Powered By Blogger

Saturday, December 09, 2023

ஜோட்டாவா ? ஓ.கே.வா ?

 நண்பர்களே,

வணக்கம். சென்னையின் புறநகர் வாசகர்களுக்கெல்லாம் புது இதழ்கள் இன்னமுமே பட்டுவாடா ஆகாது தொங்கலில் இருக்கும் சூழலில், அடுத்த செட் இதழ்களைப் பற்றிப் பேச மனசு ஒப்ப மறுக்கிறது ! So நடப்பைச் சுற்றியே இன்னும் கொஞ்சம் அலசுவோமே ? 

டிசம்பரின் துவக்க 4 இதழ்களில் ஆச்சர்யமூட்டும் விதமாய் top of the list இருப்பது அந்த ஹாரர் கி.நா. தான் !! வழக்கமாய் ஒவ்வொரு மாதத்தின் ஆன்லைன் ஆர்டர்களும் எனக்குச் சொல்லும் கதைகளே தனி ரகம் ! ஹீரோக்கள் அல்லாத கதை எதையேனும் நாம் இங்கே மாங்கு மாங்கென்று உசிரைக் கொடுத்துத் தயாரித்து - "ஆஹா..ஓஹோ..." என்று பில்டப் கொடுத்துக் கொண்டிருப்போம் ! ஆனால் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் நண்பர்களோ - 'ஏய்..அப்டிக்கா போயி விளையாடு தம்புடு !' என்று அதனை ஓரம் கட்டி விட்டுப் போய்க்கொண்டே இருப்பார்கள் ! And ஏஜெண்ட்களிடம் அரங்கேறும் விற்பனைகளிலும் மிகத் துல்லியமாய் அதே pattern தான் ஊர்ஜிதம் கண்டிடும் ! So இம்மாதத்து நான்கை லிஸ்டிங் செய்த போதே - "எப்படியும் கி.நா. விற்பனையில் தேறப்போவதில்லை ; ஜானி + ராபின் + டெக்ஸ் என்ற கூட்டணி தான் விற்பனை பார்க்கும் !" என்று எதிர்பார்த்திருந்தேன் ! ஆனால் surprise ...surprise ....இதுவரைக்குமாவது நமது selective வாசகர்கள் குச்சிமிட்டாய் தந்திருப்பது ஜானிக்கே !! பாக்கி 3 black & white இதழ்களும் டக் டக்கென்று டிக் ஆகியுள்ளன !  "காலனின் கால்தடத்தில்" இங்கும், இன்ன பிற தளங்களிலும் ஈட்டியுள்ள reviews தான் இந்த வேகத்துக்குப் பின்னணி என்பது புரிகிறது ! Of course - சில நெகட்டிவ் ரிவியூக்களுமே இருந்துள்ளன தான் ; but இந்த இரத்தக்களரியான gory style நமக்கு ரொம்பவே புதுசென்பதால், 'அது என்ன தான் என்று பார்த்துவிடுவோமே' என்ற curiosity தான் சக்கரங்களைச் சுழலச் செய்கின்றன என்றுபடுகிறது !   

இந்த வரிசைக் கதைகளுக்கு Flesh & Bones என்றே தான் பெயரிட்டுள்ளனர் & இதனில் வெளிவந்துள்ள கதைகள் அனைத்துமே திகைக்கச் செய்யும் ஸ்டைலில் ஆனவைகளே ! கொஞ்ச காலம் முன்னே ஒரு திகில் கி.நா.வெளியிட்டிருந்தோமே - "தனியே..தன்னந்தனியே.." என்ற தலைப்பில் ? அது கூட இந்தத் தொடரின் ஒரு அங்கமே ! என்ன- அதனில் அமானுஷ்யம் சற்றே தூக்கலாய் இருந்தது & இந்த குடல்-குந்தானி ரக gore இல்லாதிருந்தது ! "காலனின் கால்தடத்தில்" ஆல்பத்தில் அந்தக் குரூர சமாச்சாரங்கள் மட்டும் இல்லாதிருந்தால் maybe இன்னும் ஒரு ரவுண்ட் பாராட்டுக்களை கூடுதலாய் ஈட்டியிருக்கக்கூடுமோ - என்னமோ ?! But கொடுமை என்னவெனில், இந்த ஆல்பத்தின் வெற்றி சர்வ நிச்சயம் என்ற நம்பிக்கையில் திட்டமிடலைத் துவக்கிடும் சமயமே இதனை 2 பாக ஆல்பமாய் படைப்பாளிகள் திட்டமிட்டுள்ளனர் ! முதல் ஆல்பம் வெளியாகி செம ரவுசு விட்டதைத் தொடர்ந்து 2 பாக திட்டமிடலை - 3 பாக திட்டமிடலாய் நீட்டி விட்டுள்ளனர் ! So "காலனின் கால்தடத்தில்" இதழுக்கு இன்னமும் 128 + 120 = 248 பக்கங்களில் 2 பாக sequel உள்ளது ! அதே கதாசிரியர் ; அதே ரணகள பாணி ; அதே 'பப்பரக்கா' பாப்பாஸும் !   

முதல் ஆல்பம் நிற்கும் இடத்திலிருந்து புறப்படும் கதையானது அதே கதாசிரியர்-ஓவியர் கூட்டணியில், அதே ஸ்டைலில் ; அதே தீவில் தொடர்கிறது ! முதல் இதழின் ராப்பரில் குப்புற கிடக்கும் அம்மணி இங்கே மல்லாக்க கிடப்பது மாத்திரமே வித்தியாசம் ! பாக்கி எல்லா விதங்களிலும் ditto ditto ! 

பொதுவாய் கதைக்குத் தேவைப்படும் இடங்களில் விரசத்தை படைப்பாளிகள் நுழைக்கத் தயங்குவதில்லை ! பெளன்சர் போன்ற தொடர்களிலெல்லாம் பழுத்த கதாசிரியர் Jodorowski விட்டு தாளித்து எடுத்திடுவார் ! ஆனால் இந்த ஆல்பத்திலோ கதையின் ஓட்டத்துக்கு, இந்த பப்பி ஷேம் மங்கையரும், டவுசர் மட்டுமே போட்டுத் திரியும் லகுடபாண்டிகளும் எவ்விதத்திலும் உதவிடுவதில்லை ! "ஜாலியாய் வந்துள்ள இளசுகள்" என்ற பாத்திரப்படைப்புகளுக்கு வலு சேர்க்க மட்டுமே அவர்களின் ரவுசுகள் ! And அந்த ரணகள violence கூட அவசியமற்றதே !! க்ளோசப்பில் குடல்-குந்தானி மேட்டர்களைக் காட்ட இம்மியும் தேவை லேது ! இது சகலமுமே அந்த கதை சொல்லும் பாணியின் template மாத்திரமே ! மேற்கு ஐரோப்பாவில் இந்த அரை நிர்வாணங்களெல்லாம் அரையணாவுக்கு கவனத்தை கோரிடாத விஷயங்கள் என்பதால் இத்தகைய template-க்குள் துணிவோடு உலவுகிறார்கள் ! ஆனால் நம் கதை அவ்விதமல்ல எனும் போது அதே தடாலடி சாத்தியமாகிடுவதில்லை ! 

இங்கு தலைகாட்டும் விரசத்துக்கும் ; violence-க்கும்  நியாமான defence ஏதும் தந்திட இயலாது என்ற ஒற்றைக் காரணமே என்னைத் தயங்கச் செய்கிறது - காத்துள்ள 2 பாகங்களையும் வெளியிடுவதிலிருந்து ! ஆனால் விரச சமாச்சாரங்களை ஓரம்கட்டி விட்டு, கதையின் அந்த த்ரில் factor மீதும் ; மெலிதான வரலாற்றுப் பின்னணி மீதும் ; யுத்தத்தின் கோர பக்கவிளைவுகள் மீதும் focus செய்திடும் முதிர்வு நம்மிடம் இருப்பதைக் காணும் போது லைட்டாக மண்டையை சொறியத் தோன்றுகிறது ! 

தவிர, ஒரு நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பாய் வந்திருந்ததொரு மின்னஞ்சலும் எனக்கு இந்தத் தருணத்தில் நினைவுக்கு வருகிறது ! எந்தத் தொடரென்று துல்லியமாய் நினைவில்லை ; ஆனால் "அது நிரம்ப அடல்ட்ஸ் ஒன்லி பாணியிலானது என்பதால் skip செய்திருக்கிறேன்" என்று இங்கே நமது பிளாக்கில் எழுதியிருந்திருக்கிறேன் போலும் ! அதை பார்த்து விட்டு, "அது எப்படி நீ தீர்மானிக்கலாம் - எனது வாசிப்பின் எல்லை எது என்று ? விரசங்களையும் தாண்டி ஒரு படைப்பில் ரசிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கக்கூடும் ! நீயா திரை போட்டுக்குவது எந்த ஊர் நியாயம் ?" என்று உச்சஸ்தாயியில் பொங்கியிருந்தார் !  அந்தக் கேள்வி இங்குமே பொருந்திடுமோ-என்னவோ ? என்று பட்டது !

இதோ - பாகம் இரண்டின் பிரிவியூ !




Maybe கண்ணை உறுத்தும் அந்த அட்டைப்படத்தினை பயன்படுத்திடாது, வேறேதேனும் சைவமான ஸ்டில்லை ராப்பராக்கிடலாம் & உள்ளாற அவசியமற்ற விரசங்களை கணிசமான filter செய்திடவும் செய்யலாம் ! இந்த முதல் பாகத்திலேயே, திருத்தி எழுதும் போது ஏகப்பட்ட விரச சமாச்சாரங்களை வசனங்களில் தோணாமல் எடிட் செய்திருந்தேன் ; வீரியங்களை மட்டுப்படச் செய்திருந்தேன் ! ஆனால் அந்த "குடல் கால் கிலோ-குந்தானி அரை கிலோ" sequences எதுவும் செய்திட அனுமதிக்கா இடங்கள் ! 

மாமூலான கி.ந.க்கள் கண்டிடும் விதியினையே ஈட்டியிருக்கும் பட்சத்தில், அரவம் போடாமல் அடுத்த வேலைக்குள் புகுந்திருப்பேன் ! ஆனால் இந்த இதழ் ஒரு 'ஹிட்' ஆகிடும் பாதையில் பயணித்து வருவதால் அதற்குள் இதன் முன்னணி, பின்னணி, சைடுஅணி பற்றியெல்லாம் நண்பர்கள் அலசத் துவங்கியாச்சு ! அதிலும் ஒரு நண்பர் - இந்த ஆல்பத்துக்குப் பின்னே இன்னமும் 2 பாகங்கள் இருப்பது எனக்குத் தெரியாது போலும் என்ற பதைபதைப்புடன், வாட்சப்பில் ஒரு 17 மெசேஜ்கள் அனுப்பியுள்ளார் - படங்கள், கோரிக்கைகள் இத்யாதி..இத்யாதி என்று ! "நமக்கு இவையெல்லாமே ஒரு மகாமகத்துக்கு முன்பான பரிச்சயங்கள் நண்பரே ; ரிலாக்ஸ் !" என்று அவரை ஆசுவாசப்படுத்தி வேண்டிப் போனது ! இந்நேரத்துக்கு ஏற்கனவே வாட்சப்பில் இது சார்ந்த அலசலை அவரே துவக்கியிருந்தாலுமே நான் வியப்பு கொண்டிட மாட்டேன் - அத்தனை வேகமாய் இருந்தார் மீதப் பாகங்களும் கரை சேர்ந்திட வேண்டுமென்பது குறித்து !! 

In fact - இந்த Flesh & Bones வரிசையிலிருந்து இன்னொரு கதையுமே வாங்கியுள்ளோம் - "கதிரவன் கண்டிரா கணவாய்" என்று ! ஏற்கனவே அதன் விளம்பரமும் எப்போதோ வெளியிட்டோமென்ற ஞாபகம் உள்ளது ! So இந்த வரிசையின் சகல இதழ்களும் நமக்குத் தெரிந்தவைகளே நண்பரே !!



இதோ - உங்களின் அபிப்பிராயங்களைத் தெரிந்து கொள்ள ஒரு வோட்டெடுப்பு : https://strawpoll.com/X3nk4r8AQgE

சாத்துவதாக இருப்பின், கொஞ்சம் பாத்து ; சூதானமா அண்ணாச்சிஸ் ! Bye for now...! See you around ! 

303 comments:

  1. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
  2. Kadhai mudiyalennu ninaichen
    Karpanaikku vittuttaaronnu ethirparthen

    Aanaa innum irukkudha

    Wow

    Prebooking vote pannitten sir

    ReplyDelete
  3. Pona padhivula oru vimarsanam pottirundhen

    Adhai appadiye copy paste Inga senjiduren sir

    ReplyDelete
  4. காலனின் கால் தடத்தில்

    மனிதன் என்பவன் தொலைநோக்கு பார்வை இல்லாதவன் என்பதை நொடிக்கு ஒரு முறை நிரூபித்துக் கொண்டே இருக்கிறான். இந்த கதையிலும் தோலை நோக்கு பார்வை இல்லாத ஒரு அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் எடுத்த ஒரு செயலால் எத்தனை மக்கள் அவதிக்குள்ளாகினர் என்பதை இந்த கதை போகிற போக்கில் சொல்லிச்செல்கிறது. அது மட்டுமா கதை மாந்தர்களும் தான். த்ரில்(thrill ) எனும் அட்ரினலின் சுரப்பியை சுரக்க வைக்கும் அனுபவத்துக்காக மனிதன் ஆபத்தின் விளிம்பை தொட்டு விட துடிப்பதும் தொலைநோக்கு பார்வை இல்லாத செயல் தானே

    இந்த கதையில் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் அதிகம். அதற்கு பின்னுள்ள வரலாற்று நிகழ்வுகளையும் கதாசிரியர் சொல்லாமல் செல்லவில்லை. கதையுடன் ஒன்றி செல்லும் நாம், கதை செல்லும் வேகத்தில் பல வரலாற்று நினைவுகளை கடந்து ஓடுகிறோம்.

    மார்ஷல் தீவின் வரலாறை ஜப்பானிய ஆட்சியில் இருந்தது முதல் கொண்டு பதிவு செய்கிறார் ஆசிரியர்.

    இந்த கதையை படித்து விட்டு மார்ஷல் தீவுகள் என்று தேடினால் இந்த கதையில் சொல்லப் பட்டிருக்கும் சில வரலாற்று செய்திகள் கூட பதிவு செய்யப் படாமல் இணையத்தில் விடுபட்டிருப்பது தெரிகிறது. மிகவும் ஆராய்ச்சி செய்தே இந்த கதையை ஆசிரியர் எழுதி இருப்பார் என்று நம்புகிறேன்.

    கதையின் முடிவில் இருவர் மட்டும் உயிர் பிழைக்கின்றனர். ஆனால் திரும்ப திரும்ப கேட்கப் படும் கேள்விகளால் எரிச்சலடையும் மனநிலைக்கு மனிதன் செல்லக் கூடும். அந்த நேரத்தில் மனிதன் என்ன முடிவு எடுப்பான் என்பதை நம் யூகத்துக்கே கதையை விட்டு செல்கிறார் ஆசிரியர். இப்படி நடக்குமா? அப்படி நடக்குமா? என்ற கற்பனை மனதை பிராண்டுகிறது.

    சுகமான கதை அல்ல, சுபம் போடாத கதை அல்ல ஆனால் கதை பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. அந்த கேள்விகளை அசை போட்டபடி இந்த கதையில் குறிப்பிட்டுள்ள வரலாற்றை தேடி இணையத்தை நாடினால் வாசகர்களாகிய நாம் முதிர்ந்து விட்டோம் என்று அர்த்தம்.

    ReplyDelete
  5. அடேங்கப்பா கரெண்ட் ட்ரெண்ட்க்கு ஏற்ற மாதிரி செம்ம பதிவு சார். ஃபிளாஷ் அந்த Bone. அட்லீஸ்ட் நீங்கள் வாங்கி வைத்த கதைகளை போட்டு விடுங்கள் சார்.

    காலனின் கால் தடத்தில் மீதம் இரண்டு பாகங்களும் வந்தால் மிக்க மகிழ்ச்சி தான் சார்.

    ReplyDelete
    Replies
    1. அந்த கதிரவன் கண்டிரா கணவாய் எப்பொழுது சார் வரும்???

      Delete
    2. ஆத்தாடி...
      நடத்துங்க... எல்லோரும் ஒரு முடிவோட தா இருக்கீங்க...
      என்ஜாய்...

      Delete
    3. "கதிரவன் கண்டிரா கணவாய்"

      தலைப்பைபெல்லா ரொம்ப நல்லா தான் இருக்கு.
      எந்த ஆண்டு விளம்பரம் வந்தது.

      Delete
    4. நீங்க சொன்ன மெயின் பிக்சர் இது தானா சார்???

      Delete
  6. "இந்த முதல் பாகத்திலேயே, திருத்தி எழுதும் போது ஏகப்பட்ட விரச சமாச்சாரங்களை வசனங்களில் தோணாமல் எடிட் செய்திருந்தேன் ; வீரியங்களை மட்டுப்படச் செய்திருந்தேன் ! "

    ரொம்ப நன்றி எடிட்டர் சார்...

    ReplyDelete
  7. ///"அது எப்படி நீ தீர்மானிக்கலாம் - எனது வாசிப்பின் எல்லை எது என்று ? விரசங்களையும் தாண்டி ஒரு படைப்பில் ரசிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கக்கூடும் ! நீயா திரை போட்டுக்குவது எந்த ஊர் நியாயம் ?" என்று உச்சஸ்தாயியில் பொங்கியிருந்தார் !"////

    சரி... சரி...

    ReplyDelete
  8. என்னைப் பொருத்தவரையில் கருப்பு வெள்ளை அந்த கோரின் 50% த்தை குறைத்துவிட்டது என்றே எண்ணுகிறேன். எனவே பாகம் 2 & 3 இதன் சுவாரஸ்யத் தொடர்ச்சி என்ற நிலையில் வெளியிடலாம் சார்!!

    ReplyDelete
    Replies
    1. லண்ணத்தில் இதுபாணியிலான கதைகள் தயவுசெய்து வேண்டாம் சார்...

      Delete
  9. ///தனியே..தன்னந்தனியே.." என்ற தலைப்பில் ? அது கூட இந்தத் தொடரின் ஒரு அங்கமே ! என்ன- அதனில் அமானுஷ்யம் சற்றே தூக்கலாய் இருந்தது & இந்த குடல்-குந்தானி ரக gore இல்லாதிருந்தது !///

    தனியே...தன்னந்தனியே.....

    என்னை பொருத்தவரை ஒகே தான்.

    ReplyDelete
    Replies
    1. நமது சேலம் புத்தக விழாவில் பேய் கதை கேட்டு வந்த சிறுவர்கள் அட்டையை பார்த்த உடனே எடுத்து சென்ற புத்தகம் தனியே தன்னந்தனியே தான்.

      Delete
  10. நான் இன்னும் பார்சல் வாங்கலை காலனி தடத்தை படிக்கலை. இருந்தாலும் அந்த இரண்டு பாகங்களும் எனக்கு வேண்டும். விஜயன் சார் நீங்கள்தான் எடிட்டிங் மன்னன் ஆயிற்றே, அதனால் உங்களை நம்புகிறேன். தைரியமாக அந்த இரண்டு பாகங்களையும் உங்கள் எடிட்டிங் சங்கீதம் வெளியிடவும்

    ReplyDelete
  11. Flesh and bones கதை தொடரில் உள்ள சிறந்த எல்லா கதைகளும் வேண்டும் ஜி

    ReplyDelete
  12. ///அதிலும் ஒரு நண்பர் - இந்த ஆல்பத்துக்குப் பின்னே இன்னமும் 2 பாகங்கள் இருப்பது எனக்குத் தெரியாது போலும் என்ற பதைபதைப்புடன், வாட்சப்பில் ஒரு 17 மெசேஜ்கள் அனுப்பியுள்ளார் ///

    ...... இவர் யாரோ
    .... இவர் யாரோ.....

    ReplyDelete
  13. குடல் குந்தாணி சரிப்பது கறிகடையோடு போகட்டும் சாமி!

    ReplyDelete
    Replies
    1. இவர் தா நம்ம ரகம்...
      நண்பேன்டா.....

      Delete
    2. நம்ம நண்பர்களும் Flesh and Bones க்கு தயாராகிட்டாங்க போல நண்பரே...

      Delete
    3. எனக்கும் இந்த ஆஸிட் வெஸ்டர்ன், குத்துடா, குதறுனா, சில்லுகளை சிதறவிடுடா--லாம் பிடிக்கும் தான் தோழரே!!!

      எந்தவொரு படைப்பையும் இதுவரை ஒதுக்கிதில்லை..
      சுத்தமாக முடியாத பழங்காமீஸ் ஹீரோக்களை கூட தம்கட்டி வாசிச்சாச்சி...

      ஆனா...

      ஆனா...

      ஆனா..

      இது ஒரு ஒவ்வாத உணர்வை தோற்றுவிக்கிறது... ஒரு படைப்பு எத்தனை வன்முறையோ, மென்சோகமோ, அடர்த்தியோ இருப்பினும் வாசித்து முடிக்கும்போது ஒரு நியதி, நிறைவு தரும்..

      ஆனா இந்த கா.கா.த. வாசித்து முடிச்சபோது அப்படி அல்ல...

      இதற்காக இது வெளியிடக்கூடாதென்றோ, யாரும் ரசிக்க கூடாதென்றௌ நாம சொல்லக்கூடாது...

      ஒவ்வொருவருக்கும் சுயதேர்வு உள்ளது...
      அதை நாம மதிக்கணும்.


      என்னளவில் இது தேவையில்லாத படைப்பு... முதல் முறையாக ஸ்கிப் பண்ண போறதாகவும் இருக்கும்... சோ சிம்பிள்.

      நிறைய புக்கிக் வந்து விற்பனைக்கு உதவுமெனில் அது தனியாக வந்துட்டு போகுது...அதற்கு நாம குறக்கே கட்டையை போடப்படாது என்பதே என்நிலைப்பாடு!!

      Delete
    4. ///நம்ம நண்பர்களும் Flesh and Bones க்கு தயாராகிட்டாங்க போல நண்பரே..////

      ஒரே மாதிரியான வட்டத்திலான கதைகளிலயே சுற்றி வரும்போது இதுபோன்ற கதைகள் ஈர்ப்பது இயல்பு தானே நண்பரே...

      இட்லி,தோசை, பூரி, பொங்கல்னு போயிட்டு இருக்கும் காலை டிபன்ல திடீர்னு புரோட்டாவும் மிலிட்டரி ஓட்டல் கார சால்னாவும் ஒரு நாள் என்பது கூடுதலாக ருசிக்கும் தான் நண்பரே SK. அடுத்த நாள் பின்னாடி ப்ராப்ளத்தை அப்புறம் பார்த்துகலாம்னு இன்னோரு கரண்டி சால்னா கேட்பதும் நாமே தானே!!

      Delete
    5. ///நம்ம நண்பர்களும் Flesh and Bones க்கு தயாராகிட்டாங்க போல நண்பரே...///

      அட்லீஸ்ட் அந்த பழங்காமீஸ் மோகத்துல இருந்து வெளியே வர இந்த கா.கா.த. போன்றவை உதவுனா சரிதான்.

      Delete
    6. நா ஒரு காலத்தில் "saw" ஹாலிவுட் பட பல பாகங்கள் பாத்திருக்கேன். பயமாவுயிருக்கும், ஃதிரிலாவுயிருக்கும் , அகோரமாவுயிருக்கும். ஆனால் இப்போது பார்க்க முடியுமான்னா.... முடியாது.... ஏனெனில் நெஞ்சில் வலுவில்லை.
      அது இளம் ரத்தம் ஓடின காலம்.

      Delete
    7. ///ஒவ்வொருவருக்கும் சுயதேர்வு உள்ளது...
      அதை நாம மதிக்கணும்.///

      I too agree bro...

      Delete
  14. அனைவருக்கும் இரவு வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. அப்ப தூங்க போற ஐடியாவே இல்லையா...

      Delete
  15. Teynampet area vukkum than book varala last two months. No proper delivery..

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, கூரியரை திட்டும் நேரத்துக்கு உங்க சந்தா நம்பரை இங்கே பதிவு செய்தால் சர்வீஸை மாற்றச் சொல்லுவேனே ?

      Delete
  16. மீதி இரண்டு பாகங்களையும் ஒரே புத்தகமாக வெளியிடுங்கள் சார்.

    ReplyDelete
  17. Sir - So sorry - a BIG NO for continuing this story. It was so horrible and left a bad after-taste. இவ்வாறான கதைகள் ஒரு முற்போக்கு வாசிப்பு வகையில் அடக்கம் என்றெல்லாம் ஏற்க இயலவில்லை. ஸ்பெஷல் buy if you want வரிசையில் வெளியிடவும். 

    ReplyDelete
  18. எடி ஜி, முதலில் placerville ku பதில் Bikini atoll வெளியிட்டு இருந்தால் , flesh and bones கதை வரிசை கேட்டு இருப்போம்.

    ReplyDelete
  19. குடலு, குந்தாணி... சிரிப்பு தாங்கலைங்க...7,8.. வயசில எங்கம்மாயி.. அடிக்கடி சொல்லும்.. 😄😄.. தமிழ் நாடு பூராவும் இந்த "எச்சரிக்கை சொற்கள் " இன்னமும் உலா வரும் போல... அருமை.. நீங்க நினைவு வைத்திருக்கிறீங்க...
    நன்றி, மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் sir.. ❤️👍

    ReplyDelete
  20. கி.நா'க்கள் வாழ்க!

    ReplyDelete
  21. *எல்லாம் கிழ மயம்*

    கதையின் தலைப்பையும் & தாத்தாஸ்களையும் பார்த்து இந்த கதை வேண்டாம்னு ஒதுக்குபவர்கள் ஒரு இனிய சுவாரஸ்யத்தை இழக்குறாங்கன்னு தோணும் படித்தவர்களுக்கு.

    நண்பர்களுக்குள் இருக்கும் இணைபிரியா நட்பு, பழைய இளமையான காதல் & பிரிவு. அங்கு ஏற்படும் சில கசப்பான சம்பவங்கள். அதனால் ஏற்படும் வாழ்க்கை மாற்றங்கள் என அனைத்துமே ஒரு 65 பக்கத்துல அடக்கி இருக்காங்க.

    *அடுத்த பாகம் எப்போது வரும்னு எதிர்பாரக்க வைக்கிறாங்க.*

    கதையின் வசனங்களும் சும்மா தெறி.

    ஓவியங்கள் அருமை. அந்த அழகான கிராமத்தை அற்புதமாக வரைந்து இருக்கிறார்கள்.

    நம்முடைய முதுமையில் இது போல் அதகளமாக/சுவாரஸ்யமாக அமையுமான்னு யோசிக்க வைச்சு இருக்காங்க.

    மொத்தத்துல அனைவரும் ர(ரு)சிக்க வேண்டிய இதழ் இது.

    ReplyDelete
  22. டியர் விஜயன் சார், 

    அனிமல் என்றொரு "ஹிந்திலு" படம - வன்முறை, செக்ஸ், ஆசை நாயகியை ஷூ நக்கச் சொல்லும் ஹீரோ என்று ஒரு ரேஞ்சாக வந்திருக்கிறது, Toxic masculinity என்று கொண்டாடுகிறார்கள், வசூலிலும் சக்கை போடு போடுகிறது. இதுவே ஒரு ஐந்து, பத்து ஆண்டுகளுக்கு முன்பென்றால், சம்பிரதாயத்திற்கு பார்த்து வைத்திருப்பேன். இப்போதோ, ட்ரைலர் மற்றும் விமர்சனங்களைப் பார்த்தே நமக்கு செட் ஆகாது என்று. தவிர்த்து விட்டேன். பொழுது போகாத ஒரு தருணத்தில், OTT-ல் ஓட்டி ஓட்டி மேலோட்டமாக பார்த்து விடுவேன் என்பது வேறு விஷயம். "காலனின் கால் தடத்தில்" அந்த வகை தான்!

    அந்த காலத்திலேயே பிகினிப் பெண் நீச்சலடிக்கும் அட்டையுடன் வந்த, ஜேம்ஸ்பாண்டின் "சுறா வேட்டை"-யை மறைத்து வைத்துப் படித்த பால்வாடி புள்ளீங்கோதான் நாமெல்லாம்! எனவே, வலுவான வரலாறு, மெலிதான புவியியல், என்று என்னதான் பாலீஷாக பூசி மெழுகினாலும், sex sells என்பது தான் உண்மை!

    அதே போல, நாங்கள் கொரியப் படங்களில் பார்க்காத Gore-ஆ, அல்லது உலக மற்றும் உள்ளூர்ப் படங்களில் பார்க்காத Sex-ஆ?! வண்டி வண்டியாக வன்முறையும், லிட்டர் லிட்டராக செக்ஸும், கிலோ கணக்கில் கோரமும் இருப்பதால் மட்டுமே, ஒரு படைப்பை "இரசனைகளில் முதிர்ந்தோருக்குகானது" என்று புத்தகத்தின் பின்னட்டையில் முத்திரை குத்துவது சரியல்ல!

    "For mature audiences only" IS NOT EQUAL TO "இரசனைகளில் முதிர்வு". ஏனென்றால், இரசனை என்பது ஆளாளுக்கு மாறுபடக் கூடியது. என்னளவில், வன்முறை, கோரம், செக்ஸ் - இவற்றைக் கூட ஒரு அழகியலுடன் சொல்லக் கூடிய ஒரு படைப்பு தான், இரசனைகளில் முதிர்ந்தோருக்கான படைப்பாக இருக்க முடியும். 

    அப்படிப்பட்ட ஒரு அழகுணர்ச்சி, இந்த காலனின் கால் தடத்தில் சுத்தமாக இல்லை! ஒரு சவசவ  மூன்றாந்தர ஹாலிவுட் படத்தைப் பார்த்த அயற்சியைத் தான் இது தந்தது. வேண்டுமானால், இது போன்ற கதைகளை, படங்களை, இதுவரைக் கண்டிராதவர்களுக்கு வேண்டுமானால் இது புதிய அனுபவமாகத் தோன்றலாம். மற்றபடி, ஆஹா ஓஹோ என்றெல்லாம் கொண்டாடுமளவுக்கு இதில் சரக்கு இல்லை. 

    விற்பனை ரீதியாக வெற்றி கண்டிருக்கிறது என்றால், அடுத்தடுத்த பாகங்களை அப்படி அப்படியேவோ (விற்பனை தெறிக்கும்), அல்லது எடிட் செய்தோ (விற்பனை குறையும்) வெளியிடுவது உங்கள் விருப்பம். வாங்குவதும், வாங்காததும், அப்படியே வாங்கினாலும் படிக்காமல் தவிர்ப்பதும் எங்கள் விருப்பம்!

    ReplyDelete
    Replies
    1. நள்ளிரவில் தூக்கம் மெனக்கெட்டு, செம சீரியஸாக, இரசனைகளில் முதிர்ச்சி, சிந்தனைகளில் அதிர்ச்சி என்றெல்லாம் நீள நீளமாக நான் எழுதி வைத்திருப்பதை பார்த்தால் எனக்கே படு காமெடியாக இருக்கிறது :-)

      Delete
  23. எடிட்டர் சார்.. சில வாசகர்கள் ஏன் இப்படி உள்ளார்கள்.? ஒருத்தர் இந்த மாதிரி கதைகள் வேணாம் சார் என்கிறார்.. இன்னொருவர் கலரில் போட்டுவிடாதீர்கள் என்கிறார். இதெல்லாம் ஒரு அதீத நடிப்பாகவே தெரிகிறது. இந்தளவுக்கா இந்த வயதில் இருப்பார்கள்? இப்போது காமிக்ஸ் படிக்கும் அனைவரும் நிச்சயமாக நாற்பது வயதை தொட்டிருப்பார்கள்.தாண்டியும் இருப்பார்கள்.ஏன் கேட்கிறேன் என்றால் ராங் டர்ன், கன்னிபால் போன்ற படங்களில் Behind the scenes என்று காட்டுவார்கள்.மனித உடல் பாகங்களும் ரத்தமும் செயற்கை என தைரியமாக காட்டும்போது இவ்வளவுதானா என தோன்றும்.அவ்வளவு ஏன்.. இப்போதெல்லாம் வரும் கான்சூரிங்,அனபெல்லா வகையறா படங்களை பார்த்தால் பயம் வருகிறதா? அதே போல தானே இதுபோன்ற கதைகளை கடந்துபோகலமே.. அல்லது பிடிக்க வில்லையென்றால் வாங்காமல் தவிர்க்கலாமே? (நான் யாரையும் கிண்டல் செய்யவில்லை. எனக்குகூட படித்துகொள்ள சிரமமாக இருக்கும் ஆல்பா கதைகள், சிஸ்கோ,யுத்த கதைகள், சிஸ்கோ மற்றும் ஜெரமையா கதைகள் பிடிக்காது.ஆனால் இதையெல்லாம் போடாதீர்கள் என்று சொன்னதில்லை.

    ReplyDelete
    Replies
    1. Your are correct sir. GN pidikathavanga, attaiya maathunga, kathaya maathunga, ore rattha kalariya irukunu pulamburaanga. But antha genre ellamae only for 18+ endra tag line LA thaan release aaguthu. Story ah review panna ellorukum urimai irukku thaan. But intha GN novel la violence athigam so intha mathiri podatheengannu ean solraanganu thaan puriyala. Pidithavargal padikattum pidikathavargal vaangamal othungi kollalamae. Pala per 40+ LA thaan irukom..but puthiya muyarchiya support panna maatrangalae...

      Editor sir...Flesh & Bones series all books neenga original version ah thaarala podunga...we all Support you. We like these types if genres very much. Kalanin kaal thadathil chumma THERI RAGAM...Waiting for part 2 and 3 uncut original version...

      Delete
  24. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  25. கதிரவன் கண்டிரா கணவாய்

    பெரும்பாலானோர் எதிர்ப் பார்க்கும் இதழாக இருக்கும் போல

    ReplyDelete
  26. சார் அந்த அட்டைப்படமே 90 சதவீத வெற்றியை உறுதி படுத்திடுச்சே..... எடிட்டிங் நிச்சயமா வேணும் இதோட போதுமே....அப்டின்னு கீழ வந்தா அந்த தப்பிய இருவரின் பக்கங்கள பாக்கைல மனசு என்னவோ பன்னுது...என்னாச்சுப்பா என தலை கோத தோணுது...இந்த உணர்வு கூட அதன் வெற்றியோ.... நாளைக்கே தர முடியுமா இல்ல அடுத்த வாரமாச்சும் வாய்க்குமான்னு பட்சி பொங்குது...அட்டைப்படம் வேற வரட்டும்...போட்டு தூள் கிளப்புங்க

    ReplyDelete
  27. தவிர்க்க முடியா காரணங்களினால் இந்த முறை இந்த கிராபிக் நாவலை இன்றுதான் வாசிக்க உள்ளேன் சார்...இதுவரை இது த இதழின் விரிவான விமர்சனங்கள் எதையும் நான் படிக்கவும் இல்லை...எனவே அது கோரமா ..வல்கரா,ஓகேவா என்பதை விட படித்து விட்டு நல்லாருக்கா நல்லாலையா என இன்று முடிவு செய்து விட்டு வாக்கெடுப்பில் கலந்து கொள்கிறேன் சார்..

    ReplyDelete
  28. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  29. விஜயன் சார், பிரளயம் கி. நாவையும் தயவு செய்து வெளியிடுங்கள். ஏன் என்றால் அதில் ஒப்பீட்டுரீதியில் வன்முறைகள் குறைவு என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு அமைதியான, அப்பாவியான சிறுமியின் கதை அது ❤

      Delete
    2. இது பேச்சு....
      இது மட்டும் சார் வெளியிட்டார்ன்னா, இனிமே வர்ற எல்லா கிராஃபிக் நாவல்களையும் படிக்க நான் ரெடி...
      என்னோட கலெக்ஷன்ல ,
      "பிரளயம்" இல்லைன்னா அது முழுமை அடையாது.
      எனது கனவு இதழ் அது.
      ஹார்ட் பைண்டிங் தான் வரணும்
      ..

      Delete
    3. சூப்பர் சூப்பர்.ஆமாம் சார், அந்த பிரளயம் இன்னும் பாக்கி.

      Delete
    4. புன்னகை ஒளிர் நண்பரே. கிராஃபிக் நாவல் என்றாலே காத தூரம் ஓடும் நீங்களா இது?

      Delete
    5. பிரளயம் கி.நா.விரைவில் வெளியிடுங்கள் சார், தனித்தடத்தில்.

      Delete
  30. ஜானிக்கொரு தீக்கனவு 

    ஜானியா இப்படி என்று தொடங்கிய கதை, அதானே பார்த்தேன் ஜானின்னா இப்படி தான் என்று முடிந்தது. பல்வேறு படங்களில் பார்த்த கதை தான். ஆனால் கதையை நகர்த்திக் கொண்டு சென்ற விதம் அருமை. வில்லனை பிடித்து விட்டார்களே என்று கணிக்கும் போதும் அங்கும் ஒரு ட்விஸ்ட். ஒரு லைட் ரீடிங் க்கு கியாரண்டி. 

    கதை 7/10
    ஓவியங்கள் 9/10
    மேக்கிங் 9.5/10

    ReplyDelete
  31. கொலை நோக்குப் பார்வை 

    மனிதன் ஒரு மிருகம் என்பதும், அந்த மிருகத்தை வீட்டு விலங்காக வைத்திருக்கிறோமா அல்லது காட்டு விலங்காக உலவ விடுகிறோமோ எனும் மையப் புள்ளியே கதை. பசிக்காக அல்லாமல் பொழுது போக்குக்காக சில மிருகங்கள் வேட்டையாடுவதை குறித்து கேள்வி பட்டிருக்கிறேன். அப்படியொரு நபர் தான் இந்த கதையின் வில்லன். 

    கொலை செய்பவருக்கும் கொலை செய்யப்படுபவருக்கும் தொடர்பு இல்லையெனில் அந்த கொலையை துப்பு துலக்க முடியாது என்று நினைக்கும் வில்லன், மறந்து விடுவது என்னவென்றால், தேர்ந்த கொலைகாரர்களே ஏதாவது ஒரு தடயத்தை விட்டு செல்வார்கள் என்பதே. 

    ஒரு சின்ன தடயத்தை வைத்தே கொலையின் ஆரம்ப புள்ளியை பிடித்து விடலாம் என்று கணக்கு போடும் ஹீரோவுக்கு, சிக்கியது என்னவோ சின்ன மீன் தான் எனும் ஐயம் இருந்து கொண்டே இருப்பது முடிவில் புலனாகிறது.
    இதன் தொடர்ச்சி உள்ளதா அல்லது ஏஜென்ட் ராபின் வெறுத்துப் போய் ஒதுங்கிக் கொள்வாரா என்பது புதிரே.

    காலம் பதில் சொல்லும் அது வரை ஒரு 30 நிமிடம் உங்கள் மனதை சமநிலைப் படுத்த இது போன்ற புத்தகங்கள் உதவும் என்பது நிச்சயம்.

    கதை 9/10
    ஓவியங்கள் 10/10
    மேக்கிங் 9.5/10

    ReplyDelete
    Replies
    1. லயனில் ஏஜெண்ட் ராபின் னின் முழு பெயர் என்ன என்று யாருக்காவது தெரியுமா? அவரது ஆங்கில பதிப்புகளில் நிக் ரைடர் என்று தெரியும்.

      Delete
  32. 2023 சேலம் புத்தக கண்காட்சியும், எனது மர்ம பாஸ் சும்..

    கடந்த இரண்டு வருடங்களாக எனக்கு என்று சில ஆர்வமான சிந்தனைகள் உண்டு ஒன்று இதுவரை மீண்டும் நமது காமிக்ஸ் புத்தகங்கள் வருவதை அறியாமல் வெளியில் உள்ள முன்னாள் வாசகர்களை காமிக்ஸ் வாசிப்பு வட்டத்திற்குள் மீண்டும் அழைத்து வர வேண்டும்.

    மற்றொன்று புதிய இளம் வாசகர்களை காமிக்ஸ் வட்டத்தில் சேர்க்க வேண்டும்.

    அவை முறைப்படுத்த சரியான களம் இன்றி இருப்பேன்.

    களம் கிடைத்தாலும் அதை செயல்படுத்த முறையான யுக்திகளும் கிடையாது. இப்படி பண்ணலாம் அப்படி பண்ணலாம் என்ற சிந்தனையில் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கும். உருப்படியாக ஒன்றும் செய்தது கிடையாது.

    இந்த சூழ்நிலையில் தான்...

    21 11 2023 அன்று நண்பர்களுடன் புத்தக கண்காட்சிக்கு சென்று ஒரு நோட்டம் விட்டு , போட்டோ கொடுக்கு போஸ் கொடுத்துவிட்டு கிளம்பி விட்டோம்.

    மீண்டும் அதே வாரத்தில் சனிக்கிழமை மாலை நமது முத்து காமிக்ஸ் ஸ்டாலுக்கு சென்று இருந்தேன் அதே சமயத்தில் நண்பர் யுவா கண்ணன் வந்திருந்தார்.

    இருவரும் விற்பனைக்காக உதவி செய்து கொண்டிருந்தோம். குறிப்பிட்ட ஒரு விற்பனை யுக்தி அந்த சமயத்தில் என்னிடம் கிடையாது திட்டமிடலும் இல்லை.

    5-6 வயதுள்ள ஒரு குட்டி பெண்மணி தனது அம்மா மற்றும் பாட்டியுடன் அப்பொழுதுதான் முதல்முறையாக நம் ஸ்டாலுக்கு வருகை புரிந்தார். அவர் தனது வயதுக்கு ஏற்ற நான்கு புத்தகங்களை தேர்வு செய்து கொண்டார்.

    தனது அன்னையிடம் காட்டி இந்த புத்தகங்கள் வேண்டும் என காட்ட தாயாரும் மகிழ்ச்சி கொண்டார். ஆனால் குட்டி பாப்பாவிடம், " பணம் குறைவாக உள்ளது ஒரு புத்தகம் மட்டும் வாங்கிக் கொள்ளலாம்" என சொல்லவும் அந்த குட்டி பெண்மணி அழுது அடம் பிடிக்காமல் சூழ்நிலையை பக்குவமாக ஏற்றுக் கொண்டு சம்மதம் என சொல்லி மற்ற மூன்று புத்தகங்களை வைத்துவிட்டு வாத்து கதை உள்ள புத்தகத்தை மட்டும் பணம் செலுத்தி வாங்கிக் கொண்டார். நானும் அந்த பாப்பாவை படம் பிடித்து, நன்றி சொல்லி நன்றாக படிக்க வேண்டும் என வாழ்த்து சொல்லி அனுப்பி வைத்தோம்.

    தொடரும்...


    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆர்வமும், அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியது! தொடருங்கள்...

      Delete
  33. ****** 'Bikini atoll-2' அட்டைப்பட கவிதைப் போட்டி *******

    கொலைகாரனின் உடையெங்கும் இரத்தத் துளிகள் - கண்ணே
    கொளுத்தும் வெயிலால் உன் உடலெங்கும் வியர்வைத் துளிகள்!

    'atoll' என்றால் 'பவளப் பாறை'யாம் - கூகுள் சொன்னது;
    அட்டைப்படத்தை உற்றுப் பார்த்த பின் 'ஆமாம்' என்றே உள்மனம் சொன்னது!

    -ஈரோட்டு இளம் கவி

    ReplyDelete
    Replies
    1. பவளப் பாவைன்னும் சொல்லலாம்.

      Delete
    2. " மடல் வாழை துடையிருக்க...

      மச்சமொன்று அதிலிருக்க...

      குடலை உருவி போட்டிருக்க...

      சாப்பிட்டு ஏப்பம் விட்ட குடல்கறி வறுவலுமே

      என் ஞாபகத்துக்கு மட்டும் தான் வரவில்லையோ...

      நிலவு பிகினிப் பெண்ணாகி...

      உலவுகின்ற அழுக்கோ...

      Delete
    3. //-ஈரோட்டு இளம் கவி// ரொம்ப நாளைக்கு பிறகு ஈரோட்டு இளம் கவி வெளியே வந்துள்ளார் :-)

      Delete
  34. ஏனோ அந்த குட்டி பாப்பா செல்வதை பார்த்துக் கொண்டே இருந்தேன் ஏதோ புரிவது போல் இருந்தது ஆனால் சிந்தனைகள் ஒருங்கிணையவில்லை.

    உண்மையாகவே சில சமயம் தேடலுக்கான தீர்வு எப்பொழுது, எந்த ரூபத்தில், எந்த அனுபவத்தில் மூலம் வேண்டுமானாலும் கிடைக்கலாம் அதை புரிந்து கொள்வதற்கும் கொஞ்சம் பணிவு தேவை அவ்வளவுதான்.
    5-6 வயதுடைய அந்த குட்டி பெண்மணி எனக்கான பாடத்தை தான் புரிய வைத்துள்ளார் என புரிந்து கொள்ள எனக்கு நேரம் தேவைப்பட்டது அந்தப் பாடத்தை கிரகித்துக் கொள்ள வெகு நேரம் பிடித்தது அன்று இரவில் தான் ஓரளவு தெளிவும் இருந்தது எனக்கு.

    2023 சேலம் புத்தக கண்காட்சியில் எனது பங்களிப்புக்கு உரிய பாடத்தை தந்த, வழிமுறையை உணர்த்திய இந்த குட்டி பாப்பா தான் எனது பாஸ்.

    அதன் பிறகு கண்காட்சி முடிவு வரை என்னுடைய பாஸ் ஐ, நான் நேரில் சந்திக்கவில்லை...

    முற்றும்..

    ReplyDelete
  35. தன்னைத்தானே புகழ்ந்தான் படலம்...

    ஞாயிற்றுக்கிழமை, எடிட்டர் சார் அவர்களை புத்தக விழாவில் என்னால் சந்திக்க இயலவில்லை ஏமாற்றம் எனக்கு.

    சேலம் புத்தக கண்காட்சி 2023 எனது சிந்தனைக்கு ஏற்ற காலமாக பயன்படுத்திக் கொள்ள திங்கட்கிழமை காலை 10 மணிக்கு எல்லாம் நமது ஸ்டாலுக்கு சென்று விட்டேன் 10.30 க்கு பிறகு மாணவர்கள் மாணவிகளின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் முன்னதாகவே வந்தடைந்தேன்.

    இந்த சமயத்தில் எனது நண்பர் சேலம் குமார் க்கு போன் செய்து நண்பா மதியம் எனக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வேண்டும் என கோரிக்கை வைத்தேன். நண்பரும் தானே நேரில் வருகிறேன் என சொல்லிவிட்டார்.

    மாணவ, மாணவியர்கள் கூட்டம் அலை அலையாக வரத் தொடங்கியது நானும் எனது பாஸ் எனக்கு கற்றுக் கொடுத்த பாடத்தை செயல்படுத்த துவங்கினேன்.

    அதாவது நமது ஸ்டாலுக்கு வந்து விட்டு, குறிப்பாக காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கும் ஆர்வம் இருந்து, புத்தகங்களை தேர்வு செய்து விட்டு அவர்கள் கையில் பணம் இல்லாமலோ அல்லது பணம் பற்றாக்குறையினாலோ எக்காரணத்தைக் கொண்டும் ஸ்டாலினை விட்டு ஏமாற்றத்துடன் வெளியேறக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன் அதை செயல்படுத்த தொடங்கினேன் இதில் உண்மையான ஒரு விஷயம் என்னவென்றால், புத்தகக் கண்காட்சிக்கு வரும் பெரும்பாலான பள்ளி மாணவ மாணவர்களின் கையில் 50, 100 , 200 ரூபாய் அவ்வளவுதான் இருக்கும் இதில் அவர்கள் கேண்டின் செல்ல வேண்டிய பட்ஜெட்டும் அடங்கும் இதற்குள் அவர்கள் புத்தகத்தை வாங்க வேண்டும்.
    வரும் கூட்டத்தில் அவர்களை அறியாமலேயே காமிக்ஸ் மேல் ஈர்ப்பு ஏற்பட்டு நின்று புத்தகங்களை புரட்டி புரட்டி புத்தகங்களை தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் சிறிய பட்ஜெட் பிரச்சனை இருக்கும். அவை நான் பொறுப்பு ஏற்றுக் கொண்டு அவர்களால் இயன்ற தொகையை கட்ட வைத்து மீதி தொகையை கணக்கில் வைத்து கொண்டேன். அவர்கள் ரசனைக்கேற்ற புத்தகத்தை, கதைகளை தேர்ந்தெடுத்து கொடுப்பேன் விரும்பிய புத்தகம் 1,2,3 ஆக இருக்கும் . சிலரிடம் பணம் இருக்கும், பலரிடம் பற்றாக்குறை இருக்கும் ஆனால் அவர்கள் வெளியே செல்லும்போது அவர்கள் தேர்ந்தெடுத்த புத்தகங்கள் கையில் இருக்கும். இதுதான் என் பாஸ் எனக்கு கற்றுக் கொடுத்த யுக்தி.

    தொடரும்...

    ReplyDelete
  36. ஒரு வழியாக மதியம் 2 மணிக்கு மேல் கூட்டம் சற்று குறைய தொடங்கிய சமயத்தில் நண்பர் சேலம் குமார் வந்தார்.

    காலையில் நான் கேட்ட தொகையை எடுத்து வந்து இருந்தார். இருந்தாலும், என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். "உனக்கு டீ குடிக்க 10 ரூபா போதுமே திடீரென என்ன அவசியம் இந்தத் தொகைக்கு" என வினவ, நானும் நடந்ததை சொன்னேன்.

    உடனே நண்பரின் முகத்தில் கடும் கோபம்... "நக்கீரா ஆ ஆ ஆ"... என நெற்றிக் கண்ணை திறக்காத குறை தான் என்னை பார்த்து.

    தினமும் வாட்ஸ் அப்பில் கண்விழித்து, லயன் பிளாக்கில் குளித்து, காமிக்ஸ் இல் வாழ்க்கையில் நடத்திக் கொண்டிருக்கும் என்னிடம்... நேற்று பெய்த தூறல் மழையில் துளிர்விட்ட நுனிப் புல்.. நீ.. உனக்கு இவ்ளோ துணிச்சலா? அப்ப நான் எதுக்கு உள்ளேன் என்றார்.

    எனக்கு ஏதோ புரிஞ்சது போல் தான் இருந்தது.

    நண்பர் சொன்னார் ..திட்டம் நல்லா இருக்குது அதை இன்றைக்கும் மட்டுமல்ல சேலம் புத்தக கண்காட்சி முடியும் வரை உன்னால் முடிந்த நேரத்தில் தவறாமல் வந்திருந்து இதே பாணியில், விற்பனையை புதிய இளம் அறிமுக வாசகர்களாக உருப்பெறவுள்ள, மாணவ மாணவர்களிடம் கொண்டு செல், அன்றைய தினமே அதற்குண்டான மொத்த தொகையும் நானே செலுத்தி விடுகிறேன் என அபாரமான ஒரு கருத்தினை முன் வைத்தார்.

    எண்ணத்திற்கு ஏற்ற களமும், யுக்தியும் அதை செயல் படுத்துவதற்கான வலுவான உற்ற துணையும் கிடைத்தது, எங்களால் இயன்ற அளவு இதையே சேலம் புத்தக கண்காட்சி முடியும் நாட்கள் வரை செயல்படுத்தினோம்.

    தினமும் புதிய இளம் வாசகர்களை எங்களால் இயன்ற அளவு சிறிய அளவிலாது சேர்த்தோம். இதில் 50 சதவீதம் மாணவர்கள் "தொடர் வாசகர்களாக" மாறினால் கூட எங்களது முயற்சி வெற்றி பெற்றதாக இருக்கும்.

    நாங்கள் எங்களுக்குத் தோன்றிய எண்ணத்தை, விருப்பத்தை... நாங்கள் விரும்பியவாறு மனம் மகிழ்வுடன் எங்களால் இயன்ற அளவு செயல்படுத்தினோம் எங்கள் பங்கிற்கு.

    இதில் சேலம் குமாரின் பங்களிப்பு அபாரம். இவரது பங்களிப்பினால், ஆர்வமுடைய எந்த ஒரு மாணவ மாணவியர்களும் காமிக்ஸ் புத்தகங்கள் இல்லாமல் நமது ஸ்டாலினை விட்டு சென்றது இல்லை. தினமும் அவர்களுக்கான வித்தியாசத் தொகையினை அல்லது முழுமையான
    தொகையை செலுத்ததியமைக்கு எனது தனிப்பட்ட நன்றிகளும் பாராட்டுகளும் நண்பா உனக்கு..

    தொடரும்...

    ReplyDelete
  37. இப்படியாக திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை விற்பனை சென்று கொண்டு இருந்தன.

    ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே நண்பர் யுவா கண்ணன் நமது ஸ்டாலுக்கு விற்பனைக்கு உதவி புரிய வந்து விட்டார்.

    அன்றைய நாளில் அவரது முயற்சி அபாரம். அதில் நான் குறிப்பிட விரும்புவது இரண்டு விஷயங்கள்.

    ஒன்று... நாங்கள் ஒவ்வொரு மாணவராக வாசகர்களாக சேர்த்துக் கொண்டிருந்தோம் அந்த சமயத்தில் சேலத்தில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து மாணவ மாணவிகள் சிலர் மட்டும் வந்திருந்தனர் அந்த இல்லத்தில் குறைந்தபட்சம் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவர்கள் இருப்பார்கள். அந்த மாணவிகள் வந்த விவரம் தெரிந்தவுடன் யுவா கண்ணன் ஒரு வினாடி கூட தயங்காமல் ஒரு பெரும் தொகைக்கு அள்ளிக் கொடுத்த புத்தகங்கள் ஏராளம். அம் மாணவ, மாணவியர்களில் பாதிப்பேர் எதிர்காலத்தில் தொடர் வாசகராக மாறினால் கூட ஒரு அபாரமான எண்ணிக்கை தான் நம் காமிக்ஸ் வட்டத்திற்கு இருப்பார்கள்.

    இரண்டாவதாக... ஏழாம் வகுப்பு படிக்கும் ஒரு பள்ளி மாணவன் வார நாட்களில் கண்காட்சிக்கு வந்திருந்த சமயத்தில் "யார் அந்த சிறுத்தை மனிதன்?" என்ற ரூ 20 விலை புத்தகத்தை மட்டும் பெற்று சென்றிருந்தாலும், அதை படித்துவிட்டு அடுத்த நாட்களில் அவனது பெற்றோர் கொடுத்த காசுகளை சேர்த்து வைத்து மீண்டும் ஒரு ரூ. 20 ரூபாய்க்கு புத்தகத்தை வாங்கியே ஆக வேண்டும் என அவனது தாயாருடன் ஓடி வந்தார். அவனது தாயார் மேற்கண்ட இந்த விவரத்தை தெரிவித்து விட்டு கூடுதலாக "அந்த புத்தகத்தில் உள்ள படங்களைப் போலவே அவனும் வரைந்து கொண்டே உள்ளார்" என்ற விவரத்தையும் ஸ்டாலில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டிருந்தார். ரூ 20 விலை உள்ள குட்டி புத்தகத்தை ஒன்று கேட்டார் அந்த சமயத்தில் அருகில் யுவா கண்ணன் நடந்ததை பார்த்துக் கொண்டிருந்தார் அடுத்து அந்த இளம் வாசகனுக்கு யுவா கண்ணன் ஒரு பெரும் தொகைக்கு அள்ளிக் கொடுத்த புத்தகங்கள்... அந்த இளம் வாசகரும் அவர் தாயாரும் இரண்டு கைகளில் புத்தகங்களை மிகவும் ஆனந்தமாக தூக்கிச் சென்றனர்.

    நண்பர் யுவா கண்ணனுக்கு வாழ்த்துக்கள்.


    ReplyDelete
  38. சேலம் புத்தக கண்காட்சியின் முக்கிய நிகழ்வாக...

    இங்கு குறிப்பிட்டு ஆக வேண்டிய விஷயம் என்னவென்றால் சேலம் புத்தக கண்காட்சியில் நடைபெற்ற சமயத்தில் 1,2 புத்தகங்கள் வாங்கிய இளம் வாசகர்கள் பலர் மீண்டும் கண்காட்சி முடிவதற்க்குள் மீண்டும் வந்து கூடுதலாக புத்தகங்களை அவர்களது பெற்றோர்களுடன் பெற்று சென்றனர். பெற்றோர்களும் புத்தகங்கள் மீண்டும் பெரும் வழிமுறையை அறிந்து கொண்டனர்.

    முன்னாள் வாசகர்கள், மீண்டும் நமது காமிக்ஸ் புத்தகங்கள் வருவது அறியாமல் இருந்து, இந்த புத்தக கண்காட்சி மூலம் சிலர் நம் வட்டத்திற்குள் இணைந்தனர்.

    முன்னாள் வாசகர்களின், பிள்ளைகளும் இந்த புத்தக கண்காட்சியின் மூலம் சிலர் நம் காமிக்ஸ் வட்டத்திற்குள் சேர்ந்து விட்டனர்.

    இளம் மாணவ மாணவிகளின் காமிக்ஸ் புத்தகங்களில் முதல் தேர்வாக அவர்களது விருப்பப்படி அமைந்தது சஸ்பென்ஸ், ஹாரர், திரில்லர் கதைகள் மட்டுமே.
    இல்லையெனில் தோர்கல் கதைகள்.

    அவர்களது இரண்டாவது தேர்வு காமெடி, காமெடி மற்றும் ஆக்சன் (கர்னல் க்ளிப்டன், மேக் அண்ட் ஜாக், ஜில் ஜோர்டான்)

    அவர்களது இரண்டாவது வருகையின் போது கௌ-பாய் கதைகளும் சேர்ந்துக் கொண்டனர்.

    தங்கள் பிள்ளைகளுக்கு காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கிய பெற்றோர்கள், அவர்களும் படித்துவிட்டு நன்றாக உள்ளது என மீண்டும் வந்து வாங்கினார்கள்

    முதல்முறையாக நமது காமிக்ஸ் ஸ்டாலுக்கு வருகை புரிந்த வாசகர்களுக்கு அவர்களது விருப்பத்தினை, ரசனையை கேட்டு அதற்கேற்ற புத்தகங்களை காட்டினால் அதிலிருந்து அவர்களே தேர்வு செய்து கொள்கிறார்கள் என்பது முக்கியமாக அடியேன் தெரிந்து கொண்ட விஷயம்.

    சமீப காலங்களில் புத்தகக் கண்காட்சியில், நமது ஸ்டால்களில் உதவி புரிய ஆர்வமுள்ள வாசகர்களின் பங்களிப்பினை இந்த புத்தக கண்காட்சியின் மூலம் நண்பர்கள் வாயிலாக நான் முதல்முறையாக கேட்டு தெரிந்து கொண்டேன்.

    இதற்கு முன் நடைபெற்ற புத்தக கண்காட்சிகளில் ஆர்வமுடன் தங்களது பங்களிப்பை வழங்கிய.. யுவா கண்ணன், எம் கே ஸ்ரீராம், மாரிமுத்து அண்ணா, ஈரோடு விஜய் சார், கடல் யாழ் மேடம், தயாளன் சார், விஷ்வா சார், செந்தில் சத்தியா ஜீ மற்றும் அடியேன் பெயர் மறந்து விட்ட நண்பர்களின் பங்களிப்பினை அவ்வப்போது கேட்டு ஆச்சரியமடைந்தேன். முகம் தெரியாமல் காமிக்ஸ் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்பை செய்து கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

    தொடரும்...

    ReplyDelete
  39. மீண்டும் ஒரு முறை இறுதியாக 2023 சேலம் புத்தக கண்காட்சியில் எனக்கு செயல்பட வேண்டிய யுத்தியை, பாடத்தை, அறிவை சொல்லாமல் சொல்லி வழிகாட்டிய அந்த பெயர் தெரியாத குட்டி பெண்மணி எனது மர்ம பாஸ்க்கு எனது நன்றிகள்..

    சேலம் புத்தக கண்காட்சியில் ஜோதி மேடம் அவர்களின் பங்களிப்பும் அயராத உழைப்பு வார்த்தைகளில் சொல்ல இயலாத வண்ணம் இருந்தது ஒரு நாள் மட்டும் அல்ல அனைத்து நாட்களில் தான். என்ன ஒரு அபார உழைப்பு, வாழ்த்துக்கள் ஜோதி மேடம் உங்களுக்கு.
    அவசர நாட்களில் சிவகாசியில் இருந்து சேலம் ஓடி வந்து கடமையை செய்த பெயர் மறந்து விட்ட பணியாளர் அண்ணா அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    அடியேன் புத்தக கண்காட்சியில் இருந்த சமயத்தில் டீ வாங்கிக் கொடுத்து என்னை உற்சாகப்படுத்திய குமார், யுவா கண்ணன் மற்றும் மேடம் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி கலந்த வாழ்த்துக்கள்..

    அடுத்து வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் நமது காமிக்ஸ் புத்தகங்களில் விற்பனைக்கு உதவி புரியவுள்ள அனைத்து நண்பர்களுக்கும் எனது முன்கூட்டிய நல்வாழ்த்துக்கள்.

    சேலம் புத்தக கண்காட்சி 2023 குறித்த எனது நினைவுகளை பொறுமையுடன் படித்த நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...

    நமது எடிட்டர் சார் அவர்களுக்கு என்றும் மறவாத நன்றியுடன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ரகு அண்ணா தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் எழுத்துக்கள் அருமையாக உள்ளது. உங்கள் களப்பணி அருமை. அதே சமயம் நீங்கள் படித்த புத்தகங்களின் விமர்சனத்தையும் 10 அல்லது 15 வரிகளில் எழுதி பதிவு இட்டால் இன்னும் பல புத்தகங்கள் விற்பனையாகும் என்று எனக்கு படுகிறது.

      Delete
    2. அருமை நண்பரே புத்தக விழாவில்
      உதவிய கலக்கிய அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

      Delete
    3. நண்பா அட்டகாசமான விவரிப்பு. ரொம்பவே அழகாக எழுதியுள்ளார். மிகச் சிறந்த பங்களிப்பு. சாப்பிட கூட செய்யாமல் சில நாட்கள் நண்பன் தொடர்ந்து புத்தக விழாவில் பணியாற்றியது எனக்கு தெரியும். அவ்வளவு ஆர்வம், உழைப்பு எல்லாம் காமிக்ஸ் மீது கொண்ட காதலால் தான்.

      Delete
    4. சூப்பர் நண்பரே...கலியுக கர்ணன்கள்...வேறென்ன சொல்ல....வாழ்த்துக்கள் ...செம சூப்பர்

      Delete
    5. Congrats Kumar,yuva and ragu.
      Great work. Super.

      Delete
    6. வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி நண்பர்களே !!!

      Delete
    7. ஆல்ரெடி சேலம் குமாரின் நண்பர்களுக்கு உதவும் மனசு நமக்கு தெரியும்....

      விழாவில் அதை தொடரச் செய்து புதிய இளம் வாசகர்களின் கைகளுக்கு காமிக்ஸ் சென்று சேர வைத்த KS & யுவா இருவருக்கும் பாராட்டுகள்💐💐💐💐💐

      அந்த மனசு சார் கடவுள்...

      அனைவருக்கும் வாழ்த்துகள்

      Delete
    8. நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்...

      Delete
    9. ரகு அய்யா.நண்பர் குமார்.யுவா கண்ணன் மூவரும் நமது காமிக்ஸை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வேலையை கலையை அருமையாக செய்துள்ளீர்கள் பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் & நன்றிகள்
      சென்னை புத்தக விழாவில் இதனை செயல் படுத்திட நானும் முயற்சி செய்கிறேன் நண்பர்களே

      Delete
    10. // சென்னை புத்தக விழாவில் இதனை செயல் படுத்திட நானும் முயற்சி செய்கிறேன் நண்பர்களே //

      வாழ்த்துக்கள் செந்தில் சத்யா ஜி... தொடருங்கள் ... வித்தியாசமான சந்தோஷமான, அனுபவங்கள் இன்னும் கிடைக்கப்பெறும் உங்களுக்கு...

      Delete
  40. உங்களை கொன்றதில் மகிழ்ச்சி 

    வழக்கமான டெக்ஸ் கதை அல்ல, துப்பறியும் கதை. கூலிக்கு கொலை செய்யும் கூட்டம்,  அதிலும் அறம் நெறி என்று மிக உயரிய கொள்கையை முன்வைக்கும் வில்லன். ஆங்கிலத்தில் லூஸ் எண்ட்ஸ் என்பார்கள் அதாவது கொலை செய்தவர்கள் விட்டுச் சென்ற சிறு சிறு தடம். அதுவரை அந்த தடம் துப்பறிவாளர்களுக்கு கிடைக்காமல் இருந்தது. டெக்ஸும் கார்சனும் எடுத்த உடனேயே அந்த லூஸ் எண்ட்ஸ் சின் ஒரு பகுதியை பிடிக்க வரிசையாய் லூஸ் எண்ட்ஸ் அனைத்தையும் காலி செய்து கொண்டே வருகிறது கூலிப் படை. நூலிழையில் கொலையாளி தப்பித்துக் கொண்டே இருக்க அந்த நூலிழை இடைவெளியிலும் டெக்ஸ் கார்சன் ஜோடி மீண்டும் மீண்டும் சரியான பாதையில் பயணிக்க சுபமாக முடிகிறது கதை.

    கதை 9.5/10
    ஓவியங்கள் 7.5/10
    மேக்கிங் 8.5/10

    ReplyDelete
  41. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  42. ஆள் அரவமற்ற தீவு அது..
    மனிதர்களால் கைவிடப்பட்ட தீவு..
    பிகினி பவழத் தீவு..
    சாகஸப் பயணத்தில் ஆர்வம் கொண்ட குழு ஒன்று அந்த திகில் தீவில் பிரவேசிக்கிறார்கள்..
    ஆரம்ப பக்கங்களில் லேசான அயர்ச்சியை கொடுக்கும் கதை தீவினில் காலடி எடுத்து வைத்ததும் தீயாய் பற்றிக் கொள்கிறது கதைக் களம்..
    தீவினில் நுழையும் ஒவ்வொருவரும் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள்..
    எங்கும் இரத்தக் களறி..
    கொன்றவர்களை குற்றுயிராக்கி அவர்களது சதைப் பிண்டங்களை கொய்து தின்னும் பயங்கரம்..
    BERNARD JHATTOU வின் ஓவியங்கள் மிரட்டுகின்றன..
    கொடூரத்தின் உச்சங்களை அப்பட்டமாய் தூரிகையில் கொண்டு வந்த ஓவிய மாயாஜாலம்..
    வாசித்து முடிக்கும் போது ஒரு பரபரப்பான ஹாரர்+த்ரில்லர் ரக ஹாலிவுட் திரைப்படத்தை கண்டு மிரண்டு போன விதிர்ப்பு ஊடுறுவுவதை தவிர்க்க முடியவில்லை!

    வயதிலும்,வாசிப்பு அனுபவத்திலும் முதிர்ந்தோர்க்கான இதழ் என்ற எச்சரிக்கை வாசகத்தோடே இதழ் வெளியாகியிருக்கிறது!

    லயன் காமிக்ஸ் கிராபிக் நாவல் வரிசையில் இம்மாதம் வெளி வந்திருக்கும் சித்திரக் கதை இதழ் காலனின் கால் தடத்தில்..!
    ஒரு திகில் அனுபவம் உங்களுக்காக காத்திருக்கிறது நண்பர்களே!

    (இது போன்று ஏகப்பட்ட ஹாலிவுட் படங்கள் வந்திருந்தாலும் சித்திரக் கதை வாசிப்பில் இது புது அனுபவமே!)

    ReplyDelete
  43. கா.கா.த அடுத்தடுத்த பாகங்கள் வெளியிடும் பட்சத்தில் அட்டைப் படத்தில் கவனம் கொள்ளவும்..
    அட்டைப் படம் சைவமாகவே இருக்கட்டும் எடி சார்...

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு பருத்தி மூட்டை குடோன்லேயே கிடந்தால் தேவலாம் sir.

      Delete
  44. @Edi Sir..😍😘😃

    ✈பிகினி தீவுக்கு போக நான் விசா க்கு apply பண்ணிட்டேன் மக்களே...😍😘

    ReplyDelete
    Replies
    1. இரத்தக் களறியோடு என்ஞாய்..

      Delete
    2. சும்மாவே கிஸ்ஸியும், ஸ்மைலியும் போட்டுத் தாக்குபவர் இன்னிக்கி இன்னும் ஒரு மிடறு தூக்கலா குஷியாகிட்டா மெரி தெரியுதே ??

      Delete
  45. மேலே நண்பர் குறிப்பிட்ட படி 18+
    வயது முதிர்ந்தோருக்கான ஆக இதழாக அறிவித்தே இருக்க நேரிட்டாலும் அட்டைப்படத்தில் ( மட்டும்)ஓவர் கவர்ச்சி வேண்டாமே சார்...மற்ற இதழ்களை போல் வாரிசுகளுக்கு முன்னால் படிக்க முடியவில்லை சார...காரணம் நான் வாசிக்கும் சமயம் இதழ்களின் அட்டைப்படம் அவர்களை நோக்கியே இருக்கும்.. அதனாலேயே
    இந்த இதழ் வாசிக்க தாமதம் ஆகி கொண்டே இருக்கிறது..

    ReplyDelete
    Replies
    1. எனது ஒத்த கருத்தும் இதுவே..
      கண்டிப்பாக ஆசிரியர் ஆவண செய்வார்!

      Delete
    2. ஜாணிக்கொரு தீக்கனவு புத்தகத்துள்ளே வச்சு படிங்க சார். நான் அப்படி தான் படிச்சேன்..

      Delete
    3. சத்திய சோதனை புக்குக்குள்ளே வேணாம் சார், நம்ம புக் அதை விட பெருசா இருக்கும்

      Delete
    4. தலீவரே...உங்க கையிலே அதை ஆரு குடுத்தது ?? பச்சை மண்ணுகிட்டே 18+ சமாச்சாரத்தை குடுத்தது செயலரா ??

      Delete
    5. பாருங்க சார்...நீங்க கூட என் வயசை ஒத்துக்கிட்டீங்க..இந்த அமெரிக்க அதிபர் காதுல விழுகுற மாதிரி சொல்லுங்க சார்..டார்ச்சர் தாங்கல...

      Delete
  46. கிளாசிக் ஜானியின்
    இரத்த அம்பு
    மரண பட்டியல்
    இரத்தக்காட்டேறி மர்மம்
    பிசாசு குகை
    மர்ம முத்திரை
    பயங்கரவாதி ஜானி
    விசித்திர நண்பன்
    விண்வெளி படையெடுப்பு போன்ற கதைகளை க்ளாசிக் ரீபிரிண்ட்டில் ஜானி டைஜஸ்ட்டாக ஹார்ட் பவுண்டில் முன் பதிவுகளுக்கு மட்டுமே என வெளியிடலாமே சார்!

    ReplyDelete
    Replies
    1. எனக்கு double ok தான்...

      Delete
    2. அருமையான கோரிக்கை, பல கிளாசிக் இதழ்களை படிக்க வாய்ப்பில்லாத நபர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்

      Delete
    3. இந்த கோரிக்கைக்கு எனது ஓட்டும் உண்டு...

      Delete
    4. நன்றி நண்பர்களே

      Delete
    5. முன்பதிவெனும் சொர்ண வாத்தை, வாகான வேளைகளில் மாத்திரமே முட்டையிடச் சொன்னால் நலம் நண்பர்களே ; நாள்தோறும் அதனை களமிறக்கினால் அலுத்துப் போய்விடும் ! தவிர ஜானியின் தொடரில் இன்னமும் கணிசமான புது இதழ்கள் காத்திருக்கும் போது, பழசுக்குள் டைவ் அடிக்க வேகம் வர மாட்டேங்குது !

      Nevertheless - நிச்சயம் மண்டைக்குள் இருத்திக் கொள்வேன் இந்த வேண்டுகோளை !

      Delete
    6. நன்றி ஆசானே..😘😘

      Delete
    7. ஆமா..ஜானி Classic கதைகளை வெளியிடலாமே.. வெளியிடணும்..
      வெளியிடுவாங்களா..😃

      (நன்றி.. ச்செல்லாக்குட்டி ஆலன்)

      Delete
    8. சிறப்பான பட்டியல் குணா,ஆசிரியர் சார் விரைவில் ஆவண செய்வார் என்று நம்புவோம்...

      Delete
    9. ஜானிக்கும் கிளாசிக் தொகுப்பு

      அருமையான ஐடியா.
      அதுவும் நண்பர்கள் மேலே குறிப்பிட்ட கதைகள் மறுபடியும் வந்தால் அட்டாகாசமாக இருக்கும்.

      வந்தால் வரவேற்க இப்போதே தயார்.

      Delete
  47. நேற்று இரவு 11.30 க்கு தான் புத்தக பார்சலை பிரிக்க வாய்ப்பு கிடைத்தது. பிரித்தேன். வழக்கம்போல எல்லாத்தையும் ரசித்தவுடன் முதலில் எடுத்தது நம்ப பிகினிதான்..😘

    நண்பர்களின் விமர்சனங்கள் என்னை ரொம்பவே டெம்ப்ட் ஆக்கியிருந்தது.😍

    அருமையான திரில்லர் ..😳எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. இன்னும் ரெண்டு பாகங்கள் வேற இருக்காமே..❤ I am eagarly waiting.💐
    சூட்டோடு சூடா தனித்தடத்துல காராசாரமாகவே போட்டுடுங்க எடி சார்..🙏😜

    நாங்கெல்லாம் ரசனையில் ரொம்பவே முத்துனவங்க..😜😝😛😋
    அதனால ராவாவே கொடுத்துடுங்க..😍😘

    ReplyDelete
    Replies
    1. இரும்புக் கையாரே..
      கதையோட ரணகளத்திலும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேட்கிறதோ?😁😁😁

      Delete
    2. நண்பரே நிச்சயமா கிளுகிளுப்பு இல்லா கதை பிகினியோட சுத்துனாலுமே.... வேகமெல்லாம் ஓட்டத்திலும்...துரத்தலிலுமிருக்கைல கிளுகிளுப்பா

      Delete
    3. நம்ம ஸ்பைடர் மினிஸ்டர் செவனோட போராட வருவது...இதுக்கு மேல கவர்ச்சியா நம்ம நண்பர் கார்த்திக்குக்கு தெரியலாம்...பார்வை...பார்வை

      Delete
    4. //முதலில் எடுத்தது நம்ப பிகினிதான்//

      நாமக்கல் பக்கம்லாம் பூரிக்கட்டைகள் புழக்கத்தில் கிடையாது போலும் !!

      Delete
    5. Ha..ha..😃😃😍😘😀

      அதுக்குதான் Sir..😍 மிட்நைட் மசாலா நேரத்துல படிக்கிறது..😃😃

      Delete
  48. Adult content comics can be released under separate banner instead of lion muthu comics.

    ReplyDelete
    Replies
    1. இல்லீங்க நண்பரே ; அந்தளவுக்கெல்லாம் போகும் எண்ணம் சத்தியமாய் நமக்கில்லை ! இதுவொரு mild one-off !

      Delete
  49. @பிகினி ..ஸ்பாய்லர் அலெர்ட் ..😙

    நம்ப 'ச்செல்லாகுட்டி' ஆலனின் அம்மா லோரினை கொண்ணு போட்ட அந்த ஜந்து😱..ஆலனை மட்டும்
    ஒண்ணும் பண்ணாம விட்டுட்டு போகுதே..😶

    ஏதாவது பூர்வ ஜென்ம பந்தமா இருக்குமோ..😑

    May be... தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருக்கிறதா சொல்லப்படற, ஆலனை புடிக்கலேன்னு போன அண்ணணா இருக்குமோ..😔

    அதே மாதிரி.. அந்த கைடு மாலெவல் க்கும் that ஜந்துக்கும் ஏதோ connection இருக்கும் போல..

    நேர் செய்ய வேண்டிய கணக்கு ஒண்ணு இருக்குன்னு சொல்றான்.. அப்ப இதுக்கு முன்னாடி செம்தியா வாங்கியிருக்கான் போல..

    எல்லாத்துக்கும் என்னமோ ஒரு காரணம் இருக்கு..😙

    காத்திருப்போம்.. அடுத்தடுத்த பாகங்களுக்கு..😱😳

    ReplyDelete
    Replies
    1. ...நேர் செய்ய வேண்டிய கணக்கு ஒண்ணு இருக்குன்னு சொல்றான்.. அப்ப இதுக்கு முன்னாடி செம்தியா வாங்கியிருக்கான் போல......


      படிக்கைல இதே கேள்வி எனக்குமிருந்தது நண்பரே...சுவாரஷ்யத்துக்கோ....அல்லது தனது வாடிக்கையாளர்களை கொன்னதுக்கோன்னு இரண்டாம் பாகம் குறித்து அறியாததால் நினைத்தேன்..இதான் கிநாவாச்சே...இப்ப எப்படா வரும் அடுத்த கப்பல்னு காத்திருக்கேன் மூடிய கதவின் பின்னால்

      Delete
  50. @ ALL : என்ன சொல்லவென்று தெரியலை folks - ஆனால் வோட்டெடுப்பில் ஒரு பக்கம் ராட்சஸ மெஜாரிட்டியில் வண்டி ஓடிக்கொண்டுள்ளது !!

    அது எந்தப் பக்கத்தில் என்பதை அடுத்த சனியிரவு சொல்லட்டுமா ?

    ReplyDelete
    Replies
    1. ஏ அஜக்தா...
      ஏ ஏ ஏ அஜக்தா...

      Delete
    2. பீமன் கையிலே வைச்சிருக்கிற கதைய வேணும்னா அமேசானிலே வாங்கி வெளியிடலாம் ஸ்டீல் !

      Delete
    3. // பீமன் கையிலே வைச்சிருக்கிற கதைய வேணும்னா அமேசானிலே வாங்கி வெளியிடலாம் ஸ்டீல் ! //

      Sir, ROFL

      Delete
  51. தற்போது வரும் கிராஃபிக் காமிக்ஸ் கதைகள் சிலருக்கு முகசுழிப்பை ஏற்படுத்தினாலும் நல்ல த்ரில்லர் கதைகளாக பல வாசகர்களை கவர்ந்துள்ளது.
    குற்ற நகரம் கல்கத்தா மற்றும் விதி எழுதிய வெள்ளை வரிகள் இப்ப காலனின் கால் தடத்தில் என.
    தொடர்ந்து இதுபோன்ற கதைகளை வெளியிடுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. அந்த இரண்டும் கொஞ்சம் வரலாறோடு ஓட்டமெடுத்த கதைகள் சார் ! இது வேறு ரகமில்லையா ?

      Delete
  52. @Again begin with பிகினி..(2nd round)..😍😘

    நம்ப J(ஜொல்லு) தாத்தா வின் வசனங்களுக்காக..😍😃😘

    பட்டைய கிளப்பிட்டேள்..👍👌👌

    ReplyDelete
  53. இம் மாதம் என்னளவில் ரிப்போர்ட்டர் ஜானியே முதலிடம் வகிக்கிறது வழக்கமான இடியாப்ப கதைதான் என்றாலும் குற்றம் நடக்கும் இடங்களில் கேமராவில் ஜானியின் புகைப்படம் எங்கெங்கிலும் ஜானியின் கை ரேகைகள் என ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் கமிஷனர் போர்டனே சந்தேகிக்கும் ஜானியின் நடவடிக்கை இது நாள் வரை கூடவே இருந்த லெட்ருதான் குற்றவாளி என கதை பரபரப்பாக போக கடைசி பக்கத்தில் சரியான குற்றவாளியை அடையாளம் காண்கிறோம் சுவாரசியமான அனுபவத்தை தந்த ஜானிக்கும் அதனை தமிழில் தந்த ஆசிரியருக்கும் நன்றிகள் ரிப்போர்ட்டருக்கு ஓட்டு போட்டதற்கு நெஞ்சை நிமிர்த்தி கொள்கிறேன் சென்னை மழை .வெள்ளம்.புயல். கரண்ட் இல்லாமை.குடி தண்ணீர் கிடைக்காமை இவ்வளவு கஷ்டங்களுக்கு நடுவில் நமது காமிக்ஸே மனதை லேசாக்கியது 🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. // இம் மாதம் என்னளவில் ரிப்போர்ட்டர் ஜானியே முதலிடம் வகிக்கிறது //

      +1

      Delete
  54. படித்தாகிவிட்டது. wrong turn மூவி தொடர்களின் கான்செப்ட் ஒரு இடத்திற்கு போய் அங்கு மாட்டி உயிர் விடுவது அதனை வெறும் திகில் மட்டும் இருப்பது போலவும் எடுக்கலாம் அல்லது gore கலந்தும் எடுக்கலாம் அதற்கும் வாசகர்கள்/ரசிகர்கள் இருக்க தான் செய்கிறார்கள். எனக்கு அவ்வாறான gore பிடிக்காது. வெறும் திகில் கொலை ரத்தம் வரை சரி அதை தாண்டி எனக்கு பிடிக்காது. இந்த வகை ரசிகர்கள் உலகிலேயே கொஞ்சம் தான் என்ற பொழுது இன்னும் கொஞ்சமாக இருக்கும் காமிக்ஸ் ரசிகர்களில் அதுவும் க்ராபிக் நாவல் பிடிக்கும் இன்னும் சொச்ச நபர்களில் இந்த genre பிடிப்பவர்கள் இன்னும் குறைவு என்று தான் நினைக்கிறேன். சமீபத்துல வந்த village டிவி தொடர் கூட அந்த genre தான்.

    என்னை கேட்டால் இந்த genre தவிர்க்கலாம் சார்

    ReplyDelete
    Replies
    1. அப்படி என்றால், அந்த புத்தகத்தை நீங்கள், வாங்காமலேயோ (அ) படிக்காமலேயோ விட்டிருக்கலாமே sir. தீர்வு உங்களிடமே உள்ளது. அதை விடுத்து, , அந்த genere புத்தகத்தை வரவே விடாமல் தடுப்பது எந்த விதத்தில் நியாயம் sir? உங்களுக்கு பிடிக்காத ஒரு புத்தகம் மற்றவர்களுக்கு பிடிக்கலாம் அல்லவா? எனக்கும் சில பத்தகங்கள் பிடிக்கவில்லை தான். ஆனால் ஒரு போதும் ஆசிரியரிடம் இந்த மாதிரி புத்தகங்கள் தேவை இல்லை என்று சொல்லியதில்லை. இது தனிதடத்தில் தானே வருகிறது். எனவே புத்தகத்தை தாராளமாக விமர்சியுங்கள். அதுவரை மட்டுமே நமக்கு உரிமை உள்ளது். ஆனால் ஒரு படைப்பை வெளிவர விடாமல் தடுக்கவோ , வெளியிடாதீர்கள் என்றோ நாம் எப்படி sir சொல்ல முடியும்? அடுத்தவர் உணர்வுகளை மதிப்போம்.அனைத்து புத்தகங்களையும் ஆதரிப்போம். நன்றி.

      Delete
    2. சார் ஒரு புத்தகத்தை வாங்கி அதனை பற்றிய கருத்தை கூற வேண்டாம் என்று சொல்வது எப்படி சரி ஆகும்.

      ஆசிரியர் தான் அடுத்த பாகங்கள் வெளியிடலாமா வேண்டாமா என்று கேட்டுள்ளார் அதனால் தான் தவிர்க்கலாம் என்ற கருத்தை கூறி உள்ளேன்.

      அதே போல உங்களுக்கு அந்த கதை பிடித்துள்ளது கண்டிப்பாக அடுத்த பாகங்கள் வெளியிடுங்கள் என்று நீங்கள் கருத்து கூறியுள்ளீர்கள்

      உங்களிடம் வந்து நீங்கள் எப்படி அதை பிடிக்கும் என்று சொல்லலாம் என்று நான் வாதம் செய்ய முடியுமா.

      Delete
  55. கிராபிக் நாவல்..??ii
    அதாவது காமெடியில் நே
    ரடியான காமெடி - ப்ளாக் காமெடி ம்பாங்களே .ii
    .அது மாதிரி இது ஒருவகை..
    எனக்கு ஆக்ஷன் இருந்தாலும் X 111- ஒரு வகை கி. நாவல்தான்.
    கிரிமினாலஜி ஜுலியா கதைகளும் கி. நாவல்தான்..
    அது ஒருவகை மென்சோகம் என்று வகைப் படுத்திக்கொள்ளலாம்.. (எனக்கு இந்த ரகம் பிடிக்கும்..)

    மற்றபடி - இப்படி தனி தடத்தில் வரும்-தனியே தன்னந்தனியே,
    காலனின் கால்தடத்தில் போன்ற கதைகளை எனக்கு ரசிப்பதில்லை தான்..
    ஆனால், சந்தாவில் வரும் இவைகளை படித்துவிட்டு பத்திரமாக வைத்திருப்பேன் தான்..
    ஏனென்றால் - எனக்கப்புறம் எனது சேகரிப்புகளான "காமிக்ஸ் புத்தகங்களை", பாதுகாக்கும் பொறுப்பை பையனிடம் ஒப்படைக்க வேண்டுமே..
    .எனக்கு கிரிக்கெட் சுத்தமாக ரசிக்காது..ஆனால் எனது பையனுக்கு பிடிக்கும்..
    எனவே, மீசை முளைத்த என் பையன் அட்டை ப்படத்தில் மயங்கி படிக்க ஆரம்பித்தான் என்றால்.அப்படியே
    மீதி ரகங்களையும் ரசிக்கப் பழகிவிடுவான் அல்லவா.?i
    30 வருடத்திற்கு நியூஸ் பிரிண்ட் பேப்பரில் வந்த காமிக்ஸ் இதழ்களை யாருக்கும் கொடுக்க மனமில்லாமல் பாதுகாத்து வைத்திருக்கும் எனக்கு. ஒரு 4-5 வருடங்கள் எனது பாதுகாப்பில் வைத்திருப்பதில் ஒன்றும் சிரமமில்லை..
    எனவே, இது வேண்டும் - வேண்டாம் என்று முடிவெடுக்க
    வேண்டியது எனது பையன்தான்..
    ஆகவே - நான் ஓட்டெடுப்பில் கலந்துகொள்ளவில்லை..
    நன்றி..சார்..

    ReplyDelete
  56. @Raghuraman Salem & KS
    சிறப்பான பணி!
    வாழ்த்துகள்!!👌👌

    ReplyDelete
  57. எமைலின் இடத்தில் இருந்து இருந்தால் நானும் கண்டிப்பாக கிர்பியின் பயல்களைப் போட்டுத் தள்ளித்தான் இருப்பேன். ஏனோ லாராவைப் பறிகொடுத்த சோகம் மட்டும் ஆழ்மனதைப் பிசைந்து கொண்டே இருந்திருக்கும். கற்பனையிலாவது சொல்லி வைக்கிறேன். அமைதியில் ஓய்வெடு எமைல் தோழா 💔
    'செப்டம்பர் மாலைகளின் நிழல்களில் தான் எத்தனை
    இதம் "
    இதுவரை ரசிக்காதவர்களுக்கு, இலையுதிர் காலத்து இலைகளின் வர்ணங்களை ரசிக்க வேண்டுமா?
    சட்டென்று களவும் கற்று மற - ட்ரெண்ட் ஐ வாங்கி விடுங்கள் தோழர்களே!

    ReplyDelete
    Replies
    1. செப்டம்பர் மாலைகளின் நிழல்களில் தான் எத்தனை
      இதம் "
      இதுவரை ரசிக்காதவர்களுக்கு, இலையுதிர் காலத்து இலைகளின் வர்ணங்களை ரசிக்க வேண்டுமா?....சூப்பர் நண்பரே

      Delete
  58. ஜானிக்கு ஒரு தீங்கனவு - புத்தகத்தை கையில் எடுத்த பிறகு அதனை கீழே வைக்க மனது வரவே இல்லை . ஒரே மூச்சில் படித்து முடித்தேன். Tex மற்றும் ராபின் கதை ஒருவகை என்றால் ஜானி அதைவிட டாப்.

    ReplyDelete
  59. 2023 ஒரு பார்வை

    மொத்தம் வெளிவந்த புத்தகங்கள் (இலவசங்களையும் சேர்த்து) - 61
    அதில் மொத்த கதைகள் - 100
    இனி வரும் சிஸ்கோ, விங் கமாண்டர் ஜார்ஜ் மற்றும் இலவச Tex சிறுகதை சேர்க்கப்படவில்லை.

    படித்த புத்தகங்கள் - 61
    படித்த கதைகள் - 100
    படிக்காதது - 0

    தொகுப்பாக வந்த Supreme 60's கதைகளை தனித்தனியே பிரிக்காமல் மொத்தமாக கணக்கில் எடுத்து கொண்டால், கதைகளின் எண்ணிக்கை 74. இந்த 74 கதைகளை எனக்கு பிடித்த வகையில் வரிசை படுத்தி இருக்கிறேன்.

    //ஆஹா, ஓஹோ, தெறி, தூள், செம, வேற லெவல், போட்றா விசில, தரமான சம்பவம்பா (A+) Excellent.//

    1. விதி எழுதிய வெள்ளை வரிகள்
    2. கார்சனின் கடந்த காலம் - டெக்ஸ்
    3. புதிருக்குள் பெரும் பயணம்
    4. எந்தையின் கதை - XIII
    5. மரணத்தின் நிறம் நீலம் - தோர்கல்
    6. எல்லாம் கிழமயம் - தாத்தாஸ்
    7. காலனின் கால் தடத்தில்
    8 குற்ற நகரம் கல்கத்தா
    9. வஞ்சம் மறக்கா வரலாறு - ஆல்பா (சம்மர் ஸ்பெசல்)
    10.டால்டன்களோடு தக திமித - லக்கி
    11. மோதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
    12. THE தளபதி special
    13. லக்கி லூக்கிற்கு கல்யாணம்
    14. பனாமா படலம் - டேங்கோ
    15. பனிவனப் பிரியாவிடை - ட்ரெண்ட்
    16. மீண்டும் ஒரு அசுரன் - மார்டின்
    17. தீதும் நன்றும் பிறர் தர வாரா - மேகி கேரிஸன்
    18. மர்ம சாம்ராஜ்யம் - தோர்கல்
    19. பின்விளைவுகள் ஜாக்கிரதை - Bluecoats
    20. கொலை நோக்கு பார்வை - ராபின்
    21. நதி போல ஓடி கொண்டிரு
    22. The சிக்ஸர் Special - Tex
    23. நானும் ரவுடி தான் - சுஸ்கி விஸ்கி ஸ்பெசல் 2
    24. பள்ளத்தாக்கு படலம்
    25. பகை பல தகிர்த்திடு - டெக்ஸ்
    26. மரணம் சொல்ல வந்தேன் - மைக் ஹேமர்
    27. கானம் பாடும் கம்பிகள் - லக்கி

    //நல்லா இருக்குப்பா, தப்பு சொல்ல முடியாது (A) Very Good.//

    28. 96 மணி நேரங்கள் - ரூபின்
    29. ஜானிகொரு தீக்கனவு
    30. நட்சத்திர வேட்டை - நெவாடா
    31. சர்பத்தின் சின்னம் - டெக்ஸ் - Supremo Special
    32. உங்களை கொன்றதில் மகிழ்ச்சி - டெக்ஸ்
    33. கரையெல்லாம் குருதி - டெக்ஸ்
    34. திக்கெட்டும் திகில் - டெக்ஸ் - Supremo Special
    35. கைதியாய் கார்சன் - டெக்ஸ்
    36. கலவர பூமியில் கனவைத் தேடி - டெக்ஸ் & Zagor
    37. பேரிக்காய் படலம் - சுஸ்கி & விஸ்கி
    38. சகோதரனின் சகாப்தம் - டெக்ஸ்
    39. சென்று வா, கொன்று வா - Zagor
    40. புரவிகளின் பூமி - Zagor
    41.எல்லாம் அழகே
    42. பனித்துளி இளவரசி
    43. தப்பி சென்ற தேவதை - SODA
    44. பிரியமுடன் ஒரு போராளி - Zagor
    45. புதையலுக்கொரு பாதை - விங் கமாண்டர் ஜார்ஜ் Mini
    46. யார் அந்த சிறுத்தை மனிதன் - Mini Book

    //இதுவுந்தே நல்லா இருக்கு ஆனாலும் இங்க, அங்க கொஞ்சம் இடிக்குதே. (B) Good//

    47. அமேசானில் அதகளம் - Mr. NO
    48. கறை படிந்த கரன்சி - லேரி B மேக்ஸ்
    49. வந்தார் வென்றார் - டெக்ஸ் - Supremo Special
    50. ரிப்கிர்பி ஸ்பெஷல் - 2
    51. உயிரைத் தேடி (Black & White)
    52. உயிரை தேடி (Colour)
    53. வேதாளர் ஸ்பெஷல் - 2
    54. மரண நடை - டெக்ஸ்
    55. பேய் புகுந்த பள்ளிக்கூடம் - டைலன் Mini

    //திரிசங்கு நிலை, கொஞ்சம் சூப்பரு, கொஞ்சம் ஓவரு (C) Above Average (Un predictable)//

    56. மீண்டு(ம்) வந்த மாயன் - டெக்ஸ்
    57. சார்லி ஸ்பெஷல் - 1
    58. கொலைப்படை - ஸ்படைர் (The Big Boys Special)
    59. வேங்கையோடு மோதாதே - Mini Book
    60. வல்லவனுக்கு வல்லவன் - Mini Book

    //எந்த மலையையும் புரட்டி போடல, ஆனா தொய்வும் இல்லை, Average (D)//

    61. பிளாக் மெயில் பண்ண விரும்பு - ராபின்
    62. தேடல்களை கைவிடேல் - Zagor
    63. தப்பு தப்பாய் ஒரு தப்பு - ராபின்
    64. பூதம் காத்த புதையல் - டெக்ஸ் - Supremo Special
    65. ஓநாய் வனத்தில் டெக்ஸ்
    66. பறக்க மறந்த பறவைகள் - டெக்ஸ்
    67. மந்திர மண்டலம் - டெக்ஸ்
    68. குற்றத்தின் குரல் - டெக்ஸ் Mini
    69. மனித எரிமலை - நார்மன் (The Big Boys Special)

    //பிடிங்கினது எல்லாமே தேவை இல்லாத ஆணி, ஓவர் பில்டப்பு உடம்புக்கு ஆகாது - பல்பு (E) Below Average//

    70. ஒரு கௌபாயின் காதலி - டெக்ஸ்
    71. கிட் ஆர்டின் உஷார் - Summer Special

    //மிடில, எடுத்தேன் பாரு ஓட்டம் (F) - Disaster//

    72. ஆழ்கடலில் மாயாவி
    73. யார் அந்த மாயாவி
    74. கொலைகார குள்ளநரி

    ReplyDelete
    Replies
    1. மரணம் சொல்ல வந்தேன் - ரிப்போர்ட்டர் ஜானி???

      Delete
    2. வந்தார் வென்றார் - வெற்றிக் கதை என்று எல்லோரும் சொன்னாங்க சார்.

      Delete
    3. வாவ்! பிரமிக்க வைக்கும் பட்டியலிடல்!! அட்டகாசம்!!

      அதிலும் தோர்கலின் இரண்டு கதைகளும் உங்களுக்கு பிடித்திருப்பதில் (A+) மிக்க மகிழ்ச்சி.

      Delete
  60. ஜொலிக்கும் அட்டைப்படங்கள்

    1. கார்சனின் கடந்த காலம்
    2. The BIG Boys Special
    3. வேதாளர் ஸ்பெஷல் - 2
    4. லயன் லக்கி ஆண்டு மலர்
    5. சம்மர் ஸ்பெசல்
    6. The தளபதி ஸ்பெஷல்
    7. பனிவனப் பிரியாவிடை
    8. கரையெல்லம் குருதி
    9. நட்சத்திர வேட்டை - நெவாடா
    10. உயிரை தேடி Black & White
    11. உயிரை தேடி கலர் (Cover Jacket)
    12. அமேசானில் அதகளம்
    13. விதி எழுதிய வெள்ளை வரிகள்
    14. சகோதரனின் சகாப்தம்
    15. மீண்டு(ம்) வந்த மாயன்
    16. ரிப்கிர்பி ஸ்பெஷல் - 2
    17. யார் அந்த மாயாவி
    18. உங்களை கொன்றதில் மகிழ்ச்சி
    19. காலனின் கால் தடத்தில்
    20. பேய் புகுந்த பள்ளிக்க்கடம்
    21. ஜானிகொறு தீக்கனவு
    22. வல்லவனுக்கு வல்லவன்

    மொக்கை அட்டைகள்

    1. சார்லி ஸ்பெஷல்
    2. மரணத்தின் நிறம் நீலம் - தோர்கல்
    3. மீண்டு வந்த அசுரன் - மார்டின்
    4. சுஸ்கி விஸ்கி - 2
    5. தீதும் நன்றும் பிறர் தரவாரா
    6. வேங்கையோடு மோதாதே
    7. யார் அந்த சிறுத்தை மனிதன்

    Best Making

    1. கார்சனின் கடந்த காலம்
    2. The தளபதி special
    3. The BIG Boys Special - ஸ்பைடர் மட்டும்
    4. உயிரை தேடி (Black & White)
    5. லயன் லக்கி ஆண்டு மலர்
    6. சம்மர் ஸ்பெசல்
    7. பனிவனப் பிரியாவிடை
    8. சகோதரனின் சகாப்தம்

    Worst Making

    1. புதையலுக்கொரு பாதை
    2. மனித எரிமலை (The big boys special

    Book for the Year - கார்சனின் கடந்த காலம்
    Story for the year - விதி எழுதிய வெள்ளை வரிகள்
    Best Find for the Year - வன்மேற்கின் அத்தியாயங்கள்
    Best New Hero - Mr. No

    குறைகள்

    (-) டெக்ஸ் 75 ஆம் ஆண்டில் இருந்தாலும், ஒரு சில கதைகளை தவிர மற்றவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட Supremo ஸ்பெஷலில் கூட அதே நிலை நிலைதான்.

    (-) வருட வருடம் ஏதாவது ஒரு கதை பிரிண்டில் சொதப்புவது தொடர்கிறது. சென்ற வருடம் காரிகன் ஸ்பெஷல், இந்த வருடம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மனித எரிமலை. கிடைத்த ஒரிஜினலே அப்படித்தான் என்றால் வெளியிடாமல் இருப்பதே நலம்.

    (-) மேலும் கலர் பிரிண்டிங்கில் இன்னும் கொஞ்சம் கவனம் தேவை. சீரான வண்ணக்கலவை புத்தகம் முழுதும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். 75% பக்கங்களில் சரியாகவும், மீதி 25%ல் அடர்த்தியாகவும், டல்லாகவும் மாறி மாறி இருப்பதை தவிர்க்க வேண்டும். இதை நான் come back கிற்கு பிறகு பல முறை குறிப்பிட்டு உள்ளேன். இது அனைத்து புத்தகங்களிலும் காணப்படுவது இல்லை. ஆனால் நிச்சயம் சரி செய்ய பட வேண்டிய ஒன்று. உதாரணம் : ஒரு கௌபாயின் காதலி, பள்ளத்தாக்கு படலம், நதி போல ஓடிக்கொண்டிரு, மரணத்தின் நிறம் நீலம். இக்கதைகளில் புரட்டினாலே தெரியும்.

    (-) Black & White கதைகளுக்கு பயன்படுத்தபடும் காகிதங்கள். தரமான வெள்ளை காகிதங்கள் பயன்படுத்துவது படிப்படியாக குறைந்து இப்போது பயன் படுத்தும் காகிதங்கள் சுமார் ரகங்களே. ஆனால் இவை லயன், முத்து, லயன் கிராபிக் நாவல்களில் தான் இந்த மாற்றம். ஆனால் V காமிக்ஸில் அதே தரமான வெள்ளை காகிதங்கள் தான் பயன் படுத்தபடுகிறது. டிசம்பர் மாத இதழ்களை எடுத்து பார்த்தாலே புரியும்.

    நிறைகள்

    (+) வெளியான 74 கதைகளில், 55 கதைகள் நன்றாக score செய்திருப்பது ஆரோக்கியமான விசயம். 5 கதைகள் மட்டுமே எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை (என்னளவில்). இது ரசனை சார்ந்தது, ஆளாளுக்கு வேறுபடும் என்றாலும், தாங்கள் தொட்டிருப்பது வெற்றியின் புது உச்சம்.

    (+) புத்தகங்களின் எண்ணிக்கை . அதிக அளவில் புத்தகம் வெளிவந்த இந்த ஆண்டில், இந்த வெற்றி சதவீதம் நிச்சயம் கொண்டாட பட வேண்டிய ஒன்றே.

    (+) கிராபிக் நாவல்களின் ரசனை சார்ந்த வெற்றி. வன்மேற்கையும் கணக்கில் எடுத்து கொண்டால், இந்த வருடம் வெளிவந்தவை மொத்தம் 9. என்னை பொறுத்தவரை இதுவே பெரிய வெற்றி தான். விற்பனையில் உறுதி இல்லை என அறிந்தும் தொடர்ச்சியாக கிடைக்கும் கேப்பில் எல்லாம் நுழைத்து, இப்போது அதற்கான பலனையும் அடைந்து உள்ளீர்கள். (காலனின் கால் தடத்தில் பாகம் இரண்டுக்கான ஓட்டெடுப்பின் முன்னணி நிலவரத்தை தாங்கள் சொல்லாமல் சொல்லியதில் இருந்தே புரிகிறது)

    (+) V காமிக்ஸ் + மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்கிற சந்தா திட்டம். இதனால் தான் லயன், முத்துவில் சான்ஸ் கிடைக்காத ராபின், வன்மேற்கின் அத்தியாயங்கள் போன்ற கதைகளையும், திடீரென தோன்றும் கதைகளையும் நுழைக்க முடிந்தது. ஒருவித balance மற்றும் flexibility க்கு உத்திரவாதம் அளிப்பது ஆரோக்யம்.

    (+) முத்து 50 ஆம் ஆண்டு கொண்டாட்டம் + ஈரோடு புத்தக விழா, One line புத்தக விழா, Cricket கொண்டாட்டம், புத்தக விழா ரிலீஸ்கள், பட்டிமன்றம் மற்றும் சமீபத்திய சேலம் புத்தக விழா என்று வருடம் முழுதும் களை கட்டிய காமிக்ஸ் உற்சவங்கள் காலத்துக்கும் மறக்க இயலா தருணங்கள்.

    (+) இவையனைத்தும் காரணம் தங்களின் உழைப்பு, பதிதுக்கான தேடல் மற்றும் காமிக்ஸ் மேல் தாங்கள் கொண்ட தீரா தாகம். நன்றிகள் பல.

    வளரட்டும் காமிக்ஸ் நேசம்.

    ReplyDelete
    Replies
    1. அருமையான மீள்பர்வை

      Delete
    2. Art work இல் best எவை? ப்ளீஸ் லிஸ்ட் பண்ணுங்க.

      Delete
    3. அருமையான, ஆழமான அலசல்!! சூப்பர் @Thirunavukkarasu Vazzukkupparai

      Delete
    4. நிறைய நேரம் எடுத்துக் கொண்டு நிறைய ஆய்வு செய்து நிறைய விசயங்களை சொல்லி உள்ளீர்கள் திரு.... அருமையான ஃபுல் இயர் ரிவியூ!!

      Delete
    5. Worst making is siruthai manithan and super hero tiger books

      Delete
    6. அட்டாகாசம் சகோதரரே,,,எல்லா கதைகளும் படித்து உள்ளீர்கள் பாராட்டிகுரியது
      மிக அருமையாக பதிவு செய்துள்ளீர்கள் சகோ

      Delete
  61. *காலனின் கால் தடத்தில்*

    *அட்டைப் படமே - ஒரு பக்கம் மயக்கும் அழகியோடும் மறுபக்கம் பசியோடும் இருக்கும் சுறாவோடும் இருவேறு கற்பனைச் சிறகை நம்முள் ஏற்படுத்தம் விதத்தில் உள்ளது.*

    ஆனால் கதையின் ஆரம்பமோ... சற்றே மாறுபட்டு தொடங்குது.

    *மனிதன் தன்னுடைய அறிவின் நுட்பத்தை வளர்ச்சிக்குப் பயன் படுத்தும் போது அது அனைத்து உயிர்களுக்கும் நன்மையை ஏற்படுத்தும்.*

    *அதே அறிவு நுட்பம் அணுவைப் பிளந்து அதன் ஆற்றலை அறிந்துக் கொள்ள நினைக்கும் போது அதனால் ஏற்படும் விளைவுகள் பேரழிவே.*

    *இந்த அறிவியல் வளர்ச்சியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தினால் பூமியில் உயிரினம் தழைக்கும் இல்லையேல் சரித்திரத்தை உருவாக்கக் கூட வழியில்லாமல் போகும் அபாயம் உண்டு.*

    இந்தக் கதையின் ஆரம்பமே பேரழிவின் ஆராய்ச்சியாக தொடங்குகிறது.

    பின்னர்...

    செல்வ வளமிக்க ஒரு சிறு குழு பொழுதுபோக்கினை வித்தியாசமான அனுபவமாக அனுபவிக்க ஒரு தனி படகினை அமர்த்திக் கொண்டு பயணம் செல்கின்றனர்.

    முதலில் சுறாக்கள் அதிகம் மிகுந்த பகுதியில் அதற்கு மத்தியில் அபாயகரமாக நீச்சலடிக்கும் சாகசம் நம்மையும் சிலிர்க்க வைக்கிறது.

    அங்கு திடீரென தோன்றும் ஒரு ராட்சத சுறாவைப் பார்த்து ஒரு பெண் பயந்து வெளியேற மற்றவர்களும் வெளியேறி விடுகின்றனர்.

    *அட்டைப் படமும் கதையின் இந்தப் பகுதியையும் வைத்துப் பார்க்கும்போது அந்த ராட்சத சுறா தான் எல்லாருக்கும் காலனோ என்று ஆரம்பத்தில் யோசிக்க வைக்குது.*

    ஆனால்... தடம் மாறி காட்சியும் மாறுது.

    அந்தக் குழு தொடர்ந்து பயணித்து அணு சோதனைக்கு முன்னர் பயன் படுத்திய ஒரு ஆளரவமற்ற ஒரு தீவுக்கு வந்து அங்கு தங்கி அங்கிருக்கும் பகுதிகளைச் சுற்றிப் பார்க்கவும், ஆழ்கடல் நீச்சலிலும் பொழுதைக் கழிக்கின்றனர்.

    அங்கு சுற்றிப் பார்க்கும் போது ஒரு கல்லறையில் சமீபமாக வைக்கப் பட்ட ஒரு பூங்கொத்தை பார்த்தும் கூட தாங்கள் அங்கு தனித்து இல்லை காலனும் அங்கு தான் இருக்கிறான் என்பதை அறியாமலே கடந்து செல்கின்றனர்.

    தனிமையில் இருக்கும் போது விசித்திரமான ராட்சத உருவம் ஒன்றால் ஒரு பெண் மாயமாக அவளைத் தேடும் பணியில் குழுவில் உள்ள மற்றவர்கள் ஈடுபடுகின்றனர்.

    ஆனால் இவர்களை நோக்கி காலன் அடி எடுத்து வைக்க ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரும் அந்த விசித்திரமான உருவத்தால் கொல்லப் படுகின்றனர்.

    அந்த விசித்திரமான உருவம் யார் அது எப்படி அங்கே வந்தது, அது ஏன் அவர்களை கொல்கிறது என்பது திகிலுடன் முடிச்சவிழ்க்கப் படும் போது ஒரு ஆச்சரியமும் வலியும் மனதில் ஏற்படுகிறது.

    *ஆரம்பத்தில் சொன்னது போல் அறிவியல் நுட்பம் மனித வளர்ச்சிக்கு வரமாகவே இருப்பதில்லை.*
    *சில கண்டுபிடிப்புகள் ஒட்டுமொத்த பூமியில் இருக்கும் உயிரினத்துக்கே சாபமாகவும் மாறி விடுவது தான் விதி போலும்*

    இறுதியில் அந்தத் தீவில் உள்ள அனைவரும் காலனின் பிடியில் சிக்கினரா இல்லை அதிர்ஷ்ட தேவதை அவர்களுக்கு துணை இருந்தாதா என்பது சஸ்பென்ஸ்.

    கற்பனைக் கதைகள் வெறும் பொழுதுபோக்குக்கு மட்டுமல்ல அவை அவ்வப் போது நமக்கு சில படிப்பினையையும் கொண்டு வரும்மென்பது இக்கதையின் மூலம் ஆணித்தரமாக உணர முடிகிறது.

    கதையின் ஓவியங்கள் மிக அருமை, அந்த ஆழ்கடல் கப்பல் & நீச்சல் அனுபவம் & அந்த ஆளரவமற்ற தீவும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் ரசிக்க வைக்கின்றன.

    ஓவியத்தோடு ரசித்துப் படித்தால் புத்தகம் படித்து முடிக்க 1:30 மணி நேரம் எடுத்தது எனக்கு.

    ReplyDelete
  62. ஒட்டு போட்டாச்சு. முடிஞ்சா செ. பு. வி லயே அடுத்த பார்ட்டும் கொண்டாந்துடுங்க.

    ReplyDelete
  63. தளபதி ஸ்பெஷல் இல் உட்பக்க ஓவியங்கள் யாருடையது? Durango ஓவியர் yves swolfs தானா?

    ReplyDelete
  64. ஆசிரியர் சார் @@

    நண்பரின் முகநூல் பதிவு....



    ////காலனின் கால்தடத்தில்....

    நமக்கு இப்போ 40+ஆகிவிட்டது....நமக்கு 18+ இருக்கும் போதும்....கார்டூன் கதைகளை படித்தோம். இப்போதும் படிக்கிறோம்....புத்தகத்தின் தரம் அபாரமக உள்ளது....கையில் வைத்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது....ஆனால் அட்டைப்படத்தை பார்த்தால் இனிமேல் வீட்டில் எந்த புக்கையும் கையில் வைக்க முடியாத நிலையில் உள்ளது..... ஏன் இப்படியோரு அட்டைப்படம்....ஜட்டியுடன் மேல்கட்சை இல்லாமல்...? யாராவது குழந்தைகள் வந்தால் எடுத்து பார்க்கட்டும் படிக்கட்டும் என்று எப்போதும் காமிக்ஸ் புத்தகங்கள் டீபாயிலேயே இருக்கும்....இந்த புத்தகத்தை வைக்க முடியாதே...உடனே இது 18+ தானே என கூறாதீர்கள்...எதுக்கு என்று தான் கேள்வி...? காமிக்ஸ் குழந்தைகளிடம் தான் துவங்கவேண்டும்....அதில் இப்படியோரு கதைகள் வேண்டாம். Negative Review.////

    நண்பருக்கு 12, 13வயதில் பெண் குழந்தை உள்ளது...

    இம்மாத புத்தக அட்டைபடமோ கன்டென்டோ இவரை போல உள்ள பல 40+ தகப்பனார்களும் எத்தகைய சிக்கலை ஏற்படுத்தியிருக்கும்னு பார்த்தாலே போதும்..
    நாம பலரும் குடும்பத்துக்காகவும் புத்தகங்கள் வாங்குறோம்.

    நம்மிள் பலர் வீட்டுக்கு வருமுன்னே புத்தக பார்சல்கள் நம் குழந்தைகளால், குடும்பத்தாரால் பிரித்து பார்க்கப்படுகின்றன..அங்கெல்லாம் இந்த கா.கா. த. போன்ற இதழ்கள் சிக்கல்களை கொணரும்..

    பொது சந்தாவில் இதுபோன்ற இதழ்களை தவிர்த்து விடுங்கள் தயவுசெய்து...🙏

    வேணுங்கிறவங்களுக்கு தனித்த முன்பதிவுல போடுங்க..

    குழந்தைகள் & அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கத்தான் இத்தனை பாடுபடுகிறோம் பலரும்...

    மரியாதைக்குரிய ராஜேஷ்குமார் சாரும் தன் புத்தகங்களை யாரும் ஒளித்து வைத்து படிப்பதை தான் விரும்பவில்லைனு ரொம்ப காலத்துக்கு முன்பே குறிப்பிட்டுள்ளார்கள்....

    நம்முடைய காமிக்ஸ்க்கும் அப்படி ஒரு நிலை வர வேணாமே!!!

    அனைத்தும் கருத்தில் கொண்டு தேவையான முடிவுகள் செயல்படுத்துங்கள் சார்🙏🙏🙏


    ReplyDelete
  65. சக நண்பர்களுக்கு இது ஒரு அன்பான வேண்டுகோள் மட்டுமே....🙏🙏🙏🙏

    40+ ஆகிட்டது இன்னும் எதற்கு தயக்கம்னு நினைக்கும் நண்பர்களுக்கு அதே 40+ வயதில் உள்ள நம் சக நண்பர்களை நினைத்து பாருங்க.. அனைவரும் இப்போது பொறுப்பான குடும்பத் தலைவர்கள்...

    18+ கன்டென்ட் படிக்கவும் பார்க்கவும் காமிக்ஸ் தாண்டி ஆயிரம் வழிகள் உள்ளன.

    நம் சிறுவயதை உன்னதமாக்கிய காமிக்ஸிலாவது அதை தவிர்ப்போமே!!!

    நாம் சிறுவயதில் அனுபவித்ததை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் கடமையும் பொறுப்பும் நமக்கு உள்ளது..

    அதற்கு இந்த 18+கதைகள் துளியும் உதவாது என்பது நம் அனைவருக்கும் தெரியும்!!..சோ....

    குறிப்பு:- ஒரு காலத்தில் "பிட்டு" படம் போயிட்டு வரும் வழியில் பழைய புத்தக கடையில் காமிக்ஸ் வாங்கி வந்தவன் தான் அடியேனும்.

    சோ, இங்கே நடிப்பதற்கு ஒன்றும் அவசியமில்லை!!!

    ReplyDelete
    Replies
    1. நிதர்சனமான உண்மை.

      நாம் சிறுவர்களுக்கும் பெண் தோழிகளுக்கும் 18+ கதைக் கொண்ட காமிக்ஸ் தரமான கதைக்களமாக இருந்தாலும் பரிந்துரை செய்ய முடியாது.

      அதே போல வீட்டிலும் மறைத்து வைத்து படிக்க வேண்டிய சூழல் ஏற்படுது.

      Delete
  66. *காலனின் கால் தடத்தில்*

    Typical slasher story முதலில் Build up அப்புறம் Escalation அதன் பின்னர் Climax.
    Build up: அனு ஆயுதத்தால் பாதிக்கப்பட்ட தீவிற்கு சுற்றுலா செல்லும் ஒரு குழு. எப்போதும் தடை செய்யப்பட்ட பகுதி அல்லது No trespassing இடங்களுக்கு சென்று மாட்டிக் கொள்வார்கள், இங்க அப்படி இல்லை. பலர் செல்லும் இடத்துக்கே செல்கிறார்கள், பொருப்பு துறப்பு (waiver form)ல் கையெழுத்து போட்டு, பலமுறை நான் போட்டுள்ளேன். கதை மாந்தர்கள் எப்படிப்பட்டவர்கள், ஏன் இங்கே இருக்கிறார்கள் என்று smoothaஆக நடக்க டூரிசம் போது சந்தித்துக் கொள்ளும் சூழல் உதவுகிறது. வரும் அபாயத்துக்கான டீசர் ஆங்காங்கே வந்து போகிறது. பாதி கதை Build upலியே செல்கிறது.

    Escalation: பாதி கதையில் பலி ஆரம்பிக்க, பரபரப்பு ஆரம்பிக்க, விறுவிறுப்பாக செல்கிறது. அவர்கள் தப்பிக்கும் வழி ஒன்றன் பின் ஒன்றாக தடைபட, தப்பிப்பார்களா? எப்படி? எத்தனை பேர்?என்று த்ரில் ஒட்டிகோள்ள கதை சூடு பிடிக்கவேண்டும், அது சிறப்பாக நடக்கிறது.

    Climax: உயிர் பிழைத்த இருப்பவர்கள் தப்பிப்பார்களா, சாவை எதிர்த்து போராட வேண்டும், பிழைத்து விடுவார்கள் என்ற நம்பிக்கை ரோம்ப குறைவாக இருக்க வேண்டும், ஒரு "அட" அல்லது "அப்பாடி" என்று நினைக்க வைக்க வேண்டும். ஆல் டிக் ✅✅✅...

    Guide'ஆக வரும் கேரக்டர் எனக்கு பிடிச்சது, ரோம்ப practical.

    Art work super, பல இடங்களில் ரசிக்க வைத்தது. அந்த சுறா நிழல் வரும் frame திகில்.

    பி.கு: Scuba diving த்ரில், அது தரும் பயம் உணர்ந்துள்ளேன். அதனால் கூட இந்த கதையில் ஒட்ட முடிந்தது

    ReplyDelete