ஒரு தாய் தன் மகனுக்கு கொடுக்கக் கூடிய அதிகபட்ச சாபம் என்னவாக இருக்கமுடியும்...? அதை பௌன்சரிடம் அவள் சொல்லும் போது கதையோடு கடந்து விடுகிறோம். ஆனால், கதை முடியும் போது பௌன்சர் போகிற போக்கில் அந்த தாய் விருப்பப்பட்டதை அளிக்கும் போது, மறந்து தொலைத்த அந்த விஷயம் பொடேர் என பிடரியில் அறைந்தாற் போல் தாக்குகிறது.

    சீரியசாக செல்லும் கதையில் ரோடு ரோலர், மாமிச மலையான அரச குடும்பத்து அழகி எஸ்பெரான்ஸா வரும் இடங்கள் கொஞ்சம் கலகலப்பு ஊட்டுகிறது.அதிலும் எல் குச்சீலோ எஸ்பெரான்ஸா -விடம், உன் ஸ்கர்ட்டை தூக்கி அந்த சிறுமி பான்சிடாவைக் காட்டுமா.. என் சொல்வதெல்லாம் வேற லெவல்.

    முக்கால்வாசி கதையைக் கடந்தாச்சு, என்னடா பௌன்சரில் வரும் அந்த ஏடாகூடமான சமாச்சாரங்கள் எதையும் காணோம் என் யோசிக்கும் போது, முழுக்க முழுக்க பெண்களைக் கொண்ட அந்த அரக்கி கும்பல் ஆஜராகி அடுத்த ஒரு 7/8 பக்கங்களுக்கு செய்யும் வேலைகள் எல்லாம் இப்படியும் நடக்குமா..? என யோசிக்க வைக்கும் உவ்வே... ரகம்.

    கதைக்கு ஜீவனான ஓவியத்திற்கு அடுத்து, மொழிபெயர்ப்பு நிறைய இடங்களில் ரசிக்க வைக்கிறது. கதையும், சித்திரங்களும் அட்டகாசமாக அமைய, அதற்கு தோதாக இதழுக்கு அழகு சேர்க்கும் ஹார்ட் பவுண்ட், தரமான கிளாசி தாள், பிரிண்டிங் என எல்லாம் ஒருங்கே இணைந்து இதை தலையில் வைத்து கூத்தாடும் ஒரு இதழாக்குகிறது

    குறைகள் என்று பார்த்தல், முழுக்க முழுக்க பெண்களைக் கொண்ட அந்த அரக்கி கும்பலை ஒரு சில இடங்களில் "அவர்கள்" என்று சொல்வதற்கு பதிலாக "அவள்கள்" என்ற REPEATED-டாக வரும் வார்த்தையும், அதை போல “அலசுவாள்கள்” என்ற வார்த்தையும் படிக்கும் போது கடுப்பாக்குகிறது. (சமீபத்தில் வந்த டெக்ஸ் கதையில், தூத்தேறி, தூத்தேறிகள் என ஆன மேரி)

    ஓவியர் FRANCOIS BOUCQ சித்திரங்களில் தான் வல்லவர் என்று பார்த்தால், தான் சொல்ல வந்த கதையிலும் சிறந்த ஆற்றலாளர் என நிரூபித்துள்ளார். பரபரப்பான புதையல் தேட்டை கதையை கையில் எடுத்து அதற்கு அட்டகாசமான சித்திரங்கள் & கண்ணுக்கு இதமான வர்ணக்கலவையால் இதை ஒரு கல்ட் கிளாசிக் இதழாக படைத்துள்ளார். பிளாஷ் பேக்-க்கு க்ரே ஷேடு, இரவு சீக்வென்ஸ்-க்கு பளீர் நீலம் என அதகளம் செய்துள்ளார். சொனோராக் பாலைவன மணல் குன்றுகள், கூரான மலைமுகடுகள், பைத்தியக்கார கணவாய் என அவரின் சித்திர ஜாலங்கள்பிரமிக்க வைக்கிறது.

    மொத்தத்தில் ஒரு ஆக சிறந்த படைப்பாக மிளிருக்கிறது இந்த பௌன்சர். தவறவிடக் கூடாத இதழ்.

    Take a Bow, Francois BoucQ.

    ReplyDelete
  92. Would love to see Matt Dillon & Robot Archie. Please bring them in. Pretty please !!!

    ReplyDelete