Powered By Blogger

Sunday, July 16, 2023

ஒரு மாலை இளவெயில் நேரம்....!

 நண்பர்களே,

வணக்கம். வேளை கேட்ட வேளைகளில் வேதாளமாய் தூக்கம் லாத்துது ; உறங்க வேண்டிய நேரங்களிலோ கொட்டாங் கொட்டாங்கென  முழித்துக் கிடக்கத் தான் முடியுது ! பல்லை தேய்ச்சோமான்னும் ஞாபகமிருக்க மாட்டேங்குது ; இப்போ எந்த வேளைக்கான மாத்திரையை விழுங்கி வைக்கணும்னும் புரிய மாட்டேங்குது ! பசிக்கிறதோ, இல்லியோ - சிக்கென்ற யூனிபார்ம் போட்ட அம்மணிகள் சோத்தைக் கண்ணில் காட்டின போதெல்லாமே விழுங்கி வைத்ததன் பலனோ - என்னவோ, ஊடு திரும்பின பிற்பாடும் கண்ட கண்ட நேரத்துக்கு வயிறு கரையுது ! அடங்கப்பா....நம்ம தட்டை மூக்கார் அதகளம் பண்ணின ஊராச்சே ; வேலைக்கோசரம் நாமளும் அந்த அட்லாண்டாவுக்கு ஒரு எட்டு போனாக்கா ஏதாச்சும் பின்னிடலாமோ என்று போனால், அட்லாண்டாவில் அடை தான் சுட முடியுது நம்மாலே ! Phewwww !! ஒரு மெகா அச்சு இயந்திரத்தினைப் பார்வையிட அமெரிக்கப் பயணமானது போன வாரத்தில் அவசியமாகிப் போக, ஞாயிறன்று மூட்டை,முடிச்சுகளோடு புறப்பட்டுப் போனவன் இந்த சனி வரைக்கும் அக்கட தேசத்தில் கொட்டிங் the குப்பை ! "ஆங்....அங்கே போயும் காமிக்ஸ் வேலைகளைப் பாப்பேனே ;  அப்டியே கரெக்ஷன் போடறதை சுடச் சுட வாட்சப்பில் படம் புடிச்சு, புடிச்சு அனுப்புவேனாம் - நீங்க இக்கட முடிச்சு முடிச்சு வைப்பீங்களாம் !" என்று பலமான பீலா சகிதம் "மீண்டு(ம்) வந்த மாயன்" 3 அத்தியாய பிரிண்டவுட்களை பைக்குள் திணித்து ஒரு முக்கால் கிலோ வெயிட் ஏற்றிய கையோடு பயணம் புறப்பட்ட கூத்தும் அரங்கேறியிருந்தது ! அங்கேயோ ஆணி கூட பெருசாய்ப் பிடுங்க முடிந்திருக்கலை  ; தக்கி முக்கி முதல் அத்தியாயத்தில் ஒரு 45 பக்கங்களை மட்டுமே ஒப்பேற்ற முடிந்திருந்தது ! 

So ஊர் ஊராய், தெருத் தெருவாய் பணி செய்த ஞாபகங்கள் சார்ந்த எனது flashback பேழைக்குள் இவை லேட்டஸ்ட் நுழைவாகிப் போனது மாத்திரமே மிச்சம் ! "இந்த புக்கை எட்டாப்பு படிக்கிறச்சே, எட்டு பஜ்ஜிகளை உள்ளே தள்ளிக்கினே வாசிச்சிருக்கேன்" என்ற ரீதியில் பால்யத்து நினைவுகள் நமக்கிருக்கும் அல்லவா ? அதே ரீதியில், இந்த 'அங்கிள் to தாத்தா ஆன நாட்களிலும்' சற்றே மாறுபட்ட நினைவலைகளுக்குப் பஞ்சமே இருப்பதில்லை ! "ஆங்...இது கானாடுகாத்தானில குளத்தங்கரையிலே குந்தி எழுதின லக்கி லூக் கதையாச்சே ?! ; ஐ....இது சிகாகோ ஏர்போர்ட்டில் மொக்கை போட்ட பதிவாச்சே ? ; ஆத்தீ....மூ.சந்தில விட்டு மொத்தியெடுத்த "என் பெயர் டைகர்" பதிவிற்கான பின்னூட்டங்களுக்கு பதில் போட்டபடிக்கே பயணம் பண்ணின ஷார்லெட் ஊராச்சே ? ஹைய்யோ...கண்ணில தண்ணி வராத குறையா "மின்னும் மரணம்" புக்குக்கு கரெக்ஷன் பாத்தது இதோ, இந்த தாம்பரம் பிளாட்பாரத்தில் தானே ?" என்று ஊருக்கு, வீதிக்கொரு நினைவு இருப்பதுண்டு ! அதன் லேட்டஸ்ட் அத்தியாயம் தான் இந்த அட்லாண்டா ஆர்வக்கோளாறு ! மிச்சம் சொச்சம் முடியெல்லாம் கொட்டிப் போன ஒரு not so distant future-ல், வீட்டில் குந்தியபடியே வேர்க்கடலையை கொறித்தபடிக்கே Netflix-ல் அழிச்சாட்டியம் பண்ணக்கூடிய ஓய்வினில் இந்த ஞாபகங்களை ஆசை போடுவேனோ - என்னமோ ?!

ரைட்டு....சனி அதிகாலையில் சென்னை திரும்பியவன், சூட்டோடு சூடாக மதுரை விமானத்தைப் பிடித்திருக்க வேண்டியவன் ! ஆனால், "விலா" ஒன்று சார்ந்த அழைப்பிதழ் 2 வாரங்களுக்கு முன்பாகவே மின்னஞ்சலில் வந்திருக்க, "ஆத்தீ....நம்மளையும் ஒரு மனுசனா மதிச்சு அனுப்பியிருக்காக ; போகாம இருக்கப்படாது !!" என்று தீர்மானித்திருந்தேன் ! Becos வந்திருந்த அழைப்பிதழ் - பிரெஞ்சு தூதரகத்திலிருந்து ! ஒவ்வொரு ஜூலை 14-ம், பிரான்சுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்பான நாள் - becos பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட பஸ்ட்டில் சிறைச்சாலை முற்றுகை நிகழ்ந்தது அந்த தினத்தினில் தான் ! மன்னராட்சி முறைக்கு சங்கு ஊதி, மக்களாட்சி மலர்ந்திட முதல் வித்து விதைக்கப்பட்டது 1789-ல் இந்த நாளில் தான் என்பதால், பிரான்சுக்கு தேசிய நாளாய் ; ரொம்பவே ஸ்பெஷலான தினமாய் கருதப்படுகிறது ! And இந்தாண்டினில் பாரிசில் அரங்கேறிடும் கோலாகலங்களில் நமது பாரத பிரதமர் அவர்கள் தான் பிரதம விருந்தாளி என்பதை செய்திகள் நமக்குச் சொல்லியிருக்கும் தானே ?! பிரெஞ்சு-இந்திய நல்லுறவினைக் கொண்டாடும் விதமாய் இந்த Bastille Day-ஐ ஜூலை 14 தேதியன்று பாண்டிச்சேரியில் அரசு விழாவாக அவர்களின் தூதரக அலுவலகத்தில் கொண்டாடியுள்ளனர் ! அதன் நீட்சியாய், ஜூலை 15-ம் தேதி மாலையில் சென்னையிலொரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில், தூதரகத்தின் பிரத்தியேக விருந்தினர்களுடன் ஒரு கொண்டாட்டம் திட்டமிடப்பட்டிருக்க, நம்மையும் அதற்கு invite செய்திருந்தனர் ! தூதரகத்திலிருந்தும், பாண்டிச்சேரி செக்ரடெரியட்டிலிருந்தும் அழைப்புகள் வந்திருக்க, சர்வ நிச்சயமாய் attendance போட்டே தீருவதென்று தீர்மானித்திருந்தேன் ! So சென்னையிலேயே தங்கி விட்டு, நுங்கம்பாக்கம் Taj Coramandel ஹோட்டலில் மாலை ஆறரைவாக்கில் நடைபெறவிருந்த விழாவுக்கு செல்வதென திட்டம் ! (நேற்றைக்கு பதிவுக்கு அல்வா கிண்ட நேர்ந்ததும் இதன் பொருட்டே !!)  

செம posh ஆன ஹோட்டலின் செம posh ஆன ball ரூமில் அரங்கேறவிருந்த பார்ட்டி and நகரின் உச்ச பிரமுகர்கள் அனைவருமே வருகை தந்திடக்கூடிய விழாவுமே இது என்பது ஸ்பஷ்டமாய் புரிந்தது ! So வழக்கமான ஏதாச்சுமொரு ஜிங்குச்சா சொக்காயை மாட்டிக் கொண்டு  அங்கே ஆஜராகினால், கதைக்கு ஆகாதென்பதை யூகிக்க முடிந்தது ! என்னிடமோ பைக்குள் இருந்தவை ஜீன்சும், பொம்மை போட்ட சட்டையும் தான் ! அவசரம் அவசரமாய் ஓடினேன் ஊரின் மையத்திலிருந்த ஷாப்பிங் மாலின் மெகா ஸ்டோருக்கு ! கோவை சரளா சொல்வது போல "நல்லா...காஸ்டலியா....ஒரு ரண்டாயிரத்துக்குள்ளாற கோட் ஒண்ணை தேடித் புடிக்கணுமே " என்று எனக்குள் மைண்ட்வாய்ஸ் ! அடடே...போன ரெண்டாவது நிமிஷமே ரூ.2499-க்கு ஒரு செம ஸ்டைலான கோட் கண்ணில்பட்டது ! "ஏ..சூப்பரப்பு !" என்றபடிக்கே அதை போட்டுப் பார்க்க முனையும் முன்பாக, அருகாமையில் தொங்கிக்கொண்டிருந்த இன்னொரு கோட்டிலும் விலையைப் பார்த்தேன் - ரூ.7499 என்றிருந்தது ! ஷாக்காகிப் போய் "இது ரண்டுக்கும் மத்தியிலே ஏண்டாப்பா இம்புட்டு விலை வித்தியாசம் ?" என்று அருகிலிருந்த சேல்ஸ் தம்பியிடம் கேட்டேன் ! ஒத்தை ரூவாய்க்கு ஒரு முழு தேங்காய் வாங்க கடைக்கு வந்த கவுண்டமணியைப் பார்ப்பது போலான லுக் ஒன்றை எனக்குப் பரிசளித்து விட்டு, "ரூ.2499-ங்கிறது கோட்டுக்குள்ளாற மாட்டியிருக்கிற சட்டையின் விலை சார் ! கோட்டுக்கான விலை ரூ.7499 தான் !" என்றான் ! ஏற்கனவே ஜக ஜோதியாய் மினுமினுத்துக் கொண்டிருந்த கடையினில் நான் வாங்கிய பல்பும் சேர்ந்து எரிந்திட, கண்ணெல்லாம் கூசாத குறை தான் and விலையைப் பார்த்து கண்ணெல்லாம் வேர்க்காத குறை தான் ! 

"ச்சீ...ச்சீ...இந்த கலரே நல்லா இல்லேப்பா ; fitting கூட அம்புட்டு தெளிவில்லை" என்றபடிக்கே குதிங்கால் பிடரியிலடிக்க ஜகா வாங்கினேன் ! தேடினேன்...தேடினேன்....மாலின் மூலை முடுக்கெல்லாம் தேடினேன்.....ஊஹூம் ...பருப்பு வேக வழியில்லை !  அமேசானை தட்டிப் பார்த்தால், ரெண்டாயிரத்து ஐநூறுக்கெல்லாம் வண்டி வண்டியாய் கோட்கள் கண்ணில்பட, இவனுங்களோ அதையே வைத்துக் கொண்டு, விலையில் பிம்பிளிக்கி பிலாக்கி காட்டிக் கொண்டிருப்பது செம  கடுப்பாய் இருந்தது !! 40% தள்ளுபடி போன பிற்பாடு நாலாயிரத்துக்கு வந்ததொரு கோட்டை வேறு வழியின்றி கண்ணில தண்ணியோடு வாங்கி விட்டு, வேக வேகமாய் ரூமுக்குத் திரும்பி ரெடியாகிவிட்டு, Taj கோரமண்டல் நோக்கி புறப்படலானேன் ! சென்னையோ மருந்துக்கும் ஈரமில்லா காற்றோடு அனலடிக்க, கோட்டை அப்போதே மாட்டிக் கொண்டால், சட்டியில் வைத்த இட்லியாகிப் போவேனென்பது புரிந்தது ! So அதை மடித்து கக்கத்துக்குள் வைத்துக் கொண்டு ஹோட்டலின் உள்ளே நுழைந்த பிற்பாடு மாட்டிக் கொண்டே பார்வையைச் சுழல விட்டால் - phewwwww .....சென்னையின் செழிப்பின் முகம் கண்முன்னே "காவாலா" குத்தாட்டம் போடுவதை காண முடிந்தது ! 

வாசலில் வந்து நின்றதெல்லாமே பென்ஸ் ; Audi ; Range Rover ரகக் கார்கள் தான் ; இறங்கியோர் அனைவருமே வைரங்களின்றியுமே டாலடிக்கும் ஜனம் தான் ; and அத்தனை பேரும் dressed to kill தான் ! நகரின் உச்ச பிரமுகர்கள் ; ஊடக ஜாம்பவான்கள் ; இசைக்கலைஞர்கள் ; socialites என்று வரிசை கட்டி பார்ட்டிக்கு வந்திருப்பதை பார்க்க முடிந்தது ! "ரைட்டு...தயங்கி நிக்கப்படாது...உள்ளே போடா கண்ணா" என்று எனக்கு நானே சொல்லிக் கொண்ட கையோடு "டார்லிங்..டார்லிங்" படத்தில் ஊட்டி ரயில்வே ஸ்டேஷனில் பாக்கியராஜ் போடும் நடை மாதிரியொன்றை போட்டபடிக்கே ஹாலுக்குள் நுழையும் இடத்திலிருந்த வரவேற்பறையில் போய் நமக்கான அழைப்பிதழினை காட்டினேன் ! மலர்ந்த முகத்தோடு வரவேற்று உள்ளே அனுப்பி வைத்தனர் தூதரக அதிகாரிகள் ! Ufff ....கோட் சூட்டின்றி அங்கே நடமாடியோர் ட்ரேயில் ஒயின் கிளாஸ்களை சுமந்தபடியே பரிமாறிக் கொண்டிருந்த சப்லையர் தம்பிகள் மாத்திரமே என்பது புரிந்தது ! நல்ல காலத்துக்கு 'பட்ஜெட் பரமசிவம்' அவதாரை இந்த ஒற்றை நாளைக்காவது தொலைத்தேனே என்ற சந்தோஷத்தில் நடுவாக்கிலிருந்த சேரில் அமர்ந்தேன் ! எனெக்கெதிரே இருந்ததொரு குட்டிப்பாப்பாவுக்கு ஆரஞ்சு ஜூஸ் ஊற்றித் தர வந்த தம்பியை ஒரே மடக்காய் மடக்கி, "நேக்கும் ஒண்ணு கொண்டு வாரியா அம்பி ?" என்றேன் ! கையிலிருந்த white wine ; red wine கோப்பைகளைச் சுட்டிக் காட்டி, இது வாணாமா ? மெய்யாலுமே வாணாமா ? என்பது போலொரு பார்வை பார்த்தான் ! "ஜுஸே மதி !" என்றபடிக்கே வந்திருந்த பிரமுகர்களில் எத்தனை பேரை அடையாளம் காண முடிகிறதென்று கணக்கிட முனைந்தேன் ! 

முகம் பரிச்சயமாக இருக்க, பெயர்கள் மண்டைக்கு வராமல் போக, ஜுசை இஷ்டைலாக குடிக்க ஆரம்பித்தேன் ! அப்போது என்னைப் போலவே பாக்கியராஜ் நடை போட்டு வந்த இன்னொரு பார்ட்டியும் கண்ணில்பட, எனக்கு முகமெல்லாம் பிரகாசமாகிப் போனது ! அவருக்கும் என்னைப் பார்த்து குஷி ! அவருமொரு பதிப்பக நண்பரே ; டில்லியில் சந்தித்திருந்தேன் !! நம்மளையும் பார்த்து ஒருத்தர் முகமெல்லாம் மலர்ந்திட்டார் என்ற போது அவரை நினைத்துப் பரிதாபமும், உள்ளுக்குள் செம குஷியுமாகிப் போனது ! பேச்சுத் துணைக்கு ஆளில்லையே என்ற பரஸ்பர ஆதங்கங்கள் தீர்ந்து போக, ஒரே மேஜையில் அமர்ந்து கொண்டு - ஜோ பைடெனும், ரிஷி சுநாயக்கும் பேச்சு வார்த்தை நடத்துவது போல் கெத்து காட்ட ஆரம்பித்தோம் ! சற்றைக்கெல்லாம் அந்த ball room உள்நாட்டு, வெளிநாட்டு முகங்களோடு நிரம்பி வழிந்தது ! அத்தனை பேர் முகங்களிலும் உற்சாகம் ! அதுவே எங்களையும் தொற்றிக் கொள்ள, பரஸ்பர சொந்தக் கதை ; நொந்த கதை என்று ஏதேதோ பேசிப் பொழுதைக் கடத்திக் கொண்டோம் !

சற்றைக்கெல்லாம் விழா துவக்கம் கண்டிட, பிரெஞ்சு Consul General அவர்கள் பேச ஆரம்பித்தார் ! இந்தியாவுடனான கலாச்சார உறவுகள் பற்றி, தொழில் முன்னேற்றங்கள் பற்றி ; நம் நாட்டுப் பிள்ளைகள் அங்கே கல்வி கற்கச் செல்வதில் முன்னேற்றம் பற்றி, அடுத்தாண்டு பாரிசில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் பற்றி ; அதனில் பங்கேற்க இங்கிருந்து தேர்வாகியுள்ள தன்னார்வ இளைஞர் / யுவதிகள் பற்றி - என்று பிரமாதமாய் உரையாற்றினார் ! அதன் பின்பாய் 2 இசைக் கலைஞர்களுக்கு 'செவாலியே' விருது வழங்கிடும் விழாவும், அவர்களின் ஏற்புரைகள் + இசை நிகழ்ச்சிகள் என தொடர்ந்தது ! ஒலிம்பிக்சில் தன்னார்வலர்களாய் செயல்படவிருக்கும் குழுவிலிருந்ததொரு வட சென்னைப் பையன், துளியும் நடுக்கமின்றி மேடையேறி மைக் பிடித்து பேசியது என்னளவில் அந்த மாலையின் highlight ! விழா தொடர்ந்து கொண்டே செல்ல, எனக்கோ இரவு ரயிலைப் பிடித்திடும் நேரமாகிப் போனதே என்ற நெருடல் ! So அருகிலிருந்த நண்பரிடம் விடைபெற்று விட்டு, தூதரக அதிகாரியிடமும் சொல்லி விட்டு ஒன்பது மணிவாக்கில் கம்பி நீட்டினேன் ! வாயிலுக்கு வந்த நொடியே கோட்டை மறுக்கா கக்கத்தில் செருகிக் கொண்டே ரூமுக்குப் புறப்பட்ட போது சென்னையே ஜொலிப்பது போல் ஒரு பிரமை ! எக்மோரில் ஆட்டோக்காரரிடம் செம லோக்கலாய் ஒரு கரைவேட்டிக்காரர் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தது கூட அனிருத்தின் இசையாட்டமே தென்பட்டது ! கொஞ்சம் உறக்கம், கொஞ்சம் போன் நோண்டல் என ரயிலில் கழிந்த இரவுக்குப் பிற்பாடு வீடு வந்து சேர்ந்தால் - ஈரோட்டின் 3 மெகா இதழ்களும் அச்சாகி அழகாய் காத்திருந்தன ! சுஸ்கி-விஸ்கி புக்கே முடிந்து வந்து விட்டது ; THE BIG BOYS ஸ்பெஷல் பிரின்டிங் முடிந்து பைண்டிங்கில் ! And "கார்சனின் கடந்த காலம்" - oh boy...oh boy...oh boy !! 

இந்த மெகா இதழ் சூப்பராக வருமென்ற எதிர்பார்ப்பு இருந்தது தான் ; but நிஜத்தில் முழுசையும் புரட்டிப் பார்க்கும் போது ஏழு கழுதை வயசான எனக்கே மிரட்சி தான் மேலோங்கியது ! Simply வேற லெவல் folks !! ஹார்ட்கவரில் இதுவொரு மைல்கல் இதழாய் காலத்துக்கும் நிற்கப் போவது சர்வ நிச்சயம் !! And உங்களது போட்டோக்களை அனுப்பிட நாளை ஒற்றை நாள் மாத்திரமே உள்ளது மக்கா ; அதன் பின்பான போட்டோக்களை பைண்டிங்கில் இணைத்திட வழி இராது ! So absolutely the last chance !! போணி பண்ணிட சொல்லும் வார்த்தைகளே அல்ல இவை guys - இது மறக்க இயலாவொரு collector's edition என்பதை தைரியமாய் நம்பிடலாம் ! குறைவான பிரிண்ட்ரன் மட்டுமே ; so ரொம்ப காலத்துக்கு இது கையிருப்பில் கிடக்காதென்றுமே நம்பிடலாம் !

இதோ - கையில் சிக்கிய சில previews ; images !! Enjoy !!





And before I sign out : கோவை புத்தக விழாவினில் நமது ஸ்டால் நம்பர் 1 !!! அந்த ஏரியா நண்பர்கள் - குடும்பத்தோடு வருகை தாருங்களேன் ப்ளீஸ் ! 

மீண்டும் சந்திப்போம் ; have a great week ahead ! See you around !

125 comments:

  1. இரண்டாப்பு பாஸ்

    ReplyDelete
  2. வணக்கம் நண்பர்களே 🙏😁☕

    ReplyDelete
  3. Me வந்துவிட்டேன்..😍

    ReplyDelete
  4. கறி சோறு சாப்ட களைப்புல மக்கள் எல்லாம் சொப்பன லோகத்துல இருக்காக போல 😂🤣😊

    ReplyDelete
  5. வண்ணத்தில் ஸ்பைடர் பார்க்கவே அருமையாக உள்ளது காட்டி இருக்கிறோம் ஈரோடு திருவிழாக்காக

    ReplyDelete
  6. மாலை வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  7. அன்பு எடிட்டர் அவர்களுக்கு வணக்கம். கார்சனின் கடந்த காலம் இதழில் இடம் பெற வேண்டிய புகைப்படத்தை தங்கள் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பியுள்ளேன் சார். என்னுடைய ஈரோடு சம்பவம் முன்பதிவு எண் 96 சார். ஜூனின் 6 கதைகளும் செம தெறி ரகம் சார்.ஒவ்வொன்றும் ஒரு சுவை சார். தொடர்ந்து இதே போல் தாருங்கள் சார். நன்றி.

    அன்புடன் -

    பி.சரவணன் ,
    சின்னமனூர்.

    ReplyDelete
    Replies
    1. என் வாட்சப்புக்கா ?? எனக்கு எதுவுமே வரலியே சார் ? அனுப்புவதாக இருந்தால் ஆபிசுக்கு அனுப்புங்கள் !

      Delete
    2. 98423 19755 என்ற எண்ணுக்கு அனுப்பியுள்ளேன் சார்.

      Delete
  8. மாலை வணக்கம் உறவுகளே

    ReplyDelete
  9. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  10. கைதியாய் கார்சன் :
    துவக்கமே செம,
    கோடையின் அந்திமத்தில் ஒரு இளம் காலைப் பொழுதின் நிசப்தத்தைக் குலைத்தன தோட்டாச் சத்தங்கள்...

    வசனங்கள் நச்,

    "எங்களுடைய வருகை யாருக்கோ சுத்தமாகப் பிடிக்கவில்லை ! அதனால்,நரகத்தில் களி கிண்டும் வேலைக்கு அவர்களை அனுப்பி விட்டோம் !"

    கார்சனைக் கைதியா வெச்சி சுருக்கமா நறுக்னு 32 பக்க கதை வேணுமா ரெடி,கார்சனைக் கைதியா வெச்சி 220 பக்கத்துக்கு போரடிக்காம விறுவிறுப்பா கதை வேணுமா,தோ அதுவும் ரெடி...
    கைதியாய் கார்சன் அந்த இரகம்,கார்சனை காப்பாத்த நம்ம தல இங்கே பல சோதனைகளை எதிர்கொள்கிறார்,ஆங்காங்கே கொஞ்சம் மாட்டி பல்பும் வாங்கறார்...
    ஒரு கமர்சியல் கதையில் எங்கேங்கே சம்பவங்களை வெச்சி சுவராஸ்யபடுத்த முடியுமோ அந்தளவுக்கு சிறப்பா தொகுத்து கதையை நகர்த்தி இருக்கிறார்கள்...

    நாய்க் குட்டி பஹ்க்கி,பெருசு ஜேஸனின் நட்பு டெக்சுக்கு வாய்ப்பது நல்லா இருந்துச்சி,
    பள்ளதாக்கை நோக்கி ஜாக்கியை டெக்ஸ் அழைத்து வரும்போது,அமைக்கும் வியூகத்தை நம்மால் கணிக்க முடிந்தாலும் நல்லாவே இருந்திச்சி,
    அதே போல இறுதியில் ஹார்டர் தப்பிச் செல்ல டெக்ஸ் துரத்த அங்கே நடக்கும் ஜித்து வேலை செம,ஹார்டரின் முகம் போகும் போக்கு ஹா,ஹா செம,செம...

    டெக்ஸ்- "நீ பாலபாடம் படிக்கும் தந்திரப் பள்ளிக்கூடத்தில் நான் வாத்தியார்டா !"
    -கதை நெடுக பலரின் வியூகங்களும்,வகுக்கப்படும் உத்திகளும் கதை நகர்வுக்கு மிக உதவி உள்ளது...
    கமர்சியல் கதையை சிறப்பானதொரு களமஃய் மாற்றுவது இதுபோன்ற சிறப்பான உத்திகளே...

    ரொம்பவுமே ஜாலியான,பிடிச்ச கதை வாசிப்பா போச்சி கைதியாய் கார்சன்...


    சிறு குறைகளாய் தென்பட்டது,
    வசனங்கள் சில இடங்களில் முழுமை அடையாமல் துண்டாய் முடிக்கப்பட்டது போல் இருந்தது...

    ஓவியங்கள் மட்டும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருந்தால் இன்னமுமே நல்லா இருந்திருக்கும்னு தோணிச்சி...

    எமது மதிப்பெண்கள்-8.5/10.

    ReplyDelete
  11. நதி போல ஓடிக் கொண்டிரு,
    வன்மேற்கின் அத்தியாயம்-2,

    ஜானின் ஜீவ மரணப் போராட்டமும்,ஓட்டமும் மெல் கிப்ஸனின் அபோகலிப்டோவின் காட்சியமைப்பை நினைவூட்டியது,சிறப்பான காட்சியமைப்பு...

    ப்ரெட்டின் மனம் ஓவியங்கள் தீட்டுவதில் ஆர்வமாகவும்,அமைதியான வாழ்க்கை முறையை விரும்பினாலும் நடக்கும் நிகழ்வுகள் வாழ்க்கையை போரட்டக் களமாகவே வைத்திருக்கிறது...
    எங்கே பயணித்தாலும்,எங்கே ஓடினாலும் மோதல்களும் சச்சரவுகளும் ஓய்வதே இல்லை.....
    தேவைகள் காரணமா ?
    ஆசைகள் காரணமா ?
    கேள்விகளுக்கும் முடிவில்லை,மோதல்களுக்கும் முடிவில்லை...

    நதிபோல ஓடிக் கொண்டிரு இயற்கையின் செழுமை,மோதல்களின் உக்கிரம் இரண்டும் கலந்த கலவையாய் பயணிக்கிறது...

    பள்ளத்தாக்குப் படலம்,
    நதிபோல ஓடிக் கொண்டிரு பகுதியில் சொன்னது போல,ப்ரெட்டின் மனம் அமைதியான வாழ்க்கையை விரும்பி தேர்ந்தெடுத்து ஒதுங்கினாலும்,வம்பு தானாய் தேடி வந்தால் என்னதான் செய்ய முடியும்,
    தன்னை நிலைநிறுத்திக் கொள்ள,ஏதாவது ஒன்றை செய்யத்தான் என்ற கட்டாயம் ஏற்படுவது இயல்புதானே...

    அப்புறம் என்ன இங்கேயும் போட்டிதான்,ப்ரெட்டுக்கும்,
    ரோபெஸ்பரி ஆட்களுக்கும் இடையே மோதலை தடுக்க,திறமையை வெளிக்காட்ட படகில் சென்று பதுக்கி வைத்திருக்கும் தோல்களை கண்டுபிடிக்கும் போட்டி,

    ஒரு வாசிப்பாளனாக மனம் ப்ரெட் வெல்வதையே விரும்புகிறது, அடுத்த நடக்கும் நிகழ்வுகள் சுவராஸ்யம்...
    தோல்வியிலும் வெற்றி, நேர்மைக்கு கிடைக்கும் வெற்றி,நமக்கும் மகிழ்ச்சி...

    ப்ரெட்டிற்கும் டெஹூம்ஸேவிற்கும் இடையிலான விவாதம் அர்த்தப்பூர்வமானது,ஆழமானது...

    உருண்டோடும் கால இடைவெளியில் வெள்ளையர்களுக்கும்,செவ்விந்தியர்களுக்குமான தவிர்க்க முடியாத மோதலில் நடப்பது என்ன ?
    டெஹூம்ஸேவின் முடிவு என்ன ?
    ப்ரெட்டின் நிலைப்பாடும்,முடிவும் என்ன என்பது கதையின் போக்கில் உணர்வூப்பூர்வமாக சொல்லப்பட்டுள்ளது,மனித இனத்தின் முடிவுதான் ஏது ?
    வலியவன்,எளியவன் போட்டிக்கு முடிவுதான் ஏது ?

    வரலாறு எப்போதும் போல நமக்கு நிறைய செய்திகளை விட்டுச் செல்கிறது,அதில் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள் நிறைய உள்ளன...

    பள்ளத்தாக்குப் படலம் உணர்வுப்பூர்வமான களம்...
    அடுத்து வன்மேற்கின் அத்தியாயம் பாகம் நான்கில் வரலாற்றின் ஊடே பயணிக்கவும்,மிஸிஸிபி ஆற்றின் போக்கில் நீந்தவும் ஆவலாய் உள்ளேன்...

    எமது மதிப்பெண்கள்-9/10.

    ReplyDelete
  12. டால்டன்களோடு தக திமி தா...

    லக லக லக லக்கி லூக்...

    கொழுகட்டையிலே கோதுமை ஆவி...

    ஹா,ஹா, கதை நெடுகிலும் இந்த வார்த்தைகளை வெச்சே காமெடி தோரணம் கட்டி தொங்க விட்டுருக்காங்க,
    அதிலும் அந்த கிராமத்து பேங்க் கொள்ளை காட்சிகள் சிரிக்காமல் இருப்பது கடினமே...

    "ஆவ்ரெல்"லின் எங்கே சுத்தினாலும் கொழுகட்டையிலே கோதுமை ஆவின்னு வந்து நிக்குற பாணி நச் காமெடி...

    சிரிப்பு மேளா இந்த டால்டன்கள்,மனதிற்கு இதமான மகிழ்ச்சியானதொரு வாசிப்பு...

    எமது மதிப்பெண்கள்-10/10...

    ReplyDelete
  13. கானம் பாடும் கம்பிகள்,
    இனிய எதிரிகளான டால்டன்ஸ் இல்லாததாலோ என்னவோ கொஞ்சம் சுரத்து கம்மியாதான் போகுது,காமெடியில் களமாடும் வாய்ப்புக் குறைவாகவே இருந்தாலும் போனி எக்ஸ்பிரஸ் கலகலப்பாகவே நகர்கிறது...
    தகவல் தொடர்பின் வளர்ச்சியும்,தபால் வழி தொடர்புகளின் அடுத்தடுத்த பரிணாம வளர்ச்சிகளும் வரலாற்றுக் குறிப்புகளாய் ஆங்காங்கே கொடுக்கபட்டிருப்பது சிறப்பு...
    போனி எக்ஸ்பிரஸில் இருந்து தந்தி சேவைக் கம்பெனிக்கு செல்லும் லக்கியின் உதவியால் தந்தி சேவை முழுமையடைந்ததா,கம்பிகள் கானம் பாடியதா ???!!!

    எமது மதிப்பெண்கள்-8/10...

    ReplyDelete
  14. அப்பாடி ஜூலை விமர்சனம் போட்டாச்சி...

    ReplyDelete
    Replies
    1. But Ravi! Writing reviews is not a relief. It's an EMOTION!!!

      Delete
    2. உடன்படுகிறேன் செனா அனா...

      Delete
    3. Absolutely my dear செனா அனா

      Delete
  15. நம்மையும் பார்த்து ஒருத்தர் முகம் மலர்ந்துட்டார் எனும்போது அவரை நினைத்து பரிதாபமும் உள்ளுக்குள்செம குசியும்ஆகிப்போனது(அதுபோல கோட் விலையும் .)சிரித்துவிட்டேன் . .வழக்கம்போல நகைச்சுவை பொங்குது எழுத்துக்களில்.ஹாஹா

    ReplyDelete
  16. மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு!
    வணக்கம்!
    கார்சனின் கடந்தகாலம் Maxi மறுபதிப்பு இதழில் ஒரு பக்கத்தில் வாசகர்களின் நினைவலைகளை பதிவு செய்ய வாய்ப்பு குடுத்து இருந்தீர்கள்.

    நான் தாமதமாக பதிவை அனுப்பி இருந்தேன். இதழில் இடம்பெற வாய்ப்பு இருக்கிறதா ஆசிரியர் அண்ணா??

    ReplyDelete
  17. ஆஹா வேற லெவல் சார்.....ஸ்பைடர் தான் எவ்ளோ அழகு....பழமையை கோரும் ஆரஞ்சும்......பழச்சாறாய் நவாப்பழ தாளும்....என்னத்த சொல்ல....கோவை விழாவை சிறப்பிக்கலாமே இவ்விதழை மட்டும் முன்னரே அனுப்பி

    ReplyDelete
    Replies
    1. இரும்புக்கை நார்மனுக்கு அடுத்த mission வந்துருச்சு...நம்ம மாயாவி வேலைய முடித்த கையோடு மாயாமாகிட்டார், இப்ப ஸ்பைடர் தனியா வர முடியாதுல,,,,அதான் யோசனை பண்ணிட்டு இருக்கார் சகோ

      Delete
  18. கைதியாய் கார்சன்....

    ஆரம்பமே அதகள ஆக்சன்...

    பட்டாசு வேடிக்கைக்கு நடுவே,
    "அந்நியர்கள் இருவர் இன்று காலைதானே வந்தனர்"---னு டயலாக் கேட்டபோதே அது நம்ம ஜோடிதான்னு புரிஞ்சிபோச்...

    பெயருக்கு ஏற்றார்போல கார்சர் தான் கலக்குறார்..(அதென்ன ஓய் கார்சனை, கார்சர்ங்கிறீர்னு கேட்பவர்களுக்கு....ஒரு மருவாதைதான், 900ஓவாவுல மேக்ஸிலலாம் வரப்போறார்ல......)

    சலூன் குட்டிக கிட்ட ஜொள்ளு விடுவதாகட்டும், வழியில் வாய் காதுவரை பேசுவதாட்டும் கார்சர் 100/100..ஸ்கோர் செய்கிறார்

    சென்ற மாத டெக்ஸ் கதை கரையெல்லாம் குருதி & இம்மாத டெக்ஸ் கதை 2லும் அகஸ்மாத்தாக ஒரே ஏரியாவான "ஆகுவா நெஹரா"-வில் கதைகள் நடக்கின்றன....

    விறு விறுப்பான திரைக்கதையை செம லாவகமாக போனெல்லி கையாண்டுள்ளார்கள்....செமத்தியான ரைட்டிங்ஸ் ஆசிரியர்சார்.. கதை படு ஸ்பீடா போகுது....

    வழக்கமான பாணியில் தலையும் கார்சனும் போக்கிரி ஒருவனை வளைத்துப்பிடிக்க யுக்தி அமைக்க, எதிர்பாராத ட்விஸ்ட் ஆகி தலையை பெரும் இக்கட்டில் மாட்டிவிட...
    செம ட்விஸ்ட்ஸ்...கார்சருக்கும் அடிசறுக்குது....

    மடமடவென சம்பவங்கள் தல கட்டுப்பாட்டை மீறி சடுதியில் நடக்கின்றன.....நண்பனுக்காக சட்டத்தை வளைக்க களம் இறங்குறார் டெக்ஸ்...

    கார்சனை மீட்க
    மெக்ஸிக சிறையில் இருந்து கொள்ளையர்களின் தலைனை தள்ளிட்டு வரும் தலைக்கு, வழியெல்லாம் அதிர்ச்சி வைத்தியம் தான்...

    ஏகப்பட்ட ட்விஸ்ட்கள்...அத்தனையும் சொல்வதை விட கதையோட்டத்தில் ரசிப்பது இரட்டிப்பு சுவையானது....

    அதகள ஆக்ஸனுக்குப்பின் நண்பனை மீட்டாரா?
    கொள்ளையர் தலைவன் என்ன ஆனான்???
    டெக்ஸை ப்ளாக்மெயில் பண்ணும் ஹார்டரின் கதியென்ன?

    காணுங்கள் காமிக்ஸ் திரையில்....

    கதை நெடுக தல, கார்சன் நையாண்டிகள் இம்முறையும் வயிற்றை பதம் பார்க்கின்றன...🤩🤩🤩🤩

    ஆரம்பத்தில் கார்சன் பல்பு வாங்கும் சீக்குவன்ஸ் & கடைசியில் அதே பல்பை 1000வாட்ஸாக ஹார்டருக்கு திருப்பி தரும் சீக்குவன்ஸ் ரெண்டும் செம...

    ReplyDelete
  19. ஸ்டால் நம்பர் 1...சூப்பர் ஆசிரியரே
    ஐயாம் ஆஜர்

    ReplyDelete
  20. ஸ்பைடர் அட்டைப்படம் அருமை

    ReplyDelete
  21. வணக்கம் சார் சந்தா கட்டினவங்களுக்கு நாலு புக்கு இலவசம் என்று சொன்னீர்கள் சார் அது எப்ப வரும் சார்

    ReplyDelete
  22. ஸ்பைடர் அட்டைப்படமும் ,இருவண்ண சித்திரங்களும் பார்க்கும்பொழுதே மனதை கவ்வுகிறது சார்...அட்டகாசம்..

    ReplyDelete
  23. ஸ்பைடரி்ன் அட்டைப்படமும்..இருவண்ண சித்திரங்களும் செம அசத்தல் சார்..இப்பவே மனதை கொள்ளை கொள்ளுகிறது..சூப்பர் சார்..

    உங்கள் பயண அனுபவமும் அதே அதே...:-)

    ReplyDelete
  24. இம்மாத நான்கு இதழ்களும் வாசித்து முடித்தாயிற்று சார்..அனைத்து இதழ்களுமே இந்த முறையும் ஏமாற்றம் அளிக்காமல் முழு திருப்தியை அளித்தன..விமர்சனங்கள் நாளை..:-)

    ReplyDelete
  25. கொலைப்படை கலரில் ஜொலிக்குது

    ReplyDelete
  26. Vijayan sir, interesting post. I enjoyed reading it. Thank you sir.

    ReplyDelete
  27. ஹ, ஹா... Beautiful சார்.. எதார்த்தமான, நகைச்சுவையான, அழகிய பதிவு... வாழ்த்துக்கள்.. ❤️

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. *கைதியாய் கார்சன்*

    வழக்கம் போல் வில்லன் கோஷ்டிகளை தேடி டெக்ஸ் கார்ஸன் ஜோடி கிளம்பி வர இந்த முறையோ அந்த வில்லன் கார்ஸனையே மடக்கி விட்டு டெக்ஸ்க்கு என்னை பற்றி நீ கவலைப்படாதே போய் சிறையில் இருக்கும் இன்னொரு வில்லனை மீட்டி கொண்டு வா உன் உயிர் தோழனை விடுவிக்கிறேன் என உத்தரவு இட வேறு வழியின்றி டெக்ஸ் சிறையில் இருக்கும் அடுத்த வில்லனை மீட்க புறப்படுகிறார்..அந்த வில்லனை மீட்டு கார்ஸனை மீட்டாரா டெக்ஸ் என்பதை முதல்பக்கத்தில் இருந்து கடைசிபக்கம் வரை பரபரவென சூடு பறக்க ,துப்பாக்கி வெடிக்க ஒரு ஆக்‌ஷன் படத்தை பார்ப்பது போல் அட்டகாசமாய் அமைந்து உள்ளது இந்த கைதியாய் கார்ஸன்..அட்டைப்படம் செம பட்டாஸாய் அமைய இதழின் பருமனும் புத்தகத்தை பார்த்தவுடன் ஆஹா இந்த விலையில் இப்படி ஒரு இதழா என்று தான் முதலில் நினைக்க வைக்கிறது..தவற விடகூடாத மற்றொரு டெக்ஸ் இதழ்..

    ******

    லக்கி ஆண்டு மலர்..

    ஆண்டுமலரின் முதல் கதை டால்டனின் அட்டகாசங்களோடு ஆரம்பிக்கிறது...முதல் பக்கத்திலியே சிறை அறையே வீட்டு அறையாக்க நினைக்கும் டால்டனின் அட்டகாசங்கள் வாய்விட்டு சிரிக்க வைக்க கதையின் கடைசி வரை இந்த முறை அது தொடர்ந்து கொண்டே இருக்கிறது..நீண்ட நாள்களுக்கு பிறகு லக்கியின் முழு நகைச்சுவை இதழாக தைரியமாக இதனை சுட்டிக்காட்டலாம்..இரண்டாவது கதையாக பழக்கமான இரு கம்பெனிகளின் ரயில் பாதை போட்டி கதை போலவே இதுவும்..ஆனால் ரயில் பாதைக்கு பதில் தந்தி கம்பிகள்..முதல் கதையை விட நகைச்சுவை சிறிது குறைவு என்றாலும் கதை விறுவிறுப்பாகவே செல்கிறது..ஆண்டு மலருக்கான அழகான இதழாகவும் ,சிறப்பான அட்டைப்படமும் ,திடீர் சர்ப்ரைஸாக அதே விலையில் கெட்டி அட்டையிலும் முழு திருப்தியை அளித்த இதழ்..

    சிறப்பு மிக சிறப்பு

    *******

    வன்மேற்கின் அத்தியாயங்களாய் இரண்டு இதழ்கள் ..

    இரு இதழ்களும் கதையின் தொடர்ச்சியாய் அமைய அந்த செவ்விந்திய குடியிருப்பில் நாமும் நாயகனோடு அங்கேயே வாழ்ந்த உணர்வு..காடு,மலைகளும் ,நதிகளும் ,நீர்வீழ்ச்சிகளும் அப்படியே கண்முன்னே நிற்கின்றன..அழகான அதே சமயம் அதிகம் ஆர்ப்பாட்டம் இல்லா கதையோட்டங்கள்..

    இறுதி முடிவிற்கு அடுத்த இதழை நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன்..

    மொத்தத்தில் லேட்டாய் வந்தாலும் லேட்டஸ்ட்டாய் வருவேன் என்பது போல இந்த மாத இதழ்கள் அனைத்தும் அருமை அருமை அருமை..

    ReplyDelete
  30. Dear Vijayan sir,
    Thank you for providing a customized photo in this upcoming memorable book.
    I spent some time collaging photos and sent a photo through email yesterday.

    This adding photo in book task helped me involve my family members for the first time in my passion for comics.

    Thanks again!
    Regards,
    Mahesh kumar Selvaraj
    Chennai

    ReplyDelete
  31. அன்பு எடிட்டர் அவர்களுக்கு வணக்கம். கார்சனின் கடந்த காலம் இதழில் இடம் பெற வேண்டிய புகைப்படத்தை தங்கள் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பியுள்ளேன் சார். என்னுடைய ஈரோடு சம்பவம் முன்பதிவு எண் 96 சார். ஜூனின் 6 கதைகளும் செம தெறி ரகம் சார்.ஒவ்வொன்றும் ஒரு சுவை சார். தொடர்ந்து இதே போல் தாருங்கள் சார். நன்றி.

    அன்புடன் -

    பி.சரவணன் ,
    சின்னமனூர்.


    98423 19755 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பியுள்ளேன் சார்.

    ReplyDelete
    Replies
    1. பார்த்துக் கொள்வார்கள் சார் !

      Delete
  32. லக்கிலூக்/கிட்ஆர்டின் கதைகளைப் படிக்கும் அளவுக்கு சிரிக்கவைத்ததொரு ஜாலியான பதிவு இது எடிட்டர் சார்! 'டார்லிங் டார்லிங்' பாக்யராஜ் நடையோடு உங்களை ஒப்பிட்டதெல்லாம் ஹா ஹா ஹா செம! :))))

    ReplyDelete
    Replies
    1. will go and see that walk in youtube. Hilarious post yes.

      Delete
    2. ROFL scene :-) "I am Raja .. sari Luggage eduthuttu vaanga" :-D :-) :-)

      Delete
    3. நானும் ஒரு ரவுண்டு இப்பத்தான் Youtubeல பார்த்தேன்.. ஹா ஹா..அந்த நடை... அந்த அம்மாஞ்சி முகம்.. அந்தப் பேச்சு! ஹா ஹா செம!!

      Delete
    4. கல்லாப்பெட்டி சிங்காரம் பைப்பும், ஸ்டைலான அரை டிராயருமாய் அடிக்கும் லூட்டிகளையும் பாருங்கோ சார் ; பின்னி இருப்பார் மனுஷன் !

      Delete
  33. Editor sir. Ungalukku marketing consultant venumanu oruthar keyrukkar paarunga 😅

    ReplyDelete
  34. டியர் விஜய பாக்யராஜ் (VBR) சார்,

    பல வேளைகளில், பல ஊர்களில், பல மால்களில், இப்படி "படு காஸ்ட்லியாக, ரண்டாயிரத்துக்குள்ற" சூட்டு வாங்கும் படலங்கள் சரளாவாக நடந்திருந்தாலும், பயணங்களின் போது அவற்றில் எதையாவது ஒன்றை பத்தோடு பதினொன்றாக பெட்டியில் திணித்து வைத்துக் கொள்ளாமல், ஒவ்வொரு முறையும் புதிதாக இன்னொன்றை வாங்குவதில் இருந்தே, நீங்கள் ஒரு படு பயங்கர கோட்டு சூட்டுப் பிரியர், ஆனால் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் பிரகாஷ் பல்பு கம்பெனி ஓனர் ரேஞ்சில், பல்பு வாங்கிய பரிதாபக் கதைகளாக அளந்து விடுகிறீர்கள் என்ற பகீர் உண்மை பத்து வாட்ஸ் பல்பு போல பிரகாஷிக்கிறது!

    உங்கள் புண்ணியத்தில், அந்த டார்லிங் டார்லிங் பட பாக்கியராஜ் வெல்லிங்டன் ஸ்டேஷனில் லிவிங்ஸ்டனுன் பேசி நடக்கும் கோட்டுக் காட்சியைக் கண்டு களித்ததோடு, அதே படத்தில், ப்ரூஸ்லீ படங்களுக்கு ஈடான அவரது குங்ஃபூ நடன சண்டைக் காட்சியையும் கண்டு களைத்து விட்டு, அப்படியே நகர்ந்தால் "தென்னங்கிளி தான் நீ சொல்லும் மொழி தேன்" என்று பெரிய கண்ணாடியுடன் பாக்கியராஜ் சோக கீதம் இசைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும், நீங்கள் முன்னொரு நாளில் லண்டன் பயணத்தின் போது, கோட்டு மாட்டிக் கொண்டு, தேம்ஸ் நதியோரத்தில் இருந்து, வாசகர்களுக்காக பிரத்தியேகமாக இந்தியாவில் இருந்து எடுத்து அனுப்பிய அந்த பாஸ்போர்ட் புகைப்படம் நினைவுக்கு வந்து தொலைத்தது! ஆக, நீங்கள் ஒரு பாக்யராஜ் ரசிகர் என்கிற "சமாச்சாரம்" பத்தாயிரம் வாட்ஸ் பல்பு போட்டது போல பளீரென்று தெரிந்து விடுகிறது! :-)

    ReplyDelete
    Replies
    1. அது வந்துங்கன்னா , எங்க மிஷின் இன்ஸ்பெக்ஷன் படலங்களுக்கு இன்ஜினுக்கு கரி அள்ளிப் போடற மாதிரியான டிரெஸ் தான் சுகப்படும் ! க்ரீஸ் ; மசி ; கெமிக்கல்ஸ்னு நாஸ்தியாகிப் போகும் பணிக்கு கோட்டும் சூட்டும் மொத எதிரிகள் !

      தவிர லார்டு லபக்தாஸ் ரேஞ்சுக்கு நாம போய் நின்னாக்கா, விலையை ஏத்திப்புடுவாங்கன்னும் பயம் இருக்கும் ! ஆகையால் நம்ம அசல் நாட்டுப் பயணங்களுக்கெல்லாமே சீன்ஸும் , பொம்ம போட்ட சொக்காயும் தான் !

      கண்ணாலத்துக்கு அப்பாலிக்கா ஞான் வாங்குன ரெண்டாது கோட்டு இதுவே !

      Delete
    2. ஹா ஹா, இருந்தாலும் ஒங்க மேல கொஞ்சம் டவுட்டாவே இருக்கு! :-) பிரெஞ்சு நாட்டுக்காரர்கள் எல்லாம் கூப்பிட்டு வைத்து கௌரவிக்கிறார்கள். ஆனால், நம்ம சொந்த ஊரில், இப்போது திறக்கப்பட்ட மிகப்பெரிய நூலகத்தில் தம்மாத்துண்டு தமிழ் காமிக்ஸ் கூட இல்லை என்பது வேடிக்கை தான்!

      Delete
    3. அப்படி எல்லாம் எளிதாக அரசு நூலகங்களுக்குள் நமது நூல்களை நுழைத்து விட முடியாது என்று முன்பு ஒரு முறை இங்கே பேசிக் கொண்டது நினைவிருக்கிறது. பிரெஞ்சு தூதரகத்தின் கலாச்சார பிரிவு வாயிலாகச் சென்றாவது தமிழ் காமிக்ஸ்களை உள்ளே நுழைக்க முடியுமா என்று பாருங்களேன்?! அவர்கள் இத்தாலிய டெக்ஸ் வில்லரை எல்லாம் பரிந்துரைக்க மாட்டார்கள் என்றாலும், லக்கி லூக் உள்ளிட்ட ஃபிராங்கோ-பெல்ஜியன் அணியினருக்காவது நூலகத்தில் இடம் கிடைக்குமில்லையா?

      Delete
    4. 6 மாதங்களுக்கு முன்பாக ஒரு மாவட்ட நூலகத்துக்கென அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஆர்டர் ! ரைட்டு ... போணி பண்ணிப்புடலாமென்று உடனே பேக் பண்ணி ஒப்படைத்தாச்சு ! And இன்னிக்கி வரைக்கும் "ரிங்கா ரிங்கா ரோசஸ்" ஆடிக்கினிருக்கிறோம் ; பைசா கண்ணில் பார்க்க வழி லேது !

      Phew!!

      Delete
    5. அட கொப்புரானே...
      ஒருவேளை ஆர்டர் கொடுத்தது ஆவியே...

      Delete
  35. சென்ற மாதம் இந்த மாத புத்தகம் அதற்குள் out of stock ஆ?

    ReplyDelete
    Replies
    1. நம்ம ஸ்டீல் கிளா கிட்டே ஸ்பெசலா ஏதாவது டியூசன் போறீங்களா சார்:-)

      Delete
  36. எனக்கு என்ன தோணுதுநா நமது காமிக புத்தகங்களை ஒரு தடவை வாசிச்சாலே வாங்கிவிட தொடங்குவார்கள் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் youtube சேனல் களில் comic books ரிவ்யூ ஆகவோ அல்லது விளம்பரம் படுத்தலாமே mokka commentary என்ற youtube சேனல் ஆங்கில சூப்பர் ஹீரோ காமிக் புத்தகங்களையும் ஆங்கில படங்களையும் tamil explain பண்ணுகிறார்

    ReplyDelete
  37. அதேபோல youtube-ல் வீடியோ போடும் பொழுது normal வீடியோவாக இல்லாமல்shorts s வீடியோவாக போடுங்க. அது அதிக பேருக்கு reach ஆகும். பேசுறது மட்டும் இல்ல புத்தகத்தை அழகா mobile la சூட் பண்ணி போடுங்க. இன்னும் சில வீடியோக்களை பேக்ரவுண்ட்ல ஒரு நல்ல தமிழ் சாங்ஸ் போட்டு புக்ஸ் அன்பாக்சிங் பண்றது

    ReplyDelete
  38. இம்மாதம் வந்த லக்கி - ஆண்டு மலர்-மறக்க இயலா காமெடி விருந்தாக அமைந்துவிட்டது.
    / அயோத்தி - படத்தில், நமக்கு மொழி-தெரியாத நிலையில் (Sub-titiel_போட்டுவிளக்காததால்தான்)
    அந்த படத்தை உணர்ச்சிப்பூர்வமாக ரசிக்க முடிந்தது.
    அதே மாதிரி- முதல் கதையில் மொழிபெயர்க்காமல்-பல வார்த்தைப் பிரயோகங்கள்தான் வாய் விட்டு சிரிக்க வைத்துவிட்டது..
    இரண்டாவது கதையிலும்- வழக்கமான ரூட்டில் கதை போகாமல்- செவ்விந்தியர்களை சமாதானப்படுத்த எடுக்கும் முயற்சி என_சிரிக்க நிறையவே இடம் அமைந்துவிட்டது.
    அதிலும்- செவ்விந்தியத் தலைவனின் எதிர்பாராத அந்த மூன்றாவது கேள்வி- அதிர்ச்சி கலந்த சிரிப்பு. தான்..

    ReplyDelete
  39. இரு வண்ண கொலைப்படையே இப்படி அசத்தினால் முழு வண்ணத்தில் வந்தால் தெறிக்க விடாதா...

    கேட்டு வைப்போம்.

    ReplyDelete
    Replies
    1. விண்வெளி பிசாசு???

      Delete
    2. பாட்டில் பூதம் ???!!!

      Delete
    3. அடடே இந்த லிஸ்ட் எல்லாம் செம்மையாக இருக்கே

      Delete
  40. .ஆகஸ்ட் 5 இன்னும் 15 நாட்களே.

    ReplyDelete
  41. 💞💞💞💞💞💞 யங் டெக்ஸ்💞💞💞💞💞

    ----இந்த பதம் முதல் முறையாக கேட்க ஆரம்பித்தது 2017தீபாவளி மலரின் போதுதான்....அதற்கு முன்புவரை ப்ளாஷ்பேக்கில் டெக்ஸின் சின்ன வயது சம்பவங்கள் வரும் கதைகள், எல்லாமே ரெகுலர் டெக்ஸ் உடன் கலந்தது...!!!

    *இத்தாலியில் வித்தியாசமான சைசில் ஆரம்பிக்கப்பட்டது இந்த இளவயது டெக்ஸ் தொடர்...*. (ப்ராங்கோ பெல்ஜிய அளவு....) அப்போது நமக்கும் *யங் டெக்ஸ்* என்ற வார்த்தை அறிமுகம் ஆனது.....

    வயதான டெக்ஸ் கதை சொல்வது போல அமைக்கப்பட்ட இந்த சீரியஸ் இத்தாலியிலும் செம ஃபேமஸ்...இன்றளவும் சக்கை போடுபோடுது..ஆனா ஓவியங்கள் நம்மவர்களை சரியாக கவராதுபோன காரணமாக நம்மிடையே இவருக்கு பல்பே கிடைத்தது...!!!

    மேக்ஸி சைசில் வெளியான யங்கார் அத்தனை சோபிக்கல...
    எனவே ஒரு பாகமே வந்துள்ள இதை தற்போதைக்கு சிங்கிள் ஷாட் லிஸ்ட்லயே வைப்போம்....!!!!

    *யங் டெக்ஸ் சிங்கிள் ஷாட்ஸ்....*

    1.தீபாவளிமலர்-அக்டோபர்2017
    (ஒரு தலைவன் ஒரு சகாப்தம்
    அழகாய் ஒரு அராஜகம்)

    2.காற்றுக்கு ஏது வேலி?-ஜூலை2018

    3.சிங்கத்தின் சிறு வயதில்!-ஜூன்2019

    4.பொக்கிஷம் தேடிய பயணம்..தீபாவளி மலர்2021

    5.ஒரு காதல் யுத்தம்-ஜூன்2022

    இவைகள் எல்லாமே ப்ளாஷ்பேக்கில் கதை நகரும்.
    ஒன்றுக்கொன்று லிங் இல்லை..எப்போது வேணும்னாலும் தனிதனியாக வாசிக்கலாம்🤩🤩🤩🤩!

    *யங் டெக்ஸ் தொடர்.....*

    விவோ (போக்கிரி) டெக்ஸ்னு போனெல்லியில் ஆரம்பிக்கப்பட்ட மிகப்பெரிய தொடர்.. அதன் தமிழாக்கம் தான் *எதிரிகள் ஓராயிரம்* ல ஆரம்பிக்கப்பட்ட மிகப்பெரிய மெகா தொடர்....

    தமிழ்லயும் அனைத்து காமிக்ஸ் ஹீரோ ரசிக தரப்பையும் கவர்ந்து ஏக வரவேற்பை பெற்று வருகிறது....🤩🤩🤩

    ஒரே தொடரின் பாகங்கள் எனும்போது வரிசையில் வாசிப்பது நல்ல அனுபவமாக அமையும்....🤩🤩🤩

    *1.எதிரிகள் ஓராயிரம்-ஜூலை2020-இத்தாலிய ஒரிஜினல் பாகம் 1டூ4*

    *2.திக்கெட்டும் பகைவர்கள்-டிசம்பர்2021-இத்தாலிய ஒரிஜினல் பாகம் 5டூ9*

    *3.மாயனோடு ஒரு மோதல்-தீபாவளி மலர்-அக்டோபர்2022- இத்தாலிய ஒரிஜினல் பாகம்10டூ13*

    *4.சொர்க்கத்தில் சாத்தான்கள்-செப்டம்பர்2022- இத்தாலிய ஒரிஜினல் பாகம் 14&15*

    *5.ஓநாய் வனத்தில் டெக்ஸ்-மார்ச்2023- இத்தாலிய ஒரிஜினல் பாகம்16&17*

    (புக் 3&4 முன்பின்னாக வெளியானது... இரு கதைகளுக்கும் தொடர்பு இல்லை என்பதால் புக் 4ஐ தனியாக கூட வாசிக்கலாம்)

    *யங் டெக்ஸ் புக் 6.... இத்தாலிய ஒரிஜினல் பாகங்கள் 18 டூ 23.....2023,தீபாவளிக்கு வர உள்ள இது யங் டெக்ஸ் தொடரில் ஒரு சகாப்தமாக அமையும்......😍😍😍😍*

    ReplyDelete
    Replies
    1. https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0RB1WgS6vAoQ7c6PFUUCFC5GNWrvLFD89M3MHNYxisg7MzXATut92Z3hXuUv2nj9Cl&id=100036515580386&mibextid=Nif5oz

      புத்தகங்களை தேடி எடுக்க நேரம் இல்லா நண்பர்கள் அட்டைகளை ரசிக்க......

      Delete
    2. அருமை சகோ...நன்றிகள்

      Delete
  42. இன்று தொடங்க இருக்கும் கோவை புத்தக விழாவில் நமது லயன் முத்து காமிக்ஸ் சிறப்பிக்க வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. கோவை புத்தக விழாவில் நமது லயன்-முத்து வெற்றி பெற வாழ்த்துகள்💐💐💐💐💐

      Delete
    2. அடடே சும்மா பட்டையை கிளப்ப போகிறோம் கோவையில்.

      Delete
    3. // கோவை புத்தக விழாவில் நமது லயன் முத்து காமிக்ஸ் சிறப்பிக்க வாழ்த்துகள் //

      +1

      Delete
  43. கைதியாய் கார்சன் - விறுவிறுப்பு & அருமை.

    ReplyDelete
  44. இந்த பதிவு அருமை! நிறைய சிரிப்புகள் படிக்கும் போது! நமக்கு கிடைத்த அங்கீகாரம் மகிழ்ச்சியை தருகிறது!

    ReplyDelete
  45. நாளை கோவை பயணம்...!

    Eagerly waiting for Erode Book Fair

    ReplyDelete
  46. கைதியாய் கார்சன் - இந்த கதை புத்தகம் நிறைய நண்பர்களை கவர்வது உறுதி! இது விரைவில் நமது குடோனை விட்டு காலியாவது உறுதி சார்.

    ReplyDelete
  47. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
  48. இன்றைய பதிவில் இரும்புக் கை மாயாவி வர வாய்ப்புள்ளதா சமிக்ஞைகள் வருது

    ReplyDelete
  49. டல்லா உள்ள தளத்தை ஃபுல்லாக்க இன்று பல முக்கிய தகவல்கள் உண்டென ஓலை கொண்டு வந்த புறாவை இளவரசர்....

    ReplyDelete
  50. ORU-MUDIYA-IRAVU
    Cart la select panna mudeyala 500 sathuthaen vanga mudeyoumnu kattuthu

    ReplyDelete
  51. இன்று பதிவுக்கிழமை சார்.

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் சீக்கிரம் பதிவு எழுதுங்கள் எடிட்டர் சார்....
      கொஞ்சம் காரசாரமான மேட்டர் போடுங்கள். ராமா...ராமா புல்லரிக்க செய்யுங்கள்...
      தளம் தூங்கி வழியுது.

      Delete
  52. This comment has been removed by the author.

    ReplyDelete
  53. டால்டன்களோடு தக தமி தா - இறுக்கமாக இருந்த என்னை வாய்விட்டு சிரிக்க வைத்து மனதை லகுவாக்கியது. டால்டன் இருந்தால் சிரிப்பு மழை அதுவும் இந்த முறை ரின் டின் கேனும் இவர்களுடன் சேர சிரிப்பு அடை மழை போல் பக்கத்துக்கு பக்கம் சிரிக்க செய்தது, இவர்கள் கூடவே சுண்டெலி சாரி சுண்டெலி அளவில் நாயும் சேர்ந்து நிறைவான வாசிப்பு அனுபவத்தை கொடுத்து.

    சிரி சிரி சிரி சிரிப்பு.

    ReplyDelete
  54. எடிட்டரின் புதிய பதிவு சிறப்புச் செய்திகளுடன் ரெடி நண்பர்களே! :)

    ReplyDelete