Powered By Blogger

Saturday, December 02, 2023

மந்திர எண் முப்பத்தியாறு !

 நண்பர்களே,

வணக்கம். இதிகாச ரேஞ்சுக்கு எதையெதையோ பதிவிடும் நம்ம மாமூலுக்கு முன்பாய்,  சேலம் புத்தக விழாவினில் இருந்தே பிள்ளையார் சுழியைப் போட்டு விடுகின்றேனே guys !! 

போன செவ்வாயன்று மாலையில் விழா துவங்கிய போது ஏற்பாடுகள் முழுமை கண்டிருக்கவில்லை & அடுத்த 2 நாட்களும் வருண பகவானின் உபயத்தில் நமக்கு மிதமான சேல்ஸ் தான் ! ஆனால் போன வெள்ளி முதலாய் அடுத்த கியருக்கு மாறியுள்ள சேலத்து செவர்லே, ஒவ்வொரு நாளும் சும்மா தெறிக்க விட்டுக்கொண்டுள்ளது ! விற்பனைத் தொகைகள் வங்கிக்கணக்கினை குஷி கொள்ளச் செய்வது ஒரு பக்கமெனில், மாணாக்கர் ; யூத் - என்று அடுத்த தலைமுறையினர் நமது ஸ்டாலில் அலைமோதிடும் அட்டகாசம் சும்மா 'ஜிவ்'வென்று பறக்கச் செய்கிறது ! மாவட்ட நிர்வாகமும் சரி, பபாசியும் சரி, ரொம்பவே மெனெக்கெட்டிருப்பதைக் கண்கூடாய்ப் பார்த்திட இயல்கிறது - கல்விக்கூடங்களின் உற்சாகப் பங்களிப்பினில் ! இங்கொரு செம சந்தோஷ விஷயமும் உண்டு !! "மாயாவி ஸ்டாக் பூஜ்யம்" என்றதொரு நிலவரத்துடன் நாம் களம்காணும் முதல் புத்தகத் திருவிழா இதுவே & yet துளியும் தொய்வின்றி விற்பனைகள் மாஸ் காட்டி வருகின்றன ! இம்முறை நாயகர் அல்லாத one-shot ஆல்பங்கள் றெக்கை கட்டிப் பறந்து வந்துள்ளன ! கார்ட்டூன்களும் 'ஜிலோ' சேல்ஸ் ! பற்றாக்குறைக்கு - பல்லடத்து டிரெய்னிங்கோ என்னவோ - 'போன வருஷம் வாங்கிப் படிச்சோம்கா ; நல்லா இருந்துச்சு ; தோர்கல் புக்ஸ் குடுங்க !' என்று கேட்டு வாங்கிச் சென்ற மாணவியரும் சேர்த்தி ! லக்கி லூக் titles almost காலி ; ஒன்றோ-இரண்டோ ஆல்பங்கள் மாத்திரமே கையிருப்பில் ! லாரன்ஸ்-டேவிட் ; ஜாக்கி ஜானி ; ஸ்பைடரார் கூட ஒற்றை இதழ் ; இரண்டு இதழ்கள் என்ற நிலவரத்துக்கு நகர்ந்துவிட்டனர் ! அந்த சிறுத்தை மனிதனோ குட்டி புக்கில் ரவுண்டு கட்டி அடித்து வருகிறான் ! இப்பொதெல்லாமே  "இந்த title காலியாகப்  போகுது சார் ; கொஞ்சம் தான் ஸ்டாக் இருக்கு ; லிஸ்டிங் எடுத்து விட்ரவா ?" என்று நம்மாட்கள் கேட்பது தான் எனது favorite caller ட்யூன் !  Of course - இந்த ஸ்டாக் காலியாகும் படலம் ஒற்றை இரவினில் நிகழ்ந்திடவில்லை தான் & காலியாகும் வேகத்துக்கு சிறிதும் குறைச்சலின்றி புதுசுகளை உள்ளுக்குள் திணித்துக் கொண்டும் இருக்கிறோம் தான் ! But still - புத்தக விழாக்களின் வேளையினில் நமது கிட்டங்கி ரேக்குகள் கொஞ்சமே கொஞ்சமாய் மூச்சு விட்டுக் கொள்ளும் அதிசயத்தை சிலாகிக்காது இருக்க இயலவில்லை ! Hence பதிவின் துவக்கத்திலேயே இந்தக் குத்தாட்டம் ! 

And சேலம் விழாவினில் ஞாயிறு மாலையினில் நமது நண்பர்களைக் கணிசமாய் சந்திக்க இயன்றதுமே உற்சாக மீட்டர்கள் உசக்கே சென்றிடவொரு கூடுதல் காரணம் ! ஈரோட்டில் மரத்தடி மீட்டிங் இல்லையென்ற குறையை சேலத்தில் தீர்த்து விடலாம் என்று நண்பர்கள் கருதிட, சாரலைப் பராக்குப் பார்த்தபடிக்கே அந்த மாலையினை அழகாய்க் கழித்திட இயன்றது ! "மழைக்காலம்" என்ற ஒற்றை இக்கன்னா மட்டும் இடறிடாது போகும் பட்சத்தில், நமது ஈரோட்டு வாசக சந்திப்புக்கு tough தர சகல ஆற்றல்களும் கொண்டிருக்கும் போலும் இந்த சேலம் விழாவானது ! 

 Back to terra firma - டிசம்பரின் (முதல்) 4 புக்ஸும் ரெடி ! போன வாரமே 3 புக்ஸ்  ரெடியாகியிருக்க, 'காலனின் கால்தடத்தில்' கி.நா.வினை மட்டும் சட்டுப் புட்டென்று முடித்து விட்டால், டெஸ்பாட்ச் செய்த்திடலாம் என்று தான் எண்ணியிருந்தேன் ! ஆனால் 'கா.கா.த' கணிசமாய் மாற்றி எழுதிடுவதற்கும், எடிட்டிங்குக்கும் அவசியம் கொண்டிருக்க, நிதானமாகவே பயணிக்க வேண்டியதாகிப் போனது ! Finally எல்லாமே ரெடி - திங்களின் டெஸ்பாட்ச்சுக்கு ! இந்த கி.நா. ஒருவித ஹாரர் த்ரில்லர் என்பதையும் ; 18+ வாசிப்புக்கு ஏற்றதென்பதையும் மறுக்கா நினைவூட்டி விடுகிறேன் folks ! 

பொதுவாய் டிசம்பரில், இதழ்களின் சகலத்தினையும் பூர்த்தி செய்தான பிற்பாடு - அப்டியே ஜன்னலோரமாய் ஒரு பொசிஷனில் டர்ன் பண்ணி வடிவேல் செட்டில் ஆவது போல், நானும் செட்டில் ஆகிவிட்டு, நாம் பயணித்து வந்த 12 மாதங்களை flashback-ல் நினைவு கூர்வது வழக்கம் ! ஆனால் குறுக்குக்குள் பிடித்திருக்கும் இந்த நேரத்தில் விஷப்பரீட்சை வேண்டாமே என்பதாலும், புதுசாய் எதையாச்சும் செய்வோமே என்ற எண்ணத்திலும், முன்னே நமக்கென காத்துள்ள பாதையினை நோக்கிப் பார்வையினைப் படர விட நினைக்கிறேன் !! So here goes :  

2024-ன் அட்டவணை - செயலாளரின் விசாலத்தினில் இருந்திடுமென்ற  எதிர்பார்ப்போடு இருந்தவர்களுக்கு, தலீவரின் ஒடுக்கத்தில் அது இருப்பதைப் பார்த்த நொடியில், கணிசமான விசனம் எழுந்தது pretty much obvious ! ரொம்ப முன்னே, இயக்குனர் ஷங்கரின் "பாய்ஸ்" திரைப்படம் வெளியான சமயத்தில் அதன் writer அமரர் சுஜாதா சார் தந்திருந்ததொரு பேட்டி எனக்கு ஞாபகத்துக்கு வந்தது ! "பாய்ஸ்' படத்தில் ஒரு சீனிருக்கும் - நடிகர் சித்தார்த் சென்னை மவுண்ட் ரோடில் பப்பி ஷேமாய் ஓடுவதைப் போல ! அது கணிசமான சர்ச்சைகளை அந்நாட்களில் எழுப்பியது ! அது பற்றி அந்தப் பேட்டியில் சுஜாதா சாரிடம் கேட்டிருந்த போது - "இந்த சீனுக்கு என்ன மாதிரியான ரியாக்ஷன்ஸ் எழும் ; எந்தெந்தப் பத்திரிகைகளில் எப்படி - எப்படி கழுவி ஊற்றுவார்கள் !" என்பதையெல்லாம் முன்கூட்டியே ஒரு காகிதத்தில் எழுதி, இயக்குனரிடம் பகிர்ந்திருந்ததாய் சொல்லியிருந்தார் ! நாம சுஜாதா சாரும் கிடையாது ; நாம அடிக்கும் ஒன்னரையணா லூட்டிகள் ஷங்கர் சாரின் தெருக்கோடியும் கிடையாது தான் - but 2024 அட்டவணைக்கு இங்கே ப்ளாக்கில் ; க்ரூப்களில், நம்மில் யார்-யார் எவ்விதம் react செய்திடுவர் ? என்பதை கிட்டத்தட்ட 90% துல்லியத்துடன் கணித்தே இருந்தேன் ! And இந்தச் சந்தா வெளித்தோற்றத்துக்கு நம்ம தாத்தாஸ் போல வற்றலாய்த் தென்பட்டாலும், பயணத்தின் போது அந்தப் பெருசுகளின் லூட்டிக்குச் சிறிதும் சளைத்திராதென்ற உறுதியினையும் கொண்டிருந்தேன் !  இதோ - இந்தச் சித்திரத்தை சற்றே பொறுமையாய்ப் பாருங்களேன் guys : 


23 ஈரோக்கள் + 2 ஈரோயினிஸ் = TOTAL 25 நாயகப் பெருமக்கள் ! காத்திருக்கும் 2024-ன் அட்டவணையினில் இடம்பிடித்துள்ளோரின் லிஸ்ட் இது ! And இந்தப் பட்டியலில் V காமிக்சின் ஜூலை 2024 to டிசம்பர் 2024 க்கான புக்ஸ் சேர்த்தியில்லை ! Maybe அங்கே ஜூனியர் மேற்கொண்டு அறிமுகங்களைத் திட்டமிட்டிருக்கும் பட்சத்தில் - "25" என்ற இந்த நம்பர் இன்னமுமே ஏறக்கூடும் !! And இத்தனைக்கும் பிறகு - கீழ்க்கண்ட ரெகுலர் பார்ட்டீஸ் MYOMS சந்தாவில் சீட் பிடிக்க சட்டையைக் கிழித்துக் கொண்டுள்ளனர் :

  • CIA ஏஜென்ட் ஆல்பா
  • ஏஜெண்ட் சிஸ்கோ 
  • ப்ளூகோட் பட்டாளம்
  • சோடா 
  • நெவாடா 
  • IR$
  • மேகி கேரிசன் 
  • மேக் & ஜாக் 

இது ஒரு பக்கமெனில் ஜூன் 2024 முதலாய் காத்துள்ள க்ளாஸிக் பார்ட்டீசின் லிஸ்ட்டில் :

  • மாண்ட்ரேக் 
  • காரிகன்
  • ரிப் கிர்பி
  • சார்லி
  • விங்-கமாண்டர் ஜார்ஜ் 

என்றும் காத்துள்ளனர் ! (வேதாளர் அங்கேயும் வருவார் தான் !

இது தான் களநிலவரம் எனும் போது - இந்திய கிரிக்கெட்டின் T20 டீமில் இடம்பிடிக்க நிகழ்ந்திடும் அடிதடிக்குக் கிஞ்சித்தும் குறைச்சலில்லை நம் அணிவகுப்பினில் இடம்பிடித்திடவும் என்பது ஸ்பஷ்டமாய்ப் புரியும் ! 

ரெகுலர் தடத்தின் இந்த FAB 25-ல் பதினோரு பேர் நமக்கு நிரம்ப காலத்துப் பரிச்சயங்கள் & மீத 14 பேருமே சமீப ஆண்டுகளின் தேடல்களின் பலன்கள் ! So கிட்டத்தட்ட 60% புச்சு & 40% ரெகுலர்ஸ் என்று வைத்துக் கொள்ளுங்களேன் ! அட்டவணையில் கொணர நினைத்த balance இதுவே - simply becos எத்தனை மலைகளையும், கடல்களையும், காடுகளையும் தாண்டிச் சென்று புதுசு புதுசாய் நாயகர்களைத் தேடியாந்தாலும் - "லக்கி லூக் மெரி இல்லியே ! டெக்ஸ் மெரி இல்லியே !" என்ற ஒப்பீடுகள் தவிர்க்க இயலா சமாச்சாரங்கள் ஆகிடுவதை நாம் காதில் தக்காளிச் சட்னி வரும் ரேஞ்சுக்குப் பார்த்தாச்சு ! So பழையவர்களுக்கும் ; புதியவர்களுக்கும் இடையே ஒரு நெருடலில்லா சமரசம் அவசியம் என்பது நமது  priorities-களுள் பிரதானமாய் இருந்தது !  இதன் பொருட்டு புதியவர்களில் ஒரு கணிசமான பகுதியினை MYOMS சந்தாவுக்கு பேக்கப் செய்திருப்பது போல தோன்றினாலும் - ஏதேதோ காரணங்களினால் அவர்கள் நீங்கள் எதிர்பார்த்திடும் firepower சகிதம் இருக்கத் தவறியுள்ளனர் என்பதே bottomline ! இதோ - அந்த 8 புக்ஸ்களுள் எந்த நான்கு, பிரேத்யேகச் சந்தாவுக்குள் இடம்பிடித்திடவுள்ளனர் என்பது சார்ந்த உங்களின் தீர்ப்பு : 


  1. துவக்கம் முதலே முன்னணி வகித்து வந்த CIA ஏஜெண்ட் ஆல்பா முதலிடத்தில் தேர்வாகிறார் !
  2. மூன்றாம் இடத்திலேயே குந்தியிருந்த ப்ளூகோட்ஸ், கடைசி 2 வாரங்களில் rally செய்து இரண்டாமிடத்துக்கு முன்னேறித்  தேர்வாகியுள்ளனர்  ! ஜெய் கார்டூனாயா !
  3. மூன்றாமிடம் - க்ளாஸிக் மறுபதிப்புக்கு - CID ஜான் மாஸ்டர் & இரட்டை வேட்டையர் என்ற கூட்டணி இதழுக்கு (in pocket size)
  4. நான்காமிடம் - ஏஜெண்ட் சிஸ்கோ !! 

என்னைப் பொறுத்தவரைக்கும் SODA இந்தச் சுற்றிலும் பின்தங்கியிருப்பதில் வருத்தமே ; but உங்களின் ஓட்டுக்கள் உங்கள் ரசனைகளின் வெளிப்பாடுகள் எனும் போது மறுப்பின்றி ஏற்றுக் கொள்கிறேன் ! But இந்த பாஸ்டர்-போலீஸ்கார் நிச்சயமாய் காற்றில் கரைந்திட மாட்டார் என்பது மட்டும் நிச்சயம் !  More on that & the M.Y.O.M.S later !

பழக்கப்பட்டவர்களுக்கும், புதியவர்களுக்கும் மத்தியில் ஒரு balance இருப்பதோடு 2024-ன் அட்டவணையினில் பிரதான கவனத்தினை நாங்கள் தர விழைந்தது - ஒற்றை முக்கிய அளவுகோலுக்கே ! தேர்வாகியுள்ள கதைகள் / நாயகர்கள் - உங்கள் ஆர்வங்களை மாதாமாதம் ஈர்க்கும் ஆற்றல் கொண்டோராய் இருந்திட வேண்டும் என்பதே அந்த இலட்சியம் "ஆங்...இந்த ஈரோவா ? இல்லீங்கண்ணா....இந்த மாசம் டெக்ஸும், லக்கியும் போதும் !" என்று சொல்லிடும் நிலவரங்கள் இனி தொடரப்படாதென்று நிரம்பவே மெனெக்கெட்டுள்ளோம் !
  • *ஒரு பிரேக் முடிந்து தெறிக்கும் உத்வேகத்தோடு திரும்பும் லார்கோக்கு No சொல்ல நிச்சயம் யாருக்கும் இயலாது !
  • *அமேசான் கானகங்களில் ஒரு ஜீவ மரண வேட்டை நிகழ்த்திய ஜாரோப்பை skip செய்ய நிச்சயமாய் மனசு வராது !
  • *உலகெங்கும் சாகசம் செய்திடும் டின்டினுக்கு நிச்சயம் சிகப்புக் கம்பளமே தந்திடத் தோன்றும் !
  • *XIII-ன் புது சாகசம் காந்தமாய் ஈர்க்காது போகாது !
  • *டெட்வுட் டிக் இருப்பது கி.நா.சந்தாவில் தான் என்றாலுமே, "கெட்ட பய சார் இந்தப் பால்பாண்டி" என்ற அவனது அறிவிப்பில் மிரளாது போவது சுலபமாகவே இராது ! 
  • *பார்வைக்குக் கிழ போல்டுகளாய் தென்பட்டாலும் தாத்தாஸ் இன்றொரு கில்லி தொடராய் form ஆகி விட்டிருப்பதை மறுக்கவே இயலாது !
  • *கலரில், crisp வாசிப்பில் வேதாளரைப் பார்க்கும் போது அவரிடம் மனசைப் பறிகொடுக்காது இருப்பது ரெம்போ கஷ்டமாய் இருக்கப் போகிறது தான் ! Moreso இரண்டாம் பாதியில் V காமிக்சில் களமிறங்கவுள்ள (கலர்) வேதாளர் கதைகள் அதிரி புதிரி விசில்களை ஈட்ட வல்லவை எனும் போது !!
  • *தொடரினில் இன்னமும் வெளிவந்திருக்கா ஒரே ஒரு ஆல்பத்துடன் நமது நண்பர்களான கேப்டன் பிரின்சும் ; ஜாலி பார்ட்டி பார்னேயும், ஜின்னும் வந்து 'ஹல்லோ' சொல்லும் மாதத்தினில் அவர்களை மறுதலிக்கத் தான் இயலுமா ?
  • *சுடுவது இடியாப்பங்களே என்றாலும், ஆண்டுக்கொரு தபா மலர்ந்த முகத்தோடு வீட்டுக் கதவைத் தட்டும் வாய்ப்பினையும் ரிப்போர்ட்டர் ஜானிக்குத் தந்திடாது போகவாவது இயலுமா ?
  • *டாக்டர்களின் கனவுக்கன்னியை கலாய்க்கும் சாக்கில் உள்ளாற ரசிக்கும் உள்நாட்டு / வெளிநாட்டு ஸ்லீப்பர் செல்களும் இளவரசியிடம் "வாங்க மாட்டேன் - போ !" என்று சொல்லிடுவார்களா - என்ன ? 
  • *'தனிமையே என் துணைவன்' என்று அவர் பாடித் திரிந்தாலும், நம் கும்பலில் அவரைக் கொண்டாடாது போகத்தான் இயலுமா ?
  • *மர்மங்களே எனது உயிர்மூச்சென்று மர்ம மனிதன் மார்ட்டின் நம்மை பல விசித்திர பிரதேசங்களுக்கு இழுத்துப் போனாலுமே அந்த மனுஷனின் கைகளைத் தட்டி விடவாச்சும் மனசு வருமா நமக்கு ?
  • *ஒரு டிப்பர் லாரியில் ஏற்றக்கூடிய அளவிலான படைப்பாளிகளை ஒற்றை ஆல்பத்துக்குள் அடக்கியபடியே வன்மேற்கின் ஊடே பயணிக்கவுள்ள "மேற்கே போ மாவீரா !" இதழை skip செய்யவாச்சும் மனசு வருமா ?
  • *ஒடிசலான நவீன வெட்டியானின் களத்தினில் மென்சோகமே பிரவாகமெடுத்தாலும் அவர் மீது காமிக்ஸ் காதல் கொள்ளாது போக முடியுமா ?

இவை போன்ற கேள்விகளை ஒவ்வொரு மாதமும் உங்கள் முன்னே வைத்திட வேண்டுமென்று விழைந்தோம் - காத்துள்ள அட்டவணையினில் ! வாங்கிடவும் சரி, வாசித்திடத் தூண்டுவதிலும் சரி -  2024-ன் தேர்வுகள் சோடை போகலாது என்பதே பிரதான நோக்கம் ! இந்த நொடியினில் இன்னொருக்க இந்த FAB 25 பட்டியலைப் பார்த்தபடிக்கே - உங்கள் மனசுக்குள் கணக்குப் போடுங்களேன் guys, இவற்றுள் எத்தனையினை துயில் கிடத்தலாம் ? எத்தனையினை சுடச்சுடப் படிக்கலாமென்று ? முந்தைய நம்பர் மிகுந்திருப்பின் நிச்சயம் வியப்பு கொள்வோம் !  

Oh yes - நம்ம கூர்மண்டையரைக் கண்டு உங்களில் சிலர் மிரண்டிருக்கலாம் தான் - ஆனால் அவரை வேணாமெனில் மறுக்கும் உரிமையினையும் உங்கள் கைகளிலேயே தந்திருக்கிறோம் தானே ?! And surprise ...surprise ...இதுவரைக்கும் வந்துள்ள சந்தாக்களில் "ஸ்பைடரின் விண்வெளிப் பிசாசு வேணாம் எனக்கு !" என்று சொல்லியுள்ளோரை ஒற்றைக் கையின் விரல்களுக்குள் அடக்கி விடலாம் ! 

"வேதாளரா - பழைய நெடியடிக்குமே ?" என்று சில புருவங்கள் உசந்திருக்கலாம் தான் - ஆனால் அந்த இதழ் வெளியான பின்னேயும் உங்கள் அபிப்பிராயங்கள் அவ்விதமே தொடர்கின்றனவா ? என்பதைப் பார்த்து விடலாமா ?

*மாடஸ்டி சீமாட்டியாஆஆ ?" என்ற அலறல்கள் கேட்கலாம் தான் - மார்ச் மாதம் அவர்  V காமிக்சில் debut செய்திடும் வரைக்கும் ! மிரட்டும் அந்த  action block-ன் முடிவினில் நீங்களும் 'இளவரசிப் பாசறையில்' சேர்ந்து கொள்ள லைனில் நிற்காது போக மாட்டீர்கள் !

மேற்படி மூவர் மாத்திரமே ஒரு முந்தைய யுகத்தின் படைப்புகள் ! பாக்கி 22 நாயகப் பெருமக்களுமே சமகாலத்துப் பிள்ளையர் எனும் போது, புதுயுக சித்திர பாணிகள் ; டிஜிட்டல் கலரிங் ; கதை சொல்லும் யுக்திகள் என்று ரசிக்கலாம் ! புறா காலில் தூது கட்டி அனுப்பும் புராதன தாத்தா ஈரோஸ் இந்த 22-ல் நிச்சயமாயிட்டும் நஹி !  And நமக்கிருப்பது அந்த ஆறாயிரம் ரூபாய்களுக்குள்ளான பட்ஜெட் ; அதனுள்ளேயே கால் சத நாயகர்களையும் சாகசம் செய்திட அனுமதித்தாக வேண்டும் என்பதே திட்டமிடலாக இருந்திட வேணும் எனும் போது - "சுப்ரீமோ ஸ்பெஷல்" பாணியில் மெகா விலை இதழ்களுக்கு இடம் தந்திட இயலாதே guys ?! இந்தப் புரிதலுடன் அட்டவணையினை இன்னொருக்கா நோக்குங்களேன் ப்ளீஸ் - பின்னணியில் உள்ள நமது  அபிலாஷைகள் புரிபடாது போகாது ! 

பிப்ரவரியில் அறிவித்திடவுள்ள MYOMS முன்பதிவுகளுக்குப் பின்பாய் மேற்கொண்டு 5 நாயகர்கள் 2024-ன் கோதாவுக்குள் இறங்கியிருப்பர் ! Which means - 2024-ல் நாம் சந்திக்கவிருப்பது 25 + 5 = 30 ஈரோக்களை !!  

And ஜூன் 2024 முதலாய் தொடர்ந்திடவுள்ள க்ளாஸிக் நாயகர்களின் மூணாம் சீசனில், இன்னொரு 5 பேரை அள்ளிப் போட்டுக் கொண்டால் 30 +5 = 35 என்றாகிடும் எண்ணிக்கை !

அப்புறம் V காமிக்சின் அடுத்த 6 மாதச் சந்தாவில் ஒரு புதியவரும் காத்துள்ளார் எனும் போது - 35 + 1 = 36 என்ற மொத்தக் கணக்காகிடும் - 2024-ன் அட்டவணைக்கு ! ஆக மாதங்கள் 12 ; நாயகர்களோ 36 !!!! 

சொல்லுங்களேன் பாஸ் - 2024-ன் நமது பயணத்தில் கரம் கோர்த்துக் கொள்ள இந்த 36 காரணங்கள் போதாதா ? என்று !!!  Bye all ; சந்தா எக்ஸ்பிரஸில் இடம் பிடிக்க விரைந்திடுவோமா ? Have a great weekend ! See you around !

P.S :  "Only டெக்ஸ் வில்லர் !" என்றதொரு கணிசமான ஏற்றுமதி ஆர்டரும் இன்று கிட்டியிருக்க, 'தல' கடல்தாண்டிய பயணத்துக்கு ரெடியாகி வருகிறார் ! குத்துவோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு - அண்டாக்களில் பாயாசங்கள் போடப்பட்டாலுமே !

SCENES FROM SALEM







































187 comments:

  1. Replies
    1. ரொம்ப நாளைக்குப் பிறகு முதல் இடம் கிடைத்துள்ளது...😻

      Delete
    2. வாழ்த்துக்கள் டெக்ஸ் அய்யா ..தகவலுக்கும் மிக்க நன்றி....:-)

      Delete
    3. வாழ்த்துக்கள் டெக்ஸ்.

      Delete
  2. வணக்கம் நண்பர்களே🙏

    ReplyDelete
  3. ///மூன்றாம் இடத்திலேயே குந்தியிருந்த ப்ளூகோட்ஸ், கடைசி 2 வாரங்களில் rally செய்து இரண்டாமிடத்துக்கு முன்னேறித் தேர்வாகியுள்ளனர் ! ஜெய் கார்டூனாயா !///

    ராயப்பா.... நான் நாந்தானா..!?

    ReplyDelete
  4. அனைவருக்கும் வணக்கம்.

    ReplyDelete
  5. லயன் முத்து V காமிக்ஸ் என 2024ன் அனைத்துச் சந்தாவில் இணைய விரும்புகின்றேன் சார். வழக்கம் போல் 3 தவணை தந்து உதவ வேண்டுகின்றேன் சார். விரைவில் முதல் தவணையை அனுப்புகின்றேன் சார். நன்றி சார்.

    ReplyDelete
  6. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  7. என் நீண்ட வருட கனவுசார் உங்களை சந்திக்க வேண்டும் என்பது,
    ஈபுவி விழாவில் பேச முடியாத குறையை சேலம் மீட் தீர்த்து வைத்தது.
    இஏன்னமும் அந்த மகிழ்ச்சியில் இருந்து மீளவில்லை.
    தங்களின் எளிமையும், வாசகர்களிடம் காட்டும் அன்பும் மிகவும் ரசிக்க வைத்தது.
    தங்களின் வருகை எங்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
    நன்றி சார்.

    ReplyDelete
  8. சேலத்தில் பள்ளி குழந்தைகள் கைகளில் நம் புத்தகங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி...அதுவும் தோர்கல் 😊😊😊

    ReplyDelete
  9. ப்ளு கோட்ஸ் வந்து விடுவர் என்று தெரியும் 🥳🥳🥳🥳🥳

    ReplyDelete
  10. சோடா வந்திருப்பார், பரவாயில்லை
    மிஸ் யூ நியூயார்க் போலீஸ்காரரே😔
    கணிசமான வாக்குகளை பெற்றிருப்பதில் மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. ஆனா புத்தக விழா ஸ்பெஷல் இதழாகவாது வந்தே ஆகணும். எனக்கு மிகவும் பிடித்த நாயகர்களில் பாஸ்டர் மிக முக்கியமானவர்.

      Delete
  11. அருமை சார....பதிவை படிப்போர் இதுவரை சந்தாவில் இணையாதவர் கூட இந்த முறை சந்தாவில் இணைய விரும்புவர் என்பது உறுதி...


    மெகா இதழ் இல்லை என்பதை விட இது மெகா நாயகர்கள் கொண்ட ஆண்டு இந்த 2024 என்பதை இந்த பதிவு ஆணித்தரமாக உணர்த்துகிறது..

    சூப்பர் சார்..

    ReplyDelete
  12. எனக்கு பிடித்த ப்ளூகோட் முன்னேறுவதில் இன்னமும் மகிழ்ச்சி கூடுகிறது வருக வருக என வரவேற்கிறேன்
    :-)

    ReplyDelete
  13. எங்கள் மாவட்டத்தில் புத்தகவிழா நடந்தும் தாங்களும் கலந்து சிறப்பித்தும்....நண்பர்கள் பலர் ஒன்று கூடியும் என்னால் வரமுடியாத சூழலை நினைக்கும் பொழது இப்பொழதும் மனம் வருத்தம் அடைகிறது சார்..ஹூம்..:-(

    ReplyDelete
  14. ஈரோடு விழா போல் சேலம் புத்தகவிழாவும் மிக சிறப்பாக அமையும் என போன முறை சேலம் புத்தகவிழா அன்று உரைத்து இருந்தேன்..அது நிஜமாகியதில் மிகுந்த மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்..

    ReplyDelete
  15. வழக்கமான நடுச்சாம பதிவு இல்லாமல் இப்படி மாலை நேர பதிவு தான் தங்களுக்கும்..எனக்கும் மிகவும் பயனுள்ளதாய் அமையும் சார்..:-)

    ReplyDelete
  16. கலர் வேதாளர்.இரட்டை வேட்டையர்,இளவரசி ,ஸ்பைடர்,இதுவல்லவா காமிக்ஸ் பொற்காலம்.இந்த2024 கொண்டாட்டமான ,மறக்க முடியாத வருடம் .நன்றிகள் சார் . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  17. சூப்பர் சார்...சேலத்திலே விழாக் கோலம்.....


    எனக்கு சிஸ்கோ...டிக் தவிர்த்து அனைத்துமே தவிர்க்க இயலா ஈரோக்கள்,...ஈரோயினிக்கள்
    இருவரின் கதைகளும் ஒன்றுதான் படித்துள்ளேன்...தூசி தட்டி பார்ப்போம்

    ReplyDelete
  18. Replies
    1. // But இந்த பாஸ்டர்-போலீஸ்கார் நிச்சயமாய் காற்றில் கரைந்திட மாட்டார் என்பது மட்டும் நிச்சயம் ! More on that & the M.Y.O.M.S later ! // பரணி கவலை வேண்டாம். ஆசிரியரிடம் என்னமோ திட்டம் இருக்கு.

      Delete
    2. சோடா - வை கண்டிப்பாக எதிர்பார்க்கிறேன்..

      Delete
  19. சூப்பர் ஆன உற்சாகம் துள்ளும் பதிவு சார். சேலம் புத்தக விழா சக்கை போடு போடுவதில் மகிழ்ச்சி.

    எல்லாரும் கலந்து கட்டி புத்தகங்கள் வாங்குவதில் மகிழ்ச்சி. நமது இதழ்களில் எந்த ஹீரோவும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. ஒரு ஹீரோ புத்தகத்தை வாங்கி சென்ற மாணவர்கள் மறுபடியும் அதே ஹீரோவின் வேறு புத்தகம் வேண்டும் என்று திரும்ப வருகின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. //அதே ஹீரோவின் வேறு புத்தகம் வேண்டும் என்று திரும்ப வருகின்றனர்.//

      அருமை சகோ

      Delete
    2. நண்பன் ரகு இந்த வாரம் முழுவதும் நமது ஸ்டாலில் களப் பணியில் இறங்கி சும்மா சுற்றி சுற்றி அடித்து உள்ளார் சகோதரி.

      Delete
    3. ரகு சகோவுக்கு மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுகள்

      Delete
    4. Raghu @ மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுகள்

      Delete
    5. நன்றி.. குமார் நண்பா

      Delete
    6. நன்றி... ரம்யா மேடம்

      நன்றி... பரணி சார்

      நன்றி... செந்தில் சத்யா ஜீ

      தங்கள் பாராட்டை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன்.

      Delete
    7. ரகு சாருக்கு ஒரு ராயல் சல்யூட்.

      Delete
    8. //ரகு சாருக்கு ஒரு ராயல் சல்யூட்.//
      மிக்க நன்றி சார்...

      Delete
  20. // பிப்ரவரியில் அறிவித்திடவுள்ள MYOMS முன்பதிவுகளுக்குப் பின்பாய் மேற்கொண்டு 5 நாயகர்கள் 2024-ன் கோதாவுக்குள் இறங்கியிருப்பர் ! Which means - 2024-ல் நாம் சந்திக்கவிருப்பது 25 + 5 = 30 ஈரோக்களை !! // ஆனா MYMOS இல் அறிவித்தது 4 தானே எப்படியோ சோடா வந்தா சரி.

    ReplyDelete
    Replies
    1. @KS

      அந்த 5வது சோடா அல்ல..
      வென்றதாக
      அறிவித்தது 4..
      ஹீரோஸ் 5

      வெற்றியான புக்ஸ் நல்லா பாருங்க 5வது யாருனு தெரியும்.

      Delete
    2. ஜான் மாஸ்டர்,இரட்டை வேட்டையர், ஆல்ஃபா, ப்ளூ கோட்ஸ், சிஸ்கோ. மொத்தம் 5 ஹீரோக்கள்.

      Delete
  21. //குத்துவோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு - அண்டாக்களில் பாயாசங்கள் போடப்பட்டாலுமே !//

    உண்மைதான் ஆசிரியரே
    நான் புத்தகத்தை படிக்க குடுக்கும் இடங்களிலெல்லாம் டெக்ஸின் குத்துக்கு ரசிகர் மன்றம் உருவாகி விடுகிறது

    ReplyDelete
  22. // And ஜூன் 2024 முதலாய் தொடர்ந்திடவுள்ள க்ளாஸிக் நாயகர்களின் மூணாம் சீசனில், இன்னொரு 5 பேரை அள்ளிப் போட்டுக் கொண்டால் 30 +5 = 35 என்றாகிடும் எண்ணிக்கை ! // அப்போ இந்த முறை தாறுமாறு.

    ReplyDelete
  23. // அப்புறம் V காமிக்சின் அடுத்த 6 மாதச் சந்தாவில் ஒரு புதியவரும் காத்துள்ளார் எனும் போது - 35 + 1 = 36 என்ற மொத்தக் கணக்காகிடும் - 2024-ன் அட்டவணைக்கு ! ஆக மாதங்கள் 12 ; நாயகர்களோ 36 !!!! // இன்னும் ஒரு புதியவரா? அட்ரா சக்கை. செம்ம பிளான் சார்.

    ReplyDelete
  24. CID ஜான் மாஸ்டர் & இரட்டை வேட்டையர் - இதுவரை படித்தது இல்லை
    ரசிகர்கள் நிறையா இருப்பார்கள் போல
    வரட்டும் பார்ப்போம்

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் மாஸ்கோவில் மாஸ்டர் சுத்தமாக ஞாபகம் இல்லை. ஆனால் சமீபத்தில் ஆப்ரிக்க சதி படித்தேன் நன்றாகவே இருக்கும்.

      Delete
    2. இரட்டை வேட்டையர்கள் & ஜான் மாஸ்டர் இருவரின் கதைகளும் அனைவரையும் கவரக்கூடிய சாகஸங்கள் இன்னும் இரட்டை வேட்டையர்களின் திக்கு தெரியாத தீவில் செம்மையான சாகஸம் விரைவிலேயே அதுவும் களம் காணும் என நம்பிக்கை உள்ளது

      Delete
  25. வன்மேற்கு கதை தொடர் கன்டினியூ ஆகுமா, ஆசிரியரே

    ReplyDelete
  26. // Finally எல்லாமே ரெடி - திங்களின் டெஸ்பாட்ச்சுக்கு ! //
    சிறப்பு,டிசம்பர் இதழ்களுக்காக ஆவலுடன்...

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப ஆவலுடன். அப்போ செவ்வாய் முதல் திருவிழா

      Delete
  27. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
    Replies
    1. //பல்லடத்து டிரெய்னிங்கோ என்னவோ - 'போன வருஷம் வாங்கிப் படிச்சோம்கா ; நல்லா இருந்துச்சு ; தோர்கல் புக்ஸ் குடுங்க !' என்று கேட்டு வாங்கிச் சென்ற மாணவியரும் சேர்த்தி ! //

      இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே...!!

      Delete
  28. ப்ளூ கோட்ஸ் மற்றும் சிஸ்கோ உள்ளே வந்ததில் மிக்க மகிழ்ச்சி...

    ReplyDelete
  29. சொந்த ஊர் ராசிபுரம்...
    30 நிமிட பயணத்தில் சேலம் வந்திட முடியும் என்றாலும், பணி செய்யும் ஓர் வடக்கே உள்ளதால், இந்த வருடமும் புத்தக விழா மிஸ்ஸிங்!

    ஒரு நாளைக்கு என்னுடைய போட்டோவும் வரும்...

    வெயிட் பண்ணனும்...

    ReplyDelete
  30. டிசம்பர் புத்தகங்களுக்காக வெயிட்டிங்....

    ReplyDelete
  31. இந்த ஆண்டு திருச்சி புத்தக விழா மிக சரியான இடமான புனித வளனார் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இனி ஆண்டு தோறும் இந்த மைதானத்தில் நிகழ்ந்தால் மகிழ்ச்சி. வரும் திஙகட்கிழமையன்று நிறைவு பெறுகிறது. இன்று சரியான கூட்டம்

    ReplyDelete
  32. சென்று வா மேகி கேரிஸன்!

    நீ அப்படியொன்றும் அழகில்லை!
    நீ அப்படியொன்றும் ஃபிகர் இல்லை!
    ஆனால் மிக இயல்பாய், யதார்த்தமாய், உன் வயது பெண்களுக்கே உரிய உள்மனப் பிரதிபலிப்புளை நையாண்டி கலந்து வெளிப்படுத்தி எங்களில் ஒரு சிறு எண்ணிக்கையை வியப்பில் ஆழ்த்தினாய்! இதற்கு முன்பு வேறு எந்தப் பெண்ணும் இத்தனை இயல்பாய் தன் எண்ணவோட்டத்தை வெளிப்படுத்தி நான் படித்ததில்லை!

    மருத்துவர்களும், தொழிலதிபர்களும் ஆராதித்திடும் ஒரு அம்மணியைத் தாண்டி வேறு எந்தவொரு பெண்மணிக்கும் இங்கே இடமில்லை போலும்!

    என்றாவது ஒருநாள் இங்கே காட்சிகள் மாறிடக் கூடும்! யதார்த்தத்தை இயல்பாய் ஏற்றுக்கொள்வோர் எண்ணிக்கை எதிர்காலத்தில் எள்ளளவாவது எகிறிடக்கூடும்! அதுவரை காத்திருப்போம்.. நீ மீண்டும் வருவாயென!

    சென்று வா மேகி கேரிஸன்!

    ReplyDelete
    Replies
    1. அய்யா இன்னும் இருப்பது ஒரு கதை தான் இந்த தொடரில். அத்தோடு மொத்தமாக விடை கொடுத்து விடலாம்.

      Delete
    2. I hope this story definitely will come as surprise on next year. My favorite one.

      Delete
    3. //என்றாவது ஒருநாள் இங்கே காட்சிகள் மாறிடக் கூடும்! யதார்த்தத்தை இயல்பாய் ஏற்றுக்கொள்வோர் எண்ணிக்கை எதிர்காலத்தில் எள்ளளவாவது எகிறிடக்கூடும்! அதுவரை காத்திருப்போம்.. நீ மீண்டும் வருவாயென!//
      இதில் ஓட்டு போட்டவர்கள் எத்தனை பேர் புக்கிங் பண்ணுவார்கள் என்பது கேள்விக் குறியே. மீதி இருக்கும் நால்வருக்கும் ஆண்டின் பிற்பாதியில் ஒரு தனி புக்கிங் அறிவித்து எண்ணிக்கையை பார்த்தால் உண்மையான நிலவரம் தெரிந்து விடும்

      Delete
    4. //இதில் ஓட்டு போட்டவர்கள் எத்தனை பேர் புக்கிங் பண்ணுவார்கள் என்பது கேள்விக் குறியே. //

      அது எப்படிங்க சார் - நெகடிவாக நடக்குமென்பதில் அவ்ளோ உறுதி ?

      பாசிட்டிவாக நடக்குமென்று அதே உறுதியை காட்டித் தான் பார்ப்போமே ?

      Delete
    5. // பாசிட்டிவாக நடக்குமென்று அதே உறுதியை காட்டித் தான் பார்ப்போமே ? //

      +1

      Delete
    6. இங்கு பாசிடிவ், நெகடிவ் என்று ஏதும் இல்லை சார். நமது வாசகர்களில் குறிப்பிட்ட சதவீதம் பேர் தாங்கள் வெளியிடும் அனைத்து புத்தகங்களையும் வாங்குபவர்கள் என்பது நீங்கள் அறிந்ததே, அவர்களுக்கு தான் புதிய சந்தாவில் புத்தகங்கள் குறைவு என்பதால், balance செய்ய இந்த MYOMS தடம். இறுதியில் வாங்கப் போவதும் இவர்களே. ஆகையால் ஓட்டெடுப்பு தேவையில்லை, நேரடியாக முன்பதிவுக்கு போகலாம் என்பதே என் கருத்து. வேறு வழி இல்லாததால் தான் நான்கு பேரை தவிர்க்க வேண்டியதாகி விட்டது. ஆகையால் 8 கதைகளும் தேவை, கிடைக்கும் நேரத்தில் அக்கதைகளுக்கும் ஒரு முன்பதிவு கொடுத்து பார்த்து விட்டு முடிவெடுங்கள், வெறும் வாக்குகளை மட்டும் வைத்து முடிவு எடுத்து விடாதீர்கள் என்பதே என் கருத்து.

      Delete
  33. ஜூகோர் கலர் ஆல்பம் மிஸ்ஸிங்

    ReplyDelete
  34. சேலம் புத்தக கண்காட்சி நாளை ஞாயிற்றுக்கிழமை கடைசி நாள்...
    சேலம் புத்தக விழாவை விற்பனையை உற்சாகப்படுத்த, 2024 சந்தாவில் இணைய விரும்பும் நண்பர்கள்,... சேலம் புத்தக கண்காட்சி மூலம் சந்தாவில் இணைய அன்புடன் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  35. அட்டகாசமாக எழுதுகிறீர்கள் sir..
    👍..படிக்க தமாசாக இருப்பது
    போல உங்கள் எழுத்து இருந்தாலும்.. நன்கு யோசித்தே நீங்கள் எழுதுவதை என்னால் உணர முடிகிறது.. Director ஷங்கர்
    எல்லாம்.. முத்து, லயன் காமிக்ஸ் க்கு.. முன்னாடி ஜூஜிபி ங்க sir.. ❤️👍

    ReplyDelete
    Replies
    1. அட, நீங்க வேற ...!! நம்ம உசரம் நாமறிவோம் சார் !

      அன்பின் மிகுதியில் மிகைகளும் நிஜமாய் உங்களுக்குத் தோன்றிடலாம் தான் - ஆனால் நாங்களும் அதை நம்ப ஆரம்பித்தால் சிரிப்பா சிரிச்சுப் போய்டும் சார் !

      Delete
    2. சார் உண்மையைச் சொன்னா அர்னால்ட் விட இப்ப தமிழ்நாட்டுக்கு விஜய்தான் சூப்பர் ஸ்டார்....அதுக்காக விஜய் சாதாரணமானவரா.

      Delete
  36. சிறை மீட்டிய சித்திர கதை " வெளிவந்து 50 வருஷம் ஆகுதுங்களா.. இப்போ அந்த கதையை Titanic மாதிரி மறக்கவே முடியாத ஒரு திரைக்காவியமா மாத்த முடியும்
    Sir...அப்படி எந்த director நினச்சு....
    உங்க அனுமதி கேட்க வராங்களோ.. அவரை நான் ஒரு
    மிகச் சிறந்த director என்று நினைப்பேன் sir..கதை பற்றி ஓரளவு தெரிந்ததானால் சொல்கிறேன் sir.. மற்றபடி
    நான் ஒரு சினிமா director எல்லாம் இல்லீங்க sir.. ஆமாம் sir...95%தமிழ் சினிமா டைரக்டர்ஸ் அல்லாரும் "இட்லி ".. சுடரவங்க
    சகோ.. 😄❤️👍

    ReplyDelete
  37. // கல்விக்கூடங்களின் உற்சாகப் பங்களிப்பினில் ! இங்கொரு செம சந்தோஷ விஷயமும் உண்டு !! "மாயாவி ஸ்டாக் பூஜ்யம்" என்றதொரு நிலவரத்துடன் நாம் களம்காணும் முதல் புத்தகத் திருவிழா இதுவே & yet துளியும் தொய்வின்றி விற்பனைகள் மாஸ் காட்டி வருகின்றன ! இம்முறை நாயகர் அல்லாத one-shot ஆல்பங்கள் றெக்கை கட்டிப் பறந்து வந்துள்ளன ! கார்ட்டூன்களும் 'ஜிலோ' சேல்ஸ் ! பற்றாக்குறைக்கு - பல்லடத்து டிரெய்னிங்கோ என்னவோ - 'போன வருஷம் வாங்கிப் படிச்சோம்கா ; நல்லா இருந்துச்சு ; தோர்கல் புக்ஸ் குடுங்க !' என்று கேட்டு வாங்கிச் சென்ற மாணவியரும் சேர்த்தி ! லக்கி லூக் titles almost காலி ; ஒன்றோ-இரண்டோ ஆல்பங்கள் மாத்திரமே கையிருப்பில் ! லாரன்ஸ்-டேவிட் ; ஜாக்கி ஜானி ; ஸ்பைடரார் கூட ஒற்றை இதழ் ; இரண்டு இதழ்கள் என்ற நிலவரத்துக்கு நகர்ந்துவிட்டனர் ! அந்த சிறுத்தை மனிதனோ குட்டி புக்கில் ரவுண்டு கட்டி அடித்து வருகிறான் ! இப்பொதெல்லாமே "இந்த title காலியாகப் போகுது சார் ; கொஞ்சம் தான் ஸ்டாக் இருக்கு ; லிஸ்டிங் எடுத்து விட்ரவா ?" என்று நம்மாட்கள் கேட்பது தான் எனது favorite caller ட்யூன் ! //

    Wow wow wow. Very good news sir. Looks like school kids are back to their reading habits and they are showing interest in our comics. I am happy

    ReplyDelete
  38. // ஜாக்கி ஜானி //

    When I read first time I was wondering who is this 🤔 later I realized Jhony Nero:-) can’t control my language:-) ROFL.

    Nallaveli trouser Jhony ena yelutha villai 😁

    ReplyDelete
  39. காமிக்ஸ் எனும் கனவுலகம்!
    லயன் & முத்து காமிக்ஸ்
    விமர்சன போட்டி 2023
    விமர்சனம் - 3
    Rajkumar
    Tiruppur


    கறை படிந்த கரென்ஸி!
    இம்மாதம் லயனில் வந்துள்ளது ஒரு புதுமுக நாயகரான I.R.$ ஏஜெண்ட் லேரி B. மேக்ஸின் கறை படிந்த கரென்ஸி! கதை முழுதும் சொல்லிடாமல் மேலோட்டமாக பார்ப்போம். புதிதாக வசிப்போருக்கு அடுத்தடுத்து என்ன என்ற திரில் இந்த பதிவின் வழி கலைந்திடக் கூடாதல்லவா.
    ஒரு நல்ல தந்தையாக பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு கொடுப்பது சொத்துக்கள் அல்லது பெரும் சேமிப்புகள் விட்டுச் செல்ல வேண்டும் அல்லவா, அப்படி ஒரு பெரும் சேமிப்பை வங்கியில் பாதுகாப்பாக இருக்கும் என்றுதானே சேமித்து வைப்போம்.. நம் காலத்திற்குப் பிறகு வாரிசுகள் அதை எடுத்து ஆண்டு அனுபவித்துக் கொள்ளட்டும், என்பதுதான் ஒரு நல்ல தந்தையின் அடையாளமாக இருக்கும். பின்னாளில் அப்படியான சேமிப்பை அணுக வரும் வாரிசுகளை வாங்கிகள்.. அந்த சான்றிதல் கொண்டுவா இதைக் கொண்டுவா என்று இழுத்தடித்து நம்மை ஏமாற்றி நம் பணத்தை தின்று ஏப்பமிட முனைந்தால் நாம் நொறுங்கிப் போய் விடுவோமல்லவா? இந்தக் கதையில் யூதர்களின் மொத்தப் பணத்தையும் ஒருவன் வங்கி அதிகாரிகளுக்கு கையூட்டுக் கொடுத்து அமுக்கி விடுவதுதான் இந்தக் கதையின் மையம்.
    யூத செல்வந்தர்கள் பலர் தமது சேமிப்பை ஸ்விஸ் வங்கிகளில் சேமித்து வைத்துள்ளனர். பின்னாளில் நிகழ்ந்தேறும் மனித வரலாற்றின் நீங்கா கறையான யூத படுகொலைகளுக்குப் பின்னராக தப்பிப் பிழைக்கும் யூதர்கள் தங்களின் தந்தை சேமித்துள்ள தொகையை வேண்டி ஸ்விஸ் வங்கிகளை அணுகும்போது.. உங்கள் தந்தையின் இறப்புச் சான்றிதழ் கொண்டு வாருங்கள் என்று அலைகழிக்கப்படுகின்றனர். ஆஷ்விட்ஸ் போன்ற கொலைகளங்களில் படுகொலை செய்யப்பட்ட எண்ணற்ற தந்தைகளுக்கு எப்படி இறப்புச் சான்றிதழ் பெறுவது. இதன் பின்னணியில் கலிபோர்னியாவில் லுக் க்ரெடியோ எனும் நபரை ஒரு விபத்தில் கொல்கின்றனர். அவர் I.R.$ (Internal Revenue Service) எனப்படும் அமெரிக்க வருமான வரித்துறையின் கண்காணிப்பில் இருப்பவர். இவர் மரணம் பல சந்தேகங்களை கிளறவே... தொடரும் பக்கங்களில் அதகள ஆக்ஸனோடு ஏஜெண்ட் லேரி மேக்ஸ் துப்பறிய ஆரம்பிக்கிறார். இதன் வில்லன் யாரென்று பாதிப் பக்கத்திலேயே நான் யூகித்து அவனை துரோகியாகவே எண்ணி வாசிக்க தொடர்ந்தேன். ஆனால் க்ளைமேக்ஸில் என் யூகம் தவறு என்று நச்சென்று முடிந்திருந்தது.
    கதையை Stephen Desberg என்ற கதாசிரியர் எழுதியுள்ளார். தமிழில் இவரை இப்போதுதான் முதன்முறையாக வாசிக்கிறோம் என்று நினைக்கிறேன். இவரின் கதை சொல்லல் அபாரம். புத்தகத்தை கீழே வைக்கத் தோணாத வண்ணம் கதையை அருமையாக நகர்த்தி செல்கிறார். பக்கம் 27ல் அநாதையாகிப் போன அந்த யூத சிறுவன் கண்ணீரோடு அமர்ந்திருக்க அந்த வங்கி அதிகாரி போலி அனுதாபம் காட்டி ‘ஆவணங்கள் அவசியம்’ எனும்போது வாசிக்கும் நமக்கும் நெஞ்சில் பெரும் துயராக இருக்கிறது. இந்த இடத்தில் தமிழ் மொழிபெயர்ப்பு அபாரம். அதேசமயம் க்ளைமேக்ஸ் ரோடு சேசிங் காட்சியில் அவ்வளவு உயிர் போகும் பரபரப்பிலும்... ' ஆனால், என்னைத் தான் ஏழாம் வகுப்பிலேயே ஒழுங்கீன சிகாமணி என்று முத்திரை குத்திவிட்டார்களே!" ... என்று ரொம்ப லென்தியாக சூழலுக்கு பொருந்தாமல் பேசுவது ரசிக்க வில்லை.

    சித்திரம் Bernard Vrancken என்பவர். இவரும் நமக்கு புதிது. காமிக்ஸை பொறுத்தவரை ஒரு நல்ல கதாசிரியருக்கு நல்ல ஆர்டிஸ்ட் கிடைத்துவிட்டால் பட்டையை கிளப்பி விடுவார்கள் இல்லையா.. அதுபோலதான் இங்கும் தூள் கிளப்பி உள்ளார் Bernard Vrancken. வண்ணச் சேர்க்கையும் பிரமாதம். அத்தியாயம் 2 ஹாகென் வியூகத்தில் அந்தக் கொலைக்களம் ஆஷ்விட்ஸ் காட்சிகள் வரும்போது ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் படம் நினைவில் வந்து போனது. கூடவே கதையின் கிளைமேக்சில் மொஸாட் வரும்போது Munich படமும் நினைவில் வந்தது. கதையின் சில பக்கங்களில் World Trade Center வருகிறதே... Cinebookல் 2008ல் உருவான கதையில் 2001ல் பயங்கரவாதிகளால் அழிக்கப்பட்ட டவர் எப்படி வரும் என்று குழம்பி இணையத்தில் ஆராய்ந்ததில்.. அடடே இது பிரெஞ்சில் 1999ல் வந்தது என்று தெரிந்தது.
    புதுமுக நாயகரான I.R.$ ஏஜெண்ட் லேரி B. மேக்ஸுக்கு நல்வரவு.
    மற்ற நண்பர்களுக்கு.. கண்டிப்பாக மிஸ் செய்திடாமல் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் நண்பரே...இக்கதை சிஸ்கோக்கு பதிலா வந்தாங்ற எண்ணமே மேலோங்குது....அட்டகாசமான கதை...பார்ப்போம் அடுத்த சுற்றில் வருமா என

      Delete
    2. வோட்டெடுப்பில் தர்ம அடி வாங்கியிருக்கும் இந்த நேரத்திலே I.R.$.க்கு சிலாகிப்பு ! சத்திய சோதனை !

      Delete
    3. சார் உடனடியாக படிக்கும் நிலையில் பலரில்லை...
      அதனால் சிறந்த கதைகளை நிறுத்திப் பயனில்லை...விற்பனைய கணக்கில் வைத்து மியாம்ஸ்ல சேருங்க

      Delete
    4. ///வோட்டெடுப்பில் தர்ம அடி வாங்கியிருக்கும் இந்த நேரத்திலே I.R.$.க்கு சிலாகிப்பு ! சத்திய சோதனை///

      ஹா...ஹா... கமான்சேவை தாங்கள் ட்ராப் பண்ணி ரீலீஸ் பண்ணிய சந்தா அறிவிப்புக்கு அடுத்து கடைசியாக வெளியான ஆன கமான்சே செக்க போடு போட்டதுங் சார்...!!!

      இதுவும் அதேபோல்...

      Delete
    5. Tirupur Rajkumar nanbare
      Supera ezhuthiyirukkeenga...

      Ippa naan ezhuthiya IRS vimarsanathai enna seivadhu endru yosanai

      Kok sir
      Ivar ezhuthiya meethi irandu vimarsanangalaiyum Inge pagirungalen.

      Delete
  40. வழக்கமாக ஆசிரியர் மற்றும் நண்பர்கள் பகிரும் புத்தகவிழா புகைப்படங்களில் டெக்ஸோ அல்லது லக்கி லூக்கையோ ஏந்தியவாறு குட்டீஸ் போஸ் கொடுப்பதை பார்க்கும்போது இது போல தோர்கலுக்கும் ஒரு காலம் வருமா என ஏங்கியதுண்டு. அந்த குறை இந்த புகைப்படங்களைப் பார்த்ததும் நீங்கிவிட்டது.

    குட்டீஸ் அன்ட் ஆல வெல்கம் டூ தோர்கல் கிளப்!!

    ReplyDelete
    Replies
    1. //இது போல தோர்கலுக்கும் ஒரு காலம் வருமா என ஏங்கியதுண்டு. அந்த குறை இந்த புகைப்படங்களைப் பார்த்ததும் நீங்கிவிட்டது//

      சார்.. நீங்கள் எதிர்பார்ப்பதை விட கூடுதலாக, உருவாகி விட்டார்கள் தோர்கல் சில புதிய மாணவர் ரசிக ரசிகைகள்

      Delete
    2. ரகுராமன் சார் ; ஸ்டாலில் உங்களின் அபாரப் பங்களிப்பு பற்றி நம்மாட்கள் சொன்னார்கள் ! மிக்க நன்றி சார் !!

      Delete
    3. //ரகுராமன் சார் ; ஸ்டாலில் உங்களின் அபாரப் பங்களிப்பு பற்றி நம்மாட்கள் சொன்னார்கள் ! மிக்க நன்றி சார் !! //

      மிக்க நன்றி சார்...

      Delete
  41. *வாசகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் கோரிக்கையை ஏற்று,சேலம் புத்தகத் திருவிழா வரும் 6.12.2023 (புதன்கிழமை) வரை 3 நாட்கள் நீட்டிப்பு செய்யப்படுகிறது.*

    *- செ.கார்மேகம், இ.ஆ.ப.,*
    *மாவட்ட ஆட்சியர்,*
    *சேலம்.*
    மாவட்ட ஆட்சியரின் செய்தி.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார் ; சேலம் புத்தக விழாவில் மாவட்ட ஆட்சியர் அவர்களே பெரும் ஆர்வமும் , கவனமும் காட்டி வருகிறார் !

      Delete
    2. கிரேட் நியூஸ்.... இன்னும் சிலபல டைட்டில்கள் காலியாக புனித மனிடோ அருள் புரியட்டும்...

      Delete
  42. 2024 காமிக்ஸ் அட்டவணையை முதல் முறை பார்த்த போது பெரியதாக ஈர்க்கவில்லை. மறுநாள் மீண்டும் ஒரு முறை நிதானமாக படித்தபோது அட கதைகள் மற்றும் நாயகர்கள் செலெக்ஷன் மிக அருமையாக இருந்தது. நண்பர்கள் பலரும் குண்டு புத்தகம் இல்லை என வருத்தபட்டு இருக்கலாம், ஆனால் 2024 கதைகள் குண்டு புத்தகங்கள் கொடுக்கும் சந்தோசத்தை விட இந்த முறை அனைத்து கதைகளுள் சிறந்த வாசிப்பு அனுபவத்தை தரும் அதே போல் அந்த அந்த மாதங்களில் வந்த கதை புத்தகங்களை அந்த மாதமே நம்மை எடுத்து கண்டிப்பாக படித்து விட வைத்து விடுவோம் என்று உறுதியாக நம்புகிறேன்!

    இதுவரை வந்த அட்டவணையில் ஆசிரியர் சில கதை விற்பனையில் சாதிக்கவில்லை என்றாலும் சில நண்பர்கள் விரும்பும் கதை அல்லது மற்றும் ஒரு வாய்ப்பு கொடுப்போம் என்று அவைகளை தொடர்ந்து கொடுத்த வந்துள்ளார், இந்த முறை அப்படி எந்த ஒரு சமரசமும் செய்யாமல் அனைத்து புத்தகங்களும் அனைவருக்கும் பிடிக்கவேண்டும் அதே போல் விற்பனையில் சாதிக்க முடியும் என்ற கதைகளை மட்டும் தேர்வு செய்துள்ளார்.

    இதுவரை வந்த காமிக்ஸ் அட்டவணையில் இதுவே மிக சிறந்தது என்னை பொறுத்தவரை.

    மீண்டும் ஒரு முறை நமது காமிக்ஸ் அட்டவணையை பாருங்கள் நண்பர்களே கண்டிப்பாக உங்களுக்கு ஆசிரியரின் தேர்வுகள் பிடிக்கும்! 2024 காமிக்ஸ் சந்தாவில் விரைவில் சேருங்கள்!

    ReplyDelete
  43. சேலம் நமது காமிக்ஸ் ஸ்டாலில் விற்பனைக்கு களப்பணி ஆற்றிவரும் நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி; நண்பர் ரகுவுக்கு ஸ்பெஷல் நன்றி; உங்களின் அப்டேட் மற்றும் பங்களிப்பு மிக சிறப்பு! ஒவ்வொரு புத்தக திருவிழாவிலும் நண்பர்கள் சிலர் நமது காமிக்ஸ் ஸ்டாலில் களப்பணியாற்றுவது மிகவும் சிறப்பு, அவர்கள் செயல் பாராட்டுக்குரியது. நன்றி நண்பர்களே.

    ஒவ்வொரு புத்தக திருவிழாவிற்கு சென்று நமது காமிக்ஸ் ஸ்டாலில் சென்று நண்பர்களை போல் அங்கு இருக்க வேண்டும் என நினைப்பேன்! ஆனால் சூழ்நிலை சரியாக அமையாத காரணத்தால் இதுவரை முடியவில்லை! விரைவில் இது போன்ற வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கிறேன், நண்பர்களுடன் காமிக்ஸ் பற்றி அதிகநேரம் செலவிட ஆர்வமுடன் உள்ளேன்!

    ReplyDelete
  44. // சேலம் நமது காமிக்ஸ் ஸ்டாலில் விற்பனைக்கு களப்பணி ஆற்றிவரும் நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி; நண்பர் ரகுவுக்கு ஸ்பெஷல் நன்றி; உங்களின் அப்டேட் மற்றும் பங்களிப்பு மிக சிறப்பு! ஒவ்வொரு புத்தக திருவிழாவிலும் நண்பர்கள் சிலர் நமது காமிக்ஸ் ஸ்டாலில் களப்பணியாற்றுவது மிகவும் சிறப்பு, அவர்கள் செயல் பாராட்டுக்குரியது. நன்றி நண்பர்களே.//

    மிக்க நன்றி சார்...

    இந்த வருடம் சேலம் புத்தகக் கண்காட்சி விற்பனையில் புதிய இளம் வாசகர்களுக்கு ஊக்கம் மற்றும் ஆதரவு அளித்து வரும், சேலம் குமார் மற்றும் யுவா கண்ணன் அவர்களின் பங்களிப்பு என்றும் போல், இந்த சேலம் புத்தக கண்காட்சியிலும் மறைமுகமாக உள்ளன என்பது பலரும் அறியாத ரகசியம். இந்த பாராட்டுக்கள் முக்கியமாக இவர்கள் இருவருக்கும் சென்றடைந்தால் நான் மிக்க சந்தோஷப்படுவேன்.

    நான் வெறும் அம்பு தான், எய்தவர் இனிய நண்பர் சேலம் குமார்.

    வில்லும் அம்புமாக இருப்பவர் இனிய நண்பர் யுவா கண்ணன்.

    இதுதான் ரகசியமான உண்மை நன்றி சார்...

    ReplyDelete
    Replies
    1. வில்லுகளுக்கும் அம்புகளுக்கும் எனது மானசீகப் பூங்கொத்துகள்! தொடர்ந்து அசத்துங்கள் நண்பர்களே!

      இளம் தலைமுறையினர் ஆர்வமாகக் காமிக்ஸ் படிக்கத் தொடங்கியிருப்பதை முன்பை விடவும் இப்போது நன்றாக உணரமுடிகிறது!

      டின்டின்னின் தமிழக வருகை இன்னும் கணிசமான இளம்தலைமுறையை கவர்ந்திழுக்கக்கூடும்!

      அப்படியொரு மேஜிக் நிகழ்ந்தால் 2024ஐ தொடரும் ஆண்டுகளில் எடிட்டரின் 'ஆயிரம் சந்தாக்கள்' கனவு மெய்ப்பட்டுவிடும்!

      Delete
    2. // நான் வெறும் அம்பு தான், எய்தவர் இனிய நண்பர் சேலம் குமார். //
      // வில்லும் அம்புமாக இருப்பவர் இனிய நண்பர் யுவா கண்ணன். //

      வாழ்த்துக்கள் நண்பர்களே. உங்கள் இருவரின் செயல்களும் பாராட்டுதலுக்கு உரியது.

      நண்பர் குமாரின் காமிக்ஸ் காதல்
      பற்றி தெரியும் . முதல்முறையாக நண்பர் யுவாக்கண்ணனின் காமிக்ஸ் காதலை உங்கள் மூலமாக தெரிந்து கொண்டுள்ளேன். நன்றி யுவா கண்ணன்.

      Delete
    3. // நண்பர் குமாரின் காமிக்ஸ் காதல்
      பற்றி தெரியும் . முதல்முறையாக நண்பர் யுவாக்கண்ணனின் காமிக்ஸ் காதலை உங்கள் மூலமாக தெரிந்து கொண்டுள்ளேன். நன்றி யுவா கண்ணன். //

      இவர்கள் இருவரும் எப்போதும் மூச்சு காட்ட மாட்டார்கள் சார்.

      சென்ற வருடம் 2022 சேலம் புத்தக கண்காட்சியில் நண்பர் யுவா கண்ணன் பங்களிப்பு பற்றி எனக்கு சமீபத்தில் தான் தெரியும் சார்

      இவர்கள் மட்டுமல்ல நம் காமிக்ஸ் நண்பர்கள் எத்தனையோ பேர் வெளியே தெரியாமல் பங்களிப்பு ஆற்றி வருவது நமக்கெல்லாம் தெரியாமல் தான் உள்ளது சார் முகம் தெரியாத அந்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்

      Delete
    4. சகோதரர்கள் ரகு, யுவா கண்ணன் மற்றும் குமார் மூவருக்கும் பாராட்டுகள் பல 💐💐💐💐💐👏👏👏👏👏

      Delete
  45. // இளம் தலைமுறையினர் ஆர்வமாகக் காமிக்ஸ் படிக்கத் தொடங்கியிருப்பதை முன்பை விடவும் இப்போது நன்றாக உணரமுடிகிறது! //

    நீங்கள் சொல்வது உண்மைதான் சார்.

    நானும் என் பங்குக்கு ஒரு உண்மையை சொல்லி விடுகிறேன்.

    இந்த வார நாட்களில் பள்ளிகளின் மூலம் வருகை புரிந்த மாணவ மாணவியர்கள் ஏதேனும் ஒரு காமிக்ஸ் புக்கை மட்டும், அவர்களை அறிந்தும் அறியாமலும் பெற்று சென்று, படித்துவிட்டு .. நேற்று சனிக்கிழமை விடுமுறை என்பதால் சுமார் 10 முதல் 15 வரை வெவ்வேறு பள்ளிகளின் மாணவ, மாணவியர்கள் தனித்தனியே அவர்களின் பெற்றோர்களை அழைத்து வந்து குறைந்த பட்சம் ரூபாய் 300 முதல் 750 வரை விலையுள்ள புத்தகங்களை வாங்கிச் சென்றனர் அவர்களது பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் வாசிப்பு திறனை ஊக்கப்படுத்த மறுக்காமல் வாங்கி கொடுத்து சென்றனர். இதை நேரில் கண்ட எனக்கு எவ்வளவு ஆனந்தமாக இருந்தது !

    ReplyDelete
    Replies
    1. நமக்கெல்லாம்80 களில் உலவும் வாழ்க்கை கிடைச்சாச்சு...ஆசிரியருக்கும் கிட்டனும் மறு பாதியிலும்

      Delete
    2. // நமக்கெல்லாம்80 களில் உலவும் வாழ்க்கை கிடைச்சாச்சு...ஆசிரியருக்கும் கிட்டனும் மறு பாதியிலும் //

      +1

      Delete
    3. அருமை சகோதரரே🥳🥳🥳

      Delete
  46. வில்லாளன்....

    வில்லு....

    அம்பு.....

    அனைவருக்கும் வாழ்த்துகள்💐💐💐💐💐& பாராட்டுக்கள்....

    ஒவ்வொரு ஊரிலும் ஆசிரியருக்கு உதவிக்கரம் நீட்ட இருக்கும் நெஞ்சங்களின் பட்டியல் நீண்டு கொண்டே இருப்பது ரொம்ப நல்ல விசயம்....!!!


    ReplyDelete
  47. இவ்ளதாங்க விசயம்..சோ சிம்பிள்....

    புத்தக விழாக்கள்ல வாசகர்களுக்கு செலக்சனுக்கு உதவி செய்தா எல்லாரும் பாராட்ட போறாங்க...!!!

    மாதம் ஒரு புக்ஃபேர் இருப்பதால் நிறைய நண்பர்கள் முன்வர்றாங்க.... அந்த நேரம் ஒதுக்கும் மனசு தான் இங்கே மனிடோ...

    இதேபோல பல நண்பர்களை இணைத்து போட்டிகளை நடத்தும் சில மனிடோக்கள் உள்ளனர்...

    தொடர்ச்சியாக ஆண்டுக்கு பல போட்டிகளை ஒருங்கிணைக்கும் ஒரு மனிடோவும் உள்ளது...அந்த மனிடோவை எல்லோரும் கொண்டாடத்தானே செய்வோம்...

    நெல்லுக்கு பாயும் நீர் அங்கே வளரும் புல்லுக்கும் பாய்வது போல உதவிகரமாக இருக்கும் ஸ்பான்ஸர் மனிடோக்களுக்கும் நடுவர் மனிடோக்களுக்கும் கூட வாழ்த்து கிடைப்பது இயல்பே....

    புத்தக விழாவை சில நண்பர்கள் முன்னெடுத்து சிறப்பிக்கிறாங்க.. போலவே அடுத்த கட்டமாக ஒருசில நண்பர்கள் கூடி இந்தாண்டு கிரிக்கெட் போட்டி கூட வித்தியாசமாக செய்தாங்க.

    நெல்லு எல்லோர் வயிறையும் நிறைக்குது...புல்லு நாலுகால் ஜூவன்கள் வயிற்றை நிறைக்குது..

    இதுபுரியாம சில அற்ப பதர்கள்(நெல்லு மாதிரியே இருக்கும் ஆனா உள்ளே அரிசி இராது, மொத்தத்தில் யாருக்கும் உபயோகம் இராது...அதைதான் பதர்னு அழைக்கிறாங்க...) பொறாமை கொண்டு பொங்கி எழுந்து போலி ஐடிக்களிலும் முதுகுக்கு பின்பும் புரணி பேசுவதும் மனிடோக்களை தூற்றுவதம் நடக்கத்தான் செய்கிறது...

    உமக்கும் பாரட்டு வேணும்னா இறங்கி வேலை செய்யணும்... அதை விட்டுட்டு செய்யறவங்களை பார்த்து வயிறு எறியறுதுல என்ன பிரயோசனம்???

    பதர்கள் திருந்தினா சரி!!!

    ReplyDelete
  48. ///முதல்முறையாக நண்பர் யுவாக்கண்ணனின் காமிக்ஸ் காதலை உங்கள் மூலமாக தெரிந்து கொண்டுள்ளேன். நன்றி யுவா கண்ணன்./////

    @PfB பலமுறை யுவா தன் செயல்பாடுகள் வாயிலாக தன் காமிக்ஸ் காதலை வெளிப்படுத்தியுள்ளார்..

    2014ல இருந்தே பார்த்து வர்றோம்...

    குறிப்பாக 2014சேலம் விழாவில் அவர் செய்த அரும்பணி

    அந்த காலகட்டத்தில் அந்த விழாவை பெரும் வெற்றியாக்கியதில் யுவாவுக்கு தான் முக்கிய பங்கு உள்ளது....

    இதை பற்றி நேரம் இருக்கும்போது விரிவாக சொல்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. // இதை பற்றி நேரம் இருக்கும்போது விரிவாக சொல்கிறேன். //

      Sure! Waiting.

      Delete
  49. அனைவருக்கும் வணக்கம் ...

    சேலம் புத்தக கண்காட்சி இன்று முதல் மூன்று நாட்களுக்கு புதன்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ள விஷயம் தாங்கள் அறிந்ததே..

    சேலம் புத்தக கண்காட்சி விற்பனையை ஊக்கப்படுத்த 2024 ஆம் ஆண்டு சந்தா கட்ட விரும்பும் நண்பர்கள் புத்தக கண்காட்சி மூலம் செலுத்தி விற்பனையை உற்சாகப்படுத்துங்கள் நண்பர்களே...

    ReplyDelete
  50. இந்தக் கதையின் விமர்சனத்தை வேறொருவர் எழுதி விட்டதால் நான் எழுதி பாதியில் நிறுத்தியிருந்த விமர்சனத்தை வீணடிக்க வேண்டாமே என்று இங்கு பதிவிடுகிறேன். இது போட்டிக்கான விமர்சனம் அல்ல

    கறை படிந்த கரன்ஸி

    "இந்த தேசத்தில் குறுக்கும் மறுக்குமாய் சுற்றி வரும் ஒவ்வொரு டாலரும் என்ன செய்து வருகிறது என்பதை கண்காணிப்பதை தாண்டி IRS க்கு துளியும் அக்கறை கிடையாது". இப்படி பட்ட துறையில் அநேகமாக கிரிமினல் இன்வெஸ்டிகேஷன் (IRS - CI ) துறையை சார்ந்த ஒரு ஸ்பெஷல் ஏஜென்ட் தான் நம்ம லெரி பி மேக்ஸ். ஏழாம் வகுப்பிலேயே ஒழுங்கீன சிகாமணி என்று முத்திரை குத்தப்பட்டவர் தான் நம் ஹீரோ லேரி பி மேக்ஸ் ஆனால் கம்பியூட்டர் மூளை என்று அவரது உயரதிகாரிகளால் பாராட்டத் படுபவர்.


    "யுத்தமோ அமைதியோ எல்லாத் தருணங்களிலும் காசு பார்க்கும் வித்தைகளை அதிகாரவர்க்கத்தின் மேல்மட்டம் தெரிந்து வைத்திருக்கும்". இந்த கதையில் வரும் இந்த வசனம் தான் இந்த கதையின் அடிநாதம்.

    ஒரு மரணம் - அது சார்ந்த ஒரு புலனாய்வு எங்கெங்கு கதையை இட்டுச் செல்கிறது. வில்லனின் அஜாக்கிரதையான போக்கு நம்மை கதைக்குள் இழுத்துக் கொண்டு சென்றாலும் வில்லனின் முகமூடி கிழியும் பொழுது அட போட வைக்கிறது.

    கதாசிரியர் டெஸ்பேர்க் மற்றும் ஓவியர் ரேங்க்கென் செதுக்கி எடுத்திருக்கிறார்கள் இந்த கதையை.

    கொசு விட்ட மூச்சில் சூறாவளிகள் அடங்கிப் போனதாய்ச் சரித்திரமே கிடையாது எனும் வசனம் வில்லனின் அலட்சியத்தை பறைசாற்றுகிறது

    விலையே இல்லாத ஆள் யாருமே இந்த பூமியில் கிடையாது லேரி எனும் வசனம் உலகம் பணம் எனும் பொருளுக்கு பின்னாலேயே ஓடிக் கொண்டிருப்பதாய் அர்த்தப் படுத்துகிறது.

    நில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நதியைப் பராக்குப் பார்த்து நிற்கும் படகுத் துறைகள் மாத்திரமே நாமெல்லாம். என்று செண்டிமெண்ட் போன்ற எந்த உணர்வுக்கும் இந்த கதையில் மதிப்பில்லை என்று எடுத்துரைக்கிறது.

    32ஆம் பக்கம் நகைச்சுவை நிறைந்த ஆக்ஷன் பக்கம். ஆசிரியரின் நகைச்சுவை உணர்வு அபாரம்.

    ஓவியங்கள் - 9/10 கதை - 9.5/10 மொழிபெயர்ப்பு - 10/10

    ReplyDelete
  51. *காமிக்ஸ் எனும் கனவுலகம் விமர்சன போட்டி*

    *பின்குறிப்பு*:

    *இது கதையை பற்றிய விமர்சனம் என்றாலும் கதையோ கதையில் வரும் நிகழ்வுகளை வெளிச்சம் போட்டு காட்டும் "ஸ்பாயிலர் அலர்ட்" விமர்சனம் கிடையாது..கதையை படிக்க படிக்கவும் ,படித்து முடித்தவுடனும் என்னுள் ஏற்பட்ட மனநிகழ்வுகளே இந்த விமர்சனம்..*


    *எனவே கதையை படிக்கும் முன்னர் விமர்சனங்களை வாசிப்பது இல்லை என இருக்கும் ஷெரீப் போன்றோர் அவர்களும் இதை வாசிக்கலாம்*

    *அதே சமயம்... டெக்ஸ் கதையில் என்னய்யா கதை இருக்கு ஒரே மாதிரி தானே என கிண்டல் வசனம் பேசினால் பிச்சு..பிச்சு...*




    *தி டெக்ஸ் சிக்ஸர் ஸ்பெஷல்...*

    ஒன்றல்ல ..,இரண்டல்ல சரியாக நான்கு மணி நேரம்... அதுவும் இடைவிடாமல் தொடர்ந்து நான்கு மணி நேரம் டெக்ஸ் உடன் பயணித்து முடித்த அடுத்த நொடியே இதை எழுதுகிறேன்.

    அப்பப்பா...என்ன ஒரு அட்டகாச உணர்வு ..விவரிக்க வாரத்தைகளே இல்லாத அட்டகாசமான உணர்வை அளித்த படைப்பு டெக்ஸ் தீபாவளி மலரும்..சிக்ஸர் ஸ்பெஷல் மலருமான இந்த இதழ்...இவ்வளவு பெரிய சாகஸத்தை ஒரே மூச்சில் படிக்க வைக்க நேரமும் சூழலும் மட்டும் போதுமானது அல்ல அதை முடிக்க வைக்க அந்த கதையின் ஜீவ நாடியும் ,உணர்வும்..பரபரப்பும் விறுவிறுப்பும் ,மொழிநடையும் நமக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதும் உண்மை.. அது இந்த கதையில் நூறு சதவீதம் அப்படியே அடங்கி உள்ளது.. இளம் டெக்ஸ் கதை வரிசைகளில் என சொல்லலாமா அல்லது டெக்ஸ் கதைகளிலியே அனைத்திலுமே சொல்லலாமா என தெரியவில்லை ஆனால் மிக மிக மிக மனதை கட்டி போட வைத்த இதழ் இது என்பது மறுக்க முடியாத உண்மை..

    இப்போதைய டெக்ஸ் சாகஸங்களில் ராணுவத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு .. அனைத்து அதிகாரிகளிடமும் அவருக்கான பலத்த அறிமுகங்கள்..அனைத்து செவ்விந்தியர்களும் டெக்ஸ் அவர்களுக்கு கொடுக்கும் மரியாதை இதெல்லாம் ஓவரோ என நினைக்கும் வாசகர்களுக்கு இந்த ஒரே சாகஸத்தின் மூலம் பதில் தருகிறார் காமிக்ஸ் சூப்பர் ஸ்டார் டெக்ஸ்... இப்பொழுது அவருக்கு கொடுக்கப்படும் அதிதீவிர மரியாதை கூட சரியானது தான் என்று இந்த இளம் டெக்ஸ் சாகஸம் நிரூபிக்கிறது ( வயதில் மிக மூத்தோரும் அவரை விட மிகப்பெரிய பதவியில் இருப்போருக்கான வசனங்கள் விதிவிலக்கு)...கதையை படித்து முடித்தவுடன் தான் கதையின் தலைப்பையே காணவில்லையே என உணர்ந்தேன்..

    டெக்ஸ் டெக்ஸ் தான் என பல இதழ்கள் நிரூபித்து உள்ளன தான்...ஆனால் இந்த இளம் டெக்ஸ் அதற்கும் மேல்...இதழில் அறிவித்தப்படி இது சூறாவளி சாகஸமே...டெக்ஸ் மட்டுமல்ல கதையில் வரும் பல மாந்தர்களும் இன்னமும் மனதில் நிழலாடுகிறார்கள்..கதை மட்டுமா ஓவியங்களும் டெக்ஸ் உடன் நம்மையும் நிஜ உலகில் நுழைவது போல் நுழைய வைக்க மொழி ஆக்கத்தில் ..எழுத்து பிழையில் என ஒரு சிறு தடங்கல் கூட இல்லாதவாறு சரவெடியாய் நம்மை வாசித்து அழைத்து செல்கிறது இந்த சூறாவளி சாகஸம்.

    என்னை பொறுத்தவரை இந்த வருடத்தில் எத்தனையோ இதழ்கள்..எத்தனையோ சிறப்புகள் கொண்டு இருந்தாலும் என்னுடைய ஆதர்ஷ முதலிடமாக இந்த இளம் டெக்ஸ் இதழ் தான் மனதில் நிற்கும் என்பது சத்தியமான உண்மை..

    இந்த இதழில் குடி இருந்த அந்த நான்கு மணி நேரம் தான் என்னுடைய உண்மையான தீபாவளி சார்..

    *கிராபிக் நாவலோ ..மனதை பாதிக்கும் கதைகளோ விமர்சன போட்டியில் இடம்பெறாமல் மனதை மகிழ்ச்சியிலும் ,குஷியிலும் ஆழ்த்திய இந்த கதையின் இந்த விமர்சனத்தையே எனது முதல் விமர்சனமாக இந்த போட்டியில் இடம் பெறுகறது*

    *எனவே போட்டிக்காகவோ ,ரசனைக்காகவோ எதுவாக இருந்தாலும் எனது செலக்‌ஷன் கமர்ஷியல் கதையே*



    நன்றி நண்பர்களே...


    கே.பரணீதரன்
    தாரமங்கலம்

    9942759238

    ReplyDelete
    Replies
    1. செம தலை.. செம... ஆட்டம் சூடு பிடிக்கிறது...
      முதல் முறையாக தலைவரையும் சீரியஸாக ஒரு போட்டியில் கலந்து கொள்ள வைத்தாயிற்று....

      குட்ஜாப் @KOK அங்கிள்& கனவுலகம்!

      Delete
  52. டிசம்பர் மாத ஆன்லைன் லிஸ்டிங் போட்டாங்க....😍

    நாளை இன்னொரு தீபாவளி...🎆🎇🎆🎇🎆🎇🎆

    ReplyDelete

  53. நண்பர்களே@

    லயன்-முத்து எடிட்டர் திரு.விஜயன் சார், 17வயது இளைஞராக லயன் காமிக்ஸ் ஆரம்பித்ததில் இருந்தே பலவிதமான சாதனைகள் & பரவலான சோதனை முயற்சிகளோடு தனது காமிக்ஸ் பயணத்தை தொடர்ந்து வெற்றிகரமாக செய்து வருகிறார். அவரது பயணத்தில் எத்தனையோ சாதனை மைல்கற்கள், அசாத்திய சிகரங்கள், கத்தி மீது நடக்கும் நுட்பங்கள், அந்தர்பல்டிகள்...என பல்வேறு அசகாயங்களை அசால்டாக செய்து வருவதை நாம பார்த்து வியந்துள்ளோம்...!

    முந்தைய க/வெ யுகத்தில்.......

    #ரூ2க்கு காமிக்ஸ் பரவலாக இருந்த 1984-85ல ரூ4விலையில் வெளியான அதிரடிகள் இரும்புமனிதன், சதிவலை & கொலைப்படை...

    #ஆர்ப்பாட்டமாக அறிமுகமே ஸ்பெசல் இதழில் கண்ட அரிசோனா "அதிகாரி"-டெக்ஸ் வில்லரின் எண்ணிலடங்கா அதிரி புதிரி ஹிட்ஸ்....

    #அசத்தலான சலபன் அட்டைப்படங்கள், அரை டஜன் சூப்பர் ஹீரோக்களின் கதைகளோடு வெளியாகி ரசிகர்களை சொக்கவைத்த ரூ5 விலையிலான பாக்கெட் சைஸ் கோடைமலர்கள் & தீபாவளிமலர்கள்......

    #கனவல்ல நிஜம்தான் நம்புங்கள் என சொன்னாலும் கிள்ளிப் பார்த்துத்தான் இது நிஜம் என உணர வைத்த- தி பாக்கெட் டைனமைட் ரூ10க்கு வெளியான தி கிரேட் பாக்கெட் சைஸ் இதழ், "லயன் சூப்பர் ஸ்பெசல் ".....

    #பெயரிலேயே அதிரச்செய்த தி லயன் 50, "டிராகன் நகரம்"....

    #மீண்டும் விலையில் புரட்சி, கதைகளில் ரசிகர்களை கட்டிப்போட்ட-லயன் சென்சுரி ஸ்பெசல் & Top 10 ஸ்பெசல்.....

    #ரூ100க்கு ஒரு காமிக்ஸ் இதழா என விலையில் மட்டுமல்லாமல்- தரத்தில், அளவில், கதைத்தேர்வுகளில் என சகலத்திலும் விழிகளை அகல விரியச் செய்த பிரமாண்டங்கள் மெகா ட்ரீம் ஸ்பெசல், ஜாலி ஸ்பெஷல் & கெளபாய் ஸ்பெசல்.....


    #15வருட கனவை நனவாக்கி- விலையிலும், கதை நீளத்திலும் புதிய சரித்திரம் படைத்த ரூ200க்கு வெளியான லயன் ஜம்போ கலெக்டர்ஸ் ஸ்பெசல்-"இரத்தப்படலம்....." என பல்வேறு சாதனைகள் இன்னிங்ஸ் 1லான 27ஆண்டுகளில்..!!!!

    கம்பேக்கிற்கு பிறகு.....

    #லயன் கம்பேக் ஸ்பெசல்

    #முத்து நெவர் பிபோர் ஸ்பெசல்

    #லயன் மேக்னம் ஸ்பெசல்

    #தங்க தலைவனின் "மின்னும் மரணம்"

    #தல டெக்ஸின் தி லயன்250

    #தமிழ் காமிக்ஸ் சிம்மாசனத்தின் உச்சியில் தல டெக்ஸை அமர்த்திய "சர்வமும் நானே!"

    #தன்னிகர் அற்ற வெற்றிகோட்டை "இரத்தக்கோட்டை"

    #காமிக்ஸ் உலகை புரட்டிபோட்ட மறுபதிப்பு வண்ணத்தில் "இரத்தப்படலம்"

    #சத்தமின்றி யுத்தம் தொடங்கி, மெளன இடியாய் முழங்கிய "டியூராங்கோ"

    #அரிசோனா புயலுக்கே பிரளயமாகிய டைனமைட் ஸ்பெசல்

    #சிகரங்களின் உச்சியில் ஏறிய "சாம்ராட்" தோர்கல்

    # மார்கோ‘ எனும் மதனமோகன ரூப சுந்தரியின்
    "பிஸ்டலுக்கு பிரியா விடை"

    #டெக்ஸ் 75----"சுப்ரீமோ ஸ்பெசல்"

    #தல-தளபதி தீபாவளி ஸ்பெசல்ஸ்2023

    #இன்னும் லார்கோக்கள், பெளன்சர்கள், வெய்ன் ஷெல்டன்கள், அண்டர்டேக்கர்கள், ஜேசன் பிரைஸ்கள், பராகுடாக்கள் என எண்ணிலடங்கா நவயுக நாயகர்கள் அறிமுகம்...................

    #லக்கியின் ஆண்டுமலர் காமெடி தோரணங்கள்...

    #லயன்-முத்து காமிக்ஸில் ரூ1000 விலையில் வெளியான முதல் நாயகர்-டைகர்...

    மிக நீண்ட கதைக்கு சொந்தக்காரர்-நம்ம மறதிக்கார நண்பர் ஜேசன் ப்ளை....

    ------என பலப்பல சாதனை இதழ்களை வெளியிட்டு உள்ளார் இந்த 11ஆண்டுகளில்.....!!!


    *இந்த சாதனைகளையெல்லாம் விஞ்சும் பலப்பல சாதனைகளை இந்தாண்டு நிகழ்த்தியுள்ளார், பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே....ஓரே ஆண்டில் அதிகபட்ச ஹரா்டு கவர் இதழ்கள், அதிகபட்ச பக்கங்கள் என எல்லா பக்கமும் பெஞ்மார்க்குகள்.....


    *நாளை மற்றொரு மகத்தான சாதனையை நிகழ்த்த உள்ளார் ஆசிரியர் விஜயன் சார்...


    """""""ஓராண்டில் அதிகப்படியான எண்ணிக்கையிலான காமிக்ஸ் இதழ்கள்"""""""

    இதுவரையில் 2016ல் 58இதழ்கள் என்பதே சாதனையாக இருந்தது.....நாளை வெளிவரும் இதழ்களோடு 2023ன் எண்ணிக்கை 59 என்ற புதிய சாதனையை தொட உள்ளது...

    வாழ்த்துகள் ஆசிரியர் சார்......💐💐💐💐💐💐

    கம்பேக் முதல் ஆண்டுவாரியாக இதழ்களின் எண்ணிக்கை....

    2012---14
    2013---24
    2014---36
    2015---48
    2016---58
    2017---52
    2018---52
    2019---52
    2020---47
    2021---46
    2022---45
    2023---59*

    இந்த பயணத்தின் ஒவ்வொரு நொடியையும் நேரலையாக ரசித்தது சும்மா ஜிவ்வுனு இருக்கு.....

    """100 ""என்ற மந்திர எண்ணிக்கையை வரும் ஆண்டுகளில் எட்டிப்பிடிக்க முன்கூட்டியே வாழ்த்துகள் சார்......!!!

    ----STV வித் KOK, ஷெரீப், பேபி & கனவுலகம்!!!

    ReplyDelete
    Replies
    1. டிசம்பர் நடுவில் சிஸ்கோ மற்றும் விங் கமாண்டர் ஜார்ஜ் வேறு வருகின்றார்கள் நண்பா.

      Delete
    2. PSaravanan@ ஆம் நண்பா.... இத்தனை விசயங்களை அலசி ஆராய்ந்து உள்ள நாங்க அதை குறிக்கும் விதமாகத்தான்,
      59க்கு மேலே * வைத்து உள்ளோம். அது எதற்குனா Final Tally இன்னும் முடிவாகல என்பதைக் குறிக்க...!!!!

      60, 61 னு போகலாம்...

      மேபி ஆசிரியர் சார் ஒரு Record special (சாதனை மலர்) கூட போடலாம்! அப்ப எண்ணிக்கை இன்னும் கூடலாம்.


      (இப்ப ஈவி வந்து ப்ளோவுல, Record Dance னு படிச்சுட்டேன்னு சொல்வார் பாருங்க ப்ரெண்ட்ஸ்..)😜😜😜

      Delete
    3. ///கம்பேக் முதல் ஆண்டுவாரியாக இதழ்களின் எண்ணிக்கை....

      2012---14
      2013---24
      2014---36
      2015---48
      2016---58
      2017---52
      2018---52
      2019---52
      2020---47
      2021---46
      2022---45
      2023---59*-_--//////

      இந்த பட்டியல் தயாரிக்க //ஒரு ஆண்டில் அதிகபட்சமாக எத்தனை புக்ஸ் வந்துள்ளன?///
      என்ற கேள்வியை கனவுலகம் குழுவில் கேட்டு, இப்படி ஒரு ஐடியாவை கொடுத்தது நண்பர் SK வே...!!! இந்த சமயத்தில் நண்பர் பல்லடம் சரவணக்குமார்-க்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம்!

      Delete
    4. அருமை சகோதரரே 👏👏👏

      Delete
  54. வாழ்க்கை எப்போதும் எல்லாமே எனக்கு கெடைச்சாச்சுன்னு தையதக்கக்க ஆட்டம் போட விடாது சில கொட்டுகளையும் நமக்குத் தரும் .... அது பிரசிடெண்டாக இருந்தாலுமேதானே .!
    சக் மனிதர்கள் படும் துயரங்களை பார்க்கும் போது நாளை நமக்கும் வராது போகாதென்னும் குழப்பம் நீடிக்கா மனிதன் யாருண்டு .?
    இதோ ஓர் அப்படியானால் கதை....தனக்கு வந்தால்தானே ரத்தம் என பக்கத்து மண்ணில் நடந்ததை கண்டும் காணாமல் நடந்த தலைமுறை தானே நாம்...இப்பயுமே....
    அப்படியோர் பிரசிடெண்ட் இருந்தால்......முதலில் ஆசிரியரிடம் பெரிய மன்னிப்பு...எல்லாம் தெரிந்தத போல சிஸ்கோவுக்கு நெகட்டிவ் முத்திரை குத்தியதற்கு ஒரே கதை வாயிலாக...வாழ்த்துக்கள் சிஸ்கோவின் முத்திரைக்கு...

    உஷார் அழகாய் ஆபத்து.....

    ReplyDelete
    Replies
    1. மின்னல் போல் வேகம்....மனோவேகம் எத்தனை வேகம் வேணும்னாலும் போட்டுக்கொள்ள இக்கதைக்கு எதுவும் ஈடாகாது இதற்கு....இனிய வேகம்னா சிஸ்கோ போல சாரி சாரி...அழகாய் ஓராபத்து போல எனும் பதம் தேவைப்படலாம் காணா அறியா வேகத்துக்கு....

      பக்கத்துக்கு பக்கம் சிஸ்கோமட்டுமல்ல அனைத்து கதை மாந்தர்களும் தெறிக்க விட்டால் எப்படி இருக்கும்....அதுவும் அற்புதமான ஓவியங்கள் துணையாக வசனங்களோ அதிரடியாக கரம் கோர்த்து நாட்டியமாடினால்.....

      நாமும் சுத்தி ஆடியாகனுமே தாளம் தப்பாத போது...

      கதை மாடஸ்டி...லார்கோ ...ஜேம்ஸ்பாண்ட் மற்றும் பலர் போராடியும் முடிவுக்கு வராத. போதைப்பொருள் தரும் காட்டம் தான்...இங்கே பிரஸிடண்ட் போராட கதை செல்லும் திசையே வேறு....எங்கேயும் நம்மை தவறி சுற்றியலைய விடாத கதையின் போக்கில் அவிழும் முடிச்சுகள்...நாம் போடும் முடிச்சுகளை யும் அவிழச் செய்யும் கதையினுள் எழாமல் அமிலச் செய்யும்...

      ஆசிரியர் ஒரே வார்த்தைதான் கூறினார்...ரேஸி....நானும் ஒரே வார்த்தையில் தான் வெறுத்தேன் நாயகனா வில்லனா என...ஆசிரியர் எவ்வளவு உறுதியோடிருந்தால் டயபாலிக் அடியையும் மீறி விட்டிருப்பார்....சோதனை ஆசிரியருக்கு...பலன் நமக்கு...வெற்றி நிச்சயம் ஆசிரியருக்கே....


      முதன் முறையாக நானும் ஸ்பாய்லர் அலர்ட் தருகிறேன்... கதையை படிக்காதவங்க இந்த விமர்சனத்தை படிக்காதீங்க.....இரண்டாம் பாக அதிரடிகள தவறவிட்றாதீங்க...நாமே நடந்தால்தான் அந்தத் திரில் நிலைக்கும்....

      Delete
    2. ஸ்பாய்லர் அலர்ட்
      ஸ்பாய்லர் அலர்ட்
      ஸ்பாய்லர் அலர்ட்
      ஸ்பாய்லர் அலர்ட்
      ஸ்பாய்லர் அலர்ட்
      ஸ்பாய்லர் அலர்ட்
      ஸ்பாய்லர் அலர்ட்
      ஸ்பாய்லர் அலர்ட்

      Delete
    3. துவக்கமே போதைப் பொருளுக்கெதிராய் போரிடும் பிரசிடண்ட்....அவரது உதவியாளர்னு சம்பாசிக்க...புரளும் பக்கங்களில் பிரசிடண்ட் மகள் போதையில் புரள....உதவியாளர் பிரசிடண்ட் மகளுடன் புரள...இதெல்லாம் சாதரணமெனச் செல்லும் கதை(இதசாதாரணமல்ல...திருப்பமே இதான்னு இரண்டாம் பாகம் உடைக்கும்)
      ...அடேயப்பா என முடுக்கம் மேலும் கூட....போதைப் பொருள்களை
      உபயோகிப்போர் மேலும் சட்டம் பாயும் எனும் துவக்க சம்பாசனைகள் மனதில் தூண்டுதலை ஏற்ற வேகமெடுக்க....பாதுகாப்புக்காக சிஸ்கோ பிரசிடண்ட் மகளை சுற்றி வருகிறார் . அங்கே வேறிருவர் சிஸ்கோவின் கழுகுக் கண்களுக்கு தட்டுப் படுகிறார்கள் நாங்களும் ஆர்மர் செக்யூரிட்டீஸ் பாதுகாபபுக்கென வர...நமக்கு க்யூ பிரிவு ஜானி விமான விபத்து நினைவுக்கு வர பரபரப்பு கூடுது....
      உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரசிடண்ட் மகள் மருத்துவமனையில்...
      யாருக்கும் தெரியா ரகசியம் பத்திரிக்கைக்கு கசிய விடப்பட.....போதைப் பொருளை ஓட்டுக்காக அதை யெதிர்க்கும் பிரசிடெண்ட் மகளே உபயோகிக்க....
      உதவியாளர் இதனை மக்களிடம் கொண்டு சேர்த்தால் அனுதாபம் கூடுமே எனக்கூற... ..தனக்கு வந்தா ரத்தமென பிரசிடண்டும் மறுக்க....சிஸ்கோ வருகிறார் அதிகாரத்தின் பிரதிநிதியாய் துவம்சம் பன்ன....

      இரண்டாம் பாகம் திடுக்கிடும் திருப்பங்கள்...பக்கத்துக்கு பக்கம் தானே திருப்பம் வரும்...இங்கேயோ கட்டத்துக்கு கட்டம்....

      ஆர்மர் செக்யூரிட்டீஸ் பிரசிடெண்ட் மகளுக்கு எதிராக செயல் படுகிறார்கள் என பார்த்தால்....அந்த பத்திரிக்கைக்கு போட்டுத் தரும் நபர் பிரசிடண்ட் மகளின் தோழியா வரும் அவர் வேறோர் அவதாரம் எடுக்கிறார் ....அடடா அப்ப போதைப் பொருள் சப்ளையர்கள் வில்லனென வருவது பட்டென பின்னோக்கி செல்கிறது.....அவளையும் விட்டு வைக்காத உதவியாளர்னு போனா....
      அடுத்து அடிக்கிறார் பாருங்க கதாசிரியர் அத்தனைக்கும் காரணம் பிரசிடண்டின் உதவியாளர்னு....போதைப்பொருள் தான் வில்லன்னு படிச்சு வர...அவர்கள்தான் விரலை விட்டு ஆட்டுகிறார்களோன்னு பாத்தா...பகாசுர அவதாரமெடுக்கும் உதவியாளர்

      ஏன் இவ்வாறு செய்கிறார் அப்பெண்மணி...
      அவ்வுதவியாளர் ...ஒரே கட்டத்ல திடுக்கிடும் செய்யும் கலை சாதாரணமல்லவே.....நம்ம எண்ணவோட்டத்தை ஒரே அடியில் வீழ்த்தி திகைப்பிலாழ்த்தும் அற்புதம்....

      நீ என்னதான் அசைக்க முடியாத சக்தினாலும் அசைத்து பாக்க ஒருவன் இருப்பான்,..
      நீ செய்த துரோகம் சிறப்பாக காத்திருக்கும் பதிலடி தர...அதிகாரமென்பது மலர்படுக்கையல்ல

      அந்த உதவியாளர் வரும் கட்டங்களை...சாதாரணமாக வந்து விஸ்வரூபம் எடுக்கும் ஆர்மர் செக்யூரிட்டீஸ் வருமிடங்கள உள்வாங்கிக் படிங்க அட்டகாசம் காத்திருக்கும்...

      அதிலும் மேலதிகாரி யாருமில்லா இடத்தில் சிஸ்கோவ தள்ளி வைத்து விட்டு அந்த அட்டாக் நடத்தும் இருபக்கங்கள் ஹஹஹஹ...கதாசிரியர் நிற்கிறார் ஓவியரின் தோளில் கை போட்டு....ரசனையான காட்சி

      Delete
    4. ஆசிரியருக்கு... சார் ஓட்டெடுப்பில் ஐஆர்எஸ் இவ்விடத்துக்கு வேண்டும் எனவே ஓட்டு போட்டேன்...இவ்விடத்த சிஸ்கோ பிடிக்கைல புகைச்சலானேன்...மேலே நண்பரின் ஐஆர்எஸ் விமர்சனத்த படிக்கைல பற்றியெறியும் நெஞ்சத்தோட சிஸ்கோவ என்னடாருக்கு இது விடுன்னு படிச்சா...என் எண்ணமெல்லாம் புகையாக கதை பரபரப்பாய் ...சலசலப்பால் பத்தியெரியும் போது புகையாவது ஒன்னாவது...சூப்பர் சார்...வாக்களித்து வெற்றி பெறச் செய்த நண்பர்களே நன்றிகள் ...இம்மாத சிஸ்கோ நடுவாக்ல வரும்ன போது மனசு நக்கலா இனிமே வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்னனு நக்கலடிக்க...இப்ப இன்னைக்கு வான்னு ஏங்குறேன் எப்ப படிப்பேன்னு தெரியாட்டியும்...ஐஆர்எஸ் புக்குக்ம் கூடுதலாக ஓர் இடம் தாருங்கள்...எத்தனை வெரைட்டி கதைக சுத்தினாலும் படங்க வந்தாலும் அதிரடிக்கு மவுசு தாங்கள் அறியாததல்லவே...ஒரே கதையல்ல முடிவெடுக்காதீங்கன்னு நீங்க வேதனைப்பட்ட காரணம் புரியுது

      Delete
    5. ஸ்டீல் on Fire... என்னா விமர்சனம். என்ன பாஷை என்றே தெரியல ஆனா இதை படிக்க செம்மையாக இருக்கு.

      Delete
    6. @Kumar சகோ
      😂😂😂...ஆமாம் சகோ

      Delete
    7. @ஸ்டீல் சகோ
      👏👏👏💐💐💐💥💥💥💥👌👌👌👌

      Delete
    8. // கதாசிரியர் நிற்கிறார் ஓவியரின் தோளில் கை போட்டு // yeppadi yeluthi irukar enakka allu parthenkala! ithukey parisu kodukalam :-)

      Delete
    9. PfB@ போட்டி விதிகளை சரியாக பாலோ பண்ணனும்....

      போட்டிக்கான எண்ட்ரியை

      *காமிக்ஸ் எனும் கனவுலகம் விமர்சன போட்டி*

      --- என தலைப்பிட்டு..

      //!கே.பரணீதரன்
      தாரமங்கலம்

      9942759238///

      இதேபோல் விவரங்களை இணைத்து அனுப்பனும்..


      இதை செய்து போட்டிக்கனா பகுதியுடன் மட்டுமே பதிவிட சொல்லுங்க....

      க்ளாவுக்கு போன் போட்டு நடுவர்ஸ்க்கு தேவையான அம்சங்களை நீட்டா பிரசன்ட் பண்ண சொல்லுங்க....

      இதுபோல எண்ட்ரி இருந்தா மதிப்பீடு செய்யறவங்க சரியாக செயல்பட இயலாது போயிடகூடும்

      Delete
    10. உசார் அழகிய ஆபத்து...// சென்ற வருட கதைதான் க்ளா... அனுப்ப வேணாம் அதை...

      Delete
    11. க்ளா@ இம்மாத

      //காலனின் கால்தடத்தில்...//கதையை விரிவாக விமர்சனங்கள் & விவரங்கள் உடன் பதிவிட்டு எண்ட்ரி கொடுய்யா..பரிசை வெல்ல வாழ்த்துகள்💐💐💐

      Delete
  55. சேலம் புத்தகத்திருவிழாவில் நமது காமிக்ஸ் வெளியீடான "இரவே இருளே கொள்ளாதே" மற்றும் சில கிராபிக் நாவல்களை இளம் தலைமுறையினர் படிக்க ஆரம்பித்து உள்ளது சந்தோஷமாக உள்ளது. அதே போல தோர்கல் கதைகளை மாணவிகள் படிக்க ஆரம்பித்து உள்ளது மகிழ்ச்சி! சில குழந்தைகள் ரிப்போர்ட்டர் ஜானி கதைகளை படிக்க தேர்வு செய்தது மகிழ்ச்சி! மொத்தத்தில் இளம் தலைமுறையினர் காமிக்ஸ் புத்தகம் படிக்க ஆர்வம் காட்டுவது எதிர்கால காமிக்ஸ் ரசிகர்கள் உருவாக்கி வருவதை காட்டுகிறது.

    ReplyDelete
  56. விஜயன் சார், அடுத்த (2024) வருட காமிக்ஸ் நாயகர்கள் 36 விவரித்தவிதம் அருமை, எங்களுக்கு சிறந்ததை தரவேண்டும் என்ற உங்களின் காமிக்ஸ் காதலை இந்த தேர்வுகள் சொல்லுகின்றன.

    ReplyDelete
  57. டிசம்பர் இதழ்களை கைப்பற்றியாச்சுது....

    இதழ்கள் அனைத்தும் அருமை....

    கி.நா. ரொம்ப விசேசமாக உள்ளது....😉

    இம்மாதம் ரொம்ப சீக்கிரமாக விற்று தீரப்போவது அதாகத்தான் இருக்கும்.

    ReplyDelete
  58. ஜானிக்கொரு தீக்கனவு செம்ம மாஸ்..! முதல் வாசிப்பு ஜானின்குத்தான்..!

    உங்களைக் கொன்றதில் மகிழ்ச்சி..! தலைப்பே கவர்கிறது.. அடுத்து டெக்ஸ்.!

    கொலைநோக்குப் பார்வை... சிக்கென்ற இதழ்..! கடைசியாய் வாசிக்க வைத்துக்கொள்வோம்..!

    கிராபிக் நாவல்.. காலனின் கால்தடத்தில்...
    லேசாகப் புரட்டியதில் சித்திரங்கள் சுண்டி இழுக்கின்றன... கதையும் பிரமாதமாக இருக்குமெனத் தோன்றுகிறது..!

    பிகினிப் பவழத் தீவில் நடக்கும் கதையாம்...
    அட்டைபடம் ஏதோ குறியீடு போல..!

    ReplyDelete
  59. கொரியர் வந்தாச்.,..பக்கத்து கடைல குடுக்க சொல்யாச்...1 மணியளவில் வருகிறேன்

    ReplyDelete
  60. எந்த அட்டைப்படம் தனியா வந்திருந்தாலும் டாப் அதாகத்தான் பட்டிருக்கும்...முதலில் பார்த்தது சுறாவா நானா தெரியாது...நிஜமாவே தண்ணீருக்குள் நிப்பத போல ஃபீலிங்...அந்த தளும்பும் நீருக்க்கான வண்ணச் சேர்க்கை பிம்மாதம்...இத அடிக்க அட்டைதானேதுன்னு மலைத்து...சாரி..சாரி பிழைத்துப் பாக்க... அடுத்து தப்பிய டெக்சோ முகத்திலும் எதிரொலிக்கும் நீல நிறத்தை சிதறடித்து சுறாவை பொறிக்குள் இழுக்க,...ஜானி தடுமாறி இடம் பிடித்தது வெளிச்சமாக்க....முதலிடத்தை தர தடுமாறும் மனதில் கடைசி இடத்தை வி காமிக்ஸ் தக்க வைக்கிறது

    ReplyDelete
    Replies
    1. அவசரத்ல டெக்சின் பின்பக்க அண்டர் கவனிக்காம விட்டாச்சு ...அதுவும் செம்...காலனின் கால் தடத்தில் அடேயப்பா உள்பக்கம்

      Delete
  61. புத்தக பார்சல் வீட்டிற்கு வந்ததாக தகவல், மகிழ்ச்சி...

    ReplyDelete
  62. *காமிக்ஸ் எனும் கனவுலகம் விமர்சன போட்டி*



    வாழ்க்கை எப்போதும் எல்லாமே எனக்கு கெடைச்சாச்சுன்னு தையதக்கக்க ஆட்டம் போட விடாது சில கொட்டுகளையும் நமக்குத் தரும் .... அது பிரசிடெண்டாக இருந்தாலுமேதானே .!
    சக் மனிதர்கள் படும் துயரங்களை பார்க்கும் போது நாளை நமக்கும் வராது போகாதென்னும் குழப்பம் நீடிக்கா மனிதன் யாருண்டு .?
    இதோ ஓர் அப்படியானால் கதை....தனக்கு வந்தால்தானே ரத்தம் என பக்கத்து மண்ணில் நடந்ததை கண்டும் காணாமல் நடந்த தலைமுறை தானே நாம்...இப்பயுமே ....
    அப்படியோர் பிரசிடெண்ட் இருந்தால்......முதலில் ஆசிரியரிடம் பெரிய மன்னிப்பு...எல்லாம் தெரிந்தத போல சிஸ்கோவுக்கு நெகட்டிவ் முத்திரை குத்தியதற்கு ஒரே கதை வாயிலாக...வாழ்த்துக்கள் சிஸ்கோவின் முத்திரைக்கு...

    உஷார் அழகிய ஆபத்து.....



    மின்னல் போல் வேகம்....மனோவேகம் என்ன வேகம் வேணும்னாலும் போட்டுக்கொள்ள இக்கதைக்கு எதுவும் ஈடாகாது இதற்கு....இனி வேகம்னா சிஸ்கோ போல சாரி சாரி...உஷார் அழகிய ஆபத்து எனும் பதம் தேவைப்படலாம் காணா அறியா வேகத்துக்கு....

    பக்கத்துக்கு பக்கம் சிஸ்கோமட்டுமல்ல அனைத்து கதை மாந்தர்களும் தெறிக்க விட்டால் எப்படி இருக்கும்....அதுவும் அற்புதமான ஓவியங்கள் துணையாக வசனங்களோ அதிரடியாக கரம் கோர்த்து நாட்டியமாடினால்.....

    நாமும் சுத்தி ஆடியாகனுமே தாளம் தப்பாத போது...

    கதை மாடஸ்டி...லார்கோ ...ஜேம்ஸ்பாண்ட் மற்றும் பலர் போராடியும் முடிவுக்கு வராத. போதைப்பொருள் தரும் காட்டம் தான்...இங்கே பிரஸிடண்ட் போராட கதை செல்லும் திசையே வேறு....எங்கேயும் நம்மை தவறி சுற்றியலைய விடாத கதையின் போக்கில் அவிழும் முடிச்சுகள்...நாம் போடும் முடிச்சுகளையும் அவிழச் செய்யும் கதையினுள் எழாமல் அமிழச் செய்யும்...

    ஆசிரியர் ஒரே வார்த்தைதான் கூறினார்...ரேஸி....நானும் இரே வார்த்தையில் தான் வெறுத்தேன் நாயகனா வில்லனா என...ஆசிரியர் எவ்வளவு உறுதியோடிருந்தால் டயபாலிக் அடியையும் மீறி விட்டிருப்பார்....சோதனை ஆசிரியருக்கு...பலன் நமக்கு...வெற்றி நிச்சயம் ஆசிரியருக்கே....


    எனது விமர்சனங்களிலேயே முதன் முறையாக நானும் ஸ்பாய்லர் அலர்ட் தருகிறேன்... கதையை படிக்காதவங்க இந்த விமர்சனத்தை படிக்காதீங்க.....இரண்டாம் பாக அதிரடிகள தவறவிட்றாதீங்க...நாமே நடந்தால்தான் அந்தத் திரில் நிலைக்கும்....



    ReplyDelete
    Replies
    1. ஸ்பாய்லர் அலர்ட்
      ஸ்பாய்லர் அலர்ட்
      ஸ்பாய்லர் அலர்ட்
      ஸ்பாய்லர் அலர்ட்
      ஸ்பாய்லர் அலர்ட்
      ஸ்பாய்லர் அலர்ட்
      ஸ்பாய்லர் அலர்ட்
      ஸ்பாய்லர் அலர்ட்



      துவக்கமே போதைப் பொருளுக்கெதிராய் போரிடும் பிரசிடண்ட்....அவரது உதவியாளர்னு சம்பாசிக்க...புரளும் பக்கங்களில் பிரசிடண்ட் மகள் போதையில் புரள....உதவியாளர் பிரசிடண்ட் மகளுடன் புரள...(இதெல்லாம் சாதரணமெனச் செல்லும் கதை...இதசாதாரணமல்ல...திருப்பமே இதான்னு இரண்டாம் பாகம் உடைக்கும்)
      ...அடேயப்பா என முடுக்கம் மேலும் கூட....போதைப் பொருள்களை
      உபயோகிப்போர் மேலும் சட்டம் பாயும் எனும் துவக்க சம்பாசனைகள் மனதில் தூண்டுதலை ஏற்ற வேகமெடுக்க....பாதுகாப்புக்காக சிஸ்கோ பிரசிடண்ட் மகளை சுற்றி வருகிறார் . அங்கே வேறிருவர் சிஸ்கோவின் கழுகுக் கண்களுக்கு தட்டுப் படுகிறார்கள் நாங்களும் ஆர்மர் செக்யூரிட்டீஸ் பாதுகாபபுக்கென வர...நமக்கு க்யூ பிரிவு ஜானி விமான விபத்து நினைவுக்கு வர பரபரப்பு கூடுது....
      உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரசிடண்ட் மகள் மருத்துவமனையில்...
      யாருக்கும் தெரியா ரகசியம் பத்திரிக்கைக்கு கசிய விடப்பட.....போதைப் பொருளை ஓட்டுக்காக அதை யெதிர்க்கும் பிரசிடெண்ட் மகளே உபயோகிக்க....
      உதவியாளர் இதனை மக்களிடம் கொண்டு சேர்த்தால் அனுதாபம் கூடுமே எனக்கூற... ..தனக்கு வந்தா ரத்தமென பிரசிடண்டும் மறுக்க....சிஸ்கோ வருகிறார் அதிகாரத்தின் பிரதிநிதியாய் துவம்சம் பன்ன....

      இரண்டாம் பாகம் திடுக்கிடும் திருப்பங்கள்...பக்கத்துக்கு பக்கம் தானே திருப்பம் வரும்...இங்கேயோ கட்டத்துக்கு கட்டம்....

      ஆர்மர் செக்யூரிட்டீஸ் பிரசிடெண்ட் மகளுக்கு எதிராக செயல் படுகிறார்கள் என பார்த்தால்....அந்த பத்திரிக்கைக்கு போட்டுத் தரும் நபர் பிரசிடண்ட் மகளின் தோழியா வரும் அவர் வேறோர் அவதாரம் எடுக்கிறார் ....அடடா அப்ப போதைப் பொருள் சப்ளையர்கள் வில்லனென வருவது பட்டென பின்னோக்கி செல்கிறது.....அவளையும் விட்டு வைக்காத உதவியாளர்னு போனா....
      அடுத்து அடிக்கிறார் பாருங்க கதாசிரியர் அத்தனைக்கும் காரணம் பிரசிடண்டின் உதவியாளர்னு....போதைப்பொருள் தான் வில்லன்னு படிச்சு வர... அதில் பிழைக்கும்அவர்கள்தான் விரலை விட்டு ஆட்டுகிறார்களோன்னு பாத்தா...பகாசுர அவதாரமெடுக்கும் உதவியாளர்

      ஏன் இவ்வாறு செய்கிறார் அப்பெண்மணி...
      அவ்வுதவியாளர் ...ஒரே கட்டத்ல திடுக்கிட செய்யும் கதை சாதாரணமல்லவே.....நம்ம எண்ணவோட்டத்தை ஒரே அடியில் வீழ்த்தி திகைப்பிலாழ்த்தும் அற்புதம்....

      நீ என்னதான் அசைக்க முடியாத சக்தினாலும் அசைத்து பாக்க ஒருவன் இருப்பான்,..
      நீ செய்த துரோகம் சிறப்பாக காத்திருக்கும் பதிலடி தர...அதிகாரமென்பது மலர்படுக்கையல்ல

      அந்த உதவியாளர் வரும் கட்டங்களை...சாதாரணமாக வந்து விஸ்வரூபம் எடுக்கும் ஆர்மர் செக்யூரிட்டீஸ் வருமிடங்கள உள்வாங்கிக் படிங்க அட்டகாசம் காத்திருக்கும்...

      அதிலும் மேலதிகாரி யாருமில்லா இடத்தில் சிஸ்கோவ தள்ளி வைத்து விட்டு அந்த அட்டாக் நடத்தும் இருபக்கங்கள் ஹஹஹஹ...கதாசிரியர் நிற்கிறார் ஓவியரின் தோளில் கை போட்டு....ரசனையான காட்சி


      Delete
    2. ஆசிரியருக்கு... சார் ஓட்டெடுப்பில் ஐஆர்எஸ் இவ்விடத்துக்கு வேண்டும் எனவே ஓட்டு போட்டேன்...இவ்விடத்த சிஸ்கோ பிடிக்கைல புகைச்சலானேன்...மேலே நண்பரின் ஐஆர்எஸ் விமர்சனத்த படிக்கைல பற்றியெறியும் நெஞ்சத்தோட சிஸ்கோவ என்னடாருக்கு இத விடுன்னு படிச்சா...என் எண்ணமெல்லாம் புகையாக கதை பரபரப்பாய் ...சலசலப்பால் பத்தியெரியும் போது புகையாவது ஒன்னாவது...சூப்பர் சார்...வாக்களித்து வெற்றி பெறச் செய்த நண்பர்களே நன்றிகள் ...இம்மாத சிஸ்கோ நடுவாக்ல வரும்ன போது மனசு நக்கலா இனிமே வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்னனு நக்கலடிக்க...இப்ப இன்னைக்கு வான்னு ஏங்குறேன் எப்ப படிப்பேன்னு தெரியாட்டியும்...ஐஆர்எஸ் புக்கும் கூடுதலாக ஓர் இடம் தாருங்கள்...எத்தனை வெரைட்டி கதைக சுத்தினாலும் படங்க வந்தாலும் அதிரடிக்கு மவுசு தாங்கள் அறியாததல்லவே...ஒரே கதையல்ல முடிவெடுக்காதீங்கன்னு நீங்க வேதனைப்பட்ட காரணம் புரியுது

      Delete
    3. சகோ, போட்டிக்கு
      தங்கள் பெயர் மற்றும் ஊரை குறிப்பிடவும்
      முடிந்தால் தொலைபேசி எண்ணையும் குறிப்படவும் சகோ

      Delete
  63. முதல் புரட்டலில் எல்லா இதழ்களும் சிறப்பு,பணியில் இருந்து சற்று முன்பே வந்தபடியால் உங்களைக் கொன்றதில் மகிழ்ச்சியை வாசிச்சி முடிச்சாச்சி...
    அடுத்து தலைவன் ஜானிதான்...

    ReplyDelete
  64. ஆசிரியரின் புதிய பதிவு தயார்...

    ReplyDelete