Powered By Blogger

Saturday, January 14, 2023

பொங்கட்டும் மகிழ்ச்சி !!

 நண்பர்களே,

வணக்கம். 1990-களின் ஒரு சமயத்தில் நம்ம 'சட்டித்தலையன்' ஆர்ச்சியின் காலப்பயணம் சார்ந்த கதைகளை அடுத்தடுத்து வெளியிட்டுக் கொண்டிருந்தது நினைவிருக்கலாம் ! நினைத்த நொடியில் அந்தக் "கோட்டை" கால இயந்திரத்தில் ஏறி, ஷேர் ஆட்டோவே மெர்சலாகும் பாணிகளில் நம்ம இரும்புப் பயபுள்ளை வரலாற்றுக்குள்ளும், எதிர்காலத்துக்குள்ளும் ஷண்டிங் அடித்துக் கொண்டிருப்பான் ! இந்த நொடியில் எனக்கு மட்டும் ஒரேயொரு வரம் கிட்ட வாய்ப்பிருப்பின், அரை டஜன் ரவுண்டு பன்களை பயலின் வாய்க்குள் திணித்த கையோடு, அந்தக் "கோட்டை"யை ஆட்டையைப் போட்டு - ஜனவரியின் முதல் வாரத்துக்கு மறுக்கா போய், அங்கேயே கேம்ப் அடித்து விடவே எண்ணுவேன் ! தெறிக்க விட்ட சென்னை புத்தக விழா வாரயிறுதி ; சில பல 'ஜம்ப்'லிங்க நண்பர்களின் ஜாகஜ அதகளங்கள் ; V காமிக்சின் அதிரடி வருகை / வெற்றி ; சந்தா சேர்க்கையின் last stretch-ல் பரபரப்பாய் உரமூட்டி வரும் நண்பர்கள் ; ஆபீசே திருவிழா கோலத்தில் ஒவ்வொரு தினமும் தகித்த நாட்கள் - என ஒவ்வொன்றுமே ஒரு day to cherish !! Oh yes - இன்னமும் 9 நாட்கள் பாக்கியுள்ளன சென்னை விழாவினில் எனும் போது, உற்சாகத்துக்கும், எதிர்பார்ப்புகளுக்கும், வேண்டுதல்களுக்கும் பஞ்சமே இல்லை தான் ! முதல் வாரத்தின் விற்பனை உத்வேகங்கள் மட்டும் தொடரும் நாட்களிலும் தொடர்ந்திடும் பட்சத்தில், ஒரு சாதனை ஆண்டாய் இந்த 2023 நமக்கு அமையுமென்பது சர்வ நிச்சயம் ! புனித மனிடோவும், சென்னையின் வாசக நண்பர்களும் மனம் வைப்பார்களாக ! 

வேறு டாபிக் எதனுள்ளாச்சும் மூழ்கிடும் முன்பாக bookfair highlights பற்றி இன்னும் கொஞ்சமாய் பகிர்ந்து விடுகிறேனே guys !! இது உங்கள் ஒவ்வொருவரின் மகிழ்வும் சார்ந்ததொரு விஷயம் என்பதால் - சென்னையில் இட்லிக்கு சட்னியா ? சாம்பாரா ? என்பது கூட உங்களுக்குச் சொல்லிடணுமே ?! நான் அங்கிருந்த 2 நாட்களிலும் சரி, ஊருக்குத் திரும்பியான பிற்பாடு கிடைத்த updates வாயிலாகப் புரிந்து கொண்டதும் சரி - இந்தாண்டு ரொம்பவே unique ஆனதொரு பொழுது என்பதே ! ஒவ்வொரு புத்தக விழாவிலும் நம்மோடு அன்னம் தண்ணீர் புழங்குவது ; மொத்தமாய்க் கொள்முதல் செய்து விட்டு அவற்றை அடுத்த 11 மாதங்களுக்கு வாசிப்பது என்பதே வாடிக்கையாய்க் கொண்டிருக்கும் சென்னைவாழ் நண்பர்கள் இம்முறை in செம form ! போன வருடம் நாம் absent எனும் போது விட்டதையெல்லாம் பிடிக்கும் முனைப்பில், கையிலொரு நீளமான பட்டியலோடு ஸ்டாலில் வேட்டை நடத்தியோர் அநேகம் ! 2022-ன் full set இதழ்கள் ; 2022 சந்தாவுக்கு அப்பாற்பட்ட ஸ்பெஷல் இடைச்செருகல் இதழ்கள் ; SMASHING '70s full set இதழ்கள் - என நாமும் வித விதமான கூட்டணி இதழ்களோடு ரெடியாக இருந்ததால், பின்னிப் பெடலெடுத்து விட்டனர் நண்பர்கள் ! And இம்முறை அண்ணாச்சி & மாமூலான பில்லிங் ; பேக்கிங் டீமோடு நமது front office ஜோதியும் ஸ்டாலில் இருந்ததால் - புது நண்பர்களுக்கும் சரி, கையில் ஷாப்பிங் லிஸ்டுடன் வருகை தந்த வேட்டையர்க்கும் சரி, guide செய்திட ஒரு ஆள் இருந்தது போலாகி விட்டது !  அதே போல டெக்ஸ் புக்ஸ் சகலமும் ஓரிடத்தில் ; கார்ட்டூன்கள் எல்லாமே ஒரு வரிசையில் ; XIII முழுசும் இன்னொரு இடத்தில என நீட்டாக இருந்ததால் பலரது தேர்வுகள் சுலபமாவதைப் பார்க்க முடிந்தது ! 




And இம்முறை ஸ்டாலில் முதல் சிக்ஸர் அடித்தது - SMASHING '70s முழு செட்களும்  ; வேதாளர் நீங்கலாய் இருந்த மாண்ட்ரேக் ; ரிப் கிர்பி & காரிகன் hardcover இதழ்களும் தான் ! பார்த்த மாத்திரத்திலேயே ஏகப்பட்ட ஆயிரம் வாட்ஸ் பல்புகள் முகமெல்லாம் டாலடிப்பதை நானே பலரிடம் பார்த்தேன் ! So Smashing '70s நான்கு இதழ்கள் கொண்ட செட்ஸ் நம்மிடம் முற்றிலுமாய்க் காலி ! வேதாளர் - போயிண்டே ; ரிப் கிர்பி கிட்டத்தட்ட காலி....மாண்ட்ரேக் அநேகமாய் இந்த ஜனவரியோடு கிட்டங்கிக்கு விடை தந்திருப்பார் & இறுதியாய் வந்த காரிகன் மட்டும் maybe அடுத்த சில மாதங்களுக்கு நம்மிடத்தில் தாக்குப் பிடித்திருப்பார் ! இந்த க்ளாஸிக் நாயகர்களின் உத்வேகம், எப்போதும் போல என்னை மண்டையை சொரியச் செய்யத் தவறிடவில்லை தான் - moreso because போன ஞாயிறு முதலாய் ஸ்டாலில் மறுவருகை செய்திருக்கும் மாயாவிகாருவும் சத்தமின்றி சிக்ஸர்களாய் சாத்தி வருகிறார் ! "நீ ரைட்ல போய்க்கோ ; லெப்டிலே போய்க்கோ மாமூ ! ஆனாக்கா மாஸ் வெற்றிக்கு நீ எங்ககிட்டே தான் வந்தாகணும் !!" என்றதொரு குரல் கூட்டாய், கோரஸாய் ஒலிப்பது போலொரு பிரமை !  Of course - இன்னும் நிறைய பாணிகளில் ; ஜானர்களில் ; தனித்தடங்களில் ஏகப்பட்ட இதழ்களும், நாயகர்களும் வரும் காலங்களில் வரலாம் தான் ; அட ..இப்போது கூட SUPREME '60s தடம்தனில் க்ளாஸிக் பார்ட்டீஸ் பயணிக்க ஆரம்பித்தும் விட்டனர் தானே ?! ஆனால்....ஆனால்...முதல் சீசனில் SMASHING 70s நாட்டியிருக்கும் வெற்றியினை புறம்தள்ள, புனித மனிடோவுக்கு மாத்திரமே இனி சாத்தியப்படும் என்பேன் ! இனியொருமுறை இதே உயரங்களை எட்டிட/தொட்டிட நமக்கு சாத்தியமாகுமெனில், சத்தியமாய் வியப்பில் உறைந்திடுவேன் தான் ! Has been a simply phenomenal feat !! 

ஸ்டாலில் அடுத்த highlight - சீந்தப்படாமலே கொஞ்ச காலமாய் நம்மோடு ஊர் ஊராய் travel செய்து வந்த லார்கோ இதழ்களுக்கு இம்முறை கிட்டியுள்ள ஒரு புனர்ஜென்மம் ! நானிருந்த 2 மாலைப் பொழுதுகளிலேயே வரிசையாய் லார்கோ இதழ்கள் பேக் ஆவதை பார்க்க முடிந்தது ! And surprise ...."இரவே..இருளே..கொல்லாதே" இதழும் சரி, "தேவ இரகசியம் தேடலுக்கல்ல" இதழும் சரி, much in demand ! சும்மா இருக்காமல், நம்மிடமுள்ள சுமார் 300 இதழ்களின் கையிருப்பிலிருந்து  எனக்கு ஒரு மிடறு கூடுதலாய்ப் பிடித்திருந்த 30 இதழ்களை EDITOR'S PICKS என்று தேர்வு செய்திருந்தேன் ! அவையும் கூட சுறுசுறுப்பான விற்பனையில் இடம் பிடித்ததைப் பார்த்த போது 'ஜிவ்வென்று' இருந்தது ! 

"ஓரம் போ....ஒத்து..ஒத்து...ஒதுங்கிக்கோங்க....வழி...வழி விடுங்க...சைடு பாப்பா...சைடு தம்பி....அப்டிக்கா போயி அல்லாரும் வெளயாடுங்க !!" என்றதொரு குரல் கம்பீரமாய், கணீரென்று ஒட்டுமொத்தக் கூத்துக்களுக்கும் மத்தியினில் கேட்ட போதே எனக்கு நிமிர்ந்து பார்க்க அவசியமேயின்றித் தெரிந்தது - இது நம்ம இரவுக்கழுகாரின் குரலே என்பது ! டெக்ஸ் & டீம் செய்துள்ள சாகசங்களும் அநேகம், விற்பனைச் சாதனைகளும் எக்கச்சக்கம் - but இம்முறை அவற்றை முற்றிலுமாய் வேறொரு உச்சத்துக்கு நமது ஆதர்ஷ நாயகர்கள் இட்டுச் சென்றுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும் ! Has been an absolutely spectacular show so far !! நம்மிடம் உள்ள 28 டெக்ஸ் புக்ஸும் வரிசையாய் அடுக்கப்பட்டிருக்க, அட்டைப்படத்தையும், தலைப்பையும் அவதானிக்க மாத்திரமே அவகாசம் எடுத்துக் கொண்டு, அப்டியே ஒட்டுக்கா அள்ளிப் போட்ட நண்பர்கள் கணக்கில் அடங்கா ! And ஸ்டாலில் காலியாகி வரும் புக்சின் பட்டியலைக் கேட்டறிந்து, இங்கே சிவகாசியிலிருந்து ஒவ்வொரு மாலையும் பேக் ஆகிக் கிளம்பும் பண்டல்களில் 'தல' இடம் பிடிக்காத பொழுதே கிடையாதென்று சொல்லலாம் !! அதிலும் "நிழல்களின் ராஜ்ஜியத்தில்" & (இம்மாதத்து) "பகை பல தகர்த்திடு" have been super star performers ! இரண்டே மாதங்களுக்கு முன்பாய் வந்த "டெக்ஸ் தீபாவளி மலர் 22" கூட தரைதட்டும் நிலையை தொட ஆரம்பித்து விட்டது ! Of course 2021 தீபாவளி மலரெல்லாம் காக்காய் கொண்டு போச்சு ; is gone ! 'தல'யை ஒவ்வொருமுறை நினைக்கும் போதும், இளையராஜாவின் பாட்டு தான் ஞாபகம் வருகுது...."நேற்று இல்லை..நாளை இல்லை ; எப்போவும் நான் ராஜா !! கோட்டையில்லை..கொடியுமில்லை..அப்போவும் நான் ராஜா !" Phewwww !!

மஞ்சளாரின் அதே league-ல் இன்னமும் இல்லை என்றாலும், நம்ம ஜம்பிங் ஸ்டார் பேரவையின் ஆதர்ஷ நாயகரும், சிகப்பாரும் ஆன ஸாகோர் not too far behind ! மொத்தமே இரண்டே இதழ்கள் தான் இவரது வரிசையில் இதுவரையிலும் வந்திருப்பினும், செம பாசிட்டிவ் response !! யூத்தான ஜம்பிங் பேரவை பாய்ந்து, பாய்ந்து, மாய்ந்து மாய்ந்து, promotion வேலைகளை பார்த்து வருவதும் வலு சேர்க்க, ரொம்பச் சீக்கிரமே பெரியவர்களின் பாசறைக்குச் சவால் விடும் நிலை எழுந்தால் வியப்பே கொள்ள மாட்டேன் தான் !! 

இதோ - இரண்டாம் வாரயிறுதியான இன்றைக்கும் காலை முதலே சுறுசுறுப்பு நம் ஸ்டாலில் ! நடு நடுவே updates தந்திட விழைவேன் ! And திங்கட்கிழமை மாலை கொஞ்ச நேரத்துக்கு நமது ஸ்டாலில் தலை காட்டுவேன் என்ற கொசுறுச் சேதியோடு அடுத்த topic பக்கமாய்த் தாவிடுகிறேன் !!  

TEX 75 !!

மெது மெதுவாய் இத்தாலியிலிருந்து இந்த மைல்கல் ஆண்டின் கொண்டாட்டங்கள் சார்ந்த தகவல்கள் கசிந்து வருகின்றன !! ஒரு ஓவியப் பட்டாளத்தையே களமிறக்கி, காத்திருக்கும் மாதங்களில் டெக்ஸ் & டீமை அட்டகாசமாய் ரசிக்க வழி செய்து வருகின்றனர் ! மெபிஸ்டோ தொடர்கிறான் ; இன்னும் 2 சஸ்பென்ஸான பழம் விரோதிகள் பலப்பரீட்சை செய்து பார்க்க வருகிறார்களாம் ! And ஒரு ஆல்பத்தில் நம்மவர்கள் கப்பலேறி நம்ம ஊர் பக்கமாகவும் வருகிறார் போல தெரிகிறது !! பாருங்களேன் - சிங்கிள், டபுள், மேக்சி, இளம் டெக்ஸ் , கலர் டெக்ஸ், டெக்ஸ் கிராபிக் நாவல், என்று ஏதேதோ format-களில் தடதடக்கவுள்ள சாகஸங்களின் சில preview images :












ப்ரிவியூக்களைப் பார்க்கும் போதே ஜொள்ளுப் பிரவாகத்தை கட்டுப்படுத்த முடியலை ; இந்தாண்டின் போக்கினில் ஒவ்வொன்றையாய் முழுசாய்ப் பார்க்க வாய்ப்புக் கிட்டும் போது என்ன பாடு படப் போகிறோமோ ? And ஒரு சஸ்பென்ஸ் இதழை டெக்சின் பிறந்தநாள் தருணத்தை ஒட்டி வெளியிடவும் உள்ளனராம் !! சொக்கா...சொக்கா...அத்தனையும் டெக்ஸ் ஆச்சே....? 

ரைட்டு....சென்னையின் அதிரடிகளை கௌரவிக்கும் விதமாகவும், ஜம்பிங் பேரவையின் இஷ்ட்ராங்கான களமாடல்களினை ஊக்குவிக்கும் விதமாகவும், ப்ராமிஸ் செய்தபடியே "எங்கே..எப்போது?" பகுதியினில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்த ZAGOR கலர் இதழினை (லயன் லைப்ரரியில்) fast track செய்திடத் தீர்மானம் செஞ்சூ !! கதைகள் ஏற்கனவே கைவசம் இருப்பதால் இத்தாலிய மொழியிலிருந்து மொழிபெயர்ப்பினை ஒரு சுபயோக சுபதினத்தில் துவங்கிடலாம் !! புக் ரிலீஸ் எப்போது ? என்ன விலை ? என்பதை அறிவிக்கும் முன்பாய், ஸாகோருக்குத் துணையாக "எங்கே ? எப்போது ?" பகுதியினில் விளம்பரப்படுத்தப்பட்ட இதழ்களும் இன்னும் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்திடலாமா guys ? ஸாகோர் + இன்னும் ஒரு ஸ்பெஷல் புக் எனில், உங்கள் சாய்ஸ் ஏதுவாக இருக்குமோ :

*பெளன்சர்
*BIG BOYS ஸ்பெஷல் 
*சுஸ்கி & விஸ்கி  
*டெக்ஸ் க்ளாசிக்ஸ் - மந்திர மண்டலம் 

Of course, "உயிரைத் தேடி" கலர் + black & white இதழ்களின் ரிலீசுக்குப் பிற்பாடே Zagor & company வெளி வந்திடுவர் !! And 'உ.தே' இறுதிக்கட்டப் பணிகளில் உள்ளது ; எடிட்டிங் & color corrections செய்தான பின்னே விறு விறுவென்று தேரை எல்லை சேர்த்து விடலாம் ! Not too long a wait !!

கிளம்பும் முன்பாய் போன வாரத்தில் நமது மூத்த வாசகர் ஒருவரிடமிருந்து கிட்டிய வாஞ்சையான கடிதத்தினை இங்கே பகிர்வதோடு, அவர் கேட்கச் சொல்லியிருந்த கேள்வியினையும் கேட்டு விடுகிறேனே ? 

=========================================================================
Dear Vijayan


I read the beautiful article in the Times of India about the long journey of the Lion Muthu Comics. 

It is mentioned that it is the longest for any comics to survive in Tamil. Actually It is longest  and still live comics among all the Indian languages. Kudos for that I pray god that he bless you and your successors.with the strength to continue publishing lion-muthu comics for many years to come.Many comics have come even from leading publishers have folded , but not Lion Muthu may be because of your passion for comics .

At this juncture I recall some of my own reminisces of my journey with Lion Muthu, Mini Lion, Thigil comics from its 1st Issue. I’m now 73 and I have not missed a single issue of all the Comics published by you.I have been a non stop reader for the last 51 years without missing a single issue.

I am a vivid comics lover (which remains so even today). I was  studying for my final Chartered Accountancy exam and got introduced to the first issue of the Muthu Comics bought from Nehru Book Mart at Luz corner where I used to buy Indrajal comics every week. If I remember it started with a price of 90P. Since then the reading journey of muthu  continued even when I moved to Mumbai for professional work. I remember travelling all the way from Santacruz to Matunga to buy the comics from the news mart which was and is owned by the Girl Trading (leaders now in publishers and dealers of all religious books and Pooja articles at many places).Some time if I am lucky I could get it from the Railway Book Stall ( A H Wheelers)  at Church Gate Station.Then I moved over to Bangalore around 1974 and got the Comics from  some of the Book shops in Majestic area or from some book shops in Malleswaram area. Then moved back to Chennai in 1980 where I always used to look for the printed paper display  banners for the new issues.
 
But all these years I have to be constantly looking  around for a news mart so that I don’t miss an issue, because for many a times for  unknown reasons many times the frequency of availability used to be uncertain.

Yes you had difficulties and your passion to continue the Lion Muthu saga, ensured its sustenance. 

The second innings was more orgnised and with the introduction of the annual subscription mode made getting the issues with high level of regularity. This helped me to get the comics with out running around.

At this juncture I have a suggestion.    You may be aware of it but I will still write about it. 

You have many subscribers and those who were with you for many years. They are godd supporters but they will be dropping out slowly over a period of time. The new subscribers added every year will be the Oxygen for future growth. Take for instance myself at 73 I still subscribe, but I don’t know for how long because the age takes toll of your reading skills as the age advances.

Take a survey of your subscriber base. If it contains more of senior citizens then it is a danger signal which you have to protect against.

With this let me now sign off with 51 years of happy memories and with a wish god gives me many more years of reading the comics.

All the very best Mr Vijayan

Yours sincerely

xxxxxxxxxxxxxxx
=======================================================================================


அன்பான வார்த்தைகளோடு சின்னதாய் ஒரு எச்சரிக்கையும் செய்துள்ளார் : நம் வட்டத்தில் உள்ள "பழங்கள்" எத்தினி ? "பெருசுகள்" எத்தினி ? "யூத்" எத்தினி ? என்று கணக்கிடச் சொல்லி !! So இக்கட ஒரு census எடுத்துப் பாக்கலாமுங்களா ?

All 60+ = பழம்ஸ் = DRAGON FRUIT 
All 50+ = பெருசுஸ் = MANGO 
All 40+ = யூத் = APPLE
All 30+ = கொயந்தைஸ் = STRAWBERRY

மேற்படி பட்டியலுக்குள் நீங்கள் எந்த இடத்தினைப் பிடிப்பீர்கள் என்பதை இஷ்டைளாக குறியீட்டின் மூலமாய்த் தெரிவிக்கலாமே ப்ளீஸ் ?






ரைட்டு....பிப்ரவரியின் பணிகளுக்குள் மறுக்கா குதிக்க இப்போ ஞான் கிளம்புது ! புலரக் காத்திருக்கும் தமிழர் திருநாளில் நம் அனைவரின் இல்லங்களிலும் நலமும், வளமும், சர்க்கரைப் பொங்கலாய் பொங்கட்டும் ! உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள் from our entire team !! திங்களும் ஆபீஸ் விடுமுறை என்பதால் செவ்வாய் காலையில் தான் நம்மவர்கள் பணிக்கு திரும்பிடுவார்கள் ! Bye all ...see you around !! Have an awesome break !!





மேலுள்ள memes அனைத்தும் நண்பர் அனுப்பியது.....இதோ - கீழே தொடர்வது மாத்திரம் அடியேனின் ஆக்கம் !! மாபெரும் போட்டி அறிவிக்கப்பட்டவுடன் ஒரு மைண்ட்வாய்ஸ் என்னவாக இருக்குமென்று யூகிக்க முயன்றேன் : 


And இவை ஆன்லைன் லிஸ்டிங்கில் இப்போது உள்ளன & சென்னை ஸ்டாலிலும் :



325 comments:

  1. வணக்கம் நண்பர்களே...

    ReplyDelete
  2. ஆ! இந்நேரத்துல பதிவா?!! இதோ படிச்சுட்டு வரேன்!!

    ReplyDelete
    Replies
    1. ஹி...ஹி..ஹி...நிச்சயமா வருவீங்க !

      Delete
  3. எல்லாரும் பதிவு இரவுதான் வரும் என்று அசால்டாக இருக்க பிற்பகலில் பதிவை அசால்டாக போட்டு விட்டு, பின்னூட்டமும் இடுவது என்பது கொஞ்சம் அதிகமில்லீங்களா?...

    ReplyDelete
    Replies
    1. நம்ம என்னிக்கி சார் ஒரு routine-க்கு கட்டுப்படுற ஒழுங்குப் புள்ளையா இருந்திருக்கோம் ?

      Delete
  4. Strawberryக்கும் கீழ எதுவும் கொடுக்கலியே சார்...!? மே க்யா கரூன்...!?

    ReplyDelete
    Replies
    1. ஆங்....நெல்லிக்கா ? ஊஹூம்...அது பழ வகையே இல்லேம்பாங்க ! ரைட்டு.....ஆரஞ்சுன்னு சொல்லிக்குவோம் !

      Delete
    2. ///Strawberryக்கும் கீழ எதுவும் கொடுக்கலியே சார்...!? மே க்யா கரூன்...!?///

      ட்ராகன் ஃப்ரூட்டுக்கு மேல எதுவும் கொடுக்கலியே.. மே க்யா கரூன்னு நீங்க கேக்கணும் சார்..!

      Delete
  5. இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்... அன்பு சார்... மற்றும் நம் காமிக்ஸ் குடும்பத்திற்கு...

    ReplyDelete
  6. Replies
    1. ஸாகோர் உடன் பவுன்சர் பிளீஸ்

      Delete
  7. Apple ( note this point editor sir, i am very young Apple)

    ReplyDelete
  8. மீம்ஸ் எல்லாம் தெறி ரகம்.

    ReplyDelete
  9. பொங்கல் வாழ்த்துகள் நண்பர்களே..

    ReplyDelete
  10. @Edi Sir..😍😘

    Me MANGO 💪👍✌❤
    (Ur Honour மாங்கா என்று படிக்க கூடாது😀)

    ReplyDelete
  11. And இம்முறை ஸ்டாலில் முதல் சிக்ஸர் அடித்தது - SMASHING '70s முழு செட்களும் ; வேதாளர் நீங்கலாய் இருந்த மாண்ட்ரேக் ; ரிப் கிர்பி & காரிகன் hardcover இதழ்களும் தான் ! பார்த்த மாத்திரத்திலேயே ஏகப்பட்ட ஆயிரம் வாட்ஸ் பல்புகள் முகமெல்லாம் டாலடிப்பதை நானே பலரிடம் பார்த்தேன் ! So Smashing '70s நான்கு இதழ்கள் கொண்ட செட்ஸ் நம்மிடம் முற்றிலுமாய்க் காலி ! வேதாளர் - போயிண்டே ; ரிப் கிர்பி கிட்டத்தட்ட காலி....மாண்ட்ரேக் அநேகமாய் இந்த ஜனவரியோடு கிட்டங்கிக்கு விடை தந்திருப்பார் & இறுதியாய் வந்த காரிகன் மட்டும் maybe அடுத்த சில மாதங்களுக்கு நம்மிடத்தில் தாக்குப் பிடித்திருப்பார் ! /////

    ஆஹா....ஆஹா.....ஆஹா.....!!!!

    இதுவல்லவா சந்தோஷம் தரும் செய்தி !!!!

    நன்றி சாரே.

    மாண்ட்ரேக் விற்பனையில் சாதித்துவிட்டார் தானே.

    உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கின்றேன் ஆசிரியர் சார். இந்த வருடமும் மாண்ட்ரேக் ஸ்பெஷல் -2 ஐ வெளியிடுங்கள் சார். நிச்சயம் சாதிப்பார்.

    நன்றிங்க சார்.

    ReplyDelete
    Replies
    1. Me வழிமொழிகிறேன்..💪
      We want மாண்ட்ரெக் again..😍😘😘

      Delete
    2. நானும் வந்து ஆதரவு தருகிறேன். மாண்ட்ரேக் 2 க்கு.

      Delete
    3. எனக்கும் மாண்ட்ரேக் வேண்டும்

      Delete
    4. ஆதரவு தெரிவித்த நண்பர்களுக்கு நன்றிகள். இன்னும் ஆதரவு பெருகட்டும்.

      Delete
    5. மாண்ட்ரேக் +123456789

      Delete
  12. Dear Editor,
    Big boys Special
    Long awaited from my side
    Regards

    ReplyDelete
  13. சார் கதை சொல்லும் காமிக்ஸ் சந்தா புத்தகங்கள் செவ்வாய் அனுப்பப்படுமா?

    ஜம்பிங் அலபறைகள் அருமை மற்றும் வாழ்த்துக்கள். முடிந்த வரை தலைக்கு கொஞ்சம் டப் கொடுக்கட்டும். போட்டி இல்லாமல் போர் அடிக்கிறது.

    ஆப்பிள் 🍎

    அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்க வரும் ஜூன் வந்தால் தான் ஆப்பிள். அது வரை ஸ்ட்ராபெர்ரி என்பதை தாழ்மையோடு தெரிவித்து கொள்கிறேன்

      Delete
    2. நானும் கேட்க நினைத்தேன். நீங்களே பதில் சொல்லி விட்டீங்க.

      Delete
    3. 😔 ஒரு ஆர்வத்தில் போட்டுவிட்டேன். பின்பு கணக்கு பார்த்த போது தான் புரிந்தது

      Delete
  14. @Edi Sir..😍😘

    Zagor பேரவை அடுத்து ஐ.நா.சபை எலக்சனில் களம் காணுவதற்கான புகை சமிக்ஞைகள் மீம்சுகள் தெரிக்கவிடுவதன் மூலம் தெரிகிறது.😍💪

    Zagor-கலர் -Fast trackல் விரைவில் வருவதாக அறிவித்ததை ஜம்பிங் செய்து வரவேற்கிறோம்.❤

    கூடவே
    பெளன்சர் ஆ..
    இல்ல..
    *BIG BOYS ஸ்பெஷல் ஆ..
    இல்ல..
    *சுஸ்கி & விஸ்கி ஆ..
    இல்ல..
    *டெக்ஸ் க்ளாசிக்ஸ் - மந்திர மண்டலம் ஆ..

    எதை கேக்கிறது..
    எதை விடுறது..
    சொக்கா..😃
    (எல்லாமே சேந்து குண்டுபுக்கா வந்தா நல்லாதான் இருக்கும்😍😃😀)

    Tex 75- ல தல Tex தூள் கிளப்ப போறதை நெனச்சாலே ஜிவ்வுங்குது..(என்ன இருந்தாலும் ஸாகோருக்கு அண்ணா தானே..😃)

    *உயிரைத்தேடி*.. ஒரு தலைமுறையின் காத்திருத்தல் முடிவுக்கு வரப்போவதை நினைத்து மகிழ்ச்சி ..😍😘😘

    ReplyDelete
  15. Dear Vijayan Sir & Team, We wish you all very Happy & Prosperous PONGAL.

    ReplyDelete
  16. ###வணக்கம். 1990-களின் ஒரு சமயத்தில் நம்ம 'சட்டித்தலையன்' ஆர்ச்சியின் காலப்பயணம் சார்ந்த கதைகளை அடுத்தடுத்து வெளியிட்டுக் கொண்டிருந்தது நினைவிருக்கலாம் ! நினைத்த நொடியில் அந்தக் "கோட்டை" கால இயந்திரத்தில் ஏறி, ஷேர் ஆட்டோவே மெர்சலாகும் பாணிகளில் நம்ம இரும்புப் பயபுள்ளை வரலாற்றுக்குள்ளும், எதிர்காலத்துக்குள்ளும் ஷண்டிங் அடித்துக் கொண்டிருப்பான் ! ##
    Sir அப்படியே ஆர்ச்சியோடு மோதாதே கதையை கலர்ல ரீபிரிண்ட் போட்டா செமையா இருக்கும் 😎

    ReplyDelete
  17. ஜம்பிங் துணைக்கு எனது சாய்ஸ் பௌன்சர் சார்...

    ReplyDelete
  18. ஸாகோர் + இன்னும் ஒரு ஸ்பெஷல் புக் எனில், உங்கள் சாய்ஸ் ஏதுவாக இருக்குமோ :

    *பெளன்சர்*

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. @சீனியர் எடிட்டர் , எடிட்டர், ஜூனியர் எடிட்டர் & எடிட்டோரியல் டீம்..
    அனைவருக்கும் ஸாகோர் பேரவையினரின் இனிய தைத்திருநாள் வாழ்த்துகள் 🙏❤💐

    ReplyDelete
  21. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  22. ஸாகோர் + இன்னும் ஒரு ஸ்பெஷல் புக் எனில், உங்கள் சாய்ஸ் ஏதுவாக இருக்குமோ : ////

    பெளன்சர்.

    ReplyDelete
  23. Sir - please list the Editor's Pick 30 - would be easy to correlate and buy missing pieces if necessary.

    ReplyDelete
  24. அம்புட்டு டெக்ஸ்ம் இங்குட்டும் வேண்டும். சுடச் சுடக் கொடுக்க நீங்கள் தயாரா சார் ?

    அத்தனையும் அள்ளிக் கொள்ள நாங்கள் தயார்.

    ReplyDelete
  25. காமிக்ஸ் நன்பர்களுக்கு இனிய போகி வாழ்த்துக்கள் 💤💤💤

    ReplyDelete
  26. பெரிய தலயும் சின்னத் தலயும் விற்பனையில் சாதிப்பது எல்லாருக்கும் தெரிந்ததுதானுங்களே !!!

    ReplyDelete
  27. பெரிய தலயின் விஸ்வரூப வெற்றி கண்டு மகிழ்ச்சி. லார்கோவும் விற்பனையில் சாதிப்பது மகிழ்ச்சி.

    ReplyDelete
  28. மாண்ட்ரேக் விற்பனையில் சாதித்துவிட்டார் தானே.

    உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கின்றேன் ஆசிரியர் சார். இந்த வருடமும் மாண்ட்ரேக் ஸ்பெஷல் -2 ஐ வெளியிடுங்கள் சார். நிச்சயம் சாதிப்பார்.

    ReplyDelete
  29. Strawberry even though still a few years to go for the 30 milestone (20+ ku ஒரு பழம் இல்லாததை உண்மையான இளைஞர் அணி சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்)

    ReplyDelete
  30. பௌன்ஸர் ஐ பார்க்கமுடியாது போய்விடுமோ..? என்று குணடூசியால் குத்தப்பட்ட பட்டாம்பூச்சியாய் துடித்தேன்..... Blog ஐ பார்த்த பிறகு. வலையில் இருந்து தப்பிய வண்ணப் பறவையாய் என் மனம்
    சந்தோசமாய் சிறகை விரிக்கிறது... யி லின்..
    பாப்பா இல்ல நட்பூஸ்...
    எழுதறது நான்தான்.. ❤️

    ReplyDelete
  31. காமிக்ஸ் அறிந்த அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் 🍚🍚🍚

    ReplyDelete

  32. ///All 60+ = பழம்ஸ் = DRAGON FRUIT
    All 50+ = பெருசுஸ் = MANGO
    All 40+ = யூத் = APPLE
    All 30+ = கொயந்தைஸ் = STRAWBERRY///

    All 18+ = பிஞ்சு.!

    ReplyDelete
  33. வில்லர் வருடம் 2023 ..😍😍😍

    ReplyDelete
  34. Me mango....I want Big Boys special...

    ReplyDelete

  35. ///*பெளன்சர்
    *BIG BOYS ஸ்பெஷல்
    *சுஸ்கி & விஸ்கி
    *டெக்ஸ் க்ளாசிக்ஸ் - மந்திர மண்டலம் ///

    பௌன்சர்

    ReplyDelete
  36. முக்கனிகளில் முதல் கனியான- மாங்கனி...அது நானே..
    மேலும்- . முக்கனிகளின் சுவையைப் போல் (வரிசைப்படி, ' )தித்திக்கும். மூன்று காமிக்ஸ் எடிட்டர் - களுக்கும் என் இனியதமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள். மற்றும் தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  37. அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள். நான் Dragon Fruit.

    ReplyDelete
  38. ஆ...அதுக்குள்ள புது பதிவா...இந்த ஜம்பிங் சங்கம் வந்தவுன என்னென்னமோ மாறுதுங்க செயலரே...

    ReplyDelete
  39. Zagor துணையாக big boys போட்டு விடுங்கள் ji

    ReplyDelete
  40. Apple 43 years old (And I couldn't accept this category as youth he he!)

    Btw, my 6 years old son started showing interest in our comics, hope he will continue reading :)

    ReplyDelete
  41. சார்..கார்ட்டூன் ரொம்ப குறைவா இருக்கு. போன தபா சுஸ்கி விஸ்கி அடைந்த வெற்றியும் சரி அது தந்த வாசிப்பனுபமும் சரி. மிக நிறைவு. சோ என்னோட ஓட்டு சுஸ்கி விஸ்கி ஸ்பெசல்க்கே.

    ReplyDelete
  42. என செல்லப் பேரு ஆப்பிள்..நீ சைசா கடிச்சுக்கோ..

    ReplyDelete
    Replies
    1. என் உண்மைப் பேரு மேங்கோ.. நீ நைசா தெரிஞ்சுக்கோ..

      Delete
  43. Mango ( though often mistaken as dragon fruit without dye:-)]

    சு & வி

    ReplyDelete
    Replies
    1. விடுங்க செனா அனா. என் மச்சான் தார்சட்டில தலய முக்காம வந்தா சீனியர் எடிட்டர் க்ளாஸ்மேட்டோன்னு நானே நினைச்சிடுவேன்.

      Delete
    2. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்...
      ஆதவன் மறைவதில்லை..😎

      Delete
    3. //என் மச்சான் தார்சட்டில தலய முக்காம வந்தா சீனியர் எடிட்டர் க்ளாஸ்மேட்டோன்னு நானே நினைச்சிடுவேன்.//

      :-)))

      Delete
  44. Me Strawberry 🍓
    ஙே...கொயந்தையா நானு 😳

    ReplyDelete
  45. டெக்ஸ் 75 Preview களால் மனம் குளிர்கிறது. என் வரலாற்றில் முதல் தடவையாக என் Profile படத்தையும் மாற்றி விட்டேன் .

    ஸாகோர் கலர் இதழும் விரைவில் வர உள்ளதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  46. வணக்கம் நண்பர்களே!

    அனைவருக்கும் தைத்திருநாள் வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  47. Me Apple 🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

    ReplyDelete
  48. நான்mango . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  49. ஆஹா பதிவு வந்துருச்சுங்களா இந்த ஜம்பிங் பேரவை வந்ததில் இருந்து என்னென்னமோ நடக்கது செயலரே..

    ReplyDelete
  50. சென்னை புத்தகவிழா இந்த முறை வெற்றி கொடி பட்டையை கிளப்புவதில் பதுங்குகுழி பேரவை மட்டற்ற மகிழ்ச்சியையும் ,பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறது...இந்த சாதனை ஒவ்வொரு வருடமும் தொடர வேண்டிக்கொள்கிறோம்..பதிவை படிக்க படிக்க மனம் மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாட சொல்கிறது...

    திடீர் வரவு ஸ்பெஷலில் என்னுடைய ஓட்டு பெளன்சர் சார்...

    ReplyDelete
  51. செயலரே மீம்ஸ் எல்லாம் பாத்தீங்கள.. இது வேலைக்கு ஆவாது ..நம்ம சங்கத்து கட்டிடத்துல இருக்குற ஒட்டடையை எல்லாம் அடிச்சு சுவருக்கு சுண்ணாம்பு எல்லாம் அடிக்கனும்..நம்ம சங்கத்து பலகை வேற எந்த புதர்ல கிடக்கதோ தெரில அத வேற துழாவி பெயிண்ட் அடிச்சு மாட்ட சொல்லுங்க ..ஆனா இதுக்கெல்லாம் ஆகுற செலவ பொருளாளர்கிட்ட கேக்கலாம்னா இப்ப எல்லாம் அவரை தொடர்புக்கு அப்பால் போய் துலாவினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை..எனவே படை எடுப்போம் சங்கத்தை புதுப்பிப்போம்..
    ஜெய்ஹிந்த்..

    ReplyDelete
    Replies
    1. தலீவரே.. ஒவ்வொருவாட்டியும் வீரமா ஒரு அறிக்கையை 'ஜெய்ஹிந்த்' சொல்லி சமர்ப்பிச்சுட்டு மாசக்கணக்குல பதுங்குகுழியில குளிர்கால குறட்டை விடும் பழக்கத்தை முதலில் நிறுத்துத் தொலையுங்க!

      Delete
  52. Strawberry 🍓 (30)
    Started buying LM comics in 2002.
    I'm a huge fan, and you have my wholehearted support and subscription till the end of time.

    ReplyDelete
  53. செ. பு. வி. வெற்றி மகிழ்வையும் மன நிறைவையும் தருகிறது. இந்த வெற்றி இனி வரும் வருடங்கள் எல்லாவற்றிலும் தொடரவும், எங்களுக்கு அதனால பல காமிக்ஸ் குவியல்கள் கிடைக்கவும் மனிடோ அருளட்டும்.

    அந்த காமிக்ஸ் குவியல்கள் எங்களுக்கு அளித்து வரும் எடிட்டர்கள் சமூகத்திற்கு உடல்,மன, நிதி மகிழ்வையும் நிறைவையும் அளிக்க எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வரிக்கு வரி ஆமோதிக்கிறேன்.

      Delete
    2. எனது எண்ணமும் இதுவே. 🙏🙏🙏🙏🙏

      Delete
  54. இன்னும். இரண்டு வருடங்களில் மாங்கோ ஆகப்போகும் ஆப்பிள் 80 '_s kids.ஆரம்பத்தில் இருந்து லயனுடன் பயணித்த தலைமுறை.

    ReplyDelete
    Replies
    1. சார் ஒரு சந்தேகம். 80s or 70s kid?

      Delete
  55. இளம் கிட்டை பார்க்கையில் கார்சனின் கடந்தகாலம் மாதிரி இன்னொரு கிளாசிக் கிடைக்குமா என்ற பேராசை ஏற்படுகிறது.இப்போதைய டெக்சில் நில் கவனிசுடு,நிழல்களின் இராஜ்ஜியத்தில் முதல். பகுதி கிட்டத்தட்ட அந்த ரேஞ்ச் வந்தது,ஆனாலும் கா.க தனிதான்

    ReplyDelete
    Replies
    1. // ஆனாலும் கா.க தனிதான் // எப்பொழுதுமே கார்சனின் கடந்த காலம் தனி இடம் தான்.

      Delete
  56. //So இக்கட ஒரு census எடுத்துப் பாக்கலாமுங்களா ?//

    STRAWBERRY ..

    //ஸாகோர் + இன்னும் ஒரு ஸ்பெஷல் புக் எனில், உங்கள் சாய்ஸ் ஏதுவாக இருக்குமோ ://

    first choice - பெளன்சர்

    second choice - டெக்ஸ் க்ளாசிக்ஸ் - மந்திர மண்டலம்..

    ReplyDelete
  57. Big Boys Special விரைவில் களமிறக்கினால் மகிழ்வோம் சார்.

    ReplyDelete
  58. இன்னிக்கும் ஆபீஸில் ஏக வேலைகளில் இருந்ததால் அவசர அவசரமாகப் பதிவைப் படிக்க மட்டுமே நேரமிருந்தது!

    நெஞ்சுக்குள் நிழலாடும் வஞ்சத்தோடும், கொஞ்சமாய் கொலைவெறி மேலிடும் வஞ்சத்தோடும் இதோ நானிங்கே ஆஜர்!

    இது பலி தீர்க்கும் நேரம்!! உர்ர்ர்ர் உர்ர்ர் க்ராராஆஆஆ!!

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆ..ன்னு கத்தாம ஏதாவது பண்ணுங்க செயலரே...

      Delete
    2. கொஞ்சம் பொறுமையா இருங்க தலீவரே.. பேரவைக்காரவுக எல்லாம் தலைகால் புரியாம ஜம்ப்பிங் பண்ணிட்டிருக்காங்க. அவங்களே தடுமாறி சேத்துல விழுந்து 'களிமண் மனிதர்கள்' மாதிரி விறைச்சுப்போயி நிப்பாங்க. அப்போ நம்ம ஆட்டத்தை ஆரம்பிக்கலாம்!! சமயத்தில் பதுங்குவதும் கூட தேர்ந்த போர் தந்திரங்களில் ஒன்று என்பதை சதாகாலமும் பதுங்கியே கிடக்கும் உங்களுக்கு நான் சொல்லவேண்டியதானே தலீவரே?!!

      Delete
    3. ஆம் உண்மையே செயலர் அவர்களே..

      காலம் கனியட்டும்..

      Delete
  59. நான் ஒரு ஆப்பிள் பழம்! அதாவது - யூத்!! (எங்கே அந்த நாடுகடத்தப்பட்ட ஷெரீப்?)
    நாமெல்லாம் 'பழங்கள்'னு முன்னாடியே தெரியும்.. ஆனா என்னென்ன பழங்கள்னு இன்னிக்குத் தெரிஞ்சுக்கிட்டேன். இதைத் தெரியப்படுத்திய எடிட்டருக்கும், இதெற்கெல்லாம் காரணமாய் அமைந்த அந்த சீனியர் வாசகருக்கும் என் நன்னிகள்!!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நாட்களுக்கு பிறகு செம்ம ஃபார்ம் ல இருக்கீங்க. I just love it.

      Delete
  60. நாம எப்பவுமே ஸ்டாபெர்ரி தான் சார்...

    என்ன யாரும் நம்ப மாட்டேங்கிறாங்க...:-(

    ReplyDelete
    Replies
    1. தலீவரே..
      உங்களை நம்புறவங்களுக்கு நீங்க ஒரு ஞானப்பழம்!!

      பாசம் காட்டுறவங்களுக்கு நீங்க ஒரு பலாப்பழம்!

      வெறுப்பைக் காட்டுபவர்களுக்கு நீங்க ஒரு வேப்பம்பழம்!

      புறம்கூறித் திரிபவர்களுக்கு
      நீங்க ஒரு புளியம்பழம்!!

      மொத்தத்தில் நீங்க ஒரு பழமுதிர்ந்தசோலை தலீவரே!!

      Delete
    2. ///ROFL///

      KS.. இப்பல்லாம்தான் நீங்க JOTL ஆச்சே!! (Jump Over Tree Laughing)

      Delete
    3. தலைவரே,
      இன்னைக்கு நம்ம சங்க உறுப்பினர் ஒருத்தர் பிறந்த நாள். நீங்க வாழ்த்து சொல்லலைன்னு சோகமா இருக்கார்.
      நீங்க ஒரு பாட்டு பாடணுமாம். சொல்ல சொன்னாரு.

      Delete
    4. தலீவர் எட்டு மணிக்கெல்லாம் தூங்க ஆரம்பிச்சு, இந்நேரம் டயப்பர்ல மூனுவாட்டி சுச்சா போயிருப்பார்! அவர் சார்பா நான் வாழ்த்தறேன்..

      இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் புன்னகை ஒளிர் சார்!!

      Delete
    5. :-))))


      *****


      ஆஹா சாரிசார்..செயலர் சொன்னபடி நானெல்லாம் நேரத்துக்கு தூங்கலைன்னா ஆத்தா வையும்..அதான்...

      இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் புன்னகை ஒளிர் சார்..

      Delete
  61. சென்னைவிழாவின் வெற்றியை வாசிக்க வாசிக்க ஆனந்தம் சார்...

    டெக்ஸ், S70, ஸோகோர்னு எல்லாம் பட்டையை கிளப்புவது மெத்த மகிழ்ச்சி!!!

    ReplyDelete
  62. இங்கிட்டு சேலம் ஆப்பீளுங்கோ...

    மாங்கோ வாங்கவும் தொட்டு விடும் தூரம் தானே உள்ளது......

    ReplyDelete
  63. டெக்ஸ்75.....

    பீரோலு...பீரோலு....

    சிலுவரு பேட்டரி....🥰🥰🥰🥰🥰

    ReplyDelete
  64. ஸோகோர் கூட.....

    பெளன்சர்....

    பெளன்சர்....

    பெளன்சர்....

    ReplyDelete
  65. மீண்டும் கார்சனின் கடந்த காலம் போல ஒரு கதை வரும் போலவே. அங்கு வந்த உடனே இங்கு கொண்டு வந்து விடுங்கள் சார்

    ReplyDelete
    Replies
    1. ஆமா இள வயது கார்சன். போடுங்க சீக்கிரம் போடுங்க சார்.

      Delete
  66. ஜாகோர் வளர்ந்து வரும் ஹீரோ என்பதால் தனியாக வந்தால் அவர் மேல் முழு வெளிச்சம்படும். எனவே இவர் தனியாகவே வரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா உங்களால் மட்டும் எப்படி இப்படி யோசிக்க முடிகிறது?

      கேள்வித்தாளில் உள்ள கேள்விக்கு மட்டும் பதில் அளிக்கவும்.

      Delete
    2. ஜம்பிங் பேரவையில் உள்ளவருக்கே ஜாகோர் தனியாக வருவது பிடிக்கவில்லை போல :-)

      Delete
    3. கேள்வி அது அல்லவே?

      Delete
    4. நன்றி ஜெகத் குமார் 🙏🙏🙏🙏

      Delete
  67. Apple. நான் youth என்பது எனக்கே கடந்த 6 வருடமாக மறந்து போய் விட்டது. நினைவூட்டியதற்கு நன்றி சார்.

    ReplyDelete
  68. மந்திர மண்டலம் எனது choice

    ReplyDelete
  69. ///
    மேலுள்ள memes அனைத்தும் நண்பர் அனுப்பியது....///

    எடிட்டர் சார்... மீம்ஸுகளை அனுப்பிவச்ச அந்த நண்பர்ர்ர் பெயர் & அட்ரஸ் கிடைக்குமா? விலாசம் விலாசம்!!

    கொஞ்சம் பேசணும்!

    ReplyDelete
    Replies
    1. ஆமா எனக்கும் அவரிடம் கொஞ்சம் பேச வேண்டும்...

      Delete
  70. கா.சொ.கா முன் பதிவு செய்தவர்களுக்கு அனுப்பி விட்டீர்களா சார்?

    ReplyDelete
  71. Me 🍎 - TEX ன் தீவிர வாசகர்.
    +
    🍓(My Junior) TEX ன் அதிதீவிர வாசகர்.

    மந்திர மண்டலம் (மெபிஸ்டோ) வந்தால் சிறப்பு.
    ஜம்பிங் பாய்ஸ் இன்னும் கொஞ்சம் அதிகமாக ஜம்புவார்கள். 😂

    ReplyDelete
  72. ஆசிரியர், நண்பர்கள் மற்றும் லயன் முத்து மொத்த டீமிருக்கும் செழுமையான மகிழ்ச்சி பொங்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  73. This comment has been removed by the author.

    ReplyDelete
  74. அடக்கடவுளே!! ஏற்கனவே நண்பர் ஒருவர் இங்கே சொல்லியிருந்தார் - இம்மாத ஸாகோர், டெக்ஸ் & மைக் ஹேம்மர் கதைகளில் ஒரு பெரிய ஒற்றுமை இருக்கிறதென்று! ஆனால் இத்தனை பெரிய ஒற்றுமை இருந்திடும் என்று சத்தியமாய் நினைத்திடவில்லை!! ஒருவேளை இது எடிட்டரின் ப்ரீ-ப்ளான் எதுவுமின்றி யதேச்சையாகத்தான் நடந்திருக்குமென்றால் நம் காமிக்ஸ் வாழ்க்கையில் இதுவொரு அற்புத நிகழ்வே!!

    மூன்று கதைகளிலுமே ஒன்றல்ல - இரண்டு மிகப்பெரிய ஒற்றுமைகள் உண்டு! மூன்று கதைகளையுமே படித்தவர்கள் யாராவது சொல்லுங்களேன் பார்ப்போம்- அவை என்னென்னவென்று?

    ReplyDelete
    Replies
    1. மூன்று கதைகளிலுபே பெண்களும் வில்லிகள் தான். மூன்று கதாநாயகிகளுமே இறந்துவிடுவார்கள்.கொல்லப்படுவார்கள்.

      Delete
    2. சரியான பதில் தான் ஜம்ப்பிங் பொருளாலரே!! 'பணத்தாசையால்' என்பதையும் சேர்த்துக் கொண்டால் கூடுதல் சிறப்பாக இருந்திடும்!!

      ஆனால், ஸாகோர் கதையின் நாயகி சாவதன் பின்புலத்தில் ஒரு உன்னதமான நோக்கம் இருந்ததால், அதை 'பணத்தாசையால்' என்பதற்கு பதிலாக 'பணத்தால்' என்பது பொருந்தும்!

      Delete
  75. Apple ...சுஸ்கி விஸ்கி

    ReplyDelete
  76. என் ஓட்டு பெளன்சருக்கு

    ReplyDelete
  77. என் ஓட்டு சுஸ்கி விஸ்கிக்கே

    ReplyDelete
  78. நண்பர்கள் அனைவருக்கும் , எடிட்டர் சாருக்கும், லயன் அலுவலக நண்பர்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  79. Me apple.
    சட்டித் தலையன் என்ற வார்த்தைய பாத்ததும் என்னென்னவோ நினைச்சு..........

    ReplyDelete
  80. காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.!!!

    ReplyDelete
  81. அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  82. அப்பிள்,பெளன்சர்

    ReplyDelete
  83. சீனியர் எடிட்டர், எடிட்டர்,ஜூனியர் எடிட்டர் அவர்தம் குடும்பத்தினருக்கும் , பணியாளர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கும், நண்பர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  84. அன்பு நண்பர்களுக்கும், அருமை எடிட்டர்களுக்கும் ஈ.இளவரசரின் இனிய தைத் திருநாள் வாழ்த்துகள்!!

    என்னுடைய ஓட்டு - சுஸ்கிவிஸ்கிக்கே!!

    ReplyDelete
  85. சுஸ்கி & விஸ்கி ப்ளீஸ்.

    ReplyDelete
  86. பொங்கல் திருநாளில் ஆசிரியரிடம் ஒரு வேண்டுகோள் தல தளபதி போட்டியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மறு பதிப்புகள் இரண்டு. ஒன்று தங்க கல்லறை இரண்டு கார்சனின் கடந்த காலம். இரண்டு புத்தகங்களையும் மேக்சி சைஸில் பல வாசகர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள். இரண்டையும் தனித்தனியாக வெளியிடாமல் ஒரே சமயத்தில் இரண்டு தனி புத்தகங்களாக ஒரு ஸ்லீப் கேஸ் உடன் இணைத்து வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  87. அனைவருக்கும் காமிக்ஸ் விடுமுறை நாள் வாழ்த்துகள் :-) ;-)

    ReplyDelete